ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 15


"அய்யோ விடுங்க... அ... அ...என தயங்கியவள், பின் விடுங்களேன் யாராவது வர போறாங்க..?" என சொல்ல.

அவனோ கையை விட்டவன்,வலிக்கும்படி அழுத்தமாக அவளின் கன்னத்தை ஒரு கையால் பிடித்தவன் "எதுக்காக இப்படி யாருகிட்டயோ பேசுற மாதிரி பேசுகிறாய்..?" என்றபடி அழுத்தத்தை கூட்ட,

"ஆ.. ஆ..வலிக்குது விடுங்க" என திரும்பவும் அதே மாதிரி சொல்ல..இப்போது அவளை பிடித்து சுவரோடு சாய்த்தவன் "என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனதில்,மரியாதையா எப்பவும் என்னை எப்படி கூப்பிடுவாயோ அதே மாதிரி கூப்பிடு, இல்லனா என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" என கோபத்தில் பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான்.


அவளோ திருத்திருவென முழித்தவள் "உங்களுக்கு தான் அத்தான் என்று கூப்பிட்டா பிடிக்காது என சொல்லி நந்தனாவை தள்ளிவிட்டிங்களே, அதான் அப்படி கூப்பிடவில்லை" என பயத்துடன் சொல்ல…கையை கொஞ்சம் தளர்த்தியவன்,

அவள் கன்னத்தை வருடியபடி "நான் உங்கிட்ட இதுவரைக்கும் அப்படி சொல்லிருக்கேனா..?" என கேட்க,அவளோ இல்லை என தலையாட்டினாள்.


"அப்பறம் எதுக்கு லூசு மாதிரி இப்படி நடந்துக் கொள்கிறாய், அவளும் நீயும் ஒன்றா…? இப்போ நான் சொல்வதை இந்த மூளையில் நன்றாக ஏற்றிக்கொள் என்றவன், என்னை அத்தான் என கூப்பிட இந்த உலகத்திலேயே உனக்கு மட்டும் தான் உரிமையிருக்கு புரியுதா...சரி இப்போ கூப்பிடு" என சொல்லியபடி கைக்கட்டி நிற்க,அவளோ யாரை என கேட்டாள்.


"செத்துப்போன உன் தாத்தாவை என திட்டியவன்,இவளோ நேரம் எதை பற்றி சொல்லிட்டு இருந்தேன்,இப்படி ஒன்னும் தெரியாத குழந்தைபோல் முழிக்கிறதை நிறுத்துடி. உன்னை பார்த்தால் யாராவது டாக்டர் என சொல்வார்களா…?' என கத்தியவன் பின்னர் என்னை நீ எப்பவும் கூப்பிடுவது போல் இப்போ கூப்பிடு" என அவள் விழிகளை பார்த்தபடி சொன்னவன்,அவள் உதிக்கும் வார்த்தைக்காக காத்திருந்தான்.


நந்தினியோ அதுவரை உதட்டை கடித்து தலைகுனிந்து நின்றவள் மெல்ல விழி மலர்த்தி "விக்ரம் அத்தான்" என கொஞ்சும் குரலில் அழைக்க...விக்ரம் தன் சித்தம் தொலைத்தான். சுவற்றில் சாய்ந்து விழி மூடியவன்,சாகடிக்கிறடி என தன் கேசத்தை கலைத்து தன்னை சமன் செய்தவன்,அவள் அருகில் வந்தான்.


"யாருடி உனக்கு இந்த புடவை கட்டிவிட்டது" என கேட்க,அவளோ "அம்மா" என்றாள்.


"உனக்கு கட்ட தெரியாதா..?" என்பதற்கு , உதட்டை பிதுக்கி இல்லை என்பது போல் தலையாட்ட...

அவனோ அவளை நெருங்கி இடையை பற்றியவன் அவளின் திகைத்த பார்வையை கண்டுகொள்ளாமல் "இது என்ன கண்காட்சியா" என்றபடி இடையை வருடியவன், ஒழுங்கா புடவையை கட்டு,இதை பார்க்க எனக்கு மட்டும் தான் உரிமையிருக்கு" என்றவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான். உள்ளே நந்தினியோ அவன் முத்தத்தில் முதலில் திகைத்தவள்,இதுவும் கனவா இருக்குமோ என சுற்றி பார்க்க..இது கனவாக இருக்க வாய்ப்பில்லை என்பதற்கு சான்றாக அவள் விக்ரமின் அறையில் நின்றிருந்தாள்.


"அப்போ எல்லாமே உண்மை தானா..? ஆனா ஏன் இப்படி..?" என பலவாறு குழம்பியவள்,நேரம் கடப்பதை உணர்ந்து வெளியே செல்ல காலெடுத்து வைத்தவள்,பின்னரே ஏதோ ஞாபகம் வந்தவளாக சேலையை இடையை மறைத்தபடி பின் செய்துவிட்டே வெளியே வந்தாள்.


வெளியே வந்தவளின் பார்வை விக்ரமை தேட அவனோ ஒன்றும் நடவாததை போல் லேப்டாப்பை மடியில் வைத்தபடி அதிலேயே மூழ்கி விட்டான்.

இவன் தான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு அப்படி நடந்துக்கொண்டான் என சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள்.அப்படி இருந்தது அவனது நடவடிக்கை. அவள் கீழே சென்ற பிறகே தலையை நிமிர்த்தியவன் சிரித்துக்கொண்டே தனது வேலையை தொடர்ந்தான்.


தன் அறையில் அமர்ந்திருந்த சந்தியா கீ கொடுத்த பொம்மை போல் அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். நீங்க நிற்க சொன்னால் நிற்கிறேன் உட்கார சொன்னால் உட்கார்கிறேன் என்ற ரீதியில் இருந்தது அவள் செயல். யாருக்கோ நடக்கும் விசேஷத்திற்கு விருப்பமே இல்லாமல் கிளம்புவது போல் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் மற்றவர்கள் விருப்பத்திற்காக அமைதியாக அனைத்தையும் சகித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.



அங்கு மதன் மும்பை வந்து சேர்ந்தவன்,நாளை தான் வேலையில் ஜாயின் பண்ண வேண்டும் என்பதால்,தனக்கென வழங்கப்பட்ட பிளாட்டில் விட்டத்தை வெறித்துக்கொண்டு படுத்திருந்தவன் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது.

தன் மொபைலில் உள்ள அவளின் புகைப்படத்தை வருடியவன் அதில் தன் முத்தத்தை பதித்து.. "ஏண்டி என்னை போய் காதலித்தாய்..? உன் காதலுக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நான்" என புலம்பியபடி கடிகாரத்தை பார்த்தவன்,இந்நேரம் நிச்சயதார்த்தம் தொடங்கியிருக்கும் என எண்ணும் போதே மனம் தன்னவளை இழக்கப் போகிறோம் என கதறித்துடித்தது.


பதுமைப்போல் வந்தவள் ஹாலில் அனைவரையும் வணங்கிவிட்டு அமர..விழா தொடங்கியது.நிச்சய பத்திரம் வாசிக்கப்பட இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் என பெரியோர்களால் பேசி முடிக்கப்பட்டு, தாம்பூல தட்டை இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொள்ள திருமணம் இனிதாய் உறுதி செய்யப்பட்டது.


வந்தது முதல் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள் சந்தியா. இன்னும் அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை கூட பார்க்கவில்லை,பார்க்க விருப்பமும் இல்லை. மாப்பிள்ளை கோலத்தில் பட்டுவேட்டி சட்டையில் கொஞ்சமும் முகத்தில் சந்தோஷம் இல்லாமல் ஃபோனை நொண்டிக்கொண்டு அமர்ந்திருந்தான் ரோஹித்.

விக்ரமின் பார்வை மொத்தமும் அவன் வீட்டினுள் நுழைந்தது முதல் ரோஹித்தை தான் நோட்டமிட்டது.அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பது அப்பட்டமாக அவனின் நடவடிக்கையிலேயே தெரிந்தது.


"ஹாய் ஐம் விக்ரம்" என தன்னை அறிமுகப்படுத்தியவன் அவனிடம் பொதுவாக அமெரிக்கா வாழ்க்கை அவனுடைய வேலை பற்றி பேசியவன்,இங்க சென்னையில் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போவதாக சொன்னாங்க..? எங்கே, என்ன பிஸ்னஸ்..? என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டபடி வாங்களேன் அப்படியே வீட்டை சுத்திப் பார்த்துட்டே பேசலாம்" என அழைத்தவன் மாடியை நோக்கி அழைத்து சென்றான்.


சுமார் ஒரு நேரம் இருவரும் பேசிவிட்டு,சிரித்தபடி கீழே இறங்கி வர..பார்த்திருந்த அனைவரின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தது,இருக்காதா பின்னே வீட்டில் இருப்பவரிடமே அளந்து பேசுபவன்,சிறிது நேரத்திற்கு முன்பு பார்த்த ஒருவனிடம் சிரித்தபடி பேசியது அதிசயம் தானே.

"என்னப்பா என்ன சொல்றார் மாப்பிள்ளை..?" என்ற தந்தையை பார்த்து,மெல்ல புன்னகைத்தவன், தன் மாமன் ராகவன் அருகில் அமர்ந்து அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் "வாழ்க்கையிலேயே நீங்க பண்ண ஒரே நல்ல காரியம் இந்த சம்பந்தம் தான்" என்றவன் அவரை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான்.


ராகவன் சந்தேகமாக விக்ரமை பார்த்தவர் 'என்ன சொல்றான் இவன் உண்மையிலேயே என்னை பாராட்டுகிறானா..? இல்லை கலாய்கிறானா..? ஒன்னும் புரியலையே, ஏதுவாக இருந்தாலும் இவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.சரியான எமகாதகன்' என எண்ணியவாறு வந்தவர்களை வழியனுப்ப சென்றார்.


நாட்கள் வேகமாக செல்ல...அன்று வழக்கத்திற்கு அதிகமாக கோபத்தில் இருந்த விக்ரம் ஆபீஸில் அனைவரையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டான். புதிதாக தொடங்கிய ப்ராஜெக்ட்டில் ஏதோ தவறாகிவிட்டது என அதனை பற்றிய சிந்தனையில் முழுதாக தனது கவனத்தை செலுத்தி,அதற்கான தீர்வை ஆராய்ந்து கொண்டிருந்தான்.


விக்ரமின் அறைக்கு வெளியே நின்று.. "கைகளை பிசைந்து கொண்டு உள்ளே செல்லலாமா வேண்டாமா" என கைகளை கதவை நோக்கி நகர்த்துவதும் பின்வாங்குவதுவாக இருந்தாள் தர்ஷினி.


அவளின் செய்கையை பார்த்துக்கொண்டிருந்த அவள் தோழி சவிதா "எதுக்கு இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க ஒன்னு உள்ள போ, இல்லனா வந்து உட்காரு. லீவ் கேட்கிறதுக்கு இவளோ பயமா" என கத்த…. மனதில் தைரியத்தை வர வைத்தவள் ,கதவை லேசாக தட்டி "மே ஐ கம் இன் சார்" என்க…


அதுவரை கையிலுள்ள கோப்பையில் மூழ்கியிருந்தவன் " கம் இன்" என்றான் தன் கம்பீர குரலில்.

அதுவரை இருந்த தைரியம் மொத்தமும் வடிந்து போக…உள்ளே நுழைந்தவளுக்கு "என்ன பேச வந்தோம்..?" என்பதே சுத்தமாக மறந்துவிட்டது.


உள்ளே நுழைந்ததிலிருந்து அவளையே துளைத்தெடுக்கும் விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தவன் " வாட் " என்க...அந்த குரலில் தன்னை மீட்டவள் அதுவந்து...அது…" டூ டேஸ் லீவ் வேண்டும்" என்க…


"ஐ திங்ஸ் யூ ஆர் தேர் இன் நியூ ப்ராஜெக்ட் ரைட் " என்றவனை பார்த்து பயத்தை விழுங்கியவள்…"எஸ் சார்" என்க,

"அப்போ உங்களுக்கு பதிலா அந்த ப்ராஜெக்ட் வொர்க்கை நான் பாக்கணுமா..?" என நிதானமாக கேட்க…இல்லை என அவசரமாக தலையாட்டியவள்….
"நாளைக்கு என்னோட நிச்சயதார்த்தம்" என்றாள்.


அவளின் பதிலில் அதிர்ந்தவன் அதை முகத்தில் காட்டாமல் "வாட் கம் அகைன் " என திரும்பவும் கேட்க….

அவளோ "என்னோட எங்கேஜ்மெண்ட் சார்" என்றாள் கொஞ்சம் அழுத்தமாக.

அவனோ சிறிது நேரம் அவளையே பார்த்தவன் "ஓகே டேக் லீவ்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.


போகும் அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்,நடக்க போகாத கல்யாணத்திற்கு ஒரு எங்கேஜ்மெண்ட் வேற. முதலில் நிச்சியதார்த்தமே நடக்க வாய்ப்பில்லை என தோள்களை குலுக்கியவன் தன் வேலையை கவனிக்க தொடங்கிவிட்டான்.


சிறிது நேரத்தில் மீண்டும் அறைக்கதவு தட்டப்பட எரிச்சலானவன்,உள்ளே வந்தவனை யோசனையாக பார்த்தவாறே அமர சொன்னவன் "என்ன" என்க,

"எனக்கும் டூ டேஸ் லீவ் வேண்டும் என்றவன், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் திவ்யாவுக்கு எனக்கும் நாளைக்கு" என ஆரம்பித்து அனைத்தையும் சொன்னவன் விக்ரமின் பதிலுக்காக அவன் முகம் பார்க்க

விக்ரமோ அவன் எதிர்பார்ப்புக்கு மாறாக "கங்கிராட்ஸ் என சிரித்தவன் தாராளமா "டூ டேஸ் என்ன..? டூ வீக்ஸ் கூட எடுத்துக்கோங்க. நான் லீவ் அப்ரூவ் பண்றேன்" என சொல்ல... கேட்டுக்கொண்டிருந்த மகேஷ்க்கு வியப்பாக இருந்தது.

விக்ரமிடம் அவ்வளவு சீக்கிரம் சிரிப்பை பார்க்க முடியாது அப்படிப்பட்டவன் இன்று இயல்பாக சிரித்தது மட்டுமில்லாமல் கேட்டவுடன் லீவ் கொடுத்ததும் நம்ம முடியாமல் தன் கையை தானே கிள்ளி பார்த்துக்கொண்டான்.பின்னர் பல நன்றிகளை சொல்லிவிட்டு சந்தோஷமாக வெளியே வந்தவன்,தன் இருக்கையில் அமர்ந்து ஃபோனை எடுத்து தன் நண்பர்களை அழைத்து இன்று பாரில் பார்ட்டி இருப்பதாக சொல்லிவிட்டு மகிழ்ச்சியாக வேலையை தொடர்ந்தான்.


மாலை வழக்கம் போல்… திவ்யா வேலை முடிந்தவுடன் வீட்டிற்க்கு செல்ல தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய,அதுவோ ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ண தொடங்கியது. மழை வேறு வரும் போல் இருக்க ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு மெக்கானிக் ஷாப் நோக்கி சென்றாள்.மகேஷ் இதற்கு முன்பு பலமுறை அவளை பைக்கில் வரும்படி அழைத்தும் அவள் வராததால்,அவளை பற்றி கண்டுகொள்ளாமல் அவனும் சென்றுவிட்டான்.


மெக்கானிக் ஷாப்பில் வண்டியை நிறுத்தியவள்,அது சரியாகும் வரை காத்திருக்க... மழை பெய்யத் தொடங்கியது. மழைக்காக அருகிலுள்ள கடையில் ஒதுங்கி நிற்க,தனக்கு மிக அருகில் யாரோ நிற்கும் அரவம் கேட்க,திரும்பி பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் தள்ளி நின்றாள்.


தள்ளி நின்றவளின் கைபிடித்து தடுத்த ஆதி,அவள் கையை விடுவிக்க போராடுவதை பார்த்து இன்னும் அழுத்தமாக பிடித்தவன்,மழையை பற்றி கவலைப்படாமல் தரதரவென இழுத்தவன் அவளை காரினுள் தள்ளி கதவை அடைத்துவிட்டு காரை அதிவேகத்தில் செலுத்தினான்.


"என்ன பண்றீங்க நீங்க..? முதலில் காரை நிறுத்துங்க. இல்லனா கீழே குதித்து விடுவேன்" என மிரட்ட..

அவனோ "தாராளமாக குதிக்கலாம் அது உன் இஷ்டம்" என்க..அவளும் காரின் கதவை திறக்க முயல அதுவோ லாக்காகி இருந்தது.


"பிளீஸ் ஆதி" என கெஞ்ச தொடங்கியவளை திரும்பி பார்த்தவன்

"பேசாம அமைதியாக வந்தால் உங்க வீட்டில் கொண்டு விடுவேன், இல்லை நான் இப்படிதான் கத்துவேன் என்றால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை,இதுவரைக்கும் உன்னை கடத்தும் எண்ணம் எனகில்லை அதுதான் உன் விருப்பமென்றால் எனக்கும் ஓகே…அரேஞ்ச் மேரேஜ், ஓடிப்போய் கல்யாணம் பண்றதெல்லாம் ஓல்டு ஃபேஷன். அதில் என்ன த்ரில் இருக்கு சொல்லு..? இதுவே உன்னை மாதிரி அழகான பொண்ணை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணாலும் சரி, இல்ல டைரக்டா ஃபர்ஸ்ட் நைட் என்றாலும் சரி அதில் இருக்கும் த்ரில்லே செம்ம" என்றவன் அவள் முகம் பார்க்க...அவளோ அவன் சொன்ன விஷயத்தில் பயத்தில் உடல் நடுங்க அமர்ந்திருந்தாள்.


எட்டி அவள் கையை பிடித்தவன் அவள் நடுக்கத்தை உணர்ந்தவாறே "கவலைப்படாதே திவி பேபி எனக்கு அதுமாதிரி எந்த ஐடியாவும் இல்லை" என சொன்ன பிறகே அவள் மூச்சு சீரானது. அவளை ஓரக்கண்ணால் சைட் அடித்துக்கொண்டே சென்றவன் சாலையின் ஒரு மரத்தடியில் காரை நிறுத்தினான்.


அவள் என்ன என்பது போல் பார்க்க..."கொஞ்சம் மழை கம்மியாகட்டும் என்றவன் , ஒருவேளை என்மேல் நம்பிக்கை இல்லனா சொல்லிடு இப்போவே உன் வீட்டில் கொண்டு விடுகிறேன்" என்றான் அவளையே அழுத்தமாக பார்த்துக்கொண்டு…"அப்படியெல்லாம் ஏதுமில்லை" என உடனடியாக பதில் சொன்னவள்,அமைதியாக கொட்டும் மழையை வெறித்தாள்.

ஆல்ரெடி மழையில் கொஞ்சம் நனைந்த்திருக்க...இப்போது காரின்
ஏசி காற்றில் உடல் மெலிதாக குளிரில் நடுங்கிய தொடங்க,அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் காரின் ஏசியை அணைத்துவிட்டு காரிலிருந்த டவலை எடுத்து துவட்டி கொள்ளும்படி கொடுத்தான். அவன் அக்கறையில் நெகிழ்ந்தவள் அதனை வாங்கிக்கொண்டாள்.


சிறிது நேரம் கொட்டும் மழையின் சத்தத்தை தவிர எந்த சத்தமும் இல்லாமல் காரே அமைதியிலிருக்க...மெல்ல பேச்சை தொடங்கினான் ஆதி.

"நாளைக்கு என்ன விசேஷம்" என கேட்க,அவளோ கண்களில் கலக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள்.

"அதான் பிடிக்கலை இல்ல, வாயை திறந்து உங்க அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே எனக்கு மகேஷை பிடிக்கலைனு. எதுக்கு அமைதியா இருந்து சாகடிகிற' என முதல்முறை தன் கோபத்தை அவளிடம் காட்டியவன், எல்லா நேரமும் இந்த அமைதி உன்னை காப்பாற்றாது திவ்யா…நமக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றாலும் சரி வேண்டாமென்றும் சரி நாம தான் அதுக்காக பேசணும் போராடனும். இது ஒன்னும் சினிமா இல்லை யாராவது வந்து நம்மை காப்பாற்ற... புரியுதா..?" என அவள் முகம் பார்க்க...அவளோ அவனின் கோப முகத்தை பார்த்த அதிர்ச்சிலிருந்தே வெளி வராதவள் எங்கே அவன் சொன்னதை கவனித்தாள். அவளின் நிலையை கண்டே அவள் மண்டையில் ஒன்றும் ஏறவில்லை என உணர்ந்தவனுக்கு இப்போது கோபத்திற்கு பதில் சிரிப்பு தான் வந்தது.


அவள் தோளை தொட்டு உலுக்கி, நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தவன். "இவளோ நேரம் நான் என்ன சொன்னேன் என்று நினைவிருக்கா" என கேட்க ...அவளோ தலையை குனிந்தபடி இல்லை என தலையாட்டினாள்.

அவனும் முதலில் சிரித்தவன் பின் சீரியஸான குரலில் "நாளைக்கு என்ன பண்ணுவதாக இருக்கிறாய்" என கேட்க..அவளோ பேந்த பேந்த முழித்தாள்.அப்படியே ஓங்கி மண்டையில் ஒன்று போடவேண்டும் போல் இருந்த ஆசையை கைவிட்டவன்...கோபமாக

"அப்போ அவனை தான் கல்யாணம் பண்ணிக்க போறியா"..? என எரிந்து விழ...

கண்களில் கண்ணீரோடு "அதெல்லாம் ஒன்னும் இல்ல,கல்யாணத்தை நிறுத்த முடியவில்லை என்றால் செத்துடுவேன்" என்றாள்.

அதுவரை அவளிடம் கோபத்தை காட்ட கூடாது என கட்டுப்படுத்தியவன் விட்டான் ஒரு அறை,கன்னம் வின் வின் என தெறிக்க,பட்டு போன்ற மென்மையான கன்னம் சிவந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட தொடங்கியது.


"பைத்தியக்காரி... பைத்தியக்காரி ,நான் இருக்கும் போதே அதுவும் எங்கிட்டயே செத்துடுவேன் என சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் என்றவன்,அப்படியே செத்தாலும் சாவேனே தவிர உன் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சொல்கிறாய் அப்படிதானே. பைத்தியக்காரன் மாதிரி அஞ்சு வருஷமா உனக்காக காத்திருக்கும் எனக்கு இதுதான் பதில் அப்படித்தானே. சொல்லுடி... எதுக்கு அமைதியாய் இருக்க சொல்லு...ஆமாம் அப்படித்தான் டா என சொல்லு, நானும் அப்படியே கண்கானாமல் போய்விடுகிறேன்" என்றான் கோபமாக…


அவளோ முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள்.

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 16


காரின் ஸ்டைரிங்கை அழுத்தமாக பிடித்தபடி தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான் ஆதி. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த அவனால் அதற்கு மேல் தன்னவளின் அழுகையை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. "ஏய்...ஏய் திவி போதும் அழுதது" என்றபடி அவள் அருகே நெருங்கியவன் முகத்தை நிமிர்த்த ...அழுகையில் முகம் சிவந்து உதடு துடிக்க இருந்தவளின் எழில் வதனத்தை கைகளில் ஏந்தியபடி தன் இரு பெருவிரலால் வழியும் கண்ணீரை துடைத்து, கன்னம் வருட..அவனின் செயலில் இன்னும் விம்மல் அதிகரிக்க,அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.


தன்னில் அடைக்கலமாக சாய்ந்திருந்தவளின் தலைவருடியபடி இருந்தவன்,மெல்ல அவளை தன்னிடமிருந்து பிரித்து, நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்தான். தன் கைக்குட்டையை கொண்டு அவள் முகத்தை துடைத்தவன் " போதும்மா அழாதே.... நாளைக்கு உனக்கு பிடிக்காத எந்த விஷயமும் நடக்காது" என்றவன்,அவள் புரியாமல் மலங்க மலங்க முழிப்பதை பார்த்து மெல்ல சிரித்து "நீ எதை பற்றியும் கவலைப்படாமல் இரு" எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றவனின் சொல்லில் தைரியம் பெற்றவள் இனி அவன் பார்த்துக்கொள்வான் என்ற நிம்மதியில் காரின் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.


கார் திவ்யாவின் வீட்டை நோக்கி செல்ல… வீடு வந்தபோது அவள் தூங்கியிருந்தாள்.

"செல்லக்குட்டி இவ்வளவு நேரம் நீ பேசியதற்கும் உன்னோட செயலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா..? என்னை பிடிக்காமல் காதலிக்காமல் என்னோட அருகாமையில் உன்னால் இப்படி நிம்மதியாக தூங்கமுடியுமா…? இன்னும் உன்னுடைய மனதில் என்ன இருக்கு என்றே புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் உன்னிடம்,என்னை புரிந்துகொள்ள சொல்வது முட்டாள்தனமான செயல்தான். இனி என்னுடைய முதல் வேலையே உன் காதலை வெளிப்படுத்த வைப்பது தான்" என்றபடி தூங்கும் தன் பொன்னோவியத்தை ரசித்தவன், தோளை தொட்டு மெல்ல உலுக்க... விழித்திறந்தவளின் எதிரில் மயக்கும் புன்னகையோடு கைக்கட்டி அமர்ந்தவனை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதித்தவள் மெல்ல சுற்றிப்பார்க்க அப்போது தான் வீட்டுக்கு அருகில் வந்துவிட்டது தெரிந்தது.


மெல்ல தன் கைப்பையை எடுத்தவள்,அவனை நிமிர்ந்து பார்த்து நான் கிளம்புகிறேன் என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டியவள்,காரை விட்டு இறங்கி அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி வீட்டினுள் சென்றாள்.


போகும் அவளை பார்த்தபடி இருந்தவன்,ஒரு பெருமூச்சைவிட்டு 'இப்போவே கண்ணைக் கட்டுதே, இன்னும் அந்த விளங்காதவனை என்ன பண்றது' என எண்ணியவாறு காரை கிளப்பினான்.


தான் வேலை செய்யும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றவன்,வாசலில் நின்றவாறு நந்துவுக்கு ஃபோன் செய்துவிட்டு அவளின் வருகைக்காக காத்திருந்தான். சற்று நேரத்தில் அவளும் வந்துவிட,காரில் ஏறியவுடன் "எனக்கு ஐஸ்கிரீம் வேணும்" என்க…

"ஏண்டி லூசு... நான் இருக்குற நிலைமை என்ன, உனக்கு ஐஸ்கிரீம் வேணுமா..?" என மண்டையில் ஒரு கொட்டு வைத்தவன்,காரை ஐஸ்கிரீம் பார்லரில் நிறுத்த, அதுவரை அவன் அடித்ததில் முகத்தை "உம்" என்று வைத்திருந்தவள் சிரித்துக்கொண்டே இறங்கினாள்.


தனக்கு பிடித்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு கொண்டே.. "ஆதி எதுக்கு இப்போ இவளோ டென்ஷனா இருக்க..? உன் ஆளுக்கு எங்கேஜீமெண்ட் தானே, என்னமோ கல்யாணம் நடக்க போகிற மாதிரி,தேவதாஸ் ரேஞ்சுக்கு சோகமா உட்கார்ந்து இருக்க.. அவனெல்லம் ஒரு டம்மி பீஸ், அன்னைக்கு மாதிரி நாலு தட்டு தட்டின்னா ஓடியே போயிடுவான். அதுக்கு போய் முகத்தை 'உர்' என்று வச்சுகிட்டு பார்க்கவே நல்லா இல்லை என சொன்னவள்,எப்பவும் உன்னுடன் வரும் போது இருக்குற மொத்த பொண்ணுங்களோட கண்ணும் உன்மேல் தான் இருக்கும், இன்னைக்கு உன்னோட சோக முகத்தை பார்த்துட்டு ஒருத்தியும் திரும்பி கூட பார்க்கலை" என கிண்டல் செய்தவளை பார்த்து

"வாயாடி சீக்கிரம் சாப்பிடு. எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு உன்னை வீட்டில் விட்டுட்டு தான் போகணும்" என்றான்.


அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருக்க...அப்போது அவனுக்கு ஃபோன் வர, அதனை ஏற்றவன் சற்று நேரம் பேசிவிட்டு "இன்னும் கொஞ்ச நேரத்தில் வரேன்" என சொல்லிவிட்டு வைத்தவன், ஒருவழியாக நந்துவை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

சற்று தூரம் சென்ற கார் சற்றேன்று நின்றுவிட… இது வேறா..? இன்னைக்கு நேரமே சரியில்லை,என்ன பிரச்சனை என பார்த்தவன் இப்போது கார் ஸ்டார்ட் ஆகாது என்றுணர்ந்து "நந்து நான் கேப் புக் பண்றேன் அதுல வீட்டுக்கு போய்விடு, நான் காரை சர்வீஸ்க்கு விட்டுட்டு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்" என்றவன் கேப் வரும்வரை காத்திருந்தான்.


அப்போது நந்து அருகே ஒரு கார் வந்து நிற்க...பார்த்தவுடன் தெரிந்துவிட்டது அது யாருடையது என்று.

அப்படியே தயங்கி நின்றவளுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தெரியவில்லை,திருதிருவென முழித்தவாறு ஆதியையும் காரினுள் அமர்ந்திருந்த விக்ரமையும் மாறிமாறி பார்த்தவள், 'அடப்பாவிங்களா... ரெண்டு பேரும் வாயை மூடிக்கொண்டு இப்படியே நின்றால் நான் என்ன செய்வது' என்பதுபோல் பார்க்க...காரின் முன்பக்க டோரை திறந்த விக்ரம்,அவளை பார்க்காமல் ரோட்டை பார்த்துக்கொண்டிருந்தான்.


ஆதியோ "அடப்பாவி பயலே உனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு என்று நினைச்சேன், இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் இருந்துகிட்டு ரோமியோவையே மிஞ்சிவிடுவான் போல...நந்து மக்கு சாம்பிராணி பயத்திலேயே அவன் சொல்வது எல்லாத்துக்கும் தலையாட்டுகிறாள், நமக்கும் ஒருத்தி இருக்காளே வச்சு செய்றா" என புலம்பியவன்…. கொடுத்துவைத்தவன் "என்ஜாய்" என நினைத்தவாறு, "நந்து நீ கிளம்பு" என்றவன் காரில் ஏறும்படி சைகை செய்துவிட்டு கார் கிளம்பியவுடன் தானும் வர வைத்த கேபிள் ஏறினான்.


காரில் ஏறியது முதல் ரோட்டையே பார்த்துக்கொண்டிருந்த நந்துவை முறைத்த விக்ரம் "ஏன் மேடம் அவன் சொன்னாதான் என் காரில் ஏறுவாளோ"..? என கோபம் கொண்டவன்,வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பி, அவளை தன்னை பார்க்கும் படி திருப்பியவன் "என்கூட வர அவன்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு தான் வருவியா..? அப்போ நான் யார் உனக்கு" என்க...

அவளோ பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அது இன்னும் அவனின் கோபத்தை அதிகரிக்க செய்ய,அவளை வலுக்கட்டயமாக திருப்பியவன் பதில் சொல்லு என்றான்.

"என்ன சொல்லனும் அத்தான்...? எப்பவும் ஆதி தானே என்னை அழைச்சிட்டு போறான்,நீங்க இன்னைக்கு புதுசா வந்து வா என்று சொன்னால் எப்படி வரமுடியும், அதான்" என்றவளின் மீதுள்ள பிடியை விட்டவன், அவள் ஏதோ பேச வரும் முன் கைநீட்டி அதற்கு மேல் பேசாதே என்பதுபோல் தலையாட்டியவன்,

காரின் டோரை திறந்து "கீழே இறங்குடி" என கர்ஜிக்க..அவனின் கோபத்தில் பயந்து "எதுக்கு அத்தான்" என திணறியப்படி கேட்டவளை இழுத்து கீழே இறங்கியவன், காரின் கதவை பட்டென சாத்திவிட்டு அவளை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நந்தினி என்ற ஒருத்தி அங்கே இல்லைவே இல்லை என்பதுபோல் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.


புயல் வேகத்தில் செல்லும் அவனின் காரை வெறித்து பார்த்தவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது.தான் நிற்கும் இடத்தை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தும் முன் அருகே தங்கள் வீட்டின் டிரைவர் காரோடு நிற்க...எதுவும் கேட்காமல் உள்ளே சென்று அமர்ந்துகொண்டாள்.


அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அழுகை வெடிக்க,சத்தம் வராமல் கண்ணீர் வடித்தாள்.


அந்த பெரிய ஃபாரின் மெல்லிய இருளில்,மிதமான ஒலியில் வெஸ்டர்ன் பாடல் இசைத்துக்கொண்டிருக்க...அங்கு ஒரு நிமிடம் கூட இருக்க பிடிக்காத போதிலும், வேறு வழியில்லாமல் ஒரு இருக்கையில் அமர்ந்து மகேஷை பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி. இன்னுமே என்ன செய்து நிச்சயதார்த்தம் நிறுத்துவது என முடிவெடுக்கவில்லை...என்னதான் அவன் மோசமானவனாக இருந்தாலும்,தன் சுயநலத்திற்காக அவனை அடித்தோ உதைத்தோ நிறுத்த மனம் வராமல் வேற என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தவனின் காதில் அடுத்த டேபிளில் தன் நண்பர்களுடன் அமர்ந்தப்படி இருந்த மகேஷ் பேசிக்கொண்டிருந்தது விழுந்தது.


"மச்சான் நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா" என இந்த ஊருக்கு வந்த பின்பு ஃபாரில் அறிமுகமாகி குறுகிய நாட்களில் நண்பர்களான குடிகார,அவனை போலவே மானங்கெட்ட இரு ஜென்மங்களிடம்.

"அவளுக்கு தான் ரொம்ப அழகு என்ற திமிருடா..? அவ சின்ன வயசில் இருந்தே அப்படிதான்,நான் கிட்ட போனாலே முகத்தை சுழிப்பா...ஏதாவது பேசினால் பதிலே சொல்லாமல் நம்மக்கிட்ட தான் பேசுறாங்க என்கிற பெஸிக் மேனர்ஸ் இல்லாமல் வேற எங்கயாவது முகத்தை திருப்பிக் கொள்வாள். அவளை பார்த்தாலே பிடிக்காமல் தான் இருந்தது,அதனாலேயே பல வருஷமா என் மாமா வீட்டுக்கு போகாமல் இருந்தேன், ஆனா போன வருஷம் லீவ்க்கு அம்மாவின் பிடிவாதத்தால் போகும் போதுதான் அவள் அழகில் அப்படியே ஆடிப்போய்ட்டேன்.



அப்படியே தங்க சிலை மாதிரி இருந்தா…? அவளை பார்க்கும் முன்பு வரை அமெரிக்காவை விட்டு வரும் எண்ணம் இல்லாமல் இருந்தது.அங்க இருக்குற சுதந்திரம் இங்க இல்லடா,தினமும் பார்ட்டி பொண்ணுங்க என சொர்கம், ஆனா அந்த வாழ்க்கையையே இவளுக்காக தூக்கிப்போட்டு வந்தால் இப்போவரை என்னோட ஒரே பைக்கில் கூட வரமாட்டேன் என்கிறாள்.நாளைக்கு எங்கேஜ்மெண்ட் முடியட்டும் அப்பறம் இருக்கு அவளுக்கு, கல்யாணத்திற்கு முன்னாடி ஒரு தடவையாவது அவளை" என போதையில் அசிங்கமாக பேசியவனின் வார்த்தையில் அதுவரை பாவம் பார்த்து அடிக்ககூடாது என நினைத்திருந்த ஆதிக்கு, இப்போது அவனை கொல்லும் வெறியே வந்திருந்தது.


'பொறுக்கி நாயே.. உன்னையெல்லாம் அடிக்காமல் விட்டால் என்னையே என்னால் மன்னிக்க முடியாது' என நினைத்தபடி அவன் எப்போது முடித்துவிட்டு எழுவான் என கோபத்துடன் காத்திருந்தான்.

அவனோ ஒன்று,ரெண்டு மூன்று என பாட்டிலின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போக...அதுவரை கோபமாக இருந்தவனுக்கு இப்போது சிரிப்புதான் வந்தது.


ஒருவரால் ஒரே நேரத்தில் இவளோ குடிக்கமுடியுமா என ஆச்சரியமாக பார்த்தவன், அப்போ எப்படியும் இன்னும் ஒரு வருஷத்தில் லிவர் (கல்லீரல்) போய்டும்" அப்படியே அடுத்து "கிட்னி, ஸ்டோமக், லங்க்ஸ்,லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ஹார்ட்" எப்படியும் இன்னும் ஒரு அஞ்சு வருடத்தில் எல்லா உறுப்பும் செயலிழந்து சாக தான் போகிறாய்..? எதுக்கு வீணாக இப்போவே உன்னை கொண்ணு நான் ஜெயிலுக்கு போகணும்' என எண்ணியவன்,அவன் தள்ளாடியபடி எழுந்து செல்லவும்,அவனை பின்தொடர்ந்து,போதையில் பைக்கில் சாவியை போட முடியாமல்,காற்றில் கைகளை அசைத்துக்கொண்டிருந்தவன் கீழே விழப்போக ...அவனை தாங்கிப் பிடித்தபடி தன் காரில் ஏற்றிய ஆதி காரை கிளப்பினான்.


"டேய் நீயே இப்படி தானாக வந்து மாட்டிக்கிட்டியே,கொஞ்சம் கெத்தா பிளான் பண்ணி உன்னை தூக்கலாம் என நினைத்தேன்..? எனக்கு ஒரு மாஸ் சீன் வைக்க விடாம பண்ணிட்டியே டா" என திட்டியவன், அவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட,ஆல்ரெடி குடியின் போதையில் மிதந்து கொண்டிருந்தவன்,அவனின் முதல் அடியிலேயே காரிலேயே சரிந்து விழுந்தான்.

நீ பேசிய பேச்சிற்கு உன்னை கொல்லனும் என்ற வெறியே தோன்றினாலும், இப்போ போதையில் இருக்கும் உன்னை அடிச்சா நான் கோழை, நீ நிதானத்தில் இருக்கும் போது உனக்கு இருக்குடா..? என்றவன் கீழே சரிந்து கிடந்தவனை நிமிர்த்தி திரும்பவும் பளார் என அடித்தவன் "இது என் திவ்யாவை பற்றி அசிங்கமா பேசியதற்கு. மிச்சத்தை நீ தெளிந்த பிறகு வட்டியும் முதலுமாக தருகிறேன்" என சொன்னபடி காரை அதிவேகத்தில் செலுத்தினான்.


காரை திவ்யாவின் வீட்டின் முன்பு நிறுத்த,மகேஷ் போதையில் "அதுக்குள்ள வீடு வந்துடுச்சா மச்சி" என இதற்கும் முன்பு அடிவாங்கியது நினைவில்லாமல் ஆதியின் தோளில் தட்ட….

"உன்னை மாதிரி கேடுகெட்ட ஜென்மத்தை எல்லாம் ஒரு நாளும் என் பிரெண்டாக முடியாது அதனால் மச்சின்னு இன்னொரு முறை சொன்ன வாயை உடைத்துவிடுவேன். எருமை மாடே... அதுக்குள்ள வாங்குன அடியை கூட மறந்திட்டு திரும்பவும் வாங்க ரெடியாக இருக்கிறாய் போல என்றவன், உன்னை இன்னும் அடிக்க தான் நினைத்தேன், ஆனா அதைவிட இது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


அங்க பாருடா.... உன்னோட மொத்த குடும்பமும் நாளைக்கு ஃபங்ஷன்க்கு ரெடி ஆகிட்டு இருக்காங்க..?இப்படியே போய் அவங்க முன்னாடி நில்லு ரொம்ப சந்தோஷப்படுவாங்க,அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் தான்" என சிரித்தவன் அவனை இறக்கிவிட்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.


முழு போதையில் தள்ளாடியபடி வந்த தன் மகனை பார்த்து அதிர்ந்த மகேஷின் அன்னை அவசரமாக அவன் அருகில் சென்று "என்னடா இப்படி வந்து நிற்கிறாய்…? நம்ம சொந்தக்காரங்க முன்னாடி மானத்தை வாங்கிட்டியே 'குடித்தால் உன் ப்ரெண்ட் ரூமில் தங்கிவிட்டு காலையில் வா என சொல்லிதானே அனுப்பினேன்...இப்போ உன் மாமாவுக்கு நான் என்ன பதில் சொல்வது. என் மகன் சொக்க தங்கம், ஒரு கெட்டப்பழக்கமும் இல்லை அப்படி இப்படி என உன்னை புகழ்ந்து வைத்திருந்தேன் ஒரு நிமிஷத்தில் இப்படி பண்ணிட்டியே பாவி பயலே" என அவனை வார்த்தைகளால் வறுத்தெடுத்தவர்,தன் தம்பியிடம் என்ன சொல்லி சமாளிப்பது என யோசிக்க தொடங்கினார்.

தன் தம்பியின் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியும் அதனை தொடர்ந்து வெளிப்பட்ட அருவருப்பான முக பாவனைகளே அவரின் பிடித்தமின்மையை வெளிப்படுத்த…என்ன பண்ணலாம் என தீவிரமாக சிந்திக்க முயன்றார் மகேஷின் அன்னை.


இங்கு வீட்டினுள் நுழைந்த ஆதி,ஆல்ரெடி நேரம் இரவு பத்து மணியை நெருங்கியிருக்க அனைவரும் தங்கள் அறையில் உறங்க சென்றிருந்தனர்.அவனும் நந்தினியை பார்த்துவிட்டு உறங்க செல்லலாம் என எண்ணியபடி அவள் அறை கதவை தட்ட...அதுவரை அழுகையில் கரைந்து கொண்டிருந்தவள்,இந்த நிலையில் தன்னை பார்த்தால் அவ்வளவு தான் என எண்ணியபடி, கதவை திறக்காமல் அமர்ந்திருந்தாள்.

அவனும் ஒருவேளை அதற்குள் உறங்கியிருப்பாள் என நினைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.


விக்ரமிற்கே இன்று தான் நடந்துக் கொண்டது அதிகப்படி என தெரிந்தே இருந்தது. இருந்தாலும் அவனால் அதனை ஏற்க முடியவில்லை அவள் விஷயத்தில் மட்டும் அவளுக்கு எல்லாவற்றிலும் தானே முதன்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை இன்று அல்ல சிறு வயதிலிருந்தே மாற்றிக்கொள்ள முடியவில்லை. அது தன் கூட பிறந்தவன் ஆனாலும் சரி யாராக இருந்தாலும்' ஏன் அது அவளின் அன்னையாக இருந்தாலும்...தனக்கு அடுத்தே அனைவருக்கும் உரிமை என எண்ணினான்.

அதுவே இன்று அவன் நடந்துக்கொண்டதற்கு காரணமும் கூட…அவளை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தவனுக்கு தெரியும் தன்னவள் இந்நேரம் கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பாள் என்று.


அவளை அணைத்து ஆறுதல் படுத்த சொல்லி ஒரு மனம் பரபரக்க.... மற்றொரு மனமோ நான் எதுக்கு ஆறுதல் சொல்லனும், எல்லா தப்பும் அவள்மேல் தான் என ஈஃகோ கொண்ட மனம் எதிராய் யோசித்தது.


தன்னவன் காயப்படுத்தி விட்டான் என திவ்யாவும், தன்னவளை காயப்படுத்தி விட்டேனே என விக்ரமும்,எப்படி இந்த நிச்சயதார்த்தத்தை தன்னவன் நிறுத்துவான்..? என திவ்யாவும், தன்னவளின் நிச்சயம் நின்று விடுமா..? என்ற சந்தேகத்தில் ஆதியும், தன்னவளை இழக்க போகிறோம் என மதனும், தன்னவனின் புறக்கணிப்பில் கண்ணீர் வடித்தபடி சந்தியாவும்...ஆக மொத்தம் மூன்று ஜோடிகளும் சிவராத்திரிக்கு கூட கண்விழிக்காதவர்களை "காதல்" என்ற மூன்றெழுத்து மந்திரம் தூக்கம் தொலைத்து விழித்திருக்க வைத்திருந்தது
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 17

மறுநாள் காலை கண்விழித்த மகேஷ் தலையை கைகளில் தாங்கி பிடித்தபடி எழுந்தமர்ந்தவனுக்கு நேற்று என்ன நடந்தது என்பது சுத்தமாக நினைவில்லை. "எப்படி வீட்டுக்கு வந்தோம் ஃப்ரெண்ட்ஸ் ரூமில் தங்க வேண்டும் என்று தானே முடிவு செய்தேன்" என புலம்ப,அப்போது அறையினுள் நுழைந்த அவன் அன்னை,வந்ததும் வராததுமாக "பளார்" என்று அறைய,

அவனோ புரியாமல் தன் அன்னையை பார்த்தான். அவரும் கோபத்தில் திட்டியபடியே இரவு நடந்ததை சொல்ல...தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

"என்னம்மா சொல்ற..? என்னை யாரு இங்கு அழைத்து வந்தது..? சத்தியமா எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை" என்றவன் தன் தாயின் கையை பிடித்துக்கொண்டு "அம்மா... அப்போ என்னோட நிச்சயதார்த்தம்" என பதற்றத்தோடு கேட்க,

"இப்போ பயந்து என்ன பண்றது சொல் பேச்சை கேட்டால் தானே" என திரும்பவும் ஆரம்பித்தவர் தன் மகனின் முகத்திலுள்ள பரிதவிப்பை பார்த்து "அதெல்லாம் ஒண்ணும் கவலைப்படாதே, ஃப்ரெண்ட்ஸ் மேரேஜ்க்கு பார்ட்டி கேட்டாங்கன்னு சொன்னான்..? அதான் அனுப்பினேன், இப்போ அவனோட நண்பர்கள் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக சொல்கிறான் அதுமட்டுமில்லாமல் முதல் முறை குடித்ததால் இப்படி ரொம்ப தள்ளாடுகிறான் என என்னென்னமோ சொல்லி உன் மாமனை சமாதானப்படுத்தி வைத்திருக்கிறேன்.இனிமேலாவது கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ" என தன் மகனுக்கு புத்திமதி சொன்னவர்...மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு போடவேண்டிய உடையை பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்துவிட்டு சென்றார்.

சிறிது நேரத்தில் காஃபியும் வந்துவிட,அதை குடித்தவனின் தலைவலி சற்று குறைந்தது போல் இருக்க...தனது மொபைலை தேட அது அங்கு இல்லை,ஒருவேளை ஃபாரிலேயே விட்டுட்டு வந்துடோமோ..? என எண்ணியபடி அறையை விட்டு வெளியே வந்தவனை அனைவரும் ஒரு மாதிரி பார்க்க அவனுக்கு என்னவோ போல் இருந்தது.வீட்டைவிட்டு வெளியே வந்தவன் தன் பைக்கை தேட அதுவும் இல்லை,விழிமூடி நன்றாக யோசித்தவனுக்கு காரில் வந்தது மட்டும் நிழல் போல் நினைவிருக்க யாருடன் வந்தோம் என்பது நினைவில்லை.

எப்படியும் மாலை தான் விழா ஆரம்பம் அதற்குள் தனது பைக்கையும் மொபைலையும் எடுத்து வந்துவிடலாம் என எண்ணியபடி ஃபார்க்கு கிளம்பிவிட்டான்.

மாலை விழா தொடங்கும் நேரமும் வந்துவிட்டது. விழிகள் கலங்க தயாராகி கொண்டிருந்த திவ்யாவிற்க்கு ஆதியின் 'உனக்கு பிடிக்காத எந்த விஷயமும் நடக்காது' என்ற வார்த்தையே காதில் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இன்னும் சற்று நேரமே இருக்க சொல்லமுடியாத பயம் வந்து தொண்டையை அடைத்தது.

தன் அருகில் தட்டில் மிக்சர் ஸ்வீட்டை வைத்துக்கொண்டு சிரித்தபடி சாப்பிட்டுகொண்டிருந்த தங்கையை முறைத்தவள் "ஏண்டி நானே என்ன நடக்குமோ என பதட்டத்தில் இருக்கேன்... கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் சாப்பிட்டு கொண்டு இருக்கிறாய்" என கத்த,

அவளோ அசால்ட்டாக "நான் என்ன உன்னை மாதிரியா…? எனக்கு எங்க ஆதி மாம்ஸ் மேல நம்பிக்கை இருக்கு, எப்படியும் இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. அப்படி நின்றுவிட்டால் அதுக்கப்புறம் அய்யோ அக்காவோட நிச்சயம் நின்று போச்சு என கொஞ்சம் சோகமா இருக்கிற மாதிரி நடிக்கணும், அப்போ என்னால் எப்படி சாப்பிட முடியும்,அதுவும் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் ஐட்டம் அதான் இப்பவே எவ்ளோ முடியுமோ சாப்பிடுகிறேன்" என்றவள் எழுந்து சென்று ஒரு கிண்ணத்தில் குலாப் ஜாமூன் கொண்டு வந்து சாப்பிட்டவள்,ஒன்றை எடுத்து அவள் அக்காவின் வாயில் திணித்தாள்.

"சாப்பிடுக்கா அப்பறம் நீயும் சோகமா இருக்குற மாதிரி நடிக்கணும். அதுவும் நீதான் கல்யாண பொண்ணு வேற, உன்கிட்ட இருந்து நிறைய எதிர்பார்ப்பாக... நைட் சாப்பிடக்கூடாது,கதறி கதறி அழனும்,ரூம்க்கு ஓடி போகணும், இப்படி நிறைய இருக்கு..? எல்லா படத்திலும் ஹீரோயின் இப்படி தான் பண்ணுவாங்க..? அதனால் இப்பவே சாப்பிட்டு தெம்பா இரு" என தன் அக்காவிற்கு ஊட்டிவிட்டாள்.

வெளியே திவ்யாவின் தந்தை முதன் முறையாக அவசரப்பட்டு விட்டோமோ..? என எண்ணினார். அக்காவின் வார்த்தை கேட்டுக்கொண்டு தன்னுடைய மகளின் வாழ்க்கை பணயம் வைக்க இருந்தோமே என வருந்தினார்.காலையில் சென்ற மகேஷ் இன்னும் வீடுவந்து சேரவில்லை என்று பதட்டத்தில் இருந்தவர் அவன் மொபைலுக்கு அழைக்க... எதிரில் இருந்து வந்த பெண் குரலில் அப்படியே அதிர்ந்து பிடிமானமின்றி சோஃபாவில் அமர்ந்துவிட்டார்.

"மகேஷ் சார் தூங்கிட்டு இருக்கார் அவர் எழுந்ததும் பேச சொல்கிறேன்" என்ற பெண் குரலை தொடர்ந்து...இப்போ எங்கே இருக்கீங்க என்றவர்,அவள் சொன்ன இடத்தை கேட்டு இன்னும் ஆடிப்போனார்.

அவன் வழக்கமாக செல்லும் ஃபார் இருக்கும் ஹோட்டலின் ஒரு அறை எண்ணை சொன்னவள் இணைப்பை துண்டித்தாள்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராக தன் அக்காவின் அருகே சென்றவர் "இந்த கல்யாண பேச்சை இப்போதே முடித்துகொள்ளலாம், இந்த நிச்சயதார்த்தம் நடக்காது. உன் வளர்ப்பு சரியானதா இருக்கும் என நினைத்தேன் ஆனால் மகேஷ் இவளோ கேவலமா நடந்துக்கொள்வான் என சத்தியமாக நினைக்கவில்லை என்றவர், நடந்ததை சொல்லிவிட்டு...நல்லவேளை இப்போவே அவனை பற்றி தெரிந்துவிட்டது" என்றவர் அவர் ஏதோ சொல்லவரும் முன் தடுத்து "என் பெண்ணோட வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை" என்றவர்

தன் மகளை அணைத்துக்கொண்டு " இந்த அப்பாவை மன்னிச்சிடு டா" என்றவர் வேற எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

"நான் அப்போவே சொன்னேன் தானே
.. மாம்ஸ் நிறுத்திடுவாங்க என்று" சொன்ன பிரியா தன் அக்காவை அணைத்துக்கொண்டாள்.

திவ்யாவிற்கே எப்படி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என தெரியவில்லை,முன்பை விட ஆதியை இப்போ ரொம்ப பிடித்திருந்தது.

மறுநாள் காலையில் எழுந்தது முதல் சோகமாக எதையோ பறிக்கொடுத்தவள் போல் சுற்றிகொண்டிருந்த நந்தினியை பார்த்து ஆதி என்னவென்று கேட்க, அவளோ எப்போதும் போல் தலைவலியென செல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினாள்.அவளின் சோர்வு விக்ரமையும் தாக்க,அவனும் சாப்பிட கூட பிடிக்காமல் ஆபீஸ் சென்றுவிட்டான்.

லீவ்வை கேன்சல் செய்துவிட்டு திவ்யா ஆபீஸ் வந்துவிட... மகேஷும் வேறு வழியில்லாமல் திவ்யாவை பார்க்கவாவது செய்யலாம் என ஆபீஸ் வந்தான். தன் எதிரில் கையில் ஃபைலுடன் நின்றுகொண்டிருந்த மகேஷை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவன் "என்ன மகேஷ் லீவை கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கீங்க போல..? எங்கேஜ்மென்ட் நல்லபடியா முடிந்ததா" என கேட்க,

அவனோ சோகமாக நடந்ததை சொன்னான். "யாரு என்றே தெரியவில்லை சார் வேண்டுமென்றே நான் குடித்த ஜூஸில் தூக்க மாத்திரை கொடுத்து என்னோட வாழ்க்கையை கெடுத்துட்டாங்க...அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் அதுதான் அவனுக்கு லாஸ்ட் டே" என்றவனை பார்த்து

புருவங்களை உயர்த்தி "பார்க்கலாம் யாருக்கு அது லாஸ்ட் டேயாக இருக்கப்போகிறதுனு" என சொன்ன விக்ரம் ஃபைலை வாங்கிக்கொண்டு அவனை வெளியேற்றினான்.

நாட்கள் ரெக்கைக்கட்டி பறக்க… சந்தியாவின் திருமணத்திற்கு இன்னும் இரு நாட்கள் என்ற நிலையில்..மதனுக்கு அழைத்த ஆதி "என்னடா எங்க இருக்க" என்க,

அவனோ "ஏர்போர்ட்டில் இருக்கேன் டா ஈவ்னிங் வந்துடுவேன்" என சொல்லிவிட்டு வைத்தவனுக்கு என்ன செய்தும் அங்கு செல்வதை தடுக்க முடியவில்லை. என்ன சொல்ல முடியும் வேலை அதிகம், லீவ் தரமாட்டேன் என்கிறார்கள் என சொல்ல கூட முடியாது, இதுவும் அவர்களுடைய கம்பெனி தான் அப்படியிருக்க... தன்னவளின் கழுத்தில் எவனோ ஒருவன் தாலிக்கட்டுவதை பார்க்கும் துர்பாக்கிய நிலையில் இருப்பதை அறவே வெறுத்தான்.

மாலை வெகுநாட்கள் கழித்து சந்தியாவின் வீட்டிற்க்கு வந்த மதன்,அங்கு கூடியிருந்த அவர்களின் சொந்தங்கள் முன்பு தயங்கியபடி உள்ளே நுழைந்தான். அவனின் வருகையில் குடும்பத்தினர் அனைவருக்கும் மிக மகிழ்ச்சியே ராகவனின் குடும்பத்தை தவிர… அனைத்து நல விசாரிப்புக்கு பிறகு,அவனை அமர்த்தி பிஸினஸ் பற்றி பேச தொடங்கிவிட்டார் கண்ணன். அதற்குள் ஆதி விக்ரம் இருவரும் வந்துவிட இன்னும் பேச்சுக்கள் நீண்டுகொண்டே போனது.

அவன் குரலை கேட்டவுடன் ஒரு நொடி மகிழ்ச்சியில் திளைத்த நெஞ்சம் மறுநோடியே கோபத்தில் கொதித்தது சந்தியாவிற்கு. 'எப்படி இவனால் இங்கு வர முடிந்தது அதுவும், என் கல்யாணத்தை ஒரு மூன்றாம் மனிதனாய் இவனால் பார்க்க முடியுமா..? அப்போ உண்மையாகவே அவன் மனதில் நான் இல்லையா..?' என கலங்கியவள்,கண்களை துடைத்துக்கொண்டு நடப்பது நடக்கட்டும் இனி அனைத்தும் கடவுள் கையில் என நினைத்தவள் தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு உணர்வற்ற ஜடமாக வலம் வந்தாள்.

அவனுக்கோ அவள் முகம் பார்க்கும் துணிவில்லை என்பதைவிட தனக்கு அந்த தகுதியே இல்லை என எண்ணியவன்,அவள் இருக்கும் பக்கம் கூட பார்வையை திருப்பாமல் இருந்தான்.

அவளுக்கு நலங்கு வைக்கவேண்டி ஹாலுக்கு அழைத்துவந்து அமரவைக்க...அதுவரை கட்டுப்பாடோடு இருந்தவன்,அவளை புடவையில்,அதுவும் முழுமையான அலங்காரத்தில் பார்த்தவனால் அதற்குமேல் அங்கு நிற்க முடியவில்லை.புத்தி அவள் வேறொருவருக்கு மனைவியாக போகிறவள் என எடுத்துரைத்தாலும்,மனமோ அதற்கு எதிராய் அவள் உனக்கானவள் அவளை இழந்து விடாதே என கதறியது. சட்டென்று முடிவெடுத்தவன் இதற்கு மேல் இங்கே நிற்பது ஆபத்து என எண்ணியபடி யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு சென்றுவிட்டான்.

திருமண நாளும் விடிந்தது...திருமண மண்டபம் முழுவதும் சொந்தங்கள் சூழ்ந்திருக்க….அனைவரும் பரபரப்பாக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்…
மணப்பெண் அறையில் மௌனமாக அமர்ந்திருந்தாலும் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை.மனதினுள் மதனின் மேல் இருந்த கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டிருக்க இருக்க,அவன் மட்டும் எதிரில் இருந்தால் கொலை செய்துவிடும் ஆத்திரத்தில் இருந்தாள் சந்தியா.

பெண்ணை அழைத்து வர சொல்ல….கழுத்தில் மாலையோடு மணப்பெண்களுக்கே உரிய வெட்கமோ நாணமோ எதுவும் இல்லாமல் கோபத்தில் கண்கள் சிவக்க மணமேடைக்கு வந்து அமர்ந்தாள். தன் எதிரில் பட்டு வேட்டி சட்டையில் குறையாத கம்பீரத்தோடு,முகத்தில் புன்னகையோடு நின்றிருந்த ரோஹித்தை பார்க்க குற்ற உணர்ச்சியாக இருந்தது.

தனக்கு அருகில் பட்டுவேட்டி சட்டையில் கல்யாண மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த மதனை பார்க்க,அவனோ அவளை பார்த்து மென்மையாக சிரித்தான். அதில் இன்னும் கோபம் அதிகரிக்க அவனை முறைத்தவள்,திட்ட வாய்த்திறக்க அனைவரின் பார்வை தங்கள் மேலேயே இருப்பதை உணர்ந்து முயன்று அமைதிக்காத்தாள்.

அவள் பார்வையிலேயே அவளின் கோபத்தை அறிந்தவன் 'இன்னைக்கு நமக்கு தரமான சம்பவம் காத்திருக்கு' என உணர்ந்து எல்லாவற்றிக்கும் நான் தாயார் என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்.

"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என அயர் உரத்த குரலில் கூற...தன் கையில் மாங்கல்யத்தை எந்தியவன் சந்தியாவின் முகத்தை பார்த்துக்கொண்டே தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு,ஊரறிய அவளை தன் மனைவியாக தன்னில் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.

அவளின் கரம்பிடித்து அக்னியை வலம் வரும் போது எதையோ சாதித்த. உணர்வில் சிறகில்லாமல் பறந்தான் மதன்.

அவளோ "இனி தான்டா உனக்கு இருக்கு" என மனதில் நினைத்தபடி சுற்றி வந்தாள்.அனைவர் மனதிலும் மணமகன் மாறியதில் சிறு சலசலப்பு இருந்தாலும்,அதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாப்பிள்ளை குடும்பத்தினரே அமைதியாக இருக்கையில் அந்த சலசலப்பும் அடங்கி ஒருவழியாக நல்லபடியாக திருமணமும் முடிந்தது.

இதில் மிகவும் அதிகமாக கோபத்தில் இருந்தது ராகவன் தான்,யார் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாக வரவே கூடாது என நினைத்திருந்தாரோ,அதுவும் இந்த ஒண்ணும் இல்லாதவனுக்கு இத்தனை சொத்துக்களும் போக போகிறது என நினைக்கையில் ஆத்திரம் அதிகரித்தது. நீ நினைத்த மாதிரி இந்த வீட்டு பொண்ணைக்
கல்யாணம் பண்ணிக்கிட்ட, ஆனா இந்த சொத்தில் ஒரு பைசாவை கூட உன்னை அனுபவிக்க விடமாட்டேன் என்று எண்ணியபடி நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

அனைத்து சடங்குகளும் முடிய,மதனின் வீட்டிற்க்கு வந்த மணமக்களை ஆரத்தி கரைத்து வரவேற்றனர். சந்தியா பூஜையறையில் விளக்கேற்ற அதை தொடர்ந்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்தது.

இரவும் வந்துவிட மென்மையான அலங்காரத்துடன் மதனின் அறைக்குள் நுழைந்தாள் சந்தியா. மதனோ பதட்டமாக காத்திருந்தான்,இருவருமே ஒருவருக்கொருவர் உயிரையே வைத்திருந்தாலும்...இருவருக்குமே அந்த இரவு முக்கியமான இரவாக இருந்தாலும் அதை அனுபவிக்கும் நிலையிலில்லை அவர்களின் மனம்.

நடக்கவே நடக்காது,கிடைக்கவே கிடைக்காது என நினைத்த ஒரு விஷயம் தனக்கே தனக்கென கிடைத்து விட... எப்படி இந்த நிமிடத்தை கையாள்வது என இருவருக்குமே தெரியவில்லை.தன் அறையில் தன்னவள் என்ற நினைவே தித்தித்தது அவனுக்கு.

பதுமையென நடந்துவரும் அவளின் அழகை கணவனுக்கே உரிய உரிமையுடன் நிதானமாக ரசித்தான்.அவள் மார்பில் கிடக்கும் தாலி தனக்கான உரிமையை எடுத்துரைக்க..அதுவரை அவள் கோபத்தில் இருக்கிறாள்,தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்லி சமாதான படுத்தவேண்டும் என்ற எண்ணமெல்லாம் காற்றில் கரைந்து விட… இப்போதே அவள் வேண்டும் என மனம் துள்ளியது.இத்தனை மாதங்கள் அவளை நினைத்து வலியில் தவித்தவனுக்கு இப்போது அதற்கு எல்லாத்துக்கும் மருந்தாய் தன்னவள் இப்போதே வேண்டும் என பேராசை கொண்டான்.

தன் வலிக்கு அவளே மருந்தென நினைத்தவன், தன்னவளின் மனக்காயத்தை பற்றி சிந்திக்க தவறிவிட்டான். எல்லாரையும் போல் தாலிக்கட்டியவுடன் கணவன் உரிமையை நிலைநாட்ட நினைத்தவன்...அவளை நெருங்கி கையிலுள்ள பால் சொம்பை வாங்கி டீபாயில் வைத்துவிட்டு அவளின் கரம் பற்றி மெத்தையில் அமரவைத்தான்.

அவளோ அமைதியாகவே அவனின் செயல்களை அனுமதித்தாள். "ரொம்ப அழகா இருக்க சந்துமா. அதுவும் இந்த புடவையில் என்னால என் கண்ணை இமைக்க கூட முடியவில்லை" என காதல் போதையில் என்றுமில்லாத கரகரப்பான குரலில் சொன்னவன்,அவள் அருகில் இன்னும் நெருங்கி இருவரும் உரசிவிடும் நெருக்கத்தில் அமர்ந்தான்.

தலைகுனிந்திருந்த அவளின் மதிமுகத்தை கைகளில் எந்தியவன், இருவர் கண்களையும் கலக்கவிட்டு அவள் நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்தான். கண்கள், கன்னம், காது, தாடை என தொடர்ந்த முத்தம் இதழ்களை நெருங்கிய வேளை,தன் கையை குறுக்கே வைத்து தடுத்தாள் சந்தியா





மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 18

காதல் மயக்கதிலிருந்த மதன், அவள் விலக்குவதை பொருட்படுத்தாமல் "சந்தியா" என பிதற்றியபடி அவளின் உதட்டில் இருந்த கரத்தை அகற்றியவன்,மீண்டும் அவள் முகம் நோக்கி செல்ல இப்போது அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்.

"என்னடி" என கொஞ்சலான குரலில் சலித்தபடி மீண்டும் அவளை நெருங்க,

அவளோ "உன்னால எப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்படி நடந்துகொள்ள முடிகிறது…? உங்கிட்ட இருந்து இதை நான் எதிர்ப்பார்க்கலை மதன்..?" என அவனை தன்னிடமிருந்து பிரித்தவாரே கோபமாக அதேநேரம் வருத்தம் நிறைந்த குரலில் கத்த.,அப்போது தான் பேச வேண்டியவற்றை பேசாமல் அதற்குள் அவளை நெருங்க நினைத்த தனது முட்டாள்தனம் புரிந்து அவனுக்கு . "ஸாரி" என்றவன் அழுத்தமாக தனது கேசத்தை கோதிக்கொண்டு தன்னை கட்டுப்படுத்தியவன் அவள் முகம் பார்க்க...அவளோ அவனையே முறைத்துக்கொண்டிருந்தாள்.

"சந்தியா" என அவன் எதுவோ சொல்ல வர,அதனை கைநீட்டி தடுத்தவள் "நீ எதுவும் பேச வேண்டாம்" என்றபடி உனக்கு கொஞ்சம் கூட வெக்கமாக இல்லையா…? உனக்கு தான் என் மேல் காதலே இல்லையே அப்பறம் எதுக்காக என் கழுத்தில் தாலி கட்டினாய்..?" என அவன் சட்டை பிடித்து கேட்க...

அவனோ அவளை அழுத்தமாக பார்த்து கொண்டே "யாருடி சொன்னது எனக்கு உன் மேல் காதல் இல்லைன்னு அதுயிருக்கு மலையளவு, ஆனா அதை உன்கிட்ட நான் சொல்லலை அவ்வளவு தான் .

உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத அளவுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு...முதலில் நான் உங்களிடம் வேலை செய்யும் ஒரு சாதாரண தொழிலாளி, நீ எனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி. இது எல்லாத்துக்கும் மேல் எங்க என் காதல் என்னோட ப்ரெண்ட் ஷிப்பை பாதிக்குமோ என்ற பயம். வயசு பொண்ணு இருக்கும் வீட்டில் என்னை நம்பி உள்ளே விட்ட உன் பெற்றோரின் நம்பிக்கை, இப்படி சொல்லிட்டே போகலாம்...இதை எல்லாவற்றையும் காப்பாற்ற ரொம்ப போராடினேன். அதனால் தான் நீ உன் காதலை சொல்லும் போது விலகிப்போனேன். ஆனா அதுவும் என்னால முடியலை நான் எவ்ளோ தடுத்தும் நீ எனக்குள்ள வந்ததை என்னால தடுக்க முடியலை" என்றவன் சற்றுநேரம் விழிமூடி அமர்ந்திருந்தான்.

அவன் இத்தனை காரணம் சொல்லியும் அவளால் அவன் மேல் இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை,மணமேடை செல்லும் கடைசி நொடிவரை அவள் பட்ட துன்பம் அவள் கோபத்தை குறைக்க விடவில்லை. அவனை பார்த்து "காதலித்தால் மட்டும் போதாது அதை சொல்ல தைரியமும் வேண்டும்,இப்படி தியாகம் பண்ணிட்டு போகக்கூடாது என்றவள் கடைசி நேரத்தில் எங்க அண்ணன் மட்டும் பேசி அந்த கல்யாணத்தை நிறுத்தவில்லை என்றால் இந்நேரம் நான் வேற ஒருவனுக்கு சொந்தமாகி இருப்பேன்" என்றாள் வலியுடன்.

"இப்போ சொல்றியே நானும் காதலிச்சேன் காதாலிச்சேன் என்று அந்த காதலுக்காக நீ என்ன பண்ண"…? சொல்லுடா என்ன பண்ண..?உன் காதலையும் என்கிட்ட சொல்லை, நடக்க இருந்த என்னோட கல்யாணத்தை நிறுத்த முயற்சிக்கலை, இப்படி எனக்காக எதுவும் பண்ணாமல் எங்க அண்ணன் தாலி கட்ட சொன்னவுடன் கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் தாலிக்கட்டிட்டு இப்போ எதுவும் நடக்காத மாதிரி என்கிட்ட இதுமாதிரி நடந்துகொள்ள வெக்கமாக இல்லை. அப்போ நீ காதலிச்சது என்னையில்லை என்னோட" என சொல்ல வந்தவளை..

"ஏய்... இவளோ நேரம் நீ பேசின நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன் ஏனென்றால் என்மேல தப்பு இருக்கு என்கின்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான்... ஆனா என்னோட காதலை பற்றி தப்பா பேசினால் சும்மா இருக்கமாட்டேன். உனக்கு எப்படி உன் காதல் பெருசோ அதுமாதிரி எனக்கு என் காதல் பெருசு என்றவன், என் தப்பு தான் என்ன நடந்தது என்று சொல்லும் முன் அப்படி நடந்துகொண்டிருக்க கூடாது,அதுக்காக உங்கிட்ட திரும்பவும் ஸாரி கேட்டுக்குறேன். ஒரு நிமிஷம் நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாய் கேள்..? அதுக்கப்பறம் நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்" என்றான்.

அவளோ அதை கண்டுகொள்ளாமல் "உன்னோட விளக்கம் எதுவும் எனக்கு வேண்டாம், அதை கேட்கவும் நான் தயாராக இல்லை என்றவள் அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம் இனி என்னோட அனுமதி இல்லாமல் என்னை தொடக்கூடாது... மீறி ஏதாவது ட்ரை பண்ண அப்பறம் நான் பத்ரகாளியாக மாறிடுவேன் ஜாக்கிரதை"என என்றபடி கட்டிலின் ஒரு மூலையில் படுக்க…

"சந்தியா பிளீஸ் நான் சொல்வதை ஒரு நிமிஷம் கேட்டுட்டு தூங்கு டி" என்றவனை திரும்பி முறைத்தவள்,

"என்னை டி போட்டு கூப்பிடாதே எனக்கு பிடிக்கலை,நீ சொல்லும் பொய்யை நம்பவும் நான் தயாராக இல்லை" என்றவள் படுத்து உறங்க தொடங்கினாள்.

மதனுக்கு இப்போதே கண்ணை கட்டியது, சொல்வதை கேட்க கூட மாட்டேன் என்கிறாளே என புலம்பியபடி படுத்தவனுக்கு தூக்கம் தொலைதூரம் சென்றிருந்தது.

மறுநாள் காலையில் கண்விழித்த மதன் தன் அருகில் பார்க்க படுக்கை வெறுமையாக இருந்தது,அதுக்குள்ள எழுந்துட்டாளா என நினைத்தபடி ஃப்ரெஷாகி வெளியே வந்தவனின் கண்கள் அப்படியே உறைந்து நின்றது தன்னவளை பார்த்து...சாதாரண புடவையில் தலைக்கு குளித்து தன் தாயுடன் சமையலறையில் தங்கள் வீட்டில் பந்தமாக பொருந்தியவளை பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை. சற்று நேரம் அப்படியே நின்றவன்,பின்னர் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பார்வையை திருப்பினான். 'கிராதகி நாம பார்ப்பதை பார்த்தால் அதுக்கும் ஏதாவது சொல்லுவாள் எதுக்கு வம்பு' என நினைத்தவன் குளிக்க சென்றான்.

நாட்கள் செல்ல இன்றோடு திருமணம் முடிந்து ஒரு வாரம் கழிந்த நிலையில்...விக்ரமை பார்க்க ஆபீஸ் வந்தவன் "மச்சான் நான் சொல்றதை கேளு, மும்பைக்கே போறேன் டா இங்க வேண்டாம்...அதுவுமில்லாமல் நிறைய வேலை பென்டிங்கா இருக்கு அதையெல்லாம் பார்க்கணும்" என்றவனை முறைத்த விக்ரம்,

"அதெல்லாம் அங்க பார்த்துக்கொள்ள ஆள் போட்டாச்சு இனிமே நீ இங்கதான் இருக்கணும்" என்க...

அவனுக்கோ "முன்பாவது லவ் லுக் விட்டு படுத்தியெடுப்பா இப்போ கொலை பண்ணும் வெறியோடு இல்ல சுத்திட்டு இருக்கா..திரும்பவும் முதல்ல இருந்தா..?வீட்டிலாவது தப்பிக்க வாய்ப்பு இருக்கு ஆனால் ஆபீஸில் ஒரே அறையில் என்ன செய்ய போகிறாளோ..?" என திருதிருவென முழித்தவனை

"டேய் என்னடா இப்படி முழிகிற, கல்யாணம் ஆனா எல்லாருக்கும் பைத்தியம் பிடிச்சிடும் போல" புலம்பியபடி தன் வேலையில் கவனமானான்.

இரண்டு மாதம் நிறைவடைந்த நிலையில் சந்தியா மதன் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்க...இங்கே விக்ரம் அன்று காரிலிருந்து நந்துவை இறக்கிவிட்டு சென்ற பின்பு அவளை மொத்தமாக தவிர்த்து வந்தான். இதற்கு முன்பும் அவன் பேசமாட்டான் தான் இப்போது அவனை பார்ப்பதே அரிதாக இருந்தது..அவன் அவ்வாறு நடந்துகொண்ட பின்பும் விக்ரமை பார்க்காமல் இருக்க முடியாமல் ரொம்பவும் தவித்துப் போனது என்னவோ நந்தினி தான்.

இந்நிலையில் ராகவன் விக்ரம் ஆதியின் திருமணத்தை பற்றிய பேச்சை தொடங்க..."இப்போ தானே சந்தியாவிற்கு முடிந்தது இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்ற கண்ணனை பார்த்து

"என்ன மச்சான் இப்படி சொல்றீங்க? நம்ம ஜோசியர் சொன்னதை மறந்துட்டிங்களா..? ரெண்டு பேருக்கும் இந்த வருஷம் கல்யாணம் பண்ணவில்லை என்றால் இன்னும் ஐந்து வருஷத்திற்கு கல்யாணமே நடக்காது என்றாரே" என்க...அவரும் யோசிக்க தொடங்கினார்.

நீங்க சொல்வதும் சரிதான் என்றவர் இன்னைக்கு இதை பற்றி விக்ரம் ஆதி இருவரிடமும் பேசிவிடலாம் என்றவர் அப்போதே திருமண வேலையை பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டார்.

ராகவனுக்கு எப்படியோ நாம் நினைத்தது நடந்தால் போதும் என சந்தோஷமாக அமர்ந்திருந்தார்.

மாலை ஆதியின் கார் உள்ளே நுழைந்தவுடன் பரபரப்பான குடும்பத்தினர் எப்படியும் விக்ரம் ஆதி இருவரிடமும் ஒரே நேரத்தில் பேச்சை எடுக்க முடியாது எனவே முதலில் ஆதியிடம் பேசிவிட்டு பின்பு விக்ரமிடம் பேசலாம் என முடிவெடுத்திருக்க…. ஆதியோ வரும் போதே கட்டுக்கடங்காத கோபத்தில் வந்தவன்,இவர்கள் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என சொன்னவுடன் என்றும் இல்லாமல் இன்று அனைவரிடமும் கத்திவிட்டான்.

"நான் என்ன மனுஷனா இல்லை மெஷினனா. வேலைக்கு போய்ட்டு வந்து டயர்டாக இருப்பான் என நினைக்காமல் வந்தவுடன் பேசணும் என டென்ஷன் பண்றீங்க..? ஏதுவாக இருந்தாலும் அப்பறம் பேசுங்க" என்றவன் நிற்காமல் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

"என்ன இது, எப்பவும் விக்ரம் தான் இப்படி நடந்து கொள்வான் இன்னைக்கு இவனும்" என புலம்பிக் கொண்டிருக்கும் போதே விக்ரமும் வந்துவிட இப்போது ஒட்டுமொத்த குடும்பமும் அமைதியாக இருந்தது. குழந்தைகள் போல் வாய் மீது விரல் மட்டும் தான் வைக்கவில்லை. ஆல்ரெடி வாங்கியவையே இன்னனைக்கு போதும் என நினைத்தே அமைதியை கடைப்பிடித்தனர்..

உள்ளே நுழைந்த விக்ரம் என்ன இது வீடே பின் ட்ராப் சைலண்ட் ஆக இருக்கு என எண்ணியபடி வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த அனைவரிடமும் ஒரு அழுத்தமான பார்வையை செலுத்தியபடி மேலே சென்றுவிட்டான்.

இரவு உணவின் போது மெல்ல பேச்சை தொடங்கினார் கண்ணன். சிறிது நேரம் பொதுவாக பேசியவர் ஜோசியர் சொன்னதை ஒருமுறை நினைவு படுத்தினார்.பின்னர் விக்ரம் ஆதி இருவரிடமும் நந்தனா ஸ்வேதாவை திருமணம் செய்ய சம்மதமா..? என கேட்க

நந்தினியின் இதயம் படப்படவென அடித்துக்கொண்டது. விக்ரம் என்ன பதில் சொல்வான் என அவனையே இமைக்காமல் பார்க்க அவனோ நிமிர்ந்து நந்தினியை தான் பார்த்தான். அவள் பார்வையில் கண்ட பரிதவிப்பில் ஒரு முறை கண்களை மூடி திறந்தவன், தன் தந்தையிடம் எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் என்க,

மொத்தமாக உடைந்து போனாள் நந்தினி.அனைவர் முன்பும் தன் உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் அழுகையை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.அவன் பதிலில் ஆதியும் ஒரு நிமிடம் அதிர்ந்தவன் அவன் முகம் பார்க்க அவனோ நந்தினியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதி உன்னோட பதில் என்ன என்ற தந்தையை பார்த்து "எனக்கும் சம்மதம்" என்க நந்தினி ஒருநொடி அவனை பார்த்தவள் போதும் சாப்பிட முடியவில்லை என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டாள்.

ராகவனுக்கு தன் செவிகளையே நம்ப முடியவில்லை...என்னடா இது கொஞ்சமாவது எதிர்ப்பு தெரிவிப்பான் என எதிர்பார்த்திருக்க இருவருமே எடுத்தயெடுப்பில் ஒத்துக்கொண்டது
ஆச்சரியத்தை வரவைத்தது.அனைவரும் அதே நிலையில் தான் இருந்தனர் ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்.அதுவும் நந்தனா ஸ்வேதா இருவரும் இப்போதே கனவில் மிதக்க தொடங்கிவிட்டனர்.

தன் அறையில் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்த ஆதிக்கு இன்று மாலை நடந்த சம்பவமே ஓடிக்கொண்டிருந்தது.மாலை எப்போதும் போல் டியூட்டி முடிந்து நந்தினிக்காக காத்திருந்த நேரம் ஃபோன் வர எடுத்து பேசியவன், கோபத்தை அடக்கிக் கொண்டு மதனுக்கு அழைத்து "நந்தினியை கொண்டு வீட்டில் விடுடா, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்றவன் நந்தினியிடமும் சொல்லிவிட்டு காரை கிளப்பினான்.

கார் நேராக சென்று திவ்யாவின் வீட்டின் முன்பு நிற்க்க. காரை விட்டு இறங்கியவன் நிமிர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்தான். உள்ளே பட்டு புடவையில் மிதமான அலங்காரத்துடன் நின்றிந்த திவ்யா ஆதியை சற்றும் எதிர்பார்க்கவில்லை,அவனின் வருகையில் அதுவரை இருந்த படப்படப்பு அடங்கினாலும் இப்போது தந்தையை நினைத்து பயம் வந்து நுழைந்து கொண்டது.

அவனோ நேராக சென்று அங்கு காலியாக இருந்த ஒரு ஆள் அமரக்கூடிய சோஃபாவில் அமர்ந்தவன்,கண்களில் அணிந்திருந்த கூலர்சை கழட்டி ஸ்டைலாக சட்டையின் முன் சொருகிவிட்டு அனைவரையும் பார்த்தவனின் பார்வை இப்போது திவ்யாவின் தந்தை மீது பதிந்தது.

அவரும் அவனை தனது பார்வையால் அளந்து கொண்டிருந்தார்.

"தம்பி நீங்க யாரு..? இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து இப்படி உட்கார்ந்திருக்கீங்க..?" என்க,

அவனோ அசால்ட்டாக "பொண்ணு பார்க்கத்தான் மாமா...நல்லா பார்த்துக்கோங்க அப்பறம் மாப்பிள்ளைக்கு மூக்கு சரியில்லை,ஹைட் பத்தலை கண்ணு சரியில்லைன்னு சொல்ல போறிங்க" என்றவன் எழுந்து நின்று தன்னை ஒருமுறை சுற்றி காண்பித்தான்.

அவனின் செயலில் பிரியா சிரிப்பை அடக்கமுடியாமல் சத்தமாக சிரித்துவிட..பின்னரே தன் தந்தையின் கோப பார்வையை கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

அவளுக்கு நடப்பதை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது,இப்படி ஏதாவது செய்தாவது தன் அக்காவை ஆதி மாம்ஸ் கட்டிக்கொள்ள வேண்டும் என்பதாலேயே அவனுக்கு ஃபோன் செய்து பெண் பார்க்க வந்திருப்பதை சொன்னாள்.அவள் நினைத்தது போலவே நடந்துவிட்டது.

பெண் பார்க்க வந்திருந்த அனைவருக்கும் இது மிகவும் அதிர்ச்சியாக இருக்க...மாப்பிள்ளையாக இருந்தவன் எழுந்து "ஹலோ மிஸ்டர் ஏதாவது பிரச்சனை பண்ணுவதற்காகவே வந்திருக்கீங்களா" என தன் கேத்தை திவ்யாவின் முன் காட்ட குரல் உயர்த்த...

ஆதியோ அவனை மேலிருந்து கீழ் பார்த்தவன் "நல்லா தான் இருக்கீங்க மாப்பிள்ளை சார். வேற ஏதாவது பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணும் வழியை பாருங்க…? தேவையில்லாமல் உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிட்டு அப்பறம் கைக்கால் இல்லாமல் உங்களை எந்த பொண்ணும் திரும்பிக்கூட பார்க்காமல் போய்விடும்" என்றவன்...நீ திரும்பவும் வாய் திறந்தால் அது கண்டிப்பாக நடக்கும் என்பதுபோல் பார்க்க...அவனோ பயத்தில் உடனடியாக தன் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

அவர்கள் சென்றதை பார்த்த திவ்யாவின் தந்தைக்கு கோபம் அதிகரிக்க..."யாருடா நீ..? எதுக்காக இப்படியெல்லாம் செய்கிறாய்..? என் பொண்ணுக்கு எப்போ என்ன பண்ணவேண்டும் என்பது எனக்கு தெரியும் என்றவர்...வாசலை கைகாட்டி நீயாக வெளியே போனால் உனக்கு மரியாதை இல்லையென்றால் நடப்பதே வேறு" என்க,

அவனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் "இங்க பாருங்க மாமா, உங்க பொண்ணை ஐந்து
வருஷமா காதலிக்கிறேன், ஆனா இன்னும் என் காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை" என்றவன் தன்னை பற்றியும்,வேலை குடும்பம் என முழுவதையும் சொல்லி முடிக்க.

அவரோ "நீ யாராக வேண்டுமானாலும் இருந்துக்கொள் அதை பற்றி எனக்கு கவலையில்லை.. ஆனா என்னோட பொண்ணை உனக்கு கட்டிகொடுக்க முடியாது" என்றார் உறுதியான குரலில்.

அப்போதும் கலங்காதவன், "ஏன் என்று காரணம் தெரிந்துக்கொள்ளலாமா" என்க...

"அதையெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றவர், என் உயிரே போனாலும் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டேன்" என்றார்.

"உங்க பொண்ணுக்கு என்னை தான் பிடிக்கும் என்றாலும் இப்படி தான் சொல்லுவீங்களா..?" என்றவனை பார்த்து "என் பொண்ணு ஒருநாளும் என் சொல் பேச்சை மீறி நடக்கமாட்டாள்.எனக்கு என் பொண்ணு மேல் நம்பிக்கை இருக்கு" என்றவர் தன் மகளை பார்க்க,அவளோ மொத்தமாக தடுமாறி போனாள்.

"திவ்யா இப்போ சொல்லு..? என்னோட காதலுக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை...எனக்கு இப்போ உன்னோட பதில் வேண்டும்" என்க...

அவளோ ஒரு முழு நிமிடம் அமைதிக்காத்தவள்,தன் தந்தையின் முகத்தை பார்த்துவிட்டு, ஆதியின் புறம் திரும்பி "எங்க அப்பா யாரை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்களோ அவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்றாள்.

அவளின் பதில் இதுவாக தான் இருக்கும் என ஏற்கனவே தெரிந்திருந்தாலும்...அதை அவள் வாய்வழி சொல்லும் போது ரொம்பவே வலித்தது.

அவளையே பார்த்தவன் "இது தான் உன்னோட முடிவா" என்க,

அவளோ மனதை கல்லாக்கி கொண்டு "ம்ம்" என தலையாட்ட.

அவனோ "குட் பாய்" என அவளின் விழிப்பார்த்து மொழிந்தவன் வீட்டைவிட்டு வெளியே சென்றான்.


மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 19


மாலை நடந்து முடிந்த சம்பவத்திலேயே உழன்று கொண்டிருந்தவனின் அறை கதவு தட்டப்பட,கடுப்புடன் எழுந்து கதவை திறந்தான் ஆதி.

"இப்போ எதுக்கு இங்க வந்த..? போ போய் தூங்குற வழியை பார்" என்றவன் கதவின் மேல் கைவைக்க...அவனின் கையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த நந்தினி, சட்டமாக மெத்தையில் மேல் கால்களை மடக்கி அமர்ந்து கொண்டாள்.அவளின் செய்கையை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்பது போல் இருக்க அவனும் வேறு வழியில்லாமல் தலையணையை மடியில் வைத்து சாய்ந்து அமர்ந்தான்.


"உனக்கென்ன பைத்தியமா... எதுக்காக ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்ன.? அப்போ திவ்யா மேல் உள்ள உன் காதல் என்ன ஆச்சு..?" என தன் வலியையும் மறந்து ஆதியின் திடீர் முடிவிற்கு காரணத்தை கேட்க,அவனோ மொபைலை நொண்டிக்கொண்டே "எனக்கும் அவளுக்கும் ப்ரேக் அப் ஆகிடுச்சு" என கூலாக சொல்ல,

"என்ன ஆதி சொல்ற ப்ரேக் அப் ஆகிடுச்சா இது எப்போ நடந்தது" என்க…

"இன்னைக்கு ஈவ்னிங் தான்" என்றவனை பார்த்து "விளையாடாத ஆதி, இது உன்னோட லைஃப் நீ அவளை எவ்ளோ லவ் பண்ணினன்னு எனக்கு நல்லா தெரியும் அப்படி இருக்கும் போது திடீரென்று இப்படி நடந்துகொள்ள என்ன காரணம்" என்றவளை நிமிர்ந்து பார்த்தவன், விரக்தியாக ஒரு சிரிப்பை உதித்துவிட்டு "பெருசா எந்த காரணமும் இல்லை பிடிக்கலை அவ்ளோதான்" என்றவன் இப்போது அவளை அழுத்தமாக பார்த்தான்.


அவளும் அழுதிருக்கிறாள் என்பது அவளின் சிவந்து தடித்த கண்களிலேயே தெரிய...எனக்கு தான் லவ் ஃபைலியர் சோகமா இருக்கேன், உனக்கென்ன நந்து.. நீயும் அழுத மாதிரி இருக்கு" என வேண்டுமென்றே கேட்க,

அவளோ சற்று தடுமாறிய குரலில் "அதெல்லாம் ஒன்னுமில்ல ஆதி கொஞ்சம் தலைவலி" என்றவளை பார்த்து

"இப்போதெல்லாம் அடிக்கடி உனக்கு தலைவலி வருது போல நந்து. எதுக்கும் நாளைக்கு நம்ம நியூரோ டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணலாம்'" என்க..


'அவளுக்கோ இதுக்கு என்ன பதில் சொல்வது என சுத்தமாக தெரியவில்லை. தலைவலின்னு ஒன்று இருந்தால் தானே அதுக்கு டிரீட்மெண்ட் எடுக்க, இல்லாத தலைவலிக்கு எதுக்கு டாக்டர்' என நினைத்தவள் அவனை திசை திருப்பும் பொருட்டு "நீ பேச்சை மாத்தாதே ஆதி...சரி நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல், அதெப்படி ப்ரேக் அப் ஆன அன்றைக்கே வேறொரு பெண்ணை கட்டிக்க சம்மதிச்ச" என்க...

"இது என்ன பசங்களுக்கு ஒரு நியாயம் பொண்ணுங்களுக்கு ஒரு நியாயமா..? பொண்ணுங்க மட்டும் ப்ரேக் அப் பண்ண அடுத்த நாளே வேற கல்யாணத்திற்கு சரி என்று சொல்லுவீங்க..! நாங்க மட்டும் அவளையே நினைத்து தேவதாஸ் மாதிரி சுத்தனுமா ? அதான் மேரேஜ்க்கு ஓகே சொன்னேன்" என்றான்.


பின்னர் "சரி நீ கிளம்பு நந்து எனக்கு தூக்கம் வருது என்றவன்...நீ இதையெல்லாம் நினைத்து தேவையில்லாமல் மனசை போட்டு வருத்திக்காதே எல்லாம் நல்லதாகவே நடக்கும். போய் நிம்மதியாக தூங்கு" என்றபடி அவளை அனுப்பிவிட்டு மெத்தையில் விழுந்தவனுக்கு மீண்டும் அதே நினைவு வந்து தொற்றிக்கொண்டது.என்ன முயற்சித்தும் தன்னவள் மொழிந்த வார்த்தையை மறக்க முடியவில்லை.


அறைக்குள் நுழைந்த நந்தினிக்கு திரும்பவும் விக்ரமின் நினைவு வர அழுகையை தொடங்கிவிட்டாள்.விக்ரமோ தன் அறையில் எதுவும் நடக்காததை போல் கூலாக லேப்டாப்பில் கம்பெனி சமந்தமான வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்.


அங்கு மதனின் அறையில்...இரு மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் சந்தியாவிற்கு அவனின் மேல் உள்ள கோபம் கொஞ்சமும் குறையவில்லை. கையில் பாலுடன் அறையில் நுழைந்த சந்தியாவை லேப்டாப்பை பார்த்துக்கொண்டே ஓர கண்ணால் சைட் அடித்து கொண்டிருந்தான் மதன்.

அவன் மனசாட்சியே அவனையே "த்தூ" என காறித்துப்பியது சொந்த பொண்டாட்டியை இப்படி அவளுக்கு தெரியாமல் சைட் அடிக்கிறியே உனக்கு வெட்கமா இல்லை என...அவனுக்கு தானே தெரியும் அவளுக்கு தான் பார்ப்பது தெரிந்தாலே பேய்யாக மாறிவிடுவாள் என்று என எண்ணியபடியே தன் நிலைமையை நொந்துக்கொண்டு அமர்ந்திருந்தான் மதன்.


உள்ளே நுழைந்தவள் அவனை கண்டுகொள்ளாமல் தான் கொண்டு வந்த பாலை மெத்தையில் அமர்ந்து நிதானமா அருந்த...அதை பார்த்த மதனுக்கு ஏக்கமாக இருந்தது. முன்பாவது தன் அன்னை அனைத்தையும் பார்த்து பார்த்து தனக்காக செய்ய...திருமணம் முடிந்தவுடன் மனைவி பார்த்துக்கொள்வாள் என அவர் ஒதுங்கிக்கொண்டார், அவளோ திருமணம் முடிந்த மறுநாளே உனக்கு எது வேண்டுமென்றால் நீயே செய்துகொள்,உனக்காக எதையும் செய்ய நான் தயாராக இல்லை என்றவள் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.

தனக்காக ஒவ்வொன்றையும் மனைவி செய்யவேண்டும் என இயல்பாகவே கணவன்மார்களுக்கு இருக்கும் ஆசை அவனுக்கும் இருக்கும் தானே...தன் மனைவி உணவு பரிமாற அவளை சீண்டிக்கொண்டே உண்ணவேண்டும் என்ற கனவெல்லாம் வெறும் கனவாகவே இருந்தது அவனின் வாழ்க்கையில்.


ஒரு பெருமூச்சை வெளியிட்டு எழுந்து அவனே பாலை காய்ச்சி அருந்தியவன்,லேப்டாப்பை மூடிவிட்டு படுக்கைக்கு வந்தான்.ஒரு நிமிடம் அவளையே அழுத்தமாக பார்த்தவன் பின் அவளுக்கு முதுகுக்காட்டி படுத்துக்கொண்டான். அவனும் பலமுறை தன் பக்க நியாயத்தை கூற முயற்சிக்க அவள் அதுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவே இல்லை.


அவன் படுத்தவுடன் அவனை திரும்பி பார்த்தவளின் கண்களிலும் கண்ணீர்...அவளுக்கே கஷ்டமாக தான் இருந்தது அவனை ரொம்ப வருத்துகிறோம் என,அவனிடம் கோபத்தை மறந்து பேசிவிட ஒரு மனம் தவிக்க.... அதற்கு எதிராய் மறுமனமோ உன் அண்ணன் மட்டும் திருமணத்தை நிறுத்தவில்லை என்றால் உன் நிலைமை என வாதிட இரண்டுக்கும் நடுவே முடிவெடுக்க முடியாமல் தவித்தாள்.


மறுநாள் காலையில் ஆபீஸுக்கு கிளம்பிய திவ்யா தன் தங்கையிடம் "வாடி நானே உன்னை காலேஜில் ட்ராப் பண்ணுகிறேன்" என அழைக்க..அவளோ முகத்தை திருப்பிக்கொண்டு "ஒன்னும் தேவையில்லை நான் பஸ்லேயே போய்கிறேன்" என்றவள்,நடக்க தொடங்க...

"ஏண்டி எப்பவும் என்னை வண்டியில் கொண்டுவிடு என நீ தானே கூப்பிடுவா இன்னைக்கு மட்டும் என்ன..?" என்க...அவளோ "நான் இன்னைக்கு கேட்கவே இல்லையே,உன்மேல பயங்கர கோபத்தில் இருக்கேன் அதனால் எங்கிட்ட பேசாதே என்றவள்,உன் மனசாட்சியை தொட்டு சொல்லு உன் மனதில் ஆதி மாமா இல்லைன்னு" தங்கையின் கேள்வியில் தடுமாறியவள் பதில் சொல்லும் முன் "இல்லைன்னு மட்டும் சொல்லாத அதை நான் நம்பமாட்டேன்,அப்பறம் எதுக்கு நேற்று நைட் முழுவதும் அழுதாய்..? அதுக்கும் ஏதாவது காரணம் சொல்லாதே" என்றவள் தனது பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

செல்லும் தன் தங்கையின் முதுகை வெறித்தவளுக்கு தன் தவறு புரியத்தான் செய்தது ஆனால் தன் தந்தையை மீறி அவளால் முடிவெடுக்க தைரியம் இல்லை.



தன் எதிரில் அமர்ந்திருந்த மதனை கேள்வியாக நோக்கிய விக்ரம்…"என்னடா ரொம்ப நேரமா என்னையே வைத்த கண் மாறாமல் பார்த்து கொண்டிருக்கிறாய் அவ்ளோ அழகாவா இருக்கேன்" என நக்கலாக கேட்கப்படி தன் தலைமுடியை ஸ்டைலாக கலைத்துவிட...

மதனோ அவன் செய்கையில் கோபம் அதிகரிக்க "அப்போ நீ அந்த நந்தனாவை தான் கல்யாணம் பண்ணிக்க போற அப்படிதானே" என்க…

"எஸ் ஆஃப் கோர்ஸ். அதில் என்ன சந்தேகம்" என்றவனை முறைத்தவன்,

"நீங்க இரண்டு பேரும் என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கீங்க. அவனும் அந்த மேக்கப் மூஞ்சி ஸ்வேதாவுக்கு ஓகே சொல்லிருக்கான்...எனக்கு வர கோபத்தில் உங்க இரண்டு பேரையும் கொலை பண்ண போறேன்" என்றான்.


விக்ரமோ "என்னை பற்றி பேசுவதாக இருந்தால் மட்டும் சொல்லு நான் கேட்கிறேன், உன் பிரெண்டை பற்றியெல்லாம் இங்கே பேசாதே...அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்றவன்,சீக்கிரம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் சொல்லிவிட்டு கிளம்பு மச்சி எனக்கு வேலையிருக்கு" என்க,

மதனோ "நல்லா நடிக்கிறீங்கடா" இரண்டு பேரும். ஒரு நாள் உங்க முகமூடி கிழியும் அப்போது இருக்கு உங்களுக்கு..? நீங்க இரண்டு பேரும் அந்த பிசாசையே கட்டிட்டு நல்லா அழுங்க. எனக்கென்ன என சாபமிட்டவன், இந்த கன்னி பையனோட சாபம் கண்டிப்பா பலிக்கும் டா " என சொன்னபடியே அறையை விட்டு வெளியே வந்தான்.


இவ்வாறே நாட்கள் செல்ல… திருமண நாளும் நெருங்கி கொண்டிருந்தது.அன்று திருமணத்திற்கு ஆடைகள் எடுக்க மொத்த குடும்பமும் அந்த பிரமாண்டமான ஜவுளிக்கடையையே தலைகீழாக மாற்றியபடி உடைகளை தேர்வுசெய்து கொண்டிருந்தனர். ஸ்வேதா நந்தனா இருவரும் இப்போதே அந்த வீட்டின் மருமகள்கள் போல அதிகாரம் பண்ண தொடங்கிவிட்டனர்.

அதுவும் அவர்கள் கீர்த்தனா மற்றும் நந்தினியை அடிமை போலவே நடத்த தொடங்கினர்,ஆனால் சாமர்த்தியமாக அதை யாருக்கும் சந்தேகம் வராதபடி பார்த்துக்கொண்டனர்.


குடிக்க தண்ணீர் வேண்டுமென்றாலும் கீர்த்தாவையே வேலை ஏவியவர்கள் ஒரு நாளைக்கு பலமுறை மாடிபடியை ஏற வைத்து கொடுமை படுத்தினர்,அதுவும் சிரித்துக்கொண்டே தேன் தடவிய வார்த்தைகளை உபயோகிக்க.. நந்துவின் தாயோ அவர்களின் உள்நோக்கம் அறியாமல் பாசத்துடன் புன்னகையோடே அனைத்தையும் செய்தார்.


நந்துவையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை..அவளிடமும் இந்த வீட்டின் ஏகபோக உரிமம் தங்களுக்கே என நிரூபிக்க வார்த்தைகளால் வதைத்தனர். "ஏதோ போனால் போகிறது அனாதையாக கஷ்டப்பட கூடாதே என்பதால் தான் என் அத்தை குடும்பம் உங்களை பார்த்து கொள்கிறார்கள்.இல்லையென்றால் எப்போதோ உங்களை வீட்டை விட்டு விரடியிருப்பார்கள்.


ஆனா உனக்கு பாவம் பார்த்து இடம் கொடுத்தால் இந்த வீட்டுக்கே சொந்தம் கொண்டாட நினைப்பியா..? எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்தாயா..? நான் கூட முதலில் நீ ஆதியை தான் கவிழக்க நினைப்பதாக எண்ணினேன், அப்பறம் தான் கவனித்தேன் உன்னோட காதல் பார்வை விக்ரம் அத்தான் மேல் படிவதை...விக்ரம் அத்தானின் பக்கத்தில் நிற்கவாவது உனக்கு தகுதி இருக்கா..? அவருக்கும் இந்த சொத்திற்கும் ஏற்ற ஜோடி நான் தான். உன்னால் அந்த இடத்தை என்னிடமிருந்து பறிக்கவே முடியாது. இனி விக்ரம் அத்தான் எப்போதும் இந்த நந்தனாவிற்கு மட்டும் தான் சொந்தம்" என விழிகளில் கலர் கலர் கனவுகள் மின்ன சொன்னவளை வேதனை நிறைந்த மனதோடு பார்க்க மட்டுமே முடிந்தது நந்தினியாள்.


அவர்கள் சொன்ன பின்பு அவளுக்கே தான் கொஞ்சமும் விக்ரம் அத்தானிற்கு பொருத்தமில்லையோ என்ற எண்ணம் வலுப்பெற்றது.


இன்று ஜவுளிகடையிலும் அவர்களின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. அவளும் வர முடியாது என எவ்வளவு தடுத்தும் அழைத்து வந்துவிட்டனர். வந்தவள் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் கடையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அனைவரும் புடவை பிரிவில் உள்ள மொத்த புடவையையும் பிரித்து மெய்ந்துக்கொண்டிருந்தனர்.

அங்கு பாவப்பட்ட ஜீவன்களாக இருந்தது என்னவோ வேலை செய்யும் சேல்ஸ் கேர்ள்ஸ் தான்,தங்கள் விழி பிதுங்கி நின்றுந்தனர்,அதுவும் அந்த இரு மேனாமினுக்கிகள் தொல்லை தாங்க முடியாமல் "இந்த ஷோ ரூமில் இது தான் லாஸ்ட் டிசைன்' என்றவர்கள் கைகாட்டி இதில் ஏதாவது பிடித்தாள் எடுங்க..? இல்லையென்றால் வேற கடையை பார்த்துக்கோங்க" என வேலை போனாலும் பரவாயில்லை என எதிர்த்து பேச தொடங்கிவிட்டனர்.


மதன் வந்தது முதல் ஆதி விக்ரம் இருவரின் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவனோ மும்புறமாக மொபைலில் பப்ஜி விளையாடி கொண்டிருக்க மற்றொருவனோ மொபைலில் யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரை பார்த்துக்கொண்டிருந்த மதனுக்கு தான் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருந்தது.

ரெண்டும் என்ன டிசைனோ என எண்ணியபடி திரும்பி தன் மனைவியை பார்க்க அவளும் அவனை கண்டுகொள்ளாமல் புடவையை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.


'எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் தானே இவ மட்டும் எப்படி இருக்க போகிறாள். எல்லாம் நான் வாங்கி வந்த வரம்' என தன்னையே நொந்தபடி கண்ணன் அருகே செல்ல... அவரோ பார்த்து பார்த்து தன் மனைவிக்கு தேர்வு செய்து கொண்டிருந்தார். "ராதுமா உனக்கு இந்த பட்டு புடவை அழகாக இருக்கும், பெரிய பார்டர் வைத்து டிசைனும் சூப்பராக இருக்கு" என்க அதற்கு அவரோ இந்த வயதிலும் கண்களில் குறையாத காதலுடன் அவர் தேர்வு செய்தையே தனக்கென எடுத்துக்கொண்டார்.

இதை பார்த்த மதனுக்கு சிவாஜி கணேசன் படத்தில் வரும் "இந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்" என்ற டயலாக் தான் ஞாபகம் வந்தது. இப்படிப்பட்ட பெற்றோருக்கு மகன்களாக பிறந்துவிட்டு எப்படி கல்லையும் மண்ணையும் போல எப்படி இருக்க முடியுதோ..? இவனுங்களோடு இருந்தால் சீக்கிரம் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்றபடி யாரையும் கண்டுகொள்ளாமல் அங்குள்ள இருக்கையில் அமர்ந்து விட்டான்.



வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நந்தினியை அழைத்த அவர் அன்னை ஒவ்வொரு புடவையாக அவள் மேல் வைத்து பார்க்க...அவளோ தாயின் கையை பிடித்து தடுத்து "அம்மா எனக்கு எதுக்கு இப்போ புடவை ஆல்ரெடி இருப்பதே போதும் அதையே நான் இன்னும் கட்டி முடிக்கவில்லை" என்க அவரோ "அதெல்லாம் பொறுமையா கட்டிக்கலாம் இப்போ கல்யாணத்திற்கு புதுசா எடுத்துக்கோ" என அவள் சொல்ல சொல்ல கேட்க்காமல் தன் மகளுக்கு பொருத்தமானதாக பார்க்க தொடங்கினார்.


அதேநேரம் விக்ரமும் மொபைலில் பேசிக்கொண்டே அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் யாரும் அறியாமல். அவன் அத்தை அவள் மீது ஒவ்வொரு புடவையாக வைத்துப் பார்க்க அதில் ஒரு பட்டு புடவை அவனை மிகவும் கவர்ந்தது. கரும்பச்சை நிறத்தில் ரோஸ் நிற பார்டரில் மிதமான ஜரிகை வேலைப்பாடுடன் பார்க்கவே மிகவும் அழகாக அவள் நிறத்திற்கு பாந்தமாக பொருந்தியது.


கண்ணாடி முன் நின்று ஏதோ சிந்தனையில் பார்த்தவளுக்கு புடவையின் நிறமோ டிசைனோ எதுவும் கருத்தில் பதியவில்லை,அவளின் அன்னையும் அந்த புடவையை வைத்துவிட்டு மற்றொன்றை அவள் மேல் வைத்துப்பார்க்க…. ஆளுயர கண்ணாடிக்கும் அவளின் தாய்க்கும் கூட தெரியாத ஒன்று அவளுக்கு எது பொருந்தும், அழகை சேர்க்கும் என்பது அவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது.


சற்று நேரத்தில் இரு புடவையை அவளுக்காக தேர்ந்தெடுத்தது மற்றவருக்கு எடுக்க சென்றுவிட,அவளோ சற்று தள்ளி நின்றுக்கொண்டாள். விக்ரமோ யாரும் அறியாத வண்ணம் அந்த புடவையை எடுத்தவன், அதை மட்டும் தனியாக பில் போட்டு எடுத்துக்கொண்டான். ஒரு வழியாக மதியம் வரை நீடித்த தேடல் நிறைவடைய அனைவரும் மதிய உணவை முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.


எதையோ பறிக்கொடுத்தவள் போல் படியேறி வந்துகொண்டிருந்த நந்தினியை பார்த்த விக்ரம் அவள் அறையில் நுழைந்தவுடன் அவளின் பின்னோடு அவனும் நுழைந்து கதவடைத்தான்.

அதுவரை இயந்தித்தனமாக இருந்தவள் கதவை அடைக்கும் சத்தத்தில் திரும்பி பார்க்க...கதவில் சாய்ந்து ஒரு காலை மடக்கி கையில் ஒரு பார்சலோடு ஒற்றை காலில் அவனை போல் அடங்காத கேசம் அசைந்தாட கூர்மையான பார்வையோடு நின்றவனின் அழகில் ஒருநிமிடம் தன்னை தொலைத்தவள் பின்னரே அவனின் திருமணம் நினைவு வர முயன்று கட்டுப்படுத்தி கொண்டு "என்ன அத்… என தயங்கியவள் "அத்தான்" என சொல்லலாமா வேண்டாமா என மனதில் பட்டிமன்றம் நடத்தி கடைசியாக அத்தான் என்றவள் என்ன வேண்டும்" என்க….

"என்ன கேட்டாலும் தருவியா..? என்ற பதிலில் "என்ன" என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னவன்,தன் கையிலுள்ள பார்சலை நீட்டினான்.


அவளோ வாங்காமல் தயங்கியபடி அவனையே பார்க்க...அவனோ நீட்டிய கையை மடக்காமல் அவளையே அழுத்தமாக பார்த்தான். அவன் பார்வையிலேயே நீ இதை வாங்கி தான் ஆக வேண்டும் என்ற கட்டளையிருக்க..மெல்ல கைநீட்டி வாங்கிக்கொண்டாள்.


பார்சலை பிரித்தவளின் கண்கள் ஒரு நொடி அந்த மென் பட்டின் அழகில் நிலைத்திருக்க...பின்னர் அதை அவனிடமே நீட்டி "இது யாருக்கு" என்க..

அவனோ அவளையே பார்த்தவாறு "உனக்கு தான், என்னோட கல்யாணத்திற்கு நான் உனக்கு வாங்கி தரும் பரிசு என்றவன், அத்தோடு நில்லாமல் இந்த புடவையை தான் என்னோட கல்யாணம் அன்று நீ போடவேண்டும்" என கட்டளை பிறப்பிக்க...அவளோ கண்களில் வலியுடன் "ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு தண்டனை..?" என்பது போல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
 
Status
Not open for further replies.
Top