ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 35


துவாரகேஷ் பாலாவிடம் இனி உன் கப்பலில் யதுநந்தன் வேலை பார்க்க கூடாது என சொன்னார்… மறு முனையில் பாலா கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர்…பிறகு

பாலா “ துவா ஏன் அவன் வேலையின் போது குடித்து விட்டு உன் கிட்ட இல்ல சந்தனா பாப்பா கிட்ட தகராறு பண்ணினானா? இல்ல கப்பலில் உள்ளவங்க கிட்ட மரியாதை இல்லாமல் நடந்து கொண்டானா? நீங்க சுற்றி பார்க்க ஆசைபட்ட இடங்களுக்கு உங்களை கைடு கூட பாதுகாப்பாக அனுப்ப தவறினானா? இதில் அவன் செய்த குற்றம் என்ன? டா சொல்லு நான் உடனடியாக ஆக்சன் எடுக்கிறேன்” என்றார்.

துவாரகேஷ் எதை சொல்வார் இதில் ஒன்று கூட உண்மை இல்லையே! யாருமே அவனுக்கு எதிராக கை நீட்டி தப்பு சொல்ல மாட்டார்கள்…ஆனாலும் அவர் தோற்பதா? பிறகு அவர் கெளரவம் என்ன ஆவது என நினைத்தவர்.

துவாரகேஷ் “ இப்போ இதுவா உனக்கு முக்கியம் ஏன்? உன் நண்பன் கேட்டால் காரணம் தெரியாமல் நான் சொன்னதை செய்ய மாட்டாயா” என கோபமாக கேட்டார்.

பாலா “ போதும் துவா நீ செய்தது எல்லாம் எனக்கு தணிகாசலம் அங்கிள் தகவல் தந்து விட்டார்…யு நோ ஒன் திங் உங்களை அனைவரை விடவும் எனக்கு யது பற்றி தெரியும்…அவனின் அந்த நேர்மைக்காக தான் போராடி அவனை என் ஷிப் கேப்டன் ஆக்கினேன்…அவன் வந்த பிறகு தான் என் ஷிப்பில் லேடீஸ் அதிகமாக டிராவல் செய்கிறாங்க பிகாஸ் he is a gem person…அவர் சேவிஸ்ல் தான் அவங்க நிம்மதியாக பாதுகாப்பாக உணர்வதாக எனக்கு தகவல் வந்து இருக்கு….

இல்ல எனக்கு ஒன்று புரியவில்லை டா! நீ பிசினஸ்லில் டாப்பர் மேன் பட் எப்படி வியாட் விஷயத்தில் கோட்டை விட்ட…நீ பாப்பாவுக்கு கல்யாணம் பேச தான் என் கிட்ட இங்கே அழைத்து வந்தாக சொன்ன பட் நீ சொன்னது எல்லாம் பொய்… உன் நண்பன் கிட்டேயே பொய் சொல்லி இருக்க நீ இப்படி நடந்து கொள்வ என்று எனக்கு முன்னே தெரிந்து இருக்க நான் அங்கிளுக்கு தகவல் சொல்லி இருப்பேன்.

நானும் ஒரு பெண்ணுக்கு அப்பா ஒரு பேத்திக்கு தாத்தா அதை விட காயத்திரி என் தங்கச்சி கூட படித்தவள்…அண்ணா என வாய் நிறைய அழைப்பவள் அவள் பெண்ணு சந்தனா.. அவளுக்கு கேவலம் வியாட் போன்று அயோக்கியனா மாப்பிள்ளை….உன்னை எல்லாம் அந்தமான் கடலில் தள்ளி விட வேணும் டா உன் மேலே செம கோபத்தில் இருக்கிறேன்…

நீ இப்போ எதற்காக யதுவை வேலையை விட்டு தூக்க சொல்லுகிற என எனக்கு தெரியும்…யது அவனே விரும்பி என் வேலையை விட்டு போனால் தவிர நான் அவனை வேலையை விட்டு தூக்க மாட்டேன்…நீ நல்ல மாப்பிள்ளையை இழக்க நினைக்கலாம் ஆனால் என்னால் நல்ல கேப்டனை இழக்க முடியாது…நீ தானே சொல்வ தொழில் வேறு உறவு வேறு என்று அது போல தான் நட்பு வேறு தொழில் வேறு..

உண்மையை சொல்ல போனால் யதுவை போல மாப்பிள்ளை இப்போ கிடைப்பது கஷ்டம் டா… நான் யதுவை முன்னே சந்தித்து இருக்க அவன் தான் என் மாப்பிள்ளை அது சரி! அனைத்துக்கும் ஒரு கொடுப்பனை வேணுமே உனக்கு அது கிடைத்து இருக்கு அதை தவற விட்டு விடாதே…

பணம் என்ன டா பணம் இன்று என் கிட்ட உன் கிட்ட இருக்கும் நாளை வேற ஒருவன் கைக்கு போய் விடும்…ஆனால் மனிதநேயம் இந்த காலத்தில் காணா கிடைக்காத ஒன்று நீ மற்றவங்க சொல்வதை கேட்கும் ஆள் இல்லை என தெரியும்…இருந்தாலும் ஒரு நண்பனாக சொல்கிறேன் அங்கிள் கிட்ட பாப்பா கல்யாண விஷயத்தை விட்டு விடு அவர் நம்மை விட ஜீனியஸ்…சரி டா பாப்பா கல்யாணம் முடிவான பிறகு சொல்லு நான் இப்போ வைக்கிறேன்” என சொல்லி கால் கட் பண்ணினான்.

தணிகாசலம் “ போதுமா மாப்பிள்ளை உங்க நண்பன் அவனும் பரம்பரை பணக்காரன் பணத்தை விட…எதற்க்கு முக்கியதுவம் தருகிறான் என்று பாருங்கள் அவனுக்கு தெரிந்தது கூட உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்க ஒரு லுசர் என்று தான் சொல்ல வேணும்…சரி நாளை காலை என் பேத்தி கல்யாணம் ஒரு அப்பாவாக உங்க கடமையை செய்வீங்க என நம்புகிறேன்” என்றார்.

துவாரகேஷ் தன் அதிகாரம் பாலா, தணிகாசலத்திடம் சொல்லவில்லை… என்ற கோபத்தோடு அந்த இடத்தை விட்டு போக அவன் பின்னால் மரகதம் சென்றார்.

தணிகாசலம் “ ஓகே அவர் அப்படி தான் நம்ம இனி கல்யாண வேலைகளை பார்க்கலாம் நித்திலா நீ அக்காவை ரூம்க்கு அழைத்து போ கண்ணா…மாப்பிள்ளை நீங்களும் ரெஸ்ட் எடுங்க அருண் நீ இங்கே நில்லு உனக்கு வேலை இருக்கு என சொன்னார்…அவர் சொன்னது போல சந்தனா, யது தங்கள் ரூம்க்கு போனார்கள்.

அபிராமி “ அப்பா நாளை காலை கல்யாணம் என்றால் எப்படி பா மண்டபம், புடவை, நகை அது போல மாப்பிள்ளைக்கும் எல்லாம் ஏற்பாடு பண்ண வேணும்…தாலி யார் முறையில் பா செய்வது காயு தாலி இருக்கு ஆனா அது சந்து அப்பா கிட்ட தான் இருக்கு அதை கேட்டால் கூட வீம்புக்கு தர மாட்டார் என சொன்னாள்.

அருண் “ நான் நான் பேசுவதை தப்பாக நினைக்க வேணாம் யது என் பெஸ்ட் ப்ரண்ட் அவன் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்…அவன் கட்டிக்க போகிற பெண்ணு கழுத்தில் தன் அம்மா தாலியை கட்ட வேணும் என சொல்வான்…அது அந்த பெண்ணுக்கு உறுத்த கூடாது என்று அந்த தாலியை இன்னும் கொஞ்சம் பணம் போட்டு நீயூ மாடல் தாலி செயின் என்று செய்து வைத்து இருக்கிறான்….உங்களுக்கு ஓகே என்றால் அதை யூஸ் பண்ணலாமா அவன் கூடவே தான் அது இருக்கு” என்றான்.

தணிகாசலம் “ இதில் என்ன பா இருக்கு அம்மா என்றால் அனைவருக்குமே உசத்தி தானே தாராளமாக அதை பாவிக்கலாம்…அவங்க தீர்க்க சுமங்கலியாக போனவங்க தானே அதை நீ வாங்கி கொண்டு வா பா என்றார்… அருண் சரி என யதுவை தேடி போனான்.

தணிகாசலம் “ என்ன அபி மா இத்தனை வருடம் என் கூட இருந்தும் அப்பாவை நீ தெரிந்து கொள்ளவில்லையா? இன்று நீ கேட்ட அனைத்தும் வரும்…மூர்த்தி நீ நம்ம ஆளுங்களை அழைத்து போய் மணமேடையை தயார் செய்…கேணல் என் கூட வாங்க நான் உங்க கூட கொஞ்சம் யது பற்றி பேச வேணும்” என்றார்.

தணிகாசலம் சொன்னது போல அவர் தன் ஆளுங்க மூலமாக புடவைகள், வைர, நகைகள் எல்லாம் வரவழைத்து இருந்தார்…தனிபட்ட அவரின் ஹெலிகாப்டர் மூலமாக தான் எல்லாம் வந்து இறங்கியது அபி, சுசீலா அங்கே வந்து இருந்த தன் நண்பிகள் கூட சேர்ந்து மகளுக்கு பொருத்தமான முகூர்த்த புடவை ,நகைகள் எல்லாம் அபி தெரிவு செய்தாள்.

மணமேடை ஹோட்டல் ஹாலில் தான் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார் மூர்த்தி சந்தனாவை தூக்கி வளர்த்தவர் ஆயிற்றே… சந்தனாவை மட்டுமா காயத்திரியை கூட தான் அவள் ஒரு தடவை கூட இவரை அங்கிள் என அழைக்க மாட்டாள் சித்தப்பா என்று தான் அழைப்பாள்…அவள் மரணத்திற்கு காரணம் துவாரகேஷ் தான் என்று எண்ணியதால் தான் அவன் மேலே அவ்வளவு வெறுப்பு அவருக்கு…

மண்டபம் இயற்கை மலர்களால் தான் தணிகாசலத்தின் ஆளுங்க அலங்கரித்து கொண்டு இருந்தனர்…யதுவுக்கு பட்டு வேட்டி சட்டை, செயின், பிரேஸ்லெட், மோதிரம் என… தணிகாசலம் அனைத்தும் எடுத்தவர் அதை மூர்த்தியிடம் கொடுத்து அவனிடம் கொடுத்து வர சொல்ல…தாத்தா என நித்திலன் வந்தான்.

தணிகாசலம் “ வாடா கண்ணா தாத்தா உனக்கு பட்டு வேட்டு, சட்டை தங்கத்தில் கரை வைத்தது எடுத்து இருக்கிறேன்… கூடவே இந்த செயின், பிரேஸ்லெட், மோதிரம் எல்லாம் அளவு சரியா என போட்டு பாரு” என்றார்.

நித்திலன் “ தாத்தா எனக்கு இது வேணாம் வேட்டி இடுப்பில் நிற்காது நழுவி நழுவி போகும்…நான் ஜீன்ஸ் பேண்ட் போடவா இந்த நகைகள் எல்லாம் லேடீஸ் தான் போடுவது எனக்கு வேணாம்” என்றான்.

மூர்த்தி “ நித்திலா என்ன இது? உன் அப்பன் போல சொல் பேச்சு கேட்காமல் இருக்க…ஐயா உனக்கு பார்த்து பார்த்து ஆசையாக எடுத்தது பேசாது போட்டு காட்டு இதை நான் மாப்பிள்ளை கிட்ட கொண்டு கொடுத்து விட்டு வருகிறேன் “என்றார்.

தணிகாசலம் “ மூர்த்தி இப்போ எதற்காக அவனை திட்டுகிற அவன் துவாரகேஷ் பையன் என்றாலும் கூட என் பேரன்…கண்ணா எனக்கு நீ தானே டா வாரிசு அக்கா நாளை வேற ஒருவருக்கு நாளை சொந்தமாகி விடுவாள்…பிறகு அவளை உரிமை கொண்டாட முடியாது நீ அப்டியா? என் கடைசி காலம் வரை கூட வருபவன் உன்னை அழகு படுத்தி பார்க்க தாத்தாவுக்கு ஆசையாக இருக்காதா டா? என கேட்டார் நித்திலன் அவரை அணைத்து கொண்டவன்.

நித்திலன் “ யு ஆர் மை பெஸ்ட் தாத்தா உங்களுக்காக நான் போடுகிறேன் ஆனா அக்கா ரிசப்ஷனுக்கு எனக்கு பிடித்த டிரஸ் தான் சரியா?…தாத்தா இதை யது அண்ணாவுக்கு நான் கொண்டு கொடுக்கட்டுமா என கேட்டான்.

தணிகாசலம் சரி என நித்திலன் கூட ஒரு கார்ட் தட்டை தூக்கி வர யது ரூம்க்கு கதவை தட்டி விட்டு போனான்…யது, அருண் பேசி கொண்டு இருந்தவர்கள் இவனை காண..

அருண் “ வாடா நித்திலா உனக்கு தான் ரொம்ப குஷியாக இருக்கும்…யது உன் நண்பன் இப்போ உன் அக்கா புருஷன்” என சொன்னான்.

நித்திலன் “ அண்ணா அதை அங்கே வைத்து விட்டு நீங்க கிளம்புங்க” என்றான் கார்ட் தட்டை வைத்து விட்டு கிளம்பினான்.

நித்திலன் “ யஸ் இனி என் அக்கா என் கூட இருப்பாள் அவளை நான் நினைத்த நேரத்திற்க்கு பார்க்க முடியும்…அது போல மாமா கிட்ட நான் நிறைய விஷயங்கள் ஜாலியாக பேச முடியும் என்றான்.

யது “ என்ன நித்திலா புதுசாக மாமா சரி இது என்ன தட்டு” என கேட்டான்.

நித்திலன் “அம்மா தான் சொன்னாங்க இனி உங்களை மாமா என அழைக்க வேணும் என்று…இது தாத்தா உங்களுக்கும் அருண் அண்ணாவுக்கும் கொடுத்து விட்டார் என கொண்டு வந்தை எடுத்து கொடுத்தான்.

யது அதை திறந்து பார்த்தவன் ஏதும் பேசாது வேட்டி, சட்டையை எடுத்தவன் நகைகளை…நித்திலன் கிட்ட கொடுத்தவன்.

யது “ நித்திலா நான் இது எல்லாம் போட மாட்டேன் தாத்தா கிட்ட கொடு அவர் என்னை புரிந்து கொள்வார்” என்றான்…நித்திலனும் அதை எடுத்து கொண்டு போய் தணிகாசலத்திடம் கொடுக்க…. அவருக்கு யது இப்படி தான் நடந்து கொள்வான் என தெரியும் என்பதால் சின்ன சிரிப்போடு அதை வாங்கி கொண்டார்.


நிலவு வரும்…..




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 36


துவாரகேஷ் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார் அவர் கூட தான் மரகதமும் இருந்தார்.

மரகதம் “ தம்பி நான் ஒன்று சொல்வேன் கோபப்படாதே! வந்து அந்த கேப்டன் பையனை சந்தனா கட்டி கொண்டால் என்ன பா…அவன் நல்ல பையனாக தான் இருக்கிறான் என்ன வசதி வாய்ப்பு இல்லை நீ அழைத்து வந்த மாப்பிள்ளை…. பொறுக்கி பயல் உன்னையே கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டான் அவனை விட இவன் பரவாயில்ல…. சொத்து சுகத்திற்க்கு ஆசைபடாத பயல் நம்ம பெண்ணுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவன்” என்றார்.

துவாரகேஷ் “ அம்மா என்று பார்க்க மாட்டேன் பேசாது போய் விடு செம கோபத்தில் இருக்கிறேன்…எல்லாம் அந்த வியாட் நாயால் தான் சரியாக விசாரிக்காமல் விட்டது என் தவறு தான்…அதற்காக இந்த திமிர் பிடித்தவனுக்கு என் பெண்ணை கொடுப்பேனா! என்னை அவமானப்படுத்த வேணும் என்ற நோக்கத்தில் ஒரேய நேரத்தில் தணிகாசலம், கேணல், அபிராமி கூட அந்த பாலா பயல் எல்லாம் பிளான் பண்ணி இவனை மாப்பிள்ளையாக்கி விட்டாங்க…

என் ஸ்டேட்டஸ் என்ன? சொத்து மதிப்பு என்ன? இவனை எல்லாம் என் மாப்பிள்ளை என்று…. என் பிசினஸ் சார்க்கிளில் அறிமுகப்படுத்தி வைத்தால் என் கெளரவம் என்ன ஆவது சந்தனா பெத்த அப்பன் என் நான் சொல்வதை கேட்காமல் அந்த தணிகாசலம் சொல் பேச்சு கேட்கிறாள்…இதற்க்கு தான் நான் அவளை அவர் கூட பழகவிடுவதில்லை ஆனால் அபிராமி அவளுக்கு அவர் மேலே அன்பை உண்டாக்கி விட்டாள்….பார்க்கிறேன் எனக்கு ஒரு டைம் வராமலா இருக்கும்” என்றார்.

மரகதம் “ அப்போ நம்ம நாளைக்கு கல்யாணத்திற்க்கு போக வேணாமா பா” என கேட்டார்.

துவாரகேஷ் “ அப்படி தான் முதலில் நினைத்தேன் பிறகு அந்த தணிகாசலம் ஊர் உலகுக்கு முன்…பெத்த அப்பா இருக்கும் போது தாத்தா நான் தான் பேத்தி கல்யாணத்தை நடத்தினேன் என சொல்வார்…அதனால் நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு போகிறோம்” என்றார்.

கப்பலில் பயணம் செய்த குடும்பங்களில் இரண்டு வட நாட்டு குடும்பமும் இருந்தது அதில் இருந்த பெண்கள் தான்…அவர்கள் மேக்கப் கோர்ஸ் படித்து இருக்கிறார்கள் சந்தனாவுக்கு நாங்க அலங்காரம் கல்யாணத்திற்க்கு செய்கிறோம்…என சொல்லி இருந்தார்கள் சந்தனாவுக்கு மெஹந்தி அழகாக வரைந்து இருந்தார்கள்.

மற்ற வேலைகளை ஆண்கள் பார்ப்பதால் சந்தனா கூட அபிராமி இருந்தார் நித்திலன் யது கூட கொஞ்சம் நேரம் இருந்து விட்டு வருகிறேன் என்று….அவன் ரூம்க்கு ஓடி விட்டான் சும்மாவே அவனை பிடிக்கும் இப்போ கேட்கவா வேணும்! அபிராமி மகளின் திருமண புடவை, நகைகளை சரி பார்த்து எடுத்து வைத்து விட்டு அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட வந்தார்.

அபிராமி “ பாப்பா ஆ காட்டு நல்லா சாப்பிட்டால் தான் தூக்கம் நல்லா வரும் அப்போ தான் நாளைக்கு முகம் தெளிவாக இருக்கும்…அட ரொம்ப அழகாக அந்த பெண்ணுங்க வரைந்து இருக்கிறாங்க ம்! இதுவே சென்னையில் உன் கல்யாணம் நடந்து இருக்க… உன் தாத்தா சென்னையே வியந்து பார்க்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்து இருப்பார்…

உன் அப்பா வேலையால் தெரியாத ஊரில் தெரியாத ஆளுங்க முன்னால் கல்யாணம் நடக்க போகிறது…என்ன செய்வது எல்லாம் உங்க அப்பாவால் வந்தது ஆனால் ஒன்று அவர் செய்த வேலையால் தான் இப்படிப்பட்ட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தார்….உனக்கு மாப்பிள்ளையை பிடித்து இருக்கு தானே! தங்கம் உன் அப்பா போல இல்லை அவர் உன் தாத்தா போல ரொம்ப நல்லவர்” என்றார்.

அபிராமி பேசுவதை சந்தனா கேட்டு கொண்டு இருந்தாலே தவிர அவள் மறு வார்த்தை ஏதும் பேசவில்லை…அபிராமி அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவர் நெஞ்சில் சட்டென ஏதோ தாக்க அவர் அவள் தலையை தடவி விட்டு அவள் முகத்தை தொட்டு நிமிர்த்தி விட்டவர்.

அபிராமி “என்ன தங்கம் அமைதியாக இருக்க உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லையா? இல்ல யதுவை பிடிக்கவில்லையா? மா ஏது என்றாலும் அம்மா கிட்ட சொல்லு” என்றார்.

சந்தனா “அம்மா எனக்கு பயமாக இருக்கு மா கேப்டன் யாரென எனக்கு தெரியாதே? அவரும் அந்த டான் போல இருந்தால் … எனக்கு இந்த கல்யாணம் வேணாம் மா நான் உங்க கூடவே இருக்கிறேன்” என சொன்னாள் …அவள் பயம் அபிராமிக்கு புரிந்தது அவர் அவள் கன்னத்தை தடவி விட்டவர்.

அபிராமி “ நீ காலம் பூராகவும் அம்மா கூட இருந்தாலும் அம்மாவுக்கு சந்தோஷம் பாப்பா நீ பிறந்த போ முதலில் தூக்கியவளே நான் தான்…ஆனா உன் அப்பாவை நம்பி உன்னை தனியாக விட முடியாது காரணம் அவருக்கு ஸ்டேட்டஸ் பைத்தியம் பிடித்து இருக்கு…அதை சரி செய்ய ரொம்ப நாள் எடுக்கும் தம்பி ஆம்பள பையன் அதை விட அவனிடம் உங்க அப்பா அதிகாரம் செல்லாது அவனை கட்டுப்படும் ஒரு நபர் உன் தாத்தா தான்…

ஆனா நீ அப்படி இல்ல பாப்பா பொம்பள புள்ள அதை விட பயந்தவள் இப்போ எல்லாம் படித்த தைரியமான பெண்ணுங்களே…. இந்த சமூகத்தில் வாழ எதிர் நீச்சல் அடிக்க வேண்டி இருக்கு நீ அழகான ரோஜா அதை காவல் காக்க வேணும் என்றால் யது போல ஒரு முள் தேவை…முள் எப்பவுமே ரோஜாவை காயப்படுத்துவது இல்லை மாறாக அதை அத்துமீறி பறிக்க நினைப்பவர்கள் கையை தான் அது பதம் பார்க்கிறது…

யதுவும் அது போல தான் உன்னை ராஜகுமாரி போல பார்த்து கொள்வான்…வெளி தோற்றம் கடினமாக இருக்கலாம் ஆனால் அவனுக்கு உள்ளே இருக்கும் மனசு தூய்மையானது…இது அவசர திருமணம் என்றாலும் கூட உன் தாத்தா, அம்மா அப்படி சரியாக விசாரிக்காமல் ஒருவனுக்கு கட்டி கொடுப்போமா? அம்மா மேலே நம்பிக்கை வை பாப்பா… நான் வாழ்வதே உனக்காவும் தம்பிக்காவும் தானே இதை முழுதாக சாப்பிடு சீக்கிரமாக தூங்க போக வேணும்” என்றார்.

மறுநாள் காலை விடிந்தது அந்தமான் இன்று விஷேசம் பூண்டு இருந்தது… சாதாரணமாக இயற்கையை ஒட்டி இருப்பதால் அந்தமான் அழகாக இருக்கும்…இன்று கல்யாண அலங்காரத்தில் ஜெலித்து கொண்டு இருந்தது சுற்றலா வந்து இருந்த வெளிநாட்டவர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள வந்து இருந்தனர்.

சந்தானவை அபிராமி எழுப்பி தலைக்கு குளிர்க்க வைத்து டிபன் ஊட்டி விட்டவர் அவளுக்கு புடவை கட்ட ஆரம்பிக்க கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது….அவர் யாராக இருக்கும் என கதவை திறக்க நித்திலன் தான் கையில் வேட்டி சட்டையை வைத்து கொண்டு இருந்தான்.

நித்திலன் “ அம்மா இதை எனக்கு கட்ட வரவில்லை எனக்கு கட்டி விடு மா இல்ல? நான் வேற டிரஸ் போட்டு கொள்ளட்டுமா? என கேட்டான்.

அபிராமி “ தம்பி அம்மாவுக்கும் சரியாக இதை கட்ட தெரியாது பா நீ தாத்தா கிட்ட போ கட்டி விடுவார்….அம்மா அக்காவுக்கு புடவை கட்ட வேணும் இது அட்ஜடஸ்பிள் வேட்டி தானே” என சொன்னார்.

நித்திலன் சரி என கிளம்பி போக அபிராமி சந்தனாவுக்கு புடவை கட்ட ஆரம்பிக்க மீ்ண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது…

அபிராமி “ இவனை வர வர சொல் பேச்சு கேட்பது இல்லை… இவனுக்கு எல்லாம் உன் அப்பா தான் சரி பாப்பா இரு” என நித்திலனுக்கு அர்ச்சனை செய்து கொண்டே கதவை திறக்க வெளியே நின்றது…. சுசீலா கூடவே வடநாட்டு பெண்ணுங்க நேற்று சந்தனாவுக்கு மெஹந்தி போட்ட பெண்ணுங்க…

சுசீலா “ என்ன அபிராமி நீயே உன் பெண்ணுக்கு புடவை கட்ட ஆரம்பித்து விட்ட போல…நம்ம பழைய ஆளுங்க இப்போ இருக்கும் பேஷனில் புடவை கட்ட தெரியாது விடு இவங்க பார்த்து கொள்ளட்டும்….கல்யாண நாள் நம்ம பாப்பா ஜொலிக்க வேணாமா ரக்ஷா, பிந்து போய் உங்க அலங்கார வேலைகளை பாருங்க மா” என சொல்ல அவர்கள் சந்தனாவை அலங்கரிக போனார்கள்.

சுசீலா “ அபி துவாரகேஷ் தம்பி கல்யாணத்திற்க்கு வரும் தானே? …எந்த பிரச்சனையும் பண்ண கூடாது யது வேற ரோசக்காரன் அது தான் எனக்கு யோசனையாக இருக்கு” என்றார்.

அபிராமி “ எனக்கும் அது தான் ஆன்ட்டி பயமாக இருக்கிறது அவருக்கு சந்தனா மேலே பாசம் இருக்கு தான்! ஆனா அதை விட அவருக்கு தன் ஸ்டேட்டஸ் பெரிது…அப்பா நிற்பதால் அடக்கி வாசிப்பார் ஆனா என்ன அந்த கோபம் எல்லாம் மாப்பிள்ளை மேலே தான் பாயும்… பார்க்கலாம் என் பெண்ணு கல்யாணம் நல்லபடியாக நடந்தால் எனக்கு அது போதும்” என்றாள்.

அலங்காரம் எல்லாம் முடிய பெண்கள் வந்து சுசீலா, அபிராமியை அழைக்க இவர்கள் போய் பார்க்க அபிக்கு கண்கள் கலங்கியது….காயத்திரியின் திருமணத்தின் போது அவள் தானே கூட இருந்தது அவர்கள் நட்பு நகமும் சதையும் போல இணை பிரியாத நட்பு அந்த உறவுக்காக தான்… சந்தனாவை விட்டு கொடுக்க முடியாமல் அவள் துவாரகேஷையை கல்யாணம் பண்ணியது துவாரகேஷ் ஸ்டேட்டஸ் பைத்தியம் தானே தவிர கொடுமைக்கார கணவன் அல்ல…

சந்தனாவுக்கு அந்தி வான நேரத்தில் தான் முகூர்த்த புடவை எடுத்து இருந்தாள் அபிராமி…அது பூராகவும் தங்க நூல்கள் கொண்டு நெய்பட்டது வைர கற்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்ட புடவை காயத்திரி நகைகள் சந்தனா நகைகள் அதை விட தணிகாசலம் பேத்திக்கு புதிதாக செய்த நகைகள்…. எல்லாம் சந்தனா உடலில் அலங்கரிக்க அவள் அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் சிலை போல இருந்தாள்.

அபிராமி அவள் அருகே போய் முகத்தை தொட்டு திருஷ்டி எடுத்து விட்டு அபி “ என் காயு போலவே இருக்க பாப்பா…எத்தனை வருடங்கள் அவள் நிழலை பார்த்து கொண்டு இருந்தேன்….இப்போ உன் மூலமாக அவள் எனக்கு உயிரோடு வந்து விட்டாள் நீ நூறு வருடம் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேணும் தங்கம்” என கூறி அவளை அணைத்து கொண்டாள்.

யது நந்தனுக்கு வேட்டி கட்டி அதிக பழக்கம் இல்லை சிறு வயதில் தாய் இருக்கும் போது கட்டி விட்டார்…அவர் போன பிறகு தாயாக இருந்த தந்தை அதற்க்கு பிறகு அவன் கோவிலுக்கு மட்டுமல்ல உறவுகளின் விஷேசங்களுக்கு கூட போனது கிடையாது…பிறகு எங்கே வேட்டி கட்டுவது சரி அருணிடம் கேட்கலாம் என்றால் அவனை ஆளை காணவில்லை சரி நம்ம முயற்ச்சி செய்து பார்க்கலாம் என்று தணிகாசலம் வாங்கி கொடுத்த பட்டு வேட்டியை பிரிக்க ஆரம்பிக்க கதவு தட்டபட்டது…

அருணாக தான் இருக்கும் என போய் கதவை திறக்க வெளியே நித்திலன் கூடவே மூர்த்தி நின்று இருந்தார்கள்…ஹாய் அத்தான் என நித்திலன் உள்ளே வர அவனை பின் தொடர்ந்து வந்தார் மூர்த்தி.

மூர்த்தி “ மாப்பிள்ளை நான் அபிராமியின் அப்பா ஐயாவின் பி. ஏ அவர் உங்களுக்கு ஏதும் தேவை என்றால் கேட்க சொல்லி அனுப்பி இருந்தார்…என்ன தம்பி வேட்டி கட்ட கஷ்டமாக இருக்கா இந்த கால புள்ளைங்களுக்கு இது எல்லாம் எங்கே தெரிய போகிறது கொடுங்க அதை…நான் கட்டி விடுகிறேன்” என்றார்.

யது சங்கடமாக அவரை பார்த்தவன் “வேணாம் சார் நீங்க அத்தையின் அப்பா சந்தனா, நித்திலனின் தாத்தா…நீங்க போய் எனக்கு வேணாம் என் ப்ரண்ட் வருவான் அவன் கட்டி விடுவான்” என்றான்.

மூர்த்தி “ அட! சும்மா இருங்க மாப்பிள்ளை நான் இவங்களுக்கு தாத்தா என்றால் உங்களுக்கும் தான்…இந்த சார் மோர் எல்லாம் வேணாம் கொடுங்க நித்திலா போய் அத்தானின் சட்டையை எடுத்து வா என சொல்லியவர் யதுவுக்கு வேட்டி கட்ட ஆரம்பித்தார்.


நிலவு வரும்….
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 37


மூர்த்தி யது நந்தனுக்கு வேட்டி கட்டியவர் அவனுக்கு நித்திலன் கொண்டு வந்த பட்டு சட்டையை கொடுத்தார் …


மூர்த்தி “ தம்பி என்ன டா! இதை இப்போ பேசுகிறான் என தப்பாக நினைக்க வேணாம்….சந்தனா பாப்பா நான் தூக்கி வளர்த்த என் பேத்தி அவளுக்கு நீங்க நூறு வீதம் பொருத்தமானவர் தான்…இருந்தாலும் அவள் ரொம்ப மென்மை பயந்த சுபாவம் அவளை அப்படி ஆக்கியது அவள் அப்பாவும் அவள் பாட்டியும் தான்…நீங்க கொஞ்சம் கோபக்காரர் நான் உங்க கிட்ட கேட்பது ஒன்று தான் பாப்பா கிட்ட உங்க கோபத்தை காட்டி விட வேணாம்…


அவளால் அதை தாங்கி கொள்ள முடியாது அவள் கூட பழகி பாருங்க அவள் எவ்வளவு உயர்ந்த பெண் என்று தெரியும்…நீங்க அவள் அப்பா பேசிய பேச்சை பெரிதாக எடுத்து கொள்ள வேணாம் அவர் முதலில் நல்லவராக தான் இருந்தார் பணம் வந்த பிறகு தான் இந்த மாற்றம் …நீங்க தான் இனி பாப்பாவுக்கு எல்லாம்” என்றார்.


யது “ இதை நீங்க சொல்ல வேணுமா தாத்தா எனக்கும் பணக்கார ஆளுங்களுக்கும் சுத்தமாக ஆகாது….அதையும் மீறி சந்தனாவை நான் கட்டி கொள்ள சம்மதம் சொன்ன காரணம் அவள் பணக்கார பெண்களில் ரொம்ப வித்தியாசமானவள்….மனைவியை அவமானப்படுத்தும் கலையை என் பெத்தவங்க எனக்கு கற்று கொடுக்கவில்லை…


அது போல மிஸ்டர் துவாரகேஷ் அவரை வைத்து என் பொண்டாட்டியை கொடுமைபடுத்தும் ரகமும் நான் இல்லை! நீங்க கவலைப்பட வேணாம்” என்றான்…


ஹோட்டல் பார்ட்டி ஹாலில் தான் மண்டபம் அமைத்து இருந்தனர் அதனால் அங்கு அனைவருமே வர தொடங்கி விட்டனர்…தணிகாசலம் ,மூர்த்தி பெண் வீட்டு சார்பாக ஆளுங்களை வரவேற்று கொண்டு இருக்க… கேணல், அவர் மனைவி மாப்பிள்ளை வீட்டு சார்பாக ஆளுங்களை வரவேற்று கொண்டு இருந்தனர்…இன்னும் துவாரகேஷ் வரவில்லை அதை பற்றி அங்கு உள்ளவர்கள் பெரிதாக கவலைபடவில்லை…யதுவை விட சந்தனாவுக்கு பொருத்தமான வரன் யார் இருக்க போகிறார்கள் என்பது அனைவரின் எண்ணமும்…


நல்ல நேரத்தில் யது நந்தன் அவன் கூட மாப்பிள்ளை தோழனாக அருண் கப்பலில் வந்த இன்னும் சிலரும் சேர்ந்து வந்தனர்….அபிராமி அவனுக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து வரவேற்றாள்… அவன் உள்ளே வர போக ஒரு நிமிஷம் மாப்பிள்ளை என்ற தணிகாசலம்…


தணிகாசலம் “ கண்ணா நித்திலா உன் மாமாவுக்கு ஏதோ போட போவதாக சொன்ன அதை போடு பா “என்றார்…நித்திலன் வந்தவன்


நித்திலன் “ மாமா நான் உங்க ப்ரண்ட் தானே இதை வேணாம் என சொல்ல கூடாது சரியா? என கேட்டவன்…யது கழுத்தில் பிளாட்டின செயினில் டைமண்ட் பதித்த பெண்டனை போட்டவன்…அவன் கை பற்றி வைர பிரேஸ்லெட் அது போல மோதிரத்தை போட்டான்…தணிகாசலத்திற்க்கு தெரியும் யார் கொடுத்தால் யது மறுக்க தயங்குவானோ! அவனை வைத்து போட வைத்தார்….


தணிகாசலம் “ இதை நீங்க மறுக்க முடியாது மாப்பிள்ளை இது அன்பு பரிசு மட்டுமல்ல மச்சான் செய்ய வேண்டிய சீர்… அதை தான் என் பேரன் செய்து உள்ளான் வாங்க உள்ளே போகலாம் என கூறி அழைத்து போனார்…


அவனை மணமேடையில் இருக்க வைத்தார் நல்ல காலம் அந்தமானில் சில பிராமண குல வழி தோன்றல்கள், கோவில் இருந்தால் பிரச்சனை இல்லாமல் போனது… ஐயர் யதுவுக்குரிய சடங்குகளை சொல்ல அவன் செய்ய ஆரம்பித்தான்…


தணிகாசலம் அருகே நின்ற கேணல் “ சார் துவாரகேஷை இன்னும் காணவில்லையே! அவர் வருவாரா?....அவர் அம்மாவை கூட இன்னும் காணவில்லை சந்தனா அவர் ஒரேய பெண்ணு அவர் இல்லாமல் எப்படி? என கேட்டார்….


தணிகாசலம் “ வருவார் கேணல் என்னை ஜெயிக்க வேணும் அவருக்கு…அது மட்டுமல்ல அவருக்கு சந்தனா மேலே பாசம் இருக்கு அதை காட்டும் விதம் தெரியாது என்பதை விட அவர் அம்மா அவரை காட்ட விடவில்லை….இருந்தால் கூட அப்பா இல்லையா? பெத்த பாசம் விடுமா வருவார்” என்றார்…


மூர்த்தி “ நீங்க தான் ஐயா இப்படி சொல்கிறீங்க வருபவராக இருந்து இருக்க எப்பவோ வந்து இருக்க வேணும்….அவருக்கு பெண் முக்கியம் இல்லை உங்களை ஜெயிப்பது தான் முக்கியம்” என கோபமாக சொன்னார்…


தணிகாசலம் “ உனக்கு வர வர கோபம் அதிகமாக வருகிறது மூர்த்தி சாப்பாட்டில் காரத்தை குறைத்து போட சொல்ல வேணும்…வருவார் டா கொஞ்சம் பொறுமையாக இருப்போம் வரவில்லை என்றால் நம்ம செய்யலாம்” என்று சொன்னார்….


ஐயர் நல்ல நேரம் ஆரம்பமாக போகிறது பெண்ணை அழைத்து வாங்க என சொன்னார்…


தணிகாசலம் “ அபி மா பாப்பாவை அழைத்து வா நித்தி நீ போய் அப்பா, பாட்டி கிளம்பி விட்டாங்களா என பார்த்து வா கண்ணா “என்றார்…


நித்திலன் “ தாத்தா நீங்க சொன்னா நான் எதையும் செய்வேன் ஆனால் இது மட்டும் செய்ய மாட்டேன்….அப்பா அக்காவை அந்த டானுக்கு கல்யாணம் செய்ய பார்த்தார் அதனால் அவரை எனக்கு பிடிக்கவில்லை” என கோபமாக சொன்னான்…


தணிகாசலம் அவன் வயது அப்படி சந்தனா மேலே பாசம் உள்ளவன் அது தான் துவாரகேஷ் மேலே கோபமாக மாறி இருக்கிறது…. இது பற்றி இனி இங்கே விவாதிப்பது சரியாக இருக்காது இது என் குடும்ப விஷயம் என நினைத்தவர் அமைதியாக இருந்தார்…


கொஞ்ச நேரத்தில் அபிராமி கூடவே அவள் சில தோழிகள் வட நாட்டு பெண்கள் சிலர் சந்தனாவை அழைத்து கொண்டு வந்தனர்…அவள் வர மந்திரம் சொல்லி கொண்டு இருந்த யது நிமிர்ந்து பார்த்தவன் பார்வை அசையாமல் நின்றது….


அவன் சந்தனாவை இப்படிப்பட்ட ஒரு அலங்காரத்தில் காண்பது இது தான் முதல் தடவை அவள் பணக்கார பெண் என்றாலும் கூட சாதாரணமாக தான் டிரஸ், நகை போடுவாள்….அதுவே பல லட்சங்களில் தான் இருக்கும் ஆனால் அதிக அலங்காரம் செய்ய மாட்டாள்…இன்று கல்யாணத்திற்க்கு என்று விஷேச அலங்காரத்தில் தேவதை போல ஜொலித்தாள்…யதுவை போல தான் மற்றவர்களும் நினைத்தார்கள்…


தணிகாசலம் கண்கள் கலங்கியது எத்தனை வருடங்களுக்கு பிறகு தன்னை விட்டு போன பெண்ணை பார்ப்பது போலவே இருந்தது….மூர்த்திக்கும் அப்படி தான் அவரும் காயத்திரி வளரும் போது இருந்தவர் ஆயிற்றே சித்தப்பா சித்தப்பா என அழைத்து கொண்டு சுற்றும் அவளை அவரால் சுலபமாக மறக்க முடியுமா?...


மூர்த்தி “ ஐயா! நம்ம காயா பாப்பா திரும்ப வந்தது போல இருக்கிறது இல்லையா? இவளாவது நூறு வருஷம் தீர்க்க சுமங்கலியாக வாழ வேணும்” என்றார்….


நித்திலன் தமக்கையை காண அக்கா என ஓடி வந்து… அவளை இடையோடு அணைக்க சந்தனா முகம் மலர அவனை அணைத்தாள்…


நித்திலன் “ அக்கா நீ பிரின்சஸ் போல ரொம்ப அழகாக இருக்க… அக்கா என சந்தோஷமாக” சொன்னான்….சந்தனா அவனின் தலையை தடவி விட்டாள்…


அபிராமி “ சரி நித்திலா அக்கா புடவையை கசக்கி விடாதே கண்ணா பிறகு பேசு சரியா? சந்து வா மா மணவறைக்கு போகலாம்” என்றவர்…. அவளை அழைத்து கொண்டு யது நந்தன் பக்கத்தில் இருக்க வைத்தார்….


சந்தனா தலையை குனிந்து கொண்டு தான் யது பக்கத்தில் அமைதியாக இருந்தாள்…ஐயர் அவள் செய்ய வேண்டிய சடங்குகளை சொல்ல செய்ய ஆரம்பித்தாள்… யதுவுக்கு அவள் தயக்கம் தெரியும் அதனால் மனதில் சிரித்து விட்டு அமைதியாக இருந்தான்….


சடங்குகள் முடிய இனி தாலி கட்டும் நிகழ்வு ஆரம்பிக்க போக…


ஐயர் “ பெண்ணோட தோப்பனார் எங்கே? அவரை வர சொல்லுங்கோ தாரை வார்த்து கொடு நாழி ஆயிற்று” என சொன்னார்…


அனைவருமே தணிகாசலத்தை தான் பார்த்தனர் இன்னும் துவாரகேஷ் வரவில்லை….


கேணல் “ தணிகாசலம் சார் பரவாயில்ல இது பற்றி இப்போ பேச இடமும் நேரமும் இல்லை…தாத்தா என்றாலும் கூட அப்பா போல தானே நீங்க வந்து தாரை வார்த்து கொடுங்க…யது எங்க பேரன் போல தானே நாங்க தாரை வாங்கி கொள்கிறோம்” என்றார்….


அவர் சொன்னது சரி இது பற்றி பேச இந்த நல்ல நாளில் தேவையில்லாத ஒன்று…பிறகு பேசி கொள்ளலாம் என்பதால் தணிகாசலம் தன் செருப்பை கழட்டி விட்டு மணமேடைக்கு ஏற போக…


“ பெத்த அப்பா நான் இருக்கும் போது என் பெண்ணுக்கு முறை செய்ய நீங்க யார்? என கேட்டு கொண்டு துவாரகேஷ் வர அவர் பின்னால் மரகதம் பட்டு சேலை, வைர நகைகள் என வந்தார்….அவர் பின்னால் துவாரகேஷ் கார்ட்ஸ் வெள்ளி தட்டுகளில் ஏதோ கொண்டு வர அதை சிவப்பு பட்டு துணியால் மூடி இருந்தது…தணிகாசலம் ஏதும் பேசாமல் நின்றார்…


மூர்த்தி “ உங்களுக்கு இப்போ தான் அப்பா என்ற எண்ணம் வந்ததா இதுவா! ஒரு அப்பா பெண்ணு கல்யாணத்திற்க்கு வரும் நேரம்…ஏதோ விருந்தாளிங்க போல வாறீங்க அவங்க கூட டைம்க்கு வந்து விட்டாங்க… உங்களை விட பாப்பாவுக்கு சடங்கு செய்ய ஐயா தான் தகுதியானவர்…ஐயா நீங்க போய் பாப்பாவை தாரை வார்த்து கொடுங்க” என கோபமாக சொன்னார் துவாரகேஷ் கோபமாக ஏதோ பேச வந்தார்.


தணிகாசலம் “ தப்பு மூர்த்தி நீ என் மேலே கொண்ட அன்பில் இப்படி பேசுகிற…ஒரு பெண்ணுக்கு அப்பா எவ்வளவு முக்கியம் என்று பெண்ணை பெத்த உனக்கும் எனக்கும் தெரியும்….அப்பா இல்லை என்றால் பரவாயில்ல இது இருந்தும் அவர் உரிமையை பறிப்பது பாவம்…ஆயிரம் பிரச்சனை இருக்கட்டுமே அது வேறு இது வேறு மாப்பிள்ளை நீங்க போய் உங்க பெண்ணை தாரை வார்த்து கொடுங்க” என்றார்….


துவாரகேஷ் மூர்த்தியை முறைத்து விட்டு மணமேடைக்கு போனார் அவருக்கும் மகள் மண கோலத்தில் காண கண்கள் கலங்கியது…அவர் ஐயர் சொன்ன சடங்குகளை செய்தவர் அபிராமி கூட சேர்ந்து சந்தனா கை பற்றி யது கையில் வைத்து தாரை வார்த்து கொடுத்தார்….அதை யது கூட சேர்ந்து கேணல் அவர் மனைவி சுசீலா வாங்கி கொண்டர்….


அதன் பிறகு தாலியை அங்கே உள்ள பெண் ஒருத்தி ஆசி வாங்கி கொண்டு வந்து ஐயரிடம் கொடுக்க…அவர் அதை வாங்கி யதுவிடம் கொடுக்க நல்ல சுப முகூர்த்த நேரத்தில் அவன் சந்தனா கழுத்தில் கட்டி தன்னில் சரிபாதியாக ஏற்று கொண்டான்…



நிலவு வரும்….

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 38


யது நந்தன் சந்தனா கழுத்தில் தாலி கட்ட அவனுக்கு கூட பிறந்தவர்கள் யாருமே இல்லை என்பதால் சுசீலா தான் மூன்றாவது முடிச்சு போட்டார்….அனைவருமே சந்தோஷமாக அட்சதை தூவி ஆசீர்வதித்தனர் தாலி கட்டி முடிய சந்தனாவின் ….நெற்றி வகிட்டில், தாலியில் குங்குமம் வைத்து முடிய பெரியவர்களிடம் ஆசி வாங்க இருவருமே எழுந்து வந்தனர்….

முதலில் தணிகாசலம், பிறகு மூர்த்தி, மரகதம், கேணல் சுசீலாவிடம் ஆசி வாங்கி விட்டு…ஜோடியாக நின்ற துவாரகேஷ், அபிராமி காலில் விழுந்தனர்…..துவாரகேஷ் மகளை மட்டும் ஆசிர்வதித்தவர் யதுவுக்கு ஆசி வழங்கவில்லை….அதை அங்கே இருந்த அனைவருமே பார்த்தனர்…

அவர்கள் மனதில் ஒன்று தான் தோன்றியது துவாரகேஷ் மாறவே போவது இல்லை என்று… யது அதை பெரிதாக எடுக்கவே இல்லை….இதை பெரிதாக எடுக்க முதலில் துவாரகேஷை அவன் மதிக்க வேணுமே! அபிராமி தான் மனசார இருவருக்குமே ஆசி வழங்கினார்…

அருண் யதுவுக்கு கை கொடுத்து கட்டி அணைத்தவன் “ வாழ்த்துக்கள் மச்சி நீ சந்தோஷமாக இருக்க வேணும் சிஸ்டர் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் …அவசரத்திற்க்கு கிப்ட் இந்த ஊரில் வாங்க முடியவில்லை நம்ம ஷிப்பில் உள்ள சின்ன மாலில் இது தான் கிடைத்தது…. என சொன்னவன் இரண்டு ஜோடி தங்க மோதிரங்களை யதுவிடம் கொடுத்தான்…

நித்திலன் முதலில் அக்கா என வந்து சந்தனாவை அணைத்தவன் “ ஹாப்பி மேரீஸ் லைவ்” என சொன்னவன்… அவள் கை பற்றி ஒரு வெல்வெட் பெட்டியை வைத்தவன்…

நித்திலன் “ இது தாத்தா தந்த என் பாக்கெட் மணியில் வாங்கியது” என்றான் சந்தனா அதை திறந்து பார்க்க… தங்க செயினில் சற்று பெரிய இதய வடிவில் உள்ள வைர பெண்டன்….சந்தனா அதை தூக்கி பார்க்க யதுவும் பார்த்தவன் “அதை கொடு மா” என அவளிடம் வாங்கி அந்த பெண்டனின் ஒரு முனையை அழுத்த அது திறந்து கொண்டது…

அது போட்டோ வைக்கும் அமைப்பில் உள்ள பெண்டன் அதில் ஒரு பக்கத்தில்… சந்தனா நித்திலனை அணைத்து கொண்டு இருந்த போட்டோ மறு பக்கம் வெற்றிடமாக இருந்தது….

யது “ நித்திலா ஒரு பக்கம் நீயும் அக்காவும் இருக்கும் போட்டோ ஒகே …இது என்ன வெற்றிடமாக இருக்கு” என கேட்டான்…

நித்திலன் “ ஓ இதுவா மாமா இதில் உங்க மேரிஸ் போட்டோ வைக்க வேணும் இன்னும் போட்டோ வரவில்லை தானே அது தான்….வெற்றிடமாக வைத்தேன் அக்கா உனக்கு இது பிடித்து இருக்கா நேற்று அருண் அண்ணா கூட போய் வாங்கி வந்தேன்” என்றான்….சந்தனா அவன் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டவள் “ ரொம்ப பிடித்து இருக்கு நிது” என்றாள்….

தணிகாசலம் மூர்த்தியை பார்க்க அவர் போய் ஒரு ப்ரீப் கேஸ் கொண்டு வந்து கொடுத்தார்….தணிகாசலம் அதை வாங்கி கொண்டவர் யதுவிடம்…

தணிகாசலம் “ மாப்பிள்ளை தப்பாக நினைக்க வேணாமா நீங்க வேணாம் என்று சொல்லியும் இதை உங்க கிட்ட தருகிறேன் என்று….இது பணத்திமிர் அல்ல ஒரு பெண்ணுக்கு அவளை பெத்த அம்மாவின் ஆசி… காயத்திரி தன் அம்மா வழி சொத்து அவளுக்கு நான் கொடுத்த சொத்து அனைத்தையுமே உங்க பெயரில் எழுதி இருக்கிறாள்…ஆனால் உங்களால் இதை முழுமையாக கையாள முடியாது காரணம்.

இதை நீங்க பயன்படுத்த வேணும் என்றால் சந்தனா மட்டுமல்ல நித்திலன் கையெழுத்தும் வேணும்….நித்திலன் மேஜராகும் வரைக்கும் இதன் உரிமை என் கிட்ட தான் இருக்கும் உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு…. அதன் பதினெட்டாவது வயதில் முழு சொத்தும் அதன் பெயருக்கு தான் போகும்….

இந்த விஷயம் என் லாயர், நான், மூர்த்தியை தவிர யாருக்குமே தெரியாது அதனால் தான் அபி மா….மூர்த்தி கட்டாயப்படுத்தி உன்னை மாப்பிள்ளைக்கு கட்டி வைத்தான் ஏன் தெரியுமா? என்னை விட அவன் தான் காயத்திரி, சந்தனா மேலே பாசம் உள்ளவன்…. நீ வேற குடும்பத்தில் போனால் உன் பசங்க எப்படி இருப்பாங்க என சொல்ல முடியாது…

இதுவே அம்மா வேறாக இருந்தாலும் கூட அப்பா ஒன்று அதை விட நீ அம்மா என்ற போது எந்த பிரச்சனையும் இல்லை வராது என்பதால்…. எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லியும் என்னை கிட்ட தட்ட ப்ளாக் மெயில் பண்ணி உன்னை மாப்பிள்ளைக்கு கட்டி வைத்தான்…

காயத்திரிக்கு தன்னை விட நீ சந்தனாவை பார்த்து கொள்ளவ உனக்கு பிறக்கும் குழந்தைகளும்… உன் போல தான் இருப்பாங்க என்ற எண்ணத்தில் தான் அவள் இந்த ஏற்பாட்டை செய்தாள்…அவள் கூட நினைக்காத ஒன்று உன் திருமணம் தன் புருஷன் தான் உனக்கு புருஷனாக வர போகிறார் என்று….மாப்பிள்ளை நான் முழு உண்மையும் சொல்லாத காரணம் வேறு….

இதை பயன்படுத்தி நித்திலனை உங்க வார்ப்பாக நீங்க மாற்றி விட கூடாது என்பது தான் காரணம்…அவன் என் அபியின் பையன் உயர்வானவனாக இருக்க வேணும்…எனக்கு பிறகு என் மொத்த பிசினஸ் சாம்ராஜ்ஜியத்திற்க்கும் அவன் தானே வாரிசு….அவன் தான் தன் அம்மா, அக்காவை பார்த்து கொள்ள வேணும் என்பதால் அவனை என்னை போல உருவாக்க ஆரம்பித்தேன்…

என் பேரனும் அபியின் ரத்தம் இல்லையா? அது தான் அக்கா மேலே உயிரே வைத்து வளர்ந்தான்….காயத்திரி உங்க மேலே வைத்த நம்பிக்கையை அழித்தது நீங்கள் அவள் சீக்கிரமாக என்னை விட்டு போக காரணம் நீங்க! என் பெண்ணால் அவள் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை….நீங்க காட்டிய காதல் பொய் என்று அறிந்த போது அவள் பாதி செத்து விட்டாள் மீதி உங்க அலட்சிய போக்கு அவளை கொன்று விட்டது…

அதனால் தான் நீங்க தேர்ந்தெடுத்த வியாட்டை நான் வேணாம் என நினைத்தேன்….என் பெண்ணு போல என் பேத்தியின் வாழ்க்கையும் ஆகி விடக்கூடாது சொத்தை அல்ல என் பேத்தியை நேசிக்கும் ஒருவன் தான் அவளுக்கு தேவை… அது போல என் பேரனை அவன் தன் பையனாக நினைக்க வேணும் எனக்கு தீடீரென ஒன்று என்றால் என் பெண்ணு, பேத்தி, பேரனை யார் பார்த்து கொள்வது…

உங்களுக்கு தான் பிசினஸை தவிர எதுவுமே தேவை இல்லை என்னால் அப்படி இருக்க முடியாது….இதை எல்லாம் யோசித்து தான் நான் யது நந்தனை மாப்பிள்ளையாக நினைத்தேன்…அவர் கோடியில் ஒருத்தர் என்ன பார்க்கிறீங்க பணத்தை, பணக்காரரை துச்சமாக நினைப்பவரை அப்படி தான் உலகம் சொல்லும்….

மாப்பிள்ளை நான் பரம்பரை கோடீஸ்வரன் தான் ஆனால் எனக்கு என் பிசினஸ், பணத்தை விட என் குடும்பம் தான் முக்கியமாக இருந்தது….கடைசி காலத்தில் பணமா எழுந்து வந்து நமக்கு கஞ்சி ஊத்த போகிறது இல்லை கட்டின பொண்டாட்டி தான் வருவாள்….நம்ம பாடையில் போகும் போது தூக்க நான்கு பேர் தேவை அதற்க்கு உறவுகள், நட்புகள் தேவை நீங்க சொல்லும் பணம், அந்தஸ்து நம்மை தூக்கி சுமக்க வராது…

பணம் வேணும் தான் அது இல்லை என்றால் வாழ முடியாது தான் ஆனால் எதற்க்குமே ஒரு அளவு உண்டு இல்லையா? சாப்பாட்டை கூட அளவாக உண்டால் தான் அது மருந்து இல்லை நமக்கே விஷமாகி விடும்….எனக்கு தெரியும் இப்போ உங்களுக்கு என்னை கொலை செய்யும் அளவுக்கு வெறி இருக்கு என்று…நீங்கள் பிறப்பில் கெட்டவர் இல்லை மாப்பிள்ளை நல்ல தாய் தந்தைக்கு பிறந்து வளர்ந்தவர் இடையில் தான் உங்களுக்கு இந்த ஈகோ பேய் பிடித்தது…

நீங்க யாரு? என் மாப்பிள்ளை உங்க கிட்ட தோற்பது எனக்கு அவமானம் இல்லை உங்களுக்கு உண்மையை புரிய வைக்க தான்….நான் சில சமயம் கடினமாக நடக்க வேண்டி இருந்தது கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்…

உங்க ஒரேய மகள் இன்று தன் வாழ்க்கையை தொடங்க போகிறாள் அவளை ஆசிர்வதிக்கவில்லை என்றால் கூட பரவாயில்ல….சபித்து விட வேணாம் பெத்தவங்க சாபம் புள்ளைங்க வாழ்க்கையை அடியோடு அழித்து விடும் என சொல்வாங்க நிதர்சனத்தை புரிந்து கொள்ளுங்கள்” என்றார்….

துவாரகேஷ் “ எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது உங்க பெண்ணுக்கு என் காதல் மேலே துளி கூட நம்பிக்கை இல்லை! அது தான் என்னை நம்பாமல் சொத்து பூராகவும் யாரோ ஒருவருக்கு எழுதி வைத்து உள்ளாள்..எனக்கு இதுவும் புரியவில்லை இத்தனை வருடம் அவள் கூட வாழ்ந்த என்னை விட இவன் அவளுக்கு எப்படி நம்பிக்கைக்குரியவனாக தெரிந்தான்….

ஒரு வேளை அவள் நம்பிக்கை பாதியில் சிதைந்து விட்டாள் அவள் அதை பார்க்க உயிரோடு கூட இல்லை….இவன் சொத்தோடு கம்பி நீட்டி விட்டால் அப்போ உங்களால் என்ன செய்ய முடியும்? …..உங்க பேத்தி வாழ்க்கை மட்டுமல்ல மொத்த சொத்தும் போய் உங்க பேத்தி நடு தெருவில் தான் நிற்க வேணும்” என சொன்னார்….

தணிகாசலம் பதில் சொல்ல வர ஒரு நிமிஷம் தாத்தா என்றான் யது “அந்த கவலை உங்களுக்கு வேணாம் மிஸ்டர் துவாரகேஷ் ஒன் மினிட் என்றவன்… அருண் நீ போய் எனக்கு ஒரு வைட் பேப்பர், மை எல்லாம் எடுத்து வா சீக்கிரமாக” என்றான் அருணும் எதற்க்கு என தெரியாமல் போனான்….

யது “ மிஸ்டர் துவாரகேஷ் ஒரு பெண் அதுவும் தன் கணவனை நம்பாது அவரே பார்த்திராத தன் மருமகன் பெயரில் சொத்து எழுதி வைக்கிறார் என்றால் …. அதற்க்கு காரணம் ஒன்று தான் நீங்க சிதைத்தது அவரது நம்பிக்கையை அல்ல காதலை….அந்த காதல் சிதையும் போது கல்யாண வாழ்க்கை ஆட்டம் காண்கிறது உங்க காதல் அத்தைக்கு அந்த நம்பிக்கையை கொடுக்கவில்லை என்று அர்த்தம்…

நான் உங்க பெண்ணை காதலிக்கவில்லை தான் ஆனால் என் மனைவியை காதலிக்கிறேன்….என் காதல் உண்மை என்றால் அவள் என் மேலே அவளாக நம்பிக்கை வைப்பாள் …என்னை நம்பி வரும் அவளுக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான் என் மனைவி எந்த காலத்திலும் எதற்காகவும் உங்க வாசலுக்கு கை ஏந்தி வர மாட்டாள்…

அவளை அப்படி வர விட்டால் நான் என்ன ஆம்பள நல்ல புருஷன் அது போல நான் இந்த உலகில் இல்லை என்றால் கூட…. அவள் யார் கை ஏந்தாது வாழ கற்று கொடுத்து விட்டு தான் போவேன் …ஒரு பெண்ணுக்கு முதலில் தேவை நம்பிக்கை அடுத்து தைரியம் பிறகு வீரம் இந்த மூன்றுமே தான் ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடு கொடுத்து அனுப்பும் வரதட்சணை ஆகும்…..

இது இருந்தால் அவள் இந்த சமூகத்தை எதிர் கொண்டு வாழ முடியும் உங்க பெண்ணுக்கு நீங்க எதை எல்லாம் கொடுக்க மறுத்தீங்களோ! …அதை எல்லாம் நான் என் மனைவிக்கு கொடுக்க போகிறேன்….அவள் ஆசைபட்ட படிப்பு, நம்பிக்கை, தைரியம், வீரம் இது தான் நான் அவளுக்கு கொடுக்கும் காதல் பரிசு என்றான்….


நிலவு வரும்….
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயமா: 39

யது தன் கருத்தை சொல்லி முடிய அருண் வரவும் சரியாக இருந்தது அவன் மூன்று வெள்ளை காகிதம், மை எல்லாம் கொண்டு வந்தான் ….யது தன் அருகே நின்று இருந்த சந்தனாவை பார்த்தவன்…

யதுநந்தன்” சந்தனா நானும் நீயும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லை …ஆனால் விதி நம்மை இந்த திருமண பந்ததில் இணைத்து உள்ளது…இது ஒரு வழி பாதை திரும்ப வந்தால் போவது கடினம் இந்த பாதையில் காலம் பூராகவும் நடக்க போவது நீயும் நானும் தான்….

இந்த பாதையில் என் கூட நீ தொடர்ந்து நடக்க விரும்பினால் முதலில் என்னை நீ நம்ப வேணும்…நம்ம உறவில் நம்பிக்கை தான் அச்சாணி அது இல்லை என்றால் வண்டி எப்படி நகராதோ அது போல தான் நம்ம உறவும்…. நீ என்னை முழுமையாக நம்பினாலும் நான் சொல்லும் விடயங்களுக்கு எல்லாம் நீ தலையாட்ட வேண்டிய அவசியம் இல்லை ஏன்? எதற்க்கு என நீ கேள்வி கேட்க வேணும்….அது தான் ஆரோக்கியமான தாம்பத்தியம் சரி உன் கிட்ட கொஞ்சம் தனியாக பேச வேணும் வா” என அவளை அழைக்க அவள் யது கூட சற்றி தள்ளி போனாள்….

யது அவளிடம் ஏதோ பேச பேச அவள் முகம் முதலில் ஆச்சரியத்தை காட்டியது பிறகு சந்தோஷத்தை…. அவள் சரி என தலையசைக்க அவர்கள் இருவருமே உறவுகள் நின்ற இடத்திற்கு வந்தார்கள்.

யது “ அருண் அதை கொடு” என சொல்ல அருண் காகிதம் மை எல்லாம் அவனிடம் கொடுக்க… வா சந்தனா என்றவனை அவளும் பின் தொடர்ந்து போனாள் அங்கே குங்குமம், சந்தனம், பன்னீர், கற்கண்டு வைத்து இருந்த மேஜையில் யது காகிதத்தை வைத்தவன் அவன் முதலில் கையெழுத்து போட்டு கைநாட்டு வைத்தான். …அது போல சந்தனாவும் வைத்தாள் ஒரு ஐந்து பேப்பரில் வைத்தவன் அதை எடுத்து கொண்டு தணிகாசலத்திடம் வந்தவன்…

யது “ தாத்தா இது வெற்று காகிதம் இதில் என் சைன் அது போல சந்தனாவும் சைன் பண்ணி இருக்கிறாள்…நாங்க கைநாட்டும் வைத்து இருக்கிறோம் புரோ நோட்டை விட இதற்கு பவுர் அதிகம்…காயத்திரி அத்தை எனக்கு சந்தனாவுக்கு தந்த சொத்தை எல்லாம் நீங்க நித்திலன் பெயருக்கு மாற்றி எழுதுங்க… என் மனைவியை எப்படி கண் கலங்காமல் வைத்து கொள்ள வேணும் என்று எனக்கு தெரியும்” என்றான்…

அங்கே அந்த இடத்தில் பலத்த அமைதி நிலவியது…மட்டுமல்ல அங்கே இருப்பவர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள் இவன் மனிதனா? என்று…ஒரு கோடி இரண்டு கோடி அல்ல பல கோடி சொத்துக்கள்….அவன் கேட்காமல் வந்ததை அதை தூக்கி மச்சானுக்கு கொடுப்பது என்றால் இந்த காலத்தில் பைத்தியக்காரன் என சொல்வார்கள்…

அதுவும் நித்திலன் சந்தனாவின் கூட பிறந்தவன் கூட இல்லை மாற்றான் தாய் மகன் அவனுக்கு தான்…துவாரகேஷ், தணிகாசலம் சொத்து இருக்கு என தெரிந்தும் கொடுப்பது என்றால்…இதை என்ன என்று சொல்வது தணிகாசலம் பேச முன்னே…

அபிராமி “ மாப்பிள்ளை தப்பாக நினைக்க வேணாம் இது என் பையனுக்கு வேணாம் அவன் அபிராமியின் மகன்….உறவு தான் அவனுக்கு முக்கியம் சொத்து அல்ல அவன் ஆம்பள உழைத்து வாழ வேணும் பிறர் சேர்த்து வைத்த சொத்தில் அல்ல…

அப்பா மட்டுமல்ல காயுவும் அவன் பெயரில் நிறைய சொத்து எழுதி விட்டாங்க அது கூட நான் வேணாம் என்று தான் சொல்வேன்…இப்போ நீங்களா இது என் பெண்ணின் சொத்து அவள் குழந்தைங்களுக்கு உரியது வேணாம்” என்றாள்….

சந்தனா “ அம்மா பீளிஸ் இது அவர் என் கிட்ட சம்மதம் கேட்டு தான் செய்தார் நிது என் தம்பி மா….சொத்து என் கிட்ட இருந்தால் என்ன அவன் கிட்ட இருந்தால் என்ன எல்லாம் ஒன்று தானே மா” என்றாள்…

“இல்ல எல்லாம் ஒன்று இல்லை அக்கா” என சொல்லி கொண்டே தணிகாசலம் அருகே போனவன் “தாத்தா அதை கொடுங்கள்” என கேட்டான்….தணிகாசலம் அந்த வெற்று காகிதங்களை அவனிடம் கொடுக்க நித்திலன் அதை வாங்கியவன் அதை ஒன்றாக எடுத்தவன் அதை முதலில் இரண்டாக கிழித்து பின் நான்காக கிழித்தான் அதன் பிறகு சிறு சிறு துண்டுகளாக கிழித்தான் …

நித்திலன் கிழித்த துண்டுகளை கீழே எறிந்தவன்… ஓடிவந்து சந்தனாவை இடையோடு அணைத்து கொண்டவன்…

நித்திலன் “ எனக்கு இது எல்லாம் வேணாம் என் அக்கா தான் வேணும்” என அந்த பதினைந்து வயது சிறுவன்…உறவின் முக்கியதுவம் அறிந்து அக்கா என்றால் இன்னொரு அம்மா என அறிந்து அதை மற்றவர்களுக்கு எடுத்து காட்டினான்…

சந்தனா தம்பியை இறுக்க அணைத்து கொண்டவள் கண்கள் கலங்கியது அது அவளின் பாசத்தின் அளவை காட்டியது….அவர்கள் பாச பிணைப்பை பார்த்து அங்கே இருந்தவர்கள் கண்கள் கலங்கியது…

தணிகாசலம் தன் குரலை செறுமி தன்னை நிலைபடுத்தியவர் “ ஒகே இது பற்றி நீ பேசி பலன் இல்லை இது இடமும் நேரமும் இல்லை….அபி, மிஸஸ் ஜெகதீஷ் நீங்க தான் மற்ற விஷயங்கள் பாருங்க மாப்பிள்ளை இதற்க்கு மேலே உங்களுக்கு சாட்சி தேவையா என்பதை நீங்க தான் முடிவு எடுக்க வேணும்…

யது என் முடிவு தவறு இல்லை என நீ நிரூபித்து விட்ட இனி எனக்கு என் பேரன், பேத்தி பற்றிய கவலை இல்லை…அவங்களுக்கு தான் நீ இருக்கிறாய் மூர்த்தி என்ன பா நீ சிலை போல நிற்கிற… உன் பேரன், பேத்தியை பிறகு ரசிக்கலாம் முதலில் நம்ம விருந்தாளிங்களை கவனி அவங்களை டைனிங் ஹாலுக்கு அழைத்து போ என்றார்…

துவாரகேஷ் எதுவும் பேசாது தன் ரூம்க்கு போக மரகதம் சந்தனா அருகில் வந்தவர்… அவள் கன்னத்தை தடவி விட்டு தன் கையில் உள்ள வைர வளையல்களை கழட்டி அவள் கையில் போட்டவர்…

மரகதம் “ தீர்க்க சுமங்கலியாக இரு மா நான் செய்த பாவம் இப்போ தான் எனக்கு புரிய ஆரம்பிக்கிறது…என்ன இருந்தாலும் நீ என் பேத்தி உன் வாழ்க்கை அந்த ரவுடி பயல் கூட அமைவதை நான் விரும்பவில்லை…உன் அப்பன் கிட்ட சொன்னாலும் கூட அவன் அதை கேட்கும் மனநிலையில் இல்லை….

மாப்பிள்ளை பாப்பாவை நல்லா பார்த்து கொள்ளுங்கள் சந்தோஷமாக புள்ள குட்டி என நீங்க இருக்க வேணும்…என் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தந்தவள் காயத்திரி அவள் பெண்ணு வாழ்க்கை நல்லா இருக்க வேணும்… சந்தோஷமாக இருங்க” என சொல்லி விட்டு மகனை தொடர்ந்து மரகதம் போனார்… அவரை பார்க்கும் போது ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் தான் நினைவுக்கு வந்தார்கள்…

அபிராமி சுசீலா கூட சேர்ந்து யது, சந்தனாவுக்கு பால் பழம் கொடுத்து விட்டு அவர்களை சாப்பிட அழைத்து போனார்கள்…நாளை அந்தமானை விட்டு கிளம்புவதாக அறிவிப்பு கொடுக்க சொல்லி அருணிடம் சொல்லி இருந்தான் யதுநந்தன்…

திட்டமிட்டதை விட கூடுதலாக அந்தமானில் தங்கி விட்டார்கள் பயணத்தின் படி அடுத்து அவர்கள் வேற நாட்டுக்கு போக வேணும்…கல்யாணம் முடிந்து விட்டது அதனால் அவர்கள் நாளை கிளம்புவதாக ஏற்பாடு சாப்பாடு முடிய அனைவருமே ஓய்வெடுங்க செல்ல… மகளை அழைத்து கொண்டு அபிராமி அவள் அறைக்கு செல்ல யது அவன் தங்கி இருந்த அறைக்கு சென்றான்….

சந்தனாவின் அலங்காரங்களை களைந்தவள் அவளை வேற உடைக்கு மாற சொன்னவள் அவளை தூங்க சொன்னாள்…சந்தனாவும் திருமண களைப்பில் தூங்கி விட அபிராமி கதவை பூட்டி விட்டு தணிகாசலத்தை தேடி போனாள்…

அங்கே அவர் கட்டிலில் நித்திலன் உடை கூட மாற்றாமல் தூங்கி கொண்டு இருக்க…. பேரனின் சட்டையை கழட்டி கொண்டு இருந்தார் தணிகாசலம்… அப்பா என்று அபிராமி அழைக்க நிமிர்த்தவர் மெதுவாக வா மா என்றார்…

அபிராமி “ இங்கே வந்து தூங்கி விட்டானா உங்களை கண்டால் போதும் உங்க கூடவே இருப்பான்….உங்களை தொந்தரவு பண்ணி விட்டான் போல இருங்க பா அவனை எழுப்பி அவன் ரூமில் தூங்க சொல்லி விட்டு வருகிறேன்” என சொன்னாள்…

தணிகாசலம் “ என்ன மா அபி இவன் யாரோவா எனக்கு என் பேரன் என் வாரிசு எனக்கு சொந்தமான அனைத்திலும் அவனுக்கு உரிமை இருக்கு….இன்று பார்த்தாயா! அவன் நடந்து கொண்ட விதத்தை இது தான் பக்குவம் என்பது…இவன் தூங்கட்டும் என்ன மா விஷயம் மாப்பிள்ளை ஏதும் பிரச்சனை செய்கிறாரா? என கேட்டார்….

அபி “ எங்கே நான் அவரை சந்திக்க போனால் தானே அதை விட எனக்கு இப்போ வேற வேலை இருக்கிறது….என் பெண்ணு வாழ்க்கை தொடங்கும் நேரம் நான் இப்போ இவரை பற்றி யோசிக்க முடியுமா பா? உங்க கிட்ட சொல்ல வந்த விஷயம் வேறு பா…இன்று ஐயர் சாந்தி முகூர்த்திற்க்கு நல்ல நாள், நேரம் என சொன்னார்…நம்ம தங்கி இருக்கும் ஹோட்டலில் அப்பா கிட்ட சொல்லி சூட் ரூம் புக் பண்ணி…. அலங்காரம் பண்ண சொல்லி விட்டேன் அது தான் உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி போக வந்தேன்” என்றாள்….

தணிகாசலம் “ இதை சொல்ல வேணுமா மா! இது பெண்ணுங்க விஷயம் அடுத்து நீ சந்தனா அம்மா உனக்கு இல்லாத உரிமையா நீ செய்….முதலில் நீ போய் சாப்பிடு நான் மாப்பிள்ளைக்கும் சம்பந்திமாவுக்கும் சாப்பாடு அனுப்பி விட்டேன்….மூர்த்தி என் கூட சாப்பிட்டு விட்டான் நித்திலனுக்கு ஊட்டி விட்டேன் நீயும் பாப்பாவும் தான் சாப்பிட வேணும்…. கல்யாண சாப்பாடு நல்லா இருக்கு எல்லாம் உன் அப்பன் ஏற்பாடு….அவன் இருப்பதால் தான் நான் நிம்மதியாக இருக்கிறேன் .

அபி நீ கவலைப்பட தேவையில்லை நான் மாப்பிள்ளை கிட்ட பேசி சமாதானப்படுத்துகிறேன்… என் பேத்தி வாழ்க்கை எப்படி முக்கியமே அது போல என் பெண்ணு வாழ்க்கையும் முக்கியம்… நீ போய் மற்ற ஏற்பாடுகள் செய் உன் துணைக்கு மிஸஸ் ஜெகதீஷை அழைத்து போ மா என்றார்… இது தான் என் அப்பா என்று பெருமையாக பார்த்த அபிராமி மகள் ரூம்க்கு போனாள்…

அன்று முதல் தடவையாக சந்தனா, யதுநந்தன் முதலிரவு அறையில் சந்தித்தனர்…ஆனால் சந்தனா சொன்ன வார்த்தை, நடந்து கொண்ட முறை யது நந்தனை அவளிடம் இருந்து எட்டி நிற்க வைத்தது….


நிலவு வரும்…


 
Status
Not open for further replies.
Top