ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்:20


சந்தனாவை டாக்டர் செக் பண்ணி விட்டு அருகே நின்ற துவாரகேஷிடம். டாக்டர்



“சார் மேடம் தண்ணீரில் ரொம்ப நேரம் இருந்ததால் அவங்களால் சுவாசிக்க முடியாமல் போய் விட்டது …இப்போ ஊசி போட்டு இருக்கிறேன் நாளை காலையில் ஓகே ஆகி விடுவாங்க… கொஞ்சம் வீக்காக இருக்கிறாங்க நல்ல சத்தான ஆகாரமாக கொடுங்க சரியாகி விடும்” என சொல்லி விட்டு போக. துவாரகேஷ்



“ அபிராமி இங்கே பாரு இனி உன் பையன் என் பெமிர்ஷன் இல்லாமல் சந்தனாவை வெளியே அழைத்து போக கூடாது…அடுத்து அந்த யது நந்தன் கூட இனி இவனை நான் பார்க்க கூடாது நான் சொன்னதை மீறி நடந்தான் என்றால் எனக்கு கொள்ளி வைக்க கூட புள்ளை தேவையில்லை என நினைத்து விடுவேன்…புரிகிறதா இப்போ இவனை தூங்க போக சொல்லு நீ சந்தனா கூட இரு நாளை எனக்கு நாளை ஒரு முக்கியமான நாள் என் லட்சியம் நிறைவேற போகும் நாள்… அதில் ஏதும் தப்பு நடந்தது நான் மனுஷனாக இருக்க மாட்டேன்” என சொல்லி விட்டு நித்திலனை முறைத்து விட்டு போக. நித்திலன்


“ச்சே என்ன நன்றி கெட்ட குணம் யது அண்ணா தன் உயிரை பணயம் வைத்து அக்காவை காப்பாற்றி இருக்கிறார் ஆனால் அப்பா இப்படி பேசி விட்டு போகிறார் …அப்பா சொன்னாலும் நான் யது அண்ணா கூட பேசுவேன் இதை யாராலும் தடுக்க முடியாது அம்மா அப்பா நாளைக்கு ஏதோ லட்சியம் நிறைவேற போவதாக சொன்னார் அது என்ன மா” என கேட்க. அபிராமி



“ நானும் உன்னை போல தான் நித்திலா விபரம் ஏதும் புரியாத நிலையில் நிற்கிறேன் பார்க்கலாம் பா… சரி நீ போய் தூங்கு நான் அக்கா கூட தூங்குகிறேன் இன்டர்கம்மில் பால் ஆடர் பண்ணி இருக்கிறேன் சாப்பிட்டு விட்டு தூங்கு” என சொல்ல… நித்திலன் சரி என சொல்லி விட்டு சந்தனா அருகில் வந்தவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன் குட் நைட் அக்கா என சொல்லி விட்டு போகும் மகனை அபிராமி கனிவாக பார்த்தார்…



மறு நாள் காலையில் அந்தமான் தீவில் ஹெலிகாப்டரின் சத்தம் கேட்டது பொதுவாக கோடீஸ்வர ஆளுங்க ஹொலியில் வருவது உண்டு…இது சகஜம் என்பதால் யாருமே பெரிதாக எடுக்காமல் தங்கள் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தனர் ஹோட்டலில் உள்ள ரெஸ்டாரண்ட்டியில் ஜெகதீஷ் அவர் மனைவி சுசீலா அது போல இன்னும் சிலர் காலை காபி டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்…அப்போது யது நந்தன் ,அருண் காலை காபி,டிபன் சாப்பிட வர இவர்களை கண்ட ஜெகதீஷ் கேப்டன் என அழைக்க யது திரும்பி பார்த்தவன் முகம் மலர… ஜெகதீஷ் வர சொல்லி சைகை செய்ய ஒரு கணம் தயங்கியவன் பிறகு அருணை அழைத்து கொண்டு அவர் அருகே போனான். யது


“குட் மார்னிங் கேணல் அண்ட் மிஸஸ் ஜெகதீஷ்” என சொல்ல. சுசீலா சிரித்தவர்


“குட் மார்னிங் கேப்டன் சார் இந்த மிஸஸ் ஜெகதீஷ் என்பது வேணாமே ஆன்ட்டி என்று அழை அருண் நீயும் தான்…நேற்று இந்த ஹோட்டல் பூராகவும் உன்னை பற்றி தான் பேச்சு ரொம்ப நல்ல காரியம் செய்து இருக்க பா பாவம் சந்தனா குட்டி ரொம்ப பயந்தவள் அபிராமி , நித்து பையன் அவள் மேலே உயிரே வைத்து இருக்கிறாங்க…இந்த காலத்துல உன்னை போல ஒருத்தனை பார்க்க முடியாது என சொல்லி கொண்டு இருக்கும் போது ஹோட்டல் பரபரப்பாக இருந்து அங்கு இருப்பவர்கள் புரியாமல் பார்க்க. ஜெகதீஷ்


“வாட்ஸ் கோயிங் ஆன் யது ஏதும் சுனாமி, இல்ல கடல் சீற்றம் வர போகிறதா” என கேட்க. யது


“நோ கேணல் எங்களுக்கு அப்படி எந்த ரெட் அலர்ட்டும் வரவில்லை இது வேற ஏதோ போல இருக்கிறது…வெயிட்” என சொன்னவன்.. அங்கே கொஞ்சம் பயந்து வெளியே பார்த்து கொண்டு இருந்த வெயிட்டர் ஒருவனை அழைத்தான் அவன் கேப்டன் என வர. யது


“இங்கே என்ன நடக்கிறது ஏதும் கடல் கொந்தளிப்பா” என கேட்க. அவன்


“ அது கூட பரவாயில்ல கேப்டன் இது அதை விட அதி பயங்கரம் இனி இந்த அந்தமான் தீவு கை மாற போவது உறுதி ஏன் தெரியுமா…வந்தது என சொல்ல வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பிறகு மெதுவாக வம்பர் வெளவால் ( Vampire bat) வந்து இருக்கிறார்” என சொல்ல வாட் என யது, கேணல் சொல்ல. வெயிட்டர்


“ஆமாம் சார் அது தான் இங்கே உள்ள ஆளுங்க மட்டுமல்ல உங்க கப்பலில் வந்த ஆளுங்க கூட பயந்து போய் இருக்கிறாங்க…இனி என்ன நடக்குமோ என்று” என. ஜெகதீஷ்


“யு மீன் வியாட் டைட்டஸ் அவனுக்கு இங்கே என்ன வேலை அவனை யார் இங்கே வரவழைத்து இருப்பாங்க…அந்தமான் போல உள்ள சின்ன நாட்டில் அவன் கால் பதிக்க மாட்டானே” என சொல்ல. அருண்


“யது இவன் யாரு டா நீயும் கேணலும் இப்படி பெரிதாக பேசும் அளவுக்கு” என கேட்க .யது நந்தன்


“ ஓ உனக்கு தெரியாது இல்லையா இவனை ரத்தம் குடிக்கும் வௌவால் என வியாபார உலகில் சொல்வாங்க…இவன் நினைத்தால் அடுத்த செக்கன் ஒரு நாட்டை வாங்கும் அளவுக்கு பண பலம் படைத்தவன்…அவன் நினைத்தது நடக்க எந்த எல்லைக்கும் போவான் …உயிர்கள் இவனுக்கு விளையாட்டு பொம்மைகள் இப்போ வரைக்கும் இவனுக்கு குடும்பம் இல்லை இவனை நம்பி எந்த பெண்ணு கழுத்தை நீட்டுவாள்…பெண்கள் போக பொருளாக நினைப்பவனுக்கு இவன் ராவணனை விட பல மடங்கு கொடூரன்” என சொல்ல. ஜெகதீஷ்


“ இன்னும் ஒன்றை சொல்ல மறந்து விட்டாய் யது அண்டர் கிராவுட் தாதா யஸ் இல்லீகல் பிசினஸ் செய்வதில் மன்னன்…பட் நோ புரூப்” என. சுசீலா


“என்னங்க அப்படி பட்ட ஆளு இப்போ இங்கே ஏன் வர வேணும் எனக்கு பயமாக இருக்குங்க” என சொல்ல. ஜெகதீஷ்



“என்ன சுசீ பேசுகிற நீ யாரு கேணல் ஜெகதீஷ் வொய்ப் இந்த நாட்டை காத்த ராணுவ வீரன் நான்…எல்லையில் இருக்கும் எதிரிகளை வேட்டையாடிய எனக்கு இவன் பெரிதா விடு மா பார்த்து கொள்ளலாம் முதலில் இவனை இங்கே வர வைத்தது யாரு…இவன் அழைப்பு வைத்தால் கூட வர மாட்டான் இப்போ இங்கே வந்து இருக்கிறான் என்றால் சம்திங் ராங் முக்கிய ஏதோ விஷயம் இருக்க வேணும் வெயிட் அண்ட் சீ” என்றார்.



சந்தனா கண் விழிக்கும் போது அவள் தான் உயிரோடு இருக்கிறாளா என சந்தேகமாக இருந்தது …அவளை கடல் வாரி சுருட்டியது தான் தெரியும் பிறகு ஏதுவுமோ நினைவு இல்லை இருந்தும் அவளுக்கு யாரோ தன்னை தூக்கிய உணர்வு…சந்தனா மெல்ல எழ பார்க்க அவளால் முடியவில்லை அப்போது பாப்பா பொறு என. அபிராமி குரல் கேட்டது..



மகள் எழுந்தவுடனே அவளுக்கு பசிக்கும் என்பதால் ஆடர் பண்ணிய காபி, டிபனை ரூம் சர்வீஸ் கொண்டு வர சொல்லி அதை வாங்கி வைத்து விட்டு வர தான்…சந்தனா எழ முயற்ச்சி செய்ததை கண்டு விட்டு பாப்பா என அழைத்து கொண்டு ஓடி வந்தவர் இரு பாப்பா என்றவர் அவளை மெதுவாக அணைத்து பிடித்தவர்… அவளை கட்டிலில் சாய்வாக இருக்க வைத்தவர் அவளை கண்கள் கலங்க பார்த்து விட்டு அவள் முகத்தை தடவி நெற்றியில் முத்தம் வைத்தவர். அபிராமி


“நான் ரொம்ப பயந்து போய் விட்டேன் பாப்பா என் கையில் தந்த பொக்கிஷத்தை இழந்து விட்டேன் என்று என் உயிரே போய் விட்டது…நல்ல காலம் அந்த தம்பி கடவுள் போல வந்து உன்னை காப்பாற்றி விட்டது ஏன் பாப்பா அம்மா கிட்ட சொல்லாமல் போன…உன் தம்பி சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும்” என சொல்ல நான் ஒன்றும் சின்ன பையன் இல்லை என சொல்லி கொண்டு நித்திலன் வந்தான்.



வந்தவன் நேராக சந்தனா அருகில் போய் அவளை அக்கா என கட்டி கொண்டான் பார்த்து தம்பி என அபிராமி சொல்ல. நித்திலன்



“பார்த்து தான் மா அக்காவை அணைத்தேன் எப்படி அக்கா இருக்கு உடம்பு வலி காயம் இன்னும் வலிக்கிறதா…நான் ரொம்ப பயந்து விட்டேன் உன்னை காணவில்லை என்றவுடன் அழுகை அழுகையாக வந்தது…உன்னை கரையில் தானே நிற்க சொன்னேன் பிறகு நீ எதற்காக கடல் அருகே போன யது அண்ணா மட்டும் இல்லை என்றால் உன்னை பார்த்து இருக்க முடியாது” என… சந்தனா யாரு என வரண்டு இருந்த தன் நாவை ஈரபடுத்தி கொண்டு கேட்க. நித்திலன்



“ அது தான் கேப்டன் உன்னை காணவில்லை இனி தேடி பயன் இல்லை என டைவர்ஸ்( சுழியோடிகள்) சொல்ல நான் ரொம்ப அழுதேன் எனக்கு அக்கா வேணும் …நான் போய் தேட போகிறேன் என சொல்ல யது அண்ணா தான் என்னை திட்டி விட்டு உன்னை காப்பாற்றி அழைத்து வந்தார்… அதற்க்கு அப்பா அவருக்கு நல்ல கிப்ட் கொடுத்து விட்டார் அவரை பாராட்ட வேணாம் அடிக்காமல் இருந்து இருக்கலாம் இல்லையா என சொல்ல சந்தனா முகம் வாட. அபிராமி



“நித்திலா இப்போ இந்த பேச்சு எதற்க்கு அக்கா இப்போ தான் எழுந்து இருக்கிறாள் பிறகு பேசலாம் …முதலில் அவள் சாப்பிடட்டும் பிறகு பேசு இப்போ நீ உன் ரூம்க்கு போ” என சொல்ல… அவன் சரி என கிளம்ப அபிராமி மகளை வாஷ் ரூம்க்கு அழைத்து கொண்டு போனார் யது தன் கடமைகளை செய்ய ஆரம்பிக்க அவனுக்கு மட்டுமல்ல கப்பலில் வந்த பயணிகள் அந்த தீவில் உள்ள அனைவருக்குமே… இன்று இரவு துவாரகேஷ் விருந்து வைக்கிறார் அனைவருமே வர வேணும் என அழைப்பு வந்து இருக்க அதை படித்து விட்டு. அருண்



“என்ன டா இந்த ஆளுக்கு அம்னீசியாவா நேற்று தான் அவர் பெண்ணு சாவை நேரில் பார்த்து விட்டு வந்து இருக்கு …அது பற்றிய கவலை கொஞ்சம் கூட இல்லாமல் இந்த ஆளு இன்று பார்ட்டிக்கு நம்மை எல்லாம் இன்வைட் பண்ணி இருக்கிறார்…அதுவும் உன் கூட அப்படி சண்டை போட்டு விட்டு உன்னை இன்வைட் பண்ணி இருக்கிறார் இதில் ஏதும் உள் குத்து இருக்குமோ என்றான்.




நிலவு வரும்…








 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்: 21



அருண் துவாரகேஷ் அழைப்பில் ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என சொன்னான்…


“இருந்து விட்டு போகட்டுமே எனக்கு என்ன நான் இந்த பார்ட்டிக்கு போனால் தானே…அந்த ஆளை பார்த்தாலே தூக்கி போட்டு மிதிக்க தோணும் இதில் அவன் பார்ட்டிக்கு நான் போவதா நெவர்…நீ போய் வா எனக்கு வேற வேலைகள் இருக்கிறது” என சொன்னான் யது…அவனை தெரிந்த அருணும் அவனை மேலும் வற்புறுத்தவில்லை துவாரகேஷ் நைட் பார்ட்டி பற்றி தன் குடும்பத்தாரிடம் சொல்ல மரகதம் சந்தோஷப்பட அபிராமி யோசனையாக கணவனை பார்த்தவர்.


“இப்போ எதற்காக இந்த பார்ட்டி என தெரிந்து கொள்ளலாமா…இதற்காக தான் நீங்க விலையுயர்ந்த டிரஸ், நகைகள் கொண்டு வர சொன்னீங்களா…அப்போ நம்ம ஊரில் இருந்து கிளம்பும் போதே இது பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கிறது பார்ட்டி அதுவும் இங்கே வைக்க போவது தெரியும்” என அபிராமி கேட்டாள்…. துவாரகேஷ் முகம் அபிராமியின் கேள்வியால் மாறியது காயத்திரி போல கேள்வி கேட்கிறாளே அவள் உயிர் தோழி இல்லையா அவள் புத்தி கூர்மையில் பாதி கூட இல்லை என்றால் எப்படி அவர் பதில் சொல்ல வாய் திறக்க முன்னே.


“ஏய் என்ன டி இது எல்லாம் உன் கிட்ட கேட்டு தான் அவன் செய்ய வேணுமா பிசினஸ் மேன் என்றால் பார்ட்டி கொடுக்க தான் வேணும்…அப்போ தானே அவனை இந்த சமூகம் மதிக்கும் ஏன் உன் அப்பன் அந்த தணிகாசலம் பார்ட்டி வைக்க மாட்டானா” என கேட்டார். மரகதம்



“அப்பா பார்ட்டி வைத்து இருக்கிறார் தான் ஆனால் எங்க கிட்ட முன்னே சொல்லி விடுவார்…இப்படி உங்க பையனை போல கடைசி நிமிஷத்தில் சொல்ல மாட்டார் அவர் தன் சந்தோஷத்தை மட்டும் பார்க்கும் ஆள் இல்லை… எங்க செளகரியத்தையும் பார்க்கும் மனுஷன் இதை எத்தனை தடவை உங்க பையனுக்கும் உங்களுக்கும் சொன்னாலும் புரிய போவது இல்லை…நான் இந்த பார்ட்டில் கலந்து கொள்ள முடியாது பாப்பாவுக்கு இப்போ தான் உடம்பு கொஞ்சம் சரியாக இருக்கிறது அவளை அங்கே எல்லாம் அழைத்து வர முடியாது நித்திலனை அழைத்து போங்க” என சொன்னாள். அபிராமி



“இல்லை சந்தனா கட்டாயமாக வர வேணும் நீ, நித்திலன் வரவில்லை என்றால் கூட பரவாயில்ல…ஆனால் என் பெண்ணு இந்த பார்ட்டிக்கு வர வேணும்” என துவாரகேஷ் சொல்ல ஏன் என அபிராமி ஒத்தை வார்த்தையை உதிக்க.


“துவாரகா சரி தானே இப்போ தான் சந்தனா உடம்பு சரியாகி வந்து இருக்கிறாள் இப்போ போய்…அவளை அலைய வைத்து கொண்டு அபிராமி அவள் கூட இருக்கட்டும் நித்தி பையனை அழைத்து போகலாம்” என்றார் மரகதம்.


“ இப்போ உன் கிட்ட நான் கேட்டேனா வந்து எனக்கு அட்வைஸ் பண்ணு என்று இருக்கும் கோபத்தில் ஏதும் பேசி விடுவேன்…மரியாதையாக போய் விடு அபிராமி இங்கே பாரு உன் விளக்கம் எல்லாம் எனக்கு தேவையில்லாத ஒன்று மரியாதையாக என் பெண்ணை அழைத்து வா புரிகிறதா…அவள் என்ன கடல் கடந்தா பார்ட்டிக்கு போக போகிறாள் இங்கே நம்ம இருக்கும் ஹோட்டலில் தானே பார்ட்டி பிறகு என்ன நான் சொன்னது புரிந்ததா… அம்மா இது உனக்கும் சேர்த்து தான் அங்கே வந்து ஏதும் தமாஷாக செய்கிறேன் என சொல்லி என் மானத்தை வாங்கின நான் மனுஷனாக இருக்க மாட்டேன்” என சொல்லி விட்டு சென்றார். துவாரகேஷ்



வியாட் அந்தமான் வந்தது பற்றி பயணிகளுக்கு இடையே பேச்சு அடிபட்டாலும்…அவன் பாதையில் குறுக்கிடாத வரைக்கும் தங்கள் உயிர், உடமைக்கு பயம் இல்லை என்று தங்கள் ஓய்வை கழிக்க ஆரம்பித்தனர்… மாலை ஏழு மணிக்கு தான் பார்ட்டி என இருந்தது சரியாக ஆறு மணிக்கே ஆளுங்க துவாரகேஷ் அழைப்பை மதித்து வர தொடங்கி விட்டனர் யது வர முடியாது என சொல்ல அவனை பற்றி நன்றாக தெரிந்த அருண்…. அவனுக்கு பதிலாக அவன் போனான் .அவனும் கேணல்,சுசீலா ஒன்றாக தான் ஹோட்டல் ஹாலுக்கு போனார்கள் ஹால் அலங்காரத்தை பார்த்து அசந்து போய் அருண், சுசீலா நிற்க ஜெகதீஷ் யோசனையாக நின்றார்.


“என்னங்க இது ஏதோ ரிசப்ஷனுக்கு வந்தது போல இருக்கிறது சும்மா ஒரு பார்ட்டிக்கு இப்படியா செலவு செய்வது” என்றார் . சுசீலா


“ஆன்ட்டி துவாரகேஷ்யை யாரென நினைத்தீங்க மல்ட்டி மில்லியனர் அவர் நினைத்தால் ஜஸ்ட் ஒரு ஜூஸ் சாப்பிட பாரின் போவார் …இப்போ ஏதும் சக்சஸ் பிசினஸ் பார்ட்டியாக இருக்கலாம் அதற்காக தான் மற்றவங்க கிட்ட பெருமை காட்ட இந்த ஏற்பாட்டை பண்ணி இருப்பார்” என்றான். அருண்


“நோ அருண் இது சக்ஸஸ் பார்ட்டி போல எனக்கு தெரியவில்லை வேற ஏதோ இதில் அடங்கி இருக்கிறது வெயிட் அண்ட் சீ என்றார். ஜெகதீஷ்


அபிராமிக்கு மனசுக்கு ஏதோ தப்பாக தெரிந்தாலும் அவளுக்கு தணிகாசலம் மேலே நம்பிக்கை இருந்தது அவர் பார்வை எப்பவுமே தங்களை சுற்றி இருக்கும்…அடுத்து துவாரகேஷ் தன்னை அனைவருமே புகழ வேணும் அவர் தான் பெஸ்ட் பிசினஸ்மேன் என அனைவருமே சொல்ல வேணும் என்ற எண்ணமே தவிர வேற ஏதுவுமே அவருக்கு இருந்தது இல்லை… இப்போ கூட யாருக்கோ ஷோ காட்ட தான் இந்த பார்ட்டி ஏற்பாடு என நினைத்தவர் மகளுக்கு அலங்காரம் பண்ண ஆரம்பித்தார்.


சந்தனா எண்ணம் எல்லாம் நித்திலன் காலையில் யது நந்தன் பற்றி சொன்ன விஷயத்தையே சுற்றி வந்தது…அப்போ தன்னை காப்பாற்றியது யது நந்தனா அவனுக்கு பணக்கார ஆளுங்களை கண்டாலே பிடிக்காது என நித்திலன் பேச்சில் ஒரு தடவை சொல்லி இருக்கிறான்… அப்படி இருந்தும் கூட எந்த விதமான ஆதாயமும் எண்ணாமல் அதுவும் தன் உயிரை பணயம் வைத்து என்னை காப்பாற்றி இருக்கிறார்…அப்பா கூட காட்ர்ஸை வைத்து அவரை அடித்து விட்டார் என சொன்னான் எதற்காக அப்பா அப்படி செய்தார்…இன்று பார்ட்டிக்கு அவரை அப்பா அழைத்தாரோ தெரியாது அப்படி வந்தால் அவருக்கு நன்றி சொல்ல வேணும் என நினைத்தாள்.



அபிராமி மகளுக்கு கரும் பச்சை, பிரவுன் கலந்த ஒரு பட்டு அனார்க்கலி சுடிதார் அதற்கு பொருத்தமான மரகத கல் பதித்த நகைகள் என எடுத்து வைத்தவர்… மகனுக்கு சந்தனா உடை நிறத்தில் ஆண்கள் போடும் குர்த்தா எடுத்து வைத்தார் பொதுவாக சந்தனா, நித்திலன் பார்ட்டிகளுக்க்கு ஒரேய நிறத்தில் டிரஸ் போடுவதற்க்கு தான் விருப்பம் உள்ளவர்கள்…அது சின்ன வயதில் இருந்தே தணிகாசலம் ஏற்படுத்திய பழக்கம் இருவருக்கும் இடையில் அவர் எந்த வேறுபாடும் வர கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பார்.



அபிராமி மகளுக்கு அவள் நீண்ட கூந்தலை வாரி பீஷ் டெயில் ஸ்டைல் முறையில் போட்டவர்…அதில் குட்டி சிவப்பு நிற பட்டன் ரேஸ் வைத்த கேட்ச் கிளிப் இரண்டை இரு பக்கமும் குத்தியவர் …அளவாக அவளுக்கு மேக்கப் போட்டு விட்டார் அவளை ரெடியாக்கி விட்டு அவர் உடை மாற்ற போக அக்கா நான் ரெடி என சொல்லி கொண்டு நித்திலன் வந்தான்… அபிராமியும் ரெடியாகி வர துவாரகேஷ் அழைப்புக்காக காத்து இருக்க கொஞ்ச நேரத்தில் அவரிடம் இருந்து அழைப்பு வர மரகத்தை அழைக்க அவர் ரூம்க்கு போனார்கள்.



மூவருமே உள்ளே போக அங்கே மரகதம் ரெடியாகி இருந்த முறை பார்த்து சிரிப்பு வந்தது…அவருக்கு அலங்காரத்தில் விருப்பம் என தெரியும் அவர் சிவப்பு, தங்கம் கலந்த மைசூர் சில்க் பட்டு சாரி அதீத மேக்கப் உதட்டில் கரும் சிவப்பு லிப்ஸ்டிக் ஐ ஷேடோ துவாரகேஷ் வாங்கி கொடுத்த வைர நகைகள் என ஏதோ ஃபேஷன் ஷோவுக்கு போவது போல ரெடியாகி நிற்க… அபிராமி வந்த சிரிப்பை அடக்கி கொண்டார் என்ன இருந்தாலும் மாமியார் வயதில் பெரியவர் கேலி பண்ணுவது முறை அல்ல என்பதால்… சந்தனா மெல்ல புன்னகை புரிந்தாள் ஆனால் இந்த விதிகள் நித்திலனுக்கு பொருந்தாதே.


“பாட்டி என்ன இது உன் ரூம்மில் கண்ணாடி இல்லையா இல்ல உனக்கு தலையில் ஏதும் அடிபட்டு விட்டதா” என கேட்டான். நித்திலன்


“ஏன் டா அப்படி கேட்கிற உன் கேள்வி தான் எப்பவுமே சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் இருக்கும்” என்றார். மரகதம்


“உனக்கும் உன் பையனுக்கும் உண்மையை சொன்னால் அப்படி தான் இருக்கும் ஆனா இன்று உன் பையன் என் பக்கமாக தான் நிற்பார்…ஏன் தெரியுமா நீ பண்ணி வைத்து இருக்கும் கூத்து அப்படி உன் வயது என்ன நீ செய்து இருக்கும் அலங்காரம் என்ன இரண்டுக்குமே எந்த சம்பந்தமும் இல்லை…மேக்கப்பை விடு அதை இப்போ அனைவருமே தான் செய்கிறாங்க…அதற்க்காக ஒரு அளவு வேணாமா மேக்கப் என்றால் பார்த்து ரசிக்க கூடியதாக இருக்க வேணும் இப்படி பயந்து ஓடுவது போல இருக்க கூடாது நீ போட்டு இருப்பது மேக்கப்பா பேய் வேஷத்திற்க்கு மேக்கப் போட்டது போல இருக்கிறது…இதை மட்டும் உன் பையன் பார்த்தார் என்று வை நீ நிரந்தரமாக பேய் வேஷத்தில் இல்லை பேயாக தான் சுற்ற வேணும் என்றான். நித்திலன்


“உனக்கு பொறாமை டா என் அழகில் உன் அம்மா , அக்காவை விட அழகாக இருக்கிறேன்” என்று சொன்னார். மரகதம்


“அம்மா வா நம்ம பார்ட்டி ஹாலுக்கு போகலாம் பாட்டி நம்ம எவ்வளவு சொன்னாலும் கேட்காது…அப்பா இதை பார்த்து விட்டு நம்மை தான் திட்டுவார் நம்ம வேணும் என்று பாட்டியை இப்படி மேக்கப் பண்ணி அழைத்து வந்து அவரை அவமானப்படுத்துகிறோம் என்று… இது நமக்கு தேவையா வா போகலாம் அக்கா வா” என சந்தனாவை அழைத்து போனான். நித்திலன்


“அத்தை தப்பாக நினைக்க வேணாம் மேக்கப் போடுவது உங்க இஷ்டம் ஆனால் கொஞ்சம் குறைவாக போடுங்கள் … மணி அத்தையின் மேக்கப்பை சரி செய்து விடு சீக்கிரமாக வாங்க அத்தை நாங்க முன்னால் போகிறோம்” என சொல்லி விட்டு சென்றாள் . அபிராமி



அவர்கள் போன பிறகு மரகதம் தன் மேக்கப்பை சரி செய்ய ஆரம்பித்தார் அவருக்கு தெரியும்…நித்திலன் கேலியாக பேசினாலும் உண்மையை தான் பேசுவான் அபிராமி பொய் சொல்ல மாட்டாள்… துவாரகேஷ் கிட்ட வாங்கி கட்ட கூடாது என்று தன் மேக்கப்பை சரி செய்ய ஆரம்பித்தார் ஹாலில் அனைவருமே காத்து இருந்தனர் துவாரகேஷ் குடும்பத்தின் வருகைக்காக.



நிலவு வரும்…


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம் : 22



பார்ட்டி ஹாலில் துவாரகேஷ் அழைப்புக்கு மரியாதை கொடுத்து அனைவருமே வந்து இருந்தனர்… ஆனால் முன்னே வந்து வரவேற்று இருக்க வேண்டிய துவாரகேஷ் அவர் குடும்பம் இன்னும் வரவில்லை… அனைவருமே பெறுமை இழக்க ஆரம்பிக்க போது துவாரகேஷ் அவர் குடும்பம் வர அவர் இரு பக்கமும் பாதுகாப்பாக கார்ட்ஸ் வந்தார்கள்.



அருணுக்கு இப்படி இதை எல்லாம் நேரில் காண்பது புதிதாக இருந்தது அவன் வேலை செய்யும் போது இப்படி சில விவிஐபிகளை பார்த்து இருக்கிறான் தான்…ஆனால் இது வேறு தொலைவில் துவாரகேஷ் வர அவரை ஹோட்டல் ஜி.எம், மேனேஜர் பொக்கே கொடுத்து வரவேற்றார்கள்…சந்தனா பார்வை அந்த ஹாலை அலசியது யது நந்தன் வந்து இருக்கிறானா என்று.



எங்கே அவன் தான் ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்கு போய் விட்டான் அவனுக்கு ஸ்கூபா டைவிங் செய்ய ரொம்ப பிடிக்கும்…இப்படி நேரம் கிடைக்கும் போது எல்லாம் டைவ் செய்ய போய் விடுவான் துவாரகேஷ் அங்கே இருந்த கார்ட் ஒருவனை பார்க்க அவன் போய் மைக் எடுத்து வந்து கொடுக்க துவாரகேஷ் பேச தொடங்கினார்.



“குட் ஈவ்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ் என் அழைப்பை ஏற்று வந்த அனைவருக்குமே நன்றி …நீங்க நினைக்கலாம் தீடீரென இவன் எதற்காக இந்த பார்ட்டி ஏற்பாடு செய்தான் என்று அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது…என் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் இன்று யஸ் பொதுவாக ஓவ்வொரு அப்பாவுக்கும் உள்ள கனவு பசங்களை நல்லபடியாக வளர்க்க வேணும்…அவங்களுக்கு நல்ல படிப்பு, உணவு, உடை கொடுக்க வேணும் என்று அதை எல்லாம் நான் அளவுக்கு அதிகமாக என் பசங்களுக்கு கொடுத்தேன்…அடுத்த இன்னும் ஒரு பெரிய கடமை தான் பசங்க கல்யாணம் அதுவும் பெண்ணின் கல்யாணம் ஒவ்வொரு பெத்தவங்களின் கடமை,கனவு.



இன்று நான் அந்த கடமையை நிறைவேற்ற போகிறேன் யஸ் என் ஒரேய பெண்ணின் திருமணத்தை இங்கே இந்த எழில் கொஞ்சும் அந்தமான் தீவில் சிம்பிளாக நடத்தி விட்டு… பிறகு சென்னையில் ஊர் என்ன உலகே வியக்கும் அளவுக்கு ரிசப்ஷன் வைக்க போகிறேன் அதற்காக தான் இந்த டிரிப்பை மேற் கொண்டேன் இது என் குடும்பத்திற்க்கு கூட சர்ப்ரைஸ் தான்… அதை விட என் வருங்கால மாப்பிள்ளையை பற்றி சொல்ல வேணும் என்றால் அதை நான் சொல்வதை விட நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என சொல்லி கூட முடிக்கவில்லை… அந்த பார்ட்டி ஹால் அடுத்த செக்கன் முழுவதுமே கார்ட்ஸால் நிரம்பியது… அனைவருமே யார் என பார்க்க வந்தவனை கண்ட அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது இவனா இவன் எதற்காக இங்கே வருகிறான்.


அப்படி என்றால் இவனை வரவழைத்தது துவாரகேஷ் அதுவும் தன் மகளுக்கு வரனாக… எந்த தகப்பன் இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை செய்வான் கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பது என்பது இதை தானா…இவனை பூனை என்று கூட சொல்ல கூடாது இரத்தம் குடிக்கும் ரத்த காட்டேரி இவனை போய் தன் சொந்த மகளுக்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்க என்ன காரணம் என அனைவருமே குழம்பி போய் இருந்தனர்.


அபிராமி, சந்தனா, நித்திலன் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர் மரகதம் கூட என்ன இவன் என் கிட்ட கூட சொல்லாமல் தீடீரென இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கிறான் என யோசித்தார்… வியாட் இந்திய தந்தைக்கும் ஆங்கில தாய்க்கும் பிறந்த கலவை… அவர்கள் திருமண வாழ்க்கை நிலைத்தது ஒரு வருடம் தான் பிறகு தங்கள் இடையே ஒத்து வராது என அவர்கள் பிரியும் போது வியாட்க்கு இரண்டு வயது…ஆம் அவன் பிறந்த பிறகு தான் வியாட் பிறப்பை காரணம் காட்டி அவனின் தந்தையை சொத்துக்காக திருமணம் செய்து கொண்டார் அவனின் தாய்.


அதன் பிறகு திருமண வாழ்வு கசக்க விவகாரத்து அதன் மூலமாக கணவனிடம் பல கோடிகளை கறந்து தன் காதலனுடன் பறந்து விட்டார்…வியாட் தந்தைக்கு அது பற்றிய கவலை இல்லை கோடிகளில் பணம் புரளும் போது பெண்ணுங்களுக்காக பஞ்சம் என திருமணம் இல்லாத வாழ்வை வாழ்ந்தார்… குழந்தை பற்றிய உணர்வு யாருக்குமே இல்லை அவனை வளர்த்தது எல்லாம் ஆயாக்கள் தான்.


வியாட் வளர வளர அவனை கண்டித்து உரிமையாக வளர்க்க தாய், தந்தை இல்லை அதனால் முறையற்ற கொடூர வாழ்வை வாழ ஆரம்பித்தான்… தாயின் பரிசாக வெண்மை நிறம் , நீல நிற கண்கள், தந்தை பரிசு தான் ஆறடி உயரமும், கறுப்பு நிற தலைமுடியும் அதனால் தான் விளக்கை தேடும் விட்டில் பூச்சி போல அவன் பால் பெண்கள் ஈர்க்கப்பட்டு விழுந்தனர்… இன்று அவன் வெள்ளை நிற சர்ட், கருநீல நிற பிசினஸ் சூட் அணிந்து வந்து இருந்தான் சுருக்கமாக சொன்னால் 007ஸ்டைல் ,ஷார்ப் கட், பெர்ஃபெக்ட் ஃபிட் காலர் என ரிச் லுக் கொடுக்கும் சூட் இதன் விலையே பல லட்சத்தை தாண்டும்..


ஒரு கையில் பிளாட்டினம் பிரேஸ்லெட் அடுத்த கையில் கோடியில் விலை போகும் படேக் பிலிப் வாட்ச்… இது குறிப்பிட்ட சிலரை தவிர வேறு யாருமே அணியவில்லை… அவன் வரும் போதே அவன் பார்வை அங்கே இருந்த அனைவரையும் அலட்சியமாக பார்த்து கொண்டு வந்தவன் பார்வை சந்தனாவில் நிலை கொண்டது.



அவன் பார்வை தாக்கத்திற்கு பயந்து சந்தனா தன் அருகே இருந்த அபிராமியின் கரத்தை இறுக்க பற்றி கொள்ள…அப்போது தான் அபிராமி நிலைக்கு வந்தவர் மகள் கரத்தை அழுத்த பற்றி கொண்டவர் பார்வை துவாரகேஷை பார்த்தது… எங்கே அவர் அபிராமியை பார்த்தால் தானே அவர் வியாட்டை வரவேற்பதில் குறியாக இருந்தார் அவன் முன்னே வந்தவர்.



“வெல்கம் டூ இந்தியா மிஸ்டர் வியாட் டைட்டஸ்…நீங்க இங்கே என் அழைப்பை ஏற்று வந்தது ரொம்ப பெருமையாக இருக்கிறது என்றவர். துவாரகேஷ் அவனுக்கு கை கொடுக்க அவன் அதை அலட்சியபடுத்தி விட்டு


“லுக் மிஸ்டர் துவாரகேஷ் எனக்கு டைம் இல்லை அது மட்டுமல்ல இந்த வேஸ்ட் கன்ட்ரியில் இருப்பது எனக்கு அலர்ஜி…ஏதோ நான் கேட்டதற்க்கு நீங்கள் ஒகே சொன்னதால் தான் உங்களுக்காக இங்கே வந்தேன் நான் நாளை மார்னிங் கிளம்ப வேணும்… நீங்க என்ன செய்கிறீங்க இப்பவே மேரீஸ் ஏற்பாட்டை செய்யுங்கள் உங்க டாட்டர் கூட நாளை அமெரிக்கா கிளம்ப வேணும்” என்றான் வியாட் . அவன் பேச்சால் அங்கே உள்ளவர்கள் முகம் மாறியது என்ன தான் அவர்களில் பாதி பேர் பாரினில் செட்டில் ஆனாலும் அவர்களின் வேர் இங்கே தானே…அதுவும் கேணல் ஆர்மி மேன் கேட்கவா வேணும் நாட்டுக்காக உயிரை கொடுக்கும் ராணுவ வீரன் அவர் முகம் கோபத்தால் சிவந்தது.


“ஸாரி மிஸ்டர் வியாட் இந்த ஏற்பாட்டை கூட நீங்க கேட்டு கொண்டதால் தான் இப்படி சிம்பிளாக செய்ய சம்மதம் சொன்னேன்…இல்லை என்றால் என் பெண்ணு கல்யாணத்தை ஊரே வியக்கும் படியாக ஏற்பாடு பண்ணி இருப்பேன்… இன்று வேணும் என்றால் எங்கேஜ்மென்ட் வைக்கலாம் பட் நாளை தான் மேரீஸ் என்றார் துவாரகேஷ். வியாட் முகம் மாறியது அவர் பதிலால்… அவன் வாழ்க்கையில் இது வரைக்கும் இல்லை, முடியாது, நடக்காது என்ற வார்த்தையை கேள்விபட்டது இல்லை அவன் கோபமாக பேச வாய் எடுக்கும் போது… ஐ சே ஸ்டாப் இட் என குரல் கேட்க அனைவருமே திரும்பி பார்க்க அபிராமி தான் ரொம்ப உக்கிரமாக நின்று இருந்தாள். அவள் ஆங்கிலத்தில்



“இங்கே என்ன நடக்கிறது யாருக்கு யார் மாப்பிள்ளை என் பெண்ணு என்ன பொம்மையா அவள் சம்மதம் கேட்காமல் முடிவு பண்ண…உங்களை தான் சந்தனா அப்பா நான் ஒரு சந்தேகத்தில் திரும்ப திரும்ப கேட்டேன்… ஆனால் நீங்கள் உங்க பதிலால் என் வாயை அடைத்து விட்டீங்க இப்போ சொல்லுங்க இவர் யாரு” என கேட்டாள். அபிராமி


“அபிராமி தேவை இல்லாமல் இதில் மூக்கை நுழைக்காதே சந்தனா என் பெண்ணு எனக்கும் காயத்திரிக்கும் பிறந்தவள்… அவள் வாழ போகும் இடம் அனைவருமே அண்ணாந்து பார்க்கும் உயரம் இவரை யாரென நினைத்த வியாட் டைட்டஸ் இவர் பெயரை கேட்டாலே…உலகமே திரும்பி பார்க்கும் எனக்கு வர போகும் மருமகன் இப்படிப்பட்ட ஒருவராக தான் இருக்க வேணும்” என்றார். துவாரகேஷ்


“ மிஸ்டர் துவாரகேஷ் சந்தனாவை பொருத்த வரைக்கும் அவள் அம்மா நான் தான் இதில் நீங்க என்ன அந்த கடவுளே வந்து சொன்னாலும் கூட மாற்றம் வராது…அடுத்து உங்களுக்கு ஒன்று மறந்து விட்டது போல சந்தனா என்ன சாதாரண குடும்பத்து பெண்ணா அவள் என்ன உங்களை போல மிடில் கிளாஸ் வர்க்கத்தில் இருந்து வந்தவளா …பரம்பரையாக கோடீஸ்வர் தணிகாசலத்தின் பேத்தி அப்படிப்பட்ட என் பெண்ணு கல்யாணம் தெரியாத ஊரில் நடத்த வேணும் என என்ன அவசியம்… அதுவும் இவர் யார் இவர் அப்பா, அம்மா குடும்பம் எங்கே இருக்கிறது… இவர் என்ன பிசினஸ் செய்கிறார் நல்லவரா கெட்டவரா என்று கூட தெரியாது அப்படிப்பட்டவருக்கு எப்படி என் பெண்ணை கொடுக்க முடியும்” என்றார். அபிராமி



அபிராமி பேச பேச வியாட் முகம் மாற மற்றவர்களுக்கு புரிந்தது இன்றோடு அபிராமியின் மண்ணுலக வாழ்க்கை முடிந்தது என்று…சட்டென வியாட் தன் பின்னால் செறுகி வைத்து இருந்த பிஸ்டலை எடுத்து அபிராமி முன் நீட்டியவன்.


“என் முன்னால் இது வரைக்கும் யாரும் பேசியது இல்லை மீறி பேசினால் அவர்கள் இனி பேசுவதற்கே இடம் இல்லை… சோ குட் பாய் மிஸஸ் துவாரகேஷ் என கூறியவன்… தன் பிஸ்டல் ட்ரிக்கரை அழுத்த வேணாம் என சொல்லி கொண்டு அபிராமி முன்னே வந்து சந்தனா நின்றாள்.


“வேணாம் என் அம்மாவை விட்டு விடுங்க அவங்க தெரியாமல் பேசி விட்டாங்க” என வியாட்டிடம் அவள் கெஞ்சினாள். சந்தனா வியாட் தன் பிஸ்டலை கீழே இறக்கியவன் அவளை ஒரு தடவை பார்த்து விட்டு

“நாட் பாட் இந்த வியாட் கொடுக்கும் விலைக்கு தகுந்தவள் தான் ஓகே எனக்கு பெண்ணுங்க கேட்டால் மறுக்க தோன்றாது பேப்…உன் மம் உனக்கு வேணும் என்றால் நீ ஒன்று செய்ய வேணும் என்னை மேரிஸ் இங்கே இப்போ பண்ண வேணும்… அதற்க்கு முதலில் தமிழில் ஏதோ சொல்வாங்களே யஸ் அச்சாரம் கொடுக்க வேணும் எப்படி தெரியுமா லிப் கிஸ் இதை நீ செய்தால் தான் உன் மம் உனக்கு உயிரோடு கிடைப்பாங்க” என சொன்னான்.




நிலவு வரும்…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்:23


அபிராமியை விட வேணும் என்றால் சந்தனா தனக்கு முத்தம் தர வேணும் என வியாட் சொல்ல துவாரகேஷ் உட்பட அங்கே இருந்த அனைவரின் முகமும் மாறியது… துவாரகேஷ் தனக்கு அனைவருமே மதிப்பு கொடுக்க வேணும் என நினைப்பவர் தான் அதற்காக தன் மகளை விற்று பிழைக்கும் ரகம் அல்ல…



“மிஸ்டர் வியாட் டைட்டஸ் என்ன பேச்சு இது ஒரு பைன் என்றாலும் ஒரு அளவு வேணாமா…என்ன மனைவி பெண்ணு மேலே உள்ள பாசத்தில் பேசி விட்டாள் அதற்காக இப்படியா வருங்கால மாமியார், உறவு என பாராமல் துப்பாக்கியை எடுத்து நீட்டுவது…பீளிஸ் ஜோக்ஸ் அபார்ட்” என சொன்னார். துவாரகேஷ்



“வாட் ஜோக்கா மிஸ்டர் துவாரகேஷ் நீங்க இன்னும் இந்த வியாட்டை புரிந்து கொள்ளவில்லை…எனக்கு எதிராக குரல் உயர்ந்தினார் என்பதற்காக பெத்த அப்பன் போட்டு தள்ளியவன் நான் ஆப்டர் ஆல் உங்க வொய்ப் என் முன்னே நிற்க கூட தகுதி இல்லாத அதுவும் ஒரு பெண்ணு குரலை உயர்த்துவதா…டூ பாட் ஒன்று உங்க வொய்ப் இந்த உலகை விட்டு போக வேணும் இல்லை உங்க பெண்ணு நான் கேட்டதை செய்ய வேணும் சாய்ஸ் ஸ் யுவர்ஸ்” என்றான். வியாட்


“அப்படி உன் கிட்ட என் பெண்ணு மானம் இழந்து தான் என் உயிரை காக்க வேணும் என்றால் அப்படி பட்ட இந்த உயிர் எனக்கு தேவையில்லாத ஒன்று…தமிழ் பெண்ணுங்களை பற்றி என்ன நினைத்த கண்ட கண்ட பரதேசி நாய்க்கு எல்லாம் முந்தானை விரிப்பவங்க என்றா முட்டாள்…நாங்க பார்வதி தேவியை மட்டுமல்ல மகாகாளியையும் கும்பிடும் வர்க்கம் எங்களுக்கு ஆக்கவும் தெரியும், அழிக்கவும் தெரியும்.


என்ன மிஸ்டர் துவாரகேஷ் ஷாக்காகி நிற்கிறீங்க போல இருக்காத பின்னே தேடி தேடி பிடித்த மருமகன் ஆயிற்றே அவனின் உண்மை நிறம் தெரிந்ததும் அதிர்ச்சியாக தான் இருக்கும்…இல்ல தெரியாமல் கேட்கிறேன் நீ எல்லாம் ஒரு அப்பாவா பெத்த பெண்ணு வாழ்க்கையை இப்படி ஆபத்தில் சிக்க வைத்து இருக்க இவள் என்ன பாவம் செய்தாள் உனக்கு…என்ன சொன்ன காயத்திரி பெத்த பெண்ணா அவள் மட்டும் இப்போ உயிரோடு இருந்த இருக்க வேணும் முதல் டெத் பாடி நீ தான்.



வெளியே சொல்லி விடாதீங்க தே கிரேட் பிசினஸ் மேன் துவாரகேஷ் என்று காரி துப்பி விடுவாங்க…ஒரு கிரேட் பிசினஸ் மேன் இப்படியா சரியாக விசாரிக்காமல் கட்டிய மனைவி, பெத்த அம்மாவிடம் கூட கூறாமல் பெண்ணுக்கு மாப்பிள்ளை என்று ஒரு கேடு கெட்டவனை அழைத்து வருவான்…. நீங்க எல்லாம் என்ன பிசினஸ் தான் செய்கிறீங்களோ தெரியாது ஏதும் கஞ்சா, ஹெராயின்,அபின் இப்படிப்பட்ட போதை பிசினஸ் தான் செய்கிறீங்களோ தெரியாது என்ன முறைக்கிறீங்க..அப்படிப்பட்ட ஆளுங்க தான் போதையில் கண் மண் தெரியாமல் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்வான் படித்த எந்த மனுஷனாவது இப்படி செய்வானா… அதுவும் இவன் இங்கே நுழைந்தவுடனே இங்கே இருப்பவங்க முகங்களில் இருக்கும் மரண பயத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் இவன் எப்படிப்பட்ட ஆள் என்று நான் செத்தால் கூட பரவாயில்ல என் பெண்ணை இவன் கட்டி கொள்ள விட மாட்டேன் என்றாள். அபிராமி
அப்போது கைகளை தட்டி கொண்டு தமிழில்


“வாரே வாவ் வாட் ஏ டயலாக் மிஸஸ் துவாரகேஷ் என்ன அதிர்ச்சியாக பார்க்கிறீங்க…இவனுக்கு எப்படி தமிழ் தெரியும் என்றா ஆல் லாங்வேஜ் ஐ நோ தமிழ் பெண்ணுக்கு ரொம்ப வீரம் உள்ளவங்க தங்கள் குடும்பத்திற்காக எந்த எல்லை வரைக்கும் போய் போராடுவாங்க என கேள்விப்பட்டு இருக்கிறேன் இன் பர்ஸ்ட் டைம் அதை உங்க கிட்ட பார்த்தேன்…அந்த வீரத்திற்க்கு நான் தலை வணங்குகிறேன் பட் அதை நீங்க காட்டிய ஆள் தான் ராங் பெர்சன் எனக்கு என் முன்னே நின்று ஆண்கள் பேச வாய் திறந்தால் கூட பிடிக்காது…பெண்ணுங்க நோ வே பேசவே கூடாது அவங்க வேலை கட்டிலுக்கு மட்டும் தான் என நினைப்பவன் நான்.


சோ உங்க பெண்ணுக்கு மாப்பிள்ளை நான் தான் அதை பார்க்க தான் நீங்க இருக்க மாட்டீங்க…எனக்கு எப்பவுமே மன்னித்து பழக்கம் இல்லை பட் பர்ஸ்ட் டைம் என் லைவ்வில் மன்னிப்பு வழங்குகிறேன் எதற்காக தெரியுமா உங்க வீரத்திற்காக இங்கே உள்ள அனைவரிடமும் நான் காணாதது…பட் கேணல் நீங்க மட்டும் விதிவிக்கு உங்க வீரம் நாடு அறிந்த ஒன்று சோ உங்களை கோழை லிஸ்ட்டில் சேர்க்க மாட்டேன்…



மிஸஸ் துவாரகேஷ் நான் கேட்டதை உங்க பெண்ணு கொடுத்தால் உங்க உயிர் உங்க கிட்ட திரும்ப வரும்…என்ன பேப் ஆர் யு ரெடி என கேட்டவன் அபிராமியை அழுதபடியே அணைத்து கொண்டு இருந்த சந்தனாவின் கையை பற்ற போக சட்டென அவன் கரத்தை தட்டி விட்டது ஒரு கரம்…. வியாட் கோபமாக நிமிர்ந்து பார்த்தவன் முகம் பின் ஆச்சரியமாக மாறியது காரணம் அங்கே கோபமாக நின்றது. நித்திலன்


“என்ன மிஸ்டர் நீங்க என்ன பெரிய டாணா எங்க அம்மாவை ஷீட் பண்ண துப்பாக்கியை நீட்டுகிறீங்க…அதை விட எங்க அக்காவை பற்றி தப்பு தப்பாக பேசுகிறீங்க நீங்க யாரா வேணும் என்றாலும் இருங்க…ஆனால் எங்க அக்கா கிட்ட மட்டும் தப்பாக பேசுனீங்க இந்த நித்திலனை வேற மாதிரியாக தான் பார்ப்பீங்க… உங்களை போல ஆளு என் மாமாவா நீங்க ரொம்ப தப்பானவர் எங்க அக்கா எப்படிப்பட்டவங்க தெரியுமா.


எங்க அப்பா தான் மூளை கெட்டு போய் உங்களை போல ஆளை எல்லாம் அழைத்து வந்து விட்டார்…அதற்காக எல்லாம் உங்களை எங்க அக்காவுக்கு கட்டி கொடுக்க முடியாது நீங்க இப்படி நடந்து கொள்வது எங்க தாத்தாவுக்கு தெரிந்தால் உங்களை ஷூட் பண்ணி விடுவார்” என தைரியமா நெஞ்சை நிமிர்த்தி கொண்டு சொன்னான். நித்திலன்



அவன் பேச்சை ,நடந்தையை பார்த்த அனைவருமே அவனை பரிதாபமாக பார்த்தனர்…இது வரைக்கும் வியாட்டை எதிர்த்து பேச வாய் திறந்தது இல்லை அதை விட எண்ணியது கூட இல்லை… இவன் என்ன என்றால் அவன் கையை தட்டி விட்டு அவனை எதிர்த்து பேசுகிறான்… இனி இந்த பையன் உயிர் சொல்லா காசு தான் என நினைத்தனர்…ஆனால் அவர்கள் நினைப்புக்கு மாறாக வியாட் தன் கைகளை தட்டியவன்.


“மை காட் இந்த அந்தமான் எனக்கு பல சப்பிரைஸ் வைத்து இருக்கு போல பெண்கள் தான் வீரம் என நினைத்தால்…சின்ன பசங்க கூட வீரமாக தான் இருக்கின்றார்கள் மிஸ்டர் துவாரகேஷ் உங்க பெண்ணை மட்டுமல்ல உங்க பேமிலியை கூட எனக்கு பிடித்து விட்டது… சோ நான் முடிவு பண்ணி விட்டேன் உங்க பெண்ணு தான் என் வொய்ப் என்று இதில் எந்த மாற்றமும் இல்லை என்றான். வியாட்


“பட் எனக்கு மாற்றம் இருக்கிறது வியாட் ஆப் கோர்ஸ் நான் தான் உங்களை இந்தியா வரவழைத்தது… என் பெண்ணை நீங்க மேரீஸ் பண்ண ஓத்து கொண்டேன் உங்க பற்றிய பேச்சுகள் எனக்கும் தெரியும்…. வழமை போல அதை நான் பொறாமை பேச்சாக தான் நினைத்தேன்…. நம்மவர்களுக்கு தான் ஒருவன் நல்லா இருந்தால் பிடிக்காதே அப்படி நினைத்து தான் நீங்க என் பெண்ணை மேரீஸ் பண்ண கேட்க ஒத்து கொண்டு இங்கே வரவழைத்தேன் …பட் இப்போ நீங்க நடந்து கொண்ட முறையில்…

ஸாரி உங்களுக்கு என் பெண்ணை கட்டி கொடுக்க தயக்கமாக இருக்கிறது நான் கொஞ்சம் யோசிக்க வேணும்…நான் அனைவரையும் விட உயர வேணும் என நினைப்பவன் தான் கெளரவம் பார்க்கும் ஆள் தான்…பட் இவள் என் பெண்ணு குடிகாரன், கொலைகாரனுக்கு கூட தன் பெண்ணு என பாசம் இருக்கும் போது எனக்கு இருக்காதா…அதுவும் இவள் என் காதலின் அடையாளம் சோ நான் கொஞ்சம் யோசிக்க வேணும்” என்றார். துவாரகேஷ்



“ரியலி அப்போ உங்களுக்கும் உயிர் மேலே ஆசை இல்லை போல மிஸ்டர் துவாரகேஷ் என்னை பற்றி உங்களுக்கு இன்னும் சரியாக தெரியவில்லை …இங்கே தீர்மானிப்பதும் நடத்துவதும் இந்த வியாட் தான்…எனக்கு மேரீஸ் பண்ண தோன்றிய போது சரியாக நீங்க பிசினஸ் டீல் பேச வந்தீங்க …உங்களை பற்றி விசாரிக்க சொன்னேன் அடுத்த செக்கன் உங்க ஜாதகமே என் கையில் வந்தது…காகித பூக்கள் நடுவே உங்க பெண்ணு ரியல் ஃப்ளவராக இருந்தாள் அதை விட உங்க பர்ஸ்ட் வொய்ப் ராயல் பிளட் டாட்டர் ஆப் மிஸ்டர் தணிகாசலம்… அவரும் என்னை போல பரம்பரையாக வந்த கோடீஸ்வரன் சோ உங்க டாட்டர் தான் என் வொய்ப் என நான் தீர்மானித்து விட்டேன் இதை நீங்க நினைத்தால் கூட மாற்ற முடியாது…


மிஸ்டர் துவாரகேஷ் இனி பேச்சு இல்லை ஆ‌க்சன் தான் நாளை மார்னிங் உங்க பெண்ணு கூட எனக்கு மேரீஸ் இதில் எந்த மாற்றமும் இல்லை…மாற்ற நீங்க என்று இல்லை யார் நினைத்தாலும் கூட போட்டு தள்ளி இந்த கடலில் தூக்கி போட்டு விடுவேன் மைண்ட் இட் …மிஸஸ் துவாரகேஷ் இன்று இந்த வியாட் கிட்ட இருந்து நீங்க தப்ப காரணம் என்ன தெரியுமா நாளை என் மேரீஸ் என் கைகளில் ரத்த கறை பட கூடாது என நினைக்கிறேன்…ஓகே பேப் நாளை மீட் பண்ணலாம் அடம் பிடிக்காமல் வர வேணும் இல்லை என்றால் அடுத்த செக்கன் உன் பேமிலியை போட்டு தள்ளி விடுவேன்…உனக்கு உன் மம், பிரதரை ரொம்ப பிடிக்கும் இல்லையா சோ குட் கேர்ளாக நடந்து கொள்ளு..

அண்ட் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் இன்று இங்கே வந்து இருக்கும் அனைவருமே நாளைக்கு என் மேரீஸ் பங்ஷனுக்கு வர வேணும்… ஒருத்தர் மிஸ் ஆனா கூட அவங்க பேமிலி எங்கே இருந்தாலும் கூட போட்டு தள்ளி விடுவேன் இந்த வியாட் டைட்டஸ் பற்றி தெரியும் தானே” என சொன்னவன் பை பேப் என சந்தனாவிடம் சொல்லி விட்டு கார்ட்ஸ் புடை சூழ கிளம்பினான்.


அவன் போக அங்கே கடும் அமைதி நிலவ பயந்து அழுது கொண்டு இருந்த மகளை அபிராமி அணைத்து கொண்டு நித்திலனையும் அழைத்து கொண்டு தங்கள் ரூம்க்கு போனார்…அப்போது அவர் அருகே வந்து


“மிஸ்டர் துவாரகேஷ் நீங்க தலையை விட்டு இருப்பது முதலை வாய்க்குள்ளே அல்ல உடும்பின் பிடியில் அகப்பட்டு உள்ளீங்க” என்றார் கேணல் ஜெகதீஷ்.



நிலவு வரும்…






 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்: 25


முதலை வாயில் அல்ல நீங்கள் உடும்பின் பிடியில் அகப்பட்டு கொண்டு விட்டீங்க என கேணல் துவாரகேஷிடம் சொன்னார்.

“மிஸ்டர் துவாரகேஷ் ரொம்ப டேலண்ட் பெர்சன் தான் இப்படிப்பட்ட முட்டாள்தனமான முடிவுகள் மற்றவங்க கிட்ட டிஸ்கஸ் செய்யாமல் எடுப்பது…உங்களை போல ஆளுங்களுக்கு எல்லாம் வியாட் போல ஆளுங்க கிட்ட பட்டால் தான் புத்தி வரும் நீங்கள் மட்டும் என்று இருக்க நான் அமைதியாக போய் இருப்பேன்…பட் இப்போ போக முடியாத நிலை காரணம் சந்தனா அந்த சின்ன பெண்ணு வாழ்க்கை என்னை போக விடாமல் தடுத்து நிறுத்தி வைத்து இருக்கிறது..

பெத்த பேண்ணு வாழ்க்கையை நீங்களே உங்க கையில் அதலபாதாளத்தில் தள்ளி விட்டீங்க…இதில் இருந்து மீள்வது கடினம் மனிதர்கள் புரளி பேசுபவர்கள் தான் பட் அதில் சில துளி உண்மைகள் இருக்கும் வியாட் டைட்டஸ் விஷயத்தில் முழு உண்மையும் கலந்து இருக்கிறது…இதில் இருந்து ஒருத்தரால் தான் விடுவிக்க முடியும் அது உங்க மாமா மிஸ்டர் தணிகாசலத்தால் அவர் நினைத்தால் எல்லாம் மாறும்… தன் பேத்தி வாழ்க்கைக்காக அவர் எந்த எல்லைக்கும் போவார் சோ பாப்பாவை காப்பாற்ற அது ஒன்று தான் வழி என்றார் கேணல்… மற்றவர்களும் ஏதும் பேசவில்லை என்றாலும் கூட கேணல் பதிலை தான் மெளனமாக ஏற்று கொண்டார்கள்.

அபிராமி சந்தானவை அழைத்து கொண்டு அவள் ரூம்க்கு வர அபிராமியை கட்டி கொண்டு சந்தனா அழுதாள்.

“ அம்மா நான் அவனை கல்யாணம் பண்ண மாட்டேன் அவனை பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கிறது மா…நீ அப்பா கிட்ட சொல்லு மா நான் தாத்தா கிட்ட பேச வேணும் அவன் உன்னை, நித்தியை கொலை செய்து விடுவேன் என சொல்லி இருக்கிறான்…தாத்தாவை வர சொல்லாம் மா அவர் வந்து நம்மை அழைத்து போவார்” என்றாள் சந்தனா… அபிராமி மகளின் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை துடைத்தவள்

“அப்படி என் பெண்ணை விட்டு விடுவேனா மா இவனுக்கு ஊர், உலகம் என்ன உங்க அப்பா கூட பயந்து நடுங்கலாம்…ஆனால் உங்க அம்மா நடுங்க மாட்டாள் யார் பெண்ணுக்கு யார் மாப்பிள்ளை என் மகளை கண்டவன் கிட்ட தாரை வார்த்து கொடுக்கவா என் உயிரை கொடுத்து வளர்த்தேன் ..காயத்திரி உன்னை என்னை நம்பி தான் விட்டு போனாள் உன் அப்பாவை நம்பி இல்லை…

இவன் சொன்னால் நாளை கல்யாணம் நடந்து விடுமா என் பிணத்தின் மீது தான் நடக்கும் நீ அம்மா இருக்கும் வரைக்கும் அழ கூடாது புரிகிறதா” என்றார். அபிராமி


“அம்மா இதற்க்கு எல்லாம் காரணம் அப்பா தான் நம்மை டூர் அழைத்து போவதாக பொய் சொல்லி அழைத்து வந்தது…அக்காவை அந்த டாணுக்கு மேரீஸ் பண்ணி கொடுக்க தான் அக்கா சொன்னது போல நம்ம தாத்தாவுக்கு கால் போட்டு சொல்லாம் மா அவர் வந்தால் தான் அப்பாவுக்கு சரி… அக்கா நீ அழதாதே அவனை உனக்கு மேரீஸ் பண்ணி வைக்க நாங்க என கோழையா நான் விட மாட்டேன்…அவனை நானே ஷுட் பண்ணி விடுவேன் நம்ம தாத்தா வந்து விடுவார் அம்மா தாத்தாவுக்கு கால் பண்ணு மா” என்றான். நித்திலன்

“முதலில் பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டு வருகிறேன் டா அதற்க்கு பிறகு உங்க தாத்தா கிட்ட பேசலாம்…நித்திலா அக்காவை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளு அம்மா வந்து டேர் பெல் அடித்தால் தான் கதவை திறக்க வேணும் பாப்பா அழ கூடாது மா…அம்மா இருக்கிறேன் பார்த்து கொள்கிறேன்” என சொல்லி விட்டு அபிராமி வெளியே போனார்… அவர் போன இடம் துவாரகேஷ் ரூம் அங்கே மரகதமும் இருக்க அபிராமியை காண அவர்கள் நிமிர்ந்து அவளை பார்க்க.

“இப்போ திருப்தியா என் பெண்ணை கொண்டு இப்படி அதலபாதாளத்தில் மாட்டி விட்டுஇருக்கிறீங்க…இதற்க்கு தான் கேட்டேன் எதற்காக இந்த அவசர பயணம், பட்டு புடவை, நகை எல்லாம் என்று… அப்போ பேசி என் வாயை அடைத்து விட்ட பலன் இதோ கை மேலே கிடைத்து இருக்கிறது கொஞ்சம் கூடவா அறிவு இல்லை என கோபமாக சத்தம் போட்டார். அபிராமி

“ஏய் அபிராமி எதற்காக இப்போ இப்படி சத்தம் போடுகிற ஆ சந்தனாவை பெத்தவன் இவன்…தன் மகளுக்கு நல்லது செய்ய நினைத்து தான் இந்த வரனை ஏற்பாடு செய்து இருந்தான்…இவனுக்கு தெரியுமா இவன் இப்படிப்பட்ட ஒரு அயோக்கியனாக இருப்பான் என்று பரதேசி பயல் என் மகனையே ஏமாற்றி விட்டான்” என்றார். மரகதம்

“தயவு செய்து நீங்க ஒரு வார்த்தை கூட பேச கூடாது அத்தை உங்க மரியாதையை நீங்களே கெடுத்து கொள்ள வேணாம்…என்ன சொன்னீங்க உங்க பையனை வியாட் ஏமாற்றி விட்டானா இவர் பால் குடி மறவாத குழந்தை பாருங்க இவரை அவன் ஏமாற்ற அவன் பக்கா கிரிமினல் என்றால் உங்க மகன் பிளான் போட்டு காய் நகர்த்தும் கிரிமினல்….இது மட்டும் அப்பாவுக்கு தெரிந்து உங்க மகனுக்கு வியாட் என்ன சமாதி கட்டுவது அவரே பளிங்கு கல்லால் சமாதி கட்டுவார்.

உங்க மனசை தொட்டு சொல்லுங்க உங்க பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைத்தது காயுவும் அப்பாவும் தான்… அப்பா எத்தனை தடவை விதம் விதமான ஆளுங்க மூலமாக அந்த மாப்பிள்ளை பற்றி விசாரித்தார் தெரியுமா…இத்தனைக்கும் உங்க பெண்ணு அமலா அவர் சொந்த பெண்ணா இல்லை தந்தை இல்லாத அவளுக்கு ஒரு நல்ல பையனை தான் கட்டி வைக்க வேணும் என்று பார்த்து பார்த்து செய்தார்…

அப்படி இருந்தும் கூட உங்க பையன் எத்தனை தடவை மாப்பிள்ளை பற்றி விசாரித்தார்…அப்படிப்பட்ட இவர் பெத்த பெண்ணுக்கு எப்படி எல்லாம் விசாரித்து மாப்பிள்ளை பார்த்து இருக்க வேணும்…அப்படி செய்தாரா இவர் அதுவும் இப்போ பெரிய கோடீஸ்வரன் ஆள், படை எல்லாம் இருக்கிறது ஆனால் அப்படி செய்தாரா இல்லை …ஏதோ பொறாமையில் ஆளுங்க பேசுகிறாங்க என்று நினைத்தாராம் அதனால் சரியாக விசாரிக்க வில்லையாம் இது எல்லாம் காதில் பூ வைத்து கொண்டு சுற்றும் ஒருவனிடம் சொல்லுங்கள்…

உண்மையான காரணம் வேறு நான் உலகம் தெரிந்த வியாட் மாமனார் என பெருமை பீற்றி கொள்ள வேணும்…அது தான் முதலில் முக்கியம் பிறகு தான் மகள் வாழ்க்கை இது எப்படி இருக்கு தெரியுமா அதை வேற என் வாயால் சொல்ல வேணுமா…பெத்த பெண்ணை கூட்டி கொடுத்து பிழைப்பது போல இருக்கிறது” என்று அபிராமி சொல்ல அபிராமி என சத்தம் போட்டு கொண்டு எழுந்த துவாரகேஷ்… அபிராமி கன்னத்தில் பளார் என அறைந்தார் துவாரகா என மரகதம் எழ அபிராமி தன் கன்னத்தை பற்றி கொண்டவர்.

“என்ன உண்மை வலிக்கிறதா வலிக்க வேணும் என்று தானே பேசியது நீங்க செய்த வேலைக்கு வேற என்ன பெயர் சொல்ல முடியும்…என் பெண்ணுக்கு மட்டும் ஏதும் நாளைக்கு நடக்கட்டும் அப்பா என்ன உங்களை போட்டு தள்ளுவது நானே உங்களை போட்டு தள்ளி விட்டு போய் கொண்டே இருப்பேன்” என சொல்லி விட்டு அபிராமி போனார்.

ஹாலில் நடந்த அனைத்தையுமே அருண் யது நந்தன் கிட்ட சொன்னான்.

“டேய் யது அந்த வியாட் கொலைகாரன் என்று தானே சொன்ன ஆனா இவன் ஒன்னாம் நம்பர் பொறுக்கியும் கூட டா…சபையில் ஒரு பெண்ணு கிட்ட எப்படி நடந்து கொள்ள வேணும் என்று தெரியாதவன் இவனை போய் அந்த துவாரகேஷ் எப்படி தான் மாப்பிள்ளையாக்க நினைத்தானோ தெரியாது” என்றான். அருண்

“துவாரகேஷ்க்கு இது தேவை தான் அவர் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பதை விட இவரை வியாட் மாமனார் என இந்த ஊர், உலகமா சொல்ல வேணும் அது தான் தேவை…நான் இவர் டூர் வரும் போதே நினைத்தேன் ஏதோ ஒரு ஏழரையை கூட்ட போகிறார் என்று அது இது தான் போல இருக்கிறது….அதுவும் அந்த பெண்ணுக்கு வேற போல்ட்னஸ் கொஞ்சமும் கிடையாது வாய் திறந்து பேசவே யோசிக்கிறாள் இவள் இவனை எப்படி எதிர்த்து நிற்பாள்…அவன் துவாரகேஷையே தூக்கி சாப்பிடும் ஆள் இவனை கட்டி கொண்டால் அவள் வாழ்க்கை அதன் பிறகு நரகம் தான்” என்றான். யது

“அது உண்மை தான் டா ஆனால் அபிராமி மேடம், நித்திலன் ரொம்ப தைரியசாலிங்க… அதுவும் வியாட் பாராட்டும் அளவுக்கு நித்திலன் தைரியம் இருந்தது “ என சொன்னான். அருண்

“எனக்கு அவன் தைரியம் பற்றி கொஞ்ச நாள் பழக்கத்தில் தெரிந்தது அதுவும் அவனுக்கு அவன் அக்கா என்றால் உயிர்…அபிராமி மேடமும் தன் மூத்த தாரத்து பெண் என நினைக்காமல் தன் பெண்ணாக தான் அந்த பெண்ணை பார்த்து கொள்கிறாங்க ஷீ ஸ் கிரேட்” என யது சொல்லி கொண்டு இருக்கும் போது… கேப்டன் என ஷீப்பில் வேலை செய்யும் ஒருவன் ஓடி வந்தான்.

“கேப்டன் கொஞ்சம் சீக்கிரமாக வாங்க உங்களை ஹோட்டல் மேனேஜர் அழைத்து வர சொன்னார்” என வந்தவன் பதட்டமாக சொன்னான்.

“எதற்காக மூர் என்ன விஷயம்” என கேட்டான். யது நந்தன் அவன் மெல்ல

“அந்த வியாட் ஆளுங்க நம்ம பாசஞ்சர்ஸ் கூட ப்ராப்ளம் பண்ணி கொண்டு இருக்கிறாங்க நம்ம பாசஞ்சர்ஸ் நம்ம பொறுப்பு தானே…அது தான் உங்களை அழைத்து வர சொன்னார்” என்றான். மூர்

“இதற்க்கு மட்டும் நாங்க அவனுக்கு வேணுமா வர முடியாது என போய் சொல்லு…அந்த துவாரகேஷ் தானே இந்த ஏழரையை அழைத்து வந்தது அவரை போய் பேச சொல்லு…கப்பலில் மட்டும் தான் இவங்களை பாதுகாக்க வேண்டியது எங்க கடமை இங்கே பார்க்க வேண்டியது அந்த மேனேஜர் கடமை…பாராட்டு வரவேற்ப்பு எல்லாம் அந்த துவாரகேஷ்க்கு அதிகமான கொடுத்தான் இல்லையை இதையும் வாங்கி கட்டிக்க சொல்லு” என சொன்னான். அருண்

“அருண் நம்ம பிரச்சனை துவாரகேஷ் கூட தான் அதுவும் அவர் கர்வத்தை தான் வெறுக்கிறேன் …இவங்களை பாலா சார் துவாரகேஷை நம்பி அனுப்பவில்லை என்னை ,உன்னை நம்பி தான் அனுப்பி இருக்கிறார் …சோ இவங்களை இந்த டூர் முடியும் வரைக்கும் பாதுகாப்பது நம்ம பொறுப்பு வா என்ன என போய் பார்க்கலாம்” என அருணை அழைத்து கொண்டு யது நந்தன் விரைந்தான்.


நிலவு வரும்…






 
Status
Not open for further replies.
Top