ஜாதி மல்லி பூ 03
சுற்றி எங்கும் குமிருட்டு... அடர்ந்த காடு... பயமுறுத்தும் அமைதி.... அதை கலைக்க தூரத்தில் எங்கோ விலங்கு ஒன்று அலறும் சத்தம்.... கூடவே அந்த சத்தத்தையும் தாண்டி அதிரல் காற்றை கிழித்து வேகமாக ஓடிகொண்டிருந்தாள்... பின்னால் அகோர உருவம் ஒன்று விடாமல் துரத்திகொண்டே இருந்தது...
அந்த உருவத்தை திரும்பி பார்த்தவாறே ஓடினாள்.. உயிர் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை... வாழ வேண்டும் என்ற ஆர்வம் கூட பெரிதாக இல்லை... ஆனால் அந்த உருவத்தின் அருவருப்பு அவளை நிற்க விடவில்லை... ஓடுவதையும் நிறுத்த விடவில்லை... ஒருகட்டத்தில் அவளாலும் முடியாமல் போனது.... கால்களில் இருந்த பலம் வடிய... வேகம் படி படியாய் குறைந்து அந்த கோர உருவத்தின் பிடியில் சிக்க இன்னும் சில நொடிகளே....
முடிந்தது.... எல்லாம் முடிந்தது.... இனி இவ்வுலகில் அவள் இல்லை என தன் தாயை மனதில் எண்ணியபடி கண்களை மூடியவளை ஓர் வலிய கரம் பற்றி அதன் இரும்பு நெஞ்சுக்குள் அவளை புதைத்துக்கொண்டது... அந்த உருவமோ என அருவருத்தவளுக்கு... இல்லை, இது தன்னை அரன் போல் காக்கவந்தவன் என மூளை எடுத்துரைத்தது... அக்கைகளுக்குள் பாதுகாப்பாய் ஓர் உணர்வு.. அவள் காதுக்கு மிக அருகில் கேட்ட இதயத்துடிப்பு அவளுக்கே அவளுக்காய் துடிப்பது போல் ஓர் உணர்வு.. இனி தனக்கு ஆபத்து இல்லை என்பதாய் அவளிடம் ஒரு பெருமூச்சு....
தன்னை எழுப்ப முயன்ற அவன் குரலோ காதின் ஒரு மூலையில் ஒலித்தது.. கண்களை மெல்ல திறக்க முயன்றவளுக்கு அவன் மங்களான வரி வடிவமே தெரிந்தது.... நன்கு இமை தட்டி பார்க்க முயன்றவளுக்கு அவ்வளவு எளிதில் அது முடியவில்லை... இருந்தும் முயன்று விழித்தவளுக்கு சுற்றிலும் இருட்டு... மீண்டும் இமை தட்டி இருட்டை பழக்கபடுத்த சிறிது சிறிதாக அவ்விடம் பார்வைக்கு புலப்பட்டது.... அவள் காணும் இடம் அவள் அறை என்பதை உணர்த்த மூளை சில வினாடிகள் எடுத்ததுகொண்டது..... அதன் பின்னரே அவள் கண்டது கனவு என்பதும் அவளுக்கு புரிந்தது....
எழுந்து நேரத்தை பார்த்தவளுக்கு காலை நான்கு மணி என கடிகாரம் பதிலளித்தது..... "ச்சே என்ன இது இப்படி ஒரு கனவு"..... என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவாறே தலையை பிடித்துக்கொண்டாள்..... இனி தூங்கினாலும் தூக்கம் வர போவதில்லை என உணர்ந்தவள்.... அங்கு பால்கனியில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் போன்ற கதிரையில் அமர்ந்தவாறே அமைதியின்றி தள்ளாடும் மனதை அடக்க எப்போதும் போல் தாயின் டைரியை வெறிக்க தொடங்கினாள்...... கூடவே பழைய நினைவுகலின் பிரவாகம் அலை அலையாய் அவளுள்ளே....
சரியாக மூன்று வருடங்கள் முன்பு தாயின் நினைவு நாள் ஒன்றில் இங்கிருந்து கிளம்பியவள் தான்.... அதன் பின் அவள் வந்தது கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு தான்..
அதிரலின் தாய் சீதாலட்சுமி.., அழகும் அமைதியும் வசதியும் அளவுக்கு அதிகமாக கொடுத்த கடவுள் அதற்கு விலையாய் வாழ்க்கையையும், ஆயுள் ரேகையையும் வாங்கி கொண்டாரோ என்னவோ???....
ஊரில் பெரும் பணக்காரர் ராஜய்யாவின் ஒரே வாரிசு தான் சீதாலட்சுமி.... சிறுவயதிலேயே தாயை இழந்த தன் மகள் திருமண வயதை அடைந்ததும் அவர் தேடாத வரன் இல்லை... நீ நான் என போட்டி போட்டுகொண்டு வந்த வரன்களில் சிறு குறை இருந்தாலும் நிராகரித்தார்..... அந்தளவுக்கு சிறத்தையுடன் தேடினார் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளையை மட்டுமின்றி தன் சொத்துக்கு ஏற்ற வாரிசையும்.......
அந்த நேரம் அவர்களின் வீட்டில் கார் டிரைவர் ஆக வேலைக்கு சேர்ந்தவர் தான் கலையரசன்... நன்கு படித்தவர் தான் ஒரு அனாதை எனவும் சந்தர்ப்ப சூழ்நிலை எனவும் இந்த வேலையில் சேர்ந்தார்.... பார்க்க அமைதியான முகமும், நல்லா குணமும், வேலையில் நேர்த்தியும் அவரை ஒரு வருடத்திலேயே ராஐய்யாவின் நம்பிக்கைக்குரியவராக மாற்றியது.....
இத்தனை வருட வாழ்க்கையில் அவர் மனிதர்களை படித்து கொண்டது இந்த ஒரு வருடத்தில் தான்...... வெள்ளந்தி மனம் கொண்டவர்.... மனிதர்களில் விஷ பாம்புக்களும் உண்டு என அறியாதவர்.... மனைவி இறந்தபின் மகளுடன் வாழ்க்கையை சுருக்கி கொண்டவருக்கு கூட இருக்கும் அட்டைப்பூச்சிகளை இனம் காண தெரியவில்லை.....
மகளுக்கு வரன் பார்க்கும் இந்த ஒரு வருடத்தில் தான் உறவுகள் என கூட இருக்கும் குள்ளநரிகளின் புத்தி அவருக்கு அம்பலமானது.... ஒருவரையும் நம்ப முடியவில்லை..... உறவினர்கள் என்று வருவோர் எல்லாம் தன் மகளையும் வெறும் வருமானமாக தான் பார்த்தனர், பேசினர்..... வெளியில் வரன் பார்க்கவும் விடவில்லை... அதற்கு ஏதோ ஒரு தடை எப்போதும் இருந்துகொண்டே இருந்தது..... பணம் சுரண்ட முடியாமல் போய்விடுமோ என இல்லாத கதைகளை கட்டி ஏதேதோ பேசி எல்லாவற்றையும் கெடுத்தனர்...... ஒரு கட்டத்தில் மகள் பற்றிய கவலையே ராஜய்யாவை மிகவும் வாட்டியது..... எங்கே தனக்கு பின் மகள் தனித்து விடுவாளோ என மிகவும் பயந்து போனார்.... அதிலும் இந்த கழுகு கூட்டத்தின் மத்தியில் விட்டு செல்ல விரும்பவில்லை அவர்.......
அந்த நேரத்தில் அவருக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக தெரிந்தவர் கலையரசன் தான்.... அவரிடம் பேசி எப்படியோ மகளை முடித்து கொடுத்து விட்டார்..... மருமகன் கையில் மகளையும் கொடுத்து சொத்து பொறுப்பையும் கொடுத்தார்..... அப்போது அவர் அறியவில்லை இந்த முடிவுக்காக பின்னாளில் வருந்தபோகிறோம் என.... அறிய நேரிடும் போது நிலைமை கைமீறி சென்றிருக்கும்..... அவரை சுற்றி நல்லவர்கள் இல்லாமல் போனது கூட விதியின் செயல் தானோ என்னவோ....
கலையரசணும் சீதாலட்சுமியும் நன்றாகவே வாழ்ந்து வந்தனர்.... அதற்கு சான்றாக அடுத்து வருடமே கருத்தரித்து அதிரலை பெற்றெடுத்தார் சீதா.... எல்லாம் சுமுகமாகவே சென்றது..... ஆனால் அதிரலுக்கு ஐந்து வயதாகும் போது தான் தெரிந்தது அவளால் பேச முடியாது என்பது..... சீதாலட்சுமி மிகவும் உடைந்து போனார் இருந்தும் மனதை தளர விடவில்லை.... பணம் அளவுகதிகமாகவே இருந்தது அதனால் செய்ய வேண்டிய வைத்தியம் எல்லாம் செய்து கொண்டுதான் இருந்தார்..... காது நன்றாகவே கேட்கும் என்பதால் படிப்பில் பெரிதாக பிரச்சனை இருக்கவில்லை...... இப்படியே நாட்கள் வருடங்களாக விரைந்தது.....
அதிரலுக்கு அப்போது வயது ஏழு..... சென்ற வருடம் தான் இ.என்.டி மருத்துவர் ஒருவரால் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..... கடந்த இரண்டு மாதங்களாக ஸ்பீச் தெரபி சென்றுகொண்டிருக்கிறாள்.... இன்னும் சரிவர பேச முடியவில்லை எனினும் மகளால் பேச முடியும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் சீதா..... ஒருவார்த்தையாவது மகள் பேசி கேட்க மாட்டோமா என்பதே சீதாவின் உச்சக்கட்ட ஆசையில் ஒன்று.....
அன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பீச் தெரபி சென்ற மகள் வரும் நேரம் என்பதால் வாசலில் காத்திருந்தார் சீதா... அப்போது வாசலில் வாட்ச்மேன் யாரிடமோ வாக்குவாதம் செய்வது கேட்டது.....
"குமார் அண்ணா... என்ன பிரச்சனை?.. யார் அவங்க?..."
"யாருன்னே தெரியலமா? இரண்டு நாளா வந்து பிரச்சனை பண்ணுறாங்கம்மா?? பெரியய்யாவோட பேசணுமாம் தூரத்து உறவாம்னு கத விட்டுட்டு இருகாங்க மா"..... என்றவர் வெளிய நின்ற பெண்மணியை வெளியேற்றுவத்திலேயே குறியாய் இருந்தார்..
"குமார் அண்ணா இது தப்பு.... இப்படி பேசாதீங்க... அவங்கள உள்ள விடுங்க... நான் பேசிக்கிறேன்....." என்றவாறு அந்த வயதானவரை உள்ளே அழைத்து சென்றார்....
"சின்னய்யா நான் குமார் பேசுறேனுங்க.... அந்த அம்மா உள்ள போயிடிச்சுங்க ஐயா.... எவ்வளவு தடுத்தும் சீதா அம்மா பாத்துட்டாங்க ஐயா..."
"சீட் இடியட் ஒரு வேல ஒழுங்கா பாக்க மாட்டியே.... அந்த பைத்தியம் யாரை கண்டாலும் உள்ள கூட்டிட்டு போய்டும்.... அந்த கெழவன் வீட்ல இருக்கானா?"
"ஆமாங்கய்யா...."
"சரி நான் இப்போவே வரேன்... காளிக்கு போன போட்டு ஆளுங்களோட நான் வர சொன்னதா சொல்லிடு...."
"சரிங்கய்யா..."
உள்ளே அழைத்து சென்ற சீதா அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தவர்.... வேலையாளிடம் தந்தையை அழைத்து வர பணித்தார்....
"அடடே பாக்கியம் நீயாம்மா.... பெரியப்பா எப்படி இருக்காங்க?.... உங்கள எல்லாம் பாத்து எவ்வளவு நாள்.... என்ன விஷயமா வந்தம்மா???....." என பேசியவாறே படியில் இறங்கி வந்தார் ராஜய்யா
"நமக்கு இவங்க உறவுகாரங்களா பா?..."
"ஆமாம்மா.... தூரத்து உறவு முறை தான்... இருந்தாலும் உன் தாத்தா காலத்துல இருந்து ரொம்ப பழக்கம்.... அப்பறம் இங்க வந்ததும் பேச்சு விட்டு போச்சு... இவ உனக்கு அத்த முறை வரும்..." என மகளுக்கு விளக்கியவர்... "என்ன சாப்பிடுற பாக்கியம்.." என்று அந்த பெண்மணியிடம் முடித்தார்...
ஐயோ அண்ணா அதெல்லாம் வேணா?... ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் அண்ணா.... நேரம் குறைவா இருக்கு வந்த விஷயத்தை சொல்லிடுறேன்ணா... என்றவர் பேசும் போது அடிக்கடி வெளியில் பார்த்துக்கொண்டவர் மேலும் தொடர்ந்தார்.....
"அண்ணா கலையரசன் என் பையன் தான் ணா...." என்று சொல்ல மற்ற இருவர் முகத்திலும் குழப்ப ரேகை.....
"அவன் ஒன்னும் நல்லவன் இல்ல.... ஏற்கனவே ஊர்ல கல்யாணம் பண்ணி ஒரு பிள்ளையும் இருக்கு... நீங்க மாசம் மாசம் அனுப்புற பணம் அவங்களுக்கு பாத்தலயாம்.... பணத்தாசை பிடிச்ச என் புருசனும் இவனும் சேர்ந்துதான் பொய் சொல்லி உங்கள ஏமாத்திட்டாங்க ணா..... இதுக்கு அவன் பொஞ்சாதி அந்த பாவியும் கூட்டு" என்று அண்ணனிடம் முடித்தவர்..... "எவ்வளவு முறை இத சொல்லணும் னு முயற்சி செஞ்சும் முடியாம போச்சு.... எவ்வளவோ சொல்லி பார்த்தேன்மா பணத்தாசை பிடிச்ச பேய்ங்க திருந்தவேயில்லை.... எங்க நான் உன்கிட்ட சொல்லிடுவேனோனு அவங்க என்ன அடைச்சு வெச்சிருந்தாங்கமா... இரண்டு நாள் முதல் தான் தப்பிச்சேன்.... என்ன மன்னிச்சுடுமா" என்று சீதைவின் காலில் விழுந்துவிட்டார்.....
சீதாவின் நெஞ்சில் யாரோ காலால் மீதிப்பதை போன்ற உணர்வு..... அப்படியே சிலையாய் நின்றவரை கலைத்தது அந்த கொடூரனின் குரல்....
"எல்லாம் தெரிஞ்சிடிச்சு போல.... அப்பாடா இனி நடிக்க தேவ இல்லை.... எத்தன நாள் தான் என் பொண்டாட்டி பிள்ளையை ரகசியமா போய் பாக்குறது.... என் புள்ளைக்கு பதிலா கண்ட சனியன எல்லாம் தூக்கணும் எனக்கென்ன தலையெழுத்தா?.... இனி இங்கயே கூடவே தங்க வெச்சிக்கலாம்.... நீயும் இருக்க என்ன செய்யலாம்??? " என்று போலியாய் யோசிப்பது போல் பாவனை செய்தவர்
"அவளும் பாவம் இத்தனை நாள் என்ன உனக்கு விட்டுகொடுத்து வாழ்ந்துட்டா சோ கிழமைல ஆறு நாள் அவளுக்கு... போனா போகுதுனு ஒரே ஒரு நாள் உனக்கு... என்ன ஓகேவா???.... உன் இஷ்டப்படி அந்த ஒரு நாள் என்ன வெச்சிக்கலாம் நீ எப்படி வசதி??..... என்று ஏதோ நகைச்சுவை செய்ததை போல் சத்தமாக சிரித்தார்.... அவருக்கு இருமாப்பு இனி இந்த கிழவானால் என்ன கிழித்திட முடியும் என்பதாய்
"அண்ணா..." பக்கத்தில் நின்ற காளி என்றவர் தலையை சொறிந்தவாறே அழைக்க..
"அட நீ இருந்தத மறந்துட்டேனே... அப்பறம் மாமனாரே இவனுக்கு ரொம்ப நாளா என் பொண்டாட்டி மேல... ச்சே ச்சே என் கள்ள பொண்டாட்டி மேல ஒரு கண்ணாம்.... இவன் வேற எனக்கு ரொம்ப உதவி செஞ்சிருக்கான்... நாலு அஞ்சு கொலை வேற பண்ணி இருக்கான் நன்றியா இருக்கணுமா? இல்லையா? என்ன பண்ணலாம்.... ஒரே ஒரு நாள் அவனுக்கு கொடுத்துடலாமா???? என்னடா ஒரு நாள் போதுமா?"
"ஐயா கிழமைல ஒரு நாள் எனக்கு போதும்..... என் தம்பி கூட ரெண்டு கொலை பண்ணி இருக்கான்" என்றான் தம்பிக்கும் தன் ஈன செயலில் நியாயம் செய்தபடி....
"ஹாஹாஹா..... அப்படி கூச்சப்படாம கேளு டா..... ஆமல அவனும் பண்ணியிருக்கான் உனக்கு தந்து அவனுக்கு தராட்டி கோச்சுப்பானே.... அவனுக்கும் ஒரு நாள் கொடுத்துட்டா போச்சு தாராள மனசுடா எனக்கு கஞ்சத்தனம் இல்லைவே இல்லை" என்று சொன்னவன் மனிதன் இல்லையோ என்ற சந்தேகம் தான் அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியது.....
"நீயெல்லாம் மனிசனா.... உன்ன நம்பி என் பொண்ண குடுத்தனே.... கம்பெனில இருந்து எவ்வளவோ பணம் நீ எடுத்தும் உன் மேல இருந்த நம்பிக்கைல அதெல்லாம் கண்டும் காணாம இருந்தனே.... இப்ப இப்படி என் பொண்ணுக்கே நம்பிக்கை துரோகம் பண்ணிடியே.... என் பொண்ணு வாழ்க்கைய நானே அழிச்சிட்டேனே....." என்று கேட்டவாறே கலையரசனை வெறிகொண்டு தாக்கினார்...
"என் பாஸயே அடிக்கிறியா?" என்று காளி அவரை அடிக்க அந்த கலவரத்தில் சீதா அங்கிருந்து சமையலறை நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை... இவ்வளவு நேரம் நடந்தவற்றை வாயில் கதவின் அருகில் மறைந்தவாறே பார்த்துக்கொண்டிட்டிருந்த அதிரலை தவிர..... நடப்பவை புரியாவிட்டாலும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது குழந்தைக்கு..... பயத்தில் தாயை தேடும் குழந்தையாய் அவளும் சமையலறை பக்கம் சென்றாள்.... கதவு மூடபட்டிருந்தது.... ஜன்னல் வழியே எட்டிபார்த்தவள் கண்டது, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி நிற்கும் அன்னையை தான்.....
அதிரலை கண்டதும் சிறிது நிதானித்தவர்...
"அப்பு... அம்மா போறேன் டா.... நான் சொன்னாலும் உனக்கு புரிஞ்சிக்கிற வயசு இல்ல..... அந்த ஆள் தொட்ட இடம் எல்லாம் அம்மாக்கு எரியுதுடா.... இந்த உடம்பு அம்மாக்கு வேணாம்டா... இப்போ இன்னொருத்தனும் அம்மாவ தொட போறானாம்.... நான் சாதாரணமா செத்தாலும் செத்த உடம்பையும் விடாத நரி கூட்டம்டா இது..... அம்மா எறிஞ்ச சாம்பல் கூட கிடைக்க கூடாது இவனுங்களுக்கு..... அம்மாவால முடியலடா அப்பு மனசு ரொம்ப வலிக்கிது.... உன்ன விட்டு போக அம்மாக்கு விருப்பமில்லை ஆனா போகாம இருக்கவும் முடியல அப்பு.... மன்னிச்சுடுடா... அப்பு நீ பெரியவளான அப்பறம் புரிஞ்சிப்படா அப்ப அம்மாவ மன்னிச்சுடு அது போதும்... தாத்தாவ தவிர யாரையும் நம்பாத... அந்த கலையரசன நான் மன்னிச்சிட்டேன் என் கோபத்த காட்ட கூட அவனுக்கு தகுதி இல்லை... அவன் எனக்கு யாருமே இல்லை.... உனக்கும் அவன் இனிமேல் யாரோ தான்..... ஒருவாட்டி அம்மானு கூப்பிட மாட்டியாடா?" என்ற ஏக்கத்துடன் கேட்டவாறே தன்னை எரித்து கொண்டார்...... அதிரலில் விரிந்த கண்களுக்குள் அவள் தாய் எரிந்துகொண்டிருந்த விம்பமே முழுவதுமாய்.....
"அம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆ"
என்று அலறியவாறே ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்திருந்தாள் இருபத்தைந்து வயதான அதிரல்..... கண் இரண்டிலும் கண்ணீர் கொட்ட கண்ணை மூடியப்படி தரையிலே படுத்துக்கொண்டாள்.... பதினெட்டு வருடங்கள் கடந்தும் அந்த நாள் அவள் மனதில் இன்றளவிலும் ஆழமான வடுவாய் பதிந்து போயிருந்தது....
தாயிடம் பேச முடியாமல் போன வார்த்தைகளை அவள் அறவே வெறுத்தாள்..... சாகும் போது கூட கேட்டாரே அம்மா என்று அழைக்கும் படி.... முடியாமல் போனதே.... அம்மாவுடன் பேச முடியாமல் போனவை யாரிடமும் பேச பிடிக்கவில்லை அவளுக்கு.... அதனாலேயே முடிந்தளவு வார்த்தைகளை குறைத்துக்கொண்டாள்.....
இப்போதும் அவளால் கலையரசனின் நடிப்பை நம்பமுடியவில்லை.... தான் இருப்பதால் அவருக்கு ஏதோ லாபம் இருக்கிறது என்பதை அவள் அறிவாள்... இருந்தும் அவள் இங்கிருக்க அவளுக்கான காரணங்களும் உண்டு....
சரியாக வண்ணநிலவன் வேலையில் சேர்ந்து ஆகிற்று இரண்டு வாரம்..... அவனுக்கும் மனதுக்கு ஒரு இதமாகவே இருந்தது..... படித்தது ஏதோ இப்போது செய்வது ஏதோ..... இருந்தும் பிடித்து தான் இருந்தது......
சென்னை காவல் நிலையம்..... சற்று பரபரப்பாகவே காணப்பட்டது.... அங்கே யாரோ ஒருவர் அலறும் ஓசை காதை பிளந்தது....
"ஆஆ...ஆ...ஆ வ...லி...க்..கிது சால்... விட்...டு...டு....ங்க சால்.... இனி பண்...ணமா..ட்டேன்...."
"ஓகே இனி பண்ண மாட்ட அப்படி தான..."
"ஆமா சாழ்... " என்றவனுக்கு வார்த்தை கூட குழறலாகவே ஒலித்தது... சரியாக வார்த்தை வர வாய் பிரீ ஆக இல்லையே... நிலவன் தான் வாய்க்குள்ளேயே லத்தியை சொருகி இருந்தானே...
"இனி பண்ணமாட்ட ஓகே... ஆனா ஏற்கனவே பண்ணதுக்கு பனிஷ்மென்ட் வேணும் தான... "
"......" அவனும் இதற்கு என்ன பதில் தான் சொல்வான்... செய்த பாவத்திற்கு தான் காலையிலிருந்து வாங்கிகட்டி கொண்டிருக்கிறானே...
"ஆமாவா இல்லையா..." என்றவனின் கால்களுக்குள் அடைக்கலமானது அத்திருடனின் கை அதன் பின் சொல்லவும் வேணுமா?.. கதறல் சத்தத்தின் உச்சம் தான் அங்கே நிகழ்ந்தது..
"ஆஆஆஆ அம்ம்மா... ஆமா ஆமா.. வேணும் வேணும்.."
"அச்சோ பாரு... நீயே ஆசைப்பட்டு கேட்டும் நான் தராம இருந்தா நல்லவா இருக்கும்..... நான் எல்லாம் வள்ளல் பரம்பர தெரியுமா???..."
"நான் எங்கடா கேட்டேன்..." என்பதே வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்த திருடனின் எண்ணமாக இருந்தது...
"சின்ன பொண்ணுனு கூட பாக்காம நகை தான் கண்ணுக்கு தெரியுதுல... எப்படி பட்ட கண்ணு அது.. அதுக்கு கொஞ்சம் என்ன நிறைவே தரலாம்... அதுக்கு நீ கொஞ்சம் வெய்ட் பண்ணனும் சரியா"
"என்ன எப்படியாச்சும் காப்பாத்திடு கடவுளே... " இன்று உயிரோடு சென்றால் போதுமென்பது போல நிலவனை பயத்துடன் வெறித்தான் அத்திருடன்...
"ராமசாமி..." என்றவனின் குரலுக்கு ராமசாமி என்பவர் அடித்து பிடித்து ஓடி வந்தார்... அவர் கையில் ஒரு பாக்ஸ் இருந்தது... அவனோடு வேலை செய்த இந்த இரண்டு வார பழக்கத்தில் அவன் கூப்பிடும் நோக்கம் அவருக்கு அத்துப்படி... இப்போது இந்த அழைப்பு இந்த பாக்ஸுக்காக தான் என்பதும் அவரறிந்ததே... அதனை பார்த்த திருடனுக்கு தான் அடுத்து என்னவோ ஏதோ என மரண பீதி கண்ணில் தெரிந்தது... ஆனால் அவனே எதிர்பாக்காத ஒன்றே அங்கே நிகழ்ந்தது... ஆம் அது ஒரு முதலுதவி பெட்டி.. அவன் உண்டாக்கிய காயத்துக்கு அவனே முதலுதவியும் அளித்தான்...