அத்தியாயம் -01
இந்திய பெரும் கடலில் அந்த மிக பெரிய வெள்ளை நிற பேரழகி கம்பீரமாக நிமிர்ந்து நின்றாள் அவள் முகப்பில் சிவப்பும் தங்கநிற எழுத்துக்களால் ஈகிள் என எழுதி இருந்தது. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாக கழுகை கருதுகிறார்கள் அது போல தான் இந்த கடல் அரசனின் மேலே கம்பீரமாக வீற்று நின்று இருக்கும் இந்த கப்பலும். இந்த கப்பல் தனிபட்ட ஒரு நபருக்குரிய ஒன்றாகும் பல கோடி ரூபாய்களை போட்டு உறுதியாகவும் கம்பீரமாகவும் உருவாக்கிய பயணிகள் கப்பல்.
பொதுவாக பயணிகள் கப்பல் என்றாலே சொகுசு கப்பல்கள் எனலாம் க்ரூஸ் எனப்படும் பயணங்களை இந்த உல்லாச கப்பல்கள் தான் அறிமுகம் செய்தது. அது போல தான் இந்த ஈகிள் கப்பலின் பயணமும் ஆறு தளங்களை கொண்ட இந்த கப்பல் மூவாயிரத்து ஐந்நூறு பயணிகளை அழைத்து கொண்டு உல்லாச பயணம் செல்ல தயார் நிலையில் இருந்தது... இந்த கப்பலில் இந்த பயணத்தை மேற் கொள்ள போகும் அனைவருமே விவிஐபிகள், விஜபிகள், மேல் தட்டு வர்க்கம் தான்.
சாதாரண மக்கள் இந்த கப்பலில் பயணம் செய்வதை நினைத்து பார்க்க முடியாது அவர்களுக்கு இங்கே இடமும் இல்லை பதினைந்து உணவங்கள், மதுக்கூடங்கள்,கேசினோ உள்ளிட்ட சூதாட்டங்கள், மால்,பிரமாண்ட ஹோம் தியேட்டர், இசை அரங்கு, குழந்தைகள் விளையாட்டரங்கு, உடற்பயிற்சி கூடம், நீச்சல் தடாகம்,பனிச்சறுக்கு விளையாட்டரங்கம், மருந்துவ அறை ஆயிரத்து ஆயிரத்து ஐந்நூறு பணியாளர்கள் கூடவே கேப்டன், ஆறு சீப் என்ஜீனியர் ,மருத்துவ குழு அதை விட இன்னும் சில என்ஜீனியர்கள் என முழுமையான கப்பலாக அது நின்றது.
ஒரு மாதம் உல்லாச பயணம் செல்ல ஒரு வருடத்திற்கு முன் திட்டமிட்டு பதிவு செய்து தான் கப்பல் பயணத்தை மேற் கொள்ள வந்து இருந்தனர் குடும்பமாக சிலர் புது மண தம்பதிகள் தங்கள் தேனிலவுக்காக இன்னும் சிலர் வியாபார நோக்கம் சிலர் ஒய்வு காலத்தை கழிக்க என வந்து இருந்தனர்.... சென்னை துறைமுகத்தில் இருந்து தான் ஈகிள் புறப்பட தயாராக இருந்தது பலர் அங்கே தங்கள் உறவுகள், நண்பர்களை வழி அனுப்ப வந்து கொண்டு இருக்க சட்டென ஒரு வித பதட்டம் நிலவியது பத்து கருப்பு நிற ஜீப்பில் கருப்பு உடை அணிந்த கார்ட்ஸ் வர நடுவில் சாம்பல் நிற லாம்போர்கினி வந்து கொண்டு இருந்தது அதன் முகப்பில் பிரத்தியேக புலி பாய்வது போல உருவம் தங்கத்தால் இருக்க அனைவருக்குமே புரிந்தது.
வருவது யாரென என ஆனா அவர்கள் அனைவருக்குமே தோன்றியது ஒரு கேள்வி தான் இவருக்கு என பத்து கப்பல்கள் தனியாக இருக்கும் போது இவரின் நெருங்கிய நண்பரின் கப்பலை எதற்காக பயணம் செய்ய தேர்ந்தெடுக்க வேணும் இது தான் அனைவரின் மனதில் எழுந்த கேள்வி ஆனா அதை வாய் விட்டு கேட்கும் தைரியம் தான் யாருக்குமே இல்லை.
துறைமுகத்தில் கார் வந்து நிற்க சட்டென தரையில் சிவப்பு கம்பளம் விரிக்க பட ஒரு கார்ட் ஒரு பக்க கதவை திறந்து விட இறங்கினார் பிசினஸ் உலகில் முடி சூடா மன்னன் துவாரகேஷ்.அவருக்கு அடுத்து இறங்கியது அவரை பெத்த அன்னை மரகதம் அடுத்து அவர் மனைவி அபிராமி அடுத்து இறங்கியவள்... துவாரகேஷின் மூத்த மகள் சந்தனா அவள் பெயருக்கேற்ப சந்தன நிறத்தை மட்டுமல்ல அதிக மென்மையையும் கொண்டவள். அழகிய முகம் பிறை நெற்றி, நீண்ட வளைந்த புருவங்கள், மீன் விழிகள், கூர் மூக்கு அதில் வைர மூக்குத்தி மின்னியது சிவந்த ரோஜா இதழ்கள் சங்கு கழுத்து தந்தம் போல கை, கால்கள், இடை வரை உள்ள நீண்ட கூந்தல் ஐந்தரை அடி உயரம் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு மொத்தத்தில் பிரம்மன் செதுக்கிய சிற்பம் வயது இருபது.. .
அடுத்து இறங்கியவன் துவாரகேஷ் மகன் நித்திலன் வயது பதினைந்து அந்த வயதுக்குரிய துள்ளல் துடிப்பு எல்லாம் அவனிடம் இருக்கும் துவாரகேஷை தைரியமாக நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் ஒருவன் கூடுதல் தகவல் சந்தனா என்றால் அவனுக்கு உயிர்.
துவாரகேஷ்ரை வரவேற்க அவரின் உற்ற நண்பரும் இந்த கப்பலின் உரிமையாளருமான பாலகுமார் வந்து இருந்தார்... இவரும் பிசினஸ் செய்பவர் தான் கேஷ் என அழைத்து அவருக்கு மாலை போட்டு அணைத்து கொள்ள அவரும் பாலா என அணைத்து கொண்டார் அவர் மனைவி மரகதம், அபிராமி, சந்தனா, நித்திலனுக்கு மாலை போட்டு வரவேற்றார்.
பாலா "ஐ யம் சோ ஹாப்பி டா உனக்கு இருக்கும் கப்பல்களை விட்டு .என் கப்பலின் நீ பயணம் செய்வது எனக்கு பெருமையாக இருக்கு" என்றார்.
துவாரகேஷ் "பாலா முதலில் நான் வர நினைக்கவே இல்லை இவங்களை தான் அனுப்ப நினைத்தேன். பட் அதை தாண்டி சில விஷயங்களை நான் செய்ய வேண்டி இருக்கு... உனக்கு தெரியும் தானே எனக்கு முதலில் பிசினஸ் அதற்கு பிறகு தான் எல்லாம் சரி நீ எங்க கூட வரவில்லையா" என கேட்டார்.
பாலா "வர தான் நினைத்தேன் டா சுஜிக்கு இது டெலிவரி டைம் இந்த வாரம் டேட் கொடுத்து இருக்கிறாங்க அப்பா நீங்களும் என் கூட இருக்க வேணும் என சொல்லி விட்டாள்... ஒற்றை பெண்ணு ஆசையாக கேட்கும் போது மறுக்க முடியவில்லை மாப்பிள்ளை வேற பிசினஸ் விஷயமாக அமெரிக்கா போய் இருக்கிறார் நீ கிளம்பு பாதியில் முடியும் என்றால் உன் கூட ஜாயிண்ட் பண்ணுகிறேன்" என்றார்.
துவாரகேஷ் "ஓகே எல்லாம் பக்காவாக எனக்கு இருக்கு தானே சரி கேப்டன் யாரு டா எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர் தானே" என கேட்டார்.
பாலா "அதை பற்றி நீ கவலைப்பட தேவையில்ல இன்று பயணம் செய்வங்க எல்லாம் பணக்கார வர்க்கம் அதை விட என் நண்பன் பிசினஸ் உலகில் முடி சூடா அரசன் நீ போகும் போது சும்மா ஆளை எடுப்பேனா... இவனை போல சிறந்த கேப்டனை நீ மட்டுமல்ல நானும் காண முடியாது அரசாங்க கப்பலில் வேலை பார்த்து கொண்டு இருந்தான் அங்கே ஏதோ ப்ராபிளம் மேனஜ்மென்ட் கூட பெரிதாக வேற ஒன்றுமில்ல நேர்மை அது இவன் கிட்ட கொட்டி கிடக்கிறது கூடவே திமிர் பட் வேலை என்று வந்து விட்டால் பையன் தீ தான்" என்றார்.
துவாரகேஷ் "வாட் பையனா என்ன வயது" என கேட்டான்.
பாலா "வயது முப்பது டா ஏன் இந்த வயதுக்குள்ளே கேப்டனாகி விட்டான் என ஆச்சரியமாக இருக்கா" என கேட்க.
துவாரகேஷ் "புல் ஷிட் நீ இதை என் கிட்ட முன்னே சொல்லி இருக்க வேண்டியது தானே இவனை நம்மி கப்பலில் எப்படி நிம்மதியாக ஏற முடியும் அதுவும் கடல் பயணம்... கிட்ட தட்ட ஒரு மாத காலம் நின்று சட்டென இறங்கி வர இது பஸ் ஸ்டாப் பா நோ அவனை உடனடியாக மாற்று வேற ஆளை போடு வயது கொஞ்சம் கூடியவரை போடு" என சொன்னார்.
பாலா "டேய் சொன்னா புரிந்து கொள்ளு வயது அனுபவம் எல்லாம் சரி ஆனால் திறமை உன் குடும்பத்தோடு சேர்த்து மூவாயிரத்து ஐநூறு பேர் உயிர் டா... எல்லாம் விவிஐபி, விஜபிங்க ஏன் ரிட்டயர்ட் ஜட்ஜ் , கமிஷனர், கேணல், டாக்டர், லாயர் என குடும்பத்தோடு இந்த வெக்கேஷனை கழிக்க வருகிறாங்க... அதற்கு இவன் தான் சரியான ஆளு இவனை சும்மா எடை போடாதே இப்போ இவனை விடு நீ வந்த வேலையை பாரு சரி அபிராமி, சந்தனா கிட்ட சொல்லி விட்டாயா டா" என கேட்டான்.
துவாரகேஷ் "தேவையில்ல நான் முடிவு எடுத்தால் கட்டுபட வேண்டியது அவங்க கடமை" என்றார்.
பாலா "தப்பாக நினைக்காதே டா சந்தனா நீ பெத்த பெண்ணு அதுவும் அம்மா இல்லாத பெண்ணு பயந்த சுபாவம் கொண்டவள்.... இப்படி நீ அவளை கட்டாயப்படுத்துவது கூடாது டா உன் மாமனாருக்கு தெரிந்தால் ப்ராபிளம் ஆகி விடும்" என்றார்.
துவாரகேஷ் "அவருக்கு தெரிய கூடாது என்று தான் இந்த ஏற்பாடு வயதானால் வீட்டில் இருக்காமல் எப்போ பாரு என் விஷயத்தில் மூக்கை நுழைத்து கொண்டு மகளை கட்டி தந்தால் ஓதுங்கி விட வேணும்... சந்தனா என் பெண்ணு என் முடிவை அவள் ஏற்று கொள்ள தான் வேணும் பாலா நீ என் பெஸ்ட் ப்ரண்ட் அதனால் தான் உன் கிட்ட இந்த விஷயத்தை சொன்னேன் இதை நீ வெளியே சொன்ன நீ நண்பன் துவாரகேஷ்யை பார்க்க மாட்ட எதிரி துவாரகேஷ்யை தான் பார்ப்ப புரிகிறதா" என சொன்னார்...
பாலாவுக்கு அவர் குணம் தெரியும் என்பதால் அமைதியாக இருக்க கப்பல் கிளம்புவதற்கான முதல் சங்கு ஊதினார்கள் துவாரகேஷ் தன் குடும்பத்தோடு கப்பலில் ஏற கூடவே அவரின் பத்து கார்ட்ஸ் அவர் காவலுக்கு போனார்கள் உண்மையில் பாலாவுக்கு இவனை கூட ஏன் நட்பு கொண்டோம் என இருந்தது... இது பாவம் என தெரிந்தும் அமைதியாக இருக்க வேண்டி இருக்கிறது சந்தனா நான் பார்த்து வளர்ந்த பெண்ணு அவள் வாழ்க்கை நல்லா இருக்க வேணும் கடவுளே என வேண்டி கொள்ள அவர் வேண்டுதலை ஏற்று கொண்டது போல ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் வந்து நின்றது.
அதில் இருந்து இறங்கினான் ஆறடி உயரத்தில் கருமை வண்ண கண்ணன் அவன் கேப்டனுக்குரிய வெள்ளை நிற பேண்ட் ,சேர்ட், கையில் வெள்ளை நிற தொப்பி காலில் கருப்பு நிற பூட்ஸ் ஷூ என நடந்து வந்தவன்... தோளில் அவன் கருப்பு நிற பட்டி, மார்பிலே அவன் செய்த சாதனைகள் அணிவகுந்து மெடல்கள் கலர் கலராக தொங்கி கொண்டு இருக்க அவன் பாலா அருகே வந்தான்.
பாலா "வெல்கம் டூ ஈகிள் ஷிப் கேப்டன் யது நந்தன்" என்றார் . அவன் தான் யது நந்தன் வயது முப்பது அவன் வயதுக்கு அவன் செய்த சாதனைகள் அதிகம் அவன் அரசாங்கம் உட்பட தனியார் கப்பல்களை பல இயக்கி உள்ளான் அவன் சேவை காலத்தில் இப்போ வரைக்கும் எந்த கரும்புள்ளிகளும் இல்லை... ஆறடி உயரம், கட்டுகோப்பான உடல் அமைப்பு அந்த யது குல நந்தன் போல கருமை நிற கண்ணன் கருப்பில் அழகு உண்டு என இவனை பார்த்து அறிந்து கொள்ளலாம். பரந்த நெற்றி நீண்ட அடர்ந்த புருவங்கள், கூர்மையான விழிகள் கூர் மூக்கு சற்று கருப்பு படித்த உதடுகள் நான் புகையை ருசி பார்த்தவன் என சொன்னது மெல்லிய பியட் மொத்தில் பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் கதாநாயகன் தான்.
நிலவு வரும்…