ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்: 05


துவாரகேஷ் அபிராமி, சந்தனா, நித்திலனை அழைத்து கொண்டு போன பிறகு சென்னையில் இருந்தாலும் கூட தணிகாசலத்தோடு எந்த தொடர்பும் அவரும் வைக்கவில்லை மற்றவர்களையும் வைக்க விடவில்லை… விஷயம் கேட்ட மரகதம் தான் சொத்து தன் மகனுக்கு கிடைக்காத கோபம் தன்னை, மகனை நம்பாமல் பேத்தி பெயரில் எழுதி வைத்தது எல்லாம் சேர்ந்து வன்மமாக சந்தனா மேலே விழுந்தது அதனால் அவளுக்கு அதிகமாக கட்டுப்பாடு மட்டுமல்ல தன் அதிகாரத்தையும் காட்ட தொடங்க தான் அபிராமிக்கு மரகதம் மேலே கோபம் வந்தது….

ஆனா அதை வெளிக்காட்ட முடியவில்லை காரணம் எவ்வளவு திறமையாக இருந்தும் கூட துவாரகேஷ் மகுடிக்கு கட்டுபாடும் பாம்பு போல மரகதம் சொல்லுக்கு தலையாட்டி கொண்டு இருந்தான் அதற்காக காரணம் தந்தை இல்லாமல் தன்னையும் தங்கையும் தாய் வளர்க்க பட்ட கஷ்டம் அதனால் தாய் எது சொன்னாலும் சரி என நினைக்க தொடங்க மரகதம் கை ஓங்கியது.


அபிராமிக்கும் என்ன செய்வது என தெரியவில்லை அவள் படித்தவள் தான் அவள் வீட்டை விட்டு குழந்தைகளை தூக்கி கொண்டு தணிகாசலத்திடம் போய் விடலாம் அவர் இரு கரம் நீட்டி வரவேற்பார்… என்ன ஒன்று தன் மகள் வாழ்க்கை போல இந்த மகள் வாழ்க்கையும் பாழாகி விட்டது என அந்த வயதான மனிதர் நினைப்பார் இன்னும் அவருக்கு வலியை கொடுக்க வேணுமா… அது மட்டுமல்ல துவாரகேஷ் வீம்புக்கு கேஸ் அது என போய் குழந்தைகளை தன் கிட்ட தான் இருக்க வேணும் என கேட்பான் ..

அப்படி குழந்தைங்களை கொடுத்தாலும் மரகத்தை நம்பி குழந்தைகளை விட முடியாது அதுவும் சந்தனா பெண் குழந்தை பயந்த சுபாவம் கொண்டவள் அவள் வளர்ந்து நல்லவன் ஒருவனை கை பிடிக்கும் வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம்.

சந்தனா தான் பயந்தவள் நித்திலன் காயத்திரி போல தைரியமானவன் அவனுக்கு தணிகாசலத்தை மரகதம் பார்க்க விடாத கோபம் எல்லாம் சேர்ந்து அவரை அந்த வயதிலே வார்த்தைகளால் வெளுத்து வாங்குவான்… தணிகாசலம் துவாரகேஷ் தெரியாமல் தன் பேரபசங்களை ஸ்கூலில் பார்த்து பேசி விட்டு வருவார் அதுவும் நித்திலன் கிட்ட நீ தான் அக்கா, அம்மாவை பார்த்து கொள்ள வேணும் என் சொத்துக்கு வாரிசு நீயும், அக்காவும் தான் என அடி‌க்கடி சொல்ல அவனுக்கு சந்தனாவை பாதுகாக்க வேணும் என்ற எண்ணம் உருவானது …

அந்த ஸ்கூலில் தணிகாசலம் ஒரு ஷேர் ஹோல்டர் என்பதால் இவர் குழந்தைகளை பார்க்க வருவது துவாரகேஷ் காதுகளுக்கு போகவில்லை அது மட்டுமல்ல அவன் தணிகாசலத்தை விட அதிக செல்வாக்கு, சொத்து சேர்க்க வேணும் என ஓடி கொண்டு இருக்கும் போது எங்கே இதை எல்லாம் கவனிப்பது… மரகதம் கேட்கவே தேவையில்ல எந்த நாளும் ஊர் சுற்றுதல், ஷாப்பிங், டிவி சாப்பாடு இது தான் அவர் வாழ்க்கை இப்போ கூட இந்த கடல் பயணம் பற்றி நித்திலன் மூலமாக தணிகாசலத்திற்கு தெரிய வந்த போதும் பார்க்கலாம் என்ன நடக்கிறது என அமைதியாக இருந்தார்.

வழமையாக சந்தனாவுக்கு தனி அறை இருந்தாலும் கூட தனியாக தூங்க பயம் அபிராமி தான் மகள் கூட தூங்குவாள் துவாரகேஷ் நீ எங்கே தூங்கினால் இருந்தால் எனக்கு என்ன என் மனைவி பிசினஸ் என்ற ரீதியில் நடந்து கொள்வார்… தன் உடமைகளை துவாரகேஷ் ரூம்மில் வைத்து விட்டு குளித்து உடை மாற்றி விட்டு அபிராமி வர நித்திலன் தமக்கை ரூம்மில் தான் இருந்தான்… தணிகாசலத்தின் வளர்ப்பு அவன் அவர் தன் தொழில் யுக்திகளை அவனுக்கு இப்போதைய பயிற்றுவிக்க ஆரம்பித்து இருந்தார் அவருக்கு தெரியும் சந்தனாவை உண்மை அன்போடு பார்க்க கூடியவர்கள் அபிராமி, நித்திலன் மட்டும் தான்.

அபிராமி துவாரகேஷ்க்கு கட்டுபட்டவள் ஆனா நித்திலன் அப்படி அல்ல அவன் துவாரகேஷ் ரத்தமாக இருந்தால் கூட அவனுக்கு உறவுகள் தான் முக்கியம்… தன் சொத்தை, தொழிலை கட்டு காக்க அவனால் தான் முடியும் தணிகாசலம் ஒரு நிமிஷம் கூட அபிராமி, நித்திலனை பிரித்து பார்த்தது இல்லை என் மகள் அபிராமி, என் பேரன் நித்திலன் இது தான் அவரிடம் நித்திலனை நெருங்க வைத்தது…நித்திலன் டிவியில் கிரிகெட் மேட்ச் பார்த்து கொண்டு இருக்க சந்தனா தாவரங்கள் பற்றிய புத்தகம் ஒன்றை படித்து கொண்டு இருக்க பாப்பா என அழைத்து கொண்டு அபிராமி வர நித்திலன் தாயை பார்த்து விட்டு.

அவன் “என்ன மா உன்னை மரகதம் இவ்வளவு சீக்கிரமாக போக விட்டது ஆச்சரியமாக இருக்கே…ஓ டைம் ஆகிவிட்டது அது தான் சாப்பாடு எடுத்து வர சொல்லி இருக்கும் இது வீடு இல்லை கப்பல் நம்ம டைனிங் ஹால் போய் தான் சாப்பிட வேணும் அது தான் மேனர்ஸ் நான்கு பேரை பார்த்து பேசி பழகி சாப்பிட வேணும் அதை விட்டு ரூம்க்கு கொண்டு வா என்றால் ஏதோ அமோசன் காட்டில் இருந்து தப்பி வந்த அனிமல் போல தான் பார்ப்பாங்க போய் இதை உன் மாமியாரிடம் சொல்லு” என நித்தி என அழைத்தாள் சந்தனா.

அவளை பொருத்த வரைக்கும் அபிராமி நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்து இருக்கிறாள் அதை அவள் தம்பிக்கும் கற்று கொடுக்க முயற்ச்சி செய்கிறாள்... எங்கே அவன் கேட்டால் தானே அதை விட மரகதம், துவாரகேஷ் நடவடிக்கை அவனை இப்படி பேச வைக்கிறது துள்ளும் வயது வேற.

நித்திலன் “பின் என்ன அக்கா நம்ம இடத்திற்கு தகுந்த மாதிரியாக நடந்து கொள்ள வேணும் பணம் இருக்கு என்று ரொம்ப ஓவராக ஆட கூடாது…நம் தாத்தாவை பாரு பரம்பரை பணக்காரர் ஆனா அவர் பேச்சில், நடவடிக்கையில் எவ்வளவு நிதானம் தெளிவாக எதிராளிங்க மனதை கணித்து பேசுவார் இது தான் பரம்பரை பணக்காருக்கும் புது பணக்காரங்களுக்கும் உள்ள வித்தியாசம்…

பாட்டியை பாரு எவ்வளவு ஆர்ப்பாட்டம் இந்த வயதில் பியூட்டி பார்லர் எல்லாம் தேவையா அது மட்டுமா லேடீஸ் கிளப் வேற இதில் லேடீஸ் கிளப் பிரசிடெண்ட்டுக்கு போட்டி போட போகிறதாம் இந்த வயதில் இது தேவையா இதற்காக அப்பா கிட்ட தாஜா பண்ணி சும்மா இல்ல ஐந்து லட்சம் கறந்து இருக்கு…ஆனா என்னை விடு உனக்கு போன மாதம் நீ ஆசைபட்ட தாவரங்கள் சம்பந்தமான எக்ஸிபிஷனுக்கு அழைத்து போக கேட்க என்ன பேச்சு பேசியது இது எல்லாம் தண்ட செலவு செடி, கொடியை பார்க்க வேணும் என்றால் நம்ம தோட்டதில் உள்ளது பாரு… ஒரு நகை, துணி கண்காட்சி என்றால் மட்டும் காசு கேளு என்று அப்பா கூட பேசாது தானே இருந்தார்.

இத்தனைக்கும் அக்கா மற்ற பெண்ணுங்க மாதிரி துணி, நகை வாங்கி தா டூர் போக காசு தா என்றா கேட்கிறது…அது தான் நான் தாத்தா கிட்ட சொல்ல அவர் அந்த எக்ஸிபிஷனை வீடியோ பண்ணி அனுப்பி இருந்தார் தாத்தா அக்கா ஆசைபட்டதை செய்ய ரெடியாக இருக்கிறார் தான் ஆனா எங்கே அப்பா, பாட்டி விட வேணுமே…ஆனா எனக்கு ஒரு சந்தேகம் மா என் ஸ்கூல் பேரண்ட்ல் மீட்டிங்க்கு கூட வர நேரம் இல்லாத அப்பா இப்போ ஒரு மாசம் நம்ம கூட இந்த கடல் பயணத்திற்கு வருகிறார் என்றார் ஏதோ இருக்க வேணும் மா கூடவே மரகதம் வேறு… அதற்கு சும்மா குளிர் காற்றே உடம்புக்கு ஒத்து கொள்ளாது இப்போ கடல் காற்று சம்மதிங் ராங் நீ அப்பா கிட்ட என்ன விஷயம் என கேட்டு பாரு மா” என்றான் .

அபிராமி “அப்படி கேட்டு பார்க்க கூடிய நிலையில் நான் இருந்து இருக்க என் பெண்ணு ஆசைபட்ட படிப்பை படிக்க வைத்து இருப்பேனே நித்திலா…அவள் என்ன இல்லாத வீட்டு பெண்ணா அவங்களுக்கு கூட அவங்க பெத்தவங்க ஆசைபட்ட படிப்பை கடன் வாங்கி படிக்க வைக்கிறாங்க... சென்னையில் பாதி இடம் தணிகாசலம் அப்பாவோடது அவருக்கு இருக்கும் செல்வாக்கு இத்தனை சொத்து சேர்ந்து பெரிய பிசினஸ்மேனாக இருக்கும் உங்க அப்பாவுக்கு கூட இல்லை…நீ சொன்னது போல தான் பரம்பரை பணக்காருக்கும் புதிய பணக்காருக்கு உள்ள வேறுபாடு காயத்திரி எப்படிப்பட்ட நண்பி தெரியுமா அவள் என்ன விலையில் நகை, டிரஸ் வாங்குகிறாளே அப்படி எனக்கும் வாங்கி வைப்பாள் இத்தனைக்கும் நான் யாரு அவள் அப்பாவோட பி,ஏவின் பெண்ணு…

அவள் அம்மா கூட அப்படி தான் பிறந்த போது அம்மா இல்லாமல் இருந்த எனக்கு அம்மாவாக இருந்தவங்க அவங்க இருந்து இருக்க எங்க இரண்டு பேர் வாழ்க்கையும் இப்படி திசை மாறி இருக்காது என்னை நம்பி தான் அவள் உன் அக்காவை என் கையில் கொடுத்து விட்டு போனாள்….என்னை கூட எத்தனை தடவை வற்புறுத்தி எம். பி.ஏ என் கூட பாரினில் செய்ய வா என நம்ம இரண்டு பேருமே ஒன்றாக நம்ம பிசினஸ் எல்லாம் பார்க்கலாம் என அழைத்தாள்

நான் தான் உனக்கு தான் பிசினஸ் சரி வரும் நான் வேற படிப்பை படிக்கிறேன் என மறுத்து விட்டேன்… அப்படிப்பட்டது அவள் குணம் எங்க நட்பு துரியோதன், கர்ணன் நட்பு போல நித்திலா அம்மா ஒன்று தான் உன் கிட்ட கேட்கிறேன் உன் அக்காவை நீ தான் கடைசி வரை பார்த்து கொள்ள வேணும் அவளுக்கு பணக்கார மாப்பிள்ளை வேணாம் அவளை அவளாக ஏற்று கொண்டு அன்பாக பார்க்கும் ஒருவனை கட்டி வை அம்மா இல்லை என்றால் நீ தான் அவளுக்கு எல்லாம்…

உங்க அப்பா கிட்ட நான் கேள்வி கேட்க முடிந்து இருக்க இப்போ உன் அப்பாவை என் கை பிடியில் வைத்து இருப்பேன் என்னை, காயாவை அப்படி லட்சுமி அம்மா வளர்க்கவில்லை அது மட்டுமல்ல உங்க இரண்டு பேரையுமே உங்க அப்பா என் கிட்ட இருத்து நிரந்தரமாக பிரித்து விடுவார்... பிறகு என் இடத்திற்கு உங்க பாட்டி வேற ஒரு பெண்ணை அழைத்தை வருவாங்க அதற்காக தான் அம்மா அமைதியாக இருந்தேன் மற்றும்படி உன் அம்மா கோழை இல்லை உன் அக்காவை நல்ல ஒருவன் கை பிடித்து கொடுக்க மட்டும் தான் அமைதியாக இருக்கிறேன்…

அதற்கு பிறகு உன்னை அழைத்து கொண்டு தணிகாசலம் அப்பா வீட்டுக்கு போய் விடுவேன் அவர் உன்னை நன்றாக வளர்ப்பார் இப்போ இங்கே நான் இருக்க காரணம் உன் அக்கா உன்னை விட்டால் கூட உங்க அப்பா உன் அக்காவை விட மாட்டார் ஏன் தெரியுமா.. அவள் தங்க முட்டையிடும் வாத்து இது உனக்கு இப்போ சொன்னால் புரியாது கண்ணா” என சொல்ல சந்தனா அம்மா என அவளை அணைத்து கொள்ள நித்திலன் அவர்கள் இருவரையுமே அணைத்து கொண்டான்.


நிலவு வரும்…
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer


அத்தியாயம்: 06


யது நந்தன் சொன்னது போல அருண் கப்பலில் உள்ளவர்களுக்கு சாப்பாடு அவர்களுக்கு என்ன பிடிக்கும் ஓவ்வாமை இருக்கிறதா என கேட்க ஆரம்பித்தான்… சிலருக்கு கடல் பயணத்தில் வாந்தி, மயக்கம், ஜூரம் வருவது உண்டு காரணம் கடல் காற்று குளிராக மட்டுமல்ல சில வேளை அனலாக வீசுவதும் உண்டு தரையில் இருப்பது போல இங்கே இயற்கை இருப்பது இல்லை…

அதனால் அந்த சூழ்நிலை உடல் சட்டென ஏற்று கொள்ளாது அதனால் தான் பெரும்பாலான ஆளுங்க கடல் பயணத்தை மட்டுமல்ல விமான பயணத்தை கூட டாக்டரின் அட்வைஸ் கேட்டு செக்கப் செய்து கொண்ட பிறகு தான் மேற்கொள்வது... அருண் கூடவே அவனுக்கு என ஒரு உதவியாளன் எல்லாம் சரி பார்த்து விட்டு தலைமை குக்கிடம் சாப்பாட்டு லிஸ்ட்டை கொடுத்தவன் பிறகு மெடிக்கல் ரூம் போய் டாக்டரிடம் பாசஞ்சர்ஸ் பற்றிய உடல்நிலை சாட் கொடுத்து விட்டு யது நந்தனிடம் வந்தான்… யது ஏதோ பைல் பார்த்து கொண்டு இருந்தவன் வேலை நேரம் என்பதனால் அபிஷலாக பேச தொடங்கினான்.


யது “கோ கேப்டன் அருண் நான் சொன்ன எல்லாம் பெர்பெக்டட்டாக செய்து விட்டீங்க தானே இதில் எந்த தப்பும் நடக்க கூடாது… நடந்தால் நான் உங்க மேலே கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி இருக்கும்”என்றான்.

அருண் “எவரி திங் ஓகே கேப்டன் நீங்க சொன்னது போல எல்லாம் பெர்பெக்டட்டாக செய்து முடித்து விட்டேன் மார்னிங் பிரேக்பாஸ்ட் டைம் முடிந்து விட்டது…சோ இப்போ டீ டைம் அதற்காக அனோஸ்மென்ட் கொடுக்க சொல்லி விட்டேன் நம்ம ஷிப்பில் பர்ஸ்ட் டீ பிரேக் சோ நீங்க தான் வழமை போல தொடங்கி வைக்க வேணும் “என்றான்... யது நந்தனும் அது தான் வழமை என்பதால் சரி என அருண் கூடன் டைனிங் ஹால் நோக்கி கிளம்பினான்…

அருண் சொன்னது போல கப்பலில் முதல் சாப்பாட்டு பந்தி ஆரம்பம் என்பதால் அனோஸ்மென்ட் கொடுக்க அனைவரையுமே கிளம்பி வந்து கொண்டு இருந்தார்கள் லக்சரி ஷிப் என்பது டீ பிரேக் டிபனில் பார்க்கலாம்… கேக் என்றால் அதில் எத்தனை வெரட்டி இருக்கோ அது எல்லாம் இருந்தது அதை விட சமோசா, வடை, ஸ்வீட், காரம்… டீ என்றால் மாசாலா டீ, பால் டீ, மில்க்மெட் டீ, பெருஞ்சீரகம், கெமோமில், அஸ்வகந்தா, துளசி, செம்பருத்தி என விதம் விதமாக இருந்தது… காபி என்றால் எஸ்ப்ரசோ, எஸ்ப்ரசோ மாச்சியாடோ, காப்பசீனோ, காபி லட்டே, மோக்கசினோ, அமெரிக்கானோ, ஐரிஷ் காபி, பில்டர் காபி, டர்கிஷ் காபி, வெள்ளை காபி, நெஸ்கபே, ப்ரூ காபி, என பாரின் தொடக்கம் இந்தியாவில் உள்ள காபி வரை அணி வகுத்து நின்றது.


அனைவருமே வந்தும் கூட இன்னும் துவாரகேஷ் குடும்பம் வரவில்ல காரணம் மரகதம் தான் அவர் குளிக்க வேணும் அலங்காரம் பண்ண வேணும் என்று வேணும் என்று லேட்டாக கிளம்பி ஆரம்பித்து இருந்தார்… துவாரகேஷ் இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை அவர் வரவில்ல நீங்க போய் விட்டு வாங்க என சொன்னவர் தன் பி,ஏ மூலமாக தனக்கு தேவையான டிபன், காபியை ரூம்க்கு வரவழைத்து விட்டு ஏதோ பிசினஸ் விஷயமாக பைல் பார்த்து கொண்டு இருந்தார்…

பொதுவாக கடலில் சில நேரம் சிக்னல் கிடைப்பது கஷ்டம் ஆனாலும் இப்போ உள்ள டெக்னாலஜி காரணமாக கிடைப்பது உண்டு... நடு கடலில் தான் சிக்னல் கிடைக்காது இப்போ தானே கப்பல் நகர ஆரம்பித்து இருந்தது யது நந்தன் அருண் கூட வந்தவன் அங்கே இருந்த மைக் எடுத்து அழகான ஆங்கிலத்தில் பேச தொடங்கினான்.

யது “வெல்கம் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்ஸ் உங்க அனைவரையுமே இந்த ஈகிள் ஷிப்புக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்…நான் கேப்டன் யதுநந்தன் இது கோ கேப்டன் மிஸ்டர் அருண் பிரசாத் உங்க இந்த ஒரு மாத பயணத்தில் இனி உங்க துணைக்கு வர போவது நாங்க தான் உங்களுக்கு என்ன தேவை என்றால் எங்களை நீங்க தொடர்ப்பு கொள்ளலாம்… அதற்காக இன்டர்கம் வசதி உங்க ரூம்மில் இருக்கிறது எந்த செக்சனுக்கு எந்த நம்பர் என்று உங்க இன்டர்கம் பக்கத்தில் நாங்க சுவரில் ஓட்டி வைத்து இருக்கிறோம் அதை விட இந்த ஷிப்போட கேட்லாக் புக் உங்க அனைவரின் ரூம்மில் இருக்கிறது...

அதிலும் இந்த நம்பர் எல்லாம் இருக்கிறது இந்த நாளை இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் உங்க விடுமுறை இனிமையாக ரசித்து இந்த பயணத்தை மேற் கொள்ளுங்கள் என அழகான கூறி முடித்தான்… கை தட்டும் ஒலி கேட்கவும் யது நந்தன் நன்றி சொல்லி விட்டு நிமிர்ந்தவன் கண்டது தேவதை போல வரும் சந்தனாவை தான் அவனையறியாது அவன் கண்கள் அவளை பார்க்க ஆரம்பிக்க அருண் மெல்ல அவன் காதில்.


அருண் “மச்சி அவங்க யாரு தெரிகிறது கிரேட் பிசினஸ் மேன் துவாரகேஷ் குடும்பம் முன்னே ஒரு கிழவி புல் மேக்கப்பில் வருகிறது அவங்க தான் துவாரகேஷ் அம்மா மரகதம்… அவங்க பின்னால் அமைதியாக வருகிறாங்க அது அவர் மனைவி அபிராமி அடுத்து அவர் செல்ல ஆசை மகள் சந்தனா அவர் பையன் நித்திலன்…

இது எல்லாம் நீ கொடுத்த பைலில் இருக்கிறது ஆனா இவங்க சாப்பிடும் சாப்பாடு இருக்கே மை காட் நம்ம ஒரு மாத சம்பளம் இவங்க ஒரு நாள் இல்லை ஒரு வேளை சாப்பாடு டா அவ்வளவு எக்ஸ்பென்சிவ் சாப்பாடு டா…. சும்மாவே கோடீஸ்வரன் பிறகு எப்படி இருப்பார் என சொன்னான்... யது நந்தன் பார்வை சந்தானாவை விட்டு விலகியது அவனுக்கும் பணக்கார ஆளுங்களுக்கும் எட்டாம் பொருத்தம் இது அவனை தெரிந்த எல்லோருக்குமே தெரியும் யது நந்தன் எதுவுமே பேசாது மறு பக்கமாக கிளம்ப அவன் கூட அருணும் பின் தொடர்ந்து போனான்.

துவாரகேஷ் வரவில்லை என்றாலும் கூட தன் கார்ட்ஸை தன் குடும்பத்திற்கு துணையாக அனுப்பி இருந்தார் இவர்களை காண அனைவருமே வரவேற்க மரகதத்திற்கு தான் ஏதோ தன்னை வரவேற்பது போல உணர்ந்தார்….இங்கே உள்ள பாதி பேர் தணிகாசலத்தின் பிசினஸ் பார்ட்னர்கள் அவர்களுக்கு சில விஷயங்கள் தெரியும் ஆனா வெளியே காட்டி கொள்வது இல்லை…

அவர்களை பொருத்த வரைக்கும் தணிகாசலம், துவாரகேஷ் இருவருமே பெரும் புள்ளிங்க தங்கள் பிசினஸ்க்கு தேவை அவர்களுக்கு சந்தானாவை பிடிக்கும் தங்கள் மகன் அ‌ல்லது பேரனுக்கு அவளை பெண்ணு கேட்கலாமா என நினைத்து கொண்டு இருக்க... அவள் கூட தான் பேச துடித்து கொண்டு இருந்தனர் அவள் எங்கே தனியாக வெளியே வருவது இப்படி தான் அவளை பற்றி தெரிந்து கொள்ள முடியும் மரகதம் வேற ஒரு டேபிளில் அருகே போக போனார்.

நித்திலன் “பாட்டி எங்கே அங்கே போகிற அது நம்ம டேபிள் இல்ல வேற ஆளுங்க டேபிள் இதோ அப்பா பெயர் போட்ட டேபிள் இங்கே இருக்கு வா” என அழைத்தான்.

மரகதம் “ எல்லாம் எனக்கு தெரியும் இந்த கப்பல் என் மகனின் நண்பனின் கப்பல் நான் எங்கே இருந்தாலும் யாருமே கேட்க முடியாது” என சொன்னார்.

நித்திலன் “பாட்டி உன் மகனின் மானத்தை நீயே வாங்கி விடாதே முதலில் உண்மையை ஒத்து கொள்ள பழகு உனக்கு இங்கிலீஷ் தெரியாது என்பது எங்களுக்கு தெரியும் அது வெட்கம் இல்லை யாரும் எந்த வயதிலும் எதையுமே படிக்கலாம்... அதற்காக உன் தவறை மறைக்க உன் அதிகாரத்தை காட்டாதே இது பாலா அங்கிள் ஷிப் தான் நம்ம மட்டும் இதில் டிராவில் செய்யவில்லை பாரு எத்தனை பேர் என்று இதில்... நீ இன்னொருத்தருக்கு சொந்தமான இடத்தை பறிக்க நினைத்தால் லட்சக்கணக்கில் பணத்தை கட்டி வருபவங்க விடுவாங்களா கேள்வி கேட்பாங்க நீ முடியாது என மறுப்ப விஷயம் ஷிப் கேப்டன் வரைக்கும் போகும் அவர் அப்பாவிடம் சொல்வார்...

பிறகு அப்பா கிட்ட நீ தான் திட்டு வாங்க வேணும் இது தேவையா உனக்கு என மறைமுகமாக துவாரகேஷ்யை வைத்து மிரட்டி மரகதம் பயந்து போனார் அவருக்கு தெரியும் துவாரகேஷ்யை பொருத்த வரைக்கும் அவர் கெளரவம் எங்குமே குறைய கூடாது... அது குறைய காரணமானவங்களை உயிரோடு விட மாட்டார் தாய் என்பதால் மரகதம் உயிர் தப்பும் ஆனால் திட்டு சரமாரியாக விழும் அதனால் அவர் வெற்றிகரமாக தோல்வியை தழுவி பின் வாங்கினார் ஆனா அதை தெரியாதது போல.

மரகதம் “சரி சரி ரொம்ப லெக்சர் அடிக்காதே உனக்கு வயதிற்கு தகுந்த பேச்சு இல்லை ஏதோ உலக அனுபவம் பெற்றவன் போல பேச்சு எல்லாம் அந்த தணிகாசலத்தை சொல்ல வேணும்... அந்த காயத்திரி போல உன்னை வளர்த்து வைத்து இருக்கிறான் என் அனுபவம் உன் வயது ரொம்ப துள்ளாதே என் மகன் கிட்ட சொன்னேன் என்று வை உன்னை அடித்து பின்னி விடுவான் “என்றார்.

அபிராமி “அத்தை மன்னிக்க வேணும் உங்களுக்கு எங்களை பற்றி பேச தான் உரிமை இருக்கு தணிகாசலம் அப்பாவை பற்றி பேச உரிமை இல்லை... அவர் எவ்வளவு பெரிய மனிதர் அவர் உயரத்தை உங்க மகனால் எத்தனை முயற்ச்சி செய்தாலும் எட்ட முடியாது அவரை போய் பெயரை சொல்லி அவன் இவன் என அழைக்கிறீங்க வேணாம் அத்தை இது சரியல்ல “என்றார்.

மரகதம் “என்ன ரொம்ப பாசமோ இருக்காதா பின்னே ஒன்றுமே வக்கில்லாத உன்னை என் மகனுக்கு கட்டி கொடுத்த மகான் ஆயிற்றே அவருக்கு சப்போர்ட்டாக இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்… இரு நான் இப்போவோ போய் என் பையன் கிட்ட நீ அவனை கேவலப்படுத்தியதை சொல்கிறேன்” என கிளம்பி போக அபிராமி வெறுத்து போய் அவரை பார்த்தார்.

சந்தனா “அம்மா பாட்டி இப்போ போய் அப்பா கிட்ட சொல்ல போகிறது அவர் உன்னை திட்டுவார் மா” என கவலையாக சொன்னார்.

அபிராமி “விடு பாப்பா எனக்கு உங்க அப்பா திட்டு உங்க பாட்டி குத்தல் பேச்சு புதுசா ஆனா நான் எப்போவுமே தணிகாசலம் அப்பாவை விட்டு கொடுக்க மாட்டேன்… அவர் இவங்க சொன்னது போல என்னை சும்மா ஒன்றும் உன் அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவில்லை…. என் பெயரில் சொத்து பத்து பணம் எல்லாம் எழுதி வைத்து தான் கல்யாணம் பண்ணி கொடுத்தார் இது என் மனசை கஷ்டப்படுத்த வேணும் என்றும் வேறு சில விஷயத்தை மனதில் வைத்து பேசும் பேச்சு நீ கவலைபடாதே வா டிபன் சாப்பிட நித்தி நீயும் வாடா “என்றவர் பிள்ளைகளை கவனிக்க ஆரம்பித்தார்.



நிலவு வரும்…






 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் : 07


மரகதம் அபிராமி கூட சண்டை போட்டு விட்டு வந்த இடம் துவாரகேஷின் அறை அவர் ஏதோ பைலில் பிஸியாக இருக்க… துவாரகா என அழைத்து கொண்டு அவர் வர துவாரகேஷ் நிமிர்ந்து பார்க்க.

மரகதம் “துவாரகா உன் பெண்டாட்டிக்கு வந்த ஏத்ததை பாரு டா அந்த தணிகாசலத்தை பற்றி ரொம்ப உயர்வாக பேசி உன்னை மட்டம் தட்டுகிறாள்…அவர் பரம்பரை பணக்காராம் நீ புது பணக்காரனாம் காயத்திரியை நீ ஏமாற்றி கட்டி கொண்டதால் தான் உனக்கு இந்த வாழ்வாம் அந்த தணிகாசலத்தின் முன் நீ நிற்கவே முடியாதாம் என அங்கே சாப்பாடும் இடத்தில் வைத்து பேசி விட்டாள் டா…அதற்கு உன் மகனும் சார்பாக பேசி என்னை கேவலப்படுத்துகிறான் இதை எல்லாம் அங்கே உள்ள ஆளுங்க கேட்டு விட்டாங்க அது எனக்கு மட்டுமல்ல உனக்கும் அவமானம் தானே அவளை ஏன் என்று கேளு டா” என அபிராமி சொல்லாததை எல்லாம் சொன்னார் .

துவாரகேஷ் “அம்மா நீ சொல்ல வேண்டியது இல்லை நான் இப்போ அமைதியாக இருக்க காரணம் வேறு அபிராமிக்கு என்னை விட மாமா மீது தான் பாசம் அதிகம்….நித்திலனுக்கும் அப்படி தான் சந்தனா அவர் சொந்த பேத்தி அப்போ அவள் பாசம் பற்றி கேட்கவா வேணும் நான் இங்கே வந்து இருப்பதன் காரணம் என்ன சுற்றுலாவுக்காக அதை விட பிக் பிசினஸ் டீல் இப்போ அதற்கு அபிராமி, சந்தனா மனநிலை எனக்கு முக்கியம்….அது முடிய எல்லாம் மாறி விடும் நிரந்தரமாக அபிராமி அவள் அப்பா தணிகாசலம் வீட்டுக்கு போய் விடுவாள் இப்போ நீ அவங்க கூட வாய் கொடுக்காமல் கொஞ்சம் அமைதியாக இரு எனக்கு அவரை ஜெயிக்க வேணும்...

என் காதலை பொய் என தூக்கியெறிந்து விட்டு போனாளே காயத்திரி அவள் புருஷன் என்ற நிலையை மாற்றி துவாரகேஷ் மனைவி காயத்திரி என்ற நிலையை வர வேணும் அதற்காக வேலைகளை தான் பார்த்து கொண்டு இருக்கிறேன்…. அதனால் நீ கொஞ்சம் அமைதியாக இரு இதில் ஏதும் குழப்பம் வந்தது என்னை பற்றி தெரியும் தானே என சொல்ல மரகதமும் சரி என தலையாட்டி விட்டு நகர்ந்து போக துவாரகேஷ் தன் வாலட் எடுத்தவர் அதில் அவர் கூட திருமண கோலத்தில் இருந்த காயத்திரியின் புகைபடத்தை பார்த்தவர்.

அவர் “நான் இப்படி மாற காரணம் நீ காயு என்னை என் காதலை நம்பாமல் நீ செய்த வேலை என்னை வெறியாக்கி…. இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது நான் உன்னை உன் அப்பாவை ஜெயிக்க வேணும் அதற்காக நான் என்ன வேணும் என்றாலும் செய்வேன்” என்றான். டீ பிரேக் டைம் நேரம் யது நந்தன், அருண் அவர்களின் கேபினில் இருக்க அவர்களுக்கு அவர்கள் கேட்ட டீ, டிபன் கொண்டு வைத்து விட்டு போனார்கள்…. அவர்களுக்கு சாப்பாடு எல்லாம் பீரி இருந்தும் யது நந்தனும் சரி அருணும் சரியாக வயிற்றில் கண்ட மாதிரி கொட்டி கொள்ள மாட்டார் அருணும் கொஞ்சம் சாப்பாட்டு பிரியன் என்றாலும் கூட அளவாக தான் சாப்பிடுவான் யது நந்தன் ஏலக்காய் டீ ,உப்பு பிஸ்கட் எடுக்க அருண் தான் மாசாலா டீ, வடை, சமோசா என கொண்டு வர சொல்லி சாப்பிட ஆரம்பித்தான்.

அருண் “என்ன இருந்தாலும் கூட நந்து நம்ம கவர்மென்ட் ஷிப்பை விட பிரைவேட் ஷிப்பில் வேலை செய்வதே ஒரு லக் இல்லையா மச்சி…நிறைய பெனிபிட்ஸ் இருக்கிறது நல்ல சாப்பாடு, கை நிறைய சம்பளம் அதை விட இலவசமாக நம்ம நிறைய ஊர் சுற்றி பார்க்கலாம்” என்றான்.

யது நந்தன் “எனக்கு இதில் எந்த பெனிபிட்ம் இருப்பதாக தெரியவில்லை நம்ம உயிரை பணயம் வைத்து செய்யும் சேவைக்கு இது கொஞ்சம் தான் அதை விட நமக்கு பொறுப்புக்கள் அதிகம்…. நம்மை நம்பி இத்தனை உயிர்கள் இருக்கிறது அதை ஜாக்கிரதையாக நம்ம தானே பார்த்து கொள்ள வேணும் சோ நமக்கு தான் ரிஸ்க் அதிகம் அடுத்து சாப்பாடு நமக்கு தனியாகவா சமைக்கிறாங்க விவிஐபிங்களுக்கு சமைப்பதில் ஒரு துளி நமக்கு கிடைக்கிறது…. இதற்காக நம்ம என்ன தனியாக போய் கடையில் சாப்பிடவா முடியும் இது என்ன பஸ், ட்ரெயினா ஓட்டுகிறோம் போய் சாப்பிட்டு விட்டு வர கப்பல். எப்போ காற்று வீசும், மழை வரும் என தெரியாது கரணம் தப்பினால் மரணம் என்ற கதை தான் என சாதாரணமாக” கூறினான்.

அருண் “ உன்னால் மட்டும் தான் டா பெரிய விஷயத்தை கூட சாதாரண பார்க்க முடியும் பெரிய விஷயம் என்றவுடன் நினைவுக்கு வருகிறார்…. துவாரகேஷ் அவருக்கே பத்து கப்பல்கள் தனியாக ஓடுகிறது பிறகு எதற்காக அவர் நண்பரின் கப்பலில் வருகிறாரா ஏதோ இருக்கு டா அதுவும் இவருக்கு வீட்டுயாளுங்க கூட ஒரு நிமிஷம் கூட இருந்து பேச நேரம் இல்லை என்பது ஊர் அறிந்த உண்மை… அப்படி இருக்கும் போது ஒரு மாதம் உல்லாச கப்பல் பயணம் ஏதோ விஷயம் இருக்கு டா என்னவாக இருக்கும்” என ஆர்வமாக கேட்டான் .

யது நந்தன் “உனக்கு இப்போ இது தான் முக்கியமா அந்த துவாரகேஷா உனக்கு சோறு போடுகிறார் உன் வேலை தானே உனக்கு சேறு போடுகிறது…அவர் எதற்கு வந்தால் என்ன நம்ம வேலையா இதை எல்லாம் பார்ப்பது சந்தேகம் வந்தால் மட்டும் தான் நம்ம எதிலும் தலையிட வேணும்…

அதை விட மற்றவங்க பெர்சனல் விஷயத்தில் தலையிட கூடாது இது பேசிக் மேனர்ஸ் மட்டுமல்ல நம்ம மரைன் என்ஜினீயரிங் படிக்கும் போது சொல்லி தந்த பாடம் சாப்பிட்டு விட்டால் வா மற்ற வேலைகளை பார்க்கலாம்…. முதலில் அந்தமானுக்கு தானே ஷிப் லேண்டிங் அந்த மேப்பில் பாரு நான் போய் சீப் என்ஜீனியரை மீட் பண்ணி வருகிறேன் ஷிப் கண்டிஷன் ஓகேவா என கேட்க வேணும் சீக்கிரமாக மேப் கூட வந்து சேரு” என சொல்லி விட்டு போனான்.

அருண் “இவனை கடவுள் எதை கொண்டு செய்தாரோ தெரியாது அனேகமாக இவனை ரோபா செய்ய பயன்படும் மெட்டல் கொண்டு தான் செய்து இருக்க வேணும்….இவனுக்கு தான் எந்த உணர்ச்சியும் இல்ல எனக்கும் இல்லையா அய்யோ கடவுளே இவன் கூட என்னை நட்பு என்ற பெயரில் கோர்த்து விட்டு இருக்க நீயல்லாம் நல்லா இருப்ப”என புலம்பி கொண்டு யது சொன்ன வேலையை பார்க்க போனான் அபிராமி, சந்தனா,நித்திலன் சாப்பிட்டு முடிய.

நித்திலன் “அம்மா வாங்க நம்ம போய் ஷிப்பை சுற்றி பார்த்து விட்டு வரலாம்… அது தான் பாட்டி போய் விட்டாங்க அவங்க இருந்தால் தானே ப்ராப்ளம் வரும்” என சொன்னான்.

அபிராமி “போகலாம் கண்ணா ஆனா நமக்கு இந்த இடம் தெரியாதே போய் வேறு எதிலுமே மாட்டி கொள்ள கூடாது அக்கா வேற இருக்கிறாள்…உன் அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார் நம்ம அப்பா கிட்ட சொல்லி விட்டு சுற்றி பார்க்கலாம் இது வேற கோபுரம் போல மாடிகளை கொண்டு இருக்கு” என சொன்னான்.

சந்தனா “நித்து அம்மா சொல்வது தான் சரி டா நம்ம அப்பா கிட்ட பெர்மிஷன் எடுத்து விட்டு சுற்றி பார்க்கலாமா” என்றாள்.

நித்திலன் “என்ன அக்கா நீ அம்மா தான் புரியாமல் பேசுகிறாங்க என்றால் நீயுமா கொஞ்சம் நீ உன்னை முதலில் மாற்றி கொள்ளு எதற்கெடுத்தாலும் அப்பா கிட்ட சின்ன பசங்க போல கேட்டு கொண்டு… கேட்க வேண்டியதை தான் கேட்க வேணும் முதலில் நம்ம சொல்வதை காது கொடுத்து கேட்க அவருக்கு டைம் இருக்குமா என்று கூட தெரியாது நம்ம என்ன பாரினுக்கா வந்து இருக்கிறோம்...

தனியாக சுற்றி பார்க்க இது ஷிப் எங்கே போய் சுற்றினாலும் கடைசியில் நம்ம நிற்கும் இடத்திற்கு வர வேணும்… நான்கு சுவரை தான் நம்ம சுற்றி சுற்றி வர வேணும் இங்கு எதற்காக நம்மை அப்பா அழைத்து வந்தார் சம்மர் வெக்கேஷன் போகலாமா என்று நானும் அக்காவும் அவரிடம் கேட்கவே இல்லையே….நாங்க பிளான் பண்ணி இருந்தது தாத்தாவை போய் பார்க்க அதற்கு ஒரு ஆப்பு வைத்து இங்கே அழைத்து வந்து விட்டார் சோ இங்கே நாங்க எங்க இஷ்டபடியே தான் இருப்போம்.

நான் என்றாலும் கூட ஸ்கூல், டியூசன், கிரிகெட் பிராக்டிஸ் என போய் வருகிறேன் ஆனா நீயும் அக்காவும் அந்த வீட்டுக்குள்ளே தான் இருக்கிறீங்க….நீங்க வெளியே போய் வருவது என்றால் கோவிலுக்கு மட்டும் தான் அப்பா உங்களை தனியாக வெளியே அனுப்ப நினைத்தால் கூட பாட்டி அதற்கு தடையாக வந்து விடுவாங்க நீங்க எங்கே தாத்தாவை பார்க்க அக்காவை அழைத்து போய் விடுவீங்க என்று ….ஏன் மா அக்காவை மட்டும் அப்பா எங்கேயும் அனுப்ப மாட்டேன் என்கிறார் தாத்தா கூட சண்டை சரி அதை விடுங்க ஆனா வெளியே கூட அனுப்ப மாட்டேன் என்று இருக்கிறார் அப்படி என்ன தப்பு மா அக்கா செய்தாங்க” என கேட்க சந்தானா கண்களிலும் அந்த கேள்வி தொக்கி நின்றது.

அபிராமி “நித்தி சில விஷயங்களை உங்க இரண்டு பேருக்குமே இப்போ சொன்னால் புரியாது ஒன்று மட்டும் சொல்வேன் உங்க அக்கா உங்க அப்பாவின் அதிர்ஷ்ட தேவதை…. அது போல தான் காயத்திரி என் நண்பி உன் பெரியம்மா அவளால் தான் இன்று உங்க அப்பா ஊர் உலகம் தெரிந்த மனிதராக இருக்கிறார் ஆனா அவருக்கு அதை எல்லாம் விட அவரின் சுயநலம் தான் முக்கியமாக இப்போ வரைக்கும் இருக்கிறது….

அதை விட ஈகோ அது தான் அவரை பேயாக ஆட்டி படைக்கிறது இது இரண்டையுமே அவர் இப்போ விடுவதாக இல்லை…அதை பற்றி பேசினால் கூட உங்களுக்கு புரியாது பா சரி என் பசங்க சந்தோஷம் தான் முக்கியம் அம்மா வரவில்லை நீங்க இரண்டு பேருமே சுற்றி பார்த்து விட்டு வாங்க …நித்தி அக்கா ஜாக்கிரதை கண்ணா உங்க கூட கார்ட்ஸ் வருவாங்க நம்ம தளத்தை தவிர வேறு எங்குமே போக வேணாம்… பாப்பா நீ தம்பி கூடவே இரு தனியாக போகாதே என சொல்ல நித்திலன் எங்கே அதை எல்லாம் கேட்டான் சரி சரி என தாயிடம் தலையாட்டி விட்டு தமக்கை கையை பிடித்து இழுத்து கொண்டு சுற்றி பார்க்க கிளம்ப அபிராமி அவர்கள் வரும் வரைக்கும் அங்கயே காத்திருந்தார்.



நிலவு வரும்…
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer


அத்தியாயம் :08




நித்திலன் சந்தனாவை அழைத்து கொண்டு கப்பலை சுற்றி பார்க்க கிளம்ப கூடவே துவாரகேஷ் கட்டளைப்படி இரண்டு கார்ட்ஸ் கூடவே வந்தார்கள்….நித்திலனுக்கு எப்போவுமே இது பிடிக்காது இது பற்றி துவாரகேஷிடம் கூட சொல்லி இருக்கிறான் அவர் இது அவசியம் நீ நான் சொல்வதை கேளு என கண்டிப்பாக சொல்லி விட அவனுக்கு கோபம் முழுவது‌ம் மரகதம் மேலே திரும்பியது… காரணம் அவர்கள் எங்கே போகிறார்கள் தணிகாசலத்தை பார்க்க போகிறார்களா என கண்காணிக்கவே முக்கியமாக இந்த காவல் நல்ல காலம் அவன் படிக்கும் ஸ்கூலுக்கு கார்ட்ஸ் அனுப்பி வைத்து இருப்பார் அங்கே அனுமதி இல்லை ஸ்கூல் கேட்டுக்கு வெளியே தான் நிற்க வேணும்…அங்கே படிக்கும் பசங்க எல்லாம் விவிஐபி பசங்க அதனால் துவாரகேஷ் அங்கே காவல் தேவை இல்லை என நிறுத்தி விட்டார்.






நித்திலன் தமக்கை கையை பற்றி கொண்டு முதலில் வந்து நின்ற இடம் கப்பலின் விளிம்பில் இப்போது மதியம் நேரம் என்பதால் கொஞ்சம் சூடாக தான் இருந்தது… ஆனாலும் கடல் நீலநிறத்தில் களங்கம் இல்லாமல் பார்க்கும் போது அழகாக இருந்தது சந்தனாவுக்கு இது எல்லாம் ரொம்ப பிடிக்கும் அவள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவள். சந்தனா





“ரொம்ப அழகாக இருக்கு இல்லையா நிது இப்போ தான் எனக்கு மூச்சு விட சந்தோஷமாக இருக்கிறது…அம்மாவையும் அழைத்து வந்து இருக்கலாம் டா பாவம் அவங்க என்னை போலவே மூச்சி முட்டி போய் இருந்தாங்க ஆனா அவங்க வர மாட்டேன் என சொல்லி விட்டாங்க” என. நித்திலன்




“இல்ல தெரியாமல் கேட்கிறேன் உனக்கு ஏன் மூச்சு முட்ட வேணும் நீ என்ன அடிமையா அது உன் வீடு அக்கா…உனக்கு சர்வ சுதந்திரமும் இருக்கிறது ஆனால் நீ தான் அதை பயன்படுத்த தெரியாமல் இருக்கிற தாத்தா எத்தனை தடவை பெரியம்மாவின் தைரியம் பற்றி நம்ம கிட்ட சொல்லி இருக்கிறார்…அவங்க தனியாக எத்தனை ஆபிஸ் ரன் பண்ணி இருக்கிறாங்க ஆனா நீ ஏன் அக்கா இப்படி இருக்க உனக்கு பிடித்த படிப்பை கூட படிக்காமல் நீ தாத்தா அழைத்த போது போய் இருக்கலாம் அப்போ உன் கூட நானும் அம்மாவும் வந்து இருப்போம்” என சொல்ல சந்தனா மென்மையாக சிரித்தவள் .அவள்






“ நம்மை அவ்வளவு ஈசியாக அப்பா போக விடுவார் என நினைக்கிறாயா நிது விடவே மாட்டார் தாத்தா கூட தான் சண்டை போடுவார்… பாவம் தாத்தா அவருக்கு இப்போ எல்லாம் அடி‌க்கடி உடம்புக்கு முடியாமல் போவதாக மூர்த்தி தாத்தா கூட சொன்னார் தானே ….நான் தாத்தா கூட போக போவதாக சொன்னால் அதற்கும் அம்மாவுக்கு தான் திட்டு விழும்…அதை விட எனக்கு அம்மாவை, உன்னை விட்டு போக முடியுமா டா தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவரை எப்படியும் அப்பா, பாட்டி தெரியாமல் போய் பார்த்து விட்டு வந்து விடலாம்…ஆனா நான் தாத்தா கூட போனால் உன்னை அம்மாவை கடைசி வரைக்கும் பார்க்க முடியாது டா என்னால் உங்களை விட்டு பிரிந்து இருக்க முடியாது அதனால் தான் தாத்தா அழைத்த போது வர போக தயங்கினேன்….தாத்தாவுக்கும் அது புரிந்ததால் தான் அதற்கு பிறகு என் கிட்ட ஏதுவுமே கேட்கவில்லை நம்மை அவர் வந்து பார்த்து விட்டு போவார்” என சொல்லும் தமக்கையை நித்திலன் கட்டி கொண்டான்.






நித்திலன் சொன்னது போல அந்த பெரிய கப்பலை ஒரு நாளில் சுற்றி பார்க்க முடியாது அது மட்டுமல்ல அவர்கள் கூட கார்ட்ஸ் வருவது ஒரு மாதிரி அன் ஈஸியாக இருந்தது அங்கே வந்து இருப்பவர்கள் எல்லாம் விவிஐபிங்க தான்… அவர்களுக்கு இது பல நாள் பழக்கம் வயதாவர்கள் வேற இவர்கள் அப்படியல்ல இளைய தலைமுறை…. கொஞ்சம் சுற்றி பார்த்து விட்டு மதியம் சாப்பாட்டு நேர அறிவிப்பு வர இவர்கள் வர அபிராமி அங்கே சிலர் பெண்கள் கூட பேசி கொண்டு இருந்தாள் அவர்கள் அனைவருமே காயத்திரியின் பிசினஸ் நட்பு வட்டம் காயத்திரி அபிராமியையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்ததால் அவர்களை தெரியும் என்பதால் பேசி கொண்டு இருக்க இவர்கள் வர. அபிராமி





“என்ன பா சுற்றி பார்த்து விட்டீங்களா என்ன பாப்பா முகம் வாடி கிடக்கிறது இதற்கு தான் சொன்னேன்…மதியம் வெயில் போக வேணாம் பிறகு போகலாம் என்று நித்திலா நீ கேட்டாயா பாரு இப்போ வா பாப்பா சாப்பிட நீ பசி தாங்க மாட்ட” என சொல்ல பேசி கொண்டு இருந்த. ஒரு பெண்





“அபிராமி நம்ம சந்தனாவா இது வளர்ந்து விட்டாளே ரொம்ப அழகாக இருக்கிறாள் காயத்திரி ஜாடை தான்….ஆனால் அவள் கம்பீரம் இல்லை அது உன் மகனிடம் இருப்பதாக தான் தணிகாசலம் அங்கிள் ஒரு தடவை இவங்களை பற்றி கேட்ட போது சொன்னார்….என் பேரன் தான் என் காயத்திரி வாரிசு அவன் தான் என் பிசினஸ்க்கு ராஜா என ரொம்ப பெருமையாக சொன்னார்…எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது சொந்த பேத்தி இருக்கும் போது இவர் இப்படி பேசுவது ஆனா உன் அன்பை குறை சொல்ல முடியுமா நாக்கு அழுகி விடும்" என சொல்ல. மற்ற பெண்





“உண்மை தான் மாதவி காயாவும் அபிராமி தோழிகள் அல்ல அக்கா, தங்கை அபியும் அப்படி தானே நடந்து கொண்டாள்…சரி அபி சந்தனாவுக்கு இப்போ வயது என்ன ஒரு பத்தொன்பது இருக்குமா” என கேட்க. அபிராமி




“ இல்ல புவனா பாப்பாவுக்கு இருபது வயது ஆகிறது எதற்காக கேட்கிற” என கேட்க. புவனா




“இல்ல டி கல்யாண வயது வந்து விட்டது தானே இப்போ உள்ள ஆண்கள், பெண்கள் எங்கே முப்பது வயதுக்கு பிறகு தான் நாங்க மேரேஜ் லைவ் பற்றி யோசிப்போம் அது வரைக்கும் எங்க வேலை, பதவி உயர்வு இருக்கு… அது மட்டும் தான் எங்க நோக்கம் என சொல்லி விடுகிறாங்க…இவள் எப்படி காயா போலா இல்ல நீ வளர்த்ததால் உன்னை போல வா” என கேட்க. அபிராமி பெருமையாக




“ என் பாப்பா என்னை போல தான் ரொம்ப நிதானமானவள் சொல் பேச்சு கேட்பாள் அமைதியானவள்…அதற்கு இருக்கிறான் இவன் கேட்கவே வேணாம் காயு போல தான் என் பெண்ணுக்கு வருபவன் பெரிதாக காசு பணம் உள்ளவனாக தேவையில்ல…என் பெண்ணை கடைசி வரைக்கும் கண் கலங்காமல் பார்த்தால் போதும்….எங்க கிட்ட இருக்கும் பணம் எல்லாம் இவளுக்கு தானே” என. மாதவி





“அது எப்படி இவள் காயா பெண்ணு மட்டுமல்ல துவாரகேஷ் அண்ணன் பெண்ணும் கூட அவரை பற்றி ஊர் மட்டுமல்ல உலகுக்கு கூட தெரியும்… ரொம்ப ஸ்டேட்டஸ் பார்ப்பார் என்று அப்படி இருக்கும் போது தன் மகளை சாதாரணமாக ஒருவனுக்கு கட்டி கொடுப்பாரா என் பையன் குணால் உனக்கு தெரியும் தானே அவனுக்கு இவளை என் புருஷன் பெண் கேட்டு இருக்கிறார் போல அதற்கு துவாரகேஷ் அண்ணன் ஒரு மாதிரியாக பேசி விட்டார் போல…..அவர் வீட்டுக்கு வந்து தாம் தூம் என குதித்தார் இவன் என்ன பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவனா காயத்திரியால் தான் இந்த வாழ்வு இனி இவன் சகவாசம் வேணாம் நான் நேராக தணிகாசலம் அங்கிள் கூட பேசுகிறேன் என சத்தம் போட்டார்….நான் தான் உன் கிட்ட பேசுவதாக சொன்னேன் அபி இப்போ கேட்கிறேன் என் பையனுக்கு உன் பெண்ணை தருகிறாயா” என கேட்க. அபிராமி




“ஏய் இதை விட சந்தோஷம் என்ன டி இருக்க போகிறது குணால் ரொம்ப நல்ல பையன் திறமையானவன்…உன் புருஷன் ரூபன் அண்ணா கூட காயுவுக்கு தூரத்து சொந்தம் நீ என்றால் நான் கொஞ்சம் நிம்மதியாக இருப்பேன்….எங்க நண்பி நீ என் பெண்ணு சந்தோஷமாக உன் வீட்டில் வாழுவாள் அவளுக்கு உன் வீட்டில் சுதந்திரம் இருக்கும் இது பற்றி நீ தணிகாசலம் அப்பா கிட்ட பேசு டி” என சொல்ல .“அந்த ஆள் கிட்ட கேட்க முன் என் பையன் சம்மதம் வேணும்” என சொல்லி கொண்டு வந்தார் மரகதம் கூடவே அவர் அல்லக்கை பெண்மணி ஒருவர் கூடவே வந்தார் மரகதம் வயது தான் இவருக்கும் இருக்கும் அவர் மதியம் சாப்பிட வரும் போது தான் இவர்கள் கூட்டமாக இருந்து பேசுவது கேட்டது. மரகதம்




“அவர் கிட்ட கேட்க முன் மாதவி நீயும் உன் புருஷனும் என் பையன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்க வேணும்…அவன் தான் சந்தானாவை பெத்தவன் இல்ல நீ என் கிட்ட பேசி இருக்க வேணும் அதை விட்டு இதற்காக நீ இவள் கிட்ட சம்மதம் கேட்கிற” என. புவனா




“ என்ன மரகதம் ஆன்ட்டி பேசுகிறீங்க அபிராமி சந்தனாவின் அம்மா அவளிடம் தானே முதலில் பேச வேணும் அவள் பிறகு துவாரகேஷ் அண்ணாவிடம் பேசுவாள்”என.மரகதம்





“இங்கே பாரு இவள் என் பேத்தி,பேரன் விஷயத்தில் அப்படி முடிவு எடுக்க முடியாது அதுவும் சந்தனா விஷயத்தில் என் மகன் தான் முடிவு எடுக்க வேணும்…நாங்க எங்க ஸ்டேட்டஸ்க்கு உங்க கூட எல்லாம் நாங்க சம்பந்தம் வைத்து கொள்ளுவது எங்க தகுதிக்கு கேவலமாக இருக்கும் என் மகனுக்கு சம்பந்தியாக வர ஒரு தகுதி இருக்க வேணும் நாங்க எங்கே நீங்க எங்கே இதை எல்லாம் யோசித்து பெண்ணு கேட்க வேணாமா….இவளுக்கு தான் அறிவு இல்லை ஏன் என் மகனை கட்டிக்க கூட தகுதி இல்லை இவளை என் மகன் தலையில் கட்டி விட்டார் அந்த பெரிய மனிதர் அது தான் இவள் தகுதிக்கு குறைவான ஆளுங்க கூட சம்பந்தம் பேசுகிறாள்” என சொல்ல அங்கே இருந்தவர்கள் முகம் மாறியது. மாதவி




“மரகதம் ஆன்டி பார்த்து பேசுங்க நீங்க யாரிடம் பேசுகிறீங்க என தெரிகிறதா நாங்க பிறப்பாலே பணக்காரங்க …ஆனால் நீங்க யாரு தெரியுமா சாதாரண மிடில் கிளாஸ் ஆளுங்க ஸாரி ,ஸாரி அது கூட இல்லை அதற்கும் கீழே இன்னும் சொல்ல போனால் லோ கிளாஸ் பீப்பிள்ஸ்… நீங்க சொன்ன வாழ்வு உங்களுக்கு வர யாரு காரணம் தெரியுமா காயத்திரியும் தணிகாசலம் அங்கிளும் தான் அவங்க பணத்தை ,செல்வாக்கை முதலீடாக வைத்து தான் உங்க மகன் இந்த நிலைக்கு வந்தார்…அதை மறந்து விட்டு நீங்க ரொம்ப தான் ஆடுகிறீங்க பார்த்து கீழே விழந்தால் தூக்கி விட கூட ஆள் இருக்க மாட்டாங்க… சந்தனாவை பெண்ணு கேட்டு வருவது கூட தணிகாசலம் பேத்தி ,காயத்திரி பெண்ணு என்பதற்காக மட்டும் தான் என கொடுத்து கட்ட மரகதம் முகம் அவமானத்தில் மாற அவர் அவர்களை முறைத்து விட்டு போனார்.





நிலவு வரும்….🌙













 

T 24

Well-known member
Staff member
Wonderland writer



அத்தியாயம்: 09




மாதவி, புவனா இருவருமே மரகதத்திற்கு நன்றாக கொடுத்து கட்ட அவர் கோபித்து கொண்டு போய் விட. புவனா




“மன்னித்து விடு அபிராமி உன் மாமியார், புருஷனை நாங்க இப்படி பேசியதற்கு எங்களால் அவங்க பேசியதை கேட்டு கொண்டு இருக்க முடியவில்லை…காயத்திரிக்கு அறிவு எங்கே போனதோ தெரியாது எப்படிப்பட்ட பெண் அவள் போயும் போய் இப்படிப்பட்ட குடும்பத்திலா அவள் வாழ்க்கைபட வேணும் புருஷன் மட்டும் நன்றாக இருந்தால் சரியா நல்ல மாமியார் அமைய வேணும் என சொல்வது அத்தனையும் உண்மை..அந்த விதத்தில் நாங்க பரவாயில்ல நீயும், காயத்திரியும் தான் பாவம் “என. அபிராமி




“இதில் நீயும் மாதவியும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை புவனா என் மாமியார் பேசியது தான் அநாகரீகம்…இவங்க முன் இப்படி இல்லை பணம் வர தான் இப்படி இவங்களை விடு இத்தனை வருடத்தில் எனக்கு இந்த பேச்சு பழகி விட்டது சந்தனா அப்பா கூட இப்படி பேச மாட்டார் இவங்க காயத்திரி கிட்ட வம்பு வைத்து கொள்ள மாட்டாங்க அவள் சட்டென தப்பு என்றால் பேசி விடுவாள்… என்னால் முடியாது என்று இல்லை சில காரணங்களுக்காக அமைதியாக இருக்கிறேன்… என் பெண்ணு வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் அதற்காக நான் எதையுமே செய்வேன் இந்த டிரிப் முடிய நீ தணிகாசலம் அப்பா கிட்ட அண்ணாவை அழைத்து கொண்டு போய் பேசு அவர் மற்றதை பார்த்து கொள்வார் என்றாள்.





மரகதத்திற்கு புவனா, மாதவி அனைவருமே இருக்கும் போது பேசியது அவமானமாக இருந்தது…அதனால் வழமை போல துவாரகேஷிடம் வந்து அங்கே நடந்ததை ஒன்றுக்கு இரண்டாக சொல்ல துவாரகேஷ் தான் பார்த்து கொள்வதாக கூறினார் கப்பலில் பயணம் செய்பவர்களை மகிழ்விக்க இசை குழு என்று எப்போவுமே வருகை தரும் அதுவும் லக்சரி ஷிப் கேட்க வேணுமா சகலதும் இருந்தது… அந்த இசை குழுவுக்கே லட்சங்களில் பேமண்ட் பாலா கொடுத்தார் இந்த குழு தான் பாலாவின் கப்பலில் நிரந்தரமாக இருக்கும் இசை குழு… இவர்கள் பொதுவாக அங்கே நடக்கும் கெட்டு கெதர் போது சாப்பிடும் போது சில நேரங்களில் அங்கே உள்ளவர்களின் திருமண நாள், பிறந்த நாள் வரும் போது அவர்கள் விரும்பி கேட்ட பாடல்களை பாடுவார்கள் அன்றும் அது போல நைட் டின்னரின் போது பாடி கொண்டு இருக்க துவாரகேஷ் வந்தார்…அவரை கண்ட பலர் அவரோடு பேச முயற்சிக்க அவர் தனக்கு சரி சமமாக உள்ளவர்களோடு மட்டும் தான் பேசினார் .….அவரை பற்றி தெரிந்த மற்றவர்களுக்கு இது பழக்கம் என்பதால் அவர்களும் அவரிடம் நெருங்காமல் இருக்க துவாரகேஷ் பி,ஏ அங்கே உள்ள இசை குழுவிடம் மைக் வாங்கி கொண்டு அவரிடம் கொடுக்க துவாரகேஷ் அதை வாங்கியவர் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். துவாரகேஷ்




“லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்னை பற்றி அறிமுகம் உங்களுக்கு தேவையில்ல என நினைக்கிறேன்…பட் இருந்தாலும் கூட என்னை தெரியாதவர்கள் இங்கே இருக்கிறார்கள் so let me introduce myself ( என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்) ஐ யம் துவாரகேஷ் பிசினஸ் மேன் பிசினஸ் உலகில் என்னை முடி சூடா ராஜா என சொல்வாங்க…இதை தான் தற்பெருமைக்காக சொல்லவில்லை உண்மையை சொல்கிறேன் இதை சொல்ல நான் ஏன் தயங்க வேணும்…யஸ் நான் சிலரை போல வியாபார குடும்பத்தில் இருந்து பிறக்கவில்லை அது போல என் முதல் மனைவி காயத்திரி துவாரகேஷ் அவளின் பணத்தை கொண்டும் நான் மேலே எழுந்து வரவில்ல… அவள் தந்த முதலீடு ரொம்ப சிறியது அதை நான் இப்போ சில மடங்காக அல்ல பல மடங்காக உயர்த்தி உள்ளேன்….இப்போ இதை சொல்ல வந்த காரணம் என்னை பற்றி பலருக்கு இருக்கும் எண்ணம் அதை நான் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை பட் சொல்ல வேணும் என நினைத்தேன் சொல்லி விட்டேன்… அண்ட் இங்கே வந்த பலருக்கு ஒரு கேள்வி எழலாம் பத்து கப்பலுக்கு சொந்தகாரன் எதற்காக அவன் நண்பனின் கப்பலின் குடும்பத்தோடு பயணபட வேணும் என்று…அதற்கு காரணம் பல இருக்கிறது அதை விரைவில் நீங்க அந்தமான் தீவில் பார்க்கலாம் என சொல்லி விட்டு தன் டேபிளில் வந்து அமர மரகத்திற்கு அவன் என்ன பேசினான் என புரியவில்லை ஆனா அபிராமி துவாரகேஷ்யை யோசனையாக பார்த்தார்.





அருண் வந்து யது நந்தனிடம் துவாரகேஷ் பேசியதை பற்றி பெருமையாக பேசியவன்… அவர் ஏதோ அந்தமானில் சப்பிரைஸ் வைத்து இருப்பதாக சொல்ல. யது நந்தன்




“சோ நீ வந்த வேலையை விட்டு மற்ற எல்லாம் பார்க்கிற உண்மையை சொல்ல போனால் எனக்கு பெரிதாக அவர் மேலே எந்த மரியாதையும் இல்லை…காரணம் எவன் ஒருவன் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறானோ அவன் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பயன் அல்ல எனக்கு இவரை பற்றி ஒரளவு தெரியும்…மனைவி மூலமாக எல்லாம் பெற்று உயரத்திற்கு வந்து விட்டு இப்போ ஏதோ அவர் சுயம்புவாக வந்தது போல பேசுகிறார் இப்போ கூட ஏதோ பிசினஸ் விஷயமாக தான் வந்து இருப்பதாக எனக்கு தெரிகிறது…சரி அதை விடு நம்ம முதல் லாண்டிங் அந்தமான் தானே அதை எல்லாம் சரி பார்த்து விட்டாயா எந்த தப்பும் நடக்க கூடாது என யது நந்தன் சொன்னான்.





துவாரகேஷ் அவர் அருகே மரகதம் இருக்க மரகதம் அருகே அபிராமி அதற்கு பக்கத்தில் சந்தானா, நித்திலன் இருந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்… துவாரகேஷின் மறைமுகமான பேச்சு அங்கே உள்ள அனைவருக்குமே புரிந்தது அவர்களுக்கு மதியம் நடந்த பிரச்சனை தெரியும் புவனா, மாதவியின் பேச்சு சரி தான் என்பது அவர்களின் எண்ணம் அதை வெளியே காட்டி கொள்ளவில்லை உள்ளுக்குள்ளே சரியான ப‌திலடி என நினைத்தார்கள்…அவர்களுக்கும் துவாரகேஷ் நடந்து கொள்ளும் விதம் பிடிக்காது அவர்கள் பலர் பரம்பரை பணக்கார்கள் சிலர் சொந்த உழைப்பால் உயர்ந்தவர்கள் துவாரகேஷ் பேச்சு, நடந்தை அவர்களை மட்டம் தட்டுவது போல இருக்கு ஆனா என்ன செய்வது… அவன் தான் பல கோடிகளில் வியாபார ஓப்பந்தம் போடும் ஆள் ஆயிற்றே அதனால் அவர்கள் பேசாமல் பெண்ணுங்க பேசும் போது அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார்கள்… சந்தனா பொதுவாக தந்தை இருக்கும் போது பெரிதாக பேச மாட்டாள் நித்திலன் தான் தனக்கு மட்டுமல்ல தமக்கைக்கும் சேர்த்து பேசுவான் துவாரகேஷ் வழமையான தந்தை போல புள்ளைங்களை தூக்கி கெஞ்சும் ரகம் அல்ல தேவையான பணம், வசதி இருக்கு அதை தாராளமாக அனுபவித்து கொள் இதை எல்லாம் பார்த்து கொள்ள தானே தாய் இருக்கிறாள் என்ற எண்ணம் பிறகு எப்படி தந்தை என்ற பாசம் வரும் அமைதியாக அவர்கள் சாப்பிட்டு கொண்டு இருக்க. துவாரகேஷ்





“ அபிராமி நான் விலையுயர்ந்த டிரஸ், நகைகள் எல்லாம் எடுத்து வர சொன்னேன் உனக்கு நினைவு இருக்கிறதா…எடுத்து வந்தாயா எல்லாம் புதுசு தானே” என கேட்க. அபிராமி




“ எல்லாம் எடுத்து வந்து உள்ளேன் சந்தனா அப்பா இது எதற்கு என தெரிந்து கொள்ளலாமா…பொதுவாக இப்படி பயணத்தின் போது விலையுயர்ந்த டிரஸ், நகைகள் கொண்டு வந்தால் ஆபத்தாக முடியும் அது தான் கேட்கிறேன்” என .துவாரகேஷ்





“அது உனக்கு தெரியும் போது தெரியட்டும் இது என் நண்பனின் கப்பல் கூடவே இந்த கப்பலை சுற்றி என் கார்ட்ஸ் நிற்கிறாங்க… பிறகு என்ன நீ நான் சொன்னதை மட்டும் கேட்டால் போதும்” என. நித்திலன்




“ என்ன பா இது அம்மா சாதாரணமாக தானே கேட்டாங்க அதற்கு போய் இப்படியா பேசுவது” என சொல்ல. துவாரகேஷ்





“ நித்திலன் என் கிட்ட கேள்வி கேட்கும் அதிகாரத்தை என்னை பெத்த உன் பாட்டிக்கு கூட நான் கொடுக்கவில்லை…நீ என் கிட்ட கேள்வி கேட்கிற இது எல்லாம் என்ன பழக்கம் இந்த டிரிப் முடிந்து சென்னைக்கு போனவுடனே…. உன்னை லண்டன் போர்டிங் ஸ்கூலில் போட போகிறேன் அப்போ தான் உனக்கு மேனர்ஸ் என்றால் என்ன என தெரியும்” என. மரகதம்




“ அப்படி சொல்லு தம்பி எப்போ பாரு பதிலுக்கு பதில் பேசி கொண்டு எல்லாம் இவள் அப்பனை சொல்ல வேணும்…தன் மகள், பேத்தியை தன் கிட்ட இருந்து பிரித்து விட்ட என்ற கோபத்தில் இவனை இப்படி தூண்டி விடுகிறார்…. எல்லாம் அவர் வேலை தம்பி என நித்திலன் மரகத்தை முறைத்து பார்த்தான் சாப்பிட்டு முடிய துவாரகேஷ் தனக்கு வேலை இருக்கிறது சீக்கிரமாக தூங்க போங்கள் என சொல்லி விட்டு தன் அறைக்கு போக… மரகதம் அவன் போனவுடனே அங்கே சாப்பிட்டுக்கு பிறகு பரிமாற படும் dessert வகைகளை எல்லாம் ஒரு கை பார்த்து கொண்டு இருக்க அபிராமி என்ன இருந்தாலும் அத்தை ஆயிற்றே என்று வயதான காலத்தில் அதிக இனிப்பு எடுக்க வேணாம் என சொல்ல… அதற்கும் அவளை திட்டி விட்டு உன் அப்பன் வீட்டு காசா செலவு போகிறது என் மகன் சம்பாத்தியம் என சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பிக்க. நித்திலன்





“அம்மா உங்களுக்கு இது தேவையா அவங்க இப்படி தான் பேசுவாங்க என தெரியும் தானே நீங்க பேசாமல் அக்கா ரூம்மில் போய் ரெஸ்ட் எடுங்க….அக்காவுக்கு நைட் டைம்மில் வானத்தை பார்க்க ரொம்ப பிடிக்கும் அவளை அழைத்து போய் வருகிறேன் அக்கா வா” என சந்தனா கையை பற்ற. அபிராமி




“தம்பி வேணாம் டா ராத்திரி நேரம் பொம்பள புள்ளையை தனியாக அதுவும் தெரியாத இடத்தில் அழைத்து போக வேணாம் பிறகு உங்க அப்பாவுக்கு மட்டுமல்ல உங்க தாத்தாவுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது…இது பெரிய கப்பல் வேற எங்கே என போய் தேடுவது காலையில் போய் சுற்றி பாரு “என. நித்திலன்




“என்ன மா நீங்க எந்த காலத்தில் இருக்கிறீங்க நைட், மார்னிங் என்று சொல்லி கொண்டு இப்படியே நீங்களும் அக்காவை ஒன்றும் தெரியாத பெண்ணாக வளர்க்க போகிறீங்களா…போய் பாருங்க பெண்ணுங்க எப்படி சாதித்து கொண்டு இருக்கிறாங்க என்று அதற்கு இரவு பகல் தேவையில்ல தைரியம் தான் தேவை நான் மிட் நைட்டில் சுற்ற சொல்லவில்லை இப்போ மணி என்ன ஒன்பது தானே ஆகிறது போய் விட்டு வருகிறோம்… அக்காவை கவனமாக அழைத்து வருவது என் பொறுப்பு நீங்க மரகதம் கிட்ட வாய் கொடுக்காமல் தூங்க போங்க அக்கா வா என சந்தனா கையை பற்றி அழைத்து கொண்டு போக அங்கே யது நந்தன் நின்று கடலை ரசித்து கொண்டு இருந்தான்.






நிலவு வரும்….🌙



 
Status
Not open for further replies.
Top