ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்: 25


யதுநந்தனை மூர் அழைத்து கொண்டு போன இடம் ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரண்ட்டுக்கு… அங்கே குடித்து விட்டு வியாட்டின் கார்ட்ஸ் அட்டகாசம் செய்து கொண்டு இருந்தனர் அவர்கள் இங்கே குடிக்க வர வேண்டிய அவசியம் இல்லை அதற்க்கு தனியாக பார் இருந்தது… அவன் அதிகாரம் இவர்களை குடும்பம் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் இப்படி நடக்க வைத்தது.

இவன் போக கைகளை பிசைந்து கொண்டு இருந்த மேனேஜர் கேப்டன் என ஓடி வந்தவர்.

“கேப்டன் எனக்கு இப்போ உங்க ஹெல்ப் தேவை இவங்க நான் எத்தனை தடவை எடுத்து சொல்லியும் இப்படி நடந்து கொள்கிறாங்க…அது மட்டுமல்ல இவங்க பலசாலி நான் அப்படியா தனியாக பார் இருக்கு அங்கே போங்க என சொன்னேன் இங்கே தான் நல்லா கடல் காற்று வருகிறது சீனரி தெரிகிறது என நக்கல் பண்ணி கொண்டு இருக்கிறாங்க…

இது பேமிலி சாப்பிடும் இடம் இங்கே பாதி பேர் உங்க ஷிப்பில் டிராவல் பண்ணி வந்த பேமிலி. நீங்க தான் இவங்களை விரட்ட ஹெல்ப் பண்ண வேணும்” என்றார். மேனேஜர்

“உங்களுக்கு எங்களை பார்த்தால் எப்படி இருக்கு மேனேஜர் சார் அடியாட்கள் போலவா…நாங்க மரைன் இன்ஜினியர் படித்து விட்டு ஷீப்பில் கேப்டன், கோ கேப்டனாக வேலை பார்க்கும் ஆளுங்க.

நீங்க ஏதோ உங்க அடியாள் போல நினைத்து விட்டீங்க இதை சொல்ல வேண்டியது உங்க ஜி.எம் கிட்ட இல்லை என்றால் உங்க பெரும் மதிப்பிற்குரிய மிஸ்டர் துவாரகேஷிடம்… அவர் தானே இவங்க தலைவனை இங்கே வரவழைத்தது அவர் கிட்ட போய் சொல்லுங்க” என்றான் . அருண்

“கேப்டன் என்ன உங்க கோ கேப்டன் இப்படி சொல்கிறார் டைம் பார்த்து பழி வாங்கும் நேரமா இது… இதில் பாதி பேர் உங்க ஷிப்பில் டிராவல் பண்ணி வந்த ஆளுங்க என் கிட்ட அடியாட்கள் இருந்தால் நான் எதற்காக உங்க கிட்ட உதவி கேட்க வேணும்…இது ஹோட்டல் அதுவும் அமைதியான இந்த இடத்தில் இப்படி இது வரைக்கும் ஒரு சம்பவம் நடந்தது இல்லை

அதனால் வேலையாட்களை தவிர வேற ஆளுங்க எங்க கிட்ட இல்லை ஜி.எம் சாருக்கு இன்பார்ம் பண்ணி விட்டேன் அவர் வந்து கொண்டு இருப்பதாக சொன்னார்”… என சொல்லி கொண்டு இருக்கும் போது ஒரு பெண் பெரிதாக அழும் சத்தம் கேட்டது.

யது நந்தன் , அருண், மேனேஜர் ஓடி போய் பார்க்க அங்கே சாப்பிட வந்த அனைவருமே பயந்து போய் இருக்க… ஒரு பெண் ஒருவனிடம் ஏதோ கெஞ்சி கொண்டு இருப்பது தெரிய அவர்கள் சற்று உள்ளே போய் பார்க்க வியாட்டின் கார்ட்ஸ் ஒருவன் ஒரு இரண்டு வயது குழந்தையை டேபிளில் வைத்து… அதன் பால் பாட்டிலை பிடுங்கி வைத்து கொண்டு தங்கள் கையில் பியர் பாட்டிலை அதன் வாய் அருகே கொண்டு போவதும் வருவதுமாக விளையாட்டு காட்ட… அது அழ அதன் தாய் கெஞ்சி கொண்டு இருக்க தந்தையை தேட அவன் தரையில் இவர்கள் அடித்த அடியில் மயக்கமாக கிடந்தான்.


“இங்கே என்ன நடக்கிறது” என சத்தம் போட்டு கொண்டே யது நந்தன் ஓடி வர அவன் பின்னால் அருண் வந்தான்…மேனேஜர் கொஞ்சம் பயந்து தள்ளி நின்றார் கார்ட்ஸ் யாரு என பார்க்க யது நந்தனை காண அதில் ஒருவன் ஆங்கிலத்தில்

“ யாரு டா இவன் ஓ ஹீரோ சாரா ஹலோ ஹீரோ நாங்க யாரு தெரியுமா வியாட் டைட்டஸ் ஆளுங்க… எங்க பாஸ் பெயரை கேட்டாலே டாண் எல்லாம் உச்சா போய் விடுவாங்க அதனால் நீ என்ன செய்கிற உன் ஹீரோயிசத்தை மூட்டை கட்டி விட்டு ஓடி போய் விடு…எங்க பாஸ்க்கு நாளை கல்யாணம் அதை நாங்க இங்கே செலபிரேட் பண்ணுகிறோம் இந்த பேபி மட்டும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன் என்று இருக்கிறது பேபி ஆ வாயை திற என… அழும் குழந்தைக்கு அவன் பியர் பாட்டிலை வாயில் வைக்க போக யது நந்தன் சட்டென அவன் கையை அழுத்தமாக பற்ற சிரித்து கொண்டு இருந்த கார்ட்ஸ் முகம் மாறியது.

இன்னொருவன் யது நந்தன் அருகில் வந்து அவன் தோளை பற்றி “டேய் யாருடா நீ” என கேட்டான்.

“இவன் தான் இந்த ஷிப்போட கேப்டன் யது நந்தன் நான் கோ கேப்டன் அருண் போதுமா உனக்கு விளக்கம் “என்றான். அருண்

“ஓ கேப்டன் யது நந்தன் நீ தானா இவங்க சொன்ன ஆள் நீ தானா… நாங்களும் ஏதோ பெரிய பெரிய விவிஐபி என நினைத்தோம்” என பேசி சிரிக்க.

“குழந்தையை கொடு” என யது கேட்க குழந்தையை அருகில் நின்றவன் சிரித்தவாறே … அதை எடுத்து தூக்கி மேலே போட்டு பிடிக்க தொடங்க அது சத்தமாக அழ தொடங்கியது. அதன் தாய்

“கேப்டன் பிளீஸ் சேவ் மீ மை பேபி” என சத்தமாக அழ யது விட்டான் உதை அவன் வயிற்றில் அவன் ஆ என அலறி கொண்டு வயிற்றை பிடித்தவன்… குழந்தையை கீழே விட அது தரையை தொட முன்னே சட்டென யது நந்தன் பாய்ந்து குழந்தையை பிடித்தவன் அதை அணைத்து கொண்டான்.

அப்போது தான் அங்கே இருந்த அனைவருக்குமே மூச்சு வந்தது இத்தனை நேரம் மூச்சை பிடித்து கொண்டு இருந்தவர்கள் இப்போ நிம்மதியாக உணர்ந்தார்கள்… குழந்தையை பார்க்க அது அழுகை நிலை மாறி மெல்ல சிரிக்க யது மெல்ல புன்னகை புரிந்தவன்… அதன் தாயை பார்க்க அவள் ஓடி வர குழந்தையை கொடுத்தவன் தரையில் மயங்கி இருந்த குழந்தையின் தந்தையை… மெதுவாக தூக்கி அங்கே இருந்த சேரில் இருக்க வைத்தவன் அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை ஓப்பன் பண்ணி அவன் முகத்தில் தெளித்தவன் திரும்பினான்.

“நீ யார் மேலே கை வைத்து இருக்க தெரியுமா வியாட் ஆளுங்க மேலே… இன்று உனக்கு நாங்க சமாதி கட்டாமல் போக மாட்டோம் டேய் வாங்க டா” என… மற்ற கார்ட்ஸை ஒருவன் அழைத்தவன் அவன் கூடவே நான்கு பேர் யது நந்தனை நெருங்க…

“யது நான் போய் அந்தமான் போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணவா… அதற்க்கு முன் நம்ம கேணலை அழைக்கலாமா” என மெல்ல அவன் காதுக்கு அருகே கேட்டான் . அருண்

“தேவையில்லை நான் இன்று இவங்களுக்கு மட்டுமல்ல… அந்த வியாட்டுக்கும் சேர்த்து பாடம் சொல்லி கொடுக்க போகிறேன்… நீ இவங்களை அழைத்து கொண்டு போ என்றான் யது… முதலில் தயங்கிய அருணுக்கு யது நந்தன் பற்றி தெரியும் என்பதால் அவன் அங்கே இருந்த பெண்களை சிறுவர்களை அழைத்து போனான்..

அவன் போன அடுத்த செக்கன் வியாட் கார்ட் ஒருவன் யது மேலே பாய… அவன் சட்டென விலக அவன் தரையில் விழ மூக்கு தான் உடைந்தது …அது போல அடுத்தவன் யது முகத்தில் குத்த வர யது அவன் கையை பிடித்து முறுக்க அவன் வலியில் சத்தம் போட்டான்.

பின்னால் இருந்து யது முதுகில் ஒருவன் காலால் ஏத்தி தள்ள யது தடுமாறியவன்… சட்டென தன்னை சமாளித்தவன் திரும்பியவன் தன் முன்னே நின்றவன் வயிற்றில் உதைக்க அவன் அம்மா என சத்தம் போட்டு கொண்டு வயிற்றை பிடிக்க…. இனி தனியாக இவனை தாக்கினால் சரி வராது என நினைத்தவர்கள் ஒன்றாக யது நந்தனை ரவுண்ட் கட்டினார்கள்..

யது நந்தன் தன் கை சர்ட் பட்டனை கழட்டியவன் அதை மடித்து விட்டு அவர்களை எதிர் கொள்ள தயார் ஆனான்… அவர்கள் ஒன்றாக அவன் மேலே பாய அத்தனை பேரையுமே பிளந்து கட்டினான் அங்கே நின்ற ஆண்கள் சந்தோஷமாக விசில் அடிக்க கூடவே சில பெண்களும் நின்று இருந்தனர் அவர்களும் கை தட்டினார்கள்.

“ஏய் இங்கே பாருங்க உங்க ஆட்டத்தை எல்லாம் உங்க நாட்டில் வைத்து கொள்ள வேணும்…இங்கே கூடாது இது எங்க நாடு இந்திய தேசம் இது பெண்களையும், குழந்தைகளையும் மதிக்கும் நாடு புரிகிறதா… இன்னும் ஒரு தடவை உங்களை இந்த ரெஸ்டாரன்ட் பக்கம் பார்த்தேன் அடுத்த தடவை உங்க பாஸ் பார்க்க நீங்க இருக்க மாட்டீங்க என்றான். யது நந்தன்

“ரியலி இவங்க உன் எச்சரிக்கையை மீறி இங்கே இருந்தால் என்னை பார்க்க இருக்க மாட்டாங்க… என்பதை விட நீ இருக்க விட மாட்ட என்பது தான் உண்மை என கேட்டு கொண்டு வியாட் டைட்டஸ் வந்தான்... அவன் வரவை கண்ட அவன் கார்ட்ஸ் வலியோடு எழுந்து அவனுக்கு தலை வணங்க அங்கே இருந்த மற்றவர்கள் இந்த அரக்கன் இங்கே எதற்காக வந்தான் என யோசித்தார்கள்.

“ஈகிள் ஷிப் கேப்டன் யது நந்தன் உன்னை உனக்கு யாருக்குமே தலை வணங்குவது பிடிக்காதாமே கேள்விபட்டேன்…அதை விட உனக்கு வளைத்து கொடுப்பதும் உன் அகராதியில் இல்லையாம் உன்னை பற்றி கேள்விபட்டது உண்மை தான் போல இருக்கு…

பட் நான் யார் தெரியுமா நீயும் கேள்விபட்டு இருப்ப வியாட் டைட்டஸ் நான் நினைத்தால் இந்த உலகத்தை விலைக்கு வாங்க முடியும்… என் ஆளுங்க மேலே பார்வை வைக்கவே எவனும் துணிந்தது இல்லை நீ கை வைத்து இருக்க” என்றான். வியாட்

“ஐ நோ மிஸ்டர் வியாட் டைட்டஸ் உங்களை தெரியாதவங்க யார் இருக்க முடியும் யு நோ ஒன் திங் இலங்கை வேந்தன் ராவணையை கூட தெரியாத யாருமே இருந்தது இல்லை…

நான் வளைத்து கொடுக்க நாணல் அல்ல ஆலமரம் ஐ நோ காற்று ஐ மீன் சூறாவளி காற்று ஆலமரத்தை வேரோடு சாய்க்கும்… பட் என் விழுதுகள் உயிர் வாழும் நான் இல்லை என்றால் கூட தர்மம், சத்தியம் உயிர் வாழும் எனக்கு தப்பு செய்தால் கடவுள் என்றால் கூட தட்டி கேட்பேன்.. கடவுளுக்கே அப்படி என்றால் வியாட் டைட்டஸ் கார்ட்ஸ் எனக்கு வெறும் தூசு என்றான் யது நந்தன்…அவன் சொல்லி முடிக்க வியாட் முகம் பயங்கரமாக மாறியது காரணம் ராவணனுக்கு சமமாக தன்னை சொன்னான் அதற்கான காரணம் அவன் அரக்கன் அவனை தெரியாதவங்க இருக்க முடியுமா…. அது போல தான் நீயும் ஒரு அரக்கன் என சொல்லாமல் சொல்லி விட்டான் அங்கே இருந்தவர்களுக்கு அது புரிய அவர்கள் யோசிக்கும் போது ஏதோ சத்தம் கேட்டது… பார்த்தால் வியாட் கார்ட்ஸ் அனைவருமே கீழே விழ அதிர்ச்சியாக அனைவருமே வியாட்டை பார்க்க அவன் கையில் சைலன்சர் பொருத்திய துப்பாக்கி இருந்தது அதில் இருந்த குண்டு தான் அவர்கள் உயிரை வாங்கி இருந்தது.


நிலவு வரும்…














 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம் : 26


வியாட் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்த தோட்டாக்கள் அவன் கார்ட்ஸ் உயிரை எடுக்க அனைவருமே அதிர்ச்சியாக பார்க்க

வியாட் “எனக்கு யூஸ் ஆகாத எதையுமே நான் என் அருகில் வைத்து கொள்வதில்லை…என் கார்ட்ஸ் எப்படி இருக்க வேணும் என ஒரு தகுதி இருக்கிறது” என்றான் .


யது நந்தன் “பாவம் தான் இவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும் சேராத இடம் சேர்ந்தால் முடிவு இப்படி தான் இருக்கும்…அதற்க்கு சாம்பிள் இவர்கள்” என சொன்னவன்… வியாட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு போக வியாட் பார்வை அவனை கட்டம் கட்டி தூக்க பார்த்து கொண்டு இருந்தது..


அபிராமி துவாரகேஷ்யை கிழித்து தோரணமாக தொங்க விட்டு சந்தனா ரூம்க்கு வர அவள் இன்னும் விசும்பி கொண்டு இருக்க… நித்திலன் அவள் அருகே அமர்ந்து அவள் தலையை தடவி சமாதானப்படுத்தி கொண்டு இருந்தான் பாப்பா என்ற சத்தத்தில் சந்தனா நிமிர்ந்து பார்த்தாள்.

அபிராமி “என்ன பாப்பா இது இன்னுமா அழுது கொண்டு இருக்க அம்மா என்ன சொல்லி விட்டு போனேன்…அம்மா இருக்கும் போது அப்படி உன்னை விடுவேனா சரி நைட் டைம் ஆகிவிட்டது வா சாப்பிடலாம்…ஆடர் பண்ணி விட்டு தானே போனேன் இன்னுமா சாப்பாடு வரவில்லை” என கேட்டு கொண்டு இருக்கும் போது…டோர் பெல் அடித்தது.

அபிராமி “ தம்பி போய் பாரு சாப்பாடு தான் வந்து இருக்கும் எடுத்து வா பா” என சொன்னார் .நித்திலன் போய் பார்க்க சாப்பாடு தான் வந்து இருந்தது…அவன் நன்றி கூறி பெற்று கொண்டவன் கதவை மூடி விட்டு அதை எல்லாம் அங்கே உள்ள மினி டேபிளில் வைத்தான்.


அபிராமி “ பாப்பா போதும் அழுதது என்ன இது இதுவே காயத்திரியாக இருந்து இருக்க…எப்படி எல்லாம் யோசித்து வியாட்டை மட்டுமல்ல உன் அப்பாவையும் சேர்த்து மாட்டி விட பார்ப்பாள்…ஆனால் நீ இப்படி தொட்டதற்க்கு எல்லாம் அழுது கொண்டு இருந்தால் எப்படி பாப்பா கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தூங்கு அம்மா எல்லாம் பார்த்து கொள்கிறேன் தம்பி நீயும் சீக்கிரமாக சாப்பிடு” என சொன்னார்.


அபிராமி சந்தனாவுக்கு ஊட்டி விட நித்திலன் அவனும் தன் பங்க்கு ஊட்டி விட்டான் அவர்கள் சாப்பிட்டு முடிய… அபிராமி சாப்பாட்டு டிராலியில் சாப்பாட்டை எல்லாம் எடுத்து கொண்டு வெளியே வைத்து விட்டு வந்தவர்.

அபிராம் “பாப்பா நீ தூங்கு அம்மா ஒருத்தரை சந்திக்க வேணும் போய் விட்டு வருகிறேன்…நித்தி உனக்கு துணைக்கு இருப்பான் நித்திலா அக்காவை விட்டு வெளியே சுற்ற கிளம்பி விடாதே புரிகிறதா அம்மா சீக்கிரமாக வருவேன்” என்றவர் கிளம்ப அம்மா என சந்தனா அழைத்தாள்.

சந்தனா “அம்மா நானும் உங்க கூட வரவா எனக்கு தலைவலியாக இருக்கிறது கூடவே தூக்கம் வர மாட்டேன் என்கிறது மா…கொஞ்ச நேரம் காற்றாட வெளியே நின்றால் தூக்கம் மட்டுமல்ல இந்த தலைவலியும் போய் விடும் மா” என்றாள் அபிராமி யோசிக்க.

நித்திலன் “அக்கா சொல்வது தான் சரி எனக்கும் இந்த ஏசியில் இருந்து மூச்சு முட்டுகிறது…கூடவே இன்று நடந்த கூத்து வேற நாங்களும் வருகிறோம் மா நீங்க யாரை பார்க்க போகிறீங்க …இங்கே உங்களுக்கு யாரை தெரியும்” என கேட்டான். அபிராமி யோசித்தவர் மகளின் முகத்தை பார்த்தவர்.

அபிராமி “ நான் பார்க்க போவது கேணலை தான் அவர் மூலமாக தான் உங்க தாத்தாவுக்கு விஷயத்தை சொல்ல போகிறேன் அவரால் மட்டும் தான் முடியும்…சரி வாங்க போகலாம் பாப்பா முதலில் போய் முகத்தை கழுவி தலை சீவி விட்டு வா கிளம்பலாம் நித்திலா ரூம் டோர் கீ கார்ட் எடுத்து வை கவனமாக வை தொலைத்து விடாதே” என்றார் .அபிராமி பிள்ளைகளை அழைத்து கொண்டு வெளியே வந்தவர்… கேணல் எங்கே இருப்பாரே தெரியாது சட்டென அவர் ரூம்க்கு போவது மேனர்ஸ் அல்ல என்பதால் ரிசப்ஷனில் சொல்லி அவர் ரூம்க்கு கால் கனெக்ட் பண்ண சொல்ல சுசீலா தான் எடுத்தார்.

கேணல் தன் நண்பர்களை பார்க்க ரெஸ்டாரண்ட் போய் இருப்பதாக சொன்னார்… அபிராமி சரி என அவர் கூட பேசி நன்றி சொல்லி சந்தனா, நித்திலனை போகலாமா என அழைக்க..

நித்திலன் “அம்மா அங்கே பார்க்க ரிலாக்ஸ்டாக இருக்க என்ன மா இருக்கிறது…நீங்கள் கேணல் தாத்தா கூட பேசுவீங்க நாங்க என்ன செய்வது அக்காவுக்கு அங்கே வந்தால் அவர்கள் போடும் பாட்டு சத்தத்தில் தலை இன்னும் வலிக்கும்…நானும் அக்காவும் கேம்ப் ஃபயர் போய் பார்க்க போகிறோம் நீங்க பேசி முடித்த பிறகு எங்களை அழைத்து போங்க” என்றான்.

அபிராமி “ நித்திலா அம்மா கிட்ட திட்டு வாங்காதே நான் உன் அப்பா செய்த வேலையால் கொலை வெறியில் இருக்கிறேன்…இப்படி தான் நேற்றும் அக்காவை அழைத்து போய் தண்ணீரில் விழ வைத்த இப்போ ஏதோ ஃபயர் என சொல்லி அவளை என்ன நெருப்பில் விழ வைக்க போகிறாயா அது எல்லாம் தேவையில்லை என் கூட வா” என்றார்.

நித்திலன் “ அம்மா இது கேம்ப் ஃபயர் நம்ம ஹோட்டலுக்கு முன்னால் தான் நடக்கிறது நெருப்பு மூட்டி இருப்பாங்க…அதற்க்கு சற்று தள்ளி நாங்க பேசி சிரித்து, விளையாடி கொண்டு இருக்கலாம் …அங்கே பாரு” என இடது பக்கமாக காட்ட அபிராமி, சந்தனா பார்க்க நித்திலன் சொன்னது உண்மை தான் என்பது போல அங்கே நெருப்பு மூட்டி இருக்க அதற்க்கு சற்று தள்ளி ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் பேசி சிரித்து கொண்டு இருக்க சந்தனா முகம் மலர்ந்தது..

அவள் இயற்கையோடு வாழ்பவள் இது எல்லாம் அவளுக்கும் பிடிக்கும்… மகளின் முகத்தில் இப்போ ஒரு தெளிவை பார்த்த அபிராம் ஒரு முடிவு எடுத்தவர்.

அபிராமி “சரி நித்திலா அக்காவை அழைத்து போ வேற எங்கேயும் அவளை அழைத்து போக கூடாது… பனி ஒத்து கொள்ளவில்லை என்றால் இரண்டு பேருமே ரூம்க்கு போய் விட வேணும்… இல்லை ரெஸ்டாரண்ட்டுக்கு வாங்க ஜாக்கிரதையாக இருங்க” என சொல்லி விட்டு அவர் கேணலை தேடி போக நித்தலன் சந்தோஷமா சந்தனனாவை அழைத்து கொண்டு அந்த இடம் நோக்கி போனான்.


பொதுவாக சுற்றலா பயணங்களில், கேம்ப் ஃபயர் ஏற்பாடு செய்வார்கள் இரவு நேரத்தை மேலும் இனிமையாக்க …நித்திலன் ,சந்தனா போன போது மலையாளி ஒருவர் மலையாளத்தில் பாடி கொண்டு இருந்தார்…அங்கே உள்ள சிலருக்கு மொழி தெரியாது என்றாலும் கூட அவர்கள் அதை ரசித்து கை தட்டி கேட்டு கொண்டு இருந்தனர்.

அங்கே யது நந்தன், அருண் அவர்கள் கூட கப்பலில் வேலை செய்யும் சிலர் அதை விட கப்பலில் வந்தவர்கள் இருந்தனர்… இவர்களை காண மகிழ்ச்சியாக தலையாட்டி வரவேற்று விட்டு பாட்டை ரசிக்க தொடங்க யதுவுக்கு எதிரே உள்ள பெண்கள் கூட்டத்தோடு சந்தனா அமர நித்திலன் யதுவுக்கு இடது பக்கமாக இருந்தான்.

சந்தனா விழிர்த்தி யதுவை பார்க்க அவனும் அவளை பார்த்து விட்டு… அருகே இருந்த நித்திலன் கூட பேச தொடங்க கேப்டன் ‘நவ் யுவர் டர்ன் ” என பாடி முடித்தவர் சொன்னார்.


யது “நோ மிஸ்டர் குருவாயூரப்பன் நான் நீங்க எல்லாம் என்னை வற்புறுத்தி அழைத்ததால் உங்களை வேடிக்கை பார்க்க வந்தேன்…நீங்க என்ஜாய் பண்ணுங்கள்” என்றான்.

அருண் “டேய் நீ அழகாக பாடுவ தானே பிறகு என்ன இது பைன் டைம் பாடு மச்சி” என்றான்.

நித்திலன் “ஆமாம் அண்ணா ஷிப்பில் நீங்க பாடிய பாட்டு சூப்பராக இருந்தது அக்கா கூட சொன்னாள்” என்றான்.

யது “அன்று நான் பாடி விட்டேன் இன்று பாடதவர்கள் தானே பாட வேணும்” என சொல்ல நித்திலனுக்கு அவன் சொன்னது புரியவில்லை அருணுக்கு சட்டென புரிய.


அருண் “ யஸ் நித்தி யது சொல்வதும் சரி அவன் டர்ன் முடிந்து விட்டது இப்போ உன் அக்கா டர்ன்… அவங்க முறையாக சங்கீதம் கற்றவங்க பாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என நீ தானே சொன்ன” என்றான் .நித்திலன் சந்தோஷமாக தமக்கையை பார்க்க சந்தனா பார்வை யதுவை தான் பார்த்தது.

நித்திலன் “அக்கா யது, அருண் அண்ணா சொல்வது உண்மை தானே…நீ பாடு அக்கா வெயிட் நீ மறுக்க கூடாது உன் நிதுவுக்காக” என கேட்டான். சந்தனா அருகில் இருந்த பெண்களும் அவள் தெரிந்த மற்றவர்களும் அவளை வற்புறுத்த.. முதலில் தயங்கியவள் ஆசை உந்தி தள்ள மெதுவாக பாட தொடங்கினாள்.


ஒரு இனிய மனது இசையை

அணைத்துச் செல்லும் இன்பம்
புது வெள்ளம் அந்த சுகம்

இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்…


ஜீவனானது இசை நாதம்

என்பது முடிவில்லாதது வாழும்
நாளெல்லாம் என்னை வாழ வைப்பது
இசை என்றானது

ஆஹா ஆஹா…

எண்ணத்தில் ராகத்தின் மின் ஸ்வரங்கள்

என் உள்ள மோகத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது …


மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே

மலர்ந்த கோலமே ராக பாவமே
அதில் சேர்ந்த தாளமே மனதின் தாபமே
ஆஹா ஆஹா…


பருவ வயதின் கனவிலே பறந்து
திரியும் மனங்களே கவி பாடுங்கள்
உறவாடுங்கள் ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்…



சந்தனா பாடி முடிக்க கை தட்டும் ஒலி அந்த இடத்தை நிறைத்தது யது நந்தன் கூட அவளை ஆச்சரியமாக பார்த்தான்…அவள் அதிகமாக பேசி பார்த்தது இல்லை அவளிடம் அவன் கண்டது பேச்சற்ற அமைதி தான்…. ஆனால் இன்று அவள் இசை அனைவரையுமே கட்டி போட்டது அதுவும் கர்வி துவாரகேஷ் பெண்ணு இவள் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.

நித்திலன் ஓடி போய் சந்தனாவை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிபடுத்த… கை தட்டும் ஒலியும் “ஸ்வீட் வாய்ஸ் உன்னை போல பேப்” என்ற குரல் கேட்க அனைவருமே திரும்பி பார்க்க வியாட் நின்று இருந்தான்.

அவனை கண்டதும் அனைவருமே பயத்தோடு எழ சந்தனா நித்திலன் கையை இறுக்க பற்றி கொள்ள.. யது நந்தன் அதை கண்டவன் அவள் முகத்தை பார்க்க அதில் கொஞ்ச நேரத்திற்கு முன் இருந்த சந்தோஷம் காணாமல் போய் இருந்தது.

வியாட் வைட் டிசர்ட், பிளாக் ஷார்ட்ஸ் போட்டு ஒரு கையில் மது கோப்பை அவன் பின்னால் ஐந்து கார்ட்ஸ்… அதில் ஒருவன் கையில் ஓட்கா( வோட்கா)பாட்டில் இருந்தது வியாட் ஹாய் பேப் என சொல்லி கொண்டு சந்தனாவை நெருங்கிய அதைய நேரம் அபிராமி “கேணல் எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய வேணும் “ என்றார்.


நிலவு வரும்…


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் :27


அபிராமி கேணல் ஜெகதீஷை தேடி போக அவர் கப்பலில் பயணம் மேற் கொண்ட போது சில நட்புகளை சம்பாதித்து இருந்தார் அவர்கள் கூட தான் தன் மிலிட்டரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருந்தார்… அபிராமி அவரை தேடியவர் பிறகு கண்டு கொண்டவர் அவர் அருகே போய் கேணல் என அழைக்க அவர் நிமிர்ந்து பார்த்தவர் அபிராமியை கண்டவுடனே அவர் முகம் யோசனைக்கு மாறியது.

அபிராமி “ கேணல் உங்க கூட கொஞ்சம் பேச வேணும்” என்றார் .அங்கே இருந்தவர்களுக்கு புரிந்தது கேணலிடம் ஏதோ உதவி கேட்க போகிறாள் போல…அவர்களும் இன்று வியாட்டின் அவதாரத்தை நேரில் கண்டவர்கள் தானே .

அதில் ஒருவர் “கேணல் உங்க அனுபவங்களை நம்ம எப்போ வேணும் என்றாலும் பேசலாம்…பட் சில விஷயங்கள் அப்படி அல்ல நீங்க மிஸஸ் துவாரகேஷ் கூட பேசுங்க நாளை ஒரு நல்ல விடியலில் நம்ம அனைவருமே சந்திக்கலாம்… நீங்கள் கேணல் உங்களால் முடியாதது எதுவுமே இல்லை ஓகே குட் நைட் கேணல், குட் நைட் மிஸஸ் துவாரகேஷ்” என கூறி விட்டு அனைவருமே கிளம்பி தங்கள் ரூம்க்கு போனார்கள்.

அவர்கள் போன பிறகு கேணல் “ அபிராமி பீளிஸ் டேக் யுவர் சீட்” என சொல்ல அபிராமி அவருக்கு முன் இருந்த சேரில் இருந்தாள்… அவள் பதட்டமான முகத்தை பார்த்தவர் வெயிட்டரை அழைத்து இரண்டு கப் பாதாம் பால் எடுத்து வர சொன்னார் அவன் போன பிறகு.

கேணல் “ அபிராமி சொல்லு மா என் கிட்ட என் உதவி எதிர்பார்க்கிற தயங்காமல் கேளு… சந்தனா பாப்பாவுக்காக நான் எதையுமே செய்வேன்” என்றார். அபிராமி முகம் நிம்மதியை காட்ட.


அபிராமி “ தேங்கியூ கேணல் நான் எதை நினைத்து உங்க கிட்ட உதவி கேட்க வந்தேனோ… அதை நீங்கள் நான் கேட்காமல் சொல்லி விட்டீர்கள் கேணல் எனக்கு அப்பாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேணும்…அவர் சிங்கப்பூரில் பிசினஸ் விஷயமாக போய் இருக்கிறார் நான் குழந்தைகளை பார்த்து கொள்வேன் என்ற எண்ணத்தில் தான் போய் இருக்கிறார்..

ஆனால் இங்கே நடந்த ப்ராப்ளம் உங்களுக்கு தெரியும் நான் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு…உங்களுக்கு வியாட் பற்றி தெரியும் அவன் என் பெண்ணுக்கு மாப்பிள்ளையா இங்கே ஏதோ டவர் ப்ராப்ளம் என சொன்னாங்க… அது மட்டுமல்ல அப்பாவுக்கு சீக்கிரமாக தகவல் அனுப்ப வேணும் அது தான் உங்க உதவியை கேட்டு வந்தேன்” என்றாள்.

கேணல் “ நீ மட்டுமல்ல அபிராமி துவாரகேஷ் கூட தடுமாறி நிற்பது அவன் முகத்தில் இருந்து கண்டு கொண்டேன்…அவன் தன் பெயர் உலகம் பூராகவும் தெரிய வேணும் என நினைத்தானே தவிர வியாட்டின் உண்மை குணத்தை கணிக்க தவறி விட்டான்.

எனக்கு உங்க அனைவரையும் விட வியாட் பற்றி நல்லா தெரியும் அவன் உடும்பு பிடித்தால் அதில் இருந்து விலகுவது ரொம்ப கடினம்…ஓகே நான் இது பற்றி என் ஆளுங்க மூலமாக மிஸ்டர் தணிகாசலத்திற்கு தகவல் அனுப்புகிறேன் நீ முதலில் இந்த பாலை சாப்பிட்டு விட்டு நிம்மதியாக தூங்க போ” என்றார்.

வியாட் ஹாய் பேப் என சொல்லி கொண்டு சந்தனா அருகே வர …அவள் பின்னால் நகர நித்திலன் அவள் முன்னே வந்து நின்று வியாட்டை நிமிர்ந்து பார்க்க .

வியாட் “ லுக் மை டியர் பாய் இந்த வியாட்க்கு மன்னிப்பு என்ற வார்த்தையே தெரியாது ஏன் என் அகராதியில் கிடையாது …நான் உன்னை அப்போ மன்னித்த காரணம் என்ன தெரியுமா உன் தைரியம் அது எங்கே இருந்தாலும் கூட நான் பாராட்டுவேன்… அதுவும் ஒரு தடவை தான் அதை நீ ரிப்பீட் பண்ண நினைத்தால் என் உண்மை முகத்தை பார்ப்ப புரிகிறதா…

நான் இப்போ பேச வந்தது உன் சிஸ்டர் கிட்ட இல்ல இந்த வியாட் டைட்ஸ் பியான்சி கிட்ட ஓகே மூவ்” என சொன்னான்.


நித்திலன் “ மிஸ்டர் வியாட் டைட்டஸ் ஐ டோன்ட் கேயார் நீங்க யாராக வேணும் என்றாலும் இருக்கலாம்…பட் இவள் உங்க பியான்சி இல்ல மை சிஸ்டர் இவள் என்னை நம்பி தான் அம்மா விட்டு போய் இருக்கிறாங்க…உங்களுக்கு ஏதும் பேச வேணும் என்றால் உங்களை இங்கே அழைத்து வந்த என் அப்பா கிட்ட பேசி கொள்ளுங்கள் அவர் ரூம் நம்பர் தெரியுமா வேணும் என்றால் சொல்லவா” என கிண்டலாக கேட்டான்.

உண்மையில் அங்கே இருந்த அனைவருமே நித்திலன் துணிச்சலை நினைத்து பயந்து போனார்கள்…வியாட் டைட்டஸ் கிட்ட இப்படி பேசி விட்டு உயிரோடு இருந்தவர்கள் யாருமே இல்லை… அப்போ ஏதோ ஒரு மனநிலையில் இவனை, அபிராமியை மன்னித்து விட்டான் இப்போ மன்னிப்பான் என்று சொல்ல முடியாது என நினைத்தார்கள்.

அவர்கள் நினைப்பு உண்மை தான் என்பது போல வியாட் முகம் பயங்கரமாக மாறியது அவன் தன் அருகே நின்ற கார்ட்ஸ் ஒருவனை பார்க்க… அவன் நித்திலன் மேலே கை வைக்க போகும் முன் ஆ என அலறினான் காரணம் யது நந்தன் தான்… அவன் நித்திலனை நெருங்கும் போது அவன் எண்ணத்தை புரிந்து கொண்டவன் சட்டென அவன் அருகில் வந்து விட்டான்.

வியாட் “ யது நந்தன் நீ என் விஷயத்தில் இன்று ரொம்ப தலையிட்டு கொண்டு இருக்க இவங்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்…இவள் என் பியான்சி இவளை நான் இப்போ இங்கே இருந்து அழைத்து போக போகிறேன் யார் தடுக்கிறார்கள் என பார்க்கிறேன்” என்றவன்… சந்தனா கை பற்றி இழுக்க அவளை பற்றிய கை மேலே தன் தன் கையை வைத்த யது நந்தன் வியாட் கையை பற்றி சந்தனா கை மேலே இருந்து எடுத்தவன் அவன் கையை இறுக்க பற்றி கொண்டு.

யது நந்தன் “ கட்டிக்க போகிறவளாக இருந்தாலும் ஏன் கட்டிய மனைவியாக இருந்தாலும் கூட அவங்க சம்மதம் இல்லாமல் தொட கூடாது…இது தான் ஒரு நல்ல வளர்ப்பில் வந்த ஆண் மகனுக்கு அழகு ஆனால் நீ இந்த பெண்ணுக்கு இஷ்டம் இல்லை என தெரிந்தும் அவளை வற்புறுத்ததுகிற உன்னை எல்லாம் என்ன செய்வது…

உனக்கு நான் எச்சரிக்கை செய்ததாக நினைவு இது உன் இடம் இல்லை எங்க இடம் என்று…இங்கே நீ உன் இஷ்டப்படியே நடக்க முடியாது இந்த பெண்ணுக்கு சம்மதம் என்றால்… நீ தாராளமாக அழைத்து போகலாம் அதுவும் அவள் பெத்தவங்க அனுமதி பெற்ற பிறகு” என்றான்

சத்தமாக வியட் சிரித்தவன் “ என்ன சொன்ன விருப்பமா, அனுமதியா இது நாள் வரைக்கும்…இந்த இரண்டு வார்த்தைகளும் என் அகராதியில் இல்லை என்பதை விட இது இருப்பதே தெரியாது… யது நந்தன் நீ என்னை என்ன நினைத்து கொண்டு இருக்கிற…சும்மா லோக்கல் டாண் என்றா இல்ல பிசினஸ் மேன் என்றா.

முட்டாள் நான் வியாட் டைட்டஸ் பிசினஸ் உலகில் முடி சூடா மன்னன் என்றால் அண்டர்வேர்ல்ட்ல் கிங்… என்னை என் உன் ஷிப்பில் டிராவல் பண்ணி வரும் சாதாரண பாசஞ்சர் என்றா நினைத்த யு பூல்” என்றவன். கார்ட்ஸ் என சத்தமாக அழைக்க மறு நிமிடம் அந்த இடம் அவன் ஆளுங்கால் நிரம்பியது இத்தனை பேர் எங்கே இருந்தார்கள் என்று கூட தெரியாது.

யது நந்தன், அருண் ஏன் நித்தலன் அருகில் கூட பிஸ்டலோடு கார்ட்ஸ் நிற்க வியாட் பயந்து போய் நின்ற சந்தனாவின் கரத்தை பற்றியவன்…

வியாட் “கம் பேபி நீ வெளியே நின்று தானே கடலை ரசித்து இருப்ப இப்போ நம்ம கடலுக்குள்ளே போய் ரசிக்கலாம்…இன்னும் ஒரு ஸ்வீட் சப்பிரைஸ் நமக்கு இன்று ஃபர்ஸ் நைட்…உங்க ஊரில் தாலி கட்டி விட்டு தானே தானே ஃபர்ஸ் நைட் செலபிரேட் பண்ணுவாங்க பட் இந்த வியாட்டின் அகராதியில் அது இல்லை… நான் அனுபவித்து அது எனக்கு வொர்த் என்றால் தான் என் அருகில் இடம் கொடுப்பேன் இல்லை பணத்தை தூக்கி வீசி விட்டு போய் கொண்டே இருப்பேன்…பட் உன் லக் என்ன தெரியுமா நீ வேஸ்ட் பீஸ் என்றாலும் கூட எனக்கு மனைவி என்ற பெயரில் நீ வேணும் பிகாஸ் யூ ஆ ராயல் பிளட் ஓகே கம் லெட்ஸ் கோ” என்றவன் சந்தனா கையை பற்றி இழுத்து கொண்டு நகர தொடங்கினான்.


சந்தனா அவன் கையில் இருந்து தன் கையை உருவி கொள்ள முயற்ச்சி செய்தும் அவளால் முடியவில்லை…காரணம் வியாட் பல மணி நேரம் ஜிம்மில் காலம் கழிப்பவன் சந்தனா அழுது கொண்டே நிது என்னை காப்பாற்று என அவன் கூட போக…


நித்திலன் “அக்கா ,அக்கா டேய் அக்காவை விடு டா” என சத்தமாக சொன்னவன் நகர போக… நகர முடியாத படிக்கு வியாட் கார்ஸ் நின்று இருந்தனர். அவன் சட்டென திரும்பியவன்


நித்திலன் “ யது அண்ணா உங்களால் மட்டும் தான் என் அக்காவை காப்பாற்ற முடியும்…நீங்க அவன் ஆளுங்க கூட சண்டை போட்டு ஜெயித்தது எனக்கு தெரியும் பிளீஸ் அண்ணா அக்காவை காப்பாற்றுங்கள்” என அழுதான்...யது அமைதியாக இருக்க அவன் அமைதி எதற்க்கு என அருணுக்கு தெரியும் ஆனால் நித்திலன் , மற்ற ஆளுங்களுக்கு தெரியாதே அவர்கள் இவன் பயந்து விட்டான் போல என நினைக்க… அடுத்த செக்கன் யது அருகே நின்ற கார்ட் சட்டென தரையில் சாய மற்ற கார்ட்ஸ் எல்லாம் அலர்ட்டாக யது நந்தனை நோக்கி துப்பாக்கியை நீட்டினார்கள்.

கண் இமைக்கும் நொடிக்குள்ளே தன் புட்ஸ் ஷூவுக்குள்ளே இருந்த சின்ன கத்தியை உருவி சந்தனாவை இழுத்து கொண்டு போகும் வியாட்டின் காலுக்கு குறி வைத்து எறிய… அது குறி தவறாமல் வியாட்டின் கணுக்காலுக்கு பாய வியாட் ஆ என்றவன் சட்டென சந்தனா கையை விட அவள் ஓடி போய் யது நந்தனுக்கு பின்னால் நின்றாள்… வியாட் திரும்பி பார்த்தவன் தன் கார்ட் ஒருவன் மயங்கி இருப்பதையும் யது நந்தன் பின்னால் நின்ற சந்தனாவையும் அமைதியாக பார்த்தவன்.


தன் காலில் பாய்ந்து கத்தியை பிடுங்கி எறிந்தவன் காலை ஒரு உதறு உதறியவன்.
வியாட் “ சோ என் கூட மோதி பார்க்க ஆசைபடுகிற அஃதாவது உன் உயிருக்கு இன்று இந்த நொடி நாள் குறித்து விட்ட இல்லையா கேப்டன்” என்றான் .



நிலவு வரும்….





 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் :28


வியாட் உன் உயிருக்கு நாள் குறித்து விட்டாயா என யது நந்தனிடம் கேட்டவன்… அவன் பின்னால் நின்ற சந்தனாவை எட்டி பார்த்தவன்.

வியாட் “வாட் பேப் என்ன இது இந்த மாடர்ன் வேல்ட்ல் போய் இப்படி இருக்கிற அதுவும் நான் உன் பியான்சி …என் கூட தான் நீ பேச வேணும் பழக வேணும் நீ என்ன என்றால் தேர்ட் பெர்சன் கூட போகிற…யூ நோ ஒன் திங் பேப் இவன் எல்லாம் இந்த வியாட் டைட்ஸ்ட்கு வெறும் தூசி…இவனை மட்டுமல்ல உன் லவ்லி பிரதரையும் ஒரேடியாக போட்டு தள்ளி விட்டு போய் கொண்டு இருப்பேன்..

ஏன் பேப் எனக்கு ஒரு ஸ்மால் டவுட் இவனை உனக்கு முன்னே தெரியுமா இவன் கூட ஏதும் affair வைத்து இருக்கிறாயா?…அது தான் இவன் உன் விஷயத்தில் எல்லாம் தலையிடுகிறானா?…அப்படி இருந்தாலும் கூட பரவாயில்ல ஒன்றும் தெரியாதவளை விட எல்லாம் தெரிந்தவள் தான் இந்த வியாட்க்கு தேவை” என சொல்லி சிரித்தான்.

யது, அருணுக்கு அவன் அருவருப்பான பேச்சு முகத்தை சுளிக்க வைத்தது நித்திலனுக்கு புரிந்தும் புரியாத நிலை…சந்தனாவுக்கு சுத்தமாக புரியவில்லை அவள் வீட்டில் வைத்து வளர்க்கபடும் துளசி செடி…இவன் போல சாக்கடையில் உருளும் வர்க்கம் அல்ல அவள்.

யது “ ஸ்டாப் இட் மிஸ்டர் வியாட் ஒரு பெண்ணை அதுவும் மனைவியாக போகிறவளை இப்படியா மற்றவங்க முன்னே வைத்து பேசி அசிங்கபடுத்துவது…இதுவா மாடர்ன் கல்சர்? லுக் மிஸ்டர் நான் யது நந்தன் என் மனைவியை தவிர என் கைகள் மட்டுமல்ல என் எண்ணமும் கூட வேற ஒரு பெண்ணை தீண்டாது.

உங்களுக்கு ஏதும் தேவை என்றால் நீங்கள் மிஸ்டர் துவாரகேஷ் கூட பேசி கொள்ளுங்கள்…நித்திலா உன் அக்காவை ரூம்க்கு அழைத்து போ” என்றான். நித்திலன் யது பின்னால் மறைந்து நின்ற சந்தனாவை வா அக்கா என கூறி அவள் கரம் பிடித்து அழைத்து போக போக வெயிட் மை பாய் என்றான் வியாட்.


வியாட் “வெயிட் நித்திலன் உன் சிஸ்டர் இந்த இடத்தை விட்டு உன் கூட வர வேணும் என்றால் ஒரு நிபந்தனை…என் கூட நீ மோதி ஜெயிக்க வேணும் இல்லை என்றால் உன் சார்பாக உன் கேப்டன் ப்ரண்ட் மோத வேணும் சாய்ஸ் இஸ் யுவர் மை பாய்” என்றான்.

யது, அருண் அங்கே உள்ளவர்களுக்கும் புரிந்தது வியாட் கட்டம் கட்டியது நித்திலனுக்கு அல்ல யது நந்தனுக்கு என்று…இன்று அவனை அடியோடு அழித்து விட தீர்மானித்து விட்டான் அவனுக்கு தெரியும் நித்திலன் பதினைந்து வயது பையன் அவன் கூட மோத அவன் என்ன முட்டாளா.

யது நித்திலன் மேலே வைத்து இருக்கும் அன்பு தெரியும் நிச்சயமாக அவனுக்கு பதிலாக இவன் வருவான்….அத்தோடு இவன் கதையை முடித்து விடுவேன் என நினைத்தான்.

நித்திலன் இதற்க்கு எல்லாம் அசரும் ஆளா அவன் “ ஓகே மிஸ்டர் வியாட் டைட்டஸ்… நம்ம சண்டையை எப்போ ஆரம்பிக்கலாம்…பட் ப்ராமிஸ் மாற கூடாது” என்றான் .உண்மையில் வியாட் மட்டுமல்ல அங்கே உள்ளவர்கள் நித்திலனின் தைரியத்தை மட்டுமல்ல அவன் சந்தனா மேலே வைத்து இருக்கும் அன்பையும் கண்டு பிரமித்து போனார்கள்.

அவனுக்கே தெரியும் வியாட் பல மணிநேரம் ஜிம்மில் கழிப்பவன் என அவன் உடல் சொன்னது…அப்படி இருந்தும் அவன் யதுவின் உதவியை கூட கேட்காமல் அவனே வருகிறேன் என சொன்னால் அவன் பாசம் எப்படிப்பட்டது…

சந்தனா “நிது வேணாம் டா நீ சின்ன பையன் அவனை பாரு அரக்கன் போல இருக்கிறான்….நம்ம அப்பா கிட்ட சொல்வோம் டா அவர் கார்ட்ஸை அனுப்புவார்” என அவன் காதில் மெதுவாக சொன்னாள்.

நித்திலன் “ அக்கா அவன் என்ன சொன்னான் என்று கவனித்தாயா நீ இங்கே இருந்து போக வேணும் என்றால் அவன் கூட மோதி ஜெயிக்க வேணும்…. அவன் பலசாலி என்றால் நானும் பலசாலி தான் நான் கராத்தே கிளாஸ் போகிறேன் தாத்தா தானே என்னை அதில் சேர்த்து விட்டார்” என சொன்னான்.

சந்தனா மனதில் இவன் சொன்னால் கேட்கும் ரகம் இல்லை அதுவும் சந்தனா விஷயத்தில அவளை காப்பது தான் அவனுக்கு முக்கியம்…அதில் அவனுக்கு அடிபட்டால் கூட பரவாயில்ல ஆனால் அவளுக்கு தம்பி முக்கியம்…. அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் வர கூடாது என்ன செய்யலாம் என யோசித்தவள் கண்ணில் பட்டது யது நந்தன் தான்.

அவன் நித்திலன் மீது அன்பு உள்ளவன் அவனுக்காக அவளை இரு முறை காத்து இருக்கிறான்…இப்போ இந்த சூழ்நிலையில் உதவி செய்ய கூடியவன் அவன் ஒருவன் தான் வியாட்டுக்கு சரி சமமாக நிற்க கூடியவன்… சந்தனா நித்திலனிடம் கெஞ்சுவதை விட்டு சட்டென நித்திலன் அருகே நின்ற யது நந்தனிடம் போனவள்.

முதலில் தயங்கியவள் முன் நித்திலன் முகம் நினைவுக்கு வர சந்தனா “ கேப்டன் நீங்க என்னை இரண்டு தடவை காப்பாற்றி இருக்கிறீங்க…இப்போ என் தம்பியை அந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்ற முடியுமா? பிளீஸ்…நான் சொன்னால் கேட்க மாட்டான் எனக்காக அவனே அவன் கூட சண்டை போட போவதாக நிற்கிறான் நீங்க எனக்கு உதவ முடியுமா” என மெல்ல கேட்டாள்.

யது நந்தன் அவளை பார்த்தவன் ஏதும் பேசாது நித்திலன் அருகே போய் அவன் தோளில் கை வைத்தான் …நித்திலன் திரும்பி பார்க்க.

யது “ நித்திலா நம்ம கிட்ட வீரம் இருந்தாலும் கூட விவேகம் முக்கியம் எப்பவும் எதிரிங்கள் குறைத்து எடை போட கூடாது … அது போல அசட்டு தைரியம் நம்மை மட்டுமல்ல நம்ம கூட இருப்பவர்களையும் அழித்து விடும் புரிகிறதா?…உன் வீரத்திற்க்கு நான் தலை வணங்குகிறேன் பட் அதை காட்ட வேண்டிய நேரம் இது அல்ல அதற்க்கு இன்னும் ஐந்து ஆறு வருஷம் போக வேணும்.

ஒரு கலையை முழுமையாக கற்று கொள்ளாமல் அதை அடுத்தவர் மீது பிரயோகிப்பது…. அந்த கலையை அவமானப்படுத்துவது போல ஆகும்… நீ முழுமையாக கராத்தேவை கற்று கொள்ளு பிறகு நீ யாருடைய உதவியும் இல்லாமல் உன் அக்காவை பாதுகாக்கலாம்.

இப்போ உனக்காக நான் களத்தில் இறங்குகிறேன் நீ இன்னும் வளர்ந்த பின் எனக்கு ஒரு உதவி தேவைப்படும் போது வரலாம்…இப்போ உனக்காக உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கும் அக்காவை பாரு” என்றான்.

யது புரியும்படியாக சொன்னதால் நித்திலன் அரை மனதாக சம்மதிக்க யது அவனை அணைத்தவன் பிறகு வியாட்டிடம்.

யது நந்தன் “ மிஸ்டர் வியாட் டைட்டஸ் ஐ யம் ரெடி but you must keep your word…வார்த்தை மாறினால் நானும் என் எல்லைகளை மீற வேண்டி இருக்கும்…நம்ம மோத முன் நம்ம நிபந்தனைகளை சொல்லி விடலாம் பர்ஸ்ட் யூ நீங்க என் நாட்டின் விருந்தாளி சோ நீங்களே சொல்லுங்கள்” என்றான்.

வியாட் “ சூவர் கேப்டன் எனக்கும் என் தகுதிக்கு ஏற்ற ஆளுங்க கூட தான் மோதி ஜெயிக்க பிடிக்கும்…இந்த ஸ்மால் பாய் கூட எப்படி மோதுவது என நினைத்தேன் பட் நல்ல காலம் நீங்களே வந்து விட்டீங்க…ஆனால் இப்போ தான் எனக்கு சந்தேகம் எழுகிறது.

என்ன தெரியுமா ஒருவன் ஒன்று தன் காதலிக்காக மோத வேணும் இல்ல மனைவிக்காக மோத வேணும்… இதில் மிஸ் சந்தனா உங்களுக்கு யாரு உங்க இரண்டு பேருக்கும் இடையே என்ன இருக்கிறது” என கேட்டான்.

யது நந்தன் “வெரி சிம்பிள் எங்க இரண்டு பேருக்குமே இடையே இருப்பது மனிதாபிமானம் என்னும் கோடு…அதை என் கடமை முடிந்த பிறகு நான் அழித்து விடுவேன்… அதை விட ஒரு சிறுவன் தன் சகோதரி மீது வைத்து இருக்கும் தூய அன்பு அதை புரிந்து கொள்வது உங்களுக்கு கடினம் மட்டுமல்ல வேண்டாத வேலை கூட” என நக்கலாக சொன்னான்.

யது சொல்ல அதன் அர்த்தம் புரிந்து வியாட் முகம் மாறியது அவன் அதை தன் போட்டு இருந்த டீசர்ட் மேலே காட்டினான்… அதை கோபத்தோடு இழுக்க அது சர் என கிழிந்தது அவன் வெற்று மேனியை பார்த்த ஆண்கள் பொறாமை கொள்ள பெண்கள் வாவ் என்றனர்.

பல மணிநேரம் ஜிம்மில் இருந்த பலன் அதில் தெரிந்தது சிக்ஸ் பேக் அல்ல எய்ட் பேக்ஸ் வைத்து இருந்தான்… அதை அவன் தன் கைகளை உயர்த்தி காட்டினான்.யது அதை பார்த்தவன் ஏதும் பேசாது தன் டீசர்ட்டை கழட்டினான் அவன் உள்ளே வெள்ளை பனியன் போட்டு இருந்தான்…. ஆனால் அவனின் புஜங்கள் நாங்களும் ஜிம் கண்டவர்கள் தான் என பறை சாற்றியது.

இரவு நேரம் என்பதால் அந்தமான் தன் அழகை பன்மடங்காக காட்டி கொண்டு இருந்தது….சுற்றி வர ஹோட்டல் நிர்வாகம் லைட் போட்டு இருந்தது கூடவே கேம்ப் ஃபயர் நெருப்பு இன்னும் எரிந்து கொண்டு இருந்தது அவர்கள் எதிர் எதிரே களத்தில் நின்றனர்.

யது நந்தன் “மிஸ்டர் வியாட் நான் கேட்கும் டீல் இந்த போட்டியில் நான் வின் பண்ணினால்… மிஸ் சந்தனாவை நீங்க எந்த தொல்லையும் கொடுக்காமல் போக விட வேணும் இது தான் என் டீல்” என்றான்.

வியாட் “ ஓகே டீல் அக்சப்ட் என் டீல் என்ன தெரியுமா கேப்டன் உன் மரணம் yes i want your breath” என கேட்டான்.

யது நந்தன் மென் புன்னகை புரிந்தவன் “யஸ் சூவர் i agree to this பட் நம்ம இரண்டு பேருமே தான் மோத வேணும்…அது தான் பேசிக் ரூல்ஸ் என் ஆளுங்களே உங்க ஆளுங்களுக்கோ இங்கே இடம் இல்லை என்றான் வியாட் தன் ஆளுங்கள் ஒரு பார்வை பார்க்க அவர்கள் சற்று தள்ளி நின்றனர்.

வியாட், யது நந்தன் இருவருமே கை குலுக்கி விட்டு தங்கள் மல்யுத்த விளையாட்டை ஆரம்பித்தனர்…வியாட் முதலிலே தன் விளையாட்டை உக்கிரமாக ஆரம்பித்தான் யதுவை ஒரேடியாக காலி பண்ணுவதே அவன் நோக்கமாக இருந்தது.

நித்திலன் “கமான் யது அண்ணா அவனை விட வேணாம்” என சத்தம் போட்டான்.அருண் “ யது நீ தான் வின் பண்ண வேணும் மச்சி” என சத்தம் போட்டான் …மற்றவர்களுக்கு அந்த எதிர்பார்ப்பு இருந்தாலும் கூட …வியாட்க்கு பயந்து அமைதி காத்தனர் சந்தனா கேப்டன் வின் பண்ண வேணும் கடவுளே என வேண்டி கொண்டு இருந்தாள்.

இப்படி அவர்கள் எதிர்பார்ப்பை எல்லாம் வியாட் பொய்யாக்கி கொண்டு மல்யுத்த விதிமுறைகளை மீறி யதுவை தாக்கி கொண்டு இருந்தான் …யது மெதுவாக தன் பலத்தை காட்டி கொண்டு இருக்க வியாட் யது எதிர்பாராத நேரத்தில் அவன் அடி வயிற்றில் தன் புட்ஸ் காலால் உதைக்க யது ஆ என வயிற்றை பிடித்து கொண்டு மண்ணில் விழுந்தான்.



நிலவு வரும்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 29

வியாட் விளையாட்டு விதிகளை மீறி யது நந்தனை தாக்கினான்… அவன் எதிர் பாராத தாக்குதால் யது வயிற்றை பிடித்து கொண்டு கீழே விழுந்தான் …அனைவருமே கடவுளே இவனுக்கு என்ன நடந்தது என பயந்து போனார்கள்.

நித்திலன், அருண் யது அருகே ஓட போக வியாட் ஸ்டாப் என சத்தம் போட்டான் அவர்கள் நின்று பார்க்க.

வியாட் “ கேம் ரூல்ஸ் தெரியும் தானே கோ கேப்டன் உங்க ப்ரண்ட் சொன்ன ரூல்ஸ் தான் இது…என் ஆளுங்களோ இல்ல கேப்டன் ஆளுங்களோ எங்க அருகில் வர கூடாது…சோ மூவ் என்றான் உண்மை அது தான் என்பதால் அவர்கள் யது அருகே போக முடியாமல் தவிர்க்க… சந்தனா நான் கேட்டு கொண்டதால் தானே கேப்டன் வியாட் கூட சண்டை போட போனார்…

என்னால் தானே அடிபட்டு இருக்கிறார் நான் தான் அவருக்கு உதவி செய்ய வேணும் என நினைத்தவள் மெல்ல நித்திலன் அருகே நடந்து வந்து நின்றவள்.

சந்தனா “ கேப்டன் எழுந்து விடுங்க” என சத்தமாக அழைத்தாள் வியாட் அவள் குரல் கேட்டு திரும்பி பார்த்தவன்.

வியாட் “ I have no doubt now the truth is known! எனக்கு முதலில் ஒரு சந்தேகம் இருந்தது பேப்….உனக்காக இவன் உதவிக்கு வருகிறான் என்றால் ஏதோ ஒரு லிங் இருக்கும் என நினைத்தேன்…அது இப்போ உண்மை ஆகி விட்டது இந்த வியாட் டைட்டஸ் நிழல் கிட்ட மோத கூட ஆளுங்க பயந்து போவாங்க.

இவன் அசால்டாக வருகிறான் என்றால் சம் திங் சம் திங் உனக்கும் அவனுக்கும்… என்ன லவ்வா உன் டாட் உன்னை வெளியே விட மாட்டார் என்று கேள்வி…சோ இவனை நீ இங்கே வந்து தான் மீட் பண்ணி இருக்க வேணும் உன் பிரதர் ப்ரண்ட் தானே இவன் அது தான் சுலபமாக உன்னை நெருங்கி விட்டான்.

பட் நோ யூஸ் மை ஸ்வீட் ஹார்ட் இவன் வியாட் டைட்டஸை எதிர்க்க நினைத்து விட்டான்…அப்போ நான் அவனுக்கு யாரென காட்ட வேணாமா? இனி என்னை எதிர்க்கும் தைரியம் யாருக்குமே வர கூடாது இவனுக்கு அந்தமானில் தான் சமாதி” என்றான்.

வயிற்றை பிடித்து கொண்டு தரையில் விழுந்த யது வேற இன்னும் எழவில்லை என்ன நடக்க போகிறதோ…. என அங்கே இருந்த அனைவருமே பதறி போய் நின்று இருந்தனர் சந்தனா வேறு தன்னால் தான் இது எல்லாம்… என கண்கள் கலங்கி போய் நின்றவள் அவள் வாழ்நாளில் செய்யாத ஒரு காரியத்தை யதுவுக்காக செய்ய நினைத்தாள்.

தன் கலங்கிய கண்கள் கட்டுபடுத்தி கொண்டு மெல்ல வியாட் இருந்த இடத்தை நோக்கி நகர போனாள்…சட்டென திரும்பிய நித்திலன் தன் அருகே நின்ற தமக்கை நகர போனதை கண்டவன் அவள் கையை பற்றியவன்.

நித்திலன் “ அக்கா நில்லு எங்கே போக போகிற… உனக்கு என்ன மூளை இல்லையா அந்த டாண் இடத்திற்க்கு எதற்காக போக போகிற” என கோபமாக கேட்டான்.

சந்தனா “ நான் அவன் கிட்ட பேச வேணும் நிது என் வார்த்தைக்காக தானே கேப்டன் அவன் கூட சண்டை போட போனார்…அப்போ நான் தான் கேப்டனை காப்பாற்ற அவன் கிட்ட மன்னிப்பு கேட்க போக வேணும் ப்ளீஸ் டா என்னை போக விடு “என்றாள்.

நித்திலன் “ நீ சொன்னது உண்மை தான் ஆனால் அவன் ரொம்ப தப்பான ஆள் அக்கா… நீ அவன் கிட்ட தனியாக போக வேணாம் இரு நானும் வருகிறேன்” என சொன்னவன் சந்தனா கையை பற்றி அழைத்து போனான்.

வியாட் அருகில் சற்று தள்ளி நின்று நித்திலன் “ மிஸ்டர் வியாட் “என அழைக்க வியாட் திரும்பி பார்த்தவன்… கண்கள் கலங்கி தரையில் விழுந்து கிடைத்த யதுவை பார்த்து கொண்டு இருந்த சந்தனாவையும் அருகில் இருந்த நித்திலனையும் பார்த்தான்.

நித்திலன் “ மிஸ்டர் வியாட் My sister wants to talk to you too “என்றான்.

வியாட் “ யா சூவர் மை பாய் உன் அக்காவுக்கு இப்பவாவது என் கூட பேச வேணும்…என தோன்றி இருக்கிறதே ஐ யம் சோ ஹாப்பி என் கூட என்ன பேச வேணும் பேப்” என கேட்டான்.

சந்தனா “ கேப்டனை விட்டு விடுங்கள்…அவர் என் வார்த்தைக்காக தான் உங்க கூட சண்டை போட வந்தார்…நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் என்றாள்.

வியாட் தன் தாடையை தடவி கொண்டு பார்த்தவன் அவன் “ கேப்டனை விட வேணுமா இது யோசிக்க வேண்டிய விஷயம்…நான் யார் என தெரிந்தும் இவன் என் கூட மோத வந்து இருக்கிறான் என்றால் இவனுக்கு எவ்வளவு தைரியம் வேணும்… சோ இவனை விட யோசிக்க வேணும் பட் சேம் டைம்…கேட்பது என் பேப் சோ என்ன செய்யலாம்” என யோசிப்பது போல நடித்தான்.

நித்திலன் “ கேப்டன் உங்களை பார்த்து பயந்து போக என்ன இருக்கிறது அவர் அவ்வளவு பெரிய ஷிப் கேப்டன்…பயந்தால் அதை இயக்க முடியுமா அதுவும் கிட்ட தட்ட மூவாயிரம் பாஸஞ்சர்ஸ்க்கு மேலே…தைரியம் அவர் கூட பிறந்தது” என சொன்னான். வியாட் அவனை அழுத்தமாக பார்த்தான்.

சந்தனா “ நிது நீ கொஞ்ச நேரம் சும்மா இரு மிஸ்டர் வியாட் அவன் சின்ன பையன்…கேப்டன் மேலே உள்ள அன்பில் பேசுகிறான் நீங்க நினைத்தால் கேப்டனை விட முடியும்” என பணிவாக கேட்டாள்.

வியாட் யோசித்தவன் பிறகு “ஓகே பேப் உனக்காக இதை செய்கிறேன்…ஐ மீன் கேப்டனை ரீலிஸ் செய்கிறேன்…. பட் i am a businessman ! எந்த பெனிபிட் இல்லாமல் நான் எதையுமே செய்வது இல்லை… சோ நான் கேட்பதை நீ கொடுக்க வேணும்…இல்லை என்றால் இவன் உயிர் இந்த இடத்தில் போய் விடும்” என்றான்.

சந்தனா “ எங்க அப்பா கிட்ட கேட்டு பணம் வாங்கி தரவா… இல்லை என்றால் நான் எவ்வளவு கேட்டாலும் கூட என் தாத்தா கொடுப்பார்” என்றாள்.

நித்திலன் “ அக்கா அவருக்கு எதற்க்கு பணம் அவர் வேற ஏதோ கேட்க போகிறார்” என்றான்.

வியாட் “ உன்னை பர்ஸ்ட் டைம் பார்த்த போதே நினைத்தேன் நித்திலன் நீ டாப் பிசினஸ் மேனாக வருவ என்று …உன்னை ட்ரெயின் பண்ணி கொண்டு இருப்பது மிஸ்டர் தணிகாசலம் தானே அது தான் உன் கிட்ட அதி புத்திசாலித்தனம், தொலை நோக்கு பார்வை இருக்கிறது…யஸ் யூ ஆர் கரெக்ட் மை பாய் எனக்கு தேவை பணம் அல்ல அது என் கிட்ட கொட்டி கிடக்கிறது எனக்கு தேவை வேற ஒன்று” என்றான்.

சந்தனா “ கேளுங்க என்னால் முடிந்தால் தருவேன்” என்றாள்.

வியாட் “ ஒகே நான் அப்போ கேட்டது தான் அப்போ பார்ட்டி ஹாலில் கேட்டேன்…இப்போ ஓப்பன் பிளேஸ்சில் கேட்கிறேன் எனக்கு நீ லிப் டூ லிப் கிஸ் தர வேணும்…அடுத்த செக்கன் உன் கேப்டன் ரீலீஸ் ஆகி விடுவான்” என்றான்.

சந்தனா, நித்திலன், அருண் முகம் மட்டுமல்ல அங்கே இருந்தவர்கள் முகமும் மாறியது…இவன் நினைத்ததை அடைந்தே பழக்க பட்டு விட்டான் என்று நினைத்தார்கள்.

நித்திலன் “ மிஸ்டர் வியாட் உங்களுக்கு ஒரு தடவை சொன்னால் புரியாதா…அக்கா கிட்ட இப்படி தப்பாக பேச வேணாம் தாத்தா கிட்ட சொன்னேன் பிறகு இருக்கு உங்களுக்கு” என்றான்.

வியாட் “ரியலி மை பாய் அப்படியா உன் தாத்தா என்னை என்ன செய்வார் ஆள் வைத்து அடிப்பாரா…இல்ல போட்டு தள்ளி விடுவாரா ஐ யம் வியாட் டைட்டஸ் நான் நினைத்ததை அடைந்தே பழகியவன்…எனக்கு இனி எந்த பெர்மிஷன் தேவை இல்லை உன் அக்கா சம்மதம் இல்லாமல் அவளை முத்தமிட போகிறேன்” என்றவன்.

சந்தனா மட்டுமல்ல நித்திலன் எதிர்பாராத நேரத்தில் அவள் வலது கையை பற்றியவன் தன் அருகே இழுத்து அவள் இடையோடு அணைத்தவன்…அவள் முகத்தை இறுக்க பற்றியவன் அவள் இதழ்களை நோக்கி குனிய போன அடுத்த செக்கன் ஆ என தடுமாறி தரையில் விழுந்தான்.

அதிர்ச்சியால் உறைந்து போய் இருந்த சந்தனா,நித்திலன், அருண் அங்கே இருந்தவர்கள்….ஏன் வியாட் கார்ட்ஸ் கூட யாரு என பார்க்க யது நந்தன் தான் வயிற்றை பிடித்து கொண்டு எழுந்து நின்றவன்…தன் வாயில் இருந்து வந்த ரத்ததை உமிழ்நீரோடு துப்பி விட்டு நிற்க மச்சான் என அழைத்தபடியே அருண் அவனை போய் பிடிக்க நித்திலன் சந்தனாவை அணைத்து கொண்டான்.

கீழே விழுந்த வியாட் தன் வலது கையை ஊன்றி எழ பார்க்க அவனால் முடியவில்லை.. கையை அசைத்தாலே பயங்கரமாக வலித்தது…அது போல தாடையிலும் வலி அவனுக்கே புரியாத நிலை.

யது நந்தன் “ என்ன மிஸ்டர் வியாட் கையை அசைக்க முடியாமல் இருக்குமே இருக்காதா பின்னே…இது வர்மக்கலையின் ஒரு பகுதியை தான் பிரயோகித்து இருக்கிறேன்…. முழுமையான பிரயோகித்து இருக்க நீ காலம் பூராகவும் கை, கால் அசைக்க முடியாமல் இருந்து இருப்ப.

இந்த நரம்பை எடுக்க வேணும் என்றால் ஒன்று நான் இல்லை என்றால் இந்த கலை தெரிந்த ஒருவரால் தான் முடியும்…என்ன டா நம்ம அடியில் விழுந்து கிடந்தவன் எப்படி எழுந்தான் என யோசனையாக இருக்கா.

நீ கற்றது மார்ஷல் ஆர்ட் என்றால் நான் கற்றது நம்ம முன்னோரின் வழி வந்த கலைகளை…நான் முறையாக வர்மக் கலையை கற்றவன் நீ செய்த வேலையை என்ன சொல்வார்கள் தெரியுமா…. பேடித்தனம் மல்யுத்த விதிகளை மீறி நீ ஜெயிக்க இந்த வேலையை செய்து இருக்க.

நான் உன்னை நம்பினேன் விதிகளை கடைபிடித்து நடப்ப என்று… அதனால் கொஞ்சம் அசால்டாக இருந்து விட்டேன் நீ ஜெயித்து விட்ட …நான் மயங்கி கிடைக்கவில்லை வியாட் என் பிராணவாயுவை யோகா மூலமாக மீட்டுத்து கொண்டு இருந்தேன்..நீ அது புரியாமல் ஒரு பெண்ணை இக்கட்டான நிலையில் நிறுத்தி உன் இச்சையை தீர்த்து கொள்ள நினைத்த…

நீ சரியாக புராணங்கள் படிக்கவில்லை போல தமிழ் கற்று கொண்ட நீ முதலில் அதை தான் கற்று கொண்டு இருக்க வேணும்…பெண்கள் எங்கு எல்லாம் துன்பங்களை சந்திக்கிறாங்களோ அங்கு எல்லாம் எந்த மத கடவுள் என்றாலும் உதவிக்கு வந்து இருக்கிறார்கள்…உன்னை போல ஆளுங்க கலியுகத்தில் இருப்பதால் தான் இப்போ எந்த கடவுளும் உதவிக்கு வராது… நாட்டை, ஊரை, மனுஷங்களை அழிக்க இயற்கை உதவியை துணை கொண்டு சுத்தப்படுத்துகிறார்.

அதுவும் பவித்திரமான பெண்கள் கண்ணீர், சாபம் வேரோடு குலத்தை அழித்து விடும்…இதை நீ நன்றாக நினைவில் வைத்து கொள் உன் நரம்பை சுளுக்கு எடுக்க வேணும் என்றால் நீ சந்தனா கிட்ட மன்னிப்பு கேட்க வேணும்… இல்லை என்றால் காலம் பூராகவும் இப்படி தான் இருப்பே” என்றான்


நிலவு வரும்….

 
Status
Not open for further replies.
Top