ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 10

"ஏய் நீ என்ன லூசாடி"..? என்ன அடிச்சிட்டு நீ எதுக்கு அழுகிற,யாராவது பார்த்தா நான் என்னமோ உன்னை கொடுமைப்படுத்திய மாதிரி நினைக்க போறாங்க, முதலில் அழுகையை நிறுத்து" என கூறியவனை பார்த்து

"உனக்கு நிஜமாவே நான் எதுக்கு அடிச்சேன்னு தெரியாது,அப்படிதானே" என இடுப்பில் கைவைத்து முறைத்தவள் "அந்த வர்ஷா உன்கிட்ட, என்ன பேசிட்டு இருந்தா..?" என கேட்க...அவனோ "அது என்னோட பெர்சனல் அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது" என்றான்.

"எதுடா உன்னோட பெர்சனல்,நாலு வருஷமா ஒருத்தி உன் பின்னாடியே சுத்தி சுத்தி காதலிப்பதாக சொல்லியும்,அவளை கண்டுகொள்ளாமல் இப்போ நடுவில் அந்த மேக்கப் மூஞ்சி உன்னை லவ் பண்றேன்னு சொல்றா, நீயும் காலையில் வந்தவுடன் வேலையை கூட பார்க்காமல்,அவளோடு கேன்டீன் போனதுமில்லாமல் வீட்ல கொட்டிக்கிட்டது பத்தாதுன்னு இங்க அவளோட காஃபி குடிச்சிக்கிட்டே ஒரு மணி நேரம் அங்கேயே அவளிடம் கடலைப்போட்டுட்டு இருப்ப அதை நான் கேட்க கூடாதா..? ஒரு அடியோடு விட்டுட்டேன் என்று சந்தோஷப்படு அதுவும் அவளோட காதலை நீ ஏற்றுக்கொள்ள வில்லை என்பதால் தான் அடியோடு விட்டேன் இல்லைன்னா உன்னை கொலைப் பண்ணியிருப்பேன்" என்றாள் மூச்சுவிடாமல்.

"எனக்கு யாரை பிடித்திருக்கோ அவங்கிட்ட தான் பேச முடியும், இப்போதாவது புரிந்துகொள் எனக்கு உன்னை பிடிக்கவில்லை" என்று சொல்ல...அவளோ அவன் காலரை பிடித்தவள் "என்னை நிமிர்ந்து கண்ணை பார்த்து சொல்லு என்னை பிடிக்கலை,அவளைத்தான் பிடித்திருக்கு என்று…? இனிமே உன்னை சத்தியமா டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்" என விழிகளில் நீர்த்திரையிட அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு,அவன் பதிலுக்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்க….

ஒரு நிமிடம் விழி மூடி தயங்கி நின்றவன், பின்னர் அவள் கண்களைப் பார்த்து "எனக்கு உன்னை பிடிக்கலை" என்க,

அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தவிட்டு,ஆழ மூச்செடுத்து தன்னை சமன் செய்தவள் " சாரி எல்லாத்துக்கும்" என்று சொல்லிவிட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

போகும் அவளை வெறுமையான பார்வைப் பார்த்தவன்,தன் இருக்கையில் விழி மூடி சாய்ந்து அமர்ந்தான்.அவன் கண்களிலும் ஒரு துளி கண்ணீர் மட்டும் கீழே விழுந்து சிதறியது,அவனின் காதலைப் போல.

எப்போதும் வாரத்தில் ஒருநாள் தன் தோழியுடன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்ட திவ்யா, இன்றும் தன் தோழி சவிதாவுடன் வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள கோவிலுக்கு சென்றாள்.
லைனில் நின்று சுவாமி தரிசனத்தை முடித்தவர்கள்,ஒரு தூணுக்கு அடியில் சென்று அமர்ந்து பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டிருக்க, பக்கத்தில் யாரோ அமர்வது போல் இருக்க,திரும்பி பார்த்தவள் அங்கு ஆதியை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டாள்.

சவிதாவோ "எக்ஸ்க்யூஸ் மீ சார்"... நாங்க இங்க உட்கார்ந்து இருக்கிறது தெரியலையா ? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல்,வேற எங்காவது போய் உட்காருங்க, யாரோ தெரியாத நபர் என்று நினைத்து கோபமாக கூற...அவனோ "திவி உன்கிட்ட நான் தனியா பேசணும். அதனால் ஒழுங்கா உன் ஃப்ரெண்ட கிளம்ப சொல்லு,ரொம்ப பேசுறா அப்பறம் நடக்கும் சம்பவத்துக்கு நான் பொறுப்பில்லை" என்றவன்,

"உன்கிட்ட முன்கூட்டியே சொல்லியிருக்கேன் பழைய ஆதி மாதிரி பொறுமையாக எல்லாம் இருக்க முடியாது" என்றான்.

பின்னர் சவிதாவை நோக்கி திரும்பியவன்,"அதையே தான் நானும் கேட்கிறேன் மிஸ்.சவிதா ...ரைட்" என புருவத்தை ஏற்றி இறக்க,அவளும் என் பெயர் இவனுக்கு எப்படி தெரியும் என குழம்பியப்படி 'எஸ்' என்று தலையாட்ட...

அவனோ "ரெண்டு லவ்வர்ஸ் பேசிட்டு இருக்கும் போது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம பக்கத்தில் உட்கார்ந்து இருந்தால்,எங்களுக்கு எப்படி பிரைவசி கிடைக்கும்,சோ பெட்டர் யூ கேன் கோ" என வாசலை கைக்காட்டினான்.

அவளோ "வாட் நான் ஏன் போகணும்,நான் திவ்யாவை தனியாக விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன் என்றவள்,திவ்யா வா நாம்ம கிளம்பலாம்" என நண்பியை அழைக்க...அவளும் எழ முயன்றாள்.

திவ்யாவின் கையை அழுத்தி பிடித்து தடுத்தவன் "உன்கிட்ட நான் பேசணும் என்றவன், அப்படி நீ கண்டிப்பா உன் பிரெண்டோடு போக போகிறாய் என்றால் தாராளமாக கிளம்பலாம், ஆனா அதுக்கு முன்னாடி இதையும் கேட்டுக்கோ என்றவன்,அவள் காதருகில் குனிந்து " கோவிலை தாண்டி ஒரு அடியெடுத்து வைத்தாலும் எல்லார் முன்னாடியும் பப்ளிக்கா கட்டிபிடிச்சி கிஸ் பண்ணுவேன். உனக்கு ஓகே என்றால் தாராளமாக போகலாம். ஆனால் நான் சொன்னது மட்டும் கண்டிப்பா நடக்கும் என்றவன்,நீயே முடிவுப் பண்ணிக்கோ...நான் உன்கிட்ட தனியா பேசணும் அது கோவிலுக்குள் என்றால் டீசெண்ட்டா உன் முகத்தை பார்த்து பேசிட்டு போய்கிட்டே இருப்பேன்,இல்லை செகண்ட் ஆப்ஷன் தான் வேண்டுமென்றால் எனக்கும் டபிள் ஓகே" என்றான் கண்களை சிமிட்டி.

அவளோ அவன் சொன்ன வார்த்தையில் உறைந்து நின்றவள், அவன் முகத்தைப் பார்க்க.. அதில் நான் கண்டிப்பாக சொன்னதை செய்வேன் என்று உறுதி இருந்தது. அவளுக்கே சந்தேகமாக இருந்தது, ஐந்து வருடங்களாக அமைதியே உருவாக இருந்தவனா இவன் என்று..? அவனின் புதிதான நடவடிக்கைகளிலும் அடாவடித்தனத்திலும் சற்று மிரண்டுதான் போனாள்.

பின்னர் தன் தோழியிடம் "நீ போடி நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று சொல்ல,அவளோ இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்தவாறே வெளியே சென்றாள்.

திவ்யா தன் பயத்தை ஒதுக்கியவள்,நேரம் ஆவதை கருத்தில் கொண்டு..."ஏதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க வீட்டுக்கு போகணும் டைம் ஆகிடுச்சு" என்றாள்.

ஆதியோ எடுத்த எடுப்பில் "நேத்து உங்க வீட்டுக்கு யார் வந்தாங்க..? எதுக்காக வந்தார்கள்..? நீ எதுக்காக வேலைக்கு லீவ் போட்டாய்..?" என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக...அவளோ அவன் வேறு எதைப் பற்றியோ பேசப்போகிறான் என நினைத்திருக்க, அவனிடம் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"அது... அது...ஊரிலிருந்து அத்தை வந்தாங்க" என திணறலான குரலில் சொல்ல….அவனோ "அப்பறம் அவ்வளவு தானா" என கேட்க,அவளோ இன்னும் என்ன என்பதுபோல் அவன் முகம் பார்த்தாள்.

"வேற எதுவும் நடக்கலையா..?" என்றவனை பார்த்து தயங்கியவாறே "அது எனக்கும் அவங்க பையனுக்கும் கல்யாணம்" என சொல்லி முடிப்பதற்குள், அவள் இதழ்களில் மீது தன் விரலை வைத்தவன்,

"சும்மா பேச்சுக்காக கூட அப்படி சொல்லாதே என்றவன்,அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தபடி உனக்கு அதில் சம்மதமா..?" என கேட்க கூட பிடிக்காத வார்த்தையை அவளின் மனதை அறிய வேண்டி கேட்க...அவளோ வேகமாக "ச்சிசீ" என சொல்லியவாறே தலையாட்டியவள் அவனை பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்காது" என தன்னையும் அறியாமல் பதில் சொல்லியவளாக முகத்தை சுழித்தாள்.

அவள் பதிலில் மனம் லேசாக,பைத்தியக்காரி அவனை பத்தி பேசிய உடனேயே பிடிக்கவில்லை என சொல்ல தெரிந்த உன்னால்.. ஐந்து வருடங்களாக என்னை பார்த்து இந்த வார்த்தையை ஒருமுறை கூட உபயோகிக்கவில்லை என்பது மட்டும் உன் மண்டையில் என்றைக்கு தான் ஏறுமோ என நினைத்தவன்,இப்போது தான் கவலை மறந்து தன்னவளை ரசிக்க தொடங்கினான்.

அவளை ரசித்தபடியே ..."எனக்கு பிரசாதம் எல்லாம் தரமாட்டியா..?" என சிரிப்பை அடக்கியபடி கேட்க,அவளோ பேப்பரில் மடித்து வைத்த தீருநீரை அவன் முன் நீட்ட,அவனோ கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியப்படி தலையை மட்டும் முன் பக்கமாக நகர்த்தி நீயே வைத்துவிட்டு என சொல்ல,

அவள் தயக்கமாக "இல்ல நீங்களே " என திக்கித் திணற...அவனோ கண்களை மூடி அதே நிலையில் அமர்ந்திருந்தான்.அவளும் வேறு வழியின்றி மெல்ல தன் தளிர் விரல்களால் அவன் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு கைகளை அகற்றிக்கொண்டாள்.

விழி திறந்தவன்,அவள் கைகளில் இருந்த சர்க்கரைப் பொங்கலை பறிக்க, அவள் "அது நான் சாப்பிட்டு வைத்த மிச்சம்" என சொல்லுவதற்குள் சாப்பிட தொடங்கிவிட்டான். "சர்க்கரை பொங்கல் ரொம்ப இனிப்பாக இருக்கு" என்க,அவளோ "அப்படியெல்லாம் இல்லையே இனிப்பு சரியா தான் இருந்தது" என்றாள்.

ஆதியோ அடக்கப்பட்ட சிரிப்புடன் "எனக்கு மட்டும் அப்படி இருக்கும் போல என அவள் இதழ்களை பார்த்தபடி சொன்னவன்,சரி வா போகலாம் டைம் ஆகிடுச்சு" என்றபடி எழுந்து,அவள் எழ கைநீட்ட,

அவளோ "வேண்டாம் நானே" என சொன்னவள்,எழும்போது தன் ஷாலை மிதித்துவிட ஷாலோ தோளில் சுடித்தாரோடு ஃபின் பண்ணியிருந்தவள் தடுக்கி விழ அதற்குள் ஆதி அவளை தாங்கிப்பிடித்தான்.

"சொல் பேச்சை கேட்க கூடாது என்றே நினைத்துகொண்டு இருக்கிறாயா"..? என்றவன்,அவளை எழுப்பி ஒழுங்காக நிற்க வைத்தான். அவளோ ஒரு அசட்டு சிரிப்பை உதித்தவள் "சாரி" என்றாள்.

பின்னர் இருவரும் வெளியே செல்ல...வாசலை கடந்தவுடன் ஆதியை விட்டு தள்ளியே வந்தவளை பார்த்து...அவள் செய்கையின் அர்த்தம் புரிந்தவன், " ஹா ஹா" என சத்தமாக வாய்விட்டு சிரித்தவன் திவி பேபி எனக்கு கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்கும் எண்ணமெல்லாம் இப்போ இல்லை கவலைப்படாதே,எல்லாம் கல்யாணத்திற்கு அப்பறம் தான்...நானெல்லாம் ரொம்ப குட் பாய்" என்றவன், அவள் கையிலுள்ள ஸ்கூட்டி சாவியை வாங்கி, அவனே சென்று வண்டியை எடுத்து கொடுத்தவன்,அவள் வீடு சேரும்வரை பின் தொடர்ந்துவிட்டே தன் வீடு வந்து சேர்ந்தான்.

அன்று அதற்கு மேல் நந்தினியை யாரும் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் இருவரும். அன்றைய நாள் அவ்வாறே முடிய...மறுநாளும் விடிந்தது.இன்று அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் சற்று பரபரப்பாக காணப்பட்டது அந்த காலைப்பொழுது.

அனைவரும் உணவருந்த டைனிங் டேபிளில் கூடியிருக்க...தங்கள் உணவை உண்ணத் தொடங்கினர். அப்போது மதன் உள்ளே வர..."ஏண்டா இவ்வளவு நேரம்,எல்லாரும் சாப்பிட தொடங்கிட்டாங்க.. வா வந்து சாப்பிடு" என்ற கீர்த்தனா, அவனுக்கும் தட்டைவைத்து பரிமாற தொடங்கினார்.

"ஸ்ஸ்... ஆஆ அம்மா....என கத்தியவாறு என்னம்மா சட்னி இவ்வளவு காரமா இருக்கு" என்றவள், தண்ணீரை எடுத்து பருகத் தொடங்கினாள்.

"அத்தை அவளுக்கு தான் காரம் என்றாலே ஒத்துக்காதே,அப்பறம் எதுக்காக இவளோ காரமாக செய்தீங்க. பாருங்க இதுக்கே கண்ணு மூக்கு எல்லாம் சிவந்த்துப்போச்சு" என்றவன் அவள் தட்டை எடுத்து தூரம் வைத்துவிட்டு புதிதாக தட்டில் இட்லியும் சாம்பார் மட்டும் பரிமாரியவன்...நந்து இதை மட்டும் சாப்பிடு என கொடுக்க,அவளோ அதற்குள் ரெண்டு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டால் காரம் தாங்காமல்.

அதுவரை அமைதியாக இருந்த பாட்டி…"உன் ஒருத்திக்காக காரம் இல்லாமல் சமைத்தால் நாங்களெல்லாம் எப்படி சாப்பிடுவது,எங்களுக்கு காரமாக சாப்பிட்டு பழக்கம் ஆகிடுச்சு" என்றபடி இட்லியை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தார்.

ஆதியோ "அப்படியா பாட்டி" சொல்லவே இல்ல என நக்கலாக கூறியவன்,எழுந்து சமையலறை சென்று ஒரு பாத்திரத்தை எடுத்துவந்தவன்,அதை திறந்து வைத்துவிட்டு "சிட்னி விட இது காரமாக இருக்கும் பாட்டி இதை சாப்பிடுங்க" என்று மிளகாய் தூளை கட்டியவன் தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.

"ஆதி எதில் விளையாடுவது என்று இல்லை,இப்படி சாப்பிடும் போது மிளகாய்தூளை வைத்தால் எப்படி சாப்பிடுவது" என ராதா மகனை கத்த,

அவனோ "உங்க அம்மா தான் காரம் பத்தலைன்னு சொன்னாங்க. அவங்களை கேளுங்க என்றவன், தன் தட்டில் கவனமானன். விக்ரம் நந்துவின் முகத்தை பார்க்க,இன்னும் உதட்டை குவித்து "ஊப் ஊப்" என சத்தமிட்டவாறு தண்ணீரையே குடித்துகொண்டிருந்தாள்.அதற்குள் ராகவனோ அடுத்த வேலையை தொடங்கிவிட்டார்.

"என்னப்பா மதன் விக்ரம் கம்பெனியில வேலை செய்கிறாய் போல" என்க..

அவனும் "ஆமாம் சார்" என மகிழ்ச்சியாகவே தன் நண்பனின் கம்பெனியில் வேலை செய்வத்தை சொல்ல...அவரும் அவனை காயப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் "சந்தோஷமா இருக்காதா பின்ன, வேலை தேடி அலைய வேண்டாம்,எல்லா கம்பெனியை விட அதிக சம்பளம்,வேலை செய்யவில்லை என்றாலும் யாரும் கேட்கமாட்டாங்க...இது எல்லாத்தையும் தவிர தினமும் காலையில் டிஃபன் செலவும் இல்ல அப்போ சந்தோஷமா தான் இருப்பாய்" என குத்தலாக சொல்ல...சாப்பிட்டு கொண்டிருந்தவனின் கை தட்டிற்கும் வாய்க்கும் இடையே அப்படியே அந்தரத்தில் நின்றது.

அனைவரும் இப்படிப்பட்ட பேச்சை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை. விக்ரம் ஆதி இருவருக்கும் அப்படி ஒரு கோபம். முதலில் தொடங்கிய ஆதி "மாமா யாரை பார்த்து என்ன சொல்றீங்க..? இதே வார்த்தையை உங்களை தவிர வேற யாராவது சொல்லியிருந்தால், இந்நேரம் அவன் உடம்பில் உயிர் இருந்திருக்காது" என்றான் கோபமாக.

மதன் கண்கள் கலங்கத் தொடங்க...அனைவர் முன்பும் அழுதுவிட கூடாது என்பதால் அதன்பின் ஒரு வாய் கூட உண்ணாமல் கைக்கழுவியவன்,கீர்த்தனாவை நோக்கி "அம்மா எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. அப்பறம் வரேன்" என்றவன்,அவர்கள் தடுத்து பேசும் முன் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

சந்தியாவோ அவன் வந்தபின் குனிந்த தலை நிமிராமல் இருந்தவள்,அவன் கலக்கத்தோடு வெளியேறுவதை பார்த்து, தன் கண்ணீரை யாரும் அறியாதபடி துடைத்துக் கொண்டாள்.

"என்ன மச்சான் இப்படி சொல்லிட்டீங்க..? மதன் எத்தனையோ தடவை மாட்டேன் என்று சொல்லியும் நாங்கதான் காலையில் இங்கதான் சாப்பிடனும்னு கட்டாயப்படுத்தினோம். நீங்க பேசியதில் சாப்பிடாமல் கூட எழுந்து போய்விட்டான்" என கண்ணன் ஆதங்கமாக சொல்ல..அவரோ "நான் சாதாரணமாக தான் சொன்னேன்,அதை தப்பா புரிந்துகொண்டாள் நான் என்ன செய்யமுடியும்" என்றவர் சாப்பிட தொடங்கினார்.

பின்னர் அதற்கு மேல் யாருக்கும் உண்ண பிடிக்காமல் நந்து ஆதி சந்தியா விக்ரம் என அனைவரும் சாப்பிடாமல் தங்கள் வேலைக்கு செல்லத் தொடங்கினர். ராகவனுக்கு அது இன்னும் ஆத்திரத்தை கொடுத்தது,எவனோ ஒருத்தனை சொன்னவுடன் மொத்த குடும்பமும் இப்படி சாப்பிடாமல் செல்வதிலேயே அந்த வீட்டில் மதனின் இடத்தை நன்றாகவே புரிந்துகொண்டார். ஆளாளுக்கு என்னை கேள்விக் கேட்கிறாங்க,அப்படியென்றால் ரோட்டில் போறவனுக்கு இருக்கும் உரிமையும் மரியாதையும் கூட இந்த வீட்டில் எனக்கு இல்லை என்று தானே அர்த்தம் என நினைத்தவர்,ஒரேயடியாக அவனை இந்த வீட்டிற்கு வரவிடாமல் தடுக்கிறேன் என மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

பின்னர் அனைவரும் சென்றுவிட...விக்ரம் தன் கார் அருகில் நின்றுக்கொண்டு யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க,அப்போது வெளியே வந்த ராகவனை பார்த்து... "ஒரு நிமிஷம் மிஸ்டர்.ராகவன் என்க...

அவரோ "ஏய் என்னடா திமிரா உன் அதிகாரத்தை எல்லாம் யாருகிட்டயாவது வைத்துக்கொள். பெயர் சொல்லி கூப்பிடுகிறாய்..? நான் உனக்கு தாய்மாமா அதற்குண்டான மரியாதை கொடுத்து பேசு" என்றார்.


விக்ரம் " மரியாதை என்பது ஒருவரை பார்த்து தானாக அவரின் நல்ல நடவடிக்கையின் பேரில் கொடுப்பது,அதெல்லாம் கேட்டுவாங்க கூடாது. அதற்கான தகுதி உங்களுக்கு இருந்தால் மரியாதை தானாக வரும்,இப்போ அது உங்ககிட்ட இல்லை அதனால் என்கிட்ட அதை எதிர் பார்க்காதீர்கள்" என்றவன்,

"இந்த வீட்டிலுள்ள எல்லாரும் உங்களை நல்லவன் வல்லவன் என்று சொன்னாலும் அதை நான் நம்ம மாட்டேன்,உங்களை பற்றி முழுசா தெரிந்த ஒரே ஆள் நான் தான்..அதனால் என்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நிறைய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்...மதன் இங்க வருவதினாலோ,சாப்பிடுவதனால் உங்க அப்பா வீட்டு காசு ஒன்னும் கரைந்துப்போகாது,போறது எங்க அப்பாவீட்டு பணம் தான் அதனால் கொஞ்சம் உங்க வேலையை மட்டும் பார்த்திட்டு ...வந்தோமா போனோமா என்று இருக்கணும், அவனாவது உங்களை மாமா என்பதற்காக வார்த்தையோடு நிறுத்திட்டான். ஆனா நான் அதையெல்லாம் பார்க்கமாட்டேன்,சொன்னதை உண்மையில் செய்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பேன் ஜாக்கிரதை" என்றவன் தன் காரை கிளப்பிக்கொண்டு சென்றான்.



மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் -11

ஆபீஸ் வந்த மதனிற்கு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.ராகவன் சொன்ன வார்த்தையே திரும்ப திரும்ப மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. சந்தியாவும் வந்தலிருந்தே அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனிடம் பேச கூடாது என முடிவெடுத்தவளால்,அவனின் கண்ணீர் நிறைந்த சோகமான நிலையை கையை கட்டிக்கொண்டு பார்த்திருக்க முடியவில்லை,காதல் கொண்ட நெஞ்சம் தன்னவனின் துயரை எப்படியாவது போக்கவே எண்ணியது.

அவனருகே சென்று தோளில் கைவைத்து மதன் என அழைக்க,அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகம் 'கீழே விழுந்த குழந்தை தாயின் முகத்தை பார்த்தவுடன் அழ தயாராகுமே' அதை ஒத்திருந்தது. அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் அவனை இடையோடு அணைத்துக்கொண்டாள். அவனுக்கும் இப்போது அந்த அணைப்பு தேவையாய் இருக்க அவனும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு தன் சோகத்தை மறக்க முயன்றான். தன் இடையை அனைத்து வயிற்றில் முகம் புதைத்து சிறுபிள்ளை போல் ஆழ்ந்த மூச்சுக்களால் தன்னை நிலைப்படுத்த முயன்றவனின் சிகைக்குள் கரம் தொடுத்து வருடிக்கொடுக்க,மெல்ல தன் பாரம் குறைவதை உணர்ந்தான்.நொடிகள் நிமிடங்களாக எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ அவர்களுக்கே தெரியாது,முதலில் தன்னிலையடைந்தவன் அவளிடமிருந்து பிரிந்து,அவள் முகம் பார்க்க முடியாமல் மேஜை மேலிருந்த கோப்புகளையே வெறித்துக்கொண்டிருந்தான். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்ப்பது, நேற்று அவ்வளவு ரோஷமாக உன்னை பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு இன்று அவள் அணைப்பில் கட்டுண்டு இருந்த தன்னையே திட்டிக்கொண்டான்.

இவகிட்ட மட்டும் நான் எடுக்கும் உறுதி மொத்தமும் தகர்வதை ஒரு இயலாமையோடு உணர்ந்தான். பின்னர் அவளும் நேற்று அப்படி பேசிவிட்டு இன்னைக்கு ஏன் இப்படி நடந்து கொண்டாய்..? என எந்த கேள்வியும் கேட்டு அவனை கஷ்டப்படுத்தாமல் விலகி சென்றாள். அவளுக்கு தன்னவனின் தெளிவான முகமே போதுமானதாக இருந்தது,அதற்கு மேல் அவனை தொல்லை செய்யாமல் வேலையை தொடர்ந்தாள்.

மாலை ஐஸ்க்ரீம் பார்லரில்… நந்து ஆதி மதன் மூவரும் அமர்ந்திருந்தனர்.நந்தினி தான் மதன் காலையில் நடந்த சம்பவத்தைதொடர்ந்து சோகமாக இருப்பான்,கொஞ்சம் அவனை அந்த அழுத்தத்திலிருந்து மீட்டு இயல்பு நிலைக்கு திருப்ப வேண்டி கெஞ்சி வரவைத்தாள்.

மச்சி இந்த படத்தில் எல்லாம் வருவாங்களே, "அமெரிக்கா மாப்பிள்ளை கேரக்டரில், அவங்களை பத்தி என்ன நினைக்கிறாய்" என திடீரென்று இப்படி ஒரு கேள்வியை மதனை பார்த்து ஆதி கேட்க….அதுவரை சோகமாக இருந்தவன்,இப்போது குழப்ப நிலைக்கு சென்றான்.

"என்னடா ஆச்சு உனக்கு திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேட்கிற" என்றவனை பார்த்து..பதிலை "சொல்லுடா" என்க,

அவனும் "அதெல்லாம் ஒரு மொக்கை ரோல் டா ... அவர்களை பற்றி பேசுவது கூட டைம் வேஸ்ட்" என்றவனை தொடர்ந்து நந்தினியும் "செம்ம காமெடி பீஸ், அவங்க தான்,பாவம் மணமேடை வரை வந்துட்டு எல்லா படத்திலும் கல்யாணம் மட்டும் நடக்காது...அவனுங்க தான் உண்மையான முரட்டு சிங்கிள்ஸ்" என்றாள் சிரித்துக்கொண்டே.

ஆதியோ "அப்படி ஒரு காமெடி பீஸை பார்க்கணுமா" என்றபடி தங்களுக்கு அடுத்த டேபிளை கண்காட்ட, அங்கு வந்து போகும் பெண்களை சைட் அடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் மகேஷ்.

"யாருடா அது பார்ப்பதற்கு பேக்கு மாதிரி இருக்கான், ஆனா பொண்ணுங்களை பார்க்கிற பார்வையே சரியில்லையே" என்க…

"நான் சொன்ன அமெரிக்கா மாப்பிள்ளை இவன்தான்,உன் தங்கச்சி இருக்காளே அவளுக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளை" என்றவனை பார்த்து..."என்னடா சாதாரணமா சொல்ற,அவனை என்ன பண்றேன் பார்" என எழுந்த மதனை பார்த்து

"டேய் அதெல்லாம் வேண்ணாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் திவ்யா வந்திடுவா,அவள் வரும் போது இவன் இங்க இருக்க கூடாது,அதுக்கு ஏதாவது ஐடியா சொல்லு..? இன்னைக்கு என்னோட தான் திவி பேபி ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்" என்றான் உல்லாசமாக.

"அதுமட்டுமில்லை மச்சி அவனும் உன்னோட கம்பெனிக்கு தான் வேலைக்கு வர போகிறான், அப்படியே உன் தங்கச்சிக்கு பாடி கார்ட் வேலையும் சேர்த்து செய்யப்போகிறான்" என்ற புதிய தகவலையும் கொடுக்க…. "ஹா ஹா ... என சத்தமாக சிரித்த மதன் செத்தாண்டா சேகர்… இவன்தான் புதுசா ஜாயின் பண்ணப்போற ஆடு போலவே,இனி அவனை நான் வச்சி செய்யணும்னு அவசியமில்லை. எல்லாம் தானவே நடக்கும் கவலையை விடு,ஒரே ஆஃபீசில் இருந்தாலும் திவ்யாவை இனி அவனால் பார்க்கக்கூட முடியாது" என்றான் இனி நடக்க போகும் தரமான சம்பவத்தை நினைத்து சிரித்தபடி.

பின்னர் இவனை எப்படி இங்கயிருந்து துறத்துவது என யோசிக்க தொடங்கினர். நந்துவோ ஆர்வ கோளாறில் "இப்படி பண்ணலாம், அவன் மேல் ஏதாவது ஜூஸ் காஃபி இந்த மாதிரி ஏதாவது ஊற்றிவிட்டு ரெஸ்ட் ரூம் போக வைத்துவிடலாம்" என்க,

ஆதி மதன் இருவருமே தலையிலேயே அடித்துக்கொண்டனர். "ஏய் எதுக்கு இந்த ரியாக்ஷன் கொடுக்கிறிங்க…? இனிமே நான் உங்களுக்கு ஐடியாவே கொடுக்க மாட்டேன் போ " என்றபடி முகத்தை திருப்ப,அவளை பார்த்து சிரித்தபடி "நந்து உன்னால் மட்டும் தான் இப்படி சைல்டிஷா யோசிக்க முடியும், என்றவன் அதெல்லாம் ஓல்டு ஐடியா நந்து இவனுகெல்லாம் செட் ஆகாது.வேற ஏதாவது தான் யோசிக்கணும்" என்றான்.

அப்போது ஆதிக்கு ஹாஸ்பிடலில் இருந்து ஃபோன் வர...எழுந்து வெளியே சென்று பேசத்தொடங்கினான். மதனோ "உனக்கு வேற ஏதாவது வேணுமா நந்து" என்க,

அவளும் தனக்கு பிடித்த ஐஸ்கிரீம் பிளவரை சொல்ல,அவனும் இருக்கையை விட்டு எழுந்தவன் ஐஸ்கிரீம் வாங்கிவர சென்றான்.

அதுவரை அங்குள்ள பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்த மகேஷ் அப்போது தான் தனியாக அமர்ந்திருந்த நந்தினியை பார்த்தான். "வாவ் " என வியந்தவன், 'ச்ச... இவ்வளவு நேரம் மொக்கை ஃபிகரை எல்லாம் பார்த்து இருந்துட்டு இப்படி ஒரு பியூட்டியை மிஸ் பண்ணிட்டேனே' என நினைத்தவன்,அவளை வஞ்சனை இல்லாமல் பார்வையால் மொய்த்தான்.

ஏதோ அனிஸியாக உணர்ந்தவள், சுற்றி பார்வை சுழற்ற,அங்கே தன்னையே வெறித்தபடி பார்த்திருந்த மகேஷை கண்டு அதிர்ந்தாள். அதுவும் அவன் பார்வை அவளை அருவறுக்க வைத்தது. அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவளை பார்த்து கண்ணடிக்க அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஆதி மொபைலில் பேசிக்கொண்டே திரும்பி பார்த்தவன்,நந்தினியின் முகத்தில் தோன்றிய அருவருப்பை கண்டு ஏதோ உணர்ந்தவன், ஃபோனில் ஏதாவது எமர்ஜென்ஸி என்றால் கூப்பிடும் படி பணிந்துவிட்டு மொபைலை அணைத்து பாக்கெட்டில் வைத்தபடி அவள் அருகில் அமர்ந்தான். மதனும் வந்துவிட ஐஸ்கிரீமை நந்துவிடம் நீட்ட அவளோ கண்கலங்க இருவரையும் பார்த்து நடந்ததை சொல்ல முயல,அவளை தடுத்த ஆதி "நீ எதுவும் சொல்ல வேண்டாம் எல்லாம் எனக்கு தெரியும் என்றவன், இப்போ நீ என்ன பண்ற சிரிச்சிக்கிட்டே இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு கொண்டே நடக்க போகும் ஆக்க்ஷனை மட்டும் பார்" என்றவன், டாக்டராக ஃபார்மல் ஷர்ட்டில் இருந்தவன் கையிலுள்ள பட்டனை கழட்டி இரு கைகளிலும் முழங்கை வரை சட்டையை தூக்கிவிட்டு கொண்டு, கையிலுள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரத்தையும் கழட்டி மேஜை மீது வைத்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தான்.

"என்னாச்சு நந்தும்மா" என்ற மதன்,அவள் சொன்ன செய்தியில் கொதித்து போனவன் "பொறுக்கி நாய்" என கத்தியபடி அவனும் எழுந்தான்.

முதலில் சாதாரணமாக அமர்ந்திருந்த மகேஷ், இருவரும் தன்னை நோக்கி வரவும் பார்வையை மாற்றிக்கொண்டான். ஆதி அவன் எதிரில் சென்று அமர்ந்து 'என்ன என்பது' போல் புருவத்தை ஏற்றி இறக்க, அவனோ உள்ளே தோன்றிய நடுக்கத்தை மறைத்துக்கொண்டு மெல்ல சிரித்தான். மதனும் அவனின் அருகில் அமர இப்போது வெளிப்படையாகவே பயத்தில் வேர்க்கத் தொடங்கியது.

அவனுக்கு சென்னை புதிது, பிறந்தது கிராமத்தில் என்றாலும் படிக்க வெளிநாடு சென்றவன்,படிப்பை முடித்துக் கொண்டு அங்கேயே வேலையை தொடர்ந்தான். இப்போது தான் திவ்யாவை திருமணம் செய்யவேண்டும் என்ற ஆசையில் இந்தியா வந்தவன்,திருமணத்தையும் பேசி முடித்துவிட்டு அவள் வேலை செய்யும் கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பிக்க...வெளிநாட்டில் ஆல்ரெடி எக்ஸ்பிரியன்ஸ் இருந்ததால் வேலையும் உடனடியாக கிடைத்தது.

எங்கே ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ,தெரியாத இடத்தில் தனக்கு உதவிக்கு கூட யாருமில்லையே,அதுவும் இல்லாமல் மாமாவுக்கு தெரிந்தால் திவ்யாவை திருமணம் செய்து தரமாட்டாறே என பலவாறு எண்ணியவன்,முதலில் இங்கேயிருந்து கிளம்பிவிட வேண்டும்.எல்லாம் இந்த திவியாவால் வந்தது, அவள் சொன்ன நேரத்தில் வந்திருந்தாள் நான் ஏன் இவளை சைட் அடிக்க போறேன் என நினைத்தவன், எழ முயல,

ஒரே எட்டில் அவன் காலரை பிடித்த ஆதி "உட்காருடா எங்க தப்பிக்க பார்க்கிறாய்…?" என கேட்க

அவனோ கையை தட்டிவிட்டு செல்ல முயன்றான்.
ஆதியோ ஒரு கையில் அவனை பிடித்தவன் மற்றொரு கையில் தனது ஒட்டு மொத்த கோபத்தையும் கொண்டு முகத்திலேயே ஓங்கி குத்தினான். ஒரே அடியில் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டத் தொடங்கியது. அவன் சுதாரிக்கும் முன் அடுத்தடுத்த அடியை இறக்க,மதனும் சேர்ந்துக்கொண்டான்.

சற்று நேரத்தில் கடையின் உரிமையாளர் வந்து சண்டையை தடுக்க முயல,திரும்பி ஆதி பார்த்த பார்வையில் கால்கள் தானாக ஒரடி பின்னோக்கி சென்றது.

நந்தினி முதலில் பயத்தில் இருந்தாலும் ஆதி அடிக்க தொடங்கியவுடன் சிறுபிள்ளை போல் கைத்தட்டி அப்படித்தான் மூக்குலயே குத்து, மண்டையிலேயே போடு என ஐஸ்கிரீமை சந்தோஷமாக சாப்பிட்டு கொண்டே "ரன்னிங் கமென்ட்ரி" கொடுத்து கொண்டிருந்தாள்.

இருவரும் அடித்த அடியில் முகம் மொத்தமும் இரத்தம் சொட்ட,சட்டையெல்லாம் கிழிந்து பிச்சைக்காரன் போல் மாறிவிட்டான் மகேஷ். இன்னொரு வாட்டி உன்னை எங்கயாவது பார்த்தேன் அவ்வளவு தான் என கர்ஜித்தவன்,அவனை வெளியே துரத்திவிட்டு உள்ளே வந்தான்.தனது வண்டியை கூட தள்ள முடியாமல் தள்ளாடியவன், எங்கே திரும்பவும் வந்து அடித்துவிடுவானோ என்ற பயத்தில் கஷ்டப்பட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

எல்லாரும் இன்னும் அவனையே பார்த்துக்கொண்டிருக்க..அவனோ "இங்க என்ன வேடிக்கை…? என சத்தமாக சொல்ல அனைவரும் கலைந்து சென்றனர்.

"அய்யோ... ஆதி சூப்பர் . அவனுக்கு செம்ம அடி என்றவள்,மதன் அண்ணா உனக்கு இவளோ கோபம் வருமா..? இன்னைக்கு தான் நானே பார்த்தேன்" என்றாள்.

பின்னர் சிறிது நேரத்தில் "சரி வாங்க போகலாம்" என்ற ஆதியை பார்த்து, "நீ எங்க வர...திவ்யா வருவா தானே, நல்லவேளை இன்னைக்கு அவனை பார்க்க வேண்டிய கொடுமையிலிருந்து தப்பித்தாள்,ஆனா முன்னப்பின்ன தெரியாத பொண்ணுங்களையே இப்படி பார்க்கிறானே பொறுக்கி ,திவ்யா பாவம் எப்படியாவது அவளை சீக்கிரம் கல்யாணம் பண்ற வேலையை பார் என்றவள்,மதன் அண்ணா வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்" என்றுவிட்டு மதனுடன் வீட்டுக்கு சென்றாள்.வாசல் வரை கொண்டுவந்து விட்டவன்,அவள் எவ்வளவு வற்புறுத்தியும் உள்ளே வரவில்லை.

வீட்டையடைந்தவள்,தன் அறைக்கு சென்று உடைமாற்றி விட்டு, மாடியில் உள்ள ஹாலிலேயே உட்கார்ந்து டிவி பார்க்க தொடங்கினாள்.

கீழே ஹாலில் பாட்டியும் ராகவனும் அமர்ந்திருக்க அங்கே செல்லாமல் மேலேயே இருந்துக்கொண்டாள்.
ஆதியும் இப்போது வீட்டில் இல்லை அதனால் கண்டிப்பாக தன்னை காயப்படுத்த ஏதாவது சொல்வார்கள் எதற்கு வம்பு என்றே கீழே செல்லவில்லை.

இங்கு நந்தனா மற்றும் அவள் தங்கை ஸ்வேதாவும் நந்தினி மேல் கொலை வெறியில் இருந்தனர்.காலையில் அவளுக்கு ஒன்று என்றவுடன் ஆதி துடித்த துடிப்பை பார்த்ததிலிருந்து ஸ்வேதாவுக்கு எப்படியாவது அவளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. போதாக் குறைக்கு விக்ரம் வேறு தந்தையை மரியாதையும் இல்லாமல் பேசியதை கேட்ட நந்தனாவிற்கும் மொத்த கோபமும் நந்தினி மேல் திரும்பியது.

அக்கா தங்கை இருவரும் தீவிரமாக நந்தினியை பழிவாங்க திட்டம் தீட்ட, பாவம் அவர்களுக்கு தெரியவில்லை,இதனால் நிகழ போகும் சம்பவம் அவளுக்கு ஒரு வகையில் நன்மையை தர போகிறது என்று..? சிறிது நேரத்தில் ஸ்வேதா நந்தனா காதில் எதையோ கிசுகிசுக்க அவளும் "சூப்பர் ஐடியா" என்றுவிட்டு சமையலறை நோக்கி இருவரும் சென்றனர்.

இருவரும் தீவிரமாக சமையலில் ஈடுபட தொடங்கினர். நந்தினிக்கு காரம் ஒத்துக்கொள்ளாது என்பது காலையில் நடந்த சம்பவத்திலேயே நன்றாக தெரிந்தது, அதுவும் முகமெல்லாம் சிவந்து கண்கலங்கி அவளிருந்த தோற்றம் நினைவு வர,இன்னைக்கு உனக்கு இருக்குடி என மனதில் கருவியப்படி அல்வா என்ற பெயரில் மிளகாய்த் தூளை கொட்டி இரத்த கலரில் கார அல்வாவை செய்து முடித்தவுடன் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்றனர்.

டிவியில் கார்ட்டூன் சேனலில் டாம் அண்ட் ஜெர்ரி பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்த நந்தினி அருகே இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்தனர் இருவரும்.

'நல்லா சிரிடி இன்னும் கொஞ்ச நேரத்தில் அழ போகிறாய்' என மனதில் நினைத்துக்கொண்டு நல்லவள் போல் அவளை பார்த்து சிரித்தாள். நந்துவோ சம்பிரதாயத்திற்காக ஒரு மெல்லிய சிரிப்பை சிந்தியவள்,டிவியில் கவனமாக…"ஹாய் நந்து வேலையெல்லாம் எப்படி போகுது,நேத்து டிராவல் பண்ணியதால் ரொம்ப டயர்டா இருந்தேன், அதான் உங்கிட்ட சரியா பேச முடியவில்லை" என்று தேன் தடவிய வார்த்தையை உதிக்க,நந்தினியோ இவளா இப்படி பேசுவது என ஆச்சரியமாக பார்த்தவள்,"பரவாயில்லை நந்தனா நீ எப்படி இருக்க" என அவளும் கேட்டாள்.

சற்று நேரம் பொதுவாக பேசியவள் "நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் பார்..இந்தா நந்தினி ஸ்வீட் எடுத்துக்கோ இப்போதான் யூ டியூபில் பார்த்து டிரை பண்ணேன் சூப்பரா வந்திருக்கு. நீயும் சாப்பிட்டு பார்" என்க...

"இல்ல பரவாயில்லை நந்தனா இப்போதான் சாப்பிட்டேன் வேண்டாம்" என்க,அவளோ "ஏன் நந்தினி நானெல்லாம் கொடுத்தா வாங்க மாட்டியா"..? என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்க...

நந்துவோ அவசரமாக தலையாட்டி மறுத்தவள் "அப்படியெல்லாம் இல்லை நந்தனா" என்றுவிட்டு அவளிடமிருந்து கிண்ணத்தை வாங்கினாள்.

ஸ்பூனில் கொஞ்சமாக எடுத்து சாப்பிட முயல,அதனை தடுத்த ஸ்வேதா என்ன கொஞ்சமா எடுக்கிறாய் என்றபடி கரண்டி முழுவதும் எடுத்தவள் மொத்தமாக வாயில் திணிக்க,முதலில் சாதாரணமாக முழுங்க நினைத்தவள் அப்போது தான் காரத்தை உணர்ந்தாள். அதுவும் இதுவரை இப்படி ஒரு காரத்தை சாப்பிட்டே இல்லாதவள்,கண்கள் கலங்க வாஷ் பேஷன் நோக்கி ஓட முயல, அவளின் கையை ஓடாமல் பிடித்துக்கொண்ட நந்தனா "அல்வா எப்படி இருக்கு என்று சொல்லிட்டு போ நந்து " என்க,அவளை பாவமாக பார்த்த நந்து விடு என்பதுபோல் கையை உதற,அழுத்தமாக பிடித்திருந்ததால் அவளால் நகர முடியவில்லை.

அதற்குள் முகம் மொத்தமும் சிவக்க தொடங்கிவிட்டது.கண்களிலிருந்து ஆறாக கண்ணீர் கொட்ட,கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் அதனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் அந்த இரு ராட்சசிகளும்.
தன் மொத்த பலத்தையும் கொண்டு அவளை தள்ளியவள்,தன் அறைக்கு ஓடினாள்.

அப்போது தான் ஆபீஸிலிருந்து வந்த விக்ரம் படிகளில் ஏற அவன் காதில் கடைசியாக நந்தனா பேசியதை கேட்டவன், மேலே வரும் முன் நந்தினி அறைக்கு ஓடிவிட்டாள்.

மேலே வந்தவன்,நந்தனா ஸ்வேதாவை நோக்கி செல்ல..அப்போது அங்கு விக்ரமை எதிர்ப்பார்க்காத இருவரும் ஒருநிமிடம் நடுங்கி தான் போனார்கள்.

அவள் கையிலுள்ள கிண்ணத்தை பார்த்தவன்,அதை பறித்து மூக்கின் கிட்டே கொண்டு செல்ல.. மிளகாய்த்தூள் நெடியை உணர்ந்தவன்,இருவரையும் ஒரு நொடி முறைத்துக் பார்த்துவிட்டு,உங்களை வந்து கவனித்துக் கொள்கிறேன் என நினைத்தபடி வேகமாக நந்தினி அறைக்கு சென்றான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 12


அறைக்குள் நுழைந்த நந்தினி ரெஸ்ட் ரூம் சென்று வாந்தி எடுத்தவள்,நீரினால் வாயை கொப்பளித்து பார்த்தால் கொஞ்சமும் காரத்தினால் உண்டான எரிச்சல் மற்றும் வலி குறையவில்லை. அறைக்கு வந்து தண்ணீரை எடுத்து மொத்தமாக குடித்தவளுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

தலையை கையில் தாங்கியபடி தேம்பி தேம்பி அழுதவளின் தோளில் ஒரு கரம் பதிந்தது. திரும்பி பார்த்தவள்,அங்கு நின்றிருந்த விக்ரமை பார்த்து, "அத்தான்" என்ற கதறலோடு அவனை அணைத்துக்கொண்டாள்.

அவளின் அணைப்பு அவளின் மனதை நன்றாக உணர்த்தினாலும் இப்போது இருக்கும் நிலையில் அவளின் வலியை முதலில் விரட்ட எண்ணியவன் ...தன் மார்பில் முகம் புதைத்துக் அழுது கொண்டிருந்தவளின் முகத்தை நிமிர்த்த...முகம் சிவந்து உதடுகள் துடிக்க நின்றவளின் விழிகளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன்,அவள் என்ன நடந்தது என உணரும் முன் இதழுடன் இதழை பதித்தான்.

முதலில் விழிகள் தெறித்துவிடுவது போல் பார்த்தவள்,பின் மெல்ல அந்த முத்தத்தில் மூழ்கிப்போக விழிகள் தானாக மூடிக்கொண்டது. அவனோ அவளின் மொத்த இதழையும் விழுங்கி விடுபவன் போல ஆவேசமாக செயல்ப்பட்டான். அவளின் மொத்த உயிரையும் ஒரே முத்தத்தில் குடித்துவிடுபவன் போல் இருந்தது அவனுடைய செயல். முத்தம் முடிவில்லாமல் நீடித்து கொண்டே செல்ல,
அவள் மூச்சுகாற்றுக்காக திணற,அப்போது தான் அவளிடமிருந்து இதழை பிரித்தவன்,அவளை பார்க்க...அவளோ விழிமூடி மூச்சு வாங்க நின்றுகொண்டிருந்தாள்.

இதுவரை இல்லாமல், முதல் முறை இன்று அவளை உரிமையுடன் உச்சிமுதல் பாதம் வரை பார்வையால் வருடினான். இப்போதும் முகம் சிவந்தது தான் இருந்தது ஆனால் இது பெண்ணவளின் நாணத்தால், இதழ்கள் அவனின் அடாவடி முத்தத்தில் இன்னும் சிவந்திருக்க, முகத்தில் ஆங்காங்கே படர்ந்திருந்த கேசம் அவளை இன்னும் அழகாய் காட்ட..., தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் அவள் இதழில் தன் முத்திரையை பதித்தான்.

முன்பு அவள் வேதனையை போக்க என்று செயல்ப்பட்டவன்,இப்போது நிதானமாக அவள் இதழை சுவைத்தான். இத்தனை வருடங்களாக சொல்லாமல் தனக்குள் பொத்திவைத்த காதல் மொத்தத்தையும் அந்த முத்தத்தில் காட்டத் தொடங்கினான்.இம்முறை ஒரு கை அவள் கூந்தலில் இருக்க மற்றொரு கரமோ அவள் இடையிலிருந்து.


நேரம் செல்ல செல்ல கூந்ததிலிருந்த கரம் அவளை தன்னுடன் இன்னும் நெருக்க...இடையிலிருந்த கரமோ அழுத்தத்தை கூட்டத் தொடங்கியது. அவன் அழுத்தத்தில் அவன் இதழுக்குள்ளேயே அவள் சிணுங்க..அதில் தன்னிலையடைந்தவன் மெல்ல அவளிடமிருந்து தன் இதழை பிரிந்தான். ஒரே முத்தத்தில் தன்னை மொத்தமாக அவளுக்கு கொடுத்தவன் அவளை மொத்தமாக எடுத்துக்கொண்ட பிறகே விலகினான் . இன்னும் தன் முன் சிற்பமாய் விழிமூடி நின்றவளை பார்த்து,மெல்ல புன்னகைத்தவன்,அவள் விழி திறக்கும் முன் அவள் அறையை விட்டு வெளியே சென்றான்.

அதுவரை விழிமூடி இருந்தவள், மெல்ல கண்களை திறக்க, அறையில் யாரும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது…? என ஒன்றும் புரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவள்... ஒருவேளை கனவாக இருக்குமோ என எண்ணினாள்.

"கண்டிப்பா இது கனவாக தான் இருக்கும், இப்படியெல்லாம் நடைமுறையில் நடக்க சாத்தியமே இல்லையே" என தனக்கு தானே பேசிக்கொண்டே மெத்தையில் சென்று அமர்ந்தாள். என்ன தான் கனவாக இருக்கும் என ஒரு மனம் எண்ணினாலும் மற்றொரு மனமோ இன்னும் நடந்த சம்பவத்தின் அடையாளமாக படப்படக்க தொடங்கியது. ஒருவாறு தன்னை நிலைப்படுத்தியவள், அனைத்தையும் மனதுக்குள் ரீவைண்ட் பண்ணிப்பார்க்க,அதிலும் ஒன்றும் விளங்கவில்லை. பின்னர் "கனவு தான்" என ஒரு முடிவுக்கு வந்தவளாக நடந்த நிகழ்வை மறந்துவிட்டு அடுத்த வேலையை தொடங்கினாள்.( அடிப்பாவி நந்து, எல்லாமே கனவா உனக்கு, விக்ரம் உன் பாடு திண்டாட்டம் தான் )

இங்கே ஐஸ்கிரீம் பார்லரில் நந்து சென்ற அடுத்த பத்து நிமிடத்தில் உள்ளே நுழைந்தாள் திவ்யா. மகேஷை தேட அவனை எங்கேயும் காணவில்லை. இன்னும் வரவில்லையோ என எண்ணியவள் ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
சற்று நேரத்தில் எதிரே வந்து அமர்ந்த ஆதியை பார்த்து, "நீங்க எப்படி இங்கே..?" என கேட்க,அவனோ சும்மா உன்னோடு ஐஸ்கிரீம் சாப்பிட தான் என்றான்.

அவளோ தயக்கமாக மகேஷ் வர இருப்பதை சொல்ல,அவளை கைநீட்டி பேசாதே என்பது போல் தடுத்தவன் "அந்த பொறுக்கி இன்னைக்கு வரமாட்டான் இந்நேரம் ஏதாவது ஹாஸ்பிடலில் அட்மிட்" ஆகியிருப்பான் என்றான்.

அவளோ புரியாமல் அவனை பார்க்க,நடந்ததை சொன்னவன் "இனிமேல் உன்னிடமும் எந்த பிரச்சனையும் செய்யமாட்டடான், செய்யவும் விடமாட்டேன்" என்றான்.

அவனின் ஆளுமையிலும் உரிமையான செய்கையிலும் கவரப்பட்டவள், அவனுடன் இருக்கும் அந்த நிமிடத்தை ரசிக்கவே செய்தாள். அதனால் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்,அதுவே ஆதிக்கு போதுமானதாக இருக்க..

அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வாங்கி வந்தவன்,அவளை பார்த்தபடியே சாப்பிட தொடங்கினான். அவளும் அவன் பார்வையை உணர்ந்தாலும் நிமிராமல் இருக்க... "திவி பேபி... என்ற குரலில் நிமிர்ந்து அவனை பார்க்க,கண்களில் காதல் வழிய "டிட் யூ லவ் மீ " என்க,அவளோ அவன் கேள்விக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தாள்.

பின்னர் அவனும் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,இப்போதான் கொஞ்சம் முன்னேறி இருக்கா ,இன்னும் அவளுக்கு யோசிக்க காலஅவகாசம் தேவை என உணர்ந்தவன்,பேச்சை இயல்பு நிலைக்கு மாற்றி பொதுவான பேச்சுகளை பேச தொடங்கினான்.

அவனுக்கு அவள் தன்னுடன் இப்படி சகஜமாக பேசுவதே மகிழ்ச்சியை தந்தது. ஒருவாறு உண்டு முடித்தவர்கள்,இருவரும் ஒரு இதமான மனநிலையோடு தங்கள் வீட்டை அடைந்தனர்.

விக்ரம் கொலைவெறியில் இருந்தான்,அவன் கண்முன் வேதனையை தாங்காமல் தேம்பி தேம்பி குழந்தைபோல் அழுத தன்னவளின் முகமே தோன்றி மறைந்தது. கொஞ்ச காரத்தை கூட பொறுக்காதவள் எப்படி இதை தாங்கியிருப்பாள் என நினைக்கும் போதே மனம் வலித்தது. அதுவும் அவள் இதழில் உணர்ந்த காரத்தை அவனாலேயே ஏற்க முடியவில்லை அப்படியிருக்க தன்னவளின் நிலையை எண்ணி தன் மேலேயே கோபம் வந்தது,இதிலிருந்து அவளை காக்க முடியாததை எண்ணி.

நந்தனா ஸ்வேதா உங்க ரெண்டு பேரையும் என்ன பண்றேன் பார்..? என கொந்தளித்தவன், என்ன செய்வது என யோசிக்க தொடங்கினாள்.

நந்தினிக்கோ ஓரளவுக்கு எரிச்சல் குறைந்திருந்தது தான் ஆனால் ,இப்போது தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. நாக்கில் எதுப்பட்டாலும் எரியத் தொடங்கியது.வீட்டினுள் வந்த ஆதி முதலில் சென்றது நந்தினி அறைக்கே.

அவனுக்கும் எங்கே மாமா குடும்பம் ஏதாவது சொல்லி அவளை காயப்படுத்தி இருப்பார்களோ என்ற சந்தேகத்தில்.

தன் மெத்தையில் சாய்ந்து அமர்ந்தபடி இகழ்களில் வஸ்லின் தடவியவள்,கண்மூடி சாய்ந்திருக்க,அவளை அப்படி பார்த்தவுடன் தெரிந்துவிட்டது எதுவோ நடந்திருக்கிறது என்று..? அவள் அருகில் அமர்ந்தவன் நந்து என்றழைக்க, அவனை கண் திறந்து பார்த்தவள், எதுவும் சொல்லாமல் அமைதியாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"என்னம்மா என்னாச்சு..?" என அவள் தலையை வருடியபடி கேட்க,அவளோ ஒண்ணுமில்லை என்றபடி தலையாட்ட.. அதில் கோபம் வர... "என்னாச்சு என கேட்டேன்" என அவளை தன்னிலிருந்து பிரித்து உலுக்க...அவளும் எல்லாத்தையும் சொன்னால்,விக்ரம் தந்த முத்தத்தை தவிர,இன்னும் அதை மட்டும் கனவாக தான் எண்ணினாள்.

ஆதியோ ஆத்திரமாக மெத்தையை விட்டு எழுந்தவன்,வெளியே செல்ல முயல அவனை பிடித்து தடுத்தவள் "எங்க போற ஆதி..? அவங்களை எதுவும் பண்ணிடாதா..?, எதுக்கு தேவையில்லாமல் பிரச்சனை" என முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல,

"அதுக்காக அவங்களை அப்படியே விட சொல்றியா" என கத்தியவனை பார்த்து, "எனக்காக பிளீஸ்" என கெஞ்ச அவனும் அவளுக்காக மட்டும் சற்று அமைதியானவன் அவர்களை கண்டிப்பாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விடவில்லை.

பின்னர் சமையலறை சென்று வெண்ணெய் எடுத்து வந்தவன்,அவளுக்கு அதை போட உதவிவிட்டு படுக்க வைத்த பின்பே தன் அறைக்கு சென்றான்.

இரவு அனைவரும் டைனிங் டேபிளில் கூடியிருக்க...அனைவரும் சாப்பிட தொடங்கினர்.

நைட் எப்போதும் டிஃபன் சப்பாத்தி ரெண்டுமே இருக்கும். அதுவும் பெரியவர்கள் எல்லாருக்கும் சப்பாத்தி பிடிக்காது அதனால் டிஃபன் சாப்பிட ...நந்தனா ஸ்வேதா இருவரும் டயட்டில் இருப்பதால் சப்பாத்தி தான் சாப்பிடுவார்கள்.எனவே அதற்கு தோதாக பன்னீர் மசாலா செய்திருந்தனர்.

விக்ரம் இட்லியை எடுத்து தட்டில் வைத்து சாப்பிட தொடங்க...ஆதி நந்தினியால் சாப்பிட முடியாது என்பதால் அத்தை ஒரு கிளாஸ் பால் மட்டும் எடுத்துட்டு வாங்க, "நந்துக்கு சாப்பாடு வேண்டாம்" என்க...

"நந்து என்னாச்சு உடம்புக்கு முடியலையா..?" என அவளின் தாய் பதற,

"அதெல்லாம் ஒன்னுமில்ல அத்தை காலையில் சாப்பிட்ட காரம் ஒத்துக்கலை போல அதான் வாயெல்லாம் எரியுதாம்" என்றவன்,பாலை வாங்கி நன்றாக சூடு குறையும் வரை ஆத்தியவன் அவளிடம் கொடுத்து குடிக்க சொல்லிவிட்டு,தனக்கு சப்பாத்தியை எடுக்க முயல… விக்ரம் "க்கும்" என தொண்டையை செருமினான்.
அதில் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க, ஆதியை பார்த்து தலையை மெதுவாக வேண்டாம் என்பது போல் ஆட்ட, அவன் தீர்க்கமான பார்வையில் அவன் செய்யப்போகும் செயலை அறிந்தவன்,
இட்லியை மட்டும் சாப்பிட தொடங்கினான்.

சந்தியாவையும் விழிகளால் வேண்டாம் என்றவன் தன் உணவில் கவனமானான்.

நந்தினியால் அந்த பாலை கூட குடிக்க முடியவில்லை. "என்னால முடியலை ஆதி எரியுது" என்றவள்,குடிக்காமல் வைத்துவிட்டாள்.

அதை பார்த்த விக்ரமிற்கு உங்களுக்கு இன்னும் இருக்கு இது சும்மா சாம்பிள் தான் என நினைத்தவன் அதற்கு மேல் ஒரு வாய் கூட வைக்கவில்லை.தன்னவள் சாப்பிட முடியாமல் தவிக்க, தான் மட்டும் உண்பதா என நினைத்தவன் கையை கழுவினான்.

விக்ரம் "என்னப்பா சாப்பிடாமல் எழுந்துட்ட" என்ற அத்தையை பார்த்து "பசியில்லை அத்தை" என பொய்யுறைத்தவன் ஹால் சோஃபாவில் சென்று அமர்ந்தான். அவனைப் பார்த்த ஆதி "நல்ல ஸ்கோர் பண்றடா. உனக்கு இதெல்லாம் தெரியும் என்பதே எனக்கு இப்பதான் எனக்கு தெரியுது" என தனக்குள் சிரித்துக் கொண்டான்.

"வாவ் பன்னீர் கிரேவி சூப்பர் " என பாராட்டியபடி நந்தனாவும் ஸ்வேதாவும் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தனர்.நடக்கபோகும் விபரீதம் அறியாமல்.

அனைவரும் உண்டு முடித்துவிட்டு தங்கள் அறைக்கு உறங்க சென்றுவிட்டனர்.

ஆதியும் கூட நந்தினியுடன் விடைபெற்று தன் அறைக்கு சென்றுவிட சிறிது நேரத்தில் நந்தினியின் அறைக்கதவு தட்டப்பட.. எழுந்து கதவை திறந்தவளின் முன் கையில் பாலுடன் நின்றிருந்தான் விக்ரம்.

"விக்ரம் அத்தான்" என சத்தமாக பேசமுடியாமல் மெதுவாக அழைக்க, அறையின் உள்ளே நுழைந்தவன் பாலை அவளிடம் குடிக்க கொடுத்தான்.

அவளோ "இல்ல அத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு குடிக்க முடியலை" என பாவமாக சொல்ல...அவனோ அசையாமல் நின்றவன் "கொஞ்சம் அன்னார்ந்து நாக்கில் படமால் குடிக்க டிரை பண்ணு. வலியை பொறுத்துக்கிட்டு குடித்துவிடு இல்லனா பசிக்கும்" என முதன் முறையாக அவளிடம் கோபப்படாமல் மென்மையான அக்கறையுடன் சொல்ல,

அதற்காகவே அவனுக்காக மட்டுமாவது அவன் கேட்டதை செய்ய முயன்றாள். முதலில் வழியில் " ஸ்ஸ் ஆ" என சன்னமாக முனக...அவனோ அவள் கையிலுள்ள கிளாஸை வாங்கியவன்,அவளை முழுதாக குடிக்கும் வரை விடவில்லை.

குடித்து முடித்தவள் அவனை ஆச்சரியமாக பார்க்க...அவனோ அதை கண்டுகொள்ளாமல் போய் தூங்கு என்றவன்,அவனின் அறைக்கு சென்றுவிட்டான்.

அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது இதுவரை அவனுக்கு தன்னை பிடிக்காது என நினைத்திருந்தவளுக்கு இப்போது அவனுக்கு தன் மேல் கொஞ்சமே கொஞ்சம் அக்கறை இருக்கு என உணர்ந்தாள்.

பின்னர் தூங்க சென்றவளுக்கு. இரவு தூங்கும் போதும் அவன் தந்த முத்தம் வந்து இம்சிக்க…அதே கனவு தான் திரும்பவும் வருகிறது என எண்ணியபடி உறக்கத்திற்கு சென்றாள்.

அங்கு வந்தனா ஸ்வேதா அறையில் அடுத்து எப்படி விக்ரம் ஆதி இருவரையும் நெருங்குவது என திட்டம் தீட்டிக் கொண்டிருக்க...முதலில் வந்தனா வயிற்றில் கைவைத்து ஆ... என கத்தியவள்,வயிறு வலிக்குதுடி என்றபடி ரெஸ்ட் ரூமை நோக்கி ஓடினாள். அவள் வெளியே வரவும் ஸ்வேதாவும் அதே நிலையில் வயிற்றை பிடித்துக் கொண்டிருக்க,இவளும் ரெஸ்ட் ரூம் நோக்கி ஓடினாள்.

சுமார் இரண்டு மணி நேரம் மாறிமாறி ரெஸ்ட் ரூம் சென்று வர...மொத்தமாக தொய்ந்துப் போய் அமர்ந்தனர்.
"அய்யோ என்னால முடியலடி வா ஹாஸ்பிடல் போகலாம்" என நந்தனாவை அழைக்க...இருவரும் தன் தந்தையை எழுப்பி உடம்பு முடியவில்லை என சொல்ல… சத்தம் கேட்டு வந்த பாட்டி போட்ட சத்தத்தில் அனைவரும் ஹாலுக்கு வந்தனர்.

விக்ரம் ஹால் சோஃபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன் நிதானமாக ஏதோ படம் பார்ப்பது போல் அவர்களை பார்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஆதி என்னாச்சு பாட்டி என கேட்க...அவர் சொன்ன செய்தியில் கஷ்டப்பட்டு தனது சிரிப்பை அடக்கியவன், பின் தான் ஒரு டாக்டர் என்பதை உணர்ந்து,ஹாஸ்பிடல் எல்லாம் போக வேண்டாம் நானே மெடிசின் தரேன் என்றான்.

அப்போது கண்களை கசக்கியவாறே படிகளில் நடந்து வந்த நந்து,நடந்ததை அறிந்தவள்,வேகமாக தன் அறைக்கு சென்று மாத்திரையோடு வந்தாள். இந்த மாத்திரை போட்டால் உடனடியாக சரி ஆகிடும் என்றவள், தண்ணீரும் எடுத்து வந்து கொடுக்க..அவர்களோ கொஞ்சமும் தன் தவறை உணராமல் அவளை முறைத்தபடி மாத்திரையை வாங்கி விழுங்கினார்கள்.

தனக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் நந்தினியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். நைட் ட்ரெஸில்,கூந்தலை விரித்துவிட்டிருக்க அந்த சாதாரண உடையில் கூட விக்ரமின் கண்ணிற்கு தேவதை போல தெரிந்தாள்.

பின்னர் அனைவரும் கலைந்து உறங்க சென்றனர். நந்தனா மற்றும் ஸ்வேதா அருகில் வந்த விக்ரம்…"இது தான் உங்க ரெண்டு பேருக்கும் லாஸ்ட் வார்னிங் திரும்பவும் உங்க வேலையை காட்ட தொடங்கினாள் என்னோட வேற ஒரு முகத்தை பார்க்க நேரிடும்.என்னோட எதிரியை நான் ஹேண்டுல் பண்ற விதமே வேற,ஏதோ பொண்ணா போய்விட்டீர்கள் என்பதால் தான் என் முன்னாடி உயிரோடு நிற்கிறிங்க" என்றவன் விடுவிடுவென படிகளில் ஏற தொடங்கினான்.

இவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றிருந்தனர்.ஏதோ உணவினால் இப்படி ஆகிவிட்டது என நினைத்திருக்க இது விக்ரமின் வேலை என அறிந்தவுடன் முன்பை விட இப்போது நந்தினியை பழிவாங்கும் வெறி அதிகமாகியது. ஒரு நாள் ரொம்ப ஃபீல் பண்ணுவ விக்ரம் எதற்காக எங்களை பகைத்துக்கொண்டோம் என்று…. என கண்கள் கோபத்தில் பளபளக்க வன்மத்துடன் நின்றிருந்தனர்.

இவர்களிடமிருந்து ஆதி விக்ரம் இருவரும் நந்தினியை காப்பார்களா…? எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.



மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 13


மறுநாள் தன் அலுவலகத்தில் கணினி திரையில் இருந்து கண்ணை அகற்றாமல், முக்கியமான ஆவணத்தை சரிபார்த்து கொண்டிருந்த விக்ரம் அதிலேயே மூழ்கிப்போக, அப்போது அவன் அறைக்கதவு தட்டப்பட்டு,அதனை தொடர்ந்து "மே ஐ கம் இன் சார்" என்ற குரல் கேட்க அவனும் அனுமதி வழங்கினான்.


உள்ளே வந்தவனுக்கோ கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. அவன் கேள்விப்பட்ட வரை விக்ரமை எல்லாரும் நல்லவிதமாக சொன்னாலும் அனைவரிடமும் சிறிய பயமும் வெளிப்பட்டது அதுவே அவனின் பதட்டத்திற்கு காரணம். விக்ரம் வந்தவனை நிமிர்ந்து பார்க்காமல் தன் வேலையில் கவனமாக இருக்க,மெல்ல தன்னை நிலைப்படுத்திக் கொண்டு "சார்" என்றான் மெதுவாக.


தலையை மட்டும் நிமிர்த்தி பார்த்தவன்,தன் இரு புருவங்களை உயர்த்தி மேலிருந்து கீழ் அவனை அழுத்தமாக பார்த்தவாறு அமரும்படி கைக்காட்டினான் .அவனும் அமர,"சார் நான்" என இழுத்தவனை,

தடையிட்டது விக்ரமின் "சொல்லுங்க மகேஷ், உங்களை பார்த்தா ஃபர்ஸ்ட் டே வேலைக்கு வந்தவர் மாதிரி இல்லையே, ஏதோ ஹாஸ்பிடல் அட்மிஷன்க்கு வந்தவர் மாதிரி இருக்கீங்க" என கேட்க..

அவனோ அதற்கு என்ன பதில் சொல்வது என திருதிருவென முழித்தவன் "ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் சார் அதான்" என்றான்.


அவனை நோக்கி நீ சொன்ன காரணத்தை நம்பிவிட்டேன் என்பதுப்போல் பார்க்க..அப்போது உள்ளே வந்தான் மதன்.

யாரென நிமிர்ந்து பார்த்த மகேஷ் ஒரு நொடி ஆடிப்போய்விட்டான்.கடவுளே இவனும் இந்த கம்பெனியில் தான் வேலை செய்கிறானா..? என தனக்குள் முணகியவன்,நமக்கு இனி வேலை கிடைப்பது சந்தேகம் தான் என முடிவு செய்தவனாக, எப்படியாவது அடி வாங்காமல் இந்த இடத்தைவிட்டு சென்றாள் போதும் என கடவுளை வேண்டிக்கொண்டான்.


உள்ளே வந்த மதன் அவன் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு,தான் எடுத்து வந்த ஃபைலை விக்ரமிடம் கொடுத்தவன்,பக்கவாட்டில் திரும்பி அவனை ஒரு முறை முறைத்தான். பின்னர் ஒன்றும் தெரியாத குழந்தைபோல் "என்னாச்சு சார்..? உடலெல்லாம் ஒரே காயமா இருக்கு" என நக்கலான குரலில் கேட்க..

அடித்தவனே என்னாச்சு என கேட்க்கும் போது பொய் சொல்லவும் முடியாமல்,தனக்கு வேலை தரும் விக்ரமின் முன் உண்மையையும் சொல்ல முடியாமல் "திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி" பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.


விக்ரமோ "ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சாம்" என சொல்லியவாறு தன் நண்பனை பார்க்க,அவனோ விழியை மூடித்திறத்தவன் மெல்ல தலையாட்டினான்.

விக்ரமின் பார்வை இப்போது தீவிரமாக அவன் மேல் படிந்தது. தன் பி. ஏ வை அழைத்தவன், மகேஷை கைக்காட்டி "இவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்துட்டு, எல்லா ப்ரோசிஜரையும் கம்ப்ளீட் பண்ணுங்க" என்றவன் மதனுடம் பேசத் தொடங்கிவிட்டான்.

மகேஷ்க்கும் வியப்பாக தான் இருந்தது,எல்லாம் தெரிந்தும் இவன் எதுவும் சொல்லவில்லையே ரொம்ப நல்லவன் போல என நினைத்தவனுக்கு எங்கே தெரிய போகிறது,அவனை வச்சு செய்யத்தான் இவ்வளவும் என்று.


சற்று நேரத்தில் அனைத்து பார்மலிட்டிஸ் முடித்துவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்த மகேஷ் சுற்றிலும் பார்க்க...தனக்கு அடுத்த கேபினில் அழகான இளம்பெண் அமர்ந்திருக்க,அவனோ இது போதும் நமக்கு, ஜாலியா சைட் அடிச்சிக்கிட்டே வேலைப் பார்க்கலாம் என சந்தோஷத்தில் பறந்தான்.


அனைத்தையும் அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மதன்,விக்ரமிடம் "இவன் திருந்தமாட்டான் டா,வந்தவுடன் வேலையை காட்டத் தொடங்கிட்டான் பார் என்றவன்,இவனை இப்போதே ஏதாவது பண்ணனும்" என பேசிக்கொண்டிருக்கும் போதே மகேஷ் இருக்கையில் இருந்து எழுந்தவன் திவ்யாவின் இருப்பிடம் நோக்கி சென்றான்.


அங்கே சுற்றி இங்கே சுற்றி திரும்பவும் என் தங்கச்சி கிட்டயே வருகிறானே என சலித்துக்கொண்டவன் கோபமாக எழ முயல அவனை தடுத்த விக்ரம்,சிரித்துக்கொண்டே தொலைப்பேசியை எடுத்தவன் "திவ்யா கம் டூ மை கேபின்" என்றான்.

"திவ்யாவை எதற்கு கூப்பிடுற,அவனை கூப்பிடு நேற்று அடிச்ச அடி பத்தவில்லை என்று நினைக்கிறேன் இன்னைக்கு அவன் மண்டையை உடைக்காம விடுவதில்லை" என பொரிந்து தள்ளினான்.


மகேஷோ "ஹாய் திவி.. என்றப்படி அவள் எதிரே அமர்ந்தவன், எனக்கு என்னாச்சின்னு கேட்க மாட்டியா திவி,கட்டிக்க போறவன் இப்படி அடிப்பட்டு இருக்கானே என்ற அக்கறை இல்லையா..?" என கேட்டவன், அவனே நேற்று ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் என பதிலையும் சொன்னான்.

அதுவரை அவனை கண்டுகொள்ளாமல் இருந்த திவ்யா அவனின் ஆக்ஸிடென்ட் என்ற சொல்லில் நிமிர்ந்து பார்த்தாள். 'பொறுக்கி வேலை பார்த்து அடிவாங்கியதை எப்படி சொல்றான்,சரியான மானங்கெட்ட ஜென்மம்' என மனதுக்குள் திட்டியவள்,அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.அப்போது டேபிளில் இருந்த தொலைப்பேசி ஒலி எழுப்ப, அதனை ஏற்று காதில் வைக்க,

"நாளையிலிருந்து நானே உன்னை ஆபீஸுக்கு அழைத்து வரேன், அடிப்பட்டதினால் தான் இன்னைக்கு வர முடியலை" என அவள் ஃபோன் பேசிக்கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் இவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே இருக்க,அவன் பேசியது மொத்தமும் தொலைப்பேசியின் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்த விக்ரம், அவளை தன் அறைக்கு வரும்படி அழைத்துவிட்டு இணைப்பை துண்டித்தான்.


உள்ளே நுழைந்த திவியாவிடம் ஒரு ஃபைலை கொடுத்தவன் "ஈவ்னிங் போவதற்கு முன்பு எல்லா க்ரக்ஷனும் பண்ணிட்டு மீதியுள்ள பெண்டிங் ஒர்க்கையும் முடிச்சிட்டு எனக்கு மெயில் அனுப்புங்க" என்றவன் நீங்க போகலாம் என்றான்.

திவ்யா உள்ளே வந்த போதே வெளியே எழுந்து சென்ற மதன்,திவ்யா இருக்கையின் அருகில் அமர்ந்திருந்த மகேஷை விரலால் சொடக்கிட்டு அழைக்க…


மதனோ பயத்துடன் எழுந்து நின்றான். "இங்க உங்களுக்கு என்ன வேலை..? ஏதோ போனா போகட்டுமென்று பாவம் பார்த்தால்,இங்கேயும் உங்க வேலையை காட்டினா, அப்பறம் இங்க மட்டுமில்லை வேறு எங்கேயும் வேலைக்கு போக முடியாதபடி செய்துவிடுவேன். இனிமேல் தேவையில்லாமல் ஆபீஸில் யாரிடமாவது பேசுவதையோ ஏன் பொண்ணுங்க பக்கம் பார்வைப் போனாலே அதுதான் உனக்கு லாஸ்ட் டே" என்றான்.


"சார் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை,திவ்யா என்னோட முறைப்பொண்ணு அதுமட்டுமில்லை இன்னும் கொஞ்ச நாளில் எங்களுக்கு கல்யாணம் ஆகப்போகிறது" என பெருமையாக குரலில் சொல்ல... மதனோ 'அப்படி ஒரு விஷயம் நடக்கவே கூடாது என்பதற்கு தானே உன்னை இங்கே வேலைக்கே சேர்த்தோம்,பாக்கலாம் இனி என்ன நடக்கப் போகிறது என்று..? இனிமேல் அவளிடம் நீ பேசுவதே கஷ்டம் தான் என மனதுக்குள் அவனை கலாய்த்தவன், நீயா வந்து மாட்டிக்கிட்டியே டா. உனக்கு நாங்க ஸ்கெட்ச் போடவே இல்லையே டா, எல்லாம் விதி யாராலும் மாற்ற முடியாது' என நினைத்தபடி பரிதாபமாக பார்த்தபடி "உங்க உறவுமுறை எல்லாம் வீட்டோடு வெச்சிக்கோங்க" மிஸ்டர், இந்த கம்பெனிக்குள் கால் வைத்துவிட்டாள் எல்லாரும் ஜஸ்ட் எம்ப்ளாய் தான்" என்றுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.


'ச்சீ... இவனிடம் எல்லாம் பேச்சு வாங்கவேண்டி இருக்கே' என தன்னையே நொந்துகொண்டு தன் கேபின் நோக்கி சென்றான் மகேஷ்.


காலையிலேயே இன்று பிரதோஷம் என சிறுவர்கள் அனைவரும் வேலைக்கு சென்றப்பின் ,பெரியவர்கள் அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாராகினர். பெண்கள் அனைவரும் அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, ராகவனும் கண்ணனும் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.


"மச்சான் நம்ம சந்தியாவுக்கு ஒரு வரன் வந்திருக்கு,எனக்கு ரொம்ப தெரிந்தவர் தான்.பையன் அமெரிக்காவில் வேலை செய்திட்டு இருந்தான், இப்போ சென்னையில் சொந்தமா பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணப்போறான்.ரொம்ப நல்ல பையன்,எல்லா விதத்திலும் நம்ம சந்தியாவிற்கு பொருத்தமாக இருப்பான்" என சொல்ல...

கண்ணனும் "அதுக்கென்ன மச்சான் நல்ல விஷயம் தானே,அப்போ இன்னைக்கு கோவிலுக்கு போய்ட்டு வரும் பொது நம்ம ஜோதிடரையும் பார்த்துவிட்டு வந்துவிடலாம்" என அனைவரின் ஜாதகத்தையும் எடுத்துவர சென்றார்.


ஒரு வழியாக அனைவரும் சென்று கடவுளை வழிப்பட்டவர்கள் பின்னர் ஜோதிடரை பார்க்க சென்றனர். தங்கள் மகன் மகள் நந்தினி என அனைவரின் ஜாதகமும் கொடுத்தவர்கள் அவரின் வார்த்தைக்காக காத்திருந்தனர்.அவரோ அடுக்கடுக்காய் வெடிகுண்டை போட தொடங்கினார்.


சாந்தியாவின் ஜாதகப்படி இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்றும்,விக்ரம் ஆதிக்கும் இந்த வருடத்திலேயே திருமணம் நடைபெற வேண்டும் இல்லையென்றால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு திருமணம் என்ற சொல்லுக்கு இடமில்லை என்றார். அதுமட்டுமில்லாமல் நந்தினிக்கு இன்னும் இரு வருடத்திற்கு பிறகே திருமணம் நடைபெற வேண்டும் தோஷம் இருக்கு' என ராகவன் சொல்ல சொன்னதை மனப்பாடமாக ஒப்பித்தார்.


கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் அடுத்து என்ன செய்வது என புரியாமல் இருக்க,அனைத்திற்கும் காரணமான ராகவன் தன் இருமகள்களின் ஜாதகத்தைக் கொடுத்தார்...அவரோ "லட்சுமி கடாட்சம் பொருந்திய ஜாதகம் என்றும் விக்ரமிற்கு நந்தனாவுடையதும் ஆதிக்கு ஸ்வேதாவுடையதும் நன்றாக பொருந்துகிறது என்றவர், இவர்களுக்கே பேசிமுடிக்க வேண்டியது தானே சொந்தமும் விட்டுப்போகாது" என்றார்.


கண்ணன் ராதா இருவருக்குமே நந்தினியை தங்கள் மருமகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பலமுறை ஆதியிடம் கேட்ட போது அவன் திட்டியவை நினைவு வர….யாராய் இருந்தால் என்ன..? நந்தனா ஸ்வேதா வந்தாலும் மகிழ்ச்சியே என்பது போல் அமர்ந்திருந்தனர்.

கீர்த்தனாவிற்கு அப்படி ஒரு எண்ணம் இதுவரை இருந்தது இல்லை,என்ன நடந்தாலும் தங்கள் உறவை பிரிக்கமுடியாது அதனால் எது நடந்தாலும் எனக்கும் சந்தோஷம் என்பதுபோல் சாந்தமான முகத்துடன் அமர்ந்திருந்தார்.


இரவு ஒரு பிஸினஸ் பார்ட்டியில் கலந்துக்கொண்ட விக்ரம் வீட்டிற்க்கு வர இரவு பதினொன்று மேல் ஆகிவிட, வீடே இருளில் மூழ்கியிருந்தது. ஏற்கனவே எனக்காக காத்திருக்க வேண்டாம் என தகவல் சொன்னதால்,அனைவரும் உறக்கத்தில் இருந்தனர்.


மேலே தன் அறையை நோக்கி படிகளில் ஏறியவன்,தன் அறைக்குள் செல்வதற்கு திரும்புகையில்,மாடி ஹாலில் உள்ள சோஃபாவில் உடலை குறுக்கி படுத்திருந்த நந்துவை பார்த்து அப்படியே நின்றான். 'என்ன இங்கே படுத்திருக்கா..? டிவி பார்த்துட்டே தூங்கிட்டாளா' என நினைத்தபடி மெல்ல அவள் அருகில் செல்ல,அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, டிவியில் டாம் அண்ட் ஜெர்ரி ஓடிக்கொண்டிருந்தது.


காலையிலிருந்து நள்ளிரவு வரை வேலை செய்து களைத்துப்போய்,உடல் மொத்தமும் ஓய்வுக்காக கெஞ்சும் நிலையிலும் அவள் முகத்தை பார்த்தவுடன்,விடியலில் தோன்றும் புத்துணர்ச்சியை உணர்ந்தான் விக்ரம்.


அந்த இரவின் மெல்லிய விடிவிளக்கின் ஒளியில் தன்னவளை ரசிக்க தொடங்கியவன்,அப்போது தான் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.கண்கள் தடித்து, அவளின் பளிங்கு கன்னத்தில் கண்ணீரின் தடம் அப்பட்டமாக தெரிந்தது. எதுக்காக இப்படி அழுதுகொண்டே உறங்கிக் கொண்டிருக்கிறாள் என சிந்தனை வயப்பட்டவன்,பின்னர் தன் கையிலுள்ள லேப்டாப் பேக்கை அங்குள்ள மேஜையில் வைத்துவிட்டு,குனிந்து தன்னவளை கரங்களில் ஏந்திக்கொண்டான்.


திடீரென தூக்கியதால் தூக்கத்தில் தடுமாறி கீழே விழபோகிறோம் என பயத்தில் கத்த வாய்த்திறக்க...அவள் காதருகில் குனிந்தவன் "நான் தான்" என்ற இரு வார்த்தைகளை சொல்ல..

அந்த ஆழ்ந்த உறக்கதிலும் தான் அனுதினம் கனவில் கேட்கும் தன்னவனின் குரலில் அமைதியடைந்தவள்,
"அத்தான்" என சொல்லியவாறே அவன் கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்துக்கொண்டாள்.


தன்னவளின் செய்கையில் மலர்ந்து சிரித்தவன்,அவள் முகம் பார்க்க அதுவோ ஒருவித சோகத்தில் இருப்பது போல் புருவங்கள் சுழித்து… மெல்ல எதையோ முணகியவாறு உதட்டசைக்க,அவள் என்ன சொல்கிறாள் என ஆழ்ந்து கேட்டவன்,அவள் சொன்ன செய்தியில் கொதித்து போனான்.


"என்னடி சொல்ற..?" என அந்த நள்ளிரவிலும் கோபமாக உரும... அவளோ மீண்டும் "என்னை பிடிக்கலையா அத்தான், நந்தானாவை தான் உங்களுக்கு பிடிச்சிருக்கா .? அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா..?" என சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்க, கோபத்தில் அவளை அப்படியே கீழே போட்டுவிடலாம் என எண்ணியவன்,பின் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அவளை பூப்போல மெத்தையில் படுக்கவைத்தவனை நிமிரமுடியாமல் அவள் கரம் இருக்கிப்பிடித்திருந்தது.


"இதுக்கு மட்டும் ஒரு குறைச்சல் இல்லை,பகலில் மட்டும் என்னவோ பேய்யை பார்த்தது போல் பயந்து ஓடவேண்டியது,இப்படி ராத்திரியில் சட்டையை பிடித்து இழுக்க வேண்டியது" என்றபடி அவள் அருகே அமர்ந்தவன் குனிந்தவாரே "நதி" என அழைக்க அவளும் "ம்ம்" என தூக்கத்திலேயே சிணுங்கினாள்.

அவளின் சிணுங்களில் "படுத்தியெடுக்குற செல்லக்குட்டி சத்தியமா முடியலை,என்னோட மொத்த கர்வமும் உன் முன்னால் ஒன்றுமில்லாமல் போகிறது.அதுவும் உன்னோட இந்த குழந்தைத்தனத்தில் மொத்தமா விழுந்து விடுகிறேன் , உன்மேல் முழுசா கோபம் கூடப் படமுடியவில்லை என்றவன்…


யாரு என்னடி சொன்னாங்க..? எதுக்கு இப்படி அழுதாய்" என அவள் கன்னங்களின் கண்ணீர் தடத்தை வருடியபடி கேட்க...

அவளோ "எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்" என்றாள்.

"நானா...என அதிர்ந்தவன்,நான் என்னடி பண்ணேன்,ஒரே ஒரு முத்தம் தான் கொடுத்தேன் வேற எதுவும் பண்ணலயே..?" என குறும்பாக கேட்டவனுக்கு,

"உங்களுக்கு ஏன் என்னை பிடிக்காமல், அவளை பிடித்தது" என்க….அவனோ அவள் கழுத்தை வளைத்து பிடித்து இருந்ததால் இருவரின் மூச்சுக் காற்றும் மோதிக்கொள்ளும் நெருக்கத்தில் இருந்தவன்,

இன்னும் நெருங்கி உதடுகள் ரெண்டும் உரசிக்கொள்ளும்படி...இன்னொரு வாட்டி அவ பெயரை கூட என்னோடு சேர்த்து சொன்னால் அவ்வளவு தான் என கன்னத்தை கிள்ளியவன் "யாருடி சொன்னா..? எனக்கு உன்னை பிடிக்காதுன்னு,எனக்கு "உன்னை எவ்ளோ பிடிக்கும் தெரியுமா"..? என்றபடி அவள் இதழில் தன் இதழை பட்டும் படாமல் ஒற்றி எடுத்தவன்,அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு கழுத்தடியில் முகம் புதைத்தான் .

"எனக்கு தான் உங்களை ரொம்ப பிடிக்கும்" என்றபடி அவளும் அவனை அணைத்துக்கொண்டாள்.

தன்னவளின் பிரத்தியேக மணத்தை ஆழ்ந்து அனுபவித்தப்படி..
"உன்னை தவிர யாரையும் நான் திரும்பி கூட பார்க்க மாட்டேன்" என்றவன், அங்கும் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு அவளிலிருந்து விலக,அவளோ இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்,எங்கே தன்னைவிட்டு சென்றுவிடுவானோ என்ற பயத்தில்...

அவனோ பாவமாக "விடும்மா... அப்பறம் உண்மையாவே நாளைக்கு அழ வேண்டியது தான்,நான் இருக்குற நிலைமையில் உன்னை ஏதாவது பண்ணிடுவேன்" என்றவன் அவளில் இருந்து தன்னை பிடிவாதமாக பிரித்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்து, "நீ தான் எனக்கு எல்லாமே" என சொல்லாமல் சொல்லிவிட்டு தன் அறைக்கு விருப்பமே இல்லாமல் சென்றான்.

இதுவரை தன்னவனை இழந்து விடுவோமோ என அலைப்பாய்தலோடு இருந்த மனது இப்போது நிம்மதியாக உறக்கத்திற்கு சென்றது.


தன் அறையில் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்த விக்ரமிற்க்கு இது அனைத்தும் ராகவனின் வேலையாக தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது மட்டும் தானா,இல்லை வேறு ஏதாவது வில்லங்கம் செய்திருக்கிறாரா தெரியவில்லையே என நினைத்தவன்,நீங்க என்ன பண்ணாலும் கடைசியாக நான் நினைத்தது தான் நடக்கும்...உங்க வேலையை நீங்க காட்ட தொடங்கிட்டிங்க, இனிமேல் தான் என்னோட ஆட்டம் ஆரம்பம் என மனதுக்குள் உறுதியெடுத்தவன், தன்னவளை நினைத்தபடி உறக்கத்திற்கு சென்றான்.



மறுநாள் காலையில் தனது ஜாகிங் முடித்துவிட்டு உள்ளே நுழைந்த விக்ரமின் முன் காஃபியொடு நின்றாள் வந்தனா. அவனோ கொஞ்சமும் அவளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல… "விக்ரம் அத்தான்... உங்களுக்கு தான் காஃபி" என்று மறுபடியும் அவனை முந்திக்கொண்டு எதிரில் சென்று காஃபியை நீட்ட….

எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ, வேகமாக காஃபியை தட்டிவிட அதுவோ பல அடி தூரம் சென்று சுவற்றில் மோதி பீங்கான் கப் நொறுங்கியது.



அவன் கண் முன் தன்னை முதல்முறை பத்து வயது சிறுமியாக தனது கொஞ்சும் மழலை குரலில் "விக்ரம் அத்தான்" என நந்தினி அழைத்ததே நினைவு வந்தது. மந்திரத்திற்கு கட்டுப்படுபவன் போல் அன்று அதில் விழுந்தவன் தான், இன்றும் அவளின் விக்ரம் அத்தானில் இருந்து எழ முடியாமல் தள்ளாடுகிறான்.

நந்தினி கூட வெறும் அத்தான் என்று அழைத்தாள் அவனுக்கு பிடிக்காது,அவள் உதட்டில் உதிக்கும் விக்ரம் அத்தான் என்ற அழைப்புக்காகவே அவளிடம் பலமுறை கோபம் கொண்டிருக்கிறான்.இதையெல்லாம் நினைத்தவனுக்கு தன்னவள் அல்லாது வேறொருத்தி அப்படி அழைத்தது கோபத்தை கிளப்பியது.


நந்தானாவின் கழுத்தை நெறிக்க கையை கொண்டு சென்றவன், "உன்னையெல்லம் அடிப்பதற்காக கூட என் விரல் உன்மேல் படுவதை விரும்பவில்லை,இன்னொரு முறை என்னை அத்தான் என்று கூப்பிட்டு பார் அப்பறம் பேசுவதற்கு உயிரோடு இருக்கமாட்டாய்" என்றான்.

அவளோ அதில் இன்னும் ஆத்திரமடைந்தவள், "நந்தினியும் அப்படி தானே கூப்பிடுறா அப்போ இனிமே அவளையும் அத்தான் என்று கூப்பிட கூடாது என சொல்லுங்க,நானும் சொல்லமாட்டேன்" என்றாள் திமிராக.


திரும்பி அவளை முறைத்து பார்த்தவன் "என்னை அத்தான்னு கூப்பிட அவளுக்கு மட்டும் தான் உரிமையிருக்கு,அவளை தவிர வேற யாருக்கும் இந்த ஜென்மத்தில் உரிமையில்லை என்றவன், எல்லா நேரமும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்,அப்பறம் நடப்பதற்கு நான் பொறுப்பாக முடியாது.ஆல்ரெடி நீங்க அவளை கஷ்டபடுத்தியதற்கே உங்களை பொண்ணு என்ற ஒரே காரணத்திற்காக தான் விட்டு வைத்திருக்கிறேன்,இல்லனா நான் படுத்தும் பாட்டில் திரும்பவும் அமெரிக்காவிற்கு ஓடி போயிருப்பீர்கள் ஜாக்கிரதை" என்றவன் நிற்காமல் புயல் வேகத்தில் படிகளில் ஏறினான்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 14


தன் அறையில் நுழைய போன விக்ரமின் கால் ஒரு நிமிடம் அப்படியே நின்றது நந்தினியின் குரலில். "ஆதி நீதான் என்னை ரூம்க்கு அழைச்சிட்டு போனாயா..? சோஃபாவில் இருந்த நான் எப்படி ரூம்க்கு போனேன்" என புலம்பிக் கொண்டிருக்க...

"ஆதியோ எனக்கு வேற வேலையில்லை பார்,நானெல்லாம் அழைச்சிட்டு போகலை, ஒருவேளை தூக்கத்தில் நடக்கிற பிராப்ளம் வந்துடுச்சு போல நந்து. எதுக்கும் இன்னைக்கு ஒரு மெடிகல் செக்கப் பண்ணிடலாம்" என நக்கலடிக்க..

"ச்சீ போடா லூசு.. எனக்கெல்லாம் ஒண்ணுமில்லை" என திட்டியவள்,தனக்கு அறவே பிடிக்காத ஜாகிங் செல்ல ஆய்த்தமானாள் ஆதியின் பிடிவாதத்திற்க்காக.

"ஆதி இன்னைக்கு ஒரு நாள் ஜக்கிங்க்கு லீவ் விடேன் பிளீஸ் எனக்கு ரொம்ப தூக்கம் தூக்கமா வருது" என்க,

அவனோ "உனக்கு ஏதாவது ரீசன் வேணும் ஜாகிங் போகாமல் தடுக்க,அதெல்லாம் முடியாது மரியாதையா வா" என்றவன்,தரத்தரவென இழுத்து சென்றான்.


அவள் கீழே சென்றபின் தன் அறையில் நுழைந்த விக்ரம் தன்னவளின் செய்கையிலும் கெஞ்சலிலும் வாய்விட்டு சிரித்தான், ஒரு ஜாகிங் போவதற்கு எவ்வளவு அலப்பறை "ராட்சசி" எல்லாரையும் படுத்தி எடுக்கிறா என நினைத்தவன் தனது உடற்பயிற்சியை தொடங்கினான்.


அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க,மெல்ல பேச்சை தொடங்கினார் கண்ணன். விக்ரம் ஆதி என இருவரையும் பார்த்தபடி நேற்று ஜோதிடரை பார்த்ததையும் அவர் சொன்னவற்றையும் எடுத்துரைக்க விக்ரம் ஆதி இருவரும் சொல்லிவைத்தது போல் ராகவனை தான் பார்த்தனர்.

அவரோ 'என்னடா இது ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் நம்மை பார்க்கிறாங்க..? ஒருவேளை நம்ம திட்டம் தெரிஞ்சிருக்குமோ..என நினைத்தவர் பின்னர் தெரிஞ்சா தெரியட்டும் என்ன பண்ணிடுவாங்க..? பொடிப்பையல்கள்' என எண்ணியபடி சாப்பிட்டு கொண்டிருந்தார்.


அதுவும் சந்தியாவிற்கு இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் செய்யவேண்டும் என சொல்ல, சாப்பிட்டு கொண்டிருந்தவள் அப்படியே உறைந்து அமர்ந்துவிட்டார்.

அவள் மனம் முழுவதும் இன்னைக்கு எப்படியாவது மதனிடம் உறுதியாக பேசிவிட வேண்டும் என முடிவெடுத்தவள்,அடுத்து ராகவன் சொன்ன செய்தியில் எவ்வளவு கட்டுப்படுத்தியும் கண்ணீரை தடுக்க முடியவில்லை.எங்கே எல்லாமும் தன் கையைவிட்டு போய்விடுமோ என்ற பயம் தானாக வந்து மனதில் புகுந்துக்கொண்டது.


இன்னைக்கு எல்லாரும் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுங்கள்,சந்தியாவை சாய்ந்திரம் பொண்ணு பார்க்க வராங்க என்ற ராகவன் சந்தியாவை இன்றைக்கு வேலைக்கு செல்லவேண்டாம்,வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார்.

அவளுக்கோ எங்காவது ஒடிவிடலாம் போல் இருந்தது,மதனை தவிர வேறு யாரையும் தனக்கு வாழ்க்கை துணையாக அவளால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை,இதில் பொம்மை போல் யாரோ ஒருவன் முன்பு நிற்க வேண்டும் என்பதை நினைக்கவே மனம் வலித்தது.


"அப்பா எதுக்காக இப்படி அவசரப்படுறிங்க,சந்தியா இப்போதான் காலேஜ் முடிச்சிருக்கா,இன்னும் ஒரு வருஷம் போகட்டும் அதைவிட்டுட்டு நீங்களும் அந்த காலத்து ஆளுங்க மாதிரி ஜோசியம் அது இது என யோசிச்சு அவளை கட்டாயப்படுத்த வேண்டாம்" என்றான் ஆதி.


அவரோ "நல்ல வரனாய் இருந்தால் பேசிமுடிக்கிறது நல்லது தானே..முதலில் அவங்க வரட்டும் அப்பறம் மற்றவைகளை பற்றி பேசிக்கொள்ளலாம்" என்று பேச்சை முடித்தார்.

பின்னர் விக்ரம் ஆதி திருமணத்தை பற்றி பேச்சைத் தொடங்க.."அப்பா முதலில் சந்தியா கல்யாணம் அப்பறம் தான் எங்களுக்கு,அதனால் இப்போ அதை பற்றி பேசவேண்டாம்" என்ற விக்ரம்,கம்பெனிக்கு கிளம்பிவிட்டான்.


அன்றைய மாலை பொழுதில் ராகவன் தன் நண்பனின் குடும்பத்தை வீட்டுக்கே அழைத்து வந்துவிட,அனைவரும் பேசி பார்த்ததில்,இரு குடும்பத்திற்கும் பிடித்துவிட்டது.விக்ரம் ஆதி இருவருமே எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.


அப்போது சந்தியாவை அழைத்து வர...பட்டு புடவையில் அழகாக வந்து நிற்க, அவளை அவர்களுக்கு பிடிக்காமல் போனால் தான் அதிசயம்.அவளுக்கோ மாப்பிள்ளையாக இருப்பவன் இன்னும் அமெரிக்காவில் இருந்து வராததால் அவன் மட்டும் வரவில்லை, என்ற ஒரே ஒரு விஷயம் மட்டுமே சந்தியாவிற்கு நிம்மதியை தந்தது.


மறுநாள் முதல் வேலையாக மதன் எதிரில் நின்றாள் சந்தியா. அவனோ என்ன என்பது போல் நிமிர்ந்து பார்க்க.. "மதன் உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்,ஆபீஸில் இல்ல கொஞ்சம் பெர்சனல்" என்க...

அவனோ "நமக்குள்ள பெர்சனலா பேச என்ன இருக்கு…? எதுவாக இருந்தாலும் இங்கேயே சொல்லு. என் காதில் விழும்" என்றான்.


இவன் வேற நேரங்காலம் இல்லாமல் என சலித்திக்கொண்டவள் "மதன் பிளீஸ் விளையாயாடதே... ரொம்ப முக்கியமான விஷயம்,எனக்காக பிளீஸ்" என்றவளின் கண்ணில் கலக்கத்தை கண்டவன் சரி என தலையாட்டினான்.


மாலை கடற்கரை மணலில் அமர்ந்து அலையை வெறித்துகொண்டிருந்த சந்தியாவை கலைத்த மதன் "என்ன சொல்ல வேண்டுமோ சீக்கிரம் சொல்லு எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றான்.

ஒரு நிமிடம் விழி மூடி திறந்தவள் அவன் முகத்தை பார்த்து நேற்று என்னை பெண் பார்க்க வந்தார்கள் என தொடங்கி ஜோதிடர் சொன்னது வரை அனைத்தையும் சொன்னவள் அவன் முகம் பார்க்க...அவனோ ஒரு நொடி அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்தவன்,பின்னர் அதனை முகத்தில் காட்டாமல் மறைத்துக்கொண்டான்.


"நல்ல விஷயம் தானே 'கங்கிரட்ஸ்" என கைகொடுக்க...

அவளோ கோபத்தில் தன் கைப்பையை கொண்டு அவனை அடித்தவள். "ஏன்டா என்னை இப்படி டார்ச்சர் பண்ற" என்றவள் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு பேச தொடங்கினாள்.


"மதன் இன்னைக்கே வீட்டில் எல்லார்கிட்டயும் நம்மை பற்றி சொல்ல போறேன்" என்றவளை ஒரு கைநீட்டி தடுத்தவன் "நான் முதலிலிருந்து சொன்னது தான் நமக்குள்ள ஒண்ணுமில்லை,அதனால் தேவையில்லாமல் என்னை பற்றி பேச எதுவும் இருக்காது என நினைக்கிறேன்" என்றான் அழுத்தமாக.


அவன் வார்த்தையில் காயமடைந்தவள் "உன்னை பொறுத்தவரை நமக்குள்ள எதுவுமில்லாமல் இருக்கலாம், ஆனா எனக்கு எல்லாமே நீதான்" என்றவள்,

"உன்னை பற்றி சொல்லப்போவது இல்லை, என்னைப் பற்றிதான். நான் உன்னை காதலிப்பதாக தான் சொல்ல போறேன்,என்னா என்னோடது வெறும் "ஒன் சைட் லவ் தானே" என விரக்தியாக சிரித்தாள்.

மதனோ எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் நின்றவன், அவள் புறம் ஒரு லெட்டரை நீட்ட...அதில் அவர்களின் மும்பை பிராஞ்ச் கம்பனிக்கு மனேஜராக பொறுப்பெற்பதற்க்கான ஆர்டர் இருந்தது.


"என்ன மதன் இது" என அதிர்ச்சியான குரலில் கேட்க...அவனோ நிதானமாக "ரொம்ப நாளாக ட்ரை பண்ணி இப்போதான் கிடைத்தது என்றவன்,தேவையில்லாமல் எனக்காக உன் லைஃப்பை கெடுத்துக்காதே ..? நீயாக உங்க வீட்டில் சொன்னாலும் யாருக்காகவும் பிடிக்காத பெண்ணை என்னால் கட்டிக்க முடியாது, அதனால் வீட்டில் பார்க்கும் பையனை கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியாக இரு.நான் இவ்வளவு சொல்லியும் உங்க வீட்டில் உன் காதலை சொல்லிதான் தீர்வேன் என்றால் தாராளமாக சொல், ஆனா அதுதான் என்னை நீ கடைசியாக பார்க்கும் நாளாய் இருக்கும்" என்றவன்,எல்லாம் முடிந்தது என்றபடி தன் பைக்கை நோக்கி சென்றான்.


அவன் உரைத்துவிட்டு சென்ற வார்த்தையில் சிலையாக நின்றவள் கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வழிந்தது. பின் ஒருவாறு தன்னை நிலைப்படுத்தியவள் தானும் வண்டி இருக்கும் இடத்திற்கு சென்றாள்.அங்கு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி பைக்கில் சாய்ந்து நின்றவனின் தோற்றத்தில் காதல் கொண்ட மனம் தடுமாற...

அவன் எதிரில் சென்று, "கடைசியாக கேட்கிறேன் இதுதான் உன் முடிவா மதன்,நிஜமா என்னை பிடிக்கலையா" என்க...

அவனோ "எஸ்" என்றான் ஒரே வார்த்தையில்,பின்னர் அவனை ஆழ்ந்து பார்த்தவள் "என் வெட்க்கத்தை விட்டு உன்கிட்ட கெஞ்சிட்டேன்,காதல் தானா வரணும் கெஞ்சி வரவைக்க முடியாது என்று எனக்கும் தெரியும், ஆனா உனக்கு என்னை பிடிக்கும்னு ரொம்ப நம்பினேன், அதான் உன்கிட்ட இப்படி பேசிட்டேன்.சாரி இனி உன் லைஃப்பில் என்னால எந்த பிரச்சனையும் வராது. குட் பை" என்றவள் கிளம்பிவிட்டாள்.

அவனோ அதே நிலையில் நின்றுகொண்டிருந்தான்,மனம் முழுவதும் அவள் மேல் காதல் கொட்டிகிடக்க, அதனை அவளிடம் சொல்ல முடியாத தன் நிலையை அறவே வெறுத்தான்.


"சாரி சந்தியா... உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், ஆனா எனக்கு வேற வழி தெரியவில்லை நான் ஒரு கோழை" என்றவன்,அப்போது மழை கொட்ட தொடங்க... மழையில் நனைந்தபடி அசையாமல் நின்றான் .


வீட்டிற்க்கு வந்த சந்தியாவோ அழுகையில் கரைந்தாள்.தன் காதல் நிராகரிக்கப்பட்டதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.


மாலை வீட்டினுள் நுழைந்த விக்ரமை சீண்டிப் பார்ப்பதர்க்காகவே. அனைவரும் இருக்கும் தைரியத்தில் "விக்ரம் அத்தான் இந்தாங்க காஃபி" என உரிமையாக அவனை நெருங்கி அவன் லேப்டாப் பேக்கை கைகளில் வாங்கியபடி எல்லார் முன்பும் இப்போ என்ன பண்ணமுடியும் என சவாலாக பார்த்தபடி அழைத்தாள் நந்தனா.


அவனுக்கோ தான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் திரும்பவும் அவள் அப்படி அழைத்தது எரிச்சலை கிளப்ப...யாரை பற்றியும் கவலையில்லாமல் அவள் கையில் உள்ள தட்டை தட்டிவிட்டவன்,தன் பேக்கை அவளிடமிருந்து பரித்தப்படி அவளையும் தள்ளிவிட...பத்தடி தள்ளி தரையில் சென்று விழுந்தாள்.

"அம்மா ஆ ஆ" என வலியில் கத்தியவளை பார்த்து "கொண்ணுடுவேன் ஜாக்கிரதை இன்னொரு முறை என்னை அத்தான் என்று கூப்பிட்ட அப்பறம் நான் மனுஷனாகவே இருக்கமாட்டேன்" என்றவன்,தன் தாய் திட்டியதை கூட காதில் வாங்காமல் அறைக்கு சென்றுவிட்டான்.


நந்தினியும் அங்கே தான் இருந்தாள், "அய்யயோ அத்தான் என்று கூப்பிட்டால் இவ்வளவு கோபம் வருமா..? இனிமேல் நான் அத்தான் என்ற வார்த்தையை சொல்லவே மாட்டேன் " அப்படி கூப்பிடுவது பிடிக்காமல் தான் நம்ம மேல் அடிக்கடி கோபப்படுறாரோ" என தப்பாக சரியாய் புரிந்துகொண்டாள்.
நல்லவேளை அந்த அடி நமக்கு விழ வேண்டியது தப்பித்தேன் என்று எண்ணியபடி அமர்ந்திருந்தாள்.


ஏதாவது அடிப்பட்டு விட்டதா என அனைவரும் கேட்க..இல்லையென தலையாட்டியவளை பார்த்து அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் இனிமேல் அப்படி கூப்பிடாதே இல்லனா கோபத்தில் இப்படித்தான் ஏதாவது பண்ணிடுவான் என அவளை சமாதானப்படுத்தி எழுந்து அமரவைத்தனர்.


நாட்கள் அதன் போக்கில் செல்ல...நாளை சந்தியாவிற்கு நிச்சயதார்த்தம்,அன்று மதனிடம் பேசிவிட்டு வந்ததற்கு பிறகு வீட்டில் எடுக்கும் எந்த முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,எதாவது பண்ணுங்க என விட்டுவிட்டாள். அதன் பிறகு அனைத்து வேலையும் துரிதமாக முடிய,நாளை நிச்சயதார்த்தம் என்ற நிலையில் வந்து நிற்கிறது. இன்று தான் மதனும் மும்பை கிளம்புகிறான்.


பல நாட்களுக்கு பிறகு விக்ரம் ஆதி வீட்டிற்கு வந்தான் மதன்.அன்று ராகவனின் வார்த்தையில் சென்றவன் தான் இன்று தான் மும்பை செல்லும் முன் ஒரு வார்த்தை அனைவரிடமும் சொல்லிவிட்டு செல்ல எண்ணி உள்ளே வந்தான்.


"மதன்" என கீர்த்தனா ராதா இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து அவனின் கைபிடித்து நடுவில் அமர்த்திக்கொண்டனர்.

"இப்போ தான் இங்கே வர வழி தெரிந்ததா..?" என உரிமையாக கோபம் கொண்டவர்கள் பின்னர் சகஜமாக பேச தொடங்கினர்.

அவனும் தான் மும்பை செல்ல போவதை சொன்னவன் நைட் கிளம்புறேன் அதான் சொல்லிட்டு போகலாம் என்று வந்தேன் என்றவன் டைம் ஆகிடுச்சு, இன்னும் பேக்கிங் வேலையெல்லாம் முடியாமல் அப்படியே இருக்கு என ஏதோவொரு காரணத்தை சொல்லிவிட்டு கிளம்ப முயல...."என்னடா இப்படி சொல்கிறாய்..? அப்போ நாளைக்கு சந்தியா எங்கேஜ்மெண்ட்க்கு இருக்க மாட்டியா..?" என்க..அவனோ இல்லை என தலையாட்டியவன் கண்டிப்பா கல்யாணத்திற்கு வரேன் என்றவன் சோஃபாவில் இருந்து எழுந்துக்கொண்டு கண்ணன் ராதா மற்றும் கீர்த்தனா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன் கிளம்பிவிட்டான்.


அவன் வந்தது முதல் தன் அறை வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்த சந்தியா விரக்தியான புன்னகையை சிந்திவிட்டு தன்,அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.


மதனும் மும்பை சென்றுவிட..மறுநாள் வீடு மொத்தமும் சொந்தங்கள் நிரம்பி வழிந்தது சந்தியாவின் நிச்சியத்திற்கு. நடப்பது அனைத்தையும் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள் விக்ரமும் ஆதியும்.


உள்ளே அறையில் தயாராகி கொண்டிருந்த நந்தினி தன் தாயை தான் திட்டிக்கொண்டிருந்தாள்.

"என்னை ஏம்மா இப்படி டார்ச்சர் பண்ற, இந்த புடவை இடுப்பில் நிற்கவே மாட்டேன் என்கிறது,இதில் கண்டிப்பா புடவை தான் கட்டவேண்டும் என ஆர்டர் வேறு" என புலம்ப….

"ஏண்டி நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போக வேண்டிய பொண்ணுக்கு புடவை கூட கட்ட தெரியவில்லை என்றாள் எங்களை தான் திட்டுவாங்க..? என்ன பிள்ளை வளர்த்திருக்காங்க என்று" என கத்தியவாறு புடவையை அழகாக அவளுக்கு உடுத்திவிட்டவர்,அவளின் கூந்தலில் மல்லிகை சரத்தை சூடிவிட்டு அவள் முகம் பார்க்க...அவரே தன் மகளின் அழகில் வியந்து தான் போனார்.


"தாய் கண்ணு பொல்லாதது என சொல்வார்கள் நானே என் மகளை கண் வைக்கிறேன்" என எண்ணியவாறு அவரசரமாக சமையலறை சென்று உப்பு மற்றும் மிளகாய் வற்றலோடு வந்தவர் அவளுக்கு சுற்றிப் போட்டுவிட்டே வெளியே அனுப்பினார்.


அதுவரை கீழே உறவினர்கள் அதிகம் இருப்பதால்,மாடி ஹாலில் அமர்ந்து லேப்டாப்பை நொண்டிக்கொண்டிருந்த விக்ரம் கதவு திறக்கும் சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க,தன் அத்தையை தொடர்ந்து வெளியே வந்த நந்துவை பார்த்து அப்படியே ஃபிரிஸாகி விட்டான்.

கையிலிருந்த லேப்டாப் தடுமாறி விழ பார்க்க அதற்குள் சுதாரித்தவன் அதனை மேஜை மேல் வைத்துவிட்டு எழுந்து நின்றான்.


இதற்கு முன்பும் ஒருமுறை அவளை புடவையில் பார்த்திருக்கிறான் தான் ஆனால் அப்போது சிறுபிள்ளை போல் தெரிந்தவள், இன்று அவன் கண்ணிற்கு தேவதையாக தான் தெரிந்தாள். எவ்ளோ தான் பெண்கள் ஜீன்ஸ்,ஸ்கர்ட் என மாடலாக இருந்தாலும் புடவை அவர்களுக்கு தனி அழகை கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.


அதுவும் அந்த மயில் கலர் புடவை அவளின் பொன்னிற மேனிக்கு இன்னும் அழகை சேர்க்க...எப்போதும் யாரும் அறியாமல் தன்னவளை ரசிப்பவன்,முதன்முறையாக வெளிப்படையாகவே ரசிக்க தொடங்கிவிட்டான்.

அவளின் பிறைநூதலிலிருந்து கண், மூக்கு இதழ்கள் என இறங்கியவனின் பார்வை ஒரு நொடி தெரித்துவிடுவது போல் விரிந்தது. பின்னர் விழி மூடி தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவனின் பார்வை இப்போது அவளின் பளீரென்ற இடையில் பதிந்து அங்கிருந்து நகராமல் சண்டித்தனம் செய்தது.


அவன் பார்வையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்த நந்தினி, என்ன இப்படி பார்க்கிறாங்க..? என எண்ணியபடி அவனை கடந்து செல்ல முயல...அவனோ அவள் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.

அவளோ அதிர்ச்சியாக அவனை ஏறிட்டுப் பார்க்க,அவனோ அவளை இழுத்து கொண்டு தன் அறைக்கு சென்றவன்,கதவை அடைத்தான்.
 
Status
Not open for further replies.
Top