ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அதன் பின் நந்தினியின் தாயை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். வேலை முடிந்து வீடு வரும் நந்தினி தன் தாயுடன் அதிக நேரத்தை செலவழித்தாள்.இரவும் தாயுடனே தங்க நினைத்தவளை பிடிவாதமாக விக்ரம் அறைக்கே அனுப்பி வைத்தார்.

அன்றைய நாள் அவ்வாறே செல்ல மறுநாள் ஏற்கனவே தன் அத்தை மருத்துமனையில் இருந்த நாட்கள் முழுவதும் அங்கேயே தங்கியிருந்த ஆதி,இன்றும் மூன்று பைபாஸ் சர்ஜரியை முடித்துவிட்டு களைத்துப் போய் வந்தவன் தன் அறைக்குள் நுழைய….அப்போது தான் திவ்யா திரும்பவும் திட்டினாலும் பரவாயில்லை என தன் தந்தையை பார்த்தே ஆக வேண்டும் என கிளம்பிக் கொண்டிருந்தாள்.


இவ்வளவு நேரமிருந்த களைப்பு மொத்தமும் அவளை பார்த்தவுடன் ஒடிப்போய்விட, தானாக ஒரு சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் வந்து ஒட்டிக் கொண்டது அவனுள்.அவளை நெருங்கி பின்னாலிருந்து அணைத்தவன் "ரொம்ப டயர்டா வந்தேன் உன்னைப் பார்த்தவுடன் அதெல்லாம் காணாமல் போச்சு" என்றபடி அவளை அமர்த்தி அவள் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்.

அவளிடம் காதலை மட்டுமே யாசித்து மடி சாய்ந்தவன்,மெல்ல உறக்கத்திற்கு செல்ல...அவளுக்கோ அவன் வேண்டுமென்றே தன் தந்தையை பார்க்க கூடாது என எண்ணியே இப்படி செய்கிறான் என கோபத்தில் தவறாக முடிவெடுத்தவள் அவனை விலக்க முயல, அவனோ இன்னும் அதிகமாக அவளை இறுக்கி பிடித்தவன் அவள் வயிற்றில் முகம் புதைத்து "கொஞ்ச நேரம் அப்படியே இருடி, நான் தூங்கிய பிறகு எழுந்து போ" என்றபடி அவளின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தபடி விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.


அவனின் செய்கை அவளுக்கு இன்னும் கோபத்தை கிளப்ப பிடிவாதமாக அவனை தன்னில் இருந்து பிரித்தவளை கண்டு அவனுக்கும் கோபம் வர "இப்போ என்னதாண்டி உன் பிரச்சனை..? உன் மடியில் படுக்கும் உரிமை கூட எனகில்லையா ? இல்லை அதற்கும் உங்க அப்பா சம்மதம் வேண்டுமா ? அவர் கடைசிவரை நம்மை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன பண்ணுவாய்" என அவள் அருகாமையை இழந்த ஆதங்கத்தில் கத்த,

தன் தந்தையை பேச்சில் இழுத்தவுடன் அவரின் இன்றைய நிலைமை நினைவு வர அத்தோடு அவர் நேற்று பேசியதும் நினைவிற்கு வந்து அவளின் கோபத்திற்கு வலு சேர்த்தது.

"எதுக்காக என்னை கல்யாணம் பண்ணீங்க..? நான் பாட்டுக்கு என் வீட்டில் சந்தோஷமாக இருந்தேன், இப்படி என்னை கல்யாணம் பண்ணி என் சந்தோஷத்தை கெடுத்துட்டிங்க "என்றவளை பார்த்து "அப்போ என்கூட இருப்பது உனக்கு சந்தோஷம் இல்லையா " என வலி நிறைந்த குரலில் கேட்டவனை நிமிர்ந்தும் பார்க்காது

"இல்லை இல்லை... என கத்தியவள், எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை எனக்கு என்னோட அப்பா அம்மாவோடு இருக்க தான் பிடித்திருக்கிறது.எனக்கு அவங்க தான் வேண்டும்" என்றாள் உறுதியான குரலில்.


"நீ என்ன சொல்ல வருகிறாய் என எனக்கு சத்தியமாக புரியவில்லை, "
அவங்க தான் வேண்டுமென்றால் அப்போ நான்.? என் காதல் உனக்கு ஒன்றுமே இல்லையா.".? என்றவனை பார்த்து" எனக்கு இந்த காதலை விட என் அம்மா அப்பா தான் முக்கியம்" என்றாள்.


அவளின் வார்த்தை அவனுக்கு உயிர்ப்போகும் வலியை கொடுக்க...அவளை நெருங்கி "அப்போ இதுக்கு உன் பதில் என்ன" என்றபடி அவள் கழுத்தில் அவன் கட்டிய தாலியை கையில் எந்தியபடி கேட்க….

"இது ஒன்றும் என்னோட விருப்பத்தோடு என் கழுத்தில் ஏறவில்லையே" என்றவள் பேசி முடிக்கும் முன் அவன் கரம் இடியென அவள் கன்னத்தில் இறங்கியது.


"இன்னும் ஒரு வார்த்தை பேசாதே....இதைவிட என் காதலை உன்னால் அசிங்கப்படுத்திய முடியாது. என் காதலையும் காத்திருப்பையும் உன்னோட ஒரு வார்த்தையில் கொன்றுவிட்டாய் என்றவன் இப்போ உனக்கு அவங்கதான் வேண்டும் அவ்வளவு தானே, கிளம்பு நானே உன்னை கொண்டு விடுகிறேன்.நான் பண்ண தப்பை நானே சரிசெய்கிறேன். நீ என்கிட்ட கேட்கும் முதல் விஷயம் இதுதான். இதை கூட நான் நிறைவேற்றவில்லை என்றால் நானெல்லாம் என்ன மனிதன் சொல்லு …? என் காதல் மனைவிக்கு அவள் விரும்பும் அனைத்தையும் செய்ய நான் கடமைப்பட்டு இருக்கிறேன்" என விரக்தியாக சிரித்தபடி அவளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.


கார் அவளின் வீட்டை நோக்கி சென்றது,அவளிடம் அதற்கு பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இருவரும் அவள் வீட்டுக்குள் நுழைய...அன்று காலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவர் எதிரில் இருந்த டேபிளில் அடிப்பட்ட காலை தூக்கி வைத்து கையில் அன்றைய செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருக்க...
யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர் அங்கு நின்றுகொண்டிருந்த இருவரையும் பார்த்து கத்த தொடங்கும் முன் அவர் அருகில் சென்ற ஆதி,அவர் அருகே அமர்ந்து அவரின் கைகளை பிடித்துக் கொண்டான்.


"என்னை உங்க மாப்பிள்ளையாக ஏற்றுக்கொளுங்கள் என கேட்க வரவில்லை,ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு போய்விடுகிறேன்" என்றவன் தன் பேச்சை தொடங்கினான்.

"தப்பெல்லாம் என்மேல மட்டும் தான் அங்கிள், நான் தான் உங்க பொண்ணை காதலித்தேன் இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் உங்க பொண்ணு என்னை காதலிக்கவில்லை" என சொல்லும் போதே குரல் கரகரத்தது.

மேலும் தொடர்ந்தவன் "அவளுக்கு அன்னைக்கு எனக்கும் கல்யாணம் என்று தெரியாது, விக்ரமும் நானும் பிரதர்ஸ் என்பதே அன்றைக்கு தான் அவளுக்கு தெரிந்தது. அவளோட விருப்பமில்லாமல் நான் தான் அவள் கழுத்தில் தாலியை கட்டினேன்.என்னை மன்னிச்சிடுங்க" என்றவன்,

எழுந்து திவ்யாவின் கைப்பிடித்து அவர் கையில் வைத்தவன் "உங்க பொண்ணு எப்படி உங்களைவிட்டு வந்தாளோ அப்படியே உங்க பொண்ணாய் மட்டும் தான் இருக்கிறாள்.செய்யாத தப்பிற்கு தண்டனை அனுபவிப்பது ரொம்ப கஷ்டமான விஷயம், நான் செய்த தப்பிற்கு அவளை தண்டிக்க வேண்டாம் என்றவன், இனி உங்க பொண்ணோட வாழ்க்கையில் என் தலையிடல் இருக்காது அவளுக்கு உங்களுக்கு பிடித்த மாதிரியான வாழ்க்கையை அமைத்து கொடுங்கள். அதுக்கு நான் தடையாக இருக்கமாட்டேன்" என்றவன் ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு அவரை பார்த்து,

மீண்டும் "என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்" என்றபடி விறுவிறுவென வீட்டைவிட்டு வெளியேறி தன் காரை கிளப்பினான்.


அதுவரை அவன் பேச்சை கேட்டு சிலையாக நின்றவள் அவன் போனவுடன் தான் இயல்பு நிலைக்கு வந்தாள். தான் பேசிய வார்த்தைகள் அவனை ரொம்பவும் காயப்படுத்தி விட்டது என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.அவனோடு இருந்தவரை தந்தை தான் முக்கியம் என நினைத்தவள் அவன் தன்னைவிட்டு சென்றவுடன் அவனோடு செல்ல மனம் துடித்தது.

நம்முடைய மனது எப்போதும் ஒரு பொருள் தன் கையில் இருக்கும்வரை அதனின் அருமை தெரியாமல் கண்டுகொள்ளாமல் இருப்போம். அது தன்னை விட்டு பிரியும் நேரமே அதன் அருமை புரியும் அதுபோல் அவனோடு இருக்கும் போது அவனை தவிர்த்தவள் அவன் தன்னைவிட்டு சென்றவுடன் அவன் காதல் வேண்டும் என மனம் தவித்தது.இனிமேல் அவன் காதல் தனக்கு கிடைக்காதா என்ற பரிதவிப்போடு அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள்


இங்கு இப்படியிருக்க அங்கு விக்ரமின் அறையில்….தன் கன்னத்தை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் நந்தினி.அவளுக்கு விக்ரம் அடித்த அடியை விட அவன் சொன்ன வார்த்தையே அதிகமாக வலித்தது.

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 25


மாலை எப்போதும் போல் தனது அன்னையோடு பேசிக்கொண்டிருந்த நந்தினி "இப்போ எப்படி இருக்கும்மா, வலி எதுவும் இல்லையே" அப்படி ஏதாவது என்றால் எந்த நேரமாக இருந்தாலும் மறைக்காமல் சொல்லனும்,திரும்பவும் இது மாதிரி என்னை பயமுறுத்தாதே என அழுகையை தொடங்க... "போதும் டி நீ அழுவதை பார்த்தால் தான் ரொம்ப கஷ்டமா இருக்கு, அம்மாக்கு ஒன்னும் ஆகாது. உன் குழந்தைகளை எல்லாம் தூக்கி கொஞ்சாமல் போகமாட்டேன்" என்றவரை தடுத்து "அதுயென்ன என் குழந்தை மட்டும், நீ வேன்னா பாரும்மா என் குழந்தைகளோட குழந்தையை கூட தூங்கி கொஞ்சுவ" என சிறுபிள்ளை போல் செல்லம் கொஞ்ச...

அவரோ அவள் கன்னத்தை பிடித்து "அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் முதலில் எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுக்கும் வழியை பாரு ? அதுக்குள்ள கொள்ளு பேரப்பிள்ளைகளுக்கு போய்விட்டாள்" என்றார் சிரித்தபடி.


சிறிதுநேரத்தில் பாத்ரூம் செல்ல எழுந்தவர் மயக்கம் வரும் போல் இருக்க தடுமாறி விழ போக,அதற்குள் நந்தினி அவரை தாங்கி பிடித்து அமர வைத்தவள் "அம்மா என்ன பண்ணுது...எதுக்காக சட்டென்று எழுந்தீங்க ? எத்தனை முறை சொல்வது படுத்திருக்கும் போது சட்டென்று எழுந்து நிற்க கூடாது, கொஞ்ச நேராவது உட்கார்ந்து விட்டு தான் எழனும் என்று..? இப்போ பாருங்க இரத்த அழுத்தம் ( பீ.பி) குறைந்து மயக்கம் வரமாதிரி ஆகிவிட்டது" என சொன்னவள்.. பொறுமையாக பாத்ரூம் அழைத்து சென்று வந்தவள் பின்னர் அவரை உண்ண வைத்து மருந்துகளை கொடுத்து உறங்குவதற்கு அனைத்தையும் தயார்ப்படுத்திவிட்டே அறைக்கு சென்றாள்.


கையில் பாலுடன் தங்கள் அறைக்குள் நுழைந்த நந்தினி அதை விக்ரமிடம் கொடுத்துவிட்டு மெத்தையில் படுத்து தாயை நினைத்து அழுகையை தொடங்க… அதுவரை லேப்டாப்பில் கம்பெனி மெயிலை படித்துக் கொண்டிருந்தவன் அதனை முடிவைத்துவிட்டு அவள் தோளை தொட,திரும்பி பார்த்தவள் "அம்மா இன்னைக்கு விழ பார்த்தாங்க அத்தான். நல்லவேளை நான் இருந்தேன் இல்லனா என்ன ஆகியிருக்கும்" என்றபடி தேம்பியவளை சமாதானப்படுத்தி அழுகையை நிறுத்தியவன்,அவளை மார்போடு சேர்த்து அணைத்தபடி ஆறுதல் கூறினான்.


"இப்போதானே டா ஹாஸ்பிடலில் இருந்து வந்தாங்க அதுதான் இப்படி இருக்கு, சீக்கிரம் சரியாகிடும் என்றவன், நீ அடிக்கடி டாக்டர் என்பதை மறந்துவிடுகிறாய் அதுவும் அத்தைக்கு இப்படி ஆனதில் இருந்து உன்னை சமாளிப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று பேசிக்கொண்டே போக… வாய்யை மூடிக்கொண்டு சும்மா இருக்காமல்

"எனக்கு வேற யாரு இருக்கா ? எங்க அம்மாவை தவிர" என்க, அதுவரை அவளின் தலையை வருடிக் கொண்டிருந்த கரம் சட்டென்று வேலை நிறுத்தம் செய்தது.


அவளை தன்னிடமிருந்து பிரித்து எழுந்தமர்ந்தவன் "இப்போ என்ன சொன்ன ?" என அழுத்தமாக கேட்க...அவளோ அவன் குரலின் மாறுப்பாட்டை உணராமல் "உண்மையை தானே சொன்னேன், எங்க அம்மாவை தவிர எனக்குன்னு யார் இருக்கா..?அவங்களுக்கு ஏதாவது என்றால் அப்பறம் நான் யாருக்காக வாழனும்" என அவன் கோபத்தை அதிகப்படுத்தும் விதமாக பேசியவள் முடிக்கும் முன் அவனின் கரம் அவள் கன்னத்தை பதம் பார்த்தது.


அடித்த கன்னத்தை தாங்கியவாறு "இப்போ எதுக்கு அடிச்சீங்க அத்தான்" என்றவளின் கழுத்தை நேரிப்பது போல் வந்தவன் "உன்னை கொல்லாமல் விட்டேனே என்று சந்தோஷப்படு.எவ்வளவு தைரியம் இருந்தால் என்கிட்டே எனக்குன்னு யார் இருக்காங்க என்று சொல்வாய்..? அப்போ இத்தனை நாளாய் உன்னையும் ஒரு பொண்ணு மாதிரி பார்த்துக் கிட்டாங்களே எங்க அம்மா அப்பா அவங்க யாருடி உனக்கு? அவங்களை விடு, சின்ன வயதில் இருந்து உனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்றானே அந்த முட்டாள் ஆதி, அவன்கிட்ட போய் இதே வார்த்தையை சொல்லிப்பார் அப்பறம் தெரியும் அவனோட இன்னொரு முகம்" என்றவன்


அவளை அழுத்தமாக பார்த்தவாறே நெருங்கியவன் அப்போ "நான் யார் உனக்கு" என மிக நிதானமாக கேட்க...அவளோ அப்போதுதான் தான் பேசிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தவள் எச்சில் கூட்டி விழுங்கியவாறு "அத்தான் அது.து..து" என அடுத்த வார்த்தை வராமல் தடுமாற,

அவனோ "நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை" என உடல் விறைக்க விழிமூடி அமைதியாக நிற்க,அவள் வாயில் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக அது இன்னும் அவனின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.


"அப்போ பதில் சொல்லும் அளவுக்கு கூட உனக்கும் எனக்கும் ஒன்றும் இல்லையா..?" என்றவனை பார்த்து அவசரமாக "அப்படியெல்லாம் எதுவும் இல்லை அத்தான்" என்க

அவனோ வேண்டுமென்றே "ஓ..ஓ அப்போ எதுவுமே இல்லையா" ? என நக்கலாக கேட்க,அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.


இப்போ எதுக்கு அழுவது போல் சீன் க்ரீயேட் பண்ற, உனக்கும் எனக்கும் எதுவும் இல்லையென்றால் அப்போ இதுக்கு என்ன அர்த்தம் என கழுத்தில் உள்ள தாலியை பார்த்து கேட்க.. அவளோ அழுதுகொண்டே "நந்தனா வேற யாரையோ காதலித்ததால் தானே எனக்கு தாலி கட்டினீங்க. இல்லனா என்னை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டீங்க தானே, என்னை தான் உங்களுக்கு பிடிக்காதே" என பழைய பல்லவியை பாட … கொஞ்சமும் யோசிக்காமல் திரும்பவும் "பளார்" என மற்றொரு கன்னத்திலும் அடித்தவன்,

"உன்னை போய் காதலித்தேன் இல்ல என்னை நானே அடிச்சிக்கணும் டி . அப்பறம் என்ன சொன்ன அந்த வந்தனா என்னை விட்டுட்டு போனதினால் தான் உனக்கு தாலிக்கட்டினேன் அப்படிதானே..? என்னை பத்தி நீ இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை எனக்கு ஒன்னு வேண்டுமென்றால் அதுக்காக எந்த எல்லைக்கும், ஏன் கொலையும் செய்ய தயங்கமாட்டேன்.நீதான் எனக்கு வேண்டுமென்ற ஒரே காரணத்தால் மட்டும்தான் இப்போ நீ என் மனைவியாக இருக்கிறாய்".


"அப்புறம் என்ன சொன்ன எனக்கு உன்னை பிடிக்காதா.. என் மனதில் நுழைந்த முதல் பெண்ணும் நீ தான் கடைசி பெண்ணும் நீயாக மட்டும்தான் இருப்பாய். உனக்கு நம்ம கல்யாணத்துக்கு முன்புதான் என் காதல் புரியவில்லை என்றாலும் இப்போ இந்த ஒரு மாத காலத்தில் என்னோட மனைவியாக ஒரு நொடி கூடவா என்னோட காதல் உனக்கு புரியலை, இல்லை அதை நான் சரியாக உணர்த்தவில்லையா ?எதுக்கு சிலைபோல் நிற்கிறாய் ...வாயை திறந்து பேசி தொலையேண்டி. எதுக்கு பேசாமல் இருந்து என்னை கொல்ற ?" என கத்த…

அவளோ திக்கி திணறி "விக்ரம் அத்தான் ஸாரி ஏதோ தெரியாமல் அப்படி பேசிட்டேன்" என மன்னிப்பை யாசிக்க அதை கண்டுக் கொள்ளாதவன்

"இன்னொரு முறை என்னை அத்தான்... விக்ரம் அத்தான் என கூப்பிடும் வேலையை வைத்துக் கொள்ளாதே என்றவன் அதற்கான தகுதியை நீ இழந்து ரொம்ப நேரம் ஆகிறது.


ஏண்டி என்னை பார்த்தால் பிடிக்காத பொண்ணு கூட அதுவும் இப்படி தினமும் கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்கும் கேவலமான ஜென்மம் என நினைத்தாயா..?இனிமேல் என் முகத்திலேயே முழிக்காதே" என தன் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் வார்த்தையில் கொட்டியவனை பார்த்து


"அத்தான் பிளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன். நான் பேசியது தப்பு தான் அதுக்காக என்கிட்ட பேசாமல் இருக்காதீங்க ?" என்றவளை இடமறித்து

"என்னை அப்படி கூப்பிட்டாதே என்றேன், அதையும் மீறி கூப்பிட்டா அப்பறம் என்ன செய்வேன் என எனக்கே தெரியாது" என்றவன் அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.


மாடியில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவன் உள்ளம் உலைக் கனலாய் கொதித்துக் கொண்டிருந்தது.

'எவ்வளவு திமிர் கட்டின கணவன் அவளுக்காகவே நான் இருக்க, யாரும் இல்லை என எப்படி சொல்லுவாள். இனி அவளாய் காதலை உணர்ந்து என்னிடம் அவளின் காதலை சொல்லும்வரை என்ன ஆனாலும் அவளுடன் பேச கூடாது' என முடிவெடுத்தவன் தன் அறைக்குள் நுழைந்தான்.

அவன் வரும்வரை அவன்விட்டு சென்ற இடத்திலேயே நின்றபடி வாசலையே பரிதாபமாக பார்த்து கொண்டிருந்தவளை கண்டுகொள்ளாமல் அறையின் ஒரு மூலையில் அன்று தூக்கியெறிந்த பொம்மையை எடுத்துவந்து இருவருக்கும் இடையே வைத்தவன்,ஒரு பக்கத்தில் அவளுக்கு முதுகுகாட்டியபடி படுத்துக்கொண்டான்.


இத்தனை நாட்களாக ஒருநாள் கூட அவன் அணைப்பில் இல்லாமல் தூங்கியதில்லை அப்படியிருக்க... இன்று எப்படி தூங்க போகிறோம் என்ற சிந்தனையில் இருந்தவளுக்கு கோபம் மொத்தமும் அந்த பொம்மை மேல் தான் திரும்பியது. நீ எதுக்கு எனக்கும் என் அத்தாணுக்கும் நடுவில் வருகிறாய் ? என எண்ணியபடி திரும்பவும் அதனை தூக்கி எறிந்திருந்தாள்.


வெகுநேரம் தூக்கம் வராமல் தவித்தவள்,அவனை பார்க்க அவனோ அசையாமல் படுத்திருந்தான்.ஒருவேளை தூங்கியிருப்பாரோ என எண்ணியபடி அவனை நெருங்கி முகம் பார்க்க விழிகள் மூடியிருந்தது, தூங்கிவிட்டான் என்ற தைரியத்தில் 'அவர்தானே என்கிட்ட கோபமா இருக்கார்..? நமக்கு தான் அவர்மேல் கோபமில்லையே' என நினைத்தவள் அவனை நெருங்கி ஒரு கையை அவன்மேல் போட்டு தூங்க முயல… அடுத்த நொடி அவள் கையை தட்டிவிட்டவன் திரும்பவும் அசையாமல் படுத்துக்கொண்டான்.


"ரொம்பதான் பண்ணுறார். அவங்களும் தூங்கமாட்டாங்க நம்மையும் தூங்கவிடமாட்டாங்க" என எண்ணியபடியே இரவை கடக்க இருவருமே தூக்கம் தொலைத்து விழித்திருந்தனர்.


மறுநாள் காலையில் டைனிங் டேபிளில்...தனக்கு பரிமாற வந்த நந்தினியை தவிர்த்து அவனே தனது உணவை எடுத்துவைத்து உண்ண துவங்க... ஆதியோ எதுவும் நடக்காது போல் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.

"ஆதி எங்க திவ்யா காலையில் இருந்து ஆளையே காணும்" என்ற அன்னையின் கேள்விக்கு …"அவ அவங்க வீட்டுக்கு போய்ட்டா" என்றவன் உணவில் கவனமாக இருக்க,

"என்னடா சொல்ற அவங்க வீட்டில் எத்துக்கிட்டாங்களா ? அதுதான் அங்கே போயிருக்கிறாளா" என்றவரை பார்த்து

"அவளை மட்டும் எத்துகிட்டாங்க. இனிமேல் இங்கே வரமாட்டாள் என்றவன் வேற எதுவும் இப்போ என்கிட்ட கேட்காதீங்க" என்றுவிட்டு எழுந்து சென்றான்.


போகும் அவனை நிமிர்ந்து பார்த்த விக்ரம் பின்னர் உணவை முடித்துக்கொண்டு ஆபீஸ் கிளம்ப.. எங்கே விட்டுவிட்டு சென்றுவிடுவானோ என பயந்த நந்தினி அவனுக்கு முன் காரில் ஏறி அமர்ந்திருந்தாள். அவள் பக்கம் முகத்தை கூட திருப்பாமல் காரை செலுத்தியவன்,ஏதோ தோன்ற திரும்பி நந்தினியை பார்க்க அவளோ அமர்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கும் தெரியும் அவள் இரவு முழுவதும் தூங்கவில்லை என்று..,அவளை பார்த்தவாறே காரின் வேகத்தை குறைத்து மெதுவாக செல்ல அவள் மருத்துமனை வந்த பின்பும் அவளை எழுப்ப மனமில்லாமல் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவளே உறக்கம் கலைந்து எழுந்தவள் திருதிருவென முழிக்க..'இப்படி பார்த்தே மயக்கிடுவா போல' என மனதுக்குள் நினைத்துக் கொண்டு வெளியே முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு "இறங்குற எண்ணம் இருக்கா இல்ல, இங்கேயே அமர்ந்திருக்கும் எண்ணமா..? என தெனாவெட்டாக கேட்க..

சட்டென்று காரின் கதவை திறந்துகொண்டு வெளியே இறங்கினாள். அவள் உள்ளே செல்லும் வரை பார்த்திருந்தவன் பின்னர் காரை கிளப்பி ஆபீஸ் வந்து, தனது வேலையில் மூழக்கிவிட்டான்.


சற்று நேரத்தில் விக்ரமின் அறைக்கதவு தட்டப்பட, கணினி திரையில் பார்வையை பதித்தவாறே உள்ளே வந்தவனை பார்வையால் அளந்தான் விக்ரம். மகேஷ் திரும்பவும் இங்கே வேலைக்கு வரமாட்டான் என நினைத்திருக்க..அவனோ திவ்யா திருமணம் முடிந்த அடுத்த இரண்டாவது நாளிலிருந்து வேலைக்கு வருபவனை யோசனையாக பார்த்தவன் புருவத்தை உயர்த்தி "வாட்" என கேட்க...

அவனோ தான் கொண்டுவந்த கோப்பை அவனிடம் கொடுத்து வேலையை பற்றி மட்டும் பேசியபடி இருந்தவனை பார்க்க ஏதோ தவராகப்பட்டது விக்ரமிற்கு.

எப்போதும் எதையாவது உலறிக் கொண்டு தேவையில்லாதவற்றை பேசி கடைசியாக தான் விஷயத்திற்கு வருவான் அப்படிப்பட்டவனின் நிதானம் இவனுக்கு சரியாகப்படவில்லை.


அவனை யோசனையாக பார்த்தவண்ணம் அந்த கோப்புகளில் கையெழுத்திட்டவன் ஃபைலை அவனிடம் கொடுக்க அவனும் அமைதியாக வாங்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான்.


அந்த இருள்நிறைந்த ஃபாரின் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த ராகவன் தன் எதிரில் அமர்ந்திருந்த மகேஷை யோசனையாக பார்த்தவாறே "இந்த பிளான் சரியாக வருமா ? நீ நினைக்கிற மாதிரி அந்த விக்ரம் ஆதி ரெண்டு பேரையும் அவ்வளவு சீக்கிரம் எதுவும் செய்யமுடியாது. ரெண்டு பேருக்குமே மூளையும் அதிகம், பலமும் அதிகம்,அவனுங்களை நெருங்குவதே ரொம்ப கஷ்டம் அதுவும் அந்த விக்ரம் வீட்டிலுள்ளவர்களிடமே அளந்து தான் பேசுவான்" என்றவரை பார்த்து

"டிரை பண்ணி பார்க்கலாம் சார்..இப்படி செய்தால் யாருக்கும் நம்ம மேல எந்த சந்தேகமும் வராது ஆக்சிடெண்ட் மாதிரி முடிச்சிடலாம். அதுவும் அடுத்தவாரம் அந்த மீட்டிங்கிற்கு அவர் தனியாக தான் போகிறார்.

ஓ.எம்.ஆர் தாண்டி சிட்டிக்கு ரொம்ப அவுட் சைடு ஏரியா என்பதால் யாருக்கும் தெரியாது" என விக்ரமை விழ்த்த வழிகளை தீட்டியவர்கள் அடுத்து ஆதியை பற்றி பேச,

"அதை ஏன் சார் கேட்கிறீங்க திவ்யா எங்க மாமா வீட்டுக்கே வந்துட்டா..? நேற்று அவர் ஹாஸ்பிடலில் இருந்து வந்ததை அறிந்து அவரை பார்க்க போனேன். அங்கு ஆதி பேசியதை கேட்டேன் என அனைத்தையும் சொன்னவன் "ஆனாலும் அவன் ரொம்ப நல்லவன் தான் போல. அவங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணுமே நடக்கலையாம்,இப்படி ஒரு அழகான பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு பிரம்மச்சாரியாக இருந்திருக்கிறான். இவனெல்லாம் என்ன மனிதன் என்றபடி குடிபோதையில் அவளுக்கு நான்தான் என கடவுள் எழுதி வைத்துவிட்டார் போல. அதான் இப்படி நடந்திருக்கிறது" என வாயெல்லாம் பல்லாக இழித்தவனை பார்த்து அவனுக்கும் குறையாத சிரிப்போடு மதுவை அருந்தினார் ராகவன்.


அவருக்கு அவர் காரியம் ஆகவேண்டும்,தான் மட்டும் ஏதாவது செய்து மாட்டிக்கொள்ள கூடாது என்றே இவனையும் விக்ரம் ஆதி இருவருக்கும் எதிராக மாறினார்.ஆதியை விட விக்ரம் மீதே அதிக கோபத்தில் இருந்தவருக்கு இப்போது அவன் சொல்லும் ஐடியா ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது. முதலில் விக்ரமை முடித்துவிட்டால் பின்னர் ஆதியை அவனே பார்த்துக்கொள்வான் என்ற எண்ணம்.


மகேஷ்க்கும் விக்ரமை விட ஆதியின் மேல் தான் கோபம் அதிகம் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் ஆனால் நடந்தது அனைத்திற்கும் மூலகாரணம் விக்ரம் என சொல்லி சொல்லியே விக்ரமின் மீதும் பகையை ஏற்படுத்தி இருந்தார் ராகவன்..இப்போதும் திவ்யாவின் அழகின் மீது வெறியே இருந்தாலும் ,அதை அடைய சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார் மகேஷ் .


இரண்டு குள்ளநரிகளும் இவர்கள் நிம்மதியை அழிக்க திட்டம் தீட்டிக்கொண்டிருக்க இது எதையும் அறியாத இருவரும் தன்னவளை நினைத்தபடி இருளை வெறித்துக்கொண்டிருந்தனர். மொட்டைமாடியில் நின்று, தூரத்தில் தெரியும் நிலவின் முகத்தில் தன்னவள் முகத்தை தேடிக்கொண்டிருந்த ஆதிக்கு இன்னும் அவள் தன்னைவிட்டு சென்றுவிட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுவரை அனைத்திலும் வெற்றியை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு வாழ்க்கையில் தோற்றுப் போன உணர்வு.என்ன முயன்றும் அந்த உணர்வில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தவன் அறைக்கு செல்ல படியை நோக்கி செல்ல...அதுவரை மாடியின் மற்றொரு மூலையில் நந்துவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தவன் படிகளை நோக்கி செல்ல இருவரும் எதிரெதிரே மோதிக்கொள்வதை போல் நெருங்கிவிட கடைசி நொடியில் இருவரும் சுதாரித்துக்கொண்டு நின்றனர்.

இருவரின் பார்வையும் ஒரு நொடி சந்தித்துக்கொள்ள, ஒரு நொடிக்கு குறைந்த நேரமே ஆனாலும் இருவரின் பார்வையும் எதையோ பரிமாறிக் கொண்டது. பின்னர் பார்க்காதது போல் முகத்தை திருப்பிக் கொண்டு இருவரும் தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர்.


நந்தினியோ பாவமாக விக்ரமின் முகத்தையே பார்த்துக்கொண்டு தலையணையை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். "அத்தான்" என பலமுறை அழைத்து பார்த்தும் அவன் கண்களை திறப்பதாக இல்லை. எப்படி படுத்திருந்தானோ அப்படியே அசையாமல் படுத்திருந்தான்.

"எனக்கு தூக்கமே வரமாட்டேன் என்கிறது எல்லாமே உங்களால தான் நான் பாட்டிற்கு என் பிங்கி (பொம்மை) கூடவே படுத்திருப்பேன் இப்போ பாருங்க..?" என அவள் புலம்பியது மொத்தமும் அவன் காதில் விழுந்ததாலும் அவன் நிலையில் இருந்து மாறவில்லை.


இங்கு திவ்யாவும் ஆதியை தான் நினைத்து கொண்டிருந்தாள்.அவளுக்கு தன்னை நினைத்தே கோபமாக இருந்தது, "அவனின் காதலுக்கு கொஞ்சம் கூட தனக்கு தகுதியில்லை" என எண்ணியவாறு அழுகையில் கரைந்தாள். அவன் மீது மலையளவு காதல் இருந்தாலும் இதுவரை தன்னை பெற்று எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்த்த பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடு அவனுடன் வாழவே ஆசைப்பட்டாள். ஒரு பக்கம் ஆதி ஒருபக்கம் தன் குடும்பம் என இரண்டுக்கும் நடுவே ஒன்றை மட்டும் அவளால் தேர்ந்தெடுக்க முடியாது.அப்படி தேர்ந்தெடுத்தால் இப்போது இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் இதனால் தங்களுக்குள் ஒரு பிரச்சனை வருவதை அவள் விரும்பவில்லை.

அவள் என்னவோ நினைத்து பேச அது கோபத்தில் எங்கேயோ சென்று முடிந்துவிட்டது. காதலுக்கும் குடும்பத்திற்கும் நடுவே அல்லாடும் சாதாரண ஒரு பெண்.இன்றைய காலகட்டத்தில் பாதி பெண்கள் இதே நிலையில்தான் இருக்கிறார்கள்.அதில் இவளை மட்டும் குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை.


நாட்கள் செல்ல ஒருவாரம் முடிந்த நிலையில் இன்று ஒரு ஃபாரின் கிளைன்ட் மீட்டிங் ஓ.எம்.ஆர் தாண்டி ஒரு கடற்கரை ஹோட்டலில் நடைபெறுவதாக இருக்க அதற்கு தயாராகி கொண்டிருந்தான் விக்ரம்.நடக்கப் போகும் விபரீதம் அறியாமல்….அந்த இரு குள்ளநரிகளின் திட்டத்தில் இருந்து தப்பிப்பானா விக்ரம்..?
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 26


இரவு எட்டுமணியை கடந்திருக்க இன்னும் விக்ரம் வீடு வந்து சேரவில்லை.அவனுக்கு பல முறை அழைத்து பார்த்த நந்தினிக்கு "ஸ்விட்ச் ஆஃப்" என்ற பதிலே வந்து கொண்டிருக்க,வாசலையும் ஃபோனையும் மாறிமாறி பார்த்துக்கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள்.


தனது அத்தை முன் சென்று நின்றவள் "அத்தை
அத்தானை இன்னும் காணுமே.நான் ஃபோன் போட்டு போட்டு பார்த்துட்டேன் ஆனால் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருது" என பயத்தோடு புலம்பும் மருமகளின் கரம் பற்றி அருகில் அமரவைத்தவர்

"அவன் என்ன சின்ன குழந்தையா தொலைந்து போக..? அதெல்லாம் அவனே வந்திடுவான்" என ஆறுதல் சொன்னவருக்கும் மனது தன் மகனை எண்ணியே சுழன்று கொண்டிருந்தது. பல தடவை நடுஇரவில் கூட வேலை முடிந்து வந்து இருக்கிறான் தான், ஆனால் அப்பொழுது எல்லாம் முன்கூட்டியே நான் வர தாமதமாகும் என்பதை அறிவித்துவிட்டே செல்லுபவன், அப்படி அங்கு சென்று தாமதமானாலும் போன் செய்தாவது காரணத்தை சொல்லாமல் இதுவரை இருந்ததில்லை.

அதுவே மனதில் பயத்தை ஏற்படுத்தியது, இருந்தும் நந்துவிற்காக தனது பயத்தை வெளியே காட்டாமல் அமர்ந்திருந்தார், அவருக்கு நன்றாகவே தெரியும் நந்தினியின் பயத்தை பற்றி,அதுவும் அவளது தந்தையின் மரணத்திற்கு பிறகு கார் பயணம் என சொன்னாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்தவளை ஆதி தான் ரொம்பவே கஷ்டப்பட்டு மாற்றினான்.அப்படியிருக்க விக்ரமின் தாமதம் அவளுக்குள் பழைய பயத்தை ஏற்படுத்தியதை அவளின் நடவடிக்கையிலேயே நன்றாக புரிந்து கொண்டவர்கள் அவள் பயத்தை அதிகப்படுத்தும் விதமாக எதையும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.


நேரம் செல்ல செல்ல அவளின் பயமும் அதிகரிக்க மொபைலை எடுத்தவள் அடுத்து அழைத்தது என்னவோ மதனுக்கு தான். அந்தப்பக்கம் எடுத்தவுடன் அவனை பேசவிடாமல் "அண்ணா அவங்க எங்க இன்னும் வீட்டுக்கு வரலயே…? உங்ககிட்ட ஏதாவது சொன்னாங்களா..?" என அழ தயாராகிய குரலில் கேட்க,

அவனோ "இன்னும் வரவில்லையா…? மீட்டிங் முடிந்து ஒருமணி நேரத்திற்கு முன்பே கிளம்பிவிட்டதாக சொன்னானே" என்றவனின் பதிலில் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கொட்டத் தொடங்கியது நந்தினிக்கு .

அதற்கு மேல் பேசமுடியாமல் தேம்பியவளின் கரத்திலிருந்து ஃபோனை வாங்கி பேசிய ராதா, அவன் சொன்னதை கேட்டு கவலைக் கொண்டாலும்,அவனை சென்று பார்த்துவருமாறு பணிந்தவர் ஃபோனை அணைத்துவிட்டு நந்தினியை தேற்ற முனைந்தார்.


இங்கு அனைவரும் விக்ரமை நினைத்து கவலையில் இருக்க,அப்போது தான் அறையிலிருந்து வெளியே வந்த ஆதி "அம்மா டின்னர் எடுத்து வைங்க ரொம்ப பசிக்குது" என்றபடி வந்து ஹாலில் அமர்ந்தான்.

அனைவரின் முகமும் பதட்டத்தில் இருக்க நந்தினி அழுவதை கண்டவுடன் "நந்து என்னாச்சு எதுக்கு இப்படி அழுகிறாய்" என அவள் அருகில் அமர்ந்து தோளைத் தொட, அவன் தோளில் சாய்ந்தவள் அனைத்தையும் சொல்ல...

அவனோ "ஏய் லூசு இதுக்கா அழுற. நான் கூட வேற என்னவோ பெரிய விஷயமாக இருக்குமோ என பயந்துவிட்டேன் என்றவன், உன் புருஷன் என்ன குழந்தையா" ? ஏழு கழுதை வயசாச்சி அவனை காணுமாம் அதுக்கு மேடம் அழுகுறாங்களாம்" என நக்கலாக சொன்னவன்,

"அதெல்லாம் அவனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது,அவனால தான் எல்லாருக்கும் ஏதாவது பிரச்சனை ஆகும் "என்றவன் தன் தாயைப் பார்த்து "அம்மா போதும் உங்க பையனுக்காக ஃபீல் பண்ணது. வந்து சாப்பாடு போடுங்க..? நானும் உங்க பையன் தான்,அவனுக்காக எல்லாம் என்னால் சாப்பிடாமல் இருக்க முடியாது" என்றபடி டைனிங்க் டேபிளில் அமர்ந்தான்.


கோபமாக எழுந்த ராதா உன்கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ஆதி,அவனோடு உனக்கு என்ன சண்டையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனா, அவன் உன் கூட பிறந்தவன் அந்த பாசம் கூடவா உனக்கு இல்லை" என வருத்தமான குரலில் சொன்னவரை நிமிர்ந்து பார்த்தவன்

"எனக்கு அவன் மேல பாசமெல்லாம் இல்லை தான் ஒத்துக்கிறேன். இப்போ என்ன என்னையும் உங்களை மாதிரி அழ சொல்றீங்களா..? அதுதான் நான் இவ்ளோ சொல்றேனே அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது என்று அப்பறம் என்ன..? என்றவனை முறைத்தவர்,

"எல்லாமே தெரிந்த மாதிரி சொல்லாத டா. அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்..? அவன் ஒரு திசையில் போனால் நீ அவனுக்கு எதிர் திசையில் போவாய், இதில் நீ சொல்வதை எங்களை நம்ப சொல்கிறாயா..?" என கத்தியவர் திரும்பவும் விக்ரம் பற்றிய பயத்தில் வாசலை பார்த்தவாறு நடக்க தொடங்கிவிட்டார்.


ஆதியோ "நந்து நீயாவது அழுகையை நிறுத்திவிட்டு சாப்பிட வா..? எல்லாரும் பட்னியாக இருக்க போறிங்களா ?" என கேட்டவனுக்கு பதில் இல்லாமல் போக... அவனே தட்டை எடுத்துவைத்து பாத்திரத்தை திறக்க அது காலியாக இருந்தது.


"அந்த வளர்ந்து கேட்டவனுக்காக சமைக்க கூட இல்லையா "என கடுப்பானவன்,மொபைலை எடுத்து "எனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ண போறேன் உங்களுக்கு வேண்டுமா..?" என்றவன் அனைவரின் அமைதியையும் பார்த்துவிட்டு தனக்கு மட்டும் உணவை ஆர்டர் செய்தவன் அதற்காக காத்திருந்தான்.


அப்போது உள்ளே நுழைந்த மதனை பார்த்து அனைவரும் பதட்டத்தோடு சூழ்ந்துகொள்ள...அவனோ அனைவரின் கேள்விக்கும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் தடுமாறியபடி கைகளை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தான். பொறுமை இழந்த நந்தினி "என்னன்னு சொல்ல போறிங்களா இல்லையா" என அவனின் தோள் பற்றி உலுக்க...

முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு "நான் சொல்வதை கொஞ்சம் பயப்படாமல் கேளுங்க" என பிடிகையை போட..."சொல்லி தொலையேண்டா விக்ரம் எங்கே" என்ற ராதாவை பார்த்து

"அவனை காணும் எங்கே என்று தெரியலை ஆனா அவன் போன கார் மட்டும் மரத்தில் மோதி ஆக்ஸிடென்ட் ஆகி இருந்தது".ஆனா காரில் யாருமே இல்லை.அது கொஞ்சம் அவுட்ர் ஏரியா என்பதால் யாருக்கும் அதை பற்றி தெரியவில்லை" என பயத்துடனே சொல்ல...அனைவரும் அதிர்ந்து நிற்க நந்தினியோ ஆக்ஸிடென்ட் என்று சொன்ன கணமே தன்னிலை இழந்தவளுக்கு அதற்கு பின்னர் மதன் சொன்னது எதுவும் காதிலேயே விழவில்லை.

சற்றுநேரம் அப்படியே உறைந்து நின்றவள் "அத்தான் அத்தான்" என சொன்னவாறே மயங்கி சரிந்தாள்.


அனைவருக்கும் விக்ரம்க்கு என்ன ஆனது என்ற கவலையோடு அவளை பற்றிய கவலையும் சேர்ந்துக் கொள்ள...அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து மயக்கம் தெளிய வைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கினார்கள். கண்ணன் போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்றவர் மதனை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

ஆதியை கேட்டாலும் வரமாட்டான் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது,அவருக்கும் அவன் மேல் சிறு வருத்தம் இருந்தது,இருவருக்கும் என்ன பிரச்சனை என தெரியாத போதிலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட அவனின் தனிப்பட்ட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவதாக எண்ணிக்கொண்டார்.


இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று கம்பிளைன் பண்ணிவிட்டு வீட்டுக்கு வரவும் ஆதி ஆர்டர் செய்த உணவு வரவும் சரியாக இருந்தது. மதனுக்கு கூட அவனின் செய்கையில் கோபம் வர.."என்னடா இது" என்பது போல் பார்க்க அதற்கு அவனோ "சாரி மச்சி நீ வருவாய் என்று தெரியாது இல்லனா உனக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்திருப்பேன்" என்றவனை வெட்டி கொன்றுவிடும் ஆத்திரம் தோன்றினாலும், இருக்கும் பிரச்சனையில் இது வேறா என எண்ணியபடி அவனை முறைத்துக்கொண்டே நகர்ந்து சென்றான்.


நந்தினி தான் ஏதோ சித்தபிரம்மை பிடித்தவள் போல் சுவரை வெறித்துக் கொண்டிருந்தாள்.ஒருபக்கம் ராதா மற்றைய பக்கம் சந்தியா கீர்த்தனா என அனைவரும் தங்களின் வருத்தத்தை முழுங்கிக்கொண்டு அவளுக்காக இயல்பாக இருப்பது போல் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர்.


ஆதியோ யாரை பற்றியும் கவலைப்படாமல் உணவை பிரித்தவன் "கடைசியாக கேட்கிறேன் யாருக்காவது வேண்டுமா..? அப்பறம் உங்களை பார்க்க வைத்து சாப்பிடுவதாக சாபம் கொடுத்துவிட போறீங்க..?" என்றபடி நிதானமா உணவை சாப்பிட்டு கொண்டிருக்க...அனைவருக்கும் இவனால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்ற கேள்வி மட்டும் மனதுக்குள் எழாமல் இல்லை.


ஆதி உணவை ரசித்து சாப்பிட்டு கொண்டிருந்த நேரம்...ஏதோ தோன்ற வாசலை பார்த்தவன் அங்கு நின்றிருந்த விக்ரமை ஒரு நொடி தலை முதல் பாதம் வரை பார்த்தவன் பார்வையை தன் குடும்பத்தினர் பக்கம் திறுப்பியவன் தலையிலேயே அடித்துக்கொண்டான்.

இவளோ நேரம் அவனை காணும் என்று பதறிய ஒரு ஜீவனும் அவன் வருகை அறியாது தங்கள் சிந்தனையில் இருக்க….அதனை களைக்கும் பொருட்டு "ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன். எல்லாரும் உங்கள் கண்ணீர் டாமை குளோஸ் பண்ணுங்க ஆல்ரெடி வந்த மழை புயலே போதும், அழுகையை நிறுத்திட்டு கொஞ்சம் திரும்பி பாருங்க" என்றவன் பழையபடி உணவில் கவனத்தை செலுத்தினான்.


திரும்பி பார்த்த அனைவருக்கும் போன உயிர் திரும்பி வந்த உணர்வு...அதுவரை அவன் வருகையை கூட உணராமல் இருந்த நந்தினி ராதாவின் விக்ரம் என்ற அழைப்பில் திரும்பி பார்க்க...அங்கே காலையில் அணிந்து சென்ற வெள்ளை நிற கோர்ட் முழுவதும் இரத்தக்கரையுடன் நின்றவனை பார்த்து

"அத்தான்" என்ற கதறலோடு ஒடிசென்று அவன் மார்பில் விழுந்தாள். "அத்தான் அத்தான்" என்ற வார்த்தை மட்டும் ஓயாமல் அவள் உதடுகள் உச்சரித்து கொண்டே இருக்க,


அனைவரின் நிலையையும் இந்த நேரம் மதன் மற்றும் சந்தியாவின் வருகையும் அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நன்றாகவே தெரியப்படுத்தியது.தானும் இத்தனை நேரம் ஒரு தகவல் கூட அனுப்பவில்லை என தன்னையே திட்டிக்கொண்டவணுக்கு, தன்னவளின் பயமும் புரிந்தே இருந்தது.அதுவும் சும்மாவே பயந்து நடுங்குபவள் இவ்வளவு நேரம் எப்படி துடித்திருப்பாள் என்பதை யாரும் சொல்லி அறியவேண்டியது இல்லையே...

அவளின் கண்ணீரும் கதறலும் தன்மேல் அவள் கொண்ட காதலை அப்பட்டமாக எடுத்துரைக்க, இதற்கு மேலும் அவள் காதலை வெளிப்படுத்த முடியுமா என நினைத்தவன் அவளின் முதுகை வருடியபடி "ஒன்னுமில்ல டா காம்டவுண்" என அவளை சமாதானப்படுத்த முயன்றான்.


அவனிடமிருந்து பிரிந்து அவன் கோர்ட்டை பார்த்தவள் தான் ஒரு டாக்டர் என்பதையும் மறந்து மிரண்டு விழிக்க,அவளின் பார்வையை உணர்ந்தவன் தன் கோர்ட்டை கழட்டி சட்டையோடு நின்றபடி "எனக்கு ஒன்னுமில்ல மா" என்க...

அவன் வார்த்தையின் மீது நம்பிக்கையில்லாமல் அவன் தலை முகம் கைகள் மார்பு என வருடியவள் மீண்டும் அவனை அணைத்துக்கொண்டாள். அவள் மனதின் அலைபுறுதல் இன்னும் அடங்காமல் இருக்க….அங்கு நிற்கும் யாரை பற்றியும்,யார் என்ன நினைப்பார்கள் என்ற எந்த கவலையும் இல்லாமல் அவன் காலில் தனது காலை வைத்து எக்கி அவன் கன்னத்தை இரு கைகளாலும் தாங்கியவள் முகம் முழுக்க முத்தத்தை பதிக்க...அவளின் தீடீர் தாக்குதலில் ஒரு நிமிடம் அதிர்ந்தவன்,பின் அவளுக்கு ஏற்றவாறு தன் உயரம் குறுக்கி அவள் விழாமல் இருக்க இடையை இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.

சிறிதுநேரம் அவள் இஷ்டத்திற்கு விட்டவன் அனைவரின் பார்வையும் தங்களையே பார்ப்பதை உணர்ந்து அவளை தன்னிடமிருந்து பிரிக்க... அவளோ மாட்டேன் என்பதுபோல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.


அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டு பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க அதற்கு பதில் சொல்லியவாறே நின்றிருந்தவன் மறந்தும் தன்னவளை விளக்கவில்லை,அவளை தன் கைவலைவிலேயே வைத்திருந்தான்.

சோஃபாவில் அமர்ந்தும் அவன் தோளில் சாய்ந்தவாறு உன்னைவிட்டு அணுவளவும் அகலமாட்டேன் என்பது போல் அவனை ஒட்டிக்கொண்டே அமர்ந்திருந்தாள்.


"என்னதான் டா நடந்தது" என்ற மதனை பார்த்து "ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் மச்சான்.ஒரு லாரி கட்டுப்பாடு இல்லாமல் வந்து கொண்டிருந்தது,நான் முதலில் அதை கவனிக்கவில்லை அப்பறம் கடைசி நிமிடம் சுதாரித்து காரை திருப்பினேன், அது மரத்தில் மோதி நின்றுவிட்டது. ஆனால் எனக்கு பின்னால் வந்த காரின் மீது அந்த லாரி மோதியதில் காரில் இருந்த தம்பதியினருக்கு பலத்த அடி அதான் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வர தாமதமாகிவிட்டது" என நடந்ததை சுருக்கமாக சொல்ல...

அவனின் ஆக்ஸிடென்ட் என்ற வார்த்தையை கேட்டதிலிலேயே உடல் நடுங்க தொடங்கிவிட்டால் நந்தினி.அவனும் அவளின் கரத்தில் அழுத்தம் கொடுத்து தேற்ற முயன்றான்.


அங்கு இருந்த சூழ்நிலைக்கு எதிராக ஆதி என்ற ஒருவன் மட்டும் அமைதியாக உணவருந்திக் கொண்டிருக்க...அவன் புறம் திரும்பிய விக்ரமிற்கு ஆதியின் அமைதியையும் நிதானத்தையும் பார்த்து தன்னையும் மீறி முகத்தில் புன்னகை அரும்பியது.

"என்னடா எதுக்கு சிரிக்கிற நாங்க எல்லாரும் என்ன நிலைமையில் இருக்கோம்" என்ற அன்னைக்கு வெறும் தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தவன்,அவர்கள் பேச்சுக்குள் கலந்துகொண்டார்.


சிறிது நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்க..யாரென எழுந்து சென்ற ராதா முகத்தில் கோபம் போய் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது ஆதியை நினைத்து.

விக்ரம் வந்த உடனேயே அனைவருக்கும் சேர்த்து உணவை ஆர்டர் செய்துவிட்டான். தன்னை தவிர யாருமே சாப்பிடவில்லை என்பதை உணர்ந்து...


அனைத்தையும் வாங்கி டைனிங் டேபிளில் வைத்தவர் அங்கு கைக்கழுவி கொண்டிருந்த ஆதியை முறைக்க...அவனோ "என்ன லூக் மாம்,ரொம்ப கற்பனை பண்ணாதீங்க..? எனக்கு வயிறு வலிக்கும் என்பதற்காக மட்டும் தான் ஆர்டர் பண்ணினேன் மற்றபடி ஒன்றுமில்லை" என்றவன் டிவியை ஆன் செய்துவிட்டு சோஃபாவில் அமர்ந்துகொண்டார்.


விக்ரம் "எனக்கு டின்னர் வேண்டாம்" என சொல்ல வாய்த்திறந்தவன் முடிக்கும் முன் முந்திக்கொண்ட ஆதி "நந்து...து என சத்தமாக அழைத்தவன் விக்ரம் காதில் விழுமாறு, சாப்பாடு என்னோட காசில் ஒன்றும் வாங்கவில்லை,அதற்கான பணத்தை உன்னோட அக்கவுண்ட்டில் இருந்துதான் கட்டினேன். அதனால் யாரும் சாப்பிடாமல் இருக்கவேண்டாம். ஒருவேளை பொண்டாட்டி பணத்தில் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் சாப்பிட வேண்டாம்" என்றவன் தொலைக்காட்சியில் கவனமாக... அனைவரின் பார்வையும் இருவரையும் மாறிமாறி பார்க்க, அவர்களுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

விக்ரம் அதை தான் சொல்ல நினைத்தான் என்பது அவன் முகத்தை பார்த்துகூட கணிக்க முடியாதவர்களுக்கு அவனை பார்க்காமல் டிவியை பார்த்துக் கொண்டிருந்தவன் சொன்னதை எண்ணி ஆச்சிரியம் பிறந்தது. இருந்தும் எதுவும் கேட்க முடியாமல்,கேட்டாலும் பதில் வரப்போவதில்லை என்பதை உணர்ந்து பெருமூச்சை மட்டுமே வெளியிட முடிந்தது அவர்களால்…

"ரெண்டும் என்ன டிசைனோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.


பின்னர் அனைவரையும் சாப்பிட அழைக்க… "விக்ரம் ஒரு பத்து நிமிஷம் மாம் குளிச்சிட்டு வந்துடுறேன்" என்றவன் தன் அறைக்குள் நுழைய அவனின் பபின்னோடு உள்ளே நுழைந்த நந்தினி,அவனை வால் போல் பின்தொடர்ந்தாள். அவன் குளியலறைக்குள் நுழைய அவளும் ஏதோ நினைவில் பின்னாடியே செல்ல...அவள் கையை பிடித்து தடுத்தவன் " என்ன என்னை நீயே குளிப்பாட்ட போறியா" என்க...அவள் அப்போது தான் குளியலறை வரை வந்ததை உணர்ந்து உதட்டை கடித்தபடி தலைகுனிய..

அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் பற்களால் கடிப்பட்டுக் கொண்டிருந்த இதழை தன் கட்டைவிரலால் விடுவித்தவன் அதனை வருட...அவன் தொடுகையில் உருகி கரைய துடித்தவள்,முயன்று தன் உணர்வை அடக்கி கொண்டு, "சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க" என்றபடி குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் தன் தலையிலேயே தட்டிக்கொண்டாள்.

" லூசு லூசு குளிக்க போகும் போதும் கூடவே போவியா..? உன்னை பற்றி என்ன நினைப்பார்கள்" என தன்னுளேயே புலம்பிக்கொண்டவள் அவனுக்காக காத்திருந்து அவனை அழைத்துக்கொண்டு கீழே சென்றாள்.

சிறுபிள்ளை எங்கேயாவது வெளியே சென்றாள் எப்படி தன் தந்தையின் கரத்தை பிடித்துக்கொண்டு விடாமல் செல்லுமோ அதேபோல் அவனின் கரத்தை விடாமல் பிடித்துக்கொண்டு சுற்றினாள்.


பின்னர் உணவை முடித்துக்கொண்டு அனைவரும் அவரவர் அறைகளுக்கு செல்ல...மதன் சந்தியா இருவரும் கூட இரவு இங்கேயே தங்க முடிவெடுத்து இருக்க,அனைவரும் சென்ற பின்னர் மதனை மட்டும் நிறுத்திய ஆதி "என்ன மச்சான் என்மேல் உள்ள கோபம் இன்னும்
போகலையா ?" என்றபடி கண்ணடித்தவனை முறைத்த மதன்,

" நீ பண்ணிய அலப்பறைக்கு கோபம் வராமல் இருந்தால் தான்டா ஆச்சிரியம்" என்றவனின் தோளில் கைபோட்டு கொண்டு "அப்பறம் மச்சான் உன் ஃப்ரெண்ட் என்ன சொல்றான்" என்க...

"என்ன சொல்லுவான் ஏதோ ஆக்ஸிடென்ட் நல்லவேளை இவனுக்கு எதும் ஆகவில்லை" என்றவனை பார்த்து "உன்னை மாதிரி ஒருத்தன் ப்ரெண்டாக இருந்தால் சீக்கிரமே நானும் மேல போகவேண்டியது தான். என சொன்னவன், அவன் கண்களை அழுத்தமாக பார்த்துக்கொண்டே "அவன் போய் சொல்றான், இது கண்டிப்பாக ஆக்ஸிடென்டாக இருக்க வாய்ப்பு இல்லை. அட்டம்ட் மர்டர் என்றவன் உன் ப்ரெண்ட் கிட்ட என்ன நடந்தது என்று கேளு" என்றுவிட்டு உறங்க சென்றான்.

"என்ன சொல்றான் இவன் கொலை முயற்சியா?... யாராக இருக்கும்,என்ன காரணமாக இருக்கும்" என்ற குழப்பத்துடன் உறங்க சென்றான்.



இங்கு அறைக்குள் நுழைந்த நந்தினியை வரவேற்றது மெத்தையில் இருந்த பொம்மை...அவளால் இன்று மற்றைய தினம் போல் தனியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை. இன்று நடந்த சம்பவம் அவனின் அருகாமையை வேண்டியது. ஈகோவாவது வெட்கமாவது என்று அனைத்தையும் தூக்கிப்போட்டவள்,அவனை நெருங்கி அவனை எழுப்ப,அவனும் எதுவும் சொல்லாமல் எழுந்து அமர்ந்தவன் ' என்ன ' என்பது போல் அவளின் முகம் பார்க்க...அவளோ தயங்கியவாறே சொல்ல தொடங்கினாள்.


"அத்தான்... அது.. பிளீஸ் அத்தான் என்று மட்டும் தான் கூப்பிட வருது, வேற எதுவும் வரமாட்டேன் என்கிறது நான் இப்படியே கூப்பிடுறேன் என சொன்னவன்,அது நீங்க என் மேல கோபமாக இருப்பது எனக்கும் நன்றாக தெரியும் ஆனால் எனக்காக இன்னைக்கு ஒருநாள் மட்டும் கோபத்தை தள்ளி வைப்பிங்களா..? பிளீஸ் அத்தான் இன்றைக்கு மட்டும் முதல் போலவே உங்க கூடவே படுகிறேனே.… எனக்கு இன்னும் என்னோட பயம் குறையவே இல்லை. ஒருமாதிரி படபடப்பாக இருக்கு " என பாவமாக கேட்க…

அவனோ காதல் ததும்பும் விழிகளோடு "தன் கைகளை விரித்து வாவென தலையசைக்க" அதற்காகவே காத்திருந்தவள் போல் அத்தான் என்ற அழைப்போடு அவன் மார்பில் முகம் புதைத்துக் கட்டிக்கொண்டாள்.

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 27


திரும்பவும் எங்கேயாவது தன்னை விட்டுவிட்டு சென்று விடுவானோ என என பயந்தவள், அவனுள் அப்படியே புதைந்து விடுபவள் போல் மீண்டும் மீண்டும் மார்பில் முட்டி மோத,அவளின் பதட்டத்தை உணர்ந்தவன் எதுவும் சொல்லாமல் அவனும் அவளை இறுக அணைத்தபடி தன் கன்னத்தை அவளின் தலையில் தாங்கி அமர்ந்திருந்தான்.


சிறிது நேரத்தில் தன் மார்பில் உணர்ந்த ஈரத்தில் அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளின் முகம் பார்க்க... அவளோ மீண்டும் பெரும் கேவலுடன் அவனில் சாய்ந்து தன் அழுகையை தொடர்ந்தாள்.


"என்னம்மா இது, எனக்கு தான் ஒன்னும் ஆகலையே.. அப்பறம் எதுக்காக இந்த அழுகை" என்றவனை ஏறிட்டுப் பார்த்தவள்

"என்னோட பயத்தை வார்த்தையால் சொல்லமுடியாது அத்தான். ஆனால் உங்களுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் சத்தியமாக அப்போவே செத்திருப்பேன்" என்றவளின் வார்த்தையில் ஒரு நிமிடம் அதிர்ந்தவன்,தானும் அவளை இறுக்கிக்கொண்டான்.

"லூசு இப்படியெல்லாம் பேசாத, அப்பறம் என்கிட்ட அடிதான் வாங்குவாய்" என்க..

அவளோ அவன் அணைப்பில் தைரியம் வர பெற்றவளாய் "நீங்க என்ன அடிக்கிறது, நான் தான் உங்களை அடிக்கணும்.இனிமேல் இதுமாதிரி சொல்லாமல் எங்கேயாவது போங்க ? அப்பறம் உங்களை என்ன பண்றேன் பாருங்க" என மனைவியாக கோபம் கொண்டு அவன் மார்பில் தன் கைகளால் குத்தியவள்,அவன் தோளிலும் ஒரு அடிவைக்க….அதுவரை அவள் அடி ஏதோ மசாஜ் செய்தது போல் இருக்க அதனை அனுபவித்து கொண்டு இருந்தவன், அவன் தோளில் அடிக்கவும் மெலிதாக வலியில் கத்தினான்.


அவனின் கத்தலில் அவனிடமிருந்து பிரிந்து முகம் பார்க்க..அவனோ வலியில் முகம் சுழித்தான்.

உடனே அவளுள் பதட்டம் வந்து ஒட்டிக்கொள்ள "அச்சோ அத்தான் என்னாச்சு?" என்க

அவளின் பதட்டம் கண்டு தன் முகத்தை இயல்பாக மாற்றியவன் "ஒண்ணுமில்ல டா கார் மரத்தில் மோதிய வேகத்தில் கதவில் தோள்ப்பட்டையில் அடிப்பட்டுவிட்டது" என்பவன் முடிக்கும் முன் அவனின் பனியனில் கைவைத்தவள் "இதை முதலில் கழட்டுங்கள் அத்தான் முன்னமே சொல்வதற்கு என்ன ?" என திட்டியபடி அடிபட்ட இடத்தை ஆராய...பெரிதாக காயம் எதும் இல்லையென்றாலும் அந்த இடமே சிவந்து வீக்கம் கண்டு இருந்தது.வேகமாக எழுந்தவள் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் களிம்பை மெல்ல அந்த இடத்தில் தடவியவள்,அவனின் "உஸ்ஸ்" என்ற முணகலில்,இன்னும் மென்மையாக குழந்தைக்கு மருந்திடுவது போல் இதழ் குவித்து ஊதியவாரே மருந்திட,அந்த அழகை கண்க்கொட்டாமல் ரசித்தான் அவளின் அத்தான்.

பின்னர் வலி நிவாரணி மாத்திரையும் கொடுத்து மிழுங்க செய்தவள், அவனைவிட்டு ஒரு அடி தள்ளியே படுத்துக்கொண்டு அவனின் கையை மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.


"இப்போ எதுக்கு இப்படி தள்ளிப்படுக்கிறாய் ?" என அவன் கோபம் கொள்ள அவளோ "இல்ல அத்தான் இந்த கையில் தான் அடிப்பட்டு இருக்கே, உங்களுக்கு வலிக்கும் தானே, அதான்" என்றவளை பார்த்து தலையிலேயே அடித்துக் கொண்டவன்

"உனக்கெல்லாம் யாருடி டாக்டர் பட்டம் கொடுத்தான்,மூளை என்பது இருக்கா இல்ல என்னுடன் பேசும் போது மட்டும் அதை அடகு வைத்துவிடுவாயா..?" என சொன்னவாறே அவள் இடையில் கைத்தோடுத்து அவளை இழுத்தவன்,இரு உடல்களும் மொத்தமாக உரசிக்கொள்ளும் படி அவளை தன்மேல் கிடத்தி, பின் மெல்ல மறுபுறம் கிடத்தினான்.

அவனின் தொடுகையில் உடல் மொத்தமும் சிலிர்த்து அடங்க,முகம் சிவந்து அவன் முகம் பார்க்க தயங்கிவாறு இருந்தவளின் முகம் நிமிர்த்தி நெற்றியோடு தன் நெற்றியை முட்டியவன் "அடியே டாக்டர் பொண்டாட்டி எனக்கு இந்த கையில் தானே அடி என வலது கையை கட்டியவன்,இந்த கை நல்லாத்தானே இருக்கு" என்றபடி தன்னவளை இடது கரத்தில் தாங்கி அணைத்துக்கொண்டு உறங்க முற்பட...அவளும் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவாறு அவன் மார்பில் முகம் பதித்து உறங்க தொடங்கினாள்.


விக்ரமோ அன்றைய அதிகப்படியான அலைச்சலில் உடனடியாக உறக்கத்திற்கு சென்றுவிட...அவளோ அவன் முகம் பார்த்து உறங்காமல் விழித்திருந்து...வெகுநேரம் கழித்து உறங்க தொடங்கிய நேரம், அவனுக்கு இருமல் வர, தண்ணீர் குடிக்கலாம் என எழுந்தவன் தண்ணீரை எடுக்க முயல அதுவோ கைக்கு எட்டாமல் போக,நந்தினியை தன்னில் இருந்து பிரித்தவன் கட்டிலை விட்டு எழுந்தான்.


அப்போதுதான் தூக்கத்திற்கு சென்றவள்,சட்டென விழித்திறந்து அருகில் பார்க்க அங்கே விக்ரம் இருந்த இடம் வெறுமையாக இருக்க,மனதில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

"விக்ரம் அத்தான்.....விக்ரம் அத்தான்.... எங்க இருக்கீங்க" என பயத்தில் கண்களை மூடியபடி கத்த தொடங்க… அந்த நடுஇரவில் அவளின் கத்தலில் அதிர்ந்து கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை கீழே போட்டவன்...உடனடியாக அவளுக்கு முன் வந்து நின்று

"நதி நதி கண்ணை திறந்து பாருமா... நான் இங்கதான் இருக்கேன் உன்னை விட்டுட்டு எங்கேயும் போகலை" என அவன் சொல்வதை காதில் வாங்காமல்

"எதுக்காக என்னை விட்டு எழுந்தீங்க" என்று தேம்பியவளை கண்டு தலையிலேயே அடித்துக் கொண்டவன்,

"நீ என்ன சின்ன குழந்தையா டி..? எதுக்கு இப்படி அர்த்த ராத்திரியில் கத்துகிறாய்,யாராவது எழுந்துவிட போறாங்க..?" என கத்தியவனை பார்த்து

"நான் பார்க்கும் போது நீங்க என் பக்கத்தில் இல்லையா அதான்" என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல...அதுக்கு இப்படிதான் கத்தனுமா, எங்கன்னு தேட கூட மாட்டியா ? முதலில் இப்படி எல்லாவற்றிக்கும் எமோஷனல் ஆவதை நிறுத்து" என நடு இரவில் பாடம் எடுக்க...

அவளோ அப்போதும் பயம் குறையாமல் "உங்களுக்கு ஒன்னுமில்ல தானே" என்க,

விக்ரம் அவளை நெருங்கி அவள் முகத்தை வயிற்றோடு அணைத்துக்கொண்டான்.


அவளின் முகம் நிமிர்த்தி "எனக்கு எதுவும் ஆகாது டா" நீ இப்படி எல்லாவற்றிற்கும் பயப்படுவதால் தான் உன்னை டாக்டர்க்கே படிக்க வைத்தோம்.ஆனால் இப்பவும் நீ கொஞ்சம் கூட மாறவே இல்லை" என அதன் பின்னர் அரைமணி நேரமாக பாடம் எடுத்தும்,அப்போதும் அவள் முகத்தில் கொஞ்சமும் பயம் குறையாமல் இருக்க, இனி உனக்கு அதிரடி ட்ரீட்மென்ட் தான் சரிவரும் என எண்ணியவாறு அவளை அணைத்துக் கொண்டவன்,

அவள் நெற்றியில் அழுத்தமாக தன் இதழ்களை பதித்தவன் முகம் முழுவதும் தனது முத்த ஊர்வலத்தை நடத்தி கடைசியாக அவள் இதழில் இளைப்பாறினான். அவளுக்கும் அவனின் அண்மை தேவையாக இருக்க அவளும் அவனின் முத்த யுத்தத்திற்கு ஒத்துழைப்பை வழங்கினாள்.


அவளின் பதட்டத்தை குறைக்க என தொடங்கிய முத்தம்...நீண்டுகொண்டே செல்ல இருவரின் உணர்வுகளும் ஒன்றாக தூண்டப்பட்டது. அவள் இதழ்களை விடுவித்தவன் அவள் முகம் பார்க்க...விழிமூடி அவனின் தொடுகையில் மயங்கி நின்றவளின் வரிவடிவம் அவனை இன்னும் மயக்க…"நதி..தி" என்ற மெல்லிய முனகலுடன் அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அதற்கு பின் என்ன நடந்தது என இருவரும் உணரும் நிலையில் இல்லை.அவன் தன் காதலை அவளுக்கு உணர்த்திவிடும் வேகத்தில் இருக்க...அவளின் தயக்கங்களையும் மறுப்புகளையும் தன் முத்தத்தால் ஒன்றுமில்லாமல் ஆக்கியவன் அவளுள் மொத்தமாக கரைந்து தான் போனான்.

உதடுகள் மட்டும் ஓயாமல் "ஐ லவ் யூ நதி" என்ற வார்த்தையை மட்டும் உச்சரித்துக் கொண்டே இருந்தது. முடிவில்லா தொடர்கதையாக தனது இத்தனை வருட காதலையும் மொத்தமாக தனது செயலில் காட்டி மென்மையும் வன்மையும் கலந்து காதல் செய்ய….அவளோ அவன் மென்மையில் கரைந்து வன்மையில் மிரண்டு என தன் காதலை உணர்த்த...இருவருக்கும் அந்த இரவு தூங்கா இரவானது. கிழக்கில் சூரியன் மெல்ல எட்டிப்பார்க்க இருவரும் தங்கள் தூக்கத்தை அப்போது தான் தொடங்கினர்.



அப்போது தான் உறக்கத்திற்கு சென்றவர்களை எழுப்பியது நந்தினியின் மொபைல் ரிங்டோன்,அவளோ விழிகளை கூட திறக்க முடியாமல் வெறும் சிணுங்களை மட்டும் வெளியிட,அவளை தட்டிக்கொடுத்தப்படி மொபைலை எடுத்து பார்த்தவன் அதில் ஒளிர்ந்த ஆதியின் எண்ணை பார்த்து "எடுக்கலாமா வேண்டாமா" என ஒரு நொடி யோசித்தான்.

பின்னர் அழைப்பை ஏற்று காதில் வைத்த விக்ரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க...எதிரில் ஆதி "நந்து தூங்கு மூஞ்சி சீக்கிரம் எழுந்து வா ஜாகிங் போகணும் டைம் ஆகிடுச்சு" என அவள் தான் பேசுகிறாள் என நினைத்துக்கொண்டு எதிரில் பதிலுக்காக காத்திருக்காமல் அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக...விக்ரமோ சட்டென்று "அவள் இனிமேல் எங்கேயும் வர மாட்டாள்" என்றவன், "நீ முதலில் ஃபோனை வை தூக்கத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டு" என சொல்லும் போதே நந்தினியின் குரல் ஆதியின் காதிலும் நன்றாக விழுந்தது.

"அத்தான் ...எதுக்காக காதுக்கிட்ட வந்து கத்துறீங்க"..? நைட் ஃபுல்லா தூங்கவே விடலை இப்பவும் இப்படி பண்றீங்க" என சொல்லியபடி விட்ட தூக்கத்தை தொடங்க.. விக்ரமிற்கு தான் எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளலாமா என இருந்தது.

'ராட்சசி இப்படி என் மானத்தை வாங்கிட்டா' என நினைத்தபடி மொபைலை அணைத்துவிட்டு தனது வெட்க புன்னகையை மறைக்க முயன்றான்.

அங்கு ஆதியும் தன் தலையிலேயே தட்டிகொண்டான்…"அய்யோ கரடி மாதிரி ஃபோன் பண்ணிவிட்டேனோ" என தன் செயலை எண்ணி தானே சிரித்துக் கொண்டான்.
பின்னர் அவன் மட்டுமே ஜாகிங் சென்று வந்தவன் ஹாஸ்பிடல் செல்லும் வரை இருவரும் வெளியே வரவில்லை.


காலை பத்துமணிக்கு முதலில் கண்விழித்த விக்ரம் நந்தினியை பார்க்க அவளோ இன்னும் உறக்கம் கலையாமல் அவனின் மீது காலையும் கையையும் போட்டுக்கொண்டு அவனை மறுபடியும் பொம்மையாக மாற்றியபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.

மெல்லிய புன்னகையோடு அவளை எழுப்ப முயல,அவளோ "தூக்கம் வருது அத்தான்" என்றாள்.

இவனா விடுவான் "இப்போ நீ கண்ணை திறக்கவில்லை என்றால் அப்பறம் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என்றபடி தன் வேலையில் இறங்க… அங்கே மீண்டும் ஒரு காதல் யுத்தம் நடந்தேறியது. அதன் பின் இருவரும் குளித்து கிளம்பி கீழே வர மதிய உணவு வேளை வந்திருந்தது.

விக்ரமிற்க்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தது தன் பெற்றோரின் பார்வையை சந்திக்க,ஏதோ தவறு செய்துவிட்ட குழந்தைபோல் தடுமாறினான். அவர்களோ சாதாரணமாகவே நடந்துக்கொண்டனர்.

கீர்த்தனாவுக்கும் அதுவரை இருந்த சிறிய நெருடல் கூட இல்லாமல் போய்விட்டது தன் மகளின் மலர்ந்த முகத்தை கண்டு... நந்தினி தான் யாரின் முகத்தை கூட பார்க்கவில்லை,அவளின் முக சிவப்பே நடந்ததை அனைவருக்கும் அம்பலப்படுத்த,விக்ரம் தான் இவளை வைத்துக்கொண்டு…"என் மானத்தை வாங்குவதிலேயே குறியாக இருக்கிறாள்" என மனதுக்குள் செல்லமாக திட்டிகொண்டான்.பின்னர் உணவை முடித்துக்கொண்டு இருவரும் தங்கள் வேலைக்கு கிளம்பினர்.


மாலை ஆபிஸ் விட்டு கிளம்பும் நேரம்,விக்ரமின் அறைக்குள் நுழைந்த மதன்…"உன்கிட்ட பேசணும் டா" என்க

அவனும் அமைதியாக சொல்லு என்பது போல் அமர்ந்து இருந்தான்.

"நேற்று நடந்தது உண்மையாகவே ஆக்சிடெண்ட் தானா..?" என்க அவனின் அதிர்ந்த முகமே இந்த கேள்வியை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை எடுத்துரைக்க..

அவனோ "உனக்கு எப்படிடா தெரியும்" என்றான்.

"ஏன் யார் சொல்லி இருப்பா என உனக்கு தெரியாதா ..?" என பதில் சொல்லாமல் அவனும் எதிர்க்கேள்வி கேட்க ...சற்று நேரம் அமைதியாக இருந்தவன் சொல்ல தொடங்கினான்.


"ஆக்சிடெண்ட் எல்லாம் இல்ல மச்சான். எல்லாமே யாரோ பிளான் பண்ணி தான் பண்ணி இருக்காங்க..?அந்த லாரி ரொம்ப நேரமா என்னதான் பின் தொடர்ந்து வந்தது. கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் வந்தவுடன் வேகத்தை அதிகப்படுத்தி என் காரை நோக்கி வர... கடைசி நொடியில் காரைத் திருப்பி மரத்தில் மோதி நிறுத்தினேன் என்றான். பாவம் ஆனால் நானே எதிர்பாராத விதமாக எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது அந்த லாரி மோதிவிட்டது.நல்லவேளையாக அவர்கள் உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்படவில்லை...இன்று ஆபீஸ் வரும்முன் அவர்களைப் பார்த்து விட்டு தான் வந்தேன்".


"யாராக இருக்கும்..?" என மதன் கேட்க,

"எனக்கென்னவோ என் மாமா ராகவன் மேல்தான் சந்தேகமாக இருக்கிறது என்றவன், நான் இதிலிருந்து தப்பித்து விட்டதால் அவரின் அடுத்த டார்கேட் ஆதியாக தான் இருக்கும். இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்கணும். உன் ஃப்ரெண்ட் கிட்டயும் சொல்லிவை" என்றான்.


மாலை ஐந்து மணி அளவில் ஆதியின் அறைக்குள் நுழைந்த நந்தினிக்கு...அவன் அமர்ந்திருந்த விதத்தை பார்த்து மனம் வலித்தது.

எப்போதும் முகத்தில் உறைந்த புன்னகையோடு வலம் வருபவனின் முகத்தில் திவ்யா சென்றதற்கு பின்பு மருந்துக்கும் சிரிப்பில்லாமல் போக,இன்று மருத்துவமனையில் வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் எண்ணமில்லாமல் விட்டத்தை வெறித்து கொண்டிருந்தவன் தோளை தொட்டு உலுக்கியவள் "என்ன ஆதி பகல் கனவா..? வா வீட்டுக்கு போகலாம்" என்று பிடிவாதமாக கிளப்ப...

அவனோ "உனக்கு தான் உன் புருஷன் வெளியே வெயிட் பண்றான் இல்ல, அப்புறம் எதுக்கு என்ன தொல்லை பண்ணிட்டு இருக்க" என புலம்பியவாறே எழுந்தவன் அவளோடு பேசிக்கொண்டே காரிடாரில் நடந்து வந்துகொண்டிருந்தான்.


அப்போது எதிரில் திவ்யாவின் தந்தையை வீல் சேரில் தள்ளிக்கொண்டு "ஆர்த்தோ பீடீக் டாக்டரை" காண வந்துகொண்டிருந்தார் திவ்யாவின் அன்னை.அருகில் திவ்யா அவரின் மருத்துவக் கோப்புகளை கையில் எந்தியபடி வந்துக்கொண்டிருக்க...முதலில் திவ்யா தான் ஆதியை பார்த்தாள்.

அவன் முகத்தில் எதுவோ குறைந்தது போல் இருந்தது அவளுக்கு,அது என்னவென்று தெரிந்திருந்தாலும் அவளால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை அறவே வெறுத்தாள். அனைத்திற்கும் காரணம் அவளாக இருக்கும் பட்சத்தில் தன்னையே அவளுக்கு பிடிக்கவில்லை.


அப்போது தான் ஆதி நந்தினி இருவருமே அவளை பார்க்க...அவளை பார்த்தவுடன் காதல் கொண்ட மனம் தவிப்புடன், அவளையே பார்க்க சொல்லி முரண்டு பிடிக்க, முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு மனம் இறுக நடையை தொடர்ந்தான்.

நந்தினிக்கு இப்போது என்ன செய்வது என்பதே தெரியாமல் இருக்க, ஆதியின் முகம் பார்த்தாள்.ஆனால் அதில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெறுமையாக இருக்க..பின்னர் அவளிடம் பேசினால் அவள் மனதின் நிலையை அறிய முடியும் என யோசித்து அவளை பார்த்து சிரிக்க திவ்யாவும் பதிலுக்கு சிரிக்க, அந்த புன்னகையில் சுத்தமாக உயிர்ப்பில்லை என்பதை கண்டுக்கொண்டாள் நந்தினி.

ஆக அவளும் ஆதியை பிரிந்து சந்தோஷமாக ஒன்றும் இருக்கவில்லை என்பதே போதுமானதாக இருக்க, இவங்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என உறுதி கொண்டவள் அவளை நெருங்கி "எப்படி இருக்க திவ்யா" என்க,


அவளோ அருகில் நின்ற ஆதியை பார்த்துக் கொண்டே வெறும் தலையை மட்டும் ஆட்டினாள். அப்போது இருவரின் பேச்சுக்கு குறுக்கே வந்து விழுந்தது ஆதியின் வார்த்தை "நந்து நீ பேசிட்டு வா நான் கிளம்புறேன்" என்றவன் தன்னவளை திரும்பி பார்க்கும்படி அடம்ப்பிடித்த மனதை கடிவாளம் கட்டி கட்டுப்படுத்தியவன் வெளியே செல்ல….

'ஒருமுறையாவது தன்னை திரும்பிப் பார்க்க மாட்டானா' என ஏக்கமாக பார்த்துக்கொண்டிருந்தாள் திவ்யா.இருவரின் மனநிலையும் முழுதாக புரிந்துகொண்ட நந்தினிக்கு இப்போதே தலை வலிப்பது போல் இருந்தது.அவன் இறங்கி வந்த பொழுது இவள் முறுக்கிக் கொண்டிருந்தாள்,இப்போது இவள் இறங்கி வர தயாராக இருக்க அவன் முறுக்கிக் கொள்கிறான்.இது இரண்டையும் சேர்த்து வைப்பதுக்குள் நம்ம ஒரு வழி ஆகிடுவோம் என எண்ணியபடி திவ்யாவுடன் பேச்சை வளர்த்தாள்.


தன் தந்தை தாயிடம் இது நந்தினி விக்ரம் சாரோட மனைவி என்றவள்,மருத்துவமனை வந்ததன் காரணத்தை கூறிவிட்டு சிறிதுநேரம் பொதுவாக பேசியவள் மருத்துவரை காண செல்ல...நந்தினியும் வாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அன்று இரவு அறைக்குள் நுழைந்த நந்தினி திருதிருவென முழிக்க..'இன்னைக்கு என்ன வைத்துக்கொண்டு காத்திருக்கிறாளோ' என எண்ணிய விக்ரம்

"என்னடி திருட்டு முழி முழிக்கிற"..? என்க..

"அது ஒன்னுமில்ல அத்தான்" என்றவள் மீண்டும் அதே பார்வையை செலுத்த,

"இப்போ சொல்ல போகிறாயா இல்லையா" என கோபம் போல் கேட்க அது சரியாக வேலை செய்தது.

"அது நீங்க என்னை உண்மையிலேயே மன்னிச்சிட்டீங்க தானே" என்க...

விக்ரமின் பொறுமை காற்றில் பறக்க ஓங்கி அவள் தலையில் கொட்டியவன்

"ஏண்டி நமக்குள்ள இவளோ நடந்த பிறகும் உன்னால் எப்படி இந்த கேள்வியை கேட்க முடிகிறது" என்றவனை பார்த்து

"நீங்க இன்னும் உங்க லவ்வை சொல்லவே இல்லையே" என்க,

அவனோ கைகளை கட்டியபடி "மேடம் எத்தனை தடவை என்கிட்ட சொல்லியிருக்கீங்க..?" என்றான் அதிரடியாக.


"அது...அது நீங்க சொன்ன பிறகு சொல்லலாம் என நினைத்தேன்" என்க…

அவனோ அடக்கப்பட்ட சிரிப்போடு
"ஆனா நீ என்னை காதலிப்பது உனக்கு தெரியும் முன்பே எனக்கு தெரியும்.எப்படின்னு கேட்கிறாயா..? என்றவன், உன் கண்ணு இந்த வீட்டில் எங்க இருந்தாலும் என்னையே தேடும்,என்னைப் பார்த்தவுடன் உன் கண்ணில் தோன்றும் ஒருவித மயக்கம் ,என்கிட்ட நீ பேசாத போதிலும் தூராமாக இருந்து நீ என்னை சைட் அடிச்சது எல்லாமே எனக்கு தெரியும்.இது காதல் தான் என்று நீ முடிவெடுக்கும் முன்பே உன் காதலை அறிந்தவன் நான்….ஆனால் நீ, கணவன் மனைவியாக நம்ம வாழ்க்கையைத் தொடங்கிய பின்பும் இப்படி கேட்கிறாய் எல்லாம் என் விதி. இப்போ என்ன நான் என் காதலை சொல்லனும் அவ்வளவு தானே" என்றவன் அவள் முகத்தை கைகளில் தாங்கி

 

Anjali

Well-known member
Wonderland writer
"நான் என் செல்லக்குட்டியை உயிருக்கு உயிரா விரும்புறேன் காதலிக்கிறேன்"...இப்போ இல்ல உனக்கு பத்து வயதாக இருக்கும் போதே ஆனா அப்போ அது காதாலா,காதல் என்றால் என்ன ? என்பதெல்லாம் தெரியாது. உன் மேல எனக்கு மட்டும் தான் உரிமையிருக்கு வேற யாருக்கும் உரிமையில்லை என்ற எண்ணம், ஒரு வித பொசசிவ்னஸ். அப்போ அது மட்டும் அதிகமாக இருந்தது" என்றவன்.


"அப்பறம் நான் காலேஜ் படிக்கும் போது தான் இது காதல் என்று எனக்கே புரிந்தது என்றான். என் காதலை இதுவரைக்கும் வாய் வார்த்தையாக சொல்லவில்லையே தவிர என் செயலில் காட்டிதான் இருக்கிறேன்.
இப்போ நீ சொல்லு
... நான் என் காதலை சொல்லிட்டேன் இப்போ உன் டர்ன்" என்க,

வேகமாக மாட்டேன் என்பது போல் தலையாட்டியவள் "அதெல்லாம் நான் இன்னைக்கு சொல்லமாட்டேன் அப்பறம் சொல்றேன்" என்றவளை கரம் பற்றி இழுத்தவன்

"கேடி சொல்லமாட்டியா... அத்தானை பார்த்தா பாவமாக இல்லையா" என நக்கலாக கேட்க,

"நீங்க என்ன சொன்னாலும் இன்னைக்கு சொல்ல மாட்டேன் என்றவள்...நீங்களும் இப்போவே சொல்லு என கட்டாயப்படுத்த கூடாது சரியா ப்ராமிஸ்" என கைகளை நீட்ட அவனும் அவள் கரம் மேல் கரம் வைத்தான்.


"அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம் கேட்கணும்" என்றவளை பேசவிடாமல் காதுமடலை உதட்டினால் உரசியப்படி,

"நமக்கு கூட தான் ஒரு முக்கியமான வேலை இருக்கு என்றவன், மற்ற எல்லாத்தையும் நாளைக்கு பேசிக்கலாம். இப்போ அத்தானை கவனிடி" என்றவனின் முகத்தை தன்னிலிருந்து பிரித்து எடுத்தவள்...

"நேற்றில் இருந்து உங்ககிட்ட கேட்கணும் நினைத்திருந்தேன் அத்தான், இப்போ தான் டைம் கிடைத்தது" என்க..

"நல்லநேரம் பார்த்த" என மனதுக்குள் திட்டிக்கொண்டே வெளியே சொல்லு என்றான்.


"அத்தான்... என மெல்ல ஆரம்பித்த நந்தினி, நான் ஒன்னு கேட்பேன் ஆனா நீங்க கோபப்படாமல் பதில் சொல்லணும்" என வார்த்தைகளை இழுத்தவளை,

அவனும் அவள் இடையோடு கைத்தொடுத்து இழுத்தவன் தன் மடியில் அமர வைத்து "ஏதுவாக இருந்தாலும் இப்படியே சொல்லு" ? எப்படியும் கோபப்படுத்துவது போல தான் கேட்க போகிறாய்,அதற்கு நீ இப்படி தள்ளி நின்றாள் நான் எப்படி உனக்கு தண்டனை கொடுப்பது..இப்படி மடியில் இருந்தால் தண்டிக்க வசதியாக இருக்கும் என்றபடி கன்னத்தை செல்லமாக கடித்தவன்…"சீக்கிரம் கேட்க வந்ததை கேள். நான் பணிஷ்மெண்ட் கொடுக்க ஆவலாக இருக்கேன்" என்றவனை பார்த்து



"அது..துது...து.... என தயங்கியவாறே, உங்களுக்கும் ஆதிக்கும் என்ன பிரச்சனை அத்தான். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஒற்றுமையாக தானே இருந்தீங்க ? அப்பறம் எப்படி பிரிந்தீர்கள்" என எங்கே கோபத்தில் அடித்திவிடுவானோ என பயந்தபடி ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஓரக்கண்ணால் அவனை பார்க்க...அவனோ எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமார்த்திருந்தான்.


"இல்ல அத்தான் நேற்று நீங்க வரவில்லை என்றவுடன் நாங்க எல்லாருமே
பயத்தில் இருந்தோம் ஆனா ஆதி மட்டும்
ரொம்ப நிதானமா எப்பவும் போல இருந்தான்.ஆனால் உங்களுக்கு ஒன்னும் ஆகியிருக்காது" என அவன் சொல்லும் போது குரலே ரொம்ப உறுதியாக இருந்தது என்றவள்,

"அவனுக்கு தெரியுமா நீங்க எங்கே இருந்தீங்க என்று.? என்றவளின் கேள்விக்கு "இல்லை" என்பது போல் தலையை மட்டும் ஆட்டினான்.ஆனால் வாயை திறக்கவில்லை.



அவளும் மெல்ல தைரியத்தை வரவைத்து "பிளீஸ் அத்தான், நீங்க இப்படி பிரிந்திருக்க என்ன காரணம்னு மட்டும் சொல்லுங்களேன்..! நானும் பலமுறை ஆதியிடம் கேட்டு இருக்கிறேன் ஆனால் அவன் பதில் சொல்லவே மாட்டான்" என சலித்துக் கொண்டவள்,

விக்ரமின் கன்னம் தாங்கி "எனக்காக சொல்லுங்க அத்தான்" என கெஞ்சியவளை அழுத்தமாக பார்த்து,

"போய் கண்ணாடியின் முன்பு நின்று பார், யாரு காரணம் என உனக்கே தெரியும்" என்க...

என்ன சொல்கிறார் இவர் என்ற யோசனையோடு அவன் கூறிய வார்த்தையின் பொருளை ஆராயாமல் அவளும் சட்டென்று அவன் மடியில் இருந்து எழுந்து கண்ணாடியை நோக்கி சென்றாள். கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை புரியாமல் பார்த்தவள்,புரிந்த நொடி வேகமாக விக்ரமின் புறம் திரும்பியவள் "நானா அத்தான் காரணம்" என அதிர்ந்து கேட்டாள். அவனும் மௌனமாக தலையை மட்டும் ஆட்டினான்.
 
Status
Not open for further replies.
Top