ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"ஆஹான் அப்படிலாம் தப்பிக்க முடியாது நீ... நான் ஊட்டி விடுறேன் மெல்ல எழுந்துக்கோ... வழமை போல சண்டே உனக்கு ரசம் செஞ்சு தரேன்... டெய்லி சாப்டா நைட்ல மூச்சு விட முடியலன்னு நீதான் கஷ்டபடுவ, இன்னைக்கு இத சாப்பிடு.." என்று அவருக்கு ஒவ்வொரு கவலமாய் ஊட்டி விட்டுக்கொண்டே பேசி கொண்டிருந்தாள்....

"டேய் அப்பு இங்க எல்லா வேலையும் முடிச்சிட்டு நானும் உன்கூடவே வந்துடவாடா..." என்று சொன்னது தன் தாத்தா தானா என அதிர்ச்சி மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்..

"தாத்தா நிஜமாவா சொல்லுற..." என்றாள் உணர்ச்சிவசப்பட்டவளாய்..

"ஆமாடா கண்ணா.. அந்த ரம்யா புள்ள பத்தி நீ சொன்னதும் தான் இந்த கிழவனுக்கு புத்தி வந்திருக்கு... என் குற்ற உணர்ச்சிக்கு உன்ன பழி ஆக்குனது எல்லாம் போதும், இனி என் மீதி வாழ்க்கைய இன்னொரு பெண்ணுக்காக வாழ போறேன்... இன்னும் எத்தனை நாள் எனக்கு இருக்குனு தெரியல.. இருக்குற வர உன்கூட தான்.."

"தாத்தா ஐ எம் சோ ஹாப்பி..." என்று சந்தோச கூச்சளிட்டவள் "தாத்தா இதுல உனக்கு முழு விருப்பம் தான எனக்காக ஒன்னும் சொல்லையே..." என்றாள்

"அந்த பாவி உன்ன ஏதும் பண்ணிடுவானோனு தான் சின்ன புள்ளைல உன்ன இங்க இருந்து அனுப்பி வெச்சேன்... இந்த நரகத்துல வாழுறது தான் எனக்கு தண்டனைனும் நினைச்சேன்.. ஆனா உனக்கு ஒரு துணையா உன்கூட இல்லாம போய்ட்டேனு இப்போ தோணுதுடா... உன் விருப்பப்படியே உன்கூடவே வறேன்... நாம போய்டலாம் இங்க இருந்து... எனக்கு இதுல முழு சம்மதம் தான்.." என்று அவர் சொல்லி முடிக்க அவள் கண்ணீலிருந்து கண்ணீர் உருண்டடியது....

எவ்வளவு நாள் ஏக்கம் அவளுடையது... சொந்தமே ஆனாலும் இன்னொருவர் வீட்டில் தங்குவது என்பது அத்தனை உவகையளிப்பதில்லையே... இத்தனைக்கும் அவள் சிறிய பாட்டி இவளுடன் பாசமாக தான் இருந்தார்... ஆனால் அவர் மருமகளுக்கு அது அத்தனை பிடித்தமில்லை என்பது அவர் நடத்தையிலேயே தெரிந்தது....

குறிப்பிட்ட வயது வரை வேறு வழியின்றி அங்கே இருந்தவள் பின்னர் தனியே தங்கிக்கொள்ள பழகிக்கொண்டாள்... அவர்கள் தடுத்தும் கேட்கவில்லை... தைரியமானவளாக வெளியே காட்டிக்கொண்டாலும் உள்மனம் ஒரு ஆதரவுக்காக ஏங்கி கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை... அதன் விளைவு படிப்பு முடித்ததும் விடுமுறைக்கு அவளை இந்தியா அழைத்து வந்திருந்தது... ஆனால் காலமோ அவளை மீண்டும் வலிக்க வைத்தே அனுப்பி இருந்தது..

"ஏண்டா அப்பு அழற.."

"சந்தோஷத்துல அழுறேன் தாத்தா.. டு த்ரீ வீக்ஸ்ல நாம இங்க இருந்து பறக்குறோம் ஓகேவா.." என்றவள் கைகளால் பறப்பது போல் செய்து காட்டினாள்.

"நீ இவ்வளவு சந்தோசபடுவனு எதிர் பாக்கலடாமா... உன்ன ரொம்ப ஏங்க வெச்சிட்டனோ... இந்த கிழவனுக்கு புரியிரமாதிரி சொல்லி இருக்கலாமேடா தங்கம்.."

"நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல உன் உணர்வுகளும் எனக்கு முக்கியம் தான தாத்தா..." என்றவள் அவர் முகம் சோகத்தில் வாடுவதை பொறுக்காமல் "ஓகே நாம இந்த ஹாப்பினஸ் செலிப்ரேட் பண்ணுவோம்... இந்த சாப்பாடு வேணா.. நான் உனக்கு காரம்சாரமா மிளகு ரசம் செஞ்சு தரேன்.. பட் இந்த சண்டே கட் ஓகேவா.." என்றவள் அவரும் சரி என்க இதோ மிளகு ரசத்துக்கு வேலை நடக்கிறது சமையலறையில்..

"கமலாம்மா முறைச்சது போதும் அந்த மிளக கொஞ்சம் எடுங்க.." என்றாள் அவரு முறுக்கிக்கொள்ள அவளே எடுத்துக்கொண்டாள்...

"ரொம்ப சந்தோசதோட மனசு நிறைஞ்சு தான் பண்ணுறேன்... எனக்கு கஷ்டமே இல்லை... இன்னைக்கு தாத்தாக்கு பண்ணி கொடுக்கணும்னு தோணுது பண்ண கூடாதா நானு?.."

"அச்சோ என்ன பாப்பா நீ... உன்ன கஷ்டபடுத்த கூடாதுனு தான் நானே பண்ணுறேன்னு சொன்னேன்... உன் சந்தோசம் இது தான்னா வேற என்ன வேணும் எனக்கு..."

அதன் பின்னர் வேலை சட்டென சூடு பிடித்தது... மிளகு ஒரு மேசை கரண்டி எடுத்துகொண்டவள் நன்றாக பொடியாக இடித்து அதில் தோல் உரிக்காத வெள்ளைப்பூடு ஒரு கையளவு சேர்த்து நசிந்தும் நசியாமலும் இடித்துக்கொண்டாள்.. அதை ஒரு அளவான பாத்திரத்துகுக்கு மாற்றி சிறியதுண்டு புலி சேர்த்து.. நெருப்பில் சுட்ட வரமிளகாய் மூன்றை கைகளால் சிறிது மசித்து அதனுள் சேர்த்து கெட்டியான தேங்காய் பாலும் தேவையான அளவு உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து சிறிது நேரத்தில் கொதி வருவதற்கு சற்று முன் ஆற்றி இறக்கி இருந்தாள்.... கமலாவிற்கு அந்த வாசனைக்கே எச்சில் ஊறியது...

அன்று சாப்பாடு ராஜய்யாவின் வயிற்றை மட்டுமல்ல மனதையும் குளிர்வித்தது எனலாம்... அவரது பாராட்டு மழையில் நனைந்தவள், மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்ததில் தனிமையை நாடி தோட்டம் பக்கம் சென்றாள்... அங்கோ தனிமைக்கு பதிலாக, அங்கு பூத்திருந்த மல்லிகை பந்தல் அவளுக்கு எப்போதும் போல அந்த ஞாபகத்தை அழைத்து கொண்டுவந்திருந்தது....

"மீண்டும் அவனை விட்டு மொத்தமாக செல்ல போகிறாயா?" என்ற கேள்வி மனதை வண்டாய் குடைந்தது... ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு... இறுதி முடிவாகவே இருக்கட்டுமே... மனம் அவனுக்காக இழகி என்னவாகிட போகிறது... வேண்டாம் என்று ஒதுக்கியது உறவு ஒதுக்கியதாகவே இருக்கட்டுமே என அதனை புரம் தள்ளியவள் பந்தலின் கீழ் அமர்ந்திருக்க மனதில் ஒரு வெறுமை படர்வதை தடுக்க முடியவில்லை.. ஒரு மனம் வேண்டவே வேண்டாம் என்கிறது.. இன்னொரு மனம் யோசித்து பார் என அவனுக்காக கருணை கொள்கிறது.. அவள் முடிவில் உறுதியாக தான் இருக்கிறாள்.. உறுதி உடையும் நாளும் என்றோ?..

சற்று முன் இருந்த சந்தோசம் காற்றில் பறந்து போய்விட்டதோ என்னவோ.. அவளிடம் ஒரு அசாத்திய அமைதி.. ஏற்கனவே வேண்டாம் என்பதற்கான காரணங்கள் இன்று வரை அப்படியே தான் இருந்தது.. அது இனிமேலும் மாறப்போவதும் இல்லை.. ஆனால் உள்ளதுக்கு புரிந்தும் புரியாமல் அடம் பிடிப்பதுதான் விந்தை.. என்னதான் எண்ணினாலும் இறுதியில் ஒரு நூலிழையிலேனும் சரி அவன் பக்கம் சாய்ந்து விடுகிறது அவள் முடிவுகள்.. இப்போதும் அப்படியே அவள் விரல்கள் தன்னால் அவன் இலக்கத்தை உயிர்பித்திருந்தது.. செல்லும் அழைப்புடன் தானும் சென்று விடுவோமா என தோன்ற, அந்த எண்ணதுக்கே தன்னை தானே நிந்தித்துக்கொண்டாள்.

அழைப்பு சென்று கொண்டிருந்ததே ஒழிய எடுக்கப்படும் அறிகுறிதான் அந்தப்பக்கம் தென்படவில்லை.. திடீரென சென்றுகொண்டிருந்த அழைப்பும் சட்டென்று துண்டிக்கப்பட்டுவிட இதை எதிர்பாக்காத அதிரல் எனும் வேதாலம் மீண்டும் முருங்கை மரம் ஏறிகொண்டது..

"இந்த அவமானம் தேவையா உனக்கு.. உன் பாட்டுக்கு வந்தோமா.. வேலைய முடிச்சோமா.. போனோமான்னு இரு.. இடையில இவனுக்கு இரக்கப்படுறேன்னு போய் மாட்டிக்காத.." என்று இவ்வளவு நேரம் அவனுக்காக பேசிய மனதை கிழியோ கிழி தான்.. அதுவும் " போயும் போயும் உனக்காக பேசினேனே" என்று நிலவனுக்கு நான்கைந்து நல்ல வார்த்தைகளில் திட்டி அதன் குமுறலை தேற்றி கொண்டது...

இனி மீண்டும் அதிரலை தரை இறக்குவதெல்லாம் நிலவன் சாமர்த்தியம்.. அவன் வாழ்வில் காதல் அதிகாரம் படைக்கும் போது கடவுள், நிறையவே கரடிகளையும் சேர்த்து படைத்து விட்டார் போலும்.. நொடிக்கொரு முறை ஸ்பீட் பிரேக்கில் தான் போய் முடிகிறது.. இந்த முறை புகழ் என்ற கரடியின் கைவண்ணம் தான் இந்த சிறப்பான காரியம்.. அப்படி என்ன தான் குரளிவித்தை செய்திருப்பானோ???



ஜாதி மல்லி மலரும்......


கருத்து திரி 👇👇👇






InShot_20240807_102256087.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 12



அன்று மாலை நிலவனின் வீட்டில் நிலவனும் புகழும் செஸ் விளையாடி கொண்டிருந்தனர்.. கார்த்திக்கும் வாசுகியும் ஆளுக்கொரு பக்கம் போட்டியாளர்களுக்கு ஆதரவாய் அமர்ந்திருக்க, சேதுராமன் சற்று தூரத்தில் பார்வையாளராக அமர்ந்திருந்தார்..

"டேய் இது நாலாவது தடவ.. இந்த முறையாச்சும் எப்படியாச்சும் மானத்த காப்பாத்து டா.." என்றார் புகழ் பக்கம் அமர்ந்திருந்த வாசுகி..

"மா அவன் ஸ்டேட் பிளேயர்.. நான் அப்படியா?.. வம்படியா உக்காரவச்சு விளையாடிட்டு இருக்கான்.. இருந்தாலும் இந்த படிப்ஸ எனக்கு பிரண்டா நீங்க பெத்திருக்க கூடாதுமா.. இட்ஸ் டூ பேட்.."

"பேச்ச குறைச்சிட்டு ஆட்டத்தை பாருடா.. நீ தான் தைரியமான ஆளாச்சே விளையாடு.." என்றவன் நான்காவது தடவையும் ஆட்டத்தை தன் வசப்படுத்தி கார்த்தியுடன் கை அடித்துக்கொண்டான்

"விளையாடு விளையாடுன்னு சொல்லூறியே ஒழிய விளையாட விட மாட்டேங்கிறியேடா.. போடா நான் சோகமா போறேன்.."

"இதுக்கெல்லாம் கோச்சுக்காலமா?.. நீ தோத்துடுவனு தெரிஞ்சும் உன் பக்கம் இருந்தாங்களே எங்கம்மா வாசுகிமா அவங்கள கொஞ்சம் யோசிச்சு பாரு.." என்றான் கார்த்தி சிரிக்காமல்..

"மா என்மேல் அவ்வளவு பாசமாமா?..." என்றான் புகழ் ஸ்லோ மோஷனில் திரும்பி சிவாஜியை போல் நாடக பாணியில்..

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா புகழு.. தனியாவிட்டா பச்சை புள்ள நீ வெறுக்குனு போய்டுவியேன்னு தான்.." என்று அவனை வார அங்கே சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் போனது..

"மா யூ டூ.. எல்லாம் என் நேரம்.. நான் கூப்பிட்ட மாதிரி பல்லாங்குழி ஆட வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்.. அதுல நாங்க எல்லாம் புலி தெரியுமா?.. இதெல்லாம் ஒரு விளையாட்டுனு என்ன கலாய்க்கிறீங்க, சில்லி பெல்லோஸ்.." என்றான் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதவனாக..

"ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா உன்கிட்ட பினிஷிங்க் சரியில்லையேப்பா" என்றனர் நிலவனும் கார்த்தியும் வடிவேலு பாணியில் கோரசாக..

"வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங் அபவுட் மீ? ஒரு ஜென்டில் மேனை பாத்து கேக்குற கேள்வியா இது?" என்றான் அவனும் பதிலுக்கு அதே பாணியில்.. இந்த இடமே ஆரவாரமாய் அதிரும் வண்ணம் சிரிப்பொலி பரவியது..

"என்னடா அங்க சத்தம்..." என்று சேதுராமன் அங்கிருந்தே சாதாரணமாய் தான் கேட்டார், ஆனால் அதுவரை வடிவேலுவை போல் பேசிகொண்டிருந்த புகழ் "பேசிக்கிட்டு இருக்கேன் மாமா" என்று முடித்திருந்தான். நல்ல வேலையாக சேதுராமனுக்கு அது புரியாமல் போனது..

"அந்த பக்கம் போய் சத்தம் போடு நான் நியூஸ் பாக்கணும்.." என்றார் சேதுராமனும் அவர் பங்குக்கு.. இங்கு புகழ் திருட்டு முழி முழிக்க, மற்ற மூவருக்கும் சிரிப்பை அடக்குவது பெரும் பாடாய் போனது.. எழுந்து சமையலறை பக்கம் ஓடியே விட்டனர்..

புகழும் பின்னே செல்ல பார்க்க,
"எல்லாரும் போயிட்டா யாரு இதெல்லாம் கிளீன் பண்றது ஒழுங்கா எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு போ.. இந்த காலத்து புள்ளைங்களுக்கு பொறுப்பே இல்லை.. " என்ற சேதுராமனின் குரல் அவனை தடுத்தது..
"இதுக்கும் நான் தானா.. போலீஸ்டா நானு.. நல்லா வெச்சு செய்றீங்கடா, குடும்பமா சேந்து.." என்று புலம்பியபடி எல்லாவற்றையும் அடுக்க அதற்கும் அவர் "இப்படி வை" "அதை எடு" என்று குறை சொல்ல,ஒருவாறு எல்லாம் முடித்து சமையலறையினுள் நுழைய அங்கு அவன் கண்ட காட்சியில் கையில் சூலம் ஏந்தாத குறை தான்..

"டேய் டேய் இது உங்களுக்கே அநியாயமா தெரியல.. ஹியூமன்ஸா டா நீங்கல்லாம்.. ஒருத்தன அங்க அந்த மனிசன் அக்கு அக்கா பிரிக்கிறாரு இங்க ஜாலியா கொட்டிக்கிறீங்க.."

"பூரியும் உருளைக்கிழங்கும்டா மச்சான்.." என்றான் நிலவன் சரியாய் புகழின் வாயடைக்கும் விதமாக...

"வாவ் இதோ வந்துட்டேன்.. சுகிமா என்ன சொல்லு உனக்கு இந்த புகழ் மேல தனி பாசம் தான்" என்றவாறு நிலவனுக்கு ஊட்ட சென்ற கவலத்தை தான் வாங்கிக்கொண்டான்..

அடுத்து கார்த்தி நிலவனுக்கு பிடித்த தோசை சுட அதையும் வாசுகி மூன்று பேருக்கும் ஊட்டி கொண்டிருந்தார்.. என்ன தான் ஆண் பிள்ளைகள் தங்களை விட உயரமாய் வளர்ந்துவிட்டாலும், ஏன் திருமணமே செய்துவிட்டாலும், தாய்க்கு எப்போதும் அந்த அரை காற்சட்டையோடு பசிக்கு தன் சேலையை பிடித்திழுக்கும் வாண்டுகளே தான்..

"டேய் கார்த்தி கல்யாணதுக்கு அப்பறம் குழந்தைக்கு தோசை சுட்டு குடுக்குற வயசுல ஏன்டா இந்த எருமக்கடாக்கு சுட்டு குடுக்குற.." என்றான் புகழ் வாசுகியிடம் அடுத்த ஆ (கவலம்) வாங்கிக்கொண்டு..

"போர் யோர் கைன்ட் இன்ஃபர்மேஷன்.. நீயும் அதே எருமக்கடாதான்.." என்றான் நிலவனும் பதிலுக்கு..

"டேய் கார்த்தி உனக்கு வயசு முப்பது ஆக போகுது எப்போதான்டா கல்யாணம் பண்ணிப்ப.." என்றார் வாசுகி இதான் சாக்கென்று விடாமல்.. அதில் கோபமாய் புகழை முறைத்தவன்..

"ஒரு தோசை சுட்டு குடுத்ததுக்கு உன்னால என்ன முடியுமோ பண்ணிட்ட.."

"போறபோக்குல ஒரு சோசியல் சர்வீஸ் டா கார்த்தி... அதெல்லாம் கண்டுக்கப்படாது..."

"உன்ன கொல்ல போறேன் பாரு... வாய வெச்சிட்டு சும்மா இருக்கல, இன்னைக்கு வாங்கி கட்டிட்டு தான் வீட்டுக்கு போவ..." என்று தோசை கரண்டியை நீட்டி மிரட்ட, அதற்கு பிறகும் புகழ் மூச்சு கூட விடுவானா என்ன?

"அவன ஏன் திட்டுற எனக்கு பதில் சொல்லு.."

"மா அதான் சொன்னனேமா... எத்தனை தடவை தான் ஒரே பதில் சொல்றது.. அவ காலேஜ் முடிக்கட்டும்மா.." என்றான் சலிப்புடன்..

"நீ இப்போ பண்ணாதான இவனுக்கும் பாக்க முடியும்.. நீயாச்சும் லவ்னு வந்து நின்ன, அவன் அப்படியா? நான் தான் தேடணும்... இவனுக்கும் வயசாகுது.. இப்போ இருந்து தேடுனாதான ஒரு முப்பது ஆகுறதுக்குள்ள என் மருமகள கண்டுபிடிக்க முடியும்.. அவன் வேற உனக்கு முடிஞ்சப்பறம் தான் எனக்கு தேடணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான்.." என்க பால் வடியும் முகத்துடன், அதனை சாந்த சொரூபியாய் கேட்டுக்கொண்டிருந்தான் நிலவன்..

"இது உலக நடிப்புடா சாமி" என வாயில் தோசையை வைத்துக்கொண்டு ஆ என்றவாறு மைண்ட் வாய்ஸில் பேசிகொண்டிருந்த புகழின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு விழுந்தது.. "ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ..." என்று தடவி விட்டுக்கொண்டான்.

"வந்தோமா.. கொட்டிக்கிட்டோமானு இல்லாம.. தேவை இல்லாத கேள்வியெல்லாம் கேட்டு உசுப்பேத்தி விட்டுட்டு கனவு கண்ணுறியா, சாவடிச்சிடுவேன் ராஸ்கல்.." என்றான் கார்த்தி.

நிலவன் வந்த சிரிப்பை அடக்கி கொள்ள பார்த்தும் முடியாமல் அவஸ்த்தைப்பட.. "யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் ஒன்று" என்று புகழை சுற்றி நாலு பேர் வயலினோடு வந்து சோக கீதம் பாடிக்கொண்டிருந்தனர்..

"மா... ஒரு சிக்ஸ் மந்த் தான்மா அப்பறம் ஒரு காரணமும் சொல்லவே மாட்டேன்.. அவ பைனல் எக்ஸாம் முடியிற அன்னைக்கு மேரேஜ் வெச்சிக்கிட்டா கூட எனக்கு சம்மதம் தான்மா.. என் ஸ்டுடென்ட் எனக்கு வைபா வேணா.. என் லவ்வரா மட்டும் அவள கட்டிக்கிறேனே ப்ளீஸ்மா.."

"ம்ம்ம் உன் இஷ்டம்.. ஆனா ஆறு மாசம் தான்.. அப்பறம் எதுவும் காரணம் சொல்ல கூடாது.."

"இது போதும் தெய்வமே.. ஏண்டா நீங்க ரெண்டு பேரும் சைலன்ட் ஆகிடீங்க.."

"பெரியவங்க பேசும் போது குறுக்க பேசுறதா.. அபச்சாரம் அபச்சாரம்.. என்று புகழ் கன்னத்தில் போட்டுக்கொள்ள.. மூவரும் முறைத்த முறைப்பில் சிங்கம் பதுங்கி படுத்தேவிட்டது..

அப்போது சரியாய் புகழுக்கு அருகில் இருந்த நிலவனின் கைபேசி ஒலித்தது, புகழ் அதை உற்று பார்க்க, நிலவன் சட்டென்று கையில் எடுத்துக்கொண்டான்.. அதிலோ ஆங்கில பெரிய எழுத்து டி உம் ஆங்கில சிறிய எழுத்து ஆர் உம் அருகருகே எழுதபட்டு சிறிய இடைவெளி விட்டு ஹார்ட் எமோஜியும் அதுக்கு பக்கத்தில் இடைவெளி இன்றி வெள்ளை நிறத்தில் பூ ஒன்றும் தட்டச்சு செய்யப்பட்டு அந்த அழைப்புக்குரிய நபரின் இலக்கம் சேமித்து வைக்கப்படிருந்தது..

"டேய் மச்சான் அது யாருடா டியர்?.. பக்கத்துல ஹார்ட் வேற போட்டிருக்கு அப்பறம் அதுக்கு பக்கத்துல ஏதோ ஒன்னு இருந்திச்சே எங்க காட்டு பாக்க.." என்று அவனிடம் இருக்கு பறிக்க போராட, அந்த போராட்டத்தில் அவன் கைபட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டதில் நிலவனின் முறைப்பையும் பெற்று கொண்டான். ஆக கரடி இங்கே தான் வேலையை காட்டி இருக்கிறது..

"மா என்னனு கேளுங்கமா.. யாரையோ டியர்னு சேவ் பண்ணி வெச்சிருக்கான் இதுல பக்கத்துல ஹார்ட் வேற.." என்றான் மாட்டிவிடும் எண்ணத்தில் நிலவனா மாட்டிக்கொள்வான்?.. அவன் தான் கழுவும் மீனில் நழுவும் மீன் ரகம் ஆகிற்றே..

"உன் அரும புத்திரனோட லீலைய பார்த்தியா?.. இவன இன்னும் நீ நல்லவன்னு நம்புற.. என்ன மட்டும் லவ் பண்ணிட்டான் பண்ணிட்டான்னு தினமும் சொல்லி குத்திகாட்டுறல கேளு அவன்கிட்ட என்னனு.." என்றான் கார்த்தி வாசுகியின் தோள் மேல் கையை போட்டபடி..

"என்னடா நிலவா பாத்துட்டு இருக்க.. என்னனு சொல்லு, இவனுங்க சொல்லுறது போல இல்ல.. என்புள்ள தங்கம்னு காட்ட வேணாமா?.."

"மா அது ரம்யா விசயத்துல ஒரு டாக்டர் ஹெல்ப் பண்ணாங்கனு சொல்லி இருந்தேனே.. அவங்க தான் மா இது.. எதுக்கும் அவங்க நம்பர் இருக்கட்டுமேனு டாக்டருக்கு ஷாட்டா டி ஆர் னு சேவ் பண்ணி வெச்சேன்.."

"அப்போ ஏன் ராசா டாக்டருக்கு பக்கத்துல ஹார்ட்டு.." என்ற புகழுக்கு சப்போர்ட்டாக "இது ஒரு நல்ல கேள்வி.." என்றான் கார்த்தி இடையில்

"அவங்க தான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே... அதான் அந்த ஹார்ட்... சப்போஸ் மறந்துட்டேன்னா ஈஸியா கண்டுபிடிக்கலாம் பாரு..."

"அப்போ அது பக்கத்தில ஏதோ இருந்திச்சே அது என்ன?..."

"அதுவா நீயே பாரு" என்று தனது அழைபேசியை காட்ட வெள்ளை நிறத்திலான மலர் ஒன்று இருந்தது..

"என்ன மச்சான் அமைதியாகிட்ட... அது எதுக்குன்னு கேட்கமாட்டியா?..."

"எதுக்கு இல்ல எதுக்குன்றேன்... அதுக்கும் ஏதும் பதில் வெச்சிருப்பியே கேட்டு நானே என்ன நோஸ்க்கட் பண்ணிக்கணுமா? முடியாது போடா...."

"அப்போ இவ்வளவு நேரமும் வெட்டுப்பட்டு விழுந்தது உன் மூக்கு இல்லையா?.. குபீர் குபீர்னு ரெத்தம் வேற தெறிச்சிச்சே.."

"வேணா.. வலிக்குது... அழுதுடுவேன்.."

"பாவம் நிலவா விட்டுடலாம்" என்ற வாசுகி சிபாரிசில் தப்பித்துகொண்டான் புகழ்... அதன் பின்ன நிற்பானா என்ன? பெரிய கும்புடு போட்டு ஓடியே விட்டான்...


நிலவனுக்கு ஒருவழியாய் இரவு எட்டு மணியளவிலே கெஸ்ட் ஹவுஸ் வர முடிந்தது... தூங்க தயாராகி பெட்டில் விழுந்தவன் அவள் எண்ணை அழுத்தி காத்திருக்க... அந்த பக்கம் அழைப்பு துண்டிக்கப்பட்டது.... அவன் எதிர் பார்த்தது தான்... மெல்ல இதழ் விரிந்தது அவள் செயலில்...

"நீ இன்னும் வளரவே இல்லடி குட்டி பட்டாசு...." என்று மீண்டும் மூன்று தடவைக்கு பின்னரே அழைப்பு ஏற்கபட்டது....

"ஹலோ.."

".... "

"ஜாஸ்.."

"...."

"பேசுடி..."

"ம்ம்ம்.."

"இந்த ம்ம்ம் சொல்ல உனக்கு இத்தன வருஷம் ஆச்சுலடி..."

"...."

"உடனே சிலுத்துப்பியே... சொல்லு என்னனு..." என்றவன் மேலே பார்த்த வண்ணம் கட்டிலில் இருந்து தலையை மட்டும் கீழே போட்டுகொண்டான்

"நான் ஊருக்கு போறேன்..."

"போ எனக்கென்ன.... விட்டுட்டு போறது உனக்கென்ன புதுசா... அதான் உனக்கு கை வந்த கலையாச்சே.."

"நீ பண்ண வேலைக்கு உன்ன கொஞ்சுவாங்கலாக்கும்..."

"அப்படி செஞ்சிருக்கலனா மட்டும் அப்படியே கூட இருக்குற போல தான்... எப்பவும் பிச்சிக்கோனு என்ன விட்டுட்டு ஓடுறதுலயே தான குறியா இருக்க, பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... இதுல கொஞ்சுவாளாமே... பண்ணா நல்லா தான் இருக்கும்.." என்றான் இறுதி வரியில் பெருமூச்சுடன்...

"தாத்தாவையும் கூட்டி போறேன்... திருப்பி இங்க வரமாட்டேன்..." என்றாள் அவன் புலம்பலை கணக்கில் எடுக்காமல்

"அதுசரி உனக்கு இங்க இருந்த உறவு அவரு ஒருத்தர் தான அப்பறம் ஏன் வரணும்...." என்றான் உறவில் சிறு அழுத்தம் கொடுத்து....

"நாளைக்கு ஈவினிங் பார்க் வந்துடு..."

"வர முடியாது போடி..." என்றவன் அழைப்பை துண்டித்து உடலையும் தரைக்கு கொண்டு வந்த வண்ணம் தரையில் படுத்துக்கொண்டான்... இரு வினாடிகள் கூட சென்றிருக்காது மீண்டும் அவள் எண்ணுக்கு அழைத்திருந்தான்... சிறிது நேர கோபம் கூட அவர்களை எட்ட நின்று தான் பார்க்கவேண்டும் போல..

"ஹலோ..."

"ம்ம்ம்"

"இப்போ கோபப்பட்டது நான்.."

"சரி இருந்துக்கோ... "

"நாளைக்கு வரமாட்டேன்"

"சரி வராத...."

"ஓகே.. நாளைக்கு வரும் போது சாரி கட்டிட்டு வா.." என்றான் முன்னுக்கு பின் முரணாய்... அவளிடம் மட்டும் அவன் குணம் முரண் தானே...

"யாரோ வரமாட்டேன்னு சொன்னாங்க..."

"பிடிவாதம் எல்லாம் உனக்கு தான் எனக்கில்லை, நான் சமத்து பிள்ள... யார் மனசையும் காயப்படுத்த மாட்டேன்... நீ வருத்தப்படுவியேனு வரேன்..." என்றான் போனால் போகிறது என்பது போல...

"ஓகே குட் நைட் வெச்சிடுறேன்.. வந்து சேரு.." என்றவள் அழைப்பை துண்டித்திருந்தாள்...

அழைபேசியை பார்த்தவன் "உன்ன எல்லாம் உன் வழில விட்டு வெச்சிருக்கேன்ல அந்த திமிருடி.. உன்ன கவனிக்கிற விதத்துல கவனிச்சிருக்கணும்.. மறுபடியும் என் கண்ணுல படாத அப்பறம் விடவே மாட்டேன்னு சொல்லியும் என்ன தைரியம் இருந்தா வந்திருப்ப... இனி எப்படி இந்தவாட்டி என்ன விட்டுட்டு போறன்னு பாத்துக்கிறேன்.." என்று தனக்கு தானே பேசிக்கொண்டவன் அவளுடனான இனிமையான நிகழ்வுகளின் தாக்கத்துடன் ஆழ்ந்த உறக்கத்துக்குச்சென்றான்.




அடுத்தநாள் பொழுது பரபரப்பாக யாருக்கும் காத்திருக்காமல் விடிந்தது... அங்கு ஜெயராமனின் வீட்டிலோ வாக்குவாதம் உச்சத்தில் இருந்தது...

"இந்த ஒரு விஷயம் தான் தம்பி உன்கிட்ட எனக்கு பிடிக்கவே இல்ல.. சொன்னாலும் கேக்குறதில்ல... வெளிய தெரிஞ்சா எங்க கொண்டு போய் மூஞ்ச வெச்சிக்குவேன்.. கட்சிகாரன் எல்லாம் நாக்க பிடுங்குற போல கேப்பான்..."

"இதுக்கு உங்ககிட்ட பதில் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்ல... ஏற்கனவே இத பத்தி நிறைய பேசி இருக்கோம்.. உங்க பெர்சனல் லைப்ல நான் இன்டர்பியர் ஆகமாட்டேன்.. அதே தான் நான் உங்ககிட்டயும் எதிர் பாக்குறேன்..."

"அதுவும் இதுவும் ஒன்னா?.."

"வாட்டேவர், ஐ டோன்ட் கேர் அபௌட் இட்.. இதுல தலையிடாதீங்க..."

"இது ஒன்ன பேசுனா எப்பவும் நமக்குள்ள வாக்குவாதம் தான் வருது விடு.. அந்த ஐஜி ஒத்து வரலையே என்ன பண்ணா போற... தேர்தல் டைம்ல மாட்டிக்கிட்டா என்ன பண்றது.."

"கம்பளைண்ட் பண்ண மதர் நேம் என்ன?.."

"மேரி.."

"மேரி பேர்ல அந்த ஆசிரமத்தை எழுதி வெச்ச மாதிரி போலி டாக்குமெண்ட் ஒன்னு ரெடி பண்ணுங்க.. எப்படியும் கோட் கேஸ்னு தான் போவானுங்க பாத்துக்கலாம்... நம்ம பங்குக்கு கொஞ்சம் இழுத்தடிப்போம்..." என்றவனின் அழைபேசி "டார்லிங்" என்ற அழைப்புடன் சிணுங்கியது... ஜெயராமன் அதனை கண்டும் காணாமல் இருந்துகொண்டார்... இருந்தும் கோபம் உள்ளுக்குள் புகையவே செய்தது...

"ம்ம்ம்ம்... அப்பறம் நம்ம ஹாஸ்பிடலோட அடையார் ப்ராஞ் சீப் டாக்டர் உன்கூட பேசணுனும்னு சொன்னாரு தம்பி.."

"ம்ம்ம் தெரியும், நம்ம டீல் விஷயமா தான் பெரிய பார்ட்டி ஒன்னு கேட்டிருக்காங்க.. இப்போ கிட்டத்துல தான ஒன்னு பண்ணுனோம் மறுபடியும்னா ஏதும் சிக்கல் வர வாய்ப்பிருக்குனு தான் வேணாம்னு சொல்லி இருந்தேன்..." என்றவன் யோசைணையாக நெற்றியை நீவியபடி "ஓகே பாத்துக்கலாம் அவருக்கு சரினு சொன்னதா சொல்லிடுங்கப்பா..."

"பிரச்சனை வரும்னு சொல்லுற... அப்பறம் எதுக்குப்பா ரிஸ்க் எல்லாம்..."

"இதுதான் எனக்கு வேணும்.. நான் காசுக்காக இந்த தொழில்ல இருக்கேன்னு நினைக்கிறீங்களா?.. நெவர், எனக்கு நான் தான் பெரியவன்ற கர்வம் எப்பவும் வேணும்... யாராலயும் முடியாத ஒன்ன பண்ணும்போது எதிர்ல இருக்கறவன் கண்ணுல வருமே அந்த பிரம்மிப்பு அது வேணும் எனக்கு.. கடவுளே கைவிட்டு பிறகு எனக்கிட்ட வர்றவங்களுக்கு அந்த கடவுள விடவும் நான் தானே உயர்வா தெரியுறேன்... கொடுப்பதும் நானே எடுப்பதும் நானே.... என்ன கண்டுபிடிக்க இந்த ஜென்மத்துல ஒருத்தன் இருக்கானா என்ன?..




"இருக்கேன்.. இங்க இருக்கேன்.. என்றான் நிலவன்

"எங்க எல்லாம்டா உன்ன தேடுறது.. வேலைக்கு கிளம்பலையா நீ..."

"போகணும்மா... ஐஜிய தான் மீட் பண்ண போகணும் ஒரு நைன் பிப்டீன் போல போனா போதும்... நீ வா எனக்கு பசிக்கிது சாப்பிடலாம்" என்றவன் தாயையும் அழைத்து தோட்டத்தில் இருந்து வெளியேறினான்...

"பா.. குட் மார்னிங்... கார்த்தி எங்க காலேஜ் போய்ட்டானா ஆளையே காணோம்..." என்றவன் தட்டில் உணவை வைத்தார் வாசுகி.

"குட் மார்னிங் நிலவா.. ஆமா இப்போ கொஞ்ச முதல் தான் போனான்"

"இன்னைக்கு உங்களுக்கு செக்கப் இருக்குல... போயிட்டு ரிப்போர்ட் என்னனு எனக்கு இன்போர்ம் பண்ணுங்க... அம்மா கூட தானா போறீங்க.."

"ஆமா நிலவா.. நான் தான் கூட போறேன்... வர்ற வழில ரம்யாவ ஒரு எட்டு போய் பாத்துட்டு வறோம்.. போன வீக் போகலனு கோச்சிக்கிட்டா..."

"ஓகேமா பார்த்து போயிட்டு வாங்க... நான் வேணா புகழையும் வர சொல்லவாமா?... சார் கூப்பிடாம இருந்தா நானே வந்திருப்பேன்.. கட்டாயம் போயாகணும்.. அதான் யோசிக்கிறேன்.."

"எங்களுக்கு தெரியாதா நிலவா... அதெல்லாம் நாங்க பாத்துப்போம் நாங்க என்ன சின்ன குழந்தையா?.."

"அதான பொண்டாட்டி கூட தனியா போகலாம்னு பாத்தா அவன் எதுக்கு குறுக்க கரடி போல.." என்றார் சேதுராமன்

அந்த நேரம் சரியாக "எனக்கு எதுவும் கேக்கலப்பா..." என்று உள்நுழைந்தான் புகழ்..

"வாடா நல்லவனே.. இப்போதான் உன்ன பத்தி பேசினேன் உடனே நீ நிக்கிற... நூறு ஆயிசுடா மச்சான் உனக்கு..."

"கேட்டிச்சு கேட்டிச்சு நல்லாவே கேட்டிச்சு.. எதுக்கு நூறு வருஷம்?.. உங்க மத்தில சிக்கி சின்னாபின்னமாகவா? ஒரு அடிமை சிக்கினா விட மாட்டீங்களே.."

"கூட கூட பேசாம உக்காந்து சாப்பிடு.. ரொம்ப பசில இருக்க நீ..." என்ற வாசுகி அவனையும் உக்கார வைத்து பரிமாறினார்..

"எப்படிமா கரெக்டா கண்டுபிடிச்சீங்க..."

"பசி வந்தா தான நீ சம்மந்தமே இல்லாம உளருவ.."

"கிரேட் இன்சல்ட் மம்மி..." என்று அவரை பார்த்து அழுவது போல் நடித்தவன் ஏன்டா மச்சான் வர சொன்ன.." என நிலவனிடம் சாதாரணமாய் பேச்சை தொடர்ந்தான்..

"நீ இப்போவே போய் கந்தசாமிய மீட் பண்ணி பேசு..."

"ஏன் மச்சான் நாம ஈவினிங் போறதா தான பிளான்.. என்ன சடன் சேன்ஞ்..."

"ஈவினிங் எனக்கு முக்கியமா மீட்டிங் ஒன்னு இருக்கு..."

"சரி மச்சான் அத நான் பாத்துக்கிறேன்.. வேற ஏதாச்சும் ப்ரோப்லமா?.."

"சே சே.. அதெல்லாம் ஒண்ணுமில்ல... நீ பேசிட்டு என்னனு எனக்கு அப்டேட் பண்ணு..."

"ஓகே மச்சான் வரேன்.." என்றவன் சாப்பிட்டு கிளம்பியிருந்தான்.
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சரியாக நேரம் பிற்பகல் நான்கு மணி பெரிதாய் வாகன நெரிசல் இல்லாத அந்த சாலையில் அமைந்திருந்தது அந்த குட்டி பூங்கா.. மேலே மல்லிகை பூ பந்தல் போல் படர்ந்திருக்க கீழே குளிர்ச்சியான இதமும், அதன் வாசனையும் யாரை வேண்டுமானாலும் கட்டிப்போடும் வல்லமை வாய்ந்ததாய் இருந்தது...

இப்படி ஒரு இடம் இருப்பதே பெரிதாய் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை, சுற்றி உள்ள சிலரை தவிர.. அந்த இடத்தில் அவர்கள் இருவரது நினைவுகளும் ஏராளமாய் கொட்டிக்கிடந்தது... அங்கே தான் அமர்ந்திருந்தான் நிலவன்.. கறுப்பு ஷேர்ட்டும் வெள்ளை ஜீன்ஸும் அணிந்து கம்பீரமான தோற்றத்தில் அமர்ந்திருவன் மனது தான் இங்கே இல்லை... முரளி கிருஷ்ணன் சொன்ன விடயங்கள் தான் அவன் மனதில் ஓடிகொண்டிருந்தது..



"வாங்க மிஸ்டர் நிலவன்.. உக்காருங்க.."

"எஸ் சார்..."

"மிஸ்டர் நிலவன் உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்னு தான் கூப்பிட்டேன்.." என்று தொடங்கியவர் ஜெயராமனை சந்தித்தது... தன் மகன் ஆதியை பகடக்காய் ஆக்கியது.. என அனைத்தையும் சொல்லியவரிடம் சிறு அமைதி...

"அவங்க மோடிவ் என்ன சார்..."

"கொஞ்ச நாளைக்கு முதல் நீங்க கேள்விப்பட்டிருப்பீங்களே இங்க உள்ள ஆசிரமம் ஒன்னு பையர் ஆக்சிடெண்ட் ஆகி நிறைய குழந்தைங்க இறந்தாங்கனு... அது ஆக்சிடெண்ட் இல்லை.. அது ஜெயராமனோட பிளான்.. அதுக்கான ஆதாரமும் என்கிட்ட தான் இருக்கு.. அதுக்காக தான் இப்போ இந்த மிரட்டல்.. ஏற்கனவே இந்த கேஸ் டீல் பண்ண ஏசிபி வெற்றிமாறன கொன்னதும் அவங்க தான்.. " என்று அந்த காவலதிகாரியின் நினைவில் கண்களை மூடி திறந்தவர்... மேலும் தொடர்ந்தார்...

"இந்த ஆதாரம் வெளிய வந்தா கண்டிப்பா அவன் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி தான்.. முதல்ல என்ன விலை பேச பார்த்தான் முடியாதுன்னதும் ஆதிய வெச்சு மிரட்டுறான்.." என்றார்

"சார் எதுக்காக இந்த திட்டம்னு எனி கெஸ்?.."

"எக்ஸாக்ட் என்ன காரணம்னு தெரியல பட் சில யூகம் இருக்கு.. அந்த டிரஸ்ட் அவரோட வைப் பேர்ல தான் இருக்கு.. பட் அவங்க இப்போ ஒன்னா இல்லை சோ அவங்களுக்கு குடைச்சல் கொடுக்குறதுக்காக பண்ணி இருக்கலாம்.."

"இல்லைனா ஹெல்ப் பண்ற போல நடிச்சு மக்கள் மீடியானு நல்ல பேர் எடுக்குறதுக்காக பண்ணி இருக்கலாம் பிகாஸ் அவரு தான் அந்த பிரச்சனை அப்போ அங்க நிறைய ஹெல்ப் பண்ணி இருந்தாரு, நியூஸ்ல கூட பெரிசா பேசபட்டிச்சு.. சோ இப்படி எல்லாமே யூகம் தான், பட் உண்மைய நீங்க தான் கண்டு பிடிக்கணும்..." என்று ஆதாரம் அடங்கிய பைலை அவனிடம் கொடுத்தார்.

சிறிது நேரம் அதனை புரட்டியவன் கண்ணில் ஒரு விடயம் பட, சந்தேகம் வந்தவனாக "சார், ஹோம்ல வயசு படி தான் பசங்களுக்கு ரூம் பிரிச்சு குடுப்பாங்களா?"

"தெரியலையே நிலவன்.. ஏன் கேக்குறீங்க?"

"சும்மா தான் சார் ஜஸ்ட் தெரிஞ்சிக்க.." என்றான், தன் சந்தேகத்தை சொல்லி அவரை குழப்ப விரும்பவில்லை.. சில நேரம் அது ஏதேர்ச்சியாக நடந்ததாக கூட இருக்கலாம் என்பதால்..

"ஓகே நிலவன் இந்த கேஸ் இனிமேல் நீங்க தான் கேன்டில் பண்ண போறீங்க.. உங்க பங்குக்கு விசாரணைய தொடங்குங்க.. இன்னும் கொஞ்சம் இன்வெஸ்டிகேஷன் மிச்சம் இருக்கு... வெற்றிமாறன் முடிச்சதுல இருந்து தொடங்குனாலும் சரி.. இல்லை உங்க விசாரணைய முதல்ல இருந்து ஆரம்பிச்சாலும் சரி... கூடிய சீக்கிரமே அவன் மேல கேஸ் போடணும் இன்னும் ஸ்ட்ரோங்கா.. இல்லாட்டி எதையாச்சு பண்ணி தப்பிச்சுடுவான்.. என்ன பண்றது காசுக்கு விலை போற அதிகாரிங்க நம்மகிட்ட இருக்குறவர இந்த நாய்ங்க எல்லாம் தப்பிச்சிட்டே தான் இருக்கும்.."

"ஓகே சார் நான் பாத்துக்கிறேன்.. கூடிய சீக்கிரம் உங்களுக்கு இன்போர்ம் பண்ணுறேன்.. அப்பறம் சார் உங்க மகன் விஷயமா என்ன ஆக்ஷன் எடுக்க போறீங்க.."

"நோ ஐடியா.. அவங்க மூவ் என்னனு பாத்துட்டு தான் யோசிக்கணும்.. எப்படியும் சும்மா விட மாட்டானுங்க லெட் சீ.."

"ஓகே சார் என்ன ஹெல்ப்னாலும் கேளுங்க..." என்றவன் சலூட் அடித்து வெளியேறினான்..


அந்த நினைவுகளில் மூழ்கி இருந்தவன் நேரத்தை பார்க்க அவன் ராட்சசி வருவதாய் சொன்ன நேரத்துக்கு பத்து நிமிடம் கடந்திருந்தது.. ஆனால் அவளோ இன்னும் வந்திருக்கவில்லை.. எப்போதும் சொன்ன நேரத்துக்கு சரியாக வருபவள் இன்று ஏனோ இன்னும் வந்தப்பாடில்லை... மேலும் பத்து நிமிடம் பார்த்தவன் அப்போதும் வரவில்லை என்றதும் சற்று பதற்றம் தொற்றிக்கொண்டது... அவள் எண்ணுக்கு இரண்டு மூன்று முறை என அழைக்க, அதுவோ அழைப்பு சென்று கொண்டிருந்ததே தவிர எடுக்கப்படவில்லை.. அதில் அவன் பதற்றம் மேலும் கூட அதன் பின் கடந்த நிலவனின் நேரங்கள் அத்தனையும் டிக் டிக் நிமிடங்கள் தான்...


ஜாதி மல்லி மலரும்.....


கருத்து திரி 👇👇👇

InShot_20240808_094423930.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 13



நிமிடங்கள் கனமாக கடக்க வாயிலையே பார்த்து கொண்டிருந்த நிலவனை கலைத்தது ஸ்கூட்டியின் சத்தம்.. அவளே தான், ஒருவழியாய் அவன் பொறுமையை சோதித்தது போதும் என கடவுள் நினைத்து விட்டார் போலும்.. அவளை நேரில் கண்டதும் தான் மூச்சு சீரானது அவனுக்கு..

அவளோ இது எதுவும் தெரியாமல் இளம் சிவப்பு நிற லோங் ஸ்கேர்ட்டும் அதற்கு ஏற்றது போல் ஆங்காங்கே இளம் சிவப்பு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற கிராப் டாப்பும் அணிந்து நடந்து வந்துகொண்டிருந்தாள்..

அவள் அருகில் வர நிலவனுக்கு மீண்டும் மூச்சு விட சிரமமாகி போனது... இவ்வளவு நேரம் இருந்த யோசனை பயம் எல்லாம் அவளை கண்ட நொடி எங்கு சென்றது என்றுதான் தெரியவில்லை.. அவன் மூளையை அப்படியே முழுவதும் ஆட்கொண்டுவிட்டாள் அதிரல் என்னும் வைரஸ்.. இமைக்க கூட அவன் கருவிழிகள் இடம் கொடுக்கவில்லை.. முதல் முறை அவளை பார்த்த அதே தோற்றம் அன்று போல் இன்றும் மயங்கியே நின்றிருந்தான்....

"ராட்சசி... புடவை கட்ட சொன்னதுக்காகவே இப்படி வந்திருக்கா.. கொஞ்ச நேரத்துல மனிசன் டென்ஷன் பண்ணிட்டாளே.. இருக்க சைஸுக்கு நான் தான் பெரியவனு பேச்சு வேற" என்று முனுமுனுத்தபடி தலையை கோதி ஸ்டைலாக நிற்கவும் அவளும் வரவும் சரியாக இருந்தது..

அருகில் வந்ததும் பார்வையை மாற்றிகொண்டவன் முகத்தை முறைப்பாய் வைத்துக்கொண்டு "சொன்னா சொன்ன நேரத்துக்கு வர தெரியாதா?.. லவ்வுக்காக பைத்தியம் மாதிரி வாழ்க்கை முழுக்க காத்திருக்க வைக்குறது பாத்தாதா?.." என்று கோபத்தில் பொங்க...

அவளோ சாதாரணமாக "ரொம்ப தேடிட்ட போல.. டென்ஷன் ஆகிட்டியா?.. ஒண்ணுமில்ல வர்ற வழில ஒரு குட்டி பொண்ணு வந்து வண்டில விழுந்துட்டா அதான் ஹாஸ்பிடல் கூட்டி போய்ட்டு வர லேட்டாகிடிச்சி..." என்று ஓரிடத்தில் சொன்று அமர்ந்து அவனையும் அமரும்படி செய்கை காட்டினாள்..

"ஆக்சிடென்ட்டா?? அடி ஏதும் பலமா?? இப்போ ஓகேயா அந்த பொண்ணு??? உனக்கு அடி எதுவும் படலயே??? என்ன கூப்பிடிருக்கலாம்ல, ஏன் கூப்பிடல???.." என்றான் மூச்சு விடாமல்

"எப்பா ராசா ஆள விடு நீ கேட்டதுக்கே மூச்சு வாங்குது எனக்கு" என்று அவனை பார்த்து கும்பிடு போட்டவள்.. "அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.. ஜஸ்ட் பயத்துல மயங்கிட்டா.. ஹாஸ்பிடல அட்மிட் பண்ணியாச்சு இன்னைக்கு நைட் ஷிப்ட் போறப்ப ஒருக்கா போய் செக் பண்ணிப்பேன்.."

'ம்ம்ம்" என்றவன் இனி என்ன பேசுவது.. அவளாக தொடங்கட்டும் என அமைதியாக இருந்தான்.. அவனாக பேசமாட்டான் என்பதை உணர்ந்தவள் அவளே ஆரம்பித்தாள் "நான் மறுபடியும் அங்கேயே போக போறேன்.."

"சோ மேடம் மறுபடியும் விட்டுட்டு போக போறீங்க... அதான் போன்லயே சொல்லிடீங்களே அப்பறம் எதுக்கு நேர்ல..." என்றதும் அவள் முறைக்க

"இப்படி பார்த்தா பயந்துடுவோமா?.. இப்போ ஐயா போலீஸ் ஆபிசர்மா.."

"ஐ நோ.. உன்ன எப்பவும் நான் கஷ்டப்படுத்திட்டே தான் இருக்கேன்.. அப்பவும் சரி இப்போவும் சரி... எனக்காக வெயிட் பண்ணி உன் லைப் ஸ்பாயில் பண்ணிக்காத.. இப்போவும் சொல்லாம போயிருக்க முடியும் ஆனா நீ நல்லா வாழ வேண்டியவன்.. உன் மேல எனக்கு அக்கரையும் இருக்கு, அட் தி சேம் டைம் ஒரு பிரண்ட்டா இத சொல்லுறதுக்கான உரிமையும் இருக்கு.. இந்த காதல் கல்யாணம் எல்லாம் எனக்கு என்னைக்கும் செட் ஆகாது..." என்றவள் நிறுத்த

"என்ன மேடம் எல்லாம் பேசி முடிச்சாச்சா இல்ல இன்னும் இருக்கா?.. உன் மேல செம கோபத்துல இருக்கேன் பேசி வாங்கி கட்டிக்காத.... மூனு வருசத்துக்கு முதலும் இப்படித்தான் பைத்தியக்காரி மாதிரி உளறிட்டு போன.. சரி கொஞ்ச நாளைக்கப்பறம் பைத்தியம் தெளிஞ்சி வரட்டும்னு உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து காத்திருந்தா.. நீங்க மூனு வருஷதுக்கு அப்பறம் வருவீங்களாம்.. மறுபடியும் உளறுவீங்களாம் அத நாங்க கேட்டுட்டு இருக்கனுமோ.."

அவனிடமிருந்து தன் உணர்வுகளை மறைக்க எழுந்து சற்று திரும்பி நின்றவாறே பேசினாள் "சொன்னா புரிஞ்சிக்கோ.. இனிமேல் நான் இங்க வர ரீசன் எதுவுமே இருக்காது... சோ பெட்டர் நீ உன் வாழ்க்கைய சந்தோசமா வாழ பாரு... இதையே அட்வாண்டேஜா எடுத்து நெருங்க நினைக்காத.. அது ரெண்டு பேருக்கும் தான் கஷ்டம்.."

"நீ வரலைனா விட்டுடுவேனா... நீயே இப்போ இங்க வரலைனாலும் இன்னும் கொஞ்ச நாள்ல அங்க நான் வந்திருப்பேன்.. இந்த ஜென்மத்துல எங்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு மட்டும் பகல் கனவு காணாம போய் மாமன் கூட எப்படி வாழலாம்னு கனவு காணு.. அது தான் நிஜத்துல நடக்க போறதும் கூட.."

"நீதான் இப்போ பகல் கனவு காணுற, ரியாலிட்டிய யோசிக்க மாட்டேங்கிற.. நான் போக போறேன் திருப்பி வரப்போறதும் இல்லை.. நீயே அங்க வந்தாலும் என் மனசு மாறப்போறதும் இல்லை.. அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்கிது..

"எனக்கு எதுவும் புரியனும்னு அவசியம் இல்ல... புரிஞ்ச வரைக்கும் தாராளமா போதும்.. சொல்லுறேன் நல்லா கேட்டு உன் மூளைல ஏத்திக்கோ.. நிலவனுக்கு அவனோட ஜாஸ்மின் எப்போவும் வேணும்.. சும்மா விட்டுட்டு போறேன் போறேன்னு பேசிட்டு திரிஞ்ச, போக முடியாதபடி ப்ரோமோஷன் குடுத்து கூட வெச்சிப்பேன்.." என்றவனின் பேச்சு புரியாமல் விழித்தவளை அருகில் இழுத்து இரு கைகளாலும் வளைத்து தன் உயரத்துக்கு தூக்கிக்கொண்டான்..

மெல்ல அவன் கன்னத்தை பற்றி காதருகினில் நெருக்கமாய் குனிந்தவன் "என்ன புரியலையா என் மகன் உன் குட்டி வயிறுல விளையாடுவான்னு சொல்ல வந்தேன்.." என்றவன் அவள் முகத்தை பார்த்து ஒன்றை கண்ணை சிமிட்டினான்.. அதில் மயங்கி நின்றவளது ஆழ் மனது விழித்துக்கொள்ள, அவள் பார்வையிலோ அவனுக்கான காதல் ஆயிரம் மடங்காய் கொட்டிக்கிடந்தது...

அவள் விழிகளில் நிரம்பி இருந்த தன் மீதான நேசத்தை உணர்ந்தவன் சற்றும் தாமதிக்காமல் அவள் இதழ்களினுள் புதைந்து கொண்டான்... இவ்வளவு நேரம் இருவரும் மாறி மாறி போட்ட சண்டை வெளியில் நின்று "நான் சிவனேனு தானடா இருந்தேன்" என அவர்களை முறைத்துகொண்டிருந்தது..

மூன்று வருட பிரிவையும் ஈடு கட்ட எண்ணினானோ என்னவோ ஆழ்ந்த முத்தமது மொத்தமாக மோக உணர்வுகளை அவனுள் விழிக்க செய்திருந்தது.. இதழ்களின் சண்டை நீண்ட கொண்டே தான் சென்றது.. விருப்பமின்றி மெல்ல அவள் இதழுக்கு விடுதலையளித்த அவன் இதழ்கள், "கொஞ்சம் வளருடி.." என்று இந்த முறை அவள் கழுத்தை சிறையிட்டு தானும் சிக்கி கொண்டது.. மீளவே வேண்டாம் என்ற பேராசையோடு..

அதுவரை அவன் கட்டிப்பாட்டில் நின்றிருந்தவள், அவனை பலம் கொண்டு தள்ள முயற்சிக்க, அது வெறும் முயற்சியாக மட்டுமே இருந்தது.. அவனது இரும்பு பிடியை தகர்த்த முடியவில்லை.. அவள் மனமும் அதையே விரும்பியதோ என்னவோ, சிறிது நேரம் தன்னை ஒப்புக்கொடுத்து நின்றிருந்தாள் பேதையவள்.. யாரும் இல்லாத தனிமையும் கூட அவர்களுக்கு ஒத்துழைத்தது...

நேரம் செல்ல செல்ல அவன் பிடி இன்னும் வலுக்க ஒரு கட்டத்தில் உணர்வின் பிடியில் சோர்ந்து அவன் மீதே விழுந்தாள் மான் அவள்.. மெல்ல அவளை தன்னிடமிருந்து பிரித்து தரையில் நிற்க வைத்தவன் அவளை ஏக்கமாய் பார்க்க, இதுவரை அவனை சுமந்தவளால், அந்த பார்வை தந்த பாரத்தை சுமக்க முடியாமல் போனது..

அவளும் அவனை விட்டு விலக தான் போராடுகிறாள் வாழ்க்கை மறுபடியும் அவனிடமே அவளை ஒப்படைக்கிறது.. விந்தைகள் நிறைந்தது தானே வாழ்க்கை.. பிரிந்து சென்றது கூட இவள் விருப்பமே.. அந்த காரணங்கள் கூட இன்னும் அப்படியே தான் இருக்கிறது.. மாற்ற முடியாததும் கூட.. அவளுக்கும் அவன் வேணும் தான், ஆனால் பிரிய வேண்டிய சூழ்நிலையை அவளும் வெறுத்தாள்..

"இதுக்காக தான எல்லாம்.. இந்த உடம்புக்காக தான, நீ நினைக்கிறது என்னைக்கும் நடக்காது.. என்ன எப்போவும் தடுக்க நினைக்காத.. எவ்வளவு சீக்கிரம் போகணுமோ அவ்வளவு சீக்கிரமா போய்டுவேன்.. அப்புறம் உன் இஷ்டம், இந்த லவ்வுங்கிற இரிடேட்டிங் பெக்ட்டர விட்டு தள்ளு முதல்ல..." என்றாள் எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறானே என்ற கோபத்தில், அவனை காயப்படுத்தவென்றே..

"எதே இரிடேட்டிங் பெக்டரா... இந்த கையாள அறஞ்சேன்னு வையேன் கன்னம் பன்னு மாதிரி வீங்கும்.. ஒரு அளவுக்கு தான் என் பொறுமையும்.. பொண்ணுகளோட உடம்பு எனக்கு ஒன்னும் புதிசில்லனு உனக்கே தெரியும்.. நீ எதுக்கு இப்படிலாம் பேசிறனு நல்லாவே தெரியுது.. நீ நினைக்கிற ரோஷம் உன் விசயத்துல எனக்கு வராது... இப்போ என்கைல உருகி நின்னியே அது தான் நீ.. போதும் கிளம்பு இனிமேலும் இங்க இருந்தா எங்கிட்ட அடி வாங்குவ..." என்றான் மொத்த கோபத்தையும் அடக்கியப்படி..

அவன் கோபத்தில் ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்றவளை அமைதியாய் வெறித்து நின்றிருந்த நிலவன் "காதல் இல்ல இல்லனு சொல்லிட்டு என்ன மொத்தமா காதலிக்கிறடி பைத்தியக்காரி.." என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் மனதிலோ தீர்க்கமாய் ஒரு முடிவு...

அந்த முடிவை செயற்படுத்த விடாமல் அவன் ஜாஸ்மின் அவனுக்கே அதிர்ச்சி குடுப்பாள் என்பதை நிலவன் அறியும் நேரம், தலை குனிந்து நிற்க வேண்டி வரும் என்பதை யார் அவனுக்கு எடுத்து சொல்வது??



அன்று விடுமுறை காலை நேரத்துக்கே எழுந்துகொண்ட ரம்யா.. இருந்த வேலைகளை எல்லாம் ஓரளவுக்கு முடித்து.. வாசல் தெளித்து கோலம் போடவென வெளியில் வர, வாசலில் அன்றைய நாளுக்குரிய பத்திரிகை கிடந்தது.. அதனை சாமி படத்துக்கு பின் வைத்து கோலம் போட்டு முடித்தவள், குளித்து சாமி கும்பிட்டு, தனக்கான காபியை போட்டு கதிரையில் அமர எண்ணமெல்லாம் வேறு எங்கோ தான் சென்றது..

மனதை திசை மாற்றவே எல்லா வேலைகளையும் செய்தால்.. முன்பெல்லாம் சோம்பேறி கழுதை என ராமுவிடம் திட்டுவாங்கியவள் தான் அவள்.. இன்றோ நிலைமை அதுபோல் இல்லையே.. முடிந்த மட்டும் தேறி விட்டாள் தான்.. ஆனால் ஆங்காங்கே சில வடுகள் இருக்கவே செய்தது... பெரிதாய் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை.. தனக்காக பார்த்து பார்த்து எல்லாம் செய்யும் உறவுகள் அவள் கூடவே இருக்க, அவர்களுக்காகவே அவள் சாதாரணமாய் இருப்பதாய் காட்டிகொண்டாள்...

வாரம் ஒரு முறை வரும் நிலவனின் பெற்றோர் அவளுக்கு பெரிய ஆறுதல்.. தினமும் நிலவன், அதிரல், புகழ் என அவளுக்கு ஒருமுறையேனும் அழைப்பு வந்துவிடும்.. அது அவளுக்கு இத்தனை நாளில் பழகிப்போன ஒன்றும் கூட.... மலரிடம் இன்று வரை ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை, முடிவுரை எழுதிய பக்கத்தை மீண்டும் புரட்டி என்னவாகிட போகிறது என்ற எண்ணம் தான் அவளுக்கு... ராமசாமியும் பென்ஷன் போட்டு அவளோடு இருப்பதாக கூறியும் அவளுக்கு அதில் விருப்பமில்லை.. இன்னும் இரண்டு வருடங்கள் தானே இருக்கிறது என அவரை கண்டிப்புடன் சமாதானம் செய்திருந்தாள்.. பழையபடி அவள் வாழ்க்கை திரும்பி இருந்தது.. அவளும் பெரிதும் மாறிவிட்டாள் என்றே சொல்ல வேண்டும்..

"ரம்யா.. ரம்யா.." என்று அழைத்தபடி உள்ளே வந்த மலர் "அம்மாடியோ! பெரிய பொண்ணாகிட்டடி எம்புட்டு அழகா இருக்க... எங்க சோம்பேறி ரம்யாவ இனிமேல் தேடணும் போலயே.."

"வாக்கா.. காபி சாப்பிடுறியா?.. பசங்க எங்க?.."

"இல்லடி.. வீட்லயே உன் மாமாக்கு போடும் போது நானும் குடிச்சிட்டேன்.. அதுங்க ரெண்டும் சண்டே அன்னைக்கு எப்போ நேரத்துக்கு எழுந்திருக்குங்க.. இன்னைக்கு அப்பா மகன்னு மூனு பேருக்கும் விடிய இன்னும் நேரம் இருக்கே..."

"பாவம் இன்னைக்கு ஒரு நாள் தான தூங்கட்டுமேக்கா.. நீ ஏன் வாசல்லயே நிக்கிற உள்ள வாயேன்..."

"வசந்தி, பாப்பாவ கொண்டு வந்திருக்களாம்டி.. மொத்தமா ஊருக்கே போக போறாளாம், ஜமான் எல்லாம் எடுத்துட்டு போக வந்திருக்கா போல.. அதான் உன்னையும் கூட்டி போகலாம்னு வந்தேன்.. இன்னைக்கு பள்ளிக்கூடம் லீவு தான.. வா ஒரு எட்டு போய் பாத்துட்டு வருவோம்.."

"இல்லக்கா நான் வரல நீ போ.. ராமு வர்ற நேரம் நான் இங்கயே இருக்கேன்.."

"அட வாடி.. பாப்பாவ தூக்கணும்னு நீ தானா எப்பவும் கேட்டுட்டே இருப்ப... அதெல்லாம் ராமுப்பா வந்தா நான் சொல்லிக்கிறேன்" என்று அவளையும் இழுத்துக்கொண்டு சென்றாள் மலர்..

அங்கே வசந்தி எல்லாம் தயார் செய்து வண்டிக்காக காத்திருக்க உள்ளே நுழைந்தனர் இருவரும்.. "என்னடி வசந்தி.. எங்கள எல்லாம் விட்டுட்டு போக போறியா?.. இப்படியாகி போச்சே தங்கமான புள்ள நம்ம பாஸ்கர்.. அவனுக்கா இப்படி ஆகணும்..."

"என்னக்கா பண்றது.. கடவுள் என் வாழ்க்கைய இப்படி எழுதிட்டானே.. இப்போ பொம்புள புள்ளைய வெச்சிட்டு என்ன பண்ண போறேன்னே தெரியலக்கா... இப்போதைக்கு அம்மா அப்பா கூடவே இருந்துக்கலாம்னு தான் கிளம்புறேன்.."

"நீ ஒன்னும் கவலை படாத.. இந்த செல்லத்த பாரு.. இவ இருக்கா உனக்கு.. காலம் போக போக எல்லாம் மாறும்.." என்ற மலர் பேசியபடியே வசந்தியிடமிருந்து குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு ரம்யாவிடம் தந்தவள் மீண்டும் வசந்தியிடம் பேச்சை தொடங்கினாள்...

அவர்கள் சீக்கிரத்தில் பேசி முடிக்க மாட்டார்கள் என்றுணர்ந்த ரம்யாவின் கவனம் அந்த குழந்தையின் பக்கம் திரும்ப... அந்த குழந்தையோ தன் கரம் கொண்டு அவள் கன்னத்தை வருடியது... அந்த பிஞ்சு குழந்தையின் ஸ்பரிசம் அவளுக்கு என்ன உணர்வை கொடுத்தது என அவளுக்கே தெரியவில்லை.. குழந்தையை தட்டி கொடுத்தப்படி வெறுமனே பார்வையாளராக அமர்ந்து கொண்டாள் ரம்யா...

"ரம்யா.. ரம்யா... என்னடி உக்காந்துட்டே தூங்கிட்டியா? நல்ல பொண்ணு போ.. பாப்பாவ வசந்திட்ட குடு.. புறப்படுறா பாரு.."

"சரிக்கா.." என்றவள் குழந்தையை தர.. அம்மா குழந்தை என அவர்கள் பயணம் ஆரம்பமானது.. ரம்யாவின் மனதிலோ தான் செய்தது தவறோ என்ற எண்ணம் துளி கூட தோன்றவே இல்லை.. அந்த குழந்தைக்கு அப்படி ஒரு தகப்பன் இல்லாமல் இருப்பதே மேல் என்ற எண்ணம் தான்... போகும் அவர்களையே பார்த்திருந்த இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்... அதன் பின் அந்த நாள் சிறு சிறு வேலை கொண்டு ரம்யாவை இழுத்துக்கொண்டது..

அவளது வாழ்க்கையை மீண்ட கடவுள் எப்படியும் அவளை வாழ வைத்துவிடுவார்.. காலம் அவளுக்கு சிறந்த பதிலை வைத்திருக்கும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை...



அடுத்த நாள் நிலவனுக்கு நிற்க கூட நேரமில்லாமல் சக்கரம் கட்டி கொண்டு பறந்தது... பிரச்சனை கொடுப்பார்கள் என்று தெரியும் இப்படி என சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை... முரளி கிருஷ்ணன் எப்படி பட்ட மனிதர்.. அவன் பார்த்து வியந்தவரை இப்படி ஒரு நிலையில் காண அவன் கனவிலும் விரும்பவில்லை ஆனால் என்ன செய்வது நிஜத்திலே நடந்துவிட்டதே...

ஐசியூ முன்னிலையில் மனதளவில் உடைந்து போய் நின்றிருந்தார் அந்த மனிதர்.. எதிர்பார்க்காத நிலை தான் ஆனால் கடந்து தானே ஆகவேண்டும்..

உள்ளே முரளிகிருஷ்ணனின் மனைவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.. வெளியே இவர், அவ்வளவு தான் வித்தியாசம் மற்றப்படி போராட்டம் இரண்டும் ஒன்றாக தான் இருந்தது.. தன் காதல் மனைவி, அவருடன் எப்படியெல்லாம் வாழ்ந்தார்.. கடந்த இரண்டு வருடம் அத்தனையையும் அழித்துவிட்டதே..

இரண்டு வருடங்களாக தாம்பதியினருகிடையே பேச்சுவார்த்தை இல்லை.. ஒரு மனிதர் நேர்மையாக வாழ்ந்ததற்கான தண்டனையா இது?.. கட்டிய மனைவியும் புரிந்து கொள்ளவில்லை.. வளர்த்த மகனும் புரிந்து கொள்ளவில்லை.. இந்த இரண்டு வருடத்தில் "ஏன் நான் அவ்வாறு செய்தேன்" என அவர் எண்ணிய நாளே இல்லை, காரணம் அவரை பொறுத்தவரை அவர் செய்தது சரியே... இப்படி யோசனையில் அவர் அமர்த்திருக்க ஐசியூவில் இருந்து டாக்டர் வெளியே வந்தார்.

"சார் உங்க வைப் டேஞ்சர் சோன் தாண்டிட்டாங்க.. பட் கொஞ்சம் சீரியஸ் தான்.. கரெக்ட் டைமுக்கு கொண்டு வந்ததுனால காப்பாத்த முடிஞ்சிது.. உங்க நல்ல நேரம் பிளட்டும் சீக்கிரமே கெடச்சிருக்கு... ஹெவி பிளட் லாஸ் சோ வீக்கா இருக்காங்க... கொஞ்சம் நேரத்தில் நார்மல் வாட்டுக்கு மாத்துனதும் போய் பாருங்க.."

"ஓகே டாக்டர், தேங்க்ஸ்.. " என்றவர் மனைவி பிழைத்த நிம்மதியில் நிலவனின் கையை இறுக பற்றினார்.. இத்தனை நேரமாய், ஆதரவாக அவன் தானே நின்றிருந்தான்..

அப்போது சரியாக போலீஸ் பாதுகாப்புடன் இருவர் அந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.. இருவரும் கைதிகள் அவர்களில் ஒருவன் சிறைச்சாலை உடை அணிந்தும் இன்னொருவன் சாதாரண ஆடை அணிந்தும் இருந்தனர்.

"ஓகே டுவன்ட்டி மினிட்ஸ் தான் டைம்.. சீக்கிரம் பாத்துட்டு வந்துடனும்.. இங்க தான் வெயிட் பண்ணுவேன்.." என்ற சிறை காவல் அதிகாரிக்கு,
கையிலுள்ள விலங்கை காட்டினான் கைதி உடையில் இருந்தவன்..

"பார்டா இவ்வளவு நடந்தும் சாருக்கு கண்ணு பேசுது... ஒரு கொலையாளி உன்ன நம்பியெல்லாம் ரிலீஸ் பண்ண முடியாது இப்படியே போய் பாரு" என்றான் நக்கலாக

அவன் வந்திருக்க வேண்டிய அவசியம் சிறிதும் இல்லை.. ஆனால் அவன் வந்தது பழிவாங்கும் ஆசைக்காக.. இன்று அவனுடைய நாள் ஒன்றும் பேச முடியவில்லை மற்றவர்களால் வேண்டுமென்றே செய்பவனை என்ன தான் செய்வது..

"அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று காத்திருந்தவன் தானே சந்தர்ப்பம் கிடைத்தும் விடுவானா? கையில் உள்ள விலங்கை கூட கழட்ட விடவில்லை.. கோபத்தில் பேச போன நிலவனையும் முரளிகிருஷ்ணன் தடுத்து விட்டார்.. இன்னொரு கைதியாய் நின்றிருந்தவன் பார்வை அதற்கும் முரளிகிருஷ்ணனையே எரித்தது..

தன் பிள்ளைகளை பார்க்க கூடாத தோற்றத்தில் கண்டவருக்கு நெஞ்சே வெடிக்கும் நிலைதான்.. இருவரும் முதலில் தாயை வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்து கொள்ள.. தந்தை ஆனவர் அவர்கள் கூட்டிலிருந்து வெளியே நின்றிருந்தார்....

ஆம் இருவரும் அவரின் பிள்ளைகள் அமரும் ஆதியும் தான் அவர்கள்.. ஒரு தந்தையாய் காண கூடாத காட்சி.. என்ன செய்வது... மகனின் கோபம் ஒரு புறம் மனைவி ஒதுக்கம் இன்னொரு புறமென இருள் சூழ்ந்த நிலை தான் அவருக்கு..

அமர் கடந்த இரண்டு வருடமாக சிறையில் இருக்கிறான்.. அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்தது கூட அவன் தந்தை தான்... அதனால் தான் அவர்களது பாசக்கூடு சிதைந்து சின்னாபின்னமானது.. இன்று அதே நிலை இளைய மகன் ஆதிக்கும் நிகழ்ந்துவிட்டது.. என்ன ஒன்று, இவனுக்கு செய்யாத தப்புக்கு தண்டனை..

இன்று காலையில் தான் ஆதி தன்னை கற்பழித்ததாக ஒரு பெண் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்திருந்தாள். அவனும் தன் தந்தை மீது இருந்த கோபத்தில் அவரை பழிவாங்கவென்றே தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டான்.. அதன் பின் கைது செய்வதை எங்கனம் அவரால் தடுக்க முடியும்.. ஒரு தந்தையாய் இரண்டாம் முறையாய் தோற்றுப்போய் நின்றிருந்தார்..








 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
கேஸ் நிலவனிடம் செல்லவில்லை.. மாறாக அவர்களுக்கு சாதகமான நன்றியுள்ள ஒரு நாயிடமே சென்றிருந்தது.. ஆதியை கைது செய்து அழைத்து செல்லும் வரை முரளிகிருஷ்ணன் அமைதியாக நின்றிருக்க, அவர் மனைவி வெகுண்டழுந்துவிட்டார்.. கோபத்தில் திடீரென அருகில் இருந்த கத்தியால் மணிக்கட்டை வெட்டுவார் என்று எதிர்பாக்காத முரளிகிருஷ்ணன் திணறிவிட்டார்.. பலம் கொண்டு ஆழமாகவே வெட்டப்படிருந்ததில் இரத்தமும் வேகமாகவே வெறியேற மயங்கி சரிந்தார் அவர் மனைவி நீலவேணி...

சரியாக அந்த நேரம் நிலவன் விடயம் தெரிந்து முரளிகிருஷ்ணனின் வீட்டுக்கு வர.. ஒரு நிமிடம் என்னவென்று புரியாமல் திகைத்தவன் உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான். இந்த நிலையில் அவனது துணை அவருக்கு அவசியம் என்பதை உணர்ந்து அவருடனே நின்று கொண்டான்..

நடப்பது அவனுக்கு பெரிதாக என்னவென்று தெரியவில்லை.. குடும்ப விவாகரம் என்று மட்டும் புரிய நாகரிகமாக விலகி நின்று கொண்டவனை, அந்த ஜெயில் அதிகாரியின் செய்கை கோபம் கொள்ள செய்திருந்தது.. இருந்தும் பேச முற்பட்டவனை முரளி கிருஷ்ணன் தடுத்து விட்டார்..

"என்ன மிஸ்டர் நிலவன் சம்பந்தம் இல்லாம ஆஜர் ஆகுறீங்க.. என் கடமைய செய்ய விடாம தொல்லை பண்ணா நான் என்ன பன்றது சொல்லுங்க.. அப்பறம் உங்க மேல கேஸ் போட வேண்டி வந்திட போகுது கவனமா இருந்துக்கோங்க.. புதுசுல இப்படித்தான் துள்ள சொல்லும்.. அப்பறம் துள்ள அந்த கால் இருக்கணுமே... இதுக்கு முதல் உங்க போஸ்ட்ல இருந்த வெற்றிமாறன் பத்தி இன்னும் கேள்வி படல போலயே... கேள்வி பட வெச்சிட்டா போச்சு.." என்று முடித்தவனை அடித்தே கொன்றிருப்பான் அவன் கைகளை முரளிகிருஷ்ணன் பிடித்திருக்காவிடில்..

"அப்படி தான் சைலன்டா நிக்கணும்.. எகிறிட்டு வர்ற வேலை இங்க சரி வராது.. நம்ம ஐஜி சாருக்கு தெரியாத விஷயமா? கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. ஒரு பையன வக்கீலாக்கி இருக்காரு இன்னொருத்தன போலீஸாக்கி இருக்காரு.. என்னவாக்கி என்ன செய்றது அவர் பேச்சு கேக்காம தான் இப்போ இந்த நிலைமை.. இல்லைங்க சார்.."

"என்ன மிஸ்டர் சரவணன் என் பையன் கையால வாங்குன அடி மறந்து போச்சா என்ன... வாய்ப்பில்லையே தழும்பு கூட அப்படியே தான் இருக்கு.. சிங்கம் எங்க இருந்தாலும் சிங்கம் தான்.. ராஜா இல்லாத நேரம் சுண்டெலி என்னதான் வாலாட்டினாலும் ராஜா ஆக முடியுமா? போய் அங்க உக்காருங்க டைமுக்கு சரியா வருவாங்க ஏன்னா அவங்க என்னோட வளர்ப்பு..." என்று பதிலடி கொடுத்தார்.. அவர் சொன்னது போலவே சரியாக வெறியேறியும் இருந்தனர் அவர் பிள்ளைகள்.. அவர்களை மீண்டும் அழைத்து சென்ற போது கூட தந்தை மகன்களிடையே பார்வை பரிமாற்றம் மட்டுமே... அவர்கள் சென்றதும் நிலவன் பேச்சை ஆரம்பித்தான்..

"சார் நீங்க போய் மேடம பாருங்க.. "

"இருக்கட்டும் நிலவன்.. இந்த நிலமைல அவள பாக்குற சக்தி எனக்கில்லை.. மகன்கள பறிகொடுத்து படுத்திருக்கா ஒருத்தனயாவது அவளுக்கு மீட்டு கொடுத்துட்டு தான் அவள பாப்பேன்..."

"என்ன பண்ணலாம் சார்..."

"எனக்கும் தெரியல நிலவன்.. இவன் என்மேல உள்ள கோபத்துல அவன் வாழ்க்கையே பணையம் வைக்கிறான்... படிச்சவன் போலவா பண்ணுறான்... இவனுங்களும் இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல.. என்ன மிரட்ட நெட்ல போடுவாங்கனு தான் நெனச்சிருந்தேன்.. இப்படி கேஸ் அது இதுனு போய்ட்டானுங்க.. இந்த அரை கிறுக்கனும் தேவை இல்லாம போய் மாட்டிக்கிட்டான்.."

"சார் எப்படியும் சீக்கிரமே கோட்ல ஆஜர் படுத்துவங்க.. முடிஞ்ச மட்டும் வெளிய கொண்டு வர ட்ரை பண்ணுவோம்.. இல்லாட்டி ஜாமீன் எடுக்கலாம்.. நீங்க அந்த வீடியோ எனக்கு அனுப்புங்க என்னால முடிஞ்ச அளவுக்கு உதவி செய்றேன்.."

"ஓகே நிலவன் ரொம்ப தேங்க்ஸ்.. அட்வகேட் வேணு கோபால் கிட்ட பேசி இருகேன்.. அவரும் அவர் பங்குக்கு ஆனத செய்றதா சொல்லி இருக்காரு.. இவன் இடைல குழப்பாம இருக்கனும்.. அமர் எப்படியும் இவன் மண்டைய கழுவுவான்.. அவன் பேச்சு மட்டும் தான் இவன் கிட்ட எடுபடும்.. பாக்கலாம்.."

"கவலை படாதீங்க சார்.. எல்லாம் நல்லதாவே நடக்கும்.." என்றவன் வெளியேறினான்... அவன் கொடுத்த வாக்கு நிறைவேறுமா??...


ஜாதி மல்லி மலரும்....


கருத்து திரி 👇👇👇

InShot_20240909_142644506.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top