ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 5

எப்போதும் பரபரப்புடன் இருக்கும் அந்த பிரபலமான மருத்துவமனையின், ஓ.பி.டி என்றும் போல் இன்றும், பல நோயாளிகள் மருத்துவர்களை காண காத்திருந்தனர். ஒவ்வொரு நோய்களுக்கு ஏற்றவாறு இதயம், மூளை,குழந்தைகள்,மனநலம் என அதற்கென்று ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களின் அறைகள் முன்பு ஒரு கூட்டமே காத்திருந்தது.

முதலில் எல்லாம் கோயில்களிலும் விசேஷ வீடுகளில் மட்டுமே கூட்டம் அலைமோதி கொண்டிருக்கும்... இப்போது அதனை காட்டிலும் மருத்துவமனைகளில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வர தொடங்கிவிட்டனர். நமது வாழ்க்கை தரம் உயர உயர நோய்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது.

நந்தினி ஜெனரல் மெடிசன் என்ற பெயர் பலகை பதிக்கப்பட்ட அறைக்கு வெளியேயும் பலர் காத்திருக்க…. அறையிலிருந்து ஒருவர் வெளியே வர,உடனடியாக "ரிங் "என்று மணியடித்து அடுத்த நோயாளியை உள்ளே அழைத்தாள். நந்து எவ்வளவு சுட்டித்தனமோ அதற்கு குறையாமல் தனது வேளையில் முழு ஈடுபாடுடன் செயல்படுவாள். தனது எல்லா விளையாட்டுத் தனத்தையும் மருத்துவமனைக்கு வெளியே வைத்துக் கொள்பவள், அந்த வெள்ளை நிற மேல்கோட்டை அணிந்தவுடன் ஒரு நல்ல மருத்துவராக மட்டுமே செயல்படுவாள்.முகத்தில் தானாக ஒரு பொறுமையும், பொறுப்பும், கனிவும் தோன்றிவிடும்.

காலை பதினொன்று மணி வரை கூட்டம் அலைமோத கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் எல்லா நோயாளியையும் பார்த்தவள், சிஸ்டர் என அழைத்து…."வேற யாராவது இருக்காங்களா…?" என கேட்க,அவரின் இல்லை என்ற சொல்லை கேட்டு, தலையை இரு பக்கமாக திரும்பி கழுத்து வலியை விரட்டியவள்,நான் ப்ரேக் முடிச்சிட்டு வருகிறேன் என்றாள்.

பின்னர் மொபைலை ஆன் செய்தவள், ஆதிக்கு அழைக்க...அவனோ எடுத்தவுடன் "நான் வார்டு ரவுண்ட்சில் இருக்கேன்,நீ கேண்டீனில் வெயிட் பண்ணு" என்றவன்,ஃபோனை அணைத்து விட்டான்.

இவளும் கேன்டீன் சென்றவள், ஆதிக்காக காத்து இருக்க... அந்த நேரம் அவளின் எதிரில் வந்து அமர்ந்தான் ஒரு நெடியவன். அவளோ எதையும் கண்டு கொள்ளாமல் தனது மொபைலை பார்த்து கொண்டிருக்க,அந்த நெடியவன் "ஹாய் உங்க பெயர் நந்தினி தானே..?" என்றான்.

அவளும் அதுவரை மொபைலில் இருந்த பார்வையை விலக்கியவள், தன் பெயரை அழைத்ததும் நிமிர்ந்து " எஸ் ஐம் நந்தினி வாட் யூ வாண்ட்" என்றாள்.

அவன் சற்று தயங்கி பின் தன்னை நிலைப்படுத்தி கொண்டு "ஐம் சதிஷ்குமார் சைகேட்டரிக் டாக்டர்" என்றவன்,நானும் நீங்க இங்க ஜாயின் பண்ணியதில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்..உங்களோட ஒவ்வொரு செயலும், நடவடிக்கையும் என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுது.வேளையில் உள்ள டெடிகேஷன் ஆகட்டும், ஹாஸ்பிடலுக்கு வெளியே உள்ள குழந்தைத்தனமும் என்னை ரொம்ப பாதித்துவிட்டது" என்றான்.

நான் சுத்தி வளைத்து பேச விரும்பலை. டைரக்டா சொல்றேன் ஐம் இன் லவ் வித் யூ" என்றான்..அவளோ ஒரு நிமிடம் அவன் கூற்றில் அதிர்ந்தவள்,பின்னர் நிமிர்ந்து அமர்ந்தாள்.

"சாரி மிஸ்டர் சதிஷ், நான் ஆல்ரெடி ஒருவரை காதலிக்கிறேன்.. அவரை தவிர என் வாழ்க்கையில் வேற யாருக்கும் இடம் இல்லை' என தெளிவாகவும் நிதானமாகவும் சொல்லியவள், சோ திரும்பவும் நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டீங்கண்ணு நினைக்கிறேன்" என்றாள் அழுத்தமாக.

அவனோ அவள் இவ்வளவு சொல்லியும், "நீங்க உடனே பதில் சொல்லனும் என்ற அவசியம் இல்லை நல்லா யோசிச்சு பதில் சொன்னா போதும்" என்றான்.

கோபமே வராத எனக்கே கோபம் வர வைத்துவிடுவான் போலவே என சலித்துக்கொண்டவள்…"எக்ஸ்க்யூஸ் மீ சார்... உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா..? ஐம் ஆல்ரெடி கமிட்டெட். சோ பிளீஸ் லீவ் ஃப்ரம் ஹியர், இல்லனா பின்னாடி ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க அதுக்கப்பறம் உங்க இஷ்டம்" என்றவள் திரும்பவும் மொபைலில் பார்வையை செலுத்தினாள்.

அவன் இன்னும் இடத்தை காலி செய்யாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க...அப்போது உள்ளே வந்த ஆதி,கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவன் அருகே நிற்க... நிமிர்த்து பார்த்த நந்து ஆதியை பார்த்துவிட்டு " அப்பவே சொன்னேன் கேட்டியா..? இனி என்னால ஒன்னும் பண்ண முடியாது" என்பது போல் எதிரில் இருப்பவனை பார்த்தவள் விட்ட வேலையை அதாவது செல்லில் கேம் விளையாடும் பணியை தொடர்ந்தாள்.

"ஆடு தானா வந்து என்னை வெட்டுங்கன்னு சொன்னா, கசாப்பு கடைக்காரன் சும்மா விடுவானா…? எல்லாம் விதி" என்று நினைத்தவள் அமைதியாக நடக்க இருப்பதை பார்க்க தொடங்கினாள்.

அதுவரை நந்துவையே ஏதோ கிராமத்தான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தவன்...தன் முன் நிழலாடவும் நிமிர்ந்து பார்க்க, அங்கு கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்த ஆதியை பார்த்து அவசரமாக எழுந்து நின்றான்.

ஆதியும் நந்துவும் உறவினர்கள் என்பது அவனுக்கு தெரியும், எனவே மனதில் தோன்றிய பயத்தை விலக்கியவன்…"ஹாய் ஆதி... நந்து தனியா உட்கார்ந்து இருந்தாங்க,அதான் சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன்" என்றான் தடுமாற்றம் நிறைந்த குரலில்.

அவனை விழிகள் இடுங்க பார்த்த ஆதி " அப்படியா என்ன பேசினீங்க,எதை பற்றி பேசுனீங்க" என்றான் அழுத்தமாக.

அவனோ எச்சில் கூட்டி விழுங்கியவன்,தைரியத்தை வர வைத்து.. நந்துவை காதலிப்பதாக சொல்லவும் ஆதியோ "ஓ…. அப்படியா, அப்போ ஒன்னு பண்ணுங்க நாளைக்கு இதே நேரம் இதே இடத்திற்கு வந்து உங்க காதலை சொல்லுங்க,முடிவை நாங்க சொல்றோம். ஏனென்றால் எங்களுக்கும் கொஞ்சம் யோசிக்க டைம் வேண்டும்" என்றான் முகத்தை முடிந்தளவு சாதாரணமாக வைத்துக்கொண்டு.

சதிஷ் வாயெல்லாம் பல்லாக சிரித்தவன் "ரொம்ப தேங்க்ஸ் ஆதி" என்றுவிட்டு மகிழ்ச்சியாக கேன்டீனை விட்டு சென்றான்.

யாரு பெத்த பிள்ளையோ..? என தோன்றிய நினைவை கலைத்து ஆதியை பார்க்க...அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

போய் இருவருக்கும் காபியும் அவளுக்கு பிடித்த சமோசாவையும் வாங்கி வந்தவன் அவளுக்கு எதிரில் அமர்ந்தான். "லூசு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் தனியா வராதே,நான் இல்லனா உன் ஃப்ரெண்ட் வித்யா கூட வா என்று... சொல் பேச்சை கேட்க கூடாதுன்னு இருக்கியா" என்றான் கோபமாக.

அவளோ சமோசாவை ரசித்து உண்டவள் "நீ வருவேன்னு சொன்னதால் தான் தனியா வந்தேன்" என்றவள் அவனை நிமிர்ந்து பாராமல் சாப்பிடுவதிலேயே கவனத்தை செலுத்தினாள்.

"உன்கிட்ட சொல்வதற்கு பதில் அந்த சுவர்கிட்ட சொல்லலாம்" என்றவன் காபியை அருந்தினான்.

பின்னர் இருவரும் கேன்டீனில் இருந்து வெளியே செல்கையில்... "எதுக்காக அவனை நாளைக்கு வர சொன்னாய்..?" என நந்து கேட்க.

அவனோ "அதை நாளைக்கு வந்து தெரிஞ்சுக்கோ" என்றுவிட்டு தனது தளத்திற்கு செல்ல லிஃப்ட் நோக்கி சென்றான்.

கே.ஆர் குரூப் ஆஃப் கம்பெனியில் உள்ள அனைவரும் இன்று பரபரப்புடன் காணப்பட்டனர். புதிதாக கிடைத்துள்ள கவர்ன்மென்ட் ப்ராஜெக்ட் பற்றிய கலந்தாய்வு இன்னும் சிறு நேரத்தில் நடக்க இருப்பதால் தான் இந்த பரபரப்பு.

பல கவர்மெண்ட் ப்ராஜெக்டை செய்திருந்தாலும்... இது மிகப் பெரிய பட்ஜெட் உடைய ப்ராஜெக்ட் என்பதாலும்,இதில் எந்த தவறு நடந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என முன்கூட்டியே அறிவித்திருந்தாலும் அனைவரும் கொஞ்சம் பயத்துடனேயே மீட்டிங் ஹாலுக்கு சென்றனர்.

தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து பைலை பார்த்துக்கொண்டிருந்தவன், தனது பி.ஏ சுரேஷை அழைத்து... "மீட்டிங் ஹாலுக்கு போகலாமா எல்லாம் ரெடியா..?" என்றான்.

அவனும் "எல்லாம் ரெடி சார்,எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட் பண்றாங்க" என்றான்.

இருக்கையிலிருந்து எழுந்தவன் தனது கம்பீரமான நடையுடன் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான். அதுவரை இருந்த சலசலப்பு அடங்கி,மூச்சு விடும் சத்தம் கூட கேட்காத அளவுக்கு அமைதி அங்கே நிலவியது.
அனைவரும் எழுந்து நின்று மரியாதையை தெரிவிக்க...அதனை சிறு தலையசைப்போடு ஏற்றவன்,அனைவரையும் அமரும்படி சொன்னான்.

"லெட் மீ கமிங் டூ தி பாய்ண்ட். இந்த மீட்டிங் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன்..இதுவரைக்கும் நாம செய்த ப்ராஜக்டை விட பலமடங்கு லாபம் மட்டுமில்ல ...நம்ம கம்பெனிக்கு பெரிய பெயரும் எடுத்து தரக்கூடிய ஒரு ப்ராஜெக்ட்.

உங்களுக்கே தெரியும் இந்த ப்ராஜெட்க்காக எத்தனையோ கம்பெனிஸ் போட்டிபோட்டு.. ஃபைனலி நமக்கு கிடைத்திருக்கு.. சோ இந்த ப்ராஜெக்ட்ல எந்த ஒரு பிரச்சினையும் வருவதை நான் விரும்பவில்லை என்றவன்,உங்களுக்கு கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்திருக்கணும், எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை..அப்படி யாராவது வேலையை முடிக்க முடியாது என்றாலும் சரி,முடிக்க முடியவில்லை என்றாலும் உடனடியாக வேலையை விட்டு போகவேண்டியாதாக இருக்கும்.மற்ற எல்லா விஷயங்களையும் உங்க டீம் லீடர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க" என்றவன்.

"ஓகே கைஸ்... ஆல் தி பெஸ்ட். ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கலாம். நவ் யூ கேன் கோ" என்றவன் விடுவிடுவென மீட்டிங் ஹாலை விட்டு வெளியேறி தன் அறைக்கு சென்றான்.

புயல் அடித்து ஓய்ந்தது போல் அனைவரும் அப்போதுதான் பெருமூச்சுவிட்டனர்.இந்த ப்ராஜெக்ட் முடிவதற்குள் என்னவெல்லாம் நடக்க போகுதோ என புலம்பியப்படி சென்றனர்.

அனைவரும் சென்றிருக்க அவள் மட்டும் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

"ஏய்.. திவ்யா என்ன பகல் கனவா..? எல்லாரும் போயிட்டாங்க வா போகலாம்" என்ற தோழியை பார்த்து...இல்லடி எனக்கு இப்பவே ரொம்ப பயமா இருக்கு..ஜாயின் பண்ணி ஒரு வருஷம் தானே ஆகுது அதுக்குள்ள என்னை எதுக்கு இவளோ பெரிய ப்ராஜெக்டில் போட்டாங்க…? சீனியர் ஸ்டாஃப் கூட இப்படி பயப்படுறாங்க,இதுல நான் எப்படி" என்க,

"அதெல்லாம் பார்த்துக்கலாம் நீ அனாவசியமாக பயப்படாதே" என்றவள் திவ்யாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

"ஆமா நீ நம்ம பாஸ் படிச்ச காலேஜ் தானே...அவரை பற்றி முன்பே தெரியும் தானே உனக்கு..இப்படி பயந்து சாகுறவள்,எதுக்கு இந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்தாய்" என கேட்க,

அவளோ "நீ வேறடி...இங்க ஜாயின் பண்ணி ரெண்டு நாளுக்கு அப்பறம் தான் இது இவருடைய கம்பெனி என்று தெரிந்தது. அப்பறம் வேற வழியில்லை என்று என்னையே தேற்றிக்கொண்டேன்" என்றாள் பாவமாக.

பின்னர் 'எல்லாம் அவன் செயல்' என கடவுள் மேல் பாரத்தை இறக்கி வைத்தவள்...தனது வேளையில் முழ்கிவிட்டாள்.


தனது அறையில் நுழைந்த விக்ரம்,தனது நண்பன் மதனை அழைக்க...அவனும் உடனடியாக வந்தான். "மதன் இந்த ப்ராஜெக்ட் முடியும்வரை மற்ற வேலைகளை யாரிடமாவது கொடுத்துட்டு,நீ இதில் மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு. எந்த ப்ராப்ளமும் வராமல் பார்த்துக்கொள்" என்றான்.

பின்னர் நினைவு வந்தவனாக "அப்பறம் சந்தியா எங்கே ஆளையே காணும்" என விக்ரம் கேட்க...

அவனோ "இன்னைக்கு மாடல் கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேன். காலையிலிருந்து மாடல் கொட்டேஷன் ரெடி பண்றேன்னு ரூம் ஃபுல்லா குப்பையை போட்டுட்டு இருக்கா" என்றான் கடுப்பாக.

அதனைக் கேட்டு சிரித்தவன், "ஏதாவது பண்ணட்டும் விடு மச்சி,போக போக கற்றுக்கொள்வாள்" என்றவன் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிவிட்டான்.

தன் அறைக்கு வந்த மதன் அது இருக்கும் நிலைமையை பார்த்து…"நீ கொட்டேஷன் ரெடி பண்ண வரை போதும் விடு சந்தியா என்றவன்,வேற ஏதாவது பண்ணு இல்லனா வீட்டுக்கு கிளம்பு" என சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.

விக்ரம் எப்போதும் பிஸியாக இருப்பதால் அவளுக்கு வேலையை கற்றுக்கொடுக்கும் பொறுப்பை மதனிடன் வழங்கினான். அவனும் முதலில் மறுக்கவே நினைத்தான்,பின்னர் விக்ரமிற்காக ஒத்துக்கொண்டான். ஆனால் ஏன் ஒத்திக்கொண்டோம் என ஒவ்வொரு நிமிடமும் அவனை நினைக்க வைத்தாள் சந்தியா.

வேலை செய்கிறாளோ இல்லையோ ஆனால் அவனை சைட் அடிக்கும் வேலையை மட்டும் தவறாமல் செய்து கொண்டிருக்கிறாள். "மதன்...மதன்" என அவள் அழைக்க அவனோ "ம்ம்.. சொல்லு" என்றான் அமைதியாக.

மதன் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்...நீ பாட்டுக்கு வேலையை பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம் என்றாள் சிணுங்கியவாறு.

அவனோ அவளை நிமிர்ந்து பார்த்து "எனக்கு வேலை இருக்கு...நான் ஒன்னும் வெட்டியா இல்லை புரியுதா,உனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் வெளிய மரியா மேம் இருப்பாங்க அவங்க கிட்ட கேளு..? என்னை ஆளை விடு" என்றான் கோபத்தை கட்டுப்படுத்தி பற்களை கடித்துக்கொண்டு.

"அப்படியெல்லாம் உன்னை விட முடியாது மதன்.. நீ சொல்லிக்கொடுத்தா கொடு இல்லனா விடு,அதுக்காக எல்லாம் என்னால யாருகிட்டயும் போய் நிற்கமுடியாது புரியுதா பேபி" என்றவள், தன் இருக்கையில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் பார்வை அவனை தீண்டினாலும்,அவளை பார்க்காமல் தன் வேலையை பார்க்க முயன்றவனால் சுத்தமாக முடியவில்லை. தன்னை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தால் எப்படி ஒழுங்காக செய்வது...அவளை எதுவும் செய்யமுடியாத நிலையில் தான் இருப்பதை எண்ணி தன்னையே வெறுத்தான் மதன்.




உங்கள் கருத்துக்களை மறக்காமல் இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 6

சிறிதுநேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த சந்தியா...அவன் தலையில் கைவைத்து அமர்வதை பார்க்க அவளுக்குமே "நாம அவனை ரொம்ப டார்ச்சர் பண்றோமோ" என்ற எண்ணமே தோன்றியது.

அவனின் கவலை நிறைந்த முகம் இவளையும் தாக்க, அவனருகே சென்றவள் "மதன்" என மென்மையாக அழைத்தாள். அவனோ "ம்ம்.. சொல்லு" என்றான் வெறுமையான குரலில், முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் விழி மூடி அமர்ந்திருக்க...அவளோ "சாரி பேபி உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன் இல்ல" என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

அவனும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒரு விரக்தியான புன்னகையை சிந்திவிட்டு "உன்மேல் எந்த தப்பும் இல்லை,எல்லா தப்பும் என்னுடையது தான். என்னைக்கு நீ இந்த கம்பெனிக்கு வந்தியோ, அன்னைக்கே நான் இந்த கம்பெனியை விட்டு போய் இருக்கணும். அதைவிட்டுட்டு விக்ரம் சொன்னான் என்ற காரணத்திற்காக உன்னை ட்ரெயின் பண்ண ஒத்துக்கிட்டேன் பார் அதுதான் நான் பண்ண மிகப் பெரிய முட்டாள்தனம். இனி நீ உன் இஷ்டம் போல் இரு, எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை... நான் வேலையை விட்டு நிற்கப் போகிறேன்" என்றவன், இருக்கையை விட்டு எழுந்து விக்ரம் அறையை நோக்கி சென்றான்.

அவன் அறையை விட்டு வெளியே செல்லும் முன் குறுக்கே நின்று தடுத்தவள் "என்ன சொன்ன...என்னடா சொன்ன இப்போ…? என சட்டையை பிடித்து ஆக்ரோஷமாக கேட்டவள், வேலையை விட்டு நிற்க போகிறாயா…? ஓ… அப்போ வேலையை விட்டு நிற்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறாய்" என நக்கலாக கேட்க...அவனோ "நான் எதை வேண்டுமானாலும் சொல்லுவேன், அதை உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்றவன்,அவள் கையை பிடித்து தள்ளி நிறுத்தியபடி, வெளியே செல்ல முயல, அவளோ "ஒரு நிமிஷம்" என்றாள்.

அவனும் அப்படியே அவளுக்கு முதுகை காட்டியபடி நின்றிருக்க, அவனை நோக்கி அடியெடுத்து வைத்தவள் "நான் தானே உனக்கு பிரச்சினை. சரி நான் இனிமே ஆபீஸ்க்கு வரவில்லை" ஆனால் நீ இந்த வேலையை விட்டு போகக் கூடாது. அப்படி மீறி போகணும்னு நினைத்தால், இப்போவே வா... விக்ரம் அண்ணா கிட்ட நான் சொல்றேன்,என்னோட லவ் டார்ச்சர் தாங்க முடியாம தான் வேலையை விட்டு நிற்கிறான்" என்று.

"ம்ம்... அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம் கேட்கனும்" என அவள் கேட்க, அவனோ பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தை அடக்கியவாறு அமைதியாக நின்றான் .

"என்னன்னு கேட்க மாட்டியா மதன் என்றவள், நீ கேட்கவில்லை என்றாலும் நான் சொல்லுவேன்…. ஐ திங்க் நீ என்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டன்னு நினைக்கிறேன்" என்றவள், கண்களில் காதல் வழிய அவன் முகம் பார்த்து பதிலுக்காக காத்திருக்க.

அவனோ "லூசு மாதிரி பேசாத? எனக்கு உன் மேல் காதல் எப்போதும் வராது" என்றான் அழுத்தமாக.

"ஆனா, உன் நடவடிக்கையை பார்த்தால் அப்படி தெரியவில்லையே..? என்னை காதலிக்க மாட்டேன் என சொல்பவன் எதற்காக இந்த வேலையை விட்டு செல்ல வேண்டும்,அப்போ நான் உன்னை அந்தளவுக்கு பாதிக்கிறேனோ..? எங்கே நான் உன் பக்கத்திலேயே இருந்தால், என்னை காதலித்து விடுவாயோ என்று பயப்படுகிறாய் அப்படிதானே..?" என்றவளை பார்த்து, "உனக்கு என்ன பைத்தியமா..? அப்படி எல்லாம் எந்த மண்ணாங்கட்டியும் இல்லை, எனக்கு உன்னை பார்த்து பயமா..? நெவர்" என்றான் நிமிர்வாக.

அவளோ "கண்டிப்பா பயம்தான் அதனால் தான் வேலையை விட்டு செல்ல துடிக்கிறாய்" என்றாள்.

அவனும் அவளை எதிர்த்து பேச வேண்டும் என்ற எண்ணத்திலேயே வார்த்தையை விட்டுவிட்டான். "நான் ஏன் வேலையை விட்டு போகணும்,நான் எங்கேயும் போக மாட்டேன் இங்க தான் இருப்பேன்" என்றான்.

அவளோ அடக்கப்பட்ட சிரிப்புடன் "அடப்பாவி இந்த வார்த்தையை உன் வாயிலிருந்து வரவழைக்க நான் பட்டப்பாடு இருக்கே கடவுளே" என மனதிலேயே நினைத்துக்கொண்டவள் முகத்தை சாதாரணமாக வைக்க பெரும்பாடு பட்டுப்போனாள்.

அவனுக்கோ இப்போதுதான் தான் கூறியதே நினைவு வந்தது…."ராட்சசி என் வாயாலேயே வேலையை விட்டு போக மாட்டேன்" என சொல்ல வைத்துவிட்டாள்
என அவளை திட்டித் தீர்த்தான். பின்னர் விதியை யாரால் மாற்றமுடியும்,எல்லாம் அவன் செயல் என்று நினைத்துகொண்டு வேலையை தொடர்ந்தான்.


மாலை ஐந்து மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப... ஸ்கூட்டியை ஆன் செய்தவள், அதனை பொறுமையாக சாலையில் செலுத்தினாள். போகும் வழியில் ஏதோ ஒரு உந்துதலில் ரிவர் வியூ கண்ணாடி வழியாக பின்னால் பார்க்க…தன்னை தொடர்ந்து வரும் காரை கண்டு, சலித்தபடி தலையாட்டியவள், எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறான்...கடவுளே எங்க அப்பாக்கு மட்டும் தெரிந்தால்,அவ்வளவு தான் என நினைத்தவள் ஸ்கூட்டியின் வேகத்தை அதிகப்படுத்தினாள். பின் தொடர்ந்த காரும் வேகமெடுக்க... ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியை அடையும் போது ஸ்கூட்டியை முந்திக்கொண்டு குறுக்கே நின்றது அந்த ஆடி கார்.

யார் அது என தெரிந்திருந்தாலும்,முதன் முறையாக பார்த்தபோது இருந்த பதட்டமும் பயமும் சேர்ந்துகொள்ள….இதயம் வெளியே குதித்துவிடும் என்பது போல் படபடவென அடித்துக்கொண்டது.

காரிலிருந்து இறங்கிய ஆதி,தன்னவளை நெருங்கி, ஒற்றைக் காலை தரையில் ஊன்றி நின்றிருந்தவளை ரசனையாக பார்த்தவன்... "ஹாய் திவி எதுக்கு இவளோ வேகம்,பொறுமையாக போக வேண்டியது தானே...நீ எப்படி போனாலும் நான் பின்னால் வருவதை உன்னால் தடுக்க முடியாது. பிறகு ஏன் இந்த அவசரம்" என்றான் கண்களில் உள்ள சன் கிளாஸை கழட்டி முன்பக்க சட்டைகிடையே மாட்டியபடி.

அவளோ எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க...அவனோ கோபமாக "இன்னும் எத்தனை நாள் இப்படியே அமைதியாக இருப்பாய்...ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்லை தியா.. முழுசா ஐந்து வருஷமா உன் பதிலுக்காக காத்திருக்கேன்" என்றான் அதுவரை இருந்த மனநிலை மாறி ஏக்கம் நிறைந்த குரலில். உனக்கு நிஜமா என்னோட காதல் புரியலையா இல்லை புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறியா" என்க,

"அவளோ நான் ஒன்னும் உங்களை காத்திருக்க சொல்லவில்லை,
என்னுடைய முடிவை முதல் நாளிலேயே சொன்னதாக ஞாபகம்" என்றாள்.

"இத்தனை வருடம் எதுவும் செய்யாதவன் இனிமேல் என்ன செய்துவிட போகிறான்னு மட்டும் நினைக்காதே. நானும் ரொம்பவே பொறுமையாக இருந்துவிட்டேன்,ஆனால் இனி அப்படி இருக்கப்போவதில்லை, இனிமே தான் இந்த ஆதியோட இன்னொரு பக்கத்தை நீ பார்க்க போகிறாய் என்றவன், மாமாவோட ஆக்க்ஷன்க்காக காத்திரு பேபி" என அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு காரில் பறந்துவிட்டான்.

அவளோ அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்…"அய்யோ என்ன பண்ண போறாங்களோ…? கடவுளே நீ தான் என்னை காப்பாத்தனும்" என்ற வேண்டுதலோடு ஸ்கூட்டியை கிளப்பினாள்.

வீட்டில் நந்தினியோ…என்னை வீட்டில் விட்டுட்டு, இந்த ஆதி எங்க போய் தொலைந்தான் என வசைப்பாடியவாறு, செல்ஃபில் உள்ள புத்தகத்தை எடுக்க முயல, அதுவோ அவளை விட உயரமாக இருந்தது. அவளும் முடியும் மட்டும் தாவிப்பார்த்தவள்,முடியாமல் போக...டிரெஸ்ஸிங் டேபிள் அருகில் உள்ள சிறிய இருக்கையையை எடுத்து அதில் ஏறி நின்று முயற்சித்தாள்.

அந்தோ பரிதாபம் அப்பொழுதும் அவளுக்கு எட்டவில்லை.
மேஜையின் விளிம்பில் கால் கட்டை விரலை ஊன்றி எக்கியவள்,புத்தகத்தை எடுத்துவிட்டு காலை கிழே வைக்க….கால் வழுக்கி கிழே விழ…..விழ போகிறோம் என தெரிந்ததும், கண்களை இறுக்கமாக முடிக்கொண்டவள் உடல் நடுங்க "அம்மா..ஆ…." என கத்தினாள்.

விழிமூடி பயத்தில் நடுங்கி கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது தான் இன்னும் கிழே விழவில்லை என்பது…ஏன் இன்னும் விழலை என எண்ணியவள், அப்போதுதான் தன்னை ஒரு வலிய கரம் தாங்கி இருப்பதை உணர்ந்தாள்.

ஒரு கை தோளை தாங்கியிருக்க... மறுகையோ இடையை வளைத்திருந்தது. அந்த கையின் அழுத்தமும் ஸ்பரிசமும் சொல்லியது தன்னை தாங்கியிருப்பவன் யார் என்று. விழுந்து விடுவோம் என எண்ணிய போது தோன்றிய பயத்தை விட இப்போது இன்னும் அதிகரிக்க... எழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அப்படியே அவன் கையில் விழி மூடிக் கிடந்தாள்.

விழி திறந்தாள் என்ன சொல்லுவான்..? என பலவாறு யோசித்தவள், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கண்களை திறக்க… எதிரில் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் அழுத்தமாக நின்றிருந்தான் விக்ரம்.

விக்ரம் மாடிப்படிகளில் எறிக்கொண்டிருக்கும் போதே அவள் ஆதியை திட்டும் வார்த்தைகள் செவியில் விழுந்தது. அந்த அறையை கடக்கும் நேரம் அவன் பார்வையில் விழுந்தது என்னவோ...அம்மா என கத்தியபடி சாய்ந்தவளையே...மின்னல் வேகத்தில் அவளை நெருங்கியவன்,அவளை விழாமல் பிடித்துக்கொண்டான்.

"சா...சாரி அத்...தான் தெரியாம கால் தவறி" என திக்கித் திணறியவள்,அப்போதும் அவன் கை சிறையிலிருந்து விலகாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் முகத்தை நேராகப் பார்த்தே பல வருடங்கள் கடந்திருக்க...இன்று, அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் அவனை கண்டவுடன், காதல் கொண்ட நெஞ்சம் விழித்துக்கொள்ள தன்னவனின் ஸ்பரிசத்தையும் பிம்பத்தையும் மொத்தமாக தன்னுள் நிரப்பிக்கொண்டாள்.

அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் முகத்தில் வந்துபோன ஒருநிமிட பயம், அதைத்தொடர்ந்து தோன்றிய மகிழ்ச்சி,விழியில் தன்னை பார்க்கும் போது தோன்றிய மயக்கம் எல்லாமே அவனுள் ஆழமாக பதிந்தது. அதன்பின் தாங்கள் இருக்கும் நிலையறிந்து…"கையிலிருந்து இறங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கா…? இல்லையென்றால் இப்படியே இருக்கும் எண்ணமா" என முகத்தில் வரவைத்த கோபத்துடன் கேட்க...அப்போது தான் தன்னை மீட்டவள், மறுபடியும் மன்னிப்பை வேண்டிக்கொண்டு விலகி நின்றாள்.

அவனோ அவள் விலகிய மறுநொடி அறையிலிருந்து புயல் போல் வெளியேறினான்.

அவளோ "அய்யோ நந்து ஆல்ரெடி அவங்களுக்கு உன்னை கண்டாலே பிடிக்காது இதில் இது வேறா…?" என்று கண்ணாடியில் தெரியும் தன் முகத்தை தானே தீட்டிகொண்டாள்.
நல்லவேளை நம்மளை திட்டவில்லை,வெறும் முறைப்போடு விட்டுவிட்டார் என நினைத்துக்கொண்டு கிழே விழுந்த புத்தகத்தை எடுத்துகொண்டு படிக்க தொடங்கினாள்.

மறுநாள் எப்போதும் போல் ஓ.பி.டி யை முடித்தவுடன் ஆதி ஃபோனிற்கு கால் செய்து டீ ப்ரேக்கிற்கு வர சொல்ல...அவனோ எனக்கு சர்ஜரி இருக்கு நீ போ என்றவன் ஃபோனை துண்டித்தான்.

இவளோ "நேற்றைக்கு என்னவோ பெரிய இவன் மாதிரி தனியா போகாதே வராதே என்று டயலாக் விட்டான்,இன்னைக்கு தனியா போக சொல்றான்.. இன்று பார்த்து இந்த வித்யா வேறு லீவ்" என புலம்பியவள்...தனியாக சதிஷை பார்க்க பிடிக்கவில்லை என்றாலும், எப்படியும் ஏதாவது செய்திருப்பான் என்று ஆதியின் மேல்கொண்ட நம்பிக்கையில் கேன்டீன் நோக்கி சென்றாள்.

ஒரு காஃபி மட்டும் வாங்கிக்கொண்டு இருக்கையில் அமர்ந்து காஃபியை அருந்தத்தொடங்கினாள். சற்று நேரத்தில் சதிஷ் கேன்டீன் வந்தவன்,அவள் அருகில் வந்து "ஹாய் நந்தினி கேன் ஐ சிட் ஹியர்" என எதிரில் இருந்த இருக்கையை காட்டி கேட்க.

அவளோ 'என்னடா இது.. நேற்று அவ்வளவு உரிமையா பேசியவன்,இன்று அமர்வதற்கு பெர்மிஷன் கேட்கிறான்' என ஆச்சர்யமாக பார்த்தவள்..."எஸ் யூ கேன்" என்றாள்.நேற்று அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சிக்கு பதிலாக இன்று வெறுமையாக இருந்தது.

சிறிது நேரம் அமைதி காத்தவன், "சாரி நந்தினி... நேற்று உங்ககிட்ட நான் அப்படி பேசியது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க என்றவன் தொடர்ந்து… நீங்க யாரையோ காதலிப்பதாக சொல்லும் போது போய் சொல்றிங்கன்னு நினைத்தேன், அதான் யோசித்து சொல்லுங்கன்னு சொன்னேன். ஆனா இப்போதான் எனக்கு எல்லாமே புரிந்தது என்றவன்...திரும்பவும் ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி. இனிமேல் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்றவன் அவளிடமிருந்து விடைபெற்று சென்றான்.

அவளுக்கோ 'முக்கியமான சீனில் தொடரும்..? போட்டது போல்' என்ன நடந்தது என புரியாமல் அமர்ந்திருந்தாள்.

பின்னர் அடுத்தடுத்த வேலையை
செய்து கொண்டிருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி மட்டும் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

மதியம் உணவருந்தும் நேரத்தில் வந்த ஆதியை பார்த்து முதலில் கேட்ட கேள்வியே...ஆதி அவனை என்ன பண்ணாய் என்று தான்

அவனோ "யாரை சொல்ற" என நிதானமாக கேட்க,

"நடிக்காத ஆதி அந்த சதிஷ் இன்னைக்கு என்ன சொன்னான் தெரியுமா..?" என்று நடந்தவற்றை கூற...அவனோ "அப்படியா என வியப்பாக பார்த்தவன்,அது இருக்கட்டும் நந்து... அவன் கிட்ட யாரையோ காதலிக்கிறேன்னு சொன்னியே அது உண்மையா" என்க...

அவளோ அவன் திடீரென்று இப்படி ஒரு கேள்வியை கேட்பான் என நினைத்திடாதவள்...சற்று தடுமாறித்தான் போனாள்.

பின்னர் தன்னை நிலைப்படுத்தி கொண்டு "அப்படியெல்லாம் இல்லை... அவனை தவிர்ப்பதற்காக தான் அப்படி சொன்னேன்" என்றாள். ஆல்ரெடி விக்ரம் ஆதி இருவருக்கும் ஆகாது இதில் தான் ஒருதலையாக விக்ரம் அத்தானை காதலிப்பது தெரிந்தாள் கோபப்படுவான் என்றெண்ணி அதனை மறைத்துவிட்டாள்.

அவளை நம்பாத பார்வைப் பார்த்த ஆதி "நான் யாரையும் எதுவும் பண்ணவில்லை" என்றவன் உணவில் கவனத்தை செலுத்தினான்.

அவளோ "அப்பறம் எப்படி இந்தளவுக்கு மாறினான்" என புலம்ப… ஆதியோ "யாராய் இருந்தால் என்ன..? நம்ம பிரச்சனை முடிந்ததா அடுத்த வேலையை பார்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

யாராக இருக்கும் என எண்ணியவளுக்கு அது விக்ரமாக இருக்குமோ என்ற சிறு எண்ணம் கூட எழவில்லை. அவள் மனதில் விக்ரமிற்கு தன்னை பிடிக்காது என்பது ஆழமாக பதிந்துவிட்டது பிறகு எப்படி அவனாக இருக்குமோ என தோன்றுவதற்கு. ஆதி தான் ஏதாவது செய்துவிட்டு போய் சொல்கிறான் என நினைத்தபடி வேலையை தொடர்ந்தாள்.





மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கே சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 7

அன்று காலை வழக்கம் போல் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த திவ்யாவை தடுத்த அவள் பெற்றோர்கள்..
"இன்னைக்கு ஆபீஸுக்கு போக வேண்டாம்,ஒரு நாள் லீவ் போடுமா" என்க…. அவளுக்கோ விக்ரமின் கோப முகம் தான் முதலில் நினைவில் வந்தது.

"அய்யயோ ! அம்மா என்னால லீவ் எல்லாம் போட முடியாது. புது ப்ராஜெக்ட் தொடங்க போறோம், அது முடியும் வரை யாருக்கும் லீவ் கிடையாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க" என்க,

அவள் தந்தையோ "அதெல்லாம் தருவாங்க, இன்னைக்கு ஊரிலிருந்து உங்க அத்தை வராங்க. அவங்க வரும் போது நீயில்லையேன்றால் நல்லா இருக்காது. நாளைக்கு நீ வாழ போகிற வீடு,அவங்க மனசு கோணாமல் நடந்துகொள்ள வேண்டும்" என்றவர் தன் முடிவில் நிலையாக நிற்க, வேறு வழியில்லாமல் அவளும் ஒத்துக்கொண்டாள்.

"அப்பா எதுக்காக அக்காவை கட்டாயப்படுத்துறிங்க நான் வேண்டுமென்றால் காலேஜுக்கு லீவ் போடுறேன்" என பிரியா கேட்க...அங்கு வந்த அவள் அன்னை கையில் தோசை கரண்டியோடு "எங்க இப்போ சொன்னதை திரும்பவும் சொல்லு என்றவர், காலேஜ் போகாமல் இருக்க என்ன காரணம் கிடைக்கும்னு காத்திருக்க வேண்டியது, போய் சீக்கிரம் கிளம்புடி, அப்பறம் பஸ் போய்டுச்சு டைம் ஆகிடுச்சின்னு ஏதாவது நொண்டி சாக்கு சொல்லவேண்டியது" என எப்போதும் போல் கத்த தொடங்க….

தாயின் திட்டை எப்பவும் வாங்குவது போல் இன்றும் சந்தோஷமாகவே கேட்டுகொண்டவள் "நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்...இந்த மாசம் மழை ஏதாவது வந்தாவது லீவ் விடுவாங்கனு பார்கிறேன் அதுவுமில்லை. கடவுளுக்கு கூட நம்ம மேல் இரக்கம் வரவில்லை போல" என முணுமுணுக்க..

"என்னடி அங்க சத்தம்" என்ற அன்னையின் குரலுக்கு "சும்மா பேசிட்டு இருக்கேன் ம்மா "என வடிவேலு பாணியில் பதில் கொடுத்தவள்,தன் அன்னை கரண்டியோடு வரும் முன்.. தன் டிஃபன் பாக்ஸை எடுத்துகொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

திவ்யாவும் என்ன காரணம் சொல்லி லீவ் கேட்பது என்று யோசித்தவள், "பாட்டி இல்லனா தாத்தா இறந்துவிட்டார்கள் என்று சொல்லலாமா..? என பள்ளி செல்லும் சிறுபிள்ளை போல் நினைத்தவள்,பின்னர் இதே காரணம் சொல்லிதான் போன வருஷம் லீவ் போட்டோம்,இப்போ என்ன பண்ணலாம் என தீவிரமாக யோசிக்க...ஒரு காரணமும் கிடைக்கவில்லை. வெல்யுவ் ரீஸன் சொல்லவில்லை என்றால் வேலையை விட்டே தூக்கிடுவாங்களே' என எண்ணியவளுக்கு எரிச்சலாக வந்தது.

அவளுக்கு அவள் அத்தை குடும்பத்தில் யாரையும் பிடிக்காது,அதுவும் அந்த வீணா போன மகேஷை பார்த்தாலே எரிச்சலாக தான் இருக்கும். அவனும் அவன் பார்வையும் என நினைத்தவளுக்கு,தன் தந்தையை எதிர்த்து எப்படி இந்த திருமணத்தை நிறுத்த போகிறோம் என்பதை எண்ணி மனம் கலங்கியது.


அவளுக்கு ஆதியை பிடித்திருக்கிறதா..? என்றால் அதற்கு அவளிடம் பதிலில்லை,கடந்த ஐந்து வருடங்களில் ஒருமுறைகூட வரம்பு மீறிய பார்வையோ, நடத்தையையோ அவனிடம் பார்த்ததில்லை அதுவும் அவன் உடன் இருக்கையில் பயத்தை உணர்ந்திருக்கிறாள் தான் ஆனால் ஒருபோதும் பிடிக்காதா, பாதுகாப்பில்லாத உணர்வை உணர்ந்ததில்லை.

ஆனால் மகேஷை...அவனை நினைக்கும் மாத்திரத்தில் உண்டாகும் எரிச்சல், அவனின் வக்கிர பார்வையில் உண்டாகும் ஒருவிதமான அருவருப்பு அதை நினைக்கையிலேயே மனம் படபடத்தது.

'இவனோடு நான் எப்படி..? கடவுளே எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடு...உனக்கு நான் நூற்றியெட்டு தேங்காய் உடைக்கிறேன்' என்று அவளின் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டாள்..

காலை உணவுக்காக அனைவரும் டின்னிங் ஹாலில் அமர்ந்திருக்க...எப்போதும் போல் எதிரெதிரே அமர்ந்து ஆளுக்கு ஒரு உணவை,சாப்பிட்டு கொண்டிருந்தனர் விக்ரமும் ஆதியும். அப்போது வீட்டின் தொலைபேசி ஒலிக்க...அதை ஏற்று காதில் வைத்த ராதாவின் முகம் மகிழ்ச்சியில் விரிந்தது. "அப்படியா ரொம்ப சந்தோசம்" என இன்னும் சில நிமிடம் பேசியவர் ஃபோனை அணைத்தார்.

"என்ன ராதுமா... ரொம்ப சந்தோஷமா இருக்க" என்ற கணவரின் கேள்விக்கு..."இருக்காதா பின்ன எங்க அண்ணன் தான் ஃபோன் பண்ணார், அம்மா,அண்ணா,அவங்க பசங்க எல்லாரும் வராங்களாம்" என புன்னகையுடன் கூற.

"கல்யாணம் ஆகி எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புருஷன் தங்க தட்டில் வைத்து தாங்கினாலும் இந்த பொண்ணுங்களுக்கு பிறந்த வீட்டு சொந்தத்தை பார்த்துவிட்டாள் நாங்க எல்லாம் கண்ணுக்கே தெரியமட்டோம் போல' என வருத்தம் போல் சொன்ன கண்ணன்...அப்படிதானே ராது" என மனைவியை காதலாக பார்க்க,

"ராதாவோ ரொம்ப பேசாதீங்க,நான் மட்டுமில்லை இந்த உலகத்துல உள்ள எல்லா பொண்ணுக்கும் பொறந்த வீடும்,சொந்தமும் எப்பவும் ஸ்பெஷல் தான்" என்றவர் மகிழ்ச்சியுடன் பரிமாற தொடங்கினார்.

ராதா தன் அண்ணன் வருவதாக சொன்னவுடன் ஆதி நந்துவை தான் முதலில் பார்த்தான். அவன் மட்டுமில்லை எப்போதும் நிமிர்ந்து கூட பார்க்காமல் சாப்பிடும் விக்ரம் கூட நந்துவை தான் பார்த்துக்கொண்டிருந்தான் ..அவர் சொன்னவுடன் ஒருநிமிடம் சாப்பிட சென்ற கை பாதியிலேயே நின்றது.பின்னர் ஒரு வாய் உணவு கூட உண்ணாமல் சாப்பாட்டை கிளறிக்கொண்டே இருந்தாளே தவிர உண்ண மட்டும் செய்யவில்லை.

"நந்து சாப்பிடு, ஹாஸ்பிடல் போகணும், டைம் ஆகுது" என ஆதி சொல்ல.

"என்னமா நந்து உனக்கு பிடிச்ச வெண்பொங்கல் தானே... அப்பறம் எதுக்கு சாப்பிடாம இருக்க,தட்டில் வைத்தது அப்படியே இருக்கு உடம்புக்கு ஏதாவது பண்ணுதா..?" என்று ராதா கவலைக்கொள்ள,இவளோ தன்னை முயன்று நிலைபடுத்தியவள் "அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை சாப்பிட முடியலை" என்றவள்,தட்டிலேயே கை கழுவிவிட்டு எழுந்து சென்றாள்.

போகும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த விக்ரம் தானும் கைகழுவி விட்டு எழுந்து ஆபீஸ் கிளம்பினான். அவன் சென்ற திசையை பார்த்த ஆதி இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை என முனகியபடி எழுந்து நந்துவை காண சென்றான்.

காரில் பயணித்துக்கொண்டிருந்த விக்ரமின் எண்ணம் முழுவதும் வீட்டில் தாய் சொன்ன அவனின் மாமாவின் வருகையை குறித்தே இருந்தது. இப்போ எதுக்கு இந்தியா வரார்,ஆல்ரெடி வந்து பிரச்சனையை கிளப்பியது பத்தாதென்று இப்போ என்ன செய்ய காத்திருக்கிறார் என நினைத்தவன்..அன்று நடந்த மாதிரி திரும்பவும் நடக்க விடமாட்டேன் என எண்ணியபடியே... "ஓய் மாமா... நீ எந்த பிளானோட வந்தாலும் இந்த தடவை நீங்க நினைக்கிறது நடக்கவே நடக்காது.பார்க்கலாம்... நீங்களா நானா"..? என்று தனக்குள் சொல்லியபடி தனது ஆபீஸ் வந்து சேர்ந்தான்.

சந்தியா தனது அறையில் பத்ரகாளியாக கோபத்தின் உச்சியில் இருந்தாள். இப்போது மட்டும் மதன் அவள் கையில் சிக்கினால் அவன் சட்னி தான்.பெயர் வச்சிருக்காங்க பார் "மதன்... வெறும் மதன் என்று வைத்ததிற்க்கு பதில் ' 'மன்மதன் ' என்று வைத்திருக்கலாம். பொறுக்கி பொறுக்கி என்கிட்ட பேசும் போது மட்டும் முகத்தை ஏழுருக்கு தூக்கி வைத்திருப்பான்,ஆனா இந்த வர்ஷாகிட்ட என்ன இருக்குன்னு அவகிட்ட மட்டும் பல்லை இளிச்சிக்கிட்டு பேசுறான். மகனே நீ இங்க தானே வரணும், வாடி... உன்ன என்ன பண்ணுறேன் பார்" என மனதில் அவனை திட்டித் தீர்த்தவள் அவன் வருகைக்காக காத்திருந்தாள்.


அவனோ இன்னும் தீவிரமாக,நிமிடத்திற்கு ஒருமுறை தனது முப்பதியிரண்டு பல்லையும் காட்டி காட்டி சிரிக்க...அதனை தனது ரூமிலிருந்து கொண்டு பார்த்திருந்த சந்தியாவிற்கு பொறுமை காற்றில் பறந்துக்கொண்டிருந்தது.

என்கிட்ட இப்படி ஒரு தடவையாவது சிரித்திருக்கிறாயா..? என அந்த கோபத்திலும் மனம் வலித்தது அவனின் ஒதுக்கத்தாள். "என்னை மட்டும் ஏண்டா உனக்கு பிடிக்கலை..? இல்லயில்ல பிடிச்சிருக்கு, ஆனா அதை வெளிய காட்ட மாட்டேன் என்கிறாய்" என ஒரு மனம் அவனுக்கு எதிராகவும் மறுமணம் அவனுக்கு ஆதரவாக இருந்து அவளுக்கே சதி செய்தது.

அவளின் பொறுமையை நன்றாக சோதித்துவிட்டு,அறைக்குள் நுழைந்தவனின் சட்டையை பிடித்து இழுக்க….அவனோ "ஏய் மரியாதையா சட்டையிலிருந்து கையேடு" என கோபம் கொள்ள,அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவனை சுவரோடு சாய்த்தவள்,அவனுக்கு மிக அருகில் சென்று நின்றாள்.அவன் கொஞ்சம் அசைந்தாலும் அவள் மேல் மோதிவிடுவது போல் இரு கைகளால் அவனை சுவரோடு சிறைப்பிடித்தவள்,இருவரின் மூச்சுக்காற்று மோதிக்கொள்ளும் படி நிற்க,

அவனுக்கோ எங்கே இத்தனை நாள் தான் கடைப்பிடித்த கொள்கைகள் தகர்ந்துவிடுமோ என பயம் வந்தது.

அவனையே பார்த்துக்கொண்டிருந்த சந்தியாவிற்கு அவன் முகத்தில் ஒரு நொடி வந்துப்போன தடுமாற்றத்தை கண்டுக்கொண்டவளுக்கு ... 'இடியட் என்கிட்டே என்னை பிடிக்காத மாதிரி நடிக்கிறியா..? இனி உன்னை என்ன பாடுப்படுத்துறேன் பார்..நான் பண்ற டார்ச்சரில் நீயே வந்து உன் காதலை சொல்ல வைக்கிறேன்' என மனதில் நினைத்தவள்,

"டேய் அந்த வர்ஷா பைத்தியத்துகிட்ட உனக்கென்ன பேச்சு,இங்க ஒருத்தி நீ ஒரு வார்த்தை பேசமாட்டியானு ஏங்கிட்டு இருக்கேன்,நீ அங்க கடலை வறுத்துகிட்டு இருக்கியா…? இன்னைக்கு உன்னை" என்றவள்.. அவன் முகம் நோக்கி முகத்தை உயர்த்த...அவன் விழிகளோ விரிந்துக்கொண்டது.

இரு இதழ்களும் உரசிவிடும் நெருக்கத்தில் இருக்க ...அவனோ "சந்தியா பிளீஸ் விடு" என்க,அவளோ முடியாது என்பது போல் தலையாட்டியவள்,இன்னும் நெருங்க,அவனோ அப்படியே மூர்ச்சையாகி நின்றான். உதடுகள் மட்டும் அவள் பெயரையே விடாமல் உச்சரித்த்து. "சந்தியா பிளீஸ் டி எதும் பண்ணாத" என்றவனின் குரல் இறங்கி, கண்கள் பாதி மயக்கத்திலிருக்க...அவனை நெருங்கியவள், எதுவும் செய்யாமல் அவன் முகத்தையே பார்த்துகொண்டு இருந்தாள்.

இவ்ளோ ஆசையை மனதில் வைத்துக்கொண்டு எப்படி நடித்திருக்கான் "கள்ளன்" என செல்லமாக அழைத்தவள் அவனை விட்டு தள்ளி நின்றாள்.

சற்று நேரம் அப்படியே விழி மூடி நின்றவன்,மெல்ல கண் திறக்க...எதிரில் உதட்டில் சிரிப்புடன் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்த சந்தியாவை பார்த்து முதலில் தடுமாறி நின்றவனின் மனம் இப்போது கோபத்தில் உலையாக கொதித்தது.

"உன் மனசுல என்னடி நினைச்சிட்டு இருக்க...கொஞ்சம் இடம் கொடுத்தா ரொம்ப பண்ற,உனக்கு இதுதான் லாஸ்ட் வார்னிங், திரும்பவும் என்கிட்ட இந்த மாதிரி நடந்துக்கொண்டாள் அப்பறம் நடக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை. இனி தயவு செய்து என்கிட்ட பேசவோ,என் முகத்தில் முழிக்கவோ செய்யாதே" என கத்தியவன் வெளியேற முயல...

'மதன் நான் சொல்றதை கொஞ்சம் கேளு" என்க

திரும்பி அவளை முறைத்தவன் "இனிமே என்னை மதன்னு பெயரை சொல்லி கூப்பிடாத,அந்த உரிமை உனக்கு இல்லை" என்றவன் வெளியேறி விட்டான்.

"இப்போ என்ன நடந்தது என்று இவளோ கோபமாய் போறான்,ஒருவேளை நாம எதும் பண்ணலைன்னு ஃபீலிங்ல கத்துறானோ" என எண்ணியவள்,எப்போதும் போடும் சண்டைப் போல் இதையும் நினைத்துக்கொண்டு வேலையை தொடங்கினான்.

மாலை ஆனதும் திவ்யாவிடம் வந்த அவள் அன்னை கவிதா "இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க அத்தை வந்திடுவாங்க அதனால இந்த புடவையை கட்டிட்டு இந்த பூவையும் தலையில் வைத்துக்கொள் என கொடுக்க.

"எதுக்கு புடவையெல்லம்,நான் சுடிதாரில் இருக்கேன்" என்க,

"ஏண்டி வருவது உங்க அத்தை மட்டுமில்லை இனிமே அவங்க தான் உனக்கு மாமியார்" என்றுவிட்டு எழுந்து செல்ல.. அவளோ தாயின் கையை பிடித்துகொண்டு "அம்மா இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம்மா. பிளீஸ் அப்பாகிட்ட சொல்லுங்களேன்..இன்னும் ஒரு வருஷம் கழித்து கல்யாணம் பண்ணுகிறேன்..அதுவும் மகேஷை எனக்கு பிடிக்கலை" என்றாள்.

"சத்தமாக சொல்லாதடி,இது மட்டும் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். அவரோட அக்கா பையனுக்கு தான் என் பொண்ணுன்னு நீ பிறக்கும் போதே முடிவு பண்ணிட்டார் ,அதை யாராலும் மாற்ற முடியாது" என்றவர் சீக்கிரம் கிளம்பு இல்லனா அதுக்கும் சேர்த்து திட்டு வாங்காதே என்றுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தார்.

தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற இயலாமையோடு,எழுந்து தயாராகினாள் . அவள் ரெடியாகி முடிக்கவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது. சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த கவிதா மகளை அழைத்துக்கொண்டு ஹாலிற்கு செல்ல...அங்கே திவ்யாவின் அத்தை பரிமளா அவரின் கணவர் நாகேந்திரன் மற்றும் அவர்களின் ஒரே மகன் மகேஷ் அமர்ந்திருந்தான்.

அவள் வந்தது முதல் அவளையே முழுங்கிவிடுபவன் போல் பார்த்தவனின் பார்வை அவளின் உடலின் உச்சி முதல் பாதம் வரை மொய்க்க… ஒரு பெண்ணாக ஒரு அந்நியனின் பார்வையின் பொருளை அவளால் உணரமுடிந்தது. அவன் எதிரில் நிற்பதை அறவே வெறுத்தாள்.

"அப்படியே மஹாலட்சுமி போல இருக்க என் கண்ணே பட்டுவிடும் போல" என்றவர் அவளின் கைபற்றி அருகில் அமர்த்திக் கொண்டார்.



உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் டியர்ஸ் https://pommutamilnovels.com/index.php?threads/விக்ரமாதித்யன்-கருத்துத்-திரி.315/post-8839



 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 8

தன் அத்தையின் அருகே அமர்வதற்கு அவளுக்கு ஏதுமில்லை தான்,ஆனால் சோஃபாவின் ஒரு முலையில் அத்தையும் மறுமுலையில் அந்த விளங்காதவன் மகேஷ் அமர்ந்திருக்க..இருவருக்கும் நடுவில் அமர வேண்டிய கட்டாயம். வேண்டாம் அத்தை நான் இப்படியே நிற்கிறேன்" என்றாள்.


"பரவாயில்லைம்மா மரியாதை மனதில் இருந்தால் போதும் உட்கார்" என அவளின் கைப்பற்றி அருகில் அமர வைத்தார் பரிமளா.அவளுக்கோ முள்ளின் மேல் இருப்பது போல் இருக்க தன் அத்தையை நெருங்கி அமர்ந்துகொண்டார்.

அவளையே வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்த மகேஷ்..."எப்படி இருக்க தியா" என்க,

அவளுக்கோ ஆதியின் முகம் எதிரில் தோன்றியது. அவன் தியா என சொல்லும் போது வெளிப்படும் காதலும் மென்மையும்,இப்போது வேறொருவன் அதே பெயரை சொல்லும் போது மனம் வலித்தது. ஒருவேளை நானும் அவனை காதலிக்கிறேனோ …? மகேஷ் தன்னை அப்படி அழைத்ததை கூட என்னால் ஏற்க முடியவில்லையே,ஆனால் ஆதி அழைப்பதை இதுவரை தவிர்த்ததில்லையே அப்படியென்றால் அதை நான் அனுமதித்தேன் என்று தானே அர்த்தம்.

"அய்யோ ! கடவுளே இது என்ன என் மனம் இப்படியெல்லாம் நினைக்குது..." என தன்னுள் முழ்கியிருந்தவளை கலைத்தது மகேஷின் குரல்...அவளோ தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு நல்லா இருக்கேன் என்றாள்.

"என்னமா நல்லா இருக்கேன்னு மொட்டையா சொல்கிறாய்..? அத்தான் என்று சொல்லு, அது தான் முறை" என்றார் பரிமளா.. "ம்ம்" என்று மட்டும் தலையாட்டியவள் அத்தான் என்று மட்டும் சொல்லவே இல்லை.அவனை அப்படி கூப்பிட அவளுக்கு சுத்தமாக விருப்பமில்லை.

"அப்பறம் ரவி நம்ம ஜோசியரை பார்த்தேன், அவர்தான் இன்னும் எதுக்கு கல்யாணத்தை தள்ளி போடுறீங்க...தம்பி பொண்ணு தானே சீக்கிரம் பேசி முடித்துவிடலாம் என்று சொன்னார். அதான் உங்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு அப்படியே திவ்யாவின் ஜாதகத்தையும் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்" என்றார் பரிமளா.

அவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்க அவரின் கணவர் மற்றும் மகன் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவரின் வார்த்தையே அங்கு வேதவாக்கு,யாரையும் இதுவரை தன்னை தாண்டி முடிவெடுக்க விடமாட்டார்.அவரின் தம்பியும் அக்கா சொல்லை ஒரு போதும் தட்டமாட்டார்.

"எல்லாம் உங்க இஷ்டம் அக்கா இதுல நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை,உன்னை தவிர யாரு எங்களுக்கு நல்லதை செய்வா" என்றவர், தன் மகளின் ஜாதகத்தை எடுத்துவந்து கொடுத்தார்.

"உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் தானே ரவி..? எனக்காக ஒத்துக்கொள்ள வில்லையே" என ஒரு பேச்சுக்காக கேட்க,

"என்னக்கா என்னை பார்த்து இப்படி சொல்லிட்ட..? உன் விருப்பம் மீறி நான் என்ன பண்ண போறேன். எனக்கு முழு சம்மதம்….இவ பொறந்தப்பவே நான் வாக்கு கொடுத்துட்டேன் அதை யாராலும் மாற்ற முடியாது" என்றார்...அதை ஒருவன் தலைகீழகா மாற்ற போவதை அறியாமல்.

சற்று நேரம் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க...அப்போது கல்லூரி முடிந்து உள்ளே வந்தாள் பிரியா. அதுவரை திவ்யாவை சைட் அடித்துக் கொண்டிருந்த மகேஷ்,பிரியாவை பார்க்க…
"அட இந்த வாண்டு என்ன இப்படி வளந்துட்டா..? பரவாயில்லை இவளும் அழகா தான் இருக்கா" என்று நினைத்தவன்... அக்கா தங்கை இருவரையும் சைட் அடிக்க தொடங்கினான். பிரியாவோ ஒரே நிமிடத்தில் அவன் பார்வையின் பொருளை உணர்ந்துக்கொண்டவள்,

"சரி நீங்க பேசிட்டு இருங்க,எனக்கு நிறைய ஆசைன்மெண்ட் இருக்கு,நான் போய் எழுதுறேன்" என்றவள் தன் அறைக்கு சென்றாள்.

"பொறுக்கி பொறுக்கி" என திட்டியவள் "அக்கா கொஞ்சம் உள்ள வாயேன் ஒரு டவுட்" என குரல் கொடுக்க….அவள் தாயும் நீ உள்ள போய் இரு என்று சொல்ல….உடனடியாக எழுந்தவள்,விட்டாள் போதும் என்று அறைக்கு சென்று கதவடைத்தாள்.

உள்ளே நுழைந்தவுடன் தன் தங்கையை கட்டியணைத்தவள் "ரொம்ப தேங்க்ஸ்டி. நானே எப்படி அங்கேயிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்,அதுக்குள்ள நீயே கூப்பிட்டுவிட்டாய் என்றாள்.

பிரியாவோ "லூசா அக்கா நீ...அவன் பார்வையே சரியில்ல,அப்பாவும் அம்மாவும் அத்தைகிட்ட பேசிட்டே இருங்காங்களே தவிர இவன் பண்றதை பார்க்க மாட்டேன் என்கிறார்கள். ஏதாவது காரணத்தை சொல்லி உள்ளே வரவேண்டியது தானே...எப்போதான் இப்படி எல்லாவற்றிற்கும் பயப்படுவதையும் தயங்குவதையும் நிறுத்த போகிறாயோ." என திட்டியவள்….இப்போது இடுப்பில் கைவைத்து

" உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா..?" என கேட்க,அவளோ " ச்சிசீ... அவனை பார்க்கவே எனக்கு பிடிக்கலை" என்று முகத்தை சுழித்தாள்.


அப்போ "நீ ஏன் இன்னும் மாமாவுக்கு ஓகே சொல்லலை" என்க,

அவளை புரியாமல் பார்த்த திவ்யா "என்னடி பைத்தியம் மாதிரி பேசுற இவனை தான் எனக்கு பிடிக்கலை அப்பறம் எப்படி" என்றவளை பார்த்து தலையிலேயே அடித்துக்கொண்டவள்,

"இவனை போய் நான் எதுக்கு மாமா என்று சொல்ல போகிறேன்.நான் சொன்னது ஆதி மாமாவை" என்க,

கேட்டுக்கொண்டிருந்த திவ்யாவுக்கு தான் பெரும் அதிர்ச்சி, நம்மை தவிர யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த விஷயம் எப்படி இவளுக்கு தெரிந்தது என்பது போல் பார்க்க…. பிரியாவோ "ரொம்ப யோசிக்காத மூளை வெளியே வந்து விழுந்திட போகுது' என்றவள்,எனக்கெல்லாம் நாலு வருஷத்திற்கு முன்பே தெரியும்,அதனால் ஷாக் ஆகாமல் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு" என்றாள்.

"எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை அவ்வளவு தான்...வேற யாரையும் நான் காதலிக்கவில்லை" என்றாள்,அவளுக்கே சரியாக தெரியாத விஷயத்தை எப்படி தங்கையிடம் சொல்வது என்ற தயக்கம்.

பிரியாவோ அவளை முடியும் மட்டும் முறைத்தவள் "அது எப்படி இவனை பார்க்கவே பிடிக்கவில்லைன்னு சொல்ற,அப்போ இதே ஃபீலிங் தான் ஆதி மாமாவை பார்க்கும் போதும் உனக்கு வருதா" என்க.

அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. எப்படி சொல்லமுடியும் அதுவும் ஆதியோடு இவனை ஒப்பிட்டு பார்க்கவே அவளால் முடியவில்லை.

"பிளீஸ்டி ...எனக்கு தலை வலிக்குது கொஞ்ச நேரம் தனியாவிடு" என்றவள்,மெத்தையில் சென்று விழுந்தாள்.அவளுக்கு கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது.


"நந்து ஏன் அமைதியா வர….எப்பவும் ஏதாவது சேட்டை பண்ணி என்கிட்ட திட்டு வாங்கிட்டு இருப்ப" என ஆதி கேட்க,

அவளோ அப்போதும் அமைதியையே கடைபிடித்தாள். "நந்து இப்போ என்ன நடந்துவிட்டது என்று இப்படி இருக்க,அவரால் உன்னை எதுவும் பண்ண முடியாது அதுக்கு நான் விடவும் மாட்டேன்" என்றான்.

அவனை அதிர்ந்து பார்த்தவளை கண்டு "எனக்கெல்லாம் தெரியும் நந்து. நான் உன்கிட்ட சாரி கேட்டுக்கணும்னு நினைத்தேன்...அன்னைக்கு நான் இருந்திருந்தால் இப்படி ஆக விட்டிருக்க மாட்டேன்.சாரி ஃபார் தட் நந்து" என்க...

"அய்யோ எதுக்கு ஆதி சாரியெல்லம்" என்றவளை பார்த்து.." நீ ஏன் என்கிட்ட எதுவும் சொல்லலை நந்து" என கேட்டான்.

அவளோ எப்படி ஆதி சொல்றது..? அவங்க உன்னோட தாய்மாமா அப்படியிருக்கும் போது அவங்களை பத்தி தப்பாக எதையும் எனக்கு சொல்ல விருப்பமில்லை" என்றாள்.பின்னர் அவளை ஒரு நிமிடம் அழுத்தமாக பார்த்தவன், எதுவும் சொல்லாமல் பாதையில் கவனத்தைச் செலுத்தினான்

பின்னர் இருவரும் அமைதியாக மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.

விக்ரம் அலுவலகத்தில்...தன் பி.ஏ சுரேஷிடம் "நான் கேட்ட புராஜக்ட் பிளான் டிசைன் ரெடியா..?" என்க,

என்ன பதில் சொல்வது என தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தான் சுரேஷ்.


"வாட்..? ரெடி ஆர் நாட்" என தன் முழு கோபத்தில் கத்த…."சார் அது வந்து...அது"...என இழுக்க,

"அதான் வந்துட்டிங்களே சொல்லுங்க" என பல்லை கடித்துக்கொண்டு கேட்க,அவனோ "பாதி டிசைன் முடிந்துவிட்டது சார். இன்னும் கொஞ்சம் பலன்ஸ் இருக்கு ஆனா...அந்த டீம்ல இன்னைக்கு ரெண்டு பேர் வரவில்லை சார், ஒரு லீவ் நீங்க அப்ரூவல் பண்ணதுதான்.ஆனா எந்த ஒரு தகவலும் சொல்லாமல் மிஸ்.திவ்யதர்ஷினி லீவ் எடுத்துக் கொண்டார்கள்" என்க,

அவனுக்கு கோபம் அதிகரித்தது."வாட் இஸ் தி ஹெல்... நான் ஆல்ரெடி சொல்லிருக்கேன் இந்த புராஜக்ட் எந்த டீலேவும் இருக்க கூடாது என்று. அதையும் மீறி இப்படி நடந்துகொண்டால் வேலையை விட்டு நிறுத்தவேண்டியது தான் என்றவன், நாளைக்கு அவங்க என்னை பார்த்துட்டு தான் டியூட்டி ஜாயின் பண்ணனும்" என்றவன் மற்ற வேலையை தொடங்கினான்.

ஆல்ரெடி தன் மாமாவின் வருகையில் கோபம்கொண்டு இருந்தவன்,இங்கு ஆபீஸில் ஒர்க்கும் தாமதம் ஆகுவதில் இன்னும் எரிச்சலடைந்தான்.

அடுத்தநாள் ஆபீஸின் உள்ளே நுழையவே திவ்யாவிற்கு உடம்பெல்லாம் நடுங்கியது….கடவுளே எப்படியாவது விக்ரம் சாரிடம் இருந்து என்னை காப்பாற்று என வேண்டியப்படி தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

தன் எதிரே நிழலாட நிமிர்ந்து பார்த்தவள், எதிரே வந்து நின்றான் சுரேஷ். "நேத்து உங்களால என்னோட வேலையும் சேர்ந்து போயிருக்கும். நீங்க என்ன சின்ன குழந்தையா லீவ் போட்ட சொல்லனும்னு கூட தெரியாதா"..? என எரிந்துவிழுந்தவன் "விக்ரம் சார் வந்தவுடன் அவரை போய் பார்த்துட்டு வேலையை ஆரம்பீங்க,எப்படியும் இதுதான் உங்களுடைய லாஸ்ட் ஒர்கிங் டேயாக இருக்கும்" என்றவன்,அவளை திரும்பி ஒரு நக்கல் பார்வையை செலுத்திவிட்டு சென்றான்.

அவளோ என்ன செய்வது என புரியாமல் இருக்க, அவள் தோழி சவிதா "ஏண்டி என்னிடமாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல" என்க,

அவளோ "நானே ஏகப்பட்ட டென்ஷனில் இருந்தேன் அதான்,எனக்கு என்ன காரணம் சொல்வது என தெரியவில்லை" என தோழியை பரிதாபமாக பார்க்க.

"சரிவிடு பார்த்துக்கலாம்
இவன் சொல்வதை வைத்துக்கொண்டு நீ மனதை குழப்பிக் கொள்ளாதே ... உன்மேல் உள்ள கோபத்துல ஒண்ணுக்கு ரெண்டா சொல்லுவான்,அவனோட காதலை ரிஜெக்ட் பண்ணதுக்கு பழிவாங்குகிறான் போல, இடியட்" என முனகியடியே வேலையை தொடர்ந்தாள்.திவ்யா டென்ஷனோடு ஆஃபீஸ் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

விக்ரம் எப்போதும் யாருக்காகவும் தனது ஆஃபீஸ் செல்லும் நேரத்தை மாற்றிக்கொள்ள மாட்டான். தனது வேலையில் எப்போதும் தனிப்பட்ட விஷயங்களையும் உள்ளே கொண்டு வரமாட்டான். அப்படிப்பட்டவன் இன்று தனது அனைத்து வேலையையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, ஹால் சோஃபாவில் அமர்ந்துகொண்டு கையில் அன்றைய செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தான்.

ஆதிக்கும் நந்துவுக்கும் இன்று ஆஃப் என்பதால்,ஆதிதான் தன் மாமாவை அழைத்து வர ஏர்போர்ட் வரை சென்றிருந்தான். நந்துவோ இன்னைக்கு ஏன் தான் ஆஃப் விட்டார்களோ என சலித்துக்கொண்டவள்...
அவர்கள் வரும் போது இங்கே இருக்க கூடாது என நினைத்தவள், தன் அறைக்கு செல்ல படிகளில் கால்வைக்க...அப்போது "எனக்கு ஒரு காஃபி வேண்டும்" என்ற விக்ரமின் குரலில் அப்படியே நின்றாள்.

நந்து அவனை திரும்பி பார்க்க...அவனோ நியூஸ் பேப்பரில் பார்வையை செலுத்தியபடி அமர்ந்திருக்க...'நமகிட்ட சொல்லலை போல' என நினைத்தவள்,திரும்பவும் படியில் ஏற முயல மறுபடியும் "எனக்கு காஃபி வேண்ணும்னு சொன்னேன்" என்றான் அழுத்தமாக.

அவளுக்கோ பெரிய ஆச்சரியமாக இருந்தது, நம்மகிட்ட தான் கேட்கிறார். அம்மா கிட்டயோ அத்தை கிட்டையோ கேட்பதாக இருந்தால் சத்தமாக கூப்பிட்டு சொல்லியிருப்பார் என தனக்கு தானே கேள்வியையும் கேட்டுக்கொண்டு பதிலையும் சொல்லிகொண்டவள் சமையலறை நோக்கி சென்றாள்.

சமையலறையில் வருபவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைப்பதில் பிஸியாக இருந்தனர் ராதாவும் கீர்த்தனாவும். "அம்மா ஒரு காஃபி வேண்டும்" என்றபடி அங்குள்ள திண்டில் அமர..."ஏண்டி நாங்க என்ன சும்மாவா உட்கார்ந்து இருக்கோம்..? ஒரு காஃபி தானே அதை நீயே போட்டுக்கொண்டாள் என்ன..?" என்ற தாயை பார்த்து,

"நான் எனக்கு ஒன்னும் கேட்கலை விக்ரம் அத்தான் தான் கேட்டாங்க" என்க...

அவரோ "யாரு கேட்டா என்ன..? நீயே போட்டுக்கொடு...இப்படி ஒரு காஃபி கூட போட தெரியலைன்னா போற வீட்ல என்ன செய்வாய்" என புலம்ப, அவளே காஃபியை தயாரிக்கத் தொடங்கினார்.

"அய்யோ ! முதல் சோதனையே விக்ரம் அத்தானுக்கா என மனம் பதறியவள், பிளீஸ் தெய்வமே காஃபியை என் முஞ்சில் ஊத்த வைத்துவிடாதே" என வேண்டியபடி...ஒரு வழியாக போட்டு முடித்தாள். காஃபியை கையில் ஏந்திக்கொண்டு சமையலறையிலிருந்து ஹாலிற்க்கு வருவதற்குள் அது பச்சைத்தண்ணியாக மாறிவிடும் போல..அவ்வளவு பொறுமையாக அன்னநடை போட்டுக்கொண்டு சென்றாள்.

அவன் அருகே சென்று தொண்டையை செரும..அவனோ எந்த ஒரு ரியாக்க்ஷனையும் முகத்தில் காட்டாமல் நியூஸ் பேப்பர் பார்த்துக்கொண்டிருக்க..பின்னர் அவளுக்கே கேட்க்காதா குரலில் "அத்தான்" என்க...அப்போதும் அதே ரியாக்க்ஷன், திரும்பவும் கொஞ்சம் குரலை உயர்த்தி "விக்ரம் அத்தான்" என மென்மையாக அழைக்க, இந்த வார்த்தைக்காக தான் காத்திருந்தவன் போல உடனடியாக நிமிர்ந்து பார்த்தான்.

தன் முன் காஃபியோடு நின்றவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன், கப்பை பெற்றுக்கொண்டு பருக தொடங்கினான். அவனுக்கு தெரியும் நந்தினி இதுவரை சமையலறை பக்கம் கூட எட்டி பார்த்ததில்லை என்று. இதுவே முதல் முறை என்பதும். "ஆஹா ஓஹோ" என பாராட்டும் படி இல்லையென்றாலும் நன்றாகவே இருந்தது.

இதுவரை எத்தனையோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் காஃபி அருந்தியிருக்கிறான்,அப்போது எல்லாம் ரசித்து குடித்ததாக அவனுக்கு நினைவில்லை ஆனால் இன்று அவளின் முதல் முயற்சியில் போட்ட காஃபியை ரசித்துக் குடித்தான்.

'அவளோ முதன்முறை போட்டது என்பதால்,எப்படி இருக்கு என தெரிந்துகொள்ள வேண்டும்' என்ற ஆர்வத்தில் அவன் முகத்திலேயே பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாள்.அவன் முகம் சுழிக்கவில்லை என்பதிலேயே கொஞ்சம் தைரியம் பெற்றவள்,அவன் முழுவதையும் குடித்து முடிக்கவே அவளுக்கு சந்தோஷம் தாங்கவல்லை.

அவனிடம் தான் பேசி பலவருடங்கள் ஆகிவிட்டது என்பதையெல்லாம் மறந்து " விக்ரம் அத்தான் நான் போட்ட காஃபி உங்களுக்கு பிடிச்சிருக்கா..? நல்லாயிருந்ததா..? என கேட்டபடி அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.




உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் டியர்ஸ்.

 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 9

"விக்ரம் அத்தான் சொல்லுங்க..?" என திரும்பவும் நந்து கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன் "பதில் தெரிஞ்சு என்ன செய்யப் போற" என்றான்.

அவளோ "என்ன அத்தான் இப்படி கேட்கிறீங்க,நான் ஃபர்ஸ்ட் டைம் காஃபி போட்டிருக்கேன் அது எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா..?* என ஆதியிடம் பேசுவது போல் இயல்பாக பேச...அதுவரை பல எண்ணங்களிலும் கோபத்திலும் முழிகியிருந்தவனின் மனம் மென்மையை உணர்ந்தது.

அவள் இதுவரை அவனிடம் சாதாரணமாக கூட பேசமாட்டாள்,அப்படியே பேசினாலும் அதில் பயமும் பதட்டமும் தான் அதிகமாக இருக்கும். இன்று தான் பல வருடங்கள் கழித்து அதே உரிமையுடன் பேசுகிறாள். அவளின் இயல்பான பேச்சில் கவரப்பட்டவனாய்,அதனை நீடிக்கும் பொருட்டு அவளை சீண்டிப்பார்க்க ஆவல் கொண்டான்.

"இப்போ காஃபி நல்லா இருக்குன்னு சொன்னா உன் டாக்டர் வேலையை விட்டுட்டு காஃபி ஷாப் வைக்க போறயா..?" என புருவங்களை ஏற்றி இறக்கியவன்,பதில் சொல் என்பது போல் பார்க்க...அவளோ "இல்லை சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன்" என சொன்னவள் அப்போதுதான் உணர்ந்தாள், தான் பேசிக்கொண்டிருப்பது விக்ரம் என்று..?விக்ரம் அத்தானிடமா இவ்வளவு நேரம் இப்படி எல்லாம் பேசினேன்,என நினைத்தவள்,அவசரப்பட்டு வாயை விட்டுட்டியே..? என பழையபடி பயத்துடன்,நத்தை தன் கூட்டுக்குள் ஒளிந்துக்கொள்வதை போல ..அதுவரை இருந்த உற்சாகம் குறைந்து மௌனமாய் அடங்கிப்போனாள் .

தன்னை பார்த்து மறுபடியும் பயந்து நடுங்குபவளை பார்க்கும் போது இறங்கியிருந்த அவனின் கோபம் மேலும் அதிகரிக்க... "காஃபி போடுவதை ஒன்றும் உலக சாதனையில் சேர்க்கப்போவது இல்லை…. அதனால் வெட்டியா வேடிக்கை பார்க்காம கப்பை எடுத்துட்டு கிளம்பு என்க,

அவளோ "அப்பறம் பிடிக்காம எப்படி மொத்தத்தை குடித்தீர்கள்" என ஆர்வக்கோளாறில் முனக,

அவனோ "எதுவாக இருந்தாலும் சத்தமா சொல்லு" என்றான் அழுத்தமாக.

"நல்லா இல்லனா எதுக்காக மொத்தத்தையும் குடித்தீங்க" என அழுவதை போல் நின்று கேட்க.. அவனோ அசராமல் "நீ கொண்டு வந்தது சுடத்தண்ணியா காஃபியானு ஒரு டவுட் அதான் குடிச்சு பார்த்தேன்,ஆனா லாஸ்ட் ஸிப் வரை என்னால கண்டுபிடிக்க முடியலை என சிரிக்காமல் சொன்னவன்,மேலும் சுடு தண்ணீரில் காபி கொஞ்சம் கம்மியா தான் இருந்தது" என்றான் நக்கலான குரலில் முகத்தில் உணர்ச்சிகளை காட்டாமல்.

அவளுக்கோ ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது.இவங்க இப்படியெல்லாம் கூட கிண்டலா பேசுவாங்களா,ஆனா முகத்தை பார்த்தால் முறைத்த மாதிரி தானே இருந்தது,என எண்ணியபடியே கப்பை எடுத்துகொண்டு சமயலறைக்கு சென்றாள். தன் தலையிலேயே

தட்டிகொண்டவள் "அவங்களுக்கு தான் உன்னை பார்த்தாலே பிடிக்காது,அதில் நீ போட்ட காபியை மட்டும் பிடித்திருக்கிறது என்றா சொல்லிவிடுவார்"...என ஆள்காட்டி விரலை தன்னை நோக்கித் திரும்பியபடி தன்னைத்தானே திட்டிக் கொண்டு... நீயும் வெட்க்கமே இல்லாம அவங்க முகத்திலேயே முழிக்காதே என சொன்ன பிறகும் பேசுகிறாய்" என தன் மேலேயே கோபம் கொண்டு தனியாக பேசிக்கொண்டிருக்க..

உள்ளே நுழைந்த கீர்த்தனா "என்னடி பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்க" என்க...அவளோ கடைசியாக நமக்கு பைத்தியக்கார பட்டம் கிடைத்தது தான் மிச்சம் என நினைத்தவள்,அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லியபடி விக்ரமை கடந்து அறைக்கு செல்ல முயல..

என்னது திரும்பவும் முதலில் இருந்தா என்பது போல்
"அந்த டிவியை ஆன் பண்ணிட்டு போ" என்ற விக்ரம் குரல் கேட்க...முன்பு போல் அக்கம் பக்கம் திரும்பி பார்க்க நினைத்தவள்,தன் தலையிலேயே அடித்துக்கொண்டு உன்னை தான் சொல்றாங்க இங்க தான் வேற யாருமில்லையே இன்னைக்கு எதுக்கு புதுசு புதுசாக நடந்துக்குறாங்கன்னு தெரியலையே என தன்னையே நொந்து கொண்டு டிவியை ஆன் செய்து ரிமோட்டை அவன் அருகில் வைக்க...சரியாக அதே நேரம் வாசலில் கார் நிற்கும் சத்தமும் கேட்டது.

"அய்யோ வந்துட்டாங்க ,அவங்க வரும் போது இங்க இருக்க கூடாது என்று நினைத்தேன்" என்றபடி அறைக்கு செல்ல அடியெடுத்து வைக்கையில் அவளின் கரத்தை பற்றியது ஒரு வலிய கரம்.

விக்ரமின் அழுத்தமான பிடியினால் நந்துவால் அசைய கூட முடியவில்லை. "அய்யோ அத்தான் கையை விடுங்க..எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு" என அவன் கையிலிருந்த தன் கையை விடுவிக்க போராட,அவனின் பிடி இன்னும் இறுகியது.அவன் பிடியில் கைகள் வலிக்க தொடங்க,

"அத்தான் பிளீஸ் கை வலிக்குது" என்க அவனோ அப்போதும் கையின் பிடியை தளர்த்தவில்லை.

"அய்யோ கடவுளே... அத்தான் என்று கூப்பிட்டாலும் கோபம் வருமே என எண்ணிக்கொண்டு "விக்ரம் அத்தான்... கையை விடுங்க வலிக்குது" என கலங்கிய கண்களோடு சொல்ல,அப்போதும் பிடியை தளர்த்தினான் தான் ஆனால் பிடியை விலக்கவில்லை.

அவளோ ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க,இதுமாதிரி எப்போவும் நடந்துகொள்ள மாட்டாரே என நினைத்தவளுக்கு அப்போது தான் ஒன்று புரிந்தது. ஒருவேளை ஆதிக்கு தெரிந்த மாதிரி விக்ரம் அத்தானுக்கும் எல்லா விஷயமும் தெரியுமோ….? என எண்ணியவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க அதில் அவளால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை,அவனின் செய்கை அவள் மனதிற்கு இதம் தந்தது,அதை மட்டும் அவளால் மறுக்க முடியவில்லை.

காரில் இருந்து இறங்கிய அன்னையை அணைத்துக்கொண்டு,வாசலிலேயே தனது பாசத்தை கொட்டத்தொடங்கி விட்டார் ராதா.ராதாவின் அன்னை லட்சுமி தன் மகனுடன் அமெரிக்காவிலேயே தங்கிவிட்டவர்,எப்போதாவது குடும்பத்துடன் சென்னை வரும் போது மகளை பார்ப்பதோடு சரி. ராதா சிறுவயதில் இருக்கும்போதே தந்தை இறந்துவிட அதன்பின் அந்த ஸ்தானத்தில் இருந்து அவளைப் பார்த்துக்கொண்டது மொத்தமும் அவரின் அண்ணன் தான்,அதனால் ராகவன் மேல் பாசம் அதிகம்.ராகவரின் மனைவி சகுந்தலா மிகவும் சாது அமைதியான,ஆனால் அவரின் குணத்திற்கு மாறாக அவரின் ரெண்டு மகளும் குணத்தில் தந்தையை கொண்டு பிறந்திருத்தது.

அவருக்கு இரு பெண்கள்...இருவருக்கும் சின்ன வயதிலிருந்தே பாட்டியினாலும் தந்தையினாலும் போதிக்கப்பட்ட ஒரே விஷயம் விக்ரம் ஆதியை மணந்துக்கொண்டு இந்த வீட்டின் மருமகளாக வர வேண்டும் என்பதே... ராகவிற்க்கு சொத்தில் எந்த குறையுமில்லை ஆனால் தங்கையின் சொத்து, யாருமில்லாத நந்தினிக்கு போய் சேரக்கூடாது,இந்த வீட்டில் மொத்த உரிமையும் தன் மகள்களுக்கு தான் கிடைக்க வேண்டும் என்பதே அவரின் ஆசை.

ஆண் வாரிசு இல்லாததால் தன் தங்கையின் மகன்கள் தான் மருமகனான இருந்து தனது சொத்துக்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.


அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டே பொறுமையாக வர,ஆதியின் மாமா ராகவன் முன்னால் வீட்டுக்குள் நுழைய,அவர் கண்ணில் முதலில் பட்டது கோர்த்திருந்த விக்ரம் நந்தினியின் கரங்களே….அதுவரை சிரித்துக்கொண்டு இருந்த முகம் சட்டென்று இறுக,விக்ரமை வெறுமையான பார்வை பார்த்தவர்,அருகில் அவனுக்கு மிக நெருக்கத்தில் கைகள் கோர்த்து தலைகுனிந்து நின்றிருந்த நந்தினியை கோபமாக முறைக்க...'நான் அத்தனை தூரம் சொல்லியும் அவள் கேட்கவில்லை' என்ற எண்ணம் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது போல் அவள் மேலிருந்த கோபம் இப்போது கொலை வெறியாக மாறியது.

அதற்குள் அனைவரும் உள்ளே நுழைய,நந்தினி அவன் கையை விலக்க முயல,அவனோ திரும்பி ஒரு முறை முறைத்தவன்,கையை விலக்கினான்.

ராகவனின் கோபப்பார்வைக்கு அஞ்சி தலைகுனிந்தவாறே நின்றிருந்த நந்து,யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் இருக்க...அவள் அருகில் வந்த கீர்த்தனா "ஏண்டி வாயில் என்ன கொழுகட்டையா வைத்திருக்கிறாய்,வந்தவங்களை வாங்க என்று கூப்பிடு இதைக்கூட நான் தான் சொல்லித் தரவேண்டுமா"..? என திட்டியவர்,வந்தவர்களுக்கு சாப்பிட எடுத்துவர சமையலறை செல்ல,தன் தாயின் வார்த்தைக்கு மரியாதை தரும் பொருட்டு வாய்திறக்க முயன்றவளை,தன் மாமா காதிற்கு மட்டும் கேட்கும் குரலில் அவரை கோவபடுத்தும் எண்ணத்தில்

" நந்தினி என் ரூம்ல என்னோட லேப்டாப் பேக் இருக்கும் எடுத்துட்டு வா..?" என்க,அவளோ அவன் தன் பெயரை சொல்லி அழைத்ததில் சிலையென அதிர்ந்து நிற்க.."நந்தினி" என திரும்பவும் அழுத்தமாக அழைக்க அவளும் தன் சிந்தனையிலிருந்து வெளிவந்து அவன் அறையை நோக்கி சென்றாள்.

அவனின் உடும்பு பிடியில் கையின் மணிக்கட்டு கண்றி சிவந்து காணப்பட்டது,மெல்ல கையைதடவியவாறு மேலே செல்ல… இங்கு விக்ரம் அருகில் அமர்ந்த அவன் பாட்டி "என் கண்ணே பட்டுவிடும் போல' என நெட்டிமுறத்தவர்..எப்படியிருக்க விக்ரம்" என்க,

அவனும் அவர்களிடம் நலம் விசாரித்தவன்,நிமிர்ந்து மாடியை பார்க்க இன்னும் நந்தினி லேப்டாப் பேக்கை தேடிக்கொண்டே இருந்தவள்,வராமல் இருக்க... அதற்குள் அவனின் அடுத்தப் பக்கத்தில் வந்தமர்ந்தாள் வந்தனா ராகவனின் மூத்த மகள். ஹாய் விக்ரம் "ஹவ் ஆர் யூ" என்க...அவனோ அவளை நிமிர்ந்து ஒரு அந்நியப்பார்வையைப் பார்த்தவன் தன் செல்போனை நொண்டிக்கொண்டிருந்தான்.

அவளுக்கு அவனின் உதாசீனதில் ஆத்திரமடைந்தவள், நீயா என்கிட்ட வந்து பேசுவாய்,பேச வைக்கிறேன் என தனக்குள் சபதமிட்டவள்,இப்போது அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்தாள்.

அப்போது அவனின் பேக்கை ஏந்திக்கொண்டு வந்த நந்துவை நிமிர்ந்து பார்க்க...அவளோ யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் வந்தவள்,விக்ரம் அத்தான் இந்தாங்க என பேக்கை கொடுத்துவிட்டு நகர எத்தனிக்கையில் அவளை தடுத்த விக்ரமின் பாட்டி…"நீ என்ன பண்ணிட்டு இருக்க, இன்னுமா படிச்சிட்டு இருக்க..?" என கேட்க,

அவளோ "இல்ல பாட்டி இப்போ வேலைக்கு போய்ட்டு இருக்கேன், மேல படிக்க எக்ஸாம் இருக்கு அதுக்கு படிச்சிட்டு இருக்கேன் என்றாள். அவரோ பெருமூச்சை விட்டவர்,பாவம் என் பொண்ணும் மாப்பிள்ளையும் சம்பாதிக்கிற காசெல்லாம் இப்படி தேவையில்லாம செலவாகுது,லட்ச கணக்குல இப்படியே போச்சுன்னா அப்பறம் எல்லாரும் நடுத்தெருவுக்கு வரவேண்டியது தான்" என சாதாரணமான குரலில் சொல்ல.

நந்து கண்களிலிருந்து இறங்கிய கண்ணீர் விக்ரமின் கைகளில் பட்டு தெறித்தது.நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவனுக்கு தெரிந்தது என்னவோ உதட்டை கடித்து அழுகையை அடக்க போராடிக்கொண்டிருக்கும் நந்தினியை தான்.

கோபம் மொத்தமும் தன் பாட்டி மீது இருந்தாலும் வயதிற்கு மரியாதை கொடுத்து தன்னை கட்டுப்படுத்தியவன் தன் பாட்டியின் புறம் திரும்பி மென்மையாகவே " நீங்க ரொம்ப கவலை படாதீங்க பாட்டி, எங்க நாங்க பணத்தையெல்லாம் செலவு பண்ணிட்டு உங்க காசை கேட்டுவிடுவோம் என்று பயப்படுறிங்களா…? அப்படியெல்லாம் உங்க வீட்டு வாசலில் வந்து நிற்க மாட்டோம் என்றவன்,உங்க மாப்பிள்ளை கிட்ட போய் கேளுங்க…? அவ யாரோட காசுல இத்தனை நாளாக படித்தாள் என்று அவர் சொல்லுவார்' என்றவன்...இப்போது சற்று கோபத்துடன் இதுவரைக்கும் அவளுக்கு சொந்தமான காசில் தான் படிக்கிறா,எல்லாம் செய்றா,தேவையில்லாம எதையாவது பேசி இனிமே அவளை காயப்படுத்த நினைத்தாள் அப்பறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்" என சொல்லும்போதே அதுவரை இவர்களை இறக்கிவிட்டு ஒரு வேலையாக வெளியே சென்ற ஆதி உள்ளே வர..இனி அவன் பார்த்துக்கொள்வான் என்று நினைத்தவன்,வெளியே சென்று
தன் காரை எடுத்துக்கொண்டு கம்பெனியை நோக்கி சென்றான்.

ஆதிக்கு உள்ளே நுழைந்தவுடன்,நந்தினி நின்றிருந்த நிலையிலேயே தெரிந்துவிட்டது,தன் மாமா குடும்பத்தினர் வந்தவுடன் தங்கள் வேலையை காட்ட தொங்கிவிட்டனர் என்று…?இந்த தடவை உங்களை ஓட ஓட விரட்டுகிறேனா இல்லையான்னு பாருங்க என எண்ணிக்கொண்டவன்...தன் பாட்டியின் அருகே அமர்ந்து தோளோடு அணைத்தவன் "என்ன பாட்டி வந்தவுடனேயே உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டீங்க…? நான் உங்களிடம் இவ்வளவு ஸ்பீடை எதிர்பார்க்கவில்லை,இருந்தாலும் உங்க நலத்துக்கு சொல்லுறேன் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு தொடங்குங்க" என குரலில் நக்கலுடன் சொல்ல,

அவரோ "நான் என்னடா பண்ணேன்..?" என கேட்க..."அது உங்களுக்கே தெரியும் நான் எதை சொல்கிறேன் என்று' என சொன்னவன் அத்தோடு விடாமல், நானாவது பாட்டி என்று கொஞ்சம் யோசித்து கருணைக் காட்டுவேன்,ஒருசிலர் அதையெல்லாம் பார்க்கமாட்டாங்க பாட்டி.. பத்திரம்" என்றவன்,அந்த ஒருசிலர் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னான்.

இதனையெல்லாம் ஒரு பார்வையாளர் போல் பார்த்துக்கொண்டிருந்த ராகவனி்ற்கு நந்து மேல் தான் கோபம் வந்தது. இவளை ஒரு வார்த்தை சொன்னதுக்கு ரெண்டு பேரும் மாறிமாறி மிரட்டிட்டு போறானுங்க...பாக்குறேன் டா நீங்க என்ன பண்ணி கிழிக்கிறீங்கன்னு ? என நினைத்தவர் அமைதிக்காத்தார்.

அங்கு தனது அலுவலகத்தில் புயல் போல் நுழைந்தவன் எதிரில் வந்துக்கொண்டிருந்த யாரையும் பொருட்படுத்தாமல் தன் அறையில் சென்று இருக்கையில் அமர்ந்தான்.

திவ்யாவோ "சும்மாவே கோபமா தான் இருப்பாரு...இப்போ வரும்போதே டென்ஷனோட வருகிறார் என்ன சொல்ல போகிறாரோ..?" என எண்ணியபடி அவன் அறை கதவை தட்டி அனுமதி கேட்க...அவனும் அனுமதி வழங்கியவன் தன் முன்பிருந்த கணனித்திறையில் பார்வையை செலுத்திக்கொண்டிருந்தவன் அப்படியே "எஸ் டெல் மீ மிஸ்.திவ்யதர்ஷினி எப்போ வேலையைவிட்டு நிற்க போறீங்க"
என்க..

அவளோ "சாரி சார் ரொம்ப உடம்பு முடியலை அதான் லீவ் போட வேண்டியதாக ஆகிவிட்டது" என விளக்கம் சொல்ல...அவளை நம்பாமல் பார்த்தவன், எதுவும் சொல்லாமல் தன் வேலையை தொடங்க.

அவளோ உண்மையை வாங்காமல் விடமாட்டார் போல் என நினைத்தவள் "வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க அதான்" என சொல்ல அப்போதும் தன் நிலையிலிருந்து மாறாமல் இருப்பவனை பார்த்து, இந்த வேலை அவ்வளவு தான் என நினைத்தவள் வெளியே செல்ல திரும்புகையில் "திஸ் இஸ் யூர் லாஸ்ட் வார்ணிங்" என்ற கம்பீர குரல் காதில் விழ "தேங்க்யூ சார்" என்றவள் வெளியே செல்ல…

அப்போது உள்ளே வந்த சுரேஷ் "எப்படியும் அவங்களை நீங்க வேலையைவிட்டு நிறுத்துடுவிங்கன்னு தெரியும் சார், அதான் காலையிலேயே நல்லா திட்டி,எல்லா பேப்பர் ஓர்க்கும் முடித்தேன்,நீங்க இதில் ஒரு சைன் மட்டும் போட்டால் போதும்,இப்பவே அனுப்பிடலாம்" என்றவன் அவன் முன் ஃபைலை வைக்க,

விக்ரம் அதனை திறந்து கூட பார்க்காமல் "ஒரு சின்ன கரெக்ஷன் மட்டும் பண்ணிட்டு வாங்க" என்றான்.

இவனோ பார்க்காம எப்படி சொல்கிறார் என யோசித்தவன் "என்ன பண்ணனும் சார்" என கேட்க...

ஃபைலை அவன் முன் நீட்டியவன் "இதில் எங்கெல்லாம் அவங்க பெயர் இருக்கோ அதற்கு பதில் உங்க பெயரை மாற்றி எடுத்துட்டு வாங்க" என்றான்.

சுரேஷ் "அய்யோ ! சார் எதுக்காக என்னோட பெயர்" என பதற.

"இந்த கம்பெனிக்கு நான் எம்.டியா இல்லை நீங்களா..?இங்க யார் வேலை செய்யவேண்டும் செய்யகூடாது என்பதை நான் தான் முடிவெடுக்கணும், நீங்க இல்லை அண்டர்ஸ்டாண்ட் என்றவன், ஜஸ்ட் கெட் அவுட்" என கத்தினான்.

அவனோ "தெய்வமே நான் வைக்க நினைத்த ஆப்பு எனக்கே திரும்பி வந்துவிடும் போலவே" என புலம்பியபடி வெளியே சென்றவன்,திவ்யா இருக்கும் பக்கம் கூட திரும்பாமல் தன் வேலையை செய்த்தான்.

அதே ஆஃபீஸில் மற்றொரு அறையில்..சந்தியா அடித்த அடியில் மதன் கன்னத்தை பற்றியிருக்க,அவன்

எதிரில் ருத்ர அவதாரத்தில் நின்றிருந்தாள் சந்தியா. சூழ்நிலைக்கு மாறாக அடிவாங்கியவன் அமைதியாக நிற்க.. அடித்தவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் இறங்கிக்கொண்டிருந்தது
 
Status
Not open for further replies.
Top