ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 09


அன்று மதிய உணவுக்காக கேன்டீன் நுழைந்தவளையே எல்லோர் பார்வையும் வட்டமிட்டது... சாதாரணமாகவே அழகாய் இருப்பவள் தான்... ஆனால் இன்று நேவி ப்ளூ கலர் சாரியும் அதில் அள்ளி தெளிக்கப்பட்டிருந்த இளம் சிவப்பு நிற ரோஜா பூக்களும், ஒன்றோடு ஒன்று பிணைந்த கொடிகளாய் அவளை சுற்றி பின்னப்பட்ட பூ பந்தல் போல மேலும் அவளை தேவதையாகவே காட்டியது..... முகத்தில் பெரிதாய் எந்த ஒப்பனையுமின்றி சாதாரணமாக தூக்கி போடப்பட்டிருந்த கொண்டை கூட அவளுக்கு இன்று பாந்தமாய் பொருந்தி இருந்தது....


இன்று மனது சரி இல்லை என்பதால் காலையில் கோவில் சென்றவள் அதே புடவைவுடனே வேலைக்கும் வந்திருந்தாள்.... நெற்றியில் இடப்பட்ட சந்தன கீற்றும் கூட அழியாமல் அப்படியே ஒட்டிக்கொண்டிருந்தது.. இன்று அனைவரின் பார்வையும் அவளுக்கு ஒரு வித அசௌகரியத்தையே கொடுத்தது.. இருந்தும் அதை புறம் தள்ளியவள் சென்று ஒரு டேபிளில் அமைதியாய் அமர்ந்தாள்.... ஆனால் உணவுதான் உள்ளே இறங்குவேனா என சண்டிதனம் செய்தது..

வெளியில் இத்தனை அழகாய் அமைதியாய் அவள் முகம் இருக்க அதற்கு நேரேதிராய் அவள் மனம் கொதித்துக்கொண்டிருந்தது....
ரம்யாவின் நிலை அவளை மேலும் மனதளவில் உடைத்திருந்தது.... இன்று அதற்கான முடிவு என்கயில் ஒரு வித நிறைவு மனதை சூழ்ந்து கொண்டது... யோசனையுடனே அமர்ந்திருந்தவளை கலைத்தது ஒரு குரல்....

"ஹாய் அதிரல்.... இன்னைக்கு புடவைல கலக்குறீங்க.... ஸ்வீட் சப்ரைஸா எனக்கு.... இன்னைக்கு நான் வரபோறது முன்னாடியே தெரிஞ்சிடிச்சா என்ன?...." என்ற விஷ்வாவை பார்த்து விழித்தவள்

"ஹலோ விஷ்வா.... எங்கேயும் போயிருந்தீங்களா என்ன?... சாரி நான் நோட் பண்ணல..."

"இதுக்கு என்ன நீங்க செருப்பாலயே அடிச்சிருக்கலாம்... என்னோட ப்ரசென்ஸ் இல்லைனு கூடவா தெரியல.... கிரேட் இன்சல்ட் விஷ்வா உனக்கு.... விடு விடு உனக்கென்ன புதுசா..." என்று தன்னை கேட்டுக்கொண்டவன் "லஞ்ச் என்ன அதிரல்?.." என அவளிடம் முடித்தான்...

"ரசம் சாதம் தான்...."

"எங்களுக்கெல்லாம் இல்லையா"

"எடுத்துக்கோங்க விஷ்வா...." என்று அவளுக்கு இருந்ததில் பாதியை பிலேட்டுக்கு மாற்றி கொடுத்தாள்

"ப்ப்பா.... செம டேஸ்டா இருக்கு அதி.... ஆள் தான் அழகா இருக்கீங்கனு பார்த்தா சமையலும் அள்ளுது..." என்றவாறு உண்டவனை பார்க்கையில் ஒரு வித எரிச்சல் பரவுவதை தடுக்க முடியவில்லை அவளால்... அவளின் சமையல் லட்சணம் அவளுக்கு தெரியாதா என்ன? ஏதோ பசிக்கு வயிற்றில் போடுவதற்காகவே செய்யும் சமையல் அவளுடையது.... அவளுக்கு மட்டும் சமைப்பதாலோ என்னவோ பெரிதாய் ஈடுபாடு இருப்பதில்லை..... இன்றோ அவள் மனநிலைக்கு ஏதோ ஒன்றை சாப்பிட வேண்டுமே என எடுத்து வந்திருந்தாள்...

"அப்பறம் அதி எங்க போனேன்னு கூடவா கேக்க மாட்டீங்க??? நீங்க கேட்கலனாலும் நானே சொல்லுவேன்.... அம்மாவ பாக்க ஊருக்கு போயிருந்தேன்... "

"அப்படியா.... அம்மா எப்படி இருக்காங்க..." என்று விசாரித்தாள் ஒரு போமாலிடிக்காக.....

"அவங்களுக்கென்ன நல்லா இருக்காங்க.... என்ன தான் எப்போ கல்யாணம் பண்ணிக்க போறான்னு கேட்டு டாச்சர் பண்ணுறாங்க...."

"ஓஓ.... ஓகே விஷ்வா நான் கிளம்புறேன்... கொஞ்சம் ஒர்க் இருக்கு.... நீங்க லஞ்ச் முடிச்சிட்டு வாங்க..." என்றாள் தப்பித்து ஓடுவதை போல்... உண்மையில் அவளுக்கு வேலை இருந்தது தான்... புகழ் அவளை ஓரிடத்துக்கு அழைத்து செல்ல வருவதாக மெசேஜ் செய்திருந்தான்....

"நாமளும் லவ் சொல்லி கரெக்ட் பண்ணுவோம்னா சிக்க மாட்டேங்குறாளே.... பாப்போம் எவ்வளவு நாளைக்குனு...." என்று எண்ணியவன் சாப்பிட தொடங்கினான்.... அவன் காதல் அவளிடத்தில் செல்லாது என்பதை என்று உணர்வானோ??....




இன்று ஐஜி உடனான சந்திப்பு இருப்பதால் குறித்த நேரத்துக்கு முன்பே அலுவலகத்துக்கு முன் நின்றிருந்தான் நிலவன்... அடுத்து அவனுக்கான அழைப்பு வர உள்ளே நுழைந்தவன் எதிரே இருந்தவரை பார்த்து புன்னகைத்து மரியாதையுடன் சலூட் அடித்தபடி பார்வையை திருப்ப அங்கே, பாலமுரளி கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒப் போலீஸ் என ஆங்கில பெரிய எழுத்தில் எழுதப்பட்ட பெயர் பலகை மேசையில் வைக்கப்பட்டிருந்தது.

அவனுக்கு அவர் பதவி நிலை மீதும் அவர் மீதும் பெரிய மரியாதை இருந்தது.... போலீஸ் ட்ரைனிங் காலத்திலிருந்தே அவர் தான் அவனது ரோல் மாடல் என்று கூட சொல்லலாம், அந்த அளவுக்கு நல்ல மனிதரும் கூட... நேர்மையானவர் அதனாலேயே பல பிரச்சனையை தினம்தோறும் சந்திப்பவர்... எந்த காரணத்துக்கும் நேர்மையை விலை பேசாதவர்... இவரிடம் இருக்கும் நேர்மை அனைவரிடமும் இருந்தால் போதும் நாடே கலையெடுத்த நெல் வயல் தான் என்பதே நிலவனின் எண்ணம்..... யோசனையில் இருந்தவனை கலைத்தது அவர் குரல்...

"ஹலோ யங் மேன்... என்ன யோசனை... அடுத்து எப்போ இந்த கிழவன விரட்டிட்டு இந்த இடத்துக்கு வர்றதுனு யோசனையா...." என்றார் சிரிப்புடன்....

"ஐயோ சார்.... உங்க இடத்துக்கு நீங்க மட்டும் தான் கெத்து.... நான் எல்லாம் செட் ஆகமாட்டேன்...." என்றான் கைகளை தூக்கி சரண்டர் என்ற வண்ணம்....

"அது சரி எஸ்கேப் ஆகுறதுக்காக புகழ்ந்து பேசுற போல தெரியுதே.... மரியாதை போதும்... உக்காருங்க மிஸ்டர் நிலவன்.... "

"சார் உங்ககிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு பேசணும்..."

"இத தான் போன்லேயே சொன்னீங்களே நிலவன்... இன்பாக்ட் நானும் உங்கள மீட் பண்ணனும்னு நெனச்சிருந்தேன்.. அத இன்னொரு நாள் பேசலாம்... இப்போ நீங்க வந்ததுக்கான காரணம் என்னனு சொல்லுங்க...."

"கண்டிப்பா பேசலாம் சார்... இது கொஞ்சம் சென்சிடிவான இஸு... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு..." என ஆரம்பித்தவன் ஆதி முதல் அந்தம் வரை சொல்லி முடித்து... தன்னுடைய திட்டத்தையும் சேர்த்தே சொல்ல அவரிடன் ஆழ்ந்த மௌனம்....

"உங்களுக்கு என் முழு சப்போர்ட் இருக்கு... நீங்க நினச்ச மாதிரியே செய்ங்க... எந்த பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம்...."

"ரொம்ப தேங்க்ஸ் சார்..."

"தேங்க்ஸ் சொல்லி எல்லா புண்ணியத்தையும் நீங்களே எடுத்துக்கலாம்னு நினைக்கிறீங்களா??... நெவர் எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க..."

"சார் நீங்க செய்யாத நல்லதா... உங்க கூட போட்டி போட என்னால முடியாது..."

"அதையும் பாக்கலாம்... லஞ்ச் டைம் தாண்டிடிச்சு என்கூட சேர்ந்து சாப்பிட்டே போகலாமே நிலவன்..."

"தேங்க்ஸ் சார்... பட் முடிக்க வேண்டிய வேலைய முடிச்சா தான் சாப்பாட்ட பத்தி யோசிக்கவே முடியும்.... வேலைய முடிச்சிட்டு உங்களுக்கு இன்போர்ம் பண்ணுறேன் சார்...." என்று எழுந்தவன் சலூட் அடித்து வெளியேறினான்....



அந்த நாய்களுக்கான தீர்ப்பு அவர்களை பிடித்த அன்றே நிலவனின் கோர்ட்டில் எழுதப்பட்டிருந்தது.... அதுவும் தண்டனை மிக கொடூரமாக, பாதிக்கப்பட்டவள் கைகளாலேயே தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பது அதிரலின் வேண்டுகோள்... அதனாலேயே இந்த மூன்று நாட்களாக அவர்கள் உயிர் ஊசலாடி கொண்டிருக்கிறது. இன்று தண்டனையானது முழுமையாக
நிறைவேற்றப்பட்டுவிடும். இப்போது அவன் சென்று கொண்டிருப்பதும் அதற்காக தான்... மற்ற மூவரிடமும் தன் திட்டத்தை சொல்லி அவர்கள் யோசனையையும் அன்றே கேட்டிருந்தான்... செய்யவேண்டிய எல்லா ஏற்பாடும் இந்நேரத்திற்கு புகழால் முடிக்கபட்டிருக்கும்.....

சட்டப்படி அவர்களை தண்டித்திருக்க முடியும் ஆனால் அந்த காணொளியில் அவன் கண்டவை அவனை அசுரனாக மாற்றி இருந்தது.... ஒரு போலீஸ் அதிகாரியாக, ஆண்மகனாக பார்க்க கூடாதவை அவை... தாயுமாரவராக வளர்த்த அந்த பெரியவர் ஒரு நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியாமல் அழுத அழுகையை அவனால் மறக்க முடியுமா என்ன?... ஏன் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தைரியமாய் கையாலும் அவனுக்கே கண்களில் கண்ணீர் கசிந்திருந்ததே... தங்களுக்கே இந்த நிலை என்றால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் நிலை...... இப்போது நினைத்தாலும் நெஞ்சம் கனத்தது அவனுக்கு.... யோசனையின் மத்தியிலே வாகனம் ஒட்டிக்கொண்டிருந்தான் ஒரு அசுரவதையை நோக்கி.... பார்த்த சிறிய காட்சிக்கே இந்த முடிவு என்றால் உண்மையில் அதனை தாண்டியும் நிகழ்ந்திருந்ததே....


சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு... அன்று ராமசாமி அவளுடன் பேசிவிட்டு வேலைக்கு சென்ற பிறகு "ராமு சொல்றதும் சரி தான, விசேஷ நேரம் நாம கூட போனா மலரக்கா கஷ்டப்படும்.... இன்னொரு நாள் பிரீயா இருக்கும் போது போகலாம்"
என்று மனதை தேற்றி கொண்டு அன்று இருக்கும் பரீட்சைக்கு தயாராக தொடங்கினாள்.

படித்து கொண்டிருந்தவள் நேரத்தை பார்க்க அதுவோ... நான்கை காட்டியது "அச்சச்சோ இவ்வளவு நேரம் ஆகிடுச்சா... அஞ்சு மணிக்கு எக்ஸாம் தொடங்கிடுமே சட்டுனு ரெடி ஆகிட்டு பாஸ்கர் அண்ணாக்கு கால் பண்ணணும்..." என்று அவசரமாய் தயாராக தொடங்கினாள்... எவ்வளவு வேகமாக தயாராகியும் இருபது நிமிடங்களுக்கு மேலாகவே எடுத்துக்கொண்டது....

"ச்சே... உனக்கு அறிவே இல்லடி ரம்யா டைம் பாக்காம இப்படித்தான் உக்காந்திருப்பியா?...." என்று தனக்கு தானே திட்டிக்கொண்டு பாஸ்கர் நம்பருக்கு அழைக்க அழைப்பு செல்லவில்லை... மாறாக "இந்த அழைப்பினை தொடர்வதற்கு உங்கள் கணக்கு மிகுதி போதுமானதாக இல்லை" என்ற இயந்திர குரல் தான் கேட்டது....

"இந்த நேரம் இதுவும் சதி பண்ணுதே.... சரி மலரக்கா கிட்ட போன் பண்ண சொல்லுவோம்" என ஒருவீடு தள்ளி இருக்கும் மலரின் வீட்டுக்கு செல்ல அதுவோ வெளிப்பாக்கம் பூட்டு போடப்பட்டிருந்தது.... "எங்க போச்சு இந்த மலரக்கா.... ஊருக்கு போக திங்ஸ் வாங்கணும்னு சொல்லிட்டு இருந்திச்சே அதுக்கு போயிருக்கும் போல..... இன்னைக்கு நமக்கு கிளாஸ் கட்டு தான்...." என்று தனக்கு தானே பேசியவாறு வீட்டை அடைந்தாள்....

சரி உடையையாவது மாற்றுவோமென தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு முன்னே இருந்த கணினியை பார்த்ததும் சட்டென்று மூளையில் மின்னல் வெட்டியதும் பாய்ந்து சென்று கணினியை உயிர்பித்தாள்....

இரண்டு நாட்களுக்கு முன்பு தான்... ஒரு ஆர்வத்தில் மலரிடம் சொல்லி பேஸ்புக் வாட்ஸாப் என அவளும் புதிதாய் சமூக வளையதளங்களுக்குள் நுழைந்து கொண்டாள்... வயதின் ஆர்வத்தால் அவளும் உடனடியாக நச்சரிக்க அன்றே மலரும் அவளுக்கு பேஸ்புக்கில் வீடியோ பார்க்க... வாட்ஸாப்பில் மெஜேஸ் அனுப்ப, அழைப்பு எடுக்க என்று சொல்லி கொடுத்தும் இருந்தாள்...

இன்று பாஸ்கருக்கு இதிலிருந்து அழைப்பு எடுக்கலாம் என்பதை கணக்கிட்டு தான் கணினியை உயிர்ப்பித்திருந்தாள்.... மெல்ல வேண்டுதலோடு பாஸ்கரின் எண்ணிற்கு அழைப்பை விடுக்க, அவள் கெட்ட நேரமோ என்னவோ அழைப்பு சென்றது... வாய்ஸ் காலுக்கு பதிலாக வீடியோ கால் ஓன் செய்ய பட்டிருந்தது... முதல் முறை என்பதால் அவளுக்கும் அதைபற்றி போதிய விளக்கம் இருக்கவில்லை....



"என்ன பாஸ்கர்... எப்படி இருக்கு..."

"சொர்க்கம் தம்பி...."

"ம்ம்ம் அதே தான் நாங்க மூனு பேரும் சொன்னோம்... எங்க கேட்ட நீ, ஃபர்ஸ்ட் டைம் வேணான்னு ரொம்ப தான் பிகு பண்ணியே.... " என்றான் ஒருவர்

"இப்படி ஒரு சொர்க்கம் இருக்குனு தெரியாம போய்டிச்சே தம்பி...."

"இதுகூட ஒரு குட்டியும் இருந்தா... நெஜமாவே சொர்க்கலோகம் தான்..." என்றான் இன்னொருவர்..

"வனஜாவ கூப்பிடட்டுங்களா?..."

"அவ ஓல்ட் பீஸ்.... ப்ரஷா ஏதும் சிக்குமா?... என்றான் கண்ணில் ஆர்வம் மின்ன மூன்றாவதாய் இருந்தவன்

"இங்க அப்படி இல்லைங்களே... நீங்க பெரிய எடத்து பசங்க உங்களுக்கு தோதா இங்க அவ ஒருத்தி தான் பக்கத்துல தொழில்ல இருக்கா... மத்தத்துங்க எல்லாம் எனக்கே சகிக்காது.... எதுக்கும் வனஜா கிட்ட விசாரிச்சு பாக்குறேன் இந்த தடவ கொஞ்சம் அவளையே சமாளிச்சுக்கோங்க..."

இவர்கள் நால்வர் கூட்டணி சமீபத்தில் உருவானது தான்.... போதை பொருள் பாவனைக்கு எந்த தொந்தரவும் இல்லாத ரகசிய இடம் தேடி திரிந்த முப்பது வயது நிரம்பிய மூன்று பணக்கார வாரிசுகளின் கண்களில் மாட்டியவன் தான் பாஸ்கர்.... அதன் விளைவு கடந்த இரண்டு மாதங்களாக, அந்த ஊர் எல்லையில் காட்டுக்குள் உடைந்த பங்களா போன்ற இடமும் போதையும் மாதுவும் இவர்கள் கைவசமானது... ஆரம்பத்தில் வெறும் பணதுக்காக பார்வையாளராக இருந்த பாஸ்கர் இப்போது போதையின் பிடியில்.... அவனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆசை தான்.. அது தான் இவர்களுக்கு உதவவும் முன் வந்ததும் கூட....

வனஜாவுடன் பேச அழைபேசியை எடுக்கவும் அவனுக்கு ரம்யாவிடம் இருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது...

"என்ன இந்த பொண்ணு இப்போ வீடியோ கால் பண்ணுது...." என்ற யோசனையுடன் எடுக்க...

"ஐ பாஸ்கர் அண்ணா தெரியுறாங்க..." என்று அந்த பக்கம் அவள் சந்தோஷத்தில் கூச்சலிட அங்கிருக்கும் மற்ற மூவருக்கும் கேக்கவே செய்தது... எட்டி அவளை பார்த்த கண்களிலோ ஆர்வம் இதனை எதையும் உணராமல் பலியாக காத்திருந்தது அந்த ஜீவன்...

"பாஸ்கர் அண்ணா.. நான் ரம்யா... கிளாஸ் போகணும்ணா.... அஞ்சு மணிக்கு போகணும் கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா?..."

"அச்சோ இப்போ முடியாதே தங்கச்சிமா.... வேற வேலையா வெளியே இருக்கேன்..."

"அண்ணா ப்ளீஸ்ணா எக்ஸாம் இருக்கு... ராமுவும் இல்ல..." என்றாள் கெஞ்சலாக

மீண்டும் மறுக்க போனவனை தடுத்து அந்த மூவரில் ஒருவன் அமோதிக்குமாறு தலை அசைத்தான்... அதில் குழப்பதுடன் "சரிமா வறேன் வெயிட் பண்ணு.." என்று அழைப்பை துண்டித்தான்....

அதான் பின் அவர்களிடம் என்னவென்று வினவ அவர்கள் மூவரும் சொன்ன சேதியில் தலையில் இடி விழாத குறைதான் அவனுக்கு.... முதலில் பிடிவாதமாய் மறுத்தவன் அவர்கள் காட்டிய ஆசையில் கண்கள் ஒளிரவே செய்தது இருந்தும் பயம் விட்டபாடில்லை...

"தம்பி அந்த பொண்ணு தாத்தா போலீஸ்..."

"என்னவா இருக்காரு..."

"கான்ஸ்டபிள்..."

"ச்சே இதுக்கு தான் இவ்வளவு பயந்தியா... நாங்க யாருனு தெரியும்ல... கான்ஸ்டபிளுக்கெல்லாம் பயப்படுற... ஒரு கெழவன் தான இருக்கான் பிரச்சனை வராது... அவங்களா சொன்னா தான... சொல்லாம பண்ணிடுவோம்... வீடியோ எடுத்து நெட்ல போடுவோம்னு சொன்னா தன்னால அடங்க போறாங்க...." என்றதும் அறை மனதாய் சம்மதித்தான்... அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவளை அங்கே அழைத்து வந்திருந்தான்

"ஏதோ பொருள தூக்கணும்னு சொன்னீங்களே எங்க இருக்குணா?.. தூக்கிட்டு சீக்கிரம் போவோமா?... எக்ஸாம்க்கு லேட்டாகுது..." என்றாள் சுற்றியும் நோட்டம் விட்டு

"எக்ஸாம் தான சிறப்பா எழுதுவோம்.... எங்க பெர்பார்மன்ஸுக்கு நீ தான் மார்க்ஸ் போடணும்..." என்று ஒருவன் வர மற்ற இருவரும் கூடவே வந்தனர்

அதில் பயத்துடன் பாஸ்கரை திரும்பி பார்க்க அவன் அவளது கையை பிடித்துக்கொண்டான்..

"வாங்கண்ணா போவோம்" என்றாள் அவளும்... தன்னை இங்கிருந்து அழைத்து செல்லத்தான் அவன் தன் கையை பிடித்தான் என எண்ணி... ஆனால் அவனோ அவள் கைகள் இரண்டையும் ஒன்று சேர காட்டினான்

"அண்ணா..." என்றவள் அதிர்ச்சியில் வேறொன்றும் பேசவில்லை....

அதன் பின் அவளுக்கு நடந்தது கொடூரம் தான்.... பாஸ்கர் வீடியோ எடுக்க மற்ற மூவரும் ஒரே நேரத்தில் தங்கள் ஆளுமையை அந்த சிறு பெண்ணிடம் காட்ட தொடங்க அவள் அழுகுரல் அந்த கானகத்தை தாண்டி யாருக்கும் கேட்க வாய்ப்பில்லாமல் போனது தான் துரதிஷ்டம்....

அவர்கள் எடுத்துக்கொண்ட போதை மருந்தின் வீரியமும் கூடி இருக்க... கொடூர மிருகத்தை விட மோசமாக மூவரும் அவளை வன்மையாக மீண்டும் மீண்டும் ஆட்கொண்டனர்... வீடியோ எடுத்துகொண்டிருந்த பாஸ்கரின் நிலை எப்போதடா தனக்கு நேரம் தருவார்கள் என்றே இருந்தது.... ஆரம்பத்தில் இருந்த பயம் சிறிதும் இப்போது இருக்கவில்லை.... தெரிந்தால் பார்த்துக்கொள்ளலாம்... இப்போது ஆசை தீர அனுபவிக்கவே அவன் கேடுகெட்ட மனம் எண்ணியது... மனைவியும் இல்லாமல் போனது அவனுக்கு வாய்ப்பாய் அமைந்தது..

கொடூர வேட்டையின் பின் மூவரும் எழுந்து கொள்ள.. இப்போது பாஸ்கருக்கு வாய்ப்பு கிடைத்தது.. ரம்யாவின் நிலையோ பரிதாபம் சத்தமாக கத்த கூட சக்தி இல்லாமல் வாடிய கொடியாய் கிடந்தாள்.. மூன்று வளர்ந்த எருமைகளை தாங்க அந்த சிறு உடலில் வலிமை இருக்குமா என்ன.. அவள் இதழில் "ராமு" என்ற முனங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது... அவள் அறிந்த ஹீரோ அவர் தானே... வர மாட்டாரா, வந்து இந்த வேதனையிலிருந்து காப்பாற்றி விட மாட்டாரா என்ற நப்பாசை தான்.. சிறிதாய் தொட்டாலே வலிக்கும் என்று அழுபவள்.. இன்றோ வலிகளை ரணமாய் போர்த்திக்கொண்டாள்...

இப்போது இன்னொருவன் வீடியோ எடுக்க பாஸ்கர் அவள் மீது.... அருவெறுப்பு தாங்கவில்லை அவளுக்கு.... சிறுது நேரம் செல்ல மற்ற இருவரும் அவனோடு இணைந்து கொண்டனர்.... வாழ்க்கையை வெறுத்த கனங்கள் அவை.... உடலுறவு என்பதை வலிக்க வலிக்க அறிய கூடிய வயதா இது.... அந்த இரவு முழுவதும் அவர்கள் ஆசைக்கு அவள்.... கடவுள் உயிரையேனும் காப்பேன் என சபதம் எடுத்தாரோ என்னவோ உயிரை மட்டும் போக விடவில்லை.... கடவுளின் இந்த செயலுக்கு காரணம் என்னவோ??...

நன்றாக விடிந்தும் கண்களை மூடாமல் அப்படியே படுத்திருந்தாள் அவள். இப்போதுதான் விட்டிருந்தனர் அவளை.... கண்கள் மட்டும் தான் செயற்படுவது போல் உடம்பு மரத்து போய் இருந்தது... உடலை மறைக்க கூட கைகள் ஒத்துழைக்கவில்லை.... விடிந்ததும் அறியாமல் நால்வரும் மயக்கத்தில்...

அப்போதுதான் முழித்துகொண்ட ஒருவனின் பார்வை அவள் உடலில் தான் மேய்ந்தது.... அந்த போதை போதாமல் அந்த வீடியோவை பார்க்க ஆசை வர சற்று தள்ளி படுத்திருந்த பாஸ்கரை தட்டி எழுபினான்... வீடியோ எடுக்கப்பட்டது பாஸ்கரனின் தொலைபேசியில் தானே...

"பாஸ்கர்..."

"ம்ம்ம்..."

"அந்த வீடியோ எனக்கு அனுப்பு.." என்றான்

அவனும் தூக்க கலக்கத்தில் மூவருக்குமாய் தட்டு தடுமாறி அனுப்ப... சாட் லிஸ்டில் முதலாவதாய் இருந்த அவள் எண்ணுக்கும் அனுப்பப்பட்டது... இதை அறியாதவன் தொலைபேசியை போட்டுவிட்டு மீண்டும் கண்களை மூடிய வண்ணம் கால்களை சற்று வேகமாக அசைக்க தொலைபேசி அங்கு மூலையிலிருந்த உடைந்த மேசையின் அடியில் போய் ஒழிந்துகொண்டது....

மதியம் ஆனதும் தான் மூவரும் நன்றாக முழித்துக்கொண்டனர்.... இதற்கு மேல் இங்கிருப்பது நல்லதல்ல என்பதால் விரைவாக தயாராகினர்... அவள் ஆடையை அணிவித்தது கூட பாஸ்கர் தான்.... அணிவிக்கும் போதே அவன் கைகள் அவள் உடம்பில் ஊரவே செய்தது.. அதனை உணர்ந்த இன்னொருவன்..

"என்ன பாஸ்கர் நேத்து வேணா வேணான்னு பயந்துட்டு இப்போ இப்படி தடவுற...."

"சும்மா அள்ளுது தம்பி... வனஜா எல்லாம் என்ன.... இப்போ தான் புரியுது நீங்க ஏன் புதுசா இளசா கேட்டீங்கனு.... இப்படி அனுபவிக்கணும்னா மாட்டிக்கிட்டாலும் பரவாயில்ல..."









 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"அடுத்த வாரமும் இப்படி புதுசா ஒன்ன ட்ரை பண்ணுவோம்.. இல்லனா இவளையே மறுபடியும் ம்ம்ம்ம்ம்..." என்று கண்களை மூடியபடி சைகை காட்டினான்...

"சரிங்க தம்பி.. வெளில சொல்லிட மாட்டாளே.." என்றான் சற்று பயத்துடன்

"பயந்தா இப்படிலாம் அனுபவிக்க முடியுமா?.. அதெல்லாம் சொல்ல விட்டதான... இவள கொண்டு போய் விட்டுடு... வீடியோ விஷயத்தை சொல்லி மிரட்டிட்டு தான் அனுப்பு... நாங்க கிளம்புறோம்..." என்று மூவரும் வெளியாக...

இன்னொரு முறை அவளை ஆசை தீர அதே இடத்தில் மிருகமாய் வதைத்தவன் தொலைபேசியை தேட அது கிடைக்கவில்லை....

இனியும் தேட நேரமில்லாததால் பிறகு தேடிக்கொள்ளலாம் என அவளுடன் புறப்பட்டவன் வீட்டில் விடும் போது ராமசாமியின் நடமாட்டம் இருக்கிறதா என ஒருமுறை நோட்டமிட்ட படி அவளை மிரட்டியே அனுப்பி இருந்தான்....

அவன் நல்ல நேரத்துக்கு மலரும் புறப்பட்டிருந்தாள்... வேற யாரும் அந்த நேரம் இருக்கவில்லை...

எப்படி வீட்டினுள் நுழைந்தாள், தூங்கினாள் என்றே அவள் அறியவில்லை... இரண்டு நாளாக அமைதியாய் இருந்தவளால் ராமுவிடம் எதையும் சொல்லிவிட முடியவில்லை...

என்னவென்று சொல்வாள் தன்னை கற்பழித்தார்கள் என்றா?? தான் அழைத்தேனே அவர் தான் வரவில்லையே... வேண்டாம் அவர் வேண்டாம்... இப்போது மனது ஆதரவுக்காய் தான் அன்னையாய் நினைக்கும் மலரை தான் தேடியது..

குழந்தையாய் அவள் மடி சேர வேண்டும்... தனக்கு நடந்ததை சொல்லி அழ வேண்டும்.... நான் இருக்கிறேன் என அவள் ஆறுதல் சொல்லி அணைக்க வேண்டும்.. உனக்காக நான் நியாயம் கேட்கிறேன் என அவள் கோபப்பட வேண்டும் என்றெல்லாம் உள்மனம் அலக்கழிக்க..

அவளை கண்ணால் காண வேண்டுமென்ற ஆசை வெறியாக மாறி, கால்கள் தன்னால் சென்று கணினியின் முன் நின்றது.. அதனை உயிர்பிக்க கை கால்களெல்லாம் பயத்தில் அவள் கட்டுப்படின்றி தன்னால் நடுங்கிகொண்டிருந்தது...

மெல்ல வாட்ஸாபினுள் செல்ல, மலரின் சில செய்திகளும், அந்த கயவனின் எண்ணில் இருந்து வந்து காணொளியும் தான் அவளை வரவேற்றது... அதனை கண்டதும் உள்ளம் நடுங்க, அவள் கை பட்டு தண்ணிச்சையாக காணொளி இயக்கப்பட்டது... கண்கள் அப்படியே விரிந்தபடியே நின்றுவிட்டது....

அதிலோ அவளை மூன்று நாய்கள் குதற, அவளின் கதறல் சத்தம் காதினுள் புகுந்து மூளையை அடைய சில வினாடிகள் பிடித்தது.. அப்போது தான் சுயம் வந்தவள் போல் கணினியை ஒரே தள்ளாக கீழே தள்ளினாள்...

அவளது மீதி கோபத்துக்கு வயர்கள் இறையானது.... அதன் பின்னர் தான் இவ்வளவும் நடந்தேறி இன்று அவள் கையாலேயே முடிவுறை என்ற நிலையில் வந்து நிற்கிறது...



நிலவன் கைகளில் பறந்த வாகனம் சரியாய் வர வேண்டிய இடத்துக்கு வந்து நின்றது... எங்கு அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டதோ.. எங்கு நிராயுதபாணியாய் அவள் நின்றளோ.. எங்கு அவர்கள் அச்சமின்றி ஒரு சிறு உயிருக்கு அநியாயம் செய்தார்களோ அதே இடம்... அந்த கானகம் சூழ்ந்த உடைந்த பங்களா இன்று கயவர்களுக்கு சுடுகாடாக மாற காத்திருந்தது....


ஜாதி மல்லி மலரும்.......


கருத்து திரி 👇👇👇





InShot_20240805_102127881.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 10


வேக எட்டுக்களால் உள்ளே நுழைந்த நிலவன், அங்கு இருந்தவர்களை அருகில் சென்று "என்ன மச்சான் எல்லாம் ரெடியா?" என்றான் புகழை நோக்கி


"பக்கா மச்சான்.. உனக்காக தான் தங்கச்சி வைட்டிங்.." என்று ரம்யாவை காட்ட.. அவளோ நிலத்தை பார்த்து கொண்டிருந்தாள்.. அதிரலில் கைகள் அவள் உள்ளங்கைகளுக்கு நடுவே புதைந்திருந்தது.. அங்கே இருக்கவே பிடிக்காதவளாய் கூனி குறுகி அமர்ந்திருந்தாள் ரம்யா..

அதிரல் எவ்வளவோ சொல்லியும் தடுத்தும் பிடிவாதமாய் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தது நிலவன் தான்.. அவள் விழுந்த இடத்திலேயே தான் இன்னும் பலமாய் எழ வேண்டும் என்பது அவன் எண்ணம்..

அவள் முன்னே முன்னே முழங்காலிட்டு அமர்ந்தவன்.. அதிரலின் கையை கெட்டியாக பிடித்திருந்த அவள் கையை, மறுப்பையும் மீறி ஆதரவாய் பிடித்துக்கொண்டான்.. அதில் அதிகாரம் இருக்கவில்லை வன்மை இருக்கவில்லை.. ஆதரவாய் ஒரு தொடுகை அவ்வளவே... அதை உணர்ந்ததாலோ என்னவோ அவளிடம் மறுப்பு படி படியாய் குறைந்தது..

"ரம்யா... ரம்யா.. என் கண்ண பாரு...." என ஒரு விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை நேருக்கு நேராய் நோக்கியவன்.. "நீ ஏதாவது தப்பு பண்ணிட்டியா?.." என்க அவள் தலை இல்லை என்பதாய் ஆடியது... "அப்போ நீ ஏன் இப்படி உக்காரனும்... கெட்டவங்கள அழிக்க கடவுளான அம்பிகைக்கே காளின்னு ஒரு அவதாரம் இருந்திச்சு... இங்க பொண்ணுங்க உங்களோட மனவலிமை தான் கெட்டவங்கள அழிக்கிற இன்னொரு அவதாரம்..."

"உன்னோட பயம் தான் அவனோட முதல் வெற்றி... உடல் வலிமைய வெச்சிதான சின்ன பொண்ணுன்னு கூட பார்க்காம உன்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்காங்க அவங்களுக்கு ஒரு பொண்ணோட மன வலிமை எப்படி பட்டதுனு காட்ட வேணாமா?.. உன்ன தோற்கடிச்சவனுக்கு நீ வெற்றிய கொடுக்க போறியா? இல்லை நரகத்த காட்ட போறியா?... இப்போ நீ எத பண்ண போறங்குறது உன்னோட இஷ்டம் தான்.. சப்போஸ் இதெல்லாம் வேணாம் உனக்கு உன்னோட பயம் தான் முக்கியம்னா இப்பவே கூட இங்க இருந்து போய்டலாம்.. ஆனா நீ தண்டனை குடுக்காம இங்க யாரும் குடுக்க போறதில்ல... நல்லா யோசிச்சிக்கோ இந்த நாய்ங்க இந்த உலகத்துக்கு தேவைதானான்னு.." என்றவன் கைகளை எடுத்துக்கொள்ள பார்க்க இப்போது அவன் கையை பிடிப்பது அவள் முறையானது... நிலவன் முகத்தில் நம்பிக்கையாய் சிறு புன்னகை....

"புகழ்... "

"இதோ மச்சான்... " என்றவன் அங்கு கட்டப்பட்டிருந்த திரையை விளக்க அங்கு அவர்கள் நால்வரும் தனித்தனியே கட்டையில் இரு கைகளும் உயர்த்தப்பட்ட நிலையில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர்... உடலெல்லாம் இரத்தம் வழிய, கண்களில் மரண பயத்தோடு பேச கூட உடலில் வலுவிழந்து நின்றிருந்தனர்.... அன்று அவள் இருந்த அதே அனாதரவு நிலை... அதுவும் யாரை கசக்கி தூக்கி போட்டார்களோ அவள் முன்... இப்போது தாராளமாய் விரிந்து கொண்டது ரம்யாவின் இதழ்கள்... பயம் என்ற ஒன்று எங்கோ போய் ஒளிந்துகொண்டது...

மெல்ல எழுந்த நிலவன் அவளையும் எழ செய்து அந்த நால்வர் முன்னும் நிற்க வைத்தவன் சற்று தள்ளி நின்றுகொண்டான்... சற்றென்று தோன்றிய தனிமை அவளை தடுமாற வைத்த தருணம்... அவளது ராமுவோ அவள் கைகளை கெட்டியாய் பிடித்துகொண்டு அவளை பார்த்து ஆறுதலாய் புன்னகைத்தார்... அருகில் வந்து நின்ற அதிரல் மெல்ல அவளை ஆதரவாய் ஒரு பக்கம் அனைத்துக்கொள்ள... புகழோ பின்னிருந்து அவள் சாய தோள் கொடுத்து நின்றான்....

அன்று அவள் மலரிடம் எதிர்பார்த்த ஆதரவு... மடி சாய ஒரு அன்னை.. நடந்ததை சொல்லி அழ ஒரு தோழனாய் ஒரு தோள்.... தனக்காக பழிவாங்க ஒரு ஹீரோ... இன்றோ அனைத்தும் கிடைத்துவிட்டது... கண்களை மூட கூட தோன்றாமல் அவர்களையே பார்த்திருந்தாள்..

"என்ன ரம்யா பாக்குற இது உனக்கான நேரம், உனக்கு தந்தத திருப்பி பல மடங்கா திருப்பி குடுக்க போற நேரம்... அப்பாவா பாக்கவேண்டியவர பார்த்து பயப்பட வெச்சாங்களே அதுக்கு... நீ யாருன்னே தெரியாம பைத்தியம் பிடிச்சு உக்கார வெச்சாங்களே அதுக்கு... சின்ன பொண்ணுன்னு பாக்காம உன்ன காயப்படுத்துனாங்களே அதுக்கு.. எல்லாத்துக்கும் சேர்த்து என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு..." என்றான் நிலவன்

அவர்கள் மூவரை பார்த்தவள் பாஸ்கர் பக்கம் பார்வையை கூட திருப்பவில்லை... மௌனமாய் யோசித்தவள்... " அண்ணா, இவங்க பண்ண தப்புக்கு என்ன நானே எரிச்சிக்க போனேனே... நான் ஏன்ணா தப்பே பண்ணாம என்ன எரிச்சிக்கணும்... பண்ண இவங்களேயே எரிச்சிட்டா அதுவும் உயிரோட..." என்றாள் கண்களில் கோபக்கனலுடன்.. அதனை கேட்ட நால்வருக்கும் அடி நெஞ்சு கலங்க தான் செய்தது... செய்த பாவத்தின் விலையை சம்பாதித்துத்தானே ஆக வேண்டும், இவர்கள் மட்டும் விதி விளக்கா என்ன?...

அவள் ஆசையை நிறைவேற்ற எல்லாம் சடுதியில் தயார் படுத்திய புகழ் "நீ ரெடியா ரம்யா" என்றான்

சரி என்பதாய் தலையசைக்க அந்த நால்வர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றினார் ராமசாமி.... கொல்லி கட்டை ஒன்றில் ஏற்றப்பட்ட தீயினை நிலவன் அவள் கையில் தர அதனை வாங்கியவள்

"உங்க கூடலாம் பேசி கருத்து சொல்றதே வேஸ்ட்.. அதெல்லாம் தெரியாம தப்பு பண்ணவங்களுக்கு.." என்று அவர்களை பார்த்து கேலியாய் சொன்னவள், சிறிதும் தாமதிக்காமல் அவர்கள் மூவரும் மீதும் அடுத்ததுத்து தீயை வைத்திருந்தாள்.... என்னவென்று உணரும் முன்னரே அவர்கள் செய்த பாவத்தின் தீ அவர்களை விழுங்கி கொண்டது..... அன்று அவளது அழுகையை உள்வாங்கிய கானகம் இன்று இந்த மூவரின் மரண ஓலத்தை உள்வாங்கியது.... அன்று தன்னை தீண்டிய உடல்களோ இன்று தீக்கிரையாவதை கண்களால் திருப்தியாக பார்த்தும், அவர்கள் கதறல் சத்தத்தை காதால் ஆசைத்தீர கேட்டும் கொண்டாள்....

எத்தனை நாள் தான் பெண்கள் தவறே செய்யாமல் தங்களை அழித்துக்கொள்வது.... இனிமேல் தவறு செய்தவனை அழிக்கட்டுமே... அதுவும் கொடூரமாய், காளியின் இன்னொரு அவதாரமாய்.. மனதின் வலி கோபம் அடங்க எரியும் நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்தவளது பார்வை நிலவன் அவர்கள் மீது ஊற்றிய நீரில் அவன் புறம் திரும்பியது கேள்வியாய்...

"இவங்கள இப்படியே இங்கயே சம்பலாக விட முடியாதேடா.... என்ன ஏதுன்னு தோண்ட ஆரம்பிப்பாங்க... உனக்காக தான் இந்த இடத்துல வெச்சு பண்ண சொன்னேன்... இனி மீதி அவங்க வாகனத்துலேயே வெச்சு எரிச்சி ஆக்சிடென்டா மாத்திட்டா போச்சு.. ஒன்னுக்கு ரெண்டா போனஸா ஏரியட்டுமே..." என்றான் கண் சிமிட்டலுடன்...

கிட்டத்தட்ட எழுபது சதவீதம் எரிந்த உடலோடு தரையில் விழுந்தவர்களுக்கு வலி எப்படி பட்டது என சொல்லவா வேண்டும்.. பயத்தில் வேர்த்து போய் நின்றிருந்த பாஸ்கரின் நிலையோ அந்தோ பரிதாபம்.. அவர்களோடு சேர்ந்து தானும் எரிந்திருந்தால் தெரிந்திருக்கதோ என்னவோ ஆனால் இப்போது நடந்தவை அனைத்தையும் தானும் பார்த்துக்கொண்டிருந்ததில் சர்வமும் அடங்கி போய் இருந்தது பாஸ்கருக்கு... எத்தனை கொடூரமான தண்டனை என எண்ணாமல் இருக்க முடியவில்லை... அடுத்து தான் தானே என்ற பயத்தோடு அவர்களை பார்த்திருந்தான்...

மூவரின் நிலையையும் ஆசை தீர பார்த்திருந்த ரம்யா அடுத்து பாஸ்கரை பார்த்த வண்ணம் புகழிடம்...

"புகழண்ணா... வசந்திக்கா பாப்பாவோட வருவாங்களே பாப்பா அப்பா எங்கன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்லட்டும்ணா... "

"இத நீ பாஸ்கர் கிட்டயே கேளுடா... எல்லாம் பிளான் பண்ணி செஞ்சவருக்கு இதுக்கும் பதில் தெரிஞ்சிருக்கும்.. பதில் சொல்லுங்க மிஸ்டர் பாஸ்கர்.." என்றான் அவனும் நக்கலுடன்..

"என்ன பண்றது அந்த சின்ன குழந்தையை நினச்சா பாவமா தான் இருக்கு பாஸ்கர மட்டும் விட்டுடுவோமா ரம்யாமா?.." என்ற நிலவன் ரம்யாக்கு கண்ணை காட்ட அவளும் புரிந்துகொண்டவளாய்

"ஆமாண்ணா... எனக்கும் பாவமாதான் இருக்கு... விட்டுடலாம்... " என்று அவள் சொல்ல பாஸ்கரின் கண்களில் தப்பிக்கும் சந்தோசம் மின்னியது

"நா...ன் இ..னி...மே..ல் த..ப்பு பண்..ண மாட்..டேன்..மா.." என்றான் பேச மிகவும் சிரமப்பட்டு...

"என்ன சொன்னீங்க... கேக்கலையே உனக்கு கேட்டிச்சா ரம்யா..." என்றாள் அதிரல் இந்த முறை நக்கல் அவளுடையது என்பது போல...

"இல்லையேகா.. ஏதாச்சும் பேசினாங்களா?"

"நா...ன் இ..னி...மே..ல் த..ப்பு பண்..ண மாட்..டேன்..மா என்..ன விட்..டு..டுமா " என்றான் இன்னும் சத்தமாக, தொண்டை வலிக்கவே செய்தது, இருந்தும் உயிர் பிச்சைக்காக அவளிடம் கையேந்தும் நிலை....

"ஓகே.. சரியா நியாயமான ஒரு காரணம் சொல்லுங்க உங்கள விட்டுடுறேன்... " என்றாள் ரம்யா நிதானமாய்

அவனும் அவள் சொன்னதையே பிடித்துக்கொண்டு.. "வ..ச.ந்.தி பா..ப்பா கொண்..டு வரு..வாளே ரம்..யா.. அப்..பற.ம் உன்..ன மா..திரி பாப்..பவும் அ..ப்..பா இ..ல்லா..ம வள..ரணு..ம் பாவ..ம்ல.." இவ்வளவும் அவன் பேச பட்ட பாடு அவன் மட்டுமே அறிவான்... உதடு கிழிந்து உறைந்திருந்த காயம் அசைத்ததில் மீண்டும் இரத்தம் பீறிட்டது... தொண்டையில் அப்படி ஒரு வலி நான்கு ஐந்து நாட்களாக தண்ணீரை மருந்து போலல்லாவா கொடுத்தார்கள்... அதுவும் உயிரை பிடித்து வைப்பதற்காக மட்டும்... தொண்டை வாய் எல்லாம் காய்ந்து வறண்டு போய் இருந்தது...

"ஆமால... பாப்பாக்கும் என்ன மாதிரி அப்பா இல்லாம போய்டும்ல... ம்ம்ம்ம் நீங்களும் பாக்க பாவமா தான் இருக்கீங்க.... எனக்கு பெரிய உதவிலாம் பண்ணி இருக்கீங்களே..." என்று அவனிடம் பேசியவள் "ராமு இவரு பண்ண உதவி என்னனு தெரியுமா உனக்கு?.. என்று ராமுவிடம் முடித்தாள்..

"இல்லையேடா கண்ணா..."

"என்ன ராமு இப்படி சொல்லிட்ட... அதெல்லாம் தெரிஞ்சிக்க வேணாமா நீ... குழந்தை வரபோதுனு தெரிஞ்சும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம தப்பு பண்ணாரே இவர பத்தி கட்டாயம் தெரிஞ்சிக்கணும்... நம்பி கூட வந்த பொண்ண கழுதைறுத்தாரே... சின்ன பொண்ணுன்னு கூட பாக்கமா அவர் ஆசைய தீர்ந்துகிட்டரே.. அத வெக்கமே இல்லாம வீடியோ எடுத்தாரே... இதெல்லாம் எப்பேர்ப்பட்ட உதவின்னு தெரியாதா உனக்கு.." என்று சாதாரணமாய் ஆரம்பித்தவள் ஆரோஷமாய் முடிந்திருந்தாள்....

இதுவரை தப்பிக்க ஒரு வழி கிடைக்கபோகிறது என்ற ஆசையில் இருந்தவனுக்கு அவள் பேசியதும் புரிந்து போனது அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று...

"என்ன பாஸ்கர் தப்பிச்சுலாம்னு பகல் கனவு கண்டீங்களோ... பிரைட்டா ஆகுன மூஞ்சி சுருங்கி போச்சு.... எப்படி நம்ம விளையாட்டு.... நம்பி ஏமாறுறதுனா என்னனு என் தங்கச்சி காட்டுன டெமோ எப்படி இருந்திச்சு... ஆனாலும் உன் அளவுக்கு எங்களுக்கு வரலபாரேன்..." என்று நிறுத்தியவன் மீண்டும் "திருக்குறள் திருக்குறள் அப்படினு ஒன்னு இருக்கு தெரியுமா உனக்கு..." என்றான் நிலவன்

"அதெல்லாம் எப்படி மிஸ்டர் நிலவன் அவருக்கு தெரியும்... அவரே பாவம் சாக போறாரு... எதுக்கு வீணா யோசிக்கணும் நீங்களே சொல்லிடுங்களேன்...."

"அப்படிங்கிற... அதுவும் சரிதான் சாக போற நேரம் எதுக்கு அநியாயமா மூளைய யூஸ் பண்ணி யோசிச்சிக்கிட்டு.." என்றவன் மேலும் தொடர்ந்தான்

"மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று..." என்று முடித்தவன் "என்ன புரியலையா? உனக்கு புரியிற மாதிரி சொல்லணும்னா... உன்ன மாதிரி நடிச்சு ஏமாத்துற நயவஞ்சகனுக்கு அதையே திருப்பி கொடுக்குறது தப்பே இல்லயாம்..." என்றவன் முடிக்கவும்

"உனக்கு பொறக்க போறது பெண் குழந்தையா இருந்தா அவள இப்பயே உங்கிட்ட இருந்து காப்பாத்துனதா நெனச்சுக்கிறோம்..." என்று பாஸ்கரிடம் சொன்ன ராமசாமி "இவன் பூமிக்கு பாரமா இருந்தது போதும் கண்ணா கொளுத்திடு...." என்று ரம்யாவிடம் முடித்தார். அவர் ஆதங்கம் மற்றவர்களுக்கு புரியத்தான் செய்தது....


இதோ முடிந்து விட்டது, கடந்த இரண்டு வாரம் பட்ட பாட்டிற்கு முடிவுரையும் எழுதபட்டுவிட்டது.... பற்றி எரியும் அந்த காரையே பார்த்துக்கொண்டிருந்த அந்த ஐந்து பேர் மனதிலும் ஒரு ஆழ்ந்த அமைதி இத்தனை நாள் ஓட்டதுக்கு ஏதோ முற்றுப்புள்ளி இட்டது போல் ஒரு ஆசுவாசம்....

ரம்யா மனநிறைவுடன் நிலவனின் கைகளை பற்றிக்கொண்டவள் "இவனுங்க எரிஞ்ச மாதிரி எனக்கு நடந்ததையும் மனசுல இருந்து அழிச்சிடுவேன்ணா... ஆம்பிளைங்க கெட்டவங்க என்கிறது நாலு பேர் என் வாழ்க்கையில உதாரணமா அமஞ்ச மாதிரி, எல்லாரும் கெட்டவங்க இல்லைங்கிறதுக்கு நீங்க மூனு பேரும் என்கூட இருக்கீங்க.... என்னால நிம்மதியா வாழ முடியும்ணா... அந்த நம்பிக்கைய நீங்க எல்லாரும் தந்திருக்கீங்க.. இனிமேல் எதுக்குமே பயந்து நிக்கமாட்டேன்... என்ன போல எத்தனையோ பொண்ணுங்களுக்கு அநியாயம் நடந்திருக்கு.. இப்படி உடனே அவங்களுக்கு நியாயம் கிடைச்சிருக்கானு கேட்டா, இல்லைனு தான் சொல்லணும்... ஏன் நிறையபேருக்கு கிடைக்காமலே கூட போயிருக்கு, அந்த வகைல நான் அதிஷ்டசாலி தானே... என்கையாலயே தண்டனையும் கொடுத்துட்டேன்... இப்போ என் மனசு ரொம்ப தெளிவா இருக்குணா.."

"இது தான்டா ரம்யா எங்களுக்கு வேணும்... உன்னால முடியாதுனு எதுவும் இல்ல... வாழ்க்கை உனக்கு இன்னும் எவ்வளவோ விரிஞ்சு கிடக்கு... இந்த வடு எல்லாம் காலபோக்குல அழிஞ்சிடும்.... பீ ஸ்ட்ரோங்... எந்த உதவினாலும் இந்த அண்ணங்கள கேக்கலாம்..." என்றான் அவள் தலையை வருடியபடி... அவனுக்கு புன்னகையை பரிசளித்தவள் மெல்ல புகழிடம் சென்று "புகழண்ணா உங்கள ஒரு வாட்டி ஹக் பண்ணிக்கட்டுமா?...." என்றாள்..

இத்தனை நாள் அவள் கூடவே இருந்து தந்தை இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்று உணர்த்தியவனுக்கு வேறு எதை கொடுக்க முடியும் நம்பிக்கையை தவிர...
அதுவும் அவள் நம்பிக்கையை இதை விட வேறெப்படி காட்டிட முடியும்... அவனும் கண்கலங்க அவளை பாசமாக அணைத்துக்கொண்டான்...

"ஹலோ மேடம் நாங்களும் இங்க தான் இருக்கோம்..." என்றாள் அதிரல் கோபம் போல..

"இருந்துக்கோங்க எங்களுக்கு என்ன? ஆமா தான ரம்யா..." என்றான் நிலவனும் விளையாட்டாய் நக்கல் பார்வையை வீசி..

"அதெல்லாம் இல்ல... அக்கா தான் ஃபர்ஸ்ட்..." என்று அவளிடம் சென்று நிற்க, நக்கல் பார்வை இப்போது அதிரலின் வசமானது....

"அக்காவா" என்றான் அதிர்ச்சியுடன்...

"ஆமா.. அக்கா தான..."

"ரம்யாம்மா... இவ்வளவு அழகான பொண்ணுக்கு அண்ணாவா இருக்குறத விட மாமாவா இருந்தா தான கெத்து... இவன வேணா அண்ணாவா வெச்சிக்க... என்ன மாமானே கூப்புடு.... எங்க ஒரு வாட்டி கூப்பிடு பாப்போம்...." என பேசியவன் அதிரலின் முறைப்பை பெற்றுக்கொண்டான்..

"மாமா..."

"ஆஹா கேக்கவே எவ்வளவு இனிமையா இருக்கு..."

"ஆமா மச்சான் அண்ணானு கூப்பிடுறதுல என்ன இனிமை குறஞ்சி போச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க கேப்போம்?... "

"அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது மச்சான்... நீ சின்ன புள்ள... போய் ஓரமா நில்லு..."

"நேரம்டா..." என புகழ் தலையிலடித்து கொண்டான்.

ஒருவாறு நிலைமை சுமூகமாக அதுவரை அமைதியாய் இருந்த ராமசாமி அங்க இருந்த கட்டொன்றில் அமர்ந்து கொண்டார்.. இதில் அவருக்கு எற்பட்ட ரணம் அதிகம் தானே... அவரை அவதானித்த அதிரல் ரம்யாவிடம் கண் காட்ட அவளும் புரிந்து கொண்டு அவரிடம் பேச சென்றாள்... இனி அவர்களுக்குள் தாத்தா பேத்தி பேசி தேறிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்திருந்தது... ஒருவருக்கு ஒருவர் அவர்கள் கூட்டினுள் ஆறுதலாய் இருக்க வேண்டிய நேரமிது என்பது அவள் எண்ணம்..

இன்னும் தீ எரிந்து கொண்டுதான் இருந்தது அதனை பார்த்த அதிரலின் மனதில் தன் தாய்க்கு தான் நியாயம் செய்யவில்லையோ என்ற எண்ணம் ஓடிகொண்டிருந்தது.... மௌனமாய் நின்றவளது கரத்தில் ஒரு கரம் கைகோர்க்க நிமிர்ந்து பார்த்தவளது கண்களில் இருந்து கண்ணீர் கோடாய் இறங்கியது...

"உப்பு திண்டவன் தண்ணி குடுப்பான் ஜாஸ்... குடிக்க வெச்சிடுவோம்..." என்க அனைத்தும் மறந்து அவன் தோளில் தலைசாய்த்து கொண்டாள்.... எல்லாம் சிறிது நேரம் தான்... சட்டென்று சுதாகரித்தவள் அவனிடமிருந்து விலகி அவனை முறைக்க....

"இதென்னடா அநியாயமா இருக்கு... அவங்களா சாஞ்சுப்பாங்கலாம் அப்பறம் அவங்களா முறைப்பாங்கலாம்......." என்றவன் திரும்ப அங்கே ரம்யாவின் ஒரு பக்கம் ராமுவும் அடுத்த பக்கம் தோளில் கைகள் போட்ட வண்ணம் புகழும் நின்றிருக்க மூவரும் இவனை முறைத்து கொண்டிருந்தனர்...

"அப்ப புரியல.... இப்போ புரியுது.. என்னடா ரம்யா நான் சொல்றது..." என்றான் புகழ் அர்த்தமாக..

"ஆமாண்ணா... புரிஞ்சிபோச்சு, அக்காவும் மாமாவும் பேசிட்டு இருக்காங்க அவ்வளவு தான.." என்று அந்த மாமாவில் அழுத்தம் கூட்டி உச்சரித்தாள்..

"போதும் போதும் அப்படியே நைட்டுக்கு இங்கயே தங்குற நினைப்பா?.. மசமசனு நிக்காம வாங்க போவோம்... கொலை பண்ண வந்த இடத்துல காமெடி பண்ணிக்கிட்டு.." என்றவன் ஒரே ஓட்டம்

"ஏன்டா ரம்யா இப்போ இந்த எலி ஏன் அர டிரௌசர் போட்டுட்டு ஓடுது..."

"அத அங்க வேணா கேட்டு சொல்லவா ணா?.." என்று அதிரலை கண் காட்ட

"ஐயோ தாயே வா நாமலும் அதே டிரௌசர போட்டுட்டு ஓடுவோம்" என அவளையும் இழுத்து சென்றான்..



புகழின் வாகனத்தில் ராமுவும் ரம்யாவும் செல்ல.. அதிரல் நிலவனுடன் தான் சென்று கொண்டிருந்தாள்.. மனதில் பெரிய பாரம் குறைய இப்போது அவனுள் பழைய நிலவன் திரும்பி இருந்தான்.. இவ்வளவு நேரம் கருத்தில் பதியாத அவள் கோலம் இப்போது இம்சையை கூட்டியது....

"இன்னைக்குனு பார்த்து இவ்வளவு அழகா இருக்காளே.... சீக்கிரம் வீடு வந்துட போகுது பாஸ்ட்டா போகாதடா நிலவா..." என தனக்குள் பேசி கொண்டவன் கைகளில் ஜீப் ஊர்ந்தது ஊர்வலம் போல

எவ்வளவு மெதுவாய் வந்தும் அவள் வீடு வந்துவிட்டது. இறங்கிகொண்டவள் குனிந்து கண்ணாடி வழியே தலையை உள்ளேவிட்டு "நடந்து வந்திருந்தாலே பை மினிட்ஸ் முன்னாடி வந்திருப்பேன்... எனி வே தேங்க்ஸ்..." என இடக்காக கூறியவள் உள்ளே நுழைந்து கொண்டாள்....

"இவளுக்கு இருக்குற கொழுப்பு இருக்கே... அவளோட சைஸுக்கு ஏத்த மாதிரி கோவப்படுடினா கேக்குறாளா?... எல்லாம் அதிகமா தான் இருக்கு அந்த உயரத்த தவிர... கடுகு சைஸ்ல இருந்துட்டு மனிசன் ரொம்ப தான் படுத்துறா..." என்று செல்லமாய் திட்டிக்கொண்டு கழுத்தில் போட்டிருந்த செயினை வருடி முத்தம் கொடுத்தவன் கையில் வாகனம் வேகத்தில் பறந்தது..

இத்தனை நாள் நிம்மதி இழந்து தவித்த இந்த ஐந்து உள்ளங்களும் இன்று நிம்மதியாய் கண் மூடும் என்ற நம்பிக்கையில் நிலவும் நட்சத்திரங்களும் கூட இரவு வணக்கம் சொல்லி கண் சிமிட்டின..





அன்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தர்மராஜன் வீடு அமைதியாய் இருப்பதை உணர்ந்து, மேலே அவர் அறைக்கு சென்றவர் மெல்ல மகளின் அறையை எட்டி பார்க்க விளக்கு அணைக்கப்பட்டிருந்தது... மகளை தவிர்ப்பது அவராக இருந்தாலும் சிறிய ஏமாற்றம்.. இப்போதெல்லாம் மகள் முகத்தில் முழிக்க கூட முடியவில்லை அவரால்..














 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அன்று கார்த்தியிடம் பேசிவிட்டு வந்தவர் மனது நிம்மதியாகவே இல்லை... ஒரு மனதை உடைத்து விட்டோமே என்ற குற்றவுணர்ச்சியே மேலோங்கி இருந்தது... அவர் ஒன்னும் காதலுக்கு எதிரி இல்லையே.. அவர் மகள் மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடு, இப்படி பேச வைத்துவிட்டது...

தான் பேசிய பொழுது கூட உணராத தவறு, அவன் பதில் பேசிய போது தெள்ள தெளிவாய் புரிந்தது... மகளுக்கு தெரியும் என்பது அவருக்கு தெரியும் ஆனால் இத்தனை நாளில் ஏன் என்று ஒரு வார்த்தை கூட அவள் கேட்கவில்லை... அதுவே அவர் கவலைக்கு இன்னும் காரணமாகி போனது... சிறிது நேரத்தில் கீழே சாப்பிட வந்தவர் டைனிங் டேபிள் அருகே நின்ற மனைவியிடம் சென்றார்...

"நீங்க வந்ததயே நான் கவனிக்கல பாருங்க... கிட்சன்ல இருந்தேன்... உக்காருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.."

"ம்ம்ம்... கீதா எங்க பாரு தூங்கிட்டாளா?.."

"ஆமாங்க.. தலைவலினு சொன்னா, அதான் சாப்ட்டு மாத்திர போட்டுட்டு நேரத்துக்கே தூங்கிட்டா.." என்றதும் அவர் அமைதியாக கேட்டுக்கொண்டார்...

"என்ன இது உலக அதிசயமா இருக்கு பொண்ணுக்கு தலைவலினு சொல்லியும் இங்கயே இருக்கீங்க.. இந்நேரத்துக்கு அவ ரூமுக்கு ஓடிருப்பீங்களே..." என்று அவர் பேசிக்கொண்டே உணவை எடுத்து வைக்க அவர் கண்ணீலிருந்து கண்ணீர் கோடாய் இறங்க பார்வதி பதறிவிட்டார்

"என்னாச்சுங்க... என்ன இது சின்ன பிள்ள போல கண்ண கசக்கிட்டு.. லேசான தலவலி தான் அவளுக்கு... " என்றவரது கரத்தை பற்றிக்கொண்ட தர்மராஜன் "ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் பாரு.. நான் தூக்கி வளர்த்த பையனோட மனச நானே உடைச்சிட்டேன்... இப்படி ஆகும்னு நெனைக்கலடி... இப்போ கவலையா இருக்கு.. சுயநலமா யோசிச்சிட்டேன்.."

"என்னங்க.. என்னனு சொல்லுங்க முதல்ல..." என்று கேட்க அன்று நடந்தவற்றை சொல்ல பார்வதியிடம் மௌனம்.. கணவன் மீது கோபம் வந்தாலும் தவறை உணர்ந்து பேசுபவரிடம் கோபத்தை காட்டி பேசி என்ன ஆக போகிறது என நிதானமாகவே பேச ஆரம்பிதார்..

"இதே விஷயம் என் அண்ணன் யோசிச்சிருந்தா நம்ம காதல் என்ன ஆகிருக்கும்.."

"எனக்கு புரியுது பாரு.. நான் செஞ்சது தப்புதான்.. அவர் பண்ற வேல அதான் எனக்கு பிடிக்கல.. நம்ம கம்பனிய பாத்துக்க சொல்லி நான் மொத்தமா ஒப்படைக்க தயாரா தான் இருக்கேன் அவர் அதுக்கு ஒத்துக்கலயே..."

"ஏன் ஒத்துக்கணும்... உங்களுக்கு பிடிச்சது அது.. ஆனா அவருக்கும் பிடிக்கணும்னு இல்லையே.. நீங்க என்ன கேட்டு என் அண்ணன் வீட்டுக்கு வரும் போது இந்த கம்பனி சின்னதா தான இருந்திச்சு, அப்பறம் நீங்க உழைச்சு என்ன காப்பாத்தலையா?.. உடனேவா முன்னுக்கு வந்தீங்க.. கஷ்டப்பட்ட நேரம் கூட, நாம சேர்ந்து எவ்வளவு சந்தோசமா இருந்தோம்.. நமக்கு பிடிச்சவங்க கூட தான நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்.. நமக்கு கிடச்ச சந்தோசம் நம்ம பொண்ணுக்கும் கிடைக்கட்டுமேங்க..."

"புரியுது பாரு... அவ யார்கிட்டயும் போய் எதுக்கும் நிக்க கூடாதுனு தான்.. மத்தபடி கார்த்தியோட எனக்கென்ன கோபம்.. நான் தூக்கி வளர்த்த பையன் அவன்..."

"என்னங்க அவ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல... அவ லைப் அவ மேனேஜ் பண்ணிக்கிற வயசுக்கு வந்துட்டாங்க... கஷ்டமோ நஷ்டமோ அவங்க சேர்ந்து வாழுவாங்க.. உங்க அளவுக்கு இல்லனாலும் என் மருமகன் நல்லா தான் உழைக்கிறாரு... அவ ஆசைப்பட்டத்த வாங்கி கொடுக்கவும் அவரால முடியும்.. என்ன தான் பணம் வெச்சிருந்தாலும் அவ ஆசைப்பட்டத்த வாங்கி குடுக்க நீங்க தான் இப்போ தயங்குறீங்க..." என்று முடிக்கவும் அவர் புரியாமல் விழிக்க

"உங்க பொண்ணு உங்க மாப்பிளை மேல தான் ஆசைப்படுறா.. கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உங்க கடமை..."

"எனக்கு சம்மதம் தான் பாரு.. அக்கா மாமா கிட்ட பேசுவோம்..."

"இதாங்க நீங்க.. சும்மா மனச போட்டு குழப்பிக்காதீங்க... நாளைக்கு முதல் வேலையா மருமகன் கிட்ட போய் மன்னிப்பு கேளுங்க.."

தண்ணீர் குடிக்க கீழே வந்த கீதா தாய் தந்தை பேசுவதை கேட்டப்படி அப்படியே நின்றிருந்தவள் தாய் இறுதியில் சொன்னதை கேட்டதும் "அதெல்லாம் என் அப்பா யார்கிட்டயும் மன்னிப்பு கேக்கணும்னு அவசியம் இல்ல..." என்று அவர் அருகில் வந்து அமர்ந்தாள்..

"நீ என்னடி எழுந்துட்ட... தலவலி பரவாயில்லையா இப்போ.."

"நீ என்ன உன் அண்ணன் மகனுக்காக என் அப்பாவையே சாரி கேக்க சொல்லுவியா?.. என்றாள் கோவமாய்..

"பின்ன உன் அப்பா பண்ணது மட்டும் சரியா??.. பாவம் அந்த புள்ள மனசு என்ன கஷ்டபட்டிச்சோ..."

"அதெல்லாம் மாமா அப்பாவ புரிஞ்சிக்கும்... மாமாக்கு அப்பா மேல கோபம் எல்லாம் இல்ல..." என்று அவள் பேச அதுவரை அமைதியாய் இருந்த தர்மராஜன் "அப்பாவ மன்னிச்சுடுடா பாப்பா.. அப்பா தப்பு பண்ணிட்டேன்.. அப்பாக்கு நீ பின்னுக்கு கஷ்டப்படுவியோனு தான் டா.. மத்தபடி மாப்பிளை மேல எந்த கோபமும் இல்லை..."

"நீங்க எந்த விளக்கமும் சொல்லணும்னு இல்லப்பா.. எனக்கு உங்கள நல்லாவே தெரியும்... ஆனா மாமா கூட மட்டும் தான் பா நான் சந்தோசமா இருப்பேன்... வேற யார்கூடவும்னு யோசிச்சா கூட நான் உயிரோட இருந்தாலும் செத்ததுக்கு சமன் பா..." என்றவள் முடிக்க முதல் அவள் வாயை மூடி இருந்தார் அந்த பாசமிகு தந்தை..

"என்னடா பாப்பா பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற... புத்தி கெட்டு போய் பேசிட்டேன் டா.. நாளைக்கே முதல் வேலையா போய் உங்க சம்பந்தம் பேசி முடிக்கிறேன்... சீக்கிரமே கல்யாணத்த வெச்சிக்கலாம்..."

"எங்கப்பா... மாமா, நான் காலேஜ் முடிக்காம கல்யாணம்ன்ற பேச்சிக்கே இடம் இல்லைனு சொல்லிட்டாங்க..." என்றாள் சோகம் போல..

"நீ கவலை படாதடா பாப்பா... மாப்பிளைய தூக்குறோம் தாலி கட்ட வைக்கிறோம்..." என்று மகளுடன் ஹைபை அடித்து கொண்டார்

"நல்லா பொண்ணு நல்லா அப்பா.. உங்க அப்பாக்கு அடிச்சா மொட்ட வெச்சா குடுமி கத தான்... சாப்பிடுங்க ரெண்டு பேரும்.. நல்லா நாள் பார்த்து சம்பந்தம் பேசுவோம்.. நாளைக்கு அண்ணா கிட்ட பேசுறேன்..." என்று பார்வதி அவர்களுக்கு உணவை பரிமாறினார்..

இத்தனை நாள் மகளுடன் பேச முடியாமல் தவித்த தவிப்புகளுக்கு வடிக்காலாய் அவளுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே அவள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார் தர்மராஜன்.. அவர்களது உலகத்திலிருந்து பார்வதியே சற்று தள்ளி தான் நிற்க வேண்டியிருந்தது.. உறவுகளுகிடையேயான புரிதல் தான் அவ்வுறக்கு யானை பலம் கொடுக்கும் என்பதில் மிகையில்லை..



ஜாதி மல்லி மலரும்....

கருத்து திரி 👇👇👇













InShot_20240909_141744161.jpg
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 11


"டாட் இப்படியே உக்காந்திருந்தா ஆச்சா... என்ன பண்ண போறீங்க..."

"என்ன என்னடா பண்ண சொல்லுற... பண்ண வேண்டிய எல்லாம் பண்ணினேன் தான.. இனி பண்ண என்ன இருக்கு...."

"டாட்.. செத்துப்போனது என்னோட பிரண்ட்ஸ்.. கொன்னவன் எதுக்காக கொன்னான்னே தெரியல... சப்போஸ் நான் இன்வோல்வ் ஆகி இருக்க விஷயமா இருந்தா... எனக்கு என் சேப்ட்டி முக்கியம் டாடி.."

"அதான் கொலை இல்லை ஆக்சிடென்ட்னு பைல கிளோஸ் பண்ணிட்டானே அந்த போலீஸ்காரன்... நீ பயப்படாத பாத்துக்கலாம்..."

"அது ஆக்சிடெண்ட் தானான்னே எனக்கு நம்பிக்கை இல்லை... இந்த ஒரு மாசமா நானும் சீக்ரட்டா விசாரிச்சுட்டு தான் இருக்கேன் எதுவும் சிக்க மாட்டேங்கிது..."

"விசாரிக்கிறேன்னு வீணா நீ போய் மாட்டிக்காத சஞ்சய்.... ஆமா அந்த இடத்துக்கு ஏன் போனாங்க?.. உன்ன விட்டுட்டு எதுவும் பண்ண மாட்டானுங்களே.."

"போதை எடுத்துக்க அப்படியே பொண்ணுங்க கூட இருக்க தான்... எனக்கு தான் அதெல்லாம் செட் ஆகாதே... அதான் எனக்கு இன்போர்ம் பண்ணல.."

"ம்ம்ம்... இப்போதைக்கு நீ கொஞ்சம் ஜேகே காதுல இந்த விஷயத்தை போட்டு வை... மீதிய அவரு பாத்துப்பாரு... இன்னைக்கு ஜேகே கூட மீட்டிங்னு தான சொன்ன போகலையா?..."

"இன்னும் நேரம் இருக்கு... கெஸ்ட்ஹவுஸ் தான் போகணும்.. அதெல்லாம் சரி எப்போ அவளை இங்க இருந்து விரட்டி விட போறீங்க... அவள பார்த்தாலே இரிடேட்டிங்கா இருக்கு..."

"ஆக வேண்டிய வேலை இருக்கே.. அவ பேருல இருக்க சொத்தை அவளா எழுதி தந்தா பின்னாடி நமக்கு பிரச்சனை வராது... அதுக்கு தான் ட்ரை பண்ணுறேன்... சம்மதிக்கலனா நம்ம வேலைய காட்ட வேண்டியது தான் "

"இதுவரைக்கும் விட்டு வெச்சது உங்க தப்பு டாட்... சின்ன வயசுலேயே அவளையும் அந்த கெழவனையும் போட்டிருக்கணும்... அவளுக்கு இருக்க திமிருக்கு அவளா எழுதி கொடுக்கிறது எல்லாம் நடக்காத காரியம்..."

"நான் யோசிக்காம இல்ல சஞ்சய்... உயில் படி பதினெட்டு வயசு வந்தப்பறம் தான் சொத்து இவளுக்கு போகும்னு இருக்கு... அதுக்கு முதல் இவ இறந்தா சொத்து எல்லாம் டிரஸ்ட்க்கு போய்டும்... அதனால தான் விட்டு வெச்சிருந்தேன்.. அவள போட பிளான் எல்லாம் கரெக்ட்டா தான் போயிட்டு இருந்திச்சு அதுக்குள்ள அந்த கெழவன் சரியா என்ன மோப்பம் பிடிச்சு பதினஞ்சு வயசுலேயே அவள அவ சின்ன பாட்டி வீட்டுக்கு ஆஸ்திரேலியா அனுப்பிட்டான்.... அப்பவும் விடல இடைல வந்து போனவள கொல்ல ட்ரை பண்ணினேன் தான்.. அதுவும் எப்படியோ மிஸ் ஆகிடிச்சி.. ஒவ்வொரு தரமும் எப்படியோ தப்பிச்சிடுறா.. அவளுக்கு ஆயிசு கொஞ்சம் கெட்டி தான் போலிருக்கு.. எதுவா இருந்தாலும் இந்த வாட்டி அவளை விடுறதா இல்ல...."

"அந்த கெழவனயாச்சும் போடலாம்ல... வீணா அவன் எதுக்கு இங்க..."

"எல்லாம் அந்த வக்கீல் நாயால தான்... இவன கொன்னா அவன் சும்மா இருப்பானா.. நம்மல பத்தி வேற அவனுக்கு நல்லா தெரியும் சோ, நமக்கு கொடச்சல் குடுத்துட்டே தான் இருப்பான்.. ஏற்கனவே அவளோட பங்குக்கும் நான் தான் கார்டியன்.. இப்போவர அதையும் தான் நாம அனுபவிக்குறோம்... எதுக்கு சும்மா அவன கொன்னு அத சிக்கல் படுத்திக்கணும்.... எப்படியும் சாக போற கிழம் தான... அதுவா செத்து தொலையட்டும்... பேத்தி மேல உள்ள பாசத்துல டிரஸ்ட்க்கு போற தேர்ட்டி பெர்சென்டையும் அவளுக்கு எழுத ஒரு வாய்ப்பு இருக்குல... எப்படி பாத்தாலும் நமக்கு லாபம் தான்...."

"எப்படியோ அவளை இங்க இருந்து சீக்கிரம் அனுப்ப பாருங்க... அவ்வளவு தான் சொல்லுவேன்... என் ஆளு கூட பாரின் போய் செட்டில் ஆகணும் நான், அதுதான் இப்போதைக்கு என் லட்சியம்.. வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு எனக்கு என் பங்க குடுத்துடுங்க..." என்றவாறு கோபமாய் அவன் வெளியேற கலையரசன் மனைவி விசாலாட்சி உள்ளே வந்தார்...

"என்னங்க ஏன் அவன் கோபமா போறான்..."

"எப்பயும் போலதான் விசாலா... அவளை இங்க இருந்து அனுப்ப சொல்லி கத்திட்டு போறான்..."

"அவன் சொல்லுறதுல என்ன தப்பு.. போட்டுட வேண்டியது தான, இல்ல மகள் தானேனு பாசம் ஏதும் வந்துடுச்சா?.." என்றார் இடக்காக

"பாசமா.. அதுவும் அவ மேலயா... அவள என் மகள்னு நீ சொல்லுறதே எனக்கு அசிங்கமா இருக்கு.. உன் வயித்துல இருந்து வந்தா மட்டும் தான் அது என் வாரிசு.... சும்மா எவளோடயும் படுத்து அதுல வந்தது எல்லாம் என் வாரிசு ஆகிட முடியுமா???.... என்ன செய்றது காரியம் ஆகணும்னு அவகிட்ட நடிச்சிட்டு இருக்கேன் அவ்வளவு தான்..."

"சீக்கிரம் வேலைய முடிங்க.. கொல்றதா இருந்தாலும் சரி இங்க இருந்து அனுப்புறதா இருந்தாலும் சரி.. இவள பாக்குறப்போலாம் என் வாழ்க்கைய பறிச்சுகிட்ட அவ அம்மா நினைப்பு தான் வருது.. செத்துத்தொலஞ்சாலும் தொல்லை தான் அவ.."

"நான் எப்போவும் உனக்கு தான் விசாலா.. அவ எல்லாம் ஒரு ஆளுன்னு அவளை எல்லாம் யோசிச்சு உன் உடம்ப கெடுத்துக்காத.. பணதுக்காக மட்டும் தான் அவள தொட்டதே.." என்று எதை பேசுகிறோம் என்ற உள்ளர்த்தம் அறியாமலே அவரை அவரே விபச்சாரன் என்கிற ரீதியில் கீழ்தரமாய் பேசி வைத்தார்... பணத்துக்காக உடம்பை விற்கும் பெண் விபச்சாரி என்றால் அதே பணதுக்காக ஆண் செய்தால் மட்டும் விதி விளக்கா என்ன?...

"ம்ம்ம் அப்படியே இருந்தா சரி.... போய் அந்த வீல்செயார்ல உக்காருங்க சாப்பிட போவோம்.. இந்த நடிப்பெல்லாம் நம்புற ஆளா அவ.. சொன்னா எங்க கேக்குறீங்க.."

"இது வேற அடுத்த கொடும... அந்த புள்ள பூச்சிக்கு இப்படி ஒரு அறிவான பிள்ளையா! எப்படி நடிச்சாலும் நம்ப மாட்டேங்குறாளே.." என்று சலித்தவர் மனைவியுடன் வெளியேறினார்...



சஞ்சய் வாகனம் அந்த கெஸ்ட் ஹவுஸினுள் நுழைந்தது.... ஏற்கனவே பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் அவனுக்குரிய இடம் அது அவனுக்காக வெறுமையாகவே இருந்தது..... சென்று அவ்விடத்தில் வண்டியை நிறுத்தியவன் உள்ளே நுழைந்தான்.... அங்கே அவர்கள் ரகசிய தொழிலில் இருக்கும் முக்கியமானவர்கள் தான் கூடி இருந்தார்கள்.. ஜெயராம கிருஷ்ணன், ஜேகே, விக்ரம் உட்பட....

இவன் உள்ளே நுழைய ஜேகே அவன் கை கடிகாரத்தை ஒரு முறை பார்த்து கொண்டான்... அதில் லேசாய் நெற்றியை சுருக்கி கண்களால் அவனிடம் மன்னிப்பை வினவியவன்... எல்லாருக்கும் பொதுவாய் ஒரு மன்னிப்பை வைத்து, ஜேகே அருகில் சென்று அமர்ந்து கொண்டான்...


"ஓகே லெட் ஸ்டார்ட் தி மீட்டிங்... நான் எதுக்கு உங்க எல்லாரையும் இங்க வர சொன்னேன்னா.... நான் யூஎஸ் போயிருந்த வேலை நமக்கு சாதகமாவே முடிஞ்சிடிச்சு... இனி எந்த கவலையும் படாமல் நம்ம தொழில் ஸ்மூதா போகும்... நம்ம மேல எந்தவித சந்தேகமும் வராதபடி... சோ அதுக்காக உங்களுக்கெல்லாம் ஒரு பார்ட்டி வைக்கலாம்னு தான் இந்த மீட்டிங்..." என்றவன் கையில் ஒரு குடுவையில் இருந்த திரவத்தை காட்டியவன் அதனை பற்றி விளக்கினான்...

"திஸ் இஸ் அன்பிலீவபில்.... யூ ஆர் கிளவர் ஜேகே..." என்றாள் கண்களில் அவன் மீதான ஆர்வம் மின்ன...

"தேங்க்ஸ் மோனி..." என்று அவளை பார்க்காமலே வெளிவந்தது வெறும் வார்த்தைகள்.. "என்ஜோய் தி பார்ட்டி கைஸ்..." என்றவன் அவள் பார்வையை சிறிதும் கண்டு கொள்ளாமல் சஞ்சய் விக்ரம் இருவரையும் மதுவகைகள் தயார் செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றான்.. அதில் அவள் முகம் கறுக்க அதை காட்டிக்கொல்லாமல் அவளும் மது அருந்தத்தொடங்கினாள்... அவளுக்கு எப்போதும் ஜேகே மீது ஒரு கண்.. அவன் ஆளுமை, அறிவு மற்றும் பணம் எல்லாவற்றின் மீதும் மோகம்.. அவனுக்காக, அவன் கட்டளைப்படி நிறைய வேலைகளை செய்து கொடுத்தும் இருக்கிறாள் ஆனால் அவனோ இவளை பெரிதாய் கண்டுகொள்வதில்லை...


"என்ன ஆச்சு சஞ்சு ஏன் அமைதியா இருக்க..."

"இந்த கருமத்த குடிக்காதனா கேக்குறதே இல்ல கிருஷ் நீ..."

"அதான் இந்த விசயத்துல கேட்கமாட்டேன்னு தெரியுதுல அப்பறம் ஏன் சொல்லுற... என்ன விஷயம்னு சொல்லு..."

"எல்லாம் கூட இருக்காளே ஒருத்தி அவளால தான்..."

"யூ மீன் அதிரல்... "

"அவளே தான்.... எதுக்கு அவளை எல்லாம் கொன்னு போடாம இருக்கீங்க.... என் கையையும் கட்டி போட்டுடீங்க... அப்போ எங்கிட்ட இருந்து என் டாடிய பிரிச்சா, இப்போ என் நிம்மதிய எங்கிட்ட இருந்து எடுக்குறா... நீ தான் அவள உன் ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ண வெச்சியாமே எதுக்கு?...'

"வேற என்ன அழகா இருக்காளே அதுக்கு தான்...." என்றவன் அவன் முறைப்பை கண்டதும் "ஏற்கனவே நம்ம மெடிக்கல் காலேஜ்லயும் இருந்திருக்கா சோ இங்க ஒர்க் பண்றது தான சரி... அதுவும் அவளால ஒரு காரியம் ஆக வேண்டியதிருக்கு சஞ்சு... முடிஞ்சதும் பேக் பண்ணுவோம்.. யூ டோன்ட் ஒர்ரி.." என்றவன் முடிக்க அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த விக்ரம்...

"அவள நீங்க எதுவும் பண்ண வேணா.. நான் பாத்துக்கிறேன்... அவ உயிரோட எனக்கு வேணும்..."

"நீயுமாடா... சஞ்சு அவ மேல கோபமா இருக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு... உனக்கு என்னடா கோபம்..." என்றான் ஜேகே நக்கலாக

"அப்பா உன் ஹாஸ்பிடல்ல தான இருக்காங்க... அவ தான் டிரீட்மென்ட் பாக்குறா.. உனக்கு தான் தெரியுமே.. என்கிட்டயே ஓவர் ஆட்டிட்டியூட் காட்டுறாடா.. நீயெல்லாம் ஒரு ஆளாங்கிற மாதிரி பாக்குறா... என்னையே அவமான படுத்திட்டு நிம்மதியா இருந்துடுவாளா??... விட்டுடுவேனா??... நான் யாருனு அவளுக்கு காட்டுவேன்... என் காலுக்கு கீழ அவள நாய் மாதிரி நிக்க வைப்பேன்.. எங்கிட்ட கெஞ்சுவா கதறுவா அப்போ பாக்கிறேன் அவ திமிரு எங்க போகுதுனு..."

"ஓகே ஓகே கூல்... நீ டென்ஷன் ஆகாத.. பார்த்து சிறப்பா பண்ணிடலாம்... அப்பா இப்போ ஓகே தான..." என்றான் ஜேகே பேச்சை மற்றும் விதமாக..

" அப்பா இப்போ ஓகே தான்.... ஹார்ட் கிடைச்சு ஆப்ரேஷனும் பண்ணியாச்சு... அவ தான் பண்ணா.. பெட் ரெஸ்ட்ல இருக்கனும்னு சொல்லி இருக்கா.... ஹி வில் பைன் சூன்.."

"இப்போ உன் அப்பா நல்லா இருக்காருனா எல்லாம் உன் அப்பாக்காக நான் பிரே பண்ணதுதான் காரணம்..." என்க அதுவரை கோபமாய் இருந்த மற்ற இருவரும் பக்கென்று சிரித்து விட்டனர்...

"ஒரு வழியா சிரிச்சாச்சா.... எப்பவுமே நாம கோபப்படக்கூடாது எதிரிய கோபப்படுத்தி கூலா அடிச்சு தள்ளிட்டு போயிட்டே இருக்கணும்.. நம்ம நிதானம் தான் எப்பவும் எங்கயும் நம்மள காப்பாத்தும்...." என்றான் வெகு நிதானமாய்... இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆளுதல் என்றால் சும்மாவா... அவன் அறிவு நிதானம் இரண்டும் தான் அவன் கவசகுண்டலம்...

"ஓகே குருஜி..." என்றனர் மற்ற இருவரும்..

"ஜோக்ஸ் அபார்ட்.. ஷி இஸ் எ குட் கார்டியோலோஜிஸ்ட்... இதுவரைக்கும் அவ பண்ண ஆப்ரேஷன் பெய்லியர் ஆனதா அவ ஹிஸ்ரிலயே இல்லை.. உங்க அப்பாக்கு அவளை சஜஸ்ட் பண்ணினதுக்கும், என் ஹாஸ்பிடல அவளை வெச்சிருக்குறதுக்கும் அதுவும் ஒரு காரணம்... ."

"நீ அவளை புகழ்ந்தது போதும் உன் பிஏ உனக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறான் என்னனு கேளு..." என்றான் சஞ்சய் கோபமாக...

"எதிரியா இருந்தா கண்டிப்பா அவங்க பிளஸ் அண்ட் மைனஸ் நாம தெரிஞ்சி வெச்சிருக்கணும் சஞ்சு.. இதே இப்படி ஒரு எதிரி அவங்களுக்கு இருக்குனு நம்ம நிழல் கூட அவங்களுக்கு தெரிய விடக்கூடாது..." என்றவன் வசந்துக்கு அருகில் வரும் படி கை அசைத்தான்..

அவனும் கட்டளைக்கேட்ப அருகில் வந்தவன் "சார் ஐஜி நம்ம விசயத்துல ஒத்து வர்ற மாதிரி தெரியல.." என்றான் அவன் பிஏ வசந்த் பவ்யமாக.. ஜேகேவிடம் அதுவரை இருந்த மேனரிசம் போய் ஆளுமையான தோற்றம் மீண்டிருந்தது...

"இன்ரெஸ்ட்டிங் வீடியோ பார்த்தும் முடியாதுனு சொல்லிட்டாரா..." என்று தாடியை இரு விரல் கொண்டு நீவியப்படி "ம்ம்ம் ஸ்மார்ட் மூவ் மிஸ்டர் பாலமுரளிகிருஷ்ணன்...." என்று அவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்து மெச்சியவன்... "ஓகே வசந்த் பிளான் பி எக்ஸிகியூட் பண்ணிடு...." என்றான் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்..

"சார்... என்று அவன் அதிர்ச்சியில் இழுக்க

"டூ வாட் ஐ சேய்... காட் இட்?" என்றான் தீர்க்கமான குரலில்... அவன் ருத்ராம்மாவிடமும் சஞ்சயிடமும் மட்டுமே அவன் குணம் சாந்தமாய் இருக்கும்... விக்ரமிடம் ஓரளவு எனலாம்... வேறு யாராக இருந்தாலும் எட்ட நில் என்கிற பார்வைதான்... அது அவன் தந்தை ஜெயராமனாக இருந்தாலும் கூட...

"எஸ் சார்..." என்ற வசந்த் அந்த இடத்தை விட்டு அகன்றிருந்தான்.. தன் எஜமானின் ஆணையை நிறைவேற்ற....

"கிருஷ்... அந்த மூனு பேரோட டெத் ஏன் நம்ம பிஸ்னஸ் சம்பந்தமானதா இருக்க கூடாது.... யாராச்சும் ஸ்மெல் பண்ண சான்ஸ் இருக்கா?.."

"வாய்ப்பே இல்லை சஞ்சு... இது வரைக்குமே கண்டு பிடிக்கல.. இனி கண்டுபிடிக்கிறதும் கஷ்டம் தான்..."

"பட் இதுல ஏதோ மர்மம் இருக்குற போலவே எனக்கு தோணுதே.."

"அவனுங்க எங்கயோ பெரிசா வேற ஒரு விசயத்துல மாட்டி இருக்க சான்ஸ் இருக்கு... பட் நம்ம விஷயம் சான்ஸ்சே இல்லை, இப்படி ஒன்னு நடக்குதுங்கிறத கண்டுபிடிக்கிறதுக்கே நம்ம நாட்டு போலீஸ்காரங்களுக்கு குறைஞ்சது டென் இயர்ஸாச்சும் வேணும்.. அந்த அளவுல இருக்கு அவங்க அறிவு... அதுக்குள்ள நாம எங்கயோ போயிருப்போம்..." என்றான் இறுமாப்புடன்... இதே இறுமாப்பு உடைந்து நொறுங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை...



அங்கு ஐஜி அலுவலகத்தில் முரளிகிருஷ்ணன் யோசனையுடன் அமர்ந்திருந்தார்... தான் மறுத்தது என்ன விளைவை ஏற்படுத்துமோ என்பதே அவர் யோசனையாய் இருந்தது... நிச்சயம் விளைவு அண்ணன் மகனை பாதிக்கும் என தெரியும்... அவனை பற்றி நன்கு அறிந்தவர்.. நிச்சயம் வீம்புக்கு தவறு செய்ய கூடியவன் தான் இருந்தும் இந்த அளவு கீழ்தரமாய் நடக்கிறவன் அல்ல... அதை நம்பவும் அவர் மனம் இடம் கொடுக்கவில்லை... இதனை வைத்து இப்போது மிரட்டல் வேறு வந்திருக்கிறது...

அறிந்த நாளில் இருந்து அவருக்கு தூக்கம் இல்லை எனலாம் அவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்... தன் மகன் போல் வளர்த்தவன் இப்படி திசை மாறி போனான் என்பதே அவருக்கு முதல் அடிதான்... இந்த விடயம் என்று இல்லை தான் செய்த பிழை ஒன்றில் தொடங்கியது தான் அவனது இந்த மூர்க்கதனம்... அவன் மாற தானும் ஒருவகையில் காரணம் எனும் போது என்ன தான் செய்வார் அவர்... அவன் மேல் விழுந்த இந்த பழியை கண் பார்த்தாலும் மனம் நம்ப தயாரில்லை....

தன் அண்ணன் மகன் ஆதி ஏதோ ஒரு பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபடுவது போல் ஒரு காணொளி ஆதாரம் அனுப்ப பட்டிருந்தது ஜெயராமனால்... வழமையான மிரட்டல் போல் அதனை கடந்துவிட முடியவில்லை அவரால்... காரணம் அவன் முகம் அதில் அத்தனை தெளிவாக தெரிந்தது... அதுவே அந்த காணொளியை நம்ப இடம் தரவில்லை.... அவன் முகம் மட்டும் அத்தனை தெளிவு என்கயில் எங்கோ இடித்தது....

காணொளி அனுப்பட்ட பின் எவ்வளவோ போராட்டதுக்கு பிறகு அவருக்கு ஜெயராமனை சந்திக்க இரண்டு நாட்களுக்கு முன் தான் சந்தர்ப்பம் கிடைத்தது....

காபி ஷாப் ஒன்றில் புக் செய்யப்பட்ட கண்ணாடியால் அடைக்கப்பட்ட அறை... வெளியிருந்து உள்ளே பார்க்க முடியாதபடி தான் அந்த கண்ணாடி வடிவமைக்கப்பட்டிருந்தது.... அறை மணி நேரமாக முரளிகிருஷ்ணன் உள்ளே தான் அமர்ந்திருந்தார் இன்னும் ஜெயராமன் வந்தபாடில்லை.. சரியாக மேலும் பத்து நிமிடம் கடந்ததும் ஜெயராமன் வசந்துடன் உள்ளே நுழைந்தார் யார் கண்ணும் கவராத வண்ணம்... மேலும் பத்து நிமிடமும் மௌனத்திலேயே கழிய, ஜெயராமன் நேரடியாகவே விசயத்துக்கு வந்தார்....

"என்ன சார் முடிவு பண்ணி இருக்கீங்க..."

"என்ன பண்ணனும்"

"உங்களுக்கு தெரியாதா என்ன?... மகன்னு சொன்னதும் நேர்மை ஊர் மேய போய்டிச்சா... இப்படி ஓடி வந்திருக்கீங்க" என்றார் கேலியாய்

"என் நேர்மை எப்படிப்பட்டதுனு எனக்கு தெரியும்... நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க..."

"தெரியாத போலவே கேக்குறீங்களே சார்... நீங்க என்ன பத்தி ஏதோ மாங்கு மாங்குன்னு ரெண்டு மாசமா தேடி கண்டு பிடிச்சீங்களே அந்த ஆதரம் தான் வேணும்... அந்த போலீஸ போட்டும் உங்களுக்கு புத்தி வரலயே ஐஜி சார்.... தேர்தல் வேற வருது.. சீக்கிரம் குடுத்தீங்கனா உங்களுக்கும் லாபம் எனக்கும் லாபம்.... எப்படி நம்ம டீல்.."

"தர முடியாதுனா என்ன பண்ணுவீங்க..."என்றார் கோபமாக..

"இங்க கோபப்பட வேண்டியவன் நான்... எப்பவும் போல கெத்தாவே இருக்க நினைக்க கூடாது மிஸ்டர் முரளி... இப்போ இது எனக்கான நேரம்... என்ன பண்ணுவேன்னு சொல்லியா தெரியணும்... உங்க மகன் வேற போலீஸ் ட்ரைனிங் முடிச்சிருக்காருல.. போஸ்டிங் வேற கிடைக்க போகுது, இப்போ போய் இது வெளில வந்தா நல்லாவா இருக்கும்.." என்றார் மறைமுக மிரட்டலுடன்..

"உங்க மிரட்டலுக்கு பயப்படுற ஆள் இல்ல இந்த முரளிக்கிருஷ்னன்...." என்றவர் ஜெயராமன் முகம் கோபத்தில் ஜொலிப்பதை திருப்தியாக பார்த்து "அப்போ ஏன் இவ்வளவு நாள் மீட் பண்ண போராடுனேன்னு டவுட் வந்திருக்கணுமே.... அச்சோ டவுட் வரலையா? ஓஓ இப்போ நீங்க கோபமா இருக்குறதுனால மூளை வேலை செய்யல போல...." என்றார் நக்கலாய்...

"ஏய்..." என்றவாறு கோபத்தில் எழுந்தேவிட்டார் ஜெயராமன்...

"உக்காருங்க ஜெயராமன்.... அட உக்காருங்க... எத்தனை நாளைக்கு தான் குடும்பத்தை வெச்சே மிரட்டுவீங்க.... காலம் எவ்வளவு மாறிடிச்சு இன்னும் அதே பழைய டெக்னிக், ட்ரெண்ட்க்கு வாங்க மிஸ்டர் ஜெயராமன்.... என் மகன் எப்படினு எனக்கு தெரியும்... அவனுக்கு பிரச்சனை வராம பாத்துக்கவும் தெரியும்.. அதுவும் நேர்மையா.. இப்போ நீங்க போகலாம்...." என்றார் கெத்தாக

"இதுக்கு நீ அனுபவிப்ப..." என்றவர் கோபமாக வெளியேறி இருந்தார்...

இவ்வளவு நேரம் நடந்தவற்றை பற்றிய யோசனையில் இருந்தவர்... பிரச்சனை வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தவர், நிலவனை சந்தித்து பேச வேண்டும் என்றும் மனதில் குறித்துகொண்டார்..




மதிய வேளையில் அதிரலின் அறையின்னுள்ளே இருக்கும் குட்டி சமையலறையில் அதிரலின் கைவண்ணத்தில் ஒரு உணவு தயாராகி கொண்டிருக்க இன்னொரு ஜீவன் அவளை முறைத்துக்கொண்டிருந்தது....

நேற்று இரவும் இன்று காலையும் சேர்த்தே வேலை செய்ததால் இன்று மதியம் வீட்டில் தான் இருந்தாள் அதிரல்... குட்டி தூக்கம் கூட போட்டாகிற்று.... சற்று உட்சாகம் பிறந்திருக்க சமைக்கலாம் என சமையலறைக்குள் நுழைந்தவள் ஏதோ யோசனை வர அவள் தாத்தாவின் அறைக்கு சென்றாள்...

"நினச்சேன்... நீங்க சாப்பிடாம இப்படித்தான் இருப்பீங்கனு... எங்க கமலாம்மாவ காணோம்.. சாப்பாடு கூட அப்படியே இருக்கு... வேணான்னு சொல்லிடீங்களா?..."

அவரோ அப்பாவியாய் முகத்தை வைத்து "சாப்பிடவே முடியலடா அப்பு... இந்த கஞ்சி இறங்கவே மாட்டேங்கிது..."
 
Status
Not open for further replies.
Top