ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையின்றி நேசிக்கவா-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 10

தன் கையில் இருக்கும் கைபேசியில் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க, அதை எடுக்கலாமா...?வேண்டாமா...? என்ற யோசனையிலேயே நின்று கொண்டிருந்தாள் மகிழ்.

நீண்ட நேரமாக அடித்து அடித்து ஓய்ந்து கொண்டிருந்தது அவளது அலைபேசி....

அலுவலகத்திற்கு சென்று, ஆதியிடம் உதவி கேட்கலாம் என்று ஒரு மனதாக முடிவு எடுத்தபின், அலுவலகத்திற்கு செல்லக் கிளம்பியவளின் அலைபேசி தான் அழைத்துக் கொண்டே இருக்கிறது.

அழைத்தது வேறு யாரும் இல்லை.. அவளது பால்ய காலத்திலிருந்து, இப்போது வரை நன்றாக நட்பில் இருக்கும்.... அவளது நண்பன் விக்னேஷ் தான்.....!

'இவ்வளவு நாள் இல்லாமல், ஏன் இப்ப கால் பண்றான்' என யோசித்தபடியே அழைப்பை ஏற்று பேசலானாள்.

ஹலோ, மகிழ் எப்படி இருக்க..? ஏன் போன் அடிச்சிட்டே இருக்கேன்,நீ எடுக்கவே இல்ல...? என்றான் சற்றே பதட்டத்துடன்.

கொஞ்சம் வேலையா இருந்தேன் விக்கி.... சொல்லு என்ன விஷயம்...? ஏன் கால் பண்ணி இருக்க...?

ஏன், விஷயம் இருந்தா தான் உனக்கு கால் பண்ணனுமா...? எவ்வளவு நாள் கழிச்சு பேசுறேன்.... இப்படி வெட்டு ஒன்னு துண்டு இரண்டா பேசிக்கிட்டு இருக்க.

நான் என்ன மூணாவது மனுஷனா...? என்றான் சற்றே ஆதங்கமாக.

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல விக்கி... நான் கொஞ்சம் வேலையா இருக்கேன், அதனால தான் அப்படி பேசினேன்... சொல்லு எப்படி இருக்க...?அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா...? என்றாள் முயன்று வரவழைத்த சாதாரண குரலில்.

இங்க எல்லாரும் நல்லா இருக்காங்க... அங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா...? என்றான் சற்றே அழுத்தமான குரலில்.

அந்தக் குரலே கூறியது, இங்கு உள்ள நிலைமையை அவன் தெரிந்து தான் அழைப்பெடுத்திருக்கிறான் என்று...

அவளிடம் சிறிது நேரம் மௌனம் மட்டுமே....

எப்படி சொல்வாள்...அவளது நிலைமையை...?
அவனும் இன்னும் எவ்வளவுதான் செய்வான்...?

இப்போ இருக்க பிரச்சனைக்கு, எப்படியாவது தன் தலையை அடமானம் வச்சாவது, உதவி செய்வான் தான்...

ஆனா, அவனுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு... அதையும் அவன் பார்க்கணுமே.... இந்த குடும்பத்தையே பார்த்துக்கிட்டு இருந்தா, அவனோட லைப் என்ன ஆகிறது....?

அவன் கிட்ட உதவி வாங்கிகிட்டே இருக்கிறதுக்கும் ஒரு மாதிரி இருந்தது அவளுக்கு...

சொல்லு மகிழ், இப்படிப்பட்ட நேரத்துல கூட, உனக்கு என் ஞாபகம் வரலயா...?நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்.... அதுவாவது உனக்கு மனசுல இருக்கா? இல்ல சுத்தமா மறந்துட்டியா...?

அவனது கோபமான வார்த்தைகளில் பதறியவள், ஏன் விக்கி இப்படி எல்லாம் பேசுற உன்னை என்னைக்காவது அப்படி நினைத்து இருக்கனா...? என்றாள் இறங்கிய குரலில்.

ஓ, அதனாலதான் எனக்கு உடனே கால் பண்ணி விஷயத்தை சொன்னியா....?

நானா அப்பப்ப காவ்யா கிட்ட கால் பண்ணி எப்படி இருக்கீங்கன்னு கேட்டுக்கிறது.... நான் போன் பண்ணா கூட நீ எடுக்கறது இல்ல, அதனால நானும் உன்னை டிஸ்டர்ப் பண்றது இல்ல.

இவ்வளவு பெரிய இக்கட்டான நிலைமையில் கூட, உனக்கு என் ஞாபகம் வரலல்ல...?

இல்ல இவனால என்ன பண்ண முடியும் அப்படிங்கற மாதிரி நினைச்சுட்டியா...?

அப்படியெல்லாம் இல்ல விக்கி... உன் லைஃபையும் நீ பார்க்கணும்ல... எங்களையே நீ பார்த்துட்டு இருந்தேனா, எனக்கு ரொம்ப கில்ட்டியா இருக்கு.... அதனாலதான்.... நீ எவ்வளவு தான் எங்களுக்கு செஞ்சுகிட்டே இருப்ப...?

புரிஞ்சுதான் பேசுறியா நீ...? இந்த மாதிரி ஒரு நிலைமையில, உனக்கு உதவி செய்யாம அப்படி என்ன எனக்கு ம_று வாழ்க்கை வேண்டி கிடக்கு...?

நான் எப்போதும் சொல்ற தான்.... எனக்கு நீதான் ஃபர்ஸ்ட்... மத்ததெல்லாம் அப்புறம்தான்... அத முதல்ல உன் மனசுல ஏத்திக்க.... என்று நிதானமாக அதே நேரத்தில் உறுதியாக கூறினான்.

அவன் கூறியதோ வேறு அர்த்தத்தில்...!அவள் புரிந்து கொண்டதோ நட்பு என்னும் ரீதியில் மட்டுமே....!

அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை... இப்படிப்பட்ட உறவுகளை கடவுள் எனக்கு கொடுத்து, இன்னும் நான் உனக்கு துணை இருக்கிறேன் என்று கூறுவது போல் இருந்தது....

அமைதியாகவே இருந்தாள்...

சரி நான் கிளம்பிட்டேன், இன்னைக்கு ஈவினிங்குள்ள அங்க வந்துருவேன்...

இனிசியல் அமௌன்ட் கட்டறதுக்கு என்ன பண்ண போற....?

வீடு வித்த பணம், பேங்க்ல 5 லேக்ஸ் இருக்கு விக்கி....அதுல இருந்து 3 லேக்ஸ் இப்ப போய் வித்ட்ரா பண்ணிட்டு... மீதி பணத்துக்கு ஆபீஸ்ல போயி லோன் மாதிரி கேட்கலாம்னு இருக்கேன்.

ஓ, எந்த பிரைவேட் ஆபீஸ்ல வேலைக்கு சேந்து ஒரு வருஷத்திலேயே 20 லட்சம் லோன் கொடுக்குறாங்க மா...?

எனக்கு வேற வழி தெரியல விக்கி... ஜஸ்ட் கேட்டு தான் பார்க்கலாம்னு கிளம்பிட்டு இருக்கேன் என்றாள் உள்வாங்கிய குரலில்.

அதெல்லாம் நீ யார்கிட்டயும் போய் நிக்க வேணாம்.. நான் பாத்துக்கிறேன்... நான் அரேஞ்ச் பண்றேன்...

நீ அம்மா கூட மட்டும் இருந்து, அவங்கள நல்லா பாத்துக்க நீ... தேவை இல்லாம ஸ்ட்ரெஸ் ஆகிக்காத, நான் வந்துட்டே இருக்கேன் சரியா....? எனக் கூறியவன் சற்றே இடைவெளி விட்டு,
எப்போதுமே உனக்காக நான் இருப்பேன்....! உனக்கு தான் அது புரிய மாட்டேங்குது.... என்றான் சற்று வலி நிறைந்த குரலில்.

விக்கியை அவளுக்கு தனது ஐந்து வயதில் இருந்தே தெரியும்.... பக்கத்து பக்கத்து வீடு தான், இரு குடும்பங்களுக்கும் நல்ல பழக்கம்....

அவன் ஒரே பையன்.... மகிழ்வதனியை விட இரண்டு வயது மூத்தவன்....அவனது அம்மா இவனுக்கு 15 வயதாகும் போது கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

அதன் பிறகு முற்றிலுமாக மகிழ் குடும்பத்துடன் ஒன்றி விட்டான். அதிலும் மகிழ் மீது உயிர் நேசம் அவனுக்கு....!

அவளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே பிளஸ் டூ முடித்துவிட்டான்... ஆனால் அவளுடன் கல்லூரியில் ஒன்றாக படிக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த இரண்டு வருடங்களும் கல்லூரி செல்லாமல்....சும்மா கம்ப்யூட்டர் கிளாஸ் போவது, தொழிற்கல்வி கத்துக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு.... ஊர் சுற்றுவது என்று இருந்து விட்டு, மகிழ் கல்லூரியில் சேரும் போது அவளுடனே சேர்ந்தான்.

மகிழுக்கு, அவன் தாய் இல்லா பிள்ளை என்பதால் சிறு இரக்கம்... அதோட அவளது பால்ய காலத்தில் இருந்தே நண்பன் என்பதால் கூடுதல் அன்பு.... அவ்வளவுதான்.....

ஆனால் அவனுக்கு......!

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் விக்கி....நான் பாத்துக்குறேன் நீ வேலைய பாரு.... இப்ப தானே கம்பெனி ஸ்டார்ட் பண்ணி ஓரளவு போயிட்டு இருக்குன்னு சொன்ன....அதுக்குள்ள அத விட்டுட்டு இங்க வர்றியா...? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நான் பாத்துக்கிறேன்.

நா அங்க வரேன்....பணத்துக்கு நான் அரேஞ்ச் பண்ணிக்கிறேன், டாட்....எனக்கு கூறியபடி அலைபேசியை கட் செய்து விட்டான்.

அவளுக்கோ சற்று சங்கடமாக இருந்தாலும், ஒரு வகையில் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது. ஏதோ பெரிய பாரத்திலிருந்து விடுதலையானது போல் ஒரு உணர்வு....

முக்கியமாக ஆதிரத்னேஸ்வரனிடம் திரும்ப போய் நிற்க வேண்டாம்.....!

தனக்காகவும் யாரோ ஒருவர், இன்னும் பூமியில் இருப்பதைப் போன்ற தோற்றம்...!

'விக்கி எல்லாத்தையும் பாத்துப்பான்' என்ற மனநிலை வந்து விட்டதால், அலுவலகத்திற்கு செல்லாமல்,பேங்கிற்கு மட்டும் சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வந்து மருத்துவமனையில் கட்டி விட்டு, வீட்டிற்கு சென்று தேவையான பொருட்களை எடுத்து வந்து விட்டு, தாய் மற்றும் தங்கையுடன் இருந்து கொண்டாள்.

மூன்று வேலையும் உணவு ஹாஸ்பிடல் கேன்டீன்லையே கிடைப்பதால், அதைப் பற்றிய பெரிய கவலை இல்லை....

பணம் சற்று அதிகமாக செலவானாலும், முழுக்க முழுக்க ஹாஸ்பிடல் நிர்வாகமே அனைத்து பொறுப்பையும் எடுத்துக்கொண்டது.. தாய் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் ஆரம்பித்து அனைத்து காரியங்கும் அவர்களே கொடுத்து விட்டார்கள்.

அதனால் மகிழ் மற்றும் யாழினி அமைதியாகவே அன்றைய பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.

கடந்த சில நாட்களில் சரியான உறக்கம் இல்லாததால், மதிய உணவிற்கு பின் தாயை அனுமதித்திருந்த அறையிலேயே தரையில் ஒரு பெட்ஷீட்டை விரித்து படுத்து சற்று கண்ணயர்ந்தாள்.

யாழினியோ மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அப்பொழுதுதான் ஆழ்நிலை உறக்கத்திற்கு சென்றிருந்தாள் மகிழ்....திடீரென்று அவளது போன் ரிங் ஆனது.... பதறி எழுந்து அலைபேசியை பார்த்த அவளது கண்கள் நிலை குத்தியது.

அலுவலக நம்பரில் இருந்து கால் வந்து கொண்டிருந்தது.

அவளுக்கு ஒருவித பதட்டமான மனநிலை.... ஆம், அவள் அலுவலகத்திற்கு முறையாக விடுப்பு எதுவும் அறிவித்திருக்கவில்லை...

இருந்தும் காவ்யா ஜஸ்ட் இன்பர்மேஷனாக, வாய் வழி வார்த்தையாக மேனேஜர் ராமிடம் விஷயத்தை கூறியிருப்பதாக.... மெசேஜ் செய்திருந்தாள்.

என்னதான் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டாம் என முடிவெடுத்து இருந்தாலும், அது அப்போதைய மனநிலையால் எடுக்கப்பட்ட முடிவு .

இப்போது யோசித்துப் பார்க்கையில், அந்த வேலை அவளுக்கு மிக மிக அவசியமான ஒன்றாக தோன்றியது.... இருந்தும் அவளால் அந்த அலுவலகத்திற்கு மீண்டும் சென்று ஆதியை எதிர்கொள்ள முடியுமா.? என்பது கேள்விக்குரியே ....

சரி பேசி தான் ஆகணும், என யோசித்தபடி அழைப்பை ஏற்று பேசலானாள்.

ரிசப்ஷனில் இருந்து கால் செய்திருந்தார்கள். விஷயம் இதுதான்...!

ஏதோ முக்கியமான அவசர வேலையை, தான் பாதியிலேயே விட்டுவிட்டு வந்ததாகவும்.... அதனை வந்து முடித்துக் கொடுத்துவிட்டு விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.

அவர்களிடம் வாதிட முடியாது என நினைத்தவள்,சரி என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டாள்.

இது ஆதியின் வேலை என்பது தெளிவாக தெரிந்தது... மீண்டும் அவனைப் பார்த்து தான் ஆக வேண்டுமா...? என மனது முரண்டியது.

வேறு வழி இல்லை... போகலைனா, வேற ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பான்... தேவையில்லாமல் இனி எந்த பிரச்சனையையும் என்னால எதிர்கொள்ள முடியாது.... போய் பார்த்து என்ன வேலைன்னு முடிச்சு கொடுத்துட்டு வந்துருவோம்... என பெருமூச்சு ஒன்றுடன் எண்ணியபடியே, யாழினியிடம் கூறிவிட்டு, அலுவலகத்திற்கு செல்ல கிளம்பினாள்.

அவள் அலுவலகத்திற்குள் நுழைந்த அதே வேளையில், விக்கி ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தான்....!

மகிழை ஆவலுடன் எதிர்பார்த்த அவனது கண்கள், அவளை காணாமல் யோசனையில் சுருங்கியது....

யாழினி தான் விஷயத்தை கூறினாள்.

ஓ, அப்டியா....சரி சரி நீ இரு நான் தெரிஞ்சவங்க இங்க ஒருத்தவங்க இருக்காங்க அவங்கள பாத்துட்டு, பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரேன்... என்றபடி கிளம்பினான்....

ஆதிரத்னேஸ்வரனின் அலுவலகத்தில் தான்,அவனுக்கு கீழ் மகிழ் வேலை செய்கிறாள்... என்பது விக்னேஸ்வரனுக்கு இன்னும் தெரியாது.

மகிழும் அதை கூறவில்லை....

அது தெரிய வரும் வேலையில் விக்னேஸ்வரனின் மனநிலை....?

அதே சமயம், ஏற்கனவே ஆதிரத்னேஸ்வரனோ.... மகிழ் விக்னேஸ்வரனை திருமணம் செய்து கொண்டுவிட்டாள்... என்பதற்காகத்தான் பழிவாங்க கிளம்பி இருந்தான்.

அவள் தனியாக இருப்பதால், அவனை அறியாமலே அவன் மனம் சற்று அமைதி அடைந்திருந்தது....


ஆனால் மீண்டும் விக்னேஸ்வரனுடன் மகிழை பார்க்கும்போது, அவனது ருத்ரதாண்டவத்தை.... மகிழ் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாளோ.....?

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 11
தன் முன்னே, கைகளை பிசைந்து கொண்டு....தலையை குனிந்த படி அமைதியாக அமர்ந்திருந்தவளை பார்க்க பார்க்க மனதுக்குள் கொலை வெறி ஏறியது ஆதிரத்னேஸ்வரனுக்கு.....

அதற்கு எதிர் மாறாக மகிழோ, மனதிற்குள்... என்ன வர சொல்லிட்டு, ஒண்ணுமே சொல்லாம உட்கார வச்சிருக்கான்.... என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

'சரி நம்மளே கேட்போம்' என எண்ணியபடி....சார் வர சொல்லி இருந்தீங்களே, என்ன ஒர்க் இருக்குன்னு சொன்னீங்கன்னா... சீக்கிரம் முடிச்சு கொடுத்துட்டு கிளம்பிடுவேன்....என்றாள் பவ்யமாகவே.

அவளின் கேள்வியில், அவனுக்கோ பிபி மேலும் எகிறிது.....

ஆமாம்ல்ல,மேடம் பயங்கர பிசி.... நாங்கல்லாம் இங்க வெட்டியா தான இருக்கோம்னு சொல்ல வரீங்களா ....?

அப்படியெல்லாம் இல்ல சார்.... வொர்க் இருக்குன்னு வர சொன்னிங்கன்னு,ரிசப்சன்ல சொன்னாங்க.... ஆனா எதுவுமே நீங்க சொல்லலையே, அதனால தான் கேட்டேன்.... வேற எந்த மோட்டிவும் இல்ல சார்.

இல்ல எனக்கு புரியல... இங்க சம்பளம் கொடுக்கிறது நானா? இல்ல நீங்களா?

உங்க இஷ்டத்துக்கு லீவு எடுத்துக்கறீங்க...ப்ராப்பரா இன்ஃபர்மேஷன் ஒன்னும் சொல்றது இல்ல....

சரி ஒர்க் இருக்குன்னு வர சொன்னா.....சீக்கிரம் சொல்லுங்க நான் கிளம்பனும்கறீங்க....

இங்க சம்பளம் வாங்கிட்டு வேலை பாக்குறீங்களா...? இல்ல போனா போதுன்னு டைம் பாஸ்க்கு வந்துட்டு போறீங்களா....?

அவனது குத்தல் பேச்சில், அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது....

அப்படில்லாம் இல்ல சார்... அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அதனாலதான் நான்..... என ஆரம்பித்தவள் அதற்கு மேல் என்ன சொல்வது என்று புரியாமல் நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லாருக்கும் ஆயிரம் பிரச்சனை... அதெல்லாம் எனக்கு தேவையில்ல.

என்னோட ஒர்க், எனக்கு கரெக்டாக நடந்தாகணும்....தேவையில்லாத உங்களோட சில்லி ரீசன்ஸ் எல்லாம் என்னால கேட்டுட்டு இருக்க முடியாது.

அவளோ மனதுக்குள் அவனை வருத்தபடி....'அட லூசு பயலே வேலை வேலைங்கிறியே....அந்த வேலை தான் என்னன்னு சொல்லுன்னு சொல்றேன்.ஒரு வேலையும் சொல்லாம உட்கார வச்சு,அப்படியே பார்த்துகிட்டே இருந்தா என்னடா அர்த்தம்....?' என சரமாரியாக திட்டியபடி.....

ஓகே சார் எனக்கு புரியுது... இப்ப நான் என்ன பண்ணனும்..? என்றாள் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.

அந்தத் தோரணையும் அவனுக்கு பிடிக்கவில்லை.... எழுந்து அவள் அருகே வந்து நின்றபடி....
மகாராணி, ஏதோ போனா போகுதுன்னு வேலை பார்க்க போற மாதிரி சொல்றீங்க... வேலையே இல்லைன்னாலும் நீ இங்க வந்து உட்கார்ந்து தான் ஆகணும் ஏன்னா சம்பளம் வாங்குற இல்ல....

அவன் அருகில் வந்தவுடன் அவளும் எழுந்து இரண்டடி பின்னே தள்ளி நின்றபடி..... சம்பளம் வாங்குறதையே இன்னும் எத்தனை தடவ தான் சொல்லிக்காட்டப் போறானோ.. ? என பெருமூச்சு விட்டபடி.

இதற்கு மேல் என்ன பேசுவது...?எது பேசினாலும் குதர்க்கமாகவே பேசினா, என்னதான் செய்வது...? என அமைதியாகவே நின்று கொண்டாள்.

அதுவும் அவனுக்கு பொறுக்கவில்லை.....

வாய தொறந்து ஏதாவது பதில் பேசுங்க மிஸ்ஸஸ் மகிழ்வதனி.... இங்க ஒருத்தன் நாய் மாதிரி கத்திக்கிட்டு இருக்கான், நீங்க பாட்டுக்கு அமைதியா உக்காந்து இருந்தா என்ன அர்த்தம்...?

அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. 'இப்ப என்னை என்னதான் பண்ணச் சொல்றான் ' என்று சலிப்பாகவும் இருந்தது.

நான் எது சொன்னாலும், அதுக்கு நீங்க ஏதாவது ஒன்னு சொல்லி திட்ட தான் போறீங்க...அதுக்கு ஏன் சார் நான் பேசணும்...?அதனால தான் நான் அமைதியா இருக்கேன்.

அவளது நிதானமான பேச்சும், பொறுமையும், தன்னை சாதாரணமாக தள்ளி நிறுத்தும் பாங்கும் கூட அவனுக்கு எரிச்சலை கொடுத்தது.... கூடவே அவளது அருகாமையில் அவனது மோகத்தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில், அடுத்த டீம் மேனேஜர் ராஜேஷ் அனுமதி கேட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.

மகிழ் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு ஒரு சிநேகமான புன்னகையை சிந்தினான். அவளும் பதிலுக்கு புன்னகைத்து விட்டு திரும்பிக்கொண்டாள்.

அவன் வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பிய பிறகு... ஆதியோ ஏளனமாக மகிழை பார்த்தான்....

அவளுக்கோ மனதுக்குள் உதறலெடுத்தது....இந்த பார்வை சரி இல்லையே.... என்ன சொல்ல போறானோ என யோசித்தபடியே அவனை நோக்கினாள்.

எவன பாத்தாலும் இப்படித்தான் பல்லை இழிப்பியா....? ஒருத்தன கூட விட்றதில்ல போலவே...என்றான் எடுத்த எடுப்பிலேயே,துளி அளவுக்கு கூட அடிப்படை மரியாதை இன்றி.

தூக்கி வாரி போட்டது அவளுக்கு...

என்ன வார்த்தை கூறி விட்டான் தன்னை பார்த்து....? இன்னும் எவ்வளவுதான் கேவலப்படுத்துவான்....?

நிற்காமல் கண்ணீர் வடிந்த போதிலும்,இதற்கு மேல் பொறுமையா இருக்கக் கூடாது என அவளும் சீறிவிட்டாள்.

போதும் மிஸ்டர்.ஆதிரத்னேஸ்வரன்... திஸ் இஸ் யுவர் லிமிட்... இதோட நிறுத்திக்கோங்க, இதுக்கு மேல என்ன பத்தி ஒரு வார்த்தை பேசினீங்க அப்படின்னா அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது... என்றாள் கோபமாக.

என்னடி பண்ணுவ...? உன்னால என்ன பண்ணிட முடியும்..? நீ ஆஃப்ட்ரால் எனக்கு கீழ வேலை பாக்குற ஒரு எம்ப்ளாயி... அது மறந்து போச்சா உனக்கு....?

நான் நெனச்சனா,என்ன வேணாலும் பண்ண முடியும்...! போனா போகுதுன்னு விட்டு வெச்சா, ரொம்ப ஓவரா வாய் நீளுது...அதுவும் என்கிட்டயே....

என்ன இன்னும் பழைய ஆதி தான்கிற நினைப்பா மனசுல....?அந்த ஆதி எல்லாம் செத்து ரொம்ப நாளாச்சு டி....அதான் மொத்தமா ஒரேடியா கொன்னுட்டு வந்துட்டியே..

ஆமா கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன், ஒருத்தன் உன்ன தாலி கட்டி கூட்டிட்டு வந்தானே.... பிரண்டு பிரண்டுனு நீ என்கிட்ட சொல்லி ஏமாத்திட்டு, அவன் கூட படுத்..... எனக் கூறி முடிக்கும் முன்னே கண்ணையும் காதுகளையும் மூடிக்கொண்டு கத்தினாள்.

போதும் ஆதி...இதோட நிறுத்திக்கோ... என்ன பத்தி எதுவும் பேச வேண்டாம்.உனக்கும் எனக்கும் தான் எதுவும் இல்லன்னு ஆயிடுச்சில்ல, அப்புறம் எதுக்காக என்னோட பர்சனல் பத்தி நீ பேசுற....?

அப்படி தாண்டி பேசுவேன்... இன்னமும் பேசுவேன்.. நான் பேசக்கூடாதுன்னு சொல்றதுக்கு உனக்கு எந்த தகுதியும் கிடையாது... பாதிக்கப்பட்டது நான்...

ரொம்ப ஈசியா என்ன ஏமாத்திட்டு நீ பாட்டுக்கு கிளம்பி வந்துருவ... நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா...?

அப்படி எதுல அவன் என்ன விட உனக்கு ஒசத்தியா தெரிஞ்சுட்டான்....? உடம்பு சுகம் அதிகமா கொடுத்தானா....?ஏன் கேக்குறேன்னா, பணத்துல அவன விட நான் தான் பெரிய ஆளு... அவன விட எல்லா தகுதியும் எனக்கு அதிகமாகவே இருக்கு. அப்படி இருந்தும் என்னை விட்டுட்டு போற அப்படின்னா வேற என்ன ரீசன் இருந்துற போகுது....?

அப்படின்னா என்கிட்ட கேட்டு தொலைச்சிருக்க வேண்டியது தானடி... அவன விட நான்..... என ஏதோ கூற வந்துவிட்டு, கண்களில் அனல் தெறிக்க அப்படியே நிறுத்திக் கொண்டான்.

அவனுக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை....அவனையே நிலை குத்திய பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது....

அந்தப் பார்வை அவனுக்கு எதையோ உணர்த்த துடித்தது.... அவனது மனம் அதை உணர்ந்ததோ என்னவோ... அதற்கு மேல் அவனால் எதுவும் அவளை பேச முடியவில்லை.

இரு நிமிடங்கள் மௌனமாகவே கழிந்திருக்கும்.....

திடீரென்று ஆழ் கடலின் அமைதியுடன் அவளது குரல் ஒலித்தது... "ஆதி" என்றழைத்தாள்.

மின்சாரம் தாக்கியதைப் போல் மனதுக்குள் அதிர்ந்தான் ஆதிரத்னேஸ்வரன்....!

தனது பழைய மகிழ்வதனியை பார்த்தது போன்ற ஒரு பிரம்மை...! அவன் மனதுக்குள் ஒரு மிகப்பெரிய சூறாவளியே சுழன்று அடித்தது...!

நான் தப்பு பண்ணிருப்பேன்னு நினைக்கிறாயா ஆதி...? அப்போ உன் பக்கம் எல்லாமே சரியா இருந்துச்சா...? உன் பக்கம் மட்டுமே நீ யோசிச்சுட்டு, என்ன பத்தி யோசிக்கவே இல்லல்ல....

எப்போதுமே உன்னோட தாட்ஸ், உன்னோட மனசு,உன்னோட சரவுண்டிங், உன்னோட ஸ்டேட்டஸ் தான் உனக்கு முக்கியம்ல.....

என்ன பத்தி ஒரு செகண்ட் கூட என்னைக்குமே நீ யோசிச்சது இல்ல, இப்ப வரைக்கும்....

என்னைய தப்புனு சொல்றதுக்கு முன்னாடி, என்கிட்ட இருக்க தப்பு கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி, உன் பக்கமும் தப்பு இருக்கலாம் அப்படின்னாவது யோசி ஆதி....

"கடமையை செய்யாதவர்களுக்கு, உரிமையை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லன்னு" சொல்லுவாங்க ....

இதுக்கு மேல எதையும் நான் உன்கிட்ட பேச விரும்பல... நான் வேலயை விட்டு நின்னுக்கிறேன். இதுக்கு மேல என்னால இங்க வேல பார்க்க முடியவே முடியாது...

என் பெண்மையை கலங்கப்படுத்துற இடத்துல, என் தன்மானத்தை சீண்டிக்கிட்டே இருக்க இடத்துல...என்னால நிம்மதியாகவோ இல்ல கடமைக்காக கூட இருக்க முடியாது.

ஏதோ ஒன்ன அடைஞ்சா மட்டும் தான் நிம்மதி கிடைக்கும்னு இவ்ளோ நாள் நினைச்சுட்டு இருந்தேன்....சில விஷயங்கள இழந்த கூட நிம்மதி கிடைக்கும்ங்கிறத இன்னைக்கு தான் புரிஞ்சுகிட்டேன் .

நான் போறேன் ஆதி....இனிமே உன் முகத்திலேயே நான் முழிக்க மாட்டேன்... நீ எனக்கு வேண்டாம்....எனக்கூறிய படி புறங்கையால் கண்ணீரைத் துடைத்தபடியே.."தொலையும் போது தான் தெரியுது, சில விஷயங்கள் கிடைக்காமலே இருந்திருக்கலாம்னு...குட் பாய் ஆதி" எனக்கூறியபடி அறையை விட்டு வெளியேறினாள்.

கிரேக்க சிற்பம் போல், சிலையாக சமைந்த படி நின்று கொண்டு அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி...

முதல்முறையாக அவனது ஒரு மனமோ, ' அவ பக்கமும் ஏதேனும் நியாயம் இருக்குமோ' என யோசிக்கும் போதே...

மற்றொரு சாத்தான் மனமோ, 'ஆதி, அவ திரும்ப உன்னை ஏமாத்த பார்க்குறா....இப்படி அப்பாவி மாறி நடிச்சு, ஒன்னும் தெரியாதவ மாதிரியே உன்ன ஏமாத்தி, மறுபடியும் முட்டாளாக்க பாக்குற....'என கூறியது.

அவ்வளவுதான்.. பேக் டு ஆதிரத்னேஸ்வரன்... " இப்படி எல்லாம் அப்பாவி ஒண்ணும் தெரியாதவ மாதிரி பேசினா... நா உன்ன நம்பிடுவேனா...? "

மறுபடி மறுபடி என்ன ஏமாத்தலாம்னு பாக்குறியா...? இந்த தடவை நான் வைக்கப்போற செக்குல இருந்து, நீ எப்படி வெளியில வரன்னு பாக்குறேன் டி....


என மனதுக்குள் எண்ணிக்கொண்டவன், அடுத்தடுத்த காய்களை நகர்த்த ஆயத்தமானான்.....


 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 12

அலுவலகத்திலிருந்து நேராக ஹாஸ்பிடலுக்கு வந்த மகிழிடம் விக்னேஸ்வரன் வந்த விஷயத்தையும்,அதோடு அவன் பணம் அரேஞ்ச் செய்வதற்காக வெளியில் சென்றுள்ளதாகவும், சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறியதாகவும் கூறினாள் யாழினி.


மகிழுக்கு மனதுக்குள் நெருடலாகத் தான் இருந்தது... ஆனால், இப்போது வேறு வழியே இல்லை.. வேறு என்ன செய்வது...? என்றும் தெரியவில்லை.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே,விக்னேஸ்வரன் அந்த அறைக்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைந்த உடனே, யாழினி வேகமாக ஓடி சென்று.... என்னாச்சு விக்கி பணம் கிடைச்சுதா என்றாள்?

பணம் கிடைக்கவில்லை என்று அவன் முக உணர்வுகளையே பார்த்துக் கொண்டிருந்த மகிழுக்கு நன்றாக தெரிந்தது.

அதனால் அவனை மேலும் சங்கட படுத்த வேண்டாம் என நினைத்து, யாழினி கொஞ்சம் அமைதியா இரு, இப்ப தான வரான் கொஞ்சம் லேட்டா பேசிக்கலாம்....

நீ வா விக்கி, சாப்டியா..?ஏதாவது ஜூஸ் குடிக்கிறியா...?வெளியில அலைஞ்சு திரிஞ்சுட்டு வந்தது ரொம்ப டல்லா இருக்கும், இரு ஜூஸ் போட்டு தரேன்... எனக் கூறியபடி அவனது பதிலை எதிர்பார்க்காமல் ஜூஸ் தயாரிக்க ஆயத்தமானாள்.

அவனும் வேறு எதுவும் கூறாமல், மௌனமாக அமர்ந்து கொண்டான்.யாழினியோ சிறிது நேர யோசனைக்குப் பின், ஒரு சின்ன டெஸ்ட் எடுக்குறதுக்கு இவ்ளோ பணம் செலவாகுதா....? நான் அப்பவே சொன்னேன்ல, இதெல்லாம் ரொம்ப பெரிய ஹாஸ்பிடல்...வேண்டாம்னு....எனக்கூறியதும் தமிழ் மற்றும் விக்கி இருவருக்குமே தூக்கி வாரி போட்டது.

விக்கி கண்களாலயே மகிழிடம், இன்னும் கூறவில்லையா? என வினவ.... ஆம் என்கின்ற ரீதியில் கண்களை மூடி திறந்தாள் அவள்.

அதெல்லாம் உனக்கு எதுக்கு....?நீ கொஞ்சம் அமைதியா இரு யாழினி... என அவளை அடக்கிவிட்டு,ஜூசை விக்கியிடம் நீட்டினாள்.

அதை பருகியபடியே,என் பிரண்ட் ரமேஷோட சித்தப்பா இங்க பெரிய எஸ்டேட் டீலர்...இங்கே விழையிற பொருளை எல்லாம் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் பண்ற கம்பெனி வச்சிருக்காரு.

அவர்கிட்ட தான் பணம் கேட்கலாம்னு வந்தேன்....

ஆனா அவரு த்ரீ டேஸ் முன்னாடி தான் பாரீன் போயிருக்காரு, ஒரு பிசினஸ் விஷயமா.... திரும்ப வரதுக்கு ஒன் வீக் ஆகுமாம்....

இப்ப அடுத்து யார் கிட்ட கேட்கிறது, என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல....திரும்ப ரமேஷ் கிட்டயே சொல்லி அவர்கிட்ட பேச சொல்லிருக்கேன்....எப்படியாவது ரெடி பண்ணனும்.. என்றான் சற்று வருத்தமான குரலில்.

மகிழுக்கு அவனைப் பார்க்கையில் பாவமாக கூட இருந்தது...நமக்கு ஹெல்ப் பண்ணனும்னு அவனுக்கு அவசியமே இல்ல....நம்மளோட கஷ்டம் அவனையும் பாதிக்குதே... என வருத்தமாக இருந்தது அவளுக்கு.

சரி, விடு விக்கி பாத்துக்கலாம். வேற ஏதாவது அரேஞ்ச் பண்ணிக்கலாம், நீ முதல்ல கவலைப்படாதே....

ஆமா கேட்கணும்னு நினைச்சேன்...நீ ஆபீஸ் போய் இருக்கதா, யாழினி சொன்னாளே... என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட...? வொர்க் முடிஞ்சுதா..?

சிறிது நேரம் மௌனத்திற்கு பின், இல்ல விக்கி, நா வேலய ரிசைன் பண்ணிட்டேன்....

அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லியும், அவங்க லீவு தர மாட்டேங்குறாங்க.அதனால ரிசைன் பண்ணிட்டேன்... என்றாள் நம்பும் படியாக.

அவளையே யோசனையாக பார்த்துக் கொண்டிருந்த விக்கி, சாதாரணமா லீவு தரல்லங்கறதுக்காகவா நீ வேலைய ரிசைன் பண்ணிட்ட...?

இன்னும் கொஞ்சம் பேசி பார்த்திருக்கலாம்....இங்க உள்ள சிச்சுவேஷன சொல்லி புரிய வச்சுருக்கலாம்ல...

அவளுக்கோ மேலும் தடுமாற்றம், திரும்பத் திரும்ப பொய் கூற வேண்டியுள்ளதே என்று....

இல்ல விக்கி, எவ்வளவோ நான் சொல்லி பாத்துட்டேன்.... அந்த புது சிஇஓ கேட்க மாட்டேங்கிறாரு.

அவரோட கம்பெனியோட ப்ராஃபிட் அண்ட் லாஸ் தான் முக்கியம்னு பேசிக்கிட்டே இருந்தாரு.... அதனால தான் நான் கோவத்துல ரிசைன் பண்ணிட்டு வந்துட்டேன்.

உனக்கே பிடிக்கலைன்னா, அப்புறம் நா என்ன சொல்றது... சர்டிபிகேட்ஸ்லாம் கரெக்டா பாத்து வாங்கிடு, வேற ஜாப் பாத்துக்கலாம்.

சரி, நா இங்க பக்கத்துல தான் ஹோட்டல்ல ஸ்டே பண்ணி இருக்கேன். ஏதாவது வேணும்னா கால் பண்ணு. நா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மார்னிங் வரேன்.... என்றபடி எழுந்து சென்று விட்டான்.

அதே நேரத்தில், இங்கே தனது அலுவலகத்தில் தனக்கு முன்னே அமர்ந்திருந்த நம்பிக்கைக்குறிய டிடெக்டிவ் ஏஜென்ட் சர்வேஷுடன் பேசிக்கொண்டிருந்தான் ஆதி....!

சர்வேஷ், சென்னையை சேர்ந்த ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியின் முதலாளி... அபிசியலாக சில நேரங்களில் அவனது உதவியை நாடி இருக்கிறான் ஆதி....

தற்போது பர்சனலாக சில விஷயங்கள் தேவைப்படுவதால், அவனை சென்னையில் இருந்து இங்கே வரவழைத்து இருக்கிறான்.

சொல்லுங்க ஆதி சார், யாரை பத்தி என்ன டீடெயில்ஸ் வேணும்...? எவ்வளவு நாளைக்குள்ள வேணும்..?

ரொம்ப முக்கியமான கேஸ்னு தெரியுது... அதனால தான் என்னய அங்க இருந்து இங்க வர வச்சிருக்கீங்கன்னு தெரியுது.

சோ, சீக்ரெட் மெயின்டைன் பண்ணுவோம்... எப்போதும் போல விஷயம் வெளியில போகாம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு சார்.

ஆதியோ, சிறிது யோசித்து விட்டு... மகிழின் புகைப்படத்தை அவனிடம் நீட்டியவாறு, இவங்களோட பேரு மகிழ்வதனி. இவங்கள பத்தி தான் நீங்க ஸ்டடி பண்ணி எனக்கு சில டீடெயில்ஸ் தரணும்.

இவங்களோட கரண்ட் சிச்சுவேஷன் என்ன...? அப்புறம் எனி அதர் அபெய்யர் இருக்கா...? அப்படிங்கற கம்ப்ளீட் டீடைல் எனக்கு வேணும்.... இன்க்ளூடிங் ஹெர் பேமிலி.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் டீடைல்ஸ் தந்தா பெட்டர்.....நாளைக்கே கொடுக்க முடிஞ்சா கூட ஓகே தான் .

சர்வேஷ், யோசனையாக அந்தப் புகைப்படத்தை பார்த்தான்... ஆதி இதுவரைக்கும் எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் டீடைல்ஸ் எடுக்க சொன்னதில்லை. முதல் முறையாக ஒரு பெண்ணைப் பற்றி கேட்கிறான் என்றால் கண்டிப்பாக பர்சனலாகத் தான் இருக்க வேண்டும்....

ஓகே சார், நா சீக்கிரமாவே டீடைல்ஸ் கலக்ட் பண்ணிட்டு, உங்களுக்கு இன்பார்ம் பண்றேன்... எனக் கூறியபடி கிளம்பி விட்டான்.

ஆதிரத்னேஸ்வரனுக்கு என்ன தான் மகிழ் மேல் கோவம் இருந்தாலும், தனக்கு அவள் துரோகம் செய்திருக்க மாட்டாள்... என்று மனதுக்குள் ஒரு ஓரமாக, ஒரு சிறு துளி அளவு நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருந்தது.

அதுவும் அவள் தற்போது தனியாகத்தான் இருக்கிறாள்....என்பது அந்த நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தியிருந்தது.

அதனால் தான், இது நாள் வரையும் அவளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொண்டிருக்கிறான்.

அதிலும்,அவள் இன்று பேசிய பேச்சில்... மீண்டும் ஏமாற்றுகிறாள்... என்ற எண்ணம் வந்தாலும், அவன் மனம் அவளுக்காக அசைந்தது என்னவோ உண்மைதான்.

மனம் சற்று இளகிய காரணத்தினால் தான், இன்று சர்வேஷை வரச்சொல்லி அவளைப் பற்றி தனக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறான்.

அவனது தற்போதைய மனநிலையை பொறுத்தவரை, அவள் தனியாக இருக்கிறாள் என்றால்,அவளுக்காக இன்னும் கொஞ்சம் இறங்கி தனது கோப தாபங்களை ஒதுக்கி வைத்து விட்டு... உண்மையிலேயே அவளுக்கு என்ன பிரச்சனை? என்று ஆராய்ந்து அவளுடன் சேர வேண்டும் என்பதே...!

எனவே தான் கடைசி வாய்ப்பாக இந்த டிடெக்டிவ் ஏஜென்சியை நாடியுள்ளான்....

அவனிடம் உள்ள ஆயிரம் வினாக்களுக்கான விடையும் சர்வேஸ் சமிட் பண்ண போற, அந்த ரிப்போர்ட்டில் தான் உள்ளது....

அடுத்த நாள் காலையிலேயே டாக்டர் வந்து, மகிழின் அம்மாவுக்கு அனைத்து செக்கப்புகளும் செய்து விட்டு.... மகிழிடம்,நாளைக்கு ஈவினிங்குள்ள பணம் கட்டிடுங்க....அப்படி இல்லைன்னா நைட் நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க... எனக்கூறி சென்று விட்டார்.

மகிழுக்கு ஒரு மாதிரி இருந்தாலும், விக்கி எப்படியாவது ரெடி பண்ணிடுவான் என்ற நம்பிக்கை மனதின் ஓரமாக இருந்து கொண்டே இருந்தது. அதனால் சற்று ஆசுவாசமாக இருந்தாள்....

ஒன்பது மணி அளவில் ஹோட்டலில் இருந்து கிளம்பி வந்த விக்கி, பிரண்டோட சித்தப்பாவின் பி ஏ வை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டான்.

எஸ்டேட்க்குள் நுழையும் போதே, வாசலில் வந்து பிஏ நின்று அழைத்துச் சென்றார்.

நேத்து உங்க பிரண்டு ரமேஷ், எம்டி கிட்ட பேசி இருப்பார் போல சார்...எம்டி இன்னைக்கு ஷார்ப்பா 10:30-க்கு வீடியோ கால் பண்றேன்னு சொல்லி இருக்காங்க, உங்க கிட்ட பேசுறதுக்காக.

அதுக்காக தான் நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... உங்களை கூட்டிட்டு போலாம்னு... சார் இருங்க,ஒரு பைவ் மினிட்ஸ்ல கால் பண்ணிடுவாங்க.... பேசலாம்... என்றபடி அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்று, அமரச் சொல்லிவிட்டு,வீடியோ காலுக்கான ஆயத்தங்களை செய்யலானார்.

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, அவனது நண்பன் ரமேஷின் சித்தப்பா ஆன்லைனில் உரையாடி முடித்த பிறகு, பணம் நாளை காலையில் தருவதாக கூறினார்.

அவருக்கு நன்றி கூறிவிட்டு, பிஏவிடமும் ம் நன்றி சொல்லிவிட்டு,பணம் கிடைத்த சந்தோஷத்துடன் மகிழை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் நோக்கி செல்லலானான்.

அதே நேரத்தில்.... தனது பங்களாவில் தன் முன் வைக்கப்பட்டிருந்த, மகிழின் டிடைல்ஸ் அடங்கிய பைலை வெறித்துக் கொண்டிருந்தான் ஆதிரத்னேஸ்வரன் ....!


அதில், தற்போது மகிழின் அம்மாவின் மருத்துவத்திற்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்வதற்கு விக்னேஸ்வரன் அவளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறான்....என்ற பக்கத்திலேயே அவனது பார்வை நிலை குத்தி நின்றது.

அவனது மனமோ மேலும் மேலும் இறுகி உக்கிரநிலையை அடைந்து கொண்டிருந்தது...

ஏமாத்திட்டல்லடி....?மறுபடியும் மறுபடியும் என்னய ஏமாத்திட்டல்ல...? இன்னமும் அவன் உன் கூட தான் இருக்கான்ல....?

உன் மேல நம்பிக்கையே வைக்க கூடாதுன்னு, செருப்பால அடிச்ச மாதிரி சொல்லிட்டல்ல...?

இந்த நிமிஷத்திலருந்து, நீ நிம்மதியா ஒரு செகண்ட் கூட கண் மூடவே கூடாது.... இந்த ஆதிரத்னேஸ்வரனோட ருத்ர தாண்டவத்தை பார்க்க ரெடியா இரு 'மிஸ்ஸஸ் மகிழ்வதனி'......என வன்மமாக ஒரு புன்னகையை சிந்திய படி, யாருக்கோ போன் செய்தான்.


குறிப்பு : வணக்கம் தோழமைகளே.... 25 லைக்ஸ் மற்றும் 25 கமாண்ட்ஸ் சைட்டிள் வந்தால்,அடுத்த அத்தியாயம் இன்றே பதிவிடப்படும்.... 👍






 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 13

ஹாஸ்பிடலுக்கு வந்த விக்கியோ, ரொம்ப சந்தோஷமா இருக்கு மகிழ், பணம் ரெடி ஆயிடுச்சு....நாளைக்கு மதியத்துக்குள்ள பணம் கைக்கு வந்துடும். சோ, நீ கவலையே படாத.... எனக் கூறியதும் ஆனந்தத்தில், மகிழுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

ரொம்ப தேங்க்ஸ் விக்கி... நீ மட்டும் இல்லன்னா என்னால இவ்ளோ பணத்த ரெடி பண்ண, என்ன பண்ணிருப்பனோ.... எனக்கே தெரியல... என்றாள் திக்கி திணறிய படியே....

ஏன்...இப்ப எமோஷனல் ஆகுற...? நான் தான் வந்துட்டேன்ல.. நா பாத்துக்குறேன்... என ஆறுதலான புன்னகையுடன் கூறினான்.

அவளுக்கும் இப்போதுதான் மனது சற்றே நிம்மதி அடைந்தது.

கடவுளே எவ்வளவோ கஷ்டத்த தந்தாலும், அதுக்கான உதவியையும் யார் மூலமாவது தந்தர... என மனதார கடவுளுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் விக்னேஸ்வரனின் அலைபேசி சினுங்கி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது....

புது நம்பரில் இருந்து கால் வந்து கொண்டிருந்தது.... நெற்றி சுருக்கி யோசித்தபடியே காலை அட்டென்ட் பண்ணி பேசலானான்.

எதிர் முனையில்... தம்பி நா உங்க அப்பாவோட பிரண்டு சிவராமன் பேசுறேன் பா.... என்றார் விக்னேஸ்வரனின் தந்தையின் நண்பர்,சற்றே பதட்டமான குரலில்.

ஹான்....தெரியும் அங்கிள் சொல்லுங்க, என்ன விஷயம்...? கால் பண்ணி இருக்கீங்க..?

தம்பி காலையில அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு பா....ஏ ஆர் ஜே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.... சீக்கிரம் கிளம்பி வாப்பா....ரொம்ப கிருட்டிக்கலா இருக்காரு... உன்னய பாக்கணும்னு சொன்னாரு....

டாக்டர்ஸ் என்னென்னமோ சொல்றாங்க, எனக்கு ஒண்ணுமே புரியல பா ....

விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் துடித்து விட்டான்....

இந்த உலகத்தில் அவனுக்காக இருக்கும் ஒரே ரத்த சொந்தம் தந்தை மட்டுமே....!

அதனால், எதைப் பற்றியும் யோசிக்காமல்....சரிங்க அங்கிள் நா இப்போவே கிளம்பி வந்துடறேன்... நா வர ஈவினிங் ஆயிடும்.... கொஞ்சம் அதுவரைக்கும் மட்டும் பார்த்துக்குங்க ப்ளீஸ்...என்றபடி போனை கட் செய்து விட்டு, மகிழிடம் திரும்பினான்....

அப்போது தான் நிதர்சனம் அவனுக்கு புரிந்தது....!என்ன செய்யலாம் என அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே...

அருகில் நின்று அனைத்தையும் கேட்டுகொண்டிருந்தாள் மகிழ்வதனி.... அவனது நிலையும் மகிழுக்கு புரிந்திருந்ததால் .... நீ கிளம்பு விக்கி, நா இங்க பாத்துக்குறேன்... என்றாள் அவளும் எதைப் பற்றியும் யோசிக்காமல்....

இருந்தும் விக்கி மகிழிடம், நீ எதுவும் ஸ்ட்ரைன் பண்ணிக்க வேண்டாம் மகிழ்...நா என் பிரண்டு கிட்ட சொல்லி பிஏவ கொண்டு வந்து பணத்த கட்டிட சொல்றேன்... நீ அதனால ஒர்ரிப் பண்ணிக்காத, சரியா...? எனக் கூறியபடி அவசர அவசரமாக சென்றுவிட்டான்.

மகிழும் கடைசி நாள் மதியம் வரை,அவனிடம் எதுவும் கேட்கவில்லை....அதே நேரத்தில் பணம் எதுவும் வந்து சேரவில்லை...

அவனிடம் எப்படி கேட்பது என யோசித்தபடியே இருக்கும்போது அம்மாவை பார்ப்பதற்காக காவ்யா வந்திருந்தாள்.

என்னடி பணம் கட்டியாச்சா....? விக்கி ரெடி பண்றேன்னு சொல்லி இருந்தானே... எனக் கேட்டாள்.

அவளிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டு... இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு... ஆனால் பணம் வந்து சேரலடி... அவன்ட எப்படி கேட்கிறதுன்னும் தெரியல... அவனே அங்க இக்கட்டில இருக்கான்,எப்படி அவன் கிட்ட கால் பண்ணி கேக்குறதுன்னு புரியலையே...என பாவமாக கூறினாள்.

அதுக்காக இப்படியே உட்கார்ந்து இருக்கப்போறியா...?அங்க இருக்க சிச்சுவேஷன்ல அவன் மறந்து இருக்கலாம்ல....?ஜஸ்ட் ஒரு போன் பண்ணி சொல்லப் போற அவ்வளவு தானே...? நீ அவன் கிட்ட கால் பண்ணி பேசு, அப்பதானே அடுத்து என்ன பண்ணலான்னு யோசிக்க முடியும்.... இப்படியே உக்காந்துகிட்டு இருந்தா, என்ன பண்றது....?

அவள் கூறுவதும் சரிதான் என்று தோன்றவே, விக்கிக்கு அழைத்து பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின்.... அவனது தந்தை ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார், இருந்தும் இன்னும் கண் முழிக்கவில்லை...என தெரிந்து கொண்ட பின் மெதுவாக விஷயத்தை கூறினாள்.

அவனுக்கோ ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை...

நா எல்லாம் தெளிவா பிஏ கிட்ட பேசிட்டு தானே வந்தேன். கண்டிப்பா இந்நேரம் பணம் கட்டி இருக்கனுமே....? சரி வை, நா என்னன்னு பாத்துட்டு உனக்கு கால் பண்றேன்....

பி ஏ க்கு கால் செய்தால்,அவரோ "என்னன்னு தெரியல சார், திடீர்னு எம்டி போன் பண்ணி 'அங்கே ஏதோ பிராப்ளம் ஆயிடுச்சா' அதனால 'இப்போதைக்கு எந்த ஒரு மணி ப்ரோசஸும் பண்ண வேண்டாம்' அப்படின்னு சொல்லிட்டாரு..... அதனால இப்போதைக்கு எங்களால எந்த பணமும் தர முடியாது..."

"எதா இருந்தாலும் நீங்க அவர் வந்ததுக்கு அப்புறம் பேசிக்கங்க" எனக் கூறியபடி வைத்து விட்டார்.

விக்கிக்கு அடுத்து என்ன என்று யோசிக்க கூட முடியவில்லை. மகிழுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியதை போல் ஒரு தோற்றம்.

அதைவிட தனக்குத் தாயாக இருந்த ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டம்.

மகிழுக்கு போன் செய்து விஷயத்தை கூறிவிட்டு, தான் உடனே வருவதாக கூறினான்.

அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை...அதே நேரத்தில் அவனை குறை கூறவும் முடியாது.

எனவே, விக்கி நா இங்க பார்த்துக்கிறேன்.. நீ அங்க அப்பாவ பாரு எனக் கூறிவிட்டாள்.

இல்ல மகிழ் நா வரேன்...

வேண்டாம் விக்கி நா பார்த்துக்கிறேன்....அப்பாக்கு நீ மட்டும் தான் இருக்க... நீ அங்க இருந்து பார்த்துக்கோ... எப்படியாவது அரேஞ்ச் பண்ணிறுவேன் ப்ளீஸ் .. என பேசிவிட்டு காலை கட் செய்து விட்டாள்.

அருகில் இருந்தபடியே அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த காவ்யாவோ,நீ முதல்ல கிளம்பி என் கூட ஆபீஸ் வா.... ஈஸ்வர் சார் கிட்ட பேசி பார்ப்போம் என்றாள்.

மகிழ் எதையும் யோசிக்கும் நிலைமையில் இல்லை....அவனிடம் சென்றால் கண்டிப்பாக தன்மானத்தை இழந்து விட்டு தான் போக வேண்டும். இருந்தாலும், இப்பொழுது தாயை விட வேற எதுவும் பெரியதாக தோன்றவில்லை.

எனவே அவனிடமே உதவி கேட்கலாம் என முடிவெடுத்து, காவ்யாவுடன் அலுவலகத்திற்கு சென்று,அவனை பார்க்க அனுமதி கேட்டார்கள்....நீண்ட நேரம் காத்திருக்க வைத்துவிட்டு பின் உள்ளே அவளை மட்டும் அனுமதித்தான்.

உள்ளே வந்தவளோ, அவனிடம் எவ்வாறு விஷயத்தை கூறுவது என்று தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள்.

என்ன மேடம் இந்த பக்கம் எல்லாம் வந்து இருக்கீங்க...? இனிமே என் முகத்திலேயே முழிக்க மாட்டேன்னு போயிட்டு... இப்ப என்ன இங்க வந்து நிக்கிறிங்க...?என்றான் ஒற்றை புருவத்தை தூக்கியபடி நக்கலாக.....

அவளுக்கு பூமிக்குள் புதைந்து விடும் அளவுக்கு நரக வேதனை... நெருப்பில் நிற்பதை போன்று ஒரு உணர்வு...

வேறு வழி இல்லை,பேசி தான் ஆக வேண்டும்.

ஆதி ப்ளீஸ், வேற எதுவும் நா இப்ப பேச வரல...அம்மாவுக்கு ரொம்ப உடம்பு முடியல...இன்னும் 2 ஹவர்ஸ்குள்ள 20 லட்சம் ஹாஸ்பிடல்ல கட்டுனா தான், டிரீட்மென்ட் ஆரம்பிப்பாங்க.

எவ்வளவோ நா ட்ரை பண்ணிட்டேன்....கிடைக்கவே இல்ல... அதனால தான் கடைசியா உன்கிட்ட வந்து இருக்கேன்... வேற வழி இல்ல...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு... இந்த உதவி மட்டும் பண்ணு...எப்போதுமே நா இத மறக்கவே மாட்டேன்... லைப் லாங் வேணும்னாலும் உன்கிட்ட நா ஒரு அடிமை மாதிரி வேலை பார்க்கிறேன்.... ப்ளீஸ்.... என்றாள் மனதை உருக்கும் கண்ணீர் குரலில்.

அவனும் ஒரு வஞ்சகப் புன்னகையுடன், லைப் லாங் அடிமை மாதிரி வேலை பாக்கிறயா..?

ஆனா, அதுக்காக நா ஏன் இப்பவே 20 லட்சம் குடுக்கணும்...? அத மன்த்லி மன்த்லி சேலரியா கொடுத்தாலே, வேல பாக்குறதுக்கு எத்தனையோ பேர் இருக்காங்களே...! இதுல எனக்கென்ன லாபம்...? என யோசிப்பது போல் ஜாடை செய்தான்.

அவளுக்கோ உயிர் போகும் நரக வேதனை.....

ப்ளீஸ் ஆதி இந்த ஒரு ஹெல்ப்பை மட்டும் பண்ணு....நீ என்ன சொன்னாலும் நா கேட்கறேன்....

இப்போது அவன் இதழ்களில் திருப்தியான புன்னகை ஒன்று உதயமாகியது......

நா என்ன வேணாலும் சொல்லுவேன், எல்லாத்துக்கும் உனக்கு ஓகேவா....? என்றான் அவளை நெருங்கி நின்றபடி, மோகக் குரலில்....

அவளுக்கோ விதிர்விதித்து விட்டது. அவனது குரலும், பார்வையும் அவளுக்கு எதையோ உணர்த்தியது....

அவன் கூற வருவதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பேதை அல்லவே அவள்...

ஆதி.... ப்ளீஸ்.... வேண்டாம்....

நோ பேபி, நா இன்னும் என்னன்னே சொல்லலையே... அதுக்குள்ள என்ன ப்ளீஸ் வேண்டாம் என்கிற....?

அவளுக்கோ அடுத்து என்ன கூறுவது என்று கூட யோசிக்க முடியவில்லை....கை,கால்கள் எல்லாம் தடதடவென்று ஆடியது... கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

இங்க பாரு நா சுத்திவளச்சி எல்லாம் பேச விரும்பல... உனக்கு இப்ப உடனே இருபது லட்சம் வேணும்லஎன்றபடி, லாக்கர் அருகே சென்று அதிலிருந்து ஒரு சூட்கேஸை எடுத்து மேஜை மேல் வைத்தான்.

இத இப்பவே நீ எடுத்துட்டு போகலாம்... பட் ஒன் கண்டிஷன்... என நிறுத்திவிட்டு மீண்டும் நிதானமாக அவளை நெருங்கிய படி பேசலானான்.

என்ன...கண்டிஷன்...? அதைக்கூறி முடிப்பதற்குள் அவளுக்கு நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டு,வார்த்தை வர மறுத்தது..

தான் நினைப்பதை, அவன் கூறி விடக்கூடாது என உலகத்தில் உள்ள அனைத்து கடவுள்களையும் வேண்டிக் கொண்டிருந்தாள்.

ஆனால், பாவம் அவளது வேண்டுதல்களை எப்போதும் கடவுள்கள் கேட்பதில்லை.... என்பதை யார் அவளுக்கு எடுத்துரைப்பது....?

நா இங்கே இருந்து கிளம்ப இன்னும் 3 மந்த்ஸ் ஆகும், அதுவரைக்கும் என் கூட பெட் பார்ட்னரா கம்பெனி கொடுக்கணும்.... அதோட இந்த மூணு மாசமும் நா என்ன சொல்றேனோ,அத மட்டும் தான் நீ செய்யணும்....இதுக்கெல்லாம் சம்மதம்னா இங்க இருக்க இந்த அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிட்டு, அந்த சூட்கேஸ எடுத்துக்கிட்டு நீ கிளம்பலாம்.....என்றபடி இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டியபடி அவளை ஒரு அளவிடும் பார்வை பார்த்தபடி அவளை விட்டு தள்ளி நின்று கொண்டான்.

அவள் மனதிற்குள் யோசித்ததை தான், அவன் கூறி விட்டான்....

'சரி' என்று கூறிவிட்டால், தாயின் உயிரை காப்பாற்றி விடலாம்.... ஆனால் அவனுடன் இருக்கும் இந்த மூன்று மாதங்களையும் வாழ்நாள் முழுவதற்கும் ஆறாத வடுவாக மாற்றி விடுவான் .

"முடியாது " என்று கூறி விட்டால், கண்டிப்பாக தாயைக் காப்பாற்ற இயலாது....

உயிரை விட கற்பு தான் பெரியது என்று வளர்க்கப்பட்டவள் மகிழ்வதனி....

உயிரா...?கற்பா...? என்று வரும் வேளையில் கண்ணை மூடிக்கொண்டு சிறிதும் யோசனை இன்றி கற்பு தான் முக்கியம் என்றிருப்பாள்.

இப்பொழுது அவள் முன் இருக்கும் வினாவோ, தாயா...? கற்பா...?

இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்.....? இல்லை இல்லை இல்லை எதை தேர்ந்தெடுக்க வைக்கப் போகிறான்...?








 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 14

"ஆப்ரேஷன் சக்சஸ்.....! இனி அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.....ஒரு த்ரீ ஹவர்ஸ் கழிச்சு, உங்க அம்மா கண் முழிச்சுடுவாங்க... அதுக்கப்புறம் ஜெண்ட்ரல் வார்டுக்கு மாத்திடுவோம்.... அப்போ நீங்க போய் பாத்துக்கலாம் " எனக்கூறியபடி டாக்டர் சென்றுவிட்டார்.

அப்போது தான் அனைவருக்கும் மனம் சற்று நிம்மதியடைந்தது.....

விக்கியும் கிளம்பி வந்திருந்தான்.

ஏதோ யோசித்தவனாக.... சொல்லு மகிழ்,பணம் எப்படி ரெடி பண்ணுன?

ஏற்கனவே யோசித்து வைத்திருந்ததால், ஆபீஸ்ல ரீஜாயின் பண்ணிட்டேன் விக்கி.... ரொம்ப கெஞ்சி தான் பணம் ரெடி பண்ணி இருக்கேன்......

த்ரீ மன்த்க்கு பாரின்ல ஒர்க் பண்ற மாதிரி இருக்கும்....அதுக்கு ஒத்துக்கிட்டு சைன் பண்ணிட்டு தான், இந்த பணத்தை லோனா வாங்கிட்டு வந்திருக்கேன்.

இன்னும் ஒன் வீக்ல கிளம்பனும். யாழினிக்கு பிரச்சனை இல்ல, காலேஜ் ஹாஸ்டல்ல சேர்த்துக்கலாம்....ஆனா அம்மாவ தான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்.... என சரளமாக கூறினாள் .

மூணு மாசம் பாரின்லையா.....?சேஃபா இருக்குமா...? எந்த கண்ட்ரி போற....? விசா பிராசஸ், ஸ்டே பண்றதுக்கெல்லாம் யார் பாக்கிறது....? என அடுக்கடுக்காக கேள்விகளை தொடுத்தான் விக்கி.

அதெல்லாம் பிரச்சனை இல்ல விக்கி....ஆபீஸ்ல பாத்துக்குவாங்க. நா இன்னும் எந்த டீடெயிலும் கேட்டுக்கல, அவசரத்துல சைன் பண்ணிட்டு பணத்த மட்டும் வாங்கிட்டு வந்துட்டேன்... இனிமேதான் எல்லாம் பாக்கணும் என்றாள் சோர்ந்த குரலில்.

அம்மாவ பத்தி நீ ஒர்ரிப் பண்ணிக்காத.....நா சென்னைக்கு கூட்டிட்டு போறேன்.... எங்க வீட்ல ஒரு நர்ஸ் வச்சு பாத்துக்குறேன்.

எப்டி இருந்தாலும் அப்பாவுக்கு ஒரு நர்ஸ் வச்சு தான் பாக்கணும்... சோ ரெண்டு பேரையுமே சேர்த்து நா பாத்துக்குறேன்....அதனால அத பத்தி நீ ஒர்ரிப் பண்ணிக்காத.....

ஐந்து நாட்கள் ஹாஸ்பிட்டல் வாசத்திற்கு பிறகு பிரபாவதி அம்மாவை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தனர்.

இன்னும் இரண்டு நாட்களில் அவனிடம் போய் ஆக வேண்டும்....!

அன்று.....!
அனைத்திற்கும் 'சரி' என்று சொல்வதைத் தவிர அவளுக்கு வழி இல்லாத காரணத்தினால், தாயின் உயிரே பெரிதாக தெரிந்ததனால்,பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்.... கடகடவென கையெழுத்து போட்டுவிட்டு, அவனை நிமிர்ந்தும் பாறாமல் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு.... எனக்கு ஒரு வாரம் டைம் கொடு, எல்லாத்தையும் செட்டில் பண்ணி வச்சுட்டு, நீ சொல்றபடி நான் செய்யுறேன்.... என்றாள் சுவரை வெறித்தபடியே.....

அவனும் வேற எதுவும் பேசாமல், சரி ஒரு வாரம் கழிச்சு கரெக்ட்டா வந்துடனும்.... என்றபடி அவனுடைய அவுட் ஹவுஸ் விசிட்டிங் கார்டு ஒன்றை நீட்டினான்.

கைகள் நடுங்கியவாறு, அதனை வாங்கிக் கொண்டு கிளம்பி வந்து விட்டாள்....

இனி யோசித்து பயனில்லை... கைநீட்டி பணம் வாங்கியாயிற்று... விக்கிடம் சொன்னால் ஏதாவது செய்வான் தான்.. ஆனால் யாருக்கும் பாரமாக இனி இருக்க வேண்டாம்.... என எண்ணியபடி அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை மலமலவென்று செய்ய ஆரம்பித்து விட்டாள் .

விக்கியின் அப்பா உடல் நிலை காரணமாக, அவன் ஏற்கனவே சென்னை சென்று விட்டதால்.... யாழினியை காலேஜ் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு, அம்மாவையும் விக்கி அரேஞ்ச் பண்ணி இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டு.... அவன் கொடுத்திருந்த அவுட் ஹவுஸ் அட்ரஸை தேடி தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு செல்லலானாள்.

இரவு 8 மணி அளவில், தனது லக்கேஜ் உடன் அவன் தங்கியிருந்த, ஆள் அரவமற்ற, பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஏரியாவில் ஆட்டோவில் வந்து இறங்கினாள்.

ஏற்கனவே செக்யூரிட்டியிலிருந்து அனைவரிடமும் சொல்லி வைத்திருப்பான் போல.... அவள் வந்ததும் அவளிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் உள்ளே அனுப்பப்பட்டாள்.

முன்னறையில் சோபாவில் அமர்ந்திருக்கும் வேளையில், யாரோ ஒரு பெண்மணி காபி கொண்டு வந்து நீட்டினாள்.

வேண்டாம் என்று கூறியும், விடாப்பிடியாக 'சார் குடுக்க சொன்னார்' என்ற படி கையில் திணித்து விட்டு சென்று விட்டாள்.

வேறு வழியில்ல, குடித்து தான் ஆக வேண்டும்.... மெதுவாக மிடறு மிடறாக விழுங்கியபடி, வீட்டினை சுற்றி கண்களை சுழல விட்டாள்.

வேறு யாரும் வசிப்பது போல் தோன்றவில்லை..மிகப் பெரிய பங்களா போன்ற அமைப்புடைய வீடு அது....அவனும் தற்போது வீட்டில் இல்லை.

'இரவு எப்படியும் வந்து விடவான் ' எனக் கூறப்பட்டது ....மனதை இரும்பாக்கி கொண்டு அனைத்திற்கும் தயாராகினாள்.

காபி குடித்து முடிக்கும் வேலையில், அவளுக்கான அறையை காண்பித்தாள் காபி குடுத்த பெண்மணி.

"வேறு ஏதேனும் உதவி வேண்டுமா..?" என்றாள்.

ஒரு சிறு மறுப்பான தலையசைப்புடன், வேறு எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு, அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள் மகிழ்.

அப்படியே தொய்ந்து தரையில் அமர்ந்து, முழங்காலில் முகத்தை புதைத்தபடி, தேம்பித் தேம்பி விம்மி வெடித்து அழ ஆரம்பித்தாள்.

இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த அனைத்து உணர்வுகளும் ஒன்று சேர... தனக்கு உதவ யாருமே இல்லாத, தனது அனாதரவான நிலையை எண்ணி எண்ணி அழுது கொண்டே இருந்தாள்.

பேசாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடலாமா.... என்று கூட யோசித்தாள்.

ஆனால் அதன் பிறகு தனது குடும்பத்தின் நிலை....? அதைவிட இவன் எப்படியும் அவர்களை சும்மா விட மாட்டான்... என்ற கசப்பான உண்மை வேறு வந்து பயமுறுத்தியது.....

எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியவில்லை... சிறிது நேரம் கழித்து கதவு தட்டப்பட்டது.

எழுந்தவள் அங்கிருந்த ஆள் உயர கண்ணாடியில் தனது முகத்தை பார்த்துவிட்டு கடகடவென்று ஓரளவிற்கு சரி செய்துவிட்டு கதவை திறந்தாள்.

அதே பெண்மணி தான் நின்று இருந்தாள் உணவுடன்.....

"இன்னும் ஒரு மணி நேரத்துல சார் வந்துருவாங்கம்மா... சாப்டுட்டு ரெடியா இருக்பீங்களாம் "என ஒரு இயந்திரத் தன்மையுடன் கூறி விட்டு சென்று விட்டார்.

உணவை வாங்கி அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு, கதவை தாழிட்டவளுக்கு மீண்டும் உதறல் எடுத்து விட்டது....

உணவை கைகளால் கூட தீண்டாமல்....அறைக்குள்ளேயே இருந்த பாத்ரூமில் சென்று வாஷ்பேஷனில் முகத்தை நன்கு அடித்து கழுவினாள்.

ஓரளவுக்கு நிதானத்திற்கு வந்தது போல் தோன்றியது.

மீண்டும் வெளியே வந்து, தனது உடைப்பையில் இருந்து, ஒரு டவளை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு... வேறு எந்த ஒப்பனைகளையும் செய்யாமல் அப்படியே தரையில் அமர்ந்திருந்தாள்.

வெளிப்புறத் தோற்றத்திற்கு மிக நிதானமாக, அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும்.....உள்ளே மிகப்பெரிய பிரளயமே நடந்து கொண்டிருந்தது.

ஆனால், இனி என்ன செய்து.... என்ன பண்ண முடியும்....? எதையும் மாற்ற முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்ததால், எதுவும் முட்டாள் தனமாக யோசிக்காமல் அப்படியே அமைதியாக இருந்தாள்.

சரியாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு அழுத்தமான காலடிகள் தனது அறையை நோக்கி வருவதை உணர்ந்தவள து உடல் தூக்கி வாரி போட ஆரம்பித்தது.

கதவை தட்டும் சத்தத்தை கேட்டவுடன் மெதுவாக எழுந்து கதவை திறந்தாள்.

தனது முழு உயரத்திற்குமாக நிமிர்ந்தபடி உள்ளே நுழைந்தான். அவனது பார்வை அங்கே கேட்பாரற்று கிடந்த உணவை நோக்கியது. பின் அவளது முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தான்....

ஒரு நிமிடம் அவன் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்டவள்..... "பசிக்கல அதான் சாப்பிடல......." என்றாள் திக்கி திணறியபடி .

அவன் அதைப் பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக் கொண்டது போல் தெரியவில்லை....நேரடியாக, சரி ரெப்ரெஷ் ஆயிட்டு மேல செகண்ட் ரூம் என்னோடது அதுக்கு வந்துரு..... என்ற படி ஒரு கவரை அவளிடம் நீட்டினான்.

இப்டி சாதாரணமா, ஒண்ணுமே நடக்காதது போல பேச இவனால மட்டும் தான் முடியும்..... என நினைத்தபடி, என்ன என்பது போல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

இதுல டிரஸ் இருக்கு... இந்த டிரஸ் போட்டுட்டு மேல வந்துரு... அவ்வளவுதான் வந்த வேலை முடிந்தது என்பது போல் சென்று விட்டான்.

அவன் நீட்டிய உடையை பற்றிய மோசமான எண்ணங்கள் என்னென்னவோ அவள் மனதிற்குள் ஓடியது.... அதன் பிரதிபலிப்பாக முகம் சுருங்கியது.

அவன் சென்ற பிறகு மெதுவாக அந்த கவரைப் பிரித்து பார்த்தாள். அப்படி ஒன்றும் மோசமா, அவள் கற்பனையில் கண்டது போன்ற உடை எதுவும் அதில் இல்லை....!

ஒரு அழகிய நீல நிற புடவை தான் இருந்தது....!

சிறிதே மனது ஆசுவாசமடைந்தது... நின்று பயனில்லை என எண்ணியபடி மெது மெதுவாக ஆயத்தமாகினாள்.

முதலில் குளித்துவிட்டு வந்து, அந்த புடவையை அணிந்து கொண்டு... வேறு எதுவும் ஒப்பனைகள் செய்யாமல், பொட்டை மட்டும் ஒட்டிக்கொண்டு மேலே அவனது அறையை நோக்கி சென்றாள்.

அறை வாயில் வரையில் சென்றவளுக்கு, அதற்கு மேல் எப்படி உள்ளே செல்வது என்ற தயக்கம்....

ஏற்கனவே ஆயிரம் முறை மனதிற்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டிருந்தாள்.... எந்த சந்தர்ப்பத்திலும், அவன் என்ன செய்தாலும்.. அழக்கூடாது... அவன் முன்னால் அழுதால் தன்னை மேலும் மேலும் இழிவு படுத்துவான் ..... எனவே அவன் முன்னே மட்டும் தான் அழவே கூடாது.....

ஒரு ஆழ் மூச்சை இழுத்து விட்டபடி, கதவில் கை வைத்தாள்...அது தானாக திறந்து கொண்டது.

அவன் கட்டிலில் தான் சாய்ந்தமர்ந்தபடி மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் தான் அணிந்திருந்தான்.

இவள் கதவை திறந்து கொண்டு வரும் அரவம் கேட்டவுடன், நிமிர்ந்து பார்த்தவன்... கண்களை இமைக்கவும் மறந்து விட்டான்.....!

அவன் கண்களில் மோகத்தீ.....அவள் ஒன்றும் அப்படி பேரழகி அல்ல, சாதாரணமான பெண்தான்.... இவளை விட எத்தனையோ பேரழகிகள், எப்படி எப்படியோ அவனிடம் வழிந்த அழகிகளை எல்லாம் ஒரு சிறு எரிக்கும் பார்வையிலேயே தள்ளி நிறுத்தி விடுவான்...

மிகுந்த மன கட்டுப்பாடு உடையவன் தான்.... என்ற செருக்கு எப்போதும் அவனுக்கு உண்டு....

ஆனால் இவளை பார்த்தால் மட்டும், வீறு கொண்டு எழும் ஆண்மையையும்...அவளை அள்ளி அணைத்து முத்தமிட வேண்டும், மொத்தமாக கொள்ளையிட வேண்டும்... என்ற மோகத்தையும் அவனால் அடக்கவே முடிவதில்லை.

அவள் முன் மட்டும் எப்பொழுதுமே தன்னிலை இழந்து விடுகிறான்...

அது கோபமானாலும் சரி... தாபமானாலும் சரி .....!

அதன் விளைவு தான், தற்போது இங்கே வந்து நிற்கிறது.

அவனைப் பொறுத்தவரை, அவள் மாற்றான் மனைவி.... அதை உறுதியும் செய்துவிட்டான். இருந்தும் அவனால் அவளை விட முடியவில்லை.... ஏனென்றுதான் இன்று வரை அவனுக்கு புரியவில்லை ....

மொபைலை பக்கத்தில் இருந்த டீபாயில் வைத்து விட்டு, பீறிட்டு எழும் மோக உணர்வுகளுடன் அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் செல்ல ஆரம்பித்தான்......!


 
Status
Not open for further replies.
Top