ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 45


ஹோட்டல் ஊழியர்கள் யது நந்தனுக்கு ஆபத்து இருப்பதை பற்றி பேச சந்தனா கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல பொழிய ஆரம்பித்தது….இது அவள் மனது யதுவை ஏற்று கொண்டதை தான் காட்டியது அவளுக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிர்த்து நின்றாள்… அவள் மனதில் நின்றது ஒன்று தான் யதுவுக்கு ஆபத்து நான் காப்பாற்ற போக வேணும் என்ற எண்ணம்…

அவள் இந்த எண்ணம் சரி வருமா? என்று கூட நினைக்கவில்லை ஏன்? அவளால் இதை யார் துணையும் இல்லாது செய்து முடிக்க முடியுமா?... என கூட நினைக்காது அவள் சட்டென கடலை நோக்கி போனாள் கரையில் எப்பவும் மோட்டார் படகும் அதை இயக்கும் ஒருவரும் இருப்பார்…

அது கடலை குடும்பமாக இல்ல தனியாக சுற்றி பார்ப்பதற்க்கு ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு பண்ணிய படகு….அதை ஓட்டுபவர் மலையாளி ஆனால் நன்றாக தமிழ், ஆங்கிலம் பேசுவார் சந்தனாவை நன்றாக தெரியும்….சந்தனா கடலை நோக்கி எதற்காக போகிறாள் என தெரியாமல் அவள் காவலுக்கு இருந்த கார்ட்ஸ் கூடவே போனார்கள்….

சந்தனா படகு அருகே போனவள் தாஸ் அண்ணா அண்ணா என அழைக்க… அப்போ தான் படகில் தூங்க போன படகு ஓட்டும் மரிய தாஸ்… சத்தம் கேட்டு வெளியே வந்தவர் இவளை கண்டதும் “மோளே சந்தனா” என அழைத்தார் ….

மரிய தாஸ் மலையாளத்தில் “ ee samayathu nee evida enthaanu cheyyunnathu makale?... ( இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிற மகளே) என கேட்டார்…

சந்தனா அவர் பேசும் மலையாளம் புரியாது தடுமாற அதை சட்டென புரிந்து கொண்ட அவர்…

மரியதாஸ் “ இந்த நைட் டைம்மில் எதற்காக பாப்பா இந்த இடத்திற்க்கு வந்த வயசு பெண்ணு…. இங்கே எல்லாம் துணை இல்லாமல் வர கூடாது….கேப்டன் சார் கூட இல்லை நீ உன் ரூம்க்கு போ மா “ என்றார்…

சந்தனா கலங்கிய குரலில் “ இல்ல தாஸ் அண்ணா நான்… அவரை பார்க்க போக வேணும் என்னை கப்பலுக்கு அழைத்து போங்க” என்றாள்…

மரிய தாஸ் “ என்ன மோளே உனக்கு என்ன பிராந்தா!... அதுவும் தீ பரவி இருக்கும் இந்த நேரத்தில் போக….நீ முதலில் உன் ரூம்க்கு போ” என்றார்…

அப்போது சந்தனாவின் கார்ட் ஒருவன் மேடம் என அழைத்தபடியே வந்தவன்…

கார்ட் “ மேடம் பீளிஸ் நீங்க ரொம்ப நேரமாக இந்த மிட் நைட்டில் வெளியே நிற்க கூடாது…சாருக்கு தெரிந்தால் எங்களுக்கு தான் திட்டு விழும் வாங்க உங்க ரூம்க்கு போகலாம்” என்றான்…

சந்தனா “அய்யோ! நான் சொல்வது உங்க இரண்டு பேருக்குமே புரியவில்லையா?...அவர் அங்கே ஆபத்தில் இருக்கும் போது நான் எப்படி என் ரூம்மில் தூங்கி கொண்டு இருக்க முடியும்….நான் இப்போ அவரை பார்க்க வேணும் நீங்க இரண்டு பேருமே என் கூட வரவில்லை என்றால்… நான் தனியாக கடலில் நீந்தி போய் பார்ப்பேன்” என்றவள் அதை செயற்படுத்த போனாள்….

அவளுக்கு நீந்த தெரியாது என்ற உண்மை அவளுக்கு மட்டுமல்ல அங்கே இருந்த இருவருக்குமே தெரியும்….ஆனால் அவள் இருந்த நிலையில் அதை மறந்து விட்டாள் அதை உணர்ந்த கொண்ட தாஸ் மட்டுமல்ல கார்ட் கூட தான்….

தாஸ் “ சரி மோளே வா நான் உன்னை அழைத்து போகிறேன்… ஆனால் ஆபத்து அதிகம் என்றால் நீ பிரச்சனை செய்யாமல் திரும்பி விட வேணும் சரியா” என்றவர்…சந்தனா கூட வந்த கார்ட்டை பார்க்க அவனும் புரிந்து கொண்டவன் அங்கே இருந்த…. இன்னொரு கார்ட்டை அழைத்து விஷயத்தை மூர்த்தி அபிராமிடம் சொல்ல சொன்னான்…

காரணம் தணிகாசலம் மாத்திரை போட்டு விட்டு தூங்குவதால் என்ன விஷயம் என்றாலும்… தன் கிட்ட தான் தகவல் தெரிவிக்க வேணும் என்பது மூர்த்தியின் கட்டளை அதனால் மூர்த்தி, அபிராமியிடம் தகவல் சொல்லி விட்டு சந்தனாவை அழைத்து கொண்டு போனார்கள்…

சந்தனா இயற்கையின் ரசிகை ஆனால் இன்று அவளால் அதை கூட ரசிக்க முடியாமல் இரவு நேர கடல் பயணம் இருந்தது….காரணம் யது நந்தன் அவள் இதயம் முழுவதும் அவன் நினைவுகள் தான் நிறைந்து இருந்தது…அந்தமான் தீவுக்கு சற்று அருகே தான் கப்பல் நின்று இருந்தது அதனால் தீ…. தீவுக்கு பரவும் வாய்ப்பு இல்லை… இல்லை என்றால் காற்றில் தீ பரவும் வாய்ப்புகள் அதிகம் இருந்து இருக்கும்…

அவர்கள் கப்பலை நெருங்க அங்கே விளக்குகளால் கப்பல் ஜெகஜோதியாக ஒளிர்ந்து கொண்டு இருந்தது…ஆளுங்க நடமாற்றம் அதிகமாக இருந்தது தாஸ்க்கு இங்கே வந்து பழக்கம் என்பதால் கப்பலில் ஏற பயணப்படும் நூல் ஏணியை போட சொல்லி குரல் கொடுத்தார்…

ஏணி போடும் ஆள் வந்து எட்டி பார்த்தவர் தாஸ் கூட இருவர் வந்து இருப்பதை கண்டவர்…இந்த நேரத்தில் பெண்ணா என யோசிக்க தாஸ் கேப்டன் மனைவி அவரை பார்க்க வந்து இருக்கிறார் என குரல் கொடுக்க தான் சட்டென ஏணியை அவன் போட்டான்…

சந்தனாவுக்கு ஏணியில் ஏறி எங்கே பழக்கம்!... அதுவும் காற்று வீசும் போது எல்லாம் நூல் ஏணி ஆடி கொண்டு இருந்தது சந்தனாவின் பயம் உணர்ந்த தாஸ்…அவர் முதலில் அவளை ஏணி மேலே ஏற சொன்னவர் அவர் பின்னால் ஏறினார் …

அவருக்கு பின்னால் கார்ட் ஏறினான் தாஸ் வயதான மனிதர் சந்தனாவை தொட்டு தூக்கலாம் …ஆனால் அவனால் அவள் நிழலை கூட நெருங்க முடியாது என்பதை விட அது தான் தணிகாசலம், மூர்த்தியின் கட்டளை….அதை மீறினால் அவனுக்கு கடுமையாக தண்டனை வழங்கபடும் …

சந்தனா கையை நூல் ஏணி பதம் பார்த்தது அவள் மேலே ஏற… அங்கே இருந்தவர் கை தூக்கி விட்டார் அது போல தாஸை கூட கார்ட் அவனே பாய்ந்து ஏறினான் …

சந்தனா “ அண்ணா அவர் எங்கே இருக்கிறார் என கேட்டு கொண்டு இருக்க தீயை ஒரளவு கட்டுப்படுத்தி விட்டு… கிளம்ப வந்த யது நந்தனுக்கு இவளை காண அதிர்ச்சியாக இருக்க சந்தனா என சத்தமாக அழைத்தான்…

அவன் குரல் கேட்டு திரும்பிய சந்தனா தன்னையறியாமல் நந்து என அழைத்தவாறே ஓடி போய் அவனை அணைத்து கொண்டாள்…உண்மையில் யதுவுக்கு இது இரண்டாவது அதிர்ச்சி நேற்று எனக்கு பயமாக இருக்கிறது என்னை தொட வேணாம் என முதலிரவில் கூறியவள்…இப்போ பொது இடத்தில் அணைப்பது என்றால் அவள் மனதில் நான் நுழைந்து விட்டேன் என்று தானே அர்த்தம்…

யது சந்தோஷமாக அவளை அணைத்து கொண்டவன் அவள் தலையை தடவி விட்டவன்…

யது “ என்ன மா! இந்த நேரத்தில் இங்கே வந்து இருக்க அதுவும் யாருக்கு தெரியாது போல…தெரிந்து இருக்க உன்னை இங்கே வர விட்டு இருக்க மாட்டாங்க தாஸ் அண்ணா என்ன இது” என அவரிடம் கேட்டான் .

மரியதாஸ் “ எந்தா கேப்டன் சொல்வது உங்களுக்கு ஏதும் ஆபத்து வந்து விடும் என மோள் பேடிச்சு போயி… ஞான் இவ்வளவு பரஞ்சும் அவள் கேட்க இல்லா அது தான் அவளை நானே அழைத்து வந்தேன்…கூட இவரும் வந்தார்” என்றார்…

யது “ என்ன மா நான் சீக்கிரமாக வருவேன் என சொல்லி விட்டு தானே வந்தேன் பிறகு எதற்காக அதுவும்…இந்த நைட் டைம்மில் வர வேணும் தாஸ் அண்ணா என்றதால் பரவாயில்ல… இதுவே வேற யாரும் என்றால் உனக்கு தானே தனா ஆபத்தாகி இருக்கும்…பெண்ணுங்க முதலில் யோசித்து செயல்பட வேணும் மா” என்றான்…

சந்தனா “ எனக்கு அது எல்லாம் நினைவுக்கு வரவில்லை உங்களுக்கு ஆபத்து என அங்கே இருப்பவர்கள் பேசி கொள்ள…எனக்கு அங்கே இருக்க முடியாமல் வந்து விட்டேன் உங்களுக்கு ஒன்றும் இல்லை தானே” என கேட்டவள் அவனை ஆராய்ந்தாள்…

அங்காங்கே சட்டையில் கரியும் சில காயங்களும் இருந்ததே தவிர யதுவுக்கு பெரிதாக ஏதும் இல்லை…

யது “ எனக்கு பெரிதாக ஒன்றுமில்ல சரி வா நம்ம கிளம்பலாம்… இனி அவங்க கிளீனிங் வேலை பார்க்க வேணும் “ என்று சொன்னவன் அவளை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு வந்தான்…அங்கு இவர்கள் வரவுக்காக மூர்த்தி, அபிராமி காத்து கொண்டு இருந்தார்கள்….அபிராமி ஏன்? சொல்லாமல் போன என மகளை திட்டினால் கூட அவள் யதுவை ஏற்று கொண்டது சந்தோஷமாக இருந்தது…

யது தன் ரூம்க்கு போனவன் குளித்து விட்டு வர சந்தனா… அவனுக்கு சாப்பிட சூடான பாதாம் பால், காயங்களுக்கு போட மருந்து கொண்டு வந்து இவனுக்காக காத்து இருந்தாள்…

யது “ என்ன தனா நீ இன்னுமும் தூங்க போகவில்லையா?....நீ தூங்கு மா நான் மருந்து போட்டு விட்டு வருகிறேன்” என்றவன்…. உடை மாற்றி விட்டு மருந்தை எடுக்க வந்தான் சந்தனா சட்டென அவன் கரம் பற்றியவள்.

சந்தனா “ நீங்க எப்படி போட முடியும் அது வசதியாக இருக்காது இருங்க நானே போட்டு விடுகிறேன்” என்றவள்..பஞ்சில் மருந்து தொட்டு அவன் காயத்தை கிளீன் பண்ண போனாள்…

யது “ ஒரு நிமிடம் தனா நீ தானே நேற்று சொன்ன மறந்து விட்டாயா!....என்னை தொட வேணாம் என்ற இப்போ நீ தொடுகிற இதற்க்கு என்ன மா அர்த்தம் “என கேட்டான்.

சந்தானா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள் மறு நிமிடம் அவன் கரத்தை பற்றி மருந்து போட்டு விட்டவள்….பிறகு எழுந்தவள் யதுவை பார்த்து

சந்தனா “ இதற்க்கு அர்த்தம் நீங்க நல்லவர் என்று என் புருஷன் என்று எனக்கு உங்க மேலே பயம், வெறுப்பு இல்லை என்று… அம்மா சொன்னது போல நீங்க தெய்வத்திற்கு வைத்து பூஜிக்கும் மலர் போல” என சொன்னவள் கிளம்ப போக…

யது சட்டென அவள் ஒரு கரத்தை பற்றி இழுக்க அவன் மடியில் வந்து விழுந்தாள் …யது மென்மையாக அவளை அணைத்து கொண்டவன் அவள் காதருகே…

யது “அப்போ உனக்கு என்னை பிடிக்க ஆரம்பித்து விட்டது உன் மனதில் நான் குடியேறி விட்டேன்…நம்ம வாழ தொடங்கலாம் இல்லையா?... என கேட்க சந்தனா முகம் சிவக்க அவள் ம் என்று ஒரு சம்மத்தை கொடுத்து… அவன் மார்பிலே சாய்ந்து கொள்ள யது அவளை சந்தோஷமாக அணைத்து கொண்டான்….


நிலவு வரும்…
 
Status
Not open for further replies.
Top