ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 19




இப்படியே நாட்கள் கடந்து அதிரல் கல்லூரி வந்து நான்கு மாதம் கழிந்திருந்தது... இடைப்பட்ட நாளில் பல மாற்றம்... அவள் வந்த மறு நாளே நிலவன் அவளிடம் காதலை சொல்லி அவள் கோபத்தையும் பெற்றுக்கொண்டான். ஆனாலும் அவன் நிறுத்தவில்லை தினமும் அவளை ஒரு வழி பண்ணிக்கொண்டுதான் இருந்தான்.. நண்பர்களுக்கு கூட அவனது மின்னல் வேகம் பயத்தையே கொடுத்தது...

இன்று நிலவனுக்கு சைகாட்ரிக் அப்பொய்ன்மெண்ட் ஒன்று இருந்தது.. தற்கொலைக்கு முயன்று மனநிலை மற்றதுக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டருக்கும் மாணவி தொடர்பான முழு அறிக்கை ஒன்று தனக்கு பொறுப்பான ப்ரோபசருக்கு சமர்ப்பிக்கவேண்டி இருந்தது...

அவர்கள் வகுப்பு மூன்று குழுக்களாய் பிரிக்கப்பட்டு தான் அப்பொய்ன்மெண்ட் சென்று கொண்டிருந்தது... அதில் பூஜாவும் இவனும் ஒரு குழு.. விஷ்ணு, அறிவு, நிஷா மூவரும் ஒன்று.. ராம் மற்ற குழுவிலும் என்று பிரிந்திருந்தனர்..

அதிரல் மூன்று குழுக்களுக்கும் பொதுவாய் உதவி செய்து கொண்டிருந்தாள்.. சந்தேகங்களை முடியுமான வரை தீர்த்து வைப்பது... அவர்களை வழி நடத்துவது.. புரியாத விடயங்களை சொல்லி குடுப்பது என அவள் கொஞ்சம் பிசியாக தான் இந்த நான்கு மாதமும் வேலை செய்து கொண்டிருந்தாள்..

நிலவன் அங்கே ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தவன் நேரே அந்த மாணவியை வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான்...

ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி.. தன் தாய் தம்பியிடம் தன்னை விட அதிகமாக பாசம் காட்டுவதால் தாங்கிகொள்ள முடியாமல் கையை வெட்ட தெரியாமல் வெட்டி இருந்தாள் அந்த இளம் சிட்டு... அவள் மனநிலை மாற்றம் வேண்டியே இங்கே அனுமதிக்கபட்டிருந்தாள்...

"ஹாய் வர்ஷி... என்ன பண்றீங்க சாப்டாச்சா?.."

"ஆமாணா.. ஆச்சு.."

"குட் கேர்ள்... இன்னைக்கு நீங்க வீட்டுக்கு போக போறீங்கல்ல வர்ஷி...
போனதும் அண்ணாவ மறந்துடுவீங்களா என்ன?.."

"இல்லையே.. அண்ணா கூட டெய்லி பேசுவேனே..."

"ஓகேடாமா... இனிமேல் அண்ணா சொன்ன போல நடந்துக்குவீங்க தான..."

"பிங்கி ப்ரோமிஸ் ணா.."

"தருண நான் என் வீட்டுக்கு கொண்டு போகட்டுமா???.."

"நோ... நான் தம்பிய யாருக்கும் தர மாட்டேன்..."

"அம்மாடியோ.. யாரோ தருண பிடிக்கலைனு சொன்னாங்க... யாரு வர்ஷி அது..." என்றதும் தெரியாது என்பதாய் உதட்டை பிதுக்கி சிரித்தது குழந்தை... அவள் தலையை கலைத்தவன்

"பாய் வர்ஷி..." என்று அந்த சிறுமியை டிரீட் பண்ணும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தான்...

"எஸ்கியூஸ் மீ மேம்..."

"வா நிலவா.. பேசன்ட் வர்ஷியோட ரிப்போர்ட் ரெடியா?..."

"எஸ் மேம்.." என்று ஒரு பைலை அவரிடம் கொடுத்தான்..

"ஓகே நிலவா.. நான் அப்பறமா செக் பண்ணிட்டு சொல்லுறேன்..."

"ஓகே மேம் பூஜாவோட பைல் ஈவினிங் கொடுக்குறதா சொன்னா மேம்... லைட்டா பீவர் அவளுக்கு... "

"நோ இஸ்சு நாளைக்கு வர சப்மிட் பண்ண டைம் இருக்குல்ல... நாளைக்கே பண்ணிட சொல்லு..."

"தேங்க் யூ மேம்..." என்றவன் அங்கிருந்து வெளியேற எதிரே அதிரல் வந்துகொண்டிருந்தாள்... அவளோ அவனை பார்த்து மெல்ல புன்னகைக்க அவனோ அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை... அவன் பாட்டுக்கு வெளியேறிவிட்டான்... அதிரலுக்கு புரிந்தது அன்று அவள் நடந்து கொண்டதான் விளைவு இது என...

அவளிடம் காதலை உரைத்த நாளில் இருந்து நாள் தவறாமல் அவளுக்கு வரும் ஜாதி மல்லிகை பூ கொத்தும் கடிதமும் இந்த மூன்று நாட்களாக அவளுக்கு வரவில்லை...

அது அவளுக்கு ஏதோ போல் தான் இருந்தது.. முதலில் வெறுப்பாய் இருந்தவை அவை பின்னாளில் அந்த பூங்கொத்தும் "அன்புள்ள ஜாஸுக்கு" என்று ஆரம்பிக்கும் அந்த கடிதமும் இல்லாமல் அவள் நாள் பூரணமடைவதில்லை என்ற அளவுக்கு அதனை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது அவள் மனம்...

நட்பு வட்டம் என அவளுக்கு பெரிதாக யாரும் இருந்ததில்லை... தனிமை விரும்பி அவள்.. படிக்கும் காலத்திலும் கூட நெருங்கிய நட்பு என்று இருந்ததில்லை.. சாதாரணமாக பேசிக்கொல்வது இல்லையேல் படிப்பில் தேவை ஏற்படின் பேசிக்கொல்வது அவ்வளவே அவளுடைய கல்லூரி காலம் இருந்தது...

இங்கு வந்தது முதல் நிலவன் பூஜா மீது காட்டும் கோபத்தில் இருக்கும் நட்பு.. அவன் விஷ்னு ராமிடம் கலாய்த்தபடி பேசும் போது அதில் இருக்கும் நட்பு... அறிவு அவனை ஒதுக்கினாலும் எதை பற்றியும் யோசிக்காமல் அவனுடன் தானாய் போய் பேசும்போது அதில் இருக்கும் நட்பு... தன்னை காதலித்தவளாக இருந்தாலும் நிஷாவிடம் அவன் காட்டும் கண்ணியமான நட்பு... இவை அனைத்தும் அவளை அவன் நட்புக்காக ஏங்க வைத்தது எனலாம்...

அன்று வேண்டும் என்று பேசிவிட்டாள் தான்... பேசியது கொஞ்சம் அதிகப்படியோ என்று பேசிய பின் தான் புரிந்தது... ஒரு மனது போய் பேசு என்று நச்சரிக்க இன்னொரு மனமோ அப்படியே விட்டுவிடு இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்றது... இரண்டின் போராட்டத்தின் விளைவில் அவன் சென்ற திசையில் அவள் கால்களும் தன்னால் சென்றது...

வேகமாய் அவன் முன்னே சென்றவள் அவனை நிறுத்தி இருந்தாள்... அவனோ கேள்வியாய் அந்நிய பார்வை பார்க்க இதய மருத்துவ மாணவியவளின் இதயம் சிறிது தாளம் தப்பி தான் துடித்தது...

"ஐ எம் சாரி மிஸ்டர் நிலவன்... நான் அப்படி பேசி இருக்க கூடாதுதான்.." என்றவள் அடுத்து என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருக்க...

"இட்ஸ் ஓகே மேம்.." என்றவன் அங்கிருந்து சென்றிருந்தான்... அவனையே பார்த்திருந்தவளின் மனதில் அன்றைய நாள் விரிந்தது...




மூன்று நாட்களுக்கு முன்பும் அவளுக்கான மல்லிகை பூங்கொத்தும் கடிதமும் தவறாமல் வந்தது... அன்று அவள் அம்மாவின் பிறந்தநாள்.. அம்மாவின் தாக்கம் அவளுள் பெரிதாய் ஊடுருவி இருந்தது.. அங்கே மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த அமருவதற்க்கான மேடை ஒன்றில் தாயின் புகைப்படம் ஒன்றுடன் தனியே அமர்ந்திருந்தாள்..

அன்றென்று பார்த்து நிலவனும் இத்தனை நாளாய் திருமணம் ஆகிவிட்டதென நடிப்பவளை பிடிப்பதற்காகவென அவன் நண்பர்களுடன் திட்டம் ஒன்றை தீட்டி இருந்தான்...

"டேய் நிலவா இது அவசியமாடா.. ரொம்ப பழைய டெக்னிக்... கண்டுபிடிக்க போறாங்க பாரேன்.. ஒருத்தர் ஒரு நாள் ரெண்டு நாள் பொய் சொல்லலாம் நாலு மாசமாவாடா சொல்லுவாங்க?.." என்றான் விஷ்னு

"ஜெய வேல் சார் தான் சொன்னாரேடா அவர் பேரனுக்கு அதிய பேச போறதா??.... அப்போ கல்யாணம் ஆகலனு தான அர்த்தம்..." என்றாள் பூஜா அவன் கேள்விக்கு பதிலாக

"அதெல்லாம் சரிதான் மச்சி... அப்போ ஏன் அவங்க பொய் சொல்லணும்..."

"ஸ்டார்டிங்ல ஜஸ்ட் பன்னுக்காக சொல்லி இருக்கனும்.. அடுத்த நாள் தான் சார் ஸ்ட்ரைட்டா போய் ப்ரொபோஸ் பண்ணிட்டாரே.. அதான் அவங்க அதே பொய்ய கன்டினியூ பண்ணி இருபாங்கன்னு தோணுதுடா... இவனோட நல்ல நேரம் இவன் பண்ற குறளிவித்த எல்லாம், அவங்க மேனேஜ்மென்ட்ல கம்பளைண்ட் பண்ணாம இருக்காங்க.." என்று பூஜாவிற்கு முன், ராமே விளக்கம் கொடுத்திருந்தான்

இவர்கள் சம்பாசனையில் கலந்து கொள்ளாத நிலவன், அட்டன்டென்ட் சேகரிடம் செய்ய வேண்டியதை சொல்லிகொண்டிருந்தான்..

"அங்கிள் போய் நான் சொல்லி குடுத்தபடி ஜஸ்ட் சொல்லுங்க.. வேற ஒன்னும் பண்ண வேணாம் என்ன சொல்றானு பாப்போம்..." என்றவன் அவர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உயிர்பிக்கபட்டதும் காதில் வைத்திருந்தான் அவள் பேசுவதை கேட்பதற்காக

"சரிங்க தம்பி.." என்று அவரும் அதிரலிடம் செல்ல இவர்கள் மறைந்து பார்த்திருந்தனர்..

"வருங்கால டாக்டர்ஸ் டா நாமெல்லாம்... என்ன காரியம் பண்ணிட்டு இருக்கோம்னு தெரியுதா??.." என்றான் ராம் மறைந்திருந்தவாறு..

"மூடிட்டு நிக்கிறியா இல்ல மிதிக்கட்டுமா???.."

"ஓகே இப்படி அன்பா சொல்லு கேட்கமாட்டேன்னுவனா நானு..."

"இதுக்கு பருத்தி மூட்ட பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்..." என்று விஷ்னு வாய் மூடி சிரிக்க "விஷு" என்ற பூஜாவின் குரலில் விஷ்னு வாயை மூடி கொண்டான்...

சேகர் அதிரலிடம் சென்று " பாப்பா உன் புருஷன்னு ஒருத்தர் வந்திருக்காரு உன்ன சந்திக்கணுமாம்... "

"யாரு அங்கிள்.." என்றாள் முதலில் புரியாமல்

"தெரியலயே மா.. உன் புருஷன்னு தான் சொன்னாரு..."

"எனக்கு தான் கல்யாணமே ஆகலயே அங்கிள்... வேற யாரையோ தேடி வந்துருப்பாங்க செக் பண்ணுங்க..."

"இல்லமா அதிரல்னு தான் கேட்டாங்க... ஒருவேளை உன் வருங்கால கணவரா இருக்குமோ?..."

"இல்லை அங்கிள் அப்படி யாரும் இல்ல... இன்னொரு தரம் அவங்ககிட்ட சரியா கேட்டுப்பாருங்க அங்கிள்.." என்றதும் அவர் திரும்பி அந்த மரத்தடியை நோக்கினார்.. சட்டென நடப்பவை என்னவென்று அதிரலுக்கு புரிந்து போனது... கோபமாய் அங்கே சென்றவள்..

"மிஸ்டர் நிலவன் வெளிய வாங்க..." என்று அவள் கோபமாய் சொல்ல முதலில் நின்றிருந்த பூஜாவை தள்ளி விட்ட நிலவன் அடுத்ததாய் வெளியே வந்தான் அவன் பின்னே ராமும் விஷ்னுவும் வர சேகர் அதிரலில் பின் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார் பாவமாய்...

அவரை பார்த்த நிலவன், "நீங்க போங்க அங்கிள் நான் பாத்துக்கிறேன்" என்று சொல்ல அவரோ திரும்பி பார்த்தபடி சென்றுவிட்டார்...

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நிலவன் நீங்க..." அவன் ஏதோ சொல்ல வர "உன்னதான்னு சினிமா டயலாக் அடிச்சீங்க அப்பறம் என் கைதான் பேசும்..." என்றவள் பேச்சுக்கு "கஷ்டம்டா நிலவா..." என்று எண்ணியவன்
அமைதியாக நின்றிருக்க, மற்ற மூவரும் அப்படியே நின்றிருந்தனர்....

"இப்போ என்ன தெரியணும்... எதுக்கு இவ்வளவு ட்ராமா... ஆமா எனக்கு கல்யாணம் ஆகல குழந்தையும் இல்ல போதுமா..." என்று கோபமாய் சொல்ல அவர்கள் இதழில் புன்னகை.. அதில் மேலும் கடுப்பானவள்..

"ஓஹோ... எனக்கு கல்யாணம் ஆகலைன்னதும் உடனே உன்னோட பைத்தியக்கார தனத்துக்கு ஓகே சொல்லுவேன்னு நினைப்போ??... பாவம் நீ ஹர்ட் ஆக வேணான்னு தான் ஜஸ்ட் பன்னுக்காக சொன்ன பொய்யா அப்படியே கன்டினியூ பண்ணுனேன்... எனக்கு கல்யாணம்னு கமிட் ஆகுற ஐடியா எல்லாம் இல்ல... அப்படியே பியூச்சர்ல வந்தாலும் எனக்கு தம்பியா இருக்குற ஒருத்தர பண்ணுற ஐடியா சுத்தமா இல்ல..."

"நான் ஒன்னும் உனக்கு தம்பி இல்லை.." என்றான் அவசரமாக

"பாத்தியா அவன் விஷத்துல கரெக்டா இருக்கான்.. " என்று ராம் பூஜாவின் காதை கடிக்க.. அவள் முறைப்பில் அமைதியாக நடப்பதை பார்க்க தொடங்கினான்..

"நீ இல்லைனு சொன்னாலும் அது தான் நிஜம்... இது என்னைக்கும் நடக்காது.."

"நீயும் பாத்துட்டே இரு நீயா வந்து உன் லவ்வ சொல்லுவ.." என்றான் அப்போதும் விடாமல் அதில் கோபம் கொண்டவளோ அவனுக்கு வலிக்கும் என்று தெரிந்தே அடுத்து வந்த வார்த்தைகளை பேசினாள்...

"ஓஓஓஓ உனக்கு ஒருத்தி பத்தலையோ.. இன்னொன்னும் கேக்குது... இவளும் பார்க்க அழகா தான இருக்கா அப்பறம் எதுக்கு இன்னொன்னு... இதுல அவளே உனக்கு ப்ரோக்கர் வேலை வேற பாக்குறா செம சீன்ல... காதலனுக்கு காதலிக்க பெண் பார்த்த காதலி அப்படினு ஹெடிங் கூட வெச்சிக்கலாம்..." என்று பூஜாவை காட்டியவாறு நக்கல் தொணியில் பேச

மூன்று ஆண்களுக்கும் திடீரென கோபம் எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் அவ்வளவு கோபம்... இருந்தும் ராமும் விஷ்னுவும் நிலவனுக்காக கோபத்தை கட்டுப்படுத்தியப்படி நிற்க, நிலவனுக்குத்தான் அந்த கட்டுப்பாடெல்லம் இல்லையே...

"என்னடி சொன்ன" என்று அவள் கழுத்தை பற்றி இருந்தான்.. வலித்தாலும் அவளும் கட்டிக்கொல்லாமல் வீம்பாய் தான் நின்றாள்... ஒரு கட்டத்தில் வலி பொறுக்காமல் கண்களை சுருக்கி அவள் முகம் வலியில் சுருங்க..

"நிலவா விடு அவளை... விடுன்னு சொன்னேன்..." என்று பூஜா கட்டளையாக சொல்ல, அவனும் பிடியை தளர்த்தி இருந்தான் அதிரலோ இருமியபடி பெரிதாய் மூச்சு விட..

"உன் மேல எவ்வளவு மரியாதையும் காதலும் வெச்சிருந்தேன்னு தெரியுமாடி... பைத்தியக்காரி அவளை போய் அப்படி பேசிட்டியேடி... என் கொழந்தடி அவ..." என்று பூஜாவை ஒரு கையால் அனைத்தவன்

"அவளை என்னோட சேர்த்து சீ... இதுக்காக உன்ன நான் எப்போவும் மன்னிக்கவே மாட்டேன்..." என்று கோபமாய் பூஜாவையும் இழுத்தபடி அங்கிருந்து செல்ல பூஜாவும் அவளை பார்த்தபடி அவன் இழுப்புக்கு அவனோடு சென்றாள்...

மற்ற இருவரும் அவர்களை பின் தொடர... போகும் அவர்களையே பார்த்து நின்றிருந்த அதிரல் கண்ணில் ஒன்றை கண்ணீர் துளி உருண்டு விழுந்தது...

இப்போதெல்லாம் அவனுக்காக அவள் மனது துடிக்க தொடங்கி இருந்தது... தனக்காக ஒருவர் என்ற எண்ணமே அவளுக்கு நாளடைவில் பிடித்து போய் இருந்தது... இத்தனை நாளில் எத்தனையோ பேர் காதல் என்று வந்து நின்றிருந்தாலும் இவனிடம் மட்டும் சற்று மனம் மயங்கவே செய்தது... அவன் பார்வையில் இருக்கும் கண்ணியம் கூட ஒரு வகையில் காரணம் தான்... ஆனால் அவள் கடந்து வந்த பாதையில் காதலுக்கெல்லாம் இடம் இல்லையே...

அதிலும் தாயின் இறுதி வாக்கியம் ஆண்கள் யாரையும் நம்ப கூடாது என்பதுதானே... தாயின் வாழக்கையிலேயே பெரிய பாடத்தை படித்தவள் அவள் எங்கனம் இதற்கு சம்மதிக்க முடியும்.. அதுக்கென்று அந்த கலையரசன் இடத்தில் நிலவனை வைக்க அவள் மனது இடம் கொடுக்கவில்லை.... அவனை வெறுக்க வைப்பதற்கே இந்த பேச்சு... அதுவும் அவனை விரும்பும் அவள் உள்ளதுக்கும் சேர்த்து தான்...


அங்கே நிலவனோ அங்கிருந்த சுவற்றில் கையை ஓங்கி குத்தி இருந்தான்... இரத்தம் பீறிட்டு பாய்ந்தும் நிறுத்தவில்லை அவன்... அவனை கட்டுப்படுத்த முயன்றும் அவன் நண்பர்களால் முடியவில்லை...

"நீ இப்படி பண்ணி அவ பேசுனத உண்மையாக்க போறியா நிலவா??... எங்க போயிடிச்சு உன் நிதானம்... அவ உனக்கு வலிக்கனும்னே தெரிஞ்சே பேசுறா... நீயும் அதுக்கு ரியாக்ட் பண்ணிட்டு இருக்க.." என்று பூஜா கத்தியதும், அவன் கை குத்துவதை நிறுத்தி இருந்தது.. மேலும் அவளே தொடர்ந்தாள்..

"அவளுக்கு உன்னையும் என்னையும் பத்தி நல்லாவே தெரியும் நிலவா... நம்ம ரெண்டு பேரையும் பார்க்கும் போது அவ கண்ணுல சின்னதா ஏக்கம் தெரியும் அந்த பார்வைல எப்பவும் கோபமோ அருவெறுப்போ இருந்ததில்லை... காயப்படுத்தனும்னே இப்படி பேசி இருக்கா.... நீயே சொல்லி இருக்கியே இத்தன நாள்ல அவ கண்ணுல உனக்கான காதல பாத்தணு... அப்போ அது பொய்யா இல்ல உன் மனசு சொல்லுறது தான் பொய்யா??.. நல்லா யோசிச்சு பாரு.... " என்றவள் பேசி முடிக்க நிலவன் அங்கிருந்து சென்றிருந்தான்...




இப்படியே நாட்கள் சென்றது... நிலவன் அதிரலின் சண்டை நடந்து மூன்று மாதம் கடந்திருந்தது... அவர்களது இறுதி பரீட்சையும் முடிந்து இப்போது இன்ட்டேர்னும் தொடங்கி இருந்தது....

இன்றுவரை தொடர்கிறது நிலவனின் பராமுகம்... அவனிடம் எவ்வளவு பேச முயன்றும் பதில் பூச்சியம் தான்.. அவளும் விடாமல் தொடர்ந்து முயற்சித்து கொண்டு தான் இருக்கிறாள்...

அவள் ஆசைப்பட்ட படி அவன் விலகல் இருந்தாலும்.. இப்படியே விட்டு இங்கிருந்து செல்லவும் மனசு வரவில்லை... அதனால் இங்கிருந்து செல்லும் நாளை கூட தள்ளி போட்டுகொண்டிருக்கிறாள்... இடைப்பட்ட நாளில் அந்த "ஜாஸ்" என்ற வார்த்தை தாங்கி வரும் கடிதத்தை பெரிதும் எதிர்பார்த்தது அவள் மனது...

இப்போதெல்லாம் அந்த பழைய கடிதங்கள் தான் அவள் துணை என்றாகி போனது... தானும் இப்படி அவனை காதலிப்போம் என அவள் எண்ணியே பார்க்கவில்லை.. அதிலும் தன்னை விட வயது குறைந்தவன் மீது... நினைக்கவே அவளுக்கே விந்தையாகவே இருந்தது... காதல் என்பதே விந்தைகளின் கலவை தானே... ஆனால் அவனோடு சேருவது என்பது கேள்விக்குறி தான்... அதிலும் இது நடக்கவே கூடாது என்பதிலும் அத்தனை திண்ணம் அவளுக்கு...



அன்று மதியம் நிலவன் ஹாஸ்பிடல் கேன்டீனில் அமர்ந்திருந்தான்.. சற்று முன் தான் ஒரு சின்ன குழந்தையின் ஜனனத்தில் பங்கு கொன்டிருந்தான்.. நிலவன் மனமோ அப்படி இலகி இருந்தது... அவன் குழந்தையும் இப்படித்தான் பூமிக்கு ஜனனம் ஆகும் என்று எண்ணியவனுக்கு அதிரலில் எண்ணமும் சேர்ந்தே வந்தது... இத்தனை நாளில் அவள் எண்ணம் வராமல் இல்லை இருந்தாலும் அவளை மன்னிக்க தான் மனது இடம் கொடுக்கவில்லை...

"என்ன நிலவா யோசனை... குடி டீ ஆறுது பாரு..."

"ஆன்... இதோ பூ.." என்றவன் பருக தொடங்கினான்..

"பாவம்டா அதிரல்.. ஏதோ தெரியாம பண்ணிட்டா மன்னிச்சு விடேன்.. அவள பாக்கவே ஒரு மாதிரியா இருக்கு... இது என்னமோ அவ உனக்கு ப்ரொபோஸ் பண்ணி நீ ரிஜெக்ட் பண்ணின போல இருக்கு... எவ்வளவு கெத்தா இருந்தா.. இப்படி ஆகிட்டியே... உன்ன ரொம்ப லவ் பண்ணுறாடா.. கொஞ்சம் இறங்கி வந்தா தான் என்னவாம்..."

"அவள நம்புறியா பூ நீ... எனக்கே டாகால்டி வேலை காட்டுற ஆள் அவ... கொஞ்சம் விட்டு தான் பிடிக்கணும்... இப்போ நான் போய் பேசுனா உடனே லவ்னு வந்து நிப்பான்னு நினைக்கிறியா நெவர்.."

"அப்போ அவளை மன்னிக்கிற ஐடியா இல்லையா??.. அப்போ உன் லவ்?.."

"மன்னிக்கனுமா அவளையா??.. அவ தெரிஞ்சே தான் அப்படி பேசி இருக்கா... எத பேசுனா எனக்கு வலிக்கும்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.. இப்போ இந்த கரிசனம் கூட இப்படி பேசிட்டோமென்னு தான்... மத்தபடி காதல் இருந்தாலும் ஒத்துகிற ஆளா அவ... அவள இன்னும் கொஞ்சம் வெச்சு செய்யணும்..அதுவும் கூடவே வெச்சு.."

"எங்க நீ கோபத்துல எனக்காகனு உன்னோட லவ்வ விட்டுக்கொடுத்துடுவியோன்னு பயந்துட்டேன் நிலவா.. இப்போதான் ஹாப்பி.."

"அவ பேசும் போது செம கோபம் தான் பூ எனக்கு... அப்பறமா யோசிச்சு பார்த்தேன், உன்ன பேசுனது கூட என்ன ஹர்ட் பண்ணனும் தான், அவ அப்படி பண்ணதுக்கு பின்னாடி ஒரு வேலிட் ரீசன் இருக்கணும்னு தோணுது... நீயா என் காதலானு கேட்டா எனக்கு நீதான் பர்ஸ்ட்.. பட் காதல விட்டுடுவேன்னு இல்ல... அவ தான் எனக்கு எப்போவும்.." என்றான்

அப்போது அவன் அருகில் அட்டென்டன்ட் சேகர் வந்தவர் "தம்பி உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு"

"எப்போ அங்கிள்?... யார்கிட்ட இருந்து?... இப்போ எங்க அது?.." என்று கேள்வியை அடுக்க

"காலைல வந்திச்சி தம்பி... உங்கள தேடுனேன் காணோம்னு உங்க ரூம்ல தான் வெச்சிருக்கேன்... யாருனு எதுவும் போடல தம்பி... நான் சரியா கவனிக்கல போல"

"ஓகே தேங்க்ஸ் அங்கிள்.. நானே பாத்துக்கிறேன்..." என்று டீ குடித்து முடிந்ததும் பூஜாவுடன் அறையை நோக்கி சென்றான்...

அங்கே மேசையில் ஒரு பெரிய பார்சல் இருந்தது அதனை பிரிக்க உள்ளே ஒரு நடுத்தர அளவிளான பொக்கேவும் ஒரு கடிதமும் இருந்தது.. அவன் இதழிலோ புன்னகை.. யாரின் வேலை இது என்பது தான் தெரியுமே.. பூஜாவை திரும்பி பார்த்தவன் "என்னோட கிப்ட்ட ரொம்ப மிஸ் பண்ணுறா போல..." என்று அந்த பொக்கேவை கையில் எடுத்து கொண்டான்...

"உலகத்துல காதலுக்கு ஜாதி மல்லி பூ குடுத்துக்கிறது நீங்க மட்டும் தான்டா.." என்று அவள் தலையில் அடித்துக்கொள்ள, அவனிடம் சிறு புன்னகை.. கைகளால் மெல்ல அதனை வருடி கொடுத்துக்கொண்டான்..
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"நீயே இந்த பொக்கேக்கு அலஞ்சு திரிஞ்சு ஏதோ ஒரு ஷாப்ல ஆர்டர் பண்ணி தான் இத்தன நாளா எடுத்துட்டு இருந்த.. இப்போ அவளும் அந்த கடைய கண்டு பிடிச்சிட்டா போலயே..." என்றவளின் கேள்விக்கு அவன் தலை இடம் வலமாக ஆடியது...

"நோ.. இது அவளே பண்ணிருக்கா?.."

"எப்படி சொல்லுற..." என்று அந்த பொக்கேவை கையில் வாங்க அதனை அத்தனை மிருதுவாய் அவளிடம் கொடுத்திருந்தான்

அதனை பார்த்து சிரித்து பூஜாவோ, "அடேய் என்னடா குழந்தைய தர்றது போல தர..." என்க அவனிடம் புன்னகை...

"இது அவளே பண்ணி இருக்கா பூ... அதோட இதழ்கள்ல பாரு மேடம் அவங்களோட சாரிய அதுல எழுதி இருக்காங்க.." என்றவனின் பேச்சுக்கினங்க அதனை உற்று பார்த்தவள் முகத்தில் உண்மைக்கும் ஆச்சரியம்... அவ்வளவு சிறிதாய் அதன் மொட்டுகளிலும் இதழ்களிலும் "சாரி" என்று எழுதப்பட்டிருந்தது...

"டேய்... இவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணி இருக்கான்னா உன்மேல் காதல் இல்லாமலா இருக்கும்..."

"அதெல்லாம் எக்கச்சக்கமா இருக்கு அத அவ ஒத்துக்கணுமே... திமிரு பிடிச்சவ..."

"சரி அப்போ அந்த லெட்டர்ல என்ன இருக்குனு படி..." என்று பூஜா சொன்னதும் எதையும் யோசிக்காமல் அவன் எடுக்க அவனை தடுத்தவள்... "என்னடா சொன்னதுமே எடுக்கிற பர்சனலா ரொமான்டிக்கா ஏதாச்சும் எழுதி இருக்க போறா... நீ தனியவே படி.."

"யாரு அவ, அதுவும் ரொமான்டிக்கா.. அப்படியே எழுதி கிழிச்சிட்டாலும்.. இருந்தாலும் உனக்கு இவ்வளவு பேராச கூடாது பூ..." என்றவன் கடிதத்தை பிரிக்க அதிலோ

"அன்புள்ள மூன்.. ஐ எம் வெரி சாரி.. வில் யூ பி மை பிரண்ட்?.." என்ற வசனமும் கீழே தொண்ணூறு என்ற எண்ணை சுற்றி வட்டமும் தான் இருந்தது... பூஜாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. சற்று முன்னர் அவள் ஒன்று நினைத்திருக்க ஆனால் நடந்தது எதிர்பார்க்காதது தானே..

"ஐயோ... நிலவா முடியலடா??.." என்று சிரிக்க அவள் முடிக்கும் வரை அந்த கடிதத்தையே பார்த்திருந்தவன்

"அங்க தான் நீ மறுபடியும் தப்பா யோசிக்கிற... இந்த வசனத்துகுள்ள ஆயிரம் அர்த்தமும் காதலும் ஒளிஞ்சிருக்கு..."

"அப்படியா சரி விளக்கு கேப்போம்.." என்றவள் அங்கிருந்த சோபா ஒன்றில் அமர்ந்தவள் அவனையும் அமரச்செய்து அவன் மடியில் படுத்துக்கொண்டு கதை கேட்க தயாரானாள்..

"சோம்பேறி கழுத... எல்லாத்திலயும் சொகுசு வேணும் உனக்கு எந்திரிடி..." என்று வாய் திட்ட கை நேர்மாறாய் அவள் தலையை இதமாய் பிடித்துவிட்டது..

"சரி சரி நீ சொல்லு அப்பறம் நான் தூங்கிடுவேன்..."

"நான் உன்ன கொன்னுடுவேன் பாத்துக்கோ..." என்றதில் அவள் முகம் சுருங்க.. "ஓகே ஓகே மூஞ்ச அப்படி வெச்சிக்காத சொல்லுறேன்.." என்றவன் சொல்ல தொடங்கினான்...

"பர்ஸ்ட் அதுல எழுதி இருக்கிற மூன எடுத்துப்போம்... அது நானே எழுதுன ஒரு லெட்டர்ல என்ன எப்படில்லாம் கூப்பிடனும்னு எழுதி இருந்தேன்.. அதுல நான் சொன்ன அத்தன பேர்லயும் எனக்கு பிடிச்சது மூன் என்கிற இந்த நேம் தான்... அதுவே சரியா அவளும் எழுதி இருக்கா பாத்தியா அங்க தெரியுது எங்களோட லவ்..."

"நெக்ஸ்ட்.. அவளோட பிரண்ட்டா இருக்கணும்னு கேட்டிருக்கா.. என்மேல உள்ள காதல ஒதுக்க ஏதோ தடுக்குது அவள, சோ என்னோட டைம் ஸ்பென்ட் பண்ண, என்னோட பிரீயா பேச மேடமுக்கு பிரண்ட்டா இருக்கணும்னு தோணிருக்கு..."

"அப்பறம் அந்த நம்பர் தொண்ணூறு.. அது நான் அனுப்புன கடிதத்தோட நம்பர்.. அதாவது என் பேர இப்படித்தான் கூப்பிடனும்னு நா என்னோட தொண்ணூறாவது கடிதத்துல தான் எழுதினேன் அதையும் சரியா கவுண்ட் பண்ணி வெச்சிருக்கா... இதுல இருந்து என்ன தெரியுது?..." என்றவன் குனிந்து பூஜாவை பார்க்க அவளோ உறக்கத்தில் இருந்தாள்..

"தூங்கிட்டாளா..." என்று அவள் தலையை கோதிவிட்டவாறே யோசனை எல்லாம் அதிரலிடத்தில் தான்... திடீரென ஏதோ அந்த அறையில் மாற்றத்தை உணர்ந்தவன்

"மேடம் கொஞ்சம் வெளில வரீங்களா?..." என்றான் அந்த அறைக்குள் குட்டியாய் இருக்கும் இன்னொரு அறையை பார்த்து... அதிரலுக்கு தூக்கிவாரி போட்டது... சிறுபிள்ளை தனமாய் தான் ஒளிந்திருந்து கேட்டது எல்லாம் அவனுக்கு தெரிந்து விட்டதே என அவளுக்கு வெக்கமாகி போனது... இருந்தும் வெளியே வரவில்லை.. அங்கிருந்தே அவனை பார்க்க அவன் பார்வை இன்னும் மாறவில்லை அந்த அறையை நோக்கியே இருந்தது... இனிமேல் விடமாட்டான் என்பதும் தெரிய மெல்ல வெளியே வந்தாள்...

இத்தனை நாளுக்கு பின் இன்று தான் அவளை சரிவர கவனிப்பதால்... அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் நிலவன்... ஆனால் அந்த பார்வை அதிரலை தான் ஏதோ செய்தது, நெளிந்து கொண்டு நின்றிருந்தாள்...

அங்கே அவள் ஒரு ஸ்டாப் ஆனால் அவன் முன் தவறு செய்து மாட்டிக்கொண்ட குழந்தை போல் தான் நின்றிருந்தாள்.. அதெல்லாம் சிறிது நேரம் தான்.. பின் பழைய அதிரல் மீள அங்கிருந்து வெளியேற போனவளை தடுத்தது அவன் குரல்...

"ஜாஸ்.."

எத்தனை நாளுக்கு பின்னானா அவளுக்கே அவளுக்கான இந்த அழைப்பு... அடுத்த எட்டு எடுத்து வைக்க முடியவில்லை.. போகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் அவள் மனமோ தள்ளாடி கொண்டிருந்தது...

மீண்டும் "ஜாஸ்.." என்று அவன் அழைக்க, கால்கள் தன்னால் அவனை நோக்கி நகர்ந்தது...

"லெட்டருக்கு என்ன பதில்னு தெரிஞ்சிக்க வேணாமா?..." என்க அவள் அமைதியாக நின்றிருந்தாள்

"சாரி அக்ஸப்டட் தான் பட்..." என்று இழுத்தவன் அவளை பார்க்க அவளோ அடுத்த பதிலுக்கு ஆர்வமாய் காத்திருப்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.. அதனை உணர்ந்தவன் நெஞ்சில் சுகமான சாரல்... அவள் பொறுமையை மேலும் சோதித்தவன்

"உன்ன பிரண்ட்டா எல்லாம் ஏத்துக்க முடியாது போடி..." என்றிருந்தான் அவள் அவனது எதிர்பாராத பதிலில் திகைத்தவள்... அவனை முறைத்து பார்க்க

"நீ வேணா என்ன பிரண்டா நினைச்சிக்க.. என்னால எல்லாம் அப்படி நினைக்க முடியாது..." என்று அவன் முடிக்க

"சரிதான் போடான்னு சொல்லு அதி.. அவன கடாசிட்டு நாம பிரண்ட்ஸ் ஆகிக்கலாம்.." என்றபடி எழுந்து அமர்ந்தாள் பூஜா...

இப்போது அதிரலுக்கு மேலும் குற்றவுணர்ச்சி ஆகி போனது.. தான் அப்படி பேசியும் இந்த பெண் தன்னோடு சகஜமாக பேசுகிறாளே என்று...

"என்ன அதி என் பிரண்ட்ஷிப் வேணாமா? அவன் தான் வேணுமா?..."

"ஐ எம் வெரி சாரி பூஜா..." என்றாள் மனதார

"பிரண்ட்ஷுகுள்ள என்ன சாரி பூரின்னுட்டு.. நம்ம இவன டீல்ல விட்டுடலாம் ஓகே வா..." என்ற பூஜாக்கு பதிலாக புன்னகையை கொடுத்தால் அதிரல்...

அவளை அணைத்து விடுவித்த பூஜா.. "ஓகே நாமெல்லாம் இனி பிரண்ட்ஸ் ஓகேவா?... இன்னும் நாலு வானர கூட்டம் இருக்கு நம்ம கேங்ல அவங்களையும் அடுத்த தடவ அறிமுக படுத்துறேன்..." என்று பூஜா பேசியப்படி இருக்க அதிரலின் பார்வையோ, அவள் கொடுத்த பொக்கேவை தடவி கொண்டிருக்கும் நிலவன் மீது தான்

"ரைட்டு மேடத்துக்கு நிலவன் பிரண்ட்ஷிப் தான் வேணும் போலயே..." என்று தனக்குள் சொல்லி சிரித்தவள் நிலவனை பார்த்து

"ஏன் நிலவா உனக்கு ஓகே தான..."

"என்ன ஓகே தான"

"இல்ல இவங்களையும் நம்ம கேங்ல சேத்துக்க..."

"சேத்துக்கோங்க... பட் நான் இவள பிரண்டா எல்லாம் பாக்க மாட்டேன்..." என்று சொல்லிக்கொண்டிருக்க வெளியே பெரிய சத்தம்... யாரோ யாருக்கோ பயங்கரமாக திட்டும் சத்தம்...

என்னவோ ஏதோ என்று மூவரும் வெளியில் வர அத்தனை பேர் முன்னிலையிலும் திட்டு வாங்கி கொண்டிருந்தான் ஒருவன்... அவன் முகமோ அவமானத்தில் கறுத்திருந்தது.....

யார் அந்த ஒருவன்....??? எதற்காக அந்த திட்டு??...


ஜாதி மல்லி மலரும்....


கருத்து திரி
👇👇👇👇👇





InShot_20240816_110838754.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 20



ஜேகே ஹாஸ்பிடலே பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது... அந்த பரபரப்பையும் தாண்டி ஒரு நிமிடம் நின்று அங்கு நடப்பதை பார்த்து சென்றனர் அந்த வழியால் சென்றவர்கள்

"வாட் ஐஸ் திஸ் மிஸ்டர் அறிவழகன்... உங்க டைக்னோசிஸ் எல்லாமே தப்பு.. என்ன படிச்சிட்டு வந்தீங்க... படிச்சு மார்க் எடுத்தா மட்டும் போதாது.. அத கரெக்ட்டா அப்ளை பண்ண தெரிஞ்சிருக்கணும்..."

"சாரி மேம்.." என்றான் தயக்கத்துடன்

"திஸ் இஸ் நோட் யுவர் பர்ஸ்ட் மிஸ்டேக் மிஸ்டர் அறிவழகன்.. யூ ஹெவ் டன் சோ மெனி டைம் பிபோர்... ஈவன் சோ, ஐ போர்கேவ் யூ எவ்ரி டைம்... பட் டோண்ட் எக்ஸ்செப்ட் இட் பிரோம் மீ எனிமோர்..." ( இது உங்களோட முதல் தவறு இல்ல மிஸ்டர் அறிவழகன்.. இதுக்கு முதலும் பல தடவ பண்ணி இருக்கீங்க... அப்படி இருந்தும் எல்லாம் நேரமும் உங்கள மன்னிச்சிருக்கேன்... ஆனா இனிமேல் அதை எங்கிட்ட இருந்து எதிர்பார்க்க வேண்டாம்)..
என்று கத்தியபடி அவன் பைலை அவனை நோக்கி எறிந்தவர் கோபமாய் வெளியேறினார்....

அவனுக்கோ அவமானமாய் இருந்தது... அங்கே தான் அவன் நண்பர்களும் நின்றிருந்தனர் நிலவன் உட்பட.. யாரையும் நிமிர்ந்து பார்க்காதவன் அங்கிருந்தே சென்றுவிட்டான்.



"நீ பீல் பண்ணாத அறிவு... அந்த மேம் யாரை தான் திட்டல, நிலவன் மட்டும் தான் எப்போவும் அதுகிட்ட இருந்து தப்பிடுவான்... மத்தப்படி பேச்சு வாங்காமா யாரு இருக்கா..."

"இல்லை நிஷா இந்தவாட்டி என்மேல தான் தப்பு.. என்னோட கேயர்லெஸ்னால ஒரு உயிர் போக பாத்திருக்கே... நல்ல வேளை மேம் நோட் பண்ணாங்க.. தேங்க் கோட்... அந்த குழந்தைக்கு மட்டும் எதுவும் ஆகி இருந்தா நானே என்ன மன்னிச்சிருக்க மாட்டேன்..." என்று பேசியபடி இருக்க நிலவனும் அவன் நண்பர்களும் அதிரல் உட்பட அங்கு வரவும் சரியாய் இருந்தது... நிலவனை கண்ட நொடி அறிவழகனோ கோபமாய் எழுந்து செல்ல பார்க்க, அவன் கையை எட்டி நிலவன் பிடித்திருந்தான்..

"அறிவு பேசணும் இரு.." என்றவனுக்கு எந்த பதிலும் அழிக்காதவன் கைகளை விடுவித்து கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்...

"என்ன தான் நிஷா அவனுக்கு பிரச்சனை... அவன் இப்படி இல்லையே வேலைல கரெக்டா தான இருப்பான்.. என்மேல தான அவனுக்கு ஏதோ கோபம் இவங்கள கூட அவன் ஏன் அவொய்ட் பண்ணுறான்.. நான் இருக்கதுனாலயா???.. நான் வேணா போய்டட்டுமா??..." என்றான் விரக்தியாக..

அவன் அப்படி சொல்ல பூஜா கோபமாய் எழுந்து சென்றுவிட்டாள்... அதற்கு பிறகே அவன் சொன்னது அவனுக்கே உரைத்தது.. அதிரலை பார்த்தவன் கண்களாலேயே அவளை பூஜாவோடு இருக்குமாறு சைகை செய்ய அவளும் அதனை புரிந்து கொண்டவளாய் அங்கிருந்து சென்றிருந்தாள்...

ராமுக்கும் பூஜாவோடு எழுந்து செல்ல முடியாத நிலை.. நண்பனை பற்றி பேசியே ஆக வேண்டிய கட்டாயம்... அதிரல் சென்றதும் தான் அவனுக்கும் நிம்மதியாய் இருந்தது...

"சொல்லு நிஷா.. அவன் நம்ம பிரண்ட்... எப்படி இருந்தவன் ஏன் இப்படி இருக்கான்... நம்ம எல்லாம் ஒரு கேங் தான நிஷா.. இப்படி நீயும் அவனும் நாங்கணும்னு பிரிஞ்சி இருக்குறது நல்லவா இருக்கு... அவனுக்கு என்ன பிரச்சனைனு சொன்னா தான அதுக்குரிய தீர்வ கண்டுபிடிக்கலாம்... "

"எனக்கு எதுவுமே தெரியாது நிலவா.. அவன் தனியா இருக்கானேன்னு நானும் அவனோட இருக்கேன்... அவ்வளவு தான்... " என்றாள் அவள்

"ச்சே என்ன தாண்டா அவன் பிரச்சனை ஒரு வருசத்துக்கும் மேல ஆகிடிச்சு அவன் என்கூட பேசி.. என்னவோ மாதிரி இருக்கு... என்ன பிரச்சனனு தெரிஞ்சாலாவது ஏதாச்சும் பண்ணலாம்..." என்று அவன் நெற்றியில் ஒன்றை விரலால் கோடிழுத்துகொண்டான்....

"இப்போ கொஞ்ச நாளா அவன் ரூமுக்கே லேட்டா தான் வரான் நிலவா... சில நேரம் வர்றது கூட இல்லை... இன்னொருவாட்டி இப்படி பண்ணா அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு வார்டன் போனவாரம் தான் வந்து சொல்லிட்டு போனாரு..." என்றான் ராம்..

"ஏண்டா என்கிட்ட சொல்லல..."

"சொல்லணும்னு தான் இருந்தேன் நிலவா.. வேலை டென்ஷன்ல மறந்துட்டேன்..."

"ம்ம்ம்ம்.." என்றவன் யோசனையில் இருக்க..

ராமோ, "இன்னொரு விஷயம் நிலவா... இப்போல்லாம் நைட்ல யார்கூடவோ மறைஞ்சு பேசுறான்... யாருனு கேட்டாலும் சரியா சொல்றது இல்ல.. ஒரு மாதிரி மழுப்பி பேசுறான்... அவன்கிட்ட ரொம்ப மாற்றம்..."

"எல்லாத்தையும் இப்போ வந்து சொல்லு.." என்று ராமை கடித்தவன் "இதுக்கு ஏதாச்சும் சொலியூஷன் தேடியே ஆகணும் பாப்போம்...." என்றான் யோசனையாக..

அதனை கண்டுபிடிக்கும் நேரம் பல விபரீதம் கடந்திருக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் அப்படியே விட்டிருக்க மாட்டானோ என்னவோ?... என்ன செய்வது விதியின் கையில் எல்லோரும் பொம்மைகள் தானே....



இப்படியே நாட்கள், லேசாக திறந்து வைக்கப்பட்ட நீர் குழாயில் இருந்து நீர் துளி விழுவது போல் ஒன்றன் பின் ஒன்றாக கட்டுப்பாடின்றி கடந்து கொண்டே தான் இருந்தது..

அவ்வாறு ஒரு நாளில் அந்த நான்கு வானரங்களும் ஒன்றாக பூஜாவின் வீட்டில் கூடி இருந்தனர்..

"நான் என் வாழ்க்கைல இப்படி ஒரு கஷ்டத்தை அனுபவிச்சதே இல்லை தெரியுமா?.. வீட்ல யாரும் இல்லாத நேரமா பாத்து என்ன ரொம்ப தான் கொடும படுத்துற நிலவா நீ..." என்றாள் பூஜா அழுதபடி..

"நீ அழாதடி செல்லம்.. மாமா எதுக்கு இருக்கேன்.. " என்று அவள் அருகில் செல்ல பார்க்க நிலவனின் முறைப்பில் அப்படியே அமந்துவிட்டான்..

அதை பார்த்து கடுப்பான பூஜா "நீயெல்லாம் ஒரு காதலனா?.. அப்படியே ஓடி போய்டு... பூஜானு கூஜா தூக்கிட்டு வந்த உன்ன கொன்னேபுடுவேன்..." என்று கையில் இருந்த கத்தியை தூக்கி ராமை நோக்கி காட்டினாள்.. அப்போது சரியாக கால்லிங் பெல் சத்தம் கேட்க

அவள் பின் தலையில் தட்டிய நிலவன் "ஒரு வெங்காயம் வெட்ட இவ்வளவு அக்கப்போரு... வாய்க்கு ருசியா வக்கனையா சாப்பாடு கேக்குதுல... அப்போ ஒழுங்கா நான் வர்றதுக்குள்ள வெட்டு இல்ல உனக்கு இன்னைக்கு பிரியாணி கட்.." என்றவன் அங்கிருந்து செல்ல

"பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா??... பிரியாணி இல்லைன்னு சொல்லிட்டு போறானே கோபமா??.." என்று பூஜா ரைமிங்காக பாட

ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்த விஷ்னு, "யாரு அந்த சூப்பர் சிங்கர் சீசன் போர்" என்றான் எட்டி பார்த்தபடி

"டேய் விஷு ஆணவத்துல ஆடாதடா.. எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ உன்ன வெச்சு செய்யல நான் என் ராமுக்கு பொண்டாட்டி இல்லடா.."

அதற்கு ராமோ பதறியபடி "அடியேய் என் அடிமடில கை வைக்கிறியேடி பாவி..." என்றான்...

அப்படியே அவர்கள் நேரம் அரட்டையோடு கழிந்தது.... இன்று தடப்புடலாக சமையல் நடந்து கொண்டிருந்தது நிலவனின் கைவண்ணத்தில்.. மற்ற மூனுக்கும் சாப்பிட மட்டுமே தெரியும்.. அதனால் வந்த வினை தான் இதெல்லாம்...



"எஸ் கமின்" என்றவாறு கதவை திறந்த நிலவனுக்கு கண்களை ஏன் இமையை கூட ஆசைக்க தோன்றவில்லை அப்படியே தான் நின்றுருந்தான்.. காரணம் அவன் தேவதையின் தரிசனம் அதுவும் கறுப்பு நிற புடவையில்.. யார் சொன்னது தேவதைகள் வெள்ளை நிறமே அணிந்து வருவார்கள் என இப்போது நிலவனிடம் கேட்டால் கறுப்பு தான் தேவதைகளின் உடை என்பான் அந்த அளவு பார்த்ததும் இதயத்தில் சென்று ஒட்டிக்கொண்டாள் மீள முடியாதபடி...

யாரென பார்க்க போன நிலவன் இன்னும் வரவில்லை என நண்பர்கள் மூவரும் வெளிய வர காரணம் புரிந்தது... தங்களுக்குள் சிரித்தும் கொண்டனர்...

"அங்க பாத்தியா நம்ம ஜீனியஸ் எப்படி நிக்கிறாருனு.. அதற்கு தான் பாப்பாவ நேரத்துக்கே வர சொன்னேன்.." என்றான் ராம்

"உன்வேல தானா இது.. வாழ்க்கைலயே இன்னைக்கு உருப்படியா ஒரு வேல பாத்திருக்க ராம்..." என்று விஷ்னு அதற்கும் அவனை கலாய்க்க

பூஜாவோ "ஆமா டா விஷு.. அவருக்கு இப்போல்லாம் பாப்பா நினைப்பு தான்னா பாத்துக்கோயேன்.. அவங்க காதலுக்கு இவரு தீயா உழைக்கிறாரு..."

"மச்சி, யூ மீன் மாமா வேல.." என்றான் விஷ்னு

"க.க.க.போ டா விஷு கண்ணா..."

"புரியவில்லையே மன்னா.."

"கருத்தை கட்சிதமாய் கவ்விகொண்டாய் போ என்றேனடா மடையா..."

"மன்னித்து கொள்ளுங்கள் மன்னா.. இப்போது புரிந்து கொண்டேன்... எல்லாம் தாங்கள் கருணை..." என்ற விஷ்னு, நாடக பாணியில் இடைவரை குனிந்து நிமிர்ந்தான்... அவளும் அருள் புரிவது போல் கைகளை வைத்துக்கொண்டாள்

அவர்களின் பேச்சில் இருக்கும் நக்கலை உணர்ந்து கொண்ட ராமோ, "என்ன கலாய்க்கிறதுனா ஒன்னு சேந்துடுவீங்களே... அங்க போய் சிலையா நிக்கிற அவனுக்கு உயிர் கொடுப்போம் வாங்க..." என்றவன் நிலவனை நோக்கி செல்ல அவர்களும் பின் தொடர்ந்தனர்..

"அடேய் உலகத்துக்கு வாடா... பாப்பாவ உள்ள வர விடாம கதவ அடச்சீட்டு நிக்கிற.. தள்ளுடா அங்கிட்டு... நீ உள்ள வாடா பாப்பா..." என்று அவனை உளுக்க, அதிரல் இதழ்களுக்குள் புன்னகை, கூடவே ஆளை முழுங்கும் அவன் பார்வையில் உள்ளுக்குள் குறுகுறுப்பும் சேர்ந்துகொண்டது..

உள்ளே வந்தவள் "தேங்க்ஸ் ஸ்ரீ..." என்றாள் ராமிடம்..

"ஐயோ விஷு என்ன பிடிடா... இதுக ரெண்டும் பிரண்டா ஆனாலும் ஆச்சு.. பாப்பா, ஸ்ரீனு கொஞ்சல் தாங்கல.. எனக்கே இப்போதான் இவன் பேரு ஸ்ரீராம்னு ஞாபகம் வருது பாரேன்..." என்று பூஜா நெஞ்சில் கைவைத்துக்கொண்டாள்.

அவளை உள்ளே அழைத்து வந்த ராம்.. "உக்காரு பாப்பா என்ன சாப்பிடுற காபி ஆர் டீ?.. என்று கேட்க

பூஜாவோ, "அதி தயவுசெஞ்சி ஏதும் சொல்லிட்டாத அப்பறம் உன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை" என்றாள்..

அதிரலோ புரியாது பார்க்க "அது ஒண்ணுமில்ல அதி, உன் ஸ்ரீ சமையல் வடக்குன்னா அவன் தெற்கு நிக்கிற ஆளு.." என்றான் விஷ்னு விளக்கமாக

"சும்மானு தான் இருங்களேண்டா.. என்ன வேணும்னு தான் கேட்டேன், நான் போடப்போறேன்னு சொன்னனா?... நிலவன் தான் போடுவான்..." என்று ராம் முடிக்கவில்லை "டீ.." என்று அதிரலிடம் பதில் வந்தது..

"அட்ராசக்க.. நிலவன் கையாள டீ குடிக்க அவ்வளவு ஆர்வம்.. ம்ம்ம்ம் நீங்க நடத்துங்க..." என்று பூஜா கிண்டல் வேறு செய்ய... அதற்கு புன்னகைத்தபடி அதிரலின் பார்வை நிலவனிடமே இருந்தது...

அந்த பார்வையிலேயே நிலவனை கண்களுக்குள் வாரி சுருட்டிக்கொண்டாள் "சும்மாவே சாரில பாத்தே மயங்கி போயிருக்கேன்.. சிரிச்சே ஆள காலி பண்ணுறாளே... நம்மல இன்னைக்கு நல்லவனா இருக்க விட மாட்டா போலிருக்கே.. எதுக்கும் தள்ளியே இருந்துக்கோடா நிலவா...." என்று எண்ணிக்கொண்டவன் எழுந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டான் அவளுக்கான டீயை போடுவதற்காக...

செல்லும் அவனையே பார்த்தபடி இருந்த பூஜா அவன் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தியவள் "ஓகே எல்லாருக்கும் பிளான் ஞாபகம் இருக்குல்ல.. இன்னைக்கு எப்படியும் சர்பிரைஸ் பண்ணுவோம்னு அவனுக்கு ஒரு கெஸ் இருக்கும் பட் அவன் எதிர்பாக்காத அளவுக்கு அத குடுக்கணும்...." என்க மற்றவர்கள் ஆமோதித்து கொண்டனர்..

இன்று நிலவனின் பிறந்தநாள் நாள்.. அதற்கான ஏற்பாடுதான் இதெல்லாம் நிஷா அறிவு இருவருக்கும் சொல்லப்பட்டு விட்டது.. ஆனால் வருவார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை...

அப்படியே அரட்டை அடித்து சமையலை ஒருவழியாக முடித்து சாப்பிடவே நான்கு மணியாகி இருந்தது... நிலவன் கையால் பிரியாணி சொல்லவும் வேண்டுமா??.. சுவை அரும்பு கூட கதறும் அளவுக்கு உண்ட மயக்கத்தில் புதிதாக வெளிவந்த படம் ஒன்றை போட்டுகொண்டு அமர்ந்தார்கள் ஐவரும்..

பூஜாவோ படத்தில் போய் கொண்டிருந்த காதல் காட்சியை பார்த்து சந்தேகம் வந்தவளாக "நிலவா எனக்கொரு டவுட்..." என்று கத்த ஓடிகொண்டிருந்த படத்தை நிறுத்தியவன்

"என்னடி இந்த நேரத்துல..."

"இல்ல நீ அதிய ஜாஸ்னு கூப்பிடுறியே.. அதுக்கு என்ன அர்த்தம?.. எப்படி சுருக்கி பார்த்தாலும் அதிரல்ல ஜாஸ்னு எந்த பார்ட்டும் வரலையே..."

"ரொம்ப முக்கியமான டவுட்டுதான்.. அது அவங்க பர்சனல் நீ ஏன் மூக்க நுழைக்கிற..." என்று ராம் அவள் தலையில் கொட்டினான்

நிலவனோ அதிரலை பார்க்க அவள் கண்களில் அந்த கேள்விக்கான ஆர்வம் தெரிந்தது... அவளாக கேட்கமாட்டாள் என்றும் அவனுக்கு புரிந்தது...

"அது ஒண்ணுமில்ல பூ... அதிரல்னா மல்லிகை பேமிலில ஒரு வகை.. சோ ஜாஸ்மின்.. அத சுருக்கி ஜாஸ் அவ்வளவு தான்..." என்றான் அதிரலை பார்த்து கண்சிமிட்டி.. அவளுக்கோ ஒரு பெயருக்கு இத்தனை விளக்கம் இருக்கிறதா? என்றே தோன்றியது... மீண்டும் அவன் காதலில் அவளுக்கு ஆச்சர்யம் தான்...

"பேருக்கு ஒரு செல்ல பேர் வெச்சு... அந்த செல்ல பேரையும் சோர்ட் பண்ணது நீதான்டா நிலவா...." என்று விஷ்னு சிரிக்க மீண்டும் படத்தை ஓடவிட்டிருந்தான் நிலவன்...

அப்படியே நேரம் செல்ல.. வயிறு எக்கசக்கமாக நிரம்பியதில் கண்ணை சுழற்றிக்கொண்டு வர பூஜா, ராம், விஷ்ணு என்ன ஒவ்வொருத்தராய் அடுத்தடுத்து அமர்ந்தபடியே தூக்கத்துக்கு சென்றுவிட்டனர்..

மிஞ்சியது அதிரலும் நிலவனும் தான்... அவன் உள்ளே எரியும் அவளுக்கான உணர்வுகள் அவனை வேறு எதையும் சிந்திக்க விடவில்லை... இப்போது திடீரென தோன்றிய தனிமை அவனை பாடாய் படுத்த இனிமேலும் இருந்தால் விளைவு விபரீதம் என்பதை உணர்ந்தவன்.. எழுந்து வெளியே சென்றுவிட்டான்...

பூஜாவின் வீட்டுக்கு பின்னே இருக்கும் நீச்சல் குளத்தினுள் கால்களை உள்ளே விட்டபடி அமர்ந்திருந்த நிலவனை நோக்கி அவன் சிலை வந்துகொண்டிருந்தது..

"ஐயோ வராளே.. மனிசனோட நிலைம தெரியாம படுத்துறா.. வராதடி... வராதடி.." என்று அவனது மனது அடித்துக்கொண்டாலும் இன்னொரு மனம் அவள் அருகாமையை எதிர்பார்த்து காத்திருந்தது...

"என்னாச்சு நிலவன் இங்க வந்து உக்காந்திருக்கீங்க... உங்களுக்கு தூக்கம் வரலையா?..

"உன்ன இப்படி பாத்துட்டு என் கண்ணு எப்படிடி தூங்கும்??..." என்று மனதில் எண்ணியவன் மெல்ல புன்னகைதான் அவள் கேள்விக்கு பதிலாக..

"தூக்கம் வரலையா??... எனக்கும் வரல... சாப்பாடு செமயா இருந்திச்சு... எனக்கெல்லாம் இப்படி சமைக்க வராது... ஜஸ்ட் நார்மலா சமைப்பேன் அவ்வளவு தான்.."

"நீ ஏன் டி சமைக்கணும் அதுக்கு தான் நான் இருக்கனே.." என்று எண்ணிகொண்டான்

மீண்டும் அவளே "நானும் அங்க உக்காரவா..." என்று கேட்க..

"ரைட்டு... இன்னைக்கு என்ன எப்படியாச்சும் காப்பாத்திடு பிள்ளையாரப்பா.." என்று அவசரமாய் கடவுளுக்கு மனு ஒன்றை அனுப்பினான்.. அவர் என்ன வேலையில் பிசியாக இருந்தாரோ.. இவன் மனு அவரிடம் செல்லுபடியாகவில்லை...

"சாரி நனஞ்சிடுமே ஜாஸ்.."

"உள்ள தண்ணி ஓரளவுக்கு குறைவா தானே இருக்கு கொஞ்சமா சாரிய உயத்தி பிடிச்சிக்கிட்டா ஓகே..." என்றவள், அவன் பதில் சொல்லும் முன்னர் அவனருகில் சிறு இடைவெளிவிட்டு அமர்ந்து கொண்டாள்..

அவள் சொன்னதையும் விட சற்று மேல் தான் புடவையை உயர்த்தி பிடிக்க வேண்டியதாய் இருந்தது... கால்களில் குளிர்ச்சியை உணர்ந்தவள் கண்களை மூடிக்கொள்ள... இங்கே ஒருவனுக்கு இதயம் வெளியில் விழாத குறையாய் துடித்தது... தொண்டை மிடறு விழுங்க ஏறி இறங்கியது...

"அப்பறம் நிலவன் உங்க ரீசேர்ச் எப்படி போகுது..." என்றாள், இப்போதெல்லாம் அவனை மரியாதையாக தான் விழிக்கிறாள்.. அதனை நிலவனும் உணர்ந்தே இருந்தான்.. ஆனால் இன்று அவள் தரும் மரியாதையை கூட அவனை கொல்லாமல் கொன்றது..

நட்பு என்ற போர்வைக்குள் தொடரும் அவள் காதல் அவனறிந்தது தான்... ஆனால் அடித்து சொன்னாலும் அவள் ஒத்துக்கொள்ள போவதில்லை... நண்பன் என்று அதே பழைய பாட்டை தான் பாடுவாள் அதில் மாற்று கருத்து இல்லை...

"நிலவன் உங்கள தான்..." என்று அவள் மீண்டும் அவன் முன் கையை அசைக்க சுய நினைவுக்கு வந்தவன் போல் விழித்தவன் "ஆன் என்ன கேட்ட.." என்றான் தடுமாற்றதுடன்... அவள் கெண்டை காலே போதுமாய் இருந்தது அவன் உணர்வுகளை தட்டி எழுப்ப.. அவன் அவஸ்தை புரியாமல் இவளும் பேச்சு கொடுத்து கொண்டிருக்கிறாள்...

அவளை சொல்லியும் குற்றமில்லை.. அவர்களது திட்டத்தின் ஒரு பகுதி தான் இது... அங்கே அறையை அலங்கரிக்கும் வரை இவனிடம் பேச்சுக்கொடுக்கும் படி பூஜாதான் அனுப்பி வைத்திருந்தாள்.... அவர்களுக்கு தனிமையளிப்பதற்காகவும் சேர்த்து..

"ரீசர்ச் எப்படி போகுதுனு கேட்டேன்..."

"ஆல் குட்.. அப்ரூவலுக்கு வேலை நடக்குது... அவ்வளவு இசியா கிடைச்சிடாது தான் பட் நம்பிக்கை இருக்கு வெயிட் பண்ணி பாக்கலாம்..."

"ம்ம்ம் கண்டிப்பா கிடைக்கும்... செம கிளைமேட்ல...குளிருது.." என்று அவள் கைகளை தேய்த்துக்கொள்ள

"எனக்கு சூடா இருக்கு..." என்றான் அவனுக்கே கேக்காத குரலில்.. அவளோ புரியாமல் பார்வையாலேயே "என்ன" என்று கேட்க... "ஒன்றுமில்லை" என்பதாய் தலையசைத்தான்...

மீண்டும் சிறிது நேர அமைதி... அந்த நொடிகளின் கனத்தை நிலவனால் கடக்க முடியவில்லை..ஒரு கட்டத்தில் அவள் இதழோடு இதழ் பதிக்கும் ஆசை தரிக்கெட்டு ஓட... அதற்கு மேல் முடியாமல் எழுந்து உள்ளே செல்ல பார்த்தான்..

தீடீரென அவன் எழுவான் என தெரியாத அதிரல் அவன் உள்ளே சென்றுவிட கூடாதே என்ற பதற்றத்தில் அவன் கையை பிடித்திருந்தாள்... அவ்வளவு தான் அதன் பின் நிலவனை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை...

அவள் அருகில் அமர்ந்தவன், நீருக்குள் குதித்திருந்தான்.. நீரினுள்ளே நின்றபடியே அவளுக்கு நெருக்கமாக அவள் முன்னே வந்து நின்றவன் "இதுக்கு மேலயும் என்னால முடியலடி.. இந்த உதடு என்ன வானு கூப்பிட்டே இருக்கு..." என்று அவள் இதழ்களை விரலால் பிடித்தபடி சொன்னவன் நொடியும் தாமதிக்காது அவள் இதழுக்குள் தன் இதழை புதைத்துக்கொண்டான்...

முத்தமிட்டு கொண்டிருந்தவன் இன்றே அவள் இதழகளை மொத்தமாக கொள்ளையிட எண்ணினானோ என்னவோ விடும் அறிகுறி சிறிதும் அவனிடம் இல்லை...

முதலில் என்ன செய்கிறான் என்றே புரியாதவள்.. முத்தமிட்டதும் அவனை தள்ளிவிட போராடி ஒரு கட்டத்தில் உணர்வின் பிடியில் அமர்ந்திருந்த கட்டில் கைகளை அழுந்த பதிந்திருந்தாள்.. அதனை உணர்ந்தவன் முத்தமிட்டுக்கொண்டே அவள் கைகளை எடுத்து அவன் கேசத்துக்குள் நுழைத்தவனது ஒரு கரம் அவள் கன்னத்தை வருட, இன்னொன்று அவள் புடவையையும் தாண்டி இடையில் ஊடுருவியது...

அவர்களது நெருக்கமும்.. அந்த மாலை மங்கும் வேலையும்.. கண்களின் காதலை கடந்த மோகமும் தீயாய் எரிந்து கொண்டிருந்தது... இதற்கு இருவரும் சம பொறுப்புதாரிகளே... முத்தமும் நீண்டு கொண்டே சென்றது எனக்கு முடிவு வேண்டாம் என்பது போல..

அவள் மூச்சைக்கு திணறும் வேளையில் கூட தன் மூச்சை அவளுக்கு கொடுத்தானே தவிர அவளை விடவுமில்லை விடும் எண்ணமும் இல்லை... கிட்டத்தட்ட அவன் அவள் மேல் காதல் கொண்டு ஒரு வருடம் ஆகி இருந்தது... இன்று தான் அவர்களது முதல் நெருக்கம்.. என்ற பின் கேட்கவும் வேண்டுமா.??..

எங்கோ ஒரு மூளையில் சத்தம் கேட்பது போல் ஒரு பிரம்மை... அதிரல் சுயத்துக்கு வந்தவள்... கண்களை திறந்து பார்க்க அவன் முகமே அத்தனை நெருக்கத்தில்... அப்போதுதான் பூஜாவின் சத்தம் தொடர்ந்து அருகில் வருவது தெரிந்தது...






 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அதனை உணர்ந்ததும் அவனை விலக்க போராட அது முடிந்தால் தானே... அவன் பிடி அத்தனை வலுவாய் இருந்தது... இன்னும் சற்று நேரம் இருந்தால் பூஜாவிடம் மாட்டிக்கொள்ளும் நிலை தான்... அதுவும் இந்த நிலையில்... பூஜாவாவே இருந்தாலும் பார்க்க விட முடியுமா???...

பலம் மொத்தம் திரட்டி அவனை இதழ்களை காயம் செய்ய.. அவளில் இருந்து விலகி "வலிக்குதுடி" என்று முனங்கியப்படி அவள் கழுத்தில் முகம் புதைத்தவனை அப்படியே நீரினுள் ஒரே தள்ளாக தள்ளி இருந்தாள்... அதில் சமநிலையின்றி உள்ளே விழுந்திருந்தான் அந்த காதல் ரோமியோ..

சரியாய் அந்த நேரம் பூஜா அங்கு வர அதிரலுக்கு உணர்வுகளை முகத்தில் காட்டாமல் மறைக்கும் கட்டாயம்... அவனோ இந்த உலகத்திலே இல்லை... அவன் உணர்ந்துக்கொண்ட அவள் மென்மை அவனை இம்சித்து கொண்டிருந்தது... முத்தமிட்டால் உணர்வு அடங்கிவிடும் என்று பார்க்க அதுவோ இப்போது இன்னும் அவஸ்தையாய் இருந்தது...

"என்னடா இந்த நேரம் ஸ்விம்மிங் பண்ணுற.. எழுந்து வா..." என்ற பூஜாவின் குரலுக்கு சுய உணர்வு பெற்றவன் "கரடி" என்று வாய்க்குள் முனுமுனுத்தபடி.. "நீ போ நான் வரேன்..." என்றான்

"நீ வா அதி நம்ம போகலாம் சார் ஆறுதலா வரட்டும்..." என்று சொல்ல அதிரலோ எழுந்து கொண்டாள்...

"என்ன அதி உன் டிரஸும் நனஞ்சிடிச்சா?.." என்க அதிரல் பார்வை நிலவனோடு மோதிக்கொண்டது...

"கால் நனைக்கலாம்னு கால் வெச்சிருந்தேன்.. ஜஸ்ட் ஸ்லிப் ஆகிட்டேன்..."

"ஓகே வா... வேற டிரஸ் தரேன்..."

"அதுக்கு எதுக்கு வேற டிரஸ் அப்படியே கொஞ்ச நேரம் இருந்தா காஞ்சிடுமே.." என்று அவசரமாய் பதில் வந்தது நிலவனிடமிருந்து..

"அங்க கேட்டா இங்க பதில் வருது.. நீ வா அதி நம்ம மாத்துவோம்... இவரு என்ன சொல்றது..." என்றவள் முன்னே நடக்க... அதிரல் பார்வை இப்போது நிலவனிடம், அவன் தலையை இடம் வளமாக அசைத்து மறுப்பை சொல்லி இருந்தான்... இனி அவள் எங்கனம் மாற்றுவது....


நிலவனோ சிறிது நேரம் அந்த உடையிலே நீந்தியவன் அப்படியே வெளியேறி அருகில் இருக்கும் அறை ஒன்றிற்குள் நுழைந்து கொண்டான்... அங்கே அவன் ஆடைகள் இருந்தது... அவனுடையது மட்டுமல்ல அங்கே விஷ்ணு ராம் இருவரினதும் கூட இருக்கும்... வழமையாக பூஜாவின் வீட்டுக்கு வந்து போவதால் அவர்கள் ஆடை இங்கே இருப்பது விசித்திரம் இல்லையே...

பூஜாவின் தாய் தந்தையும் அத்தனை மென்மையானவர்கள்... ஆண்கள் மூவர் மீதும் பூஜாவை போலவே பாசமும் காட்டுபவர்கள்.. ஆனால் பூஜாவின் தாத்தா பாட்டி அப்படியல்ல பழமைவாதிகள் அவர்கள்... அதனாலேயே ராம் பூஜா காதலை ஏற்று கொள்ள இத்தனை நாள் ஆகி இருந்துது....

ஆடையை மாற்றி கொண்டவன் வீட்டினுள் நுழைய உள்ளே இருள் அவனை வரவேற்றது... அவனுக்கு அப்போதுதான் பிறந்தநாள் ஞாபகமே வர... "கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் மறக்க வெச்சிட்டா மாயக்காரி...." அவளுக்கு செல்லமாய் மனதினுள் திட்டிக்கொண்டவன்

"டேய் எல்லாரும் வெளிய வாங்க... எனக்கு தெரியும் சர்ப்ரைஸ்னு ஏதோ பண்ண போறீங்க..." என்று அந்த இருட்டினுள் நின்றபடி சொல்ல.. அவன் கண்ணை கட்ட முயற்சி செய்தது ஒரு கை... அது பூஜாவுடையது என்பது அவனுக்கு தெரியும்..

"டேய் அதான் கட்ட கஷ்டப்படுறேன்னு தெரியுதுல குனியேண்டா மலமாடு.. பர்த்டே அதுவுமா திட்ட கூடாதுனு பாக்குறேன்... விடமாட்டியே..."

"ஓகே ஓகே கோபப்படாத..." என்றவன் குனிய அவன் கண்ணை கட்டியவள் கையை பிடித்து எங்கோ அழைத்து சென்றாள்...

"அடியேய் பூ இதெல்லாம் ஓவரா தெரியல..."

"மூடிட்டு வா... உன்னலாம் வெச்சிக்கிட்டு ஒரு பிளான் பண்ண முடியுதா... உங்கள எல்லாம் மேய்ச்சே நான் கிழவி ஆகிடுவேன்.... சபா..." என்ற அவள் கோபத்துக்கு பின்னும் நிலவன் பேசுவானா என்ன.... ஒரு இடத்துக்கு அவனை அழைத்து வந்தவள்... "ஓகே இப்போ கண்ண திறக்க போறேன் வன்.. டூ.. த்ரீ.." என்று கட்டை அவிழ்த்திருந்தாள்..

இருட்டுக்கு பழக்க பட்டிருந்த அவன் கண்கள் மெல்ல வெளிச்சத்தை உள்வாங்கி கொள்ள.. அங்கே அந்த அறையே அவர்களது லூட்டிகளை சொல்லும் நிழற்படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது... நடுவில் மேசை மீது பெரியளவிலான கேக் ஒன்றும் அதில் வண்ணநிலவன் என்ற அவன் பெயர் அழகாக எழுதப்பட்டிருந்தது பிறந்தநாள் வாழ்த்துத்தோடு சேர்த்து... அந்த பெரிய கேக்கை சூழ அருகில் சிறிய கப் கேக்குகளும் அடுக்கப்பட்டிருந்தது..

ஒவ்வொருவராக அவன் பார்வை சென்று இறுதியில் விழிகள் அவனவளலில் பதிந்து மீண்டது... அவள் ஆடையை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுவரை அவளை கவனித்துகொண்டான்...

"எதுக்கு டா இவ்வளவு ஸ்ட்ரைன் பண்ணிக்கிறீங்க... உங்க கிட்ட இருந்து வர்ற விஷ் கூட எனக்கு பெரிசு தான்..."

"சிம்பதி கிரியேட் பண்ணாம மூடிட்டு கட் பண்ணு நமக்கு அதெல்லாம் செட் ஆகாது..." என்றான் விஷ்னு...

"ரைட்டு.. ஒருநாள் பீலிங்கா பேசுவோம்னா விடுறீங்களாடா... அப்பரசண்டிகளா.." என்றவன் கேக்கை வெட்ட அங்கே ஆரவாரங்களுக்கு பஞ்சமில்லை... ஒருவர் மாறி ஓருவர் கிரீமை பூசி கொண்டு ஒரே ரகளை தான்... பின் ஒவ்வொருவராக கேக்கை ஊட்டியவன் அதிரலை தேட அவளோ அங்கில்லை...

கண்கள் அலைபாய்ந்தும் அவள் இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை...

"நிலவா இது என்னோட கிப்ட்டு.." என்று பூஜா விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை கொடுத்து அவனை அனைத்துவிடுவித்தாள்...

ராமோ... "அவன் என்றோ ஒருநாள் ஆசையாய் பேசி இருந்த சன்கிளாஸ் ஒன்றை கொடுத்திருந்தான்...

விஷ்னு அவன் பங்குக்கு பைக் ஒன்றை கொடுத்திருந்தான்...

"டேய் ஏண்டா இப்படிலாம் பண்ணுறீங்க..."

"பதிலுக்கு இத விட பெருசா உன்கிட்ட இருந்து கறந்துப்போம் டோண்ட் ஒர்ரி..." என்றாள் பூஜா கிண்டலாய்..

"ஓகே இதுக்கே இப்படின்னா இன்னொன்னு ஸ்பெஷலா வெச்சிருக்கோமே..." என்றபடி மூவரும் சென்று அந்த பெரிய கிப்ட்டை தூக்கி வர..

"என்னடா இது..." என்ற நிலவனுக்கு ஓரளவுக்கு என்ன என்பதில் அனுமானம் இருந்தது... இவர்களது விளையாட்டு தனத்தை எண்ணி தலையிலடித்து கொண்டவன் மெல்லிய சிரிப்பினூடே அதனை பிரித்தான்...


உள்ளே அதிரல் ரிப்பன் சுற்றப்பட்டு நின்றிருந்தாள்... அவன் எதிர் பார்த்தது தான்... அதிரலுக்கோ வெக்கம் தாளவில்லை... விஷ்னுவின் கெஞ்சலில் தான் நேற்று ஒப்புக்கொண்டிருந்தாள் ஆனால் இன்று நிலையோ வேறு அல்லவா...

"இந்த கிப்ட் எனக்கு பிடிச்சிருக்கு..." என்றான் நிலவன் கள்ள புன்னகையுடன்.. அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரியத்தான் செய்தது...

"ஓகே எனக்கு வெளிய வர ஹெல்ப் பண்ணு ஸ்ரீ..." என்று அதிரல் சொல்ல நிலவனோ பக்கத்தில் இருந்த கேக்கை தூக்கி ராமின் கையில் வைத்தவன் "அச்சச்சோ உன் ஸ்ரீ கை பிரீயா இல்லையே.. என்ன பண்றது.. ஓகே அப்போ நானே பண்ணுறேன்.." என்று அவளை வெளியே தூக்கி இருந்தான்... எல்லாம் சடுதியில் நிகழ்ந்து முடிந்திருந்தது...

"ஹலோ ஹீரோ சார்.. இந்த டேப்ப கொஞ்சம் ரிமூவ் பண்ணி இருந்தா அவ இசியா வெளியே வந்திருப்பா.. இதுக்கு போய் உங்க வீர தீர செயல் எல்லாம் காட்டணுமா???..." என்றான் விஷ்னு

"அப்படியா எனக்கு தெரியலையே.. ஹெல்ப்னு வந்துட்டா அதெல்லாம் யோசிக்கலாமா விஷ்னு..." என்று பேச்சு இவனிடம் என்றாலும் பார்வை அவளிடம் தான்...

"ரொம்ப ஓவரா தான் டா போற நீ இன்னைக்கு..." என்றான் அவனை மேலும் கீழும் பார்த்தபடி, அவனோ "ஆமால்ல... கண்டுக்காத மச்சான்..." என்றான் வெக்கப்பட்டுகொண்டு...

அங்கே கைகளுக்குள் எதையோ வைத்து கொடுப்பதா வேண்டாமா என போராட்டத்தில் அதிரல் இருக்க, அதனை பார்த்த பூஜாவோ, "ஓகே அதிரலோட கிப்ட் எங்க.." என்றாள் அவளுக்கு உதவுவது போல்..

"கிப்டோட கிப்ட்டா..." என்ற நிலவனும் ஆர்வமாய் பார்க்க... அதிரலோ தங்க செயின் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தாள்... அதனை அவள் முன்பே கழுத்தில் போட்டுகொண்டவன் "அழகா இருக்கா??...." என்ற கேள்வியோடு அவளிடம் காண்பித்தான்.. அவளும் ஆம் என்பதாய் தலையசைக்க மற்ற மூவரும் "ஓஓஓஓ" என்று சத்தம் எழுப்பினர்...

சிறிது நேரம் அப்படியே கழிய இதுதான் சரியான நேரம் என்பதாய் அதிரல் பேச்சை தொடங்கினாள்... "என்னோட மாஸ்டர் டிகிரி கம்ப்ளீட் ஆகிடிச்சு.. மோஸ்ட்டா நெஸ்ட் மந்த் இங்க இருந்து போய்டுவேன்..."

அதுவரை இருந்த ரம்ய மனநிலை அறுந்து நிலவனுக்கு நிதர்சனம் புரிய தொடங்கியது.. அங்கிருந்து கோபமாய் எழுந்து சமையலறைக்குள் புகுந்து கொண்டான்...

"ஏன் அதி இன்னும் அவன் காதல ஏத்துக்க தோனலயா???.."

"நாங்க சேர முடியாது விஷ்னு... சேரவும் கூடாது... அவன் நல்லா வாழ வேண்டியவன்... இப்போ புரியாது உங்களுக்கு.. பட் நான் இல்லனா தான் அவன் பியூச்சர் நல்லா இருக்கும்..." என்று விளக்கம் கொடுத்தவள்.. நிலவனை எதிர்கொள்ள சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்...


அங்கே அவனோ கோபத்தில் சம்பந்தமே இல்லாமல் வெங்காயம் நறுக்கிககொண்டிருந்தான்... அவன் கோபத்துக்கு பலியாகி வெங்காயம் கதறிகொண்டிருந்தது... அவன் வெட்டும் வேகத்தில் விரல் வெட்டிவிடுமோ என்று பயந்த அதிரல் அவனை தன்னை நோக்கி திருப்பி இருந்தாள்...

"நாம சேர முடியாது நிலவா... ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற... நான் போயாகணும்...."

"ஓகே நீ போகலாம் இங்க இருந்து மட்டுமில்ல.. எனக்குள்ள இருந்தும்..." என்று முடித்தவனின் பார்வையில் "முடிஞ்சா போய் தான் பாரேன்..." என்ற பிடிவாதமே இருந்தது...

"நம்ம வயசு..." என்று அவள் பேச வர... வயச பேசாத ஜஸ்ட் பத்து மாசம் அதெல்லாம் காரணமா தூக்கிட்டு வராத.. சாவடிச்சிடுவேன்... அப்படி வயசு முக்கியமானவளா இருந்தா... பத்து மாசம் வெயிட் பண்ணி பொறந்திருக்கணும்... அவசரப்பட்டு எனக்கு முன்ன உன்ன யாரு பொறக்க சொன்னா..." என்றான் எல்லாம் அறிந்த மருத்துவனவன்..

அவன் சிறுபிள்ளை தனமான பேச்சில் அதிரலே சிரித்துவிட்டாள்...

"சிரிக்காத... இப்படி சிரிச்சு சிரிச்சு தான் என்ன இங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்க...."

"ஓகே பியூச்சர்ல நம்ம குழந்தைகளுக்கு... இதே வயசு பேசுபொருளா வருமே அப்போ என்ன பண்ணுவ...." என்றதும் அவன் முகத்தில் அத்தனை கோபத்திலும் புன்னகை விரிந்தது... தன்னை போலவே அவளும் யோசித்திருக்கிறாள் என்ற எண்ணத்தில்...

"அதெல்லாம் நான் பாத்துப்பேன்... என் பசங்கள எப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும் நீ அதுல தலையிடாத... அந்த மிஸ்ஸ நான் கவனிச்சுப்பேன்..." என்று முடிக்க அவளோ எந்த மிஸ் என்பது போல் புரியாமல் பார்த்திருந்தாள்..

"அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.. நீ இப்போ நம்ம மேட்டருக்கு வா..."

அவனிடம் இனி மறைத்து பயனில்லை என்று உணர்ந்தவள்... "ஓகே உண்மையான காரணத்தையே சொல்லுறேன்" என்று ஆரம்பித்து அவள் கடந்த காலத்தை சொல்லி முடித்தவளிடம் பெருமூச்சு.....

நிலவனுக்கோ பேச முடியவில்லை... எத்தனை ரணங்கள்... காரணம் இருக்கும் என்று இப்படி ஒரு காரணத்தை அவன் எதிர் பார்க்கவில்லை... கலையரசன் மீது கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது...

"என் அம்மாவோட கடைசி வார்த்தை நிலவா.. அவங்க அனுபவிச்ச நரகம் எனக்கு கிடைக்க கூடாது அப்படி சொல்லிட்டு போயிருக்காங்க... பட் இப்போ அம்மா உன்ன பார்த்தா கண்டிப்பா அவங்க முடிவ மாத்திப்பாங்க... அதுல எனக்கு சந்தேகமே இல்ல.." என்றவள் மேலும் சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தாள்...

"எனக்கு அந்த ரணம் வாழ்க்கை பூரா இருக்கும்... வாழ்க்கைல ஏதோ ஒரு கட்டத்துல உன்மேல சந்தேகப்பட்டு என் பார்வை ஒரு செக்கன் மாறினாலும்... என்னோட சேர்ந்து உன் வாழ்க்கையும் நரகமாகிடும்.. அந்த நரகத்த உனக்கு கொடுக்க விரும்பல... நீ நல்லா வாழ வேண்டியவன் நிலவா... என்கூட சேர்ந்து உன் லைப காம்ப்ளிகேட் பண்ணிக்காத...." என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திருக்கவில்லை அங்கிருந்தே சென்றுவிட்டாள்...

சற்றுமுன் நிகழ்ந்த முத்த போருக்கானா விளக்கம், அவனும் கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை... விளக்கம் கொடுக்கும் உணர்வுகள் அல்லவே அவை...

நிலவன் அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவே எண்ணினான்.. அவள் கடந்து வந்த ரணம் அதிகம்... அவளுக்கான நேரத்தை கொடுக்க எண்ணியவன் மனதில் தீர்க்கமாய் ஒரு முடிவு....



அங்கே அந்த உருவம் ஜேகேவின் கோபத்துக்கு ஆளாகி திட்டுக்களை வாங்கி கொண்டிருந்தது..

"சொன்ன வேலைய எப்ப முடிக்க போற... ஒரு பைல எடுக்க இவ்வளவு நாளா உனக்கு... அவன் அப்ரூவல் எடுக்குற வர கைகட்டி வேடிக்கை பாக்க போறியா??..."

"அந்த மூர்த்தி என்ன ஸ்மெல் பண்ணிட்டான்னு தோணுது ஜேகே... அதான் கொஞ்சம் பொறுமையா பண்ணலாம்னு...

"நீ என்ன வேணா பண்ணு... பட் நெக்ஸ்ட் வீக் பைல் என் கைல இருக்குறதும் நீ உயிரோட இருக்கிறதும் இப்போ உன்கையில்..." என்று அழைப்பை துண்டித்திருந்தான்...



அடுத்த வாரம் நிலவன் எதிர்பார்க்காத பல நிகழ்வு நடந்தேற காத்திருந்தது... நிலைமை கைமீறி எல்லாம் கண்ணிமைக்கும் நொடியில் முடிந்திருக்கும்.... நிலவனுக்கு நெருக்கமான இரு உயிரை அந்த நாளில் இழந்து தவிப்பான்... யாருக்கு என்ன நடக்க காத்திருக்கிறதோ?????


ஜாதி மல்லி மலரும்.....


கருத்து திரி 👇👇👇



InShot_20240817_115457255.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 21


இன்று காலை வீட்டிலிருந்து கிளம்பும் போதே நிலவன் ஏற்கனவே முடிவு எடுத்தது போல வீட்டின் பரம்பரை தாலியை எடுத்து வைத்துக்கொண்டான்..

ஆம் அவளை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்துக்கு வந்துவிட்டான்.. அவளுக்கான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க முடிவெடுத்தவன் அவளுக்கான இடைவெளியை கொடுக்க எண்ணி இருந்தான்... ஆனால் அது அவன் மனைவியான பிறகே என்பதில் உறுதியும் இருந்தது... பரம்பரை தாலியை உருக்கி இரண்டாக அதே போல் செய்து என எல்லாம் தயாராக இருந்தது.. நேற்றே அதற்கான வேலையை முடித்து விட்டான்.. நாளை அதிரல் இங்கிருந்து செல்லும் போது அவன் மனைவியாக தான் செல்வாள் அதில் மாற்றமில்லை...


இன்று ஹாஸ்பிட்டலினுள்ளே நுழைந்தவனுக்கு மற்றவர்கள் பார்வை விசித்திரமாகவே பட்டது... தன்னை பார்ப்பது அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொல்வது என அனைவரின் நடவடிக்கையும் சாதாரணம் போல தோணவில்லை அவனுக்கு... நேரே தனது அறைக்குள் நுழைய ராம் பூஜா விஷ்னு மூவரும் அவனுடன் வழமைபோல் தான் இருந்தனர்..

அப்போ உள்ளே வந்த டாக்டர் ஒருவர்.. "மிஸ்டர் நிலவன் பெஸ்ட் சாய்ஸ்.. உங்க ஜோடி தான் இன்னைக்கு ஹாஸ்பிடல்லயே ஹாட் டாபிக்.. செம ப்ரோபோசல்... உங்களுக்குள்ளயும் ஒரு ரொமான்டிக் ஹீரோ ஒளிஞ்சிருக்கிறது தெரியாம போச்சே... எங்கிட்ட கூட சொல்லல??.. எனிவேய்ஸ் காங்கிராட்ஸ் போத் ஒப் யூ..." என்று சொல்ல மற்றவர்களின் சைகையை உணராதவன்..

எப்படி தெரிய வந்திருக்கும்?? எந்த ப்ரோபோசல்??.. என்ற யோசனையுடனே "தேங்க்ஸ் சார்.. சொல்ல கூடாதுனு இல்ல.. சேம் ஹாஸ்பிடல் சோ சும்மா பேசுனாலும் ஓட்டுவாங்க அதான் சார்..."

"ஓகே யங் மேன்... ஐ அண்டர்ஸ்டாண்ட்... சீக்கிரமே ட்ரீட் தாங்க..."

"சூர் சார்..." என்றவனின் பதிலில் அவர் வெளியேற..

"எப்படி தெரிய வந்திருக்கும்??...நீங்க ஏண்டா முழிக்கிறீங்க..???

"டேய் அந்த பேக்கு உன்னையும் என்னையும் சேர்த்து வெச்சு பேசிட்டு போகுது..." என்றாள் பூஜா

"உன்னையும் என்னையுமா? என்னடி சொல்லுற..."

"ஆமா நிலவா இன்னைக்கு நம்ம ஹாஸ்பிடல்ல மோஸ்டா முக்காவாசி பேருக்கு.. நீ இவளுக்கு ப்ரொபோஸ் பண்ற வீடியோ அனுப்பப்பட்டிருக்கு... எங்களுக்கும் சேர்த்து..." என்ற ராம் அவன் தொலைபேசியை காட்ட

நிலவனோ அதனை பார்க்க அதிலோ.. நிலவனும் பூஜாவும் மட்டும் தான் அதில் நின்றிருந்தனர்.. இவன் அவளுக்கு ப்ரொபோஸ் செய்து பூ கொடுக்க, அவளோ அதனை கண்களில் காதலுடன் வெக்கப்பட்டு கொண்டே வாங்கி, இவனை கட்டி அணைப்பதோடு அந்த காணொளி முடிந்திருந்தது...

அதனை பார்த்த நிலவனுக்கு அது எப்போது எடுக்கப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது... இன்னும் ஒரு மாதத்தில் வரும் அதிரலின் பிறந்தநாளுக்கு என அவளிடம் சொல்வது போல் இவளிடம் சொல்லி காட்ட, இருவரும் அந்தந்த கதாபாத்திரமாக நடித்திருந்தனர்.. இது எப்போதோ ஒருநாள் செய்தது குறைந்தது ஆறு மாதங்களாவது இருக்கும்...

"பூ இது அன்னைக்கு.." என்று அவன் சொல்ல வர

"ஆமா நிலவா.. அதே தான்.."

"அன்னைக்கு தான் அங்க யாருமே இல்லையே பூ.. நீயும் நானும் தான இருந்தோம்... யார் எடுத்திருப்பா?..."

"தெரியல நிலவா.. ஆனா யாரோ வேணும்னு தான் இப்படி பண்ணி இருக்கனும்.."

"என்ன மோட்டிவோட இப்படி பண்ணி இருப்பாங்க நிலவா.. இதால என்ன யூஸ்..." என்றான் ராம் சந்தேகமாக

"தெரியல ராம்... சப்போஸ் நமக்குள்ள சண்டை வரணும்னு பண்ணி இருக்கலாம்.. குறிப்பா உனக்கும் எனக்கும்.. இல்லனா பூஜாக்கும் உனக்கும்..." என்றவன் யோசனையாக அமர்ந்துகொள்ள

விஷ்னுவோ.. "ஏன் இது உன்னையும் அதியையும் பிரிக்க பண்ணி இருக்க கூடாது..."

"பொஸ்ஸிபில் இருக்கு தான்... செஞ்சவனுக்கு வேஸ்ட் தான் நமக்குள்ள எப்படியும் சண்டை வராது... அண்ட் அவளும் சந்தேகம் எல்லாம் பட மாட்டா.." என்றவன் வசனத்தை சொல்லி முடிப்பதற்குள் அதிரல் கோபமாய் அங்கு வந்திருந்தாள்...

"என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல... என்கிட்டயே பொய் சொல்லி நாடகம் ஆடிட்டல... உன்ன எவ்வளவு நம்புனேன்??.." என்றவள் திட்டி கொண்டிருக்க..

இடையில் புகுந்த விஷ்னுவோ.. "நிலவன் மேல தப்பில்ல அதி... அவன் உன்ன தான் லவ் பண்ணுறான்.. உன்ன தவிர யாரையும் நினச்சு கூட பாக்க மாட்டான்... இதெல்லாம் யாரோ செஞ்ச சதி..." என்று சொல்லி இருந்தான்

"இவன் என்ன லவ் பண்ணறதுதான என் பிரச்சனையே.. என்ன பெரிய சதி, இவனுக்கு தெரியாம எல்லாம் நடந்திச்சாமா??... எல்லாம் இவனோட பிளான்... என்ன ஏமாத்தி என் சைன்ன வாங்கி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருக்கான் இடியட்... இதுல இன்னொரு ஆள் வந்து சதி பண்ணுறாங்கலாமா??.." என்று சில தால்களை அவனை நோக்கி வீச

"ஊப்.. இவ்வளவு தானா நாங்க கூட வீடியோ பார்த்து அவன சந்தேக பட்டுட்டியோன்னு நெனச்சிட்டோம்... தேங்க் கோட்..." என்றான் விஷ்னு

"என்ன வீடியோ என்ன உளறுற..." என்று கேட்க

"உனக்கு விஷயமே தெரியாதா??" என்ற விஷ்னு, நிலவன் தடுக்க பார்த்தும் அதற்குள் அந்த காணொளியை அவளிடம் காட்டி இருந்தான்...

அதனை பார்த்ததும் அவள் முகம் மாற நிலவனுக்கோ அவள் முக மாற்றம் வேதனையை தான் கொடுத்தது... அவனுக்கு தான் தெரியுமே அவள் முகமாற்றம் எதுக்கென..

"நான் நினச்ச படியே நடந்துடிச்சில... இதுக்கு தான் படிச்சு படிச்சு சொன்னேன்... வேணா என்ன விட்டுட்டுனு கேட்டியா நீ... இந்த பேப்பர்ஸ் பாத்து உன்மேல கோபம் இருந்தாலும்.. உள்ளுக்குள்ள என் மனசு அமைதியா தான் உணர்ந்திச்சு... இங்கயே இருந்துடலாம்னு கூட யோசிச்சிருந்தேன்..." என்றவள் கண்களை துடைத்து கொண்டப்படி

"இட்ஸ் ஓவர்... இப்படி சந்தேக பட்டுடுவேன்னோன்னு என்கூட பயத்துலேயே வாழ வேணாம்... எதுவும் வேணாம்... உங்கள போய் சந்தேகப்படுவேன்னு நினைச்சிட்டேல.." என்று சொன்னதையே அவள் சொல்லிகொண்டிருக்க.. நிலவன் சொன்ன சமாதானம் எதுவும் அவள் காதை எட்டவில்லை...

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன்.. ஓங்கி ஒரு அறை விட அதிர்ச்சியில் அவனையே பார்த்திருந்தாள்..

"உஸ்ஸ்ஸ்.. ஏதாச்சும் சத்தம் வந்திச்சு நான் மனிசனா இருக்க மாட்டேன்... எப்பா பாரு போறேன் போறேங்கிற போ... உன்ன யாரு போக வேணான்னு சொன்னா??... போடி போ எங்கண்ணுல இனிமேல் பட்ட அன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள்..." என்க அங்கே அப்படி ஒரு அமைதி.. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வலிய.. அடிவாங்கிய கன்னத்தை ஒரு கையால் தங்கியவாறு விசும்பி கொண்டிருந்தாள் அவன் மனைவி...

அதனை பார்க்க அவனுக்கு மனது இளக தான் செய்தது... ஆனால் அவளோ, கெஞ்சினால் மிஞ்சும் ரகம் என்பதால் கோபத்தை இழுத்து பிடித்திருந்தான்.... மற்ற மூவரும் இவர்களுக்கு தனிமை கொடுத்து அப்போதே அங்கிருந்து சென்றிருந்தனர்...

"நான் சந்தேகப்பட்டேன்னு உனக்கு தெரியுமாடி... புரிஞ்சாலும் புரியவே வேணான்னு அடம்பிடிக்கிற உனக்கு சொல்லி புரியவைக்க முடியாது... போ இங்கிருந்து எங்க வேணா போ... அதுக்கு முதல்..." என்றவன் அவள் கழுத்தில் தாலியை போட்டிருந்தான்....

அதுவரை அமைதியாக நின்றிருந்தவள்... அவன் தாலியை போட்டதும்.. அவள் இருந்த மனநிலைக்கு தாய் இறுதியாய் சொன்ன வார்த்தைகளே மூளைக்குள் ஓடிகொண்டிருக்க வெறிப்பிடித்தவள் போல் அந்த தாலியை அறுத்து அவன் முகத்தில் வீசி இருந்தாள்... அவனும் அதனை எதிர் பார்க்கவில்லை... அறுத்து எறிந்தவளும் எதிர் பார்க்கவில்லை...

"வேணா னா கேட்க மாட்டியா??... எல்லாம் உன் இஷ்டமா???...." என்றவள் பேச்சை தடுத்தவன்

"அதான் என்ன கொன்னுட்டியே... புருஷன் செத்தா தாலி இல்லாம இருக்குறது தான சரி... இனி நீ எங்க வேணா போகலாம்..." என்றவன் இருக்கும் கோபத்தில் அவளை காயப்படுத்தி விடுவோமென திரும்பி கொண்டான்...

அவளது இந்த மனநிலை மாறும் என்று அவளுக்கு தோணவில்லை ஒரு நாள் அவன் வேண்டும் என்று மனது அடம்பிடித்தால் அடுத்தநாள் அவனை சந்தோசமாக வாழ விடுவாயா என்று கேட்டு நச்சரிக்கும்... தன்னோடு தினமும் அவனுக்கு போராட்டம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவள்...

"நான் இல்லனானா தான் நீ நல்லா இருப்ப நிலவா.. உன் ஜாஸ் உனக்கு வேணா..." என்று மானசீகமாக அவனிடம் சொல்லி கொண்டவள் அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.... கூடவே அவன் கட்டிய மாங்கல்யமும் அவள் கூடவே சென்றது அவள் உடையோடு ஒட்டிக்கொண்டு பிரிய மனம் வராமல்..



அடுத்த நாள் காலை பரபரப்பாய் விடிந்தது... பல இழப்புக்களை தர காத்திருக்கும் நாள்... நிலவன் உடைத்து மருகும் நாள்... எந்த நாளை வாழ்வில் வெறுகிறானோ அந்த நாள்....

"என்ன மிஸ்டர் மூர்த்தி.. இப்படி சட்டுனு கண்டுபிடிச்சிடீங்க... அப்பறம் நாங்க மறைஞ்சு இவ்வளவு நாள் எல்லாம் பண்ணினது வேஸ்ட்டா அப்போ..." என்ற அந்த உருவத்தை கோபமாய் பார்த்தது அவர் பார்வை...

கோபத்தை அப்படித்தான் அவரால் காட்ட முடிந்தது.. கை,கால் எல்லாம் கட்டப்பட்டு வாயும் அடைக்கப்பட்டிருந்தது...

"இப்போ குடுக்க போறீங்களா??? இல்ல சாக போறீங்களா??... " என்றவாறு அந்த உருவம் வெறுமையான ஊசி ஒன்றை வெளியே எடுத்தது...

"இந்நேரத்துக்கு புரிஞ்சிருக்கணுமே டாக்டர் மூர்த்தி சார்... இத இப்படியே உங்க மஸ்ஸில்ல போட்டேன்னா எதுவுமே ஆகாம தப்பிச்சிடுவீங்க.. அதே உங்க நரம்புல போட்டேன்னு வெச்சுக்கோங்க என்ன நடக்கும்னு உங்களுக்கு சொல்லியா தெரியணும்... எப்படி கரெக்டா போடணும்னு எங்களுக்கே சொல்லி தந்தவறாச்சே... உங்க நிலவன் மட்டுமில்ல நானும் கிளவர் தான்னு உங்களுக்கு ப்ரூப் பண்ண போறேன்... ஆனா பாருங்க உங்கள வெச்சே ப்ராக்டிகள் பண்ணுற நிலைமை வந்துடிச்சே" என்று அந்த உருவம் சிரித்தபடி அவரை பார்க்க

அவருக்கு புரிந்துவிட்டது இனி தான் உயிரோடு இருக்க போவதில்லையென.. ஆனால் உயிரே போனாலும் நிலவனின் உழைப்பை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்...

"ம்ம்ம்... அப்போ சொல்ல மாட்டீங்க... என்ன சார் இப்படி அநியாயமா சாக போறீங்களே... பாவமா இருக்கு.. சொன்னீங்கனா இன்னும் கொஞ்ச நாள் வாழலாம்ல" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அந்த உருவத்துக்கு உதவியாய் வந்த ஒருவன்.. அந்த பைலை எடுத்துவிட்டதாக கொண்டு வந்து கொடுக்க... மூர்த்தியின் கண்கள் விரிந்து கொண்டது

"ஹாஹாஹா கடவுளே என் பக்கம் இப்போ... ஓகே லெட்ஸ் செலப்ட்ரேட் யுவர் டெத்?..." என்று ஊசியை அவருக்கு போட போக யாரோ வரும் அரவம் கேட்டது... அந்த உதவியாளிடம் சொல்லி அவரை மறைவாக தூக்கி வர செய்த அந்த உருவம்.. "பாய் மிஸ்டர் மூர்த்தி சேப் ஜெர்னி" ஊசியை சரியாக அவர் நரம்புனுள் செலுத்தி அங்கிருந்த பின் வழியால் வெளியேறிவிட்டது.. இன்னும் சில நிமிடங்களின் அவர் இறப்பு உறுதி...


அந்த நேரம் பாலமூர்த்தியை காண லேபினுள் நுழைந்தவன் நிலவன் தான்.. நேற்று இரவே அவனுக்கு அழைப்பெடுத்தவர் அவசரமாக சந்திக்க வேண்டும் என்றும் இன்று முதல் வேலையாக அவரை சந்திக்கும்படியும் சொல்லி இருந்தார்...

லேபின் உள்ளே நுழைந்தவன் அவரை தேட எங்கும் காணவில்லை.. சுற்றி அவன் தேடி கொண்டிருக்க அந்த கதவடுக்கில் அவன பார்த்தபடி அவனிடம் ஏதோ சொல்ல முயன்றபடி உடலை அசைத்து கொண்டிருந்தவரது உயிர் இன்னும் சில வினாடிகளே...

"மூர்த்தி சார்..." என்று இருமுறை அவன் சத்தமாக அழைத்தும் பதில் வரவில்லை என்றதும் அங்கு இல்லையோ என அவன் வெளியேற போக.. உள் அறையில் பூனை ஒன்று எதையோ தட்டிவிடும் சத்தம் கேட்க.. மூர்த்தி தான் உள்ளே இருக்கிறார் என நினைத்து உள்ளே போனவன் அவர் இருக்கும் நிலையை உணர்ந்து

"ஐயோ சார் என்ன இது..." என்று அவர் கட்டுக்களை அவிழ்த்து அவரை விடுவித்தவன்... அவருக்கு பருக நீரை தேட எழபோனவனை தடுத்தவர்

மூச்சு தினறலுடனே "நில..வா உ..ன் உ..ழைப்..ப கா..ப்பா..த்த முடி..யல மன்..னிச்..சிக்..கோ..."

"சார் அதுவா முக்கியம் இப்போ " என்று அவருக்கு சிபிஆர் கொடுக்க முயன்றவனை தடுத்தவர்

"உ.ன் உழை.ப்ப எடுத்.துக்.கிட்.டது உன் கூட இருக்..கிற..." என்றவர் முடிக்கவில்லை அவர் மூச்சு நின்றிருந்தது.. அவர் உயிர் பிரிந்ததை உறுதிப்படுத்தியவன் அவரை விட்டு அதிர்ச்சியில் சிறு தூரம் பின்னால் சென்றிருந்தான்...

என்ன நடந்தது என்றே புரியாத நிலை... தன்னால் ஒரு உயிர் போய்விட்டதா???.. யார்?? எதற்காக???.. என்றெல்லாம் பல கேள்வி அவனுள்...

அதன் பின் எல்லாம் சடுதியில் நடந்து முடிந்தது.. அவர் முன்பே அவர் உடலை அங்கே ஹாஸ்பிடளுக்கே எழுதி வைத்திருந்தார்... பயிலும் மாணவர்களுக்கு உபயோடப்படும் என்பதற்காக...

அவருக்கும் மனைவி குழந்தை என யாரும் இல்லை தனி மரமாக வாழ்ந்தவர்... ஒரே ஒரு உறவு கீதாவின் தாய் தான்... அவரும் வந்து பார்த்தாகிவிட்டது... மற்ற விடயங்களை ஹாஸ்பிடல் நிர்வாகம் பார்த்துக்கொள்ளவதாக கூறி இருந்தது.. ஹார்ட் அட்டாக் என்றே பதிவு செய்யப்பட்டிருந்ததால் பிரச்சனை என்று ஒன்றும் வரவில்லை...


எல்லாம் முடிந்து அறைக்கு வந்தவனுக்கு ஏதோ தன்னை சுற்றி சிலந்திவலை பின்னப்படுவது போல் ஒரு தோற்றம்.. விடயம் தெரிந்த நண்பர்கள் மூவரும் அவனோடு தான் இருந்தனர்.. ஆனால் இது எத்தனையும் அறியாத அதிரலோ விமானத்தில் வலிக்க வலிக்க ஒரு பிரிவுக்கு காத்திருந்தாள்... தான் இல்லாமல் தான் அவன் சந்தோசமாக இருப்பான் என்று அவனை விட்டு செல்பவள் அறியவில்லை, இந்த நேரத்தில் தன்னை அவன் மனம் எப்படி தேடுமென்பது... பின்னாளில் அறிய நேரிடும் போது இதுவே அவளை பெரிதும் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கும்..


இத்தனை வருட உழைப்பு பறிபோனதுமில்லாமல் அவனால் இன்று ஒரு உயிர் இந்த உலகத்தில் இல்லையே என்பதை ஏற்று கொள்ளவே முடியவில்லை... அதனை யோசிக்க முடியாத படி அடுத்த அதிர்ச்சி அவனுக்காக காத்திருந்தது...


அந்த நேரம் அவசரமாக உள்ளே நுழைந்த நிஷா...

"நிலவா... அறிவு நம்மல எல்லாம் விட்டுட்டு போய்ட்டான்டா..."

"என்ன சொல்ற நிஷா..." என்றாள் பூஜா அதிர்ச்சியுடன்...

"ஆமா பூஜா... தற்கொலை பண்ணிட்டான்... ஹாஸ்டல் வார்டன் ராமுக்கு நிறைய தடவ கூப்பிட்டும் எடுக்கலன்னதும் எனக்கு எடுத்திருந்தார்... நம்ம காலேஜ் பழைய லேப்ல தான் தூக்கு போட்டிருக்கான்.." என்றாள் அழுதபடி

அதன் பின் மீண்டும் தொடர்ந்தது அவர்கள் ஓட்டம்... ஏன் எதற்கு என்றே தெரியாமல் மீண்டும் ஒரு இழப்பு... நிலவன் உடைந்து போய் நின்றிருந்தான்... தன்னோடு பேசாமலே சென்று விட்டானே.. என்ற எண்ணமே அவனை கொல்லாமல் கொன்றது....

அப்படியே தான் அமர்ந்திருந்தான்... காவல்துறையினர் வந்தனர்... ஏதேதோ கேள்வி எல்லாம் கேட்டுப்பார்த்தும் எதற்கும் அவனிடம் உணர்வில்லை... மூளை மரத்துப்போய் இருந்தது... தற்கொலை என்று நம்பமுடியாதபடி அறிவின் உடலின் அத்தனை காயம்... என்னவாகி இருக்கும் என்ற கேள்வி ஒன்றே அவன் மனதில்

விசாரணையின் முடிவில் திடீரென காவலதிகாரிகள் இவன் தான் காரணம் என நிலவனை கைது செய்திருந்தனர்... நண்பர்கள் மூவரும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை... புரியாமல் அவர்களுடனே இழுப்பட்டு சென்றான் நிலவன்.... அங்கே அவர்கள் சொன்ன காரணத்தை தான் அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை...

புதிதாக ஏதோ மருந்து சட்டதுக்கு புறம்பாக தயார் செய்ததாகவும்... அதில் பல உயிர்கள் இறந்ததாகவும்... போலீஸிடம் செல்வதாக சொன்னதால் தன்னோடு சண்டையிட்டதாகவும்... நேற்று சண்டை வலுத்ததில் தன்னை அடித்து விட்டதாகவும்.. நிலவனை ஒன்றும் செய்ய முடியாமல்.. அந்த பாவத்தில் தானும் ஒரு வகையில் பங்கு பெற்றிருப்பதால் மனது கேட்காமல் தற்கொலை செய்வதாகவும்.. அறிவழகனே எழுதிய கடிதம் ஒன்று காவல்துறைக்கு கிடைத்திருந்தது... அதன் பெயரிலேயே நிலவனை கைது செய்திருந்தனர்...

இரண்டு நாட்கள் சிறை வாசம் தான் நிலவனுக்கு.... நண்பர்கள் உறவினர்கள் என யார் அப்படி இல்லை என எவ்வளவு சொன்னாலும் அவர்களிடம் எதுவும் எடுபடவில்லை... ஆதாரம் தான் எதிர்பார்த்தனர்...

நிலவன் எதுவுமே பேசவில்லை அவனால் இன்னொரு உயிரா?... இவனும் கொலை செய்ய பட்டிருந்தால், அதற்கான காரணம் தன் கண்டுபிடிப்பாக தானே இருக்க முடியும்.... இல்லையென்றால் ஏன் அதனை பற்றி அவன் கடிதத்தில் எழுதி இருக்க வேண்டும்.... என்ற கேள்விகள் மண்டையை குடைய... பித்துப்பிடித்த நிலை தான் அவனுக்கு...


இரண்டு நாள் முடிவில் அவனை வெளியே விட்டிருந்தனர்... ஏனென்று காரணம் புரியவில்லை வீட்டுக்கு வந்தவன் கேள்வியாக பூஜாவை பார்க்க

அவளோ நிலவனது தொலைபேசியில் இருந்த காணொளி ஒன்றை அவனிடம் கொடுத்திருந்தாள் அதில் இருந்தது நிலவனை அடியோடு சாய்த்திருந்தது...



அதிலோ காயங்களுடன் அங்கே அந்த பழைய லேபின் உள்ளே தனியே அமர்ந்து யாரும் வருகிறார்களா என்று பயந்து பார்த்தபடி மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான் அறிவழகன்,

"நிலவா ரொம்ப முட்டாளா இருந்திருக்கேன்னு நேத்து தான்டா புரிஞ்சிக்கிட்டேன்... உன்னோட உண்மையான அன்ப புரிஞ்சிக்காம கோபத்த வளத்துக்கிட்டேனே... அதுக்கான தண்டனை தான் இது.. என்னைவிட எல்லாத்துலயும் நீ முன்னுக்கு இருக்கங்கிறது என்ன கோபப்படுத்திச்சு... அதுக்காக உனக்கு போட்டியா நானும் மருந்து கண்டுபிடிக்க ட்ரை பண்ணி தப்பு நடந்துடிச்சு நிலவா... ரெண்டு உயிர் என்னால போயிடிச்சுனு ஏதேதோ சொல்லுறாங்க... இப்போ அத வெச்சு என்ன பிளாக் மெயில் பண்ணி உன்ன டார்கெட் பண்ண பாக்குறாங்க... என்ன கூட கொல்ல போறாங்க... ரொம்ப அடிச்சாங்கடா.. வலிக்கிது..." என்று பின்னால் திரும்பி பார்த்தவன் மீண்டும் தொடர்ந்தான்

"ஊர்ல அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் நான் ஒரு டாக்டரா வந்துடுவேன்.. அவங்க கஷ்டத்தை எல்லாம் போக்கிடுவேன்னு நம்பிக்கையோட இருக்காங்க எல்லாத்தையும் சிதச்சிட்டேனே...." என்று உடைந்து அழுதவன் பின் கண்களை துடைத்து கொண்டு

முக்கியமான விஷயம் சொல்லணும் ஆனா சொல்ல முடியாதபடி பண்ணிட்டாங்க டா... சொன்னா அப்பா அம்மாவ கூட கொன்னுடுவாங்களாம்.. தங்கச்சிய ப்ரோசிடியூட் ஆக்கிடுவாங்கலாம்னு பயம் காட்டுறாங்கடா... நான் இல்லனா கூட அவங்கள நீ பாத்துப்ப ஆனா அவங்க உயிரோட இருக்கட்டும்டா... நீயே கண்டுபிடி நிலவா.. கூட இருந்த நாயும் இதுக்கு கூட்டு..." என்றவன் மேலும் ஏதோ சொல்ல வர காணொளி தெளிவில்லாமல் அந்த இடத்தினை அவசர கதியின் சுற்றி வந்தபடி காணொளி முடிந்திருந்தது...

"என்னடி இதெல்லாம்... என் ஒருத்தனால இன்னும் எத்தனை பேர் பழி ஆகப்போறாங்க...." என்று பூஜா மடியில் படுத்தவன் உடைந்து அழுதிருந்தான்...

"இதுக்கு நீ காரணம் இல்ல நிலவா அது அவங்க விதி... நிறைய விஷயம் நம்மல சுத்தி நடக்குது அத முதல்ல கண்டு பிடிக்கணும்..." என்று அவள் பேசிய எல்லாம் அவன் காதில் விழுந்தாலும் மூளையில் ஏறவில்லை...




























 
Status
Not open for further replies.
Top