ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 40


அன்று நைட் யது நந்தன், சந்தனாவின் முதலிரவுக்கு ஹோட்டல் ரூம்மில் ஏற்பாடு செய்து இருந்தார் அபிராமி….தணிகாசலத்திடம் பேசி விட்டு வந்தவர் சந்தனாவை பார்க்க நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள் சரி தூங்கட்டும் என நினைத்தவர்…

அவர் போய் குளித்து உடை மாற்றி விட்டு வர சந்தனா அப்போது தான் எழுந்து இருந்தாள்…

அபிராமி “ பாப்பா எழுந்து விட்டாயா மா அம்மா எழுப்ப வேணும் என நினைத்தேன் நீ எழுந்து விட்ட…சரி தங்கம் சூடாக காபி, டிபனுக்கு சொல்கிறேன் சாப்பிட்டு விட்டு குளித்து விட்டு வா மா நைட் சடங்கு இருக்கு” என்றார்…

சந்தனா “ எனக்கு ரொம்ப டயர்ட்டாக இருக்கு மா ஓம புகை வேற நிது எங்கே மா?ஆளை காணோம் தாத்தாவை பார்க்க போய் விட்டானா….நைட் என்ன சடங்கு! என கேட்டவளுக்கு பிறகு தான் நினைவு வந்தது…அவள் பயந்த சுபாவம் கொண்ட பெண்ணு தான் பல உலகம் விஷயம் தெரியாதவள் தான் அதற்காக குழந்தை அல்ல வளர்ந்த குமாரி சந்தனா அமைதியாக இருந்தாள்…

அபிராமி “இன்று நீ வாழ்க்கை தொடக்கும் நாள் எல்லாம் நல்லபடியாக நடக்க வேணும் என் பெண்ணு புருஷன் ,குழந்தை குட்டி என சந்தோஷமாக இருக்க வேணும்… அதை நான் நேரிலும் என் காயு மேலே இருந்து பார்த்து சந்தோஷபடுவாள்….அவள் என்னை நம்பி விட்டு போன பொறுப்பை நான் நல்லபடியாக நிறைவேற்றி விட்டேன் இனி எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை” என சொன்னார்….

அவர் சொல்ல சந்தனா “அம்மா அப்படி பேச வேணாம்” என சொன்னவள் அபிராமியை இடையோடு அணைத்து கொள்ள…அபிராமி அவள் தலையில் தடவி முத்தமிட்டார் அப்போது டோர் பெல் அடித்தது அபிராமி போய் பார்க்க காபி, டிபன் வந்து இருந்தது… அவர் நன்றி கூறி அதை பெற்று கொண்டவர் அவரும் சந்தனாவும் அதை சாப்பிட ஆரம்பித்தனர்…

யதுநந்தன் நல்லா தூங்கி கொண்டு இருக்க அவன் ரூம் டோர் பெல் அடித்தது முதலில் எங்கோ பெல் சத்தம் கேட்கிறது…என நினைத்தவன் புரண்டு படுக்க இன்னும் அதிகமாக சத்தம் கேட்டது…யது கண் விழித்தவன் யார் இது என எரிச்சலாக எழுந்தவன் தன் வாட்ச்சில் டைம் பார்க்க அது நைட் ஏழு மணி என காட்டியது…

இவ்வளவு நேரமாகவா! தூங்கினோம் என நினைத்தவன் எழுந்து ரூம் கதவை திறக்க வெளியே தணிகாசலம் நின்று இருந்தார் பின்னால் கார்ட் ஒருவன் பையோடு நிற்க… யது வாங்க தாத்தா என அழைக்க அவர் உள்ளே வர கார்ட் பையை அங்கே இருந்த டேபிளில் வைத்து விட்டு வெளியே போய் காவலுக்கு நின்றான் …

தணிகாசலம் “ ஸாரி மாப்பிள்ளை நல்லா தூங்கி கொண்டு இருந்தீங்க போல உங்களை டிஸ்டர்ப் பண்ணி விட்டேன்…நான் வந்தது உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த தான்… எனக்கு நீங்களும் நித்தி பையன் போல பேரன் தான்…அது தான் வேற யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லி அனுப்பாமல் நானே வந்தேன்…

இன்று நல்ல நாள் என சடங்கு வைக்க ஐயர் நேரம் குறித்து கொடுத்து இருக்கிறார் அபி சொல்ல சொன்னாள்…உங்களுக்கு சூட் ரூம் அவள் தான் ஏற்பாடு பண்ணி இருக்கிறாள் அம்மா இல்லையா? தன் பெண்ணு மாப்பிள்ளை கூட சந்தோஷமாக வாழ்க்கை தொடங்க வேணும் என்பது அவள் கனவு…இதில் புது துணி இருக்கு போட்டு கொள்ளுங்கள்….

நீங்க படித்தவர் ,பல நாடு சுற்றியவர் நல்ல பதவியில் இருப்பவர் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை…இருந்தாலும் நான் தாத்தா இல்லையா? மனசு கேட்கவில்லை சிலதை சொல்ல தான் வேணும்…

என் பெண்ணு காயத்திரி பற்றி உங்களுக்கு தெரியாது மாப்பிள்ளை ஒற்றை வாரிசு தவம் இருந்து என் லட்சுமி பெத்து எடுத்தவள்…அவள் சந்தனா போல இல்லை நித்து போல ரொம்ப தைரியசாலி பணக்கார வாரிசு தான் ஆனா சந்தனா போல துளியும் அதை யாரிடமும் காட்ட மாட்டாள்…

அவள் என் கிட்ட கேட்டது ஒன்று தான் துவாரகேஷ் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வைங்க அப்பா என்று தான்…அவர் வசதி குறைவு என்றாலும் கூட நல்ல குடும்பம் பையன் நல்லவன் கெட்டிக்காரன் என விசாரித்து கட்டி வைத்தேன்….ந‌ன்றாக தான் இருந்தார் பிறகு எப்படி ஈகோ பேய் பிடித்தது என தெரியவில்லை என் பெண்ணு மொத்தமாக உடைந்து போனாள் அது தான் அவள் உயிரையும் காவு வாங்கியது…

அபி இல்லை என்றால் என் பேத்தி வாழ்க்கை என்னவாகி இருக்கும் என சொல்ல முடியாது…அபி செய்தது தியாகத்திற்க்கு மேலே மாப்பிள்ளை அவளுக்கு நான் எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்து வைத்து இருந்தேன் தெரியுமா?... அப்படிப்பட்ட மாப்பிள்ளையை உதறி தள்ளி விட்டு துவாரகேஷை கல்யாணம் பண்ண காரணம் சந்தனா தான் …

என் பேத்தி உலகம் தெரியாதவள் பயந்த சுபாவம் அவளை இப்படி ஆக்கியது அவள் அப்பா, பாட்டி தான்….எங்கே உலகம் தெரிந்தாள் தன்னை விட்டு போய் சொத்தை பிடுங்கி விடுவாள் என்ற பயம்… அதை விட அவள் அறிவாளியாக இருந்தால் அவள் தனிப்பட்ட சொத்தும் கை விட்டு போய் விடுமே!

அதற்காக தான் சரியாக விசாரிக்காமல் வியாட்டை மாப்பிள்ளையாக அழைத்து வந்தது….நீங்க இல்லை என்றால் என் பேத்தியின் கதி என்னவாகி இருக்கும் என சொல்ல முடியாது…இனி அவள் உங்க பொறுப்பு அவளுக்கு நீங்க தான் தேவையானதை கற்று கொடுத்து என் காயத்திரி, அபிராமி போல ஆக்க வேணும்…

அவள் தன்னையறியாது தவறு செய்தால் கூட நீங்க தான் பொறுமையாக கற்று கொடுக்க வேணும்….இது தான் ஒரு தாத்தாவாக உங்க கிட்ட நான் கேட்பது” என்றார் ….

யது நந்தன் அவர் கையை பற்றி கொண்டவன் “ நீங்க கவலைப்பட வேணாம் தாத்தா எனக்கு உங்க பயம் புரிகிறது….எனக்கு என் அம்மா அப்பா வாழ்ந்த வாழ்க்கை நினைவு இருக்கிறது ஒரு தடவை கூட என் அப்பா என் அம்மாவை கோபமாக திட்டி பேசியதை நான் கேட்டது இல்லை….அம்மாவும் அப்பா மேலே உயிராக இருந்தாங்க நான் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்… என் மனைவியை கண் கலங்காமல் பார்த்து கொள்ள தெரியும் இனி சந்தனா மட்டுமல்ல அத்தை, நித்திலன் கூட என் பொறுப்பு” என சொன்னான் ….

இரவு சாந்த முகூர்த்திற்க்கு சந்தனாவை அபிராமி, சுசீலா தயார் செய்ய ஆரம்பித்தார்கள்….இரவு சாப்பாடு முடிய மற்றவர்கள் தங்கள் வசதிக்கேற்ப தூங்கவே, வெளியே சுற்ற போய் விட்டனர்….நித்திலன் இன்னும் எழவில்லை துவாரகேஷ் அவர் நாளை காலை சென்னை கிளம்ப போவதாக சொல்லி விட்டார்… தன் கூட வருபவர்கள் வாங்க உங்களுக்காக நான் வெயிட் பண்ணி கொண்டு இருக்க மாட்டேன்… என்று மறைமுகமாக அபிராமி,நித்திலனை எச்சரித்து இருந்தார்…

அபிராமி அவர் பேச்சை எல்லாம் இப்போ யோசிக்க நேரம் இல்லை என்று… அதை புறம் தள்ளி விட்டு மகளை அலங்கரிக்க தொடங்கி இருந்தாள்…சந்தனாவுக்கு லாவண்டர் வண்ண சாப்ட் சில்க் ஸாரி அதிகபடியான நகைகளை தவிர்த்து அதற்க்கு பொருத்தமான சில நகைகள் போட்டு விட்டாள்….சந்தனாவின் நீண்ட முடியை பின்னலிட்டு அதில் அந்தமானில் கிடைத்த சில பூக்களை வைத்து விட்டவர் அவளை திருப்தியாக பார்த்தாள்…

அபிராமி “ ரொம்ப அழகாக இருக்க மா சந்தோஷமாக இரு அம்மா உன் கிட்ட ஒன்று தான் சொல்வேன்….இனி யது தான் உன் வாழ்க்கை முதல் இடம் அம்மா, தம்பி தாத்தா, அப்பா அல்ல இனி அது தான் உன் குடும்பம்…நாங்க உனக்கு யதுவுக்கு பிறகு தான் மா நீ சின்ன பெண் அல்ல வாழ்க்கை உனக்கு புரியும்…

விட்டு கொடு கேட்டு பெறு ஆனால் அடிமையாக இராதே உனக்கு பக்கபலமாக நாங்க எப்பவுமே இருப்போம்” என்றார்….சுசீலாவும் சில விஷயங்களை நாசூக்காக சொல்ல சந்தனா அதை கேட்டு கொண்டு இருந்தாள்….நல்ல நேரம் வர சூட் ரூம்மில் சந்தனாவை ரூம் வாசல் வரை சென்று விட அவள் அபிராமி , சுசீலா காலில் விழுந்து ஆசி வாங்கி விட்டு தயக்கமாக உள்ளே போனாள்…

அது வழமை போல உள்ள சூட் ரூம் அங்கே யது நந்தன் முதலில் வந்தவன் அங்கே இருந்த பால்கனியில் நின்று….அந்தமான் கடலை ரசித்து கொண்டு இருந்தான் பெரும்பாலும் அந்தமானில் உள்ள ரூம் பால்கனி கடலை பார்த்து தான் இருந்தது காரணம் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கட்டப்பட்டு இருந்தது…

சந்தனா உள்ளே வர கதவு ஆட்டோமேட்டிக் லாக் டோர் என்பதால் அதுவே பூட்டபட்டது சந்தனா அங்கே நின்று ரூம் அலங்காரத்தை ரசித்தாள்…மூர்த்தி பணத்தை பார்க்காது பேத்திக்காக சிவப்பு, தங்க நிறத்தால் பூக்கள், பலூன், கேண்டில் என அலங்காரம் செய்ய சொல்ல ஹோட்டல் நிர்வாகம் தான் இந்த ஏற்பாடுகள் செய்தது…

“வா மா” என சொல்லி கொண்டு யது நந்தன் வந்தான் சந்தனாவின் கொலுசு சத்தமும், கதவு பூட்டபடும் சத்தம் கேட்க தான் வந்தான்… சந்தனா அபிராமி சொல்லி இருந்த படி அவன் காலில் விழ போக பாதியில் யது நந்தன் அவளை பிடித்து நிறுத்தியவன்…அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவனும் சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தான்…

யது நந்தன் சந்தனா கையை பற்ற போக அவள் மெதுவாக இழுத்தவள் தலை குனிய அதை வெட்கம் தயக்கம் என நினைத்தவன்…

யது “ சந்தனா அழகான பெயர் உன்னை நான் தனா என அழைக்கிறேன் உனக்கு பிடித்து இருக்கு தானே! மற்ற விஷயங்கள் நம்ம நிறைய பேசி விட்டோம் இப்போ நம்மை பற்றி பேசலாமா?....உனக்கு என் பெயர், தொழில் தான் தெரியும் என் ஆசை விருப்பு வெறுப்பு தெரியாது தானே!...

என் முதல் காதலி இந்த கடல் தான் இங்கு தான் நான் வாழ்க்கையின் பாதி நாளை கழித்தேன்…இந்த தொழிலை மட்டும் நீ விட்டு விட சொல்ல கூடாது அது என்னால் முடியாது! தண்ணீர் இல்லாமல் மீன் எப்படி உயிர் வாழ முடியாதோ!... அது போல தான் எனக்கு இந்த கடல், தொழில் இரண்டுமே மற்றும்படி எனக்கு பெரிதாக எந்த ஆசையும் இது வரைக்கும் இருந்தது இல்லை… உன்னை பார்க்கும் வரைக்கும் என சொல்ல சந்தனா அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள்…


நிலவு வரும்….
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 41

யது நந்தன் சந்தனாவை காணும் வரைக்கும் தனக்கு எந்த ஆசையும் இல்லை என சொல்ல அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்….

யது “ என்ன பார்க்கிற தனா யஸ் உன்னை எப்போ பார்த்தேன் தெரியும் கப்பலில் முதல் நாள் நீ ஏறும் போது பயந்து தடுமாறி நின்ற போது தான்….நித்திலன் தான் உன் கை பிடித்து அழைத்து கொண்டு வந்தான் அப்போ உன் கண்களில் உள்ள பயம்… உன் மென்மை என்னை அசைத்தது இது வரைக்கும் நான் எந்த பெண்ணிடமும் உணராத உணர்வு…

அப்போ நீ யார்! என தெரியாது அடுத்த தடவை உன்னை பார்த்தது வெல்கம் பார்ட்டியில் அப்போ தான்…அருண் மூலமாக நீ துவாரகேஷ் பெண்ணு என அறிந்தேன் பொதுவாக எனக்கு இந்த பணக்கார வர்க்கத்தை கண்டால் ஆகாது…காரணம் பொறாமை இல்லை அவர்கள் செய்யும் அலட்டலை தினம் தினம் கப்பல் பயணத்தில் பார்த்தவன் நான்…அதனால் தான் உன்னை வெறுக்க நினைத்தேன் பட் விருப்புக்கும் வெறுப்புக்கும் சிறு நூலிழை தான் என்பது வியாட் வந்து போது புரிந்தது…

அவனை எப்படி தான் உன் அப்பா உன்னை போல ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளையாக நினைத்தார் என்று இப்போ கூட எனக்கு புரியவில்லை…அவன் உன்னை தப்பாக பார்க்க நடக்க முற்பட்ட போது எனக்கு அவனை அடித்து துவைக்கும் வெறி வந்தது அது எதனால் என்று இப்போ புரிகிறது…உன்னை காப்பாற்ற ஒருத்தரால் தான் முடியும் என்பதால் உன் தாத்தாவை என் நண்பர் மூலமாக இங்கே நடப்பதை சொல்லி வரவழைத்தேன்…

நான் நினைத்து பாராத ஒன்று உன் தாத்தா உன்னை கல்யாணம் பண்ண சொல்லி கேட்பார் என்று…முதலில் மறுக்க காரணம் உன் அப்பா பேச்சு பிறகு நித்திலன் கேட்க என்னால் மறுக்க முடியவில்லை என்பதை விட… உன்னை இழக்க முடியவில்லை இதுவே சாதாரண பெண்ணாக நீ இருந்து இருக்க நான் நேரடியாக உன் கிட்ட கேட்டு இருப்பேன்… சரி இப்போ கேட்கிறேன் உனக்கு என்னை பிடித்து இருக்கா என கேட்டவன் அவள் கையை பற்ற போக…இல்ல வேணாம் என்று சந்தனா சொன்னவள் சட்டென எழுந்தாள்…

யதுவின் முகம் மாற அவனும் எழுந்தவன் “என்ன! வேணாம் எனக்கு புரியவில்லை சந்தனா ஏன்? உனக்கு என்னை பிடிக்கவில்லையா? இல்ல இந்த கல்யாணம் பிடிக்கவில்லையா? எனக்கு உன் பதில் வேணும் “ என்றான்…

சந்தனா “ உங்களை பிடித்து பிடிக்காத என்பதை விட எனக்கு இந்த உறவு பயமாக இருக்கிறது…எனக்கு நீங்க தொடும் போது வியாட் அன்று நடந்து கொண்ட முறை தான் எனக்கு ஞாபகம் வருகிறது…நீங்க என்னை தொட வேணாம்” என்றாள்…யது அவள் முகத்தை பார்த்தவனுக்கு புரிந்தது…

இது அவன் மேலே கொண்ட வெறுப்பு அல்ல தாம்பத்திய உறவு மேலே கொண்ட பயம் சந்தனா… ஒரு சாதாரண பெண் நாளாந்தம் பஸ், ஸ்கூல், காலேஜ், ஆபிஸ் ஏன் தெருவில் கூட சந்திக்கும் ஆண் தொடுகைகளை அறியவில்லை….அவர்கள் வலிக்கு முன் வியாட் நடந்து கொண்டது மிக சாதாரணம் இவள் தங்க கூண்டில் வளர்க்கப்பட பஞ்சவர்ணகிளி…கிளியின் இறகுகள் உடையாமல் தான் இந்த நிலையை கையாள வேணும் என நினைத்தவன்…

யது “ நான் வியாட் இல்லை சந்தனா உன் புருஷன் அந்நியனுக்கும் புருஷனுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு…அதை நானே சொல்வதை விட நீயாக தெரிந்து கொண்டு பிறகு உன்னை நான் தொடுவேன்….கட்டியவளாக இருந்தால் கூட அவள் சம்மதம் இல்லாமல் தொடுபவன் ஆம்பள இல்லை என நினைப்பவன் நான்…

இன்று இதை பற்றி பேச வேணாம் நான் இப்போ சொல்லும் ஏதும் உனக்கு புரியாது நீ என்னை நம்பினால் நிம்மதியாக தூங்கு…நான் அந்த சோபாவில் தூங்குகிறேன் ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வை இது ஒரு வழி பாதை நீயாக நினைத்தால் கூட… உன்னை நான் போக விட மாட்டேன் நீ தூங்கு என்றவன் இந்த ஏமாற்ற நிலையை சமாளிக்க பால்கனிக்கு போனான்…

அங்கு அவனை சோதிக்க பால் நிலா வானில் பவனி வந்து கொண்டு இருந்தது யது அதை பார்த்து மெல்ல சிரித்தவன்…உள்ளே திரும்பி பார்க்க சந்தனா கட்டிலில் இருந்து முழங்காலை கட்டி கொண்டு ஏதோ யோசனையில் இருந்தாள்….யது நிலவை பார்த்தவன் இந்த நேரத்திற்க்கு இந்த பாட்டு தான் நமக்கு பொருத்தமானது என்று நினைத்தவன் பாட தொடங்கினான் …


நிலவைப் பார்த்து வானம்
சொன்னது என்னைத் தொடாதே நிழலலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே…

நதியைப் பார்த்து நாணல் சொன்னது
என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது
என்னைத் தொடாதே…

நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே….


அவன் பாடும் சத்தம் கேட்க சந்தனா நிமிர்ந்து அவனை பார்த்தாள் யது அவளை பார்த்தவன்…

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல்தானது
இரவல்தானது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது
திருநீலகண்டனின் மனைவி சொன்னது…


தாளத்தை ராகம் தொடாத போதிலே
கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே
தந்தை தன்னையே தாய் தொடகவிடில்
நானும் இல்லையே நீயும் இல்லையே
நானும் இல்லையே நீயும் இல்லையே


என பாட சந்தனா ஏதும் பேசாமல் தலையணையில் தலை வைத்து தூங்க தொடங்கினாள்…

தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்ததா
தர்மம் காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்வோம் அங்கே அனுமதியில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை
நீ அந்தக்கூட்டமே இதில் அதிசயமில்லை

நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே….


என பாடியவாறே உள்ளே வந்தவன் சந்தனாவை பார்க்க அவள் தூங்கி இருக்க… யது மெல்ல சிரித்து விட்டு சோபாவில் படுத்து தூங்க தொடங்க….சந்தனா சட்டென கண் விழித்து தூங்கும் அவனை பார்த்தாள்.

மறு நாள் காலையில் முதலில் வழமை போல கண் விழித்தது சந்தனா தான் அவளுக்கு அபிராமி கூட ஐந்து மணிக்கு எழுந்து பழக்கம்…யது ஆறு மணிக்கு வேலை இல்லாத நேரம் எழுவான் வேலை வந்தால் தூங்கும் நேரம் எழும் நேரம் சொல்ல முடியாது…

அவள் மெதுவாக சத்தம் போடாமல் எழுந்தவள் கொலுசு சத்தம் செய்யாமல் யது நந்தன் தூங்கி கொண்டு இருந்த சோபா அருகே போய் நின்று அவனை பார்த்தாள்….அவன் இன்னும் தூங்கி கொண்டு இருந்தான் அம்மா சொன்னது போல இவர் நல்லவர் தான் என நினைத்தவள்… அவன் போர்வை கீழே விழுந்து கிடக்க அதை எடுத்து போர்த்தி விட்டு அபிராமி சொன்னது போல குளிக்க போய் விட்டாள்…

அவள் வாஷ்ரூம் போக தான் யது நந்தன் கண் திறந்தான் உண்மையில் அவன் பழக்கமற்ற இடம் என்பதால் சீக்கிரமாக எழுந்து விட்டான்….தன் ரூம்மில் தன் கூட மனைவியாக ஒரு பெண் இருப்பது அவனுக்கும் ஒரு மாதிரி சங்கடமாக தான் இருந்தது…அவன் பெண்கள் கூட பேசி பழகாதவன் அல்ல அது பயணி அல்லது தொழில் முறை பேச்சாக இருக்கும்…

யது நந்தன் எழ போகும் போது தான் சந்தனா எழும் அசைவு தெரிந்தது சரி அவளுக்கு தன்னை கண்டு சங்கடமாக இருக்கும்….அவள் வாஷ் ரூம் போன பிறகு எழலாம் என்று நினைக்க தான் அவள் இங்கே நேராக வருவது தெரிந்தது…சரி என்ன செய்கிறாள் என பார்க்கலாம் என நினைத்தால் சந்தனா அவனை நின்று பார்த்து போர்வை போர்த்தது எல்லாம் தெரிந்தது….

அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது சந்தனாவுக்கு அவன் மேலே வெறுப்பு இல்லை…வியாட் மேலே கொண்ட வெறுப்பு, பயம் அவன் மேலும் வந்து விட்டது அதை மெதுவாக அவள் மனதில் இருந்து அகற்றினால்…. அதற்கு பிறகு அவள் அவனை ஏற்று கொள்வதில் எந்த தடையும் இல்லை என நினைத்தான்…

நேற்றே அபிராமி மகளுக்கு தேவையான டிரஸ், நகைகள் யதுவுக்கு தேவையான டிரஸ் அருணை விட்டு எடுத்து இந்த ரூம் வாட்ரோப்பில் எடுத்து வைத்து விட்டார்…அதனால் சந்தனா அங்கே இருந்த லெமன் கலர், பேபி பிங் கலந்த சில்க் சாரி அதற்க்கு பொருத்தமான ரூபி பதித்த நகைகள் அணிந்தவள்….ஈரமான தன் நீண்ட கூந்தலை துவட்டி கொண்டு டிரஸ்ங் ரூம்மில் இருந்து வெளியே வந்நாள் ….

அவள் வர குட் மார்னிங் தனா என குரல் கேட்க யது நந்தன் தான் சொன்னது அவள் அவனை பார்க்க…

யது “ ஹே குட் மார்னிங் சொன்னால் திரும்ப சொல்ல வேணும் மா அது தான் பேசிக் மேனர்ஸ் …நீயும் நானும் எதிரிகள் இல்லை கணவன், மனைவி சோ பேசி, பழக தான் வேணும்…அண்ட் இன்னொரு விஷயம் நேற்று நமக்குள்ளே பேசி கொண்டது யாருக்குமே தெரிவதை நான் விரும்பவில்லை…அதனால் எந்த லாபமும் யாருக்குமே இல்லை சங்கடம் தான் ஏற்படும் நம்ம வாழ்க்கை மற்றவங்க முன்னே கேலி பொருளாக மாறவதை நான் விரும்பவில்லை….

நீயும் மாற முயற்ச்சி செய் என்பதை விட உன்னை நீயே கேட்டு கொள் உன் மனசு சொல்லும் பதில் தான் என்னை உனக்கு உணர்த்தும்…சரி நான் குளித்து விட்டு வருகிறேன் நம்ம ரெஸ்டாரண்ட் போய் சாப்பிடலாம் நமக்காக கட்டாயமாக அத்தை, நித்திலன் காத்து கொண்டு இருப்பாங்க…

உனக்கு காலையில் எழுந்தவுடன் பால் சாப்பிட்டு பழக்கம் என்று நித்திலன் சொன்னான்….அதுவும் அதில் ஹார்லிக்ஸ் அம்மா கட்டாயமாக கலந்து கொடுப்பாங்க அது தான் அவளுக்கு பிடிக்கும் என்றான் எனக்கு ஸ்ட்ராங் காபி தான்…. இரண்டு பேருக்குமே இன்டர்கம்மில் சொல்லி விட்டேன் ரூம் சர்விஸ் கொண்டு வருவாங்க வாங்கி சாப்பிடு நான் குளித்து விட்டு வந்தவுடன் நம்ம கீழே போகலாம் என்றான்…

அவன் குளிக்க போக கொஞ்ச நேரத்தில் காபி, ஹார்லிக்ஸ் வந்தது சந்தனா அதை வாங்கி வைத்தவள்….யது வரும் வரைக்கும் சாப்பிடவில்லை யது ரெடியாகி வந்தான் அவன் கறுப்பு பேண்ட், லைட் லெமன் நிற சட்டை என சந்தனா புடவை நிறத்திற்கு பொருத்தமாக அணிந்து வந்து இருந்தான்…அவன் வந்தவன் சந்தனா தனக்காக தான் காபி சாப்பிடாமல் இருக்கிறாள் என அறிந்தவன்…. மனதில் சாரல் வீசியது அவன் சந்தோஷமாக காபி சாப்பிட்டு விட்டு கீழே போக துவாரகேஷ் சென்னை கிளம்ப ரெடியாக நின்று இருந்தார்….



நிலவு வரும்….
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 42


சந்தனா, யது நந்தன் இருவருமே ஜோடியாக ரெஸ்டாரண்ட் போனார்கள் அங்கே யது சொன்னது போல… அபிராமி, நித்திலன் மட்டுமல்ல தணிகாசலம், மூர்த்தி, கேணல், சுசீலா என அனைவருமே காலை டிபனுக்கு வந்து இருந்தார்கள்….இவர்களை முதலில் கண்டது நித்திலன் தான் இதோ அக்கா, மாமா வந்து விட்டாங்க என சத்தம் போட்டவன் எழுந்து ….வேகமாக சந்தனா அருகில் சென்று அவளை அணைக்க சந்தனா முகம் நிறைய சிரிப்போடு தம்பியை அணைத்து கொண்டாள்…

அவள் முகத்தின் மலர்ச்சி ஒரு தாயாக அபிராமிக்கு நிம்மதியாக இருந்தது… மற்றவர்கள் இவர்கள் பொருத்தமான ஜோடி என நினைத்தார்கள்….

நித்திலன் இது வரை சந்தனாவை பிரிந்து இருந்தது இல்லை தனி தனி ரூம் என்றாலும் கூட… காலையில் எழுந்தவுடனே தமக்கையை பார்க்க ஓடி வந்து விடுவான்….இன்று தான் அவனின் முதல் பிரிவு .

நித்திலன் “ நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் அக்கா அம்மா கிட்ட கேட்டேன்…அவங்க சொன்னாங்க அக்காவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது இனி அவள் முதலில் உன் மாமாவை தான் பார்க்க வேணும் பிறகு தான் நம்மை பார்க்க வேணும் என்று சொன்னாங்க ….இனி நான் உன்னை டெய்லி பார்க்க முடியாதா? நீ மாமா கூட போய் விடுவாயா?... என முகம் ஒரு மாதிரியாக அழுகை நிலையில் இருக்க ஏக்கமாக கேட்டான்…

அதற்க்கு சந்தனா பதில் சொல்ல முன் யது
“அப்படி யார் சொன்னது மை பாய் ஒரு பெண்ணுக்கு முதல் உரிமை அவளை பெத்தவங்களும் கூட பிறந்தவங்களும் தான்…இத்தனை வருடம் அவங்க தானே அவளை அன்பாக பாதுகாப்பாக பார்த்து கொண்டது பிறகு அவங்களுக்கு உரிமை இல்லை என்று எந்த சட்டத்தாலும் சொல்ல முடியாது…

கல்யாணம் என்பது புது உறவை வளர்க்க தானே தவிர பழைய உறவுகளை வெட்டி விட அல்ல …சந்தனா உன் அக்கா அவள் கிட்ட உள்ள உன் உரிமைகளை நான் உட்பட யாருமே உன் கிட்ட இருந்து பறிக்க முடியாது….நீ உன் அக்கா கூடவே இருக்க வேணும் என்றாலும் கூட தாராளமாக வந்து அவள் கூட இரு பட் அதற்க்கு உன் தாத்தா, அம்மா, அப்பா பர்மிஷன் வேணும்” என்றான்

யது நந்தன் சொல்ல சந்தனா அவனை சந்தோஷமாக பார்க்க.. மற்ற உறவுகள் நிம்மதியாக அவனை பார்த்தார்கள்…

அப்போது துவாரகேஷ், மரகதம் கார்ட்ஸ் சூழ வந்தார்கள் துவாரகேஷ் அபிராமி அருகே வந்தவர்…

துவாரகேஷ் “ அபிராமி நித்திலனை அழைத்து கொண்டு கிளம்பு நம்ம சென்னைக்கு போகலாம்….இனி நமக்கு இங்கே என்ன வேலை அது தான் நீ உன் அப்பா நினைத்ததை நடத்தி என் பெண்ணு வாழ்க்கையை மொத்தமாக கெடுத்து விட்டீங்க….இப்போ நான் பேசுவது உங்களுக்கு பைத்தியக்காரன் போல தான் இருக்கும் ஒரு நாள் உன் பெண்ணு கண்ணை கசக்கி கொண்டு வரும் போது தான் உண்மை புரியும்…

என் பெண்ணை தான் என் கிட்ட இருந்து மொத்தமாக பிரித்து விட்ட என் பையனாவது என் சொல்படி வளரட்டும்…நித்திலன் வா நம்ம கிளம்பலாம் இனி அவள் உன் அக்கா இல்லை கேப்டன் மனைவி…ஆனா நீ துவாரகேஷ் வாரிசு உன்னை எப்படி வளர்க்க வேணும் என எனக்கு தெரியும்” என்றார்…

நித்திலன் “ நான் உங்க கூட வர மாட்டேன் உங்களுக்கு எங்களை விட பணம், ஸ்டேட்டஸ் தான் முக்கியம்…அக்காவை கூட அந்த டானுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தீங்க!... எனக்கு தாத்தா, அம்மா, அக்கா, மாமா தான் வேணும் உங்க கூட வர மாட்டேன்…மாமா என்னை அக்கா கூடவே இருக்க சொல்லி விட்டார் “என்றான்

துவாரகேஷ் “ நித்திலன் எனக்கு கோபத்தை உண்டாக்கி விடாதே உன் கிட்ட நல்ல மாதிரியாக நடக்க, பேச வேணும் என நினைக்கிறேன்….உனக்கு என்ன பைத்தியமா பிடித்து இருக்கு உன் அக்காவின் புகுந்த வீட்டில் போய் இருக்க நீ என்ன யாரும் இல்லாத அனாதையாக துவாரகேஷ் பையன் கோடிக்கானக்கான சொத்துக்கு வாரிசு…

நீ இருக்கும் உன் ரூம், படிக்கும், ஸ்கூல், சாப்பிடும் சாப்பாடு போடும் டிரஸ் இது எல்லாம் என்ன விலை தெரியுமா? ஐந்து,பத்து நூறு, ஆயிரம் அல்ல லட்சம், கோடியில் வரும்…இதை எல்லாம் உன் அக்கா புருஷனால் உனக்கு கொடுக்க முடியுமா?....

முதலில் உன் அக்காவுக்கே அவர் இதை எல்லாம் கொடுக்க பல யுகங்கள் வேணும் இதில் உனக்கு கொடுத்து விட்டாலும்…மரியாதையாக கிளம்பு அபிராமி உனக்கு எப்படி வசதி உன் புருஷன் கூட உன் புகுந்த வீட்டுக்கு வருகிறாயா?.. இல்ல உன் அப்பன் கூட நிரந்தரமாக உன் பிறந்த வீட்டுக்கு போகிறாயா!.... உன் மகளுக்கு கழுத்தில் தாலி ஏறிய நேரம் உன் கழுத்தில் தாலி இறங்க வேணுமா? என்று நீ தான் முடிவு எடுக்க வேணும் உனக்கு ஐந்து நிமிஷம் டைம்” என்றார்…

அவர் பேச பேச யது நந்தன் முகம் இறுக தணிகாசலம் முகத்தில் கோபம் ஏறியது…கேணலுக்கு இவனை இப்பவே சுட்டு தள்ளி விட்டால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது அவர்கள் வாய் திறந்து பேச முன்னே!....

போதும் துவாராகா என்றது மரகதம் அனைவருமே அவரை பார்த்தனர்…

மரகதம் “போதும் இத்தோடு உன் ஆணவ பேச்சை நிறுத்தி விடு உன் இந்த பேச்சு, நடத்தைக்கு மொத்த காரணம் நான் தான்…
உன் அப்பா சொன்னது போல.. நான் பணம், புகழுக்கு மதிப்பு கொடுத்து பலதை இழந்து விட்டேன் நம்ம இப்போ நல்லா இருக்கிறோம் என்றால் அதற்க்கு காரணம் காயத்திரி…

அவளால் தான் உனக்கு இந்த பெயர், புகழ் எல்லாம் என் பெண்ணு உன் தங்கச்சி இப்போ நல்லா இருக்கிறாள் நல்ல புருஷன், குடும்பம் என்று வாழ்கிறாள் என்றால் அதற்க்கு காரணம் காயத்திரி….என் இரண்டு பசங்களும் இப்போ சமூகத்தில் நல்ல பெயர், புகழோடு இருக்க காரணம் சம்பந்தி அதை நான் மறந்ததால் தான் என் பேத்திக்கு அந்த ரவுடி பயலை நீ மாப்பிள்ளையாக கொண்டு வர காரணமானது ….

ஒரு பிள்ளை வழி தவறி போகிறான் என்றால் அதற்க்கு ஒரு காரணம் தான் இருக்கும்….ஒன்று பெத்தவங்க இல்லாமல் இருக்க வேணும் இல்ல இருந்தும் அந்த பிள்ளை செய்யும் தவறை கண்டிக்காமல் விட்டு இருக்க வேணும்…நான் இதில் இரண்டாம் ரகம் நீ இப்படி ஆணவத்தில் பேசும் போது எல்லாம் நான் அதை தூண்டி விடுவது போல பேசி நடந்து விட்டேன்….

அது தான் உன் காதலை இழக்க காரணமாகி விட்டது கடைசி காலத்தில் அந்த மகராசி நிம்மதி இல்லாமல் போய் சேர்ந்து விட்டாள்…இனியும் நான் அமைதியாக இருந்தால் என் அடுத்த மருமகள் பேத்தி, பேரனை இழக்க வேண்டி வந்து விடும்….

துவாரகா தவறு செய்வது மனித இயல்பு திருந்தும் சந்தர்ப்பம் வரும் போது அதை திருத்தி கொள்வது தெய்வ பண்பு….நான் திருந்த நினைக்கிறேன் பா என் மகன் மனைவி, பிள்ளைகள் என குடும்பமாக வாழ வேணும் அதை நான் சந்தோஷமாக பார்த்து விட்டு…காசிக்கு போய் என் பாவங்களை கங்கையில் மூழ்கி தொலைக்க வேணும் இது தான் என் ஆசை பா இதை அம்மாவுக்காக செய் துவாரகா “என கேட்டார்…

துவாரகேஷ் “ சரி தான் உனக்கும் இந்த புத்தி கெட்ட கூட்டத்தோடு இருந்து புத்தி பேதலித்து விட்டது போல…மரியாதையாக என் கூட கிளம்பி வா உன் கதாகாலேட்சபம் எல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்லை திருந்த நான் என்ன ஸ்மக்லிங்கா செய்கிறேன்….நேர்மையான வழியில் வரி கட்டி பிசினஸ் செய்கிறேன்… நீ திருந்தும் வேலை, காசிக்கு போகும் வேலை எல்லாம் சென்னைக்கு வந்து செய் இப்போ கிளம்பும் வழியை பாரு “என்றான்…

மரகதம் “ நீ இந்த ஜென்மத்தில் திருந்தும் ஆள் போல எனக்கு தெரியவில்லை இப்போ உன்னை பெத்தவள் நான் சொல்கிறேன் கேளு…நான் மட்டுமல்ல அபிராமி, நித்திலன் கூட உன் கூட வர மாட்டோம் உனக்கு விருப்பம் என்றால் நீ கிளம்பி போகலாம்…அதை மீறி எங்களை வற்புறுத்தி அழைத்து போன என்று வை மகன் என பார்க்க மாட்டேன்…

போலீஸ் கம்ப்ளைன்ட், பத்திரிகை, மீடியாவை அழைத்து உன் பெயரை நாறடித்து விடுவேன்…இது பெத்தவளாக உன்னை திருத்த எனக்கு வேற வழி தெரியவில்லை… நான் இப்போ தான் என் பேரன், பேத்திங்க கூட நிம்மதியாக வாழ ஆரம்பிக்க போகிறேன்…நீ தனியாக அந்த பெரிய பங்களாவில் இருந்தால் தான் உனக்கு தனிமை என்றால் என்ன என்று புரியும் அப்போ தான் உறவுகள் அருமை புரியும்…

இது ஒரு பெத்தவளாக என் பிள்ளைக்கு செய்யும் உதவி நீ என்னை பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்ல துவாரகா… நீ குடும்பமாக சந்தோஷமாக இருக்க வேணும்…நம்ம குடும்பம் யது மாப்பிள்ளையை விட கீழான நிலையில் இருந்து வந்தது ராசா உங்க அப்பா கூட பணம் இல்லை என்றால் கூட நான் சந்தோஷமாக தான் குடும்பம் நடத்தினேன்…அப்போ நமக்கு இருந்த சந்தோஷம் இப்போ நமக்கு இல்லை காரணம் பணம் வர உறவுகள் தூர போய் விட்டது அதனால் தான் அம்மா சொல்கிறேன் கொஞ்சம் புரிந்து நடந்து கொள் கண்ணா “என்றார்…

துவாரகேஷ் அவர்களை முறைத்து பார்த்து விட்டு தன் கார்ட்ஸ் துணைக்கு வர ஹெலிகாப்டரில் கிளம்பி சென்னைக்கு போனான்…

அவர் போக மரகதம் அங்கே இருந்த அனைவரையுமே கை எடுத்து கும்பிட்டவர்..

மரகதம் “ என்னை அனைவரும் மன்னிக்க வேணும் என் பையன் இப்படி மாற காரணம் நான் தான்….இதற்க்கு என்ன தண்டனை தந்தாலும் கூட நான் ஏற்று கொள்கிறேன்” என்றார்…

“நிச்சயமாக இதற்க்கு தண்டனை தராமல் விட்டால் எப்படி?... தணிகாசலம் சார் என்ன நான் சொல்வது சரி தானே!...என்றார் கேணல் ஜெகதீஷ்…

தணிகாசலம் “ நிச்சயமாக சம்பந்தி மா உங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? இனி நீங்க உங்க மருமகள் பேத்தி, மாப்பிள்ளை, பேரன் கூட சந்தோஷமாக இருக்க வேண்டியது தான்….இது தான் உங்களுக்காக தண்டனை” என்றார்.அவர் சொல்ல மரகதம் கண்கள் ஆனந்த கண்ணீரை சிந்தியது…



நிலவு வரும்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 43


துவாரகேஷ் கிளம்பி போனதும் அவரை பற்றி நினைக்க இனி ஒன்றுமில்ல காலம் தான் அவரை மாற்ற வேணும் என நினைத்தவர்கள்.. சந்தோஷமாக காலை உணவை எடுத்து கொள்ள தொடங்கினார்கள்…

மரகதத்திற்கு சற்று சங்கடமாக தான் இருந்தது இத்தனை நாள் இவர்களை வாட்டி வதைத்து விட்டு இப்போ இவர்களோடு எப்படி பழகுவது என்று….ஆனால் அவர் நினைத்ததற்கு நேர் மாறாக அபிராமி, சுசீலா, சந்தனா அவரையும் தங்கள் கூட சேர்த்து பழக தொடங்கி விட்டார்கள்… நித்திலனுக்கு தான் அவர் கூட கொஞ்சம் பழக ஒரு மாதிரியாக இருந்தது அவன் தணிகாசலத்தை தவிர வேற யார் கூடவும் சட்டென பழகி விட மாட்டான் யதுந்தன் தான் இதில் விதிவிலக்கு…

தணிகாசலம் “ கேணல் நானும் மூர்த்தியும் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணலாம் என நினைத்தோம்….பாப்பா கல்யாணம் சென்னையில் நடந்து இருக்க இப்படி தான் நாங்க ரிசப்ஷன் ஒன்று ஏற்பாடு பண்ணி இருப்போம்…பொதுவாக அழைப்பு வைத்தாலும் கூட பெரும்பாலும் பிசினஸ் ஆளுங்க கல்யாணத்திற்க்கு வர மாட்டார்கள் ரிசப்ஷனுக்கு தான் வருவார்கள்….

நேற்று கல்யாணம் நடந்தாலும் கூட மாப்பிள்ளையால் சில சங்கடங்கள் சரி இனி அதை பற்றி பேசி பயன் இல்லை… என்ன இருந்தாலும் கூட அவர் என் மாப்பிள்ளை விட்டு கொடுக்க முடியாது… அது தான் இப்போ சம்பந்திமாவும் இருக்கிறாங்க சந்தோஷமாக ஒரு பார்ட்டி வைக்கலாம் என்ற எண்ணம் என்ன சம்பந்திமா” என அவரிடம் கேட்டார்…

மரகதம் பதில் சொல்ல முன்னே யாஹூ! என சத்தம் போட்ட நித்திலன்… மரகதம் கையை தன்னையறியாது பற்றி கொண்டவன்….

நித்திலன் “ பாட்டி பீளிஸ் ஓகே என சொல்லுங்கள் நான் என் ப்ரண்ட்ஸ் அவங்க அக்கா கல்யாணத்தின் போது ஜாலியாக எப்படி இருந்தாங்க என வந்து சொன்ன போது….என் அக்கா கல்யாணத்தில் நானும் இப்படி இருக்க வேணும் என நினைத்தேன் நேற்று அது முடியவில்லை… இன்று பார்ட்டியில் ஜாலியாக இருக்க போகிறேன்” என அவன் வயதுக்குரிய ஆசையில் கேட்டான்….

மரகதம் இத்தனை நாளில் எதை எல்லாம் இழந்து இருக்கிறோம் என புரிந்தது இந்த உரிமை, அன்பு…. எதை கொண்டும் வாங்க முடியாத ஒன்று அல்லவா? அவர் நித்திலன் தலையை தடவி விட்டவர்…

மரகதம் “ சம்பந்தி இதை எல்லாம் என் கிட்ட கேட்க வேணுமா? பசங்க என்ன ஆசைபடுகிறாங்களோ அதை செய்யுங்கள்…உங்களுக்கு தெரியாதா? நித்திலா உன் ப்ரண்ட்ஸ் அக்கா, அண்ணங்க கல்யாணத்தை விட உன் அக்கா கல்யாணத்தை நம்ம கொண்டாடலாம்….என்ன சரியா பா” என கேட்டார் நித்திலன் முகம் மலர சரி என தலையாட்டினான்…

தணிகாசலம் அதற்காக ஏற்பாடுகள் மூர்த்தியை பார்க்க சொல்லி விட்டார் நாளை கப்பல் கிளம்ப வேணும் என்பதால்…யது நந்தன் அருண் கூட கப்பலை பார்க்க போய் விட்டான் அனைத்தும் தயாராக இருக்க வேணும் இல்லையா?... அதை எல்லாம் கப்பல் கிளம்ப முன் சரி பார்ப்பது அவன் கடமை…நடுக்கடலில் என்ன இறங்கி தள்ளவா முடியும்!...

தணிகாசலம், மூர்த்தி பாதியில் விட்டு வந்த டீலை முடிக்க அவரும் நாளை சிங்கப்பூர் கிளம்புகிறார்….அபிராமி, மரகதம், நித்திலன், சந்தனா எல்லாம் திட்டமிட்ட பயணத்தை நிறைவு செய்து விட்டு யது கூட வருவதாக சொல்லி விட்டனர்….யது நந்தன் இருப்பதால் தணிகாசலத்திற்க்கு பயம் இல்லை….

அனைவருக்குமே நைட் பார்ட்டிக்கு அழைப்பு விடுத்தார் தணிகாசலம் மாலை ஏழு மணிக்கு பார்ட்டி தொடங்க அனைவருமே வர தொடங்கி விட்டனர்…அந்தமானில் உள்ள கடைகளில் அபிராமி, மரகதம், சுசீலா கூட மகள் மருமகனுக்கு உடை வாங்கினாள்… சந்தனாவுக்கு அவள் பெயருக்கேற்றது போல சந்த நிற புடவையில் சிவப்பு கற்கள் கொண்டு டிசைன் பண்ணிய புடவை, யதுவுக்கு கறுப்பு கோட் சூட், சந்த நிற சேர்ட்….

பார்ட்டி ஆரம்பிக்க அனைவருமே வர ஆரம்பித்தார்கள் இத்தனை நாள் பழக்கத்தில் அனைவருமே ஒரேய குடும்பம் ஆகி விட்டார்கள்…தணிகாசலம், மூர்த்தி தான் வரவேற்றனர் மரகதம் திருந்தி விட்டதால் அனைவர் கூடவும் பேச ஆரம்பிக்க அவர்களும் சகஜமாக பேச ஆரம்பித்தனர்….

அப்போது தணிகாசலம் மூர்த்தியிடம் மைக் எடுத்து வர சொல்ல அவரும் எடுத்து கொண்டு கொடுத்தார்….அதை வாங்கிய

தணிகாசலம் “ டியர் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ் என் அழைப்பை ஏற்று வந்த உங்க அனைவருக்குமே என் நன்றிகள் நேற்று என் பேத்தி கல்யாணம் நடந்தது…அதில் நடந்த சங்கடங்களும் தெரியும் இப்போ ஒரளவு எல்லாம் சரியாகி விட்டது அதை கொண்டாட தான் இந்த பார்ட்டி பீளிஸ் என்ஜாய் பண்ணுங்கள் இனி நம்ம பயணங்கள் வேற பாதையில் அமையலாம் …

பட் ஒன் திங் இந்த பயணம் முடிய நான் சென்னையில் என் பேத்திக்கு பெரிதாக ரிசப்ஷன் வைக்க போகிறேன்….இது என் பேரனின் ஆசை அவன் ஆசையை நிறைவேற்றி தான் எனக்கு பழக்கம் அவன் அக்காவின் ரிசப்ஷனை அவன் நினைத்தபடியே நடத்த போகிறேன்… அதற்க்கு உங்களுக்கு அழைப்பு வரும் நீங்க கட்டாயமாக அனைவருமே வர வேணும் நீங்க வருவதற்கான ஏற்பாடு அது போல தங்குமிடம் எல்லாம் என் பொறுப்பு.. இந்த அழைப்பை நீங்க கட்டாயமாக மறுக்காமல் ஏற்று கொள்ள வேணும் தேங்க்யூ” என தன் பேச்சை முடித்தார்….

பார்ட்டி ஆரம்பித்தது டிரிங் பார்ட்டி கூட தணிகாசலம் ஏற்பாடு பண்ண சொல்லி இருந்தார்…வந்த அனைவருமே விவிஐபிங்க அது இல்லாமல் என்ன பார்ட்டி என கட்டாயமாக கேள்வி எழுப்ப கூடும்…யது நந்தன் தரையில் பார்ட்டி வைத்தால் மட்டும் மேனர்ஸ்க்காக ஒரு ஷிப் பண்ணி விட்டு நிறுத்தி விடுவான்….

கடல் பயணத்தில் போது அதை முகர்ந்து கூட பார்க்க மாட்டான் அருண் தான் கொஞ்சம் சாப்பிடுவான்….அதுவும் அவன் நண்பனுக்கு கல்யாணமான சந்தோஷஷத்தில் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டான்… நித்திலன் தன் வயது பசங்க சிலரோடு பேசி கொண்டு இருக்க சந்தனா தன் வயது ஒத்த பெண்கள் கூட இருந்தாள்…அபிராமி, மரகதம் மற்ற பெண்கள் கூட பேசி கொண்டு இருந்தார்கள்.

தணிகாசலம், மூர்த்தி, கேணல் யது நந்தனை வந்து இருக்கும் விவிஐபிங்களுக்கு அறிமுகப்படுத்தி பேசி கொண்டு இருந்தார்கள்…அப்போது அருண் சந்தோஷத்தில் அங்கே இருந்த DJ வின் மைக் வாங்கியவன் …

அருண் “ ஹாய் எவரி ஒன் இந்த ஹாப்பியான தருணத்தை மேலும் ஹாப்பியாக மாற்ற என் உயிர்தோழன்…நம்ம வந்த ஷிப்பின் கேப்டன் தன் மனைவிக்காக ஒரு பாடலை பாட போய்கிறார்…பீளிஸ் நம்ம அனைவருமே கை தட்டி அவரை உற்சாகப்படுத்த போகிறோம்…யது மச்சான் வாடா சந்தனா சிஸ்டருக்காக நீ இப்போ பாட போகிறார் என்ன? சிஸ்டர்” என கேட்டான்….

அவன் கேட்க சந்தனா முகம் சிவக்க பெண்கள் சிரித்தனர் மற்றவர்கள் கை தட்டி உற்சாகபடுத்த ஆரம்பிக்க…யது மனதில்

“இவன் தண்ணீ போட்டால் அலப்பறையை கூட்டாமல் விட மாட்டான்…இது இவனுக்கு பழக்கம் இவனை” என அருணை முறைத்து பார்க்க ….அவன் அருகில் இருந்த கேணல் அவன் தோளை தட்டியவர்.

கேணல் “ கமான் மை பாய் இது எல்லாம் லைவ்வில் ஒரு பார்ட் இந்த வயதில் என்ஜாய் பண்ணாமல் பிறகு நீ எப்போ பண்ண போகிற…மனைவியை இம்ப்ரஸ் பண்ணுவது ரொம்ப கஷ்டம் கண்ணா எங்களுக்கு தான் அந்த வாய்ப்பு இல்லாமல் தவிர்க்கிறோம்….உனக்கு லட்டாக கையில் வந்து இருக்கு சந்தனா குட்டியை இம்ப்ரஸ் பண்ணும் வழியை பாரு கோ” என சொன்னார்…

யது தயங்க தணிகாசலம், மூர்த்தி தொடக்கம் அனைவருமே சொல்ல தயக்கமாக வந்தவன்…மைக் எடுத்தவன் சந்தனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு பாட தொடங்கினான்…


ஆஆஆ ஆஹா
ஆஆஆ ஆஹா


மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே! என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே! என் கண்ணே!
பூபாளமே….கூடாதெனும்
வானம் உண்டோ சொல்?

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே! என் அன்பே!


யது நந்தன் சந்தனாவை பார்த்து பாட அவளுக்கு இந்த பாட்டு யாருக்காக ? எதற்காக என்று புரிய அவள் தலை குனிய….இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த அபிராமி மனதில் எச்சரிக்கை மணியடித்தது.

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை தான் என்ன….சொல்?

மேடையைப் போல வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன? வா


என பாட சந்தனா சட்டென யதுவை நிமிர்ந்து பார்த்தாள் யதுவும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்…இவர்களை அபிராமி கவனித்து கொண்டு இருந்ததை இவர்கள் பார்க்கவில்லை…

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
அன்பே! என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ
கண்ணே! என் கண்ணே!


யது நந்தன் பாடி முடித்த மறு கணம் கை தட்டும் சத்தம் காதை பிளந்தது….அனைவரையுமே அவன் தன் பாட்டால் கட்டி போட்டு இருந்தான்…பாட்டி முடிய டின்னர் ஆரம்பமானது பஃபே முறையில் என்பதால் தங்களுக்கு பிடித்த உணவுகளை எடுத்து கொண்டு சாப்பிட அமர்ந்தார்கள்…

அபிராமி மரகத்திற்க்கு பிடித்த சாப்பாட்டை எடுத்து வந்து கொடுக்க அவர் இப்போ சேர்ந்த தன் தோழமைகளோடு பேசி கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்…அது போல தணிகாசலம், மூர்த்திக்கு எடுத்து கொடுத்து விட்டு நித்திலனை பார்க்க அவன் நண்பர்கள் கூட சாப்பிட நின்றான்…அபிராமி தனக்கும் மகளுக்கும் போட்டு எடுத்து கொண்டு போனார்…

அவள் கூட இருந்த மூன்று பெண்கள் யாரோ தெரிந்தவர்களிடம் பேச போய் இருந்தனர்…தாயை காண முகம் மலர அம்மா என அழைக்க மகள் அருகில் வந்து இருந்தவள்…

அபிராமி “ என்ன பாப்பா தனியாக இருக்க உன் கூட இருந்த பெண்ணுங்க எங்கே? என கேட்டாள்…

சந்தனா “ அவங்களுக்கு தெரிந்த யாரோ அழைத்தாங்க என பேச போய் இருக்கிறாங்க மா…என்னை கூட அழைத்தாங்க எனக்கு அவங்களை தெரியாது என்பதால் பேச போகவில்லை…சாப்பிட போக வேணும் என நினைத்தேன் மா நல்ல வேளை நீங்களே எடுத்து வந்து விட்டீங்க” என்றாள்…

அபிராமி “உனக்கு அம்மா எடுத்து வந்து விட்டேன் ஆனா மாப்பிள்ளைக்கு யார்? இருக்கிறாங்க மா… சாப்பாடு எடுத்து போக போக” என கேட்ட அபிராமியை சந்தனா புரியாமல் பார்த்தாள்…



நிலவு வரும்….


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 44



அபிராமி சந்தனாவிடம் யதுநந்தனுக்கு யார் சாப்பாடு எடுத்து போவார்கள் என கேட்டார் சந்தனா அவரை புரியாமல் பார்த்தாள்…


அபிராமி “ பாப்பா இப்போ நீ சின்ன பெண்ணு இல்லை கல்யாணமான பெண்ணு ஒரு பெண்ணுக்கு ஒரு அம்மா எந்த எந்த வயதில்….என்ன சொல்லி கொடுக்க வேணுமோ! அதை எல்லாம் நான் உனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறேன்…


உனக்கு ஒரு பூ அழகாக தெரிகிறது அதை நீ பறித்து சூடி கொள்ள நினைக்கிற ஆனால் அது உன் கூந்தலை அலங்கரிக்க தகுதியான மலர் அல்ல உண்மை அது தான்…அடுத்த இன்னும் ஒரு பூவை பார்க்கிற அது பெரிதாக அழகும் இல்லை வாசமும் இல்லை ஆனால் அது தெய்வத்தின் காலடியில் வைத்து பூஜிக்க தகுதியான மலர்…. இதை நான் ஏன் சொல்கிறேன் என புரிகிறதா!...


வியாட்டை உன் அப்பா உனக்காக மாப்பிள்ளையாக கொண்டு வந்தது அவன் அந்தஸ்து, பெயர், புகழுக்காக…ஆனா யது நந்தன் உனக்கு தெய்வமாக பார்த்து தந்த வாழ்க்கை துணை பாப்பா…அவனை ஏற்று கொள்ள உனக்கு சில சங்கடங்கள் இருக்கும்….


நீ பணத்தை பார்ப்பவள் அல்ல மனதை நேசிப்பவள் நீ என் காயத்திரியின் அம்சம் அவள் பணத்தை, அந்தஸ்தை பார்த்து இருக்க….இன்று உன் அப்பா இப்படிப்பட்ட ஒரு இடத்தில் இருந்து இருக்க முடியுமா? அவள் நேசித்தது உன் அப்பாவின் திறமையை, நல்ல குணத்தை….யது ரொம்ப நல்லவன் பாப்பா சீக்கிரமாக அவனை புரிந்து கொண்டு உன் வாழ்க்கை தொடங்கு…


வாழ்க்கை வாழ தானே! தவிர விலகி இருக்க இல்லை நம்ம வாழ போகும் வாழ்க்கை நீண்டதா! இல்லை குறுக்கியதா! என தெரியாது ….சாவு எப்போ எப்படி வரும் என்று கூட தெரியாது அதனால் கடவுள் தந்த வாழ்க்கையை நம்ம அலட்சியம் செய்யாது வாழ வேணும்….நீயும் யதுவும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து குடும்பம், குழந்தை என இருக்க வேணும் இது தான் இந்த அம்மாவின் ஆசை…


உனக்கு ஒன்று என்றால் அழுது துடிக்க நிறைய உறவுகள் இருக்கு ஆனால் யதுவுக்கு யார் இருக்கிறாங்க மா!... யாருமே இல்லை இனி நீ தான் எல்லாமாக அவருக்கு இருக்க வேணும் அவரை பார்த்து கொள்ள வேணும் சரியா?.... அம்மா எதற்காக இதை சொல்கிறேன் என உனக்கு புரியும் சீக்கிரமாக அவரை புரிந்து கொண்டு வாழ தொடங்கு” என்றார்….


தாய் சொன்ன அனைத்தும் சந்தனாவுக்கு புரிந்தது அவள் நித்திலன் கூட பேசி சிரித்து கொண்டு இருந்த யது நந்தனை பார்க்க…அதைய நேரம் அவனும் ஏதோ உள்ளுணர்வு உந்தி தள்ள நிமிர்ந்தவன் இவள் பார்ப்பதை பார்த்தவன்…என்ன என தன் பார்வையால் வினவ சந்தனா தலை குனிந்தாள்…


அப்போது கேப்டன் என ஷிப் இன்ஜினியர் ஓடி வந்தார்…


அவர் “ ஸாரி கேப்டன் உங்களை இந்த டைம் டிஸ்டர்ப் பண்ணுவதற்கு எதிர்பாராத விதமாக ஷிப்பில் பயர் ஆக்ஸிடெண்ட் ஒன்று….கிச்சனில் குக் பண்ணி கொண்டு இருக்கும் போது கேஸ் லீக் ஆகி விட்டது நம்ம filling பண்ணி கொண்ட வாயுவால் தான் இது நடந்தது….


அதில் தான் ஏதோ தவறு இருக்கு நம்ம கார்ட்ஸ் தீயை அணைத்து கொண்டு இருக்கிறாங்க….ஹோட்டல் ரிசப்ஷனுக்கு கால் எடுத்தால் ரிங் போகுது யாரும் எடுக்கவில்லை அது தான் நான் வந்தேன் கேப்டன்” என்றான்…


அவன் சொல்ல அங்கே இருப்பவர்கள் முகம் பயத்தால் மாறியது காரணம் அவர்கள் உடைமைகள் அங்கே இருக்கிறது…..முக்கியமான பொருட்களை எடுத்து வந்து விட்டாலும் மற்ற பொருட்கள் அங்கே இருக்கே!....அதை விட திரும்பி போவது எப்படி அடுத்த ஷிப் வரும் வரைக்கும் காத்து இருக்க வேணுமோ என்ற கவலையில் அவர்கள் முணு முணுக்க தொடங்கி விட்டார்கள் ….


யது நந்தன் “ ப்ளீஸ் கொஞ்சம் அமைதியாக இருங்க உங்க பயணத்தில் எந்த ப்ராப்ளமும் வராது…பாலா சார் என்னை நம்பி தானே உங்களை எல்லாம் அனுப்பினார் சோ உங்க பாதுகாப்பான பயணம் என் பொறுப்பு…நான் போய் பார்க்கிறேன்” என்றவன் .


சந்தனா அருகில் போனவன் அவன் கோர்ட், வாட்ச், செயின், மோதிரம் எல்லாம் கழட்டி கொடுத்தவன்…


யது “ தனா நீ எனக்காக காத்து இருக்க வேணாம் தூங்கு அங்கே எல்லாம் சரி பார்த்து விட்டு வர லேட்டாகி விடும்…..தனியாக ரூம்மில் இருக்க வேணாம் அத்தை கூட தூங்கு நான் போய் விட்டு வருகிறேன்” என்றான்…..


அருண் “ டேய் யது இரு டா நானும் வருகிறேன் நான் கோ கேப்டன் தானே!....என்றான்.


யது “ வேணாம் டா நீ கொஞ்சம் ஜாஸ்தியாக லிக்கர் யூஸ் பண்ணி விட்ட உனக்கு தூக்கம் வரும்…அங்கே உன்னால் தாக்கு பிடிக்க முடியாது நீ இங்கே இரு நான் போய் என்ன என பார்த்து விட்டு வருகிறேன்” என்றவன் கிளம்ப போனான்…


தணிகாசலம் “ மாப்பிள்ளை இருங்க நீங்க இப்போ தான் புதுசாக கல்யாணம் ஆனவர் நீங்க போக வேணாம்…என் கார்ட்ஸ் போய் அதை எல்லாம் சரி செய்வாங்க” என்றார்…


யது நந்தன் “தப்பாக நினைக்க வேணாம் தாத்தா இது என் தொழில் இதில் நான் போகாது….மற்றவங்களை அனுப்ப கூடாது பாலா சார் என் மீது முழு நம்பிக்கை வைத்து தான்.. அவர் கப்பலை மட்டுமல்ல கூடவே மூவாயிரம் உயிர்களை பாதுகாக்கும் பொறுப்பையும் கொடுத்து இருந்தார்…


அதற்க்கு நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன் நான் தான் இந்த ஷிப்போட கேப்டன் அதனால் நான் போய் விட்டது ஜாக்கிரதையாக வருவேன்…எனக்கு தெரியும் உங்க பயம் எதற்க்கு என்று நீங்க பயப்பட தேவையில்லை நான் உங்க பேத்திக்காக என்னை ஜாக்கிரதையாக பார்த்து கொள்வேன் “என்றவன் சீப் என்ஜீனியர் கூட போனான்….


கப்பல் நிலை பற்றிய எண்ணத்தில் நல்ல ஒரு விருந்து சாப்பாட்டுக்கு வந்த அனைவருமே… அதன் ருசி தரம் பார்க்காது சாப்பிட்டு விட்டு தணிகாசலத்திற்கு நன்றி சொல்லி விட்டு தங்கள் ரூம்க்கு கிளம்பி போனார்கள்….மீதி இருந்தது தணிகாசலம் குடும்பமும், கேணல் அவர் மனைவியும் தான் அருண் கூட தூங்க போய் விட்டான்…


தணிகாசலம் “ சரி அப்போ நம்ம கிளம்பலாம் அபி, பாப்பா யது மாப்பிள்ளை பற்றி யோசிக்க வேணாம்…அவர் வேணாம் என்றாலும் கூட அவரை பாதுகாக்க வேண்டியது என் கடமை அதனால் நம்ம கார்ட்ஸ்…. அவரை பாதுகாக்க போய் விட்டாங்க நீங்க நிம்மதியாக போய் தூங்க” என்றார்.


கேணல் “ தணிகாசலம் சார் நீங்க கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை நான் யது கூட இரண்டு தடவை டிராவில் பண்ணி இருக்கிறேன்…எனக்கு கடல் பயணம் பிடிக்கும் அப்போ நான் அவன் திறமையை மட்டுமல்ல நேர்மையும் கண்டு இருக்கிறேன்…அவன் தன் கடமையில் இருந்து தவறாத மனிதன் அதனால் கடவுள் அவன் பக்கமாக தான் இருப்பார்…பேபி யூ டோன்ட் வொரி” என்றார் …


அவர் சொன்னது உண்மை என்பதால் அனைவருமே தங்கள் ரூம்க்கு தூங்க போனார்கள்…மரகதம் தன் வேலையாள் மணி துணைக்கு இருப்பதால் தன் ரூம்க்கு போனார்…நித்திலன் தணிகாசலம் கூட தூங்க போனான் துவாரகேஷ் ரூம் இன்னும் காலி பண்ணவில்லை அங்கே தான் அபிராமியின் உடமைகள் இருந்தது…. அதனால் அவர் புடவை மாற்றி சாதாரண நூல் புடவை அணிந்து வந்தார்….


சந்தனா அவள் முன்னே இருந்த ரூம்மில் தான் இருந்தாள் அபிராமி உடை மாற்றி வந்தவர்….அவள் இன்னும் உடை மாற்றாமல் யோசனையாக இருப்பதை கண்டவர்.


அபிராமி “ பாப்பா நீ இன்னும் துணி மாற்றவில்லையா! இப்படியே வா தூங்க போகிற! உன் டிரஸ் எல்லாம் எங்கே மாப்பிள்ளை ரூம்மிலா இருக்கு! …வா போய் மாற்றி வரலாம் அப்போ தான் தூங்க முடியும் என்றார்…


சந்தனா “ அம்மா அவர் அருண் அண்ணா இல்லாமல் தனியாக போய் இருக்கிறார்…அவருக்கு ஏதும் நடக்காது தானே தாத்தா கூட சொன்னார் நம்ம கார்ட்ஸை அனுப்பி வைத்ததாக” என கேட்டாள்….


அவள் கேட்ட கேள்வியால் அபிராமி முகம் மலர்ந்தது காரணம் சந்தனா மனதில் யது மெல்ல வர தொடங்கி விட்டான்…இனி சீக்கிரமாக எல்லாம் சரி ஆகும் சந்தானா மனது காலியாக தானே!... இருக்கு அதில் யது நந்தன் சுலபமாக குடியேறி விடலாம் என நினைத்தவர்…


அபிராமி “ அவர் தொழில் அப்படி பாப்பா ஒவ்வொரு தொழிலும் ஆபத்து உண்டு நம்ம இராணுவ வீர்களை எடுத்து கொள் நம்ம நாட்டை காக்க… தங்கள் உயிரை கூட கொடுக்க வேணும் என தெரிந்து தான் எல்லைக்கு காவலுக்கு போகிறார்கள்…மீன் பிடிப்பவர்கள் கூட புயல் வரும் என்று தெரிந்து தான் கடலுக்கு போகிறார்கள்…


கல் உடைக்கும் தொழிலாளிகள், பட்டாசு செய்பவர்கள், ஏன் உங்க தாத்தா, அப்பா தொழிலில் கூட ஆபத்து இருக்கு….அதற்க்கு பயந்தால் அவர்கள் குடும்பத்தை காப்பது எப்படி அது போல தான் மாப்பிள்ளையின் தொழிலும்….தாத்தா கார்ட்ஸ் அனுப்பி இருக்கிறார் தான் ஏன் ஒவ்வொரு தடவையும் அனுப்புவார் தான் ஆனால் அதை மாப்பிள்ளை விரும்ப வேணுமே!...


அதனால் நீ அது பற்றி யோசிக்க வேணாம் கடவுளை நன்றாக வேண்டி விட்டு வா நம்ம தூங்க போகலாம் என… அவளை உடை மாற்றி அழைத்து கொண்டு தூங்க அவள் அறைக்கு அழைத்து போனார்….


அபிராமி, சந்தனா தூங்க போனாலும் சந்தனாவுக்கு தூக்கம் வரவில்லை கண் மூடினால்… யது நந்தன் நெருப்பில் குதித்து ஆளுங்களை காப்பாற்றுவது போல காட்சிகள் தோன்றியது …சந்தனா கண்களை திறந்தவள் அபிராமியை பார்க்க அவர் இன்று ரிசப்ஷனுக்கு வேலை பார்த்த களைப்பில் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார்….


சந்தனா மெல்ல அவர் தூக்கம் கலையாமல் எழுந்தவள் ரூம்மில் இருந்த சோபாவில் கொஞ்ச நேரம் இருந்தவள்….பிறகு இருப்பு கொள்ளாமல் சரி வெளியே போய் கொஞ்சம் காற்றாட நிற்கலாம்…ஏசி காற்றில் தூக்கம் வேற வரவில்லை என நினைத்தவள்…


இந்த இரவில் வெளியே தனியாக எப்படி போய் நிற்பது அம்மா, தாத்தா, அவர் தனியாக எங்கும் போக கூடாது என சொல்லி இருக்கிறாங்க….நிது இருந்தால் கூட பரவாயில்ல சரி எப்படியும் வெளியே தாத்தாவின் கார்ட்ஸ் காவலுக்கு நிற்பாங்க என நினைத்தவள்….


கதவை சத்தம் போடாமல் திறந்து மூடி விட்டு வெளியே வர தணிகாசலம் கார்ட்ஸ் அங்காங்கே காவலுக்கு நின்று நடந்து கொண்டு இருந்தனர்…இவளை கண்டதும் தடை ஏதும் சொல்லவில்லை ஆனால் அவள் அறியாது அவளை பின் தொடர்ந்து காவலுக்கு போனார்கள்….


சந்தனா அதிக தூரம் போகாது தங்கள் ரூம்க்கு முன்னே உள்ள இடத்தில் நின்று கடலை பார்த்து கொண்டு இருந்தாள்…. அப்போது ஹோட்டல் சிப்பந்தி இருவர் பேசி கொண்டு இருப்பது கேட்டது.


ஒருவன் “ என்ன டா பாலா சார் கப்பலில் சேதாரம் ரொம்ப அதிகம் போல கேஸ் ஏதோ லிங் ஆகி விட்டது போல…இது தான் சொல்வது கர்மா வந்து நம்மை திருப்பி தாக்கும் என்பது பயணிங்க கிட்ட நல்லா நிறைய துட்டு வாங்கி போட்டு… இப்படி தரம் இல்லாத குறைத்த கேஸை நிரப்பி கொண்டு வந்தால் சேதாரம் இல்லாமல் இருக்குமா?....


நல்ல காலம் கப்பலில் யாருமே இல்லை பாவம் கேப்டன் சார் நேற்று தான் கல்யாணம்… இன்று மனைவி கூட இருக்க முடியாமல் தீயை அணைக்க போய் விட்டார்”என்றான்…


அடுத்தவன் “ ஏய்! அக்கம் பக்கம் பார்த்து பேசு சுவருக்கும் காது இருக்கு பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதற்கு….நமக்கு சம்பளம் தருவது பாலா சார் தான் நினைவில் வை… அதை விட அவர் உண்மையில் நல்ல மனிதர் கேப்டனும் தான்…இது இடையில் இருப்பவன் யாரோ பணத்தை ஆட்டதை போட்டு செய்து இருக்கிறான்….


எனக்கு கவலை எல்லாம் கேப்டன் சார் நினைத்து தான் அவர் கூட எனக்கு நல்ல பழக்கம்….இங்கே வரும் போது எல்லாம் பந்தா காட்டாமல் பழகும் மனிதர் நேற்று தான் கல்யாணமாகி இருக்கு… அவருக்கு ஏதும் ஆக கூடாது பாவம் அந்த பெண்ணு சின்ன வயது வேற கேப்டன் கடமை , கண்ணியம், கட்டுப்பாடு என நினைக்கும் ஆள்…அவருக்கு ஏதும் நடக்க கூடாது கப்பலில் தீ பரவினால் சும்மாவா” என பேசி கொண்டு இருந்தனர்….


அவர்கள் பேச பேச அதை கேட்டு கொண்டு இருந்த சந்தனா கண்கள் நீரை பொழிய ஆரம்பித்தது…



நிலவு வரும்….









 
Status
Not open for further replies.
Top