ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"யாரு உன் கிட்ட சைன் வாங்குனா?... நீயா அப்படி நெனச்சுகிட்ட.." என்றதும் குழப்பத்தில் எழுந்து அமர்ந்தே விட்டாள்... இப்போது அவன் தலை அவள் மடியில்...

"என்னடா சொல்லுற..."

"பெரிய கையெழுத்து... ஏ கொஞ்சம் ஸ்டைலா போட்டு கோழி கிண்டுன மாதிரி ரெண்டு கிறுக்கு.. குட்டி ஆர் பக்கத்தில ரெண்டு கோடு இது ஒரு சைன் இத எங்களால போடமுடியாதா? என்றான் சிரிப்புடன்

அவன் தலையில் கொட்டியவள் "பிராடு பயலே... இன்னும் என்ன எல்லாம் எனக்கு சொல்லாம பண்ணி இருக்க நீ..." என முறைப்புடன் வினவ

"அதெல்லாம் அப்பப்போ டைம் வரும் போது சொல்லுவோம்.. இப்போ தூங்கலாம் வா.." என்று அவளை தன் நெஞ்சில் போட்டுகொண்டு கண்களை மூடிக்கொள்ள அவளும் விரும்பியே அவனை அணைத்துக்கொண்டாள்...



பொழுது மெல்ல விடிய தொடங்க, நேரத்துக்கே எழுந்த வாசுகி, வேலை எல்லாம் முடித்தவர் மகனுக்கு பிறந்தநாள் என்பதால் வாழ்த்து சொல்லலாம் என சமையல் அறையில் இருந்து வாசல் நோக்கி செல்ல

அந்த நேரம் அறையிலிருந்து அபினாஷுக்கு பால் எடுக்க வெளியே வந்த பூஜா "எங்கமா போறீங்க.." என்றாள்

"நிலவனுக்கு இன்னைக்கு பிறந்தநாள்லடா அதான் விஷ் பண்ணலாம்னு போறேன்..."

"அதுக்கு நீங்க என் வீட்டுக்கு தான் போகணும்.."

"என்னடி சொல்லுற" என்றவருக்கு நேற்று நடந்தவற்றை அவள் சொல்ல, அவருக்கு முகமெல்லாம் பூரிப்பு...

"ரொம்ப சந்தோசம் டா.. புள்ளைங்க ரெண்டும் சந்தோசமா இருந்தாலே போதும்... அதி வந்ததும் அவளுக்கு சுத்தி போடணும்..." என்று பேசிகொண்டிருக்க

கீதா, நிஷா அதுக்கடுத்து புகழ், விஷ்ணு என ஒவ்வொருத்தராக வர அவர்களுக்கும் விடயம் பகிரப்பட்டது.. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி ஆனால் ஒருத்தர் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் மனதிலோ தனக்கு சொல்லப்பட்ட வேலையை முடிக்கும் வன்மம்..


அங்கே பூஜாவின் வீட்டிலோ முதலில் கண் மூழித்தது அதிரல் தான்.. அவன் நெஞ்சில் உறங்கி கொண்டிருந்தவளை ஒருகையால் வளைத்து பிடித்திருந்தான்.. மெல்ல அவன் கையை விளக்கி எழுந்தவள்..

"ஹாப்பி பர்த்டேடா நிலவா... ரொம்ப ரொம்ப குட் பாய்டா நீ... ஒரு பொண்ணு நானே என்ன எடுத்துக்கோன்னு சொல்லியும்.. அதுக்கான உரிமை உங்கிட்ட இருந்தாலும், தள்ளி நின்ன உன்னோட கண்ணியம் ரொம்ப பிடிச்சிருக்கு நிலவா... லவ் யூ சோ மச் டா பட்டு..." என்று அவன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவள்... குளிக்க சென்றிருந்தாள்..

அவள் சென்றது தான் தாமதம் அவன் கண்கள் மெல்ல திறந்து கொண்டது... அவள் பேசியவற்றை அவனும் கேட்டுக்கொண்டு தான் இருந்தான்.. மூடட்டிருக்கும் குளியலறை கதைவில் பார்வையை செலுத்தியவன்,

"உன்ன பத்தி எனக்கு தெரியாதாடி... நம்ம கல்யாணம் ஊரறிய நடக்கணுங்கிறது உன்னோட ஆசைனு எனக்கு தெரியும்.. உன்னோட குற்ற உணர்ச்சிதான் உன்ன இப்படிலாம் யோசிக்கவும் வெச்சிருக்கு... உன் மனசு கஷ்டப்படுற எந்த காரியத்தையும் நான் செய்யமாட்டேன்..." என்று மனதார எண்ணிகொண்டவன்... விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்தான்...


குளித்து முடித்து பூந்துவாளையுடன் வெளியே வந்த அதிரல், நேற்று பார்த்து பார்த்து ஆசையாய் எடுத்த மஞ்சள் நிற புடவையை கையில் எடுத்துக்கொண்டாள்.. ஜாக்கெட் பாவாடை இரண்டையும் அணிந்துகொண்டு கையில் புடவையுடன் அவனிடத்தில் வந்தாள்....

"நிலவா... நிலவா எழுந்துக்கோ..." என்று அவனை எழுப்ப.. அரைதூக்கத்தில் எழுந்தவன்.. "என்னடி..." என்க

"எனக்கு புடவ கட்டி விடு..."

"எதே நானே... ஒரு வயசு பையன நல்லவனா இருக்க விடமாட்டியாடி..."

"ம்ம்கூம் மாட்டேன்... வா வந்து கட்டிவிடு... இந்த புடவைய எடுத்ததே நீ கட்டி விடணும்னு தான்..."

"ரொம்ப நல்ல நோக்கம் டி..." என்று எழுந்தவன் அவள் அருகில் வர..

"சீக்கிரம் கட்டு... இன்னைக்கு பூரா நீ எங்கூடத்தான் இருக்கனும்... எங்க எல்லாம் போகணும்னு ஒரு லிஸ்ட்டே வெச்சிருக்கேன்..."

"டிபார்ட்மென்ட்ல எனக்கு செருப்பாலேயே அடிப்பாங்க பரவாயில்லையா?.." என்றான் அவளுக்கு புடவையை கட்டி விட்டபடியே...

"வாங்கிக்கோ தப்பில்ல... கேட்டா பொண்டாட்டி விடமாட்டேங்கிறானு சொல்லு..."

ஒருவழியாய் கட்டி முடித்தவன் கீழே குனிந்து மடிப்புக்களை சரியாக எடுத்து விட்டுகொண்டிருக்க

அவளோ "நிலவா ப்ரிஜ்ல பூ இருக்கு எடுத்துட்டு வாயேன்.." என்றாள்..

"கேடி எல்லாம் ரெடியா தான் கொண்டு வந்திருக்க..." என்றவன் எடுத்து வந்து அவளுக்கு அழகாக தலையையும் பின்னி பூவும் வைத்து விட்டான்...

"பேர்பக்ட்.. ஆள அள்ளுறடி.. நேத்து நல்லவனா இருந்து தப்பு பண்ணிட்டேனோ" என்று அவளை சீண்ட...

"யாரு நீ.. போப்பா பால்வாடி பாப்பா..."

"ரொம்ப தான்டி... ஒருநாள் மாட்டுவல்ல அப்போ இருக்கு உனக்கு.. கெஞ்சினாலும் விட மாட்டேன் பாத்துக்கோ..."

"பாக்கலாம் பாக்கலாம்..."

"நீ ரெடி ஆகு குளிச்சிட்டு வந்துடுறேன் அப்பறம் மதியம் வர உன்கூடதான் ஓகேவா?..."

"என்னது மதியம் வரையா??... அதுக்கப்பறம்.." என்று அவள் முறைக்க

"என் செல்லம்ல.. மதியத்துக்கப்பறம் கொஞ்சம் வேல இருக்குடா.. அந்த ஜேகேய பிடிச்சே ஆகணும்... ப்ளீஸ் புரிஞ்சிக்கோ... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு ஈவினிங் வந்துடுவேன் நைட் வர வெளிய சுத்தலாம் ஓகே வா.."

"முக்கியமான வேலைனு சொல்லுறதால விடுறேன்... ஈவினிங் சீக்கிரம் வரணும்..." என்றாள் போனால் போகிறது என்பது போல..

"உங்கள் கருணையே கருணை அரசியாரே..." என்று நாடக பாணியில் குனிந்து வணங்கியவன் குளிக்க சென்றிருந்தான்...


இருவரும் ஒருவாறு செல்ல சண்டைகளுக்கிடையில் தயாராகி... வெளியே செல்ல ஆயத்தமாக நிலவனின் தொலைபேசி இருப்பை உணர்த்தியது... புகழ் தான் அழைத்திருந்தான்... எடுத்து காதில் வைக்க..

"மச்சான் டிஸ்டர்ப் பண்ணுறேன்னு புரியுது பட் கொஞ்சம் அவசரம்... ஜெயராமனோட ஆள் ஒருத்தன் சிக்கி இருக்கான்.. போதைல வண்டி ஓட்டிட்டு வந்து நேத்து நைட் தான் மாட்டினான்.. இப்போ ஏதோ சரக்குனு பேசுறானாம்... ஐ திங் இவன விசாரிச்சா கண்டிப்பா ஏதோ க்ளூ கிடைக்க வாய்ப்பிருக்கு... நான் இப்போ ஸ்டேஷனுக்கு தான் போக போறேன்... நீயும் வர்றியா??..."

"ஓகே மச்சான்.. டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன்..." என்று அழைப்பை துண்டித்தவன்.. அதிரலிடம் "அதி.... கொஞ்சம் அர்ஜென்டா ஸ்டேஷன் வரைக்கும் போகணும்... போயிட்டு ஒரு தேர்ட்டி மினிட்ஸ்ல வந்துடுவேன்டா..." என்று அவளை பார்க்க...

"ஓகே நிலவா.... என்ன வீட்டுல விட்டுட்டு போ..." என்று அவள் சாதாரணமாக தான் சொன்னாள் அவனுக்கோ கோபித்து கொண்டாளோ என்று தோன்ற, "இல்ல இல்ல நீ இங்கயே வெயிட் பண்ணு நான் போயிட்டு சட்டுனு வந்துடுவேன்..."

"வேணா நிலவா... நீ ஒர்க் பாரு... நாம இன்னொரு நாள் கூட போகலாம்..."

"இல்ல இல்ல இன்னைக்கே போவோம்... என் செல்லம்ல நான் சொன்னா கேக்க மாட்டியா?... நீ கதவ பூட்டிட்டு இருந்துக்கோ சீக்கிரம் வந்துடுவேன்.." என்று அவளை அங்கேயே இருக்க வைத்தவன்... வெளியேறி இருந்தான்.... அவள் கேட்டது போல வீட்டிலேயே விட்டிருக்கலாம் என்று அதற்காக இன்றே கவலை படவும் போகிறான் என்பதை யார் அவனுக்கு சொல்வது...


நிலவனின் வாகனம் வெளியேறியதை பார்த்துக்கொண்டு தூரத்தில் நின்றிருந்த வாகனம் ஒன்று பத்து நிமிடங்களுக்கு பிறகு பூஜாவின் வீட்டின் முன் வந்து நின்றது.... அதிலிருந்தது இறங்கிய அந்த உருவாமோ... உள்ளே சென்று கதவை தட்டியது...

நிலவன் இல்லை என்பது தெரியும்... யாராக இருக்கும் என்ற சந்தேகத்தோடு கதவை திறந்தவள்... "நீயா, உள்ள வா.. நீ இங்க எப்படி?.."

"நிலவன் தான் நீ தனியா இருக்க துணைக்கு கூட போய் இருன்னு சொன்னான்... "

"ஓகே... டீ குடிக்கிறியா?..."

"ஜூஸ் கிடைக்குமா??.."

"ஓகே இரு எடுத்துட்டு வரேன்.." என்றவள் அங்கிருந்து செல்ல... மருந்து தேய்கப்பட்ட கைக்குட்டடையுடன் அவளை பின் தொடர்ந்தது அந்த உருவம்....



சொன்னதை விட நேரம் அதிகமாகவே கடந்திருந்தது.... மதியவேளை நெருங்கியிருக்க, நிலவனோ வேகமாக காரை ஓட்டிகொண்டிருந்தான்... வேக வேகமாக வீட்டுக்கு வந்து விட்டான்...

கதவு திறந்தபடி தான் கிடந்தது... "ஜாஸ்.. ஜாஸ்..." என்று அழைத்தபடி உள்ளே செல்ல பதில் எதுவும் வரவில்லை..

"ரொம்ப கோபமா இருக்கா போல..." என்று எண்ணியவன் ஒவ்வொரு இடமாக தேட... எங்கும் அவள் இல்லை... "வீட்டுக்கு சென்றிருப்பாளோ?" என்று தான் எண்ணினான்.. அவளுக்கு ஏதும் ஆகி இருக்கும் என்ற நேர் மறையான எண்ணம் கூட அவனிடத்தில் இல்லை... ஆனால் உண்மை அறியும்

நேரம்??...

வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டவனோ.. தன் வீட்டை நோக்கி தான் சென்றான்...




"மா.. ஒரு டீ..." என்று சொல்லி அங்கே இருந்த சோபாவில் விழுந்தான்..

அவன் சத்ததுக்கு நிஷா தான் முதலில் வெளியே வந்தாள்... "அம்மா இல்லையே நிலவா... ஊருக்கு போயிருக்காங்களே..."

"ஆமால மறந்துட்டேன்..." என்றவன் நெற்றியை நீவிக்கொள்ள..

"நான் போட்டு தரட்டுமா நிலவா??.."

"வேணா நிஷா.. அதிய கொஞ்சம் கூப்பிடுறியா??...

"அவ இங்க இல்லையே நிலவா உங்கூட தான இருக்கிறதா பூஜா சொன்னா???..."

"இங்க இல்லையா?..." என்றவன் எழுந்தே விட்டான்.. ஆனாலும் அதிர்ச்சியை முகத்தில் மறைத்தபடி... "என்னோடதான் இருந்தா... நான் இடைல ஸ்டேஷன் போய்ட்டேன்.. ஒருவேள இங்க வந்திருப்பாளோன்னு நேரா இங்கயே வந்துட்டேன்..." என்றான்

அந்த நேரம் வெளியில் வந்த பூஜா "எங்க நிலவா அதி.. என்ன பாக்க வெக்கத்துல ரூம்ல போய் அடஞ்சிக்கிட்டாளா?... வரட்டும் இருக்கு அவளுக்கு..." என்றாள்

"இல்லை பூஜா அவ வரல.." என்றவனின் குரலில் என்ன உணர்ந்தாளோ "என்ன நிலவா ஒரு மாதிரி பேசுற என்னாச்சு..."

"ஒண்ணுமில்ல கொஞ்சம் டையர்ட் அவ்வளவு தான்... ராம் எங்க?.."

"விஷ்னுவோட கார் போன இடத்துல இடைல எங்கயோ நின்னுடிச்சாம்... அதான் ராம் என்னனு பாக்க போயிருக்கான் நிலவா... ஏதாச்சும் அவசரமா??... கால் பண்ணி வர சொல்லவா??..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜஸ்ட் கேட்டேன் அவ்வளவு தான்... நான் வரேன் ராம் வந்தா எனக்கு கால் பண்ண சொல்லு" என்றவன் வெளியேறி இருந்தான்...

மின்னல் வேகத்தில் தான் அவன் கார் பறந்தது.... அவள் எண்ணுக்கு எத்தனை தடவை அழைத்தும் பதில் பூஜ்ஜியம் தான்... கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலமாக அழைக்கிறான் எங்கும் அவள் இல்லை... புகழும் அவன் பங்குக்கு தேட... ராமும் விஷ்ணு என ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு தேடத்தான் செய்தனர்... ஆனால் பதில் தான் அவர்களுக்கு சாதகமாக கிடைக்கவில்லை...

சரியாக மாலை ஐந்து மணி நால்வரும் அங்கே பூஜாவின் வீட்டில் தான் கூடி இருந்தனர்...

"மச்சான்.. எப்படியாவது கண்டு பிடிச்சிடலாம்டா நீ உடஞ்சிடாதடா..." என்ற புகழின் சமாதானம் கூட அவன் காதில் ஏறவில்லை...

ஜாஸ்.. ஜாஸ்.. ஜாஸ் மட்டுமே அவன் மனதில் ஓடிகொண்டிருந்த நாமம்... மூச்சு என்று கூட சொல்லலாம்... அப்படிதான் இருந்தான் இந்த ஐந்து மணி நேரமும்...

பூஜாவோ விடாமல் ராமுக்கு அழைத்து கொண்டே தான் இருந்தாள்.. என்ன சொல்லவது எப்படி சொல்லவது என்ற எண்ணமே அதனை தவிர்க்கவும் வைத்தது...



சரியாக அந்த நேரம் தான் ஜேகே அதிரலை அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்ததும் அவளோடு பேசியதும்...

"என்ன யாருனு நெனச்ச... நான் தி கிரேட் ஜெகதீஸ்வரகிருஷ்ணன்.. மருத்துவ உலகத்தோட அரசன்..." என்று அந்த அறை அதிர கத்தியவன் அங்கே அருகில் இருந்த ஆளுயற கண்ணாடியில் தன்னை தானே பார்த்துக்கொண்டவன் "விஷ்வஜெகதீஸ்வரகிருஷ்ணன்.." என்றான் கோணல் சிரிப்புடன்..

"ஹாஹாஹா... உன் பின்னாடி லவ்னு திரிஞ்சதும் பேக்குன்னு நினச்சிட்டல்ல என்ன?.. நீயும் அழகா தான் இருக்க பட் என் டேஸ்டுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட... எப்படி நம்ம நடிப்பு ரியாலிஸ்டிக்கா இருந்திச்சா?... உலகத்தோட பார்வைக்கு விஷ்வா எங்குற சந்தமான இமேஜ் எனக்கு தேவைப்பட்டிச்சு.. நான் இப்படி பட்டவன்னு நானே போய் சொன்னாலும் இனி யாரும் நம்ப மாட்டாங்க.. அதுதானே எனக்கும் வேணும்..." என்றான் வெகு நிதானமாய்

"உன்ன வேற எதுக்கோ தான் ஹாஸ்பிடல்ல விட்டு வச்சிருந்தேன்... எப்போ உனக்கு ஓ நெகடிவ்னு தெரிஞ்சிதோ அன்னைக்கு முடிவு பண்ணியாச்சு.. உன்னோட ஹார்ட் தான் என் ருத்ரம்மாவோட ஹார்டா துடிக்கணும்னு.. ரெடியா இரு இன்னும் த்ரீ டேஸ்ல ஆபரேஷன் வெச்சிக்கலாம்.. இது அந்த நிலவனுக்கும் பெரிய அடி... ஏற்கனவே அடிச்சதுல இருந்தே இன்னும் அவன் எந்திரிக்கல... என்னடா ஏற்கனவேன்னு பாஸ்ட்ல சொல்லுறானேன்னு பாக்கறியா???.." என்று அவளிடம் கேள்வியாய் நிறுத்தியவன்

மீண்டும், "ஒரேடியா எல்லா உண்மையும் சொன்னா அதிர்ச்சில, எனக்கு தேவையான உன் ஹார்ட்டுக்கு ஏதாச்சும் ஆகிட போகுது.. சோ கொஞ்சம் கொஞ்சமா சொல்லுறேன்... இன்னைக்கு இந்த அதிர்ச்சியே போதும்..."

"அப்பறம் உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு உங்க காதல் தெய்வீக காதல் வேற... வேணும்னா உன்ன அடக்கம் பண்ணி முடிஞ்ச பிறகு அவனுக்கு சொல்லி அனுப்புவோமா??... நீ பிரீயா ஹார்ட் எல்லாம் டோனேட் பண்ண போற, நன்றியா இருக்கணுமா இல்லையா???.." என்று நக்கலாக பேசியவன், தன் கையாளுக்கு கண் காட்டியபடி வெளியேற பழையபடி அவள் வாயை மூடப்பட்டு விளக்கும் அனைக்கப்பட்டது...

அவள் மனதிலோ... "சீக்கிரம் வா நிலவா.." என்ற குரலே... அதுவும் அவள் சாக போகிறாளே என்ற கவலையில் அல்ல... மீண்டும் தன்னை பிரிந்து தன்னவனால் இருக்க முடியாது என்பதால் தான்...



ஜாதி மல்லி மலரும்....


இன்னும் மூன்று நாட்களுக்குள் நிலவன் அவன் மனைவியை மீட்பானா?...

அவன் மனைவியை காப்பாற்ற முடியாவிட்டால் அதன் பின் நிலவனின் நிலை??

ஜேகே உதவும் அந்த உருவம் யாராக இருக்கும்???

கருத்து திரி 👇👇👇👇



inbound6399471388372541955.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer

ஜாதி மல்லி பூ 27




வீட்டில் நிம்மதி என்பதே தொலைந்து போயிருந்தது... நேற்று விடயம் கேள்விப்பட்டதிலிருந்து ஒருவருக்கும் ஒரு சொட்டு நீர் கூட தொண்டையில் இறங்கவில்லை... அதிலும் ராஜய்யா மிகவும் உடைந்து போய் இருந்தார்... தன் பேத்திக்கு மட்டும் ஏன் எப்போதும் இப்படியே நடக்கிறது என்ற ஆதங்கமே அவருள் பரவிக்கிடந்தது...


அனைவரும் அங்கே நிலவனின் வீட்டில் தான் கூடி இருந்தனர்.. யாருக்கு யார் ஆறுதல் சொல்லவது யார் யாரை தேற்றுவது என்றே புரியாமல் அந்த வீடே ஒருவித அழுத்தத்தில் மூழ்கி இருந்தது...


நிலவன் உடைந்து அமர்ந்ததெல்லாம் அன்றய நாள் மாத்திரம் தான்... தன்னவள் தனக்காக காத்திருப்பாள் என்ற எண்ணமே அவனுக்கு தேவையான உத்வேகத்தை கொடுத்திருந்தது...

காலை முதல் வேலையாக தயாராகிய நிலவன் வெளியே வர.. அங்கே அவரவர் நேற்று இரவு எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே தான் இருந்தனர்...

"இப்போ என்ன என் பொண்டாட்டி செத்தா போய்ட்டா??... அவள காப்பாத்தி கூட்டிட்டு வர வேண்டியது என்னோட பொறுப்பு.. யாருக்கும் அதுல சந்தேகம் இருக்கா??.." என்று அவன் கத்த.. அங்கிருந்தவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றனர் அவ்வளவே வித்தியாசம்...

"மா.. குறிச்ச அதே டேட்ல கல்யாணம் நடக்கும்.. நடக்கணும்... அதுக்கான வேலைய பாருங்க... அப்பறம் உங்க மருமக வந்தா அதுக்கும் என்னத்தான் சொல்லுவா??... பொறுப்பில்லாத புருஷனானு கேவலமா கேப்பா??.." என்று பேசியவனின் குரல், எவ்வளவு சாதாரணமாக பேச முயற்சி செய்தும் சற்று கரகரப்பாகவே ஒலித்தது... அதனை மறைத்தவன்,

"கல்யாண ஏற்பாட்டுக்கு ஆக வேண்டிய வேலைய பாருங்க... இன்னும் ரெண்டு நாள்ல அதி இங்க இருப்பா..." என்றவன் போகும் போது புகழை ஒரு பார்வை பார்க்க, அவனும் அவனோடு சென்றான்...


நேரே சென்றது ஸ்டேஷனுக்கு தான்... நேற்று ஜெயராமனின் ஆள் என பிடிபட்டவன் வாயை திறந்து எதுவுமே நேற்று சொல்லி இருக்கவில்லை ஆனால் இன்று நிலவன் ஆடிய ருத்ர தாண்டவத்தில் அவனே அலறி தான் போயிருந்தான்... அந்தளவுக்கு வெறி கொண்டு தான் தாக்கி இருந்தான்.. நிலவன்...

"நீயா உண்மைய சொல்லிட்டனா உயிராவது மிஞ்சும்.." என்று தன் காலால் அவன் கையை மிதிக்க..

"ஆஆஆஆ... சொல்லிடுறேன் சார் சொல்லிடுறேன்... ஜெயராமன் ஐயா தான் சரக்கு தருவாங்க.. சொல்லுற இடத்துக்கு டெலிவரி பண்ணுறதுதான் என்னோட வேல... வேற எதுவும் எனக்கு தெரியாது..." என்று பாடிய அதே பல்லவியை மீண்டும் பாட, கோபத்தில் நிலவன் விட்ட அறையில் மற்ற விடயமும் வெளியே வந்தது...

"பசங்க சார் பசங்க... பசங்கள தான் டெலிவரி பண்ணுவேன் சார்.. அங்க அவங்க உறுப்புகளை எடுத்துப்பாங்கனு நினைக்கிறேன் சார்..."

"ம்ம்ம்... அப்போ என் கெஸ் கரெக்ட்..." என்றவன் லத்தியால் அவன் முகத்தை நிமிர்த்தி.. "லாரில போகும் போது அடிக்கடி போலீஸ் செக்கிங் இருக்குமே எப்படி எஸ்கேப் ஆகுற.."

"பசங்களுக்கு தூக்க மருந்து கொடுத்து தான் சார் அனுப்புவாங்க... இடைல அவங்க எழுந்திரிக்கவே மாட்டாங்க.. போலீஸ் கேட்டா என் குழந்தைன்னு சொல்லிடுவேன் சார்..." என்றவன் முடிக்க, நிலவன் விட்ட அறையில் உதடு கிழிந்து இரத்தம் பீறிட்டது...

"ராஸ்கல் பணம்ன்னா என்ன வேணா செய்வீங்களா?... உன் புள்ளைன்னு சொல்லும் போது கூட உனக்கு உன் புள்ள ஞாபகம் வரலல... அந்த அளவுக்கு பணத்துல மோகம் பிடிச்சு நாய் மாதிரி அலையிறீங்க... உங்கள மாதிரி ஆட்களை எல்லாம் சுட்டு தள்ளனும்..." என்று எழுந்த நிலவனோ பக்கத்தில் நின்றிருந்த அதிகாரியை அர்த்தமாய் பார்த்தபடி வெளியேற... உள்ளே மீண்டும் அவனுக்கு பூஜை ஆரம்பமானது...


"என்ன நிலாவா பண்ண போற.. அதி காணாம போய் கிட்டத்தட்ட எய்டீன் அவர்ஸ் ஆகிடிச்சு.. ஏதாச்சும் பண்ணியே ஆகணும் டிலே பண்ற ஒவ்வொரு செகண்ட்டும் ரிஸ்க்..."

"ம்ம்ம்.. நீ அந்த ஜெய ராமனை தூக்கிடு.. அந்த ஜேகே ஒரு முடிவு கட்டியே ஆகணும்.." என்க புகழிடம் அதிர்ச்சி

"மச்சான் அதிய அவன் தான் கடத்தி இருப்பான்னு நினைக்கிறியா?..."

"ம்ம்ம்.. அப்படிதான் தோணுது.... நம்ம இந்த கேஸ்ல எடுத்து
வைக்கிற ஒவ்வொரு ஸ்டப்பும் அவனுக்கு தெரிஞ்சிருக்கு.. அன்ட் நாம போற ரூட்டும் கரெக்ட்.. சோ நம்ம கவனத்த திசை திருப்ப தான் அதிய கடத்தி இருக்கானும்... அந்த நாய பிடிச்சா எல்லாம் முடிவுக்கு வரும்.. நீ அவன தூக்கிடு..."

"டேய் அவரு மினிஸ்டர் டா, எப்படி??" என்றான் புகழ் புரியாமல்

அவனோ, "வை நோட்.." என்று புகழை அர்த்தமாய் பார்க்க, விளைவு இரண்டு மணி நேரத்தில் ஜெயராமன்.. பூஜாவின் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்தார்...





"என்ன மிஸ்டர் ஜெயராமன் எப்படி இருக்கீங்க..."

"டேய் நான் யாருனு தெரிஞ்சும் என்ன கடத்தி இருக்கியா?... எவ்வளவு தைரியம் உனக்கு.. ஒழுங்கா என்ன விட்டுடு இல்லை உன் வம்சத்தையே அழிப்பேன்..."

"வசனம் எல்லாம் நல்லா தான் பேசுறீங்க... அரசியல்வாதில அப்போ பாயின்டா தான் பேசுவீங்க..."

"என்னடா திமிரா?..."

"குழந்தைங்கள கடத்தி அவங்க உறுப்ப திருடி உழைக்கிற நாய் உனக்கே திமிரு இருக்கும் போது, போலீஸ் காரன் எனக்கு எவ்வளவு இருக்கும்..." என்று அவன் சொல்ல அவருக்கோ பயத்தில் முகம் வெளிரிவிட்டது...

அவரோ பதற்றத்துடன், "டேய் வீணா எங்கிட்ட மோதாத..."

"அப்போ பண்ணலன்னு சொல்ல வர்றீயா ??..."

"டேய்..."

"எதுக்கு கத்துற... பக்கத்துல தானே இருக்கேன்... எனக்கு தேவையானத சொன்னா விட போறேன்... என் பொண்டாட்டிய எங்க வெச்சிருக்க?.."

"உன் பொண்டாட்டியா??... எங்கிட்ட எதுக்கு கேக்குற உனக்கென்ன பைத்தியமா??.. அவ எவன் கூட ஓடி போனாளோ? யாருக்கு தெரியும்.." என்றவர் முடிக்கவில்லை மூக்கிலிருந்து இரத்தம் கொட்ட, முன் பல் எங்கோ தெரித்திருந்தது...

"ராஸ்கல் யார பத்தி பேசுற.. சாவடிச்சிடுவேன்... மரியாதையா சொல்லு இல்லை கொண்டு ஆத்துல தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.." என்றவன் அவர் இரத்தம் பட்ட கையை துடைத்துக்கொண்டான்...

"நீ என்ன பெரிய ஆளாடா?.. பொடிப்பய நீ கேட்டா நான் சொல்லணுமோ.. உன் பொண்டாட்டி பத்திரமா எங்ககிட்டதான் இருக்கா.. ஆனா எங்கன்னுலாம் சொல்ல முடியாது... உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ.." என்று அந்த நிலைமையிலும் திமிராய் பேசியவர்

"இன்னொரு இன்போர்மேஷன் சொல்லவா.. இன்னும் ரெண்டு நாள்ல உன் பொண்டாட்டி பாடி கூட உனக்கு கிடைக்காது..." என்றவர் வெடி சிரிப்பு சிரிக்க, இப்போது அதிர்வது நிலவன் முறையானது...

"என்ன சொல்லுற நீ... சாக போறாளா??... என்னடா பண்ணீங்க அவள.." என்றவன் அதன் பின் கோபத்தில் எவ்வளவு அடித்தும் அவர் வாயே திறக்கவில்லை... அவர் பதவி தான் அவருக்கு கேடயம் ... தன்னை இவனால் கொல்ல முடியாது என்பது அவர் எண்ணம்... அடி தாளாமல் ஒரு கட்டத்தில் மயங்கி சரிந்திருந்தார்...

"டேய் சொல்லுடா? அவளை என்னடா பண்ண போறீங்க..." என்று மயங்கியவரையும் விடாமல் அடித்து காயப்படுத்தியவனை தடுத்த புகழ் வெளியே அழைத்து வந்திருந்தான்...



"மச்சான் ரிலாக்ஸ்... நீ இப்படி ரியாக்ட் பண்ணிட்டு இருந்தா அதிய யாரு மீட்டு கொண்டு வருவா?... நிதானமா யோசி மச்சான் ஏதாச்சும் வழி கிடைக்கும்..." என்று பேசியபடி அவனுக்கு அருந்த நீரை கொடுத்தவன்... நண்பனை அமைதிப்படுத்தி தோள் கொடுத்து நின்றான்....

சற்று நேரத்துக்கெல்லாம் நிலவன் மீண்டிருந்தான்...

"மச்சான் அப்போ நமக்காக அதிய கடத்தல.. இது அவளுக்கு போட்ட ஸ்கேட்ச் தான்... அவளோட பிளட் குரூப் கூட ஓ நெகடிவ் தான் அப்போ???..." என்றவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.. அடுத்து அந்த வார்த்தையை சொல்ல முடியவில்லை... வார்த்தையாக கூட சொல்ல முடியாமல் தவிப்பவனுக்கு நிதர்சனம் உயிரை வேரோடு பிடுங்கியது...

"ஆமா மச்சான்.. யூ ஆர் ரைட்.. அதியோட உறுப்பு அவங்களுக்கு தேவபடுது.. அன்ட் இதுல நம்ம மூவையும் டைவேர்ட் பண்ண முடியும்னு பிளான் பண்ணி தான் பண்ணி இருக்கனும்..."

"எக்ஸாக்ட்லி.. இவன் இப்போதைக்கு எழுந்துக்கிற போல இல்லை... டைம் வேஸ்ட் பண்ண வேணா அடுத்து என்னனு பாப்போம்.."

"அடுத்து எங்க மச்சான்..."

"குவார்ட்டஸ் போலாம்..." என்றவனது அடுத்த பயணம் வார்ஷியை நோக்கி சென்றது..



அங்கே அவர்களுக்கு அதி கடத்தபட்ட விடயத்தை மட்டும் கூறியவன் வர்ஷியிடம், "வர்ஷி உனக்கு தெரிஞ்சத சொல்லுடா... அங்க என்ன நடந்திச்சுனு உனக்கு ஏதாச்சும் தெரியுமா?.. ஒரு க்ளூ கிடைச்சாலும் என் அதிய காப்பாத்திடுவேன்..."

"அண்ணா அங்க எங்கள எல்லாம் ஒரு ரூம்லதான் வெச்சிருந்தாங்க... பட் அங்க நிறைய ரூம்ஸ் இருக்கும்... அதிலயும் பசங்க இருக்காங்களான்னு தெரியல.. ஆரம்பத்துல எல்லாம் ரொம்ப பயந்து அழுவோம்... போக போக கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினா சூடு வைக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதுக்கு பயந்தே எங்க கதறல் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சிடிச்சு... டைமுக்கு சாப்பாடு மாத்திரை எல்லாம் வந்துடும்.. நாலு அஞ்சு நாளுக்கு ஒரு தடவ லேப் மாதிரி உடைஞ்ச ஒரு இடத்துக்கு கூட்டி போவாங்க.. பிளட் எடுத்துட்டு மறுபடியும் கொண்டு வந்து விட்டுவாங்க..." என்று அவள் சொல்ல ஒவ்வொரு விடயமாய் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டான் நிலவன்...

"திடீர்னு திடீர்னு வந்து கொஞ்ச பேர கூட்டி போவாங்க அதுல சிலர் மறுபடியும் அங்கேயே வருவாங்க, வயித்துல தையல் போட்டிருக்கும்... சிலர் வரவே மாட்டாங்க... அப்படி வராதவங்க வீட்டுக்கு போய்ட்டாங்கனு தான் நாங்க நினச்சிப்போம்... எங்கள எப்போ கூட்டிட்டு போவாங்கனு காத்திருக்க ஆரம்பிச்சோம்..."

"அப்படி ஒரு நாள் என்ன லேப் கூட்டி போறப்போ அங்க என் கண் முன்னாலேயே எங்க கூட இருந்த பையன் ஒருத்தனோட பாடிய தூக்கிட்டு போனப்போ ரொம்ப பயந்துடேன்.. அப்பறம் தான் அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன்"

"எனக்கு எங்க போறதுன்னே தெரியாம கால் போன இடம் எல்லாம் ஓடினேன்... அதுக்கப்பறம் தான் அதியக்கா வண்டில போய் விழுந்தேன்... தப்பிச்சிட்டோம் வீட்டுக்கு போய்டலாம்னு நிம்மதியா கண் மிழிச்சப்போ அங்க எங்கள லேப்க்கு அழைச்சிட்டு போற அண்ணாவ அங்க பார்த்தேன்... யார்கிட்டயும் எதுவும் சொல்ல கூடாதுனு மிரட்டிட்டு போனாங்க.."

"இந்த ஒரு வருஷம் அவர் கட்டுப்பாட்டுலேயே இருந்ததால அவங்க பேச்சு எனக்கு பயத்த தான் குடுத்திச்சு... அப்படி சொல்றதா இருந்தாலும் யார நம்பி சொல்றதுன்னு தெரியாம அமைதியாவே இருந்துட்டேன்...." என்றவள் நடந்தவற்றை சொல்லி முடிக்க அங்கே மௌனம்...

அவள் அந்த நேரம் அந்த கயவனை விழிக்கும் போதும் அண்ணா என்றே விழித்தாள்.. அது தானே குழந்தைகள்.. அதனை கூட உணராத நரிகள் கூட்டம் நிறைந்தது தான் இந்த உலகம்...

நிலவனுக்கோ மனது ஆறவில்லை.. எத்தனை உயிர்கள் சம்மந்தப்பட்ட விடயம்.. இன்று அவன் உயிரும் மாட்டிக்கொண்டதே... ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் காக்க வேண்டும் என்று எண்ணுகிறான்.. ஆனால் எந்த வலியில் சென்றாலும் எங்கோ முட்டி நிற்கிறது...

"டேய் வர்ஷி.. உங்கள அடச்சி வெச்சிருந்த இடம் எப்படி இருந்திச்சு... லைக் அடையாளம் போல ஸ்பெஷிபிக்கா ஏதாச்சும் ஞாபகத்துல இருக்கா உனக்கு?.." என்றவனுக்கு இடரில் இருந்து மீண்டு வந்தவளிடம் வலியை துருவ ஆசை இல்லை தான்.. ஆனால் இப்போதைக்கு வேறு வலியும் அவனுக்கு இருக்கவில்லையே..

"அந்த இடம் இருட்டா தான்னா இருக்கும்... அங்கங்க லைட் போட்டிருப்பாங்க அதுவும் அவ்வளவு வெளிச்சமா இருக்காது.. சன் லைட் கூட உள்ளுக்குள்ள அவ்வளவா வராது ணா.."

"சன் லைட் கூட வராத அளவுக்குனா... இடைவெளி எதுவுமே இருக்காதாடா?.."

"இல்ல ணா.. நாலு பக்கமும் சுவர் மட்டும் தான்.."

"அப்பறம் எப்படிடா அங்க இருந்து தப்பிச்ச.."

"லேப் மாதிரி ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போவாங்கன்னு சொன்னேன்ல.. அங்க போகும் போது எங்க எல்லாரையும் கண்ணையும் கையையும் கட்டி கொஞ்சம் தூரம் நடக்க வெச்சு தான் கூட்டிட்டு போவாங்க அப்பறம் படில ஏறனும், லேப் வந்ததும் கட்ட எடுத்துடுவாங்க... லேப்ல இருந்து ரிடர்ன் போகும் போது தான் தப்பிச்சு ஓடி வந்துட்டேன்..." என்று அவள் சொல்லி முடிக்க இத்தனை இருக்கிறதா என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை...

இனிமேலும் அவளை தொல்லை செய்ய வேண்டாம் என்று எண்ணினானோ என்னவோ "ஓகே வர்ஷி ரொம்ப தேங்க்ஸ் டா வேற ஏதாச்சும் ஞாபகம் வந்தா அண்ணாக்கு கால் பண்ணு.." என்றவன் வெளியேற எத்தனைக்க..

"அண்ணா அந்த லேப்ல லார்ட் கிருஷ்ணாவோட பிளாக் அன்ட் வைட் படம் ஒரு பக்க சுவரல இருக்கும் ணா..." என்றவளின் பதிலில் சற்று காதை கூர்மையாக்கி மனதில் அதனை குறித்து வைத்தும் கொண்டவன் வெளியேறினான்...




புகழ் ஜீப் ஓடிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்த நிலவன் மனதில் ஆயிரம் யோசனை.. அதிரல் காணாமல் போய் சரியாக இருப்பத்தினாலு மணி நேரம் கடந்திருந்தது... இன்னும் தேங்கி நிற்பதில் அவன் மீதே கோபம் அவனுக்கு...

அடங்காத கோபத்தில் வேகமாக ஜீப்பின் கதவில் கையை குத்திக்கொண்டான்.. கதவு கூட நெளிந்து போனது.. கையில் வடியும் இரத்தத்தை விட நெஞ்சில் இன்னும் ஆறாய் ஓடிக்கொண்டிருந்ததே... அது அவன் சூட்டில் ஆவி ஆகி கண்களின் இருந்து கண்ணீராய் கன்னத்தில் கோடு வரைந்தது....

வாகனத்தை ஓரமாய் நிறுத்திய புகழ்... "டேய் டேய் என்னடா பண்ணுற.." என்று அவன் கையை பற்ற போக அவனை உதறியவன்..

"இதுனால என் உயிர் ஒன்னும் போக போறதில்ல, வண்டிய எடுக்கறியா?.. இல்ல நான் எடுக்கட்டுமா?.." என்றவன் குரலில் இருந்த பிடிவாதத்தில் புகழும் ஜீப்பை செலுத்தினான்...

"மச்சான்... ரிலாக்ஸ்டா ஏதாச்சும் வழி இருக்கும்.. அதிய கண்டு பிடிச்சிடலாம்.." என்று ஆறுதலாய் சொன்னவனுக்கும் என்ன வழி என்பது புரியவில்லை தான்...

"கண்டு பிடிச்சிடுவேன்... என் அதிய கண்டு பிடிச்சிடுவேன்.." என்று மீண்டும் மீண்டும் சொல்லி அவன் மனதை உறுதிப்படுத்தி கொண்டவன்... "என் கெஸ் கரெக்ட்னா.. நம்ம கூடவே அவன் ஆள் ஒருத்தர் இருக்கனும்..."

"எப்படி நிலவா? யாரா இருக்கும்?.."

"அங்க பூஜா வீட்டுல, அதி ரெண்டு ஜூஸ் போட்டிருக்கா.. அப்படின்னா நான் போனதுக்கு அப்பறம் யாரோ வந்திருக்கணும்.."

"நீ வருவன்னு கூட போட்டிருக்கலாமே நிலவா?..."

"நோ புகழ்.. அங்க இருந்தது ஆப்பிள் ஜூஸ்.. எனக்கு ஆப்பிள் ஜூஸ் பிடிக்காதுன்னு அவளுக்கு தெரியும்.. சோ அது எனக்கானது இல்லை.. யாரோ நல்லா தெரிஞ்ச ஒருத்தர் தான் வந்திருக்கணும்.. பிகோஸ் அந்த நேரம் அவ அங்க தான் இருப்பான்னும் தெரிஞ்சிருக்கணும், கூட நான் இல்லைங்கிற விஷயமும் தெரிஞ்ச ஓராளா இருக்கனும்..."

"நீங்க அங்க இருக்குற விஷயம் நம்ம வீட்ல இருக்கவங்களுக்கு மட்டும் தான நிலவா தெரியும்... நம்ம பேமிலி அன்ட் பிரண்ட்ஸ் அவங்க எப்படி?..."

"அப்படியும் இருக்கலாம் புகழ்.. இல்லனா நம்மல சுத்தி இருக்கவங்களா கூட இருக்கலாம்ல..."

"ம்ம்ம்ம்.. எப்படி கண்டுபிடிக்க போறோம்..."

"ஐ டோண்ட் நோ... எனக்கும் நம்ம கூட இருக்கவங்கள சந்தேக படவே தோணல புகழ்.. இந்த ஒரு காரணத்துக்காக தான் மூனு வருசத்துக்கு முதல் நடந்த அந்த இன்சிடென்ட்ல கூட என் பிரண்ட்ஸ் மேல சந்தேக பட முடியாம.. அந்த விஷயம் முன்னேற்றமே இல்லாம அப்படியே இருந்திச்சு.. இப்போ மறுபடியும் அதே நிலைமை..." என்று சிறிது அமைதி அவனிடம்..

மீண்டும் அவனே,.. "பட் என் அதி எனக்கு வேணும்.. அதோட அத்தனை குழந்தைகளையும் காப்பாத்தனும்.. சோ சந்தேக பட்டு தான் ஆகணும், தெரியாத ஒருத்தன தேடுறத விட, அவனுக்கு ஹெல்ப் பண்ண நம்ம கூடவே இருக்குற ஆள கண்டுபிடிக்கிறது பெட்டர்.. ஆனா யார் மேலயும் சந்தேக பட முடியலையே.."

"நிலவா நீ சொல்றத வெச்சு பாத்தா, ஏன் காலேஜ்ல நடந்த அந்த விஷயத்தை பண்ணுனதும் அந்த ஜேகேயா இருக்க கூடாது..." என்று புகழ் சொன்னதும் தான்... அவனும் யோசித்தான்...

"பொஸ்ஸிபில் இருக்கு... அப்படினா அவனுக்கு ஹெல்ப் பண்ண அப்போ இருந்தே ஒரு ஆள் என் கூட இருந்திருக்கு.." என்றவன் அங்கேயே இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்...

"என்னாச்சு நிலவா?...

"என்னால எப்படிடா என் ப்ரண்ட்ஸ சந்தேக பட முடியும்... நான் இப்படி யோசிக்கிறேன்னு தெரிஞ்சாலே அவங்க உடஞ்சிட மாட்டாங்களா???..."

"உன்னோட பிரண்ட்ஸ் உன்ன புரிஞ்சிப்பாங்க டா... நமக்கு இப்போ அதிரல கண்டு பிடிக்கணும் அதுக்கு அந்த ஜேகேவ கண்டுபிடிக்கிறது ரொம்ப முக்கியம்... ஜெயராமன் வாய திறக்குறது போல தெரியல... சோ உன் பிரண்ட்ஸ் கிட்ட இருந்து விசாரணைய ஆரம்பி... ஈவன் மீ ஆல்சோ.." என்றவன் முடிக்க இடம் வலமாக தலையாட்டிய நிலவன்..

"வேணா புகழ்.. அப்படி பண்ணா காதலுக்காக ப்ரண்ட்ஸ விட்டு குடுத்தது போல ஆகிடும்... வேற ஏதாச்சும் தான் யோசிக்கணும்.. கடவுள் அதுக்கான வழிய எனக்கு காட்டுவாரு..." என்றவன் "யோசி நிலவா யோசி... " என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன்.. சிறிது நேரத்தில் ஏதோ யோசனை வந்தவனாக,

"மச்சான் சப்போஸ் அவனுக்கு ஹெல்ப் பண்ற அந்த ஒருத்தருக்கு அவன் பணமாவோ இல்லை வேற எதுவோ குடுத்திருக்கணும் தான.."

"மோஸ்ட்லி பணமா தான் குடுத்திருக்கணும்..."

"எஸ் அப்போ அவன் அக்கௌன்ட் டீடெயில்ஸ் எடுத்தா யாருக்கு பணம் அனுப்பப்பட்டிருக்குனு கண்டுபிடிக்கலாம் இல்லையா??..."

"அவனுக்கு தான் சிட்டிஷன்ஷிப் இங்க இல்லையே.. அப்போ யூகேல உள்ள அக்கௌன்ட் தான யூஸ் பண்ணி இருக்கனும்??..." என்றான்..

"ம்ம்ம்.. பட் இது ஒரு இல்லீகல் இஸ்சு.. அவன் அவனோட அடையாளத்தையே மறைச்சிருக்கான்.. அந்த அக்கௌன்ட் யூஸ் பண்ணி இருப்பான்னு நினைக்கிறியா??.." என்றவன் புன்னகைக்க புகழுக்கு புரிந்து போனது...

"சூப்பர் மச்சான் அப்போ ஜெயராமனோட அக்கௌன்ட் டீடெயில்ஸ் எடுத்தா ஓகே அதான..." என்க அவனும் ஆமோதிப்பாய் தலையசைத்தவன் சேகருக்கு அழைப்பு விடுத்திருந்தான்...




அங்கே ஜேகேவோ வெற்றி களிப்பில் இருந்தான்.. அவன் பலவருட கனவு நிறைவேறி இருந்தது... ஆம் நிலவனின் கண்டுபிடிப்பை இத்தனை வருடம் கழித்து மீள கொண்டு வந்திருந்தான்...

"சார்... சூப்பர் சார்.. நீங்க உண்மையிலேயே ஜீனியஸ் தான்.." என்று வசந்த் அவன் புகழ் பாட அவனும் வாங்கிகொண்டான்.. அவனுக்குதான் புகழ் போதையாயிற்றே...

"அந்த அதிரல் அழகி மட்டுமில்ல அதிஷ்ட காரியும் கூட தான் ... இதுநாள் வர அவனுக்கு இனிமேல் எனக்கு.." என்றவனின் பேச்சில் மறைமுகமாக இனி அதிஷ்டம் என்னிடமே என்ற பொருள் ஒளிந்திருந்தது....

"சார் அப்போ அம்மாக்கு இப்போவே இந்த மருந்த ட்ரை பண்ணி பாக்கலாமே.. ஏற்கனவே ரெண்டு பேர்ல டெஸ்ட் பண்ணியாச்சு தான..."







 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"நோ பர்ஸ்ட் ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் பண்ணனும்.. அவங்க உடம்பு கொஞ்சம் ஓகே ஆனதும் தான் இது..."

"ஓகே ஓகே சார்... நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.."

"வசந்த் நாளைக்கு அதிரலுக்கு அந்த இன்ஜெக்ஷன் போட்டுடு... அதுக்கடுத்த நாள் ஆபரேஷன்.."

"ஏன் சார்?.. அதான் அவள இங்கயே புதைக்க போறோமே.. அப்பறம் ஏன் அந்த மருந்து?... மயக்க மருந்து போதாதா?? மயக்க மருந்து கொடுத்தாச்சு ஆர்கான எடுத்தாச்சுன்னு வழமையா இங்க பண்ணுறது போல பண்ணலாமே.. இன்ஜெக்ஷன் ப்ரோசீஜர் ஹாஸ்பிடலுக்கு தான..." என்றான் வசந்த்

"கரெக்ட் தான்... இன்னைக்கே ஆபரேஷன் வச்சிக்கலாம்னா டாக்டர் ரெண்டு நாள் டைம் கேக்குறாரு.. அதுவரை அவளை உயிரோட வெச்சிருந்து, நிலவன கடைசில வந்து அவளை ஒருவேள காப்பாத்திட்டா??.. அவன நம்ப முடியாது.. சோ கடைசி நிமிசத்துல வந்தாலும் அவனுக்கு அவ உயிரோட கிடைக்கவே கூடாது..." என்று கொடூர எண்ணத்தில் சொன்னவன், லேபிலிருந்து அதிரலை அடைத்து வைத்திருக்கும் குடோனை நோக்கி நடந்தான்....


"ஹெலோ மேடம் என்ன சாப்பிட மாட்டேங்குறீங்கல்லாம்... ரெண்டு நாள் சாப்பிடாம போராடுனா எல்லாம் என் ஹார்ட்டுக்கு எதுவும் ஆக போறதில்ல நீ தாராளமா சாப்பிடாம இருந்துக்கலாம்.." என்றான் இரக்கமே இல்லாமல்.. அவளோ அவனை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பிக்கொள்ள

"எனக்கு ரொம்ப நெருங்கமான சொந்தம் நீ.. இப்படி முகத்தை திருப்பலாமா சொல்லு?.." என்றவன் தன் காலால் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி "நான் பேசுனா என்ன பாக்கணும்.. என்ன மட்டும் தான் பாக்கணும்.." என்று அழுத்தி சொன்னான்..

அவளோ அவனை வெற்று பார்வை பார்க்க... "உன்ன பாக்க விசிட்டர்ஸ் வந்திருக்காங்க... கொஞ்சம் சிரி மா..." என்று அவன் சொல்லிகொண்டிருக்க சஞ்சயும் விக்ரமும் உள்ளே நுழைந்தனர்..

சஞ்சய் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்.. "என்ன சஞ்சு பாசமலர பார்த்ததும் முகம் ஜொலிக்குது.."

"கிருஷ், எப்போ இவ கத முடியுது..."

ஜேகேவோ, "ஒன்லி டு டேஸ்.." என்றவன் பக்கத்தில் விக்ரமை பார்க்க அவனோ முறைத்துகொண்டிருந்தான்..

"டேய் நீ ஏன் டா முறைக்கிற.. உனக்கு இவ உயிர் போறதுல கவலையோ?.." என்று நக்கலாக வினவ

அவனோ, "ஆமா கவலை தான்... என் கையாள போகவேண்டிய உயிர் உன்னால போக போகுதே அதான்.." என்றான் கோபமாக..

"அதான பார்த்தேன்.. விடு மச்சான் எப்படியும் போற உயிர் தான.. நமக்கு உபயோகப்பட்டுட்டு போகட்டும்.."

"ம்ம்ம்.." என்ற உருமலோடு அமைதியானான் விக்ரம்..

"அப்பறம் என்ன அதிரல் மேடம் உங்க ஆளு என் அப்பாவ தூக்கிட்டாராம்... பட் சோ சேட்.. என்ன பத்தி தெரிஞ்சிக்க இந்த ஜென்மம் அவனுக்கு போதாதே..." என்று சொன்னவனுக்கும் ஆழ்மனதில் வந்து விடுவானோ என்ற எண்ணம் இல்லாமல் இல்லை...

என்ன பேசியும் அவளிடம் எந்த வித எதிர்வினையும் இல்லை.. இத்தனைக்கும் அவள் வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருக்கவும் இல்லை...

சஞ்சய் அவள் அருகில் சென்று கன்னத்தில் ஓங்கி அறையை.. உதடு கிழிந்து தான் போனது அவளுக்கு... ஆனால் வலியில் கூட முகம் சுருங்கவில்லை அவளுக்கு...

"என்னடி இப்போவும் உன் திமிரு குறையலையா?... இன்னும் ரெண்டு நாள்ல மண்ணோட மண்ணா போக போகுது... அந்த போலீஸ் நாய் வருவான்னு பகல் கனவு காணாம, கவுண்ட் யுவர் அவர்ஸ்..." என்றவனுக்கும் அவள் பதில் மௌனம் தான்... அதில் இன்னும் சூடாகிப்போன சஞ்சய் மீண்டும் அடிக்க பாய.. ஜேகே பிடித்துக்கொண்டான்..

"விடு சஞ்சய்... நீ எதுக்கு டென்ஷன் ஆகுற.. அணைய போற விளக்கு பிரகாசமா ஒளிரட்டுமே..." என்றவன் அங்கிருந்து அவனை அழைத்து சென்றிருந்தான்...

அவர்கள் சென்றதும் அதிரலின் முகமோ வலியில் சுருங்கியது.. அவர்கள் முன் வலியை காட்டி அவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கவே கூடாது என்ற வைராக்கியம் அவளுள்... வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டத்தை தாண்டி வந்தவளுக்கு வலியை மறைப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விடயமில்லையே....



அங்கே நிலவனோ தங்களுக்குள் இருக்கும் கறுப்பாடு யார் என்பதை கண்டுபிடித்திருந்தான்.. இப்போது நேரே வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவனுக்கு மூன்று மணி நேரங்களுக்கு முன் நடந்தவை தான் மனதினில் ஓடிக்கொண்டிருந்தது.


சேகரின் அழைப்புக்காக நிலவன் காத்திருக்க, அவன் தொலைபேசி அழைப்பை உணர்த்தியது....

"சேகர் கிடைச்சிதா??..."

"சார் மேக்ஸிமம் லாஸ்ட் த்ரீ மந்த்ஸுக்குரிய டேட்டா அன்ட் அவங்களோட டீடெயில்ஸ் தான் கலக்ட் பண்ண முடிஞ்சிது... அதுக்கு மேல எடுக்கணும்னா மேனேஜரோட அப்ரூவல் வேணும்.. நான் தான் சொன்னானே சார் அந்தாளு அந்த ஜெயராமனோட ஆளுன்னு.." என்றவர் அவன் கேட்டதை செய்யமுடியாமல் போன கவலையில் நிறுத்த..

"ரொம்ப தேங்க்ஸ் சேகர்... ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட்.. இதுவே பெரிய ஹெல்ப் தான்... நீங்க கிடைச்ச வரைக்கும் அனுப்புங்க.."

"ஓகே சார் நான் உங்க வாட்ஸாப்புக்கு அனுப்புறேன்..." என்றவர் சிறிது நேரத்தில் அனுப்பியும் இருந்தார்...

அதனை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக புகழும் அவனும் பார்வையிட, எதுவும் தங்களுக்கு உபயோகப்படுவது போல் தெரியவில்லை...

"என்னடா.. இதுலயும் எதுவும் கிடைக்கல... எல்லாம் கட்சி சம்மந்தப்பட்ட ட்ரான்ஸெக்ஷன் தான்... ஒருவேள இந்த மூனு மாசத்துக்கு முன்னுக்கு உள்ள ரெகார்ட்ல இருக்குமா??.." என்று புகழ் சொல்ல, நிலவனுக்கும் அப்படித்தான் தோன்றியது...

சற்று நேரத்தில் மீண்டும் சேகரிடம் இருந்து அழைப்பு..

"சொல்லுங்க சேகர்..."

"சார் இந்த மந்த்ல லாஸ்ட் பிப்டீன் டேய்ஸுக்குரிய டேட்டா, சேவர் அப்டேட் ஆகம இருந்ததுனால கிடைக்காம இருந்திச்சு.. பட் இப்போ தான் பிரண்ட் கால் பண்ணான் சார் அப்டேட் ஆகிடுச்சாம்.. அடுத்த பிப்டீன் டேய்ஸுக்குறிய டேட்டா உங்களுக்கு மறுபடியும் அனுப்புறேன் பாருங்க..." என்றவர் அதையும் அனுப்பினார்... இது கடவுளின் உதவி தான் போலும்..

அதனை பார்த்தவர்கள் முகத்தில் மகிழ்ச்சி அவர்கள் எதிர் பார்த்தது போல.. கட்சி சம்பந்தம் இல்லாத மூன்று கொடுக்கல் வாங்கல் நடந்திருந்தது... அதில் ஒன்று ஜெயராமானுக்கு வந்த வரவு... மற்ற இரண்டும் இவரால் அனுப்பப்பட்டது... அதில் ஒன்று கொஞ்சம் பெரிய தொகை, இருபது லட்சம் கை மாறி இருந்தது... மற்றயது பத்தாயிரம் கணக்கில் இருக்கும் தொகை... அவை இரண்டின் உரிமையாளர் பற்றிய தகவல்களையும் பார்வையிட்டவன்... மனதில் சுதாராணி என்ற பெயருக்கு அனுப்பப்பட்ட அந்த பெரிய தொகை மீது தான் சந்தேகம் விழுந்தது...

அவரின் தகவலை பார்த்தவனுக்கு அவர் வீட்டு அட்ரஸ் ரம்யாவின் வீட்டின் அருகில் என்பது புரிய.. மனதில் ஒரு மகிழ்ச்சி...

உடனடியாக ரம்யாக்கு அழைத்தவன்... அவளிடம் விடயத்தை மேலோட்டமாய் சொல்லி தாங்கள் வருவதாகவும் சொன்னவன்.. சொல்லி பத்து நிமிடத்தில் அங்கே இருந்தான்...

"என்ன ஆச்சு மாமா அக்காக்கு..."

"கண்டுபிடிச்சிடலாம் டா நீ கவலை படாத... டேய் நான் கேட்டவங்க எப்படி?.."

"சுதாம்மா நல்லவங்க தான் அண்ணா... இங்க பக்கத்துல தான் இருக்காங்க.. வீட்டு வேலைக்கு தான் போறாங்க... அவங்கள பார்த்தா நீங்க சொல்றதுல சம்பந்தப்பட்டிருபாங்கன்னு தோணல.. ஆனாலும் யாரு எப்படினு சொல்ல முடியாதே... நாம அங்க போய் பாக்கலாம் ணா... இப்போ வீட்ல தான் இருப்பாங்க..." என்றவள் அங்கே அழைத்து சென்றாள்..


"சுதாம்மா... சுதாம்மா..." என்று அழைக்க.. வயதான தோற்றத்தில் ஒருவர் முந்தானையால் முகத்தை துடைத்தப்படி வெளியே வந்தார்...

"யாரது ரம்யாவா... சொல்லு கண்ணு..."

"இவங்க என்னோட மாமாவும் அண்ணாவும், உங்கள பாத்து ஏதோ பேசணும்னு வந்திருக்காங்க மா..."

"உக்காருங்க தம்பி குடிக்க தண்ணி எடுத்தாரேன்..." என்று அவர்களுக்கு இருக்கையை எடுத்து போட்டவர்.. அவர்கள் தடுத்தும் உள்ளே நுழைந்து கொண்டார்... அவர் கண்களில் தங்கள் உடையை பார்த்து பயம் சிறுதும் இல்லை என்பதை நிலவன் மனதில் குறித்துகொண்டான்...

அவரோ வரும் போது தண்ணீருக்கு பதில் மோர் கொண்டுவந்திருந்தார்...

"குடிங்க மதிய நேரம் வந்திருக்கீங்க சாப்பாடே குடுத்திருக்கணும்.. இன்னைக்கு உடம்புக்கு கொஞ்சம் முடியலன்னு சமையல் ஆவல.. அதான் இத எடுத்தாந்தேன் குடிங்க.." என்றவர் அருகில் உள்ள கட்டில் அமர்ந்து கொண்டார்..

நிலவனுக்கு சாப்பாடு என்பதே நேற்றிலிருந்து மறந்திருந்தது... அதனை குடிக்கவும் மனம் வரவில்லை.. ஆனால் அவர் மனதுக்காக சிறிது அருந்தியவன் வைத்துவிட்டான்...

"சுதாம்மா உங்களுக்கு **** இந்த பேங்க்ல உள்ள அக்கௌன்ட்டுக்கு இருபது லட்சம் பணம் வந்திருக்கு... யாரு எதுக்காக அனுப்புனான்னு கொஞ்சம் சொல்ல முடியுமா??..."

"என்ன தம்பி சொல்லுறீங்க.. புரியலைங்களே..." என்றவருக்கு புகழ் விளக்கமாய் சொல்ல அவரோ, " தம்பி அப்படி வங்கி கூட எல்லாம் எனக்கு தொடர்பில்லப்பா.. அன்னன்னைக்கு வீட்டு வேல செஞ்சு கால் வயிறு கஞ்சி குடிக்கிறேன்.. எனக்கெதுக்குப்பா அதெல்லாம்..." என்றவறின் பதிலில் பொய் இருப்பதாக அவனுக்கு துளியும் தோற்றவில்லை.... நம்பிக்கையுடன் வந்தால் இங்கே மீண்டும் திருப்பம்...

"அப்போ வேற யாரும் உங்க பேர்ல யூஸ் பண்ணுறாங்கணு தோணுதுமா.. உங்களுக்கு பசங்க யாரும் இருக்காங்களா??..." என்று வினவ அவரிடம் மௌனம்..

"ஒத்த புள்ள தான் தம்பி... பதினஞ்சு வருசத்துக்கு முதல் நான் வீட்டு வேல செஞ்ச இடத்துல முதலாளிக்கு புள்ள இல்லனு எம்புள்ளைய கேட்டாங்க... எப்படி சாமி குடுப்பேன்.. அது தெரிஞ்சி அன்னைக்கே என்னோட சண்டை போட்டுட்டு என் புள்ள அவங்க கூடயே போயிடிச்சு தம்பி.. அதுக்கு என்ன விட பணம் தான் முக்கியம்னு சொல்லிடிச்சு.. இந்த அம்மாவ வேணான்னு தூக்கி போட்டிடுச்சி..." என்றவர் முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொண்டார்..

நிலவனுக்கு குற்றவாளியை நெருங்கி விட்டோம் என்றே தோன்றியது... "அதுக்கப்புறம் உங்க பிள்ளைய பாக்கலையா நீங்க.."

"அதுக்கப்பறம் என்ன அந்த வீட்டுல வேலைக்கு சேர்த்துக்கவே இல்லை.. எப்படியாச்சும் என் புள்ளய பாக்கணும்னு மனசு துடிச்சாலும் பார்க்கவே முடியல... மூனு வருஷத்துக்கு முதல்.. என்ன தேடி வந்து என்கூட ஒரு நாள் இருந்திச்சு.. என் ஞாபகர்த்தமா கையெழுத்து கூட வாங்கிட்டு போச்சு.." என்று அவர் சொல்ல, எங்கே தவறு ஆரம்பமாகி இருக்கும் என்று நிலவனுக்கு புரிந்தது...

"உங்க பிள்ளையை பாக்கலாமா.. போட்டோ ஏதாச்சும் வெச்சிருக்கீங்களா?..."

"இருக்கு தம்பி இருங்க எடுத்தாரேன்.. அன்னைக்கு வந்த புள்ளய விடாம அடம்பிடிச்சு இங்க பக்கத்துல உள்ள தம்பி கடைல ரெண்டு பேரும் போட்டோ பிடிச்சிகிட்டோம்.." என்றவன் உள்ளே சென்று புகைப்படத்தை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார்...

அதனை வாங்கி பார்த்த நிலவனின் முகத்தில் அதிர்ச்சி... பக்கத்தில் உள்ள புகழிடம் காட்ட அவனுக்கும் அதிர்ச்சி தான்...

"ரொம்ப நன்றி மா... நாங்க கிளம்புறோம்.. உங்க புள்ள பேரு என்னமா?..." என்று கேட்க அவர் சொன்ன பெயரில்.. "அதுசரி இத்தனை பொய் சொல்லி இருக்கும் போது பெயர் மட்டும் உண்மையாவா இருக்கும்..." என்று எண்ணியவன் அங்கிருந்து கிளம்பினான்...

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நபரை பற்றி ஆதி முதல் அந்தம் வரை நிலவன் பிடித்து விட்டான்...

அவனோ இந்த எண்ணங்களில் மூழ்கி இருக்க.. வாகனம் சரியாக அவன் வீட்டை அடைந்தது...

புயல் போல் வீட்டுக்குள் நுழைந்தவன்... அங்கே நின்ற பூஜாவிடம்.. "பூஜா ஒரு காபீ கிடைக்குமா?..." என்றான்..

அவன் செய்கை மற்றவர்களுக்கு குழப்பம் தான்... பூஜாவும் யோசனையுடனே தலையாட்டிய படி சமையல் அறை உள்ளே சென்றாள்...

"என்ன நிலவா அதிய பத்தி தெரிஞ்சிதா?..." என்று வாசுகி விசும்பலுடன் வினவ..

"இப்போ தெரிஞ்சிடும் மா..." என்று பேசி கொண்டிருக்க.. பூஜா அனைவருக்கும் சேர்த்தே போட்டு எடுத்து வந்திருந்தாள்... அவனுக்கு கொடுத்தவள் அங்கே எல்லேருக்கும் கொடுக்க...

நிலவனோ... "நாங்க பூஜா வீட்டுக்கு போனது இங்க உள்ள உங்க எட்டு பேர தவிர யாருக்கும் தெரியாது.. சோ உங்கள்ள ஒருத்தர் தான்.. அதி கடத்த ஹெல்ப் பண்ணி இருக்கனும்.." என்றவன் தாய் தந்தையையும் விட்டுவைக்காமல் சேர்த்தே எட்டு பேர் என்றான்... அவன் பார்வை அந்த நபரை தவிர எல்லோரையும் தழுவியது... பார்க்க கூட மனம் விரும்பவில்லை போலும்...

"என்ன நிலவா பேசுற..."

"மா ப்ளீஸ் கீப் குவைட்... இங்க நான் போலீஸா வந்திருக்கேன்.." என்று கத்தியவன் "செஞ்ச ஆளுக்கு நல்லா தெரியும் நீங்களே சொன்னா உங்களுக்கு நல்லது நானா கண்டு பிடிச்சேன் விளைவு மோசமா இருக்கும்..." என்றவன் பேச அந்த நபருக்கு வியர்க்கவே செய்தது ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை...

"ம்ம்ம் அப்போ நீங்களா ஒத்துக்க மாடீங்க... ம்ம்ம்ம் இன்டரெஸ்ட்டிங்..." என்று நாடியை நிவிக்கொண்டு இடுப்பில் ஒரு கை குற்றி நக்கலாய் சிரித்தவனை பார்க்க எப்போதும் போல இருக்கும் விளையாட்டான நிலவன் இவன் இல்லை என்று மட்டும் அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது...

"என்ன மிஸ் சத்யா... இன்னுமா உங்கள கண்டுபிடிச்சிருப்பேன்னு உங்களுக்கு தோணல..." என்று இப்போது அவன் பார்வை அந்த உருவதையே துளைக்க, அந்த நபருக்கோ கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டது... மற்றவர்கள் பார்வையும் அங்கே தான் நிலைகுற்றி நின்றது...

"அப்படி சொன்னா புரியாதில்லையா??... பல வருஷம் பெயர் மறந்திருக்கும்ல... சத்யராணி அலைஸ் நிஷா அலைஸ் மோனிஷா.. எம் ஐ ரைட்?.." என்றான் இன்னும் திருத்தமாய்... உன்னை பற்றி அனைத்தும் நானறிவேன் என்று..

அனைத்தும் தெரிந்து விட்டது என்று பயத்தில் தப்பித்து ஓடப்பார்க்க, அருகில் நின்றிருந்த விஷ்னு அவளை தப்பிக்க விடாமல் வளைத்து பிடித்திருந்தான்.....

அருகில் வந்த நிலவன் "ஏன்" என்ற ஒரு வார்த்தை தான் கேட்டான்... அதன் பின் விட்ட அறையில் மூலையில் சென்று தான் விழுந்தாள்.. மயங்கியும் இருந்தாள்...


மயக்கம் தெளிந்து எழ.. இருக்கையில் கட்டிவைக்கப்பட்டிருந்தவளை சுற்றி குடும்பமே நின்றிருந்தது.. முன்னால் நிலவன் அமர்ந்திருந்தான்....



ஜாதி மல்லி மலரும்.....


இவ்வளவு நாள் மர்மமாய் இருந்த அந்த நபரை நிலவன் கண்டு பிடித்து விட்டான்.. அதே போல் அவனவளையும் கண்டுபிடிப்பானா??...

அப்படியே கண்டுபிடித்தாலும் அவள் உயிர் இருக்குமா???


கருத்து திரி 👇👇👇

inbound9002777789123996158.jpg
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 28


அவள் முன்னே தன் துப்பாக்கியை எடுத்து வைத்தவன்.. "அதி எங்கன்னு நீயா சொல்லிட்டனா உனக்கு நல்லது..."

"எனக்கு தெரியாது..." என்றவளின் பேச்சில் ஒரு திமிர் இருப்பது போலவே ஒரு தோன்றம்...

"ஆஹான், மாட்டியும் அவ்வளவு தைரியம்..."

"உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு.. உன்ன இவ்வளவு நாள் ஓட விட்ட ஜேகேக்கு இனியும் என்ன பண்ணனும்னு தெரியும்... அவருக்கு முன்னுக்கு நீ ஜீரோ தான்.."

"அவன பத்தி பேசுறியா??.. வெக்கமே இல்லாம என்னோட உழைப்ப திருடி இருக்கான்.. தன்னோட அடையாளத்த வெளியே காட்டிக்காத கோழை அவன், அவனுக்கு இப்படி ஒரு டை ஹார்ட் பேனா.. இன்டெரெஸ்ட்டிங்..." என்றவன் புகழை பார்க்க, அவனோ நண்பனின் பார்வைக்கான பொருளை எடுத்து வந்திருந்தான்...

"இப்போ நீ என்ன பண்ற.. உனக்கு தெரிஞ்ச எல்லாம் புட்டு புட்டு வைக்கிற.. இல்லனு வெச்சுக்கோயேன்.. இந்த குரடு இருக்கே குரடு இத வெச்சு ஒவ்வொரு நகமா வெளிய எடுப்பேன்.. எனக்கு வேற கோபம் அதிகமா இருக்கு நகத்துக்கு பதிலா விரல் கூட வெளிய வரும்.. எப்படி வசதி..." என்றனது முகம் என்னவோ சாந்தமாக தான் இருந்தது ஆனால் வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்..

அவள் முகத்திலோ கலவரம்.. இப்படி ஒரு நிலவனை அவள் எதிர்பார்க்கவில்லை அல்லவா... எப்போதும் சாந்தமான நண்பனாக தானே நிலவனை பார்த்திருக்கிறாள்.. பெரிதாய் என்ன செய்துவிடுவான்.. மிஞ்சி மிஞ்சி போனால் ஜெயிலில் போடுவான்... அதன் பின்னர் தப்பித்து விடலாம் என்பதே அவள் எண்ணமாக இருந்தது.. ஆனால் இப்போது அது முடியாது என்பது புரிந்து போக... பயம் முகத்தில் விரவிக்கிடந்தது..

"நிலவா.. இவகூட எல்லாம் பேசிட்டு இருக்காம வெட்டி போடு.. கூடவே இருந்து எப்படி நடிச்சிருக்கா...." என்றாள் பூஜா கோபமாக..

"இரு பூஜா மேடம் அவங்க பண்ண விஷயத்தை அவங்க வாயாலேயே இப்போ சொல்லுவாங்க . அறிவு சாவுக்கும் மேடம் தான காரணம் சொல்லட்டும்.. எல்லாம் சொல்லட்டும்..." என்று பூஜாவிடம் சொன்னவன் பார்வை எல்லாம் மோனிஷாவிடத்தில் தான்...

"உனக்கு சரியா வன் ஹவர் தான் டைம்.. அதுக்குள்ள சொல்லி முடிக்கல நான் முடிச்சிட்டு போயிட்டே இருப்பேன்.." என்றவன் அவள் எதிர்பாராத நேரம் பெருவிரல் நகத்தை உருவி எடுத்திருந்தான்.. அவள் அலறல் அந்த வீட்டை நிறைந்தது.. யாருக்கும் பாவம் என்று சிறிதும் தோன்றவில்லை..

இப்போதுதான் நிலைமையின் வீரியம் புரிந்தது அவளுக்கு... தன்னை மிரட்டுவான் எதுவும் பண்ண மாட்டான் என்று எண்ணி இருக்க இப்போது அவள் எண்ணத்திலோ மண் விழ, வலி வேறு உயிர் போனது...

பணத்துக்காக எதையும் செய்யும் சுயநலவாதி அவள்.. உயிர்க்கு ஒன்றென்றால் சும்மா இருப்பாளா??.. நடந்ததை சொல்ல தொடங்கினாள்..



நான்கு வருடங்களுக்கு முன்...


சத்யராணியாய் இருந்தவள்.. பணக்காரியாய் தன்னை மாற்றிகொண்டதும் பெயரையும் மோனிஷா என்று மாற்றிகொண்டாள்.. பச்சோந்திக்களுக்கு மாற சொல்லி கொடுக்கவா வேண்டும்...

புதிதாய் அவளுக்கு அப்பாவாக கிடைத்தவரும் பெரிய பணக்காரர்.. அத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரர்.. இவளோடு அத்தனை பாசமாக தான் இருந்தார்..

ஆனால் அவள் எதிர்பார்த்தது போல் அவரிடம் அத்தனை இலகுவில் இவளுக்கு வேண்டியளவு பணத்தை கறக்க முடியவில்லை.. காரணம் அவளுக்கு நேர்மாறாக கொஞ்சம் நேர்மையானவராக இருந்து தொலைத்துவிட்டார்...

இத்தனைக்கும் சுதாவின் விருப்பம் இல்லாமல் தான் இவள் இங்கே வந்துவிட்டாள் என்றெல்லாம் அவருக்கு தெரியாது... அதனை அவரிடம் இருந்து மறைத்த பெருமை அவர் மனைவியையே சேரும்... அவர் அடுத்த மோனிஷா என்று கூட சொல்லலாம்.. அத்தனை சுயநலம்... பிள்ளை பாசம் என்றெல்லாம் இல்லை, தன்னை மலடி என்று ஊர் சொல்ல கூடாது அது ஒன்றே அவருக்கு வேண்டியது...

வளரும் வரை அவள் நடிப்பு தந்தையால் கூட கண்டுபிடிக்க முடியாமல் தான் இருந்தது... யூகேயில் தான் மருத்துவம் படிப்பேன் என அடம்பிடித்து அங்கே சேர்ந்துவிட்டாள்.. பேராசை அவளுக்கு எதிலும் மிச்சம் இருக்கவில்லை..

அங்கே தான் ஜேகேயை சந்தித்தாள்.. அவன் ஆளுமை, அறிவு குறிப்பாக பணம் எல்லாம் இவளை ஈர்க்க, காதலை எப்படியெல்லாமோ சொல்லி பார்த்துவிட்டாள்.. ஆனால் அவன் மசிவது போல் இல்லை.. நான்கு வருட படிப்பு முடிவிலும் அதேகதி தான்..

அவனை பற்றி எவ்வளோ அறிய முயற்சி செய்தும் பலனோ வீண் தான்... ஆனால் அவன் அறிந்துகொண்டான் இவள் முழு ஜாதகத்தையும்..

ஒரே இடத்தில் தான் வேலையும் செய்தனர் இருவரும்.. அதனால் அடிக்கடி பாத்துக்கொள்ளும் நிலை தான்...

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நேரம் தான் நிலவன் பற்றி ஜேகேவிற்கு தெரிய வந்தது... கூடவே இருந்து தகவல் சொல்ல ஒரு ஆள் தேவைப்பட, அவன் மனதில் தோன்றியவள் தான் இந்த மோனிஷா.. அதிலும் அவள் பொருத்தமாக இருப்பாள் என்ற எண்ணம் தான்...

இவளுக்காக தான் தாத்தாவிடம் மெண்டர் பற்றிய யோசனையையே சொன்னான்.. இவளை மெண்டராக தனக்கு பதில் அனுப்புவது தான் அவன் முதல் திட்டம்.. ஆனால் அவன் தாத்தா முந்திகொண்டார்..


அன்று வேலை முடிந்து அவளை பார்ப்பதற்காக அவனே வந்திருந்தான்...

"வாவ் ஸ்வீட் சர்பிரைஸ்... நீங்களே என்ன தேடி வந்திருக்கீங்க..." என்று அவள் வழிய, அவனோ அதனை சட்டை செய்யாமல்..

"மோனிஷா, வில் யூ டூ எ பேவர் போர் மீ?.."

"டெபனட்லி, ஐ வில் டூ அனிதிங் போர் யு ஜேகே.." என்று அந்த அனிதிங்கில் சற்று அழுத்தம் கூட்டியே சொன்னாள்.. அதன் அர்த்தம் கூட அவனுக்கு புரியத்தான் செய்தது...

அவள் செய்யவேண்டியதை சொன்னவன்.. "இதுக்கு உனக்கு என்ன வேணுமோ நான் கொடுக்குறேன்.. எத்தனை லட்சம் வேணும்?.."

"என்ன கேட்டாலும் கொடுப்பிங்களா ஜேகே.."

"ம்ம்ம்.. இப் பொஸ்ஸிபில் ஐ வில் கிவ்.." என்றான் முன்னெச்சரிக்கையாய்.. அவனுக்கு தான் தெரியுமே அவள் என்ன கேட்பாள் என்று....

அவன் எண்ணியது போல பணத்தையும்.. கூடவே அவனையும் தான் கேட்டாள்... அவனும் இரண்டாவது யோசிப்பதாக சொல்லி இருந்தான்... அதுவும் அவள் உதவி தேவைப்படுவதால் மாத்திரம்..

அதன் பின்னர் தான் அவள் இந்த ஐவர் குழுவோடு இணைந்து கொண்டது.. ஏற்கனவே படித்து முடித்தவள் அவள்... இதற்காக மீண்டும் கல்லூரியில் சேர்ந்து கொண்டாள்... அங்கே ஒரு வருட படிப்பு முடிந்திருந்தாலும், ஜேகேவின் கல்லூரி என்பதால் இலகுவாக உள்ளே நுழைந்து கொள்ள முடிந்தது...

முதலில் நிலவனை காதல் வலையில் விழ வைப்பதுதான் திட்டமாக இருந்தது... ரெண்டு வருடம் அதற்காக போராடியும் மசியவில்லை அவன்... ஆராய்ச்சி பற்றி பெரிதாக தெரிந்து கொள்ளவும் முடியவில்லை... ஆறுபேரும் ஒன்றாக பேசும் போது அரட்டை அடிப்பதிலேயே கழியும்.. ஆராய்ச்சி பற்றியெல்லாம் பெரிதாய் பேசிக்கொல்வதில்லை...


"ச்சே.. உண்மைலயும் லவ்க்கு அலையிறோம்.. நடிப்புலயும் அலையிறோம்.. நம்ம அழகுக்கு இதெல்லாம் தேவையா??? படிச்சதையே திருப்பி படிச்சுக்கிட்டு.. தலையெழுத்து.." என்று அவளுக்கவளே பேசிக்கொண்டிருக்க. அவ்விடம் வந்தான் அறிவழகன்.. சட்டென்று அவள் உடல் நடிப்பை தொடர்ந்தது... சோகமாக முகத்தை வைத்துக்கொண்டாள்...

"ஏன் நிஷா இங்க உக்காந்திருக்க.. வா சாப்பிட போகலாம்..."

"இல்லை வேணா நீ போய் சாப்புடு..."

"நீ எதுக்கும் பீல் பண்ணாத.. நிலவனுக்கு உன்ன பிடிக்கலைனு இல்லை உன்ன பிடிக்கும் எஸ் எ பிரண்ட்டா... எல்லாருக்கும் எல்லாரும் மேலையும் காதல் வராதுல நிஷா... உனக்காக நெஞ்சம் முட்டுற அளவுக்கு காதல குடுக்க ஒருத்தன் வருவான் நிஷா.. பிரீயா விடு..."

"என்ன ஆடு ஒன்னு தனியா அதுவே வந்து மாட்டுது.." என்று மனதில் எண்ணிகொண்டவள்.. "எனக்கு நம்பிக்கையே இல்லை அறிவு.. என்னலாம் யாருக்கும் பிடிக்காது... இந்த அனாதைய யாருக்கு தான் பிடிக்கும்.. அதுக்கெல்லாம் பார்த்ததும் அழகா இருக்கணும்.. நான் குண்டா அசிங்கமா இருக்கேன்ல அதான் யாருக்கும் பிடிக்கல..." என அவள் வேண்டுமென்றே பேச..

நெஞ்சில் காதல் சுமக்கும் அவனுக்கு பொறுக்கவில்லை... ஆம் அவன் இவளை பார்த்த அன்றிலிருந்து காதலில் விழுந்திருந்தான்...

அவள் நிலவனிடம் காதலை சொன்னதும் உடைந்து அமர்ந்ததெல்லாம் ஒரு நாள் தான்.. நண்பன் என்று வந்ததும் காதல் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை... அவளுக்கான அவன் காதலை ஆழ்மனதில் புதைத்துக்கொண்டான்...

நிலவனின் தொடர்ச்சியான நிராகரிப்பு கூட அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை மாறாக தன்னைப்போல் அவள் மனமும் உடைந்து போயிருக்குமே என்று தான் கவலைப்பட்டான்... ஆனால் இன்று அவளே அவளை கீழ் இறக்கி பேச ஆழமனதில் புதைந்திருந்த காதல் விழிந்துகொண்டது...


"நிஷா லிசின்.. நீ அழகில்லனு யாரு சொன்னா.. சொல்ல கூடாதுனு தான் நினைச்சேன் பட் இதுக்குமேல சொல்லாம இருக்க முடியல.. உன்ன பார்த்தன்னைக்கு உன் மேல காதல்ல விழுந்தவன் நான்.. உனக்கு எப்போ நிலவன தான் பிடிக்கும்னு தெரிஞ்சிதோ அன்னைக்கே என் மனசுக்குள்ள அந்த காதல புதைச்சுகிட்டேன்.. இப்போ சொல்லுறேன் ஐ லவ் யூ சோ மச் நிஷா.." என்றதும் அவள் பொய்யாய் முகத்தில் அதிர்ச்சியை கொண்டுவந்திருக்க...

"நீ உடனே ஓகே சொல்லணும்னு இல்லை நிஷா.. யோசிச்சு பாரு.. பிடிக்காட்டியும் தயங்காம சொல்லு பிரண்ட்ஸாவே இருக்கலாம்... உன் விருப்பம் ரொம்ப முக்கியம்..." என்றவன் எழுந்து செல்ல..

இவள் முகத்திலோ வழி கிடைத்து விட்ட சந்தோசம்... ஜேகேவிடமும் அன்றே பகிர்ந்து கொள்ள..

"இட்ஸ் அ குட் ஓப்ஷன் மோனிஷா... இவன உன் கைக்குள்ள போட்டுக்கோ.. ரெண்டு பேருக்குள்ளேயும் சண்டை வரவைக்க என்ன பண்ணணுமோ பண்ணு.. அண்ட் உங்க லவ் விஷயம் மத்தவங்களுக்கு தெரியாம பாத்துக்கோ..." என்று அவனும் சொல்லி இருக்க..

அடுத்த நாளே அவனை சந்தித்தவள் காதலுக்கு சரி என்றும் சொல்லி இருந்தாள்...

"அறிவு நான் நைட் புல்லா யோசிச்சேன்... பழைய டயலாக் தான் இருந்தாலும் சொல்லுறேன்.. எனக்கு பிடிச்சவனை லவ் பண்றத விட என்ன பிடிச்சவனை லவ் பண்ணலாம்ணு தோணுது... நான் ரிஜெக்ட் பண்ணுபட்ட கஷ்டம் உனக்கும் வேணாம்னு தோணுது... லவ் யூ அறிவு.. என்னடா இவ கேட்டதும் ஓகே சொல்லுறாளேனு என்ன தப்பா நினைக்கலல.."

"என்ன நிஷா நீ என்ன போய் சந்தேக படுற... நீ என்ன ஏத்துகிட்டதே எனக்கு ரொம்ப ஹாப்பி.. வா அவங்க கிட்டயும் சொல்லலாம்.. ரொம்ப சந்தோச பாடுவாங்க..." என்று அவளை அழைக்க அவளோ ஒரு அடி கூட நகரவில்லை.. அவனோ யோசனையாய் பார்க்க...

"வேணா அறிவு.. அவங்களுக்கு இப்போ சொல்ல வேண்டாம்.."

"ஏன் நிஷா... அப்பறம் தெரியவந்தா கோச்சிப்பாங்கடி..."

"அப்போ நான் ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுகிறேன்... இப்போ தெரிய வந்தா என்ன ரொம்ப தப்பா பேசுவாங்க அறிவு.. நேத்துவர அவன் பின்னாடி திரிஞ்சா இப்போ இவனானு கேவலமா பாப்பாங்க..."

"நம்ம பிரண்ட்ஸ் அப்படினு நினைக்கிறியா நீ.."

"அவங்க இல்லை அறிவு மத்தவங்களுக்கு தெரிஞ்சா அப்படித்தான நினைப்பாங்க.. அதிலயும் விஷ்ணு எல்லாருக்கும் சொல்லிடுவான்... அவன பத்தி தான் உனக்கு தெரியுமே.." என்று அவன் நம்பும் படியாக நாடகத்தையும் போட்டிருந்தாள்...

அதன் பின் நிலவனை பற்றி நேரடியாக இல்லமல் மறைமுகமாக பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவன் மனதில் ஆழப்பதித்தாள்.. அவனுள் தாழ்வு மனப்பான்மையை வளர்க்க அனைத்தையும் செய்திருந்தாள்...

எப்போதும் நிலவன் சிறந்தவன் என்ற பேச்சே அவளிடம் இருக்கும் ஆனால் சந்தேகப்படும் படியாக பேசமாட்டாள் சாதாரணம் போலவே பேசுவாள்...

எந்த காதலனுக்கும் தன் காதலிக்கு தானே சிறந்தவனாய் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்புதானே.. அப்படித்தான் அறிவழகனுக்கும் தோன்றியது..

ஆரம்பத்தில் அவள் பேச்சை சாதாரணமாக எடுத்து கொண்டவனுக்கு நாள் போக்கில் சற்று எரிச்சலை தான் கொடுத்தது... எங்கே சொன்னால் சந்தேகப்படுவதாய் எண்ணி கொள்வாளோ என்று அவளிடம் சொல்லிக்கொள்வதில்லை...

அவள் நோக்கம் போலவே நாளைடைவில், எரிச்சல் கோபமாக நிலவன் மீது திரும்பி இருந்தது... அதன் பின் எடுத்ததுக்கு எல்லாம் நிலவனோட ஒப்பிட தொடங்கியது அவன் மனது... எவ்வளவு தடுக்க எண்ணியும் அவன் மனதை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை... விளைவு நிலவனிடம் அவனை ஒதுங்க வைத்தது.. எப்போதும் ஆறு பேரும் ஒன்றாகவே இருப்பதால் நிலவனுக்கு அவ்வளவாய் அது புரியாமல் போனது...

அறிவழகனின் கோபத்தை வெறுப்பாக மாற்றும் வகையில் தான் ஒரு சம்பவமும் நடந்தது..

அன்று தேர்ட் இயர் தேர்ட் செமஸ்டர் ரிசல்ட் வந்திருந்தது.. எப்போதும் போல் நிலவனே முதலாவதாக வந்திருந்தான்... அறிவும் வழமை போல் இரண்டாவது... அவன் முதலில் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை..

ஆனால், மூன்றாவதாக வந்திருந்த மாணவன் ஒருவனுக்கு அறிவழகன் மீது பயங்கர கோபம்.. அவனோ தொழிலதிபர் ஒருவரின் மகன்.. போன முறை இவனை விட பின்னால் வந்ததற்கு அவன் தந்தை கண்டபடி திட்டி இருந்தார்... ஒன்றுமில்லாத ஊரில் இருந்து வந்தவன் எல்லாம் தன்னை விட முன்பா என்ற கோபம் அவனுள் கொழுந்துவிட்டு எரிந்தது...


"என்ன மச்சான் இந்த முறையும் அந்த அறிவு உன்ன ஜெய்ச்சிட்டான் போல..." என்று அவன் நண்பன் ஒருவன் நக்கலாய் கேட்க, அவனுக்குள் இருந்த கோபத்தை வார்த்தை என்னும் வன்மத்தால் கக்கினான்..

"யாரு அவனா?.. அவனுக்கு என்னடா தெரியும் எல்லாம் கூட இருக்குற நிலவனோட ட்ரைனிங்.. அவன் ஜீனியஸ், கூட இருக்குற இந்த நாய் அதனால முன்னுக்கு வருது.. கம்பன் வீட்டு கட்டுதரியும் கவி பாடும் னு நீ கேள்வி படலையா??.... சுயமா படிக்கிறவங்க கூடத்தான் எனக்கு போட்டியே.. இந்த ஒட்டிட்டு ஜால்ரா தட்டுறவங்க எல்லாம் எனக்கு போட்டியா??... குட் ஜோக்..".. என்றான் சரியாக அறிவழகன் அந்தப்பக்கம் வருவதை பார்த்து வேண்டுமென்றே...

அது அறிவழகனுக்கு நன்றாக கேட்கவே செய்தது.. அவனுக்கோ கோபம் என்றால் அவன் கூடவே வந்த நிஷாவுக்கோ உள்ளுக்குள் மகிழ்ச்சி..

அறிவழகன் கடின உழைப்பாளி... சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டவன் என்பதால், அவனை அவனே செதுக்கிக்கொண்டவன்... ஆரம்பத்தில் எல்லாம் அவன் இவ்வளவு நன்றாக படிப்பவன் இல்லை... அவன் முயற்சியாலேயே இந்த இடத்துக்கு வந்திருக்கிறான்..

"ஏண்டா இப்படி ஸ்ட்ரைன் பண்ணிக்கிற" என்று நிலவன் பலமுறை கேட்டத்துண்டு.. அவனுக்கு கூட இவன் படிப்பதை பார்த்து ஆச்சரியம் தான்... அப்படி இருக்கும், அதற்கான அவன் உழைப்பு...

ஆனால் இன்று அதையே நிலவனோடு ஒப்பிட்டு பேசவும் அறிவழகன் கோபம் எல்லை கடந்து வெறுப்பாய் மாறியது.. முன்பு இப்படி பேசி இருந்தால்.. ஒருவேளை சாதாரணமாக கடந்திருப்பானோ என்னவோ.. இப்போது இருக்கும் மனநிலையே அவனை இந்த நிலைக்கு தள்ளியது...

கோபம் கோபம் கோபம்... தன்னை நிலவனை விட சிறந்தவனாக வெளிக்காட்டியே ஆக வேண்டும் என்று உள்ளுக்குள் வெறியே வந்திருந்தது... இதனை தான் நிஷா ஆயுதமாக பயன்படுத்தி கொண்டாள்... அவன் மனதில் நிலவனை போல் நீயும் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசையை மறைமுகமாக வளர்த்திருந்தாள்...

அன்று முதல் அறிவழகன் ஒதுக்கத்தை நேரடியாக நிலவனிடம் காட்டவே செய்தான்...

இப்படி ஒரு நாளில் தான் நிலவன் பாலமூர்த்தியுடன் பேசுவதை கேட்ட நிஷா.. அதற்கான திட்டத்தையும் வகுத்துக்கொண்டாள்...

எல்லாம் நிஷாவின் திட்டப்படி சரியாகவே சென்றுகொண்டிருந்தது... பால மூர்த்தியிடம் நாளை அந்த அறிக்கையை அடித்து விட திட்டம் எல்லாம் சரியாக தான் இருந்தது...
ஆனால் எல்லாம் அன்று மதியம் அறிவு அவளை பார்க்கும் வரை தான்....

இன்று தன்னால் வர முடியாது.. உடம்பு சரி இல்லை என்று அவனிடம் சொல்லி வீட்டிலே இருந்து கொண்டாள்... போன மாதம் தான் ஹாஸ்டலில் இருந்து புது வீட்டுக்கு மாறி இருந்தாள்... அறிவு கூட ஒருமுறை வந்துருக்கிறான்.

இன்று உடம்பு சரி இல்லை என்றதும், "தனியாக கஷ்டப்படுவாளே பாவம்" என்று எண்ணியவன்.. பழங்கள் சிலவற்றை வாங்கி அவள் வீட்டுக்கு செல்ல, வீடோ பூட்டி இருந்தது...

"எங்க போயிருப்பா..." என்றபடி சுற்றி முற்றி பார்த்தவன்.. அங்கே வெளியே சற்று தூரத்தில் நின்ற பைக்கை கண்டதும் முகம் யோசனையில் சுருங்கியது...

காரணம் அந்த பைக்.. பார்த்ததும் இன்னாருடையது என்று சரியாக சொல்லமுடியும்.. அத்தனைக்கு கல்லூரியில் பிரசித்தி பெற்ற விலை உயர்ந்த ரக வண்டி அது... விக்னேஷின் பைக் அது... அவன் பெயரின் முன் எழுத்து கூட அதில் பெரிதாக பொறிக்கப்பட்டிருக்கும்.. அதை வைத்தே அறிவழகனும் இனம் கண்டு கொண்டான்....

ஆம் முதல் நாளே அதிரலிடம் அடி வாங்கிய அதே விக்கி தான் இந்த விக்னேஷ்... நிலவனிடமும் பல முறை அடி வாங்கி இருக்கிறான்... அவனுக்கும் இவர்கள் கேங்குக்கும் ஆகாது...

"இவன் எங்க இங்க... நிஷாவுக்கு அவனால் ஏதும்.." என தன்னவளுக்கு பிரச்னைனையோ என எண்ணியவன் உள்ளே நுழைந்தான்..
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
முன்பக்கம் பூட்டி இருக்க பின் பக்கமாய் இருந்த கதவை தள்ளி பார்க்க திறந்து கொண்டது... உள்ளே நுழைந்தவன் சத்தம் போடவில்லை..

ஒரு வேளை முடியாமல் தூங்கி இருந்தால் பாவமே என்று, மெதுவாய் அவள் அறைக்குள் செல்ல முனைய.. அங்கிருந்து வந்த சத்தம் அவனை தடுத்திருந்தது...

"செம ஹாட் பேபி நீ..." என்று அதன் பின் முத்த சத்தம் கேட்க, அப்போதும் அவனுக்கு சந்தேகம் வரவில்லை.. அவன் தான் அவளை ஏதோ செய்கிறானோ என்று உள்ளே நுழைய அங்கு கண்ட காட்சி அவனை அடியோடு சாய்த்திருந்தது...

அவன் வந்தது கூட தெரியாமல் கலவி போதையில் அவர்கள்... ஆடை துறந்து வெக்கம் துறந்த நிலையில்... அவனுக்கோ கண்ட காட்சி வாந்தி வருவது போல் இருக்க வெளியே வந்தவன் அந்த சுவரிலே அப்படியே சாய்ந்து அமர்ந்துவிட்டான்... அழுகை அடக்க பார்த்தும் முடியவில்லை அவனால்...


அங்கே அவர்களோ வேலை முடிய களைத்து அப்படியே விட்டதை பார்த்து படுத்துக்கொண்டனர்.. இப்படி ஒருவன் வந்ததோ தங்களை பார்த்ததோ ஏதும் அறியவில்லை...

"என்ன சொல்லு பேபி... அன்னைக்கு நீ பேசுறத நான் கேட்டிருக்கலனா.. இப்படி ஒரு சொர்க்கம் வாரம் ஒருமுறை கிடைக்குமா??..."

"பேசினது போதும் கிளம்பு யாரும் வந்திட போறாங்க... இன்னைக்கு ரொம்ப கம்பல் பண்ணதுனால தான் ஒத்துக்கிட்டேன்.."

"இங்க யாரு பேபி வருவா?... நான் இன்னொரு ரவுண்ட் போகலாம்னு கனவுல இருக்கேன் நீ விரட்டுற" என்று அவளுடன் இழைய..

"அந்த லூசு அறிவு தான்.. எப்ப பாரு காதல் அது இதுனு சம்மந்தம் இல்லாம பேசுவான்.. உடம்புக்கு முடியலன்னு வேற சொல்லி இருக்கேன் வந்து தொலைச்சிட போறான்..."

"அதெல்லாம் வரமாட்டன்.. அவன் தான் நிலவன பீட் பண்ணனும்னு வெறில இருக்கானே... ஆனா நீ அவனுக்கு நிலவன் மேல ஜெலஸ் கொண்டு வந்த பாரு செம... எனக்கு அன்னைக்கு நீ பேசுனத கேட்டதும் செம சாக்.. அந்த மருந்த அடிக்க வந்தவனு நீயே போய் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க.. அப்படி ஒரு ரியல் நடிப்பு உன்னோடது... பேசாம சினி பீல்ட்ல ட்ரை பண்ணலாம் நீ..."

"அதெல்லாம் விடு எப்போ அந்த வில்லாவ என் பெயருக்கு மாத்தி தருவ.."

"என்ன நடந்தாலும் உன் காரியத்துல கண்ணா இருக்க பேபி.. இவ்வளவு சந்தோசத்தை அள்ளி கொடுக்குற உனக்கு இல்லாததா?.. நெக்ஸ்ட் வீக்கே பண்ணி கொடுக்குறேன்... அதுக்கு பதிலா என்ன தருவ..." என்றான் கண்களில் மோகம் மின்ன...

பணம் என்றால் வாயை பிளப்பவள்.. வில்லா என்றால் விடுவாளா?... "நீ ஆசைப்பட்ட போல அடுத்த பைவ் டேய்ஸ் நைட் ஒன்னா இருக்கலாம்... பட் நாளைக்கு அந்த பைல் அடிக்கணும் ஞாபகம் இருக்குல்ல.."

"வாவ் சூப்பர் பேபி... கண்டிப்பா அடிச்சிடலாம்... முரண்டு பிடிச்சாருன்னா ஜஸ்ட் ஒரு எம்டி இன்ஜக்ஷன் அவ்வளவு தான்..." என்று அவன் பேசிக்கொண்டிருக்க, அவளோ அப்படியே எழுந்து வெளியே வந்திருந்தாள்...

வெக்கம் என்ற ஒன்று இருப்பவர்களுக்கு தானே கூச்சம் என்ற ஒன்று இருக்கும்... எதுவும் இல்லாத மிருகங்களுக்கு எங்கே இருக்க போகிறது..

வெளியே வந்தவளுக்கு அறிவை பார்த்து அதிர்ச்சி என்றால்... அவனை கேட்கவே தேவை இல்லை எல்லாவற்றையும் முழுதாய் கேட்டுவிட்டானே.. அதிலும் அவளை இந்த கோலத்தில் பார்த்தவன் கண்களை மூடி கீழே குனிந்து கொண்டான்...

அவனுக்கு இருக்கும் உணர்வு கூட அவளுக்கு துளியும் இல்லை... அவன் கேட்டுவிட்டேனே என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் ஓட... பக்கத்தில் இருந்த பூவாளியை தூக்கி அப்படியே அவன் மண்டையில் போட்டு உடைத்தவள்... விக்னேஷையும் வெளியே அழைத்திருந்தாள்...

தலையில் பலமான அடி... இரத்தம் சொட்ட அமர்த்திருந்தவன் அந்த நிலையிலும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை... தலை குனிந்தவாறே.. "ஏன்.." என்ற ஒரு கேள்வி தான் அவன் வாயில் வந்தது... மயங்கி சரிந்திருந்தான்...

அதன் பின் ஜேகே ஆலோசனை படி அந்த பழைய லெப் உள்ளே அவனை கட்டி வைத்தவர்கள்... பெற்றோர் தங்கையை வைத்து மிரட்டி அதுவும் போதாமல்...

அவன் கண்டுபிடித்த மருந்தை இரு குழந்தைகளுக்கு போட்டு அவர்கள் இறந்து விட்டதாகவும் பொய்யாக மிரட்டி நிலவனுக்கு எதிராக கடிதத்தையும் எழுதி வாங்கி இருந்தனர்...

ஜேகேயின் இன்னும் இரண்டு ஆட்கள் சேர்ந்து கொள்ள... அன்றைய நாள் முழுவதும் அடி பலமாய் தான் விழுந்தது அவனுக்கு... எப்படியும் சாக போகிறோம் என்பது அவனுக்கு கடிதம் எழுதும் போதே புரிந்து தான் இருந்தது...

நண்பர்களை நம்பாமல் இவளை நம்பியதற்கு, தனக்கு இந்த தண்டனை தேவை தான் என மனது எண்ணினாலும்.. தான் இல்லை என்றால் வீட்டு நிலைமை என்ன ஆகுமோ என்ற எண்ணம் தான் மனதில் ஓடியது.. இத்தனை நாளாய் எப்படி முட்டாளாய் இருந்திருகிறோம் என்ற நிதர்சனம் புரிந்தும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவன்...




அடுத்த நாள் காலை.. நிஷாவும் விக்னேஷும் பாலமூர்த்தியை சந்திக்க சென்றிருந்த நேரம் அது..

அவன் காவலுக்காக விட்டு சென்ற இருவரும் இவன் மயக்கத்தில் இருக்கிறான் என்றெண்ணி வெளியே செல்ல அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டவன்...

சுற்றும் முற்றும் பார்க்க.. அடியாள் ஒருவனின் தொலைபேசி அங்கே தான் இருந்தது மறதியில் விட்டு சென்றிருந்தான்...

பல நிமிட முயற்சியின் பின் கட்டுக்களை அவிழ்த்து... அந்த தொலைபேசியை எடுத்தவன்.. நிலவனின் எண்ணை அதில் சேமித்து வாட்ஸாப்பில் அவனுக்கு வீடியோ பதிவு செய்து பேசி இருந்தான்...

அவன் அவளை பற்றி சொல்ல விழைந்த நேரம் சரியாக உள்ளே வந்த நிஷா அவன் தலையில் ஓங்கி அங்கிருந்த கம்பியால் அடித்திருக்க.. தொலைபேசியோடு சேர்ந்து அவனும் விழுந்திருந்தான்...

அவள் அருகில் வருவதற்குள் அதனை நிலைவனுக்கு அனுப்பியவன்.. அது அவனுக்கு சென்றடைந்ததக்கான குறியீடு வந்ததும், அதனை அங்கிருந்த சுவரை நோக்கி எரிய சுக்குநூறானது... எங்கே அவன் பார்க்க முன் இவள் அழித்து விடுவாளோ என்ற பயமே அவனது இந்த செயல்...

அவன் கண்களிலோ இனி செத்தாலும் பரவாயில்லை என்ற நிம்மதியே...
ஒரு நண்பனாய் நிலவனுக்கு செய்த பாவத்துக்கு அவனை காப்பாற்ற ஒரு காரியம் செய்து விட்டோம் என்ற நிம்மதி அது....

"ராஸ்கல் அவ்வளவு சொல்லியும் போட்டுக்குடுக்குறியா??..." என்று அதே கம்பியால் அடித்தே கொன்றாள் அவனை.... சாகும் வரை அடியை நிறுத்தவும் இல்லை... வலியுடனே உயிரை விட்டிருந்தது அந்த ஜீவன்...

அதன் பின் நடந்தது தான் தெரியுமே... இவர்கள் காதல் விடயம் யாருக்கும் தெரியாமல் போனதில் அன்றைய நாள் சந்தேக வட்டதிலிருந்து தப்பிகொண்டாள்.. விஷ்னுவின் ஒன்றை குணத்தை வைத்து இவள் சுதந்திரமாக நடமாடி இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்...




இதுவரை அவர்கள் அறியாத அவர்கள் வாழ்க்கையின் மறைக்கப்பட்ட பக்கத்தை, அவள் சொல்லி முடிக்க... அவள் வலது கையில் கடைசியாக மிஞ்சி இருந்த விரல் நாகத்தை நிலவன் பிடுங்கி எடுக்கவும் சரியாய் இருந்தது...

அவள் சொல்ல சொல்ல அவன் கோபத்துக்கு இறையானது அவள் நாகங்கள் தான்...

எவ்வளவு கஷ்டத்தை அவன் நண்பன் அனுபவித்திருக்கிறான். இது எதுவுமே தெரியாமல் இருந்திருறோமே.. என்ற எண்ணம் தான் அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும்..

இப்படிப்பட்டவர்களிடம் மாட்டிக்கொண்ட அதிரலின் நிலை நினைக்கவே கொலைநடுங்கியது அவனுக்கு...

"அதிரல எங்க வெச்சிருக்கீங்க..."

"எனக்கு தெரியாது...." என்ற பதில் அவளிடம் வர.. அடுத்த நகம் அவளை விட்டு சென்றிருந்தது...

"ஆஆஆஆ... சத்தியமா தெரியாது... சத்தியமா தெரியாது..." என்று அலற..

"இதுக்கு மேலயும் உன்ன நம்புவோம்னு நினச்சா அது உன் முட்டாள் தனம்... மரியாதையா உண்மைய சொல்லு... இல்லை அடுத்து நகம் முடிய விரல் தான்..."

"அதிரல கொண்டு வந்து அவன் சொன்ன இடத்துல நிறுத்திட்டு, அங்க நிக்குற கார என்ன எடுத்துட்டு போக சொன்னான்... அவ்வளவு தான் எனக்கு தெரியும்... எங்க கொண்டு போறாங்கன்னு தெரியாது..." என்றாள் கண்களில் பயத்துடன்...

வலி என்றால் சொல்ல முடியாத அளவுக்கு வலி.. ஆறு நகங்களை உருவியே எடுத்திருந்தானே...

"ம்ம்ம்... என்று நெற்றியை நீவிகொண்டவன்..

"சரி சொல்லு என்னோட மருந்து எதுக்கு அவனுக்கு.."

"அவங்க அம்மாக்கும் பக்கவாதம் தான்.. அதான்.."

"அதுக்கு அந்த மருந்து மார்க்கெட்டுக்கு வந்த பிறகு எடுத்திருக்கலாம்... இல்லை எங்கிட்ட சொல்லி இருக்கலாமே... எதுக்கு பலியா இத்தன உயிர்..."

"ஜேகேக்கு அவன் தான் எதுலயும் பார்ஸ்டா இருக்கனும்... அவன் முயற்சி செஞ்சி முடியாம போன மருந்த நீ கண்டுபிடிச்ச கோபம் அது..."

நிலவனுக்கு தலையே சுற்றியது... இப்படியும் ஒரு சைக்கோவா??... வீணான அவன் ஈகோவிற்கு அநியாயமாக ரெண்டு உயிர்.. இவனை அழித்தே ஆக வேண்டும் என்று எண்ணம் மேலும் வலுத்தது... இன்னும் ஒரு சந்தேகம் இருந்தது அவனுக்கு..

"ப்ரைன் டெத் போர்ம் பண்ண என்ன பண்ணுறான் அவன்... ஆக்சிடென்ட்ல தலைல அடியும் இல்லாம மூளைல கட்டியும் இல்லாம... எப்படி?.." என்றவனுக்கு நிச்சயம் அவன் தான் ஏதோ செய்கிறான் என்று அவன் மனம் உறுதியாய் நம்பியது... அதிரலின் சந்தேகமும் அதுதான்...

"அது ஒரு லிக்விட் ட்ரக்... ஜேகே கண்டுபிடிச்சது... மூளையை முழுசா இருப்பத்தி நாலு மணி நேரம் உறைய வைக்கிற மருந்து அது... டுவல் டு எய்டீன் ஹவர்ஸுக்குள்ள மாத்து மருந்து குடுத்தா காப்பாத்த முடியும்..."

"அதுக்கு பிறகு போற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒவ்வொரு உறுப்பா செயல் இழக்கும்.. அண்ட் அட் லாஸ்ட் டுவன்ட்டி போர் ஹவர்ஸ் அப்பறம் உண்மையிலேயே பிரைன் டெத் ஆகிடும்..." என்று அவள் தனக்கு தெரிந்ததை சொல்ல

அங்கிருந்தவர்கள் மயங்கி விழாத குறைத்தான்... வாசுகி அருகில் நின்றிருந்த கார்த்தியின் தோளில் சாய அவனும் அம்மாவை ஆதரவாய் அணைத்திருந்தான்....

இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட நிலவன்.. பூஜாவிடம்
"பூஜா இத கிளீன் பண்ணிட்டு இவள ரூம்ல கட்டி வை... இவளுக்கு ஏன் வாழ்றோம்னு யோசிக்கிற அளவுக்கு தண்டணைய என் பொண்டாட்டிய மீட்டதுக்கு அப்பறம் கொடுப்பேன்..." என்றவன் புகழோடு வெளியேறினான்...

கூட வருகிறோம் என்று ராம் விஷ்ணு கார்த்தி மூவரும் சொல்லியும் கேட்கவில்லை... அவனுக்கு நெருங்கிய சொந்தங்கள் எல்லாரும் அவன் வீட்டில் தான் இருந்தனர்...

அவர்கள் அனைவரது பாத்துக்கப்பும் முக்கியம் என்பதை அவர்களுக்கு எடுத்துச்சொன்னவன்... அங்கேயே இருந்து பார்த்துக்கொள்ளும் படியும் சில உத்தரவுகளை வழங்கினான்...

எங்கே செல்வது என்று தெரியவில்லை.. மனது மரத்து போய் இருந்தது அவனுக்கு...

நேரே ஜெயராமனை சந்திக்க சென்றவன் மீண்டும் அவரை முடியுமட்டும் அடித்து பார்த்துவிட்டான்.. அவர் வாயிலிருந்து அதிரல் எங்கே என்று மட்டும் எடுக்க முடியவில்லை

நல்லிரவையும் தாண்டி அவனோடு புகழும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறான்...

நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தியவன் கீழே இறங்கி... வானத்தை பாத்து அவன் கோபம்.. விரக்தி.. இயலாமை... அழுகை.. பயம்.. என்று எதையும் அடக்க முடியாமல் "ஆஆஆஆ" என்று வெறுபிடித்த மட்டும் கத்தினான்... புகழுக்கே பயம் வந்துவிட்டத்து அவன் செயலில்...


"மச்சான் ப்ளீஸ் ரிலாக்ஸ்..." என்று அவனை எவ்வளவு அடக்கி பார்த்தும் முடியாமல் ஓங்கி அறைந்திருந்தான் புகழ்... அதில் அவன் மயங்கி விழவும் பிடித்து கொண்டவனுக்கு நண்பனின் உணர்வுகளை நினைத்து கவலைதான்...

அவனை தூக்கி வாகதினுள் கிடத்தியவன்... அவன் மனதுக்கு ஓய்வு தேவை... இந்த இரண்டு நாட்களில் அவன் ஓடிய தூரம் மிக அதிகம் தான்...

எத்தனையோ மாதங்கள் ஓடி கண்டு பிடிக்க வேண்டியவற்றை இந்த நாட்களில் கண்டு பிடித்திருக்கிறான் என்றால் அதற்கான அவன் ஓட்டம் அதிகம் தான்...

சிறுது ஓய்வு அவனை நிதானப்படுத்தும் என்று எண்ணியவன் அப்படியே அவனாகவே எழட்டும் என்று விட்டவன்... அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்...



அடுத்த நாள் காலை எட்டு மணி.. அங்கே அதிரலோ அப்படியே அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாள்... எது இரவு எது பகல் என்றே தெரியவில்லை... தூக்கமும் கண்ணை அண்டவில்லை.. பசி என்ற உணர்வையும் உணரவில்லை... மனமோ நிலவா என்றே கதறிகொண்டிருந்தது.. என்ன செய்கிறானோ?? எப்படி தவிக்கின்றனோ?? என்ற எண்ணமே அவளுள்...

அப்போது சரியாக ஜேகேயும் வசந்தும் அவள் அறைக்குள் நுழைந்தனர்..

"என்ன அதி மேடம் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல இருக்கு..."

"அப்படியா சார் தெரியுது... எனக்கு ரொம்ப சோகமா இருக்க போல தெரியுதே..."

"அச்சச்சோ அப்படியா?.. ஆனா பாரு இனிமேல் சோகம், சந்தோசம், பசி, தூக்கம், சிரிப்புனு எதையும் வெளிக்காட்ட முடியாம ஜடமா போக போறாளே... சோ சேட்..." என்க வசந்த மருந்தை ஊசியில் நிரப்பியிருந்தான்...

அதிரலோ என்ன வென்று பார்க்க வசந்த அவளை நெருங்கி இருந்தான்... சரியாக அவளுக்கு மருந்த செலுத்த போகும் நேரம்....

"வசந்த் வன் மினிட்.." என்று தடுத்த ஜேகேவோ, "குடு நானே போடுறேன்..." என்று ஊசியை கையில் வாங்கினான்..

"ரொம்ப கன்பியூஸா இருக்கா?? ரொம்ப யோசிக்காத... உன் டவுட் இஸ் ரைட்... சீக்ரெட் ஒப் ப்ரைன் டெத்..." என்று கையிலிருக்கும் ஊசியை அவளிடம் காட்டியவன்

"எப்படி பன்ஷன் ஆகுதுன்னு ட்ரை பண்ணியே பாரு... நைட் எயிட் தேர்ட்டிக்கு உனக்கு ஆபரேஷன்.. அதுவரை உன் ஆளு உன்ன காப்பத்த முடியாத இடத்துக்கு போக போற.... டோன்ட் ஒர்ரி உன் ஹார்ட்ட நான் பத்திரமா பாத்துப்பேன்... ஹாப்பி பார்ஷியல் டெத் மை டியர்..." என்று அந்த ஊசியை அவள் உடம்பில் செலுத்தியவன் உதட்டிலோ நிலவனை மீண்டுமொரு முறை வென்ற, வெற்றி புன்னகை....

மருந்து உள்ளே போனது தான் தாமதம்... அவள் உடலோ தூக்கி போட... இரண்டு நிமிடத்தில் அமர்ந்திருந்தவள் அப்படியே நிலத்தில் சரிந்தாள்...
பேச்சு மூச்சு எதுவும் இல்லை...

"இனிமேல்... யாராலயும் உன்ன காப்பாத்த முடியாது..." என்று ஆணவமாய் சொல்லி சிரித்தான்...

அவளுக்கென ஏற்கனவே தயார் செய்யப்பட்ட அறையில் அவளை கிடத்தி, செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது... அவள் உறுப்புக்களை பாதுகாக்கவே இது... இன்னும் அவளுக்கு இருப்பது சில மணி நேரங்கள் தான்....



இங்கே தற்காலிக மரணம் என்ற ஆழ்ந்த உறக்கத்தில் மனைவி...
அங்கோ போராட்டதுடன் தேடல்களின் மத்தியில் கணவன்...
இதற்கிடையில் ஏன் என்றே தெரியாமல் சாகும் குழந்தைகள்....

இந்த போராட்டத்தில் நிலவன் அவர்களை மீட்பான.. இல்லை அவனும் சேர்ந்து மடிவானா?....


ஜாதி மல்லி மலரும்.......


கருத்து திரி 👇👇👇👇

inbound1636967121761979891.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top