ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 04

தன் முன்னே வந்து நின்ற அண்ணனின் கேள்வியில் விக்கித்துப் போய் நின்ற யாழினிக்கு விழிகள் கலங்குவது போல் இருந்தன.

"என்னாச்சு யாழினி..? எதுக்கு கண்ணெல்லாம் கலங்கி இருக்கு..?"

"ஒன்னுல்லண்ணா.."
அழுகை அடக்கிய குரலில் கூறிட தமிழின் முகத்தில் சிந்தனையில் சாயல்.

"நீ ஏதோ மறக்கிற யாழினி..?"

"ஒன்னும் மறக்கலணா.."

"உண்மய சொல்லு யாழினி.." அவன் அதட்டிட அவளோ அவனின் தோளில் சாய்ந்து கதறியே விட்டாள். சில நாட்களாய் அடைக்கி வைத்திருந்த வலிகளும் வேதனைகளும் கண்ணீராய் வெளியேறிட எதுவும் கேட்காமல் மெதுவாய் தட்டிக் கொடுத்தான்,அண்ணன்காரன்.

அவளுக்கோ அழுகை மட்டுப்படவேயில்லை.குற்றவுணர்வும் தான் விட்டொழித்த வார்த்தைகளும் மனதில் படமாய் விரிந்திட என்ன செய்வதென்று புரியவும் இல்லை.

"யாழினி அழாதடி..என்னாச்சுன்னு சொல்லு மொதல்ல..எதுக்கு இப்டி அழுதுகிட்டு இருக்க..?" தங்கையின் கண்ணீர் மனதைப் பிசைந்திட தமிழ் கேட்டதற்கு மறுப்பாய் தலையசைத்தவளோ விம்மி விம்மி அழுதாள்,
தன்னைத் தேற்றிட.

அழுகை அடங்கிட தேம்பல் முற்றுப் பெற்று விசும்பலும் நின்று போய்விட விழி நிமிர்த்தி அண்ணனை ஏறிடும் தைரியம் இல்லை,அவளுக்கு.

எங்கே அவன் கேட்டால் மொத்த உண்மையையும் உளறி விடுவாளோ என்று பயந்து தலை தாழ்ந்தவாறு விலகிச் சென்றிட தமிழின் மனதுக்குள் பலவிதமான கேள்விகள்.

பொழுது கடந்து மறுநாளும் விடிய அலுவலகத்துக்குள் நுழைந்த பாவையவளை ஆராய்ச்சியாய் பார்த்தாள்,தாமரை.

"அரசி என்னாச்சு..?என்னடி இன்னிக்கி டல்லா இருக்க..?"

"ஒன்னுல்லடி"

"பொய் சொல்லாத..ஏதோ நடந்துருக்கு.." தோழி துருவித் துருவி கேட்டிட மழுப்பி விட்டு விலகிச் சென்றவளை புரியாது பார்த்தாள்,தோழியவள்.

"என்னாச்சு இவளுக்கு..? என்னமோ ஒரு மாதிரி இருக்கா..இதுக்கு முன்னாடி இவ இப்டி கப்பல் கவுந்த மாதிரி சுத்திகிட்டு இருக்க மாட்டாளே.." நாடி தட்டியவளுக்கு அவளின் கலக்கத்துக்கான காரணத்தை ஊகித்திடக் கூட முடியவில்லை.

யாருடனும் பேசாது வேலையில் ஆழ்ந்தவளுக்கு பையனின் வார்த்தைகளே செவியில் ஒலித்து வதைத்துக் கொண்டிருந்தது.இடையிடையே கவனம் சிதற வேலையை முடித்தவளின் மனம் தனிமையைத் தேடி அலைய ஒருவாறு அலுவலகத்துக்கு பின்னே இருக்கும் மரத்தின் கீழே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள்,நிம்மதியுடன்.

வீசிச் சென்ற காற்றும் அவள் மனதின் வெம்மையை தணிக்க முயன்று போய் இன்னும் வேகமெடுத்தது.காற்றின் வேகத்தில் சிக்கி ஆடித் திரிந்த சிகை முகத்தில் மோத அதை பின்னே தள்ளி விடும் மனநிலையில் கூட இல்லை,பாவையவள்.

இலக்கற்று வெறித்து அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கரமோ தனிச்சையாய் கையில் இருந்த நாட்குறிப்பைத் தடவிட ஏனோ புரட்டிப் பார்த்திடத் தோன்றியது.

தனியாக வருகையில் கையோடு அவளின் நாட்குறிப்பையும் எடுத்து வருவது அவளின் வாடிக்கையான பழக்கம்.

பையனைக் காதலிக்கத் துவங்கியது முதல் அவனின் நினைவுகளையும் அவளுக்கான அறிவுரைகளையும் எழுதி விடுவது வழக்கமாகிப் போனது.

அவனால் சில நேரம் மனம் காயப்பட அதை ஒன்றும் மனதுக்குள்ளே வைத்துக் கொண்டு மருகித் தவித்திட சத்தியமாய் இயலாது,அவளால்.
ஏனோ அடுத்தவர் யாரிடமும் காயத்தைச் சொன்னால் அவனைப் பற்றி தவறாய் நினைக்க கூடும் என்கின்ற எண்ணம் அவளை வாய் திறக்க விடாது.

உரைத்திடவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்து மருகிடவும் முடியாமல் தவித்தவளுக்கு துணையாகிப் போனது,எழுதுகோலும் நாட்குறிப்பும் தான்.அவளின் வலி அவளோடே கரைந்திடட்டும் என்கின்ற எண்ணம் போலும்.

மெலிதாய் விரிந்த இதழ்களுடன் சில தாள்களை புரட்டியவளுக்கு நான்காம் பக்கத்தில் எழுதியிருந்தவை வெகுவாய் கவனத்தை ஈர்த்திற்று.

"ஐ திங்க் ஐ அம் இன் லவ் வித் ஹிம்..அப்டித் தான் தோணுது..என்ன தான் முன்ன மாதிரி மனுஷன் உர்ருன்னு கல்ல முழுங்குன மாதிரி வெறப்பா இருந்தாலும் நமக்கு க்யூட் க்யூட்டா தெரிறாரு..பாக்கறப்போ எல்லாம் வயித்துல பட்டர் ஃப்ளை பறக்குது..வாந்தி வர்ர மாதிரி இருக்குது..மனுஷன பாத்தா நா நானாவே இல்ல..அப்போ இது லவ் தான..?" தனக்குத் தானே கேள்வி கேட்பது போல் எழுதியிருக்க அவளுக்கே புன்னகை.

உறைந்த முறுவறுடன் சில தாள்களை புரட்டிட காற்றில் ஆட முயன்ற தாளொன்றை இழுத்து ஒட்ட வைத்தது,இரு விரல்கள்.

"இன்னிக்க ரோபோ என்ன ரொம்ப திட்டுச்சு..அது மனசுல எனக்கு எடமே இல்லன்னு சொல்லிச்சு..ரொம்ப வலிக்கிது..நா அந்த ரோபோவ லவ் பண்ற மாதிரி அது என்ன வெறுத்துட்டு இருக்கா..?" கிறுக்கல் கையெழுத்தில் எழுதியிருக்க சற்றே பெரிதாகி கசிந்து போன மையுடன் இருந்த எழுத்துக்கள் சாட்சியம் கூறின,அவளின் கண்ணீர்த்துளிகளுக்கு.

இப்போதும் அதே நிலை தான்.அதில் மாற்றம் இல்லை என நினைத்தவளின் விரல்களோ அடுத்த பக்கத்தை புரட்டிட கையில் அகப்பட்டது,தனக்கே எழுதி வைத்த கடிதமொன்று.அதில் இருந்த வரிகளை வாசித்த பின் ஏனோ அவளின் மனதுக்கு மொத்தமாய் தீர்வு கிடைத்த உணர்வு.

"அவரு பத்தி முழுசா தெரிஞ்சு தான் லவ் பண்ற நீ..அவர முழுசா புரிஞ்சிகிட்டு இருந்தா அவரும் உன்ன மாதிரியே உன்ன லவ் பண்ணனும்னு எப்டி எதிர்பாக்கலாம்..? அப்டி எதிர்பாத்தா அது லவ்வாகிடுமா..?"

"அவரு உன்ன லவ்வே பண்ணலனாலும் உன்ன வெறுத்தாலும் அவர டார்ச்சர் பண்ணாம லவ் பண்றதால எதுவும் ஆகிடாது...வாழ்க்கைல ரொம்ப நொந்து போயிருக்குற மனுஷன் கொஞ்சம் ரஃப் அன்ட் டஃப்பாத்தான் இருப்பாரு..அதுக்காக அவரு என்ன கெட்டவர்னு ஆயிடுமா..?"

"அவருக்கு உன்ன புடிக்கலனாலும் லவ் பண்ணு..லவ் பண்ணிட்டே இரு..அவர லவ் பண்றதுக்கு உனக்கு இல்லாத உரிமயா..? உன்ன லவ் பண்ணக் கூடாதுன்னு சொல்றதுக்கு அவருக்கு கூட ரைட்ஸ் இல்ல..நீ உன் பாட்டுக்கு லவ் பண்ணு..அந்த மனுஷன் கிட்ட இருந்து எதயும் எதிர்பாக்காத..ஒத்த பார்வைய கூட..கல்லுளி மங்கன் உன்ன கண்டிப்பா திரும்பிக் கூட பாக்காது ரோபோ.."

"இங்க பாரு இசை..லவ்வுங்குறது ஒரு ஃபீல் அது தானா வரனும்..நாமளா வர வெக்க கூடாது..அது இங்கயும் பொருந்தும்..அவருக்கு உன் மேல லவ் வர்ர வர வெயிட் பண்ணு..வரும் வர நீ இன்னும் அதிகமா லவ் பண்ணு.."

"ஒன்னு புரிஞ்சுக்கோ இசை..அந்த ரோபோவ விட நீ லவ் பண்ண யாரும் பொருத்தமா கெடக்க மாட்டாங்க..என்ன தான் வெறப்பா திரிஞ்சு பேய் மாதிரி கத்தினாலும் ஹீ ஈஸ் அ ப்யூர் ஸோல்..அது உனக்கு தெரியும் தான..அப்றம் எதுக்குடி இந்த சின்ன விஷயத்துக்கு இவ்ளோ ஃபீல் பண்ற..இத விட சிறப்பான தரமான சம்பவம் எல்லாம் காத்திருக்கு..அப்போ அதெல்லாம் நடக்குறப்போ நீ என்ன பண்ணுவ இசை..?"

"அவர விட அதிகமா யாரவும் உன்னால லவ் பண்ண முடியாது..அவர விட்டுட்டு யாரயும் உன்னால நெனச்சுக் கூட பாக்க முடியாதுன்னு தெரியும்ல..அதுக்கப்றம் எதுக்கு இப்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி டைம வேஸ்ட் பண்ற..பேசாம விட்டுடு.."

"விட்டுத்தள்ளிட்டு வேலய பாரு..அந்த மரமண்ட ரோபோக்கு ஒருநாள் உன்னோட லவ் புரியும்..அப்போ வந்து கண்ணே மணியேன்னு கொஞ்சும்..அப்போ வச்சி செஞ்சு பழி வாங்கு.."

"எல்லாம் ஒரு நாள் சரியாகும் இசை..அந்த ரோபோ உன்னோட லவ்வ புரிஞ்சுக்குற நாளும் கண்டிப்பா வரும்..ரொம்ப அலட்டிக்காம விட்டுத் தள்ளு..நம்ம அரசியல்ல எல்லாம் சகஜம்..ஸோ நோ வொரீஸ்..ஆல் ஈஸ் வெல்.." என்றவாறு அவள் எழுதியது முற்றுப் பெற்றிருக்க படித்தவளுக்கு முற்றிலும் மனம் தெளிந்தது போல் தோன்றிட நிம்மதி பரவியது,மனம் பூராகவும்.

"புரியுதா இசை..? அவரு உன்ன வெளிப்படயாவே வெறுத்தாலும் நீ உன் லவ்வ மாத்திக்காத.." தனக்குத் தானே கூறித் தேற்றிக் கொண்டவளின் முகத்தில் இருந்த கலக்கம் மறைந்து போயிருந்தது,மாயமென.

●●●●●●●●

வீட்டுக்கு வந்ததில் இருந்து அவளின் முகத்தில் இருந்த வாட்டத்தை கண்ட சக்திக்கு காரணம் தெரிந்தாலும் அதை தீர்த்து வைத்திடும் வழிவகை தான் தெரியவில்லை.

மனையாளைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும்.சிறு விடயத்துக்கும் அதீதமாய் உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றுவது தான் அவள் இழுத்துக் கொண்ட சிக்கல்களுக்கும் கொடுத்து விட்ட காயங்களுக்கும் மூல முதற்காரணமென்று அறிந்து தான் இருந்தான்,அவனும்.

"அபி என்ன யோசிச்சிகிட்டு இருக்க..?"

"ஒன்னுல்லங்க.." பொய்யைக் கூறி சமாளித்தவளுக்கு கணவன் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் என்பது வேறு பெரும் அலைக்கழிப்பாய்.

அவளின் கலக்கம் அவனுக்கு தெளிவாய் புரிந்திருக்கும் போலும்.
கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் அருகே வந்தமர்ந்து தன் முகம் பார்த்திடச் செய்ய அவளுக்கோ அவனின் விழிகளை சந்தித்திட முடியவில்லை;முடியவேயில்லை.

"என் கண்ண பாரு அபி.." அவனின் உயிர்த்தொடும் குரலில் நிமிர்ந்தவளுக்கு அவனின் விழிகளில் தெரிந்த பரிவைக் கண்டதும் கழிவிரகத்தில் அழுகை வந்திட கண்ணீர் வழிந்தது,கன்னத்தின் ஓரமாய்.

"நா தப்பு பண்ணிட்டேங்க..சரியே பண்ண முடியாத அளவு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்.." அழுது கொண்ட கத்தியவளின் சத்தம் அறையைத் தாண்டி வெளியே போகும் சாத்தியம் இருக்க சாற்றியிருந்த கதவை தாழிட்டு விட்டு வந்தமர்ந்தான்,கணவன்.

"அபி என்னாச்சுன்னு சொல்லு மொதல்ல.."

"எனக்கு எல்லாம் தெரியும்ங்க.." உடைந்த குரலில் கூறியவளோ கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அவனை ஏறிட சக்திக்கோ செய்வதறியா சூழ்நிலை.

"யாரு சொன்னா.." பிசிர் தட்டா குரலில் கேட்டவனுக்கு மேற்கொண்டு எதுவும் பேசிடவும் முடியவில்லை.

"அது அது..எனக்கு தெரிஞ்சவங்க சொன்னாங்க.." திணறிய படி கூறியவளுக்கு மீண்டும் அழுகை உடைப்பெடுக்க அவனைக் கட்டிக் கொண்டு கதறியவளை மெதுவாய் தேற்றி விட்டன,அவனின் கரங்கள்.

போனது போகட்டும் என்று ஆறுதல் சொல்ல அவனின் மனசாட்சி இடம் கொடுத்திடாது.அவளின் செயலாய் நடந்த களேபரங்கள் ஒன்றும் சுலபமாய் கடந்து போய் விடக்கூடியவை அல்லவே.

அபிக்கோ அவன் ஏதும் வார்த்தைகளை கூறி தன்னை ஆற்றுப்படுத்த முயலாததே தான் செய்த தவறின் வீரியத்தை இன்னும் எடுத்துரைத்திட இன்னும் வலுத்துப் பெருக்கெடுத்தது,அழுகை.

குற்றவுணர்வில் அழுது கரைந்தே ஒரு வழியாகிக் கொண்டிருந்தாள்,அபிராமி.

அதே நேரம்,

வாழ்வில் நடந்தவை வரிசையாய் நினைவிலாட ஆழமாய் நெடுமூச்செறிந்து கோர்த்த கைகளை பின்னந்தலையில் வைத்தவாறு இருக்கையில் சரிந்தமர்ந்தவனுக்கு மனதில் அழுத்தம்.

தோழனின் நிலமை புரிந்தவன் போல் அரவிந்த கதவைத் தட்டிக் கொண்டு வந்திட சட்டென தன்னை மீட்டு இறுக்கத்தை கொண்டு வந்தவனுக்கு அரவிந்தின் முகத்தில் இருந்த பதட்டம் யோசனைத் துளிகளை தெளித்து விட்டன.

"என்னடா என்ன ஆச்சு..? என்ன ஒரு மாதிரி பரபரப்பா இருக்க..வாட் ஹேப்பன்ட்..?"

"டேய் உன் சித்தப்பா வர்ராறாம்.."

"எதே..?" அதிர்வில் குளித்த விழிகளுடன் எழுந்தே நின்று விட்டான்,பையன்.

"ஆமாட நாளக்கி ஃப்ளைட்..நாளன்னிக்கி இங்க வந்துருவாராம்..நீ பண்ணிட்டு இருக்குற திருகுதாளம் தெரிஞ்சுது நீ மட்டுல்ல நானும் காலி.."

"யார்ரா சொன்னா..?"

"இப்போ உன் சித்தப்பா தான் ஃபோன் பண்ணி சொன்னாரு.." என்றிட பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து அழுந்தத் தடவியவனின் மனமோ தான் செய்ய வேண்டிய வேலைகளை தாமதியாமல் பட்டியலிட்டது.

"மச்சான்..நீ மட்டும் யோசிக்காம என்ன பண்ணப் போற ஏது பண்ணப்போறன்னு என் கிட்டவும் சொல்லுடா..நீ மட்டும் இப்டி இருக்குறத தெரிஞ்சுதுன்னு வை..உன் சித்தப்பா என்னோட கழுத்த அறுத்துறுவாரு.." புலம்பிய அரவிந்துக்கோ பையனை விட பதட்டம்.

பின்னே பையன் செய்யும் அனைத்திற்கும் அவனைப் பிடித்து காய்த்து எடுத்தால் பதறாமல் இருக்க அவன் சிலையா என்ன..?

"டேய் என்னடா இப்பவும் காலைல மாதிரி தியானம் பண்ணிட்டு இருக்க..ஏதாவது பேசித் தொலயேன்டா.."

"ரிலாக்ஸ் அரவிந்த்..ரிலாக்ஸ்..கொஞ்சம் யோசிக்கலாம் நீ பர்ஸ்ட் உக்காரு.." இருக்கையைக் காட்டிட ஷர்ட்டின் இரண்டாவது பட்டனை திறந்து விட்டவாறே அமர்ந்து கொண்டான்,தோழன்.

"இவனுக்கு ஃப்ரெண்டா இருக்குறதுக்குள்ள நமக்கு நாக்கு தள்ளி ஆஸ்பத்திரில போய் படுத்துருவோம் போல இருக்கே.." முணகியவனின் வார்த்தைகள் பையனின் செவியிலும் விழாமல் இல்லை.

உயிர்த்தொடும்.

2024.08.22
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 05

தோழனின் வார்த்தைகள் செவியில் நுழைந்து சிந்தைக்கு எட்டினாலும் அதை கவனித்து எதிர்வினையாற்றும் நிலையில் சத்தியமாய் இல்லை,பையன்.

அடுத்த கட்டம் என்ன செய்வது என்பது பெரும் குழப்பமாய் மனதில் உருவெடுத்திருக்க நெற்றியை ஆட்காட்டி விரலாலும் நடு விரலாலும் சேர்த்தாற் போல் அழுந்தத் தேய்த்துக் கொண்டவனின் விழிகளில் அரிதிலும் அரிதாய் சேர்ந்திருந்தது,பதட்டத்தின் துளிகள்.

புருவங்கள் சுருங்கிட நெற்றிதனில் முடிச்சுக்களுடன் இருந்த தோழனை ஏறிட்ட அரவிந்தின் இதழ்களில் கணநேரப் புன்னகையொன்று மின்னி மறைந்தது.

"இப்போ என்னடா பண்றது..?" யோசித்து யோசித்து பார்த்தவனோ அரவிந்திடம் மீண்டும் வினாத்தொடுக்க உதடு பிதுக்கினான்,தோழன்.

"எனக்குன்னா ஒரே ஒரு வழி தான் தெரியுது..அத சொன்னா நீ ஒதப்ப.." என்று கூறுகையிலேயே புரிந்தது,தோழனின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணம்.

"நீ சொல்லவே வேணாம்..எனக்கு நல்லா புரியுது.." போதும்,பேசத் தேவையில்லை என்று விழிகளால் சைகை செய்திட உதடு சுளித்த தோழனின் விழிகளில் மட்டும் குறும்பு தெறித்ததன் காரணம் தான் என்ன..?

●●●●●●●●

இரவு வெகுநேரம் கழிந்தும் உறங்காமல் கட்டிலில் உருண்டு புரண்டு சிந்தனையில் ஆழ்ந்து நிகழை தொலைத்துக் கொண்டிருந்தான்,பையன்.

சிறிய தந்தையிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று பொய்கள் கலந்து சமாளித்து விட்டு வைத்தவனுக்கு இப்போதே தலை சுற்றியது.

அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் குற்றவுணர்வு நெஞ்சை அரித்து தின்றிட அதிகமாய் அவருடன் அலவளாவி கதைப்பது இல்லை முன்பு போல்.

வேலை என காரணம் கூறி பலமுறை அழைப்புக்களை தவிர்ப்பவன் சில நேரம் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டு கதைக்கும் போதெல்லாம் அவரின் அக்கறையான வார்த்தைகளும் அனுசரணைகளும் பையனை வெகுவாகப் பாதித்திடும் என்பது பொய்யல்ல.

இப்போதும் அதே நிலை தான்.ஏன் அழைப்பை ஏற்றோம் என்கின்ற மனநிலையே மனதினுள் பரவிக் கிடக்க முகம் முழுவதும் குழப்பத்தின் ரேகைகள் கீறப்பட்டுக் கிடந்தன.

சிறு வயது துவக்கமே பையனுக்கு தனிமையின் மீது அதிக நாட்டம்.பெற்றோரிடம் கூட மனம் விட்டு பேசி சிரிக்காதவன் சிறிய தந்தையிடம் கொஞ்சமேனும் தன் இறுக்கம் தளர்த்தி இயல்புடன் இருப்பதற்கு காரணம் அவர் அவன் மீது வைத்திருந்த அளப்பறிய பாசமே.

கடைக்குட்டியாய் பிறந்து வளர்ந்தவருக்கோ திருமணம் செய்து வைத்து சில மாதங்களிலேயே கொடூர விபத்தொன்று நிகழ படுகாயம் வண்டியில் பயணித்த அவருக்கும்,அவரின் மனைவிக்கும்.

மனைவியோ அதே இடத்தில் உயிர் துறந்து விட உயிர்ப்பிழைத்து மீண்டவருக்கு மனைவியின் இழப்பின் பின் மொத்த வாழ்க்கையும் இருளாகிப் போனது போன்றதோர் மாயை.

வாழ்க்கையையே வெறுத்து அதீத மன அழுத்தத்தில் இருந்தவருக்கு ஒற்றை மருந்தாகிப் போனதெனினவோ மழலையென இருந்த பையனவன் தான்.

தன் தனிமையையும் வெறுமையையும் விரட்டி அடிக்க பையனுடன் பொழுதை கழிப்பவருக்கு அதுவே மன அழுத்தம் அகலும் வழியாகிப் போய்விட இன்னுமின்னும் பையனுடன் நெருங்கிப் போனார்,அவர்.

பையனின் தாயும் அவருக்கு மன ஆறுதல் கிடைக்கட்டும் என்று எண்ணி பையனை அவரிடம் விட்டு வைத்திட உணவூட்டுவது முதல் சிறு வயதில் பையனின் இதர தேவைகள் அனைத்தையும் கவனிப்பது அவரின் கரம் சேர்ந்தது.

பெற்ற பிள்ளை இல்லை,அவன்.இருப்பினும் தந்தையாய் மாறி தாயாய்த் தாங்கி தோளில் தட்டிக் கொடுத்து அவனின் ஒட்டு மொத்த உலகமுமாய் தன்னை மாற்றிக் கொண்டிருந்தார்,அவனுக்கென.

சிறு வயது முதல் அவர்களிடையே நிலவிய நெருக்கம் பையனின் மனதில் அவனின் சிறிய தந்தைக்கு முக்கியமான இடத்தைக் கொடுத்திட தவறவில்லை என்பது மறுக்க இயலாத உண்மை.

இயல்பாகவே பையனுக்கு பிடிவாதம் அதிகம்.அத்தோடு மற்றவரின் வார்த்தைகளுக்கு அடி பணிய விரும்பாதவன் தன் கொள்கைகளை ஒரு சிலருக்காக தகர்த்திக் கொள்வதும் உண்டு.அந்த ஒரு சிலரில் அவனின் சிறிய தந்தை முதன்மையானவரே.

அந்த முதன்மையானவர்களில் அவரும் ஒருவர் என்பதால் தான் இத்தனை தூரம் யோசிக்கிறான்,அவருக்கு வேண்டி.

இன்னுமே தெளிவான தீர்வொன்று கிடைக்காதிருக்க உறக்கத்தில் விழ முயன்று தோல்வியைத் தழுவியவனோ எழுந்து வந்து பால்கனிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர இரவு நேர குளிர்காற்று அவனின் தேகத்தை தீண்டியது.

அந்த குளிர்மையில் லயித்து நின்றவனுக்குள் நினைவுகள் கிளம்பிட்டாலும் உரைத்திட்ட நிகழ் அவனை மொத்தமாய் கட்டுக்குள் வைத்திட பெருமூச்சு விட்டான்,பையன்.

தன் மனதை அலசி ஆராய்ந்து இலக்கற்று இருளை வெறித்தவனுக்கு சில பல யோசனைகள் எழுந்து அவனின் பிரச்சினைக்கு தீர்வு தர முயன்றன.

பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொண்டே அண்ணாந்து வானத்தைப் பார்த்து இதழ் குவித்து ஊதிக் கொண்டவனின் மனதில் சற்றே தெளிவா பிறந்தாற் போல்.

மறுநாள் பொழுது விடிய காலையில் எழுந்து தாயாராகிக் கொண்டிருந்தாள்,பாவையவள்.

விடுமுறை தினம் என்பதால் சற்று தாமதமாகவே எழுந்திருக்க நூலகத்திற்கு செல்லும் அவரசம் அவளின் செயல்களில் தெளிவாய்த் தெரிந்தது.

அவளின் அவசரத்துக்கு இன்னும் உபத்திரம் சேர்க்கும் விதமாய் அலைபேசி ஒலிக்க அதில் மிளிர்ந்த தாமரையின் எண்ணைக் கண்டதும் ஏறிய கடுப்போடு சுருங்கப் பேசி விட்டு தோளில் மாட்டிய பையோடு துப்பட்டா மடிப்பை விரல் கொண்டு சீர் செய்த படி பேரூந்து நிறுத்தத்தை நோக்கி அந்த சிறு பாதையில் வேக எட்டுக்களை வைத்து நடந்திட அந்த நேரம் ஆக்கிரமித்திருந்த வெயிலின் தாக்கத்தால் அவள் நெற்றியில் அரும்பின,வியர்வைத் துளிகள்.

புறங்கையால் வியர்வையைத் துடைத்தவாறு மூச்சு வாங்க நடந்து வந்து கொண்டிருந்தவளின் முன்னே வந்து வழி மறித்து நின்றது,பையனின் கறுப்பு நிறக்கார்.

●●●●●●●

மேசையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளையும் பையனின் முகத்தையும் மாறி மாறி பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

வழிமறித்து நின்று விழிகளாலே வண்டியில் ஏறிக் கொள்ள கட்டளையிட அந்த விழிகளில் தெரிந்த அதட்டலில் பயந்து அப்பாவி போல் ஏறிக் கொண்டவளுக்கு அவனிடம் ஏனென்று கேட்டிடும் தைரியம் கூட அந்தச் சமயம் இல்லை.

"என்னாச்சு இந்த ரோபோ இப்டி மெரட்டி வண்டில ஏற வச்சுருக்கு..?" மனதுக்குள் முளைத்த கேள்வியுடன் லாவகமாய் வண்டியோட்டுபவனை அடிக்கடி அவளின் ஓரவிழிகள் ஸ்பரிசித்திட ஏனோ அந்த விழிகளில் தன்னைக் கேளாமலே இரசனை துளிர்த்திற்று.
இரசனையோடு சேர்த்து பையனுக்கான காதல் தூறலும்.

துளிர்த்த தூறலதை தூறிக் கொண்டிருந்த காதலை தன்னகத்தே தூவிக் கொண்டிருந்த துளைக்கும் விழிகளை பையன் திரும்பி ஏறிட்டிருந்தால் அவனுக்குள்ளும் ஏதேதோ ஆகியிருக்குமோ என்னவோ..?

அவளின் பார்வை தன் மீது பதிவதும் ஆர்வத்துடன் படிவதும் பையனுக்கு தெளிவாய்த் தெரிந்து இருந்தாலும் திரும்பிக் கூட விழி உரசிடவில்லை.அவள் அதை எதிர்ப்பார்த்திருக்கவும் மாட்டாளே.

வண்டியை ஒரு நடுத்தர அளவு உணவகத்தின் முன்னே நிறுத்திட இறங்கிச் சென்றவனின் பின்னூடு நடந்தவளுக்கு அவனின் புதி(ரா)தான நடத்தைக்கு காரணம் தெரியாமல் மண்டை குழம்பியது.

பையனைப் பின் தொடர்ந்து வந்தவளோ அவன் அமர்ந்த இருக்கைக்கு முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ள வந்ததும் வராததுமாய் பேரரை அழைத்து உணவு வரச் சொல்லி மேசையை நிரப்பிட அவளுக்குத் தான் அடியும் புரியவில்லை.நுனியும் புரிந்திடவில்லை.

பாவையின் பார்வை தன்னை தொடுவது தெரிந்தும் ஆழ்ந்த யோசனையில் இருந்தவன் கலைந்து அவளைப் பார்த்திட சட்டென தாழ்ந்து போனது,பாவையின் நயனங்கள்.

"என்ன பாத்துட்டு இருக்க..சாப்டு.." உணவை விழிகளால் சுட்டி அவன் சொல்ல அவளின் விழிகள் அதிர்ந்து விரிந்திட விம்பம் காட்டும் கருமணிகளில் பையனின் விம்பம் பெரிதாய் பொதிந்து நின்றது.

"என்ன இப்டி கண்ண விரிச்சு பாத்துட்டு இருக்க..சாப்டு.." பையன் மீண்டும் சொல்ல அவளோ தன் கரத்தை கிள்ளிப் பார்த்தாள்,நடப்பது எதையும் நம்ப முடியாமல்.

அவனுக்கோ அவளின் அதிர்வில் இருந்தா மீளா சமைநிலை கோபத்தை தந்ததோ..?
இல்லை,தான் அதட்டினால் தான் இயல்பு மீண்டிடுவாள் என்று அறிந்து இருந்தானோ..?

விழிகளோடு சேர்த்து வார்த்தைகளாலும் அவனை அதட்டிட அதற்கு பயந்தே உணவில் கையை வைத்தாள்,பாவையவள்.

அவனின் நடவடிக்கைகளை இன்னுமே நம்ப முடியாதவளுக்கு,"ஒரு வேள சினிமால வர்ரது மாதிரி சாப்பாடு போட்டு அடிக்க போறாரோ.." என்ற நினைப்பு எழ மேசையைப் பார்த்ததும் அவள் விழிகள் பிதுங்கிற்று.

"ச்சே..ச்சே..அப்டிலாம் இருக்காது.." தனக்குத் தான மானசீகமாய் கூறி தேற்றிக் கொண்டு உணவில் கவனமானவளின் எண்ணப்போக்க அவளின் விழிமொழியை வைத்தே கணித்து விட்டிருந்தான்,பையன்.
ஆனாலும்,வார்த்தைகளின் ஊடு எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை.

பையன் கோபத்தில் ஏதேனும் திட்டியிருந்தால் கூட அவளுக்கு மனம் நிம்மதியாகி இருக்கும்.தன்னை உண்ண விட்டு சிந்தித்துக் கொண்டிருப்பவனின் அமைதிதான் குழப்பத்தை உண்டு பண்ணி மனதை பாடாய்ப்டுத்திற்று.

"ஐயோ இந்த ரோபோ வேற யோசிச்சு யோசிச்சு நம்ம பீ பிய ஏத்துதே.." மெதுவாய் முணகியவளின் வார்த்தைகள் அவனின் செவியை அடையத் தவறிடாதே.

"நா ஒரு விஷயம் சொல்லனும்.." தன்மையாய் மென்மையாய் அவன் மொழியும் போதே அவளை பயம் சுற்றி வளைத்தது.

"என்னன்னு கேக்க மாட்டியா..?" புருவங்களை ஏற்றி இறக்கி அவன் கேட்ட தோரணையில் மறுப்பாய் தலையசைத்தவளின் இதழ்களோ, "எ..என்ன..?" என்று கேட்டு விட்டிருந்தது,திணறலுடன்.

"நாளக்கி சித்தப்பா ஃபாரின்ல இருந்து வர்ராரு.." அவன் கூறுகையில் அவளிடம் இருந்து அதிர்ச்சியை எதிர்ப்பார்த்து இருக்க அவளோ துள்ளிக் குதித்த மனதை அடக்கப்பாடு பட்ட மனதை மறைக்க பிரயத்தனப்பட்டு தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

உள்ளுக்குள் ஊற்றென ஊறி உதைத்த உவகையின் சாயல் அவள் வதனத்தில் தெரிந்தட அவளின் எண்ணப்போக்கை உணர்ந்த பையனின் மனநிலை என்னவென்பதை தெளிவாய்க் கணிக்க இயலவில்லை.

அவனுக்கோ அவளின் மகிழ்வைக் கண்டு திட்ட வேண்டும் போல் இருந்தாலும் கடினப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டது விந்தையிலும் விந்தை தான்.

"இங்க பாரு..சித்தப்பா வர்ராரு..என்ன பண்ணனும்னு நா சொல்ல தேவல..உனக்கே புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.." எகத்தாளமாய் அவன் கூறியதில் என்றும் இல்லாமல் அவளுக்குள்ளும் கோபம் விரைந்தெழுந்ததோ..?

வார்த்தைகளை கட்டுக்குள் வைத்துக் கொண்டு அழுத்தமான முகத்துடன் அவளை ஏறிட அவள் முகத்தை உரசியவனின் விழிகள் சுருங்கின.

"என்ன அப்டி பாக்கற..?"

"இல்ல உங்க சித்தப்பா வர்ராருன்னு முன்ன சொல்லவே இல்லயே.." தன் கோபத்தை மறைத்து கேட்டாள்,அவள்.தன் கோபத்தை சட்டை செய்து அலட்டிக் கொள்ளும் ரகத்தில் பையன் உள்ளடங்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியாதா என்ன..?

"எனக்கே இப்போ தான் தெர்யும்..இன்னிக்கி நைட் நா ஃப்ளேட்டுக்கு போயிருவேன்..போகும் போது வந்து உன்னயும் அழச்சிட்டு போறேன்..திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி ரெடியா இரு..எப்டின்னாலும் மினிமம் ஒரு வன் மன்த் சித்தப்பா இங்க தான் இருப்பாரு..அது வர நம்மள பத்தின உண்ம எதுவும் அவருக்கு தெரியக் கூடாது.."

"ம்ம்.."

"சொல்றத கவனமா கேட்டுக்க..நாம இப்டி தான் இருக்கோமுங்குறத அவர் கிட்ட காட்டிகிட்டோம்னா அவரு ரொம்ப ஒடஞ்சி போய்டுவாரு..ஸோ நாம ரொம்ப அந்நியோன்னியமான கப்பில்ஸா இருக்கனும்.."

"எ..என்ன..?"

"ஐ மீன் நடிக்கனும்..நா உங்கிட்ட சிரிச்சு பேசுவேன்..கொஞ்சிப் பேசுவேன்..உன் பக்கத்துல வந்து உக்காருவேன்..உன் ஷோல்டர்ல கைய போடுவேன்..அதயெல்லாம் வச்சி நா உன்ன லவ் பண்றேன்னு நெனச்சிக்காத..காட் இட்ட்.."

"அப்டியே நெனச்சு கிழிச்சிட்டாலும்..அப்டியே நெனக்கிற மாதிரி தான் இவரு நடந்துக்கவும் செய்வாரு..இதுக்கெல்லாம் அட்வைஸ் கேக்க வேண்டி இருக்கே..கருமம்..கருமம்.."

"என்ன பதிலே சொல்ல மாட்டேங்குற..?"

"இல்ல சார் நீங்க சொல்றத அப்டியே செஞ்சுர்ரேன்.." அவள் ஒப்புதல் அளித்திட இன்னும் சில அறிவுரைகளை தெளித்து விட பாவையவளுக்கோ ஆயாசமாய் இருந்தது.

வேண்டா வெறுப்புடன் கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தவளின் விரல்களோ அவன் கட்டிய தாலியை மெலிதாய் வருடிக் கொடுக்க அவனுக்கோ அவளின் மனம் முழுதாய் இங்கில்லை என்று தெரிந்தும் பேச வேண்டிய சூழ்நிலை.

"‌என்ன புரிஞ்சுதா..?" அவன் அதட்டிக் கேட்டிட ஆமோதிப்பாய் தலையசைத்தாள்,அவள்.

அவள் இசையரசி!
பையனின் இல்லத்தரசியும் கூட.

உயிர்த்தொடும்.

2024.08.23
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 06

பையனின் வார்த்தைகளுக்கு தலையாட்டி விட்டு வெளியே வந்த பாவையவளுக்கு அப்படி ஒரு மகிழ்வு மனதில்.

அவன் அருகாமையில் வசிக்கலாம் என்கின்ற எண்ணமே உள்ளுக்குள் சந்தோஷப் பூக்காடை உருவாக்கி இருக்க அது அவளின் விழிகளின் வழியே தெளிவாய்ப் புலப்பட்டது.

முகம் விகசிக்க இதழ்களில் பூத்த குறுநகையுடன் பேரூந்துக்காக காத்திருந்தவளோ பையனை அழைத்துச் செல்ல வற்புறுத்தவில்லை.

அவன் தன்னுடன் அழைத்திருந்தாலும் சென்றிருக்க மாட்டாள் என்பது வேறு விடயம்.பின்னே மனதில் கிளை விரித்த மகிழ்ச்சிப் பிரவாகத்தினால் இதழ்களில் தோன்றும் முறுவலும் விழிகளில் தோன்றிடும் மினுமினுப்பும் அவன் விழிதனில் சிக்கிக் கொண்டால் மீண்டும் காது கிழியும் அளவுக்கு அறிவரை கேட்டிட வேண்டும் என்கின்ற பயம் இருந்ததே.

தாமரைக்கு அழைத்து விடயத்தை சொல்லி அவளிடம் நன்றாக திட்டு வாங்கி விட்டு அழைப்பைத் துண்டித்தவளின் இதழ்களில் உறைந்திருந்த புன்னகை மட்டும் தேய்ந்து போகவில்லை.

விலகாத இமைகளும் தளராத இதழ்களும் காதலை கட்டுடைத்துக் காட்டும் பொதுப்படைகள் போலும்.

வழியில் பார்வை பதித்த படி பேரூந்துக்கென காத்திருந்தவளுக்கு தன் முன்னே வந்து நின்ற வண்டியைக் கண்டதுமே இதயம் அதிர அதில் இருந்து இறங்கியவனைக் கண்டதும் மூச்சு நின்று விடும் உணர்வு.

அவனுக்கோ அப்படி எந்த வித பயமும் பதட்டமும் சுத்தமாய் இல்லை.விசிலடித்தவாறு கையில் சாவியை வைத்து சுழற்றிய படி வந்திட அவள் விழிகளோ தம்மை யாரேனும் கவனிக்கிறார்களா என்று சுற்றம் அலசிற்று.

"என்ன அரசி..என்ன கண்டதும் ஷாக் ஆகிட்ட..?"

"எரும மாரு..ஒன்ற வருஷம் இந்தப் பக்கமே வர மாட்டேன்னு சொல்லிட்டு தான போன..அதுக்கப்றம் எதுக்குடா வந்திருக்க..?"

"போடி பைத்தியம்..இவ்ளோ நாள் கழிச்சு வந்துருக்கேன்..வான்னு கூப்டு எப்டி இருக்கேன்னு கேக்காம பேசற பேச்ச பாரு..போடி இவளே.."

"தங்கக் கட்டி..நீ மட்டும் என் ஆளு கண்ணுல சிக்குன என் வாழ்க்க அந்தரத்துக்கு போய்ரும் தெரியும்ல..நா சும்மாலே பயந்துகிட்டு இருக்கேன்..இதுல நீ வேற சர்ப்ரைஸ்னு என்ட்ரி கொடுத்தா நா என்னடா பண்றது..?" பாவமாய்க் கேட்டிட மெல்லமாய் இதழ் பிரித்தான்,ப்ரித்வி.

"அப்போ நீ உன் ஆள இன்னும் கரெக்ட் பண்ணலியா..?"

"எதே..அப்டிலாம் ஒன்னுல்ல நா எப்போவோ கரெக்ட் பண்ணிட்டேன்..ஆனா கரெக்ட் பண்ற கண்டென்டா நா பொய்ய தான் சொன்னேன்னு தெரிஞ்சுதுன்னு வையி..நா செத்தேன்.." பொய்யைச் சொன்னவளுக்கு தம் வாழ்க்கை பற்றி வேறு யாரிடமும் கூற மனமில்லை.

ப்ரித்விக்கோ ஒட்டாது செல்லும் அவர்களின் வாழ்வியல் பற்றி தெரிந்தாலும் மேலும் துருவித் தோண்டவில்லை.அவளே மறைக்கும் பட்சத்தில் அவன் அறிய முற்படுவது அத்தனை உசிதம் அல்ல எனத் தோன்றிற்று.

"சரி சரி நா இன்னும் அஞ்சு நாள் இங்க தான் இருப்பேன்..உன் ஆளு கண்ணுல படாம தப்பிச்சுப்பேன்..நீ கவல படாத.."ஆறுதல் சொன்னவனின் செயலில் அவள் மனதில் எட்டிப் பார்த்தது,குற்றவுணர்ச்சி.

"சாரி ப்ரித்வி..ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்க..நா கூட அதப் பத்தி எதுவும் கேக்காம ஏனோ தானோன்னு பேசிட்டேன்..ரியலி சாரி.." கரகரத்த குரலில் கேட்டடி அவளைப் பற்றி அறிந்தவனின் கண்களில் கனிவு கசிந்தது.

"அடியேய்..பைத்தியமே அப்டி எதுவும் இல்ல..நீ இப்டி சீரியஸா ஆவன்னு தெரிஞ்சு இருந்தா நா கண்டிப்பா இப்டி சொல்லிருக்க மாட்டேன்..ஆமா எப்டி இருக்காரு உன் ரோபோ சார்..இன்னும் அதே உர்ரு மூஞ்சியா..? இஞ்சி தின்ன மங்கி மாதிரி.."

"அவருக்கு ஒன்னும் சொல்லாத டா.. நீ தான் டா இஞ்சி தின்ன மங்கி.." பையனுக்கு ஏதேனும் சொன்னால் எகிறிக் குதிப்பது தெரிந்தவனோ வேண்டுமென்றே சீண்ட அதை உணராது கத்திக் கொண்டிருந்தாள்,இசை.

"சரிடி சரி..அமைதியா இரு..உன் கூட கொஞ்சம் பேசனும்..வா வந்து வண்டில ஏறு..நா வீட்ல விட்றேன்.." நடந்தவாறு அழைத்திட அவனைத் தொடர்ந்து எட்டு வைத்தன,அவளின் பாதங்கள்.

●●●●●●●

இரவும் கவிழ்ந்ததாயிற்று.

காட்டன் சுடிதார் அணிந்து துப்பட்டாவை சரிபார்த்துக் கொண்டே தன் விம்பத்தை கண்ணாடியில் உரசியவளுக்கு ஏனோ கொஞ்சம் திருப்தி.

தாயோ புடவை கட்டாது திரிந்தவளை வசைபாடி விட்டுச்செல்ல அவளுக்கோ அதை கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை.

நேரத்தைப் பார்த்திட இரவு எட்டு மணிக்கு இன்னும் ஐந்து இருந்தது.பையனின் நேரம் தவறாமை பற்றி அவள் அறிந்தது தானே.

சேலைத் தலைப்பை எடுத்து சொருகியவாறு தன் முன்னே வந்து நின்ற தாயாரை புரியாது பார்த்தாள்,பாவை.

"அரசி நா சொல்றத கேட்டுக்கோ..தம்பி வந்து ஹாரன் அடிச்சதும் பாஞ்சிகிட்டு வெளியே ஓடாம மெதுவா போய் அவர உள்ள வர சொல்லு..வாசல் வர வந்துட்டு வீட்டுக்குள் வராம போனா சுத்தும் முத்தும் இருக்குறவங்க ஆளாளுக்கு கேள்வி கேப்பாங்க..மொத அவர உள்ள வர சொல்லு..ரெண்டு பேரும் காபி சாப்டுடு அப்றமா போங்க.." நீண்ட உரையை முடிக்கும் முன்னரே பையனின் வண்டி சத்தம் கேட்டிட துள்ளல்?நடையுடன் பாதங்கள் நீள கை பிடித்து நிறுத்தி தாயார் வீசிய கனல் பார்வையில் அமைதியாகி மெதுவாய் நடந்தவளுக்கோ பையனை எப்படி உள்ளே அழைப்பது என்கின்ற தயக்கம்.

"பேய் மாதிரி கத்தினாலும் தாங்கிக்க இசை.."தனக்குள் உருப்போட்டுக் கொண்டு நடந்து அவனின் வண்டியின் அருகே தரிக்க கண்ணாடியை இறக்கி விட்டவனின் முகத்தில் அனல் தெறித்தது,அவள் வெறுங்கையோடு வந்திருப்பதைக் கண்டதும்.

பையனின் ஆழ் துளைக்கும் விழிகளில் வந்து போன செய்த அவளுக்கு புரிய "வீட்டுக்குள்ள வாங்க சார்.." என்றாள்,மெதுவான குரலில்.

"வாட்ட்ட்ட்..?" வழமையை விட சில வினாடிகள் தொட்டு மீள அதிகமாய் எடுத்துக் கொண்ட இமைகளும் இமைத்தடுப்பின் உள்ளே இருந்த கூரிய விழிகளின் சுருக்கமும் போதாதா அவனின் கோபத்தை பறைசாற்றிட..?

"ஐயோ அம்மா..நா இல்ல..நா இல்ல..அம்மா தான் வர சொன்னாங்க..அக்கம் பக்கத்துல தப்பா பேசுவாங்கன்னு..ப்ளீஸ் சாரே..வீட்ல என்னால சமாளிக்க முடியாது.." தலையை உள்ளே நீட்டி இறைஞ்சியவளுக்கு தாயின் பார்வை தன் மீது இப்போது சில நாட்களாய் சந்தேகமாய் படிவது போன்ற எண்ணம்.

அக்மார்க் மேனரசிமாய் பின் காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைந்து கோதிக் கொண்டவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே காரை விட்டு இறங்கிக் கொள்ள விடுவிடுவென உள்ளே சென்ற மகளை முறைத்து தள்ளினார்,தாயார் பார்வதி.

"ஒரு தடவ சொன்னா புரியாது..? தம்பிய விட்டுட்டு நீ மட்டும் வர்ர..என்னன்னாலும் அவருக்கு இது வேறோரு எடம்..போ போய் கூட்டிட்டு வா.." அதட்டடி தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் வெளியே வந்தவளுக்கு ஒற்றைக் கரத்தை பேன்ட் பாக்கெட்டில் நுழைத்தவாறு அலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டு மெதுவாய் நடந்து வந்தவனை இரசிக்கமால் இருக்க முடியவில்லை.

காற்றின் தாளத்துக்கேற்ப சிகை அசைந்தாட கலையும் சிகையை பின்காதோரமாய் விரல் நுழைத்து சீர் செய்வது போல் அடிக்கடி கோதிக் கொண்டிருந்தவனின் செயல் அவனை கட்டிப் போட்டது.

"இந்த ரோபோவ ஏன் கடவுளே இவ்ளோ அழகா படச்ச..? இந்த ரோபோ என்ன பண்ணாலும் நம்ம கண்ணுக்கு அழகா தான் தெரியுமோ..?" மனதுக்குள் எழுந்த கேள்வியோடு அவனை நோக்கி வேக எட்டுக்களை வைத்தவளின் கரங்களோ மெலெழுந்து நின்ற தன் சிகையை அழுத்திக் கொண்டிருந்தன.

அழைப்பை துண்டித்தவனோ தன்னை நோக்கி வந்தவளை கண்டிப்பாய் ஏறிட அவளுக்கு தலையை சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போல தோன்றிற்று.

அவளோ அவனருகே வந்து நில்லாது அவனின் பின்னே வந்து நின்றவாறு அவனை தொடர்ந்தூ வர பையனுக்கோ எதுவும் புரியவில்லை.அவள் கொஞ்சம் அவனை நெருங்கி இருந்தது,அவனின் கோபத்தை ஏன் தான் கிளறி விட்டதோ..?

"வீட்டுக்கு தான வர்ரேன்..எதுக்கு இப்டி ஃபோலோ பண்ணிட்டு இருக்க..? இங்க கூட விட்டு வக்க மாட்டியா..?" சிடுசிடு குரலில் கூறிட அவளுக்கோ வாயிலில் நின்று தம்மைப் பார்த்துக் கொண்டிருந்த அன்னையைக் கண்டதும் திக்கென்றது.

"உங்கள கூட்டிட்டு வர தா வந்தேன்.."

"ஏன் எனக்கு கண்ணு தெரியாதா..?"

"ஐயோ இல்ல அம்மா தானா கூட்டி வர சொன்னாங்க.." பதட்டத்தில் சற்றே சலிப்புடன் கூறிட பையனின் பார்வை கூர்மை ஏறியது.

"என்ன வர வர மரியாத கம்மியாகிட்டு போகுது..?"

"இல்ல சாரே தெரியாம பேசிட்டேன்..நீங்க கொஞ்சம் சிரிச்ச மாதிரி வாங்க..எங்கம்மா நீங்க இப்டி வந்தா கேள்வி கேட்டே கொன்னுருவாங்க.." தாய் தன்னை கவனிப்பதால் உண்டாகிற்ற அதீத பதட்டத்தில் உளறிக் கொட்டியவளுக்கு சிறிது நேரம் கடந்த பின்னரே தான் செய்து வைத்த செயல் உரைத்திட சரேலென சுழன்று பையனை பக்கவாட்டாய் ஏறிட்டன,அவள் விழிகள்.

எப்போதும் போல் அந்த விழிகளில் எதுவுமே காணக்கிடைக்காது போய் விட மண்டை காய்ந்தது.

பையனுக்குமே அவளின் தாயாரின் பார்வையில் இருந்த ஆராய்ச்சி புரிந்திருக்க வேண்டும்.சட்டென திட்டமொன்றை தீட்டிக் கொண்டான்,கேடி.

இறுகியிருந்த இதழ்களில் மென்னகை ஒன்றை தவழவிட்டு பின்காதோரமாய் விரல் நுழைத்து சிகை கோதிய படி பின்னே வந்து கொண்டிருந்தவளின் கரத்தை பிடித்து தன்னருகே இழுத்துக் கொள்ள பேரதிர்வில் பாவையின் விழிகள் தெறித்து விரிந்து பேராழியென மாறின.

இழுத்துக்கொள்ளும் சுழலென உருவெடுத்து நின்ற விழிகளைக் கண்டு அவனுக்கு உயிர்ப்பெற்ற உணர்வு தான் என்ன..?
எதுவும் இல்லாதது போல் தான் இருந்தது,பையனின் முகபாவம்.

அதிர்வில் நனைந்த நயனங்களுடன் பேய் முழி முழித்தவளின் கரத்தை உலுக்கி அவளை இயல்புக்கு மீட்டு விழிகளாலே அவளின் தாயாரைக் காட்டி ஒற்றைக் கண் சிமிட்டிட அவள் மனதோ அதை இரசித்தல்லவா தொலைத்தது.

"நடிக்கிறதுகு பண்றதுன்னாலும் சொல்லிட்டு பண்ண வேணா.." தன் மணிக்கட்டை பற்றியிருந்த பையனின் நீளவிரல்களை பார்வையால் வருடி விட்டு இதழ்களில் புன்னகையை ஏற்றிக் கொண்டாலும் அவளின் அருகாமை அவளை திணற வைத்திடாமல் இல்லை.

"இப்போ உங்கம்மாக்கு டவுட் வராது தான..?"புன்னகையை தேங்க விட்ட படி கேட்டிட அவளின் சிரசோ தானாய் ஆமோதிக்கும் விதமாய் அசைந்தது.

"எனக்கே டவுட் வர்ர மாதிரி இல்ல..இதுல எங்கம்மாக்கு எப்டி டவுட் வரும்.." பக்கத்தோற்றத்தில் இருந்தவனின் விழிகளுக்குள் ஓரப்பார்வையை பாய்ச்சிய படி முணகியவளின் முணுமுணுப்பு பையனின் செவியோரத்தை எட்டியதை என்னவோ..?
அவன் தான் பதில் மொழிய வேண்டும்.

கரம் கோர்த்த படி உள் நுழைந்த இருவரையும் கண்டதும் அவள் தாயாரின் முகத்தில் அப்படி ஒரு நிறைவு.

"வாங்க தம்பி.." பையனை வரவேற்று அமோகமாக கவனித்திட அவனுக்கோ அவரின் அக்கறையில் நெஞ்சம் குறுகுறுத்தது.

பூரித்த முகத்துடன் தன்னை வழியனுப்பிய தாயைக் கண்டதும் இசைக்கு விழிகள் கலங்குவது போல் இருக்க சிமிட்டிக் கொண்டவளுக்கு தங்களை பற்றிய உண்மை தெரிய வருகையில் தாயாரின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை நினைக்கக் கூட முடியவில்லை.

பெற்றோரை ஏமாற்றிடும் வலி ஒரு புறம்..
பையனிடம் பொய் சொல்லி வைத்திருக்கும் குற்றவுணர்வு ஒரு புறம்..
எல்லாம் அவன் மீதான காதலுக்காகத் தான் என்றாலுமே அதை அவள் மனதால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

மெலிதாய் சிவப்பேறிய விழிகளுடன் வண்டியில் ஏறி அமர்ந்தவளை அழுத்தமாய்ப் பார்த்தவனின் பார்வை வீச்சை உணரும் நிலையை அவள் கடந்திருக்க விழி மூடி இருக்கையின் பின்னே சாய்ந்து கொண்டவளை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவாறு வண்டியைக் கிளப்பினான்,பையன்.

மனதுக்குள் நிலைபெற்று நிந்தித்துக் கொண்டிருந்த குழப்பத்தால் அவனின் முன்னான பயம் கூட பின்னே தள்ளப்பட்டிருக்க தொண்டைக்குழி ஏறி இறங்க சாய்ந்து இருந்தவளுக்கோ சடாரென பையன் வண்டியை நிறுத்தியதில் சிறு அதிர்வு.

"என்னாச்சு..?" உள்ளுக்குள் எழுந்த கேள்வியை அடக்கிக் கொண்டே அவன் புறம் திரும்பிட அதற்குள் வண்டியை விட்டு இறங்கியிருந்தான்,கண நேரத்தில்.

குடித்து விட்டிருந்த மூவர் ஒரு பெண்ணை பின் தொடர அதைக் கண்டு தான் சினம் மிகுதியில் வண்டியை அவன் நிறுத்தியதே.

முழுபோதையில் அந்தப் பெண்ணை நெருங்கப் பார்த்தவர்களை அடித்து தீர்த்தவனின் விழிகளில் கொலைவெறி தாண்டவமாடியது.

இசையவளுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை.பயந்து போயிருந்த பெண் அவளை ஒண்டிக் கொண்டிருக்க அவளை மெதுவாய் தேற்றியவளுக்கு பையனுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்கின்ற கலக்கம்.

முன்னேறி அவனை தடுக்கப்பார்த்தவளை அப்படியே வேரூன்ற வைத்தது,பையனின் பார்வையில் தெரிந்த அழுத்தம்.

அடித்து அவர்களை தள்ளி விட்டு கையில் குருதி வழிய வந்தவனை அவள் விழிகள் ஓரிரு நொடிகளுக்குள்ளே முழுதாய் ஆராய்ந்து முடித்திருக்க அவனுக்கு எந்த காயமும் இல்லையென்று தெரிந்த பின்னரே மூச்சு வந்தது,பாவையவளுக்கு.

குருதி வழிந்த கையை பிடிக்கப் போனவளை பார்வையாலே எட்ட நிறுத்தியவனோ வண்டியைக் கிளப்பி அந்த பெண்ணை அவளின் வீட்டில் விட்டு விட்டுத் தான் தன் வீட்டுக்கு திரும்பினான்.

அந்தப் பெண் இறங்கிச் சென்றதும் மீண்டும் ஸ்டியரிங்கை திருப்பப் பார்த்தவனின் கரத்தை அனுமதியின்றியே பற்றியவள்,காயத்தை ஆராய்ந்திட அவள் விழிகளில் முற்று முழுதாய் அவனுக்கான பரிதவிப்பு.அந்த பரிதவிப்பு தான் அவன் கரத்தைப் பற்றிடும் தைரியத்தை அவளுக்கு தந்து விட்டிருந்தது போலும்.

"கைய விடு.." அவளின் பிடிக்குள் இருந்து உருவிக் கொள்ளப் பார்த்திட அழுத்தமாய் பற்றியிருந்தவளோ அதற்கு துளியும் இடம் கொடுத்திடவில்லை.

"கைய விடுன்னு சொல்றேன்ற.." மறு கரத்தை ஓங்கி ஸ்டியரிங்கில் குத்தவுமே சட்டென்று விலகி அமர்ந்திருந்தாள்,கரத்தை விடுவித்து விட்டவளாய்.

"ஸ்டே ஆன் யுவர் லிமிட்.."விழிகளில் அனல் வழிய எச்சரித்தவனோ வண்டியை உயர் வேகத்தில் கிளப்பிட தலையை உலுக்கிக் கொண்டு மறுமுறை விழி மூடி சாய்ந்தாள்,பாவையவள்.

உயிர்த்தொடும்.

2024.08.24
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 07(i)

பையனின் கர்ஜனையில் முறுக்கிக் கொண்டு விழி மூடியவளின் மனமோ அவனை அர்ச்சித்துத் தள்ளியது.

"மனுஷனுக்கு பேசத் தெரியுதா பாரு..எப்பா பாரு பேய் மாதிரி கத்தி கடிச்சி கொதறிகிட்டு இருக்காரு..எதுக்கு இந்த சாமி இந்த மனுஷன் மேல லவ்வு வர வச்சுதோ..?" அவனோடு சேர்த்து கடவுளையும் திட்டியவளின் இதழ்களில் தெரிந்த மெல்லிய முணுமுணுப்பு பையனுக்கு புரியாது போய்விடின் அது அதிசயம் அல்லவா..?

"என்ன முணுமுணுக்குற..?"

"ஒ..ஒன்னுல்ல.." உள்ளங்கையால் வாயை மறைத்துக் கொண்டவளுக்கு அவன் ஒவ்வொன்றையும் துல்லியமாய் கவனிப்பது அதிர்வை தருமென்றாலும் சில நேரம் கோபத்தை தானே வாரியிறைத்திடுது.

முன்பு அவர்கள் தங்கியிருந்த அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் முன் வண்டியை நிறுத்தி அவன் முன்னே நடந்து செல்ல சுமக்க முடியாத பாரத்தை தனியாய் சுமந்து கொண்டு நடந்தவளின் மனதோ கண்டு கொள்ளாமல் கடந்து செல்பவனை திட்டித் தீர்த்தது.

"மனுஷனா இல்ல கல்லா இது மனசு.." வசை பாடியவளுக்கு சத்தியமாய் ஒற்றை ஆளாய் அத்தனை பைகளையும் தூக்க முடியவில்லை.வண்டி வரை வந்து பைகளை ஏற்றி விட்ட தம்பியின் அருமை உணர்ந்து கொண்டது,அந்த தருணத்தில் தான் போலும்.

ஒருவாறு மின் தூக்கியை அடைந்து இருவருமாய் மேலே சென்று அவர்களின் தளத்தை வந்தடைந்த போதும் தன்னிலையில் இருந்து சிறிதும் இறங்கவில்லை,பையன்.

வீடுவரை மொத்தத்தையும் தனியாய் தூக்கிக் கொண்டும் இழுத்துக் கொண்டும் சென்றதில் வியர்த்து மூச்சு வாங்கியது,பாவையவளுக்கு.

பையனோ வீட்டுக்குள் நுழைந்ததும் தன்னறைக்குச் சென்று கதவை அடைத்துச் சாற்றியிருக்க மூடியிருந்த கதவைக் கண்டதும் அவளின் உணர்வுகள் என்னவென்று அவளுக்கே புரியவில்லை.

பையனை திருமணம் செய்யும் போதே இந்த புறக்கணிப்புக்களையும் அலட்சியங்களையும் எதிர்பார்த்து தான் இருந்தாள்.பலமுறை அவை நடந்தேறும் போதெல்லாம் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் தலை முழுகி விட்டும் இருக்கிறாள்.

இருப்பினும் ஒரு சில சமயங்களில் மனம் துவள கீறலாய் வலி உண்டாவதை தடுக்கத் தான் முடியவில்லை.அவளுக்கும் இயல்பான உணர்வுகள் இருக்காமல் போய் விடாதே..?

பையனின் அறைக்கதவில் சில வினாடிகள் பார்வையை படியவிட்டு தன்னறைக்குள் வந்தவளுக்கோ சுத்தமாக இருந்த அறையைக் கண்டதும் அப்படி ஒரு நிம்மதி.இல்லையென்றால் தான் மொத்தத்தையும் சுத்தம் செய்து ஒதுங்க வைத்திருக்க வேண்டுமே.

கதவை அடைத்து விட்டு இரவு விளக்கை ஒளிர விட அறை முழுவதும் மெல்லிய வெளிச்சம் கசிந்து கண்களை சற்றே சிரமப்படுத்தின.
முழங்காலைக் கட்டிக் கொண்டு கட்டிலில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டவளுக்க சோக சித்திரமாய் இருக்கும் தன் மீது கோபம் வந்திருக்க வேண்டும்.

கட்டிலில் மல்லாக்க விழுந்தவளோ கால் மேல் கால் போட்டுக் கொண்டு விட்டத்தை வெறித்த படி பாட்டு பாடினாள்,சற்று சத்தமாகவே.

"எனக்கு ராஜாவா நா வாழுறேன்..எதுவும் இல்லனாலும் ஆளுறேன்.." கர்ண கொடூரமான குரலில் கத்தியவளோ இயல்பு மீண்டிருந்தாள்,சில நாழிகைகளில்.

நடந்தவற்றை அப்படியே மனதில் இருந்து புறந்தள்ளி விட்டு பெருமூச்சு விட்டவளின் மனம் தெளிந்தாற் போல் இருந்தது.

இது தானே அவள் மனம்.
இசையவளின் இயல்பான குணம்.
சில நேரம் வலித்துத் தான் தொலைத்தாலும் அந்த வலியில் சில நேரம் மூழ்கினாலும் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு சுயம் மீண்டிடுவாள்,சிறிது நேரத்திலேயே.

அவள் எந்த நேரத்தில் எப்படி இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.அவளுக்கே அவளை தெளிவாய் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது தான் உண்மையும் கூட.

இந்த குணம் தானோ,பையனை அவள் இன்னுமே எந்த எதிர்ப்பார்ப்புமின்றி காதலிக்க வைக்கிறது.?
அப்படித் தான் போலும்.

எதிர்ப்பார்ப்பு இன்றி நேசங்கள் இருப்பதில்லை.அப்படி எதிர்ப்பார்ப்பில்லா நேசங்கள் இருப்பின் அவற்றை விட பேரழகாய் வேறேதும் இருக்கப் போவதுமில்லை.

அப்படி எதிர்ப்பார்ப்புக்களை சுமந்திடா நேசங்கள் அரிது.அது தானோ அவை பேரழகாய்த் தோன்றிடுது.

பேரழகானவை எல்லாம் அரிதானவையா என்று தெரியாது.ஆனால்,அரிதானவை எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் பேரழகு தான்!

மறுநாள் பொழுது விடிந்தும் விடியாத வேலை அது.

தடதடவென கதவு தட்டபப்பட அந்த சத்தத்தில் விழித்து நேரத்தைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் கிலி பிடித்துக் கொள்ளாமல் போனால் உலகம் அழிந்து விடும்.

"ஐயோ என்னடா இவ்ளோ நேரம் தூங்கி இருக்கோம்.." நெற்றியில் அறைந்து கொண்டு உறக்கம் முழுதா அகலா விழிகளுடனும் கலைந்து போய் கிடக்கும் சிகையுடனும் கதவைத் திறந்தவளை உறுத்து விழித்தான்,பையன்.

போதாக்குறைக்கு அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கொட்டாவியும் வந்திட கை மறைவில் கொட்டாவி விட்டவளைக் கண்டு இன்னும் கடுமையாகிற்று,அவன் பார்வை.

"காலைல சீக்கிரம் எழுந்துக்கனும் சொல்லிருந்தேன்ல.." அடிக்குரலில் கேட்டிட அந்த உறக்கக் கலக்கத்திலும் அவளை பயம் ஆட்கொள்ள தவறிடவில்லை.

"சாரி..சாரி பத்து நிமிஷத்துல வர்ரேன்.." உறக்கத்தை முற்றிலும் விரட்டியடித்தவளோ அறையை ஒட்டியிருந்த குளியலறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வரும் போது பதினைந்து நிமிடங்களை விழுங்கியிருந்தது,காலச்சுழல்.

பதபதைப்புடன் கூடத்துக்கு வந்தவளை அழுத்தமாய்ப் பார்த்தவனோ எதுவும் பேசாது அலைபேசியில் ஆழ்ந்திட அவனிடம் வாயைத் திறந்து கேட்கவும் அவளுக்குப் பயம்.பின்னே வாய்ப்பென கருதி கடித்துக் குதறி விடுவானோ என தறிகெட்டல்லவா சிந்தித்தது,குரங்கு மனம்.

"சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.."

"ம்ம்.."

"எதுக்கு சீக்ரமா எந்திரிக்க சொன்னீங்க..?"

"................"

"சார்.."

"..............."

"சாரே.." மீண்டும் மீண்டும் கேட்டவளுக்கு கேட்காமல் விட்டிடவும் மனம் இடம் தரவில்லை.

"அத இவ்ளோ லேட்டா எழுந்து கேட்டு என்ன ஆகப் போகுது..?" அழுத்தமாய் கேட்டவனோ தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது.

"யார்ரா இது இவ்ளோ காலைல வந்துருக்குறது..?" யோசித்தவாறு சென்று கதவைத் திறந்த பாவையின் விழிகள் அங்கு நின்றிருந்த அபிஷேக்கை கண்டதும் மெல்லியதாய் விரிந்தன.

அவளின் முகபாவத்தை உள்ளுக்குள் மூண்ட கலவரத்தை கணித்தவனோ விழிமூடித் திறந்து சமாதானம் சொல்லி விட அதற்குள் சட்டைக் கையை முட்டி வரை மடித்துக் கொண்டு வாசலுக்கு வந்தான்,பையன்.

"வாங்க வக்கீல் சார்..உள்ள வாங்க.." பையனின் குரலில் கலைந்தவளோ அபிஷேக்கிற்கு வழி விட்டு தள்ளி நின்றிட பையனின் பார்வை அவள் மீது ஆராய்ச்சியுடன் படிந்தது.

அபிஷேக்கோ உள்ளே வந்து சோபாவில் அமர்ந்திட இசையோ அவ்விடத்தை விட்டு அகன்று நுழைந்து இருந்தாள்,சமயலறைக்குள்.

"என்ன அபிஷேக்..திடீர்னு இந்த பக்கம்..?"

"கேஸ் விஷயமா பேசனும் அதான்..நாளக்கி ஜட்ஜ்மன்ட் தர்ராங்கல..அதான் பேசிட்டு போலாம்னு வந்தேன்.."

"ம்ம்.." என்றவனின் முகமோ கற்பாறையென இறுகி நின்றது,நினைவுகள் தந்த தாக்கத்தில்.

"டோன்ட் வொர்ரி..கண்டிப்பா நமக்கு சாதகமா தான் தீர்ப்பு வரும்..உங்களுக்கு தெர்யும் நீங்க எந்த தப்பும் பண்ணலனு..கோர்ட்ல கூட ஆதாரத்தோட நிரூபிச்சிட்டோம்..ஸோ எந்த ப்ராப்ளமும் வராது.." அபிஷேக் கூறிட ஒட்டியிருந்த இதழ்களை பிரித்திடக் கூட பையனின் மனம் இடம் கொடுத்திடவில்லை.

அப்படியே அவர்களின் சம்பாஷணை தொடர்ந்திட இருவருக்கும் சேர்த்து காபி கலந்து எடுத்து வந்தாள்,இசை.

வழமைக்கு மாறாய் அவள் முகத்தில் இருந்த கலவரமும் உடல்மொழியில் இருந்த பதட்டமும் தப்பவில்லை,பையனின் விழிகளில் இருந்து.அடிக்கடி அவளின் பார்வையும் அபிஷேக்கை தொட்டு மீண்டது.

"இவ எதுக்கு இவ்ளோ நர்வஸா இருக்கா..? அதுவும் அபிஷேக்க பாத்து..என்னாச்சு இவளுக்கு..?" சிந்தனையில் பல்வேறு கேள்விகள் உதித்திட அதை புறம் தள்ளியவனோ காஃபியை உறிஞ்சிட சிறிது நேரத்தின் பின்னர் கிளம்பிச் சென்றான்,அபிஷேக்.

பையனுக்கோ இருந்த மொத்த மனநிலையும் தலைகீழாகிப் போன உணர்வு.ரணங்கள் கிளறப்பட இயல்பு காணாமல் போய் விட அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டவனின் மனநிலை புரிய அவள் மனம் தவித்தது.

அவனுக்கு ஆறுதல் கூடி தேற்றி விட்டு வாழ்க்கை முழுக்க உடனிருக்க அவளுக்கு ஆசை.ம்ஹும்..இல்லை,இல்லை..பேராசை.ஆனால்,பையனோ அதற்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறானே.

ஒருவேளை தன் காதல் அவனுக்கு தெரியாமல் இருந்தாலும் தனக்குத் தானே ஆறுதல் கூறி தன் மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டிருப்பாள்,அவள்.அதற்கு நேர்மாறாய் தெரிந்தும் புரிந்து கொள்ள மறுத்து அடம் பிடிப்பவனை அவளும் என்ன தான் செய்ய..?

பெருமூச்சு விட்டு சிந்தித்தவளின் மனமோ பையனை சுற்றியே வட்டமடிக்க சட்டென மனதில் ஒரு யோசனை.

வேண்டுமென்றே கூடத்தில் வந்தமர்ந்து உயர் சத்தத்தில் தொலைக்காட்சியில் பாடலொன்றை ஓடவிட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எரிச்சல் பட்ட விடயம் அவளுக்குத் தெரியாதே.

கதவை அடைத்திருந்தும் இடி போல் செவியில் மோதிய இசையின் ஒலியில் பையனுக்கு கோபம் வரப்பெற "இவ ஒருத்தி.." கடுப்புடன் மொழிந்தவாறு கதவைத் திறந்து கொண்டு கூடத்துக்குள் வர எதையோ தேடுவது போல் பாவனை செய்தவளை புருவம் சுருக்கிப் பார்த்தான்,பையன்.

அவள் உண்டாக்கி விட்டு கோபம் அவனை நிகழுக்குள் இழுத்திருக்க நினைவுகளுடன் அதன் ரணங்களும் அவன் மனதில் பின் தள்ளப்பட்டதை அவன் உணரவில்லை என்பதே உண்மை.

"எதுக்கு இவ்ளோ சவுண்டா வச்சிருக்க..? வாலியூம கம்மி பண்ணு.."கடுப்புத் தெறித்த குரலில் அவன் வெடிக்க அவளோ உள்ளுக்குள் மலையென திரண்டிருந்த பயத்தை மறைத்து வைத்தவாறு பாவமாய் பார்த்தாள்,பையனை.

"என்ன முழிக்கிற..வாலியூம கம்மி பண்ணு.."

"அ..அது ரிமோட்ட காணோம்.." பொய்யை சொன்னவளுக்குத் தெரியுமே,தான் வேண்டுமென்று செய்தது தெரிந்தால் பையன் ருத்ரதாண்டவம் ஆடிடுவான் என்கின்ற விடயம்.

அவனுக்கோ அவள் பொய் சொல்கிறாள் என்று தெளிவாய்ப் புரிந்தது.ஆனாலும்,அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

"ஓஹ் ரிமோட்ட காணோமா..?" புருவத்தை ஏற்றி இறக்கிய படி கேட்டவனுக்கு அப்படி ஒரு கோபம்.

"டீவிய ஆஃப் பண்ண வேண்டியது தான..கொஞ்சமாச்சும் காமன் சென்ஸ் இல்ல..நீ எல்லாம் எப்டி தான் படிச்சு டிக்ரீ எடுத்தியோ..?" அடிக்குரலில் சீறியவனோ ப்ளக்கை பிடுங்கிட அவளுக்கோ விழிகள் தெறித்தன.

"ச்சே..இப்டி பல்பு வாங்கிட்டியே.." மனசாட்சி வேறு கேலி பேச அவமானமாய்ப் போனது,பாவையவளுக்கு.

"இப்டி ஒரு மக்கு பாய்ண்ட்ல கோட்ட விட்டுட்டியே இசை.." தனக்குத் தானே திட்டிக் கொண்டிருந்தவளை முறைப்புடன் பார்த்து நின்றான்,பையன்.

"இங்க பாரு..திரும்ப திரும்ப என்ன சொல்ல வச்சிட்டு இருக்காத..இதுக்கப்றம் இந்த ஒலகம் அழிஞ்சாலும் நா உன்ன லவ் பண்ண மாட்டேன்.."

"ப்ளீஸ் சேஞ்ச் த டயலாக்.."

"என்ன நா சொல்றது கேக்குதா..? நீ பாட்டுக்கு ஒரு ரியாக்ஷனுமே கொடுக்காம இருக்க.." என்றவனுக்கு இத்தோடு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்கின்ற முனைப்பு.

"இன்னியோட இந்த ப்ராப்ளத்த தீத்தர்லாம்.." அவளை இழுத்து கொண்டு தன் முன்னே அமர வைத்திட அவளுக்கு இதயத்தில் குறுகுறுப்பு.

பையனின் மெல்லிய விரல் ஸ்பரிசம் இதயத்தில் எக்கச்சக்க பூகம்பங்களை உண்டு பண்ணியிருக்க விழி வழியே அதை காட்டாது இருக்க தலையை தாழ்த்திக் கொண்டவளின் செயலில் பெருமூச்சு விட்டவாறு தன் கரத்தை விலக்கிக் கொண்டான்,பையன்.

"இதுக்கு முன்னாடி எந்த பொண்ணயும் நா இப்டி கூப்டு வச்சு அட்வைஸ் பண்ணதா சரித்திரமே இல்ல..மொத மொதலா உன் விஷயத்த இவ்ளொ பொறுமயா ஹேன்ட்ல் பண்றேன்.." என்றான்,இழுத்துப் பிடித்த குரலில்.

"இங்க பாரு..நாம எந்த சிட்டுவெஷன்ல கல்யாணம் பண்ணிகிட்டோம்னு உனக்கே தெர்யும்..கல்யாணம் பண்ணிக்கிறப்போ உனக்கும் இந்த ரிலேஷன்ஷிப்ல இன்ட்ரஸ்ட் இல்ல..கண்டிப்பா ஒரு வருஷத்துக்கு அப்றமா டைவோர்ஸ் பண்ணிக்கலாம்னு தான சொன்ன.."

"ம்ம்.." தான் சொன்ன பொய்யை பையன் மீண்டும் ஞாபகப்படுத்த அவளுக்கோ இதயம் பயத்தில் வேகமாய் அடித்துக் கொண்டது.

"நீ லவ் பண்ண பையனுக்கும் உனக்கும் ப்ரேக் அப் ஆயிருந்தப்போ அப்டி சொன்ன நீ இப்போ திடீர்னு எதுக்கு என் மேல இன்ட்ரஸ்ட் காட்டற..? இங்க பாரு அரசி..உனக்கு என் மேல வந்துருக்குறது லவ் இல்ல..ஜஸ்ட் ஒரு இன்பாக்ஷுவேஷன்..மஞ்சக் கயிறு மேஜிக்னு சொல்லுவாங்கல அதான்.."

"க்கும்..இன்பாக்ஷுவேஷன்..பைத்திய ரோபோ.."

"நீ தலய குனிச்சிகிட்டு மாங்குன்னு மாங்குன்னு தலயாட்றதால எதுவும் ஆகப் போகாது..உன் லவ்வர் நம்பர தா..நா ஃபோன் பண்ணி பேசறேன்..இல்ல அவன புடிக்கலனா சொல்லு உனக்கு வேற ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வக்கறேன்..சும்மா என் மேல இன்ட்ரஸ்ட வளத்துகிட்டு சுத்தாத அவ்ளோ தான்..என் மனசுல இன்னும் அபி தான் இருக்கா.."

"நெஜமாவா சொல்றீங்க..?" அவன் பேசியது கொஞ்சம் கோபத்தை தர அதை மறைத்தவளாய் கேட்டிருக்க அவனுக்கோ விழிகள் இடுங்கின.

"ம்ம்.." மெதுவாய் இதழசைத்தவனுக்கு தெரியும்,அவன் சொல்வதில் துளியும் உண்மையில்லை என்பது.அதைக் கூறும் போதே அவன் விழிகள் அங்குமிங்கும் கொஞ்சமாய் அலைபாய்ந்தன.

என்று அவள் தன் நடத்தையை சந்தேகப்பட்டாளோ அப்போதில் இருந்தே அவள் மீது கோபம்.பின்னர் தன் பக்க நியாயத்தை கேட்காமல் வார்த்தைகளால் சாடி திருமணம் வரை சென்றதும் அவளை மொத்தமாய் காதலி எனும் ஸ்தானத்தில் இருந்து அகற்றியே விட்டான்.

அவளை வெறுக்கும் அளவுக்கு முக்கியம் வாய்ந்தவளாய் அவள் தோன்றாதிருக்க சக மனுஷியாய் அவளைக் கடந்து வந்து விட்டாலும் அவளாலும் அவன் குடும்பத்தாலும் அவன் மனதில் உண்டான காயங்கள் இன்னும் மனதில் இருக்கத் தான் செய்கின்றன.எல்லோருக்கும் முதல் காதல் மனதின் ஒரு ஓரத்திலாவது நினைவிலிருக்கும் என்பார்கள்.அவனுக்கோ அது தந்த காயம் மட்டும் தான் சிந்தையில் நின்றிருந்தது.

அவள் இன்னொருவரின் மனைவி என்றான பின்பு கண்ணியமானவன் எப்படி அவளைப் பற்றி நினைத்து மருகுவது..?
அது அவனின் கண்ணியத்திற்கு இழுக்கல்லவா..?
அதுவும் அவளுக்கு ஒரு நல்வாழ்க்கை அமைந்திருக்கும் பட்சத்தில்.

அவளின் முற்றுப் பெற்ற அதிகாரத்தை அவன் மூடி வைத்திருக்க இசையவளின் மனதை திசை திருப்பத் தான் பொய்யை எடுத்து விடுவதே.தான் சொல்வது அபத்தம் என்றெ அவனுக்குத் தெரிந்தாலும் அவள் மனதை மாற்றிட வேறு வழி தெரியவில்லை,பையனுக்கும்.

"அப்போ நெஜமா அவங்க தான் உங்க மனசுல இருக்காங்களா..?"

"ஏன் ஒரு தடவ சொன்னா புரியாதா..?"

"சரி நா என்ன மாத்திக்க ட்ரை பண்றேன்.." தலை தாழ்த்தி மொழிந்தவளின் முகபாவம் பையன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டதும் மொத்தமாய் மாறிற்று.

"இந்த மனுஷன பாத்தா பொய் சொல்ற மாதிரி தெரியுதே.." தலையில் அடித்துக் கொண்டு யோசிதிதவளுக்கு சத்தியமாய் அவன் சொன்ன எந்தவொன்றையும் ஏற்றிடும் எண்ணமில்லை.

அதனால் தானே அவள் இசையாகிறாள்!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 07(ii)


பையனை வசைபாடி விட்டு சமயலறைக்குள் நுழைந்து காலை உணவுக்காக ஏதோ செய்து கொண்டிருக்கும் போது தான் பாவையின் மனதுக்குள் அந்த எண்ணமே வந்தது.

"ஐயோ மண்ட மேல இருக்குற கொண்டய மறந்துட்டோமே.." தலையில் தட்டிக் கொண்டு அவனின் அறைக்கதவை தட்ட சலிப்புடன் திறந்தான்,பையன்.

"என்ன ப்ரச்சன ஒனக்கு..?"

"ஐயோ ரூம்ம்ம்ம்.."

"ரூம்ம்ம்.. என்ன ஒளர்ர..?"

"ஐயோ உங்க ரூம்ம்ம்ம்.."

"தெளிவா சொல்லு.." ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் சேர்த்தவாறு நெற்றியில் தேய்த்து விட்டான்,தன் கோபத்தை சற்று கட்டுப்படுத்திட.

"நாம ரெண்டு பேரும் வேற வேற ரூம்ல இருக்கோம்.."

"அதுக்கு..?"

"ஐயோ அங்கிள் பாத்தா கண்டுபுடிச்சிருவாரு.."

"என்ன கண்டுபுடிச்சிருவாரு..?"

"இவருக்கு ஏதாச்சும் மண்ட அடிபட்ருச்சா..?"

"அதான் என்ன கண்டு புடிச்சிருவாரு.."

"ஐயோ நாம ரெண்டு பேரும் நடிச்சிட்டு இருக்கோம்னு கண்டுபடிச்சிருவாரு.." அவள் உதிர்த்த வார்த்தைகளை விட அவள் குரலில் அதீத பதட்டம்.

"அதுக்கு இப்போ என்ன செய்ய சொல்ற..?"

"நா உங்க ரூம்.."

"வாட்ட்ட்ட்..?" பையனின் புருவங்கள் இடுங்கி நின்று கொக்கி போட்டது.

"ஒன்னுல்ல.." திரும்பப் பார்த்தவளை அப்படியே நிறுத்தி வைத்தது,அவன் குரல்.

"உன்னோட திங்க்ஸ் உன்னோட பேக் எல்லாம் என் ரூம்ல தான் இருக்கு..வேணும்னா வந்து பாரு.." வாயிலை மறித்து நின்றவனோ வழி விட வியப்புடன் நடந்து வந்து வாயிலில் நின்று பையனின் அறையை எட்டிப் பார்த்தவளுக்கு தலை சுற்றிப் போனது.

"இத எப்போ கொண்டு வந்து வச்சீங்க..? கிச்சன்ல தான இருந்தேன்..எனக்கு சத்தமே கேக்கல.." தன் பயம் மறைந்து இயல்பாய் கேட்டவளின் நா அவனின் அழுத்தமான பார்வையில் அப்படியே அடங்கிப் போனது.

"நா ஒன்னும் கேக்கல.." மெதுவாய் தனக்குத் தானே கூறிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தவளை உரசிய அவன் விழிகள் ஒப்பித்த செய்தி தான் என்ன..?

●●●●●●●●

பையனோ அவனின் சிறிய தந்தை ராமநாதனை அழைத்து வரச் சென்றிருக்க வெட்டியாய் நெட்டி முறித்துக் கொண்டிருந்தாள்,பாவை.

நினைவுகள் மொத்தமும் அவனில் தேங்கிக் கிடக்க அதை அப்படியே புறம் தள்ளும் விதமாய் ஒலித்த அழைப்பு மணி ஓசையில் புரிந்து விட்டது,வந்திருப்பது யார் என்பது.

ஏனோ ஒரு வித பதட்டம்.தம்மை கண்டு பிடித்து விடக்கூடும் என்கின்ற பயம் தான் அந்த பதட்டத்தின் அடித்தளம் போலும்.

கதவைத் திறந்ததுமே இன்முகமாக இதழ்களில் புன்னகை நிறைய தன்னை பார்த்தவரைக் கண்டு அவளுக்கு குற்றவுணர்வு தான் கூடிப் போனது.

"வாங்க மாமா..வாங்க உள்ள.." புன்னகை நிரம்ப அழைத்தவளின் மீது வாஞ்சையாய் படிந்த பார்வையில் அத்தனை அக்கறை.

"என்னம்மா எப்டி இருக்க..?நல்லாருக்கியா..?"

"ஆமா மாமா நா நல்லாருக்கேன்..நீங்க எப்டி இருக்கீங்க..?" இருக்கையில் அமர்ந்தவாறு கேட்டிட அவருக்கு தண்ணீர் குவளையை கொண்டு நீட்டிய படி பதில் சொல்ல அவர்களின் சம்பாஷணை தொடர்ந்தது.

"மாமா..நீங்க போய் ப்ரெஷ் ஆகிட்டு வாங்க..நா சாப்பாடு எடுத்து வக்கிறேன்.." என்றதும் அவர் அவருக்கென தயார் செய்து வைத்திருந்த அறைக்குள் நுழைந்திடவும் பையன் அவரின் பைகளை ஏந்திக் கொண்டு வாசலில் வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.

பார்த்தவுடனே தெரிந்து விட்டது,பெரிய கனம் இருக்குமென்று.மூச்சு வாங்க ஒரு கணம் தரித்தவனின் நெற்றியோரம் ஒற்றை வியர்வைத் துளி அரும்பி வழிந்து கொண்டிருக்க அதை எல்லாம் கணக்கில் கொள்ளும் நிலையில் இல்லை,அவன்.

உதவ முன்வந்தவளை தடுத்து விட்டு அவனே ஒற்றை ஆளாய் அனைத்தையும் உள்ளே கொண்டு வந்து வைத்து விட்டு நிமிர அவனின் அருகே தரித்திருந்த பாவையின் பார்வை காதலுடன் அவனைத் தொட்டது.

அதற்கும் பையன் முறைப்பையே பதிலாய்க் கொடுக்க நாக்கைக் கடித்துக் கொண்டு ஓடி விட்டிருந்தாள்,இசையவள்.

ராமநாதனும் கதையளந்த படி உணவுண்டு விட்டு பயணம் செய்த களைப்பில் உறங்கச் சென்று விட இசைக்குமே உறக்கம் கண்களை சுழற்றியது.
மதியத்துக்கு உணவை வெளியில் வாங்கிக் கொள்ளலாம் என்று பையன் சொல்லியிருக்க சமைக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லையே.

தன்னறைக்குச் செல்வதா இல்லை,பையனின் அறையில் சென்று உறங்குவதா என்று குழப்பம் மனதில்.

"பேசாம நம்ம ரூமூக்கு போய் தூங்கிரலாம்.."

"ம்ஹும்..ம்ஹும்..வேணா மாமா நமக்கு முன்னாடி முழிச்சிட்டார்னா ரொம்ப கேள்வி கேப்பாரு ரோபோ மாதிரி.."

பலவிதமாய் யோசித்தவளோ எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி பையனின் அறைக்கதவை தட்ட சட்டென அவளின் கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவை சாற்றியவனின் செயலில் அவள் விழிகள் பிதுங்கிற்று.

"என்ன பண்ணிட்டு இருக்க..?"

"ஐயோ இது நா கேக்க வேண்டிய கேள்வியாச்சே.."

"உன்னத் தான் கேக்கறேன்..பதில் சொல்லாம வெறிச்சு பாத்தா என்ன அர்த்தம்..?"

"இல்ல உள்ள வர்ரதுக்கு கதவ தட்டுனேன்.." என்றிட சட்டென அவளின் கரத்தை பிடியில் இருந்து விலத்தி விட்டு கூர் விழியால் ஊன்றிப் பார்த்தான்,பாவையின் விழிகளை.

"என்னன்னு மனுஷன் இப்டி பாக்கறாரோ தெரிலியே..? ரூமுக்கு வந்ததுக்கா..இல்ல கதவ தட்டுனதுக்கா..ஐயோ சாமி" தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் யோசித்தவளுக்கு விட்டால் அழுது விடும் நிலை தான்.

"அறிவிருக்கா உனக்கு..? எதுக்கு இப்டி வேணும்னே பண்ணிட்டி இருக்க..?" இசையவளின் இயல்பே அது தான் என்று புரிந்து கொண்ட பின்னும் பையன் அவளை சாடுவதன் காரணம் தான் என்னவோ..?

"கதவ த..தட்டி பர்..பர்மிஷன்.."

"மூள இருக்கு தான..கொஞ்சம் யோசி..நீ இப்போ கதவ தட்டிட்டு வர்ரது சித்தப்பா பாத்தா என்ன நெனப்பாரு..சொந்த ரூம்கு போறதுக்கு இந்த பொண்ணு எதுக்குடா பர்மிஷன் கேட்டுட்டு இருக்குன்னு யோசிச்சு பாக்க மாட்டாரு.."

"அட ஆமால..சாரி சாரே..இதுக்கப்றம் பாத்து நடந்துக்குறேன்.." மெதுவாய் மொழிந்திட அவன் உறுத்து விழித்து விட்டு நகர்ந்திடவும் மூச்சு வந்தது,பாவைக்கு.

"இந்த மனுஷன் செம்ம ஷார்ப்பு தான்..நாம தான் மட்டியாவே பொறந்து மட்டியாவே இருக்கோம்.." நினைத்தவளோ கட்டிலுக்கு பக்கமாய் போடப்பட்டிருந்த சோபாவில் விழ அதற்குள் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றிருந்தான்,பையன்.

மறுநாள் காலை பத்து மணியை எட்டியிருந்த சமயம் அது.

தமிழோ அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டு கீழே வர கூடத்தில் தலை தாழ்ந்து அமர்ந்திருந்த தந்தையைக் கண்டதும் சிந்தனை எங்கெங்கோ பறந்தோடியது.

"அப்பா என்னாச்சுபா..? எதுக்கு இப்டி ஒக்காந்து இருக்கீங்க..? என்ன நடந்துச்சு..?" கையில் கைக்கடிகாரத்தைக் கட்டிய படி கேட்டிட மறுப்பாய் சிரசசைத்தவருக்கோ தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது.

தமிழுக்கு எதுவும் புரியவில்லை.இப்படி குழப்பமான கவலை தோய்ந்த முகத்துடன் தந்தையை கண்டிராதவனின் மனம் முரண்டியது.

"சரிப்பா என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறீங்க..நா ஆஃபீஸ் கெளம்புறேன்..நீங்க போய் சாப்டுங்க.." அவன் இயல்பாய் கூறிட அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவர் எழுந்து உள்ளே சென்றிட தமிழுக்கு அவரின் நடத்தை புதிராய்.

வெளியே வந்து வண்டியைக் கிளப்பிட அவனை நிறுத்தச் சொல்லி விட்டு மூச்சு வாங்க வந்து ஏறிக் கொண்ட யாழினியின் விழிகள் அழுததில் வீங்கியிருந்தது.

தங்கையின் முகத்தில் இருந்த மாற்றம் புரிந்தும் எதையும் கேட்டிடவில்லை,தமையனவன்.கேட்டாலும் பதில் வராது என்று எண்ணி விட்டான்,போலும்.

வண்டி சிறிது தூரம் நகர அவனிடம் பேச முற்பட்டு தொண்டையைச் செருமினாள்,யாழினி.

"அண்ணா இன்னிக்கி மார்னிங் நியூஸ் பாத்தியா..?"

"இல்ல..எதுக்கு கேக்கற..?" நேற்றிரவு தாமதமாய் வந்து உறக்கத்தில் விழுந்தவனோ எழுந்திருக்கையில் நேரம் கடந்திருக்க அவசர அவசரமாய் வெளிக்கிளம்பியவனுக்கு ஏனோ இன்று அலைபேசியை துழாவிட நேரம் கிட்டவில்லை.

"இன்னிக்கி ஹெட்லைன்ஸ் என்ன தெரியுமா..?"

"என்ன..?" என்றவனின் குரலில் பெரிதாய் எந்த வித ஆர்வமும் இருக்கவில்லை.

"அண்ணன் மேல போட்ட கேஸுக்கு தீர்ப்பு வந்துருக்கு..அவரு மேல எந்த தப்பும் இல்ல..அந்த பொண்ண யாரோ தூண்டி விட்டதனால தான் இப்டி பொய்யா கேஸ் கொடுத்து இருக்குன்னு அதுவே ஒத்துகிட்டு இருக்கு..மே பீ இது அண்ணனோட பிஸினஸ் சர்கிள் இருக்குற யாரோட வேலயா இருக்கலாம்னு சொல்றாங்க.." அவள் முதல் வசனத்தை சொன்னதுமே ஆள் நடமாட்டமே இல்லா அந்த ஒற்றையடிப் பாதையில் வண்டியை சடாரென நிறுத்தியவனுக்கு மீதியைக் கேட்கையில் நெஞ்சம் விம்மித் தவித்தது.

"என்ன சொல்ற நீ..?"

"இதுவே அந்த பொண்ணு முன்னாடியே கோமால இருந்து கண் விழிச்சு இருந்தா தீர்ப்பு இன்னும் சீக்ரமா வந்துருக்கும்..இந்த ரெண்டு வருஷமும் வீணாகி இருக்காது..
இந்த கேஸ்ல அண்ணன் நெரபராதின்னு சொல்றதுக்கு இருந்த ஒரே சாட்சி அந்த பொண்ணு தான்..அதான் அது க்யூர் ஆனதுக்கு அப்றம் எல்லாம் தெரிஞ்சிருக்கு.."

கோர்வையாய் பேசியவளுக்கு அழுகை வரப்பார்த்திட அடக்கிக் கொண்டாள்,சிரமப்பட்டு.எந்த வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் வந்து விழுந்த வார்த்தைகளே போதும்,அவளின் மனம் படும்பாட்டை எடுத்துக் கூறிட.

"நாம நம்பியிருக்கனும்ல.." கண்ணீரை சுண்டி விட்ட படி கூறியவளுக்கு தெரியும்,தாம் மன்னிப்புக் கேட்டிடக் கூட தகுதியானவர்கள் இல்லையென்பது.

"அ..அம்மாக்கு இந்த விஷயம் தெர்யுமா யாழினி..?" கேட்கும் போதே தமிழின் குரல் உடைந்து வெளி வந்திட தந்தையின் நடத்தைக்கான காரணம் அவனுக்கு அந்தக் கணம் தான் புரியவும் செய்தது.

"தப்பு பண்ணிட்டோம்னா..அபி சொன்னத கேட்டுட்டு நாம அண்ணன சந்தேகப்பட்டு தப்பு பண்ணிட்டோம்.." மெல்லிய குரலில் கூறியவளின் விழியோரத்தில் இருந்து ஒற்றைக் கோடாய் கண்ணீர் கீழிறங்கிட அதை துடைக்க மறந்து போய் தமக்குள் கோர்த்துக் கொண்டிருந்தன,அவள் விரல்கள்.

அதே நேரம்,

"ரொம்ப தேங்க்ஸ் அபிஷேக்..நீங்க மட்டும் சரியான டைம்கு வந்து எனக்கு ஹெல்ப் பண்ணலனா கண்டிப்பா கேஸ ஜெய்ச்சு இருக்க முடியாது..ரொம்ப தேங்க்ஸ்.."

நெகிழ்வுடன் நன்றி சொன்னவனுக்கு தான் தெரியும்,அந்த உதவி அவனுக்கு எந்தளவு முக்கியம் என்பது.

"முக்கியமா தேங்க்ஸ் பண்ண வேண்டியவங்களுக்கு தேங்க்ஸ் பண்ண மறந்துட்டீங்களே மிஸ்டர்.வேந்தன்.." மனதுக்குள் நினைத்தவனோ மறந்தும் அதை வெளியில் சொல்லிடவில்லை.

"வாங்க அபிஷேக்..வீட்டுக்கு வந்துட்டு போங்க.." காரில் ஏறி நடந்து கொண்டே அவனை அழைத்தான்,பையன்.

"இல்ல வேந்தன் நா கண்டிப்பா இன்னொரு நாள் வர்ரேன்..இப்போ முக்கியமான வேலயா வீட்டுக்கு போகனும்..கண்டிப்பா இன்னொரு நாள் வர்ரேன் வேந்தன்.."

தன்மையாய் மறுத்தவனை அதற்கு மேலும் வற்புறுத்த இயலவில்லை,பையனால்.

இருவரின் கார்களும் எதிரெதிரே நிறுத்தப்பட்டிருக்க முதலில் வண்டியை தொடக்கி வைத்த அபிஷேக்கோ கண்ணாடியை இறக்கி விட்டு மறுபுறம் தலையை திருப்ப தன்னோடு பேச முயல்வது புரியாமல் இல்லை,பையனுக்கு.

"என்ன அபிஷேக்..?" தன் காரின் கண்ணாடியை கீழிறக்கி விட்டு பையன் கேட்டிட அபிஷேக்கிற்கு கேட்க வேண்டாமா என்கின்ற குழப்பம் மனதில்.

"நா ஒன்னு கேக்கட்டுமா வேந்தன்.."

"என்ன அபிஷேக்..?"

"நீங்க செகண்டா வர்ர லவ்வ பத்தி என்ன நெனக்கிறீங்க..?" முகபாவத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு கேட்டிட பையனுக்கு அவனின் கேள்வியில் பொறி தட்டியது.

"அப்டி சொல்றதுக்கு நா ஒன்னும் செகண்ட் லவ்வ ஃபீல் பண்ணது இல்ல.." தொண்டைக்குழி வரை வந்து பாயப் பார்த்த வார்த்தைகளை அடக்கியவனுக்கு தெரியாதா..? தான் சொன்னால் தம்மிருவரினதும் வாழ்க்கை வெட்ட வெளிச்சமாகி விடும் என்பது.

"செகண்ட் லவ்ங்குறது செகண்ட் லைஃப் மாதிரி..எவர் லாஸ்டிங்க லவ்.." ஒற்றைக் கண் அடித்து பொய்யையும் அடித்து விட்டு வண்டியைக் கிளப்பியவனுக்கு தெரியாதே,அது அவனின் வாழ்வில் நடந்தேறப் போகும் நிஜம் என்பது.

இதமான காலநிலை நிலவிட மனதில் பரவிய நிம்மதியுடன் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்,பையன்.

அவன் மீது போலியாய் வழக்கு சுமத்தப்பட்ட பொழுது அவன் அனுபவித்த வலிகளும் காயங்களும் நினைவடுக்குகளில் அப்படியே இருக்கத் தான் செய்கின்றன.

"ச்சே..போயும் போயும் நீங்க பொம்பள பொறுக்கின்னு தெரியாம லவ் பண்ணிட்டேன்.." ஆகரோஷமாய் சீறிய அபிராமியின் வார்த்தைகளை அவனால் அத்தனை எளிதில் மறந்திட இயலாது தான்.இருப்பினும் கடந்து விட்டான்.

கல்லூரிக் காலத்தில் அவனுக்கு அவளைத் தெரியும்.அவளின் அமைதியான பாங்கும் அலட்டலில்லா தன்மையும் அவனை காதலுக்குள் விழ வைத்திட அதை அவளிடம் உரைப்பதில் தயக்கம் ஏதும் இருக்கவில்லை,பையனுக்கு.

அவளிடம் சொன்னதும் முதலில் ஏற்றுக் கொள்ள மறுத்தவளொ தொந்தரவு செய்யாமல் ஒருதலையாய் காதல் செய்தது எல்லாம் அவன் காதல் அதிகாரத்தில் அழகான நாட்கள் தான்.

கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு அவளும் சம்மதம் தெரிவித்திருக்க அதன் பின் அவர்களின் காதல் பயணம் இனிமையானது.

காதலி என்றகிய பின்னும் விழிகளை மட்டுமே பார்த்து பேசிடும் அவனின் கண்ணியமும் எந்த இடத்திலுமே தன்னை சிறிதும் சங்கடப்படுத்த விட்டிடா அவனின் நன்னடத்தையும் திருமணம் வரை அவன் கட்டிக் காத்த இடைவெளியும் வார்த்தைகளின்றி செயல்களால் அவன் காதலை உணர வைத்த விதமும் அவளை இன்னுமே அவன் மீது காதல் கொள்ளச் செய்தது.

எல்லாம் அவன் மீது அந்த பழிச் சொல் விழும் வரை தான்.அபிக்கும் பையனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட சமயத்தில் அவன் மீது பொய்ப்பழி சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட அதன் பின் அவளின் காதலும் காற்றோடு கரைந்து கானலாகவே போய் விட்டிருந்தது.அவளும் அவனின் மீதான பழிச் சொல்லை நம்பி விட்டாள்,போலும்.

அந்த சமயங்களில் அவனுக்கு வந்து விழுந்த பழிச் சொற்கள் ஏராளம்.சமூக வலைத்தளங்களிலும் பொது ஊடகங்களிலும் அவனைப் பற்றிய வதந்திகள் அடங்கிப் போக கிட்டத்தட்ட சில வாரங்கள் எடுத்தன.

அவன் மீது தவறில்லை என்று அவனுக்கு நன்றாக தெரிந்திருந்தாலும் வீட்டினர் கூட அவனை நம்பாது போனது தான் பையனின் மனதில் பெருத்த வடுவாய்.காலங்கள் கடந்தாலும் இனி அது ஒன்றும் மாறப்பவோதுமில்லை.

தன்னை இழுத்துக் கொண்ட நினைவுகளை விரட்டி விட்டு தம் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தவனின் நடையில் என்றுமில்லாத நிமிர்வு.

தனது அக்மார்க் மேனரிசமாய் பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிய படி வேக எட்டுக்களுடன் நடந்தான்,பையன்.

அவன் யாழ் வேந்தன்! இசையவளின் இதயத்தின் ரிதமானவன்!

உயிர்த்தொடும்.

2024.08.25
 
Status
Not open for further replies.
Top