ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

9 இனி என்னென்ன நேர்ந்திடுமோ? கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
9 இனி என்னென்ன நேர்ந்திடுமோ? கதைக்கான விமர்சனங்கள்
 

Vinu Bala

New member
Super super super
Banumathi oru nalla amma than payianu therinja udane thandanai kuduthutanga romba great
Aswin he was a good human avan veetla irruka yellarukum pathu pathu seirathula irrunthu avan brother thappu senjanu avan oppose panrathu sema
Ana intha sathyan... theriyala... avan love panna ponnuku kastam athanala than avan brother ah yethirthana
Yena avan kasu vangitu kettavangalukaga support panni casela win panravana irrukane
Antha characterahyum diya kaka than mathuran lastla so avana ithula yentha vagaila sekka theriyala
Aana avan lovela unmaiya irrukan avaluku oru kastamu varavidama parthukitu avanga appavayum pathu avaluku time kuduthu avalayum jeyuchutan
He is a good family man
Romba nalla story sissy
Vetri pera vazhthukal
 
  • Love
Reactions: T21
வணக்கம் சகோதரிகளே ...

#இனி_என்னென்ன_நேர்ந்திடுமோ

#கதைஎண் 9

பொம்மு நாவலின் போட்டிக்கதை

துரிய கர்ண்ண அர்ஜூன வழித்தோன்றல்
ஒரே சூழ் உறையூல்..
விதிவிலக்கான ஒரு சூல் அதன் தனிபாதையில்
பாதையின் முகமூடி சுவடை எல்லாம் ..
களையும் தருணங்கள் ...
சாபவிமோசன தார்பரியங்களே..

ஈன்றபொழுதில் பெருது உவந்த தாய்
ஈற்றில் கலவர நிலையில் மீள் துவள்வது
வரமா?சாபமா? இங்கே இனி நேர்ந்தநிலை..

கண்ணீரில் உதித்த காதலாய் பல நிலைகள் கடக்க
முகம் மறைத்த திரைமறை காதலை என்னவென்பது.
சத்ய திய காதலின் உருமாரிய கலவையில்.. பல
இருட்டுக்கள் வெளிச்ச வீடாய்..ஒளிபெற்றதோ..!!❤❤

சத்யன்... ஹப்பா..!!என்ன ஒரு நேயன் நேசன். கண்ணீரின் வெளியோடு தன்னவளை நேசித்து சுவாசிக்கும் காதல் நிலைகள் மிகவும் மனதை நெகிழ்த்து சென்றது. நான் பார்க்க பலாபழம் உள்ளே நல் சுவையே என வந்து நிற்பது அசத்தல் .??

தன்னவளுக்காய் முகமூடி போட்டு பல திருட்டுக்கள் பிடிப்பது
இவனின் காதலின் ஆழத்தை உணர்ந்த நிலை. சத்யன் சத்யவான் தான்..தொழில் வேறு குடும்பம் வேறு இவனின் தாரகமந்திரம் .
எம் மனதோடும் நிறைந்து போனான்.??

அஷ்வின் ராமனுக்கு ஏற்ற லட்சுமணன். சுவாரசியங்கள் நிறைந்த காதல் இளவரசன் . அதையும் தாண்டி இவன் உறுமும் இடமெல்லாம் கைத்தட்டவே தோன்றியது.??

சந்(த்)தியா பட்டாம் பூச்சி நாயகி. சில போராட்ட போர்க்களத்தால் சாதனை பெண்ணாய்,பயந்தவளாய் , காதல் மறை காதலியாய்,மனைவியாய் என பல நிலைகளின் பங்குதாரி. ஆனாலும் அவளின் வலி அவள் மனதோடு.

சுமித்ரா பாவபட்ட சாதாரண குடும்ப மருமகள் .பெயருக்கேற்ற பொறுமைசாலி கடைசியில் எங்கே பொங்க வேண்டுமோ அங்கே
போர்த்தொடுத்து பொங்குவது சபாஷ் போட தோன்றியது.??

தாய் பானுமதி இவர் தெய்வ தாயே தான்!!!! இவரை தலைவணங்க தோன்றுகிறது .. இப்படியும் ஒரு தாய் அருமை... அருமை.. இவரின் பாத்திர படைப்பு.

சாணக்கிய வினையன் இவனை பற்றி சொல்லாமல் போவதே நன்று.. முகமூடி போர்த்திய திருந்தா மனித மிருகம்.??

ஆசிரிய தோழியே.. மிகவும் எம்மை எதிர்பார்ப்பை கூட்டவைத்து கதை நகர்த்திய விதம் மிகவும் நன்று. அதுவும் அந்தந்த கதாபாத்திரங்களுக்க நீங்கள் சூட்டிய பெயர்கள் மிகவும் பொருத்தமான ஒன்று சபாஷ்டா. ??

கதையில் ஒரு தோய்வு கூட இல்லாது கதை நகர்த்திய விதம் .கடைசிவரை அந்த நபரை எப்படி காட்டுவீர்கள் என எமை ஆச்சரிய படுத்த நீங்கள் கொண்டுவந்த அந்த ரகசிய நபரினை கண்டு நாம் அதிர்வு கொண்டோம். இப்படி யோசிக்கவில்லையே என்று.

இந்த கதை போட்டிக்கு சரியான தெறிவு கருவாக கொண்டு வந்ததிற்கு வாழ்த்துக்கள் ஆசிரிய தோழியே..??

குடும்ப உறவுகள்,பாசம்,சேட்டைகள், காதல், நட்பு,மற்றும் பாசவேஷம் என பல நிலைகளிலும்.. .. பெண்களை மோகிக்கும் மோகிகளை இனம் கண்டு அது யாராய் இருந்தாலும் தண்டனை நிச்சயம் உண்டு என கூறி சென்றது மிகவும் அருமைமா.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ பெயருக்கேற்ற கதைக்கரு.

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.
 
  • Love
Reactions: T21
#priyareviews

கதை எண் 9

இனி என்னென்ன நேர்ந்திடுமோ

சத்யதேவ் தன் பெயரில் இருக்கும் சத்தியத்திற்கு எதிராக சில வேலைகள் செய்கிறான் அதனால் இவனுக்கு பாதிப்பு நிகழுமா?? நாயகிக்கும் இவனுக்கும் சுத்தமா ஒத்து போகாத நிலையில் அவளை பழி வாங்க போவதாக சொல்லி திருமணம் செய்ய இந்த திருமணம் இரு மனங்களை இணைக்குமா?? விட்டு விலகுமா??

சத்யா இறுக்கமானவன் யாருக்கும் அடங்காதவன் ஒரு முடிவு எடுத்தால் எடுத்தது தான் யாரு பேச்சையும் கேட்க மாட்டான் தன் முடிவில் இருந்து எக்காரணம் கொண்டும் இறங்கி வர மாட்டான், தாய், தம்பி, நண்பன் யாராலும் மாற்ற முடியாதவன் தன் துணை பேச்சாவது எடுபடுமா?? இவனின் காதலும் அந்த காதலுக்காக இவன் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வாவ் ?????? அருமையான கணவன், சிறந்த காதலன் உன்னதமான மனிதன் ???

அஸ்வின் சரியான கலட்டா ஆள் இவன் ? இவனின் குறும்புதனமும், இவனின் தாய் பாசம், காதல், அந்த காதலில் வரும் விஷம் தோய்ந்த வார்த்தையால் ஏற்படும் வலி அதில் இருந்து மீழ்வது அதுவும் அந்த அநியாயத்தை கேள்வி பட்டபின் இவனின் கோபம் சிந்தித்து செயல்படும் விதம் ???

கவிதா கொஞ்சமே வந்தாலும் சிறந்த தோழியாக இருக்கிறாள், காதலியாக சொதப்பி இருந்தாலும் மனைவியாக சரி செய்வாளா??

சுமித்ரா தென்றலாக இருப்பவள் புயலாக மாற என்ன காரணம்? யார் செய்த தவறு??

விமல் இவனின் கதபாத்திரமும் கதையில் இவனின் முக்கியத்துவமும் மிகவும் சிறப்பு அருமையான மனிதன் ☺️☺️

பானுமதி அம்மா சராசரி தாயாக இருக்கும் இவரு அஸ்வின் க்கு செய்யும் அட்வைஸ் சத்யனிடம் பம்முவது ?? இப்படி இருக்கும் இவரே காளி அவதாரம் எடுக்க என்ன நடந்து இருக்கும் ???

தியா இவளின் காதலும், பயமும், இவளின் அவனுக்கான ரசனையும் அநியாயத்தை கண்டு பொங்கி சரியான பாதையில் உற்றார் துணையோடு செல்வது எல்லாம் செம ??

எவனை வேணாலும் நம்பலாம் கூட இருப்பவனை எப்போவுமே நம்ப கூடாது ???????

அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்று கொஞ்சம் கூட யூகிக்க முடியாமல் தியேட்டர்ல சீட் நுனியில் உக்காரும் நிலைமையில் வைத்து அருமையான முடிவு எங்களின் டென்ஷன் உங்களின் வெற்றி ??

ட்விஸ்ட் என்பதற்கு சிறப்பான ஜஸ்டிஸ் பண்ணி இருக்கீங்க ???

இன்னும் இன்னும் நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ????

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ???

லிங்க் ???

 
  • Love
Reactions: T21
Top