ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 04



மாளிகை போல் என்ன மாளிகை தானோ என வியக்கும் படி பறந்து விரிந்த அந்த பங்களாவின்

முன் கூட்டங்கள் அலைமோதிய வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.... அரசியல்வாதியின் வீடு என்றால் சொல்லவும் வேண்டுமோ???...

ஜெயராம கிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவர்... அதுமட்டுமின்றி ஜேகே ஹாஸ்பிட்டல்ஸ் , ஜேகே காலேஜஸ் மற்றும் ஜேகே இண்டஸ்ட்ரீஸ் போன்ற ஏராளமானவற்றை நிர்வகிப்பவர்.... ஏகப்பட்ட சொத்துக்களை தன்வசம் கொண்டிருப்பவர்...... அதனாலேயோ என்னவோ மரியாதையை அவரிடம் கடுகளவும் எதிர்பாக்க முடியாது....

"வசந்த் இந்த மாச டெலிவரி எந்த அளவுல இருக்கு இன்னும் டூ வீக்ஸ்ல அனுப்பனும்...." என்றார் கோப்புக்கலில் கையெழுதிட்டப்படி..

"ஆல் குட் சார்... அல்மோஸ்ட் எல்லாம் ரெடி.... சரியான டேட்க்கு அனுப்புறது மட்டும் தான் பாக்கி.." என்றான் சற்று முன் வசந்த் என அழைக்கப்பட்ட ஜெயராமகிருஷ்ணனின் பிஏ

"எல்லாத்துலயும் ஒரு கண்ணு வெச்சிக்கோ வசந்த்... எங்கயும் எதுவும் மிஸ் ஆகிட கூடாது... கேக்குற சரக்கு எப்போவும் நம்மகிட்ட ஸ்டோக் இருக்குற மாதிரி பாத்துக்கோ....." என்றார் அவன் கண்களை பார்த்து ஏதோ உள்ளர்த்தத்துடன்.. அதனை சரியாக புரிந்து கொண்டவனாய்

"கண்டிப்பா சார்... நான் பாத்துக்குறேன்.... ஜேகே சார் நாலேஜ் இல்லாம எதுவுமே நான் பண்றதில்ல சார்.... இது சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்... சோ நீங்க பயப்பட வேண்டாம் எங்கயும் தப்பா போக வாய்ப்பே இல்லை....."

"ஹா ஹா அவன் உன்னையும் விடலயா???".... என்று கேலியாய் சொன்னவருக்கு மகனை நினைத்து எப்போதும் போல பெருமிதம் தான்....

"சார் ஐஜி உங்கள மீட் பண்ண ரெண்டு நாளா கேட்டுட்டு இருக்காரு..."

"ம்ம்ம் ஞாபகம் இருக்கு... அவன் பிடி இப்போ நம்ம கைல.... வாலாட்ட மாட்டான்.... இப்போதைக்கு அவன நினைச்சு பயப்பட வேணாம்னு தம்பி சொல்லிருக்கான்.... ரெண்டு நாள்ல டைம் பிக்ஸ் பண்ணு..... கொஞ்சம் வெய்ட் பண்ணட்டும் அப்போதான் கொழுப்பு குறையும்"

"ஓகே சார்...." என்றவன் அதுக்கான வேலைகளை பார்க்க விரைந்தான்....

அவன் சென்றதும் தன் மகனுக்கு அழைத்தவர்

"தம்பி அப்பா பேசுறேன் பா....."

"ஆமா இங்க எல்லாம் நல்லா தான் போகுது...."

"டைம்க்கு எல்லாம் முடிஞ்சிடும்..... அதான் நீ இருக்கியே....

" நம்ம ஹாஸ்பிடல தான் சேர வெச்சாச்சு...."

"ம்ம்ம் வாட்ச் பண்ண ஆள் செட் பண்ணிருக்கேன் பா..."

"நீ எப்போ வர்ற?..."

"ஓகே ஓகே நீ நாட்டுக்கு வந்ததும் அத பாத்துக்கலாம் எங்க போய்ட போகுது......"

"சரி நான் வெச்சிடுறேன்.. "

என்று அந்தப்பக்கம் பேசியவற்றுக்கு பதில் சொன்னவர் கட்சி மீட்டிங் செல்ல தன் அலுவக அறையை விட்டு வெளியேறினார்....

ஜேகே என அழைக்கப்படும் ஜெகதீஸ்வர கிருஷ்ணன்.... ஜெயராம கிருஷ்ணனின் ஒரே மகன்.... அவர் சொத்துக்களின் ஒரே வாரிசு..... உலகிலேயே விரல்விட்டு எண்ண கூடிய சிறந்த நரம்பியல் மருத்துவர்களில் அவனும் ஒருவன்.... மணிக்கு லட்சங்களில் சம்பாதிப்பவன்..... இப்போது ஏதோ ஒரு கண்டுபிடிப்புக்காக அமெரிக்கா வரை நீண்டிருக்கிறது அவன் பயணம்...... பணம் மட்டுமல்ல அறிவும் கத்தி போன்றது தான்..... இருக்கும் இடத்தை பொறுத்தது தான் அதன் குணமும்...... ஒன்று இருந்தாலே பயங்கரம் ஆனால் இங்கோ இரண்டின் சங்கமம்....??????



வண்ண நிலவனின் ஜீப் சரியாக ஜேகே ஹாஸ்பிடல் வளாகத்தில் நின்றது.... அதிலிருந்து இறங்கியவன் உள் நுழையும் போதே ஏதோ ஒரு இனம்புறியா உணர்வு அவனுள்.... ஏதோ மனதுக்கு நெருக்கமான ஒரு உணர்வு..... அவனுக்கே அவனுக்கான சுவாசம் இருப்பதாய் அவன் இதயம் அடித்துக்கொண்டது.....


"என்னடா நிலவா.. என்னாச்சு.... காம் டவுன்....." என்று தனக்கு தானே சொல்லி தன் இதயத்தை நீவிக்கொண்டவாறே உள்நோக்கி சென்றான்....

"சார் பதினெட்டாம் வாட் இந்த பக்கம் தன் போகணும்....." என்ற ராமசாமியின் சொல்லுகினங்க அவர் காட்டிய திசையில் சென்றது அவன் கால்கள்..

"வா நிலவா இப்போ டாக்டர் வர நேரம் தான்..... பார்த்துட்டு டிஸ்சார்ஜ் ப்ரொசீஜர் என்னன்னு சொல்லுவாங்க...." என்றான் அவன் நண்பன் புகழ்

"ம்ம்ம்.... பேரண்ட்ஸ்???..."

"பில் பே பண்ண போயிருக்காங்க... இப்போ வந்துடுவாங்க..." என்று சொல்லவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது.....

"ரொம்ப தேங்க்ஸ் சார்... நீங்க மட்டும் பிடிக்கலனா... என் பொண்ணுக்கு ஏதாச்சும் ஆகி இருக்கும்.... அவளுக்கு ஒன்னுனா எங்களால தாங்கவே முடியாது" என்று அழுதாவேறே பேசினார் அந்த குழந்தையின் தாய்...

"அதெல்லாம் ஒன்னுமில்லமா.... தேங்க்ஸ் எல்லாம் பெரிய வார்த்தை..... ஏதோ என்னால முடிஞ்சது... பாப்பாக்கு இப்போ எப்படி இருக்கு?"

"காயம் பெருசா ஒன்னுமில்ல சார்... ஜஸ்ட் கீறல் விழுந்திருக்கு... பயத்துல தன் பாப்பா மயங்கிட்டா" என்ற குழந்தையின் தந்தைக்கு தலையசைப்பை பதில் அளித்தவன் அவர்கள் குழந்தை இருக்கும் அறைக்குள் நுழைவதை பார்த்தவாறே அங்குள்ள இருக்கையில் நெஞ்சை நீவியபடி அமைதியாய் சிறிது நேரம் அமர்ந்தான்...

"என்ன ஆச்சு நிலவா ஏன் இப்படி உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு.... எனிதிங் சீரியஸ்???? இப்படி அமைதியா இருக்க மாட்டியே..." என்றான் அவன் நண்பன் புகழ்...

"நத்திங் மச்சான் ஜஸ்ட் திங்கிங் அவ்வளவுதான்...." என்றவன் நிலைமையை சுமூகமாக்க முயன்று "அப்புறம் உன்ன அப்பா பாக்கணும்னு சொன்னாருடா..." என்றான்

அவனை கொலை வெறியுடன் பார்த்த புகழ் "ஆள விடுடா சாமி..... நான் உன்கிட்ட எதுவுமே கேட்கல..... நீ எதுவும் எனக்கு பதில் சொல்லல...." என்றான் பீதியுடன்

"ஹா ஹா ஹா..... அனுபவம் ரொம்ப பலம் போல மச்சான்...."

"மனிசனாடா நீ அன்னைக்கு அப்பாகிட்ட என்ன கோர்த்துவிட்டுட்டு நீ ஜாலியா இருந்துட்ட.... நான் பட்ட பாடு எனக்குத்தான தெரியும்.... சின்ன வயசுல இருந்து உனக்கு பிரண்டா இருக்குறதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் அளவுக்கு அதிகமாவே எனக்கு பண்ணுறடா நீ" என்ற புகழுக்கு இரண்டு நாள் முதல் மாட்டிக்கொண்ட அந்த சம்பவம் கண் முன் விரிந்தது.....


"நிலவா.... நிலவா...." என்று அழைத்தவாறே வீட்டினுள் நுழைந்த புகழ் கண்டது ஹாலில் அமர்ந்திருந்த சேதுராமனை தான்

"ஐயையோ அய்யனார் இங்க தான் இருக்காரா??? என்ன பேச போறாரோ தெரியலையே.... நண்பா ஹெல்ப் மீ டா...." என மனதுக்குள்ளே பேசியவாறே முழித்தவனை ஆபத்பாந்தவனாய் காப்பற்றினார் வாசுகி..

"அடடே புகழு...... எவ்வளவு நாளாச்சு உன்ன பாத்து.... ஊர்ல அம்மா அப்பா எல்லாம் நல்லாருக்காங்களா???.... ரெண்டு நாள் முன்ன கூட பைரவிகிட்ட பேசினேனே நீ வர்றத பத்தி அவ சொல்லவே இல்லை...... என்ன நின்னுட்டே இருக்க உக்காரு....." என்று அவனிடம் பேசியவர் இங்க பாருங்க நம்ம புகழ் வந்திருக்கான்...." என்று கணவரிடம் முடித்தார்...

"ம்ம்ம்... வாப்பா உக்காரு.. இதோ வந்துடுறேன்...." என்றவர் எழுந்து உள்ளே சென்றார்

"எப்படி இருக்கீங்கம்மா.... அம்மா அப்பா நல்லா இருக்காங்க.... அவங்களுக்கு தெரியாதுமா நான் வர்றது.... சொல்லி இருந்தா அவங்களும் கூடவே கெளம்பி இருப்பாங்க..... எப்பவும் உங்க புராணம் தான்... அங்க கூட்டிட்டு போய்ட்டாங்கனு டெய்லி அப்பாக்கு அர்ச்சன தான் விழுதுனா பாத்துக்கோங்களேன்..... எங்கம்மா நிலவன காணோம்...."

" வைரவி எப்பவும் அப்படித்தான்... என் மேல ரொம்ப பாசம் அவளுக்கு.... அவன் குளிக்கிறான் வருவான்.... நீ வா சாப்பிடலாம்........"

"இருக்கட்டும்மா அவனும் வரட்டும் சேர்ந்தே சாப்பிடுறோம்...."

"டேய் வாடா நல்லவனே..... வந்துட்டியா.." என்றவாறே அங்கு வந்து சேர்ந்தான் நிலவன்...

" இல்லை இன்னும் வரல நாளைக்கு வரட்டா..... அட போடா டேய்..... அப்பா ஏன் கூப்பிட்டாங்கன்னு சொல்லவே இல்லையே நீ....." என்று வாயடித்த புகழிடம் " ஏன்டா காலைலயே சூடா இருக்க..... சாப்பிட்டியா முதல்ல ????.... அம்மா டிபன் வைங்க...." என்றவாறு கூல் ஆக டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன் புகழையும் தன் அருகே அமர்த்தினான்.....

'நீயும் வந்துடட்டும்னு இருந்தேன்.. சாப்பிடலாம்..... என்னமா டிபன் இன்னைக்கு....."

"பூரியும் உருளைக்கிழங்கும் தான்.... உனக்கு பிடிக்குமே" என்றவாறு இருவருக்கும் பரிமாறினார்...

"இப்போவாவது சொல்லேன் டா அப்பா ஏன் கூப்பிட்டாங்கனு....."

"ஹி ஹி ஹி.... அது வேறொன்னுமில்ல மச்சான்.... நான் போலீஸ்ல சேர முக்கிய காரணமே நீ தான்.... நீ தான் என்னோட ரோல் மாடல்..... உன்னாலதான் நான் இந்த முடிவுக்கே வந்தேன்.... புகழ் இல்லாட்டி நான் இதப்பத்தி யோசிச்சிருக்கவே மாட்டேன் அப்படி இப்படினு.... அப்பாகிட்ட உன்ன பத்தி புகழோ புகழ்னு புகழ்ந்தேன்டா புகழு....." என்றவன் சிரிக்காமல் பேசியது அவனுக்கே அதிசயம்....

"அட சண்டாளா.... நான் உனக்கு என்னடா பாவம் பண்ணினேன்... இப்படி அய்யனார்கிட்ட கோர்த்து விட்டுட்டியே..... இதுல புகழ் புகழ் னு ரைமிங் வேற.... உன்னால என் பேரே எனக்கு சகிக்கல டா..... நான் ஜாயின் பண்ணப்பவே கிழி கிழினு கிழிச்சாரே உங்கப்பா......" என்றவனுக்கு உணவு தொண்டையில் சீக்கிக்கொண்டாது....

"இட்ஸ் மை டூட்டி மச்சான்..... உன் பெயர் வேற புகழ் உன்ன புகழாம இருக்கலாமா சொல்லு?..... உன் புகழ உலகம் பூரா பரப்புவேன் மச்சான் டிரஸ்ட் மீ...." என்றான் அப்பாவியாய்....

"வாயில நல்லா வந்துடும் மூடிட்டு சாப்புடு.... என்று நண்பனிடம் ஆரம்பித்தவன் "ச்சே உனக்கு நேரமே சரி இல்லடா புகழு.... ட்ரான்ஸர் தந்தாலும் தந்தாங்க இங்கயா தரணும்.... அதுவும் இவன் கூட.... நிம்மதியே இல்லை புகழு உனக்கு.. இதுல இவர நம்பணுமாம்ல...." என தனக்கு தானே முணுமுணுதாவாறு சேதுராமனின் அறையை நோக்கி விரைந்தவன் அவர் காலில் விழுந்தே விட்டான்....

"அப்பா அவன் சொன்னதை நம்பாதீங்கப்பா..... அவன் என்ன புகழ்ந்து சொல்லி இருப்பான்பா.... நான் எதுவுமே பண்ணல..... அதெல்லாம் அவன் முயற்சில கெடச்சதுப்பா.... இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இவன் வேலைல சேர போறதே எனக்கு தெரியாதுப்பா....." என வாக்குமூலம் குடுத்தவன் "என்ன சௌண்டையே காணல..... ஒரு வேல நம்ம பெர்பார்மென்ஸ் பார்த்து மெர்சல் ஆகிட்டாரோ....." என்று எண்ணியவாறே நிமிர்ந்து பாக்க அவர் அவனை பார்வையால் எரித்து கொண்டிருந்தார்....

எழுந்து நின்றவன் "என்ன அப்பா மூக்குல காத்து விடுறாரு.... நம்ம ஏதும் தப்பா சொல்லிட்டோமா???? காலைல கூட இப்படி ஓவரா மொறச்சு பாக்கலயே.... அய்யனார் லுக் கொஞ்சம் ஹெவியா அடிக்கிது.... என்னவா இருக்கும்...." என்று எண்ணியவாறே அவரை பார்த்தான்

அதன் பின் நடந்ததெல்லாம் அர்ச்சனைகளின் அணிவகுப்பு தான்..... சில மணிநேரம் தொடர்ந்த அர்ச்சனைகள் எதுக்கென்றே புரியாமல் அப்பாவியாய் நின்றிருந்தான் புகழ்.....

"அவனையும் திருத்த முடியாது.... உன்னையும் திருத்த முடியாது.... உன் அப்பாகிட்ட பேசிக்கிறேன்...." என்று கோபமாய் சொன்னவர் வெளியே சென்றுவிட்டார்...

என்னத்துக்கு அடிக்கிறீங்கன்னு சொல்லிட்டு அடிங்கடா மொமெண்ட் தான் புகழுக்கு.... அவர் சென்றதையும் அறியாமல் நின்றிருந்தவனை கலைத்தது நிலவனின் சிரிப்பு......

"ஹா ஹா....ஹாஹா... முடியல டா மச்சான்.... ஆடு தானா சிக்கி பாத்திருக்கியா????..... நான் சொன்ன எல்லாத்தையும் அப்படியே நம்புறியே யாருடா மச்சான் நீ????... சும்மாவே அந்த மனிசன் உச்சில இருக்காரு நீ வேற போய் சொரிஞ்சு விட்டுட்டியே...."

"என்னடா சொல்லுற..." என்று அதிர்ச்சியாய் முழித்தவனிடம்

"சொல்லுறாங்க சொரக்காக்கு உப்பில்லனு... சும்மா ஒரு என்டேர்டைன்மெண்ட்க்கு உன்கிட்ட அடிச்சு விட்டேன்..... ஹாஹாஹா.... நீ பாட்டுக்கு நான் தான் ஆடுன்னு அவர் முன்ன போய் நின்னா விடுவாரா???? அதான் பிரிச்சு மெஞ்சிட்டாரு.... காத கொஞ்சம் காட்டு பிளட் வருதான்னு பாப்போம்..... " என்றவனின் பேச்சில் உண்மையிலேயே காதில் கை வைத்து பார்த்திருந்தான் புகழ்.... மேலும் நிலவனே தொடர்ந்தான்....

"என்மேல் காட்டுன கோபம் கொஞ்சம் மிச்சம் இருந்திச்சா.... அதான் என் நண்பன் உனக்கு அத வாங்கி தரலாமேனு ஒரு நல்ல எண்ணத்தோட போன போட்டேன்..... நீயும் சீக்கிட்ட..... இப்போதான் மனசே நெறைஞ்சிருக்கு..... இருந்தாலும் நீ கால்ல விழுந்தது தான் மச்சான் ஹைலைட்.... ஹாஹாஹா..."

"அட கொலகார பாவி.... இன்னைக்கு உன்ன என்ன செய்றேன் பாருடா...." என்றவாறு அவன் மேல் பாய்ந்தான்... அதற்கு பின் நடந்ததெல்லாம் அமளி துமளி தான்... வாசுகி வந்து பிரிக்கும் வரை தொடர்ந்தது அவர்களின் கலாட்டா....

அந்த யோசனையில் இருந்து நிகழ்க்காலத்துக்கு வந்த புகழ்.... இப்போதும் நிலவனை முறைத்துக்கொண்டுதான் இருந்தான்.....

"விட்றா மச்சான் விட்றா.... மலையிரங்கு... அப்பறம் உன் அப்பாகிட்ட தனி பிட் போடவேண்டி இருக்கும் பாத்துக்கோ???..."

"ஐயா ராசா.... ஆள விடு சாமி.... அய்யனார் என்ன பேசினாரோ தெரியல இப்போவரை அப்பா எதுக்குனே தெரியாம கத்துறாரு... நீ மறுபடியும் தொடங்கிடாத.... அப்பறம் உசுருக்கு உத்தரவாதம் இல்லை... நான் இன்னும் கமிட் கூட ஆகல அதுவரைக்கும் உசுர விட்டு வையி..."

"அந்த பயம் இருக்கட்டும்...." என்று விரல் நீட்டி எச்சரித்தவனிடம் " நீ ஓகே தான மச்சான்..... ஒன்னும் பிரச்சனை இல்லைல.... என்ன வேணும்னாலும் சொல்லுடா பாத்துக்கலாம் மனச குழப்பிக்காத...." என்றவனுக்கு சற்று முன் நிலவனின் முகம் காட்டிய வேதனையில் மனம் கசங்க தான் செய்தது.... அவனை இலகுவாக்கவே இவ்வளவு நேரம் பேசியதும் கூட..... அவனும் அறிவானே இந்த மூன்று வருடங்களாய் அவன் படும் பாடு....

"ஒன்னுமில்ல மச்சான்.... நீ பிரீ ஆ விடு.... என்னமும்னா உனக்கிட்ட தான வருவேன்...." என்றவனுக்கு புகழின் குரலில் இருந்த அக்கறை புரிய தான் செய்தது.. தன் நட்பை நினைத்து எப்போதும் போல இன்றும் பெருமிதம் தான்....

"டென் மினிட்ஸ் ஆகிடிச்சு இன்னுமா டாக்டர் வரல.... போய் கேட்டுட்டு வரேன் இரு" என்றவாறு சென்றவன் சிறிது நேரத்தில் வந்தான்

"டேய் அந்த லேடி டாக்டர் இன்னைக்கு வர கொஞ்சம் லேட் ஆகுமாம்... போன் பண்ணி கேட்டிருக்காங்க போல.... ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ண சொன்னாங்களாம்...."

"யாரு அந்த இர்ரெஸ்பான்ஸிபல் இடியட்.... வேலைல சின்சியரா இருக்குறதில்லையா???? இன்போர்ம் கூட பண்ணாம அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேல அவளுக்கு...." என்று பேசிக்கொண்டே போனவன் தனக்கு பின் அவள் நிற்பது... தன் நண்பன் அதற்கு குறிப்பு காட்டியது எதையும் அறியாமல் பேசிக்கொண்டே இருந்தான் நிலவன்....

நண்பன் பேச்சில் வழமையாக தெரியாதவர்களை பேசும்போது இருக்கும் மரியாதை இன்று காததூரம் சென்று இருந்ததால் புகழ் தான் கையை பிசைந்து கொண்டு அவளை பார்த்து முழித்து கொண்டிருந்தான்

"என்னடா பேய் முழி முழிக்கிற..... பேய் ஏதாச்சும் பாத்துட்டியா என்ன? என்றவாறு திரும்பியவன் கண்டது கை கட்டி தன் முன் கோபமாய் நிற்கும் அதிரலை தான்..... அந்த தோற்றம் ஆயிரம் பட்டாம்பூச்சி அவனுள்..... விபரிக்க முடியாத ஏதோ சுழலில் அவனை இழுப்பது போல் உணர்வு... மூச்சு விட முடியாமல் போராடும் அவன் நெஞ்சு.... அந்த நொடி நேரத்தில் அவன் முகம் காட்டிய பாவனையோ ஏராளம்.... சட்டென்று தன்னை சுதாகரித்துக்கொண்டவன் அவளை வெற்று பார்வை பார்த்தான்....

ஆனால் அவளிடமோ ஒரு கோபபார்வை.... கூடவே ஒரு ஆராய்ச்சி பார்வை.... நொடி பொழுதில் தோன்றி மறைந்த பரிச்சய பார்வை...... அதனை அவன் கண்டுகொண்டானோ என சிறு சுருக்கம் கூட அவள் விழியில் தோன்றியது.... இது எதுவுமே அவன் பார்வையில் இருந்து தப்பவே இல்லை..... அவை எல்லாம் மலைச்சாறல் போல் அவன் நெஞ்சில் குளிர்ச்சியாய்... இருந்தும் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை அவன்...... அவளோ எதுவுமே பேசாமல் குழந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.....

"டேய் என்னடா இப்படி பேசிட்ட.... அவங்க என்ன நினைச்சிருப்பாங்க....." என்ற நண்பனின் குரல் அவனுக்கு கேக்கவே இல்லை மூச்சு முட்டுவதாய் ஒரு உணர்வு அவனுக்கு அங்கிருக்கவே முடியவில்லை..... "இதுக்கு தான் அப்படி துடிச்சியா நீ" என்று தன் இதயத்திடம் கேட்டு கொண்டவாறே..
"நான் கொஞ்சம் வெளில இருக்கேன்.... என்னனு பாத்துட்டு கூப்பிடுடா.... என்று சென்றவனின் செயல் எதிலிருந்தோ தப்பிக்க ஓடுவதை போல் இருந்தது....

"இவள் எப்படி இங்க????? ரொம்ப மெல்லிச்சிட்டாளே.... சாப்பிடுறது இல்லையோ?????..... கண்ணுல கூட கொஞ்சம் கருவளையம் வந்துடிச்சு.... ராட்சசிக்கு நல்லா முறைக்க மட்டும் தெரியும்...." என்று எண்ணியவனுக்கு எதிராய் அவன் மனசாட்சி போர் கோடி தூக்கியது...." அவளுக்கு நல்லா வேணும்.... இருக்குற கொழுப்புக்கு..... " என்ற மனசாட்சியை அடக்கியவன்
"என்ன நடந்தாலும் அந்த பார்வையும் அழகும் குறையவே குறையாது இவளுக்கு..." என்று அவள் எண்ணத்தில் மூழ்கி இருந்தவனை மனசாட்சி காரி துப்பியதை கூட கவனிக்காமல் கண் மூடி சற்று முன் பார்த்த அவள் தோற்றத்தில் லயித்திருந்தவன் புகழின் அழைப்பில் உலகத்துக்கு மீண்டு வந்தான்....

"தப்பு பண்ணிட்ட நிலவா.... அவங்க கார்டியோலோஜிஸ்டாம் டா..... நைட் ஏதோ எமஜென்சி ஹார்ட் சர்ஜெரி பண்ணினாங்கலாம்.... திடீர்னு வந்ததால வேற டாக்டர்ஸ் யாரும் அவைலபில் இல்லயாம்னு இவங்க டூட்டி டைம் முடிஞ்சும் அவசரத்துக்கு அந்த கேஸ் அட்டென்ட் பண்ணி இருக்காங்க... நைட் லேட்டா தான் போயிருக்காங்க.... அதான் இப்போ லேட்....."

"இத அவங்களே சொன்னாங்களா???? என்றவனின் குரலில் நக்கல் வழிந்தது.... கூடவே "மூன் எனக்கு கார்டியோலாஜிஸ்டா பிராக்டிஸ் பண்ண தான் ஆச...." என்ற குரல் அவன் காதில் ஒலித்தது.....

"இல்லையே அவங்க சொல்லல.... அங்க இருந்த நர்ஸ் ஒத்தவங்க சொன்னாங்க... ஏன்???"

"இல்லை சும்மா தான் கேட்டேன்... வா குழந்தையை பாத்துட்டு போவோம்...."

"அப்போ சாரி கேக்கலையா..."

"சாரியா எதுக்கு..."

"டேய் என்னடா... தப்பு பண்ணதுக்கு சாரி கேக்க தான வேணும்.... ஒழுங்கு மரியாதையா போய் சாரி கேளு..."

"தப்பா.... யாருடா மச்சான் தப்பு பண்ணினது.... நீ பண்ணியா என்ன??.. "

"டேய் படுத்தாததாடா.... வா..."

"ஓகே ஓகே என்ன இப்போ ஒனக்கு நான் சாரி கேக்கணும் அவ்வளவு தான... சாரி போதுமா?.."

"எனக்கெதுக்குடா சாரி..."

"அப்போ வேணாமா... சரி ஓகே போவோம்..." என்றவாறு முன் நடந்தவனின் இதழ்கலுக்குள் அடக்கப்பட்டிருந்த புன்னகை தாராளமாக விரிந்து கொண்டது....
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"என்னாச்சு இவனுக்கு என்னையே குழப்பிட்டு போறான்..... ஒரு சாரி கேக்க சொன்னது குத்தமாடா.... இவன் அங்க ஏழறைய கூட்ட முதல் போவோம்...." என்று தனக்கு தானே பேசியவன் நிலவனை பின் தொடர்ந்தான்.... ஆனால் அதற்குள் அவன் நண்பனோ அங்கே அவன் பயந்தது போல் ஏழறையை கூட்டி இருந்தான்.....



ஜாதி மல்லி மலரும்......



உங்கள் கருத்துக்காக காத்திருக்கும் என்னை ஏமாற்றி விடாதீர்கள் கோபால்... ஏமாற்றி விடாதீகள்


கருத்து திரி 👇

InShot_20240717_222956912.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 05



அந்த வாகன நெரிசலில் வண்டியோட்டி கொண்டிருந்த நிலவனை பார்வையால் சுட்டெரிந்துகொண்டிருந்தான் அவன் ஆருயிர் தோழன் புகழ்..... அந்த பார்வையின் சூட்டை நிலவனும் உணர்ந்தே தான் இருந்தான்...

"ஏன் மச்சான் நான் அவ்வளவு அழகாவா இருக்கேன்..... இமைக்க கூட மறந்து என்னையே சைட் அடிக்கிறியே.... ஒரு வயசு பையன் எனக்கு வெக்கம் வருமா இல்லையா?.." என்று சொல்ல மீண்டும் அந்த பக்கம் இருந்து முறைப்பே பதிலாய் வந்தது..... அவன் இருந்த உல்லாச மனநிலைக்கு இது இன்னும் சுவரஷ்யத்தையே கூட்டியது.... மேலும் அவனை வெறுப்பேற்ற எண்ணி விசிலடிதவாறே " அச்சச்சோ மச்சான்... என் ப்ளூ பென்ன அங்க ஹாஸ்பிடல்லயே விட்டுட்டு வந்துட்டேன் மச்சான்..... மறுபடியும் போய் எடுத்துட்டு வந்துடுவோமா????.... என்று வண்டியை திருப்ப போனவனிடம்...

"உங்களுக்கு என்ன தான் வேணும் இப்போ"

"என்ன கேட்டாலும் கிடைக்குமா???"

"அது நீங்க கேக்குறத பொறுத்து.."

"ஆஹான்.... மரியாதை... ம்ம்ம்ம்... நீங்க தான் வேணும் கிடைக்குமா????"

"டேய்.... டேய்... போதும்.. ஓட்டாதடா... எனக்கே மண்டை காஞ்சி போய் கெடக்கு...."

"பின்ன உன்ன என்னமோ நான் கடத்திட்டு போய் கட்டாய கல்யாணம் பண்ண போறங்கிற ரேஞ்சுக்கு முறச்சிட்டே உக்காந்திருக்க...."

"பின்ன நீ செஞ்ச வேலைக்கு உன்ன கொஞ்சுவாங்களாக்கும்.... "

"கொஞ்சேன்... யாரு கேப்பா உன்ன..."

"ம்ம்ம்ம், நானே என்ன பச்ச பச்சயா கேப்பேன்..."

"நோ அப்ஜெக்ஷன்..."

"ஏன் டா டேய் ஏன்.... இன்னைக்கு உன்ன கொல்லபோறேன் பாரு..... அது சரி அந்த பொண்ண உனக்கு முன்னாடியே தெரியுமா என்ன???..." என்றான் புகழ் சந்தேகமாக...

"யார மச்சான்"

"அதான் நீ இப்போ ஹாஸ்பிடல போன் நம்பர் கேட்டு ரகளைய கூட்டிட்டு வந்தியே அந்த ஹார்ட் டாக்டர தான் கேக்குறேன்.... "

"அது ஒரு நல்ல நோக்கத்துக்கு வாங்குனது மச்சான்.... அத ஏன் தப்பா பாக்குற நீ...."

"யாரு நீ நல்லெண்ணெத்துல... நம்பிட்டேன்.... எங்க கொஞ்சம் அந்த நல்ல எண்ணம் என்னனு சொல்லுங்க பாப்போம்.."

"ஒரு டாக்டர தெரிஞ்சி வெச்சா நல்லது தான டா.... ஆத்திர அவசரத்துக்கு ஏதாச்சும் எமஜென்சினா கால் பண்ணி கூப்பிட்டுக்கலாம் பாரு...."

"அதுசரி நம்ம வீட்டுக்கு... அதுவும் வெளில இருந்து டாக்டர் அவசரத்துக்கு வேணும் அப்படிதான....."

"அப்கோர்ஸ் மச்சான்.... சப்போஸ் உனக்கே நாளபின்ன ஹார்ட் அட்டாக் வந்தா யூஸ்புல்லா இருக்குமேனு ஒரு தூரநோக்கு பார்வையோட தான் வாங்குனேன் மச்சான்.... என்னைப்போய் சந்தேகப்படுறியே இது நியாயமா??...." என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான்....

"அட கொலைகார பாவி.... எவ்வளவு நாள் ஆசடா இது.... என்ன போட்டுதல்ல நீ ஒருத்தன் போதாதாக்கும்.. அதுக்கு ஹார்ட் அட்டாக் தான் வரணுமாக்கும்???....." என்று முறைத்தவன் மேலும் தொடந்தான்
"நீ கதைய டைவேர்ட் பண்ணின வரைக்கும் போதும்... இப்போ சொல்லு அந்த பொண்ண தெரியுமா??? தெரியாதா???...." என்றான் நண்பனை நன்கு அறிந்தவனாய்...

"இல்லையே.... நான் இன்னைக்கு தான் அவளயே பாக்குறேன்... உன் மேல சத்தியமாடா மச்சான்... அப்படிலாம் சந்தேகமா பாக்கதா... என் நெஞ்சு தாங்குமா சொல்லு..." என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு பேசியவனை நம்பி விடாதே என புகழின் மூளை மணி அடித்தது...

"நீ சும்மா சொல்லி இருந்தாலே நான் நம்புறது டவுட் தான்.... இதுல நீ ஓவர் அப்பாவி லுக் குடுத்து பர்போமன்ஸ் பண்றது தான் எனக்கு ஹன்ரட் பெர்ஸன்ட் உண்மைன்னு நம்பவைக்குது..... "

"ஸ்டேஷன் வந்துடிச்சு.... அரட்டை அடிக்காம வாங்குற சம்பளதுக்கு வேலைய பாப்போம் வா...." என்று உள்ளே நுழைந்தவனின் பின்னே

"காக்கி சட்ட போட்ட இந்த எலி இன்னைக்கு எல்லாம் வித்தியாசமாவே பண்ணுதே என்னவா இருக்கும்..... அது சரி கத்தரிக்கா முத்துனா கடைக்கு வந்து தான ஆகணும் அப்போ கவனிச்சுகிறேன்...." என்றவனும் நுழைந்தான்... அவன் பேசியது நிலவனுக்கும் கேட்கவே செய்தது...



"இடியட்... இரிடேட்டிங் இடியட்... மறுபடியும் என்ன தொல்லை பண்ணன்னே கடவுள் இவன அனுப்பி இருப்பாரோ????..... நம்பர் வேற வாங்கிட்டு போய்ட்டான்... என்ன என்ன கொரங்கு வித்த எல்லாம் பண்ண போறானோ???..... இவன் ஏன் போலீஸ் வேலைல???? அவனோட கனவு என்னாச்சு????..... அவன் எக்கேடோ கெட்டு போறான் எனக்கென்ன வந்திச்சு.... இவனுக்கு பாவபடுறேன் இவன் பண்ணுனதெல்லாம் மறந்துட்டேனா????...." இப்படி பல கேள்விகளில் மனம் லயித்திருக்க... தாதி ஒருவரின் குரல் அவள் சிந்தனையை கலைத்தது......

"டாக்டர்.... வாட் நம்பர் பத்து ஐ.சி.யூ ல இருக்க பேசன்ட் ரொம்ப சீரியஸா இருக்காங்க....."

"என்னாச்சு சிஸ்டர்.... கணேசன் தான அவங்க நேம்.... காலைல ரெகுலர் செக்கப் பண்ணினீங்க தான..." என்றாள் அந்த வாட் ஐ நோக்கி விரைந்தவாறே கையை நீட்டினாள் அவர் ரிப்போர்ட்டுக்காக....

"எஸ் டாக்டர்..... ஆனா அவருக்கு எதுவுமே பேட்டர் ணு சொல்லிக்கிற அளவுக்கு மாறல..... இப்போ கொஞ்சம் மூச்சு திணறல் அதிகமாகிடிச்சு...."

"ஐ நோ.... இவர் கேஸ் கொஞ்சம் கிரிட்டிகள் தான்... பாப்போம் வில் டூ அவ பெஸ்ட்....."

"டாக்டர் என் அப்பாவ காப்பாத்த முடியுமா??? முடியாதா???.... உங்களால முடியாட்டி சொல்லிடுங்க நாங்க வேற ஹாஸ்பிடல் பாத்துகிறோம்.... வந்து வன் வீக் ஆகிடிச்சு எந்த இம்ப்ட்ரூமென்ட்டும் இல்லை..... எங்க அப்பா யாருணு தெரியும்ல.... " என்று அவள் வந்ததும் வராததுமாய் கோபத்தில் கதியவவனை சிறிதும் சட்டை செய்யாமல் ஓரு பார்வையோடு ஐ.சி.யூ க்குள் நுழைந்தாள்...

சிறிது நேரத்தில் வெளியேறியவள்... அங்கு நின்ற அவர் மனைவியை நோக்கி "மேம் கம் டு மை கேபின்" என்றவாறு முன்னே சென்றாள்.... தாயை மட்டும் அழைத்து தன்னை மதிக்காத அவள் செயலில் மகனாகப்பட்டவனுக்கு கோபம் வரவே செய்தது.... இருந்தும் அமைதியாய் அவனும் அவளை பின் தொடர்ந்தான்....

"சிட்... கொஞ்சம் வெளிப்படையாவே பேசிடுறேன் மேம்.... இதுவரைக்கும் உங்க ஹஸ்பண்ட்க்கு பண்ண வேண்டிய எல்லா டிரீட்மென்ட் உம் பண்ணிட்டு தான் இருக்கோம்.... பட் சாரி டு சே அவரோட நிலைமை கொஞ்சம் கிரிட்டிகலா தான் இருக்கு.... என்னோட அப்சவேஷன் படி ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் தான் இதுக்கு இருக்குற ஒரே வழி..... இப்போதைக்கு ஹார்ட் அதோட டுவெண்ட்டி பெர்சென்ட்டேஜ் தான் ஒர்க் பண்ணுது.... ஒரு ஹார்ட் ஓட பங்ஷன் எவ்வளவு முக்கியம்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு இல்ல..... இன்பாக்ட் ட்ரிங்ஸ் அண்ட் ஸ்மோங் ஹாபிட் கூட உங்க ஹஸ்பண்ட்க்கு அதிகமா இருந்திருக்கு...."

"இப்போ என்ன சொல்ல ட்ரை பண்ணுறீங்க.... எங்களால காப்பாத்த முடியாது வேற இடம் பாத்துக்கோங்க அதான.... அத சொல்ல சுத்தி வளச்சு எங்க நேரத்தை வீணடிக்க வேண்டியது.... ச்சே...." என்றான் கோபமாய் அவள் பேச்சை இடைவெட்டி...

அவனின் பேசுச்சுக்கு எந்த வித உணர்வுகளையும் காட்டாமல் அவனை உற்று நோக்கியவள்.... அருகில் உள்ள பெல்லை தட்டினாள்...

"எஸ் டாக்டர்..."

"சிஸ்டர் இவங்களுக்கு இவங்க ஹஸ்பண்டோட டிஸ்சார்ஜ் ப்ரொசீஜர் கொஞ்சம் என்னனு பார்த்து சொல்லுங்க.... அப்படியே அந்த நெஸ்ட் பேசன்டோட பைலை கொண்டு வாங்க..." என்றதோடு தான் வேலை முடிந்ததென எழுந்துவிட்டாள்.... அவள் செயலில் எதிரில் இருப்பவன் தீக்கனலாய் கொதிப்பதை அறியாமல்

"அம்மாடி டாக்டர் ஒரு நிமிஷம் மா.... ஏற்கனவே அவரு ரொம்ப கஷ்டபடுறாருமா.... நாங்க இங்கயே டிரீட்மென்ட் பாத்துக்குறோம்மா...." என்றவரின் பேச்சை கேட்டவளது பார்வை அவர் மகன் பக்கம் செல்வதை உணர்ந்தவர்
"அவன் ஏதோ தெரியாம பேசிட்டான் மா நான் மன்னிப்பு கேக்க சொல்லுறேன்மா.... இனி அப்படி பேசாம நான் பாத்துக்கிறேன்... நீ என்னனு சொல்லுமா..." என்று அவளிடம் சொன்னவர் "மன்னிப்பு கேளேண்டா...." என்று அவர் மகனிடம் முடித்தார்....

" ஐ எம் சா....... "

"இப்போ உங்க ஹஸ்பண்ட இருக்குற நிலைமைக்கு இப்போவே டிரீட்மென்ட் பண்றது அவ்வளவு அட்வைசபில் இல்ல.... நாம பண்ணப்போற டிரீட்மென்ட்ட ஏத்துக்குற அளவுல இப்போ அவர் உடம்பு இல்ல.... பட் எவ்வளவு சீக்கிரம் பண்ணுறோமோ அவ்வளவு நல்லது...." என்றாள் அவன் சொல்ல வந்த சாரியை சிறிதும் மதிக்காமல்.... அதுவே அவன் எரிச்சலை இன்னும் கூட்டியது.....

"இங்க ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்ல ஹார்ட் ஓட தேவை இருக்குறவங்க லிஸ்ட்ல உங்க ஹஸ்பண்ட் நேம் அட் பண்ணுவாங்க.... பட் ஹார்ட் உடனே கெடச்சிடும்னு சொல்ல முடியாது.... மெடிக்கல் எமஜென்சி, அப்பறம் உங்க ஹஸ்பண்டோட கண்டிஷன், பிளட் குரூப் இது எல்லாம் பொறுத்து தான் ஹார்ட் டோனர் கிடைப்பாங்க...... இதெல்லாம் ஏன் சொல்லறேன்னா இந்த விசயத்துல பொறும ரொம்ப முக்கியம்.... உங்களுக்கே புரியும்னு நினைக்குறேன்..... இப்போலாம் இறந்த பின்னாடி கூட யாரும் யாருக்கும் யூஸா இருக்கனும்னு விரும்புறதில்லையே.... ஆர்கான் டொனேஷன் என்கிறது இப்போலாம் விரல் விட்டு எண்ண கூடிய வீதத்துல தான நடக்குது..... ஓகே லீவ் இட்... இந்த விஷயத்துல என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்ன நீங்க கான்டெக்ட் பண்ணலாம்....." என்றாள் நீளமான விளக்கமாய்.....

"சரிம்மா.... ரொம்ப தேங்க்ஸ்.... அப்போ அதுவரை அவர இங்க தான் வெச்சிருக்கணுமா?...."

"கட்டாயம்னு இல்ல அது உங்க விருப்பம்..... பட் இப்போதைக்கு அவங்க ஹெல்த் இம்ப்ரூவ் ஆகுற வர இருந்தாகணும்.... அப்பறம் விருப்பம்னா இங்கவே வெச்சு பாத்துக்கலாம்.... இல்லனா ஒரு நர்ஸ் அரேஞ்ச் பண்ணி வீட்லகூட வெச்சு பாத்துக்கலாம்...."

"சரி டாக்டர் ரொம்ப தேங்க்ஸ்..."
என்றவர் வெளியேற சிறு தலையசைப்பே அவளிடத்தில்..... அவர் மகன் நின்றது.... பார்த்தது.... முறைந்தது.... இது எதையுமே அவள் சட்டை செய்ததாக தெரியவில்லை... அவளிடம் ரியாக்ஷனை எதிர்பார்த்த அவன் தான் கோபமாய் வெளியேற வேண்டி இருந்தது.....

"விக்ரம்... விக்ரம்...."

"எஸ் மாம்...." என்றான் எரிச்சலுடன்....

"நீ பேசுனது ரொம்ப தப்பு.... நம்ம அப்பா இருக்க நிலைமைக்கு நாம தான் பொறுமையா இருக்கணும்...." என்றார் கண்களை துடைத்தவண்ணம்...

"நான் என்ன தப்பு பண்ணுனேன்.... ஜெயராமன் அங்கிள் சொன்னாரேனு தான் இவகிட்ட ட்ரீட்மெண்ட் பாக்குறோம்... இல்லாட்டி இவள் எல்லாம் நமக்கு ஒரு ஆளா மா... "

"வீணா விதண்டாவாதம் பண்ணாத விக்ரம்..... தப்பு என்னனு உனக்கே தெரியும்..... இங்க வந்த நாள்ல இருந்து நீ ஏன் அந்த பொண்ணு மேல உன் கோபத்தை திணிக்கிற.... இது எல்லாம் நல்லதுக்கு இல்ல..... நான் சொல்லி உனக்கு புரியனும்ற வயசுல நீ இல்லை.... புரிஞ்சிப்பனு நெனைக்கிறேன்... உன் அப்பா போல நீயும் எல்லாரையும் எடுத்துதெரிஞ்சி பேசாத அவ்வளவு தான் சொல்லுவேன்....."

"ம்ம்ம்ம்" என்றான் உள்சென்ற குரலில்....

"அப்பறம் அப்பாவோட கட்சி ஆளுங்க கிட்ட எதையும் உளறி வைக்காத..."

சரி என்பதாய் தலையாட்டியவன் மனது அப்போதும் மட்டுப்படவில்லை "அவளோட ஆட்டிட்யூட்ட எங்கிட்டயே காட்டுவாளா?.... வெளிநாட்டுல படிச்சிட்டு வந்தா பெரிய ஆளா இவ... நான் யாருனு தெரியாம எங்கிட்ட மோதிட்டலடி... இதுக்கு நீ கட்டாயம் ஒருநாள் கதறுவ.... கதற வைப்பேன்..." என்று மனதில் சபதமிட்டுக்கொண்டான்.....


காலையில் இருந்து நடந்த எதுவுமே அவளுக்கு உவப்பானதாய் அமையவில்லை..... உடல் ஓய்வுக்கு கெஞ்ச.... நேற்றிரவு இல்லாத தூக்கம்மும் சேர்ந்துகொண்டது..... இன்று அவளுக்கு நைட் டூட்டி போடப்பட்டிருந்தது.... இருந்தும் நேற்றய நாளுக்காக அதை மாற்றிகொள்ள முடியும் என்பதால் இன்று மதியம் இருந்த வேலைக்கு அறை நாள் விடுப்பு போட்டுகொண்டவள் வீட்டிற்க்கு விரைந்தாள்....

"அடடே அதிமா இன்னைக்கு எர்லியாவே வந்துட்டியாடா??? வாவேன் அப்பா கூட சாப்புடுவோம்....." என்ற கலையரசனின் பேச்சு எப்போதும் போல் விழலுக்கு இறைத்த நீராகவே ஆனது....

தன்னை சுத்தப்படுத்தி கொண்டவள்.... சிறிது சோர்வு மட்டுப்பட்டிருக்க, தான் இங்கிருக்க காரணமானவரை பார்க்க எண்ணி அவர் அறைக்கு சென்றாள்.....

அங்கே அறைக்குள் மெத்தையின் மத்தியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் ராஜய்யா.... வாயோதிபத்தோடு அவர் மனக்கவலையும் அவர் உடலை சற்று அதிகமாக உருக்குழைக்கவே செய்தது.....

அவர் அருகில் சென்று அமர்ந்தவள்... அவர் கைகளை மெல்ல தடவி கொடுத்தாவாறே மனதில் பாரத்தோடு அமர்ந்திருந்தாள்....

தாத்தாவின் நிலைமையறிந்தே அவள் இங்கு வந்தது..... அவரால் வரவழைக்கப்பட்டாள் என நம்பும் கலையரசனையும் அவர் திட்டத்தையும் அவள் அறிந்ததே.... தந்தை எனப்படுபவரின் குள்ளநரி புத்தி அவள் அறியாததா???...... பிணம் தின்னி கடுகுக்கு கூட சிறிது மனிதாபிமானம் இருக்கும் தந்தை எனும் கொடூரனை ஒப்பிடுகையில்....

என்னதான் தான் ஒரு மருத்துவராக இருந்த போதிலும் தன் தாத்தாவை காப்பாற்ற முடியாது என்னும் உண்மை அவளை சுடவே செய்தது.... அவரது இறுதி காலங்களில் அவரோடு இருக்கப் பிரியப்பட்டு கோபதாபங்களை ஒதுக்கி வைத்து அந்த வீட்டில் அவள் வசிப்பதும் அவருக்காகவே தான்.... அவளுக்கென இருக்கும் உறவு அவர் தானே........ எத்தனையோ முறை அவரை அங்க அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முயற்சி செய்தும் சிறிதும் ஒத்துக்கொள்ளவில்லை என்பதில் எப்பொழுதும் அவரின் மீது கோபம் இருக்கவே செய்கிறது..... நிலைமை கைமீறி சென்ற பிறகு கைகட்டி வேடிக்கை பார்க்க தானே முடியும்.....

யோசனைகளின் மத்தியில் அமர்ந்திருந்தவளை கலைத்தது அந்த குரல்

"அப்பு... எப்போடா வந்த..." என்று எழ முயன்றவரை தடுத்தவள்

"நீ படுத்துக்கோ தாத்தா.... நான் இப்போதான் ஒரு டென் மினிட்ஸ் இருக்கும் வந்து...."

"சாப்டியாடா..."

"இல்லை தாத்தா... இனிமேல் தான் சமைக்கணும்.... ரொம்ப டயர்ட் ஆ இருக்கு பாப்போம் ஏதாச்சும் ஆர்டர் பண்ணிக்கிறேன்... நீ சாப்பிட்டியா...."

"ஆமா டா.... இப்போதான் கமலாம்மா தந்திச்சு... சாப்பிட்டதும் லேசா கண்ணசந்துட்டேன்... நீயும் இங்கயே சாப்பிடலாம் தானடா.... எதுக்கு தனியா சமைச்சு கஷ்டப்படுற... ஏற்கனவே கமலா நமக்குன்னு வேறயா தான சமைக்குது..."

"தாத்தா.... கமலா ஆண்ட்டி இத நமக்கு ஒரு ஹெல்பா தான் பண்ணுறாங்க... உங்களையும் கவனிச்சிட்டு.. உங்களுக்கு வேறயா எனக்கு வேறயானு சமைச்சிட்டு.. பாவம் தாத்தா அவங்க.... ரெண்டுபேருக்கும் ஒன்னாவே செய்ங்கன்னாலும் கேக்குறதில்ல... அப்பறம் எப்படி நானும் கஷ்டப்படுத்துறது... உங்களுக்கும் சேத்து நானே சமைக்குறேனு சொன்னா அதுக்கும் நோ தான்... அதான் நானே எனக்கு சமைச்சுக்கிறேனு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்... அதுக்கு தான் என்னோட பேசாம மூஞ்ச தூக்கிவெச்சிட்டு சுத்துறாங்க..."

"அவ சொல்லுறதும் சரி தானடா அப்பு... நான் குடிக்கிற அந்த உப்பு சப்பில்லாத கஞ்ச நீயும் குடிப்பியாக்கும்.... ஆனா நீ சொல்றதும் சரிதான் பாவம் அவளும்... நீ சமைக்கிறது எல்லாம் சரி கரெக்ட் டைமுக்கு சாப்பிடணும் சொல்லிட்டேன்..."

"அதெல்லாம் கரெக்டா சாப்புடுவேனே.. " என்றாள் அவர் கன்னத்தை கிள்ளி...

"அப்பறம் நீ எப்போ ஊருக்கு போற அப்பு.... டிக்கெட் போட்டாச்சா???...."

"இந்தவாட்டி இப்போதைக்கு போற ஐடியா இல்லை தாத்தா.... பாக்கலாம் கொஞ்ச நாள் போகட்டும்.... இந்தவாட்டி ரொம்ப நாளா முரண்டு பிடிக்கிற உன்னையும் கூட கூட்டிட்டு பறக்க போறேன்...." என்று அவர் மீசையை இரு கைகளாலும் நீவி விட்டாள்....

"நீ சந்தோசமா இரு டா... இந்த கிழவன் இன்னும் ஏன் இருக்கேன்னு தெரியாமாட்டேங்கிது... வாழனும்னு ஆசைப்படுற யாருக்குமே கொடுக்காத ஆயுள எனக்கு தண்டனையா கடவுள் கொடுத்திருக்கான் பாத்தியா???..... என் பொண்ணுக்கு நான் பண்ண பாவத்துக்கு இது எனக்கு தேவை தான்..."

"ஐயோ தாத்தா இப்படி எல்லாம் பேச கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல.... எந்த தப்பும் நீ பண்ணல.... எல்லாரும் உன்ன மாதிரி நல்லவங்கன்னு நினைச்சுட்ட அவ்வளவு தான்...... நான் இருக்கிற வரைக்கும் என் தாத்தா எப்பவும் சிரிச்சிட்டே தான் இருக்கும்.... எங்க சிரி பார்ப்போம்...." என்றாள் அவர் இதழ்களை தன் கை கொண்டு விரித்தவாற...

"அப்பு நாளைக்கு நம்ம வக்கீல் வேணுகோபால கொஞ்சம் வந்து என்ன பாக்க சொல்லுறியாடா...."

"ஏன் தாத்தா என்னாச்சு..."

"நம்ம சொத்து எல்லாம்.... இங்க உள்ள ஆசிரமத்துக்கு எழுதி வெச்சிடலாமேனு இருக்கேன்டா.... எனக்கும் இன்னும் எவ்வளவு நாள் கடவுள் விட்டு வெச்சிருக்காரோ தெரியல.... அதுக்குள்ள இத முடிச்சிட்டு போன தான்... கண் மூடின பிறக்காச்சும் நிம்மதி கிடைக்கும்.... "

"ஓகே தாத்தா உன் ஆசைப்படியே பண்ணிடலாம்...." என்றவளை பார்த்தவருக்கு மனம் நிறைந்து போனது.... கூடவே சஞ்சலமும் தொற்றிக்கொண்டது.... அதை அவளிம் கேட்கவும் செய்தார்...

"உனக்கு தாத்தா மேல கோபம் இல்லையாடா அப்பு..."

"ஏன் தாத்தா எனக்கு என்ன கோபம்?..."

" இல்ல.... உனக்கு சேர வேண்டிய சொத்த இப்படி பண்ண போறேன்னு சொல்றனே கொஞ்சம் கூடவா வருத்தம் வரல என்மேல...."

"நீ எது செஞ்சாலும் சரியா தான் தாத்தா இருக்கும்.... கவலை படாம உனக்கு என்ன தோணுதோ பண்ணு உன் கூட எப்பவும் நான் இருப்பேன்....." என்ற தன் பேத்தியை பார்த்தவருக்கு தன் மகளின் ஞாபகமே எழுந்தது.... "அவளும் இப்படி தானே தான் செய்வதை நூறு வீதம் நம்பி அவள் வாழக்கையையே தொலைத்தாள்...... அவளை இழந்தது போல் இவளையும் இழக்க கூடாது..... தன் கண்ணுக்கு பின்னும் இவள் எல்லா ஆசியும் பெற்று வாழ வேண்டும்..." என்பதே அவர் எண்ணமாகவும் வேண்டுதலாகவும் இருந்தது.... தன் பேத்தியை கணிவோடு பார்த்தவர்....

"இந்த சொத்து பணம் எல்லாமே உனக்கு சாபம்டா அப்பு.... ஏற்கனவே கொஞ்சம் அவன் பெயர்ல மாத்திகிட்டான் அதுவும் போதாம எல்லாம் வேணுங்கிற பேராசைல என்ன வேணா பண்ணுவான் இந்த கேடுகெட்டவன்.... எனக்கு அப்பறம் சொத்துல மூணுல ஒரு பங்கு உன் அம்மாக்கும்..... இன்னொரு பங்கு உனக்கும்...... மிஞ்சி இருக்குறது ஆசிரமத்துக்கும் போற மாதிரியும்.... அதுவரைக்கும் கார்டியனா அவன் இருக்குற மாதிரியும் தான் உயில் இருக்கு... ஆனா உன் அம்மா ஏற்கனவே நம்மள எல்லாம் விட்டு போய்ட்டதுனால...." என்று பேசிகொண்டிருந்தவரின் குரல் அழுகையில் குழற தொடங்கியது....

"வேணா தாத்தா நீ எதுவும் சொல்ல வேணா.... உனக்கு தோணுறத பண்ணு.... இந்த சொத்து எல்லாம் எனக்கு எதுவுமே இல்லை.... நீ கவலை படுறது தான் கஷ்டமா இருக்கு...."

"இல்லடா எனக்கொன்னும் இல்லை... இத உன்கிட்ட சொல்லியே ஆகணும்... எப்போ பேச நினைச்சாலும் இடைல ஏதோ சங்கடம் பேச முடியாம போயிடிச்சு... நீயாச்சும் சந்தோசமா இருக்கணும்னு நானும் உன்கிட்ட இதெல்லாம் பேசினது இல்லை.... ஆனா இப்போ சொல்லியே ஆகணும்.... எனக்கென்னவோ என் நேரம் முடியப்போகுதோனு தோணுது...."
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"தாத்தா....நீ இப்படியே தான் பேசுவனு இருந்தா நீ மட்டுமே பேசிட்டு இரு நான் போறேன்...." என்று கோபமாய் எழுந்தவளை அமர செய்தவர்...

"சரி சரி... இனி அப்படி பேசலடா அப்பு..."

"ம்ம்ம்ம்" என்றாள் முறுக்கிக்கொண்டு அதனை உணர்ந்து புன்னகைத்தவர் மேலும் தொடர்ந்தார்.... "உன் அம்மா இறந்ததுனால அவ பங்கும் இப்போ உனக்கு தான் சேரும்... இப்போ அவன் கிட்ட இருக்குற கோடி கணக்கான சொத்து எல்லாம் நம்ம சொத்துல வெறும் பத்து பெர்சென்ட்டேஜ் தான்.... அது அவனுக்கு நல்லாவே தெரியும்... ஆசிரமதுக்கு போற முப்பது பெர்சென்ட்டேஜ அவனுக்கு மாத்தி எழுத இருந்த அன்னைக்கு தான் அவன பத்தி எல்லாமே தெரிய வந்திச்சு.... இப்போவும் அத அவனுக்கு எழுதிக்கிறதுக்காக தான் என்ன உயிரோட விட்டுவெச்சிருக்கான்னு தோணுது... இது என்னோட கணிப்பு, ஆனா அவன் நாம நெனைக்கிறத விட ரொம்ப மோசம்... என்ன எண்ணத்தோட உன்னையும் என்னையும் உயிரோட விட்டிருக்கான்னு தெரியல...." என்று கண்மூடி சிறிது நேரம் மௌனமாய் இருந்தவர் மேலும்....

"நான் போனதுக்கு அப்பறம் இந்த சொத்துக்காக உன்ன எதுவும் பண்ணிடுவானோனு பயமா இருக்குடா... அதனால எல்லாத்தையும் ஆசிரமதுக்கே குடுத்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்... சொத்து எதுவும் உங்கிட்ட இல்லனா உன்ன எதுவுமே பண்ண முடியாதுலடா அப்பு....." என்று வெள்ளந்தியாக கூறி உடைந்து அழுதவரை லேசாக அணைத்து கொண்டவள்.....

"நீங்க எதையும் யோசிக்க கூடாது நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.... எங்கூட பிலைட்ல வர்றதுக்கு தெம்பு வேணாமா?... ஒழுங்கா டைம் க்கு சாப்பிட்டோமா தூங்குனோமானு இருக்கனும்.... சரியா???....." என்றாள் ஆனால் மனதிலோ "அவன் அதோட விடமாட்டான் தாத்தா.... அவனுக்கு எதிர்பாக்குறது கிடைக்க எந்த எல்லைக்கு போவான்.... கிடைக்கவே கிடைக்காதுனு தெரிஞ்சா என்ன அழிக்கவும் தயங்க மாட்டான்.... நான் அவனுக்கு இவ்வளவு காலமும் தங்க முட்ட இடுற வாத்து தான்.... இந்த சொத்த அனுபவிக்க அவனுக்கு கெடச்சிருக்குற சாவி தட்ஸ் ஆல்...... இனிமேல் முட்டையோ சாவியோ கிடைக்காதுனு வர்றப்போ அவன் என்னையே விக்கவும் தயங்க மாட்டான்.... ஆனா நான் இதுக்கு அனுமதிக்க போறது இல்லை... அம்மாவுக்காக உங்களுக்காக நான் கண்டிப்பா நியாயம் செய்வேன்...." என்ற எண்ணம் தான் இருந்தும் இதனை சொல்லி மேலும் அவரை வருத்த வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தாள்....

"என்னடா அப்பு அமைதியாகிட்ட...."

"ஒண்ணுமில்ல தாத்தா.... எப்படி உங்கள பார்சல் பண்ணி கொண்டு போறதுன்னு யோசிக்கிறேன்.... என்றாள் ஒன்றை கண்ணை சிமிட்டி...."

"ஹாஹாஹா.... என்ன பார்சல் பண்ணுவியாக்கும்.... தாத்தாவோட வீரம் தெரியல உனக்கு.... அந்த காலத்துலேயே உன் பாட்டியா ஒத்த கையாள தூக்குவேனாக்கும்....."

" ஒரே லவ்ஸ் தான் பாட்டி கூட.... ஓகே இப்போ படுத்துக்குவீங்கலாம்... அப்பறம் அப்படியே கனவுல உங்க ஆள் கூட டூயட் பாடுவீங்கலாம்......."

"அதுக்கென்ன பாடி ஆடிட்டா போச்சு.... ஆனா கெழவிக்கு தான் என் அளவுக்கு ஆட வராது...."

"அதுசரி முதல்ல தூங்குங்க பிறகு ஆடலாம்...."

"சரிடா அப்பு நீயும் போய் கொஞ்சம் தூங்கி எந்திரி..... மறக்காம சாப்பிட்டுடனும்..."

"டன்....." என கண் சிமிட்டியவள் அவர் அருகில் அமர்ந்து கொண்டாள்...

"என்னடா உக்காந்துட்ட....."

"நீ முதல்ல தூங்கு தாத்தா... அப்பறம் நான் போறேன்..."

"இல்ல இல்ல... நீ போ... இப்போவே லஞ்ச் டைம் தாண்டிடிச்சு.... நான் தூங்குவேன்.... உன் கண்ணுல ரொம்ப சோர்வு தெரியுதுடாமா.... போ போய் சாப்பிட்டு தூங்கு...." என்று அவள் மறுக்க வாய்ப்பளிக்காமல் விரட்டினார்.....

போகும் அவளையே பார்த்தவர் "இவ்வளவு சொத்து சேத்தும் என் பொண்ணுங்க நீங்க எதுவுமே அனுபவிக்க கொடுத்து வெக்கலயே..... என்ன பாவம் செஞ்சிட்டு வந்தேனோ????..." என் மனதால் உடைந்து அழுதார்....

நேரே அறைக்குள் நுழைந்து கதவடைத்துகொண்டவள்..... மனதில் இருந்த சஞ்சலத்துடன் சாப்பிட தோன்றாமல் மெத்தையில் அப்படியே கண் மூடியபடி விழுந்தாள்..... தூக்கம் தான் வந்த பாடில்லை..... அன்றைய நாள் அவள் மனதில் படமாய் ஓடிகொண்டிருந்தது..... மூடிய கண்களுக்குள் அவன் புன்னகை விம்பம்.... அந்த முகம் ஏனோ அவளுள் ஆயிரம் நினைவுகளை கொட்டிதீர்த்தது..... உணர்வுகளை காட்டாத அவள் மூடிய கண்களுக்குள் தான் இன்று எத்தனை உணர்வுகள்......

"ச்சே... அவனாலதான் எல்லாம்.... போன் நம்பர் வாங்குனானே கால் பண்ணுவானோ..... பண்ணினாலும் அட்டன்ட் பண்ணவே கூடாது..... பர்ஸ்ட் ரிங்லேயே கட் பண்ணிடனும்.... அப்போ தான் இந்த அதி யாருனு அவனுக்கு தெரியும்....." ஒரு முறை ஆழ மூச்செடுத்துக்கொண்டவள்... சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தை தழுவினாள்.....



ஜாதி மல்லி மலரும்...........



கருத்து திரி 👇👇👇


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 06



"ஏண்டி உன் அத்தான தான நீ கட்டிக்க போற... " என்ற தன் அருகில் அமர்ந்திருந்த நண்பியை கேவலமாக ஒரு பார்வை பார்த்த கீதா


"உனக்கு இந்த நேரம் ரொம்ப முக்கியமான டவுட்டு தான்டி.... மூடிட்டு பாடத்த கவனி...."

"இல்லடி... அவரு தான் உன்ன பாக்கவே மாட்டேங்குறாரே.... இதுல லவ்னு எப்படி நான் நம்புறது.... பொய்னு தெரிஞ்சா நான் ட்ரை பண்ணலாமேனு தான்" என்றாள் கண்ணில் ஆர்வம் மின்ன

"அடி வாங்கி சாகாத... ஒழுங்கா பாடத்தை கவனி...." என்றவள் முடிக்கவில்லை அதற்குள்...

"கீதா அவுட்....." என்றொரு சத்தம்... பெருமூச்சு விட்டவள் தன் நண்பியை முறைந்தவாறே தன் பையை எடுத்துக்கொண்டு வெளியேறிய நேரம் பாடம் நடத்திக்கொண்டிருந்த ப்ரொபசரை ஒரு பார்வை பார்க்கவும் தவரவில்லை.....

வெளியே சென்று அமர்ந்தவளுக்கு அங்கிருக்க முடியவில்லை..... நேரத்தை பார்த்தவள் " இங்கயும் பரவாயில்ல காத்து நல்லா தான் வருது..... கிங் கொங் தந்த சம்மயாச்சும் ட்ரை பண்ணுவோம்......" என்று புக்கை வெளியே எடுத்தவள் சிறிது நேரத்தில் "இந்த சம்ம போட வேற முடியல பேலன்ஸ் ஆகவே மாட்டேங்குதே..... அந்த கிங் கொங் கலாய்க்குமே.... என்ன பண்ணலாம்.... எதுக்கு மூளைய கஷ்டப்படுத்தனும்.... எப்போவும் போல பாட்னர் கிட்ட போறோம் இந்த சம்ம கிளியர் பண்ணுறோம் அந்த அந்த லேடி கிங்கோங் மூஞ்சில கரிய பூசுறோம்... " என தனக்கு தானே சபதம் எடுத்து கொண்டு தன் ஸ்கூட்டியை எடுத்தவள் பாட்னரின் வீட்டுக்கு விரைந்தாள்.....

"அத்த ..... அத்த.... எங்க இந்த அத்தய காணோம்......" என்றவாறே சமையலறைக்குள் நுழைந்தவள்... " வாவ் அத்த.... பால் பாயசமா??? நான் வரப்போறது எப்படி தெரியுமாம் என் அத்தைக்கு....." என்றவள் பின்னிருந்து அவரை அனைத்துக்குக்கொண்டாள்...

"வாடியம்மா வாயாடி.... இப்போதான் அத்த ஞாபகம் வந்திச்சா.... எங்கடி போன ரெண்டு வாரமா ஆளயே காணோம்...." என்றவர் அவளுக்கு குடிக்க நீரை கொடுத்தார்... அவளோ அதனை பருகியவாறே

"எங்கத்த..... எக்ஸாம்ஸ் நடக்குறதுனால அசையவே முடியுதில்ல..... அதுலயும் ப்ரொபசர்னு ஒரு எரும இருக்கு... ரொம்ப ஓவரா பண்ணுதுத்த... நீ பாத்துட்டே இரு... ஒரு நாளைக்கு கைல மாட்டட்டும் அப்பறம் ஊருக்கே கறி விருந்துதான்..... இப்போதான் உன் பையன் போலீஸ் ஆகிட்டானே.... வாலாட்டினா உள்ள தள்ளிட வேண்டியது தான்...."

"வாய் மட்டும் இல்லனா உன்ன நாய் தூக்கட்டு போய்டும்டி.... நீ சொல் பேச்சு கேக்காட்டி கொஞ்சுவாங்களாக்கும்.... என் மகன் போலீஸ் ஆனதுல உனக்கு தான் குதூகலம் போல.... இந்தா சாப்பிடு.... போகும் போது பார்வதிக்கும் தரேன் எடுத்துட்டு போ..." என்று அவள் கையில் பாயசத்தை கொடுத்தார்...

"என்னவோ போ அத்த.... மாமா சுகி சுகினு உன் பின்னால வர்றது தப்பே இல்லை.... எம்புட்டு டேஸ்டா இருக்கு.... என் அம்மாக்கு கொஞ்சம் சொல்லி குடுத்த.... அது சாப்பாட்ட வாயில வைக்க முடியல..... என்ன பாரு நாளுக்கு நாள் மெலிஞ்சிட்டே போறேன்....." என்று தன்னை ஒரு சுற்று சுற்றி காட்டினாள்...

"ஒடம்பு பூரா வெசம் அப்பறம் எப்படி சாப்பாடு ஒடம்புல ஒட்டும்..... பார்வதி உன்ன எப்படித்தான் சமாளிக்கிறாளோ?"

"நீயும் பாருகிட்ட கேட்டு கத்துக்கோத்த.... இதுக்கப்பறம் வாழக்கை பூரா நீ தான் என்ன சமாளிக்கணும்.... அது சரி இன்னைக்கு ஏன் பாயசம்? ஏதாச்சும் விசேஷமா?..."

"அதெல்லாம் என் புள்ள உன்ன சமாளிச்சுக்குவான்.... என்னனு தெரியலடி நிலவன் தான் பால் பாயசம் பண்ணி வை மா வாறேன்னு சொன்னான்...."

"அப்போ ஏதோ இருக்கு.... ஒருவேள உனக்கு பண்ணிக்கொடுத்த சாத்தியத்தை மீறி காதல் கீதல்ல விழுந்துட்டானோ???"

"வாய்ப்பிருக்கு..... ஒரு பொண்ண கூட்டி வந்து இவள தான் கட்டிக்க போறேனு நிக்க போறான்... அறிவாளிங்க சொன்னா எங்க நம்புறீங்க..." என்றவாறே உள்ளே வந்த கார்த்திக் கீதாவின் தோல் மேல் கை போட்டுக்கொண்டான்....

"அத்த நான் யார்கூடவும் பேசுறதா இல்லை...." என்றாள் அவன் கையை தட்டிவிட்டவாறு

"அப்படிலாம் என் பையன் பண்ண மாட்டான் சத்தியத்தை காப்பாத்துவான்.... நான் சொல்ற பொண்ண தான் கட்டிக்குவான்...."

"அப்படில்லாம் நம்பாதத்த.... எல்லாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பிடாத என்ன மாதிரி.... என்றாள் கார்த்திக்கை முறைத்துக்கொண்டு

"ஸ்ஸப்பா..... ஆரம்பிச்சாச்சா மறுபடியும் உங்க சண்டைய...."

"நீயே சொல்லுத்த.... கிளாஸ்ல வேற யாரு பேசினாலும் கண்டுக்குறதே இல்லை... நான் பேசினா போதும் உடனே வெளிய அனுப்பிடுறது..."

" அட பாவத்த... நீ செய்றதும் தப்பு தானடா கார்த்தி.... பாவம் என் மருமக.... அவளால பேசாம இருக்குறதெல்லாம் நடக்குற காரியமா..." என்றார் நக்கலுடன்....

"மா... நீயும் அவளுக்கு பாடாத அப்பறம் உச்சி கொம்புல ஏறி உக்காந்துக்குவா உன் மருமக..... நான் அப்படி பண்றதே இவளால தான் மா....."

"அப்படி நான் என்ன பண்ணிட்டேன்னு கேளுத்த..." என்று அத்தையிடம் சொல்லியவாறே அவனுக்கு பலிப்புக்காட்டினாள்...

"அப்படி என்ன தான் டா பண்ணா இவ...."

"காலேஜ் புல்லா நான் அவ அத்தான்...... நானும் அவளும் லவ் பண்ணுறோம்... நாங்க தான் கட்டிக்க போறோம்னு சொல்லி வெச்சிருக்காமா?...."

"சரியாத்தான சொல்லிருக்கா...."

"அப்படி சொல்லுத்த"

"ஐயோ அம்மா.... நீயே சொல்லு இவ தப்பு பண்ணி நான் கண்டிக்கலனா இவளுக்கு பேவரிசம் காட்டுறதா தானமா மத்த ஸ்டுடென்ட்ஸ் நெனப்பாங்க.... அப்பறம் எப்படி என் பேச்சுல மரியாதை இருக்கும் சொல்லு......" என்றான் அவளை முறைதவாறே...

"ஐயையோ பாயிண்ட் ஆ பேசுறானே அத்த வேற முறைக்குறாங்க... சமாளிப்போம்...." என எண்ணியவளாக

"அத்த உன் பையன நம்பாத... நான் சொல்லிட்டதுனால அங்க யாரையும் சைட் அடிக்க முடியலன்னு சாருக்கு கவல....."

"அடிங்க.... உன்ன இன்னைக்கு என்ன பண்ணுறேன் பாரு டி.... பண்ணுறதையும் பண்ணிட்டு என்ன குத்தம் சொல்லுறியா நீ..." என்று துரத்த ஓடியவள் சரியாக அப்போது உள்ளே வந்த நிலவனிடன் "பாட்னர்.. இந்த வாத்தியார் என்ன அடிக்கவரான் உன் பாட்னர காப்பாத்து....." என்று அவன் பின் ஒழிந்துகொண்டாள்....

"அவன் பின்ன ஒழிஞ்சிகிட்டா விட்டுடுவேனா... வாடி இங்க..." என்று கார்த்தி முறைக்க...

"அடியேய் வாலு அவன் கிட்ட என்ன வம்பு பண்ணின..." என்றான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.. "கொஞ்சம் ஓவரா பேசி மாட்டிகிட்டேன் பாட்னர்... இரண்டு நாளா பேச கூட இல்லை உன் நொண்ணன்... அதான் லைட்டா ஒரு ஷாக் டிரீட்மென்ட்..." என்று கண் சிமிட்டினாள் அவனை போலவே மெதுவாக

"நீ திருந்த மாட்ட... வா சமாளிப்போம்..." என்று அவளிடம் சொன்னவன்
"விடு டா கார்த்தி எங்க போய்டுவா.... எப்படியும் உன் கிட்டதானே வரனும்... அப்போ கவனிச்சிக்கோ அவள... குடுக்க வேண்டிய அடி எல்லாம் சைலன்டா குடு......"

"என்ன நீ உன் நொண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுற... நீ என் பாட்னர் ஞாபகம் இருக்கட்டும்..."

"ஓஓ அப்படியா.... அப்போ இந்தாடா கார்த்தி இவ கதைய முடிச்சிட்டு வந்து சேரு..."

"ஐயையோ..... பாட்னர் மீ பாவம்.... விட்டுட்டு போயிடாதடாத... நீ அன்னைக்கு கேட்டல திவ்யா நம்பர் அத கூட தந்துடுறேன்..." என்று டீல் பேசிகொண்டிருந்தாள்...

"உன்ன பாத்தா துளியும் பாவம் வரமாட்டேங்கிது.. பட் இருந்தாலும் உன் டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு... அதுக்காக வேணும்னா காப்பாத்தலாம்..." என்றான் அவளை வெறுப்பேற்ற..

"டேய் பாட்னர்..... என்ன விட அவ.. அந்த சிறுக்கி உனக்கு முக்கியமா போய்ட்டாளாடா???...." என்று அவன் தலை முடியை பிடித்து ஆட்ட... இவன் அவள் மண்டையில் கொட்ட என்று ஒரு குட்டி போரே உருவானது.... இதனை பார்த்த கார்த்திக்கும் வாசுகியும் தலையில் அடித்துக்கொல்லாத குறை
தான்...

"மா இதுங்க ரெண்டும் இப்போதைக்கு முடிக்காது.... நான் போய் ப்ரெஷ் ஆகுறேன்..." என்றவன் தான் அறையை நோக்கி செல்ல வாசுகியும் சமையலறை நோக்கி சென்றார்.....

"ஐயோ முடிய விடுடி... அவங்க போய்ட்டாங்க...."

"ஸ்ஸப்பா.... போய்ட்டாங்களா??? இவங்கள டைவேர்ட் பண்றதுக்கு எவ்வளவு நடிக்க வேண்டி இருக்கு...."

"உன் நடிப்புல கொல்லிய வைக்க.... உண்மையாவே வலிக்கிது பக்கி... முடி எல்லாம் உன் கைல வந்திருக்கானு செக் பண்ணுடி முதல்ல..." என்றான் நிலத்தில் சரிந்து படுத்துக்கொண்டு

"ஹாஹாஹா.... அதுவா அந்த முண்டகண்ணி திவ்யா உனக்கு முக்கியமா போய்ட்டாளே.. அதான் நடிப்போட கொஞ்சம் கோபத்தையும் மிக்ஸ் பண்ணிட்டேன்.... எப்படி நம்ம மிக்ஸிங்....." என்று கேட்டவாறு அவன் அருகில் அவளும் விட்டத்தை பார்த்தவாறு படுத்து கொண்டாள்....

"கொலகார பாவி.... ஹேர் ஸ்டைல் எல்லாம் கலைஞ்சா என்ன சைட் அடிக்கிற பொண்ணுங்க எல்லாம் உன்கூட சண்டைக்கு வருவாளுங்க பாத்துக்க...."

"நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்..... சாருக்கு அப்படியே பொண்ணுங்க கியூல நீ நான்னு போட்டி போடுறாங்கனு நெனப்பு...... போலீஸ் ஆனாலும் உன் அழிச்சாட்டியம் குறையல பாறேன்...."

"அதெல்லாம் கூடவே பொறந்தது.... எனக்கென்னடி குறைச்சல் நீ சொன்னாலும் சொல்லிட்டியும் போட்டி போட தான் செய்றாங்க.... உனக்கு பொறாம...."

"பொறாம.. எனக்கு... நீ பாத்த... அது சரி உன் முகத்துல ஒரு லைட் எரியுதே என்ன விஷயம்....." என்றாள் அவன் பக்கமாக திரும்பி வலது கையால் தலையை தங்கிய வண்ணம்.....

"எனக்கா எனக்கென்ன...."

"அப்போ பால் பாயசம் எதுக்கு ராசா"

"அது சாப்பிடணும் போல இருந்திச்சு அதான்... அதெல்லாம் விடு நீ ஏன் திடுதிப்புனு வந்த அத சொல்லு ஃபர்ஸ்ட்....." என்றான் அவளை திசை திருப்ப எண்ணி.... இந்த முறை அவன் எண்ணம் கட்சிதமாய் ஈடேரியது.....

"அத ஏன் கேக்குற பாட்னர்..... உன்ன தான் பாக்க வந்தேன்....." என்று எழுந்து அவள் பையை எடுத்து வந்தவள் அதிலிருந்து நோட் ஒன்றை எடுத்து அவன் அருகில் அமர்ந்தாள்....

"அப்படியே ஓடி போயிடு உனக்கு இதே வேலையா போச்சு..... ஆவுன்னா நோடோட ஓடி வர்றது....."

"அப்படிலாம் சொல்லப்படாது என் செல்லம்ல... அப்பறம் எதுக்கு நீ எல்லாம் ஜீனியஸ்னு இருக்க.... உன்ன மதிச்சு வந்து கேக்குறேன்னு சந்தோசப்படனும்..... உன் அறிவுக்கு தீனி போடுறேன் பாட்னர்...."

"ம்ம்ம்கும் சந்தோச பட்டுட்டாலும்... இந்த வாட்டியும் அந்த லேடி கிங் கொங் தானா?...."

"எஸ் எஸ்.... அதுவே தான்...."

"ஓகே இப்படி வா எக்ஸ்பிளைன் பண்ணுறேன்......"

"ஹேய் ஹேய் பாட்னர்... இந்த வேல தான வேணாங்குறது..... நீயா எழுதி வைப்பியாம்... அதுக்குள்ள நான் உன் நொண்ணண் கூட குட்டி ரொமான்ஸ் பண்ணிட்டு ஓடி வருவேனாம்....." என்றாள் உசாராய் எட்ட நின்று... பின்ன கொட்டு வாங்குவது யாரு...

"ஏத்தம் தான்டி.... நாளைக்கு எக்ஸாம் சொல்லி குடுனு வந்து நிப்பேல அப்போ பாத்துக்கிறேன்....."

"ஓகே ஓகே பேச்ச கொறச்சிட்டு வேலைய பாரு பாட்னர்...."

"அடியேய் நான் இன்னும் ப்ரெஷாக கூட இல்லடி பக்கி...."

"நாய் பூனை எல்லாம் ப்ரெஷாகிட்டா இருக்கு..... நமக்கெதுக்கு பாட்னர் அதெல்லாம்...."

"என்னது நாய் பூனையா உன்ன..."
என்று பேசியவாறே திரும்பியவன் அங்கு அவள் இல்லாததை கண்டு தலையிலடித்துக்கொண்டான்....

"நிலவா.... எங்கடா அவ... போய்ட்டாளா???....." என்றவாறு அவனருகில் வந்தவர் " அடடே இன்னைக்கும் உனக்கு வேல கொண்டு வந்துட்டாளா??... இவ ஒரு டிகிரிய முடிகிறதுக்குள்ள உன்ன முடிச்சிடுவா போலாடா..." என்றார் சிரித்துகொண்டு..

"அவ எங்க போயிருப்பான்னு தெரியாத.... உன் தவ புதல்வன் ரூம்ல இருக்கா....."

"இதுகளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணுவோம்னா.... கார்த்தி அவ டிகிரி முடிக்கட்டும்னு இருக்கான்.... இந்த கழுதை படிப்பேனான்னு இருக்கு..... இதுகல வெச்சிக்கிட்டு....." என்று அழுத்துகொண்டவர்..... இன்னும் யூனிபோர்ம்ல தான் இருக்கியா???... நீ போய் ப்ரெஷ் ஆகிட்டு வந்து இந்த வேலைய பாரு நிலவா.... நான் பாயசம் கொண்டு வறேன் குடிச்சிட்டு போ.... "

"இல்லமா பண்ணி முடிச்சிட்டேன்... போய் ப்ரெஷ் ஆகிட்டு வந்தப்பறமே சாப்பிடுக்கிறேன்...."



"ஹெலோ இங்க என் ரூம்ல என்னடி வேல உனக்கு.... வெளிய போடி முதல்ல...." என்றான் குளித்து முடித்து இடையில் டவலுடன் வந்தவன்....

"அப்படிலாம் போகமுடியாது... நீ சொன்னா உடனே போறதுக்கு இது காலேஜூம் இல்ல இங்க நீ ப்ரோபசேரும் இல்ல...இந்த ரூம்ல பாதி ரைட்ஸ் எனக்கும் இருக்கு....." என்றாள் அவன் மெத்தையில் படுத்துக்கொண்டு..

"என்னது போக முடியாதா....உரிமை போராட்டம் எல்லாம் பிறகு நடத்து இப்போ நான் டிரஸ் சேன்ஜ் பண்ணனும்டி...."

"பண்ணு உன்ன யாரு பண்ண வேணான்னு சொன்னா???"

"நீ எதுக்கு அடி போடுறேன்னு புரியுது பட் அதெல்லாம் முடியாது... முதல்ல வெளிய போ...."

"ஆச தான்..... என்னாலயும் முடியாது.... இங்கயே மாத்துறதுனா மாத்து... இல்ல இப்படியே இரு... நான் உன் பொண்டாட்டி தான.... இந்த டிரஸ்லயும் பரவாயில்ல ஓரளவுக்கு பாக்குறமாதிரி தான் இருக்க....."

"ஏத்தம் தான்டி உனக்கு.... ஒரு வயசு பையன் இருக்க ரூமுக்கு சொல்லாம வந்ததுமில்லாம, எதித்து வேற பேசுறியே.... உன்ன என்ன பண்ணலாம்?....." என்றவன் அவனும் அவளருகில் மெத்தையில் விழுந்தான்....
அவன் விழுந்ததில் அவன் வெற்று மேனி அவளுடன் எக்குத்தப்பாய் மோதி கொண்டது.... அவனிடம் இதனை எதிர் பாக்காதவள்

"சரி மாமா... நீயும் பாக்க பாவமா இருக்க... நான் போறேன் விடு....." என எழ முயன்றவளுக்கு முயல மட்டும் தான் முடிந்தது.... அவனை அசைக்க முடியவில்லை......

"இல்ல நீ சொன்னதும் சரி தான... நீ என் பொண்டாட்டி அப்பறம் நான் ஏன் வெக்கபடனும்...." என்றான் அவளை மேலும் இழுத்து அணைத்தவனாக.....

"மாமா...." என்றாள் சிணுங்களுடன்

"சிணுங்காதடி... மாமன் மைண்ட் மாறுதுல...." என நெற்றியில் தொடங்கிய அவன் விரல் ஊர்வலம் மிக மிக மெல்ல நகர்ந்து நாசி.. இதழ்கள்.. கழுத்து என நேர்கோட்டில் பயணிக்க, அந்த நகர்வின் வேகம் எப்போது விரலை நகர்த்ததுவோ என அவளை அவஸ்தைக்குள்ளாக்கியது... வெக்கம் தாளாமல் அவன் வெற்று நெஞ்சில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.....

"கீத்து..."

"ம்ம்ம்..."

"கீத்து..."

"ம்ம்ம்ம்"

"என்ன பாருடி..."

"ம்ம்ம்கூம்..." என் அவன் வெற்று நெஞ்சில் இன்னும் தன் முகத்தை ஆழ புதைத்துக்கொண்டாள் அதுவே ஆடவனின் தாபத்துக்கு மேலும் தாபம் சேர்த்தது..... மெல்ல அவள் முகத்தை தன்னிலிருந்து பிரித்தவன் அவள் கன்னங்களை கையிலேந்தி.... அவள் கண்களோடு கண்களை கலக்கவிட்டவன்.... அதற்கு மேல் சிறிதும் பொறுமையற்றவனாய் அவள் மென் இதழ்களை தன் இதழ்களுக்குள் விழுங்கிக்கொண்டான்..... அவளிடமும் எதிர்ப்பு இல்லாது போக, அவனும் மிட்டாய் போல் அவள் இதழை தன் இஷ்டத்துக்கு வளைத்துக்கொண்டான்....

மென் முத்தமது எப்போது வன்மைக்கு தாவியது என வாங்கிய அவளும் அறியவில்லை கொடுத்த அவனுக்கும் தெரியவில்லை..... நீண்ட நேரமாகியும் இணைந்த உள்ளங்களும் பிரியவில்லை இணைந்த இதழ்களும் பிரிய பிரியப்படவில்லை..... அவள் மூச்சுக்காக ஏங்க ஆரம்பித்தும் மெல்ல அவள் இதழ்களுக்கு விடுதலை அளித்தவன்.... மீண்டும் வன்மையாய் கௌவிக்கொண்டான்.... இந்த முறை அவளும் பதில் முத்தம் வழங்க, அவன் கரம் உணர்ச்சி மிகுதில் அவள் அங்க வளைவுகளை சோதிக்க தொடங்கியது... அதுவரை இருந்த மயக்கத்திலிருந்து விழித்து கொண்டவள் பலம் திரட்டி அவனை தள்ளி விட்டு எழுந்து கொண்டாள்...... மோகம் தடைப்பட்டத்தில் சிறிது கோபம் கொண்டவன்

"ப்ப்ச்.... கிட்ட வாடி..." என கைவிட்டு துலாவ அருகில் அவள் இருக்கவில்லை... மெல்ல ஒரு கண்ணை திருந்து அவளை பார்த்து அருகில் அழைக்க, அவன் மேல் அளவுகடந்த காதலை சுமந்திருக்கும் அவளுக்கு அவன் தோற்றம் தன்னை யாசிக்கும் வளர்ந்த குழந்தையாகவே தோன்றியது...

"சரி வருவேன்... கை கால வெச்சிட்டு சும்மா இருக்கனும் சரியா???...."

"ம்ம்ம்ம்ம்..."

அவன் அருகில் சென்று படுத்துக்கொள்ள அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தத்தை பதித்தவன் அவளை மெல்ல அனைத்துகொண்டவாறு இமை மூடி படுத்துக்கொண்டான்.... அவள் அருகாமை இன்னும் வேண்டும் என்று அவன் உள்ளம் கேட்டுக்கொண்டே இருந்தது.... எவ்வளவு அனைத்தும் போதவில்லை அவனுக்கு.... அவன் அணைப்பு மேலும் இறுகி கொண்டே போவதை உணர்ந்தவள்....

"என்னாச்சு என் மாமாக்கு... ரெண்டு நாளா எங்கூட பேசவும் இல்ல...." என்றாள் அவன் தலைமுடியில் விரல்களால் அலைந்த வண்ணம்..

"ஒண்ணுமில்லடி... பேசாம தூங்கு...."

"நீ இப்போ சொல்ல போறியா இல்லயா???...." என்றவள் மூக்கு நுனியை வலிக்க கடித்தவன் "சும்மா சும்மா கோபப்படாத பாரு மூக்கு எப்படி சிவந்திருக்கு.... "

"கடிச்சு வெச்சா சிவக்காம என்ன பண்ணுமாம்... என்ன டைவேர்ட் பண்ணாம சொல்லு என் அப்பா என்ன பேசினாரு..."

"கீதா... உனக்கு..."

"எல்லாம் தெரியும்... என்ன பேசினாரு அத சொல்லு முதல்ல...."

மெல்ல அவளை விட்டு எழுந்தவன்... " ஒண்ணுமில்ல சும்மா பாக்க தான் வந்தாங்க.. "

"மாமா... இங்க என் முகத்த பாத்து பேசு... எனக்கு உன்னையும் தெரியும் என் அப்பாவையும் தெரியும்.... மறைக்காம என்னனு சொல்லு.... எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்... இப்போ என்ன நடந்ததுனு நீ உண்மைய சொல்லணும் இது என மேல சத்தியம்...." என்றவளுக்கு நடந்ததை சொல்வதை தவிர வேறு வழி அவனுக்கு இருக்கவில்லை....

இரண்டு நாட்களுக்கு முன் அவனை தேடி கல்லூரிக்கே கீதாவின் தந்தை தர்மராஜன் வந்திருந்தார்...

"சார் உங்கள பாக்க தர்மராஜன்னு ஒருத்தர் வந்திருக்கார்.. வெளியே கார்ல வெயிட் பண்றதா சொல்ல சொன்னார்..." என்ற அங்கு உதவிக்காக வேலை செய்யும் ஊழியனிடம்

"ஓகே தாஸண்ணா... என் மாமா தான் நான் பாக்குறேன்... தேங்க்ஸ்..."

"அட போங்க தம்பி எப்பபாரு தாங்க்ஸ் சொல்லிக்கிட்டு...."

"ஹாஹாஹா... ஓகே ஓகே இனி நோ தேங்க்ஸ் தாஸண்ணாக்கு... இப்போ ஓகேவா?..."

"இதையே தான் எப்பவும் சொல்லுறீங்க..... சரி தம்பி நீங்க போய் பாருங்க.. " என்று சென்றவரையே பார்த்திருந்தவன் மனதில் தன் மாமன் வந்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்பதே கேள்வியாக இருந்தது.... தங்கள் காதலில் அவருக்கு சிறிது முரண்பாடு உள்ளது என்பது அவன் அறிந்ததே.... தன் யோசனையை கை விட்டவன் வாசலை நோக்கி விரைந்தான்... அங்கே காருக்குள் அமர்ந்திருந்தவரை நோக்கி சென்றவன் கார் கதவை தட்டினான்..

"நீங்க பிரீயா இருந்தா என்னோட கொஞ்சம் வர முடியுமா?... உங்க கூட கொஞ்சம் பேசணும்...."

"ஓகே மாமா இது பிரீ பீரியட் தான்.... போகலாம்..." என்றவன் அவரோடு பயணப்பட்டான்...

அந்த ரெஸ்டாரண்ட் வந்து அரைமணி நேரம் ஆகியும் அவர் பேசுவதாக இல்லை..... ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதாகவும் இருக்க அவர் போராட்டம் உணர்ந்தவனாக அவனே ஆரம்பித்தான்....
 
Last edited:
Status
Not open for further replies.
Top