ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை ஆளும் திமிரழகே - கதை திரி

Status
Not open for further replies.

Dhivya98

Well-known member
Wonderland writer
"அவ்ளோ சீக்கிரம் எல்லாம் விடமாட்டேன். பாப்பு நீ சொன்னதை ஏன் செய்யக்கூடாதுனு இப்போ யோசனையா இருக்குடி. என்ன பண்ணலாமா?" என்றான் விசமமாக.

"அய்யய்யோ நானே வலிய வந்து மாட்டிக்கிட்டனே." என்றவள் தன் முகத்தை பொத்திக் கொள்ள,

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...
பூத்திருச்சு வெக்கத்தைவிட்டு....
என்று பாட்டாக அவன் பாட,

"அய்யோ போங்க. ரொம்ப பண்ணுறீங்க." என்றாள் சிணுங்களாக.

"நான் இன்னும் பண்ணவே இல்லையே." என்றவனது சீண்டல் தெளிவாக புரிய, தன் ஒற்றை புருவம் தூக்கி முறைத்தவளோ, அவனது முகத்திலேயே ஓங்கி குத்தினாள்.

"யோவ் என்னையா நானும் பார்க்குறேன் ஓவரா பண்ற? ஹான் போய் தூங்கு இல்லைனா செவுள்ளயே விழும்." என்றாள் முறைத்துக் கொண்டே.

"வலிக்குதுடி இராட்சசி. என் அழகான முகத்துல அப்படி என்ன உனக்கு காண்டு."

"என்னது அழகான முகமா? அது எங்க இருக்கு?"

"இந்த குசும்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. சரி தான் போடி என் அழகை கண்டு பொறாமை." என்றவன் விலகிச்செல்ல, அவனது கரம் பற்றி நிறுத்தியவளோ,

"கோபமா என் அழகு முரடா." என்றாள் தன்மையாக.

"குழப்பமா இருக்குடி." என்றவனை புரியாமல் பார்த்தவளோ,

"ஏன்? என்ன குழப்பம்?"

"இல்லை நீ தான் காதுல என்னென்னோமோ சொல்ற? நான் பக்கத்தில் வந்தால் வாய் மேலயே குத்துற? அதான் ரொம்ப குழப்பமா இருக்கு." என்றவனது பதிலில் வாய்விட்டே சிரித்தாள் பூவினி.

"மக்கு மாமா. ஒருவேளை நான் கிரீன் சாரி கட்டியிருந்தால் உனக்கு புருஞ்சிருக்குமோ?" என்றவள் மீண்டும் குழப்ப, ஒரு நிமிடம் நிதானமாக யோசித்தவன்,

"அடிப்பாவி. கேடி நீ." என்றவளை நோக்கி அடியெடுத்து வைக்க, அவன் கைகளுக்கு சிக்காமல் போக்குக்காட்டியவள் ஓட, அவளது சேலை முந்தானையை பற்றியவனோ தன் புறமாக அவளை இழுக்க, வெட்கம் கலந்த புன்னகையோடு அவன் மீதே மோதினாள் பாவையவள்.

அவளை தன் புறம் திருப்பியவன், அவளது முகத்தில் முத்தத்தை பதிக்க செல்ல, அவளோ சேலை முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டாள்.

அதில் இதழ்பிரித்து சிரித்தவனோ, உன் முந்தானையாலும் என் முத்தத்தை தடுக்க இயலாதடி என்பதை அவளுக்கு உணர்த்துமாறு சேலையோடு அவளது இதழ்கள் மீது தன் இதழ்களை பதித்தான்.

சிவப்பு நிற சேலை, அவளது முகச்சிவப்பை மறைத்திருக்க, கிறங்கியவள் அவன் மீதே சரிந்தாள். தன் மீது சரிந்தவளை தன் இரு கைகளால் ஏந்தியவன், மஞ்சத்தை நோக்கி அழைத்துச் செல்ல, இமைமூடாமல் அவனையே பார்த்தவளுக்கு சொல்லப்படாத உணர்வுகள் துளிர்க்கத்தான் செய்தது.

காற்றில் அவளது கார்கூந்தல் அசைந்தாட, தன் ஒற்றைக்கரத்தால் அவளது கூந்தலை காதோரம் ஒதுக்கியவன் அவளது செவிகளுக்கு தன் முத்தத்தை பரிசளிக்க, கூச்சத்தில் நெளிந்தவள், பக்கவாட்டில் முகத்தை திருப்பிக்கொள்ள, அந்த கன்னத்தில் தெரிந்த மச்சத்தின் மீதே இதழ் பதித்திருந்தான் அவன்.

அவளோ மொத்தமுமாய் தன்னிலை மறந்தவள், கிறங்கி போய் பார்க்க, இதழ்களை நெருங்கும் அளவிற்கு அருகில் வந்தவனோ, "பாப்பு. உனக்கு எப்போ என் மேல காதல் வந்துச்சு?" என்றான் கேட்கும் ஆவலோடு.

அவனது கேள்வியில் மயக்கம் தெளிந்தவளோ, 'கேள்வி கேட்குற நேரமாடா இது.' என்பது போல பார்க்க, அவனோ சொல்லு என்பது போல ஆவலோடு பார்த்தான்.

எழுந்தவளோ, சம்மணமிட்டு அமர்ந்துக் கொண்டவள், அவனையும் அமரச் சொன்னாள்.

"அது எப்போ எப்படினு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் உங்களை பிடிச்சிருச்சு. ஆனால் அது எப்போ பிடித்ததுனு எனக்கே தெரியாது." என்றவளின் பதிலில் ஆடிப் போனவன்,

"என்னடி குடிச்சிருக்கியா? இப்படி உளருற.." என்றான் சலிப்போடு.

"நிஜமா தான் சொல்றேன். உங்களை தேவை இல்லாமல் அடி வாங்க வெச்சுட்டேனேனு ஒரே பீலிங்கா இருந்துச்சு. அதுலயும் இரண்டு நாள் நீங்க முகம் கொடுத்து பேசலை. அப்போ கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் நீங்க என்கிட்ட திட்டு வாங்குனாலும், என்னை நீங்க விட்டுக்கொடுக்கவே இல்லையா. இது எல்லாம் சேர்ந்து உங்களை பிடிக்க வெச்சிருச்சு போல." என்றவளையே ஙே வென பார்த்தான் பிரபஞ்சன்.

"அப்போ உன்கிட்ட திட்டு வாங்குனதுனால, இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் அதுனால லவ் பண்ணலாம்னு தோணுச்சாடி" என்றான் சோகமான குரலில்.

அவனது செயலில் நகைத்தவள், அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். "சோ க்யூட்டு. அது அப்படி இல்லை. என்னையும் அறியாமல் உங்களை பிடிச்சதை நான் உணர்ந்த இடம், உங்களை காணோம்னு தேடுன அந்த நிமிசம் தான். நீங்க இல்லாமல் என் வாழ்க்கையே இல்லைனு உணர்ந்தேன். அப்போதான் எனக்கே தெரிஞ்சுது உங்க மேல இருந்த என் காதலை. ஐ லவ் யூ பிரபஞ்சா. என் பிரபஞ்சமே நீ தான். நீ மட்டும் தான்." என்றவளை இறுக அணைத்துக் கொண்டான் காதலோடு.

வார்த்தைகளால் பேசிய காதல், செயலால் பேசத் தொடங்கியிருந்த நேரம் அது. கண்கள் உறவாட, உடல்மொழிகள் பேச, கூடலில் சங்கமித்திருந்தனர் இருவரும்.

அடுத்த நாள் காலையில், கொஞ்சல்களும், சிணுங்கள்களுமாக இருவரும் தயாராகியபடி வெளியே வர, இருவரையும் தன்னோடு தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்தான் சக்தி.

"பத்து நாள் இருப்பீங்கனு நினைச்சேனுங்க. நாலு நாள்லேயே கிளம்பிடுவேனு சொல்லிட்டீங்க. என் வூட்டுகாரம்மா உங்களை கூப்பிட்டு வர சொல்லி மிரட்டி அனுப்பிருக்கா." என்றான் புன்னகையோடு.

"எல்லா வீட்டுலயும் இதுதான் போல" என்று பூவினியின் காதோரம் அவன் கூற, அவளோ அவனது தொடையை கிள்ளினாள் நறுக்கென்று.

அதற்குள் இருவரையும் அவன் காரில் வீட்டிற்கு அழைத்து வந்திருக்க, அங்கு அவர்களுக்காக காத்திருந்தது மற்றுமொரு அதிர்ச்சி.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 31

"வெளியவே நின்னா எப்படி? உள்ள வாங்க." என்ற சக்தி இருவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, இன்முகத்தோடு உள்ளே சென்றனர் பூவினியும் பிரபஞ்சனும்.

நல்ல விசாலமான அறைகள், வீட்டிலிருந்தே செல்லக்கூடிய மாடிபடிகட்டுகள் என அழகாக இருந்தது அந்த வீடு.

"வாங்க. வாங்க. உட்காருங்க" என்று சக்தியின் மனைவி வனஜாவும் உபசரிக்க, உள்ளே இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான் சக்தி.

"காபி போட்டு கொண்டுவா கண்ணு. ஆமா வித்யா எங்க?"

"கோவிலுக்கு போயிருக்காங்க. இருங்க நானே காபி போட்டு கொண்டு வரேன்." என்று கூறியவள் உள்ளே சென்றிருக்க,

அங்கு மாடிபடிகட்டுகளில் இருந்து எட்டிப் பார்த்தாள் சிறுமி ஒருத்தி. எதேச்சையாக திரும்பிப் பார்த்த பூவினியின் கண்களில் அவள் பட்டுவிட, "வா குட்டி வா." என்றாள் செல்லமாக.

அவளது குட்டி குதிரை வால் முடி அழகாக ஆடிக்கொண்டபடி துள்ளிக் குதித்து வந்தாள் ஐந்து வயது நிரம்பிய சிவன்யா. பெரிய கண்களும், செப்பு இதழ்களும் என அழகாய் சிரிக்கும் குழந்தையை ஆவலோடு பார்த்தவள், அவளை அழைத்து நெற்றியின் மீதே முத்தமிட்டாள்.

"ரொம்ப அழகா இருக்கா பாப்பா." என்று கூறிக்கொண்டே பிரபஞ்சனை பார்க்க,

"ஆமா க்யூட்டி பேபி." என்று கூறிக் கொண்டே குழந்தையை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டவன், "அடுத்த வருசம் நம்ம வீட்டுலயும் க்யூட்டி பேபி வந்துடுவாங்க." என்றான் கண் சிமிட்டிக்கொண்டே.

அவனது சொல்லில் சிவந்தவள், "ஸ்சு!" என்றாள் முறைத்தபடி. அதில் அடக்கப்பட்ட சிரிப்போடு நின்றவனோ கண் அடிக்க, அவனது செயலில் 'இவர் குறும்பு தாங்கலை' என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் பூவினி.

"அண்ணா பாப்பு பேரு என்ன?"

"பாப்பா பேரு சிவன்யா."

"ரொம்ப அழகான பேரு. சிவூ பாப்பா நீங்க என்ன படிக்குறீங்க?" என்று குழந்தையோடு ஐக்கியமாகி விட்டாள் பூவினி.

அதற்குள் காபியோடு வனஜா வந்திருக்க, பிரபஞ்சனோ கைகளால், கோப்பை குழந்தை வைத்துக்கொண்டே எடுக்க, சிவன்யா ஆடியதில் காபி அவனது உடையிலேயே சிதறியது.

"அய்யய்யோ சூடான காபிங்க. சூடு பட்டுருச்சா?" என்று பூவினி பதட்டத்தோடு கேட்க,

"இல்லை பாப்பு. சக்தி இங்க ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?"

"வெளியே ரைட் சைடு இருக்குங்க. சீக்கிரம் கழுவிடுங்க பிரபா. அப்பாதானுங்க கறை பிடிக்காது."

"ஆமா சக்தி. நான் போய்ட்டு வந்துடுறேன். இந்தா பேபியை பிடிச்சுக்கோ பூவி." என்றவன் குழந்தையை அவளது கைகளில் ஒப்படைத்துவிட்டு, வெளியே சென்றான்.

"இவரு எல்லா இடத்துக்கும் கூப்பிட்டு போனாருங்களா? உங்களுக்கு அந்தமான் பிடிச்சிருக்குங்களா?" என்று வனஜா ஆர்வத்தோடு பூவினியிடம் கேட்டாள்.

"ரொம்ப நல்லாருக்குங்க அண்ணி. அண்ணா பக்கவா எல்லா இடத்தையும் சுத்தி காட்டிட்டாரு." என்றாள் முகம் மலர்ந்து.

வெகுநாட்கள் கழித்து தங்களது ஊர்காரர்களை கண்டதுமே வனஜாவும் அகம்மகிழ்ந்தவர், பூவினியின் உரிமையான பேச்சில் மயங்கி தான் போனாள்.

"ஏனுங்க, பூவினி பேசுறது நம்ம வித்தி பேசுறாப்புலயே இருக்குங்க. நல்லா கலகலனு கருத்தா பேசுதுங்க."

"ஆமா வனஜா. நான் அத முன்னாடியே உணர்ந்துட்டேன். எங்க அப்பா பேரு உங்க பேருதான் அண்ணானு சொன்னப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு."

"என்ன அண்ணா அண்ணி, யார் அந்த வித்தி? என்னை மாதிரியே பேசுவாங்களா?" என்றாள் பூவினி ஆர்வத்தோடு.

"இப்போ வந்துடுவா. வர நேரம் தான் ஆச்சு." என்று வனஜா கூறும்போதே,

"என்ன அண்ணிமா என்ன கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு." என்று இன்முகத்தோடு வீட்டிற்குள் நுழைந்திருந்தாள் வித்தி என்னும் வித்யரூபினி.

அவளது குரல் கேட்டதுமே பூவினி எதிர்பார்ப்போடு திரும்ப, அங்கு நின்ற ரூபினியைக் கண்டு, அதிர்ந்தவள் சிவன்யாவை இறக்கி விட்டபடி எழுந்து நிற்க, ரூபினியோ பூவினியைக் கண்ட நொடி ஸ்தம்பித்து போய் நின்றாள்.

ரூபினியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, பூவினியோ அதிர்ந்த விழிகளோடு அவளைக் கண்டவளுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது. எத்தனை வருடம் கழித்து அவளை காணுகின்றாள். சிறிய பெண் முகம் எல்லாம் மாறி, முகத்தில் வயதிற்கேற்ப மாற்றம் நன்கு தெரிந்தது. ஆனாலும் அவளின் மீது கோபம் கொண்ட மனமோ ஒரு நிமிடம் கூட அங்கு நிற்க இயலாமல் செய்திருக்க, அவளைத் தாண்டி வெளியேச் சென்றாள் பூவினி. அவளையே கண்ணீர் மல்க பார்த்த ரூபியோ, "பூவி" என்றபடி பொத்தென்று கீழே அமர்ந்தவளுக்கு கண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

வெளியே ஓடி வந்த பூவினியோ, பிரபஞ்சன் மீதே மோதியிருக்க, அவனைக் கண்டதுமே இறுக அணைத்துக் கொண்டவள் கதறி அழத் தொடங்கியிருந்தாள்.

"பிரபா நம்ம இங்க இருந்து போகலாம். அதுவும் இப்போவே. எ..என்னால இங்க இருக்க முடியாது. வாங்க போகலாம்." என்று தேம்பி தேம்பி அழ, குழம்பித்தான் போனான் பிரபஞ்சன்.

"என்னாச்சு பாப்பு. ஏன்மா ஏன் திடிருனு அழுகுற? என்ன நடந்துச்சு...அங்க யாரும் ஏதும் சொன்னாங்களா.... இல்ல இப்போ ஒரு பொண்ணு வீட்டுக்குள்ள வந்துச்சே, அந்த பொண்ணு ஏதும் சொல்லுச்சா? நல்லதானே இருந்த பூவி திடிருனு என்னாச்சுமா?"
என்றவனின் கேள்வியில் சிலையாக ஸ்தம்பித்து போய் நின்றாள்.

ஒரே வயிற்றில் ஒன்றாக வளரத்தொடங்கி, ஒரே தொப்புள் கொடியில் பகிர்ந்தவர்கள் ஆகிற்றே. ஆனால் அவள் செய்த ஒரு தவறால் இன்று தன்னுடன் பிறந்தவளையே வெறுத்து போய் நிற்பதை எவ்வாறு சொல்வாள் அவளைப் பற்றி. இருந்தும் சொல்ல வேண்டிய சூழலில் நிற்கின்றாள் பெண்ணவள்.

கண்களில் கண்ணீரோடு நின்றவள், "என்னால முடியலைங்க. அவளால என் வாழ்க்கையே போச்சு. எங்க அப்பா எங்களை விட்டு போய்ட்டாரு. என் கனவுகள் எல்லாத்தையும் விட்டு குடும்பத்துக்காக உழைச்சதும் அவளாலதான். சந்தோசமா இருக்க வேண்டிய எங்க வாழ்க்கையை இப்படி நரகமா மாத்துனதும் அவ தான். காதல் கல்யாணம்னு சராசரி பொண்ணுங்களுக்கு இருக்கும் ஆசையை ஒதுக்கி, கல்யாணம்னாலே ஒரு வெறுப்பை என் மனசுல உருவாக்கிட்டு போனவளும் அவதான், ஏன் நீங்க தாலிகட்டும் போது கூட கல்யாணத்தை நிறுத்த சொன்னேன் எல்லாம் இவளால தான். கல்யாணம் காதல்னாலே வெறுப்பா உண்டாக்கிட்டு போனவ இவ தானுங்க." என்றவள் வெடித்து அழுதாள் என்றாள்.

உள்ளே ரூபினியோ முகம் சிவக்க அழுக, சிவன்யா குட்டியோ, "அம்மா அழாத. ஏன் அழுகுற?" என்று அவளது கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைத்து சமாதானம் செய்ய, தன் மகளை அணைத்துக் கொண்டு அழுதாள் ரூபினி.

சக்தியும் வனஜாவும் குழம்பி போனவர்கள் "வித்யா என்னாச்சு? பூவினியை உனக்கு தெரியுமா?" என்று அதிர்ச்சி விலகாமல் கேட்டனர்.

"பூவினி என் ட்வின் சிஸ்டர்." என்ற ரூபினியின் பதிலில் சிலையாக நின்றனர் சக்தியும் வனஜாவும்.

"பூவிமா. முதல்ல உள்ள வா. உள்ள போய் பேசிப்போம்." என்று வெளியிலிருந்தபடி பிரபஞ்சன் தன்மையாக எடுத்துரைக்க,

"இல்லைங்க. என்னால அவளை பார்க்க முடியாது. அவளை நான் பார்க்க மாட்டேன். அவ என்ன பண்ணானு தெரியுமா?" என்று அவளுக்கு தெரிந்த வரை அனைத்தையும் கூறி முடித்தவள், அவனது தோளில் சாய்ந்து அழுதாள்.

ஏன் அவள் திருமண வாழ்வை வெறுத்தாள், என்ற காரணத்தினை உணர்ந்தவனோ, அவளது தலையை வாஞ்சையோடு வருடியபடி,

"எனக்கு உன்வலியும், வேதனையும் புரியுது. ஆனால் அவ உன் கூட பிறந்தவ. யாருக்கோ ஒன்னுனாலே பதறுற நீ இப்போ இத்தனை வருசம் கழித்து பார்க்குற உன் உடன்பிறப்பா யாரோனு ஒதுக்கி வைச்சுட்டு போறது சரியா? அவங்க எப்படி இருக்காங்கனு கேளு பாப்பு."

"அவளுக்கென்ன ஓடி வந்தவன்கூட சந்தோசமா தான் இருப்பா?"

"பாப்பு எதுக்கும் நாலு வார்த்தை ஆறுதலா கேட்குறதுல தப்பு இல்லை. காதலை தப்புனு
சொல்ல முடியாது. என்ன அவசரப்பட்டு கல்யாணம் பண்ணது ரொம்ப தப்பு. அதோட பின்விளைவுகளை யோசிக்குற பக்குவம் இல்லாமல் போயிட்டாங்க. அதுக்காக இத்தனை வருசம் கழிச்சும் முரண்டு பிடிக்குறது ரொம்ப தப்பு பூவி. எனக்காக வா." என்றவனது அழைப்பை மறுக்க இயலாது போக, தயங்கியபடியே தன்னவனின் கைக்கோர்த்து உள்ளே வந்தாள் பூவினி. ஆனால் அவள் முகத்தில் கோப ரேகைகள் மட்டும் அப்பட்டமாக தெரிந்தது.

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த ரூபினியோ பிரபஞ்சனைக் கண்ட நொடி அகிலனது உருவமைப்பில் இருப்பதால், கலங்கியவள் "அகில்" என்றாள் அவ்விடமே அதிரும் வண்ணம்.

அவளது அகில் என்ற அழைப்பில் குழம்பிய பிரபஞ்சனும், பூவினியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு பார்த்துக்கொள்ள, பூவினியின் கைகளை பற்றியிருந்த பிரபஞ்சனையும், அவளது நெற்றியில் இட்டிருந்த குங்குமம், காலில் இட்ட மெட்டியும் இருவரும் கணவன் மனைவி என்பதை பறைசாற்றியிருக்க, அதை ஏற்க மறுத்த ரூபினியோ, விசும்பல் ஒலியோடு அழத் தொடங்கினாள்.

"ஏன் அகில் இப்படி பண்ணீங்க?" என்று அவளது உதடுகள் துடிதுடிக்க வந்த கேள்வியில் ஓரளவு உண்மை புரிந்த பிரபஞ்சனோ,

"அகிலனை உங்களுக்கு தெரியுமா? நான் பிரபஞ்சன். என் ட்வின் பிரதர் தான் அகிலன்." என்றவன் தன்மையாக எடுத்துக் கூறிய நொடி தலைசுற்றாத குறை தான் ரூபினிக்கு.

"அப்போ நீங்க அகில் இல்லையா?" என்ற போதுதான் போன உயிரே திரும்ப வந்தது போன்று உணர்ந்தாள் ரூபினி.

"இல்லை. நான் பிரபஞ்சன். உங்க ட்வின் சிஸ்டர் பூவினியோட கணவன்." என்று புன்னகைமுகத்தோடு கூற,

பூவினியோ, "ரொம்ப முக்கியம்." என்றவள் தீயாக முறைத்தாள்.

"எங்களுக்கு ஒரு நிமிசம் தலை சுத்திடுச்சு. ட்வின் பிரதர்ஸ் , ட்வின் சிஸ்டரை மேரெஜ் பண்ணிருக்கீங்களா? அப்போ ஏன் வித்யா உனக்கு யாரும் இல்லைனு, சாகப் போன?" என்ற சக்தியின் கேள்வியில் அதிர்ந்து தான் போனாள் பூவினி.

"வாட்? சாகப் போனாளா அண்ணா? என்ன சொல்றீங்க? இவளை இழுத்துட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணவன் எங்க?" என்றாள் கோபமாக.

தான் ஆடவிட்டாலும் சதை ஆடும் என்பது போல அவள் சாகச் சென்றதை கேட்ட நொடி அதிரும் பூவினியைக் கண்டு பிரபஞ்சனுக்கும் நிம்மதி பிறந்தது. 'மனசுக்குள்ள அவ்வளவு பாசம் இருக்குமாம். ஆனால் வெளியே காட்ட மாட்டாங்களாம்.' என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

"அதை வித்யா தான்மா சொல்லனும்." என்று சக்தி அவளைப் பார்க்க, அவளோ சொல்வதாக தலையசைத்தவள் அன்று நடந்தவற்றைக் கூறத் தொடங்கியிருந்தாள்.

"காதலோட வேகத்துல, அந்த நொடி அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இரண்டு வாரம் அவரோட வாழ்ந்த நாட்கள் ரொம்ப அழகா இருந்துச்சு. அப்படி ஒரு நாள் அவரு அவங்க அப்பாவை பார்க்குறதுக்காக சென்னை போனாரு. அப்போதான், அவரை தேடி அவங்க பிரெண்ஸ் இரண்டு பேரும் கெஸ்ட் ஹவுஸ் வந்திருந்தாங்க." என்று கூறும்போதே அன்றைய நினைவுகள் அவளின் கண்முன்பு தோன்றியது.

"டேய் அகி கதவை திற?" என்று கதவினை அடிக்கும் சப்தம் கேட்க,

"யாரு நீங்க?" என்றபடி கதவை லேசாக திறந்துக் கொண்டு வந்தாள் ரூபினி.

"யார் நீங்க? நாங்க அகில் ப்ரெண்ட்ஸ். ஆமா நீ யாருமா?" என்றான் ஒருவன்.

"நான் அவரோட மனைவி ரூபினி." என்றவளை மேலிருந்து கீழ்வரை அதிர்ச்சியோடு பார்த்தவனோ,

"டேய் விமல் உங்கிட்ட சவால் விட்ட மாதிரியே கல்யாணம் பண்ணிட்டான்டா இந்த அகி." என்றவன் கூற,

"ஆமாடா. இவளை எத்தனை நாள் வெச்சிருப்பானோ தெரியல..அநேகமா ஒரு மாசம், இல்லை இரண்டு மாசம், அவன் இல்லாதது பார்த்தால் இப்போவே ஓடிட்டான் போலயே. பாவம்மா நீ. இப்படி நம்பி ஏமாந்து நிக்கிறியே." என்று வருத்தமாகவும் மனதில் வஞ்சத்தோடும் கூறியிருந்தான் விமல். அன்று அனைவரின் முன்பும் அகிலன் அடித்த அறையே அவன் அவ்வாறு செய்ய தூண்டுதலாக அமைந்தது. அவனுக்கு வஞ்சத்தை தீர்த்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி விட, அவனும் இல்லாததும் பொல்லாததும் வரை கதையை அடித்துவிட்டிருந்தான்.

"இல்லை நீங்க சொல்றதை நம்ப மாட்டேன். என் அகில் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்."

"என்ன தெரியுமா. இந்த ஒரு சில பசங்க இப்படி தான். நல்ல வாழைப்பழம் மாதிரி இனிக்க இனிக்க பேசுவானுங்க. அப்புறம் உன்னை நட்டாத்துல விட்டுட்டு போய்ட்டே இருப்பானுங்க. நீ வேணா அகிலுக்கு போன் பண்ணி பாரு. அவன் போன் எடுக்க மாட்டான்.எனக்கு தெரிஞ்சு நீ மூணாவது ஆள் அவனுக்கு."

அவன் கூறியது அதிர்ச்சியாக இருந்தாலும். அவ்வாறு இருக்காது என்பதை நிருபிக்கவே அகிலனுக்கு அழைப்பை விடுத்திருந்தாள். ஆனால் அவனது போனிற்கு அழைப்பு செல்லவே இல்லை.

அவனது போன் அணைக்கப் பட்டிருப்பதை தெரிந்துக் கொண்டே விமல் தீட்டிய சதி தான் அது.

இருந்தும் அவள் நம்பவில்லை. "இல்லை நான் நம்பமாட்டேன். கிளம்புங்க. அவரு என்னை உயிருக்கு உயிரா காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்காரு." என்றாள் உறுதியாக.

"அப்போ எங்ககிட்ட அவன் எந்த சாவலும் விடாமல் உன்னை கல்யாணம் பண்ணிருக்கானு சொல்றியாமா?"

"ஆமா கண்டிப்பா சவால் எல்லாம் விட்ருக்க மாட்டாரு. எனக்கு என் அகில் பத்தி தெரியும்."

"சிறப்பு. உங்க கல்யாணத்தை பண்ணி வெச்சவன் பேரு சொல்லுமா?அதான் சாட்சியா ஒருத்தனாவது இருந்திருப்பானே?"

" பிரசாத் அண்ணா தான் பண்ணி வெச்சாரு."

"அப்போ பிரசாத்க்கு போன் போடுறேன். அவனே சொல்லுவான்." என்றவன் பிரசாத்தை அழைத்திருக்க,

"சொல்லுடா விமல். என்ன விசயம்?"

"மச்சி இந்த அகி என்கிட்ட சவால் விட்டமாதிரியே கல்யாணம் பண்ணிட்டான் போல. "

"ஆமா அதுக்கு இப்போ என்னடா?"

"அது இல்லை மச்சி. படிக்குற பொண்ணு அவ படிப்பு கெட்டு போயிடாதா? தப்பு இல்லையா? அவன் இப்படி அநியாயமா பொண்ணு வாழ்க்கையில விளையாடிட்டானே." என்றவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அங்கிருந்து சென்றிருந்தாள் ரூபினி.

"டேய் நீ எதுக்கு இப்படி பேசுற. ஆமா உனக்கே தெரியும் அகில் ரூபியை எவ்வளவு காதலிக்குறானு. ஏன் சம்மந்தமில்லாமல் நுழையுற." என்று பிரசாத் அடுத்து சொன்ன வார்த்தைகளை கேட்டிருந்தால் கூட அகிலனை பிரிந்துச் செல்லும் முடிவினை எடுத்திருக்க மாட்டாளோ என்னவோ. ஆனால் விதியோ விமலைக் கொண்டு சதி செய்ய இருவரையும் பிரித்திருந்தது.

"அப்போ அவங்க சொன்னது உண்மைதானா? வேணும்னே சவால் விட்டு தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாறா. ஏன் அகில் இப்படி பண்ணீங்க." என்று கதறி அழுதவள் நேராக சென்ற இடம் பிறந்த வீட்டிற்கு.

அதுவரை அவள் அறியவில்லை. அவள் தந்தை தன்னால் இறந்துவிட்டார் என்று. அவளாக தேடி சென்ற வாழ்வு தோற்றுவிட்ட விரக்தியில் தந்தை வீட்டிற்கு வந்தவளுக்கு இடியாய் விழுந்தது அதிர்ச்சி. அங்கு மாட்டப்பட்டிருந்த தந்தையின் புகைப்படத்தை கண்டு அழுதவள் உள்ளே அடியெடுத்து வைக்க, அவளைக் கண்டதும் கோபத்தோடு எழுந்தாள் பூவினி.

"அம்மா இவ எதுக்குமா இங்க வந்த? நல்ல இருந்தவரை கொன்னது பத்தாதுனு நம்மளை கொல்ல வந்தாளா. போக சொல்லுமா இவளை." என்று அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்தினாள் பூவினி.

"போடி போ. என் புருசனை கொன்னுட்ட. அப்படி என்ன வயசுடி உனக்கு கல்யாணம் பண்ண? என்னை பொறுத்தவரை நீ செத்து போய்ட்ட. உன்னை தலை முழுகிட்டேன்." என்று தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டார் தனலட்சுமி.

ரூபினியோ "அம்மா... மா... பூவி...." என்று தலையில் அடித்து கதறி அழுதாள்.

"போ. அதான் ஓடிபோய் கல்யாணம் பண்ணிகிட்டயே அவனோட போ. எங்க கண்ணு முன்னாடியே வந்திராதா. இனி அம்மாக்கு நானும் யாழினி மட்டும் தான் பொண்ணுங்க. நீ யாரோ." என்றவள் கதவை அடைக்க,

"தப்பு பண்ணிட்டனே. என் அப்பாவை நானே கொன்னுட்டேனே. அய்யோ பாவி நான் மகாபாவி நான்." என்று தலையில் அடித்தவண்ணம் கதறிக்கொண்டே சென்றவளையே அங்கிருந்தவர்கள் பாவமாக தான் பார்த்தனர்.

வாழ்க்கையை இழந்த விரக்தியில் சாவை தேடி அவள் போக, ஒரு காரின் மீது விழ சென்றவளை காப்பாற்றியவர்கள் தான் சக்தி சரவணனும், வனஜாவும்.
அவளை வீட்டில் விடுவதற்காக கேட்டும், தனக்கு யாருமில்லை என்றவள் கூறியிருக்க, தனியாக விட மனமின்றி தங்களோடு அந்தமானிற்கே அழைத்து வந்திருந்தனர் இருவரும்.

நாட்கள் செல்ல, செல்ல அவளுக்கே தெரியாமல் அவளது வயிற்றில் வளர்ந்துக் கொண்டிருந்தாள் சிவன்யா. ஆம் அகிலனது மகள் தான் சிவன்யா. தனக்கு யாருமே இல்லை என்று நினைத்தவளுக்கு எல்லாமுமாக மாறியிருந்தவள் தான் சிவன்யா. வனஜாவிற்கு உதவியாக இங்கயே சிறுசிறு வேலைகளை செய்த வண்ணம் வாழ்ந்தவளுக்கு ஒரே ஆறுதல் அவளது மகள் மட்டுமே.

தன் வாழ்வில் நடந்தவற்றை அவள் கூறி முடிக்கும்போதே பூவினிக்கு சுருக்கென்று இருந்தது என்றால், பிரபஞ்சனுக்கோ அகிலனது மனைவி அவள் என்று தெரிந்த நொடி அதிர்ந்து தான் போனான்.

"ரூபி நீங்க எவ்வளவு கஷ்டபட்டிருக்கீங்கனு புரியுது. ஆனால் நீங்க அகிலனோட பேசியிருந்துருக்கனும். என் சகோதரனுங்குறனால சாதகமாக பேசுறேனு நினைக்க வேண்டாம். எப்போதுமே ஒரு விசயத்தை தீர விசாரிக்காமல் நம்ம முடிவு எடுக்கக்கூடாது. ஒருவேளை அந்த விமல் பொய் சொல்லி இருந்திருக்கலாம். இல்லை அதை வேற மாதிரி திரிச்சு சொல்லியிருக்கலாம்." என்று அவன் கூறிய பிறகுதான் அந்த வகையில் யோசிக்கத் தொடங்கினாள்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
பூவினியோ, "ஏன்டி ரூபி ஒரு வார்த்தை கூட சொல்லலை. அதுக்குனு சாக போயிடுவியா? சக்தி அண்ணா வனஜா அண்ணினால நீ இப்போ உயிரோட இருக்க. அவங்க இல்லைனா என்ன ஆகியிருக்கும். நிஜமாவே உனக்கு சுயபுத்தினு ஒன்னு இருக்கானே தெரியலை. அறிவு கெட்டவளே." என்று தன்னையும் மீறி உரிமையாக அவள் கடிந்துக் கொள்ள, இத்தனை நாள் அவளது பாசம் கிடைத்துவிடாதா என்று எண்ணி ஏங்கி இருந்தவளோ தாவிச் சென்று பூவினியை அணைத்துக் கொண்டாள்.

"பூவி என்ன மன்னுச்சிட்டனு ஒரு வார்த்தை சொல்லுடி. நான் எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா. ஆறு வருசமா உங்களை நினைக்காத நாளே இல்லை. நம்ம யாழி எப்படி இருக்கா? அம்மா எப்படி இருக்காங்க?" என்றவள் அழ,

"யாழி உன்னை தான் நினைச்சிட்டு இருக்கா, அம்மா வெளிய காட்டிக்கலைனாலும், உன் மேல பாசம் அப்படியே தான் இருக்கு. ஆனால் ஒன்னுடி அகிலனை நீ தப்பா புருஞ்சிருக்க. அவரு அன்னைக்கு என்ன அடிச்சிட்டு என் வாழ்க்கையை அழிச்சுட்டனு சொல்லாமல் சொன்னாரு. அது ஏன்னு இப்போ புரியுது. என்னால தான் நீ எங்கயோ போய்ட்டனு நினைச்சிட்டாரு போல. இப்போவே எங்களோட கிளம்பி வா. உன்னை பார்த்தால் சந்தோசப்படுவாரு."

என்று எலியும் பூனையுமாக இருந்த சகோதரிகள் ஒரே நொடியில் ஒட்டி உறவாடுவதையே வாயை பிளந்து பார்த்த பிரபஞ்சனுக்கு ஒரு புறம் சந்தோசமாக தான் இருந்தது.

'யோவ் உடன்பிறப்பே என்னலாம் பண்ணிருக்க நீ, அதுவும் அப்போவே. இப்போ அஞ்சு வயசு குழந்தையோட அப்பனா நீ.' என்று மனதில் நினைத்தவனுக்கு அகிலனை நினைத்து சிரிக்கவா இல்லை அழவா என்று தெரியவில்லை.

"இல்லை பூவி நான் வரலை." என்ற ரூபினியின் பதிலில் அனைவருமே அதிர்ச்சியோடு பார்த்தனர்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
இறுதி அத்தியாயம்

அடுத்தடுத்த இரண்டு நாட்கள் சென்றிருக்க, ஆரூவிற்கு காது குத்து ஏற்பாடு செய்திருந்த நாளும் வந்தது. வீடே பரபரப்பாக இருக்க, அனைவரும் தத்தமது வேலைகளை சிரத்தையுடன் செய்துக் கொண்டிருந்தனர்.

"அகிலா அந்த தோரணத்தை இங்க கட்டுடா." என்றவாறு மாவிலையை அவன் கைகளில் கொடுத்திருந்தார் தாமரை.

"அம்மா. எங்க கட்டுறது. நிற்க மாட்டிங்குது."

"என்னடா அகிலா இப்படி சொல்ற? பிரபா இருந்தா நேத்தே கட்டிருப்பான். இன்னும் விவரம் தெரியாத பிள்ளையா இருக்கியேடா. அடுத்து உனக்கு வேற பொண்ணு பார்க்கனும்." என்றார் தாமரை பெருமூச்சொன்றை விடுத்துக் கொண்டே.

"என்னால இரண்டாவது கல்யாணம்லாம் பண்ண முடியாது." என்று வாய் தவறி அவன் கூறியிருக்க,

"என்னடா சொன்ன?"

"அய்யோ அம்மா அது தென்னவனுக்கு கல்யாணம் முடிச்சிடலாம்னு சொன்னேன்." என்றவாறு சமாளித்தபடி தோரணத்தைக் கட்டியிருந்தான்.

"அண்ணா.... அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே..." என்று பாடல் பாடிக்கொண்டே வந்த தென்னவனோ அகிலனை அணைக்க, அவனது அன்பு மழையில் நனைந்தவனோ,

"அடேய் விடுறா என்னை?" என்று திக்குமுக்காடி விட்டான் அகிலன்.

"அவன் தான் எதோ சொல்றானா. நீயும் எதாவது நம்பிகிட்டு. போடா தென்னவா." என்று அவனது முதுகில் ஒரு அடி வைத்தார் தாமரை.

"மம்மி இது ரொம்ப டூ மச். வரவர என்னைய நீங்க கண்டுக்கிறதே இல்லை." என்று முகத்தை திருப்பிக்கொண்டு சென்றான் தென்னவன்.

"அம்மா, பிரபா இன்னும் வரலை. ஆனால் நம்ம காதுகுத்து வெச்சிருக்கோமே." என்று அகிலன் கவலையோடு கேட்க,

"அவன் நேரடியாக மருதமலைக்கு வரேன்னு சொல்லிட்டான்டா. நம்ம கிளம்புவோம். அநேகமா வந்துருப்பாங்க." என்ற தாமரையோ வேலையை பார்ப்பதிலேயே கருத்தாக இருந்தார்.

பின் அகிலன்,அனைவரையும் மருதமலைக்கு அழைத்துக்கொண்டு வந்திருக்க, அங்கு மாதுளாவும், விதுரனும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தபடி தயார் நிலையில் இருந்தனர்.

"வாங்க மா. வாங்க அப்பா, அகில், தென்னவா வாங்க." என்றுவரவேற்றபடி அழைத்துச் சென்றாள் மாதுளா.

"வாங்க வாங்க பிராயணம்லாம் எப்படி இருந்துச்சு." என்றான் விதுரன் புன்னகை முகமாக.

"என்ன மாமா. இந்த அரைமணி நேரம் வீட்டில இருந்து இங்க வந்தது எல்லாம் பிரயாணமா?" என்றான் தென்னவன் எள்ளலாக.

"அது இல்லைடா சின்ன மச்சான். நீ வந்திருக்க பார்த்தியா! அது எவ்ளோ பெரிய விசயம். அதுக்காக சொன்னேன்."

"நல்லா சமாளிக்குறீங்க மாமா. நீங்க பொழைச்சுக்குவீங்க."

"பின்ன உங்க அக்காவையே சமாளிக்குறப்போ இது எல்லாம் ஜூஜிப்பிடா."

"அக்கா. இங்க பாரேன் மாமா எதோ ஜிலேபி. சுகர்ஃப்ரினு சொல்லுறாங்க." என்று மாட்டிவிட மாதுளாவோ விதுரனை முறைத்தாள்.

"டேய் தென்னவா. உனக்கு கல்யாணம்னு ஒன்னு நடக்கும்ல. அப்போ இருக்குடா உனக்கு." என்று அவர் முறைக்கும் போதே,

மஞ்சள் வர்ண பட்டுப்புடவையில் அழகே உருவாக, தலையில் மல்லிகை பூவோடு, முகம் முழுவதும் புன்னகையை சுமந்தபடி, படிகளில் இருந்து இறங்கி வந்தாள் யாழினி. அவளைக் கண்டதுமே அனைத்தையும் மறந்தவன், இதழ் பிரித்து புன்னகைக்க, அதனை கண்ட அகிலனோ, 'இவன் திருந்த மாட்டான். கிறுக்கு பையன்.' என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டே படி ஏறிச் சென்றான்.

"வாம்மா யாழி. அம்மா மேல இருக்காங்களா."

"ஆமாங்க அத்தை சாமி கும்பிடுறாங்க. பைய கொடுங்க அத்தை நான் தூக்கிட்டு வரேன்." என்றவள் ஒருபையை பெற்றுக் கொள்ள, தென்னவனோ அவளையே இமை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"உனக்கு எதுக்குடா கண்ணு சிரமம். இதோ இங்க பாரு. தடி தாண்டவராயன் மாதிரி ஒருத்தன் நிக்குறானே தவிர, கொடுங்கமானு வாங்குறானானு பாரு." என்று தாமரை தென்னவனை சுட்டிக்காட்ட,

"ம்மா... உனக்கு என்னை அசிங்கப்படுத்துறதே வேலையா போச்சு. கொடுங்க." என்றபடி பையை வாங்கிக் கொண்டு மேலே சென்றான்.

அப்போது தான் தாமரைக்கு காதணிவைத்த பையை, பூஜை அறையிலேயே வைத்துவிட்ட நியாபகம் எழ தலையில் கை வைத்துக் கொண்டவர்,

"அகிலா. காது குத்துற கம்மல் பூஜை அறையிலேயே வெச்சிட்டு வந்துட்டேன்டா. ஒரு எட்டு காருல போய் எடுத்துட்டு வந்துடுறியாபா." என்றார் பதட்டமாக.

"சரிமா எடுத்துட்டு வரேன். நீங்க ரிலாக்ஸாக இருங்க. அப்பா நீங்க அம்மாவை கூப்பிட்டு போங்க." என்று கூறிக்கொண்டே விரைந்து படிகளிலிருந்து இறங்கியவன், காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான்.

வீட்டுக் கதவை திறந்தவன், பூஜையறைக்கு சென்று கம்மலை எடுத்திருக்க, அங்கு அவன் முன்னே நின்றாள் ரூபினி. ஒரு நிமிடம் நின்றவன் புன் சிரிப்பொன்றை உதிர்த்தபடி,

"ஹே பட்டர்ஸ்காட்ச் இங்கயும் வந்துட்டியா? ஆனால் நீ சரியான இம்சை டி. நிஜத்துல வரமாட்ட, கற்பனையில மட்டும் வந்து இம்சிக்குற. போ இன்னைக்கு எங்க அக்கா பொண்ணுக்கு காதுகுத்து. இன்னேரம் நீ இருந்தா நமக்கு பேபி பொறந்து காது குத்திருப்போம்." என்றவன் பெருமூச்சொன்றை விடுத்தான்.

"இப்போ கிட்ட வந்தால் நீ மறைஞ்சிடுவ. சரி நான் போறேன்." என்றவன் முன்னேக்கி செல்ல, பின் என்ன நினைத்தானோ, தன்னவளின் கற்பனை முகத்தை காதலோடு ரசித்தவன் அவளது அருகில் சென்று முத்தம் கொடுத்தபடி திரும்ப, நொடி பொழுதில் அவள் நிஜமென்று உணர்ந்தவனது இதயம் நூறுமடங்கு துடித்தது.

"ப.. பட்டர்ஸ்காட்ச்." என்றவன் உதடுகள் துடிக்க திரும்பியபடி பார்க்க, அவளோ கண்ணீரோடு நின்றவள்,

"உன் பட்டர்ஸ்காட்ச் தான்." என்று கண் சிமிட்டிய மறுநொடி அவளை தாவி சென்றுக் காற்று கூட புகாத வண்ணம் அணைத்திருந்தான் அகிலன்.

"பட்டர்ஸ்காட்ச் இது என் கனவு இல்லை தானடி. நிஜமா வந்துட்ட தானே. எங்க போனடி." என்று தாயை பிரிந்த குழந்தை போல் அவள் மார்பில் புதைந்து அவன் அழ,

"நான் வந்துட்டேன் அகில். நிஜமாகவே வந்துட்டேன்." என்று கண்ணீரோடு அவனது முதுகை வருடி விட்டாள் ரூபினி.

அவனது அழுகையை கட்டுப்படுத்தவே சில நேரம் பிடித்தது. ஆறு வருட பிரிவு அல்லவா. அவளையே நினைத்து மறுகிக் கொண்டிருந்தவன், இத்தனை ஆண்டுகள் கழித்து, அவள் கிடைத்ததும் அவனால் அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் போயிருந்தது. அவள் மீது தீராத காதல் கொண்டவன், இப்போது அவளை விடுவானா என்ன? அவனது இறுக்கம் கூடிக் கொண்டே போக, அவள் தான் அவனது அன்பில் திக்குமுக்காடி போனாள்.

தன்னை ஆஸ்வாசப்படுத்தியவன் அவளை விட்டு விலகிய நொடி அவள் நெற்றியில் முட்டி மூக்கோடு மூக்கினை உரசி இதழோடு இதழ் கோர்த்துக் கொண்டான்.

இத்தனை ஆண்டுகால தவிப்பினையும் ஒற்றை முத்ததில் அவன் காட்டியிருக்க, அவனைப் பிரிந்து சென்ற தவறினை உணர்ந்துக் கொண்டவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மெல்ல அவளது இதழை விடுவித்தவன், அவளையே தவிப்போடு பார்த்தான். அவன் பார்வையே பறைச்சாற்றியது, அவனது கோபம் , தவிப்பு, ஆதங்கம் அனைத்தையும்.

அவளோ காதல் மாறாமல் பார்த்தவள் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

"ஏன்டி அடிக்குற?"

"ஒருத்தன் உன்னை கோபப்படுத்துனா. அதுக்காக நான் உன்னை விட்டு போயிருவேனு பயந்து தாலி கட்டியிருக்க நீ." என்றவளது கண்களில் கோபத்தை விட வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது.

மேலும் அவன் பதில் அளிக்கும் முன்பே மறுகன்னத்தில் அறைந்தவள் "இது என் பூவியை அடிச்சதுக்காக. உன் பிரெண்டு தான் நான் உன்னை விட்டு போகக் காரணம். ஆனால் சம்மந்தமே இல்லாமல் பூவியை அடிச்சல்ல." என்று மறு கன்னத்திலும் அடிக்க, அவனோ பேயறைந்தார் போல அவளையே பார்த்தான்.

"என்ன லுக்கு. எனக்கு எல்லாமே தெரியும். இந்தியா முழுவதும் தேடுவியாமா. ஆனால் அந்தமான்ல மட்டும் தேட மாட்டியாடா இடியட்." என்று அவள் இடுப்பில் கைவைத்து நிற்க, அவளது கோப அவதாரத்தை முதன்முதலாக கண்டவன் பிரம்மிப்பாய் பார்த்தான்.

"ஏய் தென்றல் போல இருந்த நீ எப்படி புயலா மாறுன? அப்போ அந்தமான்லயா இருந்தா?" என்றான் அதிர்ச்சி விலகாமல்.

"ஹலோ உள்ள வரலாமா?" என்று பிரபஞ்சனின் குரல் கேட்க, கையில் சிவன்யாவை பிடித்தபடி, பூவினியோடு உள்ளே நுழைந்திருந்தான் பிரபஞ்சன்.

"என்ன கொஞ்சல்ஸ் அழுகை எல்லாம் முடிஞ்சுதா. என்னமோ பட்டுனு அடிச்ச சத்தம் கேட்டுச்சே." என்று பிரபஞ்சன் இழுக்க, அகிலனுக்கோ கூச்சமாக இருந்ததில் தலையை எங்காவது கொண்டு சென்று சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

"டேய் நீ தான். என் ரூபியை கண்டுபிடிச்சியா?"

"ஆமா நீங்க தொலைச்சது பொருள் பாரு. தேடி கண்டுபிடிக்க.. எப்படியோ விதி நல்லபடியா அவங்களை கண்ணுல காட்டிடுச்சு." என்றவன் நடந்தவற்றை சுருக்கமாக கூறியவன், "அப்புறம் ரூபி சும்மால்ல வரமாட்டேனு ஒரே ஆர்பாட்டம். உனக்காக எதோ ஸ்பெஷல வெச்சிருக்காங்க." என்று கண்ணடித்தான்.

"என்ன சர்பிரைஸ். " என்றான் ஆர்வத்தோடு.

இத்தனைநாள் சேர்த்து வைத்த பணத்தில் அவனுக்காக மோதிரத்தை வாங்கியவள், அவனது கைகளில் அணிவித்தாள்.

"இந்த மோதிரம் மாதிரி இனி நானும் எப்போதும் உங்ககூடவே இருப்பேன்." என்றவள் அவனது தோளில் சாய்ந்துக் கொள்ள ஆறுதலாக அவளது தலையை வருடியவன் "லவ் யூ பட்டர்ஸ்காட்ச்." என்றான் காதல் பொங்க.

"க்கூம். நாங்க இங்க இருக்கோம்பா." என்று பிரபஞ்சன் தொண்டையை சொறுமியதில், தான் தன்னிலை உணர்ந்தனர் இருவரும்.

பின் "தாங்ஸ்டா." என்றவன் மென்னகை புரிய, அருகில் நின்ற பூவினியைக் கண்டு "சாரிமா. உன்னையும் யாழியையும் ரொம்ப தப்பா நினைச்சுட்டேன்." என்று மன்னிப்பையும் யாசித்தான் அகிலன்.

"அகில் என்னடா ரூபி அடிச்ச அடியில இப்படி ஆகிட்ட." என்று பிரபா கூறும் போதே அவனது காலை நங்கென்று மிதித்தவன் "அடி விழும்டா. எப்போதும் அகில் ஒரே மாதிரி தான்." என்றவன் அப்போது தான் கவனித்தான் சிவன்யாவை.

"இந்த பாப்பா." என்று அவன் இழுக்கும் போதே இடையில் நிறுத்தியவன், "டேய் யாருனு மட்டும் கேட்ராதடா. நல்லா பாரு. அந்த கண்ணை பாரு." என்றான் எச்சரிக்க விடுத்தபடி.

சிவன்யாவை உற்று நோக்கியவனுக்கு, அந்த பரிட்சியமான முகம் மனதை வருடச் செய்ய, "ரூபி சின்னதா இருந்தால் இப்படி தான் இருப்பா.." என்று சொல்லும் போதே எதோ ஒன்று புரிய,

"டேய் என் பொண்ணா?" என்று இன்ப அதிர்ச்சி அடைந்தவனுக்கு வார்த்தைகள் அடைபட்டது.

"ஆமாடா அகில். என்ன ஸ்பீடுடா நீ. ப்பா வேற லெவல் போ." என்று கேலி செய்ய அது யாவையும் கண்டு கொள்ளாதவனோ, தன் மகளுக்கு நிகராக மண்டியிட்டு அமர்ந்தான்.

"உன் பேர் என்னடா குட்டி." என்று ஆனந்த கண்ணீரில் கேட்க, ரூபினியே அவனது நிலைக்கண்டு கலங்கி விட்டாள்.

தன் மகளின் பெயர் கூட அறியாமல், தனக்கு மகள் இருப்பது தெரியாமல் இருப்பது எல்லாம் எவ்வளவு கொடுமை. அவன் மனம் படும்பாட்டை மனதால் உணர்ந்தவளோ தனது முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினாள்.

"என் பேரு சிவன்யா." என்ற குழந்தையது முகத்தை தன் இரு கரங்களில் ஏந்தியவனோ,

"நான் உன் அப்பாடா.. அ....அப்பா." என்றான் மனதார.

"குழந்தையும் அப்பா" என்று அழைக்க அந்த நொடி தன் மார்போடு சேர்த்து அணைத்தவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

"ரூபி. என்ன அப்பானு கூப்பிடுறா என் பொண்ணு." குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டபடி கூற, அங்கிருந்த மூவருக்குமே கண்கள் கலங்கிப் போனது.

"நான் இழந்த வாழ்க்கை எனக்கு கிடைச்சிடுச்சு." என்றவன், குழந்தையை தூக்கிக் கொண்டே, ரூபினியின் தோள்பட்டையை அழுந்த பற்றி இருந்தான்.

"சரி சரி. காதுகுத்து பங்சனுக்கு டைம் ஆச்சுபா... கிளம்புங்க." என்று பிரபஞ்சன் கூற,

"கோவில்ல எல்லாரும் சாக் ஆகப் போறாங்க." என்று கூறிய அகிலனை கண்டு புன்னகைத்தனர் மூவரும்.

"ஏன் சிரிக்குறீங்க. எவ்வளவு பெரிய இன்ப அதிர்ச்சி தெரியுமா?"

"ஹலோ பிரதர் உனக்கு மட்டும் தான் அதிர்ச்சி. ஏன்னா நேத்தே வீட்டில இருந்த எல்லாருகிட்டயும் சொல்லிட்டோம். நேரடியா கோவில் வரதாக தான் இருந்தோம். ஆனால் ரொம்ப நாள் கழித்து பார்க்க போறீங்க. சென்சார் சீன்ஸ்லாம் வரும். அதான் காதணியை இங்க வீட்டுல வெச்சிட்டு வரமாதிரி பிளான் பண்ணிட்டோம்." என்றான் கண்சிமிட்டிக்கொண்டே.

"அடப்பாவிகளா நீங்க எல்லாம் நல்லா வருவீங்க." என்றவன் வாயை பிளக்க, அதன் பின் அகிலனை அழைத்துக் கொண்டு வருவதே பெரும் வேளையாக மாறியது பிரபஞ்சனுக்கு.

கோவிலுக்கு ஐவரும் வந்திருக்க, இவர்களுக்காக காத்திருந்த அனைவரும், புன்னகையோடு வரவேற்றனர்.

குமரனோ, "அட அட என்ன ஒரு கண் கொள்ளாக்காட்சி, ஒரே ட்வின்ஸ் மயமா இருக்குபா. ஜீன்ஸ் படத்துல ட்வின்ஸ் பொண்ணா பார்த்துதான் என் பையனுக்கு கட்டி தருவேன்னு நாசர் சொன்னது தான் நடக்கலை. ஆனால் இங்க நடந்திருச்சு." என்றவன் வாயை பிளக்க,

"கண்ணு வைக்காதடா குமரா." என்று பிரபஞ்சன் முறைக்க, "ரைட்டு விடு." என்று வாயை மூடிக்கொண்டான் குமரன்.

பின் அகிலனும், பிரபஞ்சனும் அருகே அமர்ந்திருக்க, அவர்களின் பின்னே நின்றுக் கொண்டனர் பூவினியும் ரூபினியும். நேற்றே ரூபினியை அழைத்துக் கொண்டு, தனலட்சுமி வீட்டிற்கு வந்ததால் பிரிந்த மகளைக் கண்ட கண் கொள்ளா காட்சியினை பார்க்க தவறியிருந்தான் அகிலன். யாழியும் தன் அக்காவினை விடாமல் பிடித்துக் கொண்டே நிற்க, தென்னவனோ கற்பனையில் மிதக்க தொடங்கினான்.

'ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களும் , ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகளை கட்டியிருக்காங்க. ப்பா வேற லெவல்ல இருக்கே.' என்று கற்பனையை தீட்ட, அவனது முதுகில் தட்டிய தனஞ்செயனோ,

"டேய் நீயும் போய் அண்ணனுங்க பக்கத்துல உட்காருடா." என்று கூற, "போங்க டாடி நல்ல கனவை கெடுத்துட்டீங்க." என்று கவலையோடு வந்தமர்ந்தான்.

பின் ஆரூவை அகிலனின் மடியில் அமர வைக்க, பிரபஞ்சன் ஆரூவின் தலையை பிடித்துக் கொள்ள, தென்னவனோ கையை பிடித்துக் கொள்ள,

"எல்லாம் ஏன் இப்படி பிடிக்குறீங்க விடுங்க. நானே அசையமாட்டேன்." என்ற ஆரூவின் செயலில் அனைவரும் சிரித்தனர்.

பின் காது குத்தபட்டும் கூட, அழுகாத ஆரூவோ,"நான் ஸ்ட்ராங்க் கேர்ள்." என்றாள் மிடுக்காக.

யாழியும், தாமரையும் ரூபியை விடாமல் பிடித்துக் கொண்டனர். அகிலனோ தன் மகளை தூக்கிக்கொண்டே கோவிலை சுற்றி வந்துக்கொண்டிருந்தான்.

பழத்தட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்த பூவினியை, செய்கையால் அழைத்திருந்தான் பிரபஞ்சன்.

"என்னங்க. எதுக்கு கூப்பிட்டீங்க."

"இந்த சாரில ரொம்ப அழகா இருக்க பாப்பு."

"ஓ அப்படியா. சரி நான் போறேன்." என்றவள் நகர முற்பட, யாரும் பார்க்காத போது தன்னோடு சேர்த்து அணைத்தவன்,

"என்னடி போறேன் போறனு துள்ளுற. பாப்பு உம்மா பாப்பு." என்றான் கெஞ்சலாக.

"அய்யோ கோவிலுக்கு வந்துட்டு என்ன பேச்சு. போயா." என்றவன் அவனை தன்னிடமிருந்து பிரித்து தள்ளியபடி, நகர்ந்துச் சென்றாள்.

அகிலனும், தாமரையிடமிருந்து ரூபியை அழைத்து வந்து காதலோடு பேச,

இங்கு தென்னவனோ "எல்லாம் ஆளாளுக்கு ஜோடி வெச்சுட்டு ஜாலியா ரொமென்சு பண்றாங்க. எனக்கு தான் ஒன்னு வாச்சிருக்கே. கண்டுக்கவே மாட்டிங்குறாள்." என்று வாய்விட்டே புலம்பினான்.

"மாமா.. மாமா." என்ற அழைப்பு அவன் காதுகளை வந்தடைந்தது.

"இப்போகூட அவ என்ன மாமானு கூப்பிடுற மாதிரி தான் இருக்கு. ஆனால் எல்லாம் பிரம்மை." என்றவன் சோகமாக திரும்ப,

"மாமா உங்களை விதுரன் அண்ணா கூப்பிட்டாங்க." என்று கூறிவிட்டு யாழினி சென்றிருந்தாள்.

"ஓ அப்படியா." என்றவனுக்கு அவளது மாமா என்றஅழைப்பு தாமதமாக புரிய, உடல் சிலிர்த்தவன், "பாப்பா என்ன சொன்ன?" என்றான் புன்னகையோடு.

"ஹான் மாமா. உங்களை கூப்பிட்டாங்க." என்று சிரித்துக் கொண்டே ஓட, அவனோ வானத்தில் பறப்பதை போல் உணர்ந்தவன் சிறகே இன்றி பறந்தான். "சொல்லிட்டாலே அவ காதலை." என்று வாய்விட்டு பாடியவனது மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை.

நான்கு மாதங்களுக்கு பிறகு.

"பிரபா. அத எடுத்துக் கொடுங்க. அப்புறம் பிரபா அங்க துடைச்சிடுங்க. பிரபா அப்புறம் அந்த சாரி." என்று கூறிக்கொண்டே சென்றவளை இடைமறித்தவனோ,

"பாப்பு, துணி மடிக்கனும், அப்புறம், ரூம் துடைக்கனும், ஆள் டிடைல்ஸ் ஐ நோ. நீங்க ரெஸ்ட் எடுங்க. அடுத்து ஏழாவது மாசத்துல இருந்து டபுள்ளா செய்வீங்க. சரியா." என்று புன்னகைத்துக் கொண்டே அவளது மூன்று மாத மணிவயிற்றினை தடவினான் பிரபஞ்சன்.

"லவ் யூ பிரபா." என்று கண் சிமிட்டியவளது நெற்றியில் முத்தமிட்டவனோ வீட்டினைத் துடைத்துக் கொண்டிருக்க, அவனையே காதலோடு பார்த்தவள், "ரொம்ப கஷ்டபடுத்துறேனா பிரபா." என்றாள் கணிவாக.

"அடியே என் திமிரழகி. ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதுவும் இரட்டை பிள்ளையை சொமக்குறா என் பாப்பு" என்று கூறிக்கொண்டே அவளது இதழில் இதழ் பதித்தவன் செல்ல, செல்லும் அவனையே காதலோடு பார்த்தாள் பூவினி.

அதே போல், ரூபினியும் இரண்டு மாத கருவினை சுமந்துக் கொண்டிருக்க, அறையை பெருக்கியபடி, அகிலன் வெளியே வர, பிரபஞ்சனைக் கண்டதுமே கண்ணடித்தான் அகிலன். இருவருமே தங்களது மனைவியை கவனித்துக் கொள்வதில் போட்டிப்போட்டு செய்துக் கொண்டிருப்பதால் புன்னகையோடு கடந்தனர்.

அங்கு வந்த குமரனோ, "என்ன பிரதர்ஸ் கண் கொள்ள காட்சியாக இருக்கு. ரொம்ப வேலையோ" என்றான் நகைத்தபடி.

"டேய் டேய் அடங்கு. நீ மட்டும் செஞ்சதே இல்லை பாரு." என்றான் அகிலன் முறைப்பாக.

பிரபஞ்சனோ, "நம்ம ஒரு கருத்து சொல்லியே ஆகனும். டேய் குமரா நமக்காக வலிகளை எல்லாம் தாங்கி, நம்ம குழந்தை சுமக்குற மனைவிக்காக இது கூட பண்ணலைனா? நம்ம இருக்கிறதே வேஸ்ட்டுடா. மனைவிய நல்லா பார்த்துக்குறவன் கெட்டு போனாதா சரித்திரமே இல்லைடா." என்று உணர்ச்சிவசத்தோடுக் கூற, அகிலனோ அவனது தோளை தட்டிக் கொடுத்தான்.

"அடே கருத்து கண்ணப்பா நான் கிளம்புறேன்பா. ஒருத்தனே தாங்காது. இதுல இரண்டு பேரா." என்று புலம்பியவன் ஒரே ஓட்டமாக சென்றிருக்க, அகிலனும் பிரபஞ்சனும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி புன்னகைத்தனர்.

"என்னங்க." என்று இருவரின் மனைவிமார்களும் ஒரே நேரத்தில் அழைக்க "இதோ வந்தேட்டேன் பாப்பு" என்றவனும், "இதோ வந்துட்டேன் பட்டர்ஸ்காட்ச்" என்றிவனும் அவரவர் அறை நோக்கி சென்றனர்.

பெண்ணவளின் உணர்வுகளை

அடக்கி ஆளும் சிலஆண்களின்

மத்தியில்,

தன்னவளின் திமிரை கூட ரசித்து

வாழும்,

ஆண்கள் அழகோ அழகு தான்......

சுபம்
 

Dhivya98

Well-known member
Wonderland writer
Status
Not open for further replies.
Top