ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 20


அவள் பார்வைக்கு சளைக்காமல் எதிர் பார்வை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமை நோக்கி அந்த புடவையை கொடுத்தவள் "எனக்கு இது வேண்டாம்" என விழிகளில் தேங்கிய கண்ணீரோடு சொல்ல,

அவனோ "ஓ அப்படியா" என்பது போல் புருவங்களை ஏற்றி இறங்கியவன் "உங்கிட்ட நான் வேண்டுமா வேண்டாமா..? என கேட்கவில்லையே….
நீ இதை தான் கல்யாணத்திற்கு கட்டணும் இல்லையென்றால் நடக்கும் சம்பவத்திற்கு நான் பொறுப்பில்லை என அவளை நெருங்கி இதையும் மீறி நீ மாட்டேன் என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் நானே கட்டிவிட தொடங்கிவிடுவேன்" என்க,

அவன் சொல்லில் அதிர்ந்து விழித்தவளை கண்டுகொள்ளாமல் "உன்னை மாதிரி சேலை கட்ட உங்க அம்மாவை கூப்பிட வேண்டிய அவசியம் கூட எனக்கில்லை. ஒரு தடவை யூ டியூபில் பார்த்தால் போதும் நல்லா கட்டிவிடுவேன்..! உனக்கு எது வசதி..?எனக்கு ஏதுவாக இருந்தாலும் ஓகே தான். அதுவும் நீ மாட்டேன் என்று சொன்னால் என்னை விட யாரும் சந்தோஷப் பட முடியாது..? எல்லாருக்கும் இப்படி ஒரு அழகான பெண்ணிற்கு சேலை கட்டிவிடும் வாய்ப்பு கிடைக்காது இல்ல" என்றவன் இதழுக்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு அறையிருந்து வெளியேறினான்.


திகைத்து விழித்தவளுக்கு இப்போது கோபம் வந்து ஒட்டிக்கொண்டது. இன்னும் கொஞ்ச நாளில் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்ய இருப்பவன் தன்னிடம் என் இப்படி நடந்து கொள்கிறான் என்று...இருந்தும் அந்த கோபத்தை அவன் முன் காண்பிக்க கொஞ்சமும் தைரியம் இல்லை பெண்ணவளுக்கு. அவன் மீது உள்ள கோபத்தை விட காதல் அதிகம் இருக்க அடுத்தடுத்து என்ன நடக்குமோ என பயத்துடன் நாட்களை கடத்தினாள்.


அன்று அளவுக்கு அதிகமான அலைச்சல் காரணமாக தலைவலி மண்டையை பிளக்க வீட்டிற்குள் நுழைந்தான் மதன்.வெளியே ஒரு மீட்டிங்கிற்காக விக்ரமுடன் சென்றிருக்க சந்தியாவோ எப்போதும் போல் தனது ஸ்கூட்டியில் அவனுக்கு முன்பே வீடு வந்து சேர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்தவுடன் விழிகள் அன்னையை தேட,அவரோ அங்கு இல்லை ஒருவேளை கோவிலுக்கு சென்றிருப்பார்கள் என அவனே மனதினுள் நினைத்துக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.


மெத்தையில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்து ஒரு புக்கை படித்துக்கொண்டிருந்த சந்தியா,ஒருநிமிடம் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் புக்கினுள் தலையை புகுத்திக் கொண்டாள்.

களைத்து போய் வந்தவன் தனது லேப்டாப் பேக்கை உரிய இடத்தில் வைத்துவிட்டு கையில் டவலுடன் அவளை நோக்கி பார்வையை திருப்பியவன் "சந்தியா கொஞ்சம் ஒரு கப் டீ மட்டும் போட்டுகொடு" என்றவாறு குளியலறைக்குள் நுழைந்தவன் களைப்பு தீர குளித்துவிட்டு வெளியே வர அவளோ மெத்தையை விட்டு அகலாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.


அவனுக்கு இருந்த தலைவலியில் கோபம் அதிகரிக்க முயன்று தன்னை கட்டுப்படுத்தியன் "சந்தியா உன்கிட்ட தான் கேட்கிறேன் ஒரு டீ போட்டுக்கொடு ரொம்ப தலை வலிக்குது...உன் கோபத்தை அப்பறமா காட்டுடி..?" என பொறுமையாகவே எடுத்து சொல்ல அப்போதும் அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.


என்னதான் தன் மேல் கோபம் இருந்தாலும் தனக்கு ஒன்று என்றால் தன்னவள் பதட்டம் கொள்வாள் என காதல் கொண்ட மனம் நினைத்திருக்க... அவளோ அவன் சொன்னதை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருந்தது அவனுக்கு இதுவரை கட்டிக்காத்த பொறுமை காற்றில் பறக்க செய்தது....அவனோ பழைய கோபம் தான் இன்னும் இருக்கிறது என நினைத்திருக்க, ஆனால் அவளோ இன்று காலை நடந்த நிகழ்ச்சியை எண்ணி கோபமாக இருப்பது அவனுக்கு எங்கே தெரிய போகிறது.



காலையில் அலுவலகத்தில் ரொம்ப நேரமாக அவனை காணாமல் எங்க போனான் ஃபைலை எடுத்துகொண்டு அண்ணா ரூமிற்க்கு தானே போனான் இவ்வளவு நேரமாக ஆளையே காணோம்.என்ன தான் கோபமாக அவனிடம் பேசாமல் முறைத்துக் கொண்டு இருந்தாலும் அவனின் அருகாமையில் ஒருவித அறுதலை அடைந்து கொண்டிருந்தவளுக்கு இப்போது அவனை பார்த்த ஆகவேண்டும் போல் இருந்தது...வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி ஒன்றாகவே இருந்தாலும் தற்போது மனம் அவனையே நாட இன்று எப்படியும் அவனிடம் பேசி தங்கள் வாழ்வை தொடங்கலாம் என்ற கனவோடு அவனை தேடி அறையை விட்டு வெளியே வந்தாள்.


பாவம் சனிஸ்வர பகவான் அவனை பார்த்து சிரித்து கொண்டு அவரின் ஆட்டத்தைத் தொடங்க போவது தெரியாமல்….. வர்ஷாவிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தான். "சிரி மகனே சிரி..
இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கு மட்டும் ஒரு புயல் காத்துக்கொண்டிருக்கிறது" என்ற கடவுளின் வார்த்தை அவன் காதில் விழவில்லை போல எல்லாம் விதி.


அவனை காண வெகுநாட்கள் கழித்து முகத்தில் புன்னகையுடன் கண்களில் காதல் வழிய வெளியே வந்தவளின் காதல் பார்வை கொஞ்ச கொஞ்சமாக கோபப் பார்வையாக மாறியது. விட்டால் பார்வையாலேயே அவனை எரித்துவிடும் ரௌத்திரம் கொண்டு கண்கள் பளபளக்க நின்றிருந்தாள் சந்தியா.


அவனிடம் மொத்தமாக சரணடைய துடித்த மனம் இப்போது பழமை போல் மாறிவிட்டது. இதை அறியாத மதன் வெகு நேரம் வர்ஷாவிடம் பேசிவிட்டு உள்ளே வர அவளின் முறைப்பை கண்டு "
எப்பவும் அப்படிதானே பார்க்கிறாள் இன்றைக்கு மட்டும் மாறிவிடுமா என்ன..? என்றபடி வேலையை தொடங்க….அவளோ அப்போ என் கோபம் அவனை பாதிக்கவில்லையா..? என லூசுத்தனமாக சிந்திக்க தொடங்கினாள்.

இத்தனை நாளும் தான்தான் அவனிடம் கோபம் கொண்டு பேசாமல் முறைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து..என்னவோ இதுவரை இருவரும் காதலில் கசிந்துருகி சுற்றிக்கொண்டு இருந்தவர்கள் இன்று தான் முதன்முறை சண்டை போட்டுவிட்டு தன் கோபம் அவனை பாதிக்க வில்லை என்பதுபோல் எண்ணிக்கொண்டு முடிவை நோக்கி சென்று கொண்டிருந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் கமா போட்டு தொடர்கதையாக தொடர்ந்து விட்டாள்.


இதனை எல்லாம் எண்ணியபடி அமர்ந்திருந்த சந்தியா 'அவகிட்ட சிரிச்சி சிரிச்சி பேசும் போது தலைவலி இல்லை இப்போ வீட்டிக்கு வந்ததும் தலைவலிக்குதா உனக்கு..? நல்லா வலிக்கட்டும்' என்ற நினைப்போடு..."எனக்கும் தான் தலைவலிக்குது அப்போ எனக்கு யாரு டீ போட்டு தருவா..? நானே தானே போட்டுக் கொள்கிறேன் அது மாதிரி நீங்களும் போட்டுக் குடிங்க" என்றவள் மீண்டும் புத்தகத்தில் பார்வையை திருப்பினாள்.


மதனின் பொறுமை காற்றில் பறக்க அவள் அருகே வந்தவன் "உன்கிட்ட சத்தியமா இதை எதிர்ப்பார்க்க வில்லை சந்தியா என அழுத்தமாக சொன்னவன்….உனக்கென்ன என் மேல கோபம் நம்ம காதலுக்காக எதையும் செய்யவில்லை என்று தானே..? உனக்கு மூளை இருக்கு தானே... கொஞ்சம் கூட அதை யூஸ் பண்ணவே மாட்டியா..? உங்க அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் நீ கூடப் பிறந்த தங்கை தானே..! இல்லை உன்னை உங்க வீட்டில் தவிடுக்கு வாங்கினார்களா..?" என கேட்க...பல்லை கடித்துக்கொண்டு எதையோ சொல்ல வந்தவளை கைநீட்டி தடுத்தவன் மீண்டும் தொடர்ந்தான்.


"நீயேன்ன பொம்மையா அப்படியே தூக்கி என் கையில் கொடுக்க..? அறிவு கெட்டவளே நல்லா கேட்டுக்கோ நானே வாய்விட்டு கேட்டதால் மட்டும் தான் உன்னை எனக்கு கட்டிகொடுத்தாங்க..? ஒருவேளை நான் பேசவில்லையேன்றால் உன் கல்யாணம் நின்றிருக்கும் ஆனால் எனக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுத்திருக்க மாட்டார்கள்.


நான் தான் கேட்டேன் உங்க அண்ணன்கள் இருவரிடமும் என்னால சந்தியா இல்லாமல் வாழ முடியாது என்று..,? அன்னைக்கு உன் கல்யாணத்திற்கு ரெண்டு நாட்கள் முன்பு உன் வீட்டில் உன்னை நலங்கு வைக்க அழைத்து வந்தார்களே..! அதுவரை நான் கொண்ட உறுதி மொத்தமும் வீழ்ந்தது அன்றுதான். அதற்கு மேல் ஒருநிமிடம் கூட அங்கே நிற்கமுடியாமல் சென்ற என்னால் ஒரு நொடி கூட நிம்மதியாக மூச்சு விட முடியவில்லை.


எங்கே உன்னை இழந்து விடுவேனோ என்ற எண்ணத்திலேயே அன்றைக்கு இரவு ஒரு பொட்டு கூட தூக்கமில்லாமல் தவித்தேன் அது எனக்கு மட்டும் தான்டி தெரியும்" என்றவன் மேலும் தொடர்ந்தவனாக அப்பறம் ஒரு முடிவோடு காலையில் விக்ரம் ஆதி இருவரையும் வரவைத்து…..


அன்றைக்கு


"டேய் என்னடா... கல்யாண வேலை அவ்வளவு இருக்கு இப்போ எதுக்கு அவசரமாக வர சொன்ன..? என்றபடி அந்த காஃபி ஷாப்பில் மதன் எதிரில் அமர்ந்தான் ஆதி.
அப்போது விக்ரமும் நுழைய இவனையும் எதுக்கு வர சொல்லியிருக்க என்னும் போதே விக்ரம் அருகில் வந்துவிட அவனுக்கும் ஆதியை அங்கே பார்த்தவுடன் அதே கேள்விதான் மனதில் எழுந்தது .


சிறிது நேரம் எதையும் பேசாமல் அமைதியாக இருந்த மதனை கலைத்த ஆதி "பேசவேண்டும் என வர சொல்லிவிட்டு இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்" என்க...

அவனோ எப்படி துவங்குவது என தயக்கமாக "அது...அது.." என இழுக்க,

"எங்ககிட்ட சொல்ல என்னடா தயக்கம்" என்க,விக்ரம் அவன் எதை பற்றி பேச போகிறான் என்பதை நன்றாக அறிந்திருந்தவனாக நடப்பதை அமைதியாக நாற்காலியில் சாய்ந்து வேடிக்கை பார்த்தான்.


பின்னர் ஒருவாறு தன்னை சமன் செய்த்தவன் அது "நான் சந்தியாவை காதலிக்கிறேன்" என்றான்.இருவரிடமும் அதிர்ச்சியை அல்லது கோபத்தையாவது எதிர்ப்பார்த்த மதனிற்க்கு இருவரின் அமைதியான அதே நேரம் அழுத்தமான பார்வை கண்டு அதை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தான்.


முதலில் தொடர்ந்த ஆதி "இதை நீ நாளைக்கு சொல்லியிருந்தால் இந்நேரம் என் தங்கச்சிக்கு கல்யாணமே முடிந்திருக்கும் என்றவன், கோபமாக காதலை சொல்ல நல்ல நேரம் பார்த்தடா..? இனிமேல் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய்..? இப்போ சொல்ல வந்த தைரியம் ஏன் முன்னாடி வரவில்லை" என அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க...அவனின் நியாயமான கேள்விக்கு அவனிடம் தான் பதில்லிலாமல் போய்விட்டது.


"சாரிடா... நீ கேட்கிற எந்த கேள்விக்கும் என்னிடம் பதில்லை,அவளை எவ்வளவோ தவிர்க்க நினைத்தும் முடியவில்லை. எங்கே நீங்க ரெண்டு பேரும் என்னை தப்பாக நினைத்து விடுவிற்களோ என்ற பயம் என்றவன்… ஆனா இப்போ என்னால சத்தியமா முடியலை..? அவள் எனக்கு கிடைக்க மாட்டாளோ என இந்த ஒருநாள் தவிப்பையே என்னால் தாங்க முடியவில்லை. எங்க வாழ்க்கை முழுவதும் அவ இல்லாமல் பைத்தியம் ஆகிவிடுவெனோ என்று பயமா இருக்குடா..? இப்படி கேட்பது தப்பு தான் அதுவும் நாளைக்கு கல்யாணம் என்ற நிலையில் ஆனா எனக்கு வேற வழி தெரியவில்லை. என்னை மன்னிச்சிடு டா, எனக்கு என் சந்தியா வேண்டும், அவளை எனக்கே கொடுத்துடுங்களேன்" என தன் நண்பர்களிடம் முதன்முறை தன் காதலுக்காக கெஞ்சினான்.


அதுவரை அமைதியாக இருந்த விக்ரம் மெல்ல வாய்த்திறந்தான்.. "சாரிடா திஸ் இஸ் டூ லேட். நீ முன்பே சொல்லியிருந்தால் கண்டிப்பா கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்..எனக்கும் என் தங்கையுடைய விருப்பம் தான் முக்கியம்,அதுவும் இல்லாமல் நீ என் நண்பனாக இருக்கலாம் ஆனால் ஒரு தனி மனிதனாய் என் தங்கையை திருமணம் செய்ய அனைத்து தகுதியும் உனக்கு இருக்கு. இன்னும் சொல்ல போனால் நாங்க தேடினாலும் உன்னை போல் ஒருவனை என் தங்கைக்கு மாப்பிள்ளையாக கொண்டுவர முடியாது தான். ஆனால் காலையில் திருமணம் என்னும் பொழுது என்னால் எதுவும் செய்ய முடியாது. இது நான் மட்டும் முடிவெடுக்க கூடிய விஷயம் இல்லை, இதில் இரண்டு குடும்பமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது…சோ சாரிடா உன் மனதை மாற்றிக்கொள்வது நல்லது என்றபடி விக்ரம்" எழுந்து சென்றுவிட்டான்.

ஆதியும் "நானும் இதைதான் சொல்ல வந்தேன் என்றவன் சாரிடா, என்றபடி நகர்ந்தவன் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு கல்யாணத்திற்கு வராமல் இருக்காதே..?" என்றுவிட்டு அவனும் சென்றுவிட்டான்.



மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 21

தன் நண்பர்கள் சென்ற பின்பும் அந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே அமர்ந்திருந்தவன் கண்களில் இருந்து எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. "எல்லாம் என் தப்பு தான், அவள் காதலை சொல்லும் போது புறக்கணித்த எனக்கு இது தேவைதான்..! அவளை அழவைத்தற்கு என்னை வாழ்க்கை பூரா அழவைக்க போகிறாள்" என நினைத்துகொண்டு விரக்தியாக தனக்கு தானே சிரித்துக்கொண்டே வண்டியை நோக்கி சென்றான்.

மறுநாள் கல்யாண மண்டபம் மொத்தமும் சொந்தங்கள் நிறைந்திருக்க,ஒருபுறம் நாதஸ்வரம் முழங்க மறுபுறம் ஐயர் மந்திரத்தை உச்சரித்து கொண்டிருக்க ஒரே பரபரப்பு நிறைந்து காணப்பட்டது.

அவள் அருகில் வேறொருவன் நினைக்கவே மனம் வலிக்க இதை பார்க்கும் அளவுக்கு "தனக்கு பரந்த மனமில்லை" என நினைத்தவன் மண்டபத்தின் மாடியில் நின்று அந்த நீல வானை வெறித்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கரம் அவன் தோளில் விழ...திரும்பிப் பார்த்தவன் அதிர்ந்து விழித்தான்.

இந்நேரம் மணமேடையில் மாப்பிள்ளையாக அமர்ந்திருக்க வேண்டியவன் தன் அருகில் நின்றால் அதிர்ச்சியடையாமல் அவனும் என்ன தான் செய்வான்.

தன் துக்கத்தை மறைத்துக்கொண்டு மெல்ல சிரித்தவன் "இந்த நேரத்தில் நீங்க இங்க என்ன பண்றீங்க..?" என கேட்க...ரோஹித் சிரித்தபடி "ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வர சொன்னார் அதான்" என்றான் அசால்ட்டாக .

'இவன் என்ன பைத்தியமா..? இப்படி உலறுகிறான்' என நினைத்தபோதே விக்ரம் ஆதி இருவரும் அங்கே வந்தனர்.

பட்டுவேட்டி சட்டையில் இருவரும் ஆணழகனாக நிற்க...மதனுக்கோ அந்த நேரத்திலும் 'என்னமோ இவனுங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் மாதிரி வராங்க ,இந்த மாப்பிள்ளை என்னடா என்றால் பாண்ட் ஷர்ட்டில் நிற்கிறான். எல்லாமே தலைகீழாக நடக்கிறது" என எண்ணியபடி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க...

விக்ரம் "என்னடா இங்கேயே நிற்பதாக உத்தேசமா..? இன்னும் எவ்வளவு நேரம் என் தங்கச்சி உனக்காக காத்திருக்கணும்" என்க..

அவன் என்ன சொன்னான் என்பது போல் புரியாமல் பார்க்க,

"ஹா ஹா" என சத்தமாக சிரித்த விக்ரம் "அவ்ளோ ஈசியா என் தங்கை உனக்கு கிடைக்க எப்படி விடுவோம், அவள் தினமும் அழுவதை எதும் செய்ய முடியாமல் இயாலாமையோடு கைகாட்டி பார்க்க மட்டுமே எங்களால் முடிந்தது.

என் தங்கையை கல்யாணம் பண்ணிக்கோ என கேட்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது...அப்படி நான் கேட்டு அவளை நீ ஏற்றுக்கொண்டால் அது அவளுடைய காதலுக்கு தான் அசிங்கம்.
நீயாக எப்போது சொல்வாய்..? என எதிர்பார்த்தால், துரை கல்யாணத்திற்கு முதல் நாள் வந்து சொல்கிறாய்..? உன்னை அப்படியே கொல்லனும் போல இருக்கு. சந்தியாவிற்காக விடுகிறேன்" என்றவன் பேசி முடிக்கும் முன் மதன் அவனை அணைத்திருந்தான்.

அவன் உதடுகளோ நிற்காமல் "தேங்க்ஸ் டா தேங்க்ஸ் டா" என உச்சரித்துக் கொண்டே இருந்தது

அவனிடமிருந்து பிரிந்து ஆதியையும் அணைத்தவன்,பின்னரே அங்கு நின்ற ரோஹித்தை நோக்கி சென்றான்.

அவன் கையை பிடித்தவன் "எங்களோட சுயநலத்திற்காக உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்காக என்னை மன்னித்துவிடுங்க" என்க...

அவனோ "ஹலோ பாஸ் நீங்க நினைக்கிற அளவுக்கு ஒன்றுமில்லை .எனக்கு அவ்வளவு சீனு எல்லாம் இல்லை ….நானும் ஒரு பொண்ணை காதலிக்கிறேன் அவள் வேற மதம் என்பதால் வீட்டில் ஒத்துக்கொள்ள வில்லை, அதான் என்ன பண்ணலாம் என யோசிக்கும் போதுதான் விக்ரம் உங்களை பற்றியும் உங்க காதலை பற்றியும் சொன்னார்.

அதுமட்டுமில்லாமல் அப்போவே கல்யாணத்தை நிறுத்தினால் அடுத்த பெண்ணை பார்க்க முயன்று இருப்பார்கள். அதான் நானும் இந்த நாடகத்தில் கலந்துகொள்ளலாம் என நினைத்தேன். விக்ரம்க்கு மட்டும் தான் உங்கள் காதல் தெரியும் என்று நினைத்தேன் ஆனால் மறுநாள் ஆதி என் ஆபீஸிற்கே வந்து என் தங்கைக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என சொல்லவும், எனக்கே கொஞ்சம் பொறாமையாக தான் இருந்தது. இவர்களின் அண்ணன் தங்கை பாசத்தை பார்ப்பதற்கு" என அனைத்தையும் சொன்னவர்கள்…."

"சரி டைம் ஆகிவிட்டது வாங்க போகலாம்" என அனைவரையும் அழைத்துக்கொண்டு தன் தங்கையின் அறைக்கு செல்ல அங்கே மணப்பெண் கோலத்தில் கையிலுள்ள மாத்திரையை வெறித்து பார்த்துகொண்டிருந்த சந்தியா தீடீரென்று கதவு தட்டப்படும் சத்தத்தில் மாத்திரையை ஒளித்துவைத்துவிட்டு கதவை திறக்க...அங்கு அந்த நால்வரையும் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.

நேரம் கடப்பதை உணர்ந்து "சொல்லுடா...இப்போதாவது என் தங்கச்சியை கல்யாணம் பண்ண சம்மதிக்கிறாயா..?" என்க அவனும் அவள் முகம் பார்த்து சரி என்பதாய் தலையசைக்க...அவளுக்கு அவன் மேல் கோபம் இருந்த போதிலும் அவனை இழக்க விரும்பாமல் அவளும் திருமணத்திற்கு சம்மதித்தாள்.

அனைவரும் அறையைவிட்டு செல்ல எத்தணிக்க...திரும்பிய ஆதி "அதுதான் உனக்கு பிடித்தவனோடு தானே திருமணம் நடக்க போகிறது" அப்பறம் எதுக்கு அந்த மாத்திரை" என கேட்க.. அதிர்ந்தவள் திருத்திருவென முழிக்க...அவனோ "அதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும், அப்போதே தூக்க மாத்திரையை எடுத்துவிட்டு வைட்டமின் மாத்திரையை தான் போட்டு வைத்தேன்….வேண்டுமென்றால் நீயே சாப்பிடு தினமும் ஒரு மாத்திரை" என்றவன் டாக்டராக அறிவுரை கூறிவிட்டு வெளியே சென்றான்.

கேட்டிருந்த அனைவருக்கும் இது அதிர்ச்சி என்றாலும் இப்போது அதை பற்றி பேச நேரமில்லை என உணர்ந்து கலைந்து சென்றனர்.

ஒருவழியாக பெற்றோர்களை சரிக்கட்டியவர்கள் திருமணத்தை நல்ல படியாக இரு அண்ணன்களும் நடத்தி முடித்தனர்.

அனைத்தையும் சொல்லிமுடித்தவன் "இன்னும் என் வார்த்தையில் நம்பிக்கை இல்லையென்றால் உன் உடன் பிறப்புகளிடம் கேட்டுகொள்" என நக்கலாக சொன்னவன் அறைவிட்டு வெளியே வந்தான்.

அவளுக்கோ இதுவரை மனதில் அறித்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று விடைபெற்ற நிம்மதி ஒருபக்கம் இருக்க.. அவனை எப்படி சமாதான படுத்துவது என்பதே பெரும் யோசனையாக இருந்தது.

இப்போது அவள் தன் நிலையிலிருந்து இறங்கி அவனிடம் பேச முயல அவனோ முறுக்கிக்கொண்டான்.(திரும்பவும் முதலில் இருந்தா.. உங்களோட முடியலை டா என்னால)

தன் எதிரில் நின்ற திவ்யாவை ஃபைலை பார்த்தபடியே "அப்பறம் மிஸ்.திவ்யா எங்கேஜிமெண்ட் என சொல்லி லீவ் கேட்டீங்க. எப்போ மேரேஜ்க்கு லீவ் எடுக்க போறிங்க" என்க...

அவனாகவே பேசியது ஆச்சரியத்தை எழுப்ப,அவன் கேள்விக்கு பதில் சொல்லும் பொருட்டு "மேரேஜ் கேன்சல் ஆகிவிட்டது சார் என்றவளை பார்த்து "அச்சச்சோ " என பொய்யாக பரிதாபப்பட்டவன்...அவள் புறம் ஒரு இன்விடேஷனை கொடுத்து "நெக்ஸ்ட் வீக் என்னோட மேரேஜ் கண்டிப்பா வரணும். நம்ம ஆபீஸில் உள்ள எல்லாரையும் இன்வைட் பண்ணிருக்கேன் குடும்பத்தோட வந்துடுங்க" என்றவன் யூ கேன் கோ நொவ்" என்க

அவளோ "வாழ்த்துக்கள் சார்" என்றபடி வெளியே வந்தாள். அவளுக்கு விக்ரமும் ஆதியும் பிரதர்ஸ் என்பது தெரியாது அதுவும் நல்லதிற்க்கு தான் போல….

ஒரு வாரம் ஒரு நொடி போல் கடந்து விட விடிந்தால் திருமணம் என்ற நிலையில் விக்ரம் ஆதி இருவருமே ஏதோ பிடிக்காத திருமணம் போல் சோகமாக எல்லாம் வலம்வரவில்லை..! சிரித்த முகமாகவே அனைவரிடமும் பேசியபடி இருந்தனர். அதுவும் ராகவன் தன் ஆசை நிறைவடைய போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சொந்தங்களின் முன் பெருமையாகவும் கர்வத்துடன் வலம் வந்தார்.

ஒரே ஒரு ஜீவன் மட்டும் அழுகையால் தலையணையை நினைத்துக்கொண்டு இருந்தது.தன் தாய் எடுத்து வைத்துவிட்டு சென்ற புடவையை பார்த்து இன்னும் வெடித்து அழுதாள்.

விக்ரம் முதன்முறை எடுத்துக்கொடுத்த புடவை அவளுக்கு ரொம்பவும் ஸ்பெஷல் தான் ஆனால் அதை அவனின் திருமணத்திற்கு எடுத்துக்கொடுத்ததை தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் காதல் நிறைவேறாது அது வெறும் காணல் நீர் என்பது தெளிவாக தெரிய, முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் அவராவது அவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும். என்னோட காதல் கடைசி வரை யாருக்கும் தெரியாமல் என்னுடனே முடிந்து விடட்டும்' என நினைத்தவள் தூங்க முயன்றாள்.

திருமணநாள் காலையில் எளிமையான அதிக வேலைப்பாடு இல்லாத அதேநேரம் அழகான இளம்பச்சை நிற பட்டு புடவையில் பார்த்தவுடன் மனதுக்கு இதம் தருவது போல் மென்மையான அலங்காரத்துடன் தயரானாள் திவ்யா.பெற்றோரை அழைக்க அவர்கள் வர மறுக்கவே தன் தங்கையை மட்டும் அழைத்துக்கொண்டு தான் வாங்கி வைத்த கிஃப்ட்டை எடுத்துக்கொண்டு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தாள்.

நந்தினியோ தன்னை கண்ணாடியில் பார்க்க அவளுக்கே தன் தோற்றம் புதிதாக இருந்தது போல் தோன்றியது. அந்த கரும்ப்பச்சை நிற புடவை அவளின் வெளுத்த நிறத்திற்கு மேலும் அழகு சேர்க்க தன்னவனின் தேர்வில் சிலையாக நின்றவள் தன் தலையிலேயே தட்டிக்கொண்டாள்.

இனிமேல் அவர் மேல் எனக்கு உரிமையே இல்லையே பின்பு ஏன் இன்னும் தன்னவன் என நினைக்கிறேன் என எண்ணியபடியே தயாராகி வெளியே வந்தாள்.

அங்கு மணமேடையில் ஐயர் மந்திரத்தை உச்சரித்து கொண்டிருக்க.. பட்டுவேட்டி சட்டையில் மாப்பிள்ளை முறுக்குடன் அமர்ந்து மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தனர் விக்ரமும் ஆதியும்.

உள்ளே நுழைந்த திவ்யா முதலில் ஆதியை கவனிக்கவில்லை தங்கள் கம்பெனியில் இருந்து வந்திருந்த தோழிகளுடன் பேசியபடி அவர்கள் அருகிலேயே அமர்ந்துவிட…பிரியா தான் முதலில் ஆதியை பார்த்தாள்.தன் அக்காவின் கையை சுரண்டியவள் "அக்கா அங்கே பார்" என மணமேடையை நோக்கி கைக்காட்ட "அங்கே யாருடி இருக்கா..?" என்றபடி திரும்பியவள் அதிர்ச்சியில் இருக்கையிலிருந்து எழுந்து விட்டாள்.

'தான் பார்ப்பது அனைத்தும் கனவாக இருந்துவிடாதா' என எண்ணியபடி தன் தோழியிடம் "நம்ம பாஸ்க்கு தானே கல்யாணம் இங்க ரெண்டு பேர் இருக்காங்க"..? என புரியாமல் கேட்க..."உனக்கு தெரியாதா டி இவங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்" என்க..அவளோ அவள் சொன்ன வார்த்தையின் கணம் தாங்காமல் தடுமாற, விழாமல் இருக்க தன் தங்கையை பிடித்துக்கொண்டாள்.

கண்கலங்கி நிற்கும் தன் அக்காவை பார்த்து இறக்கம் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இப்போ எதுக்கு ஷாக் ஆகுற..? அதான் நீ அவரை பிடிக்கவில்லை என சொல்லிட்ட, அப்பறம் அவருக்கு யாரு கூட கல்யாணம் நடந்தால் உனக்கென்ன என்றவள் இருக்கையில் அமர்ந்து அவளையும் அமரவைத்தாள்.

ஆதியும் அவள் உள்ளே நுழைந்ததிலிருந்து அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்,தன்னை பார்த்தவுடன் அவள் முகத்தில் வந்து போன உணர்ச்சிகளை படித்தவன் அவளை மனதினுள் திட்டியபடியே அமர்ந்திருந்தான். "சரியான பொய்க்காரி காதல் இல்லாமல் தான் இப்படி உன் கண்ணிலிருந்து கண்ணீர் வருதா..? கொஞ்ச நேரம் அனுபவி" என்று நினைத்தபடி மந்திரத்தை சொல்லிக்கொண்டிருக்க...

விக்ரம் தான் தேர்ந்தெடுத்த புடவையில் தேவதையாக நின்ற நந்தினியை சைட் அடித்து கொண்டிருந்தான்.

"இரண்டு பேரும் என்ன ஜென்மங்களோ..? மணமேடையில் உட்கார்ந்து கொண்டு கட்டிக்க போறவளை விட்டுட்டு காதலியை சைட் அடிக்குறாங்க..? இதையெல்லாம் கேட்க ஆளேயில்லையா கடவுளே..! இங்க நான் ஒருத்தன் கல்யாணம் ஆகியும் ஒன்னும் ஆகாமல் இருக்கேன்,இவனுங்க ஒரே நேரத்தில் ரெண்டு பொண்ணுக்கு ரூட் விடுறாங்க " என புலம்பத் தொடங்கினான் மதன்.

சந்தியாவோ மதன் தன்னிடம் பேச மாட்டானா..? என அவனையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்.அவனும் இதுதான் சாக்கென்று அவளை அலையவிட்டான்.

"ஐயர் பொண்ணை அழைத்து வாங்க" என குரல் கொடுக்க , வந்தனா ஸ்வேதா இருவரும் வந்து தத்தம் மணமகன் அருகில் அமர...ராகவனுக்கு அனைத்தையும் சாதித்த உணர்வு,இனி யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற மமதையில் இருக்க அதை மொத்தமாக இன்னும் சிறிது நேரத்தில் இருவரும் ஒன்றுமில்லாமல் ஆக்கப்போவது தெரியாமல் மகிழ்ச்சியில் சுற்றி கொண்டிருந்தார்.

மங்கல நாணை கையில் ஏந்திய விக்ரம் ஆதி இருவரும் சொல்லிவைத்தது போல் ஒரே நேரத்தில் மணமேடையை விட்டு எழுந்து நின்றனர். கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்றிருக்க…"விக்ரம் ஆதி என்ன பண்றீங்க..? கல்யாணம் முடியாமல் ரெண்டு பேரும் மனையை விட்டு எழக்கூடாது" என ராதா சத்தம் போட அதையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் இருவருமே எதிரெதிர் திசையில் உள்ள படிகளின் வழியே மேடையை விட்டு இறங்கி நந்தினியை நோக்கி சென்றனர்.

மேடையை விட்டு இறங்கிய அதிர்ச்சியை விட இருவரும் ஒரே பெண்ணை நோக்கி செல்வதை பார்த்து அனைவரிடமும் சலசலப்பு அதிகரிக்க,இருவரையும் தடுக்க முயன்ற அனைவரையும் பார்வையாலேயே எட்டி நிற்க செய்தவர்கள் நிதானமாக தங்கள் அடியை எடுத்துவைத்தனர்.

நந்தினி அவளை நோக்கி தான் இருவரும் வருகிறார்கள் என்பதை கூட அறியாமல் "எதுக்காக இப்போ ரெண்டு பேரும் மேடையை விட்டு எழுந்தார்கள்" என்ற ஆராய்ச்சியில் இருக்க….

நந்தினியை நெருங்கிய ஆதி அவளை பார்த்து முறைத்துவிட்டு "நந்து ஒழுங்கு மரியாதையா தள்ளி நில்லு. என் ஆள்ளை மறைத்துக்கொண்டு நிற்கிறாய்…? அப்பறம் நான் உன்னை மறைத்துக்கொண்டு நிற்பதாக உன்னோட ஹிட்லர் நினைக்க போறான்" என்க

அவளோ திருத்திருவென முழிக்க, இது வேலைக்கு ஆகாது என்றுணர்ந்த ஆதி ஒரு கரத்தால் அவளை விக்ரமை நோக்கி நகர்த்தியவன் இப்போது திவ்யா எதிரில் நின்றான்.

அதுவரை நடப்பதை அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவள் அப்போது தான் ஆதி தன் எதிரில் கையில் தாலியோடு நிற்பது புரிந்தது….அதேநேரம் விக்ரம் ஒரு கரத்தால் தன்னவளை தன்னை நோக்கி இழுத்து அவள் காதருகே குனிந்தவன் "இந்த புடவையில் ரொம்ப அழகா இருக்க" என்றவன் அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தவாறு "இது உனக்காக நம்ம கல்யாணத்திற்கு நான் எடுத்த புடவை" என்றவன்,

முதன்முறை கண்களில் காதலை தேக்கி அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்.ஆதியும் அதிர்ந்து நின்ற தன்னவளை பார்த்து கண்ணடித்துவிட்டு காதல் கைகூடிய மகிழ்வோடு தன்னவளுக்கு மாங்கல்யத்தை அணிவித்தான்.

மதனோ தன் மனத்தாங்கல் மறந்து சந்தியாவை நெருங்கி "எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும்..? "நிஜமாவே உங்க அண்ணன்கள் ரெண்டு பேரும் பேசிக்க மாட்டாங்களா..? இல்லை அப்படி வெளியே மட்டும் நடிக்கிறாங்களா …? எனக்கு ரொம்ப நாளாக இந்த சந்தேகம் இருக்கு... செம்ம டைமிங் சொல்லி வைத்து இப்படி நடந்துக்கொண்டால் கூட இந்த மாதிரி ஒரு பர்ஃபக்சன் இருக்காது" என்றவன்...ஏதோ படம் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற "இப்படி எங்களை எல்லார் முன்னாலும் அவமானப்படுத்த எத்தனை நாளாய் திட்டம் போட்டீங்க…? கடைசி நிமிஷம் வரை நம்பிக்கை கொடுத்து கழுத்தை அறுத்திட்டீங்களே" என்றபடி கண்ணனின் சட்டையை பிடிக்க வர…

அவரின் விரல் தங்கள் தந்தையை தொடும் முன்பு விக்ரம் ஆதி இருவரும் ஒவ்வொரு பக்க காலரை பிடித்திருக்க..
"எங்க அப்பா மேல் கைப்படுச்சு" அதுதான் உங்களுக்கு கடைசி நாள் என்றவன்,


"யாரு உங்களை அவமானப்படுத்தியது நாங்களா இல்லை நீங்களா..?என்றவன் உங்களை மாதிரி உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே ஒன்றை பேசும் கீழ்த்தரமான ஜென்மம் நாங்க இல்லை.நீங்க கொஞ்ச நஞ்சமா பண்ணிங்க.. உங்க பொண்ணு வயது தானே இருக்கும் நந்தினிக்கு அவளை எவ்ளோ காயப்படுத்தி இருக்கீங்க..? அனாதை, சொத்துக்காக எங்களை மயக்க பார்க்கிறாள்..? அப்படி இப்படி என்று சின்ன பொண்ணு என்று கூட பார்க்காமல் அடிச்சு, அடுத்த தடவை இந்த வீட்டிற்கு வரும்போது நீ இங்கே இருக்கக்கூடாது…? எங்கேயாவது ஓடிவிடு இல்லையென்றால்... உங்க அப்பாவை போல் செத்து போ என சொன்னீங்களே. அதையெல்லாம் விடவா இப்போது நாங்க உங்க கழுத்தை அறுத்துவிட்டோம்" என விடாமல் அவர் செய்த அத்தனை செயல்களையும் அனைவர் முன்பும் பகிரங்கமாக வெளியிட ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் மீண்டும் தொடர்ந்தார்.

"ஆமா நீ சொன்ன எதையும் நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனா என் ரெண்டு பொண்ணுங்களும் என்ன பண்ணாங்க..? எதுக்காக அவங்களுக்கு இந்த நிலைமை" என்க..

"உங்களை மாதிரி மனசாட்சி இல்லாதவர்கள் நாங்க இல்லை எங்களோட சுயநலத்திற்காக அவங்க வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் அளவுக்கு" என்றவன் ..தன் பி.ஏ சுரேஷிடம் கண்காட்ட அவனோ இரு வாலிபருடன் வந்தான்.

வந்தவர்களை யாருக்கும் தெரியவில்லை என்றாலும் வந்தனா ஸ்வேதா இருவருக்கும் நன்றாகவே தெரியும் என்பது அவர்களின் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்துவிட்டது.
அவர்கள் இருவரின் பாய் பிரெண்ட்ஸ் தான். அமெரிக்காவில் டைம் பாஸிர்க்காக காதலித்து டேடிங், லிவீங் டூ கெதர் என எல்லை மீறி பழகிவிட்டு இப்போது சொத்திற்க்காகவும் தன் தந்தையின் ஆசைக்காவும் விக்ரம் ஆதியை திருமணம் செய்ய சம்மதித்தனர்.

"ரொம்ப ஷாக் ஆகாதீங்க மாமா. ரெண்டு பேரும் உங்க மருமகன்கள் தான்...உங்க பொண்ணை உண்மையா காதலிக்கிறார்கள்" என்றவன்,

மாமன் மகள்களை பார்க்க "எங்கே அனைவர் முன்பும் அனைத்தையும் சொல்லி தலைகுனிய வைத்துவிடுவானோ" என பயந்தவர்கள் ஆமாம் நாங்களும் அவங்களை காதலிக்கிறோம்" என்க… அதற்கு அடுத்து எந்த பேச்சிற்கு வழியில்லாமல் போக இருவருக்கும் அதே மேடையில் தத்தம் காதலர்களும் திருமணம் முடிந்தது.

ராகவன் தன்னை மீறி அனைத்தும் நடந்துவிட்டதை ஏற்க முடியாமல் மொத்த கோபமும் விக்ரம் ஆதி இருவரிடமும் திருப்பியவர்.."உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டேன் டா " என்று மனதில் வஞ்சத்தை அதிகரித்தது அங்கே என்ன நடந்தது என்பதை உணராமல் கழுத்தில் தாலியுடன் நின்றிருந்த நந்தினி திவ்யாவை பார்த்தவர் நக்கலான சிரிப்பை உதித்துவிட்டு வன்மத்துடன் மண்டபத்தை விட்டு வெளியே சென்றார்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 22


தன் முன் கோபத்தில் முகம் சிவக்க...மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியவாறு நின்றிருந்த மனைவியை பார்த்தவனுக்கு இவளுக்கு கோபப்பட தெரியும் என்பதே இன்று தான் அவனுக்கு தெரிந்தது. தான் முதன் முதலில் பார்த்த, சாதுவான பெண்ணா இவள் என்ற கேள்வியே மனதில் தோன்ற... "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்பது இதுதானோ என நினைத்தவன்….தன் மனைவியின் முகம் பார்த்து

"இப்போ நீ கோபப்படும் அளவுக்கு என்ன நடந்தது"..? என்க…
அவளோ "இதுக்கு மேல என்ன நடக்கணும் யாரை கேட்டு என் கழுத்தில் தாலி கட்டினீங்க" என்றாள்.

அவனோ "யாரை கேட்கணும்" என்றான் கேஷுவலாக.

எவ்வளவு திமிர் என நினைத்தவள் "யாரை கேட்கணுமா..? "என்னை கேட்கணும்" என்றாள் நிமிர்வாக.நான் என்ன உங்க அடிமையா..? நீங்க என்ன வேண்டுமானாலும் உங்கள் இஷ்டத்திற்கு நடத்துவதற்கு" என்றாள் முதன்முறை தைரியமாக…

அவளையே ஆழமாக பார்த்தவன் "நீ இப்படி பேசுவது கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா இப்போ தைரியமா என்னை கேள்வி கேட்கும் நீ அன்னைக்கு உன் அப்பா முன்னாடி என்னை பிடிச்சிருக்கு என சொல்ல ஏன் தைரியம் இல்லை" என்றவன் மேலும் அவள் பதில் சொல்லும் முன் "என்னை பிடிக்கலை, அதான் சொன்னேன் என்று மட்டும் சொல்லாதே..மண்டபத்தில் உன்னோட கண்ணீரே அதற்கான பதிலை சொல்லிவிட்டது. அதனால் வேற ஏதாவது சொல்" என்றபடி நன்றாக சாய்ந்து அமர்ந்து கதை கேட்கும் ஆர்வத்தோடு அவளை பார்க்க...இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பழையபடி கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தாள்.

அவளை நெருங்கி "உங்க அம்மா அப்பா பேசியதில் தப்பில்லை, அவங்க இடத்திலிருந்து பார்த்தால் யாராக இருந்தாலும் அப்படிதான் பேசிருப்பாங்க.. ஆனா அதுக்காக நான் பண்ணியது தப்பு என்று சொல்லமாட்டேன். என்னை பொருத்தவரை நான் பண்ணது சரி தான். நான் காதலிச்ச பொண்ணை, அதுவும் அந்த பெண்ணிற்கும் என்னை பிடித்திருக்கு என்று தெரிந்த பின்பு தான் அவள் கழுத்தில் தாலி கட்டினேன். அதை தப்புன்னு யாரு சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றவன்….சீக்கிரம் அவங்க மனது மாறி நம்மை ஏற்றுக்கொள்வார்கள் அதுவரைக்கும் காத்திருப்போம்" என அவள் தோளில் கைவைக்க...

அவளோ சட்டென்று அவன் கையை தட்டிவிட்டாள் "அது தான் சொன்னீங்களே சீக்கிரம் நம்மை ஏத்துப்பாங்க என்று அதுவரைக்கும் என்கிட்ட வராதீங்க..? என்னைக்கு அவங்க என்னை மன்னிச்சு ஏத்துக்குறாங்களோ அன்னைக்கு தான் நம்ம வாழ்க்கையை தொடங்கனும்" என்று அவன் தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டுவிட்டு போய் கட்டிலின் ஒரு பக்கத்தில் சென்று படுத்துவிட்டான்.

அவனும் இன்றே அனைத்தும் நடந்துவிடும் என்று நினைக்கவில்லை தான். ஆனால் அவள் சொல்வது போல் அவள் பெற்றோர்கள் ஏற்கும்வரை தனித்திருப்பது என்பது... அதுவும் ஐந்து
வருட காத்திருப்புக்கு பின்பு தன்னவள் தனக்கே தனக்கென ஆன பின்பும் தள்ளியிருப்பது கஷ்டம் அல்லவா…? என நினைத்தவன் பின்னர் அவளின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் பொருட்டு அவள் விருப்பப்படி நடக்க முடிவெடுத்தவன் அவனும் சென்று படுத்தான்.

திருமணம் முடிந்து அவளை தாய் வீட்டிற்கு அழைத்து சென்றவனை வாசலிலேயே நிற்கவைத்து "இன்றோடு எனக்கு ஒரு பொண்ணு தான் ஒருத்தியை தலை முழுகி விட்டேன்" என்ற திவ்யாவின் தந்தை, மேலும் "ஒன்றும் தெரியாதவள் போல் இருந்து கொண்டு என் மானத்தை வாங்கிவிட்டாய். உன்னை நம்பினேன் இல்ல அதுக்கு எனக்கு இந்த தண்டனை தேவை தான்….இவன் காதலிப்பதாக சொல்லியும் நீ சொன்ன வார்த்தைகளை நம்பி உன்னை மற்ற பெற்றோர்கள் போல் வீட்டுக்குள் அடைக்காமல் சுதந்திரம் கொடுத்தேனே... எல்லாம் என்னோட தப்பு தான் என்றவர், இனி நீ நான் செத்தாலும் இந்த வீட்டு வாசல்படியை மிதிக்கக்கூடாது" என்றவர் வாசலில் நிற்கும் இருவரையும் கண்டுகொள்ளாமல் அவர்கள் சொல்ல வருவதை கேட்கக் கூட விரும்பாதவராக கதவை அடைத்துவிட்டார். அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வரவே பெரும்பாடு ஆகிப்போனது ஆதிக்கு.

அதுதான் அவளின் இன்றைய கோபத்திற்கு காரணம் மற்றபடி அவன் தாலி கட்டியது எல்லாம் அவளுக்கு சந்தோஷம் தான். அதை வெளியே சொன்னால் எங்கே அவனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுமோ என்று தான் பயந்தாள்.இங்கே இப்படி இருக்க…

அங்கு விக்ரமின் அறையில் "அய்யோ நான் பாட்டிற்கு என் அறையில் இருந்தேன், இந்த அம்மா வேற இனிமேல் விக்ரம் அத்தான் கூட தான் இருக்கணும் என சொல்லி என்னை வம்பில் மாட்டிவிட பார்க்கிறாங்க..? சும்மாவே என்னை பிடிக்காது இதில் இனிமேல் தினமும் ஒரே அறையில் இருந்தால் சொல்லவும் வேண்டுமா..? அந்த நந்தனா வேற யாரையோ காதலித்ததால் என் காதல் நிறைவேறிவிட்டது. ஆனா அத்தானுக்கு தான் என்மேல் காதல் இல்லையே" என லூசுத்தனமாக நினைத்தவள் அவனின் அறைக்கதவை தட்ட…

இவ்வளவு நேரம் தன்னவள் வருவாள் என வாசலையே பார்த்திருந்தவன்,அவள் வருவது போல் தெரியவில்லை நாமதான் இழுத்துட்டு வரணும் என நினைத்தப்படி அறையைவிட்டு வெளியே வர.. அதே நேரம் தன் அத்தை நந்தினியை அறையிலிருந்து அழைத்து வருவதை பார்த்தவன் மீண்டும் மெத்தையில் வந்து அமர்ந்து கொண்டான்.

வாசலில் நின்று பலமுறை கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லாமல் போகவே அவளே கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். அவனோ லேப்டாப்பை மடியில் வைத்து கொண்டு அமர்ந்திருக்க... 'அப்போ வேண்டுமென்றே தான் அத்தனை முறை கதவை தட்டியும் உள்ளே வா என்று கூட சொல்லவில்லையா..? நான் அவரோடு ஒரே அறையில் இருப்பது பிடிக்கவில்லையோ..?' என நினைத்தவள்,
தயங்கியவாறே அவனிடம் பாலை நீட்ட... அதை வாங்கி டேபிளில் வைத்தவன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவள் என்னதான் செய்ய போகிறாள் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டவன் தன் நிலையில் இருந்து மாறாமல் அமர்ந்திருந்தான்.

அவளுக்கு அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. இங்கேயே இருப்பதா இல்லை போவதா என மனதுக்குள் இங்க்கி பிங்க்கி பாங்கி கூட போட்டு பார்த்துவிட்டாள் விடை என்னவோ " போ" என்று தான் வந்தது. பேசாமல் அம்மா திட்டினாலும் பரவாயில்லை என்று நம்ம ரூமுக்கே போய்விடலாம் என முடிவெடுத்தவள் ஒரு அடி எடுத்துவைக்க முயல,

அவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தவன் அவள் முகத்தை படித்தே அவள் அடுத்து என்ன செய்ய போகிறாள் என உணர்ந்துக் கொண்டு தன் மடிக்கணினியை அங்குள்ள மேஜையில் வைத்தவன் அவள் கரம் பிடித்து இழுக்க... அதுவரை அவன் மடியில் இருந்த மடிக்கணினிக்கு பதில் இப்போது அவள் இருந்தாள் அவன் மடியில்.

முதலில் அவன் செய்கையில் அதிர்ந்தவள் பின்னரே தான் அவன் மடியில் அமர்த்திருப்பதை எண்ணி எழ முயல.. அவனோ ஒரு கரத்தால் அவள் இடையை வளைத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

அவன் செய்கை இன்னும் அவளுள் நடுக்கத்தை ஏற்படுத்த,அவளின் நடுக்கத்திற்க்கு மாறாக அவள் கன்னங்கள் இரண்டும் அவன் தொடுகையினால் சிவந்து அவளின் வெக்கத்தை பறைசாற்றியது.

"அத்தான் விடுங்களேன் பிளீஸ்" என இறைஞ்சும் குரலில் சொன்னவாறே நெளியத் தொடங்க...அவனோ அவள் தோளில் தாடையை பதித்து கன்னம் உரசியவன்

"நெளியாதடி, உங்க அம்மா சொன்னா தான் நம்ம ரூம்க்கு வருவியா" என்க,

"வந்தவுடன் அப்படியே வாவென கூப்பிட்டு தான் மறுவேலை பார்த்தீங்க..?" என அவனின் நெருக்கத்தில் தோன்றிய உரிமையில் கேட்டுவிட அப்பறம் தான் பேசியதை எண்ணி உதடு கடித்தாள்.

அவளின் கோபத்தை ரசித்தவன் "ஏண்டி நம்ம ரூம்க்கு வருவதற்கு எதுக்காக கதவை தட்டி அனுமதிக்காக காத்திருக்கணும். நீ பாட்டிற்கு வரவேண்டியது தானே" என்றவன் இன்னும் தன் நெருக்கத்தை அதிகரிக்க அவனின் உஷ்ண மூச்சுக்காற்று பின்னங்கழுத்தில் மோத,அவளின் மொத்த உடலும் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

இதற்குமேல் முடியாது என்று உணர்ந்தவள் அவனிடமிருந்து பிடிவாதமாக பிரிந்துஎழுந்து நின்றவள் ,தரையை பார்த்துக்கொண்டே "எனக்கு தூக்கம் வருது அத்தான்" என்க,

அவளின் கைப்பிடித்து அருகில் அமர்த்தியவன்,அவள் முகத்தை நிமிர்த்தி "என்னோட ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டு போய் தூங்கு என்றவன், இந்த விக்ரம் அத்தானை உனக்கு பிடிக்குமா..?" என்க

அவளோ குனிந்து கொண்டே தலையை மட்டும் ஆட்டினாள்.

"என் முகத்தை பார்த்து பதில் சொல்லு, எனக்கு இந்த தலையாட்டல் எல்லாம் வேண்டாம்" என்றவன் அவளையே துளைத்தெடுக்கும் பார்வை பார்க்க...அவனின் பார்வையே ஏதோ செய்ய மெல்ல நிமிர்ந்தவள் தைரியத்தை வரவைத்துக்கொண்டு "பிடிக்கும்" என்று மட்டும் சொன்னவள்,மறந்தும் மீண்டும் அவன் முகத்தை பார்க்கவில்லை .

பெரிதாக காதல் வசனம் பேசவில்லை என்றாலும் அவளின் பிடிக்கும் என்ற ஒருவார்த்தையே அவனை உயிர்ப்பிக்க போதுமானதாக இருந்தது.

மெல்ல அவள் கன்னங்களை கைகளில் தாங்கியவன் அழுத்தமாக தன் முத்தத்தை நெற்றியில் கணவன் என்ற உரிமையுடன் பதித்தான். இதற்குமேல் இன்றே ஏதாவது தொடங்கினாள் தன்னவள் மிரண்டுவிடுவாள் என்றுணர்ந்து போய் தூங்கு என்க,

அவளும் தலையை ஆட்டியபடி அவனை பார்த்தவாறே படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே அவன் அருகாமையில் பாதுகாப்பாக உறங்கியும் விட்டாள் .அவனும் தன்னவள் மதிமுகத்தை பார்த்தபடி வெகுநேரம் விழித்திருந்தவன் எப்போது உறங்கினான் என்பதே தெரியாமல் உறங்கிவிட்டான்.


மறுநாள் காலை முதலில் கண்விழித்த ஆதி திரும்பி தன் பக்கத்தில் பார்க்க இரவு எந்த நிலையில் படுத்திருந்தாளோ அதே நிலையில் இருக்க...அடிப்பாவி இந்த பொண்ணுங்க தூங்கும் போது "டெடி பியர் கட்டிபிடித்து கொண்டு தூங்குவாங்க என்று சொல்லுவாங்க…? அப்படியாவது தூங்கும் போது உன்னை கட்டிபிடித்து தூங்கலாம் என நினைத்தேன்…எல்லாம் வேஸ்ட். இப்படி அசையாமல் சிலைப் போல் தூங்குறா ராட்சசி" என நினைத்தவன் இதழ்கள் மட்டும் சிரித்துக்கொண்டு இருந்தது.

எப்போதும் தனது டெடி பியரை இறுக்கி அணைத்து அதில் முகம் புதைத்து உறங்கும் நந்தினிக்கு அன்று விக்ரம் தான் அவளது டெடி பியராக மாறிப்போனான். அவள் பொம்மையை பிடித்து இழுப்பதை போல் அவன் தலைமுடியை இழுத்து தன்னுடன் அணைத்து கொள்ள...விக்ரம் தான் மொத்தமாக தன் சுயத்தை தொலைத்தான். அந்த நிமிடம் அவள் கையில் பொம்மையாக மாறவே அவன் மனம் துடித்தது.

தன்மேல் ஒரு காலையும் கையையும் போட்டு அவன் முகம் அவள் கழுத்தில் புதைந்திருக்க ஆறடி ஆண்மகனை மொத்தமாக தன்னுள் அடக்கியவாறு சிறிதாக வாயை திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.


நிமிர்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருக்க அவன் மொபைலில் அலாரம் அடிக்க தொடங்கியது ..அவளிடமிருந்து விலகாமல் ஒரு கையை மட்டும் நீட்டி அதனை அணைத்தவன்,தான் அன்றாடம் எழும் நேரம் கடந்திருந்தும் எழ மனமில்லாமல் அவள் அணைப்பில் கட்டுண்டு இருந்தான்.

நேரம் கடந்து கொண்டிருக்க அவன் அலுவலகம் செல்லும் நேரம் நெருங்க 'அவளை எப்படி எழுப்புவது என யோசித்தான். அவனுக்கும் இப்போது அவளைவிட்டு பிரிய மனமில்லை தான் ஆனால் இன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதால் தன் மொபைலில் அலாரத்தை அடிக்க செய்தவன் அவள் அருகே வைத்துவிட்டு விழிமூடி கொண்டான்.

அலார சத்தத்தில் கண்விழுத்தவள் கண்களில் முதலில் விழுந்தது தன்னவன் பிம்பமே, கனவென நினைத்து சிரித்தவளுக்கு அப்போது தான் சுற்றுப்புறம் உறைத்தது. இது கனவில்லை என்று புரிந்த கணம் "எதுக்காக என்னை இப்படி கட்டிப்பிடித்து படுத்திருக்காங்க" என அவன்மேல் கோபம் கொள்ள...

அவனிடமிருந்து தன்னை பிரித்தெடுக்க நினைத்து அவன்மேல் கைவைக்க அப்போதே, தான் தான் அவனை அணைத்திருக்கிறோம் என்பது அவளுக்கு விளங்கியது.

மெல்ல அவனிடமிருந்து பிரிந்தவள் அவன் கண்விழிக்கும் முன் குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.அவள் சென்ற பிறகு எழுந்து அமர்ந்தவன்,சிரித்துக்கொண்டே தன் காலைநேர வேலையை தொடர்ந்தான்.

அனைவரும் காலை உணவை முடித்துக்கொண்டு தங்கள் வேலைக்கு செல்ல கிளம்ப..நந்தினியை அழைத்த விக்ரம் "இன்னையில் இருந்து நானே உன்னை ஹாஸ்பிடலில் கொண்டு விடுகிறேன்" என்க..

அவளோ "ஏன் நான் ஆதியோடவே போகிறேன், அவனோடு போவது உங்களுக்கு பிடிக்கலையா"..? என்க,

"லூசு மாதிரி பேசாதே அவனோடு நீ செல்வது பிடிக்கவில்லை என்றால் உன்னை ஒருநாள் கூட போக அனுமதித்த திருக்க மாட்டேன் என்றவன் இப்போ நீ அவனோடு சென்றாள் திவ்யா எப்படி போவா..?
நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்திற்கு சென்றாலும்,அவ சும்மாவே என்னை பார்த்து பயப்படுவாள் அதனால் கண்டிப்பா என்னோட வரமாட்டாள்.

பெட்டர் இனிமேல் நானே உன்னை கொண்டு விடுகிறேன்,திவ்யாவை அவன் அழைத்து செல்வான்" என்றவன் காரை நோக்கி சென்றான்.

ஆதியிடம் அதனை கூற அவன் ஏற்கனவே திவ்யாவை முதலில் இறக்கிவிட்ட பின்னர் இருவரும் மருத்துவமனை செல்லலாம் என நினைத்திருக்க,நந்தினி சொன்னது சரியாக பட்டாலும் இத்தனை நாட்கள் நந்து இல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை,அதுதான் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

பின்னர் அதான் விக்ரம் இருக்கிறானே என எண்ணியவன் " ஓகே நந்து" என்றவன் திவ்யாவை அழைத்துக்கொண்டு அவன் கம்பெனி நோக்கி சென்றான். மாலையும் ஆதி விக்ரமின் கம்பெனி வாசலில் நிற்க விக்ரம் கார் ஆதி பணிபுரியும் மருத்துவமனையில் நின்றது.

காலை போலவே இப்போதும் அமைதியாக வந்த திவ்யாவை பார்த்து..."உங்க வீட்டில் ஒத்துக்கொள்ளும் வரை என்னுடன் சாதாரணமாக பேசக்கூட கூடாது என முடிவெடுத்து இருக்கிறாயா..?" என்க அவளோ தன் மௌனம் கலைத்து "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை,என்ன பேசுவது என்று தெரியவில்லை" என்றாள்.

"ஏண்டி கட்டின புருஷன் கிட்ட பேச ஒன்னுமில்லையா..? எல்லாம் நான் வாங்கி வந்த வரம்" என்றபடி அவள் இப்போது வாய்த்திறக்க மாட்டாள் என்று அவன் பேச்சை வளர்த்தான்.

அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது தொடங்கி ஸ்கூல் காலேஜ் என கேள்வி கேட்க அவளும் தன் இயல்பான அமைதியை கடந்து வாயாட தொடங்கினாள்.

நந்துவோ 'ஆதியோடு சென்றிருந்தால் இந்நேரம் ஐஸ்கிரீம் வாங்கி தந்திருப்பான். இவங்ககிட்ட எப்படி கேட்பது' என மனதுக்குள்ளேயே விக்ரமை திட்ட தொடங்க கார் சட்டென்று நின்றது. அதற்குள்ளாகவா வீடு வந்துவிட்டது என நிமிர்ந்து வெளியே பார்க்க அவள் எப்போதும் செல்லும் ஐஸ்கிரீம் பார்லர் முன் நின்றிருந்தனர்.

கண்கள் விரிய அவனை ஆச்சரியமாக பார்க்க அவளை பார்த்து ஒற்றை கண்ணை அடித்தவன்,அவளுடன் உள்ளே நுழைந்தாள்.

தனக்கு பிடித்த ஃப்லேவர் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தவள், உங்களுக்கு அத்தான் என விக்ரமின் முகம் பார்க்க,

அவளையே பார்த்தபடி "உனக்கு பிடித்ததையே சொல்லு" என்றான் அவளை பற்றி தெரியாமல்...அவளோ ஒன்று இரண்டு மூன்று என சொல்லிக்கொண்டே போக அவளை தடுத்தவன் "ஏதாவது ஒன்றை மட்டும் ஆர்டர் செய் உனக்கும் ஒன்று தான்" என்க சிரித்திருந்த முகம் அப்படியே சுருங்கிவிட்டது.

அவள் பாவனையை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவன் "நீ ஒன்று மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் தினமும் அழைத்து வருகிறேன்" என்க..

நிமிர்ந்தவள் தன் கையை அவன் புறம் நீட்டியவாறே "பிராமிஸ்" என சிறுபிள்ளை போல் சத்தியம் கேட்க,

இத்தனை நாள் தள்ளியிருந்து இந்த மாதிரியான பொன்னான நேரத்தை எல்லாம் இழந்துவிட்டோமோ என எண்ணியபடியே அவள் கரத்தின் மேல் தன் கரத்தை பதித்து உறுதியளித்தான்.முதன்முறை ஆதியின் மேல் சிறு பொறாமை கூட தோன்றியது.

சிறிது நேரத்தில் ஐஸ்கிரீம் வந்துவிட அதை ரசித்து ருசித்து சாப்பிட்டவளை ரசித்தபடியே தன்னுடையதை உண்டான்.

அவள் சாப்பிடும் அழகை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் அவள் அறியாமல்...அவளின் கையருகே இருந்த பர்ஸை கீழே தள்ளிவிட "அய்யோ" என சொல்லியபடி அதை எடுக்க குனிந்த நொடி இருவரின் ஐஸ்கிரீமை இடம் மாற்றி வைத்துவிட்டு ஒன்றும் தெரியாத பிள்ளை போல் தன்னவள் ருசித்த ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிட இது எதையும் அறியாத நந்தினி அவனவனின் மிச்சத்தை உண்ணத் தொடங்கினாள்.



மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 23

அன்று இரவு நந்தினி முன் எச்சரிக்கையாக உறங்க வரும்போதே தன் அறையிலிருந்து தனது டெடி பியரை எடுத்து வந்தவள், கட்டிலின் நடுவில் இருவரையும் பிரிப்பதை போல் அந்த பெரிய பொம்மையை வைத்துவிட்டு தள்ளி நின்று அழகு பார்க்க...அதை பார்த்திருந்த விக்ரமிற்கு "அடிப்பாவி என்ன ஒரு வில்லத்தனம், பார்க்கிறேன்டி நீ எப்படி இந்த பொம்மையோடு தூங்குகிறாய் என்று..? இன்னைக்கு இல்ல இனிமேல் ரெண்டு பேருக்கும் நடுவே வர யாருக்கும் உரிமையில்லை என்றிருக்க, இந்த பிசாத்து பொம்மையை நடுவில் வர விட்டுவிடுவேனா..?" என்று மனதுக்குள் அவளை வறுத்தெடுத்தபடி வெளியே அமைதியாக அவளின் அடுத்த நடவடிக்கையை நோட்டமிட,

அவளோ "நான் போய் உங்களுக்கு குடிக்க பால் எடுத்துட்டு வரேன் அத்தான்" என்றபடி அறையைவிட்டு வெளியே வந்தாள்.


அவள் சென்றவுடன் அந்த பொம்மையை எடுத்தவன் "நீயெல்லாம் எனக்கு எதிரியா"..? என்றபடி தன் தலையிலேயே தட்டிக்கொண்டான்,அவன் செய்கை அவனுக்கே சிரிப்பாக இருந்தது. ஒரே நாளில் தன் இயல்பையே மாற்றிவிட்டாளே... நல்லா சிங்கம் போல் கெத்தா சுத்திட்டு இருந்த என்னை அவளை போல் பொம்மையொடு சண்டை போடும் அளவுக்கு மாற்றியதை எண்ணி சிரிப்புடன் அவளுக்காக காத்திருந்தான்.


அவளும் அறையில் நுழைந்தவுடன் கையில் இருந்த கிளாஸை அவன்புறம் நீட்ட அவனும் அமைதியாக பெற்றுக்கொண்டான். அவன் குடிக்கும் வரை காத்திருந்தவள்,அவனிடமிருந்து கிளாஸை வாங்கி வைத்துவிட்டு "குட் நைட் அத்தான்" என்றவள் தன் டெடியை கட்டிபிடித்து தூங்க தொடங்கினாள்.

சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கும் சென்றுவிட அவளை நெருங்கி அவளிடமிருந்து பொம்மையை பிரிக்கமுயல அவளோ இறுக்கமாக பிடித்திருக்க அவனால் அதனை எடுக்க முடியவில்லை.


"ராட்சசி என்னோட வேலைக்காக கூட இவளோ நேரம் முழித்து யோசித்தது இல்லை என்னையே புலம்ப விடுறடி" என அவள் கன்னம் கிள்ளியவனின் கையை தூக்கத்திலேயே தட்டிவிட அவனுக்கு அப்போதுதான் ஒன்று தோன்றியது. "மேடம் தூக்கத்தில் கனவென்று நம்பி நாம் சொல்வதை எல்லாம் கேட்பாளே" என்று நினைத்தவன் அவள் காதருகே குனிந்து "நதி" என தன்னவளை அழைக்கும் பிரத்யேக வார்த்தையை உச்சரிக்க அது சரியாக வேலை செய்தது.

கனவில் விக்ரம் அத்தானின் குரல் கேட்பதாய் நினைத்து புன்னகை சிந்தியவள் பொம்மையை பிடித்திருந்த பிடியை தளர்த்தி அதனை ஓரம் தள்ளியவள், விக்ரமை தன்னை நோக்கி இழுத்துக்கொண்டாள்.


மறுநாள் காலை முந்தைய தினத்தை போல் கண்விழித்தவள்,விக்ரமை அணைத்து படுத்திருப்பதை பார்த்து குழம்பிப் போனாள். "அய்யய்யோ நாம போட்ட பிளான் சொதப்பிடிச்சோ"..? என்றபடி பொம்மையை தேட அதுவோ அறையின் ஒரு முலையில் இருந்தது.

முகத்தை பாவமாக
வைத்துக்கொண்டு அவனைவிட்டு பிரிந்தவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்திருந்தான் விக்ரம்.மறுநாளும் அவள் அதையே செய்ய முயல, அவனே அந்த பொம்மையை தூக்கி எறிந்தவன் "இன்னும் எத்தனை தலைகாணி, பொம்மை என வைத்தாலும் காலையில் மேடம்க்கு நான்தான் பொம்மையாக இருக்க போறேன். அப்பறம் எதுக்கு இது,அதான் ஆறடிக்கு உனக்கே உனக்கென்று நான் இருக்கேனே" என்றபடி அவள் கரம் பிடித்து இழுக்க...அவன் மேல் சரிந்தவளை அணைத்துக்கொண்டு உறங்க தொடங்க...அவளோ அவன் பிடியில் அசைய முடியாமல் சிலை போல் இருந்தாள்.

ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தவன் அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்து "இனிமேல் இப்படிதான் பழகிக்கொள்" என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு "தூங்கு டா" என மென்மையாக சொல்ல மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் இருபக்கமும் தலையாட்டி அணைத்தபடியே உறங்க தொடங்கினாள்.


இதுவே தொடர்கதையாக தினமும் விக்ரமின் அணைப்பும் முத்தமும் இல்லாமல் தூக்கமே வாராது என்ற நிலைக்கு தன்னவளை கொண்டு வந்திருந்தான் விக்ரம் இந்த ஒரு மாத காலத்தில்.


திவ்யா இப்பொழுது தான் கொஞ்சம் கோபம் குறைந்து தானாகவே முன்வந்து ஆதியோடு பேசத் தொடங்கியிருந்தாள். அவர்களின் உறவில் எந்த முன்னேற்றம் இல்லாத போதும் மனதளவு ரொம்பவே நெருங்கிய உணர்வு. ஆனால் இருவருக்கும் இடையே உள்ள அந்த மெல்லிய திரையை கடந்து செல்ல அவளும் நினைக்கவில்லை அதற்கு அவனும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை,பல முறை தன்னை மீறி அவளை நெருங்கிவிட்ட நிலையில் அவளோ பதறி விலகி நிற்க, அது அவனுக்கு வலியை கொடுத்தாலும், அவளை வலுக்கட்டாயமாக அணுகுவதில் அவனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. அவளின் தற்போதைய மாற்றமே அவனுக்கு போதுமானதாக இருந்தது, முழுமையாக தன்னை அவள் ஏற்றுக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தான்,அந்த நாளும் மிக விரைவிலேயே வரும் என்ற நம்பிக்கையோடு.


காலை உணவின் போது கண்ணன் மெல்ல பேச்சை தொங்கினார். "விக்ரம் ஆதி ரெண்டு பேரும் காதலித்து தானே கல்யாணம் பணிக்கிட்டீங்க..? ஆனா உங்களை பார்த்தால் அப்படி தெரியலையே,கல்யாணம் ஆன மறுநாளில் இருந்து, என்னவோ ரெண்டு பேரும் டிரைவர் மாதிரி ஆபீஸ் அழைச்சிட்டு போய் அழைத்துக்கொண்டு வந்தால் முடிந்துவிட்டதா..? அட்லீஸ்ட் ஹனிமூனாவது போவீங்க என்று எதிர்பார்த்தேன் அதுவும் இல்லை.எங்கள் விருப்பம் இல்லாமல் தீடீரென்று இந்த கல்யாணம் நடந்தாலும் நீங்க எல்லாரும் சந்தோஷ இருக்கணும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்" என மனதில் உள்ள அனைத்தையும் சொல்ல…


விக்ரமோ "அப்பா உங்களுக்கே தெரியும் என்னால இந்த ஃப்ராஜக்ட்டை யாரிடமும் ஒப்படைத்துவிட்டு எங்கேயும் செல்ல முடியாது,இது முடிந்தவுடன் நானே போகிறேன் அதுவரைக்கும் இந்த பேச்சு வேண்டாம்" என முடித்துவிட... ஆதியும் "எனக்கும் இன்னும் கொஞ்ச நாள் லீவ் கிடைக்காதுப்பா ஆல்ரெடி ஒரு சர்ஜன் மெடிகல் லீவில் இருக்கார், அதனால் இப்போ முடியாது" என இருவருமே வேலையை காரணம் காட்டி மறுத்துவிட்டனர். ஆனால் உண்மையான காரணம் அது இல்லை என இருவருக்குமே தெரியும்,போய் மட்டும் என்ன ஆக போகிறது..? என்ற எண்ணமே இருவர் மனதிலும்.


அன்று இரவில் விக்ரம் மார்பில் முகம் சாய்த்து அவனை நிமிர்ந்து பார்த்தவள் "அத்தான் நாமளும் ஹனிமூன் போலாமே, இன்னைக்கு கூட மாமா சொன்னாங்க தானே... எனக்கு ஊட்டிக்கு போகணும்னு ரொம்ப ஆசை என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க இந்த சீசனில் சூப்பரா இருகுமாம்" என்க...

அவனோ "இவ உண்மையிலேயே புரிந்து தான் பேசுகிறாளா இல்லை புரியாமல் பேசுகிறாளா" என்பது போல் பார்த்தவன் "போய் என்ன பண்ண போறோம்"..? என்க,

"என்ன அத்தான் இப்படி சொல்லிட்டீங்க, அங்க நிறைய டூரிஸ்ட் பிளேஸ் இருக்கு,பொட்டானிக்கல் கார்டன், வாட்டர் ஃபால்ஸ், நிறைய லேக்ஸ் எல்லாம் இருக்கு" என்றவள் பார்த்து தலையிலேயே அடித்துக்கொண்டே "என் நிலைமை இவளோ மோசமாக இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை" என்றவன் உண்மையிலேயே நீ படிச்சி தான் டாக்டர் ஆனாயா இல்லை பிட் அடிச்சி எம்.பி.பி.எஸ் முடித்தாயா" என்க,

அவளோ கோபமாக "நானெல்லாம் நல்லா தான் படிப்பேன்,ஒரு அறியர் கூட இல்லை தெரியுமா..?" என முறுக்கிக்கொள்ள, "அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு" என்றவனின் மார்பிலேயே குத்தியவள் திரும்பி படுத்துக்கொண்டாள்.


தன்னை நெருங்கி சமாதான படுத்துவான் என்று காத்திருந்தவள், வெகுநேரம் ஆகியும் எந்த சத்தமும் வராமல் இருக்க திரும்பி பார்த்தவளின்
கோபம் அதிகரித்தது.

கண்களை மறைத்தவாறு கைகளை மடக்கி படுத்திருந்தான் விக்ரம்,அவனின் சீரான மூச்சுக்காற்றும் ஏறி இறங்கிய மார்பும் அவன் உறங்கிவிட்டான் என்பதை உரைக்க...அவளோ "கோபத்தில் இன்னைக்கு முத்தம் கூட கொடுக்காமல் தூங்கிட்டாங்க என கவலைக் கொண்டாள். ஹனிமூன் போகலாம் என சொன்னது தப்பா..?அதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்" என முனகியபடியே .


தூங்க முயன்றவளுக்கு அது முடியாமல் போக, அவனை நெருங்கி அவன் தோளை சுரண்டினாள்,முதலில் "ம்ம்" என்ற குரல் மட்டுமே கேட்க, "அத்தான் அத்தான்" என மீண்டும் மீண்டும் அழைக்க,அப்போதும் விழி திறக்காமல் "சொல்லுமா" என்றான்.

அவளுக்கோ எப்படி கேட்பது என்று தயக்கம் வந்து ஒட்டிக்கொள்ள. "அது..அது" என திக்க,அவனோ "சீக்கிரம் சொல்லுடி தூக்கம் வருது" என்றான் .

"எனக்கு தூக்கமே வரவில்லை அத்தான்" என்றவள் மீண்டும் அவனை தோள்த்தொட்டு எழுப்ப,கண்களை மறைத்திருந்த கையை எடுத்தவன் "ஏன் தூக்கம் வரவில்லை" என்க,

இதற்கு அவள் என்ன பதில் சொல்வதாம்..! நீ முத்தம் கொடுக்கவில்லை அதனால் தான் தூக்கம் வரவில்லை என்றா சொல்ல முடியும்.


அவளையே சற்றுநேரம் பார்த்தவன் கைநீட்டி அவளை தன் புறம் இழுத்து "ஏண்டி வாயை திறந்து முத்தம் வேண்டுமென்று கேட்க மாட்டாயா"..? என்க அவளோ "ஏன் நீங்களே கொடுக்க மாட்டீங்களா..?இத்தனை நாள் என்னைக் கேட்டா கொடுந்தீங்க..?" என மனைவி என்ற உரிமையுடன் அவனிடம் வாயாடினாள்.

விக்ரமோ "அதெல்லாம் முடியாது ஏன் தினமும் நான் தான் கொடுக்கணுமா, இன்னைக்கு நீதான் எனக்கு கொடுக்கணும்" என்க

அவளோ "அதெல்லாம் முடியாது" என்பதுபோல் வேகமாக தலையாட்டி மறுத்தாள்.

"அப்போ இனிமேல் உனக்கு முத்தமே இல்லை போடி" என்றவன் திரும்ப முயல, நந்தினியோ அவனை தடுத்து "நான் போடும் கண்டிஷனுக்கு ஒற்றுக்கொண்டால் தரேன்" என பேரம் பேச.. "நீ முத்தம் தருவதாக இருந்தால் எல்லா கண்டிஷனுக்கும் ஓகே" என்றவனை பார்த்து அப்போ கண்ணை மூடுங்க என்றாள்.


"இதெல்லாம் ஓவர், கண்ணையெல்லாம் மூட முடியாது" என்றவனை பார்த்து "பிளீஸ் அத்தான் நீங்க கண்ணை மூடினாள் தான் நான் கொடுப்பேன்" என்க...

"நெற்றியில் கொடுக்கவே இப்படி ஒரு அலப்பறையா..? படுத்துறடி எல்லாம் என் நேரம்* என்றவன் விழி மூடி காத்திருக்க,தன் இதழை மென்மையாக அவன் நெற்றியில் ஒற்றியெடுத்தவள் அவன் முகம் பார்க்க...அவனோ கண்களை திறந்து "இப்போ நீ கொடுத்ததற்கு பெயர் முத்தமா"..? என்க அவளும் "ம்ம்" என தலையசைத்தாள்.


"நதி... நதி" என அவளின் கன்னம் கிள்ளியவன் இப்போ நான் கொடுக்கவா" என அவளின் இதழ் பார்த்து கேட்க அவளும் சரியென வேகமாக தலையாட்டினாள். முதலில் அவன் பார்வையை அறியாமல் சரியென்றவள்,அவன் தன் இதழை நோக்கி வரவும், வேண்டாம் என்பதுபோல் தலையசைத்து மறுக்க அதை கண்டுக்கொள்ளாதவன் அவளின் முகம் பற்றி அவள் தந்தது போல் மென்மையாக பட்டும் படாமல் ஒரு முத்தத்தை அவள் இதழ்களுக்கு வழங்கினான்.


அவன் அழுத்தம் கூட்டி கொடுத்திருந்தால் கூட இப்படியெல்லாம் தோன்றியிருக்காது போல,ஆனால் இந்த இதழ் முத்தம் அவளின் உயிர்வரை தீண்டிய உணர்வு. அந்த உணர்வை விட்டு வெளிவர முடியாமல்…. அவன் விழிமூடி படுத்திருக்க அவளோ அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள். சற்றுநேரம் சென்றிருக்க "நதி அத்தானை சைட் அடித்தது போதும் தூங்கு" என்ற குரலில்...தன்னை கண்டுக்கொண்டானே என ஒரு அசட்டு சிரிப்பை சிந்தியபடி தூங்க முயன்றாள்.


சந்தியா காலையில் இருந்து குட்டிப்போட்ட பூனை போல் மதனையே சுற்றி வந்துக்கொண்டிருந்தாள்.
இன்று அவளுக்கு பிறந்தநாள் காலையிலேயே அம்மா அப்பா அண்ணா அண்ணி என மொத்த குடும்பமும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்க, ஏன் அவளின் மாமியார் கூட வாழ்த்திவிட்டார் ஆனால் மதனோ அவளை சிறிதும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான்.


அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் எதிரே வந்து நின்றவள், "மதன் இன்னைக்கு ஒருநாள் லீவ் போடேன் பிளீஸ்" கோவிலுக்கு போய்ட்டு எங்கேயாவது வெளியே போகலாம்" என்க...அவளோ கண்ணாடியை மறைத்தபடி நின்றிருந்தவளின் கரம் பிடித்து தள்ளி நிறுத்தியவன் தலைமுடியை சரி செய்தபடி லேப்டாப் பேக்கை எடுக்க முயல…

"மதன் ... என அழுத்தமாக அழைத்தவள், உன்னை லீவ் போட சொன்னேன் அதையும் மீறி கிளம்பினால் என்ன அர்த்தம்" என்க…


அவனோ அவள் முகம் பார்த்து "லீவ் போட முடியாதுன்னு அர்த்தம்" என பல்லை கடித்தவன் அலுவலகம் சென்றுவிட்டான்.
அவளுக்கோ அழுகை வெடிக்க முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவள் தன் அத்தையை பார்த்து எனக்கு தலைவலிக்குது கொஞ்சம் தூங்குறேன் என்றபடி அறைக்குள் நுழைந்து கொண்டாள்.


மெத்தையில் விழுந்தவளுக்கு அழுகை மட்டும் நிற்காமல் வழிந்தது. அவனிடமிருந்து ஒரு வாழ்த்தை பெற்றிருந்தால் கூட இவ்வளவு வலித்திருக்காது,ஆனால் அவனின் புறக்கணிப்பு அவளை ரொம்பவே பலகினமாக்கியது...அப்படியே அழுதபடி உறங்கி போனவள் தன் மேல் உணர்ந்த பாரத்தில் மூச்சு விடவும் சிரமப்பட்டவளாக கண்களை திறக்க….அதிர்ச்சியில் எங்கே தான் காண்பது கற்பனையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கண்களை கசக்க...


"கண்ணை நொண்டி வெளியே எடுத்துவிடாதே... கனவில்லை எல்லாம் உண்மைதான் என்றவன் அவளை இன்னும் இறுக்கமாக" அணைக்க...அவளோ கண்கள் கலங்க அவன் மார்பில் குத்தியவள் "பொறுக்கி... எதுக்குடா காலையில் அப்படி பண்ண. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா" என அழ தொடங்க…

"இல்லடி எல்லாரும் பிறக்கும் போது அழுதுட்டு தானே பிறக்கிறாங்க அதான் கொஞ்ச நேரம் உன்னை அழ வைக்கலாம் என்று".. என சொன்னவனை இன்னும் அடிக்க அவளின் கைப்பிடித்து தடித்தவன்,"அப்பறம் பொறுமையா அடிச்சி விளையாடலாம் இப்போ இந்த புடவையை கட்டிட்டு வெளியே வா. உங்க வீட்டில் இருந்து எல்லாரும் வந்திருக்காங்க" என்க….

அவன் கொடுத்த அந்த அட்டைபெட்டியை திறக்க அதில் அழகான டிசைனர் புடவை அவளை பார்த்து சிரித்தது.


"சரி நீ வெளிய போ... நான் மாத்திட்டு வருகிறேன்" என்றவளின் பேச்சை பொருட்படுத்தாமல் கைகளை கட்டிக்கொண்டு சட்டமாக மெத்தையில் அமர்திருந்தான் மதன்.

அவளோ "வெளியே போ" என்றபடி இடுப்பில் கைவைத்து முறைக்க,அவனோ "லூசு பொண்டாட்டி புடவை வாங்கி கொடுத்ததே அதை என் கையாலேயே கட்டிவிட தான்" என சொன்னவனை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றினாள்.


அவளும் அவன் பரிசளித்த சேலையில் கிளம்பிவர ஹாலில் அவளது மொத்த குடும்பமும் நின்றிருக்க நடுவில் கையில் கேக்கை தாங்கியவாறு நின்றிருந்தான் மதன். அதன் பின் அன்றைய நாள் களைக்கட்டியது.கேக் வெட்டிக் கொண்டாடியவர்கள் குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுவிட்டு மதிய உணவை வெளியே முடித்துக்கொண்டு வீடு போய் சேர….மதன் சந்தியா மட்டும் வீட்டுக்கு செல்லாமல் முதன்முறை காதலர்களாக இதற்கு முன் எங்கே எல்லாம் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார்களோ. அங்கே எல்லாம் சுற்றிவிட்டு இரவு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.


குளித்துவிட்டு இரவு உணவையும் முடித்துவிட்டு மதன் அறைக்கு சென்றுவிட...சமையலறையை ஒழுங்குப் படுத்திவிட்டு படபடக்கும் மனதோடு அறைக்குள் நுழைந்தாள் சந்தியா . அவள் வருவதற்காகவே காத்திருந்தவன் பின்னாலிருந்து அணைத்துகொள்ள அவனின் அதிரடியில் ஒரு நொடி மிரண்டுப் போனாள்.


"மதன் விடுடா" என அவள் கத்த அவனோ "அதெல்லாம் முடியாதுடி இனிமேல் உன்னை விடுவதாக இல்லை" என்றவன்அணைத்தபடியே கட்டிலை நோக்கி சென்றான். மெத்தைக்கு அருகே வந்து அவளை அணைப்பிலிருந்து விடுவிக்க, அவளோ முகம் சிவக்க அவனை எதிர்கொள்ள முடியாமல் தரையை பார்த்து நின்றுகொண்டிருந்தாள் .


கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி தள்ளி நின்று அவள் வெட்கத்தை ரசித்தவன், "உன் பர்த்டேக்கு எனக்கு ஒன்றும் இல்லையா..?" என அந்த இருளை மயக்கும் ஹஸ்கி குரலில் கேட்க….அவளோ அவன் புறம் இருந்து நகர்ந்து மேஜையை நோக்கி சென்றவள் வரும் போது சாக்லேட்டோடு வர….எதுவோ திட்ட வாய்த்திறக்க அவனை முந்திக்கொண்டு "இதை இனி எனக்கு விஷ் பண்ணும் போது தருவதற்காகவே வாங்கி வந்தேன்" என நடுவில் இதய வடிவில் இருக்கும் டைரி மில்க் சாக்லேட்டை நீட்ட….அவனோ சற்றும் யோசிக்காமல் எனக்கு "சாக்லேட் பிடிக்காது" என்றான்.


"என்னது சாக்லேட் பிடிக்காதா…? "அச்சோ உனக்காக தான் இதை ஆசையாக வாங்கினேன்,இப்போ எல்லாமே வேஸ்டாக போய்டுச்சு" என கவலைக்கொள்ள...அவளை நெருங்கி அணைத்தவன் "நான் வேண்டுமென்றால் ஒரு ஐடியா சொல்லவா..?" என்றவனின் முகம் பார்க்க அவன் சொன்ன வார்த்தையில் வெட்கத்தில் முகம் சிவந்து அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

"நான் ஒன்றும் விளையாட்டுக்கு சொல்லல, உண்மையாக தான் சொன்னேன்.நான் என்ன குழந்தையா சாக்லேட் சாப்பிட அதான் எதுக்கு சாக்லேட்டை வேஸ்ட் பண்ணனும் சீக்கிரம் நமக்குன்னு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் ,எல்லா சாக்லேட்டையும் அவங்க சாப்பிடுவாங்க என்றவன்,இப்போவே அதுக்கான வேலையில் இறங்கினால் தான் உன்னோட அடுத்த பிறந்தநாளுக்கு நம்ம குழந்தையும் இருப்பான்" என்றபடி அவளையும் இழுத்து இருவருமாக மெத்தையில் விழ… அங்கே அழகாக அரங்கேறியது ஒரு காதல் யுத்தம்.அதில் யார் வென்றார் யார் தோற்றார் என்ற வேறுபாடின்றி மீண்டும் மீண்டும் யுத்தம் தொடர...விடியலின் போது இருவரும் மெல்ல உறக்கத்திற்கு சென்றனர்.


அதன் பின் ஒவ்வொரு நாளும் இருவரும் தங்கள் இத்தனை நாள் பிரிவை ஈடுசெய்ய….அன்று விக்ரம் அறையில் " மச்சி ஒரு ஒன் வீக் லீவ் வேண்டும்" என்ற மதனை பார்த்து "எதுக்குடா" என்க..

அவனோ "நான் என் வைஃப் கூட ஹனிமூன் போகப் போறேன். அதான் எல்லாரும் உங்களை மாதிரியே இருப்பாங்களா..?" என்றவனை முறைத்துக் பார்த்தவன் எல்லாம் என் நேரம் நீயெல்லாம் கலாய்கிற நிலைக்கு கொண்டுவந்த தன்னவளை மனதுக்குள்ளேயே செல்லமாக திட்டிக்கொண்டான்.


ஒரு ஜோடி தங்கள் வாழ்க்கையை தொடங்கியிருக்க,ஒரு ஜோடியோ தொடங்கலாமா வேண்டாமா என்ற கேள்வியில் இருக்க,ஒரு ஜோடியோ இப்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் சுற்றிக் கொண்டிருந்தனர்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 24

அன்று காலை எழுந்தது முதல் எதுவோ சரியில்லாத மாதிரி தோன்றியது கீர்த்தனாவிற்கு இடது கை, தோள்பட்டை, தாடை எல்லாம் வலியெடுக்க.. சாதாரண வலியாக இருக்கும் என அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் தனது அன்றாட வேலையை தொடர்ந்தார். காலை நேரம் பரபரப்பாக செல்ல அனைவரும் தங்கள் வேலைக்கு சென்றுவிட... தன் அறைக்கு வந்து சிறிது உறங்கி எழுவோம் வலி குறையும் என எண்ணியவாரே படுத்தவருக்கு சிறிது நேரத்தில் வலி அதிகமாகியது.

இதற்கு மேல் முடியாது என்றுணர்ந்து சிரமப்பட்டு எழுந்து நெஞ்சை பிடித்துக்கொண்டே வெளியே வந்தவர் ஹாலை கடப்பதற்குள் மயங்கி சரிந்தார்.


ராதா தனது அறையிலிருக்க கண்ணன் அலுவலக அறையில் ஆபீஸ் பைல்களை பார்த்துக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்த வேலையாள் கீர்த்தனாவின் நிலையை கண்டு பயந்தவராக குரல் எழுப்ப... "என்னச்சோ ஏதாச்சோ" என பதட்டத்தோடு ஓடிவந்த கண்ணன் தன் தங்கையின் நிலையை கண்டு ஒரு நொடி ஆடிப்போய்விட்டார்.


பின்னர் இது உடனடியாக செயல்பட வேண்டிய நேரம் என்பதை உணர்ந்து அவரை காரின் பின் இருக்கையில் ஏற்றியவர் காரை அதிவேகத்தில் ஆதி நந்தினி பணிபுரியும் மருத்துவமனைக்கு செலுத்தினார். முன்கூட்டியே ஆதிக்கு தகவல் சொன்னதால் கார் எமர்ஜென்சி வாசலில் நின்ற அடுத்த நிமிடமே அவருக்காக காத்திருந்த ஸ்ட்ரக்ச்சரில் ஏற்றப்பட்டு உடனடியாக சிகிச்சையை தொடர்ந்தனர்.

இ.சி.ஜி மாற்றங்களை வைத்து ஹார்ட் அட்டாக் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை தொடர்ந்தது,மேலும் அதனை உறுதி செய்ய அன்ஜியோகிராம் ( இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை உள்ளதா என கண்டறிய செய்யப்படும் பரிசோதனை ) எனப்படும் புரோசிஜர்க்கும் அவரை தயார்ப்படுத்தினர்.


நந்தினி பயந்துவிடுவாள் என்பதால் மருத்துவமனைக்கு வந்தவுடன் என்னவென்று அறிந்த பின்பு சொல்லலாம் என ஆதி கூறிவிட அவருக்கும் அதுவே சரியாகப்பட்டது. தன் தாயின் நிலை அறியாமல் தனது ஓபிடி யில் நோயாளிகளை பார்த்துக் கொண்டிருந்தவள் அறைக்கு ஆதி நுழைய…அப்போது தான் அடுத்த நோயாளியை அழைக்க காலிங் பெல்லை அடித்தவள் ஆதியை அங்கே எதிர்பார்க்கவில்லை.

அவனை டியூட்டி நேரத்தில் பார்ப்பது மிகப் பெரிய விஷயம் எப்போதும் பிஸியாக இருப்பவன் இன்று தன்னை தேடி வந்தாள் ஆச்சரியப்படாமல் அவளும் என்ன செய்வாள்.


"என்ன ஆதி இந்த நேரத்தில் என்னை பார்க்க வந்திருக்கிறாய் ? அதிசயமா இருக்கு" என சிரித்தபடியே கூறியவளை பார்த்து, முயன்று தன் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டவன் "என்கூட வா... ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்க..

அவளோ "இன்னைக்கு நிறைய ஓ.பி இருக்கே" என தொடங்கியவள் முடிக்கும் முன்பே "அதெல்லாம் பரவாயில்லை இன்னிக்கு ஒரு நாள் எல்லாமே உன்னோட ஃப்ரண்ட் பாத்துப்பாங்க ?" என்றவனின் பேச்சே ஏதோ ரொம்பவும் முக்கியமான விஷயம் போல என உணர்ந்து கொண்டவள் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவனுடன் சென்றாள்.


நேராக லிஃப்ட் மூலம் ஃபர்ஸ்ட் ப்ளோர் செல்ல...அவளுக்கோ ஒன்றும் புரியாத நிலை, இந்த மருத்துவமனையில் முதல் தளம் முழுவதும் ஆபரேஷன் தியேட்டர், கேத் லேப், தீவிர சிகிச்சை பிரிவு மட்டுமே இருக்க இங்கே எதற்கு தன்னை அழைத்து வந்தான் என புரியாமல் குழம்பியவளுக்கு அங்கே கேத் லேப் கதவின் வெளியே இருக்கையில் தலையை கைகளில் தாங்கி அமர்ந்திருந்த தன் அத்தை மாமாவை பார்த்தவளின் கண்கள் தன் அன்னையை தேட...அவர் அங்கே இல்லாமல் மனம் படப்படக்க ஆதியின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்.


"பயப்படாத நந்து ஒண்ணுமில்லை, செஸ்ட் பெயின்( நெஞ்சு வலி) வந்து மயங்கிட்டாங்க..? அதான் அன்ஜியோ பண்ணி பார்க்கிறோம்" என்க...அவன் சொல்வது எதுவும் அவள் காதில் விழவில்லை,கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிய தன்னை நோக்கி வந்த அத்தையை அணைத்துக்கொண்டு கதறிவிட்டாள்.

பத்து வயதில் தந்தையை இழந்து கதறியவளுக்கு துணையாக இருந்து, அந்த இழப்பில் இருந்து தன்னை மீட்டெடுக்க போராடிய அன்னை இன்று உடல்நிலை சரியில்லாத நிலையில் இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.தினமும் மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு ஒரு மணி நேரமாவது தன் அன்னையுடன் செலவழிப்பவள், காலை முதல் நடந்தது அனைத்தையும் அவரிடம் சொல்லாமல் இருந்தலில்லை. அவளுக்கு ஒரு அன்னையாக மட்டுமில்லாமல் நல்ல தோழியாகவும் இருந்தவரின் நிலையை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஆதியோ கேத் லேப் உள்ளே நுழைந்தவன் அங்குள்ள கார்டியோலாஜிஸ்ட் உடன் பேசி தன் அத்தையின் நிலையை கேட்டறிந்தவன் அவருக்கு இதயத்தில் இருக்கும் இரண்டு இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதாக சொல்ல...இருதய அறுவைசிகிச்சை நிபுணராக இருக்கும் ஆதிக்கு பெரிதாக ஏதுமில்லை என்பதிலேயே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...அறுவைசிகிச்சை செய்யும் அளவுக்கு பெரிய அளவில் இல்லாததால் அன்ஜியோபிளாஸ்டி செய்தால் போதும் என்ற நிலையில் அப்போதே அதுவும் நடந்தேறியது.


வெளியே நந்துவின் அழுகையை தான் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை,ஆதியும் அவரின் நிலையை சொல்லி பயப்பட ஒன்றுமில்லை என்றாலும் அவளுக்கு தாய் தந்தை இரண்டுமே அவள் அன்னை தான் என்ற நிலையில்..யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இல்லை.

அனைவரும் பயந்து போயினர், எங்கே இப்படி அழுது இவளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று….இவள் அழுகையை கட்டுப்படுத்த கூடிய ஒருவனோ அங்கே தன் அலுவலகத்தில் ஃபோர்ட் மீட்டிங்கில் அடுத்த புராஜக்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.


மீட்டிங் அறையில் அனைவர் ஃபோனும் சைலண்ட் மோடில் இருக்க, மதன் சந்தியா திவ்யா என அனைவர் ஃபோன்க்கும் அழைத்தவன் தன் கோபத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு விக்ரமிற்கு அழைக்க எண்ணி அவன் எண்ணை அழுத்திய நேரம்,மீட்டிங் முடிந்து மொபைலை பார்த்த மதன் எதற்கு இத்தனை தடவை ஃபோன் செய்து இருக்கிறான் என்றபடி அவனுக்கு அழைக்க….

காதில் வைத்தது முதல் சரமாரியாக திட்டிய ஆதி "ஏண்டா எதுக்கு நீங்களெல்லாம் மொபைல் வத்திருக்கீங்க தூக்கி குப்பையில் போடு" என்று கத்தியவன் நடந்ததை சொல்லி, "நந்துவை சுத்தமா கட்டுப்படுத்த முடியலை டா விக்ரமை சீக்கிரம் வர சொல்" என்றவன் இணைப்பை துண்டித்தான்.


அதிவேகத்தில் காரை செலுத்தியபடி வந்துகொண்டிருந்த விக்ரமிற்கு கவனம் சாலையில் இருந்தாலும் மனம் முழுவதும் தன்னவளை சுற்றியே இருந்தது. அத்தையை நினைத்து வருத்தமாக இருந்தாலும் அதையும் தாண்டி தன்னவள் துன்பத்தில் தான் உடன் இல்லாமல் போனதை எண்ணி தன்னையே திட்டியப்படி மருத்துவமனை வந்து சேர்ந்தான்.


சந்தியா திவ்யா இருவருமே நந்துவின் இருபக்கமும் அமர்ந்து அவளுக்கு அறுதல் சொல்ல... இந்த ஒரு மாத காலத்தில் தன்னையும் ஒரு மகளாக பார்த்துக்கொண்ட கீர்த்தனாவை நினைத்து வருந்தியவள்,அதேநேரம் இந்த குறுகிய காலத்தில் தனக்கு நெருங்கிய தோழியாக மாறிய நந்தினியை தேற்ற முயன்று கொண்டிருந்தாள் திவ்யா.


விக்ரம் வந்தவுடன் தன் தந்தையிடம் அத்தையின் நிலையை கேட்டு அறிந்தவன், தன்னவளை நோக்கி செல்ல அங்கே இரு பெண்களும் அவளை தேற்ற முயன்று தோற்றனர். விக்ரமின் வருகையை உணர்ந்த ஆதி, திவ்யா சந்தியா இருவரையும் நந்துவிடமிருந்து பிரித்து தன்னுடன் அழைத்துக்கொண்டு தள்ளியிருந்த இருக்கையில் சென்று அமர வைத்தான்.


அதுவரை விக்ரமின் வருகையை கூட உணராமல் தன்னில் கரைந்து கொண்டிருந்த நந்து தன் தோளில் உணர்ந்த தன்னவனின் தொடுகையில் நிமிர்ந்து பார்த்தவள்,இன்னும் அழுகை வெடிக்க அவன் இடையை கட்டிக்கொண்டு சத்தமாக அழ தொடங்கினாள்.


சிறிதுநேரம் மென்மையாக "ஒன்னுமில்ல டா எல்லாம் சரியாகிவிடும்" என அவளின் தலை வருடி சமாதானப்படுத்தியவனின் வார்த்தைக்கு பலனில்லாமல் போக, உடனடியாக முகத்தில் கடுமையை கொண்டுவந்தான்.

அவனின் கோபம் மட்டுமே அவளை கட்டுப்படுத்தக்கூடிய ஆயுதம் என நன்றாகவே உணர்ந்தவன் "மப்ச்... இப்போ எதுக்கு இந்த அழுகை..? அதான் அம்மா நல்லா இருங்காங்கன்னு எல்லாரும் சொல்றாங்க இல்ல அப்பறம் எதுக்காக அழுகிறாய்..?" என அழுத்தமாக சொன்னவன் "அழுகையை நிறுத்து" என்றான்.


அப்போதும் அழுகையை நிறுத்தாமல் இருந்தவள் கரத்தை பிடித்தவன் "நீ கிளம்பு வீட்டுக்கு போகலாம்" என்க அழுகையோடு அவனை புரியாமல் பார்த்தவளை கண்டு

"உன் அழுகையை நிறுத்தி, சொல் பேச்சை கேட்டு நடந்தால் இங்கே இருக்கலாம். இல்லையென்றால் இப்போவே கிளம்பு" என்றவன் கையை பிடித்து இழுக்க… "அம்மா" என்று தெம்பியவளை பார்த்து இளகிய மனதை கட்டுப்படுத்தி

"அழுகையை நிறுத்தவில்லை என்றால் கண்டிப்பாக இது நடக்கும், நீ வரவில்லை என்றாலும் தூக்கிட்டு போகவும் எனக்கு தெரியும்" என்றவன் கைகளை கட்டியபடி அவளையே பார்க்க…


அவன் சொன்னதை கண்டிப்பாக செய்துவிடுவான் என்பதை நன்றாகவே அறிந்தவள்,கண்களை துடைத்துக்கொண்டு தேம்பியவாறே அவன் முகம் பார்க்க… அவளை நோக்கி தண்ணீர் நிரம்பிய கிளாஸை நீட்ட '' என தலையாட்டி மறுத்தவளை கண்டு,

கொஞ்சமும் இரக்கம் கொள்ளாமல் "அப்போ வீட்டுக்கு கிளம்பு" என்க,சட்டென்று அவன் கையிலிருந்த கிளாஸை வாங்கி ஒரே மூச்சாக நீரை குடித்து முடித்தாள்.


அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது,இத்தனை நேரம் யாரின் சொல்லுக்கும் கட்டுப்படாதவள் விக்ரமின் ஒற்றை கோபத்திற்கு கட்டுப்பட்டு பொம்மை போல் தலையாட்டி நிற்பதை பார்த்து.

மதனை அழைத்து ஜுஸ் வாங்கிவர சொன்னவன் அதையும் அவள் குடித்து முடிக்கும்வரை விடவில்லை.


ஒரு வழியாக கீர்த்தானாவை ஐ.சி.யூவிற்கு மாற்ற... அனைவரும் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் என்றாலும் ஆதி நந்தினி அங்கேயே பணிபுரியும் டாக்டர் என்பதால் அவர்களுக்கு பார்க்க எந்த தடையும் இல்லாததால், அவர்களை தவிர்த்து விக்ரம் கண்ணன் இருவரும் மட்டும் சென்று பார்த்து வந்தனர்.


அதன்பின் அவரின் நலன் அறிந்த பின்பு அனைவரையும் வீட்டுக்கு செல்ல சொன்ன ஆதி ஐ.சி.யூ வில் யாருக்கும் அனுமதி இல்லை, காலையிலும் மாலையிலும் விசிட்டிங் ஹவர்ஸில் மட்டுமே பார்க்க முடியும் என்று கட்டாயப்படுத்தி நந்துவையும் அவர்களுடன் அனுப்பி வைத்தான்.


இரவு உறங்காமல் அழுது கொண்டிருந்தவளை தன் கோபம் கொண்டு உறங்கவைத்தான் விக்ரம். தினமும் காலையும் மாலையும் தன் அத்தையை சென்று பார்த்து அவரின் நலனறிந்த பின்பே மற்ற வேலையை பார்க்க தொடங்கினான்.


இன்றோடு நான்கு நாட்கள் நிறைவடைந்த நிலையில்,இன்று அவரை டிஸ்சார்ஜ் செய்ய இருந்தனர்.

மாலை எப்போதும் போல கீர்த்தனாவை பார்க்க வந்த திவ்யா,டிஸ்சார்ஜ் ஆனவுடன் சேர்ந்தே செல்லலாம் என நினைத்தவள்,அனைவருக்கும் காஃபி வாங்கி வர கேன்டீன் வரை சென்றாள்.


கேண்டீனில் பிளாஸ்க்கை கொடுத்தவள்,அப்போதுதான் அங்கு தன் அன்னையும் தங்கையும் அமர்ந்திருப்பதை பார்த்தாள்.
விரைந்து அவர்களின் அருகே சென்றவள் "அம்மா இங்க என்னமா பண்றீங்க ?பிரியா எப்படி இருக்க? அப்பா எப்படி இருக்காங்க" என அடுக்கடுக்காய் ஒரு மாதமாக பார்க்காத தன் குடும்பத்தை பார்த்த மகிழ்வில் கேட்க...

அவளின் தாயோ முகத்தை திருப்பி கொண்டு "சீக்கிரம் சாப்பிட்டு முடி" என்று பிரியாவிடம் கத்தியவர் திவ்யாவை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.பிரியாவோ வெகுநாட்கள் கழித்து தன் அக்காவை பார்த்ததில் எப்போதும் போல் நடந்த அனைத்தையும் ஒப்பித்தாள்.
"அக்கா... அப்பாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு காலில் பிராக்ச்சர்" என்க பதறியவள்,

"என்னடி சொல்ற அப்பாவுக்கு என்னாச்சு..? ஏன் என்கிட்ட எதுவும் சொல்லவில்லை" என்றவளை பார்த்து கோபமாக எழுந்த அவளின் அன்னை "எதுக்காக உன்கிட்ட சொல்லனும் உனக்கும் எங்களுக்கும் என்ன சமந்தம்" என கத்தியவர் பிரியாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட...அடுத்து என்ன செய்வது என தெரியாமல் நின்றவள் பின்னர் ரிசப்ஷனில் தந்தை பெயரை சொல்லி அவர் இருக்கும் அறை எண்ணை வாங்கியவள்,

அறைக்குள் நுழைய அவளை பார்த்தவருக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ கையில் வைத்திருந்த கிளாஸை தூக்கி எறிந்து "இப்போ எதுக்கு இங்க வந்தாய்..? நாங்க இன்னும் உயிரோடு இருக்கோமா இல்லை செத்தோமா என பார்க்க வந்தாயா..? எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான் அது இவள் மட்டும்தான் என பிரியாவை காட்டியவர், உன்னை எப்போதோ தலை முழுகிட்டேன்" என்றுவிட்டு அவளை பார்க்க விருப்பமில்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.


"அப்பா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன். அந்த கல்யாணமே எனக்கு தெரியாமல் தான் நடந்தது" என தன் பக்க விளக்கத்தை சொல்ல நினைத்தவளை "நீ சொல்லும் எந்த கதையையும் கேட்க நான் தயாராக இல்லை" என்றபடி கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்ப...அழுதுகொண்டே வந்தவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு கீர்த்தனாவின் அறைக்குள் நுழைந்தாள்.

 
Status
Not open for further replies.
Top