ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையின்றி நேசிக்கவா-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 35

உயர்தர சிகிச்சைகளின் பலனாய் ஒரு மாதத்திலேயே கண்களை திறந்து விட்டான் ஆதி....! உணர்வுகளும் மெல்ல மெல்ல வர ஆரம்பித்திருந்தது....

இப்பொழுதெல்லாம் மெதுவாக கை,கால்களை அசைத்து எழுந்து தோட்டத்தில் நடக்கப் பழகிக் கொண்டிருந்தான்.

ஆனால் யாருடனும் எதுவும் இன்னும் பெரிதாக பேசவில்லை. கண் ஜாடை, சிறு தலையசைப்புகள் இவைகளின் மூலமே தனது தேவைகளை தனக்காக நியமிக்கப்பட்டிருந்த தாதியருக்கு உணர்த்திக் கொண்டிருந்தான்.

நினைவு திரும்பியவுடன் முதலில் அவன் மகிழை பற்றித்தான் அர்ஜுனிடம் விசாரித்தான். அர்ஜுனும் தனக்கு தெரிந்தவற்றை கூறியிருந்தான். ஆனால் தற்பொழுது மகிழ் எங்கே இருக்கிறாள் என்பது யாருக்குமே தெரியாது என்றும் கூறியிருந்தான்.

அவற்றை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவனின் இதழ்களில் ஒரு வெறுமையான புன்னகை மட்டுமே...

சுந்தரலிங்கேஸ்வரர், ராமன், அர்ஜுன் ஆகிய மூவரும் பிசினஸை கவனித்துக் கொள்வதால் அதில் எந்த ஒரு தொய்வும் இருக்கவில்லை. அவன் இவ்வளவு பெரிய பாதிப்பிலிருந்து மீண்டு வந்ததால் குடும்பத்தில் யாரும் அவனை பெரிதாக தொந்தரவும் செய்யாமல் அடிக்கடி பார்த்து செல்வதோடு சரி.

மூன்று மாதத்திலேயே எப்பொழுதும் போல் நார்மலாக எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டான். மீண்டும் பிசினஸ், குடும்பம், நண்பர்கள் என அவனது வாழ்க்கை ஓரளவிற்கு சீராக ஆரம்பித்திருந்த நேரம் அது....

வெளியே அவன் உடல்நிலை சரியாகி சாதாரணமாக இருப்பது போல் எல்லோர் முன்னாடியும் காட்டிக்கொண்டாலும் அவனுக்குள் இறுகிப்போய்த்தான் இருந்தான்.

சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும், அவர்கள் எல்லாம் அவன் மேல் உயிரையே வைத்திருந்தாலும்... அவன் மனது தேடுவது என்னவோ மகிழை மட்டும் தான்....

'உன் கைய விட்டு ஒரு விஷயம்
போகுதா..? போகட்டும் அதை விடு..
இங்க எவ்வளவோ இருக்கு
அதெல்லாம் விட்டுட்டு இதையே
ஏன் புடிச்சிகிட்ருக்கணும்' என மனசாட்சி அவ்வப்பொழுது
கேட்டாலும்....

அவன் மனது சொல்வதென்னவோ, 'இங்க எவளோ ஆப்சண்ஸ் இருந்தாலும்
என் மனசு தேடுறதும் ஏங்குறதும்
அவள் ஒருத்திக்குத்தானே ....?'

'மறுபடியும் நமக்கு அவளோடு அந்த பழைய வாழ்கை கெடச்சிராதா அப்டின்னு ஒரு கண் மூடி தனமான நம்பிக்கை...'

'நமக்கு புடிச்சத இழந்தா அந்த வலி நிச்சயம் எல்லாருக்குலையும் இருந்துட்டே இருக்கும்..இது தெரியாம நம்மள முட்டளானு கேட்பவர்களிடம் ஆமா
முட்டாள் தான் அப்படியே
போயிருவோம் அவ்ளோதா.... 'என்ற மனநிலைக்கு தான் வந்திருந்தான்.

என்ன செய்தாகினும் மகிழ் மீண்டும் தனக்கு வேண்டும் என்ற எண்ணத்தில், தனது வேலைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டு அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்கு சில டிடெக்டிவ் ஏஜென்ட்களை நாடியிருந்தான்.

அவர்கள் அவனுக்கு அளித்த ரிப்போர்ட்டுகளை பார்த்தபடி தனது அறையில் இருந்தவனின் இதயமோ வேதனையில் வெந்து தணிந்தது.

சில வலிகள்
இதயத்தை பாரமாக்க
மட்டும் வந்திருக்காது.
பலமாக்க கூட வந்திருக்கும். அப்படித்தான் அவளது தற்போதைய பிரிவும் கூட அவனை மனதளவில் மிக மிக ஸ்ட்ராங்காக மாற்றி இருந்தது.......

கொடைக்கானல்.......!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிஞ்சி ஆண்டவர் கோயில்.

பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் மலை நிலத்திற்கும், குறிஞ்சி செடிகளுக்கும் இடையேயான பிணைப்பை குறிக்கும் சொல்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் அரிய வகை குறிஞ்சி மலர்கள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும்.கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மே மாதத்தில் அந்த குறிஞ்சி மலர் வழிபாடு நடைபெறும்.

இதனைக் காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடை முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது.

மேலும் குறிஞ்சி முருகனுக்கும் இந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.....

அப்படி குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கி சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த முருகனையே வெறித்தபடி பிரகாரத்தில் ஒரு தூணில் சாய்ந்து எந்த ஒரு இலக்குமின்றி அமர்ந்திருந்தாள் அவள்....!

ஆம்... அவள் வேறு யாராக இருக்க முடியும்..? நமது நாயகி மகிழ்வதனி தான்...!

அவள் தற்போது இருப்பது என்னவோ கொடைக்கானலில் தான். ஆனால் அவள் எண்ணம் முழுவதும் சென்னையில் இருக்கும் தன்னை சார்ந்தவர்களை பற்றி மட்டுமே.....

ஏதேதோ யோசனைகளுடன் அமர்ந்திருந்தவளின் கண்களுக்குள் வந்து விழுந்தது அவன் பிம்பம்... மெய்யோ பொய்யோ என பிரித்தறிய முடியாத நிலையில் அவனது குரலும் அவளது காதுகளில் எதிரொலித்தது....

மறக்க நினைத்தும் முடியாத ஒரு முகம்.....!
மறக்க நினைத்தும் முடியாத ஒரு குரல்...!

அவன்தான் அவனே தான் என்று மனது என்ன முயன்றும் கட்டுப்படுத்த இயலாமல் ஆனந்த கூத்தாடும் வேளையில் இரு துளி கண்ணீர் வந்து கண்களை மறைத்தது.

வேகவேகமாக கண்களை துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்த பொழுது அவனை காணவில்லை.

துரிதமாக கண்களை மட்டும் அலைய விட்டவள் அவனைத் தேடி அலைந்து சோர்ந்த பின் அப்படியே அமர்ந்து விட்டாள்.எழுந்திருக்க கூடவில்லை...!

கடைசியாக தனது கற்பனை தான் என்று முடிவிற்கு வந்தவள், ஒரு சிறு பெருமூச்சுடன் எழுந்து தனது இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வீட்டிற்கு சென்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள், அங்கே அமர்ந்திருந்தவனை பார்த்து அப்படியே நின்று விட்டாள்.

மறக்க முடியாத ஒரு சந்திப்பு....!
மறக்க முடியாத ஒரு பிரிவு....!
மறக்க முடியாத ஒரு வலி...!
மறக்க முடியாத ஒரு நினைவு...!

தனது அதிர்ச்சியை வெளிக்காட்டி கொள்ளக்கூடாது என முயன்றாள்.. அழுகைதான் வந்தது.. அவனது பழைய கம்பீரத்துடன் முழு ஆண்மகனாய் அமர்ந்திருந்தான் ஆதி....!

கண்கள் சிவந்து போய் பார்க்கவே பயமாக இருந்தான்.. பேச மொழியில்லை அவளுக்கு.....

"வ..வ வா.. ஆதி... வாங்க சார்.... நல்லா இருக்கீங்களா".. என்ன பேசித் தொலைக்க.. ஒன்றும் தெரியவில்லை.. அவனது பார்வையை தவிர்த்து வீட்டிற்குள் நுழைந்தவளை ஓர் கூரிய பார்வையுடன் அனுகியவன் இழுத்து அணைத்து இதழைக் கவ்வியிருந்தான்......

அவளோ மனதிற்குள் அரற்றினாள்.... என்னதான் அவனை விட்டு விலக வேண்டும் என்று தோன்றினாலும் அதனை அவளால் செயல்படுத்த முடியவில்லை. சில மாதங்களுக்கு பிறகு கிடைத்த இந்த நேசத்தை சட்டென உதற அவளால் முடியவில்லை.... அழவைக்காதே ஆதி.....

என்னய அழவைக்காதே.... என்னால முடியல.. எனக்குன்னு எல்லாரும் இருந்தும்,இப்படி தனியா அனாதை மாதிரி இருக்கிற நிலைமை ஏன்.....? நீ வேணும் ஆதி..... ஐ லவ் யூ டா.... காலம் முன்னோக்கி போகாதா....?எல்லாம் மாறிப் போகாதா.....? தங்களது காதல் காலங்கள் திரும்பி வரவே வராதா...? மனம் கதறி அழ வெளியே எந்த எதிர்ப்புமின்றி அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள்....

அவனோ அவள் மீதான கோபம் மொத்தத்தையும் அவளது இதழில் காட்டினான்.

தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.. உறவை விட்டுச் சென்றுவிட்டாள்.. வெறுமை, கோபம், ஆதங்கம்,விரக்தி என அனைத்து உணர்வுகளும் மேலோங்க அவளை சற்று விலக்கி நிறுத்தியவன் அவளது மேடிட்ட வயிற்றை பார்த்து "மகிஇஇஇஇஇ .. மகிஇஇஇஇஇ ஏன் டி இப்படி பண்ணுன "..என கோவமாக உறுமினான்..

ஆனால் மனதிற்குள்ளோ கத்தினான்..கதறினான்.. தன்னவள் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்களை நினைத்து.....கண்ணீர் வெளியே வரவில்லை அதனால் அவனது அழுகை யாருக்கும் தெரியாமல் மனதிற்குள்ளேயே கரைந்து மறைந்து போனது..

'நீ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் ரணமா கொல்லுதே டி .. முடியல டி.....'

'அவள் காதல் கிடைக்காது போனால் உயிர்வாழாது இந்த இணைப் பறவை 'என்ற நிலைக்கு வந்திருந்தான் ஆதிரத்னேஸ்வரன்.

அவள் அரவணைப்புக்குள் தான் அவன் உயிர்வாழ முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டான்....

அவளுக்கோ,அவனைப் பார்க்க பார்க்க இவ்வளவு நாட்களும் வாழ்க்கையை இழந்துவிட்ட சோகம்...இனியும் இணைந்து வழபோவதில்லை என்ற துயரத்தில் கால்கள் துவள மடங்கி அமர்ந்து விட்டாள்.. பின்மண்டை கிறுகிறுக்க கண்கள் இருட்டி மெல்ல மெல்ல தன்னிலை இழந்து சரிந்தாள் மகிழ்.....

யாரோ தூரத்தில் ஓடிவரும் சத்தம் மற்றும் தன்னை கீழே விழ விடாமல் தாங்கி பிடித்து இருக்கிறான் அவன் என அனைத்தும் தெரிந்தாலும்... மேற்கொண்டு இருளும் நிசப்தமும் சூழ்ந்து அவளை ஆழ்கடலின் அடி ஆழத்தில் தள்ளியது..

ஆதியின் முகம்..... அவனோடு வாழ்ந்த நாட்கள்.. அவன் சிரிப்பு..அவன் அரவணைப்பு... அவன் அணைப்பு.. அவன் முத்தம்.. அவன் தந்த வலிகள்.... அவன் பாசம்.. அவன் கோபம்... என காட்சிப் பதிவாக கண்முன் விரிய மயக்கத்திலும் கண்ணீர் வழிந்தது மகிழுக்கு ....

'ஏன் டி என்னயவிட்டு போறதிலேயே குறியா இருக்க...?என்னைக்குமே என்னைய தேடி ஓடி வரவே மாட்டியா நீ...?உன் ஆதி உனக்கு வேண்டாமா..? நான்தான் உன் மூச்சுகாத்துனு சொல்லுவியே.....? ஆனா அதெல்லாம் பொய்யிங்கிற மாதிரி ஏதாவது ஒரு காரணத்தை தேடி கண்டுபிடிச்சு என்னைய விட்டுட்டு போய்கிட்டே இருக்கியே..?' என அவனது ஆழ்மனம் கதறியது அவளுக்காக.....

எவ்வளவு நேரம் மயக்கத்தில் கிடந்தாளோ.. இமைத்திரைகளை கஷ்டப்பட்டு அசைத்தாள்.. விழிகளைத் திறந்துப் பார்க்க முதலில் எதுவும் புரியவில்லை.. சில நிமிடங்கள் கழிய தான் எங்கே இருக்கிறோம் என ஆராய்ந்தாள்.

தன்னுடைய தற்போதைய அறையில்தான் கட்டிலில் படுத்திருந்தாள்.அருகில் நாற்காலியில் தலையில் கை வைத்த படி கண்ணயர்ந்திருந்தாள் காவ்யா....

ஆம் அவளது தோழி காவ்யாவே தான்...!

தனது குழந்தையை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று முடிவு எடுத்தவள்,அடுத்து என்ன செய்ய வேண்டும்?எங்கு செல்ல வேண்டும்? என்றெல்லாம் யோசிக்க கூட தெம்பில்லாமல் இருந்த நிலையில்.... ஓரளவிற்கு நண்பர்கள் இருந்த போதிலும், காவ்யாவின் நினைவுதான் அவளுக்கு முதலில் வந்தது.

ஒரு தோழியாக காவ்யா நிச்சயம் தன்னால் முடிந்த உதவியை அவளுக்கு செய்வாள் என்ற எண்ணம் மேலோங்கிய பொழுது, பற்றுகோலாக அவளை பிடித்துக்கொள்ள எண்ணியவள் அவளுக்கு தனது அலைபேசியிலிருந்து அழைப்பு விடுத்தாள்.


அழைப்பை ஏற்ற காவ்யாவிடம் அனைத்தையும் ஓரளவிற்கு கூறியவள், தான் தற்பொழுது தங்குவதற்கு ஒரு இடமும் வேலைையும் வாங்கித்தருமாறு கேட்டுக்கொண்டாள்.

எப்பொழுதும் போலவே காவ்யா இப்பொழுதும் எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், 'உடனே கிளம்பி கொடைக்கானல் வரும்படி' கூறிவிட்டாள்.

அவளும் 'சரி' எனக் கூறியவள், அதன் பிறகு தான் அனைத்தையும் சென்னையில் செய்து முடித்துவிட்டு கொடைக்கானலுக்கு கிளம்பி வந்தாள்.

தங்குவதற்கு காவ்யாவின் வீட்டிலேயே இடம் கொடுத்தாள்.ஆனால் வேலை அந்த அலுவலகத்தில் வேண்டாம் என்று மகிழ் கூறிவிட்ட காரணத்தினால்... மற்ற இடங்களில் வேலை தேடி அலைய ஆரம்பித்தாள்.

அனைத்து அலுவலகத்திலுமே சொல்லி வைத்தார் போல்,' அவள் கர்ப்பமாக இருப்பதால் இன்னும் எப்படியும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் நீங்கள் நின்று விட்டால், நாங்க அந்த இடத்துக்கு மறுபடி ஆள் தேடனும் அதனால நீங்க வேற கம்பெனி பாத்துக்கோங்க' என்று கூறிவிட்டனர்.

காவ்யாவும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்து விட்டாள். " நீ வேலைக்கு எதுவும் போகவேண்டாம்.. வீட்ல ரெஸ்ட் எடு.. நான் ஓரளவுக்கு ஓவர் டைம் பார்த்தேன்னா போதும்... சமாளிச்சுக்கலாம்... " என்று.

ஆனால் மகிழ்,அவளுக்கு மேலும் மேலும் பாரத்தை கொடுக்க விரும்பாமல் அருகிலேயே இருக்கும் ஒரு எஸ்டேட்டில் தற்காலிகமாக ஐந்து மாதங்களுக்கு மட்டும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.

தற்போது மயக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்த மகிழின் அரவம் கேட்டு நிமிர்ந்து அமர்ந்த காவ்யாவோ, "இப்போ ஓகே வா டி? சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரவா? ஜூஸ் குடிக்கிறியா?" என்றாள்.

காவ்யா பேசிக் கொண்டிருக்கும் வேளையில் தான் ஆதி இங்கு வந்ததே அவளுக்கு நினைவிற்கு வந்தது. ஆனால் அவனை அந்த அறையில் காணவில்லை.

ஒருவேளை அனைத்தும் தனது பிரம்மையோ..?! கனவோ..?! என்றெல்லாம் மனதிற்குள் புலம்பியவள்.... அந்த குழப்பத்துடனே காவியாவின் முகம் பார்த்து, " நீ எப்போ காவ்யா வீட்டுக்கு வந்த..? நீ வரும்போது வீட்ல வேற யாராவது இருந்தாங்களா..? " என்றாள் ஆதி இங்கே இருந்தானா என எப்படி கேட்பது என்ற தயக்கத்துடன்.

அவளது சங்கடத்தை புரிந்து கொண்ட காவ்யாவோ, அவளை லேசாக முறைத்து விட்டு..."ஆதி சார் இங்க தான் ஹால்ல உட்கார்ந்திருக்காரு" என்றாள் பட்டென்று.

சுற்றி இருள் சூழ்ந்திருந்ததை கவனித்தவள் வேகமாக கடிகாரத்தை பார்த்தாள்.மணி இரவு 7 என்று காட்டியது.

இன்னும் அவன் இங்கிருந்து கிளம்பவில்லையா?என்று யோசனையாக அவள் அமர்ந்திருந்த வேளையில், இவர்களின் பேச்சு குரல் அரவம் கேட்டவுடன் ஹாலில் ஏதேதோ தீவிர எண்ணங்களுடன் அமர்ந்திருந்த ஆதி மெதுவாக எழுந்து மகிழ் படுத்திருந்த அறைக்குள் அவளை அழுத்தமாக பார்த்தபடி நுழைந்தான்.

அவனது பார்வையும் அவளது பார்வையும் ஒரே நேர்கோட்டில் பயணித்தது... அவன் கண்களின் வழியே இதயம் கூறிய செய்தி....'எத்தனை யுகங்கள்
கடந்தால் என்னடி? என்னவள்
நீ மட்டும் தான்...! மரணம் கூட ஒருவேளை
என்னை தழுவலாம்...உன்னை விட்டு விலகுதல் இனி சாத்தியமா என்ன?' என்பதே....

இனி ஆதி நிச்சயம் மகிழை விட்டுக் கொடுக்கமாட்டான்... விட்டு விலகவும் மாட்டான்.... ஆனால் அவள் எடுக்கப் போகும் முடிவு....?

கருத்துத்திரி இதோ... 👇
மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழமைகளே.... 🤝❤️✨


https://aadvikapommunovels.com/threads/பிழையின்றி-நேசிக்கவா-கருத்து-திரி.1765/
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 36

யாழினியை அர்ஜுன் கடைசியாக பார்த்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது . அதன் பிறகு அவளை சந்திக்கும் வாய்ப்பு அமையவே இல்லை அவனுக்கு....அவள் அமைய விடவில்லை....?!

யாழினியின் முகம் பார்க்க துடித்து மனதுக்குள் பெரும் பிரளயமே நடந்து கொண்டிருந்தது..

அவளோடு கொடைக்கானலில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் , அவள் நினைவுகளும் மட்டும் உயிர் வாழ போதுமானதாக இல்லை..

அவளை தன்னருகே நேரில் காண வேண்டும்.. இடைவெளிகளே இல்லாத நிறைய சின்ன சின்ன பிள்ளை முத்தங்களை ஆசை தீர அள்ளி வழங்க வேண்டும்.. அதட்டி மிரட்டியாவது அத்தனை முத்தங்களையும் இரு மடங்காக வட்டியோடு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்..

பிரிந்திருந்த இந்த நாட்களை பெருங்கதையாக அவளிடம் சொல்லிப் புலம்ப வேண்டும்..என ஏகப்பட்ட எண்ணங்களோடு தன் வீட்டின் பால்கனியில் நிலவை வெறித்தபடி நின்று கொண்டிருந்தான் அர்ஜுன்....

ஒரு அழகான மாலை நேரத்தில்,அவளை கடைசியாக அவளது கல்லூரி விடுதியில் ஆசை ஆசையாக சந்திக்க சென்றிருந்த நாள்... அவனது நினைவுகளில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது.

அவளுக்காக ஆசையோடு காத்திருந்தவனை நோக்கி வந்தவளோ, எந்த ஒரு முகாந்திரமுமின்றி ....'இனமே நீங்க என்னைய இங்க பாக்க வர வேண்டாம்... சில பேரோட உண்மையான முகங்களை புரிஞ்சிக்கிற பக்குவம் எனக்கு இப்போதான் வந்திருக்கு.... இதுக்கு மேல நான் உங்கள என் லைஃப்ல பார்க்கவே கூடாதுன்னு நினைக்கிறேன். அதையும் மீறி என்னைய பாக்கணும்னு நினைச்சீங்கன்னா அந்த நாள் தான் என் வாழ்க்கையில கடைசி நாளா இருக்கும்' என்று அழுத்தமான வார்த்தைகளை உச்சரித்து தன்னை விட்டு விலகியது காதுக்குள் எதிரொலித்து அர்ஜுனை பயம் கொள்ள வைத்தது...

'தான் பார்த்த யாழினி இவள் தானா...?' விளையாட்டு பிள்ளையாக திரிந்தவளின் வார்த்தைகளில் அத்தனை பிடிவாதமும், ஆக்ரோஷமும் வெளிப்பட்டதை அவன் உணர்ந்தான்..

அவளது வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஆறு மாதங்கள் வரை அவளை நினைப்பதோடு சரி. போய் பார்க்க ஒரு சிறு முயற்சி கூட அவன் மேற்கொள்ளவில்லை. அவ்வளவு பயம் அவனுக்கு...

இருப்பினும்... உயிரின் அடி ஆழம் வரை அந்த பிரிவின் வலி ஊடுருவுகிறதே!!.. இந்த மானங்கெட்ட மனதோ அவள் காலில் விழுந்து சரணாகதி அடைய சொல்லுகிறதே!!.. கெஞ்சி கதறி இயல்பை தொலைத்து.. கர்வம் அடியோடு இழக்க வைப்பதுதான் காதலோ!!..

சில நாட்களே பழகிய ஒரு பெண்ணின் மீது தன் உயிருக்கு இணையாக அன்பு கொள்ள முடியுமா என்ன..?! பேரதிசயம் தான் இந்த பெண்ணின் மீதான பிரியங்கள்..!

இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாதுப்பா....என்ன ஆனாலும் சரி.. உடனடியாக அவள் தங்கி இருக்கும் கல்லூரி விடுதிக்கு சென்று அவள் தோள் பட்டையை வலிக்க பிடித்து தன்னை பார்க்கச் செய்து.. "என் கண்ண பாத்து சொல்லுடி... நான் உனக்கு வேண்டாமா? உன்னோட அஜுவை மறந்துட்டியா...?என் கூட இவ்வளவு நாள் பழகி இருக்கியே... என் காதலை இத்தனை நாட்களில் ஒரு சதவீதம் கூட நீ உணரலையா..?சொல்லுடி".. என்று அடிக் குரலில் ஆக்ரோஷமாக கத்தி.. தன் வலியை அவளுக்கு புரிய வைக்க உள்ளுக்குள் தவிப்பு ஆழிப்பேரலையாக எழுந்தது..

ஆனாலும் அவளது அந்த உறுதியான வார்த்தைகள் அவனை கட்டிப்போட்டு வைத்திருந்தது. ' என்றாவது ஒருநாள் நிச்சயமாக தனது அன்பை அவள் உணர்ந்து கொள்வாள்... அதுவரைக்கும் நீ காத்திருக்க தான் வேணும்' என்று தன்னைத் தானே சமாதானப்படுத்தியபடி உறங்க முயற்சிதான்.

கொடைக்கானல்....

இருதயம் பெரும் பாரத்துடன்.. துடிக்க முடியாமல் திணறியதில் மூச்சு முட்டுவதாக உணர்ந்தான் ஆதி.. ரூம் ஹீட்டரை அணைத்துவிட்டு மெல்ல எழுந்தவன் ஜன்னலை திறந்து வைத்தான்..

உடலை துளைக்கும் ஊசியைப் போல், கொடைக்கானலின் பனி வாடைக்காற்று ஜன்னலின் வழியே உள்ளே வந்து உற்சாகத்துடன் அவனைத் தொட்டு வருடி விளையாடியது....

இந்த காற்று கூட ஒரு வகையில் தனது காதலியை போன்று தான் என்று மனதோடு வலியுடன் புன்னகைத்துக் கொண்டான்....

ஒரு நேரம் ஆக்ரோஷமாக அணைத்துக் கொள்வாள்....!
மற்றொரு நேரம் மயிலிறகாக மென்மையோடு தொட்டு வருடி செல்வாள்...!
வேறொரு சமயங்களில் சூறாவளியாக சுழட்டிப்போட்டு ஆட்டங்காண வைப்பாள்...!

மீண்டும் விழிகளை மூடி கட்டிலில் சாய்ந்தான்.. மகிழ் பேசியதே திரும்பத் திரும்ப செவிகளில் எதிரொளித்தது... மனம் சற்று நேரத்திற்கு முன்பு நடந்தவைகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தது....

' ஆதி இதுக்கு மேலயும் நாம சேர்ந்து வாழ வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.... நான் செஞ்சது சரின்னு சொல்ல வரல.. ஆனா நிச்சயமா தப்புன்னு சொல்ல மாட்டேன்.. ஏன்னா அந்த நேரத்துல என் குழந்தையை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியல அதனாலதான் யார்கிட்டயும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி இங்க வந்துட்டேன்' என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தவளால் அவன் முக பாவனையிலிருந்து எதையும் அவதானிக்க முடியவில்லை.

'நாம ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்தா அந்த வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியானதா இருக்காது.. '

'ஒன்னு உன் குடும்பத்தில இருக்கிறவங்க எப்ப என்ன செய்வாங்கங்கிற பயத்தோடயே நான் வாழ்ந்துகிட்டு இருப்பேன்.. இல்லைனா ஏதாவது ஒரு கட்டத்துல நீ என்னைய நிச்சயம் சந்தேகப்படுவ..'

'காதலுக்கு அஸ்திவாரமே நம்பிக்கைதான் ஆதி..... எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆதி என்னய நம்புவான்.... எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவன் என் கூடவே நிப்பான் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு ஏற்படல..' இதைக் கூறிவிட்டு அவனை நிமிர்ந்து அவள் பார்த்த பொழுது அவனது கண்கள் இரண்டும் ரத்தமென சிவந்திருந்தது.

ஏதேதோ உணர்ச்சிகளை தனக்குள் அடக்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்கிறான் என்பதை நன்றாக அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

இருப்பினும் இன்றோடு பேசி முடித்து விடுபவளை போல் ஒரு பெருமூச்சுடன் மேலும் பேச ஆரம்பித்தாள்.

'எப்பேர்ப்பட்ட சூழ்நிலை வந்தாலும் என் மகிழ் எனக்கு துரோகம் பண்ண மாட்டாங்குற நம்பிக்கை உனக்கு ஏற்படல.. அப்புறம் நமக்குள்ள காதல் எங்க இருக்கு ஆதி.....?'

' நீயும் நானும் காதலிக்கணும்னு முடிவு எடுத்ததே பெரிய தப்பு.... தவறான முடிவு எடுத்துட்டோம்.. அதை சரி செஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதுக்கு சந்தோஷப்படறேன்..'

'என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பா நம்ம குழந்தையை நீ வேற ஏதாவது கோணத்துல சந்தேகப்பட்டு என்னைய கேள்வி கேட்டுட்டேனா கூட என்னால அதை தாங்கிக்கிட்டு உயிரோடவே இருக்க முடியாது. அதுக்கு இப்பவே நாம பிரியிறது நல்லது. தயவு செஞ்சு நாம பிரிஞ்சிடலாம் ஆதி... ப்ளீஸ் எனக்காக இது ஒன்ன மட்டும் கடைசியா செய்...' என அழுதபடியே இரு கைகளாலும் முகத்தை மூடி கொண்டாள்.

வலியோடு புன்னகைத்துக் கொண்டான் ஆதி... அவன் உண்மையை உணர்ந்து கொண்டு, திருந்தி பல நாட்கள் ஆயிற்று.. இப்போது தண்டனை காலத்தில் இருக்கிறான்..

ஏன் இந்த பிரிவு....?
ஏன் இந்த வலியும் வேதனையும்...?
சேர்ந்து வாழ்ந்து தொலைக்க வேண்டியதுதானே..?
எளிதாக முடிக்கவேண்டிய ஒரு விஷயத்தை ஏன் இருவரும் இப்படி சிக்கலாக்கிக் கொள்ள வேண்டும் எனத் தோன்றலாம்..

ஆனால் மறுபடி இருவரும் சேர்ந்தாலும் சரியான புரிதல் இல்லாமல் திரும்ப பிரிய வேண்டி வரலாம்....

தேவையில்லாத மன உளைச்சலும், மன வலியும் தான் மிஞ்சும்....அந்த அவலநிலை வந்துவிடக்கூடாது என்று பயம் மகிழுக்கு..

அவள் பயத்தை அவன் போக்கவில்லை.. அவள் கூறுவது போல் எல்லாம் நடந்து விட்டால் அதில் பெரிதும் பாதிக்கப் படுவது நிச்சயம் மகிழ்வதனியாகத்தான் இருப்பாள் .. அவளுக்கு மறுபடி மறுபடி கஷ்டத்தைக் கொடுக்க அவன் விரும்பவில்லை..

ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து கிளம்பி வந்து இதோ தனது ஹோட்டல் அறையில் ஜன்னலின் வலியே கொடைக்கானலில் இருளை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

அனைத்தையுமே அவன் உணர்ந்து திருந்தி இருந்தாலும்..... இது கண்கெட்ட பின் சூர்யநமஸ்காரம் செய்வது போலத்தான் ஆயிற்று.....

மகிழ் அழுது கொண்டிருந்தாள்..காவ்யா கேள்வி கேட்டு கேட்டே ஓய்ந்துவிட்டாள்..... மகிழ் எந்த விளக்கமும் சொல்லும் நிலைமையில் இல்லை....என்ன பதில் சொல்லுவாள்.. அவனிடம் தைரியமாக பேசிவிட்டாலும், அதனை நினைத்து நொடிக்கு நொடி சித்ரவதை அனுபவிக்கிறாள் இப்போது..

ஏன்??இந்த இனம் புரியாத வெறுமை...

நடுக்கடலில் தனித்து விடப் பட்டதை போன்ற தனிமை??

காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை..

இனி எப்போதும் இருவரும் சேரமுடியாது.. 'ஆதி... ஆதி...'எனக் கத்தியவள் அங்கேயே மடங்கி அமர்ந்து கதறி அழ ஆரம்பித்து விட்டாள் விட்டுச் சென்ற தன்னவனை நினைத்து..

காவ்யாவிற்கு அவள் அழுவதை பார்த்து கோபம் கோபமாக வந்தது...

"ஏன் டி இப்படி பைத்தியக்காரி மாதிரி பண்ணித் தொலைக்கிற...? ஒருத்தரை ஒருத்தர் இவ்ளோ விரும்பிட்டு பிரிஞ்சுபோய் எந்த கோட்டையை பிடிக்கப் போறீங்க.. அதனால யாருக்கு என்ன லாபம்...?"

"ஆதி சார் எவ்வளவோ விஷயம் நடந்தாலும், உன்னத் தவிர வேற யாரையாவது திரும்பி பார்த்திருப்பாரா..? உனக்கு மட்டும் தான் அடங்குவார் .. உலகத்தில எந்த மூலைக்குப் போய் நின்னாலும் அவருக்கு நீதான் வேணும்.. நீங்க சண்டை போட்டு அடிச்சிக்கோங்க.. இல்லை சமாதானம் ஆகிக்கோங்க.. என்னவோ பண்ணித் தொலைங்க.. ஆனா ஒண்ணா இருந்து பண்ணிக்கோ..."

"இனி நீ தனியாள் இல்ல....உன் குழந்தைக்காக மட்டும் யோசி. அப்பா இல்லாம இந்த கொஞ்ச நாள் நீ படுற கஷ்டத்தை வாழ்நாள் முழுக்க உன் குழந்தைக்கு கொடுத்துறாதே.... இதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை. உன்னோட இஷ்டம்" என்றபடி அவளை தனிமையில் யோசிக்க விட்டு விட்டு அவள் சென்றுவிட்டாள்.

சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் மகிழ்.... இனி வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் எதுவும் புரியவில்லை.. தற்கொலை எண்ணங்கள் கூட இது போன்ற சூழ்நிலையில்தான் தோன்றும் போல.. யோசிக்க மறந்து போய் சிலையாக அமர்ந்திருந்தாள்..

காதல் தோல்வி மரண வலி, துயரம் கொடுக்கும்.. காதலை ஜெயிக்க தான் 'ம்' என்று சொன்னால் போதும் என்று அறிந்தும் வேண்டாம் என பிரிந்து செல்ல எப்படி மனது வரும் அவளுக்கு.....

அதிலும் காவ்யாவின் அறிவுரை அவளுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.....

முடிவெடுத்துவிட்டாள்.... என்ன ஆனாலும் இணைந்தே வாழ்வது என்று....!

அவன் கைகளுக்குள் இருக்கும்வரை அவளையும், அவள் குழந்தையையும் இனி யாரும் எந்தவகையிலும் நெருங்க முடியாது..

எல்லாவிதத்திலும் சரியாக இருப்பவர்கள்தான் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றால் யாருமே இந்த உலகத்தில் ஜோடிசேர முடியாது..

தங்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் வராது என உறுதியாக நம்ப முடியாது தான் .. ஆனால் எத்தனை சகுனிகள் வந்தாலும் அவர்களை எதிர்கொண்டு ஒன்றாக சமாளிக்கும் மனப்பக்குவம் அவளுக்கு வந்துவிட்டது..

சூழ்ச்சிகள்,வன்முறைகள், அநீதிகள் நிறைந்த இந்த உலகை மட்டும் அல்ல இந்த இருவரின் வாழ்க்கையை கூட அன்பு நேசம் காதல்தான் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கப் போகிறது இனிவரும் காலங்களில்....!

கருத்துத்திரி 👇👇👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 37

அன்றொரு நாள் இரவு யாழினி ஹாஸ்டலில் கரண்ட் கட் ஆகி விட்டது..

ஏதோ மழையில டிரான்ஸ்போரம் சாஞ்சிடுச்சி போல, காலையில் தான் கரெண்ட் வரும்... போய் படுங்க என்று வார்டன் சொல்லிவிட, யாழினி மெழுகுவர்த்தி ஒன்றை மேஜையில் பற்ற வைத்து விட்டு கொட்டும் மழையில் ஜன்னல் ஓரம் தன் நிலையை நினைத்து கொண்டே அப்படியே நிலவை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.....

ஏதேதோ நினைக்கும் பொழுதே இடையில் அர்ஜுனின் நினைவுகள்....தன்னை அறியாமல் உடல் சிலிர்த்து அடங்குவதை நன்றாகவே உணர்ந்துகொண்டாள்..

திசை மாறி பயணித்த தன் வாழ்க்கைப் படகு கலங்கரை விளக்கத்தை கண்டு சரியான இடத்திற்கு வந்து சேர்ந்ததை போன்று இதம் பரவியது ஏனோ தெரியவில்லை..?

அவளது மனமோ 'நீ இருக்கும் நிலைக்கு உனக்கு இந்த காதல் தேவைதானா..? எத்தனை நாட்கள் இந்த வாழ்க்கை நீடிக்கப் போகுதுனே தெரியல....?நாளை சாப்பாடே கேள்விக்குறியாக இருக்கு....பீஸ் ஒழுங்கா காட்டாமப்போனால் இங்கிருந்து விரட்டியடிக்கப்படுவாய்...எல்லாத்துக்கும் மேல அர்ஜுன் மனசுல என்ன இருக்குன்னே தெரியல...'என்று எச்சரித்தது.

'இல்ல இல்ல அர்ஜுன் சொன்னாரே.. என்னய ரொம்ப புடிக்கும்னு..' என்று அவள் இன்னொரு மனம் அவசரமாக மறுத்தது..

'ஆமா புடிக்குறவங்க தான் இவ்ளோ நாள் உன்ன வந்து பாக்காம இருக்காங்களா..?'என்று எண்ணும் போதே கண்ணீர் வழிந்தது.... அவள் பேசியதையெல்லாம் வாகாக மறந்துவிட்டாள்.

அவன் அருகாமையை மனம் விரும்புகிறது....அப்படியானால் அவளுக்கும் அந்த பந்தம் தேவை என்று தானே அர்த்தம்.. தேவை என்பதை விட காதலிக்கிறாளோ..? தன் மனநிலையை எண்ணி கையும் களவுமாக மாட்டிக் கொண்ட குழந்தை போல விழித்தாள் யாழினி.

'ஓ அவருக்கு பிடிக்குங்கறது இருக்கட்டும் நீ அவரை விரும்புகிறாயா..?'என்று சரியாக பதில் கேள்வி கேட்டது மனம்.. நேரடியான அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு தடுமாறிப் போனவள்..

'அப்படி இல்ல.. அர்ஜுன் என்னோட நண்பன் மட்டும் தான் ... எங்க ரெண்டு பேருக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு...அதனால அவரை பிடிக்கும்' என்று தன் மனம் போகும் போக்கு புரியாமல் சமாளித்தாள்..

'தோழனோட லைப் லாங் ஒன்னா கல்யாணம் கட்டிக்கிட்டு வாழ முடியாது.. காதலனோட தான் வாழ முடியும்.. நீ அர்ஜுனை காதலனா தான் பாக்குற... உனக்கு அர்ஜுனை ரொம்ப பிடிச்சிருக்கு.. நீ மறுத்தாலும் இதுதான் உண்மை' என்று அடுக்கடுக்காக அடி மனதின் ஆசைகளும் விருப்பங்களும் படம் பிடித்துக் காட்டப்பட.. ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறிப்போனாள் யாழினி.....

ஆனால் அவன் அன்பிற்கும்.. அளவு கடந்த நேசத்திற்கும் தான் ஏற்புடையவள் தானா..?

இந்த வாழ்க்கை தனக்கு நிலைக்குமா? தங்கள் இருவருக்கும் உள்ள பொருளாதார ஏற்றத்தழ்வுகள்..... அதையும் தாண்டி குடும்ப சிக்கல்கள்....?என்ற எண்ணமே அவளை அலைகழித்திருக்க.. தன் விழியோடு விழி பொருத்தி அவன் பார்த்த காதல் பார்வைகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறினாள்.... குழப்பத்தோடு தவித்திருந்தாள்.

இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று மகிழ் எங்கே போனாள்??? என்ற கேள்வி வேறு பூகம்பமாய் அவள் நெஞ்சை ஆட்டுவித்தது..

எது எப்படியோ.... எவ்வளவோ பிரச்சனைகள் தன்னைச்சுற்றி இருந்தபோதிலும் அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் அர்ஜுன் அவள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறான்..

அப்போது தோழனாக..!
இப்போது......?

சமீப காலங்களாக அவன் பால் சாய்ந்திருக்கும் அவள் மனநிலை தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் அவள் எண்ணங்களை மாற்ற அவள் முயற்சிக்கவில்லை....

விரும்பத்தகாத.. கொடூர சம்பவங்களால் காயப்பட்டு ரணமாகி இருந்த அவள் இதயத்திற்கு, அவன் நினைவுகள் மட்டுமே இதத்தை கொடுக்கும் தற்போதைய மருந்து..

சுவற்றில் சாய்ந்து குத்துக்காலிட்டு அமர்ந்து ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு.. தனியாக இருந்தால் பைத்தியம் பிடிக்கும் உணர்வு வரவே....பக்கத்து அறையில் தோழிகளுடன் பேச சென்றுவிட்டாள்.

நடு ராத்திரி ஒரு உருவம் யாழினி அறையை அண்ணாந்து பார்த்தது...வேற யாரா இருக்கும்.....?!

தோழிகளுடன் அரட்டை அடித்துவிட்டு தன் அறைக்குள் வர... அப்படியே திகைத்து போனாள் ...

அவளுடைய பெட்டில் அர்ஜுன் தலைக்கு கைகொடுத்து கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தான்... பைப்பைப் பிடித்து ஏறி பின் வாசல் வழியாக வந்து உள்ளே படுத்து கொண்டான் ...

“இங்க என்ன பண்றீங்க அர்ஜுன்..?இது லேடீஸ் ஹாஸ்டல்” என்றபடி கதவை வேகமாக அடைத்தாள்...

“அதான் உனக்கு என்ன பிடிக்காதே... மேடம் பேசக்கூட மாட்டீங்க.... உங்களுக்கு ஆவாதவன் தானே நான்...கத்தி ஆள கூப்பிட வேண்டியது தான?? கூப்பிடு டி வரட்டும் நானும் கேட்கிறேன்.. மெசேஜ் பண்ணா ரிப்ளை இல்ல போன் போட்டா எடுக்க மாட்டிங்கற ...” என்ற அவனது அதிரடி அவதாரத்தில் மிரண்டவள்...

“அர்ஜுன் கத்தாதீங்க ப்ளீஸ்... ஏன் திடிர்னு இப்டி பண்றிங்க??பிரச்சனை பண்ணாம போங்க..”

“முடியாது... ஏன் போனை எடுக்கல..? அவ்வளவு வேண்டாதவனா போயிட்டேனா????வேணும்னே வேற யாருக்கிட்டையோ பேசுற ... என் போனை கட் பண்ற..” அர்ஜுன் இன்னும் வேகமாக கத்த...

பயந்து போன யாழினி ஓடிப்போய் அவன் வாயை பொத்தினாள்...

அர்ஜுன் மேலே டிசர்ட் கீழே ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தான்... இவள் நைட்டியில்...

அர்ஜுன் முன்னால் நிற்கவே கூச்சமாக இருந்தது அவளுக்கு ..

அதற்கு முக்கிய காரணம்,அவன் பார்வை கூட முன் போல இப்போது கண்ணியமாக இல்லை....

அர்ஜுனை பார்த்தால் சண்டை போட வந்த போலவே இல்லை... வாய் தான் வம்பு சண்டை இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் பார்வையோ தனது காதலியை அக்குவேர் ஆணி வேராக பிரித்து மேய்ந்தது...

" அப்படி என்னடி நான் தப்பு பண்ணிட்டேன்..? ஏன் என்கிட்ட பேச மாட்டேங்குற..?அப்படியே நான் தப்பு பண்ணியிருந்தாலும் அடிக்கிறியா எவ்வளவு அடி வேணாலும் அடிச்சிக்க... அது என்ன பேசாம இருக்கிறது..? என்கிட்ட சும்மா நடிக்காத... நான் உன்னை காதலிக்கிறேன்னு உனக்கு நல்லாவே தெரியும். அத என் வாயால சொல்லணும் அதான உனக்கு... ”என்றபடி அவள் கையை இறுக்கி பிடித்து கட்டிலில் தள்ளி அவள் மேல் வந்தான் ...

“அர்ஜுன் என்ன பண்றீங்க லேடீஸ் ஹாஸ்டல் உள்ள வந்து அராஜகம் பண்ணாதீங்க....”

“நீ ஒழுங்கா என்கிட்ட பேசி இருந்தா நான் ஏன் டி இங்க தேடி வர போறேன்” என வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கண்களும் கைகளும் அவள் மேனியில் கவி பாட ஆரம்பித்தது ...

தான் இத்தனை காலம் செய்த அத்தனை தவத்திற்கும் கிடைத்த வரமாக கண்முன்னே தனது அர்ஜுன்.. !அதுவும் காதலனாக, அவன் வாயாலே அவனது காதலை கூறியபடி..!

நம்ப முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை... சற்று முன்னர் வரை இப்படி ஒரு நொடி தனது வாழ்வில் வரவேப்போவதில்லை என்றுதான் நினைத்திருந்தாள்.. ஆனால் இப்போதோ உண்மையும் உயிருமாக அவள் முன் அவன்..!

அவன் அணைப்பிலிருந்து விலகி அமர்ந்தவள்.. ஓரிரு நிமிடங்கள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனைப் பார்த்தபடியே "ஆஆஆஆ..." என்று அழ ஆரம்பித்து விட்டாள்.. பயந்து போனான் அர்ஜுன்.இத்தனை நாட்களாக கொண்ட தவிப்பின் வெளிப்பாடு அந்த அழுகை என்று புரியாமல் அவன் முழித்துக் கொண்டிருக்கும் போதே .. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சத்தமில்லாமல் கதறினாள்..

துடித்துப் போனான்.. "அம்ம்ம்மு ".. அவள் அழுததை பார்த்து அவனுக்கும் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

அணைக்க வந்தவனை விட்டு விலகினாள்.. "அம்மு ப்ளீஸ் அழாதடா.... என்ன டி ஆச்சு சொல்லு ப்ளீஸ் "அவன் கெஞ்சினான் கண்ணீருடன்.

தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு அமைதியானவள் அவனை கண்கள் தெறிக்க முறைக்கவும்.. "யாழுமா .. ஆர் யூ ஒகே".. அவள் பார்வையின் அர்த்தங்கள் புரியாமல் கன்னம் தொட்டு அவன் கேட்டிருந்த வேளையில்..

"என்னையத் தேடி வர்றதுக்கு உனக்கு இவ்வளவு நாளாச்சா டா...?" என்றபடி பளாரென வைத்தாள் ஒரு அறை..

அறை வாங்கிய அடுத்த கணமே.. கண்கள் மூடி திறந்தவன்.. மெல்லிய புன்னகையை இதழில் தவழ விட்டு விட்டு.. மீண்டும் "அம்மு" என்றான் மென்மையாக..

இப்போது ஓரளவிற்கு அவளது மனநிலையை அவன் புரிந்து கொண்டான். அந்த ஆனந்தத்தில் வந்த புன்னகை தான் அது.

மீண்டும் அறைந்தாள்.. விருது வாங்கியது போல் அவன் என்னவோ சந்தோஷத்தில் அத்தனை அடிகளையும் மலர் மாலை போல் வாங்கிக் கொண்டான் .. கோபத்தினாலும் அழுகையினாலும் அவள் முகம்தான் சிவந்து போயிருந்தது.

அடுத்து வாயை திறந்தால் மீண்டும் ஒரு அறை பரிசாக கிடைக்கும் என்று தெரியுமென்பதால்.. இதழில் குறுகுறுத்த புன்னகையுடன் அவள் முகத்தை பார்த்திருக்க.

"என்னடா.. என்னடா பாக்கறே.. நடைபிணமா நிக்கிறேன்.. என்னை இப்படி பாக்க உனக்கு சந்தோஷமா இருக்கா.. அப்பா,அம்மா, அண்ண்ணான்னு எல்லாரும் கூட இல்லாதப்ப கூட அக்கா இருக்கான்னு நிம்மதியா இருந்தேன்.. அவளும் என்னை விட்டுட்டு போயிட்டா.. அப்படியே நான் செத்துப் போயிருக்கணும்.. அப்ப தெரிஞ்சிருக்கும்.. இத்தனை நாள் வந்து என்னைய எட்டிக்கூட பார்க்கணும்னு தோணலல்ல??? அப்படியே இருந்திருக்க வேண்டியதுதானே???? ஏன்டா இப்ப மட்டும் வந்த..?" என்று அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி கோபம் தீரும் மட்டும்.. அறைந்து கொண்டிருந்தாள் யாழினி ..

அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டவன் ஒரு நிலையில் அவள் கரங்களைப் பிடித்துக் கொண்டு.. "கை வலிக்கப் போகுதுடி போதும்".. என்று தன்னோடு இழுத்து அணைத்துக் கொள்ள..

"என்னை விடுடா பொறுக்கி.. இவ்வளவு நாள் நேர்ல வந்து பாக்காம இருந்துட்டு .. பெரிய அக்கறை ம**** மாதிரி இப்போ வந்து நின்னு காதல சொல்ல வந்துட்டான்.. உன்ன பார்த்தாலே கொலை வெறி ஆகுது.. மரியாதையா எந்திரிச்சு போடா வெளில " என வெளியே கேட்டுவிட கூடாது என்ற காரணத்தினால்,அடி குரலில் கத்தியவளின் வாயிலிருந்து சரளமாக கெட்ட வார்த்தைகள் வெளி வந்தன..

குபீரென சிரித்து விட்டான் அர்ஜுன் .. தன் அணைப்பிலிருந்து விலக முயன்று திமிறிக் கொண்டிருந்தவளிடம் "என்னடி செல்லம் இப்படியெல்லாம் பேசறே, நீதானே என்னைய வந்து பார்க்காதேன்னு சொன்ன ".. என்றான் பொங்கி வந்த சிரிப்புடன்.. அந்த சிரிப்பும் சேர்ந்து இன்னும் ஆத்திரமூட்டவே..

அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் விருட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்த்து,"நான் என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுடுவியா ..? அப்போ என் கூட இவ்வளவு நாள் பழகியும், என் மனசுல என்ன இருக்குன்னு உன்னால புரிஞ்சுக்க முடியலையா..? அப்புறம் என்ன ம*****ருக்குடா என்னய காதலிச்ச...? இப்ப மட்டும் எதுக்கு இங்க வந்த...?" என்றாள் சீற்றத்தோடு..

"என்னடி சரளமா பீப் வார்த்தையா வருது"என்றபடி அவள் இதழில் மென்மையாக முத்தமிட்டிருந்தான் அர்ஜுன். நறுக்கென அவனது இதழ்களை கடித்து வைத்தாள் யாழினி.

"ஸ்ஸ் ஆஆஆஆ.. ராட்சசி .. எதுக்குடி கடிச்சு வச்ச" என்று அவளை விட்டு விலகி.. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அவளையும் தனது மடியில் அமர்த்திக் கொண்டவன், தன்னோடு அவளை இழுத்து இறுக கட்டிக் கொண்டான் ..

பதில் சொல்லாமல் அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள் யாழினி.

"ஒரு நிமிஷம் நான் சொல்றதை பொறுமையா கேளு.. என்னோட நிலைமையில் இருந்து யோசிச்சு பாரு யாழினி...."

"அங்க அண்ணன் படுத்த படுக்கையா இருக்காரு.. அவரோட பிசினஸ், குடும்பம் எல்லாத்தையும் நான் தான் பார்க்கணும்.. அது மட்டும் இல்லாம நான் உன்ன வந்து பார்க்க எவ்வளவோ ட்ரை பண்ணினேன் ஆனா நீ தான் என்னைய தள்ளி வச்சுட்ட... எல்லாத்துக்கும் மேல கடைசியா நீ சொன்ன வார்த்தை??! அதைக் கேட்டு என் உயிரே ஆடிடுச்சு... நீ அதை ரொம்ப சீரியஸா தான் சொல்ற அப்படின்னு நினைச்சு இவ்வளவு நாளும் உன்ன பாக்க வராம இருந்தது என் தப்புதான்னு இப்போதான் எனக்கே புரியுது.... நல்லவேளை இப்பவாவது நான் வந்தேன்.... நீ பேசுறதெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு நான் பாட்டுக்கு உன்னை பிரிஞ்சு போயிருந்தா....? "என சீரியஸாக முகத்தை வைத்தபடி அவளை நோக்கினான்.

இதைக்கேட்டு இன்னும் கோபம் வந்தது அவளுக்கு.. "ஓஹோ பிரிஞ்சு போறதுதான? இப்போ மட்டும் எதுக்கு என்னை தேடி வந்தீங்க..?" என்றாள் சிறுபிள்ளை போல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு.

அவளது முக பாவனைகளை ரசித்தபடி அமர்ந்திருந்தவன், இதற்கு மேல் முடியாதடா சாமி... என பேச்சை நிறுத்திவிட்டு அவள் பிடறியை ஒரு கையில் பிடித்து இழுத்து இதழோடு இதழை சேர்த்து கொள்ள.... யாழினியின் கரங்கள் அவனை விலக்க நினைத்து விலக்க முடியாமல் , அப்படியே நின்று போனது....

சிறிது நேரத்திலேயே தன்னிலை மீண்டவன், அவளை விட்டு விலகிய படி... "இத்தனை நாள் காத்திருந்த எனக்கு , உன் படிப்பு முடிகிற வரைக்கும் காத்திருக்க முடியும் தான்...என்ன அது கொஞ்சம் இல்லை நிறைய கஷ்டம் போல" என்றவன் அவளுக்கு முதுகு காட்டி எழுந்து நின்றபடி, "நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தேன்னா கூட வேற ஏதாவது ஏடாகூடமா ஆயிரும்... நான் உனக்கு அப்புறம் கால் பண்றேன்..." என்றபடி அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் எப்படி வந்தானோ அப்படியே கிளம்பிவிட்டான்.

'ஏன் இப்படி ஒரு பாய் கூட சொல்லாம ஓடுறாரு...?' என்று எண்ணியபடி தன்னை குனிந்து பார்த்தவள் வெட்கத்துடன் இரு கரங்களால் முகத்தை மூடிக்கொண்டாள்.

இங்கு கொடைக்கானலிலோ மறுநாள் காவ்யாவின் துணையுடன் மகிழ் ஆதியுடன் பேசி அவனோடு சேர்வதற்காக, அவனைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்திருந்தாள்.

தவிப்புடன் அவனை விழிநீருடன் தேட அதற்கு முன்பே அவன் விமானத்தில் சென்னை நோக்கி பறந்து விட்டான்.. அவளவன் சென்றுவிட்டான்....

அவன் அறையை காலி செய்துவிட்டான் என்று ரிசப்ஷனிஸ்ட் கூறிய உடனே ஆதி எனக் கத்தியவள்.... அங்கேயே மடங்கி அமர்ந்து கதறி அழ ஆரம்பித்து விட்டாள் விட்டுச்சென்ற தன்னவனை நினைத்து.....

கருத்துத்திரி 👇👇👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 38

"தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்ரி... உங்களோட ரூம் சர்வீஸ் கூட ரொம்ப நல்லா இருந்தது. இன்பாக்ட் என்னோட எஸ்டேட் அண்ட் பங்களா இங்க இருந்தாலும், அது ரொம்ப டிஸ்டன்ஸ்ல இருக்குங்கற ஒரே ரீசனுக்காக தான் இங்க வந்து ஸ்டே பண்ணுனேன். பட் வரும்போது யோசிச்சுட்டே வந்தேன் என்னதான் பைவ் ஸ்டார் ஹோட்டலா இருந்தாலும் சர்வீஸ் எப்படி இருக்குமோ...? அப்படின்னு.... பட் டு பி வெரி பிராங்க், நான் எக்ஸ்பெக்ட் பண்ணதுக்கு மேலேயே உங்க சர்வீஸ் இருந்துச்சு..." என்ற ஆதியின் குரல் கேட்டு வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள் மகிழ்வதனி.

'இது என்ன தனது பிரம்மையா...?! இல்லை தனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா..? ஒருவேளை படங்களில் காட்டுவது போல் அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால், எங்கு பார்த்தாலும் ஆவனாகவே தெரிகிறானா...?' என வெவ்வேறு எண்ணங்களில் உழன்றவள்.... கண்ணை சிமிட்டினால் கூட எங்கே மறைந்து விடுவானோ என்ற பயத்துடன் இமைகளை கூட இமைக்காது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த ஹோட்டலின் மேனேஜருடன் தான் உரையாடிக் கொண்டிருந்தான் ஆதி.....!?

அவரோ வாயெல்லாம் பல்லாக... அவன் நின்று தன்னுடன் பேசுவதே பெரும் பாக்கியமாக எண்ணியவர் போல், " தேங்க்யூ வெரி மச் சார்... நீங்க இங்க வந்து தங்கினதே எங்களுக்கு ரொம்ப பெருமை... அதுலயும் உங்களுக்கு எங்க சர்வீஸ் புடிச்சிருந்ததுக்கு வி ஆர் வெரி ப்ரவுட் ஆப் அஸ்.... "

" இங்கே இருந்து நீங்க ஏர்போர்ட் போறதுக்கு கார் அரேஞ்ச் பண்ணிட்டோம் சார்... கார் வந்துடுச்சு. உங்க லக்கேஜெல்லம் கூட கார்ல ஏத்திட்டோம். நீங்க செல்ப் டிரைவிங் வேணும்னு கேட்டு இருந்ததால டிரைவர் அரேஞ்ச் பண்ணல சார்.இப்ப எதுவும் டிரைவர் அரேஞ்ச் பண்ணட்டுமா சார்...?" என்றார் பவ்யமாக.

ஒரு சிறு புன்னகையுடன் " நோ தேங்க்ஸ்" என்றபடி அவருக்கு கை குலுக்கி விட்டு பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ரூமை காலி செய்து விட்டு வெளியே வந்தவனை மேனேஜர் அழைத்து காம்ப்ளிமென்ட்ரியாக பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு வற்புறுத்தவே,வேறு வழி இன்றி சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது தான் மகிழ் அங்கே வந்தது.

ஆனால் இதெல்லாம் அந்த ரிசப்ஷனிஸ்ட்க்கு தெரியாது என்பதால், ' ஆதி அப்போதே கிளம்பிவிட்டார்' என்று கூறிவிட்டதன் விளைவு தான் மகிழின் அழுகை....

வேகமாக அவனை நோக்கி சென்றவள் ஏதேனும் தடுமாறி விழுந்து விடுவாளோ என்ற பதற்றத்துடன் அவளை பின்தொடர்ந்தாள் காவ்யா.

பார்க்கிங் சென்று காரில் ஏறி அவன் அமர அவனைத் தொடர்ந்து அவளும் ஏறிக் கொண்டாள். நாகரிகம் கருதி காவ்யா வெளியிலேயே நின்று கொண்டாள்.

அவளைப் பார்த்து ஒரு நொடி ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கியவன், ஆச்சரியத்துடன்.... "என்னாச்சு மகிழ்....?நீ இங்க என்ன பண்ற??" என்றான் கரகரப்பான குரலில்.

அவனைப் பார்க்க வேண்டும் என்று கிளம்பி வந்து விட்டாளே தவிர அவனிடம் என்ன பேச வேண்டும் என்றெல்லாம் அவள் யோசிக்கவே இல்லை.

அவன் முகத்தைப் பார்த்ததும் மீண்டும் அவளுக்கு பழைய ஞாபகங்கள் மேல் எழுந்து ஆழிப்பேரலையாக அவளை அடித்துச் சென்றது.

சட்டென்று மனம் இறுக்கமாக, "சும்மா தான் வந்தேன். நீங்க ஊருக்கு கிளம்பிட்டீங்கல்ல... அதான் கடைசியா ஒரு தடவை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்...." என்றாள் வரவழைத்துக் கொண்ட சாதாரண குரலில் தன் மனதை மறைத்து.

அவனுக்கு ஒரு நொடியில் உலகமே இருண்ட உணர்வு. ஏற்கனவே காவ்யா கால் பண்ணி கூறியிருந்ததிலிருந்து, அவள் தன்னிடம் வந்து பழையபடி பேசுவாள் தங்கள் வாழ்க்கை சரியாகிவிடும் என்றெல்லாம் எண்ணி இருந்தவன்.... ஊருக்குச் சென்று தனது மொத்த குடும்பத்தையும் அழைத்து வந்து இங்கேயே திருமணத்தை முடித்து அவளை அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் தான் இன்று கிளம்பியது.

ஆனால் அவளின் திடீர் மனமாற்றம் அவனுக்கு பயத்தை குடுத்தது. வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்ற பதட்டத்தில்.... இனி எப்பொழுதும் அவளை, அவளே வேண்டாம் என்றாலும் விடக்கூடாது. என்ற எண்ணத்தில் அவளிடம் பேச ஆரம்பித்தான்.

அவளுக்கு மிக அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவளது இரு கைகளையும் இறுக்கிப்பிடித்தபடி, "நான் உன்கிட்டே இனி மன்னிப்பு கேட்கப் போறதில்ல மகிழ் .. மன்னிப்பு கேட்கக்கூட ஒரு தகுதி வேணும்.. அந்தத் தகுதி நான் செஞ்ச தப்புக்கு எனக்கு கிடையாது.. ஆனா தண்டனை கொடுக்க முழு உரிமை உனக்கு உண்டு.. நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு.. நான் ஏத்துக்கிறேன்.. ஆனா என் கூடவே இருந்து அந்த தண்டனையை கொடு தயவு செஞ்சு என்னை விட்டு பிரிஞ்சி போய்டாத டி.. என்னால இன்னொரு பிரிவை தாங்க முடியாது மகி ப்ளீஸ் ".. எனும்போதே அவனது கட்டுப்பாட்டையும் மீறி ஆண் என்ற கர்வம் முழுவதும் அழிந்து அவனது கண்ணீர் சொட்டு சொட்டாக வந்து அவள் கைகளை நனைத்தது.

மகிழால் அவனது மன உணர்வுகளை உணர முடிந்தாலும், ஏதோ ஒன்று அவளை தடுத்துக் கொண்டே இருந்தது... இன்னும் அவனிடம் அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பது அவளுக்கே புரியவில்லை.ஈரம் வற்றிப் போன நிலமாய் மாறிவிட்டாள்.

" ப்ளீஸ் ஆதி என்னை இப்படி சங்கடப்படுத்தாதீங்க....நமக்குள்ளே எதுவும் செட்டாகாது" தனது இயலாமையை மறைக்க அவனிடம் கடுகடுத்தாள்.

"பரவாயில்ல மகி எல்லாத்தையும் பழகிக்கலாம்.. ஆனா ஒன்னா இருந்து எல்லாத்தையும் சமாளிப்போம் " என அவன் சிரித்தபடி கூறினான். இப்போது ஏனோ மனதினோரம் சிறிதளவு நம்பிக்கை துளிர் விட்டிருந்தது அவனுக்கு.


"ப்ச் விளையாடாதே ஆதி .. நாம சேர்ந்து வாழ்ந்தா மறுபடி பிரச்சினை வந்துட்டா கசப்புதான் மிஞ்சும்... அதுல அதிகமா பாதிக்கப்படுவதும் நானா தான் இருப்பேன் " புரியவைக்க முயன்றாள்.

"கசப்பை இனிப்பா மாத்திக்கலாம்" அவளை இழுத்து அணைத்தபடி லேசாக நெற்றியில் முத்தமிட்டான்.

கருப்பு ஸ்டிக்கர் கண்ணாடியில் பொருத்தப் பட்டிருக்க உள்ளே நடப்பது வெளியே தெரியவில்லை.. கொடுத்த முத்தம் மனதிற்கு இதம் அளித்தாலும், "சண்டை வரும் ஆதி " என்றால் இழுத்து பிடித்த கோபத்துடன்.

"சமாதானம் ஆகிக்கலாம் டி .. சண்டை போடாத காதலர்கள், புருஷன் பொண்டாட்டினு இந்த உலகத்துல யாராவது இருக்காங்களா என்ன...?" என்றான் கூலாக.

அருகில் அமர்ந்து அவளை இறுக அணைத்தபடி அவளின் உறுதியை அவன் சோதித்துக் கொண்டிருந்தான்.

ஏற்கனவே அவன் நினைப்பில் தவித்து, தனிமை எனும் கொடுமையை அனுபவித்தவள் அல்லவா...? இந்த அன்பை ஒதுக்க மனமில்லை தான்.

இருப்பினும் மீண்டும் கஷ்டங்களை தாங்க தன்னிடம் தெம்பில்லை என்ற காரணத்தால் , "வேணாம் ஆதி .. நாளைக்கு யாராவது ஏதாவது சொன்னாங்கன்னு நீ என்னைவிட்டு போய்ட்டா....?" என்றாள் அவனின் உறுதியை சோதிக்கும் விதமாக.

"போய்ட்டா என்ன டி ..?என் பின்னாடி வரமாட்டியா ..? ஏண்டா இப்படி என்னை விட்டு போறேன்னு சட்டைய புடிச்சு கேட்க மாட்டியா நீ...? யாரு என்ன சொன்னாலும் நம்புவியாடா லூசு பயலே அப்படின்னு நாலு அரை விட மாட்டியா...?" புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தவன்... திடீரென்று உறுதியான குரலுடன், " இந்த ஒரு பிரிவு போதும் டி .. இந்த ஜென்மம் முழுக்க உன்ன விட்டு போக மாட்டேன்.. உன்னால நம்ப முடியலனா என்கூட வாழ்ந்து பார்த்து தெரிஞ்சிக்கோ.. பிரச்சினை இல்லாம வாழ்க்கை இல்ல.. இதுக்கப்புறம் பிரச்சினை வந்தாலும் அடிப்பேன் கடிப்பேன்.. சண்டை போடுவேன்.. ஆனா உன்ன விட்டு போக மாட்டேன்".. என்றவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள்.

"காதல்னா என்னனு இப்போ தான் புரியுது மகி.... ஒரு பெண்ணோட மனசை ஜெயிக்கிறது மட்டும் காதல் இல்லை....காலம் முழுக்க இவன் நமக்கு பக்கத் துணையா இருப்பான்ங்கிற நம்பிக்கையை அவளுக்கு கொடுக்கனும்.."

" எந்த நிலை வந்தாலும் நம்ம துணையை நம்பனும்.. அதுதான் காதல்.. நான் அந்த நிலையில தவறிட்டேன்.. காதலுக்கான எந்த அறிகுறியும் இல்லாம யார் யாரோ சொன்னதை எல்லாம் நம்பி உன்ன விட்டு பிரிஞ்சு அதுக்கப்புறம் உன்னோட சம்மதமே இல்லாம உன்னைய கட்டாயப்படுத்தி ஒரு இக்கட்டில் நிறுத்தி உன்ன எடுத்துக்கிட்டேன்.. உன்னை நம்பாம வார்த்தையால வதைச்சு அணுதினமும் சித்ரவதை பண்ணேன்..... " என்று பெரும் உணர்ச்சி பெருக்குடன் பேசிக் கொண்டிருந்தவன் கண்களை மூடி தன்னை சிறிது நிலைப்படுத்தியபடி ஒரு தொடர்ந்தான்.

"அப்போலாம் நீ எவ்ளோ துடிச்சிருப்ப.....?சொல்லிக் கூட அழ ஆளில்லாம எவ்ளோ தவிச்சிருப்ப.....? தப்பு செஞ்ச எனக்கே இப்போ தண்டனையை ஏத்துக்க முடியல.. தப்பே செய்யாம தண்டனை அனுபவிச்ச உனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்.... எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது மகி...எது எப்படியோ டி நா உன் மேல வைச்சிருக்கிற காதல் மட்டும் உண்மை .. என்னை நம்பு பிளீஸ் " என தன் கண்ணீரால் அவள் பாதங்களில் முத்தமிட்டான்.. அவள் எந்த எதிர்வினையும் ஆற்றாது இருக்க மவுனமாக கண்ணீருடன் எழுந்து காரை விட்டு வெளியே சென்று விட்டான்.

அவன் மனதில் உள்ளதை கொட்டிவிட்டான்.அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு காரின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த மகிழ் கண்களில் கண்ணீர் வழிய அவனைப் பார்த்தாள்...

அவனோ 'அவள் என்ன சொல்லப் போகிறாளோ?' என்ற எதிர்பார்ப்புடன் கண்கள் ரத்தமென சிவந்திருக்க கண்ணீர் கோர்த்த விழிகளுடன் அவளையே பார்த்துக் கொண்டு அப்படியே இறுகிப்போய் நின்று இருந்தான்.

கண்களில் கண்ணீரும்,உதட்டில் சிறு கீற்று புன்னகையுமாக 'ஆம்' எனும் விதமாக தலையசைத்தாள் மகிழ்.... அப்போது தான் அவனுக்கு உயிரே வந்தது....!

வேகமாக அவளை நெருங்கியவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான் ஆதிரத்னேஷ்வரன்..

"கோமாவிலிருந்து குணமாகி வந்த இந்த கொஞ்ச நாளிலேயே ரொம்ப கஷ்டப்பட்டேன் டி.. பக்கத்துல நீ இருக்கற மாதிரி.. என் தலையை கோதி விடற மாதிரி.. என் மார்புல சாஞ்சுயிறக்கிற மாதிரி.. என்னோட கைகோர்த்து நடக்கிற மாதிரி.. எனக்கு முத்தம் கொடுக்கிற மாதிரி நானே கற்பனை செஞ்சுக்குவேன்.. உன்னோட நினைவுகள் மட்டும் இல்லைனா செத்தே போயிருப்பேன் மகிஇஇஇ" என்றவனின் வாயை தன் கரங்களால் பொத்தினாள் மகிழ்வதனி.

"என்ன பேச்சு இது ஆதி... அதான் நான் வந்துட்டேன்ல.... இத்தனை வருஷமா நாம மிஸ் பண்ண வாழ்க்கையையும் சேர்த்து வைச்சு வாழ்வோம்... இனி நமக்கிடையில பிரிவே கிடையாது....மறுபடியும் இனி யாராவது எதையாவது சொன்னாங்கன்னு ஏதாவது முன்னாடி நடந்துக்கிட்ட மாதிரி பண்ணுனீங்க...?அப்புறம் நான் அப்படியே உங்களை கடிச்சு தின்னுடுவேன் பாத்துக்கங்க " என்று அவனை கடிப்பது போல பாவனை செய்ய "அய்யோ அதுக்குதான்டி காத்திருக்கேன் என் தங்கமே..... உன் இஷ்டப்படி என்னைய நீ என்ன வேணாலும் செஞ்சுக்கோ டி " என்று அவள் கன்னத்தோடு கன்னம் தேய்த்தான் காதலுடன் ஆதி....!

இவ்வளவு நேரம், 'என்னடா நடக்குது இங்கே...?' என்றபடி அவர்களை பார்த்திருந்த காவ்யா குரலை செருமினாள்.... "ஹலோ நான் இங்கதான் இருக்கேன்" என்று அப்பாவியாய் சொல்ல..

"நீ இன்னுமா இங்கே இருக்க....போகல நீ...?" என்று நக்கலடித்து அவள் பார்க்காதவாறு மகிழை இழுத்து அணைத்தபடி காவ்யாவிற்கு எதிர் திசையில் திரும்பிக் கொண்டான் ஆதிரத்னேஸ்வரன்.

காவ்யாவோ அவர்களை முறைத்துவிட்டு... 'என்னமோ பண்ணித்தொலைங்க... ஒன்னா சேர்ந்தா சரிதான்..'என்றபடி வீட்டை நோக்கி சென்று விட்டாள்.

ஓரிரு நிமிடங்கள் உணர்ச்சி பெருக்குடன் கழிய... மகிழின் கைகோர்த்து காரை நோக்கி நடந்தான்.. இனி பிரிவே கிடையாது என்பதை போல அத்தனை இறுக்கம் விரல்களுக்கிடையே..

காரின் அருகே வந்தவன் டிரைவர் சீட்டிற்கு பக்கத்து சீட்டு கதவை அவளுக்காக திறந்து விட்டபடி "மகிஇஇஇஇஇ"என இதழில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு இருக்கையில் அமர வைத்தான்.

" நான் போயிட்டு ரிசப்ஷன்ல சொல்லிட்டு வரேன் இந்த கார்லயே சீக்கிரம் நீ தங்கி இருக்கிற வீட்டுக்கு போகலாம்டி.. நீ தொட்டு தொட்டு உடம்பெல்லாம் முறுக்கேறி சூடாகிப் போச்சு.. இந்த முத்தமெல்லாம் எனக்கு பத்தாது.. மொத்தமும் வேணும்" என அவசரமாக கன்னத்தில் முத்தமிட்டு ரிசெப்ஷன்னை நோக்கி சென்றவன் பிளைட்டை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு வந்து வண்டியை எடுத்தான்.. அவர்களின் வாழ்வின் அழகான பயணம் இனிதே தொடங்கியது.....

குறிப்பு : இது போட்டி கதை என்பதால் உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன மக்களே... 💕 மறக்காமல் தங்களின் கருத்துக்களை கருத்துத்திரியில் கூறுங்கள் தோழமைகளே🤝💞
கருத்துத் திரி இதோ 👇👇👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 39

"மகிழ்.... சீக்கிரம் வா.....நேரமாச்சு... ஹாஸ்பிடல்ல செக்கப் போறன்னைக்கு தான், கோவிலுக்கும் போகணுமா....? இப்பவே லேட் ஆயிடுச்சு... இனி எப்ப கோவிலுக்கு போயிட்டு அப்புறம் ஹாஸ்பிடல் போறது....? அப்பாயிண்ட்மெண்ட் வேற போட்டாச்சு... " என சிடுசிடுத்துக் கொண்டே இருந்தான் ஆதிரத்னேஷ்வரன்..

"இப்போ எதுக்கு இப்படி கத்தற ஆதி...? உனக்கு என் மேல பாசமே இல்லை.. உருத்தாத பிங்க் நிற சில்க் காட்டன் சரிகை புடவையும் தலையில் மல்லிகை சரமுமாய் வந்தவளை கண்டதும் இதழும் விழிகளும் விரிந்தது தன்னிச்சையாய் அவனுக்கு.

பேச்சே இல்லை.. கண்களைக் கூட சிமிட்டாத சிலையாகியிருந்தான்..

அவனது நிலையை பார்த்து வீட்டுக்குள் சிரித்தபடி " ஆதி...ஆதி.." என அவள் உலுக்கவே தன்னிலை உணர்ந்தவன் "ம்ம்ம் சொல்லும் மகிழ் ".. என்றான்.

"என்ன ஆதி கண்ண கூட சிமிட்டாம அப்படியே பாத்துக்கிட்டே நிக்கிற " என அவனை நக்கலடித்தபடி அவள் சிரிக்க.. " அதெல்லாம் ஒன்னும் இல்ல... நீ எப்படியும் புடவை கட்ட கஷ்டப்படுவ...நான் வந்து ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சேன்.. ஆனா அதுக்குள்ள நீயே வந்துட்ட இப்ப நான் என்ன பண்றது...?" என்றான் ஏக்க விழிகளுடன்.

"நீ தான லேட் ஆயிடுச்சுன்னு தைய்யா தக்கான்னு குதிச்சுகிட்டு இருந்த.. இப்ப வேற மாதிரி பேசுற...? "என்றாள் வெட்கத்தோடு.

பேசும் அவளது இதழ்களையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான் வெட்கமின்றி....

நீண்ட பிரிவுக்குப் பின் இணைந்ததாலோ என்னவோ இப்போதெல்லாம் ஆசை அதிகமாக வருகிறதே.. அதுவும் தன்னவள் அருகாமையில் மோகம் நெருப்பாய் கொழுந்து விட்டு எரிகிறது..

இதற்கு முன்னும் அவளுடன் கலந்திருக்கிறான் தான்... இருப்பினும் அவள் காதலுடன் கலந்த காமம் எப்படியிருக்கும் என்று காண பேராசை அவனுக்கு....!

அடக்க முடியாத ஆசைகள் அதிகமிருந்தாலும் நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அவளின் தற்போதைய நிலையை எண்ணி.

"போகலாம் டி".. பார்வையை எங்கோ திருப்பிக் கொண்டு அவள் சொன்னது காதில் விழாததை போல் தலையை கோதிக்கொண்டு கார் பார்க்கிங் நோக்கி நடந்தான் .

ஆயிரம் பிரச்சனைகள் அவள் குடும்பத்தில் இருந்தாலும்... அதையெல்லாம் இனி ஆதி பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்ததாலோ என்னவோ இப்போதெல்லாம் தனது மனக்கவலைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அவன் நடை, உடை, ஆளுமை என அவனது அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.

ஆதியின் ஆளுமை...தலையை கோதிக்கொண்டே போனில் கட்டளையிடும் போது மிளிரும் கம்பீரம்....முகத்தில் என்நேரமும் குடி கொண்டிருக்கும் வசீகரம்.... என அனைத்தையும் கனவு நாயகனை காணும் ரசிகை போல ஒவ்வொரு நொடியும் அவனை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருக்கிறாள் கடந்த இரு நாட்களாக.

இதோ இப்போதும் கூட கம்பீரமாய் தன் முன்னே நடந்து செல்பவனை கண்ணிமைக்காமல் பார்த்து வைக்கிறேன் என்று கால் இடறி கீழே விழப்போனவளை தாங்கி பிடித்திருந்தான் மகிழின் காதல் நாயகன்.

"பாத்து நடக்க மாட்டியா டி" கடுமையான குரலில் கடிந்து கொண்டாலும் அதில் அளவு கடந்த காதலே வெளிப்பட கண்சிமிட்டி இதழ் விரித்து புன்னகைத்தாள் மகிழ் ...

அவளது புன்னகை இதழ்களை ஒரு நொடி ஆழ்ந்த நோக்கியவன் "இப்படியே சிரிச்சு என்னை மயக்கிடு" என்று நாவை ஈரப்படுத்திக் கொண்டான்.

அவனது காதல் அடி மனது ஆழத்தின் ஏக்கத்தின் வெளிப்பாடு அது.. அவள் தனது அருகிலேயே இருந்தும்.... இதழ் முத்தம் கூட இறுதி அத்தியாயம் வரை சென்று ஒரு காதல் புத்தகத்தை எழுத வைத்து விடும் என்பதால் இப்போதெல்லாம் நெற்றியுடன் நிறுத்திக் கொள்வான் அவன் முத்தப் பயணத்தை.

அதற்கு மேல் அவளை நடந்து வர அனுமதிக்காதவன் அவளை கையிலேந்தியபடியே காரை நோக்கி நடந்து சென்றான்.. அருகில் இருந்த காரை நெடுங்குவதற்கு வெறும் ஐந்து நிமிடம் தான் ஆகும் ஆனால் அவனோ அரை மணி நேரம் கடந்தும் இன்னும் நடந்து செல்ல.. காரணம் புரிந்து சிரித்தாள்....

"என்ன சார் கோயில் நடை சாத்துறதுக்குள்ளயாவது கூட்டிட்டு போயிருவீங்களா...? இல்ல எப்படி...?" என்று அவனைப் பார்த்து புருவம் ராசனையாக உயர்த்தினாள்.

'என்னவோ சொல்லிக்கொள்' என்று வீராப்பாக கருமமே கண்ணாக தனது நடையை தொடர்ந்தான் அவன்...!

இதோ கொடைக்கானலின் குறிஞ்சி ஆண்டவர் கோவிலின் வாசலில் வந்து இறங்கினர் இருவரும்..

அவளின் புறம் திரும்பாமலேயே மனதிற்குள் ஏதோ கடவுளிடம் மனு கொடுத்தபடி முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக் கொண்டு அவளுடன் நடந்தான்.

அவனை யோசனையாக புருவம் நெறி பட பார்த்தவள் 'தீவிர வேண்டுதல் இருக்கும் போல' என எண்ணிக்கொண்டாள்.

சன்னிதானத்தில் இருவரும் விழிகளை மூடி மனதார கடவுளை பிரார்த்தினர். ஆளுக்கொரு வேண்டுதல் தான். இருப்பினும் இருவரின் வேண்டுதலும் ஒரு புள்ளியில் பொருந்தி ஓரே வேண்டுதலாய் போக இறைவனுக்கும் நிறைவேற்றுவது எளிதான விஷயமாகி தான் போனது.

கடவுளை வணங்கி முடித்த மகிழ் கண்களை திறக்கும் போது, அவளது கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்கிக் கொண்டிருந்தது....!

புதுமஞ்சள் கயிற்றில் தாலியைக்கோர்த்து அவள் கழுத்தில் அணிவித்திருந்தான் ஆதிரத்னேஸ்வரன்....அவள் மார்பை தொட்டுக் கொண்டிருந்தது அவன் அணிவித்திருந்த தங்கத்தாலி...!

கோவில் மணி ஒலிக்க.. சுற்றி இருந்தோர் அனைவரும் அட்சதை தூவ... சொல்ல முடியாத ஆயிரம் உணர்வுகளுடன் வார்த்தைகள் வராமல் உதட்டில் புன்னகையும் கண்களில் கண்ணீருடனும் ஆதியின் முகத்தை பார்த்திருந்தாள் மகிழ்வதனி.

மனதுக்குள் இருந்த ஒரு குறையும் தன்னை விட்டு நீங்கி விட, சந்தோஷம் குமிழ் விட்டாலும், "எல்லாமே முன்னாடியே பிளான் பண்ணி வச்சிட்டு தான், என்கிட்ட ஒன்னுமே தெரியாதது மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்தியா ஆதி...?" என்றாள் வரவழைத்துக் கொண்ட செல்லக் கோபத்துடன்.

"ஆமாண்டி உன்கிட்ட சொன்னா ஆயிரத்தெட்டு ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் சொல்லுவ எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை இல்லை... இப்ப என்ன வேணும்னா இரண்டு அடி அடிச்சிக்கோ... கோபம் எல்லாம் பறந்து போய்விடும் "என்றபடி நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை மென்மையாக அணைத்தபடி அவ்விடம் விட்டு வெளியேறியிருந்தான் அவன்.

சென்னை......

யாழினியின் காலேஜில் அனைவரையும் மூன்று நாட்கள் டூர் கூட்டி போவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால் யாழினி தான் வரவில்லை என்று கூறிவிட்டதாக அவளின் தோழி அர்ஜுனிற்கு ஃபோன் செய்து சொல்லிவிட்டாள்.

அர்ஜுனா ஓரளவுக்கு காரணத்தை யூகித்து இருந்தாலும்,அவளிடமே கேட்டபோது....சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, "எனக்கு போக விருப்பம் இல்ல அர்ஜுன்" என்றாள் வெறுமையான குரலில் .

அந்தக் குரல் அவனை என்னவோ செய்ய, "அதுதான் ஏன்னு கேட்டேன்" என்றான் அழுத்தமாக.

அவளோ ஒரு சிறு பெருமூச்சுடன், " என்கிட்ட டூருக்கு கொடுக்கிறதுக்கு இப்போ பணம் இல்ல அர்ஜூன்" என்றாள் மெல்லிய குரலில்.

அவனுக்கு கோவம் வந்துவிட்டது... "இங்க நான் கோடி கோடியா சம்பாதிச்சு கொட்டிக்கிட்டு இருக்கேன்.... எல்லாம் யாருக்காக டி...? அப்படி என்னடி உனக்கு ஈகோ.. ஏன் என்கிட்ட கேட்க மாட்டியா...? நானா பணம் கொடுத்தாலும் வேண்டான்னு சொல்ற. சரி நீயே வச்சிருந்து செலவு பண்ணுவேன்னு பாத்தா, அதுவும் பண்ணாம.... இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கணும்னு உனக்கு என்ன டி தலையெழுத்து...? அப்ப என்னய நீ யாரோவா தான் நினைக்கற..?"என்றான்.

"இல்ல அர்ஜுன் எந்த உரிமையும் இல்லாம நீ எனக்கு செலவு செய்றதை நான் விரும்பல. முக்கியமா நம்ம சேருவோம்ங்கற நம்பிக்கையே இப்பல்லாம் எனக்கு இல்ல. உன்னோட ஸ்டேட்டஸ் வேற.... நான் இருக்கிற நிலைமை வேற... இதெல்லாம் நீ லவ்வ சொன்ன அன்னைக்கு ஒன்னும் எனக்கு பெருசா தெரியல.... இப்போ உட்கார்ந்து யோசிக்க யோசிக்க எனக்கு ரொம்ப பயங்கர பிரச்சனையா தெரியுது..." தழுதழுத்த குரலில் பேசினாள்.

அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவன், அதைப் போக்கும் விதமாக கேஷுவலாகவே பேச ஆரம்பித்தான்.

"அடி போடி பைத்தியக்காரி... உன்கிட்ட இப்ப சொல்ல வேண்டாம் சர்ப்ரைஸா சொல்லலாம்னு இருந்தேன். ஆனா நீ இப்படி கிறுக்குத்தனமா நினைச்சுகிட்டு இருப்பேன்னு தெரியாம போச்சு "

"உங்க அக்கா இப்போ கொடைக்கானல்ல தான் இருக்காங்க. அவங்கள தேடி அண்ணாவும் கொடைக்கானல் போயிருக்காரு அனேகமா ரெண்டு பேரும் கல்யாணம் முடிச்சு தான் ஊருக்கு திரும்ப வருவாங்கன்னு நினைக்கிறேன் "

"அவங்க கல்யாணம் முடிச்சு, கொஞ்சம் ஓரளவுக்கு நிலைமை சரியாக வரும். அதுக்குள்ள உன் படிப்பும் முடிஞ்சிடும். அதுக்கப்புறம்
அண்ணா கிட்ட நம்ம காதலை சொன்னா மட்டும் போதும்.. அண்ணா எல்லார்கிட்டயும் பேசி ஒத்துக்க வைப்பார்.."

"எங்க அண்ணா பேச்சுக்கு எங்க வீட்டில மறு பேச்சே கிடையாது. அதனால எல்லாம் சுமுகமாக முடியும்.. நீயும் என் மனைவியா என் வீட்டுக்குள்ள காலெடுத்து வைப்ப.. அந்த நாள் மிக நெருக்கத்தில தான் இருக்கு.. உன் மேல இருக்கிற இந்த காதல் பச்சோந்தி தனமா மாறாது புரியுதாடி உனக்கு... ஒழுங்கு மரியாதையா இப்ப உன் அக்கவுண்டுக்கு நான் பணம் போட்டு விடுவேன் அதை எடுத்து டூருக்கு பணம் கட்டிட்டு பிரெண்ட்ஸ் கூட ஜாலியா போயிட்டு வர்ற... ஓகேவா...?" என்றான்.

அவன் தனது அக்காவை பற்றி கூறியதிலேயே மகிழ்ச்சி அடைந்தவள், அடுத்தடுத்து கூறிய விஷயங்களில் மனதளவில் இருந்த சஞ்சலங்களும் விலகி ஓடிவிட சந்தோஷமாக, "சரி அஜூ" என்றால் சிரித்தபடி.

அவள் மகிழ்ச்சியை உணர்ந்தவன் அடுத்த நாள் அவனே கல்லூரிக்கு வந்து டூருக்கான பணத்தை கட்டி அவளை டூடுக்கும் சென்றுவரச் சொல்லி அனுப்பி வைத்தவனுக்கு மனதில் மிகப் பெரிய திருப்தி.. அவள் மகிழ்ச்சியில் இவன் அன்று முழுவதும் மகிழ்ச்சி அடைந்தான்..

அவள் சுற்றுலா சென்று இருந்த நாட்களில் பெரிதாக அவளுடன் போனிலும் அவன் கதைக்கவில்லை. பிரண்ட்ஸோடு நன்றாக என்ஜாய் பண்ணட்டும் என்று, 'எங்கே இருக்கிறாள்..?' என அவள் நலன் கேட்டுக் கொள்வதோடு சரி.

மீண்டும் மூன்று நாட்கள் டூர் முடிந்து அவள் வரும் வேளையில் அவளை பார்ப்பதற்காக கல்லூரியில் வந்து காத்திருந்தான். இதுதான் டூர் அழைத்து சென்ற பஸ் என ஆர்வமாக உள்ளே எட்டிப்பார்க்க வரிசையாக எல்லா மாணவ மாணவிகளும் இறங்கிப் போக ஆரம்பித்தனர்.. கடைசி ஆள் வரை வர..யாழினியை மட்டும் காணவில்லை.

'நாம் சரியாக பார்த்தோமா? இல்லை நம் கண்ணில் இருந்து தப்பி விட்டாளா?' என மீண்டும் இறங்கி போன மாணவ மாணவிகளை எல்லாம் பார்க்க யாழினியை காணவில்லை... ஏனோ மனம் பதற ஆரம்பித்தது.. தனது போனை எடுத்து அவளுக்கு கால் செய்தால் போன் நாட் ரீச்சபிள் என்று வந்தது.

வேகமாக யாழினியின் தோழியிடம் சென்று யாழினியை பற்றி விசாரிக்க.. அதனை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்திலிருந்த அவள் வகுப்பு மாணவி ஒருத்தி, 'அவள் வாட்டர் பாட்டில் வாங்குவதற்காக இறங்கி சென்றதையும் அதன்பிறகு வண்டியில் ஏறியதை தான் கவனிக்கவில்லை' என சொல்ல.. காலேஜ் மொத்தமும் யாழினிக்கு என்ன ஆனதோ என கலவரப்பட்டு போனது.. இவன் அத்தனை பேராசிரியர்களையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்க ஆரம்பித்தான்.

இப்படித்தான் பொறுப்பில்லாமல் ஒரு பெண்ணை விட்டுவிட்டு வருவீர்களா என.. அவர்களிடமிருந்து எங்கெங்கு போனார்கள் யாழினி எங்கே இறங்கினாள் என அனைத்து டீடைல்ஸையும் வாங்கிக் கொண்டவன் தனது காரை எடுத்துக் கொண்டு பறந்து போக ஆரம்பித்தான். நல்லவேளை அவள் வாட்டர் கேன் வாங்க இறங்கிய இடம் அவர்களின் கல்லூரிக்கு முந்தைய ஊர் தான். அதனால் மிக விரைவாகவே அந்த இடத்திற்கு வந்து விட்டான்.

அவர்கள் சொன்ன இடத்தில் ஒவ்வொரு இடமாக தேட ஆரம்பித்தான்.மனமெல்லாம் அவளுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது.நல்லா இருக்கணும் என வேண்டிக் கொண்டேயிருந்தது.

யாழினியோ வாட்டர் பாட்டில் வாங்கிவிட்டு கடையை விட்டு வெளியே வந்து பார்த்தவள் வண்டி இல்லை என்றதும் அழுதுகொண்டே ஒவ்வொரு இடமாக தேடி அலைந்தாள். கையில் வாட்டர் பாட்டில் வாங்க மட்டுமே பணம் எடுத்து வந்திருந்ததால் மொபைல் முதற்கொண்டு அனைத்தும் வண்டிக்குள்ளே இருந்தது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாத பேதையவளோ அந்தக் கடை ஓரத்திலே ஒரு பெஞ்சில் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, அவளை தேடிகொண்டு வந்தவன் கண்களில் தனியாக உட்கார்ந்து குனிந்து ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்த யாழினி தெரிந்துவிட...காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி வந்தவன்.. ஒத்த நொடி தாமதிக்கவில்லை அவளை தூக்கி தன்னோடு இறுக்கி கட்டிக் கொண்டவன்.. சுற்றி இருந்தவர்களை கணக்கில் கொள்ளாமல் இதழோடு இதழ் பொருத்திக்கொண்டான்....!

அர்ஜுனின் திடீர் செயலில் திடுக்கிட்டு யாழினி முழித்தாள்.. தனக்காகவும் ஒருவன் இருக்கிறான் தன்னுடைய அர்ஜுன் தன்னை தேடி வந்து விட்டான் என நினைத்து நிம்மதி அடைந்தவள்.. அவன் செய்யும் செயலில் கூச்சப்பட்டு விலக பார்க்க.. எங்கே தன்னை விட்டு சென்று விடுவாளோ என பயந்து இன்னும் இறுக்கி கொண்டு உதட்டோடு உதடு இணைத்துக்கொள்ள.. மூச்சுவிட அவள் சிரம்ப்படவும் விலகி நின்றவன்..

"உனக்கு ஒன்னும் இல்ல இல்லடி??? நல்லா தானே இருக்க... ஒரு நிமிஷத்துல எனக்கு உயிரே போயிருச்சு டி" என்றான் காதோரக் குழலை ஒதுக்கி விட்டபடி.

தலைகுனிந்து கூச்சத்துடன் யாழினி ஆமென தலையாட்டியவள், "எனக்கு ஏதாவது ஆனா தான் இப்போ என்ன..? அர்ஜுன் உனக்கு அதனால எந்த பிரச்சனையும் வரப்போவதில்லையே... ஏன்னா நம்ம இரண்டு பேருக்கிடையில தான் எந்த உறவும் இல்லையே... ஒருவேளை நீ சொன்ன மாதிரி நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தால் அதுக்கப்புறம் நீ இப்படி பதட்டப்படறதெல்லாம் நியாயம் இருக்கு. இப்போ எதுக்காக எனக்கு போய் இவ்ளோ பதற..?" என இருந்த மன அழுத்தத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவனிடம் பேசிவிட்டு காரை நோக்கி நடந்தாள்.

அவளின் விரக்தியான பேச்சிலேயே அவளின் தனிமை உணர்வை புரிந்து கொண்ட அர்ஜுனோ ,இதற்கு மேலும் இவளை தனியாக விட்டால் மனநோயாளியாகவே மாறிவிடுவாள் என யோசித்தவன்.. ஏதோ முடிவெடுத்தவனாக கார் அருகில் ரோட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த யாழினி கையை பிடிக்க..

"என்னாச்சு ஏன் திடீர்னு கைய பிடிக்கிற அர்ஜுன்....?" என்றாள் கண்களில் கேள்வியை தேக்கியவாறு...

அவளை ஒரு சிறு முறைபுடன் பார்த்தவன்... "ம்ம்ம் காலத்துக்கும் இத விடகூடாதுன்னுதான்... வா.." என பக்கத்திலிருந்த கோவிலுக்குள் இழுத்து கொண்டு சென்று சந்நிதியில் நிற்க வைத்து.. "சாமி கும்பிடு அம்மு" என்றான் அமைதியான குரலில்.

அவளோ அவனது திடீர் செய்கையில் ஒன்றும் புரியாமல், "எதுக்கு அர்ஜுன் ?" என வினவினாள்.

"அது ஒரு வேண்டுதல் வச்சிருந்தேன்... நீ தொலையாம பாதுகாப்பா கிடைச்சிட்டா இந்த கோயிலுக்கு வரேன்னு.அதான் இப்ப கிடைச்சிட்டல்ல... அதனால தான் சாமி கும்பிடு" என்றால் நிதானமான குரலில்.

யாழினியும் அவன் கூறியதை உண்மை என நம்பி கண்களை மூடி கடவுளை வணங்க. சுத்தி முத்தி பார்த்தவன் மரத்தில் தொங்கிய தாலிக்கயிறை கண்கள் மின்ன நோக்கியவன் சத்தம் வராமல் போய் அதை கழட்டி எடுத்து வந்து, யாழினி கண்திறக்கும் முன்பாக அவள் கழுத்தில் கட்ட ஆரம்பிக்க.. கழுத்தில் ஏதோ உராய்வது போல் தோன்ற கண்களைத்திறந்தவளுக்கு.. அர்ஜுன் தாலியைக் கட்டிக் கொண்டிருந்தான்...!

அதோடு நிறுத்தாமல் அவளை மெதுவாக அணைத்தவன், உரிமையாக அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தவன்.... " இப்போ ஓகே வா டி? "

"இனிமே உன்ன முழுசா கேர் பண்ணிக்கிற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு... இனிமே உனக்கு எப்போதுமே எதுவா இருந்தாலும் புருஷன் நான் இருக்கேன்னு நினைப்பு தான் முதல்ல வரணும்..." என்றான் கண்களை சிமிட்டியபடி..

யாழினியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கண்ணீரை சுரக்க... தாலியை பயந்து போய் பிடித்துக்கொண்டு நிற்க..

"எப்ப பாரு எனக்கு யாரும் இல்லைங்குற மாதிரியே பேசிகிட்டு திரிஞ்சல்ல... என்னமோ நான் உன்னையே கழட்டி விட்டுட்டு வேற ஒருத்தியை பிக்கப் பண்ணிடுவேங்கிற மாதிரி... என் மேல டவுட்டோட பேசிகிட்டு இருந்தல்ல... இப்போ மொத்தமா உன் டவுட் கிளியர் பண்ண கல்யாணம் பண்ணியாச்சு.. "

"உன் படிப்பு முடிகிற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு தான் இவ்வளவு நாள் யோசிச்சேன். ஆனா நீ எப்போ இவ்வளவு தூரம் மனச போட்டு குழப்பிக்கிட்டே இருக்கிறியோ இதுக்கு மேலயும் உன்னைய தனியா விட்டு வைக்க முடியாது. இனி நீ இந்த அர்ஜுனோட பொண்டாட்டியாவே படிச்சுக்கலாம்... ஒன்னும் உலகம் அழிஞ்சு போகாது..." என்றான் சீரியஷான குரலில்.

கிட்டத்தட்ட யாழினி, மகிழ்வதனி இருவருக்குமே ஒரே நேரத்தில் திருமணம் ஆகி இருந்தது..... அவர்களுக்கே சொல்லப்படாமல்...!

இதுதான் விதி எனும் போது, யார் அங்கே என்ன செய்து விட முடியும்...?

அர்ஜுன் தனது மனைவியான யாழினியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அதே வேளையில், ஆதிரத்னேஸ்வரனும் தனது மனைவி மகிழ்வதனியை கொடைக்கானலிலிருந்து சென்னைக்கு பிளைட்டில் தங்களின் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தான்.

இனி நடக்கப் போவது என்னவோ.....?

குறிப்பு : இது போட்டிக்கதை என்பதால் அனைவரும் லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே....அடுத்த அத்தியாயத்துடன் கதை முடிவடைகிறது.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....

கருத்துத்திரி இதோ👇

 
Status
Not open for further replies.
Top