ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 10(ii)


கண் விழித்த பார்த்த யாழவனின் விழிகளில் இசையவள் வீழாது போக உறக்கம் தோய்ந்திருந்த விழிகள் மெல்ல இடுங்கினாலும் மறு புறம் திரும்பி படுத்துக் கொள்ள முயன்றவனை எழுப்பி விட்டது,ஏதோ கீழே விழும் சத்தம்.

"கிச்சன்ல ஏதோ உருட்டிகிட்டு இருப்பா.." சலிப்புடன் நினைத்துக் கொண்டவனோ விழி மூடப் பார்த்திடினும் தொடராய் வந்த இருமலின் ஒலி அவனை அவ்வண்ணமே தரித்த இடம் கொடுத்திடாது போனது.அவள் மீதிருக்கும் அக்கறை சற்றே எட்டிப் பார்த்திருக்கும் போலும்.

எழுந்தமர்ந்தவனோ கட்டிலில் இருந்த இறங்கப் பார்த்திடினும் மனசாட்சி தடுத்தது,அவளுக்காக.

"நீ இப்ப போய் அக்கறன்னு பாத்தன்னா அவளுக்கு உன் மேல இருக்குற இன்பாக்ஷுவேஷன் இன்னும் கூடித் தான் போகும்..கண்டுக்காத மாதிரியே இரு.." அவள் நலன் வேண்டி வாதிட்ட மனசாட்சியின் பேச்சைக் கேட்டவனோ மீண்டும் படுத்துக் கொண்டாலும் உறக்கம் வந்து தொலைப்பேனா என்றிருந்தது.

விழி மூடியிருந்தாலும் அடிக்கடி எட்டிப் பார்த்த இருமல் சத்தத்திலேயே கவனம் நிலைத்திருக்க தன்னை மீறி எழுந்து செல்ல பார்த்த பாதங்களை அடக்கிக் கொண்டு படுத்திருந்தவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவ்வாறு இருந்திட முடியவில்லை.

எழுந்து கொண்டவனோ கதவருகே சென்று திறக்கப் பார்க்கவும் பாவையவள் நடந்து வரும் ஓசை செவியரோத்தை உரசவும் சரியாய் இருக்க வந்த சுவடின்றி மீண்டும் படுத்துக் கொண்டவனோ அவளுக்கு முதுகுகாட்டி இமைத்தாழ் இட்டிருந்தான்.

வாயைப் பொத்தி இருமிய படி வந்த இசையவளுக்கோ இருமல் சற்றே மட்டுப்பட்டிருக்க சோபாவில் சரிந்தவளுக்கோ பையன் விழித்திருப்பது தெரியவில்லை.

"ரோபோ..ரோபோ இவ்ளோ இருமுறேன் முழிச்சிக்கிதா பாரு.." சற்று சத்தமாக திட்டிய படி கண்களை பொத்திக் கொண்டாலும் மனசாட்சியோ பையனுக்கு வக்காலத்து வாங்கி அவளை அமைதிப்படுத்தியது.

அந்த சுணக்கம் எல்லாம் சில நொடிகளுக்குத் தான்.உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தவனின் விம்பம் விழிகளை நிரப்பியதும் மொத்தமாய் இரசனை சேர்ந்து விட்டிருந்தது,உள்ளுக்குள்.

பாவையின் இடத்தில் வேறு யார் இருப்பினும் இத்தனை தூரம் காதல் செய்திருப்பார்களா என்று தெரியாது,அதுவும் யாழவனோ அவள் மீது சிறு அக்கறை இருப்பதையும் காட்டிக் கொள்ளாத போதும்.

ஆனாலும்,அவள் காதலில் மாற்றமில்லை.சொல்லப் போனால் இன்னும் அதிகமாய்த் தான் காதலிக்கிறாள்,இப்பொழுதெல்லாம்.

பிடித்தங்களின் பிடி இறுகிக் கொண்டே தான் போகிறது.விருப்பங்களின் விரிவுரைகள் விரிவாய்த் தான் ஆகின்றன.இருந்திருந்த ஈர்ப்புக்கள் எல்லாம் ஈற்றைத் தாண்டி ஓடுகின்றன.ஈன்றெடுத்த காதலின் கால் தடங்கள் இன்னும் ஆழமாய்த் தான் மாறுகின்றன.

பெரிதாய் எதிர்ப்பார்ப்புக்கள் இல்லை.அப்படியே எதிர்ப்பார்ப்புக்கள் எழுந்தாலும் அதை பையன் நிறைவேற்றிட வேண்டும் என்றும் அவள் எதிர்ப்பார்ப்பதுமில்லை.அவ்வியல்பு தானோ யாழவனை இன்னுமின்னும் காதலிக்க வைக்கிறது..?

ஆம்,அது தான் போலும்.
அப்படி காதலிப்பதால் தானே அவள் இசையாகிறாள்!

கிட்டத்தட்ட ஒரு வாரம் அப்படியே பையனின் நடிப்புடனும் பாவையவளின் சலிப்புடனும் கழிந்திட நாளுக்கு நாள் பையனின் அலப்பறைகள் கூடிக்கொண்டு தான் போனது.

காலையில் எழுந்தவுடன் அவனோடு எழுந்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் "இசை..இசைமா.." என அழைத்தே அவளை ஒருவழியாக்கி விடுவான்.

"இசை காஃபி" என சில காலைப் பொழுதுகளில் அவனிதழ்கள் மொழிந்தாலும் ராமநாதன் அறையை விட்டு வெளியே வந்திருக்கும் பெரும்பாலான பொழுதுகளில் அவளை நோக்கியே காஃபி கோப்பை வந்திடும்.

அலுவலகத்துக்கு அவள் தாமதாகும் போதெல்லாம் அக்மார்க் கணவனாய் மாறி பகலுணவை கூட கட்டிக் கொடுத்து கை பிடித்து அழைத்துச் செல்லும் அளவுக்கு உருமாற்றம் பெற்றிருந்தது,அவனின் நடத்தைகள்.

ஆம்,உருமாற்றம் தான்.அதன் காரணம் என்னவோ ராமநாதன் மட்டுந்தான் என்பதும் குறித்துக் கொள்ள வேண்டியது.

முதன் முதலில் இவை நடந்தேறும் போதெல்லாம் பாவையவளோ உறைந்து போனாலும் இப்பொழுதெல்லாம் பழகி விட்டது.

நெற்றியில் இருந்த பொட்டை திருத்தி உச்சியில் குங்குமம் வைத்து விட்ட போதெல்லாம் அது நடிப்பென்று தெரிந்தும் அந்த தருணங்களில் நெகிழத் தான் செய்தது,அவள் மனது.

நிழல் என்று தெரிந்தும் நெகிழும் தன் மனதை அடக்கும் வழி தெரியவில்லை,
பாவையவளுக்கு.அப்படித் தெரிந்திருந்தால் இத்தனை ஆழமாய் காதலித்திருக்க மாட்டாளே!

நிஜமில்லை என்று தெரிந்தும் நெகிழ்வதும்..
நிழலெனப் புரிந்த பின்னும் இரசிப்பதும் கண்மூடித்தனமான காதலில் மாத்திரம் தான் சாத்தியம் போலும்.

ஏன் இப்போதும் கூட அவளின் பெயரை விலைக்கு வாங்கியது போல் கூவிக் கொண்டிருந்தான்,பையன்.

"இசை லேட்டாகுது சீக்கிரம் வா.." கையில் இருந்த கைக்கடிகாரத்தை பார்த்த படி குரல் கொடுத்திட ராமநாதனின் இதழ்களில் சிறு புன்னகை ஓடிக் கொண்டிருந்தது.

"தோ வந்துட்டேங்க.." அவசரமாய் அவசரமாய் கூந்தலை பின்னிக் கொண்டிருந்தவளோ அதே கதியில் அவன் முன்னே வந்து நிற்க அவளின் கரத்தை பற்றிக் கொள்ள ராமநாதனிடம் சொல்லிக் கொண்டு வெளியேறிச் சென்றனர்,இருவரும்.

மின்தூக்கியை அடையும் வரை அவளின் கரம் பையனின் பிடிக்குள் இறுகி இருந்தாலும் மின் தூக்கியில் நுழைந்ததும் பட்டென கரத்தை விட்டவனோ அலைபேசியை எடுத்துக் கொண்டு ஓரமாய் சரிந்து நின்றிட பழகிப் போனதென்பதால் அவளை அதை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.

அப்படி ஒவ்வொன்றையும் கணக்கெடுத்துக் கொண்டிருந்தால் யாழவனை அவள் எப்படி காதலிப்பதாம்..?

அவளோ சுற்றும் முற்றும் விழிகளை சுழலவிட்டு தன்னில் லயித்து போக அலைபேசியில் அமிழ்ந்தது போல் காட்டிக் கொண்ட பையனின் கவனமோ கேளாமல் அவளைச் சுற்றித் தான் சுழன்றோடிற்று.

அவளுக்கு எப்படியோ அவனைப் பொறுத்த வரையில் தான் செய்து கொண்டிருப்பவற்றை நினைக்கையில் குற்றவுணர்வு மனம் முழுக்க வியாபித்து நிற்பதை தவிர்த்திட இயலவில்லை.

அவன் மீது அவளுக்கு காதல் இல்லாத பட்சத்தில் நெருக்கமானவர்கள் போல் நடிப்பது அவ்வளவு உசிதமாய் அவனுக்கு தோன்றிடாத பொழுது அவன் மீது காதல் இருப்பது தெரிந்தும் அவ்வாறு நடந்து கொள்ள எப்படி பையனின் மனம் ஒத்துக் கொள்ளும்..?

தான் சற்றே அக்கறை காட்டினாலும் அவள் மனதில் எதிர்பார்ப்புக்களும் ஏக்கங்களும் உண்டாகிடும் என்று தெரிந்தும் அதை செய்ய வேண்டியிருக்கும் கையலாகாத நிலையை அறவே வெறுத்தது,மனது.

ஒட்டு மொத்தமாய் அவர்களின் ஒப்பந்தத்தில் இருப்பது அவனது சுயநலம் என்று முற்றாய் உணர்ந்திருப்பவனுக்கோ பாவையின் உணர்வுகளுடன் விளையாடுவது கொஞ்சமும் பிடிக்கவில்லை.

போதாதற்கு அவளுக்கு தன் மீது காதல் பூக்கும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.

ஆக,அவனைப் பொறுத்த வரையில் அவளுக்கு காதல்..
ம்ஹும் இல்லை ஈர்ப்பு உண்டாகியது திருமணத்துக்கு பின்னர் தான்.ஆனால்,பையனுக்குத் தெரியாது,அது பூத்த காதல் அல்ல,முன்பே பூத்திருந்த காதல் என்பது.

எதுவும் செய்ய இயலா இக்கட்டான சூழ்நிலையில் தான் விருப்பமின்றி திருமணத்துக்கு சம்மதம் சொன்னதே.வாழ்வா சாவா என்று ராமநாதன் போராடிக் கொண்டிருந்த பொழுதாக மட்டும் இல்லாவிடின் அவன் என்ன நடந்திருப்பினும் திருமணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டான் என்பது அவனும் அந்த கடவுளும் மட்டுமே அறிந்த உண்மை.

திருமணத்துக்கு முன்னமே இசையவளிடம் தன் எண்ணத்தை எடுத்துச் சொல்ல அவளும் அவனின் நிபந்தனைகளுக்கு தலையாட்டிய பின் தான் திருமணம் செய்து கொண்டதே.

நினைவுகளை மீட்டிப் பார்த்தான்,யாழவன்.

திருமணம் முடிந்து மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தெரிய வந்த செய்தி தான் அவனை முற்றாகவே திருமண பந்தத்தில் இருந்து விலக்கி வைத்திருப்பதாக அவனுக்குள் ஓர் எண்ணம்.

"அப்போ அப்டி இல்லன்னா நீ அந்த பொண்ணு கிட்ட டைவோர்ஸ் வாங்காம இருந்துருப்பியா..?" மனசாட்சி கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவனுக்கு தன் எண்ணத்தை நினைக்கையில் உள்ளுக்குள் பெரும் கலவரம் மூண்டது.

இரு புறமும் தலையாட்டி தன்னை சமப்படுத்திக் கொண்டவனோ அதன் பின் அவளைப் பற்றி எதுவும் யோசித்திடவில்லை.

●●●●●●●●

"இன்னும் ஒரு வாரத்துல நமக்கு யூ எஸ் ட்ரிப் இருக்கு..அதுக்கப்றம் ஜாலி தான்.." விசிலடித்த படி சுழலும் கதிரையில் அமர்ந்து இருபுறமும் அசைந்து கொண்டிருந்த மோகனுக்கோ தோழனின் முகத்தில் இருந்த வாட்டம் பல கேள்விகளை கிளப்பி விட்டது.

"டேய் மகேஷ் என்னடா நா இவ்ளோ ஜாலியா இருக்கேன்..நீ என்னன்னா இப்டி சோகமா இருக்க..? என்ன உன் லவ்வர் நெனப்புல சுத்திட்டு இருக்கியா..?" தோழனின் மன எண்ணம் புரிந்தவனாய் கேட்டிட எதிர்வினை ஏதும் இல்லை,மகேஷிடம் இருந்து.

"இங்க பாருடா..எதேச்சயா ரெண்டு மாசம் முன்னாடி மீட் பண்ண பொண்ணு மேல லவ்வு வளத்துகிட்டு வெய்ட் பண்ணாத..அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சோ தெரியல.." நிதர்சனத்தை உரைத்த தோழனை உறுத்து விழித்தன,அவன் விழிகள்.

"ப்ச்..எதுக்கு இப்டி மொற மொறன்னு மொறச்சிகிட்டு இருக்க..நா என்ன இல்லாததயா சொன்னேன்..? இப்டி நடந்துர்கலாம்னு ஒரு வாய்ப்பு இருக்குன்னு தா சொன்னேன்..பாத்துக்க.."எச்சரித்த மோகனுக்கோ தோழன் தன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக் கூடாது என்கின்ற எண்ணம்.

"மகேஷ் உன்ன அரவிந்த் சார் கூப்பர்ராரு.." உடன் பணிபுரியும் தோழனொருவன் வந்து சொல்லி விட்டு போக அரவிந்தின் அறைக்குள் நுழைய அங்கு அவனுக்கென சில கோப்புக்களை வைத்துக் கொண்டு காத்திருந்தான்,அரவிந்த்.

செய்ய வேண்டிய பணிகளை விளக்கிய படி கையில் இருந்த கோப்புக்களின் அடுக்கை அவனிடம் ஒப்படைத்திட சிறு புன்னகையுடன் வாங்கிக் கொண்ட மகேஷின் மீது அவனுக்கு தனி மதிப்பு இருப்பது என்னவோ உண்மை தான்.

மீள பையனின் அறைக்குள் நுழைந்தவனை கேள்வியாய் பார்த்தான்,பையன்.

"என்ன சார்..? ஏதாச்சும் கேக்கனுமா..?" தொழிலிடம் என்பதால் மரியாதையுடன் அழைப்பவனின் அழைப்பை பையன் மறுத்து நின்றாலும் ஏற்பதில்லை,தோழன்.

"யார் கிட்ட ஃபைல்ஸ செக் பண்ண கொடுத்து இருக்கீங்க பி ஏ சார்...?" மடிக்கணனினியில் ஏதோ தட்டிய படி கேட்டான்,பையன்.

"மகேஷ் கிட்ட சார்.."

"ஓகே.."

"சார் இந்த பேபர்ஸ்ல சைன் வேணும்.." சில காகிதங்களை நீட்டிட படிக்காமல கையெழுத்துட்டிருந்தான்,பையன்.

"எத்தன தடவ சொல்றது உங்களுக்கு..? பேபர்ஸ் நீட்டுனா படிச்சு பாத்து சைன் பண்ண மாட்டீங்களா..?" கேலியாய் கேட்டவனுக்கு தெரியாமல் இல்லை,பையன் அவ்வாறு கையெழுத்திடுவதன் காரணம் அவன் மீது வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கை என்பது.

"சும்மா ஒரு சைன வச்சு என்ன பண்ண போறீங்க பி ஏ சார்..?"

"ஏன் உங்க சொத்து மொத்ததத்தயும் என்னோட பேருக்கு மாத்தி எழுதிக்குவேன் பரவாலியா..?"

"இதுக்கப்றம் அப்டி நடந்தா என்ன..? நடக்கலனா என்ன..? நா அவ்ளோ சொத்த வச்சிட்டு என்ன போறேன்..நானே எழுதி வச்சிர்லாங்குற முடிவுல தா இருக்கேன் பி ஏ சார்.." மனதில் தோன்றியதை அப்படியே பையன் கூறிட சட்டென தோழனின் முகம் வாடிப் போய்விட அவ்விடத்தில் நிலவிய சூழ்நிலையில் அத்தனை கனமும் இறுக்கமும்.

இயல்பாய் பேசி விட்டு தோழனின் முகம் பார்த்திடவுமே தான் சிதறவிட்ட வார்த்தைகளின் வீரியம் உரைத்திட அவனிடம் மன்னிப்புக் கேட்டிடும் முன் அவ்விடத்தில் இருந்து அகன்று விட்டவ அரவிந்தின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தாலும் மனதுக்குள் சிறு பயமும்.

"கெஞ்சி கேக்கறேன் சாமி..இவன் கிட்ட என்ன காப்பாத்தி விட்ரு.." கை கூப்பி கடவுளை வேண்டிட அவனின் வேண்டுதல் கடவுளின் செவிகளை எட்டியதோ என்னவோ..?

அதே நேரம்,

"இதுக்கப்றம் நீங்க இந்த கம்பனில தான் வேல செய்யப் போறீங்க..இவங்க தான் உங்க டீம் மெம்பர்ஸ்..ஸோ எல்லார் கூடவும் இன்டர்ட்யூஸ் ஆகிக்கோங்க யாழினி.." மேலாளர் கூறி விட்டுச் செல்ல தன் அணியில் இருப்பவர்களுடன் அறிமுகமாகி மெல்ல மெல்ல தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்,யாழினி.

"டீம்ல ஆறு பேர் இருக்காங்கன்னு சொன்னீங்கல..இப்போ அஞ்சு பேர் தான் இருக்காங்க..மத்தது யாரு..? அவங்க இன்னிக்கி வர்லியா..?"

"அவ வந்துருவா..அஞ்சு பத்து நிமுஷம் வர்ரதுக்கு லேட் ஆயிடும் செல வேள.." அருகே இருந்த பெண் கூறி முடிக்கும் முன்னே மூச்சு வாங்க அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தாள்,இசை.

நெற்றியிலும் கழுத்திலும் பூத்திருந்த வியர்வைத் துளிகளை துப்பட்டா நுனியால் ஒற்றிய படி தன்னிடத்தில் அமர்ந்தவளின் கவனத்தில் பதியவில்லை,அங்கே புதியாய் ஒரு பெண் அமர்ந்திருப்பது.

"என்ன இசை இன்னிக்கி லேட் ஆயிடுச்சு போல..ஏன் உன் ஹஸ்பண்ட் கூட வர்லியா நீ..?"

"ச்சே..அவரு கூட தான் வந்தேன்..இன்னிக்கி வீட்ல இருந்து வரும் போது லேட் ஆயிடுச்சு.."

"ஆமா எங்களுக்கு எப்போ உன்னோட ஹஸ்பன்ட இன்டர்ட்யூஸ் பண்ணி வக்கப் போற.."

"அதெல்லாம் அப்றம் பாத்துக்கலாம்.." என்றவளின் மனமோ,
"நானே என் வாழ்க்க எந்த போக்குல போகுதுன்னு தெரியாம அல்லாடிகிட்டு இருக்கேன்..இதுல இன்டர்டக்ஷன் ஒன்னு தான் கொறச்சல்.." என்று நினைத்துக் கொண்டது வேறு கதை.

"இசை என்னடி பின்னால திரும்பாமலே இருக்க..இங்க பாரு..புதுசா நம்ம டீம்ல ஜாய்ன் ஆகியிருக்காங்க.." தோழியின் அழைப்புக்கேற்ப புன்னகையுடன் திரும்பியவளின் இதழ்கள் அப்படியே பாதியில் நின்று போனது,அவ்விடத்தில் இருந்து யாழினியைக் கண்டதும்.

"ஹாய் ஐ அம் யாழினி..இன்னிக்கி தா ஜாய்ன் பண்ணி இருக்கேன்.." கை நீட்டிய படி கூறியவளின் கரத்தை மனமின்றி பற்றி குலுக்கி விடுவித்தவளுக்கு தெரிந்து தான் இருந்தது,அது பையனின் உடன் பிறந்த தங்கையென்பது.

"என்னங்க நீங்க யார்னு சொல்லவே மாட்டேங்குறீங்க..?" தலை சரித்துக் கேட்ட யாழினியின் செயலில் ஏனோ பாவையவளுக்கு கோபம் தலைக்கேறியது.

"நா இசையரசி.." பட்டும் படாமல் கத்தரித்தது போல் சொல்லி விட்டு திரும்பியவளின் செயலில் அவளின் முகம் சற்றே கறுத்துப் போனது.

முகத்தில் அடித்தாற் போல் நடந்து கொண்டவளின் செயலில் சுற்றி இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்வு.எல்லோரையும் அனுசரித்து பழகும் பாவையவள் அனைவரிடமும் இன்முகம் அறிந்தவர்களுக்கு அவளின் இந்த நடந்தை கொஞ்சம் அதிர்ச்சியே.

"என்ன இசை..எதுக்கு இப்டி மொகத்துல அடிச்ச மாதிரி நடந்துகிட்ட..?" அருகே இருந்து தாமரை உலுக்க முகத்தில் கோபம் மின்ன முறைத்தவளின் விழிகளில் தெரிந்த அதட்டலில் அமைதியாகிப் போயிருந்தாள்,தாமரை.

உயிர்த்தொடும்.

2024.08.31
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 11(i)

இடைவேளை நேரத்திலும் பெருத்த அமைதியுடன் இசையைக் காண்கையில் தோழியின் மனதுக்குள் சிறு நெருடல்.

"அரசி என்னாச்சுடி..? எதுக்கு இப்டி இவ்ளோ டல்லா இருக்க..? என்ன தான் ஆச்சு..? இவ்ளோ கேட்டும் பதில் சொல்லாம இருக்க..?"
தான் இரு தடவை உலுக்கியும் பதில் தராது தன் முகத்தையை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த தோழியின் மனதை படிக்க முடியவில்லை,தாமராயல்.

"ஒரு வேள நாம டங் ஸ்லிப் ஆகி இசைன்னு பேசுனதுக்கு கடுப்பாகி இருக்காளோ.." சிந்தனை தறி கெட்டு ஓடிட தாமரையின் முகத்திலும் சிந்தனை ரேகைகள்.

"அடியேய் என்னடி ஆச்சு..?"

"நம்ம டீம்கு புதுசா வந்து ஜாய்ன் பண்ணி இருக்குற பொண்ணு யாருன்னு தெர்யுமா..?"

"ஆமா அந்த பொண்ணு தான் இன்னிக்கி காலைல வந்து பேசி இன்டர்ட்யூஸ் பண்ணிகிட்டுச்சுல..பேர் கூட யாழினி..ஏன் உன் கூடவும் பேசிச்சு தான..?"

பாவையவளோ தோழியை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு அலைபேசியில் மூழ்கி விரல்கள் அசைந்திட புகைப்படமொன்றை தேடி தோழிக்கு காட்டிட தாமரைக்கு எதுவும் பிடிபடவில்லை.

"என்னடி இது..? அந்த பொண்ணோட ஃபோட்டோ உன்னோட ஃபோன்ல இருக்கு..அந்த பொண்ண உனக்கு ஏற்கனவே தெரியுமா என்ன..?"

"ம்ம்க்கும்..யாழினி..மிஸ்டர்.யாழ் வேந்தனோட கூடப் பொறந்த தங்கச்சி.."அழுத்தம் திருத்தமாய் கூறியவளின் வார்த்தைகளிலேயே கடுப்பு தெறித்தது.

தோழி சொன்ன வார்த்தைகளை உள்வாங்கி கிரகித்த தாமரையின் விழிகளில் அதிர்வு தோன்றி மறைந்தது.

யாழவனை பற்றியே அவளுக்கு ஓரளவு தான் தெரியும்.அதுவும் அவனுக்கு உடன் பிறப்புக்கள் இருப்பது தெரிந்தாலும் அவர்களைப் பற்றி அவ்வளவாய் அவளுக்குத் தெரியாது.

அரவிந்தும் அவர்களைப் பற்றி வேறெதுவும் பகிர்ந்து கொள்வதுமில்லை.அவனுக்கும் அது பிடித்தமில்லை என்பது தெரியுமாதலால் அவளும் வற்புறுத்தி கேட்பதில்லை,பையனின் குடும்பத்தைப் பற்றி.

யாழினி பையனின் தங்கை என்று தெரிந்தாலும் ஏனோ இன்று பாவையவள் யாழினியுடன் நடந்து கொண்ட விதத்தில் உடன்பாடில்லை.

"சரிடி ரோபோ சாரோட தங்கச்சின்னாலும் நீ மொகத்துல அடிச்ச மாதிரி பேசியிருக்க கூடாது..அந்த பொண்ணுக்கு ஒரு மாதிரி இருந்துருக்கும்ல.."

"ஆமா நா அப்டி பண்ணியிருக்க கூடாது தான்..ஆனா என்னால அந்த பொண்ணு கூட நார்மலா பேச முடியல..ஏன் இதுக்கப்றம் கூட என்னால நார்மலா பேசி பழக முடியாதுன்னு தோணுது.." விழிகளை தழைய விட்டு கூறியவளோ தலையைப் பிடித்துக் கொண்டாள்.

"உன்னோட ஹஸ்பன்டே அவரு தங்கச்சி மேல இவ்ளோ கோவமா இருப்பாரான்னு தெரியல..அதுவும் இப்டி கண்டதும் மொகத்துல பாயவும் மாட்டாரு..நீ எதுக்குடி இவ்ளோ ரியாக்ட் பண்ற..? " என்றிட இதழ் பிதுக்கி மறுப்பாய் தலையசைத்தாள்,இசை.

"ஏன்னு எனக்கும் தெரில..ஆனா அந்த பொண்ணு மேல செம்ம கோவமா வருது டி..அப்டியே நாக்க புடுங்குற மாதிரி நாலு கேக்கனும்னு தோணுது..ஆனா அதயும் பண்ண முடில..அந்த மனுஷன் வேணா மன்னிச்சு விடலாம்..ஆனா என்னால முடில..ரொம்ப ரொம்ப கோவமா வருது.." விழிகளை அழுந்த மூடித் திறந்து பற்களிடையே வார்த்தைகளை கடித்து துப்பியவளின் முகத்தில் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது,கோபம்.

"இவள யாரும் ஹர்ட் பண்ணா பேசாம தான் இருப்பா..ஆனா அவருக்குன்னதும் இப்டி துடிக்கிறா..என்ன கருமம் புடிச்ச லவ்வோ தெரிலி இவளோடது.." மனதுக்குள் திட்டியவளுக்கு ஏன் இத்தனை தூரம் காதலித்துத் தொலை(க்)கிறாள் என்பது மட்டும் புரியாத புதிராய்.

ஏனோ பையனின் மீது கோபமாகவும் வந்தது.காதலைத் தாண்டியதோர் கரை காணா நேசத்தை தன் மீது வைத்திருப்பவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாது இருக்கிறானே என்று.

ஆம்,அவன் மீதான அவளின் நேசத்தை காதல் எனும் ஒற்றை வார்த்தைக்குள் உள்ளடக்கி விட முடியாது.

அவனின்றி அவளிதயம் துடிக்காதென்றெல்லாம் இல்லை.ஆனால்,இதயத்தின் துடிப்பு மீட்டும் ஒவ்வொரு ரிதமும் அவனின் பெயர் சொல்லும்.

அவனின்றி அவள் மூச்சடைத்து மாண்டு போவாள் என்றெல்லாம் இல்லை.ஆனால்,அவளின் சுவாசங்களின் ஜீவனாய் அவனின் நினைவுகள் நிறைந்திருக்கும்.

அவனின்றி அவள் உயிருடன் இருக்க மாட்டாள் என்றெல்லாம் இல்லை.ஆனால்,அவளின் உயிரும் உணர்வுகளின் மொத்தமும் அவனுக்கென மட்டுமே வாழ்ந்து கொள்ளும்.

அவனின்றி அவளின் நாட்கள் நகராது என்றெல்லாம் இல்லை.ஆனால்,நகரும் நொடிகள் யுகங்களாகிட யுகங்களின் வினாடிகளாய் அவனின் எண்ணங்கள் நிலைக்கும்.

அவனின்றி அவள் ஜீவன் மோட்சம் காணாது என்றெல்லாம் இல்லை.ஆனால்,மோட்சம் காணும் வரை அவனுக்காக மட்டுமே அவள் ஜீவன் ஜீவித்து நிற்கும்.

அவனின்றி அவள் அழுது தீர்ப்பாள் என்றெல்லாம் இல்லை.ஆனால்,கன்னத்தில் வாழும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் அவனுக்கென மட்டுமே உதிர்ந்ததாய் இருக்கும்.

அவனின்றி அவள் புன்னகைத்து சிரித்திட மாட்டாள் என்றெல்லாம் இல்லை.ஆனால்,அந்த புன்னகை ஒவ்வொன்றும் அவனின் சாயலை தன்னுள் நிரப்பிக் கொண்டிருக்கும்.

அவனின்றி அவள் இல்லை என்றெல்லாம் இல்லை.ஆனால்,காலம் முடியும் வரை அவள் அவனாய் வாழ்ந்து தீர்த்திருப்பாள்.

அவனின்றி அவள் உணர்வுகள் உயிர்க்கொலை செய்து கொள்ளும் என்றெல்லாம் இல்லை.ஆனால்,உயிர்ப்புடன் இருக்கும் அவள் உணர்வுகளின் உயிர்த்துடிப்பாய் அவன் நின்றிருப்பான்.

உண்மை தான்.அப்படிப் பட்டது தான் அவளின் நேசம்.எந்த வித எதிர்பார்ப்பையும் சும(ந்)த்திடா ஆழ் மன நேசம்.

எல்லா நேசங்களும் ஒன்று போல் ஒரு வரையறைக்குள் உள்ளடங்கிட வேண்டிய தேவை இல்லையே.

இலக்கணங்களை உடைத்திடும் சில ப்ரியங்கள் இருப்பதால் தான் எல்லோரும் நேசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
ஏதோ ஒரு வகையில்!

●●●●●●●●

"சொல்லாமா..? வேண்டாமா..?..சொல்லலாமா வேண்டாமா..?" மனதுக்குள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தவளின் மனமோ இறுதியில் வேண்டாம் என்று தெளிவாய் முடிவெடுத்துக் கொண்டது.

இன்று அவனின் தங்கையை சந்தித்த விடயத்தை பையனிடம் கூறலாமா..? வேண்டாமா..? என்பதற்கு தான் இந்த போராட்டமே.

"வேணா சொல்லிட்டு ரோபோ அப்சட் ஆயிடுச்சுன்னா என்ன பண்றது..?" தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டிருந்தவளின் முன்னே வந்து நின்றான்,பையன்.

அடர் கறுப்பு நிற டெனிமும் சாம்பல் நிற டீஷர்ட்டும் அணிந்து கொண்டு பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொண்டவனோ புரியாது பார்த்தாள்,பாவையவள்.

ஏனென்று கேட்டிட பயம் தடுத்தாலும் விழிகளோ பையனை இரசித்துத் துளைக்க அவளின் விழிகளில் தெரிந்த இரசனையில் இம்முறை கோபம் எழவில்லை,பையனுக்கு.

அவளிடம் நிதானத்தை கையாள வேண்டும் என்று நினைத்தானோ..?
இல்லை,எப்போதும் அவனை உரசிச் செல்லும் பார்வை என்பதால் அமைதி காத்தனோ..? யாருக்குத் தெரியும்..? பையனிடம் தான் பதில் கேட்டிட வேண்டும்.

"வெளில கெளம்பனும்..சீக்ரம் போய் ரெடியாகு.." அதட்டலாய் வந்து விழுந்த குரலில் அவளின் விழிகள் முழுதாய் விரிந்து கொண்டன.

"என்ன பாத்துட்டு இருக்க..சித்தப்பாகு டவுட் வந்துரக் கூடாதுல..அதுக்காக தான்..போ போய் ரெடியாகு நீ.." சத்தமாய் திட்டியவனோ " எப்ப பாரு..முட்ட கண்ண விரிச்சு முழின்னு முழின்னு முழிக்க வேண்டியது" என்று வேறு சத்தமின்றி முணுமுணுத்திடவும் செய்தான்.

அவளோ அவனின் திட்டலிலேயே அவ்விடத்தில் இருந்து அகன்று போயிருக்க அவனின் முணகலை கண்டு அதைப் புரிந்து கொண்டிருந்தால் அவளின் எண்ணம் என்னவாகி நின்றிருக்குமோ..?

மிதமான வேகத்தில் அவனின் காரை செலுத்திக் கொண்டிருக்க திறந்திருந்த யன்னல் வழியே வந்து முகத்தில் மோதிய மென்காற்றில் தானாகவே லயித்துப் போனாள்,பாவையவள்.

இடைக்கிடையே கருமணிகள் விழியோரத்தை உரசி பையனின் விம்பத்தை தமக்குள் புதைத்துக் கொண்டு மத்திக்கு வர அதை உணர்ந்தும் அவன் எதுவும் சொல்லவில்லை.

பல்லாயிரம் தடவை சொல்லி அவனுக்கும் சலித்து விட்டது.அவனுக்கும் அலுப்பும் சலிப்பும் உண்டாகுவதில் பிழையேதும் இல்லையே.

"ஆமா உன் லவ்வர் பேர் என்ன..?" ஓரப்பார்வையால் அவளை அழுத்தமாய் உரசி விட்டு பையன் கேட்டிட அவளுக்கோ திக்கென்றது.

வதனத்திலும் உடல் மொழியிலும் தோன்றிட்ட பதட்டத்தை மறைத்திட அவனுக்கு முதுகு காட்டி பக்கமாய் திரும்பி அமர்ந்திட பையனின் புருவங்கள் சுருங்கின.

ஏற்கனவே அவளுக்கு முன்னால் காதலென்று ஒன்று இருக்கிறதா என்பதிலேயே பெரும் சந்தேகம் இருந்தது.இப்போது அது இன்னும் உறுதியாகுவது போல்.

"என்ன பதில காணோம்..?" அவன் குரலில் இருந்த பேதம் அவளுக்கு கொஞ்சம் பயத்தை தந்தது.

"அது அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.." அவன் புறம் திரும்பாமலே மொழிந்தவளுக்கு தான் இன்னும் ஏதும் பொய்யை மொழிந்து வைத்திருக்கிறோமோ என்கின்ற கலவரம் வேறு.

"வாட்ட்ட்ட்...?" எதிர்பாரா அதிர்வை பையனின் விழிகள் பிரதிபலித்திட கிறீச்சிட்டு நின்றது,வண்டி.

அவள் புறம் தேகத்தின் மேற்பகுதியை வளைத்து அமர்ந்திருந்தவனோ அவளை ஆராச்சியாய் பார்த்திட பாவையோ அவன் விழிகளை ஏறிடுவதை முற்றிலும் தவிர்த்துக் கொண்டாள்.

"நெஜமா தான் சொல்றியா நீ..?"

"நா எதுக்கு பொய் சொல்லனும்..? நா எதுக்கு சார் பொய் சொல்லனும்..? அவன் ஒருத்திய கல்யாணம் பண்ணிகிட்டு இருக்குறது தெரிஞ்சு தான் என்னோட மனசு மாத்தி தேத்தி இப்போ ஒரு மாதிரி பழய நெலமக்கி வந்துருக்கேன்..நீங்க வேற திரும்ப திரும்ப அவன பத்தியே கேட்டுகிட்டு இருக்கீங்க..?இப்போ என்ன உங்களுக்கு நா உண்மய தான் சொல்றேன்னு தெரியனும்ல..இருங்க..தோ இது தான் என்னோட எக்ஸு..பேர் ப்ரித்வி..ஹான்..ஆமால உங்களுக்கு அவன் யாருன்னு தெர்யும்ல..தோ இது தான் சம்யுக்தா..ப்ரித்வியோட வைஃப்..அவன் இப்போ ஃபாரின்ல இருக்கான்..அவன் வர்க் பண்ற இவளும் வர்க் பண்றா..போதுமா..?" மூச்சு விடாமல் தன் தடுமாற்றத்தை மறைக்க சீறியவளை அமர்த்தலாய் பார்த்திருந்தான்,பையன்.

பயம் களைந்து அவளுக்குள் விதைந்திட்ட தைரியத்தின் காரணம் நிச்சயம் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கின்ற பயம் தான்.

அவனின் பார்வையின் மறை பொருளாய் இருந்தது என்னவோ,அவளை நம்பவில்லை என்பதே.என்ன,அந்த மறைபொருளை உணர்ந்தும் கொள்ளும் பக்குவம் இசையவளிடம் இன்னுமே உருப்பெற்றிருக்கவில்லை.

பையனோ அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு எதுவும் பேசாமல் வண்டியைக் கிளப்பினாலும் மனதுக்குள் அவளைப் பற்றிய சிந்தனைகள் தான் ஓடித் தள்ளிக் கொண்டிருந்தன.

அவள் சொல்வதை அவனால் முதலில் முழுதாக நம்ப முடியவில்லை.அவளின் கடந்த காலம் பற்றி ஆராயவும் அவனின் ஆழ் மனம் இடம் கொடுத்திடவில்லை.

அவளுக்கு முன்னைய காதல் ஒன்றிருந்தால் அதற்கு வழி கோடிட்டு சேர்த்து வைத்திடத் தான் பையன் நினைத்திருந்ததே.இடையில் முன்னைய காதல் ஒன்றிருக்கிறதா என்று சந்தேகம் வந்து விட்டது.

இப்போது அவளின் முன்னைய காதல் கதை உண்மையாக இருந்தாலும் அதை சேர்த்து விட்டு தன் வாழ்வில் இருந்து அவளை விலத்தி வைத்திட வழியில் இல்லை என்று புரிந்து போக அதைப் பற்றி ஆராய்வது வீண் என புரிந்து கொண்ட மனமோ வேறு விதமாய் யோசிக்கச் செய்தது.

இசையவளும் நாவை சற்றே அடக்கி இருக்கலாமோ என்னவோ..?

அந்த நடுத்தர அளவு உணவகத்தின் முன்னே வந்து வண்டி நின்றிட பையனின் பின்னூடு நடந்து வந்த பாவையின் மனமோ பையனின் அமைதியில் பயந்து பெரும் அலைக்கழிப்புடன் திரிந்து கொண்டிருந்தது.

அவன் இரண்டொரு வார்த்தை பேசியிருந்தாலும்..
ம்ஹும் காது கிழியும் வரை அதட்டியிருந்தாலும் அவளின் மனம் இத்தனை பதபதைத்திருக்காது.அந்த ஆழ்ந்த பார்வையும் அதனைத் தொடர்ந்து அவன் கடைபிடித்து வந்த அமைதியும் தான் அவளுக்கு பிரச்சினையே.

தன் எண்ணத்தில் உழன்ற படி நடையிட்டுக் கொண்டிருந்தவளின் பாதங்கள் தானாய் தளர்ந்து போயிட முன்னே சென்றவனை கவனிக்கத் தவறியிருந்தாள்,பாவையவள்.

அலைபேசியில் தீவிரமாய் உரையாடிய படி வந்த பையனோ ஓரிடத்தில் நின்று திரும்பிப் பார்த்திட அவனில் இருந்து இருபது அடி தள்ளி நடந்து வந்து கொண்டிருந்தவளைக் கண்டதும் ஏனோ கோபம் வந்தது.

"இவ ஒருத்தி.." அவளைப் பார்க்கும் போது அவனுக்கு கோபமாய் வந்தது.ஏனோ தெரியவில்லை,முன்பை விட இப்போதெல்லாம் அவள் மீது தொட்டது பிடித்தற்கெல்லாம் கோபம் வருவது போல் ஒரு மாயை.

அவனியல்பில் இருக்க விடாது தடுக்கிறாள் என்கின்ற ஆற்றாமையோ..?
இல்லை,விலகிட முயலும் தன்னை கொஞ்சம் ஆட்டி வைக்கிறாள் என்கின்ற ஆதங்கமோ..?

அவளை அவ்விடத்திலேயே அவனால் விட்டுச் சென்றிட முடியும் தான்.ஆனால்,அவள் மீது மனதின் ஓரத்தில் துளிர்த்து புதைந்து கிடக்கும் சிறு துளி அக்கறை அதை செய்ய விடாமல் தடுக்கிறது.

அதுவும் அவள் அவனை நம்பி வந்திருக்கும் பெண் வேறு.அவளை அப்படியே விட்டுச் செல்ல அவனின் மனசாட்சி இடம் கொடுக்காது என்பது வேறு கதை.

வேக எட்டுக்களுடன் பாவையவளை நெருங்கி அவளின் கரத்தின் மணிக்கட்டை அழுந்தப் பற்றிக் கொண்டிட அவனின் வருகையில் ஸ்தம்பித்து போனவளோ பையனின் அழுத்தமான பிடியில் உறைந்து நின்றாள்.

"இவ்ளே நேரம் என்ன பண்ற..? சீக்கிரம் வந்தா தான் என்ன..?" விழியை ஊடுருவிய படி அவன் கேட்டிட்ட கேள்வி எல்லாம் எங்கனம் அவள் செவியில் நுழைந்திடப் போகிறது..?

பையனின் ஆழ் துளைத்திடும் காந்த விழிகளுக்கு கட்டுப்பட்டு கவரப்பட்டு நின்றவளுக்கு சுற்றம் மொத்தமும் மறந்து தான் போயிருந்தது.

உயிர்த்தொடும்.

2024.09.02
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 11(ii)


இந்தக் காதல் மட்டும் இல்லையென்றால் சில பைத்தியக்காரத் தனங்கள் என்றோ இல்லாமல் போயிருக்கும்.இருப்பினும் தன்னை மீறி நடந்தேறும் அந்த பைத்தியக்காரத் தனங்கள் இல்லாமல் போயிருப்பின் காதலின் அழகியலும் தொலைந்து போயிருக்கும்.அந்த பைத்தியக்காரத் தனங்கள் தானே காதலின் அழகே!

பைத்தியக்காரத்தனங்களின் உதிப்பிடம் காதல் என்றால் காதலின் இருப்பிடம் பைத்தியக்காரத் தனங்களாகவும் இருக்கும்.

அவனுக்கும் அவளின் செயற்பாடுகள் பைத்தியக்காரத்தனங்களாய் தோன்றியதோ என்னவோ..?

குனிந்த தலை நிமிராது தன் முன்னே அமர்ந்து உண்டு கொண்டிருப்பவளை அவனால் என்ன ரகத்தில் கொண்டு சேர்ப்பது என்று புரியாமல் குழம்பி நின்றான்,பையன்.

அவளின் கரத்தைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்த பின்னர் தான் அவளுக்குள் உருப்பெற்றிருக்கும் உணர்வுப் போராட்டம் அவனுக்கு உரைக்க பட்டென அவளின் கரத்தை விடுவித்தாலும் அவளின் உணர்வுகளுடன் விளையாடிய மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டவனோ அவளின் முகத்தை அதன் விழி நிமிர்த்தி பார்த்திடவும் இல்லை.

அவளுமே தனக்குள் போராடிக் கொண்டிருக்க அவன் மீது படியும் பார்வைகளுக்குமே பஞ்சமானது.

ஏன் இப்போதும் தன் உணவில் கவனமாகியிருந்தாலே ஒழிய அவன் புறம் கொஞ்சமும் கவனத்தை திருப்பவே இல்லை.

பையனுக்குமே அது வசதியாகிப் போனது.இல்லையென்றால் அவனுக்கும் கடுப்பாகி ஏதும் திட்டப் போய் அது வேறு விதமாய் அவளுக்கு உணர்வுப் போராட்டங்களை கொடுத்திடும் என்று பயந்து நின்றான்,பையன்.

யாழவனுக்குள் இத்தகைய பயங்கள் எல்லாம் இதற்கு முன் உண்டானதே இல்லை.அவனின் தைரியத்தை சற்றே அசைத்து தான் பார்க்கிறாள்,இசையவளும்.

மௌனமாய் உணவுண்டு விட்டு இருவரும் கிளம்பிட அவளுக்கு அவ்விடத்தில் இருக்கச் சொல்லி விட்டு பாதையின் எதிர்ப்புறம் இருந்த கடைக்குள் நுழைந்தான்,பையன்.

பெரிதாய் வாகனங்கள் வந்து செல்லாவிடினும் பாதையை மாறும் போது கவனம் இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிச் சென்றன,கடந்து போன வண்டியின் வேகங்கள்.

அவனின் வண்டி நின்றிருந்த இடத்துக்கு முன்னே மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்று கொண்டிருந்தவளின் பார்வையோ சுற்றத்தை அலசிய வண்ணம் இருக்க மனதிலே இன்னும் ஆர்ப்பரித்த தடுமாற்றம் அடங்கிய பாடில்லை.

அவனின் பார்வைக்கே ஆர்ப்பரித்தெழும் ஆன்மா தொடுகைக்கு ஆட்டம் காணாது இருக்குமா என்ன..?

இதழோரம் உறைந்த சிறு முறுவலுடன் நின்றவளின் விழிகளோ தன்னை நோக்கி வருபவனை ஸ்பரிசிக்க அந்த விழிகளில் காதல் நிரம்பி வழிந்து பெரு வெள்ளமாய் அணை கடந்து ஓடிற்று.

ஆம்,காதல் தான்..
அவனுக்கான கொஞ்சம் காதல்..
அவன் ஜீவன் மொத்தத்தையும் உறிஞ்செடுக்கும் அளவு கொஞ்சம் காதல்..
அவன் உயிர்த்துடிப்பை முற்றாய் உருக்கிக் குடிக்கும் அளவு கொஞ்சம் காதல்..
அவன் சுவாசம் மொத்தத்தையும் அழுந்தச் செய்து மூச்சடைக்க வைத்திடும் அளவு கொஞ்சம் காதல்..
அவனின் இதயத் துடிப்பை நிறுத்தி உறையச் செய்திடும் அளவு கொஞ்சம் காதல்..
அவன் ஆன்மாவை ஆட்கொண்டு ஆட்டிப் படைத்திடும் அளவு கொஞ்சம் காதல்..

அவள் விழிகளில் கசிந்திருந்தது கொஞ்சம் காதல் தான்.அவனுக்கான காதலை நிச்சயம் எந்ததவொன்றாலும் அளவிட முடியாதே.

யாழவனும் அவளின் விழிகளை சற்றே நிதானமாய் நின்று பார்த்திருந்தால் துளியளவேனும் அவன் உறுதி அசைந்திருக்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.

பையனின் சிந்தனை சத்தியமாய் அவன் வசம் இல்லை.அருகே இருந்த கடையொன்றில் அபியையும் அவனின் தங்கை யாழினியையும் கண்டவனின் மனது தவித்துக் கொண்டிருக்க அவர்களின் விழி வீச்சில் சிக்காது தப்பித்தவனின் மனதில் பழைய நினைவுகள் நிழற்படமாய் தோன்றி உள்ளுக்குள் கசப்பை தோற்றுவித்தன.

அந்த யோசனையுடன் இன்னும் சிலபல நினைவுகளும் வந்து ஆக்கிரமித்திட அவனுக்கு தன் வாழ்க்கையை நினைத்தே விரக்தி.

சுற்றத்தை பெரிதாய் அலசாது பாதையை மாறப் பார்த்தவனின் கவனம் தப்பிப் போக வந்த வண்டியை கவனிக்கத் தவறியவனுக்கு தான் தள்ளுப்பட்டு பின்னடையும் போது தான் பாவையவள் தன்னை தள்ளி விட்டிருப்பதே உரைத்தது.

விழி விரித்து இசையவளைப் பார்த்தவனோ சட்டென அவளை தன்னருகே இழுத்துக் கொண்டிட பையன் ஒரு நொடி தாமதித்து இருந்தாலும் இசையவளை நிச்சயம் வண்டி மோதியிருக்கும்.

வண்டியை நிறுத்திய சாரதியோ இருவரையும் கண்ட படி திட்டி விட்டுச் செல்ல முதலில் தன்னிலை அடைந்தது யாழவன் தான்.

இசையவளைப் பார்த்திட அவளோ இன்னும் பதட்டமும் பயமும் குறையாது நின்றிருக்க அவனுக்கும் அவளைப் பார்த்திட இறுகிய இதயம் மெல்ல கொஞ்சம் அசைந்திற்று.

பாவையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு வண்டியின் பின்னே வந்து நின்றான்,பையன்.
இருவரும் கடந்து செல்வோருக்கு காட்சிப் பொருளாகி நிற்பதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.

"இசை.."

"இசை..."

"இசை..இங்க பாரு.." இருமுறை பேசியும் அவளிடம் இருந்து எதிர்வினை இல்லாது போக தோற்பட்டையை பிடித்து மென்மையாய் உலுக்கிடவே சுயம் மீண்டது,பாவையவளுக்கு.

இயல்புக்கு வந்து நின்றாலும் இன்னும் பாவையவளுக்கு பதட்டம் தணிந்த பாடில்லை.பையனுடன் ஒன்றிப் போக துடித்த மனதை அடக்கிய படி நின்றிருந்தவளுக்கு அவனுக்கு ஏதேனும் ஆகியிருந்தால் என்று நினைக்கக் கூட முடியவில்லை.விழிகள் மெல்லச் சிவப்பேறிற்று.

சிவப்பேறிய விழிகளில் தனக்கென தெரிந்த தடுமாற்றம் பையனை ஏதோ செய்தாலும் அவள் தனக்காக அவளைப் பற்றி சிந்திக்காது போனது பையனுக்கு கோபத்தை தான் தூண்டி விட்டிருந்தது.

"அறிவிருக்கா
உனக்கு..? எதுக்காக உன்ன பாக்காம என்ன தள்ளி விட்ட..உனக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா என்ன பண்றது..? கொஞ்சமாச்சும் யோசிக்க வேணா.." அவன் சீறிட அமைதியாய் நின்றாள்,பாவையவள்.

புரிந்து தான் பேசுகின்றானா என்று அவளுக்கு சத்தியமாய் புரிந்திடவில்லை.அவள் வந்திராவிட்டால் அவன் நிலை என்னவாகிப் போகும் என நினைக்கும் போதே அவளுள்ளும் நடுக்கம் கண்டிட பையனோ அவளைப் பற்றி நினைத்து தான் இத்தனை தூரம் திட்டிக் கொண்டிருந்ததே.

நிதானமாய் தெளிவாய் அவனின் வார்த்தைகளை பாவையவள் அசை போட்டு பார்த்திருந்தால் அவனின் வார்த்தைகளின் பின்னே தொனித்திடும் அக்கறை புரிந்திருக்கும்.அவளோ அதை பற்றி ஆராயும் நிலையில் இல்லையே.இல்லவே இல்லையே.

"நா இங்க பேசிட்டு இருக்கேன்..நீ எதுக்கு இப்டி முழிச்சிட்டு நிக்கற..இப்போ எதுக்கு குறுக்கால வந்த..? உனக்கெதுவும் ஆகியிருந்தா நா.." என்றவனின் வார்த்தைகள் பாதியின் நின்றன.

"நா என்ன பதில் சொல்றது..? ஹான் உன்ன தான் கேக்கறேன்..எதுக்காக வந்து என்ன தள்ளி விட்ட..?"

"அது அடி பட்ரும்னு தான்.." அதட்டலில் பயந்து மெதுவாய் அவள் பதில் சொல்லிட பையனின் பார்வையில் உஷ்ணமேறியது.

"அதுக்கு..? அடிபட்டா என்ன பண்றது..? அடி பட்றதுன்னா எனக்கு தான பட போகுது..? அடி பட்டு செத்து.." என்று பையனின் இதழ்கள் மொழிந்து முடிக்கும் முன்னே சட்டென அப்படியே நின்று போனது,அவனின் பேச்சு.

இமைகள் தொட்டுக் கொள்ள மறைந்து போய் விட ஒரு நிமிடம் என்ன செய்வதென்று புரியாது விக்கித்து நின்றான்,பையன்.

அவனின் வார்த்தைகள் அவளின் செவி சேரும் முன்னே அவனோடு வந்து சேர்ந்து கொண்டவளின் எதிர்பாரா செயலில் பின்னே சரியப் பார்த்து வண்டியில் உள்ளங்கைகளை ஊன்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவனுக்கு நியாயமாய்ப் பார்த்தால் கோபம் வந்திருக்க வேண்டும் என்பது தானே நியதி.

அந்த நியதி காணாமல் போன காரணம் தான் என்ன..?

"இசை.." அதட்டலும் பதபதைப்பும் சரி விகிதமாய் கலந்திருக்க அழைத்தவனுக்கு பதில் தரும் விதமாய் வெறுமனே சாய்ந்திருந்தவள் அவனின் நெஞ்சில் நெற்றி முட்டி அசைந்து தரித்திட பையனுக்கோ எதுவும் செய்ய இயலவில்லை.

தன் நெஞ்சில் நெற்றி முட்ட நின்றிருந்தவளின் கரங்களோ பையனின் பின்னூடு முதுகைச் சுற்றி படர்ந்திருக்க ஏதோ அவனை விட மாட்டேன் என்பது போல் அவளின் அணைப்பு.

"அப்டி உங்களுக்கு எதுவும் ஆயிடாது சாரே." விழிகள் கலங்க குரல் கமற மெதுவாய் அவள் மொழிந்தது நிச்சயம் அவனின் செவியோரத்தை தொட்டிருக்காது.

தன்னை சுற்றியிருந்த கரங்களில் இருந்த நடுக்கமும் தன்னோடு ஒன்றிப் போன பாவையவளின் உடல் மொழியில் தெரிந்த பயமும் அவளை விலக்க முயன்ற கரங்களை அப்படியே கட்டிப் போட்டன.

அவனோடு ஒன்றிப் போய் இருந்தவளும் சத்தியமாய் தன்னிலையில் இல்லை.அதீதமாய் உணர்ச்சி வசப்பட்டிருந்தாள்.அந்த சுற்றம் மறக்கும் தன்மை தான் அவளுக்கு தைரியத்தை தந்திருந்தது போலும்.

என்ன செய்கிறாள் என்று புரியவில்லை.ஆனால்,ஏதோ செய்கிறாள் என்று மட்டும் புரிந்தது அவனுக்கு.

அவனை விலக்கித் தள்ளிடும் அளவுக்கு அவனில் பலம் உண்டு.அப்படியே தள்ளி நிறுத்தும் அளவு திடமும் உண்டு.இருப்பினும் எல்லாம் உடலளவில் தானோ..?

புத்தியோ விலக்கி விடச் சொல்லி ஆணித்தரமான உறுதியோடு கத்திக் கொண்டிருக்க மனமோ காற்றிலாடும் நாணலின் உறுதியுடன் மறுப்பு சொன்னது.

என்ன அதிசயமோ தெரியவில்லை.யாழின் இசையதிகாரத்தில் மனதின் பேச்சு ஜெயித்திட அவளை விலத்திடாது அப்படியே நின்றிருந்தான்,பையன்.

புத்தி நினைத்ததை மனம் செய்யவில்லை.மனம் செய்வதை புத்தி ஏற்கவில்லை.சித்தமும் மனமும் போட்டி போட சிதறி நின்றான்,பையன்.

ஏறியிருந்த அவளின் இதயத் தாளத்தை வெகுவாய் உணர முடிந்தவனுக்கு இத்தனை நேரம் கடந்தும் ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாள் என்று புரியாது போய்விடினும் ஏனோ அதற்கான காரணத்தை ஊகித்திட முடிந்தது.

விழி தாழ்த்தி பாவையவளை பார்த்திட நெற்றிய நெஞ்சோடு ஒட்டிக் கொள்ள் அவள் இருந்த விதம் அப்படியே மனதுக்குள் பதிந்து போனது,அவனைக் கேளாமலே.

ஏனோ அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அவளிதயத் துடிப்பின் வேகம் கண்டு அவனுக்குள் ஏதோ பிறழ்வது போல்.

இசையவளின் இதயம் மீட்டும் ரிதத்தின் வேகம் உணர்ந்த யாழவன்,ஒரு கணம் உறைந்து தான் போனான்;சமைந்து தான் நின்றான்.

முதன் முதலாய் இசையவளின் ரிதத்தை உணர்ந்து கொண்டிருந்தான்,யாழவன்!

ஒரு கணம் ஆழமாய் மூச்செடுத்து தன்னை நிதானித்துக் கொண்டவன் அவளை எட்ட நிறுத்திடப் பார்க்க அதற்கு முன்னமே தன்னை சுதாரித்துக் கொண்ட பாவையவளின் செயலில் அவன் விழிகள் இடுங்கின.

"சாரி..சாரி..தெ..தெரியாம.." தடுமாற்றத்துடன் மொழிந்தவனோ பையனின் முகம் பாராது காரில் ஏறி அமர்ந்து கொண்டிட பையனுக்கோ அவள் மன்னிப்புக் கேட்டுச் சென்றது மனதை பிசையாமல் இல்லை.அவள் பேசாமல் விலகி நின்றிருந்தால் கூட இப்படி உணர்ந்து தொலைத்திருக்க மாட்டான்.

இரு நிமிட இடைவேளையில் தன்னை சமப்படுத்தி இயல்பாக்கி கொண்டு வந்து காரை எடுத்தவனோ மறந்தும் திரும்பவில்லை,பாயவையவள் இருக்கும் திசைக்கு கூட.

மாற்றங்களே வேண்டாமென அவன்!
அவன் வாழ்வின் ஒட்டு மொத்த மாற்றமாய் அவள்!

மறுநாள் பொழுது விடிய வழமைக்கு மாறாய் தன் வீட்டுக்கு முன் வண்டியுடன் தனக்காக காத்துக் கொண்டிருக்கும் தோழனின் நடவடிக்கை சரியாய்ப் படவில்லை,அரவிந்துக்கு.

"என்ன இன்னிக்கி இவ்ளோ சீ்க்ரமா வந்து அதுவும் நமக்காக காத்து கிட்டு இருக்கான்.." மூளைக்குள் யோசனை குடைந்தெடுக்க எதுவும் கேளாது வண்டியை ஏறிக் கொள்ள வண்டியும் நகர்ந்தது.

"மச்சான் உனக்கு காலேஜ் டைம்ல எக்கச்சக்கமான ப்ரபோஸல் வந்திருக்குல்ல.."

"ஆமா.." பதில் சொன்னாலும் அவன் ஏன் கேட்கிறான் என்பது முழுச் சிந்தனையாய் பையனின் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

"ஆமா தீடீர்னு எதுக்கு கேக்கற..?"

"சும்மா தான்..இப்போ ஒரு பொண்ணு உன் லவ் பண்ணுது..ஆனா அந்த பொண்ணு உன்ன லவ் பண்றது உனக்கு பிடிக்கல..அத அவாய்ட் பண்றதுகு என்ன பண்ணுவ..?"

"அந்த பொண்ண புடிக்கலனா நல்லா நாலு திட்டு விட வேண்டியது தான்.."

"பொண்ண புடிக்கும்..பட் பொண்ணு லவ் பண்றது புடிக்காது..அதுக்கு என்ன பண்ணுவன்னு கேட்டேன்.."

"இவன் கேக்கற மாதிரியே சரிலியே.."

"என்னடா பதில காணோம்.."

"ஆங்..அது ஒன்னுல்ல..அந்த பொண்ணு கிட்ட போய் தெளிவா மெதுவா சொல்லுவேன்.."

"சரி அப்டியும் அந்த பொண்ணு கேக்கலனா..?" பையன் எதற்கு அடி போடுகிறான் என்று தோழனுக்கு சட்டென புரிந்து போயிற்று.

"அது ஒன்னுல்ல மச்சான்..செல பேருக்கு தூரத்துல இருக்குன வர இந்த அட்ராக்ஷன் எல்லாம்..அதுவே நாம அவங்க கூட பேசி ப்ரெண்ட் மாதிரி பழகுனா எல்லாம் காணாம போயிடும்.." என்றிட வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு சரேலென திரும்பி பார்த்தான்,தோழனை.

"நா அட்ராக்ஷன்னு சொல்லவே இல்லயே.."

"லவ் இல்லன்னா அட்ராக்ஷன் ரெண்டுகும் காமனா தான நா சொன்னேன்..என் கிட்ட சில பொண்ணுங்க பேசியிருக்காங்க..பட் அவங்க கூட நா ப்ரெண்டா பழக ஆரம்பிச்சதும் அது எல்லாம் காணாம போயிடுச்சு..உனக்கு தெர்யுமா..?" என்றிட சிறு யோசனையை தன்னகத்தே இழுத்துக் கொண்டது,பையனின் மனம்.

உயிர்த்தொடும்.

2024.09.02
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 12(i)


வண்டி அலுவலக வளாகத்தில் வந்து நின்றிட அரவிந்த் இறங்கிச் சென்ற பின்னும் ஸ்டியரிங்கில் இருந்து கரத்தை விலக்கக் கூட மறந்து யோசனையில் ஆழ்ந்து இருந்தான்,பையன்.

இன்னுமே அவளின் இதயத்துடிப்பை உணர்வது போல் தோன்றிட கரமோ நெஞ்சுக்கு சற்று கீழே அழுத்தமாய் தடவிக் கொடுத்தது.

நேற்றில் இருந்து அதே யோசனை தான்.அவளைப் பற்றி மட்டும் தான் எண்ணங்கள் சுழன்றடித்துக் கொண்டிருந்தன.

இதுவே முன்பன்றால் அபிராமியையோ அவனின் குடும்பத்தினரின் யாரையேனுமோ கண்டிருந்தால் அவனின் நினைப்பு முழுக்க பழைய வடுக்கள் கிளறிய படி திரிந்து கொண்டிருக்கும்.ஆனால்,நேற்று அப்படியல்ல.

ரணங்கள் கீறப்பட்டது தான்.வடுக்கள் கிளறப்பட்டது தான்.இருப்பினும் அதிலேயே நிலைக்க விடாமல் அவனின் நிகழை மொத்தமாய் களவாடிக் கொண்டிருந்தாள்,பாவையவள்.

அவனுக்குமே அது புரிந்தது.இருப்பினும் அதைப் பற்றி அவ்வளவாய் யோசித்திடவில்லை,பையன்.

நேற்றைய அவளின் அணைப்பில் இருந்து அவள் மீண்டு வந்திருந்தாலும் அவனுக்கு இன்னும் அதன் தாக்கம் மீதமிருந்தது.வெடிப்பது போல் துடித்த இதயத்தின் வேகமெடுத்திருந்த துடிப்பின் காரணம் அவன் தான் என்று தெரியாது போய் விடாதே பையனுக்கு..?

அதுவும் அவள் தன்னைப் பற்றியும் நினையாது அவனுக்கென வந்தது சத்தியமாய் அசைத்தே பார்த்து விட்டிருந்தது,பையனை.

யாரும் வேண்டாம் என விலகி இருப்பவனிடம் கேட்காமலே நான் இருக்கிறேன் என்று அவள் மொழியின்றி கூறிக் கொண்டிருக்க பையனின் மனதில் சிறியதோர் இதம் பரவுவதை எத்தனை முயன்றும் அவனால் தடுக்கவோ அதைத் தவிக்கவே முடியவில்லை.

ஆற்றாமையுடன் வலித்துக் கொண்டிருந்த மனது ஆற்றுப்படுத்த இடம் கிடைக்கையில் கொஞ்சமேனும் நிம்மதி அடையாது இருக்காதே.

அதுவும் ஒரு நொடி தன்னை மறந்து ஏறி நின்று பின் தழைந்து போன இமைகளை தாங்கிய விழிகள் கண நேரத்துக்கும் குறைவாக உரசிச் சென்ற போதும் விலகிச் சென்ற ஒற்றைப் பார்வையில் ஓராயிரம் அர்த்தங்கள் இருப்பது போன்ற மாயை பையனின் மனதுக்குள்.

அவன் பாதை மாறுகையில் தன்னை நோக்கி வந்த வண்டியைக் கவனிக்கவில்லை.அது உண்மை தான்.அதே போல் அவள் தன்னை காப்பாற்ற அவளை விடுத்து வந்திடுவாள் என்று அவன் துளியும் நினைக்கவில்லை என்பதும் உண்மை.

அவள் அணைப்பில் இருந்த ஆத்மார்த்தமும் பிடியில் இருந்த அழுத்தமும் இதயம் எக்குத் தப்பாய் எடுத்திருந்த வேகமுமே மறைமுகமாய் அவனுக்கான நேசத்தின் ஆழத்தை உணர்த்த முயன்றது,போலும்.

இத்தனை நாள் தன் மீது அவளுக்கு வெறும் ஈர்ப்பு இருப்பதாய் எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு நேற்றைய இரவிலேயே அந்த எண்ணம் முற்றிலும் தகர்ந்து போயிருந்தது.

அவளிடம் ஈர்ப்பென்று புரிய வைத்து பின் விலகி விடலாம் என்று நினைத்திருந்தவனுக்கு அவளுக்கு தன் மீது ஈர்ப்பில்லை என்று கொஞ்சம் கொஞ்சமாய் புரியும் போது மனதை ஏதோ அழுத்தி அடைப்பது போல்.

இத்தனை நாள் இல்லாது அழுத்தம் நேற்றில் சூழ்ந்து கொண்டது போல் தோன்றிடவே தோழனிடம் அறிவுரை கேட்டதே.

அரவிந்தோ தானாய் ஒன்றைப் புரிந்து கொண்டு தன்பாட்டில் விளக்கம் சொல்லி விட்டு நகர்ந்திருக்க அதை நினைத்து பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லையே பையனுக்கு.

"நா என்ன கேட்டேன்..இவன் என்னமோ சொல்லிட்டு போறான்.." திட்டியவனுக்கு இப்போது கையில் இருப்பது ஒரே ஒரு வழி தான்.

அலுவலத்துக்குள் நுழைந்து தன் வேலையில் ஆழ்ந்து போன பையனுக்கு நேரம் கடந்ததே தெரியவில்லை.

முற்றாய் மூன்று மணி நேரங்கள் கடந்திருக்க அவனின் சிந்தனையை கலைக்கும் விதமாய் ஒலித்தது,அலைபேசி.

நெடு நாட்களுக்கு பிறகு முன்பு பாடசாலையில் ஒரே வகுப்பில் கற்ற தோழனொருவன் தான் அழைத்திருந்தான்.பையனும் பெரிதாய் பேசும் ரகமில்லை என்பதால் இருவருக்குமிடையே பெரிதான நட்பும் இல்லை.

அழைப்பை ஏற்றவனோ சுக நலம் விசாரிக்கும் முன்னமே அவனின் அலுவலகத்துக்கு வரச் சொல்லி அழைத்திட பையனுக்கு எதுவும் புரியவில்லை.

"எதுக்கு உன் ஆஃபீஸ்கு வரனும்..?"

"உன் வைஃப் இங்க தான் வேல பாக்கறாங்கன்னு எனக்கு தெர்யும் வேந்தன்..அரவிந்த் ஏற்கனவே சொல்லி தான் வச்சிருந்தான் ஒரு சேஃப்டிக்கு.." என்க இந்த விடயம் முன்பே தெரியும் என்பதால் அத்தனை அதிர்வில்லை,பையனில்.

"ஸோ வாட்..? அதுக்கு ஏன் நா வரனும்..?" நிதானமான குரலில் கேட்டவனோ தன் கெத்தை கொஞ்சமும் இறக்கிக் கொள்ளவில்லை.

"அரசிக்கு சின்ன ப்ராப்ளம்.." அவன் சொல்ல பையனுக்குள் சிறு பதபதைப்பு.

நேற்றைய தடுமாற்றம் இல்லையென்றாலும் இந்த பதட்டமும் பதபதைப்பும் இருந்திருக்கத் தான் செய்யும்.ஆனால்,வெளிப்படுத்தி நின்றிக்க மாட்டான்.உள்ளுக்குள் வைத்து அழகாய் மறைத்திருப்பான்.

"வாட்..? இசைக்கு என்னாச்சு..? அவங்க ஓகே தான..?"

"நத்திங் டு வாரி.."

"ஆர் யூ ஷ்யூர்..?" அவனின் குரலில் மெல்லிய மாற்றம் இழையோடிக் கொண்டிருந்தது.

"யெஸ்..ஷ்யூர்.."

"ஐ வில் பீ தேர் இன் டென் மினிட்ஸ்.." படக்கென்று அழைப்புத் துண்டித்தவனோ அரவிந்திடம் கூட சொல்லிக் கொள்ளாது விடுவிடுவென்று நகர்ந்து போக அரவிந்தின் இதழ்களில் மென்னகை தவழ்ந்தது.

பாவையவளின் பாதுகாப்புக்காக தான் அந்த நண்பனிடம் சொல்லி வைத்தது.பையனுக்கு தெரிய வந்து திட்டு வாங்குவதற்கு முன் கூட்டியே சொல்வது பொருத்தம் என்று தோன்றிட தான் கூறிய விடயத்தை யாழவனிடமும் எத்தி வைத்திருந்தான்.

இருவருக்கும் நடந்த திருமணம் வீட்டினரையும் அவர்களை தவிர்த்து ஒரு சிலருக்கும் மட்டுமே தெரியும்.பையனோ அவளின் எதிர்காலம் கருதி பிறகு பெரிதாய் அனைவரையும் அழைத்து வரவேற்பு வைத்துக் கொள்ளலாம் என்கின்ற பொய் வாக்குறுதியோடு அனைவரையும் சமாளித்திருக்க அதன் உண்மைத் தன்மையை தெரியப்படுத்த வேண்டியவர்களிடம் தெரிவித்திடவும் தவறிடவில்லை.

அதனால் தான் இசையவளின் அலுவலகத்தினருக்கு அவளுக்கு திருமணமானது தெரிந்தாலும் அவள் கணவன் பையன் என்று தெரிந்திருக்கவில்லை.அதை விட வேறுபட்டதாய் பையனின் அலுவலகத்தில் யாருக்கும் இன்னும் அவனுக்கு திருமணமாதே தெரியவில்லை.

வழமைக்கு மாறான வேகத்துடன் வண்டியைக் கிளப்பிய பையனுக்கோ அதே அலுவலத்தில் தங்கை பணிபுரிவது தெரியும் என்பதால் முகக் கவசம் அணிந்து விழிகளை குளிர் கண்ணாடியில் மறைத்துக் கொண்டு தான் வண்டியில் இருந்து கீழிறங்கி இருந்தான்.

சாம்பல் நிற ஷர்ட்டும் கறுப்பு நிற டெனிமும் அணிந்து பார்மல் இருந்தவனை காவலாளி எதுவும் கேட்டிடாமல் உள்ளே விட்டிருந்தார்,முதலாளியின் கட்டளைக்கேற்ப.

வாசலுக்கு வரும் போதே அந்த நண்பனின் பிரத்தியேக காரியதரிசி வந்து பையனுக்கென காத்து நின்றிருக்க அவனுக்கு சிறு தலையசைப்பை பதிலாகக் கொடுத்து விட்டு அவனுடன் சேர்ந்து நடந்தான்,பையன்.

அவரவர் தத்தம் வேலையில் மூழ்கியிருந்ததால் பையனின் புறம் யாரினது கவனமும் சொல்லிக்கொள்ளும் படி திரும்பிடவில்லை.

கதவைத் திறந்து கொண்டு அனுமதி கேட்டிடாமல் உள் நுழைவான் என்று அந்த நண்பனும் எதிர்பார்த்திருக்கவில்லை,போலும்.

"இசை எங்க..?" முகத்தில் இருந்த முகக் கவசத்தை கீழிறக்கிய படி கேட்டவனின் விழிகளோ அங்குமிங்கும் சுழன்றன.

"பர்ஸ்டு உக்காரு வேந்தன்.." பையனின் விழிகளில் படர்ந்திருந்த சிறு பதட்டத்தை சுவாரஷ்யமாக பார்த்த படி இருக்கையை விழிகளால் காட்டினான்,
கார்த்திக்.

"அத அப்றம் பேசிக்கலாம்..இசை எங்க..? என்னாச்சு அவங்களுக்கு..?"

"சாரி வேந்தன்..அவங்களுக்கு எதுவும் இல்ல..ஆனா அவங்களுக்கு ப்ரச்சன ஆயிடக் கூடாதுன்னு தான் வார்ன் பண்றதுகு உன்ன கூப்டேன்..ப்ளீஸ் சிட் டவுன்.."

கார்த்திக்கின் பொய்யில் கோபம் வந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது இத்தனை நேரம் இருந்த பதட்டம் மறைந்து போய் கோபம் வந்து விட அவன் முன்னே அமர்ந்து கொண்டவனின் முகத்தில் பழைய அழுத்தம் மீண்டு வந்திருந்தது.

"இந்த வீடியோவ பாரு வேந்தன்.." என்று கணினித்திரையில் காணொலியொன்றை ஓட விட முதலில் பையனுக்கு எதுவும் புரியவில்லை.

"இப்போ எதுக்கு இந்த வீடியோவ போட்டு காட்டிகிட்டு இருக்க..? யாரோ ஒரு பையன் பைக்க தள்ளிட்டு போறான்..அது எதுக்கு நா பாக்கனும்..?" கெத்தை விடாமல் கேட்டிட கார்த்திக்கின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு.

"இந்த பையனோட பைக்க பன்சர் பண்ணி விட்டது உன்னோட வைஃப்.." என்றிட பையனின் விழிகளில் சிறு அதிர்வு தோன்றிடினும் லாவகமாய் மறைத்து கொண்டான்,காட்டிக் கொள்ளாது.

"வாட்..? இசை இப்டி பண்ணிருப்பாங்கன்னுசொல்றியா..? ம்ம்..பட் அப்டி இசை தான்னு சொல்றதுக்கு ஆதாரம் ஏதும் இருக்கா..? இப்டி சீசிடீவி ஃபுட்டேஜ் ஏதாச்சும்..?" இருபுருவமுயர்த்தி விழிகளாலும் வினாத் தொடுத்தவனோ மனைவியை விட்டுக் கொடுக்காது பேசிட கார்த்திக்கிற்கோ பையனின் இந்த அவதாரம் புதிது தான்.

"அந்த எடத்துல சீசிடிவி எதுவும் இல்ல..அதனால அரசி தப்பிச்சுட்டாங்க..பட் ஒரு வெல் விஷரா சொல்றேன்..அவங்க பைக்க பன்சர் பண்றத என்னோண பி ஏ பாத்துருக்கான்..முரளி.." என்று அவனது பி ஏ வை அழைத்திட பவ்யமாக வந்து நின்றான்,முரளி.

"சார் கிட்ட சொல்லுங்க அவங்க வைஃப் தான் பைக்க பன்சர் பண்ணுனாங்கன்னு..?"

"யாரோ ஒருத்தர் சொல்றத வச்சு நா எப்டி என்னோட வைஃப கொஸ்டின் பண்ண முடியும்..? அதுவும் அவங்க இங்க இல்ல..அப்டியிருக்கும் போது இவரு சொல்றது நா எப்டி நம்புவேன்னு தோணுது கார்த்திக்..?"

பையனின் மனசாட்சிக்கு நன்கு தெரியும்,நிச்சயம் இது பாவையவளின் கைங்கர்யமாகத் தான் இருக்கும் என்பது.ஆனால்,அந்நியரின் முன் அவளை விட்டுக் கொடுத்திட முடியவில்லை.அதற்கு மனம் இடம் தரவுமில்லை.

அந்நியரனின் முன் விட்டுக் கொடுத்திட முடியவில்லை என்றால் அவளை தன்னுடைமையாக தன்னுரிமையாக எண்ணிக் கொள்ளத் துவங்கி விட்டானோ என்னவோ..?
யாரறிவர்..?

"ரொம்ப அழகா சமாளிக்கிற வேந்தன்..பட் இந்த வேந்தன் புதுசா தான் இருக்கு.." மெச்சுதலாய் சொன்னவனோ முரளிக்கு கண்ணைக் காட்ட அவனும் சிறு தலையசைப்புடன் விலகிப் போயிருந்தான்.

"வேந்தன் கண்டிப்பா இத நா உங்கிட்ட சொல்லியே ஆகனும்..நா அரசி மேல தப்புன்னு சொல்றதுக்காக இத சொல்லல..இப்போ ரெண்டு மூனு வருஷமா இங்க வேல செய்றாங்க..இது வர அவங்க மேல எந்த கம்ப்ளைனும் வந்தது கெடயாது.."

"ஐ க்நோ.." அமர்த்தலாய் பையன் சொல்லிட அவனுக்கு நெற்றியை எங்கேனும் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

"கொஞ்சம் உன் கெத்த விட்டுட்டு விஷயத்த கேளு வேந்தன்..நீ நம்பலனாலும் பைக்க பன்சர் பண்ணினது அரசி தான்..அது மட்டுல்ல நேத்து ஒரு பையனுக்கு யாருக்கும் தெரியாம கான்டீன்ல காபி குடிக்கும் போது பேதி மாத்தர கலந்து விட்ருக்காங்க..நல்ல வேள கான்டீன் நடத்துறவரும் கண்டு முரரி கிட்ட டைரெக்டா சொல்லி விட்டது..இல்லன்னா விஷயம் இன்னும் பெருசாகி போய்ருக்கும்..நேத்து இங்க வேல செய்ற ஒருத்தரோட கார் கண்ணாடியயும் ஒடச்சி விட்ருக்காங்க..இவ்ளோ நடந்ததும் டைரெக்டா எனக்கோ முரளிக்கோ நேரடியா தெரிய வந்தது தான் எந்த ப்ராப்ளமும் வராம அவங்கள காப்பாத்தி இருக்கு..ஐ ஹோப் யூ வில் அன்டர்ஸ்டான்ட்.."

"நம்பறதா இல்லயான்னு தெரில..பட் புரிஞ்சிக்கறேன்.."

"அடேய்.." கருவிய கார்த்திக்கிற்கு பையனை பற்றி தெரியுமே.அவனின் அலட்சியத்தை கண்டு கொள்ளவில்லை.

"பட் இதுக்கு என்ன ரீசன்னு நீ கேக்கவே இல்லியே..?"

பையனுமே அதைப் பற்றி தான் பாவையிடம் கேட்டிட யோசித்துக் கொண்டிருந்தான்.உள் மனம் உந்தித் தள்ளி முந்திக் கொண்டு சொன்னது,அவள் தரப்பிலும் நியாயம் இருக்கும் என்பது.

என்னவென்றாலும் அடுத்தவர் உடைமைகளை சேதமாக்கும் விதமாய் அவள் நடந்து கொண்டது நிச்சயம் தவறு தான்.அவளை தவறு செய்திருக்க மாட்டாள் என்றெல்லாம் நினைத்திடவில்லை,பையன்.அவள் தரப்பிலும் நியாயமான காரணம் இருக்கும் என்றே எண்ணினான்.

"நீ தான்.." பையனை சுட்டு விரலால் சுட்டி கார்த்திக் கூறிட உள்ளுக்குள் அதிர்ந்தாலும் புறத்தே தன்னை வெகு அமைதியாய் காட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தான்,பையன்.

"நார்மலாவே அரசி ரொம்ப சாஃப்ட்..அவங்க கூட வேல செய்றவங்க..செஞ்சவங்க எல்லாரும் அப்டி தான் சொல்லுவாங்க..அரசிய எனக்கு முன்னவே தெரியும்..எந்தவொரு வம்பு தும்புக்கும் போகாம தானும் தன்னோட வேலயும்னு ஒதுக்கி நிக்கற ஆளு அவங்க..ரொம்ப பொறுமயும் கூட..பட் உன்னோட விஷயம்னு வர்ரப்போ மட்டும் அப்டியே தல கீழா மாறிர்ராங்கன்னு எனக்கு இப்போ கொஞ்ச நாளா தான் புரிது.."

".................."

"அன்னிக்கி உன்னோக கேஸ்ல தீர்ப்பு வந்ததுல.." கார்த்திக் சற்றே தன்னை சமப்படுத்திக் கொண்டு எந்தவித உணர்வையும் காட்டிராத குரலில் கேட்டும் பையனின் முகம் இறுகி நின்றது.

"அ..அப்போ தான் அந்த பையன் சோஷியல் மீடியால ஏதோ பாத்துட்டு மிஸ் அன்டர்ஸ்டான்டிங்க்ல உனக்கு திட்டிட்டு இருந்தான்..அரசி அவன மொறச்சிட்டே க்ராஸ் பண்றத பாத்தேன்..பட் அவனுக்கு பேதி மாத்திர கலந்து கொடுப்பாங்கன்னு நெனச்சு கூட பாக்கல.." உணர்வு காட்டாத குரலில் கூறிக் கொண்டிருந்தாலும் இறுதியில் அவனிதழ்களில் குறுஞ்சிரிப்பொன்று படர்வதை தவிர்க்க இயலவில்லை,கார்த்திக்கால்.

பையனின் முகத்தை பார்த்திட அது எப்போதும் போல் எந்த உணர்வையும் காட்டாது இருந்தாலும் அவனுள்ளுக்குள் ஏதோ ஆனது உண்மை.

அவனுக்கென அவனோடு எப்போதும் இருப்பேன் என்று அவளின் ஒவ்வொரு செய்கையும் உணர்த்திக் கொண்டு நிற்பதாலோ..?

"அதுல்ல அவன் ப்ரெண்டோட வண்டிய தான் பன்சர் பண்ணி விட்ருக்காங்க..அவன் கூட ஏதோ சொல்லி இருப்பான் போல..நா சொல்ற நீ நம்புவியா மாட்டியான்னு தெரில..ஆனா அரசிக்கு கொஞ்சம் பாத்து நடந்துக்க சொல்லு..ஏதாச்சும் ப்ராப்ளம் வந்தப்றம் யோசிக்க முடியாதுல.." நிஜமான அக்கறையுடன் கார்த்திக் சொல்ல வெறுமனே தலையசைப்பு மட்டுமே அவன் பதிலாய்.

"வில் ஸீ..நா பாத்துக்கறேன்.." அதை மட்டும் பதில் மொழியாய் கூறி விட்டு அவ்விடத்தில் இருந்து பையன் அகன்று வந்திட ஏதோ ஒரு சிந்தனையில் தரித்தன,பையனின் பாதங்கள்.

உயிர்த்தொடும்.

2024.09.03
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 12(ii)


பாதங்கள் தரித்திட பையனின் விழிகளோ சுழன்று தங்கையைத் தேடிட அவனின் எண்ணப்போக்கு புரிந்தாற் போல் அவனைக் கடந்து சென்றாள்,யாழினி.

தங்கையைக் கண்டதும் இதழ்களில் முறுவலொன்று தோன்றி மறைந்திட அது யாருக்கும் தெரியாமல் முகக் கவசத்தினுள் மறைந்து கொண்டது.

தங்கையின் மீது ஒரு வினாடி பார்வையை பதிய விட்டவனும் மறு கணமே கிளம்பி இருக்க ஏனோ இசையவளின் நினைவு.

கார்த்திக் சொன்னது முழுக்க தலைக்குள் ஓடிக் கொண்டிருக்க அவளைப் பார்த்து எச்சரித்து விட்டு போகலாம் என்று மனம் ஓசை எழுப்பியதன் காரணம் தான் என்ன..?

அவளிடம் இருந்து விலகிடத் தான் நினைக்கிறான்.ஆனால்,தானாகவே அவளின் அருகாமையை அடைய வேண்டும் போல் அல்லவா அவனின் சூழ்நிலைகளும் அமைந்து கொடுக்கிறது..?

நேரத்தைப் பார்த்தவனுக்கு அவள் நிச்சயம் சிற்றுண்டிச்சாலையில் தான் தவம் கிடப்பாள் என்று மனம் வாதிட அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டவனின் பாதங்கள் சிற்றுண்டிச் சாலையை நோக்கி நீண்டன.

பையனின் எண்ணத்தை துளியும் பொய்யாக்காது வாசலின் அருகே இருந்த மேசையில் இடம் பிடித்து அமர்ந்திருந்தவளின் பேச்சு சத்தம் சில அடி தூரத்துக்கு முன்பாகவே அவனின் செவிகளில் விழிகளில் விழ மானசீகமாய் நொந்து கொண்டான்,பையன்.

"மைக்க தான் செருகி வச்சிருக்கா.." ஆயாசமாய் நினைத்துக் கொண்டவனுக்கு அவளிடம் எப்படி விடயத்தை எடுத்துக் கூறுவதென்பது பெருத்த பிரச்சினையாய்.

"நீ அதுக்காக தானா ரோபா சார வர வேணாம்னு சொன்ன..?" தாமரை கேட்டது பையனுக்கு தெரியாவிடினும் அவளின் பதில் தெள்ளத் தெளிவாய் பையனின் செவிகளில் அலைமோதிற்று.

"ஆமாடி ஆமா..ரோபோக்கு இன்னும் யாழினி இங்க தான் வேல செய்றாங்கன்னு தெரியாது போல..அதான் நார்மலா இருக்காரு..அது தெரிஞ்சா மனுஷன் அப்ஸட் ஆயிருவாருன்னு தோணுச்சு..அதான் நேத்து எதுவும் சொல்லல.." கூறியவளின் வார்த்தைகளே அவனை கட்டிப் போட்டிருக்க அந்த குரலில் இழையோடிய வருத்தம் அவனை இன்னுமின்னுமே அசைத்து பார்ப்பதாய்.

அவளை எச்சரித்து விடயத்தை சொல்லத் தான் வந்தான்.தன் மனம் ஏதோ பிறழ்வது போல் தோன்றிடவே வந்த சுவடு கூட சத்தமின்றி கிளம்பி விட்டிருந்தான்,பையன்.

மேலும் இரண்டு நாட்கள் கடந்து விட்டிருந்ததன.

அவள் புறம் பையனின் மனம் சாயாவிடினும் அவளின் செயல்கள் ஒவ்வொன்றும் அவனை அசைத்திடுவது பையனுக்கு புரியாமல் இல்லை.

முன்பும் அவளின் அக்கறையும் கரிசனமும் அவனுக்கு பிடித்திருந்தாலும் அது தன்னை பாதித்திட இடம் கொடுக்காமல் அழுத்தமாய் இருந்தவனுக்கு இப்போது அழுத்தமாய் இருக்க முடிந்தாலும் முன்பிருந்த அளவு இருக்க முடியாது என்கின்ற எண்ணம்.

விலக்கி வைத்திருந்த போது கடைபிடித்த இறுக்கத்தை அவளின் அருகாமை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தது,போலும்.

அவளுக்கு தன் மீது இருப்பது காதல் என்று புரிந்திராவிடினும் அவனின் அழுத்தம் தளரத் துவங்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை.என்ன,அதை பையன் தானே ஒப்புக் கொண்டிருக்க மாட்டான்.அது அவனின் குணமும் அல்ல.

ஆனால்,இப்போது அதை ஒத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயம்.ஒத்துக் கொண்டு தீர்வு தேடி முடிவொன்று எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் பையனுக்கு.

இந்த இரண்டு நாட்களும் பையன் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் அவனுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருக்க ஆழமாய் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்த பின்னரே மனதில் அத்தனை நிம்மதி.

பொழுது விடியும் முன்னே வண்டியை எடுத்துக் கொண்டே வெளியே சென்றவனை புருவம் சுருக்கி பார்த்தாலும் எதுவும் கேட்டிடவில்லை,பாவையவள்.

நிம்மதியான சுவாசத்துடன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு வந்த பையனோ ஒரு பூங்காவின் முன்னே வண்டியை நிறுத்தி விட்டு இறங்கிக் கொண்டிட அவனுக்காக அங்கோர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தான்,மகேஷ்.

பையனின் நேரம் தவறாமை பற்றி நன்கு தெரியுமாகையால் பையன் குறிப்பிட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே வந்திருந்தான்,அவ்விடத்துக்கு.

"மகேஷ்..ரொம்ப சீக்ரம் வந்துட்டீங்க போல..நா லேட்டாயிட்டேனா..?" கேட்ட படி தன் கைக்கடிகாரத்தை பார்த்திட்டான்,பையன்.

"இல்ல..இல்ல சார் நீங்க ஒன்னும் லேட் கெடயாது..நா தான் கொஞ்சம் சீக்ரமா வந்துட்டேன்.." பதபதைப்புடன் தடுத்தவனுக்கு யாழவன் என்றால் ஒரு மரியாதை கலந்த பயம்.
அத்தோடு யார் மீதும் இல்லாத மதிப்பும் கூட.

அவனின் ஆளுமையும் கெத்தும் பிடித்தது என்றாலும் எல்லோருக்கும் மரியாதை தரும் விதமாய் அவன் நடந்து கொள்ளும் பாங்கு அவன் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்தி விட்டது.

தன் கெத்தை விட்டுக் கொடுக்காது அலட்சியம் காட்டும் ரகம் என்றாலும் யாரையும் மரியாதை குறைவாய் பையன் நடத்தியதில்லையே.

"சரி உக்காருங்க மகேஷ்.." என்றுமில்லாத தன்மையான குரலில் பையன் சொல்லிட மறுத்து நின்றவனை அப்படியே அமர வைத்தது,பையனின் கூரிய பார்வை.

"நீங்க ஒரு பொண்ண லவ் பண்றீங்கன்னு கேள்விபட்டேன் மகேஷ்.." இயல்பாய் உணர்வுகளை பிரதிபலிக்காத குரலில் பையன் சொல்லிட மகேஷுக்கு தூக்கி வாரிப் போட்டது.

பையனுக்கு காதல் மீது வெறுப்பு கதைகள் அலுவலகத்தில் உலாவிக் கொண்டிருக்க அதை நம்பாவிடினும் இப்போது பயம் மட்டும் துள்ளி எழுந்தது.

"அ..ஆ..இல்ல சார்..இல்ல சார்.."

"ஆமாவா இல்லயா..?" வார்த்தைகளில் இருந்த அழுத்தத்தை விட விழிகள் சுமந்து நின்ற தீர்க்கம் அவனை மேலும் கீழும் சிரசை அசைத்திட வைத்தது.

"லவ்னா எப்டி லவ்..? பொண்ண பர்ஸ்ட் எங்க பாத்தீங்க..?"

ஏன் கேட்கிறான் என்று தெரியாவிடினும் பையன் கேட்டதற்கு பதில் சொல்லத் தான் மனம் விழைந்தது.

"அது ஒரு ரெண்டு மாசம் முன்னாடி தான்..ஒரு எக்ஸிபிஷன்ல.." நெளிந்து கொண்டே சங்கோஜத்துடன் சொல்லிட பையனின் பார்வை அவன் மீது சுவாரஷ்யமாய் படிந்தது.

"ரொம்ப டீப் லவ்வா..? இல்ல சும்மா டைம் பாஸ்கு லவ் பண்றீங்களா..?"

"லவ்வா இல்லயான்னு புரில சார்..ஆனா அந்த பொண்ண கண் கலங்காம சந்தோஷமா பாத்துக்குவேன் சார்.." எங்கே தன் பிடித்தத்தை பொய்யென்று நினைப்பானோ என படபடவென தன் மனதை ஒப்புவித்த அவனை கூர்ந்து பார்த்த பையனின் விழிகளில் எந்த வித உணர்வும் பிரதிபலிக்கப்படவில்லை.

"ம்ம்..ஓகே..ஒருவேள அந்த பொண்ணு கல்யாணம் ஆகி டைவோர்ஸ் வாங்கியிருக்கற பொண்ணா இருந்தாலும் இதே தான் உங்க பதிலா இருக்குமா..?" ஆழ்ந்த குரலில் பையன் கேட்டிட யோசியாது ஆமோதிப்பாய் தலையசைத்தான்,பையன்.

"எங்கம்மாவும் டிவோர்ஸீ தான் சார்..ஆனா எங்கப்பா அவங்கள கல்யாணம் பண்ணிகிட்டாரு..ஸோ அதனால எனக்கு எந்த மறுப்பும் கெடயாது அந்த விஷயத்துல.." தீர்க்கமாய் அவன் சொல்லிட பையனின் மனதில் பரவிய நிம்மதி அவள் மீதான அக்கறையின் சாட்சி.

"ஓகே மகேஷ்..கண்டிப்பா நீங்க யூ எஸ் ல இருந்து வந்தப்றம் அந்த பொண்ணோட பேசி பாத்து தானே கல்யாணம் பண்ணி வக்கறேன்..டோன்ட் வொரி..நம்பிக்கயோட ப்ராஜெக்ட முடிச்சிட்டு வாங்க.." உறுதியான குரலில் பையன் கூறிட மகேஷின் முகம் விகசித்தது.

"சார் உங்களுக்கு எப்டி அந்த பொண்ண தெர்யும்..? அதுவும் எனக்கு அந்த பொண்ணேட பேர் கூட தெரியாது..உங்களுக்கு..?" உள்ளத்தில் பீறிட்டுக் கிளம்பிய மகிழ்வுடன் அவன் முகம் விகசிக்க கேட்டிட இருபுறமும் தலையாட்டிக் கொண்டான்,பையன்.

"அது என்னோட வைஃப்.." எனக் கூற முயன்றவனை ஏதோ ஒன்று கட்டிப் போட "வைஃப்.." என்கின்ற வார்த்தையை மட்டும் மென்று முழுங்கின,அவனிதழ்கள்.

"உங்களோட.."

"என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்.." என்று கூறி கண்ணை சிமிட்டிட அதிர்ந்த பாவனை மகேஷின் முகத்தில்.

மனைவி என்று அறிமுகப்படுத்திக் கொள்ள சங்கடம் தோன்றினாலும் உற்ற தோழி என்று அவன் அங்கீகாரம் அளித்தது ஆத்மார்த்தமாய் தான்.

"சார் பொண்ணோட பேரு..?"

"இ..அரசி.." தடுமாறியவனுக்கோ தான் செய்வது மனதை உறுத்திக் கொண்டு இருந்தது.

"ஓகே மகேஷ் நீங்க யூ எஸ் ட்ரிப்ப முடிச்சிட்டு வாங்க..நாம அப்றமா பேசலாம்.." மனம் நெருடிட பேச்சை கத்தரித்துக் கொண்டு வந்தாலும் பாவையவளை மகேஷுக்கு மணம் முடித்துக் கொடுத்திட வேண்டும் என்று தீர்க்கமாய் நேற்றே மனம் முடிவெடுத்து விட்டிருந்ததே.

இரண்டு நாட்களாய் குழம்பிக் கொண்டிருந்தவனை தீர்வு காணச் செய்தது என்னவோ தற்செயலாய் கேள்விப் பட்ட மகேஷின் காதல் விவகாரம் தான்.

அதுவும் அவனுக்கு பாவையவளின் மீது பிடித்தம் இருப்பது தெரிய வந்திட ஏற்கனவே அவளுக்கு வரன் பார்த்திட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தவனுக்கு இன்னும் வசதியாகிப் போனது.

மகேஷின் மீது ஏற்கவனே நம்பிக்கையும் மரியாதையும் நிரம்பவே இருந்தது.அவனுக்கு பாவையவளை கட்டிக் கொடுத்தால் நிச்சயம் அவள் வாழ்வு சிறக்கும் என்று நினைத்தவனோ அவள் மனதை பற்றி யோசிக்க மறந்தது ஏனோ..?

திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் என்று அவளுக்கு வாழ்வு அமையுமோ என பயந்தவனோ மகேஷின் வாக்குறுதி பெரிதும் அமைதிப்படுத்தியிருக்க இத்தனை நாள் அவள் வாழ்வு குறித்து நீங்காமல் நிலைபெற்று நின்றிருந்த அழுத்தம் மொத்தமும் அகன்று போயிருந்தது,இந்த நொடி.

அவனிடம் பேசி விட்டதாயிற்று.இனி அவளிடம் தெளிவு படுத்திடுவதே மிச்சம் என நினைத்தவனோ வண்டியை கிளப்பியிருந்தான்,வீட்டுக்குள்.

"இன்னிக்கி ஆஃபிஸ்கு கொஞ்சம் லேட்டா போ இசை.." அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவனோ அவளிடம் மொழிய அவளுக்கு ஏனென்று புரியவில்லை என்றாலும் அவன் பேச்சை மீறிடவில்லை,மனம்.

ராமநாதனோ வேலை என்று சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பியிருக்க அவர் வரும் நேரம் அறிந்திருப்பது பையனின் வேலையை இன்னும் இலகுவாக்கியது.

சோபாவில் அமர்ந்து இருந்தவனோ அவளுக்கு தன்னருகே வந்து அமருமாறு சைகை செய்திட பெரிய விழிகளை இன்னும் விரித்துக் கொண்டு அதிர்வின் துளிகளோடு அவனருகே வந்து இருந்து கொண்டாள்,இசையவள்.

ராமநாதன் வீட்டில் இருந்த போது இப்படி நடந்திருந்தால் அத்தனை அதிர்வு இருந்திருக்காது.ஏன் அதிர்வே இருந்திருக்காது.ஆனஆல்,இப்போது ராமநாதன் வீட்டில் இல்லை என்பது தான் அவளை போட்டுக் குழப்பியது.

"நா உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.." அவளின் விழிகளை ஊடுருவி பையன் சொல்லிட சட்டென தழைந்து போய் நிலத்தை மேய்ந்தன,அவள் விழிகள்.

இத்தனை காலம் மௌனமாய் நேசித்துக் கொண்டிருப்பவளால் அந்த விழிகளை மட்டும் சந்திக்கும் தைரியம் இன்னும் வந்தபாடில்லை.

"நா சொல்றதுல எந்த தப்பும் இல்ல..உன் கிட்ட கண்டிப்பா நா எதுக்காக உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லியாகனும்..குறுக்க எதுவும் பேசாம நா சொல்றத மட்டும் கேளு.."

பையன் அதட்டலாய் சொல்லியிருந்தால் கூட அவளுக்கு எகிறியிருக்கும்.குரலில் மாறுபாடு காட்டி உள்ளார்ந்த வருத்தத்துடன் அவன் கூறியது பதிலேதும் கூறிடாமல் அவளை அப்படியே அவன் பேச்சுக்கு செவிசாய்த்திட வைத்திட்டது.

"நா முன்னாடி ஒரு பொண்ண லவ் பண்ணேன்..பட் ஏதோ ரீசன் நிச்சயதார்த்தம் வர போய் அது அப்டியே நின்னு போச்சு..எங்க லவ்வும் ப்ரேக் அப் ஆயிடுச்சு.."

அவன் கூறக் கூற அவளுக்கு அவன் மீதிருக்கும் நேசம் தான் கூடிக் கொண்டு போனது.அவர்களின் காதல் பிரிவுக்கு காரணம் என்னவென்று அவளுக்கு நன்கு தெரியும்.

பிழை மொத்தமும் அவனின் முன்னால் காதலி மீது என்று தெரிந்தவளுக்கோ அவள் மீது எந்தவொரு பழியையும் இடாமல் குறையொன்று கூறாமல் கதையை மூடி விட்டது இன்னுமே அவனின் மீதான மதிப்பைத் தான் கூட்டிற்று.

"சத்தியமா அதுக்கப்றம் எனக்கு வாழ்க்கய பத்தின எந்த ஆசயும் இல்ல..ஏன் கல்யாணம் பத்தி எந்த இரு தாட்டும் இல்ல..முக்கியமா எனக்கு யார் மேலயும் நம்பிக்கயும் இல்ல..வேற எந்த பொண்ணயும் நம்பற அளவு பரந்த மனசும் என் கிட்ட இல்ல..ஆனா அப்போ சித்தப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு..உயிருக்கு போராட்ற கட்டம் வந்ததும் அவர் என் கிட்ட கேட்டது கல்யாணம் பண்ணிக்கோன்னு தான்..அந்த எடத்துல என்னால அவர மறுக்க முடில.."

"அப்போ தான் அரவிந்த் மூலமா நீ எனக்கு இன்டர்ட்யூஸ் ஆகன..நீயா வந்து எங்க வீட்ல கல்யாணம் பண்ணிக்க போர்ஸ் பண்றாங்க..நா ஒரு பையன லவ் பண்றேன் ஹெல்ப் பண்ணுங்கன்னு.." என்றவனின் விழிகளோ பாவையவளை கூர்மையாய் அளவிட அவளோ தன் உள்ளத்து உணர்வுகளை காட்டிக் கொள்ளாது இருக்க வெகுவாய் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது.

"நீ கெஞ்சு கேட்டதால தான் ஒரு வருஷத்துல டைவோர்ஸ் பண்ணிக்கலாம்னு உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்..அதுல உனக்கு நல்லது ஏதும் இருந்ததா எனக்கு இன்னிக்க வர தெரில..பட் என்னோட சுயநலம் தான் மொத்தமா இருக்குன்னு நல்லாவே எனக்கு தெர்யும்.." கூறிட்டவனின் குரலில் எக்கச்சக்கமாய் வழிந்தோடியது,குற்றவுணர்வு.

"ஆனா என்னோட சிட்டுவேஷன் அப்டி.. அதுக்கப்றம் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது..அது முன்னாடியே தெரிய வந்திருந்தா கண்டிப்பா என்ன நடந்து இருந்தாலும் நா உன்ன கல்யாணம் பண்ணிகிட்டு இருக்க மாட்டேன் இசை..கண்டிப்பா அப்டி செஞ்சிருக்க மாட்டேன்.."

பையனின் விழிகளோ தன்னை மீறி வருத்தத்தை பிரதிபலித்திட அதை பாவையவள் கவனிக்காமல் இல்லை.அவனின் வருத்தம் அவள் மனதை ஆழமாய் கீறியது.

"இப்போ நா உன்ன கல்யாணம் பண்ணிகிட்டது தான் நா செஞ்ச பெரிய தப்புன்னு தோணுது..அப்டி பண்ணி கிட்டதனால உனக்கு என் மேல லவ்வு வந்தது.." கூரிய விழிகளால் கூறு போட்ட படி அவன் சொல்லிட அவளோ அவன் விழிகளைப் பாரத்திடவேயில்லை.

"என் மேல உனக்கு லவ் வரும்ங்குற மோட்டிவ் ல நா கண்டிப்பா நடந்துகிட்டது இல்ல..ஆனா உனக்கு என் மேல லவ் வந்துருக்கு..என் மேல விருப்பம் வர்ர மாதிரி நடந்துகிட்டு மனசு கலச்சு இருந்தா ஐ ஆம் ரியலி சாரி.."

தாழ்ந்த குரலில் வருத்தம் இழையோட அவன் மன்னிப்புக் கேட்டிட மறுப்பாய் தலையசைத்தவளுக்கு அவன் தனக்குள் மருகிப் புழுங்குவது புரியாது போகுமா என்ன..?

அவன் இப்படியெல்லாம் இறங்கி வந்து பேசும் ரகமில்லை.பணிந்து பேசுவது எல்லாம் அவனின் அகராதியில் இருந்ததாய் சரித்திரமே இல்லை.அப்படியிருப்பவனின் இத்தனை தூரம் உடைத்து பேசுகிறான் என்றால் அவனின் மனதின் போராட்டாம் எத்தகையது என்று அவளுக்கு புரியாது போய்விடாதே!

"இங்க பாரு இசை..உன் கிட்ட திட்டி திட்டி எனக்கும் அலுத்துப் போச்சு..உன் மேல மட்டுல்ல வேற எந்தப் பொண்ணு மேலயும் கண்டிப்பா எனக்கு லவ் வராது..இந்த ஒலகம் அழிஞ்சாலும் வரவே வராது..ஏன்னா என்னோட சூழ்நில அப்டி...அப்டியே லவ்வு வந்தாலும் அத எக்ஸ்பிரஸ் பண்ணி சந்தோஷமா வாழ்ற லைஃப் எனக்கு இல்ல.." அவளுக்கு விடயம் தெரியாது என்கின்ற எண்ணத்தில் அவன் மறைபொருளோடு கூற அதை உணர்ந்து கொண்டவளின் மனமோ கனத்துப் போனது.

அவனை இந்த எண்ணத்தில் இருந்து வெளிக்கொணர்ந்திடத் தான் அவள் இத்தனை தூரம் இழுத்துப் பிடித்து போராடுவதே..?
அதை ஏற்க மறுப்பவனை நினைக்கையில் விரக்தியை மட்டுமே சுமந்து நின்றது,மனம்.

"உன் கிட்ட எறிஞ்சு விழறேன்..உன்ன ஹர்ட் பண்றேன்..என்னோட நேச்சரே அது தான்.."

மறந்தும் பையன்,அவளின் நலனுக்காகத் தான் அக்கறை காட்டி நிற்பதை சொல்லிடவில்லை.

"உன் மேல எனக்கு அக்கற இருக்கா இல்லயான்னு தெரில..அப்டியே வந்தாலும் அது கண்டிப்பா லவ்வா மாறாது..புரியுதா..? என்ன நடந்தாலும் அது லவ்வா மாறவே மாறாது..இன்னொரு பொண்ணுக்கு என்னோட மனசுல கண்டிப்பா எடம் இருக்காது.." என்றவனோ அவன் மனதில் அவள் முன்னால் காதலி இருப்பதாய் எப்போதும் கூறும் பொய்யை இன்று கூற ஏனோ மறந்து போக அதை தெளிவாய் குறித்துக் கொண்டது,பாவையின் மனது.

"இங்க பாரு இசை..நா உன்ன கொழந்த மாதிரி தான் பாக்கறேன்..அப்டியே உன் மேல அக்கற பாசம் எது வந்தாலுமா அது அப்பா பொண்ணு மேல வக்கிற பாசமா தான் இருக்கும்..இல்ல சும்மா ப்ரென்ஸ்ட்குள்ள இருக்கற அக்கறயா தான் இருக்கும்..ஆரம்பத்துல உனக்கு என் மேல இருக்கறது வெறும் இன்பாக்ஷுவேஷன்..ஐ மீன் க்ரஷ்னு தான் நெனச்சிகிட்டு இருந்தேன்.."

"பரவால க்ரஷ்னாவது புரிஞ்சி இருக்கே..அது பெரிய விஷயம் தான்.." மனதுக்குள் நொடித்துக் கொண்டவளோ வாயைத் திறந்து எதுவும் கூறிடவில்லை.

"ஆனா அது க்ரஷ் இல்லன்னு புரிது..லவ்வுன்னு புரிஞ்சாலும் நீ லவ் பண்றது எனக்கு என் மேலயே குற்றவுணர்ச்சி தான் கூட்டுது..ஸோ ப்ளீஸ் என்ன மறந்துடு.."
முதன் முதலாய் தன் கெத்தை இறக்கி விட்டு மன்றாடியவனை சலனமின்றி உரசின,அவள் விழிகள்.

"நீ என்ன மறந்துர்ரேன்னு மட்டும் சொல்லு..நா உனக்காக என்ன வேணாலும் பண்றேன்.."

"கண்டிப்பா பண்ணுவீங்களா..?" தன் மௌனம் கலைந்து அவள் பேசிட அது பையனுக்கு சரியாய்ப் படவில்லை.அவள் இத்தனை எளிதில் ஒத்துக் கொண்டது அவனுக்கு சந்தேகத்தை விதைத்தது.

"பண்ணுவீங்களா சார்..? இல்லன்னா.?" அவள் இழுக்கும் முன்னே ஆமோதிப்பாய் தலையசைத்தான்,பையன்.

"பண்றேன் என்ன பண்ணனும்னு சொல்லு.."

"நமக்கு இன்னும் ரெண்டு மாசத்துல டைவோர்ஸ் கெடச்சிடும்ல.."

"ஆமா.."

"அப்போ அது வர என் கூட ப்ரெண்டா பழகனும்..உங்க ப்ரெண்ட்ஸ் கு நீங்க கொடுக்கற அதே உரிமய எனக்கு தரனும்..அவங்க கூட பழகற மாதிரி என் கூட நார்மலா பழகனும்..அதுக்கப்றமும் என் மேல உங்களுக்கு லவ் வர்லனா கண்டிப்பா நா டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..ப்ரெண்ட்ஸ்" என்றவாறு கை குலுக்க கரத்தை நீட்டிட நீட்டிய கரத்தை சில நொடி ஆழ்ந்து பார்த்தான்,பையன்.

"ஏன் சார் என் கூட ப்ரெண்டா இருக்க பயமா இருக்கா..?" ஏதோ பையனின் வார்த்தைகள் தந்த தைரியத்தில் அவள் கேட்டிட புருவமுயர்த்தி நோக்கியவனோ அழுத்தமாய் அவளின் கரத்தை பற்றிக் குலுக்கினான்,"ப்ரெண்ட்ஸ்" என கூறிக் கொண்டு.

உயிர்த்தொடும்.

2024.09.04
 
Status
Not open for further replies.
Top