ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையின்றி நேசிக்கவா-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 20

நேரம் இரவு 10 மணி நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியே சென்ற ஆதி இன்னும் வீட்டிற்கு வரவில்லை. வாட்ச்மேனை தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை.

வீட்டிற்குள் இருக்க மகிழுக்கு பயமாக இருந்தது. அதனால் கொடைக்கானலின் கொட்டும் பனியையும், குளிரையும் கூட பொருட்படுத்தாமல் தோட்டத்தில் உள்ள கல்பெஞ்சில் அமர்ந்து ஆதியின் வருகைக்காக காத்திருந்தாள்.

கோபமாக சென்றானே...? வந்து என்ன பண்ணுவானோ..? என்று ஒரு பக்கம் பயமாக இருந்தாலும்....

யாரும் இல்லாத தனிமையில் தனியாக இருக்க பயமாக இருந்த காரணத்தினால், அவன் வந்தால் போதும் என்ற நிலைமைக்கு வந்திருந்தாள்.

சிறிது நேரத்தில் அவனும் வந்துவிட்டான். 'ஹப்பாடா' என்ற உணர்வு தான் அவளுக்கு வந்தது. வேகமாக எழுந்தவள் அவனை நோக்கி வரும் பொழுது பத்தடி தூரத்திலேயே குப்பென்ற மது வாடை முகத்தில் அடித்தது.

அப்படியே சிலை போல் நின்றுவிட்டாள்.அவளின் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் சுத்தமாக நிதானத்தில் இல்லை என்பது அவனது தள்ளாட்டத்திலேயே மகிழுக்கு தெரிந்தது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட அவளால் யோசிக்க முடியவில்லை.அப்படியே அவனை வெறித்தபடியே நின்று இருந்தாள்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ,அவன் சற்று தள்ளாடியபடி அங்கே வாசற்படியிலேயே அமரவும் வேகமாக அவனை நோக்கிச் சென்றவள் கைதாங்கலாக அவனை எழுப்பி அறைக்கு அழைத்துச் சென்றாள்.

ஏதேதோ குளறலாக உளறியப்படியே வந்தான், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

எப்படியாவது அவனை கொண்டு போய் அவனது அறையில் சேர்த்த பின்,தனது அறைக்கு சென்று விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு முடிந்த அளவு அவனை இழுத்துச் சென்றாள்.

அவனது அறையில் அவனை படுக்க வைத்தவள்.... ஏசியை ஆன் செய்துவிட்டு, அவனது ஷூ சாக்ஸையும் கழட்டி விட்டு, சட்டையின் பட்டன்களை கழட்டி விட ஆரம்பித்தாள்.

அவன் உளறல் மொழிகள் இப்பொழுது ஓரளவிற்கு அவளுக்கு புரிந்தது.

அதிலிருந்து அவள் புரிந்து கொண்டது, நெடு நாட்களுக்குப் பிறகு இன்று தான் அவன் மதுவை நாடியுள்ளான். அதற்கு காரணம் அவள் தான் என்று....

நிதானமாக இருந்தால் கோபத்தில் அவளை உடல் ரீதியாக துன்புறுத்தி விடுவான் என்ற காரணத்தினால் தன்னை மறக்கும் அளவிற்கு மது அருந்தி இருக்கிறான் .

அவளுக்கோ மனது மிகவும் பாரமானது..... ஏன் தங்களது வாழ்க்கை இப்படி மாறியது....? எப்படி எப்படியோ வாழ்ந்து இருக்க வேண்டிய தாங்கள், இப்படி இருவருமே நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ வேண்டியதாகி விட்டதே..... இதற்கெல்லாம் யார் காரணம் .....?

இப்படியே குடித்து குடித்து இவன் உடல் நலனை கெடுத்து கொண்டு விடுவானோ என்ற அச்சம் புதிதாக பிறந்தது. என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் அவன் மேல் காதலில் கசிந்துருகியவள் அல்லவா...?

அது மட்டும் இல்லாமல் அவன் பழிவாங்குகிறேன் என்று திரும்ப தேடி வந்த பிறகு தான், அவன் இன்னும் தன்னை மறக்கவில்லை, அதே நேரத்தில் அவன் தன்னை நம்பவும் இல்லை, என்ற உண்மையே அவளுக்கு புரிந்தது....

அதுவரைக்குமே அவன் வேறொரு திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பான் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

இனி எப்படி அவனை இந்த குடிப்பழக்கத்தில் இருந்து வெளிக்கொண்டு வருவது என அவளுக்கு புரியவில்லை...

தான் என்ன கூறினாலும் அவன் அதனை இந்த பொருட்டாக கூட மதிக்க மாட்டான் என்பதை வேதனையுடன் நினைவு கூர்ந்தாள்.

இனி யார் என்ன சொன்னாலும், அவன் பார்வையில் அவள் தவறு செய்தவள். அத்தனை சுலபத்தில் அவளை மன்னிக்க மாட்டான்.

இதில் அவள் தவறு எதுவும் இல்லை. ஆனால் அதை அவன் புரிந்து கொள்ள வேண்டுமே. அதைக் கூறவும் அவளுக்கு மனதில்லை அவனாக எதையும் தெரிந்து கொண்டால் தெரிந்து கொள்ளட்டும்.....

என் மேல் துளி அளவுக்கேணும் காதலோ நம்பிக்கையோ இருந்திருந்தால், நிச்சயம் என்னை தேடியிருப்பான். எதனால் இப்படி பண்ணினேன் என்ற காரணத்தை கேட்டிருப்பான்.

ஆனால் அவனோ எதுவுமே கேட்கவில்லை...அவனாகவே முடிவு செய்து கொண்டு விட்டான்.

அப்படி என்றால் என்ன அர்த்தம் என் மேல் துளி அளவு கூட நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம்.. அப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத காதலே எனக்கு வேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாள்.

அமைதியாக வந்து தனது அறையில் படுத்தவள், நெடுநேரம் உறங்காமல் ஏதேதோ எண்ணங்களில் உழன்டவள் விடியலின் அருகாமையில் உறங்கிப்போனாள்.

காலை எழுந்த ஆதிக்கு ஒரே யோசனையாக இருந்தது.... இவ்வளவு செஞ்ச பிறகும் அவளை ஏன் என்னோட கூட்டிட்டு வந்து வச்சிருக்கேன்...? பிளாக் மெயில் பண்ணியாவது அப்படி அவ கூட வாழனும்னு என்ன கட்டாயம்....?

இவ்வளவு நாள் இருந்தது போல், இனியும் அவளை பிரிந்து இருக்க முடியாது என்பதுதானே காரணம். ஆனால் அதை அவளிடம் சொல்ல ஈகோவும், கோவமும் தான் தடுக்கிறது. எது எப்படியோ, கடந்த காலம் கடந்த காலமாகவே இருக்கட்டும்.

அந்த வேண்டாத நினைவுகளை ஓரமாக தூக்கி போட்டுவிட்டு, அவளை இந்த மூன்று மாதங்களுக்கும் என்னோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்குள் அவள் மேல் உள்ள காதலும் மோகமும் வடிந்துவிடும் என நம்பினான். அதே நேரத்தில் அவளை பழிவாங்கவும் செய்யணும்.... பண்றதெல்லாம் பண்ணிட்டு அவ நிம்மதியா தான் இருக்குறா.....

அவள பழி வாங்கணும்னு சொல்லி நா ஏன் உடம்பை கெடுத்துக்கிட்டு திரிகிறேன்....? ஏன் என்னால அவ கஷ்டப்படுவதை பார்க்க முடியல...? இன்னும் இந்த வீணா போன ப்ளேடி ****க் லவ்... என முஸ்டியை மடக்கி பெட்டில் குத்தியவன் இதுக்கெல்லாம் இன்னைலயிருந்து ஒரு முடிவு கட்டுறேன் என எண்ணியபடி ரெப்ரஷ் ஆகி கீழே சென்றான்.

மகிழ் எழுந்து குளித்துவிட்டு, டைனிங் டேபிளில் அமர்ந்து வேலைக்காரம்மா கொடுத்த காபியை அருந்திக்கொண்டிருந்தாள்.

ஆதியோ, ' மகாராணிக்கு சேவகம் மேல நடக்குதோ, இருடி வரேன்...' என மனதிற்குள் கருவியவன் டைனிங் டேபிளில் அவள் எதிரே அமர்ந்தபடி சமையல்காரம்மாவை சொடக்கு போட்டு அழைத்தான்.

அவர் வந்தவுடன்.... " போய் தோட்ட வேலை செய்றவங்க,வீடு கிளீன் பண்றவங்க, வாட்ச்மென தவிர மத்த எல்லாறையும் வர சொல்லுங்க.... இப்போவே " என்றான்.

ஓரிரு நிமிடங்களில் அனைவறையும் அழைத்து வந்தார்.

"இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு உங்களுக்கு "எனக்கூறினான்.

அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் முதலாளி கூறுகிறாறே என்று "சரி "என தலையசைத்துவிட்டு கிளம்பிவிட்டனர்.

மகிழ் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு அவளை நோக்கி திரும்பியவன், "இன்னைல இருந்து இந்த மொத்த வேலையும் நீ தான் செய்யணும்..." என்றான் அவள் முக பாவனைகளை அவதானித்தபடியே....

அவளுக்கோ மனதிற்குள் 'இத்தனை பேர் செஞ்ச வேலைய, நான் ஒரு ஆளு செய்யணுமா...? முடியாதுன்னு சொன்னா மட்டும் விடவா போறான்...."என யோசித்தபடியே சரி என தலையசைத்தாள்.

"அது மட்டும் இல்ல, நைட்...." என சிறிது கேப் விட்டவன்.... அவள் இதயம் எம்பி துடிப்பதை அளந்தபடியே, "நா கூப்பிடும்போதெல்லாம்,எனக்கு பெட் பார்ட்னராவும் இருக்கணும்..." என்றான் அழுத்தமான குரலில்.

என்னதான் எல்லாம் ஏற்கனவே தெரிந்து வந்து இருந்தாலும், அதனை அவன் வாயால் அடிக்கடி கேட்கும்பொழுது அவளுக்குள் ஏதேதோ நொறுங்கியது.

அதற்கும் மௌனமாக சரி என தலையசைத்தாள்.அதற்காக தானே கை நீட்டி அவனிடம் பணம் வாங்கி இருக்கிறாள்.

நான் ஆபீஸ் போயிட்டு லஞ்சுக்கு வந்துருவேன்.எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டு தோட்ட வேலை வீட்டு வேலை எல்லாம் கிளீனா முடிச்சு இருக்கணும்.... எனக் கூறியபடி மேலே செல்ல எழுந்தான்.

திடீரென ஏதோ யோசித்தவளாக “நீங்க ஏன் இன்னும் திருமணம் செஞ்சுக்கல...” கேட்டவளுக்கு, 'உன்னை மறந்துட்டு என்னால வேற ஒருத்தி அந்த இடத்துல நெனச்சு பார்க்க முடியல ' எனக் கூற வேண்டும் என்கிற ஏக்கம் பிறந்தது.

ஆனால் அவனோ, “எதுக்கு? காதல்ல தோத்தது போதாதா, வர்றவகிட்டயும் ஏமாறவா?” என்றான்.

அவன் பதிலில் யாரோ வேகமாக அவள் முகத்தில் சுடுதண்ணியை ஊற்றியது போல துடித்துப்போனாள் மகிழ் .

அழுகையில் உதடுகள் நடுங்கின. ஆனாலும் அடக்கியவளாக, “என்னை விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறமா, வேறு.. வேறு பெண்ணோட இப்படி இருந்திருக்கீங்களா...?” கேட்டவளின் இதயத்தின் துடிப்பு காதில் கேட்டது.

இதெல்லாம் ஏன் கேட்கிறோம் என்று தெரியாமலே மனதில் இருந்த அனைத்தையும் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் .

அவளது கேள்வியில் நின்று நிதானமாக அவளை திரும்பி பார்த்தவன்.

எல்லாரையும் உன்ன மாதிரியே நினைச்சுட்டியா...? முதல்ல நான் அடுத்து விக்கி... இல்ல இல்ல.... சாரி சாரி பஸ்ட்ல இருந்தே விக்கி தான்.... நா இடையில ஜஸ்ட் டைம் பாஸ் இல்ல...என உறுமியவன்...

லிஸ்ட்ல நாங்க ரெண்டு பேரு மட்டும் தானா...? இல்ல இன்னும் வேற யாரும் இருக்காங்களா...?

மகிழ் கோவத்தோடு... "போதும் ஆதி இதோட நிறுத்திக்க... உன்கிட்ட பணம் வாங்கிட்டேங்கறதுக்காக, என்ன வேணாலும் பேசலாம்னு அர்த்தம் கிடையாது.என்னோட பர்சனல் எப்படி வேணாலும் இருக்கலாம். அத பத்தி உனக்கு என்ன கவலை...? நா யாரோட வேணும்னாலும் இருப்பேன்...?" என்றாள்.

"அது சரி, நீ யாரோட வேணாலும் இருந்துக்கோ... அத பத்தி எனக்கு ஒன்னும் கவலை இல்ல...." எனக்கூறியவன் அவளின் யோசனை முகம் கண்டு.... "இப்ப நான் ஏன் கூட உன்ன கூட்டிட்டு வந்து இருக்கேன்னு தானே யோசிக்கிற...."என்றான்.

அவளுக்கோ கோபத்தில் கண்கள் சிவந்து வேகமாக ஏதோ சொல்ல வந்தாள்.

“இரு சொல்லி முடிச்சிடுறேன். எனக்கு நீ வேணும். நீ மீன்ஸ் உன்னோட உடம்பு .. அதனால நீ இங்க இருக்கிற நாள் வரை எனக்கு பெட்ல நல்லா கம்பெனி கொடு. உன்னோட சேவையை பொறுத்து எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கிறேன்...” என்றான் ஆதி.

அதை கேட்டு அதிர்ந்து போனாள் அவள். அவளைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறான் இவன்....?விபசாரி என்றா...? நெஞ்சம் வெடித்து விடும் போல் ஆனது.

எதுவும் பேசாமல் புறங்கையால் கண்ணீரைத் துடைத்தபடி கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.

அவளை பின்தொடர்ந்தவன் "என்ன பதில் ஏதும் சொல்லாமலே வந்துட்ட" என்றான் நக்கலாக.

"ஆதி ப்ளீஸ் இப்படி வார்த்தையாலே கொல்றதுக்கு, பேசாம என்னை ஒரேடியா கொன்னுரு....அப்போ உனக்கு நிம்மதி கிடைக்கும்..." என்றாள் விம்மி வெடித்து அழுதபடியே.

அவளைக் கோபமாக முறைத்தவன், "அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு..." எனக் கூறியபடி தனது அறையை நோக்கி நடந்தான்.

போகும் அவனது முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ்.....


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 21

அடுத்த நாளிலிருந்து அனைத்து வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், சமையல் என அனைத்து வேலைகளையும் மகிழ்வதனியே செய்யத் தொடங்கினாள்.

இந்த வேலைகள் அவளுக்கு கடினமானதாக இருந்தாலும், ஒரு வகையில் மனதிற்கு நிம்மதி அளித்தது. நன்றாக மாடு போல் உழைத்து விட்டு போய் படுக்கையில் விழுந்தால் உறக்கம் அவளை உடனே தழுவிக்கொண்டது.

அதற்கு ஏற்றார் போல் ஆதியும் அவளை முதல் நாளுக்கு பிறகு இரவில் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை.

அவனுக்கும் அலுவலகத்தில் வேலைகள் அதிகமாக இருந்ததால், அதிலேயே நேரம் சரியாக இருந்தது. எனவே இவள் பக்கம் கவனத்தை திருப்பவில்லை...

இப்படியே ஒரு வாரங்கள் ஓடி இருக்கும், அன்று அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது தலைவலி உயிர் போனது ஆதிக்கு.....சிறிது நாட்களாகவே முன்பு போல் உடல் மற்றும் மன ரீதியான தொந்தரவுகள் அதிகமாகின.

அவனுக்கு மூளை சூடாகியதைப் போல் ஒரு உணர்வு.... ஏற்கனவே ட்ரீட்மென்ட் எடுத்த டாக்டரிடம் கால் செய்து, தனக்கு முன்பு போல் தலைவலி மற்றும் உடல் ரீதியாக சில தொந்தரவுகள் இருப்பதாக கூறி என்ன செய்யலாம் என கேட்டான்.

அவரோ கொஞ்சம் அனைத்து வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மைண்டை ரிலாக்ஸ் செய்ய சொன்னார்.

அவனும் சரி என்று கூறிவிட்டு சிறிது நேரம் அமர்ந்து யோசித்தவன், மேனேஜரை அழைத்து ' இன்னும் 4 நாட்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும்' என்ற வேலைகளை அவரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான்.

ஆதி அலுவலகத்திற்கு காலையில் கிளம்பி போனால் சில நாட்களில் மதிய உணவிற்கு வீட்டிற்கு வருவான், சில நாட்களில் அதுவும் கிடையாது இரவு தான் வருவான்.

எனவே மகிழ் வேலைகளை முடித்துவிட்டு பகலில் சிறிது நேரம் ஓய்வெடுப்பாள்.

இன்று மதிய உணவிற்கும் அவன் வராத காரணத்தினால், இனி இரவு தான் வருவான் என எண்ணியவள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு மூன்று மணி அளவில் தனது அறைக்குச் சென்று சுடிதாரை கலைந்துவிட்டு நைட்டிக்கு மாறியவள், அப்பொழுதுதான் படுத்திருப்பாள்... 'தடார்' என்று கதவை திறந்து கொண்டு அவளது அறைக்குள் நுழைந்தான் ஆதி.

அவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை...ரொம்பவே பயந்துவிட்டாள்.

"ஆ...தி நீ... நீங்...க இந்.. ந்...த நேரத்...து..ல.." என திக்கி திணறி பேசியபடியே எழுந்து நின்றாள்.


அவனோ அழுத்தமான பார்வையை அவள் மீது பதித்தவன், வேறு எதுவுமே பேசாமல் டையை கழட்டி விட்டு, ஷர்ட்டின் மேல் இரு பட்டன்களை கழட்டியவன்... அவளை நெருங்கி இறுக அணைத்து இதழோடு இதழ் பொருத்தினான்.

உலகமே ஒரு நிமிடம் நின்று சுழன்றது போல் இருந்தது இருவருக்குமே....!

ஆதிக்கு அப்பொழுதுதான் ஒரு உண்மை புரிந்தது.... தனது ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 'ஸ்ட்ரெஸ் பஸ்டர் ' அவள் தான் என்று.....

இரு நிமிடங்களுக்கு பிறகு அவளது இதழை விடுவித்தவன், அவளை அணைத்தபடியே கட்டிலில் விழுந்தான்.

மகிழ் அனைத்தையும் ஒரு மரத்த தன்மையுடன் உள்வாங்கிக் கொண்டு, அமைதியாக அவனது நடவடிக்கைகளுக்கு உடன்பட்டாள். வேறு வழியும் இல்லையே....

கட்டிலில் விழுந்தவன் வேறு எதுவும் செய்யாமல் அவளை இறுக்கி அணைத்தபடி, அவளது மார்பில் முகம் புதைத்தவன் அவள் மேல் கால்களை போட்டு கொண்டு அப்படியே உறங்க ஆரம்பித்துவிட்டான்.

அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாலும் அப்படியே அவனது அணைப்பில் அமைதியாக படுத்திருந்தாள்.சிறிது நேரத்திலேயே அசதியின் காரணமாக அவளும் உறங்கிவிட்டாள்.

இரவு 7 மணியை போல மகிழ் தான் முதலில் கண்விழித்தாள். இன்னும் அவனது கையணைப்பில் தான் இருந்தாள். மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்,அவன் சீரான மூச்சுடன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

அவனை தொந்தரவு செய்யாமல், மெதுவாக அவனை விலக்கிவிட்டு எழுந்தவள், ரெப்ரசாகி கீழே சென்று இரவு உணவு தயாரிக்க தொடங்கினாள்.

அவள் எழுந்து சென்ற அரை மணி நேரத்திலேயே அவனும் கீழே வந்து விட்டான். இப்பொழுது ரெஃபரஷ் ஆகி வேறு உடை மாற்றி இருந்தான். கீழே ஷார்ட்ஸ் மேலே ஆம்கட் பனியன் அணிந்திருந்தான்.

அவனது பார்வை அவளை விட்டு அங்கு இங்கு நகரவில்லை... அவளைப் பார்த்தபடியே டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு, அவள் வேலை செய்வதை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். ஏன் இப்படி பார்த்துக் கொண்டே இருக்கிறான் என எண்ணியபடியே இரவு உணவு தயாரிக்கலானாள்.

இரவு உணவாக சப்பாத்தி மற்றும் பன்னீர் கிரேவி செய்து இருந்தாள்.

சமையல் வேலையை முடித்தவள், அவனை நோக்கி வந்தபடி "ஆதி சாப்பாடு ரெடி. இப்போ சாப்பிடுறீங்களா..? இல்ல நேரம் ஆகட்டுமா..?"என்றாள்.

'ரெண்டு பேருமே உட்கார்ந்து சாப்பிடலாம்..'என்றவன், ஹேண்ட் வாஷ் செய்துவிட்டு வந்து அமர்ந்தான். இருவருமே அவரவர்கள் பரிமாறிக் கொண்டு சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்தவன் ஒரு அழுத்தமான பார்வை அவளை பார்த்துவிட்டு மேலே எழுந்து சென்றுவிட்டான்.

அப்போதுதான் அவளுக்கு மூச்சு வந்தது... அடுத்து சாப்பிட்ட பாத்திரங்கள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தியவள்,விளக்குகள் அனைத்தையும் அனைத்துவிட்டு, எல்லா கதவுகளும் பூட்டி இருக்கிறதா என்பதை செக் செய்துவிட்டு மேலே தனது அறைக்கு தூங்குவதற்காக சென்றாள்.

அறையின் கதவை திறந்தவள் அப்படியே ஷாக் அடித்தது போல் நின்று விட்டாள். அவளது அறையில் உள்ள கட்டிலில் அவன்.....!

சாய்வாக அமர்ந்து கால்களை நீட்டியபடி அவளின் வருகைக்காக காத்திருந்தான்....

மகிழுக்கோ நெஞ்சுக்குள் நீர் வற்றிய உணர்வு.....மெதுவாக அடி மேல் அடி வைத்து சென்றவள், கபோர்டு திறந்து இரவு உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

ஏன் இங்க வந்து படுத்து இருக்கான்...?அய்யோ அப்போ இன்னைக்கு நைட்டும்.... என எண்ணியவளுக்கு பயத்தில் இதயம் வாய் வழியே வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு துடித்தது.

அரை மணி நேரத்திற்கு மேலாக பாத்ரூமிலேயே குளித்துவிட்டு இருந்தவள், இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என எண்ணி மெதுவாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

அவன் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

'பேசாம போய் படுத்துருவோம்' என யோசித்தபடி கட்டிலின் அடுத்த மூலையில் போய் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.

சிறிது நேரத்திலேயே அவளை பின்னிருந்து இறுக அணைத்தவன், பின் கழுத்தில் அழுத்தமாக தனது இறுகிய இதழ்களால் முத்தமிட்டான்.

மகிழ்வதனியோ பயத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.ஏனென்றால் அவளது முதல் அனுபவம் அப்படியாயிற்றே....!

அவளை மெதுவாக தன்னை நோக்கி திருப்பியவன், அவள் இமைகளில் இதழ் பதித்தான். அதன் பிறகு அவளின் வெற்றிடையை இறுக பற்றியவன், மென்மையாக இதழோடு இதழ் பொருத்தினான்.

முதல் நாள் போல் வன்மையாக இல்லாமல்... மிக மிக மென்மையாக கையாண்டான். சில நேரங்களில் அவனையும் அறியாமலேயே மூர்க்கமாக செயல்பட்டான்.

இருப்பினும் அவளது கண்களைப் பார்த்து,அவள் வலி உணர்ந்து தன்னை கண்ட்ரோல் செய்து கொண்டு,முடிந்த அளவிற்கு மிக மிக மென்மையாக அவளுடன் கூடினான்.

கூடல் முடித்த பின்பு அவளது நெற்றியில் இதழ் பதித்தவன், அவளை வாரி எடுத்து தன் மார்பின் மேல் போட்டு அணைத்துக் கொண்டபடி தூங்க ஆரம்பித்துவிட்டான்.

இத்தனைக்கும் ஒரு வார்த்தை கூட அவளிடம் அவனும் பேசவில்லை, அவளும் பேசவில்லை.....!

மகிழுக்கு சிறு நிம்மதி.... அவன் பேசாமல் இருப்பதே போதும் என்று எண்ணினாள்.பேசினால் தான் வார்த்தைகளாலே அவளை குத்திக் கொன்றுவிடுகிறானே.

விடியற்காலையில் மகிழ் கண் விழிக்கும் போது அறையில் அவன் இல்லை.

திரும்பி மணியை பார்த்தாள். அதிகாலை 5 மணி..... 'இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு எங்க போயிட்டான்....?' என எண்ணியபடி மெதுவாக எழுந்தவள், அருகில் ஏதோ பேப்பர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து எடுத்து பிரித்து படித்தாள்.

அதில் ' எங்கோ வெளியே செல்ல வேண்டும் 7 மணிக்கெல்லாம் கிளம்பி ரெடியாகி இரு ' என்று மட்டும் எழுதி இருந்தான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும்.... வேலைகள் வேறு அப்படியே கிடக்குமே... அதை யார் பார்ப்பார்கள்...? என்று யோசனையுடன் மெதுவாக குளித்து சாதாரண ஜார்ஜெட் சுடிதார் ஒன்றை அணிந்து சாதாரணமாக எப்போதும் போல் ரெடியாகி கீழே வந்தாள்.

அவனும் ஜாக்கிங் முடித்துவிட்டு அப்பொழுது தான் உள்ளே நுழைந்தான்.

அவளைப் மேலிருந்து கீழாக பார்த்தவன் வேறு எதுவும் கூறாமல் "10 மினிட்ஸ் வெயிட் பண்ணு, நானும் ரெடியாகிட்டு வந்தர்றேன்" எனக்கூறியபடி தனது அறைக்கு சென்றுவிட்டான்.

அவளும் அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள். கூறியது போலவே பத்து நிமிடத்தில் வந்தவன், அவளை அழைத்துக்கொண்டு தனது ஜீப்பில் வெளியே கிளம்பிவிட்டான்.

கேட்கக் கூடாது என நினைத்தாலும் அவளையும் மீறி, " எங்க போறோம்...? " என கேட்டுவிட்டாள்.

கேட்ட பிறகு அவன் பார்த்த பார்வையில்...'ஏன் கேட்டோம்' என்று ஆகிவிட்டது.

நாக்கை கடித்தபடி மெதுவாக "இல்ல சொல்ல வேணாம்னா பரவால்ல....ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்டேன்" என்றபடி அமைதியாக திரும்பி உட்கார்ந்தவள், ஜன்னலின் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

அவனிடம் சிறிது நேரம் மௌனம். என்ன யோசித்தானோ தெரியவில்லை பின்பு ஒரு பெருமூச்சுடன் "கொடைக்கானலை சுற்றி பார்க்க போறோம்... 3 டேஸ்" என்றான்.

அவளுக்கோ ஆச்சரியம்...! அதையும் மீறி "நான் டிரஸ் எதுவுமே எடுத்து வைக்கலையே... த்ரீ டேஸ் னு சொல்றீங்க.... முதல்லயே சொல்லியிருந்தா அதுக்கு தகுந்த மாதிரி ரெடி ஆயிருப்பேன்ல..." என்றாள் சிறு வருத்தத்துடன்.

அவனோ மீண்டும் அமைதியாக அவளை திரும்பி பார்த்துவிட்டு, "எல்லாம் ரெடியா இருக்கு... நான் ரெடி பண்ணிட்டேன். நீ பேசாம வேடிக்கை மட்டும் பாத்துட்டு வா.." என்றான்.

மகிழின் மனதிற்குள்ளோ 'கனவு ஏதும் காண்கிறோமா...?' என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.

அவளுக்கு அவனுடன் இருப்பது ஒரு மாதிரி அசூசையாக இருந்தாலும், வெகு நாட்களுக்குப் பிறகு எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் யோசிக்காமல், மூன்று நாட்கள் இயற்கையோடு கழிக்கப் போகிறோம் என்பதில் அவளை அறியாமலே மனதில் சிறு மகிழ்ச்சி குமிழ் விட்டது உண்மையே.....!

அந்த சந்தோஷம் முகத்தில் பிரதிபலிக்க, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டியவன், அவளின் முகத்தை வைத்தே அகத்தை கணித்தவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டு அமைதியாக வாகனத்தை செலுத்தினான்.

அரை மணி நேர பயணத்திற்கு பிறகு கொடைக்கானலின் 'பிரையண்ட் பூங்கா'வை வந்து அடைந்தனர். அங்கு சிறிது நேரம் செலவிட்டவர்கள் அங்கேயே பிரேக்பாஸ்ட் முடித்துக் கொண்டு பின்னர் கோக்கர்ஸ் வாக், படகு சவாரி, மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட வழக்கமான சுற்றுலா இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

அனைத்து இடங்களிலும் அவளின் கைகோர்த்தபடியே, அவளிடம் ஏதும் கேட்காமலேயே அவளின் முக பாவனைகளை வைத்து அவளின் தேவை அறிந்து கொண்டு அவற்றை நிறைவேற்றி வைத்தான்.

நிறைய இடங்களில் புகைப் படங்களும் எடுத்துக் கொண்டனர்...!

அவனின் இந்த அமைதியும், அக்கறையான செயல்களும் அவளின் காயம் பட்ட இதயத்திற்கு சிறிது ஆறுதலாக இருந்தது என்னவோ உண்மைதான்.

மாலை ஐந்து மணி வரை நன்றாக அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, களைப்பாக இருந்ததால் அங்கேயே இருக்கும் ரெசார்ட் ஒன்றில் சென்று தங்கினார்.

அன்றைய இரவு அந்த குளிரும், பனியும் காரணமாக அமைய, மீண்டும் ஒரு மோக இரவாகி போனது அவனுக்கு...!

அவளுக்கோ நரக வேதனையானது... இருந்தும் எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக அவனுக்கு ஒத்துழைத்தாள். அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது....

அடுத்த நாள் காலை 8 மணி அளவிலேயே கொடைக்கானலை விடுத்து, அருகே உள்ள கிராமங்களை சுற்றிப் பார்ப்பதற்காக கிளம்பினார்.

கொடைக்கானலில் வழக்கமான சுற்றுலா இடங்கள் தவிர கண்களுக்கு குளிர்ச்சியான ரம்மியமான இடங்கள் மலைக்கிராமப் பகுதிகளில் ஏராளமாக உள்ளன.

குளிர்ந்த பனிமூட்டத்துடன் கூடிய மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதி, ஏரி, நீர்வீழ்ச்சி, புல்வெளிகள் என சுற்றுலா பயணிகள் அதிகம் வராத இடங்களாக தேர்ந்தெடுத்து சுற்றித்திரிந்தனர்.

அவ்வப்போது ஆள் அரவமற்ற தனிமை நேரும் இடங்களில் எல்லாம், சிறு சிறு இதழ் அணைப்புகளும்... மோகமுத்தங்களும் கூட ....அரங்கேறியது.

முத்தங்களை தாண்டி மொத்தமாக கொள்ளையிட அவன் ஆயத்தமாகும் பொழுதுகளிலெல்லாம், அவள் அவனை இருக்கும் இடம் பொருட்டு கண்ட்ரோல் செய்தாள். அதிசயமாக அவனும் அவளுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து விலகி விடுவான்.

மதிய உணவிற்குப் பிறகு இருவரும் ஜீப்பிலேயே வில்பட்டி அருகேயுள்ள புலியூருக்கு சென்றனர்.

புலியூர் பகுதியில் புல்வெளி அதிகம் இருக்கும். மழைக் காலத்தில் மழைநீரைச் சேமித்து சிறுக சிறுக இங்குள்ள புற்கள் வெளிவிடுவதால் ஓடையாக, அருவியாக, ஆறாக மாறி ஆண்டு முழுவதும் மலைப் பகுதியில் தண்ணீர் வரும்.

அந்த இயற்கையின் அழகில் தன்னை மறந்தவள்,அப்படியே அங்கேயே அமர்ந்து விட்டாள்.....!

ஏன் கொடைக்கானலை மலைகளின் இளவரசி...? என்று கூறுகின்றனர் என்பதற்கான காரணம் இப்பொழுது அவளுக்கு புரிந்தது ....

நாள் முழுவதும் அவள் இயற்கையை ரசிக்க, அவன் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

இப்படியே இரு தினங்கள் சென்று இருந்தது. பகலில் இயற்கை அன்னையின் வனப்புகளை ரசிப்பதும், குளிர் இரவில் இருவரும் வஸ்திரங்கள் இல்லாத ஓர் உடலாக மோக கூடலுமாக சென்றது.....

அடுத்து மூன்றாவது நாள்....!

இருவரும் கொடைக்கானலில் இருந்து பாம்பார்புரம் வழியாக வட்டக்கானல் செல்லும் வழியில் உள்ள வட்டக்கானல் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

அங்கேயும் பெரிதாக கூட்டம் இல்லை. அங்கொருவரும் இங்கொருவருமாக மொத்தமே நான்கைந்து பேர்கள்தான் குளித்துக் கொண்டிருந்தனர்.

இருவரும் அந்த ஜில்லென்ற ஐஸ் போன்ற நீரில் ஒன்றாகவே சிறு சிறு சில்மிஷங்களோடு குளித்துவிட்டு உடைமாற்றி அருகே இருந்த உணவகத்தில் உணவருந்திய பின் அடுத்த இடத்திற்கு கிளம்பினர்.

அடுத்ததாக அவர்கள் சென்றதோ, கொடைக்கானலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது பள்ளங்கி மலைக் கிராமம்....!

இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஊரில் சிறிய சமவெளி பகுதியில் ஓடும் சிற்றோடையில் எப்போதும் குளிர்ந்த நீர் ஓடிக் கொண்டிருக்கும்.

குளிர்ந்த நீரில் கால்களை நனைத்தபடி நடந்து சென்றவாறு இயற்கை எழிலை ரசித்தனர் . அவனோ மெல்லிய குரலில் அவளிடம் அந்த இடத்தைப் பற்றி விளக்கியபடி நடந்தான்.

இந்த இடத்திற்கு "ரிவர் வாக்" என்று பெயரும் உண்டு என கூறினான் .

அப்படியே அருகில் உள்ள பள்ளங்கி - கோம்பை இடையே பள்ளங்கி அருவிக்கு அடுத்து சென்றனர் . அந்த அருவிக்கு பக்கத்திலேயே ஒரு மிக அழகான புல்வெளி பகுதியும் இருந்தது.

அந்தப் புல்வெளியில் அமர்ந்தபடியே அந்த இடங்களை பற்றியும் அவளுக்கு விளக்கினான். அதன் அருகேயுள்ள புல்வெளி பகுதியில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளதாகவும், இப்பகுதியில் 360 டிகிரியில் மலையைப் பார்க்கலாம் என்றும் கூறினான்.

அவளோ கொடைக்கானலில் இருந்தாள் என்று தான் பெயர், இந்த இடங்களை எல்லாம் கனவில் கூட பார்த்ததில்லை... அவன் கூறும் அனைத்தையும் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

அதன் பிறகு அருகிலேயே இருந்த கேரட் தோட்டத்திற்கு சென்று கேரட் விளைவது குறித்தும் தெரிந்து தெரிந்து கொண்டார்கள்.

மகிழுக்கு அந்த கேரட் தோட்டத்தை விட்டு வரவே மனதில்லை. பிரஷ்ஷாக விளைந்த கேரட்டை அப்பொழுதே மண்ணில் இருந்து பறித்து அங்கிருந்த தண்ணீரில் கழுவி விட்டு அவளிடம் நீட்டினான்.

இலையுடன் கூடிய கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்ட அனுபவத்தை மகிழால் இனி வாழ்க்கையில் மறக்கவே முடியாது....!

அவ்வளவு இனிமையான நினைவுகள் அவை....!

அந்த இடத்தை விட்டு கிளம்பவே மனதில்லாமல் கிளம்பி அடுத்த இடத்திற்கு அவனுடன் சென்றாள்.

அன்று மாலை அருகில் உள்ள கோம்பை வன பகுதிக்குச் சென்றவர்கள் நேரமாகி விட்டதால், அங்கேயே அந்த பழங்குடியினர் வசிக்கும் குடிசையிலேயே அன்றைய இரவை கழித்தனர்.

அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்று நினைத்த அந்த பழங்குடியின மக்கள், ஆதியிடம் ஏதோ கயிறு போன்ற ஒரு பொருளை நீட்டி அதை அவளின் கழுத்தில் மாட்டி விடச் சொன்னார்கள்.

அவனும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், அதனை அவளது கழுத்தில் அணிவித்துவிட்டான். அதன் பிறகு தான் அங்கிருந்த ஒரு பெண்மணி கூறினாள்,அது அவர்கள் முறையில் உபயோகிக்கும் தாலி என்று....!

ஆதி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மகிழுக்கோ என்ன மாதிரி உணர்வென்று வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை....

அன்றைய இரவு அவன் அவளை நாடிய பொழுது தன்னை அவள் அவனின் மனைவியாகவே பாவித்து முதல் முறையாக அவனுடன் காதலுடன் கூடினாள்.....

அவனுக்கோ அவளது மாற்றம் புரிந்தாலும், அது அவனுக்கு இரு மடங்கான இன்பத்தை கொடுத்ததனால் அதனை பற்றி பெரிதாக ஆராயவில்லை.


அன்றைய இரவு அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத காதலுடன் கூடிய கூடல் அடங்கிய இரவாகிப்போனது .....!

குறிப்பு : கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.....உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... 🥰 உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....



 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 22

அடுத்த நாள் காலை அந்த பழங்குடியின மக்களிடம் விடைபெற்று கொண்டு கொடைக்கானல் நோக்கி புறப்பட்டனர்.

இருவருக்குமே மனதிற்குள் இந்த நாட்கள் இப்படியே நீண்டு கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணமே.....

ஆனால் அது சாத்தியமில்லையே....!

மகிழுக்கோ இத்தனை நாட்கள் நன்றாக நடந்து கொண்டவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் எப்படி தன்னிடம் இருப்பானோ என்ற பயம்..

ஆதியோ தனது உடல் நிலைக்காக தான் இந்த ட்ரிப் ஏற்பாடு செய்திருந்தான் என்றாலும், இந்த மூன்று நாட்களும் அவளுடன் பழைய வாழ்க்கையை வாழ்ந்த திருத்தி அவனுக்கு...

இப்படியே அவளை மன்னித்து தன்னுடன் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு மனது எடுத்துரைக்க, மற்றொரு மனதோ உன்னை வேண்டாம் என்று உதறிவிட்டு அந்த விக்கியுடன் ஓடியவள் உனக்குத் தேவையா...? அவளுக்கு நீ சேவகம் செய்யப் போகிறாயா..? என எள்ளி நகையாடியது.

இரு மனதிற்கும் இடையில் நின்று தவித்துக் கொண்டிருந்தான் ....

காலை 10 மணி அளவிலயே ஆதியின் வீட்டை அடைந்துவிட்டனர்.

ப்ரேக்ஃபாஸ்ட் வெளியிலேயே முடித்திருந்த காரணத்தினால் அமைதியாக இருவரும் அவரவர் அறைக்குள் சென்று முடங்கினர்.

மகிழுக்கு களைப்பாக இருந்தாலும் மதிய உணவு தயாரிக்க வேண்டுமே என எண்ணியவளாக குளித்து உடை மாற்றிய பின் கிச்சனுக்குள் தஞ்சம் புகுந்தாள்.

ஆதி வந்த அரை மணி நேரத்திலேயே அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். தன் மனதிற்குள் நடக்கும் போராட்டத்தால் அவளிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

அவளுக்கு மனதிற்குள் 'சுள்' என்ற வலி எழுந்தாலும், இதுதான் அவனது இயல்பாயிற்றே என எண்ணியவள்.... தேவையில்லாததற்கெல்லாம் ஆசைப்படாதே என மனதை அடக்கியபடி தனது வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் சென்று ஓய்வு எடுக்கலானாள்.

தாய், தங்கையின் நினைவு வந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை போனை தான் உடைத்து விட்டானே.

எப்படியாது இன்று வந்தவுடன் அவனிடம் கேட்டு தாய் தங்கையிடம் பேச வேண்டும் என எண்ணியவளாக உறங்கிப் போனாள்.

மீண்டும் இரவு தான் ஆதி வீட்டிற்கு வந்தான்.

வந்தவன் அவளிடம் எதுவும் பேசாமல் அவனது அறைக்குச் சென்று ரெப்ரஷ் ஆகி கீழே வந்து உணவருந்தினான்.

அவன் சாப்பிட்டு முடிக்க போகும் வேளையில் மெதுவாக தனது கோரிக்கையை அவனிடம் கூறினாள்.

"ஆதி... 4 நாளாச்சு....அம்மா கிட்டயும் தங்கச்சி கிட்டயும் பேசணும் போல இருக்கு..." என்றாள் பாவமான குரலில்.

குனிந்து உணவருந்தி கொண்டிருந்தவன், கண்களை மட்டும் உயர்த்தி அவளை நோக்கினான்.

என்ன சொல்லப் போகிறானோ என கைகளை பிசைந்தபடி அப்படியே பதட்டமாக நின்று இருந்தாள்.

தனது போனை எடுத்து பாஸ்வோர்ட் போட்டுவிட்டு அவளிடம் நீட்டியவன்.... " இங்கேயே உக்காந்து ஸ்பீக்கர்ல போட்டு என் முன்னாடியே பேசு... " என்றான்.

'பேசச் சொன்னதே போதும்' என எண்ணியவளாக, வேகமாக அலைபேசியை வாங்கியவள் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.

ஃபாரினில் இருப்பதாக கூறியிருப்பதால் வாட்ஸப்பின் மூலம் முதலில் தங்கைக்கு அழைத்து பேசிவிட்டு, பின் தாய்க்கு அழைக்கலானாள்.

அழைப்பு ஏற்கப்பட்ட உடன் வேகமாக... "அம்மா நா மகிழ் பேசுறேன்..." என்றாள்.

ஆனால் அவளது போதாத காலம் அந்த அழைப்பை எடுத்தது விக்கி....!

"சொல்லு மகிழ்...நல்லா இருக்கியா...? அத்தை தூங்கிக்கிட்டு இருக்காங்க. ஏன் நீ போனே பண்ணல...? வேற நம்பர்ல இருந்து பண்ணி இருக்க...? உன் போன் என்னாச்சு...?" என அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்தான்.

அவனது குரலை கேட்டதும் அவளுக்கோ உதறல் எடுக்க ஆரம்பித்தது.

ஆதியோ சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டியபடி நாற்காலியில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து அவளைத் துளைக்கும் பார்வை பார்த்தான்.

அவளுக்கோ அவன் முன்னே என்ன பேசுவது என்றே தெரியவில்லை...

வேகமாக போன் காலை கட் செய்துவிட்டு போனை ஆதியிடம் நீட்டினாள். பயத்தில் கை நடுங்குவது அப்பட்டமாக தெரிந்தது.

ஆதியின் பார்வை தன்னை துளைப்பது தெரிந்தாலும், அவன் வேறு ஏதாவது பேசி தன்னை காயப்படுத்தும் முன், இந்த இடத்திலிருந்து சென்றாக வேண்டும் என்னும் நோக்கத்தில் வேகமாக கிச்சனிற்குள் நுழைந்து கொண்டாள்.

இங்கு விக்கியோ பிரபாவதியின் மொபைலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மகிழ் கால் பண்ணிய நம்பரின் வாட்ஸப் டிபி-யில் ஆதிரத்தினேஸ்வரன் ஸ்டைலாக போஸ் கொடுத்து கொண்டிருந்தான்.

'மகிழ் ஏன் இவன் நம்பர்ல இருந்து கால் பண்ணி இருக்கா...? எதுவுமே பேசாம வச்சிட்டா...திரும்ப கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறா....' என பல கேள்விகள் மனதிற்குள் சுற்றி சுழன்றாலும் 'மீண்டும் இவனா...?' என்ற எண்ணமே மேலோங்கியது.

ஏதோ சரி இல்லை என்பது மட்டும் புரிந்தது. தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டவன், தன்னுடைய கல்லூரி கால காவல்துறை நண்பனுக்கு அழைத்து, அந்த நம்பரை கொடுத்தவன் இந்த எண் யாரோட பெயரில் உள்ளது என்பதையும், எங்கு உள்ளது என்பதையும் டிரேஸ் பண்ணி சொல்லுமாறு கேட்டான்.

அவனும் சரி நாளைக்கு சொல்றேன் எனக் கூறினான்.

அடுத்த நாள் விக்கிக்கு அழைத்த அவன் நண்பனோ... ' இது பிசினஸ்மேன் ஆதிரத்னேஸ்வரனின் நம்பர்' என்றும் 'தற்பொழுது அந்த நம்பர் இருக்கும் லொகேஷன் கொடைக்கானல்' என்றும் அட்ரஸயும் அனுப்பினான்.

"ஏதாவது பிரச்சனையா விக்கி...? எதனால் அவரோட நம்பர நீ டிரேஸ் பண்ண சொல்லிருக்க...?அவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்...?" என கேட்டான்.

அவனிடம் மேலோட்டமாக விஷயத்தை கூறியவன், மகிழுக்கு ஏதோ ஆபத்து என்றும் தான் முதலில் செல்கிறேன்... சென்று பார்த்துவிட்டு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அழைப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

சென்னையில் தனது வேலைகள் அனைத்தையும் ஒழுங்கு படுத்தியவன், அன்று இரவே கொடைக்கானலுக்கு பயணமாகினான்.

இங்கு மகிழின் நிலைமையோ அந்தோ பரிதாபம்...!

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தனது அறைக்கு வந்தவளை வரவேற்றது என்னவோ ஆதிரத்னேஸ்வரன் தான்....!

ஒரு அமைதியான பெருமூச்சுடன் அவள் குளித்துவிட்டு வந்து படுக்கும் வரை அமைதியாக தனது மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவன் , அவள் அருகே வந்து படுத்ததும் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு அவளின் புறம் திரும்பி... "ஆமா ஏன் உன் ஹஸ்பண்ட் கிட்ட பேசாம ஃபோன கட் பண்ணிட்ட...?" என்றான் நிதானமான குரலில்.

அவளோ மரண பீதியுடன் அவனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக எழுந்து அமர்ந்தாள்.

"இல்ல ஏன் கேட்கறன்னா, அவன் வேற திரும்பத் திரும்ப என் நம்பருக்கு கால் பண்ணிக்கிட்டே இருக்கான்... எனக்கு அது டிஸ்டர்ப் ஆகுது. இதுல பத்து வாய்ஸ் மெசேஜ் வேற..... அவ்வளவு லவ் உன் மேல....!"

அதற்கும் அவள் அமைதியாகவே தலையை குனிந்த படி அமர்ந்திருந்தாள்.

"இருக்காதா பின்ன.... தாலி கட்டுன பொண்டாட்டில்ல..." என்றான் நக்கலாக.

அதற்கும் அவள் நிமிர்ந்து கூட பார்க்காமல், வாயை மூடிக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள். ஆனால் மனதிற்குள் ஒரு பெரிய பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.

அவனுக்கோ மூளையில் வெறியேறியது... " ஏதாவது பேசுடி " என உச்சஸ்தானியில் கத்தினான்.

தான் விரும்பிய ஒன்றை வேறு ஒருவரின் கையில் பாக்கும் போது வரும் வலி சற்று அதிகம் தானே.....

"ஆ... ஆதி அ..து வந்... ந்..து.... நா..." என ஏதோ கூற வந்தவளை பேசவிடாது முகமெங்கும் மொச் மொச்சென்று முத்தங்கள் வைக்க அவன் வாயிலிருந்து வந்த மதுபான வாடை அவள் குடலை புரட்டியது..

"என்னை விடு...ங்க.. ம்ம்ஹம்....ம்ம்ம்.. "அதற்குமேல் எங்கே பேசவிட்டான்..

கால்கள் துடிக்க திமிறியவளை இன்னும் தனது முழுபாரத்தையும் கொடுத்து அழுத்தி அடக்கினான்..

மூச்சு முட்டியது.. வாயைத் திறந்து மூச்சுக்கு ஏங்கியவளை தன் மூச்சைக் கொடுத்து கொடுத்து முத்தத்தை தொடர்ந்தான்...

அவனது இதழ்கள் ஊர்ந்து கழுத்தை அடைந்து கடித்து அவனது மோகத்தைக் ஏற்ற.. அவள் இரு கரத்தையும் தலைக்குமேல் தூக்கிப்பிடித்து தன் ஒற்றைக்கரத்தினுள் அடக்கினான்....

"வேணாம்...ஆதி .. ப்ளீஸ்...விட்ரு..எனக்கு பயமா இருக்கு ".. என பயத்தில் அவள் திமிறித் துடிக்க.. அவளது மொழிகள் எதையும் தனது காதுலயே வாங்காதவன், தன் வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தான்...

அவள் மார்பில் முகம் புதைத்தான்.. போராடி அவனை தள்ளிவிட்டவள் அதே வேகத்தில் அவளும் உருண்டு கட்டிலிருந்து கீழே விழுந்தாள்..

வேகமாக மறுபக்க கட்டிலிலிருந்து இறங்கிவந்தவன், தன் டி-ஷர்ட்டை கழட்டி வீசியெறிந்தான்..

அவன் அகண்ட மார்பும், முறுக்கேறிய புஜங்களும், ஒட்டிநின்ற எயிட் பேக் வயிறும் என பார்க்கவே மகிழுக்கு கொலை நடுங்கியது...

காமத்தில் சிவந்த கண்களின் வேட்கையைப் பார்த்து சுவற்றோடு ஒட்டிநின்றாள் பெண்ணவள்..

மீண்டும் அவளை நெருங்கி அணைக்க முயன்றவனை... தனது இரு கைகளையும் கொண்டு, பலன் அனைத்தையும் ஒன்று திரட்டி வேகமாக தள்ளிவிட்டாள்.

மோகம் அறுபட்ட கோபத்தில், கன்னத்திலே பளாரென ஒரு அறை விட்டவன் "ஏன்டி இப்படி என்னோட உணர்வுகளோட விளையாடுற..... நீயாதான என்ன விட்டுட்டு போன..? ஏன் போனன்னு இப்போ வரைக்கும் ஒரு ரீசணும் என்கிட்ட நீ சொல்ல.... ஆனா கஷ்டமும் வலியும் மட்டும் எனக்கா..?"

"முடியல அம்மு.... உன் காதல் வேணா பொய்யா இருக்கலாம்.. ஆனா என்னோட காதல் உண்மைடி.. உன்னை மறக்கவே முடியல ".. என்று தன்னை மறந்து போதையில் உளறியவன் "நீ என்ன விட்டுட்டு போன அவமானம் தாங்கமுடியாம, உன் மேல தோணுற மோகத்தை எப்படி கட்டுப்படுத்துறதுன்னு தெரியாம தான் இப்படி குடிச்சி சீரழியறேன்.. என் காயத்துக்கு நீ தான்டி மருந்து.. என் வலிக்கு நீ தான்டி நிவாரணி.. நீ வலியில துடிக்கிறதப் பாத்தாதான் என் மனசு ஆறும்" என்றபடி அவள் மார்பில் முகத்தை புரட்ட... அவன் கண்ணீர் அவள் நெஞ்சை நனைத்தது..

அப்படியே உயிரற்ற சிலையாக நின்றிருந்தாள் மகிழ்வதனி.... அந்த நேரத்தில் அவனோ அவள் இதழை நெருங்கியிருந்தான்.. "ஆனா உன்ன மன்னிக்கவே மாட்டேன் டி .. ஏன்னா நீ என்ன அவ்வளவு காயப்படுத்தியிருக்கே.. என்ன நடந்திருந்தாலும் எனக்காக நீ காத்திருந்திருக்கணும்....என்னய தேடி இருக்கணும்...அத விட்டுட்டு அந்த விக்கி கூட..... இங்கே.. இங்கே.. வலிக்குதுடி.. அந்த வலி உனக்கு தெரியுமா டி ..?" என அவள் பிடரியைப் பிடித்துத் தன்பக்கம் இழுத்தான்..

அவளது இதழை மூர்க்கமாக கடித்து இழுக்க.. மௌனமாக ஒரு மரபொம்மை போல் வலியைப் பொறுத்துக்கொண்டாள் மகிழ் ..

அவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் போட்டவன் அவளது உடைகளை வெறிகொண்டவன் போல் கிழித்தெறிந்தான்..

அவன் இட்ட மூர்க்க முத்தங்களில் கன்றிப் போனது அவள் பொன்மேனி.....

அவன் வேகம் தாளாமல் படுக்கைவிரிப்பை கசக்கிப் பிடித்தாள்... கண்களில் கண்ணீர் கோடாக வழிந்த போதும் வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை.

கூடல் முடிந்த பின்பும் அவளை விடாமல் இறுக்கி அணைத்தபடியே உறங்கினான்.

அந்தக் கொடூர இரவு முடிந்து மெல்லிய கீற்றாக வெளிச்சம் எட்டிப்பார்க்க தன்மேல் கிடந்தவனை சிரமப்பட்டு கீழே புரட்டிப் போட்டாள் மகிழ்......

கீழே இறங்கியவளுக்கு காலை ஒரு அடி கூட நகர்த்தமுடியவில்லை.. அடிவயிறு பயங்கரமாக வலித்தது.வயிற்றைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டாள்..

பின் ஒரு வாராக தன்னை சமாளித்துக் கொண்டவள்,தளர்ந்த நடையுடன் எழுந்து குளித்துவிட்டு காலை வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்தபடி கீழே இறங்கி வந்தவன், டைனிங் டேபிளில் அமர்ந்தபடி அவளை ஏறிட்டு பார்த்தான்.

அவளது சிவந்து தடித்த இதழ் நேற்றைய இரவின் கூடலை நினைவுபடுத்த அவளையே இமைக்காமல் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தான்....

நேற்று ரொம்ப தான் போட்டு படுத்திட்டோம் போல என மனதிற்குள் எண்ணியவன் ....இருந்தாலும் வெளியே தடுமாறும் மனதை நிலைப்படுத்த "ஏய் காபி கொண்டு வாடி ".. என்றான் கடுமையான குரலில்..

அவளும் அமைதியாக அவனுக்கு காபி கலந்து கொண்டிருந்த வேளையில், செக்யூரிட்டியிடமிருந்து ஆதிக்கு போன் வந்தது.

ஆதியின் வீட்டு கேட்டிற்கு வெளியே விக்கி நின்று கொண்டிருந்தான்......!


குறிப்பு : கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.....உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே.... கருத்துத்திரி இதோ 👇👇👇


 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 23

'யாரோ ஒருவன்' தன்னை பார்க்க வந்திருப்பதாக வாட்ச்மேன் கூறியதும், 'இங்க யாரும நம்மள பார்க்க வரப்போறாங்க...?யாருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கலையே...' என யோசித்தபடி மொபைலில் கேட்டின் சிசிடிவி காட்சியை ஆன் செய்தான்.

திரையில் விக்கியின் முகம் தெரிந்ததும், ஆதியின் இதழ்களோ வன்மமாக புன்னகைத்துக்கொண்டது.

'ஹா... ஹா....ஆடு தானா வந்து மாட்டுது' என மனதிற்குள் எண்ணியபடி வாட்ச்மேனுக்கு மீண்டும் கால் செய்தவன், "ஒரு அரை மணி நேரம் கழிச்சு அனுப்பு" என்றான் கட்டளையாக.

தனது இழிநிலையை எண்ணி கண்கள் கரித்துக்கொண்டு வந்தது மகிழுக்கு.... அடுப்பில் பாலை வைத்துவிட்டு ஜன்னலினூடே வெளியே மலைமுகட்டை இழக்கின்றி பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.

அடுப்படிக்குள் சத்தமின்றி நுழைந்த ஆதியோ, அவளைப் பின்னிருந்து இறுக அணைத்தபடி கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்தான்.

அவனது தொடுகையை உணர்ந்தாலும் சிலை போல் அப்படியே நின்று இருந்தாள்.

"ம்ம்ம்... ஹஃப்பா.... அப்படி என்ன தாண்டி வச்சிருக்க உனக்குள்ள...? இப்படி மயக்கி வச்சிருக்க என்னய..." என்றான் ஹஸ்கி குரலில் .

அந்த நேரத்தில் பால் பொங்கவும் அமைதியாக அவனை விலக்கிவிட்டு பாலை இறக்கி காபி கலக்கலானாள்.

அந்த விலகல் அவனுக்கு கோபத்தை உருவாக்க, அவளது மெல்லிடையை இறுக பற்றியவன் வேகமாக தன்னை நோக்கி இழுத்து கண்ணோடு கண் தன்னை நோக்க வைத்தான்.

"நான் தான் பேசிகிட்டு இருக்கேன்ல... அப்றம் என்ன ***க்குடி தள்ளி விட்டுட்டு போற..? கைநீட்டி பணம் வாங்கி இருக்க, நியாபகம் இருக்கட்டும்...."

"இந்த மூணு மாசமும் நான் என்ன சொல்றேனோ அத மட்டும் தான் நீ செய்யணும்... புரிஞ்சுதா...?" என்றான் கர்ஜனையான குரலில்.

மனது எவ்வளவு மரத்திருந்தால் அவன் இப்படி பேசியதற்கு அழுகை கூட வராமல், அப்படியே தலையை ஆட்டி இருப்பாள்....!

'சரி' என்னும் விதமாக தலையை ஆட்டியவள், 'அடுத்து என்ன..?' என்பது போல் அவனது முகத்தை பார்த்துக் கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.

அந்த கண்களில் என்ன கண்டானோ...? அவளை மெதுவாக விடுவித்தவன்.....விக்கி வந்திருக்கும் விஷயத்தை கூறிவிட்டு, அவன் உள்ளே வந்த பிறகு, அவள் என்ன பேச வேண்டும் என்பதை தெளிவாக விளக்கினான்.

"இதுல ஏதாவது மாத்தி பேசினா இல்ல வேற ஏதாவது பண்ணனும்னு நெனச்சேன்னா கூட இந்த ஆதியோட இன்னொரு முகத்த நீ பார்க்க வேண்டியது இருக்கும்.... ஜாக்கிரதை...."

"******* காலேஜ்லதானே உன் தங்கச்சி படிக்கிறா...?" என்றபடி நக்கலாக அவளைப் பார்த்தான்.

"ப்ளீஸ் ஆதி...எதுவும் பண்ண மாட்டேன், நீ என்ன சொன்னியோ அதை அப்படியே பேசிறேன்.. வேற எதுவும் செஞ்சுடாதே.. ப்ளீஸ்...." என இரு கரங்களையும் கூப்பி அழுதவளை, மீண்டும் இழுத்து பிடித்து இறுக அணைத்தவன்... "எனக்கு மட்டும் உன்ன கஷ்டப்படுத்தணும்னு ஆசையா என்னன்னு சொல்லு...? நானும் நல்லவனா தான் இருக்கணும்னு நினைக்கிறேன்... ஆனா விட மாட்டேங்கிறீங்களே...."

"சரி இப்போ மேல ரூமுக்கு போயிட்டு, கண்ண நல்லா தொடைச்சிட்டு, பேஸ் வாஸ் பண்ணிட்டு,புல் மேக் அப்ல கீழே இறங்கி வா..." என மனசாட்சியே இன்றி அவளை ஏவினான்.

கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்த போதும், அவன் வேறு ஏதும் செய்து விடுவானோ என்ற பயத்தில் வேகமாக தனது அறையை நோக்கி ஓடினாள்.

போகும் அவளை ஒரு மர்ம புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், "என்னோட ஒட்டுமொத்த வலிக்கும் இன்னைக்கு நியாயம் கிடைச்சுரும் டி " என வாய் விட்டே கூறிக்கொண்டான்.

அவள் பாதியிலேயே விட்டுவிட்டு சென்ற காபியை கலந்தவன், ரசித்து குடித்துக்கொண்டே சோபாவில் போய் அமர்ந்தான்.

அவன் அமர்ந்த சிறிது நேரத்திலேயே விக்கி வேகமாக உள்ளே வந்தான்.

அவன் முகத்தில் உள்ள பதட்டத்தையும் கோபத்தையும் அவதானித்தபடியே அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டே காபியை அருந்தினான் ஆதி....

உள்ளே நுழைந்த விக்கி முதலில் பார்த்தது என்னவோ....குட்டியான ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து கால்மேல் கால் போட்டபடி ஹால் சோபாவில் அமர்ந்து காபி அருந்தி கொண்டிருக்கும் ஆதியைத்தான்....!

அவனைப் பார்த்தவுடன் முகத்தை அருவருப்பாக சுளித்தவன், வேறு வழி இல்லாத காரணத்தினால் அவன் முன்னே போய் நின்று, " மகிழ் எங்கே...? " என்றான் சற்றே காட்டமாக.

மெதுவாக காபியை அருந்தி முடித்தவன், அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மாடிப்படி பக்கம் திரும்பி பார்த்தான்.

அங்கே மகிழ், காஸ்ட்லியான ஒர்க்குகளுடன் கூடிய ஆலியா கட் சுடிதார் ஒன்று அணிந்து, சிறிதளவு மேக்கப் போட்டிருந்தவள் ஸ்டைலிஷ் ஆக இறங்கி கீழே சோபாவை நோக்கி வந்தாள்.

அவளின் தோற்றத்தை புருவம் சுருக்கி பார்த்த விக்கிக்கோ ஒன்றும் புரியவில்லை....

இருப்பினும் வேகமாக அவளை நெருங்க, அவளின் கைகளை இறுக பற்றியவன், " மகிழ் என்ன ஆச்சு...? ஏன் இங்க இருக்க..? நீ ஃபாரின்ல தானே வேலை பார்க்க போறேன்னு சொல்லிருந்த...? இவன் கூட இங்க.. எப்படி...? "

"இவன் எதுவும் சொல்லி உன்ன மிரட்டி இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்கானா...? பயப்படாம எதா இருந்தாலும் சொல்லு.... நீ முதல்ல கிளம்பு, வா நாம இங்க இருந்து போவோம்.... அப்பறம் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்...." என அவளது கைகளை பிடித்து இழுத்தான் .

மகிழன் கைகளைப் பிடித்திருந்த விக்கியின் கைகளை ஒரு கூர்மையான பார்வையுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதியோ மெதுவாக நிமிர்ந்து மகிழைப் பார்த்தான்.

அவளுக்கோ முதுகுத்தண்டு வரை சில்லிட்டது... வேகமாக விக்கியின் கைகளை உதறியவள், "நீ ஏன் விக்கி இங்க வந்த..? உனக்கு நான் இங்க இருக்கேன்னு யார் சொன்னது...? நீ மொதல்ல இங்க இருந்து கிளம்பு.... நான் ஆதி கூட தான் இனிமே இருப்பேன்... மறுபடியும் என்னால அவன இழக்க முடியாது..."

" ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.... நா விருப்பப்பட்டு தான் இங்கே இருக்கேன்... நீ முதல்ல இங்க இருந்து கிளம்பி போயிடு... " என எவ்வளவு முயன்றும் கோபத்தை குரலில் வர வைக்க முடியாமல் அழுகையில் முடித்தாள்.

தாடை இறுக அவளை பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கோ ரத்த அழுத்தம் எகிறியது....

'இவள' என பற்களை நற நறவென கடித்தவன்.... 'இவள என்ன பண்ண சொன்னா, என்ன பண்ணிக்கிட்டு இருக்கா...?'

விக்கியோ ஓரிரு நிமிடங்கள் தான் ஷாக் ஆகி நின்றவன், உடனே சுதாரித்துக் கொண்டு... "மகிழ் என்ன பேசுற நீ...? புரிஞ்சுதா பேசுறியா...? நா தான் சொல்றேன்ல, அவன் உன்ன என்ன சொல்லி மிரட்டி இருந்தாலும் நா பார்த்துக்கிறேன்.... நீ கெளம்பு.... நாம போவோம்....நீ இல்லாம நா இங்க இருந்து போக மாட்டேன்...."

"நா ஒன்னும் மத்தவங்க மாதிரி கிடையாது. எனக்கு உன்ன சின்ன வயசுல இருந்தே தெரியும்...." என்றபடி ஆதியை திரும்பி முறைத்தவன்...

"என்ன இப்படி பேசணும்னு, அவன் உனக்கு சொல்லிக் கொடுத்தானா...?" என கோபமாக அவளைப் பார்த்து வினவினான்.

மீண்டும் ஆதியின் புறம் திரும்பி, "உனக்கு என்ன தான்டா பிரச்சனை...? அவள நிம்மதியா இருக்க விடவே மாட்டியா....? நீ வந்ததுக்கப்புறம் தான் எங்க நிம்மதியே போச்சு....."

"நாங்க பாட்டுக்கு எங்க வேலைய பாத்துட்டு தானே இருக்கோம்... ஏன்?? திரும்பத் திரும்ப எங்க வாழ்க்கையிலயே மூக்க நுழைச்சுக்கிட்டே இருக்க....?" என எகிறினான்.

ஆதியோ அமைதியாக திரும்பி மகிழை ஒரு பார்வை பார்த்தான்.

பின் அமர்த்தலான குரலில், "தாராளமா அவள இங்க இருந்து கூட்டிட்டு போ.... நா எதுவும் சொல்ல மாட்டேன்..." என்றபடி அவனை விட்டு விலகி மற்றொரு சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.

விக்கியோ அவனை வெறித்து பார்த்துவிட்டு... " மகிழ் அவன் என்ன சொல்லி உன்ன பிளாக்மெயில் பண்ணி இருந்தாலும் பரவால்ல, நா பாத்துக்குறேன்.... என் மேல நம்பிக்கை இருந்தா இப்பவே கிளம்பு.... " என்றான் எப்படியாவது அவளை தன்னுடன் அழைத்து சென்று விட வேண்டும் என்னும் ஆதங்கமான குரலில்.

ஆதி மகிழின் முகத்தை தான் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

அவள் முகத்தில் கலவரம் அப்பட்டமாக தெரிந்தது. இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், "விக்கி உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா...? நா வர முடியாது... தயவு செஞ்சு இங்க இருந்து நீ கெளம்பிரு..." எனக் கையெடுத்து கும்பிட்டாள்.

"உனக்கு என்ன பைத்தியமா டி..? நா இவ்வளவு தூரம் சொல்றேன்ல... வா போகலாம்..." என அவளின் கரத்தைப் பற்றி இழுத்தான்.

அவளோ அவனின் கரத்தை உதறிவிட்டு வேகமாக ஆதி அமர்ந்திருந்த சோபாவை நோக்கி சென்றவள், அவன் அருகே சிறிதும் இடைவெளி இன்றி அமர்ந்தபடி அவனை இறுக அணைத்து ஆதியின் நெஞ்சினில் முகம் புதைத்துக் கொண்டாள்.

விக்கிக்கோ செருப்பால் அடித்த உணர்வு.... இருப்பினும் அவளை அப்படியே விட மனமில்லாதவன்....

"ஏன் இப்படி பண்ற மகிழ்? வா போகலாம். " என்றான் உள்ளடங்கிய குரலில்.

இத்தனைக்கும் ஆதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை...!

விக்கிடம் பேச கூட விரும்பாதவள் போன்று மகிழ், "ஆதி ப்ளீஸ் இவன இங்க இருந்து போக சொல்லுங்க..." என மேலும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்....விக்கியின் புறம் திரும்பவே இல்லை.

விக்கியால் ஆதியின் நக்கல் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை.

வேகமாக அங்கிருந்து செல்ல திரும்பியவன், மீண்டும் மனம் கேட்காமல் அவள் அருகே வந்தவன்.. "மகிழ், நீ ஏதோ கட்டாயத்தில பண்றேன்னு மட்டும் எனக்கு புரியுது... ஆனா நா இவ்ளோ சொல்றேன், என்ன நீ நம்ப மாட்டேங்குற... அப்போ என் மேல உள்ள நம்பிக்கை அவ்வளவு தான் இல்ல...?" என ஏதோ எதிர்பார்ப்பு நிறைந்த குரலுடன் அவளிடம் வினவினான்.

ஆனால் அவள் நிமிர்ந்தும் அவனைப் பார்க்கவில்லை.

ஆதியின் நெஞ்சுக்குள்ளையே புதைந்து விடுபவளை போல் அவனை காற்று கூட புகாத அளவிற்கு இறுக அணைத்தபடியே உட்கார்ந்து இருந்தாள்.

அதனை ஒரு வலியுடன் பார்த்துவிட்டு...ஆதியை பார்க்கவே முடியாத அளவிற்கு அவமானம் பிடுங்கித் தின்ற காரணத்தினால், அங்கிருந்து வேகமாக வெளியேறினான் விக்கி.

அவன் சென்ற ஓரிரு நிமிடங்களிலேயே ஆதியை விட்டு விலகியவள், விம்மி வெடித்த அழுகையை அடக்க வழி தெரியாமல் வாயை கைகளால் பொத்தியபடி வேகமாக தனது அறையை நோக்கி ஓடினாள்.

விக்கி சென்ற திசையை வெற்றி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், மகிழ் அழுது கொண்டே ஓடவும் எதிலோ தோற்ற உணர்வுடன் அவளது முதுகையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

இப்படியே நாட்கள் வேகமாக சுழன்று ஓட ஆரம்பித்தது......

தினமும் இரவுகள் என்பது மோகத்துடன் கூடிய கூடலுடனும்.... பகல் பொழுதுகள் வன்மத்துடன் கூடிய வார்த்தைகளுடனும் கழிந்தது.....!

அனைத்து உணர்வுகளையும் தனக்குள் அடக்கி அடக்கியே ஓட்டிற்குள் சுருளும் நத்தை போல் உள்ளுக்குள்ளே புளுங்கி கொண்டிருந்தாள் மகிழ்.....

மூன்று மாதங்கள் முடிவடைய இன்னும் இரு வாரங்கள் இருந்த நிலையில், ஆதியின் தந்தை சுந்தரலிங்கேஸ்வரரோ தங்களது சொந்த பந்தங்கள் என மொத்த குடும்பத்தையும் வெக்கேஷனுக்காக அழைத்துக் கொண்டு ஆதி தங்கி இருக்கும் அதே கொடைக்கானல் பங்களாவின் வாசலில் வந்து இறங்கினார்.......!


குறிப்பு : இது போட்டிக்கதை என்பதால் இங்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே... ❤️ உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....
கருத்துத்திரி இதோ 👇👇👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 24

காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு செல்வதற்காக கிளம்பி வெளியே வந்த ஆதி அங்கே நின்ற பெரும்படையை பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டான்.

அவனது சித்தப்பா, மாமா,அத்தை மற்றும் அவர்களது குடும்பம் என பெரும் பட்டாளமே கொடைக்கானலில் வந்து இறங்கி இருந்தது.

அவர்களை இங்கே இந்த நேரத்தில் சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் அவனை இங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் முக பாவனையிலேயே புரிந்து கொண்டான்.

ஓரிரு நிமிடங்களிலேயே தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், அனைவரையும் வரவேற்று ஹாலில் அமர வைத்தான்.

சுந்தரலிங்கேஸ்வரரின் துளைக்கும் பார்வையை தவிர்த்தவன் தனது பர்சனல் மேனேஜருக்கு கால் செய்து வீட்டில் வேலை செய்வதற்காக ஐந்து வேலை ஆட்களை வரச் செய்தான்.

அடுத்த அரை மணி நேரத்திலேயே ஆட்களும் வந்து விட, அனைவருக்கும் அவரவர்களுக்கான அறைகளை ஒதுக்கி அவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்து விட்டான்.

இப்போ இதெல்லாம் அவனுக்கு பிரச்சனையே இல்லை... இரவு அவன் போட்டு படுத்திய பாட்டில், மேலே இன்னும் மகிழ் அவளது அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றி வீட்டில் என்ன கூறுவது என்ற யோசனை தான் அவனுக்கு....

வீட்டின் மூத்த வாரிசு அவன்... அனைவருக்கும் தவறான உதாரணமாக ஆகிவிடக்கூடாது அல்லவா....!

அவனது பெரிய அத்தை லட்சுமியோ, "ஆமா ஆதி நீ ஏதோ பாரின் போயிருக்கன்னுல அண்ணன் சொன்னாரு, ஆனா நீ இங்க இருக்க" என்றார் ஒரு ஆராயும் பார்வையுடன்.

அனைவரின் கேள்வியும் அதுதான் என்பதை அவர்களின் பார்வையே உணர்த்தியதால், "பாரின் தான் போயிருந்தேன் அத்தை... திடீர்னு இங்க இருக்கிற பிராஞ்சிலருந்து ப்ராப்ளம்னு போன் வந்துச்சு, அதனால கிளம்பி வந்துட்டேன். இன்னும் ஒன் வீக்ல கிளம்பனும்..." என்றான் எல்லாருக்கும் பொதுவாக.

அனைவரும் ஓரளவிற்கு அதனை நம்பி விட்டனர். வரும் வழியிலேயே காலை உணவை முடித்து விட்டு வந்து விட்டதால் மற்றவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்று விட்டனர்.

ஆனால் சுந்தரலிங்கேஸ்வரரோ ஒரு கூர்மையான பார்வையுடன் மகனை அளந்தபடியே சென்றார்.

சுந்தரர் லிங்கேஸ்வரருக்கு ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி....

சுந்தரலிங்கேஸ்வரருக்கு அடுத்ததாக பிறந்தவர் தான் ராமன்.

ராமன், சகுந்தலா தம்பதியரின் மகன் அர்ஜுன். ஆதியை விட மூன்று வயது இளையவன் அர்ஜுனின் தங்கை பூர்ணிமா.

கடைசியாக பிறந்தவர் தான் ராதிகா. இவரது கணவர் இளமாறன்.

இவர்களுக்கு ஒரே ஒரு மகள் ஸ்ருதி.... ஏகபோக திமிருக்கு சொந்தக்காரி. எப்படியாவது ஆதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் சுற்றி வருபவள்.

இவர்களுடன் ஆதியின் அன்னை மீனசுலோச்சனாவின் அண்ணன் உலகநாதன் குடும்பமும் வந்திருந்தது. உலகநாதன், சரஸ்வதி தம்பதியரின் மகன் ருத்ரன், மகள் நேத்ரா.

அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அறை கொடுத்து அனுப்பி வைத்தவன், வேகமாக மகிழின் அறையை நோக்கி நடந்தான்.

விடியலின் அருகாமையில் தான் உறங்கியதால், அப்பொழுது தான் மகிழ் எழுந்து குளித்துவிட்டு கிளம்பி கீழே சென்று மதிய உணவாவது தயாரிக்க வேண்டுமே என எண்ணியபடி அறையை விட்டு வெளியே வர கதவை திறந்த அதே நேரத்தில் அவளை தள்ளிக் கொண்டு கதவை உள்ளே தாழிட்டபடி உள் நுழைந்தான் ஆதி...

ஏற்கனவே பலஹீனமாக இருந்தவள், அவன் வேகமாக தள்ளிக் கொண்டு வந்ததால் தடுமாறி கீழே விழ சென்றவளை விழுந்துவிடாமல் இடையோடு கை நீட்டி பிடித்தவன், அவளை சரியாக நிற்க வைத்துவிட்டு அவளின் கண்ணோடு கண் பார்த்தபடி பேசலானான்.

"கீழ என்னோட சித்தப்பா,அத்தை, மாமான்னு மொத்த ஃபேமிலியும் வந்து இருக்காங்க.." என்றான் மொட்டையாக.

அவளுக்கு நிலைமை ஓரளவுக்கு புரிந்தது என்றாலும் மௌனமாக அவனையே பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்.

அவளது பாவனை அவனுக்கு மேலும் எரிச்சலை ஊட்டியது. சதா சர்வ காலமும் லொடலொடவென்று பேசிக்கொண்டிருக்கும் மகிழ்வதனியை அவனது மனம் அந்த நேரத்தில் எதிர்பார்த்து ஏங்கியது.

"நான் சொல்றது உனக்கு புரியுதா..? இல்லையா..? ஏதாவது வாயைத் திறந்து பேசித் தொலைடி" என்றான் கோபமாக.

அவளோ ஒரு பெருமூச்சுடன், "அதுக்கு நான் இப்ப என்ன பண்ணனும்...?அவங்களுக்கெல்லாம் லஞ்ச் ரெடி பண்ணனுமா...? இல்ல வீடெல்லாம் கிளீன் பண்ணி ரூம் ரெடி பண்ணிக் கொடுக்கணுமா...?" என்றாள் அக்மார்க் அடிமையாக.

அவளை முறைத்து பார்த்தவன்..." நீ எதுவும் பண்ண வேண்டாம். நா சொல்ற வரைக்கும் ரூம விட்டு மட்டும் வெளியில வராம இருந்தன்னாவே போதும்.. " என அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்த்து விட்டு வெளியே சென்றான்.

அவன் வெளியேறியதும் தொப்பன கட்டிலில் அமர்ந்தவள் தன்னை நினைத்தே அருவருப்பாக உணர்ந்தாள்....

'ஏன் இப்படி ஆச்சு....?நான் அப்படி என்ன பாவம் பண்ணேன் கடவுளே...? இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை எனக்கு தேவை தானா..?இதுக்கு பேசாம நான் செத்தே போயிடலாமே...' எனை ஏதேதோ எண்ணங்களுடன் எவ்வளவு நேரம் கழித்தாலோ வயிறு வேறு நான் இருக்கிறேன் என்னை கவனி என்று சத்தம் எழுப்பியது.

பசி கொடுமையில் மேலும் சிறிது நேரம் அழுது கொண்டிருந்த வேளையில் மெலிதாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

இது நிச்சயமாக ஆதி கிடையாது. ஏனென்றால் அவன் என்று அனுமதி வாங்கி இருக்கிறான்...?

திடீரென்று மனதுக்குள் எழுந்த ஒரு வித பயத்துடன் மெதுவாக எழுந்து சென்று கதவை திறந்தாள்.

வெளியே வேலை செய்யும் தோற்றத்துடன் ஒரு பெண் கையில் உணவு தட்டுடன் நின்று கொண்டிருந்தாள்.

ஆதி தான் அனுப்பி இருப்பான் என யூகித்தவள், 'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ' என எண்ணினாலும் அந்த பெண்ணிடம் வேறு எதுவும் பேசாமல் உணவை வாங்கிக் கொண்டு அனுப்பியவள் அமைதியாக அறைக்குள்ளையே இருந்து கொண்டாள்.

எவ்வளவு நேரம் தான் அறைக்குள்ளேயே இருப்பது என்று அவளுக்கும் தெரியவில்லை... மூச்சடைப்பது போல் இருந்தது.

வெளியே செல்லவில்லையே தவிர நேரத்திற்கு நேரம் உணவு, காபி என்று அனைத்தும் அறைக்கே வந்தது. சாப்பிட்டு சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கி எழுந்து கொண்டிருந்தாள். தங்கை,தாய்க்கு அழைத்து பேசலாம் என்றால் கையில் போனும் இல்லையே. அதைத்தான் அவன் நொறுக்கி விட்டானே.

ஆதி வரும் வரை அறைக்குள்ளேயே தான் இருந்தாள்.

வெளியே ஆட்கள் நடமாடும் சத்தங்கள் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. இருப்பினும் அவனது பேச்சை மீறி வெளியே செல்ல பயமாக இருந்தது.

வெளியே சென்றால் 'தான் யார்..?' என்ற கேள்வி வரும் அதற்கு பதில் அளிப்பதை விட உள்ளயே சிறைவாசம் இருப்பதே மேல் என தோன்றியது அவளுக்கு.

இரவு உணவை முடித்தவள் மீண்டும் படுக்கையில் படுக்க ஒரு மாதிரி இருக்கவும் ரூமுக்குள்ளே நடைபயிலானாள்.

அப்போது உள்ளே நுழைந்த ஆதி " பேசாம தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே... ஏன் நடந்துகிட்டு இருக்க..? " என கோபமாக கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.

அவளுக்கும் கோபம் வந்துவிட்டது.
"வேண்டுதல் எனக்கு.... அதான் நடந்துகிட்டு இருக்கேன்... எவ்வளவு நேரம் தான் நானும் இந்த ரூமுக்குள்ளேயே அடைஞ்சிருக்கறது...?" என்றாள் வெடுக்கென்று.

அவனோ சிறு யோசனைக்கு பிறகு, "நாளைக்கு காலையிலிருந்து கிச்சன் வேலை,தோட்டவேலை செய்றவங்களோட கொஞ்சம் கலந்து இருந்துக்கோ....யாராவது கேட்டா இந்த வீட்ல வேலை பாக்கறேன்னு சொல்லிரு" என்றான்.

அவனுடைய பதில் அவளுக்கு உகப்பானதாக இருக்கவில்லை...

"நா அப்பன்னா வேலை பார்க்கிறவர்களோடு போய் தங்கிக்கவா...? உங்களோட இந்த ப்ளோர்ல நா இருந்தேன்னா தப்பாகிடும் அதனாலதான் சொல்றேன்..."

அவளை ஆழ்ந்து ஒரு முறை பார்த்தவன்.. பின் தன் பிடரியை வருடியபடி, " அது அப்போ பாத்துக்கலாம்... வேற எங்கேயும் போய் தங்க வேண்டாம். உன்னை தேடிக்கிட்டு டெய்லியும் நா அங்க வர முடியாது... "

அவளோ மனதிற்குள் 'இத சாக்கா வெச்சாவது தப்பிச்சிடலாம்னு பார்த்தா, விடமாட்டேங்கிறானே,... ' என புலம்பியபடி 'சரி' என்றாள்.

பேசி முடித்தவன் அவ்வளவுதான் பேச்சு முடிந்தது என்பது போல் அவனது வேலையை தொடங்கி விட்டான்....

அவனது ஆளுமைக்கு அவளும் அமைதியாக அடிபணிய பழகிக்கொண்டாள்.

ஆதியோ அவள் சிணுங்கல்களில் பித்தம் கொண்டான்....!

மென்மைதனில் மோகம் கொண்டான்.....!

அவனது வெற்றுத் தோள் காகிதமாக, அவளது வெண்டை பிஞ்சு கரங்களின் நகங்கள் தூரிகையாக மாறி பல ஓவியங்கள் தீட்டியது....!

பதிலுக்கு அவனது மீசை ரோமங்கள் அவளது மென்மையை பதம்பார்த்தது....!

அடுத்த நாள் அதிகாலையே எழுந்தவன் அவள் அயர்ந்து தூங்குவதை பார்த்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான்.

சற்று தாமதமாக எழுந்த மகிழ், வேகமாக குளித்து கிளம்பி கீழே கிட்சனக்குள் நுழைந்து கொண்டாள்.

அங்கு இருந்தவர்களிடம் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பதாக கூறியவள் அவர்களுடனே தனது பொழுதை கழித்தாள்.அன்று சாப்பாடு குடுத்த பெண் மட்டும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றாள்.

ஆதியின் குடும்பத்தின் வருகை மகிழுக்கு ஒரு விதத்தில் நிம்மதியாகத்தான் இருந்தது .

இரவு மட்டுமே அவனது தொல்லைகள்... பகல் பொழுதுகள் முழுவதும் வேலை செய்யும் ஆட்களுடனே கழித்தாள்.

ஓரளவிற்கு எந்த பிரச்சனையுமின்றி யார் கண்ணிலும் பெரிதாக உறுத்தாமல் இரு நாட்களை கடத்திவிட்டாள்.

மூன்றாவது நாள் இரவு வேலையில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அனைவரும் உறங்கச் சென்றதை உறுதி செய்தவள், தன்னுடைய அறைக்கு செல்லும் வேளையில்...ஆதியின் சித்தப்பா மகள் பூர்ணிமாவின் கண்களில் பட்டுவிட்டாள்.

பூர்ணிமாவோ தனது மொபைலில் சிக்னல் இல்லாத காரணத்தினால் வெளியே வந்து பேசிக் கொண்டிருந்த வேளையில்... பயந்து பதுங்கி பதுங்கி தனது அறையை நோக்கி சென்று கொண்டிருந்த மகிழை யோசனையாக பார்த்தவள்....

" ஏய் இங்க வா...? " என்றாள் அதிகாரமாக...

மகிழுக்கு சர்வமும் ஒடுங்கி விட்டது. ஏனென்றால் அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. அவ்வளவு ஈசியாக பொய் சொல்ல வராது. ஓரளவிற்கு மேல் உண்மையை உளறி விடுவாள்...

இருந்தும் மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள், அவளை நோக்கி சென்றபடி சொல்லுங்க மேடம் என்றாள் பணிவாக...

அவளது தோரணையை பார்த்து அவள் இந்த வீட்டில் வேலை செய்பவள் என்பதை உணர்ந்து கொண்ட பூர்ணிமா, "ஆமா நீ இங்க வேலை பாக்குறவங்க தானே..? இந்த நேரத்துல ஆதி அண்ணனோட ப்ளோர்ல உனக்கு என்ன வேலை..?" என சந்தேகமாக வினவினாள்.

மகிழோ ஒரு நிமிடம் திருத்திருவென முழித்துவிட்டு, " சார் தான் வர சொன்னாங்க மேடம்" என்றாள்.வேறு எதுவும் அந்த நேரத்தில் அவளுக்கு தோன்றவில்லை.

ஆனால் பூர்ணிமாவோ அவளை நம்பாத பார்வை பார்த்தாள்.

"நீ வந்த தோரணைய பார்த்தா அப்படி தெரியலையே... ஆதி அண்ணா கிட்டேயே கேப்போம்.. வா.." என்றபடி ஆதியின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

மகிழுக்கு உள்ளுக்குள் உதறலாக இருந்தாலும், ஆதி எப்படியாவது சமாளித்து தன்னை காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கையில் அவளை பின் தொடர்ந்தாள்.

ஆதியின் அறைக் கதவை தட்டியவள் அவன் வெளியே வந்தவுடன் "அண்ணா நீங்க இவங்கள வர சொன்னிங்களா...?" எனக் கேட்டாள்.

அவன் திரும்பி மகிழை ஒரு பார்வை பார்த்தான், அந்தப் பார்வையில் வன்மம் அப்பட்டமாக மகிழுக்கு தெரிந்தது.

மனதிற்குள் 'அய்யய்யோ இவன் ஏதோ ஏழரைய இழுத்து விட போறான்..' என எண்ணியபடி அவனது பதிலுக்காக கைகளை பிசைந்து கொண்டு காத்திருந்தாள்.

மகிழ் நினைத்ததைப் போலத்தான் அவனும் பேசினான்.

பூர்ணிமாவிடம் திரும்பியவன் "இந்த நேரத்துல வேலைக்கார பொண்ண நா எதுக்கு ரூமுக்கு வர சொல்ல போறேன்..? உனக்கு அறிவு வேண்டாம்...? இத வந்து என்கிட்ட கேக்குற..." எனக்கூறி மகிழின் இதயத்தை நொறுக்கினான்.

அவன் அப்படி கூறியதும் பூர்ணிமா பார்த்த பார்வையில் முசுமுசுவென்று அழுகை வந்தது மகிழுக்கு .... தனித்தீவில் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தாள்....

இவை அனைத்தையும் தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் தம்பி அர்ஜுனுக்கோ மகிழை பார்த்து பாவமாக இருந்த காரணத்தினால் அவர்கள் அருகே வந்தவன்....

பூர்ணிமாவிடம் "நா தான் வாட்டர் கீழ ரூம்ல கொட்டிடுச்சுன்னு கிளீன் பண்றதுக்காக வர சொன்னேன்... அவங்க தப்பா புரிஞ்சுகிட்டு ஆதி அண்ணனோட ரூமுக்கு வந்துட்டாங்க போல...."என அவளுக்கு உதவும் நோக்கத்துடன் கூறியதைக் கேட்டு, ஆதி பார்த்த பார்வையில் மகிழ் அங்கேயே பஸ்பம் ஆகிவிடாமல் இருந்தது தான் ஆச்சரியமே .....!

குறிப்பு : கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.....உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே.... கருத்துத்திரி இதோ👇👇👇




 
Status
Not open for further replies.
Top