ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னை ஆளும் திமிரழகே - கதை திரி

Status
Not open for further replies.

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 12

பதட்டத்தில் அவள் இதயம் நூறுமடங்கு துடிக்க, அவளை பிடிக்கும் வேகத்தில் கைகளில் இருந்த காபி கோப்பையினை தெறிக்க விட்டிருந்தான் பிரபஞ்சன்.

அவளது இடையினை வளைத்து பிடித்தவனின் கைகள் அவளின் வெற்றிடையை அழுத்தமாக பற்றியிருக்க, இருவரின் கண்களுமே ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தது. அவனது காதல் கொஞ்சும் அழுத்தமான பார்வையில் தவித்துப் போனவள் தன் எச்சிலை விழுங்கிக் கொண்டாள்.

அவனுக்கோ நேற்று மற்றும் இன்று என, நிஜத்திலும் கனவிலும் இம்சை செய்த அவளின் இதழ்களை மிக அருகில் பார்க்கவும், ஆசைகள் எழாமல் இல்லை. இருந்தும் முத்தம் கொடுக்க துடித்த தன் அதரங்களை கடினபட்டு அடக்கியவன் ஏக்கப் பெருமூச்சொன்றை விட்டான்.

முதலில் சுதாரித்தவள், சட்டென்று எழுந்து, அவனது வெற்று மார்பினை கை வைத்து தள்ளியபடி விலகி வர, "எங்கடா இன்னும் தள்ளலையேனு நினைச்சேன்." என்று அவன் கூறவும், பதிலுக்கு இவள் முறைக்கவும் சரியாக இருந்தது.

' இதை, இதைதான் எதிர்பார்த்தேன். முறைச்சுட்டா' என்று மனதில் நினைத்துக் கொண்டவனது இதழில் முறுவல் பூத்திருந்தது.

" அத்தைமா, உங்ககிட்ட கோவிலுக்கு போக தயாராக சொன்னாங்க." என்றவள் கீழே விழுந்த தம்ளரை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து விறுவிறுவென வெளியே செல்ல, அவளது செயலில் அடக்கப்பட்ட சிரிப்போடு நின்றிருந்தவனோ, செல்பவளையே கண்கள் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்...

"அத்தைமானு மட்டும் உரிமையா சொல்லுவா... ஆனால் என்ன மட்டும் மாமானு சொல்லமாட்டாள்." என்று வாய்விட்டு சொன்னவனின் வார்த்தைகளில் தெரிந்தது சிறு பொறாமை.

அறையை விட்டு வெளியே வந்த, பூவினிக்கோ இன்னும் அந்த பதட்டம் இருந்துக்கொண்டே இருந்தது. "கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வந்து நிக்குறாங்க." என்றவள் தன் மாமியாருக்கு உதவ அடுப்பங்கரைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

" சொல்லிட்டியா பூவிமா."

" சொல்லிட்டேன் அத்தைமா. கொடுங்க நான் காய்கறி நறுக்குறேன்."

" பரவாயில்லை பூவிமா, அதை நான் பார்த்துக்குறேன். கோவிலுக்கு போகனும்ல. போய் ரெடியாகுடாமா. அப்புறம் உங்க அம்மா வாங்கி தந்தாங்களே நலங்கு அப்போ கட்டிருந்த புடவை, அது கட்டிக்கோமா. உனக்கு ரொம்ப பொருத்தமா இருந்துச்சு." என்று கூறிக்கொண்டே அவளது தலையை வருட,

" சரிங்க அத்தைமா." என்று புன்னகையோடு விடைபெற்றவள் தயாராகச் செல்வதற்காக அறைக்குள் நுழையவும், பிரபஞ்சன் வெளியே வரவும் சரியாக இருந்தது.

இருவரது பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் வர, 'என்ன கண்ணுடா சாமி. பூவினினு வைக்குறதுக்கு பதிலா அனல்விழினு பேர் வெச்சிருக்கலாம் போலயே...' என்று மனதிலே கூறிக்கொள்ள, அவளும், 'சரியான இம்சையா இருக்காரு. பார்க்குற பார்வையே ஆளை முழுங்குற மாதிரியில்ல இருக்கு' என்று நினைத்துக் கொண்டாள்.

" உனக்கு புது புடவை எடுத்து வச்சிருக்கேன். அது கட்டிக்கோ." என்று அவளுக்கே கேட்கும் வண்ணம் கூறியவன் அவளைக் கடந்து வெளியே வர, பதில் ஏதும் பேசாதவள் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

" இவரை யாரு சேலை எடுக்கச் சொன்னது? நான் கேட்டேனா.. ஆரம்பத்துல இம்பிரஸ் பண்ண இப்படி தான் பண்ணுவீங்க. அதை பார்த்து நாங்க நல்லவங்கன்னு நினைச்சு ஏமாறனும்." என்று தனக்கு தானே கேள்விக் கேட்டும், அதற்கான பதிலை அவளே கொடுத்துக் கொண்டும் இருந்தவள், கட்டிலில் பார்க்க, வாடாமல்லி நிறத்தில் தங்க மயில் ஜரிகை போடப்பட்டிருந்த புத்தம்புது புடவை பளீச்சென்று அவளின் கண்களில் பட்டது.

அப்போது தான் ஒன்றை நினைவு கூர்ந்தவள். " ஓ சாரும் வைலெட் கலர் சொக்காதான போட்ருந்தாரு." என்று யோசித்துக் கொண்டே பையிலிருந்த தன் அன்னை வாங்கிக் கொடுத்த வானத்து நீல நிற புடவையினை எடுத்தவள், இரண்டு புடவையையுமே மாற்றி மாற்றி பார்த்தபடி, இறுதியாக ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்துக் கட்டத் தொடங்கியிருந்தாள்.

வெளியே வந்த பிரபஞ்சனுக்கோ செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்த தென்னவன் கண்களில் பட, அவனருகே சென்றவன் அவனது கழுத்தை வளைத்து கை போட்டான்.

" என்னடா அதிசயமா இருக்கு. பேப்பர் எல்லாம் படிக்குற?"

" ஏன் நான் படிக்கக் கூடாதா என்ன?" என்றவன் ஒற்றை புருவத்தைத் தூக்க,

"பார்ரா சார் முறைக்க எல்லாம் செய்றீங்க?" என்று அவனது கழுத்தை மேலும் இறுக பற்றிக்கொண்டே, செய்தித்தாளை எட்டிப் பார்க்க, அதில் சினிமா பற்றிய தகவல்கள் இருந்தது.

"அது தான பார்த்தேன். நல்லா வருவடா தம்பி நீ..."

" அண்ணா இதுவும் ஒரு பொது அறிவு தான அண்ணா."

" எது? அ எழுத்து நடிகையும், வி எழுத்து நடிகருடனான காதல் முறிந்தது. இது தான் பொது அறிவாடா" என்று முறைக்கவும் தவறவில்லை.

" அய்யோ அண்ணா அது இல்லைனா. இதுல தீக்ஷிதன் இயக்குனரோட அடுத்த படம் பற்றி போட்டிருக்கு. அதான் கொஞ்சம் ஆவலோடப் பார்த்தேன். "

" ஓ.. ஓ அவர் படத்துல எப்போதும் ஒரு அழுத்தம் இருக்கும் இல்லைடா." என்று தன் தம்பியின் தோள்களை தட்டிக்கொண்டே கதவையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

அதை சரியாக கவனித்த தென்னவனோ, "என்ன அண்ணா. பேச்சு மட்டும் தான் இங்க, கவனம் எல்லாம் வேற எங்கயோ இருக்கு போல." என்று கேலி செய்ய,

" நீ ஒருத்தன் தான் கலாய்க்காமல் இருந்த. இப்போ நீயுமா... சரி நீ படிச்சது போதும் பேப்பரைக் கொடு." என்று கூறிக்கொண்டே அவனிடம் இருந்து செய்தித்தாளை பறித்திருந்தான்.

" அட போ அண்ணே உன் அலும்பு வரவர தாங்கலை. நான் கிளம்புறேன்." என்று இளையவன் அங்கிருந்து கிளம்பி வெளியேச் சென்றான்.

அதே சமயம் தன் அன்னையிடம் கோபித்துக் கொண்ட யாழினியோ, முகத்தை தொங்கப் போட்டபடி, சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்தவளது, கண்களில் தென்பட்டார் மரத்தடி பிள்ளையார்.

"பிள்ளையாரப்பா. நான் அப்படி என்ன தப்பா கேட்டேன். நீயே நியாயத்தைச் சொல்லு, யாராவது வீட்டுல நேத்து கல்யாணம் நடந்து அடுத்த நாள் காலேஜ் போவாங்களா?... ஆனால் நான் போறேனே."என்று செவனேனு மரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையாரைக் கண்டதும் ஓடிச்சென்றவள் தனது மனக்குமறலைக் கொட்டினாள்.

"கல்யாணம் உங்க அக்காக்கு தானே. உனக்கு இல்லையே..." என்று பதில் வந்ததும்,

தன் கைகளைக் கிள்ளியவள், "பிள்ளையாரே நீ பேச எல்லாம் செய்வியா?" என்று வாயை பிளந்தாள் யாழினி.

" அடியே யாழி.... பேசுனது நான்டி. உன் புலம்பலுக்கு பிள்ளையாரே வந்து பதில் சொல்லுவாருனு வேற நினைப்போ...." என்று பக்கத்துக் கடைக்கார பெண்மணி மகாலட்சுமி கூறவும்,

"நீங்களா... அதான்ன பார்த்தேன் தண்ணி லாரியில அடி வாங்குன தகர வாழி வாய்சு வந்தப்போவே நான் சுதாரிச்சிருக்கனும்." என்றாள் கேலியாக.

" இந்த வாய் தான் உனக்கு ஜாஸ்தி." என்று அவள் முகத்தை ஒரு வெட்டு வெட்ட.

" பார்த்து மகா அக்கா கழுத்து சுளுக்கிக்க போகுது. நான் காலேஜ் போறேன் போங்க." என்று வேண்டாம் வெறுப்பாக கூறிக்கொண்டே அங்கிருந்து சென்றவளை பார்த்தவர்,

"போய்ட்டு வரேன்னு சொல்லுடி." என்று கூறிய வார்த்தைகள் காற்றில் கரைந்து போனது தான் மிச்சம்.

"இன்னைக்கு நேரமே சரியில்லை யாழி. சுண்டெலியிலிருந்து பெருச்சாளி வர எல்லாம் கலாய்க்குறாங்கப்பா சாமி." என்று புலம்பிக் கொண்டே தெரு முனைக்கு வந்திருந்தாள் யாழினி.

அப்போது தான் சற்றுத் தள்ளி இருந்த பேருந்து நிலையத்தை நோக்கி சென்றவளது கண்களில் பட்டது அந்த காட்சி.

பள்ளிக்கு செல்லும் பெண்ணை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர் மூவர். அவர்களது தோற்றமே கூறியது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று. தலை முடியில் கலரும், கைகளில் ஏகப்பட்ட கயிறுகளையும் சுற்றிக்கொண்டு, காலை இறுக்கிப் பற்றிக் கொண்டிருந்த கால்சட்டையில் ஆங்காங்கே ஓட்டைகள் இருக்கும் உடைகளை அணிந்திருந்தனர்.

அந்த மாணவியின் கைகளை பிடித்து இழுக்கும் போதே, அப்பெண்ணின் காதுகளில் பொருத்தப்பட்ட கேட்கும் கருவி கீழே விழுந்தது.

கீழே விழுந்ததை அந்த சிறுமி அழுத கண்களோடு குனிந்து எடுக்கச் செல்ல, அந்த சிறுமியை புகைப்படம் எடுத்துத் தள்ளினர் அந்த மூவரில் ஒருவன்.

"காது கேட்காது போலடா.." என்று ஒருவன் கேலி செய்ய, மற்றொருவனோ, " காத ஏன்டா பார்க்குற? பொண்ணு செம பிகர்ல" என்று பேசிக் கொண்டே அவளைச் சீண்டியபடி இருந்ததை கண்ட நொடி, வெகுண்டு எழுந்த யாழினியோ புயலென சென்றாள்.

சீண்டியவனது கன்னங்களில் இடியாய் இறங்கியது அவள் விட்ட அறை. தற்காப்பு பயின்றவளுக்கு இவர்களை அடிப்பது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஆதலால் அவனை அடித்தவள், மற்றொரு கைகளால் புகைப்படம் எடுத்திருந்தக் கைப்பேசியைப் பறித்திருந்தாள்.

"எவ்வளவு தைரியம்டா உங்களுக்கு எல்லாம். நீங்களாம் மனுசங்களா?" என்று கை நீட்டி எச்சரிக்க,

"என்னடி எங்களையே அடிக்குறியா? உன்னை என்ன பண்ணப் போறோம்னு மட்டும் பாரு." என்று கூறிக்கொண்டே யாழினியின் கன்னத்தில் அடிக்க வர, அவனது கைகளைப் பிடித்து ஒரே முறுக்கில் கீழே தள்ளினாள் பெண்ணவள்.

" உங்களை மாதிரி ஆளுங்களை தட்டிக் கேட்கவே பொறந்தவடா. தைரியம் இருந்தால் என் முன்னாடி ஒரு எட்டு வைங்க பார்ப்போம்." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, அவளது கன்னத்தில் பதம் பார்த்திருந்தான் அவன்.

ஒரு நிமிடம் அவளுக்கு தலைச்சுற்றுவது போலத் தோன்றியதில் மயங்கிக் கீழே விழுந்தவளை தன் இரு கரம் கொண்டு தாங்கிப்பிடித்தவன் அங்கிருந்த பசங்களைப் பார்த்து, கைகளில் பத்தாயிரம் ரூபாய் பணத்தினைக் கொடுத்து, அந்த பெண்ணிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்திருந்தான்.

" என்ன சார் அடி எல்லாம் வாங்கிருக்கோம். பத்தாயிரம் தான் தரிங்க." என்றவனை அருகில் அழைத்தவன், அவனது மறுக் கன்னத்தில் அறையையும் வழங்கத் தவறவில்லை.

அவளை மிரட்டி காரில் ஏற்றிவரச்சொல்லி அவன் செய்த ஏற்பாடு தான் அந்த மூன்று பசங்களும், அந்த பெண்ணும். ஆனால் பசங்களோ இவளிடம் அடி வாங்கிக்கொண்டிருக்க, வெகுண்டு எழுந்தவன் தானே களத்தில் இறங்கியிருந்தான்.

" கடத்திட்டு வர சொன்னா, அடிவாங்கிட்டு வந்து நிக்குறல்ல இது போதும். கிளம்பு" என்று கூறிக்கொண்டே யாழினியை தன் தோள்களில் சாய்த்தவன், தனது மகிழுந்தின் பின் பகுதியில் அவளை போட்டபடி, காரை வேகமாக இயக்கிக் கொண்டவனது இதழில் தெரிந்தது வெற்றிக் களிப்பு.

பிரபஞ்சனது வீட்டில், தயாராகி வந்த பூவினியோ, கதவை திறந்து வெளியில் வர, வானத்து நீல நிற புடவையை அணிந்துக் கொண்டு வந்திருப்பதை கண்ட பிரபஞ்சனது முகமோ சுருங்கிப் போனது. ஆவலோடு எதிர் பார்த்தவனது ஆசைகளை நொடியில் உடைத்து சுக்கு நூறாக்கியிருந்தாள் பூவினி.

தான் சொல்லியும் அவள் இவ்வாறு செய்வாள் என்று துளிகூட எதிர்பார்க்கவில்லை என்பதால், கோபத்தில் பல்லைக் கடித்தபடி அங்கிருந்து வெளியே சென்றான்.

"பூவிமா. மறக்காமல் தேங்காய் பழம்லாம் போறப்போ வாங்கிட்டு போங்க. குல தெய்வ கோவிலுக்கு போறப்போ மாலை கண்டிப்பா வாங்கிடனும்" என்றவர் தன் மருமகளை மேலிருந்து கீழ்வரை பார்த்தபடி, "ரொம்ப அழகா இருக்கா. என் மருமக." என்று திருஷ்டி கழித்தார் தாமரை.

"சரிங்க அத்தைமா. நாங்க வரோம்." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே, பிரபஞ்சனோ வண்டியின் ஒலிப்பானை வேகவேகமாக அழுத்திக் கொண்டே இருந்தான்.

"இவன் எதுக்கு இப்படி ஹாரன் அடிக்கிறான். சரிமா நீ கிளம்பு." என்று புன்னகையோடு வழி அனுப்பினார் தாமரை.

வெளியே வந்தவளது பூமுகத்தினை, வண்டியின் நிழல்கண்ணாடி வழியாக கண்டவன், ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டிருந்தான்.

அவள் வண்டியில் ஏறும்வரை காத்திருந்தவன், பின் இருசக்கர வாகனத்தை புயல்வேகத்தில் செலுத்த, ஒரு நிமிடம் உறைந்துப் போனவள்.

" கொஞ்சம் மெதுவா போறீங்களா?" என்று அவள் கேட்டது அனைத்தும் காற்றோடு காற்றாய் மறைய, அவன் மட்டும் வேகத்தை குறைத்தபாடில்லை.

பொறுமை இழந்தவள், அவனது முதுகில் ஒரே போடாய் போட, அது என்ன அவனுக்கு வலிக்கவா செய்யும், இருந்தும் அவளது விரல்பட்ட நொடி, சற்று வேகத்தை தணித்திருந்தான்.

"எதுக்குங்க இவ்ளோ வேகம்?"

"சீக்கிரமா போகத்தான்." என்றவன் கண்ணாடியில் அவ்வப்போது அவளின் முகத்தை பார்க்காமல் இல்லை.

வழியில் தெரிந்த பூக்கடையைக் கண்டவள், "மாலை வாங்கிட்டு போவோம்." என்றாள் தன் மெல்லிய குரலில்.

அவள் கூறியதுமே வண்டியை ஓரமாக பூக்கடையின் முன்பு நிறுத்தியவன் இறங்க, அவனோடு சேர்ந்து, அவளும் உடன் இறங்கியவள், கடையை நோக்கிச் சென்றாள்.

"இந்த மாலை எவ்வளவு அக்கா."

" ஐநூற்றைம்பது ரூபாய் கண்ணு."

"கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்ககா."

" இருபது ரூபாய் குறைச்சு தரேன். மல்லிப்பூ வாங்குறீங்களா கண்ணு. தலையில பூ இல்லாமல் வெறிச்சோடி இருக்கு பாருமா." என்று அந்தக் கடைக்காரம்மா கேட்கும் போதுதான், எங்கோ வேடிக்கைப் பார்த்தவன் தன்னவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தபடி,

" மூனு முலம் கொடுங்க." என்று இவன் இடையில் கூற, அவளோ எதுக்கு என்பது போல் கண்களாலே கேட்டாள்.

பதில் ஏதும் கூறாதவன், மாலைக்கும், மல்லிகைப் பூவுக்குமான பணத்தை செலுத்தியபடி, அவளது கைகளில் மல்லிப்பூவை திணிக்க, அவளோ முறைத்துக்கொண்டே வாங்கிக் கொண்டாள்.

"புதுசா கல்யாணம் ஆனவங்கனு பார்த்தாலே தெரியுது. கண்ணு நீயே வெச்சுவிடு சாமி. அது தான் புதுப்பொண்ணுக்கும் சந்தோசத்தை தரும்." என்றவரை புன்னகையோடு பார்த்தவன், சரி என்று தலையாட்டியபடி அவளது கைகளிலிருந்த மல்லிகப்பூவினை வாங்கியவன், அவளது தலையில் வைப்பதற்காக சென்றான்.

"இல்லை நானே வெச்சுக்கிறேன்." என்றவளை முறைக்க, அவன் முறைப்பில் அமைதியானவள் ஒன்றும் பேசாமல் நிற்க, அவளது பின்னலிட்ட சடையில் மல்லிப்பூவை வைத்து விட்டான் பிரபஞ்சன்.

"இந்தாங்க தம்பி பூ ஊசி." என்று இரண்டு ஊசிகளைக் கடைக்காரம்மா, கொடுக்க அதைப் பெற்றவன் வாங்கி, இறுக்கமாகவே பூவினை வைத்துவிட்டான்.

அதில் சற்று முகம் சுணங்கியவள், ' வேணும்னே பண்றாரு. ரொம்ப திமிரு தான்.' என்று மனதிற்குள்ளே திட்டிக் கொண்டாள். பூ வைத்தபின் பூவினியின் முகத்தினை பார்த்தவனுக்கு, ரசிக்காமல் இருக்க இயலவில்லை. இருந்தும் கோபமாக இருந்தவன், எங்கே அவள் பூ முகத்தை பார்த்து மனம் மாறி போய்விடுமோ என்று நினைத்துக்கொண்டே, அதற்கும் மேல் அவளை பார்க்காது முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவளுக்காகவே ஆசையாக வாங்கிய முதல் புடவை அது. அவன் கூறியும் அவள் கட்டாமல் வந்தது அவனது காதலையே அவள் அவமதிப்பது போன்ற உணர்வினை தர, தன் கோபத்தை இவ்வாறு காட்டினான் பிரபஞ்சன்.
பின் இருசக்கர வாகனத்தில் ஏறியவன், அவளை ஏறச்சொல்ல, அவளும் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

அதே சமயம் இருவரையும் கடந்து சென்றது யாழினியை கடத்தி சென்ற மகிழுந்து. மெல்ல தன் கண்களை விழித்த யாழியோ, நான் எங்க இருக்கேன்?" என்பது போல காரை பார்த்தவள், தன்னை அவன் கடத்தி செல்கிறான் என்று அறிந்த நொடி, "யார் நீ? முதல்ல நீ வண்டியை நிறுத்து?" என்று அவள் கத்திக்கொண்டு முன்னிருந்தவனின் கழுத்தை பிடிக்கச் சென்றாள்.

அந்த நொடி அவளை திரும்பி பார்க்க, அவனது முகத்தைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தவள், வாயை திறக்கும் முன்னரே அவளின் முகத்தில் மயக்க மருந்து தெளிப்பானை அடித்திருந்தான் அவன்......
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 13

மயக்கமருந்து அவளது முகத்தில்பட்டதும், யாழினிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் வர, நிலைத்தடுமாறியவள் காரின் பின் கதவினை திறக்க முயல, அவளால் திறக்க இயலாது போனது. காரின் கண்ணாடி வழியாக பார்த்தவளுக்கு சாலையோரத்தில் தன் நண்பனோடு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த, தென்னவன் கண்ணில் பட, அவனைப் பார்த்துக் கொண்டே மயங்கி சரிந்திருந்தாள்.

தென்னவனுக்கோ தன்னை யாரோ அழைப்பது போன்ற உள்ளுணர்வு எழ, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவன் துளியும் அறியவில்லை தன்னருகே உள்ள மகிழுந்தில் தான் யாழினி இருப்பதை.

"என்னடா சுத்தி சுத்தி பார்க்குற?" என்று வண்டியினை ஓட்டிக்கொண்டே அவன் நண்பன் கேட்க,

"யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு மச்சி." என்றவன் அறியவில்லை தனக்கு மிக அருகாமையில் யாழி இருந்தும் அவளை தவறவிட்டுவிட்டோம் என்பதை. ஆனாலும் இதில் அவனின் தவறு ஒன்றும் இல்லை. விதி செய்த சதியில் யாரும் பொறுப்பாகிட இயலாது.

இருசக்கர வாகனத்தில் மாலையோடு ஏறிய பூவினியோ பிடிமானத்திற்காக அவனது தோள்களை பிடிக்க, அந்த நொடி அவனது கோபம் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியிருந்தது. இருந்தும் மனதில் நினைத்தக் கேள்விகளை கேட்டுவிட வேண்டும் என்று ஆழமாக நினைத்திருந்தான் பிரபஞ்சன்.

தன்னவளோடு தனித்து செல்லும் முதல் பயணம் அது. எந்த பெண் தன்னை மூன்றாம் நபர் என்று கூறி வர மறுத்தாலோ, அதே பெண் இன்று தன்னோடு மனைவி என்று உரிமையாக தன்னுடன்பயணிப்பது அவனுக்கு சற்று கர்வமாகவே இருந்தது. கண்ணாடியில் அவளைப்பார்க்க கண்ணாடியை திருப்பி வைத்தவன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே வண்டியினை செலுத்தியிருந்தான்.

போகும் வழியில், பூவினியின் கண்களில் சிறு பூச்சி ஒன்று கண்ணில் பட்டுவிட, அலறியே விட்டாள் அவள். அவளது அலறலில் வண்டியினை ஓரமாக நிறுத்தியவன், "என்னாச்சு பாப்பு." என்றான் பதட்டமாக.

"கண்ணுக்குள்ள எதோ விழுந்துடுச்சு. ரொம்ப எரிச்சலா இருக்குங்க. வலிக்குது." என்றதும் தான் தாமதம் வண்டியை விட்டு, அவளை இறங்கச் சொன்னவன், தானும் உடன் இறங்கியிருந்தான்.

மெல்ல அவளது கண்களுக்கு அருகே விரல்களைக் கொண்டு சென்றவன், மேல் இமைகளை ஒரு விரலினால் பிரித்து, கீழ் இமைகளை மற்றொரு கைகளினால் இழுத்து, தன் மொத்த சுவாசக்காற்றினை திரட்டி 'உப்' என ஊதினான்.

அதில் அந்த சிறு பூச்சி, தெறித்து வெளியே விழ, அவளது ஒற்றைக்கண் மட்டும் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது. அந்த பூச்சியை எடுத்ததும், எரிச்சல் மட்டுப்பட, ஆழ்ந்த மூச்சினை இழுத்து விட்டவள் அப்போது தான் கவனித்தாள். அவனது சட்டையை இறுகப்பற்றிக் கொண்டு நிற்பதை.

அவளும் பதட்டத்தில் அவனது சட்டையை பற்றியிருக்க, அவனும் அவளது கண்களில் விழுந்த பூச்சியினை ஊதும் மும்முரத்தில் அதை கவனிக்காது போனான்.

"ஒன்னும் இல்லை பாப்பு. கொஞ்ச நேரத்துல கண்ணு சரியாகிடும். " என்று ஆறுதலாக அவன் கூறும்போதே அவனது சட்டையை பற்றியிருந்த கைகளை பட்டென்று எடுத்துக்கொள்ள, அவளது செயலைக் கண்டு இதழ்பிரித்து சிரித்தே விட்டான் பிரபஞ்சன்.

"எதுக்கு சிரிக்குறீங்க?" என்பவளை பார்த்து, 'நீ பண்றது பார்த்து சிரிக்கவா, இல்லை என் நிலைமையை நினைச்சு அழுகவானு தெரியாமலே சிரிக்குறேன்டி' என்று சொல்லத்துடித்த நாவினை அடக்கியவன் "ஒன்னும் இல்லை, வண்டியில ஏறு." என்று மட்டும் கூறிக்கொண்டே கோவிலை நோக்கி வண்டியினை செலுத்தியிருந்தான்.

முதலில் காரமடைக்கு சென்ற பூவினியும் பிரபஞ்சனும், கடவுளை மனதார வணங்கிக் கொண்டிருந்தனர். "அரங்கநாதரே இந்த புள்ளைக்கு நல்ல புத்தியை நீ தான்பா கொடுக்கனும்." என்று மனமுருகி வேண்டினான் பிரபஞ்சன்.

"கடவுளே என் யாழி எப்போதும் சந்தோசமாக இருக்கனும். அவளுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு கூட சம்மதிச்சேன். அப்புறம் வீட்டுல இருக்க எல்லாருமே நல்லாருக்கனும்." என்று இவள் வேண்டிக் கொண்டிருக்கும் போதே, அய்யர் குங்குமம் மற்றும் திருநீறை நீட்டினார்.

அருகில் இருந்த பிரபஞ்சனோ, ஆராதனையை பெற்றுக் கொண்டபடி, அவளது கண்களுக்கும் சேர்த்து ஆராதனையை தன் கைகளாலே காட்டியவன், அவர் கொடுத்த குங்குமத்தை வாங்கி பெண்ணவளின் நெற்றியிலும், நெற்றி வகுட்டிலும் வைத்து விட்டான். அவனது தொடுகையில் கண்களை திறந்தவள், அவனையே பார்த்தாள் சிலைபோல்.

அர்ச்சகரோ, அவனது செயலைக் கண்டு அடக்கப்பட்ட சிரிப்போடு நகர்ந்துச் செல்ல, பூவினிக்கு தான் 'அய்யோ' என்றானது.

"நான் அழகா இருக்கேனு தெரியும். அதை நொடிக்கு ஒரு முறை நிரூபிக்குற மாதிரி... நீ பார்க்குறது தான் ஹைலைட்டு பாப்பு." என்றவன் கண்ணடித்துக் கொண்டு அங்கிருந்து நகர,

"என்ன சொன்னீங்க. இல்லை எனக்குதான் தப்பா கேட்ருச்சோ?... அப்படிப்பட்ட அழகன் யாருங்க?" என்று கூறியவள், அவனது கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினாள்.

அவள் கைத்தொட்டதும், இவனின் இதழ்கள் அன்னிச்சையாக மலர, "சொல்லுங்க மிஸ்சஸ் பூவினி பிரபஞ்சன்? நானே அந்த ஆணழகன்." என்றவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவளுக்கு அப்போதுதான், அவனது கைகளை உரிமையாக பற்றியது நினைவுவர, பட்டென்று கைகளை விடுத்தாள்.

"பொதுவா பொண்ணுங்க மனசை புருஞ்சுக்குறது ரொம்ப கஷ்டம்னு சொல்வாங்க. ஆனால் உன் மனசை புருஞ்சுக்க, நான் இன்னொரு ஜென்மம் தான் எடுத்து வரனும் போலயேடி..." என்று கூறியவன் அவள் கைகளை வெடுக்கென்று எடுத்ததில் முறைக்காமலும் இல்லை.

"நானும் காலையிலிருந்து பார்த்துட்டு தான் இருக்கேன். நீங்க ரொம்ப பண்றீங்க.." என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"நான் சொல்ல வேண்டிய வசனத்தை நீ சொல்ற? சரி யார் சொன்னா என்ன? புருசன் பொஞ்சாதிக்குள்ள இதுலாம் சகஜம் பாப்பு...." என்றவன் அவளது கைகளைப் பற்றி "கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோமா?" என்றான் அழுத்தமாக.

அவனது வார்த்தைக்கு செவி சாய்த்தவள் அவனோடு சென்று அமர்ந்துக் கொண்டாள். அங்கிருந்து பார்ப்பதற்கு தெப்பக்குளம் மிகவும் அழகாய் காட்சியாளித்துக் கொண்டிருந்தது.

சிலுசிலுவென வேப்பமரக்காற்று, இருவரின் மீதும் தீண்டிச் செல்ல, அதில் அவளது நெற்றியின் மீது இருந்த ஒற்றை முடி மட்டும் அசைந்தாடிக் கொண்டிருந்ததை பார்த்தான் என்பதை விட அப்பட்டமாக தன் மனைவியை ரசித்தான் என்பதே உண்மை.

'இவ வேற ரொம்ப அழகா இருந்து இம்சை பண்றாள். ஆனால் அவ திமிரு தான், நம்மள வெச்சு செய்யுது. ஆனாலும் என் பொண்டாட்டியோட திமிரு கூட அழகு தான். ' என்று ஏக்கப் பெருமூச்சொன்றைவிட, அவனின் மனசாட்சியோ, 'நீ சைட் அடிக்குறத மட்டும் அவ பார்த்தால் கண்ணாலேயே உன்னை பொசுக்கிடுவா பார்த்துக்கோ.' என்று உள்மனம் வாரினாலும், அதைக் கண்டுக் கொள்ளாதவனது பார்வை, பூவினியின் கன்னத்தில் இருந்த அவளின் சிறு மச்சத்தின் மீது படிந்தது.

அந்த நொடி, பெண்ணவளின் கன்னத்தை அலங்கரிக்கும் மச்சமாக மாறி விடக்கூடாதா என்ற ஏக்கம் தோன்றாமல் இல்லை. அதன்பின் மச்சத்தை விடுத்து அவளது நாசியில் வந்து நின்றது அவன் பார்வை.

ஒற்றைக்கல் மூக்குத்தியின் மினுமினுப்பு, அவனது கண்களை கூச, மெல்ல தன் பார்வையை அவளது இதழோரம் செலுத்தியிருந்தான்.

சிறு இதழின் மீது அவனது கண்பட்ட நொடியே, எச்சிலை விழுங்கியவன், 'டேய் பிரபா உன் வீக்னஸே அவ லிப்ஸ் தான். ரூட்டை மாத்து' என்று கூறிக்கொண்டே அவளது காதுமடல்களில் பார்வையை செலுத்தினான்.

பெண்ணவளின் உள்ளுணர்வோ தன்னையே அவன் பார்க்கிறான் என்பதை உணர்த்திட, பட்டென்று தன் பார்வையினை அவன் மீது செலுத்தினாள் பூவினி.

" சொல்லுங்க... " என்றவளின் வார்த்தைகளின் அழுத்தமே கூறியது ' பார்த்தது போதும், சொல்ல வந்ததை, சொல்லித் தொலைடா' என்னும் அர்த்தத்தை அவன் புரிந்து கொள்ள ரொம்ப நேரம் ஆகவில்லை.

தன் தொண்டை செறுமியவன், அவளை ஆழமாக பார்த்துக்கொண்டே, " மனிதர்கள்ல பொதுவாக நமக்காக வாழனும்னு இருக்கவங்க ஒரு ரகம், நம்மை சார்ந்தவங்களுக்காக வாழனும்னு நினைக்குறவங்க இன்னொரு ரகம். இந்த இரண்டு ரகமும் தனிதனியா தான் ஒருத்தங்க மேல நமக்கு வரும். ஆனால் ஒரே ஒருத்தங்களை தவிர்த்து.... அந்த ஒருத்தங்களுக்கு மட்டும் இந்த இரண்டுமே, கண்டிப்பாக சேர்ந்து தான் வரும்... அது யார்னு சொல்லு?" என்றான்.

'இதை கேட்கவா கூப்பிட்டாரு' என்பது போல பார்த்தவள், "நம்ம அப்பா அம்மா மேலயா?" என்றாள் சந்தேகமாக.

" அது தான் இரண்டாவது ரகத்துல வருதே"

"அப்போ எனக்கு தெரியலைங்க."

"அது புருஞ்சா நீ ஏன் இப்படி இருக்கப் போற" என்று அவன் முணுமுணுக்கும் சப்தம் கேட்டதும் "என்னது?" என்று புருவத்தை அவள் தூக்க, "இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை. உனக்கு விடை தெரியனுமா வேண்டாமா?" என்றான் இரு கைகளையும் கட்டிக்கொண்டு.

'வேண்டாம்னு சொன்னால் விடவா போறிங்க. ' என்று நினைத்துக்கொண்டே "சொல்லுங்க..." என்றாள்.

"தன்னோட துணை மேல தான்." என்றவன் அவளது கரத்தில் தன் கரத்தினைக் கோர்த்திருந்தான்.

"எப்படி சொல்றீங்க?" என்றவள் கேள்வியாய் பார்க்க,

" உனக்காக வாழனும்னு நான் நினைக்குறது இரண்டாவது ரகம். அதே சமயம் எனக்காகவும் நான் வாழனும்னு நினைப்பேன். ஏன்னா என்னை நம்பி ஒருத்தி வந்துருக்கா. நான் நல்லா இருந்தால் தான் அவளும் நல்லா இருப்பா, அதுனால எனக்காகவும் வாழனும்னு நினைப்பேன். அவகூட சந்தோசமா வாழனும்னு நினைப்பேன். இதே மாதிரி தான் மனைவியும் அவ கணவனுக்காக நினைப்பா. இப்போ புருஞ்சிருக்கும்னு நினைக்குறேன்." என்றவன் அவளது கண்களையே ஊடுருவிக் கொண்டிருக்க, அவனது பார்வை தாளாமல் தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள் பூவினி.

இவ்வளவு அழகாகவும் தன் மனதில் உள்ளக்காதலை ஒருவனால் கூறமுடியுமா? என்ற கேள்வியை அவள் மனதில் அவன் கூறியிருந்தான். ஒருபுறம் அவனது பேச்சில் தெரிந்த காதல் ஆச்சரியம் தான் என்றாலும், அந்த பேச்சில் இருக்கும் நிதர்சனம் உண்மைதானே என்று யோசிக்கத் தொடங்கிய நொடி, என்ன சொல்வது என்று தெரியாமல், தவித்துத்தான் போனாள் பூவினி.

தாம் இவ்வளவு சொல்லியும் அவள் தன்னைத் தவிர்க்கிறாள் என்று நினைத்துக் கொண்டவனோ "நான் ஆசையா வாங்கித் தந்த புடவையை, நீ கட்டாதப்போவே நான் புருஞ்சிருக்கனும். உனக்கு அப்படி எந்த எண்ணமும் என் மேல இல்லைனு. இட்ஸ் ஒகே இது தான் நடக்கும்னு விதி இருந்தால் யாரால மாத்த முடியும்." என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவன் அவளது பிடித்திருந்த கைகளை விடுவித்தபடி எழுந்தான்.

அதுவரை அவனது காதலை பற்றி யோசித்த அவளின் மனம், அவனது இந்த பதிலில் காணாமல் போய்விட, மீண்டும் இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டது.

"இங்க பாருங்க... நான் உங்களை கல்யாணம் பண்ணது என் தங்கையோட ஆசைக்காக மட்டும்தான்." என்றவள் விறுவிறுவென நடக்க,
அவள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை ரணப்படுத்தியிருந்ததே நிதர்சனம்.

அதே சமயம், யாரோ ஒருவனால் கடத்தப்பட்டிருந்த யாழினிக்கோ, கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிய, தன் கண்களை விழித்தவளுக்கு, காரில் வந்த நினைவுகள் மட்டுமே மனதில் இருந்தது. இருகைகளும் கட்டப்பட்டு, வாயில் துணியால் கட்டியிருக்க, அவளது மனமோ, காரில் கண்டவனது முகத்தையே நினைத்துக் கொண்டிருந்தது.
மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்தவள், கட்டப்பட்டிருந்த கால்களால் தத்திக்கொண்டே அறைக்கதவை நோக்கி குதித்துச் சென்றாள்.

கதவின் அருகே சென்றதும், திரும்பி நின்றவள், பின்னிருந்துக் கொண்டே அறைக்கதவை திறக்கப்பார்க்க, பூட்டப்படாத கதவு திறந்ததும், அப்பாடா என்றிருந்தது யாழினிக்கு.

உடனே வெளியே குதித்துக்கொண்டு வந்தவளுக்கு, மேல் தளத்தில் இருந்து இறங்குவதற்காக மாடிப்படிகள் கண்களில் பட, நிச்சயம் படியில் எந்த ஒரு பிடிமானமும் இன்றி குதித்துச் செல்ல இயலாது என்பதை புரிந்துக் கொண்டாள் யாழினி.

அந்த நொடி, கீழே இருந்து யாரோ வரும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டவள், தத்திதத்திச் சென்றே மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். முன்பு மயங்கிய நிலையில் படுத்திருந்ததை போவே கட்டிலில் ஒரு புறமாக படுத்தவள் கண்களை வழுக்கட்டாயமாக மூடிக் கொண்டாள்.

உள்ளே வந்தவனோ, கதவு திறந்திருப்பதைக் கண்டு மயங்கிய நிலையில் கிடப்பவளையே சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தான். பின் என்ன நினைத்தானோ, கதவை பட்டென்று சாத்தினான். அவனது செயலில் படுத்திருந்த யாழினிக்கோ பக்கென்று ஆனது.

இருந்தும் பயத்தை வெளிக்காட்ட விரும்பாதவள், தன் கண்களை திறக்காமலே இருக்க, மெல்ல அவளது அருகே வந்தவன் அவளின் கால்களை தொட, அப்போது கூட அசையாமலே இருந்தாள் யாழினி.

அவனோ, அவளது கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அவிழ்த்தவன், " எவ்வளவு நேரம் தான் மயங்குன மாதிரி நடிப்ப? நடிச்சது போதும் எழுந்திரி..." என்று கூறியும் கூட, எழாமலே இருந்தாள் யாழினி.

அதில் கடுப்படைந்தவன், " இப்போ எந்திரிக்குறியா? இல்லை செவுல்லையே ஒன்னு விடட்டா?" என்று அவன் கூறியதும் அப்போது தான் மயக்கம் தெளிவது போல கண்களை சுருக்கிக் கொண்டு எழுந்தாள் யாழினி.

எழுந்தவள் கண்களை சிமிட்டாது அவனையே பார்க்க, அவளது பார்வையில் சிறு பயம் கூட இல்லை என்பதை உணர்ந்தவனுக்கு கோபம் வராமலும் இல்லை.

"என்னடி கடத்திட்டு வந்திருக்கேன். பயமே இல்லாமல் இருக்க? உன்னை என்ன பண்ண போறேன் தெரியுமா? உன் கழுத்துல தாலிக் கட்டப் போறேன் அதுவும் வலுக்கட்டாயமா." என்றெல்லாம் அவன் மிரட்டியும் அவளது கண்களில் பயம் துளியும் துளிர்க்கவில்லை.

ஒரு வித பிரம்மிப்பு, பாசம், ஆராய்ச்சி என பல்வேறுபட்ட பாவனைகள் அவளது கண்களுக்கு நடுவில் தெரிந்தது. அதில் கடுப்படைந்தவன், "ஏய் சொல்லுடி உனக்கு என்ன பார்த்தா, ஜோக்கர் மாதிரி தெரியுதா?" என்று கைநீட்ட போக, பின் என்ன நினைத்தானோ, அங்கிருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினான்.

அப்போதும் கூட மௌனமாக இருப்பவளை பார்த்து எரிச்சலோடு அவளின் அருகில் வர, அவளோ கண்களாலே தன் வாய் மூடப்பட்டிருப்பதை செய்கை செய்தால், "இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை." என்று சலித்துக் கொண்டே அவளது வாயில் இருந்த துணியை கழற்ற,

இருமியவள், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இமைகள் மூடாமல் அவனையே பார்த்தாள்.

அதில் சலிப்புடன், "ஏய் உனக்கு பயம்னா என்னென்னு தெரியுமா? தெரியாதா? எதோ அனிமேஷன் மூவி பார்க்குற மாதிரில்ல என்னைப் பார்க்குற?" என்று பல்லைக் கடித்துக் கொண்டே கூறினான்.

"அத்தான்...." என்று சிறுகுழந்தை போல கூறுபவளின் வார்த்தைகளை கேட்டதும் அதிர்ந்தவன், "இது தான் விசயமா... நான் ஒன்னும் உன் அத்தான் இல்லை." என்றான் திமிராக.

"தெரியும். என் அத்தான் இப்படி பண்ண மாட்டாரு. ஆனால் நீங்க என் அத்தானோட ஜெராக்ஸ் காப்பி மாதிரி இருக்கீங்களே. உங்களை பார்க்குறப்போ எனக்கு பயம் வரலை." என்று கண்களில் ஆர்வம் மின்ன கூறுபவளை தலையில் அடிக்காத குறையாய் ஒரு பார்வை பார்த்தான் அவன்.

அவன் அகிலன் கிருபாகரன். தன் ஒற்றை கண்ணசைவைக் கொண்டே அனைத்தும் நடத்தி முடிப்பவன், இன்று ஒரு சிறுபெண்ணின் முன்பு செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தான்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 14

காரமடையிலிருந்து, குல தெய்வ கோவிலுக்கு, பூவினியை அழைத்துக்கொண்டு, வந்திருந்தான் பிரபஞ்சன். வரும் வழியில் இருவருக்கும் இடையில் அமைதி மட்டுமே நிலவியது. பார்த்ததுமே மனதில் ஆழப்பதிந்தவள், வாழ்க்கை துணைவியாக வந்தும் கூட, அவளுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை, குறைக்க இயலாமல் தவித்துத்தான் போனான் பிரபஞ்சன்.

'தாலிக்கட்டிட்டு சந்நியாசியா வாழுறேன். என்னக் கொடுமைடா சாமி.' என்று அவனின் மனக்குமறல் அந்த இறைவனிடமே சென்று சேர்ந்தாலும் கூட, அவனது மனைவி மனம் இறங்கி வரமாட்டாள் என்பதை அவனும் அறிவான்.

பிரசித்தி பெற்ற கவகாளியம்மன் கோவிலுக்கு வந்து இறங்கினர் இருவரும். கால்களை கழுவிக்கொண்டு, இருவரும் ஒன்றாகவே கோவிலினுள் காலடி வைத்து, உள்ளே சென்றனர்.

மாலையை அர்ச்சகரிடம் கொடுத்த பிரபஞ்சனோ, பூவினியின் பெயர் ராசி நட்சத்திரமும், மற்றும் தனது நட்சத்திரமும் சொல்லி அர்ச்சனை செய்திட சொல்ல, ஒரு நிமிடம் தன்னவனை ஆச்சர்யமாக பார்த்தாள் அவள்.

அவளுக்கு கூட அவனின் ராசி நட்சத்திரம் பற்றி எல்லாம் தெரியாது என்பதைவிட, தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை என்பதே உண்மை. ஆனால் அவனோ தனது ராசி பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றானே என்று நினைத்தவள் பிரம்மிப்பாய் பார்த்தாள்.

எதேச்சையாக திரும்பியவன் அவளை பார்க்க, பட்டென்று தன் கண்களை மூடிக்கொண்டவள், சாமியை வணங்குவது போல இரு கைகளையும் கூப்பிக் கொண்டாள்.

அவளது செயலைக் கண்டு மென்னகை ஒன்றை உதிர்த்தவனது இதழ்கள், "சரியான கேடிடி நீ" என்று அன்னிச்சையாக மொழிந்தது.

அய்யர் தீபாராதனை காட்டிவிட்டு, இவர்களிடம் வரும்போதே பட்டென்று கண்களை திறந்துக் கொண்டாள் பூவினி. எங்கு அவன் அந்த கோவிலில் செய்தது போலவே செய்துவிடுவான் என்று.

அவளது செயல்களை அடக்கப்பட்ட சிரிப்போடு கவனித்துக் கொண்டே இருந்தவன், "பயங்கரம் பாஸ்" என்றுக் கூறிக்கொண்டே ஆராதனையை தன் கைகளினால் பெற்றுக் கொள்ள,

ஐயரோ, "பாஸ் இல்லைடா தம்பி. பாஸ்கரன்." என்று கூறிக்கொண்டே அவனது நெற்றியில் திருநீற்றை வைத்துவிட, இவனோ புரியாத பார்வை பார்த்தான்.

"என்ற பேருடா அம்பி." என்று அய்யர் கூறவும், "நான் கேட்கவே இல்லையே தம்பி." என்று பதிலுக்கு கூறியவன் செல்லமாக அவரது கன்னத்தில் தட்ட, பூவினிக்கு சிரிப்பு தான் வந்தது.

ஒரு நிமிடம் எதேச்சையாக திரும்பி பார்த்தவன், அவள் சிரிக்கும் அழகினைக் கண்டு, "உனக்கு சிரிக்க எல்லாம் தெரியுமா பாப்பு." என்று கேட்டேவிட்டான்.

அவன் கேட்டதும் கடினபட்டு சிரிப்பை அடக்கியவளது முகம் ஒரு நொடியில் இறுக்கமாகிவிட, எதுவும் பேசாமல் அமைதியாக திரும்பிச் சென்றாள் பூவினி.

"உங்ககிட்ட அப்புறம் வந்து பேசுறேன் பாஸ்." என்று அய்யரிடம் கூறிக்கொண்டே அவள் பின்னே சென்றான் பிரபஞ்சன்.

"ஹே பாப்பு. நான் என்ன தப்பா சொல்லிட்டேனு நீ பாட்டுக்குபோற?"

"நீங்க தப்பா சொன்னீங்கனு நான் சொல்லவே இல்லையே. சீக்கிரம் பிராகாரத்தை சுத்திட்டு வீட்டுக்கு கிளம்பனும்ல அதான் போறேன்." என்று கூறிக்கொண்டே பிரகாரத்தை சுற்றிவர, அவள் பின்னே சுற்றி சுற்றி வந்தான் பிரபஞ்சன்.

"நானும் வரேன். சேர்ந்து சுற்றுவோம் ." என்றவனை திரும்பி அவள் முறைக்க,

"பிரகாரத்தை சுற்றுவோம்னு சொன்னேன்டி." என்றான் அவளது பார்வையின் அர்த்தம் புரிந்துக்கொண்டே. அவளும் பதில் ஏதும் கூறாமல், நடக்கலானாள்.

அந்த நேரம், அவனது அலைபேசி சிணுங்க, அதில் தெரிந்த குமரனின் எண்ணைக் கண்டவன், "மச்சான்.." என்று கூறிக்கொண்டே கைபேசியை காதில் வைத்தான்.

"என்னாட மச்சான். ஜாலியா உன் மனைவியை கூப்பிட்டு ஊர் சுத்துறதா நீயூஸ் வந்துச்சு....நீ நடத்து ராசா."

"அடிங்கு.... ஜாலியா நானும் அவளும் ஊர் சுத்துறத நீ பார்த்த?" என்றவனது குரலில் தெரிந்த உஷ்ணம் அவனுக்கு விளங்கியது.

இருந்தும் " இல்லையாப் பின்ன..." என்று ராகமாக கூறுபவனை அடித்து நொறுக்கவேண்டும் என்ற அளவுக்கு கோபம் வந்தது பிரபஞ்சனிற்கு.

"டேய்... உன் நல்லதுக்கு சொல்றேன், ஓடிடு. ஏற்கனவே முடியலைடா." என்றவனது பதிலில் வயிறு குலுங்க சிரித்தான் குமரன்.

"டேய் மச்சான். உன் நிலைமையை நினைச்சாலே சிரிப்பா வருது. நீ என்ன பண்ற தங்கச்சியை இம்பிரஸ் பண்ற?"

"எது யாழினியவா?" என்றதும்,

"அடிங்கு பூவினியைடா. பூவினி எனக்கு தங்கச்சிதானடா... அதான் அப்படி சொன்னேன். எப்போ பாரு மச்சினிச்சி நினைப்பு தானா." என்றான் குமரன்.

"டேய் கிறுக்கா... யாழினி என் ஆரூகுட்டி மாதிரி தான்டா பார்க்குறேன். தப்பா சொல்லாத." என்று பல்லைக் கடித்தான் பிரபஞ்சன்.

"உன்னை பத்தி எனக்கு தெரியாதா மச்சான். சும்மா தான் சொன்னேன்.பெருசா எடுத்துக்காத"

"சொல்றத சொல்லிட்டு. இப்படி சொல்றியா? உங்கிட்ட அப்புறம் பேசுறேன். வைடா." என்றவன் போனை துண்டித்தான்.

தன் பின்னால் வந்துக் கொண்டிருந்தவன் காணமல் போனதால், அவனை காண்பதற்காக தேடி வந்த பூவினிக்கு அவன் கூறிய வார்த்தைகள் தெளிவாக காதில் கேட்டது. அதில் சற்று அகம் மகிழ்ந்துதான் போனாள். இருந்தும் அதை வெளிக்காட்ட விரும்பாதவள் அமைதியாக சென்று விட, அவனும் அவள் பின்னே சென்றான்.

பூவினி கடவுளை வணங்கிவிட்டு, ஓரிடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டாள். அவளை நோக்கி வந்தவனும் அவளின் அருகில் வந்து அமர்ந்துக் கொள்ள, அப்போது தான் அவளது முகத்தை பார்த்தவனுக்கு, எதோ ஒன்று குறைவது போல் தோன்றியதும், யோசித்தவனுக்கு பதிலாக கிடைத்தது பெண்ணவளின் மூக்குத்தி.

அங்கு யாழினியோ, தன்னை ஒருவன் கடத்தி வந்துள்ளான்... என்ற கவலை துளிகூட இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என் முகத்துல என்ன தெரியுது உனக்கு...? இப்படியே பார்த்துட்டு இருந்தால் செவுல்லேயே விட்ருவேன்." என்று சலிப்புடன் தொடங்கி கோபமாக வந்தது அவனது வார்த்தைகள்.

"என்ன எதுக்கு கடத்திட்டு வந்தீங்க? அந்த பொறுக்கி பசங்க எல்லாம் உங்க ஏற்பாடு தானா?"

"உன்னை கல்யாணம் பண்ணலாம்னு தான் கடத்திட்டு வந்தேன்."

"நம்பிட்டேன்... நம்பிட்டேன்." என்று வாயை பொத்திக்கொண்டு சிரித்தாள் யாழினி.

அதில் கடுப்படைந்தவனோ, " என்ன பொண்ணுடி நீ. ஒருத்தன் உன்னை கடத்திட்டு வந்து மிரட்டுறான். நீ என்னடானா சிரிச்சுட்டு இருக்க." என்றான் பல்லைக்கடித்துக் கொண்டே.

"இல்லை அத்தான். நீங்க வா யாழினு கூப்பிட்டிருந்தாலே உங்ககூட வந்திருப்பேன். ஆனால் என்னை கடத்த ஒரு மாஸ் சீன்லாம் ரெடி பண்ணீங்க பார்த்தீங்களா அங்க நிக்குறீங்க."

'படுத்துறாளோ' என்று கடுப்படைந்தவன், "இன்னொரு தடவை அத்தான் சொத்தானு கூப்பிட்ட பல்லை தட்டிக் கையில கொடுத்துடுவேன்."

"ஹலோ. நீங்க என் அத்தான் மாதிரியே அச்சு அசலா இருந்தீங்கனா.. நான் என்ன பண்றது?"

'ஒருவேளை இவளுக்கு என்ன நியாபகம் இருக்கோ.' என்று யோசித்துக்கொண்டே, "வாயை மூடு. அமைதியா இருக்கனும். என்னை எதிர்த்து பேசுன மவளே அடிச்சுப்போட்டு போய்ட்டே இருப்பேன்." என்று அவன் மிரட்டியதும் பாவமாக அவனையே பார்த்தாள் யாழினி.

"என்ன லுக்கு?" என்றவன் முறைக்க, தன் வயிறை தொட்டுப் பார்த்தவள்,

"எனக்கு ரொம்ப பசிக்குது." என்றாள் குழந்தைப்போல.

"அதுக்கு நான் என்ன பண்ணட்டும்."

"கடத்திட்டு வந்தீங்கள்ள... ஒரு சாப்பாடு கூட கொடுக்க மாட்டீங்களா..? அவ்ளோ கஞ்சுஸா நீங்க?" என்றவளைப் பார்த்து "வாட்?" என்று அவன் கர்ஜிக்க,

"என்ன அத்தான் வாட்டு கோழினு, எனக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க." என்றவளை பார்த்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டபடி, அங்கிருந்து சென்றான் அகிலன்.

"பசிக்குதுனு சொன்னது ஒரு குத்தமா..?" என்று செல்லும் அவனின் முதுகை வெறித்துக் கொண்டே பெருமூச்சொன்றை விடுத்தாள் யாழினி.

இங்கு கோவிலில், பிரபஞ்சனோ, "ஏய் பாப்பு உன் மூக்குத்தி எங்க?" என்றதும் தான் தனது மூக்கினை தொட்டுப் பார்த்தவள் அதிர்ந்தே விட்டாள்.

"எங்கே என் மூக்குத்தி?"

"அது தான் பாப்பு நான் கேட்குறேன். ஒருவேளை எங்காவது விழுந்திடுச்சோ?"

"அய்யோ. என் மூக்குத்தி எனக்கு வேணும். எங்க விழுந்திருக்கும்?" என்றவளது கலக்கத்தை பார்த்து கவலைக் கொண்டவன்,

"சரி விடு பூவிமா. கடுகு சைஸ் மூக்குத்தியை எங்கேனு போய் தேடுறது? போற வழியில வேற வாங்கிக்கலாம்."

"அந்த மூக்குத்தி பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?" என்றவள் கோபமாக கேட்க,

"சொன்னா தானேடி தெரியும்." என்றான் சாதாரணமாக.

"அது எங்க அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த மூக்குத்தி. அவர் நினைவா என்னோட இருக்குற மூக்குத்தி. எனக்கு அந்த மூக்குத்தி தான் வேணும்." என்று கூறியவளின் கண்கள் கலங்கியே விட்டது.

அவளது கலங்கிய விழிகள் இவனைப் படுத்தி எடுக்க, அவளது அருகே நெருங்கி கண்களை தன் விரல்களால் துடைத்துவிட்டான்.
"மூக்குத்தி தான வேணும் நான் தேடுறேன். கோவில் பிராகாரத்தை சுற்றும் போது தான் எங்கேயாவது விழுந்திருக்கனும்." என்று ஆறுதலாக கூறியவன் அவளுக்காக தேடவும் செய்தான்.

அன்றொரு நாள் தன் தந்தை தனக்காக மூக்குத்தி குத்த அழைத்துச் சென்ற நினைவு அவளது நினைவில் வர, மூக்குத்தி இவளுக்கு குத்தியதும், அவர் தந்தை கண்களை இறுக மூடிக்கொண்டதும், இவள் அவரிடம் சென்று, 'அப்பா வலிக்கவே இல்லை பாருங்க' என்று காட்டியதும் நினைவில் வர, அவளது கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக பெருகியது.

பிரபஞ்சனோ மூலைமுடுக்கு என அனைத்துப் பகுதியிலும் தேடிக் கொண்டிருந்தான்.
"நான் எங்கேனு போய் தேடுவேன்?" என்று இவன் கீழே உருளாத குறையாக தேட, அங்கு கோவிலுக்கு வந்தவர்கள் தான் அவனை வினோதமாக பார்த்தபடி, சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவனருகே வந்த ஒருவன், "என்ன தம்பி... என்ன பண்ணிட்டு இருக்கீங்க." என்று மும்முரமாய் தேடிக் கொண்டிருந்தவனைக் கேள்வியால் குடைய,

அதில் கடுப்படைந்தவன், "ஆஹான். பரிகாரம் செய்றேன்." என்றான் சலிப்பாக.

"அப்படி என்ன பரிகாரம் தம்பி? இப்படி ஒரு பரிகாரத்தைக் கேள்விப்பட்டதே இல்லையே!." என்று வாயில் கைவைத்து அதிசயமாக பார்த்தான்.

"இப்படி தவிழ்ந்துட்டே பிரகாரத்தை சுற்றி வந்தால், நினைச்சது எல்லாம் நடக்குமாம்." என்று வேண்டுமென்றே கூறிய பிரபஞ்சனோ மூக்குத்தியை தேடிக்கொண்டிருக்க,

"உண்மையா தம்பி?" என்று ஆச்சரியமாக கேட்டான் அவன்.

"நான் சுத்துறத பார்த்தும் உங்களுக்கு தெரிய வேண்டாமா." என்றவன் செவ்வெனத் தேட, அவரோ, 'ஒருவேளை இருக்கும் போல' என்று கூறிக்கொண்டே அவன் செய்வது போலவே தவிழத் தொடங்கினார்.

மெல்ல மெல்ல இவ்விசயம் ஒருவர் பின் ஒருவர் பரவி, சிலர் அவனைப் போன்றே செய்ய, மூக்குத்தி கிடைத்ததும் அவன் எழுந்துப் பார்க்க, அங்கிருந்த சிலர் இவ்வாறு செய்வதைப் பார்த்து வாய்விட்டே சிரித்தான் பிரபஞ்சன்.

"இந்த மூடநம்பிக்கை தான் நம்ம மக்களோட பலவீனமே." என்று தலையில் அடித்துக் கொண்டு அவ்விடமிருந்து, சென்றான்.

அழுதுக் கொண்டிருந்த பூவினியோ, அவனைக் கண்டதுமே தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

" மூக்குத்தி கிடைச்சிடுச்சா?" என்று கண்களில் ஆவல் மின்ன கேட்பவளை பார்த்து "இல்லை" என்று முகத்தை வலது புறத்தில் இருந்து இடது புறமாக ஆட்டினான் பிரபஞ்சன்.

அவளது முகமோ மீண்டும் கவலையைத் தொற்றிக் கொள்ள, தனது ஒற்றை விரலால் அவளின் தாடையை பிடித்து நிமிர்த்தியவன். தன் மற்றொரு கைகளில் இருந்த மூக்குத்தியை காட்ட, அதைக் கண்டதும் முகம் சிவந்தவள், மகிழ்ச்சியில் அவனை ஆரத்தழுவியிருந்தாள்.

அதை சற்றும் எதிர்பாராதவனோ, இன்ப அதிர்ச்சியில் மூழ்க, அப்போது தான் தன்நிலை உணர்ந்தவள், தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் இருந்து விலகினாள்.

"தாங்ஸ். அப்புறம் சாரி உணர்ச்சி வசத்துல அப்படி பண்ணிட்டேன்." என்பவளைப் பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்தான் பிரபஞ்சன்.

"நானெல்லாம் என் மனைவி என்னை கட்டிப்பிடிச்சா தள்ளி எல்லாம்விட மாட்டேன். உனக்கு எல்லா விதத்துலயும் உரிமை இருக்கு பாப்பு." என்றான் கண்ணடித்துக் கொண்டே.

அவன் காலையில் நடந்ததை சொல்கிறான் என்பது தெளிவாக புரிய, தலையை கவிழ்ந்த பூவினியின் இதழில் படர்ந்திருந்தது புன்னகை.

அவளது செயலை வெகுவாக ரசித்தவனோ, "ஹே பாப்பு மூக்குத்தி தான் இருந்துச்சு. திருகாணி காணோம்." என்றான்.

"அச்சச்சோ திருகாணியும் எனக்கு வேணும்." இவள் அழுவது போல கண்களை கசக்க,

"ஹே அழாதமா. எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க பாரு. அதான் மூக்குத்தி கிடைச்சிடுச்சே." என்றான் தவிப்போடு.

அவனது தவிப்பைக் கண்டு இதழ் பிரித்து சிரித்தவளோ, அவன் செய்தது போன்றே தனது மடக்கியிருந்த கைகளை விரித்துக்காட்ட, அதிலிருந்த திருகாணியைக் கண்டு, "இது எப்படி கிடைச்சுது?" என்று ஆவலோடு கேட்டான்.

"இது மூக்குல தான் இருந்துச்சு. கொஞ்சம் கவனிக்காம விட்ருந்தால் விழுந்திருக்கும்."

" சரி சரி அதைக் கொடு" என்று அதையும் வாங்கிக் கொண்டவன், அவளது மூக்கில் மாட்டிவிடச் செல்ல, அதிர்ந்தவள், "நானே மாட்டிக்குறேன்." என்றாள்.

"பரவாயில்லை. திரும்ப கீழ விழுந்திட போகுது. ஏற்கனவே கஷ்டப்பட்டு தேடி எடுத்துட்டு வந்திருக்கேன்டி." என்றவனது பேச்சைக் கேட்டு சிரித்துக்கொண்டே சரி என்று தலையாட்டினாள்.

கோவிலை விட்டு வெளியே வந்தவர்கள், வெளியே இருந்த திட்டில் அமர்ந்துக் கொண்டனர். மெல்ல அவளின் மூக்கின் சிறு துவாரத்தில் முக்குத்தியை வைத்தவன், திருகாணியினை மற்றொரு கைகளால் மாட்டிவிட, அவனது பாதி தேகம் அவளை உரசிக் கொண்டிருந்ததில் நெளியவும் முடியாமல் நகரவும் முடியாமல் சங்கடமாக அமர்ந்திருந்தாள் பூவினி.

மிக அருகில் அவனது முகம் இருக்க, அவனது கண்களின் வீச்சினை தாங்க இயலாமல் கண்களை மூடிக்கொண்டாள். மூக்குத்தியை மாட்டும் போது தான். அவளது செயலை உற்று நோக்கியவனுக்கு, அதன் பின்னரே அனைத்தும் புரிய கள்ளச்சிரிப்பொன்றை உதிர்த்தவன், மூக்குத்தியை மாட்டிவிட்டும் வேண்டும் என்றே மாட்டிக்கொண்டே இருப்பது போல அவளை நெருங்கி அமர்ந்துக் கொண்டான்.

ஒருகட்டத்தில் தன் கண்களை திறந்தவள், 'இன்னுமா இவரு மாட்டுறாரு?' என்று பார்க்க, அவனது செயலைக்கண்டு அவனைத் தன்னிடம் இருந்து பிரித்துத் தள்ளினாள் பூவினி.

"கொஞ்சம் சிரிச்சு பேசுனதும் அட்வான்டேஜ் எடுக்க பார்க்குறீங்களா?" என்று முறைத்துக் கொண்டே நகர,

அதற்குமேல் தன் பொறுமையை முற்றிலும் இழந்திருந்தான் பிரபஞ்சன். இருக்காதா பின்ன, காதலோடு பார்த்தாலும் சரி, பேசினாலும் சரி, அவளது உதாசீனம் ஒவ்வொரு முறையும் அவனைப் ரணப்படுத்திக்கொண்டே தான் இருந்தது.

அவளது செயலில் முகம் சுருங்கியவன், அவளை நெருங்கி " அப்படி தான்டி பண்ணுவ? எனக்கு இல்லாத உரிமையா?" என்று கோபத்தில் கூறிக்கொண்டே அவளது கைகளை அழுத்தமாக பற்றியிருந்ததான்.

அவனது செயலில் கோபம் கொண்டவளோ, அவனையே தன் அனல் விழிகளால் சுட்டெறிக்கும் பார்வை பார்த்தாள் பூவினி.

யாழினியோ தன் முன்னே இருந்த பிரியாணியை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். அவள் பசிக்கிறது என்று கேட்டதால், வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொடுத்திருந்தான் அகிலன்.

"இருக்குறது ஜீரோ சைஸ்ல. ஆனால் சாப்பிடறது மட்டும் ராஜ்கீரண் பேத்தி மாதிரில்ல சாப்பிடுறா" என்று வாய்விட்டே அவன் கூறிவிட,

"சாப்பிடும் போது கண்ணு வைக்காதீங்க அத்தான்." என்று எலும்பை அடித்து நொறுக்குவதை செவ்வென செய்தாள் யாழினி.

"அடி போட்டேனா. இன்னொரு வாட்டி அத்தான்னு சொல்லமாட்ட." என்று கைகளை ஓங்க,

அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாதவள், நாக்கை திருத்தி பழிப்புக் காட்டிக்கொண்டே பிரியாணியை வெளுத்து வாங்கினாள்.

"நீ எல்லாம் என்ன டீசைன்டி.. ச்சே" என்று அவளை வினோதமாக பார்த்தான்.

"மேட் இன் இந்தியா தான் அத்து. நீங்க என்ன சைனா செட்டோ பட்டுபட்டுனு பொறிஞ்சு தள்ளுறீங்க." என்றவளை வெட்டவா குத்தவா என்பது போல தான் பார்த்தான் அகில்.

"வாயை மூடிட்டு சாப்பிடுற வழியை மட்டும் பாரு." என்றான் காட்டமாக.

"வாயை மூடிட்டு எப்படி அத்து சாப்பிட முடியும்." என்றாள் பாவமாக.

'அய்யோ படுத்துறாளே' என்று நினைத்துக் கொண்டே, "என்னடி அத்து சொத்துன்னு. உன்னை பேச வெச்சுட்டு வேடிக்கை பார்க்குறேன்ல, அதான் இப்படி பேசுற?" என்று முறைத்துக் கொண்டே அவளது அருகில் வர,

அவளும் பின்னே செல்ல, அவளது அருகில் நெருங்கியவன், "எங்கடி ஓடுற. இப்போ சொல்லு பயமா இருக்குல்ல என்ன பார்த்து." என்று கூறிக்கொண்டே அவளை நெருங்கினான்.

"இப்போவும் சொல்றேன். எனக்கு உங்களை பார்த்தால் பயம் வரலை." என்று அவள் கூறிய நொடி அவளது துப்பட்டாவினை பிடித்து, அவன் இழுக்க, துப்பாட்டாவில் குத்தப்பட்டிருந்த ஊக்கு அவளது சுடிதாரை சிறிது கிழித்துக் கொண்டு வர, அதிர்ச்சியில் உரைந்தவள், கண்கள் கலங்கி போய் அவனைப் பார்த்தாள்.

அதில் 'ஏன் இப்படி பண்றீங்க?' என்னும் கேள்வி மட்டுமே இருந்தது.
அவளது கலங்கிய கண்களைக் கண்டவன், "இப்போ சொல்லுடி. பயமா இல்லை." என்றவனை வினோதமாக பார்த்தவள்,

"எனக்கு உங்களை பார்த்தால் பயம் வரலை. என் குடும்பத்துல ஒருத்தரா தான் நினைக்க தோணுது, பாசம் மட்டும் தான் வருது." என்றவளது விழிகள் கலங்கி கண்ணீரை சுரந்திருக்க, அவளது பதிலைக் கேட்டு உறைந்து தான் போனான் அகிலன் கிருபாகரன்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 15

என்ன மாதிரியான பெண் இவள்.. கடத்தியவன் மீது கோபம் வரவில்லை, பயமும் வரவில்லை, மாறாக அன்பு எப்படி வரும். என்று அகிலனின் மனதில் பல்வேறுபட்ட கேள்விகள் எழ, தன் கோபத்தை மொத்தமும் அவள் மேல் காட்டாமல், மேசையின் மீதிருந்த கண்ணாடி கோப்பைகளை உடைத்து நொறுக்கினான்.

"உரிமை கொண்டாடுற வேலை வேண்டாம் சாவடிச்சிடுவேன்." என்று அடிக்குரலில் கர்ஜிக்க, அவனது அதட்டலில் மிரட்சியுடன் பார்த்தாள் யாழினி.

அவனோ அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல், அந்த அறையை விட்டு வெளியே வந்தவன் கதவைப் படார் என்று சாத்திவிட்டு செல்ல, அவனது செயலில் தன் கண்களை மூடி திறந்தவள் பொத்தென்று கட்டிலின் மீதே அமர்ந்துக் கொண்டாள்.

"அச்சு அசலாக என் பிரபா அத்தான் மாதிரி இருந்துட்டு. பயப்படு.. பயப்படுனு சொன்னால் எப்படி பயம் வரும். பெரிய ரவுடினு நினைப்பா இவருக்கு. ஆனால் இவரோட குரல் ரொம்ப பரிட்சியமா இருக்கே." என்று வாய்விட்டே புலம்பியவள் அங்கிருந்த குளியலறைக்கு சென்று தன் கைகளை கழுவ, அப்போது தான் அங்கிருந்த கண்ணாடி சன்னலைப் பார்த்தாள்.

"பேசாமல் இங்க இருந்து, உதவி கேட்கலாமா?" என்று யோசனை துளிர்த்த நொடி, அங்கு எதேனும் எழுத பொருட்கள் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தாள்.

அப்போது அங்கிருந்த காலண்டர் கிடைக்க, அதை கிளித்தவள் அங்கிருந்த பேனாவினால், உதவியை வேண்டி எழுதினாள்.

"எத்தனை படம் பார்த்திருப்போம். எங்ககிட்டயேவா." என்று கூறிக்கொண்டே அந்த காகிதத்தை பந்து போல் சுருட்டினாள். பின் அங்கிருந்த குளியலறைக்குள் நாற்காலி ஒன்றை எடுத்துச் சென்றவள் அதன் மீது ஏறி, வெளியே பார்க்க, அந்த தெரு அழகாய் தெரிந்தது.

சுருட்டி வைத்த ஒவ்வொரு காகிதத்தையும் போட்டுக் கொண்டே இருக்க, அவள் மீது கட்டுக்கடங்காத கோபத்தோடு வெளியே வந்த, அகிலனது தலையிலேயே ஒரு காகிதம் வந்துவிழ,

எதேச்சையாக பார்த்தவள், "அய்யய்யோ இவரா?" அடித்துப் பிடித்து கீழே இறக்கியதில் கால்வழுக்கி பொத்தொன்று விழுந்தாள் யாழினி.

வெளியில் நின்றவனோ, காகிதம் தன்தலையில் பட்டதுமே, அது வந்திருந்த திசையை நோக்கியவனுக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. கீழே விழுந்திருந்த காகிதங்களை எடுத்தவன், படித்து பார்த்ததில் அவனது இரும்பு இதழ்கள் தன்னாலே வளைந்து சிரித்தது.

அவனது காலடி சப்தம் இவளது காதுகளை அடைய, "சரி சமாளிப்போம்." என்று நொண்டிக் கொண்டே, கட்டிலின் மீது வந்தமர்ந்துக் கொண்டாள்.

கதவை திறந்துக் கொண்டு வந்தவன், அவளையே அழுத்தமாக பார்த்தபடி, அந்த காகிதத்தை அவள் முன்பு வீசி எறிந்தான்.

"என்னது இது?" என்று அழுத்தமாக கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டே கேட்க,

"பேப்பரு. இது கூடவா தெரியலை." என்றாள் அசராமல்.

"அதுல நீ என்ன எழுதியிருக்கனு கேட்டேன்?"

"அதுவந்து சும்மா எழுதுனேன். போர் அடிச்சுது அதான்." என்றவள் இழுக்கும்போதே, அவளை நோக்கி வந்தவன்,

"அதான் மேடம் பேப்பர் தூக்கி போட்டீங்களோ?" என்றவன் மேலும், "எல்லாம் சரி. அது என்ன இந்த வீட்டில் புதையல் இருக்குனு போட்ருக்க? அப்புறம் இன்னொரு பேப்பர்ல நான் உன்னை காதலிக்குறேன்னு போட்டு ஒரு ஹார்ட்டு அதுல ஒரு அம்பு வேற." என்று கூறும்போது அவனது இதழ்களில் சிறு புன்னகை வந்தது.

"காப்பாத்துங்கனு போட்டா மட்டும் காப்பாற்றவா போறாங்க. இது மாதிரி ஏதாவது போட்டாளாவது என்ன ஏதுனு பார்ப்பாங்க. அதுக்குதான்." என்பவளைக் கண்டு வாய்விட்டே சிரித்தான் அகிலன்.

"நீங்க சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கீங்கனு தெரியுமா? அப்படியே ஹீரோ மாதிரி இருக்கீங்க." என்றவளின் பதிலில், அவனது முகம் ஒரு நொடியில் இறுக்கமாகி விட, தன் கண்களை மூடித் திறந்தான் அகிலன்.

அப்போது தான் அவளை நன்கு கவனித்தான். உடை முழுவதும் அவள் குளியலறையில் விழுந்ததில் ஈரமாகி இருக்க, அவளையே உற்று பார்த்தவன், மெல்ல அவளை நோக்கி அடியெடுத்து வைக்க, அவன் எதற்காக அருகில் வருகிறான், என்பதை புரிந்துக் கொள்ள இயலாத பாவையவளோ திருதிருவென விழித்தாள்.

இங்கு பிரபஞ்சனோ, பூவினியின் கைகளை அழுத்தமாக பற்றியிருக்க, அவளது பார்வைக்கு சலிக்காமல் பதில் பார்வைப் பார்த்தான்.

'என்னடி குட்டி கண்ணு வெச்சுட்டே, நீ முறைக்குறப்போ, பெத்த கண்ணு வெச்சிருக்க நான் முறைக்க மாட்டேனாக்கும்.' என்று அவனும் முறைக்க, அவனது செயலில் கடுப்படுந்தவள், அவனது கன்னத்தை தாடியோடு பற்றி, இழுத்து ஆட்டியதில் வலியில் கத்தியே விட்டான் பிரபஞ்சன்.

"என்னடி பண்ற? விடுடி என்னை?" என்றவனை விடாமல் ஆட்டி எடுத்தபடி,

"இப்படி தானடா என் கையும் வலிக்கும். உனக்கு வந்தால் வலி. எனக்கு வந்தால் தக்காளி சட்னியா?"

"என்னடி பொசுக்குனு மரியாதை இல்லாமல் பேசிட்ட...விடுடி. நான் உன் புருசன். யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க?"

"என்ன நினைச்சா எனக்கென்ன? மரியாதையா கையை விடுங்க. நான் உங்க தாடியை விடுறேன்." என்றவளின் கண்டிப்பில் அவளின் கைகளை பட்டென்று விடுத்தான் பிரபா.

"இப்போவாது விடு." என்று அவன் கூறினாலும், அவனின் உள்மனமோ, 'சரியான ரவுடியா இருப்பா போல. என்ன பிடி பிடிக்குறாள்.' என்று நினைத்துக்கொண்டபடிஅவள் விட்டதும் தன் கன்னத்தை பிடித்து தேய்த்து கொண்டான்.

அவனது பிடியில், கன்றி சிவந்து போயிருந்த கைகளை வலியோடு பார்த்தவள், கைகளை நீவிக் கொண்டே, இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தை நோக்கிச் சென்றாள்.

இங்கு தென்னவனோ தன் நண்பனை அழைத்துக்கொண்டு, யாழினி படிக்கும் கல்லூரிக்கு வந்திருந்தான்.

"இதுதான்டா பாப்பா படிக்குற காலேஜ்." என்று முப்பத்திரண்டு பல்லையும் காட்டியபடி கூற,

"என்னடா சொல்ற? பாப்பா எல்லாம் காலேஜ் படிக்குமா?" என்று வேண்டுமென்றே கலாய்த்தான் அவனின் நண்பன்.

"டேய் என்னடா நக்கலா?"

"இல்லடா விக்கலு. எனக்கு ஒரு டவுட்டு. பொண்ணுங்கனாலே உனக்கு பிடிக்காதுல. எப்போ இப்படி பாப்பா பாப்பானு சுத்த ஆரம்பிச்ச?"

"யார்ரா சொன்னுது அப்படி. நம்மளை கஷ்டபட்டு பெத்தடுக்குற அம்மா, மூத்தவளா பிறந்தாலும் நமக்கு இன்னொரு அம்மாவா பார்த்துக்குற அக்கா, இப்படி பெண்களால வளர்க்கப்பட்டு பெண்ணே பிடிக்காதுனு சொல்ல முடியுமா?"

"சாரிடா சாமி. எதோ தெரியாமல் சொல்லிட்டேன். நீ என்னமோ பண்ணுடா. உன் பாப்பாவை சைட் அடி. ஆனால் என்னையும் ஏன்டா சேர்த்து கூட்டிட்டு சுத்துற?" என்று வாய்விட்டே புலம்பிய நண்பனைக் கண்டு நகைத்தவன்,

"நண்பன்னாலே நண்பன் லவ்வுக்கு உதவி பண்ணனும்டா." என்றபடி கண் இமைக்காமல் கல்லூரி நுழைவு வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சில மணி நேரங்கள் கழித்து, "டேய் காலேஜ்ல இருக்க, எல்லாரும் வெளிய வந்துட்டாங்க. உன் ஆளு எங்கடா? ஒரு வேளை காலேஜ்க்கு வரலையோ?" என்றவனின் கேள்வியில் திகைத்தவன்,

"ஒருவேளை இருக்குமோ?"

"அடேய். ஒரு மணி நேரமா நிக்க வெச்சிருக்கடா சண்டாளா? போய் உங்க அண்ணி வீட்டுக்கு போய் பாரு. நான் கிளம்புறேன்."

"சரிடா கோவப்படாத. அப்படியே போற வழியில அத்தை வீட்டுக்கு கொண்டு போய் விடு." என்றவனை, மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டபடி அழைத்துச் சென்றான் பிரபு.

யாழினியின் வீட்டிற்கு வந்தவனை, வரவேற்று உள்ளே அமர வைத்தார் தனலட்சுமி. ஆனாலும் அவரது முகமோ பதட்டத்தோடு இருக்க, தென்னவன் தனலட்சுமியின் கலக்கத்தை கண்டுக்கொண்டான்.

"என்னாச்சுங்க அத்தை. பதட்டமா இருக்கீங்க?" என்றான் அக்கறையாக.

"ஒன்னும் இல்லை தம்பி. சாப்பிட எதாவது கொண்டு வரேன். ஆமா மாப்பிள்ளை பூவினி எல்லாரும் எப்படி இருக்காங்க. மறுவீட்டுக்கு கூப்பிட வரனும்."

"நல்லாருக்காங்க அத்தை. கோவிலுக்கு போயிருக்காங்க. ஆமா நீங்க மட்டும் தான் வீட்டுல இருக்கீங்க போல?" என்றவனது கண்கள் மட்டும் யாழினியை தேடாமல் இல்லை.

"யாழி காலேஜ் போயிருக்காபா. இன்னும் அவளை காணோம். இப்போ வந்துடுவா." என்று கூறும் போதே அவரது குரலில் தெரிந்தது பதட்டம்.

அதை கேட்ட தென்னவனுக்கோ அதை விட பதட்டம் அதிகரித்தது. இப்போது தானே அவளது கல்லூரியில் இருந்து வந்தான். நிச்சயம் அவள் கல்லூரிக்கு வரவில்லை என்று தெரிந்தபின், அவன் மனமோ பதட்டத்தில் பலமடங்கு துடிக்க ஆரம்பித்தது. இதை தனலட்சுமியிடம் சொல்லவும் முடியவில்லை. ஏற்கனவே பதட்டத்தில் இருக்கும் தனலட்சுமி மேலும் கவலைக் கொள்ள நேரும் என்பதால் மறைத்திருந்தான். பின் என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தவன்,

"அத்தை யாழினி பிரண்டோட வீட்டுக்கு போயிருப்பாங்களோ?" என்று யோசனையாக வந்தது அவனின் வார்த்தைகள்.

"இல்லைபா. அவ சொல்லாமல் போக மாட்டாள். ஒருவேளை பஸ் கிடைக்காமல் இருக்கும் வந்திடுவா?" என்னும் தனலட்சுமியிடம் எவ்வாறு சொல்வான் அவள் கல்லூரிக்கு வரவில்லை என்று.

'பாப்பா எதாவது பிரச்சினையில மாட்டிருப்பாளோ? இல்லை அவளுக்கு எதாவது ஆகியிருக்குமோ' என்றெல்லாம் அவன் மனம் துடிக்க, அங்கு ஒரு நிமிடம் கூட இருக்க இயலாமல் தன் நண்பனுக்கு அழைப்பை விடுத்து யாழினியை தேடுவதற்காக கிளம்பினான். பின் பிரபு வந்ததும் அவனோடு வண்டியில் நாலாபுறமும் தேடத் தொடங்கியிருந்தான் தென்னவன்.

"எங்கேனு தேடுறதுடா மச்சான். ஒருவேளை அவ பிரண்டு வீட்டுக்கு போய்ருக்கும்டா அந்த பொண்ணு."

"இல்லைடா. அத்தை உறுதியா சொன்னாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு மச்சான். குட்டிக்குழந்தைங்கள கூட விட்டு வைக்காத உலகம்டா இது. எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு. பாப்பா ரொம்ப அழகுடா. அவ அழகே அவளுக்கு ஆபத்தாகிடுமோனு பயமா இருக்குடா." என்று கூறும்போதே அவனது கண்கள் கலங்கிவிட்டது.

"டேய் டேய் அந்த பொண்ணுக்கு ஒன்னும் ஆகிருக்காது. போட்டோ வெச்சிருக்கியா? போற வழியில விசாரிப்போம்."

"ம்ம்ம் இருக்கு. அண்ணா கல்யாணத்துல பாப்பாக்கு தெரியாம எடுத்திருக்கேன். ஆனால் அவளுக்கு மட்டும் எதாவது ஆச்சு. நான் சும்மா இருக்க மாட்டேன்டா." என்றான் கோபத்தில்.

தென்னவனும் அவனது தோழனும் நாலாபுறமும் யாழினியை பற்றி விசாரித்தபடி, தேடிக் கொண்டிருக்க, இவையாவும் அறிந்திடாத பிரபஞ்சன், வரும் வழியிலேயே சைவ உணவகம் ஒன்றில் உணவினை உண்டு விட்டு, அவளை நேராக வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தனது மாமியாரின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

அதை சற்றும் எதிர்பார்க்காத பூவினியோ ஆர்வமாக அவனைப் பார்க்க, அவனோ, "ஒய் உனக்காக ஒன்னும் கூப்பிட்டு வரலை. என் யாழிமாவை பார்க்க வந்தேன்." என்று வேண்டுமென்றே கூறியவன் அவளுக்கு முன்பு வீட்டை நோக்கிச் செல்ல,

"ரொம்ப தான்" என்று முகத்தை திருப்பிக் கொண்டே அவன் பின்னே வீட்டிற்குள் நுழைந்தாள் பூவினி.

"அம்மா.... யாழி..." என்று கூறிக்கொண்டே வந்தவளுக்கு அங்கு தனலட்சுமியின் விசும்பல் சத்தமே கேட்க, விரைந்தவள் தனது தாயை நோக்கிச் சென்றாள்.

"என்னாச்சு அம்மா?" என்று பதட்டத்தோடு கேட்கும் தன் மூத்த மகளைக் கண்டதுமே தனது சேலை முந்தானையில் தனது கண்ணீரைத் துடைத்து மறைத்தார் தனலட்சுமி.

"பூவிமா. எப்போடா வந்த? மாப்பிள்ளையும் வந்திருக்காரா?" என்று ஒன்றும் அறியாதவர் போல கேட்டார்.

அவர் வேண்டுமென்று மறைக்கவில்லை. எங்கு யாழினியை காணவில்லை என்று கூறி அவளைப் பற்றி மாப்பிள்ளை குடும்பத்தினர் தவறாக நினைத்துவிடக் கூடுமோ என்ற பயத்தில் அவ்வாறு செய்தாள் தனலட்சுமி.

"அம்மா. கண்ணுலாம் கலங்கியிருக்கு? என்ன விசயம்னு சொல்லுமா? கல்யாணம் ஆகி ஒரே நாள்ல நான் மூணாவது மனுசி ஆகிட்டேன்ல" என்றாள் ஆதங்கத்தோடு.

"பூவிமா அப்படில இல்லைடி. அது வந்து மாப்பிள்ளை." என்று இழுக்கும் போதே இருவரது சத்தம் கேட்டு அங்கு வந்தான் பிரபஞ்சன்.

"என்னாச்சுங்க அத்தை. ஏன் பதட்டமா இருக்கீங்க? ஆமா யாழினி எங்க?" என்றவனது அடுக்கடுக்கான கேள்வியில், அழுதே விட்டார் தனலட்சுமி.

"யாழி காலேஜ் போய்ட்டு இன்னும் வீட்டுக்கு வரலை மாப்பிள்ளை. எனக்கு ரொம்ப பயமா இருக்கு." என்றவரின் பதிலில் இருவரும் ஒரு சேர அதிர்ச்சி அடைந்தனர்.

"என்ன சொல்றீங்க அத்தை. எங்களுக்கு போன் பண்ணிருக்கலாம்ல அத்தை."

"அவ வந்துடுவானு நினைச்சேன் மாப்பிள்ளை." என்றவரது குரலேக் காட்டியது அச்சத்தினை.

"என்னமா. மணி ஏழு ஆகுதுமா அவளுக்கு மூணு மணிக்கே காலேஜ் முடிஞ்சிடும்ல இவ்ளோ நேரம் ஆகியும் வரலை. ஒரு வார்த்தை சொல்றதுக்கு உங்களுக்கு அவ்ளோ கஷ்டமா. நான் வேற ஒருத்தி ஆகிட்டேன்ல?" என்றவள் வார்த்தைகளை அழுத்திக் கூறினாள்.

"டென்ஷன் ஆகாத பூவி. அத்தை நான் போய் பார்க்குறேன். நீங்க எதுவும் வருத்தப்படாதீங்க. அப்புறம் பூவி அத்தைகிட்ட சண்டை போடாத, ஆறுதலா இரு." என்றவன் உறுதியாக கூறினான்.

"அவ என் தங்கச்சி. அவ காணோம்னு வருத்தப்படாமல் நான் என்னப் பண்ணுவேன்." என்றவள் கோபத்தை அவனிடம் காட்ட,

"ஒரு நிமிசம் அத்தை." என்று தனலட்சுமியிடம் கூறியவன், பூவினியை அங்கிருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

"பைத்தியமாடி நீ. அவ என் மச்சினிச்சி அவளை தேட மாட்டேனா நானு." என்று அழுத்தமாக அவளது தோளை பற்றிக்கொண்டு கூறினான்.

"இந்த உறவு முறையே என்னால தான் வந்துச்சு. உங்களை கட்டிக்காமல் இருந்திருந்தால் என் தங்கச்சிக்கு இப்படி ஆகிருக்காது. இது மாதிரி ஒருநாள் கூட நடந்ததில்லை தெரியுமா?" என்று உணர்ச்சிவசத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பூவினி கோபப்பட,

"நிஜமாவே நீ பைத்தியம் தான்டி. சம்மந்தமே இல்லாமல் பேசுற? என்னை கல்யாணம் பண்ணதுக்கும் யாழிமா காணாமல் போனதுக்கு என்ன சம்மந்தம்? உங்கிட்ட பேசுற நேரத்துல நான் யாழினியை போய் தேடுறேன்." என்று பல்லைக் கடித்தவன் அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

பூவினியின் அருகில் வந்த தனலட்சுமியோ, "ஏன்டி இப்படி பேசுற?" என்று அழுதுக் கொண்டே கேட்டார்.

"ம்மா.. நீ பேசாத. எல்லாம் உன்னாலதான்." என்றவளது கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

"பூவிமா பயமா இருக்குடி. அவ எதாவது ரூபி" என்று கூறும்போதே தன் அன்னையை முறைத்தவளது கண்களில் அப்படி ஒரு ஆவேசம் தெரிந்தது.

"போதும் நிறுத்துமா. யாழி என் தங்கச்சி. அவளை மத்தவங்களோட கம்பேர் பண்றது நல்லாயில்லை. இனி இப்படி சொன்னா நான் மனுசியாவே இருக்க மாட்டேன்மா."

"இல்லைமா. எனக்கு அவ பக்குவமில்லாத வயசு தான் பயத்தை தருதுமா." என்று கலங்கியே விட்டார் தனலட்சுமி.

இவர்களது உரையாடல் வெளியே இருந்த பிரபஞ்சனின் காதுகளில் நன்கு கேட்க, அவனுக்குள் ஒரு நெருடல் தோன்றத்தான் செய்தது. இருந்தும் யாழியை தேட வேண்டும் என்ற உந்துதலில் வெளியே சென்றவனது கண்முன் வந்தாள் யாழினி.

அவளைக் கண்டதும். "யாழிமா" என்று அதிர்ச்சி கலந்த புன்னகையோடு அவன் கூற, பிரபஞ்சனையே கண்கள் அகலாமல் மலைப்பாய் பார்த்தாள் யாழினி.

அவனது சத்தம் கேட்டு வெளியே வந்த பூவினியும், தனலட்சுமியும் யாழினியைக் கண்டதும் தான் நிஜத்திற்கே வந்தனர்.

பூவினியோ, "யாழி எங்கடி போன?" என்று கேட்டுக் கொண்டே கட்டியணைக்க, அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்த தென்னவனோ, "முதல்ல யாழியை உள்ள அழைச்சிட்டு போங்க" என்றான்.

அவன் கூறுவதும் சரியெனப்படவே அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். நொண்டி நொண்டி நடந்தவளது பார்வை முழுவதும் பிரபஞ்சனையே பார்த்த வண்ணம் இருந்தது.

அவள் அவ்வாறு நடப்பதை பார்த்து கலங்கிய பூவினியோ, "என்னாச்சு யாழிமா? ஏன் இப்படி நடக்குற?" என்றவள் அவளது கன்னத்தை பிடித்துக் கேட்க, அகிலன் அறைந்ததில் சிவந்திருந்த கன்னத்தை அவள் தொட்டதும் வலியில் "அம்மா." என்று கூறியவளது முகத்தில் தெரிந்தது வலி.

தென்னவனுக்கு தான் இருப்புக் கொள்ளவில்லை. என்றும் புன்னகையை தவிழும் அவளது முகம் சிவந்து, கிடந்ததைக் கண்டு மனதால் நொந்துப் போனவன். வலியோடு அவளைப் பார்த்தான். வரும் வழியில் தெருமுனையில் அவள் நின்றக் காட்சி கண்முன் வந்தாடிச் சென்றது. பிரபுவோடு அவளைத் தேடியபடி வந்திருந்தவனுக்கு தெருமுனையில் தென்பட்டாள் யாழினி. அவளைக் கண்டதுமே ஓடிச் சென்றவன், அவளிடம் பேச பதில் எதுவும் பேசாதவள் சிலை போல் நிற்க, அவளைத் துளைத்தெடுத்து கேள்விக் கணைகளை கேட்க விரும்பாதவன், கையோடு வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அவளை.

பிரபஞ்சனுக்கோ யாழினியின் பார்வையும், அவளது நிலையும் எதோ தவறாகப்பட, அவளது அருகில் சென்றவன், "யாழினிமா என்னாச்சுடா? கால்ல எப்படி அடிப்பட்டுச்சு. உன் அத்தான் கிட்ட சொல்லுடா." என்று அவளது தலையை வருடிக்கொண்டே கேட்டான்.

தன் எச்சிலை விழுங்கியவள், அவனையே இமை மூடாமல் பார்த்துக் கொண்டே பேசத் தொடங்கினாள்.
 

Dhivya98

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 16

தன்னை காணவில்லை என்ற கவலையில் அழுது கரைந்த அம்மாவின் கலங்கிய முகம், அக்காவின் துடிப்பு, அதில் புதிதாக சேர்ந்துக் கொண்ட அத்தானின் பாசம் என அனைவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தவள், இறுதியாக தனது தலையை பாசமாக வருடிக் கொண்டே கேள்வியைக் கேட்கும் பிரபஞ்சனையே அழுத்தமான பார்வைப் பார்த்தாள்.

அகிலனையும், பிரபஞ்சனையும் அருகே நிற்க வைத்தாள். ஒரு துளி அளவு வித்தியாசம் கூட சொல்லிவிட முடியாது. அந்த அளவிற்கு ஒரே உருவ அமைப்பைக் கொண்டிருந்தனர். ஆனால் குணம் மட்டும் முற்றிலும் வேறாக அல்லவா இருந்தது. அது எவ்வாறு சாத்தியம்? என்று அவளின் சிந்தைகளில் எண்ண அலைகள் ஒவ்வொன்றாய் ஓடிக் கொண்டிருந்ததால்,
பிரபஞ்சனது கேள்விக்கு பதில் அளிக்கத் தடுமாறினாள்.

"அது வந்து." என்று யாழி தயங்க,

"யாழி என்னடி ஆச்சு உனக்கு? எதுனாலும் அக்காகிட்ட சொல்லு? கன்னம் வேற வீங்கியிருக்கு." என்ற பூவினியோ, தன் தங்கையின் கன்னங்களை ஆறுதலாக பற்றியிருந்தாள்.

யாழினியின் முன்பு முட்டிப்போட்டு அமர்ந்த பிரபஞ்சனோ, "யாழிமா. தைரியமா சொல்லுடா. என் யாழிமா எவ்வளவு போல்டான பொண்ணு. இப்படி பேசவே தெரியாத பாப்பா மாதிரி அமைதியாக இருப்பானு நான் எதிர்பார்க்கவே இல்லைமா?" என்று கூறும்போதே அந்த பாப்பா என்ற வார்த்தையில் அங்கு பரிதவிப்போடு நின்றிருந்த தென்னவனையும் ஒரு பார்வை பார்த்தாள்.

"அத்தான் நான் காலேஜ் விட்டு வரப்போ, ஒரு டூவீலர் வேகமா வந்தது. அது இடிச்சிடுமோனு பயந்து நான் நகரும் போது, கல் தடுக்கி விழுந்துட்டேன். விழுந்தது தான் நியாபகம் இருக்கு அப்புறம் மயங்கிட்டேன். அங்க இருக்கவங்க ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனாங்க. காலுக்கு காயத்துக்கு மருந்து போட்டு விட்டாங்க. மயக்கம் தெளிஞ்சதும், நான் பஸ் பிடிச்சு, தெருமுனையில இருக்க பஸ் ஸ்டாப்கிட்ட வந்துட்டேன். அப்போதான் உங்க தம்பியை பார்த்தேன். அவரு இங்க வீட்டுக்கு கூப்பிட்டு வந்தாங்க." என்றவள் தோன்றியது எல்லாம் அவிழ்த்துவிட, பிரபஞ்சனுக்கோ குழப்பமாக இருந்தது.

பூவினியும், தனலட்சுமியும் ஒரு நிமிடம் பதறிப் போயினர்.

"அவ அப்போவே சொன்னா? இன்னைக்கு காலேஜ் போகலைனு? நான்தான் கேட்காமல் தப்பு பண்ணிட்டேன். யாழி காயம் பலமா அடிபட்ருக்கா? ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வருவோமாடி?" என்று கலங்கியபடி கேட்டார் தனலட்சுமி.

"அம்மா ஹாஸ்பிடல்ல இருந்து தானே வந்திருக்கா. நீ கொஞ்சம் அமைதியா இருமா. போய் அவளுக்கு குடிக்க எதாவது கொண்டு வாங்க." என்றவள் தன் தங்கையை தன் தோளோடு சாய்த்துக் கொண்டவள்,
"அடி பலமா யாழிமா?" என்றாள் கண்ணீரோடு.

"அய்யோ அக்கா நீ அம்மாவைவிட மோசமா இருக்க? கண்ணைத் தொட மொதல்ல. எனக்கு சின்ன அடிதான் அதிர்ச்சில தான் மயங்கிட்டேன்." என்று தன் கவலைகளை உள்ளுக்குள் மறைத்தபடி புன்னகைத்துக் கொண்டே அதட்டினாள்.

தென்னவனோ அதிர்ச்சி ஒருபுறம் குழப்பம் ஒருபுறம் அவளையே ஏறிட்டவனுக்கு, அவள் மறைப்பது அப்பட்டமாக தெரிந்தது. அவளிடம் அதைப்பற்றி பேச வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டவன், பிரபஞ்சனிடம் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டே அங்கிருந்து சென்றான்.

பிரபஞ்சனும் அதற்கு மேல் யாழியை கேள்வியால் துளைக்க வேண்டாம் என்று நினைத்தவன், வெளியில் அமைதியாக இருந்தாலும், யாழினியை கூர்ந்து கவனித்துக்கொண்டே தான் இருந்தான்.

நேரங்கள் செல்ல, யாழிக்கு தன் கைகளாலே உணவூட்டி, அவளை உறங்கவைத்துவிட்டு, பிரிய மனமே இன்றி பிரபஞ்சனோடு வீட்டிற்கு வந்திருந்தாள் பூவினி.

காலையில் சென்றிருந்த மகனும் மருமகளும் இரவு வந்து கதவை தட்டவும், கதவினை திறந்தார் தாமரை.

"எப்போ வரிங்க இரண்டு பேரும்? போன் பண்ணி தகவல் சொல்ற பழக்கமே இல்லை... சரி சாப்பிட்டீங்களா?" என்று அதட்டலில் தொடங்கி அக்கறையோடு வந்தது தாமரையின் வார்த்தைகள்.

"சாரிங்க அத்தமா. வர வழியில வீட்டுக்கு போயிருந்தோம். அங்க" என்று பூவினி தொடங்கும் முன்னரே தொடர்ந்தவன்,

"அங்கயே சாப்பிட்டு வந்துட்டோம்மா. இனி எதுனாலும் போன் பண்ணி சொல்றோம். இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க ஜட்ஜ் அம்மா." என்று விளையாட்டாக கூறிமுடித்தான் பிரபஞ்சன்.

"இவன் இருக்கானே" என்று சிரித்த தாமரையோ "சரிசரி போய் தூங்குங்க. சின்னவனும் சாப்பிடாமலே போய்ட்டேன். நாளைக்கு பூரி தோசைனு வாங்க, உனக்கும் உன் தம்பிக்கும் பழைய சாதத்தை கரைச்சு கொடுக்குறேன்."

"அம்மா உன் கையால எது கொடுத்தாலும் அமிர்தம் தான்."

"போதும்டா. ஐஸ் மழை பொழிஞ்சது. பூவிமா அவனை உள்ள கூப்பிட்டு போமா." என்று மகனிடம் தொடங்கி மருமகளிடம் கூறியவர் அங்கிருந்து தனது அறைக்குச் சென்றுக் கொண்டார்.

பூவினியோ, அவனைக் கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்றவள், பின் குளியலறைக்கு சென்று, கைகால் முகம் அலம்பியபடி, முகத்தை துண்டாள் ஒற்றிக் கொண்டே வெளியே வந்தாள். அவன் அறைக்குள் வராததைக் கண்டவள், உடை மாற்றிட எண்ணி புடவையை அவிழ்க்க செல்லும் போதே, கதவை திறந்துக் கொண்டு வந்தான் பிரபா.

அவளைக்கண்டதும், முந்தானையால் தன்னை சுற்றி மறைத்துக் கொண்டவள், "கதவை தட்டிட்டு வர பழக்கம் இல்லையா?" என்று கேட்டதுமே,

"கதவை தாழ் போடுற பழக்கம் உனக்கு இல்லையா?" என்று சலிக்காமல் எதிர் கேள்வி கேட்டான் பிரபஞ்சன்.

'ரொம்பதான்.' என்றவள் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொள்ள,

"பூவி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்?"
என்றான் குரலை செருமியபடி.

"என்ன பேசனும்?" என்று சொல்லிக்கொண்டே தன் வளையல்கள், தலையில் இருக்கும், பூ என ஒவ்வொன்றையும் கழற்றிக் கொண்டிருந்தாள் பாவையவள்.

"நான் முக்கியமான விசயம் பற்றி பேசப் போறேன். கொஞ்சம் என்ன கவனிச்சா நல்லாருக்கும்." என்றவன் கூர்ப்பார்வை பார்க்க,

"சரி சொல்லுங்க." என்றவள் அவனை கவனிக்கத் தொடங்கினாள்.

"யாழி சொன்ன பதில் எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு. நம்ம யாழி நம்மகிட்ட எதையோ மறைக்குற மாதிரி தோணுது. எப்போதும் என் கண்ணை பார்த்து பேசுவா? இன்னைக்கு அவ அப்படி பேசலை. நம்ம இது பத்தி அவகிட்ட, இன்னொரு முறை பேசனும்னு நினைக்குறேன்."

"நான் தனியாவும் அவகிட்ட பேசிட்டேன். அவ உண்மையை தான் சொல்றா? இது நாள் வரை என் யாழி என்கிட்ட பொய் சொன்னது இல்லை. அதுனால உங்களுக்கு இதுல எந்த கவலையும் வேண்டாம்." என்று கூறிக்கொண்டே இத்தோடு பேச்சு முடிந்தது போல எழுந்தவள், இரவு ஆடையை மாற்றுவதற்காக குளியலறைக்குள் நுழையச் சென்றவளை தடுத்து நிறுத்தினான் பிரபஞ்சன்.

"பாப்பு. கொஞ்சம் அவ கன்னத்தை பாரு அறைஞ்ச மாதிரி இருக்கு. இதுலயே தெரியலையா எதோ விசயம் இருக்குனு?" என்று தன்மையாக எடுத்துரைத்தான்.

"இங்க பாருங்க. இந்த பேச்சை இதோட நிறுத்துங்க. அப்படி எதாவது இருந்தால் நான் பார்த்துக்கிறேன். அவ என் தங்கச்சி." என்றவளது பதிலில் கோபம் துளிர்க்க,

"என்ன பேச்சு இது. அவ எனக்கும் சொந்தம் தான். அந்த வீட்டு மூத்த மருமகனா எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. இனி ஒரு தடவை இப்படி பிரிச்சு பேசுன அவ்வளவுதான்." என்று ஆள்காட்டி விரல் நீட்டி எச்சரித்தான்.

அதில் கடுப்படைந்தவள், "என்ன உரிமை பொல்லாத உரிமை. நான் கொடுக்காமல் அந்த உரிமை உங்களுக்கு இல்லை அது மொதல்ல நீங்க புருஞ்சுக்கோங்க. என் மேலயும் சரி, என் குடும்பத்து மேலயும் சரி, நான் சரினு சொல்லாமல் உங்களுக்கு உரிமை கிடையாது." என்றவள் முறைத்துக் கொண்டே நகர,

அவளது கைகளை அழுந்த பற்றியவன், தன்புறம் இழுத்ததில் அவன் மீதே மோதி நின்றாள் பூவினி. அவள் கைகளில் வைத்திருந்த மாற்று உடை கீழே விழுந்திருக்க, அவனையே அதிர்ச்சியோடு ஏறிட்டது பூவினியின் விழிகள்.

அவனோ தனது திடகாத்திரமான புஜங்களைக்கொண்டு, அவளது இடையை வளைத்தவன் அழுத்தமான தன் பார்வையை அவள் மீது செலுத்தியிருந்தான்.
அந்த பார்வையே கூறியது அவளிடம் இருக்கும் தனக்கான உரிமையை.

"முதல்ல விடுங்க பிரபஞ்சன்." என்றவள் கோபத்தோடு பார்க்க,
அவளது பார்வைக்கு அசராதவன்,
'நீ என்ன வேணா முறைச்சுக்கோ, இன்னைக்கு உன்னை விட மாட்டேன்' என்பது போல பதில் பார்வைப் பார்த்தான்.

தன்னிடம் உள்ள மொத்தபலத்தையும் திரட்டியவள், அவனைப் பிடித்து தள்ளப் பார்க்க, அவனது உடும்புப்பிடியோ, அதற்கு சிறுதும் இடம் கொடுக்கவில்லை.

"இப்போ சொல்லு. கொஞ்ச நேரம் முன்னாடி, என்னென்ன சொன்னியோ அதை இப்போ சொல்லுடி பார்ப்போம்." என்று அடிக்குரலில் சீறினான்.

அவனது அதிரடி செயலில் அதிர்ந்து போய் நின்றவள், "எனக்கு ஒன்னும் பயமில்லை. என் விசயத்துல தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் இல்..." என்று அவள் வார்த்தைகள் முடிக்கும் முன்னரே முடித்துவைத்தவன், அவளது இதழ்களை தன் இதழ்களோடு பொருத்தியிருந்தான் அதிரடியாக.

அவனது செயலை சிறிதும் எதிர்பாரதவள் அவனை விட்டு விலக முற்பட்டும் முடியாமல் போக, இயலாமையால் அவளின் இரு விழிகளும் கண்ணீரை சுரந்திருந்தது.

அவளது கண்ணீர் அவனது கன்னத்தை நனைத்த நொடி, அவளைவிட்டு விலகத்தான் நினைத்தான். ஆனால் மாறாக, அப்படி என்ன தன் மீது வெறுப்பு? என்ற கேள்வி அவன் மனதில் ஆதங்கமாக எழ, அவளை விடாமல் அழுத்தமான தன் காதலினை முத்தத்தால் பறைச்சாற்றினான் பிரபஞ்சன்.

அதிரடியாக தொடர்ந்த முதல் முத்ததில், அப்படியே மென்மையை கொஞ்சம் கொஞ்சமாக பறைச்சாற்றினான். அவனையும் அறியாமலே உணர்ச்சிவசப்பட்டவன் பெண்ணவளின் இதழ் தரும் சுவையில் கிறங்கிதான் போனான்.

ஒரு கட்டத்தில் அவள் மூச்சு தடைப்பட்டு போவதை உணர்ந்தவன், அவளைவிட்டு விலக, தனது கலங்கிய சிவந்த விழிகளோடு அவனை ஏறிட்டவளது கண்களில் தெரிந்தது பெண்ணவளின் வலி.

அவளது வலியைக் கண்டதும் தனது செயலின் வீரியத்தை உணர்ந்தவன் அவனது கன்னங்களை தன் இரு கைகளால் ஏந்தி, "பாப்பு சாரிடி." என்று இதமாக கூறியவன் கண்களாலே மன்னிப்பை யாசிக்க, அதன்பின் அவள் கூறிய வார்த்தைகள் அவனை நெருஞ்சி முள் கொண்டு அவனைத் தாக்கியது.

இங்கு யாழினியோ, தூங்க முயற்சி செய்தும் அவளது தூக்கம் தொலைந்து இருக்க, தனது உயிருக்கும் மேலானவர்களிடம் பொய்யுரைத்தது எண்ணி கலங்கிதான் போனாள் பெண்ணவள்.

தனது அருகில் படுத்திருந்த தாயின் முகத்தை பார்த்தவள், "சாரிமா" என்று சத்தமின்றி கேட்டாள் அவரது உறக்கம் கலையாதவாறு.

அகிலன் அவளை நெருங்கி வந்த காட்சிகள் மீண்டும் அவளது கண்களில் வந்துச் சென்றது. அவள் உடுத்தியிருந்த ஈர உடைகளையே பார்த்தவன், அவளை நெருங்கி வர, திருதிருவென விழித்தாள் பெண்ணவள்.

மெல்ல அவளை நெருங்கியவன், அவளின் கணுக்காலை பிடித்து தன்புறம் இழுக்க,

"என்ன பண்றீங்க?" என்று கேட்டே விட்டாள் யாழினி.

அவளது கேள்வியில் அவனை முறைத்தவன், "உன் வேண்டாத வேலையோட விளைவை தான் பார்க்குறேன். கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?" என்று முறைத்தபடியே கணுக்காலினை சுட்டிக்காட்ட, அப்போது தான் பார்க்கிறாள் தன் காலில் அடிப்பட்டு இரத்தம் கசிவதை.

அவள் விழும்போது அங்கிருந்த கூர்மையான ஆணி ஒன்று அவளது காலினை பதம் பார்த்து இருக்க, அவன் வந்துவிடுவான் என்கிற அதிர்ச்சியில் அதனை கவனிக்கத் தவறியிருந்தாள் யாழி.

அதன்பின்னரே வலியையும் உணர்ந்தவள், "அம்மா.. ஆ.. வலிக்குதே." என்று குழந்தைப்போல அழுக,

'என்ன நடிப்பு நடிக்குற? ஆளாக்கு சைஸ்ல இருந்துட்டு' என்று தனக்குள்ள கூறிக்கொண்டவன், "வாயை மூடு." என்று முறைத்தபடி, அங்கிருந்த முதலுதவி பெட்டி ஒன்றை எடுத்து வந்தான்.

அவளும் அவனது அதட்டலில் கப்சிப்பென்று தனது வாயை மூடிக்கொண்டவள் அமைதியாக பார்க்க, அவனோ பஞ்சினை டெட்டாலில் நனைத்து அவளது கால்களை தன் ஒருகைகளால் பிடித்துக்கொண்டே துடைத்துவிட்டவன், பின் மருந்துக் களிம்பினை வைத்துவிட்டு கால்களை இலகுவாகவும் அல்லாது, இறுக்கமாகவும் அல்லாமல் கட்டை கட்டிவிட்டான்.

"குட். தண்ணீ மட்டும் படாமல் பார்த்துக்கனும் சரியா?" என்று கூறிக்கொண்டே அவளது தலையை தன்மையாய் வருடியபடி திரும்பியவனுக்கு, அப்போதுதான், மிருதுவாக தான் நடந்துக்கொண்டது நினைவுவர, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் அவளை திரும்பியும் பார்க்காமல் அவ்வறைவிட்டு நகர, அவளது சொல்லில் தடைப்பட்டு போய் சிலையென நின்றான் அகிலன்.

அவளோ கண்கள் கலங்கியபடி, அவனையே பாசத்தோடு பார்த்தாள். "நீங்க என் ஹீரோ தானா?" என்று நினைவு வந்தவளாக கேட்டவள், அடுத்துக் கேட்ட கேள்வியில் அவனது முகம் பாறாங்கல்லை போன்று இறுக்கத்தை சுமந்தது.

பின் கோபத்தில் அவளது அருகில் வந்தவன், அவளின் கன்னங்களை ஓங்கி அடித்து பதம் பார்த்தபடி,

"இப்போ சொல்லு? நான் உன் ஹீரோவா?" என்று முறைத்ததில் கண்கள் கலங்கிப் போய் அவனையே பார்த்தாள்.

அதில் அவளது விழிகளில் அத்தனை வலி அப்பட்டமாக தெரிந்தது? ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறார் என்றே கேள்வியே அவளது விழிநீரில் வழிந்தபடி இருந்தது.

அவளது அழுத விழிகள் மேலும் எரிச்சலை ஏற்படுத்த அவளது கைகளை பற்றியவன் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து வர, அவளால்தான் நடக்க இயலாது போனதில், வலியில் கத்தியேவிட்டாள்.

"வலிக்குது அத்தா..." என்று சொல்லத்துடித்த வார்த்தைகளை மென்று தனக்குள் அடக்கியவள் "ரொம்ப வலிக்குது" என்று கண்ணீரோடு கூறினாள்.

கோப ரோகைகள் அவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிய, உடனே தன் இருகைகளிலும் அவளை ஏந்தியவன், தனது காரில் அவளை அமர்த்திக் கொண்டு, அவளை எங்குக் கடத்தினானோ, அதே தெருமுனைக்கு அழைத்து வந்திருந்தான்.

"இறங்குடி. நீ நான்தான் உன்னைக் கடத்துனேனு சொன்னால் கூட கவலையில்லை. ஆனால் இந்த நிமிசம் என் கண்ணுல படாமல் ஓடிடு. இல்லைனா சாவடிச்சிடுவேன்." என்று பற்களை கடித்துக்கொண்டு கூறியதில், அவனது செயல் அவளை அச்சம் கொள்ளத்தான் செய்தது.

மகிழுந்தை விட்டு இறங்கியவள், அவனை அடிப்பட்ட பார்வை பார்க்க, அவளது முகத்தைக்கூட பார்க்கப்பிடிக்காதவன், அங்கிருந்து காரினை விரைவாக செலுத்தியிருந்தான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், அவளைத் தேடிக்கொண்டே வந்திருந்த தென்னவன் கண்களில் அவள் பட்டுவிட, அவனோ அவளைப் பார்த்ததும் நிம்மதி அடைந்தவன் அவளது அருகில் விரைந்துச் சென்றான்.

"பாப்பா. ஆர் யூ ஒகே. உன்னை எங்க எல்லாம் தேடுறது?" என்று கலக்கமாக வந்தது அவனது வார்த்தைகள்.

அவள்தான் பதில் பேசும் நிலையிலேயே இல்லையே, அழுத விழிகளோடு அவனை ஏறிட்டவள் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டு அழுதாள்.

தன் தோளில் சாய்ந்தவளுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்துதான் போனான் தென்னவன். அவள் அழுவதைக் கண்டு, அவனையும் மீறி அவனது கண்கள் கலங்கிவிட, அவள் அறியும் முன் தனது கண்களைத் துடைத்துக் கொண்டான்.

"என்னாச்சு பாப்பா? ஏன் அழுகுற? உனக்கு என்ன தான் ஆச்சு? வா முதல்ல வீட்டுக்கு போவோம்." என்று அவளை எவ்வாறு சமாதானம் செய்வது என்று தெரியாமல் தடுமாறிப் போனான் தென்னவன்.

அவனைவிட்டு விலகியவள், "சாரி. எனக்கு அடிபட்டிருக்கு கால்ல அதான் அழுதுட்டேன்." என்று கூறியவள் உண்மையை கூறாமல் போனதன் விளைவை தாமதமாக தான் உணர்ந்துக் கொள்ளப் போகிறாள் என்பதை அவள் அறியவில்லை.

அதன்பின்னர் தென்னவன் கேட்டும் அவள் எதையும் கூறாமல் மறைத்திருக்க, பிரபுவிடம், இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் தென்னவன்.

இவ்வாறு நடந்தவற்றை நினைத்தவளுக்கு தன்னையும் மீறி கண்கள் கலங்கி போக, "ஏன் இப்படி பண்றீங்க? நீங்க ரொம்ப நல்லவங்க தானே. எனக்கு இப்போதான் எல்லாமே நியாபகம் வருது. உங்களை பிடிச்சதுனால தான் பிரபஞ்சன் அத்தானையும் எனக்கு பிடிச்சுது. உங்க முகத்தை நான் எப்படி மறந்து போனேன்." என்று தனக்குதானேக் கேட்டவள் சத்தமாக அழுகவும் முடியாமல் மனதிற்குள்ளே அழுதுக் கரைந்தவளையே நினைத்துக் கொண்டிருந்தது மற்றொரு உள்ளம். நாளை வரும் விடியலோ, அவளுக்காக மற்றொரு அதிர்ச்சியை பரிசளிக்க காத்திருந்தது....
 
Status
Not open for further replies.
Top