ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையின்றி நேசிக்கவா-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 25

ஆதி ஒருமுறை காட்டிய தனது குடும்ப புகைப்படத்தில் அர்ஜுனை பார்த்திருந்ததாள் மகிழ். அவன் ஆதியின் தம்பி என்பதை உணர்ந்து கொண்ட மகிழ் அவனை கண்கலங்க நன்றியோடு பார்த்தாள்.

அர்ஜுன் அவ்வாறு கூறியதும், அதற்கு மகிழின் பார்வையும் ஆதிக்கு கோபத்தை வரவழைத்திருந்தாலும் .....அந்த இடத்தில் வேறு எதுவும் பேச விரும்பாமல்,"சரி சரி... எல்லாரும் போய் படுங்க என்றபடி மகிழ்வதனியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டான்.

அர்ஜுன் மற்றும் பூர்ணிமாவும் சென்ற பிறகு தான் எங்கு தூங்குவது என்று யோசனையில் மெதுவாக கீழே இறங்கி சென்றாள் மகிழ்.

வேலையாட்கள் தோட்டத்தில் இருக்கும் ஒர்க்கர்ஸ் ஹவுஸ்-ல் தான் தங்குவார்கள். இந்த நேரத்தில் அங்கே செல்ல முடியாது. அடுப்படியில் தூங்கலாம் என்றால் கொடைக்கானலின் குளிரில் விரைத்து விடுவாள்.....

ஆனால் இப்பொழுது வேறு எதுவும் யோசனை தோன்றாததால் அமைதியாக அடுப்படிக்கே சென்று தனது ஷாலை விரித்தவள் அதில் படுத்துக்கொண்டாள். காலையிலிருந்து இரவு வரை வேலை செய்து அசதியாக இருந்ததால் ஓய்விற்கு உடல் கெஞ்சியது. இருப்பினும் அந்த குளிரில் தூக்கம் வர மறுத்தது. கை கால்களை குறுக்கியபடி உடல் அலுப்பினால் தூக்கமும் இல்லாத மயக்கமும் இல்லாத ஒருவித மோன நிலைக்கு சென்று கொண்டிருந்தாள்.

திடீரென அந்தரத்தில் மிதப்பது போன்ற உணர்வு அவளுக்கு...

ஆதி தான் அவளை பொக்கிஷத்தை கையிலேந்தி போவதுபோல் பக்குவமாக தூக்கி சென்றான்...... அவன் அறையை அடைவதற்குள் அவள் மென் இதழில் ஆயிரம் வன்முத்தம் வைத்து விட்டான் முரடன்..... எதுவுமே நடக்காதது போல் படுக்கையில் கிடத்தி பக்கத்தில் படுத்து அழகு வதனத்தை ஆசை தீர பருகினான்....

அவளுக்கு கோபம் வந்துவிட்டது....

"இப்ப எதுக்காக என்னய இங்க தூக்கிட்டு வந்தீங்க...? நா வேலைக்காரி தானே.... அங்க இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை...?"

" உங்க தங்கச்சி என்னய ஏதோ திருடிய விசாரிக்கிற மாதிரி விசாரிச்சாங்க...அப்ப ஒன்னுமே தெரியாத மாதிரி பேசிட்டு, இப்ப எதுக்கு என்னய இங்க தூக்கிட்டு வந்து கொஞ்சுறீங்க....? உங்க தேவைய தீர்த்துக்க பாக்குறீங்க...? அப்போ இதுக்கு மட்டும் தான் நானா....? நா என்ன விபச்சாரியா...? "

"உங்க தம்பி மட்டும் அந்த நேரத்துல வரலன்னா என் நிலைம என்ன ஆயிருக்கும்...? நா இனிமே உங்க ரூமுக்கு வர மாட்டேன், தயவு செஞ்சு நா கீழேயே இருந்துக்கறேன்... என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு நாளைக்கு ஷிஃப்ட் ஆயிடுறேன்..."என்றாள் படபடவென்று கோபமாக.

அவனிடம் என்ன பேசுகிறோம் என்று யோசனையே இன்றி பேசிக்கொண்டே சென்றவள் அவனது உக்கிரமான பார்வையில் தனது வாயை இறுக மூடிக்கொண்டாள்.

"என்ன சொன்ன..? திரும்ப சொல்லு.." என்றான் அழுத்தமாக.

'ஐயையோ நிறைய பேசிட்டேனே... இனி இவனோட ருத்ரதாண்டவத்தை வேற தாங்கனுமே....ஆண்டவா எனக்கு தெம்பக்கொடு' என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

வாயை திறக்க முடியவில்லை.. அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

"மேடம் உங்களுக்கு பழசு எல்லாம் மறந்து போச்சுனு நினைக்கிறேன்... உங்கள என்னோட பெட் பார்ட்னரா தான் இங்கே கூட்டிட்டு வந்து இருக்கேன்....அதுவாவது ஞாபகம் இருக்கா....?"

"அப்புறம் இன்னும் நீ ஏதோ சொன்னியே... ஹான், விபச்சாரியான்னு... இதுக்கு நான் தனியா வேற பதில் சொல்லனுமா...? கைநீட்டி பணம் வாங்கிட்டு தானே வந்திருக்க..? அப்போ அதுக்கு பேரு என்ன...?"

"உனக்கு இங்க வேலைக்காரியா இருக்கக்கூட தகுதி இல்ல.. நீ செய்யற ஒவ்வொரு வேலைக்கும் இங்கே சம்பளம் உண்டு.. மரியாதையெல்லாம் எதிர்பாக்காதே....."

" ஐ அக்ஸப்ட்... வீட்டு வேலையும் பாக்குற.அதுக்கும் எக்ஸ்டிரா பேமன்ட் போட்டுத் தரேன்.. இவ்வளவுதான் உன் இடம்.. இதான் உன் தகுதி.. அதை மறந்து என்கிட்ட பழைய ஆதிங்குற நினைப்புல பேசலாம்னும் மயக்கலாம்னும் நினைக்காதே... "

பழி உணர்ச்சியில் அவளை காயப்படுத்தும் நோக்கோடு பேசிய வார்த்தைகளில் கண்கள் கலங்கிப் போனது அவளுக்கு..

சில நொடிகள் அமைதியாக தலையை குனிந்த படி கண்ணீர் சிந்தியவள் " சாரி சார்".. என ஒற்றை வார்த்தையில் கண்ணீரோடு படுத்துவிட்டாள்.

மனமே கனமாகிப் போனது ஆதிக்கு.. "சே.. ஹவ் க்ருயல் ஐயம்".. என்றவன் கைமுஷ்டியால் சுவற்றில் குத்தினான்..

அவன் புண்படுத்திய பிறகு அவள் கண்கலங்கியதும் 'சாரி' என கூறியதும் அவன் மனதை பிசைந்தது....

அவளை பேசிவிட்ட குற்ற உணர்ச்சியினால் அன்று இரவு அவளை எதுவும் தொல்லை செய்யாமல் உறங்கி விட்டான்.

அடுத்த நாள் அதிகாலையிலே எழுந்த மகிழ் யார் கண்ணிலும் படாமல் வேகமாக தனது அறைக்கு சென்றவள் குளித்து ரெடியாகி கீழே சென்றுவிட்டாள்.

இன்று அலுவலகத்திற்கு செல்லவில்லை ஆதி... மனது சரியில்லாத காரணத்தினால் குடும்பத்துடன் வீட்டிலேயே மதியம் வரை நேரத்தை செலவிட்டு விட்டு, பின்பு அலுவலகம் செல்லலாம் என எண்ணி இருந்தான்.

அனைவரும் காலை உணவை முடித்துவிட்டு ஹாலிலேயே உட்கார்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர் . அப்போது ஆதிக்கு மகிழின் தங்கை யாழினியிடம் இருந்து அழைப்பு வந்தது. யோசனையுடன் அழைப்பை ஏற்றவன் "ஹலோ" என கூறினான்.

யாழினியோ சற்று சோர்ந்த குரலுடன் "ஹலோ நான் மகிழ்வதனியோட தங்கச்சி யாழினி பேசுறேங்க அண்ணா...அக்காவோட நம்பர காண்டாக்ட் பண்ண முடியல... லாஸ்ட்டா அக்கா இந்த நம்பர்ல இருந்து தான் கால் பண்ணி இருந்தாங்க. அவங்க கூட பேசணும் கொஞ்சம் கொடுக்க முடியுமா" என கேட்டாள்.

முதலில் மறுக்க நினைத்தாலும் பின் அவளது குரல் அதனை செய்யவிடாமல் தடுத்தது....

"ஒரு மணி நேரம் கழிச்சு கால் பண்ணுங்க" என்றபடி காலை கட் செய்தான்.

அனைவரையும் நோட்டம் விட்டபடி மகிழ் எங்கே என்று கண்களால் துலாவினான். அவள் கிச்சனில் மேலும் இருவருடன் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தாள்.

எப்படி அவளை தனியா வர வைக்கிறது என யோசித்தபடி மெதுவாக கிச்சனை நோக்கி சென்றவன், " மகிழ்வதனி ஒரு கப் காபி மேல கொண்டு வாங்க" என்றபடி தனது அறைக்கு சென்று விட்டான்.

எந்த வேலையாட்களையும் அவன் பெயர் சொல்லி அழைப்பதில்லை. ஆனால் இவளை மட்டும் பெயர் சொல்லி அழைக்கவும் மற்ற இருவரும் அவளை ஒரு மாதிரி பார்த்தனர்.

அதையெல்லாம் மகிழ் தற்பொழுது கண்டு கொள்வதே இல்லை. 'இதற்கு மேல் என்ன இருக்கிறது' என்று நினைப்பில் பேசாமல் காப்பியை கலந்தவள் மேலே எடுத்து சென்றாள்.

அங்கு சென்றவுடன் அவளிடம் மொபைலை நீட்டியவன்... " உன் தங்கச்சி கால் பண்ணி இருந்தா. என்னன்னு கால் பண்ணி பேசு" என்றபடி காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்து விட்டான்.

அவளுக்கு சற்று பதட்டமாக இருந்தாலும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கால் செய்துவிட்டு... அவன் கூறாமலே ஸ்பீக்கரில் போட்டவள்... "என்னாச்சி யாழினி என்றாள்.."

"அக்கா இங்க ஹாஸ்டல்ல வெக்கேஷன் ஹாலிடேக்கு ஒன் மன்ந்த் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு போறாங்க. மெஸ் கிளோஸ்ட்டுன்னு சொல்லிட்டாங்க. நான் மட்டும்தான் போகாம இருக்கறேன். நாளைக்கு ஈவினிங்குள்ள கிளம்பிரணும்னு வார்டன் சொல்லிட்டாங்க. இப்ப நான் என்னக்கா பண்ணட்டும்...?"

"உங்களுக்கு கால் பண்ணி நீங்க எடுக்கலைன்னதும், விக்கிக்கு கால் பண்ணுனேன்.... அவனும் கால் எடுக்கல. இப்ப என்ன பண்றதுன்னு தெரியலக்கா..." என்றாள் அழுது விடும் குரலில்.

தங்களை அனாதைகள் போல் உணர்ந்தாள் மகிழ்... அண்ணனும், தந்தையும் இல்லாத குறை அப்பொழுதுதான் வெகுவாக நெஞ்சை தாக்கியது.

அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆதி என்ன நினைத்தானோ... அவளது கையில் இருந்த போனை வாங்கியவன், "யாழினி உன்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிக்கிட்டு ரெடியா இரு... இன்னைக்கு ஈவினிங் உன்ன பிக்கப் பண்ணிக்க ஒரு கார் வரும். கிளம்பி உங்க அக்கா இருக்க இடத்துக்கு வந்துரு.." எனக்கூறிவிட்டு மொபைலை மகிழிடம் நீட்டினான்.

அவனை அதிர்ச்சியோடு பார்த்த மகிழ்வதனிக்கு யாழினி இங்கே வருவதில் சுத்தமாக விருப்பமில்லை. ஆனால் இப்போதைக்கு வேறு வழியும் இல்லை.

யாழினிக்கு ஒன்றும் புரியவில்லை... " அக்கா பாரீன்ல தானே இருக்காங்க... ஆனா நீங்க வேற ஏதோ சொல்றீங்க...? "என்றாள் குழப்பமாக.

மகிழ் அப்போதைக்கு நிலைமையை சமாளிப்பதற்காக, "நீ கிளம்பி வா... நான் எல்லாம் அப்புறம் சொல்றேன் உனக்கு.." என்றபடி போனை கட் பண்ணி விட்டாள்.

போனை அவனிடம் நீட்டிவிட்டு, அவன் குடித்த காபி கப்பை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல கிளம்பிய அவளை அவனது நக்கலான குரல் தடுத்தது.

"நியாயமா பாத்தா,நீ இப்ப எனக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு போயிருக்கணும்... பட் எதுவுமே பேசாம போற..."என்றான்.

அவளோ தங்கையுடன் பேசியதிலயே மனபாரத்தில் இருந்தவள், அவனது திமிரான பேச்சில் மேலும் உக்கிரமானவளாக பேசினாள்.

"நான் எதுக்காக சார் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்...?" என்றாளே பார்க்கலாம்....!

ஆதி ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

"நாங்க இந்த நிலைமையில இருக்குறதுக்கே நீங்கதான காரணம்.... நீ... நீ...மட்...டும் தான் ஆதி எல்லாத்துக்கும் காரணம்...."

"நீ மட்டும் எங்க வாழ்க்கையில வராம இருந்திருந்தா.... இப்படி நான் விபச்சாரியா இங்கே நின்னுருக்க மாட்டேன்.... இப்படி நாங்க அனாதைங்க மாதிரி அலைய வேண்டிய தேவையே வந்திருக்காது...."

"எல்லாத்தையும் இழந்துட்டு உசுர மட்டும் வச்சுக்கிட்டு வாழ்ந்திருக்கவும் மாட்டேன்..."என ஆக்ரோஷமாக பேசியபடி மடங்கி அமர்ந்தவள் சற்று நேரம் அழுதுவிட்டு பின் நிதானத்திற்கு வந்தபடி... "சாரி சார்... ஏதோ தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடுங்க"

"இந்தக் கோவத்துல என் தங்கச்சிய எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்... என இரு கரங்களையும் கூப்பி அழுதவாறே கெஞ்சிவிட்டு எழுந்து கண்களைத் துடைத்தவள் விறுவிறுவென கிச்சனுக்கு சென்று விட்டாள் .

ஆதிக்கு மனம் கனத்து போய்விட்டது....அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்று தான் இவ்வளவும் செய்தான்.

அவன் நினைத்தது தான் நடக்கிறது... ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.. இதயத்தில் ஏதோ பெரும் கொடும் பாறையை தூக்கி வைத்தது போன்ற வலி அவனுக்கு....!

பெட்டில் அப்படியே மல்லாக்க படுத்தவன் சீலிங்கை வெறித்தபடியே எவ்வளவு நேரம் இருந்தானோ... ஸ்ருதி அவனது தோள்களை தொட்டு உலுக்கி "ஆதி சாப்பிட வாங்க" என எழுப்பும் வரை அப்படியேதான் இருந்தான்.

தன்னை ஒரு வார சமாளித்துக் கொண்டு எழுந்தவன்.. " நீ போ ஸ்ருதி..நா ரெப்ரஷ் ஆயிட்டு வரேன்... " என்றபடி குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

ஸ்ருதிக்கோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.... போகும் ஆதியின் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகிழ் மேலே வரும்போது அவளை பின்தொடர்ந்து வந்தவள்,அவர்கள் இருவரும் பேசியது முழுவதையும் கேட்டிருந்தாள்.....!

'என்கிட்ட மட்டும் விலகி விலகி போற... அவள பார்த்தா மட்டும் இனிக்குதா உனக்கு...? இதுக்கெல்லாம் கூடிய சீக்கிரமே ஒரு முடிவு கட்டுறேன்...'

'மகிழ்வதனி உனக்கு பட்டதெல்லாம் பத்தாதுல்ல.... நீ அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்குனு உன் தலையில எழுதி இருந்தா, நா என்ன பண்ண முடியும்....? உன் தங்கச்சி வேற வராயில்ல.... உங்க ரெண்டு பேருக்குமே இந்த தடவ நா கொடுக்க போறது மரண அடியா தான் இருக்கும்...' என எண்ணியபடி கீழே சென்று அனைவருடன் உணவருந்த தொடங்கிவிட்டாள்.

மாலை ஆதி சொன்னது போலவே யாழினியை அழைத்து வந்து விட்டான். மகிழுக்கு மேலும் சிரமம் கொடுக்க கூடாது என எண்ணியவனாக அவர்கள் இருவரும் தங்குவதற்கு கீழேயே அறை ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

வீட்டோடு எந்த நேரம் வேண்டும் என்றாலும் வேலை செய்வதற்காக ஒரு வேலைக்காரி வேண்டும் என அவளை மட்டும் இங்கேயே வைத்திருப்பதாக கூறி அப்போதைக்கு குடும்பத்தையும் சமாளித்து வைத்தான்.

இவை அனைத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதி, வன்மத்துடன் மகிழ் மற்றும் யாழினியை முறைத்தவள் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி வக்கிரமாக சில பிளான்களை அவர்களுக்காக போட ஆரம்பித்தாள்....

அதே நேரத்தில் அர்ஜுனின் பார்வை மகிழின் மேல் காதலுடன் படிவதை பார்த்த ஆதியின் ரத்த அழுத்தம் எகிரியது... அவள் தனியாக மாட்டும் பொழுதுக்காக காத்திருக்க தொடங்கினான்.....

ஆனால் அர்ஜுனோ ஆசையாக காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தது தன்னுடைய பழைய காதலி யாழினியை.....

இனி மகிழ் மற்றும் யாழினியின் நிலைமை என்ன ஆகுமோ....?

குறிப்பு : இது போட்டிக்கதை என்பதால் அனைவரும் லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே.... 🥰 உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே.... கருத்துத்திரி இதோ👇👇👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 26

யாழினி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அர்ஜுன் கல்லூரி படிப்பில் இருந்தான்..

யாழினி மகிழ் போல் இல்லாமல் சற்று பூசினாற் போன்ற உடலமைப்பு. கொழுக்மொழுக் பேபியாக வயதிற்கு மீறிய வளர்ச்சியுடன் இருப்பாள்.

ஒரு நாள் கோவிலுக்கு செல்லும்போது அக்காவின் தாவணி பாவாடையை ஆசையாக வாங்கி அணிந்து கொண்டாள்.

பிரபாவதியோ "அடியே வயசுக்கு கூட வரல அதுக்குள்ள உனக்கு தாவணி பாவாட போட ஆசையா.../" என எவ்வளவு திட்டியும் கூட கேட்காமல் 'ஆசையா இருக்கு' என்று கூறியதால் அவள் அண்ணனும் "அம்மா விடும்மா....அவ தான் ஆசை படுறால்ல சின்ன புள்ள" என ஏதேதோ சமாதானம் சொல்லியபடி தங்கைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான்.

சாமி கும்பிட்டு முடித்தபின் கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில் அவள் அண்ணனுக்கு போன் வர கோவில் ரேடியோ சத்தத்தில் சரியாக கேட்காத காரணத்தினால், " இங்கயே உட்கார்ந்திருங்க...இப்போ வந்திடறேன்" என்றபடி போன் பேச வெளியே சென்று விட்டான்.

அன்று ஆதியின் சித்தப்பா குடும்பம் அதே கோவிலில் வேண்டுதலின் பொருட்டு புளியோதரை, சர்க்கரை பொங்கல், சுண்டல் என பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது யாழினியோ மகிழிடம் "அக்கா...அக்கா சக்கர பொங்கல் வாங்கிட்டு வருவோம்.. வரியா...?" என்றாள் ஆசையாக.

அவளோ "கூட்டமா இருக்குடி.. வேண்டாம். அண்ணா வந்தா திட்டும்...பேசாம அமைதியா இரு.." என்றாள்.

ஆனால் யாழினியோ கேட்காமல், "போ... உனக்கு வேண்டாம்னா இரு...நான் போய் வாங்கிட்டு வரப்போறேன். அப்புறம் கேட்ட உனக்கு நா தரவே மாட்டேன்..." என்றபடி எழுந்து சென்று விட்டாள்.

அங்கே சென்ற அவளுக்கு அப்போது தான் புரிந்தது, மகிழ் கூறியதைப் போல் நீண்ட க்யூவாக நின்றிருந்தது கூட்டம்.

"அய்யய்யோ இந்தக் லைன்ல நின்னா நைட் ஆயிருமே வாங்குவதற்கு.... அதுக்குள்ள அண்ணன் வந்து கூட்டிட்டு போயிரும்..... என்ன பண்ணலாம்...? சர்க்கரைப் பொங்கல் வாசம் வேற சூப்பரா இருக்கே....." என யோசித்தபடியே சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

அர்ஜுன் வீட்டு வேலையாட்கள் தான் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் கட்டளையாக ஏதோ கூறிவிட்டு வந்த அர்ஜுனை பார்த்து யாழினிக்கு ஒரு ஐடியா தோன்றியது.

வேகமாக அவனின் முன் போய் நின்றவள்... " அண்ணா... அண்ணா... அந்த பொங்கல் கொடுக்கிறவரு உங்களுக்கு தெரிஞ்சவரா...? ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் சர்க்கரைப் பொங்கல் மட்டும் வாங்கி தரீங்களா... கூட்டம் ரொம்ப இருக்கு" என்றாள்.

தன் முன்னே கொழுகொழுவென அமுல் பேபி போல் தாவணி பாவாடையில் இரட்டைச்சடையுடன் வந்து நின்ற பெண்ணை சுவாரசியமாக பார்த்தான் அவன்.

துருதுருவென கண்களும்...
அலைபாயும் நீண்ட கூந்தலும்....
வெண்ணெய் போன்ற தேகமும்.... வெள்ளந்தி பேச்சும்...
அவளது குழந்தை முகமும் அவனை சுண்டி இழுத்தது.

ஆனால் அவளது 'அண்ணா' என்ற அழைப்பு தான் இடித்தது....

எனவே அவளை முறைத்து பார்த்தவன்... " சரி வாங்கி தரேன் ஆனா அண்ணான்னு கூப்பிடக்கூடாது அர்ஜுன்னு கூப்பிடனும்... அதோட என்கூட ஒரு செல்பி எடுத்துக்கணும் சரியா என்றான் அவளிடம் ஆசையாக.

அவளுக்கு அதெல்லாம் புரியும் வயது இல்லையே... அதிலும் செல்ஃபி மோகம் வேறு... எனவே எப்படியோ பொங்கல் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில்... " சரி அர்ஜுன் என்றபடி அவனின் தோளில் கை வைத்து எம்பிய படி செல்ஃபிக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டாள்.

அர்ஜுனுக்கு தான் அவளது நெருக்கம் அவஸ்தையாகிப் போனது.... தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டவன்... சில போட்டோக்களை கிழுக்கிக்கொண்டு சரி நான் போய் வாங்கிட்டு வரேன் என்றான்

"நான் இங்கேயே நிற்கிறேன் நீ போய் வாங்கிட்டு வா" என்றாள் உரிமையாக....

அவனும் அவளிடம் ஒரு புன்னகையை சிந்திவிட்டு வேகமாக சென்றவன், பொங்கல், புளியோதரை, சுண்டல் என தட்டு நிறைய அள்ளிக் கொண்டு வந்து பார்த்தால் ஆளை காணவில்லை.

அதற்குள் அவளது அண்ணன் வந்து நேரமாகிவிட்டது கிளம்பலாம் என்று இருவரையும் அழைத்துச் சென்று விட்டான்.

அவளும் சக்கரை பொங்கலையே ஏக்கமாக பார்த்தபடி வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.

அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்த அர்ஜுனும் அவளைத் தேடி தேடி கோவில் முழுவதும் அலைந்தும் அவள் கிடைக்கவே இல்லை.

எதையோ இழந்ததைப் போல் இருந்தது மனது..... ' சரி விடுடா பாத்துக்கலாம்' என்றபடி மனதை தேற்றிக்கொண்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அவளைப் பார்த்த முதல் நாளும் அதுதான்...! கடைசி நாளும் அதுதான்...!

அதன் பிறகு அவன் வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவன் மனதில் ஓரத்தில் அவள் எங்கேயாவது தென்படுகிறாளா என்று தேடிக் கொண்டே தான் இருந்தான்.

அவ்வப்பொழுது காரணமே இன்றி அவர்களது செல்பியை எடுத்துப் பார்த்துக்கொள்வான்.... முதலில் ரசனை என்று எண்ணியவன் போகப் போக அது காதல் என்பதை உணர்ந்து கொண்டான்.

காரணமே இன்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதே நேரத்திற்கு அந்த கோவிலுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறான் இன்று வரை....!

அவளைக் கல்லூரி படிக்கும் பெண் என எண்ணி, சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி வாசலிலும் நின்று விட்டான்.

ஆனால் பாவம் அவனுக்கு தெரியாதே ஸ்கூல் படிக்கும் பிள்ளை எதற்கு கல்லூரிக்கு வரப்போகிறது....!

எவ்வளவோ அழகிகளை பார்த்து பழகினாலும் அவர்களிடம் யாழினியின் சாயலை தேடி தேடி தினமும் தோற்றுக் கொண்டிருக்கிறான்.

ஒருவேளை அவளை திரும்ப பார்க்காமலே விட்டிருந்தால் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு கடனே என்று வாழ்ந்திருப்பான் தான் ஆனால் அதற்க்கு அவசியமே இன்றி கடவுள் அவளை அவனது கண்ணில் காட்டிவிட்டாரே....!

ஆனால் அவளின் பார்வையிலேயே புரிந்து கொண்டு விட்டான் அவளுக்கு தன்னை நினைவில் கூட இல்லை என்று.

மனதின் ஓரத்தில் மெல்லியதாக ஒரு வலி எழுந்த போதிலும், எப்படியோ அவளை திரும்ப பார்த்ததே பெரிய விஷயம்..... 'இனிப் பேசி, பழகி கரெக்ட் பண்ணிட வேண்டியதுதான்' என மனதை தேற்றிக் கொண்டான்.

'அடேய்... அர்ஜுன் அந்த ஆண்டவனே ஆறு வருஷம் கழிச்சு உனக்கு மறுவாய்ப்பு தந்திருக்கார்டா... இனியும் மசமசன்னு லேட்டாக்காம, சட்டுப்புட்டுன்னு காதல சொல்லி... கல்யாணம் பண்ணி...குழந்தை குட்டி பெத்துக்கற வழிய பாருடா....'

'யாழுமா....இனி உன் வாழ்க்கை முழுவதும் என்கூட தான் டி என் தங்கப்புள்ள... ' என்று மனதிற்குள் அவளை கொஞ்சிக் கொண்டவன்... அவளையே ஆசை தீர பருகுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த ஆதியோ அவன் மகிழ்வதனியைத் தான் அப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் முகம் இறுக அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

யாழினியை அழைத்துக் கொண்டு தங்களது அறைக்கு சென்ற மகிழ் அவளிடம் உண்மைகளை மறைத்து, அம்மாவின் ஆப்ரேஷனுக்காக வாங்கிய பணத்திற்காக தான் இங்கே வீட்டு வேலை செய்வதாகவும்... அது மற்றவர்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள், எனவே பாரின் செல்வதாக கூறியிருந்தேன் என நம்பும் படியாக யாழினியிடம் கூறினாள்.

அதற்க்கே யாழினிக்கு மனது பாரமாகிவிட்டது, "வீட்டு வேலை செய்றியா....? ஏன் கா இப்படி... ஏன்...?" என்று அழுதாள்.

மகிழுக்குத் தெரியும் யாழினி கல்லூரி சென்று கொண்டிருந்தாலும், இன்னும் மனதளவில் குழந்தையாகத்தான் இருக்கிறாள்.

எதையும் புரிந்து கொள்ளும் பக்குவமோ... சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளும் தந்திரமோ அவளிடம் இல்லை...

இங்கு நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை எல்லாம் கூறினால் அவளால் தாங்கிக் கொள்ளவே இயலாது....

மனதால் இன்னும் குழந்தையாகவே இருக்கும் அவளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து கொண்டவள்... இங்க ரொம்ப நாள் இருப்பது அவளுக்கு நல்லதல்ல என நினைத்தாள்.

எப்படி இங்கருந்து வெளியே செல்வது என யோசிக்கலானாள்.

அதன் பிறகு யாழினியும் ஓரளவிற்கு மகிழுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஆரம்பித்திருந்தாள்.

யாழினி வந்திருப்பதால் இரவுகளை தனிமையில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஆதிக்கு....

மொந்த குடும்பமும் இங்கே இருப்பதால் இப்போதைக்கு வேறு வழியும் இல்லை... ஆனாலும் அவள் வேண்டும் என கேட்கும் தனது உடலை அடக்குவது பெரும் பாடானது அவனுக்கு....

எங்கேயாவது பார்க்கும் பொழுதுகளில் யாருக்கும் தெரியாமல் இதழ் அணைப்புகள், காபியை மேலே தனது அறைக்கே கொண்டுவர கூறிவிட்டு... சிறுசிறு சில்மிஷங்களோடு அடுத்தவர் கண்ணை உறுத்தாமல் தனது மோக விளையாட்டை நிறுத்திக் கொண்டான்.

ஒரு நாள் மாலை வேளையில் அடுப்படிக்குள் இரவு உணவை மகிழும் யாழினியும் தயாரித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

குடும்பத்தில் இருந்த அனைவரும் கொடைக்கானலை சுற்றி பார்க்க சென்று விட்டு இன்னும் வீடு திரும்பவில்லை.

அர்ஜுன் தனக்கு வயிறு சரியில்லை என பொய் கூறிவிட்டு வீட்டிலேயே இருந்து கொண்டான். எல்லாம் தன் தேவதையின் தரிசனத்திற்காகத் தான் ....!

ஆதியோ அலுவலகம் முடிந்து அப்போதுதான் வந்தவன் ஹாலில் அமர்ந்து மொபைல் பார்ப்பது போல், தான் வந்ததை கூட கவனிக்காமல் கிச்சனையே எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனை புருவம் சுருக்கி பார்த்தவன்... " இங்க என்ன பண்ற அர்ஜுன்..? " என்றான் சத்தமாக.

அதில் தன்னிலை மீண்டவன், "ஒன்னுமில்லையே.... சும்மா மொபைல் பாத்துட்டு இருக்கேன்.." என்றான் அவசரமாக.

ஆதிக்கு சுறுசுறுவென்று வந்தது.

இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது என எண்ணியவன், அவனிடம் நேரடியாகவே "வர வர உன் போக்கே சரியில்லையே....நீ கொடைக்கானல் வந்ததிலிருந்து பார்த்துகிட்டுத் தான் இருக்கேன் உன் பார்வை போற திசையே சரியில்ல...."

"நம்ம ரேஞ்ச் என்னங்கிறது ஞாபகம் இருக்குல்ல....?சித்தப்பா பேர கெடுக்கிற மாதிரி எதையும் பண்ணிராத..." என்றான் சற்று அழுத்தமான குரலில்.

அந்தக் குளிரிலும் அர்ஜுனுக்கு வியர்த்து வடிந்தது.

"இல்லண்ணா...அது... வந்து.." என இழுவையாக இழுத்தவன், "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லன்னா... நீங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க...?" என்றான்.

"சில விஷயங்களை உன்கிட்ட நேரா பேச முடியாது அர்ஜுன்...ஏன்னா நான் உன் அண்ணன். மறைமுகமா நான் சொல்லும்போதே புரிஞ்சு நடந்துக்கிட்டேன்னா உனக்கும் மத்தவங்களுக்கும் நல்லது. தேவையில்லாத வேலை பார்த்து என்னை கோபப்படுத்தாத. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்" என்றபடி அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது அறைக்கு சென்று விட்டான்.

அர்ஜுனா சோபாவிலேயே அப்படியே சிலை போல் அமர்ந்து விட்டான்.

என்னதான் அர்ஜுன் தனது தந்தையின் தொழில்களை பார்த்துக்கொண்டு அனைவரும் மதிக்கும் ஓர் நிலையில் இருந்தாலும் ஆதியின் பேச்சு தான் அந்த குடும்பத்தில் ஓங்கி ஒலிக்கும்...

'ஆதி சொன்னா சரியா இருக்கும் பா' என அவன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல் அப்படியே செய்து விடுவார்கள்.

ஆதி பயங்கரமாக ஸ்டேட்டஸ் பார்ப்பவன். நிச்சயமாக யாழினியை தான் காதலிப்பதை அவன் விரும்ப மாட்டான். குடும்பத்திலும் ஒத்துக்க வைப்பது மிக மிக கடினம். எல்லாம் தெரிந்தாலும் அர்ஜுனால் யாழினியை விட முடியாது.

எப்படியாவது முதலில் அவளிடம் தனது காதலை கூறி சம்மதம் வாங்க வேண்டும். அவ சம்மதம் மட்டும் கிடைச்சிட்டா போதும் மத்த எல்லாத்தையும் பாத்துக்கலாம் என்ற மனநிலையில் இருந்தான்.

அவனும் எவ்வளவோ தனது காதலை அவளிடம் தெரியப்படுத்த முயற்சிகள் எடுத்து பார்த்து விட்டான். ஆனால் அவளோ அவனிடம் முதலாளி என்ற முறையை தாண்டி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குறாளே....

எப்படி அவளுக்கு புரிய வைக்கிறதுன்னு அவனுக்கும் புரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டான்.

இவனது முயற்சிகள் அனைத்தும் யாழினிக்கு புரியவில்லை என்றாலும் ஸ்ருதி, பூர்ணிமா இருவருக்கும் நன்றாகவே புரிந்து விட்டது.

பூர்ணிமாவிற்கு ஆப்ட்ரால் ஒரு வேலைக்காரி தனது அண்ணியாக வருவதா....?என்று ஆதங்கம். அதனை மேலும் மேலும் ஊதி பெரிதாக்கி வைத்திருந்தாள் ஸ்ருதி.

"இங்க பாரு பூர்ணி...அவ உனக்கு அண்ணியா வரக்கூடாதுன்னா ஃபர்ஸ்ட் உன் அண்ணனோட மனசுல அவள பத்தின கேவலமான அபிப்பிராயம் வரணும்.அப்பதான் அவளை 'சீச்சீ வேண்டாம்' அப்படின்னு சொல்லிட்டு,உங்க ஸ்டேட்டஸ்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிப்பான்."

"அது எப்படி அந்த மாதிரி ஒரு அபிப்பிராயம் வரும் ஸ்ருதி ...?"

"அது நம்ம தான் பண்ணனும்... அதுவா எப்படி வரும்..? அதுக்கு தான் என்கிட்ட ஒரு பிளான் இருக்கு.." என்றபடி அவளிடம் தனது பிளானை கூறினாள்.

கண்கள் மின்ன அதனை கேட்ட பூரணியும், "எல்லாம் ஓகே தான், இது சரியா வருமா..? எனக்கு என்னவோ பயமா இருக்கு...?"

"அதெல்லாம் சரியா வரும்... நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன். நீ ஜஸ்ட் என் கூட மட்டும் இரு போதும்"

"எதுவும் பிரச்சனை ஆயிடாதில்ல..?"

"கண்டிப்பா பிரச்சனை ஆகும்... ஆனா நமக்கு இல்ல அவளுக்கு..!"

"ஏதோ சொல்ற, சரி நான் உன் கூடவே இருக்கேன். அவ எனக்கு அண்ணியா வரவே கூடாது... அது மட்டும் தான் முக்கியம்.. "

"அதான் நான் இருக்கேன்ல... நான் பாத்துக்குறேன் விடு..." என இருவரும் யாழினியை மிகப்பெரிய சிக்கலில் மாட்டி விடுவதற்கான பிளானை அசால்டாக போட்டு முடித்துவிட்டு, இரவு அனைவரும் உறங்குவதற்காக காத்திருக்க தொடங்கினார்.

அவர்களின் திட்டத்திற்கு ஏற்றவாறு அன்று மகிழ் தலைவலி என்பதால் விரைவாகவே அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, தலைவலி மாத்திரை ஒன்றை போட்டுக் கொண்டவள்...

யாழினியிடம் "எல்லாமே ரெடியா எடுத்து டைனிங் டேபிளில்ல வச்சிட்டேன். லட்சுமி அக்கா பரிமாறிட்டு கிளம்பிடுவாங்க. நீ கொஞ்சம் அவங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் அந்த பாத்திரத்த மட்டும் அள்ளி அடுப்படியில சிங்கிள போட்டுடு....நான் காலையில எழுந்திருச்சு கழுவிக்கிறேன்.... லைட் எல்லாம் ஆஃப் பண்ணி டோர் எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டு வந்து படுத்துரு. என்னால தலைவலி தாங்க முடியல கண்ணே திறக்க முடியல " என்று கூறினாள்.

யாழினியோ "நான் பாத்துக்கிறேன் கா... நீ போய் படு..." என்று விட்டு அனைத்து வேலைகளையும் முடித்து உறங்கச் செல்லும் வேளையில் ஸ்ருதி அவளை அழைத்தாள்.

இரவு சரியாக 11 மணி இருக்கும்... "எனக்கு ரொம்ப தலை வலிக்குது ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா என் ரூமுக்கு..." என்றபடி கீழே உள்ள தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

'ஒரு காபி தான அதுக்காக அக்காவ எழுப்ப வேண்டாம் நம்மலே போட்டு கொடுப்போம்' என்றபடி காபியை போட்டு எடுத்துக்கொண்டு ஸ்ருதியின் அறைக்குச் சென்றாள்.

அங்கே அவள் சென்ற வேளையில், ஸ்ருதி பாத்ரூமில் இருந்தாள்.பெட்டில் நிறைய நகைகள் கடைப்பரப்பி இருந்தது.

'எங்க போனாங்க இவங்க...? ' என ஆராய்ச்சியாக அறையை சுற்றிப் பார்த்தவள் கண்ணில் நகைகள் பட....

'என்ன இவ்வளவு நகைய கட்டில்ல இப்படி போட்டு வச்சுட்டு, கதவையும் தொறந்து போட்டுட்டு, அவங்க பாட்டுக்கு போயிருக்காங்க...?' என யோசித்தபடி குளியலறையில் சத்தம் கேட்டதால் பாத்ரூம்ல இருக்காங்க போல என எண்ணியபடி அவள் வருகைக்காக காத்திருந்தாள்.

ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தவள் அவளிடம் காபியை வாங்கி அருந்தியபடி, அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு காலி கப்பை அவளிடம் நீட்டி "நீ போ" என்றாள்.

அதனை வாங்கிக் கொண்டு வெளியே வரும் வேளையில் பூர்ணிமா ஸ்ருதியினறைக்கு வந்தாள்.

யாழினி ஆச்சரியமாக பார்த்தபடி, "என்ன இந்த நேரத்தில நீ இங்க வந்து இருக்க..?" என ஆச்சரியமாக கேட்பது போல் வினாவினாள்.

"இல்ல அவங்க தான் காபி கேட்டாங்க... அதனால தான் கொண்டு வந்தேன்..." எனக்கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

அறைக்குள் வந்த பூர்ணிமாவும் ஸ்ருதியும் ஹை ஃபை அடித்துக் கொண்டனர் பிளான் சக்சஸ் என்றபடி....

மறுநாள் காலையில் அனைவரும் கொடைக்கானலில் இருக்கும் குருஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் ஸ்ருதியின் வைர நெக்லஸ் ஒன்று காணாமல் போயிருந்தது. அதற்கு காரணம் யாழினி தான் என்று அனைவரின் முன்பும் குற்றவாளியாக நிற்கவைக்கப்பட்டு இருந்தாள்.....!


குறிப்பு : இது போட்டிக்கதை என்பதால் அனைவரும் லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே.... உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... 🥰 உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....❤️

கருத்துத்திரி இதோ👇👇👇


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 27

வீட்டில் உள்ள அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர் வேலையாட்கள் உட்பட....

ஸ்ருதியின் குரல் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. மற்ற அனைவரும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் நின்று கொண்டிருந்தனர்.

"அந்த டைமண்ட் நெக்லஸோட ப்ரைஸ் என்னன்னு தெரியுமா உனக்கு...? ஒழுங்கு மரியாதையா எடுத்த வைரஸ் நெக்லஸ குடுத்துட்டு இரண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க..."

"போலீஸ் கம்ப்ளைன்டுன்னு போனா,அசிங்கப்பட்டு போவீங்க..." என்று சத்தமாக கத்திக் கொண்டிருந்தாள்.

மகிழ்வதனியின் கைகளை தனது நடுங்கும் கைகளால் இறுக்கமாக பிடித்துக் கொண்டு தலையை குனிந்த படி அழுது கொண்டிருந்தாள் யாழினி..... அவளை வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தான் அர்ஜுன்.

மகிழ்வதனியின் பார்வை ஆதியின் உணர்வுகளை பிரதிபலிக்காத முகத்தை தான் வெறித்துக்கொண்டிருந்தது .

அர்ஜுனால் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை...

"ஸ்ருதி நீ கொஞ்சம் வாயை மூடுரியா.... இப்ப எதுக்கு இப்படி எல்லாரையும் கூட்டி வச்சு கத்திக்கிட்டு இருக்க...? அந்த பொண்ணு தான் எடுத்துச்சுங்கிறதுக்கு என்ன எவிடன்ஸ் இருக்கு உன்கிட்ட...? சும்மா ஒருத்தவங்க மேல பழி போடக்கூடாது..." என்றான் கோபக் குரலில்.

வேகமாக அவனது புறம் திரும்பிய ஸ்ருதியோ, "சும்மா பழி போடுறனா..? காணாமப்போனது என்னோட டைமண்ட் நெக்லஸ்.... அதுவும் என்னோட போன பர்த்டேக்கு என் டாடி ஆசையா வாங்கி கொடுத்த நெக்லஸ்..."

"நைட்டு இவதான் என் ரூமுக்கு வந்துட்டு போயிருக்கா.... நைட் பதினோரு மணிக்கு இவளுக்கு என்னோட ரூம்ல என்ன வேலை...? அதுக்கு முதல்ல அவ பதில் சொல்லட்டும்..."

அர்ஜுனோ யோசனையாக "அந்த டைம்ல அவங்க ஏன் உன்னோட ரூமுக்கு வர போறாங்க...? அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல அவங்க உன் ரூமுக்கு வந்துட்டு போனாங்கங்கிறது உனக்கு எப்படி தெரியும்...?"

அவனை இகழ்ச்சியாக பார்த்தபடி, "எதுக்காக அர்ஜுன் போயும் போயும் ஒரு வேலைக்காரிக்கு நீ இவ்வளவு சப்போர்ட் பண்ற" என்றாள்.

"யாரா இருந்தா என்ன..? அவங்களும் மனுஷங்க தானே...? வீனா பழி போடக்கூடாது ஸ்ருதி..."

மகிழ்வதனியின் கண்கள் ஆதியை விட்டு நகரவில்லை.அவனோ அவளது முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் ஸ்ருதி பேசுவதையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையை உணர்ந்த ஸ்ருதியோ மேலும் உற்சாகமாகி, "என்ன ஆதாரம்னு தானே கேட்ட... உன் தங்கச்சி பூர்ணிமா தான் பார்த்து இருக்கா... வேணும்னா அவகிட்டயே கேட்டுப் பாரு..."

அனைவரின் பார்வையும் பூர்ணிமாவின் புறம் திரும்பியது....

பூர்ணிமாவோ மெதுவாக எச்சிலை விழுங்கியபடியே, "ஆமா நா பார்த்தேன்... நாளைக்கு என்ன டிரஸ் போட போறேன்னு ஸ்ருதி கிட்ட கேக்கறதுக்காக நைட் அவளோட ரூமுக்கு போனேன்... அப்போ இந்த யாழினி பதட்டமா ஸ்டுதியோட ரூம்ல இருந்து வெளில வந்தா..."

"இந்த நேரத்துல இங்க என்ன பண்ற அப்படின்னு கேட்டதுக்கு, 'ஸ்ருதி காபி கேட்டா அதான் கொண்டு வந்தேன்' அப்படின்னு சொன்னா....ஆனா அவ கைல காபி கப் எதுவுமே இல்லை. எனக்கு அப்பவே டவுட்டா இருந்துச்சு. பட் அப்ப நான் அத பெருசா எடுத்துக்கல."

"மார்னிங் சுருதி வந்து என்னோட டைமண்ட் நெக்லஸ காணும்னு சொன்னப்ப தான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு..."

"ஏன்னா நா ரூமுக்கு போனப்ப ஸ்ருதி வாஷ் ரூம்ல இருந்து வெளில வந்தா.அவ பெட்டுல தான் நகையெல்லாம் இருந்தது. நான் கூட திட்டுனேன்... இவ்வளவு கேர்லசா நகைய வெளியில வச்சுட்டு போயிருக்க அப்படின்னு..."

"அதுக்கு அவ சொன்னா 'நம்ம வீடு தானே அப்படின்னு'... ஆனா இப்ப என்ன நடந்திருக்கு பாருங்க..." என்றபடி நிறுத்திக்கொண்டாள்.

யாழினியோ அழுகையுடனே "ஸ்ருதி மேடம் தான் காபி கேட்டாங்க. அது கொடுக்குறதுக்காக தான் போனேன்.." என்றாள் தேம்பியபடி.

அவளால் சரியாக பேசக்கூட முடியவில்லை... உள்ளுக்குள் நொறுங்கி, ஒடுங்கிப்போய் நின்று இருந்தாள்... இப்படிப்பட்ட நிலைமையை அவள் கனவில் கூட யோசித்ததில்லையே...!

மகிழ்வதனி, யாழினியின் கையை இறுக்கமாக பிடித்திருந்தாள்.....அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

உன்னை நான் நம்புகின்றேன்....!
எதற்காகவும் நீ பயப்படாதே....!
எப்பொழுதும் நான் உன் கூடவே இருப்பேன்....!

இப்பொழுதும் ஆதி வாயை திறக்கவில்லை.. அர்ஜுன் தான் பேசினான்.

"நீதான ஸ்ருதி காபி கேட்டுருக்க... அதனால தான் அவங்க கொண்டு வந்திருக்காங்க.. இதுல என்ன இருக்கு...?"

"எதே நா காபி கேட்டனா...? நைட் பதினோரு மணிக்கு காபி கேட்க நா என்ன பைத்தியமா..?" என்றாளே பார்க்கலாம்...

மகிழ்வதனிக்கு முழுவதுமாக புரிந்துவிட்டது. இவை அனைத்துமே ஸ்ருதியின் பிளான் என்று...

அன்று தன்னை பகடைக்காயாக உருட்டிய பொழுது தாங்கிக் கொண்டு குடும்பத்திற்காக நின்றவளால்... இன்று தன் தங்கையின் மேல் விழும் திருட்டுப் பழியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இருந்தும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் நின்று கொண்டிருந்தாள்.தற்பொழுது அவளது ஒரே நம்பிக்கை ஆதியின் மேல் மட்டுமே இருந்தது...

அவன் நிச்சயமாக ஏதாவது செய்வான் என்று அவளது உள்ளுணர்வு கூறிக் கொண்டே இருந்தது...

ஆதியின் சித்தப்பாவும், "தேவையில்லாத ஆர்கியுமென்ட்ஸ் எதுக்கு..? அந்த பொண்ணோட பேக் எல்லாத்தையும் செக் பண்ணுனா தெரிஞ்சிட போகுது.." என்றார்.

ஸ்ருதியின் தந்தை இளமாறனோ "அது எப்படி எடுத்த பொருளை இவ்வளவு நேரமா பேக்ல வச்சுக்கிட்டு இருக்க அவ என்ன முட்டாளா...? இந்நேரம் எங்க எங்க கைமாத்துனாங்களோ..?"

" எனக்கு என்னமோ இது முதல் தடவ இந்த பொண்ணு செஞ்ச மாதிரி தோணல... இதையே தொழிலா வெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்... " என்றார் இகழ்ச்சியாக இதழ்களை வளைத்தபடி..

அவரை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தானே தவிர, ஆதி ஒரு வார்த்தை கூட பேசவில்லை....!

மகிழ்வதனிக்கு பத்தி கொண்டு வந்தது... அன்றும் தனது நம்பிக்கையை பொய்யாக்கினான். இன்றும் தனது நம்பிக்கை பொய்க்கப் போகிறது....

இனியும் இவனை நம்பிக் கொண்டு நின்று கொண்டிருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலைமை போல்,தன் தங்கை மேல் திருட்டுப் பழியை சுமத்தி விடுவார்கள்.... என்ற காரணத்தினால் அவளே பேச ஆரம்பித்தாள்.

"அந்த மாதிரி புத்தி எல்லாம் எங்க குடும்பத்துல யாருக்கும் கிடையாது சார்...சில பேரு தான் அடுத்தவங்களோட பணம்,காசு, பேர், புகழுக்காக ஆசைப்படுவாங்க... எங்களுக்கெல்லாம் அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்ல..." என்றாள் இளமாறனை கூர்மையாக பார்த்தபடி.

அவரின் முகம் பயங்கரமாக மாறியது... பின் சட்டென்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அமைதியாகிவிட்டார்.

ஆனால் ஸ்ருதியோ அகங்காரமாக, "நெக்லஸ திருடிட்டு என்ன பேச்சு வேண்டி கிடக்கு உனக்கு...? உன் தங்கச்சிய அதுக்காக தான் இங்க கூட்டிட்டு வந்தியா...? அப்ப குடும்பமா சேர்ந்து இதே தொழிலா தான் சுத்துறீங்களா...? திருட்டு மட்டும் தானா கைவசம் வேற தொழில் எதுவும் வச்சிருக்கீங்களா...?"

"மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.... என் தங்கச்சி அந்த நெக்லஸ திருடல" என்றாள் அழுத்தமாக. "

"அப்போ அந்த நெக்லஸ்க்கு கால் முளைச்சு தன்னால ஓடிருச்சா..?"

"இல்ல சம்பந்தப்பட்டவங்க யாரோ அத எடுத்து வச்சிருக்காங்கன்னு சொல்றேன்... அது யாரா வேணாலும் இருக்கலாம்.... நெக்லஸ்க்கு சொந்தக்காரங்களாக கூட இருக்கலாம்..."

"நானே எடுத்து ஒழிச்சு வச்சுட்டு உன் தங்கச்சி மேல பழி போடுறேன்னு சொல்லவற்ரியா...? அதுக்கு எனக்கு என்ன அவசியம் வேண்டி கிடக்கு..?"

"யாருக்கு மேடம் தெரியும்...?"

"ஆப்ட்ரால் ஒரு வேலைக்காரிக்கு ஈக்வலா நா இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யணும்னு எனக்கு என்ன தையெழுத்து...."

"எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..." என்றார் சுந்தரலிங்கம் கர்ஜனையாக.

அவரது கர்ஜனையில் அனைவரும் அமைதியாகிவிட்டனர்.

ஸ்ருதி மற்றும் பூர்ணிமாவை முன்னே அழைத்தவர் "என்ன நடந்ததுன்னு இப்போ தெளிவா சொல்லுங்க" என்றார்.

அவர்களும் தாங்கள் ஏற்கனவே யோசித்து வைத்திருந்த அனைத்தையும் அப்படியே நடந்தது போல் அச்சு பிசுகாமல் ஒப்பித்தனர்.

அடுத்ததாக யாழினியின் புறம் திரும்பியவர் "இங்க வாம்மா" என்றார்.

அவளோ கை, கால், உடல் எல்லாம் நடுங்க.... வேர்த்து விறுவிறுத்தபடி தனது அக்காவை திரும்பி நிமிர்ந்து பார்த்தாள்.

மகிழ்வதனியோ கண்களை மூடித் திறந்தவள், அமைதியாக 'நான் இருக்கேன் பார்த்துக்கிறேன்' என்ற ரீதியில் அவளை போகச் சொன்னாள்.

மெதுவாக அடி மேல் அடி வைத்து சுந்தரலிங்கேஸ்வரரிடம் சென்றவள் அமைதியாக தேம்மியபடி நின்று கொண்டாள். கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக ஓடிக்கொண்டிருந்தது.

தன் தங்கையின் நிலையை பார்த்து மகிழ்வதனிக்கு இதயமே நின்று விடும் அளவிற்கு நெஞ்சடைத்தது....

'ஏன் கடவுளே...? நாங்க விலகி விலகி தானே போறோம்... ஏன் எங்களை இப்படி பாடா படுத்துற...? அப்படி என்ன நாங்க தப்பு செஞ்சிட்டோம்....? ' என மானசீகமாக கடவுளிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"நீ சொல்லுமா என்ன நடந்துச்சு நேத்து நைட்டு..?" என்றார் பொறுமையாக.

அவளோ தேம்பியபடி தன் தரப்பு நியாயங்களை கூறினாள்.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, " சரி அப்படியே அவ காபி கேட்டிருந்தாலும் உங்க அக்கா தானே போட்டுக் கொண்டு போய் கொடுத்திருக்கணும். நீ ஏன் அங்க போன...? " என்றார் அவளை ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டு.

மகிழ்வதனி வேகமாக ஏதோ சொல்ல வாய் எடுக்க....வேகமாக தனது கரத்தை அவளை நோக்கி நிறுத்து என்பது போல் காட்டியவர், யாழினியின் புறம் திரும்பி "நீ சொல்லுமா" என்றார்.

அவளும் சற்று தன்னை தேற்றிய படி அமைதியாக, மகிழுக்கு தலைவலி என்பதால் தானே காபி கொண்டு சென்றதாக கூறினாள்.

இரு தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்தவர் சற்று நேரம் அமைதியாக சிந்திக்கலானார்.

அந்த நேரத்தில் இளமாறன், "என்ன மச்சான் நீங்க...திருட்டு கழுதைகளை எல்லாம் நிக்க வச்சு, பேச விட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க. இவளுங்களையெல்லாம் கேட்கிற விதமா கேட்டா தான் உண்மை வெளியில வரும்.... " என்றார் ஆவேசமாக.

அவரின் முறையற்ற பேச்சில் குறுகியவளாக கண்ணீர் சிந்திய படி மகிழ்வதனி தலையை குனிந்து நின்றிருந்த வேளையில் "பளார் " என ஒரு சத்தம்.....!

அங்கிருந்த அனைவரும் என்ன ஏதென்று உணரும் முன்னே... 'பளார்... பளார்...' என மேலும் நான்கைந்து அறைகள் இளமாறனை அறைந்திருந்தான் ஆதி....!


குறிப்பு : 25 லைக்ஸ் & கமெண்ட்ஸ் இங்கு வந்தால் அடுத்த அத்தியாயம் இன்றே வரும் 🥰இது போட்டிக்கதை என்பதால் அனைவரும் லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....🤝
கருத்துத்திரி இதோ👇👇👇👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 28

தன்முன் வெறிகொண்ட வேங்கை போல் கண்கள் சிவக்க... நரம்புகள் முறுக்கியபடி... ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்த ஆதியையே கண்ணிமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மகிழ்வதனி.

அவள் மட்டுமல்ல அனைவரும் ஸ்தம்பித்து போய் சிலையாகத் தான் நின்று கொண்டிருந்தனர்.

ஸ்ருதியின் தாய் ராதிகா தான் வேகமாக சுதாரித்தவர், தன் கணவரின் முன்னே வந்து நின்றபடி, "ஆதி என்ன பண்றப்பா....?அவர் உன் மாமா..." என்றார் ஆதங்கமாக.

ஆதங்கமாக மட்டுமே....! ஆம் அவனிடம் கோபமாக பேச முடியுமா...?

"அதனால மட்டும்தான் அவரு இன்னும் உயிரோட என் முன்னாடி நின்னுகிட்டு இருக்காரு..." என்று உறுமினான் .

இளமாறன் தலையை நிமிரவே இல்லை. தளர்ந்து போய் தலையை குனிந்த படி சோபாவில் அமர்ந்துவிட்டார்.

ஆதியின் தாய் மீனசுலோச்சனாவோ, " என்னடா இது திருடின அந்த பொண்ண விட்டுட்டு.... மாமாவா போய்... " என்றார்.

அவரை நோக்கி ஒரு தீ பார்வையை வீசியவன், " அம்மா உங்களுக்கு ஒன்னும் புரியாது. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க... எல்லாத்தையும் சொல்றேன். "

ஸ்ருதிக்கோ கை கால்கள் உதற ஆரம்பித்துவிட்டது...…

எங்கே தனது குட்டு அனைத்தும் வெளிப்பட்டு விடுமோ என வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்துவிட்டாள்.

"சொல்லுங்க மிஸ்டர் இளமாறன்... நீங்க இதுவரைக்கும் யார் யாரோட சேர்ந்து என்னென்ன பண்ணுனீங்கங்கறத எல்லாரும் கேட்கிற மாதிரி சொல்லுங்க..." என்றான்.

அவரால் ஒன்றும் பேச முடியவில்லை தலையை குனிந்தபடி அப்படியே அமர்ந்திருந்தார்.

ஸ்ருதி தனது பதட்டத்தை மறைத்துக் கொண்டு வேகமாக ஆதியின் முன்னால் வந்தவள், "ஆதி அப்பா கிட்ட என்ன பேசுறீங்க...? அவர் என்ன பண்ணி இருந்தாலும் இப்படித்தான் அறைவீங்களா...? என்றாள் கோபமாக.

அவளைப் பார்த்து லேசாக இதழ் வளைத்தவன்... " நீ சொல்றதும் கரெக்ட் தான் ஸ்ருதி. என்ன தான் அவரு எல்லாமே பண்ணி இருந்தாலும் அதுக்கு மூலக்காரணம் யாரோ அவங்கள விட்டுட்டு அவர அரைஞ்சது என் தப்பு தான்.... ஆனா அதை இப்ப சரி பண்ணி விடலாம்" என்றான்.

ஆதி பார்த்த பார்வையில் ஸ்ருதி தன்னால் இரு அடிகள் பின்னோக்கி நகர்ந்தாள்.

அதைப் பார்த்து வாய்விட்டு சிரித்தவனோ மீண்டும் இளமாறனின் முன் வந்து நின்றவன், அவரின் சட்டை காலரை பிடித்து தூக்கி நிறுத்தியபடி ஸ்ருதியிடம் திரும்பியவன், "இப்ப நீ கட கட னு ஒன்னு விடாம நா கேட்கிற கேள்விக்கு உண்மைய சொல்லல..." என நாக்கை மடித்து ஒற்றை விரலை உயர்த்தி அவளை எச்சரிக்கை செய்தான்.

சர்வமும் ஒடுங்கி விட்டது ஸ்ருதிக்கு...!

"நான் ஃபாரின் போனதுக்கு அப்புறம் மகிழ் வீட்டுக்கு போய் என்ன பண்ணுனீங்க...?"

"நா... நா.... நாங்க ஒன்னும் பண்ணலையே.... நாங்க ஏன் அவ வீட்டுக்கு போகணும்..? என ஸ்டுதி கூறியது தான் தாமதம்...

மீண்டும் இளமாறனை ஓங்கி அறைந்திருந்தான்...!

"உண்மையைத் தவிர உன் வாயில இருந்து ஒரு வார்த்தை பொய் வந்தாலும் உங்க அப்பா தான் அறை வாங்குவாரு...." என்றான் கர்ஜனையாக.

"வேணாம்...வேணாம்... ஆதி ப்ளீஸ்... ஏதோ தெரியாம பண்ணிட்டோம்.விட்டுடு..." என்றாள் அழுதபடியே.

"ஹ்ம் இப்ப சொல்லு.."

ஒரு கணம் மகிழ்வதனியை நோக்கி வன்மமாக பார்வையை திருப்பி விட்டு நடந்ததை கூற ஆரம்பித்தாள்.

ஸ்ருதிக்கு பதின்மவயதிலிருந்தே ஆதியை மிக மிகப் பிடிக்கும்...!

அது அவன் பணக்காரன் என்பதினாலா...?
ஸ்மார்ட் ஆக இருக்கிறான் என்பதனாலா...?
அனைத்திலும் முதன்மையாக இருக்கிறான் என்பதினாலா...?இல்லை அனைத்தும் சேர்ந்ததாலோ...?அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

ஆனால் ஆதி குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடம் எப்படி பேசுகிறானோ அப்படி தான் ஸ்ருதியிடமும் பேசுவான்.

ஆதி எம்பிஏ கல்லூரி படிப்பில் இருந்த சமயம் அது...அந்த நேரத்தில் தான் ஸ்ருதியின் தந்தை இளமாறனின் தொழில் சரிவடைந்து மீட்க முடியாமல் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருந்தது.

தங்கியிருந்த வீட்டிலிருந்து அனைத்து சொத்துக்களும் ஜப்தி செய்யும் நிலையில் இருந்தது. ராதிகா தனது அண்ணனான சுந்தரலிங்கத்திடம் உதவி கேட்டிருந்தார்.

அவரும் தன்னாலான உதவிகளை செய்து கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் ராதிகாவின் குடும்பம் முழுவதும் ஆதியின் வீட்டில் தான் தங்கி இருந்தது.

அதுவரை தனக்கு போட்டி மீனசுலோச்சனையின் அண்ணன் மகள் நேத்ரா மட்டுமே என எண்ணி, அவளை முடிந்த அளவு ஆதியிடமிருந்து தள்ளி வைத்திருந்த ஸ்ருதிக்கு, பேரிடியாக தெரிய வந்தது ஆதியின் மகிழ்வதனி மீதான காதல்....!

ஒரு நாள் ஆதி அவனது அறையில் இருக்கும் பொழுது அவனிடம் கொஞ்சம் அப்படி இப்படி இருந்து அவனது மனதை தனது கவர்ச்சியான உடலை காட்டி கவர்வதற்காக சென்றவள், அவன் மகிழ்வதனியுடன் கதைத்துக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டாள்.

அவளால் அந்த தோல்வியை ஜீரணிக்கவே முடியவில்லை. வேகமாக தனது தந்தையிடம் சென்று விஷயத்தை கூறியவள், அந்தப் பெண் யார் என்று கண்டுபிடித்து ஆதியின் வாழ்க்கையிலிருந்து அவளை நீக்க வேண்டும் என்று கூறினாள்.

இளமாறனும் பேராசைக்காரர்....! மகளை எப்படியாவது ஆதிக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு, இந்த வீட்டோடு சம்பந்தியாக இருந்து கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தவருக்கு ஸ்ருதி கூறிய விஷயம் அதிர்ச்சி தான்....!

இருந்தும் எதுவும் இன்னும் தங்கள் கையை விட்டுப் போகவில்லை... பார்த்துக் கொள்ளலாம்... என்ற நினைப்பில் அடுத்தடுத்த காய்களை நகர்த்தினர் அப்பாவும், மகளும்.

அன்றிலிருந்து ஆதியை ஃபாலோ செய்ய ஒரு ஆளை போட்டவர் மகிழ்வதனியை பற்றிய முழு விவரங்களையும் கைப்பற்றினார். விக்கியைப் பற்றியும் தெரிய வந்த பொழுது வேகமாக மனதிற்குள் பல கணக்குகளை போட்டுவிட்டனர்.

காதல் மயக்கத்தில் இருந்த ஆதிக்கும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

தக்க சமயத்துக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள், ஆதி பாரின் கிளம்பி போன சமயத்தை பயன்படுத்தி மகிழின் வீட்டிற்கு சென்றனர்.

அன்று யாழினிக்கு பிறந்தநாள்...!

அனைவரும் காலை உணவை முடித்து விட்டு கோவிலுக்கு சென்று வந்த பிறகு மதிய உணவு ஸ்பெஷலாக தயாரித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ருதியும் அவளது தந்தையும் உள்ளே நுழைந்தவுடன், " யார் நீங்க..? என்ன வேண்டும்...? " என வினாவினான் மகிழ்வதனியின் அண்ணன் சஞ்சய்குமார்.

இளமாறனோ "கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோம் தம்பி... வாங்க.." என்றபடி அமர்ந்து வீட்டை நோட்டம் விட்டார்.

சஞ்சயோ இருவரையும் ஆராய்ச்சியாக பார்த்தான்.

"என்ன தம்பி இவ்ளோ ராயலா இருக்காங்க, இவங்க ஏன் நம்மள தேடி வந்துருக்காங்கன்னு யோசிக்கிறீங்களா..?"

அவன் எதுவும் பேசாமல் நீங்களே கூறுங்கள் என்பது போல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

உள்ளே சமைத்துக் கொண்டிருந்த மகிழ்வதனி வெளியே சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவள் ஆதியின் மாமாவை பார்த்தவுடன் அசையாமல் நின்றுவிட்டாள்.

"நாங்க யாருன்னு தானே தம்பி யோசிக்கிறீங்க...? அங்க பாருங்க உங்க தங்கச்சி அவங்கள கேளுங்க எல்லாம் சொல்லுவாங்க..."

சஞ்சய் திரும்பி மகிழ்வதனியை புருவங்கள் சுருக்கி பார்த்தான். அவளது அதிர்ச்சியான முகம் எதையோ கூறுவது போல் இருந்தது அவனுக்கு.

ஸ்ருதியோ மனதிற்குள், 'ச்ச அழகா கூட இல்ல... இவள போய் ஏன் தான் இந்த ஆதிக்கு புடிச்சு தொலையுதோ...? போயும் போயும் இப்படி ஒருத்தி எல்லாம் எனக்கு போட்டியா..' என அருவருப்பாக மகிழ்வதனியை நோக்கினாள்.

ஸ்ருதியின் பார்வை தன் தங்கையின் மேல் அருவருப்பாக படிவதை பார்த்தவன் அதனை தாங்கிக் கொள்ள முடியாது, " நீங்க வந்த விஷயம் என்னன்னு சொல்லிட்டு கிளம்புறீங்களா...எங்களுக்கும் நிறைய வேலை இருக்கு" என்றான் கோபத்தை கட்டுப்படுத்தியபடி.

"அதுக்கு தானப்பா வந்திருக்கோம். கொஞ்சம் பொறுமையா இரு... ஆமா உனக்கு ரெண்டு தங்கச்சின்னு கேள்விப்பட்டேன். ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளை ரெடி பண்ணிட்ட... இன்னொரு பொண்ண யாரு கூட பழக சொல்லி அனுப்பிவிட்டு இருக்க...?என்றார் எடுத்த எடுப்பிலேயே முகங்சுழிக்க வைக்கும் சொற்களோடு...

சஞ்சய்க்கு கை நரம்புகள் புடைத்துக் கொண்டு கோபம் தலைக்கேறியது....இருந்தும் தன் தங்கை பக்கம் ஏதோ தவறு உள்ளது என்பதை உணர்ந்து கொண்டவன், நிதானமாகவே "அந்த மாதிரி புத்தி எல்லாம் எங்க குடும்பத்துக்கு கிடையாது. நீங்க யாருங்கிறத பஸ்ட் சொல்லப் போறீங்களா? இல்ல எழுந்திருச்சு வெளியில போறீங்களா..?" என்றான்.

"அது எப்படிப்பா அந்த மாதிரி புத்தி எல்லாம் கிடையாதுங்குற, நல்ல பணக்கார பையனா பார்த்து வளைச்சு போட தங்கச்சிக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததே நீயா தான் இருக்கும்... இல்லன்னா பணக்கார பசங்க படிக்கிற காலேஜ்ல ஏன் கொண்டு போய் சேர்த்த...? இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுற நீ..."

"வார்த்தைய அளந்து பேசுங்க.. தேவையில்லாம என் தங்கச்சிய பத்தி தப்பா பேசாதீங்க... பின்னாடி ரொம்ப வருத்தப்படுவீங்க.."

அவன் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே ரவுடிகள் போன்ற தோற்றம் கொண்ட நான்கைந்து பேர் கடகடவென உள்ளே நுழைந்தனர்.

சஞ்சய் மற்றும் அவனது குடும்பத்தினர் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை....

சஞ்சய் தான் வேகமாக எழுந்தவன் தங்கைகள் மற்றும் தாயை கிச்சனுக்குள் நகர்த்தியபடி, "யாருடா நீங்க..? உங்களுக்கெல்லாம் என்ன வேணும்...?" என தன் பதட்டத்தை மறைத்தபடி ஆக்ரோஷமாக வினவினான்.

இருவர் அவனை இறுக்கமாக பிடித்துக் கொள்ள, மற்றவர்கள் மகிழ், யாழினி மற்றும் பிரபாவதி என மூவரின் கழுத்தில் கத்தியை வைத்தனர்.

இளமாறன் தான் பேசினார், " சத்தம் போடக்கூடாது... சவுண்ட் வெளியில வந்துச்சு மூணு பேரை அறுத்து போட்டுட்டு போய்கிட்டே இருப்போம் "

ஸ்ருதி வேகமாக மகிழிடம் வந்தவள், "உன்னோட போன் எங்கடி...?" என்றாள்.

அவளோ அழுது கொண்டே தனது அண்ணனை நோக்க, அவன் வாயையே திறக்க முடியாத சூழ்நிலை. கண்களாலேயே கொடுத்து விடு என்றான்.

தனது அறைக்கு அவர்களது அடியாளுடனே சென்று போனை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தாள்.

அதனை வெடுக்கென மகிழின் கையிலிருந்து பறித்தவள், வேகமாக சாட் மற்றும் கால் ஹிஸ்டரியை ஆராய்ந்தாள்.

அதனைப் பார்த்த அவளின் முகம் பயங்கரமாக மாற.. மகிழை நோக்கி திரும்பியவள் ஓங்கி ஒரு அறை விட்டாள்.

"பிச்சைக்காரி மாதிரி இருக்கிற உனக்கு என்னோட ஆதி கேக்குதா..? இவங்க எல்லாரையும் வண்டில ஏத்த சொல்லுங்கப்பா. நம்மளோட இடத்துக்கு கொண்டு போயிடலாம்" என்றாள்.

இளமாறனும் அடியாட்களுக்கு கண்ணைக் காட்டி விட, விறுவிறுவென கண்ணிமைக்கும் நொடிகளில் மொத்த குடும்பத்தையும் வண்டியில் ஏற்றியபடி அவர்களது இடம் நோக்கி பறந்தார்கள்.

அங்கு சென்ற பிறகுதான் ஏற்கனவே விக்கியை கடத்திக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை மகிழுக்கு புரிந்தது.

யாராலும் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை... மகிழின் மனம் ஆதியை பெரிதும் நாடியது...

' எப்படியாவது வந்து எங்கள காப்பாத்திடு ஆதி....' என்று மனதிற்குள் அவள் புலம்பிக் கொண்டிருந்த நேரம்....ஸ்ருதியின் கைகளில் இருந்த மகிழ்வதனியின் மொபைல் சினுங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அதனைப் பார்த்து ஸ்ருதிக்கு ஆத்திரமாக வந்தது....

ஆனால் காலை அட்டென்ட் செய்யவில்லை. போன் எடுக்கவில்லை என்றதும் ஏகப்பட்ட குறுஞ்செய்திகளை வேற அனுப்பியிருந்தான்.

அதனைப் பார்க்க பார்க்க ஸ்ருதிக்கு கிட்டத்தட்ட வெறி பிடித்து விட்டது. இருந்தும் வேலையாக வேண்டுமே என்று பொறுமை காத்தாள்.

"இப்ப நான் சொல்றத அப்படியே செய்யற. இல்லன்னா உன் குடும்பம் மொத்தத்தையும் நீ உயிரோடவே பார்க்க முடியாது" என்றாள் மகிழை பார்த்து.

அவளுக்கும் வேறு வழியில்லாததால், அழுது கொண்டே 'சரி' என தலையசைத்தாள்.


விக்கி மற்றும் மகிழை மணக்கோலத்தில் ரெடி செய்தவர்கள்... அவர்கள் கூறியபடி பேச சொல்லி வீடியோவாக ரெக்கார்ட் பண்ணிக் கொண்டனர்.

அவர்கள் விரும்பிய படி அனைத்தும் முடிந்ததும்... இனி மகிழ்வதனி ஆதியை தொடர்பு கொள்ளவே கூடாது என்றும், அவர்கள் அனைவரையும் இந்த ஊரை விட்டு செல்லும்படியும் கூறியவர்கள்...

தங்களை மீறி ஏதாவது செய்ய நினைத்தால் அடுத்த நொடியே குடும்பத்தில் இருப்பவர்களை கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

அனைத்தையும் கூறி முடித்த ஸ்ருதி... "இது எல்லாமே உங்களுக்காக தான் ஆதி பண்ணுனேன். நா உங்க மேல அவ்ளோ லவ் வச்சிருக்கேன்... ப்ளீஸ் ஆதி என்னய ஏத்துக்கங்க... உங்களுக்கு நா தான் கரெக்டா இருப்பேன்.... எல்லா விதத்திலும்.. என்றாள் அழுகை கலந்த குரலில்.

அவளைப் பார்த்த ஆதிக்கு ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டள் போலத்தான் தோன்றியது.

அவள் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு எதுவும் அவளிடம் பதில் கூறாமல் மகிழை நோக்கி திரும்பினான்.

அவளது கசங்கிய முகமே அவள் அன்று நடந்ததை யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை பறைசாற்றியது....!

அதற்கேற்றார் போல் மனதிற்குள் மகிழும் அன்று நடந்த சம்பவத்தை தான் நினைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அழுதபடியே வீடு வந்து சேர்ந்தவர்கள் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

மகிழுக்கு மட்டும் கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது. சஞ்சய் எதுவும் பேசவில்லை அப்படியே பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான். அடுத்து என்ன என்பதை அவனால் யோசிக்கக்கூட முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து விக்கி தான் சற்று நிதானத்திற்கு வந்தவன், சஞ்சயிடம் சென்று "இப்படியெல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கல மச்சான், எனக்கு ஏற்கனவே தெரியும்... உன்கிட்ட டைம் பார்த்து சொல்லலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதுக்குள்ள என்னென்னவோ ஆகிப்போச்சு" என்றான்.

அவனை முறைத்து விட்டு மகிழை நோக்கி திரும்பினான் சஞ்சய்... அவளின் அழுத முகத்தை பார்த்தவன், அவளிடம் எதுவும் பேசாமல் ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு.. " நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன்" என்று பொதுவாக சொல்லியவன் வெளிக்கிளம்பிவிட்டான்.

அவனது அந்தப் பார்வை மகிழின் உயிர் வரை கொன்று புதைத்தது.

அவன் சென்ற அரை மணி நேரத்திலேயே ஹாஸ்பிட்டலில் இருந்து போன் வந்தது.

"இந்த போன் வச்சிருந்த பையனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சும்மா. ஹாஸ்பிடல்ல ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல சேத்துருக்கோம் மலர் ஹாஸ்பிட்டலுக்கு வந்துருங்க" என்றனர் எதிர் முனையில்.

போனை அட்டென்ட் செய்து பேசிய பிரபாவதி மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்த விக்கி தான், "அம்மா என்னாச்சு..? என்னாச்சு..?" என்றபடி ஃபோனை எடுத்து காதில் வைத்து எதிர்முனையில் கூறப்பட்ட செய்தியில் அதிர்ச்சியானவன்.. தண்ணீர் தெளித்து பிரபாவதி எழுந்து ஒரு நிலைமைக்கு வந்த பிறகு, யாழினியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மகிழை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றான்.

அங்கு ஹாஸ்பிடலிலோ... 'கவன குறைவால் வண்டியை லாரியில் விட்டுவிட்டார் என்றும்,தலையில் பயங்கரமான அடி... கோமா ஸ்டேஜ்க்கு சென்று விட்டார்... இனி சரி பண்ணவே முடியாது.. ' என ஒரு பேரிடியை இறக்கினர்.

அதன் பிறகு அவள் வாழ்வில் நடந்ததெல்லாம் கொடுமையான நிகழ்வுகள் மட்டுமே....!

வீட்டில் இருந்த பணம், நகை என அனைத்தையும் ஒன்று மாற்றி ஒன்று வித்து அண்ணனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என அனைத்து ஹாஸ்பிடலுக்கும் கொண்டு சென்று பார்த்துவிட்டனர்.

எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து முடித்த பிறகு அனைவரும் கூறிய ஒரே பதில், ' இனி உயிர் மட்டும் தான் இருக்கும்... உணர்ச்சிகள் இருக்காது...' என்பதே.

இதற்கிடையில் ஒரு நாள் ஸ்ருதியின் தந்தை வேறு மீண்டும் வந்து, "நீங்க இன்னும் ஊர காலி பண்ணலையா...?குடும்பத்தை மொத்தமா தூக்கினா தான் நீங்க அடங்குவீங்களா..?" என மிரட்டி விட்டு சென்றிருந்தார்.

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த வேலையில் தான் விக்கியின் நண்பன் மூலம் இந்த கொடைக்கானலில் இருக்கும் வைத்தியர் பற்றி தெரிய வந்தது.

அடுத்த ஒரு வாரத்திற்குள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு, அண்ணனை அந்த வைத்தியரிடம் சேர்த்து விட்டு, இவர்களும் அங்கு பக்கத்திலேயே ஒரு வேலையைத் தேடிக் கொண்டு தங்கி விட்டனர்.

இவை அனைத்தும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மகிழின் ஆழ்மனதிற்குள் ஒரு நம்பிக்கை.... அவளே அறியாமல் இருந்து கொண்டே இருந்தது.

ஆதியின் மேல் அவள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை...!

ஆதி எப்படியும் என்னை தேடி வருவாரு....
அந்த வீடியோவை எல்லாம் நம்ப மாட்டாரு....
என் மேல அவருக்கு முழு நம்பிக்கை இருக்கு....
என்ன கை விட்றமாட்டார்....
எப்ப இருந்தாலும் எனக்காக நிச்சயம் வருவாரு.... என ஆழ்மனதிற்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது...!

தன்னால்தான் அண்ணனுக்கு இப்படி ஆகிவிட்டது... தன் காதலால் தான் குடும்பமும் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறது என்ற குற்ற உணர்ச்சி மனதிற்குள் ஒரு பக்கமும், ஆதிக்கு அவனது குடும்பத்தை பற்றி தெரியும் தானே..? எனக்கு சரியான வகையில் பாதுகாப்பு கொடுக்காமல் ஏன் சென்றான்...? என்ற கோபம் ஒரு பக்கமும்... இருந்து கொண்டே இருந்தது.

நான் அவனை மீண்டும் சந்திக்கவே கூடாது என்ற வைராக்கியத்தில் தான் இருந்தாள்.

இருப்பினும் அவனது காதல் மீதான, அவளின் நம்பிக்கை அப்படியே தான் அடிமனதில் இருந்து கொண்டே இருந்தது....!

ஆதியின் மேல் இருந்தால் அசைக்க முடியாத நம்பிக்கை ஆட்டம் கண்டது அவனைத் திரும்ப பார்த்த பொழுது அவன் பேசிய பேச்சில் தான் ....!

குறிப்பு : இது போட்டிக்கதை என்பதால் அனைவரும் லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே.... உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....

கருத்துத்திரி இதோ👇👇👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 29

ஆதி தன்னையே பார்ப்பதை உணர்ந்த மகிழ் தன் யோசனைகளில் இருந்து விடுபட்டவளாக யாழினியை நோக்கி திரும்பியவள், " நம்மளோட திங்க்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணு நாம கிளம்பலாம் " என்றாள் உணர்ச்சிகளற்ற குரலில்.


யாழினியும் இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு கிளம்பினால் போதும் என நினைத்தவள், " சரி" என தலையசைத்தவிட்டு கடகடவென்று ரூமிற்குள் சென்று அனைத்தையும் பேக் செய்து விட்டாள்.


மகிழ், அங்கு நின்றிருந்த அனைவரையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள்....யாழினியை ஒரு கையில் பிடித்தபடி தங்களது உடைமைகளை எடுத்துக்கிட்டு விறுவிறுவென வெளியேறி விட்டனர்.


அனைவரும் ஆதி ஏதாவது கூறுவான் என்றபடி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றனர்.


தனக்கு அனைத்து உண்மையும் தெரிந்து விட்டது என்று தெரிந்தவுடன் முதலில் அழுவாள் பிறகு எதுவும் கூறாமல் அப்படியே தன்னை ஏற்றுக் கொள்வாள்.... என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தவனுக்கு, இது பலமான பதிலடி.


அவள் போகிறாள் என்பது அவன் புத்திக்கு புரிவதற்கே நெடு நேரமானது. உடனே தன்னைச் சுற்றி நின்றவர்களை பொருட்படுத்தாமல்,தன் காரை எடுத்துக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்.


அவளோ இதற்குள்ளாக நெடுந்தூரம் போயிருந்தாள். தோளில் ஒரு பையும், கையில் ஒரு பையுமாய் நடப்பவளை பாவமாய் பின் தொடர்ந்தாள் யாழினி. ஏன் எதற்கு என்று தெரியாமலே நடப்பதை எல்லாம் பார்த்து அவள் பயந்துவிட்டிருந்தாள் .


அவள் வழியை மறித்து காரை நிறுத்திய ஆதி , "மகிழ் , எங்க போற?" என்றான் கோபமாய்.


"நாங்க எங்க போனா உங்களுக்கு என்ன?"


அவளின் கோபமான கேள்வியில், என்ன சொல்வது என ஒரு நொடி யோசித்தவன், "நம்ம காண்ட்ராக்ட் இன்னும் முடியல அதுக்குள்ள கெளம்புறியே அதுதான் பிரச்சனை, வீட்டுக்கு வா" என்றான்...


"நான் வரல சார். விட்ருங்க..."


"மழை வருது மகிழ் , வீட்டுக்கு வா..."


" இந்த மழை எங்களை ஒன்னும் செய்யப்போவதில்லை.... உன்னால நாங்க ஓடுவதும் புதுசு இல்ல , இருக்க இடம் கிடைக்காம நாங்க சுத்துறதும் புதுசு இல்ல.... "


"யாழினி, உன் அக்காவுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. அவகூட போகாத, கார்ல ஏறு..." என்றான், யாழினி வந்தால் அவள் வந்து தானே ஆக வேண்டும் என்று எண்ணத்தோடு.


அவர்களுக்குள் நடக்கும் உரையாடலே புரியாமல் தவித்த யாழினி , ஆதியின் மிரட்டலான அழைப்பில் அழுதே விட்டாள் .


"அழாத யாழினி... இப்படி எல்லாம் பயந்து அழுதுகிட்டு இருந்தோம்னா இந்த மாதிரி மனுஷங்க இருக்க உலகத்துல நம்மள மாதிரி ஆளுங்க எல்லாம் வாழவே முடியாது. வா போகலாம்..." முன்பை விட வேகமாக நடந்தாள் மகிழ்.


வேகமாக ஓடி வந்து அவளை வழி மறித்தவன், " மகிழ் உனக்கு என்னடி ஆச்சு...? நான்தான் எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்ல... இனிமே நமக்குள்ள எந்த பிரச்சனையும் வராது. நான் உன்னை முழுசா இப்போ நம்புறேன்... வா போகலாம்... நம்ம வாழ்க்கையை முதல்ல இருந்து புதுசா ஆரம்பிக்கலாம்....ப்ளீஸ் "


"யாரு உன்ன நம்பி என்னய வர சொல்றீயா....? ஏன் இதுவரைக்கும் எனக்கும் என் குடும்பத்துக்கும் நீ செஞ்சதெல்லாம் பத்தாதா....? நாங்க உயிரோடு இருக்கிறதும் உனக்கு கண்ண உறுத்துதா....? " என்றாள் ஆக்ரோஷமாக.


"மகிழ் , பேசனுங்குறதுக்காக எதையாவது பேசாத. நீ இப்ப என்ன தான் சொல்ல வர்ற...? நான் என்ன பண்ணனும் டி...? சுத்தமா எனக்கு புரியல "


"ஊர்ல இருக்கிறவங்க பேச்சை மட்டுமே நம்புற உங்களுக்கு, இன்னும் நூறு ஜென்மம் எடுத்தாலும் நான் பேசுறது புரியாது. என்னால மட்டுமில்ல, எந்த பொண்ணாலயும் உங்களோட ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழவே முடியாது. அப்படியே எவளாவது வந்தாலும், உங்க குடும்பத்தில் இருக்கிறவங்களே விரட்டி விட்டுருவாங்க."


"நம்ம பிரச்சனைக்குள்ள குடும்பத்தை ஏன்டி இழுக்கிற?"


" கடைசியா சொல்றேன் சார் இனிமே நீங்க என்னோட வாழ்க்கையில கிடையாது. எப்ப என் மேல நம்பிக்கையே இல்லாம, ஏதோ ஒரு வீடியோவை பார்த்தவுடனே என்னை தள்ளி நிறுத்துனீங்களோ... அதுலயே உங்க காதலோட லட்சணம் எனக்கு புரிஞ்சிருச்சு. "


"உங்க குடும்பத்து ஆளுங்க பண்ணதே என் ஆயுசுக்கும் போதும். தயவு செஞ்சு எங்கள விட்டுருங்க...." என்றபடி யாழினியை அழைத்துக் கொண்டு வேகமாக அவனைத் திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள்.


வார்த்தை என்னும் சவுக்கால் அவனை சரமாரியாக அடித்து துவைத்து விட்டு, அந்த அறிகுறியே இல்லாமல் சென்றுவிட்டாள் .


அடிவாங்கியவனோ, அவள் உதிர்த்துப் போன வார்த்தையிலிருந்து மீள முடியாமல் தவித்து நின்றான்.

ஆதி ஒன்றும் அவளை ஒரேடியாக தேட வேண்டாம் என்று நினைக்கவில்லையே. அவனுக்கும் மனதிற்குள் மகிழ் அப்படியெல்லாம் தன்னை விட்டுப் போய் இருக்கமாட்டாள் எனும் நினைப்பு இருந்தது. அவள் பிரிந்து சென்ற சில நாட்களிலேயே, அவளின் ஞாபகங்கள் அதிகமாகி போனது தான் உண்மை.


மகிழின் நினைவுகளை அழிப்பதற்காகவே அவன் உருவாக்கி வைத்த வேலைப்பளுவும் அவ்வளவு உபயோகமாக இல்லை.

இருப்பினும் விக்கி மேல் அவனுக்கு அடிப்படையில் இருந்த பொறாமையும், அவனது பிறவி குணமான ஈகோவுமே அவனை இவ்வளவு நாள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது .


இதுவரை செய்த முட்டாள் தனங்கள் போதும்.இனியும் அவனால் அவளை விட்டு இருக்க முடியாது. இனி பிரிந்தால் அவனது வாழ்வே நரகமாகிவிடும் என்பதை உணர்ந்துவிட்டான்.


தனது யோசனைகளிலிருந்து விடுபட்டவன் ஓட்டமும் நடையுமாக அவளை நெருங்கி அவள் சொல்லச் சொல்ல கேட்காமல், அவளது பைகளை பிடுங்க முயன்றாள்.


அவள் விடாமல் இழுத்து பிடித்தபடி அவனை விட்டு பிரிவதிலேயே குறியாக இருந்ததில் மூர்க்கத்தனமாக கோபம் வந்தது அவனுக்கு.


அடுத்த கணம், அவனது இயல்பான குணம் தலையை தூக்க பளாரென்று அறைந்திருந்தான் அவள் கன்னத்தில்.


ஏற்கனவே நேற்று இரவில் இருந்து தலைவலியால் சாப்பிடாமல் இருந்தவள், அவன் அடித்த அடியில் இரண்டு அடி தூரம் தள்ளிப் போய் விழுந்தாள். விழுந்த வேகத்தில் மூர்ச்சையானது அவள் தேகம்....!


மகிழ்வதனி திரும்ப கண்களை திறக்கும் பொழுது, ஏதோ ஓரிடத்தில் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள். கண்களை சுழற்றி நன்றாக பார்த்தபொழுது தான் அது ஆதியின் அறை என்பதை கண்டு கொண்டாள்.


அவளால் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை. உடம்பெல்லாம் அப்படி வலித்தது. கூடுதல் தொல்லையாக தலைவலி வேறு.


அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஆதி .

ஜன்னல் வழியே தெரியும் வானிலை மூலம், பொழுது இரவை நெருங்கி விட்டது என்று உணர்ந்தவள், " யாழினி..." என்று கத்திக்கொண்டே எழ முயற்சித்தாள்.


" யாழினி கீழ.... நீங்க ஆல்ரெடி தங்கி இருந்த ரூம்ல இருக்கா " எனும் அதிகார குரல் அந்த அறை முழுவதும் எதிரொலித்து அடங்கியது.


அவன் குரல் கேட்ட அடுத்த கணம், அதற்கு முன் நடந்த அத்தனை விஷயங்களும் அவள் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.


நொடியும் அவன் இருப்பிடத்தில் இருக்கக் கூடாது எனும் வைராக்கியத்துடன் வேகமாக புறப்பட்டாள். பாவம், அவளின் மனவேகத்திற்கு உடலால் ஒத்துப் போக முடியாமல் திணறியது.


தள்ளாடிபடியே நடந்து தரையில் விழப்போனவளை தாங்கி பிடித்தான் ஆதிரத்னேஸ்வரன்...!


"மகிழ் , ஏன் டி இப்படி பிஹேவ் பண்ற? உனக்கு என்னதான் டி வேணும்?"


"எனக்கு என்ன வேணும்னு இன்னுமா உனக்கு புரியல ஆதி ?"


"சத்தியமா புரியலடி... நடந்த உண்மை எல்லாமே எனக்கு தெரிஞ்சிருச்சு . உன் மேல தப்பு இருக்குன்னு நெனச்சப்ப கூட என்னால உன்னை விட முடியல டி ஆனா இப்ப எனக்கு உன் மேல எந்த தப்பும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்,உன்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன் இதுக்கு மேல உனக்கு என்ன தான் வேணும்...?"


அவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்தவள் வேகமாக கட்டிலை விட்டு இறங்கி கீழ் அறையை நோக்கி செல்வதற்காக வேகமாக இறங்கினாள்.


" மகிழ் ... இரு டி , நானே வந்து இறக்கி விடுறேன்... விழுந்திட போற... "


"இல்ல...வேணாம், நானே..." எனும் முன்பாக அவளை தன் கையில் தூக்கி இருந்தான்.


"ஐயோ ... விடு ஆதி ... என்னய விடு..." தூண்டிலில் மாட்டிய மீனாய் துள்ளிவளை, ஒற்றை பார்வையிலேயே மிரட்டி உருட்டி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டான் அவன்.


திரும்பவும் அதே படுக்கையில் படுக்க வைத்தவன், முன்னெச்சரிக்கையாய் அறையின் கதவை பூட்டி தாழ்ப்பாள் போட்டான்.


"நான் போகணும் ஆதி ப்ளீஸ் ..." என்றபடி கதவை நோக்கிச் சென்றவளை இழுத்து சுவற்றோடு சேர்த்து நிறுத்தினான்.


அவளின் தோள்கள் இரண்டும் அவனது இரும்பு பிடிக்குள் சிக்கித் தவித்தது. அந்தக் கரங்கள் மெதுவாக கீழ இறங்கி இடையை எடுக்கமாக பிடித்தது.அந்த கரம் கொண்ட வலிமைக்கு முன்னால் அவளால் அசையக் கூட முடிமுடியவில்லை.


நேரங்காலம் தெரியாமல் அவனது மோகம் வேறு கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது....அதனை அவனது மூச்சுக்காற்றின் மூலமே அறிந்து கொண்டாள் அவள் .


என்ன முயன்றும் அவனால் கட்டுப்படுத்த முடியாமல் அவளது செர்ரிப்பழ இதழ்களைக் கவ்விக்கொண்டான்.....!


அதிர்ச்சியில் விரிந்த அவளது விழிகள் மனது அந்த கருவண்டுக் கண்கள் இரண்டையும் கண்டவுடன் பயந்து தன் கண்களை மூடிக்கொண்டாள்...


அவளின் மெல்லிடை வதனம், வலியால் விரிந்து சுருங்குவதைப் பார்த்த பின்பும் அவன் தன் இதழ் முத்தத்தை விடுவதாய் இல்லை‌.


பயத்திலும், படபடப்பிலும் அவளுக்கு உடலெல்லாம் வியர்த்தது. எவ்வளவு முயன்றும் அவனை அசைக்க முடியாது போக, அவள் போராட்டத்தின் வேகம் குறைய துவங்கியது.


" ரொம்ப வலிக்குது ஆதி ப்ளீஸ் விடு..."


மெதுவாக அவளது இதழை விடுவித்தவன் இடையை இறுக்கிப்பிடித்தபடி... "சொல் பேச்சு கேளு, விடுறேன்."


" ஐயோ நீ என்ன சொன்னாலும் கேட்டு தொலைகிறேன் ,இப்போ விடு ப்ளீஸ்....." இப்போதைக்கு அவன் பிடியிலிருந்து தப்பிக்க இதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை அவளுக்கு .


சாதியின் இதழ்களில் திருப்தியான புன்னகையுடன், தன் பிடியை தளர்த்தினான்.


அவனை முறைத்தபடி,வலிக்கும் இடையை நீவி விட்டாள்.


அவள் இருந்த இடத்திற்கு ஒரு சேரை எடுத்துப் போட்டு, "உட்காரு, பேச வேண்டியத எல்லாம் பேசி முடிச்சிட்டு அதுக்கப்புறம் போகலாம் . முதல்ல உன்ன நா ரேப் பண்ண வந்த மாதிரி கத்தாத" என்றான் கோபமாய்.


" இப்படி கல்யாணம் ஆகாத ரெண்டு பேரு தனியா ரூமுக்குள்ள இருந்தா, ஊரு உலகத்துல மத்தவங்க என்ன பேசுவாங்கனு உனக்கு எப்பவும் கவலை கிடையாது. நா அப்படியில்ல, இன்னிக்கி நடந்ததை பார்த்தவங்க என்னய பத்தி என்ன நினைப்பாங்க? நாளபின்ன எப்படி பேசுவாங்க?"


"ஏன்? யார் கேட்டாலும் 'இவர் என்னோட லவ்வர்...வருங்கால கணவர் கிட்ட பேசிகிட்டு இருந்தேன்னு' தைரியமா சொல்ல வேண்டியதுதான?"


"சார், நீங்க என் எக்ஸ் மட்டும் தான் ..." என்றவளை கடித்து தின்று விடுவது போல பார்த்தான் அவன்.


அசுசையாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவளுக்கு, பழைய நினைவுகள் அவளுள் பூதாகரமாக பேயாட்டம் போட்டது.


கண்கள் இரண்டிலும் கண்ணீர் நிறைந்து விட, அவள் அருகே வந்து நின்ற ஆதி , தன் கை விரலால் அவள் முகத்தை உயர்த்தினான். மின்னல் கீற்றாய் அவள் கன்னங்களில் வழிந்தோடியது கண்ணீர்.


"ரொம்ப ரொம்ப சாரி டி ... இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல.ஆனா ஒன்னு மட்டும் நிச்சயமா என்னால சொல்ல முடியும். இனிமே உன் கண்ணுல இருந்து இந்த கண்ணீர் வரவே வராது " எனக் கூறியபடி அவளது கண்ணீரை அழுத்தி துடைத்தான்.


அந்த லேசான தொடுகைக்கே அவளின் தேக ரோமங்கள் அத்தனையும் சிலுப்பிக்கொண்டு எழுந்து நின்றது.


இருஜோடி விழிகளும் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள, மென்மையாய் அவள் பட்டு நெற்றியில் முத்தம் பதித்தான். ஏற்கனவே உடல் இயக்கத்தை நிறுத்தி இருந்த பெண்ணவளுக்கு , இப்போது உலகின் இயக்கங்களும் நின்று போனது....

இனி மகிழ் எடுக்கப் போகும் முடிவு என்ன....?

குறிப்பு: மகிழ் என்ன முடிவு எடுக்க வேண்டும்...? என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என கருத்துத்திரியில் கூறுங்கள் தோழமைகளே.... ❤️

கருத்துத் திரி இதோ 👇


 
Last edited:
Status
Not open for further replies.
Top