ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"மாமா... பேசணும்னு சொல்லிட்டு ரொம்ப நேரமா சைலன்டாவே இருக்கீங்களே... ஏதாச்சும் பிரச்சனையா மாமா....."


"ம்ம்ம்ம்... பிரச்சனை தான்.... நான் சொல்ல போறது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் ஆனா நீங்க என் நிலைமைய புரிஞ்சிக்கணும்.... என் பொண்ண விட்டு நீங்க விலகணும்.... நான் சொல்லுறது தப்புனு எனக்கு நல்லாவே தெரியும்... இருந்தாலும் ஒரு அப்பனா எனக்கு இது தான் சரின்னு படுது....

"மாமா"

"முதல்ல நான் சொல்ல வந்தத சொல்லிடுறேன் அப்பறம் நீங்க பேசுங்க ப்ளீஸ்...."

"ம்ம்ம்ம் சொல்லுங்க...."

"எந்த அப்பனும் தன் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு தான எதிர்பாப்பான்... அதே போல தான் நானும் எனக்கிருக்குறது ஒரே பொண்ணு... அவள என்ன விட நல்லா பாத்துக்குற மாப்பிள்ளைக்கு தான கட்டி வைக்க ஆசைப்படுவேன்.... குறைஞ்சது என் அளவுக்கு பாத்துக்குற மாப்பிளையாச்சும் தேட மாட்டேனா.... நீங்க நல்லா பாத்துக்க மாட்டீங்கனு நான் சொல்ல வரல.... உங்க மேல எந்த முன் கோபமும் எனக்கில்லை நீங்க புரிஞ்சிக்கணும்...." என்றார் தான் சொல்லுவதை அவன் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்புடன்

"எனக்கு புரியுது மாமா நீங்க மேல சொல்லுங்க...." என்றவனின் குரலில் இருந்த கோபத்தை அவர் உணரவே செய்தார்...."

"நீங்களும் உழைக்கிறீங்க தான் நான் இல்லனு சொல்லல... ஆனா என் பொண்ண என் அளவுக்கு பாத்துக்க அது போதுமான்னா இல்லைனு தான் நான் சொல்லுவேன்.... எனக்கு என் பொண்ணு நல்லா வாழனும் அவ்வளவு தான்... எப்போவுமே அவ எதுக்குமே கையேந்தி நிக்குற நிலைமை வர கூடாது... அவ ஆசைப்படுறது அவ யோசிக்கிறதுக்கு முதலே அவளுக்கு கிடைச்சிருக்கணும்னு நினைக்கிற அப்பா நான்.... உங்க மேலயோ உங்க குடும்பம் மேலயோ எனக்கு எந்த கோபமும் இல்ல... சப்போஸ் நிலவனுக்கு என் பொண்ண பேசுறதா இருந்தா நான் சந்தோசமா கட்டி குடுத்திருப்பேன்...." என்று பேசிக்கொண்டு போனவரின் பேச்சு அப்படியே நின்றது... காரணம் அவன் கோபம் கையில் இருந்த கிளாசை நொறுக்கி இருந்தது... கோபத்தை அடக்க கிளாசை பிடித்தவன் கடைசி வசனத்தில் அதை சுக்குனூறாக்கி இருந்தான்.... கையில் இரத்தம் வடிவது அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை... ஆனால் இதயத்தில் யாரோ உளி கொண்டு அடித்தது போல் வலித்தது....

"ஐயோ ரத்தம் வருது மாப்பிள.... நான் அந்த அர்த்தத்துல சொல்லல... என்னவோ எண்ணத்துல சொன்னது உங்களுக்கு வேறமாதிரி அர்த்தம் தந்துடிச்சு.... வாங்க ஹாஸ்பிடல் போவோம்...."

"இட்ஸ் ஓகே மாமா... நோ நீட்.... உங்க மனநிலைய நீங்க சொல்லிடீங்க.... உங்க பொண்ணு நீங்க யோசிக்கிறது தப்புனு நான் சொல்ல மாட்டேன்.... ஆனா அவளுக்கும் ஒரு மனசு இருக்குனு நீங்க புரிஞ்சிக்கணும்.... அதுல எப்போவும் நான் மட்டும் தான் இருப்பேன்.... இது உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்னு இல்ல.... எங்களோட நேசம் ஆரம்பிச்சது இப்போனு இல்ல மாமா.... காசு பணம் ஒன்னும் அறியாத காலத்துலயே வளந்தது எங்க காதல்... எங்க காதலுக்குள்ள நீங்க இல்ல யாராலயும் நுழையவே முடியாது..."

"என் மனசுல அவ காதலியா இல்லை மனைவியா தான் இருக்கா... அப்படித்தான் அவளுக்கும்.... என்ன விட யாரோடவும் உங்க பொண்ணு வாழவும் மாட்டா.... நானும் அவள யாருக்கும் விட்டு கொடுக்கவும் மாட்டேன்.... இத நான் கர்வமாவே சொல்லுவேன்.... எத்தன ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உங்க மாப்பிள... நீங்க தான் என் மாமா.... நீங்க இந்த விஷயத்தை அக்செப்ட் பண்ணி தான் ஆகணும் வேற வழி இல்ல.... நாங்க வாழுறத பாத்தா நீங்க உங்க எண்ணத்தயே மாத்துவீங்க அதுக்கு நான் கேரண்டி... நீங்க பேசினது முடிஞ்சிதுனா கிளம்புவோம் மாமா..."

"மாப்பிளை இந்த விஷயம் என் பொண்ணுக்கு...."

"அவளா கேக்காம நான் சொல்லமாட்டேன் மாமா... என்ன நம்பலாம் நீங்க..." என்றவன் அங்கிருந்து அவருடன் கிளம்பிவிட்டான்....


அவன் சொல்லி முடிக்கவும் அங்கு பெரிய அமைதி... அவன் உள்ளங்கை காயத்தை வருடியபடி அங்கு நிலவிய அமைதியை உடைத்தவள்... "அதெப்படி நான் கேப்பேன்னு உனக்கு தெரியும்..." என்றாள் லேசாக குணமடைந்திருந்த அவன் காயத்தில் முத்தமிட்டு அவனை அணைத்து கொண்டவாறு...

"தெரியும்... தட்ஸ் இட்..."

"அதான் எப்படி..."

"அடியேய்... எவ்வளவு பெரிய விஷயம் சொல்லி இருக்கேன்... அதெல்லாம் கேக்காம இத ஏன் டி கேக்குற...."

"அதெல்லாம் எதுக்கு... நீதான் என் அப்பா கேட்ட எல்லாத்துக்கும் சரியா பதில் சொல்லிட்டியே அப்பறம் என்ன?.. எனக்கு தேவை இல்லாத நான் எதுக்கு கேக்கணும்...."

"நீ இருக்கியே... உன்ன திருப்பி திருப்பி டீப்பா லவ் பண்ண வெச்சிட்டே இருக்கடி..." என்று அவள் நெற்றியில் முத்தம் பதித்தான்..

"லவ் பண்றியா என்ன? எனக்கொன்னும் அப்படி தெரியலையே... லவ் பண்றவர் தான் ரெண்டு நாள் என்கூட பேசாம இருந்தாராக்கும்.."

"அது ஒரு மாதிரி டென்ஷன் ஆகிடிச்சு செல்ல குட்டி.. அப்பவே உன்ன பாத்திருந்தேன்னு வெச்சிக்கோ இப்போ பண்ண மாதிரி, ஏன் அதையும் விட ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணி இருப்பேன்... அப்பறம் கல்யாணத்துக்கு முன்ன வளைகாப்பு பண்ணவேண்டி இருந்திருக்கும்... அப்பறம் உன் அப்பாவ யோசிச்சு பாரு...."

"பண்ணுவீங்க பண்ணுவீங்க ஆளையும் மூஞ்சயும் பாரு... ஒரு கிஸ் வாங்குறதுக்குள்ள நான் படுற பா...." என்று பேசிக்கொண்டுபோனவளின் மீதி வார்த்தைகள் அவன் இதழுக்குள் புதைந்து கொண்டது... சிறிது நேரத்தின் பின் அவனிடம் இருந்து விலகியவள்

"அதிசயம் எல்லாம் நடக்குது..."

"என் ஆள் என் உரிமை...."

"அது சரி.... அந்த கவிதா உன் மேல ஒரு கண்ணாவே திரியிறா... உன் கண்ணு சும்மாவும் அவ பக்கம் திரும்பிச்சு..."

"அடியேய் டவல விடுடி... நான் ஏண்டி அவள பாக்கபோறேன்..."

"நானும் பாக்குறேன் இவ்வளவு நடந்தும் எப்படி இந்த டவல் ஸ்ட்ரோங்கா அவிலாமலே இருக்கு...."

"ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி தான்டி... முதல்ல படிச்சு டிகிரி வாங்குற வழிய பாரு...."

"டிகிரி வாங்குறத பத்தி பேசு ஆனா படிச்சுனு ஒரு வார்த்தைய சொருகாத... அதெல்லாம் என் பாட்னர் பாத்துக்குவான்... முதல்ல ஒழுங்கா டிரஸ போடுங்க வாத்தியாரே..... வரட்டா...." என்றவள் ஒரே ஓட்டமாய் ஓடியே விட்டாள்... போகும் அவளையே பார்த்தவன் கண்களில் மித மிஞ்சிய காதலே கொட்டிகிடந்தது.....



ஜாதி மல்லி மலரும்....

கருத்து திரி 👇👇👇




InShot_20240802_003750584.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 07



நாட்கள் இப்படியே உருண்டோடியது..... சில பல மாற்றங்களோடு அவரவர் வாழக்கை நிற்க நேரமில்லாமல் யாருக்கும் காத்திருக்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.....

அன்று மதியம் வேலைக்கு தயாராகி கொண்டிருந்த ராமசாமி ரம்யாவிடம்.. "கண்ணா இன்னைக்கு நைட் தாத்தா வரமாட்டேன்... நைட் டூட்டி போட்டிருக்கு.. மலர் புள்ள கூட தூங்கு.... சேட்ட பண்ணாம இருக்கணும்..." என்றவரின் பேச்சுக்கு அந்த பக்கம் பதில் வரவில்லை என அவள் புறம் திரும்ப கோபத்தில் முகத்தை தூக்கி வைத்திருந்தாள் அவர் அன்பு பேத்தி...

"அடடே... என் ரம்யா கண்ணுக்கு இன்னும் கோபம் போகலையா??... தாத்தா நல்லதுக்கு தானடா சொல்லுவேன்... மலர் பொண்ணு அவ அக்கா பொண்ணு விசேஷத்துக்கு ஊருக்கு போகுது இப்போ போய் நீயும் போனா அவ விசேஷத்த பாப்பாளா? உன்ன கவனிப்பாளா சொல்லு... நாம அடுத்த தடவ அவ ஊருக்கு போகும் போது கண்டிப்பா போகலாம் சரியா?...

"ப்ரோமிஸா கூட்டிட்டு போவேல? சிவகாமி மேல சத்தியம் பண்ணு.."

"சரி சிவகாமி மேல சத்தியம் போதுமா?..." என்று சத்தியம் செய்தவர் அறியவில்லை இப்போதே அனுப்பி இருக்கலாம் என பின்னாளில் வருந்த போவதை...

"அப்போ ஓகே..." என்றாள் புன்னகையுடன்

"இது ரம்யா... முகத்த தூக்கி வெச்சிருந்தா நல்லாவா இருக்கு... அப்பறம் இன்னைக்கு மதியம் கிளாஸ் போகாத கண்ணா.... தாத்தாவால வரமுடியாது.... நாளைக்கு பாத்துக்கலாம்...."

"ம்ம்ம்கூம்... இன்னைக்கு கிளாஸ்ல பரீட்ச்ச இருக்கு ராமு கண்டிப்பா போகணும்... நீ போ நான் பாஸ்கர் அண்ணா கூட போய்கிறேன்..."

"அடி கழுத.. நேத்து என்ன சொன்ன நீ... இன்னைக்கு போக தேவையில்ல சும்மா தான் வர சொல்லி இருக்காங்கன்னு தானே சொன்ன.." என்று அவள் காதை திருக

" ஐயோ வலிக்குது ராமு விடு.... அது நீ அப்போ தான் மலரக்கா கூட விடுவனு சொன்னேன்... அதான் இப்போ விடலையே சரி கிளாஸுக்கே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்..."

"சரியான தொட்டாசுணுங்கி தொட்டாலும் வலிக்கும்னு கத்துவ.... சரி காலையில எப்படியும் நீ பள்ளிக்கூடம் போனப்பறம் தான் வருவேன்.... நீ நைட் அங்கதான் தூங்குவேன்னு மலர்கிட்ட சொல்லிட்டு போறேன்.."

"வேணா வேணா நானே சொல்லிக்கிறேன்... மலரக்கா இப்ப வேலையா இருக்கும்... ஈவினிங் அங்க போறப்ப சொல்லிக்கிறேன் நீ போ..."

"சரி கதவ பூட்டி பத்திரமா இருந்துகோ வறேன்...."

வேலை முடிந்து அடுத்த நாள் காலை சற்று தாமதமாகவே வந்தார்... ரம்யா பள்ளிக்கூடம் சென்றிருக்கும் நேரம் என்பதால் அவளை தேடவும் இல்லை... மலர் வீடும் பூட்டி இருக்க "மலர் புள்ள ஊருக்கு போயிடிச்சு போல.." என எண்ணிகொண்டார்..

மதியம் வரை வீட்டில் தான் இருந்தார் சமைத்து குளித்து வீட்டுவேளை எல்லாம் முடித்த பிறகும் ரம்யா வந்திருக்கவில்லை பள்ளிக்கூடம் விட இன்னும் நேரம் இருந்தது... அவளை சமாதானப்படுத்த எண்ணி தானே சென்று அழைத்து வருவோமென தயாராக... ஸ்டேஷனில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது அவசர வேலை என்று.. பிறகு எங்கே அவளை அழைத்து வருவது.. இரவு பேசிக்கொள்வோமென ஸ்டேஷன் சென்றுவிட்டார்....

மாலை வழமையை விட சற்று முன்பே தான் வந்திருந்தார்... ரம்யா அவள் அறையில் உறக்கத்தில் இருக்க, சமைத்த சாப்பாடு சாப்பிடாமல் அப்படியே இருந்தது... அதை பார்த்தவர் "கடும் கோபமா இருக்கா போல அதான் அவ ரூம்ல தூங்குறா... கோபத்துல அப்படியே சிவகாமி தான்... தூங்குறா போல தூங்கட்டும்... எழுந்தா சாப்பாடு குடுத்துப்போம்..." என்று அவரும் படுத்துக்கொண்டர்... அன்று மட்டுமல்ல அவள் கோபம் அடுத்து இரண்டு நாட்களும் தொடர்ந்தது... அவர் பேச சென்றால் கதவை அடைப்பது... விட்டத்தை பார்த்தே அமர்ந்திருப்பது பயந்து கத்துவது என அவரை பக்கத்திலே அனுமதிக்காத அவள் செய்கை எல்லாம் விசித்திரமாகவே இருந்தது... அதுவும் அப்படியே தொடர உண்மையில் பயந்து போய் விட்டார் அவர்.. மனதில் தோன்றிய யோசனையுடன் அதிகாலையிலே கண்ணயர்ந்தார்...



இன்று நேரத்துக்கெல்லாம் கிளம்பி ஸ்டேஷன் வந்திருந்தான் நிலவன்... பார்க்கவேண்டியே கேஸ் கோப்புக்கள் இருக்க... இன்னும் முடிந்தப்பாடில்லை... தலைவலி எடுத்ததுதான் மிச்சம்... நெற்றியை ஒற்றை விரலால் நீவியபடி அதை பார்த்து கொண்டிருக்க, யாரோ கதவை தட்டும் சத்தம் "எஸ் கமின்.... "

"ஐயா.... "

"சொல்லுங்க ராமசாமி..." என்றான் கோப்புகளை புரட்டியவாரு...

"ஐயா..." என்று அவர் தயங்க

பார்த்துக்கொண்டிருந்த கோப்பை மூடி வைத்தவன் அவரை நிமிர்ந்து பார்த்தான்.... அவர் கசங்கிய முகமே எதுவோ சரி இல்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது..... "சொல்லுங்க ராமசாமி ஏன் தயங்குறீங்க... எதுவா இருந்தாலும் சொல்லுங்க.."

"என் பேத்திய நீங்க தான் ஐயா காப்பாத்தணும்...." என்று கேவலுடன் அழுதார் அந்த பெரிய மனிதர்...."

ஒரு நிமிடம் என்னவோ என திகைத்தவன் "என்னாச்சு எதுவா இருந்தாலும் அழாம சொல்லுங்க.... உக்காருங்க இந்த தண்ணிய குடிங்க முதல்ல..." என்று அவரை தேற்றி, "நீங்க ஓகே தான... இப்போ சொல்லுங்க என்னாச்சு உங்க பேத்திக்கு...."

"என் பேத்தி இப்போ அவளாவே இல்ல..." என்றார் பதட்டமாய்...

"பதட்டப்படாம கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ராமசாமி அப்ப தானே என்னால என்ன நடந்துதுனு புரிஞ்சிக்க முடியும்...."

"சரிங்கய்யா... என் பேத்தி பேரு ரம்யா... என் மக வயித்து பொண்ணு.... இப்போதான் பதினாறு வயசு..... சரியான சுட்டி பொண்ணு எதையாச்சும் பேசிட்டே இருப்பா... கொஞ்ச நேரம் கூட அவளால பேசாம இருக்க முடியாது... ஒரு இடத்துல அவள பாக்குறது ரொம்ப கஷ்டம்.... எப்போவும் எங்க பக்கத்து வீட்டு குட்டி பசங்க கூடத்தான் அவ சேட்டை எல்லாம்.... மத்தபடி வெளிய எங்கயும் போகாம படிப்பு விட்டா வீடுன்னு இருந்துக்குவா..."

"ஆறு வருசத்துக்கு முன்னாடி தான் அவ அப்பன் ஆத்தா ஒரு விபத்துல இறந்துட்டாங்க..... தாய் தகப்பன் இல்லாத பொண்ணுன்னு நானும் பெருசா கண்டிக்கிறதில்ல.... இப்போ ஒரு நாலு அஞ்சு நாளா ரொம்ப அமைதியாவே இருக்கா... என்ன கேட்டாலும் விட்டத்த பாத்துட்டே உக்காந்திருக்கா....சில நேரம் அமைதியா இருக்கா.. சில நேரம் ரொம்ப கோவமா நடந்துக்குறா... நான் கிட்ட போனாலே பயந்து கத்துறா..... இரவுல கூட தூங்குறதில்ல போல... கண் மூடாம அப்படியே உக்காந்திருக்கா..... நேத்து ஏதேர்ச்சியா நான் முழிச்சப்போ தான் எனக்கே இது தெரிஞ்சிது..... எப்போவும் எங்கூடவே தூங்குற பொண்ணு இப்போ பக்கத்துல வரவே பயப்புடுது..." என்று கேவலுடன் கண்ணை துடைத்தவர் மேலும் தொடர்ந்தார்...

"ரொம்ப பயமா இருக்குங்கய்யா... வயசு பொண்ணு வேற.... வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்க நிலைம.... ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடிச்சோனு பக்குனு இருக்கு..... ஆஸ்பத்திரிக்கு கூட்டி போலாம்னா என்ன கிட்டவே விடமாட்டேங்கிது என் புள்ள..... தனியா என்ன பண்றதுனு புரியல.... உங்ககிட்ட உதவி கேட்டு பாக்கலாம்னு தோணிச்சு... பொட்ட புள்ள விஷயம் வேற யாரையும் நம்பவும் முடியல... என் பேத்திக்கு என்னாச்சுனு புரியல சாமி...." என்று கடினப்பட்டு சொல்லி முடித்தவர் அவன் கைகளிலே வயதையும் மீறி ஓ வென்று உடைந்து அழுதார்....

அவனுக்கு சட்டென என்ன சொல்லுவதென்றே புரியவில்லை... வயதுப்பிள்ளை அதுவும் பெண் பிள்ளை விவகாரம்.... சற்று பொறுமையுடனே கையாள வேண்டும் என்பதை யோசித்து கொண்டவன்.... புகழிடம் மேலோட்டமாய் விடயத்தை சொல்லி மூவருமாய் ராமசாமியின் வீட்டை நோக்கி சென்றனர்.....

அங்கே திறந்திருந்த வீட்டினுள்ளே அவள் இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.... உள்ளே செல்ல... ஹால், அறை, சமையலறை எதிலுமே அவள் இருக்கவில்லை.... மெல்ல பின் பக்கம் செல்ல அங்கு சுற்றி அடைக்கப்பட்டு மறைவான கட்டிடமாய் இருந்த குளியலறையில் தண்ணீர் சத்தம் மூவரின் காதையும் அடைந்தது....... ஒருவரை ஒருவர் பாத்துக்கொள்ள, ராமசாமியிடம் உள்ளே செல்ல பணித்து மற்ற இருவரும் வெளியில் நின்று கொண்டனர்....

உள்ளே சென்றவர் மெல்ல கதவை தட்ட அதுவோ சட்டென திறந்து கொண்டது.... அதுவரை பிரம்மையில் இருந்தவள், இவரை கண்டதும் சத்தமாய் கத்த தொடங்கினாள்....

"போ..... வெளிய போ.... நிக்காத போ.... போன்றேன்ல.... ஏன் நிக்கிற???..." என்று ஆக்ரோசமாய் கத்தியவாறு உள்ளே இருந்த வாலியை அவரை நோக்கி எரிந்தாள்.... அது அவரது நெற்றியை நன்கு பதம் பார்த்தது.... அப்போதும் அவர் போகாமலிருக்க, அதன் பின் அவள் பேசியவை அவரை உயிரோடு சமாதியாக்கியது.... எந்த தந்தையும் கேட்க கூடாத வார்த்தைகள் அவை.....

"உனக்கும் பாக்கணுமா???... என்ன முழுசா பாக்கணுமா???... டிரஸ் இல்லாம பாக்கணுமா??... பாரு நல்லா பாரு.... இங்க இங்க எல்லாம் தொடணுமா... வா வந்து தொடு...." என்று தன் உடையை தானே கிழித்து கொண்டிருந்தவளை கண் கொண்டு பார்க்கமுடியாமல் அந்த தந்தை உள்ளம் துடிதுடிக்க அப்படியே மடங்கி அங்கேயே அமந்துவிட்டார்... இந்த நிலையில் இரத்தம் வழிவதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை....

"ஐயோ என்ஜாமி.... நான் தான்டா.... உன் தாத்தாடா கண்ணா.... வேணாடா.... வேணா.... உன் ராமுடா ரம்யாம்மா... இதுக்கு நீ என்ன கொன்னு போட்டிருக்கலாமே..." என்று அவளுக்கு தன்னை உணர்த்த விளைந்தவர், "ஐயோ.... சிவகாமி பாத்தியா.... என்ஜாமிய பாத்தியா...." என்று கடவுள் ஸ்தானத்தில் இருக்கும் தன் மனைவியிடம் தன் பாரத்தை முறையிட்டார்...

சத்தம் கேட்டும் உள்ளே செல்லாமல் பொறுமையாய் இருந்தவன் அதற்கு மேல் முடியாமல் கண்களை மூடிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.....

"ராமசாமி.... ராமசாமி...." என்று குரல் கொடுத்து நுழைந்தவன் குரல் கேட்டு எழுந்துகொள்ள முயன்று முடியவில்லை என்றதும் பதறியவர்.... "ஐயோ.. வராதீங்கய்யா.... வராதீங்க....." என்றார் அவசரமாய்...

"பதறாதீங்க.... நான் கண்ண மூடிட்டு தான் வறேன்...." என தட்டு தடுமாறி வந்து குளியலறை கதவை மூடியவன் வெளிப்பக்கம் கதவை லாக் செய்து அவரிடம்.... "ராமசாமி என்ன பாருங்க... இப்போ நான் கண்ண திறக்கலாம் தான.... உங்க பேத்தி உள்ள தான இருக்கா..."

"ம்ம்ம்ம்"

கண்களை திறந்து அவரை நோக்கியவன், "மெல்ல என்ன பிடிச்சிக்கோங்க நாம வெளில போய் பேசிக்கலாம்...." என்றான் அவர் நிலைமை உணர்ந்து.... வெளியே வந்ததும்... அவர் காயத்தை துடைத்து இப்போதைக்கு ஒரு கட்டு போட்டுவிட்டவன்...

"ராமசாமி... இப்போ நீங்க உடைஞ்சு போற நேரமில்லை.... இப்போ உங்க பேத்திய நீங்க தான் தேத்தணும்... என்னாச்சுன்னு முதல்ல தெரிஞ்சிக்கணும்... அதோட இவ்வளவு நேரம் தண்ணிக்குள்ள இருக்குறது அவளுக்கு நல்லதில்ல.... பக்கத்துல லேடிஸ் யாராச்சும் இருக்காங்களா????..... நம்பிக்கைக்குரியவங்களா இருக்கணும்...."

"இங்க பக்கத்து வீட்டுல மலர்னு ஒரு பொண்ணு இருந்திச்சு தம்பி.... அவ கூடவும் அவ பசங்க கூடவும் தான் ரம்யா எப்போவும் இருப்பா.... இப்போ அவங்களும் இங்க இல்லைங்களே.... சொந்தம்னு சொல்லிக்க யாருமில்ல... இங்க வேற யாரையும் நம்பலாமானு தெரியலையே...." என்றார் பரிதவிப்புடன் நடுக்காட்டில் தனித்து விடப்பட்டவர் போல... அவர் தோற்றம் ஆனாதரவற்ற குழந்தையையே அவனுக்கு நினைவூட்டியது.....

"ஓகே நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க கொஞ்சம்... நான் பாக்குறேன்...." என்றவனின் யோசனை யாரை அழைப்பது என்றே.... அவன் தோளை பற்றி ஆறுதலளித்த புகழ் "அம்மாவை கூப்பிடுவோமா மச்சான்...."

"ம்ம்ம்கூம்... அம்மா ஸ்ட்ரோங் தான் பட் இந்த சிட்டுவேஷன் ஹண்டில் பண்ணிக்க மாட்டாங்க புகழ்.... கீதாவ கூப்பிடலாம்னா அது இன்னொரு வளந்த குழந்த.... வேற ஆப்ஷன் தான் யோசிக்கணும்...."

"ஸ்டேஷன்ல லேடி கான்ஸ்டபில் யாரையும் கூப்பிட்டு பாக்கவா...."

"நோ புகழ்... எல்லாருமே ராமசாமிக்கு தெரிஞ்சவங்க, அவங்களுக்கு விஷயம் போறத அவர் விரும்ப மாட்டார்..." என்று சொன்னவனின் யோசனையில் ஒரு பெயர் உதிக்க... "ஓகே மச்சான் நான் போய் கூட்டிட்டு வறேன்... நீ இங்க பாத்துக்கோ... வெளில எங்கயும் போகாத... அவர் கூடவே இரு.... அந்த பொண்ணு உள்ள இருக்கு, ஏதும் சத்தம் வந்தா என்னனு பாரு.... கதவ திறக்காத...."

"ஓகே மச்சான்... எதாவதுனா கால் பண்ணு... போய்ட்டு சீக்கிரம் வா..."

வாகனம் ஓட்டிகொண்டிருந்தவன் மனம் ஒருநிலையில் இருக்கவில்லை.... அந்த வளர்ந்த குழந்தையின் கூக்குறலே காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.... இருந்தும் மனதை திடப்படுத்தியவனுக்கு ஓரளவு நடந்திருப்பதை அனுமானிக்க முடிந்தது... இருந்தும் முழுதாய் என்ன இருக்கிறது என்பது கேள்விக்குறியே.... இது பொறுமைக்கான நேரம் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டவன்... அன்று சேமித்து வைத்திருந்த அவள் எண்ணிற்கு தொடர்பு கொள்ள, சிறிது நேரம் அழைப்பு சென்று பின் அப்பக்கம் இருந்து துண்டிக்கப்பட்டது...

"இவள.... இவ வேற இருக்குற நிலைம தெரியாம மனிசன டென்ஷன் பண்ணுறாளே...." என்று மீண்டும் முயற்சிக்க இந்த முறையும் அதே பதில் தான் அந்த பக்கம்.... "இது சரி வராது நேர்ல போய் பாப்போம்" என்றவாறு வண்டி ஓட்ட.... அவன் கையில் போலீஸ் ஜீப் பறந்தது.... நினைத்ததை விட முன்பே ஹாஸ்பிடல் வளாகத்தை அடைந்தவன் முன்னேறி நடந்தான்....

"எக்ஸ்கியூஸ் மீ சிஸ்டர்.... இங்க டாக்டர் அதிரல கொஞ்சம் மீட் பண்ண முடியுமா?... இட்ஸ் அன் எமஜென்சி.... அவங்க கேபின் எங்க இருக்கு...."

"சூர் சார்... என்னோட வாங்க நான் கூட்டி போறேன்...." என்று முன் சென்ற தாதியை பின் தொடர்ந்தான்...

"சார் இதோ இந்த ரூம் தான் மேடமோடது... உள்ள வெயிட் பண்ணுங்க.. இந்நேரம் ரவுன்ஸ் முடிஞ்சிருக்கும் இப்போ வருவாங்க..."

"ம்ம்ம்ம் ஓகே..." என்று உள்ளே அமர்ந்தவன் மீண்டும் அவள் எண்ணுக்கு அழைக்க இப்போதும் அதே பதில் தான்.... நிலவனின் கோபம் அவள் மேல் எல்லை கடந்தது... எப்போதும் நிதானமாய் இருப்பவன் அவன், இன்றோ நடந்த சூழ்நிலை அவனை நிதானமாய் யோசிக்க விடவில்லை.... அந்நேரம் சரியாக அவளும் உள்ளே வர....

"என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல.... பெரிய இவளா நீ.... கால் பண்ணினா ஆன்சர் பண்ண மாட்டீங்களோ?.... ஒரு மனிசன் உயிர் போற அவசரத்துல கூப்பிட்டாலும் இப்படி தான் ரியாக்ட் பண்ணுவியா???.... நீ எல்லாம் என்னடி டாக்டர்..." என்று கோபமாய் கத்தியவனை அழுத்தமாய் பார்த்தவள் எதுவும் பேசாமல் கைகட்டி நின்றவாறே கண்களால் அவனுக்கு அருகில் இருந்த நீரை அவனுக்கு காட்டினாள்..... அத்தனை கோபத்திலும் அவள் செய்கைக்கிணங்க அதனை அருந்தியவனுக்கு கோபம் கொஞ்சம் மட்டுபடவே செய்தது.. அதன் பிறகே செய்த தவறும் புரிய .... "செத்தடா நிலவா நீ..." என தனக்கு தானே திட்டிகொண்டான்.

"ஜாஸ்..." என்று பேச வர... "அதிரல்..." என திருத்தினாள்

"ஓகே மிஸ் அதிரல்ல்ல்... இப்போ ஒரு பொண்ணா, டாக்டரா உங்க ஹெல்ப் எனக்கு தேவைப்படுது... இந்த விசயத்துல வேற யாரையும் நம்பி ஹெல்ப் கேக்க முடியாது.... கொஞ்சம் என்கூட வர முடியுமா??...." என அந்த அதிரலில் ஒரு அழுத்தம் குடுத்தே உச்சரித்தான்...

"என்ன விஷயம் மிஸ்டர் வண்ண நிலவன்.... என் ஹெல்ப் உங்களுக்கு தேவைப்படுதா ஆச்சரியமா இருக்கே..." என்றதில் பொறுமை இழந்தவன்

"அதிரல் பீ சீரியஸ்.... விஷயம் ரொம்ப சென்சிடிவ்...." என தொடங்கியவன் சூழ்நிலையை சுருக்கமாய் அவளுக்கு விளக்கினான்.... நிலைமையை புரிந்து கொண்டவள்.... உடனடியாக சில மருந்து, தேவைப்படும் பொருட்கள் என்பவற்றை எடுத்துக்கொண்டு அவனோடு புறப்பிட்டாள்.....


வண்டியில் ஆழ்ந்த மௌனம்.... எதுவும் பேசவில்லை இருவரும்..... அதிரலுக்கும் இது கடக்கமுடியாத கனமான நிமிடங்கள் தான்...... இந்த அளவு இல்லை என்றாலும் இதனை போல அவளும் நிர்கதியாய் நின்றிருகிறாளே.... பெண்ணுக்கு ஒரு தாயின் அருகாமை முக்கியான நேரத்தில் தாயுமில்லாமல், வேறு துணையும் இல்லாமல் போவதெல்லாம் கொடுமை....

தாய் இறந்த பின் அந்த அதிர்ச்சியில் தந்தை இஸ்தானத்தில் இருக்க வேண்டிய தாத்தாவும் கோமாவுக்கு சென்று விட வாழ்க்கை அதே இடத்தில் ஸ்தம்பித்து போன உணர்வு அவளுக்கு.... இருந்தும் அந்த வயதிலேயே தன்னை தேற்றிகொள்ளக்கூடிய மன தைரியத்தை கடவுளே கொடுத்தார் என்பதில் மிகையில்லை.... யார் கைவிட்டாலும் கடவுள் விடுவதில்லையே...

அன்று தந்தையாகபட்டவரின் பேச்சில் எதை புரிந்து கொண்டாளோ??? அந்த சிறு வயதிலேயே தன் வட்டத்தை அவள், தாத்தா என்பதாய் சுருக்கிக்கொண்டாள்.... தந்தை என வளையவரும் பிறவியையும் கணக்கிலெடுப்பதில்லை.... கூடவே ஒட்டி வந்த ஒட்டுண்ணிகளையும் கருத்தில் கொள்வதில்லை...

கோமாவில் இருக்கும் ராஜய்யா வீட்டிலே வைத்தே கவனிக்கப்பட்டார்.... அவரையும் அவளையும் கவனிக்கவென்றே தனியாக நர்ஸ் ஒருவரின் உதவி, அவர்களது குடும்ப வக்கீல் வேணுகோபால் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.... அந்த குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர் அவர்... ராஜய்யாவின் நெருங்கிய நண்பரும் கூட.... இதில் கலையரசனால் கூட தலையிட முடியவில்லை....

அப்போது அதிரலுக்கு வயது பத்து.. பேச்சு ஓரளவுக்கு வந்திருந்தது.... அன்று விடுமுறை வீட்டில் தான் இருந்தாள்.... தாத்தாவை கவனிக்கும் நர்ஸ் கமலா ஆண்ட்டி அன்று வரவில்லை... அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்பதை மதியம் தான் கவலையுடன் கூறி இருந்தார்.... இவளும் ஒரு இரவு தானே தான் பார்த்துக்கொள்வதாக அவரை சமாதானம் செய்திருந்தாள்.... இத்தனை வருடம் கூடவே இருப்பதால் அவளுக்கும் ஓரளவுக்கு கமலா செய்யும் வேலைகள் அத்துப்படி... சமையலும் சரி தாத்தாவை பார்த்து கொள்வதிலும் சரி....


நேற்றே கமலா படுக்கை விரிப்பை மாற்றியதால் இன்று மாற்ற வேண்டிய அவசியம் இருக்கவில்லை அவளுக்கு.. எனவே மெல்ல உடம்பை வெந்நீரில் துடைத்து ஆடைகளை மாற்றி விட்டவள்... அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்தையும் கொடுத்தாள்... பின் அவர் அருகில் அமர்ந்தவாறு அவருக்கு பிடித்த ராமாயணத்தை அவருக்கு வாசித்து காட்டி கொண்டிருந்தாள்.. அவர் கேட்கிறாரா என்றெல்லாம் கவலை கொண்டதில்லை.. கொஞ்சநாளாக தான் பேச்சு வருவதால் சாராளமாக பேச முடிவதில்லை ஓரளவுக்கு மெதுவாகத்தான் பேச முடிடைந்தது... விரைவாகவோ பதட்டமாகவோ பேசினாள் சட்டென்று திக்கி விடும் அவள் பேச்சு....

வாசித்து கொண்டிருந்தவளுக்கு திடீரென முகமெல்லாம் வியர்த்து, அடி வயிற்றில் ஊசி கிழிப்பது போல் ஒரு வலி... இருந்தும் புறக்கணிந்தவள்... மீண்டும் இயல்பு போல் படிக்க தொடங்க, வலி செக்கனுக்கு செக்கன் அதிகரித்ததே தவிர குறையவில்லை.... வயிற்றை பிடித்தபடி கீழே விழுந்தவள்..
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"தா...த்....தா வலி...க்...குது முடி...யல... என்ன...வோ பண்ணு...து தாத்...தா... நீ வாவே...ன் ஐயோ... பிளட் வருது தாத்தா... நான் சாக போறேனா... சாவுறது இப்ப..டித்..தான் வலிக்..குமா???" என்று திக்கி திணறி பேசியவளுக்கு தொண்டையும் சேர்ந்து வலித்தது.... முதல் தடவை என்பதாலோ என்னவோ உதிரபோக்கு மிக அதிகமாகவே இருந்தது.... தான் வயதுக்கு வந்துவிட்டோம் என்பதையே உணராமல், தனக்கு என்னவோ நடக்கிறது என பயந்து போன குழந்தையின் குரல் அந்த அறையிலேயே எதிரொலித்தது....

ஒரு கட்டத்தில் சத்தம் போடவே அவளுக்கு வலு இருக்கவில்லை.. "வா தாத்தா..." என்று சிறிது நேரம் வாய்க்குள்ளேயே முணங்கியவளின் வலி மேலும் அதிகமாக பயத்தில் தொண்டை வறண்டு விட்டது.. தாகத்துக்கு தண்ணீர் தேட, அதுவோ அந்த அறை மூலையில் மேசை மீது இருந்தது.... "மா.." என மெல்ல முனங்கியபடி உடம்பை அசைத்து மேசை அருகே செல்லவே பத்து நிமிடம் பிடித்தது அவளுக்கு.. கைகளை எட்டி எடுக்க பார்த்தும் முடியாது போக, அதற்கு மேல் வலுவில்லாமல் அவ்விடத்திலேயே மயங்கிவிட்டாள்...

அவள் நிலை உணர்ந்து கடவுள் இரக்கம் கொண்டாரோ என்னவோ மெத்தையில் மரம் போல் படுத்திருந்த ராஜய்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.... மெல்ல அவருக்கு உணர்வுகள் வந்திருந்தாலும் முதல்லில் புரியாத பேத்தியின் நிலை அவள் கத்தியதும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய தொடங்கியது.... இருந்தும் மூன்று வருடமாக அசையாத உடம்பு இப்போ அசைவுக்கு ஒத்துழைக்கவில்லை.... மௌனமாக கண்ணீர் வடிக்கவே முடிந்தது அவரால்... யாராவது வரமாட்டார்களா??? பேத்தியை பார்க்க மாட்டார்களா என வாசலையே பார்த்திருந்தார்... அந்த இரவு அப்படியே கொடூரமாய் தான் நகர்ந்தது அவருக்கு, அதிகாலையில் கமலா வரும் வரை..

காலையில் அறைக்கு வந்தவர் கண்டது இரத்தம் தோய்க்கப்பட்ட தரையையும் மயங்கி கிடந்த அதிலரலையும் தான் உடனடியாக செய்யடப்பட்டவர் மருத்துவ உதவியை நாடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்து விட்டார்... அதன் பின்னரே ராஜாய்யாவின் நிலையை உணர்ந்து இருவரையும் சேர்த்தே மருத்துவமனை அழைத்து சென்றார்.... இருவரின் நிலையும் அன்று மோசமாகத்தான் இருந்தது.... அவள் குணமாக அன்றிலிருந்து சரியாக ஐந்து நாட்கள் பிடித்தது.... இன்றளவிலும் அவளுக்கு மறக்க முடியாத நாட்கள் அவை... ஒவ்வொரு மாதமும் அந்த நாளை ஞாபகபடுத்திவிட்டே செல்லும் அவளது மாதாந்த சுழட்சி....

பழைய ஞாபகங்களின் தாக்கம் அவள் கண்களில் கண்ணீராய் உருவெடுத்தது.... தான் காணப்போகும் அந்த சிறு பெண்ணுக்காகவும் தான்.... அதனை அவன் காணாமல் மறைத்துக்கொண்டாள்... இருந்தும் விடாக்கண்டன் அவன் கண்ணிலிருந்து அது தப்புமா என்ன?

அந்த வீட்டை அடைந்ததும் அதிரல் இறங்கி உள் நுழைய விளைந்த நேரம் நிலவன் குரல் அவளை நிறுத்தியது....

"லுக் மிஸ் அதிரல்... இப்போ நீங்க உள்ள போனா, அந்த பொண்ணு ரம்யா ரொம்ப வயலண்டா பிகேவ் பண்ண நைன்ட்டி பெர்சன்ட் வாய்ப்பிருக்கு.... பட் நீங்க மட்டும் தான் அவள தனியா ஹண்டில் பண்ணி ஆகணும்.... ஏன் சொல்றேன்னா அந்த பொண்ணு டிரஸ் எப்படி இருக்கும்னு சொல்ல தெரியல.... டிரஸ் ஓகே ஆனதும் குரல் குடுத்தா போதும் நான் வருவேன்.... நானும் உங்க கூடவே தான் இருப்பேன் பீ ஸ்ட்ரோங்.... எந்த காரணத்துக்காகவும் நீங்க உடைஞ்சிட வேணாம்... இப்போ உங்க ஹெல்ப் அவளுக்கு கண்டிப்பா வேணும் அத ஞாபகம் வெச்சுக்கோங்க... இப்போ போலாமா?...." என்றான் உன்னை நானறிவேன் என்பதாய்.....

"ம்ம்ம்..." என்று தலையசைத்தவள் அவனை பின் தொடர்ந்தாள்..... உள்ளே நுழைந்த இருவரும் கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றனர்....


ஜாதி மல்லி மலரும்......


கருத்து திரி 👇👇👇



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 08



இருவரும் உள்ளே செல்ல.. அங்கே சமையலறை கதவின் வெளி பக்கம் புகழ் நின்றிருக்க உள்ளே பேச்சு சத்தம் கேட்டது....


"என்னாச்சு புகழ் இங்க ஏன் நிக்கிற.... ராமசாமி எங்க..." என்று உள்ளே எட்டி பாக்க விளைந்தவனை தடுத்தவன்....

"அந்த பொண்ணு ரொம்ப வயலண்டா பிகேவ் பண்ணுது நிலவா. சுயநினைவுல இருக்க மாதிரி தெரியல.. கிட்ட போய் கண்ட்ரோல் பண்ணலாம்னா... கிட்ட கூட போக விடமாட்டேங்குறா... அதோட டிரஸும் ரொம்ப மோசமா இருக்கு உனக்கு தான் தெரியுமே...." என்றவனின் குரலில் இருந்த வேதனை மற்ற இருவருக்கும் புரியவே செய்தது. திடீரென ராமசாமியின் சத்தம் பெரிதாய் கேட்டது....

"ஐயோ.... வேணாம் டா... நான் போயிடுறேன்.... வேணா... அத கீழ போடு....."

"எரியுது... உடம்பெல்லாம் எரியுது.... பாரு இங்க இங்க இங்க எல்லாம் காயம்... வலிக்கிது..... செத்துட்டா வலிக்காது தான...." என சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருந்தாள்...

சத்தம் கேட்ட நிலவன் "ராமசாமி..." என அழைக்க

"ஐயா... எஞ்சாமி சாக போகுதுயா.... காப்பாத்துங்க...." என்ற கதறல் தான் வெளியில் இருப்பவர்களுக்கு கேட்டது... இனியும் பொறுமைக்கும் இடமில்லை என உள்ளே நுழைந்தான் நிலவன்...

அங்கே மண்ணெண்ணெய் கேன் உடன் எரியும் அடுப்பின் அருகில் நின்றிருந்தாள் ரம்யா.... அறை நிர்வாணமாய் தான் அவள் ஆடை தொங்கிகொண்டிருந்தது.... வெளியில் தெரிந்த இடங்களில் எல்லாம் இரத்தம் கண்டிப்போன காயங்கள் தான்... ஆடை அவிழ்ந்திருப்பதெல்லாம் அவள் உணர்வில் இல்லை.. இந்த இடத்தில் அவள் குழந்தை... வேறு எதனை அவளிடம் எதிர்பாக்க முடியும்....

அதிரலின் கண்களுக்கு தாய் நின்ற கோலமே தெரிந்தது, அவளோ உணர்வுகளின் பிடியில் ஏழு வயது அதிரலாய் தான் நின்றிருந்தாள்.. அந்த சமையலறையே ஸ்தம்பித்து நின்ற நேரம், உடனே நிலைமையை புரிந்து கொண்ட நிலவன் அவளின் அருகில் செல்ல கால்களை வைத்த கணம் மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி கொண்டாள் அந்த பெண்.... ஏற்கனவே அடுப்பு ஓன் செய்யப்பட்டிருந்தது.... சிறிது முன்னோக்கி அவள் அசைந்தாலும் விளைவு விபரீதம் தான் என்கிற நிலைமை... மேலும் நகர முடியவில்லை அவனால்... எங்கே தான் நகர்ந்தால் அவளும் முன்னேறி விடுவாளோ என்ற பயம் தான் அவனுக்கு...

"மச்சான்... போகாதடா.. அங்கேயே நில்லு... அவ ஒரு ஸ்டேப் முன்னாடி வெச்சாலும் கஷ்டம்டா..." என்று புகழ் சொல்ல ஆமோதிப்பாய் தலையசைத்தவன்... ஆண்களை கண்டால் பதறுகிறாள்... பதற்றம் விபரீதத்தில் போய் முடியலாம்.... இப்போதைக்கு அவன் கடைசி ஆயுதம் அதிரல் என்கிற நிலை தான்....

"ஜாஸ் ப்ளீஸ் டூ சம்திங்.... குயிக்..." என்று அதிரலை நோக்கி அவன் கத்த, அந்த குரலுக்கே அவள் சுய உணர்வு பெற நிலைமை புரிந்தது.... அந்த அறையை சுற்றி நோட்டம் விட்டவள் அருகில் இருந்த பெரிய நீர் நிரம்பிய மட்பாண்ட குடம் ஒன்றை அந்த இடத்திலேயே தூக்கி எரிந்து உடைத்திருந்தாள்.... அதில் ஏற்பட்ட பெரிய சத்தமொன்றில் அனைவரது கவனமும் அவள் பக்கம் திரும்பியது... அவள் எதிர்பார்த்தது போல ரம்யாவின் கவனமும் சேர்த்து.... ரம்யாவின் கண்களை நேருக்கு நேர் சந்தித்தவாறு அவளோட உரையாடலை தொடர்ந்தாள்...

"ரம்யாமாக்கு என்னாச்சு.... அச்சச்சோ டிரஸ் எல்லாம் ஈரமாகிடுச்சா?..." என்ற இவள் குரலுக்கு கட்டுப்பட்டது போல் ரம்யாவும் குனிந்து அவள் ஆடையை பார்த்துக்கொண்டாள்...

"புது டிரஸ் அக்கா வெச்சிருக்கேனே.. சிவப்பு கலர் டிரஸ்... அதில மஞ்சள் கலர்ல பெரிய ரோஜாப்பூ.. ரம்யாக்கு பிடிக்குமா?..." என்று ஏற்ற இரக்கதோடு அவள் கவனம் வேறு பக்கம் திரும்பதவண்ணம் அவளை யோசிக்க வைக்க பேசியபடி மெல்ல அவளை நோக்கி நெருங்க, அவளும் இவள் பேச்சுக்கு கட்டுண்டது போல அமையாய் நின்றிருந்தாள்.....

மெல்ல கவனமாய் அவளை நெருங்கிவிட்டிருந்த அதிரல் "என்னடா இது ஒரே ஈரம்... குளிச்சிட்டு அப்படியே வந்துட்டியா...." என அவளை மெல்ல தொட... தொடுகைக்கு உணர்வு வந்தது போல கையில் இருந்த மண்ணெண்ணெய் கேன் கீழ விழ இருவர் மீதும் மண்ணெண்ணெய் பட்டு தெரித்தது..... பின் சிறிதும் நேரம் வீணடிக்காமல் ஏற்கனவே தயாராக கையில் வைத்திருந்த மயக்க ஊசியாய் அவள் உடம்பில் செலுத்தி அவள் மயங்கி சரியவும் பிடித்துக்கொண்டாள்.... அப்போது தான் அங்கிருப்பவர்களுக்கு மூச்சே வந்தது....

உடனடியாக அடுப்பை ஆப் செய்த நிலவன்... அதிரலின் கையில் இருந்த ரம்யாவை தூக்கியவன் அதிரலுக்கு கண் காட்ட அவளும் அவனை தொடர்ந்தாள்.... நேரே குளியறளைக்குள் தூக்கி சென்றவன் சவரை திறந்து அவளை அதன் கீழ் சிறிது நேரம் நிற்க வைத்தவன் அதிரலிடம் அவளை ஒப்படைத்து வெளியே நின்றுகொண்டான்..

புகழ் தேடி கையில் மாட்டிய ஆடை ஒன்றை கொண்டு வந்து தர, அதிரலும் அவளுக்கு மாற்றி விட்டாள்... இது எல்லாம் துரித கதியில் தான் நடந்தது..

மீண்டும் அவளை தூக்கி அறைக்குள் மெத்தையில் படுக்க வைத்தவன் கதவடைத்து வெளியே நின்று கொண்டான்.... இதனை எல்லாம் அதிர்ச்சியிலே பார்த்துக்கொண்டிருந்தார் ராமசாமி.... அவர் வயசுக்கு இன்று அனுபவித்தது எல்லாம் அவரை புரட்டி போட்டிருந்தது....

"டேய் மச்சான்..." என்று தன் தோள் மேல் கைவைத்த நண்பனின் கையை இவனும் பிடித்துக்கொண்டவன் சட்டென யோசனை வந்தவனாக... அருகே நின்ற ராமசாமியிடம்

"ராமசாமி... ரம்யா போன் ஏதாச்சும் யூஸ் பண்ணுவாளா?...."

"ஆமாங்கய்யா... பள்ளிக்கூடம் போய் வரனு இருக்க புள்ள தகவல் சொல்லணுமேனு, சின்ன போன் ஒன்னு வாங்கி குடுத்திருந்தேன்... இருங்க எடுத்துட்டு வரேன்... "என்றவர் சென்று சிறிய பட்டன் தொலைபேசி ஒன்றை எடுத்தும் வர அதனை பார்த்தவன் இடம் வலமாக தலையசைத்து கொண்டு வாங்கினான்....

"இது நமக்கு பெரிசா யூஸ் ஆகாது.... வாட்ஸாப்... பேஸ்புக்... இப்படி ஏதாச்சும் இருக்க ஸ்மார்ட் போனா இருந்தா ஏதாச்சும் இருக்கானு பாக்க முடியும்... இதுல கஷ்டம் தான்.... ஆனா ட்ரை பண்ணலாம்.." என்று புகழ் அவருக்கு விளக்கி கொண்டிருக்க நிலவன் அந்த தொலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தான்....

"ராமசாமி... ரம்யா இந்த போன் மட்டும் தான் வெச்சிருந்தாளா?...

"எனக்கு தெரிஞ்சி இது மட்டும் தான் ஐயா.... வேற போன் வாங்கி பாவிக்கிற அளவுக்கு அவகிட்ட ஏதுங்கய்யா பணம்?...

"ஓகே... மலர், பாஸ்கர், ராகவி அப்பறம் உங்க நம்பர்... இது நாலும் தான் ரம்யா போன்ல சேவ் பண்ணி இருக்குற நம்பர்... மலர் சொல்லி இருக்கீங்க.. இதுல பாஸ்கர் ராகவி என்கிறது?..."

"ராகவி அவளோட கூட படிக்கிற பொண்ணு... பாஸ்கர் இந்த ஏரியா ஆட்டோ டிரைவர்.... அப்பப்போ அவசரம்னா அந்த தம்பி ஆட்டோல தான் ரம்யா பள்ளிக்கூடம் கிளாஸ்னு போகும்...."

"பாஸ்கர் எப்படி?..."

"ரொம்ப தங்கமான புள்ளங்கய்யா... நல்ல மரியாதையாவும் நடந்துக்கும்... இங்க பக்கம் தான் வீடு.. ரம்யாகிட்ட கூட பாசமா தங்கச்சி தங்கச்சின்னு தான் பேசும்.."

"அவங்க வீட்ல எத்தனை பேர்..."

"அவனும் அவன் சம்சாரமும் தான் தம்பி.... இப்போ ரெண்டு வாரம் முன்னாடி தான் அந்த புள்ள பிரசவத்துக்கு தாய் வீட்டுக்கு போயிருக்கு... எங்க கிட்ட கூட வந்து சொல்லிட்டு தான் போச்சு... "

"ம்ம்ம்..." என்றவன் அமைதியாய் யோசிக்க தொடங்ககியவன் மனது இப்போதைக்கு பாஸ்கர் மீது ஒரு சந்தேக வட்டம் போட்டுகொண்டது...

சரியாக அந்த நேரம் கதவை திறந்து வெளியே வந்த அதிரலின் முகம் சோகத்தை தத்தெடுத்திருந்தது... பார்த்துக்கொண்டிருந்த போனை பாக்கட்டினுள் போட்டுகொண்டவன் அவளை நெருங்கினான்... கண்களால் அவன் ஏதோ வினவ அவளும் ஆமோதிப்பதாய் தலையசைத்தாள்.... கண்களை மூடி திறந்தவன் மனதில் இத்தனைக்கு பிறகும் அவரிடம் மறைத்து என்னவாகிட போகிறது என்ற எண்ணம் தான்... இருந்தும் அந்த பெரியவர் தாங்கிகொள்ள வேண்டும் என்ற வேண்டுதலும் அவன் மனதில் இருக்கவே செய்தது.....

"அங்கிள்... இப்போ நான் சொல்ல போறது உங்களுக்கு கஷ்டமா இருக்கலாம் ஆனா இனிமேல் நீங்க தான் அவளுக்கு ஒரு தூணா பக்க பலமா இருக்கணும்.... அவ இதுக்கு பிறகு வாழ போற வாழ்க்கைக்கும் சேத்து இன்னும் ஸ்ட்ரோங் ஆக்கணும்...."

"ரோட்ல போகும் போது ஒரு நாய் கடிச்சாலே ரொம்ப வலிக்கும் பயமா இருக்கும்.. அதே ரெண்டு மூணு நாய்ங்க சேர்ந்து கடிக்கிறது எல்லாம் கொடும தான், ஆனா அதுக்கும் ஊசிய போட்டுட்டு நாம நம்ம வேலைய பாக்க போறதில்ல... அதே போல தான் இவளையும் அப்படி ரோட்ல போற நாய்ங்க கடிச்சிடிச்சுனு நெனச்சுக்கோங்க... நான் ஊசி போட்டுட்டேன்.. அவ சின்ன பொண்ணு ரொம்ப பயந்திருக்கா.. இனி இவள தேத்தி அடுத்த வேலைய பாக்க வைக்க வேண்டியது நம்ம கைல தான் இருக்கு...." என்றவளுக்கும் ரம்யாவின் நிலையை நினைத்து கவலை தான்....

அதிரல் அவளை பரிசோதித்த மட்டில்.. ஒருவர் இருவர் என்றில்லை சிலரால் பாலியல் ரீதியில் துன்பறுத்த பட்டிருக்கிறாள் என்பது புரிந்தது.... கொடூரமான மிருகங்கள் போல நடந்துகொண்டிருக்கின்றனர் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை...

அவள் உடம்பில் காயங்கள் இல்லாத இடத்தை விரல் விட்டு எண்ணி விடலாம் அவ்வளவுக்கு கொடுமை நடந்திருந்தது... சிகரெடால் சூடும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது... அதில் சேல் கட்டி பார்க்கவே முடியாத நிலைமையில் இருந்தது.... இடது மார்பகத்தில் பல்லால் பதிக்கப்படிருந்த காயம் ஒன்றில் இரத்தம் கசிந்து காய்ந்து போய் ஆழமான வடுவாய் பதிந்திருந்தது.... அதிலும் கொடுமையின் உச்சமாய் அவள் பிறப்புறுப்பு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேதபட்டிருந்தது.... இத்தனை நாட்கள் கவனிக்காமல் விட்டதில் காயங்கள் எல்லாம் கிருமி தொற்றுக்குள்ளாகி மோசமான நிலையில் இருந்தது.... அவளது நிலையை ஒரு வைத்தியராக மற்ற மூவருக்கும் சுருக்கமாக சொன்னவள்

"நிலவன் சீக்கிரம் இவள ஹாஸ்பிடல் கொண்டு போகணும்... இவ்வளவு நாள் பாக்காம விட்டது காயம் எல்லாம் ரொம்ப செப்டிக் ஆகி இருக்கு... இமீடியட்டா நாம ஹாஸ்பிடல் கொண்டு போறது நல்லது...." என்றவளின் பேச்சுக்கினங்க சில மணி நேரங்களிலேயே ஜேகே ஹாஸ்பிடலில் ரம்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாள்.... நிலவன் மற்றும் அதிரலின் சிபாரிசில் விடயம் வைத்தியசாலை நிர்வாகத்தினால் வெளியே கசியாமல் சற்று ரகசியம் காக்கப்பட்டது....


இப்படியே நாட்கள் கடக்க நிலவனின் விசாரணையின் பதில் என்னவோ பூச்சியம் தான்... பாஸ்கரிடம் மேலோட்டமாய் விசாரித்தாகிவிட்டது... அன்று அவள் கிளாஸுக்கும் செல்லவில்லை... பாஸ்கருக்கு அழைத்ததுக்கான அழைப்பு விபரம் மட்டுமே அவள் அழைபேசியில் இருந்தது பேசியதற்கான விபரம் ஏதும் இருக்கவில்லை... என்னவாகி இருக்கும் என்பதே நிலவன் மூளையை குடைந்தது...

இன்றோடு ரம்யா ஹாஸ்பிடலில் அனுமதிக்கபட்டு நான்கு நாள் முடிவடைந்திருந்தது... ராமசாமி இந்த நான்கு நாட்களாக ஹாஸ்பிடலே கதி என்று தான் இருக்கிறார்.... வேலைக்கு செல்வதை பற்றி யோசிக்க கூட அவரால் முடியவில்லை... நடந்த சம்பவம் அவரை வெகுவாய் புரட்டி போட்டிருந்தது.... எப்போதும் ரம்யா இருக்கும் அறை வாயிலியே அமர்ந்திருப்பார்....ஒரு முறையேனும் தன்னை ராமு என்று அழைத்து பேசிவிட மாட்டாளா என்று அவளுக்காகவே காத்துகொண்டிருக்கிறார்....

இதோ சிகிச்சையின் பின் அவளுக்கு காயங்கள் ஓரளவு ஆற தொடங்கி இருந்தது ஆனால் அவள் மனநிலையில் பெரிதாய் மாற்றம் ஏற்படவில்லை.... பேச்சு வெகுவாய் குறைந்திருந்தது.. அதிரலிடம் மட்டும் என அவள் பேச்சு சுருக்கப்பட்டிருந்தது... முன்பு போல் கத்தி ஆர்ப்பாட்டம் ஏதும் செய்யவில்லை என்றாலும் இன்றைளவிலும் ஆண்களை அருகில் சேர்த்து கொள்ளவில்லை... ஆனால் ஆண்கள் மூவரும் அவளை சுற்றி அவள் கண்ணில் பட்டுக்கொண்டே தான் இருந்தனர்.. நிலவனாவது விசாரணைக்காக வெளியில் சென்று வந்தான் ஆனால் புகழ் இந்த நான்கு நாட்களும் அங்கே தான், எங்கும் செல்லவில்லை...

இத்தனை நாட்களில் ரம்யா ஓரளவுக்கு அதிரல் சொல்வதை கேட்டு நடந்துகொள்ளவே செய்தாள்... சிறிது சுயநினைவு வந்திருந்தது போலும்.. இப்போது ராமசாமியை அவளால் இனம் காண முடிந்தது ஆனால் இன்னும் பேசவில்லை... அவள் நிலைக்கு யார் காரணம் என அறியமுடியா வண்ணம் எல்லா கதவுகளும் மூடப்பட்டிருக்கும் நிலை தான்.... அவள் வாய் திறந்தாலேயன்றி கயவர்களை அறிவது சற்று சிரமம் தான்... அதனாலேயோ என்னவோ நிலவன் இன்று அவளுடன் பேசியே ஆக வேண்டும் என வந்திருந்தான்...

"இத என்னால அனுமதிக்க முடியாது மிஸ்டர் நிலவன்...." என்றவள் அவன் பார்வையை எதிர்கொண்டு கைகட்டி நின்றாள்..

"லுக் மிஸ் அதிரல்.... இப்படி இந்த சின்ன பொண்ண சீரழிச்சு போட்டிருக்காங்களே அந்த உதவாக்கர நாய்ங்க அவங்கள அப்படியே விட்டுட்டு என்ன கைகட்டி வேடிக்கை பாக்க சொல்லுறீங்களா?.... " என்றான் கோபமாய்..

"உங்க கோபம் எனக்கு புரியுது மிஸ்டர் நிலவன்... இன்பாக்ட் எனக்கும் கோபம் இருக்கு... அவள செக் பண்ண எனக்கு உங்கள விட அதிகமாவே அந்த கோபம் இருக்கு... இத பத்தி அவகிட்ட பேசினா இன்னும் தான் அவ மெண்டலி டிஸ்டர்ப் ஆவா... இது நான் சொல்லியா உங்களுக்கு தெரியணும்?... "

"ம்ம்ம் ஐ நோ... இந்த நாலு நாள் அவங்கள பிடிக்காம விட்டுவெச்சிருக்கேனேனு என் மேலயே எனக்கு கோபமா வருது.... ஆனா வேற எந்த முறையில அவங்கள பிடிக்கிறது... ராப்பகலா பைத்தியம் மாதிரி சுத்துறேன் ஒரு க்ளூ கூட கிடைக்க மாட்டேங்கிது...." என்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாவாறு தலையை பிடித்து கொண்ட நேரம் அவன் அருகில் நின்ற புகழின் தொலைபேசிக்கு நோட்டிபிகேஷன் வந்த சத்தம் தொடர்ந்து நான்கு ஐந்து முறை ஒலித்தது.. அந்த சத்தம் நிலவனுக்கு ஏதோ உணர்த்த திடீரென எழுந்துகொண்டவன்

"மச்சான்... ரம்யாவோட போன் உன்கிட்ட தந்திருந்தனே எங்க அது...."

"எங்கிட்ட தான் மச்சான் இருக்கு... நம்ம ஸ்டேஷன்ல உன் கேபின்ல தான் வெச்சிருக்கேன்..... ஏன் மச்சான்..." என்றவனின் பேச்சில் எதையோ யோசித்து கணக்கிட்டவன்...

"ஓகே... இந்தா கீய பிடி.... நீ என்ன பண்றனா போன எடுத்துட்டு நேரா ராமசாமி வீட்டுக்கு வந்துடு.. நானும் அங்க வரேன்.. சீக்கிரம் போ..." என அவனை அவசரமாய் அனுப்பியவன் அதிரலிடம்...

"மிஸ் அதிரல்... என்கூட நீங்களும் ராமசாமி வீடு வர வர முடியுமா?..." என்றவனின் பேச்சில் எதையோ கண்டுகொண்டான் என்பதை புரிந்துகொண்டவளாய் "ம்ம்ம்... ஓகே... வெளிய வெயிட் பண்ணுங்க வண்டிய எடுத்துட்டு வந்துடுறேன்...." என்று அவள் வெளியேற இவனும் வெளியேறினான்....



நான்கு நாட்களின் பின் இன்று தான் வீட்டுக்கே வந்திருந்தார் ராமசாமி... குளித்து ஆடை மாற்றி ரம்யாவுக்கு தேவையான சிலவற்றை எடுத்துக்கொண்டவர்... அவளுக்கு பிடித்த உணவை சமைக்க எண்ணி சமையலறைக்குள் நுழைய, அது இருந்த கோலம் நடந்தவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியது.... அதை பெருமூச்சுடன் புறம் தள்ளியவர் சுத்தப்படுத்தி சமைக்க ஆயத்தமாகவும் புகழ், நிலவன், அதிரல் மூவரும் அங்கே வரவும் சரியாக இருந்தது.....

"தம்பி நீங்க... வாங்க உள்ள வாங்க...." என்றவர் உள்ளே அழைத்து அவர்களை அமரவைத்தார்....

இடப்பட்ட நாளில் ஐயா என்பது மாறி தம்பி என அழைக்கும் அளவிற்கு உறவு கொஞ்சம் முன்னேறியது அதுவும் நிலவனின் ஆணை தான்.... வேலை விடயம் தவிர்ந்த மற்ற நேரங்களில் தம்பி என அழைக்க பழகி இருந்தார்....

"ராமசாமி... ரம்யா ரூம் கொஞ்சம் செக் பண்ணனும்..."

"ஏன் தம்பி..." என்றார் புரியாமல்...

"வேற போன் இல்லனு சொல்லுறீங்க பட் அவ பேஸ்புக் யூஸ் பண்றதுக்கு அடையாளமா இந்த போன்ல நார்மல் மெசேஜ்ல நோட்டிபிகேஷன் வந்திருக்கு... பேஸ்புக் ஓபன் பண்றதுக்குறிய ஓடிபி இந்த நம்பருக்கு தான் வந்திருக்கு அண்ட் யாரோ பிரண்ட் ரெகுவேஸ்ட் குடுத்திருக்காங்க... சோ ரம்யா வேற ஸ்மார்ட் போன் யூஸ் பண்ணி இருக்கணும்...." என்றவனின் பேச்சு புரிந்தும் புரியாத நிலைமை தான் அவருக்கு... பேஸ்புக் வாட்ஸாப் எல்லாம் அவர் அறிந்தது தான்... ஆனால் பாவனை என்பது இருந்ததில்லை.... பெரிதாய் அதில் ஆர்வம் இருந்ததில்லை.... ரம்யாவும் இதை பற்றி அவரிடம் பேசி இருக்கவில்லை.... இது எல்லாம் அவருக்கு மிரட்சியையே கொடுத்தது.....

"இதுல நீங்க யோசிச்சு பயப்பட ஒண்ணுமில்ல ராமசாமி.... அப்படி அது இருந்தா அவனுங்கள கண்டுபிடிக்க ஏதாச்சும் க்ளூ கிடைக்குமேனு தான் நிலவன் கேக்குறான்.... தேடி பார்ப்போம்.... " என்றான் புகழ்

பின்னர் நால்வரும் அவள் அறையில் தேடியும் அப்படி ஒன்றும் அவர்கள் கண்ணில் தென்படவில்லை... இருக்க வேண்டுமே என்ற வேண்டுதலோடு தான் தேடினர்.... என்ன தான் கேட்டாலும் இல்லாத ஒன்றை கடவுள் எப்படி கொடுப்பார்.... அதிரல் ஏதோ யோசனை வந்தவளாக...

"மிஸ்டர் நிலவன் நாம ஏன் அது போனா தான் இருக்கும்னு பிக்ஸ் பண்ணிட்டு தேடணும்.... அந்த மைண்ட் ஓட தேடுறதால வேற யோசிக்க மாட்டேங்குறோம்.... சப்போஸ் அது ஏன் வேற டிவைஸா இருக்கக்கூடாது?..."

"அது எப்படி மேடம் ஸ்மார்ட் போன் இல்லாதவங்க கிட்ட கம்ப்யூட்டர் டேப் லேப்னு இருக்கும்... "

"நோ புகழ்... ஷி இஸ் ரைட்... ஒன்னு பிக்ஸ் பண்ணிட்டு தேடுறது தான் பிழை.... வேற ஆப்ஷனும் இருக்க தான செய்து...."

அதுவரை அவர்கள் பேச்சின் சராம்சம் புரியாமல் இருந்த ராமசாமி "தம்பி.... அப்போ நீங்க சொல்லுற பேஸ்புக் கம்ப்யூட்டர்ல பாக்கலாமா?....." என்க அவர் குரலுக்கு மூவரும் அவரை திரும்பி பார்த்தனர்....

"ஆமா... பாக்கலாம்... கம்ப்யூட்டர்னு மட்டுமில்ல லேப்டாப், டேப் இப்படி நிறைய இருக்கு எல்லாத்துலயும் பாக்க முடியும்...." என்றான் புகழ் அவருக்கு விளக்கமாய்...

"அப்படினா கொஞ்ச நாளுக்கு முதல் மலர் புள்ள புருஷன் புதுசா புது மாடல்ல கம்ப்யூட்டர் வாங்கிட்டாருன்னு, அதுகிட்ட இருந்த பழச ரம்யாக்கு குடுத்திச்சு தம்பி... ரம்யா வேணாம்னு சொல்லியும் அது கேக்கல படிப்புக்கு உதவும் வெச்சுக்கோ அப்பறமா திருப்பிதானு சொல்லிச்சு...."

"இப்போ எங்க அது...." என்றான் நிலவன் வீட்டை சுற்றி நோட்டம் இட்டப்படி..

"அது ஒரு நாலு நாளைக்கு முதல் கீழ விழுந்து வயரெல்லாம் அறுந்து கிடந்திச்சு என்னாச்சுன்னு ரம்யாகிட்ட கேட்டேன் ஒன்னுமே சொல்லல... சரினு அதெல்லாம் பழுது பாக்குற கடை தம்பிக்கு போன போட்டு எடுத்துட்டு போய் ரெடி பண்ண சொல்லி இருந்தேன்.... அந்த தம்பியும் சரி பண்ணி தரேன்னு சொல்லிச்சு..."

"அந்த கடை இங்க பக்கமா?"

"ஆமா இங்க இந்த ஏரியா முடிவுல தான் இருக்கு... நடந்து கூட போகலாம்..."
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"ஓகே அந்த பையன் நம்பருக்கு கால் பண்ணி.... ரெடி ஆகிடுச்சானு கேளுங்க... சப்போஸ் ரெடி ஆகலான கூட பரவாயில்லை... கொண்டு வந்து தர சொல்லுங்க... டெலிவரி சார்ஜ் சேர்த்து தந்துடுறேன்னு சொல்லுங்க...." என்றவன் அவர் போனில் அவன் நம்பருக்கு அழைப்பு விடுத்து அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட பேசுமாறு சைகை காட்டினான்....


"ஹலோ..."

"தம்பி நான் ராமு பேசுறேன்..."

"சொல்லு சார்.."

"தம்பி நான் கம்ப்யூட்டர் ஒன்னு செய்ய சொல்லி தந்திருந்தனே...."

"ஓஓ ஆமா... இன்னும் ரெடி ஆகலையே சார்... இனிமேல் தான் செய்யணும்..... அடுத்த வாரம் வாங்க சார் ரெடி பண்ணி வைக்குறேன்..."

"இல்லை தம்பி திருத்தலனாலும் பரவாயில்ல அது வேணும் கொஞ்சம் தர முடியுமா?....."

"என்ன சார்... டிலே ஆகிடுச்சா... வேற இடத்துல குடுக்க போறீங்களா? நானே இன்னும் ரெண்டு நாள்ல ரெடி பண்ணி குடுத்துடுறேன் சார்... ஒரே ஏரியா வேற என்ன நம்பமாட்டீங்களா?... அதெல்லாம் நான் கரெக்டா பண்ணிடுவேன் சார்... என்ன கொஞ்சம் நேரமாகிடிச்சு.. அதுக்காக கோபப்படலாமா?.." என்றான் கோபித்துக்கொண்டாரோ என்றெண்ணி..

"ஐயோ அதெல்லாம் இல்லை தம்பி... அத திருத்த வேணான்னு தான் யோசிச்சேன்... புதுசா ஒன்னு வாங்க போறேன் அதான்...." என்றார் நிலவனின் சைகைக்கிணங்க...

"என்ன சார் சொல்லவே இல்லை திடீர்னு, நம்மகிட்டயும் புது ஐட்டம் இருக்கு, எடுக்குறதுனா இங்கயே எடுத்துக்கலாம்... சரி சார் நம்ம சேகர் ஆட்டோல குடுத்து அனுப்புறேன் அவன்கிட்ட ஆட்டோக்கு பணத்தை குடுத்துட்டு எடுத்துக்கோங்க...." என்பதாய் அழைப்பை துண்டித்திருந்தான்.....

சிறிது நேரத்தில் அவனும் கொண்டு வந்துவிட, அதன் பின் எல்லாம் துரித கதியில் தான் நடந்தது.... நிலவன் அதனை சில மணிநேரத்தில் வேலை செய்ய வைத்திருந்தான்... அதன் பின் ஓன் செய்து அங்கிருந்த வைபை கனெக்ட் செய்து என நிலவனும் புகழும் இயந்திர கதியில் இயங்கி கொண்டிருக்க ராமசாமி அதிரல் இருவரும் பார்வையாளராகினர்... ஏதாவது ஒரு க்ளூ கிடைக்குமென்று தான் இத்தனையும் செய்தனர்.. ஆனால் அதிலோ கயவர்களின் ஆட்டம் காணொளியாய்... நால்வருக்கும் கண் கொண்டு பார்க்க முடிவில்லை.. அவள் அழுகுரல் கேட்பவர்களை கண்கலங்க வைத்திருந்தது.. ராமசாமி அழுது அழுது மயங்கியே சரிந்திருந்தார்.. அவர்கள் கோபத்தின் விளைவு சரியாக ஆறு மணி நேரங்களுக்கு பிறகு கயவர்கள் நான்கு பேரும் ராமசாமியின் வீட்டில் கட்டி வைக்க பட்டிருந்தனர்....

அடி என்றால் அடி சரமாரியாக விழுந்திருந்தது.... அவன் கோபம்.. புகழ் கோபம்... ராமசாமி, அதிரலின் கோபம் என பாக பங்கீடாய் சரியான விகிதத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.... இதில் கொடுமை என்னவென்றால் வலிக்கு கத்தி அழக்கூட அவர்களை அனுமதிக்கவில்லை... காரணம் வாயில் துணியை வைத்து அடைத்து பிளாஸ்டர் ஒட்டி அடைக்கப்பட்டிருந்தது...

பழுக்க காய்ச்சப்பட்ட கம்பிகளால் உடலில் ஆங்காங்கே சூடு வைக்கப்பட்டு அதில் மிளகாய் தூவப்பட்டிருந்தது விசேடமாக மிளகாய் யோசனை புகழுடையது அவன் ஆசையை கெடுப்பானேனென நிலவனும் அதை கண்டுகொள்ளவில்லை..

கத்தி அழவும் முடியாமல் வேதனையும் தாங்காமல் அவர்கள் துடித்ததெல்லாம் பார்க்க அங்கிருந்த நால்வருக்கும் பாவம் என தோன்றவே இல்லை... நடந்ததை அவர்கள் வாயால் கேட்டதுமில்லாமல் காணொளி மூலம் நேரடியாக கண்டதில் இந்த தண்டனை எல்லாம் தூசாகவே தோன்றியது... அந்த நால்வர் கண்ணிலும் உயிர் பயம் அப்பட்டமாய் அப்பி கிடந்தது.. இவ்வளவு சீக்கிரத்தில் மாட்டிக்கொள்வோமென சிறிதும் நினைக்கவில்லை.. கிழவன் தானே பார்த்துக்கொள்ளலாம்... அப்படியும் மாட்டினால் பணம் இருக்கிறதே அது தான் பாதாளம் வரை பாயுமே என பயமின்றி சுற்றியவர்களுக்கு இன்றைய நிலை கடவுளின் பரிசு தானோ என்னவோ...


ஜாதி மல்லி மலரும்.............


கருத்து திரி 👇👇👇


InShot_20240804_105115722.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top