ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அங்கு ஆதியும் தன் அறைக்குள் நுழைந்தவுடன் தன்னவளை பின்னால் இருந்து அணைத்தவன் "திவி" என கிறக்கமான குரலில் அழைத்து

"எனக்காக உங்க அப்பா கிட்ட பேசினாயா"..? என்க, அவளும் "ம்ம்" என்று மட்டும் தலையாட்டினாள்.

"என்னடி சொன்ன" என்றவனின் உதடு அவளின் காதுமடலை வருட...

அவளோ அவன் தொடுகையின் நெளிந்தபடி "எனக்கு ஆதி தான் வேண்டும் என்று சொன்னேன்" என்றவளை தன் புறம் திருப்பியவன்

"எங்கடி என்னோட பர்த்டே கிஃப்ட்" என அவளை அணைத்தபடி கேட்க...ஏதோ எடுப்பதற்காக அவனை விட்டு விலக முயன்றவளை

"அதெல்லாம் காலையில்…. இப்போ எனக்கு வேற வேண்டும்" என்றபடி அவள் இதழ்களையே பார்க்க...

"கல்யாணம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் பொண்டாட்டிக்கு ஒரு கிஸ் கூட கொடுக்காத ஒரே ஆள் நானாக தான் இருப்பேன்" என்றவன் அவள் இதழை சிறைப்பிடித்தான்.தன் இத்தனை நாள் காத்திருப்பு மொத்தத்தையும் தன் முத்தத்தில் காட்டினான். மிகவும் மென்மையாக நிதானமாக தன் காதலை அவளுக்கு வெளிப்படுத்த...அவள் அதில் மயங்கித்தான் போனாள்.


முத்தயுத்தம் நீடித்துக்கொண்டே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல...தன்னவளை இன்றே அறிந்துவிடும் நோக்கத்தில் அவளை கைகளில் ஏந்தியவன் மெத்தையில் கிடத்த,அவளுடன் அவனும் சரிந்தான்.விடியும் வரை தொடர்ந்த காதல் யுத்தம் "ஆதி ப்ளீஸ்" என்ற வார்த்தையில், கிழக்கு வெளுக்கும் வேளையில் முடிவுக்கு வந்தது.


காலையில் தன் மொபைல் சத்தத்தில் கண்விழித்த ஆதி அதனை எடுத்து காதில் வைக்க,எதிரில் விக்ரமின் குரல் "டேய் இன்னைக்கு நந்து ஹாஸ்பிடல் வரமாட்டாள்" என்க,

அதற்கு அவனும் "நானும் அதை தான் சொல்ல நினைத்தேன் இன்னைக்கு திவ்யாவும் ஆபீஸ் வரமாட்டாள்.மரியாதையா ஃபோனை கட் பண்ணுடா தூக்கம் வருது" என்றவன் இணைப்பை துண்டித்தான்.விக்ரமும் சிரித்துக்கொண்டே விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.




இரு ஜோடிகளும் தங்கள் காதலை வெளிப்படுத்த,அதுவும் திவ்யா ஆதிக்கு பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தாள்.அவன் காதலுக்கு குறையாத காதலை அவனுக்கும் அளிக்க….மொத்தத்தில் அனைத்து ஜோடிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர்.


ஒருவருடம் நிறைவடைந்த நிலையில் அனைவரும் பதட்டத்தோடு மருத்துவமனையில் அமர்ந்திருந்தனர்.திவ்யாவின் பெற்றோர்கள் ஒருபக்கம் விக்ரமின் குடும்பம்,கையில் தனது நான்கு மாத குழந்தையோடு சந்தியா என அனைவரின் முகத்திலும் பயமும் பதட்டமும் நிறைந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்... இரண்டும் ஆண் குழந்தை என்க அங்கிருந்த அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.


திவ்யா நந்தினி இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட,இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விக்ரம் ஆதி இருவரும் தத்தம் மனைவிக்கு உறுதுணையாக பிரசவ அறையில் அவர்களுக்கு குறையாத வலியை மனதில் தாங்கியவாறு ஆறுதலாக இருந்தனர்.


மருத்துவர் சென்ற சில நிமிடங்களில் கையில் குழந்தையோடு கண்களில் தேங்கிய கண்ணீரும் அதற்கு மாறாக முகத்தில் புன்னகையோடு வெளியே வந்தார்கள் விக்ரமும் ஆதியும்.

ரோஜா நிறத்தில் குட்டி கைக்கால்களுடன் பார்க்கவே அவ்வளவு அழகு இரு குழந்தைகளும்.அதுவும் இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரியான முக சாயலோடு இருக்க… மதனோ குழந்தையை கவனிக்காமல் விக்ரம் ஆதியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.


"டேய் என்னடா எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க நீ மட்டும் இப்படி பார்க்கிறாய்" என்க...

அவனோ இருவரையும் முறைத்தப்படி "டேய் உங்க ஒற்றுமைக்கு ஒரு அளவே இல்லையா டா… ஒரே நேரத்தில் பிறந்த குழந்தை மாதிரியா இருக்கு டிவின்ஸ் மாதிரி இருக்குடா….சத்தியமாக எங்களால இன்னொரு விக்ரம் ஆதியை தாங்க முடியாது டா" என சிரிக்க...

மொத்த குடும்பமும் சிரிப்புடன் "ஆமாம்" என தலையாட்டி சிரித்தாலும் குழந்தைகளும் இவர்களை போலவே இருக்கவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருந்தது.
 

Anjali

Well-known member
Wonderland writer
எபிலாக்


நான்கு ஆண்டுகளுக்கு பிறகு


கடிகாரம் மாலை ஏழு மணியை காட்ட...கோபத்தோடு சோஃபாவில் இருந்து எழுந்த நந்து வாசலை நோக்கி நடப்பதும் திரும்ப வருவதுமாக இருக்க…


"இப்போ எதுக்குடி வீட்டை அளந்துட்டு இருக்க, கொஞ்சமாவது வயித்துல இருக்குற குழந்தையை பத்தி கவலை இருக்கா..? நீ பாட்டிற்கு இப்படி ஏதாவது பண்ண வேண்டியது. அதுக்கு நாங்கதான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் வாங்கி கட்டிக்கிறோம். மகாராணியை ஒழுங்கா பார்த்துக்கலைன்னு. எல்லாம் எங்க நேரம்" என தலையிலேயே அடித்துக் கொண்டு சமையல் அறையை நோக்கி சென்றார் கீர்த்தனா.


"கொஞ்சம் ஒரு இடத்துல உட்காரேன்டி எல்லாரும் தான் சொல்றாங்களே..? அவங்க ரெண்டு பேரும் என்ன குழந்தையா,ஏதாவது வேலையிருக்கும் வருவாங்க" என சொன்னபடி அழும் தன் நான்கு மாத குழந்தையை சமாதானப்படுத்த தொடங்கினாள் திவ்யா.

"யாரு அடிச்சது என் செல்லத்தை,பாட்டி அடிச்சாங்களா..? இல்லம்மா இல்ல அழ கூடாது என என்னெனவோ சொல்லி அழுகையை கட்டுப்படுத்த முயற்சிக்க...அவளோடு நந்துவும் சேர்ந்துக் கொள்ள ஆனால் ஆதியின் மகள் தன் அழுகையை தான் நிறுத்திய பாடில்லை.


"ஏண்டி நீயெல்லாம் என்ன பீடியாட்ரிக் டாக்டர் ஒரு குழந்தை எதுக்கு அழுதுனு கூட தெரியலை" என நந்துவை திட்டியபடி... வீட்டில் இருந்த அனைவரின் கைக்கும் மாறினால் நந்தனா.

"இப்போதான் பால் குடித்தால் ஆனாலும் எதுக்கு இப்படி அழறா" என புலம்பும் போதே வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.


விக்ரம் ஆதி இருவரும் ஒன்றாக உள்ளே நுழைய...வரும்போதே குழந்தையின் அழுகையே அவர்களை வரவேற்றது.


விக்ரம் தான் முதலில் குழந்தையை வாங்கியவன் "நந்துமா" என தோளில் போட்டு தட்டிக்கொடுக்க அதுவரை யாரின் சமாதானத்திற்கு அடங்காமல் அழுது கொண்டிருந்த குழந்தை விக்ரமின் குரலை கேட்டவுடன் அழுகையை நிறுத்தி அவனை பார்த்து சிரித்தது.


யாரும் அதை பார்த்து ஆச்சிரியப்பட வில்லை. ஏனென்றால் இது இப்போது ஆரம்பித்தது இல்லை.அவள் பிறந்தது முதல் விக்ரமின் குரலை கேட்டால் மட்டும் அழுது கொண்டிருந்தாள் கூட நிறுத்திவிட்டு அவன் முகம் பார்ப்பாள். அதுதான் இப்போதும் நடந்தது. சரியான அப்பா பிள்ளை என்றே அனைவரும் கலாய்ப்பார்கள். அந்தளவுக்கு இருவருக்கும் ஒரு பிணைப்பு.


சற்று நேரத்தில் அவன் தோளிலேயே தூங்கிவிட அவனே தொட்டிலில் கிடத்திவிட்டு சோஃபாவில் அமர்ந்தான்.


"இவளோ நேரம் நாங்க என்னென்னவோ பண்ணோம் ஆனா எங்களையெல்லாம் படுத்தியெடுத்திட்டு நீ வந்ததும் தூங்கிட்டா"..? என குழந்தையின் பேச்சில் இருந்து வேற பேச்சிற்கு மாறினர்.


அதுவரை வெளியே தன் தாத்தாவோடு பார்க்கில் விளையாட சென்றிருந்த விக்ரம் ஆதியின் மகன்கள் ஆதேஷ் அஷ்வந்த் இருவரும் ஓடிவர.. ஆதேஷ் சட்டென்று நந்துவின் மடியில் அமர அனைவரும் ஒருநிமிஷம் அதிர்ந்தனர் அவனின் வேகத்தில்.

அதுவும் ஆதி தான் "டேய் எத்தனை தடவை சொல்றது இப்படி பண்ணாதே" என்று என திட்ட தொடங்க அவனின் முகமோ சட்டென்று சுருங்கிவிட்டது.


"உனக்கென்ன டா சும்மா அவனை திட்டிக்கிட்டே" என சொன்னவாறே மடியில் இருந்து இறங்கியவனை மீண்டும் மடியில் அமர்த்திக்கொண்டாள் நந்தினி.


ஆதேஷ் ஆதி திவ்யாவின் மகன். அஷ்வந்த் விக்ரம் நந்துவின் மகன்.இருவருமே தந்தையின் குணத்தில் இருந்து மாறுப்பட்டவர்கள். ஆதேஷ் அப்படியே விக்ரம் மாதிரி கோபத்தில் இருந்து அனைத்திலும்.ஆனால் அஷ்வந்த் ஆதியின் மறுஉருவம்.


அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு தங்கள் அறைக்குள் நுழைந்தனர்.


ஆதி உள்ளே நுழையும் போதே மகனை தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் திவ்யா.அதற்குள் பசியில் நந்தனா அழ தொடங்க...அவளிடமிருந்து மகனை வாங்கியவன் அவனை தூங்க வைக்கும் வேலையை தொடர்ந்தான். அஷ்வந்த்தை தூங்க வைப்பதற்குள் ஒருவழி ஆகிவிடுவார்கள் இருவரும்.அந்தளவுக்கு படுத்தி எடுப்பான். அரைமணி நேரம் படுக்கையறையில் நடந்தபடி தட்டிக்கொடுக்க...தூங்கிவிட்டான்.


இருவரையும் உறங்க வைத்துவிட்டு திவ்யா அருகில் வந்தவன், அவளை தோளோடு சாய்த்து நெற்றியோடு நெற்றி முட்டியவாறு "உன்னை ரொம்ப படுத்துறனா திவி"..? என அவளின் ஒவ்வொரு விரலுக்கும் முத்தம் பதிக்க...

அவளோ நிமிர்ந்து அவனின் முகம் பார்த்து "என்ன பேசுறீங்க நீங்க..? இது எல்லாம் ஒரு கஷ்டமா.. இன்னும் சொல்ல போனா இப்போதான் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.


என் வாழ்க்கையில் நீங்க மட்டும் இல்லனா இதெல்லாம் எதுமே நடந்திருக்காது.இப்படி ஒரு அழகான குடும்பம்,என்கிட்ட எந்த நிலையிலும் காதலை மட்டுமே எதிர்பார்க்கும் இப்படி ஒரு அன்பான புருஷன்,மொத்த வாலு தனத்தையும் குத்தகைக்கு எடுத்த மாதிரி ரெண்டு குழந்தைகள்.என்ன கேட்டா இந்த உலகத்திலேயே சந்தோஷமா இருக்கிறது நான்தான்னு சொல்லுவேன்" என்றால் உண்மையான மகிழ்ச்சியுடன்.


அவளின் ஒவ்வொரு வார்த்தையிலும் புதிதாக பிறந்தது போல் உணர்ந்தான் ஆதி. தன் காதலை ஒரு நாளாவது இவள் உணர்வாளா என ஏங்கியிருந்த காலங்கள் போய்...இப்போது அவளின் ஒவ்வொரு செயலிலும் செய்கையிலும் ஏன் கண்ணசைவில் கூட காதலை உணர்ந்தான் ஆதி. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அவனை தன் காதலில் குளிப்பாட்டினாள் திவ்யா.


காதலையும் தாண்டிய நிலையில் இருவரும் இருக்க...மெல்ல தன் அணைப்பை அதிகப்படுத்தினான். ஆனால் அதில் காதல் மட்டுமே நிறைந்திருந்தது.

அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து "தூங்குமா" என்க...

அவளோ கேள்வியாக அவனை பார்த்தாள். பல மாதங்கள் கழித்து மனைவியை நெருங்கிய போதிலும் "எனக்கு இதுவே போதும்" என அவளின் அணைப்பை சுட்டிக்காட்டியவன்,

"இன்னும் கொஞ்ச நேரத்தில் நந்து முழிச்சிடுவா அதுவரைக்குமாவது துாங்குடா" என தட்டிக் கொடுக்க இதுபோல் ஒரு வாழ்க்கை துணை கிடைக்க என்ன தவம் செய்தேன் என்பதே அவளின் எண்ணமாக இருந்தது. மெல்ல அவனின் சுகமான வருடலில் தூக்கத்தை தழுவினாள் திவ்யா. அவனும் அவளை பார்த்துக் கொண்டே உறங்க தொடங்கினான்.


இங்கு விக்ரமின் அறையில் விளையாடிய களைப்பில் ஆதேஷ் நேரத்தில் தூங்கிவிட... நந்துவோ கோபத்தோடு விக்ரமின் வருகைக்காக காத்திருந்தாள்.


அவன் உள்ளே வரும் போதே மனைவியின் முகம் மாற்றத்தை கண்டுக் கொண்டவன் எதுவும் சொல்லாமல் தூங்கும் மகனை ஒரு நொடி நின்று பார்த்தவன் பின்னர் நந்து அருகே அமர்ந்தான்.


அவள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க….மெல்ல பாதத்தை தன் கால் மேல் எடுத்துவைத்து அழுத்த தொடங்க...அவளோ காலை சட்டென்று எடுத்துக் கொண்டான்.

"யாரும் எனக்கு எதும் செய்ய வேண்டாம்" என முகம் திருப்ப...அவனோ மெல்லிய சிரிப்போடு "நதி" என பெயருக்கு வலிக்குமோ என்பதுபோல் மென்மையாக அழைத்தான்.


"சாரி டா செல்லம்... இன்னைக்கு கொஞ்சம் முக்கியமான வேலை அதான் சீக்கிரம் வர முடியலை.நாளைக்கு கண்டிப்பா வெளியே கூட்டிட்டு போறேன்" என சமாதான படுத்த…

"நீங்க சொல்றதை எல்லாம் இனி நம்ப மாட்டேன், ப்பாராமிஸ் பண்ணுங்க" என கையை நீட்ட... அவனும் "இன்னும் ரெண்டு குழந்தைக்கு அம்மா ஆனாலும் உன் குழந்தை தனத்தை மாற்றமுடியாது" என்றபடி அவள் கரம் மேல் கரம் பதித்தான்.


அவன் சாரி கேட்டவுடன் கோபம் தள்ளி சென்றுவிட..இப்போது அவளே தன் காலை தூங்கி அவன் மேல் போட்டு "வலிக்குது அத்தான்" என சலுகையாக சொல்ல அவனும் வீங்கியிருந்த பாதத்தில் மசாஜ் ஆயிலை தடவி மென்மையாக பிடித்துவிட்டான்.

"ரெஸ்ட் எடுனு சொன்னால் கேட்கிறது இல்லை, எப்போ பார்த்தாலும் நடந்துகிட்டே இருந்தால் இப்படிதான் வலிக்கும்" என மென்மையாக கண்டித்தவாறே பிடித்துவிட்டான்.


பின்னர் சற்று நேரத்தில் அவளை பின்னால் இருந்து அணைத்தபடி தூங்க முற்பட...

அவளோ சிணுங்களாக "அத்தான் எனக்கு இப்படி வேண்டாம்,எனக்கு உங்க முகத்தை பார்க்கணும்" என அடம்பிடிக்க….

"நந்து பாப்பா இருக்குடா..? உனக்கு தான் கஷ்டமா இருக்கும்" என எடுத்து சொல்ல அவள் கேட்கும் ரீதியில் இல்லை. பின்னர் அவன் எழுந்து சாய்வாக அமர்ந்துக் கொண்டு அவள் வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.


அப்போதும் தூங்காமல் அவன் முகம் பார்த்து விழித்திறந்து கிடந்தவளை பார்த்து "தூங்குடா" என்க, அவளோ வேகமாக தலையாட்டி "தூக்கமே வரலை அத்தான்" என்றாள்.

"நானே என்னை ரொம்ப கட்டுப்படுத்திட்டு இருக்கேன், ஆனா நீ என்னை ரொம்ப டெம்ட் பண்றடி" என சொல்லியபடி அவள் இதழ் நோக்கி குனிந்தான்.
அவனின் ஆழ்ந்த இதழ் முத்தத்தில் அதுவரை அலைபாய்ந்து மனம் சமன்பட...அவன் மார்பில் தலைவைத்து அப்படியே தூங்கிப் போனாள் நந்தினி. அவனோ வெகுநேரம் அவள் முகம் பார்த்தே இருந்தவனின் கண்கள் தானாக மூடியது .


அன்று மதன் சந்தியா இருவரின் இளைய மகளுக்கு இரண்டாவது பிறந்தநாள். வீடே சொந்தங்கள் நிறைந்து இருக்க...அங்கே ஒரு மூலையில் ஆதேஷ் அஷ்வந்த் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டிருந்தனர்.


அதுவரை தன் மகள் எங்கே என தேடி வந்த மதன்...அங்கே நடுவில் மதனின் மகள் நிவேதிதா வை நிற்க வைத்து இருவரும் சண்டை போடுவதை பார்த்து அருகில் செல்ல….அங்கே இருவரின் பேச்சை கேட்டு தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் மதன்.

குழந்தையை தேடி போனவனை காணாமல் குடும்பமே அவர்களை தேடி இருக்குமிடம் வர...அங்கே தலை மேல் கைவைத்து அமர்ந்திருந்த மதனை நெருங்கிய விக்ரம் ஆதி இருவரும் "என்னடா ஆச்சு எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்க" என்க….

அவனோ இருவரையும் எரித்துவிடுவது போல் பார்த்துக்கொண்டே குழந்தைகள் புறம் கைக்க்காட்ட….



அங்கே அஷ்வந்த் "நீ ஏண்டா நிவியை அடிச்ச இன்னைக்கு அவளுக்கு பர்த்டே தான... பாரு எப்படி அழறானு, இனிமே அவளை நீ அடிச்ச உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என சொல்ல….

அதற்கு கொஞ்சமும் அசராமல் ஆதேஷ் "நான் அப்படிதான் அடிப்பேன்.நான் கூப்பிட கூப்பிட என் பேச்சை கேட்காமல் உன்கிட்ட விளையாடிட்டு இருந்தா அதான் அடிச்சேன். அது என்ன? என்னை விட அவளுக்கு நீ தான் முக்கியமா..?" என இவனும் கேட்க….அதற்கு காரணமான நிவியோ இருவரும் சண்டையிடுவதை பார்த்து அழ தொடங்கினாள்.


மொத்த குடும்பமும் திரும்பி விக்ரம் ஆதியை தான் முறைத்தது.அப்பனுக்கு பிள்ளைகள் தப்பாம பிறந்திருக்கு.


"காலம் திரும்புது டா மகனே" என கண்ணன் தன் மகன்களை கலாய்க்க மொத்த குடும்பம் அவர்களை பார்த்து சிரித்தது.அவர்களும் தங்களை ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு மகன்ள் அருகே சென்றனர்.


மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்க விழா இனிதே முடிவுற்றது.


எத்தனையோ குடும்பத்தில் வெளியே ஒற்றுமையாக காட்டிக்கொண்டு உள்ளே "அவன் நல்லா இருக்க கூடாது, எல்லாமே எனக்குத்தான் கிடைக்கவேண்டும்" என்ற சுயநலத்தோடும் வன்மத்தோடும் வலம் வருவதை காட்டிலும்….விக்ரம் ஆதி மாதிரி பிரிந்திருந்தாலும் மனதால் ஒற்றுமையாக, யாராலும் பிரிக்க முடியாதவர்களாக இருப்பவர்களே சிறந்த சகோதரர்கள்.



முற்றும்.

மீண்டும் part வில் சந்திப்போம் 👋👋👋 டாடா.



மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ். உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் தான் எனக்கு மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை கொடுக்கும்.





இது என்னுடைய இரண்டாவது கதை. ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் இந்த கதை எனக்கு. நிறைய ரீடர்ஸ்ஸை போய் சேர்ந்த நாவல், நிறைய ரிவ்யூ...எல்லாத்துக்கும் மேல என்னுடைய முதல் புத்தகமாக மகதீரா பதிப்பகத்தால வெளிவந்த நாவல்.

இது வரை இந்த கதைக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மிக்க நன்றிகள் டியர்ஸ். Hope u all enjoy this novel.thank u so much all my lovable readers ❤️❤️
 
Status
Not open for further replies.
Top