ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம் :15



அந்தமான் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது இரண்டு தீவு கூட்டங்களை கொண்டது அவை அந்தமான், நிகோபர் தீவுகள் இதன் தலைநகர் போர்ட் பிளேர் ஆகும்… இங்கு பல மதத்தவர்கள் வாழ்கின்றனர் இங்கு ஆட்சி மொழி ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், வங்காளம், ஜாரவா, செண்டினல், சாம்பென், ஒன்கே அதை விட அந்தமான் பழங்குடியினரால் பேச படும் எழுத்து வழக்கு இல்லாத மொழி உள்ளது.




இங்கு சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் ஹேவ்லாக் தீவு, போர்ட் பிளேர், செல்லுலார் சிறை,பரதாங் தீவு ,சாமுத்திரிகா கடல் அருங்காட்சியகம், ராதாபுரம் கடற்கரை, மானுடவியல் அருங்காட்சியகம், ரோஸ், ஸ்மித் தீவு இப்படி பல உள்ளது… ஈகிள் ஷிப் அந்தமான் தீவை வந்து அடைந்தது சுற்றலா பயணம் மேற்கொள்ள சிறந்த இடங்களில் அந்தமான் தீவும் ஒன்றாகும் அதனால் ஈகிள் ஒரு ஷிப் தன் ஒரு மாத பயணத்தில் அந்தமான் தீவையும் தேர்ந்தெடுத்து இருந்தது கப்பல் அந்தமான் தீவை நெருங்க அருண் அறிவிப்பு செய்தான்… இங்கே நான்கு நாள் தங்குவதாக ஏற்பாடு செய்து உள்ளது நிர்வாகம் அதற்கு ஏற்றது போல உடைகள் உங்க முக்கிய தேவையான பொருட்களை எடுத்து கொண்டு வாருங்கள் மற்றது எல்லாம் கப்பலில் உள்ள உங்க ரூம் லாக்கரில் வைத்து பூட்டுங்கள்…. இங்கே உள்ள பாதுகாப்பு அங்கே இருக்குமா என தெரியாது காரணம் பல தரப்பட்ட மக்கள் வந்து போகும் இடம் சுற்றி வர பெரும்பாலும் கடற்கரை வழி பறி நடப்பது உண்டு அதற்காக தான் நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்தது என்று அவன் அறிவிப்பு செய்ய… அவன் சொல்வது சரி என்பதால் அபிராமி துவாரகேஷ் எடுத்து கொண்டு வர சொன்ன சந்தனாவின் நகைகள், பட்டு புடவை கூடவே தன் நகை, உடை எல்லாம் லாக்கரில் வைத்து பூட்ட போக. துவாரகேஷ்




“ அபிராமி என்ன செய்கிற நான் எதற்காக இதை எல்லாம் எடுத்து கொண்டு வர சொன்னேன் பாவிக்க தானே…நீ என்ன என்றால் இதை எல்லாம் உள்ளே வைத்து பூட்டுகிறாய் எல்லாம் நம்ம கொண்டு போகும் டிராலி பேக்கில் எடுத்து வை” என சொல்ல. அபிராமி




“ என்னங்க இது அந்தமான் கடற்கரை தீவு அதற்கு எதற்கு பட்டு, புடவை நகை எல்லாம் அதுவும் திருடன் பயம் வேற இருக்கிறது… என அறிவிப்பு செய்து உள்ளாங்க இங்கே வைத்து விட்டு சாதாரண உடைகளை மட்டும் எடுத்து போகலாம்” என. துவாரகேஷ்




“ இது எல்லாம் தெரியாமல் கொண்டு வர சொல்ல நான் என்ன முட்டாளா …நான் சொன்னதை செய் நம்ம பாதுகாப்புக்கு என்று பத்து கார்ட்ஸ் வந்து இருக்கிறாங்க ஓவ்வோருவரும் இரண்டு மல்யுத்த வீரனுக்கு சமம் நான் சொன்னபடியே எடுத்து கொண்டு வா போ சீக்கிரமாக இறங்க தயாராக இருக்கங்கள்” என சொல்ல…. அபிராமிக்கு உண்மையில் சந்தேகமே இல்லாமல் இவர் ஏதோ தவறு செய்கிறார் என நினைக்க தோன்றியது மனசு வேற ஒரு மாதிரியாக சங்கடமாக இருந்தாலும் தணிகாசலம் பார்வை எப்போவுமே தங்களை விட்டு அகலாது என்பதால் அவர் நிம்மதியோடு பிள்ளைகளை அழைக்க போனார்… மரகதம் எங்கே போனாலும் மொபைலும் கையுமாக அலைவார் வேற ஒன்றுமில்ல இளமையில் அவரால் செய்ய முடியாதது எல்லாம் இப்போ செய்து கொண்டு இருக்கிறார்… பேஸ் புக்கில் போட்டோ போடுவது ,லைவ் கொடுப்பது டிக் டாக் செய்வது இது தான் அவர் இப்போதைய வேலை… அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்க அபிராமி வழமை போல தலையில் அடித்து கொண்டு பிள்ளைகளை அழைத்து கொண்டு தீவுக்கு போக தயார் ஆனார்.




அவர்கள் வந்தது ஹேவ்லாக் தீவு அந்தமான், நிக்கோபார் தீவுகளில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் இங்கு ஸ்கூபா டைவிங், ஆழ்கடல் டைவிங், ஸ்நோர்கெல்லிங் போன்ற சாகச விளையாட்கள் இடம் பெறும் இது அந்தமான் தீவு கூட்டத்தில் இருந்து மிகவும் வித்தியாசமான தீவாக காணபடுகிறது… சின்ன சின்ன கடற்கரை, விளையாட்டுகள்,பீச் சைட் ஹோட்டல்கள் என்று விடுமுறையை கழிக்க ஏற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது இங்கு பாலாவுக்கு சொந்தமான ஒரு ஹோட்டல் இருந்தது … பெரும்பாலான கப்பபலுக்கு சொந்தகார்கள் இப்படி சில முக்கிய சுற்றுலா இடங்களில் ஹோட்டல்கள் வைத்து இருப்பது உண்டு கடல் பயணங்களில் போது தங்கி ஓய்வெடுக்க சுற்றி பார்க்க தங்களுக்கு சொந்தமான ஹோட்டல்கள் இருந்தால் வசதி பணத்திற்கு பணமும் ஆயிற்று தங்கள் பயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பார்கள்…. பயணிகளை எல்லாம் பாதுகாப்பாக இறங்கி விட்டு யது நந்தன், அருண் கப்பலின் மேனஜ்மென்ட் நிர்வாகி, கூடவே பாதுகாப்பு அதிகாரி, ஆளுங்க இறங்கினார்கள் மீதி உள்ளளவர்கள் கப்பலில் தங்கி கப்பலை பாதுகாக்கும் பணியை தொடர்ந்தனர் பாலாவின் ஹோட்டல் அழகாக தீவுகளுக்கு ஏற்ற போல இருந்தது அந்த ஹோட்டல் பெயரும் ஈகிள் தான்…





ஹோட்டல் மேனேஜர் ஓடி வந்தவர் முதலில் துவாரகேஷ்க்கு தான் பூமாலை போட்டு பொக்கே கொடுத்து வரவேற்க… அதில் அவர் முகத்தில் பெருமை தெரிந்தது இங்கு தமிழ் மொழி பரிச்சயமான ஒன்று என்பதால் மேனேஜர் தமிழில்




“ வெல்கம் சார் நீங்க எங்க ஹோட்டலுக்கு வந்ததில் எங்க ஹோட்டலுக்கு தான் பெருமை சார்…நீங்க வருவதாக பாலா சார் சொன்னதும் நான் ஏற்பாடு எல்லாம் பெரிதாக செய்ய நினைத்தேன்…ஆனால் ஷிப் எப்போ வரும் என தெரியாது என்பதால் இது தான் என்னால் செய்ய முடிந்தது உங்க ரூம் எல்லாம் பக்காவாக தயார் பண்ணி இருக்கிறேன்” என சொல்ல துவாரகேஷ் மற்றவர்கள் முன் தன் இமேஜ் உயர்ந்து விட்டதாக நினைத்தவர். துவாரகேஷ்





“ மேனேஜர் என் ஸ்டேட்டஸ்க்கு இந்த ஹோட்டலில் எல்லாம் தங்க கூடாது பட் இது என் நண்பனின் ஹோட்டல்…நானும் கூடிய சீக்கிரமாக இங்கே பைப் ஸ்டார் ஹோட்டல் கட்ட போகிறேன் அங்கே நீங்க தான் ஜி.எம் என சொல்ல மேனேஜருக்கு கேட்க வேணுமா வாய் எல்லாம் பல்லாகி போனது அவர் தேங்கஸ் தேங்க்ஸ் சார் என சொல்ல… துவாரகேஷ் மற்றவர்களை ஒரு அலட்சிய பார்வை பார்த்து விட்டு கிளம்ப போக அவர் பின்னால் மேனேஜரும் போக வன் செக்கன் மேனேஜர் என ஆங்கிலத்தில் குரல் கேட்க துவாரகேஷ், மேனேஜர் திரும்பி பார்க்க யது நந்தன் தான் நின்று இருந்தான். யது




“ நீங்க உங்க கடமையை சரியாக செய்யவில்லை என தெரிகிறது மிஸ்டர் துவாரகேஷ்க்கு மட்டும் வரவேற்ப்பு கொடுத்தால் போதுமா…இங்கே பல விவிஐபிங்க இருக்கிறாங்க எல்லாருமே உயர் பதவியில் இருந்து ரிட்டயர்ட் ஆனவங்க சோ அவங்களுக்கும் நீங்க தான் வரவேற்ப்பு கொடுக்க வேணும்… அது தானே பேசிக் மேனர்ஸ் பாலா சாருக்கு இது பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் மேனேஜர்” என அழுத்தமாக சொல்ல. மேனேஜர் முகம் மாற துவாரகேஷ் யது நந்தனை சினம் துளிர்க்க பார்க்க அவன் அதை அலட்சியம் செய்தவாறே நிற்க. கேணல் ஜெகதீஷ்




“ கமான் யது அது எல்லாம் எங்களுக்கு வேணாம் நாங்க இங்கே வந்து இருப்பது நிம்மதியாக எங்க ஓய்வை கழிக்க தான்…எங்க கடமைகளை அடையாளத்தை மறைத்து வந்து இருக்கிறோம் இது எல்லாம் எதிர் பார்க்கும் ஆளுங்க நாங்க இல்லை” என மறைமுகமாக துவாரகேஷ்யை சொல்ல. துவாரகேஷ்




“ மிஸ்டர் ஜெகதீஷ் வாட் யூ மீன் நீங்க சொல்வதை பார்த்தால் நான் இந்த பப்ளிசிட்டியை எதிர்பார்த்து இருப்பது போல சொல்கிறீங்க….கேணல் பார்த்து நான் யாரென தெரியும் தானே பிசினஸ் மேன் துவாரகேஷ்” என சொல்ல. ஜெகதீஷ்




“ ஐ நோ யு மிஸ்டர் துவாரகேஷ் பட் இப்போ நீங்க பிசினஸ் ட்ரிப் வரவில்லை தானே பேமிலி டூர் வந்து இருக்கிறீங்க…சோ அந்த பிசினஸ் மேன் முகமூடியை கழட்டி வைத்து விட்டு ஜாலியாக எங்களை போல இருக்கலாம் தானே” என கேட்க. துவாரகேஷ்




“ மிஸ்டர் கேணல் எனக்கு மற்றவங்க அட்வைஸ் பண்ணினால் பிடிக்காது சோ பிளிஸ்” என சொல்ல கேணல் சின்ன சிரிப்பை கொடுக்க. மேனேஜர்




“ வெல்கம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கேணல் ஜெகதீஷ்” என சொல்ல. யது நந்தன்




“ வெல்கம் ஓகே பூமாலை, பொக்கே எல்லாம் எங்கே மேனேஜர் சார் ஒருவருக்கு மட்டும் தான் இந்த தீவில் பூக்கள் பூக்குமோ என கேட்க… துவாரகேஷ் தன் கழுத்தில் உள்ள பூமாலைலை கழட்டி கீழே எறிந்தவர் அது போல பொக்கேவை எறிந்து விட்டு கார்ட்ஸ் கூட வர தன் ரூம்க்கு போக அவர் பின்னால் துவாரகா நில்லு என மரகதம் யதுவை முறைத்து விட்டு போக… அபிராமி கண்களால் அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு போனார் சந்தனா அவனை பார்த்தவள் ஏதும் பேசாது போக நித்திலன் அவன் அருகே வந்தவன் அவன் கை பற்றி குலுக்கி விட்டு சூப்பர் அண்ணா செம நோஸ் கட் என சொன்னவன் அவர்களை பின் தொடர்ந்து போக…மேனேஜர் போகும் அவரை பார்த்து கொண்டு இருக்க மேனேஜர் சார் என யது நந்தன் அழைக்க மேனேஜர் திரும்பியவர். அவர்




“கேப்டன் நீங்க ரொம்ப தப்பு பண்ணி விட்டீங்க அவர் யாரு தெரியுமா நம்ம சாரோட பெஸ்ட் ப்ரண்ட்… அது மட்டுமா உலகம் தெரிந்த பிசினஸ் மேன் அவரை இன்சல்ட் பண்ணி நீங்க தான் இப்போ சிக்கலில் மாட்டி கொண்டு உள்ளீங்க” என சொல்ல. யது நந்தன்




“ எந்த சிக்கல் வந்தாலும் அதை தீர்க்கும் விதம் எனக்கு தெரியும் அது போல பாலா சாருக்கு நான் பதில் சொல்லி கொள்கிறேன்…முதலில் நீங்க அனைவரையுமே சரி சமமாக நடத்த கற்று கொள்ளுங்க நீங்க பாலா சாருக்கு தான் வேலை பார்க்கிறீங்க…முதலில் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைபட வேணாம் பணக்காரங்க வாக்கு தண்ணீர் மேலே எழுதிய எழுத்து போல நான் சொல்வது புரிகிறதா இந்த வேலை தான் உங்களுக்கு நிரந்தரம் விசுவாசத்தை ஒருத்தரிடம் காட்டுங்கள் பலரிடம் காட்டினால் அதற்கு பெயர் சந்தர்ப்பவாதி…தொழிலில் உயர தான் வேணும் உழைப்பால், நேர்மையாள் நேர்மையற்ற இடத்தில் நீங்க வேலை பார்க்க வேண்டி இருந்தால் தாராளமாக நீங்க விலக நினைக்கலாம்… பாலா சார் அப்படிப்பட்டவர் அல்ல என்பது என்பது என்னை விட உங்களுக்கு நன்றாக தெரியும் இப்போ நடந்ததை நான் அவரிடம் சொன்னால் உங்க கிட்ட தான் தப்பு என்பார் நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.. நம்ம அனைவருமே இங்கே வேலை பார்ப்பவங்க எங்களை நம்பி வந்து இருக்கும் இவங்க நம்ம அனைவருக்குமே ஒன்று தான் சோ உங்க தனிப்பட்ட விருப்பத்திற்காக சிலதை மாற்ற முயற்சிக்க வேணாம்” என்றான்…





நிலவு வரும்…🌙




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer


அத்தியாயம்: 16




துவாரகேஷ் தனக்கு ஏற்பாடு பண்ணிய ரூம்க்கு வந்தவருக்கு யது நந்தனை கொலை செய்யும் அளவுக்கு கோபம் வந்தது சின்ன பயல் என் உயரம் என்ன என் நிழலை கூட தொட முடியாத நிலையில் இருப்பவன் இன்று அனைவர் முன்னும் என்னை இன்சல்ட் பண்ணி விட்டான்… இவனை முதலில் வேலை விட்டு தூக்க வேணும் அப்போ தான் சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் போது என் காலில் விழ தோணும் அதற்கு இப்போ பாலாவிடம் பேச வேணும் என நினைத்தவர் சுந்தரம் என சத்தமாக அழைக்க பதில் இல்லை திரும்ப அழைக்க தான் அவர் பி,ஏ சுந்தர் சார் என ஓடி வர. துவாரகேஷ்




“ எங்கே போய் தொலைந்த தேவையான நேரம் இருக்காதே மற்ற நேரம் என் பின்னால் சுற்று முதலில் பாலாவுக்கு போனை போடு…இந்த கேப்டன் பயலை ஒரு வழி செய்ய வேணும்” என சொல்ல. சுந்தரம் சார் என மெதுவாக அழைக்க துவாரகேஷ் அவனை பார்க்க. சுந்தரம்




“ சார் இப்போ தான் இங்கே என்ன நிலவரம், ஆளுங்க எப்படி என விசாரிக்க போய் இருந்தேன்…நீங்க தங்கும் இடம் சேப்பாக இருக்க வேணும் இல்லையா அந்தமானில் டவுர் எப்போவுமே தொந்தரவு தருவதால் அதை சரி செய்யும் வேலை ஒரு மாதமாக நடக்கிறது போல நம்ம நிற்கும் இடத்தில் நாளைக்கு தான் வேலை முடியும்… இப்போ இங்கே சுற்றுலா பயணிகள் அதிகமாக வர தொடங்கி உள்ளதால் எல்லாம் திருத்தி புதிதாக செய்து கொண்டு இருக்கிறாங்க போல…பாலா சாரை கன்டக்ட் செய்ய கொஞ்சம் கஷ்டம் சார்” என. துவாரகேஷ்




“ என்ன டவர் இல்லையா என்ன ஊர் இது முதலில் பாலாவை தான் கிழித்து தோரணமாக தொங்க விட வேணும்…சுற்றுலா செல்லும் ஊரை தேர்ந்தெடுத்த லட்சணத்தை பாரு இவனுக்கு இப்போ பேர குழந்தை எப்போ பிறக்கும் என்ற எண்ணம்… அது தான் எதனையுமே சரி வர விசாரிக்காமல் ஏற்பாடு செய்து நம்ம கழுத்தை அறுக்கிறான் இப்போ மற்றவங்களை எப்படி கன்டக்ட் பண்ணுவது என கேட்க. சுந்தரம்





“ நாளை காலை எல்லாம் க்ளியராகி விடும் சார் நீங்க முன்னே பண்ணிய ஏற்பாடுபடியே எல்லாம் நன்றாக நடக்கும்” என. துவாரகேஷ்





“ நடக்க வேணும் நான் நடத்தி காட்டுவேன் சுந்தரம் அந்த கேப்டன் பயலின் டீட்டெல் கலக்ட் செய் என்னை அவமானபடுத்திய அவனை ஒரு வழி செய்ய வேணும்” என்றார்… அபிராமி வழமை போல பிள்ளைங்க ரூம்க்கு வந்தவர் அவர்களுக்கு அனைத்தும் சரியாக இருக்கிறதா என பார்த்தவர் அங்கே உள்ள கபோர்ட்டில் சந்தனா உடைகளை அடுக்கி கொண்டு இருக்க. நித்திலன்





“ யது அண்ணா சூப்பர் இல்லையா அம்மா எப்படி பாயிண்டாக பேசினார் மேனேஜர் செய்தது தப்பு தானே…நம்ம போல வந்தவங்க எல்லாம் விவிஐபிங்க சோ அவங்களுக்கும் மரியாதை கொடுக்க வேணாமா இப்படிப்பட்ட ஆளுங்க தவறை சுட்டி காட்டி திருத்த ஒருவர் வேணும்” என. சந்தனா




“ நீ சொல்வது சரி தான் நிது ஒருத்தருக்கு மட்டும் மாலை மரியாதை செய்ய கூடாது அந்த ஒருத்தர் தனிபட்ட முறையில் சாதனையாளர் என்றால் பரவாயில்லை… மகாத்மா காந்தி, அன்னை தெரசா போல என்றால் நம்ம மதிப்பு கொடுக்க தான் வேணும் அப்பா பிசினஸ் செய்பவர் மட்டும தானே…அப்பா போல வந்து இருந்த அனைவருமே பெரிய பெரிய ஆளுங்க தான் மேனேஜர் செய்தது தப்பு கேப்டன் அதை சுட்டி காட்டியதில் தவறு இல்லை ஆனால் என இழுக்க. நித்திலன்





“ ஆனால் என்ன கா நீ எதற்காக தயங்குகிற என தெரிகிறது யது அண்ணா அப்பாவை எதிர்த்து பேசியதை தானே சொல்ல வந்தே… அதனால் அவரை நம்ம பா ஏதும் செய்து விடுவாரோ என பயப்படுகிற என்ன நான் சொல்வது சரி தானே” என. சந்தனா





“ஆமாம் டா அப்பாவுக்கு தன்னை எதிர்த்தவர்களை பிடிக்காது கேப்டனுக்கு நிச்சயமாக தண்டனை கொடுக்க நினைப்பார்” என. நித்திலன்




“ யாரு நம்ம அப்பா யது அண்ணாவுக்கு தண்டனை கொடுக்க நினைப்பதாவது யது அண்ணாவை யாரு என நினைத்த…பார்த்தாய் தானே எப்படி நம்ம அப்பாவுக்கு நோஸ் கட் கொடுத்தார் என்று முன்பை விட இப்போ தான் எனக்கு அவரை பிடிக்கிறது” என்றான்… இவர்கள் விவாதத்தில் தலையிடாமல் சந்தனா உடைகளை வைத்தவர் கபோர்ட்டை சாத்தியவர் யோசனையாக சந்தனா அருகில் வந்து இருக்க. சந்தனா





“ அம்மா நான் சொன்னது சரி தானே அப்பாவுக்கு அவரை எதிர்த்தவர்களை பிடிக்காது என்று” என. சொல்ல அபிராமி ஏதோ யோசனையில் இருக்க அம்மா என அபியாமியின் கை பற்றி சந்தனா உலுக்கிய பிறகு தான் என்ன பாப்பா கேட்ட என அபிராமி கேட்க. நித்திலன்




“ என்ன மா ஏதும் யோசனையில் இருக்கிறீங்க போல நானும் அக்காவும் யது அண்ணா அப்பாவுக்கு நோஸ் கட் கொடுத்ததை பற்றி பேசி கொண்டு இருக்கிறோம்…யது அண்ணா சூப்பர் மேன் இல்லையா மா இப்போ வரைக்கும் அப்பா முன்னாடி தாத்தாவை தவிர யாரும் எதிர்த்து பேசியதை நான் கண்டது இல்லை அதை தான் சொன்னேன்” என. அபிராமி




“ ஓ அதுவா சரி தம்பி இந்த இடத்தில் நம்ம போன் பேச முடியுமா நீ தானே இதை எல்லாம் தெரிந்து வைத்து இருப்ப” என கேட்க. நித்திலன்




“ என்ன மா சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீங்க ஆமா இப்போ யாருக்கு போன் பேச போககறீங்க தாத்தாவுக்கா… தாத்தா ஏதோ பிசினஸ் விஷயமாக சிங்கபூர் சொல்வதாக சொன்னார் மூர்த்தி தாத்தா மொபைலுக்கு ட்ரை பண்ணி பாருங்க: என சொல்ல. சந்தனா





“அம்மா எனக்கு தாத்தா கூட பேச ஆசையாக இருக்கிறது அவரை பார்க்க வேணும் போல இருக்கிறது…தாத்தாவும் நம்ம கூட வந்து இருந்தால் எவ்வளவு ஜாலியாக இருந்து இருக்கும் அப்பாவுக்கு தாத்தாவை பிடிக்காதே பாவம் தாத்தா தனியாக இருக்கிறார் நிது நீ நம்ம போகும் இடத்தை எல்லாம் போட்டோ எடுத்து வை டா… பிறகு தாத்தா ஸ்கூலுக்கு உன்னை பார்க்க வரும் போது காட்டு என சொல்லும் மகளை அபிராமி நெஞ்சு கலங்க பார்த்தார் அவருக்கு துவாரகேஷ் நடவடிக்கை ஏதோ சரியில்லாதது போல இருந்தது… அபிராமி காயத்தரி போல திறமைசாலி இல்லை தான் ஆனாலும் அம்மா என வரும் போது எல்லா தாயும் பல மடங்கு திறமைசாலி, பலம் வாய்ந்தவர்கள் நித்திலனும், சந்தனாவும் பேசி கொண்டு இருக்க அபிராமி அவர்களை விட்டு நேராக போன இடம் மரகதம் ரூம்க்கு தான் மரகதம் வாயை கிண்டி கிளறி ஏதும் தகவல் பெறலாம் என்று தான். அபிராமி




“ அத்தை உங்களுக்கு இந்த ரூம் எல்லாம் சரியாக இருக்கிறதா சாப்பிட ஏதும் கொண்டு வர சொல்லவா” என. அன்பாக கேட்க மரகதம் அபிராமி ஒரு தடவை பார்த்து விட்டு. அவர்




“ நீ எப்படி எல்லாம் கேட்கும் ஆள் இல்லையே காயத்திரியை கூட நம்புவேன் உன்னை நம்ப மாட்டேன்… நீ விஷயம் இல்லாமல் இப்படி வர மாட்ட என்ன உன் புள்ளைங்க ஊர் சுற்ற துவாரா கிட்ட நான் அனுமதி வேண்டி தர வேணுமா அது முடியாது…அவன் அம்மா என பார்க்காமல் என்னை திட்டி விடுவான் சந்தானாவை எங்குமே தனியாக அனுப்ப கூடாது அவளை கண்காணித்து கொண்டு இரு என சொல்லி இருக்கிறான்” என. வாய் விட அபிராமி மனதில் மணியடித்தது அப்போ நிச்சயமாக ஏதோ திருட்டு வேலையை துவாரகேஷ் செய்ய போகிறார் .அபிராமி




“ ஏன் இப்போ மட்டும் என்ன ஸ்பெஷலாக எப்போதுமே சந்தனாவை உங்க பையன் வெளியே விடுவது இல்லை தானே…அதுவும் தெரியாத ஊர் நாங்க எங்கே போக போகிறோம்” என அலட்சியம் போல காட்டி கொண்டு பேச. மரகதம்




“ இதை தான் நானும் கேட்டேன் கேட்க அது உனக்கு தேவையில்லாத வேலை சொன்னதை செய் அவள் வெளியே போனால் நீ நிரந்தரமாக உன் மகள் வீட்டுக்கு போய் விடுவ என சொன்னான்… சரி சரி வந்ததும் வந்த ஏதோ கம் என சொன்ன அதில் எனக்கு ஆப்பிள் ஜூஸ் சாப்பிட பிஸ்கட் எல்லாம் எடுத்து கொண்டு வர சொல்லு… இந்த மணிக்கும் இதில் எடுக்க தெரியாது என சொல்ல அபிராமி அவர் சொன்னதை செய்து விட்டு வெளியே வந்தவர் மனதில் இவங்களுக்கு கூட ஏதும் தெரியாது போல இருக்கே…தெரிந்து இருக்க தம்பட்டம் அடிக்காத குறையாக சொல்லி இருப்பாங்க சந்தானாவை சுற்றி ஏதோ நடக்கிறது என வந்தவர் கண்ணில் பட்டான் யது நந்தன் ஏதோ கேணல் கூட பேசி கொண்டு இருந்தான்… அபிராமி துவாரகேஷ் கார்ட்ஸ் இங்கே யாரும் நிற்கிறாங்களா என சுற்றி பார்த்து விட்டு மெதுவாக நடந்து வந்தவர் தம்பி என அழைக்க கேணல் ஜெகதீஷ், யது நந்தன் தங்கள் பேச்சை நிறுத்தி விட்டு பார்க்க. ஜெகதீஷ்



“ வா மா அபிராமி எப்படி இருக்க என்ன இந்த பக்கம்” என கேட்க. அபிராமி




“ கேணல் சார், யது தம்பி எனக்கு அவசரமாக ஒரு ஹெல்ப் வேணும் வந்து இது யாருக்குமே தெரிய கூடாது..நான் இங்கே ரொம்ப நேரம் பேச முடியாது எனக்கு சிங்கப்பூருக்கு கால் பண்ணி தர முடியுமா என கேட்க. யது நந்தன் அவரை அழுத்தமாக பார்க்க கேணல் யோசித்தார். யது நந்தன்




“ முடியும் மிஸஸ் துவாரகேஷ் பட் இப்போ முடியாது நாளை தான் டவர் சரியாகும் என சொல்லி இருக்கிறாங்க ஏதும் அவசரமா” என கேட்க. அபிராமி



“ பரவாயில்ல அப்படி ஒன்றும் இல்லை கேணல் சார் நான் வருகிறேன் தம்பி வருகிறேன்” என. அபிராமி போக கேணல் போகும் அவளை பார்த்தவர் யது நந்தனிடம். அவர்




“ சம்திங் ராங் யது இப்போ ஏன் அபிராமி அவசரமாக மிஸ்டர் தணிகாசலத்தை தொடர்பு கொள்ள வேணும்…அதுவும் இந்த ட்ரிப்புக்கு துவாரகேஷ் வந்து இருக்கிறான் என்றால் கூடவே வினையும் வரும் இப்போ மிஸ்டர் தணிகாசலம் சிங்கபூர் போய் இருப்பதாக நியூஸ் பேப்பரில் பார்த்தேன்… அப்போ அவருக்கு தெரியாமல் துவாரகேஷ் ஏதும் பிளான் பண்ணி இருக்கிறான் போல என சொல்ல யது நந்தன் அது அவர்கள் குடும்ப விஷயம் நம்ம தலையிட முடியுமா என நினைத்தான்… அபிராமி யோசனையாக ரூம்க்கு வர சந்தனா, நித்திலனை காணவில்லை நித்தலன் தமக்கையை வலுக்கட்டாயமாக அழைத்து கொண்டு வந்த இடம் ஹோட்டலை ஓட்டி உள்ள கடற்கரைக்கு.






நிலவு வரும்…🌙








 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்: 17




அபிராமி மரகத்தை தேடி போக இங்கே அக்கா தம்பி இருவருமே ரூம்மில் பேசி கொண்டு இருந்தனர். நித்திலன்





“ அக்கா பார்த்தாயா என்ன அழகான இடம் இது நிறைய அழகான சீனரிஸ் இருக்கிறது சுத்தமான காற்று… இதை எல்லாம் நம்ம சிட்டியில் காண கூட முடியாது” என சொல்ல. சந்தனா





“உண்மை தான் டா நிறைய செடி, கொடிகள் கூட இருக்கு…. புது வகை தாவரங்கள் எல்லாம் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது” என சொல்ல. நித்திலன்




“ அப்போ போய் பார்க்கலாமா வீட்டில் கூட நீ தான் இருக்கிற இங்கே கொஞ்சம் சுற்றி பார்க்கலாம் வா” என சொல்ல. சந்தனா




“ எனக்கும் ஆசையாக தான் இருக்கிறது ஆனா பயமாகவும் இருக்கிறது டா அப்பா திட்டுவார் என்று” என. நித்திலன்




“அப்பா அப்படி தான் அவர் இப்போ பிஸியாக இருப்பார் லேப்டாப் பார்க்க தொடங்கினால் நம்ம இருப்பது அவர் கண்ணுக்கு தெரியாது பாட்டி கூட ரூம்மில் சாப்பிட்டு விட்ட தூங்கி இருக்கும்… அம்மா நம்ம திங்ஸ் எல்லாம் எடுத்து வைத்து கொண்டு இருப்பாங்க வா சீக்கிரமாக போய் விட்டு வரலாம் என சொல்ல சந்தனாவுக்கும் ஆசை இருக்க தம்பியோடு சுற்றி பார்க்க கிளம்பி விட்டாள்…அவர்கள் வெளியே வர அந்த ஹேவ்லாக் தீவின் அழகை காண முடிந்தது இது அந்தமான், நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய தீவாகும்… சின்ன சின்ன கடற்கரைகள் இங்கே உள்ளது வளமான கடல்வாழ் உயிரினங்களை பார்த்து ரசிக்க நீர் விளையாட்டுகள் உள்ளது… அங்கே இவர்களை போல வேற கப்பல், விமானங்கள் மூலமாக சுற்றுலா பயணிகள் வந்து இருந்தார்கள் அவர்கள் கூட்டமாக நீர் விளையாட்டு விளையாடி கொண்டு இருக்க சந்தனாவுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம் அதனால் நித்திலன் கொஞ்சம் தள்ளி ஆளுங்க குறைவாக இருக்கும் இடத்திற்கு அழைத்து போனான்.




சந்தனாவுக்கு உண்மையில் சந்தோஷமாக இருந்தது அவளுக்கு இயற்கை ரொம்ப பிடிக்கும் இயற்கையோடு ஒன்றி வாழ்பவள் அவள்…ஆனால் எங்கே துவாரகேஷ் அவளை வெளியே விடுவது இல்லை சொந்த தாத்தா தணிகாசலம் அவரை கூட பார்க்க அனுமதி கொடுக்க மாட்டார்… துவாரகேஷ், மரகதம் பெரிதாக அவள் கூட மட்டுமல்ல அபிராமி, நித்திலன் கூட பேசுவது இல்லை… சந்தனா அங்கே பரந்த விரிந்த கடல் அழகை பார்த்து ரசித்தவள் தன் கன்னத்தில் இரு கைகளை வைத்து கண்களை விரித்து பார்த்தவள் தன் அருகே நின்ற தம்பியிடம். சந்தனா





“ ரொம்ப அழகாக இருக்கு டா இங்கயே தங்கி விடலாம் போல பாரு கடல் தண்ணீர் எவ்வளவு தெளிவாக இருக்கிறது… அதன் அருகே நிறைய செடி, கொடி எல்லாம் இருக்கு நிது வா டா போய் அதை பறித்து வரலாம் நம்ம ஊருக்கு போகும் போது கொண்டு போக …இதை எல்லாம் என் ரூம்மில் உள்ள ஜாடியில் வைக்கலாம் பெரிய தாவரம் வேணாம் சின்னதாக உள்ளதை பிடுங்கலாம்” என சொல்ல. நித்திலன்





“ பணக்கார பெண்களில் நீ ரொம்ப வித்தியாசமான பெண்ணு அக்கா அவங்க பணம், நகை, மாடர்ன் டிரஸ், டிஸ்கோத் என ஆசைபட்டால் நீ…தாவரம், செடி , பாட்டு என சாதாரணமாக ஆசைபடுகிற உண்மையில் என் அக்கா என உன்னை சொல்ல எனக்கு பெருமையாக இருக்கிறது….வா போய் உனக்கு பிடித்ததை பிடுங்கி எடுக்கலாம் இரு பை எடுத்து கொண்டு வருகிறேன் எங்கேயும் போய் விடாதே” என சொன்னவன் ஓடி போக… சந்தனா அங்கே நீர் விளையாடி கொண்டு இருந்த சிறுவர்களை வேடிக்கை பார்த்தவள் அப்படியே மெதுவாக கடற்கரை அருகே போய் தன் கால்களை நீரில் நனைத்து கொண்டு நிற்க…. அவள் வெண்ணிற பாதங்களை ஆசையாக முத்தமிட்டு போன அலைகள் அவள் தங்க கொலுசுக்கு இணையாக சின்ன சின்ன சிற்பிகள், கிளிஞ்சல்கள் வந்து அவள் காலை அலங்கரித்து.





சந்தனா அதை எல்லாம் சேகரித்தவள் அவள் போட்டு இருந்த துப்பட்டாவில் வைத்து கொண்டவள் இதை பார்த்த போது அவளுக்கு சங்கு சேகரிக்கும் ஆசை வர…கொஞ்சம் கடல் உள்ளே போனாள் முதலில் அவளுக்கு சின்னதாக ஒரு சங்கு தென்பட்டது அதை எடுத்து வைத்து கொண்டவள் இன்னும் உள்ளே போனாள்… ஏதுவுமே இல்லை இன்னும் முட்டி வரை தண்ணீர் உள்ளே போக தான் அந்த விபரீதம் நடந்தது அவள் எதிர்பாராத நேரம்…சட்டென ஒரு பெரிய அலை வந்து அவளை நனைத்து விட சந்தனா தடுமாறி விழந்து விட்டாள் நீச்சல் வேறு தெரியாது பயந்தவள் சத்தம் போட முடியாமல் கடைசி நிமிடம் உயிர் பயம் வருவதை போல அவளுக்கு வர கை, கால்களை தண்ணீருக்குள்ளே அடித்து மூச்சு காற்றுக்காக தவிர்த்தாள்… அங்கே இருந்த ஒன்று இரண்டு பேருக்கு நீச்சல் தெரியாது அதனால் சத்தம் போட்டு மற்றவர்களை அழைக்க அங்கே இருந்த பெண் ஒருவர் ஓடி போனார் ஆளுங்களை அழைக்க…





நித்திலன் ரூம்க்கு போகாமல் அங்கே வேலை செய்து கொண்டு இருந்த ஒருவரிடம் பைகளை கேட்க அவரும் கொஞ்சம் இருங்கள் எடுத்து வருகிறேன் என சொல்லி விட்டு உள்ளே போக…யது நந்தன் தன் கேப்டன் உடையை மாற்றி விட்டு பிளக் டிராக் சூட் பேண்ட் உள்ளே சிவப்பு டிசர்ட் என வந்தவன் நித்திலன் வெளியே நிற்பதை கண்டவன். யது





“ ஹே நித்திலா என்ன இங்கே நிற்கிற என் அப்பா திட்டி விட்டாரா அது தான் கோபித்து கொண்டு வந்து நிற்கிறாயா…உன் அம்மா, அக்கா உன்னை தேட மாட்டாங்களா” என கேட்க. நித்திலன்




“இந்த டிரஸ்சில் நீங்க சூப்பராக இருக்கிறீங்க அண்ணா அப்பா திட்டு எல்லாம் எனக்கு தூசி போல நானும் அக்காவும் கடல் பார்க்க வந்தோம்…அக்காவுக்கு இந்த புது செடி ,கொடி கலக்ட் செய்வது பிடிக்கும் அங்கே நிறைய செடி கொடி இருக்கா அதை கலக்ட் செய்து போட தான் பை வாங்க வந்தோம்” என. சொல்லி கொண்டு இருக்கும் போது அழகான நிறமூட்டிய சாணல் பைகளை கொண்டு வந்து கொடுத்தான் வேலை செய்யும் பையன் … அந்த தீவில் ப்ளாஸ்டிக் பைகள், பொருட்கள் தடை விதிக்க பட்டு உள்ளது காரணம் அது கடல் நீரில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் அதை சாப்பிட்டு விட்டு இறந்து போகிறது அதனால் தான் அரசு இந்த மாற்றத்தை கொண்டு வந்து உள்ளது… அப்போது கூச்சல் கேட்க பலர் ஓடி கொண்டு இருக்க யது நந்தன் ஓடி கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விஷயத்தை கேட்க அவர் ஒரு பெண் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் விழுந்து விட்டாள் என ஆங்கிலத்தில் சொல்ல நித்திலனுக்கு புரிய அவன் முகம் மாற அய்யோ அக்காவாக இருக்குமோ அவளுக்கு நீச்சல் தெரியாதே என கண்கள் கலங்க நினைக்க தொடங்க .யது நந்தன்




“ஹே நித்திலா ரிலாக்ஸ்டா நீ நினைப்பது இருக்காது வா முதலில் போய் பார்க்கலாம்” என அவனை அழைத்து கொண்டு போக…அங்கே கூட்டம் கூடி இருந்த இடம் நித்திலன் தமக்கையை விட்டு போன இடம் கூடவே கரையில் அவள் துப்பட்டா இருக்க அதை எடுத்தவன் அய்யோ அக்கா என பெரிதாக அழ தொடங்கியவன்… சட்டென கடலை நோக்கி ஓடி போக போக யது நந்தன் சட்டென அவனை பிடித்து இழுத்து அவன் தோளில் தன் கைகளை அழுத்தமாக வைத்தவன். யது




“ ஆர் யூ மேட் நீயும் முதலில் அது உன் அக்கா என எப்படி சொல்கிற அவங்க இங்கே வேற எங்கேயும் சுற்றி பார்க்க போய் இருக்கலாம்…அது தெரியாமல் நீ போய் ஆபத்தில் சிக்கி கொள்ள போகிறாயா என கோபமாக கேட்க. நித்திலன் அழுகை குரலில்




“ இல்ல அது என் அக்கா தான் அவளை இங்கே நிற்க சொல்லி விட்டு தான் போனேன் இது அவள் போட்டு வந்த துப்பட்டா தான்…எனக்கு என் அக்கா வேணும் இல்ல நானும் செத்து போய் விடுவேன் யது அண்ணா.. என் அக்காவை அழைத்து வாங்க பீளிஸ்” என அழ தொடங்க. அவன் தமக்கை மேல் வைத்த அன்பு தெரிந்த யது அவன் கண்களை துடைத்து விட்டவன். யது




“ அழாதே டா அவங்க போய் இருக்கிறாங்க இப்போ உன் அக்கா வந்து விடுவாங்க” என சொல்லி கொண்டு இருக்க இப்படி சில நேரம் கடலில் குளிக்க வந்த ஆளுங்க கடலில் மாட்டி கொள்ளும் போது…அவங்களை காப்பாற்ற நீச்சல் தெரிந்த ஆளுங்களை ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு பண்ணி வைத்து இருக்கும் அதில் வந்த இருவர் மேலே கரையேறி வந்தவர்கள்… யது நந்தனை கேப்டன் என்ற முறையில் அவர்களுக்கு தெரியும் அதனால் பெங்காலி ( வங்காளம்) மொழியில் மொழியில் யாரையுமே காணவில்லை என யது நந்தனிடம் பேச அவன் பல ஊர் சுற்றியவன் என்பதால் பல மொழிகளின் பரிச்சயம் உண்டு அவனும் ஏதோ சொல்ல நித்திலனுக்கு மொழி புரியவில்லை என்றாலும் கூட அக்கா வர மாட்டாள் என புரிய… யது நந்தன் பேசி கொண்டு இருக்கும் போதே அக்கா அக்கா என கடலை நோக்கி ஓடி போக இதை எதிர்பாராத யது நித்திலா நில்லு என ஓடி போனான்..





அந்த நேரம் விஷயம் கேள்விபட்டு அருண், அபிராமியை அழைத்து கொண்டு ஓடி வந்தவன்… அவனும் யது பின்னால் ஓடி போக யது நந்தன் நித்திலனை பிடித்து நிறுத்தியவன் அவன் கன்னதில் பளார் என அறைய. நித்திலன் அழுதாலும்




“ நீங்க என்னை தடுத்து நிறுத்தினாலும் ஏன் கொலை செய்தாலும் கூட அக்கா இல்லாமல் இந்த இடத்தை விட்டு நான் வர மாட்டேன் யது அண்ணா” என சத்தம் போட. யது நந்தன்




“ முட்டாள் இப்போ என்ன உன் அக்காவை அவங்க தான் காணோம் என சொன்னாங்க இப்போ நான் சொல்கிறேன்…உன் அக்காவை அழைத்து வருவது என் பொறுப்பு இது என் ப்ராமிஸ்” என… அருண் யது என அழைக்க அவனை கை காட்டி நிறுத்த சொல்லி விட்டு தன் டிராக் சூட் கோர்ட், டிசர்ட், ஷூ எல்லாம் கழட்டி வைத்தவன் பேண்ட், உள் பனியனோடு கடலை நோக்கி போனான் யது நந்தன்.





நிலவு வரும்…🌙
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்: 18




யது நந்தன் முறையாக நீச்சல் கற்றவன் மட்டுமல்ல யோகா, கராத்தே எல்லாம் கற்றவன் அவன் செய்யும் தொழிலுக்க நீச்சல் அவசியம் அது தான் இன்று அவனுக்கு கை கொடுத்தது…யது நந்தன் கடலுக்குள்ளே குதித்தவன் உள்நீச்சல் அடித்து பார்க்க சந்தனா தென்படவில்லை அவன் இன்னும் கொஞ்சம் உள்ளே போய் பார்க்கலாம் என போக தான் சந்தனா கடலில் உள்ளே இருக்கும் தாவர வேர் ஒன்று அவள் காலை சுற்றி இருக்க மயங்கி இருந்தாள்… அந்த வேர் அமுக்கியதால் தான் அவளால் மேலே எழுந்து வர முடியவில்லை யது நந்தன் மேலே ஒரு தடவை எழுந்தவன் தன் மூச்சை வெளியிட்டு விட்டு நன்றாக காற்றை மீண்டும் உள்ளிழுத்தவன் மீண்டும் கடலுக்கு அடியில் போனவன் சந்தனா காலில் உள்ள வேரை அகற்ற தொடங்கினான்… கடல் தாவரங்கள் எப்போவுமே பலம் வாய்ந்ததவை அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் நித்திலனின் அழுகை குரல் மட்டுமல்ல சந்தனாவின் மயங்கிய முகமும் அவனை தூண்டி விட அவன் தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவளை விடுவித்தவன் அவளை மெதுவாக தன்னோடு அணைத்து கொண்டவன் நீந்த தொடங்கினான்.





துவாரகேஷ் தன் லேப்டாப்பில் நெட்வொர்க் கிடைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்க சரி சில பைல்களை பார்க்கலாம் என பார்த்து கொண்டு இருக்க… அவர் ரூம் பெல் அடிக்க அவர் யஸ் கம்மிங் என சொல்ல அவர் பி,ஏ சுந்தர் சார் என பதட்டமாக ஓடி வர துவாரகேஷ் அவரை கேள்வியாக பார்க்க. அவர்




“ சார் சந்தனா பாப்பா கடலில் விழுந்து விட்டாங்க போல அவங்களை தேடி பார்த்தும் காணவில்லை…மேடம், தம்பி எல்லாம் கடல் அருகே தான் நிற்கிறாங்க இப்போ தான் எனக்கு விஷயம் தெரிய வர நம்ம கார்ட்ஸ் சிலரை அங்கே போக சொல்லி விட்டு உங்களுக்கு தகவல் சொல்ல ஓடி வந்தேன்” என சொல்ல.. வாட் என எழுந்த துவாரகேஷ் முகம் கோபத்தால் அதி பயங்கரமாக மாறியது மகள் என்ற பாசத்தை விட அவர் காரியம் கெட்டு விட்டது என நினைக்க… இதற்கு எல்லாம் காரணம் யாராக இருக்கும் என நினைத்தவருக்கு நித்திலன் தான் காரணமாக இருக்க வேணும் அவளுக்கு தனியாக எதனையுமே செய்ய பயம்… இவன் தான் அவளை அழைத்து போய் இருப்பான் அபிராமிக்கு தெரிந்து இருக்கும் இன்று இவனுக்கு ஒரு காட்டு காட்ட வேணும் என நினைத்தவர் வேகமாக ரூம்மை விட்டு வெளியேற சுந்தரம் அவர் பின்னே ஓடி போனார்.






கரையில் நின்று அக்கா அக்கா என நித்திலன் அழுது கொண்டு இருக்க.. மறு புறமாக அபிராமி பாப்பா அம்மாவை விட்டு போய் விடாதே என அழுது கொண்டு இருந்தார். அருண்




“ மேடம் அவங்களுக்கு ஒன்றும் ஆகி இருக்காது அது தான் யது போய் இருக்கிறானே அவன் அவ்வளவு சீக்கிரமாக வாக்கு கொடுக்க மாட்டான் கொடுத்தால் அதை உயிரை கொடுத்தும் காப்பாற்றுவான்…நித்திலா நீ தைரியமான பையன் இப்படி அழலாமா அம்மாவுக்கு தைரியம் சொல்ல வேண்டியது நீ தானே” என. சொல்லி கொண்டு இருக்க அங்கே இருந்த ஒருவர் ஆங்கிலத்தில்




“அதோ அந்த பெண்ணு கூட கேப்டன் வருகிறார்” என சத்தம் போட நித்திலன், அபிராமி கண்களை துடைத்து விட்டு பார்க்க கடலில் இருந்து பாதி தூரம் சந்தனாவை அணைத்து கொண்டு நீந்தி வந்தவன்…. முட்டி வரை தண்ணீர் இருக்க இனி நீந்த தேவையில்லை என நினைத்தவன் சந்தனாவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு நடந்து வந்தான் அக்கா, பாப்பா என அபிராமி, நித்திலன் ஓட போக. அருண்




“ கொஞ்சம் நில்லுங்க அவன் இங்கே தானே வருகிறான் நீங்களும் போய் தண்ணீரில் விழுந்து விட வேணாம் பிளீஸ் என சொல்ல அவர்கள் கரையில் காத்து இருக்க… யது நந்தன் கரைக்கு வர அபிராமி, நித்திலன் ஓடி வர மற்றவர்களும் ஓடி வந்தார்கள் அருண் ஓடி போய் அங்கே இருந்த ஒரு சாய்வு நாற்காலியை எடுத்து கொண்டு வர யது நந்தன் அதில் சந்தனாவை படுக்க வைக்க… அபிராமி பாப்பா பாப்பா கண்ணை திறந்து பாரு என அழுதவாறே தன் புடவை முந்தானையால் மகளின் முகம், முடியை துவட்டி விட அக்கா எழுந்திரு அக்கா என நித்திலன் அழுதவாறே சந்தனாவின் கரம் பற்றி உலுக்க. அருண்





“யது அவங்க தண்ணீர் நிறைய சாப்பிட்டு விட்டு இருப்பாங்க முதலுதவி செய்ய வேணும் பிறகு ஹோட்டல் டாக்டரை வர சொல்லாம் நீ முதலில் முதலுதவி செய்” என சொல்ல.யது நந்தன் சந்தனாவின் வயிற்றை அமுக்க அவள் நீண்ட நேரம் நீருக்குள்ளே இருந்ததால் நிறைய தண்ணீர் உட் கொண்டு இருந்தாள் அதனால் வாய் வழியாக தண்ணீர் கொஞ்சமாக தான் வந்தது. யது




“ இது சரி வராது டா இவங்க ரொம்ப காற்றை, தண்ணீரை உள்ளே இழுத்து விட்டாங்க நீ டாக்டரை அழை மிஸஸ் துவாரகேஷ் பிளிஸ் கொஞ்சம் தள்ளி நில்லுங்க… காற்று வரட்டும் நித்திலா நீ அக்காவின் காலை நன்றாக தேய்த்து விடு என சொன்னவன் வயிற்றை அமுக்க தண்ணீர் சிறிதாக வெளியே வர. அங்கே நின்ற ஒருவர் ஆங்கிலத்தில்




“கேப்டன் நீங்க மூச்சு காற்று கொடுத்து பாருங்க அது வொர்க் அவுட் ஆகும் டாக்டர் வர அப்போ சரியாக இருக்கும்” என சொல்ல… யது நந்தன் அமைதியாக நிற்க அபிராமிக்கு அது என்ன என புரிந்தது நித்திலனுக்கு புரியவில்லை அவனுக்கு ஆங்கிலம் தெரியும் விஷயம் தான் தெரியாது. அவன்




“ யது அண்ணா அந்த அங்கிள் சொல்வது போல மூச்சு காற்றை கொடுங்கள் என் அக்கா கண் திறக்க வேணும்…அக்கா இங்கே பாரு உன் நிது வந்து இருக்கிறேன் கண்ணை திற அக்கா எனக்கு பயமாக இருக்கிறது…அம்மா அக்காவை கண்ணை திறக்க சொல்லு மா என அழ அபிராமி அழுத தன் கண்களை துடைத்தவர் யது நந்தனை பார்த்து. அபிராமி




“ தம்பி நீங்க என் பெண்ணை எனக்கு மீட்டு தந்த கடவுள் கிட்ட தட்ட டாக்டர் போல எனக்கு என் பெண்ணு வேணும்…நீங்க முதலுதவி செய்யுங்கள் இவள் அம்மா நான் சொல்லுகிறேன் என சொல்ல… யது நந்தன் தயங்கினான் காரணமும் அவனுக்கும் இது தான் முதல் தடவை கடலில் தவறி விழுந்த சிலரை காப்பாற்றி இருக்கிறான் தான் அதில் பாதி பேர் ஆண்கள் ஆனால் இது பெண் அதுவும் இளம் பெண் அவன் தயங்க… அண்ணா என நித்திலன் அழைக்க சுற்றி இருந்தவர்கள் கேப்டன் பிளிஸ் டூ இட் என சொல்ல… அபிராமி தன் கரங்களை அவனை நோக்கி குவிக்க உயிரில் ஏது ஆண், பெண் யது நந்தன் கண்களை மூடி தன்னை திடப்படுத்தி கொண்டவன் சந்தனா அருகே அமர்ந்தவன் அவள் முகம் நோக்கி குனிந்தான்… நித்திலனுக்கு முதலில் புரியவில்லை புரிந்த போது அவன் முகம் மாறியது அவனும் பதினைந்து வயது பையன் தானே ஒரளவுக்கு விபரம் எல்லாம் புரியும் வயது அவன் தடுக்க நினைக்க சந்தனாவின் உயிர் கண் முன்னே ஊஞ்சலாட அவன் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்க …யது நந்தன் தன் வலது கரத்தை சந்தனா இதழ் மேலே வைத்தவன் அதை கொஞ்சம் விரித்தது போல வைத்தான் அது மேலே தன் இடது கரத்தை வைத்தவன் அதில் தன் வாயை வைத்து ஊத அங்கே நின்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்க அபிராமிக்கு அவன் பண்பு புரிய அவள் மனதில் யது நந்தன் ஒருபடி மேலே உயர நித்திலன் முகம் தெளிய அவனுக்கு யது நந்தன் மேலே இன்னும் அன்பு பெருகியது.





அப்போது வேகமாக வந்த துவாரகேஷ்க்கு யது நந்தன் சந்தனாவின் இதழில் முத்தமிடுவது போல தோன்ற வேகமாக வந்தவர்… “ஹொவ் டார் யூ பிளடி” என சத்தம் போட்டவர் யது நந்தன் தோளை பற்றி அவனை இழுத்து அறைய போக… யது நந்தன் முகம் மாற அவன் அடிக்க ஓங்கிய அவர் கையை பற்றியவன் பிடி இரும்பு பிடியாக இருக்க துவாரகேஷ் ஆங்கிலதில். அவர்




“ என்ன தைரியம் இருந்தால் இந்த துவாரகேஷ் பெண்ணை தொட நினைப்ப கேவலம் மாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் பரதேசி பயல் நீ…கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசு என் பெண்ணு அவளை தொட்டு இருக்க அது மட்டுமா என்ன திமிர் இருந்தால் என் கையை பிடிப்ப… கார்ட்ஸ் இவன் இந்த தீவை விட்டு உயிரோடு போக கூடாது கையை காலை முறித்து இங்கயே இவனுக்கு சமாதி கட்டுங்க…கேட்க ஏன் என்று கூட இவனுக்கு ஆள் இல்லாத அனாதை பயல் இவன்” என சொல்ல. யது நந்தன் கண்கள் கோபத்தில் ரத்தம் நிறம் கொள்ள அவன் சட்டென துவாரகேஷ் கையயை விட அவன் தடுமாறியவர் பின் நேராக நிற்க தன்னை நெருங்கி வந்த கார்ட்ஸ் அத்தனை பேரையுமே யது நந்தன் பந்தாட ஆரம்பித்தான். அபிராமி





“என்னங்க நிறுத்த சொல்லுங்க அந்த தம்பி தான் நம்ம பெண்ணு உயிரை காப்பாற்றியது அவரை ஒன்றும் செய்ய வேணாம்” என சொல்ல. நித்திலன்





“அப்பா யது அண்ணாவை அடிக்க வேணாம் என சொல்லுங்க பா அவர் தான் அக்காவை காப்பாற்றியவர்” என சத்தம் போட… துவாரகேஷ் பார்வை நித்திலன் மேலே திரும்ப துவாரகேஷ் யது நந்தன் மேலே இருந்த கோபத்தில் தன் பெல்ட்டை கழட்டியவர் தன் உயரம் மறந்து இருக்கும் இடம் மறந்து. துவாரகேஷ்





“இதற்கு எல்லாம் காரணம் நீ தான் டா கண்ட கண்ட நாய் எல்லாம் என் பெண்ணு மேலே கை வைக்க…உன்னை தட்டி வைக்காமல் விட்டது தான் என் தப்பு நீ தான் இவளை அழைத்து போய் இருக்க வேணும் எப்போ பாரு அந்த கிழவன் பேச்சை கேட்டு ஆடி கொண்டு… இன்று உன்னை உறிக்கும் உறியில் இனி நீ என்னை கேட்காமல் என்னை எதிர்த்து ஏதுவுமே செய்ய கூடாது” என சொன்னவர். நித்திலனை நோக்கி பெல்ட்டை வீச என்னங்க என அபிராமி சத்தம் போட துவாரகேஷ் வீசிய பெல்ட் அடி ஒன்று கூட நித்திலன் மேலே விழவில்லை.. காரணம் துவாரகேஷ் கார்ட்ஸை பந்தாடி முடிந்த யது நந்தன் துவாரகேஷ் நித்திலனு நோக்கி அடிக்க வீசிய பெல்ட்டை பற்றி அதை திரும்ப அவரை நோக்கி வீச போக ஸ்டாப் இட் யது என அழைத்தவாறே கேணல் ஜெகதீஷ் வந்தார்.





நிலவு வரும்…🌙






 

T 24

Well-known member
Staff member
Wonderland writer

அத்தியாயம்: 19




யது நந்தன் துவாரகேஷ்யை நோக்கி பெல்ட்டை வீச போக ஸ்டாப் இட் யது என சொல்லி கொண்டு கேணல் ஜகதீஷ் வந்தார்… அவர் வர யது நந்தன் கோபத்தோடு கையில் இருந்த பெல்ட்டை மணலில் தூக்கி போட்டான். ஜெகதீஷ்




“ here's what's going on மிஸ்டர் துவாரகேஷ் நீங்களா இது மை காட் ஸாரி டூ சே பக்கா ரவுடிங்க போல பிகேவ் பண்ணி கொண்டு இருக்கிறீங்க…யது உன்னை நான் எப்படி நினைத்து இருந்தேன் இப்போ உன்னால் ரொம்ப டிசப்பாயின்ட் ஆகி விட்டேன் நான் கேள்விபட்டு வந்த விஷயம் வேற இங்கே நடப்பது வேறாக இருக்கிறது…இங்கே என்ன நடக்கிறது மிஸ்டர் துவாரகேஷ்” என கேட்க. துவாரகேஷ் கோபமாக




“ என்ன நடக்கிறதா இந்த அனாதை பயல் என் பெண்ணை தொட்டி அசிங்கபடுத்தி விட்டான் அதுவும் எப்படி…இத்தனை பெயர் முன்னாடி என் இமேஜ் போய் விட்டது” என சொல்ல.ஜெகதீஷ்




“மிஸ்டர் துவாரகேஷ் மைண்ட் யுவர் வேர்ட்ஸ் என்ன வார்த்தை பிரயோகம் இது அனாதை இது அது என்று கொண்டு…இந்த உலகத்தில் அனாதை என்று யாருமே இல்லை நிச்சயமாக ஒருவருக்கு அன்பு காட்ட ஒருவரை கடவுள் படைத்து இருப்பார்…அனாதை என்றால் யாரு தெரியுமா உண்மையான அன்பு கிடைக்காதவர்கள் தான்…உறவு இருந்தும் அன்பு கிடைக்காதவர்கள் நீங்க படித்தவன் பெரிய பிசினஸ்மேன் பார்த்து வார்த்தையை விடுங்க முதலில் உண்மையை மட்டும் சொல்லுங்க… நீங்க பெரியவங்க உண்மையை தவிர பொய் தான் உங்க வாயில் இருந்து வரும் நித்திலன் நீ சொல்லு பா இங்கே என்ன நடந்தது என்று” என. நித்திலன்





“ அங்கிள் அப்பா சொல்வது எல்லாம் பொய் யது அண்ணா அக்காவை காப்பாற்ற தான் போனார்…அம்மா கிட்ட கேட்டு பாருங்க என்ன நடந்தது தெரியுமா” என நடந்த அனைத்தையும் சொல்ல அதை கேட்டு விட்டு. ஜெகதீஷ்




“ மிஸ்டர் துவாரகேஷ் இப்போ தப்பு யாரு மேலே உங்க மேலே உங்களை விட யதுவை பற்றி எனக்கு நன்றாக தெரியும்…உங்க கிட்ட இருக்கும் ஈகோ தான் இப்போ உண்மையை அறிந்து கொள்ள விடாமல் தடுத்தது…முதலில் எனக்கு ஒன்று புரியவில்லை உங்க பெண்ணு நலத்தை பாராமல் யது உங்க பெண்ணை தொட்டு தூக்கி காப்பாற்றியது தான் உங்களுக்கு பெரிதாக போய் விட்டதா…சந்தனா உங்க ஒரேய பெண்ணு அவள் நலமாக இருக்கிறாளா என பார்க்காமல் மற்ற எல்லாம் தான் உங்களுக்கு முக்கியமாக படுகிறது…நீங்க யதுவை பாராட்ட வேணாம் அவனை இப்படி நான்கு பேர் பார்க்க அசிங்கபடுத்தி விட்டு இருக்கிறீங்க…இது மட்டும் உங்க மாமனார் மிஸ்டர் தணிகாசலத்திற்கு தெரிந்தால் பிறகு உங்க நிலை பற்றி நான் சொல்ல தேவையில்லை.




நித்திலன் உங்க பையன் அவன் செய்த தப்பு என்ன அதுவும் படித்த மனிதர் பெத்த புள்ளை என்றால் கூடவா…இப்படி காட்டுமிராண்டி போல நடந்து கொள்வது இப்போ இருக்கும் சட்டம் உங்களுக்கு தெரியாதா இல்ல அதையும் பணத்தால் விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணமா…தோளுக்கு மேலே வளர்ந்தால் தோழன் என சொல்வாங்க தட்டி வைக்கவும் வேணும் தட்டி கொடுக்கவும் வேணும்… சின்ன பையன் அவனுக்கு அக்கா தான் உயிர் அவள் ஆசைபட்டாள் என்று தான் அவன் சுற்றி காட்ட கடற்கரைக்கு அழைத்து வந்தான்…இது ஒரு விபத்து அது கூடவா உங்க புத்திக்கு தெரியவில்லை.




அடுத்து யது நந்தன் செய்த குற்றம் தான் என்ன உங்க பெண்ணை உயிரோடு உங்களுக்கு மீட்டு தந்தது தான் குற்றமா…துவாரகேஷ் நீங்க பிசினஸ் செய்பவர் வெளிநாடுகளில் கூட அங்கே ஆண் பெண் எப்படி வெளிபடையாக இருப்பாங்க என தெரியும்… இங்கும் இப்போ அந்த கலாசாரம் வந்து விட்டது முதலுதவிக்கும் சாதாரண முத்ததிற்க்கும் கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியாது…அதுவும் பெத்த அம்மா கூட பிறந்தவன் சுற்றிலும் ஆளுங்களை வைத்து கொண்டு முத்தம் கொடுக்க யது நந்தன் ஒன்றும் கெடு கெட்டவன் அல்ல…




அவனை பற்றி உங்களை விட எனக்கு இங்கே இருக்கும் பலருக்கும் தெரியும் ஏன் உங்க நண்பர் பாலா உட்பட…அவன் ஒழுக்கம் பற்றி நீங்க சொல்ல வேண்டிய தேவையும் இல்லை அது மட்டுமல்ல அவன் நம்ம வந்த ஷிப்பின் கேப்டன் அவனை போய் எப்படி அசிங்கபடுத்தி விட்டீங்க இனி அவன் வேற ஒரு பெண்ணு ஆபத்தில் இருக்கும் போது எப்படி உதவ முன் வருவான்… முதலில் மனுஷனாக நடக்க கற்று கொள்ளுங்கள் பிறகு கோடீஸ்வரன், பிசினஸ்மேனாக நடக்க கற்று கொள்ளலாம் இதோ டாக்டர் வருகிறார்” என சொல்ல… துவாரகேஷ்க்கு ஜெகதீஷ் பற்றி நன்றாக தெரியும் அவருக்கு அரசாங்கத்தில் இருக்கும் சலுகைகள் பற்றியும் கூட அதனால் யது நந்தன் மேலே கொலை வெறி இருந்தாலும் கூட அமைதியாக இருந்தார்.




ஹோட்டல் டாக்டரை அருண் அழைத்து வந்தவன் யது நந்தன் இருக்கும் நிலை கண்டவன்… யது என அவன் அருகே போனான் காரணம் நடந்த சண்டையில் சில அடிகள் பட்டு யது நந்தனுக்கு காயம் ஏற்பட்டு இருந்தது அது போல துவாரகேஷ் கார்ட்ஸ்க்கு‌ம். அருண்



“டேய் என்ன டா இது உடலில் காயம் எங்கே போன இவங்களுக்கும் வேற அடிபட்டு இருக்கிறது…என்ன டா நடந்தது சண்டை போட்டாயா” என கேட்க. யது




“ இங்கே வேணாம் பிறகு பேசலாம் நான் என் ரூம்க்கு போகிறேன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நீ இங்கே எல்லாம் பார்த்து கொள்ளு” என சொன்னவன். துவாரகேஷ்யை கோபமாக பார்த்து விட்டு தன் ரூம்க்கு போனான் அருண் அவன் பின்னால் போக போக. ஜெகதீஷ்




“ அருண் வெயிட் அவன் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் கொஞ்ச நேரம் கழித்து நான் போகிறேன்..நீ இவங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா வேற தேவை ஏதும் இருக்கிறதா என பார்த்து கொள்ளு உங்க கடமை முக்கியம் சொந்த பிரச்சனை அதற்கு பிறகு தான்” என்றார்.




டாக்டர் சந்தனாவை செக் செய்து விட்டு அருகே நின்ற துவாரகேஷிடம். டாக்டர்




“ சார் மேடம் நிறைய தண்ணீர் சாப்பிட்டு இருக்கிறாங்க கூடவே சுவாசிக்க முடியவில்லை எதிர்பாராத அதிர்ச்சி தந்த பயம் அது தான் இப்படி இன்னும் கண் திறக்காமல் இருக்கிறாங்க…நான் ஒரு ஊசி போடுகிறேன் நைட்குள்ளே சரியாகி விடும் இவங்க உடம்பு வீக் என்றால் நாளை மார்னிங் தான் கண் திறப்பாங்க…கொஞ்சம் ஜூரம் அடிக்கும் பாறைகள் உரசிய காயங்கள் இருக்கிறது கிளீன் பண்ணி மருந்து போட வேணும் ரூம்க்கு அழைத்து போகலாமா இங்கே மெடிக்கல் ரூம் இருப்பதால் ப்ராப்ளம் இல்லை என சொல்ல.துவாரகேஷ்




“ தேவையில்ல நீங்க என் பெண்ணு ரூமூக்கு வந்து அவளை செக் பண்ணுங்க சுந்தரம் நம்ம கார்ட்ஸ் எல்லாம் மெடிக்கல் ரூம்க்கு அழைத்து போ…அபிராமி நீ நித்திலனை அழைத்து கொண்டு சந்தனா ரூம்க்கு போ” என. சொன்னவர் மயங்கி கிடந்த மகளை தூக்கி கொண்டு சந்தனா ரூம்க்கு போனார்.





யது நந்தன் தன் ரூம்க்கு வந்தவனுக்கு துவாரகேஷ்யை கொலை செய்யும் வெறி வந்தது எதையுமே புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது…இவன் எல்லாம் ஒரு பிசினஸ்மேன் பிசினஸ்க்கு தேவை முதலில் நிதானம் அது துளி கூட இவனிடம் இல்லை…சின்ன பையன் அவன் தன் அக்காவுக்காக துடித்த துடிப்பை கூட துவாரகேஷிடம் பார்க்க முடியவில்லை அவனை போய் பெல்ட்டால் அடிக்க போகிறார்

இவன் எல்லாம் ஒரு அப்பன் இவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது…



கேணல் சார் மட்டும் தலையிடாமல் இருந்து இருக்க நுங்கு சீவுவது போல இவன் தலையை சீவி இருப்பேன் என நினைக்க அவன் ரூம் பெல் அடிக்க…ரூம் சர்வீஸ் இல்லை என்றால் அருண் என நினைத்தவன் யஸ் கம்மிங் என சொல்ல வந்தவரை பார்த்தவன் நீங்களா என எழுந்தான்… ஆம் வந்தவர் கேணல் ஜெகதீஷ் கையில் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் கொண்டு வந்து இருந்தார் இவன் எழ சிட் டவுண் யது என சொல்ல யது நந்தன் அங்கே இருந்த சோபாவில் இருக்க ஜெகதீஷ் அவன் அருகே அமர்ந்தவர். ஜெகதீஷ்




“யது உன் காயங்களை காட்டு மருந்து போட இல்லை என்றால் செப்டிக் ஆகி விடும் தண்ணீரில் வேறு இருந்து இருக்க….கடலில் உள்ள சில மீன்களின் வாய், வாலில் விஷம் உள்ளது பாறைகளில் கூட அப்படி சரியாக கவனிக்காமல் விட்டால் ஆபத்து ஆகி விடும்” என சொல்ல. யது





“பரவாயில்ல கேணல் எனக்கு இது புதுசு இல்ல பழக்கம் தான் கொடுங்க நான் போட்டு கொள்கிறேன்” என. சொல்ல கேணல் அவன் தோளை அழுத்தமாக பற்றியவர். கேணல்




“ யது என் பேரன் வயது தான் உனக்கு இருக்கும் சோ பரவாயில்ல விடு உன் கோபம் புரிகிறது பா…துவாரகேஷ் செய்தது பெரிய தப்பு பட் அவர் செய்த தவறை நீ செய்து விட கூடாது என்று தான் நான் உன்னை தடுத்தேன்…துவாரகேஷ் பற்றி உனக்கு சரியாக தெரியாது அவன் வெற்றியை அடைய எந்த எல்லைக்கும் போவான்… இப்போ இங்கே உல்லாச பயணம் என்ற பெயரில் வந்தது கூட ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.





சந்தனா இவனுக்கு மகளாக பிறந்தது அதிர்ஷ்டம் மட்டுமல்ல பாவமும் கூட அந்த சின்ன பெண்ணை இவன் தன் இஷ்டப்படி வளைக்க நினைக்கிறான்…ஆனா இவனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை தணிகாசலம் அவர் இவனை விட பிசினஸ் உலகில் முடி சூடா மன்னன் அவர் தன் பேத்தியை இவனிடம் விட்டு வைத்த காரணம் அபிராமி…உண்மையில் அவள் க்ரேட் இவள் உயிர் தோழி தான் சந்தனாவின் அம்மா காயத்திரி தணிகாசலத்தின் ஒரேய பெண்ணு பிசினஸ் வுமன் தன் தோழிக்காக கொடுத்த வாக்குக்காக தான் சந்தனாவுக்காக துவாரகேஷை கல்யாணம் பண்ணினாள்.




துவாரகேஷை பொருத்த வரைக்கும் இவர்கள் அனைவருமே அவன் பொம்மைகள் அவன் சொற்படி கேட்க வேணும்…அதில் தப்பி பிறந்தவன் நித்திலன் தணிகாசலத்தின் வளர்ப்பு இவனை எதிர்க்கும் ஆயுதமே அவன் தான் தணிகாசலத்திற்கு இவன் என்றால் உயிர்… தன் எதிர்கால வாரிசாக இவனை தான் பிசினஸ்ஸில் இறங்க போவதாக பேச்சு துவாரகேஷ்க்கு அதுவும் ஒரு விதத்தில் கோபம்…தன்னை புறக்கணிப்பதாக எண்ணம் தன்னை தான் அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேணும் என்ற எண்ணம் அது தான் உன் கிட்ட அவன் இப்படி நடந்து கொண்டு விட்டான் யது…சந்தனா ரொம்ப அப்பாவி பெண்ணு இவனை வைத்து அவளை திமிர் பிடித்தவள் என எண்ணி விடாதே” என பேசியவாறே அவன் காயங்களுக்கு மருந்து போட்டு விட்டு போக துவாரகேஷ் டவர் கிடைக்க அவசரமாக யாரோ ஒருவரிடம் தொடர்ப்பு கொள்ள அவர் மறுநாள் வருவதாக சொன்னார்.





நிலவு வரும்…


 
Status
Not open for further replies.
Top