ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 29


சுற்றிலும் விசித்திர வெளிச்சம்... நிலவன் கண் சற்று சிரமப்பட்டே திறக்க வேண்டி இருந்தது.. மெல்ல இமைத்தட்டி கண்களை திறந்தவன் முன்னே கீழே செல்லும் படிகள் தான் கண்ணில் பட்டது.. அவனும் யோசனையுடனே அந்த படிகளில் இறங்கினான்..

ஏழு எட்டு படிகள் தான் முன்னே சென்றிருப்பான் மேலே பெரிய சத்தம் என்னவென்று திரும்பி பார்க்க, மேலே உள்ள ஒவ்வொரு படியாய் காணாமல் போய் கொண்டிருந்தது... குழப்பம் மேலோங்க கீழே பார்க்க கீழிருந்தும் படிகள் ஒன்றன் பின் ஒன்றாய் காணாமல் போய் கொண்டிருந்தது...

குழப்பம் மேலோங்க அவன் நின்றிருந்த நேரம் அவன் நின்றிருந்த படியும் மறைய, அவன் கீழே விழ போன கணம் ஒரு கை அவனை பிடித்துக்கொண்டது... கூடவே மறைந்த படிக்களும் மீள தோன்றியிருந்தது...

நிலவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.. தன்னை பிடித்த கை யாருடையது என்று உற்று நோக்க, அங்கே அறிவழகன் நின்றிருந்தான்...

"அறிவு.." என்று வியப்புடன் அவன் அழைக்க, அறிவழகனிடம் புன்னகை..

"நீ... நீ..."

"நான் தான் நிலவா..."

"அறிவு.. நீ.." என்றான் நிலவன் மீண்டும், அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சு வரவில்லை...

"என்னப்பாரு நிலவா, எல்லாம் உனக்கு தன்னால தெரிய வரும்..."

"என்ன பேசுற அறிவு... நீ உயிரோட.."

"என்னப்பாரு நிலவா, எல்லாம் உனக்கு தன்னால தெரியவரும்..." என்று சொன்னதையே மீண்டும் சொன்னபடி இருக்க, நிலவனுக்கோ குழப்பம்..

"உன் தேடலுக்குரிய சாவி நான் தான் நிலவா..." என்று சொன்னவனது உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய..

"அறிவு..." என்று கத்தியபடி நிலவன் எழுந்திருந்தான்...

"என்னாச்சு நிலவா.." என்று புகழ் அருகில் வர.. அப்போது தான், தான் கண்டது கனவென்பதே நிலவனுக்கு புரிந்தது...

"நத்திங்.. தூங்கிட்டேனா?... ஏன் தூங்க விட்ட புகழ்?.." என்றபடி எழுந்து தலையை பிடித்துக்கொண்டவனுக்கு கனவின் தாக்கம் குறைவதாய் இல்லை..

"தூங்கல மயங்கிட்ட.. ரொம்ப வயலண்டா பிஹெவ் பண்ண ஆரம்பிச்சிட்ட, அதான் அறைய வேண்டியதா போயிடிச்சு... ரொம்ப நேரம் எல்லாம் இல்லை ஜஸ்ட் பிப்டீன் மினிட்ஸ் தான் இருக்கும்.. இப்போ பெட்டரா பீல் பண்றியா?..."

"ம்ம்ம்ம்.." என்றவன் யோசனை எல்லாம் கனவில் தான்.. அதனை கனவு தான் என்று ஒதுக்கவும் முடியவில்லை... அறிவழகனும் சரி கடவுளும் சரி அவனுக்கு எதையோ உணர்த்த வருவது போலவே ஒரு தோன்றம் அவனுள்...

"என்னப்பாரு எல்லாம் உனக்கு தன்னால தெரிய வரும்..."

"உன் தேடலுக்குரிய சாவி நான் தான் நிலவா..."

யோசனைனையில் ஜீப்பினுள்ளே அமர்ந்திருந்தவனுக்கு நண்பன் சொன்ன வார்த்தையே மீண்டும் மீண்டும் காதினுள் ஒலித்தது...

சிறிது நேர யோசனைக்கு பிறகு.. ஏதோ தோன்றியவனாக... தன் தொலைபேசியை ஆராய்ந்தவன் அவன் தேடிய காணொளி கிடைக்கவும்.. அதனை பார்வையிட்டான்...

ஆம் அது அறிவழகன் அவனுக்கு இறுதியாக அனுப்பிய காணொளி தான்....

இரண்டு முறை பார்த்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் கோபத்தில் தொலைபேசியை பக்கத்து இருக்கையில் வீசயவன், ஜீப்பை விட்டு வெளியே வந்து புகழின் அருகில் நின்றான்...

புகழோ தீவிர யோசனையில் இருக்க, நிலவன் வந்தது கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை..

சிறிது நேர அமைதிக்கு பின் புகழோ, "மச்சான் வர்ஷி சொன்ன அந்த லோர்ட் கிருஷ்ணவோட படம் எனக்கு தெரிஞ்சி எங்கயும் இருக்குற மாதிரி தோணல... ஜேகே காலேஜ், ஹாஸ்பிடல்.. இப்படி தேடுனோம்னா ஒரு வேளை கிடைக்க வாய்ப்பிருக்குல..." என்றதும் தான் தாமதம் நிலவனோ ஜீப்பை நோக்கி ஓடியவன் தன் தொலைபேசியை உயிர்ப்பிற்க அதுவோ அவன் வீசி எரியும் போதே உயிரை விட்டிருந்தது..

"சிட்... புகழ் சார்ஜர் கேபிள் இருக்கா.."

"இல்லையே மச்சான்.. வேணும்னா பக்கத்துல ஸ்டேஷன் போய் போட்டுக்கலாம்..." என்றான் ஏதோ அவசரம் என்பதை உணர்ந்து...

அங்கு செல்லும் அளவுக்கு நிலவனுக்கு பொறுமை இருக்கவில்லை.. உடனடியாக பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தான்...

"உன் போன்ல சார்ஜ் இருக்கா?.. குடு..." என்று வாங்கியவன் பூஜாவுக்கு தொடர்பு கொண்டான்...

"ஹெலோ பூஜா" என்றவன் முடிக்கவில்லை

"என்னாச்சு நிலவா?.. அதிரல காப்பாத்திட்டியா?.. எங்க அவ?.. எப்போ கூட்டிட்டு வருவ?..." என்று அந்த பக்கம் அவள் கேள்விகளை அடுக்க..

"பூஜா லிசின்.. பதில் சொல்ற அளவுக்கு எனக்கு டைம் இல்லை.. என் லேப்டாப்ல அறிவோட வீடியோ சேவ் பண்ணி வெச்சிருக்கேன்.. அத இப்போ புகழ் நம்பருக்கு சென்ட் பண்ணு.. குயிக்.." என்றவன் அழைப்பு துண்டித்து சிறிது நேரத்தில் அந்த காணொளி வந்ததற்காக சத்தம் கேட்க..

அதனை உயிர்ப்பித்தவன் பார்வையிட தொடங்கினான்...

அவன் எதிர் பார்த்தது போல.. அந்த லோர்ட் கிருஷ்ணாவின் படம் அறிவழகன் பேசிகொண்டிருந்த காணொளியில் அவனுக்கு பின் பக்க சுவரில் தெரிந்தது...

கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்பது போல.. இவ்வளவு நாள் எண்ணத்தில் இல்லாததால் அது அவன் மூளையில் பதிந்திருக்கவில்லை... இன்றோ புகழின் பேச்சில் எழுந்த சந்தேகத்துடன் தேடிய போதுதான் அதனை மூளை உணர்த்தி இருந்தது...

புகழிடமும் காட்டியவன் மனதில் தன்னவளை நெருங்கி விட்ட சந்தோசம்...

ஆனால் இந்த நேரத்தில் அங்கு செல்ல முடியாதே.. விடியும் வரை கத்திருக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு, நிமிடம் ஒவ்வொன்று வருடமாய் கடக்கும் மாயை...

அந்த நேரத்தை வீணடிக்காமல் முரளி கிருஷ்ணனை தொடர்பு கொண்டான்.. அவனுக்கு தெரியும் இந்த நேரம் அழைப்பதற்கான நேரம் இல்லை என்பது.. ஆனால் அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லையே.. அவன் கடக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பாய் தான் கடந்தது...

அவரிடம் செய்யவேண்டியவற்றையும் சொன்னவன்.. புகழை வற்புறுத்தி சிறிது நேரம் உறங்கும் படி பணித்திருந்தான்...

அவன் யோசனையுடனே கண் மூட.. அவனது பிறந்தநாள் அன்று அவளோடு பேசிய எண்ணங்களை அவனுள்...


அன்றிறவு அவன் கைகளைக்குள் அணைவாய் படித்திருத்தவளது வாய் ஒரு நிமிடம் அமைதியாய் இருக்கவில்லை.. தூங்கலாம் என்று அவளை நெஞ்சில் போட்டுகொண்டவனை எங்கே தூங்க விட்டாள்.. பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே தான் இருந்தாள்.. இவனும் ம்ம்ம் கொட்டி கேட்டுக்கொண்டே தான் இருந்தான்...

அவள் பேசிய அத்தனையும் அவர்கள் எதிர்காலம் தான்...

"நிலவா குறஞ்சது நம்ம ஆறு குழந்தைங்க பெத்துக்கணும்..."

"குறைஞ்சதே ஆறுங்களா மெண்டர் மேடம்..."

"ப்ச்.. குறுக்க பேசாத.. என்று அவன் வாயில் அடித்தவள்.. "கண்ணு வைக்காத எரும..." என்று அவன் நெஞ்சில் பல் பதியும் வரை கடித்திருந்தாள்..."

"ஸ்ஸ்ஸ்ஸ்... ராட்சசி வலிக்குதுடி..."

"வலிக்கட்டும் நல்லா.. பேசும் போது இடைல சத்தம் போட்ட கொன்னுடுவேன் பாத்துக்க.."

"ம்ம்ம்ம்.. பேசமாட்டேனே.. நீ பேசு ராஜாத்தி..." என்றவன் அவள் தலையில் முத்தமிட்டு இன்னும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்..

"குறைஞ்சது ஆறு பசங்க பெத்துக்கணும்.. முதலாவது பையன்... அப்பறம் அவனுக்கு தங்கச்சியா ஒரு பொண்ணு.. என் மூத்த பையன் அவனோட பீலிங்ஸ் ஷேர் பண்ணிக்க அவனுக்கு தம்பியா ஒரு பையன்.. பொண்ணு அவளோட பீலிங்ஸ் ஷேர் பண்ணிக்க அவளுக்கு தங்கச்சியா ஒரு பொண்ணு... அப்பறம் இந்த நாலு பேருக்கும் செல்லமா ஒரு தங்கச்சியும் ஒரு தம்பியும்... அவ்வளவு தான்.. இதுக்கு மேல வேணும்னா நம்ம இஷ்டம்.." என்றவள் அவனை நிமிர்ந்து பாக்க, அவன் பார்வையில் முகத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டாள்..

"ரொம்ப தான்டி... இவ்வளவு ஐடியா வெச்சிட்டு நீ இப்படி வெக்கப்பட்டீனா.. எப்படி உன் கனவ நனவாக்கிறது?.. நான் தான் உன் கனவுக்கு உழைக்கணும் ஞாபகம் இருக்கட்டும்.." என்று அவளை சீண்டியவனுக்கு தெரியும்.. தனியே வளரந்த அவளது தனிமையின் ஏக்கமே இந்த உணர்வுகள் எல்லாம் என்று..

"எனக்காக கஷ்டப்படமாட்டியா?..." என்றாள் முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு..

"அடியேய்.. எய்டீன் பிளஸ் கண்டென்ட முறைச்சிட்டே பேசுற ஆள் நீ ஒருத்தி தான்டி..."

"அதெல்லாம் அப்படிதான்.." என்றவள் முறுக்கிக்கொள்ள...

"கறும்பு தின்ன கூலியா?... நீ கவலைப்படாதடி செல்லம்.. மாமா எதுக்கிருக்கேன்.. ஆறு என்ன ஒரு டசனே பெத்துக்கலாம்.. என்ன வேல வெட்டிக்கு போகாம இதான் வேலைனு இருக்கணும்..." என்று சிரித்தவன் அவள் கையால் அடிகளும்.. பல்லால் பல கடிகலையும் பெற்றுக்கொண்டான்...



அன்றைய நாளின் நினைவில் மூடி இருந்த கண்களில் கண்ணீர் தன்னால் கீழ் இறங்கியது... கண்களை திறக்க அவளில்லாமல் இரண்டாவது விடியலும் வந்திருந்தது... கண்களை துடைத்து கொண்டவன் புகழையும் எழுப்பி.. ஜேகே கல்லூரியை நோக்கி விரைந்தான்...


காலை ஆறு மணி தான் ஆகி இருந்தது... யாரும் வந்திருக்க வில்லை.. வாட்ச்மேன் கூட அப்போதுதான் வந்திருந்தார்.. அவரிடம் பேசி உள்ளே நுழைந்து கொண்டவன்.. நேரே அந்த பழைய லேபிற்கு தான் சென்றான்..

பாவனையில் இல்லாத காரணத்தால் வெளியே செடி கொடிகள் படந்து வாயிலையே மூடியபடி தான் இருந்தது...

கொடிகளை எல்லாம் கைகளால் அகற்றியவன் உள்ளே நுழைய.. அந்த இடமே சிலந்தி வலைகள் நிறைந்து, பார்க்க பழைய பேய் பட அறை போலவே கட்சியளித்தது...

அவன் கால்கள் நேரே அந்த கடவுள் கிருஷ்ணனுடைய படத்தின் முன் தான் போய் நின்றது... அதனை புகழின் தொலைபேசியில் படம் பிடித்தவன்.. வர்ஷியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து அவளிடம் இது தானா என்று அதனை உறுதிப்படுத்தியும் கொண்டான்...

சுற்றி எவ்வளவு தேடியும் ஒன்றையும் கண்டுகொள்ள முடியவில்லை... நான்கு பக்க சுவர் தான் இருந்தது... வர்ஷி சொன்ன படிகள் போன்ற எதுவும் அங்கு இருப்பதாக தெரியவில்லை...

ஒருமணி நேர தேடலும் முடிவுக்கு வந்திருந்தது... இவ்வளவு நெருங்கியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை அவனுள் இருக்கத்தான் செய்தது...

"மச்சான்.. இங்க எதுவுமே இல்லையே டா.. தப்பான இடத்துக்கு வந்துட்டோமா??.."

"நோ புகழ் சரியா தான் வந்திருக்கோம்.. இங்க லேப் பில்டிங் மட்டும் தான் உடைஞ்சிருக்கு.. எகியூப்மெண்ட்ஸ் அப்படியே தான் இருக்கு... இத்தன வருஷம் பாவனை இல்லாம இருந்தா எப்போவோ துருப்பிடிச்சிருக்கணும்... பட் அப்படி எதுவுமே நடக்கல சோ இங்க டெஸ்டிங் நடந்துட்டு தான் இருக்கனும்... ஆனா இங்க உண்மை மறைஞ்சிருக்கு அத தான் கண்டுபிடிக்க நாம முயற்சி செய்யணும்.." என்றவன் சிறிது அமைதிக்கு பின்

"லெட்ஸ் கோ.." அங்கிருந்து வெளியேறி இருந்தான்...

புகழும் எங்கே என்று கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை... போக வேண்டிய ஓரிடத்துக்கு சென்றவன், அங்கே பேசி அவனுக்கான பதில் கிடைத்ததும் புன்னகையுடன் பூஜாவின் வீட்டுக்கு வண்டியை விட்டான்.

பூஜாவின் வீட்டில் நிலவனை இறக்கி விட்ட புகழ், நண்பனின் கட்டளையை நிறைவேற்ற ஓரிடம் சென்றான்..



யாரோ வரும் சத்தம் கேட்ட ஜெயராமன் கண்களை உயர்த்தி பார்க்க நிலவனின் உருவம் மங்களாகவே தெரிந்தது... கண்களை சிமிட்டி பார்வையை கூர்மையாக்க அவன் உருவம் படிப்படியாக தெளிவாகியது அவருக்கு....


"ஹாஹாஹா... நீ எப்படியும் திருப்பி எங்கிட்ட தான் வருவன்னு நல்லாவே தெரியும்.. எப்படியும் உன்னால கண்டுபிடிக்கவே முடியாது... என் பையன யாருனு நெனச்ச.. மருத்துவ உலகத்தோட முடி சூடா அரசன் அவன்... யாராளையும் சாய்க்க முடியாது..."

"அப்படிப்பட்ட உங்க மகன் தான் என் மருந்த திருடுன திருடனும் கூட.." என்றவனின் பதிலில் அவர் முகம் சற்று வெளிரவே செய்தது...

"எப்போவுமே அநீதியே ஜெயிச்சுக்கிட்டே இருக்காது மிஸ்டர் ஜெயராமன்.. கடவுள் ஏதோ ஒரு ரூபத்துல உண்மையா வெளிய கொண்டு வந்தே தீருவாரு..."

"என் மகன் ஜெயிக்க பொறந்தவன்டா..."

"மகன் பூராணம் பாடுனது போதும்... அந்த பழைய லேப் உள்ள போற வழி தான் தெரியணும்.. இப்போ அதிரல் இருக்க இடத்துக்கு போக வழி சொல்ல போறியா சாகுறியா?..."என்றான் அவன்

சரியாக லேப் வரை சென்று விட்டானே என அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை... அதனை முகத்தில் மறைத்தவர், "செத்தாலும் என் மகன காட்டி கொடுக்க மாட்டேன்..."

"ம்ம்ம் நல்ல அப்பா... இப்படி ஒரு அப்பாக்கு அப்படி ஒரு புள்ள இருக்குறதுல நியாயம் தான்.. பட் சாரதா மேம் மாதிரி நல்லவங்களுக்கு இப்படி ஒரு புருஷன்.. அப்படி ஒரு புள்ள.. சொல்லவே விசித்திரமா இல்லை...."

"டேய்ய்ய்ய்ய்... என்னடா பண்ண சாருவ..." என்றவர் கண்ணில் அத்தனை கலக்கம்..

"உங்களுக்கு வந்தா ரெத்தம் இதே அடுத்தவனுக்கு வந்தா?... எல்லாம் உயிர் தான, எத்தனை குழந்தைங்க வீணா அதோட உயிரை விட்டிருக்கும்.. எத்தனை கனவுகளோட இருந்த வாலிப வயசு பிள்ளைங்களோட கனவ செதச்சிருப்பீங்க... அடுத்தவன் பொண்டாட்டின்னதும் அசால்ட்டா பேசுன, இப்போ உன் பொண்டாட்டிக்கு ஒன்னுனதும் பதறுற.."

"என்ன என்ன வேணா பண்ணு சாரதாவ எதுவும் பண்ணாத அவளுக்கு நாங்க பண்ற வேலைல எந்த சம்பந்தமும் இல்லை... அவளுக்கு எதுவுமே தெரியாது.. அவளை விட்டுடு.."

"தெரியாதுன்னு தான் எனக்கே தெரியுமே.. தெரிய வெச்சிட்டா போச்சு.." என்றவன் "புகழ்" என்று சத்தம் போட, புகழ் அங்கே வர பின்னே சாரதாவும் கண்களில் கண்ணீருடன் வெளியே வந்தார்...

லேபிள் இருந்து நேரே அவன் சென்றது சிஸ்டர் மேரியிடம் தான்.. அவரிடம் பேசி சாரதாவை தொடர்பு கொண்டவன்... நடந்த விடயத்தை மேலோட்டமாய் விளக்க அவருக்கோ அதிர்ச்சி.. என்ன சொல்வது நம்புவதா வேண்டாமா என்றெல்லாம் யோசனைக்கு சென்றுவிட்டார்...

அவரிடம் நம்பிக்கை இல்லை என்பதை புரிந்து கொண்டவன்... அவர் கணவன் மீதான அவரின் நம்பிக்கையே அந்த ஜெயராமானின் இந்த ஆட்டதுக்கு காரணம் என்பதை புரிந்து கொண்டான்...

அவரிடம் பல மன்றடல்களில் பின்னர் அவர் வருவதாக அரைமனதாய் சம்மதித்தார்.. அதுவும் சிஸ்டர் மேரி கேட்டுக்கொண்டதும் ஒரு காரணம்... அவரை அழைத்து வரத்தான் புகழை அனுப்பி இருந்தான்... ஜெயராமனை வாய் திறக்க வைக்கும் ஆயுதம் அவர் தான் என்பது நிலவனுக்கு புரிந்தது.. அதனால் தான் இந்த நடவடிக்கையும் கூட...

சற்று முன் தான் புகழ் அவரை இங்கே அழைத்து வந்திருந்தான்... முதலில் ஜெயராமானின் நிலையை கண்டு அவர் பதற, அடுத்து அவர் பேசியவைகளில் உண்மை அப்பட்டமாக தெரிந்ததில் உள்ளம் நொறுங்க நின்றிருந்தார்....

உள்ளே நுழைந்த மனைவியை கண்டவரது உள்ளம் பட்ட வேதனை அவர் மட்டுமே அறிவார்... எத்தனையோ பிஞ்சு குழந்தைகளை கொல்லும் போது வராத குற்றஉணர்வு அவர் மனைவியை கண்டதும் வந்தது... சில ஜென்மங்கள் எப்போதும் இப்படித்தான்... தங்களுக்கு ஒன்று என்றால் மாட்டுமே துடிக்கவும் செய்யும்...

"சாரு... இவங்க சொல்றது உண்மை இல்லடா நம்பாத... உன்கிட்ட பொய் சொல்லிருக்காங்க... நம்பாதடா..."

அவரோ கண்களை துடைத்துக்கொண்டு "அவங்க சொன்னத நான் ஏங்க நம்ப போறேன்... இவ்வளவு நாள் நீங்க சொன்ன பொய்யையே நம்பி வாழ்ந்த இந்த மூளை அவ்வளவு சீக்கிரம் உண்மைய நம்பிடுமா என்ன?... இப்போவும் நீங்க சொன்னதை தான் நம்ப போறேன்... இனியும் அப்படியே முட்டாளாவே இருக்க போறேன்..."

"டேய் சாருமா... அப்படியெல்லாம் இல்லை டா..." என்றவருக்கு மேலும் பேச வார்த்தை வரவில்லை...

என்னவென்று சொல்வார் அதான் உண்மை தெரிந்துவிட்டதே.. கண்களில் கண்ணீருடன் நிற்கும் மனைவியிடம் என்ன சொல்வார்... தான் செய்யவில்லை என்று பொய்யா??... இல்லை செய்தவற்றை முழுமையாகவா??... சொன்னால் தாங்குவாரா??.. முதலில் தன்னால் சொல்ல முடியுமா??... என்றெல்லாம் பல யோசனை அவர் மனதில்...

அதன் பின் சாரதா எதுவும் பேசவில்லை.. பார்வை மொத்தமும் அவர் கணவரிடம் தான்... ஆனால் அதிலோ எப்போதும் இருக்கும் காதல் இருக்கவில்லை மாறாக அந்நிய பார்வை மட்டுமே.... ஜெயராமனை அதுவே கொல்லாமல் கொன்றது...

அதன் பின் மடை திறந்த வெல்லம் தான்.. தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்திருந்தார்... புகழ் அதனை ஆதரமாக பதிவும் செய்து கொண்டான்..


"ரொம்ப தேங்க்ஸ் மேம்.. எங்கள நம்பி வந்ததுக்கு.. அண்ட் ரொம்ப சாரி.. இப்படி ஒரு கஷ்டத்த உங்களுக்கு குடுத்ததுக்கு..."

"இட்ஸ் ஓகே யங் மேன்.. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க... இனிமேல் எனக்கு புருசனும் இல்லை புள்ளையும் இல்லை... இப்போ போய் உங்க வைப பர்ஸ்ட் காப்பாத்துங்க.. மீதி அப்பறம் பேசிக்கலாம்..." என்றவர் ஒருநிமிடம் கூட தாமதிக்கவில்லை வெளியேறிவிட்டார்...

ஜெயராமானின் முகத்தை கூட அவருக்கு பார்க்க பிடிக்கவில்லை.. நிலவனும் புகழும் தாங்களே வீட்டில் விடுவதாக எவ்வளவு கூறியும் மறுத்தவர்.. அவராகவே நடந்து சென்றுவிட்டார்...

அவருக்கு தனிமை தேவை என்பதை புரிந்து கொண்ட நிலவனும் அவர் போக்கிலேயே விட்டுவிட்டான்...

ஆனால் அப்படியே விடவில்லை.. அவர் இருக்கும் மனநிலைக்கு எந்த தப்பான முடிவுக்கும் போய் விடுவாரோ என்று அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது...

தனக்கு கீழ் வேலை செய்யும் அந்த இடத்துக்கு அருகில் இருக்கும் அதிகாரி ஒருவனுக்கு அழைத்தவன்.. நிலைமைய எடுத்து செல்லி அவரை பின் தொடருமாறு பணிந்தவன்.. அவர் வீடு சென்ற பிறகே செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்... அதன் பிறகே மனைவியை காக்க கிளம்பி இருந்தான்...

இத்தனை நாள் ஓடி அலைந்த முயற்சிகளுக்கு விடையாய், அவன் மனைவி இருக்கும் இடத்துக்கான வழியை அறிந்துகொண்டாலும்... தனக்கு உதவிய ஒரு உயிரின் மனநிலை அந்த நேரத்தில் கூட முக்கியம் என்று கருதியது அவன் உள்ளம்...


அங்கே கல்லூரியில் உள்ள அந்த லேபிற்கே மீண்டும் சென்றனர் நிலவனும் புகழும்...

அவர்கள் வாகனத்தை அங்கே நிறுத்த.. அவன் ஏற்கனவே சொல்லி இருந்ததற்கு இணங்க, முரளிகிருஷ்ணனின் உதவியுடன் ஐவர் கொண்ட நம்பிக்கையான குழு ஒன்றும் வந்திறங்கியது... இன்று கல்லூரி விடுமுறை தினம் என்பதால் மாணவர் கூட்டம் அங்கு இல்லை... அதுவும் பெரிய உதவியாகிப்போனது...

நேரே அந்த லேபினுள் நுழைந்து கொண்டவன்.. ஜெயராமன் சொன்னபடி அங்கு வரையட்டிருந்த அந்த லோர்ட் கிருஷ்ணனின் கண் மணிக்குள் சிறிதாய் இருந்த பட்டன் போன்ற ஒன்றை தொட்டதுதான் தாமதம்.. சட்டென்று அதற்கு எதிர் பக்கமாக இருந்த சுவர் தன்னால் இரண்டாக பிளந்து திறந்து கொண்டது... அங்கே வர்ஷி சொன்னது போலவே.. கீழ் நோக்கி செல்லும் படியும் இருந்தது...

"நீங்க மூனு பேரும் இங்கயே இருங்க.. உள்ளுக்குள் எத்தனை பேர் இருப்பாங்கன்னு தெரியல... முரளி சார் இன்னும் போர்ஸ் கொஞ்ச நேரத்துல வரும்னு சொல்லி இருக்காரு.. அவங்க வந்ததும் இங்கேயே வெயிட் பண்ணுங்க.. நான் இன்போர்ம் பண்ணப்பறம் உள்ள வந்தா போதும்..." என்று தன்னோடு வந்த அந்த ஐவர் குழுவில் மூவரை அங்கேயே இருக்க பணித்தவன்...

ஏழு பேரும் ஒன்றாக தொடர்பில் இருக்கும் படி தொலைபேசி அழைப்பை இணைத்தவன்... மற்ற இருவரோடு இவனும் புகழும் அந்த படி வழியே உள்ளே இறங்கினர்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
நிலவன் முன்னே செல்ல.. அவனை அடுத்து புகழும்,அவர்கள் இருவரின் பின்னால் மற்ற இருவரும் என நால்வலும் சுற்றி முற்றி பார்த்தப்படி தான் ஒவ்வொரு எட்டாய் எடுத்து வைத்தனர்....

கொஞ்ச தூரம் செல்ல வழி இரண்டாய் பிரிந்து கொண்டது... நிலவன் புகழை பார்க்க, அவனோ ஒரு பக்கம் பின்னால் வந்த ஒருவனுடன் செல்ல... நிலவன் அடுத்த வழி பக்கமாக மற்றொருவனுடன் சென்றான்...

பெரிதாய் வெளிச்சம் இருக்கவில்லை... அங்காங்கே ஒரு மின்குமிழ் அவ்வளவே...

நேரே சென்று கொண்டிருந்தவனுக்கு வலது பக்கம் திரும்பும் பாதை வரவும்... மறைவில் நின்று எட்டிபார்க்க.. அங்கே ஒருவனின் முதுகு தெரிந்தது...

சத்தம் வராது சுடக்கூடிய துப்பாக்கி வைத்திருந்தான் தான்.. ஆனால் அருகில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் அதனை உபயோகிப்பது ஆபத்து என்பதனால்... பின்னால் நின்றிருந்தவனை அங்கேயே நிற்குமாறு சைகை செய்தான்..

மெல்ல சத்தம் வராமல் முன்னேறி அங்கே நின்றிருந்தவனின் வாயை கைகளால் மூடிவன், சத்தம் வெளியே வராமல் தலையை திருப்பி உடைத்திருந்தான்...

அவன் எதிர்பார்த்தது போல அதனை பார்த்து இன்னொருவன் ஓடி வர அவனையும் தாக்கியவன்.. வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி.. தன்னோடு வந்தவனுக்கு வரும்படி சைகை செய்தவன் முன்னேற... அந்த பாதையின் திருப்பதில் புகழை கண்டுகொண்டான்...

"மச்சான் ஆர் யூ ஆல்ரைட்... அந்த பக்கம் எத்தனை பேர் இருந்தாங்க..." என்றான் புகழிடம்

"மூனு பேர் தான் மச்சான்... இவ்வளவு பெரிய இடத்துக்கு காவலுக்கு வேற யாரையும் போடாம இருக்குறது தான் இடிக்கிது.."

"இவ்வளவு தடையையும் மீறி யாரு வந்துட போறாங்கன்ற தைரியம் தான் மச்சான்..." என்றவன் மற்றவர்களோடு முன்னேற அவர்களை ஐந்து பேர் சூழ்ந்து கொண்டனர்...





அங்கே ஹாஸ்பிடலில் ஜேகே வழமை போல விஷ்வாவாக அவன் அறையில் அமர்ந்திருந்தான்... அந்த நேரம் அவனது கைகடிகாரதில் இருந்து வித்தியாசமான சத்தம் வெளியாக, அவன் கைகள் தன்னால் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்த புருவத்தில் குழப்ப முடிச்சு...

அவன் ரகசிய அறையை யாராவது திறக்க முற்பட்டால் தான் அந்த சத்தமே கேட்கும்.. அதுவும் அதிரலுக்கு ஊசி போட்டுவிட்டு வந்து ஒரு மணிநேரம் தான் தாண்டி இருக்கும்... அதற்குள் யாராக இருக்கும்... அவனை தாண்டி அதனை தொட அங்கே யாருக்கும் தைரியம் இல்லையே...

வசந்துக்கு அழைத்தபடி.. அங்கிருந்து டீனின் அறையான ஜெயராமனின் அறைக்குள் அவன் கைரேகையை பதித்தவன் உள்ளே நுழைந்து கொண்டான்...

அந்தப்பக்கம் வசந்த் அழைப்பை உயிர்பிக்க "இடியட் என்ன பண்ணுற நீ.. அங்க அதிரல வெச்சிருக்க சீக்ரெட் ரூம யாரோ திறக்க ட்ரை பன்றாங்க..."

"நோ சார் அதுக்கு வாய்ப்பில்லையே... நம்ம பசங்க யாரும் தொட கூட மாற்றங்களே... எல்லாத்தையும் மீறி யாரு வருவா?.."

"நான் கேள்வி கேட்டா திருப்பி நீ என்ன கேக்குறியா இடியட்?.. அது அந்த நிலவனா தான் இருக்கும் ராஸ்கல் எப்படியோ மோப்பம் பிடிச்சிட்டான்.. நீ நம்ம ஆட்களை கூட்டிட்டு அங்க வந்து சேரு.. இன்னைக்கு அவனுக்கு அங்கேயே சமாதி கட்டி ஆகணும்..." என்றவன் டீனின் அறையில் இருந்த இருக்கைக்கு அருகில் மறைவாக இருக்கும் பட்டனை தட்ட.. அங்கேயும் பின் சுவர் பிளந்து அவனுக்கு வழி விட்டது.. ஒரே இடத்துக்கு இரு வழிகள்...



அங்கே நிலவனோ "எலிகள்" என்று பொறிக்கப்பட்டிருந்த முதல் அறையை தான் முதலில் திறந்தான்... திறக்கும் போதே வந்த மணம், மூக்கை மூடும் படியாக தான் இருந்தது... வெளியே காட்டிலும் உள்ளே இன்னும் இருட்டு.. என்ன இருக்கிறது ஒன்றும் புரியவில்லை...

தனது தொலைபேசியில் வெளிச்சத்தை படரவிட்டப்படியே நிலவனும் புகழும் உள்ளே நுழைய மற்ற இருவர் வெளியே நின்று கொண்டனர்...

அங்கே குழந்தைகள் தரையை ஒட்டி படுத்திருந்தனர்... ஆனால் இவர்கள் உள்ளே சென்றும் சத்தம் கூட போடவில்லை... யோசனையுடன் மேலும் முன்னேறினர்...

"டேய்.. யாரெல்லாம் டா இருக்கீங்க.. உங்கள காப்பாத்த வந்திருக்கோம்டா... எழுந்து வாங்க தங்கங்களா??..." என்று நிலவன் பேசியும் எந்த எதிர்வினையும் இல்லை...

நிலவனுக்கோ மனது துடித்தது.. யாரும் உயிரோடு இல்லையோ என்ற எண்ணம் சூழ... மனதில் அழுத்தம்...

"என்னடா புகழ் யாரும் ரியாக்ட் பண்ண மாட்டேங்குறாங்க..."

"இரு மச்சான் நான் இங்க லைட் ஏதாச்சும் இருக்கான்னு பாக்குறேன்..." என்றவன் தேடி லைட்டா போடவும்..

நிலவனுக்கும் சரி புகழுக்கும் சரி கண் கொண்டு பார்க்க முடியவில்லை... அத்தனை குழந்தைகள் அங்கே... ஒருவர் கூட உயிரோடு இல்லை என்பது மட்டும் புரிந்தது..

புகழோ ஒவ்வொருவராய் யாருக்காவது மூச்சு இருக்கிறதா என்று பார்க்க.. பதில் பூஜ்ஜியம் தான்...

எப்படியும் நேற்றோ இல்லை அதற்கு முந்திய நாளோ தான் இறந்திருக்க வேண்டும்.. ஏனென்று அறியாமல் பலியாய் இத்தனை ஜீவன்...

நிலவனோ கண்களை துடைத்துக்கொண்டவன்.. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வெளியேறிவிட்டான்...

"என்ன மச்சான் இதெல்லாம்.. என்னடா பாவம் பண்ணாங்க இவங்கல்லாம்.. சாகுற வயசா மச்சான் இது.. என்ன அனுபவிச்சிடாங்கன்னு இவங்களுக்கு இந்த நிலைமை..."

"மச்சான் இன்னும் என்ன இருக்கும்னு தெரியல இங்கயே நின்னா எப்படி... வா இன்னும் யாரையாவது காப்பாத்தலாமான்னு பாப்போம்.." என்றான் புகழ் நிலைமையை உணர்ந்து..

அங்கே அடுத்து "எஸ்ப்போர்ட்" என்ற அறையை திறக்க.. அங்கே வெளிச்சம் ஏற்கனவே இருந்தது... கட்டில் போடப்பட்டு அதில் ஒவ்வொரு குழந்தையும் படுத்திருந்தது...

இவர்கள் சென்ற சத்ததுக்கு எழுந்து அமர்ந்து பார்க்க, நிலவனுக்கோ பெருமூச்சு...

இப்படி அங்குள்ள அறைகள் ஒவ்வொன்றாய் திறக்க ஐந்து அறையில் கிட்டத்தட்ட நூறு பிள்ளைகள் மீட்கப்பட்டனர்...

வயிற்றில் காயங்களுக்கு மருந்திட்டப்படி நிறைய குழந்தைகள் இருந்தனர்.. உறுப்பு எடுக்கப்பட்ட குழந்தைகள் என்பது நிலவனுக்கு புரியத்தான் செய்தது..

அவ்வளவு குழந்தைகளையும் அந்த இரு அதிகாரிகளிடம் ஒப்படைத்து வெளியே அழைத்து செல்லும் படி பணிந்தவன்... புகழுடன் முன்னேறினான்...

அடுத்து அவன் சென்றது அதிரலை அடைத்து வைத்திருக்கும் அறைக்கு தான்... எவ்வளவு திறந்து பார்த்தும் திறக்க முடியவில்லை... இலத்திரனியல் பூட்டு போடப்பட்டிருந்தது...

அவன் திறக்க முயற்சித்து கொண்டிருக்கும் போதே அங்கே வந்திருந்தான் ஜேகே..

"நீங்க இங்க எப்படி விஷ்வா?..." என்றான் நிலவன் அவன் வந்ததை உணர்ந்து...

"உன் பக்கத்துலயே இருந்தாலும்.. உன்னால என்ன கண்டுபிடிக்க முடியாது..." என்றவன் சிரிக்க.. நிலவனின் ஒற்றை புருவம் உயர்ந்தது..

"எல்லா சரக்கையும் காப்பாத்திட்ட போல... ரெண்டு நாள் முன்ன வந்திருந்தா அந்த எலிகளையும் காப்பாத்தி இருக்கலாம்.. ஜஸ்ட் மிஸ்.."

"ஜேகே??..."

"விஸ்வஜெகத்தீஸ்வர கிருஷ்ணன்" என்றான் நக்கலாய்...

நிலவனோ அவனை அடிக்க பாய்ந்தவன் "டேய் சின்ன குழந்தைங்கடா அவங்க.. அவங்கள போய்.." என்று அவன் மூக்கிலே குத்த

வழிந்த இரத்தத்தை துடைத்து கொண்ட ஜேகேவோ.. "ஓஓஓஓ அதுக்கு சூடாகுரியா?.. வேல முடிஞ்சிது.. முடிச்சிட்டேன்.." என்றதும் நிலவன் பார்வை அவனையே துளைக்க

"அதான் உன் மருந்த ரீ கிரீயேட் பண்ணிட்டேனே.. இனி எதுக்கு டெஸ்டிங் பீஸஸ்..." என்றான் சர்வ சாதாரணமாய்... விளைவு நிலவனிடம் மேலும் பல அடிகளை பெற்று உதடு கிழிந்திருந்தது...

"என்ன பாஸ் நீங்க... தொட்டதுக்கெல்லாம் கை வைக்கிறீங்க... மருத்துவ புரட்சி செய்யும் போது சில உயிர் போகத்தான் செய்யும்.. டாக்டர் உங்களுக்கு தெரியாததா??.. அனிமல் உயிர் மட்டும் உயிர் இல்லையோ?..."

"ரொம்ப பேசுற நீ... அடிவாங்கி சாகாம அதிரல் எங்கன்னு சொல்லு?.." என்றான் கோபத்தை அடக்கியபடி அதிரல் மட்டும் அவனிடம் இல்லை என்றால் இப்பொழுதே அவனை சமாதி ஆக்கி இருப்பான்..

"ஹாஹாஹா.. இப்போ தான் மேட்டருக்கே வந்திருக்க நீ... ஒரு லவ்வர இவ்வளவு லேட்டாவா கேப்ப.. இதோ இதுக்குள்ள தான் இருக்கா.. முடிஞ்சா காப்பாத்து.. ஆனா இவ்வளவு லேட்டா கேக்குறியே, அவ உயிர் உனக்கு முக்கியம் இல்லையோ?..." என்று அவன் கேட்க, நிலவன் அவனை பார்த்த பார்வையில் உள்ள காரத்தை அவன் உணரவே செய்தான்...

"செம சூடா இருக்க போலயே... கொஞ்சம் குலாக்குவோமா?.." என்று கேட்டவன் அந்த அறையின் லாக்கை தன் கை கடிகாரதின் மூலம் திறந்திருந்தான்...

நிலவன் எதையும் யோசிக்கவில்லை உள்ளே நுழைந்திருந்தான்... அங்கே அவன் தேவதையோ மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்...

"ஜாஸ்... அதி... பேசுடி.. என்னடி... பொண்டாட்டி.. சாவடிப்பேன்டி உன்ன... உன் நிலவன் வந்திருக்கேன்டி..." என்று ஏதேதோ பிதற்றினான் அவள் முன்னே...

"ச்சு ச்சு... செம லவ் சீன்... பாத்துப்பா நிலவா.. எழும்பி வந்துட போறா??..." என்று நக்கலாக அவன் சொல்ல... எதுவும் அவன் காதில் விழவில்லை...
மாறாக அவன் கவனம் எல்லாம் அதிரலிடம் தான்...

ஜேகேயின் கவனம் அங்கே அதிரல் நிலவனிடத்தில் இருந்ததில் அங்கிருந்து புகழ் வெளியேறியதை அவன் அறியவில்லை...

அன்று புகழின் நண்பன் ஜேகே பற்றி சொல்லி இருந்த விடயம் இன்று புகழுக்கு ஞாபகம் வர, கூடவே அதற்கு நிலவன் சொன்னதும் ஞாபகம் வந்தது...

"ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கும் புகழ் இந்த ஜேகேவோட வீக்னஸ் இந்த விஷயம் தான்... நமக்கு கண்டிப்பா யூஸ் ஆகும்..." என்றிருந்தான்..

அந்த நம்பிக்கையுடன் தான் புகழ் அங்கிருந்து கிளம்பி இருந்தான்...





நிலவனோ "என்னடா பண்ண அவள..." என்று ஜேகேவின் சட்டையை பிடிக்க...

"நானா?.. நான் எதுவுமே பண்ணலப்பா... சின்னதா ஒரு இன்ஜக்ஷன் அவ்வளவு தான்... ஆனா பாரு இனி எழுந்துக்கவே மாட்டா... மூளை தூங்கிடுச்சு.. சோ நான் அவ ஹார்ட் மட்டும் எடுத்துக்குறேன்.. நீ அதுக்கு பிறகு வேணா அவளை கொண்டு போய் அடக்கம் பண்ணிக்கோ..." என்றான் அத்தனை சாதாரணமாக...

நிலவனோ கோபத்தில் அடிக்க பாய... பின்னிருந்து வசந்த் மற்றும் ஜேகேயின் ஆட்கள் பிடித்து கொண்டனர்...

அவர்களிடம் விடும் படி செய்கை செய்தவன், "என்ன நிலவா இப்படி வந்து மாட்டிக்கிட்ட..." என்றவன் ஒற்றை அறை தான் .. நிலவனின் உதட்டில் இரத்தம் வந்திருந்தது....

"என்னடா இவ்வளவு நேரம் அடிவாங்குனவன் அடிக்குறானேனு பாக்கறியா??... எனக்கு உன் மேல தனி பாசம்னு வெச்சிக்கோயேன்.. அதனால என்ன பண்ணுற அவளை எனக்கு கொடுத்துடு.." என்றதும் இருவருக்குள்ளும் சண்டை ஆரம்பமானது...

ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பது அவர்கள் சண்டை செய்யும் லாவகத்திலே புரிந்தது...

சண்டையின் இடையில் ஜேகே, "எப்படியும் இன்னும் டென் ஹவர்ஸ்ல பிரைன் டெத் ஆகி சாக போறா... அவ ஹார்ட்ட என் ருத்ராம்மாக்கு குடுத்து உதவலாம்ல.. உனக்கு வேற இலகுன இதயம்..." என்று பேசி இரண்டு அடிகளை மேலதிகமாக வாங்கிக்கொண்டான்...

அந்த நேரம் அவன் ஆட்கள் அதிரலை தூக்கி செல்லபார்க்க... தடுக்க போன நிலவனை ஜேகே பிடித்துக்கொண்டன்...

காதில் இணைக்கப்பட்டிருந்த கருவி வேறு சண்டையில் கீழே விழுந்து நொறுங்கி இருந்தது... புகழை தேட அவனும் அங்கு இல்லை... சுற்றும் முற்றும் பார்த்தவன் எதிரில் இருந்த கட்டை ஒன்றால் ஜேகேவை தாக்கி.. அங்கே விரைய, அதற்குள் மின்னல் வேகத்தில் எழுந்த ஜேகே அவனை மீண்டும் பிடித்துக்கொண்டான்...

அந்த நேரம் சரியாய் வெளியே நின்ற படை உள்ளே வர... நிலவனின் முகத்தில் வெளிச்சம்... புகழோ வெளியேறும் போது இவர்களிடம் சொல்லிவிட்டே சென்றிருந்தான்...



அடுத்த பத்து நிமிடத்தில் இடமே நிலவனின் கட்டுபாட்டிற்குள் வந்திருந்தது...

ஜேகே மற்றும் அவன் ஆட்கள் கட்டி வைக்கப்பட்டிருக்க... நிலவனோ.. ஜேகேவின் முன் நின்றவன்... "அந்த மாத்து மருந்து எங்க இருக்கு..."

"ஹாஹாஹா... மாத்து மருந்தா???... அந்த நிஷா உன்கிட்ட சிக்கிட்டாளா??... அப்போ எல்லாம் தெரிஞ்சி தான் வந்திருக்க... ஆனா என்ன பண்ணுறது அந்த மாத்து மருந்த தான் நான் கண்டுபிடிக்கவே இல்லையே...." என்றவன் மேலும் சிரிக்க இப்போது அதிர்வது அவன் முறையானது... இருந்தும் நம்பிக்கையை தளர விடவில்லை....

"ஜேகே.. உன் உயிர் உனக்கு வேணும்னா உண்மையா சொல்லு இல்லை நீயும் இங்கயே சாக போற..."

"நான் ஏண்டா மாத்து மருந்த கண்டுபிடிக்க போறேன்... எனக்கென்ன பைத்தியமா??... அதுசரி நீதான் பெரிய அறிவாளியாச்சே நீ கண்டுபிடி..." என்றவன் பேச்சு எகத்தாளமாகவே வந்தது...

அதன் பின் நேரம் போனதே தவிர அவனிடம் இருந்து பதில் தான் வரவில்லை... அடித்தும் பார்த்துவிட்டான் பலனோ பூஜ்ஜியம் தான்...

அவனிடம் நேரமும் இல்லை... அவன் காதலை காக்க வெறும் ஒன்பது மணி நேரம் தான் மீதம் இருந்தது...

அந்த நேரம் புகழ் சரியாக உள்ளே நுழைந்தவன்... நிலவன் காதில் ஏதோ சொல்ல... நிலவன் முகத்தில் நம்பிக்கை மீண்டிருந்தது...

"என்ன விஷ்வா சார்... நீங்களே இப்படி சொல்லலாமா??... அதியோட நெருங்குன சொந்தம் நீங்க..." என்றதும் அத்தனை நேரம் சிரிப்புடன் இருந்த ஜேகேயின் முகம் சிரிப்பை தொலைத்தது...

"பாத்தீங்களா உங்களுக்கே கவலையாகி போச்சு... உங்க மச்சினிச்சி உயிரோட நீங்களே விளையாடலாமா?.." என்றவன் புகழிடம் கண்ணை காட்ட

புகழோ, "ராம்.." என்று அழைக்க நிலவனின் நண்பர்கள் மூவரும், கை கட்டப்பட்டு வாய் அடக்கப்பட்ட நிலையில் ஒருவரை உள்ளே அழைத்து வந்திருந்தனர்...

அந்த நபரை பார்க்க ஜேகேவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்துகொண்டது...

"என்ன சொல்லு உன் அப்பாவும் சரி நீயும் சரி எதுல தப்பா இருந்தாலும் காதல்ல ரொம்ப ஸ்ட்ரோங்கா தான் இருக்கீங்க..."




ஏழு மணி நேரங்களின் பின்...

அங்கே நிலவனின் கெஸ்ட் ஹவுஸில் உள்ள லேப் போன்ற ஒரு அறையில் அதிரல் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்... நான்கு வருடங்களின் முன் அவனது ராட்சியம் அது... நான்கு வருடம் கழித்து அவன் காதலுக்காய் உள்ளே நுழைந்திருக்கிறான்...

கடந்த ஆறு மணிநேரமாக நிலவனும் எவ்வளவோ போராடுகிறான்... அந்த மாற்று மருந்தை கண்டுபிக்க வேண்டுமென்று... அத்தனை முயற்சிகளும் தோல்வியே...

அவனுக்கு மட்டுமல்ல அங்கே நின்றிருந்த அவன் நண்பர்களுக்கும் தெரியும் வெறும் ஒரு ஒன்பது மணி நேரத்தில் மருந்து எல்லாம் கண்டுபிடிப்பது என்பது நூற்றில் ஒரு பங்குக்கும் குறைவான அளவில் கூட வாய்ப்புகள் குறைவென்பது... ஆனால் நிலவனுக்கோ அவன் காதலில் நம்பிக்கை இருந்தது...

இங்கே இவர்களின் போராட்டம் என்றால் அங்கே வாசுகி,சேதுராமன் கீதா, கார்த்தி... நால்வரும் கடவுளிடம் மன்றாடலுடன் கோயிலே கதி என்று அமர்ந்திருந்தனர்...


அந்த முறையும் முயற்சி தோல்வியில் முடிய.. நிலவன் எழுந்து அதிரல் அருகில் சென்றான்..

அவன் மனமோ போராட்டத்தின் மத்தியில் வெடிக்க காத்திருக்க.. அதற்கு நேர் மாறாய் அவளோ அத்தனை சாதாரணமாய் ஆழ்ந்த உறக்கத்தில் அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தாள்...

அவள் முகம் அருகில் குனிந்தவன் "எல்லாம் என்னால தான்ல... நீ அங்கேயே இருந்திருப்ப.. எனக்காகனு இங்க வந்து இப்போ என்னால நீயும் சாக போற... என் ஒருத்தனால தான் இங்க எல்லாம்.." என்று தன்னை தானே அடித்துக்கொண்டவன்.. கண்களை துடைத்துக்கொண்டு..

"என்ன கஷ்டப்படுத்துறல்லடி.. உன்ன கொல்ல போறேன் பாரேன்... நீ இல்லனா நான் இல்லனு உனக்கு தெரியும்லடி.. வா அதி நான் பாவம்ல.. ஆறு குழந்தை பெத்துக்கணும்னு கேட்டல.. ஆறு என்ன இங்க வீடு புல்லா பெத்துக்கலாம்டி... நீ எது கேட்டாலும் நோ சொல்லவே மாட்டேன்... எழுந்து வாவேன்... என் பட்டுல.. உன் மூன் பாவம்ல.." என்றவனது கண்ணீர் அவள் முகத்தில் பட்டு தெரித்தது...


"நிலவா டைம் ஆகுது பாரு டூ ஹவர்ஸ் தான்டா இருக்கு... அதுக்கப்பறம் அவளுக்கு தான் ஆபத்து.. உன்னால முடியும் நிலவா.. உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல... கடவுள் அதிக்கு எதுவும் ஆக விடமாட்டாரு..." என்ற பூஜாவோ அவன் தோளில் அழுத்தம் கொடுக்க.. நிதர்சனம் புரிந்து கொண்டவன்..

அதிரலை அப்படியே தூக்கி நெஞ்சில் சாய்த்துக்கொண்டவன்... "என்கிட்ட வந்துடுடி பட்டு... நீ இல்லனா நானும் இல்லை... அது மட்டும் பொய் இல்லை.. உன் இதயம் துடிக்கிறத நிறுத்துனா... என் இதயமும் நிறுத்திடும்..." என்றவன் அவள் உச்சந்தலையில் ஆழ்ந்த முத்தத்தை பதித்தவன் அவளை படுக்க வைத்து எழுந்து கொள்ள, கூடவே அவன் ஆடையோடு ஒட்டிக்கொண்டு அவள் தலையில் மிச்சம் மீதி இருந்த காய்ந்த ஜாதி மல்லி பூவும் அவனோடு சென்றது....

அடுத்த ஒன்றறை மணி நேரமும் மீண்டும் அவன் மூளைக்கு வேலை என்றே சென்றது... இப்போது தயார் செய்த மருந்தை கையில் வைத்து கொண்டிருவன் மனதில் மட்டுமல்ல கையிலும் அத்தனை நடுக்கம்...

அவன் கையின் நடுகத்தில் அவன் உடலில் ஒட்டி இருந்த காய்ந்த ஜாதி மல்லி பூ ஒன்றும் உடுண்டு அந்த குடுவையில் விழுந்தது... அதனை நிலவன் கவனிக்கவே இல்லை...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவன்... அந்த மருந்தை பரிசோதிக்க அவன் எதிர்பாத்த விளைவு வந்ததில் அவன் சக்தி மொத்தமும் வடிந்து அங்கேயே இருக்கையில் சாய்ந்துவிட்டான்...

நண்பர்களுக்கும் அத்தனை சந்தோசம்... வார்த்தையால் சொல்லிவிட முடியவில்லை...

ஆனால் அவன் மனம் மகிழ்ச்சி கொண்டாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கவே செய்தது... இதனை அவள் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என... ஆனால் அவனுக்கு வேறு வழியும் இல்லை.. இன்னும் இருப்பது அரை மணி நேரம் தான்... கண்களை மூடிக்கொண்டு ஒருமுறை கடவுளை பிராத்தித்தான் அவன் காதலுக்காக...

அதான் பின் நொடியும் தாமதிக்காது கைகள் நடுங்க அந்த மருந்தை அவள் நரம்பில் செலுத்தி இருந்தான்... கடக்கும் ஒவ்வொரு வினாடியும் அவன் மனதில் பெரிய பூகம்பத்தையே உருவாக்கியது...

சென்ற அறுபது வினாடிகளுக்கும் எதுவும் மாற்றம் இருக்கவில்லை... சரியாக ஒரு நிமிடம் இருபது வினாடிகளில்.. திடீரென அவள் உடல் தூக்கி போட.. அவளுக்கு மூச்சு திணற தொடங்கியது....
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
படிப்படியாக அவள் பல்ஸ் ரேட் குறைவது அருகில் பொறுத்தப்பட்டிருந்த அந்த கருவியில் தெரிய நிலவனின் உடல் உறைந்த நிலை தான்...

அவளுக்கு மூச்சு வந்துவிட்டது என சந்தோசபடுவதா... இப்போது மூச்சு திணறி கொஞ்சம் கொஞ்சமா பல்ஸ் குறைகிறதே என கவலைப்படுவதா??... எதையும் அவன் மூளை செய்ய தயாராக இல்லை...

"அதி...." என்ற பெரிய சத்தத்தோடு அழுத பூஜா அந்த கணங்களின் அழுத்தம் தாங்காது அங்கே நிற்க முடியாமல் வெளியே சென்றிருந்தாள் கூடவே ராமும் செல்ல... விஷ்னுவோ நிலவனுக்கு ஆதரவாய் நின்றிருந்தான்...


பூஜாவின் சத்தத்தில் சுயம் பெற்றவன்... அருகில் நின்ற விஷ்னுவை பார்த்து... "மச்சான் ப்ளீஸ் டூ சம்திங் டா.... அவ எனக்கு வேணும் என் ஜாஸ் எனக்கு வேணும்... அவ இல்லாம நான் இல்லடா... எனக்கு ஒன்னும் ஆகல என் இதயம் துடிக்குதே அப்போ அவளுக்கும் எதுவும் இல்லல..." என்று சிறுவன் போல அழ விஷ்னுவுக்கோ அவன் அழுகையையும் பார்க்க முடியவில்லை... அதிரலின் நிலையையும் பார்க்க முடியவில்லை...

நிலவனோ, "ஜாஸ் வேணாம்டி உன் மூன் பாவம் இல்லையா??? வந்துடுடி... என்னால முடியல.. நீ இல்லாம நானும் இல்லைல..." என்றவன்

அவள் இறுதி மூச்சில் கலக்க ஆசை கொண்டான் போலும் அவன் இதழோடு தன் இதழை சேர்த்து ஆழ முத்தமிட, அவள் துடிப்பு படி படியாக குறைந்தது....

டிக் டிக் டிக்.....



ஜாதி மல்லி மலரும்....


கருத்து திரி 👇👇👇

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 30



"என்ன சொல்லு உன் அப்பாவும் சரி நீயும் சரி எதுல தப்பா இருந்தாலும் காதல்ல ரொம்ப ஸ்ட்ரோங்கா தான் இருக்கீங்க..." என்ற நிலவன் ஜேகேவை நக்கலாக பார்க்க... அவனோ முறைத்துக்கொண்டிருந்தான்

"அதுசரி.. என்ன நீ பன்னெண்டு வயசுலேயே காதலிய கிஸ் பண்ணி அம்மாகிட்ட அடி வாங்குனியாமே.. மெய்யாலுமா?..."

"டேய்..."

"காதலினு சொல்லாமில்லயா?.. அதுசரி உங்க ரெண்டு பேருல யாரு காதலி யாரு காதலன்?..."

"டேய்ய்ய்..."

"என்னங்கடா இது கேள்வி கேட்டா கத்துறான்... சரி உனக்கும் வேணா எனக்கும் வேணா அந்த மாத்து மருந்த குடு போயிட்டே இருப்பேன்... இல்லைனு வெச்சுக்கோயேன் உன் ஆளோட சங்க அறுத்துருவேன்..." என்றவன் கத்தியை அந்த உருவத்தின் கழுத்தில் வைக்க.. பதற்றம் இப்போது ஜேகேயின் முறையானது...

"சஞ்சுவ எதுவும் பண்ணிடாத... சத்தியமா மாத்து மருந்து எதுவும் நான் கண்டுபிடிக்கவே இல்லை.." என்றான்

ஆம் சஞ்சய் தான் அவன் காதலி... பத்து வயசு இருந்தே அவன் மீது இவனுக்கு தோன்றிய காதல் இது... சிறு வயது முதலே ஒன்றாக படித்தவர்கள்.. பாட புத்தகத்தை தாண்டி அவனுக்கென்று இருந்த உறவு அவன்.. நாளடைவில் காதலாகவும் மாறி இருந்தது..

அன்று சாரதா கோபப்பட்டு பேசியதற்கான காரணமும் இது தான்... ஜெயராமனுக்கு இவனோடு முட்டிக்கொள்ளும் காரணமும் இதுதான்...

இந்த வருடத்தோடு அமேரிக்கா சென்று விடுவோம் என்பதே அவர்கள் எண்ணமும்... இங்கேதான் அவர்களுக்கான அனுமதி இல்லை ஆனால் அங்கே அப்படி இல்லையே...

"பாத்தியா புகழ் சார் எப்படி உருகுறாருன்னு... ஓகே நீ கண்டுபிடிக்கலைனு நான் எப்படி நம்புறது..."

"ஐயோ.. சஞ்சு மேல சத்தியமா இல்லை..."

"இப்படி சொன்னா நம்பிடுவோமா?.."

"கத்திய எடு நிலவா.. இப்போ நீதான் அந்த மருந்த கண்டுபிடிச்சு ஆகணும்.. வேற வழி இல்லை... எங்கிட்ட இல்லை... இப்படியே கேட்டுட்டு இருந்தா டைம் தான் போகும்..." என்று அதிரலை காரணம் காட்டி அவனை திசை திருப்ப பார்க்க, நிலவனிடத்தில் அது வேலையும் செய்தது...

ஆழ மூச்செடுத்துக்கொண்ட நிலவன், "ஓகே அதிரலுக்கு போட்ட இன்ஜெக்ஷனோட சாம்பில் வேணும்..."

"அதோ.. அதோ அந்த பெட்டிக்குள்ள இருக்கு..." என்றதும் நிலவன் அந்த பெட்டியை எடுக்க.. அதுவோ பூட்டி இருந்தது... திறக்க முடியவில்லை... நிலவன் அவனை திரும்பி பார்க்க..

"ஸீரோ நைன் டு வன்..." என்றான் ஜேகே

நிலவனும் திறக்க உள்ளே இரண்டு மருந்துகள் இருந்தன..

"ரெண்டு இருக்கே... இதுல எது?"

"ரெண்டுமே அது தான்.." என்று உடனே பதில் வந்தது ஜேகேயிடமிருந்து..

அதனை எடுத்துக்கொண்டு ஜேகே அருகில் வந்தவன்.. "ரொம்பவே பிளே பண்ணிட்ட.. டையர்ட்டா இருக்கும் ரெஸ்ட் எடு.. என் பொண்டாட்டி உயிர காப்பாத்திட்டு வந்து உனக்கு வேண்டியத தறேன்.." என்றவன்

ஜேகே கையில் இருந்த கைகடிகாரத்தை கழற்றி தன்னிடம் வைத்துக்கொண்டான்...

"அது சரி இது தான் அந்த மருந்துனு எப்படி நம்புறது... டெஸ்ட் பண்ணி பாத்துடுவோமா?..." என்றவனது சிரிப்பிலேயே ஜேகேக்கு புரிந்து போனது அவன் செய்ய போகும் செயல்...

"டேய் நிலவா வேணாஆஆ..." என்று அவன் கத்த..

"என்ன மிஸ்டர் ஜேகே மருத்துவ உலகத்துட அரசனாம் நீங்க உங்களுக்கு தெரியாதா?.. மருந்து கண்டுபிடிக்கிற ப்ரோஸஸ்ல சில உயிர்கள் போகும்னு... நீங்களே கூட என்கிட்ட சொன்னீங்களே மறந்துடீங்களா??... டெஸ்ட் பண்ணி பாத்துடலாமா?..." என்று ஒரு மருந்தை ஊசியில் ஏற்றியவன் பார்வை ஜேகேயிடம் இருந்தாலும், பாதம் சஞ்சயை நோக்கி பின்னால் அசைந்தது...

நொடியும் தாமதிக்காமல் அந்த மருந்தை சஞ்சயின் கழுத்தில் இறக்கி இருந்தான்...

நின்றிருந்தவன் ஒரு நிமிடத்திலேயே அடியற்ற மரம் போல் கீழே விழ.. ஜேகேயின் அலறல் அந்த அறையை நிறைத்தது...

மருந்தை பூஜாவிடம் கொடுத்தவன்.. அதிரலை கையில் ஏந்திகொண்டான்..

அவர்கள் அத்தனை பேரையும் உள்ளே வைத்து அடைத்தவன் காவலுக்கு மூன்று பேரை நிற்க வைத்து, தன் தேவதையை காப்பாற்ற கிளம்பி இருந்தான்....



அதன் பின் கடந்து சென்ற ஒன்பது மணி நேரமாக அவன் காதலுக்காக தான் போராடுகிறான்...

அவன் உள்ளே அழுவது வெளியே நின்றிருந்த பூஜாவுக்கும் ராமுக்கும் கேட்கவே செய்தது...

"ஜாஸ் வேணாம்டி உன் மூன் பாவம் இல்லையா??? வந்துடுடி... என்னால முடியல.. நீ இல்லாம நானும் இல்லைல..." என்றவன்

அவள் இறுதி மூச்சில் கலக்க ஆசை கொண்டான் போலும் அவன் இதழோடு தன் இதழை சேர்த்து ஆழ முத்தமிட, அவள் துடிப்பு படி படியாக குறைந்தது...

அப்போதுதான் அந்த மருத்துவனுக்கு புரிந்தது, மூச்சு விட முடியாமல் தான் அவளுக்கு மூச்சு திணறி இருக்கிறது என்பதே...

எப்போது அவன் அவனது மூச்சு காற்றை அவள் இதழ் வழியே அவளுக்கு கொடுத்தானோ அப்போதே அவள் சுவாசம் மீண்டிருந்தது...

அவன் சுவாசம் கொடுத்து அவள் சுவாசம் மீட்டிருக்கிறான்....

அவளை விட்டு விலகியவன்.. விலகி கிடந்த ஓக்சிஜன் மாஸ்க்கை அவளுக்கு சரியாக மாட்டி விட அவளோ மயக்கத்துக்கு சென்றிருந்தாள்...

மூச்சு சீரான அறிகுறி பக்கத்தில் இருந்த கருவியில் காட்ட... நிலவனின் மொத்த சக்தியும் அவனை விட்டு சென்றிருந்தது... அப்படியே நிலத்தில் அமர்ந்திந்தான்...

இந்த மூன்று நாள் போராட்டத்தில் ஒரு காவலனாக காதலானாக நண்பனாக மருத்துவனாக மனிதனாக எதிலுமே குறை வைக்கவில்லை.. மனதார கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டது அவன் மனம்...

விஷ்ணுவிற்கோ ஆனந்தத்தில் கண்ணீரே வந்திருந்தது... பூஜா ராம் இருவரிடமும் சொல்ல வெளியே ஓடியேவிட்டான்...

அதன் பின் மூவருமாய் அவளை பரிசோதனை செய்தவர்கள் மனதில் வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை சந்தோசம்...

சாவின் விளிம்பில் சென்று காத்திருக்கிறானே!.. இதை விட ஒரு காதலன் தன் காதலை உணர்த்தி விட முடியுமா என்ன?...



அங்கே சாமியின் முன் அமர்ந்து பிராத்தனையில் இருந்த நால்வரின் முகமும் சோகத்தில் இருக்க.. கடவுளோ புன்னகையுடன் மலர் ஒன்றால் அவர்களை ஆசிர்வதித்தார்...

தன் மேல் விழுந்த மலரின் தொடுக்கையில் கண் திறந்து வாசுகி பார்க்க.. ரோஜா மலர் ஒன்று கடவுள் பாதத்தில் இருந்து விழுந்திருந்தது...

அவருக்கோ அத்தனை மகிழ்ச்சி.. அதிரல் மீண்டு வந்து விடுவாள் என்ற நம்பிக்கையே வந்திருந்தது... தெய்வத்துக்கு மனதார நன்றியும் சொல்லிக்கொண்டார்..

அந்த நேரம் சரியாக சேதுராமனின் தொலைபேசி அதன் இருப்பை உணர்த்தியது... எடுத்து பேசியவரின் முகத்தில் அத்தனை சந்தோசம்..

"இதோ இப்போவே வறோம்டா..." என்றவர் அழைப்பை துண்டிக்க வாசுகியோ அவரை கேள்வியாக பார்த்தார்..

"நம்ம மருமக பொழச்சிட்டா சுகி.. நம்ம கும்பிடுற சாமி நம்மல கைவிடல... " என்றவர் அத்தனை புன்னகையுடன் சொல்ல மற்றவர்களையும் தொற்றிகொண்டது அந்த புன்னகை...

மீண்டும் மனதார கடவுளை வணங்கியவர்கள் அங்கிருந்து செல்ல...

அங்கே சிலையாய் வீற்றிருந்த கடவுளின் முகத்திலோ நொடி நேர புன்னகை தோன்றி மறைந்தது... ஜாதி மல்லி பூவை அந்த மருந்து குடுவையினுள் விழ வைத்தவர் அவராகிற்றே... அவர் கணக்கு எங்கனம் பிழையாகும்... அநீதியை அழிக்க இந்த ஆட்டத்தை ஆரம்பித்தவர் அவரல்லவா!...



அதிரலோ சில மணி நேர ஆழ்ந்த தூக்கத்தின் பின் மெல்ல கண்களை திறக்க.. அடுத்த நாள் பொழுது விடிந்திருந்தது... அவள் வயிற்றிலோ ஏதோ பாரம்...

சற்று குனிந்து பார்த்தவளின் மனம் நிறைந்து போனது.. கனமான சுமையல்லவே இது... அவளுக்கே அவளுக்கான இஷ்டமான சுமை...

நிலவன் தான் இருக்கையில் அமர்ந்து அவள் வயிற்றை கட்டியப்படி துயிலில் இருந்தான்... இன்னும் அவன் ஆடை கூட மாற்றி இருக்கவில்லை... அதே காவலுடையில் தான் இருந்தான்...

சற்று அவன் தூக்கம் கலையாத வண்ணம் மெதுவாய் எழுந்தவள் சுற்றி பார்க்க, இப்போது நிலவன் அறையில் தான் இருந்தாள்... அவள் உடையோ மாற்றபட்டிருந்தது.. எத்தனை ஆசையாய் அணிந்தாள் அந்த புடவையை... பெருமூச்சொன்றை விட்டவள்.. நிலவன் முகத்தில் பார்வையை நிலைக்கவிட்டாள்...

என்ன நடந்திருக்கும் என்று தெரியாவிட்டாலும்.. தன்னை காப்பாற்றி இருக்கிறான் என்றால் எந்தளவு போராட்டத்தை இந்த மூன்று நாளில் சந்தித்து இருப்பான் என்பது அவளுக்கு புரியத்தான் செய்தது... அவளும் ஒரு மருத்துவர் தானே....

உடலின் சற்று வலி இருக்கவே செய்தது.. மெல்ல அமர்ந்தவாறு பின்னே சாய்ந்து கொண்டவள் அவன் கேசத்தை வருடி கொடுத்தாள்...

அவன் முகமோ அவள் வயிற்று பக்கமாக திரும்பியவாறே இருந்தது... அவளது இத்தனை அசைவுக்கும் அவன் எழவே இல்லை..
அவள் அருகாமையில், அத்தனை மன நிறைவுடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்..

அமர்ந்தவாறே தூங்குகிறானே வலிக்க போகிறதே என்று எண்ணினாலும் அவளால் தனியே எழுந்து அவனை தூக்கவும் உடல் ஒத்துழைக்காது என்பது புரிய, யாராவது வரட்டும் என காத்திருந்தாள்...


"ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா நிலவா?.. இனி எந்த கஷ்டம் உனக்கு வர்றதா இருந்தாலும் அத எனக்கே குடுத்துடுன்னு கடவுள வேண்டிக்கிறேன்டா.." என்று அவன் கன்னத்தில் முத்தம் பதித்தவள் அவனையே பார்த்தபடி அவன் கேசத்தை வருடிக்கொடுத்தாள்..

அந்த நேரம் புகழ் தான் முதலில் உள்ளே வந்தான்.. "அடடே அதி முழிச்சிட்டியா?... இப்போ உடம்பு எப்படி இருக்கு.."

"ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா.. தூங்குறான்ல.. பீலிங் பெட்டர் புகழ்... இவன கொஞ்சம் பெட்ல தூங்க வைக்கிறியா?.. பாவம் வலிக்க போகுது..." என்றாள் எங்கே அவன் சத்ததுக்கு எழுந்துகொள்வானோ என்று குரலை தாழ்த்தி மென்மையாக...

அவனும் சரி என்பதாய்.. நிலவனை கை தாங்களாக தூக்கி மெத்தையில் அதிரல் அருகில் படுக்க வைக்க நிலவனிடம் அசைவு...

"அச்சச்சோ எழுந்துட்டானா?" என பதறியவள் அவனை தட்டி கொடுக்க அவள் ஸ்பரிசம் அவனை அமைதிப்படுத்தி மீண்டும் உறக்கத்தில் ஆழ்த்தியது...

அவர்களை அப்படி பார்க்க அவன் கண்களில் கண்ணீர் தன்னால் உருண்டோடியது... நிலவன் பட்ட பாடு அவன் அறியாததா?..

கண்ணீரை துடைத்தவன் அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேற திரும்ப.. மொத்த குடும்பமும் அவன் பின்னால் தான் நின்றிருந்தது... அவர்கள் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் தான்...

மனநிறைவுடன் அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேறி இருந்தனர்..

வெளியே வந்த புகழ் முதலில் பேச்சை ஆரம்பித்தான்... "கல்யாணத்துக்கு கிட்டத்தட்ட வன் வீக் தான் இருக்கு... வேலை எல்லாம் நம்மலே செய்யலாம்.." என்ற அவனின் பேச்சுகிணங்க அதன் பின்னரே கல்யாணகளை கட்ட ஆரம்பித்தது அந்த வீட்டில்....



அப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது... இந்த ஒருவாரம் நிலவனுக்கு நிற்கவும் நேரம் இருக்கவில்லை.. அத்தனை ஓட்டம்... அத்தனை விஷ ஜந்துக்களையும் அழித்தாக வேண்டுமே...

அன்று காலை பொழுது அழகாக புலர்ந்திருந்தது... இன்று மாலை நிச்சயதார்த்தம் விடிந்தால் திருமணம்... என்கிற நிலை தான்...

பூஜா,விஷ்ணு, ராம், அதிரல், கீதா.. இப்படி அவரவர் குடும்பம் மொத்தமும் அங்கே தான் நிலவன் வீட்டில் கூடி இருந்தனர்...


நிலவனோ காலை நேரத்துக்கே வேலைக்கு தயாராகி வந்திருந்தான்.. அவன் எங்கே செல்கிறான் என்பது வரை அனைவருக்கும் தெரியும் என்பதால் யாரும் எதுவும் கேட்டிருக்கவில்லை...

அன்று அவன் அருகில் உறங்கியவன் எழும் போது அவள் உறங்கி இருந்தாள்... இருவரும் பேசிக்கொள்ளவில்லை... அன்று என்றில்லை அடுத்து வந்த ஏழு நாளும் பேசவில்லை என்பதைவிட நிலவன் அதற்கான சந்தர்ப்பதத்தை தவிர்ததான் என்று தான் சொல்ல வேண்டும்...

அவள் பேச வரும் நேரமெல்லாம்.. வேலை இருப்பது போல் காட்டிக்கொண்டான்... அவனது விலகல் அவளுக்கு புரியவும் செய்தது... ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை...


"மா டிபன் எடுத்து வைங்க வேலைக்கு போகணும்.." என்று சமையலறையை பார்த்து அவன் குரல் கொடுக்க..

"இதோ வறேன் உக்காரு நிலவா..." அவர் பதிலுக்கு குரல் கொடுக்க.. அவனும் சென்று அமர்ந்து கொண்டான்...

பெண்கள் சங்கம் உள்ளே தான் கூடி இருந்தது... அதில் உள்ளே மருமகளுக்கும் அத்தைக்கும் பேச்சு வார்த்தை போய் கொண்டிருந்தது...

"டார்லிங் ப்ளீஸ் என் செல்லம்ல நான் கொடுக்குறேனே.. நீ போகாத.." என்று பாவமாய் கேட்டவளை பார்க்க அவருக்கு அத்தனை ஆதங்கம்...

"இந்த லூசு பய எப்ப எப்படி இருப்பான்னு தெரியமட்டேங்கிது... புள்ளைய எப்படி ஏங்க விடுறான்.. அவனுக்கு பைத்தியம் தான் டா புடிச்சிருக்கு... உன்மேல என்ன கோபமாம் அவனுக்கு, அதுவும் பேசாம திரியிற அளவுக்கு... இரு நான் போய் ரெண்டுல ஒன்னு கேக்குறேன்.. இன்னைக்கு இருக்கு அவனுக்கு...." என்று அவர் கோபமாய் செல்ல பார்க்க, அவரை பிடித்து தடுத்தவள்

"அச்சோ டார்லிங் வேணா... அவருக்கு என்மேல கோபம் எல்லாம் இல்லை.. இது வேற... நீ இதுல வராத சாப்பாட மட்டும் கொடு..."

"அமைச்சரே அவன் பாடிய ஸ்ருதியை கவனித்தீரா??..." என்று கீதா பூஜாவின் தோளில் கை போட்டப்படி கேட்க

"ஆம் மன்னரே மரியாதை எல்லாம் தூள் பறக்கிறது... இதில் தலைவனின் அம்மையாரை கூட இடையில் வர கூடாதாம்..." என்றாள் அவளும் விளையாட்டாய்..

அங்கே சிரிப்பலை பரவ, அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல உணவை எடுத்துக்கொண்டு அதிரல் வெளியேறிவிட்டாள்...


அங்கே சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தவன் யாரிடமோ தொலைபேசியில் பேசிகொண்டிருந்தான்...

"இல்லை அங்கிள் அப்படியே பண்ணிடலாம்.. நோ இஸ்சு.. அங்க தான் வரப்போறேன்... சாப்பாடு முடிஞ்சதும் வந்துடுவேன்.. நான் வேணா உங்கள பிக்கப் பண்ணிக்கிறேனே.."

"....."

"ஓகே அங்கிள் அப்போ நீங்களே வந்துடுங்க... இன்னைக்கு எப்படியும் பைனலா இருக்கும்..." என்றவன் அழைப்பை துண்டிக்க.. அதிரல் சாப்பாடு பரிமாரவும் சரியாக இருந்தது...

நிமிர்ந்து பார்த்தவன் எதுவும் பேசவில்லை.. அமைதியாக உணவை உண்டான்...

அவள் இன்னொரு தோசை வைக்க போக வேண்டாம் என்பதாய் அவன் கை காட்ட, அதையும் மீறி வைத்திருந்தாள் அவள்..

ஒன்றும் சொல்லவில்லை அவள் வைத்துவிட்டாளே என்று பாதியை உண்டவன் அதிலே கை கழுவபோக

"அப்படியே வெச்சிடுங்க.. இல்லனா வேஸ்ட் ஆகிடும்..." என்றவளது பார்வை உணர்த்திய செய்தியில் அப்படியே எழுந்து சென்று உள்ளே கைகளை கழுவிக்கொண்டவன், வெளியே வர..

அவன் அமர்ந்த இடத்தில் இப்போது அவன் மனைவி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. அதுவும் அவன் மிச்சம் வைத்த உணவு..

அவன் எதிர்பார்த்தது தான்... மனதிலோ சிறகடிக்கும் உணர்வு.. இருந்தும் காட்டிகொல்லவில்லை... அப்படியே வெளியேறிவிட்டான்...

ஆனால் காதிலோ வீட்டு இளவட்டங்களிடம் மாட்டிக்கொண்டு சமாளிக்க முடியாமல் ஏதேதோ உளரும் மனையாளின் குரல் கேட்கவே செய்தது...

மனதிலோ.. "ரெண்டு நாள்ல கொஞ்சம் மெலிஞ்ச போல இருக்காளே..." என்ற எண்ணம் ஓட..

"நீ பேசாம சுத்துனா அப்பறம் அவ மெலியாமல் என்ன பண்ணுவா?.." என்று அவன் மனமே பதிலையும் எடுத்து கொடுத்தது...

அதனை ஒதுக்கியவன்.. செல்ல வேண்டிய இடத்துக்கு வாகனத்தை செலுத்தினான்...



சரியாக நிலவனின் வாகனம் நீதிமன்றத்தின் முன் நின்றது.. ஜெயராமன் மீது பொதுநல வழக்கு போட்டு இன்றோடு ஏழாவது நாள்... இன்று தான் தீர்ப்பும் கூட...

எல்லா ஆதாரங்களும் சட்டப்படி சமர்ப்பிக்கப்பட்டத்தில் ஜெயராமன் மீது குற்றம் சட்டப்படி நிரூபணம் ஆகி இருந்தது...

நிலவன் உள்ளே நுழைய புகழ் எல்லாம் தயார் நிலையில் தான் வைத்திருந்தான்...

"'என்ன மச்சான் ஏர்லியாவே வந்துட்ட சாப்பிடாமயே போயிட்டேன்னு அம்மா புலம்பிட்டு இருந்தாங்க... உனக்கு போனதும் சாப்பாடு வாங்கி குடுத்துட்டுட்டுமாம்னு ஆர்டர் எனக்கு... ஏதாச்சும் சாப்பிட்டியா??.."

"ஆச்சு மச்சான்.. இங்க தான் கடைல சாப்பிட்டேன்... சுகிமா எனக்கும் ரெண்டு வாட்டி கால் பண்ணிட்டாங்க..." என்றான் புன்னகையோடு..

"அவங்க பண்ணலனா தான் அதிசயம்.." என்றவன் மீண்டும் "எங்க அவங்க?.." என்றான் கேள்வியாக..

"எல்லாம் ரெடி மச்சான்.. சரியா டைமுக்கு வந்துடுவாங்க..." என்றவனுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன் உள்ளே நுழைந்தான்..

ஜெயராமன் மற்றும் வசந்த் உட்பட மற்ற குற்றவாளிகள் அழைத்து வரப்பட்ட சற்று நேரத்தில் எல்லாம் வழக்கு ஆரம்பித்திருந்தது...

வேணுகோபால் தான் தன் வாதத்தை ஆரம்பித்திருந்தார்...

"யுவர் ஹானர்... நடந்த எல்லா குற்றதுக்குமான ஆதாரம், முன்னரே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.. அத்தோடு கண்டுபிடிக்கப்பட்ட அந்த கொடூரமான மருந்துடன் தொடர்புடைய வெளிநாட்டவர்களின் தகவல்கள் இந்த பென்ட்ரைவ்ல இருக்கு யுவர் ஹானர்.." என்றவர் நிலவன் கொடுத்த பென்ட்ரைவை அங்கிருந்த ஊழியரிடம் கொடுத்தவர்..

"அது தொடர்பான விசாரணையை சிபிஐயிடம் நீதிமன்றம் சார்பாக வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஹானர்..."
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"குற்றம் சுமத்தப்பட்ட முன்னால் மினிஸ்டர் மிஸ்டர் ஜெயராமன்.. மற்றும் அந்த குற்றதுக்கு துணையாக இருந்த டாக்டர் மிஸ் மோனிஷா இருவர் மீதும் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..."

"இந்த வழக்கில் உண்மைகளை கண்டறிந்து கொடூரர்ககளிடம் இருந்து கிட்டத்தட்ட நூறு குழந்தைகளையும் வருங்கால இந்தியாவையும் காப்பாற்றிய மிஸ்டர் வண்ண நிலவனுக்கு மனமார்ந்த நன்றியை இந்த நாட்டு பிரஜையாக சொல்லிக்கொண்டு என் வாதத்தை முடித்து கொள்கிறேன் யுவர் ஹானர்.." என்று அவர் முடித்துக்கொள்ள,

எதிர்த்தரப்பு வக்கீல் பேச எதுவும் இல்லை என்பதாக தலையசைத்து கொண்டத்தில்.. நீதிபதி தீர்ப்பை எழுத தொடங்கினார்...


நீதிபதியோ தனது மூக்கு கண்ணாடியை கழற்றியவர்.. "மீண்டும் ஒரு விசித்திர வழக்கை நீதிமற்றம் சந்திக்க நேரிட்டிருக்கிறது.." என்ற நீதிபதி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்...

"இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மிஸ்டர் ஜெயராமன் வைத்தியசாலை ஊடாக பல பேரின் உடல் உறுப்பு திருட்டில் ஈடுபட்டிருப்பதற்கான சரியான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது"

"அத்தோடு நாட்டின் நன்மை கருதி அவரது சொத்துக்கலான ஜேகே கல்லூரி மற்றும் வைத்தியசாலை இரண்டையும் பறிமுதல் செய்வதோடு அரசாங்கமே இனிமேல் எடுத்து நடத்த வேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் வலியுறுத்துகிறது..."

"மேலும் புதிதாக கொடிய மருந்தை கண்டுபிடித்து அதனை கொண்டு பல உயிர்களை பாலியாக்கிய குற்றவாளி மிஸ் மோனிஷாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கி தீர்ப்பளிப்பதுடன் அவரது மருத்துவ சான்றிதழை ரத்து செய்ய அந்த நாட்டு நீதிமன்றதுடன் கலந்தாலோசித்து இந்த நீதிமன்றம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும்... அத்துடன் அவருக்கு துணை நின்ற அவர் அடியாட்ளுக்கு பத்து வருட கடுங்காவல் தண்டனையும் அளித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது "

"மேலும் இந்த மருந்துடன் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்கள் வழக்கில் நேரடியாக சிபிஐ இணைந்து கொள்ள இந்த நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.."

"இந்த பொதுநல வழக்கை திறம்பட வாதாடிய வேணுகோபாலை பாராட்டுவத்தோடு.. இந்த முக்கிய வழக்கை கண்டறிந்து, அநியாயமாக போக இருந்த பல உயிர்களை காப்பாற்றி நாட்டு மக்களுக்கு, காவல்துறை மீதும் சட்டம் மீதும் நன்மதிப்பை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரி மிஸ்டர் வண்ணநிலவனின் சேவையை பாராட்டுவதில் இந்த நீதிமன்றம் மகிழ்ச்சியடைக்கிறது.." என்றவர் அன்றைய வழக்கை முடித்து வைத்தார்...


"சூப்பர் நிலவா.. இன்னொரு முறை உன் திறமையை நிரூபிச்சிட்ட.." என்றார் வேணுகோபால்...

"உங்க உதவி இல்லனா இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்..." என்று பேசியப்படி நிலவன் அவருடன் வெளியே வர.. பத்திரிகை நிருபர்கள் அவர்களை பிடித்து கொண்டனர்...


அதில் ஒருவனோ "மிஸ்டர் நிலவன்.. காப்பாத்தப்பட்ட நூறு குழந்தைகளுக்கும் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகுது காவல் துறை..."

"இப்போதைக்கு அவங்க உடல்நிலை சரிபடுத்த தான் எல்லா முயற்சியும் நடக்குது .. வரபோற நாட்கள்ல முடியுமான அளவுக்கு அவங்க பேரண்ட்ஸ் கிட்ட பிள்ளைங்க சேர்க்குறதுக்கு தான் முயற்சி செய்ய போறோம்.." என்றான் பொறுமையாக..

அதற்கு இன்னொருவனோ "இப்போ அந்த குழந்தைங்க இருக்க ஹாஸ்பிடல் மட்டும் சரியானதுனு எப்படி நம்புறீங்க..."

"இங்க எல்லாரும் நல்லவங்களும் இல்லை.. அதே போல எல்லாரும் கெட்டவங்களும் இல்லை... நாம சந்தேக பட வேண்டிய இடத்துல அமைதியா இருப்போம்.. எங்க சந்தேகம் வரக்கூடாதோ அங்க அத பத்தி யோசிப்போம்.. இது தான் நம்மளோட வீக்னஸ்.. அத தப்புனும் சொல்ல முடியாது.. இப்படி இயற்கைக்கு மாற்றமான விஷயம் எல்லாம் கடவுள் கைல தான்.. சோ எங்களால முடிஞ்ச அளவுக்கு ப்ரோட்டெக்ஷன் கொடுக்க வேண்டியது காவல் துறையோட கடமை.. குழந்தைங்க இப்போதைக்கு பாதுகாப்பான சூழல்ல தான் இருக்காங்க..."

"என்ன சார் நீங்க கேள்விக்கு விடை தெரியலன்னதும் கடவுள கை காட்டுறீங்க..." என்று ஒருவன் சிரிக்க..

"உலகத்துல எந்த கேள்வியும் ஒரு இடத்துல போய் பதில் தெரியாம தான் நிற்கும்.. அத சிலர் சையன்ஸ்னு சொல்லுவாங்க.. சிலர் இயற்கைனு சொல்லுவாங்க.. சிலர் கடவுள்னு சொல்லுவாங்க.. அது அவர் அவர் விருப்பம்.. உங்களுக்கு எதுனு தோணுதோ அத எடுத்துக்கோங்க தட்ஸ் இட்... ஓகே உங்க கேள்விகள் முடிஞ்சா நான் கிளம்பலாமா?..." என்றவன் புன்னகையுடன் கேட்க..

அதில் இருந்த ஒரு பெண் நிருபரோ "உங்க திருமணத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்..." என்க

அவனோ புன்னகையுடன் "தேங்க்ஸ்" என்றவன் அங்கிருந்து சென்றான்...




அவன் நேரே சென்றது ஜேகேவை வைத்திருக்கும் இடத்துக்கு தான்...

அந்த கைகடிகாரம் கொண்டு அந்த அறையை திறக்க.. வந்த மணத்தில் நிலவன் மூக்கை மூடிகொண்டான்...

"அடடே ஜேகே என்னப்பா இன்னும் உயிரோட தான் இருக்கியா?..." என்றவன் பேச்சில் ஜேகே நிமிர்ந்து பார்க்க

"நீ கேட்ட மருந்து கொண்டு வந்துட்டேனே.. கொஞ்சம் சிரிக்கலாம்ல.. நான் எல்லாம் நியாயஸ்தன் சொன்னா சொன்னபடி செய்வனாக்கும்.. நான் கேட்டது போல நீ அந்த போரீனர்ஸ் டீடெயில்ஸ் குடுதல்ல.. சோ நான் மருந்து கொண்டு வந்துட்டேன்..." என்றான் ஏற்ற இறக்கங்களோடு..

ஜேகேயின் தலை பழையப்படி குனிந்து கொண்டது.. அவன் பேச்சை கேட்க விருப்பம் இல்லை என்பது போல...

"என்னப்பா நீ சிரிக்கவே மாட்டேங்குற.. உன் ஆள காப்பாத்த வேணாமா?.." என்றவன் எதிர்பக்கம் திரும்ப அங்கே சஞ்சயின் உடல் பாதி அழுகியிருந்தது..

"அச்சச்சோ... லேட்டா வந்துட்டேனா?.. அது ஒன்னுமில்லப்பா கொஞ்சம் ட்ராபிக் அதான் ஒரு ஏழு நாள் லேட்டாகிடுச்சு... நீ ஒன்னும் நினச்சிக்காத..." என்றவன் பேச்சில் ஏகத்துக்கும் நக்கல்...

அவன் பேச்சை தாங்க முடியாமல் இத்தனை நாள் பட்ட வேதனையின் தாக்கமும் தாளாமல் "ஆஆஆஆ" என்று சத்தமாக கத்தி இருந்தான்...

"இன்னும் சத்தமா கத்து.. இப்படித்தான மத்தவங்களுக்கும் இருந்திருக்கும்.. நீ அடைச்சு வெச்ச அந்த பிஞ்சி குழந்தைங்க எப்படி தவிச்சிருக்கும்... ஓடியாடி விளையாட வேண்டிய வயசுல இங்க முடங்கி கிடந்தாங்களே.. அதுக்கெல்லாம் நீ பதில் சொல்ல வேணா..."

"தனக்கு வேண்டியவங்க பக்கத்துலயே சாக கிடந்தாலும் காப்பாத்த முடியாம தவிக்கிற தவிப்பு இருக்கே.. அத வார்த்தையா இல்லாம உன்கிட்ட ரியலா காட்டி இருக்கேன்.. நீ செஞ்ச பாவத்துக்கு இதெல்லாம் பத்தாது நீ இன்னும் அனுபவிக்கனும்.. அதுவும் உயிரோட இருந்து..." என்றவன் சிறு அமைதிக்கு பிறகு

"ஆனா பாரு உன்ன உயிரோட விடுறது இன்னோரு உயிருக்கு ஆபத்தா கூட ஒருநாள் முடியலாம்... உன்ன மாதிரி ஆட்கள் எல்லாம் எப்பவும் திருந்த மாட்டீங்க.. பீனிக்ஸ் பறவ மாதிரி செத்தாலும் திரும்பி திரும்பி வந்துகிட்டே தான் இருப்பீங்க.. உங்கள எல்லாம் வேரோட அழிக்கணும்..." என்றவன் கையில் வைத்திருந்த திரவத்தை சொட்டு சொட்டாக அவன் மேனியில் ஊற்ற.. பட்ட இடமெல்லாம் வெந்து எரிந்தது அவனுக்கு...

"இன்னொரு விஷயம் கேள்வி பட்டியா?.. உன் அப்பா அதான் அந்த ஜெயராமன் இப்போ ஆயுள் கைதி.. உன் அல்லக்கை அவனும் இப்போதைக்கு வரமாட்டான்.. நீ பண்ண வேல எல்லாம் இப்போ நிஷா தலைல கட்டியாச்சு... உன்ன தேட யாருமே இல்லை.. உன் அடையாளத்தையே மறச்சியே இப்போ அடையாலாமே இல்லாம சாக போற...." என்றவன் திரவத்தை ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை...

அவன் அலறல்களை ஆசை தீர கேட்டவன்.. "மருத்துவ உலகத்தோட அரசன் அரசன்னு வார்த்தைக்கு நூறு முறை சொல்லிட்டு திரிஞ்சியே இப்போ ஹாஸ்பிடலே உங்களுக்கு இல்லை.. அரசாங்கமே எடுத்து நடத்த போறாங்க.. செமல..." என்றவன் இப்போது அவன் முகத்தில் அந்த திரவத்தை ஊற்றி இருந்தான்..


ஜேகே கதறல் சத்தம் அவன் காதை பிளக்க "ஆசிட் ரொம்ப பவர்புல்லா இருக்குல்ல... என்ஜோய்..." என்று சிரித்தவன்... இப்போது அவன் முகத்தில் முழுவதுமாக ஊற்றினான்.. குழந்தைகள் எல்லாம் அனுபவித்த ஒட்டுமொத்த வலியில் பாதியை அவனுக்கு கொடுத்த திருப்தியில்...

"பாய் ஜேகே.. உன்ன மாதிரி ஒருத்தன் இந்த உலகத்துக்கு சாபக்கேடு..." என்றவன் அவன் உடம்பை அப்படியே அரை உயிரோடு தீயிட்டு கொளுத்தி இருந்தான்...

நிலவன் வெளியேற அந்த அறை மொத்தமும் பற்றி எரிய, நிலவனின் மனதில் எரிந்து கொண்டிருந்த தீ அனைந்து சாந்தமாகியது....



அவன் வீடு வரும் போதே திருமணக்களை கட்டி வீடே ஜொலித்து கொண்டிருந்தது...

வாசலிலே அவனை பிடி பிடியென பிடித்துக்கொண்டார் வாசுகி.. "என்ன நிலவா இப்படியா லேட்டா வருவ?... உன்ன எல்லாம் என்ன சொல்றது போ... உன் அண்ணண் ரெடி ஆகிட்டான் பாரு.. போ போய் ரெடி ஆகு.." என்ற தாயின் திட்டுக்களையும் வாங்கி கொண்டவன் கார்த்தியின் அறைக்குள் நுழைந்தான்...

அங்கே தயாராகி கொண்டிருந்த அண்ணனின் முதுகில் ஒரு மொத்து மொத்தியவன்

"நீயெல்லாம் ரெடி ஆகலனு யார்டா அழுதா???.. உன்னால நான் திட்டு வாங்கணுமா??.."

"இங்க பாருடா... யார் சார் நீங்க?... ஒரு வாரமா மூஞ்ச தூக்கிட்டு திரிஞ்சீங்க இப்பவும் அப்படியே இருக்க வேண்டியது தானே.."

"அதெல்லாம் சகஜம்டா அண்ணா..." என்றவன் குளியறைக்குள் புகுந்துகொள்ள

"என்ன கருமம் வேணாலும் பண்ணி தொல... அண்ணனு மட்டும் பேசாத சகிக்கல... " என்ற கார்த்தியின் குரல் தான் காதை அடைந்தது...


அவன் குளித்து முடித்து வெளியே வர அவனுக்கான வெள்ளை நிற சர்வாணி அயன் செய்து தயாராக இருந்தது... அதனை அணிந்து கொண்டவன்... தன்னை கண்ணாடியில் பார்க்க சற்று அழகாய் தான் தெரிந்தான்...

"அழகன் டா நிலவா நீ..." என்று தன்னை தானே பாராட்டிக்கொண்டவன்..

வெளியே வர எல்லாம் தயாராகயிருந்தது... சேதுராமன், வாசுகி, பார்வதி, தர்மராஜன் வேணுகோபால், நீலவேணி.. என பெரியவர்கள் ஒருவர் மிச்சம் இல்லாது அனைவரும் பம்பரமாய் தான் சுழன்றனர்... ஒரு ஜோடி என்றாலே அத்தனை பரபரப்பு இருக்கும் இங்கோ இரண்டு ஜோடி சொல்லவும் வேண்டுமா?...

முதலில் கார்த்தியின் நிச்சயம் தான் நடந்தது... சிறியவர்கள் மத்தியில் அத்தனை கலாட்டா...

கீதா மஞ்சள் நிற புடவையில் அத்தனை அழகாய் அழகு பதுமையாய் நின்றிருக்க, அருகில் கார்த்திக்கோ வெள்ளை நிற சர்வாணியில் கம்பீரமாய் நின்றிருந்தான்...

முதலில் வாசுகி கார்த்தியிடம் மோதிரத்தை தர.. அவனும் அவள் கண்களை பார்த்துக்கொண்டே மனம் நிறைந்த காதலுடன் அவள் கையில் அணிவித்து கையில் முத்தமிட்டதும் இளைஞர் பட்டாளம் "ஓஓஓஓ" சத்தம் எழுப்ப, கீதாவோ நாணம் வந்து அவளை சூழ்ந்து கொள்ள தலை தாழ்த்திக்கொண்டாள்...

அடுத்து அவள் முறை.. தர்மராஜன் அவளிடம் மோதிரத்தை தர அவளும் வாங்கி கொண்டவள்... அவன் கையில் போட...

"என்னங்க பொண்ணே எங்க மாப்பிளைக்கு முத்தம் எல்லாம் இல்லையா??.." என்றாள் பூஜா...

"ஆமா ஆமா... மாப்பிளைக்கு முத்தம் வேணுமாம்..." என்று அங்கே சத்தம் எழும்ப.. அவளோ மறுக்க, சத்தம் இன்னும் அதிகமாகியது... கொடுக்காமல் விட மாட்டோம் என்பதாக... அவளும் வெக்கத்துடன் அவன் புறங்கையில் இதழை ஒற்றி எடுக்க.. மீண்டும் "ஓஓஓஓ" என்ற சத்தம் காதை பிளந்தது...

அடுத்து நிலவன் அதிரல் நிச்சயத்துக்கு மேடை சடுதியில் தயாரானது...

நிலவன் வந்ததில் இருந்து. அதிரலின் பார்வை மொத்தமும் அவனிடத்தில் தான்... தன்னை பார்க்க மாட்டானா? என்ற ஆவலோடு அவனையே பார்த்திருந்தவளை மேடைக்கு அழைத்தது கூட அவளுக்கு கேட்கவில்லை...

அவளும் மஞ்சள் நிற புடவையில் தான் தாயராகி இருந்தாள்... தன் அழகை அவன் காண வேண்டும் என்ற ஆசையும் இருக்கவே செய்தது...

"ஹெலோ மெண்டர் மேடம் உங்க அவர அப்பறமா சைட் அடிப்பீங்கலாம்... இப்போ மேடைக்கு வரட்டுமாம்..." என்ற பூஜாவின் குரலிலே சுயத்துக்கு வந்தவள் அவளுடனே மேடைக்கு வர...

நிலவனோ "ராட்சசி பார்வைலயே முழுங்குறா?..." என்று மனதுக்குள் எண்ணிக்கொள்ளவும் அதிரல் மேடைக்கு வரவும் சரியாக இருந்தது...

வாசுகியோ மோதிரத்துக்கு நிலவனை பார்க்க, அவனே தன் சட்டை பையில் வைத்திருந்த பெட்டியை அவரிடம் கொடுத்தான்...

ஆம் தான் தான் வாங்குவேன் என்று அடம் பிடித்து வாங்கி இருந்தான் அவர்களுக்கான மோதிரத்தை...

அதில் ஒன்றை அவனிடம் கொடுக்க... அவன் காதல் கண்மணியின் கண்களை பார்த்த வண்ணமே... அவள் கைகளை அத்தனை மென்மையாக பற்றி, அந்த மோதிரத்தை அவள் விரலில் போட்டவன் அவள் கரத்தை விட

அடுத்து ராஐய்யா அதிரலிடம் மோதிரத்தை கொடுக்க போக.. இளைஞர் பட்டாளத்திடம் பயங்கர எதிர்ப்பு..


அவனும் முத்தமிடுவான் என்று எதிர்பார்த்த அந்த வானரக்கூட்டம் அது நடக்காமல் போனதில் பொங்கி எழுந்துவிட்டது...

"செல்லாது செல்லாது செல்லாது... எங்களுக்கு கிளுகிளுப்பு சீன் இல்லாம அடுத்த ரிங் போட விடமாட்டோம்" என்று கத்த...

நிலவனோ அதிரலின் கரங்களை மீண்டும் பற்ற, முத்தமிட தான் போகிறானோ என அவர்களும் சரி அவனவளும் சரி நினைத்திருக்க அவனோ அவள் கரத்தை தன் கரத்தினுள் அடக்கியபடி பாட தொடங்கி இருந்தான்....


இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்...

பிறிதோர் பக்கம் மனம் சாயா
பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கல்அறிந்து சேவை செய்வேன்

நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

கை பொருள் யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன்

ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்

கண்ணீா் கனியே உன்னை
கை விடமாட்டேன்

சத்தியம் சத்தியம் இது சத்தியமே...

என்று அவளை பார்த்தபடியே அத்தனை அழகாய் பாடி முடிக்க வீடே அத்தனை அமைதி.. அவன் குரலில் மெய்மறந்து நின்றிருந்தனர்...

அவர்களுக்கே அப்படி என்றால்.. யாருக்காக அவன் பாடினானோ அவளை சொல்லவே வேண்டாம்...

மீண்டும் லட்சமாவது தடவை அவன் காதலில் தன்னை தொலைத்து நின்றாள்... அவள் கண்களிலோ கண்ணீர்.. ஆனால் அதற்கு மாற்றமாய் இதழ்கள் புன்னகைத்தது...

அதன் பின் ராஜய்யா அவளிடம் மோதிரம் தர... அவன் கையில் அணிவித்தவளையும் விடாமல் பாடச்சொல்லி அவர்கள் தொல்லை செய்ய .. அவள் இருக்கும் நிலை உணர்ந்தவனோ

"ஓகே காய்ஸ் என் பொண்டாட்டி இன்னொரு நாள் பாடுவா... எனக்காக அவளை விட்டுடலாமே.." என்றவன் வேண்டுகோள் வைக்க...

மீண்டும் "ஓஓஓஓ" என்ற சத்தமே அந்த வீட்டை நிறைந்தது....


ஜாதி மல்லி மலரும்....


கருத்து திரி 👇👇👇

inbound3018544294145914454.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top