ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 14



இப்படியே நாட்கள் வேகமாக சுழன்று கோர்ட்டில் கேஸும் நான்கு ஹியரிங் முடிந்து, இன்று ஆதியின் வழக்கின் தீர்ப்பு நாள் என்கிற நிலைக்கு வந்திருந்தது.. நிலவனுக்கு இத்தனை நாட்களில் தூக்கம் கூட அரிது என்று சொல்லலாம் அவ்வளவுக்கு அவனது பங்கு இதில் இருந்தது.. இதற்கிடையில் வீட்டுக்கு செல்வதே பெருமளவு குறைந்திருந்தது எனலாம்.. அதிலும் அதிரல் கிளம்பி விட்டாளா? இல்லையா? என்றெல்லாம் யோசிக்க கூட நேரம் இருக்கவில்லை அவனுக்கு.. முழு மூச்சாய் இதில் இறங்கிவிட்டான்..

முரளி கிருஷ்ணனுக்காக தான் இந்த வழக்கில் மறைமுகமாக நுழைந்து கொண்டான்.. ஆனால் இப்போது அவன் முழுமனதாய் போராடுவது எல்லாம் ஆதி எனும் ஒரு நல்ல உள்ளத்துக்காக தான்.. இந்த இடைப்பட்ட நாளில் அவர்களது குடும்ப பூசல் விவாகரம் கூட நிலவனுக்கு தெரிந்திருந்தது.. யாரை நோவது வாழ்க்கை அவரவருக்கு வைத்திருக்கும் கருப்பு பக்கத்தை கடந்து தானே ஆக வேண்டும்...

இதோ இப்போது ஆதி கோட் வாளாகதினுள் அழைத்து வரப்பட்டு கூண்டில் ஏற்றப்பட இன்றைக்கான வாத பிரதி வாதம் நீதிபதியின் தலையசைப்பில் தொடங்கப்பட்டது.. நிலவனோ முரளிகிருஷ்ணண்ணுக்கு ஆதரவாக நின்றிருந்தான்.

ஆதியை சத்யபிரமானத்துடன் விசாரிக்க தொடங்கினார் எதிர்த்தரப்பு வழக்கறிஞ்சர்.

"மிஸ்டர் ஆதி இவ்வளவு ஆதாரத்தோட உங்க மேல குற்றம் ஸ்ட்ரோங் ஆகி இருக்கு அன்ட் ஏற்கனவே தப்பு நீங்க தான் பண்ணீங்கனு உங்க தரப்புல இருந்தும் ஒப்புதல் வாக்குமூலம் குடுத்த நீங்க, இப்போ உங்க வக்கீல் மாத்தி சொல்லும் போது தப்பிக்கலாம்னு அமைதியா இருக்கீங்களா?

"நான் பண்ணல.."

"ஓகே பண்ணலனே வெச்சிப்போம் அப்போ எதுக்காக ஒத்துக்கணும்..? படிச்சிருக்கீங்க அதுவும் போலீஸ் ட்ரைனிங் முடிச்சிருக்கீங்க செய்யாத தப்ப செஞ்சதா தெரியாம ஒத்துக்குற அளவுக்கு அறிவு இல்லாத ஆள் இல்லையே!.. தெரியாம சொல்லிட்டாருனு உங்க வக்கீல் சொல்லுற காரணம் ஏத்துக்கொள்ளும் படியா இல்லையே..." என்று அவர் முடிக்க ஆதியிடம் மௌனம்..

இப்போதும் அவனுக்கு விடுதலையாகவெல்லாம் விருப்பம் இல்லை.. சொன்ன பொய்யை திருத்த வேண்டிய காட்டாயம் அவனுக்கு.. காரணம் அவன் அண்ணன் அமர்.. அவன் சொல்லை தட்ட முடியாமல் தான் இவ்வளவும்..

"ஓகே மிஸ்டர் ஆதி நீங்க போகலாம்.." என்றவர் அவன் சென்றதும் நீதிபதியிடம் "யுவர் ஹானர்.. இதில் மேலும் மேலும் விசாரிக்கவோ வாதம் புரியவோ ஏதும் இருப்பதாய் தெரியவில்லை... இத்தனை நாட்களாக இந்த கேஸ் இழுத்தடிப்பதும் வீண் என்று தான் தோன்றுகிறது..குற்றம் சுமத்தப்பட்டவரே குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அதனை அவரே மாற்றி சொல்வது தான் யோசிக்க வைக்கிறது.. அதுவும் பெரிய பதவியில் வகிக்க வேண்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.." என்று முடித்தவரிடம் ஏகத்துக்கும் நக்கல்... மேலும் அவரே தொடர்ந்தார்..

"அதிலும் எதிர்த்தரப்பு வக்கீல் தி கிரேட் அட்வகேட் மிஸ்டர் வேணுகோபாலே தன் கட்சிக்காரர் தெரியாமல் ஒப்புக்கொண்டு விட்டார் என்று ஒரு வாதத்தை முன் வைப்பது தான் வேடிக்கையாக உள்ளது... தவறையும் செய்து விட்டு தெரியாமல் செய்துவிட்டேன் என்று தப்பிக்க முடியுமென்றால் காவல் நிலையம் எதுக்கு?... நீதிமன்றங்கள் தான் எதற்கு? எல்லாம் இழுத்து மூடப்பட வேண்டி வந்துவிடுமே..."

"மை லார்ட்.. இந்த ஒரு விடயத்திலே தெரிந்து விடுகிறதே குற்றவாளி யாரெனெ.. அப்படி இருந்தும் பாதிக்கப்பட்ட எனது கட்சிக்காரரால் போதுமான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டும் இன்னும் நீதிமன்றம் அமைதி காப்பது ஏனோ?.. பெண்ணைகளை வன்புறுத்தும் செயல் இன்று நேற்று என்றில்லை... காலம் காலமாக நடந்து வருகிறது... பெண்கள் அவமானதுக்கு பயந்து வெளியே சொல்லாது மறைத்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது... இன்று பெண்களே தைரியமாய் குற்றவாளிகளை வெளி கொண்டுவர போராடுகிறார்கள் அதில் என் கட்சிக்காரரும் ஒருவர்.."

"குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டாலே ஒழிய குற்றங்களை தடுக்க முடியாது... எனவே குற்றவாளிக்கு தகுந்த கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. தட்ஸ் ஆல் யுவர் ஹானர்..." என்றவர் தன் வாதத்தை முடித்துவைத்ததும் வேணுகோபாலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது...

"தேங்க் யூ யுவர் ஹானர்" என்றவர் அவர் என்று எழுந்தவர் தன் வாதத்தை தொடர ஆயத்தமனார்...

"எதிர்த்தரப்பு வக்கீல் மிஸ்டர் மகேந்திரன் சிறப்பாக அவர் வாதத்தை முடித்திருந்தார்.. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. இருந்தாலும் இப்படி சிறப்பாக வாதடிய வழக்கு அவருக்கு தோல்வியை தர போவது தான் சற்று கவலையளிக்கிறது..." என்று தொடங்கும் போதே எதிர்த்தரப்பு வக்கீலுக்கு ஒரு கொட்டு வைத்தே தொடங்கினார்..

"மை லார்ட் பாதிக்கபட்ட பெண் என்று சித்தரிக்கப்படும் பெண்ணை விசாரிக்க அனுமதி கோருகிறேன் யுவர் ஹானர்..." என்க அவரும் அனுமதி கொடுத்து அந்த பெண் அழைக்கப்பட்டாள்...

"மிஸ் ரஞ்சினி, நீங்க ஏன் அந்த ஹோட்டலுக்கு அன்னைக்கு போனீங்க?

"ஏற்கனவே சொல்லி இருந்தேனே சார்.. பிரண்ட் ஒருத்தியோட பர்த்டே பார்ட்டி இருந்திச்சு..." என்றாள் தயக்கதோடு..

"ம்ம்ம் ஓகே கான்போர்ம் பண்ணிக்கிறதுக்காக கேட்டேன்.. அப்பறம் மாத்தி சொல்ல கூடாதில்லையா?.. சோ பார்ட்டிக்கு போன இடத்துல தான் நீங்க கற்பழிக்க பட்டிருக்கீங்க.. எம் ஐ ரைட்?"

"ஆமா சார்.."

"இதுக்கு முதல் என் கட்சிக்காரர் ஆதிய எங்கயாவது மீட் பண்ணி இருக்கீங்களா?

"இல்லை சார்.."

"சரி.. இதுவரை ஆதிய பார்த்ததே இல்ல... அவர் உங்கள கற்பழிக்கும் போது நீங்க உங்க சுய நினைவுல இல்ல.. சோ சிசிடிவி ஆதாரம் தான் அவர உங்களுக்கு குற்றவாளினு நிரூபிச்சிருக்கு அப்படி தான.."

"ஆமா சார்.."

"ஓகே கொஞ்சம் வெளிப்படையாவே பேசலாமா?.. நீங்க கற்பழிக்கப்படீங்கனு உங்களுக்கு எப்படி தெரிஞ்சிது?.. அன்ட் சுயநினைவுக்கு வந்ததும் எங்க இருத்தீங்க?"

"அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்.. என் கட்சிகாரரை புண்படுத்தும் விதமாகவே தொடர்கிறது எதிர்த்தரப்பு வக்கீலின் வாதம்..."

"இந்த கேள்விகள் வழக்குக்கு முக்கியம் என்பதால் தான் நான் இவ்வளவு தூரம் கேட்குறேன் யுவர் ஹானர்."

"அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்" என்று கூறிய நீதிபதி விசாரணையை தொடர சொல்லவும் மீண்டும் ரஞ்சினியிடம் திரும்பிய வேணு கோபால்

"சொல்லுங்க மிஸ் ரஞ்சினி... உண்மைய மட்டும் சொல்லுங்க.."

"அன்னைக்கு மயக்கம் தெளிஞ்சதும்.. எனக்கு எங்க இருக்கன்னு முதல்ல ஒண்ணுமே புரியல.. அப்பறமா பாக்கவும் தான் ரூம்ல மோசமான நிலையில இருக்கிறது புரிஞ்சிது.. பக்கத்துல யாரும் இருக்கல.. சோ என் பிரண்டுக்கு கால் பண்ணி ஹெல்ப் கேட்டு தான் அங்க இருந்து வெளிய வந்தேன்.. அவ உதவியாலதான் சிசிடிவி புட்டேஜ் எடுக்க முடிஞ்சிது.."

"வெல்டன் மிஸ் ரஞ்சினி சொல்லி குடுத்தத ரொம்ப நல்லாவே ஒரு பிழையும் இல்லாம சொல்லுறீங்க நல்லா நடிக்கவும் செய்றீங்க பட் ஸ்கிரீன்பிலே அவ்வளவா நல்லா இல்லனு சொல்லி தந்தவங்க கிட்ட சொல்லிடுங்க.."

"மிஸ்டர் வேணுகோபால் மைண்ட் யுவர் வேர்ட்ஸ்..." என்று நீதிபதி சத்தம் போட..

"சாரி யுவர் ஹானர்.." என்று மன்னிப்பு கேட்டவர், ரஞ்சினியிடம் "ஹெல்ப் பண்ண பிரண்ட் யாருனு தெரிஞ்சிக்கலாமா?.." என்றதும் அவள் தயங்க

"ஆள சொல்லணும்னு கூட இல்லை அவங்களும் பார்ட்டிக்கு வந்திருந்தாங்கலானு சொன்னா மட்டும் போதும்" என்றதும் அவள் ஆமோதிப்பாய் தலை ஆசைkக்க "ஓகே நீங்க போகலாம் மிஸ் ரஞ்சினி" என்றார்

"யுவர் ஆனார்... இங்க ரெண்டு விஷயத்தை நாம மெயினா பாக்கணும்.. ஒன்னு, ரஞ்சினியோட பிரண்ட்ஸ் யாருமே அன்னைக்கு இரவு ரஞ்சினிய தேடவே இல்ல.. இன்க்ளூடிங் ஹெல்ப் பண்ணதா மிஸ் ரஞ்சினியால சொல்லப்பட்ட அந்த பொண்ணு கூட... இங்க என்னோட கேள்வி என்னனா கூட வந்த ஒரு பிரண்ட்ட காணோம்னா தேடுறது சகஜமான ஒரு விஷயம் ஆனா அது மிஸ் ரஞ்சினி விசயத்துல நடக்கல யுவர் ஹானர்... சோ அவங்களுக்கு ஏற்கனவே மிஸ் ரஞ்சினி அங்கேயே தங்க போறாங்கன்ற விஷயம் தெரிஞ்சிருக்கணும்... அப்படினா அவங்க காணாம போக வாய்ப்பில்லனு தான அர்த்தம்..."

"அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்..." என்றார் மகேந்திரன் மீண்டும்

இந்தமுறை நீதிபதி "எஸ் ப்ரோசிட்.." என்று அனுமதி கொடுக்கவும்.. "என் கட்சிக்காரர யாரும் கடத்துனதா எங்க தரப்புல சொல்லவே இல்லை யுவர் ஹானர்.. இல்லாத விஷயத்தை சொல்லி வழக்க திசை திருப்ப பார்க்கிறார் ..."

"மிஸ்டர் மகேந்திரன், ஏன் பதறுறீங்க? உண்மை வெளில வந்துடும்னா... ஆதாரம் இல்லாமலா இவ்வளவு தைரியமா சொல்லுவோம்.. யோசிக்க வேணாமா?.. ஏற்கனவே அந்த வீடியோ பேக்னு சமர்ப்பிக்கபட்ட ஆதாரம் போலின்னு சொன்னீங்க.. இப்போ குடுக்க போறதும் போலியான்னு பொறுமையா பாருங்களேன்.." என்றவர் அங்கு நீதிபதியின் உதவியாளரிடம் பெடிரைவ் ஒன்றை கொடுத்தார்..

"அதுல இருக்க முதலாவது வீடியோல இப்போ நான் சொன்னதுக்கான ஆதாரம் இருக்கு யுவர் ஹானர்..

அவர் சொல்லுகிணங்க அதில் இருந்த முதலாவது காணொளி இயக்கப்பட அதிலோ.. ஒருவர் பின் ஒருவராய் ரஞ்சினியின் நண்பி, தனது பார்ட்டிக்கு வந்தவர்களை ஹோட்டல் வாசல் வரை வந்து வழி அனுப்பி அவளும் செல்லும் காட்சி.. யார் முகத்திலும் பதட்டம் சிறுதும் இல்லை..

நீதிபதி நெற்றி சுருங்க அக்காட்சியை பார்த்தார்.. அதனை பார்த்த ரஞ்சினியின் முகத்திலோ பயத்தில் வியர்வை அரும்பியிருந்தது... மகேந்திரனால் எதுவுமே சொல்லமுடியவில்லை அடுத்து எப்படி வாதத்தை மடக்கலாம் என யோசனைக்கு சென்றுவிட்டார்...

"நெக்ஸ்ட் , அவங்க அன்னைக்கு முழிச்சதும் பக்கத்துல யாரும் இல்லைனு சொல்லி இருக்காங்க அன்ட் அன்னைக்கே அவங்க சிசிடிவி புட்டேஜ் எடுத்ததாகவும் சொல்லுறாங்க..
இதே போன முறை நடந்த வாதத்துல அந்த ஹோட்டல விட்டு ஆதி வெளியேறுனதா புட்டேஜ் இல்லனு எங்க பக்கம் சொல்லும் போது எதிர்த்தரப்பு வக்கீல், என் கட்சிக்காரர் தான் அதனை அழித்திருக்க கூடும் என்பதாய் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்...." என்றவர் பார்வை மகேந்திரனை தொட்டு மீண்டது....

"எதிர்த்தரப்பு வக்கீல் சற்று யோசிக்க தவறிவிட்டார் போலும், அதை அழிக்க தெரிஞ்ச என் கட்சிக்கார் சம்மந்தப்பட்ட வீடியோவ மட்டும் ஏன் விட்டுவைக்கணும்... சோ இது வேணும்னே தீட்டப்பட்ட சதி யுவர் ஹானர்.... அங்க இருந்தது ஆதி இல்லைங்கிறதுக்கான ஆதாரம் அந்த ரெண்டாவது வீடியோல இருக்கு யுவர் ஹானர்.." அந்த காணொளி இயக்கப்பட அதனை பற்றி விளக்கினார் வேணு கோபால்..

"ஹோட்டளுக்கு வெளியே கொஞ்சம் தள்ளி உள்ள சின்ன ஷாப்பிங் மால் ஒன்னோட சிசிடிவி புட்டேஜ் யுவர் ஹானர் இது... எந்த வீடியோவ ஆதாரமா கொடுத்தாங்களோ அதில உள்ள அதே ஆடையோட ஹோட்டல விட்டு வெளியேறி போன ஆளோட முகம் இதுல கிளீயரா தெரியுது யுவர் ஹானர்..."

"அப்ஜெக்ஷன் யுவர் ஹானர்.." என்று எழுந்த மகேந்திரனை "சிட் டவுன் மிஸ்டர் மகேந்திரன்.. அவரு பேசட்டும்... உண்மை வெளியில வரட்டுமே.." என்று அமர வைத்திருந்தார் நீதிபதி, வாதத்தின் இலக்கு எதிர்பாரா உண்மைகளை வெளி கொண்டுவர முயல்வதானால்...

"தேங்க்ஸ் யுவர் ஹானர்... மிஸ்டர் மகேந்திரன் இத ஒத்துக்க மாட்டார்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஒரே போல சட்ட ரெண்டு இல்லையானு கேப்பார்.. எம் ஐ ரைட் மிஸ்டர் மகேந்திரன்?.." என்ற கேள்வியில் நக்கலை கோர்த்து வினாவினார்.

"எதிர்த்தரப்புல ஆதரமா கொடுக்கப்பட்ட வீடியோ பேக், அதுல இருக்குறது ஆதியே இல்லைங்கிறதுக்கு அவங்க தந்த அதே வீடியோ ஆதரமே போதும்... அந்த பென்ரைவ் உள்ள தேர்ட் வீடியோல சரியா போத் மினிட்ஸ் அன்ட் டுவெண்ட்டி செக்கன பிளே பண்ணி பாருங்க யுவர் ஹானர்... அந்த வீடியோல இருக்க நபருக்கு வலது கைல ஆறு விரல் இருக்குறது தெளிவா தெரியுது.. பட் அன்போர்சுனட்லி மிஸ் ரஞ்சினியால குற்றம் சாட்டப்பட்ட என் கட்சிகாரர் ஆதிக்கு ஒன்லி அஞ்சு விரல் தான் இருக்கு... சோ இது ஒரு பொய்யான குற்றசாட்டு யுவர் ஹானர்.. என் கட்சிக்காரரோட முகத்தை பொய்யா யூஸ் பண்ணி அவர குற்றவாளியாக்க முயற்சி செஞ்சிருக்காங்க யுவர் ஹானர்... என் கட்சிக்காரர் நிரபராதி..." என்றவர் சிறிய அமைதிக்கு பின் ஆதங்கமாகவே தொடர்ந்தார்.

"யுவர் ஹானர், இந்த நீதிமன்றம் இன்றோடு இந்த வழக்கிக்கு தீர்ப்பு வழங்க காத்திருக்கிறது.. நீங்களோ நானோ இனி அடுத்த வாத பிரதிவாதம் என பல விசித்திர வழக்குகளை சந்திப்போம்... இந்த நீதி மன்றம், ஆதரங்களின் அடிப்படையில் எத்தனையோ தீர்ப்புக்களை அளித்துள்ளது. எத்தனையோ பிரச்சினைகளை யாரும் மனு தாக்கல் செய்யாமலேயே தானே விசாரணைக்கு எடுத்து விசாரித்துள்ளது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம்."

"சட்டமும், சாட்சியங்களுமே ஒரு வழக்கின் பாதையை தீர்மானிக்கிறது. இங்க பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறவருக்கும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் நீதி சமன். ஏனோ பாதிக்கப்பட்டவர் என்னும் போது நானோ நீங்களோ சற்று அந்த பக்கம் யோசிக்கும் இயல்பு எல்லாருக்கும் இருக்கும்... இனிமேல் அப்படி ஒரு யோசனை உதிக்கும் நேரம் இந்த வழக்கு மனதில் வந்து போகுமென்பதில் எந்தவித ஐயமும் இல்லை..."

"நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பல நேரங்களில் வியக்க வைத்துள்ளன; மகிழ வைத்துள்ளன; சில நேரங்களில் யோசிக்கவும் வைத்துள்ளன. இன்று பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் கடந்து விட்டோம்... சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியின் அடிப்படையில் எனது கட்சிகாரருக்கு நியாயமான முறையில் தீர்ப்பளிகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... தட் ஆல் யுவர் ஹானர்.." என்று அவரது பெரிய வாதத்தை முடித்துக்கொள்ள அங்கே நிசப்தம்... இப்படி ஒரு திருப்பத்தை யாரும் எதிர் பாக்க வில்லை அல்லவா.. மகேந்திரனுக்கு கூட பேச நா எழவில்லை... சிறிது நேரம் நீதிபதி அமைதியாய் தீர்ப்பு எழுதிகொண்டிருந்தவர், படிக்க தொடங்கினார்..


"வெல் டன் மிஸ்டர் வேணுகோபால்.. உங்களோட வாத திறமையை இன்னைக்கும் நீங்க விட்டுக்கொடுக்கல.. ஓகே தீர்ப்ப வாசிக்க முதல், இத்தனை நாளா இந்த கேஸ்ல பயணிக்கிறோம்... நாம ஒன்ன நினச்சா.. நீதி இன்னொரு பக்கம் இருக்கு.. என்ன தான் ஆதாரம் அடிப்படையில நேர்மையா நீதி வழங்கப்படுறதா இருந்தாலும் அந்த ஆதாரங்கள் போலியா இருந்தா அந்த இடத்துல நிரபராதி தண்டிக்கப்படுறது தவிர்க்க முடியாதது ஆகிடுது... பட் இன்னைக்கு அப்படி இல்ல.. ஒரு நிரபராதிய தண்டிச்சு இந்த கோர்ட் பாவத்தை பூசிக்காம மிஸ்டர் வேணுகோபால் காப்பாத்திட்டாருன்னு தான் சொல்லணும்.. ஆனால் கவலை பட வேண்டிய விஷயம், காவலதிகாரி இந்த வழக்கை சிறப்பான முறையில் கையாளாதது தான்... வருங்காலதில் இது போல் நேராமல் இருக்க இந்த கோட் அவரை வன்மையாக கண்டிக்கிறது..."

"ஓகே லெட்ஸ் ரீட் தி ஜட்ஜ்மெண்ட்... குற்றம் சுமத்தப்பட்ட மிஸ்டர் ஆதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதரங்களின் அடிப்படையில் அவர் நிரபராதி என்றும் அவர் மீது எதுவித தவறும் இல்லையென்றும் அவரை விடுதலை செய்யுமாறும் இந்த நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிடுகிறது..."

"மேலும் ஐபிசி செக்ஷன் போர்ட்டி போ வின் படி ஒருவருடைய மனம், புகழுக்கு தீங்கு விளைவிக்கிறது குற்றமாகும். அன்ட் ஐபிசி செக்ஷன் டூ லெவனின் படி ஒருவருக்கு துன்பம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் மீது குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பது குற்றமாகும்.. எனவே குற்றவாளி மிஸ் ரஞ்சினிக்கு அதிகபட்ச தண்டனையாக ஏழு வருட கடுங்காவல் தண்டனையும் ரூபா ஒரு லட்சம் அபராதமும் அளித்து இந்த கோட் தீர்ப்பளிக்கிறது.. இந்த வழக்கில் மேலும் உள்ள மர்மத்தை கண்டறிந்து நீதிமன்றதில் சமர்ப்பக்குமாறும் காவல் துறைக்கு ஒரு மாதகாலம் அவகாசம் அளிக்கப்படுகிறது..." என்று நீதிபதி தீர்ப்பளித்து முடித்தார்.

முரளிகிருஷ்ணன் முகத்திலோ மகிழ்ச்சியின் ரேகை.. அருகில் நின்றிருந்த நிலவனுக்கு கலங்கிய கண்களாலேயே நன்றியை தெரிவித்தார்.. வேணுகோபாலும் அவர்கள் அருகில் வர

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் வேணுகோபால்..." என்று நெகிழ்ச்சியாய் அவர் சொல்ல " எனக்கு எதுக்கு முரளி சார் தேங்க்ஸ் சொல்லுறீங்க உங்க பக்கத்துல நிக்கிறாரே யங் மேன் அவருக்கு தான் சொல்லணும் நீங்க.." என்றதும் முரளிக்கிருஷ்ணன் புரியாமல் பார்க்க அவரே மேலும் தொடர்ந்தார்

"நேத்து நைட் வரைக்கும் இந்த கேஸ்ல நம்ம பக்கம் சொல்லிக்கிற போல ஆதாரம் எதுவும் இருக்கவே இல்ல.. என்ன பண்ண போறோம்னு யோசிச்சிட்டு இருந்த நேரம் தான் மிஸ்டர் நிலவன் ஆதரத்தோட என்ன பார்க்க வந்திருந்தார்.. எனக்கு அவர் சொல்லும் போது தான் ஆதிய வெளிய கொண்டு வந்துடலாம்னு நூறு வீதம் நம்பிக்கையே வந்திச்சு... இந்த ஆதாரம் எல்லாம் திரட்ட ரொம்ப உழைச்சிருக்காருன்னு தான் சொல்லனும்.. சோ, நீங்க அவருக்கு தான் நன்றி சொல்லணும்.." என்று அவர் சொன்னதும் முரளிகிருஷ்ணன் நிலவனை அனைத்துக்கொண்டார்

"ரொம்பவே பெரிய உதவி நிலவன்.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.." என்று பேச்சு வராமல் அவர் தடுமாற.. "எமோஷனல் ஆகாதீங்க சார்.. ஒரு நேர்மையான அதிகாரிக்கு சட்டம் செய்யவேண்டிய கடமைய தான் நான் செஞ்சிருக்கேன்.. உங்கள குருவா நினைக்கிற எனக்கு இது ஒரு வாய்ப்பு தான் சார்.."

"உங்க சிஷ்ய பிள்ளை எனக்கே சட்டம் சொல்லி தரார்... என்னனு கேளுங்க முரளி சார்... வக்கீலா வரவேண்டிய ஆளு ஜஸ்ட் மிஸ்..." என்றார் புன்னகையுடன்
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"அப்படின்றிங்க.. உங்களுக்கு புரியுது என்ன பண்றது அவர் விதி இங்க இருக்கார்.." என்று தொடங்கி நிலவனை பற்றி மேலும் சொல்ல வேணுகோபால் முகத்தில் உண்மைக்கும் ஆச்சரியம்..

"அதான பார்த்தேன் எனக்கே வாதாட சொல்லி தராரேன்னு இப்போ புரியுது..." என்றார் அர்த்தத்துடன்..

" அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜஸ்ட் ஆதாரம் கொடுத்தேன் அவ்வளவு தான்... ரெண்டு பேரும் என்ன கலாச்சது போதும் அதோ ஆதியே வரார் போய் பேசலாம்.." என்று அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த்தான்..

ஆதியுடன் அறிமுக படலத்தை முடித்து "ஓகே ஆதி நீங்க டையடா இருப்பீங்க.. வீட்டுக்கு போங்க நாம அப்பறமா பேசலாம்.." என்று அப்பா மகனுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து அகன்றான்.. வேணுகோபாலும் செல்ல, அப்பா மகன்

இருவரிடமும் அமைதி..

முரளிகிருஷ்ணன் அதை உடைத்தவராக "இங்க வெயிட் பண்ணு ஆதி கார் எடுத்துட்டு வறேன்.." என்றவர் முடிக்க முதல் அங்கு வந்த ஆட்டோ ஒன்றில் ஏறி இருந்தான் அவர் மகன்.. போகும் மகனையே பெருமூச்சுடன் பார்த்த அவரும் காரை எடுத்து வீட்டுக்கு விரைந்தார்..


எங்கோ இருக்க வேண்டிய நிலவனை இந்த இடத்தில் ஒரு காவல் அதிகாரியாக்கிய விதி இன்னும் என்ன முடிச்சுக்களை அவனுக்காக வைத்திருக்கிறதோ?.. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..




ஊருக்கு செல்வதற்கான எல்லாம் தயாராக இப்போது தான் கூடி வந்திருந்தது அதிரலுக்கு... வேலை செய்யும் இடத்துக்கு தகவல் சொல்லி, முடிக்க வேண்டிய வேலை எல்லாம் முடித்து கிளம்பவே இத்தனை நாட்கள் இழுத்தடித்தது...

அதிலும் கலையரசனுக்கு பதிலுக்கு சிறப்பாய் செய்துவிட்ட நிம்மதியுடன் தான் இங்கிருந்தே செல்ல இருக்கிறாள்.. தாத்தாவையும் அழைத்து செல்ல முழு ஏற்பாடும் தயாராகிவிட்டது... இன்று காலை பதினொரு மணியளவில் பிலைட்.. சிறிய வேலை மீதி இருப்பதால் நேரத்துக்கே தயாராகி கீழே வந்திருந்தாள்..

"வாம்மா அதி.. என்ன ஏர்லியாவே ரெடி ஆகிட்டியா?.."

"ஆமா அங்கிள்.. வீட்டுக்கு போய் கொஞ்சம் திங்ஸ் எடுக்க வேண்டி இருக்கு போய் எடுத்துட்டு வந்துடுறேன்..."

"தனியாவாடா போற... அங்கிளும் கூட வரட்டா..."

"அச்சோ அங்கிள் அதெல்லாம் வேணா.. நீங்களே இன்னைக்கு தான் பிரீயா இருக்கீங்க.. நானே போய்ப்பேன்..."

"டேய் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல.. நான் வரேன்.. வழமை போல தானே"

"என்னது வழமை போலவா.. நோ நோ நோ இதுக்கு நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டீங்கனு நானும் தான் பார்த்தேனே.. நேத்து நீங்க வாதாடுனது தான் இன்னைக்கு சோசியல் மீடியா பூரா ஹாட் டாபிக்.. பிச்சி ஒதரிட்டீங்க அங்கிள், இது உங்க ஹாட் ஒர்க்குக்கு கிடைச்ச வெற்றி.."

"இல்லடா.. இதுல என்ன விட மிஸ்டர் நிலவனுக்கு தான் கிரெடிட் அதிகமா போகணும் அவரோட உழைப்பு இதுல ரொம்ப பெரிசு..." என்றவர் நடந்ததை சொல்ல அவர் சொன்ன இந்த விடயம் அதிரலுக்கு புதிது.. அவனும் இதில் இருப்பதே அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..

அதிலும் இத்தனை நாளில் அவனை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருந்த அவளது ஒரு மனதுக்கோ, தான் செல்வதாக சொல்லியும் இடைப்பட்ட நாளில் அவன் தொல்லை இல்லாமலிருந்த காரணம் புரிய மெல்ல முகத்தில் வெளியே தெரியாத சிறு புன்னகை எட்டிப்பார்த்தது

"என்னடா அதி சைலன்ட் ஆகிட்ட.."

"ஒண்ணுமில்ல அங்கிள் அவர் இந்த கேஸ்ல இருக்குறது தெரியதில்லையா அதான் யோசிச்சிட்டு இருந்தேன்..."

"நேரடியா இல்லடா.. மறைமுகமா முரளிகிருஷ்ணனுக்காக தான் இன்வோல்வ் ஆகி இருந்தாரு.."

"ம்ம்ம்... ஓகே அங்கிள் அப்போ நான் போய்ட்டு வரேன்.."

"நானும் வரேன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிற... ஓகேடாமா பார்த்து போயிட்டு வா.. கவனம், ஏதும்னா கால் பண்ணு.. ஏர்போர்ட்ல நானே ட்ரோப் பண்ணுறேன்.."

"ஓகே அங்கிள்.." என்றவள் அங்கிருந்து வெளியேறினாள்..

கடந்த இரண்டு நாளாக அதிரலும் ராஜய்யாவும் வேணுகோபால் வீட்டில் தான் தங்கி இருக்கின்றனர்... அவர்கள் வாழந்த வீட்டை தவிர மற்ற அணைத்து அசையும் ஆசையா சொத்துக்கள் எல்லாம் டிரஸ்ட்க்கு எழுதி கொடுத்தாகிவிட்டது.. எல்லாம் வேணுகோபாலின் தலைமையில் தான்..

அதுமட்டுமில்லாது கலையரசனின் பெயரில் உள்ள சொத்துக்களும் ஏமாற்றி பறிக்கப்பட்டது என்று கோர்ட்டில் வழக்கு பதிந்தாகிவிட்டது.. அதனை அவர் கேஸ் முடியும் வரை உபயோகிக்க முடியாத படியும் கோர்ட்டில் ஸ்டேயும் வாங்கி விட்டாள்.. அவையும் பின்னாளில் டிரஸ்டுக்கு தான் என்பதில் அவளிடம் அத்தனை உறுதி..

எதற்காக எந்த சொத்துக்காக தன் அம்மாவை ஏமாற்றினார்களோ அது துளியும் அவர்களிடம் இருக்க கூடாது என்பது அவள் ஆசை... அது நிறைவேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை...

இங்கிருந்து மொத்தமாக செல்ல வேண்டும் என்று முடிவில் இருப்பவளது முடிவு, அவளாலேயே தகர்த்துத்தெரியப்பட போகிறதென அறியாதவளது பயணம் அவள் வீட்டை நோக்கி நீண்டது...


ஜாதி மல்லி மலரும்......

கருத்து திரி 👇👇👇

 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 15


அடர்ந்த இருள்.. மூச்சு சத்தம் மட்டுமே பெரிதாய் கேட்டுகொண்டிருந்தது.. பக்கத்தில் யார் என்று கூட பார்க்க முடியவில்லை ஆனால் அங்கே சிறிய ஜீவன் ஒன்றோ தட்டு தருமாறி எழுந்து சென்று தன் இயற்கை தேவையை பூர்த்தி செய்து மீண்டும் வந்து சரியாக அதன் இடத்தில் உறங்கியது..

சென்று வரும் வேளையில் மிதிக்கப்பட்ட கைகளும் கால்களுமோ ஏராளம்.. பதிலுக்கு அந்த ஜீவனுக்கும் அது திருப்பி இன்னொருவரால் கிடைக்க கூடிய ஒன்று தான்... கிட்டத்தட்ட பல நாட்களாக பழக்கப்பட்ட ஒன்றும் கூட... அழ கூட முடியாது, சத்தம் வெளியில் கேட்டால் இரண்டு நாட்களுக்கு கிடைக்கும் தண்ணீரும் கிடைக்காது..

எது காலை எது இரவு என்றே தெரியாத நிலை.. பேச்சை கூட மறந்து விட்ட நிலை தான்.. ஒருவாரத்தில் ஒரு முறையோ அல்லது இரு முறையோ போடப்படும் சாப்பாட்டுக்கு பேசி சக்தியை கரைத்து என்ன செய்வது... அப்படி பேசியும் எதுவும் ஆக போவதில்லையே என்பதை இத்தனை நாளில் வலிக்க தெரிந்து வைத்திருந்தனர்...

மீண்டும் ஒரு உருவம் எழுந்து அமர அந்த சத்தத்தில் மீண்டும் மிதி படவேண்டுமே என சில உள்ளம் பதறத்தான் செய்தது.. அந்த உருவாமோ சட்டை பைக்குள் ஒளித்து வைத்திருந்த உணவை சிறிது பிட்டு வாய்க்குள்ள போட்டு மீதியை மீண்டும் சட்டை பைக்குள் போட்டுகொண்டது, மீதி இருக்கும் இரண்டு நாளுக்காக.. நான்கு நாட்களுக்கு முன் போடப்பட்ட உணவு அது.. அப்போது சரியாக அந்த உருவத்தின் கை அருகே இன்னொரு கை நீள, சிறிது அதற்கும் பரிமாறபட்டது... அந்த உணவில் இருந்து வரும் மனம் கூட பழகிவிட்டது போலும்...

வெளியே அந்த அறை கதவில் "எலிகள்" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது...
இப்படி அங்கே அது போல் பல அறைகள் இருந்தன.. அறைகறை பொறிக்கப்பட்ட வாசகம் மாறி இருந்தது..

அப்போது சங்கு சத்தம் ஒன்று கேட்க பயத்தில் அங்கிருந்த ஜீவன்கள் அனைத்தும் பயத்தில் எழுந்து அருகில் இருந்த உருவத்தின் கைகளை இறுக பற்றிக்கொண்டது...

அப்போது சரியாக ஜேகேயின் வாகனம் அந்த கட்டிடம் இருந்த வாளாகதினுள் நுழைந்ததது... அவனும் வசந்தும் இறங்க, அடியாள் விக்ரம் அருகில் ஓடி வந்தான்

"பாஸ்..." என்றவன் முடிக்கவில்லை அதற்குள் அவன் கன்னம் எரிந்தது...

"இடியட்... நாம என்ன பண்ணிட்டு இருக்கோம்னு தெரியும்ல.. அப்பறம் என்னடா உனக்கு?.. ஒரு வேலைய ஒழுங்கா பார்க்க தெரியாதா?..."

"பாஸ்.. அது பிடிக்கிறதுக்குள்ள அந்த நாய் ஓடிடிச்சு.." என்றவன் ஜேகே பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டான்...

"இப்போ என்ன பண்ணலாம் சார்..." என்றான் வசந்த்

"எப்படியும் நம்ம மருந்து இல்லாம உயிரோட தாக்கு பிடிக்கிறதே கஷ்டம் பாக்கலாம்... அதான் இருட்டுலேயே வெச்சிருக்கோமே என்ன சொல்லிட முடியும்.. அப்படியே சொன்னாலும் எதையும் புடுங்க முடியாது..." என்று வசந்திடம் சொன்னவன் விக்ரமிடம் திரும்பி "இன்னைக்கு அனுப்ப வேண்டிய சரக்கு ஓகேயா.."

"ரெடியா தான் இருக்கு பாஸ்..."

"ஓகே அழைச்சிட்டு வா.." என்றவன் சவகாசமாக அவன் காரின் முன் சாய்ந்தவாரு நிற்றுக்கொள்ள, சற்று நேரத்தில் பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கண் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டான்... அவனோட ஜேகேயின் பயணம் மீண்டும் எங்கோ பயணித்தது...

அடைக்கப்பட்டிருக்கும் ஜீவன்கள் யாரோ??... என்ன நோக்கத்துக்காக கடத்தப்பட்டார்களோ???... இந்த கொடூரனின் ஆட்டத்தின் முடிவு நாளும் என்றோ???....




அவளது வீட்டுக்கு வந்து இறங்கி நேரே உள்ளே சென்றவள் அங்கே கோபமாய் அமர்ந்திருந்த மூவரையும் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்ல...

"ஏய் நில்லு.. உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி பண்ணி இருப்ப.. உன்ன எல்லாம் உயிரோட விட்டுவெச்ச என்ன சொல்லணும்... மரியாதையா எல்லாத்தையும் குடுத்துட்டு இங்க இருந்து போய்டு.."

"என்ன மிஸ்டர் கலையரசன் சத்தம் கூடுது.. போக தான் போறேன் ஆனா குடுக்க எல்லாம் முடியாது.. என்னமோ உங்க அப்பன் வீட்டு சொத்து போல குதிக்கிறீங்க... அப்பறம் எங்க போச்சு உங்க வீல் செயார்.. அவசரத்துல ஆக்ட்டிங்க மறந்துடீங்க போல.." என்றாள் நக்கலுடன்

"ஏய்..." என்று கலையரசன் கோபத்தில் எழ

"சும்மா கத்திட்டு இருக்க கூடாது.. எனக்கு சத்தம்னாலே அலர்ஜி... இன்னுமா இங்க இருந்து கிளம்பல நீங்க... பாவம் அதிர்ச்சில இருப்பீங்க நீங்களா போவீங்கன்னு பார்த்தா நடக்காது போலயே.. ஓகே உங்க ஆசைய கெடுப்பானேன் போலீஸ் விட்டே காலி பண்ண வெச்சிடுவோம்... இனிமேலாச்சும் அடுத்தவன ஏமாத்தாம வாழுங்க.." என்றவள் சிறிது யோசித்தபடி பாவனை செய்து

"அச்சச்சோ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க பிச்ச எடுக்க தெரியுமா?.. இனிமேல் அதுக்கு காலம் வரும் எதுக்கும் தெரிஞ்சி வெச்சுக்கோங்களேன்... உங்களுக்கு கூட நடிப்பு நல்லா வருமே கால் கை இல்லாத மாதிரி நடிச்சு கூட பிச்ச எடுக்கலாம்...."

"என்னடி விட்டா ரொம்ப பேசிட்டே போற.. இப்போ இங்க உன்ன கொன்னு போட்டாலும் கேக்க ஆள் இல்லாத நாயி நீ.. நீயெல்லாம் பேசி கேட்கணுமா?... என்றான் சஞ்சய் கோபமாக

"அடடே சப்ஜெக்ட்க்கு உயிர் வந்துடிச்சு போல.. நான் கூட நீ கெஸ்ட் ரோல்ல நடிக்கிறியேனு நெனச்சிட்டேன் பாரேன்.. அப்போ நீயும் வில்லன் ரோல் தானா?..." என்றாள் ஏகத்துக்கும் நக்கலுடன்...

"என்னடி பயம் விட்டு போச்சா... இவ்வளவு நாளும் இருக்குற இடம் தெரியாம பயந்து ஓடி ஒழிஞ்சவதான நீ... இப்போ மட்டும் பெரிய இவளாட்டம் பேசுற.. இதுக்கு ரொம்ப மோசமா அனுபவிப்ப..."

"அச்சச்சோ அத நீ பயம்னு நெனச்சிட்டியா?.. துஷ்டன கண்டா தூர விலகுன்னு சொல்லுவாங்களே அத கேள்விப்பட்டதில்லையா???... இந்த முடிவு உங்களுக்கு எப்பவோ கொடுத்திருக்க வேண்டியது என்ன கொஞ்சம் லேட்டாகிடிச்சு.. இதுவும் நல்லா தான் இருக்கு, பசில இருக்கவனுக்கு தட்டு நிறைய சாப்பாடு போட்டு எல்லாம் உனக்கு தான்னு நம்பவெச்சு, சாப்பிட்டு இருக்கும் போது பாதில தட்ட பறிச்சா எப்படி இருக்கும்.. அந்த நிலைமை தான் இப்போ உங்களுக்கும்.." என்றவள் மேலே அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்

"இதுக்குத்தான் இவள போட்டுடலாம்னு அப்பவே சொன்னேன் கேட்டீங்களா?.. எவ்வளவு திமிரா பேசிட்டு போறா.. வந்த வரைக்கும் லாபம்னு போகாம நீங்க எல்லாத்துக்கும் ஆசைப்பட்டதுக்கு இப்போ நடுத்தெருவில தான் நிக்கணும்... நான் என் ஆளு கூட போய் செட்டில் ஆகிடுவேன்... நீங்க நடுத்தெருவில பிச்ச எடுத்தாலும் ஐ டோன்ட் கேர்..." என்று கத்திவிட்டு சஞ்சய் அவன் வேலையை முடிந்ததென கிளம்பிவிட்டான்..

கலையரசனுக்கு கையில் பணம் எதுவும் இருக்கவும் இல்லை.. ஏற்கனவே இருந்தவற்றை சஞ்சய் ஏதோ தொழிலுக்கு வேணும் என்று கேட்க மொத்தமாய் தூக்கி கொடுத்துவிட்டார் பின்னர் எடுத்துக்கொள்ளலாமென... ஆனால் இன்றோ சொத்து எல்லாம் கைமீறி போய்விட்டது... தனக்கென இருந்ததிலும் வழக்கு இருப்பதால் விற்கவும் முடியாது.. பண ஆசையில் நிறைய இடத்தில் கடனும் வேறு இஷ்டத்துக்கு வாங்கி இருந்தார்.. என்ன செய்வதென யோசனையில் அமர்ந்தவருக்கு நம்பிக்கையாய் இருந்த மகனும் போய் விட்டான்..

"விஷாலா.. கொஞ்ச நாளைக்கு உன் ஊர் பக்கம் போய் இருப்போம்.. கடன் தந்தவன் எல்லாம் கேட்டு வந்தா மாட்டிப்போம்.. அங்க போய் என்ன செய்றதுனு பாப்போம்... கேஸ்ல எப்படியாச்சும் ஜெயிச்சு நம்ம பங்க மீட்கணும்.. அதுவே போதும் இப்போதைக்கு..." என்க விசாலாட்சி அமைதியாகவே இருந்தார் எதுவும் சொல்லவில்லை..

"என்ன விசாலா எதுவும் சொல்ல மாட்டேங்குற..."

"கேஸ்ல ஜெயிப்பீங்கனு இன்னும் நம்பிக்கை இருக்கா உங்களுக்கு?.. ஜெயிக்க எந்த எல்லைக்கும் போவீங்கனு தெரியும் ஆனா அப்படியும் ஜெயிக்கலான என்ன பண்ணுவீங்க? இத்தன வயசுக்கு பிறகெல்லாம் என்னால கஷ்டபட முடியாது..." என்று பேசியவரை புரியாமல் பார்த்திருந்தார் கலையரசன். சரியாக அந்த நேரம் அவருடன் தொழிலில் பட்டனராக இருக்கும் மோகன் உள்ளே வந்தார்..

"வாடா மோகன்.. இப்போ அவசரமா ஊருக்கு போக கார் ஒன்னு வேணும்.. ஏற்பாடு பண்ண முடியுமா?.."

"கார் வேணும்னா என்னோடதுல போய்க்கலாமே.."

"ரொம்ப தேங்க்ஸ்டா மோகன்..."

"ஆனா உன்ன அழைச்சிட்டு போக முடியாதே, வேணும்னா நம்ம விசாலாவ மட்டும் கூட கொண்டு போய் வெச்சிக்கிறேன்.. சும்மா ஒன்னும் வேணாம் எனக்கு தர வேண்டிய கடன வேணும்னா கழிச்சிக்கோ.." என்றார் இரட்டை அர்த்தத்தில்..

"என்னடா சொன்ன.." என்று கோபத்தில் அடிக்க ஓங்கிய கையை பிடித்து தடுத்தார் அவர் மனைவி விசாலாட்சி..

"நான் தான் வர சொன்னேன்.. உங்க இஷ்டதுக்கெல்லாம் கை ஓங்க கூடாது... நான் தான் சொன்னனே, இத்தன வயசுக்கு பிறகு கஷ்டப்பட முடியாதுனு.. இவ்வளவு நாளும் ரகசியமா இருந்த எங்க தொடர்பு இனியும் ரகசியமா இருக்கனும்னு அவசியம் இல்ல.. நான் அவர் கூடவே போறேன் நீங்க உங்க லைப பாருங்க... கேஸ்ல ஜெயிச்சா மட்டும் வாங்க மறுபடியும் உங்க கிட்ட வறேன், என்னா நீங்க தான் எனக்கு முக்கியம்.." என்று அவர் மனைவி என நிரூபித்தார்..


"என்ன விட்டு போறியா விசாலா உனக்காக நான் என்னலாம் பண்ணேனு மறந்துட்டியா?.."

"நான் ஏன் மறக்கபோறேன்... பணத்துக்காக நீங்க இன்னொருத்தி கூட வாழ்ந்தீங்க... இப்போ நான் பணத்துக்காக இன்னொருத்தர் கூட போறேன்.. எனக்கு இரண்டும் வித்தியாசமா தெரியல.. இங்க எல்லாரும் சுயநலவாதிதான்... வரட்டா.. " என்றவர் திரும்பியும் பார்க்காமல் மோகனுடன் கைகோர்த்து சென்றார்...

கலையரசன் கண்ணீலிருந்து கண்ணீர் உருண்டது... செய்த பாவத்தின் பலன் கிடைக்கமாலா இருக்கும்.. இதோடு முடியாதே.. இன்னும் அவர் சந்திக்க எவ்வளவோ இருக்கிறதே...

"வாவ் மிஸ்டர் கலையரசன்... உங்களுக்கு ஏத்த கலையரசி தான் இவங்க.. காணவே கண்கொள்ளா காட்சியா இருக்கே.. சீரியல்ல வில்லி கேரக்டர் குடுத்தா டிஆர்பி எகிரும் போலயே..." என்று பேசியப்படி கீழே இறங்கி வர அவள் கையிலோ சீதாலட்சுமியின் புன்னகையுடனானா புகைப்படம்... அந்த புன்னகையோ அவரின் நிலையை பார்த்து சிரிப்பது போலவே கலையரசனுக்கு தோன்றியது...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
"மிஸ்டர் கலையரசன் கனவு கண்டது போதும் கொஞ்சம் வெளில வரீங்களா? என் வீட்டு கதவ கொஞ்சம் மூடனும்.." என்று அவள் சொல்ல அவருக்கோ செருப்பால் அடித்த உணர்வு... இருந்தும் காட்டிக்கொள்ளவில்லை..

"நீ இதுக்கு அனுபவிப்ப.." என்றவர் கோபமாய் வெளியேறிவிட்டார்... அவள் அதனை வழமை போல் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவளை பொறுத்தவரை கலையரசன் இப்போது பல்லு பிடுங்கப்பட்ட பாம்பு அவ்வளவே தான்.. வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டவள் வெளியேற புகழ் அவளை தேடி அங்கு வந்திருந்தான்.

யோசனையாய் புருவம் உயர்த்தியவள் அவனோடு பேச ஆரம்பத்தில் சாதாரணமாய் இருந்த அவள் முகம் இறுதியில் கோபத்தை தத்தெடுத்திருந்தது... அதன் பின் அவளை புகழால் கூட தடுக்க முடியவில்லை... விளைவு, சிறிது நேரத்தில் புயல் வேகத்தில் நிலவனின் வீட்டு கம்போவுண்டுக்குள் நுழைந்தது அதிரலில் கார்...

அவள் கோபத்தில் உள்ளே நுழைய பின்னே புகழும் அடித்து பிடித்து ஓடி வந்திருந்தான்.. அதிரல் என்கின்ற புயல் இன்று இங்கே மையம் கொண்டிருந்ததன் காரணம் அவன் அல்லவா...

"ஏம்மா தங்கச்சி நில்லுமா..." என்று கதியபடி வர அவனை திரும்பி பார்த்து "யாரு யாருக்கு தங்கச்சி..." என்று கேட்டவள் உள்ளே நுழைந்தே விட்டாள்...

"போச்சு போச்சு இன்னைக்கு செத்தேன் நான்... என்ன கொன்னே போட்டுடுவானே... தேவ இல்லாத வேலைய பாத்துட்டடா புகழு..." என்று தனக்கு தானே திட்டிக்கொண்டவனும் உள்ளே நுழைந்தான்...

"யாருமா நீ... யார தேடுற.." என்று வாசுகிக்கு பதில் சொல்லாதவள் பார்வை அந்த வீட்டையே வட்டமிட்டது.. அவளுக்கு தெரியும் இது மரியாதையான செயல் இல்லையென்று ஆனாலும் அவள் கோபத்துக்கு காரணமானவன் இல்லாமல் யாரிடம் என்ன பேசவென்றே அமைதியாய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்...

"டேய் புகழ் வாடா... யாருடா இந்த பொண்ணு வந்ததுல இருந்து யாரையோ தேடிட்டே இருக்கா... கேட்டா ஒண்ணுமே சொல்லவும் மாட்டேங்குறா.. சின்ன பொண்ணுடா, வழி மாறி வந்துட்டா போலடா??..." என்றார் ஏதோ சின்ன பெண் வழி மாறி இங்கே வந்துவிட்டதோ என எண்ணி...

காரணம் தூர பயணத்துக்கு வசதியாய் இருக்கட்டுமென அவள் அணிந்திருந்த ஆடை தான்... தொல தொலவென்று மிருதுவாய் இருந்த முக்கால் பேண்டும்.. இடை தெரியாத வகையில் குட்டியாய் கிராப் டாப்பும் தான் அணிந்திருந்தாள், வழமையை விட சற்று சிறிய பெண் தோற்றத்தில் தான் இருந்தாள்...

"மா.. இவங்க டாக்டர் அதிரல்.. நிலவன் சொல்லிருந்தானே அவங்க தான் இது.. நிலவன பாக்க வந்திருக்காங்க... நீங்க வாங்க வந்து அவங்களுக்கு காபி போடுங்க..." என்று அவரை அழைத்து சமையலறையில் விட்டவன் நிலவனை அழைத்துவர கெஸ்ட் ஹவுஸ் விரைந்தான்.



இது எதையும் அறியாத நிலவனோ அங்கே அவன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.. நேற்று இரவு வீட்டுக்கு வந்த நிலவன் நேராக கெஸ்ட் ஹவுஸுக்கு தான் சென்றான்... மனது ஒரு நிலையில் இல்லை... அவளோடு அவன் வாழ்க்கை முடிச்சு போட்ட சம்பவங்களே மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது..

இத்தனை நாட்களாக கோட் கேஸ் என்று ஓடியவன் மனதை முழுவதுமாய் ஆட்கொண்டிருந்தாள் அவன் தேவதை... தன்னை விட்டு சென்றிருப்பாளே, என்று நீண்ட நேரமாக யோசித்தவன் இனியும் அவளை விட்டுவைக்க விரும்பாமல் தாயிடம் பேசி சீக்கிரமே சென்று அழைத்து வருவதென முடிவெடுத்தவன் ஒரு வழியாய் தூங்கவே விடியல் நெருங்கியிருந்தது...

"அடேய் நாதாரி நாயே நான் உனக்காக பேச போய் இங்க பைத்தியம் பிடிக்காத குறையா வந்திருக்கேன்.. உனக்கு இழுத்து போத்திட்டு தூக்கம் கேக்குதா?.." என்றவன் எட்டி ஒரே உதை நிலவன் தான் தரையில் கப்பல் ஓட்டவேண்டி இருந்தது... விழுந்ததில் தூக்கம் கலைந்து எழுந்தவன்..

"ஏண்டா தள்ளிவிட்ட கொரங்கே... "

"அங்க தென்றல் புயலாகி உன் மேல மையல் கொள்ள காத்திருக்கு.. உனக்கு தூக்கம் கேக்குதா?.."

"என்னடா உளறுற... தூக்க கலக்கத்துல எழும்பி வந்துட்டியா என்ன?.."

"யாரு உளறுறது... இன்னும் கொஞ்சம் நேரத்துல நீ உளற போற ராசா... அதிரல் என்கிற புயல் உன்ன தேடி உன் வீட்டுக்கே வந்து காத்திட்டு இருக்கு.." என்றவனை குழப்பமாக ஏறிட்டவன் முகம் சட்டென்று சந்தோஷத்தில் பிரகாசித்தது...

"என்னடா மூஞ்சில பல்பு எரியுது..."

"அவ எங்க இங்க..?" என்றான் கேள்வியாக

"நான் தான்.." என்று தொடங்கியவன் ஏர்ப்போர்ட் செல்ல இருந்தவள் இங்கு வர காரணமான கதையை, அவன் பேசியவற்றை விடுத்து மேலோட்டமாய் சொல்லி "ஏன் னு தெரியல ரொம்ப கோபமா வந்திருக்காங்க..." என்றான்.

"மச்சான்... ஐ லவ் யூ.." என புகழ் கன்னத்தில் முத்தம் பதித்து "எப்படி வந்தா என்னடா.. அவ வந்துட்டாளே அது போதும்.. வா போய் பாப்போம்..." என்று வெளியேற முயன்றவனை தடுத்து "இப்படியேவா வர போற" என்றவன் நிலவனை மேலும் கீழும் நக்கல் பார்வை பார்க்க... நிலவனோ வெக்கப்பட்டு கொண்டே குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்...

"என்னத்துக்கு இந்த எரும சம்மந்தம் இல்லாம வெக்கப்படுது... திட்டுவான்னு பாத்தா முத்தம் கொடுக்குறான்.. நட்டு கிட்டு கலண்டுடிச்சோ" என்று தலையிலடித்தவன் அங்கே அமர்ந்துவிட்டான்...

இன்று காலையில் அதிரலை சந்திக்க புகழ் சென்ற காரணம் நிலவன் மீது கொண்ட அக்கரை தான்.. நிலவனுக்கு இவளிடத்தில் பிடித்தம் என்பது தெரியும்.. இருந்தும் இருவருக்குள்ளும் முட்டி கொள்வது ஓரிரண்டி முறை நேரிலும் கண்டிருந்தான்.. அவளுக்கு விருப்பம் இல்லையோ என்னவோ என்று தோன்ற, தான் ஒரு முறை பேசி பார்த்தால் என்ன என்கிற எண்ணத்தில் தான் தேடி சென்றிருந்தான்.. ஆனால் பேச போனவனின் பேச்சு அவள் பயணத்தை திசை மாற்றி கோபமாய் இங்கே வரவழைத்திருந்தது.. இதுவும் கடவுளின் செயல் தானோ என்னவோ!...



"சுகி... சுகி..." என்றவாறு உள்ள வந்த சேதுராமன் அங்கு அமர்ந்திருந்த அதிரலை ஒரு பார்வை பார்த்தவர் சமையலறையை எட்டி பாக்க சரியாய் வாசுகி தேநீருடன் வந்துகொண்டிருந்தார்...

"நீ எடுத்துக்கோமா.." என்று தேநீரை அவளுக்கு எடுத்து கொடுத்தவர் "வாங்க... கறி எடுத்துட்டு வந்தீங்களா??..." என்றார் சேதுராமனிடம்..

"ம்ம்ம் நீ கேட்டது எல்லாம் இதுல இருக்கு..." என்று பையை அவர் கையில் கொடுத்தவர் "யாரு சுகி இந்த பொண்ணு... கார்த்திட ஸ்டுடென்டா... அவன பாக்கவா வந்திருக்கு..." என்றார்

"அது வந்துங்க..." என்று அவர் சொல்ல வர அந்த நேரம் சரியாய் "மா.. மா... என் ரெட் கலர் ஷர்ட் பாத்தியா? காபோர்ட்ல தான் வெச்சிருந்தேன்..." என்று மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் கார்த்திக்...

"நல்லா பாத்தியா கார்த்தி..? உன் ரூம்ல தான் இருக்கும்..." என்றார் மற்றது மறந்தவராக...

"இல்லயேமா.. நைட்டே சொல்லி இருந்தேனே இன்னைக்கு கீதா கூட வெளில போகணும்னு.. அவ எடுத்து கொடுத்தது அது, வேற ஷர்ட் போட்டு போனேன் கொன்னே போட்டுட்டுவா.." என்று பேசிக்கொண்டே வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த அதிரலை பார்த்து யோசனையாக

"மா யாருமா இவங்க.. அப்பாக்கு தெரிஞ்சவங்களா... அப்பாவ பாக்க வந்திருக்காங்களா?.. என்று வாசுகியின் காதை கடித்தான்.. சேதுராமன் அவளை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து.. மெதுவாக பேசியும் சேதுராமனுக்கும் அதிரலுக்கும் கேட்கவே செய்தது...

"இல்லடா கார்த்திக்... அப்பாவும் உனக்கு தெரிஞ்ச பொண்ணான்னு தான் கேட்டுட்டு இருந்தாங்க... சொல்ல வரதுக்குள்ள நீ வந்துட்ட... இவங்க..."

"அத்த.... அத்த.... எங்கத்த உன் சீம புத்திரன்..." என்று மீண்டும் ஒரு கரடி உள்ளே நுழைந்தது...

"ஸ்ஸப்பா... ஒரு வசனத்தை சொல்லி முடிக்க விடுதுங்களா?... என்று வாசுகி சத்தமாய் புலம்ப அதிரல் பக்கென்று சிரித்து விட்டாள்... நடந்தவற்றை பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவரது புலம்பல் அத்தனை நேரம் இருந்த கோபத்தை விடுத்து சட்டென்று சிரிப்பை கொடுத்து விட்டது...

"வாவ்... நைஸ் கேர்ள்.. யாருத்த இவங்க உன் ரெண்டாவது மருமகளா?.. ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சிட்ட போல, செம சூப்பரா இருக்காங்க... என்ன விட கொஞ்சம் சின்ன பொண்ணு போல.. பட் என் பார்ட்னருக்கு ஏத்த ஜோடி தான்...." என்க மற்றவர்கள் தலையில் அடித்துக்கொள்ளாத குறை தான்...

"நீ ஒண்ணுமே நினைச்சிக்காதமா... இவளுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி.. இவங்க டாக்டர் அதிரல்.. நம்ம ரம்யா விசயத்துல ஹெல்ப் பண்ணது இவங்க தான்... நிலவன பாக்க வந்திருக்காங்க..." என்று ஒரு வழியாக சொல்லி முடித்தவர் பெருமூச்சு விட்டார்...

"டாக்டரா... அவ்வளவு பெரிய பொண்ணா நீங்க... நான் கூட சின்ன பொண்ணுன்னு நெனச்சிட்டேன்..." என்ற கீதா சொல்ல பதிலுக்கு அதிரலிடம் சின்ன புன்னகை...

"அதெல்லாம் பாக்க சின்ன பொண்ணு போல தான் இருப்பா, ஆனா ஆளு தான் சரியான மொளகா..." என்று முனுமுனுத்தபடி புகழுடன் நிலவன் உள்ளே வர அவனை கண்டதும் அதிரலின் கோபம் பழையப்படி மீண்டிருந்தது..

அவன் அருகில் சென்றவள்.. அமைதியாய் கைகட்டி நின்று "எதுக்கு வேலைய விட்ட.."

"ஜாஸ் அது.." என்று இழுக்க "ம்ம்ம் சொல்லு எதுக்கு வேலைய விட்ட.."

"பிடிக்கலனு..."

"யாருக்கு பிடிக்கலைனு..." என்ற அவள் கேள்விக்கு அவன் புகழை திரும்பி பார்க்க "அங்க என்ன பார்வை இங்க பதில் சொல்லு..." என்றாள் அங்கிருந்தவர்களுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை என்கிற நிலை தான்..

"ஜாஸ் லெட் மீ எக்ஸ்பிளைன்..." என்று தொடங்க அவள் விடவில்லை..

"நீ எக்ஸ்பிளைன் பண்ணி ஒன்னும் கிழிக்க வேணா... எனக்கு ஒரு உதவி பண்ணனும்.. சார் தான் கொடை வள்ளலாச்சே யாரு கேட்டாலும் இல்லைனு சொல்லாம தூக்கி குடுத்துடுவீங்களே..." என்றவளின் நக்கலிலே அவனுக்கு புரிந்துவிட்டது அவளுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதென..

"என்ன பண்ணனும்..."

"மறுபடியும் நீ வேலையில சேரனும்..."

"ஏற்கனவே வேலைல இருக்கேன் தானே.."

"புரியாத மாதிரி நடிக்காத.. நான் சொல்றது நீயா விரும்பி படிச்ச, உனக்கு பிடிச்ச வேலைய பத்தி..."

"அது முடியாது.." என்றவன் முடிக்கவில்லை அதற்குள் அவன் கன்னம் எரிந்தது அவள் விட்ட அறையில்.. அதுவரை என்ன நடக்கிறது என புரியாமல் நின்றிருந்த சேதுராமன் மகனின் மீது ஒரு பெண் கை வைத்ததும் பொருக்க முடியாமல் கோபத்தில் முன்னேற.. வாசுகி அவர் கைகளை பிடித்து வேண்டாமென்பது போல தலையசைத்தார்...

அவருக்கு ஏதோ புரிவதை போலிருந்தது.. அவள் உரிமையான பேச்சும், கண்டிப்பும்.. அவன் பொறுமையும், அமைதியும்.. இவர்களுக்கான உறவை எடுத்துரைத்ததோ என்னவோ அமைதியாய் பார்வையாளராகவே இருந்து கொண்டார்..

"எவளோ ஒருத்தி சொன்னான்னு தூக்கி போடுவ... நான் சொன்னா கேக்கமாட்ட அப்படி தான... உனக்கு நான் யாரு?.. சொல்லு உனக்கு நான் யாரு.." என்க அவன் பார்வை அனைவரையும் தொட்டு மீள, அவர்களது பார்வையும் இவனையே வட்டமிட்டது...

தாயிடம் அனைத்தையும் சொல்லி எப்படியாவது அவளை அழைத்து வர வேண்டும் என நேற்றே முடிவெடுத்திருந்தானே.. எப்படியும் தெரிய வேண்டிய ஒன்று தான் ஆனால் இன்று இப்படியா தெரியவேண்டும் என அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை...

"இப்போ எதுக்கு இதெல்லாம்.. நீ வீட்டுக்கு போ வந்து பேசிக்கிறேன்..."

"நீ எதையுமே பேசி கிழிக்க வேணா.. ரெண்டுல ஒரு பதில் போவியா மாட்டியா?..." என்றவளுக்கு அதற்கிடையில் அவள் தொலைபேசி அதன் இருப்பை மூன்று முறை உணர்த்தி இருந்தது...

"முடியாதுடி... நீ சொல்லறதுலாம் கேக்க முடியாது.. விட்டுட்டு போனவ தானடி நீ.. இப்போ மட்டும் என்ன புதுசா அக்கரை... சம்பந்தம் இல்லாதவங்களுக்கு பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல நீங்க போகலாம்..." என்றவன் வாசல் கதவை காட்ட கோபம் கொண்டவள்

"சம்பந்தம் இல்லாதவளா?.. நான் சம்மந்தம் இல்லாதவளா?.. என்றாள் கோபத்தோடு

"ஆமா.. நீ தான்.. நீயே தான்..." என்றான் இவனும் கோபத்தில்..

அதில் மேலும் கோபம் கொண்டவள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அங்கும் இங்கும் நடந்தவாறே இதழ்கள் "சம்மந்தம் இல்லாதவளா" என்று முனுமுனுத்துக்கொண்டிருந்தது.. அதுவரை அவனை வலிக்க வலிக்க நிரகாரித்தவள் தான் அவள்.. ஆனால் இன்றோ அவன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது...

திடீரென மீண்டும் "உனக்கு நான் சம்மந்தம் இல்லாதவளா" என்று கேட்டவள் அடுத்து செய்த காரியத்தில் அந்த வீடே அதிர்ச்சியில் உறைந்து நின்றது...


ஜாதி மல்லி மலரும்.....


கருத்து திரி 👇👇👇

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜாதி மல்லி பூ 16



"நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம் தம்பி.." என்ற ஜெயராமனின் கோபமான குரலுக்கு அவர் மகனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..

"நீ இப்படியே இரு, கடைசில நான் தான் கம்பி எண்ண வேண்டி வரும்.."

"ஸ்ஸ்ஸ்ஸ்.. நான் பாத்துக்கிறேன்... எதுவும் ஆகாது, ஆகவும் விடமாட்டேன்..."

"அந்த பொண்ணு நம்ம பக்கம் கைய காட்டுனா எல்லாம் முடிஞ்சிது..." என்று அவர் புலம்ப அவனோ சற்று தள்ளி நின்றிருந்த வசந்த் மீது தன் பார்வையை திருப்பினான்... அந்த பார்வையை புரிந்துகொண்ட அவனும் ஜெயராமனை நோக்கி

"அப்படி நடக்க வாய்ப்பில்லை சார்... அந்த பொண்ணு வீடியோ நம்ம கைல அன்ட் அவ லவ்வரும் இப்போ நம்ம கஷ்டடில தான் இருக்கான்... அவ குடும்பத்துக்கு பணமும் குடுத்திருக்கோம்.. எதுவும் ஏடாகூடமா பண்ணா அவங்க உயிர் இருக்காது... அது அவளுக்கும் நல்லாவே தெரியும். சோ நம்ம பக்கம் விரல் என்ன நிழல கூட ஆசைக்க மாட்டா..." என்றவன் தன் வேலை முடிய்ந்ததென ஓரமாய் போய் நின்று கொண்டான்..

"நம்ம மேல கைய வைக்க யாராலயும் முடியாது.. நீங்க சில்லா இருங்க.. நான் சொல்ற வேலைய சரியா பாருங்க போதும்... பிரகாஷ் போன் பண்ணி இருந்தான் குடோன்ல ஒன்னு போய் சேந்துடிச்சாம் இப்போவே போய் என்னனு பாத்து ஈவினிங்குள்ள எனக்கு இன்போர்ம் பண்ணுங்க... " என்றவன் "அநியாயமா யாருக்கும் யூஸ் இல்லாம போய் சேந்துடிச்சே சனியன்..." என எரிச்சல் பட்டுக்கொண்டான்...

"சரி தம்பி நான் இப்போவே போறேன்.." என்று செல்லும் அவரையே பார்த்திருந்தவன் "வசந்த்" என்க

"எஸ் சார்" என்றான் வசந்த், அவன் குரலுக்கிணங்கி

"இவர் எப்படியும் இப்ப அந்த லேடி வீட்டுக்கு தான் போவார்.. அடிக்கடி போராரா என்ன?.. கொஞ்சம் கவனிச்சிக்கோ... அவ மேல ஒரு கண்ணு இருக்கட்டும்.. என்னைக்கு இருந்தாலும் அவ எனக்கு கண்ணுல விழுந்த தூசு தான்.." என்று சொன்னவனின் யோசனை எல்லாம் எப்படி இந்த கேஸில் இருந்து அந்த ஐஜியின் மகன் வெளியே வந்தான் என்பது தான்...

"எப்பவும் போல போய் வரன்னு தான் இருக்கார் சார்.."

"அவர திருத்த முடியாது.. அப்பறம் அந்த வேணுகோபால் எப்படி?.."

"ஹி இஸ் டேலண்ட்ட் சார்.. நோ டவுட்..." என்றான் தன் எஜமான் கேட்க வருவதை சரியாக புரிந்துகொண்டு... அதில் ஜேகேவிற்கு சற்று பெருமிதமாய் புருவங்கள் வளைந்து கொண்டது..

"எஸ் ஐ நோ.. ஹி இஸ் டெலேன்டட் பட் இந்த கேஸ்ல அவரே இவ்வளவு அறிவுபூர்வமா ஆதாரத்த கொண்டு வந்திருக்காருனு என் மூளை நம்ப மாட்டேங்குதே!.. நீ எதுக்கும் இதுக்கு பின்னால யாராச்சும் இருக்காங்களானு செக் பண்ணு.."

"ஓகே சார்.." என்றவன் சென்றுவிட..

"எனக்கே தோல்வியா நெவர்.. மிஸ்டர் முரளிகிருஷ்ணன் வெயிட் அன்ட் சீ.. உனக்கு ஹெல்ப் பண்றது யாரா இருந்தாலும்.." என்று அங்கே அருகில் இருந்த மீன்தொட்டியில் நீந்திகொண்டிருந்த அந்த வண்ண மீனை கைகளினால் எடுத்து தரையில் போட்டவன்.. அது துடி துடித்து இறப்பதை ஆசை தீர புன்னகையுடன் பார்த்திருந்தான்... முதல் முறையாய் அவன் இலக்கு குறி மாறி போனதில் பெரிய பூகம்பமே வெடிக்க காத்திருந்தது...



அங்கே அதிரலோ.. "நான் சம்பந்தம் இல்லாதவளா?.. ஓகே அப்போ இதுக்கு என்ன பதில்..." என்று கோபத்தில் என்ன செய்கிறோம்.. எங்கே இருக்கிறோம் என தெரியாமல் கழுத்தில் மறைத்து வைத்திருந்த செயினை அனைவர் முன்னிலையிலும் வெளியே எடுத்திருந்தாள் அதிரல்..

நிலவன் உட்பட முதலில் புரியாமல் பார்த்தவர்கள் உன்னிப்பாய் பார்க்க
அதில் மாங்கல்யம் தொங்கிக்கொண்டிருந்தது..

அது நிலவனின் வீட்டு பரம்பரை மாங்கல்யம்... சேதுராமனின் தயாருடையது அது.. வீட்டுக்கு வரப்போகும் இரு மருமகள்களுக்கென அவரே சொல்லி சென்றது.. அதனால் வாசுகியும் எடுத்து வைத்திருந்தார்... உருக்கி அதே போல் இரண்டாக செய்து கொள்ளலாமென... ஆனால் இன்று அதுவுவோ அதிரல் கழுத்தில்...

வாசுகியின் பார்வை நிலவனையே வெறித்தது... அவனுக்கும் புரிந்தது தான் ஆனால் அவர் கண்களை சந்திக்க வலுவின்றி திரும்பாமலே நின்று கொண்டான்... அவனுக்கும் அதிர்ச்சி தான் அவள் கழுத்தில் தாலி இருப்பது... கட்டிய அன்றே கழற்றி வீசி இருந்தாளே பின் எப்படி அவளிடம்?....

தான் கட்டிய தாலி இத்தனை வருடம் அவள் கழுத்தில் இருப்பது ஒரு வகையில் நிம்மதி என்றாலும்.. உண்மை தெரிந்த குடும்பத்தின் நிலையோ அவனை சற்று அவனை அசைத்து தான் பார்த்தது.. எதுவென்றாலும் சமாளிப்போம் என் முடிவெடுத்துக்கொண்டான்...

"என்ன நிலவா இது?... உன்ன நாங்க இப்படி வளக்கலையே!.. நாங்க வேண்டாதவங்களாகிட்டோமா?.. இல்ல உன் முடிவுல தலையிட நாங்க யாருனு நினச்சிட்டியா???... பாரு உன் அம்மாவ எப்படி உடைஞ்சு போய் நிக்குறா... இதுக்கு தான் உன்ன பெத்தாளா?.." என்று சேதுராமன் மனைவியின் நிலை உணர்ந்து கேட்க நிலவனோ தலைகுனிந்து நின்றிருந்தான்.. அவன் செய்தது தவறென அவன் அறிவானே...

கார்த்திக்கும் கீதாக்கும் இதில் என்ன பேச யார் பக்கம் பேச என்றே புரியாமல் தான் அவர்களும் அதிர்ச்சியில் நின்றிருந்தனர்... புகழின் மனதிலோ, இந்த கலவரம் தன்னால் தானோ என்ற குற்ற உணர்ச்சி சூழ்ந்து கொண்டது... அங்கோ குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் படி அப்படி ஒரு அமைதி...

அதிரலுக்கும் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிய கையை பிசைந்து கொண்டு நின்றாள்... அவளும் எதிர் பார்த்து ஒன்றும் செய்யவில்லையே... கோபத்தில் மூளை செயற்பாட்டை நிறுத்தியிருந்தது... அவளுக்கும் தன் மடத்தனதால் நிலவனின் நிலையை எண்ணி கவலை தான்... அப்படியே நின்றிருந்தவளது அழைபேசி மீண்டும் மீண்டும் தன் இருப்பை உணர்த்த பொறுமை இழந்த நிலவன் அதை கையில் எடுத்திருந்தான்...


"மிஸ்டர் வேணுகோபால், நான் நிலவன் பேசுறேன்..." என்றவன் அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ..

"அதுக்கு பதில் அவளே சொல்லுவா.. இப்போ என்ன கேக்கணுமோ கேளுங்க.." என்றவன் அந்த பக்கம் கேட்கப்பட்ட கேள்விக்கு...

"போகவா... அனுப்ப முடியாது எப்பவும் எங்கேயும்..." என்றவன் மீண்டும் அந்த பக்கம் சொல்லப்பட்ட பதிலுக்கு..

"பெரிய பெரிய விஷயம் எல்லாம் பண்ண தெரிஞ்ச உங்க அதிக்கு நான் அவ புருஷன்னு சொல்ல தெரியலையோ??..." என்றான் அதிரலை முறைத்துக்கொண்டு..

"எல்லாம் போன்லேயே சொல்ல முடியாது.. பெரியவர கூட்டிட்டு நீங்களும் என் வீட்டுக்கு வாங்க..." என்றவன் அழைப்பை துண்டித்து போனை அங்கிருந்த சோபாவில் எரிந்திருந்தான்... அதுவோ வீசிய வேகத்தில் சோபாவில் தன்னை நுழைத்து மேலேழுந்து மீண்டும் சோபாவில் விழுந்தது....

"நீ தப்பு பண்ணிட்டு.. ஏன் சம்மந்தமே இல்லாம அதுகிட்ட கோபத்த காட்டுற... என் அம்மாவோட ஆசை கூட உனக்கு ஞாபகம் வரலல... என் மகன் எப்பவும் தப்பு பண்ணமாட்டான் எது பண்ணாலும் சரியா தான் இருக்கும்னு எப்பவும் சொல்லுவேனே இப்போ அத சுக்குன்னூறா ஒடச்சிட்டியே..." என்ற சேதுராமன் கீதாவை காட்டி..

"இந்த பொண்ணு நம்ம வீட்டு மூத்த மருமக அவளுக்கு கிடைக்கவேண்டிய உரிமையயையும் சேர்த்து எடுத்துகிட்டியே உனக்கு யாரு அந்த உரிமைய கொடுத்தா???..." என்றவர் கோபமாய் முடித்தார்..

கீதாவோ,.. "மாமா.. நிலவன் எதையும் யோசிக்காம பண்ணி இருக்க மாட்டான்... அவனே இப்படி பண்ணி இருக்கான்னா அதுக்கு நிச்சயமா ஒரு காரணம் இருக்கும்.. இதுல எனக்கோ மாமாக்கோ எந்த வித கோபமோ எதுவுமே இல்லை... எங்களுக்காகனு நீங்க அவன திட்டாதீங்க மாமா..."

"அவ உரிமைய அவன் பறிச்சுக்கல.... அவனுகானத மட்டும் தான் எடுத்துகிட்டான்... அவ உரிமை அவளுக்காக இப்பவும் காத்திட்டு தான் இருக்கு.. " என்று சத்தமாய் சொன்ன வாசுகி நிலவன் அறைக்கு சென்றவர் சிறிது நேரத்தில் கையில் சிறிய நகை பெட்டி ஒன்றுடன் வந்தார்..

"இதோ இருக்கு அவளுக்கான உரிமை" என்று அந்த பெட்டியை திறந்து அங்கிருந்த மேசையில் வைக்க, அதிலோ அதிரல் கழுத்திருந்த அதே மாதிரியான மாங்கல்யமும் தாலியில் கோர்க்கும் தங்க காசுகளும் இருந்தன..

அதிர்ச்சியில் நிலவன் "மா உனக்கு..." என்று அதிர்ச்சியுடன் வினவ..

"அம்மாக்கு தெரியும் நிலவா... நீ கல்யாணம் பண்ணிகிட்டனு கூட.."

"மா.." என்றான் அதிர்ச்சியுடன்..

அவன் அருகில் வந்தவர் அவன் கழுத்தில் போடப்பட்டிருந்த செயினை வெளியில் எடுத்தார் அவன் கண்களில் மீண்டுமொரு அதிர்ச்சி மின்னி மறைந்தது... அவனுக்கு மட்டுமா அங்கு நின்றுந்தவர்களில் அதிரல் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சிதான்...

அதிரலின் கழுத்தில் மாங்கல்யம் என்றால் அவன் கழுத்தில் அந்த தங்க காசுகள்... அவள் தாலியை கழற்றி வீசிய அன்று அவனுக்கு கிடைத்தது அந்த காசுகள் மட்டும் தான்.. அவை தான் இன்று வரை அவன் காதல் சின்னமாய் அவன் கழுத்தில்...

அந்த காசுகளையே பார்த்துருந்த வாசுகி "ஏன்டா சொல்லாம மறச்ச சொல்லுவ சொல்லுவன்னு எவ்வளவோ நாள் காத்திருந்தேன் தெரியுமா?... உன்னால இவர்கிட்ட கூட என்னால மறைக்க முடியாம தவிச்சேனே..." என்று மடங்கி அங்கிருந்த சோபாவில் அமர.. நிலவன் ஏதும் பேசாது தரையில் அமர்ந்தபடி அவர் மடியில் தலையை சாய்த்துக்கொண்டான்... அவர் கரங்கள் அவன் தலையை கோதியவாறு வேறெங்கோ வெறித்தது..

"மா சொல்ல கூடாதுனுலாம் இல்லமா.. சரியான சந்தர்ப்பம் அமையல.. அவளும் இங்க இருந்தே போய்ட்டா, அதுக்கப்பறம் என் வாழ்க்கைல நடந்தது தான் உனக்கு தெரியுமே மா... நேத்துக்கூட உங்கிட்ட எல்லாம் சொல்லி இவள இங்க அழைச்சிட்டு வரலாம்னு இருந்தேன் மா... நான் நல்ல பையனே இல்லல மா.." என்றதும் அவர் கைகள் கோதுவதை நிறுத்தி இருந்தது, அவர் மடி ஈரமாவதை உணர்ந்து

" நிலவா, ஏன் அழற இப்போ... எனக்கு கோபம் இல்ல.. சொல்லலையே வருத்தம் மட்டும் தான்.. இங்க பாரு.." என்று அவன் முகத்தை நிமிர்த்தி கண்களை துடைக்க.. அவன் அழுகிறான் என்றதும் மற்ற நால்வருக்கும் மற்றது மறந்து போக அவன் அருகே விரைந்தனர்..

"அடேய் படவா சொல்லாம கல்யாணமே பண்ணிட்டு அழறியா நீ.." என்று சேதுராமன் முதுகில் ஒரு அடி வைக்க

"அப்பா.. சாரி பா.." என்று எழுந்தவன் அவரை அனைத்துக்கொள்ள.. அவரும் தட்டிக்கொடுத்தார்...

புகழோ... "அப்பா நம்பிடாதீங்க அம்புட்டும் நடிப்பு.. எங்க திட்டுவீங்களோன்னு பிளேட்ட மாத்துறான் திருடன்..." என்க கண்ணீருடனே அவனை முறைத்தான் நிலவன்..

"என்ன நீ என் தம்பியவே கலாய்க்கிறியா? கொல்லுவேன் ராஸ்கல்.. நீ கவல படாதடா தம்பி அண்ணா உனக்கு சாக்கி வாங்கி தரேன்.." என்று இறுதி வரியில் நிலவனை வாரி இருந்தான் கார்த்தி..

"ஐய அவன விட்டா அவன் குழந்தைக்கே சாக்கி வாங்கி குடுக்க வெச்சிருப்பான் அவன்கிட்ட போய்.." என்ற புகழுக்கு முதுகில் ஒரே நேரத்தில் நான்கு அடி விழுந்தது

"அடேய் கொலைகார கும்பல் கிட்ட வந்து மாட்டிகிட்டனா நானு.." என்று முதுகை தேய்த்துக்கொள்ள நிலவனே சிரித்துவிட்டான்

"அப்பாடி சிரிச்சிட்டியா பாட்னர்.. நா கூட பயந்துட்டேன்.. நீ அழுதுட்டே இருந்தா நான் டிகிரி எப்ப கம்ப்ளீட் பண்றது எப்போ உன் அண்ணன ஆட்டைய போடுறதுனு... உன் அளவுக்கெல்லாம் உன் அண்ணனுக்கு சாமர்த்தியம் பத்தல பாரேன்.." என்ற கீதாவின் காதை திருகிய நிலவன்

"உன் விஷயத்துல கரெக்ட்டா இரு.. " என்று புன்னகைக்க அப்போதுதான் மற்றவர்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தது... எதுக்கும் கலங்காதவன் இன்று கலங்கியதும் தாங்கவில்லை அவன் குடும்பதுக்கு


அவர்கள் கூட்டிலிருந்து அதிரல் மட்டும் தனித்து நின்றிருந்தாள்... அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. தான் ஏதோ அந்த இடத்தில் அதிகப்படியோ என்று தான் தோன்றியது.. அந்த நேரம் அதிரலுக்கு அவள் அம்மாவின் எண்ணம் அதிகமாக வருவதை தடுக்க முடியவில்லை... அணைத்து அழ அம்மா வேண்டும் போல இருந்தது... இனியும் நின்றாள் அவளை அவளாலேயே கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தவள் வெளியேற கதவில் கை வைத்த நொடி...

"ஏம்மா மருமகளே... என் பையன் வேணாமா?..." என்ற வாசுகியின் தோளில் கை போட்டுகொண்ட நிலவன்

"ஓய் பொண்டாட்டி... இப்போவும் என்ன விட்டுட்டு போக போறியாடி..." என்ற குரலுக்கு அவள் திரும்ப, கைகளை விரித்த வண்ணம் கண்களாலேயே அழைக்க அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவனை நோக்கி அணைப்பது போல் சென்றவள் அருகில் நின்ற வாசுகியை இறுக அணைத்துகொண்டாள்..

"ச்சே... சு... சு.. இந்த வெளவால் எதுக்கு பறக்குதுன்னு தெரியலயே.." என்று நிலவனை கலாய்ப்பது போல் மேலே பறவை விரட்டிய புகழின் கழுத்தை முழங்கையில் இறுக்கி இருந்தான் நிலவன்

"ஹி ஹி சும்மா மச்சான்.." என்று இளிக்க தலையில் ஒரு கொட்டுடன் தான் அவனை விட்டான்...

அதிரல் அழுகை என்றால் அழுகை அப்படி ஒரு அழுகை எவ்வளவு சமாதான படுத்தியும் அவள் வாசுகியை விட்டு நிமிர்வதாக இல்லை... அழுகை தீரும் மட்டும் அழட்டும் என வாசுகியும் பொறுமையாக தான் இருந்தார்...

"ச்சே ச்சே என்ன இந்த ஜோடி ஒரே அழுகாச்சியா இருக்கு... பேசாம ரெண்டு பேரையும் நாம டிவோஸ் பண்ணிடுவோமாத்த..."

"டேய் மருமகள் பேர சொல்லுடா" என்று நிலவன் முதுகில் வாசுகி அடி போட

"ஜா... அதிரல் மா..."

"எம்மா அதி... இங்க பாரு அத்தைய பாரு... ஏங்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க..." என்று கணவனை பணிந்தவர் அவர் கொண்டு வந்து தரவும் அவளை அருந்த வைத்தார்..

"இப்போ என்னாச்சுன்னு அழற நீ... இவனுக்கு அடிக்காம விட்டோம்னா..." என்க அவள் தலை இடம் வளமாய் ஆடியது...

"அப்போ ஏன் அழற..."

"தப்பு பண்ணிட்டேன்.. வேணும் னு சொல்லல.. கோபத்துலதான் பண்ணிட்டேன்... அம்மா ஞாபகம் வந்துடிச்சு..." என்றாள் அழுகையுடனே

"பால்வாடி புள்ளய கட்டிக்கிட்டு வந்தா இப்படித்தான்... அம்மா வையும் காச குடுன்னு அழும்..." என்ற புகழின் காதின் அருகில் குனிந்த நிலவன், "மச்சான் இத மட்டும் அவ நிதானமா இருக்குற நேரம் சொன்னனு வெச்சிக்கோ உனக்கு வாழ்நாள்ல ஹார்ட் அட்டாக்கே வராது..." என்றான் சிரிக்காமல்..

"ஏன் மச்சான்... ஏதாச்சும் பவர்புல் மெடிசின் எழுதி குடும்பாங்களா?..."

"ச்சேச்சே.. ஆபரேஷனே பண்ணாம உன் ஹார்ட்ட உருவியே வெளிய எடுத்துடுவா... அப்பறம் ஹார்ட்டே இல்லாத உனக்கு ஹார்ட் அட்டாக் எப்படி வரும் சொல்லு..." என்று முடிக்க சீரியஸாக ஏதோ சொல்கிறான் என கேட்டுகொண்டிருந்த புகழுக்கு இறுதியில் பல்பு தான் காத்திருந்தது...

"நீ எந்த தப்பும் பண்ணலடாமா... எல்லாம் இந்த தடியனால தான்... நீ இங்க அத்த கூடவே இருந்திடுறியா?..." என்க, அவளும் இருந்த மனநிலையில் ஆம் என்பதாய் தலையசைத்திருந்தாள்...

"இன்னைக்கு இடியுடன் கூடிய மழை வரும்... என் பொண்டாட்டி தலையாட்டுறாளே..."

" ஓ மை பிள்ளையாரப்பா.. வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டி பொண்டாட்டின்னு சொல்லி வெறுப்பேத்துறானே... மச்சான், என்னனு கேளுடா ஒரு வயசு பையன் அதுவும் சிங்கள் பையன் இருக்குற வீட்டுல..." என்றான் புகழ் கார்த்தியிடம்..

"பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான்... நம்ம என்ன பன்றது எல்லாம் விதி..."

"விதி இல்லடா மச்சான் உன் தம்பியோட சதி... எப்படிப்பட்ட எமோஷனல் சீன இப்படி காமடி சீனா மாத்திடீங்களே டா.... ரகசிய கல்யாணத்துல வர்ற சண்டைக்குரிய மரியாதையே போச்சுடா உங்களால...." என்று புகழ் தலையில் அடித்துக்கொண்டான்...

"புகழ் நீ..." என்று வாசுகி ஏதோ ஆரம்பிக்க கைகளை நீட்டி தடுத்தவன்.. "இப்போ என்ன நான் பசில இருக்கேன் அதனால உளறுறேன்.. சாப்பிட வரணும் அதான மா... " என்று முடித்திருந்தான்..

"அச்சோ அறிவுடா புகழு நீ... ஓகே எல்லாரும் சாப்பிடலாம் வாங்க.." என்று வாசுகி எழ போக...

"ஆண்டி, ஒரு நிமிஷம்.. இன்னொரு விஷயம் சொல்லணும்..." என்றவள் தயங்கியபடி நிலவனை பார்க்க அவனோ வேண்டாம் என்பதாய் தலை அசைத்தான் ஆனால் அவளுக்கோ இப்படி பாசமாய் நடப்பவர்களிடம் இனியும் மறைக்க தோணவில்லை.. அவன் மறுப்பையும் மீறி... அவள் வாசுகி பக்கம் திரும்பினாள்..

அவர்களது இந்த மௌன பாசை அங்கிருந்தவர்களும் தெரிந்தது தான் ஆனால் மௌனமாய் இருந்தனர் அடுத்த பூகம்பம் ஒன்று வர காத்திருப்பதை எண்ணி...

புகழோ சும்மா இராமல்.. "டேய் உண்மைய சொல்லு பிள்ளை எந்த ஸ்கூல்ல படிக்கிது... பிள்ளையா இல்ல பிள்ளைகளா?..." என்றதும் நிலவன் முறைக்க

"புகழ்..."

"ஓகேமா நான் பேசல..." என்று வாயை மூடிக்கொண்டான்...

"நீ சொல்லுடா.. ஆண்டி எல்லாம் வேணாம் அத்தைனே கூப்பிடு.. உனக்கும் நான் அம்மாதான் டா எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு..."

"மா.. எங்களுக்குள்ள.." என்று தொடங்கி அவள் ஒன்று சொல்ல உண்மைக்கும் அது அடுத்த அதிர்ச்சி தான்... இன்னும் எத்தனடா மறைச்சிருக்க... என்ற ரீதியில் குடும்பமே முறைத்தது...

"ஓகே ஓகே கண்ணால நெருப்பு விட்டதெல்லாம் போதும்.. இனி ஒவ்வொண்ணா அதிர்ச்சி ஆகாம எல்லாம் நானே சொல்லுறேன்..." என்றவன் அங்கிருந்த மூவர் அமரும் சோபாவில் அமர்ந்தான்..

எதிரில் நால்வர் அமரும் படியான சோபாவில் முதலில் கார்த்தியும் அடுத்து கீதாவும் அமர அதிரலை நிலவன் அருகில் அமர வைத்த வாசுகி, கீதாக்கு அடுத்து அமர்ந்துகொள்ள..

"நல்ல குடும்பம் டா சாமி... என்னமோ படம் பாக்குற ரேஜ்ஜூக்கு எல்லாம் தயாராக்குதுங்க" என்ற புகழ் வாசுகி அருகில் போய் அமந்துகொள்ள

"நீ எழுந்து அங்க போ..." என்று தனி சோபாவை புகழிடம் காட்டியபடி அருகில் வந்து நின்றார் சேதுராமன்... ஏன் என்ற கேள்வியுடன் புகழ் பார்க்க..

"என் பொண்டாட்டி பக்கத்துல நான் தான் உக்காருவேன்..."

"பா.. இங்க என்ன நடக்குது நீங்க சீட்டுக்கு சண்டை போடுறீங்க.."

"நான் பெத்ததுங்களே ஜோடியா உக்காரும் போது நான் உக்கார கூடாதா போடா அங்கிட்டு..." என்று அவனை விரட்டி அமந்துகொண்டார்...

"யார் பெற்ற மகனோ... இவன் யார் பெற்ற மகனோ..." என்று சோக கீதம் வாசித்து புகழ் போய் அமர நிலவன் சொல்ல தொடங்கினான்....



🌼நான்கு வருடங்களுக்கு முன்🌼


"மா... டிபன் ரெடியா... காலேஜ்க்கு லேட்டாகுது பாரு..." என்று நிலவன் அவன் ரூமிலிருந்தே கத்த தொடங்கினான்...

"சுகி.. சுகி... லஞ்ச் பாக்ஸ் எங்க?... சீக்கிரம் கொடு.." என்றார் சேதுராமன்.

"இதோ வரேங்க.." என்று அவசரமாய் வந்தவர் கணவரிடம் கொடுக்க.. அவரும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.. அதன் பின் தான் நிலவன் பேசியதே நினைவு வர

"நிலவா சாப்பாடு ரெடியா தான் இருக்கு கீழ வா" என்று அவன் அறையை பார்த்து சத்தம் வைத்தார்.

அப்போது சரியாக தயாராகி கீழே வந்த கார்த்தி "மா... என் பைக் கீ எங்க.. நேத்து பைக்க வாட்டர் வாஷ் பண்ணிட்டு கீய இங்க தான வெச்சிருந்தேன் காணோம்... இன்னைக்கு சீக்கிரம் போகணும் பசங்களுக்கு எக்ஸாம் இருக்கு..."

"இரு இரு கத்தாத நிலவன் தான் நைட் பைக்க ஏதோ அவசரம்னு எடுத்துட்டு போனான்.. இரு அவன் கீழ வரட்டும் கேப்போம்..." என்று சொல்லவும் அவன் வரவும் சரியாய் இருந்தது...
 
Last edited:
Status
Not open for further replies.
Top