ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"எனக்கிட்ட தான் இருக்கு கார்த்தி... என் பைக் சர்வீஸ் விட்டிருக்கேன்... இன்னைக்கு நீயே என்ன ட்ராப் பண்ணிடு..." என்றவாறு சாப்பிட அமர கூட கார்த்தியும் அமர்ந்தவன்..

"டுடே பசங்களுக்கு எக்ஸாம் நிலவா.. நான் எர்லியா போகணும்.. உன்ன ட்ராப் பண்ணிட்டு போக லேட் ஆகிடுமே.."

"அப்படியா என்ன பன்றது.. அப்பா இல்லையா மா??.."

"போய்ட்டாங்களே நிலவா.. இன்னைக்கு பேங்க்ல ஏதோ ஆடிட்டிங் இருக்காம்னு போய்ட்டாங்க.."

"ஓகே கார்த்தி அப்போ நான் பஸ்லயே போய்கிறேன்"

"இல்லை நிலவா.. அது கஷ்டம், வேணும்னா ஒன்னு பண்ணலாம்.. நீ என்ன காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டு பைக் எடுத்துட்டு போ.. ஈவினிங் என்ன பிக்கப் பண்ணிக்கோ..." என்றான் கார்த்தி தீர்வாக..

"ஓகேடா இது பெட்டர் ஐடியா... அப்படியே பண்ணுவோம்..." என்று இருவரின் பயணமும் தொடங்கியது...


கார்த்தியின் காலேஜில் அவனை இறக்கி விட்டவன்..

"ஓகேடா கார்த்தி ஈவினிங் பிக்கப் பண்ணிக்கிறேன்.. " என்றவனது பேச்சு மட்டுமே கார்த்தியிடம் இருந்தது... பார்வையோ அங்கே உள்ள பெண்களையே வட்டமிட்டது...

"சைட் அடிச்சது போதும் கிளம்பு நீ..."

"அப்படிலாம் சொல்லப்படாது.. சைட் அடிக்குறது பசங்க உரிமை.. அதுலலாம் தலையிடாத.. என் தேவதைய தேடுறேன்.."

"அது சரி உன் காலேஜ்ல இல்லாத பொண்ணுங்களா?.. அந்த பொண்ணு பேரென்ன... ஆஆ.. நிஷா.. அந்த பொண்ணு கூட மூனு வருசமா லவ்னு சுத்துது கண்டுக்க மாட்டேங்கிறியே..."

"இப்போ மட்டும் உங்களுக்கு எக்ஸாம்க்கு லேட்டாகலயா ப்ரொபசர் சார்.. நின்னு பேசிட்டு இருகீங்க.. எனக்கு நோ அப்ஜெக்ஷன் நாள் பூரா பேசலாம்..."

"உனக்கு இருக்க கொழுப்பு இருக்கே... ஓகே நாளைக்கு உன் காலேஜ்ல ப்ரஸஸ் வராங்கல்ல அதுலயாச்சும் உன் தேவதை இருக்காளான்னு பாரு..."

"டெபனட்டலி.. அதான முதல் வேலையே..."

"பாத்துடி மகனே... சுகிகிட்ட ஒரு நாள் வசமா மாட்டுவ.." என்றவன் உள்ளே செல்ல நிலவன் சற்று நேரம் ஆற அமர சைட் அடித்துவிட்டே கிளம்பியவன் ஜேகே மெடிக்கல் காலேஜ் என பொறிக்கபட்டிருந்த கல்லூரி வாளாகத்துக்குள் நுழைந்திருந் தான்...


அங்கே அதிரலின் வீட்டில் குண்டு வெடிக்க தயாராக இருந்தது... "யாரை கேட்டு இப்படி பண்ண தாத்தா... நான் இங்க வந்ததே வெகேஷன்ல உன்கூட கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாமேனு தான்.. நீ அதுக்கும் வேட்டு வெச்சிட்ட.. நான் கேட்டனா இப்போ காலேஜ்லாம் போகணும்னு.."

"அதில்லடா அப்பு... என் பிரண்டோட மெடிக்கல் காலேஜ் தான் அது..."

"அதுக்காக என்ன கேக்காமயே எல்லாம் பண்ணுவியா நீ.."

"தாத்தாகாகடா அப்பு..." என்று அவர் பாவமாக கேட்க அதில் மனம் இறங்கியவள்

"என்னவோ பண்ணு.. இப்போ வா சாப்பிட..." என்று வெளியேறி இருந்தாள்...


நாளை சந்திக்க போகும் அதிரலால் நிலவனுக்கு பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது... அவனையே பேசமுடியாமல் வாயை மூட வைத்தும் விடுவாள்... அப்படி என்ன நடந்திருக்கும்???...




ஜாதி மல்லி மலரும்.......

கருத்து திரி 👇👇👇👇

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 17


நிலவன் மருத்துவ கல்லூரியில் இறுதி வருடத்தில் பயிலும் மாணவன்... இந்த வருடத்தோடு அவன் படிப்பு முடிந்து ஒரு வைத்தியராக வளம் வர போகிறான்... இது அவனது சின்ன வயது முதலான ஆசை.. இன்னும் ஒருவருடத்தில் நிறைவேறவும் காத்திருக்கிறது... அதில் அவனுக்கு எப்போதும் மன நிறைவு தான்..


நிலவன் காலேஜினுள் நுழைய அவன் வானர படை அங்கே அவர்கள் வழக்கமாக அமரும் மரத்தின் கீழ் தான் அமர்ந்திருந்தனர்.. அவன் கேங்கில் அவனோடு சேர்த்து மொத்தமாய் ஆறு பேர் தான்... மற்ற ஐவர் விஷ்னு, ராம், பூஜா, அறிவழகன் மற்றும் நிஷா..

"வாடா மச்சான்.. உனக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு.. என்னனு கெஸ் பண்ணு பாக்கலாம்..." என்றான் விஷ்ணு

"டேய் ஓட்ட வாய் கொரங்கே... இப்பவே சொல்லனுமா? அவன கொஞ்சம் இங்க வந்து உக்கார விடு .." என்று பூஜா அவன் தலையில் கொட்ட..

"ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ... ஏன்டி அடிச்ச அதான் நான் உன் வீட்ல உன் லவ் விஷயம் சக்ஸஸ் ஆகிடிச்சினு சொல்லவே இல்லையே... சர்பிரைஸ்னு மட்டும் தான சொன்னேன்.." என்றான் தலையை தடவியப்படி..

"சுத்தம்..." என்று அருகில் அமர்ந்திருந்த ராம் தலையிலடித்து கொள்ள

பூஜாவோ "நான் தான் சொன்னனே இவன் கிட்ட பர்ஸ்ட் சொல்லாதனு கேட்டியா நீ இனி இந்த காலேஜ் பூரா இன்னைக்குள்ள எல்லார்கிட்டயும் உளறி தொலைச்சிடுவான்..."

"விட்றி அவன பத்தி தான் தெரியுமே... நம்ம விஷயம் இங்க யாருக்கும் தெரியாததா?? இதுவும் தெரிஞ்சிட்டு போகுது விடு..." என்றான் ராம் நண்பனை அறிந்தவனாய்..

விஷ்னுவின் கெட்ட பழக்கம் இது ஒன்று தான்... எதையும் மறைத்து வைக்க தெரியாது... தெரியாது என்பதை விட அவனால் அது முடியாது என்று தான் சொல்ல வேண்டும்... சொல்ல வேண்டும் என்று சொல்வதில்லை.. அதுவாகவே வந்துவிடும் அப்படிப்பட்ட ஒரு ஓட்ட வாய் அவனுக்கு...

இந்த நான்கு வருடத்தில் எது மாறினாலும் அவனிடம் இந்த குணம் மட்டும் மாறவேயில்லை... நண்பர்கள் எவ்வளவு போராடியும் மாற்ற முடியாமல் அவனை அப்படியே ஏற்றுக்கொண்டும் விட்டனர்...

ஆனால் அவனது இந்த குணத்தால் மறைமுகமாக.. இன்னொரு ஜீவன் தைரியமாய் சுதந்திரமாக உலாவ போகிறது... அதில் இரண்டு உயிர்கள் பாதிக்கப்படவும் இருக்கிறது.... அதனை அறிந்த விதியால் கைகட்டி வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது....


"மறுபடியும் உளறிட்டனா?" என்றான் விஷ்னு சோகமாக

"அத விடு மச்சான் நமக்குள்ள தான.. சூப்பர் நியூஸ் சொல்லி இருக்கீங்க... ட்ரீட் எங்க.." என்று அவர்கள் அருகில் வந்தமர்ந்தான் நிலவன்..

உடனே ராம், "உனக்கில்லாத ட்ரீட்டா... ட்ரீட் நான் தரேன் பில் நீ பே பண்ணிடு அம்புட்டு தான.."

"பூ, உனக்கு இந்த கஞ்ஜுஸ் தான் கண்ணடிப்பா வேணுமா... நீ எதுக்கும் உன் முடிவ ஏன் ரீகன்சிடர் பண்ண கூடாது..."

"நீ சொல்லிட்டல பண்ணிட்டா போச்சு..."

"எப்பா ராசா இப்போ தான் ஓகே ஆகி இருக்கு அதுக்குள்ள நீ முடிவுரை எழுத வெச்சிடாத.. ட்ரீட் தான தந்து தொலைக்கிறேன்..."

"ஆஆ.. அப்படி வா வழிக்கு... அறிவயும் கூப்பிடுவல.."

"நீ திருந்த மாட்டியா நிலவா.. அவன் தான் உன்ன அவொய்ட் பன்றான்னு தெரியுதுல... அப்போ ஏன் நீ அவன பிடிச்சிட்டு தொங்குற... அவன் இப்போ முன்ன மாதிரி இல்ல, அத நீ புரிஞ்சிக்கோ பர்ஸ்ட்... உன்ன வேணும்னே ஹேர்ட் பண்றவன் பிரண்ட்டாவே இருந்தாலும் எனக்கு வேணா.." என்ற பூஜா கோபத்தில் எழுந்து செல்ல பார்க்க

"ஓகே ஓகே நான் அவன பத்தி பேசல நீ உக்காரு..." என்று அவளை ஒருவாறு சமாதானம் செய்து அமர வைத்தவன் பேச்சை மாற்றும் விதமாக

"நாளைக்கு பிரஷஸ் வராங்கல்ல... அதுல என் தேவதை வருவானு தோணுது பூ..."

அதற்கு பூஜாவோ "இதேயே தான் நீ ஒவ்வொரு முறையும் சொல்லுற.. அப்படி பாத்தா வருஷத்துக்கு ஒன்னுபடி இப்போவே உனக்கு நாலு தேவதை இருந்திருக்கணுமேடா..." என்றாள் நக்கலுடன்..

"அதான் ஏற்கனவே நிலவனுக்கு ஒரு தேவதை இருக்காளே பூஜா..." என்ற விஷ்னு நிலவன் கையால் கொட்டு ஒன்றை பெற்றுக்கொண்டான்...

"உதபடுவ ராஸ்கல்.. நிஷா இருக்கப்போ இப்படி உளறி கொட்டிடாத... என்ன ஞானம் பொறந்திச்சோ?, இப்போ தான் கொஞ்சம் அத பத்தி பேசாம இருக்கா... திருப்பி லவ்ன்னு ஆரம்பிக்க வெச்சிடாத..." என்றான் நிலவன் பெரிய கும்பிடோடு...

"ஐ வில் ட்ரை மச்சான்..." என்ற விஷ்னுவின் பதிலில்

"ஹாஹாஹா இப்போவே உன் வசந்த காலம் எனக்கு தெரியுது நிலவா..." என்ற ராமையும் முறைத்தான்.. நால்வரும் ஒருவாறு கேன்டீன் நுழைந்து கொண்டனர்..

அதன் பின் அவர்களுக்கான நேரம் அந்த கேன்டீனில் வழமைப்போல் அரட்டையுடன் கழிந்தது... அதனை தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த அறிவழகன் கண்களில் நிலவன் மீதான பொறாமையும் வெறுப்புமே நிறைந்திருந்தது....

அவன் அருகில் நின்றிருந்த நிஷா அவன் தோளில் கை வைத்து "அவங்களும் உன்ன மிஸ் பன்றாங்க தான் அறிவு.. நீ ஏன் ஒதுங்கி போற.. உன் கோபம் அர்த்தமில்லாதது... அப்பவும் நிலவன் மேல தான கோபம் உனக்கு.. ஏன் மத்தவங்களையும் அவொய்ட் பண்ணுற... முதல்ல அவங்க உனக்கு தான் பிரண்ட்ஸ் அத மறந்துடாத" என்றாள்

அவன் ஏதும் பேசாது அங்கிருந்து செல்ல.. அவ்வளவு நேரம் சிரித்து பேசியபடி இருந்த நிலவனுக்கு அறிவழகன் ஞாபகம் எழ சற்று முகம் வாடவே செய்தது.. இருந்தும் இன்னைக்கு அவர்களது சந்தோஷமான நாளை கெடுக்க விரும்பாமல் அவர்களோடு இணைத்து கொண்டான்...

ராம் பூஜா இருவரும் பள்ளிக்கூடம் இருந்தே ஒன்றாக படிப்பவர்கள் காதலும் எப்போதோ எப்படியோ நுழைந்து விட்டது இருவருக்குள்ளும்.. விதியும் அவர்களை பிரிய விடாது முடிச்சு போட்டே இங்கேயும் அனுப்பி வைத்துவிட்டது...

அறிவழகன் ஒதுக்குப்புற கிராமம் ஒன்றில் இருந்து வந்தவன்.. கஷ்டப்பட்டு படித்து மாவட்டத்திலே இரண்டாவதாய் வந்திருந்ததால் அவனுக்கு இந்த கல்லூரியில் சீட் கிடைத்து.. அதில் அவன் தந்தைக்கு பெருமை தான்...

கல்லூரி முதல் நாள் அன்று.. எல்லோரையும் கண்டு மிரட்சியாய் ஒரு ஓரமாய் நின்றிருந்தனர் அவனும் அவன் தந்தையும்... அவர்களிடம் முதல் வந்து பேசியது பூஜா தான்

"என்ன அங்கிள் இங்க நிக்கிறீங்க ஏதாச்சும் உதவி வேணுமா..."

"அம்மனி.. இங்க என் மகன சேர்க்கனும்னா என்ன பண்ணனும்?.. இவன் அழகு.. என் பையனுங்க.. இங்க தான் அழகு டாக்டருக்கு படிக்க போகுதுங்க.. மாவட்டத்துலேயே ரெண்டாவது வந்திருக்கு... டிவில எல்லாம் காட்டுனாங்களே.." என்றார் பெருமையாக

"வாவ் சூப்பர் அழகு.. என் பேரு பூஜா.. இவன் ராம்.. நாங்களும் இங்க தான் படிக்க போறோம்... சோ டோன்ட் ஒர்ரி.. நாம பிரண்ட்ஸ் ஆகிக்கலாம்..." என்று அவள் சொல்லி உதவியும் செய்ய அன்றே அவர்கள் நட்பும் ஆரம்பமானது..

அறிவழகனுடன் தான் முதலில் பூஜா, ராம் இருவருக்கும் நட்பு உருவானது... அவர்கள் மூவர் கூட்டுக்குள் அதற்கு அடுத்ததாய் நுழைந்தவன் தான் விஷ்னு..

கல்லூரி தொடங்கி முதல் ஒரு வாரம் காய்ச்சல் நிலவனை படுத்தி எடுத்துவிட்டது... அடுத்த வார தொடக்கத்திலேயே அவனால் அங்கு வர முடிந்தது... அவன் முதலில் சந்தித்ததும் அறிவழகனை தான்.. அதன் பின் அவனும் அந்த நால்வரோடு சேர்ந்து கொள்ள, நிஷாவும் பின்னாளில் அந்த கூட்டினுள் நுழைந்து கொண்டாள்..

அறிவு நல்லவன் தான் ஆனால் தனக்கு முன் ஒருவன் இருக்கிறான் என்ற பொறாமை என்னும் தீ காலப்போக்கில் நுழைந்து கொள்ள, எடுத்ததற்கு எல்லாம் நிலவன் மீது இல்லாத கோபத்தை வளர்த்துக்கொண்டான்...

நிலவன் இயற்கையிலேயே சற்று அறிவாளி தான்... லட்சத்தில் ஒருவன் என்று கூட சொல்லலாம்.. சராசரி மனிதனை விட அவன் மூளை கொஞ்சம் அதிகமாகவே வேலைசெய்யும்.. அது கடவுளின் அருளும் கூட... ஆனால் ஒரு நாளும் அதை கொண்டு அவன் தன்னை பெரிதாய் நினைத்ததில்லை... கடவுள், தனக்கு தந்ததால் தான், இல்லையென்றால் தன் இடத்தில் இன்னொருவர் என்பதே அவன் எண்ணம்...

பள்ளிக்கூடம் சென்ற காலம் தொட்டு பெரிதாய் நண்பர்களும் இருந்ததில்லை... புகழ் மட்டுமே நண்பனாய் பிறந்தது முதல் அவனோடு... இப்போது புகழின் இடத்தை நிரப்பவே இந்த ஐவர் என்பது அவன் எண்ணம்..


நாலு வருடமாக புகழ் அவனுடன் இல்லை... சொந்த ஊருக்கு சென்றிருந்தான்.. தினமும் பேசி விடுவதால் பெரிதாய் பிரிந்திருப்பது போல் தோன்றுவதில்லை ஆனால் அவன் போலீஸ் ட்ரைனிங்காக சென்றிருந்த இந்த ஒரு மாதம் அவனோட பேச முடியாமல் போனது... இன்னும் ஐந்து மாதம் இப்படியே கடக்க வேண்டும் என்பதும் நிலவனுக்கு கவலையே... புகழை எப்படித்தான் கலாய்த்தாலும் அவன் எப்போதும் நிலவனுக்கு ஸ்பெஷல் தான்...


அந்த கவலையுடன் இப்போது அறிவழகனின் விலகலும் சேர்ந்து கொண்டது... அவனின் விலகளுக்கான காரணம் என்ன என்பதே நிலவனுக்கு தெரியவில்லை.. அவனும் பேச முயற்சி செய்கிறான் தான் ஆனால் அறிவழகன் பிடிக்கொடுப்பதாய் இல்லை... சாதாரணமாய் தொடர்ந்த விலகல் இன்று அவர்கள் கூட்டை உடைத்து விட்டது எனலாம்...

நட்பு தான் எவ்வளவு விசித்திரமானது.. யார் என்று தெரியாமல் தொடங்கும் நட்பு.. தாய்க்கு தெரியாத விடயங்களை கூட யாரும் சொல்லாமலே தெரிந்து கொள்கிறதே!!... இந்த உலகத்தில் காதல் இல்லாமல்.. தாய் இல்லாமல்.. தந்தை இல்லாமல்... ஏன் மனைவி பிள்ளைகள் இல்லாமல் கூட ஒருவன் இருந்து விடுவான் ஆனால் ஒரே ஒரு நண்பன் கூட இல்லாத ஒரு மனிதனை எவராலும் காட்டிவிடத்தான் முடியுமா என்ன??...



மதியம் ஏதோ ஒரு விசிட்டிங் ப்ரோபசர் ஒருவரின் லெக்சர் இருந்தது.. ஹார்மோன்கள் தொடர்பான வகுப்பு அது... நிலவன் செய்துவரும் ஆராய்ச்சிக்கு அது மிகவும் தேவைப்படும் ஒன்று என்பதால்.. ஆர்வமாகவே அவதானித்து சந்தேகங்களையும் கேட்டுக்கொண்டான்...

அதன் பின் மீண்டும் நண்பர்களுக்கான நேரம் தொடர்த்தது... கார்த்தியையும் அழைத்து செல்ல வேண்டும் என்பதால் நிலவன் நேரத்துக்கே சென்றுவிட்டான்.. அவனோடு விஷ்னுவும் காதல் ஜோடிக்கு தனிமை கொடுத்து விடைபெற அந்த நாள் ராம் பூஜா இருவருக்குமானதானது...

அந்த நாள் முடிவில்... ராம் ஹாஸ்டல் அறைக்கு வர அங்கே அறிவழகன் அமர்ந்திருந்தான்...

"ராம்.."

"சொல்லு அறிவு.." என்றான் குளிக்க ஆயத்தமானவாறு...

"என்மேல கோபமா..."

"எனக்கென்ன கோபம்.."

"பொய் சொல்லாத... எனக்கு தெரியும் உங்களுக்கு என் மேல கோபம்னு "

"உன் மேல கோபப்பட நாங்க யாரு அறிவு..."

"இப்படிலாம் பேசாத ராம்... எனக்கு சில விஷயம் பிடிக்கல அதான் விலகி இருக்கேன்.. மத்தபடி உங்க மேல எல்லாம் எனக்கு கோபம் இல்ல..."

"ஏன் சுத்தி வளைக்கிற, நிலவன் மேலதான் கோபம் அவனைத்தான் பிடிக்கலைனு சொல்லேன்..." என்க அவனிடம் மௌனம்

"அப்படி இல்லனு கூட உன்னால சொல்ல முடியலல... அப்படி என்னடா அவன் உனக்கு பண்ணிட்டான்.. அந்த பைத்தியக்கார இப்பவும் உன்ன பத்தித்தான் பேசிட்டு இருக்கான்..." என்றான் ராம் கோபத்தோடு..

அறிவோ, "அதெல்லாம் இல்ல... நீ எப்பவும் போல என்னோட பேசு.. நீ குளிச்சிட்டு வா நாம சாப்பிட போகலாம்...." என்று அந்த விடயத்திற்கு அதோடு முற்றிப்புள்ளி வைத்தான்... ராமோ "இவனுக்கு சொல்றதே வேஸ்ட்" என்று எண்ணியவாறு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்....



அடுத்த நாள் காலை ரம்மியமாய் விடிந்தது நிலவனுக்கும் சரி அதிரலுக்கும் சரி.. ஆனால் அவர்கள் சந்திப்பதற்காக காத்திருக்கும் கியூபிட்டுக்கு கலவரமாக தான் விடிந்தது....

அங்கே அதிரலில் வீட்டில் ராஜய்யா ஏதோ சொல்லி அதிரலின் முறைப்பை பெற்றுக்கொண்டார்..

"இப்போ என்ன தாத்தா.. இத மாத்தணுமா?? இந்த டிரஸுக்கு என்ன குறைச்சல் நல்லா தான இருக்கு..." என்று அப்படியும் இப்படியும் தன்னை கண்ணாடியில் பார்த்து கொள்ள.. இவர் தான் பாவமாய் முழிக்க வேண்டி இருந்தது...

அவளோ தொடை வரையான இளம் சிவப்பும் இல்லாமல் கடும் சிவப்பும் இல்லாமல் சிவப்பின் ஏதோ ஒரு வகையில் ஸ்கேர்டும் இடை ஓரளவுக்கு தெரியும் படியான அதே நிறத்திலான கிராப் டாப்பும் தான் அணிந்திருந்தாள்... மேற்கத்தைய கலாச்சாரதில் வளர்ந்தவளுக்கு அது ஒன்றும் தவறாக தெரியவில்லை... அங்கே ஒரு மாதிரி இங்கே ஒருமாதிரி என இத்தனை நாளில் அவள் நடந்ததுமில்லை... ஆனால் அவருக்கோ இந்த உடையில் செல்வது பிடிக்கவில்லை.. அதனாலேயே இந்த எதிர்ப்பு...

"ஓகே முகத்தை அப்படி வெச்சிக்காத... மாத்துறேன்... என்றவள் உள்ளே சென்று அதே டாபிற்கு இப்போது சற்று நீளமான ஸ்கேர்ட்டை அணிந்து வந்திருந்தாள்... இடை சற்று தெரியத்தான் செய்தது... முன்பை விட இது எவ்வளவோ மேல் என்பதால் அவரும் புன்னகைத்து சம்மதம் சொல்லி இருந்தார்....

"அப்பாடா.. இதுக்காச்சும் ஒத்துகிட்டியே... உன் பிரண்ட் அங்க இருப்பாருல நான் போய் மீட் பண்ணுறேன்... அவர் நேம் என்ன?..

"ஜெயவேல் கிருஷ்ணன் டா.."

"ஓகே தாத்தா போயிட்டு வரேன் பாய்.. என்ன ப்ளஸ் பண்ணு" என்று அவர் காலில் விழுந்து எழுந்திருந்தாள்.. இது சீதா பழக்கி விட்ட பழக்கம்.. இன்றுவரை பேத்தி மாறாமல் கடைபிடிப்பதில் அவருக்கு மகிழ்ச்சி தான்...



"என்ன நிலவா இன்னைக்காச்சும் இந்த கூட்டத்துல உன் தேவதை தேறுமா?..."

"வெயிட் பண்ணு பூ... அத தான் நானும் பாக்குறேன்... எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா ஸ்பார்க் வர மாட்டேங்கிதே... மனசு சைட் அடிக்க மட்டும் தான சொல்லுது..."

"சொல்லும் டா சொல்லும்.. ஊர்ல இருக்க பொண்ணு ஒன்னு விடாம சைட் அடிக்க வேண்டியது அப்பறம் ஸ்பார்க் வரல தேவதை வரலன்னு கத விட வேண்டியது..."

"அட மச்சான்.. நீ ஏன் பொங்குற.. அந்த டீச்சர் கவிதா.. நேத்து கூட நாம அந்த பக்கம் போகும் போது ரெண்டு பேரும் சைட் அடிச்சோமே... நீ கூட செம ஹாட்.. அளவான ஹைட்னு சொன்னியே அத சொல்லுறியா மச்சான்??.."

ராமோ, "ரைட்டு சைத்தான நானே சைக்கில்ல கூப்பிட்டேனா?" என்றபடி பூஜாவை பார்க்க.. அவள் பார்த்த பார்வையில் குறைந்தது இன்னும் மூன்று வாரத்துக்கு இதை வைத்து செய்வாள் என்பது அவன் கண் முன் விரிந்ததில் மீண்டும் வாயை திறப்பானா என்ன?...

"விஷ்னு குமுறல் சத்தம் கேக்கலையா மச்சான் உனக்கு?." என்றான் நிலவன் விஷ்னு தோள் மீது கை போட்டப்படி

"ஹெவியா வருதே... பெரிய ஒப்பாரி சத்தமே உள்ள ஒளிஞ்சு கிடைக்கு மச்சான்..."

"ரெண்டு பேரும் அவன கலாச்சது போதும்.. பிகர பாப்போம் வாங்கடா...." என்ற பூஜாவை மூவரும் முறைக்க

"ஹி ஹி சாரி... உங்க கூட சேர்ந்ததுல இருந்து அடிக்கடி நானும் ஒரு பொண்ணுங்கிறதைய மறந்துடுறேன்.."

"நல்லா மறந்த போ.." என்ற நிலவன் தீவிரமாய் பெண்களுக்கு மார்க் போட்டு கொண்டிருக்க... சற்று தள்ளி சில இடங்களில் ரேகிங் நடக்க தான் செய்தது...

அந்த நேரம் நிஷாவும் அறிவும் அந்த இடம் வர... கோபமாய் கிளம்ப போன பூஜாவை கண்களால் கெஞ்சி அமர வைத்திருந்தான் நிலவன்...

அவன் பூவுக்கு நிலவன் என்றால் எப்போதும் ஸ்பெஷல்... அவனுக்கும் அவள் மீது தனி பாசம் தான்..

அவர்களது பிணைப்பு அவர்களது நண்பர்களுக்கே விசித்திரம் தான்.... அவர்கள் உறவுக்குள் அவர்களுக்கேயான எல்லா உறவும் வந்து போகும்...

அவள் குழந்தையாக இருந்தாள் அவன் தந்தையாக அவளை சுமப்பான்.. அவன் குழந்தையாகும் போது அவள் தாயாய் மடி கொடுப்பாள்.. சண்டை போட அண்ணன் தங்கையாய்... உயிரை எடுக்கும் அண்ணன் தம்பியாய்... தோள் கொடுக்க நண்பர்களாய் இப்படி பல அவதாரம் அவர்கள் நட்புக்குள்...

"வா நிஷா... வாடா அறிவு உக்காரு... சைட் அடிக்கிற சங்கத்துல நீயும் ஜொயின் ஆகிக்கோ..." என்ற நிலவனின் பேச்சை சிறிதும் கண்டுகொள்ளாதவன்

"நான் ஒன்னும் பொறுக்கி இல்ல.." என்று பொதுவாய் சொன்னவன் ராமிடம் "ராம்.. எனக்கு ரிப்போட் சப்மிட் பண்ணவேண்டியதிருக்கு நான் கிளம்புறேன் நீ வரியா??..." என்றான்

"நான் நாளைக்கு பண்ணிப்பேன்... நீ போ அறிவு.. எனக்கு சைட் அடிக்கிற வேல இருக்கு.. கொஞ்சம் பொறுக்கி தனம் பண்ணப்போறேன்..." என்ற ராம் வேலை முடிந்தது என்பதாய் நிலவன் பக்கம் திரும்ப அறிவுக்கு கோபம் தான்.. இருந்தும் காட்டிகொள்ளாமல் "ஓகே டா" என்றவன் கிளம்பிவிட்டான்..

இவர்கள் இங்கே பேசிகொண்டிருக்க பக்கத்தில் யாரோ யாரையோ அறையும் சத்தம்... ரேகிங், அளவு மீறி அடிப்பது வரை சென்று விட்டதோ என நினைத்து நண்பர்கள் நால்வரும் அங்கே செல்ல

"நீ சீனியர்னா என்ன வேணா பேசுவியா??.. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு.. பேசுற வார்த்தைல கவனம் இருக்கணும்.. அதுக்காக தான் இந்த அறை..." என்று சிறிது நிறுத்தியவள் "ம்ம்ம் இப்போ சாரி கேளு.." என்று முடித்திருக்க அவனுக்கோ பெரிய அவமானம்... அங்கு நின்றிருந்தவர்கள் அவனையே பார்த்திக்க உள்ளுக்குள் கனன்ற கோபத்தோடு நின்றிருந்தான்...

அவன் நான்காம் ஆண்டு மாணவன் நிலவனின் ஜூனியரும் கூட... கொஞ்சம் சிக்கலான பேர்வழி தான்... அவன் பேச்சில் நிதானம் இருக்காது, நிலவனிடம் கூட இரு முறை அறை வாங்கி இருக்கிறான்... எப்படியும் அவன் மீதுதான் தவறு இருக்கும்.. அந்த பெண்ணை ஏதோ ஏடாகூடமாக பேசி இருக்கிறான் என்று அவனுக்கு புரிந்தது...

ஆனால் "வந்த முதல் நாளே இப்படி அடித்து விட்டாளே" என பூஜா அவளையே பார்த்திருக்க... நிலவனோ கண்ணில் காதல் அம்பு விட்டுகொண்டிருந்தான் அதிரலுக்கு... குயூபிட் வேலையை நிலவனின் பக்கத்தில் சிறப்பாய் ஆரம்பித்து வைத்து விட்டது.. ஆனால் இனி தான் அதற்கு உண்மையான போராட்டமே...

"நிலவா டேய் என்னடா கனவு கண்டுட்டு இருக்க... போய் பிரச்சனைய முடிச்சு வை..."

"நானா என்று அவன் முழிக்க..."

பூஜா, "பின்ன நானா.. நீ தானடா.. ஸ்டுடென்ட்ஸ் ப்ரெசிடெண்ட்.. நீதான பேசணும் அப்பறம் டீன் வரைக்கும் போனா பிரச்சனை ஆகும்..." என்றதும் தான் சுய உணர்வே வர... கூட்டத்தை விளக்கி உள்ளே சென்றான்..

அவன் இருந்த மனநிலைக்கு விசாரிக்க கூட தோன்றாமல் "விக்கி மன்னிப்பு கேளு... உனக்கு இதே வேலையா போச்சு... யோசிச்சு பேசணும்னு எத்தனை தடவ சொல்லுறது..." என்றான் அந்த மாணவனிடம்..

அதிரலோ.. "ஹூ ஆர் யூ..." என்றாளே பார்க்கலாம்.. எல்லோரும் "ங்கே" என்றே பார்த்திருந்தனர்..

"எக்ஸ்கியூஸ்மி.. ஐ ஆஸ்க்ட் ஹூ ஆர் யூ?..

"நிலவன்..." என்றவன் "நா.." என்று ஏதோ சொல்ல வர அதனை தடுத்து நிறுத்தினாள்

"இங்க பாருங்க மிஸ்டர் நிலவன்.. இங்க என்ன நடந்திச்சிச்சு தெரியுமா??.." என்க அவன் தலை இடம் வளமாக ஆடியது.. "தென் வை ஆர் யு அஸ்கிங் ஹிம் டு அப்போலோஜய்ஸ்..." (அப்போ அவர ஏன் மன்னிப்பு கேட்க சொல்லுறீங்க ) என்று அவனிடம் கேட்க அவனுக்கோ ஏதோ வில்லங்கமாய் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது, அவன் செய்தது தவறு என உணர்ந்ததாலோ என்னவோ?? மௌனமாய் நின்றிருந்தான்...

"நீ மன்னிப்பு கேளு மா.. உனக்கு இன்னொரு முறை சொல்லனுமா.." என்று அந்த பெண்ணிடம் சொல்லி, அவளும் மன்னிப்பு கேட்க கூட்டம் கலைந்தது...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அவள் மெல்ல நகர அருகில் நின்ற பூஜாவின் காதில் "பூ உன் அண்ணி... என் தேவதை போறா பாரு போய் பேச்சு குடு நான் வரேன்.." என்றான்

"தேவதையா? இவளா??.. பேசணுமா?? நானா??.." என்றாள் அதிர்ச்சியாக

"அட கேள்விக்கு பொறந்தவளே... அதுக்காக வேற ஆளையா கூட்டி வர முடியும்? நீதான் போய் பேசு போ..." என்று அவளை தள்ளி விட

"எக்ஸ்கியூஸ்மி... ஏம்மா பிங்க் ஸ்கேர்ட் கொஞ்சம் நில்லுமா... என்று அங்கிருந்தே கத்தியவள்
"பிங்கா இது? இல்லை வேற கலரா தூரத்துல கண்ணும் தெரியாமட்டேங்கிது " என்று தனக்குள் பேசியபடி அதிரலின் முன் போய் அவளை மறைக்க

"எஸ்.." என்று கேள்வியோடு நின்றாள் அதிரல்

பூஜாவோ , "இல்ல அங்க என்ன நடந்திச்சினு" என்று இழுக்க..

"அதுவா... அது ஜஸ்ட் மிஸ் அன்ட்ஸ்டாண்டிங்... அந்த பொண்ண யாரோ பின்னுக்கு டச் பண்ணிட்டாங்க போல... அவங்க இவருதான் அதுன்னு நினைச்சு திட்டிட்டாங்க... அதுல அவரு கோபப்பட்டு பேட் வேர்ட்ஸ் யூஸ் பண்ணிட்டாரு... தட்ஸ் இட்.." என்றாள் சின்ன புன்னகையுடன் அதுவே அவளை கொள்ளை அழகாய் காட்டியது நிலவனுக்கு..

"அப்பறம் ஏன் அவன அடிச்ச..." என்றாள் பூஜா விடாமல்

"ஒரு பொண்ண பார்த்து பேட் வேர்ட் பேசுறது தப்பு தான.. அதுக்கான பனிஷ்மென்ட் தான் அது.."

"எஸ் தப்பு தான்.. பட் இப்போதான் பர்ஸ்ட் இயர் அதுக்குள்ள வீணா பிரச்சனை தேவையா??" என்ற கேள்விக்கு சிறு புன்னகையுடன் அவள் கடந்து செல்ல பார்க்க.. மீண்டும் நிலவன் பூஜாவை இடித்ததில் அவளோ

"எக்ஸ்கியூஸ்மி" என்றாள் மீண்டும் அவளும் திரும்ப இப்போது என்ன பேசுவது என்று முழித்தவள் பின் "டைம் என்ன?.." என்று உளறி இருந்தாள்..

"சொதப்பிட்டா" என்று நிலவன் ஒன்றை கண்ணை மூடி திறந்தான்..

அதிரலோ நிலவனை பார்த்தவண்ணம் பூஜாவிடம்.. "இந்த ஜெண்டில் மேன் உங்க பிரண்ட் தானா" என்று கேட்டவள்.. "உங்களுக்கு எதுவும் கேக்கணும்னா நேரடியா கேளுங்க.. எதுக்கு மௌத் பீஸ்?.." என்று நிலவனிடம் முடித்திருந்தாள்...

"செம சார்ப் தான் போ.. உன் பாடு வருங்காலத்துல திண்டாட்டம் தான்டா நிலவா..." என்று மனதில் எண்ணியவன்..

"அதான் அவளே கேட்டாளே டைம் அதுதான்?.. என்றான் முகத்தில் எதையும் வெளிக்காட்டாமல்..

அதிரலோ அவன் கையிலிருந்த விலை உயர்ந்த பிரான்டெட் கை கடிகார்த்தையே பார்க்க அவனோ "இது சும்மா டம்மி ஸ்டைலுக்காக.. ஓடாத வாட்ச்.." என்றான் அவள் பார்வை உணர்ந்து..

ஆனால் மனதிலோ "ஒரிஸ் கம்பெனி காரன் இத கேட்டா என்ன செருப்பாலேயே அடிப்பான்.." என்று எண்ணிகொண்டது

"ஓகே நீங்களே பாத்துக்கோங்க" என்று அவன் கண் முன் தன் கையை நீட்டி இருந்தாள்... அப்போதும் அவளாக சொல்லாமல்.... அவள் பிடிவாதம் இவனை ஏதோ செய்ய.. போகும் அவளையே பார்த்திருந்தான்....


என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்

எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண


ஜாதி மல்லி மலரும்.....

கருத்து திரி 👇👇👇

inbound95006732386071213.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 18



நிலவனுடன் பேசிய அதிரல் நேரே சென்றது டீனின் அறைக்கு தான்..
உள்ளே நுழைந்தவள் "குட் மார்னிங் சார்... " என்றாள்

"அடடே வாமா அதி உக்காரு... பெரிய பொண்ணாகிடியே.... சின்ன வயசுல பார்த்தது... தாத்தானே கூப்பிடுடா.. நோ போர்மாலிட்டிஸ்..."

"நோ நோ இது உங்க இடத்துக்கான மரியாதை சோ அத குடுத்து தான் ஆகணும், மத்தபடி நீங்களும் தாத்தா தான் ஓகேவா?... நான் தான் அதிரல்னு எப்படி சரியா கண்டுபிடிச்சீங்க..."

"அத ஏண்டா கேக்குற... காலைல இருந்து என் நண்பன் என்ன பாடா படுத்துறானே... நொடிக்கொரு தரம் போன் பண்ணி நீ என்ன கலர் டிரஸ் பண்ணி இருக்க... எப்படி இருப்பனு பாட்டா பாடிட்டு இருக்கான்... " என்றார் நண்பனை எண்ணி சிரித்தபடி..

"அப்போ வசமா சிக்கி இருக்கீங்கன்னு சொல்லுங்க..."

"நண்பன்னாலே தொல்லை தான.. அதுவும் தவிர்க்க நினைக்காத தொல்லை... உனக்கு ஓகே தானடா இங்க?... இல்ல நான் கேட்டதுக்காக அவன் உன்ன போர்ஸ் பண்ணி அனுப்பினானா??.."

"ஓகே தான் சார்.."

"அப்போ சரி, வா லேட்டாகிடிச்சு போய் உன் பர்ஸ்ட் கிளாஸ் அட்டண்ட் பண்ணிட்டு மிச்சம் அப்பறமா நாம பேசிக்கலாம்.." என்று அவரும் எழ

"நானே போப்பேன் சார்.." என்று அவரை மறுத்து அங்கிருந்து சென்றவள் அவளுக்கான வகுப்பை தேடி கண்டுபிடித்து சரியாக நிலவனின் வகுப்பின் முன் வந்து சேர்ந்தாள்.. பூஜா ஜன்னல் அருகில் அமர்ந்திருந்ததால் அவள் வரும் போதே கண்டுகொண்டவள்

"டேய் நிலவா உன் தேவதை தரிசனம் தர வந்திருக்காடா.. இடம் தெரியாம கிளாஸ் மாறி இங்க வந்துட்டா போல... கலாச்சு விடுவோமா??.."

விஷ்னுவோ, "ஏன் உனக்கு இந்த விபரீத ஆச... காலைல விழுந்த இடி சீ அடி மறந்து போச்சா.."

"என்னடா அடி?... இவன் ஏன் அப்போ இருந்து மந்திரிச்சவன் போல உக்காந்திருக்கான்?.." என்றான் ராம் என்னவென்று தெரியாமல்..

"நீ இப்போதான வந்திருக்க மோர்னிங்கே செம சீன் ஒன்னு.." என்று தொடங்கிய விஷ்னுவின் ஓட்ட வாயை கேட்கவும் வேண்டுமா ஒன்று விடாமல் அனைத்தும் சொல்லி முடிக்க

ராமோ, நிலவனை பார்த்து "ஏன் ராசா உனக்கு, அந்த பெற்றோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா??" என்க நிலவனோ ஒரு கையால் பாதி முகத்தை மூடி வெக்கப்பட்டுகொண்டான்...

"நீ என்ன கருமத்தை வேணும்னாலும் பண்ணு தயவு செஞ்சு வெக்கம்னு ஒன்னு படுறியே அத மட்டும் திருப்பி ட்ரை பண்ணாத..." என்று நிலவனிடம் சொல்லி கொண்டிருக்க திடீரென வகுப்பில் நிசப்தம்.. இவன் குரல் மட்டும் சற்று பெரிதாய் கேட்க

"மிஸ்டர் ரெட் ஷர்ட்" என்றொரு சத்தம் ராம் முன்னால் திரும்ப இவர்களை தவிர எல்லாரும் எழுந்து நின்று அவர்களையே பார்த்திருந்தனர்.. அதிலும் குறிப்பாக ராமை... குனிந்து அவனை அவனே பார்த்து கொள்ள அவன் தான் அந்த ரெட் ஷர்ட் என்பது புரிந்தது...

"சொல்லுடா பாப்பா என்ன வேணும்??.." என்றான் தன்னை அழைத்த அதிரலிடம்.. அவள் தான் இவ்வளவு நேரம் நண்பர்களால் சொல்லப்பட்ட பெண் என்பது தான் அவனுக்கு தெரியாதே... அவன் முன் குட்டியாய் ஒரு உருவம் நின்றிருக்க அவன் வாயில் அப்படி வந்துவிட்டது .. நிலவன் உட்பட மற்றவர்களுக்கு அவன் கேட்ட தொனியில் சிரிப்பு தான்.. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை

அதிரலோ, "வாட்ஸ் யோர் நேம்.." என்றாள்

அவனும் "ராம்.." என்றான்

"மிஸ்டர் ராம், டிட் யூ நோ? நவ் ஐ எம் யுவர் நியூ மெண்டர்..." என்றாள் கைகளை கட்டிய வண்ணம்...

அதுவரை ஏதோ பேசுகிறாள் என்று நின்றிருந்த நிலவனோ அவள் சொன்ன அர்த்தம் உணர்ந்து "வாட் கம் எகேன்.." என்றிருந்தான் அதிர்ச்சியுடன்.. அவளோ அவனை பார்த்தபடி "ஓகே கைஸ்.. டேக் யுவர் சீட்" என்று முன் போடப்பட்டிருந்த மேசையில் சாய்ந்து நின்றுகொண்டாள்..

"ஓகே லெட்ஸ் இன்ரடியூஸ் மை செல்ப்... ஐ எம் அதிரல்.. பிரோம் அவுஸ்திரேலியா பட் நேட்டிவ் இங்க தான்.. இப்போ ரீசண்டா வன் இயர் முன்னாடி தான் எம்.பி.பி.எஸ் முடிச்சேன்.. இப்போ எம்.எஸ்.சி கார்டியோ பண்ணிட்டு இருக்கேன்... அப்பறம் இங்க உங்க ஸ்டடிக்கு ஹெல்ப்பா ஒரு மெண்டரா ஒர்க் பண்ண போறேன்... இது தான் என்னோட டீடெயில்ஸ்.. போக போக இன்னும் என்ன பத்தி தெரிஞ்சிக்கலாம்.. அண்ட் உங்கள பத்தியும் தெரிஞ்சிக்கிறேன்... ஏதாச்சும் கேக்கணும்னா கேளுங்க..."

"மேம்... யூ லூக்கிங் கோர்ஜஸ்.." என்றான் முன்வரிசையில் இருந்த மாணவன் ஒருவன்..

"தேங்க் யூ.. மேம்னு மரியாதை எல்லாம் வேணாம் அதினே கூப்பிடலாம்.. இல்லனா அக்கானு கூட கூப்பிடலாம் நோ இஸ்சு... மோஸ்ட்லி உங்கள விட ஜஸ்ட் வன் அண்ட் ஹாப் இயர்ஸ் தான் எனக்கு அதிகமா இருக்கும்..."

"என்ன அதி குண்ட தூக்கி போடுறீங்க.. இவ்வளவு அழகான பொண்ணு அக்காவா??.. எங்க பாய்ஸ் ஹார்ட் ஹேர்ட் ஆகிடாது.." என்று அந்த மாணவன் இதயத்தை தொட்டு காட்ட.. அவளிடம் சின்ன புன்னகை..

"எப்படிக்கா இவ்வளவு யங்கா அழகா இருகீங்க" என்றாள் பெண் ஒருத்தி

"அடேய் படிப்புல டவுட் கேப்பீங்கனு பார்த்தா என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க... " என்று அவள் சிரித்துவிட மீண்டும்

"அதி ஆர் யூ கமிடெட்..." என்றொரு சத்தம் பின் வரிசையில் இருந்து... விஷ்னுவின் வேலை தான் இது.. நிலவனோ அவனை நன்றியாய் பார்த்தவன் அவள் பதிலை கேட்க ஆர்வமானான்..

"எஸ் ஐ எம் மேரிட்... ரெண்டு பசங்க.." என்றாள் சாதாரணமாய்.. நிலவனின் புருவம் சுருங்கியது யோசனையில்

"நோ..." என்று ஆண்களுகிடையில் பல குரல்..

"ஓகே பேச்சை விட்டுட்டு வந்த வேலைய கொஞ்சம் பாப்போமா?? இப்போ என்ன அபொய்ன்மெண்ட் போகுது உங்களுக்கு?"

"சைக்காட்ரிக் அபொய்ன்மெண்ட் கா.." என்றாள் அங்கிருந்த மாணவி.. அதன் பின் அது தொடர்பாக சிறிது பேசியவள் அவர்கள் ஒன்று ரெண்டு சந்தேகத்துக்கும் முடிந்தவரை பதிலளித்திருந்தாள்... ஆனால் நிலவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் அதில் ஒன்ற முடியவில்லை..

ஒருவழியாக அன்றைய வகுப்பை முடித்தவள் "ஒரேடியா உங்கள போரடிக்க விரும்பல.. கெஷுவல்டில கொஞ்சம் கொஞ்சமா பாத்துக்கலாம்.. என்ன டவுட்னாலும் அக்காகிட்ட கேக்கலாம்... ஓகே கைஸ் சீ யூ டுமோரோ..." என்றவள் வெளியேற..

"அக்கா அக்கானு ஹார்ட்ல இஞ்சரி பண்ணிட்டு மருந்து குடுக்காம போறீங்களே அதி.." என்ற ஆண் மாணவர்களின் குரல்கள் கோரசாய் பின் தொடர சிறு புன்னகையோடு அங்கிருந்து நேரே ஜெயவேல் கிருஷ்ணனின் அறையை நோக்கி சென்றாள்.



"எக்ஸ்கியூஸ் மீ சார்..."

"வா அதி எப்படி போச்சு.. பசங்க கோப்ரேட் பண்ணாங்களா?..."

"பிரச்சனை இல்லை சார்.. போக போக மிங்கிள் ஆகிடுவாங்க... பட் சிக்ஸ் மந்த்ஸ் இல்ல வன் இயர்ல நான் போயாகணும்... உங்களுக்கு ஓகே தான??.."

"இட்ஸ் ஓகே டா... நோ இஸ்சு ஜஸ்ட் ஒரு ஹெல்ப்பா தான் கேட்டேன்... சலரி என்னமாதிரினு பேசிக்கலாமா??.."

"மார்னிங் தான தாத்தானு சொன்னீங்க அப்பறம் சலரி பத்தி பேசுறீங்க.." என்றாள் சற்று கோபமாக..

"அதெல்லாம் குடுக்கணும் தானடா.. அத நான் பாத்துக்கிறேன்.. நீ கண்டிப்பா வாங்கிக்கணும் இது தாத்தாவோட அன்பு கட்டளைனு வெச்சுக்கோயேன்..."

"ஓகே.. எனக்கு சலரியா தரப்போற பணத்தை மொத்தமா உங்க ஹாஸ்பிடலுக்கு டொனேஷனா வெச்சுக்கோங்க.. இது இந்த பேத்தியோட அன்பு கட்டளை சரியா??..."

"ராஜா பயலுக்கு ஏத்த பேத்தி தான் நீ..."

"எவ்வளவோ ப்ரோபசர் இருந்தும் என்ன எதுக்காக கூப்பிடீங்க சார்?.."

"பைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ் கொஞ்சம் பீல் பிரீயா காத்துப்பாங்கன்னு தான்டா... நீயும் எம்.பி.பி.எஸ் பாரின்ல முடிச்சிருக்க சோ அவங்களுக்கு இன்னும் ஹெல்ப்பா இருக்குமேனு தான்.. என் பேரன் கிருஷ்ணாவோட ஐடியா தான் இது... அவனும் பாரின்லதான் மெடிசின் முடிச்சான் அங்கேயே வேலையும் பாக்குறான்.. அவன் பண்றதா தான் இருந்திச்சு.. பட் இப்போ அங்க ரிசேர்ச் ஒன்னுல மாட்டிகிட்டான் சோ நெக்ஸ்ட் பேட்ச்சுக்கு ஸ்டார்ட் பண்ணுவோம்னு சொல்லி இருந்தான்.. அந்த டைம் தான் ராஜாகிட்ட பேசும் போது உன்ன பத்தி ராஜா சொன்னான் சோ நானும் கேட்டேன்..." என்றார் விளக்கமாக..

"ஓகே சார் என்னால முடிஞ்ச பெஸ்ட்ட நான் கொடுக்குறேன்.." என்றவள் வெளியேறி இருந்தாள்..



இன்றும் அவர்களது சங்கம் மதிய வேளையில் அந்த மரத்தடியில் ஒன்று கூடி இருந்தது... பூஜாவின் அருகில் தான் நிலவன் அமர்ந்திருந்தான்.. அவர்களுக்கு எதிரே சற்று தள்ளி அமர்ந்திருந்த விஷ்னுவிற்கும் ராமிற்கும் சிரிப்பை அடக்குவதே பெரிய பாடாய் போனது... ஒருக்கட்டத்தில் முடியாமல் சிரித்த விஷ்னுவை பதம் பார்த்தது நிலவன் எரிந்த கல்..

"இருந்தாலும் இப்படி நடந்திருக்க கூடாது மச்சான்.. நீ வாங்குன பல்ப் இன்னும் பத்துதுனா பாத்துக்கோயேன் எவ்வளவு பவர்புல்னு..." என்ற ராமை நிலவன் முறைக்க

பூஜாவோ, "அதுகூட பரவால்ல விஷு ஒருத்தர் பாப்பானு நின்னாரே.. அது என்னவாம்"

"அதெல்லாம் ஒரு விஷயமா?.. நீங்க கூடத்தான் ஜூனியர்னு நினைச்சீங்க... அதான் ரெண்டு பசங்களுக்கு அம்மானு சொல்லிட்டாளே... ஆனா பாரேன் பார்த்தா அப்படி தெரியவே இல்ல... ஒருவேளை செந்தூர் மம்மியா இருப்பா போல.."

"ஆஹான் உங்களுக்கு வந்தா ரெத்தம் அதே அவனுக்கு வந்தா தக்காளி சட்னியா.."

"அத விடு மச்சி.. ஒருத்தன் இத்தன வருசமா தேவதை தேவதைன்னு சுத்துனான் இனிமேல், அவ தேவதானான்னு சுத்துவான் பாரேன்..." என்றான் விஷ்ணு

"டேய் விஷு நீ இன்னைக்கு அவன் கையால அடி வாங்கி சாக தான் போற பாரேன்... எனக்கு அவ சொன்னது என்னமோ பொய்னு தான் தோணுது.. ஜஸ்ட் பாய்ஸ கலாய்க்க சொல்லிருப்பா.." என்றாள் பூஜா யோசனையாக..

விஷ்ணுவோ "அதெப்படி மச்சி நீ சொல்லுவ ஒரு வேளை அது உண்மையா இருந்தா??..."

"சும்மா தான் இரேன்டா..." என்று விஷ்னுக்கு திட்டியவள் நிலவனை பார்க்க.. அவனோ இவர்கள் பேச்சில் கலந்துகொள்ளாமல் தீவிரமான யோசனையில் இருந்தான்... அவனை உளுக்கி சுயநினைவுக்கு கொண்டு வந்தவள் "என்னடா எங்க போய்ட்ட... யோசனையே பலமா இருக்கு.."

நிலவனோ, " அதுவந்து பூ.. பாவம் எங்க குழந்தை.. அத பத்தித்தான் யோசிச்சுட்டு இருக்கேன்.." என்றான்

"எதே குழந்தையா??.. அதுக்குள்ள அவ்வளவு தூரம் போய்டியா நீ.. பாத்து தம்பி அவ புருஷன் குறுக்கால வந்துடாம " என்று ராம் சிரிக்க.. அவனை வாயை மூடும் படி சைகை செய்திருந்தான் நிலவன்..

பூஜா நண்பனின் பதிலில் சிரித்தவள் "அப்படி என்ன சார் உங்க குழந்தை பாவம்??.." என்று கேட்க அவள் முகம் பார்த்தபடி திரும்பி அமர்ந்தவன்

"பூ.. எங்க பையன்.." என்று ஆரம்பிக்க

"பையன்னே முடிவு பண்ணிட்டியா??.."

"எஸ் அப்கோர்ஸ்.. முதல்ல பையன் தான்.. அதுவும் அவள மாதிரியே.." என்று சிலாகித்தபடி சொன்னவன் "இடைல பேசாம சொல்ல வர்றத மட்டும் கேளு எரும.." என்று பூஜாவின் மண்டையில் கொட்டி மீண்டும் தொடர்ந்தான்.

"எங்க பையன் வளர்ந்து ஸ்கூல் போகும் போது.. அவன் பர்த் சர்டிபிகேட் பார்த்து, அவன் மிஸ் அவன்கிட்ட உன் அம்மா அப்பாவ விட பெரிய பொண்ணான்னு கேட்டு கஷ்ட படுத்த மாட்டாங்களா??.. பாவம் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும்?... மிஸ்ஸுக்கு தான் அறிவில்ல எத யார்கிட்ட கேக்கணும்னு... நான் என் பையன பர்த் சட்பிகேட் கேட்காத ஸ்கூல்ல தான் சேர்ப்பேன் பாரேன்..." என்று முடித்தவனை மற்ற இருவரும் வேற்று கிரக வாசி போல் தான் பார்த்தனர்...

பூஜா அவன் தலையில் கை வைத்து பார்த்தபடி "ஆர் யூ ஓகே மச்சான்.. தலைல அடி ஒன்னும் படலையே.."

"நீயும் அவனுங்க கூட சேர்ந்து கலாய்க்கிறியா??.."

"ஓகே சீரியஸாவே பேசுவோமா?.. அவ உன்ன விட வயசுல பெரியவ.. இங்க நம்ம ஸ்டடிக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கா.. அதுகூட பரவாயில்லை.. கல்யாணம் ஆகிடிச்சு ரெண்டு குழந்தன்னு வேற சொல்லுறாளே... அது உண்மை இல்லனாலும் அவ லைப்ல யாராச்சும் இருக்க வாய்ப்பிருக்கு இல்லையா?"

"வயசு எனக்கு ஒரு சீன் இல்ல பூஜா.. என்னோட இத்தன நாள் தேடல் அவ... இத நான் சும்மா பேச்சுக்கு சொல்லல அவள பார்த்த நொடி இங்க சொல்லிச்சு அவதாண்டா உனக்குன்னு... பார்த்த உடனேலாம் லவ் வருமான்னு நீங்க யோசிக்கலாம்.. பட் நான் நம்புறேன் அவ தான் என்னோட காதல்.." என்று நெஞ்சத்தை சுட்டி காட்டி சொன்னவன்

"கல்யாணம் பண்ணிட்டாதா சொன்னது உண்மையா இருக்க வாய்ப்பில்லை பூஜா... அவ கழுத்துல தாலி இல்ல.. காலுல மெட்டி இல்ல.." என்று பேசிகொண்டிருந்தவனின் இடையில் விஷ்னு ஏதோ சொல்ல வர

"தெரியும் விஷ்னு, அவ பாரின்ல வளந்தவ சோ தாலி மெட்டி எல்லாம் காரணமா சொல்ல முடியாதுனு தான சொல்ல வர".. என்க அவன் தலை ஆம் என்பதாய் ஆடியது...

"நீ சொல்றதும் சரிதான் ஆனா ஒரு ரிங் கூட இல்லையே... இன்பாக்ட் அதெல்லாம் தேவையே இல்ல பார்த்த நொடில இருந்து என் மனசு அவ தான் எனக்குன்னு அடிச்சு சொல்லுது அது ஒன்னு போதாதா... அவ எனக்குன்னா நான் தான அவளுக்கு... சோ அவ லைப்ல யாரும் இருக்க வாய்ப்பில்லை..." என்று தீவிரமாய் பேசிய நிலவனை பார்த்த நண்பர்கள் மூவருக்கும் இதுவே உண்மையாக இருந்து விட வேண்டும் என்ற வேண்டுதலே இருந்தது.. அதுவும் பூஜாவிற்கு அவன் பூ என்று அழைத்து பேசாததிலே அவன் மனநிலை புரிந்து கொள்ள முடிந்தது....

அவனோடு பழகும் இத்தனை நாளில்... பெண்களை சைட் அடிப்பதோடு அவன் வேலை முடிந்துவிடும் ஆனால் இதுபோல் யாரையும் அவன் பேசியதில்லை..

எத்தனையோ பெண்கள் காதலை சொல்லியும்... அவன் காதல் என்ற வட்டதுக்குள் யாரையும் கொண்டு வந்ததில்லை.. காதலுக்கான அவன் தேடல் இன்று வரை தொடர்ந்து கொண்டிருந்த ஒன்று... ஆனால் இந்த நொடி அவன் தேடல் முற்றுபெற்றிருந்தது....

"ஓகே நிலவா... இப்போ என்ன பண்ண போற... உனக்கு வயசு பெரிசா தெரியாம இருக்கலாம் பட் அவளுக்கும் அப்படி இருக்கணும்னு இல்லையே.."

"கடத்திட வேண்டியது தான்.." என்றான் கண்ணடித்தபடி...

"அதுசரி.. கடத்த கூடிய ஆளா அவ.." என்று பூஜா சொல்லிகொண்டிருக்க அட்டெண்டர் ஒருவர் அவர்கள் அருகில் வந்திருந்தார்

"நிலவன் தம்பி உங்கள பாலமூர்த்தி சார் மீட் பண்ண சொன்னாரு..." என்க நிலவன் பார்வை பூஜாவை பார்க்க அவளோ அவனை பார்க்காததுபோல் மற்ற பக்கம் திரும்பிகொண்டாள்..

"அங்கிள் சார் எங்க இப்போ?..."

"லேப்ல தான் தம்பி..."

"ஓகே அங்கிள் நான் போய் பாக்குறேன்.." என்றவன் அவரும் சரி என்பதாய் சென்றுவிட "இரு உன்ன வந்து வெச்சிக்கிறேன்... என்று பூஜாவிடம் கோபமாய் சொல்லி சென்றான்..

"என்னா மச்சி பண்ண... கோபமா போறான்..."

"மாமாகிட்ட அவன் ரீசேர்ச் பத்தி சொல்லி ஹெல்ப் பண்ண சொன்னேன்டா விஷு அதான் சார் கோச்சிட்டு போறார்..."

"நல்லா விஷயம் தான.. ஓகே ரெண்டு பேரும் இருங்க, கேன்டீன் போய் குடிக்க ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்..."

"வேணா விஷு இனிமேல் ஹாஸ்பிடல் தான போகணும் அங்க பாத்துக்கலாம்..."

"அங்க போனா நமக்கு டைம் எங்க இருக்கும் சொல்லு.." என்றவன் கிளம்பி விட காதல் பறவைகளுக்கு தனிமை கிடைத்தது.. பூஜா எழுந்து ராம் அருகில் வந்து அமர

"என்ன மேடமுக்கு புதுசா நானெல்லாம் கண்ணுக்கு தெரியுறேன்..." என்றவன் கையில் கிள்ளியவள்

"அதெல்லாம் எப்போவும் எங்கண்ணுக்குள்ள தான் இருப்ப நீ.. நிலவனுக்கு அவன் லவ் கிடச்சிடும்ல ராம்..."

"கிடைக்கும்டி.. அவன் மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்..."

"ம்ம்ம்" என்றவள் அவன் தோளில் சாய்ந்துகொள்ள அவனும் அவள் தலையோடு தன் தலையை சாய்த்துக்கொண்டான்... அவரவர் நெருக்கத்தை ரசித்தபடி சிறிது நேர மௌனம் அவர்களுக்குள் இனிமையாய் கழிந்தது..

"சரி ஒன்னு கேக்கட்டுமா?..." என்று பூஜா மௌனத்தை உடைக்க..

"என்ன மேடம் புதுசா அனுமதி எல்லாம் கேக்குறீங்க.."

"இல்ல என் கூடவே ரொம்ப நாளா ட்ராவல் பண்ணுறியே உனக்கு போர் அடிக்கலையா ராம்..."

"ஏன் உனக்கு போர் அடிக்குதா?.. லூசு போல உளராம சும்மா இரு.." என்றான் சட்டென தோன்றிவிட்ட கோபத்தோடு..

"சும்மா சொல்லேன்.."

"இப்போ அடிதான்டி வாங்க போற நீ .. உனக்கு இப்படி சந்தேகம் எல்லாம் வராதே... யார் கேட்டது?.." என்றான் அவளை சரியாக கணித்து.. அதில் அவளோ நாக்கை கடித்து ஒன்றை கண்ணை மூடி திறந்தாள்..

"அப்போ நான் சொன்னது தான் கரெக்ட்ல... சொல்லு யாரு?.."

"சொல்லுவேன் திட்டகூடாது..."

"அத நான் முடிவு பண்ணிக்கிறேன் நீ சொல்லு..."

"என் பிரண்ட் ஒருத்தி சொன்னா, சேம் பீல்ட்ல லவ் பண்ண கூடாதாம் எப்போவுமே கூடவே இருந்தா லவ் குறைஞ்சிடுமாம்... நம்ம மூஞ்சியே பார்த்துட்டு இருக்க போர் அடிக்குமாம்... போன்ல பேசிகிட்டு பார்க்கணும்னு ஏங்கி பிரிஞ்சு இருந்து அப்பப்போ மீட் பண்ணினா தான் லவ் கூடுமாம்னு..." என்று அவள் முடிக்க

"சரி அதுக்கு..." என்றான் புருவம் உயர்த்தி...

"இல்ல நாமலும் பர்ஸ்ட் ஸ்டான்டட்ல இருந்து ஒன்னாவே படிக்கிறோம்.. டெய்லியும் மீட் பண்ணிக்குறோம்.. பெரிசா போன்ல பேசிக்கிறதில்ல... உனக்கு நான் போர..." மீதி வார்த்தை சொல்ல விடாமல் வாயை மூடிகொண்டான் அவன் கைகளினால்...

"கையால மூடுனதுக்கு பதிலா வாயால மூடி உன் கேள்விக்கான பதில சொல்லி இருப்பேன்.. இது காலேஜா போயிடிச்சு..." என்க அவள் முகம் சிவந்தது வெக்கத்தில்..

"இதோ உன் முகத்துல வருதே வெக்கம், இது சொல்லல நம்ம லவ்வ... டெய்லியும் தான் பேசுறோம்னு உனக்கு வெக்கம் வராமலா போயிடிச்சு..." என்றவன் அவள் விரலை பிடித்து..

"அதே போல தான் எனக்கும்.. உன்னோட இந்த சுண்டு விரல் பட்டாலும் எனக்குள்ள காதல் பெருகும் எட் தி சேம் டைம் மோகமும் வரும்... எப்போவுமே பார்த்துக்குறோம் எப்போவும் தொட்டுகிறோம்னு நமக்கான பீலிங்ஸ் வாராம போய்டுமாடி..." என்று அவள் முடியை காதோரம் ஒதுக்கியவன்

"நைட்ல மட்டும் உன்ன பிரிஞ்சி இருக்கிற நரகமே எனக்கு பெரிசுன்னு கடவுளே உன்ன எனக்கு இப்படி கூடவே குடுத்திருக்காரு... அது எனக்கு வரம்டி.." என்று அவன் முடிக்க அவள் கண்ணில் கண்ணீர் துளி உருண்டு விழுந்தது...

இதை விட அவன் காதலை உணர்த்திட வார்த்தை வேண்டுமா என்ன??.. கண்களில் கண்ணீருக்கு நேர் மாறாக அவள் உதட்டில் புன்னகையுடனே "ஐ லவ் யூ ராம்..." என்றாள் ஆழ் மனதில் இருந்து.. அவனோ பதிலை அவள் நெற்றி முத்தத்தில் கொடுத்திருந்தான்..

"உனக்கான என்னோட காதல் எந்த நேரத்திலயும் குறையாது... குறையவும் விட மாட்டேன்... அதுக்காக சண்ட போட மாட்டேன்னுலாம் சொல்ல மாட்டேன்... அதெல்லாம் எக்கசக்கமா போடுவேன்... நீ தான் சமாளிக்கணும்... கிடைக்கிற கொஞ்ச நேரமும் இப்படி உன் கண்ணுக்குள்ள என்ன பொத்தி வெச்சிக்கோ எங்கயும் போகாதபடி.... என்றான் மனதார

"அட அட என்ன லவ்வு என்னா லவ்வு??.." என்று விஷ்னு ஜூஸுடன் அங்கு வர பூஜா தள்ளி அமர்ந்து கொண்டாள்.. அதில் ராம் விஷ்னுவை முறைக்க..

"முறைச்சது போதும் இத குடிச்சிட்டு வந்து சேருங்க நான் ஹாஸ்பிடல் போறேன்... நான் போனதும் உங்க லவ்ஸ கன்டினுயூ பண்ணுங்க.." என்றவன் கையில் ஜூசை வைத்து சென்றுவிட்டான்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜேகே காலேஜூம், ஹாஸ்பிடலும் அருகருக்கே தான்... நடந்து செல்லும் தூரம் தான்.. அவர்கள் வரட்டும் என அவர்களுக்கு தனிமை கொடுத்து அவன் செல்ல.. அவன் புரிதலில் இவர்களுக்கு புன்னகை...

"விஷு செம கேரக்ட்டர்ல ராம்... எவ்வளவு தான் பணக்காரனா இருந்தாலும் துளியும் அத காட்டிக்கிட்டதே இல்ல.."

"ஆமா பூஜா.. அவனுக்கு நாமனா எப்போவும் பெரிசு தன்... வா நாமலும் கிளம்புவோம் நிலவன் ஸ்ட்ரைட்டா அங்க வருவான்..." என்றவன் பூஜாவுடன் அங்கிருந்து கிளம்பினான்...




அங்கே லேபினுள் நுழைந்த நிலவன் பாலமூர்த்தியின் அருகில் செல்ல..

"வா நிலவா..."

"சார் வர சொல்லி இருந்தீங்க..."

"ஆமா உக்காரு பேசுவோம்..."

"உன் ரீசேர்ச் பத்தி பூஜா சொன்னா... எவ்வளவு நாளா பண்ணுற? எந்தளவுல போயிட்டு இருக்கு? அத பத்தி சொல்லேன்..

"போர் இயர்ஸ் உழைப்பு சார் அல்மோஸ்ட் கம்ப்ளீட் தான்... பாராலிஸிஸ் (பக்கவாதம்) குணப்படுத்துறது தான் சார் என்னோட ஆராய்ச்சியோட கண்டுபிடிப்பு..."

"அது தான் பிசியோ இருக்கே நிலவா..."

"நான் சொல்றது பூரணமா குணப்படுத்துறதுக்கான டிரக் சார்...

"இட்ஸ் இம்மபொஸ்ஸிபில் நிலவா.." என்றார் ஆச்சரியத்துடன்...

"பொஸ்ஸிபில் சார்... ஹெல்ப் ஒப் அட்ரீனலின்.." என்றவன் அது தொடர்பாக மேலும் விளக்கம் கொடுக்க மூர்த்தியின் முகத்தில் ஆச்சரியத்தின் ரேகை...

"ப்ரிலியண்ட் நிலவா... அன்பிலீவபில்! யூ ஆர் எ கிப்டட் சைல்ட் யங் மேன்..." என்று அவனை பாராட்டவும் தயங்கவில்லை.. மேலும் அவரே... "இதுல என்னோட ஹெல்ப் என்ன வேணும்.."

"அப்ரூவல் வாங்கி தரணும் சார்.. நம்ம மெடிக்கல் லேப் பொறுப்பானவங்க நீங்க அதான்..."

"அனிமல் ஸ்டடி தான நிலவா??...

"ஆமா சார்.."

"ஓகே நிலவா நாளைக்கு லேப்ல டெஸ்ட் பண்ணி பாக்கலாம்..."

"கண்டிப்பா சார்.." என்றவன் வெளியேற "யாருக்காக நிலவா இந்த முயற்சி.." என்ற அவர் குரல் தடுத்தது...

"என்னோட தாத்தா சார்..." என்றவன் வெளியேறி இருந்தான்...

நிலவனின் பதினாறாம் வயதில் தான் சீதாவின் தந்தை பக்கவாததினால் பாதிக்கப்பட்டார் ஆனாலும் தைரியமான மனிதர் அதையும் தைரியமாக தான் கடந்தார்... இப்போது பேச நடக்க என்று ஓரளவுக்கு முடிகிறது
ஆனால் நிலவனுக்கு அது போதவில்லை...

கம்பீரமாய் பார்த்த அவரை ஒரு இடத்தில் பார்ப்பதற்கு நிலவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.. அன்றே மனதில் நினைத்ததை இன்று முடித்திருந்தான் அவருக்காக....

நிலவன் லேபில் இருந்து வெளியேற ஜேகேக்கு அழைத்தது ஒரு உருவம்...

"சார் நீங்க கெஸ் பண்ணது உண்மை தான்... நிலவன் அதுக்கான எல்லாம் செஞ்சு முடிச்சிட்டான்... அப்ரூவலுக்கு வெயிட் பண்ணுறான்.."

"ம்ம்ம் இன்டெரெஸ்ட்டிங்..." என்றவன் மேலும் சில கட்டளைகள் அந்த உருவத்திற்கு வழங்கி அழைப்பை துண்டித்திருந்தான்... அந்த உருவமும் அங்கிருந்து வெளியேறியது...


அங்கே யூகேயில் ஜேகே மதுவை அருந்திய வண்ணம் "மிஸ்டர் நிலவன், ரெடி டு பேஸ் பெய்லியர்??? என்று கர்வமாய் புன்னகைத்து கொண்டான்...

வெளியேறிய உருவம் யாராக இருக்கும்... பாலமூர்த்தியா?? இல்லை வேறு ஒருவரா??? யாராக இருந்தாலும் நிலவனுக்கு நல்லதாக இல்லை என்பது மட்டும் உண்மை....


ஜாதி மல்லி மலரும்......



கருத்து திரி👇👇👇
InShot_20240814_202437458.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top