ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையின்றி நேசிக்கவா-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பிழையின்றி நேசிக்கவா...

அத்தியாயம்-1

சென்னை....

விஐபிகள் மட்டுமே வசிக்கக் கூடிய ஏரியாவில், சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து காணப்படும் கண்ணாடி மாளிகையில் தனது அறையின்
கண்ணாடி முன் நின்று டையை சரி செய்த படியே தனது ஆறடி தேக்கு மர உறுதி வாய்ந்த உடலை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் நொடிக்கு ஒரு உணர்வை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

திடீர் திடீரென்று மாறிக்கொண்டிருந்த உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் பயிற்சி எடுப்பவனை போல் நின்று கொண்டிருந்தான் அவன்.

"இட்ஸ் ஓவர் ஆதி.. எனக்கு விக்னேஷைத் தான் புடிச்சிருக்கு. என்னை திரும்ப தேடி வந்து தொந்தரவு பண்ணாத ப்ளீஸ்... ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் எவரிதிங்.. குட் பாய் ஆதி." என்று நெற்றி வகுட்டில் குங்குமமும், கழுத்தில் புது மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலியுமாக கூறியவளது முகம் மனதில் வந்து போனது.

மறக்கணும்னு நினைச்சாலும் திரும்பத் திரும்ப மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும் அவனுக்கான அவளுடைய கடைசி வார்த்தைகள்....

என்கிட்ட இல்லாத எதுடி அவன்கிட்ட இருக்குன்னு என்னை விட்டுட்டு போன....? பணம்,அழகு, அந்தஸ்து, அறிவு எல்லாம் இருந்தும் உனக்கு நான் அவ்வளவு ஈஸியா போய்ட்டேன் இல்ல..? அவ்வளவு சுலபமா என்ன யூஸ் & த்ரோ கப் மாதிரி தூக்கி போட்டுட்ட இல்ல...?திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்பை தாங்கவியலாது, பக்கத்தில் இருந்த பிளவர் வாஷை தூக்கி முகம் பார்த்துக் கொண்டிருந்த கண்ணாடியில் அடித்து அது சில்லு சில்லாக நொறுங்குவதை ஒருவித திருப்தியுடன் பார்த்துக் கொண்டு எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் நின்று கொண்டிருந்தான்.

‘வரேன் டி வந்துகிட்டே இருக்கேன்... உன்னை நெருங்கி வந்துகிட்டே இருக்கேன்... நீ எனக்கு கொடுத்த வலியை, ஆயிரம் மடங்கா உனக்கு திருப்பி கொடுக்க வந்துகிட்டே இருக்கேன். கெட் ரெடி டு பேஸ் இட், மை கேம் ஸ் ஸ்டார்ட் நவ்...’

நீ இதுவரையும் பார்த்த ஆதி இல்லடி இவன்.... ஆதிரத்தினேஸ்வரன்..... எல்லார்கிட்டயும் மாதிரி உன்கிட்டயும் அப்படியே இருந்து இருக்கலாம்,உன் கிட்ட மட்டும் ஆதி யா இருந்து கொஞ்சுனது தான் தப்பா போச்சு இல்ல...? இவன் எல்லாத்தையும் டேக் இட் ஈசினு எடுத்துக்குவான், ஈஸியா ஏமாத்திடலாம்னு நினைச்சுட்ட இல்ல....

கண்களை மூடி நிதானத்திற்கு வர முயற்சித்தான். முடியவில்லை கண்களை மூடினாலே..அவள் மீதான காதலும் மோகமுமே பெருக்கெடுத்து ஓடுவதை அவனால் தடுக்கவே முடியவில்லை.

ஆயிரம் முறை மனதில் தோன்றிய கேள்விதான்... இருந்தும் சலிக்காமல் மீண்டும் தோன்றியது.

“ஏன் உலகத்துல வேற பொண்ணா இல்ல..? ஏன் அவ மேல மட்டும் எனக்கு காதல் வந்து தொலைச்சுச்சு..?”

தனக்குள்ளே ஒரு பெரும் பிரளயத்தையே சந்தித்தான் ஓரிரு நொடிகளுக்குள்....

ராட்சசி என முனுமுனுத்துக் கொண்டே ....ஈஸ்வர் கண்ட்ரோல் யுவர்செல்ப்,

உணர்ச்சிகளை கண்ட்ரோல் பண்ண முடியாமல் இருந்தன்னா, அவள எப்படி பழி வாங்குறது.

அவ உனக்கு பண்ணினதுக்கு எல்லாம் திருப்பி நூறு மடங்கா அனுபவிக்க வேண்டாமா? 'ஏன் என்ன உயிரோடு வச்சிருக்க, என்னை கொன்னுருன்னு' அவ புலம்ப வேண்டாமா.

“ அவ்வளவு ஈஸியா நீ என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தன் கூட சந்தோஷமா வாழுவ....நான் பைத்தியக்காரன் மாதிரி இங்க சுத்திகிட்டு இருக்கணுமா...? ”

இந்த உணர்வு கொந்தளிப்பு எல்லாம் மனதுக்குள் மட்டுமே.வெளியில் மிக மிக சாதாரணமாக நின்று கொண்டிருந்தான். அழகன், அழுத்தக்காரன், அறிவானவன்,கண் அசைவில் அனைவரையும் ஆட்டுவிப்பவன்... பிசினஸ் உலகின் சாம்ராட் என்றெல்லாம் பலராலும் புகழப்படுபவன். ஆனாலும், ஒரு சிறு பெண்ணிடம் ஏமாளியானதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனதளவில் மரித்து, அரக்கனாகி கொண்டிருக்கிறான்.

சிறுவயதிலிருந்தே அனைத்திலும் முதலிடம், தனித்துவம்... ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்தே பழக்கப்பட்டவன். முதல் முறை பெரிய தோல்வி,அதுவும் தனது சொந்த வாழ்வில்.. அதைவிட அதில் இருந்து மீள முடியவில்லை என்பதை தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதன் பிரதிபலிப்பு உரியவளை தேடி புறப்பட்டு விட்டான் புயலாக ....

இந்த புயலிடம் சிக்கிக் கொள்ளப் போகும் பூம்பாவையின் நிலை என்னவோ...?



கொடைக்கானல்...

பூம்பாறையிலிருந்து கொடைக்கானல் செல்லும் நெடுஞ்சாலையில், காலை நேர இதமான தென்றல் காற்றை சுவாசித்தபடி, தனது ஸ்கூட்டியில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தாள் மகிழ்வதனி.

தினந்தோறும் அவளுக்கு மிகவும் பிடித்த பயணம் இது.. காலை நேர இதமான இளந்தென்றல் காற்றுடன் கூடிய, மென்பனிச் சாரலை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டே எதிர் காற்றில் வண்டி ஓட்டுவது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று... எத்தனையோ துன்பங்களுக்கு இடையே சிறு ஆறுதல்...தாய் மடியை போல, மனதிற்கு இதம் அளிக்கக்கூடிய இந்த பயணம் அவளுக்கு தினமும் விருப்பமானதே.

மெதுவாக சென்று கொண்டிருந்தவள் அருகில் கேட்டகாரின் பலத்த ஹாரன் ஒலியில் சற்று நிலை தடுமாறி வண்டியை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசமாகிய பின் மீண்டும் அலுவலகத்திற்கு செல்லலானாள்.

ஒரு காலத்தில் தனியாக நடந்து செல்லவே பயந்தவள்..எங்க போகணுமா இருந்தாலும் அண்ணன் கை பிடித்தே நடந்து பழகியவள்... இன்று தனியாக தினமும் ஒரு மணி நேர பயணம் மேற்கொண்டு அலுவலகம் சென்று வேலை பார்க்கும் அளவிற்கு அவளது சூழ்நிலை அவளை மாற்றியுள்ளது. மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள்... சாதாரண நிறம், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம்... ஆடை அலங்காரங்களில் எப்போதுமே பெரிதளவில் நாட்டம் இருந்தது இல்லை. எப்போதும் சுடிதார் தான்.

வண்டியில் சென்று கொண்டிருக்கும்போதே தன்னைப்பற்றி சற்று அசை போட்ட படியே செல்லலானாள்.

அம்மா,அண்ணன், தங்கை என்று அழகான குடும்பம் அவளது. அப்பா நினைவறியா வயதிலேயே இறந்து விட்டார். அப்பா இல்லை என்ற குறையே தெரியாமல் அண்ணன் அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொண்டான். அண்ணன் இருந்த வரையில் அவர்களுக்கு எந்த ஒரு குறையும் வந்ததில்லை. எதற்கும் அவள் கலங்கியதில்லை. எல்லாமே அண்ணன் செய்திடுவான் என்ற மனநிலை தான்.

அண்ணன் துணை இல்லாமல் துரும்பும் அசையாது அவளுக்கு.. அதனாலோ என்னவோ சற்று கூச்சம் மற்றும் பயந்த சுபாவத்துடனே வளர்ந்து விட்டாள்.

ஆனால் இன்று அப்படி இல்லையே.. தான் முடங்கி விட்டால் தன்னைவிட சிறிய பெண் யாழினி என்ன செய்வாள்...?படுக்கையில் இருக்கும் அம்மாவின் நிலை என்னவோ..? அனைத்திற்கும் தான் தான் ஓடியாக வேண்டுமே.. எல்லாத்திற்கும் பயந்து கொண்டும் தயங்கிக் கொண்டும் இருந்தால் நிலை என்ன ஆவது???

இது எல்லாவற்றையும் விட அவள் மனதிற்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியை கொல்லவாவது அவள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

தன்னால் தானே இந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டது என்ற குற்ற உணர்ச்சியில் இருந்து வாழ்நாள் முழுவதும் அவளால் வெளியில் வர முடியாது.அந்தப் பாவத்திற்கு பரிகாரமாகவாவது தான் தன் தங்கையையும் தாயையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும்.. தன்னால் இயன்றவரை அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றாள்.

எப்படி எப்படியோ சிட்டுக்குருவி போல் பறந்து திரிய வேண்டிய தானும் தன் தங்கையும் சிறகொடிந்து... தன் தாயும் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகி பேச முடியாமல் இருக்கும் நிலைமைக்கு ஆளாகி இருக்க ஒரே காரணம் அவன் மட்டுமே....

மீண்டும் தன் வாழ்நாளில் அவனைப் பார்க்கவே கூடாது என்ற வேண்டுகோளை மட்டும் தினம் தினம் கடவுளிடம் வைத்துக் கொண்டே இருக்கிறாள்.... அவனைப் பற்றி நினைத்ததுமே, மனதுக்குள் கொழுந்து விட்டு எறியும் நெருப்பை சற்று நிதானப்படுத்த வேண்டி மீண்டும் கண்களை மூடி ஓர் இடத்தில் நின்று விட்டு பின் மணியை பார்த்தவள், நேரமாகிவிட்டதை உணர்ந்து வேகமாக செல்லலானாள்.

அவளது வேண்டுகோள் நிறைவேறுமா....?

குடும்பத்திற்காக மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் அவளும்...அவளை வஞ்சம் தீர்க்க மட்டுமே தேடி வந்து கொண்டிருக்கும் அவனும்...சந்தித்துக் கொள்ளும் வேளையில் நடப்பது என்னவோ...? பொறுத்திருந்து பார்ப்போம்....
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் – 2

அலுவலகத்திற்குள் நுழையும் முன்னே வாசலில் நின்ற காவ்யா, மகிழைப் பார்த்து கையசைத்தாள்.

காவ்யாவை நோக்கி சென்ற படியே..

" என்னடி வழக்கம்போல இன்னைக்கும் வாசல்லயே செக்யூரிட்டிக்கு போட்டியா நின்னுகிட்டு இருக்க..? யாருக்காக வெயிட்டிங்?" என்று சிரித்துக் கொண்டே வினவினாள்.

"யாருக்காகவும் இல்லடி..உனக்காக தான் நின்னுட்டு இருக்கேன்.."என்றாள் தனது தெத்துப்பல் தெரிய சிரித்தபடியே காவ்யா .

"நம்பிட்டோம் நம்பிட்டோம்...இதே தான் நீயும் ஒரு வருஷமா சொல்ற, என்னைக்காவது ஒரு நாள் கையும் களவுமா பிடிக்கத் தான் போறேன் அன்னைக்கு இருக்குடி உனக்கு" என்று சிரித்து பேசிய படியே இருவரும் உள்ளே நுழைந்தனர்.

காவ்யா.....மகிழின் அலுவலகத்தோழி.

குறுகிய காலத்திலேயே மிகவும் இறுகிய நட்பு இவர்களது.

மகிழ்வதனிக்கு அடிக்கடி தோன்றும்... 'கடவுளுக்கு இன்னும் சிறிது கருணை என் மேல் உள்ளது' என்று.

அதற்கு காரணம் காவ்யாவின் நட்பு மட்டுமே.. அவள் உதட்டளவில் மட்டுமாவது சிரிக்க காரணம் காவ்யா தான்...

காவ்யா கலகல பேர்வழி.....

அலுவலகத்தில் எல்லாரிடமும் நன்றாக கதைத்தாலும்.... மகிழ் அவளுக்கு ஸ்பெஷல் தான்...!

ஆரம்பத்திலிருந்து காவ்யா நன்றாக பேசிய பொழுதும், மகிழ் விலகி தான் சென்றாள்.

ஆனால், ஏனோ தெரியவில்லை காவ்யாவிற்கு மகிழை ரொம்ப பிடித்து விட்டது.

அதனாலேயே இழுத்து இழுத்து பிடித்து பேசி பேசியே நட்பை இறுக்கி பிடித்து விட்டாள்.....

ஒரு நிலைக்கு மேல் மகிழாலும் அவளை அவாய்ட் செய்ய முடியவில்லை.

அதற்கு ஒரு சில சூழ்நிலைகளும் காரணமாக அமைந்தன.

நாம என்னதான் எடுத்தெறிஞ்சு பேசினாலும், என்ன பண்ணினாலும் நம்மள மத்தவங்க முன்னாடி விட்டுக் கொடுக்காமல் இருக்கிற நபர் கிடைக்கிறது எல்லாம் ஒரு வரம்...!

அந்த வரம் தானா தனக்கு கிடைக்கும் போது அதை எட்டி உதைக்க மகிழ் விரும்பவில்லை.

நன்றாக நட்பு இறுகிய பிறகு எத்தனையோ தடவை காவ்யா விடம் மகிழ் கேட்டுவிட்டாள்... "எதனாலடி என்ன உனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கு...?ஏன் நான் என்ன பண்ணுணாலும் அதில் நிறை குறையை பிரித்துப் பார்க்காம, அப்படியே அக்சப்ட் பண்ணிக்கிற...?" என்ற அடுக்கடுக்காக எத்தனையோ கேள்விகள் கேட்டாலும், காவியாவிடமிருந்து வரும் பதில் ஒன்றே ஒன்று மட்டும் தான்....!

அழகாக தனது தெத்துப்பற்கள் தெரிய சிரித்தபடியே... "உன்னை எனக்கு புடிச்சிருக்கு டி, தட்ஸ் ஆல்" என்று கூறி விடுவாள்.

அந்த மயக்கும் புன்னகை, மகிழின் மனதிற்கு அவ்வளவு இதமாக இருக்கும்.

"வழக்கம்போல இன்னைக்கும் பத்து நிமிஷம் லேட்டு டி... அந்த மேனேஜர் இன்னைக்கும் என்ன சொல்ல போறாரோ தெரியல....எல்லார் முன்னாடியும் வைத்து திட்டுவதில் அந்த ஆளுக்கு ஒரு அல்ப சந்தோசம் " என்று புலம்பிய படியே மகிழ் வேகமாக நடக்க...

காவ்யாவோ, "ஏய் அந்த சொட்டத் தலையன் கிடக்கிறான் விடுடி... மதியத்துக்கு என்ன லஞ்ச் கொண்டு வந்தே..?" என்று அடுத்த டாபிக்கிற்கு மாறிவிட்டாள்.

மகிழ் எதிர் நோக்கியப்படியே இவர்களுக்காகவே காத்திருப்பதைப் போல, மேனேஜர் ராம் அவர் ரூம் வாசலிலேயே நின்று, சும்மா ஒருவனை பிடித்து வைத்து பேசிக்கொண்டிருந்தார்.

"இந்த ஆளுக்கு கொழுப்பப் பாருடி... காலைல வந்தோமா, பயோமெட்ரிக்ல கைரேகை வச்சமா, ரூம்ல போய் ஏசிய போட்டுகிட்டு உட்கார்ந்து வேலையை பார்க்க ஆரம்பிச்சமான்னு இல்லாம....வேணும்னே நமக்காக வாசல்ல நின்னுகிட்டு இருக்கான்... அப்பத்தான் எல்லாரும் பார்க்க நம்மள திட்டலாமில்ல...? அதுக்கு தான்" என்று காவ்யா மகிழ்வதனிக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தப்படியே வந்தாள்.

அவள் சொல்வதும் உண்மைதான் என்று மகிழ்வதனிக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும் அவர்களால் என்ன செய்து விட முடியும்.

தனக்கு கீழ் பணிபுரிபவரை மற்றவர்கள் முன் தரக்குறைவாய் பேசுவது, ஆளுமை என நினைத்துக் கொள்வதும் ஒரு வகையான மனநோய் தான்.

இவர்களின் கெட்ட நேரம், அந்த மனநோயால் இவர்களின் உயர் அதிகாரியான ராம் பாதிக்கப்பட்டு இருப்பது தான்....!

மனதிற்கு உள்ளே அவரை போட்டு வறுத்தெடுத்தாலும்... வெளியே "குட் மார்னிங் சார்" என்று பணிவாக வணக்கம் வைத்தனர் இருவரும்.

இருவருக்கும் பதில் வணக்கம் கூட சொல்லாமல், "இதுதான் நீங்க ஆபீஸ் க்கு வர்ற நேரமா..? அப்படி என்னதான் உங்க ரெண்டு பேருக்கும் தினமும் வெட்டி முடிக்கிற வேல...? அதுவும் ஒன்னா சொல்லி வச்ச மாதிரி..? யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல், வழக்கம்போல ஆரம்பிச்சு எக்ஸ்ட்ரா பத்து நிமிஷம் லேட் ஆனதுக்கு அப்புறம் தான் இருவரையும் கேபின்க்கு போக அனுமதித்தார்.

அவர்கள் கேபினில் உட்கார்ந்து மேலும் ஐந்து நிமிடங்கள் ஆனதற்கு பிறகு தான், ஷர்மிளா ஆஃபீஸுக்குள் நுழைந்தாள்.

"நம்மள மட்டும் அந்த கிழி கிழின்னு கிழிச்சான்ல்ல அந்த ஆளு.... "

"இப்ப பாரு இவ பேகை வச்சுட்டு உள்ள போவா... போயிட்டு இருபது நிமிஷம் கழிச்சு, எக்ஸ்ட்ரா ரெண்டு கோட் லிப்ஸ்டிக் போட்டுகிட்டு வெளியில வருவா...."என்று காவ்யா முணுமுணுக்க..

"சும்மா இருடி.. நீ வேற.. பேசாம நம்ம வேலைய மட்டும் நீ பாரு....மத்தவங்கள ஏன் நீ பாக்குற...?"

"யாரோ என்னமோ பண்ணிட்டு போறாங்க... நம்மளோட ஒர்க்ல நம்ம ஒழுங்கா இருப்போம்... புரிஞ்சுதா..?" என்றாள் மகிழ்வதனி.

"புரிஞ்சது புரிஞ்சுது.. உனக்கு வேல பார்க்கும் போது சும்மா பேசினா கூட பிடிக்காதே...?'என்றாள் சற்று ஆதங்கமான குரலில்.

அவளது சிறுபிள்ளைத்தனமான செயல்பாட்டினால் சிறிது புன்னகைத்து விட்டு....சரி விடு விடு லஞ்ச் பிரேக்ல நல்லா பேசிக்கலாம்... சரியா.? இப்ப பேசாம நல்ல பிள்ளையா வேலைய பார்ப்பியாம்.."என்று கொஞ்சி விட்டு தனது வேலையை செய்ய ஆரம்பித்து விட்டாள்.

'ஒரு உறவு நீடிக்க அதிகமான அன்பை விட...அதிகமான புரிதல் தான் தேவை...'

அந்தப் புரிதல் இவர்கள் இருவருக்குள்ளும் நன்றாகவே இருந்தது.

காவ்யா சொன்னபடி தான் நடந்தது. இருந்தும் இது வழக்கமான ஒன்றுதான் என்பதால்... அனைவரும் கண்டு கொள்ளாமல் தங்களது வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

அது ஒரு இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் பேக்டரிக்கான அலுவலகம்.

கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் இருக்கும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு தோட்டங்கள் மற்றும் சாக்லேட் ஃபேக்டரி மற்றும் இன்னும் இதர மலைப்பிரதேச பொருள்களுக்கான ஒரு ப்ரைவேட் லிமிடெட் கம்பெனியின் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கணக்கு வழக்குகள் மற்றும் அனைத்து செயல்பாடுகளுக்குமான அலுவலகம் இது.

இந்த அலுவலகத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோர்,ஐந்து குழுக்களாக பிரிந்து வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முப்பது பேருக்கும் ஒரு மேனேஜர்.... அந்த வகையில் இவர்கள் இருக்கும் குழுவின் மேனேஜர் தான் ராம். சற்றே சபல புத்திகாரன்... இருந்தாலும் கெத்தை விடாமல் மற்றவர்கள் முன் மெயின்டைன் பண்ணுவதில் கில்லாடி.

சிறிது வளைந்து கொடுத்து,பல்லை காட்டினால் போதும்... அவர்களை ஒன்றும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டான்.

'அதுவே தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று இருக்கும் பெண்களை கண்டால் அவனுக்கு ஏனோ பிடிப்பதில்லை.

மதிய உணவு இடைவேளை வரை நிமிர முடியாத அளவிற்கு வேலைகள் குவிந்து கிடந்தன. அனைத்தையும் முடித்துவிட்டு இருவரும் கேண்டின் நோக்கி நடக்க தொடங்கினர்.

வழக்கமான பொருளாதார ரீதியான மகிழ் புலம்பல் களை கேட்டுக் கொண்டிருந்து விட்டு... "மிதிக்க மிதிக்க தான் டி சைக்கிள் முன்னாடி போகும், அதே மாதிரி தான் பிரச்சனையும் மிதிக்க மிதிக்க தான் வாழ்க்கை ல முன்னாடி போக முடியும்.... போட்டு நல்லா மிதிப்போம்" என்று ஏதோ போர்வேர்டு மெசேஜை படித்துவிட்டு உளறினாள் காவ்யா..

தனது முத்துப் பற்கள் தெரிய சிரித்தபடியே, ஐயோ உன்னையோட முடியலடி...."

"சீக்கிரம் சாப்பிட்டு வா திரும்பவும் லேட்டா போனோம்னா... மறுபடியும் ராம அர்ச்சனை தான்" என்றபடி கை கழுவி விட்டு கேபின் நோக்கி நடக்க தொடங்கினாள் மகிழ்.

"இருடி வர்றேன்.... விட்டுட்டு போயிடாத" என்றபடி அவளை வேகமாக பின்தொடர்ந்தாள் காவ்யா....

அன்றைய நாள் இப்படியே சென்று விட...

வழக்கம்போல் ஈவினிங் வீட்டிற்கு சென்ற மகிழ், தனது தங்கை மற்றும் அம்மாவுடன் நேரம் செலவழித்து விட்டு.. படுக்கையில் படுத்து கண்களை மூடினாள்...

ஆம் கண்களை மட்டும் மூடிக்கொண்டு படுத்திருந்தாள்... ஆனால் தூங்க முடிவதில்லை.

என்னதான் காலை முதல் மாலை வரை மாடாக உழைத்தாலும், நித்ரா தேவிக்கு அவள் மேல் இரக்கமே வருவதில்லை....

ஏதேதோ எண்ணங்களால்... புரண்டு புரண்டு படுத்துவிட்டு,விடியலின் அருகாமையில் உறங்கிப் போனாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்-3

அலுவலகம் செல்வதற்காக கிளம்பி கீழே இறங்கி வந்த ஆதிரத்னேஸ்வரன், காலை உணவு உண்பதற்காக டைனிங் ஹாலை நோக்கி நடக்க தொடங்கினான்.

வழக்கமாக மூன்று வேளையுமே உணவு வீட்டில் உண்பதே இல்லை. இன்று சில விஷயங்கள் பேச வேண்டும் என்பதற்காகவே வீட்டில் சாப்பிட முடிவெடுத்து இருந்தான்.

டைனிங் ஹாலில் அவனது தந்தை சுந்தரலிங்கேஸ்வரர், தாய் மீனசுலோச்சனை இருவரும் அமர்ந்து உணவு உண்டபடி ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

திடீரென்று கேட்ட காலடி சத்தத்தில் இருவரும் நிமிர்ந்து பார்த்துவிட்டு, சற்று ஆச்சரியத்துடன் "என்ன இன்னைக்கு அதிசயமா டைனிங் ஹாலுக்கு எல்லாம் வர்றான்" என்றார் சுலோச்சனா.

"அப்ப ஏதோ பெரிய விஷயமுன்னு தான் நினைக்கிறேன்... ஏதோ பேசுறதுக்காக வரான்....நீ பாட்டுக்கு எதையும் முன்னாடியே பேசி உளறி வைக்காத... அவன் பஸ்ட் பேசி முடிச்சுடட்டும்... அதுக்கப்புறம் நம்ம பேசிக்கலாம்" என்றார் சுந்தரம்.

அவர்கள் முணுமுணுப்பதை வைத்து என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவதானித்தபடியே வந்து அமர்ந்தான் ஆதிரத்னேஷ்வரன்.

எதுவும் பேசாமல் அவன் பாட்டுக்கு பிளேட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

சுலோச்சனையால் அதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.

"என்னப்பா ஈஸ்வர் அதிசயமா டைனிங் ஹாலுக்கு எல்லாம் வந்திருக்க.... ஏதாச்சும் விஷயமா..? " என்று வினவினார்.

ஈஸ்வர் அவரை நிமிர்ந்து ஒரு பார்வை தான் பார்த்தான்.

சுந்தரம் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்.

"எவ்வளவு சொன்னாலும் இவளுக்கு புரியவே புரியாது.." என்று நினைத்துக் கொண்டவர், அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே... சாதாரணமாக புன்னகைக்க முயற்சித்தார்.

அதில் அலர்டான சுலோச்சனை "அதுக்கு இல்லப்பா, ஏதாவது பேசணும்னா தான் நீ வீட்ல சாப்பிடுவ... அதனால தான் கேட்டேன்...ஏதோ முக்கியமான விஷயமா அப்படின்னு.... ஏன்னா நாங்க ஒரு முக்கியமான விஷயம் பேசிக்கிட்டு இருந்தோம் " என்று அடுத்தடுத்து உளற ஆரம்பித்து விட்டார்.

இதற்கு மேல் அமைதியாக இருந்தால், அனைத்தையும் உலறிவிடுவார் என்பதை உணர்ந்த சுந்தரம்...

" நீ கொஞ்ச நேரம் பேசாமல் இரு சுலோ... அவன் ஏதோ பேசணும்னு நினைக்கிறான்... பேசட்டும், அதுக்கப்புறம் நம்ம பேசிக்கலாம்" என்று கூறி முடித்துவிட்டு ஈஸ்வரை பார்த்தார்.

அவனோ, 'என்னமோ பேசிக் கொள்ளுங்கள், நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்' என்பதைப் போல...

" இந்தோனேசியா பிரான்ஞ்ல ஏதோ பிராப்ளமாம்...நான் போக வேண்டியது இருக்கு. அத முடிச்சிட்டு அப்படியே ஃபாரின் பிரான்ஞ்சஸ்க்கு எல்லாம் ஒரு விசிட் போயிட்டு வரலாம்னு இருக்கேன்...ரிட்டன் வர மினிமம் சிக்ஸ் மந்த்ஸ் ஆகும்... " என்று கூறிவிட்டு கை கழுவியப்படியே எழுந்தான்.

சுந்தரமோ சற்று நெற்றி சுருக்கி யோசித்தபடியே...

"இந்தோனேஷியா பிரான்ஞ்ல என்ன பிரச்சனை...?அப்படி ஒன்னும் விஷயம் என் காதுக்கு வரலையே..? திரும்பி வரதுக்கு சிக்ஸ் மந்த் ஆகுமா...? எதனால..? பாரின் கம்பெனிஸ்க்கு விசிட் போனாலும், யூஸ்வலா த்ரீ மன்த்ல ரிட்டன் வந்துருவியே... எதனால சிக்ஸ் மந்த்ஸ் ஆகுது இந்த தடவை...?"

என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தார்.

அவனோ தந்தை என்றும் பாராமல், "ட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்.. தேவையில்லாம என் ஆபீஸ்ல நடக்குற விஷயம் எதுக்கு உங்க காதுக்கு வரணும்...?யார் மூலமா வருது..?" என்று கதாராக கேட்டுக் கொண்டே அவரை கூர்ந்து பார்த்தான்.

சற்றே சுதாரித்த சுந்தரம், "அப்படி இல்லப்பா எனக்கும் வீட்ல இருக்க போர் அடிக்குது, அதனால சும்மா ஏதாவது ஆபீஸ் ரிலேட்டடா உன் பிஏ கிட்ட கேட்பேன்.." என்று ஏதோ சமாளித்தார்.

"உங்களுக்கு வீட்ல இருக்க போர் அடிக்குதுன்னா, நமக்கு உலகம் ஃபுல்லா ஆயிரத்தெட்டு பிரான்ஞ்சஸ் ஆப் கம்பெனிஸ் இருக்கு.. தமிழ்நாட்டுலயே 23 பிரான்சஸ் இருக்கு..."

"ஏதாவது ஒரு பிரான்சுக்கு வந்துட்டு அத மேனேஜ் பண்ணுங்க... போரடிக்காது.. அதை விட்டுட்டு இப்படி தேவையில்லாம, ' நான் என்ன பண்றேன், என் கம்பெனில என்ன நடக்குது.. அப்படிங்கிற இன்ஃபர்மேஷன் எல்லாம் கேட்டுகிட்டு திரியாதிங்க.."

" அப்படி உங்களுக்கு ஏதாவது இன்ஃபர்மேஷன் வேணும்னா, என்கிட்ட மட்டும் கேளுங்க.. என்ன பத்தி மத்தவங்க கிட்ட விசாரிக்காதீங்க.. அது எனக்கு பிடிக்காது... திஸ் இஸ் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்" என்ற படியே சுந்தரம் ஏதோ சொல்ல வருவதையும் பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்து விட்டான்.

சுலோச்சனா தான் பின்னாடியே ஓடிப்போய் "எப்பப்பா கிளம்புற..?" என்று கேட்டபடியே பின் தொடர்ந்தார்.

" டுடே நைட் பிளைட் ஆபீஸ்ல இருந்து அப்படியே போயிடுவேன், வீட்டுக்கு வர மாட்டேன்" என்றபடியே கிளம்பி போய் விட்டான்.

சுந்தரமும் ஏதோ யோசித்தபடியே, ஈஸ்வரின் பிஏவான சதீஷுக்கு போன் செய்து சில கேள்விகளைக் கேட்டுவிட்டு போனை வைத்தபடியே... சுலோச்சனாவை பார்த்து "உன் அண்ணன் ஃபேமிலி கிட்ட சொல்லி அவன் சிக்ஸ் மன்த்ஸ் கழிச்சு வரும்போது, என்கேஜ்மென்ட்க்கு ரெடி பண்ண சொல்லு" என்றார்.

சுலோச்சனா வாயெல்லாம் பல்லாக.. " சரிங்க.. சரிங்க சொல்லிடுறேன்" என்று சொல்லி கூறிவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.



ஆனால் ஆறு மாதம் கழித்து நிலைமை தலைகீழாக ஆகிவிடும் என்று சுந்தரம் தற்போது உணர வாய்ப்பில்லையே....!

வீட்டில் ஃபாரின் செல்வதாக கூறிவிட்டு வந்த ஆதிரத்னேஸ்வரனோ, திருச்சிக்கு பிளைட்டின் வழியாக வந்துவிட்டு... திருச்சி டு கொடைக்கானல் ஹைவேயில் BMW காரில்,கொடைக்கானலில் இருக்கும் தன்னுடைய ஐந்து நட்சத்திர விடுதி நோக்கி சென்று கொண்டிருந்தான்.....

மகிழ் வழக்கம் போல் தனது காலை வேலைகளை முடித்துவிட்டு.. அன்று லோக்கல் ஹாலிடே கல்லூரி விடுமுறை என்பதால், யாழினி வீட்டில் இருக்கிறாள்... எனவே அவளை காலேஜில் டிராப் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.... மதிய உணவையும் அவள் பார்த்துக் கொள்வாள்... பெரிதாக வேலை எதுவும் இல்லை... எனவே மிக நிதானமாகவே அலுவலகத்திற்கு கிளம்பலானாள்.

அவளை அறியாமலே மனதிற்குள் ஒரு வகையான சோம்பல் வந்து ஒட்டிக்கொண்டது.

வழக்கமாக யாழினியை கல்லூரியில் டிராப் செய்துவிட்டு செல்ல குறைந்தபட்சம் இருபது நிமிடங்களாவது ஆகும்.

ஆனால், இன்று அந்த அவசியமில்லை என்பதால்.. வழக்கத்தை விட இன்று அலுவலகத்திற்கு முன்னாடியே வந்து விட்டாள்...

காவ்யாவும் அலுவலகத்திற்கு வந்த பிறகு இருவரும் பேசிக் கொண்டே வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்...

மேனேஜர் ராம் கூட இன்று விரைவாகவே வந்து தனது வேலைகளை மும்மரமாக செய்து கொண்டிருந்தார்..

காவ்யாவோ "என்னடி உலக அதிசயமா இருக்கு, சொட்டை தலையன் சீக்கிரமா வந்துட்டு, இவ்ளோ சின்சியரா வேலை பாத்துட்டு இருக்கான்... என்ன விஷயமா இருக்கும்..?" என்றாள்.

மகிழ்வதனியோ சிறு புன்னகையுடன், " நம்ம கூட தான் இன்னைக்கு சீக்கிரம் வந்து வேலையை பார்க்கிறோம்.. விடுடி அதை பத்தி எல்லாம் யோசிக்காம, நீ பாட்டுக்கு வேலையப்பாரு...பெண்டிங் ஒர்க் நிறைய இருக்கு.. " என்று சொல்லிக் கொண்டே தனது கணினியில் விழிகளை பதித்திருந்தாள்.

காலை பதினோரு மணியளவில் மேனேஜர் ராமின் குரல் ஓங்கி ஒலித்தது...

"கைஸ் லிசன் டு மீ... இன்னைக்கு மதியம் டூ ஓ கிளாக், நம்ம பிரான்சில் இருக்க எல்லா டீமையும் மீட்டிங் ஹால்ல அசம்புலாக சொல்லி மெயில் வந்திருக்கு .... "

"நம்ம கம்பெனியோட சிஇஓ, மிஸ்டர் ஈஸ்வர்...இன்னைக்கு நம்ம கம்பெனிய விசிட் பண்ண வராரு."

" இன்னும் கொஞ்ச நாள் அவர் இங்க தான் ஸ்டே பண்ணி எல்லாத்தையும் சரி பாத்து, கரெக்ட் பண்ணிட்டு தான் கிளம்புவாரு.... "

"அதுவரைக்கும் எல்லாரும் கொஞ்சம் கோ ஆபரேட் பண்ணி, ஒர்க் பண்ண பாருங்க... அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் வார்னிங் எதுவுமே தரமாட்டாரு.... டைரக்டா டெர்மினேஷன் தான்... சோ பி கேர்ஃபுல் கைஸ்..." என்று கூறியபடியே மகிழ் மற்றும் காவ்யாவின் புறம் திரும்பி... "முக்கியமா லேட்டா வரக்கூடாது, சொன்ன வேலைய ஒழுங்கா செய்யணும், எதிர்த்து பேசக்கூடாது... இதெல்லாம் அவருக்கு சுத்தமா பிடிக்காது " என்று கூறிவிட்டு தனது கேபினுள் சென்று விட்டார்.

காவ்யாவோ "என்னடி நமக்காகவே வந்து சொல்லிட்டு போற மாதிரி இருக்கு.."

" என்னமோ இந்த ஆபீஸ்ல இருக்க மத்தவங்க எல்லாம் சின்சியரா 24x7 வொர்க் பண்ற மாதிரியும்...நம்ம மட்டும் சும்மா ஜாலிக்காக ஆபீஸ் வந்துட்டு டைம் பாஸ் பண்ணிட்டு போற மாதிரியும் சொல்லிட்டு போது இந்த சொட்ட... கொழுப்ப பாரேன்.. " என்று பொரிய ஆரம்பித்து விட்டாள்.

மகிழோ மெலிதாக சிரித்துவிட்டு, "அடியே, பேசாம வாடி...அவர் சொன்னா சொல்லிட்டு போறாரு..."

" நம்ம எப்போதும் போல நம்ம வேலைய பாப்போம்... நம்ம கிட்ட இருக்க ஒரே மிஸ்டேக் காலைல லேட்டா வர்றது... "

" எப்படியாவது நான் சீக்கிரம் வர பாக்குறேன்...அம்மா எழுந்திருக்க லேட்டாகுறதுனால தான் அம்மாவுக்கு செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சுட்டு வர லேட் ஆகுது.. இனி அதுக்கு ஏதாவது ஆல்டர்னேட்டிவ் யோசிக்கணும்.. "

" பரவால்ல விடு, நாளையிலிருந்து தானே.. பார்த்துக்கலாம்" என்று கூறிவிட்டு தனது வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

'அனைத்து கஷ்டங்களையும் பட்டாகிவிட்டது.... இனி படுவதற்கு என்ன இருக்கு..' என்ற மனநிலையில் அவள்....!

‘நீ அனுபவித்ததெல்லாம் ட்ரைலர் தான்... இனிமே தான் மெயின் பிக்சரே இருக்கு ’என்று காட்டுவதற்காகவே ஒருவன் வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறியாள்.....


இன்று இருக்கும் அவளின் நிலை, அவனை சந்திக்கும் பொழுது என்ன ஆகும்....?
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்-4

மதிய உணவு இடைவேளை முடிந்த கையோடு அனைவரும் மீட்டிங் ஹாலில் கூடினர்.

காவ்யா மற்றும் மகிழ்வதனி இருவரும் ஓரமாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு கதைக்க ஆரம்பித்தனர்...

காவ்யாவோ, "உலகம் ஃபுல்லா இருக்கிற கம்பெனியோட சி இ ஓ னு சொல்றாங்க எப்படியும் ஒரு ஐம்பது இல்ல அறுபது வயசுல ஒரு கிழம் கோட்டு சூட்டெல்லாம் போட்டுகிட்டு வந்து அறுத்து தள்ள போகுது..."

"எப்படியோ நமக்கு ஒரு டு ஆர் த்ரீ ஹவர்ஸ் ரெஸ்ட்... நம்ம பாட்டுக்கு பேசிட்டு இருக்கலாம்... யாரும் நம்மள கவனிக்க கூடாதுல்ல , அதுக்கு தான் நான் ஓரமா சீட்டு புடிச்சு உட்காரலாம்னு சொன்னேன்....எப்படி நம்ம ராஜதந்திரம்" என்று கண்ணாடித்தாள்.

மகிழ் அவளை பார்த்து முறைக்கவும்...

" என்னடி முறைக்கிற, சின்ன வயசு ஆளா இருந்தா சைட் ஆவது அடிக்கலாம்... "
" ஒன்னு, நான் யாரு தெரியுமா..?எங்க இருந்து வந்திருக்கேன்னு தெரியுமா..? எப்படி குதிச்சேன்னு தெரியுமா...? அப்படின்னு செல்ஃப் டப்பா அடிப்பாங்க.... "
" இல்லன்னா...எனக்கு ரூல்ஸ் தான் பர்ஸ்ட், ரன் ரன் ரன் னு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்க போறாங்க.... கிழவன் பேசுறதெல்லாம் யாருடி கேட்கறது... அதுவும் எப்படியும் இங்கிலீஷ்ல தான் பேசுவாரு, எனக்கு அதுல பாதி புரியாது... புரிஞ்சிக்கவும் நான் விரும்பல அது வேற டிபார்ட்மெண்ட்... அதுக்கு தான் இப்படி ஒரு ஐடியா....பாரு சிப்ஸ் பாக்கெட் கூட எடுத்துட்டு வந்துட்டேன், சத்தம் வெளியில கேட்காம மெதுவா சாப்பிடணும் சரியா...?" என்று சீரியஸாக கூறிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று நிசப்தம்.
ஆனால், மகிழால் சிரிப்பை அடக்க முடியவில்லை...சிறது சத்தமாகவே சிரித்து விட்டாள்.
அவளைக் கண்களால் துலவியப்படியே வந்து கொண்டிருந்த ஆதிரத்னேஸ்வரனின் கண்களில் அவளது சிரிப்பு தப்பாமல் பதிவானது...
' என்னோட நிம்மதி, சந்தோஷம், சிரிப்பு, தூக்கம் னு எல்லா உணர்ச்சிகளையும் குழி தோண்டி புதைச்சுட்டு... இங்க வந்து சந்தோஷமா, நிம்மதியா சிரிச்சு வாழ்ந்துகிட்டு இருக்கியா...? கவுன்ட் யுவர் டேஸ் .... நான் இங்க இருந்து கிளம்பும்போது, இப்போ உன்கிட்ட இருக்க எல்லாத்தையுமே இல்லாம பண்ணிட்டு தான் கிளம்புவேன்...' என்று மனதுக்குள் எண்ணியப்படியே ஸ்டேஜில் ஏறி அமர்ந்தான்.

"வாவ்...!வாட் எ ஹாண்ட்சம் யன்க் மேன்" என்ற காவ்யாவின் குரலில் நிதானத்திற்கு வந்த மகிழ்... ஸ்டேஜ் இன் புறம் திரும்பியவள், இமைக்க மறந்து அப்படியே சிலையாக சமைந்து விட்டாள்.

உச்சகட்ட அதிர்ச்சி தாக்கும் பொழுது நமது உடலில் உள்ள எந்த ஒரு உணர்உறுப்பும் செயல்படாது என்று கூறுவார்கள்...

அதை நிரூபிப்பது போல், அவளால் எதையும் யோசிக்கக்கூட முடியவில்லை...
அப்படியே கண்களை விரித்தபடியே, அவனை வெறித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை.
காவ்யா தான், "ஏய் சிஇஓ செம்மயா இருக்காரு டி....இன்று முதல் இவரையே.." என்று ஏதோ சொல்ல வந்தவள், தோழியின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்துவிட்டு...
"ஏய் என்னடி இப்படி வச்ச கண்ணு வாங்காம சைட் அடிச்சுக்கிட்டு இருக்க... உன்னய போய் நான் முனிவர் ரேஞ்சுக்கு மனசுக்குள்ள பில்டப் பண்ணி வச்சிருந்தேனே....இப்படி வெறிக்க வெறிக்க பாக்குற, கண்ட்ரோல் யுவர் செல்ப் டா..." என்று சிரித்தபடி கூறிக் கொண்டே கையில் கிள்ளினாள்.

அதன் பிறகே சற்று சுயம் பெற்று, சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு நிதானத்திற்கு வந்தாள்.

உடலெல்லாம் வேர்த்து விறுவிறுத்து, கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது.... தலையை சுற்றிக்கொண்டு மயக்கம் வரும் போல் இருந்தது.

'கடவுளே உனக்கு என் மேல இரக்கமே இல்லையா...? மறுபடியும் ஏன் இவனை என் கண்ணுல காட்டுற...? போதும் நான் பட்டதெல்லாம், இதுக்கு மேல என்னால முடியாது... இவன் கண்ணுல நான் படுறதுக்கு முன்னாடி, எப்படியாவது இங்கே இருந்து போயிடனும்.. " என்று பலவாறு யோசித்துக்கொண்டும் மனதுக்குள் புலம்பி கொண்டும் வாஷ் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

காவ்யாவோ, 'என்னாச்சு இவளுக்கு ஏன் திடீர்னு...? எந்திரிச்சு போறா...?' என்று யோசித்தபடி அவளை பின்தொடர்ந்தாள்.

இதனை ஸ்டேஜில் அமர்ந்தபடி ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரத்னேஸ்வரனோ, ஓடுறியா ஓடு ஓடிக்கிட்டே இரு துரத்துவதற்கு தான் நான் வந்து இருக்கேனே ' என்று வன்மமாக புன்னகைத்துக் கொண்டான்.

வாஸ் ரூமிற்குள் வந்த மகிழ்வதனியோ, முகத்தில் ஓங்கி ஓங்கி தண்ணீரை அடித்தபடி இருந்தாள்.

பின் தொடர்ந்து வந்த காவ்யாவோ, "என்னாச்சுடி, அவ்வளவு அவசரமா..? என்கிட்ட கூட சொல்லாம எந்திரிச்சு வந்துட்ட....?" என்றபடி அவளை பார்த்தவள்....
"ஏன் உன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..?ஏன் இப்படி டிரஸ் நனையறது கூட தெரியாத அளவுக்கு, தண்ணிய அள்ளி ஊத்தி வச்சிருக்க...?" என்று வினவினாள்.
அவளால் தற்போது எதுவுமே பேச முடியவில்லை....

"ஒரு மாதிரி இருக்கு டி , நா ரெஸ்ட் எடுக்கணும்" என்று மட்டும் சொல்லி விட்டு, தனது கேபின் நோக்கி நடந்தாள்.

காவ்யா,அவளை புரியாத பார்வை பார்த்தபடி...' சரி ரெண்டு பேரும் போயிட்டோம்னா, அங்க என்ன நடக்குதுன்னே தெரியாது.. அவ போய் ரெஸ்ட் எடுக்கட்டும், நாம போய் மீட்டிங் அட்டென்ட் பண்ணுவோம்..' என்று நினைத்தபடி மீட்டிங் ஹாலிற்க்கு சென்றாள்.

பொதுவான அறிமுகம் மற்றும் வழக்கமான பேச்சுக்களுடன் மீட்டிங் முடிந்த நிலையில் அனைவரும் அவரவர் வேலைகளுக்கு திரும்பினர்.

மகிழால் அங்கே இருக்கவே முடியவில்லை... உடனே வெளிக்கிளம்பியாக வேண்டும்.... எனவே , காவ்யாவிடம் கூறிய அதே காரணத்தை, மேனேஜர் ராமிடமும் சொல்லிவிட்டு...அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, தனது வீட்டிற்கு செல்லலானாள்.

அவள் இப்படி இதற்குமுன் லீவ் கேட்டதில்லை என்பதாலும், மேனேஜர் ராம்க்கு ஆல்ரெடி நிறைய வேலைகள் இருந்ததாலும் லீவ் கிடைப்பது எளிதாகியது.
தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவளுக்கு, வீட்டிற்கு செல்ல மனமில்லை.
எங்கேயாவது தனியாக உட்கார்ந்து சிறிது நேரம் யோசிக்க வேண்டும் என்று இருந்தது...
செல்லும் வழியில் கண்ணில் ஒரு பார்க் பட,வண்டியை பார்க் பண்ணி விட்டு, அதனுள் நுழைந்தாள்.

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த பின், யோசிக்கலானாள்.

'அவன் கண்ணுல நம்ம படவே கூடாது... அதுக்கு என்ன பண்ணலாம்.? பேசாம வேலைய விட்டுடலாமா..?'
' ஆனா வேலைய விட்டுட்டா நம்மளை நம்பி இருக்கிறவங்கள எல்லாம் என்ன பண்றது..? பேசாம இந்த ஊரை விட்டு வேற ஊருக்கு போய், வேற வேலை தேடிக்கலாமா...?'
' ஆனா, அதுக்கெல்லாம் கொஞ்சம் டைம் எடுக்கும்....'
அதைவிட முக்கியமா இந்த ஊர்ல இருக்கிறதுக்கு இன்னொரு ரீசன் இருக்கு,அது அவளது அண்ணன் சஞ்சய் குமார்....!

ஆம், அவளது அண்ணன் சஞ்சய் குமார், இதே ஊருக்கு அருகில் உள்ள ஒரு மலை கிராமத்தில், மூலிகை வைத்தியர் ஒருவரிடம் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறான்.

அனைத்து மருத்துவர்களாலும் கைவிடப்பட்ட நிலையில்... இனிமே அவனுக்கு எந்த நினைவும் வராது, கோமா ஸ்டேஜ்க்கு போய் விட்டார்... என்று அனைவராலும் ஒதுக்கப்பட்ட பின்பு, அவளது பால்ய கால நண்பன் விக்னேஷின் மூலம் இந்த மலைவாழ் மக்களுக்கான மூலிகை வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
அதனால் தான், சென்னை வாழ்க்கை,வீடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு.. இந்த அறிமுகமே இல்லாத கொடைக்கானலில் வந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இப்போது தான் அனைத்தும் ஓரளவு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் வேளையில்...மீண்டும் அவள் வாழ்வில் அவன்.....!

'போதும் இதுக்கு மேல என்னால இழப்புகளை சந்திக்க முடியாது.... அதே நேரத்துல இப்போதைக்கு வேற வழியும் இல்ல, வேலைக்கு போய் தான் ஆகணும்..'

'எப்படியும் கொஞ்ச நாள் மட்டும் அவன் இங்கே இருந்துட்டு கிளம்பிருவான்.... அதுவரைக்கும் அவன் கண்ணுல படாம இருந்துட்டாலே போதும்...'

'அது சுலபமும் கூட ஏனெனில் அவள் கடைநிலை ஊழியர் தான்... எப்படியும் அவனோட கம்யூனிகேஷன் எல்லாமே, மேனேஜர் அல்லது அதற்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளுடன் தான் இருக்கும்...'

'அதனால நம்மள அவன் பாக்குறதுக்கு வாய்ப்பே இல்லை...'என்று ஒரு முடிவுக்கு வந்தவளாக வீட்டை நோக்கி புறப்பட்டாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாத ஒரு விஷயம், அவன் வந்ததே அவளுக்காகத்தான் என்பதே.....!

அதை அவள் அறிய வாய்ப்பில்லையே..

அதை அறியும் நாளும் வெகு தொலைவில் இல்லை தான்....!
 
Last edited:
Status
Not open for further replies.
Top