ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer


அத்தியாயம்: 10



நித்திலன் சந்தானாவை அழைத்து கொண்டு வந்தவன் கண்டது கப்பலின் கைபிடியில் அருகே நின்று… அதன் விளிம்பில் தன் கைகளை வைத்து கடலை ரசித்து கொண்டு இருந்த யது நந்தனை தான் அவனை காண. சந்தனா




“ நிது வா டா நம்ம போகலாம் அங்கே யாரோ ஒருவர் நிற்கிறார் நீ வேற கார்ட்ஸை வர கூடாது என கடுமையாக சொல்லி விட்ட…அவங்க அப்பா கிட்ட போய் இப்போ அதை பற்றி சொல்லி இருப்பாங்க இப்போ நம்ம இங்கே வருவது சரியாக எனக்கு படவில்லை” என சொல்ல.நித்திலன்






“ என்ன அக்கா நீ எதெற்கெடுத்தாலும் பயந்து கொண்டு அவர் யாரு தெரியுமா சரியாக பாரு வெள்ளை டிரஸ் போட்டு இருக்கிறார்…இந்த கப்பலின் கேப்டன் யது நந்தன் அவருக்கு போய் பயந்து கொண்டு…அவர் என்ன பேயா, பிசாசா அவர் தன் வேலையை பார்கிறார் நம்ம நம்ம வேலையை பார்க்கலாம் அது தான் இயற்கையை ரசிப்பதை தான் வா” என அவளை கை பிடித்து அழைத்து போனான். யது நந்தன் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கலாம் என இங்கே வந்து நின்று இருந்தான் அவன் கடல் காதலன் அதனால் தான் தந்தை வேலையை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்த போதும் மறத்து விட்டான் எத்தனையோ படிப்புகள் இருக்க ரிஸ்க்கான இந்த படிப்பை தேர்ந்தெடுத்து கஷ்டபட்டு படித்து பட்டம் பெற்றான்.





ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் இங்கே வந்து விடுவான் மனதுக்கு நிம்மதி இங்கே தான் அவனுக்கு கிடைக்கும் யதுநந்தன் காலடி சத்தம் கேட்க யாரோ வருகிறார்கள் போல இனி இங்கே நிம்மதி கிடைக்காது நம்ம கேபின் போகலாம் என கிளம்ப போக… ஹாய் கேப்டன் என கர கர இளம் ஆண்குரல் கேட்க அவன் திரும்பி பார்க்க… சிரித்த முகமாக நித்திலன் கூடவே அவன் கையை பற்றி கொண்டு கொஞ்சம் தயக்கம், பயம் என கலவையான உணர்வுகளை முகத்தில் பிரதிபலிக்க சந்தனா நின்று இருந்தாள் யது நந்தன் இவர்களை கூர்ந்து பார்க்க. நித்திலன்





“ ஹாய் கேப்டன் ஐ யம் நித்திலன் இது என் சிஸ்டர் சந்தனா உங்க ஷிப்பில் தான் டிராவல் பண்ணுகிறோம்…நாங்க பிசினஸ் மேன் தணிகாசலத்தின் பேர பசங்க என தன்னை அவனுக்கு தெரியாமல் இருக்கும் என அறிமுகப்படுத்த… யதுநந்தனுக்கு நித்திலன் தன்னை அறிமுகப்படுத்திய விதம் பிடித்தது தந்தை பெயரை உச்சரிக்காமல் தாத்தா பெயரை சொல்கிறான் சம் திங் ராங் என நினைத்தவன் மெல்ல புன்னகை புரிந்தவன். யது நந்தன்






“ஹலோ நித்திலன் யஸ் ஐ நோ யு நீங்க இரண்டு பேருமே பிசினஸ் மேன் மிஸ்டர் துவாரகேஷ் பசங்க” என சொல்ல. நித்திலன்




“ ம் அது உண்மை தான் பட் என் தாத்தா தணிகாசலம் பெயரை சொல்வது தான் எனக்கு கெளரவம், பெருமை இதை விடுங்க…ஸாரி உங்க தனிமையை நாங்க ஸ்பாயில் பண்ணி விட்டோம் போல…உங்களுக்கு கடலை பிடிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கு நீங்க கடலில் வாழ்பவங்க ஒரு விதத்தில் நீங்க சோ லக்கி கேப்டன் சுதந்திரமாக இயற்கை அழகை ரசித்து கொண்டு கடலில் டிராவில் பண்ணுகிறீங்க…. நாங்க பாருங்க சிட்டிக்குள்ளே இருந்து கொண்டு பொல்யூஷன், டிராபிக் ,ஜாதி ,மத சண்டை இதை விட வேற வேற சண்டைகள் என டெய்லி அனுபவித்து கொண்டு இருக்கிறோம்…உங்களை போல என்

அக்காவுக்கும் இயற்கையை ரொம்ப பிடிக்கும் அங்கே சிட்டியில் இதை எல்லாம் எப்படி பார்க்க முடியும் அது தான் இங்கே அவளை நான் வற்புறுத்தி அழைத்து வந்தேன்” என. யது நந்தன்




“ நீ சொன்னது ஒரு விதத்தில் ஏற்று கொள்ள கூடிய ஒன்று தான் நித்திலா பிகாஸ் கடலுக்கு கட்டுபாடு இல்லை வரையறை கூட இல்லை பட் அது தன் கடமையை தவறாது செய்கிறது கரைக்கு சென்று பூமி அன்னையை குளிர்வித்து விட்டு திரும்ப வருகிறது…எனக்கு சின்ன வயதில் இருந்து கடல் என்றால் ரொம்ப பிடிக்கும் சோ நீ சொன்னது போல ரிஸ்க் இருக்கிறது என தெரிந்தும் இந்த தொழிலை தேர்தெடுத்தேன் சரி உனக்கு கடல் பிடிக்காதா உனக்கு என்ன பிடிக்கும், கேம்ஸா எனக்கு தெரிந்த வரைக்கும் உனக்கு கிரிகெட் பிடிக்கும் என நினைக்கிறேன்” என.நித்திலன்




“ வாவ் சூப்பராக கெஸ் பண்ணி விட்டீங்க கேப்டன் யஸ் எனக்கு கிரிகெட் பிடிக்கும் இது எல்லாம் என் அக்காவுக்கு தான் பிடிக்கும்” என வார்த்தைக்கு வார்த்தை அக்கா என பேசும் அந்த சிறுவன் மேலே யது நந்தனுக்கு பிடித்தம் ஏற்பட்டது… அவனுக்கும் கூட பிறந்தவள் இருந்து இருக்க இப்படி தான் இருந்து இருப்பான் என நினைக்க தோன்றியது அவனும் நித்திலனும் பொதுவாக பேசி கொண்டு இருக்க சந்தனா கடல் அழகை ரசித்து கொண்டு இருந்தாள் கொஞ்ச நேரத்தில் யது நந்தனின் வாக்கி டாக்கில் அருண் அவனை வர சொல்லி அழைப்பு விடுக்க… யது நித்திலனிடம் மட்டும் சொல்லி விட்டு கிளம்ப துவாரகேஷ் கார்டஸ் வந்தனர் நேரம் ஆகி விட்டது அவர்களை ரூம்க்கு போக சொல்லி துவாரகேஷ் கட்டளையிட்டு உள்ளார் என சொல்ல நித்திலன் ஏதோ பேச வர சந்தனா தான் பிரச்சனை வேணாம் நம்ம கிளம்பலாம் என கிளம்பி வந்தார்கள்.





சந்தனா கூட வழமை போல அபிராமி தூங்க நித்திலன் தன் ரூம்க்கு தூங்க போனான் மறுநாள் காலை அழகாக விடிய… சந்தனா தன் ரூம்மில் உள்ள குட்டியாக உள்ள யன்னலில் காலை கதிரவனை ரசித்து கொண்டு இருக்க. அபிராமி





“ பாப்பா இன்னும் தம்பி எழவில்லை தூங்குகிறான் போல அம்மா அவனை எழுப்பி விட்டு வருகிறேன் உனக்கு டிரஸ் எடுத்து வைத்து இருக்கிறேன்…நீ குளித்து விட்டு ரெடியாக இரு நம்ம சாப்பிட போகலாம் என சொன்னவர் நித்திலன் ரூம்க்கு போய் அவனை எழுப்பி விட்டு தங்கள் அறைக்குள்ளே வர.. துவாரகேஷ் எழுந்து காபி சாப்பிட்டு கொண்டு இருந்தவர் அபிராமியை காண. துவாரகேஷ்




“ அபிராமி சந்தனா எங்கே அவளை எதற்காக தனியாக விட்டு வந்த…அவளை பார்ப்பதை விட்டு உனக்கு இங்கே என்ன வேலை நித்திலனை நம்பி தனியாக விட வேணாம்… அவன் சின்ன பையன் அவனை ஏமாற்றி அவளை யாரும் நெருங்கி விடுவாங்க நீ முதலில் கிளம்பு” என சொல்ல. அபிராமி




“ சந்தனா குளிக்க போய் இருக்கிறாள் நான் என் டிரஸ் எடுத்து வர வந்தேன் உங்களை விட நித்தி என் பெண்ணை ஜாக்கிரதையாக பார்த்து கொள்வான்….அவன் சின்ன பையன் தான் ஆனா சந்தனா மேலே பாசம் உள்ளவன் எனக்கு ஒன்று புரியவில்லை ஊரில் இருக்கும் போது நீங்க இப்படி சந்தனாவை காவல் காக்கவில்லை இப்போ எதற்காக இந்த காவல் எனக்கு ஏதோ சரியாகபடவில்லை” என.துவாரகேஷ்





“ அது உனக்கு தேவையில்லாத ஒன்று சந்தனா என் பெண்ணு என் கெளரவம் அவளை வைத்து தான் என் கெளரவத்தை பல மடங்காக உயர்த்த போகிறேன்…அது வரைக்கும் அவளை நான் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேணும் நேற்று அந்த அதிகபிரசங்கி எதற்காக அவளை அழைத்து கொண்டு கண்டவன் முன் நின்றான்… கண்டித்து வை அவனை சந்தனா மனதில் வேற எண்ணங்கள் ஏற்பட்டது அவளை, நித்திலனை ஒன்றும் செய்ய மாட்டேன்….உன்னை வெட்டி பொலி போட்டு விடுவேன் புரிகிறதா” என அழுத்தமாக சொன்னவர் தன் லேப்டாப் திரையில் பார்வையை பதிக்க அபிராமி மனதில் ஏதோ தவறாக பட்டது இல்லை இவர் பேச்சே சரியில்லை தீடீரென இந்த கடல் பயணம், சந்தனாவுக்கு அதிக பாதுகாப்பு இது பற்றி மரகத்திற்கு கூட தெரியாது என்பது உண்மை… ஏன் என்றால் ஏதும் விஷயம் தெரிந்து இருக்க அவர் பெருமை பீத்தி கொள்ளாமல் இருக்க மாட்டார் அவர் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை அப்போ துவாரகேஷ் சந்தனாவை வைத்து ஏதோ திட்டம் போட்டு இருக்கிறார்.





அவர் ஈகோ பிடித்தவர் தான் தணிகாசலத்தை விட நான் பெரியவன் என காட்ட வேணும் என்ற எண்ணம் அல்ல வெறி அவருக்கு இருக்கிறது…அதற்காக மகளை வைத்து பகடை ஆடும் கேவலமானவர் அவர் அல்ல ஆனா ஏதோ வேற பெரிய திட்டம் போட்டு இருக்கிறார்…தணிகாசலம் அப்பாவுக்கு தெரிய கூடாது என்று தான் இந்த கடல் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் போல கடவுளே என் பெண்ணுக்கு ஏதும் விபரீதமாக நடக்க கூடாது…அப்பா கூட சட்டென வர முடியாது இடம் தரை என்றால் கூட பரவாயில்ல அவர் வயதுக்கு இங்கே எல்லாம் அலைய வைத்து விடாதே என நினைத்தவர் தன் உடைகளை எடுத்து கொண்டு போக நித்திலன் எழுந்து குளித்து விட்டு சந்தனா ரூம்க்கு வந்து அவள் கூட பேசி கொண்டு இருக்க அபிராமியை காண. நித்திலன்





“ அம்மா சீக்கிரமாக குளித்து விட்டு வாங்க நம்ம சாப்பிட போகலாம் மரகதம் வரும் முன்… அவங்க நம்ம கூட வந்தாங்க அவ்வளவு தான் இன்று சாப்பிட்டது போல தான் நேற்று போல ஏதும் பிரச்சனையை இழுத்து விடுவாங்க” என சொல்ல அபிராமிக்கு ஏதோ யோசனையில் இருந்தவர் நித்திலன் பேச்சை கேட்காமல் குளிக்க போனார்… அவர் குளித்து விட்டு வந்தவர் பிள்ளைகளை அழைத்து கொண்டு சாப்பிட போனார் கடல் பயணம் தொடங்கி இன்றோடு மூன்றாம் நாள் என்பதால் அன்று அதை செலபிரேட் சின்னதாக ஸ்பெஷல் நைட் டின்னர் ஏற்பாடு செய்து இருந்தது மேனஜ்மென்ட் குழு… இது வழமையாக பாலா தன் பயணிகளை ஈர்க்க செய்யும் விஷயம் அது தான் அவர் கப்பலில் பயணிகள் பயணம் செய்வதை அதிகம் விரும்புவார்கள் வணிக நோக்கத்தோடு சேர்ந்து அவர் பயணிகள் மனதையும் அறிந்து நடந்து கொள்பவர்.





அதனால் அன்று கொஞ்சம் ஸ்பெஷல் டின்னர் பிளஸ் இசை நிகழ்ச்சி இருக்கிறது அதில் அனைவருமே தவறாது கலந்து கொள்ள வேணும் என நிர்வாகம் கேட்டு இருந்தது…அதனால் அன்று நைட் டின்னர் இரவு ஏழு மணிக்கு ஆடல், பாடலோடு ஆரம்பமாகிறது துவாரகேஷ்யும் வந்து இருந்தார் கேப்டன் என்ற முறையில் யது நந்தன், அருண் வந்து இருந்தார்கள் விருந்து சந்தோஷமாக ஆரம்பமாகியது.





நிலவு வரும்…🌙
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer


அத்தியாயம்: 11





கப்பலில் அன்று இரவு விருந்து கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தது காரணம் ஈகிள் கப்பல் தன் பயணத்தை ஆரம்பித்து இன்றோடு மூன்று நாட்கள் வெற்றிகரமாக கடந்து இருந்தது… கப்பல் நிர்வாகம் வழமை போல அதை தங்கள் சார்பில் சிறப்பித்து கொண்டு இருக்க கப்பலின் கேப்டன் என்ற முறையில் யது நந்தன், கோ கேப்டன் அருண் வந்து இருந்தார்கள் விருந்து தொடங்க முன் இதை ஏற்பாடு செய்த கப்பலின் மேனஜ்மென்ட் பிரிவில் உள்ள ஒருவர் பேச வந்தார். அவர்





“ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் வெல்கம் ஆல் ஈகிள் ஷிப் மேனஜ்மென்ட் இன்றோடு நம்ம கடல் பயணம் ஆரம்பித்து வெற்றிகரமாக மூன்று நாட்கள் கடந்து விட்டது… இதற்கு நான் முதலில் நன்றி சொல்வது முதலில் கடவுளுக்கும் அடுத்து கேப்டன் யது நந்தன், கோ கேப்டன் அருணுக்கும் தான்…அவர்கள் திறமையால் தான் நம்ம கடல் பயணம் சுலபமாக போய் கொண்டு இருக்கிறது யது நந்தன் பற்றி சொல்ல வேணும் என்றால் இந்த சின்ன வயதில் அவர் கடல் பயணத்தில் செய்து இருக்கும் சாதனைகள் பெரிது…ஒரு தடவை ஒரு பெரிய கப்பல் விபத்தில் இருந்து இரண்டாயிரத்திற்கு மேலே உள்ள உயிர்களை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி இருக்கிறார் இது சாதனை மட்டும் அல்ல அவர் திறமை, கடமையுணர்வும் கூட அதனால் அவர் கூட நம்ம பயணிப்பது நம்ம அதிர்ஷ்டம்…நீங்க நிம்மதியாக இந்த ஒரு மாத கடல் பயணத்தை மேற் கொள்ளலாம் இன்னும் மூன்று நாளில் நம்ம கப்பல் அந்தமான் தீவை அடைந்து விடும் அங்கே மூன்று நாட்கள் நீங்கள் தங்கி உங்க விடுமுறையை என்ஜாய் பண்ணலாம்… பிறகு அங்கே இருந்து நம்ம கப்பல் குறிப்பிட்ட நாடுகளுக்கு தங்கள் பயணத்தை தொடங்கும்… எங்கள் கப்பலில் ஏதும் உங்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டால் நீங்க தாராளமாக கேப்டனிடம் இல்ல கோ கேப்டனிடம் உங்க குறைகளை அங்கே உள்ள கம்ப்ளைன்ட் பார்மில் எழுதி கொடுத்தால் அவர்கள் அதை எங்களுக்கு தெரிய படுத்துவார்கள்… முடிந்தளவு விரைவாக நாங்க உங்க அசெளகரியத்தை தீர்த்து வைப்போம் ஓகே இப்போ இந்த விருந்தை ஆடல் பாடலோடு என்ஜாய் பண்ணுங்கள் நன்றி என தன் உரையை முடித்து கொண்டவர் யது நந்தன், அருணிடம் கை குலுக்கி விட்டு கிளம்பினார்.





விருந்து பாடலோடு ஆரம்பமானது யது நந்தன், அருண் தனி டேபிளில் இருந்தனர் யது நந்தனுக்கு இதில் எல்லாம் ஈடுபாடு இல்லை… ஆனா நிர்வாகம் அன்பாக அவனை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க அவன் அதை தட்ட முடியாமல் வந்து இருந்தான்…அருணுக்கு தான் இதில் எல்லாம் ஈடுபாடு அதிகம். அருண்




“ யது உண்மையில் நம்ம மேனேஜ்மெண்ட் ஏற்பாடு பண்ணிய பார்ட்டி சூப்பராக இருக்கிறது டா… ஆட்டம் என்ன பாட்டு என்ன அதை விட சாப்பாடு வகைகள் என்ன ஒன்று கூடவே ஒரு காதலி இருந்து இருக்கலாம் ஜாலியாக அனுபவித்து இருக்கலாம்” என சொல்ல யது நந்தன் ஒரு வாய் ஆப்பிள் ஜூஸை மிடறு பருகியவன் .யது





“ ஏன் உனக்கு நிம்மதியாக இருப்பது பிடிக்கவில்லையா வெயிட் நான் பெண்களை மதிப்பவன் தான் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து தானே நானும் பிறந்தேன்…பட் என் அம்மா உன் அம்மா போல பெண்களை இப்போ பார்ப்பது கஷ்டம் இருக்கிறாங்க ஆனா தேடி பார்க்க வேண்டிய அளவில் சோ சிங்கிள் லைப் தான் பெஸ்ட் என்று சொல்வேன்…இது என் எண்ணம் தான் அதற்காக மற்றவங்களை இதை பின்பற்றுங்கள் என சொல்ல எனக்கு எந்த உரிமையும் இல்லை” என. அருண்




“என்ன டா சொல்கிற அப்போ காலம் பூராகவும் இப்படியா இருக்க போகிற நீ முதலில் பார்த்த வேலையை கூட ஏன் விட்ட என கேட்டால் காரணம் அந்த ஷிப் ஒனர் பெண்ணு உன்னை காதலிப்பதாக சொன்னதால் என்று…எந்த மடையனாவது வலிய வரும் சீதேவியை எட்டி உதைப்பானா டா இந்த அளவு லக்சரி ஷிப் இல்லை என்றால் கூட ஒரளவுக்கு வசதியான ஷிப் இப்படி சம்பளத்திற்கு வேலை பார்ப்பதை விட நீயே ஷிப் முதலாளியாக மாறி இருக்கலாமே டா நானும் என் நண்பன் கப்பல் என உரிமையாக வேலை பார்த்து இருப்பேன்” என. யது




“ என்னை நீ புரிந்து கொண்டது இவ்வளவு தான் போல எனக்கு சுயமரியாதை எந்த இடத்திலும் முக்கியம்…அந்த பெண்ணு தன் வாழ்க்கை துணையை தேடவில்லை அவள் செய்யும் தப்பை கண்டும் காணாதது போல இருக்கும் புருஷனை தான் எதிர்பார்த்தாள் அதற்கு நான் ஆள் இல்லை…நான் இந்த கடலின் காதலன் இந்த தொழிலை விரும்பி தான் படித்தேன் இதில் ஆபத்து அதிகம் உனக்கு தெரியும் இதில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பணயம் வைக்க நான் விரும்பவில்லை…என்னை நம்பி வந்தவர்களை என் உயிரை கூட பொருட்படுத்தாமல் காப்பாற்ற வேண்டியது என் கடமை இதில் சில வேளை என் உயிர் கூட போகலாம் இது தான் நம்ம தொழில் அதற்காக தான் நமக்கு லட்சக்கணக்கில் சம்பளம், சலுகை எல்லாம்…இதற்காக தான் நமக்கு பெண்ணு கொடுப்பாங்களே தவிர நம்மை நம்பி அல்ல எனக்கு இதில் ஒரு பெண்ணை உள்ளே இழுக்க விருப்பம் இல்லை அவள் கணவன் கூட காலம் முழுக்க நிறைவாக வாழ வேணும் பாதியில் போகும் எனக்கு பணத்திற்காக கழுத்தை நீட்ட கூடாது அதற்காக தான் இந்த காதல், கல்யாணத்தை எல்லாம் தவிர்க்கிறேன்” என. அருண்





“ என்ன மச்சான் பேசுகிற நீ அப்போ நம்ம பீல்ட்ல் காதல், கல்யாணம் பண்ணாமல் எல்லோருமே என்ன கட்டை பிரமச்சாரியாகவா இருக்கிறாங்க…நம்ம சீனியர்ஸ் ஏன் நமக்கு ஜூனியர் பசங்க கூட கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி என வாழ்ந்து கொண்டு இருக்கிறாங்க… அதை விட இன்னும் ஒன்று கப்பலில் வரும் வெள்ளகாரிகளை சைட்டில் செட் பண்ணி ஜெகஜோதியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் ஆளுங்களை கூட நீயும் நானும் பார்த்து இருக்கிறோம் பிறகு என்ன டா இப்படி நீ பேசுகிற “ என கேட்க. யதுநந்தன்





“ மற்றவங்களை பற்றி கருத்து சொல்லும் உரிமை நமக்கு இல்லை அருண் அது தனி மனித சுதந்திரம்…நான் நாட்டை திருத்த மகாத்மாகாந்தி அல்ல அவர் எத்தனை செய்தும் இந்த ஜனங்கள் திருந்துவதாக இல்லை என்னை பொருத்த வரைக்கும் எனக்கு என்று சில கோட்பாடுகளை வகுத்து கொண்டு அந்த வழியில் வாழ்கிறேன்…அதற்காக மற்றவங்க எக்கேடும் கெட்டு போகட்டும் என நினைக்கும் ரகம் நான் அல்ல உண்மையில் உதவி தேவைப்படுகிறவங்களுக்கு உதவி செய்வேன்” என்றான். யதுநந்தனை கண்டு விட்ட நித்திலன் அவன் கூட அறிமுகமான தோழமையில் அவனுக்கு கை காட்ட யது நந்தனும் அவனுக்கு கை காட்ட இதை எதர்ச்சையாக கண்ட துவாரகேஷ் முகம் மாறியது…. காரணம் நித்திலன் அருகில் தான் சந்தனா இருந்தாள் அவளும் தம்பி யாருக்கு கை காட்டுகிறான் என பார்க்க யது நந்தனும் அப்போ தான் கை காட்டினான் நித்திலா என துவாரகேஷ் அழைக்க அவன் மெதுவாக திரும்பி தந்தையை பார்க்க. துவாரகேஷ்




“ உன் உயரம் என்ன நீ இருக்கும் நிலை உனக்கு மறந்து விட்டது போல i don't think u need to remind me if u remember who you are ( நீ யாரென்று நினைவு இருக்கிறதா அதை திரும்ப நினைவுபடுத்த தேவையில்ல என நினைக்கிறேன்).... நீ பிசினஸ் ஜயண்ட் துவாரகேஷ் பையன் அதற்கு ஏற்ப நடந்து கொள்ளு லோ கிளாஸ் பையன் போல பிகேவ் பண்ணாதே…நீ அதில் இறங்குவது மட்டுமில்லாது உன் அக்காவையும் அதில் இழுக்க பார்க்கிற அபிராமி இது தான் நீ வளர்த்து இருக்கும் வளர்ப்பா ஹை சொசைட்டியில் மூவ் பண்ணி இருந்தால் உனக்கு தெரிந்து இருக்கும் நீயும் அப்படிப்பட்ட ஆளுங்க கூட தானே பழகிற” என .நித்திலன்




“ அப்பா பிளிஸ் ஸ்டாப் பண்ணுங்க உங்க தற்பெருமை கதையை கேட்டு கேட்டு எனக்கு இந்த ஹை சொசைட்டி என்ற வார்த்தையை கேட்டாலே கசக்கிறது…இப்போ என் கிட்ட என்ன தப்பை கண்டு விட்டீங்க என்று இப்படி என்னை, அம்மாவை தப்பு சொல்கிறீங்க சந்தனா என் அக்கா அவளை உங்களை விட நான் நன்றாக பார்த்து கொள்வேன் முதலில் நீங்க புரியாமல் பேசுவதை நிறுத்தி விட்டு நான் செய்த தப்பை சொல்ல முடியுமா” என கேட்க. மரகதம்




“ நல்லா கேளு தம்பி இப்படி தான் எதற்கு எடுத்தாலும் எதிர் பேச்சு பேசி கொண்டு ஒரு சொல் பேச்சு கேட்பது இல்லை…இதோ இவளும் சேர கூடாத கூட்டத்தோடு சேர்ந்ததால் தான் அவள்கள் என்னை அந்த பேச்சு பேசினாள்கள் இப்போ இவன் யார் கூட தம்பி சேர்ந்தான்…இங்கே இவன் வயசு பையன்கள் ஒன்று இரண்டு பேர் தானே இருக்கிறாங்க அவங்க கூடவா சேர்ந்தான் இல்ல இவனை விட பெரிய பசங்க கூடவா” என கேட்க. நித்திலன்





“ என்ன விஷயம் என தெரியாமல் பேச வந்து விடு பாட்டி முதலில் நான் அப்படி யார் கூட பழகினேன் என அப்பா சொல்லட்டும்…பிறகு அது சரியா, தப்பா என பார்க்கலாம் என. துவாரகேஷ்





“ நீ அந்த யது நந்தன் கூட பழகுவது எனக்கு பிடிக்கவில்லை அதுவும் நேற்று நான் தனியாக போக கூடாது… கார்ட்ஸ் கூட தான் போக வேணும் என சொல்லியும் கூட அவங்களை ஏமாற்றி சுற்றலில் விட்டு நீ சந்தனாவையும் அழைத்து கொண்டு நைட் டைம் அவன் கூட நின்று பேசி இருக்க… இதை வேற யாரும் பார்த்து இருக்க என் பிரஸ்டீஸ் என்ன ஆவாவது அவன் கூட எல்லாம் நம்ம தகுதிக்கு பேசலாமா” என கேட்க .நித்திலன்




“ அவர் ஒன்றும் தகுதி குறைவானவர் இல்ல அவர் தான் இந்த ஷிப்போட கேப்டன் நன்றாக படித்தவர் சும்மா ஒன்றும் கேப்டன் பதவியை தூக்கி கொடுக்க மாட்டாங்க…அவர் பல உயிர்களை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி இருக்கிறார் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்க அப்பா பணத்தை வைத்து யாரையுமே எடை போடுவதை நிறுத்துங்கள்…. அவர் என்ன கொலை செய்தவரா இல்ல கொள்ளையில் ஈடுபட்டவரா அவர் கூட பேச கூடாது என நீங்க சொல்ல அவர் நேற்று அக்கா என் அருகே இருந்தும் கூட ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை என் கிட்ட தான் பேசினார்…நான் பதினைந்து வயது பையன் எனக்கும் சிலது புரியும் என் அக்கா என் உயிர் அவளுக்காக நான் எது வேணும் என்றாலும் செய்வேன் ஏன் ஒரு வேளை உங்களை எதிர்க்க வேண்டி வந்தால் கூட செய்வேன்…சும்மா எப்போ பாரு ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ் என பேசி இரிடேட்டிங் பண்ணி கொண்டு இருக்க வேணாம் நீங்க இப்படி சொல்ல சொல்ல தான் எனக்கு வேற ஆளுங்க கூட பழக தோணுகிறது… ஐ ஹேட் திஸ் ஹை கிளாஸ் சொசைட்டி இப்போ நான் கையை ஆட்டியதற்கு தானே என்னை திட்டுறீங்க ஓகே உங்க கிட்ட சொல்லி விட்டே நான் கேப்டன் கூட பேச போகிறேன் என சொன்னவன் எழுந்து யது நந்தன் டேபிள் நோக்கி போக…. துவாரகேஷ்க்கு அவனை அடிக்கும் அளவுக்கு கோபம் வந்தாலும் இருக்கும் இடம் கருதி தன் இமேஜ் போக கூடாது என்பதாலும் அதை விட அவன் தோளுக்கு மேலே வளர்ந்த பையன் தோழன் என சொல்வாங்க அதனால் தன் கோபத்தை அடக்கி கொண்டவருக்கு அது யது நந்தன் மேலே திரும்பியது.





நிலவு வரும்…🌙
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 12




நித்திலன் துவாரகேஷிடம் சொல்லி விட்டு யதுநந்தன் இருந்த டேபிளை நோக்கி போனான் அவன் வருவதை கண்ட. அருண்




“ டேய் யது இது பிஸினஸ்மேன் துவாரகேஷ் பையன் தானே எதற்காக நம்ம டேபிளை நோக்கி வருகிறான் “என கேட்க. யது




“ இப்போ நீ சொன்ன தானே துவாரகேஷ் பையன் என்று அதை அவன் முன்னால் சொல்லி பாரு பதில் வேற மாதிரியாக இருக்கும்…ரொம்ப டிப்ரண்ட் டா இவன் மற்ற பணக்கார பசங்க போல திமிர், அலட்சியம் நான் பணக்கார வாரிசு என்ற எண்ணம் துளி கூட இல்லை நேற்று அவன் அக்காவை அழைத்து கொண்டு கடல் பார்க்க வந்தான் அப்போ தான் பழக்கம்… ரொம்ப நல்லா பேசினான் சின்ன பையன் இங்கே அவன் வயது பையன் ஒன்று இரண்டு பேர் தானே இருக்கிறாங்க போல ரொம்ப போர் அடித்து இருக்கும் அது தான் நம்ம கூட பேச வருகிறான்” என. அருண்




“ டேய் நீ துவாரகேஷ் பெண்ணு கூட பேசினாயா அந்த பெண்ணை வெளியே கூட விட மாட்டார் துவாரகேஷ் அப்படி பாதுகாப்பு பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்…அந்த பெண்ணு ஷிப்பில் ஏறியதில் இருந்து பார்க்கிறேன் ஒன்று இரண்டு வார்த்தைகளுக்கு மேலே பேசவில்லை தன் அம்மா, தம்பி கூட மட்டும் தான் பேசுகிறாள் என்னவாக இருக்கும் டா ஏதும் லவ் அப்படி இப்படி என இருக்குமா” என ஆவலாக கேட்க. யதுநந்தன்





“ இதை மட்டும் கேளு பெண்ணுங்க போல உனக்கு மற்ற வீட்டு விஷயம் அறிய ரொம்ப ஆவல் போல…நான் பேசவில்லை நான் எதற்காக பேச வேணும் நான் நினைக்கிறேன் அந்த பெண்ணுக்கு பணக்கார திமிர் என்று துவாரகேஷ் பெண்ணு நான் எதற்காக மற்றவங்க கூட பேச வேணும் என்ற எண்ணமாக இருக்கலாம்…ஆனா பையன் ரொம்ப நல்ல மாதிரி இவள் துவாரகேஷ் மூத்த மனைவியின் பெண்ணு அவங்க பணக்கார பெண்ணு அந்த குணம் இவள் கிட்ட இருக்கலாம்” என சொல்லி கொண்டு இருக்கும் போது “ஹாய் கேப்டன்” என நித்திலன் வர “ஹாய் நித்திலன்” என யது நந்தன் சொன்னான். நித்திலன்





“ ஸாரி கேப்டன் உங்க இரண்டு பேர் பிரைவசியில் நான் இடையில் வந்து விட்டேனா…அப்படி என்றால் சொல்லுங்க நான் போய் விட்டு திரும்ப வருகிறேன்” என பணிவாக பேசும் அவனை யது நந்தனுக்கு மட்டுமல்ல அருணுக்கும் ரொம்ப பிடித்தது. அருண்




“ ஹாய் நித்தி ஐ யம் கோ கேப்டன் அருண் பிரசாத் உன்னை பற்றி யது சொன்னான் நைஸ் டூ மீட் யு யங் மேன்” என கை கொடுக்க நித்திலன் அவன் கை பற்றி குலுக்கியவன். நித்திலன்




“ யா ஐ நோ கோ கேப்டன் உங்களை தெரியும் பட் பேசியது இல்லை நேற்று தான் நான் கேப்டன் கூடவே பேசினேன்” என சொல்ல.யது





“ டேக் ஏ சீட் நித்திலா நாங்க பெரிதாக என்ன சீக்ரட் பேச போகிறோம்… பட் நீ உன் பேமிலி கூட வந்து இருக்கும் போது இங்கே வந்தது உங்க அப்பாவுக்கு பிடிக்குமா” என கேட்க. நித்திலன்





“ அப்பா கிட்ட சொல்லி விட்டு நேர்மையாக தான் வந்தேன் எனக்கு எதையுமே மறைத்து செய்யும் பழக்கம் கிடையாது…உண்மையை சொல்ல போனால் அப்பாவுக்கு நான் மட்டுமல்ல அக்கா கூட வேற யாரிடமும் பேசி, பழகினால் பிடிக்காது… அதற்கு அவர் சொல்லும் காரணம் ஸ்டேட்டஸ் அவர் தான் பிசின்ஸ்மேன் நான் இல்லை சோ நான் யார் கூடவும் பேசலாம் பழகலாம்” என சொல்ல அருணுக்கு வியப்பாக இருந்தது யது சொன்னது இதை தான் போல என நினைத்தவன் அவன் கூட நட்பாக உரையாட தொடங்கினான்… அவர்கள் கூட யது நந்தனும் சேர்ந்தான் நித்திலன் பாதி பேச்சில் வந்தது சந்தனா தான் அடுத்து தணிகாசலம், தன் அன்னை, பெரியம்மா காயத்திரி இதில் துளி கூட துவாரகேஷ், மரகதம் இடம் பெறவில்லை இதை நண்பர்கள் கவனித்தாலும் கூட கவனிக்காதது போல நடந்து கொண்டனர்… பேசி கொண்டு இருக்கும் போது யது நந்தனுக்கு தங்களை யாரோ உற்று பார்ப்பது போல இருக்க அவன் சட்டென திரும்ப அவர்களை துவாரகேஷ் தான் வெறுப்பாகவும் கோபமாகவும் பார்த்து கொண்டு இருந்தார் யது நந்தனுக்கு ஏதோ ஒன்று புரிவது போல இருந்தது துவாரகேஷ்க்கு நித்திலன் தங்கள் கூட பழகுவது பிடிக்கவில்லை… காரணம் பெரிதாக ஒன்றுமில்ல நித்திலன் சொன்னது போல ஸ்டேட்டஸ் இவன் அவரை மீறி வந்து இருக்கிறான் அது தான் இந்த கோபம் என நினைத்து கொண்டு இருக்க கேப்டன் கேப்டன் என அழைக்கும் குரல் கேட்க திரும்ப நித்திலன் தான் அழைத்து இருந்தான். நித்திலன்




“ கேப்டன் என்ன நடந்தது நானும் அருண் அண்ணாவும் எத்தனை தடவை உங்களை அழைப்பது” என கேட்க. யது நந்தன்




“ ஒன்றுமில்ல ஏதோ ஒரு சின்ன யோசனை அது சரி கோ கேப்டன் எப்போ அருண் அண்ணாவாக மாறியது…நான் மட்டும் உனக்கு கேப்டனா” என கேட்க. அருண்




“ எனக்கு இவன் கோ கேப்டன் என அழைப்பது ஏதோ அன்னியமாக இருந்தது அது தான் அண்ணா என அழைக்க சொன்னேன்…நித்தி யதுவையும் அண்ணா” என அழை என. நித்திலன்




“ அண்ணா என அழைக்க நீங்க பர்மிஷன் கொடுத்தீங்க அருண் அண்ணா ஆனா கேப்டன் சார் தரவில்லையே சோ நான் எப்படி அழைப்பது…அது தப்பு இல்லையா” என விளையாட்டாக கேட்க அருண் வாய் விட்டு சிரிக்க யது மென் புன்னகை புரிந்தவன். யது நந்தன்




“ உண்மையான அன்புக்கு மரியாதை தேவையில்ல நித்திலா பெயரளவு அன்புக்கு தான் அது தேவை நீ என்னை அண்ணா என தாராளமாக அழைக்கலாம்” என சொல்ல நித்திலன் சந்தோஷமாக தலையாட்டினான்… இதை எல்லாம் துவாரகேஷ் போல பார்த்து கொண்டு இருந்த அபிராமி மனதில் மகன் இப்போ தான் நிம்மதியாக சிரிக்கிறான் இந்த சிரிப்புக்கு ஆயுள் நீண்டு இருக்க வேணும் கடவுளே என வேண்டி கொள்ள அதை கொடுப்பது போல. மரகதம்





“ தம்பி பார்த்தாயா இந்த பயல் அவன் கிட்ட மட்டும் பல்லு சுளுக்கும் அளவுக்கு சிரித்து பேசுகிறான் என் கிட்ட கடு கடுவென முகத்தை வைத்து கொண்டு தான் பேசுவான்…என்னை விடு பெத்த அப்பன் நீ உன் கிட்ட இப்படி ஒரு நாள் சிரித்த முகத்தோடு பேசி இருப்பானா எல்லாம் அந்த தணிகாசலம் பண்ணும் வேலை தன் பேத்தியை நீ அவருக்கு தர மறுத்து விட்ட என்று இப்போ உன் மகன் உறவு உனக்கு இல்லாமல் போக வேணும் என செய்கிறான்” என. சந்தனா




“ அப்படி இல்லை பாட்டி நிது எல்லோர் கூடவும் நன்றாக பேசுவான் அப்பா கிட்ட மட்டும் பேச தயக்கம்…தாத்தா எங்க கிட்ட அப்பா கூட பேச கூடாது என ஒரு தடவை கூட சொல்லவில்லை” என .மரகதம்




“ நல்லா பேசுவ டி அவனை கூட நம்பலாம் உன்னை நம்ப முடியாது உன் ஆத்தா காயத்திரி குணம் உனக்கு இல்லாமலா போகும்…தன் புருஷனை நம்பாமல் போன மகராசி ஆயிற்றே தாத்தாவை சொன்னவுடனே உனக்கு வாய் பூட்டு திறந்து விடும்” என சொல்ல துவாரகேஷ் மகளை ஆச்சரியமாக பார்த்தார்…பொதுவாக அவர் இருக்கும் போது அவள் குரல் வெளிவராது நித்திலன் தான் தமக்கைக்காக குரல் கொடுப்பான் இப்போ தணிகாசலம் பற்றி பேச்சு வரும் போது வாய் திறக்கிறாள் என்றால்…அவர் ஆதிக்கம் இவள் மேலே இருக்கிறது இல்லை இது நடக்க கூடாது காயத்திரி போல இவள் என் கை விட்டு போக கூடாது சீக்கிரமாக இதற்கு முடிவு கட்டுகிறேன் என நினைத்தார். அப்போது மைக்கில் இசை குழு தலைவர் பேச ஆரம்பித்து இருந்தார்





“குட் ஈவ்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ் இந்த இனிய மாலை பொழுதில் உங்களை எங்க இசையால் நாங்க மகிழ்வித்து கொண்டு இருக்கிறோம்…இசை இதற்கு தான் காயங்களை ஆற்ற கூடிய சக்தி உண்டு மனிதர்களாகிய நமக்கு சில நேரம் நம்ம கடந்த வந்த பாதையில் வலிகள் உண்டாகி இருக்கும் இது யாருக்குமே பொதுவான விஷயம் அதை மாற்ற அல்ல மறக்க வைக்க ஒன்றால் மட்டும் தான் முடியும் அது தான் இசை…. அன்னையின் தாலாட்டை எந்த வயதிலும் ரசிக்காமல் இருக்க முடியுமா அது போல தான் இசை இது கடவுள் கொடுத்த வரம் என சொல்வார்கள் இப்போ அந்த வரத்தை நீங்க பயன்படுத்த போகிறீர்கள் என்ன டா இவன் ஏதோ சொல்கிறான் என நினைக்க தோன்றுகிறது போல இது பெரிய விஷயம் அல்ல சிறிய விஷயம் தான் எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பாடும் திறமை இருக்கிறது…உண்மையை சொல்லுங்க இங்கே எத்தனை பாத்ரூம் சிங்கர்ஸ் இருக்கிறீங்க பாத்ரூமில் பாடாத நபர்கள் இருக்கவே மாட்டார்கள்.





சோ இப்போ நாங்க ஒரு போட்டி வைக்க போகிறோம் அதை போட்டி என சொல்ல கூடாது உங்க ஆசையை நிறைவேற்ற போகிறோம்…ஆம் பாத்ரூம்லில் கேட்ட உங்க குரலை இப்போ இங்கே அனைவரின் முன்னும் கேட்க வைக்க போகிறோம் கெட் ரெடி இந்த சவாலை நீங்க அனைவருமே ஆவலாக வரவேற்பீர்கள் என நினைக்கிறேன்… இதற்கு வயது ஒரு தடையல்ல அது போல சங்கீதம் முறையாக கற்று இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்ன உங்க மன அழுத்தங்களை போக்க நீங்க ரெடியா என கேட்க அனைவருமே ஆம் ஆம் என கை தட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிபடுத்தினார்கள்… துவாரகேஷ் இதற்கும் எனக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் தன் ஐ பாட்டில் எந்த ஷேர் மார்க்கெட்டில் எதை இன்வெஸ்ட்மென்ட் பண்ணலாம் லாபம், நஷ்டம் எப்படி இருக்கும் என புள்ளி விபரங்கள் பார்த்து கொண்டு இருக்க. நித்திலன்




“ வாவ் சூப்பர் எங்க அக்காவை இதில் பாட வைக்க வேணும் அவள் முறையாக சங்கீதம் கற்றவள்…அவள் பாடினால் காற்று கூட அசையாமல் நின்று கேட்கும் இந்த சங்கீதம் கற்று கொள்ளவே அவளுக்கு ஆயிரம் கண்டிசன் நல்ல காலம் அம்மா தான் போராடி அவளுக்கு கற்று கொடுக்க வைத்தாங்க பிறகு எங்கே அவளுக்கு பாட சந்தர்ப்பமே கிடைக்கவில்லை… இப்போ இது தான் சான்ஸ் அவளை நான் இதில் பாட வைக்க போகிறேன் இருங்க அண்ணா அக்காவை பாட சொல்லி விட்டு வருகிறேன் என எழுந்து சந்தனாவை நோக்கி போனான்.





நிலவு வரும்….🌙



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்: 13



நித்திலன் தன் குடும்பம் இருந்த டேபிளை நோக்கி வர துவாரகேஷ் அவனை விழி உயர்த்தி ஒரு பார்வை பார்த்தவர் பிறகு தன் ஐ -பாட்டில் பார்வையை பதிக்க. காந்திமதி




“ துவாரகா உன் பையன் வருகிறான் நல்லா உறைக்கும் படியாக நான்கு கேள்வியை கேளு டா” என அவரை ஏத்தி விட… அபிராமி அவரை வெறுப்பாக பார்க்க சந்தனா இவரை எல்லாம் திருத்த முடியாது என நினைத்தாள் நித்திலன் சந்தனா அருகே வந்து அமர்ந்தவன். நித்திலன்




“ அக்கா உனக்கு ஒரு குட் நியூஸ் அனோஸ்மென்ட் கேட்டு இருப்ப தானே பாரு நிறைய பேர் பாட போகிறாங்க நீயும் உன் திறமையை காட்டலாம்…நீ முறையாக சங்கீதம் கற்றவள் அதனால் நீ பாடினால் இங்கே நிறைய ஃபேன்ஸ் உனக்கு வரும் போய் உனக்கு பிடித்த பாட்டை பாடுக்கா” என சொல்ல சந்தனா முகத்தில் ஆர்வம் பிரதிபலிக்க. அவள்




“ அம்மா நான் போய் பாடட்டுமா” என அபிராமியை பார்த்து ஆவலாக கேட்க.. அவள் சந்தோஷம் தெரிந்து அபிராமி சம்மதம் கொடுக்க வாய் திறக்க போக. துவாரகேஷ்




“ சந்தனா நீ இங்கே என்று இல்லை எங்குமே பாட முடியாது, கூடாது ஏன் என்றால் நீ துவாரகேஷ் பெண்ணு…கேவலம் பாடி பிழைக்கும் கூட்டத்தில் இருந்து வந்தவள் இல்லை எனக்கு நீ சங்கீதம் கற்று கொண்டது கூட எனக்கு பிடிக்கவே இல்லை ஆனா உனக்காக உன் அம்மா பட்டினி கிடந்தாள் என் சம்மதம் பெற அதற்கு பயந்து நான் சம்மதம் கொடுக்கவில்லை அவள் செத்து தொலைத்து விட்டால்…அந்த தணிகாசலம் என் மேலே பழி போட்டு என் இமேஜை ஸ்பாயில் பண்ணி விடுவார் அதற்காக தான் ஓகே சொன்னேன் புரிகிறதா நீ பாட கூடாது” என சொல்ல… அபிராமி நீ என் கணவனா என் பிள்ளைகளுக்கு அப்பனா சராசரி ஆணை விட நீ கேவலமான பிறவி மனைவி செத்தால் கூட பரவாயில்ல உனக்கு உன் இமேஜ் போக கூடாது…முட்டாளே நான் அவ்வளவு சீக்கிரமாக போக மாட்டேன் என் பெண்ணுக்கு நல்ல புருஷனை தேடி கொடுக்க மட்டும் நான் இருக்க வேணும் என் மகனை என் அப்பா தணிகாசலம் பார்த்து கொள்வார் உன்னை, உன் அம்மாவை நம்பி என் அப்பாவி பெண்ணை தனியாக விட்டு நான் போவதா என நினைக்க. நித்திலன்




“ அப்பா என்ன இது நீங்க மட்டும் இப்படி ஸ்டேட்டஸ் பைத்தியம் பிடித்து கொண்டு அலைகிறீங்க உங்களை விட பெரிய பெரிய பணக்கார ஆளுங்க ஏன் ராஜ வம்சம் ஆளுங்க கூட இப்படி நடந்து கொள்ள மாட்டாங்க….அவங்க அனைவருமே இசையை ரசிக்க தெரிந்த மனிதர்கள் ஏன் பாடி கூட இருக்கிறாங்க இது ஒரு பைன் பா இங்கே பாருங்க இவங்க எல்லாம் விவிஐபிங்க தான், வயதாவங்க வேற சந்தோஷமாக பாடி, ரசித்து மகிழ்ச்சியாக இருக்கிறாங்க இதற்காக தானே இந்த கடல் பயணத்தை மேற் கொண்டது…ஆனா நீங்க அக்கா பாவம் அவள் என்ன பாட்டி போல வயதானவளா அது மட்டுமல்ல அவள் என்ன டிஸ்கோ போகவா கேட்டாள் பாட தானே அதுவும் முறையாக அவள் கற்று கொண்டவள்….தன் திறமையை அவள் இங்கே காட்ட வேணாமா பீளிஸ் பா அவள் சந்தோஷத்தை கெடுக்க வேணாம் அவளை பாட விடுங்க” என சொல்ல. துவாரகேஷ் அழுத்தமாக நித்திலன் என அழைத்தவர் .அவர்




“ நித்திலன் நான் இது வரைக்கும் உன் கிட்ட கோபமாகவோ இல்ல கை நீட்டியதோ இல்லை இப்போ இந்த இரண்டையும் என்னை செய்ய வைத்து விடாதே…சந்தனா உன் அக்கா என்றால் அவள் எனக்கு பெண்ணு அவளுக்கு எது நல்லதோ அதை தான் நான் செய்வேன் அவள் ஒன்றும் தெரு கூத்தாடி பெண்ணு இல்லை துவாரகேஷ் பெண்ணு அதற்கு ஏற்றது போல அவள் நடந்து கொண்டால் போதும் இனி நீ அவள் விஷயத்தில் வாய் திறக்க கூடாது புரிகிறதா…உன் வயதுக்கு மீறி நீ கொஞ்ச காலமாக நடந்து கொண்டு வருகிற என்ன நீ பேசுவதை கேட்டு நான் அமைதியாக இருப்பதை நீ சாதகமாக்கி கொள்ள நினைக்காதே அது உனக்கு தான் ஆபத்தாக முடியும் உன் வேலை படிப்பது அதை மட்டும் பாரு புரிகிறதா” என சொல்ல. நித்திலன் கோபமாக பேச வாய் திறக்க டேபிளுக்கு அடியில் அவன் கையை பற்றிய சந்தனா அவனை அமைதியாக இருக்க சொன்னாள். நித்திலன்




“ ஓகே இப்போ தான் பார்க்கிறேன் புள்ளைங்க திறமையை அடக்கி வைக்கும் அப்பாவை…அக்கா நீ இப்படியே உன் தேவைகளை கேட்காமல் இருந்தால் இவர் உன்னை பொம்மை போல தன் இஷ்டம் போல ஆட்டி வைக்க நினைப்பார்…வாயை திறந்து பேசு இல்ல நீ வாய் திறந்து பேச நினைக்கும் நேரம் எல்லாம் கை மீறி போய் விடும்” என சொன்னவன்… கோபமாக எழுந்து யது நந்தன் டேபிளை நோக்கி போனான் அருண் கோபமாக வரும் நித்திலனை பார்த்தவன். அருண்




“ யது என்ன டா பையன் அக்காவை சந்தோஷமாக பாட வைக்க போகிறேன் என போனான்… இப்போ கோபமாக நம்ம டேபிளை நோக்கி வருகிறான்” என சொல்ல. யது நந்தன்




“ வெரி சிம்பிள் மிஸ்டர் துவாரகேஷ் மட்டுமல்ல அந்த பெண்ணும் கூட பாட முடியாது என மறுத்து இருக்கும் பிகாஸ் ஸ்டேட்டஸ் பையன் அது தான் அப்செட் ஆகி விட்டான் போல ….அவன் ஏதும் சொல்லும் வரைக்கும் நீ எதுவுமே கேட்க வேணாம்” என சொல்ல அருண் சரியென்றான் நித்திலன் கோபமாக வந்து இருந்தவன் கண்கள் கலங்கி இருக்க நண்பர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள்…யது நந்தன் டேபிள் மேலே உள்ள அவன் கையை பற்றியவன் ரிலாக்ஸ் நித்திலா என சொல்ல அருண் தண்ணீர் கிளாஸ்யை அவன் பக்கமாக நகர்த்தி வைத்தவன் டேக் இட் நித்திலன் என சொல்ல நித்திலன் தண்ணீர் எடுத்து சாப்பிட. யது நந்தன்





“ நித்திலா ஒன்றை புரிந்து கொள்ளு அதிக எதிர்பார்ப்பு நமக்கு ஏமாற்றத்தை தரும்…அதுவும் நம்ம நம்பி இருப்பவர்கள் செய்யும் துரோகம் ரொம்ப வலிக்கும் உன் வயதுக்கு இது கஷ்டமாக தான் இருக்கும் எங்க வயது வரும் போது உனக்கு உலகம் புரிய ஆரம்பிக்கும்…சில நேரம் நம் மீதும் தவறு இருக்கலாம் நம்ம எதிர்பார்ப்பு வைத்து இருக்கும் நபர் சரியானவரா என பார்க்காமல் நம்ம அவர்களை நம்பி இருப்போம் சோ நீ யாரையுமே அதிக எதிர்பார்ப்போடு நெருங்காதே அது உனக்கு வலியை மட்டுமல்ல கோபத்தை தரும்… அது நாளடைவில் அவர்களை பழி வாங்க சொல்லும் உன்னை பிறகு இந்த சமூகத்தில் குற்றவாளியாக காட்டும் சோ நீ எதிர்பார்ப்பு வை உண்மையானவர்களிடம் புரிகிறதா” என சொல்ல. நித்திலன்





“தேங்கியூ யது அண்ணா எனக்கு மனசுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா ஆசையாக அக்காவை பாட வைக்க போனேன்…அவளுக்கும் இதில் ரொம்ப இஷ்டம் அம்மா கிட்ட கூட கேட்டாள் பாட அம்மா சம்மதம் சொல்ல போகையில் அப்பா ரொம்ப என்னை மட்டுமல்ல அம்மா, அக்காவை திட்டி விட்டார்… போதாதது என்று எங்க பாட்டி வேற அவரை ஏத்தி விட்டாங்க பாவம் அக்கா அவள் எந்த சின்ன ஆசைகள் கூட இது வரைக்கும் நிறைவேறியது இல்லை” என. அருண்





“ நித்திலன் தப்பாக நினைக்க வேணாம் இது சாதாரண விஷயம் நீங்க பணக்கார ஆளுங்க தான் இதோ இப்போ கிட்டார் வாசிக்கும் பெண்ணுங்க கூட பணக்கார பெண்ணுங்க தான்…அப்போ உங்க அக்கா பாடினால் என்ன தப்பு இருக்கிறது உங்க அப்பா அவங்களை ஏன் எதிலும் கலந்து கொள்ள விட மாட்டேன் என்று சொல்கிறார்…உங்க அக்காவுக்கு ஏதும் ப்ராபிளம் இருக்கா தப்பாக நினைக்காதே நான் இப்படி கேட்பதற்கு” என அருண் என யது அழுத்தமாக அழைக்க அருண் அவனிடம் பார்வையால் மன்னிப்பு கேட்க. நித்திலன்




“ விடுங்க யது அண்ணா அக்கா பற்றி இப்படி தான் பலர் அம்மா, என் கிட்ட தாத்தா கிட்ட கூட கேட்டு இருக்கிறாங்க…உங்க பெண்ணுக்கு ரொம்ப திமிரா என் யார் கூடவும் பேச பழக மாட்டேன் என்று சொல்கிறாள் என்று…உண்மை தெரிந்த எங்களுக்கு தானே அவளை பற்றி தெரியும் அவள் பணக்கார வீட்டு பெண்ணு அல்ல கோடீஸ்வரி அவளுக்கு அப்பா பணம் மட்டுமல்ல அப்பாவை விட நான்கு மடங்கு கோடீஸ்வர் என் தாத்தா தணிகாசலம், பெரியம்மா காயத்திரி அவங்க பணம் கூட அவளுக்கு தான்… ஆனா அவளால் ப்ளஸ் டூ வரைக்கும் தான் படிக்க முடிந்தது காரணம் எங்க பாட்டி பெண்ணுங்களுக்கு மேலே படிப்பு எதற்கு என அப்பாவை தூண்டி விட அவரும் அக்காவை மேலே படிக்க வைக்கவில்லை அவளுக்கு தாவரவியல் (Botany) படித்து தாவரவியலாளராக ( Botanist) படிக்க ஆசை எங்கே அதை எல்லாம் வெளியே சொல்லாமல் வாய் மூடி மெளனமாகி விட்டாள்…இது எல்லாம் தாத்தாவுக்கு தெரிந்தது அப்பாவை அதற்கு பிறகு உயிரோடு பார்க்க முடியாது அவர் அமைதியாக இருப்பது என் அம்மா எனக்காவும் தான்” என. அருண்




“நானும் கேள்விபட்டு இருக்கிறேன் பட் சரியாக தெரியாது ஏன் நித்திலன் உனக்கு உங்க அப்பாவை விட தாத்தாவை ரொம்ப பிடிக்குமா …அவர் பற்றி அடிக்கடி பேசுகிறாய்” என கேட்க. நித்திலன் முகம் மலர




“ ரொம்ப பிடிக்கும் அருண் அண்ணா அவர் பெரிய கோடீஸ்வர் தான் ஆனா அதை துளி கூட காட்ட மாட்டார்…நானும் அக்காவும் போனால் கம்பெனிக்கு கூட போகாமல் எங்க கூடவே விளையாடுவார் எங்களை மடியில் வைத்து சாப்பாடு ஊட்டுவார் நானும் அக்காவும் அவர் மடியில் தான் தூக்குவோம்… நான் பெரியம்மா போலவாம் ரொம்ப தைரியமானவனாம் அதனால் அம்மா, அக்காவை மட்டுமல்ல தாத்தா கம்பெனி எல்லாம் நான் தான் பார்த்து கொள்ள வேணும் என சொல்வார் எனக்கு அவர் கூட இருக்க தான் பிடிக்கும் ஆனா அப்பா, பாட்டி என்னை, அக்காவை தாத்தாவை பார்க்க போக விட மாட்டாங்க…தாத்தா எங்களை ஸ்கூலில் வந்து தான் பார்த்து விட்டு போவார் அக்கா ஸ்கூல் முடித்த பிறகு என்னை பார்க்க வாரா வாரம் வருவார்…வரும் போது எனக்கு பிடித்த எல்லாம் வாங்கி வருவார் என சந்தோஷமாக சொல்ல தணிகாசலத்தின் மீது நித்திலனுக்கு உள்ள பாச பிணைப்பு புரிந்தது அப்போது மைக்கில் யது நந்தன் பெயர் சொல்ல அவன் திருப்பி பார்த்தான்.





நிலவு வரும்…🌙


 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் -14




யது நந்தன் பெயரை மைக்கில் சொல்ல அவன் மட்டும் அல்ல அருண், நித்திலன் கூட பார்க்க… அங்கே ஒரு பெரியவர் தான் மைக்கை பிடித்து அவன் பெயரை சொன்னது அவர் வேறு யாருமல்ல யதுவுக்கு தெரிந்தவர் ரிட்டையர் ஆர்மி கேணல் ஜெகதீஷ் அவர் ஆங்கிலத்தில்…




ஹாய் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ் ஐ யம் ரிட்டரயர் ஆர்மி கேணல் ஜெகதீஷ் எங்க ஓய்வை கழிக்க நானும் என் மனைவியும் இந்த கடல் பயணத்தை மேற் கொண்டு உள்ளோம் இங்கு பாதி பேர் அப்படி தான்…எனக்கு இசை ரொம்ப பிடிக்கும் நாங்க நாட்டின் எல்லையில் இருக்கும் போது இது தானே எங்கள் பொழுது போக்கு நான் ஓய்வு பெற்ற பிறகு விமான பயணத்தை விட்டு கடல் பயணத்தை தான் அதிகம் மேற்கொண்டோம் அப்படி பட்ட ஓரு கடல் பயணத்தில் தான் இந்த ஷிப் கேப்டன் யது நந்தனை மீட் பண்ணினேன்…அதுவும் எப்படி பட்ட ஓரு நேரத்தில் என்ன கேப்டன் ஞாபகம் இருக்கிறதா அந்த அனுபவம் நம்ம பயணம் மேற் கொண்ட போது தீடீரென கடுமையான காற்று வீசியது திசை மாறிய ஷிப்பை நீங்க தான் திசை மாறாமல் பல உயிர்களை காத்து எங்களை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தீங்க உங்களுக்கு அதற்கு விருது கூட கிடைத்தது…அப்போ உங்க சேவைக்கு நன்றி செய்யும் விதமாக ஓரு பார்ட்டி வைத்தோம் அப்போ இது போல தான் விரும்பியவர்கள் பாடலாம் என நாங்க சொன்னோம் உங்களை கூட வற்புறுத்தி பாட வைத்தோம் நீங்களும் எங்களுக்காக ஓரு பாடலை பாடினீங்க… அந்த பாடல் இப்போ கூட எனக்கு காதில் ஓலிக்கின்றது உங்க குரல் கடவுள் தந்த வரம் சோ இப்போ அது போல எங்களுக்காக ஒரு பாடலை பாட வேணும்” என சொல்ல அவனை அங்கு தெரிந்தவர்கள் அவனை பாட சொல்ல யது தயங்கினான் …காரணம் அப்போ இருந்த சூழ்நிலை வேறு இப்போ இருக்கும் சூழ்நிலை வேறு .அருண்




“ என்ன மச்சி யோசிக்கிற நீ காலேஜ்ஜில் எல்லாம் பாடி இருக்க தானே பிறகு எதற்காக தயங்குகிற பாடு” என. நித்திலன்




“ வாவ் அண்ணா நீங்களும் பாடுவீங்களா எனக்கு சொல்லவே இல்லை அண்ணா எனக்கா நீங்க பாட தான் வேணும்… அக்காவால் தான் பாட முடியவில்லை நீங்களாவது பாடுங்க அண்ணா பீளிஸ் எனக்காக என அந்த சிறுவன் பேச்சை தட்ட முடியாமல் யது நந்தன் பாட எழுந்தான்… அவன் அங்கே போட பட்டு இருந்த சிறு மேடையை நோக்கி போக அவனை மற்றவர்கள் கை தட்டி வரவேற்க சந்தனா அவனை வியப்பாக பார்க்க… துவாரகேஷ் அவனை வெறுப்பாக பார்த்தார் யது பாட மட்டுமல்ல நன்றாக கிட்டார் கூட வாசிப்பான் அங்கே இருந்த இசை குழுவிடம் ஒரு கிட்டார் வாங்கியவன் அதை மீட்டி பாட தொடங்கினான்.




இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே விழாக் காணுமே வானமே





வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்…




வான வீதியில் மேக ஊர்வலம்

காணும் போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்…




முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள்


தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்

ஓடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்து

யார் நவமணிகள்…




இளைய நிலா பொழிகிறதே


இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம் கனாக்

காணுமே விழாக் காணுமே வானமே …





என பாடலை நிறைவு செய்ய இத்தனை நேரம் அந்த இடமே அவன் பாடலில் அமைதியாக இருந்தது அவன் பாடலை நிறைவு செய்ய மறு நிமிடம் அந்த அரங்கமே அதிர கை தட்டியது… நித்திலன் யது அண்ணா சுப்பர் என சொல்லி கொண்டு ஓடி போய் அவனை அணைத்து கொள்ள யதுவும் அவனை சிரித்தவாறே அணைத்து கொண்டான் அபிராமி, சந்தனாவும் சந்தோஷமாக கை தட்டியவர்கள்.அபிராமி




“என்ன குரல் வளம் பையனுக்கு கேட்கவே மனதுக்கு நிம்மதியாக இருந்தது என்ன பாப்பா… நீ சங்கீதம் படித்தவள் தானே அந்த பையன் நன்றாக பாடினான் தானே” என கேட்க.சந்தனா



“ அவர் ரொம்ப நல்லா பாடினார் மா நீங்க சொன்னது போல இயற்கையாகவே குரல் வளம் அவருக்கு இருக்கு” என. மரகதம்




“ என்ன குரல் வளம் நான் அந்த காலத்தில் பாடினால் கேட்டு கொண்டு இருப்பவர்கள் மயங்கி போய் இருப்பாங்க… இது எல்லாம் ஒரு குரல், பாட்டு என்ன துவாரகா” என கேட்க துவாரகேஷ் யது மேலே உள்ள கோபத்தில்.அவர்




“ அம்மா உனக்கும் உன் பேரன் போல வர வர அறிவு என்பதே இல்லாமல் போய் கொண்டு இருக்கிறது இப்போ இது ரொம்ப முக்கியம் பாரு …இப்போ நீ பாடினால் என்ன பாடாமல் விட்டால் தான் என்ன அபிராமி போய் உன் பையனை அழைத்து வா சாப்பிட்டு விட்டு தூங்க போக வேணும்…வர வர அவன் நடவடிக்கை சரி இல்லை இருக்கட்டும் நான் நினைத்து நல்ல படியாக முடியட்டும் அதற்கு பிறகு இருக்கு அவனுக்கு…நீ என்ன மா வாய் பார்த்து கொண்டு இருக்க சாப்பி்டு சந்தனா உனக்கு என்ன தனியாக சொல்ல வேணுமா என எல்லோரையும் திட்டினார் அபிராமி யது நந்தன் டேபிளுக்கு வந்தவர் அவனையும், அருணையும் பார்த்து புன்கை புரிந்தவர். அபிராமி




“நித்திலா சாப்பிட வா பா டைம் ஆகி விட்டது தூங்க வேணாமா அவங்களும் சாப்பிட வேணும் இல்லையா என. நித்திலன்




“அம்மா நீங்க போங்க நான் யது, அருண் அண்ணாக்கள் கூட சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என. அபிராமி




“ தம்பி அக்கா எப்போ பா உன்னை விட்டு தனியாக சாப்பி்ட்டு இருக்கிறாள்…அப்பா வேறு உனக்கா வெயிட் பண்ணுகிறார் நாளைக்கு வந்து பேசலாம் கண்ணா” என .நித்திலன்




“யாரு அப்பா எனக்கா வெயிட் பண்ணுவதா சும்மா போ மா ஜோக் அடிக்காமல் அவருக்கு முதலில் நானும் அக்காவும் கண்ணுக்கு தெரிவதே அதிசயம் இதில் அவர் என் கூட சாப்பிட வெயிட் பண்ணுவதாவது…வேணும் என்றால் ஒன்று செய்யலாம் நீயும் அக்காவும் இங்கே சாப்பிட வாங்க எல்லாம் ஒரு சாப்பாடு தானே” என. அபிராமிக்கு இப்போவே தலையை சுற்றியது… இதை மட்டும் துவாரகேஷ் கேட்டு இருக்க நித்திலனை வெளுத்து வாங்கி இருப்பார் அதுவும் சந்தனாவை இங்கே அழைத்து வருவதா வேறு வினையே வேணாம் இதை எல்லாம் மூன்றாம் மனிதர்கள் முன்னே விளக்கி கொண்டு இருக்க முடியுமா அபிராமி சங்கடமாக நிற்க. யது நந்தன்




“ நித்திலா நீ எங்க கூட பேசுவது எங்களுக்கு சந்தோஷமாக தான் இருக்கிறது ஆனால் குடும்பத்தை புறகணிப்பது தவறு …எல்லோருக்குமே அழகான குடும்பம் அமைவது இல்லை அப்படி அமைந்தாலும் நிலைத்து நிற்பது இல்லை… அடுத்து கடவுள் நமக்கு தந்த பெரிய கிப்ட் அம்மா இதுவும் பாக்கியம் பெற்றவங்களுக்கு தான் கிடைக்கும் இது இரண்டையுமே நீ எப்பவுமே அலட்சியபடுத்த கூடாது …நம்ம ஒரு மாதம் ஷிப்பில் தானே டிராவில் பண்ண போகிறோம் நிறைய பேசலாம் இப்போ அம்மா கூட போ” என சொல்ல நித்திலன் சரி என இருவரிக்குமே குட் நைட் சொல்லி விட்டு முன்னால் போக நன்றியோடு பார்த்த .அபிராமி




“ நன்றி தம்பி அவன் சின்ன பையன் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி… டைம் ஆகி விட்டது சீக்கிரமாக இரண்டு பேருமே சாப்பிடுங்கள்” என சொல்லி விட்டு அபிராமி போக.அருண்




“யது என்ன டா இவங்க தீடீரென இப்படி பேசி விட்டு போகிறாங்க துவாரகேஷ் ஏதும் சொல்லி இருப்பாரே தெரியாது” என. யது




“சொல்லி இருப்பாரே இல்லை சொல்லி இருக்கிறார் அதை நம்ம முன்னாடி எப்படி சொல்லுவது என்று தான் மிஸ்ஸிஸ் துவாரகேஷ் தயங்கினாங்க… அதை புரிந்து தான் நித்திலனுக்கு புரியும் படியாக சொல்லி அனுப்பினேன்…சரி இதை விடு டைம் ஆகி விட்டது வா நம்ம சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்” என்றான். நித்திலன் வர துவாரகேஷ் அவனை முறைத்து பார்த்தாரே தவிர வேற ஏதுவுமே பேசவில்லை நித்திலன் தான் யது, அருண் பற்றி சொல்லி கொண்டு இருந்தான் அதுவும் அவனுக்கு யது நந்தனை ரொம்ப பிடித்து இருந்தது… அதை சந்தனா, அபிராமி கேட்டு கொண்டு இருக்க துவாரகேஷ்க்கு நித்திலனை இழுத்து வைத்து கன்னம் கன்னமாக அறைய வேணும் என்ற ஆதி குணம் தலை தூக்கியது இருந்தும் இருக்கும் இடம் கருதியும் வேறு சில காரணங்களுக்காக தன்னை அடக்கி கொண்டவர்… சாப்பிட்டு விட்டு அவரே நின்று அனைவரையுமே அழைத்து கொண்டு போனார் அவருக்கு தெரியும் அவர் இவர்களை விட்டு போனால் நித்திலன் திரும்ப யதுவை தேடி ஓடி விடுவான் என்பதால் கையோடு அழைத்து கொண்டு போனார்.





இரண்டு நாள் கடல் பயணம் இது வரை நன்றாக தான் போய் கொண்டு இருந்தது சில சின்ன சின்ன சங்கடங்களை தவிர, உடல் உபாதைகள் தவிர மற்றும்படி பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை…இந்த இரண்டு நாளில் நித்திலன் யது நந்தன் கூட நன்றாக பழகி இருந்தான் காலையில் யதுவை மீட் பண்ண முடியாது என்பதால் தமக்கையை கொண்டு கப்பலை, இயற்கையை சுற்றி காட்டினான்… துவாரகேஷ் கடுமையாக சொல்லி விட்டார் நீ யதுவை பார்க்க போவது என்றால் போ சந்தனாவை அழைத்து போன என்று கேள்விப்பட்டேன் ஒரேய மகன் எனக்கு பிறகு இந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தை ஆள வேண்டியவன் என்று எல்லாம் பார்க்க மாட்டேன் வெட்டி கடலில் வீசி விட்டு போய் விடுவேன் என்று.. அதற்கு நித்திலன் பேச வர அபிராமி, சந்தனா தான் அவனை சமாதானப்படுத்தி வைத்து இருந்தார்கள் மறுநாள் கப்பல் அந்தமான் தீவை சென்று அடையவுள்ளது அதை அன்று இரவே கோ கேப்டன் என்ற முறையில் அருண் அறிவிக்க தான் துவாரகேஷ் முகம் மலர்ந்தது… இந்த நாளை தானே அவர் எதிர்பார்த்து இருந்தது ஆனா அபிராமிக்கு தான் இது சரியாகபடவில்லை துவாரகேஷ் முகம் மலரும் என்றால் அவர் வெற்றிக்கு மட்டும் தான் அது நல்லாதாக இருந்தால் சரி சில நேரம் ஆபத்தாக முடிவதும் உண்டு கடவுளே எல்லாம் நல்லபடியாக நடக்க வேணும் என அவர் வேண்டி கொள்ள கப்பல் அந்தமான் தீவை வந்து அடைந்தது.






நிலவு வரும்…🌙
 
Status
Not open for further replies.
Top