Mahasharvesh
Member
#இனி என்னநேரந்திடுமோ #no:9 நாயகன் : சத்யதேவன் நாயகி :சத்யா (a) தியா சத்யதேவ் பெயரில் இருக்கும் சத்யம் தொழில் இல்லை.ஆனாலும் இவனின் ஆளுமை ரசிக்கவே வைத்தது??.இவன் செய்யும் செயல் ஏன் இவன் இப்படி செய்கிறான் என்றுதான் தோன்றியது .சந்தியா பயம் கொண்ட பாவை.இவளுக்கு நடந்த கொடுமை வேதனையின் உச்சம்???.அஸ்வின் தாய் சொல்லை தட்டாத தனயன்.இவன் காதலை சொன்ன விதம் மிகவும் அழகு ❤❤.கவிதா இனிய தோழி.ஆனால் இவள் அஸ்வினிடம் நடந்து கொண்டது தான் வருத்தம் அளித்தது.ஆனாலும் அவள் மேல் தவறில்லை தன் தோழியின் நிலைமை கண்டு அச்சத்தின் பிரதிபலிப்பு ஆனாலும் அந்த கயவனுடன் அஸ்வினை ஒப்பிட்டது தவறு ?.விமல் சிறந்த தோழன்,சகோதரன்.சந்தியாவிற்கு செய்த உதவி மிகவும் சிறப்பு.சுமித்ரா சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி இவளுக்கு பொருந்தும் ?.உண்மை தெரிந்த பிறகு இவளின் அதிரடி அருமை.பானுமதி சிறந்த தாய் ??.தவறு செய்தது தனயன் என்று தெரிந்ததும் அவனுக்கு தன் கையால் தண்டனை கொடுத்த தெய்வம்.தன்னுடைய வளர்ப்பு பொய்த்து போய்விட்டதே என்று வருந்தும் இடம் உணர்ச்சி மிகுந்ததாக இருந்தது ??.விஸ்வதேவன் ??.நல்லவன் என்ற முகமுடியனிந்த நச்சுப்பாம்பு.பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவனே பெண்களை நாசம் செய்யும் கயவன் ???.இவனோடு கூட்டு சேர்ந்த ரகு,ராஜேஸ் இவர்களின் தண்டனைஇவன் கையால் கொடுத்தது அருமை. இவன் எந்த இடத்திலும் இவனின் தவறை உணரவில்லை ???.இவன் ஏன் வாழ்கிறோம் என்ற தண்டனை கொடுத்திருக்கலாம்.ஆனால் தன்னை பெற்ற தாயின் கையால் மரணம்.தியா என்கிற சத்யா இவளே கதையின் திருப்பம்.என்ன இந்த பெண்ணுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது ஆனால் இந்த பெண் இப்புடி இருக்க்கிறாளே என்ற குழப்பமாகவே இருந்தது.ஆனால் இவளுக்கு நடந்த கொடுமையே இவளை மாற்றி விட்டது என்று தான் நினைக்க தோன்றியது.ஆனால் தன் இரட்டை சகோதரியின் மரணத்திற்க்கு பழி வாங்க வந்தவள்.ஆனால் ஒவ்வொரு இடத்திலும் இவள் செய்யும் செய்ய போகும் செயலை சத்யன் கண்டுபிடித்து சொல்வது ரசிக்க வைத்தது.சத்யன் ❤தியா இவர்களின் காதல் அருமை..தியாவிற்கு உண்மை தெரிந்த பின் விஷ்வாவை பார்த்து பயபடுவது போல் வைத்தது ஏன்? விமல்,சுமித்ராவை கேள்விக்குறியோடு நிறுத்தியது தான் புரியவில்லை.இனி என்ன நேருமோ என்று எதிர்பார்ப்பு,திருப்பங்கள்,நிறைந்த ஆத்மர்த்தத்தமான கதை.இந்த போட்டியில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் ??????.(நல்ல வேலை நான் கதை fulla முடிஞ்சுதான் படிச்சேன்.ud வர வரைக்கும் என் நகத்தை கடிச்சு விரல்ல நகமே இல்லாம போயிருக்கும்.)