ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 28


"அத்தான் பொய் தானே சொல்றீங்க..? உண்மையை சொல்லுங்க, நானா காரணம்" என விழிகள் குளமிட அவன் மீதே பார்வையை செலுத்திய வண்ணம் "ஆம்" என்று மட்டும் சொல்லிவிடாதே என்பது போல் பார்க்க..அவனோ அவள் விரும்பாத பதிலை தான் சொன்னான்.


அவளோ "ஏன் நான் என்ன பண்ணினேன்" என எவ்வளவு யோசித்தும் விடை தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க...அவன் தன் குரலை செருமியபடி சொல்ல தொடங்கினான்.


ஆதி விக்ரம் இருவரும் உடன் பிறந்த இரட்டையர்களாக இருந்ததாலும் இருவரின் குணாதிசயங்களும் வெவ்வேறாகவே இருந்தது. ஆதி சிறுவயது முதலே எந்த சூழலையும் நிதானமாக கையாளுபவன்,எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் அதனை பேசியே சரி செய்ய முயல்வான்.ஆனால் விக்ரம் அதற்கு நேரெதிராக...கோபமே முதன்மையாக இருக்கும்.ஆனால் எவ்வளவு கோபத்திலும் தன் நிதானத்தை இழக்க மாட்டான்,அதேநேரம் கையில் எடுத்த வேலையை முடிக்காமல் விடவும் மாட்டான்.


ஆதி யாராக இருந்தாலும் சட்டென்று பேசி பழகிவிடுவான்,அதனாலேயே அவனின் நட்பு வட்டம் மிகவும் பெரியது.விக்ரமிற்கும் நண்பர்கள் இருந்தாலும் அது மிக குறைவே, மதன் மட்டுமே இருவருக்கும் பொதுவுடமையாகி போனான்.


எது எப்படி இருந்தாலும் இருவரும் ஒற்றுமையாகவே இருந்தனர்.சொல்ல போனால் பார்க்கும் அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் ஒற்றுமையாக, எதற்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.


இருவருக்குள்ளும் சகோதரர்களுக்கு உரிய அன்பு ஒற்றுமை இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு புரிதலை முதன்முறை உணர்ந்த தருணம் அன்றைய தினம் தான். இருவரும் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்க,வழக்கம் போல் ஸ்கூல் முடிந்தவுடன் கிரவுண்டில் விக்ரம் பஸ்கட் பால் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஆதி அடுத்த நாள் செய்யவேண்டிய அசைன்மெண்ட்க்காக லைப்ரரியில் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க.. மதன் ஆதியோடு இருக்க விக்ரம் தணித்து தன் டீமோடு இருந்தான்.


மதனோ ஆதியை திட்டிக் கொண்டே நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான் "ஏண்டா நீ பெரிய படிப்பீஸ்ட் தான் ஒத்துக்கிறேன், அதுக்காக என்னையும் இப்படி விளையாடவிடாமல் கொடுமை படுத்துற" என்க

" தினமும் தானே விளையாட போறோம்,ஒருநாள் உன்னால போகாமல் இருக்க முடியாதா….மரியாதையா நோட்ஸ் எடு இல்லனா கழுத்தை நெரித்து கொன்றுவிடுவேன்" என்றவன் புத்தகத்தில் கவனம் செலுத்த மதனும் வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தான்.

"நானெல்லாம் ஸ்கூல் ஒர்கிங் டைமில் கூட இப்படி படிக்கமாட்டேன் என்னை போய் இப்படி ஓவர்டைம் படிக்க வைக்கிறானே.. எல்லாம் விதி" என்றபடி புத்தகத்தை புரட்டினான்.


அப்போது கிரவுண்டில் விளையாடி கொண்டிருந்த விக்ரமை பார்த்து "எப்போதும் இவனால் தான்டா நாம தோற்றுப் போகிறோம், நாமதான் அவனைவிட சீனியர் அப்படியிருந்தும் அவனை செயிக்க முடியவில்லை" என்ற கோபத்தில் எதிர் அணியை சேர்ந்த மாணவர்கள் வேண்டுமென்றே அவனை அந்த வார இறுதியில் நடைபெற இருக்கும் கைப்பந்து ஆட்டத்தில் கலந்துக்கொள்ள கூடாது என்று திட்டம் தீட்டினர்.

வேகமாக ஓடி வந்து பந்தை கூடையில் போட்டுவிட்டு காலை கீழே வைக்கும் வேளை விக்ரமின் காலை இடறிவிட... இதை கொஞ்சமும் எதிர்பாராத விக்ரம் எகிறிக் குதித்ததினால் பிடிமானம் இன்றி கீழே விழுந்தான்.

நெற்றியிலும்,முழங்கை மற்றும் முழங்கால் முட்டியிலும் அடிப்பட்டு இரத்தம் வர எழ முடியாமல் தவித்தவன் நிமிர்ந்து பார்க்க..தட்டிவிட்டவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தான்.


அப்போதே புரிந்துகொண்டான் இது தெரியாமல் நடந்த விஷயமில்லை வேண்டுமென்றே தான் இப்படி செய்திருக்கிறார்கள் என்று. உயிர்ப் போகும் வலியை உணர்ந்தாலும் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வரவில்லை.அவனும் பள்ளி செல்லும் சிறுவன் தான் வலிக்காமல் இருக்க அபூர்வ பிறவி ஒன்றுமில்லையே ஆனால் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் முன்பு அழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் அழுகையை அடக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக் கொண்டிருந்தான்.


அதேநேரம் இங்கே லைப்ரரியில் அமர்ந்திருந்த ஆதிக்கு என்னவோ போல் இருந்தது...உடல் லேசாக வியர்க்க தொடங்க இதயம் தன் துடிப்பை அதிகமாக்கியது. அவனுக்குள் என்ன நேர்கிறது என உணர முடியாத வயதில் இருப்பவனுக்கு ஏதோ சரியில்லை சரியில்லை என மனம் அடித்துக்கொண்டது.

அப்போது அவன் மனக்கண்ணில் தோன்றியது விக்ரமின் முகமே….ஏன் அவன் முகம் தோன்றுகிறது என எண்ணியவன் அனைத்தையும் ஒன்றாக கோர்த்துப் பார்க்க விக்ரமிற்கு ஏதோ ஆபத்து என்பது புரிந்தது.

புரிந்த நொடி சற்றுநேரம் என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் உறைந்து நின்றான்.விக்ரம் ஒன்றும் வெகுதூரத்தில் இல்லை லைப்ரரிக்கு வெளியே சென்றால் போதும் அவனால் ஸ்கூல் கிரவுண்ட் மொத்தத்தையும் பார்க்க முடியும் இருந்தாலும் முதன்முறை ஏற்ப்பட்ட மாற்றத்தால் அப்படி உறைந்து நின்றவன், சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டு

மதனை நோக்கி " வாடா போகலாம்" என்க...
அவனோ அப்போது தான் ஆர்வமாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.


"ஏண்டா நான் போகலாம் என சொன்னபோது முடியாது என்று சொல்லிவிட்டு இப்போது படிக்கும் மூட் வரும்போது போகலாம் என்கிறாய்" என்று காய்ந்தவனை பதட்டத்துடன் பார்த்து

"விளையாடாத டா சீக்கிரம் வா விக்ரமிற்கு ஏதோ ஆகிவிட்டது போல் இருக்கு" என படப்படக்க.. அவன் முகத்தை பார்த்து விளையாட்டை கைவிட்டவன் ,

"உனக்கு எப்படிடா தெரியும் அவன் வெளியே இருக்கான், நம்ம இங்க இருக்கோம்" என புரியாமல் கேட்க...

அவனோ "அதெல்லாம் அப்பறம் சொல்றேன் முதலில் வா" என அவனை இழுத்துக்கொண்டு கைப்பந்து விளையாடும் இடத்தை நோக்கி நடையை எட்டிப்போட,அங்கே அனைவரும் கூட்டமாக இருப்பதை பார்த்த ஆதி மதனின் கையை விட்டுவிட்டு ஓட தொடங்கினான். அவனின் ஓட்டத்தை பார்த்த மதனும் அவனை பின் தொடர்ந்து ஓடினான்.


அங்கே கூட்டத்தை விளக்கி உள்ளே சென்ற ஆதி பார்த்தது அடிப்பட்டு இரத்தம் சொட்ட நின்ற விக்ரமை தான்.

விக்ரம் "என்னடா ஆச்சு" என்றபடி தன் கைக்குட்டையால் நெற்றியில் கட்டிட்டவன்,மதனின் கைக்குட்டையை வாங்கி கையில் கட்டியபடி,

"மதன் நீ போய் ஆபீஸில் யாராவது ஸ்டாஃப் இருந்தால் அப்பாவுக்கு கால் பண்ணு" என்றவன் கூட்டத்தை கலைத்து...குடிக்க தண்ணீர் கொடுத்தவன்

"ரொம்ப வலிக்குதாடா" என்றபடி வாசலையே பார்த்துக் கொண்டிருக்க.. சிறிது நேரத்தில் அவனின் தந்தையும் வந்துவிட்டார். அதன்பின் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றவன் வீடு வந்து சேர...அதற்குள் அனைவரும் அவனுக்கு அடிப்பட்ட விஷயம் கேட்டு பதட்டத்துடன் காத்திருந்தனர்.


நந்தினியின் வீடும் அருகிலேயே இருக்க,அவர்களுக்கு வாரம் சனி ஞாயிறு இங்கே தான்.அவர்களும் அவனை காண வந்திருக்க அனைவரின் நல விசாரிப்புக்குக்கு பிறகு தன் அறைக்கு வந்தவனுக்கு அவன் அன்னை உணவை ஊட்டிவிட்டு மருந்து கொடுத்துவிட்டு செல்ல… அவனும் டிவியை ஆன் செய்துவிட்டு அமர்ந்தான்.


சற்று நேரத்தில் ஆதியும் மதனும் வர….அவனிடம் எப்படி அடிப்பட்டது என கேட்டும், கீழே விழுந்துவிட்டேன் என்பதை தவிர எதுவும் சொல்லவில்லை.

பின்னர் விக்ரம் ஆதியை பார்த்து "உனக்கு எப்படிடா தெரியும், யாரு சொன்னது எனக்கு அடிப்பட்டு விட்டது என்று" என கேட்க,

ஆதியும் தனக்கு நேர்ந்த மாற்றத்தை சொல்ல அதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாத நிலையில் இருந்தான். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களும் அவனை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு சென்றுவிட...அவனும் உறங்கலாம் என நினைத்த வேளை அவன் அறைக்குள் ஒரு தலை மட்டும் எட்டிப் பார்த்தது.


"ஏய் வாலு... இங்க என்ன பண்ற ?" என்றவனின் குரலில்

"அய்யய்யோ பார்த்துட்டாங்களா" என்றபடி உள்ளே வந்த நந்தினி, அவனை நெருங்கி கால் கட்டை பார்த்தபடி "உங்களுக்கு அடிப்பட்டு விட்டதா அத்தான்" என்க..

அவனும் தலையை மட்டும் " ம்ம் " என ஆட்ட,மெல்ல அவளின் பிஞ்சு கைவிரல்களால் கால் கட்டினை வருடி

"உங்களுக்கு வலிக்குதா ?" என்றவள் உதடு குவித்து ஊதியவாறே "இப்படி பண்ணா வலி போய்டும் எனக்கு அடிபட்டா அம்மா இப்படிதான் பண்ணுவாங்க" என்றவளின் கண்களில் கண்ணீரை கண்டவன்,

அவளை தன் அருகில் அழைத்து "எதுக்கு அழற" என்க

அவளோ சட்டென்று "உங்களுக்கு வலிக்கும் தானே அதான்" என்றாள்.


அந்த பதில் அவனுக்கு ஆச்சிரியதையும் வியப்பையும் கொடுத்தாலும் பிடித்துத் தான் இருந்தது. அவள் முகம் தாங்கி கண்ணீரை துடைத்தவன்

"அதெல்லாம் இப்போ வலியில்லை டாக்டர் ஊசி போட்டாங்க சரியாகிவிட்டது" என்றவனை பார்த்து,

"அய்யய்யோ ஊசி போட்டாங்காளா ? நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க நான் படிச்சி டாக்டர் ஆகி உங்களுக்கு ஊசி போடாமால் இனிப்பா இருக்குற மருந்து மட்டும் தரேன்" என்றவளின் கன்னம் பற்றி கிள்ளியவன்

"வாயாடி... போய் சாப்பிட்டுவிட்டு தூங்கு" என அனுப்பி வைத்தான்.

"அமுல் பேபி வரவர ஓவரா பேசுற" என்று நினைத்தபடி உறங்க சென்றான்.


விக்ரம் தன் இயல்பை மீறி கெஞ்சிக் கொஞ்சி பேசும் ஒரே ஜீவன் நந்தினி மட்டுமே..சிறுவயதில் இருந்தே அமுல் பேபி மாதிரி கொழுகொழுவென்று தன் குண்டு கன்னங்களோடு "விக்ரம் அத்தான்" என மழலை குரலில் சொல்லும் தன் அத்தை மகளை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். இருவரையும் பெயர் சொல்லியே அழைத்தவளை,

விக்ரம் தான் " நான் உன்னை விட ரொம்ப பெரியவன் ஒழுங்கா அத்தான் என்று கூப்பிடு அதுதான் முறையாம்... அமெரிக்கா பாட்டி சொன்னாங்க. நந்தனா ஸ்வேதாவை கூட அப்படித்தான் கூப்பிட சொன்னாங்க,அவங்க அப்படி கூப்பிடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. "நீ அப்படி கூப்பிடு செல்லக்குட்டி" என எட்டுவயது சிறுமியிடம் பன்னிரெண்டு வயது விக்ரம் கெஞ்சிக் கொண்டிருக்க,

அவளோ "மாட்டேன் பெயர் சொல்லிதான் கூப்பிடுவேன், அது தான் எனக்கு பிடித்திருக்கு" என அடம்பிடிக்க..

அவனோ "அப்போ இனிமேல் என்கிட்ட பேசாதே" என்றவன், ஒரு வாரம் அவளிடம் பேசாமல் அவள் பெயர் சொல்லி அழைக்கும் போது கண்டுகொள்ளாதவன் போல் இருக்க, பின்னர் அவள்தான் தன் பிடிவாதத்தை கைவிட்டு "விக்ரம் அத்தான்" என அழைக்க நேர்ந்தது.


ஆதிக்கு அவள் பெயர் சொல்லி கூப்பிடுவது தான் பிடிக்கும் என்பதால்,அதன் பின் எப்போதும் அத்தான் என்ற வார்த்தை விக்ரமிற்கு மட்டுமே ஏகபோக உரிமை ஆகிவிட்டது.அவள் அத்தான் என கூப்பிடும் நபர் இந்த உலகில் அவன் மட்டுமே ஆகிப்போனான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
இப்படியிருக்கும் நிலையில் தான் நந்தினியை ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு காரில் அழைத்து வந்து கொண்டிருந்தார் அவளின் தந்தை. நந்தினி சரியான அப்பா செல்லம்,அவளுக்கு தந்தையுடனான கார் பயணம் மிகவும் பிடித்தமான ஒன்று,இன்றும் ஸ்கூலில் நடந்த அனைத்தையும் தன் தந்தையோடு கதைத்தவாறு அவர் வாங்கித் தந்த ஐஸ்கிரீமை சாப்பிடு கொண்டிருந்த வேளை எதிரில் கட்டுப்பாடின்றி ஒரு லாரி வந்துகொண்டிருக்க,அவர் சரியாக வண்டியை செலுத்திய போதிலும் கண்டிப்பாக மோதிவிடும் என்று தெரிந்த நொடி காரின் வேகத்தை குறைத்து தன் மகளை மட்டும் காரின் கதவை திறந்து வெளியே தள்ளிவிட்ட நொடி காரின் மீது பலமாக லாரி மோதியதில் அதே இடத்தில் அவர் உயிர் அவரைவிட்டு பிரிந்தது.

தன் தந்தை இறந்ததை தன் கண் எதிரிலேயே பார்த்த நந்தினியும் மயங்கி சரிந்தாள்.



நந்தினியின் தந்தை இறந்து ஒருமாதம் நிறைவடைந்த நிலையில் அவர்களை தங்களோடே தங்கவைத்துவிட்டார் கண்ணன்.தங்கையின் துயரத்தை அவரால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை,கூடவே இருந்து அவளை பார்த்துக்கொண்டாள் மட்டும் தான் அவருக்கு நிம்மதி.ஆனால் நந்தினி தான் மொத்தமாக மாறிப்போனாள் எப்போதும் துருத்துருவென ஓர் இடத்தில் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருப்பவள் இப்போது இருக்கும் இடத்தை விட்டு அகலாமல் அமைதியாகிப் போனாள்.


சில நேரம் அமைதியாக இருப்பவள்,தீடீரென்று அழ தொடங்கிவிடுவாள்.அதன்பின் அவளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆதியும் கெஞ்சி கொஞ்சி அவளுக்கு பிடித்தது என அனைத்தையும் செய்தாலும் அதற்கு ஒரு பலனும் இருக்காது.

விக்ரமிற்கும்
இதே நிலை தான்,"எனக்கு என் அப்பா வேணும், அப்பா வேணும்" என கதறுபவளை யாராலும் கண்க்கொண்டு பார்க்க முடியாது. சந்தியாவும் தன் தோழி அழுவதை பார்த்தவுடன் அவளும் அழ தொடங்கிவிடுவாள் ஆக மொத்த குடும்பமும் அந்த இழப்பில் இருந்து மீளமுடியாமல் தவித்தனர்.


அன்றும் அழுது ஆர்ப்பாட்டம் செய்த நந்தினியை கட்டுப்படுத்த முடியாமல் போக,எவ்வளவு கெஞ்சியும் சாப்பிடாமல் மாடிக்கு சென்றவள் அங்குள்ள சோஃபாவில் படுத்துக் கொண்டாள். அந்த சோஃபாவில் தான் இங்கு வரும்போதெல்லாம் தன் தந்தையின் மடியில் படுத்துக்கொண்டு பொம்மை படம் பார்ப்பாள். அதனால் இப்பொழுதெல்லாம் அந்த சோஃபா தான் அவள் அதிகநேரம் இருக்கும் இடமாகிவிட்டது. அனைவரும் அவளை கட்டுப்படுத்த முடியாமல் அவள் போக்கிலேயே விட்டுவிட்டனர்.சிறிது நேரத்தில் தெளிந்துவிடுவாள் என்று…


சோஃபாவில் தன்னை சுருக்கிக் கொண்டு படுத்திருந்தவளை "நந்து நந்து" என மெல்ல எழுப்பிய விக்ரம் சாப்பாட்டை கைகளில் எடுத்து அவள் வாயருகே கொண்டு செல்ல...

அவளோ உதட்டை இறுக்கமாக மூடிக்கொண்டு மாட்டேன் என மறுக்க, இது தினமும் நடப்பது தான் இவனும் சிறிது நேரம் போராடிவிட்டு சென்றுவிடுவான் என்று அவள் நினைக்க அதற்கு மாறாக ஒரு முடிவோடு தட்டை கீழே வைத்தவன்,அவளிடம் எப்போதும் கையாளும் பொறுமையை கைவிட்டவனாக முகத்தில் கோபத்தை கொண்டுவந்து அவளை பார்த்தான்.


"இப்போ சாப்பிட முடியுமா முடியாதா"..? என மிரட்டும் குரலில் கேட்க..

முதன்முறை தன்மேல் கோபம் கொள்ளும் விக்ரமை மிரண்டு பார்த்தவள் வேண்டாம் என்க,

அவனோ "முடியாது இப்போ சாப்பிட்டு தான் ஆகனும். இல்லனா நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்" என்றவனின் குரலே அவளை பயம்கொள்ள செய்ய.. எங்கே அடித்துவிடுவானோ என நடுங்கியபடி வாய்த்திறந்து அவன் ஊட்ட ஊட்ட வாங்கிக்கொண்டாள்.

அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது அவன் கோபம் அவளை பாதிக்கிறது அப்படியானால் தன் கோபம் மட்டுமே அவளை இந்த நிலையிலிருந்து மீட்க்கும் என உணர்ந்தவன் அதையே அவளிடம் செயல்படுத்த தொடங்கினான்.


ஆதியும் அவளை இனி எதற்காகவும் அழவிட கூடாது என்று எண்ணி அவளுக்கு பிடித்ததை மட்டுமே செய்தான் ,அவளை தனிமையில் விடாமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.விளையாட்டு படிப்பு, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ் என அவளை பிஸியாக வைக்கும் பொருட்டு அனைத்திலும் தன் தந்தையிடம் சொல்லி சேர்த்துவிட்டான்.

இருந்தாலும் சில நேரம் பழைய நிலைக்கு செல்பவளை விக்ரமின் கோபம் மட்டுமே கட்டுப்படுத்தும்.

அன்றும் அவளின் அடத்தில் கோபம் கொண்டவன் "இப்போ எதுக்காக இந்த அழுகை...ஒழுங்காக அழுகையை நிறுத்து... நிறுத்துன்னு சொன்னேன்" என அருகில் இருக்கும் யாரை பற்றியும் கவலைப்படாமல் சத்தம் போட்டான்.


அவள் அப்போதும் தன் நிலையில் நின்றவளின் செய்லில் இன்னும் கோபம் அதிகரிக்க, தலையில் ஓங்கி கொண்டியவன் "ஒழுங்கா தட்டை கையில் எடு" என்க...

அவன் கொட்டியதில் வலி அதிகரிக்க சத்தமாக அழ தொடங்கினாள்.

அங்கு நின்ற யாருக்கும் அவன் செயல் பிடிக்கவில்லை,அதுவும் ஆதிக்கு சுத்தமாக விக்ரமின் செயல் பிடிக்காமல் போக அவன் கையை பிடித்து தடுத்தவன் "அவளை எப்படி சமாளிப்பது என்பது எங்களுக்கு தெரியும். நீ தேவையில்லாமல் அவளை அடிக்கும் வேலை வைத்துக் கொள்ளாதே. உன் வேலையை மட்டும் பார், மீறி இனிமேல் அவளை அடித்தால் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது" என்றவன் அவள் அருகில் அமர்ந்து சமாதானப்படுத்த முயன்றான்.


விக்ரமிற்கு முதன்முறை ஆதியின் மேல் கோபம் வந்தது. 'அவனுக்கு மட்டும் தான் உரிமையிருக்கா,அப்போ நான் யார் அவளுக்கு ? அவனுக்கு இருக்கும் அதே அளவு உரிமை அவனுக்கும் இருக்க,நான் மட்டும் என் வேலையை பார்த்துக் கொண்டு போகவெண்டுமா' என எண்ணியவன் அவனை முறைத்துக் கொண்டு சென்றான்.


நாட்கள் அதன் போக்கில் செல்ல நந்தினியும் கொஞ்ச கொஞ்சமாக தன் தந்தையின் இழப்பில் இருந்து வெளியே வந்தாள். காரில் ஏறவே மாட்டேன் என்று அடம்பிடித்தவளை பல முயற்சிகளுக்கு பிறகு பயணம் செய்யவைத்தான் ஆதி. அனைவரும் அவளை தாங்கினர்,விக்ரமை தவிர..

இப்போதும் அவனுக்கு மட்டுமே அவள் பயப்படுவாள்.அன்றைய நிகழ்விற்கு பின் அனைவர் முன்பும் அவளை கடிந்துக் கொள்வது இல்லை என்றாலும் ஒரு சில விஷயத்தில் அவளை தனிமையில் கண்டிக்கவும் தவறவில்லை. அதனால் அவனிடமிருந்து அதிகமாக விலகிக்கொண்டாள்.முன்புபோல் அவனுடன் தானாக சென்று பேச முயலவில்லை அவன் கேள்விக்கு மட்டும் பதிலளித்து விட்டு சென்றுவிடுவாள்.


அந்நிலையில் அவளுக்கு பத்தாவது பிறந்தநாள் வர,அவளின் தந்தை இல்லாமல் கொண்டாடப் போகும் முதல் பிறந்தநாள். அவள் எந்த விதத்திலும் தனக்கு தந்தை இல்லையே என எண்ணிவிட கூடாது என்று அனைவரும் பார்த்து பார்த்து ஒவ்வொரு ஏற்பாட்டையும் செய்துக் கொண்டிருந்தனர்.

விக்ரமும் அவளுக்கு பிடிக்கும் என்று ஆளுயர டெடி பியர் பொம்மையை தனது சேமிப்பில் வாங்கியவன் யாருக்கும் தெரியாமல் பேக் செய்து தன் அறையில் வைத்திருக்க...பிறந்தநாள் விழாவும் நல்லபடியாக கேக் வெட்டி முடிந்திருக்க விக்ரம் தன் அறையிலிருந்து அவளுக்கான பரிசுடன் அவள் முன் நிற்க அந்த பார்சலை பார்த்து,

தனக்கு தான் பரிசு வாங்கி வந்துள்ளான் என்ற மகிழ்வில் அதனை வாங்கும் நேரம்….ஆதியின் குரல் சத்தமாக கேட்டது "நந்து குட்டி" என்று அழைத்தவன்,மாடிப்படியில் இருந்து கடகடவென இறங்கியவன் தன் கிப்டை கொடுக்க அவனும் டெடி பியர் பொம்மைதான் வாங்கி வந்திருந்தான்.


அதனை ஆசையாக பிரித்தவள் உள்ளே இருந்த பொம்மையை பார்த்த சந்தோஷத்தில் விக்ரமையும் அவனின் பரிசையும் மறந்துதான் போனாள். ஆதி அவனுக்கு நெருக்கமான நண்பன் அதனால் அவளுக்கு அதுவே பெரிதாக பட்டது.


விக்ரமும் அவள் தன்னை பார்ப்பாளா என எண்ணியபடி சிறிது நேரம் நின்றவன்,ஏமாற்றத்துடன் அங்கிருந்து விலகி சென்றான். தன் அறையில், முதன்முறை மிகவும் அவமானமாக அதே நேரம் மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தான் விக்ரம்.

அவன் வாங்கிய பொம்மை அவனை பார்த்து சிரிப்பது போல் இருந்தது . அவள் தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தது அவனுள் பெரிய காயமாக உருமாறியது...அதன்பின் அவனும் அவளிடம் பேசுவதை குறைத்துக் கொண்டான். அவனுக்கும் நன்றாகவே தெரியும் சிறிய பெண், அவளிடத்தில் யாராக இருந்தாலும் அப்படிதான் நடந்துக் கொள்வார்கள் என்று தெரிந்து இருந்தும் மனம் அதை ஏற்க மறுத்தது.


நாட்கள் செல்ல அவள் பிறந்தநாள் முடிந்து ஒரு மாதம் சென்றிருக்க அவள் மீதிருந்த கோபம் கொஞ்சம் குறைந்தே இருந்தது.அன்று மாலை வீட்டின் வாசலையே நடந்துக் கொண்டு பார்த்திருந்த நந்தினியை நோட்டமிட்டவன் அமைதியாக அமர்ந்திருந்தான். அவளும் சிறிதுநேரம் வாசலை பார்த்திருந்துவிட்டு, தனது ஸ்கூல் டைரியுடன் வந்தவள் விக்ரமிடம் அதை நீட்ட...

அவனோ "இதை எதுக்கு என்கிட்ட கொடுக்கிற" என்க,

ஒருமாதமாக அவன் பேசாமல் இருப்பதை அவனுக்கு தன்மேல் இருந்த கோபம் சென்றுவிட்டது போல என்று எண்ணிக்கொண்டவள்..."அது நாளைக்கு ஸ்கூலில் சைன்ஸ் எக்ஸிபிஷன் அதுக்கு ப்ராஜக்ட் பண்ணனும், எனக்கு பண்ணித் தரிங்களா" என கேட்க அவனும் அவள் மேலிருந்த கோபத்தை ஒதுக்கிவிட்டு டைரியை வாங்கி பார்த்தான்.


தலைப்பு நகரமயமாதல் என்றிருக்க,சரியென அவன் தலையசைத்தவுடன் மகிழ்ச்சியுடன் அதற்கென தாய் வாங்கி தந்த அனைத்தையும் அவனிடம் கொடுத்தவள், தன் வேலை முடிந்துவிட்டது என்பதுபோல் டிவி பார்க்க சென்றுவிட்டாள்.

அவனும் மெல்ல சிரித்துக் கொண்டவன்,தன் அறையில் தரையில் அமர்ந்து பெரிய தர்மாகோலை வைத்துவிட்டு செய்ய தொடங்கினான்.வெளியே சென்று தேவையான சில பொருட்களை வாங்கி வந்தவன் உறங்காமல் விழித்திருந்து அவளுக்காக அனைத்தையும் செய்து முடித்தவன் மணியை பார்க்க அதுவோ அதிகாலை நான்கு மணியை காட்டியது.



அவன் செய்த மாடலை ஓரமாக வைத்தவன்,அதன் பின்னரே உறங்க சென்றான். அதிகாலையில் உறங்க தொடங்கியதால் கஷ்டப்பட்டு ஏழரை மணிக்கே கண்விழித்தான்.

விரைவாக கிளம்பியவன் அந்த வாண்டை அழைத்துவந்து காட்டலாம் ,அவள் விழிகள் விரித்து சந்தோஷத்தில் குதுகளிப்பதை பார்க்க ஆவல் கொண்டவன் கீழே சென்றான்.

அங்கு அவள் காலில் ஷூவை போட்டுகொண்டிருந்தவள் முன் சென்று நின்றவன் அவள் கரம் பற்றி "என்கூட வாவென" அழைக்க, அவளும் எழுந்து கொண்டவள் அவனோடு செல்ல படிகளில் ஏற...அப்போது கையில் அவளுக்காக ஆதி செய்த சயின்ஸ் ப்ராஜெக்ட்டை கையில் ஏந்தியவாறு வந்தவன் அதை ஹாலில் உள்ள டேபிளில் வைக்க,



சந்தோஷத்தில் குதித்தவள் விக்ரம் கையை விட்டுவிட்டு அதனை சென்று பார்க்க ஒரு புறம் கிராமம் ஒருபுறம் நகரம் என செய்திருந்தவனை அனைவரும் பாராட்ட…. நந்தினியோ "ஆதி சூப்பர் ரொம்ப அழகா இருக்கு" என்றவள்,

"நீ மறந்திருப்ப என்று நினைத்தேன்,நேற்று நீ வேற உன் பிரெண்டஸ் கூட போய்ட்டியா ? நான் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன் தெரியுமா?" என்றவள்,அவன் செய்ததையே சுற்றி சுற்றி பார்க்க... விக்ரமிற்கு கோபம் ஆத்திரம் எல்லை மீறியது.

தான் செய்ததை பார்க்க கூட விரும்பாதவள் மீது வெறுப்பு வந்தது. அவனிடம் சொல்லிவிட்டு, அவன் இல்லை என்றவுடன் என்னிடம் சொல்லி இருக்கிறாள் என எண்ணியபடி ..


கடகடவென படிகளில் ஏறியவன் தான் செய்ததை கொண்டுவந்து அதே மேஜையில் வைக்க...அனைவரும் ஒரு நொடி வியந்து போயினர். ஆதியும் நன்றாக தான் செய்திருந்தான் ஆனால் விக்ரம் வெறும் தர்மாகோலில் செய்தால் காற்றில் கூட சிதைந்துவிட வாய்ப்பிருப்பதால் கிராஃப்ட் போர்ட் கொண்டு ஒரு கிராமத்தையும் நகரத்தையும் செய்திருந்தான்.கிராமத்தில் மரங்கள் பறவைகள் விலங்குகள் வயல்வெளி என பசுமையை காட்டி, நகரத்தில் கட்டிடங்கள் போக்குவரத்து நெரிசல காற்று மற்றும் நீர் மாசுபடுதல் என அனைத்தையும் மிக நேர்த்தியாக செய்திருந்தான்.

அனைவருக்கும் விக்ரம் செய்தததையே எடுத்து செல் என சொல்ல நினைக்க,ஆதி கூட அதன் அழகில் திளைத்தவன் இதை கொண்டு சென்றாள் கண்டிப்பாக நந்தினிக்கு தான் அந்த பரிசு என நினைத்தவன் இதையே பள்ளிக்கு எடுத்து செல் என சொல்ல நினைத்து வாய்திறக்க...

அப்போது ஓர் மூலையில் இருந்த கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்த விக்ரம் அனைவரும் என்ன நடக்கிறது என்று உணரும் முன் இரவு முழுவதும் கண்விழித்து அவன் செய்த ப்ராஜக்ட் மாடலை சுக்கு நூறாக உடைக்க தொடங்கினான்.


அனைவரும் அதிர்ந்து அவனை தடுக்க முயல அவனோ அனைவரையும் மீறி மொத்தத்தையும் நொறுக்கி விட்டே நகர்ந்தான்.


"ஏண்டா இப்படி பண்ணினாய்" என்ற கேள்விக்கு "எனக்கு பிடிக்கல அதான்" என்றவன் நந்தினியை எரித்துவிடுவதை போல் பார்த்துவிட்டு உணவு கூட உண்ணாமல் ஸ்கூலுக்கு கிளம்பி சென்றுவிட்டான்.

அவன் சென்ற பின் ஆதி நந்தினியின் புறம் திரும்பியவன் "அவன்கிட்ட புராஜக்ட் செய்ய சொன்னாயா ?" என்க

அவளும் "நேற்று நீ வர லேட் ஆகிடுச்சா அதான் நீ மறந்துவிட்டாய் என நினைத்துக்கொண்டு விக்ரம் அத்தான் கிட்ட சொன்னேன்" என்றாள்.

"அவன் உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு அதை செய்திருப்பான், ஆனா நீ என்னுடையது பிடித்திருக்கு என்று சொன்னவுடன் கோபம் வந்துடுச்சு என்றவன்.. இதுக்கு நீ தான் காரணம். மாலை அவன் வந்தவுடன் சாரி கேளு" என்றவனும் பள்ளிக்கு அவளுடன் சென்றுவிட்டான்.


விக்ரமின் கோபத்தில் ஒரு நிமிடம் அனைவருமே நடுங்கித்தான் போனார்கள்.இந்த வயதில் இவனுக்கு என்ன இப்படி கோபம் வருகிறது என்று..? ஆனால் அவனை தடுக்கதான் யாராலும் முடியவில்லை.


மாலை அவனிடம் சாரி கேட்டுவிட வேண்டும் என உறுதியோடு அவன் அறைக்குள் நுழைந்தவளை பார்த்து "வெளிய போ" என கத்தியவனை சட்டைசெய்யாது உள்ளே நுழைந்தவள்

"சாரி விக்ரம் அத்தான். நான் ஆதிகிட்ட சொல்ல மறந்துட்டேன் உங்ககிட்ட செய்ய சொல்லியதை அதான் அவனும் பண்ணிட்டான். நீங்க பண்ணது ரொம்ப அழகா இருந்து, ஆனா நீங்க ஏன் அதை உடைச்சீங்க" என்றவளை பார்த்து

"என் பொறுமையை சோதிக்காதே மரியாதையா வெளியே போய்டு" என திரும்பவும் சொன்னான்.


அவனை நெருங்கி "ரொம்ப சாரி அத்தான்" என்றவள் அப்போது தான் அவன் விரலில் உள்ள பேண்டேஜை பார்த்தவள்

"அய்யோ அத்தான் கையில் என்னாச்சு" என அவன் கரம் பிடிக்க அதனை தட்டிவிட்டவன்,

"இனிமேல் என்னை அத்தான் என்று கூப்பிடாதே "என தள்ளிவிட அவளும் தடுமாறி கீழே விழுந்தாள். அவள் விழ வேண்டும் என்று அவன் தள்ளிவிடவில்லை அது அவனே எதிர்பாராதது. விழுந்த அதிர்விலும் வலியிலும் அவள் அழ தொங்க,

அந்த சத்தத்தில் விக்ரமின் அறைக்குள் நுழைந்த ஆதி கீழே விழுந்திருந்த நந்தினியை பார்த்து கோபம் அதிகரிக்க விக்ரமை நோக்கி பாய்ந்தவன், அவனின் சட்டையை கொத்தாக பற்றி "எதுக்குடா இப்படி பண்ண, அவ சின்ன பொண்ணுதானே அவளுக்கு என்ன தெரியும் என்றவன், இனி மேல் அவளை அடிக்கிற வேலையை வைத்துக் கொள்ளாதே, அதுக்கு உனக்கு உரிமையில்லை" என்க .

அந்த வார்த்தை விக்ரமை மிகவும் பாதிக்க…."திமிராக அப்படி தான் அடிப்பேன், அதை கேட்க நீ யார்" ? அவள் மேல் உனக்கு எவ்ளோ உரிமை இருக்கோ , அதே அளவு உரிமை எனக்கும் இருக்கு புரியுதா. அதனால் உரிமையில்லை என்று நீ சொல்லாதே அதை அவள் சொல்லட்டும் அப்போ ஒத்துக்குறேன்" என்றான் அதே வேகத்தில்.


அழுகையில் இருப்பவளை கைகொடுத்து தூக்கியவன்,விக்ரமை முறைத்தவாறே "இனிமேல் என்னை அடிகாதீங்க, அதற்கு உங்களுக்கு உரிமையில்லை என அவனிடம் சொல்லிட்டு வா. அப்போது தான் இனிமேல் உன்னை இதுபோல் தள்ளிவிட மாட்டான்" என்க

அவளும் அந்த வார்த்தை அவனை எவ்வளவு பாதிக்க போகிறது என்பதை அறியாமல் இனிமேல் அவன் கோபத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தில் ஒரு வார்த்தை கூட மாறாமல் அதை சொல்ல...

அவனோ அழுத்தமான பார்வையோடு அவளை நெருங்கியவன் அவள் உயரத்திற்கு குனிந்து "திரும்பவும் சொல்லு" என்றான்.


அவளும் "இனிமேல் என்னை அடிக்காதீங்க அதுக்கு உங்களுக்கு உரிமையில்லை" என்க..

விழிமூடி திறந்தவன் சம்மதமாக தலையாட்டி, அடுத்த நொடி "வெளிய போ" என்றவன் அவள் வாசலை தாண்டும் நேரம் ஒருநிமிடம் என்று தடுத்து 'நீ சொன்ன அதே வார்த்தை உனக்கும் பொருந்தும். இனி என்னை அத்தான் என்றோ... பெயர் சொல்லி கூப்பிடவோ.... ஏன் என் கண் முன்னால் நிற்க கூட உனக்கு உரிமையில்லை" என்றவன் வாசலை நோக்கி கைக்காட்டினான்.


அதன் பின் விக்ரம் மொத்தமாக ஆதி மற்றும் நந்தினியை தவிர்த்தான்.ஆதியும் அவன்மேல் கோபத்தில் இருந்தவன் இருநாட்கள் கழித்து அவனே விக்ரமிடம் சென்று பேச முயல அவனோ அவனைக் கண்டுகொள்ளாமல் திரும்பிக் கூடப் பார்க்காமல் அமைதியாக நின்றவனின் உதாசீனம் இவனுக்கும் கோபத்தை ஏற்படுத்த...ஆக தனிப்பட்ட எந்த காரணமும் இல்லாமலேயே இருவரும் பேசாமல் இருந்தனர்.

நந்தினி எதிரில் வந்தாலே திட்டுபவன், நாட்கள் செல்ல செல்ல அவன் பார்வைக்கே நடுங்க தொடங்கிவிட்டாள்.


அவனுக்கும் ஏன் அவள் மேல் இத்தனை உரிமை எடுத்துக் கொள்கிறேன் என்ற கேள்வியே தூங்கவிடாமல் செய்தது. காலேஜ் படிக்கும் போது தான் நந்தினி மேல் தனக்கு இருப்பது காதல் என்று உணர்ந்து கொண்டாலும் "என்னை வேண்டாம் என சொன்னவள், எனக்கும் வேண்டாம்" என நினைத்தவன் ஒதுங்கியே இருந்தான்.

இந்நிலையில் அவள் பார்வை தன்னையே தொடர்வதை கண்டவன் அவளுக்கும் தன்மேல் காதல் இருப்பதையும் கண்டுக்கொண்டான். ஆனாலும் அதை சொல்ல அவனின் ஈகோ தடுத்து நிறுத்த என கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க, கடைசியில் அதற்கு முற்றுப் புள்ளியாக.. காதலை சொல்லாமலே இறங்கி அவளை திருமணமும் செய்துக் கொண்டான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 29


விக்ரம் சொன்னவற்றை கேட்டவளுக்கு தன் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. தன்னை அறியாமலே அவனை ரொம்பவும் காயப்படுத்தி விட்டோம் என்பது மட்டும் நன்றாகவே புரிந்தது.

"சாரி அத்தான்... சாரி" என புலம்பியவாறே அவன் மார்பில் சாய்ந்து பெருங்குரலேடுத்து அழ.

அவனோ "ஏய் லூசு இப்போ எதுக்கு இந்த சாரி அழுகையெல்லாம், சொல்லபோனால் நான் தான் உன்கிட்ட சாரி கேட்கணும்" என்க,

அவளோ "இல்லையில்லை நான் தான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திடேன்" என்றவளின் முகம் நிமிர்த்தி..

" இல்லம்மா என் மேல தான் தப்பு, நீ அப்போ ரொம்ப சின்ன பொண்ணுடா. நீ சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் கூட உனக்கு தெரியாது.
நான் தான் அதை பெருசா எடுத்துக்கிட்டு உன்னையும் காயப்படுத்தி நானும் சந்தோஷமாய் இல்லாமல் முட்டாள் மாதிரி நடந்துக்கொண்டேன்.உன் இடத்தில் யாராய் இருந்தாலும் அப்படிதான் நடந்திருப்பாங்க,அதுவும் நான் அப்போ உன் மனநிலையை மாற்ற கோபமாய் வேறு நடந்து கொண்டிருந்தேன்,அப்படியிருக்கும் போது யாருக்கும் தன்னிடம் அன்பாக இருப்பவர்கள் தான் முக்கியமாக படுவார்கள்.நான்தான் எல்லாத்தையும் சீரியஸாக எடுத்துக் கொண்டேன்" என்றான் தனது தவறை உணர்ந்தவனாய்..!


"செல்லக்குட்டி அத்தான் சொல்கிறேன் இல்ல, போதும் அழுதது அழுகையை நிறுத்து" என சமாதானப் படுத்தியவனை பார்த்து..."அப்போ ஆதிக்கு என்மேல இருக்குற அன்பை நீங்க தப்பாக புரிஞ்சிக் கொண்டீர்களா அத்தான்..?" என்க,

அவனோ அவள் தலையில் ஓங்கி கொட்டியவன் "என்னடி லூசு மாதிரி உலற. அவன் என் கூட பிறந்தவன்,உன்னைவிட எனக்கு அவனை பற்றி நன்றாகவே தெரியும்.அவனுக்கு சந்தியா எப்படியோ அதேமாதிரி தான் நீ... சொல்லபோனால் சந்தியாவை விட உன்மேல் தான் அவனுக்கு பாசம் அதிகம். உன்னை எதுக்காகவும் ஏங்க விடக்கூடாது என்பதில் ரொம்ப உறுதியாக இருந்தான். அன்றைக்கு என்னிடம் அப்படி சொல்ல சொன்னதற்கு கூட திரும்பவும் நான் உன்னை அடித்துவிட கூடாது என்பதற்காக தானே தவிர வேற எந்த காரணமும் இல்லை" என்றான் அவனின் மனதை படித்தவன் போல.

"ஏன் அத்தான் அவனை பற்றி இவ்வளவு புரிந்து வைத்துக்கொண்டு எதற்காக ரெண்டு பெரும் சண்டை போட்டிங்க..?" என்றவளை பார்த்து,

"நாங்க எப்போ சண்டை போட்டோம் ?" என்றான் அசால்ட்டாக.

"அத்தான் குழப்பாதீங்க ? எனக்கு ஒண்ணுமே புரியலை" என்று முகம் திருப்ப..


"இதுவரைக்கும் நாங்க ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டோ இல்லை வார்த்தைகளில் எங்கள் கோபத்தை வெளிப்படுத்தியோ யாராவது பார்த்திருக்கீங்களா..?" என்பவனை புரியாமல் பார்த்தவள் அவனின் அடுத்த பதிலில் விக்ரமை அடிக்க தொடங்கிவிட்டாள்.


"எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை,நாங்க இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை அவ்வளவு தான். நீங்களா நாங்க சண்டை போட்டுவிட்டு பிரிந்து இருக்கிறோம் என நினைத்துக் கொண்டாள் அதற்கு நான் பொறுப்பில்லை" என்க,

அவளோ அவன் மார்பில் தன் கரங்களால் குத்தியவள் "இது என்ன பதில் அத்தான். உங்க ரெண்டு பேரால் வீட்டில் உள்ள எல்லாரும் எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா…? ஆனால் நீங்க இப்படி ஒரு பதிலை சொல்றீங்க..? நீங்க பதில் சொல்லாமல் இப்படி மழுப்பினாலும் எல்லாவற்றிற்கும் மூலகாரணம் நான் தானே அத்தான்" என திரும்பவும் விழிகளில் தேங்கிய கண்ணீரோடு சொல்ல..

அவனோ "கண்டிப்பா நாங்க இப்படி இருக்க நீ காரணம் இல்லை.. உனக்கு எப்படி சொல்லி புரியவைக்க,
சொல்லபோனால் எங்க எங்களுக்குள் சண்டை வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் பேசாமல் இருக்கிறோம்.


இன்னும் தெளிவா சொல்லனும்னா... அவனை பற்றி எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும் என்னால உன் விஷயத்தில் மட்டும் என் மனதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. உனக்கு நான் மட்டும் தான் முதன்மையாக இருக்கணும் என்கிற எண்ணம் அது ஆதி என்பதால் மட்டுமில்லை, அது அத்தை, ஏன் இறந்துபோன உங்க அப்பாவாகவே இருந்திருந்தாலும் நான் இப்படிதான் நினைத்திருப்பேன்.இதுக்கு பெயர் பொசசிவ்னஸ் என்றுகூட சொல்ல முடியாது அதையும் தாண்டிய ஒரு நிலைன்னு வேண்டுமென்றால் சொல்லலாம்.

அதான் அவனிடம் பேசுவது இல்லை, அதுவுமில்லாமல் நாங்க பேச வேண்டும் என்ற அவசியமே எங்களுகில்லை. நான் என்ன நினைப்பேன் அடுத்து என்ன செய்வேன் என்பதுவரை அவனுக்கு தெரியும்,அதேமாதிரி தான் எனக்கும் அவனுடைய அத்தனை அசைவுகளும் எனக்கு அத்துப்படி.


இவ்வளவு ஏன் நான் உன்னை காதலிப்பது கூட அவனுக்கு முன்பே தெரியும். அதேபோல் திவ்யா நம்ம கம்பெனியில் வேலை செய்கிறாள் என்றால் அது ஆதியின் காதலி என்பதால் மட்டுமே" என்க...

நந்தினியோ அவன் வார்த்தையில் சிலையாக அமர்ந்திருந்தாள்.இது என்ன மாதிரியான உணர்வு,இருவரும் பேசிக் கொள்ளாமல் இது எப்படி சாத்தியம் என யோசித்தவளின் கவனத்தை களைத்தவன்,

"என்ன மேடம் யோசனை பலமா இருக்கு" என நக்கல் செய்ய,

அவளோ "உங்களை பார்த்தால் ஆச்சரியமா இருக்கு அத்தான்" என்றவளை பார்த்து சிரித்தவன்

"இதுல யோசிக்க ஒன்றுமே இல்லை செல்லகுட்டி.
ஒருத்தரை பற்றி தெரிய அவங்களோட பேசணும் என்று அவசியமில்லை. ஒருவருடைய கண்கள் பேசுவதை விடவா உண்மையை, ஒருவரின் உதடுகளும்... அவர்கள் உதிக்கும் வார்த்தைகளும் சொல்லிவிட போகிறது" என தத்துவம் பேச,அவன் என்னவோ புரியாத மொழியில் பேசவது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.


"நடுராத்திரியில் இப்படி திருதிருன்னு முழகிக்காதடி பார்க்கவே பயமா இருக்கு' என கேலி செய்தவன் 'போதும் நதி பேசியது வா தூங்கலாம் என்க...அவளும் சரி என அவனை அணைத்துக்கொண்டு படுத்தவளுக்கு தூக்கம் தான் வரவில்லை.

இத்தனை நாளும் அவனுக்கு தன்னை பிடிக்காது என நினைத்திருக்க இன்று அவனின் காதலை மொத்தமாக அறிந்தபின் அந்த நினைவிலிருந்து வெளியே வரமுடியவில்லை.


"அத்தான் அத்தான்..ன்... என அவனை எழுப்பியவள், என்னவோ வேலையிருக்கு என சொன்னீங்க ? இப்போ இப்படி தூங்குறீங்க ?" என அவன் முகம் பார்க்காமல் உதடு கடிக்க.

அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் "வேலையா நான் எப்போ சொன்னேன்" என்றவனின் முகம் பற்றி

"நீங்க சொன்னீங்க ஆதியை பற்றி பேசும் முன்" என சொல்ல..

விக்ரமோ "நான் என்ன சொன்னேன் என்று மறந்திடுச்சு செல்லக்குட்டி. அத்தானை தூங்கவிடுடி" என்றபடி திரும்பிப் படுக்க அவளும் அவனைத் திட்டியப்படி கண்களை மூட... அப்போது அவளை பின்னால் இருந்து அனைத்திருந்தான் விக்ரம்.


"விடுங்க அத்தான் விடுங்கன்னு சொல்றேன் இல்ல, அதான் தூக்கம் வருது என்று சொன்னீங்க தானே அப்பறம் என்ன..?" என கோபம் கொள்ள.

அவனோ அவள் கன்னத்தை அழுத்தமாக கடித்தவன் "என் தூக்கத்தை கெடுத்து என்னை டெம்பட் பண்ணி விட்டுட்ட,அப்பறம் எப்படி என்னால தூங்கமுடியும்" என்றவனின் மூச்சுக்காற்று அவள் காதுமடலை வருட...கூச்சம் நெட்டித்தள்ள நெளிந்தப்படி அவன் கைகளின் அத்துமீறல்களை தடுக்க முயன்றாள். அவனோ விடாக்கண்டனாக தன் வேலையை தொடர்ந்தான்.


அன்று ஆபீஸில் வேலை செய்துகொண்டிருந்த திவ்யாவின் மொபைலுக்கு அழைப்பு வர,அதில் நந்தினியின் எண்ணை பார்த்தவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

அனைத்து நலவிசாரிப்புக்கு பிறகு "இன்னைக்கு ரெண்டு பேரும் மீட் பண்ணலாமா திவ்யா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்க அவளும் சரி என்றாள்.பின்னர் அரைநாள் ஆபீஸ்க்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.


நந்தினியும் ஹாஃப் டே லீவ் போட்டுவிட்டு ஒரு காபி ஷாப்க்கு திவ்யாவை காண சென்றாள். அவளும் சிறிது நேரத்தில் வந்துவிட சிறிதுநேரம் சாதாரணமாக பேசியவர்கள் பின்னர் என்ன பேசுவது என தெரியாமல் அமைதிக்காத்தனர்.

அந்த அமைதியை கலைத்து முதலில் தொடங்கிய நந்தினி "இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போவதாக இருக்கிறாய்" என்க,
அதற்கு அவள் மெளனத்தையே பதிலாக தர, மேலும் தொடர்ந்த நந்தினி "நான் ஆதியோடு சேர்ந்து வாழு என்றெல்லாம் சொல்ல வரவில்லை திவ்யா. ஏன் என்றால் அது உங்க இருவருக்கும் உள்ள பெர்சனல். ஆனால் பிரிந்திருந்து மட்டும் சந்தோஷமாகவா இருக்கீங்க..? எதுக்காக உங்களை நீங்களே வருத்திக்கிறீங்க ? என்று தான் எனக்கு புரியவில்லை. அவன் முகத்தில் சிரிப்பை தவிர எதையுமே நான் பார்த்ததே இல்லை ஆனால் இப்போ அந்த சிரிப்பை அவனிடம் தேடி அலுத்து போய்ட்டேன்" என்றால் வலியுடன் கூடிய குரலில்.


"எனக்கே தெரியும் என்மேல் தான் தவறு என்று அதை சரிசெய்ய தான் முயல்கிறேன் ஆனால் என்னோட குற்றவுணர்ச்சி தான் தடுக்குது. அவரை இவளோ காயப்படுத்திவிட்டு இப்போ எதுவும் நடக்காத மாதிரி எப்படி அவர்கிட்ட பேசுறது" என்றவள் காலை வேலைக்கு செல்லும் முன் தந்தையுடன் பேசியதை சொன்னாள்.


இரவு முழுவதும் மருத்துவமனையில் பார்த்த ஆதியின் முகமே வந்து இம்சிக்க..அவனின் அந்த நிலைமைக்கு தான்தானே காரணம் என நினைத்துக் கொண்டு தூக்கம் தொலைத்தவள் ஒரு முடிவோடு காலையில் தன் தந்தை முன் நின்றாள்.

அவள் இங்கு வந்த இத்தனை நாட்களில் அனைவரும் அவளிடம் பேசினாலும் அவர் மட்டும் அவளிடம் பேசவே இல்லை.


இன்று தன் எதிரில் கைகளை பிசைந்துக்கொண்டு பரிதவிப்போடு நின்ற மகளை பார்த்து "என்ன நினைத்தாரோ வா என கைநீட்ட..." அப்பா..ஆஆ " என்ற கூவலோடு அவர் தோளில் சாய்ந்து அடக்கிவைத்த மொத்த அழுகையும் வெடித்து சிதற கதறினாள். அவரும் அவளின் தலைவருடி அமைத்திப்படுத்தியர்

"என்னமா என்னாச்சு" என்க, அவளோ தேம்பியவாறு

"எனக்கு ஆதி வேணும்ப்பா" நான் அவரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். என்னால உங்களுக்கு ஒரு நல்ல மகளாவும் இருக்க முடியலை அவருக்கு நல்ல மனைவியாகவும் இருக்க முடியலை. என்னால் தான் எல்லாருக்கும் கஷ்டம் என நினைக்கும் போதே செத்துவிடலாம் போல இருக்கு" என்ற மகளை தன்னில் இருந்து பிரித்து...

"இது என்னம்மா ஒரு படிச்ச பொண்ணு இப்படி தான் சாவை பற்றி பேசுவதா ? எந்த சூழ்நிலையிலும் எதிர்த்து போராடனும், இப்படி உடைந்துப்போய் சாவை பற்றி எண்ணக் கூடாது. இப்போ உள்ள எல்லா பசங்களுக்கும் இதுவே வழக்கமாக போய்டுச்சு.... விரும்பியது கிடைக்கவில்லை என்றால் அடுத்தது தற்கொலை தான் முடிவாகிறது".



"யாரு சொன்னா நீ நல்ல மகளாக இல்லை என்று,இப்போ நான் சொல்றேன், என் பொண்ணு சொக்கத் தங்கம். மனசு முழுவதும் அவன்மேல் காதல் இருந்தாலும் இதுநாள் வரை அவனிடம் கூட சொல்லாமல் இப்போது கூட என்னுடைய சம்மதத்திற்காக வந்து நிற்கிறாயே இதைவிட ஒரு பொண்ணு எப்படி தன் பெற்றோர்க்கு மரியாதை தரமுடியும்" என்றவர் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு போய் ஆபீஸுக்கு கிளம்பு நாளைக்கு நல்ல நாள், நாங்களே உன்னை முறைப்படி கொண்டுவந்து உன் புகுந்த வீட்டில் விடுகிறோம் என்ற தந்தையை அணைத்துக்கொண்டாள்.



அனைத்தையும் சொல்லிமுடிக்க கேட்டுக் கொண்டிருந்த நந்தினிக்கு அவ்வளவு சந்தோசம்.
ஆதி திவ்யா சேர போகிறார்கள் என்பதே அவளுக்கு அவ்வளவு நிம்மதியை கொடுத்தது.பின்னர் இருவரும் சிரித்த முகமாக வேண்டியவற்றை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.


நந்தினி வரும்போது கேப் புக் பண்ணி வந்ததால் இப்போதும் அதற்காக முயற்சிக்க..அதனை தடுத்த நந்தினி "வா நந்து நானே உன்னை ட்ராப் பண்றேன், நம்பி வரலாம் உன்னை எங்கேயும் தள்ளியெல்லாம் விட்டுவிடமாட்டேன்" என்க...

அவளோ "அடிப்பாவி பார்க்க தான் பச்சபிள்ளை போல் இருக்க ஆனால் உனக்கும் வாய் அதிகம் தான்" என்றபடி அவள் ஸ்கூட்டியில் ஏறினாள்.


இருவரும் மிகவும் சந்தோஷமாக தங்கள் பயணத்தை ரசித்தபடி சென்று கொண்டிருக்க...அப்போது அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த கார் சட்டென்று அவள் வண்டியின் குறுக்கே நிறுத்த,கடைசி நேரத்தில் சுதாரித்த திவ்யா "சடன் பிரேக்" போட்டு ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஒரு காலை தரையில் ஊன்றியபடி திட்ட வாய்த்திறக்கும் முன் முந்திகொண்ட நந்தினி

" எக்ஸ்கியூஸ் மீ கண்ணு தெரியவில்லை என்றால் எதுக்காக காரை எடுத்துக்கிட்டு வரிங்க இடியட்ஸ். நாங்க கொஞ்சம் சுதாரிக்கவில்லை என்றால் இந்நேரம் என்ன நடந்திருக்கும்" என அவள்ப்பாட்டிற்கு திட்டிக்கொண்டே போக அப்போது காரில் இருந்து இறங்கினான் மகேஷ்.


அவனை பார்த்து அதிர்ந்தது என்னவோ திவ்யா மட்டும் தான். நந்தினிக்கு அவனை தெரியாததால் அவள் தன் வீரத்தை வாய்மொழியில் காட்டிக்கொண்டு இருக்க.. மறுபுறம் கதவை திறந்துகொண்டு வந்தவரை பார்த்து நந்தினியின் வாய் தானாக மூடிக்கொண்டது.

ராகவனும் மகேஷம் ஒரே காரில் இருந்து இறங்கியதும் எதுவோ தவறாக பட, முதலில் தன்னிலையடைந்த திவ்யா "நந்து வண்டியில் ஏறு நாம முதலில் இங்கிருந்து போகலாம்" என்க,

அவளுக்கும் ஏதோ மனம் படபடக்க தொடங்கியது. திவ்யா வண்டியை யூ டர்ன் எடுக்க முயல பின்னால் இன்னும் ஒரு கார் வந்து நின்றது.


இங்கு என்ன நடக்கிறது என இருவரும் உணர்ந்து தப்பிக்கும் முன் காரிலிருந்து வந்த ஆட்கள் இருவரை காரில் ஏற்றினர்.இருவரும் தங்களை காப்பாற்றுமாறு கத்தத் தொடங்க...இருவரின் சத்தமும் காதை கிழிக்க அடியாட்களில் ஒருவன் "முதலில் இவளுங்க வாயை மூடுங்க டா. ரெண்டும் பேய் மாதிரி கத்துங்க பார்க்க தான் ஹய் ஃபையாக இருக்கிறாங்க எல்லாம் லோக்கல் டிக்கெட்" என்றான் காதை குடைந்துக்கொண்டே...

திவ்யா நந்தினி இருவருமே பயந்த சுபாவம் கொண்டவர்கள் என்பதால் அவர்களை எதிர்த்து போராடவும் பயந்துகொண்டு கண்ணீரை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டனர்.


அப்போது தான் இருவருக்குமே புரிந்தது யாரிடமும் சொல்லாமல் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருப்பது, தங்களின் முட்டாள்தனத்தை எண்ணி இப்போது வருந்த மட்டுமே முடிந்தது இருவராலும். அதுவும் நந்தினி விக்ரமிடம் சொல்லாதது மட்டுமில்லாமல் அதே மருத்துவமனையில் இருக்கும் ஆதியிடம் கூட சொல்லாமல் வந்திருந்தாள்.

அவன் என்ன விஷயம் என்று கேட்டாள் அவளால் போய் சொல்ல முடியாது, அப்படியே சொன்னாலும் கண்டுபிடித்துவிடுவான் என்பதால் அவன் அறியாமல் வந்திருந்தாள்.


மாலைவரை அன்று சர்ஜரி இருந்ததால் வீட்டுக்கு கிளம்பும் போதுதான் நந்தினியை பார்க்க வந்தான் ஆதி. அவள் மதியமே சென்றுவிட்டாள் என்று சொன்னதும் ஒருவேளை விக்ரமோடு சென்றிருப்பாள் என எண்ணி "இதுங்க லவ் தொல்லை தாங்க முடியலை"என விக்ரம் நந்தினி இருவரையும் நினைத்து சிரித்தபடி தன் காரை கிளப்பினான்.

டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு அருகில் பார்க்க திவ்யா இருந்தவரை இருவரும் சேர்ந்து பயணித்த நினைவு வந்து வருத்தியது. 'இன்னுமா என்னோட காதல் உனக்கு புரியவில்லை இதற்கு மேல் ஏப்படி என் காதலை உணர்த்துவது என்று எனக்கும் தெரியவில்லையே' என தன்னவளுடன் மனதோடு வாதாடியப்படி கேட்டை நெருங்க...அங்கு காரின் வெளியே நின்றபடி மொபைலில் நந்தினிக்கு அழைத்து கொண்டிருந்தான் விக்ரம்.



'இவன் என்ன தனியாக நிற்கிறான், அப்போ நந்தினி இவனோடு செல்லவில்லையா..? வேறு அங்கே சென்றிருப்பாள்' என குழம்பியவனும் அவள் மொபைலுக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறியது.

இங்கேயே நிற்பதற்கு உள்ளேயே சென்று பார்த்து வரலாம் என எண்ணி விக்ரம் மருத்துவமனையின் நுழைய போக "நந்தினி மதியமே வெளிய போய்விட்டதாக சொன்னாங்க ? ஏன் உன்கிட்ட எதுவும் சொல்லவில்லையா ?" என நந்தினிக்கு என்ன ஆனதோ என்றெண்ணி அவனின் முகம் பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு சொல்ல,விக்ரமின் நடை பாதியிலேயே நின்றது.


விக்ரமிற்கு அதே எண்ணம் தான் யாரிடமும் சொல்லாமல் எங்கே சென்றாள். ஒருவேளை உடம்புக்கு முடியாமல் வீட்டுக்கு சென்று இருப்பாளோ என கருதி தாயிடம் அழைத்துக் கேட்க,அவர்களிடம் இருந்தும் இன்னும் வரவில்லையே என்ற பதிலே வந்தது.


அப்போது ஆதியின் மொபைல் அடிக்க இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு திரையை பார்க்க அதுவோ புதிய எண்ணை காட்டியது.


இங்கு திவ்யாவின் வீட்டிலும் இந்நேரம் வீடுவந்து சேர்ந்துவிடும் மகள் இன்னும் வரவில்லையே என அவளின் எண்ணிற்கு அழைக்க எதிரில் கேட்ட குரலில் அதிர்ந்தவர்

"மகேஷ் நீயா..? திவ்யா எங்கே..? அவள் ஃபோன் உன்கிட்ட எப்படி வந்தது..?" என பதட்டத்திலும் அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்க ...

அவனோ ஃபோனே அதிரும்படி சிரித்தவன் "பயபடாதீங்க மாமா உங்க பொண்ணை நான் பத்திரமா பார்த்துக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க பொண்ணு கழுத்தில் உள்ள தாலியை கழட்டிட்டு என் கையால் அவளுக்கு தாலிக்கட்டி பொண்டாட்டியாக மாற்றப் போகிறேன். எனக்கு எல்லாமே தெரியும் மாமா அன்றைக்கு அவன் பேசியது அனைத்தையும் நானும் கேட்டுக்கொண்டு தான் இருந்தேன், எப்போது அவங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என்று தெரிந்ததோ அப்போதே முடிவுப் பண்ணிட்டேன் என்றவன், எங்க கல்யாணத்தை நேரில் பார்க்க முடியாது அதனால் அங்கே இருந்தே எங்களை வாழ்த்துங்க" என அவர் அங்கு பேசுவதை கண்டுகொள்ளாமல் இணைப்பை துண்டித்தான்.


அவரோ நெஞ்சில் கைவைத்தவாறே "அய்யோ என் பொண்ணு இவன் இப்படிப்பட்ட கேவலமான ஜென்மாமாக இருப்பான் என்று நினைக்கவில்லையே" என கண்ணீர் வடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் முழிக்க..அவரின் பதட்டத்தை கண்டு பதட்டம் கொண்ட மற்ற இருவரும்

"என்னங்க ஆச்சு" என்னப்பா ஆச்சு..?" என கேட்க அவர் சொன்ன செய்தியில் உறைந்து நின்றனர்.



"யாரிடம் சொல்ல வேண்டும் என்பது கூட புரியவில்லையே... மாப்பிள்ளையுடைய ஃபோன் நம்பர் கூட இல்லையே" என புலம்பியவரிடம்

பிரியா, "அப்பா என்கிட்ட மாமா நம்பர் இருக்கு" என தயங்கியபடி சொல்ல,அவரும் உனக்கு எப்படி தெரியும் என எந்த கேள்வியும் கேட்காமல் அவனுக்கு அழைத்துவிட்டார்.


மொபைலில் தோன்றிய எண்ணை மனம் படப்படாக்க எடுத்து பேச... எதிரில் "மாப்பிள்ளை நான் திவ்யா அப்பா பேசுகிறேன்" என சொல்லிவிட்டு நடந்ததை சொல்ல, பதட்டத்தில் அவரின் மாப்பிள்ளை என்ற உச்சரிப்பு கூட மனதில் பதியவில்லை.

அதிர்ந்து நின்றவனின் காதிலிருந்து மொபைலை பிடுங்கிய விக்ரம் அறிந்த விஷயத்தில் சற்று நேரம் விழிமூடி யோசித்தான்.

பின்னர் தான் எதுவோ புரிந்தது.திவ்யாவும் மதியம் பெர்மிஷன் போட்டுவிட்டு சென்றது நினைவில் வந்தது அப்போ ரெண்டு பேரும் ஒரே இடத்தில் தான் இருக்கணும் என யூகித்தவன் யாராக இருக்கும் என யோசித்தான்.ஆதியும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தான்.


சற்றுநேரம் எதையோ சிந்தித்தவாறு நின்றிருந்த இருவரின் பார்வையும் ஒரேநேரத்தில் சந்திக்க ..."ரகவனாக இருக்குமோ" என்க,

அடுத்த நொடி வேகமாக செயல்பட தொடங்கினர்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 30

"அவர் மட்டும் இல்லை, அந்த மகேஷும் தான் திவ்யாவை கடத்தியிருக்கான், ஆனால் நம்ம நந்தினியும் சேர்ந்து கடத்தியிருப்பதால் ராகவனும் இதில் கூட்டு என்பது உறுதியாகிறது. ஆனா எப்படி இந்த ராகவனும் மகேஷும் ஒன்று சேர்ந்தார்கள் என்று தான் ஒரே குழப்பமாக இருக்கு" என இருவரும் ஒரு நிமிடம் அமைதிக் காத்தவர்கள்,அடுத்த என்ன செய்வது என யோசிக்க தொடங்கினர்.


திவ்யாவின் தங்கை பிரியாவின் எண்ணிற்கு அழைத்த ஆதி..அவர்களிடம் பயப்பட வேண்டாம் சீக்கிரம் திவ்யாவுடன் வருவதாக ஆறுதல் கூறியவன்,அடுத்து மதனுக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூறியவன்,

"நீ வீட்டில் போய் இருடா. அத்தை அம்மா பயபட போறாங்க. எதையாவது சொல்லி சமாளி, நாங்க சீக்கிரம் வருகிறோம்" என்றான்.

பின்னர் இருவருமே தங்கள் காரை எடுத்துக்கொண்டு தனித்தனியாக தேடத் தொடங்கினர்.


பின்னர் ரெண்டு பேரும் சேர்ந்து தான் எங்கேயாவது சென்றிருப்பார்கள் என்றால் கண்டிப்பாக ஒன்று நந்தினி வழக்கமாக செல்லும் ஐஸ்கிரீம் பார்லர் இல்லையென்றால் அதற்கு அருகில் உள்ள காஃபி ஷாப்பாக இருக்கும் என சரியாக கெஸ் பண்ணிய விக்ரம் அடுத்து அங்கே சென்று விசாரிக்கலாம் என கிளம்ப...அங்கும் எந்த ஆதாரமும் கிடைக்காமல் வெளியே வர அப்போது ஆதியும் அங்கே வந்திருந்தான்.


ஆக இருவருமே ஒரே இடத்தில் தான் தேட போகிறோம் என்பது போல் பார்த்தவர்கள் தங்கள் காரை நோக்கி செல்ல,தன் காரை திறக்க கைவைத்தவனின் கை பாதியில் நின்றது.

ஒரு நொடி அப்படியே நின்றவன் நகர்ந்து வந்து ஆதியின் கார் முன்பக்க கதவை திறந்து அவனின் அருகில் அமர்ந்து கொண்டான் விக்ரம்.


ஆதியும் அந்த இக்கட்டான நிலையிலும் சிறு புன்னகையோடு காரை கிளப்பினான். சிறிதுதூரம் சென்ற ஆதி ஒரு மரத்தடியில் நிறுத்த என்னவென்று பார்த்த விக்ரமிடம் "ராகவனுக்கு ஒரு ஃபோனை போடுடா..? ஒருவேளை அவரிடம் பேசினால் ஏதாவது க்ளூ கிடைக்கும்" என்க

விக்ரமும் "அதுக்கு தான்டா டிரை பண்றேன், மனுஷன் உஷாராகி ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டாரோ" என சொல்லி முடிக்கும் முன் அந்தப்பக்கம் அழைப்பு எடுக்கப்பட,விக்ரமும் "அதானே பார்த்தேன் அவருக்கு அந்தளவுக்கு எல்லாம் மூளை இல்லையே என்று...இவரை கூட வைத்துக்கொண்டு கிட்நாப் பண்ற அளவுக்கு போய்யிருக்கானே அந்த மகேஷ், எல்லாம் முட்டாள் ஜென்மங்கள்" என்றபடி மொபைலை காதில் வைத்தான்.

"என்ன மாப்பிள்ளை இப்போதான் இந்த மாமனின் ஞாபகம் வருகிறதா..?" என நக்கல் நிறைந்த குரலில் கேட்க..


விக்ரம் "உங்களை எப்படி மாமா மறக்க முடியும்" என அதே நக்கல் குரலில் சொல்ல,

"என்ன காரணத்திற்காக இப்போ எனக்கு ஃபோன் பண்ணினாய் என தெரிந்துக் கொள்ளலாமா..?" என்றவருக்கு

"அது ஒண்ணுமில்லை மாமா என் பொண்டாட்டி பசி தாங்கமாட்டா, அதான் கொஞ்சம் கோபித்துக் கொள்ளாமல் ஏதாவது சாப்பிட மட்டும் வாங்கி தந்துடுங்க, அதுகெல்லாம் சேர்த்து வைத்து செட்டில் பண்ணிடுறேன்" என அசால்ட்டாக அவர் தலையில் குண்டை தூக்கிப் போட..


அவரோ அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
இவனுக்கு எப்படி தெரியும்..? அப்படி தெரிந்தாலும் கூட எந்த கவலையும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது என நினைத்தவரின் சிந்தனையை கலைத்தது அடுத்து விக்ரம் சொன்ன பதில்.


"மாமா நீங்க இருக்குற தைரியத்தில் தான் நிம்மதியாக இருக்கிறேன்,பத்திரமாக பார்த்துக்கோங்க என்றவன் அதோடு நிற்காமல் திவ்யாவையும் சேர்த்து பாத்துக்கோங்க" என்க,

அவரோ தனது படபடப்பை மறைத்தவாறே "என்ன உளறுகிறாய் ? அவர்கள் இருவரும் இங்கு இல்லை" என சொன்னபடி,எங்கே தன் வாயாலேயே உலறிவிடுவோமோ என பயந்தவர் இணைப்பை துண்டித்தார்.


விக்ரம் ஆதியின் புறம் திரும்பி "என்னடா எங்க இருக்காங்க என்று ட்ரேஸ் பண்ண முடிந்தா"..? என்க,

அவனும் " ம்ம் " என தலையாட்டியவாறே இங்க தான்டா கொஞ்சம் அவுட் ஆஃப் சிட்டி என சொன்னவன் தனது காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.


அங்கு நந்தினி திவ்யா இருவரையும் இருக்கையில் கட்டிவைத்து இருந்தனர். வாயிலும் துணியால் கட்டப்பட்டு இருக்க இருவருமே பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தனர்.விக்ரமுடன் பேசியதில் இருந்து படப்படப்பாக உணர்ந்த ராகவன் எங்கே அவன் கண்டுபிடித்து வந்துவிடுவானோ என எண்ணியவாறு அமர்ந்திருந்தவர்,அங்கே அவரையே முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்த நந்தினியின் அருகே செல்ல..அவளோ பார்வையை மாற்றாமல் அமர்ந்திருந்தாள்.


"என்ன.. என்னை பார்த்தாலே பயந்து நடுங்குவாய்..? இப்போ அந்த பயம் போய்விட்டதா ?இல்லை இது அந்த விக்ரம் கொடுத்த தைரியமா..? "என்னையே முறைக்கும் அளவுக்கு வந்துவிட்டாயே பாராட்ட கூடிய விஷயம் தான் என்றவர்,அவன் வந்துவிடுவான் என்ற தைரியம்...எப்போ என்னை மண்டபத்தில் வைத்து அவமானப்படுத்தினானோ அப்போதே முடிவு பண்ணிட்டேன் அவனை போட்டுத் தள்ள.... ஆனால் ஜஸ்ட் மிஸ் அந்த ஆக்ஸிடென்ட்டில் இருந்து தப்பித்து விட்டான்.அதான் உன்னை டார்கெட் பண்ணேன்,உனக்கு ஒன்று என்றால் தான் இரண்டு பேருக்கும் பதறுமே..! எப்படி என்னோட பிளான்.நான் மட்டுமென்றால் கஷ்டம் என நினைத்துதான் இவனையும் என்னோடு சேர்த்துக்கொண்டேன். எனக்கு தேவை விக்ரம் ஆதி இவரின் நிம்மதி. அது எப்படி போனால் என்ன அதான் அந்த திவ்யாவையும் தூக்கினோம்" என்றார் வன்மம் நிறைந்த குரலில்..


அதுவரை இருந்த தைரியம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது நந்தினிக்கு . "அப்போ அத்தானை இவர்தான் கொலை செய்ய முயன்றாரா" என எண்ணும் போதே,
"கடவுளே என் அத்தானுக்கும் ஆதிக்கும் எதுவும் ஆக கூடாது" என கடவுளுக்கு உடனடி வேண்டுதல் வைத்தாள்.


இங்கே திவ்யாவின் அருகே வந்த மகேஷ் அவள் வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு "திவி செல்லம், இப்போ நமக்கு என்ன நடக்க போகுது தெரியுமா..?" என்க

அவளோ "பொறுக்கி நாயே... என்னை அப்படி கூப்பிடாதே" என கத்த,

அவளை ஓங்கி விட்டான் ஒரு அறை அதில் அவள் கன்னம் சிவந்தது உதட்டோரம் இரத்தம் கசிந்தது. "யாரை பார்த்து நாய் என்று சொல்கிறாய் ? எனக்கென்னடி குறைச்சல் அந்த ஆதியை விட, அவன் தான் ஒன்னுக்கும் லாய்க்கு இல்லாதவன், பக்கத்தில் உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணை இத்தனை நாள் வைத்துக்கொண்டு எதுவுமே செய்யாமல் இருந்திருக்கிறான் என்றால் என்ன அர்த்தம் அவன் ஒரு..." என அடுத்த வார்த்தையை சொல்லவிடாமல்

"பிளீஸ் இதுக்கு மேல எதுவும் சொல்லாதே" என்றால் அழுதவாறு உரத்த குரலில்.


"என்னடி" என அவள் தலைமுடியை கொத்தாக பற்றி இழுத்தவன் அவள் வலியால் கத்துவதை பற்றி கொஞ்சமும் கவலைக் கொள்ளாமல் "அவனை எதுவும் சொல்ல கூட விடமாட்டேன் என்கிறாய் ? அவ்வளவு காதலா அவன் மீது" என இன்னும் அவள் முடியை பிடித்து இழுக்க,

"அம்மா" என உயிர் போகும் வலியில் கத்தியேவிட்டாள்'. திவ்யாவை அவன் அடிப்பதை பார்த்த நந்தினிக்கு கோபம் அதிகரிக்க, கட்டப்பட்ட நாற்காலியில் இருந்தபடி துள்ள…

"டேய் அவள் வாயிலுள்ள கட்டையும் கழகட்டிவிடுங்க டா என்னதான் சொல்கிறாள் என பார்ப்போம்" என திமிராக கர்ஜித்தான்.


நந்தினியின் கட்டினை அகற்றிய மறுநொடி "என் அத்தானுக்கும் ஆதிக்கும் மட்டும் இந்த விஷயம் தெரிந்தது உங்க ரெண்டு பேரையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவார்கள். கண்டிப்பா அவங்க வருவாங்க.. அப்பறம் இருக்கு உங்களுக்கு" என்றவளை நெருங்கி

"நீ யாருன்னு கூட எனக்கு தெரியாது, அன்னைக்கு ஏதோ கொஞ்சம் அழகா இருக்கியே என்று சைட் அடித்தற்கு, அந்த ஆதியும் மதனும் போட்டு அடிச்சாங்க ,அடுத்தநாள் யாரு என்றே தெரியாத ஒருத்தன் என்னையும் என் வண்டியையும் அடித்து நொறுக்கி விட்டு "இன்னொரு முறை அவளை நீ பார்ப்பது தெரிந்தாலே உன் கண்ணு ரெண்டும் இருக்காது" என மிரட்டிவிட்டு போனான்.
ஆனால் அப்போ இருட்டில் அது யாரு என்று சரியாக தெரியவில்லை,எப்போ அந்த விக்ரம் உன் கழுத்தில் தாலி கட்டினானோ அப்போதே தெரிந்துவிட்டது அது அவன் தான் என்று..?"


"உன் ஓருத்திக்காக மூன்று பெயரிடம் அடிவாங்கியிருக்கிறேன் அதற்கெல்லாம் சேர்த்து இன்றைக்கு உன்னையும் என்ன பண்றேன் பாரு…? முதலில் திவ்யாவை முடித்துவிட்டு உன்கிட்ட வருகிறேன்" என்றவன் அவளை விட்டுவிட்டு திவ்யாவை நோக்கி சென்றான்.


நந்தினிக்கு அவன் வார்த்தையில் இன்னும் பயம் அதிகரித்தாலும் இருவரும் கண்டிப்பாக வருவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் இருந்தது.



திவ்யாவிடம் வந்தவன் நான் உனக்கு ரெண்டு சான்ஸ் தருகிறேன்.. ஒன்று உன் கழுத்தில் உள்ள தாலியை கழட்டிட்டு நான் கட்டும் தாலியோடு எனக்கு மனைவியாக வாழ்வது. இரண்டாவது உன் புருஷன் கட்டிய தாலியோடு எனக்கு பொண்டாட்டியா வாழ்வது" என்க...அவளோ கோபத்தில் அவன் முகத்திலேயே காரி உமிழ்ந்தாள்.


"ச்சி ...நீயெல்லாம் என்ன ஜென்மம், அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட இப்படி கீழ்த்தரமாக பேசுகிறாயே..? நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டாய்" என சாபம் கொடுக்க...அவனோ தன் முகத்தை ஒரு கையால் துடைத்துக்கொண்டு

"உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி செய்வாய்..? நானும் மாமன் மகள் தானே கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்று நினைத்தால் உனக்கு ரொம்பதான் டி... முடிந்தால் என்னிடம் இருந்து உன் மானத்தை காப்பாற்றிக் கொள்" என கூறியாவாறு..

"இப்போ கூப்பிடுடி உன் புருஷனை எப்படி வந்து அவன் பொண்டாட்டி மானத்தை காப்பாற்றுகிறான் என்று நானும் பார்க்கிறேன்" என்றவன் அவள் சேலையில் கைவைக்க...

அவளோ சர்வமும் அடங்கியவாறு "பிளீஸ் வேண்டாம் விட்டுடு உன்னை கெஞ்சி கேட்கிறேன்" என தன் மானம் காக்க போராடியவள் மனம் முழுவதும் "ஆதி வந்துடுங்க, ஆதி வந்துடுங்க... உங்களை தவிர வேற யாரும் என்னோட மனசும் உடலும் தொடமுடியாது. இவனால் ஏதாவது என் கற்புக்கு பங்கம் வந்தாள் அடுத்த நொடி என் உயிர் என் உடலில் இருக்காது" என மானசீகமாக தன்னவனுடன் பேசியவளின் வேண்டுதல் கடவுள் காதில் விழுந்துவிட்டது போல...சரியாக அதேநேரம் புயலென உள்ளே நுழைந்தனர் விக்ரமும் ஆதியும்.


இருவரும் இருந்த நிலையை பார்த்து ராகவனையும் மகேஷையும் கொல்லும் வேகம் இருவரிடமும்,அதுவும் திவ்யாவின் சேலை முந்தானையை பிடித்து நின்றுகொண்டிருந்த மகேஷை கண்கள் சிவக்க நெருங்கினான் ஆதி.


அந்த நேரத்தில் இருவரையும் எதிர்பாராத மகேஷின் மூளை ஒரு நிமிடம் வேலை நிறுத்தம் செய்துவிட்டது. எப்படி இவங்களுக்கு இந்த இடம் தெரிந்தது...என்னையோ இல்லை ராகவன் மீது சந்தேகம் வந்திருந்தாலும் இந்த இடத்தை பற்றி அறிய வாய்பில்லையே.. இது அவன் நண்பனின் கெஸ்ட் ஹவுஸ் அப்படியிருக்கும் போது இவர்கள் மட்டும் எப்படி மோப்பம் பிடித்து வந்தார்கள் என திட்டிக்கொண்டே நிமிர..ஆதி அடித்த அடியில் அறையின் முலையில் சென்று விழுந்தான்.


"ஏண்டா பொறுக்கி நாயே .. எவ்ளோ தைரியம் இருந்தா என் கண்ணு முன்னாடியே என் பொண்டாட்டி மேல் கைவைப்பாய்..? இந்த கை இருப்பதால் தானே அப்படி செய்தாய் இனிமேல் நீ எப்படி இந்த கையை உபயோகப்படுத்துகிறாய் என்று நானும் பார்க்கிறேன்" என்ற ஆதி மகேஷின் வலது கையை பிடித்து முறுக்க...

அவனோ "அய்யோ அம்மா" என்று அலறினான்."இப்படி தானே அவளும் அழுதிருப்பாள்" என்றபடி எழும்பை உடைத்திருந்தான்.


விக்ரம் முதலில் சென்று நந்தினியை விடுவித்தவன்,அங்கு நின்றிருந்த அனைத்து அடியாட்களையும் அடித்துவிட்டு ராகவனை நோக்கி சென்றான். நந்தினி இருவரும் சரியான நேரத்தில் வந்துவிட்ட மகிழ்வில் திவ்யாவின் கட்டை அவிழ்த்து விட்டாள்.


"என்ன மாமா பரவாயில்லையே நான் சொன்ன மாதிரியே நாங்கள் வரும்வரை இரண்டு பேரையும் பத்திரமா பார்த்து கொண்டீர்கள். அதுக்கு உங்களுக்கு ஏதாவது சன்மானம் தரணுமே... என்ன தரலாம்" என தாடையை தடவியபடி யோசிக்க...

அவரோ பயத்தில் "என்னை எதும் பண்ணிவிடாதே விக்ரம். நான் உன் தாய்மாமன் அப்பறம் உங்க அம்மாவே உன்னை மன்னிக்க மாட்டாள்" என தங்கை தன் மேல் கொண்டுள்ள பாசத்தை அறிந்தவர்,அதனை முன்நிறுத்தி தப்பிக்க முயல...

அவனோ சத்தமாக சிரித்தவன் மொபைலை எடுத்து தன் அன்னைக்கு அழைப்பு விடுக்க,எதிரில் தன் தங்கையின் பதிலை கேட்ட ராகவன் அடுத்து இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் கைகளை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தார்.


விக்ரமிற்கு தன் அன்னையின் வார்த்தையில் அத்தனை நிம்மதி.."எப்போ என் மருமகளை கடத்தும் அளவிற்கு சென்றாரோ அப்போதே அவருக்கும் எனக்கும் உள்ள அண்ணன் தங்கை உறவு முடிந்துவிட்டது.எனக்கு அண்ணனே இல்லை என்றவர் அவர் முகத்தை கூட எனக்கு பார்க்க பிடிக்கவில்லை" என்று விட்டு இணைப்பை துண்டித்தார்.


இப்போ உங்களுக்கு புரிந்திருக்கும் "நீங்க என்ன சொன்னாலும் எங்களிடமிருந்து தப்பிக்க முடியாது என்று..?" அவரோ வேகமாக சிந்தித்தவர் அடுத்து ஆதியை அழைத்தார்.எப்படியும் விக்ரமின் செயலை தடுக்கவும் எதிர்க்கவும் ஆதியால் மட்டுமே முடியும் என நம்பியவர், அவனை பயன்படுத்திக் கொண்டு தப்பித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்.


அவனோ அப்போதுதான் மகேஷ் உடலில் உயிர் மட்டுமே மீதம் இருக்கும் அளவுக்கு அடித்து முடித்திருந்தான். அவர் அழைக்கவும் சட்டையின் கைகளை மேலே ஏற்றியவாரே அவரை நோக்கி வந்தவன் என்ன என்பதுபோல் பார்க்க...

அவரோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு "தெரியாமல் தப்பு பண்ணிட்டேன் ஆதி, நீதான் விக்ரம் என்னை எதுவும் பண்ணாமல் தடுக்க வேண்டும். இனிமேல் நீங்க இருக்கும் பக்கமே தலைவைத்து படுக்கமாட்டேன். உனக்கு தான் தெரியுமே அவன் எல்லாரையும் தப்பாக தான் புரிந்துகொள்வான், அவன் மீது உள்ள கோபத்தில் தான் இப்படி பண்ணினேன் ஆனால் உன் மீது எனக்கு எப்பவும் கோபம் இருந்தது இல்லை, உன்மேல் எனக்கு எப்போதுமே பாசம் அதிகம்" என அவனிடம் நல்லவன் வேஷம் போட…


அவனோ விக்ரமை முறைத்தவன் ராகவனை பார்த்தவாறே "என்னடா பேரம் பேசிக்கிட்டு இருக்கியா..? இந்நேரம் நாலு அடி அடிக்காமல் பேசவிட்டுட்டு இருக்க" என்க அவனை அதிர்ந்து பார்த்தார் ராகவன்.


"என்ன அப்படி பார்க்கிறீங்க..? நாங்க எப்படி சேர்ந்தோம் என்றா..? பிரிந்தால் தானே சேர்வதற்கு...என்ன சொன்னீங்க அவன்மேல் மட்டும் தான் கோபம் என்மேல் எதுவும் இல்லை என்று தானே... நாங்க இரண்டு பேரும் உடலால் வேண்டுமானால் இருவராக இருக்கலாம் ஆனால் மனதால் எப்போதும் ஒன்று தான்.அவனை எதிர்த்தால் என்னை எதிர்ப்பது மாதிரி தான்.இப்போ இல்ல நாங்க பேசாமல் இருந்த போதும் எங்களுக்கு எல்லாமே ஒன்று தான். இது தெரியாமல் என்னையே அவனுக்கு எதிராக மாற்ற திட்டம் போடுறீங்களா..?" என்றவன்…


"இப்போ கூட சின்ன வயதிலிருந்து எங்களை தூக்கி வளர்த்தவர் என்பதால் மட்டுமே எங்க கையால் அடிக்காமல் அமைதியாக இருக்கிறோம். அதுக்காக உங்களை அப்படியே விட்டுவிடுவோம் என்று நினைக்காதீங்க ? நாங்க அவ்ளோ நல்லவர்கள் எல்லாம் இல்லை" என்றான்.

"ஆனால் உங்களுக்கு ஒரு விதத்தில் நாங்க நன்றி சொல்லியே ஆகவேண்டும்,கடத்தியவுடன் ஃபோனை கூட ஆஃப் பண்ணாமல் எங்களின் அழைப்பிற்கு பதில் அளித்தீர்கள் பாருங்க, அதனால் தான் இவ்வளவு சீக்கிரமாக நீங்க இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது" என்றான்.


ஆதியின் விளக்கத்தில் மகேஷ் ராகவனை முறைக்க...மகேஷின் தலையிலேயே ஒன்று போட்ட விக்ரம் "அவரை ஏண்டா முறைக்கிற நீ மட்டும் என்ன ஒழுங்கா நீயும் தானே திவ்யாவின் அப்பாகிட்ட பேசினாய்..மொத்தத்தில் இரண்டு பேருமே எதுக்கும் லாய்க்கு இல்லை" என்றான்.


அப்போது போலீஸ் உள்ளே நுழைய...ஆல்ரெடி விக்ரம் அனைத்தையும் விளக்கியிருந்ததால் இருவரையும் அவர்களின் அடியாட்களையும் கைது செய்தனர்.அதுவரை பொறுமையாக அனைத்தையும் ஒரு ஓரமாக நின்று பார்வையாளராக பார்த்திருந்த திவ்யா மற்றும் நந்தினி அவர்களை நோக்கி வந்தனர்.


நந்தினி ஓடிவந்து விக்ரமை அணைத்துக் கொண்டவள் "அத்தான் நான் எவ்ளோ பயந்துவிட்டேன் தெரியுமா..? ஏன் இவளோ லேட்டாக வந்தீங்க" என அவன் மார்பில் அடித்தவள்,அவன் உயர்த்திற்கு எம்பி கட்டைவிரலில் நின்று அவன் முகம் பற்றி முகம் முழுவதும் தன் முத்திரையை பதித்தாள்.

அவனும் அவளை தன் உயரத்திற்கு தூக்கிக் கொண்டு அவளுக்கு இசைந்து கொடுத்தான்.


ஆதி திவ்யாவை தலை முதல் பாதம் வரை பார்த்து அவள் நலனை உறுதி செய்தவன்,அவளை அணைக்க துடித்த கரத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தான். அவளுக்கும் அவனை அணைத்து அவன் மார்பில் சாய்ந்து அறுதலடைய விரும்பினாலும் குற்ற உணர்ச்சியுடன் செய்வது அறியாமல் நின்றிருந்தாள் .
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 31


அந்த இடத்தில் இன்னும் இருவர் இருப்பதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விக்ரமை அணைத்துக்கொண்டு தன் முத்தத்தை தொடர்ந்து கொண்டே இருந்தாள் நந்தினி,விக்ரமால் அவளை கட்டுப்படுத்த முடியவில்லை.

"செல்லக்குட்டி அதான் ஒன்னும் ஆகலையே அப்பறம் என்னமா.. விடுடா சீக்கிரம் வீட்டுக்கு போகலாம். அத்தை உன்னை காணாமல் இந்நேரம் ரொம்ப தவித்துப் போயிருப்பார்கள்" என்க,

தாயை பற்றி சொன்னவுடன் தன்னிலைக்கு வந்தவள், விக்ரமை விட்டு விலகி நின்றாள். ஆதி திவ்யா இருவரும் அங்கு இருப்பதே அப்போது தான் உணர்ந்தவள்,அவர்களின் முகம் பார்க்க வெக்கப்பட்டவள் போல் விக்ரமின் முதுகில் முகம் புதைத்துக் கொண்டான்.



ஆதியோ 'இப்போ கூட என்னை நெருங்காமல் இருக்கிறாள் என்றால் அவளுக்கு கொஞ்சம் கூடவா என் மீது காதல் இல்லை' என விழிமூட...

அவளோ 'இப்போது கூட என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டாரா. அந்தளவுக்கு அவரை காயப்படுத்தி விட்டேனா' என ஏற்கனேவே குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தவளின் மனம் மேலும் தன்னுள் சுருண்டுக்கொண்டது.

தனது ஈகோவை ஒதுக்கி வைத்து அவனும் பேசவில்லை, தயக்கம் உடைத்து இவளும் பேசவில்லை. ஆக இருவரும் தேவையே இல்லாத வலியை தானே தங்களுக்குள் வர காரணமாக இருந்தனர்.


பின்னர் அனைவரும் காரில் ஏற நந்தினி விக்ரமை விட்டு பிரியாமல் அவனோடு ஓட்டிக்கொண்டே திரிய...அவர்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்,திவ்யா தயங்கியவாறே முன் இருக்கையில் ஆதியின் அருகில் அமர,வீடு வந்து சேரும் வரை நிமிடத்திற்கு ஒருமுறை அவன் முகம் பார்த்து.... ஏதோ சொல்ல நினைக்க அவனோ அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் காரினை செலுத்தினான்.


வீட்டின் கேட் முன்பு கார் நிறுத்தப்பட "ஏண்டா இங்கேயே நிறுத்திட்ட..? உள்ளே போக வேண்டியது தானே" என்ற விக்ரமின் கேள்விக்கு

"நீங்க இரண்டு பேரும் போங்க…நான் இவங்களை அவங்க வீட்டில் விட்டுட்டு வரேன்" என்க,அவனின் இவங்களை என்ற வார்த்தையில் மிகவும் காயப்பட்டு போனாள் திவ்யா.

விக்ரமும் அவர்களின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாமல் காரிலிருந்து இறங்கிக்கொண்டான்.


கார் திவ்யாவின் வீடு வந்து சேரும்வரை அதே அமைதி நிலவியது. திவ்யா வீட்டில் அனைவரும் வாசலிலேயே காத்திருக்க,அவனோ காரைவிட்டு இறங்காமல் அவள் இறங்க கதவை திறந்துவிட்டவன்,அவள் இறங்கியதும் அதிவேகத்தில் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.



"என்னமா..? மாப்பிள்ளை உள்ளே கூட வராமல் அப்படியே போய்ட்டாங்க" என்ற தாயை பார்த்து விரக்தியாக சிரித்தவள்

"அவங்க என்னை ட்ராப் பண்ண தான்மா வந்தாங்க.."என்றவள் வீட்டுக்குள் நுழைந்தாள்.


இங்கு ஆதி வீட்டுக்குள் நழைந்தபோது அனைவரும் நந்தினியை சுற்றி அமர்ந்து கொண்டிருந்தனர்.

அவனும் சென்று ஹாலில் அமர, திவ்யாவை பற்றி கேட்டதற்கு "அவளை அவள் வீட்டில் விட்டுட்டு தான் வந்தேன்" என்றவன் அதற்கு மேல் எதுவும் கேட்க்காதீங்க? என்பதுபோல் பார்வையை செலுத்திவிட்டு நந்தினியை பார்த்தான்.


அவளோ தன் தாய்க்கும் விக்ரமிற்கும் நடுவில் அமர்ந்து நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நானும் திவ்யாவும் காஃபி ஷாப் போகலாம் என்று பிளான் போட்டு போனோமா..? அப்போ" என அவள் வாய் திறக்கும் முன் ஆதி ஓங்கி அவள் தலையிலேயே கொட்டினான்.


அவளோ வலியில் துடித்தாள்,அவன் எப்போதும் போல விளையாட்டிற்கு அடிக்கிறான் என அமைதியாக அமர்ந்திருந்தாலும் அவனின் அடி உண்மையிலேயே அதிகப்படியான வலியை ஏற்படுத்த,அழ தொடங்கிவிட்டான்.


ஆதி இப்போதுதான் முதல் முறை இப்படி வலிக்கும்படி அடித்திருக்கிறான் அதுவே அவளின் அழுகையை அதிகப்படுத்தியது.

விக்ரமோ "டேய் இப்போ எதுக்குடா அவளை அடித்தாய்" என எகிற,

ஆதியோ "அடிக்காமல் என்ன பண்ண சொல்ற..வெளியே போகணும் என்று பிளான் போட தெரிந்தவளுக்கு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போகணும் என்று தெரியாதா..? அட்லீஸ்ட் ஒரு மெசேஜ், என்கிட்ட சொல்லலை விடு, உன்னிடமாவது சொல்லிட்டு போயிருக்கலாம் இல்ல...இப்படி எதுவும் சொல்லாமல் அனைவரையும் பயமுறுத்தி விட்டு இப்போ கதை மட்டும் நன்றாக சொல்ற..?" என கேட்க...அவனின் அனைத்து கேள்வியும் நியாயமானது என்பதால் யாரும் அவனை தடுக்கவில்லை.


அவள் அழுகை அதிகரித்துக் கொண்டே இருக்க,விக்ரமின் சமாதானம் கூட அங்கே எடுப்படவில்லை. சற்று நேரம் பொருத்த ஆதி, அவள் அருகே அமர்ந்து தோளை தோட அவளோ அதனை தட்டிவிட்டாள்.

"நீ பண்ணியது தப்பு தானே,உங்க ரெண்டு பேரையும் காணாமல் நாங்க எவ்ளோ பயந்திருப்போம்,ஒருவேளை நாங்க வர கொஞ்சம் லேட்டாகியிருந்தால் என்ன ஆகி இருக்கும்" என்க,

அவன் சொல்வதும் சரிதானே கொஞ்சம் லேட்டாக வந்திருந்தாலும் நடக்கவிருந்த சம்பவம் கண்முன் வர அவளே "சாரி இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்" என்றவள், ஆனா ரொம்ப வலிக்குது" என தலையை தடவ...

"சாரி... கோபத்தில் அடிச்சிட்டேன்" என தலையை தடவி விட்டான் ஆதி.


"இதுதான் ஃபர்ஸ்ட் டைம் நீ என்னை அடித்தது தெரியுமா..?" என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்க...

அவனோ "இதுவரைக்கும் அதுக்கு அவசியம் வரவில்லை,இதற்கு முன்பாவது இவனுக்கு பயப்படுவாய் என விக்ரமை கட்டியவன்,இப்போ இவனும் உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கான்" என்றான் சிரித்துக்கொண்டே..
"அதான் நான் அடித்தேன்" என்றான்.

விக்ரம் ஆதி நந்தினி என மூவரும் மாறிமாறி ஒருவருக்கொருவர் பழி சுமத்தி கொண்டு இருக்க….அதனை குடும்பத்தினர் அனைவரும் ஆச்சிரியமாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

நடந்த சம்பவத்தால் விக்ரம் ஆதி இருவரும் பேசிக்கொள்வது கவனிக்காமல் இருந்தவர்கள் இப்போது ஏதோ புரியாத மொழியில் படம் பார்ப்பது போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.


இந்த உலக அதிசயம் எப்போது நடந்தது என்பது போல் பார்த்துக்கொண்டிருக்க...தங்கள் வாக்குவாதத்தை முடித்த மூவரும் அனைவரும் அமர்ந்திருக்கும் நிலையை பார்த்து,அவர்களை களைத்தவர்கள்

"என்னாச்சு எல்லாருக்கும் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க..? என்க,

முதலில் வாய்த்திறந்த மதன் "டேய் ஒரே நாளில் எங்களால இப்படி அடுக்கடுக்காக அதிர்ச்சியை கொடுத்தால் நாங்க என்னதாண்டா பண்றது..? நீங்க இரண்டு பேரும் எப்போதிருந்து சேர்ந்தீர்கள்" என கேட்டவனை பார்த்து,

"நாங்க எப்போ சண்டைப் போட்டோம்" என சொல்ல எழுந்த மதன் இருவரையும் ஓடஓட விரட்டி அடித்தான்.


"அடப்பாவிகளா எங்களை எல்லாம் பார்த்தா பைத்தியகாரங்க மாதிரி இருக்கா"..? என மொத்த குடும்பமும் இருவரை ஒருவழியாக்கி இருந்தனர்.


மறுநாள் காலையில் ஆதி விக்ரம் அனைவரும் வேலைக்கு சென்றிருக்க,நந்தினி லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாள். திவ்யாவின் தந்தை சந்திரசேகர் இன்னும் நடக்கமுடியாமல் இருந்தபோதிலும் இதற்குமேல் இருவரும் பிரிந்து இருக்க கூடாது,தன்னால் தான் தன் மகளின் வாழ்க்கை இந்த நிலையில் இருக்கிறது என நினைத்து கொண்டு இருந்தவர்,அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துவிட்டார்.இனிமேலாவது ஆதி திவ்யா இருவரும் சேரவேண்டும் என்று..


இருகுடும்பமும் தங்களுக்குள் பேசி அனைத்து பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வர...திவ்யாவின் தந்தைக்கு ஆச்சரியமாக இருந்தது, பெரிய பணக்கார குடும்பம் என்ற எண்ணம் இல்லாமல் அவர்களின் இயல்பான உபசரிப்பும் பேச்சும் நிறைவை தந்தது.

தன் மகள் வாழப்போகும் குடும்பம் நல்லவிதமாக இருப்பது மட்டுமில்லாமல் அவள் வீட்டைவிட்டு வந்ததை பற்றி கேட்டு கவலைப்படுத்தாமல் தாங்கி பேசுவதை கேட்கும் போது, தான் கஷ்டப்பட்டு தேடினால் கூட இப்படி ஒரு சம்பந்தம் அமையாது என உணர்ந்து கொண்டவர் சந்தோஷமான மனதோடு மகளை விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

மாலை ஹாஸ்பிடலில் இருந்து வந்த ஆதி தனது அறைக்கு குளிக்க சென்றான். அதுவரை நந்தினியோடு பேசிக்கொண்டு இருந்தவள் ஆதியின் வரவை அறிந்து,தயங்கியபடி உள்ளே நுழைய அப்போது தான் குளித்துவிட்டு இடுப்பில் டவலோடு வெளியே வந்தவன் அவளை பார்த்து அதிர்ந்து நின்றான்.

அவளும் அவனை அந்த கோலத்தில் எதிர்ப் பார்க்காததால் சட்டென்று திரும்பி நின்று "சாரி" என்க,

அவனோ "நீ எப்படி இங்க?" என்றவனின் கேள்விக்கு "சிரித்தபடி அப்பாதான் கொண்டுவந்து விட்டுட்டு போனாங்க" என்றாள்.

"அப்போ உங்க அப்பா அழைத்து வந்ததால் தான் இங்கே வந்தாய் இல்லையா..? நான் ஒரு முட்டாள் ஒரு நிமிடத்தில் 'நீ எனக்காக, நம்ம காதலுக்காக தான் வந்திருப்பாய் என எண்ணிவிட்டேன்" என உணர்ச்சியற்ற குரலில் சொன்னவன் தன் உடையை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு சென்றுவிட்டான்.

அவள் தான் தவித்துப் போனால் அவனுக்கு எப்படி தன்னை புரியவைப்பது என புரியாமல்…


நாட்கள் செல்ல ஆதிக்கு திவ்யாவுக்கு இடையே இருந்த இடைவெளி அப்படியே தான் இருந்தது. அவளும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டாள் அவள் சொல்வதை கேட்க கூட அவன் தயாராக இல்லை.

அப்படியும் ஒருநாள் அறைக்கு தூங்க வந்தவனை வழிமறித்து நின்றவள் "பிளீஸ் ஆதி நான் சொல்றதை ஒரே ஒருமுறை கேளுங்க" என்க..

அவனும் என்ன என்பது போல் கைகளை கட்டிக்கொண்டு அவளை அழுத்தமாக பார்க்க...அவனை நெருங்கிய திவ்யா அவன் பார்வைக்கு பதில் பார்வை பார்த்தவாறே "ஐ லவ் யூ ஆதி, ஐ லவ் யூ சோ மச்" என்றவள் அவன் மார்பில் சாய்ந்து கொள்ள முயல,அவளை விலக்கிவிட்டு கட்டிலில் போர்வையை தலை வரை போர்த்தி கொண்டு படுத்துக்கொண்டான்.


அவனின் விலகலும் புறக்கணிப்பும் உயிர்போகும் வலியை கொடுக்க...இதே வலியை தான் இத்தனை நாளும் அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தோம் என்பதை நினைக்கும் போது இன்னும் மனம் வலித்தது.


ஆதிக்கு தான் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதே புரியவில்லை,அவள் தன் காதலை சொன்ன பிறகும் எது தன்னை தடுக்கிறது என குழப்பத்தோடு இருந்தவன் அப்படியே தூங்கிப் போனான்.

நடுஇரவில் ஏதோ சத்தத்தில் கண்விழித்து அருகில் பார்க்க...திவ்யாவின் இடம் வெறுமையாக இருந்தது.இந்த நேரத்தில் அங்கே சென்றால் என எண்ணியபடி எழுந்தவன் விளக்கை ஒளிரச்செய்ய ...அங்கு தரையில் அமர்ந்து சோஃபாவில் தலைவைத்து அழுது கொண்டிருந்தாள் திவ்யா.

அவளை அந்த நிலையில் பார்த்தவனின் காதல் கொண்ட மனம் துடிக்க அருகில் சென்று அவன் தோளை தொட அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.


அடுத்து எதைப்பற்றியும் யோசிக்காமல் கோபத்தை எல்லாம் தூக்கிப் போட்டவன்,அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். "சாரிடா சாரி, உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். அழாதடா பிளீஸ்" என்றவனின் கண்ணீர் அவள் உச்சந்தலையை நனைக்க, நிமிர்ந்து பார்த்தவள் அவள் கண்ணீரை துடைத்து

"நீங்க ஏன் அழறிங்க எல்லா தப்பும் என்மேல் தான்" என்றவளின் முகம் பற்றி "இல்லம்மா உன்மேல் எந்த தப்பும் இல்லை, நான்தான் என்னோட ஒருபக்கதை மட்டும் பார்த்துவிட்டு உன் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துக் கொள்ளவில்லை".


"நான் தான் பேசாமல் சென்று படுத்துவிட்டேன் என்றால் நீயாவது என் சட்டையை பிடித்து கேட்ட வேண்டியது தானே… என் பொண்டாட்டி உனக்கு இல்லாத உரிமையா"..?" என அவள் நெற்றியில் அழுத்தமாக தன் முத்தத்தை பதித்தவன்,அவள் கரம் பற்றி எழுப்பி மெத்தைக்கு அழைத்து சென்றான்.

"இனிமேல் இப்படி அழக்கூடாது பாரு முகமே வீங்கிவிட்டது" என்றபடி படுக்கவைத்தவன்,அழுது அழுது தடித்திருந்த இமைகளில் தன் இதழ் பதித்து "எதை பற்றியும் யோசிக்காமல் தூங்குடா" என்றவன் அவளை அணைத்துக் உறங்க துவங்கினான்.அவளும் நிம்மதியாக அவன் மார்பில் தலைசாய்த்து தூங்க முயன்றாள்.அதன்பின் பழையபடி இருவரும் பேசிக்கொண்டு இருந்தாலும், அதையும் தாண்டி கணவன் மனைவி என்னும் உறவினை நெருங்காமல் இருந்தனர்.


நாட்கள் செல்ல நாளை ஆதி விக்ரம் இருவரின் பிறந்தநாள்..எப்போதும் போல் இரவு பன்னிரெண்டு மணிக்கு கேக் வெட்டினார்கள் தான் ஆனால் என்ன வித்தியாசம் என்றால் தனித்தனி கேக் இல்லாமல் ஒரே கேக்கை இருவரும் இணைந்து பத்து வருடங்களுக்கு பிறகு வெட்டினார்கள்.

இதுவரை ஒவ்வொரு வருடமும் அந்த ஒரு வருத்தம் மட்டும் அனைவருக்கும் இருக்கும், இப்போது அது எல்லாம் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க பெரியவர்கள் அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.


விக்ரமின் அறையில் தன்னை முந்திக்கொண்டு கட்டிலில் படுக்க சென்றவளின் அவளின் கரம் பிடித்து தடுத்தவன், "செல்லக்குட்டி" அத்தானுக்கு கிப்ட் இல்லையா ?" என்க..

அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு 'எதுக்கு தூக்கி போடுவதற்கா ? என கோபமாக சொன்னவள்,உங்களுக்கு இனிமேல் கிஃப்ட் கொடுக்கவே மாட்டேன்" என்றாள்.


"நீயேண்டி தூக்கிப் போடுவது போல் கிஃப்ட் கொடுக்கிற ? தூக்கியே போட முடியாதா கிஃப்ட் கொடு" என்றவன் அவளை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு மஞ்சத்தை நோக்கி செல்ல,

அவன் கையிலிருந்து துள்ளி குதித்து ஓடியவளை இவன் துரத்த என நடுராத்திரியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தவள்,

மூச்சு வாங்க "அத்தான் அங்கேயே நில்லுங்க, என்னால ஓட முடியலை. உங்களுக்கு கிஃப்ட் வேண்டுமென்றால் அமைதியா வந்து உட்காருங்க" என அதிகாரம் செய்ய,

அவனும் மகாராணி சொன்னால் கேட்க வேண்டியது தான் என இடைவரை குனிந்து சொன்னவன் அமைதியாக சென்று கட்டிலில் அமர்ந்தாள்.


அவளோ அவன் காலுக்கு அடியில் அமர.."செல்லக்குட்டி அத்தான் காலில் எல்லாம் விழ வேண்டாம். அத்தானின் ஆசிர்வாதம் எப்போதும் உனக்கிருக்கு" என்றவனின் காலில் நறுக்கென்று கிள்ளியவள்

"அந்த ஆசை வேறயா..? முதலில் காலை அந்த பக்கம் நகர்த்துங்க" என்றவள் கட்டிலுக்கு அடியில் இருந்து ஒரு பெட்டியை எடுத்தாள்.


அதில் இருந்து ஒன்றை எடுத்தவள் "இது என்ன என்பதுபோல் பார்த்தவனை கண்டுகொள்ளாமல் "இதுதான் நான் நீங்க தூக்கிப்போட்ட கிஃப்ட்" என கொடுக்க,

"முதலில் அதை பிரிக்கும் முன் எதுக்காக அன்னைக்கு தூக்கிப்போட்டீங்க என காரணத்தை சொல்லுங்க" என்றவளின் செல்ல கோபம் கூட அவனுக்கு பிடித்தே இருந்தது.


அவளை இழுத்து மடியில் அமரவைத்தவன்,அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து "அன்னைக்கு என்கிட்ட கிஃப்ட் கொடுக்கும் முன் ஆதிகிட்ட என்ன சொன்னாய்..?" என தன் உதடுகள் உரச கேட்க….

இந்த நிலைமையில் இருந்துக்கொண்டு எதையும் சிந்திக்க கூட முடியாது என உணர்ந்தவள்,பிடிவாதமாக அவன் மடியில் இருந்து எழுந்து கொண்டாள்.


"ஏய் எங்கடி போகிறாய்" என கைப்பிடித்தவனின் கரத்தை விடுவித்து

"நான் பேசி முடிக்கும்வரை அமைதியா இருக்க சொன்னேன்" என்றவள் எவ்வளவு யோசித்தும் அன்றைக்கு ஆதியிடம் என்ன சொன்னால் என்பது நினைவில்லாமல் போக "தெரியலையே" என்றாள்.

விக்ரம் "உனக்கு மட்டும் கிஃப்ட் கொடுத்துட்டு விக்ரம் அத்தாணுக்கு கொடுக்காமல் இருக்க முடியாது என்று சொன்னாய்..! அதை நீ எந்த அர்த்தத்தில் வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம் ஆனால் நான் புரிந்துகொண்டது வேற வழியில்லாம எனக்கும் கொடுத்ததாக தான் நினைத்தேன். அதான் அன்னைக்கு தூக்கிப்போட்டேன்...உனக்கு நான் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்றவன் அவளிடமிருந்து அந்த பெட்டியை வாங்கிப்பார்க்க அது மொத்தமும் நிறைய கிஃப்ட் பேக் செய்த பொருட்கள் இருந்தது.


"இதெல்லாம் என்ன" என கண்களில் வியப்புடன் கேட்க

அவளோ "இதுயெல்லாம் உங்க ஒவ்வொரு பர்த்டேக்கும் நான் வாங்கின கிஃப்ட் ஆனால் கொடுக்கத்தான் தைரியம் வரவில்லை" என்றாள். ஷர்ட், வாட்ச்,கூலர்ஸ் என பல பொருட்களுக்கு நடுவே பென், ஸ்கேட்ச் என இருக்க,அதனை காட்டி "இது எப்போ வாங்கினாய்..?" என கேட்க..அவள் சொன்ன பதில் உறைந்து நின்றான்.


"இதெல்லாம் நீங்க டென்த், பிளஸ் ஒன், பிளஸ் டூ " படிக்கும் போது வாங்கியது என்றாள். அவள் பதிலில் அவன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. இது மொத்தமும் அவளுடன் சண்டைப் போட்டு பேசாமல் இருந்த பொழுது அதுவும் அப்போது அவளுக்கு பத்து வயது தான் இருந்திருக்கும்...அப்போதே தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கியிருக்கிறாள் என்றால் அவள் அன்புக்கு முன், நான் அவள்மீது கொண்ட காதல் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றே தோன்றியது.


அவளை இழுத்து அணைத்துக்கொண்டவன் "செல்லகுட்டி அத்தானை அவ்ளோ பிடிக்குமா" என அவள் முகம் முழுவதும் முத்தம் பதித்தவன்,கடைசியில் அவள் இதழில் இளைப்பாறினான்.

முடியாமல் நீண்டுகொண்டே இருந்த இதழ் முத்தம் அவளின் மூச்சுதிணறலால் முடிவுக்கு வந்தது.

மூச்சு வாங்க "நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் என்றவள் "ஐ லவ் யூ அத்தான்" என்க..

அதற்கு மேல் அவளை பேச விடவில்லை விக்ரம். "உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் என்று சொல்லிட்ட இப்போ என்னோட டர்ன்" என்றவன் தன் காதலை செயலில் காட்டத் தொடங்கினார்.
 
Status
Not open for further replies.
Top