ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 13(i)


அமர்த்தலான பார்வையுடன் கரத்தை குலுக்கியவனைப் பார்த்தவளுக்கு ஏதோ நிறைவு உண்டானது போல்.

அவளொன்றும் மனமுவந்து பையனிடம் அவனை மறப்பதாய் வாக்குக் கொடுத்திடவில்லை.என்ன நடந்தாலும் அவனை விடுத்து வேறொருத்தரை மனதால் நினைப்பது கூட அவளால் இயலாத காரியம்.

அவளுக்கு அவனை மாற்ற வேண்டும்.மொத்தமாய் மாற்றி அவனுக்கு வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுக்க வேண்டும்.

அப்படி அவனை மாற்றிட வேண்டுமென்றால் அவனோடு நெருங்கிப் பழக வேண்டும்.இத்தனை நாள் காத்திருப்பின் பலனாய் இந்த சந்தர்ப்பம் கிடைத்திட அதனை முழுதாய் தன் வசப்படுத்திக் கொள்ள முனைந்தாள்,பாவையவள்.

அவனுக்கென மட்டுமே இல்லாத தைரியத்தை வரழைத்துக் கொண்டு பையனிடம் பேசிட அது சரியாகியும் நின்றது.மாற்றம் ஒன்றை உருவாக்கிடும் முன் காரணமானவரிலும் ஏதேனும் மாற்றம் உண்டாகிட வேண்டும் என்பது தானே நியதி.

துளிர்த்திடும் மாற்றங்கள் கூட துளிர்த்திட்ட சில மாற்றங்களுக்கான எதிர்வினை தானே!

அப்படி ஒன்று நடந்தேறிய பின் அவன் அவளை மீள காதலிக்கா விட்டாலும் அவளுக்கு அது பிரச்சினையேயில்லை.
ஏன் வேறு யாரின் மீது அவனுக்கு காதல் துளிர்த்தாலும் கவலையுமில்லை.
மனதோரம் வலிக்கும் தான்.அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை தான்.ஆனாலும் கடந்திடுவாள்,
அவனுக்காக..
அவனுக்கென..
அவனுக்கென மட்டும்..
அவனின் நினைவுகளுடன்.. கடந்திடுவாள் நிகழில் அவனின் அத்தியாயத்தை,அவனின் நினைவுகளை இறுகப்பற்றிக் கொண்டே.

ஒரு வேளை அவனுக்கு யார் மீதும் காதல் வராது போனாலும் அவள் மீதும் காதல் தோன்றாதிருந்தாலும் அவனுக்கும் சேர்த்து அவளே காதலித்துக் கொண்டு வாழ்ந்து விடுவாள்,அருகில் இருந்தோ..
தொலைவாகச் சென்றோ..

அவளுக்கு அவன் மாற வேண்டும்.அவன் கூட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.வரமென வந்த வாழ்வை இரசித்திட வேண்டும்.அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகித் தான் இருந்தாள்.ஏன் அவளின் காதலைக் கூட விட்டுக் கொடுக்கச் சென்னால் அதைச் செய்வதிலும் அவளுக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை.

அவன் தன் கவலை மறந்து வாழ்க்கையை நிம்மதியாய் வாழ வேண்டும்.அவ்வளவு தான் அவளின் மன எண்ணம்.

அவன் மீதான ஆழமான காதல் தான்.அந்தக் காதலில் அவள் அவளுக்கான எந்த எதிர்ப்பார்ப்பையும் சுமந்திடாதது தான் அவள் காதலின் தனித்துவம்.பையனை மட்டுமே சுற்றி வந்து அவனுக்கென மட்டுமே யோசித்திடும் அந்தக் காதலின் சுயநலம் கூட கொஞ்சம் அழகாய்த் தான் தெரிகிறது.

"உன் லவ் மேல அவ்ளோ நம்பிக்கயா உனக்கு..? இவ்ளோ நாள் இல்லாம இப்டி ரெண்டு மாசம் உன் கூட பழகறதனால பெருசா என்ன நடந்துடப் போகுது..?" புருவமுயர்த்தி கேட்டிட அவளிதழ்களில் புன்முறுவல் படர்ந்தது.

தன் மீது நேசம் துளிர்த்து பெருமரமாய் விரியும் என்றெல்லாம் அவள் நினைத்திடவில்லை.அவனை ஏதோ மாற்றிட முயலும் அது மட்டும் உறுதியாய்த் தெரிந்தது.

அவள் காதலின் ஆழத்தை உரித்தானவனாலே தெரிந்து கொள்ள முடியாதிருக்கும் பட்சத்தில் அவள் உணர்ந்து எங்கனம் தன் காதலின் மீது நம்பிக்கை வைத்திட..?

"ரெண்டு மாசம் இருக்கு என்ன வேணுன்னாலும் நடக்கலாம்.." பெரிதாய் நம்பிக்கை எதுவுமின்றி மெல்லிய குரலில் மொழிந்தவளுக்கு அவனுக்கு தன் மீது நேசம் உருப்பெறாவிடினும் பரவாயில்லை,அவனை மொத்தமாய் மாற்றி விட்டால் போதுமென்கின்ற எண்ணம் தான்.

வாழ்ந்து வாழ வைத்திடும் காதல்கள் அழகென்றால் மடிந்தும் வாழ வைத்திடும் காதல்கள் பேரழகு தானே!அவள் காதலும் அப்படித்தான்!

தான் மடிந்தாலும் பரவாயில்லை,அவன் வாழ்ந்தால் போதுமென்பது மட்டுமே அவள் காதலின் உச்சபட்ச எதிர்ப்பார்ப்பு.

"இப்போவே உன்னோட மனசு தேத்தி வச்சுக்கோ இசை..என்ன நடந்தாலும் நாம ரெண்டு பேரும் டைவோர்ஸ் வாங்கப் போறது கன்ஃபார்ம்..மறக்காம ஞாபகம் வச்சிக்க.." தீர்க்கமாய் உறுதியாய் கூறியவனுக்கு அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை என்றாலும் தற்சமயம் பாவையவளின் எண்ணம் என்னவென்று தான் கணிக்க இயலாமல் போனது,பையனால்.

என்ன தான் பாவையவள் சவால் விட்டாலும் அவள் விழிகளில் அவள் காதல் மீதான உறுதியை அவன் காணவில்லை.தன்னை காதலிக்க வைத்து விடலாம் என்கின்ற உறுதி அவளுக்குள்ளும் இல்லை என்பது போல் தான் தோன்றிற்று,பையனின் மனதில்.

"இவ எதுக்கு இப்டி பண்றா..?" மௌனமாய் யோசித்து ஆழமான பார்வையொன்றை வீசி விட்டு அறையில் இருந்து வெளியேறிட நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்,இசையவள்.

பையனோ உடை மாற்றிக் கொண்டு வர வீட்டைப் பூட்டி விட்டு வெளியே வந்தனர்,இருவரும்.

பையனோ இத்தனை நாள் மனதை அழுத்திக் கொண்டிருந்த குழப்பம் முழுவதும் நீங்கப் பெற்றிருந்ததால் சற்று நிமிர்வாய்த் தான் தெரிந்தான்.

இசையவளோ அவனை ஓரப்பார்வையால் உரசிக் கொண்டே வர ஒரு கட்டத்தில் அவனுக்குமே கோபம் வந்து விட்டது.

முன்பும் இப்படி கடைவிழி உரசல்கள் அவளிடமிருந்து கிடைக்கப் பெற்றாலும் தான் ஓரவிழியில் முறைப்பை படரவிட்டாலே பம்மிக் கொண்டு பயந்து நிற்பாள்,பாவையவள்.

இப்போது முறைத்தாலும் அவள் கண்டு கொள்ளாதது சிறு கோபத்தை கிளப்பி விட்டது.

"எதுக்கு இப்டி ஓரக்கண்ணலா பாக்கற..?"

"ஆங்..நா பாக்கவே இல்லியே.." பதறிய குரலில் கூறிக் கொண்டு விழிகளை தாழ்த்தியவளை கடுமையோடு சாடின,பையனின் விழிகள்.

"என்ன பாக்கலன்னு பொய்யெல்லாம் சொல்ற..? நீ பாத்தத நா பாத்தேன்..பாக்கலனு சொல்லு பாக்கலாம்.."

"சாரே நம்ம டீல் ஞாபகம் இருக்குல..இப்போ நா உங்க ப்ரெண்ட்..உங்க ப்ரெண்ட் இப்டி பாத்தா நீங்க திட்டுவீங்களா..?" கேட்டவளுக்கும் தன்னுள் இருக்கும் பயமும் பதட்டமும் எங்கு போனதன்றே தெரியவில்லை.

பையன் தன்னிடம் தோழமைக் கரம் நீட்டி விட்டதால் உண்டாகிய நிமிர்வா..?
அவனை மாற்றிய தீர வேண்டும் என முனைப்புடன் சுற்றுவதால் எழுந்திட்ட ஆர்வமா..?

பையன் அவளிடம் இருந்து இப்படி ஒரு பதிலைத் தான் எதிர்பார்த்திருப்பான் போலும்.இரு புறமும் தலையாட்டி இதழ் குவித்து ஊதிக் கொண்டவனோ பதிலேதும் பேசாமல் முன்னே நடந்திட அவளுக்கும் அவனின் அமைதியில் கிலி பிடித்து பரவி நிற்க தானாய் வேறு புறம் தாவின,அவள் விழிகள்.

●●●●●●●●

"இவங்க எதுக்கு எப்போ என்ன பாத்தாலும் மொறச்சிகிட்டே இருக்காங்க..முன்ன பின்ன நா இவங்கள பாத்ததும் இல்ல..ஆனா எதுக்கு இப்டி பண்றாங்கன்னு தெரிலியே..அவங்க உங்க ப்ரெண்ட் தான..என்னன்னு நார்மலா கேக்கற மாதிரி கேட்டு சொல்றீங்களா..? இது வர யாரும் என் கிட்ட மொகத்த திருப்பி கிட்டு நடந்தது இல்ல..அதான் ஒரு மாதிரி இருக்கு.."உணவைப் பிசைந்த படி அடுத்த மேசையில் அமர்ந்து உணவில் கவனமாகி இருந்த பாவையவளை பார்த்துக் கொண்டு யாழினி சொல்ல கேட்டுக் கொண்டிருந்த தாமரைக்கு புரையேற மட்டுந்தான் இல்லை.

இன்று தற்செயலாய் யாழினியின் அருகே அமர்ந்தவளோ அவளிடம் சாதாரணமாய் பேசத் துவங்கிட அவளின் பேச்சுக்கு செவிசாய்த்தாலும் யாழினியின் விழிகள் சுற்றி வந்தது என்னவோ,இசையவளைத் தான்.

"அண்ணன் அடிக்க வேண்டிய சைட்ட தங்கச்சி அடிக்கிதோ..?" அவளின் பார்வை அடிக்கடி படிவதும் மீள்வதுமாய் இருக்க அதைக் கண்டு கொண்டவளின் மனசாட்சி இப்படி நினைக்காது இருந்தால் தான் அதிசயம்.

"என்ன தாமர நா இவ்ளோ சொல்றேன்..நீங்க பதில் சொல்லாம இருக்கீங்க..? ஏன் உங்க கிட்ட அவங்க நார்மலா தான இருக்காங்க.." தன்பாட்டில் கூறியவளுக்கு தெரியாது,தான் கதைத்துக் கொண்டிருப்பது பாவையவளின் உயிர்த்தோழியுடன் என்பது.

"நா என்னன்னு மெதுவா விசாரிச்சு பாக்கறேன் யாழினி..இப்போ ரெண்டு நாளா கொஞ்சம் பிஸியா இருக்குறதனால அரசி கூட அவ்ளவா பேச டைம் இருக்கல..நா கண்டிப்பா கேட்டு சொல்றேன்.."

அந்த சமயத்தில் யாழினியை சமாளித்தவளுக்கு அவளிடமும் சுமூகமாக அனுசரித்து செல்ல வேண்டிய நிலைமை அல்லவா..?

உணவை முடித்து எழுந்தவளோ காலையில் பையனுடன் நடந்த சம்பாஷணைகள் இரசனையுடன் மீட்டிய படி இதழில் உறைந்த முறுவலுடன் கரங்களை கழுவிக் கொண்டிருக்க அவ்விடம் வந்த நான்கைந்து பேரும் இசையவளை விசித்திரமாய்த் தான் பார்த்து வைத்தனர்.

அவளுக்கோ பையன் தன்னுடன் தோழனாய் பழக ஒப்புக் கொண்டு வாக்குக் கொடுத்த மகிழ்வும் நிம்மதியும் ஒரு வித மோன நிலையை கொடுத்திட வழமைக்கு மாறாய் விகசிக்கும் வதனமும் மின்னும் விழிகளுமாய்த் தான் சுற்றிக் கொண்டிருந்தாள்,பாவையவளும்.

"அரசி தண்ணிய தெறந்து விட்டுட்டு கனவு காணாம இங்க வா.." உடன் பணிபுரியும் தோழியொருத்தி பிடித்து தன் புறம் இழுத்து வைத்ததுமே அவள் சிந்தை கலைந்தது.

இன்னும் கரத்தை கூட முற்றாக கழுவத் தவறி போயிருக்க அதைக் கழுவிக் கொண்டே நகர்ந்திருந்தாள்,ஈரடி.

"என்னடி இது என்னக்கும் இல்லாம இன்னிக்கி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்க..?" சுற்றி நின்ற நான்கைந்து பேரும் கேட்டுக் கொண்டே அவளை கலாய்த்து சிரித்திட அவளோ முறைத்துக் கொண்டே நகர்ந்திருந்தாள்,அவ்விடம் விட்டு.

"நம்ம மொகர மட்டும் எதுக்கு இப்டி கண்ணாடி மாதிரி இருக்கோ தெரியல.." தனக்குத் தானே திட்டிக் கொண்டு நடந்தவளோ முரளிக்கு எதிர்ப்பட அவனும் சிறு புன்னகையுடன் அவளை தாண்டிச் செல்ல பாவையவளுக்கு மண்டை குழம்பியது.

"ஆளாளுக்கு எதுக்கு தான் நம்மள பாத்து சிரிக்கிறாங்களே..அதுவும் இந்த முரளி என்னக்கு இல்லாம உலக அதிசயமா பாத்து சிரிக்கிறாரு.." தலையில் அடித்துக் கொண்டு வந்தவளின் செயலில் புதிதாய்த் தான் இருந்தது,தாமரைக்கும்.

அலுவலக நேரம் முடிந்திருக்க வழமையாக அலுவலக வளாகத்தினுள் இருப்பவள் இப்போதெல்லாம் பாதையை கடந்து வந்து அங்கிருக்கும் பேரூந்து நிறுத்தத்தில் தரிக்கத் துவங்கி இருந்தாள்,பையன் யாழினியை பார்த்திடக் கூடாது என்பதற்காக.

மழைக்கு குடையும் இன்றிப் போக கொட்டும் மழையில் பாதம் வைத்து வந்தவளோ கொஞ்சம் நனைந்து போயிருக்க தேகத்தைச் சுற்றி துப்பட்டாவை போர்த்திக் கொண்டு நின்றிருந்தவளுக்கு தெரியாமல் இல்லை,மழையும் அதன் குளிரும் அவளுக்கு ஒத்துக் கொள்ளாது என்பது.

பையனின் வரவிற்காக காத்திருக்கும் போதும் சரிவாய் வீசிய சாரல் அவளை நனைத்துச் சென்றிட இன்னுமே தனக்குள் ஒடுங்கிக் கொண்டாள்,பாவையவள்.

மொத்தமாய் ஐந்து நிமிடங்கள் கடந்த பின் அவளின் முன்னே வந்து நின்றது,பையனின் வண்டி.தூரத்தில் இருக்கும் போதே அவள் நிற்பதை இனங்காண முடிந்திருந்தது,அவனால்.

அவளோ நனைந்து கொண்டு வரப்பார்த்திட கையமர்த்தி சைகை செய்தவனோ காரில் இருந்து இறங்கி வந்து நனைந்து கொண்டே குடையொன்றை நீட்டிட
முறைப்புடன் வாங்கிக் கொண்டாள்,அவள்.

குடையைப் ப பிடித்துக் கொண்டே மறுபுறம் வந்து அவள் ஏறிட முன்னே பையன் வண்டிக்குள் நுழைந்து வண்டியை இயக்கியிருக்க இருக்கையில் அமர ஒரு கணம் யோசித்தவளை பையனின் அழுத்தமான பார்வை அப்படியே அமரச் செய்தது.

இருக்கையின் ஒரு ஓரமாய் ஒன்றிப் போய் உட்கார்ந்து இருந்தவளுக்கு இருக்கை நனைந்து விடுமோ என்கின்ற பயம்.அதை விட குற்றவுணர்ச்சி.

"சீட் ஒன்னும் ஆகாது..நார்மலா உக்காரு.." அவளின் மனதை படித்தவனோ அதட்டலான குரலில் மொழிய அப்போதும் அசையவில்லை,அவள்.

"ஒழுங்கா உக்கார சொல்றேன்ல.." வண்டியைக் கிளப்பாது அவன் மீண்டும் எச்சரித்திட அதில் பயந்தவளோ சரியாய் அமர்ந்து கொண்டான்,கொஞ்சம் அசைந்து.

வழி எங்கும் மௌனத்தின் அலைவரிசை.அவனுடன் பேசுவதற்கு உரிமையும் தந்து விட்டான் தான்.இருப்பினும் ஏதோ தயக்கம்.

அவ்வப்போது அவளின் தைரியம் எட்டிப் பார்த்தாலும் ஒரே நாளில் அவளின் மொத்த பயத்தையும் களைவது அத்தனை சுலபமான விடயம் அல்லவே.

அலுவலகத்தில் நிலவிய ஏசியின் குளிரோடு சேர்த்து மழையில் நனைந்ததும் தன் வினையை காட்டத் தொடங்கிட அவளுக்கு தலை வலிக்க ஆரம்பித்து விட்டது.இடைக்கிடை தும்மல் வேறு.

இருக்கையில் சாய்ந்து தலைசாய்த்து விழி மூடிக் கொண்டவளுக்கோ அடிக்கடி தும்மல் வந்து கொண்டேயிருக்க அவனுக்கும் மனம் பிசைந்தது.

அவள் அந்த மழையில் நனைந்து கொண்டு வந்து பேரூந்து நிறுத்தத்தில் ஒதுங்கி நின்றது அவன் யாழினியை கண்டு காயப்படக் கூடாது என்பதற்காகத் தான் என்று பையனுக்கு நன்றாகவே தெரியும்.

வண்டியில் ஏறிக் கொண்டவுடன் கிளப்பச் சொல்லி பரபரக்கும் அவளின் வேகமும் அங்குமிங்கும் அசைந்து ஆசுவாசப் பெருமூச்சை விடும் அவளின் செயலும் அதை அவனுக்கு இரு நாட்களிலேயே கூறிப் போயின.

"எதுக்கு மழைல நனஞ்சிட்டு வந்து பஸ் ஸ்டாப்ல நின்ன..? உன் ஆஃபீஸ்ல எடம் இருக்கு தான.."

"அ..அது நாம ஹஸ்பன்ட் அன்ட் வைஃப்னு யாருக்கும் தெரியக் கூடாதுன்னு சொன்னீங்கல..அதுக்கு தான்.."

"அன்னிக்கி எல்லாம் கேட் கிட்ட தான வந்து நின்ன..? அங்கயும் மழக்கி ஒதுங்கி நிக்க எடம் இருக்கு தான..?" இத்தனை பொறுமையாய் துருவிக் கேள்வி கேட்பது எல்லாம் பையனின் அகராதியில் இல்லாத விடயங்கள்.
அவளுக்கென அவனைக் கேளாமல் அவனறியாமல் நடந்தேறிக் கொண்டிருந்தன.

அவளால் அவன் அகராதியில் கொஞ்சம் மாற்றங்களோ என்னவோ..?

"அ..அது இன்னிக்க வந்து நிக்கனும்னு தோணுச்சு சாரே.." விட்டு விடேன் எனும் பாவனையில் மொழிந்தவளுக்கு மீண்டும் தும்மல் வரத் துவங்கிட விழி மூடியிருந்தவளை அழுத்தமாய் தொட்டு மீண்டன,அவளின் விழிகள்.

உனக்காகத் தான் செய்தேன் என்று தைரியமாய் போட்டுடைத்து ஒப்புக் கொண்டாலும் அவனுக்குள் இத்தனை குற்றவுணர்ச்சியும் கனமும் உண்டாகியிருக்காதோ என்னவோ..?

அவள் தன்னை காதலிக்கிறாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும் ஒரு போதும் அவள் அதை சொல்லியதேயில்லை.

அறிந்தோ அறியாமலோ இயல்பாய் நடந்தேறும் அவளின் செயல்கள் எல்லாம் அவன் மீதான நேசத்தை தெள்ளத் தெளிவாய் விளக்கிக் காட்டிட ஒவ்வொரு முறையும் அவனுக்குள் ஏதோ ஆகிடுவது நிஜம்.

ஒவ்வொரு நொடியும் அவனுக்கான காதலை சத்தமின்றி உணர்த்திச் செல்லும் அவள் புதிராய்த் தோன்றினான்,பையனுக்கு.

யாழவனின் இறுக்கங்களையும் அழுத்தங்களையும் தாண்டி இசையவளின் காதல் அவனின் உயிர்த்தொடும் மாயம் பையன் அறியவில்லை.

உயிர்த்தொடும்.

2024.09.05
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 13(ii)


அவன் பதிலுக்கு காதலித்திருந்தால் அவனுக்குள் இப்படி கலவையான உணர்வுகள் சத்தியமாய் கிளர்ந்தெழுந்திருக்க மாட்டாது.

மௌனமாய் அவள் காதலை உணர்த்திச் செல்லும் ஒவ்வொரு வினாடிகளும் அவனிதயத்தில் சின்னச் சின்ன அதிர்வலைகள்.

தும்மிக் கொண்டே இருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் சாய்ந்த வண்ணமே உறக்கம் வந்து விட சீரான சுவாசதினால் ஏறியிறங்கிய தேகம் அவள் துயில் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.

கொட்டும் மழையும் அந்நேரத்தில் வீதியில் வழமையாய் நிலவும் வாகன நெரிசலை அதிகப்படுத்திட பையனோ ஸ்டியரிங்கில் கையை தட்டிய விழிகளை அங்குமிங்கும் அலசலானான்,தன்னிச்சை செயலாய்.

சிறிதாய் இதழ் பிளந்து எதுவும் அறியால் உறக்கத்தில் இருந்தவளின் தோற்றம் அவனை இன்னும் இளக்குவது போல்.

ஏன் தான் அவள் தன்னை காதலித்துத் தொலைக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மனதில் தோன்றி அமிழ அதுவே அவனின் மனதின் பாரத்தை இன்னும் அதிகப்படுத்துவது போல்.

முதலில் எல்லாம் அவள் காதலை ஒரு பொருட்டாகவே கொள்ளாதவனுக்கு இப்போதெல்லாம் அப்படி இருந்திட இயலாமல் தான் போகிறது.

அவனும் காதலித்தான் தான்.ஆனால்,அவள் காதலித்துத் தொலைத்திடும் அளவு அவன் காதலித்ததை என்கின்ற உண்மை முகத்தில் அறைய கசப்பாய் விரிந்தன,அவனிதழ்கள்.

வாழ்க்கையே ஏதுமில்லை என்றாகிப் போன பின் இறைவன் கண்ணில் காட்டிடும் காதல் அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.

சலிப்பாய் இரு புறமும் தலையசைத்து தன்னை மீட்டாலும் அவனுள் முன்பிருந்த உறுதி இல்லை என்பது சத்தியமான உண்மை.

வீட்டுக்கு வந்த பின்னும் தொடராய் தும்மிக் கொண்டிருந்தவளை கண்டிக்கத் தான் செய்தார்,ராமநாதன்.

"மழன்னா ஒதுங்கி இருக்க வேண்டியது தான மா..எதுக்கு நனஞ்ச..? இப்போ பாரு தும்மிகிட்டே இருக்க.." கடிந்து கொண்டே மாத்திரைகளை நீட்ட வாங்க மறுத்தாள்,பாவையவள்.

"எதுக்குமா மாத்திர வேணாங்குற...?"

"இல்ல மாமா..மாத்தர போட்டு பழக்கம் இல்ல..கொஞ்சம் கசாயம் வச்சி குடிச்சா சரியாய்டும்.." மூக்கை உறிஞ்சு கொண்டே அவள் அகல முயன்றிட அவளின் முன்னே வந்து கசாயம் நிரம்பிய கோப்பையை வைத்தான்,பையன்.

"இந்தா இத குடி பர்ஸ்ட்.." நெற்றியில் வழிந்த வியர்வைத் துடைத்துக் கொண்டே கூறியவனை அதிர்ந்து பார்த்தாள்,பாவையவள்.

நெற்றியிலும் கழுத்தோரத்திலும் வியர்த்திட டீஷர்ட்டின் கையை முட்டி வரை இழுத்து விட்டு முக்கால் பேண்ட்டுடன் சிகை தாறுமாறாய் கலைந்திட அவன் நின்றிருந்த தோற்றம் அவன் வெகுவாய் சிரமப்பட்டிருப்பதை கூறாமல் கூறின.

தட்டுத்தடுமாறி அவளுக்கென செய்திருப்பான் போலும்.அப்படித் தானே கதை கூறிற்று,பையனின் தோற்றம்.

"என்ன பாத்துட்டு இருக்க..கசாயத்த குடி.." பையன் மென்குரலில் அதட்டிட இருவரையும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை,அவனின் சிறிய தந்தையானவருக்கு.

"பாத்தியாம்மா என் பையனுக்கு உன் மேல இருக்குற பாசத்த..நீ செய்யனும்னு நெனச்ச..அவன் செஞ்சிட்டான்.." கூறியவரின் குரலில் அத்தனை மெச்சுதல்.

"ம்ம்க்கும் இது ஒன்னும் பாசம் இல்ல மாமா..நீங்க இருக்கறதால போட்ற வேஷம்.." மனதுக்குள் நினைத்தவளோ வெளியில் சொல்லாமல் அசடு வழிய சிரித்து வைத்திட அவளின் புன்னகையே போதும்,பையனுக்கு.

ராமநாதன் அங்கு இல்லாதிருந்தாலும் அவனின் நடவடிக்கை அப்படித் தான் இருந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகத்திற்கு இடமில்லை.ஆனால்,மனமோ அப்படியில்லை என்று அவள் கூறிட மனம் இடம் கொடுத்திடவில்லை.

அவளுக்கு தன் தரப்பை நிரூபிக்கப் போனால் அவள் இன்னும் தன் மேல் ஆழமாய் காதல் கொள்வாள் என்று பயந்து விட்டிருந்தது,அவன் மனது.

"குடிச்சிட்டு நல்லா தூங்கி எழுந்து ரெஸ்ட் எடு மா..நைட்கு வெளில சாப்பாடு வாங்கிக்கலாம்.." கூறிய ராமநாதனோ இருவருக்கும் தனிமை கொடுத்து அறைக்குள் நுழைந்து கொண்டிட அவரின் எண்ணத்தை ஊகித்தவளுக்கு அவரின் கள்ளச் சிரிப்பை கண்டதும் சட்டென புரையேறிற்று.

"இவரு வேற நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ்னு நெனச்சு சிரிச்சிட்டு போறாரே.." மனதோ ஊமாயாய் அலற அதை உணரும் வாய்ப்பில்லையே,பெரிய மனிதருக்கு.

வாயில் இருந்த கசாயம் நாசி வழியே பீய்ச்சியடிக்க நெஞ்சை பிடித்துக் கொண்டு இருமியவளின் தலையை தன்னிச்சையாய் தட்டி விட்டது,பையனின் கரம்.

அவளுக்கோ அவனின் தொடுதலை உணர சில நொடிகள் பிடித்திட அதன் பின் அதிர்ந்தாலும் ராமநாதன் இருப்பதால் தான் என்று எண்ணி இதழ் சுளித்துக் கொண்டவளில் தற்சமயம் பெரிதாய் தடுமாற்றங்கள் இல்லை என்றும் சொல்ல முடியாது.

அவளின் முதுகுக்கு பின்னரே ராமநாதனின் அறை இருக்க அவள் உள் நுழைந்து விட்ட பின்னும் பையன் கரிசனையுடன் அவளின் முதுகை நீவி விடுவதை நடிப்பு என்று தான் நினைத்திருந்தாள்,எப்போதும்.

"போதும் சாரே விடுங்க.." அவள் எழுந்து கொண்ட அறைக்குள் நுழைந்திட மனமோ தனக்கே காரி துப்பியது.

"நடிப்புன்னு தெரிஞ்சும் நாம ஏன் இப்டி உருகுறோம்னு தெரிலியே.." தனக்குத் தானே திட்டிக் கொண்டு கட்டிலில் சரிந்தவளோ அசதியில் உறங்கியும் போனாள்.

நேரம் கடந்து இரவு ஒன்பது மணியைத் தழுவியிருந்தது.

"இசை..இசை எந்திரி..இசை எந்திரி லேட்டாகுது..எழுந்து சாப்டு படு.." பையன் கன்னத்தை தட்டிய படி அவளை எழுப்புவது அவளுக்கு கனவு போல் இருந்தது.

"எனக்கு பசியில்ல.." தூக்கக் கலகத்தில் முணகிக் கொண்டே அவள் திரும்பிப் படுத்திட காய்ச்சலா என தொட்டுப் பார்த்திட நீண்ட கரத்தை பட்டென இழுத்துக் கொண்டான் பையன்,ஏதோ தோன்றிடவே.

"இசை எந்திரி.." மீண்டும் அவன் எழுப்பிட சண்டித்தனம் செய்தவளோ தன் பிடிவாதத்தில் ஜெய்த்தவளாய் உறக்கத்தில் விழி அவள் கீழே விழாமல் தலையணையை வைத்து விட்டு அறைக் கதவை சாற்றிக் கொண்டு வெளியே வந்தான்,பையன்.

"என்னப்பா பொண்ணு எந்திரிக்கலயா..?"

"இல்ல சித்தப்பா நல்லா தூங்கறா..அப்றமா எழுந்துக்கட்டும்.." என்றவனோ அவருக்கு மாத்திரைகைளை எடுத்துக் கொடுத்து விட்டு அறைக்குள் நுழைந்து தன் வேலையில் ஆழ்ந்தும் போனான்.

சோபாவில் அமர்ந்தூ மடிக்கணினியில் மூழ்கி தன் வேலையில் கவனமாய் இருந்தாலும் அடிக்கடி அவளை விழிகள் தொட்டு மீள மறந்திடவில்லை.

அவனுக்கு பசித்தது தான்.இப்போது சில நாட்களாய் சிறிய தந்தையின் கண் துடைப்புக்காக அவளுடனேயே உண்டு பழகியவனுக்கு ஏதோ இரு வெறுமை பரவியது போல்.

இத்தனை நாள் தனிமையில் இருந்தவனுக்கு அவளுடன் உண்டு பழகி விட்டு தனியாக பசி தீர்த்துக் கொள்ள ஏனோ பிடித்தம் வரவில்லை.சலிப்பாக இருந்தது.

மனம் வெறுமையை உணர்ந்தது போல் வயிறும் வெற்றுத் தன்மையை உணர்ந்து கொள்ள சமயலறைக்குள் நுழைந்து பால் கலக்கிக் குடித்து விட்டு அறைக்குள் மீண்டும் வரவும் அவள் எழுந்திடவும் சரியாய் இருந்தது.

கை மறைவில் கொட்டாவி விட்ட படி நிமிர்ந்தவளுக்கு நேரத்தைப் பார்த்ததும் தலை சுற்றிப் போனது.

"இவ்ளோ நேரம் தூங்கியிருக்கோமே.." அழு குரலில் முணுமுணுத்துக் கொண்டு எழுந்தவளுக்கு நாளைக்கு செய்து கொடுக்க வேண்டிய வேலைகள் தலைக்கு மேல் குவிந்து கிடந்தனவே.

படக்கென்று எழுந்து குளியலறைக்குள் நுழைந்திட்டவளின் வேகத்தின் காரணம் புரியாது முழித்தான்,பையன்.

அவளோ முகத்தை தண்ணீரால் அடித்துக் கழுவிக் கொண்டு வெளியே வந்து கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து மடிக்கணினியை திறந்து வேலை செய்யத் துவங்கி விட பையனுக்கோ அவளிடம் வேண்டாம் என்று சொல்லிட மனம் உந்தித் தள்ளியது.

உந்தி உறுத்திய உள்ளுணர்வை தலையை உலுக்கி சமப்படுத்திக் கொண்டு மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்து போக ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை.

மடிக்கணினியை அணைத்து வைத்தவனோ கைகளை பின்னே நீட்டி சோம்பல் முறித்த படி எழுந்து கொண்டவனுக்கு மடிக்கணினியை உயிர்ப்பித்து வைத்துக் கொண்டே குரட்டை விட்டுக் கொண்டு உறங்கியிருந்தவளை காணும் போது அத்தனை சிரிப்பு.

இதழ் பிரியாமல் புன்னகைத்தவனோ மடிக்கணினியை அணைத்திடும் நோக்கத்துடன் கையில் எடுத்திட பார்த்தவுடன் புரிந்து போனது,அவள் வேலைகள் பாதியில் செய்து கொண்டிருக்கும் போது உறங்கி இருப்பது.

அவளை சரியாய் உறங்க வைத்து போர்த்தி விட்டவனோ அவளின் வேலைகள் மொத்தத்தையும் முடித்துக் கொடுத்து விட்டு உறக்கத்தில் விழும் போது மணி இரண்டைத் தொட்டிருந்தது.

விழிகளை இறுகப் பொத்தி கொண்டு விழிகளை முழங்கை மேற்பகுதியால் மறைத்துக் கொண்டு உறங்க முயன்றவனின் விழிகளுக்குள் அவள் விம்பம் வந்து போக விழிகளை இறுகப் பொத்தி தன்னை சமப்படுத்திக் கொண்டு உறங்கிப் போனான்,பையன்.

●●●●●●●●

"ஐயோ இன்னிக்கி என்ன பண்ணப் போறேன்னு தெரில..அந்த கார்த்திக் வேற தொண்ட கிழிய கத்துமே.." தாமரையிடம் வழி நெடுக அலைபேசியில் புலம்பிக் கொண்டு வந்தவளைக் கண்டு உண்டாக்கிற முறுவலை அடக்கிக் கொண்டு வந்தான்,பையன்.

காலையிலும் அவள் விழித்துக் கொள்ள தாமதமாகி இருக்க அவசரமாய் தயாராகிக் கிளம்பியவளுக்கு பாதியில் விட்டிருந்த வேலையை செய்து கொள்ள நேரம் கிடைக்காது போயிற்று.

மனதில் பல சிந்தனைகள் உழன்று கொண்டிருக்க தயாராகி முடிந்த பின்பே தனக்கு வேலை மீதம் இருப்பது நினைவில் வர அலுவலகத்துக்கு விடுப்பு எடுக்க முயன்றவளை வம்படியாய் இழுத்துக் கொண்டு வந்த பெருமை பையனையே சாரும்.

"தாமர இன்னிக்கி லீவ் போட்டாலும் செம்மயா திட்டு விழும் டி..பரவாலன்னு லீவ் போடா பாத்தாலும் விட மாட்டேங்குறாங்க.."

பையனை முறைத்த படி சொன்னவளுக்கோ அவனின் அடாவடியின் மீது சிறு கோபமும் கூட.

"சரி டி நா வந்து பேசறேன்.." கடுப்புடன் கூறி அழைப்பை துண்டித்தவளுக்கு வாய்ப்புத் தந்தால் இப்போது வேண்டுமென்றால் வீட்டுக்கு ஓடிவிடும் மனநிலையில் தான் இருந்தாள்.

"சாரே.."

"என்ன..?"

"ப்ளீஸ் நா வீட்டுக்கு போறேன்..வண்டிய திருப்புங்க..ப்ளீஸ்..என்னால எல்லார் முன்னாடியும் திட்டு வாங்க முடியாது.."

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற பேராவலில் பாவையவள் பேசிட அவன் அசைந்திடுவானா அவளுக்குத் தெரியும் படி..?

"அத நல்லா தூங்கறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும்..அத விட்டுட்டு வேலய மறந்துட்டு தப்பிச்சு ஓடக் கூடாது..அது நல்ல பழக்கமும் கெடயாது.."
நல்ல பிள்ளையாய் அவன் அறிவுரை வழங்கிட அவளுக்கு சப்பென்றானது.

"ஆமா நா உங்கிட்ட ஒன்னு கேக்கணும்.." விட்டால் புலம்பிக் கொண்டே வருவாள் என்று அறிந்தவனோ அவளை திசை திருப்பிட பேச்சுக் கொடுத்திட அது வேலை செய்தது,சரியாய்.

"என்ன...?" முகம் விகசிக்க வினவியவளுக்கு அவன் சற்றே இயல்பாய் தன்னுடன் கதைப்பதே பெரும் மகிழ்ச்சியை தந்திடாமல் இல்லை.

அவளைப் பொறுத்த வரை அவள் கேட்டுக் கொண்டதற்கிணங்கத் தான் பையன் அவளுடன் கதைப்பதே.ஆனால்,அவன் மீது காதல் இருப்பது பையனுக்கு தெரியாது இருந்தால் அவன் இப்படித் தான் அவளுடன் இருந்திருப்பான் என்பதை பாவையவள் அறிந்திடும் வாய்ப்பில்லை.

"உனக்கு என் மேல கோவமே வராதா..?"
நெடுநாள் மனதுக்குள் நிலைத்து அவனை அலைக்கழிக்கும் கேள்வியை கேட்டு விட்டு அவள் முகம் பார்த்திட அவளுக்கோ என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

அவன் மீது கோபமே வருவதில்லை என்றெல்லாம் இல்லை.சில சமயம் அவனின் செயல்களிலும் பேச்சிலும் கொலைவெறியே வந்திடும்.என்னவொன்று அவள் அதையெல்லாம் அலட்டிக் கொள்ளும் ரகமில்லை.பொருட்டாய் கருதாது கடந்து விடுபவளுக்கு தன் மீது கோபம் வருவதில்லை என்று தான் நினைத்திருந்தான்,பையன்.

"என்ன பதில காணோம்.."

"அது அப்டிலாம் இல்ல.." மழுப்பியவளுக்கு தான் உண்மையைச் சொன்னால் எங்கே கோபப்படுவானோ என்கின்ற பயம் வேறு.
ஒரே நாளில் அத்தனை நெருக்கமாகி விட முடியாதல்லவா..?

"என்ன பொய் சொல்றியா..?" ஆராய்ச்சியாய் பையன் கேட்டிட திருதிருவென விழித்தவளுக்கு தான் பொய் சொன்னால் கண்டு பிடித்து விடுவான் என்று தெரியுமே.

"அ..அது..அது.." அவள் திணறும் போதே அலுவலகம் வந்து விட படக்கென்று கதவைத் திறந்து கொண்டு இறங்கிச் சென்றவளின் செயலில் நிச்சலமான பாவம்,அவன் வதனத்தில்.

பாவையவளை விட்டு விட்டு அலுவலகத்துக்கு நுழையும் போது பையனின் அலைபேசி ஒலித்திட எடுத்துப் பார்த்தவனின் புருவங்கள் இடுங்கின.

ஒரு நோடி யோசனையை பிரதிபலிக்கும் விதமாய் விழிகளை அழுந்த மூடித் திறந்தவனோ அழைப்பை ஏற்று அலைபேசியை காதில் பொருத்திட சொல்லப்பட்ட செய்தியில் அவன் முகம் ரௌத்திரத்தை தத்தெடுத்துக் கொள்ள வந்த வழியே திரும்பிச் சென்றிருந்தன,அவன் பாதங்கள்.

அதே நேரம்,

அழுது வீங்கிய முகத்துடன் தன்னிடத்துக்கு வந்த யாழினியை கவனித்தவளோ மடிக்கணினியை உயிர்ப்பிக்க முயன்றும் அவளிடம் என்னவென்று விசாரிக்காமல் அதை செய்திட இயலவில்லை.

தன் வேலையை அப்படியே வைத்து விட்டு யாழினியின் அருகே சென்றிட அவளை பாவையவளின் வருகையை கூட உணராது தன் எண்ணத்தில் மூழ்கி அழுது கொண்டிருந்தாள்,
நாசியும் சிவந்து போக.

இசையவளுக்கோ இத்தனை நாள் இல்லாது அவளை நெருங்கிடத் தயக்கம்.கடுமை காட்டி விட்டு சட்டென்று அக்கறை காட்டிட ஒரு மாதிரியாக இருந்தது.

"எக்ஸ்க்யூஸ் மீ.." தனக்குள் போராடி அவளுதிர்த்த ஒற்றை வார்த்தையில் சட்டென விழிகளைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு பாவையவளை அவளருகே கண்டதும் சிறு அதிர்வு.

"வாங்க என்ன விஷயம் அரசி..?" வெகு இயல்பாய் காட்டிக் கொண்டு கேட்டிட விடயத்தை எப்படி கேட்பதென்று புரியவில்லை,இசையவளுக்கு.

உயிர்த்தொடும்.

2024.09.05
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 14(i)


யாழினியோ தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு பாவையவளிடம் கேட்டிட பதில் சொல்லத் தெரியாது ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள்,அவள்.

"இ..இல்ல..ஒன்னுல்ல.." என்றவளோ அவ்விடத்தில் இருந்து நகர்ந்திருக்க வேண்டும்.அதை செய்தவற்கும் பாழாய்ப் போன மனம் இடம் தரவில்லை.

அவளிடத்தில் வேறு எந்தப் பெண் இருந்தாலும் அவளின் நடவடிக்கை இப்படித் தான் இருந்திருக்கும் என்றாலும் பையனின் தங்கை என்பதால் இன்னும் கரிசனம் அதிகமாய்.

யாழினி மீது கோபம் இருக்கிறது தான்.அந்த கோபத்தின் அளவு அவளுக்கெ தெரியாது.அதற்கென்று அக்கறை இல்லாமல் ஆகி விடாதே.

"யாழினி..என்னாச்சு எதுக்கு அழுதுட்டு இருக்கீங்க..?" ஆழமான மூச்சொன்றை இழுத்து விட்டவாறு பாவையவள் கேட்டே விட முன்னிலையில் இருந்தவளிடம் இருந்து வெடித்துக் கொண்டு வந்தது,அழுகை.

முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழுதவளை தேற்றிட கரங்கள் நீண்டெழுந்தாலும் ஒரு வினாடி அது அப்படியே அந்தரத்தில் நின்றிட அவளிடம் இருந்து கேட்ப விம்மல் சத்தத்தில் மெதுவாய் தோற்பட்டையை அழுத்தினாள்,பாவையவள்.

அழுத்தமான அந்த பிடி வார்த்தைகளால் கூட கடத்த தவறிடும் பெரும் ஆறுதலை அவளுக்குள் பரப்பிட விழிகளை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு பாவையவளை புரிந்து கொள்ள சிரமமாய்த் தான் இருந்தது.

"என்னாச்சு யாழினி..? எதுக்கு அழுதுகிட்டு இருக்கீங்க..? யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா..?" தன்மையாய் மென்மையில் ஒட்டி வந்த பாவையின் குரலுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவளின் விழிகளில் மீண்டும் நீர் சேர்ந்திற்று.

மற்றவர்கள் கேட்டு சொன்ன மறுத்த விடயத்தை ஏன் பாவையவளிடம் கூறுகிறோம் என்று யாழினிக்கு புரியவில்லை.சிலரை பார்த்த மாத்திரத்தில் நம்பிக்கை எழுமே,அப்படி ஏதும் நடந்ததோ என்னவோ..?

"யாரு யாழினி..ஆஃபீஸ்ல யாராச்சுமா..?"

"ம்ம்.."

"யாரு சொன்னாங்க..?" நிதானமாய் கேட்டவளுக்கு அவளுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்ததே ஒழிய கோபமெல்லாம் இல்லை.

இரு தரப்பையும் ஆராயாமல் அவளால் கோபம் கொள்ள இயலாதல்லவா..?

"அ..அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மண்ட் ஹேமா.."

"என்ன சொன்னாங்க..?"

"என்னோட கேரக்டர பத்தி தப்பா பேசுனா.."
திடுமென ஊற்றெடுத்து வழிந்த விழிநீரை துடைத்தவாறு விம்மிக் கொண்டே சொன்னவளை பார்க்கவும் பாவமாய் இருந்தது,பாவையவளுக்கு.

"இங்க பாருங்க யாழினி..மத்தவங்க சொல்றதுக்காக நாம எதுக்கு அழனும்..? அடுத்தவங்க சொல்றதுக்கெல்லாம் அழுதுட்டு இருக்கனும்னா லைப் லாங் அழுதே சாக வேண்டியது தான்..அவங்க என்ன வேணா சொல்லிருக்கட்டும்..நீங்க ஃப்ரீயா விடுங்க.."

அவளைத் தேற்றிட கூறியவளோ என்ன நடந்ததென்று கேட்டு யாழினியை சங்கடப்படுத்த விரும்பாதிருக்க அதற்கு எந்த தேவையுமின்றி நடந்ததை அப்படியே ஒப்புவித்தாள்,அவள்.

"நா இன்னிக்கி கீழே போனேன்..சார் புதுசா வந்துருக்கறதால பழகிக்கட்டும்னு எங்கிட்ட ஃபைல்ஸ தந்தாரு..அது அவளுக்கு புடிக்கல..நா பைல்ஸ செக் பண்ணி இங்க கொண்டு வர்ர வர திட்டிட்டே இருந்தா.."

"ம்ம்ம்ம்ம்.."

"நானும் பேசாம தா இருந்தேன்..திடீர்னு இவ எப்டியோ..? எத்தன பேர வளச்சு போட வந்துருக்காளோன்னு சொன்னா.." எனும் போது அவளின் குரல் கமறிட பற்றியிருந்த தோற்பட்டையில் மெல்லிய அழுத்தத்தை தந்தன,பாவையின் விரல்கள்.

"எனக்கு எதுவுமே புரியல..அப்றம் தான் பணக்கார வீட்டு பொண்ணு பசங்கள ஏமாத்தி கழட்டி விட்றது ஈசி..வீட்டாளுங்களும் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொன்னா.."

கண்ணீரை துடைத்த படி மொழிந்தவளுக்கு சட்டென ஆறுதல் சொல்ல இயலவில்லை,அவளால்.அந்தப் பெண்ணின் வார்த்தைகள் முற்றிலும் பிழை தான் என்றாலும் அவளைத் திட்ட மனம் தடுத்தது.

"இப்டி தான யாழினி..ஒருத்தங்களுக்கு நம்ம மேல கோவம் இருந்தா ஆயிரம் மாதிரி பேசுவாங்க..அதயெல்லாம் யோசிச்சு கிட்டு இருந்தா நம்ம நிம்மதி என்னாகறது..? அவங்க பேசும் போதே நீங்க பதில் சொல்லிட்டு வந்திருக்கலாம்ல..அப்டின்னா இப்டி அழுதிருக்க வேண்டிய தேவ கெடயாதுல.."

ஆற்றுப்படுத்தும் விதமாய் ஆறுதல் கூறியவளுக்கு தான் தெரியும்,தான் கூறுவது எத்தனை அபத்தம் என்பது.யார் தன்னை திட்டி காயப்படுத்தினாலும் வாயைக் கட்டிக் வாங்கிக் கொண்டு கோபத்தை காட்டிட முடியா ஆற்றாமையில் அழுவது பாவையவளினதும் பழக்கம் அல்லவா..?

"என்னால அப்டி பேச முடியாது அரசி..ரொம்ப கோவமா வருது..அத காட்ட முடில..அது தான் இப்டி எல்லாத்துககும் அழுது கிட்டு இருக்கேன்.."

"வேணுன்னா போய் திட்டிட்டு வரலாமா..?" விளையாட்டுக்கென கேட்டிட அதிவேகமாய் மறுப்பாய் அசைந்திருந்தது,யாழினியின் சிரசு.

"இல்ல இல்ல வேணா.."

"ம்ம் சரி..அவங்க திட்டுனா திட்டிட்டு போகட்டும்..நாம போய் வேலய பாக்கலாம்..வாங்க போய் மொகத்த கழுவிட்டு வர்லாம்..அதுக்கப்றம் நடக்கறது பாக்கலாம்.." கூறிக் கொண்டே அவளை ஓய்வறைக்குள் அழைத்துச் செல்ல இத்தனை நேரம் தோழியின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த தாமரையின் இதழ்களில் சிறு புன்னகை.

முகத்தை நீரால் அடித்துக் கழுவிக் கொண்டு நிமிர்ந்தவளின் அழுகை சற்று மட்டுபட்டிருக்க இயல்பாக பேசலானாள்,பாவையவளுடன்.

"எல்லாம் ஓகே அரசி..என்னோட கேரக்டர அவங்க தப்பா பேசனது ஓகே..ஆனா எங்க அண்ணனோட கேரக்டரயும் தப்பா பேசிட்டாங்க..?"

"என்..என்ன என்ன சொன்னாங்க..?" பதட்டத்துடன் கேட்டவளின் முகத்தில் சடுதியாய் கோபம் குமிழிட்டது.

"அது..அது..உங்களுக்கு தெரியும்ல..என் அண்ணன்.."

"ப்ச்ச்..அதெல்லாம் தெரியும்..அந்த ஹேமா என்ன சொன்னா..?" இத்தனை நேரம் இருந்த மரியாதையான விளிப்பு காணாமல் போயிருப்பதை உணரும் பக்குவமில்லை,யாழினிக்கு.

"அது.."

"அவ என்ன சொன்னா..?"

"அண்ணன் தப்பு பண்ணிட்டு தப்பிச்ச மாதிரி பணம் இருக்கறதால பசங்கள ஏமாத்திட்டு தப்பிச்சிருவான்னு சொன்னா.." அவள் கூறி முடிப்பதை கேட்டிட கூட பாவையவள் இருக்கவில்லை,அவ்விடத்தில்.

●●●●●●●

தன் முன்னே தலை தாழ்த்தி எதுவும் அறியா குழந்தை போல விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை காணும் போது தோன்றிய சிரிப்பை அடக்கிக் கொண்டு கார்த்திக்கை பார்த்திட அவனோ நெற்றியை நீவி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்,பிரயத்தனப்பட்டு.

பாவையவளின் பின்னே யாழினியும் தாமரையும் நின்றிருக்க அவளுக்கு அருகே கன்னம் இரண்டு வீங்கப்பெற்று உச்சபட்ச கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தாள்,ஹேமா.
விழிகளில் கோபம் நிரம்பியோடிற்று.

இருவருக்கும் இடையிலேயே முற்றுப் பெற்றிருக்க வேண்டிய பஞ்சாயத்து.கார்த்திக்கின் தூரத்து சொந்தம் என்பதால் அழுது போராடி கார்த்திக்கின் முன்னே இழுத்து வந்திருந்தாள்,ஹேமா.

"யாராச்சும் சொல்லுங்க என்னாச்சு..?" அமைதியான குரலில்?கேட்டவனும் கண்டிருந்தான்,பாவையவள் ஹேமாவின் கன்னத்தில் அறைவதை.

"தோ எல்லாம் இவளால தான் சார்..நா பாட்டுக்கு என்னோட வேலைல இருந்தேன்..நீ எப்டி யாருன்னு தெரியாத ஒருத்தர பத்தி தப்பா பேசுவன்னு கேட்டா.."

"அதுக்கப்றம்.."

"எனக்கு என்னன்னு புரில..அவ கேட்ட டோன் புடிக்கல..அதுக்காக ஆமான்னு சொன்னேன்..என்ன ஏதுன்னு சொல்லாம அவ பாட்டுக்கு அறஞ்சிட்டா..இங்க பாருங்க ரெண்டு கன்னமும் எப்டி வீங்கியிருக்குன்னு.."

"ம்ம்.." என்றவனின் விரல்களோ அருகே இருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்து திறந்து வாய்க்குள் சரித்துக் கொண்டன.

"அதுக்கப்றம் தான் தெரிஞ்சுது அவ எதுக்கு அடிச்சான்னு..யாரோ தெரியாத அந்த யாழ் வேந்தன பத்தி தப்பா பேசனதுக்கு இவ இதுக்கு இவ்ளோ கோவத்தோட அறயனும்..? அதுவும் நா அவ முன்னாடி பேசவே இல்ல.." படபடவென அவள் பொறிந்து கொண்டிருக்க பையனின் பெயரை சொன்னதுமே புரையேறிட வாயில் இருந்த நீர் வெளியே சிதறும் அளவு இருமினான்,கார்த்திக்.

முரளிக்கோ சிரிப்பை அடக்கிட கடினமாய்த் தான் இருந்தது.அதுவும் இசையவளோ ஹேமாவிடம் மீண்டும் பாயப்பார்த்திட தாமரை அவளைப் பிடித்து நிறுத்தியது ஏனோ இன்னுமின்னும் சிரிப்பைத் தந்திட மறக்கவில்லை.

"அத தான் சார் நானும் கேக்கறேன்..இவளுக்கு என்னால திரும்ப அடிச்சிருக்கலாம்..ஏதோ பாவம் பாத்து விட்டுட்டேன்..இவளுக்கு ஏதாச்சும் பனிஷ்மன்ட் கொடுத்து கண்டிச்சு விடுங்க சார்.."

"ம்ம்..அரசி நீங்க சொல்லுங்க என்ன ஆச்சு..?"

"எதுக்காக சார் அவ கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க..? நீங்களும் பாத்தீங்க தான அவ எனக்கு அறைரத..அதுக்கப்றமும்.."

"ஹேமா நீங்க இருங்க..நா அவங்க கிட்டவும் கேட்டுக்கனும்.." அவளை அமைதிப்படுத்திவனின் பார்வை பாவையவளை அழுத்தமாய் தொட்டது.

"என்னாச்சு அரசி..?"

"அ..அது இந்த பொண்ண ரொம்ப திட்டிட்டா அதான் அடிச்சேன்.."

"அதுக்காக மட்டுமா..?"

"அதுல்லாம யாருன்னு தெரியாத ஆள பத்தி ரொம்ப தப்பா பேசிட்டா அதான் கோவத்துல கை நீட்டிட்டேன்..தப்பு முழுக்க என் மேல தான் சார்..நா தா கோவத்துல கை நீட்டிட்டேன்.."

விடயத்தை மென்று முழுங்கி தப்பை ஒத்துக் கொண்டிட கார்த்திக்கின் இதழ்களில் மெல்லிய முறுவல்.

"சரி நீங்க மூணு பேரும் போங்க..நா அரசி கிட்ட பேசிக்கறேன்.."

கார்த்திக்கின் கட்டளைக்கேற்ப மூவரும் வெளியே செல்ல ஹேமாவோ அவளை கோபத்துடன் பார்த்து விட்டு தான் நகர்ந்து இருந்தாள்.

"நா கூட இசை ரொம்ப ரகட்னு நெனச்சேன்..ஆனா ரொம்ப நாள் கூட பழக்கம் இல்ல..அப்டி இருந்தும் எனக்காக தெரியாத எனக்காக அடிச்சிருக்காங்க..அவங்க ரொம்ப நல்ல கேரக்டர்ல.." இசையவளை யாழினி சிலாகிக்க தாமரைக்கோ இருமல் வரப் பார்த்திற்று.

"அவ அவ புருஷன ஒத்த வார்த்த தப்பா பேசிட்டான்னு கும்மிட்டு வந்துருக்கா..இது தெரியாம இந்த பொண்ணு வேற சந்தோஷப்படுதே.." மனதால் நினைக்க மட்டுமே முடிந்தது,பாவையவளின் தோழியால்.

தன் முன்னே அமர்ந்து இருந்தவளின் கோபம் நியாயமானது தான் என்றாலும் நிர்வகிப்பவன் என்கின்ற ரீதியில் சில நடவடிக்கைகளை எடுத்திட வேண்டிய கட்டாயம் கார்த்திக்கிற்கு.

"அரசி எனக்கு எதுக்காக நீங்க அப்டி நடந்துகிட்டீங்கன்னு நல்லாவே தெர்யும்..அரவிந்த் தான் நீங்க வேந்தனோட வைஃப்னு என் கிட்ட சொல்லியிருந்தான்.." என்றிட பாவையவளின் மனதில் எழுந்த கேள்விக்கு உடனடியாக விடை கிடைத்திட்டது போல்.

"பட் என்னால எதுவும் செய்ய முடியாது அரசி..உங்கள வன் வீக்குக்கு நாங்க சஸ்பன்ட் பண்றோம்.."
அவன் தன்மையாய் கூறிட குத்தாட்டம் போட்ட மனதை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள், இசையவள்.

"சார் இந்த விஷயம் அவருக்கு மட்டும் தெரியாம பாத்துக்கோங்க..ப்ளீஸ்.." அவள் பையனை குறிப்பிட்டுச் சொல்ல அதற்கு முன்னமே பையனை அடைந்திருந்தது,செய்தி.

அதே நேரம்,

தன் கையில் இருந்த கோப்பில் நேர்த்தியாய் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த காகிதங்களை மீண்டும் மீண்டும் பார்த்தவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.

ஏதோ நடந்திருப்பதை ஊகிக்க முடிந்தவனால் நடந்திருப்பதை சற்றும் கணித்திட இயலாமல் போயிருக்க மனதில் அத்தனை சோர்வு.

மேசையில் விரல்களால் தாளமிட்டவாறு தனக்குள் உழன்று கொண்டிருந்தவனின் செயலில் புன்னகை சிந்தியவாறு அவன் முன்னே வந்தமர்ந்தான்,குணாளன்.

"வெல்கம் வேந்தன்..என்ன திடீர்னு இந்த பக்கம்...? எனிதிங் இம்பார்டன்ட்.."

"ஆமா குணா..ரொம்ப சீரியஸான விஷயம் தான்..அதான் நீங்க சொன்னதுமே வந்து நிக்கறேன்..எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா குணா..?"

"என்ன விஷயம் வேந்தன்..? நீங்க பேசறத பாத்தா ரொம்ப சீரியஸான விஷயம் மாதிரி தோணுது..இந்த ஹாஸ்பிடலோட சேர்மனா என்னால முடிஞ்ச ஹெல்ப பண்றேன்.."

"கரெக்டா ஒரு நைன் மன்த்ஸ்கு முன்னாடி இந்த ஹாஸ்பிடல்ல டாக்டர் சாய்ராம்னு ஒருத்தர் வர்க் பண்ணாரு தான..? அவரு இப்போ எங்க இருக்காரு..?"

"ஓஹ் நீங்க அவர பத்தி கேக்கறீங்களா..? அவரு இப்போ பேமிலியா ஃபாரின்ல செட்டில் ஆகி இருக்காரு..ஏன் அவர மீட் பண்ணனுமா வேந்தன்..?"

"ம்ம்..மீட் பண்ணுனா பெட்டர் தான்..பட் கண்டிப்பா எனக்கு அவரோட கான்டெக்ட் நம்பர் வேணும்..உங்களால முடியும்னா எனக்கு நம்பர எடுத்து தர முடியுமா..?"

"யாஹ் ஷ்யூர்..கண்டிப்பா இன்னிக்கி நைட்குள்ள வாங்கி தர்ரேன்.."

"ஓகே குணா..இந்த விஷயம் கொஞ்சம் சீரியஸ்..ஸோ யார் கிட்டவும் சொல்லிக்க வேணா..அதனால தான் நா டைரெக்டாவே உங்க கூட பேச வந்தேன்.."

"புரிது வேந்தன்..யாருக்கும் தெரிய வராது.."

"ஓகே குணா..தாங்க்ஸ் அ லாட்..நா அப்றமா மீட் பண்றேன்.." அவனிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிய பையனின் மனதில் சிந்தனைகள் தோன்றி குடைந்து கொண்டேயிருந்தன.

வண்டியில் ஏறி கிளப்பிய பின்னும் மனம் அடங்க மறுத்திருக்க ஆள் அரவமற்ற ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அலைபேசியை எடுத்திட அதில் முரளியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை கண்டதும் மனதில் இன்னும் கனம் ஏறுவது போல்.

"இவ ஒருத்தி நம்மல லவ் பண்ணியே சாகடிப்பா போல.." இதழ்களில் கசப்பான முறுவலுடன் விரிந்து கொடுக்க அவனின் மனநிலை மொத்தமாய் மாறிப் போய் இருந்தது.

இசையவளைப் பற்றிய எண்ணங்கள் மனதை நிறைத்திட அவனை வாட்டிக் கொண்டிருந்த குழப்பங்கள் தற்காலிகமாய் புதைந்து போயிருந்தன.

ஒவ்வொரு முறையும் நிகழ்ந்தேறுவது இதே தான் என்பதான் பையன் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.அவளின் நினைவுகளை அவனின் வாட்டம் மொத்த்தையும் தனக்குள் சுருட்டியிழுத்து மென்று தின்னும் அதிசயம் என்னவென்று யோசித்திட விரும்பவில்லை,பையன்.

ஒருவேளை தனக்கு மட்டும் வாழ்க்கை இப்படி திசை மாறியிருக்கா விட்டால்.?யோசிக்க யோசிக்க மனம் கனத்துப் போனது.

நடந்திடாவிட்டால்..?
அந்த ஒற்றைக் கேள்வியில் தான் எத்தனை எத்தனை ஏக்கங்கள்..?

நினைவுகளும் நிகழும் ஏன் எதிர்காலம் கூட அந்த ஒற்றை ஏக்கத்தில் அடங்கி நின்றிடுமே.தன்னை தொலைத்து திரிந்திடுமே.

அவள் வரும் முன் அவன் வாழ்க்கையில் உண்டான மாற்றம் எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.ஆனால்,இப்போதெல்லாம் அந்த காரண காரியங்கள் மனதை அடிக்கடி கீறி விடுவது வாடிக்கையாய் இருந்தது.

அவன் வாழ்வு மட்டும் இயல்பாய் இருந்திருந்தால் இசையவளை முன்பே காதலித்திருப்போமே என்கின்ற எண்ணம் மனதில் எட்டிப் பார்த்திட திடுக்கிட்டு கலைந்தான்,பையன்.

தறி கெட்டு ஓடும் தன் சிந்தனையை தலையில் தட்டி அடக்கிக் கொண்டவனுக்கு தன் மீதே கோபம் வந்து தொலைத்திட ஸ்டியரிங்கில் குத்தியவனுக்கோ ஆழமாய் இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

உயிர்த்தொடும்.

2024.09.06
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 14(ii)


இத்தனை நாள் கட்டுக்குள் இருந்ந சிந்தனை தாவிப்பாய்ந்திட பையனுக்கோ ஆழமாய் மூச்சு வாங்கியது.

இப்படி எல்லாம் அவனுக்கு யோசனைகள் வரக்கூடும் என்பதால் தானோ திருமணம் முடிந்து சில மாதங்களில் ராமநாதன் வெளிநாடு கிளம்பிச் சென்றதும் அவளை தனித்திருக்கச் சொன்னதே.

அவள் மீது முன்பிருந்தே அவனுக்கு அக்கறை உண்டு.அது பிடித்தமாக மாறி விடுமோ என்று பயந்து தான் அவன் விலகி நின்றதே.

அவளுக்கு மட்டுமல்ல,அவனுக்கும் அவள் மீது பிடித்தம் உண்டாகினாலும் அதை காதலாக மாற்றி மேற்கொண்டு திருமணத்தை தொடரும் சூழ்நிலையில் இல்லை,பையன்.காலமும் வாழ்க்கையும் அதற்கு அவனுக்கு இடம் கொடுத்திடவுமில்லை.

வாழ்க்கையை பற்றிய கனவுகளால் நொந்து போய் விடக் கூடாது என்று தான் வெளுத்துப் போன நிறத்தில் தான் வாழ்க்கையை அவன் கொண்டு சென்றதே.ஆனால்,பாவையவளோ அதில் கொஞ்சம் கொஞ்சமாய் வானவில்லை சேர்த்துக் கொண்டிருப்பதை தான் அவனால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

அந்த சமயங்களிலும் பாவையவளின் செயல்களில் இருந்த காதலை உணரா விடினும் அக்கறையை உணர்ந்திட்ட பையனுக்கு பயம் பிடிக்கவும் தான் அவளை விலகி இருக்கச் சொன்னதே.

அவனுக்கு தன் மீது நம்பிக்கையில்லை.தனித்திருப்பவனுக்கு அவள் மீது எளிதில் விருப்பம் உண்டாகிடுமோ என்கின்ற கலக்கம் அப்பொழுதுகளில் பையனின் மனதில் இல்லாமல் இல்லை.இசையவளின் குணங்களும் மனமும் கட்டியிழுப்பவை அல்லவா..?

ஸ்டியரிங்கில் தலை சாய்த்து இதழ் பிளந்து சுவாசித்துக் கொண்டிருந்தவனுக்குள் இப்படி உணர்வலைகள் எழுவது எல்லாம் புதிது தான்.அதே போல் ஆழமாகவும் தோன்றிற்று.

"கன்ட்ட்ட்ரோல் யாழ்ழ்ழ்.." தனக்குத் தானே எச்சரித்துக் கொண்டு எழுந்தவனோ தன் வாழ்வை அப்படியே மீட்டிப் பார்த்து தன் மனதில் மீள அழுத்தத்தை சேர்த்துக் கொண்டான்,அது அவளின் முன் கரைந்தோடப்போவது தெரியாமல்.

வீட்டுக்கு வந்த பின்னும் பையனின் இதயத்தில் உண்டாகிற்ற படபடப்பு அடங்க மறுத்திட அறைக்குள் அவன் அடைந்து கிடந்தது,அவளுக்கும் அத்தனை நிம்மதியைத் தந்தது.

இன்று அலுவலகத்தில் நடநத் விடயங்கள் அவனுக்கு தெரிய வந்திருக்குமோ என்கின்ற கேள்வி மண்டையைக் குடைந்து கொண்டேயிருக்க தன் குழப்ப முகமே அதைக் காட்டிக் கொடுத்து விடும் என்று பயந்திருந்தாள்,போலும்.

இரவுக்கு தேவையான உணவை சமைத்து விட்டு அவனையும் அவனின் சிறிய தந்தையையும் சாப்பிட அழைத்திட சோர்ந்த முகத்துடன் வந்த பையனின் முகத்தில் இருந்த வாட்டம் அவளுக்கு புரியாமல் இல்லை.

"என்னம்மா இன்னிக்கி வாசனயே தூக்கலா இருக்கு.." உணவைத் திறந்து பார்த்து சிலாகித்த படி உண்டார்,பெரிய மனிதர்.

பையனோ உணவைப் பிசைந்து வாயில் போட்டு மென்று முழுங்கினாலும் அவனின் கவனம் இங்கு இல்லை.இத்தனை நாள் இல்லாது பெரிதும் குழம்பிப் போயிருப்பவனிடம் காரணம் கேட்கத் துடித்தது,மனது.

கடமைக்கு கொறித்து விட்டு அறைக்குள் நுழைந்தவளின் பின்னூடு அவள் நுழைய அவளின் பாதச் சத்தங்களே கேட்டதுமே அவனின் முகத்தில் கலவையான உணர்வுகள்.

தன்னை இத்தனை தூரம் துரத்திக் காதல் செய்கிறாளே என்கின்ற ஆதங்கம்.பலமுறை எடுத்துக் கூறியும் தன் பேச்சை கேட்காது இருப்பதன் கோபம்.தன் மனதின் உறுதியை நிலை நிறுத்திக் கொள்ள இயலாமல் போவதால் தன் மீதே உண்டாகும் ஆற்றாமை.
தான் திட்டித் தீர்த்தும் தன் மேல் கோபம் கொள்ளாதவளின் மீதான எரிச்சல்.வாழ்க்கையின் ரணங்கள் தொட்டுத் தொட்டு கீறப்படுவதால் உண்டாகும் விரக்தி.

அத்தனை உணர்வுகளையும் கலவையாய் பிரதிபலித்து நின்றன,பையனின் விழிகள்.உணர்வுகளை எளிதில் வெளிக்காட்டும் மனிதன் இல்லை,அவன்.இன்று ஏனோ தன்னை மீறி வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

"சாரே.." அவன் நிலை அறியாது தாழ்ந்த குரலில் அவள் பேசிட விழி மூடி பெருமூச்சு இழுத்து மனதை ஈடு செய்து கொண்டவனோ அவள் புறம் திரும்பி நின்றாலும் இதழ்கள் பிரியவில்லை.

பையன் நட்புக் கரம் நீட்டியதால் உண்டாகிய தைரியமோ அவனின் வாட்டத்தின் காரணம் கண்டறிய துடித்திட அதனால் தான் பயத்தை களைந்து பையனின் முன்னே அவள் நின்றிருப்பதே.

"என்ன விஷயம் இசை..?" எத்தனை முயன்றும் அவன் குரலில் கடுகடுப்பு தெரிய ஏனோ அவளுக்கு கோபமாய் வந்தது.

அவனின் தோழனாய் இருப்பேன் என்று உறுதி தந்து கொஞ்சம் இயல்பாய் பழக முயல்வதால் தானே அவனுடன் நெருங்கிப் பழக முயல்கிறாள்.அப்படியிருக்கும் போது அவன் கடுகடுப்பை காட்டிட அவளுக்கு அவன் முன்பிருந்தது போல் சிடுசிடுவென இருந்தாலும் பரவாயில்லை என சுணங்கியது மனம்.

அவளின் விழிகளில் ஓடிய உணர்வுகளை படித்தவனுக்கு தன் மீது கோபம்.யோசியாது வாக்கு கொடுத்து விட்டோமோ என பையன் சிந்திப்பது எத்தனையாவது தடவை என்று அவனுக்கே தெரியாது.

"என்ன விஷயம் இசை..?" இறங்கிய குரலில் கேட்டான்,பையன்.அவளிடம் முகத்தை திருப்பிக் கொள்ள விருப்பமில்லை என்பதை விட அதற்கான இடமில்லை என்பதே பொருத்தம்.

"ஏன் டல்லா இருக்கீங்க..? ஏதாச்சும் ப்ராப்ளமா..?" யாழினியின் முக வாட்டமே அவளின் கோபத்தை குறைத்திருக்க யாழவனின் முகச் சுணக்கம் அவளுக்கு தைரியத்தை தந்திடாதா என்ன..?

இசையவளின் இதயம் மீட்டும் ரிதமவனின் வாட்டம் இம்சையைத் தந்திட மறக்குமா,இசையவளுக்கு..?

ரிதம் மாறுகையில் இசையின் இதமும் இயல்பின்றி தப்பித் தானே போகும்..?

"நத்திங்..ஒன்னுல்ல நீ போய் வேலய பாரு.."

"இல்ல நீங்க பொய் சொல்றீங்க..ப்ரெண்ட் கிட்ட கூட சொல்ல மாட்டீங்களா..?" கோபமும் ஆதங்கமும் ஆற்றாமையும் கலந்தடித்த குரலில் கேட்டிட சலிப்பாய் விழி மூடித் திறந்தான்,பையன்.

"இப்போ நா பேசற மூட்ல இல்ல..அப்றமா பேசறேன்.." பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் மொழிந்தவனை மேலும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை,அவள்.

ஏதோ ஒரு ஆற்றாமையில் தான் தன்னை மீறி அவள் கேட்டு விட்டதே.ஏனோ இப்போது அது தவறு என்று தோன்றிற்று.பையனின் மன எண்ணம் தெரியாது சங்கடப்படுத்தி விட்டோமோ என்று தோன்றிட தவிப்புடன் அவன் முகம் பார்த்து "சாரி.." என்றிட சிறு தலையசைப்புடன் அவன் நகர்ந்து விட்டிருந்தான்,மனதில் குழப்ப மேகங்கள் நிறைந்திருக்க.

முன்னே பாதங்களை வைப்பவனின் முதுகை வெறித்தவளுக்கு இருந்த தவிப்பு அடங்கிடாது இருக்க தனக்குள் சிந்தனையில் மூழ்கிய படி நடந்தவனோ கவனம் தப்பி அறையில் இருந்த சிறு அலுமாரியின் மேல் முனையில் நெற்றியை இடித்துக் கொள்ள பதறிப் போனாள்,பாவையவள்.

"ஐயோ என்னாச்சு..?" பதறிக் கொண்டே அருகே வந்தவளை கையமர்த்தி தடுத்தவனின் செயலில் அவளின் கோபம் உச்சிக்கு ஏறியது.

இயல்பாகவே அவளுக்கு கோபம் வருவது அரிதென்று சொல்லி விட முடியாது.சுள்ளென்று கோபம் வந்தாலும் அடக்கிக் கொள்பவளுக்கு சில சமயம் உச்சானிக் கொம்பில் ஏறி நிற்கும் கோபம் இல்லாத தைரியத்தை வரவழைத்திடும்,இன்று ஹேமாவின் விடயத்தில் நடந்தது போலவே.

அடிபட்ட வேகத்தில் நெற்றி புடைத்து கிளம்பியிருக்க சிறு காயமும்.உண்டாகியிருந்த காயத்தில் இருந்து சிறு கோடாய் வெளிப்பட்டு நின்றிருந்தது,உதிரம்.

"ரத்தம் வருது.." பதபதைப்புடன் ஆராய முயன்றவளை தடுக்க முயன்ற கரத்தை எட்டிப் பிடித்தவளோ அவனின் காயத்தை எட்டி ஆராய்ந்திட சத்தியமாய் அவளை தடுக்கும் மனநிலையில் இல்லை,பையன்.

"வாங்க மருந்து போடலாம்.." பதட்டமாய் சொன்னவளிடம் மறுப்பு தெரிவித்தவனை இழுத்துக் கொண்டு சென்று சோபாவில் அமர வைத்தவனுக்கு உறுதியாய் மறுக்க முடியும் தான்.மீண்டும் தோழமையை இழுத்து விடுவாளோ என்று பயந்து அமைதி காத்தவனின் முன்னே முதலுதவிப் பெட்டியுடன் வந்து நின்றாள்,பாவையவள்.

சோபாவில் சாயந்து அமர்ந்து விழி மூடியிருந்தவளின் இமைகளுக்குள்ளே கருமணிகள் அசைந்திட அதுவே அவனின் குழப்ப நிலைக்கு சான்றாய்.

"ச்சே மடச்சி..நீ வேற டார்ச்சர் பண்ணி இருக்க.." தனக்குத் தானே திட்டிக் கொண்டவளின் மனதில் குற்றவுணர்வு வழிந்தோடிற்று.

மருந்தை எடுத்து பஞ்சில் நனைத்து மெதுவாய் அவனுக்கு பூசி விட்டவளின் விழிகளோ அவன் வதனம் வலியில் சுருங்குகிறதா என்று சுழன்று ஆராயத் தவறவும் இல்லை.

பையனுக்கு காயத்தில் மருந்து பட்டதும் எரிந்தது தான்.எப்போதும் போல் வெளிக்காட்டாது இருக்க அவனின் வலி உணர்ந்தவள் போல் மென்மையாய் ஊதி விட்டவளின் கருத்தில் அவனின் காயம் மட்டுமே.

அத்தனை நேரம் விழி மூடி இருந்தவனோ தனிச்சையாய் இமை பிரித்திட இதழ் குவித்து ஊதிக் கொண்டே இருந்தவளின் விழிகள் முழுதாய் அவன் விழிகளுக்குள் விழுந்தன.

அத்தனை நெருக்கத்தில் அவளின் பேராழி விழிகளை கண்டதாலோ என்னவோ,அவனுக்குள்ளும் ஏதோ ஆனது.

முனைகளுக்கு சுழன்றோடி அவன் காயத்தை அவளின் கருமணிகள் ஆராய்ந்திட இமைக்காக பார்வையுடன் சற்றே அவளின் விழிகளை உரசியவனின் பார்வையோ சற்றே தாழ்ந்து ஒற்றைக் கையால் அவனின் கன்னத்தையும் தாடையையும் பற்றியிருந்தவளின் விரகளை தொட்டு மீண்டது.

இடைவெளி விட்டுத் தள்ளித் தான் நின்றிருந்தாள்.ஆனால்,ஆட்டுவிக்கும் கருவிழிகள் மட்டும் அத்தனை நெருக்கமாய்..

இதுவரை அவளின் விழிகளை பார்த்திருக்கிறான் தான்.இருப்பினும் இத்தனை நெருக்கமாய் கண்டதேயில்லை.

சிடுசிடுவென திட்டுபவனுக்கு அவளின் விழிகளை ஆராயும் எண்ணமே இல்லாதிருக்க ஏனோ தற்சமயம் அவள் விழிகளில் புலப்படும் உணர்வுக் கோலங்களை ஆராய்ந்து உள்வாங்கி உணர்ந்து கொண்டிருந்தவனுக்கு தன் விழிகளை விலக்கிக் கொள்ளத் தான் முடியவில்லை.கட்டியிழுத்து கவர்ந்தன,போலும்.

அவனுக்கான மொத்த உணர்வுகளும் அவள் விழிகளிலா அழகாய் புலப்பட்டது.உள் மனதை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய விழிகளின் ஜாலம் நிச்சயம் பையனுக்கு புதிது தான்.

அவளுக்கே வலிப்பது போன்ற தவிப்பும் காயத்தை மீள மீள ஆராய்கையில் தெரிந்த பதட்டமும் விழிகளில் ஓரமாய் கசிந்த அக்கறையும் அக்கறையின் அடித்தளத்தில் ஒளிந்திருந்த கரிசனமும் அவனை ஆட்டி வைத்தது என்றால் அவளை கெத்தை மொத்தமாய் கரைந்தோடச் செய்திட முட்டை விழிகளை முழுக்க நிரப்பியிருந்த காதல் பையனை மூச்சடைக்க வைத்திட்டதே.

எல்லா உணர்வுகளையும் காதலுக்குள் அமிழ்த்தி மற்றையை உணர்வுகளை விட காதலை அதிகமதிகாய் பிரதிபலித்துக் கொண்டிருந்த விழிகள் ஏதோ செய்தது,பையனின் உயிருக்குள்.

அவனுக்கென தவித்து அவனுக்கென துடித்து அவனுக்கென அவள் செய்திடும் ஒவ்வொன்றும் அவனை அவனாய் இருக்க விடுவதில்லையே.

விழிகளில் தெரிந்த அலைப்புறுதலும் அவன் கன்னத்தை பற்றியிருரந்த விரல்களில் இழையோடிய நடுக்கமும் பையனின் உயிரின் அடி ஆழம் தொட்டுச் சென்றதே.

கன்னத்தை பற்றியிருந்த விரல்களின் ஈரத்தை அவனின் ஒட்டு மொத்த தேகமும் உணர்ந்து கொள்வது போன்ற பிரம்மை அவனுக்குள்.அந்த குளிர்மை அவன் ஆன்மாவுக்குள் சூடு பரப்பியது.

அவனின் இமைக்காத பார்வையை பாவையவள் உணரவில்லை போலும்.

"வலிக்குதா..?" காயத்தில் ப்ளாஸ்டரை ஒட்டிக் கொண்டே அவனின் விழிகளுக்குள் பார்வையால் ஊடுருவி கேட்டிட மறுப்பாய் தலையசைத்தவனுக்கு அந்த நொடி பார்வையை தாங்கிட திராணி இல்லை,சத்தியமாய்.

அவள் பார்வையை விலக்கிக் கொண்டு விட்டாள்.அவன் தான் அந்த விழிகளில் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் திணறித் தடுமாறி நின்றான்.

விழிகள் மோதிக்கொண்டு காதலை பிரசவிக்கும் என்பார்கள்.அவனுக்கோ இதயத்தின் ஆழத்தில் பிரளயத்தை அல்லவா உண்டாக்கியது..?

காதலின் துளிர்ப்புக்காக தூது தானோ அந்த பிரளயம்..?

கடைவிழி உரசலில் கொஞ்சமும் அசையாதவனின் மொத்த தைரியத்தையும் உறுதியையும் கருவிழியின் ஒரு நொடி மோதல் கருவறுத்துப் போட்டது.

கருவிழிகள் நேர்கோட்டில் மோதிக் கொண்டு உரசியது ஒரு நொடி தான்.அந்த ஒரு நொடியில் உண்டாகிய மின்னல் கீற்று பையனின் உயிரைப் பற்ற வைத்ததை என்னவென்று சொல்ல..?

அவள் பார்ச்சிய பார்வை அவனின் இதயக் கூட்டை துளைத்துக் கொண்டு உயிர்வரை தீண்டி நின்றது.அவனின் இறுக்கங்களினதும் அழுத்தங்களினதும் அடி ஆழத்தை ஆட்டி விரிசல் உண்டு பண்ணுவதாய்.

காதல் இல்லை..
நிச்சயம் காதல் இல்லை..
இருப்பினும் அவள் விழிகள் அவனை ஏதோ செய்ததே..?
அதை என்னவென்று சொல்ல..?

அவனுள்ளத்தை பிடித்து அசைத்திருந்தால் கூட தாங்கிக் கொள்வான்.இது உயிரை அல்லவா ஆட்டிப் பார்த்தது..?

உயிரின் அடி ஆழம் வரை பரவி உள்ளுக்குள் அலையடித்த உணர்வின் பெயர் தெரியாது தவித்தவனுக்கு தன் நிகழ்ந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.

ஒரு நொடிப் பார்வையென்றாலும் அந்த ஒரு நொடிகளில் அவன் விழிகளுக்குள் அவன் ஜீவன் வாழ்ந்து தொலைத்ததே.உணர்வுகள் உருமாறி பிறழ உயிர்த்துடிப்பு மொத்தமும் உறைந்து நின்றதே.

ஆன்மாவின் ஆழம் வருடிய பார்வையில் அவனின் ஆயுள்ரேகை முழுவதும் கரைந்து போனதே.அவனின் கம்பீரத்தை வாரி சுருட்டிக்கொள்ளும் விழியுரசலில் அவன் எண்ணம் மொத்தமும் தேங்கி நின்றதே.கண நேர விழி மோதலில் அவன் இறுக்கங்களை தாண்டி அவள் விழிகளின் விம்பம் அச்சுப்பிசகாமல் அடிமனதில் தேங்கி நின்றதே.

எப்படி மறுக்க இயலும் அவனால்..?

இது நாள் வரை குழந்தையாய்த் தெரிந்தாள்.இப்போது அப்படியில்லை.ஒற்றைப் பார்வையில் அவன் மனதில் அவளின் மொத்தப் பரிமாணத்தையும் மாற்றிப் போட்டு விட்டாளே.

ஒற்றைப் பார்வை உயிரைத் துளைக்குமா..?
துளைத்து நிலைத்தது.
ஒற்றை விழி மோதல் ஜீவனைக் களவாடுமா..?
களவாடி நிரப்பிக் கொண்டது.

அவள் காயத்துக்கு மருந்திட்டு விட்டு நிமிரும் வரை அவன் இயல்புக்கு மீண்டிருக்கவில்லை.உள்ளத்தில் உணர்வுகள் ஆழிப்பேரலையாய் விசிறடித்தாலும் விழிகளில் தெரியும் உணர்வற்ற பாவமே அவனுக்கு அரணாய்.

அவளோ அவனை விட்டு விலகிச் சென்று கைகளை கழுவ அப்போது தான் இயல்பு மீண்டான்,பையன்.

இருபுறமும் தலையாட்டி தன்னை மீட்டுக் கொண்டு எழுந்தாலும் இன்னும் இரு விழி விலங்கில் இருந்து முற்றாய் மீண்டிருக்காது போக சலிப்பாய் பெருமூச்சு விட்டவன் காதலில் காணா பரிமாணங்களை எல்லாம் காட்டிக் கொடுக்கும் பாவையவளின் மீது துளிக் கோபமும்.

இடக்கரத்தை நெஞ்சில் வைத்து அழுத்திப் பார்த்தான்.பையனின் இதயத் துடிப்பு கொஞ்சம் வேகமெடுத்திருந்தது.

வேகமெடுத்திருந்த யாழவனின் இதயத் துடிப்பு என்ன சொன்னதாம்..?
இசையவளுக்காக துடிக்கப் போவதற்கு முன்னோட்டம் காட்டியதாமா..?

உயிர்த்தொடும்.

2024.09.06
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 15(i)


இரு நாட்களாய் தன்னுடன் முகம் கொடுத்து பேச மறுப்பவனின் செயலுக்கான காரணம் புரியாதிருக்க அதுவே தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தாலும் எப்போதும் அலட்டிக் கொள்ளாமல் தான் நடமாடித் திரிந்தாள்,பாவையவள்.

இருப்பினும் மனதுக்குள் அன்று தான் அதிகப்படியாய் பேசியதால் தான் ஒதுக்கம் காட்டுகிறானோ என்கின்ற எண்ணம் அலைக்கழித்து வதைத்துக் கொண்டிருந்தது.கேட்டால் இன்னும் ஒதுக்கம் கொள்வானோ என்று பயந்து தான் எதுவும் பேசாது தானுண்டு என்றிருந்ததே.

காலையில் எழுந்து அலுலவகத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தவனின் விழிகளில் ஆற அமர காலையுணவை உண்டு கொண்டிருப்பவள் விழவே பையனுக்கு இரண்டு நாள் அவள் அலுவலகம் செல்லாத விஷயம் கருத்தில் சுரீரென்று உரைத்தது.

இரு நாட்களும் ஏனென்று இல்லாமல் அவளை எதிர் கொள்ள அத்தனை தயக்கம்.அவனில் எப்போதும் இருக்கும் தைரியம் எங்கு சென்று ஒளிந்து கொண்டதென்றே தெரியவில்லை.

இதுவே அவனின் வாழ்க்கை இயல்பாய் இருந்திருந்தால் கடந்திருப்பான்.அவன் நிகழை மட்டும் அவள் விழிகள் இழுத்துக் கொண்டிருந்தால் அவனுக்கு அது ஒரு பொருட்டாக இருந்திருக்குமா என்று அவனுக்கே தெரியாது.

ஆனால்,அந்த விழிகள் அவனின் நிகழோடு சேர்த்து அவனின் எதிர்கால வாழ்க்கை பற்றிய சிந்தையை கூட தன்னுள் மொத்தமாய் இழுத்துக் கொண்டிருந்ததே.

என்ன தான் பையன் இயல்பாய் காட்டிக் கொண்டாலும் வாழ்க்கையின் நிதர்சனமும் நிச்சயமற்ற தன்மையும் மனதில் ஒரு மூலையில் அசரீரி போல் ஒலித்துக் கொண்டேயிருக்க அவனால் எல்லாவற்றையும் மறந்து முற்றும் துறந்து எதிலும் மூழ்கி விட முடிவதில்லை.அவனைச் சூழ்ந்திருக்கும் இறுக்கத்தின் காரணமும் அது தான்.

அவள் விழிகளை சந்திக்காத வரை அவனுமே அப்படித் தான் தன் மனதைப் பற்றி எடை போட்டி வைத்திருந்தான்.ஆனால்,இரு விழிப்பார்வையால் அவள் விழிகளும் அவன் விழிகளும் சந்தித்துக் கொண்ட வினாடியில் அது மொத்தமும் தகர்ந்தல்லவா போயிருந்தது..?

அவள் விழிகளுக்கு எத்தனை சக்தி என அவன் வியந்த கணமும் அதை உணர்ந்த நொடியும் அதுவாகத் தான் இருக்கும்.அதனால் தானே இத்தனை பயம்.

இன்று தான் கொஞ்சம் இயல்பு மீண்டாற் போல் உணர்ந்தது,அவன் மனம்.

கழுத்துப் பட்டியை சரி செய்து கொண்டு அவளருகில் வந்தவனோ தொண்டையைச் செருமிட விழி நிமிர்த்தி பார்த்தவளுக்கு அவன் பேச வந்ததே போதுமென்றிருந்தது.

"என்ன ரெண்டு நாளா ஆஃபீஸ் போகாம இருக்க..? என்ன விஷயம்..?" எதுவும் அறியாதது போல் கேட்டிட விழுங்கிய உணவு பாதியில் தொண்டைக்குழியில் அடைத்து நிற்க பாவையவளின் விழிகள் பிதுங்கின.

சடுதியாய் இருமல் உண்டாகிட தலையில் தட்டிக் கொண்டு பையனின் வதனத்தை ஏறிட்டவளுக்கு அவனிடம் சொல்ல காரணம் ஏதும் அகப்படவில்லை,உடனடியாய்.

"உன்ன தான் கேக்கறேன் இசை.."

"அ..அது லைட்டா ஜலதோஷம்..அதான் போகல.."

"ஆமால..ஐஸ்க்ரீம் ஜலதோஷத்துக்கு ரொம்ப நல்லதுல்ல.." நேற்று அவள் வரைமுறையின்றி குளிர்கழி சாப்பிட்டதை குறிப்பிட்டு பையன் கூறிட ஐயோவென்றிருந்தது,பாவையவளுக்கு.

"இல்ல..இல்ல.."

"என்னாச்சு உனக்கு..? ஆஃபீஸ்ல ஏதாச்சும் ப்ராப்ளமா..?" அவளின் வாயைப் பிடுங்கும் நோக்கில் கேட்டிட பதறித் தொலைத்தாள்,அவனின் சரிபாதி.

"ஐயோ அப்டிலாம் இல்ல.."

"இல்ல இல்லன்னு சொல்ற..அப்டின்னா ஏதோ இருக்கு..நா வேணுன்னா வரட்டா கார்த்திக்கோட பேச..?" அவள் தன் வாயாலே உண்மையை உரைத்திட வேண்டும் என்கின்ற முனைப்பில் பையன் மேலும் பேசிட அவளுக்கோ கலவரமானது.

"ஐயோ அப்டிலாம் பண்ண வேணா..நீங்க ஆஃபீஸ்கு வர வேணா.." படபடப்பாய் மொழிந்தவளின் வார்த்தைகளுக்கு பின்னே இருக்கும் காரணம் அறியாதவனா பையன்..?

திரும்ப திரும்ப அவளின் அக்கறை அவனின் உயிர்த்தொட்டு மாண்டிடச் செய்யும் மாயம் அவன் அறியான்.

"எதுக்கு வர வேணா..?"
புருவங்களால் கொக்கி போட்டு அவன் தொடுத்த கேள்வியில் அவளுக்கு சந்தேகம் வந்தாலும் அதை மேலும் வளர விடாமல் செய்தது,பையனின் கேள்வி.

"கேட்டா பதில் சொல்ல மாட்டியா இசை..?"

"அது ஒன்னுல்ல..நீங்க ஆஃபீஸ்கு வர வேணா.." படபடவென மொழிந்தவளுக்கு உள்ளங்கை பயத்தில் குளிர்ந்து போனது.

"சரி நா ஆஃபீஸ் வர்ல..என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு..எதுக்கு ஆஃபீஸ் போகாம இருக்க..?"

"அ..அது.."

"நீயா சொன்னன்னா உனக்கு சேஃப்..இல்லன்னா நா கண்டிப்பா உன் ஆஃபீஸ்கு வந்துருவேன்.." தீர்க்கமாய் அவன் சொல்ல அவளுக்கு மாட்டிக் கொண்டது தெளிவாய்ப் புரிந்திட வெகு நேரம் பிடிக்கவில்லை.

"அது ஒன்னுல்ல..என்னோட வேல செய்ற பொண்ணு..சும்மா தான் இருந்தேன்..ஏதோ சொன்னா..சுள்ளுன்னு கோவம் வந்துச்சா..அதான் அடிச்சேன்..அதுக்கு தான் சஸ்பண் பண்ணிட்டாங்க.." எதுவும் அறியாமல் பூனைக்குட்டி போல் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு சொன்னவளை பற்றி பையனுக்கு தெரியாதா என்ன..?

"ம்ம்ம்ம்.." வழமை போல் ராகமிழுக்க பயந்து விட்டாள்,அவள்.

"ஐயோ நம்புங்க சாரே..இது தான் நடந்துச்சு..இது தான் உண்ம.."

"ம்ம்ம்ம்.." மீண்டும் அதே இழுவையின் ராகம் மாறிடாது அவன் குரல்.

"ஐயோ ம்ம் சொல்லிச்சுன்னா வேணும்னே ஆழம் பாக்குதுன்னு தான அர்த்தம்..மாரியாத்தா நா இப்போ என்ன பண்ணுவேன்.." மனதுக்குள் புலம்பித் தீர்த்தவளோ கலவரம் மின்ன பார்த்து வைத்தாள்,அவனை.

"ம்ம்..அப்றம்..?"

"யோவ் இது என்ன மெக சீரியலா..அப்றம் அப்றம்னு கத கேக்க..இவன் வேற எப்ப பாரு நம்மளோட பீதிய கெளப்பி கிட்டு.." முணுமுணுத்தவளை காப்பாற்றவென அங்கு வந்து சேர்ந்தார்,பையனின் சிறிய தந்தை.

அதே நேரம்,

அறைக்குள் அடைந்து கிடந்து மருகும் தன் மனைவியைப் பார்க்கையில் உள்ளம் குமைந்தது,ரத்னவேலுக்கு.

அவராலே தன் குற்றவுணர்வை போக்கிக் கொள்ள முடியாதிருக்க மனைவியால் அது கொஞ்சமும் இயலாத காரியம் என்று புரிந்து தான் இருந்தது,மனிதருக்கு.

இமைகளின் ஓரமாய் கண்ணீர் வழிய கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்த மனைவியைக் காணும் போதே தானாகவே ஒரு நெடுமூச்சு.

மிடுக்குடன் வலம் வரும் தைரியமான பெண்மணியாய் மனைவியை கண்டிருந்தவருக்கு அவரின் இந்த உடைந்த தோற்றம் பிடிக்கவில்லை.தன் வாழ்நாளில் மனைவி இத்தனை உடைந்து அவர் கண்டதுமில்லை.

மனைவியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டவரோ "மரகதம்" என்று பரிவாய் அழைத்திட சத்தம் போட்டு அழத் துவங்கினார்,மரகதவள்ளி.

அவரின் கண்ணீரை கண்டு கணவரானவரின் விழிகளிலும் ஈரம் சேர்ந்தது.அவரின் குற்றவுணர்வை கண்ணீராய் கரைந்து தன்னை போக்கிக் கொள்ள முயன்றது போலும்.

"அழாத மரகதம்..எல்லாம் சரியாய்டும்..நாம போய் பேசலாம்..நம்ம பையன் தான என்ன திட்டுனாலும் பரவால..நம்ம பையன் தான..அவனுக்கில்லாத உரிமயா..நாம போய் பேசலாம்..கண்டிப்பா நம்மள மன்னிச்சிருவான்.." விழிகளை சிமிட்டிய படி சொன்னவரின் குரலில் அத்தனை கமறல்.

"இல்லங்க என்ன நடந்தாலும் நாம அவன நம்பி இருக்கனும்ல..யா..யார் என்ன சொன்னாலும் நாம அவன நம்பியிருக்கனும்ல.." கதறியவருக்கு பையன் அன்று பார்த்த பார்வை நினைவில் வரும் போதெல்லாம் மனம் துடிக்கத் தான் செய்கிறது.

ரத்னவேலுக்கும் மொழிய ஆறுதல் வார்த்தைகள் இல்லை.அவரையும் இன்னொருவர் தேற்றி விட நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது,அவர் மனம்.

"நாம போனா நம்ம கூட பேசுவானாங்க..?" அழுகுரலில் கேட்டவருக்கு வார்த்தைகளை உதிர்க்கும் போதே கண்ணீர் வழிய துடைத்து விட்டன,கணவரின் கரம்.

"கண்டிப்பா பேசுவான் மா..வேந்தன பத்தி தான் நமக்கு தெர்யும்ல..ரொம்ப பாசக்காரன்..கண்டிப்பா பேசுவான் மா.." மனைவியைத் தேற்றியவரின் மனதிலும் அதே கேள்வி இருக்கத் தான் செய்தது.

"அப்போ நாம இன்னிக்கே கெளம்பி போலாமாங்க..அவன போய் பாத்து பேசுனாலே எனக்கு போதுங்க.."

"இல்லம்மா..இப்போ வேணாம்..ராமுவும் இப்போ ஃபோன எடுக்க மாட்டேங்குறான்..வேந்தனுக்கும் கொஞ்சம் மனது ஆறட்டும்..இன்னும் ஒரு வாரம் இல்லன்னா ரெண்டு வாரம் கழிச்சு நாம போய் பாத்துடலாம்..அது வர கொஞ்சம் பொறுத்துக் கோ.." என்றவருக்கு மகன் தம்மை மன்னித்து விடுவான் என்று மனதோரம் சிறு நம்பிக்கையும் இல்லாமல் இல்லை.

மன்னிப்பான் தான்,
அதில் மாற்றுக்கருத்தே இருந்திடப் போவதில்லை.
ஆனால் மறப்பது..?

மன்னிப்பது இலகு தான்.அதை விட மன்னிப்பது இலகு தான்,மனமென்று ஒன்று இல்லாதிருந்தால்..
அதில் ரணமென்று ஒன்று நில்லாதிருந்தால்..

மறப்பது ஒன்றும் அத்தனை எளிதல்லவே.
மறந்திடுவான் என்று யாராலுமே உறுதியாகக் கூறிட முடியாதே.ஏன் பையனாலும் கூட.

அவனே மறந்ததாய் நினைத்திருக்க எதிர்பாரா சமயங்களில் நினைவில் வந்து பையனை குத்தாது என்பது நிச்சயமில்லையே..?

மன்னிக்கப்பட்டதெல்லாம் மறக்கப்பட்டதல்ல..
மறக்கப்பட்டதெல்லாம் மன்னிக்கப்பட்டதுமல்ல..

●●●●●●●●

வானை நிரப்பியிருந்த கார்முகிலை சிறு வியப்புடன் பார்த்து நின்றிருந்தாள்,பாவையவள்.

வானம் முழுவதும் கார் முகில்கள் நிரம்பி சூழ்ந்து நின்றிருந்தன.அந்த மேகங்களுக்கு தான் எத்தனை திடம்..?

இன்னும் சொற்ப நேரத்தில் தான் முற்றாய் மாய்ந்து போகப் போவது தெரிந்தும் ஒளிந்து கொள்ளாமல் விறைப்பாய் நின்றிடுதே.மாண்டு போனாலும் தன் உதிரம் எண்ணற்ற ஜீவன்களை வாழச் செய்திடும் என்கின்ற இறுமாப்பு கொடுத்திட்ட தைரியமோ..?
இல்லை,இருக்கும் வரையாவது பிடித்தவாறு வாழ்ந்திருப்போம் என்கின்ற ஆசையோ என்னவோ..?

இறப்பின் விளிம்பிலும் எதை பற்றியும் யோசியாது ஆங்காங்கே ஓடித்திரிந்து கொண்டிருக்க அவளின் பார்வை கார்முகில்களைத் தான் காதலுடன் தழுவிக் கொண்டிருந்தது.

வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பிடத் தான் பேரூந்து நிறுத்ததில் தரித்திருந்தாள்,பாவையவள்.

தாமரையும் இன்று விடுப்பு எடுத்திருக்க உடன் செல்ல யாரும் இல்லாது போனது.மழையின் வரவால் பேரூந்து நிறுத்தத்தில் கூட ஆட்கள் எவரும் இல்லை.அவளின் நேரத்துக்கு முச்சக்கர வண்டிகளும் வர மறுத்தது.

அஸ்தமனத்தை அண்மித்த நேரம் என்பதாலும் மழையின் திடீர் வராலும் மெல்லிய இருள் போர்வை அவ்விடத்தை நிரப்பியிருக்க அது அவளுக்கு எந்த வித பயத்தையும் தந்திடவில்லை.

"இந்த பஸ்ஸு வேற.." எரிச்சல் பட்டு முணகிக் கொண்டே நின்றிருந்தவளை கோணல் பார்வையால் தீண்டிக் கொண்டே அவளருகே வந்து நின்றான்,ஒருவன்.

குடித்திருப்பான் போலும்.போதையில் விழிகள் சிவந்து போயிருக்க மதுவின் நெடியை பாவையாலும் உணர முடிந்தது.

அவனின் கோணல் பார்வை அவளுக்குள் சிறிதாய் பயத்தை விதைத்திட சற்றே தள்ளி நின்றவளை மேலும் நெருங்கி வந்தான்,அவன்.

உதவிக்கு கூட ஆள் இல்லை என்கின்ற எண்ணமே அவளின் மொத்த திடத்தையும் தகர்த்துப் போட்டிருக்க இதற்கு முன் இப்படி நேர்ந்திராததால் செயலற்றுப் போயிருந்தது,மூளையும்.

முகக் கவசத்தின் ஊடு தெரிந்த விழிகளில் பயம் மின்னிட அவளோ பாதங்களை எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் விகாரச் சிரிப்புடன் மேலும் நெருங்கலானான்,அவன்.

அவளுக்கோ பயம் முழுதாய் ஆட்டிப் படைத்திட விடுவிடுவென நடந்திட தன்னை அவன் தொடர்வதை உணர்ந்தவளோ எதைப்பற்றியும் சிந்தியாது ஓடத் துவங்கி இருந்தாள்.

மூச்சிறைக்க உடல் தொய்யும் வரை ஓடிக் கொண்டு வந்தவளுக்கோ அவன் தன்னை நெருங்கி வருவது கண்டு மூச்சடைத்துப் போனது.

பயத்தில் விழிகள் கலங்கிட ஓடிக் கொண்டே வந்தவளின் முன்னே ஆபத்தில் உதவுபவனாய் வந்து நின்றான்,பையன்.

இதுவரை அவனைக் கண்டதேயில்லை,அவள்.ஆனால்,அவன் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை பாதுகாப்பாய் உணர வைத்தது.

பாவையவளை ஓரமாய் இருக்கச் சொல்லி விட்டு பின் தொடர்ந்து வந்த குடிகாரனை அடித்துச் சாற்றி விட்டுத் தான் அவளருகில் வந்தான்,பையன்.

அவனின் செயலே அவனைப் பற்றி நல்லெண்ணத்தை தாராளமாய் விதைத்திருக்க அந்த விழிகளில் தெரிந்த கோபம் அவளை தாக்கியது.

"எங்க போனும்..?" இத்தனை நேரம் தன் முகத்தை மறைத்திருந்த முகக் கவசத்தை கழற்றிய படி பையன் கேட்டிட அப்பொழுது தான் அவனின் முகத்தை சரியாக கண்டு கொண்டாள்,இசையவள்.

அவனின் செயலைப் போன்று அவனின் உருவம் அவளுக்கு எந்த மாற்றத்தையும் தராதிருக்க அந்த விழிகளில் தெரிந்த வெற்றுப் பாவத்தை பையன் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை.

"அ..அது நா நடந்து போறேன்.." அவள் தன் தரப்பில் பேச பையனுக்கு கோபம் வந்திருக்கும் போலும்.விழி மூடித் திறந்து கோபத்தை அவன் அடக்கியது அவள் விழிகளில் இருந்து தப்பவில்லை,சற்றும்.

தன்னை நம்பவில்லை என்கின்ற ஆற்றாமையால் எழுந்த கோபமாய்த் தான் இருக்கும் அது.

"இங்க பாருங்க பொண்ணு..கார்லயும் ஒரு பொண்ணு இருக்கா..நீங்க நம்பி எங்க கூட வரலாம்..இப்போதக்கி இந்த ரூட்ல பஸ் ஆட்டோ எதுவும் வராது..முன்னாடி இருக்குற ரோட ஏதோ கட்சி ஊர்லவத்துக்காக க்ளோஸ் பண்ணியிருக்காங்க.." அலட்டலின்றி கம்பீரமான குரலில் பையன் மொழிந்திட அவளுக்கும் அவனுடன் செல்வதை தவிர வேறு வழியில்லையே.

பையனை ஏனோ ஆழ்மனம் நம்பிட வண்டியில் ஏறிக் கொண்டவளுக்கு முன் இருக்கையில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணைக் கண்டதும் நிம்மதி பிறந்தாலும் ஏறி அமர்ந்த பின் வண்டி கிளம்பியதும் சிந்தனை தாறுமாறாய் ஓடிற்று.

"ஒரு வேள கடத்தி மயக்க மருந்து கொடுத்து இருக்குறதனால தான் இந்த பொண்ணு தூங்கி இருக்கோ.."

"நம்மளுக்கு திடீர்னு திரும்பி இப்டி மயக்க மருந்து அடிச்சி மயங்க விட்ட பாடி பார்ட்ஸ் எடுத்து வித்துருவாங்களோ.."

எல்லையின்றி விரிந்த சிந்தனை உண்டாக்கிய பயத்தினால் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளின் விழிகள் பையனைத் தழுவியதை உணர்ந்தாலும் அவளின் பயம் இயல்பு தான் என உணர்ந்தவனும் காய்ந்து விழவில்லை,அவளிடம்.

காய்ந்து தீர்த்தாலும் யாழவனின் மீது குற்றம் சொல்வதற்கில்லை.அவன் குணமும் அப்படித் தானே.இத்தனை காப்பாற்றியும் தன் மீது நம்பிக்கை வராதிருந்தால் அவனுக்கும் இயல்பான ஆற்றாமை எழத் தானே செய்யும்.

அவளின் வீட்டிற்கு செல்லும் வழியின் துவக்கத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னவள் இறங்கிக் கொண்டிட அவனுக்கு நன்றி உரைக்கும் முன்னமே விருட்டென வண்டியைக் கிளப்பியிருந்தான்,பையன்.

"ரொம்ப டெரர் பீஸு போல.." ஆயாசமாய் நினைத்தவளின் கரங்கள் முகத்தை மறைத்திருந்த முகக் கவசத்துக்கு அப்போது தான் விடுதலை அளித்தது.

அவனுக்கோ அவள் யாரோ ஒருத்தியாய் இருக்க அவளுக்கு அவன் மீது அந்த எண்ணம் இல்லாமல் இருந்தது,அந்த நொடி.

மேகம் நிறைந்த வானத்தை பார்த்துக்கொண்டே பழைய நினைவுகள் மீட்டியவாறு இருந்தாள்,பாவையவள்.

எப்போதுமே மழைக்கு முன்னான சாயல் எல்லாம் அவர்களின் முதல் சந்திப்பின் சாரலை கொட்டிச் செல்ல மறப்பதில்லை,
இப்போது போல்.

பால்கனிக் கம்பியை பற்றிய படி நின்றிருந்தவளின் விழிகளில் மினுமினுப்பு ஏறியிருக்க இதழோரம் மென் புன்னகை ஓடிக் கொண்டிருந்தது.

அதே முறுவலுடன் இருந்தவளை கலைத்தது,அலைபேசி அடிக்கும் ஓசை.

உயிர்த்தொடும்.

2024.09.07
 
Status
Not open for further replies.
Top