ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் :30


யது நந்தன் வியாட்டிடம் உன் நரம்புகளை சரி செய்ய வேணும் என்றால் நீ சந்தனாவிடம் மன்னிப்பு கேட்க வேணும் என சொன்னான்.

வியாட் அந்த வலியிலும் மெல்ல சிரித்தவன் “ யு பூல் நான் யாரு என தெரியாமலே என் மேலே கை வைத்து விட்ட கேப்டன்…நீ உன் மரணத்தை நீயே வருந்தி வரவழைத்து விட்ட முதலில் நீ இந்த இடத்தை விட்டு போக முடியுமா? என பாரு என்றவன். கார்ட்ஸ் என சத்தம் போட அவன் ஆளுங்க வந்து நின்றனர்.

வியாட் “ கேப்டன் இன்று தன் வாழ்வின் கடைசி நாளை செலிபிரேட் பண்ணட்டும்….ஏன் என்றால் அவர் நாளை எனக்கு கல்யாணமான அடுத்த செக்கன் அவர் இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக கண்களை மூடி விட வேணும்…அவரை மரியாதையாக அழைத்து கொண்டு செல்லுங்கள் என சொன்னான்….அவன் சொன்ன மறு நிமிடம் அவன் கார்ட்ஸ் யது நந்தனை பிடிக்க வர …மிஸ்டர் வியாட் டைட்டஸ் என்ற கம்பீரமான குரல் கேட்டது அனைவருமே திரும்பி பார்க்க அங்கே நின்று இருந்தது.

தணிகாசலம் கூடவே அபிராமியின் அப்பா மூர்த்தி அதை விட ஆறயடிக்கு மேலே இருக்கும் அவர் கார்ட்ஸ் …சந்தனா, நித்திலன் முகம் மலர அவர்கள் தாத்தா என அவர் அருகே ஓடி போக அவர் முகம் மலர அவர்கள் இருவருமே அணைத்து கொண்டார்.

நித்திலன் “ தாத்தா நீங்க நல்ல நேரத்திற்கு வந்து விட்டீங்க அந்த வியாட் அக்காவை என்ன எல்லாம் கொடுமைபடுத்தினான் தெரியுமா…இப்போ கூட யது அண்ணா இல்லை என்றால் அக்கா கிட்ட தப்பாக நடக்க பார்த்து இருப்பான்….பாவம் எங்களால் தான் யது அண்ணா அவன் கிட்ட அடி வாங்கி நிற்கிறார்” என்றான்.

தணிகாசலம் “ தாத்தா வந்து விட்டேன் இல்லை நான் பார்த்து கொள்கிறேன் உங்க அம்மா எங்கே பா என கேட்டார் அவர் கேட்ட நேரம்…. அபிராமி கூடவே கேணல் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்தார்கள் அபிராமி தணிகாசலத்தை காண அப்பா என அவர் அருகே ஓடி போனாள்.

அபிராமி “ அப்பா நீங்க இங்கே எப்படி நான் இப்போ தான் கேணல் கிட்ட சொல்லி உங்களுக்கு தகவலை சொல்ல சொல்லி விட்டு வருகிறேன்…வந்து பார்த்தால் நீங்க இங்கே நிற்கிறீங்க யார் பா தகவல் தந்தது என கேட்டாள்.

மூர்த்தி “ என்ன மா ஐயாவுக்கு தகவல் வராமல் இருக்க அவர் என்ன துவாரகேஷ்ஷா? தணிகாசலம் தகவல் சொன்னது வேறு யாருமல்ல கேப்டன் யது நந்தன் தான்” என்றார்… அவர் சொல்ல யதுவை தான் அனைவருமே ஆச்சரியமாக பார்த்தனர் தணிகாசலம் பேர பசங்களை அபிராமியிடம் விட்டவர் யது நந்தன், வியாட் இருக்கும் இடத்திற்க்கு அருகில் போனார்….
வியாட்டை ஒரு பார்வை பார்த்தவர் யது நந்தன் தோளில் கை வைத்தவர்.

தணிகாசலம் “ ஹாவ் ஆர் யு யங் மேன் ஆர் யு ஓகே? ஹாஸ்பிட்டல் போகலாமா? இல்ல டாக்டர்களை வரவழைக்கவா” என கேட்டார்.

யது “ நவ் ஐ யம் பைன் சார்! இந்த வலிக்கு டாக்டர் எல்லாம் எதற்க்கு …ஷிப் டாக்டர் இருக்கிறார் இல்லை என்றால் ஹோட்டல் டாக்டர் இருக்கிறார்….நான் அவங்க கிட்ட டிரிட்மெண்ட் எடுத்து கொள்கிறேன்” என்றான் தணிகாசலம் மெல்ல புன்னகை புரிந்தவர் .

தணிகாசலம் “ இது தான் ஒரு சிறந்த வீரன் மனுஷனுக்கு அழகு” என சொன்னவர்… திரும்பியவர் பார்வை வியாட்டை கடுமையாக பார்த்தது.

தணிகாசலம் “மிஸ்டர் வியாட் டைட்ஸ் உங்க பெயரை உலகம் கேட்டு நடுங்கினால்…என் பெயரை பிசினஸ் சாம்ராஜ்ஜியம் கேட்டு நடுங்கும்…யார் பேத்தி மேலே கை வைக்க நினைத்து இருக்கிறீங்க உங்கள் இங்கே வரவழைத்தது யார் என்று எனக்கு தேவையில்லாத விஷயம்…

பட் சந்தனா என் பேத்தி அவள் மட்டுமல்ல நித்திலன் கூட என் பேரன் அவங்க மேலே கை வைக்க என்ன?... நினைப்பு கூட வந்தால் கூட இந்த தணிகாசலத்தின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்….யார் பேத்திக்கு யார் மாப்பிள்ளை இந்த கல்யாணம் மட்டுமல்ல நீங்க கூட என் பேத்திக்கு மாப்பிள்ளையாக இருக்க முடியாது …சோ நீங்க அந்தமானை விட்டு கிளம்புவது தான் உங்களுக்கு நல்லது” என குரலை உயர்த்தாது ஆனால் கடுமையாக சொன்னார்.வியாட் அந்த வலியிலும் சிரித்தவன்.

அவன் “ வெல்கம் டூ அந்தமான் மிஸ்டர் தணிகாசலம் ஐ நோ நீங்க சீக்கிரமாக வருவீங்க என்று பட் இவ்வளவு சீக்கிரமாக என்று நான் நினைக்கவே இல்லை…பிகாஸ் நீங்க பிக் டீல்லில் இருப்பதாக எனக்கு தகவல் வந்தது …but i thought you wrong ! மிஸ்டர் துவாரகேஷ் போல தான் உங்களுக்கும் பிசினஸ் தான் இம்பார்ட்டன் என்று…எல்லாம் தெரிந்த உங்களுக்கு இந்த வியாட் டைட்ஸ் பற்றி தெரிந்து இருக்க வேணுமே?.

நான் ஆசைபட்டதை நான் அடையாமல் விட்டதே இல்லை உங்க பேத்தி மேலே ஆசைபட்டு விட்டேன்…அதற்க்கு அவளை பெத்தவரும் ஓகே சொல்லி விட்டார் சோ நான் தீர்மானித்தபடி நாளை காலை எனக்கும் உங்க பேத்திக்கும் கல்யாணம் நடக்கும்….நடந்தே ஆக வேணும் இது இந்த வியாட் டைட்ஸ்ஸின் கெளரவம் சம்பந்தப்பட்ட விஷயம் இதில் யார் தலையிட்டாலும் அவர்களுக்கு மரணம் நிச்சயம்” என சொல்லி விட்டு கிளம்ப போக.

தணிகாசலம் “ ஒன் மினிட் மிஸ்டர் வியாட் உங்க முடிவை நீங்க சொல்லி விட்டீங்க என் முடிவை….நான் சொல்ல வேணாமா உங்களை போல தான் எனக்கும் பிடிவாதம் அதிகமாக இருக்கிறது வயதில் உங்களை விட பெரியவன் இல்லையா…என் பேத்தி கல்யாணம் நடக்கும் It's not even u, it's someone else” என்றார்…. வியாட் அவருக்கு சிரிப்பை பதிலாக கொடுத்தவன் தன் வலது கையை பிடித்து கொண்டு கார்ட்ஸ் கூட வர தன் இடத்திற்க்கு போனான்.

தணிகாசலம் “ மூர்த்தி நான் துவாரகேஷ் கூட பேச வேணும் அவருக்கு தகவல் அனுப்பு…பாப்பா தாத்தா வந்து விட்டேன் இல்லையா நீ தைரியமாக இரு அது தான் உன் தம்பி உன் கூட இருக்கிறான் இல்லையா? பிறகு என்ன மா அபிராமி நீ புள்ளைங்களை அழைத்து கொண்டு உன் ரூம்க்கு போ.

கேப்டன் நீங்க செய்த உதவிக்கு நன்றி என்ற வார்த்தை மூலமாக ஒதுங்கி விட முடியாது…சிலதை களை எடுக்க வேண்டி இருக்கு எடுத்து விட்டு உங்களை பார்க்க வருகிறேன்” என சொன்னவர்… முன்னால் போக அவர் பின்னால் மூர்த்தி கார்ட்ஸ் போனார்கள்.

அவர் போன பிறகு அபிராமி தன் இரு கரங்களை எடுத்து குவித்தவர் அபிராமி “தம்பி அப்பா சொன்னது போல நன்றி என்ற வார்த்தை மூலமாக நாங்க சென்று விட முடியாது…நீங்க செய்தது உதவி அல்ல அதற்க்கும் மேலே உங்க காலில் கூட நான் விழலாம். …உங்க உயிரை கூட பெரிதாக எண்ணாமல் என் பெண்ணின் மானத்தை காப்பாற்றி தந்து இருக்கிறீங்க அதற்க்கு என்ன செய்து அந்த கடனை தீர்க்க முடியும் என்று தெரியவில்லை” என்றார்.

யது “என்ன வார்த்தை இது மிஸஸ் துவாரகேஷ் நீங்க பெரியவங்க என் காலில் போய் விழுவதா…இந்த இடத்தில் உங்க பெண்ணு என்று இல்லை யார் இருந்து இருந்தாலும் நான் இதை தான் செய்து இருப்பேன்…பாலா சார் என்னை நம்பி தானே உங்களை எல்லாம் அனுப்பியது அப்போ அந்த கடமையை நான் காப்பாற்ற வேணாமா…சரி தணிகாசலம் சார் சொன்னது போல இவங்களை அழைத்து கொண்டு செல்லுங்கள் ” என்றான்.

நித்திலன் தேங்கியூ யது அண்ணா என அவனை கட்டி கொள்ள அவன் தலையை யது தடவி விட்டான்… சந்தனா பார்வையும் நன்றியை சொன்னது… அபிராமி அவர்களை அழைத்து போக அருண் யதுவை அழைத்து கொண்டு ரூம்க்கு போனான்.

தணிகாசலம் வரும் போதே அவருக்கு அந்தமான் ஹோட்டல் நிர்வாகம் சூட் ரூம்மை தயார் செய்து விட்டு இருந்தது… அவர் செல்வாக்கு அப்படி பட்ட ஒன்று அவர் அந்த ரூம்மில் உள்ள வரவேற்பறையில் காத்து இருந்தார் துவாரகேஷ் வரவுக்காக…

உண்மையில் துவாரகேஷ்க்கு இப்போ தான் அவர் பி.ஏ மூலமாக தகவல் வந்து இருந்தது என்ன இருந்தாலும் மகள் இல்லையா? அதுவும் அவரின் காதலின் பரிசு அவர் தன் கார்ட்ஸை முன்னால் போக சொல்லி விட்டு தன் பிஸ்டலை இடுப்பில் செருகி கொண்டு
ஓடி வர தான்… தணிகாசலம் வந்து இருப்பதாக தகவல் வந்தது அதை விட அவரை சந்திக்க வர சொல்லி ஏனோ அப்போ தொடக்கம் இப்போ வரை அவர் வார்த்தையை தட்ட முடிந்தது இல்லை.

ஒன்று தணிகாசலம் அவனின் காயத்திரியின் தந்தை… அடுத்து தொழிலில் அவர் அவனின் மானசீக குரு அதனால் அவன் அவரை சந்திக்க அவர் ரூம்க்கு போனார்…வாசலில் கார்ட்ஸ் இருந்தனர் இவரை கண்டதும் அவர்கள் வழி விட துவாரகேஷ் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார்.

தணிகாசலம் சோபாவில் இருக்க அவர் அருகே உள்ள சோபாவில் மூர்த்தி மெளனமாக இருந்தார்… இவனை கண்டதும் ஐயா என தணிகாசலத்தை மெதுவாக அழைத்தார்… அவர் அழைப்பில் கண்களை மூடி இருந்த தணிகாசலம் கண்களை திறந்தார்.

தணிகாசலம் “ உட்காருங்கள் மாப்பிள்ளை என தன் எதிரே இருந்த சோபாவை கை காட்டினார்…துவாரகேஷ் அவர் எதிரே இருந்த சோபாவில் இருக்க மூர்த்தி அவரை கொலை வெறியில் பார்த்தார்… அவர் பார்வையை கண்டு கொண்ட தணிகாசலம்.

தணிகாசலம் “ மூர்த்தி ரிலாக்ஸ்டாக இரு பேசலாம் அவர் என் பெண்ணு அபிராமியின் புருஷன்…சந்தனா,நித்திலனின் அப்பா அதை மனதில் வைத்து இரு” என்றார்.

மூர்த்தி “ அதை நினைவு வைத்து இருப்பதால் தான் அமைதியாக இருக்கிறேன் ஐயா…ஆனா என் சந்தனா பாப்பா விஷயத்தில் அந்த அமைதி என் கிட்ட நீங்க மட்டுமல்ல இவரும் கூட எதிர்பார்க்க கூடாது…ஒரு பெத்த அப்பன் செய்யும் காரியத்தையா இவர் செய்து இருக்கிறார்….எத்தனை பொய் இந்த டூர்ருக்கு கூட பிளான் பண்ணி தான் அவங்களை அழைத்து வந்து இருக்கிறார்.

நான் உங்க கிட்ட எத்தனை தடவை எடுத்து சொன்னேன் இதில் ஏதோ இருக்கிறது என்று…ஆனால் நீங்க தான் அவர் தன் மனைவி, புள்ளைங்க கூட ரிலாக்ஸ்டாக ஊர் சுற்ற கிளம்பி இருக்கிறார் என சொன்னீங்க …இதுவா ஊர் சுற்றுவது… பெத்த பெண்ணை பணம், பதவி, கெளரவத்திற்காக ஊர் உலகறிந்த நம்பர் ஒன் பொறுக்கிக்கு கட்டி கொடுக்க நினைப்பது இதற்க்கு வேற பெயரும் உண்டு என்ன தெரியுமா? கூட்டி கொடுப்பது அதற்கு வேலை பார்ப்பவனை மாமா பயல் என இந்த ஊர் உலகம் அழைக்கும்” என சொல்ல. துவாரகேஷ் ஏய் என சத்தம் போட்டவாறே எழுந்தார்.



நிலவு வரும்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயமா: 31


மூர்த்தி பேசியதை கேட்டு துவாரகேஷ் கோபமாக எழுந்தார்.

தணிகாசலம் “ மாப்பிள்ளை உட்காருங்க முதலில் நம்ம பேசலாம்…கோபம் அனைத்திற்கும் முடிவை தராது அப்படி நான் கோபபட்டு இருக்க…இப்போ நீங்க என் முன்னே இந்த நிலையில் இருந்து இருக்க முடியாது” என்றார்.

துவாரகேஷ் “ அப்போ இந்த ஆள் என்னை கேவலமாக பேசுவதை கேட்டு கொண்டு அமைதியாக வாய் மூடி இருக்க சொல்கிறீங்களா….நான் துவாரகேஷ் அப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன? என கேட்டான்.

தணிகாசலம் “ துவாரகேஷ் இந்த பெயரை ஊர் உலகறிய செய்தவள் என் மகள் காயத்திரி….அப்படிப்பட்ட அவளையே நொடியில் தூக்கி எறிந்தவர் நீங்கள் உங்களுக்கு எப்படி பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியும்…மூர்த்தி வயதில் பெரியவர் மட்டுமல்ல உங்க மாமனார் கூட கொஞ்சம் மரியாதையாக பேச கற்று கொள்ளுங்கள்…மூர்த்தி சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது” என கேட்டார்.

துவாரகேஷ் “ஓ அது சரி நீங்க எப்போ என்னை மதித்து இருக்கிறீங்க இப்போ மதிக்க… உங்க பெண்ணு காயத்திரிக்காக தானே வேண்டா வெறுப்பாக என்னை ஏற்று கொண்டீங்க….அது தான் உங்க வலது கையை விட்டு பேச சொல்லி இருக்கிறீங்க அவர் வார்த்தை எல்லாம் உங்களின் வார்த்தை தானே” என்றான்.

தணிகாசலம் “ இப்போ பழைய கதையை பற்றி பேச உங்களை அழைக்கவில்லை நீங்கள் தொடங்கி வைத்த புது கதைக்கு வரலாம்…முதலில் என் பேத்திக்கு யாரை கேட்டு கல்யாணம் முடிவு பண்ணீங்க அதுவும் இது என்ன ரகசிய கல்யாணமா…அடுத்து வியாட் டைட்டஸ் யாரென தெரியுமா? இல்லை தெரிந்தும் உங்க சுய லாபத்துக்காக உங்க பெண்ணை தாரை வார்க்க நினைத்து விட்டீங்களா? என கேட்டார்.

துவாரகேஷ் “ யாரை கேட்க வேணும் சந்தனா என் பெண்ணு அப்பாவாக அவளுக்கு கல்யாணம் செய்ய வைக்க வேண்டியது என் கடமை…வியாட் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை என்ன சில வேண்டாத பழக்கங்கள் இருக்கிறது அது தான் இப்படி நடந்து கொண்டு விட்டான்” என்றான்.

அவன் பதிலில் தணிகாசலம் அவனை அழுத்தமாக பார்க்க துவாரகேஷ் பார்வை தன்னையறியாது கீழே பார்த்தது…மூர்த்தி கோபமாக பேச வர.

தணிகாசலம் “ மூர்த்தி வேணாம் புரியாதவர்களுக்கு புரிய வைக்க முடியும் பட் புரியாது போல நடப்பவர்களுக்கு… நம்ம எதை சொன்னாலும் காதில் ஏறாது அவர்களுக்கு நம்ம சொல்லும் அட்வைஸ் செவிடன் காதில் ஊதிய சங்கு போல நிலமை ஆகிவிடும்…மாப்பிள்ளை நீங்க போகலாம்..

நாளை நடக்க போவதை நீங்க வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் உங்க உயிர் பாதுகாப்பாக இருக்க காரணம் என் இரண்டு பெண்ணுங்க தான் ஒருத்தி தான் பாதி வழியில் போய் விட்டாள்… மற்றொருத்தியை கைம்பெண்ணாக காண என்னால் முடியாது அதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் “என்றார்.

துவாரகேஷ் வேறு ஏதும் பேசாது எழுந்து போனான் அவன் போன பிறகு.

தணிகாசலம் “ மூர்த்தி நான் கேணல் ஜெகதீஷ், அபிராமி கூட பேச வேணும் அதற்க்கு ஏற்பாடு பண்ணு” என்றார்.

சந்தனாவுக்கு இன்று நடந்த சம்பவத்தை நினைத்தாலே உடல் இப்போ கூட நடுங்கியது…அவள் காதல், அடிதடி இப்படிப்பட்ட விஷயங்கள் ஏதும் அறியாத பெண் அவளுக்கு பணக்கார பெண் என்று தான் பெயர் கட்டுபாடுகள் அதிகம்.

டிவியில் கூட பக்தி, வரலாற்று படங்களை தவிர மரகதம் அவளை வேற படங்களை பார்க்க விட மாட்டார்…அபிராமியும் இன்றைய காலத்திற்கு அது சந்தனா, நித்திலனுக்கு நல்லது என்பதால் அமைதியாக இருந்து விட்டாள்.

இன்று அவளிடம் வியாட் நடந்து கொண்ட முறையில் அவள் பயந்து போனாள் தன் மனதில் கல்யாணம் என்றால் ஆண்கள் என்றால் வியாட் போல தான் இருப்பார்கள்…தன் அப்பா கோபக்காரன் தான் ஆனால் ஒழுக்கம் உள்ள மனிதன், அடுத்து தன் தாத்தாக்கள், தம்பி அவளுக்கு பாதுகாப்பான உறவுகள்….அடுத்து அவள் நம்பும் வெளி ஆண் யது நந்தன் தான் எத்தனை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றியவன்…

அவள் நிலையறிந்து அபிராமி சந்தனாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு அவளை தூக்க வைத்தவர் …நித்திலனை அவள் துணைக்கு வைத்தவர் கதவை பூட்டி விட்டு வெளியே வர அவர்கள் அறைக்கு காவலுக்கு மட்டும்… தணிகாசலத்தின் கார்ட்ஸ் ஆறு பேர் நின்று இருந்தனர் அது போல சற்று தள்ளி துவாரகேஷ் கார்ட்ஸ் நின்று இருக்க அபிராமி தந்தையின் ரூம்க்கு நிம்மதியாக கிளம்பினாள்.

தணிகாசலத்தின் ரூம்மில் கேணலும் இருந்தார் அபிராமி வர.

தணிகாசலம் “ வா மா அபி பாப்பா தூங்கி விட்டாளா வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து விட்டாள்…அவளால் இந்த அதிர்ச்சியை தாங்கி கொண்டு இருக்க முடியாது தான்” என்றார்.

அபிராமி “ நீங்க சொன்னது தான் பா உண்மை என் பெண்ணால் இன்று நடந்தை தாங்கி கொள்ள முடியவில்லை…ஏன் என்னால் கூட அவளுக்கு ஒன்று என்றால் பிறகு இந்த அபிராமி உயிரோடு இருக்க மாட்டாள்…கேப்டன் மட்டும் இன்று இல்லை என்றால் அந்த வியாட் என்ன செய்து இருப்பான் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை பா…

இதில் உங்க மாப்பிள்ளை நான் துவாரகேஷ் என்னை எதிர்ப்பவர் யார் என மார் தட்டி கொண்டு தான்…சுற்ற தெரியும் அவர் கிட்ட பேசுனீங்களா பா” என கேட்டாள் .

மூர்த்தி “ யாரு உன் புருஷனிடமா சுத்த வேஸ்ட் ஃபெலோ மா ஐயா மட்டும் இல்லை என்றால் எனக்கு வந்த கோபத்திற்க்கு…அவன் மண்டையில் மாவு கட்டு போட வைத்து இருப்பேன் என் தங்க பாப்பா சந்து குட்டி நான் நெஞ்சில் போட்டு வளர்த்த என் ஆசை பேத்தி இவன் முட்டாள்தனமான முடிவால் எவ்வளவு கஷ்டபட்டு விட்டாள் …. அந்த யது தம்பி மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் என் பாப்பா நிலமை நினைத்தாலே நடுங்குகிறது… இதில் இவருக்கு பெரிய பிசினஸ் மேன் என்ற நினைப்பு” என தன் கோபத்தை கொட்டினார்.

தணிகாசலம் “ மூர்த்தி விடு முதலில் உன் பீபியை செக் பண்ண வேணும்…இப்போ ஹை லெவலில் இருக்கும் ….கேணலை பேச வர சொல்லி விட்டு நம்ம குடும்ப கதை பேசுவது சரியாக இருக்காது….ஸாரி கேணல் உங்களை இங்கே வர சொன்ன காரணம்.

உங்க கிட்ட சில விஷயங்கள் கேட்க வேணும் அதற்க்கு பிறகு தான் நான் சில முடிவுகளை எடுக்க வேணும்…நீங்க நாட்டை காத்தவர் உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை சாதாரண எங்க பார்வை வேற உங்க பார்வை வேறு…அபிமா நீயும் யோசித்து நான் பேச போவதற்க்கு பதில் சொல்லு சரியா” என்றவர்.

அவர் பேச கேணல் முகத்தில் மாறுதல் இல்லாது கேட்டு கொண்டு இருக்க… அபிராமி , மூர்த்தி முகத்தில் பல மாறுதல்கள், யோசனைகள் வந்து போனது.

அவர் பேசிய பிறகு கேணல் சில விஷயங்களை பேசினார் அது போல அபிராமி, மூர்த்தி கூட தங்கள் கருத்துக்களை சொல்ல….தணிகாசலம் அதை எல்லாம் கேட்டு கொண்டவர் தன் இறுதி முடிவை உறுதியாக சொல்ல அவர்களும் சரி என்றார்கள்.

யது நந்தனை அருண் ரூம்க்கு அழைத்து வந்தவன் தங்கள் ஷிப் டாக்டருக்கு தகவல் சொல்ல…அவரும் விஷயம் எல்லாம் கேள்விபட்டு இருக்க வேறு ஏதும் கேட்காமல் வந்து யதுவுக்கு டிரிட்மெண்ட் பார்த்து விட்டு போனார்.

அருண் “ டேய் இரண்டு நாள் காயங்களில் தண்ணீர் படாது பார்த்து கொள்ளு உண்மையில் உனக்கு தில் ஜாஸ்தி டா…அந்த வியாட் பற்றி உலகத்திற்கே தெரியும் அவன் கூட மல்லுக்கட்டி நின்ற பாரு நீ வீரன் டா” என்றான்.

யது “ இதற்க்கு எதற்க்காக தில் வேணும் நம்ம கடமையை செய்யும் போது தானாகவே நமக்கு தைரியம் வந்து விடும்…என்னை பொருத்த வரைக்கும் பெண்ணுங்க கிட்ட வீரத்தை காட்டிபவன் மனிதனே அல்ல…அவனை எல்லாம் எதிர்க்க எதற்க்காக தயங்க வேணும்” என்றான்.

அருண் “ சரி மச்சி உன் கிட்ட ஒன்று கேட்க வேணும் நீ எப்போ டா… தணிகாசலம் சாருக்கு இன்பார்ம் பண்ணின இந்த மேரீஸ் பற்றி” என கேட்டான்.

யது “ நித்திலன் ரொம்ப வருத்தப்பட்டு அழுதான் அது உனக்கும் தெரியும் தானே… மிஸஸ் துவாரகேஷ் தணிகாசலம் சாரை எப்படி காண்டாக்ட் செய்வது என கேட்டாங்க…மிஸ்டர் துவாரகேஷ் பற்றி தெரியும் கொஞ்சம் கூட யோசிக்க தெரியாமல் ஈகோவை கட்டி கொண்டு அழும் ஆள் என்று.

அதை எல்லாம் விட நித்திலன் அக்கா மற்ற பெண்களுக்கு இருக்கும் துளி தைரியம் கூட இவள் கிட்ட இல்லை…வியாட் எப்படி பட்ட அயோக்கியன் என தெரியும் அவள் அவன் கிட்ட மாட்டினால் அதற்க்கு பிறகு அவளுக்கே இந்த வாழ்க்கையை விட மரணம் பெரிதாக தெரியும்…..

இதை எல்லாம் யோசித்து தான் நான் முன் வேலை பார்த்த ஷிப்பில் டிராவில் பண்ணின நண்பர் ஒருவர்… சிங்கப்பூரில் நல்ல நிலையில் இருக்கிறார் அவர் மூலமாக தான் தகவல் சொன்னேன்” என்றான்.

அருண் “ அப்படி ரிஸ்க் எடுத்து செய்யும் அளவுக்கு என்ன உறவு அவர்கள் மேலே…நித்திலன் மட்டும் தானே நமக்கு பழக்கம்” என கேட்டான்.அவன் கேள்வில் ஒரு கணம் தடுமாறிய அவன் மறுகணம் தன்னை நிலைப்படுத்தி கொண்டு.

யது “ நான் அக்கா தங்கை கூட பிறக்கவில்லை தான்… ஆனால் என் அப்பா, அம்மா எனக்கு பெண்களை மதிக்க கற்று கொடுத்து இருக்கிறாங்க” என்றான். அருண் யதுவை அழுத்தமாக ஒரு தடவை பார்த்தவன்

அருண் “ நம்ம பழகிய காலம் தொட்டு உன்னில் நான் தடுமாற்றத்தை நான் கண்டது இல்லை மச்சி…பட் இப்போ உன் தடுமாற்றமே எனக்கு வேற கதையை சொல்கிறது அது என்ன என்று தான் தெரியவில்லை…விடு உண்மை வெளியே வராமலா போகும் சரி நீ ரெஸ்ட் எடு உனக்கு சாப்பிட டின்னர் எடுத்து வருகிறேன்” என சொல்லி விட்டு சென்றான்.

யது நந்தன் கடலில் மேலே பவானி வரும் வெண்ணிலவை பார்த்தவன் மனதில் வேறு உணர்வு தோன்றியது….அதை உதறி விட்டு அவன் ரெஸ்ட் எடுக்க போனான் அதைய வேளை வியாட் ரூம்மில்… வர்மக்கலை தெரிந்த ஒருவர் அவன் கையில் மூலிகை எண்ணெய் பூசி விட்டு… நரம்பை நீவி சுளுக்கு எடுக்க ஆரம்பிக்க அவன் வலியை அடக்கியவன் இதற்க்கு காரணமான யது மேலே கொலை வெறி உண்டானது.



நிலவு வரும்….
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 32


இன்று அந்தமான் தீவு கடல் ஆர்ப்பரிப்பு இல்லாது அமைதியாக இருந்தது…. காரணம் இன்று கடலை விட தரமான சம்பவங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் இருந்தது.

இன்று கப்பலில் டூர் வந்தவர்கள் அந்தமான் விட்டு கப்பலுக்கு கிளம்ப வேண்டிய நாள் யதுநந்தனுக்கு அடிபட்டதால் …எப்படி போக முடியும் என அவர்கள் யோசித்து கொண்டு இருக்க அதை புரிந்து கொண்ட அவன் அருண் மூலமாக தனக்கு ஒன்றுமில்ல.

திட்டமிட்டபடியே அனைவருமே கிளம்பலாம் என சொல்லி இருந்தான் அவன் மனதில் ஏதோ தவறாக நடக்க போகிறது…என தெரிய அவன் அதை பெரிதாக எண்ணாமல் கிளம்ப தயார் ஆனான்….தன் உடமைகளை எடுத்து வைத்து கொண்டு இருக்கும் போது யது என அழைத்து கொண்டு அருண் ஓடி வந்தான்.

யது “ என்ன டா ஏதோ தலை போகும் விஷயத்தை சொல்வது போல ஓடி வருகிற…என்ன விஷயம் உன் திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி விட்டாயா நம்ம கிளம்ப வேணும்” என்றான்.

அருண் “ என்ன! இங்கே இருந்து கிளம்ப போகிறாயா யார் கூட மச்சி தனியாகவா? என கேட்டான்.

யது “ டேய் என்ன உளறி கொண்டு இருக்க நம்ம ஏன் தனியாக போக வேணும்…நம்மை நம்பி டிராவல் பண்ணி வந்த ஆளுங்க கூட தான்…வெட்டி கதை பேசாது போய் கிளம்பும் வழியை பாரு” என்றான்.

அருண் “ கிளம்ப வேணும் என்றால் நானும் நீயும் மட்டும் தான் கிளம்ப வேணும்…என்ன பார்க்கிற அந்த வியாட் திரும்ப தன் ஆட்டத்தை தொடங்கி விட்டான்…இவன் எப்போ ஆட்டத்தை ஆரம்பித்து முடித்து நம்ம கிளம்புவது….அவன் நம்ம பாசஞ்சர்ஸ் அனைவரையுமே ஹோட்டலில் உள்ள பார்ட்டி ஹாலில் அரெஸ்ட் பண்ணி வைத்து இருக்கிறான்.

எதற்க்கு தெரியுமா? அவன் கல்யாணத்திற்காக யஸ் அவனுக்கும் சந்தனாவுக்கும்….துவாரகேஷ் அறிவித்தபடியே கல்யாணம் நடக்க வேணுமாம்….அப்படி இல்லை என்றால் பிடித்த வைத்த ஆளுங்களை உயிரோடு விட மாட்டான் என சொல்லி இருக்கிறான்.

அங்கே தான் துவாரகேஷ் மொத்த குடும்பமும் போய் இருக்கிறது…ஏன் டா உனக்கு வர்மக்கலை கற்று கொடுத்தவர் சரியாக கற்று கொடுக்கவில்லை என நினைக்கிறேன்…நான் நினைத்தேன் நீ அடித்த அடியில் அவன் கிட்ட தட்ட ஆறுமாதம் எழ மாட்டான் என்று…ஆனா அவன் இன்று எழுந்து என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறான் பாரு” என்றான்.

யது “ அதை இப்போ உனக்கு பரிசீலித்து காட்ட நேரமில்லை பிறகு பார்க்கலாம்…முதலில் நம்மை நம்பி வந்த ஆளுங்களை பார்க்கலாம் வா” என அருணை அழைத்து கொண்டு ஹோட்டல் பார்ட்டி ஹாலுக்கு போனான்.

அங்கே அருண் சொன்னது போல கப்பலில் வந்த அனைவருமே பயத்தோடு நின்று இருக்க…கூடவே துவாரகேஷ் குடும்பம் யோசனையாக நின்று இருந்தார்கள் தணிகாசலம், மூர்த்தியை மட்டும் காணவில்லை…. யது நந்தன் வர அவனை பார்த்த வியாட் முகம் பயங்கரமாக மாறியது… அதை அங்கே இருந்த அனைவருமே பார்த்தவர்கள் யது நந்தனை இவன் ஏதும் செய்து விடுவானோ என பயந்தனர்.

வியாட் “ வெல்கம் கேப்டன் என்னை சீக்கிரமாக பழைய வியாட்டாக எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க தானே….அது தான் வியாட் நேற்று நடந்தது எனக்கு தோல்வி அல்ல எச்சரிக்கை நீ ஒரு கலையை சரியாக தெரிந்து கொள்ளவில்லை என்ற எச்சரிக்கை …அது தான் நீ ஜெயிக்க காரணம் பர்ஸ்ட் டைம் இந்த வியாட் டைட்டஸ்க்கு தோல்வியை நீ அறிமுகப்படுத்தி இருக்க அதற்க்கே உன்னை இந்த உலகத்தை விட்டு அனுப்பி இருக்க வேணும்.

பட் உன் குட் டைம் நான் ஹாப்பி மூட்டில் இருக்கிறேன் ஓகே வந்தும் வந்த… என் கல்யாணத்தை பார்த்து விட்டு போ என்ன மிஸ்டர் துவாரகேஷ் நம்ம மேரீஸ்க்கு ரெடியாகலாமா….ஒன் மினிட் உங்க பாதர் இன் லா எங்கே? மிஸ்டர் தணிகாசலம் அவர் முன்னே என் மேரிஸ் நடந்தால் இன்னும் ஸ்பெஷலாக இருக்கும்.

ஓ நான் மறந்து விட்டேன் அவருக்கு வயதாகி விட்டது தானே அது தான் சட்டென மேலே டிக்கெட் வாங்கி போய் விட்டாரா…நோ ப்ராப்ளம் அவர் டெத் பாடியை ராஜ மரியாதையோடு நான் கொண்டு போக ஏற்பாடு செய்கிறேன்” என சொன்னான் …அவன் சொன்ன விதத்தில் அபிராமி, சந்தனா, நித்திலனுக்கு கோபம் வந்தது நித்திலன் அவனுக்கு பதில் அளிக்க போக….

“அந்த நிலைக்கு என்னை படைத்தவன் என்னை கொண்டு வந்து நிறுத்தவில்லை மிஸ்டர் வியாட் டைட்டஸ் “என சொல்லி கொண்டு தணிகாசலம் அவர் கூடவே மூர்த்தி வர பின்னால் கார்ட்ஸ் வந்தார்கள்.

கார்ட்ஸ் ஒருவன் தணிகாசலத்திற்க்கு அங்கே இருந்த சேர் ஒன்றை எடுத்து போட அவர் அதில் அமர்ந்தவர்… காலுக்கு மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்து இருந்தார்.

தணிகாசலம் “ Can we talk now? மிஸ்டர் வியாட் நீங்க ரொம்ப பேசி விட்டீங்க என தெரிகிறது சோ you take rest now…இப்போ நான் பேச போகிறேன்…இன்று கல்யாணம் நடக்கும் என் பேத்திக்கு பட் Not even u வேறு ஒருவர் கூட அதுவும் உங்களுக்கு தெரிந்த நபர் தான்” என்றார்.

வியாட் தன் கார்ட் ஒருவனை பார்க்க அவன் சேர் ஒன்றை கொண்டு போட… அதில் அவன் அமர்ந்தவன் கால் மேலே கால் போட்டு கொண்டவன்.

வியாட் “ மிஸ்டர் தணிகாசலம் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணி கொண்டு போகிறீங்க…உங்களை பற்றி பிசினஸ் சர்க்கிள் சொன்னது சரி தான் உங்க வயது தான் உங்க பலம் என்றாங்க….உங்க பலவீனம் உங்க ஒன்லி ஒன் டாட்டர் மிஸஸ் காயத்திரி துவாரகேஷ்… இப்போ உங்க பேரபசங்க இல்லையா? பட் எனக்கு பலவீனமே கிடையாது பிகாஸ் எனக்கு எதிராக மாறியதற்க்காக என் பெத்தவரையே போட்டு தள்ளியவன் நான்.

ஆதாரம் இருந்தும் எந்த போலீஸ், கோர்ட்ம் என்னை டச் பண்ண முடியவில்லை ஏன் தெரியுமா? நான் ஒரு Vampire bat (ரத்தம் குடிக்கும் வெளவால்) எனக்கு ரத்தம் குடிப்பது புதுசு இல்லை…என் பாதையில் குறுக்கிடாத வரைக்கும் ஐ யம குட் மேன் உங்க பேத்தி தான் என் மனைவி என நான் டிசைட் பண்ணி விட்டேன் இதில் நோ சேன்சஸ்…சோ பெட்டர் நீங்க விலகி நிற்பது தான்” என்றான்.

தணிகாசலம் “தமிழில் ஒரு பழ மொழி இருக்கு மிஸ்டர் வியாட் என்ன தெரியுமா? யானைக்கும் அடி சறுக்கும்…அந்த பெரிய உருவத்திற்கே சறுக்கும் போது நம்மை போல அதுவும் பிசினஸ் ஆளுங்களுக்கு எப்படி சறுக்கும்…ஓ பாருங்க நம்ம பேச்சு சுவாரஸ்யத்தில் ஒன்றை மறந்து விட்டேன்.

என் பேத்தியின் வருங்கால புருஷனை நான் அறிமுகப்படுத்த போகிறேன்…லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ் என் பேத்தியின் வருங்கால கணவன் வேறு யாருமல்ல… கேப்டன் யது நந்தன் திரவியம் தான் என சொல்ல அங்கே கடும் அமைதி நிலவியது அதை கலைத்தது நித்திலன் தான்.

நித்திலன் தன் கைகளை சந்தோஷமாக தட்டியவன் “ ஹை தாத்தா சூப்பர் அக்காவை யது அண்ணாவா கட்டி கொள்ள போகிறார்…எனக்கு டபுள் ஓகே அக்காவுக்கும் அவரை பிடிக்கும் இல்லையா அக்கா? என சொன்னவன் சந்தனாவை கட்டு கொண்டான்.

உண்மையில் அபிராமி, கேணலை தவிர சந்தனா, யது ஏன் அருண், வியாட் கூட அதிர்சியில் இருந்தனர்…

துவாரகேஷ் “ இதற்க்கு நான் ஒத்து கொள்ளவே மாட்டேன் கேவலம் இந்த துவாரகேஷ் மருமகன் மாத சம்பளம் வாங்கும் ஒருவனா…அது மட்டுமா இவனுக்கு உறவு என யாரு இருக்கிறாங்க கடலிலே காலம் கழிப்பவன் இவன் என் மாப்பிள்ளையா நோ நெவர்” என சத்தம் போட்டார்.

தணிகாசலம் நிதானமாக திரும்பியவர் துவாரகேஷ் பக்கமாக ஒரு பார்வை பார்த்தவர் “ யதுநந்தனை விட உங்க நிலைமை ஒரு காலத்தில் ரொம்ப மோசமாக இருந்ததா எனக்கு நினைவு…அதை மாற்றியவள் என் பெண்ணு காயத்திரி அவளால் தான் நீங்க இந்த இடத்தில் இந்த பெயரோடு நிற்கிறீங்க…முதலில் என் பேத்தி விஷயத்தில் நீங்க பேசும் தகுதியை இழந்து விட்டீங்க அதனால் அமைதியாக இருப்பதே உங்களுக்கு நல்லது” என்றார்.

யது நந்தன் “ மன்னிக்க வேணும் தணிகாசலம் சார் ந உங்க ஆசையை நான் இப்போ என்று இல்லை எப்பவுமே நிறைவேற்ற முடியாது…எனக்கு தேவை பணக்கார பதுமை அல்ல என் கூட மனம் ஒன்றி குடும்பம் நடந்த ஒரு சாமானிய பெண்” என்றான்.

தணிகாசலம் “ யதுநந்தன் உன் கிட்ட கேட்காமல் முதலில் என் ஆசையை சொன்னது தவறு தான்…பட் என் சூழ்நிலை அப்படி என் பேத்தி பதுமை தான் தங்க பதுமை யாருக்குமே கிடைக்க முடியாத பதுமை…அது சேர வேண்டிய கரங்கள் மாவீரனின் கரங்கள் நம்ம இது பற்றி தனியாக பேசலாம்.

முதலில் தீர்க்க வேண்டிய சில கணக்குக்கள் இருக்கிறது மிஸ்டர் வியாட் நான் அறிவிப்பு கொடுத்து விட்டேன்…உங்களை அழைத்தவர் கூட இனி என் பேத்தி விஷயத்தில் தலையிட முடியாது மீறி தலையிட்டால்…விளைவுகள் அதிபயங்கரமாக இருக்கும் அவரை உருவாக்க தெரிந்த எனக்கு அவர் ராஜ்ஜியத்தை அழிக்கவும் தெரியும்…சோ நீங்கள் கிளம்பலாம்” என்றார்.

வியாட் “ என்ன மிஸ்டர் தணிகாசலம் என்னை யாரென? நினைத்து விட்டீங்க நான் வியாட் டைட்டஸ்… நீங்க வா என்றால் வருவதற்க்கும் போ என்றால் போவதற்க்கும் உங்க வீட்டு வேலைக்காரன் அல்ல…எனக்கு தேவை உங்க பேத்தி கூட கல்யாணம் அது நடக்கவில்லை என்றால் என் கல்யாணம் நடக்கும் பிணங்களின் மேலே” என்றான்.

தணிகாசலம் “ ஓ ஐ சீ அப்டியா அப்போ நான் உங்களுக்கு ஒரு திருமண பரிசு தர வேணும் இல்லையா? என் பேத்தியின் கை பிடிக்க போகிறவருக்கு மூர்த்தி அந்த பைலை மிஸ்டர் வியாட் டைட்டஸ் கிட்ட கொடு பா அப்படியே உன் மொபைலை ஆன் பண்ணி” என்றார்.

மூர்த்தி சிரித்தவாறே முதலில் பைலை வியாட் பி.ஏ கிட்ட கொடுக்க…அவன் அதை பிரித்து படித்தவன் முகம் மாற சார் என அழைக்க வியாட் அதை பறித்து படித்தவன் முகம் மாற… மூர்த்தி மொபைலை கொடுக்க அதை வாங்கி காதில் வைத்தவன் அடுத்த செக்கன் மிஸ்டர் தணிகாசலம் என சத்தம் போட்டவன் மொபைலை தூக்கி தரையில் விசிறியடித்தான்.


நிலவு வரும்....

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 33


வியாட் மொபைலை தூக்கி எறிய அது தரையில் விழுந்து இரண்டாக பிளந்தது.

தணிகாசலம் “ கூல் மிஸ்டர் வியாட் இந்த வயதில் வர கூடாத நோய்களில் ஒன்று பிபீ வியாட் என் அனுபவம் உன் வயது பா…உன் அப்பா டைட்டஸ் சொந்த வாழ்க்கையில் எப்படியோ தெரியாது? பட் தொழிலில் நேர்மையான மனிதர்… அது உனக்கு இடைஞ்சலாக இருக்க தான் நீ அவரை உன்னை பெத்தவர் என பார்க்காமல் போட்டு தள்ளி இருக்க ….

அது தான் எதற்காக நீ அதை செய்தாயோ அதை அசைத்து பார்க்க நினைத்தேன் நீ அடி‌க்கடி சொல்லும் டயலாக்…ஐ யம் வியாட் என் கிட்ட இல்லாத அண்டர்வேர்ல்ட் ஆளுங்க இல்லை என்று…நீ படித்தவன் தானே தொழில் செய்பவன் உனக்கு தெரியாதா? எல்லா பிசினஸ்மேனும் அண்டர்வேர்ல்ட் ஆளுங்க கூட தொடர்ப்பு உண்டு என்று…அதை சிலர் தங்களை காத்து கொள்ளவும் சிலர் மற்றவர்களை அழிக்கவும் பயன்படுத்துகின்றனர் அது தான் வித்தியாசம்…

நான் இந்த துறையில் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலே இருக்கிறேன் அப்போ என் செல்வாக்கை நீ யோசித்து பாரு….அதை விட நான் பரம்பரை கோடீஸ்வரன் அது தான் என் அதிகாரத்தின் எல்லையை காட்ட ஒரு சின்ன சாம்பிள் காட்டினேன்…ஒரேய நேரத்தில் உன் மொத்த பிசினஸ்க்கும் ஆப்பு வைத்தேன் லீகல், இல்லீகல் பிசினஸ் இரண்டுக்கும் கவர்மென்ட் பார்வையை உன் மீது மொத்தமாக பதிய வைத்தேன்…அது தான் நீ சமாளிக்க முடியாத அளவு ரைட் வந்து உள்ளது அதுவும் இப்போ ஒரேய நேரத்தில்… நீ என்ன தான் வியாட் டைட்ஸாக இருந்தாலும் அதை விட டான்னாக இருந்தாலும் கூட உன் பிசினஸை நீ தான் காப்பாற்ற வேணும்…

இல்லை என்றால் உன் பார்ட்னர்கள் உன்னை போட்டு தள்ள கூட தயங்க மாட்டாங்க நீ கூட்டு வைத்து ஆளுங்க அப்படி …வியாட் என் பேத்தி, பேரனுக்கு முன் எனக்கு எதுவுமோ ஏன் யாருமே பெரிது அல்ல சோ உன் உயிர் ,பிசினஸ்… இரண்டையுமே காப்பாற்ற இப்போ அந்தமான் விட்டு கிளம்பினால் தான் சரியாக இருக்கும் உயிரா? பெண்ணா? சாய்ஸ் ஸ் யுவர் “என்றார்.

வியாட் “ மிஸ்டர் தணிகாசலம் நீங்க நான் யார் என தெரியாமல் விளையாடி விட்டீங்க இல்லையா? இதன் பிரதிபலிப்பை உங்க பேத்தி, பேரன் தான் அனுபவிப்பாங்க…என்ன நீங்க சொன்னது ஒரு விதத்தில் சரி தான் முதலில் என் பிசினஸை சரி செய்து விட்டு வந்து உங்களுக்குரிய பரிசை தருகிறேன்” என்றவன்…. சந்தனா, யதுநந்தனை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி சென்றான் அவன் போன பிறகு தணிகாசலம் அங்கே உள்ளவர்கள் பார்த்தவர்.

தணிகாசலம் “ ஸாரி எவரி பாடி என் மருமகன் செய்த ஒரு முட்டாள்தனமான காரியத்தால்…நீங்களும் கஷ்டப்பட்டு விட்டீங்க பட் ஒரு ஸ்மால் ரிக்குவெஸ்ட் இன்று மட்டும் உங்க பயணத்தை ஓத்தி வைக்க முடியுமா… நீங்க இருக்க போகும் இந்த நாள் செலவு எல்லாம் என் பொறுப்பு பீளிஸ் நீங்க அந்தமானில் எங்கே வேணும் என்றாலும் போகலாம் பொருட்கள் வாங்கலாம் அதற்காக பணத்தை நான் கொடுக்கிறேன்” என்றார்.

அவர்களும் பணக்கார ஆளுங்க பணமை பெரிது இல்லை அவர்களுக்கு தணிகாசலம் மீது நம்பிக்கை மட்டுமல்ல மதிப்பும் அதிகம் அவர்கள் சரி என கிளம்பி போனார்கள்….அவர்கள் போக அந்த ஹாலில் நின்றது துவாரகேஷ் குடும்பம், யது, அருண், கேணல் அவர் மனைவி தணிகாசலம் அவர்களோடு தனியாக பேச வேணும் என்பதால் நின்று இருந்தார்கள்…

தணிகாசலம் “ முதலில் மாப்பிள்ளை உங்க கிட்ட இருந்து வருகிறேன் ஏன் தெரியுமா? இந்த பிரச்சனையை ஆரம்பித்தது வைத்தது நீங்க தானே? ஒரு மனிதனுக்கு கர்வம் இருக்கலாம்… ஆனால் அதுவே தான் என்ற அகந்தையாக மாறினால் அது அவனை அதலபாதாளத்தில் தள்ளி விடும்…

உண்மையில் இப்போ தான் எனக்கு சந்தேகமாக இருக்கிறது என் மகள் காயத்திரியை நீங்க ஏன்? திட்டம் போட்டு சொத்துக்காக ஏமாற்றி இருக்க கூடாது என்று…என்ன பார்க்கிறீங்க என் பெண்ணை உண்மையான நீங்க காதலித்து இருந்தால் அவள் தந்த பரிசை நீங்க எப்படி பாதுகாத்து இருக்க வேணும்.

சந்தனா உங்க காதலின் அடையாளம் ஆனால் நீங்க அவளை கிட்ட தட்ட ஒரு கைதி போல வைத்து இருந்தீங்க…அவள் ஆசைபட்ட படிப்பை படிக்க விடாது அவளை வெளியுலகத்தை பார்த்து ரசிக்க விடாது ஏன்? எதற்காக இது எல்லாம் சொத்து உங்க கை விட்டு போக கூடாது என்ற ஒரு எண்ணத்தில் தானே…அபி மட்டும் என் பேத்திக்கு அம்மாவாக வரவில்லை என்றால் அவள் நிலை என்ன? இதோ இந்த வியாட் டைட்டஸ் மாதிரி ஆளுங்க கிட்ட மாட்டி சிக்கி அழிந்து போய் இருப்பாள்.

நான் பெண்ணுங்க எப்பவுமே அவங்க சொந்த காலில் நிற்க வேணும் என நினைப்பவன்…அது தான் என் பெண்ணை படிக்க பாரின் அனுப்பினேன் அவளுக்கு தனியாக பிசினஸ் வைத்து கொடுத்தேன்…நான் இல்லை என்றால் கூட அவளை தனியாக இந்த சமூகத்தில் வாழ தயார்படுத்தினேன் ஆனால் நீங்க இந்த சின்ன பூவை மலர விடாமல் மொட்டாக இருக்க வைத்து விலங்கு போட்டு விட்டீங்க…

நல்ல காலம் அபி இருந்தால் அவளுக்கு தன்னால் முடிந்ததை கற்று கொடுத்தாள் அபியும் தான்…தன் நண்பியின் குழந்தைக்காக மொத்த வாழ்க்கையும் அவள் சந்தோஷத்தையும் தொலைத்தாள்…. என் மொத்த அக்கவுண்ட் பார்ப்பது அவள் தான் சார்ட்டட் அக்கவுன்டன்ட் அவள்…அவளையும் உங்க அம்மா வீடு என்னும் கூட்டுக்குள்ளே அடைத்து விட்டாங்க மன்னிக்க வேணும் சம்பந்திமா… நீங்க என் பெண்ணுங்க இரண்டு பேருக்குமே அம்மாவாக அல்ல மாமியாராக தான் நடந்து கொண்டீங்க… ஆனா உங்க பெண்ணு, பையன் வாழும் வாழ்க்கை யாரால் என்று நினைத்து பார்த்து இருக்க நீங்க இப்படி நடந்து கொண்டு இருக்க மாட்டீங்க …

அது தான் என் பேரனையும் உங்க கூட்டுக்குள்ளே அடைத்து விடுவீங்க என்பதால்….அவனுக்கு இப்போ இருந்தே என் வியாபார யுக்திகளை கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டேன்….எனக்கு பிறகு அவன் தானே என் தொழில் சாம்ராஜ்ஜியத்திற்க்கு வாரிசு அவன் தான் தன் அம்மா, அக்காவை பார்த்து கொள்ள கூடியவன் என் அபியின் நகல் அவன் ….

என்ன நினைத்தீங்க மாப்பிள்ளை கடல் கடந்து என் பேத்தியை அழைத்து போய் விட்டால்…என் பார்வையில் இருந்து தப்பலாம் என்றா வியாட் டைட்டஸை ஒரு நொடியில் காலி பண்ணிய எனக்கு நீங்க பெரிதா? ஆனா அதை தடுப்பது என் பெண்ணின் மாங்கல்யம்….

என் பார்வை என் பெண்ணு, பேரபசங்களை விட்டு நொடி கூட அகலாது உங்க சீப் கேம் எனக்கு தெரியும்…நீங்க புறப்பட முன்னே என்னால் தடுத்து இருக்க முடியும் ஆனால் என் பேரபசங்க இப்பவாவது ஊரை சுற்றி பார்க்கட்டும் என நினைத்து தான் விட்டேன்…அதற்கு இடையே எனக்கு சிங்கப்பூரில் முக்கிய டில் பேச வர சொல்லி விட்டாங்க சரி இங்கே பிரச்சனை இல்லை என கிளம்பி போனால்… நீங்க பிரச்சினைக்குரிய மூல காரணத்தை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்று இருக்கிறீங்க.

என் பாட் லக் அந்தமானில் சிக்னல் கட் ஆகிவிட்டது அதனால் நீங்க உங்க ஆட்டத்தை தொடங்கி முடித்து விட நினைத்தீங்க….ஆனா நீங்க எதிர்பாராத ட்விஸ்ட் நித்தி யது கூட நட்பு கொண்டது அடுத்து வியாட்டின் உண்மை முகம்…தெரியாமல் தான் கேட்கிறேன் ஒருத்தர் இரண்டு பேர் அவனை பற்றி தப்பாக சொன்னால் பொறாமை எனலாம்…உலகமே சொல்லும் போது அதில் கொஞ்சம் கூடவா உண்மை இருப்பது தெரியாது நீங்க படித்து கோல்ட் மெடில் எடுத்து என்ன? பலன் நோ யூஸ்…

பெத்த பெண்ணை காப்பாற்ற தெரியாமல் தடுமாறி போய் நிற்கிறீங்க யது மட்டும் இல்லை என்றால்….நேற்று வியாட் என் பேத்தியை சீரழித்து இருப்பான் நீங்க அடுத்த ஸ்டெப் எடுக்க தெரியாமல் ரூம்க்குள்ளே அடைந்து கொண்டு இருக்கிறீங்க…சின்ன பையன் அவன் வயது என்ன அவன் தன் அக்காவுக்காக வியாட் கூட சண்டை போட போகிறான்… ஆனால் நீங்க ஒரு அப்பாவாக இருந்தும் உங்க உயிரை காப்பாற்ற அமைதியாக இருக்கிறீங்க….

என் பேத்தி சொத்து வேணும் அவள் வேணாம் நீங்க எல்லாம் ஒரு அப்பாவா இதில் ஸ்டேட்டஸ் போதை தலைக்கு ஏறி அலைகிறீங்க….ஏன்? என்னை விட ஒரு படி மேலே நிற்க வேணும் என்ற வெறி அதற்க்கு பெத்த பெண்ணை பழி கொடுக்க தயாராகி விட்டீங்க….இனி உங்களை நம்பி என் பேத்தியை விட முடியாது இப்போ வியாட்டை மாப்பிள்ளை என அழைத்து வந்த நீங்க நாளை ஒரு வயதான ஆளை அழைத்து வர மாட்டீங்க என என்ன? நிச்சயம்…

அதனால் தான் நான் நன்றாக யோசித்து அலசி ஆராய்ந்து யது நந்தனை என் பேத்திக்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தேன்…இனி உங்க கூட என் பேச்சு வார்த்தை முடிந்தது இனி கேப்டன் கூட தான் என் பேச்சு வார்த்தை…சொல்லுங்கள் கேப்டன் என் பேத்தி சந்தனாவை நீங்க கல்யாணம் பண்ணி கொள்கிறீங்களா “என கேட்டார்.

யது பார்வை ஒரு கணம் சந்தனாவை பார்க்க அவள் பார்வை நிலம் நோக்கி இருந்தது… அவன் “ ஐ யம் ஸாரி சார் நான் இதற்க்கு சம்மதிக்க முடியாது “என்றான்.

தணிகாசலம் அவனை அழுத்தமாக பார்க்க நித்திலன் ஓடி போய் யதுவை இடையோடு கட்டி கொண்டவன் நித்திலன்” யது அண்ணா என் அக்காவை கல்யாணம் பண்ணி கொள்ளுங்கள்…அவள் ரொம்ப நல்லவள் நீங்க வேணாம் என்றால் எங்க அப்பா வியாட் போல ஒருவனை திரும்ப அழைத்து வந்து விடுவார்…என் அக்கா பாவம் அவளுக்கு உலகமே தெரியாது எனக்காக அவளை கல்யாணம் பண்ணி கொள்ளுங்கள்” என கேட்டான் .

நித்திலன் என குரலை உயர்த்தி சத்தமாக அழைத்த துவாரகேஷ் “ நித்திலன் பெத்த மகன் என்று கூட பார்க்க மாட்டேன்…உன்னை வெட்டி பொலி போட்டு விடுவேன் யாருக்கு யாரு மாப்பிள்ளை? துவாரகேஷ் மகளுக்கு இந்த ஒன்றுமில்லாத பிச்சைக்கார அனாதையா மாப்பிள்ளை” என கேட்டார் .

யது நந்தன் முகம் இறுக தணிகாசலம் துவாரகேஷை பேச வாய் எடுக்க யது “ தணிகாசலம் சார் ….உங்க பேத்தியை கல்யாணம் பண்ணி கொள்ள எனக்கு பரிபூரண சம்மதம் …ஆனால் ஒரு நிபந்தனையின் பெயரில் என்றான்.




நிலவு வரும்….
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 34

யது நந்தன் சந்தனாவை திருமணம் செய்ய சம்மதம் ஆனால் ஒரு நிபந்தனையின் பெயரில் என்றான்…அவன் சம்மதம் சொன்னதும் துவாரகேஷ், மரகதம் தவிர மற்ற அனைவரின் முகமும் மலர்ந்தது.

தணிகாசலம் “ சொல்லு பா என்ன நிபந்தனை நீ தப்பாக ஏதும் நிபந்தனை விதிக்க மாட்டாய்…என தெரியும் சொல்லு நான் என்ன செய்ய வேணும் “என கேட்டார்.

யது நந்தன் “ உங்க பேத்தி மிஸ்டர் துவாரகேஷ் பெண்ணாக வர கூடாது… யது நந்தன் மனைவியாக வர வேணும்” என்றான்.

தணிகாசலம் “ புரியவில்லை பா துவாரகேஷ் பெண்ணாக இல்லை என்றால் நீ எதை பா எங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கிற…. நான் நினைத்தது சரி என்றால் என் பேத்தியை மட்டும் தான் எதிர்பார்க்கிற சரியா” என கேட்டவர் மெல்ல புன்னகை புரிந்தார்.

யதுநந்தன் “ இப்போ தெரிகிறது சார் வியாட் உங்க கிட்ட தோற்றது எப்படி என்று யஸ் உங்க பேத்திக்கு நீங்க வரதட்சணை என்ற பெயரில் ஏதும் கொடுக்க கூடாது….அதை விட என் சம்பளத்தில் என் ஸ்டேட்டஸ்ஸில் அவள் வாழ பழகி கொள்ள வேணும்….அதற்காக உங்க மருமகன் சொன்னது போல நான் பிச்சைக்கார பரதேசி இல்லை அனாதையும் அல்ல…

நான் கேப்டன் மாசம் கிட்ட தட்ட ஒரு லட்சத்திற்க்கு மேலே வருமானம் வருகிறது அதை விட என் சொந்த ஊரில் வீடு இருக்கிறது…எனக்காக என் அம்மா, அப்பா சேர்த்து வைத்த சேவிங்ஸ் பணம் இருக்கு என் அம்மாவின் நகைகள் இருக்கு எல்லாம் உங்க பேத்திக்கு தான்…இதை எல்லாம் விட அவளை காலம் பூராகவும் கண் கலங்காமல் பார்த்து கொள்ள நான் இருக்கிறேன்.

உங்க வீட்டில் வளர்ந்த போல அவளுக்கு தங்க தட்டில் ஆறு சுவை உணவு தினமும் போட முடியாது…அவள் சாப்பிட சாதாரண தட்டு அதில் மூன்று வேளையும் அவளுக்கு தவறாமல் சாப்பாடு போட என்னால் முடியும்…நல்ல துணிமணிகள் ஏன் வருடத்தில் ஒரு தடவை வைர நகைகள் எடுத்து கொடுக்க முடியும் அது போல அவளின் நியாயமான ஆசைகளை நான் என் உயிரை கொடுத்தாவது நிறைவேற்றுவேன்….இது தான் என் நிபந்தனை இதற்க்கு உங்க பேத்திக்கும் உங்க அனைவருக்குமே சம்மதம் என்றால் நானும் இதற்க்கு முழு மனதாக சம்மதம் சொல்கிறேன்” என்றான்.

துவாரகேஷ் “ இந்த பிச்சைக்கார வாழ்வுக்கு என் பெண்ணு என் கூடவே இருக்கலாம் அவள் யாரு தெரியுமா….துவாரகேஷ் பெண்ணு மட்டுமல்ல காயத்திரி பெண்ணு கூட அவள் பெயரில் கோடிக்கானக்கான சொத்துக்கள் இருக்கிறது…ஏன் ஐந்து கப்பலுக்கு சொந்தக்காரி அவள் வீடா ஏது! ஓடு போட்ட வீடு தானே உன் வீடு அவள் இருப்பது அரண்மனையில்…அவள் அலுமினிய தட்டில் சாப்பிட்ட பெண்ணு இல்லை…

தங்க தட்டில் ஆறு சுவை விருந்து, பால் பாயாசம் என சாப்பிட்டு வளர்ந்தவள் வருடத்தில் ஒரு தடவை அல்ல… வாரத்தில் ஒரு தடவை உயர்ரக துணிகள், வைர நகைகள் என போட்டு அழகு பார்ப்பவள்… அவள் நடப்பது தரையில் அல்ல பாரசீகக் கம்பளத்தில் அவளை போய் இப்படிப்பட்ட ஒருவனுக்கு கட்டி கொடுப்பதா ! நோ நெவர் என் பெண்ணுக்கு இவன் மாப்பிள்ளையாக வர முடியாது” என்றார்.

தணிகாசலம் “ போதும் மாப்பிள்ளை இத்தோடு உங்க அலப்பறைகளை நிறுத்தி கொள்ளுங்கள்….என் பெண்ணை நீங்கள் கல்யாணம் செய்யும் போது இதை விட நீங்க கீழான நிலையில் இருந்த ஞாபகம் இருக்கா…எனக்கு இப்போ தேவை என் பேத்திக்கு பணக்கார பொம்மை அல்ல நல்ல இதயம் உள்ள ஆண் மகன்…பணத்தை வைத்து மட்டும் ஒரு ஆணை சமூகத்தில் மதிப்பது இல்லை அவன் நல்ல ஒழுக்கத்தை பார்த்து தான் பெத்தவங்க பெண்ணை கட்டி கொடுப்பாங்க….அப்படி பணத்தை பார்த்து பெண்ணை கட்டி கொடுத்தவர்கள் நிலை என்ன என எனக்கு தெரியும்? வேணாம் என் பேத்திக்கு அந்த நிலை…

உங்க வரட்டு பிடிவாத்திற்காக என் பேத்தி வாழ்க்கையை நான் பணயம் வைக்க முடியாது…இப்போ உங்க சம்மதம் இங்கே முக்கியம் அல்ல என் பேத்தி சம்மதம் தான் முக்கியம்” என்றவர் “பாப்பா இங்கே வா டா” என சந்தனாவை அழைத்தார்…அபிராமி அருகே நின்று இருந்தவள் தணிகாசலம் அருகே போனாள்…அவளை அணைத்து கொண்டு

தணிகாசலம் “ பாப்பா உன் தாத்தா உன் நல்லதற்காக மட்டும் தான் எதையும் செய்வேன் நீ என் பெண்ணின் பிம்பம்…நீ காலம் பூராகவும் சந்தோஷமாக இருக்க வேணும் நீ பணத்தை பெரிதாக எதிர்பார்ப்பவள் இல்லை…அன்பை மட்டும் தான் தேடுபவள் அது தாத்தாவுக்கு தெரியும் காரணம் நீ என் அபி வளர்த்த பெண்ணு.

யதுவை பற்றி தாத்தா உன் கிட்ட அதிகமாக சொல்ல வேண்டிய தேவை இல்லை அவன் தான்… உன் உயிரை, மானத்தை எந்த பிரதிபலனும் இல்லாது காத்தவன் அவன்… அவனை கட்டி கொண்டால் உனக்கு நிம்மதி , சந்தோஷம் பாதுகாப்பு கூடவே அன்பும் கிடைக்கும் மா …அவனை கட்டி கொள்ள உனக்கு சம்மதமா? தாத்தா உன்னை வற்புறுத்த மாட்டேன் உன் முடிவு தான் என் முடிவும்” என்றார்.

சந்தனா தணிகாசலம் மார்பிலே சாய்ந்து கொண்டு இருந்தவள் அவர் சட்டை பட்டனை நோண்டி கொண்டு கொஞ்ச நேரம் யோசித்தவள்…பிறகு

அவள் “ தாத்தா என் கூட அம்மா, நிது வருவாங்களா அவங்களை நான் பிரித்து இருந்தது இல்லை…நான் கேப்டனை கல்யாணம் பண்ணி கொள்கிறேன் அவங்க என் கூட தான் இருக்க வேணும்” என சொன்னாள்…. அவள் பதிலில் அங்கே இருப்பவர்கள் முகம் புன்னகை பூசி கொண்டது யது கூட மெல்ல புன்னகை புரிய …

கேணல் மனைவி சுசீலா “ என்ன பாப்பா புதுசாக இருக்கு உன் புகுந்த வீட்டுக்கு உன் பிறந்த வீடி வந்து ஏன் இரண்டு வாரம் வரை இருந்து போகலாம்…ஆனால் நிரந்தரமாக தங்க சொன்னால் அது அவங்களுக்கு கெளரவமாக இருக்காது தங்கம் ஏன் உனக்கும் தான் கெளரவம் இல்லை…எல்லாம் தள்ளி இருந்தால் தான் மரியாதை அது மட்டுமல்ல நாளை உன் தம்பிக்கு கல்யாணமாகும் போது அவன் மனைவி எப்படி உன் வீட்டில் உரிமையாக இருக்க முடியும் யோசி தங்கம் “என்றார்.

யது “ மிஸஸ் ஜெகதீஷ் எனக்கு உறவுகள் பெரிதாக இல்லை இனி அவள் உறவுகள் தான் என் உறவும் கூட…அதுவும் நித்திலன் என் கூட பிறக்காத உறவு அவன் என் வீட்டில் தங்க என் அனுமதி எதற்க்கு” என்றான்…அவன் பதில் சந்தனா சந்தோஷமாக வாழ போகும் வாழ்க்கையை காட்டியது.

ஜெகதீஷ் “ ஓகே தணிகாசலம் சார் கேப்டன், சந்தனா இருவருமே சம்மதம் கொடுத்து விட்டார்கள்…மேரிஸ் எப்போ சார் நம்ம ஊர் திரும்பிய பிறகு தானே” என கேட்டார் .

தணிகாசலம் “ இல்லை நாளை அந்தமானில் என் பேத்தி கல்யாணம் நடக்கும்” என்றார்…அவர் சொன்னதும் என்ன! என அனைவருமே ஆச்சரியமாக கேட்டனர்.

அபிராமி “ அப்பா சந்து எனக்கு இருக்கும் ஒரேய பெண்ணு அவள் கல்யாணத்தை அவள் குழந்தையாக இருக்கும் போதே….நானும் காயுவும் எப்படி நடத்த வேணும் என தீர்மானித்து வைத்து இருந்தோம்… நீங்க கூட அவள் கல்யாணத்தை எப்படி நடத்த வேணும் என பிளான் எல்லாம் போட்டு இருந்தீங்க அப்படி இருக்கும் போதே இப்படி சொன்னால் எப்படி பா” என கேட்டாள்.

தணிகாசலம் “ ஒரு கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்துவது திருமண வாழ்வில் வெற்றி இல்லை மா….அதில் வாழ போகும் இருவரின் விட்டு கொடுப்பு ,அன்பில் தான் அந்த வெற்றி தங்கி உள்ளது…நீ சொன்னது உண்மை தான் நம்ம பல கனவுகள் காண்கிறோம்… ஆனால் அது எல்லாம் நிஜத்தில் நிறைவேறுவது இல்லை மா இதுவும் அப்படி ஒன்று தான்..

என் பேத்திக்கு தேவை நல்ல மாப்பிள்ளை அப்படிப்பட்ட ஒருத்தர் கிடைத்து விட்டார் எனக்கு அது போதும்….அந்தமானில் கல்யாணத்தை சிம்பிளாக வைத்து கொள்ளலாம்… சென்னைக்கு போன பிறகு கிராண்ட் ரிசப்ஷன் வைக்கலாம் என்ன யது உங்களுக்கு இதில் சம்மதம் தானே மாப்பிள்ளை நீங்க” என்று துவாரகேஷிடமும் கேட்டார்.

துவாரகேஷ் “ ரொம்ப நடிக்க வேணாம் ஏதோ என் கிட்ட கேட்டு செய்வது போல என் சம்மதம் கேட்கிறீங்க என் குடும்பத்தை வைத்து என்னை லாக் பண்ணி விட்டீங்க தானே….பார்க்க தானே போகிறேன் உங்க ஆசை பேத்தி வாழ போகும் ராஜ வாழ்க்கையை… இவனை போல ஒருவன் எனக்கு மாப்பிள்ளை என சொல்வது எனக்கு தான் அவமானம் .

ஏய்! சந்தனா உன் தாத்தா சொல் கேட்காதே அழிந்து போய் விடுவ இவன் உன்னை சந்தோஷமாக வைத்து இருக்க மாட்டான்… இந்த கல்யாணத்தை நிறுத்து விடு என்றார்…சந்தனா ஏதும் சொல்லாது அமைதியாக இருந்தாள்.

துவாரகேஷ் “ ஆல் ரைட் உன் தாத்தா வார்த்தை தான் உனக்கு எப்பவுமே முக்கியம் உனக்கு மட்டுமல்ல உன் தம்பிக்கு கூட… பார்க்கிறேன் இவன் எப்படி உன்னை வைத்து வாழ போகிறான் என்று முதலில் இவன் உன்னை வாழ வைக்க பணம் வேணும் இல்லையா அதற்க்கு இவனுக்கு இந்த தொழில் வேணும்… அதை முதலில் இல்லாமல் செய்கிறேன் இவன் தானே யாரிடமும் கையேந்த மாட்டான் இப்போ என் கிட்ட ஏந்த வைக்கிறேன்.. சோற்றுக்கு சிங்கி அடித்தால் தான் இந்த துவாரகேஷ் யாரென தெரியும்” என்றவர் தன் மொபைலை எடுத்தவர்… ஒரு நம்பருக்கு டயல் பண்ணி அதை காதில் வைக்க போனவர்…பிறகு அதை ஸ்பீக்கரில் போட்டவர் அனைவரையுமே நக்கல் சிரிப்போடு பார்த்து விட்டு ஹலோ பாலா நான் துவாரகேஷ் என்றான்.

பாலா “ சொல்லு டா நானே உனக்கு கால் பண்ண வேணும் என நினைத்தேன் அந்தமானில் இப்போ ஷிப் நிற்பதாக… யது ரிப்போர்ட் பண்ணி இருந்தான் சிக்னல் வேற சரியாக இல்லை சந்தோஷமான விஷயம் டா எனக்கு பேத்தி பிறந்து இருக்கிறாள்….என் வீட்டு குட்டி இளவரசி நானே யது கிட்ட பேசி ஷிப்பில் வந்தவர்களுக்கு ஒரு நாள் சாப்பாட்டு செலவை என் பெயரில் கொடுக்க சொல்ல நினைத்தேன்..

நீ சென்னைக்கு ரிட்டன் ஆனா பிறகு நம்ம ப்ரண்ட்ஸ் அனைவருக்கும் பிக் பார்ட்டி இருக்கு” என சொன்னார்.

துவாரகேஷ் “ ரொம்ப சந்தோஷம் டா இதை பற்றி நான் பிறகு பேசுகிறேன்….இப்போ நீ எனக்கு செய்ய வேண்டியது ஒன்று தான் உன் ஷிப்புக்கு வேற கேப்டனை அனுப்பு… அடுத்து இனி உன் ஷிப்பில் மிஸ்டர் யது நந்தன் வேலை பார்க்க கூடாது அவனை வேலையை விட்டு தூக்க வேணும்” என்றார்.


நிலவு வரும்…
 
Status
Not open for further replies.
Top