ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையின்றி நேசிக்கவா-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 30

காலை பிரச்சனை நடந்ததிலிருந்து இப்போது வரை யாழினி அந்த அறையிலேயே தான் இருக்கிறாள்.

ஸ்ருதியின் குடும்பத்தை அப்போதே கிளம்ப சொல்லிவிட்டார் சுந்தரலிங்கேஸ்வரர். மகனை விட வேறு எதுவும் முக்கியமில்லை என நினைப்பவர் அவர். அவரது ரத்தத்திலேயே அந்தஸ்து, இனப்பற்று இருந்தாலும் மகனுக்கு முன் அதெல்லாம் ஒன்றுமே இல்லை அவருக்கு.

ஸ்ருதியின் குடும்பம் பண்ணிய வேலை ஓரளவிற்கு அவருக்கு ஏற்கனவே தெரியும் தான், ஆனால் இந்த அளவிற்கு நடந்து கொண்டிருப்பார்கள் என்று அவர் நினைக்கவே இல்லை.

அவர்கள் பண்ணிய வேலைகளை கேள்விப்பட்டதிலிருந்து மகன் சிறிது நாட்களில் மாறி விடுவான். அதன் பிறகு தங்களின் தகுதிக்கு ஏற்றார் போல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்தால் அவனது வாழ்வு நன்றாக இருக்கும் என எண்ணித்தான் சில விஷயங்களை கண்டும் காணாமல் விட்டுவிட்டார்.

எல்லோரும் ஒரு வகையில் ஒரு சில விஷங்களில் சுயநலவாதி தானே....!

ஸ்ருதியின் குணங்கள் தெரிந்ததனால் தான் அவளை விட்டுவிட்டு மீனசுலோசனையின் அண்ணன் மகளான நேத்ராவை ஆதிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணினார்.

ஆனால் இப்பொழுது என்ன என்னவோ ஆகிவிட்டது... எந்த காலத்திலும் ஆதி மாறப்போவதில்லை என தெரிந்து கொண்டவர், மகனின் ஆசை தான் முக்கியம் என அவனது விருப்பப்படியே அனைத்தும் நடக்கட்டும் என்று விலகிக் கொண்டார்.

இனி தன் தங்கையின் குடும்பத்திற்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை எனக்கூறி உடனேயே அவர்களை கிளம்பச் சொல்லிவிட்டார்.

குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் வெக்கேஷன் ட்ரிப் எல்லாம் போதும் எல்லாரும் வீட்டுக்கு கிளம்பலாம் என்றபடி பேக் செய்து கொண்டு இருந்தனர்.

அர்ஜுன் மட்டும் அண்ணனுக்கு துணையாக தான் இங்கேயே இருப்பதாக கூறி விட்டான். அவனை முறைத்த பூர்ணிமாவுக்கு எதுவும் பேச முடியாத நிலைமை.

ஏதாவது பேச போய்... 'நீயேன் ஸ்ருதி கூட சேர்ந்துகிட்டு இதெல்லாம் பண்ண..?' அப்படின்னு யாராவது கேட்டுட்டா என்ன பண்றது என்றபடி வாயை மூடிக்கொண்டாள்.

மாலைபோல் அனைவரும் கிளம்பி விட்டனர். அதுவரை மகிழ் கண் விழிக்கவில்லை. ஆதி பார்த்துக்கொள்வான் என்றெண்ணியப்படி அவனிடம் மட்டும் கூறிவிட்டு அனைவரும் கிளம்பிவிட்டனர்.

அவர்களை வழி அனுப்பி வைத்த ஆதியோ மீண்டும் தனது அறையில் மகிழுடன் இருந்து கொண்டான்.

அர்ஜுன் தான் யாழினிக்கும் சரி ஆதிக்கும் சரி நேரநேரத்திற்கு வேலையாட்களின் மூலம் உணவை கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தான்.

மகிழ் இரவு தான் கண்விழித்தாள். அதன் பிறகும் ஆதி அவளை கீழேயே விடவில்லை. யாழினிக்கு மேலே சென்று தனது அக்காவை பார்க்க வேண்டும் என்று ஆசையாகத் தான் இருந்தது.

அவள் நன்றாக துறுத்துறுவென இருப்பவள். இந்த அறையிலேயே காலையிலிருந்து இரவு வரை தனியாக இருப்பது ஒரு மாதிரி இருந்தது.

இரவு 7 மணி அளவில் லேசாக யாரோ கதவை தட்டும் சத்தம். சாப்பாடு கொண்டு வந்திருப்பார்கள் என எண்ணியவளாக கதவை திறந்தபொழுது அர்ஜுன் நின்றிருந்தான்.

புன்னகையுடன் "உள்ளே வரலாமா..?" எனக்கேட்டவன், அதற்கான பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்தான்.

அவனை பார்த்ததும் 'அவர்கள் குடும்பத்து ஆட்களைப் போல தானே இவனும் இருப்பான். இவன் எதுக்கு இப்ப இந்த ரூம்குள்ள வரான்' என எண்ணி பயந்தவளாக கதவை மூடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

அவள் இன்னும் அறைக்குள் வராமல் இருப்பதை பார்த்த அர்ஜுன் திரும்பி அவளை நோக்கினான்.

முகபாவனைலயே அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவன், தனது காதல் கை கூடுவது மிக மிக கடினம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

இப்போதைக்கு அவளுடன் எப்படியாவது நட்புறவையாவது ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மிகத் தெளிவாக இருந்தான்.

"ரொம்ப நேரம் ரூம்குள்ளே இருக்க உனக்கு போர் அடிக்கலையா...? வாயேன் தோட்டத்துல போயி ஜஸ்ட் நடந்துட்டு வரலாம்"

அப்போதுதான் அவளுக்கு மூச்சே வந்தது. அவன் உடன் வருவது சற்று நெருடலாக இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்போதைக்கு துணை கிடைத்த சந்தோஷத்துடன் 'சரி' என தலையசைத்தாள்.

கொடைக்கானலில் பனிவிழும் இரவு நேரம்...!அப்படி ஒரு குளிர்ச்சி...! அந்தத் தோட்டத்தை பார்க்கும் பொழுது யாழினிக்கு மனதிற்கு இதமாக இருந்தது.

அவள் முக பாவனைகளையே நோட்டமிட்டபடி மெது மெதுவாக பேச்சை ஆரம்பித்தவன், ஓரளவிற்கு மேல் சரளமாக இருவரும் பேச ஆரம்பித்து விட்டனர்.

இருவரும் தோட்டத்தில் நடந்தபடியே ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.. முழுவதும் அர்த்தமற்ற பேச்சுக்கள்.. அர்ஜுன் வார்த்தைகளில் முழுவதும் அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று அவளைப் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கமே நிறைந்திருந்தது .. யாழினியின் வார்த்தைகளில் முழுவதும் அவள் குடும்பம் நிறைந்திருந்தது ..

பல வருஷம் தெரிஞ்சவங்க கிட்ட வராத நட்புணர்வு,கொஞ்ச நாள் பழகினவங்க கிட்ட அதிகமாவே இருக்கும். அதுக்கு காரணம் இருவரது எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது தான்.

நம்ம ஆச படர....நம்ம எதிர் பாக்குற போலவே ஒரு கற்பனை கேரக்டர் நம்ம கண்ணு முன்னாடி நம்மகிட்ட பேசி சிரிச்சிக்கிட்டு நமக்கு ஏத்த வைப்ல இருந்தா நம்மள அறியாமலே எமோஷனலி அவங்க கூட ஒண்ணா ஆகிருவோம்...

ஒருத்தங்க கூட நட்பாகுவதற்கு நாட்கள் தேவை இல்ல ஜஸ்ட்
கேரக்டர் அப்புறம் ஒத்த சிந்தனை இருந்தால் போதுமே..!

அது இரண்டும் தான் யாழினிக்கும் அர்ஜுனுக்கும் நன்றாகவே ஒத்துப் போய்விட்டது. மிகக் குறுகிய நேரத்திலேயே இருவரும் நண்பர்களாகி விட்டனர்.

அர்ஜுன் மனதில் காதல் நிரம்பி வழிந்தாலும், தற்போதைக்கு இந்த நட்பே போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தான்.

யாழினிக்கு யாருமற்ற தனிமையை போக்க அர்ஜுன் கிடைத்ததே பெரிய வரமாக இருந்தது.

ஆதியின் குடும்பத்தில் உள்ள அனைவருமே ஒரே மாதிரி தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை அர்ஜுனை பார்த்து சற்று மாற்றிக் கொண்டிருந்தாள்.அதுவே இப்போதைக்கு அர்ஜுனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான்.

நேரம் ஆகிக்கொண்டே இருந்த காரணத்தினால் மனதேயின்றி அர்ஜுன் தான் , "சரி வா போய் சாப்பிட்டு தூங்குவோம்... காலைல பேசிக்கலாம்.." என்றபடி அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போனான்.

ஒரு ஜோடி இப்படி இனிமையாக நேரத்தை கழித்திருக்க மற்ற ஜோடியோ எதிரிகள் போல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது.

ஆதியின் அனைப்பில் ஓரிரு நிடங்கள்தான் தன்னை மறந்து நின்று இருந்தாள். பின்பு அனைத்தும் ஞாபகம் வர ஆதியை வேகமாக தள்ளி விட்டுவிட்டு விலகி நின்றவள்... அவனை நோக்கி கோபமாக, " ஆதி நீ என்னை எவ்வளவு தான் இன்னும் டார்ச்சர் பண்ண போற..? நீ என்ன சொன்னாலும் சரி என் லைஃப்ல இனிமே நீ கிடையாது. அத முதல்ல உன் மண்டைல ஏத்திக்க... " என்றாள்.

ஆதிக்கோ மனதிற்குள் நொறுங்கிய உணர்வு....!

தன்மேல் காதலாகி கசிந்துருகும் பழைய மகிழ் தனக்கு கிடைக்க மாட்டாளா என்று ஏக்கமாக இருந்தது..!

தன் முட்டாள் தனத்தால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று உணர்ந்தாலும், அதனை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு அவளிடம் சரணடைய அவனது ஈகோ தடையாக நின்றது.

அவனோட டிசைன் அப்படி....!

அதனால்தான் இப்பொழுதும் தனது கெத்தை விடாமல், அவளை உருட்டி மிரட்டி எப்படியாவது தன்னுடன் இருக்க வைக்கலாம் என்று கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறான்.

ஆனால் அவனுக்கு ஒன்று புரியவே இல்லை. அவன் அப்படி ஒத்துக்கொண்டே அவளிடம் காலில் விழுந்து கதறினால் கூட, அவள் இனி அவனுடன் வாழ சம்மதிக்க போவதில்லை...!

ஆனால் ஆதியும் அவளை விட போவதில்லையே....அவனுக்கு நிச்சயமாக மகிழ் வேண்டும்...மகிழ் இல்லாத வாழ்க்கையை இனி அவனால் நினைத்து கூட பார்க்க முடியாது.

இந்த சில ஆண்டுகளும் அவனுக்கு நரக வாழ்க்கை தான்....!

என்னதான் நம்ம ஆயிரம் பேருக்கு
அறிவுரை சொன்னாலும்..
பல சந்தர்ப்பங்கள்ல பாறையாக
கூட இறுகி நின்னாலும் ..
பல கடினமான துயரங்களை
தூக்கி எறிஞ்சிட்டு கடந்து
போயிருந்தாலும் கூட..

யாரோ ஒருத்தங்க கிட்ட
மட்டும் அவங்க விரலைப்
பிடிச்சு நடைபழகுற சிறு
குழந்தையாகவே இருக்க
ஆசைப்படுறோம்.... அந்த நிலைமையில் தான் மகிழிடம் ஆதி இருந்தான்.

மகிழை ஊன்றி பார்க்கும் பொழுது தான் அவன் அறைந்ததால் கன்னத்தில் அவனது கைகளின் அச்சு அப்படியே பதிந்து இருந்தது.

ஒரு பெருமூச்சுடன் எழுந்தவன் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கினான்.

அவளோ அவனையும் பாக்சையும் மாறிமாறி பார்த்துவிட்டு ஒரு முறைப்புடன் திரும்பிக் கொண்டாள்.

ஆனால் அவனா விடுவான்...? பிடிவாதக்காரன்...!

அவளது தாடையை பிடித்தவன் ஓர் அழுத்தமான பார்வையுடன்
கர்ம சிரத்தையாய் மருந்து தடவியவன், அவள் முகத்தை தன் இரு கையில் தாங்கியபடி "நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன்..?? Athanala இப்போ நான் எது சொன்னாலும் அது உனக்கு தப்பா தான் தெரியும் மகிழ் ..."

" நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் வாழ போறோம். என்னோட காதல் உண்மை அதுக்கு சாட்சி நான் இத்தனை வருஷமா எந்த பொண்ணையும் ஏறெடுக்காமல் இருந்தது மட்டும்தான்... "

"விக்கி மேல இருந்த பொறாமையாலதான் இதெல்லாம் நடந்திருச்சு. அந்த பொறாமை கூட நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் அப்படிங்கற பொசசிவ்நெஸ்னால வந்ததுதான். நிச்சயமா உன்னை என்னால் எங்கும் அனுப்ப முடியாது டி ..."

அதனை கேட்டு நக்கலாக சிரித்தவள், "என்ன நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறமா..? என்ன அனுப்ப முடியாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாரு சார்...?"என்றாள்.

"நான் ஒன்னும் உங்கள கட்டிக்கிட்டு வந்த பொண்டாட்டி இல்லையே..."என்றபடி அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.

ஆனால் அந்த சிறு விலகளைக் கூட அவனால் தாங்க முடியவில்லை...!

அவள் திமிர திமிர அவள் கையை இறுக்கிப்பற்றிக் கொண்டான். அவள் சொன்னது போல் அவனுக்கும் அவளுக்கும் திருமணமாகவில்லை தான்....

ஆனால் அவனது செல்வாக்குக்கு அவன் ஒரு சொடக்கு போட்டால் போதும் அவனுக்கும் அவளுக்கும் திருமணம் ஆனது போல் சர்டிபிகேட் அடுத்த நிமிடம் அவன் கைகளில் இருக்கும்....!

ஆனா அதையா அவன் விரும்புகின்றான் ...??? இல்லையே...!

சம்பிரதாயப்படியானாலும் சட்டப்படியானாலும்....மனம் ஒப்பி இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் விரும்பினான்..

ஊர் உலகத்தை கூட்டி அவளுக்கு தாலி கட்ட வேண்டும்..!
அவள் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு முத்தமிட வேண்டும்.....! அனைவரும் அட்சதை தூவ அருந்ததி பார்த்து அம்மி மிதித்து அவளுக்கு காலில் மெட்டி இடவேண்டும்...?? எத்தனை எத்தனையோ கனவுகள் எல்லாம் கானல்நீர் ஆகிவிடுமோ என்று எண்ணம் தோன்றும் பொழுதே, 'அப்படி நான் ஆக விடவேமாட்டேன்... மகிழ் எனக்கு வேண்டும்..' என்று வெறி கொண்டவன் போல் அவளை இழுத்து அனைத்து கொண்டான்.

மகிழ்வதனியை மையம் கொள்ளும் ஆதிரத்னேஸ்வரன் என்னும் புயல் சீறிவரும் நேரத்தில் மகிழ் அவனை ஏற்றுக் கொள்வாளா.....?

குறிப்பு : இது போட்டிக்கதை என்பதால் அனைவரும் லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே.... உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....

கருத்துத்திரி இதோ👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 31

ஒரு வாரம் எப்படி போனது என்றே தெரியவில்லை.....!

ஆதி தனது கைகளுக்குள்ளேயே மகிழை அடைகாத்தான்.... எங்கே தன்னை விட்டு சென்று விடுவாளோ என்ற பயத்திலேயே ஆபீஷுக்கு கூட செல்லாமல் அவளுடனே வீட்டில் நேரத்தை கழித்தான்.

அதிகபட்சமாக அவளை தோட்டத்திற்கு மட்டும்தான் அழைத்துச் செல்வான். யாழினியை கூட அவளை நெருங்க விடவில்லை. கிட்டத்தட்ட மகிழுக்கு சிறைவாசம் தான் .... இருப்பினும் ஒரு வார்த்தை கூட அவனுடன் அவள் பேசவில்லை.

யாழினி அர்ஜுனுடன் நன்றாகவே ஒட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டாள்.நட்பாக மட்டுமே....!

"அஜு.. அஜூ.." என அழைத்து அவள் பேசும் அழகை நாள் முழுவதும் கன்னத்தில் கை வைத்தபடியே ரசித்துக்கொண்டிருப்பான் அர்ஜுன்.

அவளது ஆசைகள், ரசனைகள், கவலைகள், கோபம், சோகம், அழுகை.. என அனைத்து உணர்வுகளையும் அர்ஜுனிடம் இந்த ஒரு வாரத்தில் கொட்டி தீர்த்திருந்தாள்.

அவளது பேச்சில் குடும்பத்தை பிரிந்து இருக்கும் ஏக்கம் பெரிதளவில் தெரிவதை கவனித்த அர்ஜுன் அந்த வார இறுதியில் அவளை எங்காவது வெளியே அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து அவளிடம் கூறிய போது, 'அக்கா இல்லாமல் நான் வரமாட்டேன் அஜூ 'என்று கூறிவிட்டாள்.

அதனால் வேறு வழி இல்லாமல் ஆதியிடம் சென்று பேசினான்.

"உங்களுக்கு நான் சொல்லனும்னு இல்லங்கண்ணா, இப்படி வீட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருக்கிறதுக்கு அவங்க ஒன்னும் ஜெயில் கைதி இல்ல..."

"கொஞ்சம் அவங்கள மைண்ட் ரிலாக்ஸ் பண்ண விடுங்க. ஒரேடியா போட்டு டார்ச்சர் பண்ற மாதிரி இருக்கு.."

"அதுக்கு மேல உங்க இஷ்ட்டம்...இந்த வீக்கென்ட் எங்கயாவது வெளியில கூட்டிட்டு போயிட்டு வரலாம்ணா" எனக்கூறினான்.

ஆதிக்கும் தற்போதைய மனநிலையில் எங்காவது சென்று வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றிய காரணத்தால் 'சரி' எனக்கூறிவிட்டான்.

யாழினியை விட்டு மகிழிடம் பேச சொல்லி, ஒரு வழியாக அவளையும் சம்மதிக்க வைத்துவிட்டான் அர்ஜுன்.

ஐந்து நாட்கள் பயணம் என பிளான் செய்து கொண்டனர். யாழினி தான் மிக குஷியாக இருந்தாள்.

மகிழ் எதிலும் தலையிடவே இல்லை. எங்கோ வெறித்தபடியே அமர்ந்திருந்தாள். தன் குடும்பம் இருக்கும் நிலையில் இது ஒன்றுதான் குறைச்சல் என்ற மனநிலை அவளுக்கு.

ஞாயிறு இரவு கிளம்பி வெள்ளிக்கிழமை கொடைக்கானல் திரும்புவது தான் பிளான்.

யாழினி,மகிழ்,ஆதி,அர்ஜுன் என நால்வரும் சுற்றுலாவிற்கு கிளம்பிவிட்டனர்....

ஆதி எப்பொழுதுமே இயற்கை விரும்பி... அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத சுற்றுலா தளங்களையே அதிகமாக தேர்ந்தெடுப்பான்.

அதேபோல் இந்த முறை அவன் தேர்ந்தெடுத்த இடம் கொடைக்கானலில் அவ்வளவு எளிதாக யாருமே போக முடியாத இடம்.....

கொடைக்கானல் பக்கத்திலயே இருந்தாலும் அவ்வளவு எளிதாக யாருமே போக முடியாத இடம் அது....!

இயற்கை அத்தனை அழகையும் அங்கே ஒளித்து வைத்து இருக்கிறது...!

கொடைக்கானலில் இருந்தாலும் அந்த இடத்திற்கு கேரளா வழியாகவே போக முடியும்.

எனவே முதலில் மூணாறு சென்று விட்டு அங்கிருந்து அந்த இடத்திற்கு செல்லலாம் என்று பிளான் செய்து அதற்கான ஏற்பாடுகளை அர்ஜுனை பார்க்க சொல்லிவிட்டான்.

அவர்களுக்கு தேவையான உடை மற்றும் அனைத்து பொருட்களையும் பேக் செய்து கொண்டு நம்பிக்கை மற்றும் அனுபவமிக்க டிரைவரை ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பிவிட்டனர்.

ஆதி மகிழை விட்டு பிரிந்திருக்க மாட்டேன் என்று கூறிவிட்டதால் ஆதியும் மகிழும் முன்னால் இருக்கையில் அமர்ந்து விட, அவர்களுக்கு பின் இருக்கையில் யாழினியும் அர்ஜுனும் அமர்ந்து கொண்டனர். மகிழ் ஆதியைப் பார்த்து ஒரு முறைப்புடன் ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டாள்.

யாழினிக்கு அக்காவுடன் இருக்க முடியவில்லை என்று வருத்தமாக இருந்த பொழுதும், அர்ஜுனுக்கு ஒரே குஷி தான்.ஆனால் அதனை வெளிப்படையாக காட்ட முடியாமல் மனதிற்குள்ளே குத்தாட்டம் போட்டபடி அமர்ந்து கொண்டான்.

காரில் அமைதி மட்டுமே நிலவியது அந்த அமைதியை கலைக்கும் விதமாக, "இப்ப போற இடத்துக்கு நீ ஏற்கனவே போயிருக்கீங்க தானே அண்ணா, அந்த இடத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று அர்ஜுன் ஆரம்பித்து வைத்தான்.

ஆதி அவனை முறைத்துப் பார்த்தான்... ஏனென்றால் ஏற்கனவே அவனுக்கு அந்த இடத்தை பத்தி தெரியும். இருந்தும் தெரியாதவனைப் போல் கேட்பதால் முறைக்கவும், அவன் மகிழை கண்ணை காட்டி பேச சொன்னான்.

ஆதியும் ஒரு சிறு புன்னகையுடன் மகிழைப் பார்த்தபடியே அந்த இடத்தைப் பற்றி விளக்க ஆரம்பித்தான்.

"ஒரு தடவ நாங்க யுஜி படிக்கும் போது பிரெண்ட்ஸ் கேங்கா சேர்ந்து அந்த இடத்துக்கு போனோம்"

"தமிழ்நாடு கேரளாவை இணைக்கும் பகுதிக்குத் தான் இப்ப போய்க்கிட்டு இருக்கோம் . இந்த ஏரியாவிற்கு கேரளா தமிழ்நாடு என இரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுமே அவ்வளவு எளிதாக போக முடியாது...."

" ரொம்ப கஷ்டம் அண்ட் ரொம்ப ரிஸ்க்கா இருந்தாலும் அந்த இடத்துல அப்படி ஒரு நிம்மதி கிடைக்கும்....ஒரு ரிலாக்ஸ்டா இருக்கலாம்.... "

யாழினி நன்றாக கதை கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

"ஏன் அந்த இடத்துக்கு யாரும் அதிகமாக போறது இல்லை...?" என வினவினாள்.

"இப்ப நாம நார்மலா கூகுள்ள கொடைக்கானல் டூ மூணாறு பாதையை கேட்டோம்னா தேனி, போடி, வழியாக காட்டும்."

"அதே பாதையை நடந்து செல்லும் வழி என்று போட்டு பார்த்தோம்னா பூம்பாறை, மன்னவனூரை அடுத்த கடவேரி வழியாக வட்டவடாவை அடைந்து அங்கிருந்து டாப் ஸ்டேசன், மாட்டுப்பட்டி அணையை அடைந்து மூணாறு போக முடியும்னு காட்டும்"

அவன் கூறுவதை மகிழ் காதில் வாங்கிக் கொண்டிருந்தாலும் அவனது புறம் திரும்பவே இல்லை.

வெளியில் ஜன்னல் வழியே இயற்கையை வெறித்தபடி வந்து கொண்டிருந்தாள். எதையும் ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை இருப்பினும் கண்ணுக்கு மட்டும் குளிர்ச்சி அளித்து கொண்டிருந்தால் இயற்கை அன்னை....!

அவளை ஒரு சிறு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.... " எளிதான இந்த பாதையை 1990களில் சில முக்கியமான ரீசன்களுக்காக மூடிட்டாங்க "

"இப்ப கொஞ்சம் வருஷமா தான் கொடைக்கானல் அருகே கிளாவரையில் இருந்து கேரள மாநில எல்லையில் உள்ள கடவேரி வரை ஜீப்பில் போறதுக்கு ரிலாக்சேஷன் கொடுத்துருக்காங்க..."

"ஆனா அதுக்கப்புறம் கொட்டக்கம்பூர் வரை உள்ள 8 கிலோ மீட்டர் தூரம் பாதை இல்லை..!"

ஆதி கூறுவதை கவனமாக கேட்டுக் கொண்டு வந்த யாழினியோ... "எதே 8 கிலோமீட்டருக்கு பாதை இல்லையா..? அப்புறம் எப்படி போறது...?" என்றாள் பயந்தபடி..

அவளைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்திய ஆதி... "கவலப்படாத உன்னை நடக்க விட்ற மாட்டோம்" என்றபடி மீண்டும் தொடர்ந்தான்.

"அந்தப் பாதை பல இடங்களில் சேதம் அடைந்து பயணிக்கவே முடியாத நிலையில் இப்போ வரைக்கும் இருக்கு . அதை தாண்டி போனோம்னா வட்டவாடா என்ற அழகான கிராமம் இருக்கும்...!"

"அதாவது கடவேரியில் இருந்து 11.5 கிமீ தூரம் வரை தள்ளி உள்ள வட்டவடாவிற்கு சரியான பாதை இல்லை.."

"யாழினியோ பாதை இல்ல பாதை இல்லைங்கிறீங்க அப்புறம் ஏன் அந்த இடத்துக்கு நம்ம போகணும்...?" என்றாள் பேச்சு சுவாரஸ்யத்தில் ஆதி மேல் இருந்த பயமெல்லாம் ஓடிப் போய்விட்டது.

"கொஞ்சம் பொறுமையா தான் கேளு அதுக்கு இன்னொரு வழி இருக்கு..."

"கேரளாவின் மூணாறு வழியாக வட்டவடாவிற்கு போக முடியும். வட்டவடாவும், அந்த வழியாக கடவேரி சென்று கொடைக்கானல் செல்லும் திரில்லிங்கான பாதை....."

"இது மாதிரி தனிமை விரும்பிகளுக்கும்,சாகசம் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கும் ரொம்ப புடிச்ச இடம்.." என்றபடி மகிழை பார்த்துவிட்டு யாழினியை நோக்கி திரும்பியவன் 'பக்' என சிரித்துவிட்டான்.

அவளோ 'நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகணும்...?' என்ற ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டு அப்பாவியாக அமர்ந்திருந்தாள்.

"கவலைப்படாத கண்டிப்பா அந்த இடம் உனக்கும் பிடிக்கும்... நீ போயிட்டு வந்ததுக்கு அப்புறம் அடுத்த டூர் எப்ப போறோம்னு கேப்ப பாரு" என்றான் அவளை குழந்தை போல பாவித்து.

எதையோ யோசித்தவனாக அர்ஜுனிடம் திரும்பி "பாரஸ்ட் ஆபீஸர்ஸ்கிட்ட கிளியரன்ஸ் வாங்கிட்ட இல்ல..?" என்றான்...

ஏனென்றால் இந்த ஏரியாக்களாம் டூரிஸ்ட் ஓரளவிற்கு வந்து போயிட்டு இருந்தாலும், வட்டவடாவிற்கோ அல்லது கொட்டக்கம்பூருக்கோ வனத்துறை அனுமதி இல்லாமல் வாகனத்தில் போக முடியாது.
அதேபோல் கொட்டக்கம்பூரில் இருந்து வனத்துறை அனுமதி இல்லாமல் நடந்து கூட கடவேரி போக முடியாது.

அதேபோல் தமிழ்நாட்டின் கிளாவரையில் இருந்து கேரள மாநிலம் கிளாவரைக்கும் வனத்துறை அனுமதி இல்லாமல் போக முடியாது.

இங்குதான் முக்கியமான வியூ பாய்ண்டான வட்டவடாவிற்கு வனத்துறை அனுமதியுடன் போக முடியும்.

வட்டவடா என்பது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட பசுமையான பள்ளத்தாக்கு பகுதியாகும்....!

வட்டவடாவில் தங்க வேண்டும் என்றால் அங்கு ரூம் எடுத்திருக்க வேண்டும். அப்போது தான் அனுமதிப்பார்கள்..

யாழினியும் மகிழும் ஒரு ரூமில் தங்கிக் கொள்ளட்டும்....அர்ஜுனும் ஆதியும் ஒரு ரூமில் தங்கிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அர்ஜுன் இரு ரூம்களை மட்டும் புக் செய்திருந்தான்.

ஆனால் இப்பொழுது ஆதியின் நடவடிக்கைகளை பார்த்த பிறகு அவன் மகிழை,யாழினி உடன் தங்க அனுமதிப்பான என்ற யோசனை பெரிதாக வந்து அவனை தாக்கியது.

'சரி அங்க போய் பாத்துக்கலாம்...எது நடந்தாலும் ஓகே தான்...!' என்று மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.

ஏதேதோ பேசிய படியே பயணம் செய்து கொண்டிருந்தனர். அங்கங்கே நிறுத்தி உணவு உண்டு கொண்டனர்.

ஒரு வழியாக வட்ட வடாவிற்கு வந்து சேர்ந்து விட்டனர்....

அர்ஜுன் நினைத்ததை போலவே தான் ஆதி மகிழை விட்டு தான் வரமாட்டேன் என்று குழந்தை போல அடம்பிடிக்க...

அதுவரை ஒரு வார்த்தை கூட பேசாத மகிழ், அவனை பார்த்து ஒருமுறை முறைத்துவிட்டு.... அர்ஜுனனை நோக்கி திரும்பியவள், " இவர் கூட தங்கறதா இருந்தா, நான் இப்படியே வெளில குளிர்ல கிடந்து வெறச்சு செத்தாலும் பரவாயில்லை... ரூம்குள்ள வரவே மாட்டேன்.. " என்றாள் கோபமாக...

ஆதிக்கோ ஒரு பாதுகாப்பற்ற உணர்வு.... 'எங்கே மகிழ் தன்னை விட்டு போய்விடுவாளோ' என்று கிட்டத்தட்ட மனநலம் பாதிக்கப்பட்டவன்போல் ஆகிவிட்டான். அதனால் முடியாது என்று தனது பிடியிலேயே நின்றுவிட்டான்.

எப்படி இருவரையும் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அர்ஜுன் முழித்துக் கொண்டிருந்த வேலையில், உதவிக்கு வந்தாள் யாழினி....

ஆதியிடம் இருந்த பயம் இப்பொழுது அவளுக்கு குறைந்து இருந்தது. அதனால் அவன் முன்னே வந்து நின்றவள், " ப்ளீஸ் சார் அக்கா என் கூடவே இருக்கட்டுமே.. ஆசையா இருக்கு.. " என்றாள் தனது திராட்சை நிற கண்களை உருட்டி மழலைபோல்...

அதில் அரக்கன் ஆதியின் மனமும் கூட சற்றே இறங்கிய இளகியது...!

அரை மனதாக 'சரியென' கூறியவன் அர்ஜுனுடன் தங்கி கொண்டான். யாழினியும் மகிழும் தனி அறையில் தங்கி கொண்டார்கள். மகிழுக்கு இப்போதுதான் 'அப்பாடா' என்று இருந்தது.

இருப்பினும் அவ்வளவு நேரம் யார் கூறியும் சம்மதிக்காதவன், யாழினி கேட்டவுடன் சம்மதித்தது அவளுக்கு சற்று ஆச்சரியம்தான் ....!


மதியம் வரை ஓய்வெடுத்தவர்கள், மதிய உணவை முடித்துக்கொண்டு சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டனர்.

படிக்கட்டு படிக்கெட்டாக(step farms) உள்ள நிலங்களில் மக்கள் விவசாயம் செய்தார்கள்..... மிக மிக அமைதியாக அற்புதமான கிராமம் தான் வட்டவடா..!

மகிழுக்குக் கூட மனப்பாரம் லேசாக இறங்கியதைப் போன்ற நிம்மதியை கொடுத்தது அந்த இடம்...

அவளது முகத்தை வைத்து ஆதிக்கும் மனதிற்குள் ஒரு நிம்மதி பரவியது. யாழினிக்கும் அர்ஜுனுக்கும் சொல்லவா வேண்டும்....?

ஆங்காங்கே நின்று கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அவ்வப்பொழுது கஷ்டப்பட்டு ஆதியையும் மகிழையும்கூட தங்களுடன் இழுத்து வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து தள்ளினார்.

வட்டவடாவில் அருவி கூட உள்ளது.... அதை நாளை காலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவு செய்தவர்கள் அறைக்கு திரும்பிவிட்டனர்.

அன்று இரவு ஆதிக்கு தான் சோதனையான இரவாக அமைந்தது.... இவ்வளவு நாள் மகிழைத் தன் கைவளைவிலேயே வைத்துக் கொண்டு உறங்கியவன் அவள் இல்லாது தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தான்.

ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ் அன்று ஓரளவு நிம்மதியாக உறங்கி எழுந்திருத்தாள்...

அடுத்த நாள் அருவிக்கு சென்று விட்டு அங்கேயெ நிறைய பழத்தோட்டங்கள் உள்ளது எனக் கூறி அங்கே அழைத்து சென்றனர் .

அங்குள்ள ஸ்டாபெரி பழ தோட்டம் மிகவும் பிரபலம் ஆகும்....
தங்கும் விடுதிகள் பல மலைகளின் சரிவில் அற்புதமாக அமைந்திருக்கும். எனவே அன்று இரவு அங்கேயே தங்கலாம் என்று ஏற்கனவே முடிவெடுத்து அதற்கான ஏற்பாட்டுடன் தான் வந்திருந்தனர்.

இங்குள்ள எல்லா இடங்களுமே இயற்கையாக அப்படியே கடவுளால் படைக்கப்பட்டபடியே இருந்தது....

அதை மேலும் அழகுப்படுத்துகிறேன் என்ற பெயரில் மனிதர்கள் எதையும் செய்யாமல் அப்படி அப்படியே வைத்திருந்ததால் அதனை பார்ப்பதற்கு அவ்வளவு ரம்யமாக மனதிற்கு நிம்மதியாக இருந்தது அனைவருக்கும்.....!

இப்படியே நான்கு நாட்கள் எந்தப் பிரச்சனையுமின்றி அழகாகவும் அமைதியாகவும் கடத்திவிட்டனர்.

அன்று ஐந்தாவது நாள்.....!

அன்றுதான் அந்தக் கோரச் சம்பவம் நடந்தது.....!????

குறிப்பு : இது போட்டிக்கதை என்பதால் அனைவரும் லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே.... உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....

கருத்துத்திரி இதோ👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 32

அன்று ஐந்தாவது நாள்....!

வட்டவடாவில் உள்ள மொட்டை மாடி சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் கடல் மட்டத்திலிருந்து 6500 அடி உயரத்தில் அமைந்திருக்கும்....

அங்கு உள்ள ஒரு ஃபாரஸ்டுக்கு தான் அன்று அனைவரும் ட்ரக்கிங் போகலாம் என்று முடிவு செய்து காலை 7:00 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டனர்....

மகிழுக்கு சுத்தமாக விருப்பமேயில்லை.... ஏதேதோ காரணங்கள் சொல்லிப் பார்த்தாள்...தலை வலிக்குது, கால் வலிக்குது என்று, ஆனால் அதற்கெல்லாம் அசருபவனா ஆதி...? அவளையும் இழுத்துக் கொண்டு நால்வருமே கிளம்பிவிட்டனர்.

அடிப்படைத் தேவைகளான உணவு,நீர் மற்றும் இன்னும் சில பொருட்கள் என கொஞ்சம் மட்டும் எடுத்துக் கொண்டு சென்றனர்.

வழியில் ஆங்காங்கே கண்ணில் பட்ட சில விலங்குகளையும், பறவைகளையும் ரசித்துப் பார்த்துக்கொண்டே சென்றனர்.

யாழினிக்கு மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. காட்டுக்குள் இவ்வாறு தனியாக செல்வது அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.

தன்னை ஒரு அட்வென்ச்சர் ரேஞ்சுக்கு இமாஜின் செய்து கொண்டாள்.அர்ஜுன் மற்றும் ஆதி இருவருக்குமே இதெல்லாம் சாதாரணமான விஷயம்.... அவர்கள் அடிக்கடி செல்வதுதான் என்பதால் தங்களின் காதலிகளின் முகபாவனைகளை ரசித்தபடியே வந்தனர்.

மகிழ் ஏற்கனவே பலவீனமாக இருந்ததால் அங்கங்கே சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டே நடக்க தொடங்கினர்.

மதியம் 2மணியளவில் உணவு உண்டுவிட்டு ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தபோது. அருகே உள்ள ஒரு மரத்தில் பெரிய சைஸ் ஆரஞ்சு பழங்கள் இருப்பதை யாழினி பார்த்தாள்.

அருகில் அருவி வேறு கொட்டி கொண்டிருந்தது.. அந்த இடத்தை பார்ப்பதற்கே அவ்வளவு ரம்யமாக இருந்தது... வேகமாக எழுந்தவள் அந்த இடத்தை நோக்கி ஓடிச்சென்றாள்.

அவள் ஓடும் வேகத்தை பார்த்த அர்ஜுன், 'என்னாச்சு..?' என்றெண்ணிபடி அவளை பின்தொடர்ந்தான்.

வேகமாக சென்று ஆரஞ்சு பழங்களை எட்டிப் படிக்க முயன்ற யாழினியோ,பாறை ஒன்றில் இருந்த சிறிய கல்லில் காலை வைக்க அது உருட்டி விட்டுவிட்டது. கண்ணிமைக்கும் நொடிகளுக்குள் வேகமாக பள்ளத்தில் உருண்டு செல்ல ஆரம்பித்து விட்டாள்.

பின்னே ஓடி வந்த அர்ஜுனுக்கு உயிரே போய் விட்டது. அந்த ஒரு நொடிதான் ஸ்டன்னாகி நின்றிருப்பான். அடுத்த நொடி வேகமாக எதைப்பற்றியும் யோசிக்காமல் 'அம்மு' என்று அடித்தொண்டையிலிருந்து கத்தியபடி அவளை தொடர்ந்து ஓட ஆரம்பித்தான்.

அவனின் சத்தத்தில் திரும்பி பார்த்த மகிழும் ஆதியும் ஏதோ விபரீதம் என புரிந்து கொண்டு வேகமாக அவனை பின் தொடர்ந்தனர்.

அர்ஜுன் ஓடி வருவதற்குள் யாழினி மலையின் உச்சியில் இருந்து கீழே விழ ஆரம்பித்தவள், ஒரு வேரை பிடித்தபடி தொங்க ஆரம்பித்திருந்தாள்.

வேகமாக ஓடி வந்த அர்ஜுனும் அவளின் கையை இறுக பற்றிய படி, " அம்மு... கை... நல்லா..புடிச்சு...க்கமா... புடிச்சுக்கோ... "என்று என்ன பேசுவது எனத்தெரியாமல் உலற ஆரம்பித்தான்.

கைகளில் அங்கங்கே பயங்கரமாக சிராய்ப்புகள் வேறு இருவருக்குமே..கரடு முரடான பாறை என்பதால்.

யாழினிக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. மெது மெதுவாக அவனது கைகளை விட ஆரம்பித்தாள்.

அர்ஜுனின் பின்னே ஓடி வந்த ஆதியும் மகிழும் இவர்களின் நிலையை பார்த்து ஸ்தம்பித்துவிட்டனர்.

மகிழுக்கு உலகம் மொத்தமும் நின்று போன உணர்வு.அப்படியே உச்சபட்ச அதிர்ச்சி தாக்கியதில் மூளை யோசிக்கும் திறனை இழந்து சிலையாக சமைந்துவிட்டாள்.

ஆனால் ஆதி தான் சுதாரித்தவனாக வேகமாக சுற்றி முற்றி பார்த்தவன் மகிழின் ஷாலை உருவி யாழினியின் ஒரு கையில் கட்டியவன், அங்கே மிக அருகில் இருந்த மரத்தில் அதன் இன்னொரு முனையையும் கட்டினான்.

இப்பொழுது யாழினி முழு மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தாள். அவளை இழுக்க முடியாத நிலை. கீழே யாராவது சென்று அவளை மேல் நோக்கி தள்ளினால் மட்டுமே அவளை மேலே எடுக்க முடியும். ஏனென்றால் அவளின் ஒத்துழைப்பு சுத்தமாக இல்லை. அவள் முழு மயக்கத்திற்கு சென்று இருந்தாள்.

அர்ஜுன் யாழினியின் இன்னொரு கையை கெட்டியமாக பிடித்தபடி எப்படியாவது அவளை மேலே இழுத்து விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தான்.

ஆதிக்கு நிலைமை விபரீதமாகி கொண்டிருப்பது புரிந்தது. எப்படியாவது கீழே சென்று அவளை மேல் நோக்கி தள்ளினால் மட்டுமே காப்பாற்ற முடியும்.

எனவே அர்ஜுனை சற்று நிதானத்திற்கு கொண்டு வர வேண்டும் என எண்ணியவன், "அர்ஜுன் நான் சொல்றத கவனமா கேளு.." என்றான் அவசர குரலில்.

அவனுக்கோ எதுவும் புரியவில்லை, மூளையில் ஏறவுமில்லை என்றாலும் அவளை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே...

"சொல்லுங்க அண்ணா.." என்றான் இன்னும் சரியாக நிலை வராத குரலில்.

"நான் இப்போ ஒரு கொடிய புடிச்சுட்டு கீழே இறங்கப்போறேன். நான் கீழப்போயி யாழினிய மேல தள்ளும் போது நீ தான் அவள மேலே இழுக்கனும். சோ பீ ஸ்ட்ராங்...." என்றபடி அருகே இருந்த ஒரு உறுதியான பச்சை கொடியை இழுத்து தனது இடுப்பில் கட்டியவன், அதன் இன்னொரு முனையை அதே மரத்தில் கட்டி விட்டு சரசரவென கீழே இறங்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே அநேக இடங்களுக்கு ட்ரக்கிங் போயிருந்த காரணத்தினாலும், மலையேற்றம் போன்ற பயிற்சிகளில் அனுபவம் இருந்ததாலும் அவனுக்கு அது சாத்தியமாயிற்று...

ஆனால் அவன் கவனிக்க மறந்த ஒன்று, அந்த கொடி அவனது எடையை முழுவதுமாக தாங்க முடியாமல் சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்திருந்தது.

ஓரளவிற்கு கீழே இறங்கியவன் பாறை இடுக்குகளில் இரண்டு கால்களையும் பலம் பொருந்தியபடி வைத்து யாழினியை மேலே தூக்க ஆரம்பித்திருந்தான்.

அவன் தூக்கி விடவிட அர்ஜுன் மேலே இருந்து இழுக்க ஆரம்பித்தான்.அவன் ஒருவனால் அவ்வாறு இழுக்க முடியவில்லை. மகிழை நோக்கி திரும்பியவன் "கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுங்க அண்ணி ..."என்று கத்தினான்.

அப்போதுதான் மகிழ் என்ற சிலைக்கு உயிர் வந்தது....! அர்ஜுனை நோக்கி ஓடி வந்தவள், யாழினியின் இன்னொரு கையைப் பிடித்து மேல் நோக்கி இழுக்க ஆரம்பித்தாள்.

ஆதியின் எடையை தாங்க முடியாமல் உடைய ஆரம்பித்த கொடி இப்பொழுது யாழினியின் எடையும் சேர்ந்து கொள்ள பலமாக முறிய ஆரம்பித்தது.

யாழினியை முழுவதுமாக ஏற்றி முடிப்பதற்குள் ஆதியை கட்டியிருந்த கொடியானது முழுவதும் முறிந்துபோனது.

அதை கவனித்த அர்ஜுன் "அண்ணா.."என்று பலத்த குரலில் அலறினான்.

கிட்டத்தட்ட தான் கீழே விழுவதற்குள் யாழினியை மேல் நோக்கித் தள்ளியபடி கீழே விழ ஆரம்பித்தான் ஆதி....!

"ஆதி.." என்றபடி மகிழும் அவனை நோக்கி கையை நீட்டி கத்த ஆரம்பித்தாள்.

அவர்களின் கூக்குரல் எதுவும் அவன் காதில் விழவில்லை... பள்ளத்தாக்கில் வேகமாக கீழ் நோக்கி சென்று கொண்டிருந்தான்.

ஆனால் அவனது கண்கள் கடைசி வரை மகிழின் முகத்திலேயே நிலைத்திருந்தது....!

சாகப் போகிறோம் என்ற மரண பயம் கூட அவன் கண்களில் இல்லை. மகிழை விட்டு பிரியப் போகிறோம் என்ற வலி தான் அவனின் கண்களில் தெரிந்தது.

மரணத்தின் கடைசி நொடிகளில் கூட, "ஐ லவ் யு டி...... எல்லாத்துக்கும் மன்னுச்சுடு டி...."எனக்கத்தியபடி தான் விழுந்தான்.

அதனை கேட்ட மகிழ் கதறி அழுக ஆரம்பித்தாள்.....

தங்கையை காப்பாற்றி விட்டான் என்று நினைத்து சந்தோஷப்படுவதா...? இல்லை காதலனை இழந்து விட்டோம் என்று கவலைப்படுவதா...? என்று அவளுக்கு புரியாத நிலைமை.

ஆம்...! அவன் எவ்வளவோ செய்த போதிலும் கூட,அவனது மீதான அவளது காதல் என்றுமே மாறியதில்லை...!

இருப்பினும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த தங்களது நிலையால் இந்த உறவு வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தாள்.

ஆனால் எங்கேயாவது அவன் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று அடி மனதிலிருந்து ஆத்மார்த்தமாக வேண்டிக் கொண்டுதான் இருந்தாள்.

இப்படி தன் கண் முன்னே அவனது மரணம் நிகழும் என்று அவள் கனவில் கூட நினைத்ததில்லை...!

அப்படியே மடங்கி அமர்ந்தபடி முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு "ஆதி... ஆதி... வந்துடு.. ஆதி...ப்ளீஸ்.." என கதறி அழுக ஆரம்பித்தாள்.

அர்ஜுனுக்கும் ஒன்றும் புரியவில்லை... "அண்ணா.. அண்ணா.." என்று கத்தியபடி எப்படியாவது அவனை காப்பாற்றி விட முடியாதா என பள்ளதாக்கில் எட்டி எட்டி பார்த்தான்.

ஆனால் அங்கோ கண்ணுக்குட்டிய தூரம் வரை தரை தென்படவில்லை. எத்தனை அடி தூரம் என்று அவனுக்கும் புரியவில்லை....

எப்படியாவது வனத்துறையினரிடம் உதவி கேட்டு அவனை மீட்டு விட வேண்டும்... அதற்கு முன் இவர்கள் இருவரையும் கொண்டு போய் ஷேபாக எங்காவது விட்டுவிட்டுத் தான் அவன் அடுத்த கட்ட வேலையை செய்ய முடியும்.

அதுவரைக்கும் ஆதிக்கு ஒன்றும் ஆகியிருக்கக்கூடாது என்று உலகில் உள்ள அத்தனை கடவுள்களையும் வேண்டியபடி, தனது பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஓடி வந்தவன்... யாழினி முகத்திலேயே நீரை ஓங்கி ஓங்கி அடித்தான்.

ஐந்து முறை அடித்தபிறகு லேசாக கண்களை திறந்தாள் யாழினி.

அதையெல்லாம் உணரும் நிலைமையில் மகிழ் இல்லை. அவள் கதறியபடியே அருகில் அமர்ந்திருந்தாள்.

துரிதமாக செயல்பட்ட அர்ஜுன் யாழினியை எழுப்பி விசயத்தை கூறியவன், வேகமாக மகிழிடம் திரும்பி "அண்ணி எப்படியாவது அண்ணன காப்பாற்றிடலாம்... நீங்க தயவு செஞ்சு அழுகாதீங்க.... வாங்க முதல்ல நீங்க ரூமுக்கு போங்க... நா போய் ஃபாரஸ்ட் ஆபிஸ்ல போய் ஹெல்ப் கேக்கணும்.. ப்ளீஸ் " என்று அவர்களை துரிதப்படுத்தினான்.

அவன் கூறிய வார்த்தைகள் அவள் மூளைக்குள் சென்றடைந்த போதிலும், அவளால் சட்டென அதிலிருந்து வெளிவர முடியவில்லை.

"அண்ணி ப்ளீஸ் நீங்க லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் அண்ணனோட உயிருக்கு ஆபத்து. தயவு செஞ்சு வாங்க.." என்றான் சற்றே காட்டமாக.

அப்பொழுதுதான் அவளுக்கு உறைத்தது. எப்படியாவது ஆதியை காப்பாற்றிய விட வேண்டும் என எண்ணியபடி வேகமாக எழுந்தவள், 'சரி' என தலையாட்டிபடி யாழினியுடன் கிளம்பிவிட்டாள்.

மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கி வந்தவர்கள்... முதலில் பாரஸ்ட் ஆபீஸ்க்கு தான் சென்றனர்.

அவர்கள் மூவரின் நிலையை பார்த்து ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்ட அலுவலர்கள் என்ன ஏதென்று விசாரிக்கும் பொழுது, நடந்தவைகள் அனைத்தையும் அர்ஜுன் தான் விளக்கினான்.

"எப்படியாவது எங்க அண்ணனை காப்பாத்தணும் சார்....உடனே அதுக்கான ஏற்பாடுகளை பண்ணுங்க.... என்ன பண்ணனும்னாலும் சொல்லுங்க நான் பண்றேன்.." என்றான் அவசரமாக.

அவனை பரிதாபமாக திரும்பி பார்த்த அலுவலர், " தம்பி அந்தப் பள்ளம் எவ்வளவு ஆழத்துல இருக்குன்னு தெரியுமா...? அதுல விழுந்த யாருமே இதுவரைக்கும் பிழைச்சதில்லை... " என்றார் நிதர்சனத்தை அவனுக்கு உணர்த்தும் வகையில்.

"இல்ல அண்ணன் எங்கேயும் போக மாட்டாரு... தயவு செஞ்சி என்கூட வாங்க சார்... இப்பவே போய் தேடிப் பார்க்கலாம்..." என்றான் அவசரமாக கிட்டதட்ட கதறியழுது இறஞ்சியப்படி....

அவருக்கு அங்குள்ள நிலவரம் புரியும் என்பதால், "கொஞ்ச நேரம் உட்காருப்பா போகலாம்.." என்றபடி அவர் அங்கு செல்வதற்கான வேலைகளை மிகவும் மெதுவாகவே செய்து கொண்டிருந்தார்.

அவனுக்கு பொறுமை போய்க்கொண்டிருந்தது.. இதற்கு மேல் விஷயத்தை யாரிடமும் கூற வேண்டாம் என்று நேரம் கடத்தினால் அது ஆதியின் உயிருக்கே ஆபத்து என்பதை உணர்ந்தவன்... வேகமாக ஆதியின் தந்தைக்கு அழைத்து விஷயத்தை கூறியவன், பெரிய அரசியல்வாதி யாருக்காவது கூறி இந்த தேடுதல் வேட்டையை துரிதப்படுத்துமாறு கூறினான்.

சுந்தரலிங்கேஸ்வரருக்கு ஆதி தான் உலகமே...! இந்த செய்தியை கேட்ட அவர் உள்ளமே ஆடிப் போய்விட்டது.

இருப்பினும் தான் நிலையாக நிற்க வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து கொண்டவர், தனக்கு தெரிந்த அனைத்து பெரிய தலைகளிடம் பேசி ஒரு வழியாக பாரஸ்ட் ஆபீஸில் உள்ள அத்தனை பேரும் பெரிய இடம் என்பதால் வேகமாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்துவிட்டனர்.

மகிழ் மற்றும் யாழினியை அங்கேயே ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து தங்க வைத்துவிட்டு அவர்களுடன் அர்ஜுன் மட்டும் சென்றிருந்தான்.

நேரம் ஆக ஆக மகிழால் அங்கே இருக்க முடியவில்லை. யாழினியை அங்கே இருக்க சொல்லிவிட்டு, அவளும் கிளம்பிவிட்டாள்.

தூரத்திலிருந்து அவர்கள் தேடுவதை வெறித்துப்பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். அவளது உதடுகள் மட்டும் "ப்ளீஸ்...ஆதி... என்னிடம்... வந்துவிடு.."என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

நேரம் சென்று கொண்டே இருந்ததை தவிர ஆதியை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இரவு ஆகிவிட்டதால் இதற்கு மேல் தேடவும் முடியாது என்று ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் கையை விரித்தனர்.

அதிலும் தலைமை அதிகாரியோ, "இனி கண்டுபிடித்தாலும் அவர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை... எனவே காலையில் வந்து தேடலாம் " என்று கூறிவிட்டார்.

அர்ஜுனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடுத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவன், முதலில் சுந்தரலிங்கேஸ்வரருக்கு அழைத்து விஷயத்தை கூறலாம் என்று பாரஸ்ட் அலுவலகம் நோக்கி நடந்தான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகிழுக்கு உயிரே போய்விட்டது.

'அப்போ என்னோட ஆதி என்கிட்ட திரும்ப வரமாட்டானா...?' என பிரம்மை பிடித்தவள் போல் ஏதேதோ யோசித்தவள்.... சிறிது நேரத்தில் ஒரு வழியாக ஏதோ ஒரு முடிவு எடுத்தவளாக தனது கண்களை துடைத்துக் கொண்டு, அவர்கள் அனைவரும் வெளியேறிய பின் அந்த அடர்ந்த காட்டுக்குள் வேகமாக நுழைந்தாள்.....!

கருத்துத்திரி இதோ👇
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 33

அடர்ந்த இருள் சூழ்ந்த கானகம்... ஊசியால் உடலை துளைப்பது போல் குளிர் வேறு... லேசாக தூறலும் போட்டுக் கொண்டிருந்தது....!

இது எதையுமே பொருட்படுத்தாமல் தன்னவனை மீட்பது மட்டுமே குறியாக, யாருடைய துணையும் இன்றி தனியொருத்தியாக அந்த கானகத்துக்குள் நுழைந்தாள் மகிழ்.

அவர்கள் தேடி முடித்த இடத்திலிருந்து தனது தேடுதலை தொடங்கினாள். "ஆதி... ஆதி..." என கத்தியபடி அந்த காட்டிற்குள் இருட்டில் நடக்க ஆரம்பித்தாள்.

அந்த இருட்டில் அவ்வளவு ஆட்கள் இருந்தும்,டார்ச் லைட்டின் உதவியுடன் தேடும் போதே கிடைக்காதவன்.... தான் இப்போது தனியாக இப்படி வெளிச்சமே இன்றி தேடும் பொழுது மட்டும் எப்படி கிடைத்துவிடுவான்...? என்ற நிதர்சன யோசனை எதுவும் இன்றி தேடிக் கொண்டே இருந்தாள்.

நீண்ட நெடிய கொடுமையான நிமிடங்கள் அவை....! நொடிகள் நிமிடங்கள் ஆகி நிமிடங்கள் மணித்திலாயங்களாக நீண்டு கொண்டே சென்றது தவிர, அவளது தேடுதளுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை.

இருப்பினும் அவளது முயற்சியை கைவிடாமல் பித்து பிடித்தவளை போல் தேடிக்கொண்டே இருந்தாள்.

கிட்டத்தட்ட அவளும் அறை உயிராகி இருந்தாள்.....இருப்பினும் இந்த காட்டை விட்டு வெளியே சென்றால்,ஒன்று ஆதியுடன் செல்ல வேண்டும். இல்லையேல் அவனுடன் இங்கேயே மடிய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவனைத் தேடிக்கொண்டே இருந்தாள்.

இரவு 7 மணிக்கு ஆரம்பித்த தேடல் நள்ளிரவை தாண்டியும் நீண்டு கொண்டே இருந்தது.....!

இதற்கிடையில் ஃபாரஸ்ட் அலுவலகத்திற்கு வந்த அர்ஜுன் அங்கே யாழினி மட்டும் இருப்பதை பார்த்துவிட்டு, " அண்ணி எங்கே...? " என்று கேட்டான்.

யாழினியோ திருத்திருவென முழித்துவிட்டு... " உங்களை பார்க்கத்தானே அக்கா வந்தாங்க.. " என்றாள்.

அவனோ, "அங்க வரலையே.." என்றான் யோசனையாக.

யாழினி அழ ஆரம்பித்து விட்டாள்.... "ஐயையோ அப்படினா... அக்கா எங்க போனாங்க...? எல்லாமே என்னால தான் உங்க அண்ணாவும் இறந்துட்டாங்க. இப்போ என் அக்காவும் எங்க போனாங்கன்னு தெரியல. இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம் பேசாம நான் செத்து போயிருந்திருக்கலாம். ஏன் என்னைய காப்பாற்ற ட்ரை பண்ணுனீங்க அஜூ ..?" என குற்ற உணர்ச்சி தாங்காமல் தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

அர்ஜுனுக்கு அவள் மேல் கோபம் இருந்தது தான், அவளது சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுத்தனம் தான் இவ்வளவு வினையும் என்று... ஆனால் இது எதையும் அவள் தெரிந்தோ,வேண்டுமென்றோ செய்யவில்லையே.... விதியின் சதி வேறு என்ன சொல்வது என நினைத்திருந்தான்.

அவளது அழுகை வேறு அவனது மனதை போட்டு பிசைந்தது... " இங்க பாரு அழாத யாழினி, அவங்க எங்கேயும் போயிருக்க மாட்டாங்க. இங்க தான் பக்கத்துல இருப்பாங்க.நான் போய் பாத்துட்டு வரேன்... நீ தயவு செஞ்சு அழுகாமல் ரெஸ்ட் எடு " என்றான் வாஞ்சையாக அவளது தலையை தடவிய படி கண்ணீரை துடைத்து விட்டு கொண்டு..

அவளோ தகப்பன் மடியில் சாயும் மழலை போல் அவனை வயிற்றோடு சேர்த்து இறுக கட்டிக்கொண்டாள்.

"எல்லாத்துக்கும் காரணம் நான் தானே....அஜூ....நா....ன்தான் நானே.. செத்து சாமிகிட்ட போய் இருக்கலாம்..." என மனப்பாரம் தாங்காமல் குற்ற உணர்ச்சியோடு புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

அர்ஜுனுக்கு எப்படி அவளை சமாளிப்பது என்று தெரியவில்லை. மகிழை வேறு போய்த் தேட வேண்டும்.

ஆதியின் தந்தை மற்றும் அர்ஜுனின் தந்தை என இருவரும் வேறு வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதி என்ன நிலைமையில் இருக்கிறான் என்றே தெரியவில்லை.... அதையும் வேறு பார்க்க வேண்டும். இவள் இப்படி இருக்கும் நிலைமையில் எப்படி விட்டு செல்வது...? என்ற யோசனையுடன் நெத்தியை நீவி விட்டுக்கொண்டான்.

மெதுவாக அவளுக்கு புரிய வைக்கும் நோக்கில், " இங்க பாரு அம்மு... தயவு செஞ்சு நிலைமைய புரிஞ்சிக்க நான் போய் அண்ணியையும் அண்ணனையும் தேடணும். நீ ஸ்ட்ராங்கா இருந்தா தான்,நான் உன்னை விட்டுட்டு போக முடியும். ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ.... " என்றான் மென்மையாகவே.

அவளது அழுகை சிறிது சிறிதாக குறைந்தது.... " சரி அஜு,நீ போய் அவங்கள தேடு. நானும் வரட்டுமா.? " என்றாள்.

"அதெல்லாம் எதுவும் வேணாம். நீ நல்லா ரெஸ்ட் எடுத்து தெம்பா இருந்தாலே, எனக்கு யானை பலம் கிடைத்த மாதிரி. நீ இப்படி இருந்தா,நா உன்னை விட்டுட்டு எப்படி நிம்மதியா போய் அங்க உள்ள வேலைகளை பார்க்க முடியும்...?உன்ன பத்தின யோசனை மட்டுமே தான் எனக்கு ஓடிக்கிட்டு இருக்கும். வேற எதைப்பத்தியும் என்னால யோசிக்க முடியாது.... ப்ளீஸ் அதனால கொஞ்சம் அழுகாமல் ரெஸ்ட் எடு.."என்றான் மனதை உருக்கும் குரலில்.

அவளும் 'சரி' என்று தலையசைத்த பின் மகிழைத் தேடி கிளம்பிவிட்டான்.

காட்டிலோ மகிழ் தேடி அலைந்து அலைந்து அவள் தான் அரைகுறை உயிராய் ஆனாலே தவிர ஆதியை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

நேரம் நள்ளிரவையும் தாண்டி சென்று கொண்டிருந்தது. சரியாக சாப்பிடாததால் மயக்கம் வேறு அழையா விருந்தாளியாக வந்தது.

தலையை சுற்றிக்கொண்டு வந்ததனால் ஓரிடத்தில் அமர்ந்தபடி," ஆதி...ஆதி.. " என்று கத்தி அழுது கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஏதோ முனகல் சத்தம் போல் கேட்டது. எங்கிருந்துதான் மகிழிற்கு அவ்வளவு தெம்பு வந்ததோ வேகமாக எழுந்தவள் சத்தம் வந்த திசையில் இருக்கும் மரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

அங்கோ ஓர் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த மரத்தின் ஒரு கிளை மெது மெதுவாக முறிந்து கீழே விழ தொடங்கி இருந்தது. அந்தக் கிளையில் ஏதோ ஒரு உருவம் தொங்கிக் கொண்டிருந்தது.

இருட்டில் சரியாக தெரியவில்லை. நிலவு வெளிச்சம் மட்டுமே...வேகமாக அந்த இடத்திற்கு ஓடினாள். அருகில் சென்ற பிறகுதான் உடல் முழுவதும் காயத்துடன்,முகம் கூட அடையாளம் தெரியாத அளவிற்கு ரத்தமாக மாறி இருந்தது தெரிந்தது .உடையை மட்டுமே வைத்து ஆதி என்பதை அறிந்து கொண்டாள்.

ஆனால் அவனிடம் சிறிதும் அசைவு இல்லை.. மகிழுக்கு அவனை அப்படி பார்க்கவே முடியவில்லை. இப்போது என்ன செய்வது என்றும் புரியவில்லை.

அவன் உயிரோடு இருக்கிறானா? இல்லையா? என்று முதலில் அறிய வேண்டும் என எண்ணியவளாக, பதற்றத்தோடு ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிய படி, அவனது இதயத்தில் தனது காதை வைத்து இதய ஓசையை கேட்டாள்.மூச்சுக்குழாயிலும் தனது கைகளை வைத்தும் பார்க்கும் பொழுது இதயம் துடிப்பதும் மூச்சு உள்ளே வெளியே என செல்வதுமாக இருந்தது.

அப்போதுதான் அவளுக்கு உயிரே வந்தது... எப்படியாவது அவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கும் கண்ணை இருட்டிக்கொண்டு வர அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டாள்.

தன்னால் தனியாக நிச்சயம் ஆதியை இங்கிருந்து அழைத்துச் செல்ல முடியாது. இந்த நடு கானகத்தில் இரவில் யார் வந்த தங்களை காப்பாற்றப் போகிறார்கள் என்ற எண்ணமே அவளுக்கு உடல் சோர்வை அதிகரித்தது.

மகிழைத் தேடித்த சென்ற அர்ஜுனோ அவளது புகைப்படத்தை காட்டி அங்கு இருப்பவர்களிடம் விசாரிக்கும் பொழுது அவள் அந்த காட்டுப்பக்கம் சென்றதைப் பார்த்த சிலர் அங்கு சென்றதாக கூறினார்.

அவனுக்கு புரிந்து விட்டது...! ஆதி தேடித்தான் சென்றிருக்கிறாள் என்று. ஆனால் அந்த காட்டின் ஆபத்து புரியாமல் இவளும் போய் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என பாரஸ்ட் ஆபீஸர்களின் உதவியை நாடினான்.

பெரிய இடம் என்பதால் வேறு வழி இல்லாமல் அவர்களும் அவன் கூடவே கிளம்பினார். ஐந்து பேரை உதவிக்கு அழைத்துக் கொண்டு வேகமாக காட்டை நோக்கி ஓடினான்.

காட்டின் உள்ளே செல்லும் பொழுதே ஸ்பீக்கரில்,"அண்ணி... அண்ணி.. " என்று அழைத்துக் கொண்டே தான் சென்றான்.

அவனது குரலைக் கேட்ட மகிழுக்கு புது தெம்பு பிறந்தது. எப்படியாவது காப்பாற்றி விடலாம் தன்னவனை என்னும் எண்ணமே அவளுக்கு புதிய சுறுசுறுப்பை கொடுத்தது.

தனது சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி பலமாக கத்தினாள்... "அர்ஜுன்.. நா...ன் இங்க இருக்கேன்..." என்று.

அந்தக் காட்டின் நிசப்தத்தில் அவளது குரல் நன்றாகவே எதிரொலித்தது.

குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் சென்றனர். அங்கே அவர்கள் கண்ட காட்சியில் ஸ்தம்பித்து அப்படியே நின்றுவிட்டனர்.

ஆதியை அவளது மடியில் போட்டபடி அப்படியே அமர்ந்திருந்தாள்.அவன் உடல் முழுவதும் ரத்தம் வெளியேறி காய்ந்து போயிருந்தது. இவ்வளவு நேரம் இந்த ரத்த வாடைக்கு எந்த உயிரினமும் வந்து அவர்களை தாக்காமல் இருந்ததே பெரிய விஷயம்...!

நிலைமையை புரிந்து கொண்ட வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டனர்.அவர்களைக் கண்டதுமே மகிழுக்கு ஆதியை அவர்களிடம் ஒப்படைத்த நிம்மதியே பலம் அனைத்தும் இழந்து விட மயங்கி சரிந்தாள்.

வேகமாக இருவரையும் தூக்கிக் கொண்டு ஃபாரஸ்ட் அலுவலகத்தில் இருக்கும் எமர்ஜென்சி மெடிக்கல் ரூம்மிர்க்கு விரைந்தனர்.

இருவருக்கும் முதலில் ஃபர்ஸ்ட் எய்ட் செய்தவர்கள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து மூணாறில் இருக்கும் மிகப்பெரிய மல்டி ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர்.

மகிழுக்கு சாதாரண மயக்கம் தான்.... இரண்டு குளுக்கோஸ் போட்டு லேசான சிகிச்சை செய்த உடனே அவள் கண் விழித்துவிட்டாள்.

ஆனால் ஆதியின் நிலைமை தான் மிக மோசமாக இருந்தது. அவ்வளவு பெரிய பள்ளத்தாக்கில் அவ்வளவு தூரத்திலிருந்து விழுந்தவன் உடலில் உயிர் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தது. உணர்வுகள் சுத்தமாக இல்லை. கிட்டத்தட்ட அனைத்து உறுப்புகளும் செயலிழந்த நிலை தான்....

நீண்ட நேரம் சிகிச்சை போய்க் கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட 12 மணி நேரங்களுக்கு பிறகு வெளியே வந்த மருத்துவர்கள், 'அவரது உயிரை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது. அவர் மூளை சுத்தமாக வேலை செய்வதை நிறுத்திவிட்டது. கோமாவிற்கு சென்றுவிட்டார்' என்று கூறினர்.

ஆதியின் குடும்பம் மொத்தமும் அங்கே தான் இருந்தது. இதுதான் சாக்கென்று ஸ்ருதியின் குடும்பமும் வந்து ஒட்டிக்கொண்டு, அழுது நாடகம் போட்டுக் கொண்டிருந்தது. மருத்துவர் கூறியதைக் கேட்ட மொத்த குடும்பமும் கதறி அழுதது.

சுந்தரலிங்கேஸ்வரர் எதுவுமே பேசவில்லை. மகனுக்கு இப்படி ஆனதிலேயே இடிந்து போனவர் அப்படியே அமர்ந்துவிட்டார்.

ஓரமாக நின்று அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மகிழிற்கு அப்படி ஒரு வலி இதயத்தில்....

தன்னுடைய ராசி தான் ஆதிக்கு இப்படி ஆகிவிட்டது என்பதை ஸ்ட்ராங்காக நம்பினாள்.

'என்னை நீ பார்க்காமலே இருந்திருக்கலாம் ஆதி,உன்னோட லைஃப் நிச்சயம் நல்லா இருந்திருக்கும்.. ' என மனதிற்குள் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவனை ஒரே ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் எனும் நோக்கில், அவர்களின் குடும்பத்தை தாண்டி எப்படி உள்ளே செல்வது என எண்ணியபடி அங்கேயே நின்று கொண்டிருந்தாள்.

அனைத்தையும் ஓடியாடி பார்த்துக் கொண்டிருந்தது அர்ஜுன் ஒருவன் தான். எனவே அவனிடம் சென்று கேட்கலாம் என எண்ணியவள் அவனிடம் சென்று, "அர்ஜுன் நான் ஒரே ஒரு தடவை ஆதிய பாக்கணும்" என்றாள் கண்ணீர் வழியும் கண்களுடன்.

அவளைப் பார்த்து அர்ஜுனுக்கும் அவளது உணர்வுகள் புரிந்தது. இருப்பினும் அவன் ஐசியூவில் இருப்பதால் இப்போதைக்கு அவனை பார்க்க முடியாது என்பதை அவளிடம் கூறியவன், "டாக்டர் எப்போ பார்க்கலாம்னு சொல்றாங்களோ அப்ப கண்டிப்பா நான் கூட்டிட்டு போறேன்.நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க" என்றான்.

அவளோ அழுகையுடனே இல்லை என தலையாட்டியபடி அங்கேயே உள்ள ஒரு சேரில் அமர்ந்துவிட்டாள். அதனை பார்த்து ஒரு பெருமூச்சுடன் அடுத்து மருத்துவரை பார்த்து என்ன செய்ய வேண்டும் என கேட்பதற்காக விரைந்துவிட்டான்.

யாழினியையும் அதே மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தவன்,அங்கேயே மகிழும் தங்கிக் கொள்ளுமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் கேட்காமல் அந்த வராண்டாவிலயே சேரில் அமர்ந்தபடி... ஊண், உறக்கம் இன்றி அவனது முகத்தை பார்ப்பதற்காக தவம் இருந்தாள்.

கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு பிறகு அவனை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனைவரும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தபின் தவிப்புடன் வாசல் கதவையே பார்த்துக் கொண்டு நின்ற மகிழை அழைத்துக்கொண்டு அர்ஜுன் உள்ளே நுழைந்தான்.

அங்கே அவள் கண்ட காட்சியில் அவளது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது...!

அவள் ரசித்த வசீகரா முகம் சிதைந்து இருந்தது...
அவளை அனைத்த அவனது உறுதியான கரங்கள் தளர்ந்திருந்தது....
அவள் மஞ்சம் கொண்ட மார்பு உயிர் காக்கும் கருவியின் ஒயர்களால் சூழப்பட்டிருந்தது....
உறுதியான அவன் கால்கள் கூட அசைவின்றி துவண்டு இருந்தது....

அவனை பார்த்த பின்பு அழுகை பெருகியதே தவிர குறையவே இல்லை. அவன் அருகே சென்று கைகளை இறுக்கி பிடித்தவள், எதுவும் பேசாமல் விம்மலை அடக்கியபடி அவனை பார்த்தபடி ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நின்று இருந்தாள்.

அதற்குள் அர்ஜுன் வந்து 'டைம் ஆகிவிட்டது வெளியே செல்லலாம்' என்று அழைத்துச் சென்றுவிட்டான்.

வெளியே வந்த அவளின் முடியை கொத்தாக பிடித்து இழுத்து தள்ளினார் ஆதியின் அத்தை ராதிகா.

"உன்னால தாண்டி என் மருமகன் இங்க வந்து படுத்திருக்காரு.... உன்ன என்னைக்கு பார்த்தானோ அன்னைல இருந்து அவன் வாழ்க்கையில் நிம்மதியே இல்லை."

"ராசி கெட்டவளே உன் தங்கச்சிய காப்பாத்த போய்தாண்டி என் மருமகனுக்கு இப்படி ஆச்சுன்னு சொல்றாங்க.... மறுபடியும் ஏன் இங்க வந்து நின்னுகிட்டு இருக்கீங்க..? ஏன் அவன் உயிரோடு இருக்குறதும் உனக்கு புடிக்கலையா...? அவன கொன்னுட்டு தான் வேற வேல பாக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியிறியா...?" என்றாள் ஆக்ரோஷமாக.

இன்னும் ஏதேதோ தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய போதும் அங்கிருந்த யாரும் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் அவர்களுக்கும் அந்த கோபம் இருந்தது... யாழினியை காப்பாற்ற போய் தான் ஆதிக்கு இப்படி ஆகிவிட்டது என்று.

அர்ஜுன் தான் டாக்டரை பார்த்து விட்டு வேகமாக ஓடி வந்தவன், "அத்தை அவங்களை விடுங்க" என்றபடி இருவரையும் விலக்கிவிட்டான்.

அப்போதும் நிறுத்தாமல் அவளை இழுத்து பிடித்து பளார் பளார் என கன்னத்தில் அறைந்தவர்,உன் மூச்சு காத்து கூட என் மருமகன் மேல பட்டா விஷம் டி....எங்க கண்ணு மூடி முன்னாடி நிக்காம எங்கேயாவது தொலைஞ்சு போ.. " என்றார் ஆத்திரமாக.

அர்ஜுனோ அவரை விலக்கி விட்டவன், " அண்ணி நீங்க வாங்க" என்றபடி அவளை அழைத்துக்கொண்டு போய் யாழினி இருக்கும் அறையில் விட்டுவிட்டு... " நீங்க எதையும் மனதில் வச்சுக்காதீங்க அண்ணி" எனக்கூறிவிட்டு வெளியேறினான்.

மகிழின் மனது ராதிகா கூறிய வார்த்தைகளிலேயே சுற்றி சுழன்று சூறாவளி போல் தாக்கிக் கொண்டிருந்தது.

'இனியும் தான் ஆதியின் வாழ்க்கையில் இருப்பது சரியாக இருக்காது.... ஏன் நான் அவன் அருகில் இருப்பதே அவனுக்கு ஆபத்து தான்' என்று எண்ணியவளாக, அவனை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுத்தவள்... இனி அவனை அவனது குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் அர்ஜுனிடம் கூட கூறாமல் யாழினியை அழைத்துக்கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்டாள்.....

குறிப்பு : இது போட்டிக்கதை என்பதால் அனைவரும் லைக்ஸ் & கமெண்ட்ஸ் செய்து உங்களின் ஆதரவை தாருங்கள் தோழமைகளே.... உங்களின் கருத்துக்கள் தான் எனது தூண்டுகோல்....! அதிகமான லைக்ஸ் & கமெண்ட்ஸ் வரும் வேளையில், அப்டேட்டுகளும் விரைவாக வரும்.... உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழமைகளே....
கருத்துத்திரி இதோ👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 34

மகிழ் கொடைக்கானலிருந்து கிளம்பி வந்து இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைந்திருந்தது....

அங்கிருந்து கிளம்பும் பொழுது ஹாஸ்பிடலின் வெளி வளாகத்தில் அர்ஜுன் மட்டுமே ஓடிவந்து அவர்களை தடுக்க முயற்சி செய்தான்.

ஆனால் மகிழ்வதனியோ அவனிடம், "தயவு செய்து இதுக்கு மேல எங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ளீஸ்..." என இரு கரங்களையும் கூப்பிக் கெஞ்சினாள்.

அப்போதும் அவனது பார்வை தவிப்புடன் யாழினியின் மேல் படுவதை உணர்ந்த மகிழ், 'போதும் தான் பட்டதே போதும்... மீண்டும் தங்கையும் அந்த புதை குழியிலேயே விழ வேண்டாம்' என எண்ணியவளாக விறுவிறுவென ஹாஸ்பிடல்லை விட்டு வெளியேறி விட்டார்கள்.

சென்னைக்கு வந்தவள் முதலில் தேடி சென்றது விக்கியைத் தான். அவளுக்கும் அவனை விட்டால் வேறு யார் தான் இருக்கிறார்கள்...?

வாசலில் வந்து நின்ற மகிழையும், யாழினியையும் பார்த்த விக்னேஸ்வரன் முதலில் அதிர்ந்து, பின் உள்ளே அழைத்து அமர வைத்து என்ன ஏதென்று விசாரித்தான்.

நடந்தவற்றை மேலோட்டமாக கூறினாள் யாழினி. வந்ததிலிருந்து யாழினி தான் அனைத்தையும் பேசிக் கொண்டிருந்தாளே தவிர,மகிழ் வாயே திறக்கவில்லை. அவனை நிமிர்ந்து பார்க்கவே அவளால் முடியவில்லை.

அனைத்தையும் ஒரு மௌனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவன், மகிழை ஆராயும் பார்வை பார்த்தபடி... "அத்தை இப்ப தூங்கிட்டு இருக்காங்க. அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்".

"யாழினி நீ முதலில் போய் ஓய்வெடு" என கூறிவிட்டு மகிழுடன் தனியாக பேச வேண்டும் என்று தனியறைக்கு அழைத்துச் சென்றான்.

அதனை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தவளே போல்,ஒரு மரத்த தன்மையுடனே அவனை பின் தொடர்ந்தாள் மகிழ்வதனி.

அறைக்குள்ளே நுழைந்ததும் முதலில் அவன் கேட்ட கேள்வியே, "ஆதி உன் கிட்ட எதுவுமே கேட்கலையா...? நான் அங்க இருந்து வந்த மறுநாளே அவன் பாரின் போயிருந்தப்ப நடந்த எல்லாத்தையுமே அவன் கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன்" என்றான்.

அவளோ விக்கியை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.'என்ன மனுஷன் இவன்..?அவ்வளவு அவமானப்படுத்தி அனுப்பியும், ஏன் இப்படி...?' என அவன் அன்பின் கணம் தாங்காமல் மீண்டும் ஒருமுறை கதறி அழுதாள்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏன் இப்படி அழற மகிழ்...? சொல்லு... அவன்கிட்ட தான் நா எல்லா உண்மையும் சொல்லிட்டேனே. அதுக்கப்புறம் என்ன பிரச்சனை...? அவன் தான் உன்னை புரிஞ்சுக்கிட்டு இருப்பானே. நீங்க ஒன்னா சந்தோஷமா இருந்து இருக்கலாமே...?" என்று அடுக்கடுக்காக அவனது சந்தேகங்களை எழுப்பினான்.

ஆனால் அவளோ அவன் கேள்விகள் எதையும் கணக்கிலேயே எடுக்காமல், "நா அவ்ளோ தூரம் உன்ன அவமானப்படுத்தியும்,இங்க வந்ததுக்கு அப்புறம் நீ ஏன் விக்கி எனக்காக அவன் கிட்ட பேசின..? " என்றாள் அழுகையுடனே.

அவளது கேள்வியில் மென்மையாக புன்னகைத்தவன்... " நீ என்னையப்பத்தி என்ன நெனச்சிட்டு இருக்கனெல்லாம் எனக்கு தெரியல. ஆனா எனக்கு நீ சந்தோஷமா இருக்கணும். ஒரு ஸ்டேஜ்ல நான் உன்னைய லவ் பண்றேன்னு கூட நினைச்சுகிட்டு இருந்தேன்.... ஆனா அது ஏன்னு இப்ப யோசிச்சா கிட்டத்தட்ட அது ஒரு தகப்பனோட பரிதவிப்பு மாதிரி தான்.... "

" என்னோட குழந்தைய நா மட்டும் தான் நல்லா பாத்துக்க முடியும் அப்படிங்கிற மனநிலை தான்... நா உன்ன என் குழந்தையா தான் பார்க்கிறேன் மகிழ்.... என்னால நீ கஷ்டப்படுறத பார்க்கவே முடியாது. நீ சிரிச்சுக்கிட்டு இருந்தா மட்டுமே போதும்னு நினைக்கிறேன்.. ஆனா கடவுள் ஏன் உன்னோட வாழ்க்கைய மட்டும் இவ்வளவு கொடூரமா கொண்டு போறார்னு தான் எனக்கும் புரியல... "

"ஆனா ஒன்னு மட்டும் மனசுல வச்சுக்கோ.... எப்போதுமே உனக்காக நான் இருப்பேன். அது எந்த சிச்சுவேஷனா இருந்தாலும்.
அத மட்டும் என்னைக்குமே மறந்துடாத" என்றான் வாஞ்சையாக.

அவனது அன்பில் அவளுக்கு நெக்குருகியது...'இதற்கு தான் தகுதியானவள் தானா...?' என்ற எண்ணம் கூட தோன்றியது.

மறுபடியும் அவள் அழுகையை பார்த்தவன்.. " ப்ளீஸ் மகிழ் இப்படி அழுதுகிட்டே இருக்காத.. உன்னைய பழைய மாதிரி பாக்கணும்னு ஆசையா இருக்கு" என்றான் இறைஞ்சும் குரலில்.

நீண்ட நேரம் அழுதபின் தன்னை ஒரு வழியாக தேற்றிக்கொண்டு தனது கண்களை துடைத்தவள், பின் தெளிவான மனநிலையுடன் விக்கியிடம் பேச ஆரம்பித்தாள்.

"நிச்சயமா என்னால பழைய மாதிரி மாற முடியாது விக்கி... ஆனா என்னோட குடும்பத்துக்காக கொஞ்சமாவது நான் நார்மலா இருக்கணும்னு ஆசைப்படுறேன்..."

"அம்மாவுக்கும் அண்ணனுக்கும் உடம்பு சரி பண்ணனும்... யாழினியோட படிப்ப கண்டினியூ பண்ணனும்...இதுக்காகவாது நான் ஓடி ஆகணும்"

"என்னோட குடும்பத்துக்காக நிச்சயமா என்னோட லைஃப நா ரீஸ்டார்ட் பண்ணித்தான் ஆகணும் விக்கி..." என்றாள் அழுகையை மறைத்து லேசாக புன்னகைத்தபடி.

அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு மனது மேலும் மேலும் வேதனையாக இருந்தது.

இருந்தாலும் தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது என்ற காரணத்தினால் அவளுக்கு துணையாக மட்டுமே இருக்க முடிவு செய்தவன், அவளின் விருப்பப்படியே இருக்கட்டும் என ஒரு பெருமூச்சுடன் நகர்ந்துவிட்டான்.

மீண்டும் பைலை தூக்கிக்கொண்டு வேலை தேடும் படலம்.....!

விக்கி எவ்வளவோ கூறியும் கூட, 'அது சரி வராது' என அவனது அலுவலகத்தில் பணிபுரிய மறுத்துவிட்டாள்.

"ஏனென்று...? "அவன் ஆதங்கமாக கேட்ட போதும் பதில் இல்லை.

'அவளது விருப்பம்' என அதற்கும் அவன் மௌனமாகவே இருந்துவிட்டான்.

ஏகப்பட்ட இன்டர்வியூகள் அட்டென்ட் பண்ணி இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று தான் ஒரு இறக்குமதி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை கிடைத்து முதல் நாள் செல்வதற்கு வேலைக்கு ரெடியாகிக் கொண்டு இருந்தாள்.

யாழினியின் கல்லூரி படிப்பையும் இங்கேயே மாற்றிக் கொண்டு, தற்போதைக்கு கையில் பணம் அதிகம் இல்லாத காரணத்தினால் விக்கியின் வீட்டிலேயே தங்கி இருந்தார்கள்.

ஆனால் முதல் மாதம் சம்பளம் வந்த உடனே பக்கத்தில் ஏதாவது ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொண்டு தனியாக சென்று விட வேண்டும் என்று முடிவோடு தான் இருந்தாள்.

ஏனென்றால் விக்கியின் அப்பாவிற்கு தாங்கள் இங்கே இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவ்வப்பொழுது அவரது நடவடிக்கைகளின் மூலம் அவள் அறிந்தே வைத்திருந்தாள்.

அவளுக்கும் மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது....எவ்வளவு தான் அவன் தங்களுக்காக பார்த்து பார்த்து செய்து கொண்டே இருப்பான்....? அவனது வாழ்க்கையை அவன் வாழ வேண்டும். அதற்கு அவனது வாழ்வில் இருந்து இவர்கள் விலகியாக வேண்டும்.

அலுவலகத்திற்கு செல்ல தொடங்கிய ஒரு வாரத்திலேயே அவளுக்கு உடல் நிலை சற்று சரியில்லாமல் ஆக ஆரம்பித்திருந்தது. அதீத சோர்வு, அசதி, தூக்கம் என எப்போதும் களைப்புடனே இருந்தாள்.

வேலைக்கு சென்று வருவதே பெரும் பாடாக இருந்தது. இத்தனைக்கும் வேலை ஒன்றும் அவ்வளவு கடினமானதாகவும் இருக்கவில்லை.

தாயின் உடல் நிலையிலும் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. படுத்த படுக்கை தான்.... யாழினி தான் ஓரளவிற்கு வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.மகிழால் சுத்தமாக முடியவில்லை...

'ஏன் இவ்வளவு பலவீனமாக மாறிவிட்டேன்..?' என்று யோசிக்கும் போது தான் மண்டையில் நச்சென்று ஆணி அடித்தார் போல் ஒன்று புரிந்தது.... கடந்த இரண்டு மாதங்களாக அவளுக்கு மாதவிடாய் வரவில்லை.

'ஒருவேளை அப்படியும் இருக்குமோ..!?' என்று யோசித்தவளாக மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று பிரக்னன்சி கிட் வாங்கி வந்து செக் செய்து பார்த்தாள்.

இரண்டு பிங்க் நிறக் கோடுகள் அவளைப் பார்த்து பல்லை காட்டி சிரித்தது.... ' பெண்ணே நீ அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது' என்று...

இந்த சூழ்நிலையில் அவள் என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. யாரிடம் சொல்வது? இப்படி சொல்வது? என்று ஆயிரம் யோசித்தாலே தவிர இந்த குழந்தையை கலைக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் கூட யோசிக்கவில்லை.

அவளுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது....' தான் திரும்ப ஆதியுடன் வாழ்வில் சேரப் போவதில்லை. அவனுக்கு இருக்கும் பணபலத்திற்கு இந்நேரம் அவனது குடும்பம் அவனை நிச்சயம் சரி செய்திருக்கும். அவன் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழட்டும்' என்று நினைத்தாள்.

அதே நேரத்தில் தனக்கென்று தனி வாழ்வு ஏதும் இல்லை. எனவே அவளுக்கான பற்று கோளாகத்தான் இந்த குழந்தையை நினைத்தாலே தவிர பாரமாக நினைக்கவில்லை....

ஆனால் இந்த ஊர் உலகம் என்ன சொல்லும்...? கழுத்தில் தாலி இல்லாமல் குழந்தையை சுமந்து அதனை பெற்று வளர்ப்பது ஒன்றும் சாதாரண விஷயம் அல்லவே..!?

அதே நேரத்தில் இதனை கூடிய விரைவில் கண்டிப்பாக வீட்டில் சொல்லியே ஆக வேண்டும். மறைக்கும் விஷயம் இல்லையே...

இப்பொழுதெல்லாம் அதிகம் விக்கி வீட்டிற்கு வருவதில்லை....வேலை இருக்கிறது என்று அலுவலகத்திலேயே தங்கிக்கொள்கிறான். ஆனால் அது ஏன் என்று மகிழுக்கு நன்றாகவே புரிந்தது.

இரு வயது பெண்கள் இருக்கும் வீட்டில், ஒரு இளம் வயது பையன் தங்குவது அக்கம்பக்கத்தில் இருப்பவரின் பார்வைக்கு கண்டிப்பாக தவறாகத்தான் தெரியும்.அதற்காகத்தான் அவளும் தனியாக வீடு எடுத்துச் செல்ல வேண்டும் என நினைத்தாள்.

ஆனால் இனி அது சாத்தியமே இல்லை.வேறு ஏதாவது தான் யோசிக்க வேண்டும் என எண்ணியபடி வலம் வந்தவள்....ஒரு வழியாக யோசனையின் முடிவில் ஸ்ட்ராங்காக ஒரு முடிவு எடுத்தாள்.

யாழினிக்கு கடைசி செமஸ்டர் என்பதால் நன்றாக படிக்க வேண்டும் எனக் கூறி கல்லூரி ஹாஸ்டலிலேயே சேர்த்துவிட்டாள்.

எடுக்கவே கூடாது என நினைத்திருந்த அண்ணனின் சிகிச்சைக்கான பணத்தை பேங்கிலிருந்து எடுத்து வந்தவள், அதனை யாழினியின் பெயரில் டெபாசிட் செய்து, அதற்கான டீடைல் அனைத்தையும் கொண்டு போய் அவளிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.

'ஏனென்று..?'அவள் கேட்ட பொழுது தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும்... விரைவில் வெளியூர் கிளம்பப்போவதாகவும், அதற்குப் பிறகு இதற்கெல்லாம் நேரம் இருக்காது என கூறி சமாளித்தாள்.

'இன்னும் நீ சின்ன பிள்ளை கிடையாது... உன்னோட லைஃப நீ தான் லீட் பண்ணிக்கணும்' என்ற மாதிரியான பொதுவான அறிவுரைகளை வழங்கிய பிறகு, அவளை கண்ணிறைய பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

இனிமேல் தன் வாழ்க்கையில் எப்போது அவளை பார்ப்பாள் என்பது அவளுக்கே தெரியாத ஒன்று அல்லவா...!

வீட்டிற்கு வந்தவள் அன்று விக்கியை கால் செய்து, 'உன்னை பார்த்தே ஆக வேண்டும் கிளம்பி வா..' என்றாள் விடாப்பிடியாக.

இவ்வாறு அவள் அழைத்ததேதில்லை என்பதால் அவனும் உடனே கிளம்பி வந்தான்.

தன்னிடமிருந்த மிச்சசொச்ச அனைத்து சின்னஞ்சிறிய நகைகள், தங்கையின் நகைகள் என அனைத்தையும் ஒன்று திரட்டியவள் அதையெல்லாம் விற்று ஓரளவிற்கு அமவுண்ட் ரெடி செய்தாள்.

அந்த பணத்தை விக்கியின் கையில் திணித்தவள், 'அம்மாவின் சிகிச்சைக்கு என்னால் முடிந்தது இவ்வளவுதான் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு தான்.... மன நிம்மதிக்காக வெளியில் போவதாகவும், அதுவரை தாயையும் அண்ணனையும் பார்த்துக் கொள்ளுமாறு' வேண்டிக்கொண்டாள்.

"எனக்கு தெரியும் விக்கி இது உனக்கு பாரமான ஒன்றுதான்... ஆனால் ப்ளீஸ் எனக்காக இது ஒன்று மட்டும் பண்ணு... உன்னால முடிஞ்ச அளவுக்கு பாரு, முடியாத பட்சத்துல.. " என்று விம்மியவள் இதுக்கு மேல அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

இன்னும் பூமிக்கே வராத ஒரு உயிருக்காக எவ்வளவு இழக்க வேண்டியுள்ளது... என்று மனம் ஒரு பக்கம் விரக்தி ஆனாலும், இந்த குழந்தை வளர்வது ஆதியின் குடும்பத்திலிருக்கும் யாராவது ஒருவருக்கு தெரிந்தாலும் நிச்சயமாக அடியோடு அழித்து விடுவார்கள் என்ற காரணத்தினாலே யாரிடமும் கூறாமல் கிளம்புகிறாள்.

விக்கியோ அவளை புரியாத பார்வை பார்த்தவன், " இப்ப என்ன உனக்கு பிரச்சனை... இங்க நல்லா தானே போய்கிட்டு இருக்கு. ஏன்?? மனசு சரியில்ல வெளியில போய் கொஞ்ச நாள் தங்கிட்டு வரேன்னெல்லாம் சொல்லிட்டு இருக்க..இப்போ எங்க போகப்போற...?"என்றான்.

"ப்ளீஸ் விக்கி என்னய இப்ப எதுவும் கேட்காத" என்றாள் அழுகையோடு.

அவள் அழுவதை பார்க்க முடியாமல்,"சரி எதுவுமே நா உன்ன கேட்கல. எல்லாத்தையும் நானே பாத்துக்கிறேன்.. நீ எத பத்தியும் ஒன்னும் கவலைப்பட வேண்டாம். தயவு செஞ்சு அழுகாத என் முன்னாடி..." எனக் கோபமாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பிய அரைமணிநேரத்திலேயே, தனக்கு தேவையான சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டவள் வேறு யாரிடமும் எதுவும் கூறாமல் தாயைப் பார்த்து ஒரு மூச்சு அழுது முடித்தவள், தன் குழந்தையை ஸ்ருதி போன்ற சில பிணம் தின்னி கழுகுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கிளம்பிவிட்டாள்.

'இவ்வளவு நாள் குடும்பத்திற்காக ஓடினாள்....இனி தனது குழந்தைக்காக ஓட வேண்டும் ' என எண்ணியபடி தனது பயணத்தை தொடரலானாள்.

அவளது ஓட்டம் மீண்டும் ஆரம்பமானது......!

கருத்துத்திரி 👇👇👇
 
Status
Not open for further replies.
Top