ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அந்நேரம் சரியாக உள்ளே வந்த நிஷா.. "உனக்கு போதுமா நிலவா.. இன்னும் இங்கயே இருந்து எத்தனை உயிர காவு வாங்க போற... உனக்கென்ன நீ நல்லா இருப்ப உங்கூட இருக்க பாவத்துக்கு நாங்க சாகணுமா??.. உன்கூட இருந்தா அடுத்து சாக போறது நானா தான் இருக்கும்... ஒருத்தன் போய் சேந்துட்டேன்... இப்படி சம்மந்தமே இல்லாம சாக எனக்கு இஷ்டம் இல்ல, குட் பாய்..." என்று எங்கிருந்து வெளியேறி இருந்தாள்...

"இவ எதுக்குடா விஷ்னு சம்மந்தமே இல்லாம ரியாக்ட் பண்ணிட்டு போறா.." என்றாள் பூஜா யோசனையாக

"யாருக்கு தெரியும்... ஒருவேள அந்த ஆள் இவளா கூட இருக்கலாம்..." என்றவனது தொலைபேசி, அழைப்பை உணர்த்த வெளியே சென்றான்..



அங்கே தொலைபேசியில் ஜேகே அந்த உருவத்திடம் தான் பேசிகொண்டிருந்தான்..

"சொன்ன வேலையை சிறப்பா முடிச்சிட்டியே வெல் டன்... இனிமேலும் இதே பீல்ட்ல இருப்பானா அவன்..."

"கண்டிப்பா இருக்க மாட்டான் ஜேகே... எமோஷனலா ரொம்ப உடைஞ்சி போயிருக்கான்... இனி இருக்க மாட்டான்னு தான் தோணுது... இனி உங்க இடத்துல நீங்க தான் ராஜா..."

"தட்ஸ் குட் டு ஹியர்... அப்பறம் அந்த பைல் அன்ட் மெடிசின் எடுத்துட்டு இங்க வந்துடு..."

"நீங்க சொன்னது போல நாலு வருசமா பிரண்டா கூடவே இருந்து எல்லாம் சரியா பண்ணி முடிச்சிட்டேன் ஜேகே.. நான் கேட்டது..." என்று தயங்க

"நீ கேட்ட பணம் உன் அக்கௌன்டுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடிச்சு... பட் இன்னொன்னு?? என்ற கேள்வியுடன் அழைப்பு துண்டிக்கபட்டிருந்தது...

அவன் கேள்வியிலே அந்த உருவத்துக்கு புரிந்தது தான் கேட்ட இரண்டாவது விடயம் கிடைக்காது என்பது... ஏமாற்றம் தான் ஆனால் அவனிடம் போய் கேட்க முடியாதே உயிரோடு இருக்கவேண்டுமல்லவா??....



அனைத்தையும் சொல்லி முடித்த நிலவனுக்கே தெரியும் அவன் கடந்த காலத்தில் அவனுக்கே தெரியாமல் திறக்கப்படாத பக்கங்கள் உள்ளதென....

அவனிடம் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரிடமும் மௌனம் தான்... என்ன சொல்வது?? யாரை நோவது??..

அதிரல் தான் மௌனத்தை உடைத்திருந்தாள்..

"நீ அதுக்கான காரணத்த கண்டுபிக்க ட்ரை பண்ணலயா நிலவா?? பூஜா ராம் விஷ்னுலாம் எங்க இப்போ??...."

"நான் அப்போ இருந்த சூழ்நிலைல எதுவுமே வேணான்னு தோணிச்சு தனிமைய தான் துணையாவும் எடுத்துக்கிட்டேன்..."

"அப்பறம் இந்த மூனு வருசத்துல எவ்வளவோ மாறிடிச்சு... பூஜா ராம் வெடிங் முடிஞ்சி போரின்ல செட்டில் ஆகிட்டாங்க... விஷ்னுவும் ஹையர் ஸ்டடிக்கு போரின் போய்ட்டான்.. நிஷா என்ன ஆனான்னு இப்போவரை எதுவுமே தெரியல..."

"இப்படியே இருந்த நான் இதுக்குள்ள வர காரணம் என் தாத்தா தான்... என்ன சுத்தி பின்னப்பட்ட வலைய நானே அவிழ்க்கணும்னு எனக்கு புரிய வெச்சது அவருதான்... அதுக்காக என்ன நானே தயார் படுத்திகிட்டேன்... இப்போ நடந்தத கண்டுபிக்க ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்... சீக்கிரமே கண்டு பிடிச்சிடுவேன்... " என்று முடிக்க மீண்டும் அமைதி..


வேணுகோபாலும் ராஜய்யாவும் கூட அங்கே தான் இருந்தனர்... விடயம் கேள்விப்பட்டு இங்கே வந்த ராஜய்யாவுக்கு அத்தனை சந்தோசம்... திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்த பேத்தி எங்கே தனக்கு பின் தனிமரமாகி விடுவாளோ என்று பயந்தவருக்கு இந்த திருமண சேதி அமிர்தம் தான்...

நிலைமையை சுமூகமாக்கும் பொருட்டு வாசுகி தான் திருமண பேச்சை ஆரம்பித்திருந்தார்...

"ஏதோ நடந்தது நடந்திடுடிச்சு... கடவுள் ஒன்ன நடத்துறாருன்னா அதுல ஆயிரம் காரணம் இருக்கும்... அந்த விசயத்துலயே தேங்கி நிக்க கூடாது.... எங்க விட்டோமோ அதுக்கான பதில் அங்கேயே நம்மல சுத்தி தான் இருக்கும்.... சீக்கிரம் எல்லாமே வெளிச்சதுக்கு வரும் நிலவா..." என்றவர் சிறு அமைதிக்கு பின்

"கல்யாணம் பண்ணது தான் பண்ணிட்டாங்க அடுத்து என்னனு பேசணும்ல..." என்று தன் கணவரிடம் சொன்னவர்..

அங்கே அமர்ந்திருந்த ராஜய்யாவை பார்த்து "மாமா.. என் மகன் பண்ணது தப்பு தான்... உங்க பேத்தியோட சம்மதம் இல்லாம அவள கட்டிகிட்டான்... அவன் சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன்..." என்றார் உரிமையுடன்...

"அச்சச்சோ நீ ஏண்டாமா மன்னிப்பெல்லாம் கேக்குற... இதுல எனக்கு சந்தோசம் தான்... நானும் சில விஷயங்கள் சொல்லணும் முன்னமே சொல்லிட்டா நல்லது தானே...." என்று ஆரம்பித்து தன் பேத்தியின் கடந்த காலத்தை சொல்லி முடித்தவர் மேலும்...

"இதுல அவ தப்பு எதுவும் இல்லமா... அவ கடந்த பாதை தான் அவளை அப்படியெல்லாம் யோசிக்க வெச்சிருக்கு... ஆனாலும் பூனைக்கு மணி கட்ட ஒருத்தர் வேணும் தான... அத தான் மாப்பிளை பண்ணி இருக்கார்...." என்று இறுதியில் பேத்தியை வாரி அவள் முறைப்பையும் பெற்றுக்கொண்டார் மனம் நிறைந்த புன்னகையுடன்...

வாசுகி எழுந்து சென்று அதிரலை அனைத்துக்கொண்டவர்... "உனக்கு நான் இருக்கேன்டாமா... அம்மா நான் இருக்கேன்... இத்தன நாள் இழந்த உன் நாட்களையும் அம்மாவா நான் குடுக்குறேன்..." என்றவருக்கு கண் கலங்கிவிட்டது...

அவளும் அணைத்து அவரை சமாதானப்படுத்தி அமர வைக்க... அவரோ முடிவெடுதவறாக

"மாமா அடுத்த மாசம் வர்ற முகூர்த்தத்துல ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா வெச்சிடலாம்... இனிமேல் எல்லாம் என் ரெண்டு மகள்களையும் தனியா விட்டுவைக்க முடியாது..." என்றவர் பார்வை கார்த்தியை துளைக்க

அவனோ, "இதுக்கப்பறமும் அப்ஜெக்ஷன் சொன்னா என் உயிருக்கு உத்தரவாதம் இல்லனு தெரியும் சோ நானே ஒத்துக்கிறேன்.." என்றவன் சம்மதம் சொல்ல கீதாவின் கண்களில் ஒளி..

அவள் காதினருகே குனிந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.. "ரொம்ப சந்தோஷமோ... கல்யாணம் மட்டும் தான் ஓகே.. மத்ததெல்லாம் டிகிரி முடிச்சப்பறம் தான்..." என்றான்..

அவளும் அதே குரலில்.. "அவ்வளவு நல்லவனா மாமா நீ... அதையும் பாக்க தானே போறேன்..." என்றவள் கன்சிமிட்ட... "ரொம்ப கஷ்டம் தான் போலயே.." என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டான் கீதாவின் கார்த்திகேயன்...

பெரியவர்கள் ஒருபுறம் கல்யாண பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்க... அதிரலின் கைகளோ நிலவனின் கைகளுக்குள் இனிமையாய் அவஸ்தைபட்டு கொண்டிருந்தது...

அந்த பக்கம் கார்த்தி கீதா குசுகுசுக்க... இந்த பக்கம் நிலவன் அதிரல் காதல் சண்டை செய்ய... தனியே அமர்ந்திருந்த புகழுக்கு எங்கோ முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது... பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துவிட்டான்..

"அம்மா.... நானும் இங்க தான்மா இருக்கேன்..."

"இருடா புகழு.."

"இல்ல நானும் நிலவன் கூடத்தான் படிச்சேன்..."

"ஆமா தெரியுமே... அந்த காலத்துல அரை கால்சட்டையோட பள்ளிக்கூடத்துக்கு போகமாட்டன்னு அழுத பிள்ளை தானடா நீ..."

"மா... இப்போ அது ரொம்ப முக்கியமா... எனக்கு எப்போ கல்யாணம் பண்ணுவீங்க..."

"கல்யாணமா??? உனக்கா??? பச்சை மண்ணுடா நீ..." என்க அங்கிருந்த மொத்த பேரும் சிரித்துவிட்டனர்...

"வாழ்க்கை முழுக்க சந்நியாசி தான் போலயே..." என்று அவன் தலையில் கைவைத்து கொள்ள...

வாசுகி அவரது வழமையான டயலாக்கை சொல்லி இருந்தார்...

"புகழ் நீ பசில இருக்க அதான் உளறுற வா சாப்பிடுவோம்..." என்று எல்லாருக்கும் பரிமாற... புகழோ அப்பாவி பிள்ளையாய் முழித்திருந்தான்...


அப்படி அந்த உருவம் யாராக இருக்கும்???... நிலவன் இன்னும் எத்தனை இடர்களை சந்திக்க நேரிடுமோ??... அந்த ஜேகேவின் ஆட்டம் முடிய போகும் நாளோ மிக விரைவில்.....


ஜாதி மல்லி மலரும்.....


கருத்து திரி 👇👇👇👇



InShot_20240819_134938833.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 22




"ச்சே நிலவன் சொல்லுற போல இன்னும் கொஞ்சம் வளந்திருக்கலாம் டி அதி நீ.... எப்படியாச்சும் உள்ள போகணுமே... என்ன பண்ணலாம்..." என்று நிலவன் வீட்டு வெளி சுவரின் முன்னே நின்று புலம்பி கொண்டிருந்தாள் அதிரல்...


"வேற வழி இல்லை இதுதான் ஒரே வழி.." என்று எண்ணியவள் யாருக்கோ அழைப்பு விடுத்து... அழைப்பு எடுக்கப்பட்டதும்...

"ப்ளீஸ் டார்லிங்... ஹெல்ப் மீ..."

"என்னாச்சுடா..."

"கதவ திறந்து விடு டார்லிங்..." என்று கெஞ்ச அந்த பக்கம் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது

சற்று நேரத்தில் வாசுகி வெளியே வந்தார் அவளுக்கு கதவை திறந்து விட்டவர் "என்னடா இந்த நேரத்துல.."

"உன் புள்ள ரெண்டு நாளா என்கூட பேசமாற்றான் டார்லிங்..." என்றபடி உள்ளே வந்தவள் நேரே வீட்டினுள் நுழைய போக தடுத்து நிறுத்தியவர்

"அங்க எங்க போற உன் ஆளு அங்க கெஸ்ட் ஹவுஸ்ல...."

"ஏன் டார்லு அவன மட்டும் நாடு கடத்தி வெச்சிருக்க..."

"அதுவா.. வேலைய விடப்போறன்னு சொன்னதும் உன் மாமாக்கு கோபம் வந்து கொஞ்சம் திட்டிட்டாரா... எப்பவுமே திட்டாதவரு அன்னைக்கு திட்டவும் உன்னோட ஆளுக்கு கோபம் வந்து அங்க போய்ட்டாரு... அதுவே பழகிப்போய் இப்போ பிரைவசி வேணுமாம்னு தூங்க மட்டும் அங்க போயிடுவான்... மத்தபடி எல்லாம் இங்க தான்... "

"ரொம்ப தான் கோபம் வருது உன் புள்ளைக்கு.."

"பின்ன உன் புருஷனாச்சே உன் கோபத்துல பாதியாச்சும் இருக்கணுமே... "

"நோ நோ நான் இப்போ திருந்திட்டேன்.."

"இப்படியே பேசிட்டே இருந்தீனா இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும் எப்படி வசதி..."

"ஐயையோ ஆமால.. என்ன பிளஸ் பண்ணு டார்லிங்.." என்று அவர் காலில் விழுந்து எழுந்தவள் "பாய் பாய்.." என்று ஓட போக மீண்டும் தடுத்து அவள் கையில் கெஸ்ட் ஹவுஸ் சாவியினை வைத்திருந்தார் வாசுகி...



மெல்ல கதவை திறந்து பூனைப்போல் அவன் அறையை தேடி உள்ளே நுழைத்தவள் அவன் அருகில் சென்றாள்..

அங்கே நிலவனோ டெடி பியரை கட்டி அனைத்தபடி தூங்க இவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...

"வெளில பெரிய போலீஸ்னு சீன் போடவேண்டியது..." என்று சொல்லியபடி அவனை அப்படியே புகைப்படம் எடுத்துக்கொண்டாள்...

"பால்வாடி பாப்பாவ எல்லாம் கட்டிக்கணும்னு உனக்கு விதி அதி..." என்று தன்னை தானே சொல்லிக்கொண்டவள்.. மெல்ல அந்த பொம்மை இருந்த இடத்தில் தன்னை இடம் மாற்றிக்கொண்டாள்...

அத்தனை நெருக்கத்தில் அவனை பார்த்தபடியே... "உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்ல... நான் இல்லனா நீ நல்லா இருப்பனு நினைச்சி தான் விட்டுட்டு போனேன்... ஆனால் நீயும் நல்லா இருக்கல.. நானும் நல்லா இல்ல... என்னோட வீம்பால உன் கஷ்டத்துல என்னால கூட இருக்கமுடியாம போயிடிச்சு... என்ன மன்னிச்சிக்கோ..." என்றவள் அவன் கன்னத்தில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தவள்.. அடுத்த கன்னத்திலும் வஞ்சனை இல்லாமல் முத்தத்தை வழங்கினாள்..

கன்னத்திலிருந்த இதழ்கள் இப்போது அவன் இதழை சோதித்து பார்க்க ஆசை கொண்டதோ என்னவோ?? இப்போது அவள் மென் இதழ்கள் அவன் வன்மையான இதழை கொய்ய காத்திருந்த நேரம் ஒரு நூலிடைவெளியில் தன் கரத்தால் அந்த முத்தத்தை தடுத்திருந்தான் நிலவன்...

பட்டென்று கண்களை திறந்தவன் எழுந்தமர்ந்து நேரத்தை பார்க்க அதுவோ அதிகாலை இரண்டை காட்டியது... "இங்க என்ன பண்ணுற"

"என் புருஷன பாக்க வந்தேன்.."

"அப்படி யாரும் இங்க இல்ல நீ.. போகலாம்..

"மூன்..."

"செருப்பாலயே அடிப்பேன் போயிடு..."

"பரவாயில்ல அடிச்சிக்கோ.. உன்ன விட்டு போற ஐடியா இல்ல எனக்கு.." என்று அவள் அணைக்க இவன் தள்ளி விட என்று மாறி மாறி நடந்துகொண்டிருந்தது...

ஒருக்கட்டத்தில் நிலவனின் எதிர்ப்பு குறைந்து போக அவள் அணைப்பும் இறுக்கியது...

"மூன்..."

"..."

"மூன்.."

"ம்ம்ம்.."

"மூன்..."

"என்னடி..."

"என்ன மன்னிக்க மாட்டியா..."

"ம்ம்ஹும்.."

"நான் உன்னோட ஜாஸ்ல.."

"இல்ல...

"நான் பாவம்ல.."

"இல்ல.." என்க அவளோ அவனை விட்டு அணைப்பிலிருந்து விலகி அவனை எரிட்டு பார்க்க இப்போது அவளை அணைப்பது அவன் முறையானது...

"இப்படி இருந்தே பேசு..."

"அப்போ மன்னிப்பு..."

"தோணல.." என்க அவளிடம் சிறு அமைதி மீண்டும் அவனே "என்ன விட்டுட்டு போவியா?... அவளோ அணைப்பில் இருந்தபடியே இல்லை என்பதாய் தலையசைக்க அதனை தன் வெற்று மார்பில் உணர்ந்து கொண்டான்... கூடவே அவள் அழுகையையும்... அவளை தன்னை பார்க்கும் படி செய்தவன்...

"எப்போவும் என் ஜாஸ் மேல எனக்கு கோபம், ரொம்ப நேரம்லாம் தாக்கு பிடிச்சதில்ல... வருத்தம் மட்டும் தான்.. அதுவும் உன்மேல இல்ல உன் சூழ்நிலை மேல.. உனக்கு அந்தளவுக்கு நம்பிக்கைய கொடுக்காத என் மேல... இனி நீயா நெனச்சாலும் உன்ன எங்கிட்ட இருந்து பிரிக்க முடியாது..." என நம்பிக்கையோடு அவளை மீண்டும் அணைத்துக்கொண்வன் அறியவில்லை அவளை இழந்து தவிக்க போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை...


"ஆமா நமக்கு கல்யாணமாகி மூனு வருஷம் ஆகிடுச்சுல..." என்றான் நிலவன் கேள்வியாய்

"ம்ம்ம் ஆமா... மூனு வருஷனும் ரெண்டு மாசமும் ஆச்சு..."

"மூனு வருசமாச்சு ஒரு பர்ஸ்ட் நைட் கொண்டாலையே நிலவா நீ.. வெரி பேட்.... ஆனா உன் ஜாஸ் மனசு வெச்சா இப்போவே பர்ஸ்ட் மார்னிங் கொண்டாடலாம்... ஒத்துப்பாளா??..." என்றான் அவளுக்கு கேட்கும் படி...

"அடியேய் அதி... உன் மூன் எதுக்கு அடி போடுறான்னு தெரியுதுல... கொஞ்சம் சொல்லி வை.. ஊரறிய கல்யாணம் நடக்குற வர கசமுசா ஏதாச்சும் ஆச்சு... உன் ஏசிபி உயிருக்கு உத்தரவாதம் இல்ல பாத்துக்கோ...." என்றாள் அவனை போலவே...

"ஒரு முத்தா கூட இல்லையா???..."

"வாய்ப்பில்லை ராஜா.."

"தரும் போதே மூடிட்டு வாங்கி இருக்கலாம்.. அதுல போய் கோபத்த காட்டிட்டியேடா??..." என்று வாய்க்குள் முன்னங்க அவளுக்கு கேட்கவே செய்தது... இருந்தும் "என்ன?..." என்றாள் வேண்டும் என்றே..

"ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல என்ற படி அவள் மடியில் படுத்தவாறு, அவள் விரல்களை கேசத்துக்குள் நுழைத்துக்கொண்டவன்..

"அந்த டைம் உன்ன ரொம்ப மனசு தேடிச்சு ஜாஸ்... ஏன் என்னால ரெண்டு உயிர் போச்சேன்னு தெரியாம தவிச்சப்போ?... இப்படி உன் மடில படுத்துக்கணும்.. எனக்குள்ள இருந்த கேள்வி எல்லாம் உன்கிட்ட சொல்லணும்... நீ என் தலைய கோதி எதுவுமே இல்ல நிலவா, எல்லாம் சரி ஆகிடும் நான் இருக்கேன்னு சொல்லணும்... இப்படி எத்தனையோ தவிப்பு இருந்திச்சு...." என்றவன் முகத்தை அவள் வயிற்றில் புதைத்தவன் மீண்டும் அவள் முகம் பார்த்து..

"ஆனா... நீ இல்லையே... ஒருக்கட்டத்துல உனக்கான ஏக்கம் கூடிப்போய் உன்ன தேடி வந்துடலாமான்னு கூட தோணிச்சு... ஆனா நீயா தான விட்டுட்டு போன நீயாவே வரணும்னு எனக்குள்ள ஒரு ஆச... எந்த காரணமும் நம்ம காதலுக்குள்ள வரக்கூடாதுனு தோணிச்சு.... ஆனா மேடம் தான் வரவே இல்லையே.. இனியும் முடியாது நிலவா, போய் கால்ல விழுந்துடு கூட்டிட்டு வந்துடுடானு யோசிச்ச நேரம் தான் நீயா வந்த... அப்படி இருந்திச்சு தெரியுமா??..." என்றவன் அன்றைய நாளின் நினைவில் கண்களை மூடிகொண்டான்..

மேலும் அவனே.. "ஆனா மேடம் அப்பவும் எனக்காக வரல... செம கோபம்.. சரி எப்படியும் நம்ம கிட்ட தான வரப்போறா வட்டியும் முதலுமா பாத்துக்கலாம்னு விட்டுவெச்சிருந்தேன்..." என்று முடிக்க அவன் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தாள்...

"இனி எப்பவும் இந்த ஜாஸ் அவ மூனுக்கு தான்..." என்றாள் கண் சிமிட்டி...

"சீக்கிரமே நம்ம சுத்தி நடக்குற எல்லாம் பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வெச்சிட்டு... நமக்கான நாட்களை நிம்மதியா வாழலாம் ஜாஸ்.."

அவளோ அவன் ஆசைப்படியே தலை கோதியபடி.. "எதுவுமே இல்ல நிலவா, எல்லாம் சரி ஆகிடும் நான் இருக்கேன்... உன்னால முடியும் நீ கண்டுபிடிச்சிடுவ.." என்றாள் அவன் கண்களோடு கண் கலக்க விட்டப்படி... இருவர் கண்களும் லேசாக கலங்கி இருந்தது... நிலைமையை இலகுவாக்கும் பொருட்டு

"பூ, ராம், விஷ்ணு எல்லாம் இப்போ எப்படி இருக்காங்கனு பாக்கறியா..." என்றவன் தன் தொலைபேசியை எடுத்து புகைப்படத்தை தேடியப்படி... "உன் ஸ்ரீக்கு இப்போ குட்டி ஸ்ரீ கூட இருக்கு... ரெண்டு வயசு நம்ம குட்டி மாப்பிளைக்கு... நெஸ்ட் மந்த் வெகேஷனுக்கு வருவான் பாரேன்... செம சேட்டை...." என்றவன் ஒவ்வொன்றாய் காட்டியப்படி அவர்களை பற்றி சொல்லிக்கொண்டிருந்தான்...

"பேசலாமா நிலவா இப்போ அவங்ககூட"

"யா.. சூர்..." என்றவன் அவர்களுக்கு அழைத்திருந்தான்... பூஜா, ராம், குட்டி, விஷ்னு என அத்தனை பேரும் கான்பிரன்ஸ் காலில் இருக்க, அதன் பின் பேச்சுக்கா பஞ்சம்... கொஞ்சம் கவலை கொஞ்சம் அதிரடி கொஞ்சம் எதிர்பார்ப்பு என அன்றைய நேரம் அவர்களுக்கு கழிந்தது....




"கம் இன் வசந்த்..." என்று அனுமதிக்காக காத்திருந்த அவன் பிஏவை உள்ளே அனுமதிதான் ஜேகே..

"சார் அந்த பொண்ணு.." என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே

"எஸ் வசந்த.. ஐ நோ இப்போ அவ நம்ம ஹாஸ்பிடல்ல தான் இருக்கா??.. அதிரல் தான் அவளை அட்மிட் பண்ணி இருக்கா... அவளே பிளட் கொடுத்திருக்கா.. அதான..."

"எஸ் சார்... யூ ஆர் ரைட்... எப்போ அந்த பொண்ண நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போகனும்..."

"நோ நீட்..." என்றவன் சிகரெட்டை பற்ற வைத்து அமர்ந்திருந்த இருக்கையில் சாய்ந்து அமர.. வசந்தோ குழப்பதுடன்...

"சார் அந்த பொண்ணு உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியும்... ரெண்டு வருசமா தேடி அலைஞ்சு கஷ்டப்பட்டு கண்டுபிடிசீங்க.. இப்போ தேவ இல்லைனு சொல்றதுக்கு என்ன காரணம்... " என்றான்..

"ஜேகேவோ சிரித்தபடி... நான் சொன்னதை நீ சரியா கேட்ச் பண்ணால வசந்த்..." என்றவன் சிறு மௌனத்துக்கு பின் "அதிரல் தான் பிளட் கொடுத்திருக்கா.." என்ற வசனத்தை அழுத்தி சொல்ல அதன் பின் தான் வசந்துக்கு விஷயமே புரிந்தது...

"ஐ அண்டர்ஸ்டாண்ட் சார்..." என்றான்

"என்ன பண்ணனும்னு நான் இன்போர்ம் பண்ணுற வர அந்த பொண்ண வாட்ச் பண்ணு..."

"ஓகே சார்..." என்றவன் மேலும் "சார் அந்த நிலவன் கூட அதிரல் சேந்துட்டாங்கனு இன்போர்மேஷன் வந்திருக்கு..."

"சூப்பர் அப்போ ஒரு கல்லுல ரெண்டு மாங்கா.. அவங்களையும் வாட்ச் பண்ணு வசந்த்" என்றான்

"ஓகே சார்.." என்றவன் வெளியேறி இருக்க

ஜேகேவோ கண்களை மூடி கொண்டவன் "மறுபடியும் என்கிட்ட தோற்க ரெடியா இருந்துக்கோ நிலவா... ஏற்கனவே அடிச்சதுல இருந்தே இன்னும் எழல.. இந்த வாட்டி நீ உயிரோட இருந்தும் பிணம் தான்..." என்று அந்த அறையே அதிரும் வண்ணம் சிரித்தான் வெற்றிகளிப்பில்..




ஜெயராமனின் கார் அங்கே ஒரு பெரிய வீட்டின் காம்பௌண்டுக்குள் நுழைந்தது.. அத்தனை சாந்தமாய் இயற்கை எழில் நிறைந்து மரம் செடி கொடிகளோடு உறவாடியபடி குளிர்மையாய் அமைந்திருந்தது அந்த வீடு..

எப்போதும் போல் உரிமையாகவே உள்ளே நுழைந்து கொண்டார் ஜெயராமன்.. அங்கே சாரதா அமைதியாய் புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டிருந்தார்.. இவரை கண்டதும் புத்தகத்தை மூடி வைத்தவர் எழுந்து அவர் அருகில் வந்தார்..

"வாங்க.. என்னங்க இன்னைக்கு லேட்.. எப்பவும் வீகென்ட் சரியா ஒன்பதுக்கெல்லாம் வந்துடுவீங்க.. இன்னைக்கு டென் மினிட்ஸ் லேட்..." என்று அவர் கோபித்துகொள்ள

"அச்சோ சாருமா உன் பையன் என்ன விட்டதானே.. ஸ்ட்ரிக்ட் ஆபிசர் மாதிரி எப்போ பாரு என்ன ரூல் பண்ணிட்டே இருக்கான்.. அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்திருக்கேன் நீ என்னடான்னா என்மேல கோச்சிக்கிற.." என்றார் எதை சொன்னால் அவர் உருகுவார் என்று தெரிந்தவராக..

"நம்ம ஜெகா ரொம்ப பெரியவன் ஆகிட்டான்லங்க.."

"ஆமா பின்ன இல்லையா?.. முப்பது வயசாச்சு.. ஆறடிக்கும் மேல இருக்கான்.. நீ வேற குட்டியா இருக்க அவன அண்ணாந்து தான் பாக்கணும் போ.." என்று அவர் சிரிக்க.. சாரதாவால் சிரிக்க முடியவில்லை.. அவர் மௌனமாகி விட.. அப்போது தான் அவர் செய்த மடத்தனம் ஜெயராமனுக்கு புரிந்தது..

"சாருமா நான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன் டா.. நீ இப்படி பண்ணலாமா சொல்லு.. உன்ன பாக்க வந்த என்ன ஒழுங்கா கூட கவனிக்கல நீ போ நான் போறேன்.." என்றார் பொய் கோபம் காண்பித்து..

"அச்சோ இல்லைங்க.. ஜெகா என்ன கிட்ட கூட சேத்துக்க மாட்டேங்குறான் அந்த கவலை தான் எனக்கு..."

"அவன் சேத்துகலனா என்ன டா.. அவன் என்னதான் பண்ணாலும் நீ அவன் அம்மா இல்லைனு சொல்லிட முடியுமா சொல்லு.. அவனே வேணான்னாலும் நீ குடுத்த உயிர் அது... உன்னோட அழகும் அறிவும் தான் அவன்கிட்ட அப்படியே.. உன்ன வேணான்னு சொன்னவன் அத வேணான்னு சொல்லலையே... புரிஞ்சிப்பான்டா.."

"எனக்கு நம்பிக்கையே விட்டு போச்சுங்க... நான் அவன விட்டு வந்து பதினாலு வருசமாச்சு.. இப்போ வர என்ன அவன் தேடலயேங்க.. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன் நான்... எதுக்கு ஒதுக்கபடுறேன்னு கூட தெரியாம என் பிள்ளைய இழந்து தவிக்கிறேனே..."

"எனக்கும் கவலை தான் சாரு.. எனக்கும் சொல்ல மாட்டேங்குறான் எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன் வாய திறப்பனானு இருக்கான்.. என்னதான் அறிவாளியா இருந்தாலும் இந்த விசயத்துல அவன் முட்டாள் தான்.. ஒரு பிரச்சனை வந்தா தீர விசாரிக்கணும்னு கூடவா அவனுக்கு தெரியல...."

"உங்ககிட்டனு இல்லங்க அவன் ருத்ரா கிட்ட கூட சொல்ல மாட்டேங்குறானாம்... அவ இருக்க போய் அவனுக்கு தாய் பாசம் கிடைக்கிது இல்லனா என் புள்ளைக்கு தாய் அரவணைய்ப்பே கிடைக்காம போயிருக்கும்... இப்போ ருத்ராவும் முடியாம இருக்கா அவள கூட வந்து பாக்க முடியாத நிலமைல இருக்கேனே... " என்று தன் முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்டார்...

"உன் தங்கச்சிய நீதான் மெச்சிக்கணும்.. எனக்கென்னமோ அவதான் எல்லாத்துக்கும் காரணமோனு தோணுது.. அப்பா இருந்த வரை அவளை நம்பாதனு சொல்லிட்டே இருந்தாரு..."

"நீங்க அரசியல்வாதி கூடலாம் பேசி பேசி உங்களுக்கு எல்லாம் கெட்டவங்களாவே தெரியுறாங்க.. அவ பாவம்ங்க சின்ன வயசுல இருந்தே என் பின்னாலயே இருந்துக்குவா.. காதல்னு போய் அவ லைப் இப்படி ஆகிடுச்சு.. நல்லா வாழ வேண்டிய வயசுல வாழ்க்கைய தொலைச்சவ... அவள போய் குத்தம் சொல்லுறீங்களே..."

"நீ விட்டா மகன் தங்கச்சினு அவங்க புராணமே பாட்டிட்டு இருப்ப, கொஞ்சம் புருஷனையும் கவனிமா... பேசின வரைக்கும் போதும் நீ வா பசிக்குது டிபன் என்ன பண்ணிருக்க.."

பசி என்றதும் மற்றது மறந்தவர் அவருக்கு பரிமாற தொடங்கினார்... அன்றய நாள் மதியம் வரை அவர்கள் அன்பிலே அந்த வீடு நிறைந்தது... கணவன் சென்றதும் தோட்டத்தில் அமர்ந்தவருக்கு மனதில் பழைய ஞாபகங்களே நிறைந்திருந்தது... அதில் அவர் அறியாத பக்கங்களோ... அவர் வீழ்த்தப்பட்ட சதிகள்...


சாரதா அழகான அமைதியான பெண்மணி... ஜெயராமனின் அன்பு காதல் மனைவி.. இரண்டு டாக்டர் பட்டங்களை கைவசம் கொண்ட தலை சிறந்த மருத்துவரும் கூட.. அவரது முப்பதாவது வயது வரை பாராட்டும் பட்டமும் புகழும் என்றே வாழ்ந்தவர்.. தோல்வி கூட எட்ட நின்று தான் அவரை பார்த்தது.. காதல் திருமணம்.. அன்பான கணவர்... குழந்தை செல்வமென வாழ்க்கை செழிப்பாகவே சென்றது..

ருத்ரா அவர் கூட பிறந்த தங்கை, இரட்டை பிறவியும் கூட ஆனால் இருவருக்குள்ளும் சிறிது வித்தியாசம் இருக்கும். அவர் தங்கை இருபது வயதிலேயே காதல் என்று ஊரை விட்டு ஓடியவர்.. பல நாட்கள் தேடியும் அவரை பற்றி தகவல் எதுவும் தெரியவில்லை.. எங்கயாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற பிராத்தனையோடு சாரதாவும் அவர் வாழ்க்கையை பார்க்க, பத்து வருடம் தன்னால் ஓடியது.. அவ்வப்போது தங்கையின் ஞாபகம் எழவே செய்யும் அப்போதெல்லாம் பிராத்தனையோடு அந்த நேரத்தை கடந்து விடுவார் சாரதா..

இப்படியே நாட்கள் நகர அவர்களது மகன் ஜெகாவிற்கு ஏழு வயதாகும் போது மீண்டும் கருவுற்றிருந்தார் சாரதா.. இந்த முறை மகள் தான் என ஜெயராமனும் குழந்தை ஜெகனும் வீட்டை இரண்டாக்கிவிட்டனர்.. இந்த நேரம் ஜெயராமனின் பரம்பரை கம்பனி ஒன்றின் வெளிநாட்டு கிளையை ஆரம்பிக்க இரு வருடம் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை ஏற்பட, அவளுக்கு சாரதாவை விட்டு செல்ல மனமில்லாமல் தன் தந்தையை பேசி அனுப்பி வைத்திருந்தார்..

அப்போது சாரதாவுக்கு மூன்று மாதம் ஓரளவுக்கு வயிறு வெளியே தெரிய ஆரம்பித்திருந்தது... ஜெயராமனும் கட்சியில் நல்ல நிலையில் தான் இருந்தார்.. குடும்ப தொழிலை ஒரு புறமும் அரசியலை ஒருபுறமும் என சமாளித்து கொண்டார்... அதிலும் அவர் செய்யும் கொலை கொள்ளை போன்ற அரசியல் வேலைகள் எல்லாம் சாரதாக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்..

யாருக்கு எப்படியோ சாரதாக்கு மட்டும் கடைந்தெடுத்த நல்லவராக தான் தெரிய வேண்டும் என்றே விரும்புவார்... இப்படி அவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரம் தான் அவர் தங்கை ருத்ரா அவர் வீடு தேடி வந்திருந்தார்... கணவன் இறந்துவிட்டான் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை என சொல்லி அவர்களுடனே தங்கி கொண்டார்...

சாரதாக்கும் மசக்கை ஒருபுறம் வேலை ஒருபுறம் என படுத்தி எடுக்க குழந்தை ஜெகன் ருத்ராவின் கையில்.. சாரதாவே பார்த்துக்கொள்வதாய் கூறினாலும் ருத்ரா விடுவதில்லை.. அவனை கைக்குள்ளேயே வைத்துக்கொண்டார்... தங்கையின் மனநிலை அறிந்து ஆறுதலாய் மகனை நினைக்கிறாள் என புரிந்து கொண்ட அவரும் தடுக்கவில்லை...

எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது ருத்ராவின் திட்டப்படி... தன்னை நம்பவைக்க பெரிதாய் நடிக்க தேவை இருக்கவில்லை, சிறு வயதிலிருந்தே சாரதாவிடம் நடிப்பவராயிற்றே.. எனவே அவர் திட்டபடியே அழகாய் காய் நகர்த்தி கொண்டிருந்தார்..

சாரதா மீது அப்படி ஒரு பழி வெறி, பொறாமை அவருக்கு.. சிறிய வயது முதல் இரட்டை பிறவியாக இருந்தாலும் தன்னை விட அழகாய் இருப்பதால், தன்னை விட நன்றாக படிப்பதால், தன்னை விட அவரையே எல்லோருக்கும் பிடிப்பதால் என ஒவ்வொரு விடயத்திலும் பகையை வளர்த்துகொண்டிருந்தார் ருத்ரா... அந்த கண்ணோட்டத்திலே பார்ப்பதாலோ என்னவோ அவருக்கு அப்படியே தான் மனதில் பதிந்து போனது...

அதிலும் உச்சமாய் அவர் விரும்பியவர் சாரதாவை காதலிப்பதாய் அவரிடம் சொல்லி உதவி கேட்டதும் மனதில் ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார்.. எப்போதும் போல தன்னிடம் இல்லாத எது அவளை அழகாக காட்டுகிறது என்ற குரோதம் மேலும் வளர்ந்து விருட்சமாகியது... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை படிக்க மறந்து விட்டார் போலும்....

காதல் கை கூடாத கோபத்தில் அதை அப்படியே விடவில்லை.. சாரதா போல் பேசி ஏமாற்றி அவருடன் ஊரை விட்டே ஓடிப்போய் திருமணமும் செய்து கொண்டார்... அதுவும் இந்த வாழ்க்கை அவருக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசையினால் அல்ல, சாரதாவிற்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காக தான் இந்த அவசர திருமணமும்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
இந்த விடயம் பின்னாளில் தெரிந்தது கொண்ட அவர் கணவர் கொதித்தாலும் தன்னை நம்பி வந்த பெண் என சந்தோசமாக தான் பார்த்துக்கொண்டார், ஆனாலும் மனதில் எரிந்துகொண்டிருந்த தீ அவரை வாழ விடவில்லை.. கணவர் தொட்டாலும் அவளை நினைத்து தொடுகிறாரோ என கற்பனையை வளர்த்து வாழ்க்கையை நரகமாக்கி கொண்டார்... இப்படியே சமீபத்தில் விபத்து ஒன்றில் கணவனையும் பறிகொடுக்க அதற்கும் சாரதா மீதே பழியை போட்டுகொண்டார்...

அதற்கு பிறகு பைத்தியம் பிடித்தவர் போல் தினமும் அவர் உடன் பிறப்பை பற்றியே தேட தொடங்கினார்... அந்த தேடலின் முடிவில் சாரதா நன்றாக வாழ்வதை தினம் தினம் பார்த்து, கேட்டு என இவரால் நிம்மதியாய் வாழ முடியாமல் போனது.. அதனாலேயே கிளம்பி வந்துவிட்டார் அவர்கள் நிம்மதியை குழைக்க....

முதலில் ஜெயராமனை தான் வளைக்க பார்த்தார் ஆனால் அவரிடம் எடுப்படவில்லை.. சதா சாரதா புராணம் பாடும் அவரை வழிக்கு கொண்டு வர முடியாமல் போனது... எனவே அவர் அடுத்ததாய் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் ஜெகதீஸ்வரகிருஷ்ணன்...

அந்த நேரத்தில் சாரதாவிற்கு ஏற்பட்ட விபத்து ஒன்றில் கடுமையான காயத்துக்குட்பட்ட சாரதாவிற்கு கரு கலைந்திருந்தது.. அதுவும் ருத்ராவின் கைவண்ணம் தான்.. அந்த சம்பவத்தில் சாரதா நிலை குழைந்து விட ஜெயராமன் கவனம் எல்லாம் அவர் மீதுதான்.. சாரதாவும் குழந்தையை கேட்கும் போதெல்லாம் தான் பார்த்துக்கொள்வதாக நம்பிக்கை அளித்திருந்தவர்.. ஜெகாவிடம் இருவரும் அவனை கவனிக்கவில்லை என்ற விம்பத்தை ஆழமாய் விதைத்திருந்தார் ருத்ரா...

சிறு வயதில் இருந்து தான் செய்த வேலைகளை எல்லாம் சாரதா அவருக்கு செய்ததாய் சொல்லி அவன் மனதில் வெறுப்பை விதைத்திருந்தார்.. அதில் அவரது காதலும் உள்ளடக்கம்.. சிறியவன் ஆனாலும் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும் அப்போதே அவனிடம் இருந்தது.. அந்த அறிவு பயன்படுத்தப்பட்ட விதம் ஆரம்பத்திலே கேள்வி குறியானது தான் அந்தோ பரிதாபம்...

எல்லாம் செய்தும் அவ்வப்போது ஜெகா அம்மாவையே கேட்டு அழுவதை தடுக்க முடியாமல் போனது அவரால்.. கடுமையாக யோசித்தவர் அவனது எல்லாவற்றையும் விட கொடுமையின் உச்சமாய் சாரதா போல் வேடமிட்டு இரண்டு மூன்று முறை வீட்டு தோட்ட வேலைகாரனுடன் தப்பாக நடந்து கொண்டவர் அதனை அவன் பார்க்குமாறும் செய்திருந்தார்... சிறியவன் காண கூடாது காட்சி... ஆனால் செய்ததே அவன் பார்க்க தானே...

அவரே அவனிடம் இது வழமையாக நடக்கும் விடயம் என்றும் அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என அவன் முன் அழுது நாடகம் போட்டிருந்தார் அக்காவை காப்பாற்றுவதை போல... இது எதையும் அறியாத சாரதா இறந்த குழந்தைக்காக வருந்தி வாழும் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருந்தார்..

சாரதா ஓரளவுக்கு தேறி வந்த பிறகு தான் மகனின் ஒதுக்கம் அவர் கண்ணில் பட்டது.. பேச்சு முற்றிலுமாய் குறைந்திருந்தது.. அவனிடம் புதிதாய் வெறுப்பான பார்வையை உணர்ந்தவர் உடைந்தே போனார்.. அவராக பேசப்போனாலும் பேசவில்லை அவன்.. ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடிக்காத குறை தான் சாரதாவிற்கு.. அதன் பின் எவ்வளவு போராடியும் பேச வைக்கவும் முடியவில்லை காரணமும் அறிய முடியவில்லை..

அவன் வளர வளர பிடிவாதமும் சேர்ந்தே வளர்ந்தது.. ஜெயராமனும் எவ்வளவோ பேசியும் அவன் மாறுவதாக இல்லை... அவருடன் சாதாரணமாக பேசுவான் அவ்வளவே.. ருத்ரவிடம் தான் அவன் ஒட்டுதல் எல்லாம்.. ஊருக்கு வந்த ஜெயராமனின் தந்தைக்கு பெரிய அதிர்ச்சி... அவர் பங்குக்கு அவரும் அவனுடன் போராடி பார்த்தும் பலன் பூச்சியமே... இப்படியே வருடங்கள் உருண்டோட ஒரு தாயின் பரிதவிப்பில் குளிர் காய்ந்துகொண்டிருந்தார் ருத்ரா... அவர் மீது சிறு சந்தேகம் கூட வராமல் பார்த்துக்கொண்டது அவர் சாமர்த்தியம்...

அவனது பதினாறாம் வயதில், தன் மகன் தவறான பாதையில் போவதை உணர்ந்தவர் ஒரு தாயாய் வலுகட்டாயமாக பேசி அவனை கண்டிக்க முயற்சிக்க, நிலைமை விபரீதமானது.. அவனை அவனே காயப்படுத்தி ஐந்து நாட்கள் ஹாஸ்பிடலே கதி என்று உயிருக்கு போராடினான்... அதில் பயந்து போனவர் முற்றுமாய் அவரை அவனிடமிருந்து ஒதுக்கிக்கொண்டார்... எப்படியாவது மகனுக்கு புரிய வைத்து விடலாமென எண்ணியவர் இப்போதைக்கு அவன் உயிரோடு இருப்பதே போதும் என்பதாய் வெளியேறினார்... கூடவே வருகிறேன் என்ற ஜெயராமனையும் தடுத்துவிட்டார்.. மகனுக்கு அவராவது இருக்கட்டும் என..

பெற்றவர்கள் குணம் குழந்தைக்கு இருந்தாலும் வளர்ப்பவர்கள் குணமே அதிக ஆதிக்கம் செலுத்தும்.. இவனிலும் ருத்ராவின் குணம் ஆழ புதைந்து கொண்டது மீள முடியாதபடி.. அதுவும் ருத்ரனுக்கே ருத்ரனாய்...


யோசனையில் அமந்திருந்த சாரதாவிற்கு இன்றுவரை மகனின் கோபத்துக்கான காரணமும் தெரியவில்லை தன்னை புரியவைக்கவும் முடியவில்லை.. தான் வந்திருக்க கூடாதோ, கூடவே இருந்திருக்க வேண்டுமோ என எண்ணாத நாளில்லை... இருந்தும் இன்னும் நம்பிக்கொண்டே தான் இருக்கிறார் மகனை பேச வைத்துவிடலாமென... அவர் மகன் எப்போதோ அரக்கன் ஆகிவிட்டான் என்பதை அவருக்கு யார் எடுத்துச்சொல்வது...



இங்கே செய்த பாவத்திக்கு பலனாய் அந்த அறையில் எழ கூட முடியாத நிலையில் படுத்திருந்தார் ருத்ரா.. அவசர தேவையை கூட இன்னொருவர் மூலம் செய்து கொள்ளும் நிலைமை... சாரதா வீட்டை விட்டு சென்ற இரண்டு வருடத்தின் பின் பக்கவாதத்தில் விழுந்தவர் தான், இன்று வரை அதே கெதி..

இப்போது இரண்டு வருடங்களாக இதயத்தின் செயற்பாடும் பலவீனம் ஆகி இருந்தது.. கிட்டத்தட்ட உயிர் ஊசலாடும் நிலைமை என ரொம்ப மோசமாக தான் இருந்தார்.. ஆனால் சிறிதும் குணம் மாறவில்லை.. இப்போதும் தன் நிலையை எண்ணி கவலை கொள்ளவோ செய்தவற்றை எண்ணி வருந்தவோ இல்லை.. குள்ளநரி தன் குணத்தை என்றும் மாற்றிகொள்வதில்லையே..


அந்த அறைக்குள் நுழைந்து கொண்டான் ஜெகதீஸ்வரகிருஷ்ணன்.. அவனை கண்டதும் அவர் உடல் தன்னால் நடிப்பை தொடர்ந்தது... பல வருட பழக்கத்தில் தானாகவே அவருக்கு அவர் உடல் பழக்க பட்டிருந்தது...

"ருத்ரம்மா.. சாப்பிட்டாச்சா.." என்று அவர் கைகளை பிடிக்க ஆமா என்பதாய் கண்களை மூடி திறந்தார்..

"நீங்க கவலை படாதீங்க உங்கள நான் காப்பாத்துவேன்.. உங்களுக்கானத தேடி கண்டுபிடிச்சிட்டேன் ருத்ரம்மா.. சீக்கிரம் இன்னொன்னும் கண்டுபிடிச்சிட்டா உங்கள காப்பாத்திடுவேன்..."

"நீ சாப்யா செகா..." என்றார் வராத பேச்சிலும் கஷ்டபட்டு..

"நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க ருத்ராம்மா.. நான் சாப்பிட்டேன்.. சீக்கிரமே பழையப்படி உங்கள பேச வெச்சிருவேன்.. எழுந்து நடப்பீங்க பாருங்களேன்..." என்றான் புன்னகைக்க பதிலுக்கு அவரும் புன்னகைத்தார்..

"ஓகே ருத்ராம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க நான் அப்பறமா வரேன்.." என்றவன் எழுந்து செல்ல.. போகும் அவனையே பார்த்தவர் மனதில் "இப்பவும் ருத்ராம்மான்னே சொல்லுறியா.. அம்மான்ற வார்த்தையை மறக்க வெச்ச எனக்கு எனக்கானதா மாத்திக்க முடியலயே.. வருவேன் திருப்பி வருவேன்.. உன்னாலேயே வருவேன் நீயே என்ன மறுபடியும் கூட்டி வருவ.... உன்னையும் அழிப்பேன்.. உன் மேல பாசமா நடிச்சா நீ என் பிள்ளை ஆகிடுவியா?.. நீ அறிவாளியா? உன்னையே முட்டாளாக்குனவடா நானு... நீ என் வாழ்நாள் எதிரியோட பையன்.. உன்ன மட்டும் விட்டுடுவேனா.. இதுக்காக என் மகனையே கொன்னுட்டு இங்க வந்தவடா நானு..." என்று கொடூரமாய் எண்ணிக்கொண்டார்..


இப்படிப்பட்ட நரியிடம் வளந்தவன் மட்டும் நியாயமானவனாகவா இருக்க முடியும்.. அவன் என்னதான் சிறுவயதிலேயே பாழாக்கபட்ட குழந்தை என்றாலும் அவனும் அந்த நரியில் ஒருவன் தான்.... இரக்கமற்ற ஓநாய் அவன்... இவனுக்கான அழிவு வெகு தூரத்தில் இல்லை...


அதிரல் மீது விழுந்த அவன் பார்வையை நிலவன் கண்டு கொள்வானா???... கேள்விகளுக்கான விடைகளை கண்டறிந்து தன்னவளை காப்பானா???.....




ஜாதி மல்லி மலரும்......


கருத்து திரி 👇👇👇👇

InShot_20240820_170400512.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 23



அன்று காலை முதல் வேலையாக நிலவன் சென்றது அன்னை தெரேஷா குழந்தைகள் காப்பகத்துக்கு தான்...

அவனுக்கு தான் முரளிகிருஷ்ணன் கொடுத்திருந்த வேலையை முடிக்க வேண்டிய கடமை இருந்ததே...

உள்ளே நுழைய முன் அங்கே நின்ற கவலாளியிடம் பேசியபடி சுற்று வட்டாரத்தில் உள்ள விடயங்களை ஒருமுறை நன்கு உள்வாங்கி கொண்டான்...

"உள்ள தான் சார் இருக்காங்க.. நீங்க போங்க.." என்றவர் அங்கே பொறுப்பாக இருக்கும் சிஸ்டர் மேரியின் அறைக்கு வழி காட்டினார்... அவனோ அவருக்கு நன்றியை தெரிவித்து.. சிஸ்டர் மேரியின் அறையை அடைந்தான்...

"எக்ஸ்கியூஸ் மீ..." என்று மரியாதைக்காக திறந்திருந்த கதவில் தட்டியவன் அவர் அனுமதியுடன் உள்ளே நுழைந்தான்...


அவர் இவனை அமர சொன்னவர் கேள்வியாக பார்க்க " குட் மார்னிங் சிஸ்டர்... ஐ எம் ஏசிபி நிலவன்... அந்த பையர் ஆக்சிடெண்ட் கேஸ விசாரிக்க வந்திருக்கேன்..."

அவரோ அவரது மூக்கு கண்ணாடியை கழட்டியவர்.. " குட் மார்னிங் சார்... நான் வேணா கேஸ வாப்பஸ் வாங்கிடுறேன்.. இனிமேல் இது சம்மந்தமா எந்த விசாரனையும் வேண்டாமே.." என்றார்

"என்னாச்சு சிஸ்டர் ஏதாச்சும் மிரட்டல் எதுவும் வந்திச்சா..."

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை... இதுக்காக இன்னொரு உயிரும் போகணுமா?? அவங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க சார்... வெற்றி சார் எவ்வளவோ போராடுனாரு கடைசில அநியாயமா அவர் உயிரும் போயிடிச்சு... அவர் வைப் குழந்தை ரெண்டு பேரும் இங்க ரெகுலரா வருவாங்க ரொம்ப ஹெல்பும் பண்ணுவாங்க... இப்போ எல்லாம் அவங்கள பாக்கும் போது எனக்குள்ள எழுற குற்றவுணர்ச்சிய தடுக்க முடியல.."

"அதுக்காக அப்படியே விட முடியுமா சிஸ்டர்.. எத்தனை உயிர் போயிருக்கு... இதோட நிக்கபோறதும் இல்ல.. இந்த ஒரு ஆசரமமான்னு கேட்டா அதுவும் இல்ல... எங்கயோ ஒரு இடத்துல எத்தனையோ குழந்தைங்க காரணமே தெரியாம சிதைக்கப்படுறாங்க.. அதுக்கான வேர கண்டுபிடிச்சி அழிச்சா தான் இனி வர்ற சமூதாயத்தையாவது காப்பாத்த முடியும்... நீங்க சொல்ல போற ஏதாவது ஒரு விஷயம் அவங்கள பிடிக்க உதவுனாலும் உங்களுக்கு உள்ள குற்ற உணர்ச்சி தன்னால போகும்... ஈவன் வெற்றி சாரும் இதத்தான் விரும்புவாரு.... அவர் உயிர் விட்டதுக்கு நாம நியாயம் செய்ய வேணாமா??...." என்றவன் முடிக்க அவன் பேச்சிலுள்ள நிதர்சனம் புரியதான் செய்தது அவருக்கும்...

"ஓகே சார்.. கர்த்தரோட விரும்பமும் இது தான்னா அப்படியே செய்வோம்... உங்களுக்கு என்ன தெரியணும்..."

"அன்னைக்கு எக்ஸாட்டா என்ன நடந்திச்சினு சொல்ல முடியுமா..."

"அன்னைக்கு நைட் இங்க பவர் இல்லாம போயிடிச்சு... சோ பசங்களுக்கு நைட் சாப்பாடு கொஞ்சம் ஏர்லியா முடியவும் பசங்களுக்கு நைட் பிரேயர் நடந்திச்சு... அப்பறம் அவங்கவங்க இடத்துக்கு தூங்க போய்ட்டாங்க... புள்ளைங்க தூங்குனப்பறம் நானும் எங்க ஸ்டாப்ஸ்ஸும் தூங்க ஆரம்பிச்சோம்.."

"நைட் ஒரு மூனு மணி இருக்கும் திடீர்னு எனக்கு முழிப்பு வந்துடிச்சு... ஏதோ பெரிய சத்தம் ஒன்னு கேட்டது போல இருந்திச்சேன்னு வெளிய போய் பாக்கலாம்னு போனேன்.. அப்போ திடீர்னு ரெண்டு பில்டிங்கும் தீப்பிடிச்சு எரிய ஆரம்பிச்சிடிச்சு... அதுக்கப்பறம் பதறி வாட்மேனும் நானும் தீயணைக்க முயற்சி செஞ்சும் உடனே அணைக்க முடியல.. பையர் சர்வீசுக்கு சொல்லி அவங்க வர்றதுக்குள்ள ஏகப்பட்ட சேதம்.. எத்தனையோ குழந்தைங்க தூக்கத்துலேயே கருவி போய் இருந்தாங்க... கொஞ்ச பேரதான் காப்பாத்தவே முடிஞ்சிது..." என்று முடித்தவர் கண்கள் இப்போதும் அன்றைய நாளின் தாக்கத்தில் கலங்கியது... அவர் சொன்னதை உன்னிப்பாக கேட்டுக்கொண்டவன்

"அப்பறம் எது சிஸ்டர், இது ஆக்சிடென்ட் இல்லை திட்டமிட்டு தான் நடந்திச்சினு உங்கள கம்பளைண்ட் பண்ண வெச்சிது..." என்றதும் அவர் கண்களை துடைத்துக்கொண்டு

"அன்னைக்கு ஏதோ சத்தம் கேட்டு தான் நான் வெளியே போனேன்.. சோ அப்போ யாரோ வந்திருக்கணும்னு என்னோட மூளைக்குள்ள சந்தேகம் ஓடிட்டே இருந்திச்சு... ஆனா இதெல்லாம் வெறும் சந்தேகம் தானேன்னு பெரிசா எடுத்துக்கல... சம்பவம் நடந்து சரியா ரெண்டு நாள் கழிச்சு இங்க எல்லா இடமும் சுத்தப்படுத்தும் போது, ஒரு வாட்ச் பின் பக்க கதவுகிட்ட கிடந்ததா வாட்ச்மேன் கொண்டு வந்து கொடுத்தாரு... என்னனு பார்த்தா ரொம்ப விலை உயர்ந்த வாட்ச் அது... அந்த நாள்ல இருந்து என் சந்தேகம் கூடிட்டே போக ஆரம்பிச்சிது... நாள் போக போக அந்த பிஞ்சி ஓலங்கள் என்ன தூங்க விடல..."

"அதனால இங்க வழமையா வர்ற பாலமிரளிகிருஷ்ணன் சார் கிட்ட என்னோட சந்தேகத்த சொல்லி அந்த வாட்சையும் கொடுத்தேன்... அவரும் ரகசியமா ஒரு கம்பளைண்ட் எழுதி தர சொன்னாரு..." என்றவர் முடிக்க

நிலவனோ, "ம்ம்ம்.. இப்போ உங்க சந்தேகம் ஊர்ஜிதமாகிடுச்சு..."

"ஆமா நானும் ஆரம்பத்துல சந்தேகமா தான் சொல்லி இருந்தேன்... அதுவே உண்மையா இருக்கவும் ஆடிப்போட்டேன்... அதிலயும் காரணம் அந்த ஜெயராமன் என்கிறப்போ ரொம்ப கவலையா இருந்திச்சு... சாரதா அம்மா ரொம்ப நல்லவங்க இந்த இடத்த அவங்கதான் ஆசிரமதுக்காகனு கொடுத்தாங்க... அவர் கணவரே இதுக்கு காரணம்னு என்னால நம்பவே முடியல..."

"வழமையா ஜேகே ஹாஸ்பிடல்ல இருந்து தான் இங்க பிரீயா மெடிக்கல் கேம்ப் நடத்துவாங்க.. அந்த சம்பவம் நடக்க ஒரு மாசத்துக்கு முன்னாடியும் ஜெயராமன் சார் தலைமையில இங்க மெடிக்கல் கேம்ப் நடந்திச்சு... வழமையா அவங்களே வர்றதால யாருமே இன்போர்ம் பண்ணாம அந்த நேரத்துக்கு சரியா மெடிக்கல் டீம் எப்படி வந்தாங்கன்ற கேள்வி எனக்குள்ள தோணாமலே போயிடிச்சு..." என்றார் கவலையுடன்...

எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டவன் அவனுக்கான சந்தேகத்தையும் அவரிடம் கேட்டான்.. "சிஸ்டர் இங்க வயசுப்படி தான் குழந்தைங்க பிரிஞ்சு தூங்க விடுவீங்களா??..."

"அப்படி எதுவும் இல்ல சார்.. ரெண்டு பில்டிங்லையும் பிள்ளைங்க தூங்குவாங்க.... எல்லா வயசுலயும் கலந்து தான் பிரிச்சிருக்கோம்... ஸ்டாப் ஒருத்தரும் அவங்க கூட தூங்குவாங்க... சின்ன பசங்க மட்டும்னா பயந்துக்குவாங்களே சார் அதனால அந்த ஏற்பாடு..."

"ஓகே சிஸ்டர்... என்னவா இருந்தாலும் உடனே எனக்கு இன்போர்ம் பண்ணுங்க... சீக்கிரமே அவங்களுக்கு தண்டனை வாங்கி குடுத்துடலாம்... " என்று வெளியேறியவன் தன் சந்தேக வட்டதுக்கு உறுதியாய் மனதில் இன்னொரு வட்டத்தை போட்டுகொண்டான்...



நேரே ஸ்டேஷனுக்கு சென்றவன் அந்த கேஸ் பைலை திருப்பி படிக்க தொடங்கினான்... தான் ஏதும் தவறு விடுகிறோமோ?? அதனால் தான் அப்படி தோன்றுகிறதோ?? என தன் சந்தேகத்தை மறுபரிசீலனை செய்ய, விளைவு மீண்டும் அவன் சந்தேகம் நூறு வீதம் சரி என்றே சொன்னது...

"ஓகே.. அப்போ ரிப்போர்ட் குடுத்த டாக்டர்ல பிழை இருக்கணும்... இல்ல அந்த நேரம் கேஸ் கேன்டில் பண்ண போலீஸ்ல பிழை இருக்கனும்..." என்று எண்ணியவன்.. "பட் ஜெயராமனுக்கு போலீஸ் அண்ட் டாக்டர் ரெண்டு கூடவும் தொடர்பு இருக்கு... சோ லெட்ஸ் திங் அனதர் வேய்.." என்று எழுந்தவன்,

அங்கே இருந்த வைட் போர்ட் ஒன்றில் ஜெயராமன் என்று எழுதி வட்டம் ஒன்று போட்டுகொண்டவன்.. அதனை சூழ, "நம்பர் வன், மே பி போர் எ பொலிடிகல் ரீசன்.." என்று சொல்லியபடி அதனையும் எழுதி வட்டமிட்டு அம்புக்குறி ஒன்றின் மூலம் அவர் பெயரோடு இணைத்தான்...

மீண்டும்.. "நம்பர் டூ, மே பி போர் எ குட் இமேஜ்.." என்று இன்னொரு அம்புக்குறி மூலம் எழுதியவன் மனதில் இன்னொரு காரணம் இருக்க கூடும் என்றே தோன்றியது ஆனால் என்னவென்று சரியாக தெரியவில்லை...

சிறிது யோசித்தவன்.. "நம்பர் த்ரீ, மே பி எ ஹாஸ்பிடல் ரிலேடட் எனி ரீசன்.." என்று எழுதி கேள்விக்குறி ஒன்றை போட்டுகொண்டவன் சிறிது தூரம் பின்னோக்கி சென்று அதனை நோக்கியபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்... எந்த பக்கம் போனாலும் ஒரு இடத்தில் கொக்கி நின்றது... யோசனைகளுக்கு நடுவே அந்த நேரம் அதிரலிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது..

எடுத்து காதில் வைத்தவன் "என்னடி..." என்றான்...

"நிலவா நம்ம ஹாஸ்பிடலுக்கு கொஞ்சம் வாயேன்..."

"டியூட்டில இருக்கேன் டி..."

"இட்ஸ் ஏர்ஜென்ட் நிலவா..." என்றாள் சற்று பதற்றதுடன்...

"ஓகே ரிலாக்ஸ், ஐ வில் பி தெயர் இன் டுவன்ட்டி மினிட்ஸ்..." என்று அழைப்பை துண்டித்தான்...




"என்னங்க.. இன்னும் பதினஞ்சு நாள்ல கல்யாணத்த வெச்சிட்டு இப்படி உக்காந்திருந்தா ஆச்சா... ரெண்டு பசங்க கல்யாணம் ஒன்னா நடக்க போகுது எம்புட்டு வேலை இருக்கு... நீங்க என்னடான்னா சாவகாசமா உக்காந்து நியூஸ் பாத்துட்டு இருக்கீங்க...."

"சுகிமா... பத்திரிகை எல்லாம் அடிக்க கொடுத்திருக்கேனேடா... அந்த கடை பையன் நாளைக்கு எல்லாம் வந்துடும்னு சொல்லி இருக்கான்.. நாளைக்கே கொடுக்க ஸ்டார்ட் பண்ணிடலாம்.... நீ டென்ஷன் ஆகாத... நிலவன் எல்லாத்துக்கும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் கிட்ட பேசி இருக்கான்... நாள் குறைவா இருக்கதுனால நம்மல ஸ்ட்ரைன் பண்ணிக்க வேணான்னு சொன்னானேடா..." என்றார் பாவமாய்

"அவன் ஆயிரம் சொல்லுவாங்க.. நம்ம நின்னு பாத்து செஞ்சா தான நமக்கு திருப்தி... வாங்க ஒரெட்டு சம்பந்திங்க வீட்ட போய்ட்டு பேசிட்டு வருவோம்..."

"அதுக்கு அவசியமே இல்ல அண்ணி நாங்களே வந்துட்டோம்.." என்றபடி பார்வதியும் தர்மராஜனும் வர.. பின்னாலேயே வேணுகோபால் அவர் மனைவி, ராஜய்யா மூவரும் வந்தனர்....

"வாங்க வாங்க... உக்காருங்க... ஏன் மாமா நீங்க கஷ்டப்படுறீங்க சொல்லி இருந்தா நாங்களே வந்திருப்போமே இவ்வளவு தூரம் வரணுமா??...."

"இதுல என்னமா இருக்கு... பேத்தி கல்யாணம்னதும் எனக்கு பத்து வயசு குறைஞ்சிடிச்சு பாரேன்..."

"அது சரி... உக்காருங்க சாப்பிட்டு தான் போகணும்... ஏங்க கறி மீன் எல்லாம் எடுத்துட்டு வாங்க இன்னைக்கு விருந்து தான்..." என்றவர் வந்தவர்களுக்கு டீ கொடுக்க சமையலறைக்குள் செல்ல பார்வதியும் வேணுகோபாலின் மனைவியும் பின் தொடர்ந்தனர்.. அதன் பின் ஆண்கள் மூவரும் கல்யாண பேச்சில் மூழ்கி போக நேரம் தன்னால் கடந்தது....



நிலவன் ஹாஸ்பிடல் உள்ளே நுழைந்தவன் நேரே அதிரலில் கேப்பினுக்கு செல்ல... அங்கே அவள் இருக்கவில்லை... யோசனையுடன் அவளுக்கு அழைக்க அவள் தொலைபேசியோ அங்கே தான் அதன் இருப்பை உணர்த்தியது....

"போன வெச்சிட்டு எங்க போனா இவ.." என்ற யோசனையுடன் வெளியே வந்தவன் அங்கே நின்றிருந்த தாதி ஒருவரிடம் "எக்ஸ்கியூஸ் மீ சிஸ்டர், வெயர் இஸ் டாக்டர் அதிரல்..." என்று வினவினான்...

"சார் மேடம்க்கு சின்ன ஆக்சிடென்ட்.. ரூம் நம்பர் தேர்ட்டி நைன்ல இருக்காங்க.." என்றதும் தான் தாமதம் அவன் கால்கள் தன்னால் அங்கே விரைந்திருந்தது...

உள்ளே யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை வந்த வேகத்தில் உள்ளே நுழைந்திருந்தான்.. அங்கே அதிரல் கையில் ஒரு கட்டும் காலில் ஒரு கட்டோடும் அமர்ந்திருந்தாள்... கண்களாலேயே அவள் நலனை உறுதி செய்தவன்.. நேரே சென்று அவளை அணைத்துக்கொள்ள, அங்கு நின்றிருந்த தாதிகள் இருவரும் தங்களுக்குள் சிரித்தபடி அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேறினர்.

அவளோ "நிலவா.. பாரு அவங்க சிரிச்சிட்டு போறாங்க.. விடு என்ன..." என்று விலக பார்க்க

"விடணுமா அதெல்லாம் முடியாது போடி... உனக்கு என்னாச்சுன்னு தெரியாம இந்த ரெண்டு நிமிஷம் நரகம்... ம்ம்ம்கூம் வேணாம் நம்ம பிரிஞ்சிருந்த வர போதும்... இனியும் வேணாமே..." என்று மீண்டும் அணைத்துக்கொண்டவன்
அன்பில் உருகி அவளும் விரும்பியே அனைப்புக்குள் புகுந்து கொண்டாள்...

சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து விலகியவன் "என்னடி ஆச்சு... போன்லயே சொல்லி இருக்கலாம்ல.. ஏண்டி ஏர்ஜென்ட்னு மட்டும் சொன்ன..."

"அப்பவே தெரியாதே இப்படி ஆகும்னு... லிப்ட் வேலை செய்யலன்னு உன்கூட பேசிட்டே படில இறங்கினேன்... சடனா யாரோ இடிச்ச போல பீல் ஆச்சு... பேலன்ஸ் மிஸ் ஆகிடிச்சு..." என்றவள் முகம் வலியில் சுருங்க அவன் முகம் கவலையை தத்தெடுத்துக்கொண்டது...

அந்த நேர உணர்வில், அவள் சற்று முன் பதற்றமாக பேசியதை பற்றி அவனும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை....

அவள் காயத்தை பார்த்தவன் "ரொம்ப வலிக்கிதா..." என்று காயத்தை தடவியபடி வினவ

"இல்ல குளு குளுன்னு இருக்கு..." என்றாள் குறும்பாக.. அவன் கோபமாக முறைக்க "காயம்னா வலிக்கும் தான அது என்ன கேள்வி வலிக்குதான்னு..." என்றவளுக்கு பதில் வழங்காதவன்...

"சாப்டியா நீ.. சாப்பிட ஏதாச்சும் வாங்கி வரட்டுமா??..."

"எதுவும் வேணா, பட் உன்னோட ஸ்பெஷல் இஞ்சி டீ வேணும்..." என்றாள் கண்களை சிமிட்டி...

"இங்க எப்படிடி... ஈவினிங் வீட்டுக்கு போனதும் போட்டு தரேன்... இப்போ இங்க ஏதாச்சும் சாப்பிடு.."

"இல்ல இல்ல.. இப்போவே வேணும்.. நீதான என்ன வேணும்னு கேட்ட, அது தான் வேணும்.. தர்றதுனா தா.."

முறிக்கிக்கொண்டு அவள் கேட்கும் அழகுக்கு இல்லை என்று சொல்ல தோணவில்லை அவனுக்கு... "ஓகே வன் மினிட்" என்றவன் அங்கிருந்து வெளியேறி இருந்தான்... பின்னே "நிலவன்" என்ற அவள் குரல் காற்றில் அவனை பின் தொடர்ந்தது...

அவளோ விளையாட்டுக்கு தான் அவனிடம் கேட்டாள்... செய்யமுடியாமல் முழிக்க வேண்டும்.. தான் அவனை ஒரு வழி பண்ண வேண்டும் என்று, ஆனால் அவனோ செய்வதாக சென்றிருந்தானே... "எங்கே செல்வானோ" என்ற எண்ணத்தில் வாயிலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.


அங்கே ஹாஸ்பிடல் கேன்டீனுள் நுழைந்த நிலவன்.. நேரே டீ போடும் இடத்துக்கே விரு விருவென நுழைந்து கொள்ள, அங்கே நின்றவர்கள் சற்று பயந்து தான் போனர்.. இருக்காதா பின்ன போலீஸ் யூனிபோர்மில் அதிரடியாய் அங்கு சென்று நின்றால் பயம் வரும் தானே...

"சார்..." என்றான் பவ்யமாய்

"டீ போடணும்.."

வெளிய உக்காருங்க சார் இப்போவே போட்டுத்தறேன்... " என்று அவனை அங்கிருந்து நகர்த்த பார்த்தான்... அங்கிருந்த அத்தனை பேரும் அவனை தானே பார்த்திருந்தனர்... ஏதோ சாப்பிட்டில் பிரச்சனை என்று எண்ணிகொள்வார்களோ என்று பயந்து தான் போனான்... அவனுக்கு அவன் பிரச்சனை..

"நோ நோ நானே போடுறேன் கொஞ்சம் இடம் கொடுத்தா போதும்..." என்றவனை விசித்திரமாக பார்த்தபடி அந்த டீ மாஸ்டர் அவனுக்கு இடம் கொடுத்து நகர...

"ராட்சசி, உன்னால எல்லாரும் என்ன பைத்தியம் போல பாக்குறாங்கடி.." என்று அவளுக்கு செல்லமாய் மனதினுள் திட்டிக்கொண்டவன் அவளுக்காக இஞ்சி டீ போட தயாரானான்... அங்கிருந்த ஒருவன் இவனை படமெடுக்க எண்ணி தொலைபேசியை இவனை நோக்கி நீட்ட, அவர் பார்த்த பார்வையில் தன்னால் கை கீழே இறங்கியது...

"இன்னும் சிலர் அவங்க வாழ்க்கைய சோசியல் மீடியா மூலமாதான் வாழுறாங்க.. எப்போ திருந்த போறாங்களோ?..." என்று அவனால் எண்ணாமல் இருக்கமுடியவில்லை...

அவன் டீ போட்ட லாவகத்தில் அந்த மாஸ்டர் உட்பட அங்கிருந்தவர்கள் பார்வை அவன் மீது தான்.. அந்த டீயை குடிக்க வேண்டும் போலவும் தோன்றியது....

டீ போட்டு எடுத்துக்கொண்டவன் அதற்கான பணத்தை கொடுத்து விரைந்தான் அவன் மானை தேடி....




அங்கே ஜேகே பயங்கர கோபத்தில் இருந்தான்.. இன்றும் அவன் முயற்சி தோல்வியில் தான் தழுவி இருந்தது... கடந்த மூன்று வருடமாக அவனும் எவ்வளவு முயற்சி செய்தும் நிலவனின் கண்டுபிடிப்பை மீள கொண்டுவர முடியவில்லை....

நிலவனிடமிருந்து எடுக்கப்பட்ட, அவனது ஆராய்ச்சி அறிக்கையின் இறுதி மூன்று பக்கங்களில் அந்த மருந்து கொட்டியதால் அந்த இடத்தில் வர வேண்டிய விடயங்களை ஜேகேயினால் கண்டறிய முடியவில்லை... மருந்தும் மீதம் இருக்கவில்லை.... எவ்வளவோ முயன்றும் இவனால் அந்த மருந்தை மீள உருவாக்கவும் முடியவில்லை...

ஜேகே எத்தனையோ வருடங்களாக முயன்றும் முடியாத ஒன்றை தன் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் முயல்கிறான் என்ற செய்தியே அவனுக்கு அத்தனை உவப்பாக இருக்கவில்லை... அன்றே அவன் பார்வை நிலவன் மீது விழுந்தது...

தன்னை போல் ஒருவனா??.. என்ற கேள்வியே அவனை தூங்க விடவில்லை... தான் தான் எதிலும் முன் நிற்க வேண்டும்... தன்னையே எல்லோரும் பிரமிப்பாய் பார்க்க வேண்டும் என்று எண்ணுபவன் அவன்... அன்றே நிலவனை தொடர எல்லாம் சரி வர செய்திருந்தான்... தன் திட்டப்படி காய்களையும் நகர்த்தி இருந்தான்...

என்னதான் செய்கிறான் பாப்போம் என்றே அவனை ஆரம்பத்தில் விட்டு வைத்திருக்க, அவன் கண்டுபிடித்து விட்டான் என்ற செய்தியை ஜேகேவின் மூளை உள்வாங்கிகொள்ள விரும்பவில்லை.. அன்று மீண்டும் அவன் பார்வை நிலவன் மீது விழுந்தது... அதுவும் குரோதமாய்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அது தன்னுடைமை ஆகவேண்டும் என்பது மட்டுமல்லாது.. அவன் தனக்கு நிகராக இந்த துறையில் இருக்கவே கூடாது என்பதையும் தீர்மானித்து கொண்டான்... அதனாலேயே நிலவன் அவன் கை பொம்மையானான்... காய்களை கட்சித்தமாக நகர்த்தி அன்றைய நாளை தனக்குறியதாக்கியும் இருந்தான்... ஆனால் விளைவு இன்றுவரை பூஜ்ஜியம் தான்...

"சிட்... அந்த நாய நம்பி எடுத்து வர சொன்னது என்னோட தப்புதான்..." என்று நெற்றியை நீவிகொண்டவன் அறியவில்லை.. இது அந்த உருவத்தினால் வேண்டும் என்றே செய்யப்பட்டது என்பது...

தன் இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்ற பதிலில் அந்த உருவம் கோபம் கொண்டு அந்த திரவத்தை வேண்டும் என்றே அறிக்கையில் கொட்டி இருந்தது...


லேப்பை விட்டு வெளியே வந்தவன் வெளியே நின்ற வசந்திடம் கை காட்டி வெளியேற முயல.. "பாஸ், நாம அந்த நிலவனை கடத்திட்டு வந்து மறுபடியும் செய்ய சொன்னா என்ன?..." என்றான் அங்கிருந்த அடியாள் ஒருவன்... புதிதாக சேர்ந்தவர் என்பதால் ஜேகே பற்றி சரிவர தெரியவில்லை...

அவன் பேசிய கடைசி வார்த்தை அதுவாக தான் இருந்தது... அதன் பின் பேச அவன் உயிரோடு இருக்கவில்லை... அகம்பாவம் கொண்டவன் தன்னை கீழிறக்கி பேசுவதை பொறுப்பானா என்ன?... தன்னால் முடியாது என்று அவனே சொன்னாலும் அவன் நம்பமாட்டான்.. இதில் இன்னொருவன் சொல்வதா???... இறந்து கிடந்தவனின் உடலையே அவன் பார்வை கோபமாய் வெறித்தது...

அவன் எண்ணத்தை திசை மாற்றும் பொருட்டு வசந்தோ "சார் பிளான் சக்ஸஸ்.. அதிரல் நம்ம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கா..."

"ம்ம்ம்ம் கிரேட்.. அடி ஒன்னும் பலம் இல்லையே?..."

"நோ சார்... பெரிசா இல்ல ஜஸ்ட் ப்ராக்சர் தானாம்.."

"ம்ம்ம்ம் குட்... பிளான் பண்ண படி.. பண்ண வேண்டிய எல்லா செக்கப்பையும் பண்ண சொல்லிடு.. இன்னும் தேர்ட்டி மினிட்ஸ்ல ரிப்போர்ட் எங்கைல இருக்கனும்..."

"சூர் சார்..."

"ஓகே நான் கிளம்புறேன்.. நைட் சரியா அந்த சரக்க டெலிவரி பண்ணிடு... அண்ட் இதயும் கிளியர் பண்ணிடு..." என்று அங்கு செத்து கிடந்த உடலை காட்டி சொன்னவன்... மீண்டும் "அப்படியே உள்ளேயும் ஒன்னு இருக்கு அதையும் சேர்த்து.." என்றவன் விரு விருவென அங்கிருந்து வெளியேறியிருந்தான்...



அதிரலோ அங்கே நிலவனை எதிர்பார்த்து காத்திருக்க அவள் கவனம் உள்ளே வந்த விஷ்வாவினால் தடைப்பட்டது...

உள்ளே நுழைந்தவன் படபடப்புடன் "அதிரல் ஆர் யூ ஓகே... என்னாச்சு... பார்த்து வரலாமில்லையா கவனம் எங்க இருக்கு?... இப்போ பாருங்க கஷ்டம் யாருக்கு... உங்க உயிர் உங்களுக்கு முக்கியமில்லாம இருக்கலாம்... எனக்கு முக்கியம்... உங்களுக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா என்ன பண்ணி இருப்பேன் சொல்லுங்க...."

"ஹலோ ஹலோ விஷ்வா... கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசுங்க... எனக்கு ஒண்ணுமில்ல.. ஐ எம் ஆல்ரைட்.. இதவிட பெரிய காயம் எல்லாம் பாத்திருக்கீங்க.. இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு டென்ஷன்.." என்றவள் தான் உனக்கு அத்தனை முக்கியம் இல்லை என்பதையும் உணர்த்தி இருந்தாள்...

"ஏதாச்சும் சாப்டீங்களா அதி... வாங்கி வரட்டுமா??..."

"இல்ல இல்ல... நீங்க உங்க ஒர்க் பாருங்க விஷ்வா... நான் மேனேஜ் பண்ணிப்பேன்.." என்றவளுக்கு அவனை அங்கிருந்து அனுப்பும் முனைப்புத்தான்..

எங்கே நிலவன் வந்து விடுவானோ என்ற அவசரம் தான்... இந்த நேரம் வந்தால் எப்படியும் விஷ்வாவிடம் முட்டிக்கொள்ளும் என்பது நிச்சயம்... முன்பே தன்னோடு யாரும் பேசுகிறேன் என்று வழிந்தால் முறைப்பவனாயிற்றே...

அதுவும் இன்று விஷ்வாவின் பேச்சில் வேறு புதிதாய் உரிமை வழமைக்கும் அதிகமாய் ஒட்டிக்கொண்டதை புரிந்து கொள்ள முடிந்தது அதிரலால், இதனை கேட்டால் நிச்சயம் அவளவன் நெருப்பு இல்லாமலே கொதிப்பான் என்பதில் ஐயமில்லை...

அவள் பயந்தது போல நிலவன்
"ஜாஸ்... டீ ரெடி..." என்றபடி உள்ளே நுழைந்தவன்.. அங்கே நின்ற விஷ்வாவை பார்த்தது கண்களால் அளவிட்டபடியே அமைதியாக உள்ளே வந்தான்

அவன் அழைப்பில் இருக்கும் உரிமையும், அவர்கள் இருவரினதும் பார்வை பரிமாற்றமும் விஷ்வாவின் கண்களில் இருந்து தப்பவில்லை...

"விஷ்வா, இது நிலவன்.. மை லைப் பாட்னர்..." என்றவள் "நிலவா, இது விஷ்வா.. மை கொலீக்..." என்று இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினாள்...

இருவரும் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக்கொண்டனர்.. விஷ்வாவிற்கோ நிலவனை பார்த்ததுமே பிடிக்கவில்லை அது அவன் முகத்தில் வெளிப்படவும் செய்தது...

"ஓகே அதி.. யூ கேரியோன்.. ஐ வில் பி பேக் லேட்டர்.." என்று வெளியேறியவனது முகம் கோபத்தில் சிவந்திருந்தது...

அவன் சென்றதும் நிலவன், "என்னடி இங்கேயும் ஒரு காதல் மன்னனா உனக்கு?... எங்க இருந்துதான் எனக்கு எதிரிங்க உருவாகுறாங்கன்னே தெரியல.. ஆனாலும் ரொம்ப லவ்வு போல.. பார்வையாலேயே என்ன எரிக்கிறான்..." என்று டீயை அவளிடம் தந்திருந்தான்

சற்று நேரம் முன் வரை கோபப்படுவானே என பயந்திருந்தவள்.. அவன் முகத்தை உற்று நோக்கி அதில் அவள் தேடும் கோபம் இல்லை என்றதும் இப்போது கோபப்படுவது இவள் முறையானது...

"ஒரு பொஸ்ஸசிவ் இருக்கா உனக்கு... முன்ன எல்லாம் என்னோட யாரு பேசுனாலும் கோபப்படுவ... இப்போ என்னடான்னா லவ் பண்ணுறானான்னு கூலா கேக்குற.. வர வர உனக்கு லவ் கொறஞ்சிடிச்சு..." என்றாள் அவனது ஸ்பெஷல் இஞ்சி டீயை ரசித்து குடித்தபடி...

அவனோ அதுக்கு சிரிக்க... "சிரிக்காத டா..." என்று அதற்கும் அவள் கோபப்பட "அதுவா சிரிப்பு வருதுடி.. நான் என்ன பண்ணட்டும்..." என்றான்..

"கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு அப்பறம் சிரிக்கலாம்..."

"மெச்சூரிட்டி வந்துடிச்சு போலடி..." என்றான் மீண்டும் சிரித்தபடி...

"போடா நீயும் உன் மெச்சூரிட்டியும்.. என்றவள் கோபத்திலும் டீ பருகுவதை நிறுத்தவில்லை...

"ஓகே ஒரு ரெண்டு மூனு நாள் லீவ் சொல்லிட்டு வந்துடு... அம்மா சொல்லிட்டு இருந்தாங்க நாளைக்கு கல்யாண பட்டு எடுக்க போகணுமாம்.. அந்த வேலையும் முடிச்சிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வேலைக்கு வந்தா போதும்..."

"ம்ம்ம்... இன்னும் பிப்டீன் டேய்ஸ்ல நமக்கு கல்யாணம்ல... சோ எக்சைடட்..."

"எதுக்கு செகண்ட் மேரேஜ்க்கா..." என்றான் அவள் மூக்கொடு மூக்கு உரசியப்படி... அதில் அவள் முறைக்க

"சரியாத்தான சொன்னேன்... நமக்கு செகண்ட் மேரேஜ் தான..." என்றவன் பேசி சிரித்துகொண்டிருக்க அவன் இடையை இரு கைகள் பின்னிருந்து தழுவிக்கொண்டது... அவனுக்கு அதிர்ச்சி என்றால் முன் அமர்ந்திருந்த அதிரலுக்கும் அதிர்ச்சி...



நாட்கள் பல கடந்தும் ஜேகேவிடம் இருந்து தப்பித்த பெண்ணை ஜேகேயின் கட்டளைப்படி அங்கே ஹாஸ்பிடலில் தான் வைத்திருந்தனர்...

ஆரோக்கியமான அந்த பெண்ணை, சில பல ரிப்போர்ட் எடுக்க வேண்டும் என்று ஏதேதோ காரணம் கூறி அங்கேயே வைத்திருந்தனர்.. அங்கே பலருக்கு அவள் இருப்பது இன்று வரை தெரியாது, ஜேகேவின் ஆட்களை தவிர... கேட்பதற்கு யாரும் இல்லாத பெண்.. அதுவும் வசதியாகி போனது...

அந்த பெண்ணோ முன்பு அங்கே சிறையில் இருந்தாள் இப்போது இங்கே இருக்கிறாள் அவ்வளவே வித்தியாசம்... தனக்கு தெரிந்த யாரையும் பார்த்து விட மாட்டோமா என அவள் கண்கள் எப்போதும் அலைபாயும்... ஆனால் பதில் என்னவோ பூச்சியம் தான்...

அதிரலோ அவள் அனுமதிக்கப்பட்ட அன்று இரத்தம் வழங்கி, இரண்டு நாட்களில் யாரென்று விசாரித்து போலீஸிடம் ஒப்படைக்குமாறு சொல்லி இருந்தாள்... அதன் பின் தான் அவளுக்கு ஊருக்கு செல்வதற்கான பல வேலை இருந்ததில் இதனை அவதானிக்கவில்லை...

அதிலும் பிரச்சனை முடிந்து, இங்கேயே இருக்கும் படி ஆன பிறகும் அந்த நினைவே அவளுக்கு மறந்திருந்தது... அப்படி ஒரு பெண்ணை தான் காப்பாற்றியதையே மறந்திருந்தாள்... அவளை அவள் பெற்றோருடன் சேர்த்திருப்பார்கள் என்று அவள் ஆழ் மனது நம்பியதும் கூட அவளை பற்றி நினைவு வராமலிருக்க காரணமாக இருக்கலாம்...

இன்று அந்த பெண் வேறு ஏதோ ரிப்போர்ட் எடுக்க வேண்டும் என்று தாதி ஒருவரால் அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டாள்...

இங்கே இருக்கும் இத்தனை நாளில் இன்றுதான் ஹாஸ்பிடல் சூழலை வெளிச்சத்தில் பார்க்கிறாள்... எப்போதும் இரவில் தான் அவளை அழைத்து செல்ல வேண்டுமென்பது ஜேகேவின் கட்டளை... ஆனால் அந்த தாதியோ இன்று இரவு கணவனோடு வெளியே செல்லும் ஆர்வத்தில், பகல் நேரத்திலேயே வேலையை முடிக்க எண்ணி வெளியே அழைத்து வந்திருந்தாள்...

அந்த பெண்ணும் அவள் கூடவே நடந்து வர... சரியாக அதிரல் இருக்கும் அறையை கடக்கும் நேரம் நிலவனின் குரல் அந்த பெண்ணின் காதில் விழ... திடுக்கிட்டு சத்தம் வந்த திசையை பார்த்தவள்.. சட்டென்று மூளை அலசியதில் நிலவனை யாரென்று கண்டு கொண்டாள்... ஏதோ தனக்கு வெளிச்சம் கிடைத்த சந்தோஷத்தில் தாதியின் கைகளை தட்டி விட்டவள் ஓடி சென்று பின்னிருந்தே நிலவனை அணைத்திருந்தாள்.....



ஒரு சிறு பிரிவுக்கு கவலை கொண்ட நிலவன் அறியவில்லை இன்னும் இரு நாட்களில் மீண்டும் அவளை பிரிந்து தவிக்க போகிறான் என்பதை....

அவனை அணைத்த பெண்ணுக்கும் நிலவனுக்கும் என்ன சம்பந்தம்???....

அதிரல் காப்பாற்றினாள் என்றால்... அந்த பெண் யாராக இருக்க கூடும்??...

பின்னப்பட்ட வலையை அறுக்கும் ஆயுதம் அவள்.... அவளை கொண்டே ஒவ்வொரு புதிரும் உடையும்.... புதிர்களுக்கான விடைகளும் தெரியும்... அதுவும் மிக அருகில்....



ஜாதி மல்லி மலரும்.....

கருத்து திரி 👇👇👇👇

InShot_20240821_171259369.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top