மகிழுக்கோ இதயம் வெளியே வந்து விடும் அளவிற்கு துடிக்க ஆரம்பித்துவிட்டது... அவன் நெருங்க நெருங்க இவளுக்கு இங்கே கை கால்கள் உதறலெடுத்தது...
இனி பேசி எதுவும் பயனில்லை என்று தெரிந்த போதிலும்.... கடைசி வாய்ப்பாக, தனது பெண்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டி.... "ஆதி....ப்ளீஸ்... இது வேண்டாமே..." என்றாள் நலிந்த குரலில்.
"டோன்ட் கால் மை நேம்.. கால் மீ சார்".. என்றான் உறுமலாக..பயத்தில் விழிகளை மூடியவளுக்கு தொண்டைக் குழியில் நீர் வற்றிய உணர்வு.....
மெதுவாக அவளை நெருங்கிய படியே, ஒரு ஏளன சிரிப்புடன்....என்ன பணம் கைக்கு வந்துருச்சு, உன் வேல முடிஞ்சிருச்சுங்கறதுக்காக, உன் தில்லாலங்கடி வேலைய மறுபடியும் என்கிட்ட காட்டலாம்னு பாக்குறியா....?
பழைய ஆதி இல்லடி.... உன் பாவமான மூஞ்சிய பாத்து விட்டுட்டு போறதுக்கு...
நீயா என் கூட இருந்தன்னா ஓகே.... இல்ல ஏதாவது கேம் ஆடுன..... நீ கிளம்பி போயிட்டே இருன்னு சொல்லிட்டு, உன் தங்கச்சிய தூக்கிருவேன்... எப்படி வசதி...? என்றான் சற்றும் இரக்கமின்றி.
வாயடைத்து போய்விட்டாள்.....அதற்கு மேல் அவளால் என்ன பேசிவிட முடியும்..? அப்படியே சிலையாக சமைந்து நின்று விட்டாள்.
மெதுவாக அவளை நெருங்கியவன்.... வேற எது பேசினாலும், இந்த நேரத்தில் அது எங்கெங்கோ சென்று முடிந்து விடும் என்பதை உணர்ந்ததினால், கோபத்தை தள்ளி வைத்துவிட்டு மோகத்திற்குள் அடியெடுத்து வைத்தான்.....!
அவளை நெருங்கியவன், தடலாடியாக காற்று கூட புகாத அளவிற்கு அவளை கட்டி அணைத்து இதழோடு இதழ் பொருத்தினான்......
அவள் உடல் கொடுத்த வெப்பத்தில், அவனின் மோக உணர்வுகள் கரைமீற.... முதுகில் படர்ந்திருந்த அவன் கரம் மெதுவாய் ஊர்ந்து பெண்ணிடையை தீண்டியது.. விழிகள் சொருகி மேனியின் வனப்பில் புதைந்தவன் மெல்லிடையை வன்மையாய் பிடிக்க.. "ஸ்ஸ்ஆஆ".. என வலியில் முனகினாள் மகிழ்....
மின்சாரம் தாக்கியதை போன்ற அதிர்வு இருவருக்குள்ளும்....
இடையின் வழவழத்த தன்மையில் தன்னை இழந்தவன்... மெதுவாக அதனைப் பற்றி பிசைய ஆரம்பித்தான்...
அப்படியே அவனை அறியாமலே கைகள் இடையில் இருந்து சற்று மேலேற ஆரம்பித்தது...
மகிழால் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அதற்கு மேல் மரக்கட்டை போல் நிற்க முடியவில்லை... அவனது கைகளை பிடித்து விட்டாள்...
அவனுக்கோ கடுப்பாகிவிட்டது.... ஆனாலும் அவளிடம் எதுவும் பேசி விவாதிக்க தற்போது அவன் விரும்பவில்லை....
எனவே காரியத்தில் கண்ணாக, காலால் கதவை அறைந்து சாத்தியவன் கட்டிலில் அவளை கிடத்தினான்.. தாடையை இறுக்கப் பிடித்து முத்தத்தை தொடர்ந்தான் முரடன்..
உலகமே தட்டாமாலை சுற்றுவது போன்ற பிரம்மை மகிழிற்கு...
நடக்கும் எதையும் தடுக்கவும் முடிக்க முடியவில்லை, அதனைத் தாங்கிக் கொண்டு ஒன்றவும் முடியவில்லை....
மெல்லினமாக ஆரம்பித்த அவனது மோக களியாட்டம் வல்லினமாக சென்று கொண்டிருந்தது....
ஆம்....! எப்போது அவளை அணைத்தான், எப்போது அவளை கொள்ளை விட ஆரம்பித்தான்.... என்பது அவளுக்கே தெரியவில்லை.
மயக்க நிலையில் அவளும்... மோக நிலையில் அவனும்.....!
அவனுக்கோ எத்தனை நாள் காத்திருப்பு.. எத்தனை நாள் வலி, வேதனையை சுமந்து கொண்டு உறங்காமல் இரவுகளை கடந்து இருப்பான்.... அதற்கெல்லாம் சேர்த்து வைத்தார் போல் இன்று அவன் கைகளில் அவள்.... என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்....
என்னன்னவோ செய்து கொண்டு தான் இருந்தான்...! அவனது கைகளும் வாய்களும் காட்டிய வித்தையில், மகிழுக்கோ வேறொரு உலகத்திற்குள் சென்று வந்தது போன்ற உணர்வு....!
முதல் கூடல் வன்மையாக முடிந்திருக்க..... 'எல்லாம் முடிந்து விட்டது' என்று இருந்தது மகிழுக்கு. அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட்டாள். அதற்கு மேல் அவளிடம் தெம்பு இல்லை, அவனுடன் போராட.....
அடுத்த நொடியே,பின்னோடு அவளை கட்டிக்கொண்டவன் காதுக்குள் 'எப்டி இருந்துச்சு'..... என்று ஆழ்ந்த குரலில் கிசுகிசுக்க..
தன்னை மீறி ஏதாவது பேசிவிட்டால், என்ன செய்வது? என மௌனமாக உதடுகளை இறுக மூடிக்கொண்டாள்.... உதடு வலித்தது.. "ஸ்ஸ்ஆஆ".. என வலியில் முனக.. அவளைத் தன்பக்கம் திரும்பியவன் "என்னாச்சு".. என்றான் மெல்லிய குரலில் ..
அவள் தலைநிமிராமல் குனிந்திருக்க முகத்தை நிமிர்த்தி இதழை ஆராய்ந்தான்...... காயம் சற்று அதிகம்தான்..
அவன் இதழ்களுக்குள் மென் புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது....
தனது பிடரி முடியை கோதியபடி, 'இப்படியாடா காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி பண்ணி வைப்ப' என தன்னையே மனதுக்குள் கடிந்தவன்....
சாரி.. நான் அந்த நேரத்துல கொஞ்சம் முரட்டுத்தனமா இருப்பேன்.. எங்கெங்க காயம் ஆகுதோ எல்லாத்துக்கும் சேத்து எக்ஸ்ட்ரா பேமென்ட் வாங்கிக்கோ..... என்றான் இரக்கம் என்பதே சிறிதும் இல்லாமல்......
மகிழ் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.. கண்ணீர் வந்து விழிகளை மறைத்தது...
வலிக்க வலிக்க அடித்தான் இதயத்தை.. 'விபச்சாரி நீ' என சொல்லாமல் சொன்னான்.. சொன்னதோடு நிறுத்தாமல், அடுத்த இரு நொடிகளிலேயே அவளைப் பின்னிருந்து இறுக அணைத்தவன் மீண்டும் மீண்டும் அவளுடன் இணைய ஆரம்பித்து விட்டான்.....
அவனால் அவளின் மேல் உள்ள பித்தை குறைக்கவே முடியவில்லை...
என்ன தான் இருக்கு இவ கிட்ட...?ஏன் திரும்பத் திரும்ப இப்படி போய் அவ மேல ஏறுரேன்....? என அவனே அவனுக்கு திட்டிக் கொள்ளும் அளவிற்கு இருந்தது அவனது அவளுக்கான தேடல்....
மகிழிற்கு சுத்தமாக சக்தி அனைத்தும் உறிஞ்சப்பட்ட உணர்வு.... வெறும் சக்கையாக மாறிவிட்டது போன்ற பிரம்மை....
எதிர்க்க கூட தெம்பில்லாமல் அவனுக்கு உடன்பட்டபடி மரக்கட்டை போல் அப்படியே கிடந்தாள்.
அவளது நிலை புரிந்தாலும், அவளை விட்டு அவனால் விலகவே முடியவில்லை... மீண்டும் மீண்டும் அவளை வன்மையாகவும் மென்மையாகவும் மாறி மாறி ஆண்டு கொண்டே இருந்தான்.
விடியலின் அருகாமையில் தான் சற்று விலகினான், அதுவும் அவளது நிலைமையை பார்த்துவிட்டு தான்...
அவளுக்கோ எழுந்து பாத்ரூம் சென்று விட்டு உடைகளை அணிய வேண்டும் என்ற எண்ணம் கூட வரவில்லை.... சுத்தமாக தெம்பு இல்லாத காரணத்தினால் அப்படியே சுருண்டு படித்து விட்டாள்...
இருவரது உடைகளும் எங்கெங்கோ மூலைகளில் கிடந்தது....
அதற்கு மேல அவளை தொந்தரவு செய்ய அவனுக்கும் மனம் இடம் கொடுக்காததால், அப்படியே அவளை அனைத்தபடி அவனும் கண்ணயர்ந்து விட்டான்.
மறுநாள் கண் விழித்தவன் கண்ட காட்சியோ, தனது கை வளைவில் இரவு படுத்த அதே நிலையில் அப்படியே உறங்கிக் கொண்டிருந்த மகிழைத்தான்....
மணியை திரும்பி பார்த்தான், காலை 11:35 என காட்டியது இவ்வளவு நேரமாவா தூங்கிட்டேன்....
இன்னும் இவ ஏன் எந்திரிக்காம இருக்கா...?என யோசித்தபடி அவளை நோக்கியவன், அப்போதுதான் உணர்ந்தான்.... தன் உடலோடு ஒட்டி இருந்த அவள் உடல் அனலாக தகித்து கொண்டிருப்பதை.....
வேகமாக அவள் நெற்றி, கழுத்து என்று புறங்கையால் தொட்டுப் பார்த்தான்... காய்ச்சல் நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது.
விறு விறு என எழுந்தவன் தனது உடைகளை அணிந்து கொண்டு, மகிழ்... மகிழ்... என்று அவளை எழுப்பினான். அவளிடம் சிறு முனங்கள் மட்டுமே....
"ஓ சிட்..." என நெற்றியில் கை வைத்தபடி , 'என்னடா பண்ணி வச்சிருக்க அவள' என தன்னையே திட்டியபடி.... வேகமாக கீழே இறங்கிச் சென்று, அவளது உடைகள் அடங்கிய பையில் இருந்து ஒரு நைட்டியை எடுத்து வந்து விறுவிறுவென்று அவளுக்கு அணிவித்தவன்... மெதுவாக அவளை தூக்கி அந்த அறைக்கு பக்கத்தில் உள்ள அறையில் படுக்க வைத்து விட்டு, தனது பிரத்தியேக மருத்துவர்க்கு கால் செய்து, எமர்ஜென்சி எனக்கூறி ஒரு லேடி டாக்டரை வரச் சொன்னான்.
சிறிது நேரத்திலேயே 50 வயது மதிக்கத்தக்க பெண் டாக்டர் ஒருவர் வந்துவிட்டார்....
அவனை வெளியே வெயிட் பண்ண சொல்லிவிட்டு உள்ளே சென்றவர், அவளின் கோலம் கண்டு அதிர்ந்துவிட்டார்.
உடல் முழுவதும் அவனது கை தடங்கலும்... பல் தடங்கலும்... இதழ்களோ கோவைப்பழம் போல் சிவந்து, ஓரத்தில் சிறு துளி அளவு ரத்தம் கூட கசிந்திருந்தது.
அவளின் கலைந்த தோற்றமே என்ன நடந்திருக்க கூடும் என்பதை அவருக்கு தெளிவாக எடுத்துரைக்க....அவளை முழுவதுமாக பரிசோதித்த டாக்டர், வெளியே வந்து அவனை அனல் தெரிக்க முறைத்தார்....
என்ன பண்ணி வச்சிருக்கீங்க மிஸ்டர்....?இது ரேப் கேஸ்.... இன்னும் கொஞ்சம் விட்றுந்தா அந்த பொண்ணு செத்தே போயிருப்பா..... அந்த பொண்ணுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணி இருக்கேன்...இன்னும் கொஞ்ச நேரத்துல அவ கண் முழிச்சிடுவா.....
அவ கண் முழிச்சதுக்கு அப்புறம், அவ கிட்ட என்ன நடந்துச்சுன்னு விசாரிச்சுட்டு... இதுக்கு யார் காரணம்னு தெரிஞ்சுகிட்டு, போலீஸ்ல இன்பார்ம் பண்ணனும்... எனக் கூறியபடி அவனை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்தார்.
நீங்க அந்த பொண்ணுக்கு என்ன வேணும்..? என்றார் அவனை யோசனையாக பார்த்தபடி.
அவன் எதுவும் கூறாமல், கண்களை மூடியபடி அருகே இருந்த சோபாவில் அப்படியே அமைதியாக அமர்ந்து கொண்டான்.
அதற்கு மேல் அவரும் எதுவும் கேட்காமல் அவள் கண் முழிப்பதற்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் அவளும் கண் முழித்து விட்டாள்.அவன் அருகில் கூட செல்லவில்லை தூரத்தில் நின்று அப்படியே அவளையே வெறித்துக் கொண்டிருந்தான்.
டாக்டர் தான் அருகில் சென்று, என்னமா..? என்னாச்சு...? எதா இருந்தாலும் என்கிட்ட தைரியமா சொல்லு... உன்னை யார் இப்படி பண்ணினது...? என்று அவனை முறைத்தபடியே கூறினார்....அவன் மேல் சிறிதளவு சந்தேகம்.
அவள் மௌனமாக அமர்ந்திருப்பதை பார்த்தவர், யாருக்காகவும் பயப்படாத.... எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லு... நான் போலீஸ்ல இன்பார்ம் பண்ணி உன்னைய காப்பாற்றி கூட்டிட்டு போயிடறேன்.... என்றார் வேகமாக.
அவளோ ஒரு பெருமூச்சு இழுத்து விட்டபடி, அப்படி எல்லாம் இல்ல டாக்டர்... என் விருப்பப்படி தான் எல்லாம் நடந்துச்சு.... ப்ளீஸ் இதை பத்தி இனி பேசாதீங்க... என்றபடி மௌனமாக அமர்ந்து கொண்டாள்.
அவருக்கோ மிகப்பெரிய அதிர்ச்சி... இல்லம்மா நா என்ன சொல்ல வர்றேன்னா.... என அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே, இடையிட்டவன்,அவங்க தான் சொல்றாங்கல்ல டாக்டர் நீங்க ட்ரீட்மென்ட் மட்டும் பார்த்துட்டு கிளம்புங்க.... என்றான் அழுத்தமாக.
அதற்கு மேல் அவரால் ஏதும் பேச முடியவில்லை அவளுக்கான மருந்து மாத்திரைகளை கொடுத்து விட்டு மூன்று நாட்களுக்கு கட்டாய ஓய்வு தேவை என கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
அவர் சென்ற பிறகு அவளை நெருங்கியவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவளோ நிமிர்ந்து கூட அவனைப் பார்க்கவில்லை தலையை குனிந்தபடியே மௌனமாக அமர்ந்திருந்தாள்....
அவன் ஏதாவது பேசுவான் என்றபடி அவனையே பார்த்துக் கொண்டே இருந்தவள்....அவன் ஏதுவுமே பேசவில்லை என்றதும், அவளே "சாரி என்னோட மிஸ்டேக் தான்... ஆனா நா வேணும்னு பண்ணல.... என் மேல இருக்க கோவத்துல, என் குடும்பத்த ஒன்னும் பண்ணிடாதீங்க சார்...." என்றாள் அவசரமாக....
அதற்கும் எந்த பதிலும் சொல்லவில்லை அவன்....
லேசாக விழிகளை மட்டும் உயர்த்தி அவனை பார்த்தாள்....அவனது முகம் பாறையாக இறுகி இருந்தது... கை நரம்புகள் முறுக்கி கோபம் எல்லையை கடக்க தயாரானது, பக்கத்தில் இருந்த பிளவர் வாஷை தூக்கி சுவரில் அடித்துவிட்டு வெளியேறினான் ....
அதில் நடுங்கி போனவள், காதுகளை பொத்திக் கொண்டு, கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்....
ஏன் இந்த கோபம்....?எதனால் இந்த மூர்க்கம்...? என்று எதுவும் புரியவில்லை அவளுக்கு....
வெளியே வந்தவனோ ஹாலில் உள்ள சோபாவில் தொய்ந்து அமர்ந்தான்..... புரிந்து கொண்ட நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் மனதில்லை அவனுக்கு....
நினைத்துக் கொள்ளவும் அவள் வேண்டும்....!
நிம்மதிக் கொள்ளவும் அவள் வேண்டும்....!
அவனது அனைத்திற்கும் அவள் மட்டுமே போதும்...என்பதே நிதர்சனமான உண்மை....!
இருவரது நினைவுகளும் பின்னோக்கி சுழன்றது....!
குறிப்பு : கருத்துத் திரியில் தங்களது கருத்துக்களை மறக்காமல் பதிந்து விடுங்கள் தோழமைகளே....
அன்றுதான் மகிழ்வதனிக்கு கல்லூரியின் முதல் நாள்... அவசர அவசரமாக சிறு பதட்டத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
அவளது தாயோ ஏண்டி இப்படி பதட்டமா கிளம்புற..? எல்லாத்துக்கும் இப்படி பயந்துகிட்டே இரு... உங்க அண்ணன் தான் இப்படி உன்ன கெடுத்து வச்சிருக்கான்.
எப்ப பாரு குழந்தை மாதிரி இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு திரிஞ்சா இப்படித்தான், எல்லாத்துக்கும் பயந்துகிட்டே திரிய வேண்டியதுதான்....என புலம்பிய படி காலை உணவை தயாரிக்கலானார்.
யாழினி பள்ளி படிப்பில் இருந்தாள்....மகிழின் அண்ணன் சஞ்சய் குமாரோ ஒரு டிகிரி முடித்துவிட்டு, எஸ் ஐ போஸ்டிங் எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற விடாமுயற்சியில் அதற்கான போட்டி தேர்வுகள் மற்றும் பயிற்சியில் இருந்தான். கூடவே குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டுமே எனவே ஜிம் ஒன்றில் ட்ரைனராக வேலை செய்து கொண்டு தனது கனவையும் நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.
ஏம்மா அவளை திட்டிக்கிட்டே இருக்கீங்க....? மகி தங்கம் நீ ஏன் பயப்படுற....? அதான் விக்கியும் உன் கூடவே தானே காலேஜ்ல சேர்ந்து இருக்கான்.
அவன் கிட்ட நா எல்லாம் பேசிட்டேன்...அவன் உன்னைய பாத்துக்குவான். அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டமா கிளம்புற..?
அண்ணன் தான் கொண்டு வந்து விடப் போறேன்... வேணும்னா கிளாஸ்க்குள்ள கொண்டு வந்து விட்டு, சொல்லிட்டு வரட்டுமா...?
ஆமாடா, அப்படியே மதியம் போய் சாப்பாடு கொடுத்துட்டு, ஊட்டி விட்டுட்டு வந்துரு.... என்றார் பிரபாவதி வெடுக்கென்று.
யாழினி பக் என்று சிரித்து விட்டாள்.
ஏய் வாலு உனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சுல்ல....? நீ கெளம்பு போ.... என யாழினியை அதட்டினான்.
ஆமா,என்னய மட்டும் ஏண்ணா திட்டிக்கிட்டே இருக்க....? மகிழ் அக்காவ மட்டும் எதுவுமே சொல்ல மாட்டேங்குற... என சிணுங்கினாள்.
அவ என் தங்கம், நான் திட்ற அளவுக்கு நடந்துக்க மாட்டாள்....
சரி லேட் ஆகுது சீக்கிரம் கெளம்புங்கடா என்று துரிதப்படுத்தினான்.
அண்ணா, பயமா இருக்கு... பயமா இருக்கு.... என கூறியபடி முதல் நாள் என்பதால் அண்ணனுடன் பைக்கிலேயே கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள்.
கல்லூரியும் வந்துவிட்டது... விக்கி கல்லூரி வாயிலேயே காத்துக் கொண்டிருந்தான்.
சஞ்சய் அவனிடம் ஆயிரம் பத்திரம் கூறி, மகிழை விட்டு விட்டு தனது வேலைகளை பார்ப்பதற்காக கிளம்பி விட்டான்.
சென்னையில் இருக்கும் மிகப்பெரிய கல்லூரி அது, அங்கே படித்தால் நல்ல எதிர்காலம் என்பதால், இங்கேதான் படிக்க வேண்டும் என்று சஞ்சய் மகிழை இங்கே சேர்த்து இருந்தான்.
பணம் ரொம்ப செலவாகும் வேண்டாம் அண்ணா... என்று கூறிய போது கூட அவன் கேட்கவே இல்லை. எப்டியாவது நா கட்டுறேன், அதை பத்தி உனக்கு என்ன...?என்றபடி இங்கே சேர்த்து விட்டு விட்டான்.
விக்கி படிப்பில் சுமார் தான்... எனவே பிளஸ் டூ காமர்ஸ் குரூப் எடுத்திருந்த காரணத்தினால், பிகாம் சேர்ந்திருந்தான்.
மகிழ் நன்றாகவே படிப்பாள்... எனவே பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருந்தாள்.
இருவரும் வெவ்வேறு டிபார்ட்மென்ட், வெவ்வேறு திசையில் உள்ள பில்டிங்....எனவே முதலில் அவளை கொண்டு போய் அவளுடைய கிளாஸ் ரூமில் விட்டு விட்டு பிறகு அவனது வகுப்பிற்கு சென்றான்.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு விக்கி,பேசாம நீயும் கம்ப்யூட்டர் சயின்ஸ்யே எடுத்து இருக்கலாம்ல... என குறைபட்டபடி நின்று கொண்டிருந்தாள்.
அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா நீ சும்மா சும்மா என்னய பாப்பா மாதிரி எல்லாம் ஒன்னும் ட்ரீட் பண்ண வேணாம்... ஒரு ஒன் வீக் மட்டும் அப்பப்ப வந்து பார்த்துட்டு போ. அதுக்கப்புறம் நானே பாத்துக்கிறேன்....என்றாள் பயத்தை உள்ளே மறைத்தபடி.
விக்கிக்கு அவளைப் பற்றி நன்றாகவே தெரியும். அதனால் அதற்கு மேலும் அவளை சீண்டாமல்.... சரி மா,அப்படியே செஞ்சிருவோம்....எனக் கூறியபடி எனக்கு டைம் ஆச்சு நா கிளம்புறேன் என கிளம்பிவிட்டான்.
ஆரம்பத்தில் சற்றே சிரமமாக இருந்தாலும்,அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விக்கியின் உதவியுடன் கல்லூரி வாழ்க்கைக்கு பழகிக் கொண்டாள்.
விக்கிக்கும் சும்மா சும்மா போய் அவள் கிளாஸ் முன்னே நிற்பது சற்றே சங்கடமாக இருந்ததால், அதிகமாக அவன் செல்வதில்லை.
அவளும் ஓரளவுக்கு தனது வகுப்பு தோழிகளுடன் கலந்துவிட்டபடியால், இனி பார்த்துக் கொள்வாள்.... என்று அவன் தனது நண்பர்கள் வட்டாரத்துடன் கலந்துவிட்டான்.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் தான், அவனது கண்களில் விழுந்தாள் மகிழ்...!
அவன் ஆதிரத்னேஸ்வரன்.....! மிகப்பெரிய மல்டி மில்லியனர் சுந்தரலிங்கேஸ்வரனின் ஒற்றை வாரிசு....
பேருக்கு ஒரு டிகிரியை முடித்தவன், தந்தையின் கம்பெனியில் ஒரு வருடம் பிசினஸ் கற்றுக் கொண்டான். பிசினஸில் ஆர்வம் வரவே மேலும் மாஸ்டர் டிகிரி பண்ணினா இன்னும் நன்றாக உலகம் முழுவதும் தனது பிசினஸை கொண்டு செல்லலாம் என்கின்ற எண்ணத்தில் சென்னையிலேயே மீண்டும் மாஸ்டர் டிகிரி சேர்ந்து தற்பொழுது பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறான்.
இதுவரை அவனுக்கு பெரிதாக பிசினஸை தவிர எதன் மீதும் நாட்டம் வந்ததில்லை... அது பொருளாகட்டும், பொண்ணாகட்டும், நண்பர்களாகட்டும் எல்லாமே ஒரு லிமிடோடு நிறுத்திக் கொள்வான். முக்கியமாக ஸ்டேட்டஸ் பார்ப்பான். தனது ஸ்டேட்டஸ்க்கு ஈக்குவலாக இல்லாதவர்களிடம் நின்று கூட பேச மாட்டான். நண்பர்களை கூட ஸ்டேட்டஸ்யின் அடிப்படையில்தான் தேர்வு செய்திருந்தான்.
ஒரு நாள் மதிய உணவை தனது நண்பர்களுடன் கேண்டினில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த வேளையில், மகிழும் தனது தோழிகளுடன் அன்று உணவு கொண்டு வராத காரணத்தினால், உணவருந்த வேண்டி கேண்டினுக்குள் நுழைந்தாள்.
ஆதியின் நண்பன் ஒருவனோ,ஃபர்ஸ்ட் இயர் கேர்ள்ஸ் வராங்கடா கொஞ்சம் கலாய்ச்சு விடுவோமா என்றான் அந்த வயதிற்கே உரிய துடிப்புடன்....
அருகில் இருந்தவர்களும் அதை ஆமோதிப்பது போல், ஓகே என்னடா பண்ணலாம்..? என கேட்டார்கள்.
அந்த கேர்ள்ஸ் நம்மள க்ராஸ் பண்ணும்போது இந்த டம்ளர தட்டி விடுவோம். யார் அதை எடுத்து நம்ம கிட்ட கொடுக்குறாங்களோ அவங்கள வச்சு செய்வோம்... என்றான் சிரித்தபடி.
ஆதிக்கு இதில் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல, அதே நேரத்தில் தலையிடவும் மாட்டான்.
என்னவோ செய்து கொள்ளுங்கள் என்பது போல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
அவர்கள் வரும்பொழுது சரியாக டம்ளர் வந்து மகிழின் காலடியில் விழுந்தது. வேகமாக அதை எடுத்தவள் அங்கிருந்த டேபிளில் இருந்து தான் அது விழுந்திருக்கிறது என்பதை யூகித்து கொண்டு, நேராக அவர்களிடம் அதனை நீட்டியபடி, "டம்ளர் கீழே விழுந்துடுச்சு அண்ணா இந்தாங்க..." என்றபடி கொடுத்தாள்.
ஆதியின் மனதிற்குள் ஒரு மாதிரியான உணர்வுகள் பீறிட்டு எழுந்தன... அழகிய தேவதை போல் அவன் கண்களுக்கு தோன்றினாள்..... பார்த்தவுடன் அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க கண்களை இமைத்தால் எங்கே மறைந்து விடுவிடுவாளோ என்ற பயத்தில் இமை வெட்டாது பார்த்திருந்தான்.. பார்த்த நொடியில் உடலின் ஹார்மோன்கள் பரபரப்பாக வேலை செய்து அவள் உனக்கானவள் என்ற வாசகத்தை அவன் இதயப் பெட்டகத்தில் அழுத்தமாக பதியச் செய்து விட்டது..
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பதையெல்லாம் கிண்டல் செய்தவன், தற்போது தனக்கே அது நடப்பது போன்ற பிரம்மையில் அவளைப் பார்த்துக் கொண்டே அப்படியே அமர்ந்திருந்தான்... மனம் இவள் கண்டிப்பாக வேண்டும் என பார்த்த நொடி முதல் பரிதவிக்க, கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்துப் போனான்..தாமதிக்காது தன் மொபைலை எடுத்து அவளை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான்.. இவள்தான் என் தேவதை என நெஞ்சில் செதுக்கிக்கொண்டான்..
ஆதி பக்கத்தில் இருந்த அவனது நண்பனோ,இங்க பாருமா... என்று ஏதோ கூற வர... அவனது கையை வேகமாக அழுத்திப்பிடித்தான்.... எதுவும் பேச வேண்டாம் என்பது போல்.
அவனுக்கு வலி உயிர் போனது, "சரிடா மச்சான்... " என்றபடி அமைதியாகி விட்டான், மகிழும் சென்றுவிட்டாள்.
அவனது நண்பர்களோ என்னாச்சு ஆதி...? ஏன் எதுவும் பண்ண வேண்டாம்னு சொன்ன...? எனக்கேட்டார்கள்.
என்ன சொல்வது? என யோசித்தபடி, "ப்ரொபஷர் ஒருத்தர் அங்க நின்னு பாத்துட்டு இருந்தார், அதனால தான்.." என நம்பும் படியாக கூறி அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்.
ஆனால் அவனது மனமோ அவள் பின்னே சென்று விட்டது.... அவளைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்தவன், அடுத்த நாளிலிருந்து தனது காரை விட்டு, அவளுடன் கல்லூரி பேருந்தில் வர ஆயத்தமானான்....
முதல்முறையாக தனது ஸ்டேட்டஸிலிருந்து இறங்கி, அவளுக்காக சாதாரண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தான்.
ஆதி எப்போதுமே தனக்கு ஒன்று வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அது கிடைத்தே ஆக வேண்டும்....
இதுவரையும் அது பொருளாக மட்டுமே இருந்தது. எனவே எந்த பெரிய மெனக்கிடலும் இல்லாமலே அனைத்தும் அவனுக்கு கிடைத்து விட்டது. ஆனால் தற்போது அது பொருளல்லவே, உயிர் உள்ள ஒரு பெண்...
எனவே அவளுக்காக தனது வாழ்க்கை முறைகளை பெரிதளவில் மாற்றிக் கொண்டான்.
அவன் அறிந்தவரை, அவள் மிகவும் பயந்த சுபாவம்... எனவே தான் பணக்காரன் என தெரிந்தால், தன்னிடம் அதிகம் ஒட்ட மாட்டாள். ஏன் பேசக்கூட மாட்டாள் என்பதால், தான் ஒரு சாதாரணமானவன் என அவளிடம் காட்டிக் கொண்டு மெது மெதுவாக அவளை நெருங்கி அவளுடன் நட்பாக முதலில் பழக ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் விலகியே போனாலும், தினமும் கல்லூரி பேருந்தில் பார்ப்பதால் நாளடைவில் அவனுடன் பேச ஆரம்பித்தாள். அதுவும் அந்த ஒரு மாதமும் விக்கி வேறு டைபாய்டு ஜுரம் என்று லீவிலிருந்ததால் அவனுடன் நன்றாகவே பேச ஆரம்பித்து விட்டாள்.
சும்மாவே அவள் மேல் பித்தாக இருந்தவன்.... ஆதி... ஆதி... என்று கூறிக் கொண்டே அவள் பேசும் அழகும், தினமும் ஏதாவது வீட்டில் செய்தோம் என்று சாப்பிட கொண்டு வந்து தரும் அன்பும் என்று அவள் மேல் முழு பைத்தியமாக மாறிவிட்டான்.
இனி தன்னால் அவளை விட்டு விலகவே முடியாது என்ற நிலைக்கு அவன் சென்று கொண்டிருந்த வேலையில் தான் விக்கி உடல்நிலை சரியாகி மீண்டும் கல்லூரிக்கு வர ஆரம்பித்தான்.
முதல் நாளே இருவருக்கும் முட்டிக்கொண்டது.....
விக்கிக்கோ அவள் தன்னிடம் மட்டுமே நட்பு பாராட்ட வேண்டும் என்ற எண்ணமும், எங்கே அவள் தன்னை விட்டு ஆதியின் மேல் காதல் கொண்டு விடுவாளோ என்ற பயமும் சேர்ந்ததினால் அவனுக்கு ஆதியை சுத்தமாக பிடிக்கவில்லை.
அதே நேரத்தில் ஆதிக்கோ, தனது சிறுவயதில் இருந்தே தன்னுடைய பொருள் தனக்கு மட்டுமே என்ற எண்ணம். எனவே தன்னிடம் பேசுவது போலவே விக்கிடமும் அவள் பேசுவதைக் கூட அவன் விரும்பவில்லை.
இருப்பினும் மகிழின் முன் தனது கோபத்தை காட்டினால் தன் மீதான அவள் மதிப்பு குறைந்து விடும் என்ற காரணத்தினால் இருவருமே அமைதியாக இருந்தனர்.
இருவருமே நட்பு என்ற உறவு நிலையை அடுத்த கட்டமாக,காதல் என்ற உறவுக்குள் எப்படி கொண்டு செல்வது...? என யோசித்தபடியே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
ஆதியின் பிசினஸ் மூளையோ பக்காவாக பிளான் செய்து, கல்லூரியின் கல்ச்சுரல்ஸ் டே அன்று அவளிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்றவன் தனது காதலை அவளிடம் கூறியிருந்தான்.
அவளுக்கோ அதிர்ச்சி....!
நட்பாக மட்டுமே பழகிக் கொண்டிருந்த வேளையில் இப்படி கூறியது சற்று சங்கடமாக இருந்தது. தனது குடும்பச் சூழலுக்கு இதெல்லாம் ஒத்து வராது என்றும் தோன்றியது.
இருந்தும் அவனிடம் முகத்தில் அடித்தார் போல் முடியாது என்று கூறவும் அவளுக்கு விருப்பமில்லை....எனவே யோசித்து சொல்வதாக கூறிவிட்டு வந்து விட்டாள்.
அதன் பிறகு அவனை கொஞ்சம் கொஞ்சமாக அவாய்ட் செய்யத் தொடங்கி விட்டாள்.
ஆதியால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை... எத்தனையோ பெண்கள் தனக்காக க்யூவில் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், தான் ஒரு பெண்ணிடம் ப்ரபோஸ் செய்து அவள் தன்னை நிராகரிப்பதா..? என்ற கோபம்.
இருந்தாலும் தான் பொறுமையாக இருந்து தான் ஆக வேண்டும் என்ற காரணத்தினால் மெது மெதுவாக அவளிடம் பேசி பேசியே அவளது மனதை கரைத்தான்.
அவளுக்கும் வயதிற்கு தகுந்தார் போன்ற ஹார்மோன் சுரப்பால்... ஹீரோ போன்ற ஒருவன் தன்னை சுற்றி வருவதை ரசிக்க ஆரம்பித்து ஒரு வழியாக சம்மதம் கூறிவிட்டாள்.
ஆனால் அதன் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பம் ஆனது.....!
குறிப்பு : கருத்து திரியில் தங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும் நண்பர்களே...25 லைக்ஸ் & கருத்துக்களை தாண்டும் பொழுது அடுத்த அத்தியாயம் இன்றே பதிவிடப்படும்...
கருத்துத் திரி இதோ
எந்த ஒரு ஜீவனுக்குமே பிடிக்காத ஒன்று.... அடிமைப்படுத்துவது முக்கியமாக பெண்களுக்கு அறவே ஆகாதது......
காதலிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே ஆதி நிறைய கட்டுப்பாடுகளை மகிழுக்கு விதிக்க ஆரம்பித்து விட்டான்...
இப்படித்தான் டிரஸ் போடணும், இவங்க கூட மட்டும் தான் பேசணும்... அவன் அவனுடைய ஹை சொசைட்டிக்கு தகுந்தார் போல் அவளை மாற்ற முயன்றான்.
மகிழும் அதனை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவனுடைய உண்மையான காதலுக்காக தன்னை நிறையவே மாற்றிக் கொண்டாள்.
எந்த பெண்ணும் ஆணிடம் விரும்பும் முதல் விஷயம் உண்மையான அன்பு மட்டுமே....
ஆதியோ தனது காதல் மாளிகையை பொய் என்னும் செங்கல் கொண்டு எழுப்பி இருந்தான்... காதலிக்க ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிய பின்பும் கூட தான் ஒரு பணக்காரன் என்பதை அவளிடம் அவன் கூறவே இல்லை.
அவனுடைய அனைத்து கட்டுப்பாடுகளையும் ஓரளவிற்கு ஏற்றுக் கொண்ட அவளால் விக்கியிடம் பேசக்கூடாது என்று அவன் கூறியதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதை நேரடியாக அவனிடமே கூறியும் விட்டாள்....
"இங்க பாரு ஆதி நீ சொல்ற எல்லாமே நான் அக்செப்ட் பண்ணிக்கிட்டன்ல.... இது ஒன்ன மட்டும் எனக்காக விட்டுக்கொடு. விக்கி என்னோட சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட். அவனோட எப்டி பேசாம இருக்க முடியும்...? வேற எந்த பாய்ஸ் கூடையும் பேசல போதுமா..? இது ஒன்னு மட்டும் எனக்காக விட்டுக்கொடு" என பாவமாக கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாக அவனை சம்மதிக்க வைத்திருந்தாள்.
ஆதிக்கோ தான் சொல்லியும் அவள் கேட்கவில்லையே என்ற கோபம் ஒரு பக்கமும், சிறுவயதிலிருந்தே அனைத்தும் தனக்கு மட்டுமே என்று வளர்ந்ததினால், எதையும் பங்கு போட விரும்பாதவன்.... அவள் நட்பு என்று கூறி விக்கியுடன் பழகிய போதிலும் அவளது அன்பை பங்கு போட விரும்பவில்லை.
அதனாலே அவ்வப்பொழுது இருவருக்கும் சிறு சிறு ஊடல்கள் வந்து கொண்டிருந்தன.
விக்கியிடமும் மகிழ், தான் ஆதியை காதலிப்பதாகவும் அண்ணனிடம் இப்பொழுது கூற வேண்டாம் தனது படிப்பு முடிந்த பிறகு கூறிக்கொள்ளலாம் என்று கூறியிருந்தாள்.
அவனுக்கோ மனதிற்குள் மிகுந்த வழி இருந்தாலும், சிறுவயதில் இருந்தே மகிழின் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று வாழும் அவனால் அவளது காதலை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லாது போய்விட்டது.
தன்னுடைய சிறு வயது முதலான காதலை தன் மனதிற்குள்ளே போட்டு புதைத்து விட்டு வெளியே அவளுக்காக சிரித்துக்கொண்டே ஒரு நல்ல நண்பனாக மட்டுமே பழகினான்.
ஆனால் ஆதிக்கோ அவள் ஆரம்பத்தில் இருந்தே விக்கியுடன் பழகுவது சுத்தமாக பிடிக்கவில்லையல்லவா....தன்னுடைய பேச்சை மீறி ஒன்று அவள் செய்து கொண்டிருக்கிறாள், என்பதே அவனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது.
இப்படியே நாட்கள் செல்ல செல்ல... ஆதியும் தனது மாஸ்டர் டிகிரியை முடித்துவிட்டு தன்னுடைய தந்தையின் கம்பெனியை டேக் ஓவர் செய்து கொண்டான்.ஆனால் மகிழிடம் அந்த கம்பெனியில் வேலை செய்வதாக கூறி வைத்திருந்தான்.
அவள் சாதாரணமானவன் என தன்னை நினைத்துக் கொண்டு பழகுவது அவனுக்கு ஒரு வகையான போதையை தந்தது.... எனவே தான் ஒரு பணக்காரன் என்பதை தற்போது வரை கூறாமல் தெரியும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற தெனாவட்டில் இருந்து விட்டான்.
ஒரு நாள் வெளியே காபி ஷாப்பில் வைத்து மகிழிடம், " நீ தேவையில்லாம விக்கிய தொட்டு தொட்டு பேசுற வேலை எல்லாம் இனிமே வச்சுக்காத.. " என்றான் சாதாரணமாக சொல்வது போல் அழுத்தமான குரலில்.
மகிழுக்கு உயிரே ஒரு நொடி நின்று துடித்தது.. என்ன வார்த்தை கூறி விட்டான் தனது நட்பையே கொச்சைப்படுத்தி விட்டானே.
எப்போதும் போல் இதற்கும் அமைதியாக சென்றுவிட்டால், இது போன்ற வார்த்தைகள் தொடரும் என்பதால் அவளும் பொங்கி விட்டாள்.
"மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ஆதி... உன்னை தெரியறதுக்கு முன்னாடியே எனக்கு விக்கிய தெரியும்.... ஐ நோ மை லிமிட்.... விக்கியும் நானும் சின்ன வயசுல இருந்தே பிரண்ட்ஸ். இதை கூட உன்னால புரிஞ்சுக்க முடியலையா...? இவ்ளோ சீப்பா பேசுற...." என்றாள் சற்று துளிர்விட்ட கோபத்துடன்.
ஆதியின் ஈகோ பயங்கரமாக அடி வாங்கியது... நான் சொல்லி அவள் கேட்கவில்லையே என்பது ஏற்கனவே மிகப்பெரிய குறையாக இருந்து கொண்டிருந்த வேளையில், தற்போது அவனுக்காக என்னையே எதிர்த்து பேசுகிறாள் என்றால்....?நான் அவளுக்கு முக்கியம் இல்லையா..? முதலாவது இல்லையா...? கண்மண் தெரியாமல் கோவம் வந்தது.....
சிறு வயதிலிருந்தே அனைத்திலும் முதலிடம்.... அனைவருக்கும் தான் மட்டுமே முதலாவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்....
நான் விரும்பும் பெண்ணின் மனதில் தனக்கு மட்டுமே தனியிடம் வேண்டும் என்பதில், அவளின் விருப்பு வெறுப்புகளை பற்றி யோசிக்க மறந்து விட்டான்.
அந்தக் கோபத்தில் அவனும் வார்த்தைகளை சற்று அதிகமாகவே விட்டுவிட்டான்.
இப்போ என்னடி சொல்ல வர்ற என்ன விட அவன் தான் முக்கியம்னு சொல்றியா...?
நான் அப்படி சொல்லல ஆதி ப்ளீஸ் புரிஞ்சுக்க...
போதும் சும்மா நிறுத்து.... இன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் .ஒன்னு இனிமே என் கூட பேசு இல்ல, அவன் கூட பேசு....நானா...?அவனான்னு...? இப்போவே முடிவு பண்ணு....
ஆதி.... மகிழுக்கு பதறிவிட்டது. இருவரும் இரு கண் போன்றவள் அல்லவா... யாரேனும் ஒருவரை மட்டும் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால்... எப்படி முடியும்...?
"ஆதி புரிஞ்சுக்கோ... நீ என்னோட லவ்வர்,என் லைஃப் பார்ட்னரா வரப் போறவன்... நீ எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்..."
"அதே நேரத்துல, சின்ன வயசுல இருந்தே அவனும் நானும் பிரண்ட்ஸ்... அவன் கூட என்னால பேசாமல்லாம் இருக்க முடியாது.... அதோட அவன் அம்மா இல்லாத பையன் ஆதி. அவனுக்கு பாசம் காட்டுறதுக்கு எங்கள விட்டா வேற யாரு இருக்கா..?" என்று நிதானமாகவே விளக்கினாள்.அவனுக்கு எப்படியாவது புரிய வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.
ஆதிக்கோ, அவனுக்காக அவள் பரிந்து பேச பேச... மேலும் மேலும் உக்கிரமாகிக் கொண்டிருந்தான்.
சரியாக அந்த நேரத்தில் விக்கி அங்கே வந்து, " மகிழ் கிளம்பலாமா? டைம் ஆயிடுச்சு.. " என்றான்.
மகிழுக்கோ எப்படி கிளம்புவது என்று புரியவில்லை. ஆனால் அங்கேயே இருக்கவும் முடியாது...
அண்ணனிடம் விக்கியுடன் வெளியே செல்வதாக கூறிவிட்டு தான் வந்திருந்தாள். வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதால் கிளம்பியாக வேண்டிய கட்டாயம்.
எனவே ஆதியிடம் திரும்பியவள், கண்களால் இறைஞ்சியபடியே... "ஆதி டைம் ஆயிடுச்சு, நம்ம நாளைக்கு பேசலாம், நான் கிளம்பவா..?" என்றாள்.
ஏற்கனவே கோவத்தில் இருந்தவன்... அவள் விக்கியுடன் கிளம்புகிறேன் என்று கூறியதால், நிலைமையை புரிந்து கொள்ளாமல் மேலும் மூர்க்கமானான்.
கண்மூடித்தனமான கோபத்துடன் அவளது கைகளை இறுக்கமாக பிடித்தான்.
"நீ இப்ப போக கூடாது மகிழ்....நானே உன்னை ட்ராப் பண்றேன், அவன கிளம்ப சொல்லு" என்றான் கோபமாக.
விக்கிக்கு முகம் கருத்து விட்டது. ஆதி எப்போதுமே இப்படித்தான், விக்கிடம் மூஞ்சியில் அடித்தார் போல் தான் அதுவும் நேரடியாக கூட பேச மாட்டான்.
தற்போதும் அதே போல் நீ எல்லாம் எனக்கு இணையா...?உனக்கு ஈக்வலா நான் பேசணுமா...? என்ற தோரணை அவனிடம்...
விக்கியோ அவமானத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மகிழின் மனதை நோகடிக்க கூடாது என்பதற்காக... " நான் கிளம்புறேன், நீ பார்த்து பத்திரமா வா.. " எனக்கிளம்ப பார்த்தான்.
மகிழுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. ஆதியின் ஆட்டிடியூட் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை...அது என்ன எப்ப பார்த்தாலும் விக்கிய ஏதாவது அவமானப்படுத்திக்கிட்டே இருக்கான்...என்ற கோபத்தில் "நீ வெயிட் பண்ணு விக்கி, நானும் வரேன்.." என்றபடி ஆதியிடம் திரும்பியவள்... "ஆதி நா கிளம்பறேன்,நாளைக்கு பேசிக்கலாம்.." எனக் கூறியபடி எழுந்து விட்டாள்.
ஆதியோ மகிழின் கையை விட மறுத்தான். "நான் தான் சொல்றேன்ல, இரு.." என்றான் பற்களை நரநரவென கடித்தபடி....
மகிழோ வலி தாங்க முடியாமல், அவனது கையை பிரித்து எடுத்தவள்... " நா கிளம்புறேன் ஆதி... பாய்.. " என்றபடி ஒரு அடி தான் எடுத்து வைத்திருப்பாள் கர்ஜனையாக ஒழித்தது அவனது குரல்.
"இப்ப மட்டும் நீ போனன்னா, இனி எப்போதுமே என் முகத்திலயே முழிச்சிராத.."என்றான் உறுதியான குரலில் .
ஆனால் மகிழோ அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அவனை திரும்பி ஒருமுறை முறைத்துவிட்டு விக்கியுடன் கிளம்பி விட்டாள்.
போகும் அவள் முதுகையே வெறியோடு பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி......!
அதன் பிறகு ஒரு வாரம் ஆதி மகிழுக்கு போன் செய்யவில்லை, அவள் போன் செய்தாலும் எடுத்து கட் பண்ணி விட்டான்.அவள் அனுப்பிய குறுஞ்செய்திகள் அனைத்திற்கும் எந்த ரிப்ளையும் இல்லை.
அந்த ஒரு வாரமும் மகிழுக்கு ஒன்றும் ஓடவில்லை.... அவனுடைய காலுக்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனவள், கடைசியாக ஆதியை அவனது அலுவலகத்திலயே சென்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அவனது ஆபீஸ்க்கு கிளம்பினாள்.
விக்கிடம் கூட கூறாமல் கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு தனியாகத்தான் வந்திருந்தாள்.
ரிசப்ஷனில் சென்று ஆதிரத்னேஸ்வரனை பார்க்க வேண்டும் எனக்கூறி இருந்தாள்.
என்ன போஸ்டிங்கில் இருக்கிறான் என்பதெல்லாம் தெரியாததால் வெறுமனே இங்கே வேலை செய்பவன் என்று மட்டும் கூறியிருந்தாள்.
ரிசப்ஷனில் இருந்த அல்ட்ரா மங்கையோ அவளை நிமிர்ந்து மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவளது சாதாரண தோற்றத்தால் கண்டிப்பாக எம் டிக்கு இவள் தெரிந்தவளாக இருக்கமாட்டாள் என்ற எண்ணத்தில், அப்படி யாரும் இங்கே இல்லையே என்று விட்டாள்.
மகிழும் அந்தப் பெண் தெரியாமல் சொல்கிறாள் என்ற நோக்கத்தில், "இல்ல எனக்கு நல்லா தெரியும், இங்க தான் வேலை செய்றாங்க, நல்லா செக் பண்ணிட்டு சொல்லுங்க..." என்றாள் சற்று குரல் உயர்த்தி....
அது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஆதியின் பிஏ சதீஷின் காதுகளில் விழ, என்னாச்சு என்றபடி ரிசப்ஷன் நோக்கி வந்தான்.
அவனிடமும் விபரத்தை கூறியவள், "இவங்க செக் பண்ணாம அப்படி யாருமே இங்க இல்லன்னு சொல்றாங்க..."என கோபமாக கூறினாள்.
அவனும் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "அப்படி யாரும் இங்க இல்லமா... இந்த பேர்ல எங்க எம் டி மட்டும் தான் இருக்காரு" என்றான்.
அவளோ வேகமாக தன்னுடைய மொபைலை எடுத்தவள்.அதில் தானும் ஆதியும் சேர்ந்து எடுத்துக் கொண்டு செல்ஃபியை காட்டி "இது தான் நா சொன்ன ஆதிரத்னேஸ்வரன்" என்றாள்.
இருவருக்கும் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டது....
அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் தோன்றிய மரியாதையுடன், அவளை ஆதியின் அறைக்கு அழைத்துச் சென்றான் சதீஷ்....
அழைத்துச் செல்லும் வழியிலேயே அவளிடம் மெதுவாக பேச்சு கொடுத்தவன், ஓரளவிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவளின் வழியாகவே அறிந்து கொண்டிருந்தான்.
மகிழை ஆதியின் அறைக்கு அழைத்துச் சென்று விட்டவன், ஒரு நொடி கூட தாமதிக்காமல் உடனே ஆதியின் தந்தை சுந்தரலிங்கேஸ்வரனுக்கு கால் செய்து அனைத்து விஷயங்களையும் ஒப்பித்து விட்டான்.... அவரது விசுவாசி...!
இங்கு ஆதியின் அறைக்குள் நுழையயிலேயே அவன் தான் எம்டி என்பதை அறிந்து கொண்டவள், மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்வுடன் தான் உள்ளே நுழைந்தாள்.
இருந்தும் தன்னிடம் அவன் பொய் கூறி இருக்க மாட்டான் என்ற சிறு நம்பிக்கையில்... அவனிடம் "நீ... நீ...தான் இந்...த கம்பெ...னியோட எம்..டி...யா ஆதி..?" என்றாள் அதிர்வு நீங்காத குரலுடன்.
தன்முன் கண்களில் கண்ணீர் வழிய, சரியாக பேசக்கூட முடியாமல் திக்கித் திணறி பேசியபடி, அதிர்ந்த தோற்றத்தில் நின்றவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி....
இந்த உண்மை தெரிய வரும்போது அவளிடம் வேறு ஏதேதோ உணர்வுகளை எதிர்பார்த்து தான் இருந்தான்... ஆனால் இப்படி கண்களில் கண்ணீருடன் அதிர்ச்சியாகி நிற்பாள் என்று துளி கூட எண்ணி பார்க்கவில்லை அவன்.
அவள் முன்னே கால்மேல் கால் போட்டு ராஜ தோரணையில் அமர்ந்திருந்தவன் ஏதோ புதியதாக தெரிந்தான்.. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக..... அவன் பார்வையில் எப்போதும் போல நெருக்கம் தெரிந்தாலும் அவள் வித்தியாசமாகத்தான் உணர்ந்தாள்..
சில விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் தத்தளித்தாள்..
அப்படியானால் எல்லாமே பொய்யா..?திட்டம் போட்டு மறைத்து இருக்கிறானா ..? என் ஆதி ஏழை இல்லையா..? எதுவும் தெரியாத முட்டாளாக இருந்திருக்கிறேன்.. என தன் மீதே கோபமும் கழிவிரக்கமும் தோன்ற ஒருவித அசூயையாக உணர்ந்தாள் மகிழ்.....
அவள் பார்வையில் இருந்தே அவளது மனதை படித்தவன், "மகிழ் உன் கிட்ட நான் நிறைய பேசணும் ஃபர்ஸ்ட் நீ வந்து உட்காரு" என்றான்.
"கேக்கறேன்.. ஆனா அதுக்கு முன்னாடி என் மனதை உறுத்திக்கிட்டு இருக்கிற ஒரே ஒரு கேள்வி .. ஏன் என்கிட்டேருந்து மறைச்சீங்க...?".. என்றாள் கண்ணீர் கண்ணம் தாண்டி வழிய..
"மகி ..நான்".. என்று மேலும் ஏதோ கூற வந்தவனை தனது ஒற்றைக்கை உயர்த்தி தடுத்தவள், "அப்போ.. அப்போ.. உங்க பர்சனல் விஷயங்களை ஷேர் பண்ணிக்கிற அளவுக்கு நான் உங்க மனசுக்கு நெருக்கமானவ இல்ல அப்படித்தானே.. இல்லை இந்த செல்வத்துக்கும் வசதி வாய்ப்புக்கும் நா தகுதி இல்லைன்னு நினைச்சீங்களா..? அதனாலதான் என்கிட்ட இத்தன நாளா ஏழையா கடனாளியா நடிச்சீங்களா...?".. என்று கேவலுடன் கேட்கவும் அவன் மீண்டும் பதில் சொல்ல தயாராகும் முன்..
இடைவெளி கொடுக்காமல் மீண்டும் அவளே ஆரம்பித்தாள்..
"நான் உங்களை அப்படியேதான் நேசிக்கிறேன்.. உங்களை மட்டும் தான் நேசிச்சேன்..."..
"எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டே இருந்து மறைச்சுட்டீங்க.. இதுக்கு என்ன அர்த்தம்..? லைஃப் பார்ட்னர்னா நிரந்தரமாய் தொடர்ந்து வரும் பந்தம் தானே.. அப்படிப்பட்ட உறவுகிட்ட இப்படி ஒரு விஷயத்தை மறைக்கனும்னு எப்படி தோணும்..? அப்போ இதுக்கு என்ன அர்த்தம்? நா உன்னோட வாழ்க்கையில ஒரு தற்காலிகமான உறவு.. என்னை.. என்னை".. என்று முடிக்கும் முன்னே..
" இழுத்து அறைஞ்சேன்னா பாத்துக்க.... " என்று அடிக்குரலில் கத்தியவன் கையை ஓங்கிவிட.. அச்சத்தில் உடல் குலுங்கியவள் சட்டென கரங்களால் முகத்தை மூடி கொண்டாள்.
விரல்களைப் பிரித்து மெல்ல விழிகளை திறந்து பார்க்க இன்னும் கண்கள் சிவந்தபடி கோபமாகத்தான் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான் அவன்.. படக்கென அவள் கரங்களை எடுத்து விட்டவன்..
"என்ன.. என்ன சொன்னே.. தற்காலிக உறவா?.. அப்படி யோசிச்சு கூட பாக்க கூடாது.. சரி ஏதோ மனசுல இருக்குற ஆதங்கத்தை கொட்டுறேன்னு பார்த்தா.. உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போறே.. இந்த வசதியும் என் உயரமும் தான் நம்ம காதலை நிர்ணயிக்குதா.. அவ்வளவுதான் என்னை புரிஞ்சு வச்சிருக்கியா நீ".. என்று கொதிப்புடன் படபடக்க..
அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் திருத்திருவென விழித்தவள் மறுகணமே சுதாரித்து.. " ஒருவேளை .. நா இப்படி ஒரு விஷயத்தை உன்கிட்டேருந்து மறைச்சிருந்தா நீ சும்மா இருந்திருப்பியா...?".. என ஆத்திரத்துடன் சீறினாள்.
ஓரிரு நிமிடங்கள் தனது கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன்... பின்பு மென்மையான குரலில், அவளைப் பார்வையால் வருடியபடி பேச ஆரம்பித்தான்.
ஆரம்பத்துல நான் ஏதோ ஒரு ஈர்ப்புல தான் உன்கிட்ட பேசி பழக ஆரம்பிச்சேன். உன் கூட பழக ஆரம்பிச்சு கொஞ்ச நாளிலேயே நீ என் உயிரோட இணைஞ்சிட்ட மாதிரி ஒரு பீல்.... நீ வேற, நான் வேறன்னு தோணல...
உன்கிட்ட எல்லாம் உண்மையும் நான் சொல்லிடலாம்னு நெனச்சேன் தான்... பட், உன்னோட சந்தோஷம் பொருட்கள்லயோ பணத்துலயோ இல்ல.. அது முழுக்க முழுக்க என்கிட்ட மட்டும் தான் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு வாழ்க்கையே சுவாரசியமாயிடுச்சு..
என்கிட்ட ஒண்ணுமே இல்லன்னு தெரிஞ்ச பிறகும், அதே அளவு பாசத்தோட பழகுறது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு.... நாளாக நாளாக அத ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்....
எனக்கு உன்கிட்ட அப்படி இருக்க புடிச்சி இருந்துச்சு தட்ஸ் ஆல் வேற எந்த மோட்டிவும் கிடையாது நீயா இமேஜின் பண்ணிக்காத என்றான்
அவளோ அவனை விலக்கி தள்ளியபடி, "போதும் என்கிட்ட நீ மறுபடி மறுபடி நடிக்காத... சொல்ற பொய்யெல்லாம் சொல்லிட்டு... இப்போ சப்ப கட்டு கட்டுறியா.." என மீண்டும் அவனைத் திட்ட ஆரம்பித்து விட்டாள்.
அவளை மீண்டும் தன்னோடு அணைத்து இறுக்கிப் பிடித்தவாறு, "பேபி,ஒரே நாள்ல எல்லாத்தையும் திட்டி முடிச்சிறாத.. அதுக்கப்புறம் நீ என்ன திட்றதுக்கு வார்த்தையே இல்லாம போயிடும்.." என்று கூறிக்கொண்டே அவளின் இதழ்களின் மேலே தன் இதழைப் பதித்தான் அவன்.
அவளோ அவனிடம் இருந்து திமிறி விடுபட அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன் அவளுடைய இதழ்களை கவ்வி சுவைத்தான்.
அவன் விழிகளோ கிறங்க, அவளுக்கோ விழிகள் கிறங்கி மூடிக் கொண்டன. அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டே அருகில் இருந்த சுவற்றோடு மோதி நின்றான்....
மங்கையின் மென் இதழ்களைத் தன் வாயினுள் வைத்து சுவைக்கத் தொடங்கினான்....இதழ்களை சுவைத்துக் கொண்டே அவனது கைகள் இரண்டும் அவளது உடலில் ஓடி விளையாடத் தொடங்கியது....
ஓரிரு நிமிடங்கள் கழித்து அவளை விட்டு விலகியவன்... அவளது கண்களை ஆழ்ந்த நோக்கினான்.
அவள் கண்களில் முன்பிருந்த கலக்கம் தற்போது குறைந்து இருந்ததை கவனித்தவன், அவள் நார்மல் ஆகிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டு... " இப்போ ஓகே வா டி...?என்றான் தனது மயக்கும் மாயக் குரலில்.
அவளும் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பினை போல் தலையாட்டினாள்...... இருப்பினும் சிறுவயதிலிருந்தே பணக்காரர்களின் மேல் கொண்ட பயத்தின் காரணமாக 'அவன் தன்னை ஏமாற்றி விடுவானோ' என்று சிறு பயம் மனதில் ஒரு ஓரமாக இருந்து கொண்டே இருந்தது.
அதனை அப்பொழுதே அவனிடம் கூறி அதற்கான விளக்கத்தைப் பெற்றிருந்தால் பின் நாட்களில் எந்த சோதனையும் இன்றி சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம்..
ஆனால் அவளும் சிறு பெண் என்பதால் வருங்காலத்தை பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்காமல் தற்போதைய நாட்களிலேயே சுழன்று கொண்டிருந்தாள்.
இருவரும் சமாதானமான பின்பு நாட்கள் ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது...
ஆதியோ அவ்வப்போது அவளிடம் தனிமை கிடைக்கும் போதெல்லாம் எல்லை மீற முயலுவான் தான். 'தன்னவள் தானே' என்ற எண்ணத்தில், ஆனால் மகிழ் அதற்கு ஒத்துழைக்க மாட்டாள்.
ஏதாவது காரணங்கள் கூறி மறுத்துவிடுவாள். அதற்கான முக்கிய காரணம் அவள் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும் அந்த பயம் தான்.
இருவருக்குமே மனதிற்குள் ஒரு சிறு நெருடல் இருந்துகொண்டே இருந்த போதிலும்... வெளியே சாதாரணமாக இருப்பது போலவே மற்றவரிடம் காட்டிக்கொண்டனர்.
ஆதிக்கோ அவள் விக்கியிடம் தன்னை மீறி பேசிக் கொண்டிருப்பதால் வந்த நெருடல்... அவளுக்கோ அவன் பணக்காரன் என்பதால் தன்னை ஏமாற்றி விடுவானோ என்ற நெருடல்....
ஆக மொத்தம் இருவருக்குமே அளவுக்கு அதிகமான காதல் இருந்தபோதிலும், காதலுக்கு அடிப்படையான நம்பிக்கையின்மையில் உழண்டு கொண்டிருந்தனர்....
இதற்கிடையில் இவர்கள் இருவரையும் ஆதியின் தந்தை சுந்தரலிங்கேஸ்வரரின் ஆட்கள் கண்காணித்து கொண்டிருப்பதை இவர்கள் இருவருமே அறியவில்லை.
அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் ஆதி கூட, காதல் மயக்கத்தில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் இருந்தது தான் விதியின் சதி......!
இவர்களின் காதல் சுமூத்தாக சென்று கொண்டிருந்த வேளையில்....ஆதியை அழைத்த சுந்தரலிங்கம்,ஜப்பானில் ஒரு புதிய தொழிற்சாலை தொடங்க போவதாகவும்...அது சம்பந்தப்பட்ட வேலைகளை பார்ப்பதற்காக மூன்று மாதம் ஆதி அங்கே போய் தங்கி அந்த வேலைகளை பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
ஆதியாலும் அதனை மறுக்க முடியவில்லை... குறைந்தது 6 மாதம் ஆகலாம்..
அவ்வளவு நாள் மகிழை விட்டு எவ்வாறு இருப்பது என்று தான் முதலில் யோசித்தான்.... ஆனால் வேறு வழியும் இல்லை என்பதால் ஜப்பானுக்கு கிளம்புவதற்கு ஆயத்தம் ஆகினான் .
மகிழிடம் விசயத்தை கூறிய பொழுது அழுது தீர்த்து விட்டாள்.... தன்னால் அவ்வளவு நாட்கள் பிரிந்து இருக்க முடியாது எனக் கூறி அழுத அவளை, ஒருவாறு கொஞ்சி...கெஞ்சி... சமாதானப்படுத்தியவன் "நா திரும்பி வந்த உடனே எங்க வீட்ல பேசுறேன்..அதே மாதிரி உங்க வீட்டுக்கும் வந்து பேசி நம்ம கல்யாணத்தை முடிவு பண்றோம்.... அதுக்கு அப்புறம் லைப் லாங் நாம ஒன்னாவே தான் இருக்க போறோம்.... சரியா...?" எனக்கூறி கண்ணாடித்தான்....
ஒரு வழியாக அவளை சமாதானப்படுத்திய பின் கிளம்பியவன், என்ன நினைத்தானோ மீண்டும் அவளை நெருங்கியவன் காற்றுக்கூட புகாதபடி இறுக அனைத்து இதழோடு இதழ் பதித்தான்....!
காதலுடன் கூடிய இறுதியான இதழணைப்பு அது...! என்பதை அப்போது அவன் அறியவில்லை...
அவளிடம் அங்கு சென்றதிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீடியோ கால் செய்வதாக கூறியவன், அங்கு சென்றது முதல் வேலை கழுத்தை நெரித்ததனால் மெசேஜ் மட்டும் செய்தான்.... அதுவும் நேரம் இங்கு இரவென்றால் அங்கே பகல்.... எனவே தொடர் உரையாடல்களும் குறைவே.....
வெளிநாடு சென்று சில நாட்கள் வரைக்கும் ஆதிரத்னேஸ்வரனால் மகிழ்வதனியை பெரிதாக தொடர்பு கொள்ள முடியவில்லை.வேலை கழுத்தை நெரித்தது.....
ஓரளவிற்கு வேலைகளை ஒழுங்குப்படுத்தி விட்டு, அதற்கான ஆள்களை நியமித்தவனின் மனம் தன்னால் அவளின் அழுகாமைக்காக ஏங்க ஆரம்பித்தது....
ஆனால் தற்போது அங்கு செல்ல முடியாத சூழ்நிலை என்பதால், வீடியோ கால் செய்து பார்த்தான். அவள் எடுக்கவே இல்லை....
சரி ஏதாவது வேலையா இருப்பா, இல்ல வீட்ல யாராவது இருப்பாங்க என்று மனதை தேற்றிக் கொண்டவன், அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கி விட்டான்.
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்கும் அவன் அனுப்பும் மெசேஜஸ்க்கு மட்டும் ரிப்ளை வந்து கொண்டே இருந்தது.....அதுவும் ஆடியோ மெசேஜ் கூட இல்லை டெக்ஸ்ட் மெசேஜ் மட்டும்தான் .
வீடியோ காலை அட்டென்ட் செய்யவில்லை. அதே நேரத்தில் அதற்கான காரணங்களும் சரிவரக் கூறப்படவில்லை.
ஆதியோ 'தான் விட்டுவிட்டு இங்கே வந்ததனால் கோபத்தில் இருக்கிறாள்' என்று நினைத்தவன் வேலைகளை துரிதப்படுத்தினான் விரைவில் இந்தியா செல்வதற்காக.
இரவு பகல் பாறாமல் தன்னை வேளையில் மூழ்கடித்துக் கொண்டவனுக்கு, எப்போதடா இந்தியா சென்று மகிழ்வதனியை பார்ப்போம் என்று ஆகிவிட்டது. அவளுடன் பேசாமலே அவளின் குரலை கேட்காமலே வெறும் மெசேஜ்ஸலையே மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.
இதற்கு மேல் தாங்காது என்று எண்ணியவன் தன் தந்தையிடம் கூறிவிட்டு, தனது பி.ஏவான சதீஷை அங்கு வரவழைத்தவன், அவனிடம் மற்ற பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு இந்தியாவிற்கு கிளம்ப ஆயத்தமாகினான்.
அனைத்தையும் ஒழுங்குபடுத்தி விட்டு இந்தியாவிற்கு கிளம்ப இன்னும் இரு தினங்கள் இருந்த நிலையில், ஒரு நாள் இரவில் ஒரு வீடியோ மெசேஜ் அவனது மொபைலுக்கு மகிழின் எண்ணிலிருந்து வந்தது....
'ஹ்ம்....ஹப்பாடா இப்பவாவது இவளுக்கு கோபம் குறைந்ததே ' என எண்ணியவன்....அதனை ஆசையாக ஓபன் செய்தான்.
ஆனால் அந்த வீடியோவில் தோன்றிய மகிழ்வதனியின் தோற்றம் வேறு மாதிரி இருந்தது....புதிதாக திருமணமான பெண்ணை போல் நெற்றி வகுட்டில் குங்குமம், கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் கயிறுடன் கோர்த்த தாலி வெளியே தெரியுமாறு போட்டிருந்தாள்.
வேற எந்த ஒரு முகவுரையும் இன்றி நேரடியாக "இட்ஸ் ஓவர் ஆதி.. எனக்கு விக்கிய தான் புடிச்சிருக்கு. என்னை திரும்ப தேடி வந்து தொந்தரவு பண்ணாத ப்ளீஸ்... ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் எவரிதிங்.. குட் பாய் ஆதி." என முடித்திருந்தாள்.
ஆதிக்கு ஒன்றுமே புரியவில்லை. எந்த ஒரு இலக்குமின்றி மீண்டும் மீண்டும் ஆட்டோமேட்டிக்காக ப்ளே ஆகிக் கொண்டிருந்த அந்த வீடியோவையே வெறித்துக் கொண்டிருந்தான்.
தன்னிடம் விளையாடுகிறாளா...? வேண்டுமென்றே சும்மா சீண்டி பார்க்கிறாளா....?என்றெல்லாம் தோன்றியதே தவிர, இது உண்மையாக இருக்கும் என்று சிறிதுளியளவு கூட அவனுக்கு தோன்றவில்லை.
ஒரு வழியாக அவள் தன்னிடம் விளையாடுகிறாள் என்ற முடிவிற்கு வந்தவன்... " ஊருக்கு போனதுக்கு அப்புறம் இருக்கு அந்த கழுதைக்கு... எது எதுல விளையாடுறதுன்னு அறிவே இல்ல.....? " என மனதுக்குள் அவளுக்கு திட்டியபடி இந்தியாவிற்கு கிளம்பினான்.
ஆனால் அவன் இந்தியா வந்த பொழுது இங்கே நிலைமை தலைகீழாக மாறி இருந்தது.
போனில் அவளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. காலேஜிலும் டிகிரி டிஸ்கன்டினியூ என்று கூறினார்கள். போன் சுவிட்ச் ஆப் லேயே இருந்தது. ஏதோ சரியில்லை என்று மனதிற்குள் உறுத்தியதால் அடுத்த நாள் அவளை நேரில் சென்று சந்திக்கலாம் என்று அவளது வீட்டிற்கு சென்றான்.
வீடு பூட்டி இருந்தது.... வீட்டின் கேட்டில் வீடு விற்பனைக்கு என்ற போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. என்ன நடக்கிறது என்பதை கிரகிக்க முடியவில்லை ஆதியால்.....
ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டவன்,பக்கத்து வீட்டில் விசாரித்தான். அந்தப் பெண்மணியோ மகிழுக்கு திடீரென்று திருமணம் ஆகிவிட்டது, அதுவும் விக்கியுடன் என மின்னாமல் விழுங்காமல் குண்டை தூக்கி போட்டாள்.
அதுமட்டுமில்லாமல் மகியை விக்கியுடன் ஏதோ வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு,மகிழின் குடும்பம் அனைத்தும் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும், ஊர் எது என்று அவளுக்கு தெரியாது என்றும் கூறினாள்.
மேலும் மகிழின் திருமண புகைப்படம் என்று ஒரு போட்டோவை தனது செல்போனில் காட்டினார் . அதுவரை அவர் கூறியதிலேயே உடைந்து நின்றிருந்தவன் லேசாக நிமிர்ந்து அந்தப் புகைப்படத்தை பார்த்தான்.
அதுவரை இருந்த சிறு துளி அளவு நம்பிக்கையும் அந்தப் பெண்மணி காட்டிய புகைப்படத்தை பார்த்ததும் துணி கொண்டு துடைத்தார் போல் மொத்தமாக முடிந்துவிட்டது....
அந்தப் புகைப்படத்தில் மகிழ் திருமண கோலத்தில் மாலையும் கழுத்துமாக, கழுத்தில் தாலி தொங்க, நெற்றி வகுட்டில் குங்குமத்தோடு விக்கியின் அருகே நின்று புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.ஆதிக்கு அனுப்பிய வீடியோவில் போட்டிருந்த உடை தான் உடுத்தி இருந்தாள்.
மொத்தமாக நொறுங்கி விட்டான் ஆதி.... அவனது மனமோ கதற ஆரம்பித்தது.
'ஆரம்பத்திலிருந்தே உனக்கு அவன் தான் முக்கியமா இருந்திருக்கான்ல.... ' என மனதளவில் மரித்தவன்.... 'என்னய வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டல்லடி, நீயும் எனக்கு வேண்டாம்' என முடிவெடுத்து விட்டான்.
அதன் பிறகு மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு... நெடுநாட்கள் ஊன் உறக்கம் இல்லாமல் உடல் நலனையும் கொடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மனநல மருத்துவரிடம் சென்று சிகிச்சை எல்லாம் பெற்றான்.
ஓரளவிற்கு சரியாகி தற்போது மீண்டும் பிஸினஸில் அடி எடுத்து வைத்திருக்கிறான்.
தற்போது யார் மீதும் அவனுக்கு நம்பிக்கை கிடையாது... தன்னை பெற்றவர்களை கூட மூன்றாவது மனிதர்கள் போல் தள்ளி வைத்து விட்டான்.
பிசினஷில் தொட்ட அனைத்திலும் வெற்றி மட்டுமே....ஆனாலும் எதிலும் ஒரு திருப்தி கிடையாது. அனைத்திலும் வெறுமை மட்டுமே...மனதிற்குள் ஏதோ ஒரு நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது....
என்னை ஏமாத்திட்டு போய் அவ மட்டும் நிம்மதியா இருக்கா....ஆனா நான் மட்டும் இங்கே நிம்மதி இல்லாம அலைஞ்சுகிட்டு இருக்கேன்...
'அவளுக்கு நான்னா அவ்வளவு கிள்ளு கீரையா போயிட்டனா....? இந்த ஆதிரத்னேஸ்வரன் யாருன்னு காட்டுறேண்டி..
அவள பழிவாங்கினா மட்டும்தான் என் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னா,அதையும் செய்யலாமே...' என்று தான் அவளைத் தேடி கண்டுபிடித்து பழி வாங்க கிளம்பிவிட்டான்.
ஆனால் இதில் அவனது பிழை என்னவென்றால், அவள் பக்கத்து நியாயங்களை கேட்கவே இல்லை... ஏன் அவளுக்கு பேசக்கூட ஒரு வாய்ப்பளிக்கவில்லை என்பதுதான்....!
அனைத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்த ஆதிக்கு அவள் மேல் தோன்றி இருந்த சிறு இணக்கமும் மறைந்து மீண்டும் பழிவெறியே மேலோங்கியது.
இருந்தும் தற்பொழுது அவளது உடல் நிலையை கருத்தில் கொண்டு, தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டவன் அவளை சாப்பிட அழைப்பதற்காக சென்றான்.
அறையில் அவளும் ஏதோ யோசித்தபடியே அமர்ந்திருக்க, 'க்கும் ' என்று கனைத்தவன் அவள் நிமிர்ந்து பார்க்கவும், "சாப்பிட்டுட்டு டேப்லெட் போடணும் எழுந்திருச்சு வா" என்றான் சாதாரண குரலில்.
அவளும் எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து டைனிங் டேபிளை நோக்கி அவன் பின்னே நடந்தாள்.
வேலைக்கார அம்மா சமைத்து வைத்துவிட்டு சென்றிருந்தார் அதனை இருவரும் சாப்பிட்டு வந்து அமைதியாக தனித்தனி அறையில் உறங்கினர்.
அடுத்த இரு தினங்களுக்கு அவளை தொந்தரவு செய்யாமல் ரெஸ்ட் எடுக்க விட்டவன் தனி அறையில் தங்கிக் கொண்டான்.
மூன்று வேளையும் உணவருந்த மட்டுமே ரூமை விட்டு வெளியே வந்தாள். அந்த நேரங்களில் மட்டும்தான் அவனையும் சந்தித்தாள், மற்றபடி தனிமை மட்டுமே அவளுக்குத் துணையானது... அது சிறு ஆறுதலாகவும் இருந்தது மகிழுக்கு.....!
மூன்றாவது நாள் மாலை வேலையில் மகிழின் அறையை ஆதி கடக்கும் பொழுது, அவள் யாருடனோ போனில் கதைத்துக் கொண்டிருப்பது அவனுக்கு கேட்டது.....
'ஒருவேளை அவளது வீட்டினருடன் கதைத்துக் கொண்டிருக்கிறாளோ...?' என்று யோசனையுடன் அவளின் அறையை நெருங்கும் வேளையில், "இல்ல விக்கி நானே ப்ரீயா இருக்கும்போது கால் பண்றேன்... நீ ஸ்ட்ரைன் பண்ணிக்காத. அப்பாவை பார்த்துக்கோ..." என மென்மையான குரலில் பேசிக் கொண்டிருந்தாள் .
ஆதிக்கு பிபி ஏறியது.... மீண்டும் மிருகமாக மாறினான். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் வேகமாக அறைக்குள் சென்றவன் அவளது மொபைலை வாங்கி சுவற்றில் ஓங்கி அடித்தான்.
அந்த ஆண்ட்ராய்டு போனோ அவனது வேகத்தை தாங்க முடியாமல் சுக்கல் சுக்களாக நொறுங்கியது. நிச்சயமாக மீண்டும் அதனை பயன்படுத்தவே முடியாத நிலைக்கு சென்றது.
மகிழ்வதனியோ உச்சகட்ட அதிர்ச்சியுடன் எழுந்து சிலையாக நின்றுவிட்டாள்.
அவளை உறுத்து பார்த்தவன்... வேறு எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.
அந்த பார்வை அவள் முதுகுத்தண்டை சில்லிட வைத்தது. புள்ளிமானை வேட்டையாடும் புலியின் பார்வை அது....!
ஓரளவிற்கு நிதானத்தில் இருந்தவனை மீண்டும் மிருகமாக்கி விட்டாள்... இனி அவளின் நிலை என்னவோ.....!
குறிப்பு : தங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன... உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்... மறக்காமல் உங்களது கருத்துக்களை கருத்துத் திரியில் சொல்லுங்கள் தோழமைகளே.... கருத்துத் திரி இதோ