ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 31



நள்ளிரவையும் தாண்டி விட்டது ஆனால் இன்னும் பெண்கள் கூட்டம் அரட்டையை முடித்த பாடில்லை... பேச்சின் இடையிலே ரம்யாவும் வர்ஷியும் தூங்கி இருந்தனர்..

"கீதா.. என்னமா யோசனை.. நாளைக்கு நைட் சடங்குல ஏதாச்சும் டவுட் இருந்தா கேளு.. அக்கா நான் எதுக்கு இருக்கேன்..." என்றாள் பூஜா..

"டவுட்டா எனக்கா நெவர்.. கிளாஸ்ல பிரீயா இருக்கும்போது என்ன பண்ணுவோம்னு நினைக்கிற.. டவுட் எல்லாம் கிளீயர் பண்றது தான் வேலையே.." என்று அவள் கண்ணடித்து சொன்னதில் ஆரவாரம் தான் அங்கே..

"ஸ்ஸ்ஸ் மெதுவாடி.. இருந்தாலும் ரொம்ப முன்னேற்றம் தான்... இப்ப உள்ள டுகே கிட்ஸ நம்பவே முடியாது... வெரி டேன்ஜரஸ்" என்று பூஜா சொல்ல

அங்கிருந்த இன்னொரு உறவுக்கார பெண்ணோ "அப்போ ஏன் மேடம் மேடைல வெக்கப்பட்டீங்களாம்?..." என்று கீதாவை வார..

"வெக்கம் அது வேற டிபார்ட்மென்ட்..." என்று அவள் கெத்தாய் சொன்னதில் நான்கைந்து அடிகள் விழ, அங்கே குட்டி கலவரமே உருவானது...

அதிரலோ இது எதிலும் கலந்து கொல்லாமல் ஜன்னல் அருகே நின்றிருந்தாள்.. அப்போது தான் அதனை அவதானித்த பூஜா அவள் அருகில் சென்றாள்...

"என்ன அதி இங்க தனியா நிக்கிற.. வா அங்க பேசிட்டு இருப்போம்.."

"நோ பூஜா நீங்க பேசுங்க.. நான் இங்க நிக்கிறேன்.." என்று அவள் மறுக்க..

"ஐ கேன் அன்டர்ஸ்டாண்ட் அதி.. நிலவன் பண்றது எனக்கே கொஞ்சம் ஓவர் போல தான் தோணுது... பட் அவன் பண்ணுனா கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்.. அதுவும் உன்ன அவொய்ட் பண்றான்னா நீயே யோசிச்சிக்க.." என்று சொல்ல

அதிரலோ சிரித்தபடி "ஐ நோ ஹிம் பூஜா.. பட் அவன் என்ன அவொய்ட் பண்றது என்ன விட அதிகமா அவன தான் ஹேர்ட் பண்ணும்.. அது தான் எனக்கு டிஸ்டர்ப்பா இருக்கு.."

"போய் பேசு அதி.. விடிஞ்சா கல்யாணம்.. இப்பவும் மாப்பிள்ளை முறுக்கிட்டே இருந்தா நல்லாவா இருக்கும்.. ரெண்டு அடி போடு வழிக்கு வரட்டும்..."

"எப்படி பூஜா போறது.. வெளிய அத்தன பேர் இருக்காங்க.." என்றவள் உதட்டை வளைக்க

"நாங்க எதுக்கு இருக்கோம்.. உன்ன பாட்னர் கூட பேச வைக்கிறது என் பொறுப்பு அதி..." என்றாள் பின்னால் இருந்து கீதா..

"ஆக இங்க பேசுறத ஒட்டுக்கேட்டுட்டு இருந்திருக்க கழுத.." என்று பூஜா அவள் காதை திருக..

"ஹீஹீ இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.. நானும் என் மாமா கூட பேசணும்.. சோ ஹெல்ப்க்கு ஹெல்ப் சரியா போகும்ல அந்த ஒரு நல்ல எண்ணம் தான்.."

"அதுசரி இப்போ எப்படி இத்தனை பேர தாண்டி போறது.." என்ற பூஜா லேசாக கதவை திறந்து ஹாலை எட்டி பார்க்க.. சிலர் தூங்கி இருக்க, சிலர் இன்னும் கதை பேசி கொண்டு தான் இருந்தனர்... கல்யாண வீட்டில் பேச்சுக்கா பஞ்சம்...

"இந்த பெருசு எல்லாம் கத பேசலனு யார் அழுதா.." என்று தலையில் அடித்துக்கொள்ள

"வயசானவங்க தான பேசிட்டு இருக்காங்க.. நம்ம போறது தெரியவா போகுது.. சத்தம் போடாம போயிட்டு வந்துடவா?..." என்ற அதிரலை அங்கிருந்தவர்கள் அப்பாவி போல பார்க்க..

"ஏன் என்னாச்சு.." என்றாள் புரியாமல்..

"நீ அவங்கள என்ன நினச்ச.. வயசானவங்க தான பார்க்க மாட்டாங்கனா?... எல்லாம் சிசிடிவி கேமராவையும் மிஞ்சின ஆட்கள்.. பார்க்காத மாதிரி தான் இருக்கும் ஆனா கண்ணு எல்லா பக்கமும் இருக்கும்... காது கேக்காத போல தான் இருக்கும். ஆனா நம்ம நடக்குற சத்தம் கூட கிரிஸ்டல் கிளீயரா கேட்கும்... அத்தனைக்கும் மேல அம்புட்டும் சோசியல் மீடியாவ விட பவர்புல் லேடீஸ்.. நாம இப்படிக்கா போய் வரதுக்குள்ள இங்க எல்லாருக்கும் விஷயம் பரவிடும்.." என்றாள் கீதா ஏதோ தீவிரவாதியை விபரிப்பது போல.. அவள் சொன்ன விதத்தில் அதிரலுக்கு சிரிப்பு வரவே செய்தது...

"ஓகே இதான் பிளான்.. நானும் ஹேமாவும் கிட்சனுக்கு தண்ணி எடுக்க போறோம்... அப்போ சிசிடிவி கேமரா எல்லாம் எங்கள போகஸ் பண்ணும்.. அந்த நேரம் நீயும் கீதாவும் அந்த பக்கம் போய்டணும்..." என்று அதிரலிடம் பூஜா சொல்ல.. அவளும் சரி என்பதாய் பெருவிரலை உயர்த்தி காட்டி இருந்தாள்...

"அப்போ நாங்க என்ன பண்றது.." என்று உள்ளே மிச்சமாய் இருந்த பெண்களில் ஒருத்தி ஆர்வமாய் கேட்க..

பூஜாவோ தலையில் கை வைத்தபடி "உங்கள எல்லாம் மேய்க்கிறதுக்கு எருமைய மேய்க்கலாம் போலடி... மூடிட்டு இங்கயே இருங்க வந்துடுறோம்..." என்று கதவியில் கை வைக்க போக

"பூஜா.. நிலவன் கெஸ்ட் ஹவுஸ் போயிருந்தா என்ன பண்றது?..." என்றாள் அவசரமாக

"இது ஒரு நல்ல கேள்வி.." என்று கீதா சொல்ல

பூஜா ஸ்லோ மோஷனில் திரும்பிவள்
"வாய்ப்பிருக்கு... ம்ம்ம் என்ன பண்ணலாம்.. நான் ராமுக்கு கால் பண்ணுறேன் இரு..." என்றவள் அவனுக்கு அழைக்க அழைப்பு சென்று கொண்டிருந்தது ஆனால் எடுக்கப்படவில்லை..

"இந்த எரும போன எடுக்காம என்ன பண்ணுது..." என்றவள் மீண்டும் அழைக்க.. இந்த முறை அந்தப்பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது...

"ராம்.. அங்க உங்ககூட நிலவன் இருக்கானா?.."

"பூஜாமா நான் கார்த்தி பேசுறேன் டா.. ராம் தூங்குறான்... நிலவன் அங்க கெஸ்ட் ஹவுஸ்ல டா... ஏதாச்சும் வேணுமாடா?..."

"இல்ல கார்த்தி ணா.. அதி நிலவன் கூட பேசணுமாம் அதான் எங்க இருக்கான்னு செக் பண்ண கேட்டேன்.."

"ஓகேடா.. அங்க கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கான் போய் பார்க்க சொல்லு... என்று நிறுத்தியவன்.. சிறு தயக்கத்தின் பின்.. "கீதா இருக்காளாடா அங்க?.." என்க

பூஜாவோ சிரித்தபடி "இருக்காளே.." என்றாள் இழுவையுடன்..

"கொஞ்சம் கார்டன் பக்கம் வர சொல்லுறியாடா??..."

"ஓகே ணா சொல்லிடுறேன்..." என்று பேசி அழைப்பை துண்டித்தவளை கீதாவும் அதிரலும் ஆர்வமாய் பார்த்தனர்...

"உன் ஆளு கெஸ்ட் ஹவுஸ்ல தானாம்.. என்று அதிரலிடம் சொன்னவள்...

கீதாவிடம் "உன் ஆளு தூங்க போராறாம் டிஸ்டர்ப் பண்ண வேணாமாம்.." என்றாள்.. அவளுக்கோ மூஞ்சி சுருங்கி போக...

"ஹாஹா... உடனே சார்ஜ் குறையிது.. உன்ன கார்டன் வரட்டுமாம்.. இப்போ ஹாப்பி.." என்க அவளும் புன்னகைத்தாள்..



சரியாக அரை மணி நேரம் கழித்து கீதா பதுங்கி பதுங்கி கார்டன் பக்கம் செல்ல, அங்கிருந்து ஒரு கை அவளை இழுத்து அணைத்துக்கொண்டது..

"என்னங்க மேடம் இந்த பக்கம்.."

"யாரோ ஒருத்தர் ரொம்ப ஏங்கி போய் பார்க்கணும்னு வர சொன்னாறாமே.. அதான் பாவம் போனா போகட்டும்னு வந்தேன்..." என்றாள் அவன் அணைப்பில் வாகாய் நுழைந்தபடி...

"ம்ம்ம்ம்.. ரொம்ப ரொம்ப ஏங்கி போய் இருக்கேன்... என்றவன் அணைப்பு இன்னும் இறுக..

"யாரோ சொன்னாங்க படிச்சு முடிக்கிற வர ஒன்னுமில்லனு... இப்போ அவங்களே இவ்வளவு இறுக்கமா கட்டி பிடிச்சிருக்காங்க..."

"எவன் சொன்னான்.. லூசு பையன்.. இவ்வளவு அழகான பொண்டாட்டிய வெச்சிட்டு எவனாவது சும்மா இருப்பானா???... இன்னைக்கு புடவைல மாமன் மனச அள்ளிட்டடி ராட்சசி.." என்றவன் அவள் கன்னத்தை கடித்தான்..

"ஸ்ஸ்ஸ் வலிக்குது மாமா..."

"நல்லா வலிக்கட்டும் வயசு பையன் மனச கெடுத்துட்டல்ல.. உன்ன அங்க மேடைலயே கட்டிக்கணும்னு தோணிச்சு தெரியுமா அவ்வளவு அழகா இருந்த... இவ்வளவு அழக எங்கடி ஒளிச்சு வெச்சிருந்த?..."

"அதெல்லாம் இங்கயே தான் இருக்கு உன் கண்ணுக்கு தெரியல அவ்வளவு தான்..." என்று அவள் முறுக்கிக்கொள்ள.. அவனோ முத்தமிட்டு சமாதானம் செய்திருந்தான்...

அங்கே கீழே அந்த புல்லில் அமர்ந்தவன் அவளை மடியில் இருத்தி கொண்டு "இதுக்கு தான்டி.. இப்போ கல்யாணம் வேணான்னு தலைப்பாடா அடிச்சிகிட்டேன்.. எங்க கேட்டீங்க??.. சந்தர்ப்பமும் உங்களுக்கு ஏத்த மாதிரியே அமஞ்சிடிச்சு.. இப்போ என் நிலைமை.. நீ படிச்சு முடிக்கிற வர எப்படி நல்லவனா இருக்க போறேனோ??..." என்று புலம்ப..

"புலம்பாத மாமா.. நான் பேபியையும் படிப்பையும் சேர்த்து பாத்துப்பேன்... நீ கவல படாத.." என்று நம்பிக்கை கொடுக்க..

"நீ ஒருத்தி போதும்டி.. இப்படி பேசி பேசியே என் முடிவ மாத்திடுவ.. பட் இந்த விசயத்துல நான் ஸ்ட்ரிக்டா தான் இருப்..." என்றவனின் மீதி வார்த்தையை அவள் இதழ் விழுங்கிகொண்டது...

அதன் பின் எங்கே அவன் உறுதி செல்லுபடி ஆக.. தள்ளுபடி தான் ஆனது....




அங்கே அதிரலோ, கீதா கார்டன் பக்கம் போவதை பார்த்திருந்தவள்.. அவள் சென்றதும் நிலவனை காண சென்றாள்...

அங்கே முன் கதவு பூட்டி இருக்க.. இது அவன் வேலை தான் என்பதும் புரிந்து தான் இருந்தது... சுற்றி வீட்டின் மற்ற பக்கம் வந்தாள்..

சரியாக அவன் அறையின் பின் பக்க ஜன்னலை திறக்கச்செல்ல அதிலோ ஏதோ இருப்பது போல் தெரிய.. தன் தொலைபேசியில் வெளிச்சத்தை படர விட்டாள்..

அங்கே ஒரு காகிதத்தில் "இன்னைக்கு மட்டும் என்ன விட்டுடு ஜாஸ்.. நாளைக்கு பேசிக்கலாம்.. இப்படிக்கு உன் மூன்.." என்று எழுதி இருந்தது...

"இடியட்.. வேணும்னே பன்றான்.." என்று அவனை திட்டியவளுக்கு லேசாக கண் கலங்கவே செய்தது.. பேசிவிடலாம் என்று அத்தனை ஆசையாய் வந்தாளே..

இனி அவன் பேச்சை மீறி உள்ளே செல்லவும் மனம் இடம் கொடுக்கவில்லை... கண்களை துடைத்தவள் வந்த வழியே திரும்பி நடக்க தொடங்கினாள்...

இத்தனை நேரமும் அவனும் தூங்கவில்லை அவளையே தான் உள்ளிருந்து பார்த்திருந்தான்... உள்ளே வெளிச்சம் படர விட்டிருந்ததில் இவள் வந்தது தெரிந்தது..

அதிலும் அவள் கண்களை துடைத்தபடி திரும்பி சென்றது கூட நிழல் உருவாமாக தெரியவே செய்தது... அதன் பின்னும் பொறுப்பானா என்ன?..

அவசரமாக வெளியே வந்தவன்.. அவளை நெருங்கி பின்னிருந்தே தைத்தாங்கலாக அவளை தூக்கி இருந்தான்...

"விடு என்ன விடு... அதான் பேச விருப்பம் இல்லல விடு.. என்ன விடு.." என்று அழுகையினூடே அவள் திமிர... அவன் எதுவும் பேசவில்லை.. நேரே அறைக்கு தூக்கி வந்தவன் கீழே விட்டது தான் தாமதம்.. இறுக்கி அணைத்திருந்தான் அவளை...

வழமை போல் அந்த அணைப்பில் மென்மை இருக்கவில்லை.. வன்மையான ஒரு அணைப்பு... நேரம் செல்ல செல்ல அணைப்பு வன்மை கூடியதே தவிர குறையவே இல்லை...

ஒரு கட்டத்தில் அதிரலுக்கு உடல் வலிக்கவே செய்தது... ஆனாலும் அவனுக்காய் தன்னை கொடுத்து நின்றிருந்தாள்...

ஆனால் அவனோ விடுவது போல் இல்லை.. அடுத்த நொடியே உலகம் அழியபோகிறது என்கிற ரீதியில் அவளை விடாமல் தன்வசம் வைத்திருந்தான்...

அத்தனை நேரம் பொறுமையாய் இருந்தவள்.. அவள் கழுத்தோரம் சூடான ஈரத்தை உணர்ந்ததும் தன்னவன் அழுகிறான் என்பது புரிய அவனை வலுகட்டாயமாக பிரிக்க முயன்றும் முடியாமல் தான் போனதில் வலியில் "ஸ்ஸ்ஸ்ஸ்" என்பதாய் மெல்லிய சத்தம் எழுப்பினாள்..

இத்தனை பலம் கொண்டு தள்ளியும் அவனை அசைக்க முடியவில்லை...
ஆனால் அந்த மெல்லிய வலியில் முணங்கும் சத்தம் அந்த வேலையை சரியாக செய்திருந்தது.. அவனை அவளை விட்டு விலக்கி இருந்தது...

"சாரிடி சாரிடி ரொம்ப வலிச்சுடுச்சா..." என்று அவள் முகம் பார்த்து கேட்டவன் கண்களில் உருண்டோடிய கண்ணீர் அவள் கண்ணீலும் கண்ணீரை வரவழைத்திருந்தது..

தன் அணைப்பின் வலியில் வந்த கண்ணீரோ என எண்ணியவனோ "இதுக்கு தான்டி உன்ன பார்த்தாலும் பேசாம விலகி விலகி போனேன்... நான் இருக்குற நிலைமைக்கு உன்ன ஹேர்ட் பண்ணிடுவேனோன்னு தான் உன்ன விட்டு என்ன நானே ஒதுக்கிகிட்டேன்.... செத்துட்டேன்டி, உன்ன அந்த நிலமைல பார்த்ததும்... மூச்சு பேச்சில்லாம நீ படுத்திருந்த நான் நடமாடினேன் அவ்வளவு தான் வித்தியாசம்...." என்றவன் அங்கிருந்த மெத்தையில் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்... சிறிது நேரம் பேசவில்லை மௌனம் அவனிடம்..

அவன் அருகில் சென்றவள் அவன் தோளை தொட... அவளை இழுத்து அருகில் அமர வைத்தவன்.. அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்...

"திரும்ப நீ கண்முழிச்சப்போ தான் நான் மறுபடியும் பிறந்து வந்ததா பீல் ஆச்சு.. அப்போ இருந்து உன்ன உணரணும்னு என் ஒவ்வொரு செல்லும் என்ன பாடா படுத்துது... உன்ன முழுசா எனக்குள்ள உணரணும்.. உன் மூச்சு காத்து என்மேல வீசிட்டே இருக்கணும்.. நீ எனக்குள்ள இருக்கனும்.. இப்படி நான் நானா இருக்க முடியலடி... உன் கூட பேசுனா கண்டிப்பா என் நிதானத்த இழந்துடுவேன்னு தெரியும்.. அதான் உன்ன அவொய்ட் பண்ற போல நடிச்சேன்..." என்றான்.

அவள் ஏதோ பேச வர, தடுத்தவன் அவனே "நான் கேக்காமலே உன்ன எனக்கு கொடுக்க நினைச்சவ நீ.. நான் கேட்டும் தராம இருக்க போறதில்ல தான்.." என்றவனின் முகம் அதுவரை இருந்த மென்மையை தொலைத்திருந்தது.. அடுத்து அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளுக்கு..

"ஆனா உன்ன இந்த நிலைமைக்கு ஆளாக்குவனுக்கு தண்டனை கொடுக்காம எப்படிடி உன்ன எடுத்துப்பேன்... என் உயிர என்ன விட்டு பிரிக்க பார்த்தவனுக்கு தண்டனை கொடுக்க வேணாமா?... அதுவரைக்கும் என்ன கட்டுப்படுத்திக்க தான் உன்ன விட்டே தள்ளி ஓடுனேன்... இன்னைக்கு அவனுக்கு முடிவு கட்டியாச்சு.. இனி நோ டென்ஷன்..." என்றவன் அவளை அணைத்திருந்தான்.. இப்போது மென்மையாக...

"ஆனா இன்னைக்கு ஒரு நாள் தான கடத்திடலாம்னு பார்த்தா இன்னைக்கு அவ்வளவு அழகா வந்து என்ன மூச்சு முட்ட வெச்சிட்டடி.. எப்படியும் நீ என்ன தேடி வருவன்னு தெரியும்... வந்தா என்ன என்னலேயே கட்டுப்படுத்த முடியாம போயிடும்னு பயந்து தான் அப்படி எழுதி வெச்சேன்... ஆனா நீ வந்து திரும்பி கண்ண துடைச்சிட்டே போகவும்.. கட்டுப்பாடாவது ஒன்னாவதுனு உன்ன தூக்கிட்டு வந்துட்டேன்... என்ன ரொம்ப தான்டி மயக்கி வெச்சிருக்க நீ.." என்று அவள் மூக்கை கடிக்க..

"நீ தான் காலையில இருந்து என்ன பாக்கவே இல்லையே..."

"யார் சொன்னா.. நம்ம போகஸ் புல்லா எப்போதும் என் ஜாஸ் மேல தான்.. அதுவும் என்னையே பார்த்துட்டு நான் பாப்பேனா மாட்டேனானு தவிச்சிட்டு நின்னியே... அப்போ போங்கடா நீங்களும் உங்க சாம்பிரதாயம்னு உன்ன அப்படியே தூக்கிட்டு நாட்ட விட்டே ஓடிடலாம்னு கூட தோணிச்சு..." என்றான் கண்ணில் காதல் மையலுடன்...

"அப்போ ஏன் சார் தூக்கிட்டு போகல... யாரு உங்கள தடுத்தா?.."

"வேற யாரு உன் சேலை மறைவுல தெரிஞ்ச உன் இடுப்பு தான், என்ன பாத்து வெளிநாட்டுக்கு போய் என்னடா பண்ணப்போற வாழ் நாள் முழுசா இங்கயே உனக்கு இடம் தரேன்னு சொல்லி என்ன அதுல முடிஞ்சிடிச்சு.. அந்த டீல் எனக்கு பிடிச்சதால நானும் ஓகேனு சொல்லிட்டேன்..." என்று கண்ணடித்தவனின் கரங்கள் அப்போது உணர ஆசைப்பட்ட இடையின் மென்மையை இப்போது ஆற அமர சோதித்தது.. அவள் அணிந்திருந்த டிசேர்ட்டும் அவனுக்கு வழிவிட அவன் கரங்களுக்கு ஏது தடை...

"கேடி ஏசிபி..." என்றவள் அவன் கரம் செய்யும் மாயத்தில் உணர்வுகள் தாங்காமல் கண்களை மூடிகொண்டாள்...

அவளை மெத்தையில் சரித்து அவள் மீது படர்ந்து, அவள் முகத்துக்கு நேரே அவன் முகத்தை கொண்டு வந்தவன்

"ஜாஸ்.."

"ம்ம்ம்"

"நோ சொல்லுடி"

"ம்ம்கூம்.."

"ஐ காண்ட் கண்ட்ரோல்டி பட்டு.. ஐ நீட் யூ பேட்லி.. உன்ன ஏதாச்சும் பண்ணிடுவேன்... ப்ளீஸ் நோ சொல்லிடுடி பட்டு.."

"நான் முழுசா உனக்கே உனக்கு தான் நிலவா..." என்ற அவளது வார்த்தைகள் அவன் தாபத்தை மேலும் கூட்டவே செய்தது..

அவள் கன்னத்தில் இரு விரல்கள் கொண்டு அழுத்தம் கொடுக்க விரிந்துகொண்ட அவள் இதழை அவன் இதழ்களால் கொள்ளையிட்டான் அந்த காவலதிகாரி...

அவன் பாரத்தை தன்னில் சுமந்தவளது ஒரு காரமோ அவன் கேசத்துக்குள் நுழைத்து கொள்ள, அடுத்த கரம் அவன் முதுகில் கோலம் போட தொடங்கியது...

மென்மையான முத்தமது அவள் ஸ்பரிசத்தை அவனுள் ஆழ உணர்த்தி இருந்தது... நீண்ட நெடிய முத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவன் விலகி அவள் அருகில் படுத்துக்கொண்டு அவளை அவன் நெஞ்சில் போட்டுகொண்டான்...

சிறிது நேர அமைதிக்கு பின் "வை மீ நிலவா?.." என்ற கேள்வி அதிரலிடம் இருந்து வந்தது

அவனோ புரியாமல் அவளை குனிந்து பார்க்க "இவ்வளவு பேர் இருக்கும் போது என்ன ஏன் லவ் பண்ற நிலவா??... அதுவும் இவ்வளவு காதல்.. உன்னோட இந்த அளவில்லாத காதல் எனக்கே எனக்குன்னு ஏன்?... இப்போவும் உன்னோட உணர்வுகளை விட எனக்குனு யோசிக்கிறியே.. இந்தளவு காதல் என் மேல ஏன்?.."

"ஏன்னா நீ தான் என்னோட ஜாஸ்மின்..." என்ற ஒரே ஒரு பதில் தான் அவனிடம்..

"என்ன உன் காதலால மூச்சைடைக்க வைக்கிற நிலவா?... இவ்வளவு காதலையும் வெச்சிட்டு எப்படிடா உன்னால விலகி நிற்க முடியுது..."

"நமக்கான காதலும் சரி காமமும் சரி நமக்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லையா ஜாஸ்... நம்ம ஒருத்தர ஒருத்தர் காதலா உணர்ந்து அதுக்கு மேலே ஒரு படி போய் தாம்பத்தியத்துல இணையிரப்போ உனக்கும் சரி எனக்கும் சரி எந்தவித உறுத்தலும் இருக்கவே கூடாது... முழுக்க முழுக்க காதல் மட்டுமே நிறைஞ்சி இருக்கனும்... இன்னொரு நாள் அத நினைச்சி பாக்குறப்போ எந்தவித செகண்ட் தோட்டும் வரவே கூடாது... இது எல்லாத்துக்கும் ஒரு நாள் வெயிட் பண்றது தப்பில்லல..."

"லவ் யூ சோ மச் நிலவா... கடவுள் ரொம்ப நியாயமானவருல வள்ளலும் கூட... சின்ன வயசுல எனக்கு கொடுத்த கஷ்டத்துக்கு அதைவிட பெரிய பொக்கிஷமா உன்ன எனக்கு கொடுத்திருக்காரே... நான் ரொம்ப ரொம்ப ஹாப்பி நிலவா..." என்றவள் ரொம்பவே உணர்ச்சிவசப்படிருந்தாள்...

"ரெண்டு பேருமே லக்கி தான்.." என்றவன் தங்கள் இருவரது நிச்சய மோதிரத்தை அருகருகே வைத்து அவளுக்கு காட்டியவன்... "அதிரலோட மூனும் நிலவனோட ஜாஸும் எப்போவும் சேர்ந்தே தான் இருக்கணும்... எனக்காக நீ தான்.. உனக்காக நான் தான்.. நாம ஒருத்தருக்காக ஒருத்தர் படைக்கப்பட்டவங்க ஜாஸ்.. ரொம்ப யோசிக்காம நம்ம நாலாவது கல்யாணத்துக்கு ரெடி ஆகுங்க பொண்டாட்டி" என்றவன் அவளை நெஞ்சில் சுமந்து தட்டிக்கொடுத்தபடி கண்களை மூடினான்...

அவர்கள் அணிந்திருந்த நிச்சய மோதிரத்தில் பூரண நிலவினுள்ளே ஜாதி மல்லி பூ இருப்பது போல வடிவமைத்திருந்தான் நிலவன்... இவர்களை போலவே அவையும் என்றும் பிரியாதிருக்கும்....

அவன் காதல் சின்னமாக நினைக்கும் இதே ஜாதி மல்லி தான் அவன் காதலையும் அவனிடம் மீட்டு கொடுத்திருந்தது என்பது அவன் அறியாத உண்மை....
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
நான்காவது முறையாக அடித்துக்கொண்டிருந்த தொலைபேசியின் சத்தத்தின் கண்களை கடினப்பட்டு திறந்த நிலவனோ அருகில் துலாவி காதில் வைத்தான்...

"நிலவா.. மாடே ஒருவாட்டி கூப்பிட்டா எடுக்க மாட்டியா?.."

"சொல்லு பூ.."

"என்னடா சொல்லு பூ நொல்லு பூன்னுட்டு இருக்க.. எங்கடா அதி?.. இன்னும் கொஞ்ச நேரத்துல மேக்கப்புக்கு ஆளுங்க வந்துடுவாங்க.."

"அதுக்கு என்ன பூ.. மேக்கப் தான பண்ணிக்கோ.." என்றான் இன்னும் முழுமையாக கலையாத தூக்கத்துடன்...

"ஊர்ல பசங்க பிரண்ட் வெச்சிருக்கவலுக எல்லாம் நிம்மதியா இருக்காளுங்க... உங்க மூனு பேரையும் வெச்சிட்டு நான் படுற பாடு இருக்கே ஆண்டவா??... டேய் எரும மாடே அதிரல அனுப்பி தொலடா..." என்று அவள் கத்தியதும் தான் சுகமாய் தன்னை கட்டி உறங்கும் மனையாளின் எண்ணமே வந்தது...

"ஐயய்யோ... இதோ அனுப்புறேன் பூ.. அங்க யாரும் எழுந்துக்கலல.." என்றவன் நேரத்தை பார்க்க அதுவோ இரண்டு மணியை காட்டியது...

"இல்லை இல்லை பதறாத.. இருந்தாலும் பொண்டாட்டிய கூட வெச்சிருக்கிறதுக்கு பயப்படுற போலீஸ் நீ மட்டும் தான் டா... பேரு மட்டும் தான் பெரிய ஏசிபினு..." என்று அவனை அந்த நேரத்திலும் கலாய்த்த திருப்தியுடன் அழைப்பை துண்டித்தாள்..

அதன் பின் அவளை எழுப்பி பல போராட்டத்துடனும் சில பல கொஞ்சல் கெஞ்சல்களுடனும் ஒருவாறு அனுப்பி வைத்தவன்.. இனி எங்கே தூங்குவது என்று அவனும் எழுந்துகொண்டான்...

மனது அத்தனை இலேசாக இருந்தது... தன்னால் முடிந்த மட்டில் நியாயம் செய்து விட்ட திருப்தி அது... மன நிறைவுடனே கார்த்தியின் அறைக்கு சென்றான்....






அந்த கல்யாண மண்டபமே பரபரப்புடன் தான் இருந்தது... மூன்று மணமேடைகள் அமைக்கப்படிருந்தது... முதலாவதில் கார்த்தி அமர்ந்து மந்திரம் சொல்லி கொண்டிருக்க... அதற்கடுத்ததில் நிலவன் அமர்ந்திருந்தான்...

மூன்றாவதில் முகத்தில் சோகத்துடன் புகழ் அமரந்திருந்தான் என்பதை விட அமர வைக்கப்பட்டிருந்தான் என்பது தான் சரியாக இருக்கும்...

புகழின் எண்ணங்களோ சில மணி நேரங்களின் முன் நடந்தததையே மீண்டும் மீட்டியது...


"புகழ் ஏன் இப்போ அடம்பிடிக்கிற.. உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு உன் அப்பாம்மாக்கு விருப்பம் இருக்கும்ல... புரிஞ்சிக்கோ புகழ் உனக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்காக தான் சொல்லாம பண்ணோம். நிலவனோட ஏற்பாடு தான் எல்லாம்.. பொண்ணு செலக்ஷன் கூட.." என்று வாசுகி சொல்லி கொண்டிருக்க.. புகழிடம் அமைதி...

தன்னக்காக பார்த்து பார்த்து பண்ணி இருக்கும் உறவுகளை நோகடிக்கவும் விருப்பம் இல்ல.. இத்தனை வருடம் மனதினுள் பொத்தி வைத்திருந்த காதலை மறக்கவும் தைரியம் இல்லாமல் இருதலைகொல்லி எறும்பாக தவித்தது அவன் மனம... அதுவும் அவன் காதலியும் அங்கே தான் இருக்கும் போது அவனும் என்ன தான் செய்வான்...

அவன் மனமோ.. "நீ காதலிக்கிறது தான் அந்த பொண்ணுக்கு தெரியாதே.. உன்மேல அவளுக்கு விருப்பமும் இல்ல... இப்போ உனக்காக அலங்காரம் பண்ணிட்டு உள்ளே ஒரு பொண்ணு உக்காந்திருப்பா.. அவளோட கனவு அவளோட குடும்பத்துட கனவு.. உன் நண்பன் உன்மேல் வெச்ச நம்பிக்கை இது எல்லாத்தையும் சிதைக்க போறியா புகழ்?..." என்று அவனை கேள்வி கேட்க

கண்களை மூடி திறந்து கொண்டவன்.. சரி என்பதாய் தலையசைத்து அங்கிருந்து சென்றான்...

"நிலவா பாரு புள்ள முகமே வாடி போச்சு.. இதுக்கு தான் அன்னைக்கே சொல்லலாம்னு சொன்னேன் நீ தான் கேக்கல..."

"அதெல்லாம் அவனுக்கு ஹாப்பி தான்... சும்மா சீன் போடுறான்... நீ போய் வேலைய பாருமாவ்.." என்று அவரை அங்கிருந்து அனுப்பியவன்.. நண்பர்கள் பட்டாளத்துடன் தயாராக தொடங்கினான்...



தன் முன்னே எரியும் தீயை போலவே புகழ் மனதிலும் எரிந்து கொண்டிருந்தது மூன்று வருட அவன் காதல்... தன் வாழக்கையில் புதிதாய் ஒரு பெண் நுழைய போகும் நேரம்... காதலை துறக்க தான் நினைக்கிறான்.. ஆனால் அவள் மதி முகம் நினவலைகளில் வந்து "என்ன மறந்து விடுவாயா?.." என்று அவனை மிரட்டி வேறு பார்க்கிறது...

கண்களை மூடி திறந்தவன்... இரு பெண்களின் வாழ்வும் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை கடவுளிடம் வைக்க, அந்த நேரம் சரியாக ஐயர் "பொண்ண அழைச்சிட்டு வாங்கோ.." என்று குரல் கொடுத்தார்...

தன் விரல்களை ஒன்றோடு ஒன்று இறுக பிடித்தவன் உணர்வுகளை கட்டுப்படுத்தி அமர்ந்திருக்க.. தன்னருகே ஒரு பெண் அமர்வது அவனுக்கு புரியவே செய்தது ஆனால் நிமிர்ந்து பார்க்கவில்லை..

சிறிது நேரத்தில் "கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்ற ஐயர் தாலியை எடுத்து கொடுக்க கையில் வாங்கி கொண்டவன் தன் கதலியிடமும் வருங்கால மனைவியிடமும் மானசீகமாக மன்னிப்பு கேட்டவன்... அவளை கழுத்தில் தாலியை கட்டி இரண்டு முடிச்சு போட, மூன்றாவது முடிச்சை ரம்யா தான் போட்டாள்....


அங்கே நிலவனோ கண்களில் ஒட்டுமொத்த காதலையும் தேக்கி அவன் ஜாஸ்மினுக்கு மூன்றாவது முறையாக தாலியை கட்டி இருந்தான்.. அதிரலுக்கு மூன்றாவது முடிச்சை பூஜா போட.. அதிரலோ கண்களாலேயே அவள் மூனுக்கு காதல் தூது விட்டுக்கொண்டிருந்தாள்...

"அடேய்.. கொஞ்சமாச்சும் கண் சிமிட்டி பாருங்கடா... இதுங்க லவ் தொல்ல தாங்கலப்பா" என்றவள் கார்த்தியை திரும்பி பார்க்க..


அவனை சொல்லவே வேண்டாம்.. மீண்டும் அவளை புடவையில் பார்த்து மயங்கி கிறங்கி போய் இருந்தான்... கிறக்கத்துடனே தாலி கட்ட மூன்றாவது முடிச்சை வர்ஷி தான் போட்டாள்...

தாலி கட்டி முடித்தும் கூட அவளை விழுங்கி விடுவது போலவே பார்க்க அவன் காதினருகில் குனிந்தவளோ "இந்த மூஞ்சிதான் படிச்சு முடிக்கிற வர வெயிட் பண்றனு சொன்னதா?.. என்றாள்

"ஈஈஈ.. அதெல்லாம் கண்டுக்காத.. நம்ம பேபியையும் உன் படிப்பையும் நான் பாத்துக்கிறேன்டி செல்லம்..." என்றான் வெக்கபட்டுகொண்டே..

இவர்களுக்குள் இத்தனை நடக்க அங்கே புகழோ குனிந்த தலை நிமிரவே இல்ல... பொறுத்து பார்த்த மணப்பெண்ணோ அவன் காதினருகில் குனிந்து மெதுவாக...

"என்ன விட்டுடு இன்னொரு பொண்ண கட்டிக்க தயாராக்கிட்டல... செத்தாடா மாமோய்..." என்றாள்..

அதிர்ச்சியில் புகழின் கண்களோ வெளியே தெரித்துவிடும் படி தான் விரிந்து கொண்டது... நிமிர்ந்து அவளை பார்த்தவன் கண்ணில் ஆயிரம் மாத்தாப்பு...

அவன் அருகில் அவன் மனைவியாய் அவன் காதல் தேவதை.. அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை...

"வைஷு..."

"இப்போதான் பேரே சொல்லி பழகுறீங்களாக்கும்... நீங்க காதல சொல்லுவீங்கன்னு காத்திருந்தா நான் கிழவியா தான் போகணும்.. நல்ல வேளை நிலவன் அண்ணா கண்டுபிடிச்சாங்க..." என்றாள்

பதிலுக்கு புன்னகைத்து கொண்டிருந்தவனது மனதோ நிலவனுக்கு நன்றி சொல்லி கொண்டது...

அவள் பேச அதன் பின் அவனிடம் சத்தம் இல்லை என்றதும் அவனை தொட, அப்போதும் அவன் உலகத்துக்கு வரவில்லை..

அத்தனை நேரமும் அவன் எங்கே அவள் சொல்வதை கேட்டான்... பேசும் போதும் அசையும் அவளை இதழ்களை அல்லவா கண்களால் கொய்து கொண்டிருந்தான்...


அதன் பின் சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று நேரம் கடக்க வீட்டுக்கு வந்து சேரவே மாலை ஆகி இருந்தது...

வீட்டில் மட்டும் முடிந்ததா என்ன?.. அங்கேயும் மீண்டும் சடங்குகள் ஆரம்பிக்க எப்போதடா விடுவார்கள் என்றிருந்தது மூன்று ஜோடிகளுக்கும்...

ஒருவழியாய் ஓய்வுக்காக விட.. கார்த்தி அறையின் தான் ஆண் சிங்கங்கள் கூடி இருந்தது...

"எல்லா டிக்கெட்டும் அவுட்.. ஒன்னே ஒன்னு மட்டும் சிங்களா சந்தோசமா சுத்துதே என்ன பண்ணலாம் நிலவா?..

"ராம் சார் ஏற்கனவே லவ்ல விழுந்துட்டாரு.. நம்மகிட்ட ஏதோ வேலை வேலைனு எங்கயோ ஓடுனாரே ஞாபகம் இருக்கா?.. எல்லாம் அவர் ஆள பாக்க தான்..." என்றான் நிலவன்..

ராமோ விஷ்ணுவை அப்படியா என்பது போல பார்க்க, அவனோ வெட்கப்பட்டு சிரிக்க...

"துரோகி... எங்கிட்ட சொன்னியாடா?.. இரு பூஜாகிட்ட மாட்டி விடுறேன்.. ஓட்ட வாயா சுத்துனியேடா... இப்போ உன் விஷயம்னதும் மறச்சிட்ட பார்த்தியா?... விவரம் தான்..."

"மறைக்க எல்லாம் இல்லடா மச்சான் எனக்கே ஆள் யாருனு ரெண்டு நாள் முன்ன தான்டா தெரிய வந்திச்சு... எப்பில பிரண்ட் மச்சான் பேசி அப்படியே லவ் வந்துடிச்சு... இங்க வந்து தேடுனா ஐடிய மட்டும் வெச்சு கண்டுபிடிக்க முடியல.. அப்பறம் நிலவன் தான் கண்டுபிடிச்சு குடுத்தான்... இப்போ டபிள் சைட் லவ் ஆகிடிச்சு...

"வாவ், தங்கச்சி பேர் என்னடா?.."

"யாழினி..." என்றான் தரையில் கோலம் போட்டப்படி...

"அட கருமமே... வெக்கம் எல்லாம் படுறான்டா..."

"விடு மச்சான் புதுசுல பழகிடும்.."

"நிலவா இது கூட பரவாயில்ல.. அங்க பாரேன் காலைல ஒருத்தன் கல்யாணம் வேணாங்கிற மாதிரி இருந்துட்டு இப்ப விடாம எப்படி கடல வருக்கிறான்னு..." என்று கார்த்தி, புகழ் அவன் மனைவியுடன் கடலை போடுவதை பார்த்து மாட்டி விட்டான்..

நிலவனோ எழுந்து அவன் அருகில் செல்ல

"ம்ம்ம்ம் நீ சொல்லுடி தங்கம் மாமா எதுக்கிருக்கேன் நீ சொல்றத கேக்க தான..." என்று கொஞ்சி கொண்டிருந்தவனின் அழைபேசியை பறித்தான் நிலவன்..

"வைஷுமா.. நான் அண்ணன் பேசுறேன் டா... நீ ரெஸ்ட் எடு.. இந்த பூச்சிய நான் பாத்துக்குறேன்..." என்றவன் அழைப்பை துண்டிக்க, புகழ் பாய்ந்து நிலவனை அணைத்தவன் கன்னத்தில் முத்தமிட்டான்...

"ஐய சீ.. நான் ஒன்னும் வைஷு இல்லடா... கண்ண முழிச்சிக்கோ கோட்டை சாமி..." என்றவன் அவனை தன்னில் இருந்து பிரிக்க..

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டா மச்சான்.. என் காதல்ல ஒளிவிளக்கே ஏத்தி வெச்சிட்ட.. லவ் யூ சோ மச் மச்சான்.." என்று மீண்டும் முத்தமிட வந்தவனை தடுத்தவன்...

"எப்பா ராசா ஆள விடு.. இதெல்லாம் என் தங்கச்சிகிட்ட வெச்சிக்க..." என்றான் நிலவன்..

"எப்படி மச்சான் கண்டுபிடிச்ச.."

"பெரிய சிதம்பர ரகசியம் பாரு... அதான் வைஷுவ எப்ப பாக்க போனாலும் கூடவே வருவியே மூஞ்சில லைட்டோட.. அதுவுமில்லாம சரியா டான்னு அங்க போற நாள எனக்கு ஞாபக படுத்துறதே நீ தான... இதுல மத்தவங்களுக்கு தெரியாதுனு நினைப்பு வேற... வைஷுக்கே நீ லவ் பண்ண தொடங்கி ரெண்டு மூனு நாள்லயே தெரிஞ்சிடிச்சு... அவளும் அப்போ இருந்தே உன்ன லவ் பண்ணுறா.... இதெல்லாம் தெரியாம இதயம் முரளி ரேஞ்சுக்கு சுத்தி இருக்க நீ.. போடா அங்கிட்டு..."

"அவ்வளவு அப்பட்டமாவா தெரிஞ்சிது... அவளும் லவ் பண்ணி இருக்காளா??.. இவ்வளவு நாள வேஸ்ட் பண்ணிட்டியே டா புகழு... நீயாச்சும் சொல்லி இருக்கலாம்ல டா பாவிப்பயலே.."

"ஆன் சொல்றாங்க சொரக்காக்கு உப்பில்லனு... போடாங் வாயில நல்லா வருது.. பாவம் வைஷு நீ இப்போ சொல்லுவ நாளைக்கு சொல்லுவன்னு காத்துட்டு இருந்து, அவளுக்கு வயசாகுனது தான் மிச்சம்... அவ மட்டும் உன்ன லவ் பண்ணி இருக்கல, உன்ன கடாசிட்டு வேற நல்ல மாப்பிள்ளையா என் தங்கச்சிக்கு பாத்திருப்பேன்.."

புகழோ "அட கொலைகார பாவி..." என்று வாயில் கைவைத்து கொள்ள,

அவனை தோளோடு அணைத்து விடுவித்த நிலவன் "ஜோக்ஸ் அபார்ட்... அறிவு என்ன நம்பி தான் அவன் குடும்பத்தை விட்டுடு போயிருக்கான்.. அவங்கள நல்லா பாத்துக்க வேண்டியது என் கடமை.. ஒரு அண்ணனா என் தங்கச்சி வைஷ்ணவிக்கு உன்ன விட ஒரு பெஸ்ட் சாய்ஸ் என்னால கொடுக்க முடியாது புகழ்... அவளை நீ நல்லா பாத்துப்பேன்னு நூறு வீதம் எனக்கு நம்பிக்கை இருக்கு... மேல இருந்து பாத்துட்டு இருக்குற அறிவு ரொம்ப சந்தோசப்படுவான் டா.." என்று உணர்ச்சிவசப்பட்டு புகழை மீண்டும் அணைத்திருந்தான்..




அங்கே அந்த அறையில் மனம் நிறைந்த வஞ்சதுடன் படுத்த படுக்கையாய் கிடந்தார் ருத்ரா... இந்த ஏழு நாளும் சாரதாவை பார்க்கும் போதெல்லாம் மீண்டும் அவர் பழிவாங்கும் குணம் பெறுகவே செய்தது... ஆனால் ஒன்றும் செய்யமுடியாமல் கையாளாகாமல் படுத்த படுக்கையாய் இருக்கிறார்...

இப்போது முன்பை விட இதயம் பலவீனமாகி இருந்தது... எப்போது என்று சொல்ல முடியவிட்டாலும் மரணம் வெகு தூரத்தில் இல்லை அவருக்கு...

யாரும் இல்லை என்று தங்கையை தானே பார்த்துக்கொள்ள தன் வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார் சாரதா... அவருக்கென தனி நர்ஸ் ஒருவரை நியமித்து பத்திரமாகவே பார்த்துக்கொண்டார்... இப்போது அவருக்கென இருக்கும் ஒரே உறவும் அவர் தங்கை தானே..

இப்போதெல்லாம் கணவன் மகன் என யாரை நினைத்தும் அவர் மருகுவதில்லை.... தெளிந்த நீரோடையாக தான் அவர் மனம் இருக்கிறது...

பாதிக்கப்பட்ட குழந்தைகளை கூட அவர் வேலை செய்யும் வைத்தியசாலையில் வைத்து அவர் தான் பாத்துக்கொள்கிறார்...

அவர்களை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் மகன், கணவர் என்ற பெயரில் வாழ்ந்த மிருகங்களின் மீது வெறுப்பே கூடியது அவருக்கு...

இதோ நிலவனின் திருமணத்துக்கு சென்றவர் அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்தார்... அணிந்து சென்ற புடவையை கூட மாற்றவில்லை.. தங்கையை காண அறைக்குள் நுழைந்தார்...

அத்தனை நேர்த்தியாக கண்ணுக்கு உருத்தாத வகையில் அணிந்திருந்த புடவை அவருக்கு அத்தனை அழகாக இருந்துது.. அதுவே ருதராவின் மனதை தீயிட்டு கொழுத்தியது...

தான் படுத்த படுக்கையாய் கிடக்க, இவளோ நன்றாக வாழ்கிறாளே.. என்ற எண்ணம் உள்ளுக்குள் அவரை அரித்துகொண்டிருந்தது...

இப்போதெல்லாம் பேசும் போது சாரதா மனதில் மகன் பற்றிய கவலை தெரிவதில்லை... தான் செய்த ஒன்று இன்று ஒன்றுமில்லாமல் போய்விட்டதே என வெறிபிடித்த மிருகம் போல் தினமும் அதையே எண்ணிகொண்டிருந்தார்...

தான் செய்தவற்றை சொல்லி அவரை காயப்படுத்த எண்ணினாலும் அவரால் பேச முடியவில்லையே.. இப்படிப்பட்ட வாழக்கையையே வெறுத்தார்...

தன் சகோதரியை எதிரியாய் நினைத்து அவரை பழிவாங்கியவருக்கு இன்றோ அவர் உதவியால் வாழும் நிலை.. அதுவும் அவரையே தினம் தினம் பார்த்து மருகி சாகும் நிலை...

மரணம் வரும் வரை இதே நிலை தான் இவருக்கு...


ஜாதி மல்லி மலரும்......


கருத்து திரி 👇👇

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 32
(
இறுதி அத்தியாயம் )



அங்கே நிலவனின் வீட்டில் தான் மூன்று ஜோடிகளுக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்படிருந்தது..


இரவு சடங்குக்கு பெண்கள் ஒருபக்கம் தயாராகி கொண்டிருக்க... அங்கே ஆண்கள் கூட்டம் இன்னொரு பக்கம் பல ஆசைகளுடன் தயாராகி கொண்டிருந்தது...

"என்னடியம்மா எல்லாம் தயாரா... இன்னுமா உங்க மேகப்பு முடியல... நான் எல்லாம் அந்த காலத்துல என்ற மாமாவ மொத ரத்திரில வெறும் மஞ்சள் குங்குமத்தோட தான் போய் பார்த்தேன்.. அதுவே அவர மயக்கிடிச்சு... இப்போ உள்ள புள்ளைங்க எவ்வளவு தான் மேகப்பு போட்டாலும் எங்க அழகுக்கு வரமுடியுமா?..." என்றார் அங்கு வந்த பாட்டி ஒருவர்...

"பாத்தியா கீதா இந்த சிசிடிவிக்கு இருக்க எகத்தாளத்த.." என்றாள் பூஜா

கீதாவோ அந்த பாட்டியை பார்த்து "ஏனுங்க பாட்டி.. தாத்தா உங்கள வெளிச்சத்துல பாத்தாரா இல்ல இருட்டுலயே வேலைய முடிச்சாரா..." என்க பெண்கள் மத்தியில் சிரிப்பு..

"அடியாத்தி.. என்ன இது இந்த காலத்து புள்ளைங்க வெக்கமே என்ன விலைனு கேக்கும் போலயே.. பாவம் என் பேரனுங்க..." என்றவர் வெளியே போக

"ஏனுங்க பாட்டி நீங்களே உள்ள வந்து பாருங்களேன் எப்படி வெக்க படுறேன்னு... உங்களையே வெக்க பட வைப்பேன்னா பாத்துக்கோங்க.." என்று அவள் அங்கிருந்தே கத்த.. அந்த பாட்டியோ கேட்டும் கேட்காமல் ஓடியே விட்டார்..

"இப்போ இந்த பிபிசி இந்த மேட்டர எப்படி பரப்புது மட்டும் பாரேன்.." என்றாள் பூஜா அவளுக்கு அலங்காரத்தை முடித்தபடி...



மூவரும் தங்க நிற ஜரிகை பட்டில் அத்தனை அழகாய் தயாராகி பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க..

ராஜய்யா மனதிலோ அத்தனை சந்தோசம் மூவரையும் ஆசீர்வதித்தவர்.. அதிரலின் தலையில் கை வைத்தபடி கண்கலங்க அதிரலோ அவளை அனைத்துக்கொண்டாள்..

"ரொம்ப சந்தோசமா இருப்படா அப்பு.. அம்மா ஆசி உனக்கு எப்பவும் இருக்கும்" என்றவர் அவள் நெற்றியில் முத்தமிட்டார்...

அதன் பின் பெண் தோழிகளுடன் மூவரும் ஒன்றாகவே அவரவர் அறையை நோக்கி நடக்க,

முதலில் வைஷ்ணவி தான் புகழ் அறையில் நுழைந்தாள்...


அங்கே புகழோ ஆர்வத்துடன் அமர்ந்திருக்க.. கதவை பூட்டிய வைஷ்ணவி அவன் அருகில் வர.. புகழுக்கு நெஞ்செல்லாம் அடைக்க தொடங்கியது... எழுந்து நின்றே விட்டான்..

அவன் கையில் பால் சொம்பை கொடுத்தவள்... அவன் காலில் விழுந்து வணங்க.. அவனோ பதறி போய்விட்டான்..

"வைஷு எந்திரி..."

"ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா..."

"நல்லாருப்படா.. எந்திரி முதல்ல.." என்று அருகில் இருந்த மேசையில் சொம்பை வைத்தவன் அவளை தூக்கி விட..

அவன் மனைவியோ வெக்கத்தில் தலை குனிந்திருந்தாள்..

"வைஷு.."

"ம்ம்ம்.."

"என்ன பாரேன்.." என்க அவளும் நிமிர்ந்து அவனை பார்க்க அந்த பார்வையில் புகழுக்கு வேர்க்க தொடங்கியது...

எட்டாக்கனி என எண்ணி இருந்தவள் இப்போது அவன் கையில்.. நினைக்கவே அத்தனை சந்தோசம்...

"என்ன உனக்கு பிடிக்குமா வைஷு.." என்று சும்மா இராமல் அவள் கோபத்தை ஞாபகப்படுத்தி இருந்தான்...

அவள் முறைக்க.. அவனோ.. "எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் வைஷு.. உன்ன பார்த்த நாள்ல இருந்து எனக்குள்ள வந்துட்ட.. எப்படினு கேட்டா சொல்ல தெரியல.. ஆனா மனசு முழுக்க நீதான் இருக்க, இனியும் இருப்ப.. உன்ன பாக்க மாட்டோமானு உன்ன பாக்க வர்ற நாளுக்கா அந்த மாசம் முழுக்க காத்திருப்பேன் தெரியுமா?... நிலவனே மறந்தாலும் நான் அவனுக்கு ஞாபகப்படுத்தி கூட்டிட்டு வருவேன்.. எல்லாம் என்ன நீ பாக்குற அந்த ஒத்த பார்வைக்கு தான்... பேசிடுடா சொல்லிடுடான்னு மனசு கெடந்து அடிச்சிக்கும்.. ஆனா மனசுக்குள்ள சின்ன தயக்கம்.." என்றவன் நிறுத்த..

அவன் மனைவியோ அவன் நெஞ்சில் சாய்ந்து அவனை அணைத்திருந்தாள்.. புகழுக்கோ பறக்கும் உணர்வு

"உங்கள போலவே தான் மாமா நானும்... நீ வர்ற நாளுக்காக காத்திருப்பேன்... பேசுவீங்கன்னு ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தா வெறும் பார்வையோட போயிடுவீங்க... அப்போலாம் செம கோபம் வரும் உங்க முடிய பிடிச்சு ஆட்டி.. உன்னால பேசமுடியாதானு கேட்க தோணும்.." என்க அவனோ அவளை கையை எடுத்து அவன் தலையில் வைத்தவன் சற்று குனிந்து அவளுக்கு வாகாய் தலையை கொடுத்து நிற்க..

அதனை புரிந்து கொண்டவளோ புன்னகையுடன் அன்றைய நாள் கோபத்தை ஆசையாய் இன்று நிறைவேற்றினாள்...

மீண்டும் அவனை அணைத்து கொண்டவளோ "நிலவன் அண்ணா வந்து உங்கள கட்டிக்க சம்மதமான்னு கேட்டதும், எதுவுமே யோசிக்காம உடனே ஒத்துக்கவும் அண்ணாவே சிரிச்சிடிச்சு.. அதுக்கும் நம்ம காதல் விஷயம் தெரியும்... ஏன் மாமா எங்கிட்டே உங்க காதல சொல்லல?.. இதுவே நான் இல்லாம இன்னொரு பொண்ணா இருந்திருந்தாலும் தாலி கட்டி தான் இருப்பீங்கல்ல..." என்றவள் செல்லமாய் அவன் நெஞ்சில் கடிக்க, சுகமாய் வாங்கி கொண்டவனோ

"எனக்கு ரொம்ப பயம் வைஷு.. நான் பேசினா எங்க நீ என்னையும் நிலவன் போல அண்ணான்னு கூப்பிட்டுடுவியோன்னு.. அப்படி மட்டும் நடந்தா நான் செத்தே போய் இருப்பேன்டி..." என்றவன் அணைப்பு இறுகியது...

"அந்த பயம் தான் என்ன உங்கிட்ட பேச விடாம தடுத்திச்சு.. நிலவன் கிட்ட பேசி பாப்போமான்னு யோசிச்சப்பபோ தான் பிரச்சனை அதுனு ஒவ்வொன்னா வரவும் பேசமுடியாம போயிடிச்சு.. சரி அவன் கல்யாணம் முடிஞ்சதும் பேசலாம்னு வெயிட் பண்ணா.. உனக்கும் தான் கல்யாணம் பொண்ணெல்லாம் பார்த்தாச்சுன்னு வந்து நின்னாங்க.. எனக்கு செம சாக்.. அவங்க சொல்லும் போது நீயும் அங்க தான் இருந்த... உன் முகத்துல எனக்கான காதல் இருக்குமான்னு உன் கண்ணுல அதிர்ச்சிய தேடுனேன்.. பட் எனக்கு அது கிடைக்கவே இல்ல.." என்றவன் சோகமாக..

"அதான் எனக்கு தெரியுமே மாமா.. நமக்குத்தான் கல்யாணம்னு.. அப்பறம் எப்படி அதிர்ச்சி வரும்..."

"ஆனா அது எனக்கு தெரியாதுலடா... அப்போ உனக்கு என்ன பிடிக்கலைன்ற உண்மை என்ன கொன்னுடிச்சு.." என்று நிறுத்தியவன்..

அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் அவள் கண்களை பார்த்தாவாறே "நிலவன் அவன் எனக்கு அப்பாம்மாக்கும் மேலடி.. அவன் எனக்காக ஒன்ன பண்ணும் போது அத தடுக்குற சக்தி எனக்கில்லை.. உனக்கும் பிடிக்கலனு நினைச்சுகிட்ட நான்.. என் நிலவனுக்காக என் காதல புதச்சிட்டு தான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன்... நீ இல்லாம இன்னொரு பொண்ணா இருந்தாலும் நிச்சயமா தாலி கட்டி இருப்பேன்... நிலவன் உனக்கு என்ன விட நல்ல வாழ்க்கையை அமைச்சு தருவான்ற நம்பிக்கையோட..." என்றவன் அவன் விளக்கத்தை முடிக்க

அவளுக்கோ அவன் மீது காதல் இன்னும் தான் பெறுகியது.. "நிலவன் அண்ணாவும் இதைத்தான் சொன்னாங்க... அவங்க சொன்னா நீங்க யார வேணா கட்டுவீங்கன்னு.. உங்க நட்ப பார்த்தா எனக்கே பொறாமையா தான் இருக்கு.. ஐ லவ் யூ சோ மச் மாமா.." என்றவள் அவள் அணைப்பை கூட்டி அவன் நெஞ்சில் புதைய, அவன் கரங்களோ கணவனாய் அவளை தழுவியது...

அதில் வெக்கம் வரப்பெற்றவள் அவனை கேள்வியாய் பார்க்க, அவனோ மெத்தையை கண்ணால் காட்டினான்.. அதன் பின் வேறென்ன, தாம்பத்தியம் என்னும் அத்தியாயம் அவர்களுக்குள் அழகாய் ஆரம்பமானது....



அடுத்ததாய் அறைக்குள் பெண்களின் கேலியுடன் கீதா நுழைந்து கொண்டாள்...

கார்த்தியோ அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க.. உள்ளே நுழைந்த கீதவுக்கோ சிரிப்பு..

கதவடைத்து நேரே அவன் அருகில் வந்தவள் அங்கிருந்த மேசையில் பால் செம்பை வைத்து மெத்தையில் அமர்ந்தாள்...

"என்னடி உக்காந்துட்ட..."

"வேறென்ன பண்ணனும்.."

"கால்ல விழுந்து ஆசீர்வாதம் எல்லாம் வாங்க மாட்டியா?..."

"அந்த ஆச வேற இருக்கா உனக்கு... செம டையர்ட்டா இருக்கு.. வா தூங்கலாம்.." என்று தூங்க தயாரானவளை வாய் பிளந்து பார்த்தவன்..

"எதே தூங்க போறியா.. என்னடி விளையாடுறியா?..." என்று அவளை தூங்க விடாமல் தடுக்க...

"என்ன வாத்தி தூங்க கூட விடமாட்டேங்குற.. என்னயா உன்ன பிரச்சனை.." என்றாள் தூக்க கலக்கம் போல் நடித்தபடி..

"என்னடி கீத்து தூங்க போறன்னு சொல்லுற... இன்னைக்கு என்ன நாள்.. நமக்கு என்ன நடக்க போகுது... நீ பாட்டுக்கு தூங்க போற..."

"நீதான மாமா சொன்ன படிச்சு முடிக்கிற வர நமக்குள்ள எதுவும் வேணாம்னு... எனக்கும் அது தான் சரினு படுது.. படிச்சு முடிச்சப்பறமே வெச்சிக்கலாம்.." என்று அந்த பக்கம் திரும்பி படுத்தவளுக்கு சிரிப்பை அடக்குவதே சிரமமாய் தான் போனது...

அவனுக்கோ ஏன் தான் அந்த வார்த்தையை சொன்னோம் என்று ஆனது... பொறுத்து பார்த்தவன் அதற்கு மேல் முடியாமல் அவளை மீண்டும் எழுப்பினான்...

"கீத்து செல்லக்குட்டி எந்திரிடி... மாமா தெரியாம சொல்லிட்டேன் பழிவாங்காதடி... என்று அவளிடம் கெஞ்சி எழுப்ப அவளோ எழவே இல்லை...

"இதெல்லாம் தேவையாடா உனக்கு.. பெரிய வீர வசனம் எல்லாம் பேசுனியே இப்போ பாரு பர்ஸ்ட் நைட்ல தனிய உக்காந்திருக்க..." என்று தனக்கு தானே புலம்ப, அவன் புலம்பலில் சிரித்தே விட்டாள் அவன் கள்ளி...

"அச்சோ அழகு மாமா நீ.." அவனை கொஞ்ச, மீதி கொஞ்சல் விடியும் வரை அவன் வசமானது....




அங்கே இறுதியாய் அதிரல் தான் நிலவன் அறைக்குள் நுழைந்தாள்... ஆனால் உள்ளே அவளவனை காணவில்லை..

பாலை அங்கேயே வைத்தவள் அவன் எங்கே என்று தேட பின்னிருந்தே அவள் கண்களை கட்டி இருந்தான் கள்வன்...

"ஓகே ஓகே சர்ப்ரைஸ் அதான..."

"அதே தான்டி பொண்டாட்டி.." என்றவன் அவளை கைகளில் ஏந்தி இருந்தான்.. அவளும் அவன் கழுத்தில் கையிட்டு அணைத்துக்கொண்டாள்...

"போலாங்களா பொண்டாட்டி..."

"ஓகேங்க புருஷன் சார்.."

அவளை அங்கே யாருக்கும் தெரியாமல் கெஸ்ட் ஹவுஸ் அழைத்து வந்தவன் அவன் அறையில் இறக்கிவிட்டவன் நெற்றியில் முத்தம் பதித்து.. கட்டை அவிழ்க்க..

அவள் கண்களோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.. அங்கே அவன் அறையில் கீழே மெத்தை விரித்து அதன் மேலே அவர்கள் காதல் சின்னமான ஜாதி மல்லி பூக்களால் அலங்கரித்து... ஜன்னல் வழியே வந்த நிலவின் ஒளியோடு சேர்த்து ஆங்காங்கே மெழுகுவர்த்தி ஏற்றி செயற்கையான ஒளியும் அத்தனை அழகை தந்திருந்தது அந்த அறைக்கு....

"ரசனக்காரன்டா நிலவா நீ.."

"அதான் உன்ன ரசிக்கிறேனே..."

"வார்த்தைக்கு வார்த்தை ஸ்கோர் பண்ணுறீங்க ஏசிபி சார்... திருடன பிடிக்க மட்டுமில்ல பொண்டாட்டியோட மனச பிடிக்க கூட நல்லாவே தெரிஞ்சி வெச்சிருக்கீங்க..." என்று பேசிகொண்டிருந்தவளை தூக்கியவன்.. அந்த மெத்தையில் அமரவைத்து அவள் காலடியில் அமர்ந்து கொண்டான்...

அவன் கையிலோ தங்க கொலுசு மின்னி கொண்டிருந்தது... அதனை அவன் பாதத்தை பற்றி அணிவித்தவன்

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா?...
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா??...

என்று பாடியபடி அவள் பாதத்தில் இதழ் பதித்திருந்தான்...

"மனச அள்ளுறீயே.. முடியல இறுக்க கட்டிக்கோ நிலவா... இனிமேல் வெயிட் பண்ணா நானே உன்ன ரேப் பண்ணிடுவேன் பாத்துக்கோ..." அவள் மனைவியிடம் இருந்து அதட்டலாய் பதில் வந்தது...

"ஹாஹா... நாளு வருஷ தவம் சும்மாவா?... ஆரம்பிக்கலாமா?.." என்றவன்

"லாஸ்ட்டா சிடுவேஷன் சோங் ஒன்னு.." என்று அவளை பார்த்து கண்ணடித்தவன்.. அவளும் அனுமதி தர...

"ஜாதி மல்லி பூவே
தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு.."

என்று பாடி முடிக்க அவன் மனைவி அதிரடியில் இறங்கி இருந்தாள்...

ஆரம்பித்தவளுக்கு நாணம் என்னும் போர்வை வந்து சூழ்ந்துக்கொள்ள, அவள் விட்ட இடத்தில் அவள் கணவன் தொடங்கி இருந்தான்.. அவளுள் மூழ்கி முத்தெடுக்க... விடும் வரை அவளை விடவும் இல்ல...

அவள் தயக்கங்கள்.. வெக்கங்கள்... முனங்கல்கள்.. கோபங்கள்.. வலிகள் எதுவும் மிச்சம் இல்லாம அவன் கைகளுக்குள் அடங்கியது...

சிலநேரம் வன்மையாக.. சிலநேரம் மென்மையாக... அவளை கொண்டாடி தீர்த்தான்... அந்த நிலவு கூட இந்த நிலவனின் ஆட்டத்தில் வெக்கம் தாளாமல் மேகம் கொண்டு அவனை மூடிகொண்டான்...

விடியும் வேளையிலே அவளை விட்டவன்... அவள் நெற்றியில் முத்தமிட்டு, அவன் மல்லிகை தோட்டத்தை நெஞ்சில் தாங்கிக்கொண்டவன் சுகமான துயிலில் ஆழ்ந்தான்...



இப்படி ஒவ்வொரு ஜோடியும் அவரவர் துணைகளின் அறைக்குள் நுழைந்து கொள்ள.. இறுதியாய் வேலை முடித்து பூஜா அவள் அறைக்குள் நுழைய.. அங்கே கண்ட காட்சியில் சிரித்தே விட்டாள்...

அங்கே ராமோ அவர்கள் மெத்தையில் பூக்களை போட... அவன் மகன் அதனை கலைத்து தூக்கி எரியும் வேலையில் இருந்தான்...

"என்னடா பண்ணுறீங்க ரெண்டு பேரும்..." என்றாள் சிரித்தபடியே..

"நான் இவனுக்காக தான்டி இதெல்லாம் பண்ணுறேன்.. பாரேன் அவனே அத விட மாட்டேங்கிறான்... எனக்கு எதிரி வெளில இல்ல இன்னும் தூங்காம கூடவே முழிச்சிட்டே இருக்கான்.."

"எது சார் அவனுக்காக பூ போடுறீங்க அதான..."

"ஆமா இல்லையா பின்ன... ஒத்த பிள்ளையா தனிச்சு போய் நிக்கிறானே.. தங்கச்சியோ தம்பியோ கொடுக்கலாம்னு பார்த்தா விடுறானா?.." என்றவன் மெத்தையில் விழுந்து மகனுக்கு கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்க... அவனும் சத்தமாய் சிரித்தபடி தந்தையோடு ஒட்டிக்கொண்டான்...

அவர்கள் இருவரையும் பார்த்து நின்றவள் அவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொள்ள.. தாய் தந்தை மகன் என சந்தோஷத்துக்கு பஞ்சம் இல்லாமல் போனது அந்த பொழுதுகள்...

விளையாடி களைத்த குழந்தை தூங்கியதும் அவனை படுக்க வைத்தவள் ராம் அருகில் வந்து படுத்துக்கொள்ள, அவனோ இவளை அணைத்துக்கொண்டான்...

"என்ன சார் அபிக்கு ஹெல்ப் பண்ற ஐடியா இல்லையா?..."

"இப்போ வேணாம் டி கண்ணம்மா.. அவன் இன்னும் கொஞ்சம் வளரட்டும் வன் இயர் ஆகட்டும் அப்பறம் பெத்துக்கலாம்..."

"அவனுக்கு வேணாம் சரி அவன் அம்மாக்கு வேணுமாமே..." என்றவள் கண் சிமிட்ட... ராமோ அவள் ஆசையை நிறைவேற்றும் வேலையில் இருந்தான்.....



நான்கு வருடங்களுக்கு பிறகு...


இந்த நான்கு வருடங்களில் பல மாற்றங்கள்.. அதில் முக்கியமான ஒன்றாக ராஜய்யா சென்ற வருடம் மீளா துயிலுக்கு சென்றிருந்தார்..


அன்று காலை அமைதியாக தான் விடிந்தது.. ஆனால் அதற்கு நேர்மறாய் நிலவனுக்கும் அதிரலுக்கும் பரபரப்பாய் தான் அமைந்தது...

தாயின் அமுதம் குடித்து முடித்த அவர்களது ஒன்றரை வயது மகள் வான்மொழியாளை நிலவன் கையில் கொடுத்த அதிரல்... மூன்று வயது மதியழகனை குளியலறைக்குள் தூக்கி சென்றாள்..

"செல்லக்குட்டிக்கு இன்னும் தூக்கம் போகலயா?? அம்மா சீக்கிரமே எழுப்பி விட்டுட்டாளா?.. அவளுக்கு அடி கொடுக்கலாம் சரியா.. அக்கா கூட நீங்களும் தூங்குங்க" என்றவன்

தூக்கத்துக்கு கண்ணை மூடும் மகளை அவளின் இரட்டை சகோதரியான அவன் மகள் மென்மொழியாள் அருகில் படுக்க வைத்தான்...

மகனோடு மல்லுகட்டி வெளியே வந்தவள்.. கட்டிலை பார்க்க மகள்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.. நிலவன் மீது கொலைவெறியே வந்தது...

"ஏங்க... நானே அந்த கும்பகர்ணிய கஷ்டப்பட்டு எழுப்பி விட்டா நீங்க மறுபடியும் தூங்க வெச்சிடீங்களா??..." என்று ங்க யில் அவள் கொடுத்த அழுத்தத்திலே தெரிந்தது அவள் கோபத்தின் அளவு...

மற்றவர்கள் முன் அவனை மரியாதை குறைவாக என்றும் நடத்தியதில்லை அவள், அது அவர்கள் பிள்ளைகள் என்றாலும் சரி...

"பாவம்டி என் செல்லம் கண்ண மூடுறத பாக்க பாவமா இருந்திச்சு..." என்று அவன் பாவமாய் சொல்ல...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"அப்போ பங்ஷன் யாரு போவா... டைம் ஆகுதுங்க.. நாமலே லேட்டா போனா எப்படி?..." என்றவள் பேச்சினூடே மதியழகனை தயார் செய்திருந்தாள்...

"மதி கண்ணா.. பாட்டி கிட்ட போய் இருந்துக்கோங்க.. அம்மா பாப்பாங்க ரெண்டு பேரையும் ரெடி பண்ணி கூட்டிட்டு வறேன்.. அப்பறம் நம்ம தன்வி பாப்பா ஆர்த்தி பாப்பாவ எல்லாம் பாக்க போகலாம்..." என்று சொல்ல

அவள் மகனோ இப்பவே கண்ணனாய் "கணலி பாப்பா..." என்றான் கேள்வியாக...

அவளோ நிலவனை முறைத்தாள்.. "இதுக்கு தான் பசங்க கிட்ட அப்படிலாம் பேச கூடாதுனு சொல்றது... பாருங்க இப்போவே ஒருத்தி இல்லனா இன்னொருத்திய தேடுறான்..."

"நீ பாப்பாங்கள பாரு.. இதோ இவன அம்மாகிட்ட விட்டுடு வறேன்..." என்று அவளிடம் தப்பி ஓடியவன் வெளியே வர..

வெளியே கார்த்தி கீதா அவர்களது இரண்டு வயது மகள் இனியா என குடும்பம் சகிதமாய் தயாராகி அமர்ந்திருந்தனர்..

நிலவனை கண்டதும் அவன் சிரிக்க.. "ஆணவத்துல ஆடாதடா அண்ணா.. இவன வெச்சிக்கோ... கணலி பாப்பாவ கேட்டு என்ன மாட்டிவிட்டுட்டான் டா... பெரிய பிளே போயா வருவாரு போலிருக்கு இப்பவே மூனு மாமன் பொண்ணுங்க இவருக்கு.." என்று மகன் கன்னத்தில் முத்தமிட்டு கார்த்தியிடம் தர...

"இப்படி வருசத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ணிட்டே இருக்கியே ஸ்கூல் எதுவும் கட்ட போறியா என்ன?..."

"பொறாமைல பொங்காத பொண்ட்டாட்டி மேல பாசம் ஓவர் ப்லொவ் ஆகுனா அப்படிதான்... உனக்கு என் பாட்னர் மேல பாசம் இல்லனா நான் என்ன பண்றது..." என்று போறப்போக்கில் கார்த்தியை அவன் மனைவியிடம் கோர்த்து விட்டே சென்றான்...

"அட கிராதகா ஒரே ஒரு கேள்வி தானடா கேட்டேன்.. என் லைப்ல விளையாட்டிட்டு போறான்... இவ வேற முறைக்குறளே..." என்றவன் அவளை பார்க்காமல் குழந்தைகளுடன் ஐக்கியம் ஆகினான்...



நிலவன் உள்ளே செல்ல அவன் புதல்விகள் கை காலை ஆட்டி ஏதோ அவர்கள் பாஷையில் பேசி சிறிது கொண்டிக்க, அதிரலோ அவர்களை மிரட்டி கொண்டிருந்தாள் பார்க்கவே அவன் கண்களுக்கு கவிதையாய் தெரிந்தது...

"அடியேய் ரெண்டு பேரும் இப்போ இந்த டிரஸ போடல உங்க அப்பாக்கு தான் அடி விழும்..." என்க என்ன புரிந்ததோ குழந்தைகள் இன்னும் சிரிக்க...

"அப்பாக்கு அடிக்கிறதுனா போதுமே.. அம்மாக்கும் பொண்ணுங்களும் ஒரே ஹாப்பி தான்ல..." என்று அவர்கள் அருகே வந்தவன் மென்மொழியை கையில் ஏந்தி அவளுக்கு ஆடையை அணிவிக்க சமத்தாய் குழந்தை அணிந்து கொண்டாள்...

"சரியான அப்பா கொண்டு.." என்று அதி அவள் கன்னத்தில் கிள்ள, முகத்தை சுருக்கி அழ தயாரானாள் குழந்தை...

"அச்சோ.. என் பட்டுக்கு வலிச்சுடிச்சா.." என்று கன்னத்தில் முத்தமிட அழுகை தன்னால் சிரிப்பாய் மாறியது...

குழந்தைகளை தயார்படுத்திய அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் அதிரலும் நிலவனும் தயாராகி வெளியே வந்தவர்கள்... மற்றவர்களுடன் சேர்த்து கிளம்பினர்...



அவர்கள் வாகனம் நேரே சென்று கொண்டிருந்தது... எம்ஏ ஹாஸ்பிடல் திறப்பு விழாவுக்கு தான்... நண்பர்கள் நால்வருடன் அதிரல், கார்த்திக், கீதா, புகழ், வைஷ்ணவி, யாழினி என்று இவர்களும் இணைந்து உருவாக்கியது தான் இந்த எம்ஏ ஹாஸ்பிடல்..

பாலமூர்த்தியின் ஞாபகர்த்தமாக எம்மும் அறிவழகனின் ஞாபகதர்த்தமாக ஏயும் என்றே எம்ஏ ஹாஸ்பிடல் என்று பெயரிட்டிருந்தனர்...

மருத்துவமும் மருந்தும் எந்தவித கலப்படமும் இல்லாமல் மக்களை போய் சேரவேண்டும் என்ற நோக்கத்துடனே இதனை ஆரம்பித்தனர்...

இதற்காக பூஜா, ராம், விஷ்ணு கூட வெளிநாட்டுக்கு செல்லாமல் இங்கேயே மொத்தமாய் வந்துவிட்டனர்..


இவர்கள் அங்கே செல்ல அனைவரும் வந்திருந்தனர்... பூஜாவும் ராமும் அவர்களது குழந்தைகளான ஆறு வயது அபினேஷ் உடனும் இரண்டு வயது தன்விதா உடனும் நின்றிருக்க..

புகழ் வைஷ்ணவி இருவரும் அவர்களது இரண்டு வயது மகள் ஆர்த்திஷா உடனும்...

விஷ்ணு யாழினி அவர்களது ஒன்றரை வயது மகள் கணலி உடனும் நின்றிருந்தனர்...

நிலவன் உள்ளே நுழைய அவர்கள் முறைப்பையே பெற்றுக்கொண்டான்...
இதோ வருகிறேன் என்று ஒரு மணி நேரம் கழித்து வந்திருந்தானே... முறைக்காமல் இருந்தால் தான் அதிசயம்...


வைத்தியசாலை திறப்பு விழாக்கு முரளி கிருஷ்ணனும் சாரதாவுமே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்...

விழாவும் சிறப்பாய் நடந்து முடிய நிலவனோ மகனை தேட.. அவனோ பெண்கள் கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்தான்..

மதியை சூழ கணலி ஆர்த்தி தன்வி என நின்றிருக்க அவனோ அவர்களுக்கு மிட்டாய் கொடுத்துகொண்டிருந்தான்... அதிலும் மிட்டாய் வாங்கி கொண்ட கணலி அவன் கன்னத்தில் முத்தம் வேறு பதிக்க..

அதனை கண்ட விஷனுவோ "டேய் மச்சான் இப்போவே உன் பையன் என் பொண்ண கரெக்ட் பண்ணிட்டான் டா... லவ்ல உனக்கே டப் கொடுப்பான் போலிருக்கே.."

"டேய் சத்தம் போடாதடா... காலைல தான் என் பொண்டாட்டி கிட்ட வாங்கி கட்டிருக்கேன்... நீ வேற மறுபடியும் ஆரம்பிக்காத.." என்று கும்பிட..

அங்கே சாப்பாடு தயாராகி இருந்த இடத்தில் ஏதோ சத்தம்... நிலவனும் நண்பர்களும் என்னவென்று அங்கு விரைய..

அங்கே ஒரு பெண்மணி சாப்பிட அமரபோக, சாப்பாட்டு பொறுப்பாக இருந்தவன் விரட்டி கொண்டிருந்தான்...

அவரை பார்க்கவே அத்தனை பாவமாக தான் இருந்தது நிலவனுக்கு.. மிகவும் வறுமைபட்ட நிலையில் தான் இருந்தார்... முகம் கை கால் எல்லாம் காயங்களாக இருந்தது...

"ஏன் விரட்டுறீங்க சாப்பிடட்டுமே..." என்று அங்கே வந்த நிலவன் சொல்ல

"இல்ல சார் இந்த அம்மா நாலாவது முறையா பந்தில உக்கார பாக்குறாங்க... மூனு தடவையும் ஒன்னும் சொல்லாம தான் சாப்பாடு போட்டோம்... இந்த முறையும் வந்திருக்காங்க... இன்னும் நிறைய பேர் சாப்பிடணுமே சார்.. அவங்களும் பசில தான் இருக்காங்க..." என்று அங்கே நின்றிருந்தவர்களை காட்ட.. அவர்களும் கஷ்டப்பட்டவர்கள் என்று புரிந்தது...

"ஓகே விரட்ட வேணாம் சாப்பாடு ஒரு பார்ஸல் கட்டி கொடுங்க, வீட்டுக்கு கொண்டு போகட்டும்.." என்றவன் அந்த பெரியவரிடம்...

"அம்மா.. உங்களுக்கு வீட்டுக்கு கொண்டு போக சாப்பாடு கட்டி தருவாங்க.. கொண்டு போங்க" என்று சொல்லி கொண்டிருக்க,

அங்கு வந்த அதிரல் அவனிடம் ஏதோ பேசி கொண்டிருக்க அதனை பார்த்த அந்த பெண்மணியின் கண்கள் விரிந்து கொண்டது.. அங்கிருந்து நடக்க முடியாமல் காலை விந்தி விந்தி செல்ல தொடங்கினார்...

அப்போது சரியாக உணவு பொட்டலத்தை கொண்டு வந்த ஊழியன் அந்த பெண்மணியை தேட அவரோ அங்கிருந்தே சென்று கொண்டிருந்தார்... நிலவன் அதை தான் கொடுப்பதாக அந்த ஊழியனிடம் வாங்கி கொண்டான்...

"அச்சோ சாப்பாடு வங்காமலே போறாங்களே... இரு அதி நான் இத அவங்க கிட்ட குடுத்துட்டு வந்துடுறேன்..."

"உன்ன அங்க முரளி சார் ஏதோ கேஸ் சம்மந்தமா பேசணும்னு, கேட்டாங்க நிலவா.. நீ போ நான் கொடுக்குறேன்..." என்று அந்த பெண்மையை நோக்கி வேகமாக சென்றவள் அவரை பிடித்தும் கொண்டாள்...

"என்னங்க... சாப்பாட வாங்காமலே போறீங்களே..." என்றவள் உணவை கொடுக்க, அவர் முகத்தை பார்த்து அவளுக்கு அதிர்ச்சி தான் ஆனால் காட்டிக்கொள்ளவில்லை... உணவை அவர் கையில் வைத்தவள் திரும்பி நடக்க தொடங்கி இருந்தாள்...

அவள் காணவே விரும்பாத உருவம் அது... தன் தாயை ஏமாற்றியவரின் மூத்த மனைவி அவர்... ஆம் விசாலாட்சியே தான்... யாரை நம்பி போனாரோ அவன் இரண்டு நாட்களில் தெருவில் விட்டிருந்தான்....

இவருக்கே இந்த நிலை என்றால் அந்த கலையரசனின் நிலையை கேட்கவும் வேண்டுமா?...

அங்கே ஒரு முதியோர் இல்லத்தில் இரு கால்களும் வலது கையும் இல்லாத நிலையில் படுத்த படுக்கையாய் இருந்தார் கலையரசன்...

பல நாள் பசி மயக்கத்தில் நடந்து சென்றவர் மயங்கி அந்த பக்கம் வந்த லாரியின் முன்னே தவறுதலாக போய் விழுந்ததில் தான் இந்த நிலைமை...

அதிஷ்ட வசமாக உயிர் மிச்சம் இருந்தது... யாரோ ஒரு நல்ல உள்ளம் இங்கே கொண்டு வந்து போட. அன்றிலிருந்து இந்த அறையே அவர் வசம்... சில நேரங்களில் சாப்பாடு ஊட்ட ஒருவர் இருப்பார்.. பல நேரங்களில் இடது கையாலேயே உண்ணும் நிலைமை....

சிலர் நமக்கு செய்த தீங்கை தாம் மறந்து கடந்தாலும் கடவுள் அதற்கான தண்டனையை கொடுக்க மறப்பதில்லையே.....

இன்னும் நம்மை சூழ வாழும் நல்லவர்களை போலவே கேட்டவர்களும் இருப்பர்... இயற்கைக்கு மாற்றமாக உலகில் நடக்கும் ஒவ்வொரு செயலும் அதற்கான கூலியை அடைந்தே தீரும்.. அது நடக்கும் நேரம் தான் ஒருவருக்கு ஒருவர் மாற்றம் பெரும்....



அன்றிரவு குழந்தைகளை தூங்க வைத்தவள் கணவனுக்காக காத்திருக்க.. அன்று வேலை எல்லாம் முடித்து அவன் வரவே சற்று தாமதமாகி இருந்தது... குளித்து முடித்து வந்தவன்

"தூங்கிட்டாங்களா?... கொஞ்சம் லேட்டாகிடிச்சுடி... என்ன தேடுனாங்களா?.."

"உன் பசங்க உன்ன தேடாமலா இருப்பாங்க...."

"பசங்க மட்டும் தானா..." என்றவன் அவள் அருகில் படுத்துக்கொள்ள

"நாலு பசங்களும் அவங்க அம்மாவும் உன்ன தான் தேடுனாங்க.."

"இனியா குட்டியும் தேடுனாளா?.."

"ம்ம்ம்கூம்... உன் பசங்க நாலு பேரும் தேடுனாங்கனு சொன்னேன்..."

அவள் சொல்ல வருவது அவனுக்கு புரிய, கண்களால் அவளிடம் கேட்டவனுக்கு அவளும் ஆம் என்பதாய் தலையசைக்க சந்தோஷத்தில் அவன் முகம் ஜொலித்தது...

"ஈவினிங் தான் செக் பண்ணி பார்த்தேன்..."

"ரொம்ப ரொம்ப ஹாப்பி டி பொண்டாட்டி..." அவள் மணி வயிற்றில் முத்தமிட்டவன் "பசங்க ரொம்ப ஓட்டுவாங்களேடி..." என்று அவன் பின்னந்தலையை கோதி வெக்கப்பட்டு,
ஆண்கள் வெக்கம் கூட கவிதை என்பதை மீண்டும் ஒருமுறை அவன் மனைவிக்கு உணர்த்தினான்...

"இதுக்கே வெக்கப்பட்டா எப்படி.. இன்னும் குறைஞ்சது ரெண்டு இருக்கே.." என்று விரல்களால் காட்ட..

அந்த விரல்களில் முத்தமிட்டவன்... "இப்போவே ஏசிபி பள்ளிக்கூடம் நடத்த முயற்சியான்னு பேசிக்கிறாங்க.. இனிமேல் கொஞ்ச நாளைக்கு நான் தான் காட் டாபிக்..." என்றவன் சிரிக்க, அவளும் சேர்ந்து சிரித்தாள்....

"அதுசரி இன்னைக்கு பாட்டு இல்லையா???" என்று அவன் கிறக்கத்துடன் கேட்க..

அவளோ வெக்கத்துடன் சம்மதம் சொல்ல...

"ஜாதி மல்லி பூவே
தங்க வெண்ணிலாவே..
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு...."

அவர்களுக்கேயான பாட்டுடன் அவர்களது சங்கமம் ஆரம்பமானது....

விரலில் வீற்றிருந்த மோதிரத்தில்.. நிலவும் ஜாதி மல்லியும் அவர்களை லட்சமாவது தடவையாய் மீண்டும் முத்தமிட்டு கொண்டது....




அங்கே ரம்யா கோபமாக அமர்ந்திருந்தாள்.. ஆதியை பற்றி கேள்வி பட்ட நாளில் இருந்தே அவன் மீது கோபம் அவளுக்கு... அந்த வழக்கு சம்பந்தமாக ஆதியின் மேலே தவறு இல்லை என்று சொன்னாலும் அவள் மனம் அதனை நம்ப மறுக்க, பார்க்கும் இடமெல்லாம் அவனை முறைத்து கொண்டு தான் சுத்துகிறாள்... நிலவனுக்கு தொடர்பான நிகழ்வுகளில் பெரும்பாலும் அவனை சந்திக்க நேரிடதான் செய்கிறது...

இவள் இவன் எண்ணத்தில் இருக்க... அங்கே அவனோ..

"பொண்டாட்டின்னு யாரையாச்சும் கூட்டிட்டு வந்தீங்க அடுத்த நாளே வீட்ட விட்டு ஓட வைப்பேன்..." என்றான் முரளிகிருஷ்ணனை பார்த்து...

இருவரும் ஒருவரை ஒருவர் நினைக்கும் அந்த நேரம் சரியாக கியூபிட் இருவர் மீதும் அம்புகளை ஏரிய தயாராக...

குறுக்கே வந்த நிலவன்...
"ஹெலோ கியூபிட் சார்... இது என்னோட கதை... இங்க அம்பு மொத்தமும் எனக்குத்தான்... வேணும்னா நீங்க அடுத்த கதைல ட்ரை பண்ணுங்களேன்.." என்று அம்புகள் அத்தனையும் வாங்கி செல்ல கியூபிட்டோ சோகமாய் திரும்பி சென்றது அம்புகளை எடுத்து வர.....

இன்னும் சில வருடம் கழித்து அம்புகளுடன் கியூபிட் வரும் போது இங்கே அருளாதித்யன் ரம்யஸ்ரீ வாழக்கையில் பல திருப்பம் நிகழ்ந்திருக்கும்....



ஜாதி மல்லி மலரும்.....



ஜாதிமல்லி பூ மூலமா என்னோட பயணித்த அணைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி... இந்த கதைய முடிக்கிறதுக்கு நீங்களும் மிகப்பெரிய காரணம்... உங்க ஒவ்வொரு விமர்சனமும் என்ன அவ்வளவு சந்தோச படுத்திச்சு... வாசகி ஒருத்தர் கிட்ட விமர்சனம் கேட்டு கூட வாங்கி இருக்கேன்...

அதிரல் நிலவன் அண்ட் அவன் நண்பர்கள் கூட நம்ம பயணம் இன்னையோட முடியுது... உங்கள போலவே நான் உருவாக்குன இந்த கதாப்பாத்திரங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன்... காதப்பாத்திரம் என்கிறத விட என்னோட ரொம்பவே கிளோஸ் ஆகிட்டாங்க கதைல வந்த அத்தனை நல்ல உள்ளங்களும்...

எனக்கு பர்ஸ்ட் பேவரைட்னா அது எப்பவும் நிலவன் தான் பட் அவனுகடுத்ததா எனக்கு புகழ ரொம்ப பிடிக்கும்...

அப்படி உங்கள கவர்ந்த காதபாத்திரம் எதுனு சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்...

தப்பு பண்ணவங்களுக்கு என் மனசுக்கு சரினு பட்ட தண்டனையை கொடுத்த திருப்தியோட.. இந்த கதைய சந்தோசமா நிறைவு செஞ்சி வைக்கிறேன்...

இன்னொரு முறை.. உங்கள எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....



கருத்து திரி 👇👇👇👇

inbound931383731914422023.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top