ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 24



"அண்ணா" என்று அழைத்தபடி அவனை அணைத்துக்கொண்ட அந்த விரல்கள் உண்மைக்கும் நடுங்கி கொண்டிருந்தது..

நிலவனுக்கும் அதிரலுக்கும் சட்டென்று ஒன்றும் புரியவில்லை... என்னவென்று உணரும் முன்பே அந்த தாதி உள்ளே வந்திருந்தார்.. முகத்தில் தெரியும் பயத்தை மறைத்தபடி...

"சாரி சார்.. இந்த பொண்ணு இப்படித்தான் யாரப்பாத்தாலும் கட்டிபிடிச்சிடுது..." என்றவர் அவனிடம் இருந்து அந்த பெண்ணை பிரித்து வெளியே அழைத்து செல்ல முயற்சிக்க.. அவளோ பிடியை விடவில்லை... அவரோ வழுகட்டாயமாக இழுத்து செல்ல, அந்த பெண்ணோ பேசவே தோன்றாமல் பார்வை முழுவதையும் நிலவனிடமே நிறுத்தி இருந்தாள்..

அந்த பர்வை அவனை ஏதோ செய்ய, அவனோ அவன் ஞாபக அடுக்கில் அந்த பெண்ணை தேடிகொண்டிருந்தான்.. அதில் எங்குமே அவள் முகம் இருப்பதாய் தெரியவில்லை...

அதிரலுக்கு சட்டென்று ஏதோ யோசனை வர.. "ஒரு நிமிஷம்... இவ நான் அட்மிட் பண்ண பொண்ணு தான..." என்று இறங்கி அந்த பெண் அருகே சற்று மெதுவாக நடந்து சென்றாள்...

அந்த தாதிக்கோ இப்போது என்ன சொல்வதென்று குழப்பம்... இல்லையென்று சொன்னால் அவள் சந்தேக படக்கூடும்... ஆம் என்றாலும் அவள் கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் இப்படி இக்கட்டில் மாட்டிக்கொண்டோமே.. என்ற பதற்றத்தோடு தேர்த்து, இந்த நேரம் அவளை அழைத்து வந்த தன் மடத்தனத்தையும் எண்ணி கவலையும், பயமும் இணைந்து கொண்டது...

"உங்கள தான் கேக்குறேன்... பதில் சொல்லுங்க சிஸ்டர்.."

"ஆமா மேடம் அந்த பொண்ணு தான்..."

"இன்னும் இவள இங்க ஏன் வெச்சிருக்கீங்க.."

"இல்ல டாக்டர் சில ரிப்போர்ட்ஸ் எடுக்கணும்னு சொன்னாங்க..."

"எந்த டாக்டர்?... வன் வீக் இவ கேஸ் நான் தான் கேண்டில் பண்ணேன்.. காயம் குணமாகி இவ நல்ல ஆரோக்யமா தான இருந்தா.. அன்னைக்கே யாருனு விசாரிச்சு டிஸ்சார்ஜ் பண்ண சொல்லி இருந்தனே.." என்ற அதிரலுக்கு அந்த தாதியின் மழுப்பலான பேச்சில் ஒரு வித சந்தேகம் தோன்றத்தான் செய்தது...

இத்தனை பேச்சு வார்த்தைக்கும் அந்த பெண்ணின் பார்வை நிலவனை விட்டு அகலவே இல்லை...

"ஆமா மேடம்.. இந்த பொண்ணும் ஒன்னும் வாய தொறந்து சொல்லல.. இவள தேடியும் யாரும் வரல.. அதான் இங்கயே வெச்சிருந்தோம்.." என்றார் என்ன சொல்லுவதென்று தெரியாமல்...

"ஓகே நீங்க கிளம்புங்க நானே அவளை அவங்க வீட்டுல விட்டுடுறேன்... இந்த பெரிய பொண்ணுகிட்ட அட்ரஸ் கேட்டு தெரிஞ்சிக்க இவ்வளவு நாள்னு நீங்க சொல்லுற சில்லி ரீசன்கெல்லாம் தலையாட்ட முடியாது..." என்றாள் கோபமாக..

"இல்லை மேடம், டாக்டர் கேட்டா?.." என்று அவர் இழுக்க...

"யாரா இருந்தாலும் என்ன வந்து பாக்க சொல்லுங்க..." என்றாள் அவர் பேச்சை கத்தரித்தது போல்...

அந்த பெண்மணியோ திரும்பி திரும்பி பார்த்தபடியே வெளியேறினார்...

அதிரளுக்கோ மனதில் ஆயிரம் கேள்வி... ஏற்கனவே நிலவனை வர சொல்லி இருந்தது கூட ஏதோ ஒரு சந்தேகம் வந்ததன் காரணமாக தான்.. இங்கே இன்னொன்று... ஏதோ நடக்கிறது இங்கே என்பது மட்டும் புரிந்தது...

அந்த பெண்ணில் அருகில் சென்றவள்.. அவளை அங்கே அமர வைத்து "ஏண்டா... உங்க வீட்டு அட்ரஸ் சொல்லி இங்க இருந்து போய் இருக்கலாமில்லையா?... ஏன் சொல்லல நீங்க??... என்று கேட்க அப்போதும் அவள் பார்வை நிலவனிடம் தான்...

ஏனென்றே தெரியாமல் ஒரு இடரில் மாட்டிக்கொண்டு தவியாய் தவித்து... பல நாட்களாய் யாரவது வருவார்களா என்று காத்திருக்கும் ஒரு உயிருக்கு தெரிந்தவர் ஒருவரை கண்டால் உள்ளம் படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காதல்லவா... அந்த நிலையில் தான் இருந்தாள் அந்த பெண்ணும்.. மூளை உறைந்திருந்தது.. இந்த நிமிடம் பொய் ஆகிட கூடாதென உள்ளம் அடித்துக்கொண்டது... பேசவேண்டும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறாள் தான் ஆனால் பேச்சு தொண்டையை தாண்டி வரவில்லை...

இத்தனைக்கும் சில வாரங்களுக்கு முன் தான் அதிரல் அவளை காப்பாற்றி இருந்தாள் ஆனால் அதிரல் கூட அவளுக்கு கண்ணுக்கு தெரியவில்லை நிலவனின் முன்னால்...

"ஏன் நிலவா இவ பேசமாட்டேங்கிறா?... ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மல் தான்.. அன்னைக்கு ஒருநாள் உன்ன சந்திக்க வரும் போது நான் கூட லேட்டா வந்தனே.. ஒரு சின்ன பொண்ணு பைகல வந்து விழுந்து ஆக்சிடென்ட் அதனாலதான் லேட்னு கூட சொல்லி இருந்தேனே.. உனக்கு ஞாபகம் இருக்கா??.."

"ம்ம்ம்ம் ஆமா ஞாபகம் இருக்கு... அந்த பொண்ணா இவ..."

"ஆமா.. பயத்துல மயங்கிட்டா... விழுந்ததுல காயம் கொஞ்சம் ஆழம் தான்.. இவளுக்கு பிளட் குரூப் ஓ நெகடிவ்.. சோ நானே பிளட் குடுத்துட்டு.. இங்கயே அட்மிட் பன்னிட்டு தான் அன்னைக்கு உன்ன பாக்க வந்தேன்.."

"அப்பறம் வன் வீக் ஹாஸ்பிடல்ல தான் இருந்தா.. நார்மல் ஆகிட்டா.. அந்த நேரம் தான் நான் அந்த கலையரசன் கேஸ்ல கொஞ்சம் பிசியா இருந்தேன்... சோ டிஸ்சார்ஜ் ப்ரோசீஜர் என்னனு பாக்க சொல்லி என் கோலீக் ஒருத்தங்க கிட்ட சொல்லிட்டு போனேன்.."

"அன்னைக்கு பெரிய பிரச்சனை இல்ல.. ஜஸ்ட் பயத்துல மயங்கிட்டான்னு மட்டும் தான சொன்ன?.." என்றவன் பார்வை அவளை துளைக்க

"டிரீட்மென்ட் ஓரளவுக்கு நடந்து அவளும் ஓகே ஆகிட்டா நிலவா.. சோ எதுக்கு ஏற்கனவே டென்ஷன்ல இருந்த உன்ன மேலும் டென்ஷன் பண்ணனும்னு தான் அப்படி சொன்னேன்.."

நிலவன் சிறிது நேரம் யோசித்தவன் "அதி.. அந்த பொண்ணு ஏதோ பிரச்சனை ஒன்னுல மாட்டி இருந்து இருக்கா... இங்க இந்த ஹாஸ்பிடல்ல ஏதோ நடக்குது... அந்த ஜெயராமன் என்னமோ ஒன்னு பண்ணுறாருன்னு மட்டும் புரியுது..." என்றான்..

அவன் மனமோ, அவன் சந்தேக வட்டமான "ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட ஏதோ பிரச்சனை தான்" என்று உறுதியாய் நம்பியது...

"இன்னொரு விஷயமும் சொல்லணும் நிலவா... நான் உன்ன இங்க வர சொன்னதே அதுக்கு தான்... நடந்த கலவரத்துல அத மறந்துட்டேன்... இங்க..." என்று அவள் ஆரம்பிக்க போக தடுத்தவன்...

"இங்க இதப்பத்தி பேச வேணாம் அதி.. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்... இந்த பொண்ணுக்குரிய டிஸ்சார்ஜ் என்னனு பாரு போகலாம்.." என்று அவன் வெளியேற

அவ்வளவு நேரம் பொம்மையாய் அமர்ந்திருந்தவள் அவன் செல்ல போகிறான் என்றதும் உயிர் வந்தவளாக மீண்டும்... "நிலவன் அண்ணா..." என்று அழைத்திருந்தாள்

நிலவனோ அவள் அருகில் வந்து "உனக்கு என்ன தெரியுமாடா???" என்று கேட்க அந்த பெண்ணும் ஆம் என்பதாய் தலையாட்டினாள்..

"நீ யாரு... என்ன எப்படி உனக்கு தெரியும்.."

"உங்க வர்ஷி பாப்பா ணா... தருண் கூட அதுக்கப்பறம் நான் சண்டையே போடல தெரியுமா?.." என்று அவளை அவனுக்கு உணர்த்தியவள் கண்களில் தன்னை கண்டுகொள்ள வேண்டுமே என்ற ஆர்வம்...

அவனோ அவள் கையை பிடித்து வெட்டுப்பட்ட இடத்தை பார்க்க அந்த தழும்பு அப்படியே இருந்தது... அவனுக்கோ அதிர்ச்சி.. "வர்ஷியா இவள்.." என்ற கேள்வி தான்
அவனுள்... அடையாளமே தெரியவில்லை... இந்த மூன்று வருடத்தில் நன்கு வளர்ந்திருந்தாள்... அப்போதே அவளுக்கு பன்னிரெண்டு வயது.. குட்டி பெண் போலத்தான் இருப்பாள்... இன்று பதினஞ்சு பதினாறு வயது இருக்கும்.. அவனால் அடையாடம் காணமுடியவில்லை...

"டேய் வர்ஷி நீயாடா... இத்தன வருசத்துக்கு அப்பறம் அதுவும் இந்த டிரஸ்ல உன்னால என்ன அடையாளம் காண முடியாதா டா??.. என்று அவன் சந்தேகத்தை கேட்டிருந்தான்...

இங்கே ஓரிரண்டு முறை வந்திருந்தாலும்... அவன் வேலை செய்த நாளில் இருந்தே இங்கே இருப்பவர்கள் சிலர் இன்னும் இருக்க தான் செய்தனர் ஆனால் அதில் ஒருவர்கூட இதுவரை அவனை அடையாளம் கண்டு கேட்டத்தில்லையே...

"உங்க குரல தான் ணா முதல்ல உணர்ந்தேன் அதுவே நீங்கனு காட்டி கொடுத்திச்சு..." என்றவளின் பேச்சில் தெரிந்த அன்பு அவனுக்கு ஆச்சரியம் தான்... இருந்தும் அவளின் இன்றைய நிலையை அறிய வேண்டும் என்பதை உணர்ந்தவன்

"அம்மா அப்பா தேடுவாங்கல்லடா... இங்க ஹாஸ்பிடல்ல உன் அட்ரஸ் சொல்லி இருக்கலாமே... இவ்வளவு நாள் இங்கயே இருக்க, அவங்க பயந்துடுவாங்கல்ல..."

அவளோ "அம்மா அப்பா இருப்பாங்களாணா..." என்று அவன் கேள்விக்கு பதிலாய் அவள் கேள்வி கேட்டவள் கண்களில் கண்ணீர் கொட்டியது, பெற்றோரின் ஞாபகத்தில்...

"ஏண்டா என்னாச்சு ஏன் இப்படி கேக்குற?...

"ஒரு வருசத்துக்கு முதலே அவங்கள அடிச்சிட்டு போட்டுட்டு தான்ணா என்ன கொண்டு போனாங்க..." என்றாள் விசும்பலுடன்...

"என்னடா சொல்லுற? ஒரு வருசத்துக்கு முதலா.."

"ஆமா ணா.. அன்னைக்கு ஒரு நாள் வீட்டுக்குள்ள கொஞ்ச பேர் வந்தாங்க.. அப்பாகிட்ட ரொம்ப சத்தம் போட்டாங்க.. நான் அவங்களுக்கு வேணுமாம்ணு பணம் எல்லாம் கொடுத்தாங்க... அப்பா முடியவே முடியாதுனு கோபமா சண்டை போடவும்... என் கண் முன்னாடியே மூனு பேரையும் அடிச்சி போட்டுட்டு என்ன கூட்டிட்டு போய்ட்டாங்க ணா... " என்றவள் அன்றைய நாளின் தாக்கத்தில் மேலும் அழுதாள்...

அவனுக்கோ தலைசுற்றியது.... என்னடா இது கிணறு வெட்ட பூதம் கிளம்புவது போல் ஒவ்வொன்றாய் கிளம்புகிறதே என்று....

வெளியே ஏதோ சத்தம் வருவதை உணர்ந்த அதிரல்..

"நிலவா இங்க இருந்து முதல்ல வீட்டுக்கு போகலாம்.. மிச்சம் அங்க போய் பேசிக்கலாம்.." என்று நிலைமையை உணர்த்த...

"அதி.. இங்க ஹாஸ்பிடல் தான் பிரச்சனைனா.. இவ நம்ம கூட வர்றது யாருக்கும் தெரிய வேணாம்.. இப்படியே கூட்டிட்டு போய்டலாம்..." என்றவனுக்கு அவளும் சம்மதமாய் தலையாட்டினாள்

அவர்கள் நேரே சென்றது நிலவின் வீட்டுக்கு தான்... புகழையும் அழைக்க அவனும் அங்கு வந்திருந்தான்... நிலவனோ அழுதழுது சோர்வாய் இருந்தவளை அங்கிருந்த அறை ஒன்றில் தூங்க வைத்தவன்... வெளியே வர

"நிலவா நீ போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா... பேசலாம்..." என்றான் புகழ் அவன் இன்னும் யூனிபோர்முடன் இருப்பதை பார்த்து...

"அதெல்லாம் வேணாம்.. என்றவனை கட்டாயப்படுத்தி அனுப்பி இருந்தான் புகழ்...



"என்ன வசந்த பண்ணிட்டு இருக்க நீ... அந்த இடியட் பண்ண வேலைல இப்போ அந்த பொண்ணு அவன் கைல... சிட்.."

"அவளை முடிச்சிடுவோமா சார்..."

"சென்ஸ் ஓட பேசு வசந்த்... ஓ நெகடிவ் பிளட் குரூப் அவ.... அவளோட பெறுமதினு என்னனு தெரியாதா உனக்கு??... சும்மா போக விடுற உயிரா அவ... அவளை நம்ம இடத்துக்கு எடுக்க ஏற்பாடு பண்ணு... அந்த அதிரலையும் சேர்த்து..."

"ஓகே சார்... அந்த பொண்ணுக்கு அடையாளம் சொல்லுற அளவுக்கு நம்ம இடம் சரியா தெரியாதே... எப்படியும் அவள மட்டும் வெச்சிட்டு நம்ம இடத்த கண்டுபிடிக்க கஷ்டம் தான் சார்... நீங்க டென்ஷன் ஆகாதீங்க..." என்றான் சமாதானமாக...

"நோ.. அந்த நிலவன சாதாரணமா நினைக்காத... அவன் கொஞ்சம் உஷாரானாலும் டேஞ்சர் தான்..." என்றவன் மீண்டும் "அந்த லேடிய பயர் பண்ணிடு... அவ இனிமேல் நம்ம ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ண கூடாது... ஆனா ரீசன் வேலிட்டா இருக்கணும் பாத்துக்கோ... இன்னும் டூ த்ரீ மந்த் அப்பறம் பண்ணு..."

"ஓகே சார் பண்ணிடுறேன்... ஆனா நாளைக்கே பண்ணலாமே.. ஏன் லேட்டா?..."

"நீ ஸ்மார்ட்டா தான் இருக்க.. அப்பப்போ ஊர் புத்திய காட்டுற... ஏற்கனவே அவ மேல சந்தேகம் வந்திருக்கும்... இப்போவே அவள பயர் பண்ணா இதுக்கு நாமளும் காரணம்னு ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் மேலயே சந்தேகம் வருமேடா இடியட்..." என்றான் அவனுக்கு புரியும் படி...

"ஆமால... ஓகே சார்..." என்று தலையை சொரிந்தவன் வெளியேறி இருந்தான்...





"இப்போதைக்கு மூனு பிரச்சனை நம்மல சுத்தி இருக்கு... நம்பர் வன், காலேஜ்ல நமக்கு நடந்த பிரச்சனை... நம்பர் டூ, அந்த ஆசிரமத்துல நடந்த பையர் ஆக்சிடென்ட்... நம்பர் த்ரீ, வர்ஷியோட விஷயம்.. இதுல மூனுலையும் சம்பந்தப்பட்ட ஒரே
விஷயம் அண்ட் ஒரே ஆள் ஜெயராமன் தான்..." என்று நிலவன் சொல்ல

புகழோ.. "ஆசிரமம் ஓகே... காலேஜ்ல நடந்ததும் வர்ஷியோட விஷயமும் தொடர்பு பட்டிருக்கும்னு எப்படி சொல்ற.."

"காலேஜூம் ஜெயராமனோடது தான.. அண்ட் மோர் ஓவர் என்னோட மருந்து யாருக்கோ தேவபட்டிருக்கு.. சோ காலேஜ் மேனேஜ்மென்ட் ஏன் இத பண்ணி இருக்க கூடாது... ஜஸ்ட் ஒரு சந்தேகம் தான்...

"அடுத்தது வர்ஷியோட விஷயம் அவ ஏதோ ஒண்ணுக்காக கடத்தபட்டிருக்கா.. அவங்க பேரண்ட்ஸ தாக்கியாவது கடத்துனும்கிற அளவுக்கு அவகிட்ட ஏதோ ஒன்னு இருந்திருக்கு... அன்ட் ஜேகே ஹாஸ்பிடல்ல அவள யாருக்கும் தெரியாம வெச்சிருந்திருக்காங்க.. சோ அங்க உள்ள யாரோ தான் அவள கடத்தி இருக்கனும்.. அப்படி இல்லனா கடத்துனவங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கனும்.. எப்படி பார்த்தாலும் அதுல ஜேகே ஹாஸ்பிடலுக்கு சம்பந்தம் இருக்கு... சோ அது ஏன் ஜெயராமனா இருக்க கூடாது?..."

"வாய்ப்பிருக்கு நிலவா பட் உறுதியா சொல்லமுடியதில்லையா??..." என்றான் புகழ்...

"இல்ல புகழ் அவன் யோசிக்கிற வே கரைக்ட்... எனக்கும் அங்க நடக்குற விஷயத்துல சில டவுட்ஸ் இருக்கு..." என்று புகழிடம் சொன்னவள்

நிலவனிடம் "உன்ன இன்னைக்கு வர சொன்னதும் இதுக்காக தான்.... கொஞ்ச நாள் முதல் அங்க எம்எல்ஏ கணேசனுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் நடந்திச்சு... நான் தான் பண்ணினேன்.. வழமையை ஹார்ட் அப்படியெல்லாம் உடனடியா கிடச்சுடாது.. அவருக்கு டூ வீக்ஸ்லயே கிடச்சுது.. அதுவும் அங்க ஹாஸ்பிடல்ல இருந்த ஒரு பொண்ணு மூலமா கிடைசித்து... சேம் இன்சிடென்ட் போனவாரம் எங்க ஹாஸ்பிடல் அடையார்ல உள்ள பிரான்ச்லயும் நடந்திருக்கு... இது இன்னைக்கு தான் எனக்கே தெரியவந்திச்சு... அது எப்படி இரண்டு தடவையும் ஒரே போல நடக்கும்னு டவுட்டா இருந்திச்சு..."

"ஹார்ட் எப்படி இன்னொரு ஆளுக்கு குடுப்பாங்க..."

"இல்ல புகழ்.. அந்த பொண்ணுக்கு பிரைன் டெத்... அவளுக்கு ஆசிடெண்டும் ஆகல... மூளைல கட்டியும் எதுவும் இல்ல பட் அவளுக்கு பிரைன் டெத் ஆகி இருந்து.. அப்போவே எனக்கு சந்தேகம் தான்... பட் அதுக்குரிய டாக்டர்ஸ் சொல்லும் போது என்னால நம்பாம இருக்கவும் முடியல... அதுக்கு டூ த்ரீ டேய்ஸ் முன்னாடித்தான் அவ அப்பாவுக்கு கிட்னி பெய்லியர்னு அவளோட கிட்னிய கொடுத்திருந்தா... அவளை அங்கேயே தொடர்ந்து பார்த்ததுனால அப்படி தோணி இருக்கும் போல..."

நிலவனோ அவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுகொண்டிருந்தவன் என்ன தோன்றியதோ உடனடியாக "அதி உனக்கு அடையார் பிராஞ்ல நடந்ததா யாரு சொன்னது..." என்றான் சற்று அவசரமாய்...

"அங்க ஹார்ட் ஸ்பெலிஸ்ட்டா ஒர்க் பண்றவங்க தான்... அவங்க கொஞ்சம் புதுசு... அப்பப்போ ஒர்க் பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க.. ஏன் கேக்குற..."

"ஓகே அவங்களுக்கு கால் பண்ணி... ஹார்ட் டோனரா இருந்த பொண்ணு... ஆபரேஷனுக்கு முதல் அங்க ஏதாச்சும் ட்ரீட்மென்ட் எடுத்திச்சானு கேளு... இல்ல உறுப்பு தானம் ஆர் இரத்த தானம் இப்படி எதுக்காச்சும் அங்க ஹாஸ்பிடலுக்கு வந்திச்சானு கேளு...." என்றவன் சொல்ல அதிரலுக்கும் ஏதோ புரிவதை போல் இருந்தது...

அவளும் அந்த பெண்ணுக்கு அழைப்பெடுத்து பேசி வைத்தவள் ஆமாமென்பதாய் தலை அசைத்தாள்

"போன மந்த் அங்க பிளட் டொனேட் பண்ணி இருக்கா...."

"எஸ் ஐ கொட் இட்..."

"நிலவா அப்போ இது..." என்று அவள் சொல்ல வர

"எஸ் யூ ஆர் ரைட்... உடலுறப்பு திருட்டு.."

"என்ன நிலவா சொல்லுற..." என்றான் புகழ்

"ஆமா புகழ்... ஹாஸ்பிடல் வர்ற ஆட்களோட பிளட் ரிப்போர்ட் எடுக்குறாங்க... தேவைப்படும் போது அவங்க உறுப்புகளை எடுக்குறாங்க.. இதுதான் அங்க ஹாஸ்பிடல்ல நடக்கிற மர்மமா இருக்கனும்... பட் ஆக்சிடென்ட் எதுவும் இல்லாம எப்படி பிரைன் டெத் ஆகுதுன்னு யோசிக்கணும்... இதே விஷயம் ஆசிரமதுளையும் நடந்திருக்கு... தீ விபத்து நடக்க முதல் அங்க மெடிக்கல் கேம்ப் நடந்திருக்கு அதுவும் ஜேகே ஹாஸ்பிடலால தான்..." என்றான்..

"அப்படினா... ஆசிரமத்துல உள்ள குழந்தைங்க கடத்த தான பட்டிருக்கணும்.. ஏன் அவங்கள கொன்னாங்க..."

"கொன்னது கூட ஒரு வித கண்துடைப்பா தான் இருக்கணும்... அங்க ஒரு குறிப்பிட்ட வயசு பிள்ளைங்களோட பாடி விபத்துல கிடைக்கல... அதுக்கு ரீசன், தீ ஒரு பில்டிங்ல அதிகமான பிடிச்சதால உடல் கருகி போயிடிச்சுனு ரிப்போர்ட்ல இருக்கு..."

"பட் அப்படி காணாம போன பிள்ளைங்க எல்லாருக்கும் பதினாலு டு பதினெட்டு வயசுதான்... அங்க தான் எனக்கு சந்தேகம் வந்திச்சு.. எப்படி ஒரு குறிப்பிட்ட வயசு உள்ளவங்க உடம்பு மட்டும் கிடைக்காம போகும்னு...."

"அந்த வயசு பிள்ளைங்க மட்டும் தனியா தூங்கி இருக்கலாம் இல்லையா?.."

"இதே டவுட் எனக்கும் வந்திச்சு புகழ்... நான் சிஸ்டர் மேரிகிட்டயே கேட்டேன்... அப்படி எதுவும் இல்ல எல்லா வயசுலயும் கலந்து தான் பிரிச்சிருக்கிறதா சொன்னாங்க... சோ அந்த பிள்ளைங்க எல்லாம் கடத்தபட்டிருக்கணும்.. வர்ஷியும் இதே நோக்கத்துக்காக தான் கடத்தப்பட்டிருப்பா அவளோட பிளட் குரூப் ரொம்ப ரேர்..." என்று சொன்னவனுக்கு தன்னவளுக்கும் அதே இரத்த வகை தான் என்பது மறந்துபோனது....

"அந்த ஜெயராமனுக்கு இப்படி ஓரு மூளையான்னு ஆச்சரியமா இருக்கு நிலவா..."

நிலவனோ இடம் வலமாக தலையாட்டியவன் "நோ புகழ்... அவருக்கு பின்னால யாரோ இருக்கனும்.. அவரோட மூளையா செயற்பட ஒரு ஆள் இருக்கு.. அந்த நபர தான் நாம கண்டுபிடிக்கணும்..."

"நிலவா, அவருக்கு ஒரு பேரன் இருக்குறதா ஜெயவேல் சார் எங்கிட்ட அடிக்கடி சொல்லுவாரு.. அவனும் டாக்டர் தான்... ஏன் அது அவனா இருக்க கூடாது..." என்றாள் அதிரல் சந்தேகமாய்

"வாய்ப்பிருக்கு பட் அவன பத்தி விசாரிக்கணும்... உனக்கு ஏதாச்சும் தெரியுமா அவன பத்தி..."

"நோ ஐடியா... ரீசென்ட்டா கேள்வி பட்டது கூட இல்லையே... அவன் போரின்ல இருக்குறதா தான் ஜெயவேல் சார் சொன்னாரு..."


புகழ் ஏதோ ஞாபகம் வந்தவனாக "மச்சான் நான் ட்ரைனிங்ல இருந்த டைம்ல என் பிரண்ட் ஒருத்தன் இந்த ஊர்தான்... அவன் அப்பா கூட ஜெயராமன் வீட்ல டிரைவரா வேலை பாக்குறதா சொல்லி இருக்கான்... அவன் கிட்ட வேணும்னா கேட்டு பாக்கலாம்...."
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"சூப்பர் மச்சான்... இப்போ சந்திக்க முடியுமான்னு கேளேன்... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கணும்.. இவ்வளவு நாள் தெரியாமலே பல உயிர் போயிருக்கலாம்... இப்போ தெரிஞ்சே போக விட கூடாது..." என்றான் உறுதியாக...

அவனும் அழைப்பெடுக்க கடவுளின் செயலோ என்னவோ அன்றே அவனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது....




"தம்பி அம்மாகிட்ட கையெழுத்து வாங்கிட்டேன்.. அந்த மேரி பேர்ல போலி ரிப்போர்ட் ரெடி.." என்றதும் அவன் முறைக்க...

"நீ இல்லனா அவ உன் அம்மா இல்லாம போய்டுமா???.." என்றவருக்கு மீண்டும் முறைப்பே..

"ஜட்ஜ் பொண்ணுக்கு கிட்னி பெய்லியராம்.. ஒரே பொண்ணு செல்லமா வளத்திருப்பாரு போல.. குடி கூத்துனு இருந்திருக்கு... ஹாஸ்பிடல்ல ஒரு மாசம் வெய்ட் பண்ணா தான் கிடைக்குமான்னு சொல்ல முடியும்னு சொல்லி இருக்காங்களாம்... பொண்ணு மேல உள்ள பாசத்துல காத்திருந்து ரிஸ்க் எடுக்க முடியாம நம்ம கிட்ட வந்திருக்காரு..."

"என்ன குரூப்..."

"ஏ பிளஸ்..."

"எல்லாம் சொல்லிடீங்களா?..."

"ம்ம்ம் வாய தொறக்க மாட்டாரு..."

"ம்ம்ம் ஸ்டோக் இருக்கு... ஆனா இப்போ நம்ம ஹாஸ்பிடல்ல வெச்சு செய்ய வேணா... அதிரலுக்கு லைட்டா டவுட் வந்திருக்கு... நம்ம லேப்ல உள்ள டாக்ட்டர்ஸ் வெச்சு பண்ண சொல்லுங்க... இன்னும் வன் வீக்ல பண்ணிடலாம்..."

"சரி தம்பி"... என்றவர் வெளியேறினார்

ஆம் நிலவன் சந்தேகித்தது போல் கடந்த ஐந்து வருடங்களாக உடலுறப்பு திருட்டு தான் ஜேகேவினால் கொடூரமாக நடத்தப்பட்டுகொண்டிருக்கிறது...

அதிலும் வர்ஷி கடத்தப்பட்ட நோக்கம், ருத்ராக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இதயம் மிகவும் பலவீனமாக தான் துடிக்கிறது... நிச்சயம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும்... ஆனால் அவருக்கோ ஓ நெகடிவ் வகை குருதி... மிகவும் அரிதானது... ஹாஸ்பிடல் வரும் நோயாளிகளில் லட்சத்தில் ஒருவருக்கு ஏன் கொடியில் ஒருவருக்கு என்றே இவ்வகை குருதி இருக்கும்... வரும் ஒன்று இரண்டு கூட ஆரோக்கியம் இல்லாமல் இருக்கும் அப்படி இல்லையேல் வயது அதிகமாக இருக்கும்...

இப்படியே நாட்கள் கடந்து கொண்டிருக்க, ஜேகேவின் கண்ணில் மாட்டியவள் தான் வர்ஷி... பழைய ரெகார்ட் ஒன்றில் அவள் வயதும் இரத்த வகையும் இருக்க, இப்போதைய வயதை கணக்கிட்டவன் தூக்கி இருந்தான்... ஆனால் இன்னும் ஒரு வயது சென்றால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதே அவளை விட்டு வைக்க காரணமாக இருந்தது...

அதிரலை அங்கு வேலைக்கு வைத்திருக்க எண்ணிய நோக்கமும் ருத்ராவுக்கு அவள் மூலமாக மருத்துவம் பார்க்க எண்ணித்தான்... ஆனால் இன்று அவளே மருந்தாகும் நிலை...



ஜெயராமன் அங்கிருந்து வெளியேறவும் வசந்த் உள்ளே வரவும் சரியாக இருந்தது....

"சார் ரிப்போர்ட்..." என்றபடி அதிரலின் அறிக்கையை கொடுத்திருந்தான்

அதனை பிரித்து படித்தவனோ... "ம்ம்ம் பேர்பக்ட்... இனிமேல் நிலவனோட கண்மணி என் ருத்ரம்மாவோட ஹார்ட்ல துடிக்க போறா... அது தெரியாம அந்த நிலவன் அலைய போறான்... வாழ்க்கை முழுக்க யார தேடுறோம்னே தெரியாமா ஓட போற நிலவா...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா... சூப்பர்ல வசந்த்" என்று அவனை பார்த்து கேட்டவன்

மீண்டும் அந்த அறிக்கையை பார்த்தபடி "நீ தப்பு பண்ணிட்ட நிலவா...ஒன்னு நீ அறிவாளியா இருந்திருக்க கூடாது... ரெண்டு என் கண்ணுல பட்டிருக்க கூடாது... ஆனா நீதான் ரெண்டையும் பண்ணிட்டியே.. உன்ன யாரைலயும் என் வலைல இருந்து காப்பாத்தவே முடியாது... தேடிட்டே இரு..." என்று சிலாகித்து சொன்னவன் அறியவில்லை நிலவன் முன் நிற்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது...



"மச்சான்.. இது நிலவன் நான் சொல்லி இருக்கேனே என் பிரண்ட்.... இங்க தான் ஏசிபியா இருக்கான்..." என்று புகழ் அவனுக்கு நிலவனை அறிமுகப்படுத்த

அவனோ... "ஆனா நிலவன் டாக்டர்னு தான சொன்ன இவரு போலீஸ்..."

"ஹெலோ மிஸ்டர் ரமேஷ்... டாக்டர் தான்.. இப்போ போலீஸாகிட்டேன்..." என்றான் அவனோடு கை குலுக்கிய படி..

"எங்களுக்கு ஒரு உதவி வேணும் மச்சான்... ரொம்ப முக்கியமான கேஸ் ஒன்னுக்காக.."

"சொல்லு மச்சான்... என்கிட்ட என்ன தயக்கம்..."

நிலவன் தான் ஆரம்பித்தான்... "ரமேஷ் எனக்கு ஜெயராமனோட பையன பத்தி தெரியணும்.." என்றதும் வேறெதோ கேட்பார்கள் என்று எண்ணி இருந்தவனுக்கு இப்படி கேட்டது எதிர்பார்க்காததுதான்...

"அவர எல்லாரும் ஜேகேனு தான் சின்ன வயசுல இருந்து கூப்பிடுவாங்க... தூரத்துல இருந்து நானும் பாத்திருக்கேன் அதுவும் சின்ன வயசுல... அதுக்கப்பறம் அவர வெளில பாக்கவே முடியாது... வீட்டுல வேலை செய்ற வேலைக்காரங்க கூட அவரோட பதினெட்டு வயசுக்கு பிறகு பார்த்ததில்லை, எங்க அப்பா உட்பட... அவரு படிக்க போனப்பறம் இங்க வரலனு தான் பேசிகிட்டாங்க... நானும் போஸ்டிங் கிடைச்சு இங்க இருந்து அப்பாவையும் அழைசிட்டு போய்ட்டேன்.. இப்போ என்ன நிலைமைனு தெரியல..."

"வீட்டு வேலைக்காரங்க கூட பாக்கலனா ஏன்.. போட்டோல கூட பார்த்ததில்லையா?..."

"ஏன்னு தெரியல... அவரு யாரையும் பார்க்க விரும்ப மாட்டாரு... எப்பவும் படிச்சிட்டே தான் ரூம்ல இருப்பாரு.."

"வயசு என்ன இருக்கும்..." என்றான் அவன் அழைப்பில் கொடுத்த மரியாதையில்

"என்ன விட மூனு வயசுதான் பெரியவரு... ஆனா சின்ன வயசுல இருந்து மரியாதையா பேசி பழகிடிச்சு..." என்றவன் மீண்டும் "இன்னொரு விஷயம் அவ்வளவு உறுதியா தெரியல.." என்று ஒரு விஷயம் சொல்ல அதனையும் உள்வாங்கி கொண்ட அவர்கள் கண்ணில் சிறிது அதிர்ச்சிதான்...

"ஓகே ரமேஷ் ரொம்ப தேங்க்ஸ்..."

"இதுக்கெல்லாம் தேங்க்ஸா... இன்னும் ஏதாச்சும் இன்போமேஷன் தேவைப்பட்டாலும் கால் பண்ணுங்க.. எனக்கு தெரிஞ்சா சொல்லுறேன்..." என்றவன் அவர்களுக்கு விடை கொடுக்க.. அவர்களும் வெளியேறி இருந்தனர்...


வாகனம் ஓடிகொண்டிருந்த நிலவன் யோசனை எல்லாம் இன்றைய நாளை பற்றி தான்... காலையில் ஆரம்பித்த அவன் ஓட்டம் இரவாகியும் தொடர்கிறது... ஆனால் பல குழப்பம் சில தெளிவு என பலவற்றை கடந்தாகி விட்டது... இன்னும் என்ன இருக்கிறதோ என்ற கேள்வி தான்... கூடவே ஜேகே என்று புதிதாய் அறிந்து கொண்டவனை பற்றியும் ஓடிக்கொண்டுதான் இருந்தது...

"என்ன மச்சான் யோசனை..."

"இல்ல புகழ்.. ரமேஷ் சொன்னதை பத்தி தான் யோசிக்கிறேன்... எப்படி வேலைகாரங்களுக்கு கூட தெரியாம இருக்கும்?..."

"அப்போ அப்படி இருந்திருக்கலாம்.. இப்போ மாறி இருக்கலாம்ல.. விசாரிச்சு பாப்போம்..."

"ம்ம்ம் நாளைக்கு முதல் வேலையா அத பத்தி விசாரிப்போம்... அவன பத்தின நியூஸ் ஒன்னு கிடைச்சா கூட ஓகே... அப்படி இல்லனா பேர்பர்ஸா மறச்சிருக்கனும்... லெட்ஸ் சீ..." என்றவன் கையில் வாகனம் பறந்தது....



"என்னடா அதி.. கல்யாண நாள் நெருங்குது நீ இப்படி அடிபட்டு வந்திருக்க... பாத்து போயிருக்கலாமேடா..."

"அதெல்லாம் எனக்கு ஒண்ணுமில்ல டார்லிங்..." என்றவள் அவர் தோளில் சாய்ந்து கொண்டாள்...

"என்னடாமா..."

"வர்ஷி பாவம்ல... ஏன் பொண்ணுங்க எங்க போனாலும் பிரச்சனையே வருது.. சின்ன வயசு அவளுக்கு.. தனக்கு என்ன நடந்திச்சினே தெரியாம ரொம்ப கஷ்டபட்டிருப்பால்ல..."

"பாவம் தாண்டா... ஆனா காரண காரியம் இல்லாம எதுவும் நடக்காதில்லையா... கடவுளோட கணக்கு ஏதோ ஒன்ன நோக்கி இருக்கும்... நமக்கு இப்போ நடக்குறது மட்டும் தான தெரியும்.. ஆனா அவரு முக்காலமும் அறிஞ்சவரு... யாருக்கு எது எந்த நேரத்துல நடக்கணும்னு அவர் தீர்மானிச்சிருப்பார் அது வழில போக வேண்டியது தான் நம்ம விதி..." என்று நிறுத்தியவர் மீண்டும்

"இப்பயாச்சும் அவ நம்மகிட்ட கிடச்சிடாளேனு மனச தேத்திக்கடா... அவளை அவங்க அப்பா அம்மாகிட்ட ஒப்படைச்சா அவ அவ லைப இனி பட்ட கஷ்டத்துக்கும் சேர்த்து சந்தோசமா வாழுவா..." என்று அவர் சொல்லிகொண்டிருக்க நிலவனும் புகழும் உள்ளே நுழைந்தனர்...

"வர்ஷி இன்னும் எழுந்துக்கலையா அதி..." என்றவனுக்கு வாசுகியே பதிலளித்தார்...

"இல்ல... நிலவா.. சின்ன சத்ததுக்கும் பயந்து முழிச்சிக்கிறா.. பாவம் நான் பக்கத்துலயே இருந்தேன் இப்போதான் தூங்கினா..."

"ஓகேமா... அதி வா உன்ன வீட்ல விட்டுடுறேன்..."

"இல்ல நிலவா இன்னைக்கு அவ இங்கயே இருக்கட்டும்.. அடிபட்டு வந்திருக்கா அலைய வேண்டாமே... நீயும் இங்கயே படுத்துக்கோ... வர்ஷியும் இருக்கா பாதுகாப்பா இருக்கும்..."

"சரிமா.. நாளைக்கு வர்ஷிய அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகணும்... அங்க என்ன நிலைமைனு பாக்கணும்..."

"சரி... நீங்க ரெண்டுபேரும் ப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்...." என்று அவர் சமையறைக்குள் நுழைந்து கொண்டார்...

"என்னாச்சு நிலவா ஏதாச்சும் இன்போமேஷன் கிடச்சிதா?.." என்றவளுக்கு நடந்ததை சொன்னவன்... நாளை சென்று விசாரிப்பதாகவும் சொல்லி உள்ளே சென்றான்... பின்னே புகழும் நுழைந்து கொள்ள.. இப்போது யோசனையில் ஆழ்வது அதிரலின் முறையானது.....


ஜாதி மல்லி மலரும்......


கருத்து திரி 👇👇👇


InShot_20240823_230538547.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 25


தாயிடம் பால் குடிக்கும் சிறுவாண்டு விளையாட்டாய், தாயின் முந்தானைக்குள் முகத்தை மறைத்து தந்தை தன்னை தேடுகிறாரா என கள்ள தனமாய் எட்டி பார்க்குமே அது போல கதிரவன் தன் ஒளிக்கை கொண்டு இருளை விளக்கி மெல்ல புவியை எட்டிபார்த்தான்...

முதலில் துயில் கலைந்து எழுந்தது அதிரல் தான்.. இன்னும் பொழுது நன்றாக புலர்ந்திருக்கவில்லை... அவள் காலுக்கு அணைவாய் தலையணை ஒன்று வைக்கப்பட்டிருந்தது... அது யாருடைய வேலை என்பதும் அவள் அறிவாள்...

நிலவனின் காதலில் எப்போதும் போல நெகிழ்ச்சி தான் அவளுக்கு... அவன் காதலுக்கு தான் எதுவும் செய்யவில்லையே என்ற ஏக்கம் எப்போதும் போல் அவளை தொற்றிகொண்டது...

எழுந்து அமர்ந்தவள் எதிரில் பார்க்க நிலவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்...

இரவு நீண்ட நேரமாக பேசிகொண்டிருந்தவர்கள் அப்படியே அங்கே சோபாவிலே உறங்கி இருந்தனர்..

எழுந்து நிலவன் அருகில் சென்றவள்... தன் போர்வையை அவனுக்கு போர்த்தியவள்.. அவன் தலையருகே அமர்ந்து தலையை மடியில் தாங்கியபடி நெற்றியில் மென் முத்தம் பதித்திருந்தாள்...

"உன்ன விட்டுட்டு போனத தவிர, உன் காதலுக்கு நான் எதுவுமே பண்ணலல நிலவா... நீ உன்னோட காதல தினம் தினம் காட்டுற.. நானும் என்னோட காதல காட்டணும்ல... அதுவும் நீ எதிர்பாக்காத படி... நாளைக்கு உன்னோட பர்த்டேல சோ ரெடியா இரு நிலவா.. எந்த டென்ஷன்னும் இல்லாம என் காதல் உனக்கே உனக்கா தரேன்..." என்று மனதினுள் எண்ணிகொண்டவள் அவனை மீண்டும் சோபாவில் தூங்க செய்து காபி போடுவதற்காக சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்...

அப்போது சரியாய் ஒரு உருவம் வீட்டினுள் நுழைந்து உறக்கதிலிருக்கும் நிலவனை பார்த்து சிரித்தபடி சத்தம் கேட்ட திசை பக்கம் நேரே நுழைந்து கொண்டது...

அங்கே சமையலறையில் பாடலை முனுமுனுத்தபடி காபி போட்டுகொண்டிருந்தவளின் வாயை பின்னிருந்து பொத்தியபடி சத்தம் வெளியே வராமல் வளைத்து பிடித்துக்கொண்டது அந்த உருவம்...




"உன்ன இப்போ யாரு இங்க வர சொன்னது..."

"நிலவன் அவன் வெட்டிங்க்கு இன்வைட் பண்ணி இருக்கான்.. எத்தனை நாளைக்கு தான் அவன் கண்ணுல படாம இருக்கிறது... சும்மா போய் ஒரு அட்டென்டன் போட்டுட்டு வருவோம்னு தோணுது.." என்ற அந்த உருவம் ஜேகேயின் முகத்தில் கோபத்தின் சாயல் தெரிகிறதா என்பதையும் பார்த்துக்கொண்டது...

"ம்ம்ம் நைஸ் கேம்.. இப்படி சொன்னா நான் பயப்புடுவேன்னு நினைப்போ?.. நீ போய் உண்மைய சொன்னாலும் ஐ டோண்ட் கேர்... பட் உன்னோட உயிர் அங்க போக முதல் போயிருக்கும்... இந்த ஜேகே கிட்டயே கேம்மா...." என்று அந்த உருவத்திடம் நக்கலாக கேட்க...

அந்த உருவத்தின் முகத்திலோ அதிர்ச்சி.. இப்படி சொன்னால் தன்னிடம் கெஞ்சக்கூடும் கோபப்படக்கூடும் அப்போது இன்னும் அவனிடம் பணத்தை கரந்துகொள்ளலாம் என்று எண்ணி இருக்க... அவனோ சர்வசாதாரணமாய் பேசுகிறானே..

"இப்போ என்ன வேணும்.. எதுக்காக இந்த ட்ராமா..."

"கொஞ்சம் பணம் தேவைப்படுது ஜேகே.."

"அதான் நீ பண்ண வேலைக்குரிய பணத்தை மொத்தமா செட்டில் பண்ணிட்டேனே.." என்றான் இருக்கையில் நன்கு சாய்ந்தபடி

"வாஸ்தவம் தான்... ஆனா நான் கேட்ட ரெண்டாவது டிமாண்ட முடியாதுனு சொல்லிட்டியே சோ அதுக்கும் சேர்த்து பணமா தந்துடு..."

"அவனோ ஏதோ யோசித்தவன்.. "ஓகே உன் அக்கௌன்ட்டுக்கு ட்ரான்பர் பண்ணுறேன்... பட் சும்மா எல்லாம் பண்ண முடியாது.. நீ இன்னொரு வேலை பண்ணனும்..." என்றவன் செய்யவேண்டிய வேலையை சொல்ல..

"நான் அங்க போற ஐடியால இல்ல ஜேகே ஜஸ்ட் சும்மா தான் சொன்னேன்..."

"யா ஐ நோ.. பட் இப்போ அத உண்மையாக்கிடு..." என்றவன் பேச்சு முடிந்தது போல் மடிக்கணினியின் பாக்கம் திரும்பிக்கொண்டான்...

தானே மீண்டும் வந்து மாட்டிக்கொண்டோமோ என்றே அந்த உருவத்துக்கு தோன்றியது...



அங்கே துயிலில் இருந்த நிலவனின் முகத்தில் பஞ்சு பொதி போன்றொரு பிஞ்சு கை விழ... உறக்கம் கலைந்து எழுந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி தான்...

"டேய் அபி குட்டி எப்போடா வந்தீங்க..." என்று எழுந்தமர்ந்தவன் குழந்தையை கையில் அள்ளி கொண்டான்...

"மம்மா.." என்றது குழந்தை

"அச்சோ செல்லம் மாமா சொல்லுறீங்களா?..." என்று கேட்டதும் குழந்தை அவன் கன்னத்தை பற்றியது...

அப்போது "என்னடா கல்யாண மாப்பிளை, என்ன சொல்லுறான் என் பையன்..." என்றபடி லகேஜுடன் ராம் உள்ளே நுழைந்தான்...

"டேய் ஏன்டா வர்றதா சொல்லவே இல்லை?.." என்று நிலவன் அவனை அணைத்து விடுவித்தான்..

"சர்ப்ரைஸ்டா மாப்பிள சர்ப்ரைஸ்... உங்கிட்ட சொன்னா என் பொண்டாட்டி என்ன உண்டு இல்லைனு பண்ணிடுவா.. நான்லாம் பொண்டாட்டிக்கு பயந்த புருஷனாக்கும் மூச்சு கூட விட மாட்டேனே..."

அவனை எற இறங்க பார்த்த நிலவனோ, "சீ தூ... மேய்க்கிறது எரும இதுல பெரும வேற இந்த நாய்க்கு..."

"இட்ஸ் ஓகே துப்புனாலும் தொடச்சிக்குவோம்.. மானம் சூடு சொரணை எல்லாம் இவள பாத்தன்னைக்கு டாடா பாய் பாய் சொல்லிட்டு போனது மச்சான்.. திரும்பி வரவே இல்லையே..."

"என்னடா இப்படி இறங்கிட்ட.."

"நீயும் சம்சாரி வாழ்க்கைக்குள்ள வந்தா தன்னால புரிஞ்சிக்குவ மச்சான்..." என்று ராம் பேசிகொண்டிருக்க.. தன் மாமனின் கவனம் தன் மீது இல்லை என்பதை உணர்ந்த குழந்தையோ ஒற்றை குட்டி விரலை நீட்டியபடி "டாம் ஷு..." என்றிருந்தான் ராமை நோக்கி... நிலவனுக்கோ சிரிப்பு..

"பொண்டாட்டிக்கு மட்டுமில்ல புள்ளைக்கும் நான் தான் மச்சான் டாம்... அடிவாங்க ஒரு ஜீவன் வேணும்ல..."

"போதும் ராம்.. என்ன டேமேஜ் பண்ணது..." என்றபடி சமையலறையிலிருந்து அதிரலுடன் வெளியே வந்தான் பூஜா...

"ஹேய் பூ... ஸ்வீட் சர்ப்ரைஸ் டி..." என்றவனை அனைத்துக்கொண்டவள்.. "நான் இல்லாம ரொம்ப ஜாலியா இருக்க போலிருக்கே..."

"அதான் கல்யாணம் ஆக போகுதே.. இனி அப்படி இருந்துடுவேன்னு நினைக்கிற..." என்றவன் அதிரலின் முறைப்பை பெற்று கொண்டான்...

"மச்சான் நீ இப்போதான் டா என் சிங்லயே வர்ற... இப்படியே மெய்ன்டைன் பண்ணணு வெச்சிக்கோ இன்னும் டூ இயர்ஸ்ல நானே உங்கிட்ட பிச்ச வாங்கணுங்கிற அளவுக்கு டெவலப் ஆகிடுவ..." என்றான் ஆசீர்வதிப்பது போல்... நிலவனும், "எல்லாம் உங்கள் ஆசி குருஜி..." என்றிருந்தான்...

"போதும் மூடுறீங்களா ரெண்டு பேரும்..." என்று போலியாய் அதட்டியவள் மீண்டும் "என்னடா உன் பொண்டாட்டி பயப்படவே மாட்டேங்கிறா.. பின்னாடி போய் வாய மூடுனா.. சிவனேன்னு நிக்கிறாடா.. பயம் காட்டுற எனக்கு ஒரு மரியாதை வேணாமா சொல்லு.."

"அதான என் பூக்குட்டி பயம் காட்டினா இனி பயந்துக்கோ சரியா?..." என்றான் அதிரலிடம் சிரிப்புடன்

அதிரலோ.. பூஜாவின் தலையில் தட்டி "நீ வர்றதே தெரியாத ஆள பயம் காட்டி இருந்தா பரவாயில்லை... நேத்து நைட் வந்து இறங்கிட்டேன்.. காலைல வந்துடுவேன்னு நொடிக்கொரு தடவ எனக்கு மெசேஜ போட்டுட்டு, என்னையே வந்து பயம் காட்டுறியா?.. என் அறிவுக்கொழுந்தே..." என்று தலையில் அடித்துக்கொள்ள அசடு வழிய நின்றிருந்தாள் பூஜா...

இந்த கலாட்டாவில் குழந்தை மீண்டும் அழ தொடங்கி இருந்தான்...

"அச்சோ அபி குட்டி, மாமா உங்கள பாக்கலனு கோபமாகிடீங்களா?... எல்லாருக்கும் ரெண்டு டிஷும் போட்டுட்டு நாம விளையாடலாம்.. " என்றபடி குழந்தையின் வயிற்றில் முகத்தை பிரட்டி சிரிக்க வைத்திருந்தான்...

அதிரலின் பார்வை நிலவனிடம் தான் குழந்தையுடன் அவன் ஒன்றிய விதமே சொன்னது குழந்தை மீது அவன் பிரியம் எத்தகையது என்பதை... இப்போதே தங்கள் குழந்தையை அவன் கையில் கொடுத்துவிடமாட்டோமா என்றே மனது ஏங்கியது... அந்த எண்ணத்துக்கே அவளுக்கு வெக்கம் வேறு வந்து தொலைத்தது.. மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டவள்.. மற்றவர்களிடம் கவனத்தை செலுத்த தொடங்கினாள்...

இவர்கள் ஐக்கியத்தில் பிரச்சனை கூட சற்று எட்ட நின்று தான் வேடிக்கை பார்த்தது...

சிறந்த நண்பர்களின் அருகாமை தன்னையே மறக்க வைக்கும் போது பிரச்சனைகள் எல்லாம் எம்மாத்திரம்... ஒன்னு என்ன எத்தனை ஜேகேக்கள் வந்தாலும் சாமாளிக்கும் வலிமையை கொடுக்கும் உறவுகள் அவனிடத்தில்...


அந்த நேரம் "பூஜாக்கா..." என்று அழைத்தபடி வர்ஷி வெளியே வர, பூஜா கேள்வியாய் அவளை நோக்கினாள்....

நிலவனோ "டேய் வர்ஷி, பூஜாக்கா இங்க தான் இருப்பா நாம பேசலாம்.. நீ போய் ப்ரஷ் ஆகிட்டு வாடா வீட்டு போகனும்ல.." என்று அவளை உள்ளே அனுப்பியவன் பூஜாவிடம் அனைத்தையும் விளக்க... அவளோ அங்கிருந்த சோபாவில் அப்படியே அமர்ந்தாள்...

"என்ன நிலவா இதெல்லாம்.. இப்படியெல்லாமா நடக்குது.. மனிஷ ஜென்மங்களாடா அவங்களாம்... ஒருத்தனையும் விடாத நிலவா.. தேங்க் கோட் வர்ஷி அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டா..." என்று பேசிகொண்டிருக்க வர்ஷி அங்கே தன்னை சுத்தப்படுத்தி வந்திருந்தாள்...

அவள் முன் துக்கத்தை மறைத்தவளாக "அடடே நம்ம வர்ஷியா இது... ரொம்ப வளந்துட்டாளே... அப்போல்லாம் பாய் கட்ல இருந்துட்டு இப்போ இப்படி முடியெல்லாம் வளந்து பார்க்கவே பெரிய பொண்ணா தெரியுறா...." என்றாள் அவளை அருகில் அமரவைத்து...

"அதெல்லாம் பொண்ணுங்க சட்டுனு வளந்துடுவாங்கடா பூஜாமா..." என்று சொல்லியபடி அங்கே வந்தார் வாசுகி...

அவரை கண்டதும் எழுந்து காலில் விழுந்து ஆசி வாங்கியவள்.. "எப்படிமா இருக்கீங்க... இவன் ஒன்னும் உங்கள தொல்லை பண்ணலையே..." என்றாள் நிலவனை காட்டியபடி...

"உன் நண்பனை பத்தி தெரிஞ்சே கேக்குறியே டா..." அவரும் அவர் பங்குக்கு அவனை கலாய்க்க...

"யூ டூ புருட்டஸ்" என்றான் நிலவன் போலி அதிர்ச்சியுடன்...

"குழந்தையை தாடா முதல்ல." என்று அபியை அவனிடம் இருந்து வாங்கியவர்..

"வாட் இஸ் யுவர் நேம் கண்ணா??.." என்றார் அவன் வெளிநாட்டில் வளர்ந்திருப்பதால் தமிழ் புரியாதோ என்றெண்ணி...

குழயந்தயோ... "பாட் நோ இங்கிஷ்.. பூ அடி... " என்றான் ஒரு விரலை வாயில் வைத்து கண்களை உருட்டி அவரை பயம் காட்டியபடி... அவன் பேசிய அழகில் மயங்கி நின்றவருக்கு என்ன சொல்கிறான் என்று புரியவில்லை தான்... மழலை மொழிக்கு ஈடான இனிமையான மொழியும் உலகில் உண்டோ...

"மா.. இங்கிஷ் பேசினா பூஜா அடிப்பான்னு சொல்லுறான் மா...." என்ற ராம் மேலும் விளக்கமாக "அபினேஷுக்கு இங்கிலிஷ் பேசி பழக்கல மா... வீட்ல தமிழ் தான்... பூஜாவோட ஸ்ட்ரிக்ட் ஓடர் இது... வீட்டுக்குள்ள கூட என்னால ஹாஸ்பிடல் கால்ஸ் பேச முடியாதுனா பாத்துக்கோங்களேன்..." என்றான்

"நல்லது தான் பூஜா.. அந்த மொழியும் பழகுறதுல தப்பில்லயேடா.. ரெண்டும் பழகிட்டு போகட்டுமே.. ஏன் பேசவேணான்னு சொல்லி இருக்க பாரு பேசுனா அம்மா அடிப்பான்ற வர அவனுக்கு புரிஞ்சிருக்கு.. குழந்தைங்க இந்த வயசுல குடுக்குறத மொத்தமா உள்வாங்கிப்பாங்கடா..." என்றார் மூத்தவராய்

"இவன் அவன் அப்பாவ விட நடிகன் நம்பிடாதீங்கமா.. சும்மா பயந்த மாதிரி நடிக்கிறான்.. வீட்ல மெய்ட் கிட்ட எனக்கு தெரியாம சார் பேசிகிட்டு தான் இருக்காரு..." என்றவள் மகனின் கன்னத்தை கிள்ளி

"எங்க தமிழ் பேசாம போய்டுவானோன்னு தான் மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருந்தேன்.. நெக்ஸ்ட் இயர் மூனு வயசாகும் போது கிண்டர்கார்டன் சேர்ப்போம்ல அப்போ இங்கிலிஷ் பழகிக்கட்டும்னு நினைச்சேன் மா... இனிமேல் கொஞ்சம் கொஞ்சமா பழக்குறேன்மா..." என்றாள் அவர் சொன்னவற்றை ஆமோதித்தபடி

"அப்பறம் பூ.. அந்த ராஸ்கல் விஷ்னு வரலையா?..."

"இங்க வந்துட்டதா தான்டா நேத்து பேசும்போது சொன்னான்... ஆனா இங்க ஏதோ வேலை இருக்காம்.. அத முடிச்சிட்டு ஸ்ரைட்டா இங்கயே வாருவானாம்..."

"ஆன்... அவன பாத்து எவ்வளவு நாள் ஆச்சு, லீவுக்கும் வரல... சாருக்கு அப்படி என்ன வேலையாம் இங்க?.. அதுவும் நமக்கு தெரியாம.. வரட்டும் பாத்துக்கிறேன்.."

"அப்பறம் கல்யாணத்துக்கு வேற யாருக்கெல்லாம் சொன்ன நீ..."

"நிஷாக்கு சொன்னேன்... அப்பறம் நம்ம ஜூனியர்ஸ் கொஞ்ச பேருக்கு சொல்லி இருக்கேன்..."

"நிஷா தான் டச்ல இல்லையே அப்பறம் எப்படி?"

"அவ எப்பி அக்கௌன்ட்டுக்கு அனுப்பினேன்டி... பாத்துட்டான்னு தான் காட்டிச்சு.. பட் ரிப்ளை எதுவும் பண்ணல..."

"அவளுக்கு சீன், கண்டுக்காம விட்டிருக்கனும்.. உனக்கு கொழுப்பு அதான் அந்த மேனா மினிக்கிய வழிய போய் கூப்பிடிருக்க.."

"சரி விடு விடு அவளும் நம்ம பிரண்டு தானே..."

"யாரு அவளா??... பிரச்சனைனதும், எங்க அவளுக்கு ஏதும் வந்துடும்னு அந்த ஓட்டம் ஓடினாளே.. அவளை எல்லாம் இன்னுமா உன் பிரண்ட் லிஸ்ட்ல வெச்சிருக்க..."

"சரி சரி.. நீ வந்ததும் வராதததுமா கோபப்படாம போய் ரெஸ்ட் எடு... ஈவினிங் டிரஸ் எடுக்க அம்மா கூட போய் உங்களுக்கும் எடுத்துகோ.. நிஷா, விஷ்னு அவங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே எடு.. ஆனா என் செலவு ஓகே வா??.."

"நீ சொல்லாட்டியும் உன் பர்ஸ காலி பண்ணத்தான் வந்திருக்கேன்... டோன்ட் ஒர்ரி..."

"நீ அப்படியே தான் டி இருக்க.." என்றவன் அவள் முன் முடியை களைத்து விட்டவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்...

"என்ன அதி இவன் சொல்லிட்டு போறான்... அப்போ டிரஸ் எடுக்க வரமாட்டானா இவன்..." என்றார் வாசுகி

"வருவாருத்த லேட்டாகும்... வர்ஷிய வீட்ல விட்டுட்டு பாதுகாப்புக்கும் ஆள் செட் பண்ணனுமாமே... நம்ம முதல்ல போகலாம்.. அவரும் புகழும் நேரா அங்கேயே வந்துடுவாங்க..." என்றாள் அதிரல்.. நிலவனுக்கான மரியாதை சாதாரணமாகவே வாசுகியிடத்தில் வந்தது அவளுக்கு...



"வர்ஷி.. சீக்ரெட்டா விசாரிச்சதுல உன் குடும்பம் இங்க ஷிப்ட் ஆகிட்டாங்கன்னு தான் இன்பொர்மேஷன் வந்திருக்கு... சரியா தெரியல உள்ள போய் பாக்கலாம்.." என்றான் உள்ளே இல்லை என்றால் அவள் கவலை கொள்ள கூடுமே என்று... அவன் ஜீப்பில் இருந்து இறங்க புகழும் வர்ஷியும் கூடவே இறங்கிக்கொண்டனர்

அங்கே அத்தனை பின்தங்கிய சாலை போன்ற இடத்தில் தன் குடும்பமா? என்று வர்ஷியால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை... வர்ஷியின் தந்தை பேங்க்கில் உயர் அதிகாரியாகவும் தாய் கவர்மென்ட் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் வேலை செய்பவர்கள்... அவர்கள் இங்கே என்றால் சந்தேகம் வருவது இயல்புதானே...

நிலவனின் கால் நேராக ஒரு குடிசையின் முன் போய் நின்றான்.. வர்ஷி அவன் கண்களை பார்க்க அவனோ ஆமோதிப்பாய் தலை அசைக்க, அவள் கால்களோ அசைவேனா என்றது..

நிலவன் தான் "சார்.. ராஜசேகர் சார்.." என்று அழைத்தான்...

"யாரோ வந்திருக்காங்க போல சகு.. நான் பாத்துட்டு வரேன் இரு..." என்றவர் உள்ளே பேசும் குரல் வெளியே அப்படியே கேட்டது... தந்தையின் கம்பீரமான குரலா இது? என வர்ஷியால் வியக்காமல் இருக்க முடியவில்லை....

வெளியே வந்தவர்.. "யாரு தம்பி நீங்க..." என்று நிலவனிடம் வினவியவரின் கண்கள் அருகில் நின்றிருந்த தன் மகளை கண்டுகொண்டதும் உணர்ச்சி பெருக்கில் "டேய் பாப்பா.... என்று பெரிய குரல் எடுத்து அழுதபடி அப்படியே கீழே விழுந்திருந்தார்...

நிலவனோ அவரை தாங்கி பிடித்துக்கொண்டவன்... "சார் ரிலாக்ஸ் உள்ளே போய் பேசலாம்..." என்றவன் அவரை உள்ளே அழைத்து செல்ல தந்தை மகள் இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தான் அளவிட்டது...

ராஜசேகர்.. மிகவும் மெலிந்து போய் இருந்தார்... வயதையும் மீறிய வயோதீபம் அவர் உருவத்தில் நன்கு தெரிந்தது...

உள்ளே நுழைந்த நிலவன் அவரை அமரவைக்க இடம் தேட... வெறும் தரை மட்டும் தான் இருந்தது... அதுவும் மணல்.. கீழே சீமெந்து கூட போடப்பட்டிருக்கவில்லை... ஓலையால் வேயபட்ட குடிசை உள்ளே ஒரே ஒரு அறைதான்... அங்கே ஒரு மூலையில் சமயலுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது... அங்கே தான் ராஜசேகரின் மனைவி நின்றிருந்தார்...

சேகரை அப்படியே அங்கே தரையில் அமர வைத்தவன் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி வெளியே நின்றுகொண்டான் புகழுடன்...

பொம்மை போல் உள்ளே நுழைந்த வர்ஷி தாயையும் காண அவளால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை.. சேலை கூட சுருங்காமல் அணிபவர் அவள் தாய் இன்றோ... "பாஆஆ" என்று குரலெடுத்து அழுதாள் நெஞ்சம் விம்ம...

"என்னால தான எல்லாம்.. என்னால தான்... நான் உங்களுக்கு எப்பவும் கஷ்டத்தை மட்டும் தானப்பா கொடுத்திருக்கேன்..." என்றவள் அவர் மடியில் புதைந்து அழ...

அவரோ.. "செல்லம் நீ அப்பாவோட லக்கி சார்ம்டா... அழாதடா... நீ இல்லாம வீடே வீடா இல்ல தெரியுமா... அழாதடா கண்ணா..." என்றவருக்கும் அழுகை நின்றபாடில்லை...

அவர் மனைவி சகுந்தலாவோ அங்கே உறைந்து நின்றிருந்தார்... வயதுப்பெண்ணை இழந்து எவ்வளவு துடித்திருப்பார்.. இன்று அவளை முழுதாய் காண அவர் உணர்வுகளை வெளிகாட்ட முடியவில்லை...

"சகு... சகு... எம்பொண்ணு வந்துட்டாடி..." என்று மனைவியை கத்தி அழைக்க, அப்போதுதான் அவருக்கு நடக்கும் நிகழ்வே புரிந்தது... மகளிடம் ஓடி வந்தவர்.. அவளை மடியில் தாங்கி இருந்தார்.. எதுவும் பேசவில்லை நெஞ்சோடு அனைத்துக்கொண்டவர் கண்களில் கண்ணீர் ஆறாய் ஓடியது... மீண்டுமொறு முறை அவளை கருவில் சுமந்த ஆனந்தம் அவருக்கு...

ஒருவர் மாறி ஒருவர் அவளை அணைத்து அழுதபடியே அமர்ந்திருந்தனர்... ஒருவருட ஏக்கம் அவர்களுடையது... கடந்து வந்த நாட்களில் கடவுள் மீண்டும் கொடுப்பாரென்ற நம்பிக்கை சுத்தமாய் குறைந்திருந்தது... ஆனால் இன்றோ பொக்கிஷம் மீண்டும் கை சேர்ந்து விட்டது... நீண்ட நாட்களில் பின் நிம்மதியான சுவாசம் அவர்களுடையது.. அதனை ஆழ்ந்து அனுபவித்தனர்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
வெளியே நின்றிருந்த நிலவனின் உணர்வுகளை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை... இப்போது அந்த ஐயோக்கியன் கிடைத்தாலும் வெட்டிப்போடும் கோபம் தான் அவனுக்கு... எப்படி இருந்த குடும்பம் இப்படி ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கம் தான் அவனுள்...

அமைதியாய் நின்றுந்த நிலவனையும் புகழையும் ராஜாசேகரே வந்து உள்ளே அழைத்திருந்தார்...

"ரொம்ப நன்றிங்க தம்பி... வர்ஷி பாப்பா சொன்னிச்சு நீங்க தான் காப்பாத்துனதா... ரொம்ப பெரிய உதவி நீங்க நல்லா இருப்பீங்க சாமி..." என்றவர் கையெடுத்து கும்பிட..

அவர் கையை பிடித்து இறக்கிவிட்டவன் "நான் எதுவுமே பண்ணல உங்க பொண்ணு தைரியமா அவளாவே தப்பிச்சு வந்திருக்கா... இன்னும் நிறைய குழந்தைகளை காப்பாத்த போறதுக்காக காரணமும் அவ தான்... இப் யூ டோண்ட் மைண்ட் உங்ககிட்ட சில கேள்வி கேட்கலாமா?..."

"எதுவா இருந்தாலும் கேளுங்க தம்பி..."

"வர்ஷிய யார் அன்னைக்கு கூட்டிட்டு போனது உங்களுக்கு தெரியுமா??..."

"நல்லாவே தெரியும் தம்பி.. அந்த நாசமாப்போன ஜெயராமோட ஆட்கள் தான் தம்பி..." என்றவர் விளக்கமாக சொல்ல தொடங்கினார்..

"வழமையா எங்க பேங்க்லதான் அவரோட எல்லா காசு சம்மந்தமான ஆக்டிவிடிசும் நடக்கும்.. எங்க பேங்க் மேனேஜர் அவரோட கொஞ்சம் கிளோஸ்.. சோ அடிக்கடி நாங்க அவர் வீட்டுக்கு போவோம்.. ஆனா அன்னைக்கு ஒரு நாள் ஜெயராம் என்ன சந்திக்க பேங்க்குக்கு வந்திருந்தார்... அவர் பேசுனதும் எனக்கு செம கோபம்.. என் மகள் அவர் மகனுக்கு தேவைப்படுறாளாம்.. கொடுத்துடட்டாம்னு ரொம்ப திமிரா ஏதோ பொருளை கேக்குறது போல எனகிட்டயே கேட்டாரு தம்பி..." என்க நிலவனின் பார்வை அர்த்தமாய் புகழை நோக்கியது...

"எந்த தகப்பனும் கேக்க கூடாத வார்த்தை... பொண்ண பெத்தவனா எனக்கு ரொம்ப கோபம்... பயங்கரமா திட்டிட்டேன்.. அப்பறம் அவரும் போய்ட்டாரு நானும் கொஞ்ச நாள் வைப் கிட்ட புலம்பிட்டு விட்டுட்டேன்..."

"ஆனா அடுத்த மாசமே வீட்டுக்கு ஆட்களோட வந்து நின்னாரு.. மிரட்டி என்னவோ எல்லாம் பண்ணுனாரு.. நான் மசியலன்னதும் அடுத்த நாளே அவரோட ஆட்கள் வந்து எங்கள அடிச்சு போட்டுட்டு பொண்ண தூக்கிட்டு போய்ட்டாங்க தம்பி..." என்று பேசியவர் அன்றைய நாளின் தாக்கத்தில் உணர்ச்சிவசப்படிருந்தார்...

"போலீஸ்ல இன்போர்ம் பண்ணியிருக்கலாமே..." என்றான் நிலவனுக்கே அந்த கேள்வி அபத்தம் என்று தான் தோன்றியது...

அவரோ விரக்தியாய் புன்னகைத்தபடி... "போகாம இருந்திருப்பேன்னு நினைக்கிறீங்களா தம்பி.. அன்னைக்கு அடிபட்டதுல என் மகனுக்கு ரொம்ப காயம்.. அவன ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி, வைப அவன் கூட விட்டுட்டு.. நான் நாய் மாதிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சேன் தம்பி.. எவ்வளவோ கெஞ்சினேன் யாரும் என்ன ஒரு பொருட்டா கூட அங்க மதிக்கல... கம்பளைண்ட்டும் எடுத்துக்கல..தினம் தினம் அப்படி தான் நடந்திச்சு..."

"அதுக்கப்பறம் எங்கள நிம்மதியா இருக்கவே விடல.. என் வேலை இவ வேலை எல்லாம் போயிடிச்சு... எங்க வீட்ல மட்டும் கரண்ட் இருக்காது தண்ணி வராது... இரவுல தூக்கமே இல்லாம எத்தனை நாள் முழிச்சு இருந்திருப்போம்.. எங்க போனாலும் வேல தரல... ஒரு வேளை சாப்பிட்டுக்கே கூலி வேல பாக்க வேண்டிய நிலைமை.."

"இது எதுக்குமே நான் போராடுறத நிறுத்தல தம்பி.. டெய்லியும் போய் அங்க போலீஸ் ஸ்டேஷன் முன்னுக்கு நிப்பேன்.. ஆனால் பதில் பூஜ்ஜியம் தான்... என் பிரண்ட் ஒருத்தன் ஐஜி ரொம்ப நல்ல மாதிரி அங்க போய் பாருன்னு சொன்னான்... நம்பிக்கையோட அவர பாக்க போகலாம்னு இருக்கும் போது தான் என் மகன வெச்சு மிரட்ட ஆரம்பிச்சாங்க.."

"பொண்ணையும் இளந்துட்டோம் அவனையும் இழக்க முடியாதுனு இங்க வந்துட்டோம் தம்பி... அப்பவும் மறைமுகமாக ரெண்டு மூனு தடவ அவர சந்திக்க ட்ரை பண்ணப்ப தான் தருனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடிச்சு அவனுங்க வேலைதான்... அதுக்கப்பறம் போராட முடியாம கடவுள்கிட்ட ஒப்படச்சிட்டேன் தம்பி... இப்போ அவரே உங்க மூலமா என் பொண்ண எனக்கே திருப்பி கொடுத்துடாரு" என்று அவர் சொல்லி முடிக்க தருண், வர்ஷியின் தம்பி உள்ளே வந்தான்...

"மா.. மல்லிகா அக்கா மட்டும் இட்லி பாக்கி தரணும்..." என்றபடி உள்ளே வந்தவனது கண்கள் வர்ஷியை கண்டதும் விரிந்து கொண்டது... பத்து வயதுதான் இருக்கும் அவனுக்கு... அவனது ஒட்டிய உடல்வாகும், அவன் பேச்சும் அவன் கஷ்டம் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியது....

"வர்ஷிக்கா... எங்கக்கா போன..." என்று அத்தனை பேரையும் தாண்டி சென்று சிறிது நேரம் அவளை அணைத்து அழுதவன்.. "நீ வந்துட்டல்லக்கா இனிமேல் நம்ம பெரிய வீட்டுக்கே போவோமா??.. நம்ம அங்க பழையபடி நிறைய சாப்பிடலாம்.. பெட்ல தூங்கலாம்... விளையாடலாம்.. ஸ்கூல் போகலாம்... ஆமா தானக்கா?..." என்றான் அந்த சிறுவன்... அவன் எண்ணமெல்லாம் அக்கா இல்லாத காரணத்தால் தான் இங்கே இருக்கிறோம் என்பதே... அவன் உலகம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறது என்பது அவன் பேச்சிலேயே புரிந்தது...

அவன் பேச்சில் நிலவனுக்கும் புகழுக்கும் கூட கண்களில் நீரை வரவைத்திருந்தது....

வர்ஷியோ அவனை இறுக்க கட்டி கொண்டவள் "போய்டலாம் தரு... இப்போவே போய்டலாம் இனி இங்க வேணா..." என்று ஆறுதல் சொன்னவள் நிலவனிடம் தான் பார்வையை செலுத்தினாள்.. அவனன்றி அவளுக்கு யார் உதவிட முடியும்... அதனை அவனும் உணர்ந்தான் தான்..

"ஓகே சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வரேன்" என்று புகழுக்கு செய்கை காட்டி வெளியேறி இருந்தான்...

"என்ன மச்சான் பண்றது... இவங்கள இப்போதைக்கு பாதுகாப்பா தங்க வைக்க ஒரு இடம் வேணும்.. நம்ம எனி டைம் கூடவே இருக்கவும் முடியாது... யாரையும் நம்பியும் விட்டு போகவும் முடியாது என்ன பண்ணலாம்..."

"மச்சான் நம்ம வீட்டுக்கே கூட்டி போய்டலாமா?..."

"அது சரி வராது புகழ்... வீட்ல கல்யாண வேலைனு வெளில போறதும் வர்றதுமா இருப்பாங்க.. எப்பவுமே பாதுகாப்பா இருக்க மாதிரி ஏதாச்சும் இடம் வேணும்..."

"அப்படினா போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கணும்..."

"எக்ஸாக்ட்லி... அங்க தான் வைக்க போறோம்..."

"என்ன சொல்ற நிலவா..."

"உன்னோட குவார்ட்டஸ்ல தங்க வைக்க போறோம்..."

"சூப்பர் நிலவா... நல்லா ஐடியா யாரும் உள்ள போக முடியாது.. பட் போலீஸ் யாரும் அவனுங்களுக்கு ஹெல்ப் பண்ணினா?..."

"என்னதான் தைரியமான ஆளா இருந்தாலும் குவார்ட்டஸ் உள்ள வந்து தூக்குற அளவுக்கு யாருக்கும் தைரியம் இருக்காது... அதுதான் இப்போதைக்கு இருக்குறதுலயே பெஸ்ட்டான இடம்..." என்றான் நம்பிக்கையுடன்...


முரளிகிருஷ்ணனிடம் பேசி அனுமதி வாங்கியவன்.. சரியாக இரண்டு மணி நேரத்தின் பின் புகழின் குவார்ட்டஸில் அவர்களுக்கு எல்லாம் தயார் செய்திருந்தான்...

"கொஞ்சம் நாள் இங்க தங்குங்க.. எந்த பயமும் வேணாம்.. உங்க பாதுகாப்புக்காக தான் இதெல்லாம்... கண்டிப்பா இந்த பிரச்சனைய முடிச்சிடுவேன்.. அப்பறம் உங்க வீட்டுக்கு போகலாம்... சாப்பாடெல்லாம் டைமுக்கு வரும்.. எந்த கவலையும் வேண்டாம் நிம்மதியா இருங்க..." என்றான்

"ரொம்ப நன்றி தம்பி... உங்க உதவிய எப்போவும் மறக்க மாட்டோம்..."

"நன்றியெல்லாம் எதுக்குங்க... ஏதும் பிரச்சனனா எனக்கு ஆர் இவனுக்கு கால் பண்ணுங்க..." என்று அங்கிருந்த கலேண்டரில் இரு தொலைபேசி இலக்கங்களையும் எழுதியவன் அங்கிருந்து வெளியேறினான்...


இதெல்லாம் முடியவே மாலை நாலு மணி ஆகி இருந்தது... திருமணப்பட்டு எடுக்க தானும் உடன் இருப்பேன் என்று அதிரலுக்கு வாக்கு கொடுத்திருந்தான்... எடுத்து முடிந்ததா என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் முடிந்திருக்க கூடாது என்ற வேண்டுதலுடன் அங்கே தான் சென்று கொண்டிருந்தான்... கூடவே புகழும்...

அப்போது புகழின் தொலைபேசி ஒலிக்க எடுத்து அந்தப்பக்கம் சொல்லப்பட்டத்தை கேட்ட புகழ், நிலவனிடம் "நீ சொன்னது கரெக்ட் மச்சான்... இந்த அஞ்சு வருசத்துல அந்த ஜேகே பத்தின நியூஸ் அப்பப்போ வந்திருந்தாலும்... அவன் எப்படி இருப்பான்னு யாருக்கும் தெரியல... சிட்டிஷன்ஷிப் கூட யூகேல தான்... ரொம்ப வருஷமா இங்க வரவே இல்லனு தான் எல்லாரும் சொல்லுறாங்க... வேல்ட்லயே முக்கியமான நீயூரோ சேர்ஜென்ல அவனும் ஒருத்தன்... நேம் ஜெகதீஸ்வரகிருஷ்ணன் அத தான் சோர்ட்டா ஜேகேன்னு சொல்லுறாங்க... ரெண்டு வருசத்துக்கு முதல் பேட்டி ஒன்னு கொடுத்திருக்கான் பட் அதுவும் ஆன்லைன்ல மூலமா, வித்தவுட் வீடியோ..."

"அப்போ எக்ஸாக்ட்டா நாம தேடுறது அவன தான்... அவன பிடிச்சா இந்த பிரச்சனைக்கு சொலியூஷன் கண்டு பிடிக்கலாம்... சோ அவன் எப்படி இருப்பான்னு கண்டுபிடிக்கணும்... ம்ம்ம் கண்டுபிடிச்சிடலாம்...."



"என்னடா பிடிச்சிடலாம் பிடிச்சிடலாம்னு சொல்லிட்டு இருக்க... முடியாது.. உன்னால எப்பவும் முடியாது..."

"சார்.." என்று வசந்த் இழுக்க

"குறைஞ்சது ஆறுமாசமா அந்த சேகர தேடுற நீ... ஆனா அவன் ஒரு நாள்ல கண்டுபிடிச்சிட்டான் பாத்தியா?... அது தான் அவன்.. இப்போதைக்கு அப்பா வரைக்கும் கெஸ் பண்ணி இருப்பான்... சோ இனிமேலும் டிலே பண்ண முடியாது அந்த அதிரல தூக்கிடு..." என்றான் கடுமையான கோபத்துடன்...

"சார்.. ஆனா அதிரல் த்ரீ டேய்ஸ் லீவ் போட்டிருக்காங்க.. இப்படி எப்படி?..."

"யா ஐ நோ.. சீக்கிரமே கல்யாணம்ல மேடமுக்கு.. சோ வெளியே வருவா.. அண்ட் மோரோவர் நம்ம ஆள் ஒருத்தர் அங்க இருக்குல்ல சோ இன்போர்மேஷன் கெதர் பண்ணிக்கோ... அவன இனிமேலும் யோசிக்க விடக்கூடாது... யோசனைய காதல் பக்கம் திருப்பிடுவோம்..." என்றவன் வெளியேற, வசந்த் அவன் சொன்ன வேலையை முடிக்க கிளம்பி இருந்தான்.



நிலவனின் ஜீப் அங்கே பெரிய ஜவ்ளி கடையின் முன் நின்றது... கூட்டம் அவ்வளவு இல்லை என்றாலும் வழமை போல் நான்கு ஐந்து என்று இருக்கத்தான் செய்தது... ஏற்கனவே வர்ஷியை அவள் பெற்றோரிடத்தில் சேர்த்தது பற்றி அதிரலிடம் சொல்லி ஆகிவிட்டது... இனி இங்கு அதனை பற்றி பேச வேண்டாமென பிரச்சனைகளை எல்லாம் ஓரம் கட்டியவன், உள்ளே நுழையவும் அவனவள் அவனை தேடி வெளியே கண்களை அழைபாய விடவும் சரியாக இருந்தது... இவனை கண்டதும் தான் தாமதம் அவள் கண்ணில் ஆயிரம் மின்னல்..

"என்ன கண்ணு ஜொலிக்குது..." என்று அவள் பார்வை போன பக்கம் பூஜாவும் திரும்ப, அங்கு நிலவன் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான்... "ஓஹோ இதான் சங்கதியா?... இவ்வளவு நேரம் தலைவன பாக்காம தலைவிக்கு பசலை நோயோ??..." என்று பூஜா அவள் தோளில் இடிக்க, அதிரலுக்கு வெக்கம் வந்து தொலைத்தது...

"அடடே மெண்டர் மேடம் வெக்கம் எல்லாம் படுறாங்க டோய்..."

"சும்மா இரு பூஜா..."

தூரத்தில் இருந்து வரும் போதே அவனவளின் வெக்கமும் பூஜாவின் கிண்டலும் அவனுக்கு புரியத்தான் செய்தது... அவன் அருகில் வரவும்

"நம்ம மெண்டர நீ என்னமோ பண்ணிட்டடா நிலவா..."

"ஆஹான், அத மெண்டர் மேடமே சொன்னாங்களா என்ன?..."

"அவங்க சொல்லல பட் அவங்க வெக்கம் சொல்லுது..." என்று மீண்டும் பூஜா கலாய்க்க... அப்போதும் அவளால் வெக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை ஏனோ இன்று அளவுக்கதிகமாய் வந்து தொலைத்தது...

"ஓகே பூ... அங்க அம்மா உன்ன கூப்பிடுறாங்க பாரு... போ.." என்று பூஜாவின் தோளில் கையை வைத்து அந்த பக்கம் திருப்பி போகும் படி செய்தவன்...

"ஓகே ஓகே புரியுது.. நீங்க நடத்துங்க... நான் எதுக்கு கரடி..." என்றவள் வாசுகியிடம் சென்றாள்...

"பூஜா... பூஜா.." என்று அதிரல் அழைத்தும் அவள் திரும்பவில்லை...

"ஏன் நிலவா.. அவ வேறமாதிரி எதுவும் நினைச்சிக்க போறா..."

"என்ன வேற மாதிரி... அவளும் லவ் பண்ணினவ தான் புரிஞ்சிப்பா..." என்றவன் பார்வை முழுவதும் அவளிடம் தான்...

"அப்படி பாக்காத நிலவா.. வெக்கமா வருது..." என்று அவன் கண்களை தன் கைகொண்டு அவள் மூட

"ம்ம்ம் மூனு வருசமாகியும் இன்னும் பார்த்துட்டு தானே இருக்கேன்..." என்றான் பெருமூச்சுடன்..

"உன்ன யாரு பாத்துட்டு மட்டும் இருக்க சொன்னா?.." என்று பேச்சில் அவனை அதிர வைத்திருந்தாள்...

அந்த நேரம்... "மேடம் நீங்க கேட்டது போல சாரி இதுல இருக்கு பாருங்க..." என்றபடி கடை பையன் ஒருவன் சாரிகளை காட்டுவதற்காக அங்கு வர, நிலவன் பார்வையை மாற்றிகொண்டான்...

"ஜாஸ்.. கல்யாணப்பட்டு செலக்ட் பண்ணுவோமே பர்ஸ்ட்... இது எதுக்கு..."

அவளோ அவன் காதில் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்... "அது சஸ்பன்ஸ்..." என்றாள்... அந்த குரலும் அவள் இதழின் மெல்லிய உரசலும் காவலதிகாரி அவனையே சிறையிலிட்டது சில நொடிகள்...

"ஐயோ.. படுத்துறாளே.." என்று அவன் மனம் அலறியது அவனுக்கே கேட்டது....

"ஓகே நீ செலக்ட் பண்ணு நான் அம்மாவ பாத்துட்டு வரேன்" என்று தப்பி ஓட முனைந்தவனை தடுத்தவள் "அதெல்லாம் அத்த என்கூடதான் இருக்க சொல்லுவாங்க..." என்று அவனை அங்கேயே நிறுத்தியவள் மஞ்சள் நிறத்தில் அழகிய சில்க் சாரி ஒன்றை தேர்ந்தெடுத்திருந்தாள்...

"ஓகே இப்போ பட்டு எடுக்கலாம்... அத்த மூனு பட்டு எடுக்க சொன்னாங்க... நீயே செலக்ட் பண்ணு..." என்றவள் அவனருகில் நின்றுகொண்டாள்...

அவன் கண்களோ அங்குள்ள புடவையில் அலைபாய்ந்து அவனது மல்லிகைக்கான புடவையை தேடியது...
தேடலின் இறுதியில் நான்கு புடவைகளை எடுத்திருந்தான்...

"பிடிச்சிருக்கா ஜாஸ்..."

"ம்ம்ம் ரொம்ப.." என்றாள் அவன் கண்களை பார்த்தபடி...

"நான் சாரிய கேட்டேன்..."

"நானும் அத தான் சொன்னேன்..."

"பார்வை அப்படி தெரியலையே..." என்க அவளோ எதுவும் சொல்லவில்லை வெறுமனே உதடுகளை பிதுக்கினாள்...

புடவை தேடுகிறேன் என்ற பெயரில் இரண்டு காதல் புறக்களும் கடலை வருத்துகொண்டிருந்தது..

"அதுசரி... வாக்கு தந்தது போல சரியா புடவை எடுக்க வந்தனே.. எனக்கு என்ன தருவ..."

"என்னையே தருவேனே..." என்று மீண்டும் அவனை அதிர வைத்திருந்தாள் அவன் மனைவி...

"ஒரே சொல்லுல என்ன வாயடைக்க வைக்க உன்னால மட்டும் தான்டி முடியும்... கல்யாணம் வரைக்கும் தனியா மாட்டிடாதடி ஏடாகூடமா ஏதும் பண்ணிடுவேன்னு பயமா இருக்கு.." என்றாள் கண்களில் அவளுக்கான மயக்கத்துடன்...

"யாரு நீ..." என அவனை ஒரு பார்வை பார்த்து, "நீயெல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்ட ராசா...." என்று நக்கலாக சொன்னவள், அந்த பையனிடம் பில் போட கொடுத்து வாசுகியிடம் சென்றிருந்தாள்...

"கிரேட் இன்சல்ட்டா நிலவா... புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்..." என்று முனுமுனுத்தவன்

"அவ என்ன புள்ள பூச்சியா??.. இருந்தாலும் உனக்கு ஓவர் தைரியம் தான்..." என்று மீண்டும் அதற்கு எதிர் மாறாய் எண்ணிகொண்டவன் அவளை பின்தொடர்ந்தான் ...




அடுத்த நாள் மாலை ஐந்து மணி....

அந்த இருட்டு அறையில் மயங்கி கிடந்த அதிரலுக்கு மெல்ல சுயநினைவு வர தொடங்கியது.... மனதில் என்ன என்ற கேள்வியோடு மெல்ல கண்களை இமை தட்டி திறந்தவளுக்கு இருட்டே விடையாய் கிடைத்தது... இரண்டு மூன்று முறை கண்களை மூடி திறக்க இருட்டு ஓரளவுக்கு பழக்கமாகியது...

அந்த அறையில் அவளை தவிர யாரும் இருக்கவில்லை... கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தது.... அவள் அணிந்திருந்த அந்த மஞ்சள் புடவை அவளை போலவே வேர்வையில் குளித்திருந்தது... சில மணி நேரத்துக்கு முன் தலையில் வைத்திருந்த பூவோ அவள் மனதை போல வாடாமல் தலைவனுக்காய் காத்திருந்தது.. யாரோ வருவது போல் சத்தம் கேட்க, மனதை திடப்படுத்திக்கொண்டாள்...


அவளுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தை கணக்கிட்டு, அவளை அடைத்து வைத்திருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான் ஜேகே...

நேரே அவள் அருகில் சென்று, வாயில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டரை அகற்றியவன்.. வெளிச்சத்தை படரவிட்டு அவளை பார்தான்...

திடீரென தோன்றிய வெளிச்சத்தில் கண்களை ஒருமுறை மூடி திறந்தவள் "நீயா" என்ற கேள்வியுடன் அதிர்ச்சியாய் அவனை பார்க்க..

"எப்படி இருக்கீங்க மிஸ் அதிரல்... சாரி சாரி மிஸிஸ் நிலவன்..." என்றான் நக்கலாக

"நீ எதுக்கு என்ன கடத்தி இருக்க..." என்று தைரியமாக தான் கேட்டாள்....

"ம்ம்ம்ம் தைரியம்... அதுவும் மிஸ்டர் வண்ண நிலவனோட வைபுக்கு இந்தளவு தைரியம் எதிர்பாக்க கூடியது தான்... ஆனா என்ன பண்றது வீணா சாக போறியே.. எனக்கு ஜென்ம எதிரியான அவன அழிக்க மாட்டேன்... ஆனா ஓட விடுவேன்.. இவ்வளவு நாள் என்ன தேடி ஓடினான்.. இனிமேல் வாழ்க்கை பூரா உன்னயும் தேடி ஒடப்போறான்..."

"ஜென்ம எதிரியா? உனக்கா?..." என்று அவள் அடுத்த அதிர்ச்சியுடன் சந்தேகமாக வினவ...

"என்ன யாருனு நெனச்ச... நான் தி கிரேட் ஜெகதீஸ்வரகிருஷ்ணன்.. மருத்துவ உலகத்தோட அரசன்..." என்று அந்த அறை அதிர கத்தி இருந்தான்...

"இவனா ஜேகே.." என்று அதிரல் மனதுக்குள் வியப்புடன் எண்ணிக்கொண்டாள்....



எப்படி நிலவனையும் மீறி அதிரல் ஜேகேவினால் கடத்தப்படிருப்பாள்?..

அதிரலுக்கு ஏற்கனவே தெரிந்த ஒருவர் என்றால் அந்த ஜேகே யாராக இருக்க கூடும்.?...

நிலவனின் கூட்டத்தில் இருக்கும் அந்த உருவம் யாரோ??...

நிலவன் எப்படி அந்த உருவத்தை கண்டறிந்து... தன் காதலை காப்பானோ?.....


ஜாதி மல்லி மலரும்........

கருத்து திரி 👇👇👇

inbound3413142159884590664.jpg








 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 26


"என்னடா நிலவா சாரி செலெக்ஷன் முடிஞ்சிதா?... மேல பட்டு வேட்டி எடுக்க அப்பா,கார்த்தி, புகழ் எல்லாரும் போயிருக்காங்க... நீயும் போய் பாரு..." என்றார் வாசுகி நிலவனிடம்...

"அதெல்லாம் எடுத்தாச்சு மா.." என்றவன் தாயின் சொல்லுக்கிணங்க மேலே சென்றான்... அப்போது அவனது செல் சிணுங்க.. எடுத்து காதில் வைத்தபடி படியேற..

"ஏண்டா சண்டாள பாவி... ஊர்ல சிவனேன்னு இருந்தவன போன் போட்டு வர சொல்லிட்டு... நீ எங்க போய் தொலைஞ்ச... நாலு மணி நேரமா உன் விட்டு வாசல்லயே பிடிச்சி வச்ச பிள்ளையார் கணக்கா உக்காந்திருக்கேன்டா.." என்ற விஷ்னு மேலும் சில பல நல்ல வார்த்தைகளால் அந்தப்பக்கம் கத்திகொண்டிருக்க நிலவனோ, தொலைபேசியை காதிலிருந்து சிறிது தூரம் தள்ளி இருந்தான்...

"டேய்... டேய் நிறுத்து.. இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவோம்.. அப்படியே உக்காந்துக்கோ..." என்றவன் அந்த பக்கம் பதில் சொல்லும் முன் அழைப்பை துண்டித்திருந்தான்...

விஷ்னுவுடன் பேசி சரியாக அரை மணி நேரத்தின் பின்னர் தான் அவர்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்தனர்....

அங்கே விஷ்னுவோ உக்கார்ந்த படியே தூங்கியும் இருந்தான்... அவன் அருகில் நிஷா அமர்ந்திருந்தாள்...

அவர்கள் அருகில் வந்த நிலவன் நிஷாவிடம் பேசவேண்டாம் என சைகை காட்டி "அடேய் விஷ்னு பையா" என்று அவன் காதினுள் கத்த, அதன் பின் அங்கே குட்டி கலவரமே உருவானது....

உருண்டு பிரண்டு சண்டைக்கு பின்னே இருவரும் ஆசுவாசம் அடைய... மொத்த குடும்பமும் உள்ளே சென்றிருந்தது...

"மனுஷனாடா நீயெல்லாம்.. வந்ததே லேட்.. இதில தூங்குனவன கத்தி எழுப்பிடியே... நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட"

"ஹிஹி.. உன்ன ரொம்ப நாளைக்கப்பறம் பார்த்த சந்தோசம்னு வெச்சுக்கோயேன்..."

"அது ஒன்னுதான் கொறச்சல், வந்தவன வீட்டுக்குள்ள கூப்பிட்டியாடா நீ..."

"கோச்சுக்கமா வாடா... வந்ததுல இருந்து பொறிஞ்சிட்டே இருக்க" என்று எழுந்தவன் அவன் எழ கைகொடுத்து தூக்கியும் விட்டான்...



"அதி... மாங்கல்யத்த கொடுடா... நாளைக்கு நானும் மாமாவும் ஊருக்கு போறோம் அப்படியே குலதெய்வ கோவிலுக்கு போய் உன்னோடதையும் பூஜாவோடத்தையும் குடுத்து அர்ச்சனா பண்ணிட்டு வரணும்..." என்றதும் அவள் தயங்க..

அவளை சாமி அறை முன் நிற்க வைத்தவர் "ஏன் தயங்குற.. உன் தாலிய எல்லாம் நான் பறிச்சுக்கல.. மஞ்சள் கயிற கட்டிட்டு அத குடுத்தா போதும்டா..." என்றார் அவள் தயக்கத்தை உணர்ந்து...

அந்த நேரம் நிலவனும் வர "நிலவா இங்க வா.." என்று அழைத்தவர் அவன் கைகளாலேயே மஞ்சள் கயிறை கட்ட வைத்திருந்தார்.. முதல் முறை தான் தாலி கட்டியதும் அவளை பிரிந்து தவித்தான் என்றால், இந்த முறையும் அவளை பிரிந்து தவிக்கவே போகிறான் என்பது தான் அவன் விதி...

அவனோ தாலியை கட்டியபடி அவள் காதில்.. "முதல் தடவ தாலி கட்டியும் முதலிரவு நடக்காமலே போயிடிச்சு... ரெண்டாவது முறையா தாலி கட்டுறேனே அதுக்கு வாய்ப்பு உண்டாடி பொண்டாட்டி..."

"நமக்குள்ள கசமுசா நடக்குறதுல உங்க முதல் பொண்டாட்டிக்கு சம்மதமான்னு பர்ஸ்ட் கேளுங்க ஏசிபி சார்..." என்றாள் அவளும் மெல்லிய குரலில்..

"முதல் பொண்டாட்டி கொஞ்சம் ராங்கி... ஒத்துப்பாளோ தெரியாதே..."

"அப்போ நீங்க கேட்டது நடக்குறதும் டவுட்டு தான்..."

"என்னவோ போ நிலவா.. உனக்கு நாலாவது பொண்டாட்டி கூடத்தான் முதலிரவு நடக்கும் போலிருக்கு... உனக்கு குடுத்து வெச்சது அவ்வளவு தான்" என்றவன் மூனு முடிச்சையும் போட்டு முடித்திருந்தான்...

"நாலாவதா.. அது யாரு??..." என்று அவள் முறைக்க...

"ஹிஹி.. நல்லா யோசிங்க மேடம்... இப்போ நடந்தது மூனாவது கல்யாணம்... நீங்க மூனாவது பொண்டாட்டி..." என்று கண் சிமிட்ட அவளுக்கு புரியவில்லை... எப்படி? என்று யோசிக்கவே ஆரம்பித்துவிட்டாள்..

"டேய் டேய் சிங்கள்ஸ் சாபம் உன்ன சும்மா விடாதுடா.. இங்க ஒருத்தன் ஒரு கல்யாணத்துக்கே வழி இல்லாம இருக்கான்... நீ ரெண்டாவது மூனாவதுன்னு லைன்ல போறியே உனக்கே நியாயமா இருக்கா??..." என்று புகழ் பேசி முடிக்க

கார்த்தியோ, "பொங்குனது போதும் சோடா குடி மச்சான்..." என்று அவன் கையில் கோலி சோடாவை வைக்க..

"அவன் இந்த பக்கம் தாலி கட்டும் போதே நீ அந்த பக்கம் கிளாஸ்க்குள்ள தண்ணி எடுத்து குதிச்சு தற்கொல பண்ணி இருக்கணும்... நீ அவனுக்கு அண்ணன் டா எரும மாடே..."

"நீ சொல்றது வாஸ்தவம் தான்டா புகழ்.. ஆனா எனக்குதான் ஆள் இருக்கே... இன்னும் டு வீக்ஸ்ல கல்யாணமும் கூட... ஆனா பாரு உனக்கு தான் ரெண்டும் இல்ல..."

"நீ வேற ஏண்டா அதயே ஞாபகப்படுத்துற நெஞ்சே புண்ணா கிடைக்கு..."

"புண் பட்ட நெஞ்ச.. சோடா குடுச்சு ஆத்து மச்சான்... நான் என் பொண்டாட்டி கூட பேசப்போறேன் சத்தம் வராம ஆத்து.." என்று நிலவன் அதிரல் தோள் மேல் கை போட்டபடி மேலும் வெறுப்பேற்ற

"ஐயோ படுத்துறானே... என்ன தேட வேண்டாம்னு எழுதி வெச்சிட்டு நாட்ட விட்டே ஓட போறேன் பாரேன்..."

"அங்கையும் தனியா தான் ஓடணும் புகழ்ணா.." என்றாள் பூஜா

"நீயுமாடா பூஜா..." என்று புகழ் அவள் பக்கம் திரும்ப சிரிப்பலை தான் அங்கே...

"விளையாடுனது போதும் சாப்பிட வாங்க எல்லாரும்..." என்று வாசுகி மொத்தமாய் ஆட்டத்தை கலைத்திருந்தார்...

திருமண விடயத்தில் இந்த கேஸ் சம்மந்தப்பட்ட எதையும் உள்ளே கொண்டு வர கூடாது என்பதில் நிலவன் உறுதியாய் தான் இருந்தான்... ஓரளவுக்கு அவனால் முடிந்தளவு இரண்டையும் சமனாகவே கொண்டு செல்ல முயல்கிறான்... ஆனால் அவன் ஜாஸ்மின் இல்லாமல் அந்த சமநிலை உடைய காத்திருந்தது...



சரியாக பதினொருமணி.. மூன்று வருடங்களுக்கு முன் அன்று அவன் பிறந்தாளுக்கு அவள் அணிந்திருந்த புடவையை தான் இன்றும் அணிந்து கொண்டாள்....

தயாராகி முடிந்ததும் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்து, "அழகா இருக்கடி அதி..." என்று தன்னை தானே கிள்ளி முத்தமிட்டு கொண்டவள் மனமோ, தன்னவன் தன்னை இந்த கோலத்தில் பார்க்கும் போது அவன் கண்ணில் தெரியும் அளவு கடந்த காதலுக்காக காத்திருந்தது...

வெளியே பூனை பதுங்கி பதுங்கி வந்தவளை பின்னிருந்து யாரோ கையை பிடித்து நிறுத்த, அவளோ நாக்கை கடித்தபடி திரும்பி பார்க்க அங்கே பூஜா

"என்ன மெண்டர் மேடம் அர்த்தராத்திரில இந்த எக்ஸஸ் அழகோட எங்க போறீங்க.."

"வீட்டுக்கு போறேன் பூஜா..." என்றவளுக்கு பொய் கூட ஒழுங்காக வரவில்லை...

"நம்பிட்டேன் நம்பிட்டேன்..." என்று அவள் கைகளை விட அதிரலோ தயங்கியபடியே வாசல் வரை சென்றாள்..

"என்ன அதி... என்னோட பழைய வீட்ட பத்தி எல்லாம் கேட்டுட்டு கீ வங்காம போற..." என்ற பூஜாவின் குரல் அவளை நிறுத்தியது... மாட்டிக்கொண்டது போல் முழித்தாள்..

அவளருகில் வந்த பூஜாவோ, "அடியேய் ரியாக்ஷன மாத்துடி.. நீ உன் புருஷன தான் பாக்க போற.. ஏதோ காதலன ரகசியமா பாக்க போறது போல பண்ணிட்டு இருக்க.." என்று சொன்னவள் வீட்டு திறப்பை அவள் கையில் வைத்திருந்தாள்..

"அங்க வாட்ச் மேன் கிட்ட சொல்லிட்டேன் அவரு இன்னைக்கு ஈவினிங்கே வீட்டுக்கு போய்ட்டாரு... மெயிட்ஸ் யாரும் வரமாட்டாங்க.. என்ஜோய் யுவர் டேய்..."

"உனக்கெப்படி..."

"முச பிடிக்கிற நாய மூஞ்சில பாத்தா தெரியாதா??..."

"பூஜா.." என்றாள் சிணுங்களுடன்...

"ஓகே ஓகே.. நேத்து நீ அந்த வீட்ட பாக்கணும்னு கேட்டதும்.. நிலவனோட பர்த்டேயும் சேர்த்து கனெக்ட் பண்ணி பார்த்தேன்.. புரிஞ்சிடிச்சு... நானும் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைய பெத்தவ தான்டி.." என்று முடிக்க அதிரல் முகத்தில் ஏகத்துக்கும் வெக்கம்..

மீண்டும் பூஜாவே, "நிலவன் உன்ன பிரிஞ்சு ரொம்ப கஷ்ட பட்டுட்டான் அதி... நீ இல்லாத இந்த மூனு வருஷம் ஒவ்வொரு பர்த்டேக்கும் அந்த வீட்டு ஸ்விம்மிங் பூல் பக்கத்துல தான் போய் உக்காந்துக்குவான்.. வெளில கட்டிக்கலனானும் உன்ன ரொம்பவே மிஸ் பண்ணினான்... இனிமேல் அவன நீதான் பாத்துக்கணும்... ஓகே டைம் ஆகுது பாரு நீ போ..." என்று அவளை அனுப்பி வைத்தவள் மனதில் எந்த பிரச்சனையும் வராமல் இவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் தான்... ஆனால் கடவுள் அவளுடைய அந்த வேண்டுதலை ஏற்றுக்கொள்ளாமல் போனது தான் விதி...


மணி சரியாக பதினொன்று முப்பதை தொட்டிருந்தது.. நிலவனின் அறைக்குள் நுழைந்து கொண்டவள்.. ஒரு பக்கமாக சரிந்து படுத்திருக்கும் நிலவனின் கண்களை ஒரு துணி கொண்டு கட்ட,

கட்டியது மட்டும் தான் நினைவில் இருந்தது... எப்போது அவன் கீழே அவள் வந்தாள் என்றே உணராத அளவுக்கு வேகத்தில் அவளை அவன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருந்தவன், கண்ணில் இருக்கும் துணியை அவிழ்க்க முனைய அவன் கைகளை பிடித்து கொண்டாள்

கண்ணை கட்டும் போதே போலீஸாக முழித்துக்கொண்டவனோ யாரோ என நினைத்து தான் வளைத்து பிடித்திருந்தான்... ஆனால் அதன் பின்னனா அவள் ஸ்பரிசம் தன்னவள் தான் என்பதை உணர்த்தியது.

"நிலவா நான் தான்.. துணிய எடுத்துடாத..." என்றவளது கழுத்தில் முகம் புதைத்து சவகாசமாக படுத்துக்கொண்டான்...

கழுத்தோரம் அவன் மூச்சுக்காற்று அவளை எங்கோ அழைத்து சென்றிருந்தது... அந்த உணர்வின் பிடியில் அவனோடு ஒன்றியவளுக்கு நிதர்சனம் புரிய.. "மூன் இட்ஸ் கெட்டிங் லேட்.. எந்திரி.. ஒரு இடத்துக்கு போகணும்..."

"ம்ம்ம்ம்.. போகலாமே.." என்றவன் எழும்பும் எண்ணமின்றி மீண்டும் அவளுள் புதைந்து "என்னடி பூ எல்லாம் வெச்சிருக்க..." என்றான் வாசம் பிடித்தபடி...

பலம் கொண்டு அவனை அசைத்தும் முடியாமல் "ப்ளீஸ் என் பட்டுல எழுந்துக்கோடா போகலாம்.." என்று செல்லம் கொஞ்சுபவளிடம் மறுக்க தோன்றாமல் அவன் எழுந்து கொள்ள, தொடர்ந்தது அவர்கள் பயணம்...

அதிரல் தான் கார் ஓட்டிக்கொண்டு வந்தாள்... அவளும் எங்கே என்று சொல்லவில்லை அவனும் கேட்கவில்லை...

நேரே பூஜாவின் வீட்டின் முன் தான் கார் நின்றது.. அவளும் இறங்கி அவனையும் இறங்க வைத்தவள், காரினுள்ளே வைத்த பெட்டி ஒன்றையும் எடுத்து கொண்டாள்..

வீட்டின் முன் கதவை திறந்து அவன் கைபிடித்து உள்ளே அழைத்துச்செல்ல, அவனோ சட்டென்று அவளை கைகளில் அள்ளிக்கொண்டான்...

"டேய் டேய்... என்னடா பண்ற.. விழ போறோம் பாரு..." என்றாள் எங்கே விழுந்து விடுவோமா என்ற பயத்தில்..

"என்ன பண்றது நீதான் என்ன தூக்கி இருக்கனும்.. சர்ப்ரைஸ் பண்ணுறவங்க கண்ண கட்டினா மட்டும் போதாது தூக்கிட்டும் போகணும்.. சர்பிரைஸோட பேசிக் ரூல்ஸ் தெரியலையேமா உனக்கு..." என்றவன் கொடுத்த விளக்கத்தில் இவள் தான் முழிக்க வேண்டி இருந்தது..

"நிலவா லெப்ட் சைட்..." என்று அவள் வழி சொல்ல அவனும் அதன் படியே சென்று சரியான இடத்துக்கே வந்திருந்தான்...

"இறக்கி விடு நிலவா..."

"முடியாது என்னடி பண்ணுவ.." என்று அவள் நெற்றியில் முத்தம் பதித்தவன் சற்று கீழிறங்கி மூக்கொடு மூக்குரச..

"உன்ன இப்படியே கட்டிக்குவேன்..." என்றவள் அவன் கழுத்தோடு கையிட்டு கட்டிக்கொள்ள... அதிர்ந்த நிலவனோ அவள் உச்சந்தலையில் முத்தமிட்டவன் அவளை கீழே இறங்கி விட்டிருந்தான்...

"பாத்தியா எப்படி என் டிரீட்மென்ட்.. வழிக்கு வந்தியா..." என்று கேட்டப்படி அவனை அங்குள்ள இருக்கை ஒன்றில் அமர வைத்தவள்...

"நான் வர்ற வரைக்கும் அப்படியே உக்காந்துக்கோ.." என்றவள் சொல்லி சென்ற சிறிது நேரத்திலே அமர்ந்திருந்தவனின் மடியில் பாரம்.. வேறு என்ன அவன் மனைவி தான் வந்து அமர்ந்திருந்தாள்...

ஒரு பக்கமாய் அவனை பார்த்தபடி அமர்ந்தவள் "மேனி மோர் ஹாப்பி ரிடன்ஸ் ஒப் தி டே மை டியர் மூன்..." என்று கண்ணில் இருந்த துணியை எடுக்க.. நிலவனின் கண்களோ அதிர்ச்சியில் விரிந்திருந்தது...

அவனுக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை... அன்று அவன் ஆசையாய் அவளை முத்தமிட்ட நீச்சல் தடாகம் இன்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.. அதன் அருகில் சிறிதாய் ஒரு மேசையில் கேக் ஒன்று வைக்கப்பட்டு, வெளிச்சத்துக்கு ஆங்காங்கே மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு பார்ப்பதற்கே அத்தனை அழகாய் இருந்தது அந்த இடம்... அவற்றையும் தாண்டி அவனுக்கு பிடித்த கறுப்பு புடவை அணிந்து மடியில் அவன் தேவதை... கூடவே அவள் தலையில் ஜாதி மல்லி பூவும், அவர்களை ஆசீர்வதிக்க வானில் தங்கமாய் ஜொலிக்கும் வெண்ணிலாவும்.. இதை விட வேறு என்ன வேண்டும் நிலவனுக்கு...

"பிடிச்சிருக்கா நிலவா.." என்றாள் கண்ணில் எதிர்பார்ப்புடன்.. அவன் மனநிறைவை, சந்தோசத்தை வார்த்தைகளால் சொல்லி விட முடியுமா என்ன?... அவள் கன்னத்தை இரு கைகளாலும் தங்கி அவள் கண்களோடு கண்களை கலக்க விட்டபடி சிறிதும் தாமதிக்காமல் அவள் இதழ்களை அவன் இதழ் என்னும் சிறையில் அடைத்துக்கொண்டான்...

முத்த யுத்தம் முடிவு பெற போராளிகள் இருவருக்கும் விருப்பம் இருக்கவில்லையோ என்னவோ?.. நீயா நானா என்பது போல் போட்டி நீண்டு கொண்டே தான் சென்றது..

அவள் கன்னத்தை பற்றிக்கொண்டிருந்த அவன் காரமோ மெல்ல கீழிறங்கி அவள் வளைவுகளை சோதிக்கத்தொடங்கியது.. வழமையாக அவளிடம் இருக்கும் எதிர்ப்பு இன்று துளியும் இல்லை... அந்த நேரத்தில் உணர்ச்சியின் பிடியில் நிலவன் அதனை கவனிக்க தவறியும் இருந்தான்.

அவன் கேசத்துக்குள் நுழைந்து ஆதிக்கத்தை உணர்த்திய அவளது கரங்களோ, மெல்ல கீழிறங்கி அவன் ஒற்றை கையை பற்றி அவள் இடையோடு இருக்கிக்கொண்டது... வழமைக்கும் மாற்றமான அவள் ஒத்துழைப்பு நிலவனுக்கு சற்று சந்தேகத்தை கொடுக்க சட்டென்று அவளை விட்டு விலகினான்...

"என்ன நிலவா..." என்றாள் அவனது விலகலை உணர்ந்து..


"நத்திங் டி.." என்று இடம் வலமாய் தலையாட்டியவன்...

"தேங்க் யூ சோ மச் டி.. இந்த பர்த்டே என் லைப்ல மறக்க மாட்டேன்... வா கேக் கட் பண்ணுவோம்..." என்று அவளையும் கேக் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அழைத்து சென்று கேக் வெட்டி அவளுக்கு ஊட்டி விட்டவன்... "எங்கடி கிப்ட்டயே கண்ணுல கட்டமாட்டேங்கிற கஞ்சூஸ் ஆகிட்டியா என்ன?..."

அவளோ அவள் கையை அவனை நோக்கி நீட்ட.. அதிலோ பரிசு பொருளுக்கு மேலே கட்டும் பட்டி கட்டப்பட்டிருக்க அவனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை... சிரித்தபடியே "என்னடி விளையாடுறியா?... சாவடிச்சிடுவேன் உன்ன.."

"நோ நிலவா ஐ எம் சீரியஸ்... நான் தான் உன்னோட கிப்ட்.. உன் இஷ்டப்படி என்ன என்ன வேணாலும் பண்ணிக்கலாம்..."

"பைத்தியம் போல உளராத அதி... வா வீட்டுக்கு போவோம்..." என்றவனுக்கு அவள் நடவடிக்கையும், பேச்சின் தீவிரமும் வேறு எதையோ தான் உணர்த்தியது...

"இப்போ என்ன எடுத்துக்க முடியுமா முடியாதா?..."

"முடியாதுடி.. என்றவனுக்கு இப்போது உண்மைக்கும் கோபம் வந்தது...

"அப்போ என்மேல உனக்கு காதல் இல்ல.. ஆசை இல்ல அப்படித்தான..."

"என்ன இப்படிலாம் பேசுனா உடனே கோபத்துல உன் மேல பாய்ஞ்சிடுவேன்னு நினைப்போ... உனக்கு இன்னைக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு... வா இங்க இருந்து போவோம் முதல்ல..." என்றவன் எவ்வளவு பேசியும் அவள் விட்டுக்கொடுபதாக இல்லை...

"ஜாஸ் ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டாண்ட்... இப்படி ஒரு மைண்ட் செட்டோட நமக்குள்ள எதுவுமே நடக்க வேணாம்... அது ஒரு மெஜிகல் பீல்... எந்த வித டென்ஷணும் இல்லாம அதுவாவே நடக்கட்டுமே..." என்றான் கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில்

"ஏன் நிலவா என்ன கஷ்டப்படுத்துற... எப்பவுமே உனக்காக நம்ம காதலுக்காக நான் எதுவுமே பண்ணதில்லயே.. என்ன எடுத்துக்கோ நிலவா.. உன் டென்ஷன் எல்லாம் இல்லாம.. ஒரு ரிலாக்ஸ் பீலுக்காக எடுத்துக்கோ..."

"ஏன் டி இப்படி எல்லாம் பேசுற... நீ ஏன் நான் பண்ணேன் நீ பண்ணலனு யோசிக்கிற... நம்ம காதல் ஜாஸ் அது.. இதுல எங்க இருந்துடி கொடுக்கல் வாங்கல் வந்திச்சு.. அதையும் விட நீ எனக்காக எதுவும் பண்ணலனு யாரு சொன்னா??... உன்னோட காதல் தான்டி என்ன இப்போவரை உயிர்ப்போட வெச்சிருக்கு.. உன்னோட காதல் தான் நாம இப்போ சேர்ந்து இருக்குறதுக்கு காரணம்... உன்னோட காதல் தான் இப்போ உன்னையே எனக்கு கொடுக்ககுற அளவுக்கு யோசிக்க வெச்சிருக்கு... நீ என்னோட தேவதை டி உன்ன இப்படி பட்ட ஒரு சூழ்நிலைல எனக்கே எனக்கா எடுத்துக்க தோணலடி... நீ ஆசைப்பட்டது போல ஊர கூட்டி உங்கழுத்துல தாலி கட்டி அப்பறம் நீயே வேணான்னாலும் நானே உன்ன எடுத்துப்பேன் எனக்கே எனக்கா..." என்றவன் பேசி முடிக்க அவளிடம் மௌனம்...

விழிகள் கலங்க அவனை ஏறிட்டு பார்த்தவள்... "நான் ரொம்ப கெட்ட பொண்ணாகிட்டேன்ல.." என்று விசும்ப

அவளை அணைத்துக்கொண்டவன் "என் அதி எப்பவும் நல்ல பொண்ணு தான்... புருஷன ரொம்ப ரொம்ப லவ் பண்ணுற பொண்ணு... அவனுக்காக எதையும் பண்ணுற பொண்ணு...." என்று அவளை சமாதானப்படுத்தி நேரம் செல்லவதை உணர்ந்தவன்.. அவளை தூக்கிக்கொண்டு வீட்டினுள்ளே நுழைந்தான்...

"நாம வீட்டுக்கு போகலையா நிலவா??.."

"லேட்டாகிட்டிச்சுலடா காலைல போகலாம்..." என்று அவளை மெத்தையில் படுக்க வைத்து தானும் அருகில் படுத்துக்கொண்டவன்... அவன் தலையை அவள் வயிற்றுக்கு இடம் மாற்றி திரும்பி படுத்தான்... அவளோ அவன் கேசத்தை கைகளால் அளந்தப்படியே அவனோட பேசிகொண்டிருந்தாள்...

"ஆமா இன்னைக்கு தாலி கட்டும் போது மூனாவது கல்யாணம்னு சொன்னியே அது எப்படி... ரெண்டாவது தான?..."

"தாலி ரெண்டாவது தான் பட் கல்யாணம் மூனாவது..."

"அதான் எப்படி..."

"ரெஜிஸ்டர் மேரேஜ்.." என்று கண் சிமிட்ட

"அட ஆமால... அது சரி எப்படி எனக்கு தெரியாம என் சைன் வாங்குன..."
 
Last edited:
Status
Not open for further replies.
Top