ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையின்றி நேசிக்கவா-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 5

அடுத்த நாள் சனிக்கிழமை....
வாரத்தின் ஆறு நாட்களும் அலுவலகம் செயல்படும்... ஞாயிறு மட்டுமே விடுமுறை தினம்...

அன்று கிளம்பவே மகிழ்வதனிக்கு மிகவும் அலுப்பாக இருந்தது. பயம் வேறு, கைகளில் நடுக்கம் இன்னும் குறைந்த பாடில்லை....

'சப்போஸ், அவன் நம்மள பாத்துட்டா எப்படி ரியாக்ட் பண்றது' என்று, இரவு முழுவதும் எடுத்த பயிற்சிகள் அத்தனையும் செயலிழந்தது போல் ஒரு உணர்வு...

மீண்டும் பழைய மகிழ்வதனியாக மாறிவிட்டதை போன்ற ஒரு எண்ணம்...

'பேசாம இன்னைக்கு லீவு போட்டுட்டு இருந்திருவோமா' என்று கூட யோசித்தாள்.

'ஆனா, எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளிந்து கொண்டே இருக்க முடியும்....? எப்படி இருந்தாலும் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும் ' என்று பெருமூச்சு விட்டபடி அலுவலகத்துக்கு தயாராகினாள்.

எப்போதும் இனிக்கும் காலை நேர பயணம் கூட இன்று கசந்தது.....

இன்றும் யாழினிக்கு விடுமுறை என்பதால் விரைவாகவே அலுவலகம் வந்துவிட்டாள்.

காவ்யாவும் "இப்போ ஓகே வாடி..?" என வினவ... "ம் ஓகே டி" என்று பதில் அளித்தபடி தனது வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர் .....

வேலை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, மேனேஜர் ராம் வந்து...
" கைஸ், லிசன்" என்றபடி பேச ஆரம்பித்தார்.

மகிழ் மனதிற்குள்ளோ 'ஐயோ என்ன குண்டத் தூக்கிப் போடப் போறாரோ...' என்றபடி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இதுவரைக்கும், சிஇஓ த்ரீ இயர்ஸ் ஒன்ஸ் தான் வருவாரு... அப்படி வந்து விசிட் பண்ணாலும் ஹயர் ஆபீஸர்ஸ் மட்டும் பாத்துட்டு, டு ஆர் த்ரீ டேஸ் மட்டும் விசிட் பண்ணிட்டு கிளம்பிடுவாரு...."

" பட் இந்த வருஷம் டீம் பை டீமா வாட்ச் பண்ண போறாராம்....ஒவ்வொரு டீம்க்கும் மினிமம் ஒன் மந்த் எடுத்துக்க போறதா சொல்லி இருக்காரு.. "

" சோ கண்டிப்பா உங்க எல்லாரையும் அவர் வாட்ச் பண்ண போறாரு... ஃபர்ஸ்ட் நம்ம டீமை தான் செலக்ட் பண்ணி இருக்காங்க... "

" சோ நம்ம டீம்ல இருந்து தான் ஸ்டார்ட் பண்ண போறாங்க டுடே ஆப்டர்நூன் ல இருந்து நாம எல்லாரும் சிஇஓ பார்வைக்கு கீழ போக போறோம்... அவர் சொல்றபடி தான் நடந்துக்க போறோம் "

"அதுக்கு தகுந்தபடி பாத்துக்கோங்க....என்ன டவுட்னாலும் என்கிட்ட வந்து கேட்டுக்கோங்க.... நொவ் யூ கேரி ஆன் " என்று கூறியபடி தனது கேபினில் நுழைந்து விட்டார்.

காவ்யாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை... " அப்பாடா இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த சொட்ட தலையன் தொல்லையிலிருந்து தப்பிச்சோம்... அட் த சேம் டைம் சைட் அடிக்கவும் புது ஆள் கிடைச்சாச்சு " என்றபடி தனது கேபினுக்கு சென்று வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டாள்.

ஆனால், அதற்கு நேர் மாறாக மகிழ்வதனியோ, திக் பிரம்மை பிடித்ததை போல் நடந்து சென்று தனது கேபினில் அமர்ந்தவள் கணினியை வெறித்தபடி அப்படியே ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருந்தாள்.

யோசித்து யோசித்து டயர்ட் ஆனது போல் இருந்தது...

' தப்பெல்லாம் செஞ்சிட்டு தைரியமா அவனே இப்படி சுத்தும் போது... எந்த தப்புமே செய்யாம, நான் ஏன் ஓடி ஓடி ஒளியனும்..? '

' என்ன வந்தாலும் பாத்துக்கலாம்... அவன பாக்கும்போது, எந்த ஒரு ரியாக்ஷனையும் முகத்துல காட்டக்கூடாது... ஆபீஸ் சம்பந்தமா தவிர வேற எதுவும் பேசக்கூடாது...' என்றெல்லாம் மனதிற்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டாள்.

ஏதோ ஒரு குருட்டு தைரியத்துடன் அவனது சந்திப்பிற்கு தயாரானாள்.

மதியத்திற்கு மேல், ஆதிரத்னேஸ்வரன் வந்தவுடன் அறிமுகத்திற்காக மேனேஜர் அறையில் அனைவருக்கும் மீட்டிங் அரேஞ்ச் செய்யப்பட்டது....

அனைவருடனும் மகிழும் அந்த அறைக்குள்ளே நுழைந்து ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.

அவள் உள் நுழைந்ததிலிருந்து, அவளை விட்டு அவன் கண்களை அகற்றவில்லை... அவளையே கூர்ந்து பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தான்.

" குட் ஆப்டர்நூன்" என்று அவன் பேச ஆரம்பித்தது மட்டும்தான் மகிழுக்கு தெரிந்தது.... என்ன பேசினான் என்பதெல்லாம் அவள் கவனிக்கவே இல்லை.

என்னதான் தைரியமாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் பயங்கரமாக உதறலெடுத்துக் கொண்டே இருந்தது....

அவளால் தைரியமாக இருக்கவே முடியவில்லை.. அவளின் பாதிப்பு அத்தகையது.

' என்ன பண்ணப் போறானோ' என்று ஒவ்வொரு நொடியும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருந்தாள்.

"ப்பா...!ஆளு செம ஹான்சம் டி... தூரத்தில இருந்து பார்க்கும்போது கூட அவ்வளவா தெரில, பக்கத்துல வந்து பார்க்கும் போது தான் அள்ளுது....." என்று கூறியபடி மகிழின் கையில் அடித்த காவ்யாவோ "என்னடி உன் கை இவ்ளோ ஸ்வெட்டிங் ஆயிருக்கு...? நேத்துல இருந்தே ஒரு மாதிரி இருக்க... இன்னும் உடம்பு சரியாகலையா...?" என்று சற்று கவலையாக வினவினாள்.

அதில் சுதாரித்துக் கொண்ட மகிழ், "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடி.. நீ பேசாம அங்க மீட்டிங்க கவனி..." என்றபடி பேச்சை திசை மாற்றினாள்.

மேனேஜர் ராம் அனைவரையும் பெயர் மற்றும் அவர்களின் போஸ்டிங் ஆகியவற்றை அறிமுகம் செய்துவிட்டு விலகிக் கொண்டார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன், " நீங்க இதுவரைக்கும் எப்படி வொர்க் பண்ணீங்களோ அதே மாதிரி ஒர்க் பண்ணுங்க.... "

" எனக்காக எந்த சேஞ்சஸும் வேண்டாம்... எதுவும் சேஞ்ச் பண்ணனும்னா, நானே உங்களுக்கு இன்பார்ம் பண்ணுவேன்... "

"சோ ரொம்ப ஹெசிடேட் ஆகிக்காதீங்க.... இந்த ஒன் மன்ந்தும் நமக்குள்ள டைரக்ட் டீலிங் தான்.."

" உங்களுக்கு என்ன தேவையினாலும், என்கிட்ட கேட்டுக்கோங்க.... அதே மாதிரி எனக்கு என்ன கேட்கணும் என்றாலும் உங்க கிட்ட நான் கேட்டுக்குவேன்.... ஜஸ்ட் கோ ஆப்பரேட் வித் மீ.... "

"இந்த ஒன் மன்ந்தும் எனக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவைப்படுறாங்க... சோ, உங்கள்ள வாலண்டியர்ஸ் யாராவது இருந்தா பெட்டர்...இந்த கம்பெனிய பத்தி நல்லா தெரிஞ்சவங்க இருந்தீங்கன்னா, நல்லா யோசிச்சுட்டு சொல்லுங்க.. இல்ல மேனேஜர் ராம் யாரையும் சஜஸ்ட் பண்ணாலும் எனக்கு ஓகே தான்.. "

"நவ் யூ கேன் மூவ்.... ராம் நீங்க இருங்க " என்றபடி தனது உரையை முடித்துக் கொண்டான்.

அனைவரும் கலைந்து சென்றபின், ராமிடம் திரும்பியவன்.... " ராம் மகிழ்வதனிய என்னோட அசிஸ்டன்டா பிக்ஸ் பண்ணிருங்க.... "

"தென், நீங்களா சஃஜெஸ்ட் பண்ணமாரி இருக்கட்டும்.. " என்றபடி அவரை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தான்.

அவரும் "சரி சார், நீங்க என்ன சொல்றிங்களோ அப்டியே பண்ணிடலாம் "என சொல்லிவிட்டு வெளியேறினார்.

வெளியே வந்தவருக்கு மிகப்பெரிய சந்தேகம்.... 'இந்த பொண்ணு பேரு இவருக்கு எப்டி தெரியும்...?ஏன் இந்த பொண்ண மட்டும் பாயிண்ட் அவுட் பண்ணி கேக்குறாரு....? முன்னாடியே பழக்கமோ...?'என்றெல்லாம் யோசித்துவிட்டு....

' ச்ச ச்ச இருக்காது.... அவரு ரேஞ்சுக்கு இந்த பொண்ணயெல்லாம் எங்க பாத்துருக்க போறாரு.... A3 டீம் மேனேஜர் கிருஷ்ணா தான் சொல்லிருப்பான்.... அவன் தான் நேத்து இவர்கிட்ட பேசிட்டு இருந்தான்...'

'சரி பெரிய இடம்.... நமக்கு எதுக்கு வம்பு....' என்றெண்ணியபடி மகிழிடம் சென்றவர்....

"மகிழ்வதனி உன்ன தான் மா சாரோட அசிஸ்டன்டா பிக்ஸ் பண்ணிருக்கேன்...இன்னும் ஒன் மன்ந்துக்கு உனக்கு அங்க தான் வேல....லஞ்ச்க்கு அப்றம் சார் கேபின்க்கு மாறிரு"என அசால்ட்டா ஒரு குண்டத்தூக்கி அவள்மீது போட்டுவிட்டு பதிலை கூட எதிர்பார்க்கமல் போய்விட்டார்.

"Beggars can't be choosers - பிச்சைக்காரர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது..." என்று கூறுவர்கள்..... அதுபோல மகிழிற்கு எந்த ஒரு ஆப்ஷனும் வழங்கப்படவில்லை.

பக்கத்தில் இருந்த காவ்யாவோ, " ஹே காங்கிரஸ் டி...ஒரு பக்கம் நீ பிரமோஷன் வாங்கிட்டு போறது சந்தோஷமா தான் இருக்கு.... எப்படி இருந்தாலும் சேலரி இன்க்ரீஸ் பண்ணுவாங்க... உனக்கும் யூஸ் ஆகும்ல.... "

"ஆனா நீ கேபின் மாரி போறத நெனச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு. இனி உன்ன அடிக்கடி பாக்க முடியாது...."

" லஞ்ச்ல இல்லனா பிரேக்ல மட்டும் தான் மீட் பண்ண முடியும்... சோ சாட் ல.... நீ ஏன் டி டல் ஆயிட்ட...? என்ன விட்டு போறத நினைச்சு பீல் பண்றியா...? " என்று கேட்டபடி அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவ்வளவு வருத்தத்திலும் மகிழிற்கு சிரிப்பு வந்துவிட்டது... " நீ இருக்கியே... நீ ஒரு ரேர் பீசுடி.. உனக்கு சப்ஸ்டியூடே கிடையாது... " எனக் கூறியபடி கலகலவென சிரித்தாள்.

அவளை முறைத்துக் கொண்டே, "இப்ப என்ன கேட்டுட்டேன்னு, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற...? சீ போடி நான் தான் உன்ன மிஸ் பண்ணுவேன்....நீ ஒன்னும் என்ன மிஸ் பண்ண போறது இல்ல... ஹ்க்கும்" என்று உதட்டை சுழித்தபடி....

"சரி வா போய் கொட்டிக்குவோம்... என்ன சாப்பாடு கொண்டு வந்துருக்க..." என்று கேட்டு விட்டு அவளது லஞ்ச் பேகையும் எடுத்துக்கொண்டே கேண்டீன் நோக்கி நடக்க ஆரம்பித்ததாள்.

ஒரு சிறு பெருமூச்சுடன் அவளும் எழுந்து கொண்டாள்....

' அவன் வேணும்னே தான் நம்மள தேடி வந்திருக்க மாதிரி தெரியுது.. எப்டியும் வச்சு செய்ய போறான்.... சமாளிச்சு தான் ஆகணும். இனிமே வாழ்க்கையில போராடுவதற்கு என்ன இருக்கு...? எல்லாத்தையும் தான் பாத்தாச்சே.... '

'எல்லா வலியையும் அனுபவிச்சாச்சு.... இதுக்கு மேல என்ன கஷ்டத்தை அவன் தரப்போறான்...? மிஞ்சி மிஞ்சி போனா வார்த்தையால குத்துவான்..?'

'எது வந்தாலும் பாத்துக்குவோம்' என்ற மனநிலைக்கு வந்து விட்டாள்.

ஆனால்,அவள் நினைக்கும் அளவைவிட பெரும் மடங்கான வலியை அவளுக்குத் தரப்போகிறான் என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை....!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 6

கையை பிசைந்து கொண்டு ஆதியின் கேபின் வெளியே நின்று கொண்டிருந்தாள் மகிழ்.

"கடவுளே, உன்ன நான் என்ன பண்ணேன்...? அவன் கண்ணுலயே பட கூடாதுன்னு நினச்சா...நாள் முழுக்க அவன் முன்னாடியே உக்காருற மாதிரி பண்ணிட்டியே...."

" இப்ப நான் உள்ள போகணுமே.... அவன ஃபேஸ் பண்ணி ஆகணுமே... என்ன பண்ணப் போறேன்.. " என வாய்விட்டு புலம்பியப்படியே இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அந்த வழியாக சென்ற ஷர்மிளா, "ஏன் மகிழ் இங்க நடந்துட்டு இருக்குற.... ஏதும் வேண்டுதலா....?" என்றாள் சிரித்தபடி.

'இவ வேற, நேரம் காலம் தெரியாம..' என முணுமுணுத்தபடி, "அதெல்லாம் ஒன்னும் இல்ல, எப்படி உள்ள போறதுன்னு தெரியாம நின்னுட்டு இருக்கேன்.... போதுமா" எனக்கூரியது தான் தாமதம்....

" இது கூடவா தெரியாது உனக்கு, இப்படித்தான்" என்று கேபின் கதவை ஓபன் செய்து விட்டாள்.

'அடிப்பாவி உனக்கு என்னடி நான் பாவம் பண்ணுனேன்.... இப்படி கோர்த்து விட்டுட்டியே.... அய்யோ பாத்துட்டானே...இப்ப போய் தான் ஆகணும்,வேற வழியே இல்ல...' என மனதுக்குள் புலம்பியபடி உள்ளே நுழைந்தாள்.

உள்ளே நுழைந்தவள், "குட் ஆப்டர்நூன் சார்" என்றபடி அடுத்து என்ன பேசுவது என தெரியாமல், ஷாலை திருகியபடி நின்று கொண்டிருந்தாள்.

அவளை கூர்மையாக பார்த்தபடி, "கதவை தட்டி, பெர்மிஷன் கேட்டு உள்ள வரணும்ங்கற ஒரு பேசிக் மேனர்ஸ் கூட தெரியல, உன்னல்லாம் எவன் வேலைக்கெடுத்தது..." என்று ஆரம்பத்திலேயே மரியாதை என்பது துளியும் இன்றி பேச ஆரம்பித்தான்.

அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை... " நா.....ன்... அது.... வந்து...." என்று உலற ஆரம்பித்து விட்டாள்.

"அதான் வந்துட்டியே... சொல்லு என்ன வேணும்...?" என்று அதிகாரமாக கேட்டான்.

'இவனால மட்டும் எப்படி நார்மலா நம்ம கிட்ட பேச முடியுது.... நமக்கு மட்டும் பேச்சே வர மாட்டேங்குது...' என எண்ணியபடி, சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.... " நீங்கதானே வர சொன்னீங்கனு.... ராம் சார் சொன்னார் "என்றாள்.

"ஓ... நான் தான் உன்ன வர சொன்னேன்ல....உன்ன தான் அசிஸ்டென்டா செலக்ட் பண்ணி இருக்காங்களா... ஹ்ம் ஓகே ஓகே.." என ஒரு நக்கல் பொதிந்த பார்வை பார்த்தான்.

பேசாம எங்கேயாவது ஓடிவிடலாமா என்று இருந்தது மகிழுக்கு... ஆனால் அது முடியாதே என்பதால், " ஆமா சார், என்னய தான் செலக்ட் பண்ணி இருக்காங்க, இப்ப நான் என்ன பண்ணனும்...? " என்றாள் சாதாரண எம்ப்ளாயி என்ற முறையில்....

இதற்கு முன் அவள் பேசிய தோரணைக்கும், இப்போது பேசும் தோரணைக்கும் உள்ள வித்தியாசத்தை நன்றாகவே உணர்ந்து கொண்டான்.

முதலில் பயத்துடன் பேசியவள், இப்பொழுது சாதாரண முதலாளி - தொழிலாளி என்று பேசியதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"ஓ நீங்க இப்ப இங்க சேலரி வாங்கிட்டு வேல பாக்குற வேலைக்காரங்கல்ல.... அப்போ பாஸ் என்ன சொன்னாலும் கேட்கணும்ல...?" என்று 'என்ன சொன்னாலும்' என்பதில் ஒரு அழுத்தம் கொடுத்து அவளை ஒரு அர்த்த பார்வை பார்த்தான்.

அவளுக்கு கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது....

இருந்தும், "நிச்சயமா சார்... ஆபீஸ் ஓரியன்டடா நீங்க எந்த வொர்க் கொடுத்தாலும் நான் செய்வேன்" என்றாள் சற்று வரவழைத்துக் கொண்ட மிடுக்குடன்.

அவனுக்கு அந்த தோரணை பிடிக்கவில்லை....அவளிடம் எதையோ மனம் எதிர்பார்க்கின்றது...! ஆனால், அதை வெளிப்படையாக சொல்லவும் அவன் விரும்பவில்லை... அதற்காக அவளை அப்படியே விட்டுவிடவும் அவனால் முடியவில்லை.

"அப்படியா...?சரி.." என்று ஒரு வன்ம புன்னகையுடன்,அவன் அறைக்குள்ளாகவே இருக்கும் ஒரு லாக்கர் ரூம்பை காட்டி.." அங்க போயி ரோ நம்பர் 17 ல இருக்க பைல் எல்லாம் எடுத்துட்டு வாங்க" என்றான் கேஷுவலாக.

அவள் சற்றே ஜெர்க் ஆகிவிட்டாலள்....'ஒரு ரோல இருக்க பைல் ஃபுல்லா தூக்கிட்டு வரணுமா...?கொறஞ்சது 100 பைலுக்கு மேல இருக்குமே...!' என்று எண்ணிக்கொண்டு அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

மீண்டும் அவளைப் பார்த்து.. " நான் உங்களப் போய், எடுத்துட்டு வர சொன்னேன்.. " என்றான் சற்று அழுத்தமாக.

அதில் சற்றே பயந்தவள்.. விறுவிறு என்று லாக்கர் ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

'வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்... இப்ப சலங்க கட்டி ஆடப்போறான்...' என்ற புலம்பிய படியே 120 பைல்களையும் கொண்டு வந்து,அவளுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு டேபிளில் அடுக்கினாள் ...

டேபிளில் இடம் பற்றாமல், கீழே அதனைச் சுற்றியும் அடுக்கினாள்.

"எடுத்துட்டு வந்துட்டேன் சார்...இப்ப என்ன பண்ணனும்...?" என்றாள் உஷாராக சாதாரண தோரணையுடன்.

அதுவரை தனது மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவன், அதனை நிறுத்தி விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தபடி... "இந்த பைல்ஸ்ல லாஸ்ட் 5 இயர்ஸ்க்கான, இன்கம் ஓரியன்டடான டீடெயில்ஸ் இருக்கு. அதெல்லாம் கரெக்டா இருக்கான்னு ரீ செக் பண்ணிட்டு... என்னென்ன செக் பண்ணுனீங்க அப்படின்னு,ஒரு டீடைல் ரிப்போர்ட் வேணும் எனக்கு" என்றான்.

'என்ன இதெல்லாம் ஒரு வேலையா..? எல்லாமே ஆல்ரெடி செக் பண்ணி தான இருக்கு. அதையே திரும்ப செக் பண்ண சொல்றான்...'

' ஓகே எப்படியோ ஒரு மாசமும் இந்த வேலைய வச்சு ஓட்டிற வேண்டியது தான்...' என்று சிறு நிம்மதி வந்து ஒட்டிக்கொண்டது.

அதனால் முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாமல், "ஓகே சார் " என்றாள்.

"நாளைக்கு மார்னிங் 10 ஓ கிளாக் சப்மிட் பண்ணிடுங்க" என்றான் மீண்டும் மடிக்கணினியை பார்த்தபடி.

அவளுக்கு தூக்கி வாரி போட்டது... அந்த அதிர்ச்சியில், "எப்படி சார் அது முடியும்...?" என்று சற்றே ஆதங்கமாக குரலை உயர்த்தி கேட்டுவிட்டாள்.

இப்பொழுது வேலை செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு...தனது நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துபடி...

" ஓ முடியாதா....! மேடம் கொஞ்ச நேரம் முன்னாடி தான் 'ஆபீஸ் ஓரியன்டடா எந்த ஒர்க் கொடுத்தாலும் நான் செய்வேன்' அப்படின்னு சொன்னீங்களே என்றான் நக்கலாக.

அந்தத் தோரணையில் சற்றே கோபம் கொண்டவள் "இப்ப என்ன உங்களுக்கு ரிப்போர்ட் நாளைக்கு மார்னிங் 10 ஓ கிளாக் உள்ள வேணும் அவ்வளவு தானே நான் ரெடி பண்றேன்" எனக்கூரியபடி தனது டேபிளை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்.

"பிளடி _____" என்று ஒரு கெட்ட வார்த்தை போட்டு திட்டியபடி, " இந்த கோபம் _____க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல" என்றபடி தனது வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

மாலை நேர இடைவேளைக்கு கூட செல்லாமல் வேலை செய்து கொண்டே இருந்தாள்.அவனும் அவளை கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.

அவனுக்கு தேவையான டீ, ஸ்நாக்ஸ் அனைத்தும் அங்கேயே வந்தது. பியூன் கூட அவளை பாவமாக பார்த்துவிட்டு சென்றான்.

காவ்யா தான் ரொம்ப பரிதவித்து போய்விட்டாள்.இருந்தும் சிஇஓ அறைக்கு செல்லும் அளவுக்கு அவளுக்கு தைரியம் இல்லை....

எனவே, 'சரி ஈவினிங் பாத்துக்குவோம்.....இன்னும் ஒரு ஒன் ஹவர் தானே...' என்று மனதை தேற்றிக் கொண்டாள்.

ஆனால் ஐந்து மணி ஆகி, அனைவரும் சென்று விட்ட போதும் கூட அவள் கேபினை விட்டு வெளியே வரவில்லை.

அதற்கு மேல் பொறுமை இழந்த காவ்யா, ஆதி கேபினை தட்டி விட்டு "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்றபடி உள்நுழைந்தாள்.

"கெட் ன்" என்றபடி நிமிர்ந்து காவ்யாவை பார்த்தவன்,என்ன? என்பது போல் பார்வையாலே வினவினான்.

அவனுக்கு இந்த மாதிரி கடைநிலை ஊழியர்களுடன் உரையாடிய அனுபவமே கிடையாது. அந்த எரிச்சல் வேறு அவனுக்கு....

'இவள பழிவாங்கறதுக்காக என்னென்ன பண்ண வேண்டியதா இருக்கு....?' என்று மனதுக்குள் புகைந்தபடி காவ்யாவை பார்த்தான் .

அவளோ மகிழ்வதனியை திரும்பிப் பார்த்துவிட்டு, "டைம் ஆயிடுச்சு, மகிழ் இன்னும் வெளில வரல அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன் சார்..." என்றாள்.

"ஓ...." என்றபடி அவளை திரும்பி பார்த்தான். அவளோ அவசரமாக, "இல்ல காவ்யா,எனக்கு ஒர்க் இருக்கு நீ கெளம்பு நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.

அதற்கு மேல் அவளாலும் அங்கே நிற்க முடியவில்லை... " ஓகே டி பாய்.. " என்ற படி கிளம்பி விட்டாள்.

மணி ஆறாகியது, ஏழாகியது, எட்டாகியது.....இருந்தும் அவள் வேலை செய்து கொண்டே இருந்தாள். தங்கைக்கு 'வர லேட்டாகும்' என்று ஒரு வாய்ஸ் மெசேஜ் மட்டும் போட்டு விட்டாள்.

ஏதோ ஒரு வைராக்கியம்...'இவன் கிட்ட நாம இறங்கி போய்ட கூடாது' என்று.

ஆதியோ டீம் மேனேஜர்ஸ்சோட மீட்டிங் முடித்துவிட்டு... இரவு எட்டு பத்துக்கு கேபினுள் நுழைந்தான்.

அவள் இன்னும் வேலை செய்து கொண்டிருந்தாள்.

அவளை அழுத்தமாக பார்த்தபடி... "இன்னும் நீ இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்க....? நைட் இங்கேயே ஸ்டே பண்ண போறியா...?" என்றான்.

"நீங்க கொடுத்த ஒர்க் இன்னும் முடியலையே சார்... பாதியாவது இப்போ முடிச்சா தானே, மார்னிங் இயர்லியரா வந்து மீதிய முடிக்க முடியும்..." என்றாள் மிகவும் சோர்வாக.

" எல்லாத்தையும் மார்னிங் பாத்துக்கலாம்....எடுத்து வச்சுட்டு கிளம்புங்க...ஒரு லேடி ஸ்டாப்பை, இவ்வளவு நேரம் நான் இங்கே இருக்க வச்சிருக்கேன்னு வெளில தெரிஞ்சா.... என்னோட நேம் ஸ்பாயில் ஆயிடும்....."

"எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு... சோ யூ ஜஸ்ட் கெட் அவுட்" என்றான் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்.

அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது... அதற்கு மேல அவன் முன் நிற்க கூட விரும்பாமல், விறு விறு என்று வெளியே வந்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது...

மழை வேறு ஊற்றிக் கொண்டிருந்தது...ஏற்கனவே,இந்த குளிர் மற்றும் இருட்டில் ஸ்கூட்டியில் எப்படி தனது ஊருக்கு இவ்வளவு தூரம் செல்வது என்றே யோசித்தபடி வந்தவளுக்கு.... மழை வேறு ஊற்றிக் கொண்டிருக்கவும் உயிரே போய்விட்டது.

என்ன செய்யப் போகிறோம்...? என்று தெரியாமல் திருத்திருவென்று முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 7

பொதுவாகவே மலை பிரதேசங்களில் மாலை 6:00 மணிக்கு மேல் பொது போக்குவரத்துகள் செல்ல அனுமதி இருக்காது....

மகிழுக்கு ஒரு நிமிடம் என்ன செய்ய போகிறோம் என்றே புரியவில்லை.....

சிறிது நேரம் அப்படியே நின்று இருந்தாள்.... அப்போது தங்கையிடம் இருந்து கால் வரவும், அவசரமாக அட்டென்ட் செய்து பேசினாள்.

"அக்கா எங்க இருக்க...? ஏன் இன்னும் வரல....? அம்மாவுக்கு பிக்ஸ் வந்துடுச்சு... எனக்கு என்ன பண்றதுனே தெரில.... பக்கத்து வீட்டு ஆண்ட்டிய தான் கூப்ட்டேன்.... "

"அவங்க தான் தெரிஞ்ச ஆட்டோ புடிச்சு தந்தாங்க..... இங்க மழை வேற பெய்யுது.... அதுனால ஆட்டோக்கார அண்ணா தூரமா போக முடியாதுனு சொல்லி, பக்கத்துலயே இருக்க மலர் கிளினிக்ல விட்டுட்டு போய்ட்டாங்க"

"எனக்கு என்ன பண்றதுனே தெரில கா.... சீக்கிரம் வா.... தனியா இருக்க பயமா இருக்கு...." அழுது கொண்டே பேசினாள்.

"நான் இதோ வந்துட்டே இருக்கேன் யாழு மா ... கொஞ்ச நேரம் பொறுத்துக்க வந்துடுவேன்.... அழக்கூடாது... நீ தான அம்மாவுக்கு தைரியம் சொல்லணும்....அம்மா பக்கத்திலேயே இரு,இன்னும் கொஞ்ச நேரத்துல நான் வந்துருவேன்...."என்று போனை அணைத்தபடி, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பார்க்கிங் நோக்கி நடந்து செல்வதை, மேலே தனது அறையிலிருந்து எந்த ஒரு உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல், உறுத்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ஆதிரத்னேஸ்வரன்.

ஸ்கூட்டி சீட்டுக்கடியில் எப்பொழுதுமே வைத்திருக்கும் ரெயின் கோட்டை எடுத்து அணிந்தப்படி அதனை உயிர்ப்பித்து சென்றுவிட்டாள்.

அவளது நல்ல நேரமோ என்னவோ, சற்று நேரத்திலேயே மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து... முற்றிலுமாக நின்றுவிட்டது.

இருந்தும் நனைந்த உடல், குளிர்ந்து உதறல் எடுக்க ஆரம்பித்தது. எங்காவது சிறிது நேரம் நின்று விட்டு செல்லலாம் என்றால், இருட்டு வேறு அச்சுறுத்தியது... அதனால் நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இருந்தாள்.

எதிரிலுள்ள விம்பத்தை மறைக்கும் அளவிற்கு கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. புறங்கையால் துடைத்துவிட்டு ஓரளவுக்கு வேகத்துடன் ஓட்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு வளைவில் திரும்பும் பொழுது சிறு கல் ஒன்று இடறி ரோட்டில் ஸ்லிப் ஆகிவிட்டாள்.... காலை ஊன்றி பேலன்ஸ் செய்த போதிலும், பக்கத்திலிருந்த கல் ஒன்றில் முழங்கை உரசி ரெயின் கோட் கிழிந்து,லேசாக சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

கீழே விழுந்ததை விட, தனது அனாதரவான நிலையை நினைத்து அழுகை பெருகியது.... வண்டியை தூக்கி விட்டு எழ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அப்படியே சரிந்த நிலையிலேயே அழுது கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு காரின் ஹாரன் சத்தத்துடன் கூடிய, வெளிச்சம் கண்ணில் தென்பட்டது. பரரப்பாக எழுந்து கொண்டாள்... எப்படியாவது போயாக வேண்டுமே...!

தனது ஸ்கூட்டியை நிமிர்த்துவிட்டு.. மனதை சற்றே நிலைப்படுத்திய படி, கிடுகிடுவென ஆடிய கை, கால்களை முடிந்த அளவு நிலைப்படுத்தியபடி... வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

'இந்தக் கார ஃபாலோ பண்ணிட்டு எப்படியாவது போயிடலாம்.... ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்துல, இந்த கார் வந்ததே கடவுள் புண்ணியம்' என்று எண்ணியபடி அந்தக் காரை பின் தொடரலானாள்.

அவளுடைய நல்ல நேரம், அந்த காரானது,அவள் செல்லும்... அவளுடைய ஊரான பூம்பாறைக்குள்ளே நுழைந்தது.

' அப்பாடா இனி பயம் இல்லை..' என்றபடி, வீட்டுக்கு சென்று உடை கூட மாற்றாமல் நேராக கிளினிக் நோக்கி சென்றாள்.

அங்கே, வெளியே யாழினி அழுது கொண்டிருக்க.... அடிப்படை வசதிகள் மட்டுமே இருந்ததால், அவளது அம்மாவிற்கு தேவையான முதலுதவிகள் மட்டும் செய்து படுக்க வைக்கப்பட்டிருந்தார்.

'யாழினி என்று அழைத்தது தான் தாமதம் வேகமாக ஓடி வந்து, "அக்கா ரொம்ப பயந்துட்டேன்... நல்ல வேல நீ வந்துட்ட..." என்றபடி இருக்க அணைத்துக் கொண்டாள்.

சரி அழாதடி... நான் தான் வந்துட்டேன்ல... டாக்டர் என்ன சொன்னாங்க..? அம்மாக்கு இப்போ எப்டி இருக்கு...?

டாக்டர்லாம் இல்ல கா.... ஈவினிங்கே போயிட்டாங்களாம்... பெரிய நர்ஸ் தான் இருந்தாங்க... இப்போ தான் செக் பண்ணாங்க... கொஞ்ச நேரம் முன்னாடி தான் ரூமுக்கு போனாங்க..நீ வந்ததும் அழைச்சுட்டு வர சொன்னாங்க....போய் பேசிட்டு வருவம் வா...

நீ இங்கயே அம்மா கூட இரு டி... நா போய் பேசிட்டு வரேன்..

ஹ்ம் சரி கா, சீக்கிரம் வந்துடு.. ஒரு மாதிரி பயமா இருக்கு....

சரி டி.... என்றபடி சென்று பேசிவிட்டு வந்தவள்... அம்மாவ மார்னிங் வீட்டுக்கு கூட்டி போக சொல்லிட்டாங்க டி... ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையாம், நைட் இங்க தான் இருந்தாகணும்... நீ சாப்டியா?

சாப்ட்டேன் கா.... நீ?

பசிக்கல டி.... என்றாள் பெருமூச்சுடன்.... இனி எங்க போயி சாப்பாடு வாங்கி சாப்பிடறது என்ற அலுப்பினால்...

இருவரும் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டு காலை 7:00 மணிக்கெல்லாம் தங்களது அம்மாவையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டனர்.

யாழினி அன்று கல்லூரிக்கு விடுமுறை எடுத்து விட்டு தாயை பார்த்துக் கொண்டாள்....

மகிழ் அலுவலகத்திற்கு லீவு போட முடியாத காரணத்தினால், அவசர அவசரமாக இரண்டு இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட்டாள்.

மிகுந்த சோர்வுடன் தான் அலுவலகத்திற்கு வந்தாள்.

கையில் உள்ள காயம் தெரியக்கூடாது என்பதற்காக ஃபுல் ஹாண்ட் சுடிதார் அணிந்து வந்திருந்தாள்.

வழக்கம் போல் காவ்யாவிடம் பேசிவிட்டு, தான் வேலை பார்க்கும் டேபிளில் போய் அமர்ந்து வேலையை ஆரம்பித்து விட்டாள்.


ஆதி இன்னும் வந்திருக்கவில்லை... அதுவரை நிம்மதி என்றபடி... நேற்று அவன் கொடுத்த வேலைகளை விட்ட இடத்தில் இருந்து தொடங்கி செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 8

காலை 11 மணி அளவில் தான் ஆதி அலுவலகத்திற்கு வந்தான்.

வந்தவன் எழுந்து நின்று 'குட் மார்னிங் சார் ' என்று கூறிய மகிழை, ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு தனது வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டான்.

அலுவலக ஆட்கள் உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருந்ததால், வேறு எதுவும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

அன்று பெரிதாக அவளை அவன் எதுவும் சொல்லவில்லை.... மதிய உணவு இடைவேளைக்கும் காவ்யா அழைக்கும் முன்னே சென்றுவிட்டாள்.

அவளின் புலம்பல்களை கேட்டுக்கொண்டே மென் சிரிப்புடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மீண்டும் யாழினியிடமிருந்து அழைப்பு வந்தது.

'இந்த டயத்துக்கு போன் பண்ண மாட்டாளே' என்று நெற்றி சுருக்கி யோசித்தபடியே... அழைப்பை ஏற்று பேசலானாள்.

"சொல்லு யாழினி, என்ன ஆச்சு...? ஏன் இந்த டைம்க்கு போன் பண்ணிட்டு இருக்க....? ஈவினிங் எதுவும் வாங்கிட்டு வரணுமா...? அம்மா நல்லா இருக்காங்கல்ல...?"என படபடவென்று கேள்விகளை அடுக்கினாள்.

"அக்கா...இல்ல கா.... அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. திரும்ப நான் உனக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு, கிளினிக்கு கூட்டிட்டு போனேன். ஆனா அங்க பாக்க முடியாது.... பெரிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க அப்படின்னு சொல்லிட்டாங்க. அதனால இப்ப கொடைக்கானல்ல இருக்க ஜி.ஹெச்க்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கேன் கா.உன்னால வர முடியுமா...? எனக்கு பயமா இருக்கு... "

"உன்ன டிஸ்டர்ப் பண்ணவும் கஷ்டமா இருக்கு... யாரோ புது சிஇஓ வேற வந்திருக்காங்கன்னு சொன்ன... இருந்தாலும் நான் ஆட்டோகார அண்ணா ஹெல்ப்னால தான் அம்மாவையே இங்க கூட்டிட்டு வர முடிஞ்சது.... வந்தேனா பெட்டரா இருக்கும் கா.."

அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை, அடுத்தடுத்த பிரச்சனைகளால் மூளை மழுங்கியதைப் போல் இருந்தது.

"சரிடி நீ இப்ப எங்க வந்துட்டு இருக்க..?" என்று கேட்டுவிட்டு, "நீ அங்க வரும்போது நான் ஹாஸ்பிடல் வந்துடுவேன், கவலைப்படாம வா.." என்று கூறியபடி டிபன் பாக்ஸை மூடிவிட்டு எழுந்தாள்.

காவ்யாவும், அவளுடைய உரையாடலை கவனித்திருந்தபடியால்... "என்னடி அம்மாவுக்கு உடம்பு முடியலையா...?பணம் எதுவும் வேணுமா....?"என்று கேட்டுக்கொண்டே உடன் எழுந்தாள்.

"ஆமாடி, நான் எல்லா டீடெயிலும் வந்து சொல்றேன்... இப்போ பர்மிஷன் கேட்டுட்டு நான் கிளம்பனும்.. டைம் ஆயிடுச்சு மேனேஜர் ராம் எங்கடி இருப்பாரு...? என்றபடி நடந்தாள்.

"நீ, ராம் சார்கிட்ட பர்மிஷன் கேட்க முடியாதுடி... இப்போ உன்னோட வொர்க் சிஇஓ க்கு கீழல்ல அப்ப ஈஸ்வர் சார் கிட்ட தான் நீ பர்மிஷன் கேட்கணும்..." என்றதும் ஷாக் அடித்தது போல் அப்படியே நின்றாள்.

நிதர்சனம் அப்போது தான் புரிந்தது. 'ஐயோ, அவன்கிட்டயா என்றானது.....'எப்படியும் வேற வழியும் இல்லாததால்... "சரி டி அவர்கிட்ட கேட்டுக்குறேன்" என்றபடி ஆதியின் அறையை நோக்கி சென்றாள்.

அவனிடம் அனுமதி வாங்கி விட்டு உள் நுழைந்தவள், "சார் எனக்கு ஹாப் டே பெர்மிஷன் வேணும்" என்றாள்,எடுத்த உடனேயே.

அவன் நிமிர்ந்து பார்த்து எதுவும் கேள்வி கேட்காமல், 'ஏன்' என்பது போல் ஒற்றைப் புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கினான்.

அதை புரிந்து கொண்டவள், "அம்மாக்கு உடம்பு சரியில்ல.. ஹாஸ்பிடல் போகணும்"

அவளை அளந்தப்படி, "ஓ அப்படியா...! ஆனா, நேத்து கொடுத்த ஒர்க் இன்னும் முடிக்கல போலயே.... அப்புறம் எப்படி நான் பர்மிஷன் கொடுக்கிறது" என்றான் கொஞ்சமும் இரக்கம் இன்றி.

"சார் நா நாளைக்கு வந்து முடிச்சிடறேன்... சார் ப்ளீஸ் இன்னைக்கு போயே ஆகணும்.... அம்மாக்கு உடம்பு சரியில்ல, தங்கச்சி தனியா இருப்பா...ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க" என்றாள் வேற வழியில்லாமல் கெஞ்சும் குரலில்.

"இத எப்டி என்னை நம்ப சொல்ற...? அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு பர்மிஷன் போட்டுட்டு, மே பி வேற யார் கூடவும் அவுட்டிங் போலாம்னு பிளான் பண்ணி இருந்தா..? உங்களோட என்ஜாய்மென்ட்காக, என் ஆபீஸ் ஒர்க் ஆ நா ஸ்பாயில் பண்ணிக்க முடியாதுல்ல..."

"சார் நான் உண்மைய தான் சொல்றேன். பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.... ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க "

"ஆமால்ல மேடம் பொய்யே சொல்ல மாட்டீங்க..." என்றான் நக்கலாக.

"நா, ஏன் சார் பொய் சொல்லணும்..? அப்படி ஒன்னும் எனக்கு அவசியமில்ல... அதுவும் இந்த விஷயத்துல நான் பொய் சொல்ல மாட்டேன்...?"

நம்பிக்கை இல்ல என்பதைப்போல், உதட்டை பிதுக்கியப்படி "உங்கள பத்தி எனக்கு தெரியாதா..? ஒருத்தனை காதலிச்சு கழட்டி விட்டுட்டு, இன்னொருத்தன கல்யாணம் பண்ணி, இப்ப அவன் கூடயும் இல்ல போலயே..."என்றான் அவளை மேலிருந்து கீழ் அருவருப்பான ஒரு பார்வை பார்த்தபடி .

"சீச்சீ" என்று முகத்தை சுளித்தபடி திரும்பிக் கொண்டாள்.

அவளது ஒரு மனமோ, 'அவனை பொறுத்த வரைக்கும்.... நீ இன்னொருவனின் மனைவி, அவனை ஏமாற்றியவள்... அதனால் அப்படித்தான் பேசுவான்' என்று வாதித்தாலும்...

இன்னொரு மனமோ, 'அப்போ அவன் என்ன காதலிச்சதெல்லாம்....? என் மேல துளி கூடவா நம்பிக்கை இல்ல...? நான் ஏன் அப்படி பண்ணேன்னு கூட அவன் கேட்கலயே...?'

' இவன போய் நான் காதலிச்சேன் பாரு....அந்த காதல்னால எனக்கு வலியும் வேதனையும் தான் மிச்சம்' என்று மனதுக்குள் புலுங்கினாள்.

அவளின் 'சீச்சீ' என்ற உதாசீனமான முகத்திருப்பல்... அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை எழுப்பி விட்டது.

விறுட்டென்று எழுந்தவன், "என்னடி சீச்சீ...?" என்ற படி அவளை நோக்கி சென்று, அவளது தாடையை இறுக பற்றிய படி....

" பண்ற அசிங்கத்தை எல்லாம் நீ பண்ணிட்டு என்ன பார்த்து சீச்சீ னு சொல்லுவியா...? "

"என் முன்னாடி நிக்க கூட தகுதி இல்லாத உன் கூட எல்லாம் பழகுனேன் பாரு,என்ன சொல்லணும் டி" என்றான் உக்கிரமாக.

அதில் வெகுண்டெழுந்தவளோ... "மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ஆதி... உன்ன மாதிரி கேவலமான ஒருத்தன காதலிச்சதுக்கு நான் தான் வருத்தப்படணும்...." என்று அவளும் பதிலுக்கு பதில் சீறினாள்.

அவ்வளவுதான் ஆதி தனது சுயத்தை இழந்தான்.....அவளை எப்படியாவது காயப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்தில்... அவளை மேலும் நெருங்கி ஒரு கையால் அவளது தாடையை பிடித்தபடி, பின்னந்தலை முடியை இறுக்கமாக பிடித்து, காற்று கூட புகாதபடி இறுக அணைத்து .... அவனது வல்லின இதழோடு அவளது மெல்லிய இதழ்களை பொருத்தினான்....!

நீண்ட நெடிய உயிரை உருக வைக்கும் இதழ் யுத்தம்....

ஏற்கனவே நெடு நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்த்ததிலிருந்தே,அவளின் அருகாமையால், அவனுக்குள் கொழுந்து விட்டு எறியும் மோகத்தீயை அணைக்க வழி தெரியாமல்... அந்தக் கோபத்தையும் அவள் மேலயே காட்டிக் கொண்டு திரிந்தான்.

இப்போது அதற்கு ஏற்றார் போல், அவளும் வந்து வகையாக மாட்டிக் கொள்ள பழிவாங்குகிறேன் என்ற பேரில் அவளது இதழ் வழியே உயிரை உறிஞ்சி கொண்டிருந்தான்.

அந்த நெடிய இதழ் ஒற்றுதலானது நொடிகளைக் கடந்து, நிமிடங்களைக் கடந்து... சென்று கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அவள் மூச்சுக்கு திணறவும் தன்னிலைக்கு வந்தவன், அவள் சுவாசிப்பாதற்க்காக தன்னை விட்டு சிறிதளவே அவளை பிரித்தான்.

ஒரு சில நொடிகள் மட்டுமே மூச்சு விட நேரம் கொடுத்தவன்... மீண்டும் இறுக அனைத்தபடி,விட்ட இடத்திலிருந்து இதழனைப்பை தொடர்ந்து விட்டான்.

மகிழால் நிற்க கூட முடியவில்லை... தொய்ந்து விழப்போனவளை,இடையில் கரம் கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டு...தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.

அவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்து, மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தாள்.

அவளது நிலையை உணர்ந்த பின்னரே அவளை விளக்கினான்.

அவளால் நிற்க கூட முடியவில்லை... கை,கால்கள் கிடுகிடுவென நடுங்க, உடல் முழுவதும் வியர்வையில் தொப்பமாக நனைய்திருக்க... தள்ளாடியபடி கீழே விழப் போனாள்.

மெதுவாக தாங்கி பிடித்து அவளை அருகில் இருந்த சோபாவில் உட்கார வைத்து விட்டு தண்ணீரை எடுத்து வந்து நீட்டினான்.

அவளுக்கும் தற்போது நீர் தேவைப்பட்டதால், வீணாக விவாதம் ஏதும் செய்யாமல் கடகடவென்று தண்ணீரை குடித்தாள்.

ஓரளவு நிதானம் வந்த பிறகு தான் தன்னுடைய நிலை உணர்ந்து கண்களை கரித்துக் கொண்டு வந்தது.

ஆனால் அவனோ, மிகவும் சாதாரணமாக நின்றுபடி அவளைத்தான் அளவிட்டுக் கொண்டிருந்தான்.

அவனது தோரணையில், அவளுக்கு ஆத்திரம் வர, " ஹவ் டார் யூ ஆதி....? எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணிருப்ப...? இப்படி பண்றதுக்கு உனக்கு வெட்கமா இல்ல...? " என்றாள் அருவருப்பான முகபாவனையுடன்.

அதுவரை மனதுக்குள் இருந்த லேசான இதமும் தொலைந்து போக, இறுகியபடி "நான் கிஸ் பண்ணும் போது நீ ஒன்னும் தள்ளி விடலையே...? அப்போ உனக்கும் நான் தேவைப்படுறேன் என்று தானே அர்த்தம்...?"

சீச்சீ....

"என்னடி சீச்சீ....பெரிய பத்தினி மாதிரி ஓவர் ஆக்ட் பண்ணிக்கிட்டு இருக்க.... உனக்கு என்ன தேவை பணம் ஆர் சுகம்...? எது வேணும்னாலும் தாராளமா நான் தரேன்... இன்னும் ஒன் மன்த்க்கு என் கூட இரு....

சும்மா சொல்லக்கூடாது குடுக்கற பொருளுக்கு நீ ஒர்த்தா தான் இருப்ப....கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே அது எனக்கு புரிஞ்சிருச்சு....

சோ, நான் இங்கே இருக்கிற வரைக்கும் கம்பெனி கொடு... உனக்கு என்னென்ன வேணுமோ எல்லாமே வாங்கிக்க....தட்ஸ் சால்.

அவனது முறையற்ற பேச்சில் பிரம்மை பிடித்தவள் போல் அவனையே வெறித்துக் கொண்டு, அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

அவள் மனதுக்குள்ளோ,'இந்த இடத்தில இருந்து ஓடிடு மகிழ்...' என்ற குரல் மட்டும்தான் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் உடலோ மறத்து போய் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அனைத்து புலன்களும் செயல் இழந்த நிலையில்,அவன் கண்ணிலேயே படக்கூடாது என்று மட்டும் தோன்றியது...!

வேகமாக எழுந்தவள், அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல்... விறுவிறுன்னு தனது ஹேண்ட் பேக் மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விட்டாள்.

அவனும் அவளை அழைக்கவில்லை.... பின்னந்தலையை வருடியபடி போய் தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி யோசிக்கலானான்.

'நான் ஏன் அவகிட்ட அப்டி கேட்டேன்..? ஈவு இறக்கமே இல்லாமல் பழி வாங்கணும்னு சொல்லிட்டு, இப்போ அவள போய் என் கூட வாழ சொல்லி கேட்டு இருக்கேன்' என்று வாதித்தது ஒரு மனம்

மோகம் கொண்ட இன்னொரு மனமோ, 'அவளை எப்படியும் பழிவாங்குறதுன்னு ஆயிடுச்சு எனக்கு புடிச்ச மாதிரி, என் ஸ்டைல் பழி வாங்கிட்டு போறேனே' என்றது.

அவளை நினைத்தவுடன் மிகமிக மெதுவாக தன் இதழை வருடி கொண்டான்..... ஜிவ் என்ற பீல் உடல் முழுவதும் பரவி, ஆண்மை முறுக்கேறியது......

அதுக்காக எச்சி தட்டுல சாப்பிட போறியா....?

நான் ஒன்னும் அவள கல்யாணம் பண்ணிக்க போறதில்லயே, ஜஸ்ட் பெட் பாட்டனரா தானே வச்சிருக்க போறேன்.....அதுவும் கொஞ்ச நாளைக்கு மட்டும்.

என்னமோ சொல்ற.... என்னமோ பண்ணி தொலஞ்சு, அவளை பழி வாங்கினா சரி.... என்று இரு மனங்களும் ஒரு புள்ளியில் இணைந்தது.

ஆதியின் யோசனைகள் இப்படி ஓடிக்கொண்டிருக்க....

வெளியில் வந்த மகிழோ, வேகமாக மருத்துவமனை நோக்கி சென்றாள்..

அவளுக்கு நின்று வருத்தப்பட்டு அழுவதற்கெல்லாம் நேரம் இல்லை.

அவளுக்கு இப்போது தனது தாய் மற்றும் தங்கையைப்போய் பார்த்து, அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்... வேறு எந்த எண்ணமும் இல்லை.

'என்னென்ன பேசிட்டான்....எவ்ளோ அசிங்கமா பேசிட்டான்....' என்றெல்லாம் ஒரு பக்கம் ஓடினாலும்... 'இவன் கிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும், அவன் எப்போதுமே இப்படித்தானே.... ஒரு துளி கூட என் மேல நம்பிக்கை இருந்ததில்லையே....' என்று ஒரு விரக்தி சிரிப்புடன் எண்ணிக்கொண்டாள்.

இனி கண்டிப்பா அவன் முகத்திலேயே முழிக்க கூடாது... இந்த வேல போனா போயிட்டு போகுது... இனி வேலைக்கும் போகக்கூடாது...

'வேற ஏதாவது வேல தேடிக்கலாம்... சர்டிபிகேட் வாங்க கூட போகக்கூடாது... கூலி வேல செஞ்சு கூட பொழச்சிக்கலாம்.. ஆனா இவன் கிட்ட போய் நிற்கவே கூடாது...' என தனது கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க புறங்கையால் துடைத்தபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

ஹாஸ்பிடல் போய், பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தும்போதுதான் மிரர் வழியாக பார்த்தாள்....தொடர்ந்த இதழ் யுத்தத்தால், அவளை வெகுவாகவே காயப்படுத்தியிருந்தான் .

இதழின் ஓரம் சிறு துளியாக ரத்தம் துளிர்த்து காய்ந்து உறைந்து போய் இருந்தது.


வேகமாக ஷால் கொண்டு அதனை துடைத்தபடி, தனது தலை முடியை சரி செய்து விட்டு .... தங்கைக்கு கால் செய்தாள்.

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 9

"இதைவிட, இன்னும் பெரிய பெரிய பாரங்களை....சுமக்க வேண்டி நீ பிறந்துள்ளாய்" எனக் கூறுவது போல் இருந்தது அச்செய்தி.

"உங்க அம்மாவோட ஹார்ட்ல பிராப்ளமா... ஆல்ரெடி வால்வு ரொம்ப வீக்கா இருந்திருக்கு, அதோட அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகி, சரியான ட்ரீட்மென்ட் எடுக்காம இருந்திருக்கீங்க...."

"இப்ப ரொம்ப கிரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்காங்க... உடனே ஆபரேஷன் பண்ணி ஆகணும்..."

"இங்க அந்த ஆபரேஷன்லாம் பண்ண மாட்டோம் மா... பிரைவேட்க்கு தான், நீங்க கொண்டு போகணும்.." என்று கையை விரித்து விட்டனர்.

ஆப்ரேஷன் பண்ணா அம்மா பொழைச்சிடுவாங்கல்ல டாக்டர்...?

அதையும் கன்ஃபார்மா சொல்ல முடியாதுமா... அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க... சோ 50 பர்சன்டேஜ் தான் சான்ஸ் இருக்கு.

மொத்தமாக நொறுங்கி விட்டாள் மகிழ்... யாழினி அம்மாவுடன் இருந்ததால், இந்த உரையாடல்களை கேட்க நேரவில்லை.

எப்படி நடந்து தாயை அனுமதித்திருந்த அறைக்கு அருகில் வந்தால் என்பதே தெரியாமல்... திக்பிரமை பிடித்தவளை போல், நடந்து வந்து கொண்டிருந்தாள்....

அறைக்கு வெளியே நின்ற யாழினியோ, "டாக்டர், என்ன அக்கா சொன்னாங்க...? இப்போ கிளம்பலாமா...? எனக்கு இங்க இருக்கவே புடிக்கல.... ரொம்ப ஸ்மெல்லா இருக்கு.... வீட்டுக்கு போகலாம் சீக்கிரம்..." என்றாள்.

எப்போதும் போல சாதாரணமான மயக்கம் என்று யாழினி அவள் பாட்டுக்கு கூறிக் கொண்டிருந்தாள்....

அவளை நிமிர்ந்து பார்த்த மகிழ், எதுவும் கூற முடியாமல்... மனதுக்குள்ளேயே, 'சின்ன பொண்ணு அவகிட்ட சொல்லி மட்டும் என்ன பண்ணப்போறா..?அவளாவது எதுவும் தெரியாம நிம்மதியா இருக்கட்டும்....'என்றெண்ணியபடி....

இல்லடி ஏதோ டெஸ்ட் எடுக்கணுமாம்...அது இங்க எடுக்க மாட்டாங்களாம், பிரைவேட் ஹாஸ்பிடல்ல தான் எடுக்கணுமாம்.

சோ அம்மாவ இப்ப பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகப்போறோம் ...

இப்பவே மணி நாலாச்சுக்கா, இனி கூட்டிட்டு போயிட்டு நம்ம வீட்டுக்கு போக ரொம்ப லேட்டா ஆயிடுமே.... என புலம்பிக் கொண்டாள்.

அம்மா இப்பதான் எழுந்திருச்சு... ஆனா இன்னும் ஒன்னும் சாப்பிடல, பேசல....பேசாம அமைதியா உட்கார்ந்து இருக்கு என்றாள்.

சரி வா உள்ள போவோம்.... என்றபடி, உள்ளே நுழைந்து.... அம்மாவை சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு, அருகிலுள்ள மிகப்பெரிய மல்டி நேஷனல் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றாள்.

யாழினி தான் யோசனையாக, அக்கா இங்க காசு ரொம்ப அதிகமா வரும் கா.... சாதாரண டெஸ்ட் தானே, நம்ம நார்மலா உள்ள ஹாஸ்பிடல்ல எடுத்து இருக்கலாம்ல என்றாள்.

இங்க தான் வந்து எடுக்க சொல்லி இருக்காங்க டி....வா பாத்துக்கலாம்.

அங்கு சென்று ரிசெப்சன் ல் விசாரித்து எல்லாம் பேசிய பின், தாயை ஒரு அறையில் படுக்க வைத்து விட்டு, யாழினியை துணையாக இருக்கச் சொல்லிவிட்டு....டாக்டரை பார்க்க சென்றாள்.

ஜி.ஹச் ல் எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை டாக்டரிடம் கொடுத்தவள், அங்கு கூறியவற்றையும் கூறிவிட்டு டாக்டரின் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அந்த லேடி டாக்டரும் ரிப்போர்ட் அனைத்தையும் பார்த்துவிட்டு, "அவங்க சொன்னது உண்மைதான்மா.... ரொம்ப க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல தான் இருக்காங்க... உங்க அம்மாக்கு இன்னும் த்ரீ டேஸ் குள்ள, கண்டிப்பா ஆப்ரேஷன் பண்ணியாகணும்.... "

"அப்படி பண்ணலனா, மினிமம் ஒன் வீக் மேக்ஸிமம் த்ரீ மந்த்ஸ் வரைக்கும் தான் உயிரோட இருப்பாங்க..." என்றார்.

மகிழுக்கு தலை சுற்றி கண்களை இருட்டிக் கொண்டு வந்தது...

அப்போ ஆபரேஷன் பண்ணிடலாம் டாக்டர்....எப்படியாவது எங்க அம்மாவை காப்பாத்துங்க... என்றாள் வேகமாக....

டாக்டரோ ஒரு நிமிடம் அவளின் தோற்றத்தை அளவிட்டுவிட்டு, "ஆப்பரேஷன் பண்ணிடலாம்மா, ஆனா அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் வருவாங்க அதோட இங்க 15 டேஸ் ஆவது உங்க அம்மாவை அப்சர்வேஷன்ல வச்சிருந்து தான் அனுப்புவோம்...."

"சோ மினிமம் 20 டு 25 லேக்ஸ் வரைக்கும் செலவாகும்... உங்களால அவ்வளவு பணம் ரெடி பண்ண முடியுமா....?"

25 லேக்ஸ் ஆ....? என்று அவள் கூறிய தோரணையிலேயே, " ஓகே மா, நீங்க வேற ஹாஸ்பிடல் பாத்துக்கோங்க... இங்க கண்டிப்பா உங்களுக்கு செட் ஆகாது.... " எனக் கூறி முடித்து விட்டார்.

மகிழுக்கு நன்றாக தெரியும், கொடைக்கானலில் இருக்கும் மருத்துவமனைகளிலேயே இந்த மருத்துவமனையில் தான் செலவு கொஞ்சம் அதிகமானாலும், இந்த மாதிரி ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எல்லாம் நடக்கும் என்று.....

எனவே சற்று சுதாரித்தவளாக, எனக்கு ஒரு ஒன் வீக் மட்டும் டைம் குடுங்க மேம்.... நா பணம் ரெடி பண்ணிட்டு எப்படியாவது கட்டிடுறேன்.....

சாரிமா அந்த அத்தாரிட்டி எல்லாம் எனக்கு கிடையாது.... இன்னும் த்ரீ டேஸ் குள்ள நீங்க பணம் கட்டுனீங்க அப்படின்னா மட்டும்தான் ஆபரேஷன் பண்ண முடியும்.... அப்படி இல்லன்னா கண்டிப்பா முடியாது, நீங்க இப்பவே அழைச்சிட்டு போயிடலாம்.... என்றார் சற்று கராறான குரலில்.

நிதர்சனம் புரிந்தாலும், எப்படியாவது தாயை காப்பாற்றி விட வேண்டும் என்ற தவிப்புடன், "ஓகே டாக்டர், நா பணம் த்ரீ டேஸ்ல ரெடி பண்ணி கட்டிறேன்....." என்றாள்.

பட் இந்த த்ரீ டேஸ் அவங்க இங்க ஸ்டே பண்ணி நாங்க ட்ரீட்மென்ட் பாக்குறதுக்கு 3 லாக்ஸ் நீங்க இனிஷியல் அமௌன்ட் பே பண்ணியாகணும்.... அதுக்கு ஓகேன்னா நீங்க கண்டினியூ பண்ணுங்க, இல்லைனா கூட்டிட்டு கிளம்பிருங்கம்மா.... என்றபடி ஒரு நர்சை அழைத்து ட்ரீட்மென்ட் பத்தி இவங்களுக்கு எல்லா டீடெயிலும் சொல்லிருங்க....என்றபடி வெளியேற்றி விட்டார்.

மகிழ் யோசிக்கலானாள்....எப்படியும் அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணி எப்படியாவது காப்பாற்றியே ஆகனும்.

சென்னையில இருந்த வீடு வித்த பணத்தில் மிச்சம் அஞ்சு லட்சம் பேங்க்ல இருக்கு சோ அத எடுத்து 3 லட்சம் இனிஷியல் அமௌன்ட் கட்டிடலாம்.

அது ஒரு பிரச்சனை இல்ல.... இன்னும் 20 லட்சம் வேணும்... அதுக்கு எங்க போறது...? யார்கிட்ட கேட்கிறது...? ப்ராபர்டினும் எதுவும் இல்லையே... என்ன பண்ண போறேன்...? என்று யோசிக்கலானாள்.

அன்று இரவு அப்படியே சென்று விட,மறுநாள் காலை அவர்களைப் பார்த்துவிட்டு போவதற்காக காவ்யா வந்திருந்தாள்.

அவளிடம் அனைத்தையும் கூறியவள், " இப்ப என்ன பண்றதுனே தெரியலடி... அவ்ளோ பணத்துக்கு நா எங்க போவேன்...? யார்கிட்ட கேட்பேன்....? " எனக் கூறியபடி தனது இயலாமையை நினைத்து அழுதாள்.

காவ்யாவோ சிறிது நேரம் யோசனைக்கு பின் நீ இப்ப சிஇஓ-க்கு கீழ தானே வேலை செய்ற.... சோ அவர்கிட்ட டைரக்ட்டா பேசுற சான்ஸ் உனக்கு இருக்கு.

அவருக்கு இதெல்லாம் ஒரு பெரிய அமௌன்டே கிடையாது.... நீ பேசாம அவர்கிட்ட லோன் மாதிரி இல்லன்னா கடன் மாதிரி கேட்டு பாறேன்....

மகிழுக்கோ அதில் உடன்பாடு இல்லை... 'காவ்யாவுக்கு அவன பத்தி தெரியாது, அதனால அப்படி சொல்றா.... போய் கேட்டனா இன்னும் கொஞ்சம் அசிங்கமா வேணா பேசுவானே தவிர, எந்த ஹெல்ப்பும் பண்ண மாட்டான்' என மனதுக்குள் எண்ணியபடி....

"அது சரி வராதடி, வேற ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு..." என்று விட்டாள்.

எனக்கு தெரிஞ்சு இது ஒரு ஐடியா தாண்டி இருக்கு.. என்னாலையும் அவ்வளவு பணம் புரட்ட முடியாதுனு உனக்கே தெரியும்....

சோ உனக்கும் பெருசா வெளியில யாரும் பழக்கம் கிடையாது.... ஆபீஸ்லயும் அந்த அளவுக்கு பணம் கொடுக்கிறதுக்கு யாரும் கிடையாது... வேற வழியே இல்ல நீ ஈஸ்வர் சார் கிட்ட தான் கேட்டு ஆகணும்....

நல்லா யோசிச்சுக்கோ ஜஸ்ட் ஒரு ட்ரை தான அவர் தரல்ல அப்படினா அடுத்த விஷயத்தை பத்தி நம்ம யோசிப்போம்..

சரி நீ நல்லா யோசிச்சுட்டு, ஆபீஸ்ல வந்து பேசு...நான் கிளம்புறேன் இப்ப டைம் ஆயிட்டு என்றபடி கிளம்பி விட்டாள்.

மகிழும் எவ்வளவோ யோசித்து யோசித்து பார்த்துவிட்டு, வேறு எந்த ஐடியாவும் இருப்பது போல் தோன்றவில்லை...

அவளுக்குள், தன்மானம் பெரிதா...? தாயின் உயிர் பெரிதா...? என்று மிகப்பெரிய போராட்டமே நடந்தது....

தன்மானத்தை விட தாயின் உயிர் பெரிதாக தெரிந்தது..... இறுதியில் தாயின் உயிர் தான் வென்றது....

ஆம், அலுவலகத்திற்கு சென்று ஆதியிடம் உதவி கேட்கலாம் என்ற முடிவிற்கு வந்தாள்......



 
Status
Not open for further replies.
Top