ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9 இனி என்னென்ன நேர்ந்திடுமோ? கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
#priyareviews

கதை எண் 9

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

சத்யதேவ் தன் பெயரில் இருக்கும் சத்தியத்திற்கு எதிராக சில வேலைகள் செய்கிறான் அதனால் இவனுக்கு பாதிப்பு நிகழுமா?? நாயகிக்கும் இவனுக்கும் சுத்தமா ஒத்து போகாத நிலையில் அவளை பழி வாங்க போவதாக சொல்லி திருமணம் செய்ய இந்த திருமணம் இரு மனங்களை இணைக்குமா?? விட்டு விலகுமா??

சத்யா இறுக்கமானவன் யாருக்கும் அடங்காதவன் ஒரு முடிவு எடுத்தால் எடுத்தது தான் யாரு பேச்சையும் கேட்க மாட்டான் தன் முடிவில் இருந்து எக்காரணம் கொண்டும் இறங்கி வர மாட்டான், தாய், தம்பி, நண்பன் யாராலும் மாற்ற முடியாதவன் தன் துணை பேச்சாவது எடுபடுமா?? இவனின் காதலும் அந்த காதலுக்காக இவன் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வாவ் ?????? அருமையான கணவன், சிறந்த காதலன் உன்னதமான மனிதன் ???

அஸ்வின் சரியான கலட்டா ஆள் இவன் ? இவனின் குறும்புதனமும், இவனின் தாய் பாசம், காதல், அந்த காதலில் வரும் விஷம் தோய்ந்த வார்த்தையால் ஏற்படும் வலி அதில் இருந்து மீழ்வது அதுவும் அந்த அநியாயத்தை கேள்வி பட்டபின் இவனின் கோபம் சிந்தித்து செயல்படும் விதம் ???

கவிதா கொஞ்சமே வந்தாலும் சிறந்த தோழியாக இருக்கிறாள், காதலியாக சொதப்பி இருந்தாலும் மனைவியாக சரி செய்வாளா??

சுமித்ரா தென்றலாக இருப்பவள் புயலாக மாற என்ன காரணம்? யார் செய்த தவறு??

விமல் இவனின் கதபாத்திரமும் கதையில் இவனின் முக்கியத்துவமும் மிகவும் சிறப்பு அருமையான மனிதன் ☺️☺️

பானுமதி அம்மா சராசரி தாயாக இருக்கும் இவரு அஸ்வின் க்கு செய்யும் அட்வைஸ் சத்யனிடம் பம்முவது ?? இப்படி இருக்கும் இவரே காளி அவதாரம் எடுக்க என்ன நடந்து இருக்கும் ???

தியா இவளின் காதலும், பயமும், இவளின் அவனுக்கான ரசனையும் அநியாயத்தை கண்டு பொங்கி சரியான பாதையில் உற்றார் துணையோடு செல்வது எல்லாம் செம ??

எவனை வேணாலும் நம்பலாம் கூட இருப்பவனை எப்போவுமே நம்ப கூடாது ???????

அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று கொஞ்சம் கூட யூகிக்க முடியாமல் தியேட்டர்ல சீட் நுனியில் உக்காரும் நிலைமையில் வைத்து அருமையான முடிவு எங்களின் டென்ஷன் உங்களின் வெற்றி ??

ட்விஸ்ட் என்பதற்கு சிறப்பான ஜஸ்டிஸ் பண்ணி இருக்கீங்க ???

இன்னும் இன்னும் நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???

லிங்க் ???

Wow...சூப்பர் அக்கா. அழகான விமர்சனம் சஸ்பென்ஸ் உடைக்காமல் அழகா சொல்லிட்டீங்க. மிக்க நன்றி அக்கா உங்களின் ஒவ்வொரு வீடியோ மீம்ஸ் ரிவ்யூ வும் ரொம்ப அழகு.thank u so much akka ❤️❤️
 

T21

Well-known member
Wonderland writer
அருமையான கதை ?????, அழகான மன நிறைவான நிறைவு அருமை ????, வாழ்த்துக்கள் ????
மிக்க நன்றி சிஸ்❤️❤️
 

T21

Well-known member
Wonderland writer
Super... Super.. Super...
சத்யாவின் காதல் ரொம்ப அழகு...
பானுமதி ரொம்ப கிரேட்...
விஷ்வா மாதிரி கொடும்பாவியெல்லாம் இதுக்கு மேலயே டார்ச்சர் பண்ணி கொல்லனும்....
அருமையான கதை ???????????
மிக்க மிக்க நன்றி சிஸ்❤️❤️உங்களின் ஆதரவிற்கு.
 

T21

Well-known member
Wonderland writer
இனி என்னென்ன நேர்ந்திடுமோ.....

டைட்டில்கேத்தா மாதிரி இப்ப என்ன ஆகும் நு நேல் பைட்டிங் மோமெண்ட்லையே ஸ்டோரி மூவ் ஆச்சி???

சத்யதேவன் ஒரு ஃபேமஸ் லாயர். உண்மை பக்கம் இல்லாம எந்த கேஸ் எடுத்தாலும் வெற்றி மட்டும் தான் அவன் இலக்கு. எதுலையும் தோர்க்க கூடாதுனு ஒரு கொள்கை ஏன் வெறி கூட சொல்லலாம். அப்படி அது அவனுக்கு வாழ்கையில் என்ன தேடி தந்தது????

சந்தியா இவ இவனுக்கு அசிஸ்டென்ட் லாயர் ஆ இருக்கா. ரொம்ப பயந்த சுபாவம், அவன் முன்னாடி மட்டும்????.

இவளா பழிவாங்க கல்யாணம் பண்றான் நம்ம லாயர் சார். பழிவாங்கினானா இல்லையா நு கதையில்......

சத்யா வா கல்யாணத்துக்கு முன் & பின் பிரிக்கலாம். அவளோ மாற்றம் அவன் கிட்ட. ஏண்டா பழிவாங்க கல்யாணம் பண்ணிட்டு என்னடா பண்ற நு தான் நம்மள குழப்பி விடுவான். ஒரு வேலை ஹீரோயின் ஆர்மி ஆ பார்த்து பயந்துட்டானோ நம்ம பய???. அப்படி என்ன தான் பண்ணினான் அது கதையில்.....

தியா சத்யாக்கு மட்டும் அவன் செல்ல தியா, என்னடா செல்ல பேரா நீ கலக்கு செல்லம் அப்படினு நம்ம எல்லாம் நினைச்சா???. ஷாக் ஆகதிங்க இப்பவும் செல்ல பேர் தான் பட் ஆதுள்ள செம்ம டுவிஸ்ட்???.

அஸ்வின் சாக்லேட் பாய், அம்மாவுக்கு செல்ல பிள்ள. ஆன இவன் காதல் சோ கியூட். ரொம்ப நல்லவன்???.

கவிதா சந்தியா ப்ரெண்ட், நம்ம அஷு வா அழ வெய்க்கறவா, அதான் பா அவனுக்கு ஜோடி???. என்னடா பயபுள்ள சீக்கரம் லவ்க்கு ஓகே சொல்லிடாலே பார்த்தேன் பட் அப்பறம் செம்மையா சொதப்பி எங்க பேபி ஆ அழ வெச்சி அவளும் அழ மாதிரி சீன் போட்டு ஒரு வழியா கல்யாணமும் முடிஞ்சிருச்சு❤️❤️❤️.

விஷ்வா????????????.........

சுமித்ரா சாது மிரண்டால் காடு கொள்ளாது. எவ்ளோ பொறுமையா அன்புக்கு அடிமையா இருந்தாலோ அதுவோ தான் ஏமாற்ற பட்டுடோம் நு தெரிஞ்ச நிமிஷம்???, ஆன சில நிமிஷங்கள் அப்பறம்???.

விமல் பாவம் இவன், ஏன்னா சத்யா ஓட ப்ரெண்ட். ரொம்ப நல்லவன், நிறைய ஹெல்ப் செய்து இருக்கான் எல்லாருக்கும் முக்கியமான நேரத்தில்.....

பத்மாவதி இந்த அவதாரங்களை பெத்த புண்ணியவதி???. அன்பான பெண்மணி, மாமியார் & அம்மா. லாஸ்ட் ஆ அவங்க எடுத்த போல்ட் டெசிஷன் ????.

இந்த அவதாரங்களுக்கு அப்பா இருக்காரு பட் சாரி சார் உங்களை ரைட்டர் ஜீ வெறும் மிக்சர் மட்டும் சாப்பிட விட்டுடாங்க???????.

விஸ்வநாதன் தியா டாடி, ஆன பாவம் அவர் வாழ்க்கையில் ரொம்ப துன்ப பட்டுடார், இனியாவது ஹேப்பி ஆ இருக்கட்டும்.

ஜோக்ஸ் அபர்ட், ரொம்ப சென்சிடிவ் ஆன ஸ்டோரி. நா எதையும் ப்ரேக் பண்ணி சொல்லல, நீங்களா படிச்சி ஜஸ்ட் ஃபீல் தீ நேல் பைட்டிங் மோமெண்ட்.

இத கண்டிப்பா சொல்லியே ஆகனும் எதிலையும் அவசரம் காட்டாம சும்மா நின்னு அடிச்சிருக்கான் சத்யா?????(ஹீரோ ஆர்மி டா???)

சில இடத்தில் கண் கலங்குச்சின கூட லாஸ்ட் லா கண்டிப்பா ஸ்மைல் இருக்கும்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????.
Wow அழகான review அக்கா❤️❤️மிக்க நன்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க....ஹீரோவோட அப்பாவை கூட விட்டு வைக்காம. Thank u so much sis ❤️❤️
 
Top