ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை ஆளும் திமிரழகே - கதை திரி

Status
Not open for further replies.

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 17

பறவைகளின் கீச் குரல், அந்த ரம்மியமான காலை வேலையை அலங்கரிக்க, என்றும் போல் அழகான சூரிய உதயம்தான், ஆனால் இரு ஜோடிகளின் உள்ளத்திலும் வலியை சேர்த்தபடி அந்த நாளானது தொடங்கியிருந்தது.

படுக்கையிலிருந்து எழுந்த பூவினியின் கண்கள் அன்னிச்சையாக அவனைத் தேடியது என்றால் மிகையாகாது. ஆனாலும் அவளது திமிரு பிடித்த மனமோ அதனை ஏற்காது.
'நான் எதுக்கு அவரை பார்க்கனும். அவரு பண்ணது மட்டும் சரியா?' என்று மனதிற்குள் நினைத்தபடி, தலைமுடியினைக் கைகளாலே திரளாக சேர்த்து கொண்டையிட்டுக் கொண்டவள், தனது வேலைகளை பார்க்கத் தொடங்கியிருந்தாள்.

"குட் மார்னிங் அத்தைமா. இருங்க நான் டீ வைக்குறேன்." என்று கூறிக்கொண்டே பாலைக் காய்ச்சியவள் அனைவருக்கும், தேநீரைக் கொண்டு சென்றுக் கொடுத்தாள்.

கடைசியாக பிரபஞ்சனுக்கு எடுத்துச் செல்ல நினைத்தவள், அறைக்குள் செல்ல அங்கு அவன் இருந்தால் தானே? இறுதியாக தன் மாமியாரிடம் வந்தவள், எப்படி கேட்பது என்று தவித்தபடி நின்றாள்.

"பூவிமா காலையில என்ன டிபன் செய்யலாம்? ஆமா கேட்கனும்னு நினைச்சேன். பிரபாக்கும் உனக்கும் எதாவது சண்டையாடா?" என்று தயக்கத்தை விடுத்துக் கேட்டே விட்டார் தாமரை.

'சொல்லிட்டாரோ?' என்று திருதிருவென விழித்தவள், "அது வந்துமா..." என்று தயங்க,

"பூவிமா என்னை சண்டை ஏது என்னென்னுலாம் கேட்கலைடா. ஆனால் அவன் முகமே சரியில்லைடா அதான் அப்படி கேட்டேன். எதுனாலும் மனசுவிட்டு பேசுனீங்கனா சரியாகிடும். அடுத்த வாரம் தான் வேலைக்கு போறதா இருந்தான், பார்த்தால் இன்னைக்கே கிளம்பி போய்ட்டான். சாப்பிட கூட இல்லை. அதான் வருத்தமா இருக்கு." என்று பெருமூச்சொன்றை விட,

"சண்டை எல்லாம் இல்லை அத்தைமா. நான் பார்த்துக்கிறேன். கவலைப்படாதீங்க." என்று கூறினாலும் அவள் மனதுக்கு உறுத்தலாகவே இருந்தது.

ஏன் என்றால் அம்மணி பேசிய பேச்சு அப்படி. அவனது செயலில் கோபம் கொண்டவளது வார்த்தைகள் அவனை புரட்டி போட்டிருக்க, காலையில் எழுந்ததும் தான், தான் செய்ததும் தவறுதானே என்று தோன்றியது பூவினிக்கு.

நேற்று இரவு நடந்த ஒவ்வொன்றையும் நினைக்கத் தொடங்கியது அவளது மனம்.நேற்று தனது உரிமையை நிலைநாட்டுவதற்காக அவளின் அதரங்களை பற்றியிருந்தவன், மெல்ல அவளிடம் இருந்து விலகியபடி, அவளது கன்னங்களை தன் இரு கைகளால் ஏந்தி, "பாப்பு சாரிடி." என்று இதமாக கூறியவன் கண்களாலே மன்னிப்பை யாசித்தான்.

"அய்யோ எதுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்குறீங்க? உங்களுக்கு தான் எல்லா உரிமையும் இருக்கே." என்ற கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுக்கும்போதே அவளது இருவிழிகளில் இருந்தும் வழிந்த கண்ணீர் அவனின் கைகளின் மீதே விழ,

அவளது கண்ணீரை தன் பெரு விரல் கொண்டு துடைத்தவன், "பாப்பு சாரிமா. நான் எதோ கோபத்துல நடந்துகிட்டேன்டா. நிஜமா உன்னை கஷ்டபடுத்தனும்னு நினைச்சு பண்ணல." என்றவனது பதிலில் விரக்தியாக புன்னகைத்தவள்,

"நான் உங்களை எதுவுமே சொல்லலை. ஏன் நிறுத்திட்டீங்க. இன்னும் கொடுங்க. என்னை, என்னவெல்லாம் பண்ணனும்னு தோணுதோ பண்ணுங்க." என்றவளது வார்த்தைகளைக் கேட்டு ஆடிப்போனவன், அடிபட்ட பார்வை ஒன்றை அவள் மீது செலுத்தினான்.

"பூவி நீ பேசுறது ரொம்ப தப்பா இருக்கு. கோபத்துல என்ன பேசுறோம்னு தெரியாமல் பேசாதடி." என்றவனை உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு ஏறிட்டவள்,

"நல்லா உங்களை பத்தி புருஞ்சுகிட்டு தான் பேசுறேன். நேத்து எதுவும் பண்ண முடியலை. அதான் இன்னைக்கு உங்க உரிமை, அது, இதுனு இப்படி பண்றீங்க? இன்னும் ஏன் உங்களை நியாயப்படுத்திக்க பார்க்குறீங்க? உங்களுக்கு என்ன..? நான் தானே வேணும், எடுத்துக்கோங்க." என்று கோபத்தில் தன் சேலையை விலக்கியவள், அவன் முன்பு நிராயுதபாணியாக நிற்க... அவளது செயலில் சில்லுசில்லாக நொறுங்கியவன், "அறைஞ்சனா பார்த்துக்கோ" என்று அவளை அறைவதற்காக கையினை ஓங்கியிருந்தான் கோபத்தில்.

அவனது அந்த கோபத்தைக்கண்டு பதட்டத்தோடு பார்த்தவளது கண்களில் கண்ணீர் நிரம்பியது. பின் என்ன நினைத்தானோ, தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளது சேலையை எடுத்து அவள் மீது போட்டபடி,

"என் பொறுமைக்கும் எல்லை இருக்கு பூவினி. ஆனால் நீ இப்போ பண்ணது என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருக்குடி. என்னடி நினைச்சுட்டு இருக்க என்ன பத்தி? ஒரு நிமிசத்துல உடல் தேவைக்காக தான் அலையறனு சொல்லாமல் சொல்லிட்டியேடி. உனக்கு பிடிச்சது எல்லாம் பண்ணனும், உன்னைத் தாங்கனும், உன்னோட சேர்ந்து, காதலால சந்தோசமாக வாழ்க்கையை வாழனும்னு, எவ்வளவோ ஆசைகள் அது எல்லாத்தையும் இப்படி சுக்கு நூறாக உடைச்சுட்டுயேடி. என் காதலை நீ புருஞ்சுக்காத வரைக்கும் என் நிழல்கூட உன் மேலப்படாது. இதுக்கு மேல நான் இங்க நின்னா, வர கோபத்துக்கு அடிச்சிடுவேன் பார்த்துக்கோ" என்றவன் ஒரு நிமிடம் கூட அவ்வறையில் இருக்கவில்லை.

வெளியே வந்தவன் மொட்டை மாடிக்கு சென்றுக் கொண்டு, "என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருக்க பூவினி? உன்னை பிடிச்சு கல்யாணம் பண்ணேன். உன்னை இதுவரை தப்பாகூட பார்த்தது இல்லடி. ஏன் ஏன் இப்படி பண்ண?" என்று கத்தியவன் அங்கிருந்த சுவற்றில் தன் கைகளை மடக்கி குத்திக் கொண்டவனது கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக வழிந்தோடியது.

வலி என்றால் அனைவருக்கும் ஒன்று தானே. அவன் வலியோ தான் நேசித்த பெண்ணின் வார்த்தைகளில் இருந்து கிடைக்க, அதை சற்றும் எதிர்பாராதவன் நொந்துதான் போனான். அவனது இதயத்தை உயிரோடு அறுப்பது போன்ற உணர்வு தான் பிரபஞ்சனுக்கும்.

இங்கு பூவினியோ, கலங்கிய விழிகளோடு கட்டிலில் பொத்தென்று அமர்ந்தபடி, அழுது கரையத் தொடங்கியவளுக்கு எப்போது உறங்கினாள் என்பது கூட தெரியவில்லை.

கணவன் மனைவி உறவில் புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்று. அது இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் கடினம்தான்.
நேற்றைய நிகழ்வை இன்று நினைத்தவளுக்கு தான் செய்த செயலின் வீரியம் நன்கு புரிந்தது.

ஒரு மகளாக, சகோதரியாக, மருமகளாக என்று அனைத்திலும் சிறந்தவள் தான். ஆனால் அவனிடம் மட்டுமே இவ்வாறு இருக்கிறாள். அது எதனால் என்று யோசித்தால் கூட அவள் செய்த தவறு என்னவென்று உணர்வாள். ஆனால் இங்க அவனின் மீது மட்டும் வரும் அவளின் திமிர் அவளை யோசிக்க விடாமல் செய்துக் கொண்டிருந்தது.

"நான் ரொம்ப ஓவரா பண்ணிட்டேன்னு மட்டும் புரியுது. பேசாமல் மன்னிப்பு கேட்போமா?" என்றவளின் சிந்தையை கலைத்தது அவளது கைப்பேசி.
போனை எடுத்துப் பேசத் தொடங்கியவள், "இல்லை மேம். கீ எங்கிட்ட தான் இருக்கு. ஒரு ஒன் ஹவர்ல கொண்டு வந்து தரேன் மேம்." என்று கூறிக்கொண்டே வைத்தவள்,

"ஒரு வாரம் லீவ் போட்டும் விட மாட்டிங்குறாங்க... மொதல்ல அந்த சாவியை ஒப்படைச்சுட்டு வந்திடனும்." என்று புலம்பிக் கொண்டே சலிப்போடு கல்லூரிக்கு செல்வதற்காக தயாராகியவளுக்கு தக்க பதிலடி காத்துக் கொண்டிருந்தது.

அதே சமயம், முக்கியமான பரிட்சை இருப்பதால் கல்லூரிக்கு வந்து இறங்கினாள் யாழினி. ஏற்கனவே அவளுக்காக அங்கு காத்திருந்த தென்னவனோ, அவளை நோக்கி வர, அவனைக் கண்டதும் புரியாதப் பார்வை இவள் பார்க்க, அதற்குள் அவளிடம் வந்து சேர்ந்தான் தென்னவன்.

"இப்போ கால் எப்படி இருக்கு யாழ்?"

"ம்ம்ம் வலியில்லை. நீங்க இத கேட்கத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா?"

"ஏன் வரக்கூடாதா என்ன?" என்றவன் கேள்வியாய் அவளைப் பார்க்க,

"அப்படினு இல்லை. இங்க பேசுனா எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. நான் கிளம்புறேன்." என்று கிளம்புவதிலேயே குறியாக இருந்தாள் யாழினி.

"பாப்பா உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசனும். கொஞ்சம் அந்த பக்கம் வரியா?"

"எதுனாலும் சாயங்காலம் பேசலாமே. எனக்கு நேரமாச்சு."

"இன்னும் உனக்கு காலேஜ் ஆரம்பிக்க அரை மணி நேரம் இருக்குனு தெரியும் பாப்பா. முக்கியமான விசயம் பேசனும் வா." என்றவன் அவளது கைகளை பற்றிக்கொண்டு மரத்தடிக்கு அழைத்துச் சென்றான்.

"சொல்லுங்க என்ன பேசனும்? எனக்கு எக்சாம் இருக்கு?"

"தெரியும். அதவிடு நேத்து ஏன் பொய் சொன்ன?"

"என்ன பொய்? எனக்கு ஒன்னும் புரியலையே." என்று கூறினாலும் அவள் மனமோ பயத்தில் நடுங்கியது என்னவோ உண்மைதான்.

"நேத்து நீ காலேஜ் வரலை. ஆனால் காலேஜ் விட்டு வந்தப்போ விபத்துனு சொல்ற? என்னதான் ஆச்சு? இன்னுமே நீ நிதானமாவே இல்லை. படபடனு பேசுறவ, இப்போ தெறிச்சு ஓடுறதுலயே குறியா இருக்க... ஏன்?"

"அப்படி எல்லாம் இல்லை. அது எக்சாம் டென்ஷன். ஆமா நான் காலேஜ் வரலைனு நீங்க எப்படி சொல்றீங்க?"
'இது மட்டும் சரியா கேட்பா' என்று நினைத்துக்கொண்டே, "என் பிரெண்டோட தம்பி உன் கிளாஸ் தான். இப்போ சொல்லு நேத்து என்ன தான் நடந்துச்சு?" என்று வம்படியாக அவன் கேட்டதில் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்துதான் போனாள் யாழினி.

"இங்க பாருங்க தென்னமரம். நீங்க என் சொந்தகாரங்களா இருக்கலாம். அதுக்காக எல்லாம் சொல்லனும்னு அவசியம் இல்லை. எனக்கு நேரமாச்சு, நான் கிளம்புறேன்."

"பாப்பா உனக்கு ஏதாவதுனா நான் துடிக்குற துடிப்பு எனக்கு தான் தெரியும். ப்ளீஸ் பாப்பா எதுனாலும் சொல்லுமா?" என்று இறைஞ்சினான்.

"எனக்கு என்ன ஆனால் உங்களுக்கு என்னங்க பிரச்சனை? ஏன் இப்படி கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றீங்க?" என்றவள் எரிச்சலாக பார்த்தாள்.

"ஏன்னா எனக்கு உன்னை." என்று தயங்கியவன் அமைதியாக நிற்க,
"சொல்லுங்க. என்ன?" என்று கேள்வியாய் பார்த்தாள்.

"ஒன்னும் இல்லை போ. போய் எக்சாம் எழுது." என்று மட்டும் கூறியவன் கோபமாக நிற்க, அவளோ புரியாதப் பார்வை ஒன்றை அவன்மீது செலுத்தியவள்,யோசித்துக் கொண்டே செல்ல, அவள் முன்னே வேகமாக வரும் லாரியினை கவனிக்கத் தவறியிருந்தவளது கைகளை பற்றி தன்புறம் இழுத்திருந்தான் தென்னவன்.

********
அந்த அழகான காலை நேரம் தன்னை நோக்கி வரும் அவளையே காதலோடு பார்த்துக் கொண்டிருந்தான் அகிலன். அவனது அருகில் வந்து நின்றவள் அழகாய் புன்னகைத்தாள்.

"நான் எப்படி இருக்கேன் அகில்." என்று கண்களை சிமிட்டிக் கொண்டு கேட்பவளின் அழகினைக், கண்களாலே களவாடிக் கொண்டிருந்தான் அகிலன்.

"நீங்க இன்னும் நான் எப்படி இருக்கேனு சொல்லவே இல்லையே அகில்?" என்றவள் அவனது கண்களையே ஆர்வமாக பார்க்க, அவளது உள்ளமோ அவனது பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

"நான் தான் உன்னை சின்னப் பொண்ணுனு தப்பா நினைச்சுட்டேன். இந்த பிளாக் சாரியில ரொம்ப அழகா இருக்க. ஆனால் இந்த ஹைட்டு தான் குட்டியாக் காட்டுது. இட்ஸ் ஒகே ஐ வில் மேனேஜ்." என்றான் அவளை ரசித்துக்கொண்டே.

அவனது முதல் கருத்தில் சிவந்தாலும், உயரம் சார்ந்த அவனது இரண்டாம் கருத்தில் சீண்டப்பட்டவள், தனது காலின் பெருவிரல்களால் சற்று எம்பிக் கொண்டே அவனது கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டப்படி, "இப்போ உங்க உயரத்துக்கு சரியா இருக்கேனா?" என்றவள் தன் ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேள்வியாய் பார்க்க,

அவளது அணைப்பிலும், நெருக்கத்திலும் கிறங்கியவன், அவளது காதோரம் தனது உதடுகளை குவித்தபடி, "ஏய் பட்டர்ஸ்காட்ச். நீ இப்படி இருந்தால் தாண்டி ரொம்ப அழகு. உயரத்திலயும் சரி, என்னை பிடிச்சு நிற்குற, இந்த விதத்திலையும் சரி." என்று காதலோடு தொடங்கி பின் கிசுகிசுப்பாய் முடித்தான்.

அவனது பதிலில் சிவந்தவள், "போங்க அகில் நீங்க ரொம்ப மோசம்." என்றவள் வெட்கத்தோடு அவனை விட்டு விலகினாள்.

"அப்படியா சொல்ற? சும்மா நின்னவனை உசுப்பேத்திட்டு, இப்போ இப்படி சொல்றியா? சரிவிடு நான் கிளம்புறேன்." என்று கூறிக் கொண்டே அவன் திரும்ப, அவனை நகரவிடாமல் பின்னிருந்து வந்து அணைத்திருந்தாள் அவள்.

"என்னைவிட்டு போகமாட்டேன்னு சொல்லிட்டு? இப்போ போறிங்களா அத்தான்." என்று கூறும்போதே, பெண்ணவளின் கண்களில் திரண்டிருந்த கண்ணீர் அவனது முதுகினை நனைத்திருக்க, அவளது அன்பில் நெகிழ்ந்தவன், பின்னிருந்தவளை தன் புறம் இழுத்து அவளது தாடையை தன் ஒற்றைவிரலால் நிமிர்த்தினான்.

"ஏய் பட்டர்ஸ்காட்ச் உன்னைவிட்டு போற ஐடியா எல்லாம் இல்லை. வா இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று காதல் பொங்க கூறுபவனை இறுக அணைத்தவள்,
"இப்போவேவா?" என்றாள் அவனது இதயக்கூட்டின் கதகதப்பை உள்வாங்கிக் கொண்டு.

"ம்ம்ம் இப்போவேதான். பண்ணிப்போமா?" என்று இதழ்கள் பிரித்து அவன் சிரிக்க, அவனது சிரிப்பில் என்றும் போல் மதி மயங்கிப் போனவள், "பண்ணிக்கலாமே." என்றாள் அவனது முகத்தினை நிமிர்ந்து பார்த்தபடி.

அவளது கண்களையே உற்றுப் பார்த்தவன், அவள் உயரத்திற்கு குனிந்து, பெண்ணவளின் இரு கண்களின் மீதும் முத்தம் பதிக்க,
வெட்கத்தில் சிவந்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

"ஏய் பட்டர்ஸ்காட்ச் உனக்கு என்ன எவ்ளோ பிடிக்கும்?"

"வானத்துல இருக்க நட்சத்திரத்தை எண்ண முடியாது, அது போல என் மனசுல உங்க மேல இருக்க அன்பை வார்த்தைகளால வெளிப்படுத்த முடியாது அகில் பேபி." என்றவளை சுவாரஸ்யமாக பார்த்தவன், அவளைத் தன்னோடு மேலும் மேலும் இறுக அணைத்துக் கொண்டான்.

"ஐ லவ் யூ பட்டர்ஸ்காட்ச். ஐ லவ் யூ சோ மச்." என்று பிதற்றிக் கொண்டிருந்தவனது கைபேசி சிணுங்கியதில், தன் நினைவுகளைக் கலைந்து நிகழ் உலகிற்கு வந்தான் அகிலன்.

அவளோடு பேசிய, வாழ்ந்த ஒவ்வொரு நினைவுகளும் அவனைத் துரத்திக் கொண்டே இருக்க.... கைக்கு கிடைக்கும் பொருட்களை எல்லாம், எறிந்தபடி தன் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தவனோ, கைபேசியில் கேட்ட செய்தியால் விரைந்து தயாராகியபடி அடுத்து சென்ற இடம் மருத்துமனை.

உயர்தர மருத்துவமனை அது. புயலென விரைந்து வந்தவன் அங்கிருந்த ஐ.சி.யூ விற்குள் நுழைந்திருந்தான்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, அகிலனின் தந்தை கிருபாகரனின் அருகில் சென்றவன், "டாட்" என்று மென்மையாக அழைத்தான்.

அவனது குரலில் மென்மையும் இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அவனது அழைப்பில் இருந்தது.

கடினபட்டு தன் கண்களை திறந்த கிருபாகரனோ தன் மகனையேக் கண்கள் கலங்கி போய் பார்த்தார்.
இரும்பாய் இருந்த மனிதன் கலங்குவதைக் கண்டதும் துடித்தான் ஒரு மகனாக.

அவரது கண்ணீரை தன் கைகளால் துடைத்தவன், "டாட் உங்களுக்கு ஒன்னும் இல்லை. சீக்கிரமே சரியாகிடும்." என்றவன் மகனாக ஆறுதல் சொல்ல, ஒரு மருத்துவனாக அவன் அறிவான். தன் தந்தை வாழ்வின் கடைசி தருணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது.

ஆம் அவருக்கு நுரையீரல் புற்றுநோயின் இறுதிகட்டம்.
விரக்தியாக புன்னகைத்த கிருபாகரனோ தனது ஆக்ஸிஜன் மாஸ்கினை கழற்றியவர், "சாகப் போறவனுக்கு ஆறுதலா அகி... உன்கிட்ட பேசனும்."என்றார்.

"டாட் ரிஸ்க் எடுக்க வேண்டாம் ப்ளீஸ்" என்று கூறிக்கொண்டே மாஸ்க்கை எடுத்து மாட்டச் சென்றவனைத் தடுத்து நிறுத்தியவர், "அகி... நான் பேசனும்." என்றவர் அவனது கைகளைப் பற்றியிருக்க, அவர் கூறப்போகும் செய்தி அவன் வாழ்வையே மீண்டும் புரட்டிப் போடுமா? இல்லை மாற்றம் தருமா என்பது அந்த விதி அறிந்த ஒன்று.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
18.அத்தியாயம்

ஓரமாக வந்த லாரியை கவனிக்காமல் யாழினி செல்ல,
அவளது கைகளைப் பற்றி தன்புறம் இழுத்திருந்தான் தென்னவன். மோதிய வேகத்தில் அவன் திண்ணிய நெஞ்சத்தின் மீதே மோதியவளுக்கு, நொடிப்பொழுதில் உண்டான அதிர்ச்சி சற்றும் விலகவில்லை. பயத்தில் அவனது சட்டையினை அழுந்தப் பற்றி இருந்தாள்.

அவளது தலையை தன் வலது கரத்தில் அழுத்தமாக பற்றியவனது இதயம் துடிக்கும் சத்தம் அவளின் செவிகளுக்கு நன்கு கேட்காமலும் இல்லை. சிறிது நேரம் கழித்தே, அவனிடம் ஒன்றி நிற்பது புரிய பட்டென்று அவனைவிட்டு விலகி நின்றாள் யாழினி.

"பார்த்து போறது இல்லையாடி. ஒரு நிமிசம் உயிரே போய்டுச்சு." என்று கூறும் போதே ஏறி இறங்கி வந்த அவனது உரிமை நிறைந்த குரலைக் கண்டு கண்கள் விரிய பார்த்து நின்றாள் யாழினி.

"நான் ஓரத்திலதான் போனேன். அது லாரி ஓட்டுனவங்க மிஸ்டேக்" என்று குழந்தைத்தனமாக சுட்டிக் காட்டுபவளைக் கண்டு கோபத்தில் முறைத்தவன்,

"இது எல்லாம் தெளிவா பேசு. எவன் மிஸ்டேக்கா இருந்தாலும் வலி நமக்குதான். ரோட்டில் நடக்குறப்போ நாலாபக்கமும் பார்த்துட்டு போக கத்துக்கோ. பொய் மட்டும் சரளமாக பேசுற? ஆனால் ரோட்டுல எப்படி நடக்கனும்னு மட்டும் தெரியாது." என்றவனின் வார்த்தைகளில் அடிப்பட்ட பார்வை பார்த்தவள்,

"ரொம்ப பேசுறீங்க தென்னமரம். வேணும்னே பேசுறீங்க." என்று கண்கள் கலங்கியவளது கண்ணீரை துடைத்துவிட வேண்டும் என்ற துடிப்பு அவனுக்கும் உண்டானது.

முதல் பார்வையிலேயே மனதை பறித்தவள் அல்லவா! அவளை அடித்தக் கைகளாலே அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள ஆசை எப்போதோ வந்துவிட்டது தென்னவனுக்கு. அதிலும் அவள்மீது தனக்கு உண்டான காதலை நேற்றுதான் உணர்ந்திருந்தான், அவளை காணவில்லை என்று தெரிந்ததும் அவன் பட்டப்பாடை அவன் மட்டுமே அறிவான். அவனோடு சேர்ந்து அலைந்த பிரபுவும் கூட அறிவான். ஆனால் அறியவேண்டியவளோ அறியாமல் இருப்பது விந்தையே.

பின் நிதானத்திற்கு வந்தவன், "பாப்பா. நீ தான் பார்த்துப் போகனும். உன் மேல தப்பு இல்லை தான். ஆனாலும் ஒரு நிமிசத்துல எதாவது ஒன்னு நடந்தால் என்ன ஆகியிருக்கும்." என்றவன் பொறுமையாக கூறிய பிறகு தன் கண்களை அழுந்த துடைத்தவள், "தாங்க்ஸ்" என்றாள்.

"உன் தாங்க்ஸ்லாம் யாருக்கு வேணும்? ஆமா அது என்ன தென்னமரம்? நீ அத்தான் இல்லைனா, மாமானு கூப்பிடுவியா மாட்டியா?" என்று கைகளைக் கட்டிக்கொண்டே முறைத்தவனை, திருதிருவென பார்த்தவள்,

"வாய்ப்பில்லை ராசா." என்று தன் கன்னத்தில் குழி விழ சிரித்துக் கொண்டே அங்கிருந்து செல்ல,

"இருக்குடி உனக்கு. எக்சாம் நல்லா பண்ணு ஆல் தி பெஸ்ட்." என்று கூறியவனது முகத்தில் அப்பட்டமாக அசடு வழிந்தது. புன்னகையோடு அங்கிருந்து சென்ற யாழினி அவன் உரிமையோடு டி என்று அழைத்ததைக் கவனிக்க தவறியிருந்தாள். செல்லும் அவளையே கண்களுக்குள் நிரப்பியிருந்தான் தென்னவன்.

இங்கு மருத்துவமனையில், தன் தந்தையின் கரம் பற்றியவன், "சொல்லுங்க டாட்." என்றான் கனிவாக.

"நான் சொல்லப்போற இந்த விசயம் நிச்சயம் உனக்கு அதிர்ச்சி கொடுக்கும்னு எனக்கு தெரியும். ஆனால் அகி இந்த அப்பாவை மட்டும் வெறுத்துடாதடா என்னைக்குமே."

"டாட்... அது மாதிரி கனவுல கூட நடக்காது. நீங்க ரிலாக்ஸ்டா இருங்க."

"அது போதும்டா அகில்." என்று அன்று நடந்த முக்கியமான நிகழ்வினைக் கூறத் தொடங்கியிருந்தார்.

"உங்க அம்மா கல்யாணியோட பிரசவத்துக்காக கே.எச். மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். நான் வெளிய பதட்டத்தோட நடந்துகிட்டு இருக்கேன். அப்போ அங்க இன்னொரு நிறைமாத பெண்மணியை ஸ்டெச்சரால எடுத்துட்டு வராங்க." என்று கூறும்போதே அன்றைய நினைவு அவர் கண்முன் பளிச்சிட்டது.

"டாக்டர். நீங்கதான் என் மனைவியை காப்பாற்றனும்?" என்று மன்றாடிக் கொண்டிருந்தார் தனஞ்செயன்.

"அவங்க ரொம்ப சீரியஸாக இருக்காங்க. தாயும் பிள்ளையும் காப்பாற்றனும்னா கண்டிப்பா அறுவைசிகிச்சை செய்யனும். நீங்க உடனே பில் செட்டில் பண்ணுங்க. நாங்க ஆப்பிரேஷன் தியேட்டர் ரெடி பண்ணிடுறோம்." என்று கூறிக்கொண்டே மருத்துவர் செல்ல, அவரைப் பின்தொடர்ந்தே சென்றவன் மன்றாடத் தொடங்கினார்.

"நாளைக்கு கடன் வாங்கியாவது கட்டிடுறேன் டாக்டர். இப்போ கையில அவ்வளவு தொகை இல்லை. என் மனைவி வலியில துடிக்குறதைப் பார்க்க முடியலை." என்று அழுது மன்றாட,

"மருத்துவமனைக்குனு சில வழிமுறைகள் இருக்கு. அத மீற முடியாது. இல்லைனா அரசு மருத்துவமனைக்கு கூப்பிட்டு போங்க." என்ற மருத்துவர் அங்கிருந்துச் சென்றிருந்தார்.

"அய்யோ இங்க இருந்து போறதுக்கே இரண்டு மணி நேரம் ஆகிடுமே." என்று தலையில் கைவைத்தவர் அழுகையில் கரைய, அவரது தோள்களை ஆறுதலாக பற்றினார் கிருபாகரன்.

அவரைப் பார்த்ததுமே தான் முதலில் வேலை பார்த்த கம்பெனியின் முதலாளி என்று அறிந்தவர், "சார் நீங்களா?" என்று ஆச்சர்யமாக கேட்டார்.

அவருக்கு அவரைத் தெரிந்திருந்தது. ஆனால் அவருக்கோ தனஞ்செயனை பார்த்த நியாபகம் இல்லாததால், கேட்டே விட்டார்.

"என்னை தெரியுமா?" என்றவர் ஆச்சரியமாக பார்க்க,

"தெரியும் சார். உங்க பஞ்சு மில்லுல ஒரு இரண்டு வருசம் முன்னாடி வேலைப் பார்த்தேன். என் பேரு தனஞ்செயன்."

"ஓ சரி தனஞ்செயன். நானும் நடந்தது பார்த்தேன். உங்க மனைவி பிரசவத்துக்கான பணத்தை நான் காட்டுறேன். நீங்க கவலைப்படாதீங்க." என்று கூறும் கிருபாகரன் அன்று தனஞ்செயனுக்கு கடவுளாகவே தெரிந்தார்.

கேட்காமலே கிடைக்கும் உதவி. அதுவும் இரண்டு உயிர்களை காக்கும் செயலினை செய்த கிருபாகரனின் முன்பு கைகூப்பி தன் நன்றிகளை தெரிவித்துக் கொண்டவர், "ரொம்ப நன்றிங்க சார். நான் இந்த உதவியை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன். சீக்கிரமே அந்த பணத்தை உங்ககிட்ட திருப்பித் தந்துடுறேன்." என்று கூறுபவரை பார்த்து மென்னகை ஒன்றை உதிர்த்தார் கிருபாகரன்.

"பலனை எதிர்பார்த்து செஞ்சா, அதுக்கு பேரு உதவியே இல்லை, ஜெயன். என் மனைவி கூட பிரசவத்துக்காக உள்ள இருக்கா. உனக்கு பண்ற இந்த உதவி என் தலைமுறையவே நல்லா பார்த்துக்கும்." என்று சினேகமாக புன்னகைத்து அவர் சொன்னதை செய்துவிட்டே நகர்ந்தார்.

அடுத்த இரண்டு மணி நேரங்களில், தனஞ்செயனுக்கும், தாமரைக்கும் இரட்டை குழந்தை பிறந்திருக்க, அதுவரை தன் மனைவியின் வயிற்றில் இரட்டை குழந்தை இருப்பதை அறிந்திடாதவரோ இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார்.

தாமரை இரண்டாவது குழந்தையை சுமந்ததிலிருந்தே அதிகளவு மருத்துவமனைக்கு அவள் செல்லவே இல்லை. அவளது சொந்த ஊர் கிராமம் என்பதால் என்றாவது அங்கிருக்கும் சிறிய அரசு மருத்துவமனைக்கு சென்றவர் மருந்துகளை மட்டும் பெற்றுக் கொண்டு வருவார் என்பதால் ஒரு கருவில் பூத்த இரண்டு பிஞ்சுக்கள் பற்றியும் அவரும் சரி தனஞ்செயனும் சரி அறியவே இல்லை. ஏற்கனவே மூத்த மகள் மாதுளாவிடம், குட்டி தம்பியோ தங்கையோடு வரோம் என்று கூறிவந்த தனஞ்செயனுக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை. இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார் அவர்.

அவரை நோக்கி வந்த கிருபாகரனோ, "வாழ்த்துக்கள் ஜெயன்." என்று புன்னகையோடு கூறியவர் தனது மகனின் வருகைக்காக மகிழ்ச்சியோடு காத்திருந்தார்.

ஆனால் விதியோ, அவர் மகிழ்ச்சியை சுக்கு நூறாக்கும் செய்தியை தாதியர் வடிவில் கொண்டு வந்து சேர்த்தது.

"சாரி சார். உங்க குழந்தை இறந்தே பிறந்திருக்கு. உங்க மனைவி இப்போ மயக்கத்துல இருக்காங்க சார் " என்று தாதி பெண்மணி கூறியதுமே உலகமே இருண்டது போன்ற உணர்வு அவருக்கு.

வெளியே வந்த மருத்துவரும் அதையே கூற, நம்பாதவர் இடிந்து போய் பொத்தென்று விழ, அங்கிருந்த தனஞ்செயனோ பதறிப்போய் அவரை தாங்கிப் பிடித்தான்.

"ஜெயன் என் மனைவிக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். கல்யாணமாகி எட்டு வருசத்துக்கு அப்புறம் தவமாய் தவமிருந்து பெத்த குழந்தை. அவ தாங்கவே மாட்டா. குழந்தை இல்லாதப்போ இந்த சமூகம் அவளை எத்தனை முறை வார்த்தைகளால வதைச்சுது. அதுக்கு எல்லாம் முடிவுகட்ட, எங்களை தேடி வந்து சேர்ந்த எங்க குழந்தைனு நினைச்சோமே. எல்லாமே முடிஞ்சது." என்று கண்ணீர் விட்டு கதறினார் கிருபாகரன்.

என்றுமே நிமிர்ந்த நன்னடையில் வலம் வரும் மனிதர் இன்று கதறி அழுவதை பார்க்கும் போதே தனஞ்செயன் வருந்திவிட்டார்.

"சார் வருத்தப்படாதீங்க. உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்."

"எப்படி ஜெயன். அவ்வளவு தான் எல்லாமே முடிஞ்சது. என் மனைவி இதை கேட்டால் அடுத்த நொடியே தன் உயிரை விட்ருவா. அவ பின்னாடியே நானும் போய்டுவேன்." என்று விரக்தியாக கூறியவரது கைகளை பற்றினான் தனஞ்ஜெயன்.

"சார். என்னோட இரட்டை பிள்ளைகள்ல ஒருத்தனை நீங்க எடுத்துக்கோங்க சார். இன்னைக்கு மூனு உசுரை காப்பாற்றுனது நீங்கதான். அதுல ஒரு உயிர் உங்க மகனா வளரட்டும்." என்றவனது பெருந்தன்மையில் அதிர்ந்தவர்,

"ஜெயன்..." என்று நாதழுதழுக்க "உங்க மனைவி கேட்டா என்ன சொல்விங்க?"

"சார் தாமரைக்கு இரண்டு குழந்தை பிறக்க போறது தெரியாது. எங்களை பொறுத்தவரைக்கும் ஒரு குழந்தை அப்படியே இருக்கட்டும். அவன் உங்களோட மகனாவே வளரட்டும்." என்றவனை ஆரத்தழுவியிருந்தார் கிருபாகரன்.

"யாருமே செய்ய நினைக்காத உதவி. இதுக்கு நான் என்ன கைமாறு பண்ணுவேன்னு தெரியலை." என்று விழிகள் கலங்க கூறுபவரை பார்த்தவன்,

"கைமாறு எதிர்பார்த்து செஞ்சா அது உதவியே இல்லையே சார்." என்று கண்கள் கலங்க கூறியவர், கிருபாகரனை அழைத்துக் கொண்டு தனது இரண்டு குழந்தைகளையும் காட்டினார்.

கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்க பார்த்தவர், இரண்டு குழந்தையின் பிஞ்சு கைகளை வருடிக்கொடுக்க, அதில் ஒரு குழந்தை அவரது கைகளை பற்றிக் கொள்ள, சொல்லப்படாத சந்தோசம் அவரை ஆட்கொண்டது.

அந்த நொடி அந்த குழந்தையை எடுத்துக்கொண்டவர் தனஞ்செயனிடம் கொடுக்க, ஆசையாக பெற்றெடுத்தவனோ கண்ணீரோடு குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டான்.

பின் கிருபாகரனிடம் கொடுத்தவன், "இனி இவன் உங்க மகன்." என்று நாதழுதழுக்க கூறினான்.

அன்று நடந்தவற்றை மொத்தமாக கூறி முடித்திருந்த கிருபாகரனோ, "அகில் இப்படிதான் நீ எங்களுக்கு கிடைச்ச. இந்த விசயம் உங்க அம்மாக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது. கல்யாணி இறந்து இரண்டு வருசம் ஆகுது. நானும் இப்போவோ அப்போவோனு இருக்கேன். எனக்கு அப்புறம் உனக்கு யாரும் இல்லைனு நினைப்பு வந்துடக்கூடாதுனு தான்டா இந்த உண்மையை இப்போ சொன்னேன். தப்புனு தெரியுது. ஆனால் சூழ்நிலைக் கைதியா ஆகிட்டேன்டா. இப்போ சொல்லு நீ இந்த அப்பாவை வெறுத்திட்டியா?" என்று அமைதியாக சிலையென உறைந்திருந்த அகிலனைப் பார்த்துக் கேட்டார் கிருபாகரன்.

அவரையே அன்போடு பார்த்தவன், "என்னை பெத்தது அவரா இருக்கலாம். ஆனால் எனக்கு எப்போதுமே நீதான் அப்பா. நான் உன்னை என்னைக்குமே வெறுக்க மாட்டேன் டாட். நான் எப்போதுமே அகிலன் கிருபாகரன் தான்." என்று கண்கள் கலங்க கூறும் மகனைப் பார்த்து புன்னகைத்தவர்,

"இது போதும் அகி. இது போதும்." என்று மகிழ்ச்சியோடே தனது இறுதி மூச்சினை விட்டிருந்தார் கிருபாகரன்.

அவரின் கண்களை மூடியவன், உண்மையைக் கூறியதும் நிம்மதியடைந்திருந்த நிர்மலமான அவரின் பூ முகத்தினை கண்களாலே நிரப்பிக் கொண்டபடி, குழந்தையில் அவரது விரல்களை பிடித்தது போலவே பிடித்துக்கொண்டான். எல்லா செயல்களிலும் தந்தையாக மட்டும் அல்லாமல் உற்ற தோழனாகவும் இருந்தவரின் இறப்பு பெரும் பேரிடியே அவனுக்கு.

"லவ் யூ டாட். நீ ஒரு நாள் கூட என்னை வளர்ப்பு மகனா வளர்த்தது இல்லை. எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை டாட். இப்போ நீ சொன்னது எல்லாம் பொய்யா இருக்கக்கூடாதானு ஏங்குது என் மனசு. ஆனால் ஒன்னு மட்டும் உண்மை நான் ரொம்ப விரும்புறவங்க என்னோட இருக்க மாட்டாங்க." என்று கூறும்போதே அவனது கண்ணீர் அவரின் இறந்த மார்பின் மீதே துளியாக விழுந்தது.

அதற்குமேல் அங்கு அமர இயலாதவன், அந்த அறையிலிருந்து வெளியேறியபடி, மருத்துவரிடம் தன் தந்தை ஆசைப்பட்டது போன்றே கண் தியானம் செய்ய சொன்னான்.

பின் தனது கைபேசியை எடுத்தவன், கிருபாகரனின் பி.ஏ சேகரை அழைத்து இறுதி சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை தயார்நிலையில் செய்திடச் சொல்லி கட்டளையிட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.

கல்லூரிக்கு வந்தவள் சாவியினை ஒப்படைத்ததும், அவளைப் போன்றே ஒவ்வொரு துறையிலும் ஆய்வக உதவியாளர் பணியில் வேலைப் பார்க்கும் பெண்கள் அவளை சூழ்ந்துக் கொண்டு வாழ்த்து மழை பொழியத் தொடங்கினர்.

"சாரிடி கல்யாணத்துக்கு வர முடியலை. உனக்கே நல்லா தெரியும், நம்ம காலேஜ்ல லீவ் கொடுத்துட்டாலும்." என்று ஒருத்தி சலித்துக் கொள்ள, மற்றொருத்தியோ, "இல்லனா மட்டும் நீ போய்ட்டுதான் மறுவேலை பார்ப்ப." என்று கேலிச் செய்தாள்.

"ஹே விடுங்கடி. அதான் நான் போய்ட்டு வந்துட்டேனே. ஆனால் இரண்டு பேரோட பொருத்தம் செம சூப்பர். எதோ காதலிச்சு கல்யாணம் பண்ணுனா எப்படி இருப்பாங்க அது மாதிரி இருந்துச்சு இரண்டு பேரோட நெருக்கமும் அந்த ரொமென்டிக்லுக்கும், ப்பா அந்த போட்டோ சூட் வேற லெவல்." என்றாள் அவளது தோழி சத்யா.

'அடிப்பாவி அதுவா ரொமென்டிக் லுக்கு. அது போட்டோசூட் இல்லை மிரட்டியே எடுக்கப்பட்ட சதிசூட்டு.' என்று மனதில் நினைத்தவள் அமைதியாக நிற்க,

"போட்டோசூட்டே அப்படி ரொமென்டிக்கா இருந்துச்சுனா... முதலிரவு.." என்று வேண்டுமென்றே ஒருத்தி இழுத்ததில், பூவினிக்குதான் இவர்களது பேச்சில் தர்ம சங்கடமாக இருந்தது.

"சரிடி நான் கிளம்புறேன்." என்று தப்பித்தால் போதும் என்று நகரப் பார்க்க, அவளை விடாமல் சீண்டிக் கொண்டிருந்தனர் அனைவரும்.

"என்ன பூவி, எங்களை கண்டுக்காமல் கிளம்புறதுலயே குறியாக இருக்க?"

"பின்ன நம்ம மூஞ்சியவே பார்த்துட்டு இருந்தா? எப்போ போய் அவங்க ஆத்துக்காரரோட ரொமென்சு பண்ணுறது." என்று மற்றொருத்து சீண்டினாள்.

'சோதிக்காதீங்க டி என்னைய...' என்று கத்திவிட வேண்டும் என்று துடித்த நாவினை அடக்கியவள், "அய்யோ எங்க அத்தை என்னை தேடுவாங்க. நான் சீக்கிரம் வருவதாக சொல்லிட்டு வந்திருக்கேன். ஆளை விடுங்கடி." என்று கூறிக்கொண்டே நழுவினாள் பூவினி.

"சரிசரி கிளம்புங்க புதுப்பெண்ணே." என்று கூறியே வழியனுப்பினார்கள் அவளது தோழிகள்.

கல்லூரியை விட்டு வெளியே வந்தவள் பேருந்தில் ஏறியிருந்தாள். பேருந்து ஒரு நிறுத்ததில் நிற்க, அங்கு நின்றிருந்த அகிலனைக் கண்டதும் பிரபஞ்சன் என்று நினைத்தவள், அவன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து வெகுண்டு எழுந்தாள்.

ஏற்கனவே காலையில் உணவினைகூட உண்ணாமல் சென்றுவிட்டான் என்ற கோபம் வேறு இருந்தது பெண்ணவளுக்கு. இதில் இந்நிலையில் அவனைக் கண்டதும் கோபத்தில் எழுந்தவள் அந்த பேருந்தினை வம்படியாக நிறுத்துவிட்டே இறங்கியிருந்தாள்.

"சொல்றது எல்லாம் பொய். வசமா மாட்டிருக்க... இன்னைக்கி உன்னை விடுறதாக இல்லை மிஸ்டர் பிரபஞ்சன்." என்று வீறுநடை போட்டவள் அவனை நோக்கிச் சென்றாள்.

அவன் முன்பு சொடுக்கிட்டு அழைத்தபடி, "என்ன சார் உரிமை அது இதுனு பேசி சண்டை போட்டு வந்தது இங்க சிகரெட் பிடிக்கத்தானா? யாரோ என்கிட்ட சிகரெட் பிடிக்குறது இல்லைனு சொன்ன மாதிரி இருந்துச்சு. இதுல காலையில சாப்பிட்டு வேற போகலை அதுக்கும் சேர்த்து நான் திட்டு வாங்கனும் அப்படி தானே.. ஹான்" என்றாள் ஏகத்துக்கும் அவனை முறைத்துக்கொண்டே.

ஏற்கனவே தன் தந்தையின் இழப்பில் துவண்டு போய், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவனோ ஒவ்வொருத்தருக்காக அழைப்பைவிடுத்து தகவலைக் கூறிக்கொண்டிருக்க, அவளைப் பார்த்ததும் கோபத்தில் கண்கள் சிவக்க நின்றவனுக்கு, அவளை கொல்லும் அளவிற்கு ஆத்திரம் உண்டானது.

அவள் பாட்டுக்கு எதை எதையோ பேச, அந்த பேச்சை கவனிக்கும் நிலையில் இல்லை அவன். அவளைக் கொலைவெறியில் பார்த்தபடி நின்றவனோ பளார் என்று ஓங்கி அறைய, அவனது அடி இடிப்போல் அவளது கன்னங்களில் இறங்கியிருந்தது.

அந்த அடியில் நிலைத்தடுமாறியவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வருவது போன்ற உணர்வு ஒரு பக்கம், மறுபக்கம் பொதுவெளியில் இவ்வாறு அவன் நடந்தது என்று முட்டிக் கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்த முயற்சி செய்தபடி சிலையென சமைந்தாள் பூவினி. ஆனால் அவனோ, இத்தனை ஆண்டு கோபத்தையும் ஒரே அடியில் காட்டியிருந்தது மட்டுமில்லாமல், கோபத்தில் ருத்ரமூர்த்தியாய் மாறியபடி நின்றிருந்தான்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
19.அத்தியாயம்

திண்மையான அவனது கைகள் பூவினியின் மிருதுவான கன்னத்தை பதம் பார்த்திருக்க வலி ஒரு புறம் என்றால், தன்னையே அனைவரும் வேடிக்கை பார்க்கின்ற நிலை எண்ணி தலைக் கவிழ்ந்தவளது ஒரு சொட்டுக் கண்ணீர் நிலமகளின் மீது விழுந்தது.

அவனோ, அவளது கண்ணீரைக் கண்டு இரக்கம் கொள்ளவில்லை. தன் நிலைக்கு அவளும் ஒருவகைக் காரணம் என்ற கோபம் மட்டுமே அவனிடத்தில் நிலைத்திருந்தது.

"இன்னும் ஒரு நிமிசம் என் கண்ணு முன்னாடி நின்னாலும் சாவடிச்சிடுவேன். என் அப்பாவால உன்னை சும்மாவிட்டுட்டு போறேன்." என்று விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்தவனது கண்களில் தெரிந்தது அப்படி ஒரு ஆதங்கம்.

அவனது இந்த செயலை சற்றும் எதிர்பாராதவள் அவன் அறைந்த கன்னத்தினை கைகளால் பிடித்துக்கொண்டே அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.

அமைதியையும், குறும்புதனத்தையும், உரிமையான பார்வையையும் சுமந்த கண்களில் தெறிந்த வெறியை பார்த்ததும் பதறித் துடித்தது அவள் மனம். பூவினி அறியவில்லை, அவள் எத்தனை அடித்தாலும் தாங்கும் அவளின் பிரபஞ்சன் இவன் அல்ல என்று. அப்படி ஒரு உருவ ஒற்றுமை இருவருக்கும். அகிலனும் அறியவில்லை தன் சகோதரனின் மனைவி இவள் என்று. ஆனால் விதியோ எந்த ஒரு பந்தத்தால் பூவினியின் குடும்பத்தை வெறுக்க வைத்ததோ, அதே விதி மற்றொரு பந்தத்தினை உருவாக்கியும் இருந்தது.

பூவினியின் கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளம் போன்று கண்ணீர் சுரந்த வண்ணமே இருந்தது. சுற்றி உள்ள அனைவரும் வேடிக்கைத்தான் பார்க்கிறார்களே தவிர, அவனைத்தடுக்க யாரும் வரவில்லை. அவமானத்தில் கூனிக்குறிகியவள், ஒரு நிமிடம் கூட அவ்விடம் நிற்க இயலாது அங்கிருந்து விறுவிறுவென சென்றாள்.

அகிலனுக்கும் அவளை அடித்தே தீர வேண்டும் என்ற கோபம் வந்தாலும் தன் தந்தைக்கு முறையாக செய்ய வேண்டிய சடங்குகளை செய்திட துடித்தவன் அங்கிருந்து சென்றிருந்தான். இப்படி ஒரு நிகழ்வு நடக்காமல் இருந்திருந்தால் பூவினியின் நிலை இதைவிட மோசமாகி இருக்கக்கூடும் என்பதே மறுக்கப்படாத உண்மை.

வீட்டிற்கு வந்தவள், தனது சிவந்த கன்னத்தினை தன் மாமியாரிடம் காட்ட மனமின்றி, தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

நிலைக்கண்ணாடியில் தன் முகத்தினை பார்த்தவள், சிவந்திருந்த தன் கன்னங்களை கண்டு அதிர்ந்துதான் போனாள். தாரைதாரையாக அவனின் கைவிரல் பதிந்து இருந்தது. பேருந்தை பிடித்து, வீட்டிற்கு வருவதற்குள் யாரின் முகத்தையும் அவள் ஏறெடுத்துப் பார்க்கவே இல்லை.

"நேத்து கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். தப்புதான், ஆனால் அதை மனசுல வெச்சுட்டு, பொது இடத்துல இப்படி எல்லார் முன்னாடியும் வெச்சு அறையறது தப்பு இல்லையா?" என்று கூறும்போதே பெண்ணவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.

இங்கு பூவினியை பற்றி யோசனையிலேயே உழன்றிருந்த பிரபஞ்சனோ அமைதியாக அமர்ந்திருக்க, தன் நண்பனையே வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். அவனது பார்வையை வந்ததிலிருந்துக் கவனித்துக் கொண்டு இருந்தாலும், கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தான் பிரபஞ்சன்.

"டேய் பிரபா. இது எல்லாம் உனக்கே ஓவரா தெரியலை. இன்னைக்கு நம்ம ஆபிஸ் முழுக்க உன்னை பத்தி தான் பேச்சு. கல்யாணமாகி இரண்டே நாள்ல வந்துட்டான்னு." என்று சோகமாக கூறுபவனை அழுத்தமான பார்வை பார்த்துக் கொண்டே எதிரே இருந்த காபியினை குடித்தான்.

"என்னடா பார்வை இது...காமப் பார்வையால்ல இருக்கு. டேய் பிரபா எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுடா." என்று வேண்டும் என்றே கூறியதில் , பிரபஞ்சனுக்கு தான் பொறை ஏறியது. அங்கிருந்த பேனாவினைத் தூக்கி அவன் மண்டையிலேயே அடித்திருந்தான்.

"ஏன்டா உனக்கு கலாய்க்க வேற யாரும் கிடைக்கலையா? போ போய் வேலையை பாரு." என்று கடிந்தவன் காபியினை வைத்துவிட்டு செல்ல, அவனது கரம் பற்றியவனோ,

"டேய் கோபப்படாத... உன் மூஞ்சியை பார்க்கும்போதே தெரியுது. எதோ பெரிய விசயம் இருக்குனு. போய் மனசு விட்டு பேசு எல்லாம் சரியாகிடும்." என்று முதன்முறையாக நல்ல வார்த்தைகளை கூற, அவனது அந்த பக்குவமான பேச்சை பிரம்மிப்பாய் பார்த்தவனோ, "பார்ரா இப்படி எல்லாம் உனக்கு பேச வருமா?" என்று கிண்டலடித்தான் பிரபஞ்சன்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, இடையில் வந்த ஒருவனோ, "பிரபா குமரா உங்களை பாஸ் கூப்பிடுறாங்க." என்று கூறிக்கொண்டே சென்றான்.

"இவன் என்னடா பள்ளிக்கூடத்துல தலைமை ஆசிரியர் கூப்பிடுறாங்கனு சொல்ற மாதிரி சொல்லிட்டு போறான்." என்று பிரபஞ்சன் கூற,

குமரனோ, "அதான் மச்சி நானும் நினைச்சேன். நம்ம ரூட்டு தலை சும்மால்ல கூப்பிடுற ஆள் இல்லையே. வா என்னென்னு கேட்போம்." என்று தன் நண்பனை அழைத்துக் கொண்டே அவரது அறை வரை சென்றவன், "மச்சான் மொதல்ல நீ உள்ளே போடா." என்று கூற,

"ஏன். நீ சொல்றது பார்த்தாலே எதோ பெரிய வில்லங்கம் இருக்கும் போலயே.நீ போடா."

"உனக்கு வேண்டாம், எனக்கும் வேண்டாம், வா சேர்ந்துப் போவோம்." என்று அவனது கரம் கோர்த்துக் கொண்டவன், "சார் உள்ள வரலாமா?" என்று தயக்கத்தை விடுத்துக் கூறினான் குமரன்.

"வராதனு சொன்னால் திரும்பி போய்ருவியா என்ன?" என்ற காந்தகுரல் தேனாய் வந்து இருவரின் காதுகளில் அடைய,

"பார்த்திய பிரபா இந்த பாஸ்க்கு இருக்க குசும்பு. வரவர ரூட்டு தலை லோலாய் அதிகமாகிடுச்சுடா." என்று நண்பனின் காதுகளில் முணுமுணுத்துக் கொண்டே உள்ளே வந்தனர் இருவரும்.

நெற்றியில் சந்தனப்பட்டையில், வெள்ளைவேட்டி சட்டையில் கம்பீரமாக புன்னகை முகத்தோடு அமர்ந்திருந்தவரை பார்த்ததும்,
"ஆஹா என்ன சார் மங்களகரமா வந்துருக்கீங்க." என்று கேட்டே விட்டான் குமரன்.

"அது ஒன்னு இல்லை குமரா. அந்த மருதமலை முருகனை பார்த்துட்டு அப்படியே வந்துட்டேன். அது சரி பிரபஞ்சா உன் கடமை உணர்ச்சியை நினைச்சு பாராட்டுறதா, ஆச்சர்யப்படுறதானு தெரியலையே கண்ணு." என்று பிரம்மிப்பாய் பார்த்தார் சதாசிவம்.

சதாசிவம் பிரபஞ்சன் சூப்பர்வைஷராக வேலைப் பார்க்கும் கம்பெனியின் நிறுவனர். அவர் பட்டப்படிப்பு படிக்கவில்லை என்றாலும் மனிதர்களை படித்தவர். தன் அனுபவத்தைக் கொண்டு நல்முறையில் நிறுவனத்தினை வழிநடத்தி செல்பவர், அனைவரிடமும் ஒன்று போல் பழகும் குணம் வாய்ந்தவர் என்பதால் பிரபஞ்சனுக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.

"என்னங்க சார் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க." என்று மென்னகை புரிந்தான்.

"என் மனசே குளிர்ந்து போச்சு பிரபஞ்சா. உனக்கும், உங்க வூட்டுகார அம்மாக்கும் ஒரு பரிசு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். கல்யாணத்துக்கும் பெரிசா பரிசு தரலை. அதனால இந்த பரிசை மறுக்காமல் வாங்கிக்கனும்." என்றார் உறுதியாக.

"டேய் மச்சி ரூட்டு தலை பெரிய பரிசுல்ல தரப்போறாரு போலடா. என்ஜாய்." என்று குமரன் முணுமுணுக்க,

"க்கூம். என்ன சொல்றான் உன் நண்பன்." என்று குரலை சொறுமினார் சதாசிவம்.

"பாஸ் இதையே இவன்கிட்ட கேட்டுகிட்டு, நானே சொல்றேன். வாழ்த்துக்கள் சொன்னேன்." என்றான் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியபடி.

"இல்லையே என் காதுல என்ஜாயினு எதோ கேட்டுச்சே."

'அய்யோ காது ரொம்ப சார்ப்பா வெச்சிருக்காரே.' என்று நினைத்துக் கொண்டே "பாஸ் வேற ஒன்னும் இல்லை அது என்ஜாயி என்சாமி பாட்டு இப்போ ட்ரொண்டிங் அது தான். அதுதான் பாடுனேன்." என்று கூறிக்கொண்டே "குக்கு... குக்கு" என்று கூவியவனை முறைத்தவர்,

" என்றா கண்ணு அடி வேணுமாக்கும்... குக்கு குக்கு..." என்று அதே ராகத்தில் பாடியதும் தனது வாயை பிளந்தவன், "சார் நீங்க வேற மாதிரி." என்று குமரன் வியக்க, பிரபஞ்சனோ புன்னகைத்துக் கொண்டே வேடிக்கை பார்த்தான்.

சதாசிவமோ, இரண்டு டிக்கெட்டுகளை பிரபஞ்சனது கைகளில் ஒப்படைத்தவர். "அந்தமானுக்கான டிக்கெட். உன் மனைவியும் நீயும் போய்ட்டு வாங்க. ஒரு வாரம் உனக்கு ரெஸ்ட்." என்றதும் அதிர்ச்சியில் உறைந்த பிரபஞ்சனோ,

"எதுக்கு சார்? இது எல்லாம்." என்று மறுத்தான். அவன் மனமோ 'சும்மாவே சாமி ஆடுவா. இதுல இந்த ஹனிமூன் பிளான் தெரிஞ்சா' என்று நினைக்கும்போதே ஒரு வித கலக்கம் அவனது மனதில் தோன்றியது.

குமரனோ, "வாவ் செம பிளேஸ்டா. போய்ட்டு வா." என்று புன்னகைக்க,
சதாசிவமும், "போய்ட்டு வா பிரபஞ்சா. உன்வேலையும் சேர்த்து குமரன் பார்த்துப்பான்." என்று சத்தமே இல்லாமல் குண்டை இறக்கியதில் "ஙே" வென விழித்தான் குமரன்.

பின் விருப்பமின்றி ஏற்றுக் கொண்டவன் அவரிடமிருந்து விடைபெற்று செல்ல, குமரனோ, "பாஸ் எனக்கு ஒரு பரிசு தருவீங்களா? ரொம்ப எல்லாம் வேண்டாம் கோவாக்கு ஒரு டிக்கெட் மட்டும்..." என்று கூறும்போதே சதாசிவம் ஏகத்துக்கும் முறைக்க, "சும்மா சொன்னேன். அதுக்கு எதுக்கு உங்க நெற்றிக்கண்ணை திறக்குறீங்க. போடானு சொன்னா போய்ட போறேன்." என்று கூறிவிட்டு ஒரே ஓட்டமாக வெளியே வந்தான் குமரன்.

மாலை நான்கு மணி, தன் தோழிகளிடம் பேசிக்கொண்டே கல்லூரியிலிருந்து வெளியே வந்தாள் யாழினி.

"இன்னைக்கு எக்சாம்ல கேட்ட கேள்வி எல்லாம் ரொம்ப சுலபமாக இருந்துச்சுல." என்று யாழினி புன்னகையோடு கூறினாள்.

"ஆமா யாழி. அதை விடு கேட்கனும்னு நினைச்சேன். காலையில யார் வந்தாங்க? பார்க்க உங்க அத்தான் ஜாடை இருந்துச்சு? உங்க அத்தானோட தம்பியா?" என்று பிரியா ஆர்வமாக கேட்க,

"ஆமா. இது எல்லாம் நல்லா கேளு. எக்சாம் பத்தி பேசுறப்போ அவரை எதுக்கு தேவையில்லாமல் இழுக்குற?" என்று முறைத்துக்கொண்டே கூறினாள் யாழி.

"அதான் இன்னைக்கான எக்சாம் முடிஞ்சுதே. ஆமா நீ என்னடி அவருனு அழுத்தி சொல்லுற? ஏன் நாங்க கேட்கக்கூடாதா என்ன?"

"பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்துதானே சொல்ல முடியும். அப்புறம் நீ நினைக்குற மாதிரி ஒன்னுமில்லை." என்றவள் வாயை மூடும்படி செய்கை செய்ய,

மற்றொரு தோழி சாருவோ, "ஏய் பிரியா எப்படி இருந்தாரு அந்த அவரு?" என்று ஆர்வமாகக் கேட்டாள்.

"அவரு செம ஹேண்ட்சமாக இருந்தாருடி." என்று பிரியா கண்ணடிக்க, யாழினியோ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

"பிரியா வரவர உனக்கு கண்னு தெரியலைனு நினைக்குறேன். அவரு ஹேண்ட்சமா..." என்று முறைத்துக் கொண்டே, 'ரொம்ப பண்றாளுங்க திமிரு பிடிச்சவளுங்க.' என்று மனதில் திட்டினாள். மேலும் 'இதுக்குதான் இந்த தென்னமரத்தை, இங்க இருந்து போக சொன்னேன். இப்போ பாரு எல்லாம் ஓவராக சைட் அடிக்குறாளுங்க.' என்று தென்னவனைக் கடிந்துக் கொள்ளவும் தவறவில்லை.

அதே நேரம் வேலையிலிருந்து விரைவிலேயே கிளம்பிய பிரபஞ்சனோ, யாழினியை வழியில் கண்டதும் அவள் முன்பு தனது வண்டியை நிறுத்தியவன், தலைகவசத்தை கழற்ற, முதலில் அகிலனோ என்று அதிர்ந்தவள், அவனது புன்னகை முகத்தை பார்த்ததும் "பிரபா அத்தான்." என்று பெருமூச்சினை விட்டவள் "சரிடி பாய். அத்தான் வந்துருக்காரு." என்று விடைபெற்றுக் கொண்டு பிரபஞ்சனை நோக்கி வந்தாள்.

"அத்தான்" என்று புன்னகையோடு கூற, இந்த புன்னகை நேற்று அவளிடம் இல்லையே என்ற யோசனையோடு பார்த்தான் பிரபஞ்சன்.

"யாழிமா. இப்போ கால் எப்படி இருக்கு?"

"பராவயில்லை அத்தான் சின்ன அடிதானே சரியாகிடுச்சு. நீங்க என்ன இந்த பக்கம்? அக்கா என்ன பண்றா?"

"வேலை முடிஞ்சு வந்தேன். அதான் உன்னை ஒரு எட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். சரி வண்டில ஏறு வீட்டுல கொண்டு போய் விடுறேன்."

"சரிங்க அத்தான்." என்றவள் வண்டியில் ஏறிக் கொள்ள, தனது முதல் சந்தேகத்தைக் தயங்கிக் கொண்டே கேட்டாள் யாழினி.

"அத்தான் உங்களுக்கு கூட பிறந்த சகோதரன் இருக்காங்களா?"

"இது என்ன கேள்வி யாழிமா. இருக்கானே என் தம்பி தென்னவன். உனக்கே நல்லா தெரியுமே."

"அய்யோ அத்தான் அவரை தவிர வேற யாராவது இருக்காங்களா?" என்றாள்.

"வேற யாரு இருக்கப் போறா? இருந்தால் உங்கிட்ட சொல்லிருக்க மாட்டேனா."

"அதுவும் சரிதான்." என்று யோசனையில் மூழ்கத் தொடங்கினாள்.

"சரி யாழி நான் உன்கிட்ட கேட்கனும். நேத்து என்ன நடந்துச்சு? உன் அத்தான்கிட்ட சொல்லனும்னு தோணுச்சுனா தயங்காமல் சொல்லு." என்றவன் வண்டியினை ஓரமாக நிறுத்தியிருக்க பதட்டம் கொண்டவளோ, மௌனமாக வண்டியினை விட்டு இறங்கினாள்.

"பிரபா அத்தான் அப்படி எதுவும் இல்லை." என்று தயங்கினாள் யாழினி.

கண்களை பார்த்து பேசுபவள், நேற்றில் இருந்து தன் முகத்தைக் கூட பார்க்காமல் பேசுவதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான் பிரபஞ்சன். அதுமட்டுமின்றி தன் முகத்தை பார்க்கும் போதே பாசத்தை காட்டும் அவளது முகத்தில் ஒருவித தயக்கம் இருப்பதையும் உணர்ந்திருந்தான்.

"சரி. சொல்ல விருப்பப்படலைனா வேண்டாம் யாழினி. என்ன தான் இருந்தாலும் நான் வேற யாரோ தானே." என்று அவன் கூறும்போதே அதிர்ந்தவள்,

"அய்யோ அத்தான் ஏன் இப்படி பேசுறீங்க? எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்." என்றாள் கலக்கத்தோடு.

"அப்போ சொல்லு யாழிமா? நீ எந்த பிரச்சினையிலும் மாட்டிடக்கூடாதுனு தான் நான் நினைப்பேன். உனக்கு நான் சொல்ல வரது புரியும்னு நினைக்குறேன்." என்றவன் அழுத்தமான பார்வை ஒன்றை பார்க்க,

அவனது அந்த பார்வையை மீறி அவளால் எப்படி மறைக்க முடியும். சொல்லிடலாம் என்று நினைத்தவள் கூற நினைத்த வேளையில் பிரபஞ்சனின் கைபேசி ஒலித்தது.

கைபேசியில் தன்னை அழைப்பது புரிய, பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கைபேசியினை அணைத்தவன்.

"சொல்லுடா யாழிமா. எதுனாலும் நான் இருக்கேன்." என்று தன்மையாக கூறும்போதே மீண்டும் கைபேசி ஒலித்தது.

"அத்தான் நீங்க போன் பேசுங்க. ரொம்ப பெரிய விசயம் எல்லாம் இல்லை." என்று யாழினி கூறியதும், கைபேசியை எடுத்தவன் காதில் வைத்துக் கொண்டே "சொல்லுமா. என்ன விசயம்?" என்று கேட்க, அவரது கோபத்தினைக் கண்டு மிரண்டவன்,

"அம்மா என்னாச்சு?" என்று அதிர்ச்சியோடு கேட்கும் போதே மறுபுறம் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

"யாழினி நீ வண்டில ஏறு." என்று கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டபடி, அவனின் வீட்டிற்கு விரைந்து வந்தான்.

"அம்மா... அம்மா." என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவனை, கோபத்தோடு பார்த்திருந்த தாமரையோ,

"என்னடா நல்லவனே. வா உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்." என்று கோபத்தில் அவர் பேச, புரியாத பார்வை பார்த்தவனோ, "என்னாச்சுமா?" என்றான் தன்மையாக.

"இன்னும் என்னாகனும்? என் வளர்ப்பு தப்பா போய்டுச்சுனு நினைக்குறேன். அதான் இப்படி ஒரு காரியம் பண்ணிருக்க?"

"அம்மா என்ன பேச்சு இது?" என்று முதலும் புரியாமல், முடிவும் தெரியாமல் குழம்பி போனான் பிரபஞ்சன்.

"போதும் பிரபா. நீ பேசாத, பேசுற தகுதியை இழந்துட்ட." என்று கூறிக்கொண்டே தன் மருமகளை அழைத்து அவன் முன்பு காட்டியவர்,

"என்னடா பண்ணி வெச்சுருக்க. அவ முகத்தை. பொண்ணை அடிக்குறதே தப்பு. நீ நடுரோட்டுல வெச்சு அவளை அறைஞ்சிருக்க." என்று கண்கள் சிவக்க கூறினார் தாமரை.

அவர் கூறியதுமே பூவினியின் சிவந்திருந்த கன்னத்தினைப் பார்த்தவன்,

"என்னாச்சுமா. எனக்கு ஒன்னும் புரியலை." என்று பரிதவிப்போடு கேட்பவனை தனது ஒற்றை விரலை உயர்த்தி அமைதியாக இருக்கும்படி சொன்ன தாமரையோ,

" பேசாதனு சொல்லிட்டேன். என்ன பையன்டா நீ. உன் அம்மாவை தலை குனிய வெச்சுட்ட பிரபா நீ." என்று கூறும்போதே அவரின் கண்கள் கலங்கியது.

பூவினியை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவனோ, அவள் தான் வேண்டுமென்றே எதையோ சொல்லிருக்க வேண்டும் என்று யூகித்தபடி, "அம்மா அவ எதையோ சொல்றானு நீ நம்பிட்டு பேசாதமா. அவ பொய் சொல்ற." என்று அவன் கூறிய பதிலில் அதிர்ந்து நின்றாள் பூவினி.

"நான் பொய் சொல்றேனா? அபாண்டமா பேசாதீங்க. இப்போகூட நான் அத்தைகிட்ட எதுவும் சொல்லலை. பக்கத்து வீட்டு காரங்க தான் சொல்லிருக்காங்க. நீங்க என்னை அடிச்சது பார்த்து."

"ஏய். நான் எப்போடி உன்னை அடிச்சேன்.. என்ன நாடகம் பண்றீங்களா?" என்று அவளை முறைக்கும்போதே தன் மகனின் கன்னத்தில் பளார் என்று ஓர் அறை அறைந்திருந்தார் தாமரை.

இதுவரை தன் மீது கைவைத்திடாத அம்மா இன்று செய்யாத தவறிற்கு அடித்ததை எண்ணி கலங்கிப் போனவன், "ம்மா.." என்றான் பரிதவிப்போடு.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 20

தாமரை அறைந்ததை கண்டு பூவினி அதிர்ந்தபடி நின்றாள். அவள் கொஞ்சம் கூட எதிர்பாராத நிகழ்வு தான். மகனின் மீது பேரன்பு கொண்ட அன்னை இன்று கைநீட்டியிருக்கிறார் அதுவும் தனக்காக என்பதை கர்வமாக பார்ப்பதா, இல்லை தன் கணவன் அடி வாங்கியதைக் கண்டு கலங்குவதா என்று புரியாமல் குழம்பி போனாள். ஆனாலும் அவனது வலி நிறைந்த முகத்தை பார்க்கும் போதே மனவருத்தம் இருக்கத்தான் செய்தது.

பிரபஞ்சனும் தன் மீது தவறு இல்லை என்று தெரிந்திருந்தும் கூட "அம்மா" என்ற அழைப்பை தவிர்த்து ஒரு வார்த்தைக் கூட எதிர்த்து பேசாமல் அறையினை வாங்கியிருந்தான். இக்காலத்தில் பெற்றவர்கள் அறிவுரை சொன்னாலே கடுப்பாகும் குழந்தைகள் இருக்க, தாமரை அறைந்தும், அடியை வாங்கிக்கொண்ட பிரபஞ்சனது நல்ல குணத்தினை புரிந்துக்கொள்ளாமல் போய்விட்டார் தாமரை என்பதே நிதர்சனமான உண்மை.

சரியாக அந்நேரம் தனஞ்செயன் அவ்விடம் வர, தாமரையின் செயலைக் கண்டு முதல் முறையாக கோபம் கொண்டவர், "தாமரை.." என்று அவரது பெயரை கர்ஜிக்க, அந்நொடி தன் கணவரைக் கண்டதும் தனது சேலை முந்தானையைக் கொண்டு வாயைப் பொத்தியவர் அழத் தொடங்கினார்.

ஒருபுறம் வளர்ந்த தன் மகனை அடித்துவிட்டோமே என்ற கவலை என்றால், மறுபுறம் தன் மகன் தன்மருமகளிடம் செய்த செயலினால் உண்டான வலி என்று ஒரு சேர தாமரையை துளைத்தெடுத்ததே, அவரின் கண்ணீருக்கு காரணம்.

பிரபஞ்சனோ அழுத்தமான வலி நிறைந்த பார்வையால் பூவினியை பார்த்தபடி நின்றான். அந்த பார்வையே கூறியது, ஏன் இவ்வாறு செய்தாய்? என்ற கேள்வியினை.

'அம்மா உன் மகன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?' என்று ஒரு புறம் தன் தாயை வலி நிறைந்த பார்வை பார்த்தவன் அங்கு நிற்க பிடிக்காமல் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான்.

வலியோடு செல்லும் மகனை தடுக்க நினைக்காத தனஞ்செயனோ, தன் மனைவியை கண்டு, "தாமரை உள்ள வா. உன்னோட பேசனும்." என்று அதிகாரமாக கூறிக்கொண்டே அறைக்குள் சென்றார்.

தாமரை உள்ளே வந்ததும் பிரச்சினை என்ன என்பதை பொறுமையாக கேட்டவரது மனமோ பல விதத்தில் யோசிக்கத் தொடங்கியது. அவர் அறிவார் பிரபஞ்சனை பற்றி, தாமரைக்கும் தன் மகனை பற்றி தெரியும். இருந்தும் அவன் அறைந்ததை கண்ணால் பார்த்தவர்கள் கூறும்போது அவரால் எப்படி மறுக்க முடியும். இதில் சிவந்த பூவினியின் கன்னங்களே சாட்சியாக இருக்க, தன் மகன் என்றும் பாராமல் அவன் செய்த தவறிற்காக அடித்திருந்தார் தாமரை.

"தாமரை உனக்கு பிரபாவை பத்தி நல்லாவே தெரியும். நம்ம பிரபா இப்படி செஞ்சுருப்பானு நினைக்குறியா?" என்றார் அவரது கண்களை அழுத்தமாக பார்த்தபடி.

"நம்ம பையன் செஞ்சுருக்கக் கூடாதுனு நினைக்குறேன். என்னால நம்பவும் முடியலைங்க. ஆனால் பூவினி கன்னத்தை பாருங்க, பாக்கியமும் பார்த்ததா வந்து சொல்றப்போ, என்னால என்னங்க பண்ண முடியும். தோளுக்கு மேல வளர்ந்த பையனை அடிக்குறது தப்பு தான். ஆனால் அவன் நப்பு பண்ணானு தெரிஞ்சபிறகு அடிக்காமல் இருக்குறது அதவிட தப்புங்க." என்று ஆதங்கமாய் வந்தது அவரது வார்த்தைகள்.

" தப்பு பண்ணிருந்தால் சரி, பண்ணலைனா தப்பா போயிடாதா?" என்றவரை புரியாத பார்வை பார்த்தார் தாமரை.

"என்னங்க சொல்றீங்க? பிரபா பண்ணிருக்க மாட்டானு சொல்றீங்களா?"

"என் மனசு அப்படிதான் சொல்லுது தாமரை. சில சமயங்கள்ள நம்ம கண்ணு பாக்குறத கூட தப்பா புருஞ்சுக்கும், நம்ம மனசும் அந்த கண்ணோட்டத்தை வெச்சுட்டு எல்லாமே முடிவு பண்ணிடும். இந்த விசயத்துல பொறுமையாக கேட்டு இருக்கனும் தாமரை."

"அப்போ பார்த்தவங்க எல்லாம் பொய் சொல்றாங்கனு சொல்றீங்களா?"

"அப்படி இல்லை. பூவினியை அடிச்சது வேற யாராவதாக இருக்கலாம்."

"வேற யாராவதுனா! பிரபா மாதிரியேவா இருப்பாங்க. சும்மா பேசனும்னு நினைச்சுட்டு பேசாதீங்க." என்றவர் "பிரபாவை அடிச்சது எனக்கும் வலிதாங்க." என்று கூறும்போதே கண்கள் கலங்கியது தாமரைக்கு.

அவரது பதிலில் தனஞ்செயனுக்கு தன் இன்னொரு மகனின் நினைவு அன்னிச்சையாக வந்து போக, அவனாக இருக்குமோ என்று ஆணித்தரமாக நம்பியது அவரின் மனம். ஒருபுறம் எப்போதும் தனக்குள்ளே உண்டாகும் குற்ற உணர்வு வேறு. தன் மனைவியிடம் மறைக்கப்பட்டிருந்த அந்த உண்மையை நினைக்கும்போது எல்லாம் அவரின் மனவேதனையை சொல்லால் கூறிட இயலாது. ஆதலால் தானோ என்னவோ, மிகவும் அமைதியானவராகவே மாறிவிட்டார்.

பூவினியோ தன் அறைக்குள் நுழைந்தவளுக்கு சற்று முன்பு அடி வாங்கிச் சென்ற பிரபஞ்சனின் முகமே மனக்கண்களில் நங்கூரம் போன்று வந்து நின்றது. அவன் அவளை பார்த்தப் பார்வையே அவன் அவ்வாறு செய்யவில்லை என்பதை பறைச்சாற்ற, குழம்பி தான் போனாள் பூவினி.

அன்றைய இரவு உணவு கூட யாரும் சரியாக உண்ணவில்லை. வெளியே சென்ற மகன் வீட்டிற்கு வரவில்லையே என்ற கவலை தாமரையிடம் அப்பட்டமாக தெரிந்தது. நடந்தவற்றை ஓரளவு அறிந்துக் கொண்ட தென்னவனுக்கும், தன் அண்ணன் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லையே என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. பின் அனைவரும் உறங்கச் சென்றதும், அவனது வருகைக்காக காத்திருந்தது என்னவோ தனஞ்செயன் தான்.

இரவு பதினொரு மணிக்கு வீட்டிற்கு வந்த மகனுக்காக காத்திருந்து கதவை திறந்தார் தனஞ்செயன்.

"சாப்டியாப்பா?" என்ற அவரது கேள்வியில் கண்கள் கலங்கிப் போக, "இல்லைப்பா பசிக்கலை." என்றான் வலுக்கட்டாயமாக புன்னகைத்துக் கொண்டே.

"ஒரு வாய் சாப்பிட்டு போய் படுப்பா." என்றவரின் பேச்சிற்கு மரியாதை தரும் விதமாக இரண்டு தோசையை எடுத்து வைத்தவன் சாப்பிட மனமே இன்றி உண்டு முடித்தான்.

அவன் சாப்பிடும் வரை அவனருகே இருந்த தனஞ்செயனோ, கைகழுவிவிட்டு வரும் தன் மகனது தோளினை ஆறுதலாக தட்டிக் கொடுக்க, அந்த ஆறுதலான அணைப்பே அவர் தன்னை நம்புகிறார் என்ற உண்மையை பறைச்சாற்றியதில் உள்ளம் மகிழ்ந்து போனான்.

சில நேரங்களில் பேசப்படாத தந்தையின் பாசத்தினை செயலால் உணரும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை. என்பதை உணர்ந்திருந்தான் அத்தருணத்தில்.

"நீங்க தூங்குங்கப்பா." என்று முறுவலோடுக் கூறியவன், தனது அறைக்குள் நுழைந்திருந்தான். அவனுக்காக காத்திருந்தவள் எப்போது உறக்கத்தினை தழுவியிருந்தாள் என்று தெரியாமலே உறங்கிவிட்டாள் பூவினி.

மின்விசிறியின் காற்றில் அவளது சுடிதாரின் மேலாடை தூக்கியிருக்க, அவளது சுடிதாரினை சரியாக இழுத்துவிட்டவன் அங்கிருந்த போர்வையை எடுத்து அவளுக்கு சரியாக போர்த்தி விட்டான்.

அவள் மீது கோபம் தான், இருந்தாலும் உறங்கும் நிலையில் இருப்பவளிடம் அவன் காட்டிட நினைக்கவில்லை.

உடையை மாற்றியவன், உறங்க வர, அவளது வீங்கியிருந்த கன்னம் வெளிச்சம் போட்டுக் காட்டியதில், உற்றுப் பார்த்தவனது பார்வையே கூறியது அவனது குழப்பத்தினை.

'எப்படி இந்த அளவு வீங்கிருக்கும். கண்டிப்பா பலமா அடிச்ச மாதிரி இருக்கு. ஆனால் நான் அடிச்சனு ஏன் சொல்றா? பூவினியே தன்னை காயப்படுத்திட்டாளா? இல்லை வேற யாராவது அடிச்சாங்களா?' என்று கேள்வி மேல் கேள்வி எழுந்தது அவன் மனதில்.

ஏற்கனவே தாமரை அவளுக்காக கொண்டு வந்த எண்ணெயும் மயிலிறகும் மேசையின்மீது இருப்பதை பார்த்தவன், "அறிவு கெட்டவ? எண்ணெய் எடுத்து கன்னத்துல வெச்சா தான சரியாகும். எதுவும் பண்ணாமல் தூங்குறா?" என்று திட்டிக்கொண்டே எண்ணெய்யை எடுக்கப் போனவன், பின் என்ன நினைத்தானோ திரும்பி வந்து படுத்துக் கொண்டான்.

நேரங்கள் செல்ல செல்ல, அவன் கண்கள் மட்டும் உறக்கத்தை தழுவ மறுத்தது. அவளின் வலி அவனுக்கும் வலிக்கும் அல்லவா. அந்தநொடி கோபத்தை சற்று தள்ளி வைத்தவன் எழுந்துச் சென்று எண்ணெயினை எடுத்து வந்து மயிலிறகால் பட்டும்படாமல் அவளது கன்னத்தின் மீதே தடவினான்.

முதலில் மயிலிறகின் கூச்சத்தால் முகம் நெளிந்ததும், சட்டென்று நிறுத்தியவன், அவள் உறக்கம் கலையாதவாறு எண்ணெயினை தேய்த்துவிட்டபடி பின் உறங்கச் சென்றான்.

அங்கு யாழினிக்கோ புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. "பிரபா அத்தான்கிட்ட சொல்லியிருந்தா, எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகியிருக்கும். என்னால வீணாக அக்காக்கும் அத்தானுக்கும் இடையில சண்டை வந்திருக்கும். மொதல்ல இந்த விசயத்தை அக்காகிட்ட தான் சொல்லனும்." என்று தீர்மானித்தவள் உறக்கத்தினை தழுவியிருந்தாள்.

ஆள் அரவமற்ற சாலை அது. அங்கு துள்ளிக் குதித்துக் கொண்டு, பள்ளியிலிருந்து வந்துக் கொண்டிருந்தாள் யாழி. எங்கிருந்த வந்த ஆட்டோவானது அவளை இடித்துவிட்டு குப்புறக் கவிழ்ந்துவிட, இவளோ நிலைத்தடுமாறியவள் கீழே விழுந்திருந்தாள். காலில் அடிப்பட்ட காயம் வேறு. விழுந்த அதிர்ச்சியில் மயங்கியே விட்டாள் யாழினி.

ஆபத்து என்று வந்துவிட்டால் சூப்பர் ஹீரோ வந்து காப்பாற்றும் படங்களை எல்லாம் கண்டு வளர்ந்தவளுக்கோ, அந்த மயங்கிய நிலையிலேயே கண்களை திறக்க, தன்னை இரு கைகளால் ஏந்திக்கொண்டு ஒருவர் செல்வது மட்டும் நன்கு தெரிந்தது.

அவளது உதடுகள் அன்னிச்சையாக "நீங்க என் ஹீரோவா?" என்று மொழிந்திட,
சிறியவளை கையில் ஏந்தியவனோ இதழ் பிரிக்காமல் சிரித்தான்.

அவனது கன்னக்குழி பளிச்சென்று காட்ட, அந்த இருபத்தி இரண்டு வயது இளைஞன் அவளுக்கு ஹீரோவாக தான் தெரிந்தான். அப்படியே அவனது கைகளிலேயே மயங்கியநிலையில் சரிந்தாள் யாழினி.

அவன் யாழினியை தான் வந்த மருத்துவமுகாமில் சேர்த்து இருந்தான்..மயக்கம் தெளிந்தவள், கண்களை திறந்து பார்க்க, பஞ்சினைக் கொண்டு அவளது காயத்திற்கு இதமாக மருந்து இட்டவனோ, "சின்ன காயம் தான் பேபி. தண்ணீர் மட்டும் காயத்துல படமா பார்த்துக்கோ." என்று இதமாக கூறியவன் அவளது தலையை அழுத்தமாக வருட, அப்போது தான் அவளது அக்கா அவளைத் தேடி அங்கு வந்திருந்தாள்.

அன்றைய நினைவு கனவுகளாக வந்திருக்க பட்டென்று கண்களை திறந்துக் கொண்டு எழுந்தாள் யாழினி. முகம் முழுவதும் வியர்த்து வழிந்தது. அவளது சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த தனலட்சுமியும் எழுந்துக் கொள்ள,

"என்னடி ஆச்சு?" என்று பதட்டத்தோடு கேட்டார்.

"ஒன்னும் இல்லைமா கனவு வந்திருச்சு." என்றுகூறுபவளை பார்த்து கவலைக் கொண்டவர், திருநீறை எடுத்துக் கொண்டு அவளது நெற்றியில் வைத்துவிட்டார்.

"இப்போ தூங்கு யாழி. எதுவும் நினைக்காத. எல்லாம் நன்மைக்கே." என்று ஆறுதலாக கூறிக்கொண்டே அவளது முதுகினை ஆறுதலாக வருடிவிட்டார்.

அடுத்த நாள் காலை கதிரவன் அழகாக மலர்ந்திருக்க, தூக்கத்திலிருந்து எழுந்தாள் பூவினி. தனது அருகே பிரபஞ்சன் இல்லாததை பார்த்தவள் பெருமூச்சொன்றை விட்டபடி எழ, கண்ணாடியில் முகம் பார்த்தவளுக்கு வீக்கம் குறைந்தது போல தோன்றியதில், அன்னிச்சையாக தனது கன்னத்தினை தொட்டுப் பார்த்தாள். மேசையின் மீதிருந்த எண்ணெயில் மூழ்கிய மயிலிறகு கண்களில்பட, சடுதியில் அவளது நினைவில் வந்தவன் பிரபஞ்சனே.

'அடிக்கவும் செய்றாரு, மருந்துப் போடவும் செய்றாரு! இவரை புருஞ்சுக்கவே முடியலையே.' என்ற யோசனையோடு குளியலறைக்குள் நுழையச் செல்ல, அங்கு குளியலறையிலிருந்து வெளியே பிரபஞ்சன் வர, இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிடாத குறையாக நின்றனர்.

அவனது வெற்று மார்பில் இருந்து வழிந்தோடும் நீர்திவளைகளின் ஈரத்தினை உணர்ந்தவள், ஒரு வித பதட்டத்தோடு அவனை ஏறிட்டாள். ஆனால் அவனோ அவளது முகத்தை பார்க்காமல் எங்கோ பார்த்தபடி நின்றான்.

என்றுமே கண்களாலே சீண்டுபவனது பார்வை இன்று வேறொரு பக்கம் இருப்பதைப் பார்த்ததும் அவளின் மனம் சற்று சுணங்கத்தான் செய்தது.

'இவரு மேல நான் தான் கோபமா இருக்கனும். ஆனால் இவரு மூஞ்சியை தூக்கி வெச்சுக்குறாரு.' என்று பெருமூச்சொன்றை விட, அவளது உஷ்ண காற்று அவன் மார்பின் மீதே பட்டது.

அப்போது கூட அவளை அவன் பார்க்கவில்லை. அவளிடம் இருந்து நகர்ந்தவன், அவளது முகத்தினைக் காணாமலே அங்கிருந்து சென்றான். ஏனோ அவனது விலகல் முதல் முறையாக ஒரு வித நெருடலை உருவாக்கியிருந்தது பெண்ணவளின் மனதில்.

இதே விலகல் அவள் காபி கொடுக்கும் போதும், உணவினை எடுத்து வைக்கும் போதும் என ஒவ்வொன்றிலும் அப்பட்டமாக தெரிய, அவளுக்கு அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது விலகல் என்பது எவ்வளவு பெரிய வலியினை உண்டாகும் என்பது.

தனஞ்செயனும் தன் மருமகளையும் மகனையும் கவனித்துக் கொண்டே தான் இருந்தார். திருமணம் ஆகி மூன்று நாட்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த விரிசல் பெரிதாகக் கூடாது என்று நினைத்தவர், பூவினியிடம் இதை பற்றி பேசிட வேண்டும் என்ற முடிவினை எடுத்திருந்தார்.

பிரபஞ்சன் வேலைக்கு சென்றதும், தாமரை கடைக்கு சென்றப் பிறகு வீட்டு வேலைகளை செய்துக் கொண்டிருந்த பூவினியை அழைத்தார் தனஞ்செயன்.

"சொல்லுங்க அப்பா?" என்று கேட்பவளை பார்த்து புன்னகைத்தவரோ,

"பூவினிமா. கன்னம் இப்போ பரவாயில்லையா? நேத்து என்ன நடந்துச்சுமா? உனக்கு என்னத் தோணுது பிரபா தான் உன்னை அடிச்சானு தோணுதா?" என்று கேட்பவரை புரியாதப் பார்வை பார்த்தாள் பூவினி.

'அவரு அடிச்சது உண்மை தான். ஆனாலும் இவரு கேட்குறதே புரியலையே' என்ற குழப்பத்தில் அவள் பார்க்க, அதை புரிந்துக் கொண்ட தனஞ்செயனோ,

சில நேரம் மனசு சொல்றதை கேட்கனும். சில நேரம் மூளை சொல்றதை கேட்கனும். ஆனால் சில நேரம் உள்ளுணர்வு சொல்றது கண்டிப்பா சரியா இருக்கும் பூவினிமா. இப்போ சொல்லு அப்போ உன் உள்ளுணர்வு என்ன சொல்லுச்சு?"

"அப்பா அது. குழப்பமா இருந்துச்சு எப்போதும் ஒரே மாதிரி இருக்கவங்க, நேற்று ரொம்பவே வித்தியாசமா தெரிஞ்சாரு. சொல்லப் போனா அவருக்கு ஏன் அப்படி ஒரு வெறுப்புனு குழப்பத்தோடு தான் பார்த்தேன். முழுசா வேற மாதிரி இருந்தாருப்பா." என்று கூறும் போதே அவளது முகத்தில் அத்தனை வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது.

அவளது பதிலில் கொஞ்சம் இருந்த சந்தேகமும் விடுபட்டு போக, ஆழ்ந்த மூச்சினை இழுத்துவிட்டவர், "பூவினிமா, நான் சொல்றது உனக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால் இருபத்தி ஒன்பது வருசமா மனசுக்குள்ளயே வெச்சு மறைச்சுட்டு இருக்க ஒரு உண்மையை தான் நான் சொல்லப் போறேன்." என்றவர் தனது தயக்கத்தை விடுத்து கூறத் தொடங்கினார்.

தாமரைக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் பற்றியும், கிருபாகரன் பற்றியும் ஒன்றைவிடாமல் கூறியவர், "இப்போ சொல்லு பூவினி உன்னை அடிச்சது ஏன் இன்னொரு பையனா இருக்கக்கூடாது?" என்ற கேள்வியை முன் வைக்க,

அவர் கூறியவற்றில் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றவள், இப்போது தான் உணரத் தொடங்கினாள். முதலில் 'அவன் வேறு நிற சட்டை தானே போட்டிருந்தான். இதை எப்படி நான் யோசிக்கலை.' என்ற எண்ணம் தான் மேலோங்கியதில் அவளுக்கோ, தலை சுற்றாதக் குறைதான்.

"எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை அப்பா. இவ்ளோ பெரிய விசயத்தை மனசுகுள்ளயே போட்டு வெச்சிருக்கீங்க? உண்மையா உங்க வலியை நினைச்சு கவலைப்படுறதா? இல்லை செய்யாத தப்புக்காக அடி வாங்கிட்டாரேனு உங்க பிள்ளையை நினைச்சு கவலைப் படுறாதானு தெரியலை." என்று கூறும்போதே அவளது கண்கள் கலங்கியது.

"உண்மையை சொல்லிட்டா நிம்மதி தான். ஆனால் அந்த உண்மையை மனசுகுள்ளயே வெச்சிட்டு இருக்குறது நரகம். இத்தனை நாள் எனக்கு மட்டுமே தெரிஞ்ச பாரத்தை உன்கிட்ட இறக்கி வெச்சிருக்கேன்.." என்று கூறும்போதே அவரது குரலில் தெரிந்தது அத்தனை வலி.

"என்னங்க?" என்று கதவருகே நின்றபடி அதிர்ச்சி குறையாமல் தாமரைக் கேட்க, அவரைக் கண்டதுமே அவரைவிட அதிர்ச்சியில் பூவினியும் தனஞ்செயனும் தாமரையை ஏறிட்டனர்.

இத்தனை நாள் மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்ததும் தாமரையின் மனநிலை என்னவாகக் கூடும்......
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 21

சற்று முன்பு கடைக்கு சென்றிருந்த தாமரையோ, விரைவாகவே வீட்டிற்கு வந்திருக்க, வெளியே காய்ந்திருந்த துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தார். தன் கணவர் பிரபஞ்சனை பற்றி பேசத் தொடங்கியதும் அவரது காதுகளில் விழுந்த அந்த நொடி, தன் கணவர் என்ன தான் கூறுகிறார் என்பதைக் கேட்பதற்காக அவ்விடமே அமைதியாக நின்றிருந்தவருக்கு இரட்டைக்குழந்தை பற்றிய செய்தி இடியாக காதில் இறங்க, அதிர்ந்து போனார் தாமரை.

இது அவ்வளவு எளிதான விசயம் அல்லவே. ஒரு தாயால் எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும். அதிர்ச்சி சிறிதும் குறையாமல் கையில் வைத்திருந்த துணிகள், பைகளை கீழேப் போட்டவர் "என்னங்க!" என்றார் அதிர்ச்சி விலகாமல். கண்கள் ஒருபுறம் கலங்க அதிர்ச்சியில் உறைந்து போன தாமரைக்கு உலகமே இருண்டது போன்ற உணர்வு துளிர்க்காமல் இல்லை.

எவ்வளவு பெரிய விசயத்தை தன் கணவர் தன்னிடம் மறைத்திருக்கிறாரே என்ற ஆதங்கம் ஒரு புறம் என்றால், தன் வயிற்றில் ஜனனித்த குழந்தை கையில் கூட ஏந்தவில்லையே என்ற வேதனை என்று உயிர் போகும் வலியினை உணர்ந்திருந்தவருக்கு ஒரு நிமிடம் இதயமே நின்றது போன்ற உணர்வு ஏற்பட்டிருந்தது.

இருபத்தி ஒன்பது வருடத்திற்கு முன்பு, பிரபஞ்சன் காரணமே இன்றி அழும்போது, அவனைத் தேற்றத் தெரியாமல் கஷ்டப்பட்ட நாட்கள், பிரபஞ்சனிற்கு பால் கொடுத்த பின்பும் மார்பில் சுரக்கும் தாய்ப்பால், உறக்கத்தில் கூட பால் கட்டிக்கொண்டு உருவான வலி என்று விடை தெரியாத கேள்விக்கு விடை இன்றல்லவா தெரிந்துக் கொண்டார்.

"ஏங்க? ஏன்?" என்ற வார்த்தை மட்டுமே ஆதங்கமாக வந்தது. அதற்குமேல் பேச முடியாமல் சுவற்றிலேயே சாய்ந்தபடி பொத்தென்று விழச்சென்றவளைக் கண்டதும் ஓடிச் சென்று பிடித்துக்கொண்டாள் பூவினி.

"அத்தைம்மா..... அழாதீங்க அத்தைமா. அமைதியா இருங்க. ப்ளீஸ் இப்போ நீங்க நிதானமாக இருக்கனும்." என்று ஆதரவாக கூறியவள் தாமரையின் கைகளை இதமாக பற்றிக் கொண்டாள்.

"வலிக்குதுமா பூவினி. பெத்த வயிறு வலிக்குது. இதுவரை என்கிட்ட எதையுமே மறைக்காத உன் மாமானார், எவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சிருக்காரு. ஏங்க ஏன் என்கிட்ட சொல்லலை? இத்தனை வருசத்துல ஒருதடவை கூடவா சொல்லனும்னு தோணலை." என்று பூவினியில் தொடங்கி தன் கணவரிடம் கேள்வியாய் முடித்திருந்தார்.

"தாமரை. பொறுமையாக இருமா. நான் அப்போ சொல்லியிருந்தால் மட்டும் நீ கஷ்டப்பட மாட்டியா? நாளுக்கு நாள் அவன் என்ன பண்றான்? சாப்பிட்டானா? தூங்குனானானு உனக்குள்ள கேள்வி மேல கேட்டு உன் நிம்மதியை தொலைச்சிருப்ப. நீ நல்லா இருக்கனும்னா... நான் மறைச்சு தான் ஆகனும்னு எனக்கு தோணுச்சுமா. அதுனால தான் மறைச்சேன்."

"நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாதுங்க. இப்போவே என் பிள்ளை எனக்கு வேண்டும்." என்றார் பிடிவாதமாக.

"கொடுத்த பிள்ளையை திரும்ப எப்படி கேட்க முடியும். புருஞ்சுகிட்டு பேசு தாமரை. அவங்க எப்போவோ சென்னை போய்ட்டாங்க. எப்போவாவது கோயமுத்தூருக்கு வருவாங்கனு வாட்ச்மேன் ஒரு தடவை சொன்னான். அவன் நல்லா இருக்கான். அத நினைச்சு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்." என்றவரை ஆதங்கமாக பார்த்தாள் தாமரை.

"என்னங்க பேசுறீங்க. அவனை பார்க்க எல்லா உரிமையும் எனக்கிருக்கு. இப்போவே என் மகனை நான் பார்க்கனும். அவனை பார்க்கனும். அவன் எப்படி இருப்பான்? நம்ம பிரபா மாதிரியேவா? அவ..அவன் என்ன அம்மானு கூப்பிடுவான்ல. அவன் என் கூடவே வந்திடுறேனு சொல்வானா? இல்லை நீ யாருனே தெரியாது போனு சொல்லிடுவானா? " என்று அழுத்தமாக வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரின் ஏக்கத்தினையும், தாய்மையையும் பறைச்சாற்ற பூவினிக்கோ, தன் மாமியாரைக் கண்டு கண்கள் கலங்கிவிட்டது.

"தாமரை இவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சுட்டு வாழ்க்கை முழுவதும் மனசளவுல துடிச்சிட்டு தான் இருக்கேன். என் வலியை மனசுல புதைச்சுட்டு நான் படுற கஷ்டம் எனக்கு மட்டுமே தெரியும். ஆனால் என்ன? கிருபாகரன் சார் அவனை நல்லபடியா பார்த்துப்பாருனு ஒரு நம்பிக்கையிலயே காலத்தை ஓட்டுறேன்." என்றார் தனஞ்செயன்.

"நீங்க என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாதுங்க. எனக்கு என் பிள்ளை வேணுமுங்க. அப்போ பூவினிய அடிச்சது அவன் தானா. அவன் என்கிட்ட இருந்தால் இப்படி பண்ணிருக்க மாட்டான்ல. என்ன கஷ்டத்துல இருந்தானோ, இது தெரியாமல் பிரபாவை அடிச்சுட்டேனே. என் இரண்டு பிள்ளைகளும் இந்த அம்மாவை விட்டு போய்டுவாங்களா?" என்று எதைஎதையோ யோசித்தபடி இயலாமையில் அழுது கரைந்தார் தாமரை.

"அத்தைமா அழாதீங்க. நான் இருக்கேன் உங்க பையனை உங்களோடு சேர்த்து வைக்குறேன்." என்று ஆறுதலாக கூறியவள் அறியவே இல்லை அவன் யார் என்று. அவனைப் பற்றி தெரிந்திருந்தால் இவ்வாறு சொல்லியிருப்பாளோ என்னவோ. ஆனாலும் அவன் அறைந்த அறையை ஒரு நிமிடம் நினைத்தவளது கைகள் அன்னிச்சையாக அவளது கன்னத்தினை தொட்டு பார்த்தது.

நடந்தவற்றை அறிந்திடாத பிரபஞ்சனோ குமரனோடு அவனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தான்.

"டேய் பிரபா ஏன்டா இப்படி உர்ருனு மூஞ்சியை வெச்சிட்டு இருக்க?" என்று தனது இருசக்கர வாகனத்தின் கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே கூறினான் குமரன்.

"ஏன்டா தெரியாத மாதிரியே கேட்குற? ஏற்கனவே கடுப்பா இருக்கு. இதுல நீ தேவையில்லாமல் பேசி வெறுப்பை கிளப்பாதடா." என்று கூறிக்கொண்டே கையில் வைத்திருந்த மாலையினை நசுக்கியபடி இருந்தான்.

"டேய் மச்சி வாழ்க்கையினா சில பல அடிகள் விழத்தான் செய்யும். அதுக்குனு உன் கோபத்தை மாலையில காட்டாதடா. ரூட்டு தலை, ஆள் உயர மாலையை பத்திரமா எடுத்துட்டு வர சொல்லியிருக்காரு. கொஞ்சம் சேதாரம் ஆனாலும் நம்ம இருந்த ஆதராமே தெரியாமல் பேசியே சாவடிப்பாரு." என்று எச்சரிக்கை விடுத்துக் கொண்டே வண்டியினை ஓட்டிக் கொண்டிருந்தான்.

"எனக்கு தெரியும். ஆமா.... உன்னை தான வாங்கிட்டு வர சொன்னாரு தேவையில்லாமல் என்னையும் ஏன்டா இழுத்துட்டு போற." என்றான் எரிச்சலாக.

"நான் எல்லாம் வண்டி ஓட்டுறதே பெருசு. இதுல இந்த மாலையை வெச்சுகிட்டு எப்படி வண்டி ஓட்டுவேன். அதான் உன்னை இழுத்துட்டு வந்துட்டேன்." என்று திரும்பிக் கூறிக்கொண்டே ஓட்ட,

"டேய் இப்படியே திரும்பிட்டு வண்டி ஓட்டிட்டு இருந்தா,நாம இந்த மாலைய சொர்கத்துக்குல போய் தான் கொடுக்க வேண்டியது வரும்." என்று கடுப்போடு கூறினான்.

"அது அப்படி இல்லை மச்சி. நமக்கு தான் இந்த மாலையை போட வேண்டியதாகிடும் " என்று சிரித்துக் கொண்டவனது முதுகின் மீதே ஒரு அடி வைத்தான் பலமாக.

அங்கு யாழினியோ எப்போதும் போல கல்லூரிக்கு செல்ல தயாரானவள் பேருந்து நிலையத்திற்கு வர, அங்கு எதேச்சையாக வருவதுபோல வந்தான் தென்னவன்.

"ஹாய் பாப்பா. நீ எங்க இங்க?" என்று அப்போது தான் பார்ப்பது போல சிரித்துக் கொண்டே கேட்க,

"அப்போ நான் இங்க நிக்குறது உங்களுக்கு தெரியாது. சும்மா கேசுவலா.... எதேச்சையாக பார்த்தீங்க. அப்படி தானேங்க." என்று ராகமாக அவள் இழுக்க,

அவனோ பதில் கூற இயலாமல் சிரித்துக் கொண்டே "ஆமா பாப்பா. அப்புறம் இந்த எக்சாம் எப்படி பண்ண?" என்று அவளை திசைத் திருப்பும் பொருட்டுக் கேள்வியைக் கேட்டான்.

"அது வேற லெவல்ல பண்ணியாச்சு. சரி பஸ் வர மாதிரி இருக்கு நீங்க கொஞ்சம் தள்ளுங்க." என்றுக் கூறிக்கொண்டே அவள் செல்ல,

"ஹே பாப்பா..." என்று அவன் அழைத்ததில் அங்கிருந்த மூன்று வயது குழந்தை முதல், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் வரை அவனையே திரும்பி பார்க்க,

யாழியோ தலையில் அடிக்காத குறையாக அவனை பார்க்க, 'இங்க வா' என்று கண்களாலே அழைத்திருந்தான் தென்னவன்.

அதில் சலிப்போடு அவனை நோக்கி வந்தவள், "என்ன விசயம் சட்டுனு சொல்லுங்க. இந்த பாப்பானு கூப்பிடாதனு சொன்னா கேட்க மாட்டீங்களா மிஸ்டர் தென்னமரம்." என்று இடுப்பில் கைவைத்தபடி ஒற்றை புருவத்தை உயர்த்திக் கொண்டு கேட்டாள்.

"எனக்கு எப்போதுமே நீ பாப்பா மட்டும் தான். சரி வா வண்டியில ஏறு. காலேஜ்ல கொண்டு போய் விடுறேன்"

"அய்யோடா உங்க அக்கறைக்கு நன்றி. நான் பஸ்ல போயிடுறேன்." என்றவள் இதழை சுழிக்க, அவனது கைகளோ அந்த ஆரஞ்சு இதழ்களை இழுத்து விளையாடத் துடித்தது.

'டேய் தென்னவா கன்ட்ரோல் யுவர் செல்ஃப்.' என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டவன், "யாழ் வண்டியில ஏறு. நான் உன் மாமா தான? என்ன பார்த்து உனக்கு என்ன பயம்?" என்றவனை மேலிருந்து கீழ்வரை அழுத்தமாக பார்த்தவள், வாய்விட்டே சிரித்துவிட்டாள்.

"ஏன் இப்படி சிரிக்குற?" என்றவனுக்கு, அவள் சிரிப்பதால் அனைவரும் தன்னை ஒரு மாதிரியாக பார்ப்பது போன்ற உணர்வு எழ, கூச்சப்பட்டு போனவன் அவளை முறைக்கவும் தவறவில்லை.

"எந்த கோணத்துல பார்த்தாலும் உங்களை பார்க்கும் போது பயம் வரவே இல்லை. ஆனால் ஒன்னு மட்டும் புரியலை.... அது ஏன் என்ன பார்த்தால் மட்டும் பயம் வருதானு கேட்குறீங்க நீங்க எல்லாம்." என்றவள் பொதுவாக கூறியிருக்க,

அவனோ, "வேற யாரு அப்படி கேட்டா?" என்ற கேள்வியினை எழுப்பியிருந்தான்.

'அய்யோ யாழி சிறப்பா உளறிட்டியேடி.' என்று தன்னைத்தானே கடிந்தவள், "அது ஒன்னு இல்லை. என் சீனியர்ஸ் இப்படி தான் ராகிங் பண்றப்போ கேட்டாங்க. அதுதான்" என்று கூறி ஒரு வழியாக சமாளித்தாள்.

"யாராவது ராகிங் பண்ணுனா என்கிட்ட சொல்லனும் சரியா?" என்றவன் நம்பி சொல்லியிருக்க, யாழினியின் மனமோ, 'பச்சமண்ணு எது சொன்னாலும் நம்புது.' என்று நினைத்துக் கொண்டே சரியென தலையாட்டினாள்.

"சரி வண்டியில வரியா?" என்று ஆர்வமாக அவன் கேட்கும் போதே பேருந்து ஒலிப்பானை எழுப்பியபடி அவ்விடம் வந்து நிற்க,

" உங்க சின்ன வண்டியைவிட, என் பெரிய பஸ் செமல்ல" என்று கண்ணடித்துக் கொண்டே பேருந்தில் ஏறிக் கொண்டவள், சன்னலின் வழியாக " பாய் தென்னமரம்" என்று சத்தமாக கூற , "அடிங்கு" என்றவன் முறைத்துக் கொண்டே ஏக்கமாக பார்த்தான்.

"ரொம்ப கஷ்டம்டா தென்னவா. நீ என்ன பண்ணாலும் அவளை க்ரக்ட் பண்ணவே முடியாது." என்று நிலைக்கண்ணாடியில் தன் முகத்தினை பார்த்து புலம்ப,

தம்பி அந்த பாப்பாவை மட்டும் தான் கூப்பிட்டு போவியா? என் பேரு பாப்பா தான். அதாவது பாப்பாத்தி, என்னை கொஞ்சம் வீடு வரைக்கும் இறக்கி விட்ருப்பா.." என்று எழுபது வயது நிரம்பிய மூதாட்டி கேட்டதில்

"என்ன கொடுமை தென்னவா இது." என்று தன் விதியை நொந்துக் கொண்டவன், "சரி வாரும், வந்து தொலையும் உன்னையாவது இறக்கி விடுறேன் தாய்கிழவி." என்று வேண்டாம் வெறுப்பாக கூறியவனோ யாழியை நினைத்து நொந்துக் கொண்டே தன் வண்டியினை உயிர்பித்தான்.

அந்த பால் வண்ண பளிங்கு போன்ற அழகிய வீட்டின் முன் திரளான மக்கள் சூழ்ந்திருந்தனர். ஒவ்வொருவராக வந்த வண்ணமாக, கிருபாகரனது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய வண்ணமுமாக இருந்தனர். சற்று முன்பு தான் கிருபாகரனின் உடலுக்கு இறுதி சடங்குகள் நிறைவாக செய்யப்பட்டிருந்தது.

உணர்வுகள் துடைத்த முகத்தோடு, ஈரத்துண்டினால் தனது உடலினை சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான் அகிலன். அனைவரும் அவனது கைகளை பற்றி துக்கம் விசாரிக்க, எதுவும் பேசாமல் அமைதியாக கைகளைக் கொடுத்தவன் தன் தந்தையின் புகைப்படத்தையே பார்த்தபடி இருந்தான். எதோ ஒன்றை தன்னைவிட்டு போய்விட்டது போன்ற உணர்வு எழ, ஆறுதலுக்கு கூட உறவுகள் இன்றி தனிமரம் போல் அமர்ந்திருந்தான் அகிலன். பின் என்ன நினைத்தானோ விறுவிறுவென உள்ளேச் சென்று, தனது அறைக்குள் அடைந்துக் கொண்டான்.

அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தார் சதாசிவம். "இந்த பசங்க மாலை வாங்கிட்டு வந்தானுங்களா?" என்று யோசனையோடு உள்ளே சென்றார்.
தொழில் முறை சார்ந்து கிருபாகரனை அவர் நன்கு அறிவார். இச்செய்தியைக் கேட்டதுமே நொடி பொழுதுகள் கூட வீணடிக்காமல் அவ்விடம் வந்திருந்தார் அவர்.

எப்போதுமே இன்ப நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போமோ, அதைவிட மிக முக்கியமாக துக்க வீட்டிற்கு சென்று அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் கடைப்பிடிப்பவர் இன்றும் அதனைக் கடைப்பிடித்திருந்தார்.

கிருபாகரனின் புகைப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தியவர், அவரின் உறவுகளை தேட, அங்கிருந்த ஒருவரோ, "அவங்க பையன் உள்ள இருக்காரு. பாவம் நல்ல மனுசன். கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருந்தால் கூட நீங்க பார்த்திருக்கலாம்." என்க

"ஆமாங்க. எனக்கு இப்போதான் தகவல் கிடைச்சுது. ஆனால் ரொம்ப சீக்கிரமே எடுத்துட்டாங்க."

"அது ஒன்னுமில்லைங்க, அவருக்கு உடம்பு சரியில்லைமா இருந்ததுனால சீக்கிரமே எடுத்துட்டாங்க."

"சரி சரிங்க. நான் போய் அவரு பையனை பார்த்துட்டு வரேன்." என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றவரை யாரோ தெரிந்தவர் அழைக்க, திரும்பியவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்த அகிலன் சட்டை ஒன்றை அணிந்தபடி, வெளியே வந்தான்.

எதேச்சையாக திரும்பியவரோ, அவனைப் பார்த்து, "பிரபஞ்சா.. இவன் வந்துட்டானா? எப்போ வந்தான்?" என்று குழம்பிக் கொண்டே அவனை நோக்கிச் சென்றார்.

"டேய் எப்போ வந்த? ஆமா அந்த குமரன் எங்க? மொத மாலை எங்கடா?" என்று கேள்வி மேல் கேட்க, அவனோ அவரை வினோதமாக பார்த்தான்.

அதே சமயம் பிரபஞ்சனும் குமரனும் அவ்விடம் வந்து சேர்ந்திருக்க, மாலையை குமரனது கைகளில் ஒப்படைத்தபடி, "போடா போய் கொடுத்துட்டு வா." என்று கூறியவன் அவனை அனுப்பிவிட்டு வெளியவே நின்றுக் கொண்டான் பிரபஞ்சன்.

"நல்லா வருவடா நீ..." என்று நொந்துக்கொண்டே, மாலையினை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சென்றான் குமரன்.

அவனையே அனைவரும் வினோதமாக பார்க்க, "தம்பி போட்டோக்கு போட இவ்வளவு பெரிய மாலையா?" என்று ஒருவர் கேட்டே விட்டார்.

" அவர் உடம்புக்கு சார்." என்றவனை வினோதமாக பார்க்க, "பரவாயில்லை நம்ம வாங்குனதுனு நினைச்சுட்டாங்க போல. ஆமா நம்ம ரூட்டு தலை எங்க?" என்று நாலாபுறமும் கண்களை சுழலவிட, அங்கு அகிலனிடம் பேசிக் கொண்டிருந்த சதாசிவம் கண்களில் பட,

"இதோ இங்க இருக்காரே." என்றவன் அவரை நோக்கி வேக எட்டுக்களை வைத்தான்.

"பாஸ்" என்றவனது அழைப்பில் அவரோடு சேர்ந்து அகிலனும் திரும்ப திகைத்தது என்னவோ குமரன் தான்.
 
Status
Not open for further replies.
Top