ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 18(i)


இசையவளின் இதழ்களின் துளிர்த்திருந்த புன்னகையில் வார்த்தைகள் கொண்டு விளக்கிட முடியா பலநூறு அர்த்தங்கள் பொதிந்து கிடந்தன.

தோழியவளின் எந்தவொரு கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லையென்றாலும் ஏனோ புன்னகை மட்டும் உருவெடுத்திருந்தது.

அவளுக்கு பையனின் மாற்றங்கள் புரிகிறது தான்..தெள்ளமாய் தெரிகிறிது தான்..ஆனாலும்,அந்த மாற்றத்தின் காரணம் காதலின் தோற்றம் என்று அவள் யோசித்ததே இல்லை;யோசிக்கவும் மாட்டாள்.

அவளுக்கு அவனைப் பற்றி நன்றாகவே தெரியும்.உடன் யார் இருந்தாலும் இத்தனை அக்கறை காட்டி நடத்துவது அவனின் பழக்கம் என்றும் தெரியும்.

வீட்டினர் அவனை காயப்படுத்தியிருந்த பின்னும் அவர்களை யோசிக்கும் அவன் மனம் பற்றி அவள் அறியாததா என்ன..?
இன்னுமே அவன் தங்கையின் பாதுகாப்பை பற்றி அவன் கவனம் செலுத்தவது அவள் அறிந்த விடயமே.

யாழவனின் குணமே அப்படிப் பட்டது தான் என்ற கணிப்பில் இருப்பவளுக்கு அவன் தன்னுடன் இயல்பாய் உரையாடுவதை எல்லாம் வைத்துக் கொண்டு காதல் என்றெல்லாம் பிதற்றிட மனம் இடம் கொடுத்திடாது.

கடுகடுப்புடன் அக்கறை காட்டினாலும் சில நேரம் அவளுக்கே அது குழம்பிப் போகும்,ராமநாதன் இருப்பதால்.அவனின் அக்கறையை உணர்ந்தாலும் முழுதாய் தனக்கானது தான் என்று ஏற்றுக் கொண்டிட பெரும் நெருடல்.

கல்லுளி மங்கன் அவனும் ஏதேனும் உணர்வுகளை விழிகளை காட்டியிருந்தால் மகராசிக்கு அவள் மீதான அக்கறை என்று முழுதாய் நம்பிட எண்ணம் வந்திருக்க கூடும்.அவன் வேறு தான் பங்குக்கு அவளை படுத்தி எடுக்கிறானே.

அவனுடன் வாயடிக்கிறாள்..வம்பிழுக்கிறாள்..வாய் ஓயாமல் கதைக்கிறாள்..எல்லாம் நடக்கிறது தான், இருப்பினும் மன எண்ணங்கள் அவ்விடத்தில் பரிமாறப்படவில்லையே.அவன் வேறு தோழனாய் இருப்பதாகத் தான வாக்குக் கொடுத்தும் இருப்பது.அந்த தோழமை எண்ணத்தில் தான் இப்படி நடந்து கொள்ளக் கூடும் எனவும் வாதிடும் ஆழ் மனம்.

ஆயினும்,அவனின் செயல்களில் குழம்பிப் போய் விழித்தாலும் முற்றாய் அவன் வசம் இழுக்கப்படும் மனதுக்கே புரிவதில்லை,ஏன் இத்தனை தூரம் அவன் வசம் வீழ்கிறோம் என்பது.

இன்று காலையில் கூட பையன் தன்னுடன் விளையாடிச் சீண்டியது அவளுக்கு பெருத்த அதிர்வு தான்.அவள் இதுவரை கண்டிராத..
கண்டே இராத யாழவன் அல்லவா அது..?

பேரூந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவளுக்கு அது தலையை குழம்ப வைத்திட அந்த மனப்போராட்டத்தை தாள முடியாமல் தான் உறக்கத்தில் விழுந்ததே..?

இப்போது சற்று சமப்பட்ட மனதுடன் தெளிந்திருந்தவளின் சிந்தனயை மீண்டும் கலங்க வைத்திருந்தாள்,தாமரை.

மதிய நேரம் கடந்து தான்,பாவையவளுக்கு அழைப்பெடுத்திருந்தான்,பையன்.அவனின் பிடிவாதத்திற்கு அழைத்தே இருக்க மாட்டான் என்பது வேறு விடயம்.ஆனால்,அவளென்று வருகையில் அந்த பிடிவாதமும் கொஞ்சம் பிடிகொடுத்து தானே போகிறது..?

"ஹலோ.." கம்பீரமாய் அவன் குரல் அவள் செவியில் மோதினாலும் பையனின் மன உணர்வுகள் வேறு கதை கூறிக் கொண்டிருந்தன.

"ஹலோ சாரே..என்ன பண்றீங்க..?" மாற்றமில்லா தொனியில் அவள் கேட்டது இவன் அகத்தில் ஏன் மாற்றிட முடியா அளவு மாற்றங்களை உண்டு பண்ணிட வேண்டும்..?

அவளின் செவி வழி நுழைந்த குரல்,புத்தி கிரகிக்கும் முன்னமே மனதை துளைத்துச் சென்று அவளின் இதயத் துடிப்பை வேகமெடுத்திட வைத்ததே.

அக்மார்க் மேனரிசமாய் பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொண்டவனுக்கோ அவளின் குரலில் சிலிர்த்தடங்கிய தேகத்தை இன்னும் நம்பிட முடியவில்லை.அப்படியே புத்தி மரத்துப் போக பேச்சற்று நின்றான்,பையன்.

"சாரே என்ன லைன்ல இருக்கீங்களா..?"

"ம்ம்..ஆஃபீஸ்ல இருக்கேன்.." மாறா குரல் தொனியில் பதில் மொழிந்தவனோ வலக்கரத்தை இடது நெஞ்சின் அழுத்தி வைத்திருக்க விரல்கள் உணர்ந்து கொண்டன,அவனிதயம் எடுத்திருக்கும் வேகத்தை.

"ஓஹ் அப்டியா..? நாங்க இப்போ தான் ஊருக்கு போற ரூட்கே வந்துருக்கோம்..இன்னும் ஒரு மணி நேரத்துல ஊருக்கு போய்ரலாம்னு சொன்னாங்க..இப்போ சாப்பட்றதுக்காக தான் வண்டிய நிறுத்தி வச்சிருக்காங்க..ஆமா நீங்க சாப்டீங்களா..?"

"ம்ம் சாப்டுடேன்.." கூறியவனின் விழிகளோ மேசையின் மீதிருந்த பிரிக்கப்படா உணவுப் பொதியை தொட்டு மீண்டன.

"என்ன நீ இல்லாம நா சாப்ட மாட்டேன்னு நெனச்சியா..?" அவளின் அருகின்மை தனக்குள் எந்த வித வெறுமையையும் தோற்றுவித்திடவில்லை என்று பாவையவளுக்கு உணர்த்தும் முனைப்பில் கூறிட அதற்கெல்லாம் அசரும் ரகமா அவள்..?
அவனையே பாடாய்ப் படுத்தும் பெண் அவள்.அவளிடம் இப்படி ஒரு கேள்வியை அவன் யோசித்து தான் கேட்டிருக்க வேண்டுமோ..?

"எதே நா எங்க அப்டி நெனச்சேன்..? நா இல்லாம நீங்க சாப்ட மாட்டீங்கன்னு..நானே அப்டி இல்ல..நீங்க பக்கத்துல இல்லன்னாலும் என் பசிக்கு நா சாப்டுவேன்..இதுல நா எப்டி பாஸ் எதிர்பாக்கறது..?"

"லவ்வு லவ்வுன்னு சொல்ற..ஆனா நீ பண்றதெல்லாம் அதுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாம தான இருக்கே.."

"லவ்வு தான்..ஆனா அத நீங்க தான் மறக்க சொல்லிட்டீங்க..ஆனாலும் லவ்வுங்குறதுக்காக நீங்க பக்கத்துல இல்லன்னு என்னால சாப்டாம இருக்க முடியுமா..?அப்டி இருந்தா உங்கள லவ் பண்ணதுக்கு நா மெலிஞ்சு எலும்புக்கூடா தான் மாறி இருக்கனும்.."

"அப்போ என்ன லவ் பண்ணது தப்புன்னு சொல்லாம சொல்ற..?"

"யோவ்வ்வ்வ்..நா எங்கய்யா அப்டி சொன்னேன்..நீ தான் லவ்வுன்னா தப்பு..அதுவும் என்ன லவ் பண்றது மகா தப்பு..காவி வேஷ்டி கட்டிகிட்டு நா சாமியாராக போறேன்னு டயலாக் விட்டுட்டு இருந்த..பசின்னா சாப்டுவேன்னு சொன்னதுக்கு என் மேல பழிய திருப்பி விட்ற.." சத்தியமாய் அவளுக்கு கோபம் வந்து விட்டது.

அவள் காதலை குற்றம் சொல்ல அவனுக்குமே அவள் மனம் இடம் கொடுத்திடாது.இத்தனை நாள் அவனின் அறிவுரைகளை எல்லாம் சலிப்புடன் பொறுத்துக் கொண்டாள்.கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு பொறுமையாய் இருந்தாள்.

ஆனால்,இப்போது அவன் விளையாட்டுக்கென கூறியதும் ஏனோ பொங்கி விட்டாள்.

அவள் காதல் அப்படித் தான்..
அவன் மீதான அவள் காதல் அப்படித் தான்..
அவனிடம் கூட விட்டுக்கொடுக்கத் தெரியா அவனின் மீதான அவள் காதல் அப்படியே தான்..

பையனுக்கு ஏனோ அவளின் படபடபேச்சும் அந்த வார்த்தைகள் கொண்டிருந்த ஆயிரமாயிரம் பெரிய அர்த்தங்களும் உள்ளிறங்கி ஆழத்தை ஆட்படுத்தியது.அவளின் வார்த்தைகள் அவளின் காதலை பறைசாற்றுவது போல்.

கோபத்தில் கூட அவன் மீதான காதலைக் காட்டிட அவளால் மட்டும் எப்படித் தான் முடிகிறதோ என்று வியந்து நின்றாலும் பேச்சை திசை திருப்பவே விரும்பினான்,பையன்.இன்னும் எத்தனை தூரத்துக்கு தான் தன்னை ஆட்டுவிப்பாள் என்று பயந்து விட்டான்,போலும்.

"சரி சும்மா கோவப்படாத..நீ சாப்டியா என்ன..?" தன்மையாய் வந்து விழுந்த வார்த்தைகளில் அவளும் அடங்கி நின்றாள்.அவளுமே அவன் உடனே இறங்கி வருவான் என்று நினைத்திருக்கவில்லை.

"ம்ஹும் இன்னும் இல்ல..இதுக்கப்றம் தான் சாப்டனும்..லேட்டாகாம வீட்டுக்கு சீக்ரமா போங்க..மாமா மட்டும் தனியா வீட்ல இருப்பாரு.."

"ம்ம்.." அவளின் கட்டளை போன்ற கூற்றுக்கு அவன் எந்த வித மறுப்பும் தெரிவிக்காது போனதை கவனிக்கவில்லை,அவள்.

"சரி சாரே..சாப்ட கூப்பட்றாங்க..நா அப்றமா பேசறேன்.."

"ம்ம்.." என்றிட அவள் அழைப்பை துண்டித்த பின்னும் அவன் இன்னும் தன்னியல்புக்கு வந்திடவில்லை.

இங்கு தாமரைக்கு நெஞ்சு வலி வராத குறை தான்.பையனை அவள் சராமாறியாய் திட்டியது அதிர்வென்றால் அதற்கு அவன் தன்மையாய் பதில் சொல்வது மெதுவாய் செவியை உரசியிருக்க அது இன்னுமும் அதிர்வே.

"என்ன அவரு இவ கிட்ட திட்டு வாங்கிட்டு பேசாம இருக்காரு..இவ என்னன்னா மொத்தமா அவர குத்தகக்கி எடுத்த மாதிரி திட்டி கிட்டு இருக்கா..ஒன்னுமே புரியலயே.." சித்தம் கலங்கிப் போய் பாவையவளைப் பார்த்திட அவளோ அலைபேசியில் தெரிந்த பையனின் புகைப்பத்தை வெடு ரசனையுடன் பார்வையால் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தாள்,சுற்றம் மறந்து.

பையனின் மனமோ ஒரு நிலையில் இல்லை.அவள் எதையும் காட்டிக் கொள்ளாது இயல்பாய் பேசியது,பையனின் மனதுக்குள் சிறு சுணக்கத்தை ஏனென்றில்லாமல் விதைத்து விட்டிருக்க "ப்ச்ச்ச்" சலிப்பாய் உச்சுக் கொட்டினான்,அவன்.

மனதின் மாற்றங்கள் மெல்லப் புரிந்தாலும் அதை உணர மறுப்பவனின் மறுப்பில் அவை அப்படியே உள்ளுக்குள் மடங்கி போயிற்று.மடங்கிப் போனாலும் மரித்துப் போயிருக்கவில்லை என்பது சத்தியமான உண்மை.

இன்னும் அவள் மீது காதல் வந்திருக்கிறதா என்பதில் சந்தேகம் தான்.இருப்பினும் அது கூட அவனுக்கு அழகே.

உணர்ந்தும் உணராமலும் புரிந்தும் புரியாமலும் தவிக்கும் அழகிய இம்சையால் அவள் பாராபட்சமின்றி அவனை வதம் செய்து கொண்டிருக்க மெதுமெதுவாய் கரைந்தோடுகிறது,அவனின் கர்வமும் அழுத்தமும் இறுக்கமும்.

யார் மீதும் மீண்டும் காதல் வராது என்ற இறுமாப்புடன் சுற்றிக் கொண்டிருந்தவனின் இறுக்கத்தை அவள் நேசம் மெதுவாய் அவனே அறியாது உடைத்துக் கொண்டிருக்க அதை உணரும் நிலையில் ஏற்றுக் கொள்வானா பிடிவாதக்காரன்..?

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அவளை அவனுடன் தங்க அழைத்த போதில் இருந்து ஐந்தரை மணியானதுமே அலுவலகத்தில் இருந்து அவளை அழைத்துச் செல்வது அவனுக்கு வாடிக்கையாய் மாறிப் போயிருக்க அரவிந்துக்கும் அது அத்தனை நிம்மதியைத் தந்திற்று.

முன்னைய நாட்களில் இரவு பத்து மணி வரை அலுவலகத்தில் தரிப்பவனை வீட்டுக்கு போகச் சொன்னால் கேட்கவும் மாட்டான்.அரவிந்துக்கோ அவனை தனியாக விட்டுச் செல்லவும் மனம் வராது.அதனாலோ என்னமோ இப்போது சீக்கிரமாக வீடு செல்வது அவனுக்கு அத்தனை நிம்மதி.

இன்றும் அப்படித் தான்.
ஐந்தரை மணிக்கு போல் தோழனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என வந்தவனுக்கு மடிக்கணினியில் மூழ்கியிருந்த தோழனைக் கண்டதும் ஐயோவென்றானது உண்மை.

"என்ன இவன் இன்னிக்கி வீட்டுக்கு போகமா இருக்கான்..?" யோசனையுடன் கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு உள்ளே வர அரவம் உணர்ந்தவனுக்குத் தெரியுமே வந்திருப்பது யார் என்பது.

"என்ன அரவிந்த்..?"

"என்ன வேந்தா..? ஐஞ்சர மணி ஆயிடுச்சு இன்னும் வீட்டுக்கு போகாம இருக்க..தங்கச்சிய கூட்டிட்டு போனும்ல.."

"உன் தங்கச்சி இன்னிக்கி டூர் போயிருக்கா.."

"அத எதுக்குடா இவ்ளோ கடுப்போட சொல்லனும்..? நீ எப்ப பாரு அந்த பொண்ண திட்டிட்டே இருப்ப..உனக்கு சரியாப் பாத்தா அந்த பொண்ணோட லவ் டார்ச்சர் இல்லன்னு சந்தோஷம் தான வரனும்..?" நாடி தட்டிய படி தன்பாட்டில் பிதற்றியவனுக்கு தோழனின் மனநிலையை கணித்துக் கொள்ளத் தான் முடியவில்லை.

"நா எப்ப டார்ச்சர் சொன்னேன்..?" விழிகளிலும் கடுகடுப்பைக் காட்டி கேட்டவனுக்கு ஏனோ எக்கச்சக்கமாய் கோபம் வந்தது.

முகத்தில் கோப ரேகைகள் படரவிட்டு ஏதோ ஒரு வெறுமையைத் தாங்கிய விழிகளுடன் உறுத்து விழித்த படி அமர்ந்திருந்த தோழனை புதிதாய்ப் பார்த்தான்,அரவிந்த்.

அவனின் தோழன் வேந்தன் இப்படியெல்லாம் நடந்து கொள்பவன் அல்லவே.பையனின் பெரும் பலமே உணர்வு காட்டாத வதனமும் கோபத்தின் போது கையாளும் நிதானமும் தான்.

பையனுக்கோ கோபம் உச்சிக்கு ஏறி நின்றாலும் அதை விட ஒரு படி அதிகமாய் நிச்சயம் நிதானம் இருக்கும்.கட்டுப்படுத்த இயலா கோபம் வந்தாலும் அந்த நிதானத்தை ஒருபோதும் கை விட்டதில்லை அவன்.

இசைவளால் யாழவனின் மெல்ல மெல்ல மாற்றங்கள்,அவனின் இயல்புகளை மறக்கடித்து.யாழின் இசை அல்லவா அவள்..?
யாழின் இசையாய் மாறி அவனின் உயிர்த்தொட்டுக் கொண்டிருப்பவள் அவனை மாற்றாது இருந்தால் தானே அதிர வேண்டும்..?

"என்ன இவன் இப்டி கடுப்படிக்கிறான்..காப்பாத்து சாமி.." மானசீகமாய் கடவுளிடம் பேசியவனோ எதுவும் பேசாது பையனின் அருகிலேயே அமர்ந்து கொண்டிட அதன் பின் அங்கு மௌனத்தின் ஓசை.

இரவு எட்டு மணியைக் கடந்திருந்தது.

அரவிந்தோ அலைபேசியில் மூழ்கியிருந்தாலும் அடிக்கடி விழிகள் வேலையில் ஆழ்ந்திருந்த தோழனை தொட்டிட இதழ்களோ அவனுக்கு மௌனமாய் வைதன.

"என்ன எதுக்கு பாத்து பாத்து திட்டிட்டு இருக்க..?"

"திட்டாம என்னடா பண்ணுவாங்க..எட்டு மணி ஆயிடுச்சு..வீட்டுக்கு போகாம ஆஃபீஸ கட்டிட்டு அழுதா என்ன தான் பண்ணுறது..?"

"இவ்ளோ சீக்கிரமா வீட்டுக்கு போய் என்ன பண்றது நா மட்டும்..? அதான் கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்னு பாக்கறேன்.."

"அப்போ சார் எதுக்கு இதுக்கு முன்ன சீக்கிரமா வீட்டுக்கு போனீங்களாம்..?"

"அது இசை இருப்பா..எனக்கும் போர் அடிக்காது..ஆனா இன்னிக்கி அவ வீட்ல இல்லல..அதான் வீட்டுக்கு போக போர் அடிக்கிது.." சலிப்பு இழையோடிய குரலில் கூறியவனை பேயறைந்தது போல் பார்த்திருந்தான்,தோழன்.

"அப்போ அரசி இல்லன்னா உனக்கு போர் எல்லாம் அடிக்குதா..?" ஏதோ அர்த்தத்தை தனக்குள் சுருட்டியிருந்த குரலில் தோழன் கேட்டிட பையனோ அதன் மாற்றுக் கருத்தை உணரும் நிலையில் இல்லை.இசையவளே நிகழை மொத்தமும் சொந்தமாக்கியிருந்தாள்.

"அஃப்கோர்ஸ் இசை இல்லன்னா எனக்கு ரொம்ப போர் அடிக்கும்.." அலட்டலின்றி பையன் சொல்ல தோழனின் பார்வையில் இன்னும் மாற்றமில்லை.

உயிர்த்தொடும்.

2024.09.10
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 18(ii)


"நீ என்ன சொல்ற..?" விழிகளை கசக்கிப் பார்த்த படி கேட்டவனுக்கு அந்த வார்த்தைகளை உதிர்த்தது தோழன் தானா என்கின்ற சந்தேகமே உருப்பெற்றது.

"இசை இல்லன்னா யாழுக்கு போர் அடிக்கும்னு சொன்னேன்.." தோளைக் குலுக்கியவாறு மொழிந்தவன் உணர்ந்து உரைத்தானா உணராது ஒப்புவித்தானா என்பது அவனிடம் தான் வினவிட வேண்டும்.

"நெஜமாவா சொல்ற..?" பையனின் இன்றைய நாளின் நடத்தைகளை மனதுக்குள் மீள ஓடவிட்டு ஏதோ பிடிபட்ட பாவத்துடன் வினாத்தொடுத்திட பையனின் கவனம் இங்கில்லையே.

"ஆமா அதுல என்ன இருக்கு..?" விழி நிமிர்த்திக் கேட்டவனுக்கு தோழனின் முகத்தில் இருந்த மினுமினுப்பைக் கண்டதுமே தான் கூறியதை அவன் எடுத்துக் கொண்டிருக்கும் விதம் புத்தியில் உரைத்தது.

"அரவிந்த்..நீ நெனக்கிற மாதிரி ஒன்னும் இல்ல..இவ்ளோ நாள் கூட இருந்த பொண்ணு..அதுவும் ஏதாச்சும் பண்ணி அவ இருக்குறத சொல்லாம சொல்லிகிட்டு இருப்பா..அது தான் அவ இன்னிக்கி இல்லன்னதும் போர் அடிக்கிது.." சட்டென தன்னை மீட்டவனாய் பையனின் இதழ்கள் உச்சரித்த வார்த்தைகளில் கொஞ்சம் பொய் கலந்திருந்தது மறுப்பதற்குரிய விடயம் அல்ல.

அரவிந்தின் முகத்தில் இருந்த உற்சாகம் மொத்தமும் பையனின் பேச்சினால் அப்படியே வடிந்தோடிட முகம் சுருங்கியது.

"அரவிந்த் நீயா ஒன்ன கற்பன பண்ணிக்காத..இசை எனக்கு கொழந்த மாதிரி காட் இட்.." அழுத்தமாய் இதழ் பிரித்து அவன் கூறிடும் போதே அவனின் மனக்கண்ணில் பாவையவளின் பேராழி விழிகள் வந்து செல்ல சட்டென தலையை உலுக்கிக் கொண்டவனை புரியாது பார்த்தான்,அரவிந்த்.

நிஜத்தில் இழுத்தது போலவே நினைவிலும் அவள் விழிகள் அவனை வாரி சுருட்டிக் கொள்வது போன்ற மாயை உருவெடுத்திட இதழ் குவித்து ஊதிக் கொண்டு கதிரையில் இருந்து விருட்டென எழுந்திருந்தான்,பையன்.

பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து அழுத்தமாய் கோதிக் கொண்டவனின் வலக்கரம் இடது நெஞ்சில் அழுந்தப் பதிந்திருக்க அரவிந்துக்கு தலைகால் புரியாத நிலை.

"என்ன இவன் இப்டி பிஹேவ் பண்ணிட்டு இருக்கான்..என்னாச்சு இவனுக்கு..?" மனதால் குழம்பியவனோ வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

●●●●●●●●●

காரை பாதையோரமாய் நிறுத்தி விட்டு இருக்கையில் விழி மூடி சாய்ந்திருந்தான்,பையன்.பத்து விரல்களும் ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்டிருக்க அவை பின்னந்தலை தாங்கிக் கொண்டிருந்தன.

காரின் கண்ணாடியை பாதியாய் ஏற்றி வைக்கப்பட்டிருக்க அந்த இடைவெளியின் ஊடு வந்து சென்ற குளிர் காற்று பையனின் முகத்தை மோதிச் சென்றிட மெதுவாக இமை பிரித்தவனோ இருட்டை மேய்ந்தான்,வெறுமை சூழ் விழிகளுடன்.

ஏனோ மனம் முழுக்க வெறுமை நிரம்பி வெற்றிடமாகிக் கிடந்தது.நொடி தவறாது இருப்பை உணரத்திக் கொண்டிருந்தவளின் கண நேர இன்மை கூட அவனை சற்றே அசைத்திடும் என்றிருக்க இன்று நாள் முழுவதும் அவளைக் காணாதிருந்தது,அவனுக்கு ஏதோ போல்.

அந்த ஏதோவிற்குள் ஏதேதோ அர்த்தங்கள்.ஏதேதோ அர்த்தங்களிற்குள் ஏதேதோ மாற்றங்கள்.ஏதேதோ மாற்றங்களிற்குள் ஏதேதோ எண்ணவலைகள்.ஏதேதோ எண்ணவலைகளிற்குள் ஏதேதோ உணர்வுப் போராட்டங்கள்.ஏதேதோ உணர்வுப் போராட்டங்களிற்குள் ஏதேதோ ஏதேதோ தவிப்புக்கள்.ஏதேதோ தவிப்புக்கள் ஏதேதோ தடுமாற்றங்கள்.அந்த ஏதேதோ தடுமாற்றங்களுக்குள் மட்டும் கொஞ்சமாய் தடம் மாற்றங்கள்.

ஒரு நாளே போதும்,மனதில் அவளின் இருப்பை உணர வைத்திட.உணரந்து உணர்ந்து அவனுக்கும் அலுத்துப் போய் விட்டது.உணர்ந்ததை சற்றேனும் உள்ளிறங்க விட்டிருந்தால் உணர்வுகளின் உருமாற்றங்கள் உரைத்திருக்கும்.

இருபுறமும் தலையாட்டி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றும் அவனால் இயலவில்லை.அலைபேசேயில் பேசலாம் என ஒரு மனம் நினைத்தாலும் அது இன்னும் அவள் விதைத்துச் சென்ற தாக்கத்தை ஆழமாக்கி விடுமோ என்கின்ற பயம் வேறு.

ஸ்டியரிங்கை பிடித்து திருப்பி விட்டவனுக்கு தன்னையே கட்டுக்குள் வைத்திட முடியாத ஒரு நிலை.அவன் நினைத்திருக்க மாட்டான்,தனக்கும் இப்படி உணர்வலைகள் எழுந்திடும் என்று.

மனம் முழுக்க மண்டிக் கிடந்த வெறுமைக்க சாட்சியாய் இதழ்களும் இறுகிக் கிடக்க ஏன் இத்தனை வெறுமையை அவன் மனம் உணர்ந்து தொலைக்கிறதென்று பையனுக்கு எதுவுமே புரியவில்லை.

இத்தனைக்குள் அவள் அவன் உருகி நேசித்த பெண் என்றாலும் பரவாயில்லை.இல்லையென்றால் அவன் நேசித்த பெண்ணாகவோ அவனின் நேசத்துக்குரிய பெண்ணாகவோ இருந்தாலும் பரவாயில்லை.

இது அப்படியுமல்ல,அவள் மீது பாசம் இருக்கிறது.நேசம் இருக்கிறதா என்று அவனே உணரவில்லை.அப்படி இருந்தும் இத்தனை துரம் தன்னை பாதிக்கும் அளவு தான் பலவீனமானவனா என மனமே கேள்வி கேட்டது,தன்னிடம்.

இரவு பத்து மணி போல் வீடு வந்து சேர்ந்தான்,பையன்.கலைந்து போனவன் போல் இருந்த தோற்றமும் முகத்தில் வழிந்த சோர்வும் ராமநாதனுக்கு சிரிப்பைத் தான் தந்தன.
சிரித்தவாறே கடந்து சென்று விட்டார்,மனிதர்.

அறைக்கதவு ஏதோ நினைப்பில் "இசை" என அழைத்துக் கொண்டு தட்ட முயன்றவனின் கரமோ அந்தரத்தில் நின்றிட வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்,மெதுவாக.பெரிய மனிதர் கண்டால் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கக் கூடும் எனற்றறிருந்தவனின் விழிகளோ அவர் இருக்கிறாரா என ஆராயவும் மறக்கவில்லை.

குளித்து விட்டு வந்தவனுக்கோ மனதில் இருந்த வெறுமை வயிற்றிலும் வெறுமை சேர்த்திட உணவும் வேண்டாமென தோன்றிற்று.

அலைபேசியை கரத்தில் வைத்து மேலும் கீழும் ஆட்டிய படி கட்டிலில் சரிவாக சரிந்திருந்தான்,பையன்.பாதங்கள் கட்டிலின் மெத்தைக்கு வெளியே சற்று நீண்டிருந்தன.

அவளிடம் இருந்து பகல் பேசியதன் பிறகு எந்த வித அழைப்புமோ குறுஞ்செய்தியுமோ வந்திராதிருக்க பார்த்தவனுக்கு வெறுமைக்கு மேலாய் கோபமும்.

"லவ் பண்றேன்..லவ் பண்றேன்னு வாய் கிழிய சொல்லுவா..ஆனா கட்டுன புருஷன் சாப்டானான்னு கூட ஃபோன் பண்ணி கேக்க மாட்டா.." மனதால் அவளை வறுத்தெடுத்த படி விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்க குறுஞ்செய்தி வந்திருப்பதை உறுதி செய்ய ஒலித்திட்ட சத்தத்தில் சடுதியாய் ஆர்வமொன்று தொற்றிக் கொண்டது,பையனில்.

அலைபேசியை எடுத்துப் பார்த்தவனின் நினைப்பு பொய்யாகவில்லை.அவனின் எண்ணம் முழுக்க தன் வசம் கட்டியிழுத்துக் கொண்டிருப்பவளிடம் இருந்து தான் குறுஞ்செய்தி வந்திருந்தது.

"என்ன பாஸ் சாப்டுடீங்களா..?" என்கின்ற கேள்வியுடன் ஒரு வில்லையால் ஒற்றைக் கண்ணை மட்டும் மறைத்து ஆராய்வது போல் தோற்றம் தரும் எமோஜியும் வந்திருக்க அவன் புருவங்கள் ஏறி நின்றன.

"நா சாப்டுவேன் சாப்ட மாட்டேன்..உங்களுக்கு என்ன வந்துச்சு..?" பதிலுக்கு முறுக்கியவாறு விடை சொல்லி விழிகளை திருப்பி ஒரு புறமாய் இதழ் சுளிக்கும் எமோஜியை சேர்த்து அனுப்பி வைத்திருந்தான்,பையன்.

அவளும் அவனிடம் இருந்து பதிலை எதிர்ப்பார்த்து அலைபேசியை கையில் வைத்திருந்திருக்க குறுஞ்செய்தி உடனே பார்க்கப்பட்டிருந்தது.

"பாவமே சாப்டீங்ளான்னு கேட்டேன்..என்ன சொல்லனும்.." மறுமொழியுடன் கண்டு கொள்ளாமல் கொட்டாவி விடும் எமோஜியை அனுப்பி விட்டிருக்க பையனின் இதழ்களினோரம் புன்னகை தேங்கிற்று.

"நானா உனக்கு பாவம் பாக்க சொன்னேன்..?" கேள்வியுடன் ஒற்றைப் புருவமுயர்த்தி உறுத்து விழிக்கும் முகத்தை அவன் அனுப்பியிருக்க அவளுக்கோ இன்னும் ஆர்வம் கூடிப்போயிற்று.

யாழவன் இத்தை தூரம் நேரம் ஒதுக்கி குறுஞ்செய்தி வாயிலாக தன்னுடன் உரையாடுவான் என்று அவள் எண்ணியிருக்க மாட்டாள் போலும்.அவனுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உரையாடுவது அத்தனை பிடித்தமானதில்லை என்பதும் அவளுக்குத் தெரிந்த விடயம் அல்லவா..?

"என்ன இன்னிக்கி சேட் எல்லாம் பண்றீங்க..?"

"ஏன் சேட் பண்றது தப்பா..?"

"இல்ல நீங்க இப்டி சேட் எல்லாம் பண்ண மாட்டீங்களே.." இரு கைகளாலும் முகத்தை மறைக்கும் எமோஜியும் சேர்ந்து வந்தது,அந்த குறுஞ்செய்தியுடன்.

"என்ன லந்தா..?"

"இல்ல நெஜமாலுமே ஷாக்கா இருக்கு.." என்பதோடு நில்லாமல் இரு விழிகளும் விரிந்து அதிர்ச்சியை பிரதிபலிக்கும் முகத்தை அனுப்பிட பையனோ முறுக்கிக் கொண்டான்.

அவளுடன் இயல்பாக அவன் இருப்பது உண்மை தான்.அவளுக்கு அதை ஏற்றுக் கொள்வது அத்தனை சுலபமும் அல்ல என்பதும் அவனால் ஒத்துக் கொள்ள முடியுமானதே.ஆனால்,மனமோ ஏற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறதே.

அவனோ அவளின் விளையாட்டில் முறுக்கிக் கொண்டு பதிலனுப்பாது இருக்க "கோவமா..?" என்று கேட்டிருந்தாள்,தொங்கிப் போன முகத்துடன்.

"இவ்ளோ நேரம் ஈன்னு பல்லு முழுக்க காமிச்சிட்டு போன நோண்டிட்டு இருந்தா..இப்போ என்னன்னா மொகத்துல இருந்த பல்ப் மொத்தமா மங்கலாயிருச்சு..என்ன தான் நடக்குதுன்னு தெரிலியே..தயவு செஞ்சு இவ கிட்ட இருந்து என்ன காப்பாத்திரு சாமி.." இதழ்களுக்குள் முணுமுணுத்தவாறு தோழியைக் கடந்து தாமரை செல்ல அதைக் கூட உணரும் நிலையில் இல்லை,பாவையவள்.

"சாரே வெளயாட்டுக்கு சொன்னேன்..அதுக்கு போய் கோச்சிகிறீங்க..?"

"சாரேஏஏஏஏஏஏ"

"சாரே சாரி.."

அவளிடம் இருந்து தொடராய் குறுஞ்செய்திகள் வந்து விழுந்தும் அவன் பதில் அனுப்பாது வேண்டுமென்றே முரண்டு பிடித்திட அவளுக்கோ மனம் கேட்டிடவில்லை.

எதையும் யோசியாது பையனுக்கு அழைப்பு விடுத்திட அவளிடம் இருந்து அழைப்பு வருவதைக் கண்டதும் பையனின் இதயத் துடிப்பு சற்றே ஏறுவது போல்.

ஏனோ அவளின் அழைப்பை ஏற்றிடும் திராணி சத்தியமாய் பையனுக்கு உண்டாகிடவில்லை.மனம் மட்டும் படபடத்து ஓய்ந்து போனது.

இத்தனை தூரம் அவன் தயங்கிட வேண்டிய தேவை இல்லை தான்.அவளின் குரல் அவனின் அகத்தில் புகுந்து உயிரில் கலந்து உணர்வுகளுடன் ஒன்றிப் போவது போல் தோன்றிடவே தடுத்திட முயன்றான்,அதை.

அதுவும் அவளுடன் இன்று மதியம் பேசிய பின் சில மணி நேரங்கள் மொத்தமாய் அவளின் நினைப்பே.தன்னை ஈடி செய்து கொண்டு வேலையில் ஒருமித்துப் போனாலும் அவளின் நினைவுகளின் கொஞ்சம் மொத்தமாய் அவனை சிதறடித்தன.அதை உணர்ந்தே அவன் புறக்கணிக்க முயல அதற்கு அவள் விட்டாள் தானே.

ஒருமுறை அடித்தோய்ந்த பின் மறுமுறையும் அழைப்பெடுத்திட அதற்கு மேலும் அவளை பதட்டப்படுத்த பையன் விரும்பிடவில்லை.குறுஞ்செய்தி ஒன்றை தட்டி விட்டிருக்கலாம் தான்.

தான் பேசாது இருந்தால் ஏதேனும் நினைத்துக் கொள்வாள் என்று மழுப்பலான காரணம் சொல்லி மனதை சமாளித்து ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டு அழைப்பை ஏற்றிட அவன் செவியில் உரச்சிச் சென்ற குரலின் அதிர்லைகள் உயிர் முழுவதும் பரவும் விந்தை அறியாது விக்கித்து நின்றான்,யாழவன்.

யாழின் இசையின் குரல் இன்னிசையாய் அவன் இதயம் தொட்டிட படக்கென்று அப்படியே எழுந்தமர்ந்து கொண்டான்,பையன்.

"ஹலோ ஹலோ..ஹலோ.." என்ற அவளின் கத்தலுக்கு மேலாய் அவளின் மூச்சுக் காற்றின் ஓசையும் துல்லியமாய் காதோரம் ரிதமிசைத்திட இதயத்தின் வேகம் இன்னும் கூடிப் போனது.

தொண்டைக்குழி ஏறி இறங்க எச்சில் விழுங்கிக் கொண்டவனின் மயிரக்கால்கள் குத்திட்டு நின்றிட தேகத்தில் குளிர் பரவிற்று என்றால் உள்ளுக்குள் மட்டும் அனல்.

இத்தனை தூரம் ஆட்டம் காணதும் தேகமும் மனமும் அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்த பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க அத்தனை எளிதில் அதை சாத்தியமாக விட்டிடுவானா பையன்..?

தப்பியிருந்த நிதானத்தை தன்னோடு ஒட்டிக் கொள்ள வைத்து "ஹலோ" என்றவனின் குரலில் மட்டும் இலேசான கரகரப்பு.

"என்ன சாரோ கோவமா..?"

"ச்சே அப்டிலாம் ஒன்னுல்ல இசை.." இயல்பு மீட்டுக் கொண்டு சொன்னவனின் குரலில் அழைப்பை துண்டித்து விடும் வேகம்.

"நா பயந்துட்டேன்.."

"ம்ம்ம்ம்.." அவன் பேச்சைக் கத்தரிக்கச் சொல்லிட அவளுக்கோ அவனின் "ம்ம்ம்ம்" தான் நினைவில் வந்தது.

"நெஜமா பாஸ்..வேணுன்னா என்னோட ஹார்ட் பீட கேளுங்க.." அவனிடம் பதில் கேளாது அலைபேசியை இடது நெஞ்சின் மேல் வைத்திட தடதடவென?ஓடிய இதயத்தின் ரிதத்தை உணர முடிந்தது,அவனாலும்.

இசையின் ரிதம் யாழை அசைத்துத் தொலைத்தது.தாளம் தப்பிய வேகம் அவனை மொத்தமாய் ஆட்டிப் பார்த்தது.ஏறியிருந்த துடிப்பு அவனின் மன இறுக்கத்தை அப்படியே இறக்கி வைத்தது.செவிவழி சேர்ந்த ஓசை இசையென அவனிதயம் துளைத்தது.

பதட்டத்தில் தாளம் தப்பி இசைத்துக் கொண்டிருந்த ரிதமது யாழவனை ஏனோ தாக்கிட அவனோ "ஹலோ" என்றான்,அவளின் இதயத் துடிப்பு தன் செவிகளுக்குள் ஓடிக் கொண்டிருப்பதை போன்ற உணர்வுடன்.

ஏனோ அன்று அவள் அணைத்து நின்றது தான் நினைவில் மின்னல் கீற்றாய்.அன்றும் இப்படித் தான்,அவளின் இதயத் துடிப்பை உணர்ந்து மருகித் தவித்து செத்துப் பிழைத்தான்.இன்றோ இன்னும் ஆழமாய் அவனைத் துருவி உயிரைக் குடிக்கிறதே.

அவனுக்கென துடிக்கும் இதயம் அவனை அசைத்திடாது போகாதே..?

"ஹலோ பாஸ் என்ன..?இப்பவாச்சும் நம்பறீங்களா..?"

"நம்பறேன் இசை..இப்போ எனக்கு தூக்கம் வருது..நா அப்றமா பேசறேன்.."

"ஓ அப்டியா சாரே..சரி அப்போ நான் காலைல பேசறேன்..பத்ரமா இருங்க.." என்று விட்டு அவள் அழைப்பை துண்டித்திட விட்டத்தில் பார்வையை அலையவிட்டு மீண்டும் சாய்ந்தான்,பையன்.

அவளின் குரட்டை சத்தமின்றி உறக்கமும் வராமல் சண்டித்தனம் செய்தது.

அவன் வாழ்வு யாழ் அதிகாரம் என்றால் அவனுள் மாற்றங்கள் துளிர்த்திருக்காது.அது யாழின் இசையதிகாரம் அல்லவா..?

யாழிசைத் தென்றலாய் யாழிலும் யாழின் இசையாய் மாற்றங்கள் துளிர்க்கத் தானே வேண்டும்..?

உயிர்த்தொடும்.

2024.09.10
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 19(i)


இரவின் நிசப்தங்களின் அர்த்தங்கள் அவரவருக்கேற்ப மாறிக்கொள்வதில் தான் எத்தனை விசித்திரம்..?

ஓயாது ஓடி அயர்ந்து போய் உறக்கத்தில் விழுபவருக்கு அந்த நிசப்தம் தாலாட்டு என்றால் தனிமையில் தவித்து தனக்குள் மருகித் தீர்ப்பவருக்கு அந்த நிசப்தம் ஒரு கோரம்.இரவுக்கு ஆயிரம் பரிமாணங்கள் போல இரவின் நிசப்தமும் உருப்பெறும் வடிவங்கள் ஏராளம்.

தனிமையில் இரவின் நிசப்தத்தை கோரமாய் உணர்பவனுமே ஈற்றில் உறங்கிப் போவது அந்த இரவின் நிசப்தத்தில் தான்.தாலாட்டாயினும் கோரமாயினும் மானுடத்திடம் ஒரே மாதிரியாய் நடந்து கொள்ள அதுவால் முடியும் போலும்.

எதுவாகி நின்றாலும் இரவின் நிசப்தங்கள் தனித்துவம் தான்.யாரிடமும் கண்டிட முடியா ஆழ்ந்த அமைதியை தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் தனித்துவம்.

அந்த நிசப்தத்ததில் தான் ஆன்மாவின் ஓசை மொத்தமும் ஆர்ப்பரிக்க காணுகிறது,மானிடம்.
ஜீவனின் ஏக்கங்கள் மொத்தமும் வெளிப்படக் காண்பதும் அந்த தனிமையுடனான நிசப்தத்தில் தான்.ஆழியென ஆழமாய் ஆழ்ந்திருக்கும் ஏக்கங்கள் மொத்தமும் வெடித்துச் சிதறக் காண்பதும் அந்த நிசப்தத்தில் தான்.

ஆக மொத்ததில் பாறையன இறுக்கி வைத்திருக்கும் மனங்கள் உணர்வுப் பிளம்பாய் மாறுவதும் தனிமையுடனான அந்த இரவின் நிசப்தத்தில் தான்.

அவனின் வாழ்க்கையும் அவள் வந்திடும் முன் இப்படித் தான் இருந்தது.பாறையென விறைப்பாய் இருப்பவனின் இரவின் மையிருட்டிலும் ஆழ்கடல் அமைதியிலும் உணர்வுப் பிளம்பாய் மாறி தன்னையே நொந்து கொண்டு தனிமையை இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டு உறங்குவது வாடிக்கையாய் இருந்தது.

ஆனால்,அவள் வந்த பின் அந்த தனிமையும் வெறுமையும் வெருண்டோடிட உணர்வுப் போராட்டங்கள் இல்லாமலே போயிருந்தது.

இப்போது அவள் அருகாமையில் இல்லை.ஆனால்,அதற்கென்று அவன் உணர்வுப் பிளம்பாய் கொந்தளித்து நின்றிடவில்லை.

இதழோரம் அழகாய் மென்னகையொன்று தேங்கி தொங்கி நின்றிருக்க முழங்கையின் மேற்பகுதியால் விழிகளை மறைத்தும் மறைக்காமலும் தனக்குள்..ம்ஹும்..
ம்ஹும்..அவளுக்குள் ஆழ்ந்திருந்தவனின் மொத்த நினைப்பையும் தன் புறம் திருப்பி கட்டியிழுத்திருந்தாள்,பாவையவள்.

இதழோரம் புன்னகை கசிய விழியோரம் மினுமினுப்பு வழிய வசீகரமாய் அவனிருப்பதை பாவையவள் அவனைக் கண்டிருந்தால் "மாயக்காரன்" என நொந்து போயிருப்பாள்,தன்னிலை மறந்து முன்னிலை பிறழ்ந்து.

உயிரின் ஆழத்தில் உருவெடுத்த நிம்மதியின் வழித்தடமாய் இதழோரம் வீற்றிருந்த புன்னகையில் யாரும் கண்டிட முடியா அர்த்தங்களின் குவியல்.

அவனுமே நினைத்திருக்க மாட்டான் இத்தனை நிம்மதியாய் யாரோ ஒருத்தியின் நினைவுகளுக்குள் மட்டும் மூழ்கி புன்னகைத்திடுவோம் என்று.சத்தியமாய் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டான்,பையன்.

வாழ்க்கை அவனுக்கு கொடுத்த அடி அப்படி.அனுபவங்கள் அவனுக்கு கற்றுக் கொடுத்த பாடம் அப்படி.அந்த அனுபவங்களும் பாடங்களும் அடுத்தடுத்து தொடராய் வந்திட்ட வாழ்வியலின் கட்டங்களும் அவனுக்கு நினைத்திட கூட இடம் தரவில்லை என்பதே உண்மை.

"என்னால நிம்மதியா எல்லாத்தயும் மறந்துட்டு ஒரு நிமிஷமாச்சும் இருக்க முடியுமா டா..? அப்டி இருக்கும் போது எப்டிடா அந்த பொண்ணோட மொத்த லைஃபயும் வீணாக்க சொல்ற..?" ஆற்றாமை பொங்கிய குரலில் தோழனிடம் இசையவளை குறிப்பிட்டு அவன் மொழிந்தது,அணுவும் மாறாமல் நினைவில் வந்து போக இதழோரப் புன்னகை மேலும் விரிந்தது.

அவன் நடந்தே தீராது என்றதை எந்த வித ஆர்ப்பாட்டமும் ஆர்ப்பரிப்பும் அன்றி அத்தனை அழகாய் நடத்திக் காட்டியவளுக்கு மானசீகமாய் நன்றி சொல்லிக் கொண்டான்,பையன்.

மொத்தமும் மறந்து அவன் இயல்பாய் இருப்பதன் ஒற்றைக் காரணம் இசையவள் தான் என்பதை உணர்ந்திட இன்றைய தினமே போதுமாய் இருந்தது.

அவளின் அருகாமையில் அவன் ஆழ் மனம் உணரும் நிம்மதியே ஆயுளுக்கும் போதுமென நினைத்தவனுக்கோ வாழ்வின் நிதர்சனம் அவளை தன்னுடன் வைத்துக் கொள்ள முடியாது என்று தோன்றிடவும் மனதுக்குள் ஏதோ அழுத்தி அடைப்பது போல்.

அவளின் பிரிவைப் பற்றி நினைத்தாலே மனம் மருகும் நிலையில் தான் இருக்கிறான்,கல்லுளி மங்கன்.இதில் அவளை பிரிந்து செல்வதாய் உறுதி வேறு எடுத்திருக்கிறான்..?

பாவம்,பையன் அறியவில்லை.அவனின் உறுதி வேண்டுமென்றால் மற்றவர்களின் முன் செல்லுபடியாகலாம்.இசையவளின் முன் கொஞ்சமும் எடுபடாது என்று.

தலையை உலுக்கி தன்னை இயல்பாக்கி மீட்டுக் கொண்டவனுக்கும் கவலையில் கலந்து போக விருப்பமில்லை.

நேராய் படுத்து இருந்தவனோ கட்டிலில் ஒரு புறமாய் சரிந்து கொண்டிட விரல்களோ அன்று தவறுதலாய் அவன் அலைபேசியில் எடுக்கப்பட்ட இருவரினது சுயமியை ஆராய்ந்து தேடி எடுத்தது.

அந்த புகைப்படத்தை எடுத்திட அவள் செய்திட்ட அலும்பல்களை எண்ணுகையில் இப்போதும் சிரிப்பு வருவது போல்.தனியாய் சிரித்துக் கொள்ளவும் செய்தான்.

புகைப்படத்தில் இருந்தவளின் உருவத்தை மெல்ல மெல்ல அவன் விழிகள் அலசின.பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் பேரழகி அல்ல அவள்.

அவளின் குணம் அறிந்ததாலோ என்னவோ அவன் விழிகளுக்கு அழகாய்த் தெரிந்து தொலைத்தாள்,என்றும் இல்லாமல்.

காற்றின் உதவியால் ஆங்காங்கே கலைந்த சிகையுடன் அவனின் அதட்டலுக்கு பயந்து விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை மற்றவர்களால் அழகாய்க் கண்டிட முடியுமா என்று தெரியாது.

பையன் காண்கிறான்..
அவளில் அழகை காண்கிறான்..
அவளை அழகாய்க் காண்கிறான்..
அவளால் அழகாகக் காண்கிறான்..

இசையவளை மட்டுமல்ல,அவளால் தன் வாழ்வையும் அழகாகக் காண்கிறான்,யாழவன்.

சில நொடிகள் அவளின் முகத்தில் தான் நிலை பெற்று தரித்திருந்தது,பையனின் பார்வை.முட்டை விழிகள் நிழலில் கூட முற்றாய் ஈர்த்திழுப்பது போல தோன்றிட கருமணிகளை இருமுனைக்கும் மாறி மாறி நகர்த்தி ஒரு சுழற்று சுழற்றியவனோ பட்டென அலைபேசியை கீழிறக்கிறான்,இதயம் படபடத்திட.

மீண்டும் மனம் முரண்டு பிடிக்க அவளின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தவனுக்கு தன் மனதின் போக்கு சரியாய்ப் படவில்லை.

"என்னாச்சு யாழ் உனக்கு..?" தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அலைபேசியை அருகே இருந்த மேசையில் வைத்தவனோ உறங்க முயல உறக்கமும் வந்த பாடில்லை.

மூடிய விழிகளுள் மூச்சு முட்டும் விதமாய் அவளின் விம்பம் குடியேற அடிக்கடி இதழ் குவித்து ஊதிக் கொண்டு துயிலுக்குள் சென்றிருந்தான்,பையன்.

உடலும் உள்ளுணர்வுகளும் தளர்ந்து போய் உறக்கத்துக்குள் விழும் முதற் கட்டம் அது.

அவனின் ஆழ்மனதின் கிடங்கென ஆழமாய் கிடக்கும் அவன் மட்டுமே அறிந்த இரகசிய பிரதேசம் மெல்ல விழித்தெழுந்து அவனுள் வேர்ப்பிடித்து எழுந்து பெருமரமென விரிந்து நிற்குன் அவளின் நினைவுகள் மனதின் ஒவ்வோர் இடத்தில் இருந்தும் மெல்ல மெல்ல சேர்த்து தன்னிடத்தில் புதைத்துக் கொண்டிட சிறு துளியென துளிர்த்து ஆழிப் பேரலையாய் கிளர்ந்து அவனை வாரிக் கொ(ல்)கிறாள்.

மனமெங்கும் பரவியிருக்கும் தளர்தல் போதாதென்று அவனை மொத்தமாய் தகர்த்திட ஏதேதோ இரகசியமாய் கூறுகிறாள்.பாறையென அவன் இறுக்கி வைத்திருந்த மனதின் அடியில் சிறு கொடியாய் ஊடுருவி அவனின் இறுக்கங்களை தகர்த்து புன்னகைக்கிறாள்.முரண்டு பிடிக்கும் பிடிவாதத்துடன் பையன் மறுக்க மறுக்க மறுபேச்சுமின்றி விழிகளால் காந்தமென அவனை மொத்தமாய் கவர்ந்திழுக்கிறாள்.இரவின் நிசப்தம் அவளின் மௌனமாய் விரிந்து நின்றிட அந்த மௌனத்தால் கூட அவனை மொத்தமாய் வலியின்றி கொன்று புதைக்கிறாள்.

உணர்வுகள் மறுபடியும் விழித்திட மூடிய இமை வழியே பையனின் கருமணிகள் நகர்ந்து இதழ்களும் ஏதோ பிதற்றியவாறு தானாய் ஒட்டிப் பிரிகின்றன;தொட்டு விலகுகின்றன.

நிசப்தங்கள் அவளின் மௌனமாகி ஆயிரம் அதிர்வலைகளை தருகின்றன.சின்ன அமைதி கூட பூகம்பாய் வெடித்து அவனிதயத்தில் அவள் நினைவுகளை சிதற விடுகின்றன.மையிருட்டில் மெல்லிய வெளிச்சம் தோன்றிட அதில் அவள் விம்பம் மட்டும் அவன் விழிகளுக்குள் வருகின்றது.ஒட்டியிருக்கும் இமைகளுடன் விழியோரம் அவளில்லா வெறுமையில் கரைகிறது.

உறக்கத்தில் கூட யாழவனை இம்சிக்காது அவனின் இ(ம்)சையவள் இருந்திட மாட்டாள்,போலும்.அவனில் ரிதமிசைத்து அவனாய் மொத்தமாய் இம்சித்து ஒரு வழி செய்து கொண்டிருந்தாள்.

உணர்வுகள் மட்டுமல்லாது உறக்கும் போட்டி போட விழிப்பிற்கும் சலிப்பிற்கும் இடையே தள்ளாடி போகிறான்,பையன்.

அதே நேரம்,

துயில் தொடக் கூட மறுக்கும் விழிகளுடன் இலக்கின்றி வானத்தில் பார்வையை நகர்த்தியவாறு இருந்தவளுக்கு சத்தியமாய் உறக்கம் வரவில்லை.

நேரடியாகவோ கள்ளத் தனமாகவே பையனின் வதனத்தை ஒரு தடவையேனும் விழிகளால் உரசி அவனை மனதுக்குள் நிரப்பிக் கொண்டு உறங்குவது பழகிப் போயிருக்க இன்று உரசிட அவனின் உருவம் இல்லையே.

சலிப்பாய் பெருமூச்சு விட்டவளுக்கு மனமோ ஒரு மாதிரியாகத் தவித்தது.உள்ளுக்குள் ஏனென்றின்றி தகித்தது.

அலைபேசியில் இருந்த அவனின் புகைப்படத்தை அடிக்கடி பார்த்தவாறு இருந்தவளுக்கு அவனுடன் காலம் முழுக்க இருந்திட ஆசை தான்.ஆனால்,அதற்கு அவள் போராடித் தீர்க்க வேண்டியிருப்பதை நினைக்கும் போதே சிறு ஆத்திரமும்.

"கல்லுளி மங்கன்..ஃபோட்டோல கூட சிரிக்காது..சிரிச்சா தான் எவ்ளோ அழகா இருக்கும்..எப்பா பாரு உர்ருன்னு கிட்டு திரிய வேண்டியது.." புகைப்படத்தை பார்த்து மென்குரலில் திட்டியவளோ திரையில் தெரிந்தவனின் இறுகியிருந்த அதரங்களை அவிழ்த்துப் பிரித்திடும் முயற்சியில் தள்ளாடித் தோற்றாள்,இரு விரல்களுடன்.

"உர்ரு உர்ருன்னு கிட்டு..உர்ரு மூஞ்சி..யோவ் உன் ப்ரச்சன என்னன்னு எனக்கு நல்லா தெர்யும்..அது தெரிஞ்சு தான் உன்ன கட்டிக்குவேன்னு நா ஒத்தக் கால்ல நின்னு கட்டிகிட்டேன்னா எனக்கு எப்டி யா அந்த ப்ரச்சன பெரிய விஷயம் ஆகும்..? ஆனா விஷயம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணி கிட்டேன்னு தெரிஞ்சா கண்டிப்பா உன் கிட்ட இருந்து நாலு அற வாங்குவேன்னு மட்டும் தோணுது.."

"நீ ரொம்ப நல்லவன்யா..ரொம்ப ரொம்ப நல்லவன்..பாக்கறதுக்கு தான் வெறப்பா இருக்குறது..ஆனா மனசால ரொம்ப சாஃப்ட்..அது தான் இந்த யாழ் பையன பைத்தியாம லவ் பண்ண வக்கிது போல..ஹும்ம்ம்ம்..அப்டியும் சொல்ல முடியாது..நம்ம கல்யாணத்துக்கு அப்றம் தான் உனக்கு இப்டி வெர்ஷன் டூ ஒன்னு இருக்கறதே எனக்கு தெர்யும்..இப்போ நீ எதுக்காக உலகமே இருண்டு போன பீலிங்கல இருக்கன்னு எனக்கு நல்லா தெர்யும்.."

"நீயும் மாற மாட்டா..சே சே இல்ல..இப்போ கொஞ்சம் மாறி தான் இருக்க..அதுவே போதும் எனக்கு..உன்ன?இன்னும் கொஞ்சம் மாத்திட்டேன்னா அதுக்கப்றம் நீ போய்த்தொலன்னு சொன்னா கூட கண்டிப்பா போவேன்..போக வேணான்னு சொன்னா நீ போன்னு சொல்ற வய உன் பக்கத்துல இருப்பேன் நா மட்டும் லவ் பண்ணிகிட்டு..கண்டிப்பா உன் கிட்ட இருந்து பதிலுக்கு லவ்வ எதிர்பாக்க மாட்டேன்..ப்ரமிஸா..அப்பப்போ திட்டுவேன் தான்..பட் என்ன மாதிரி நீயும் என்ன லவ் பண்ணனும்னு ஹோப் வச்சிக்க மாட்டேன்..உன்ன லவ் டார்ச்சர் பண்ணாம இப்ப மாதிரியே உனக்கு புரிஞ்சும் புரியாம லவ் பண்ணிட்டு இருப்பேன்.."

"அதுவே என் மேல உனக்கு கொஞ்சூண்டு லவ் இருக்குன்னு நா ஃபீல் பண்ணாலோ இல்ல எனக்கு தெரிய வந்தாலோ மவனே நீ செத்த..அதுக்கப்றம் நீயா தொரத்துனா கூட இந்த இசை உன்ன விட்டுப் எங்கயும் போக மாட்டா..தவறுதலாவாச்சும் அந்த லவ் தெரிய வந்ததுன்னா உங்களுக்கு எங்கிட்ட இருந்து தப்பிக்கறதுக்கான எல்ல வழியும் இல்லா போய்ரும் மிஸ்டர்.யாழ்வேந்தன்..
சாரி சாரி மிஸ்டர்.இசையரசி.." விரல் நீட்டி அவனின் புகைப்பத்துக்கு எச்சரித்தவளின் விழிகளில் அவனை மூச்சடைக்கு வைத்திடும் அளவு காதல்.

மறுநாள் விடியற்காலையில் விழிப்புத் தட்டியிருக்க பையனுக்கு மனதின் வெறுமை இன்னும் அதிகமாகி நிற்பது போல்.

"இவ நம்மள ரொம்ப படுத்தி எடுக்குறா" இதழ்கள் நகர்ந்து உச்சரித்திட தவித்துப் போனவனுக்கு அவளைக் காண மனம் முழுவதும் ஏங்கி நின்றது.

இத்தனைக்குள் அவர்களிடையே அத்தனை நெருக்ககும் இல்லை.விபத்தாய் ஒரு விழி உரசல்,உணர்வுக் குவியலாய் ஒரு அணைப்பு,பரிவுடனான ஒரு விரல் ஸ்பரிசம் இதைத் தவிர அவர்களிடையே இருந்தது எல்லாம் இயல்பானவை தானே.

வார்த்தைப் பரிமாற்றங்களும் பார்வைத் தீண்டல்களும் கூட இயல்பு தான்.அதுவும் தோழர்களாக பழகத் துவங்கிய பின்னர் தான் அது இயல்பாகவே மாறியிருந்தது.அதற்கு முன் பையன் முறைத்துக் கொண்டல்லவா இருப்பான்..?

அவள் நினைவுகள் தந்த புன்னகை இதழ்களில் தேங்கிட அலுவலகத்திற்குள் நுழைந்தவனுக்கு அரவிந்தின் பதட்டமான முகம் சிறு யோசனையைத் தந்திட்டது.

"என்னாச்சு அரவிந்த்..? எதுக்கு இப்டி இருக்க..?"

"ஒ..ஒன்னுல்ல.." வார்த்தைகள் தந்தியடிக்க பொய் கூறியவனின் விழிகளை வைத்தே ஏதோ ஒன்று இருப்பதை கணித்தவன் தன் கேபினுக்குள் செல்ல அங்கு அவனுக்காக காத்திருந்தவர்களை கண்டதும் அவனுக்குள் சிறு திடுக்கிடல்.

உயிர்த்தொடும்.

2024.09.11
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 19(ii)


வாசலில் விழி பதித்து சக்தியின் கரத்தைப் பற்றிய படி தனக்காக காத்திருந்த அபிராமியைக் கண்டதும் மனதுக்குள் சிறு திடுக்கிடல் எழுந்தாலும் அதை லாவகமாய் மறைத்துக் கொண்டான்,கலையில் கை தேர்ந்தவனாய்.

பையனின் பின்னூடு வந்த அரவிந்துக்கும் செய்வதறியா நிலை.அவனும் அபிராமியை பலமுறை தடுத்துப் பார்த்து விட்டான்,வர வேண்டாமென்று.

முதலில் அவள் அலைபேசியின் ஊடு பையனை சந்திக்க வரும் விடயத்தை சொல்லி அனுமதி கேட்டிட அரவிந்த மறுத்தும் கேளாமல் அவனைக் காண வந்திருந்தாள்,அவள்.

அலுவலக வாயிலில் வைத்தும் வழி மறித்து அவனை சந்திக்க விடாது திருப்பி அனுப்பப் பார்த்திட அவளோ கெஞ்சியவாறு அழுதிட அதற்கு மேலும் இறுக்கத்தை கடைபிடிக்க இயலாமல் தான் போனது,பையனின் தோழனால்.

தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை பையனின் விழிகள் வெறுமையான பாவத்துடன் தழுவியது என்றால் அரவிந்தின் விழிகளில் ஏனோ கோபம்.

அவள் வருவதாக கூறிய விடயத்தை இசையவளிடம் நள்ளிரவிலேயே உரைத்து விட்டிருக்க அவள் என்ன செய்து கொண்டிருப்பாளோ என்பது வேறு பெரும் யோசனையாய்.சொல்லாமல் இருந்திருக்க வேண்டுமோ என பலமுறை எண்ணி விட்டாள்.

வெற்றுப்பார்வை விழிகளில் மின்ன அழுத்தம் தோய்ந்த முகத்துடன் தன்னை நோக்கி வந்தவனை அடிபட்ட பாவத்துடன் குற்றவுணர்வு மிகுதியில் விழிகள் கலங்க பார்த்திருந்தாள்,அவள்.

அவளின் அருகே அமர்ந்து இருந்த சக்தியின் கரமோ மனைவியின் கரத்தை மெல்ல அழுத்தி ஆறுதல் படுத்த முயன்று கொண்டிருந்தது.

தன்னிருக்கையில் வந்தமர்ந்த பையனுக்குமே எப்படி அவர்களுடன் உரையாடலை துவக்குவதென்று தெரியவில்லை.

அவள் மீது கோபம் ஆர்மபத்தில் கோபம் இருந்தது தான்.தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்கின்ற ஆற்றாமை இருந்தது தான்.தன்னை கொஞ்சமும் நம்பவில்லையே என்கின்ற ஆதங்கமும் இருந்தது தான்.எல்லாம் அவள் அவனின் காதலியாக இருக்கும் வரை.

அவள் ஒரு வேளை தன் தவறை உணர்ந்து மனம் திருந்தி அவனிடம் மீண்டும் காதலை யாசித்திருந்தாலும் மறுத்து வாழ்க்கை முழுக்க தண்டனை கொடுத்திருக்க மாட்டான்,பையன்.நேசித்த பெண் என்பதற்காக என்றல்ல,அவனின் குணமுமே அப்படித் தான்.

ஆனால்,அவள் என்று தன்னை முற்றாய் வெறுத்து ஒதுக்கி இன்னொருவனை திருமணம் செய்து கொண்டாளோ அந்த நொடி அவளுக்கான காதல் மொத்தமும் செத்தே போய் விட்டது.ஏன் அவன் மனதில் இருந்து அவளும் கூட.

அவளையே அவன் மனதில் இருந்து தூக்கி எறிந்தவனுக்கு அவள் மீதான காதலும் கோபமும் மட்டும் எம்மாத்திரம்..?

காதலை துறந்து விட்டான்.கோபத்தையும் மறந்து விட்டான்.அவளைப் பற்றி நினைப்பதும் இல்லை.அவ்வப்போது அவளைக் காண நேர்கையில் அவளும் அவனின் வீட்டினரும் கொடுத்த காயங்கள் கீறி விடும்.அது அவனின் மனநிலையை மொத்தமாய் புரட்டிப் போடும்,அவ்வளவே.

ரணங்கள் மீள வந்து கணங்களை ரணமாக்குவதால் தான் அவளை சந்திப்பதை விரும்புவதில்லை,பையன்.ஆனால்,தற்பொழுதோ அவனின் எண்ணத்திற்கு மாற்றமாய் அவளே வந்து நிற்கிறாள்,அவனின் முன்னே.

சக்திக்கு கூட பையனின் உணர்வு துடைத்த முகம் அதிர்வே.பையனிடம் விழிகளிலேனும் சிறு கோபத்தை எதிர்வினையாக எதிர்ப்பார்த்தவனுக்கு அவனின் முகம் சலனமின்றி இருந்தது,அபியை அவன் முற்றாய் ஒதுக்கி விட்டான் என்று தெளிவாய் புரிய வைத்திட ஆழ்ந்த பெருமூச்சொன்று.

மனைவி மீது தவறு இருப்பது தெரிந்து அவளை அவன் வெறுக்கவுமில்லை.அதற்கென்று அவள் செய்தது சரி என்று அவன் துணை நிற்கவும் இல்லை.

"சா..சாரி..வேந்.."

"யாழ்வேந்தன்.." பையனோ அழுத்தமாய் அவளின் அழைப்பை திருத்திட பழக்க தோஷத்தில் அழைத்தவளுக்கு முகத்தில் அடித்தாற் போல்.

சக்தி எதுவும் பேசவில்லை.பிரச்சினை அவர்கள் இருவருடையிலானது என்பதால் தீர்த்துக் கொள்ளட்டும் என ஒதுங்கி இருந்து விட்டான்,எதுவும் பேசாமல்.

"ஐ அம் ரியலி சாரி வே..யாழ்வேந்தன்..நா பண்ணது தப்பு தான்..ரொம்ப பெரிய தப்பு..அதுக்காக மன்னிப்பு கேட்டு பத்தாதுன்னு எனக்கு தெர்யும்..ஆனா எனக்கு அதத் தவிர வேற கேக்க முடியாது..ரியலி சாரி வேந்தன்..நா அன்னிக்கி உங்கள நம்பி இருக்கனும்.." ஈரம் நிறைந்த விழிகளுடன் இமை அடித்தவாறு அவள் கூறிட பையனுக்கு ஏனோ அவளின் அந்த எண்ணத்தை கேட்கவும் பிடிக்கவில்லை.

அவள் அப்படி நடந்திராவிட்டால் இசை எப்படி தன் வாழ்வில் வந்திருப்பாள் என மனசாட்சி தன்பாட்டில் யோசித்திட தனது எண்ணப் போக்க அறிந்தவனின் இதயம் எம்பிக் குதித்தது.

பல நாட்களுக்கு முன்னமே அவனுமே அவ்வாறு நினைத்திருக்கிறான் தான்.ஆனால்,இப்போது அந்த எண்ணத்தில் சாயல் கூட அவனுக்கு உவப்பாய் தோன்றாதிருக்க உள்ளுக்குள் உணர்வுப் போராட்டம் குடை விரித்திட அதை வெளிக்காட்டிக் கொள்ளாது அமர்ந்து இருந்தான்,பையன்.

"நா பண்ண தப்புக்கு மன்னிப்பு கேக்க கூட எனக்கு தகுதி கெடயாது யாழ்வேந்தன்..ஆனா அத கேக்காம போனா என்னோட வாழ்க்க முழுக்க அந்த குற்றவுணர்ச்சி என்ன குத்திட்டே இருக்கும்..முடிஞ்சா என்ன மன்னிச்சிருங்க.."

"................."

"என்னால அவ்ளோ தான் சொல்ல முடியும்..நீங்க அப்போ என்ன காதலிச்சீங்க..ஆனா உங்க அளவுக்கு நா உங்கள காதலிக்கல..அது தெரிஞ்சும் நீங்க இன்னும் தான் என்ன காதலிச்சீங்களோ தவிர என்னோக காதல்ல ஒரு நாளும் கொற கண்டதில்ல..ஆனா உங்க காதலுக்கு கண்டிப்பா நா தகுதியானவ கெடயாது..உங்க மனசுல ஒரு காயமா நா இருப்பேன்னா என்னோட மனசுல நீங்க எப்பவுமே என் லைஃப்ல நா சந்திச்ச ஒரு நல்ல பர்சனா மனசுல இருப்பீங்க.."

"லுக் அபிராமி..பர்ஸ்ட் லவ்வுங்குறது எப்பவுமே எல்லார் ஃலைப்லயும் வரும்..பட் அது லைஃப் கெடயாது..என்னக்கியே பர்ஸ்ட் லவ் மறயாம மனசுல இருக்கும்ங்குற தாட்டோட ஒத்துப் போற ஆளு நா கெடயாது..நம்மள நம்பி நம்ம லைஃப்ல இன்னொருத்தங்க என்டர் ஆகுவாங்கன்னா அவங்களுக்கு உண்மயா இருக்கனும்னு நெனக்கிற ஆளு நான்..அத தான் உங்களுக்கும் சொல்றேன்..நா எப்பவுமே உங்க மைன்ட்ல இருக்க கூடாது காட் இட்ட்ட்ட்ட்.." அழுத்தமாய் கூறிட்ட பையன் அவளுக்கு புதிது.பையனின் இப்படியான தோரணையை அவள் இதுவரை கண்டதேயில்லை.

"சாரி.." மீண்டும் மன்னிப்பை யாசித்தவளை சலிப்பாக ஏறிட்டவனின் பார்வையோ சக்தியை மரியாதையாக தழுவிற்று.அவனைப் டோன்ற ஆண்கள் அரிதல்லவா இன்றைய சமூகத்தில்.

"திரும்ப சாரி..அப்போ நாங்க கெளம்பறோம்.." என்றவளிடம் மையமாய் தலையசைத்தவனின் விழிகளில் சடுதியாய் ஏறி நின்ற மினுமினுப்பும் வதனமதில் வழிந்தோடிய விகசிப்பும் அவன் பார்வை போன திசையில் சுற்றியிருந்த மற்றைய மூவரையும் திரும்பிடச் செய்தது,விழிகளை நிரப்பி நின்ற அதிர்வுடன்.

இத்தனை நேரம் அவனிருந்த தோரணை மொத்தமும் மாறிப்போய் பையனின் முகத்தில் வெளிப்பட்ட உணர்வுக்கோலம் மூவரையும் திடுக்கிட வைத்தது.

அபிராமியோ மீள முடியா அதிர்வுடன் பையனின் விழிகளைத் தான் பார்த்திருந்தாள்.
இசைவயவளை உரசிக் கொண்டிருந்த அந்த விழிகளில் தான் எத்தனை உணர்வுக் கோலங்கஙள்..?

அபியிற்கு அவன் விழிகளில் வந்திருந்த கலவையான உணர்வுகள் என்னவென்று தெரியாவிடினும் காதலிக்கும் காலத்தில் இப்படியொரு உணர்வுக் குவியலை அவள் பையனின் விழிகளில் கண்டதில்லை என்பது மறுக்க இயலாத உண்மை.

நீள விழிகளின் கோலக் கருமணிகளில் நொடிக்கு நொடிக்கு உருப்பெருத்துக் கொண்டிருந்த அவள் விம்பமும் அதற்கு தோதாய் மத்தளம் வாசித்த இதயத் துடிப்புடன் ஒருங்கிணைந்த அவனின் புன்னகையும் நீண்டு கொண்டே போனது.அவளை அவ்விடத்தில் எதிர்பாரா இன்ப அதிர்வு விழிகளில் விரவிப் பரவி விரிந்து நின்றது.

விழியோரம் அவள் விம்பம் நிரம்ப இதழ்களில் மெல்லிய புன்னகை இழையோட ஒரு நிமிடம் உலகம் மறந்து அவளை மட்டுமே நினைத்து அவன் இருந்த தோரணை அத்தனை அழகு.

உணர்வுகளை காட்டி பழக்கப்படாதவனின் வதனத்தில் மாற்றி மாற்றி வந்து போன உணர்வுகள் இன்னும் அவனை இரசிக்க வைத்தது.

வெளுப்பு நிறம் தேங்கிய வானத்தில் வானவில் போல அழுத்தமான விழிகளில் தோன்றிய உணர்வுகளின் தேக்கமும் அத்தனை எழிலாய்.

அவனின் மொழியின்றிய உணர்வுகளுக்கு உரிமையானவளோ அவனை துளியும் கவனியாது வியர்க்க விறுவிறுக்க நடந்து வந்து கொண்டிருந்தாள்,தன் மனதுக்குள் சிந்தனைகள் நெட்டித் தள்ளிட.வேக நடையால் அவளுக்கு மூச்சும் வாங்கியது.

அரவிந்துக்கோ அவளைக் கண்டதும் விழிகள் விரிந்தன.அபிராமி வரும் விடயத்தை அவளிடம் தெரிவித்து வைத்திடலாம் என்பதற்காகத் தான் கூறினானே தவிர அவளை வரச் சொல்லி அல்ல.

பையனின் கேபினின் கண்ணாடிக் கதவுக்கு முன்னே வந்து நின்ற பொழுதே உள்ளே வந்து இருப்பவள் யாரென்று அறிந்து கொள்ள முடிந்திட அவள் இதழ்கள் இறுகிற்று.

இத்தனை நேரம் இல்லாத கோபம் இப்பொழுது மனதினில்.
அபியைக் கண்டதும் உச்சிக்கு சினம் ஏறியது என்னவோ உண்மை தான்.

யாழவன் வேண்டுமென்றால் அபியை மன்னித்து விடலாம்.ஆனால்,யாழின் இசையவளால் அது இயலாத காரியம்.

ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கதவைத் திறந்து "எக்ஸ்க்யூஸ் மீ சார்.." என்று அனுமதி கேட்டிட பையனின் இதழோரம் துடித்து அடங்கியது.

அன்று தவறுதலாய் அபியின் சிறு வயது புகைப்படம் தவறுதலாய் இருந்ததற்கே நாள் கணக்கில் முறுக்கிக் கொண்டு திரிந்தவள்.இன்று அவள் வேறு முன்னே வந்து நிற்கிறாள்,பாவையவளின் கோபத்தை சொல்லவும் வேண்டுமா என ஊகித்து தனக்குள் சிரித்துக் கொண்டான்,பையன்.

"யெஸ் கம் இன்"கண நேரத்தில் முகத்தை இயல்பாக்கி பதில் கொடுத்தவனின் செயலைக் கண்டு அரவிந்துக்குமே வியப்பு.

ஒவ்வொரு தடவையும் அவனை கட்டியிழுக்கும் கருவிழிகளில் முறைப்பை தேக்கி அழுத்தமான நடையுடன் நோக்கி அடியெடுத்து வைத்திடுபவளை இமைக்காது பார்த்திருந்தான்,பையன்.இமைகளும் இதயமும் இப்போதெல்லாம் அவனின் பேச்சை கேட்பதில்லையே.

அவனருகில் வந்து நின்றவளோ உறுத்து விழித்தாளே தவிர ஒரு வார்த்தை பேசிடவில்லை.அந்த அமைதியே போதும்,அவளின் கோபத்தை எடுத்துரைத்திட.

"யெஸ் சொல்லுங்க என்ன விஷயம்..? எதுக்காக என்ன தேடி வந்திருக்கீங்க..?" தோளைக் குலுக்கிக் கொண்டு அவளை சீண்டிடவே பையன் கேட்டிட பாவையவளுக்கு பையனுக்கு நான்கைந்து அடிபோடும் வேகம்.

"ஹான்ன்ன்ன் ஒன்னுல்ல..புரிஞ்சிக்கவே முடியாத பீஸா ஒருத்தர் இருக்காராம்..அவர பாத்துட்டு போலாம்னு வந்தேன்.." அவள் எகிற இருவரையும் சுவாரஷ்யமாய் பார்த்திருந்தது,சக்தி தான்.

யாழவனின் திருமண விடயம் அரசல் புரசலாக அவனுக்குத் தெரியும் என்றாலும் இன்று அவனின் விழிப்பார்வை ஆணித்தரமாய் அவனுக்கு அந்த விடயத்தை உறுதிப்படுத்தியது.

"பாத்தாச்சுன்னா கெளம்பலாம்.." அவனோ கெத்தாய் சொல்ல "யோவ்வ்வ்வ்வ்" என பல்லைக் கடித்தாள்,அவள்.

அபிராமியோ சுருங்கிய நெற்றியுடன் பாவையவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளை எங்கோ கண்டிருப்பது போன்று மனதுக்குள் தோன்றிட அந்த நினைவை தான் மீட்டுக் கொள்ள முடியவில்லை.

"இ..இது யாரு..?" அவள் திணறிய படி கேட்டிட பாவையவளின் முகத்தில் இருந்த முறைப்பு மட்டும் மாறவில்லை.

ஒரு நொடி தயங்கினாலும்,மறு கணமே அவளை தன்னருகே இழுத்தெடுத்து தோளணைத்து நிறுத்தியவனின் விரல்களோ பாவையவளின் தோற்பட்டையை அழுந்தப் பற்றியிருக்க அவளோ அதை எங்கே உணர்ந்தாள்.அவனின் ஸ்பரிசத்திலும் அருகாமையிலும் பனிக்கட்டியாய் உறைந்து போயிருந்தாளே.

"இது என்னோட வைஃப் இசையரசி.." கம்பீரமாய் சொன்னவனின் குரலில் அவள் பெயர் வெளிவருகையில் மட்டும் அத்தனை மென்மை,அவனே அறியாமல்.

மனதுக்குள் ஒரு வித நிம்மதி பரவுவது தெளிவாகப் புரிந்தது,அபிராமிக்கு.பையனின் விழிகளும் பாவையவளின் உணர்வுகளும் அவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழ்வது போன்ற எண்ணத்தை உண்டு பண்ணியது,அவளுக்குள்.

அவளுக்கு சக்தி கணவனாக கிடைத்தது போன்று அவனுக்கும் நல்லதோர் வாழ்க்கை துணை அமைந்திருப்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்து விட அவள் மனதின் ஆழத்தில் நிறைவு.

"ஹாய் ஐ அம் அபிராமி.." சிறு புன்னகையுடன் அவள் கையை நீட்ட சிலையென நின்றிருந்தவளோ பையனின் உலுக்கலில் தன்னிலை மீண்டாளும் இன்னுமே அதிர்வலைகள் அடங்கி ஓய்ந்தபாடில்லை.

நீட்டிய கரத்தைப் பார்த்தவளுக்கு ஏனோ கோபமாய் வர பக்கமாய் திரும்பி பையனின் முகம் பார்த்திட அவளின் பார்வை தன் மீது படரும் என அவனும் கணித்திருந்தானோ என்னவோ..?
மெதுவாய் விழி மூடித் திறக்க அவனின் விழியசைவுக்கு கட்டுப்பட்டவளோ அவளின் கரம் பற்றி குலுக்கினாலும் இருந்ந முறைப்பில் மாற்றமில்லை.முகமும் தொங்கிப் போய் கிடந்தது.

அபிக்கு இசையவளின் மனநிலை கொஞ்சம் புலப்படுவது போல் இருக்க அதற்கு மேலும் அவ்விடத்தில் நிற்காது தலையசைப்புடன் கிளம்பிட பட்டென்று பையனை விட்டு விலகி நின்று கொண்டாள்,பாவையவள்.

பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து பையன் கோதிக் கொண்டதையும் இதயத் துடிப்பின் வேகத்தில் மிரண்டு இடது புற நெஞ்சில் சற்றே அழுத்தி கரம் பதித்ததையும் அவள் கண்டிருந்தாலே போதுமே.

நெற்றியில் மெல்லியதாய் அரும்பியிருந்த வியர்வை புறங்கையால் துடைத்துக் கொண்டவனே "இசை" என்று அழைத்தது தான் தாமதம்,பொங்கி விட்டாள்,அவள்.

உயிர்த்தொடும்.

2024.09.11
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 20(i)


சக்தியும் அபியும் வெளியேறியதைத் தொடர்ந்து அரவிந்தும் அவ்விடத்தில் இருந்து அகன்றாலும் அவன் மனதில் பாவையவளின் மீதான பாசம் அதிகரிக்கத் தான் செய்தது.

"‌கடவுளே இந்த மரமண்டக்கி விஷயத்த புரிய வை.." கடவுளிடம் மானசீகமாய் வேண்டுதல் வைத்தவனுக்கு தோழனின் வாழ்வு விரைவில் சீராகி விடும் என்கின்ற எண்ணம்.

"இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு..ஆனா தா அந்த பொண்ண முன்னாடி பாத்து இருக்கேன் சக்தி..இதுக்கு முன்னாடி கண்டிப்பா பாத்துருக்கேன்..எப்டியே அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும்.." மனம் நிறைய சொன்னவளின் வார்த்தைகளில் சக்தியின் இதழ்களிலும் மென்னகை.

யாழவனின் விழிகளில் தெரிந்த உணர்வின் ஆழம் அந்த ஆண்மகனுக்கு புரிந்து போய் விட இத்தனை நாள் பையனின் வாழ்வை பற்றி மனதின் ஓரமாய் இருந்த உறுத்தில் முற்றாய் துடைத்தெறியப்பட்டு இருந்தது.அதுவே அவனுக்கு போதும்.

அரவிந்த் அழைத்து விடயத்தைச் சொன்னதில் இருந்து அவளின் மனதில் பிரசவமான படபடப்பு அவள் கட்டுக்குள் கொண்டு வர பலமாய் முயன்றும் அடங்கியபாடில்லை.

அன்று கவனமின்றி பாதையை மாறப்பார்த்தவனின் கவனச் சிதைவுக்கு காரணமே அபியைக் கண்டது தான் பின்னொரு நாளில் தான் அவளுக்குத் தெரியவே வர அதில் இருந்து மனதில் அலைக்கழிப்பு மின்னி மறைந்து கொண்டேயிருக்கும்.

இன்றும் விடயம் கேள்விப்பட்டதில் இருந்து அதே பயம் தான்.மனதும் தானாய் படபடக்கத் துவங்கி புத்தியை முந்தி மனம் முன்னே வந்திட விடியற்காலை என்றும் பாராமல் கிளம்பி விட்டிருந்தாள்,தனியாக.

முரளி கூட அவளை பலமுறை தடுத்துப் பார்த்திட அதற்கும் பிடி கொடுத்திடவில்லை,அவள்.யாழின் அழுத்தத்தில் கொஞ்சம் இசையில் சேர்ந்து கொண்டதோ என்னவோ..?
யாருக்குத் தெரியும்..?

அவனைக் காண வந்து சேரும் வரை படபடத்துக் கொண்டிருந்த இதயம் பையனின் சீண்டலில் முற்றாக தளர்ந்து போயிற்று.அதுவும் பையனின் சீண்டலானே பேச்சே அவன் முன்பு போல் இல்லை என்பதை எடுத்துரைக்க அவள் மனதில் பரவிய நிம்மதிக்கு வார்த்தைகள் இல்லை.

"இசை.." என்ற அழைப்பில் ஏனோ கோபம் பொங்கிட அவன் புறம் திரும்பி நின்று கோபமாய் தீயென விழித்தவளை சுவாரஷ்யமாய் பார்த்தான்,பையன்.காட்டிக் கொள்ளத் தான் இந்தக் கோபம் என்று புரியாது இருந்தால் அவர்களிடையே இருக்கும் ஆத்மார்த்தத்திற்கு பெயர் ஏது..?

"என்ன மேடம் சூடா இருக்கீங்க போல.."

"இல்லயே நார்மலா தான இருக்கேன்.." பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவளுக்கு அபியுடன் அவன் கை குலுக்கும் படி விழி மூடி சைகை செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.மனம் கோபத்தில் ஆர்ப்பரித்தது.

"ஆமா மூணு நாள் டூர் போறேன்..ஃபன் பண்றேன்னு சொல்லிட்டு என்ன அடுத்த நாளே வந்து நிக்கற..என்னாச்சு..?" அவன் அவள் மீதான அக்கறையில் கேட்டிட அவளுக்கு தன் கோபத்தை கண்டு கொள்ள மாட்டான் என்கிறானே என்பது இன்னும் கோபத்தை தந்தது.

"ஆ..கல்யாணம் நின்னு போச்சு.." கடுப்புடன் சொல்ல பையனின் விழிகளில் சிறு அதிர்வு.

"வாட்ட்ட்ட்ட்..? என்ன சொல்ற..? திடீர்னு எப்டி கல்யாணம் நின்னு போகும்.."

"ச்சே..சிவசிவா" வாயில் இரண்டு அடி போட்டுக் கொண்டவளின் செயலே போதும் அவள் கடுப்பில் கூறியிருப்பதை உணர்த்திட.

"தோணுச்சு அதான் வந்தேன்.."

"எதுக்கு இப்போ வேண்டா வெறுப்பா பதில் சொல்லிட்டு இருக்க.." தன்மையாய் கேட்டவனுக்கு இதற்கு முன் இருவரின் இயல்புகளும் தலைகீழாய் இருந்தது நினைவில் வந்து போக மறக்கவில்லை.

"நீங்க எதுக்கு அவங்க கூட ஹேன்ட் ஷேக் பண்ண சொன்னீங்க..?" என்று சீறவுமே அவளின் கோபத்தின் அடிநாதம் பிடிபட பையன் உணர்ந்து தொலைத்ததை உரைத்திட மொழிகள் இல்லை;மொழிகள் இருந்தாலும் அதில் வார்த்தைகள் இல்லை.

விழிகளிலும் காதலை தேக்கி கோபத்திலும் காதலை காட்டி அவனை ஜீவனை உதிரமின்றி கொலை செய்பயவளிடம் தப்பிக்கும் வழி பையனுக்குத் தெரியவில்லை;தெரியவேயில்லை.

இயல்பான அவளின் துடிப்புக்கள் கூட வாழ்வின் ஆழம் தொடும் விந்தை தான் என்ன...?
இயல்பின்றிய அவளின் தவிப்புக்கள் கூட ஜீவனின் நிறைவைத் தந்திடும் அதியசம் தான் என்ன..?

காதல் என்பதா..?
காதல் தான்..காதலே தான்..ஆனால்,மொத்தமாய் அவனுக்கான அவளின் உணர்வை காதல் என்று சொல்லிட முடியாதே..? காதல் என்று மட்டும் கூறித்திரிய இயலாதே..?

காதலுடன் ஒருமித்துப் போன எத்தனையோ உணர்வுகளில் ஒருங்கிணைவு தானே அவனுக்கான உணர்வு.ஆக,அதை வெறுமனே காதல் என்றிட இயலாதே.

"சரி தெரியாம சொல்லிட்டேன்..முறுக்கிட்டு நிக்காம கேக்கறற கேள்விக்கு பதில்.." வேகமெடுத்த இதயத்தின் துடிப்பின் ஓசையை ஆழ்ந்து செவிமடுத்தவாறு கூறலானான்,பையன்.

"ஆமா நீங்க தெரியாம சொல்லுவீங்க..நாங்க ஒடனே மறந்துடனுமா.." முறுக்கிக் கொண்டு பதில் மொழியாது அவழ் கிளம்பிட தடுக்கவில்லை,பையனும்.அவனுமே தளர்ந்து தொய்ந்து போயிருந்தான்,அவள் உணர்த்திடும் காதலில்.

"அபி வர்ரான்னு நேத்து லேட் நைட் எனக்கு மெஸேஜ் பண்ணி இருந்தாடா..உனக்கு ஃபோன் பண்ணா நீ அட்டன்ட் பண்ணல..தங்கச்சிக்கு ஃபோன் பண்ணிட்டேன்..விஷயத்த சொல்லாம இருக்கலாம்னு பாத்தா அரசி வேற சொல்லுங்கன்னு ஒத்தக்கால்ல நின்னுச்சி..சரி தானா சொன்னதுமே கெளம்பி இருக்கு போல..முரளி இப்போது தான் ஃபோன் பண்ணாரு..அவரு வேணாம்னு சொல்லியும் அரசி வந்துருக்கு போல..கொஞ்சம் எடுத்து சொல்லு டா..நைட் டைம் தனியா ட்ராவல் பண்ணியிருக்கு..அன்னிக்கி நீ அபிய பாத்து தான் அப்சட் ஆகியிருப்பன்னு நா சும்மா சொன்னேன்.."

"அன்னிக்கின்னா.."

"ரோட்ல ஏதோ யோசனைல போய் ஆக்சிடன்ட் ஆகப் பாத்தல்ல..அன்னிக்கி தான்..அது தான் நீ திரும்ப அப்சட் ஆகிருவியோன்னு பயந்து தான் அரசி நைட்டோட நைட்டா வந்துருக்கும் போல.." அவள் மீதான அக்கறையில் பேசி விட்டு பையனுக்கு அவனின் வார்
த்தைகள் ஒவ்வொன்றும் அத்தனை கனமாய்.மனமோ தன்னிலை தவறி தவித்தது.சுற்றம் மறந்து தத்தளித்தது.

அரவிந்து பேசி விட்டுச் சென்று பத்து நிமிடங்கள் கூட கடந்திருக்கவில்லை.அவனுக்கு அழைப்பு வந்து அதில் தெரிந்த செய்தி அவனை மேலும் ஆட்டி வைத்தது.அதற்கு மேலும் அலுவலகத்தில் இருக்க முடியாதென்று தோன்றிட வீட்டுக்கு வந்தவனோ அறைக்குள் நுழைய கட்டிலில் சரிந்து ஒருக்களித்துப் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்,பாவையவள்.

இரவு முழுக்க சரியான உறக்கம் இல்லை.பையனுடன் பேசி விட்டு ஒரு மணி நேரம் உறங்கி இருப்பாள்.அதற்குள் அரவிந்தின் அழைப்பு வந்திட தயாராகிக் கிளம்பியது தான்.பேரூந்தில் இடையிடையே உறக்கத்தில் விழிகள் மூடினாலும் ஆழமாய இதம் தரும் உறக்கம் அல்ல அது.

சயனித்திருந்தவனின் முகத்தை பெருமூச்சோடு குற்றவுணர்வு மின்ன பார்த்திருந்தான்,பையன்.உள்ளுக்குள் உடைந்து நொருங்கி சிதறி நெகிழ்ந்து போயிருந்தான்.

அவளோ காதலாலும் அக்கறையாலும் பாசத்தாலும் நேசத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை கொன்று கொண்டிருந்தாள்.வாழ்வின் வலிகள் மொத்தத்தையும் தாங்கி போராடியவனுக்கு ஏனோ இந்த இவளின் காதலை மட்டும் தாங்கிடும் தைரியமே இல்லை.மூச்சை யாரோ இறுக்கிப் பிடித்து நெஞ்சத்தில் பாரம் ஏற்றி விட்டது போல் இருந்தது.

கட்டிலில் அவள் தலை வைத்திருந்த இடத்துக்கு அருகே நிலத்தில் அமர்ந்து விட்டான்,அவன்.அவள் மீதான அவனின் உணர்வு அவனுக்கு இன்னும் புரியவில்லை தான்.அது புரிந்தால் கூட அவள் வாழ்வில் இருந்து விலகுவதிலும் அவளை தன் வாழ்வில் இருந்து விலக்குவதிலும் குறியாய் இருந்தான்,பையன்.

"எதுக்கு டி இப்டி போட்டு சாவடிச்சிட்டு இருக்க..இப்டி ஏதாச்சும் பண்ணி தொலப்பன்னு தான் நானும் உன் கிட்ட ஹார்ஷாவே பிஹேவ் பண்ணிட்டு இருந்தேன்..ஆனா கொஞ்சம் அக்கற காட்டினும் இப்டி நடந்துக்குற..ம்ஹும் நா முன்ன மாதிரி இருந்தாலும் நீ இதே பைத்தியக்காரத் தனம் தான் பண்ணிட்டு இருந்திருப்ப..பைத்தியம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.."

"நா உன்ன லவ் பண்ணல இசை..சத்தியமா லவ் பண்ணல..அப்டி லவ் பண்ண தோணவும் இல்ல..ஏன்னா நீ எனக்கு கொழந்த மாதிரி..அதுவும் என்னால கண்டிப்பா லவ் பண்ண முடியாது..முடியவே முடியாது..என்ன இவ்ளோ லவ் பண்ற பொண்ணேட லைஃப லவ் பண்ணி என்னால ஸ்பாய்ல் பண்ண முடியாது இசை..புரிஞ்சிக்கோ.."

"பைத்தியக்கார தனமா என்ன லவ் பண்ற நீ..இதெல்லாம் அடி முட்டாள்தனமா தான் தோணுது..பதிலுக்கு நா லவ் பண்ணாலும் நீ இப்டி நடந்துக்குட்டனா பரவால..என் சைடால எந்த வித ரெஸ்பான்ஸும் இல்லன்னு தெரிஞ்சும் எதுக்கு இப்டி லவ் பண்ற..? சத்தியமா மூச்சடக்க வக்கிதுடி உன் லவ்..அதுவும் அதக் கூட காட்டிக்காம இருக்க பாரு..அது தான்..அது தான் என்னால தாங்கிக்க முடில.." மனம் நோக அவள் காதலில் நெகிழ்ந்து போய் பேசியவனின் வார்த்தைகள் அவள் செவியில் விழுந்து இருந்தாள்,பாவையவள் செத்தே போயிருப்பாள்.ஆனால்,அவை அவளின் செவியை உரசிடும் சாத்தியம் ஏது..?

"அப்போவே நீ என்ன லவ் பண்றன்னு எனக்கு தெரியாது..ஆனா உனக்கு என் மேல ஏதோ ஒரு ஃபீலிங்ற இருக்குன்னு தெரியும்..முட்டாள் மாதிரி அத நானும் இன்பாக்ஷுவேஷன் நெனச்சு கண்டுக்காம இருந்துட்டேன்..ஆனா அப்றமா தான் புரிது நீ பைத்தியக்கார தனமா லவ் பண்றன்னு.."

"ஒவ்வொரு தடவ உன் லவ்வ ஃபீல் பண்றப்போவும் தோ இங்க ஏதோ பண்ணுது.." தன் நெஞ்சை சுட்டிக் காட்டி கூறியவளின் விழிகள் சிவந்து போயிருந்தன.மொத்தமாய் அவளை உடைத்துப் போட்டிருந்தது,அவள் நேசம்.

"நீ வாயத் தெறந்து உன்ன லவ் பண்றேன்னு சொல்லி இருந்தாலும் நா இப்டி ஃபீல் பண்ணிருப்பேனான்னு தெரில..ஆனா நீ பண்ற?ஒவ்வொன்னும் சொல்லாம சொல்றப்போ செத்து தான் டி போறேன்..உனக்கு அது ஒன்னும் புரியாது..உன் பாட்டுல ஏதாச்சும் கிறுக்குத்தனமா பண்ணிட்டு இருப்ப..ஆனா நா..நா மனுஷன் தான்டி..இந்த மனுஷனால உன் லவ்வ சத்தியமா தாங்கிக்க முடில..எதுக்குடா இப்போ இப்டி ஒரு லவ்வ கண்ல காட்டனும்னு கடவுள் மேல கோவமா வருது.." மனம் திறந்து பேசியவனுக்கு சத்தியமாய் தன் வாழ்கையின் மீது கோபம்.

"எதுக்குடி இப்டி பண்ற..? இவ்ளோ ஃபீல் பண்ண வக்கிற..? நானும் பைத்தியம் மாதிரி உன் லவ்வ ஃபீல் பண்ணி ஒடஞ்சி பொய்ட்டு இருக்கேன்..மொத மொதலா புரியுது இசை..என்னோட சுயநலத்துக்காக உன்ன என்னோட லைஃபல் இழுத்து விட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு..எதுக்கு என்ன இவ்ளோ லவ் பண்ற இசை..? நா உனக்கு என்ன பண்ணி இருக்கேன்..எதுக்காக நீ இப்டி லவ் பண்ற..?"

"உன்ன கண்டிப்பா என்னால லவ் பண்ண முடியாது..ஆனா மூச்சு முட்டுதுடி பைத்தியமே..என் வாழ்க்கய பத்தி நா ஒருநாளும் இவ்ளோ தூரம் யோசிச்சது இல்ல..ஆனா நீ யோசிக்க வக்கிற..உனக்கு லவ் பண்ண வேற யாரும் கெடக்கலியா என்ன..? நா மட்டுந்தானா உனக்கு லவ் பண்ண கெடச்சேன்.." உணர்ச்சி வசப்பட்டு பேசியவனின் இத்தகைய செயல் அரிதிலும் அரிது.

அன்று தன் குடும்பத்தை விட்டு வந்த போதும் சரி,அபிராமி தன்னை விட்டுச் சென்ற போதும் சரி,அவன் வாழ்க்கையில் எதிர்பாரா விடயங்கள் நடந்தேறிய போதும் சரி,எல்லாவற்றையும் அழுத்தி வைத்துக் கொண்டானே தவிர வாயைத் திறந்து எதையும் பேசவில்லை.

அவனுணர்வுகள் அவனுக்கு மட்டும் என அவற்றை பொத்தி வைத்துக் கொண்டவனின் மனதில் மெதுவாய் ஊடுருவி மொத்தவாய் தகரத்தே போட்டு விட்டாள்,அவனை.அவள் காதல் அவனை உடைத்தே விட்டிருந்தது,அவனையே மாற்றி வைத்திட்டு.

இரு விழிகளும் அத்தனை சிவந்திருக்க விரல் கொண்டு மறைத்திருந்தவனின் தொண்டைக் குழி நான்கைந்து தடவை ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

அவன் ஒன்றும் அத்தனை பலவீனமானவன் அல்ல.சூழ்நிலைகளும் மனநிலைகளும் அவனை தலைகீழாய் புரட்டிப் போட்டிருந்தது.

விருட்டென எழுந்து குளியலறைக்குள் நுழைந்தவனோ அவ்விடத்தில் இருந்த நிலைக்கண்ணாடியில் தன்னுருவத்தை ஆராய இதழ்களினோரம் விரக்திச் சிரிப்பு.

கேசம் கலைந்து விழிகள் சிவந்து முகத்தில் சொல்லொண்ணா வேதனை படர்ந்திட விரக்தியின் விளிம்பில் நின்றிருந்தவனுக்கு சத்தியமாய் இந்த நொடி தந்த கனம் அத்தனை வலியாய்..உயிர் வதையாய்..

அவள் காதலும் மேலொங்கி நின்றிருந்த அவள் வாழ்க்கையை வீணாக்கி விட்டாம் என்கின்ற குற்றவுணர்வும் தன் வாழ்வின் மீதான கோபமும் அவனின் உறுதியை உருக்கி போட்டிருந்தது.

"எதுக்குடி இப்போ என்னோட லைஃப்ல வந்த..நீ வந்ததுன்னாலும் எதுக்குடி இப்போ வந்த..? என்னால ஏத்துக்கவே முடியாதுன்னு எனக்கு நல்லா தெர்யும்..அப்றமும் எதுக்கு உன் லவ்வ ஃபீ்ல் பண்ண வச்சு என்ன டிஸ்டர்ப் பண்ற..ஐ ஸ்வேர்..நா ஒத்துக்கறேன்..பட் கண்டிப்பா நா உன்ன லவ் பண்ண மாட்டேன்..நீ நல்லா இருக்கனும் இசை.." இத்தனை நேரம் உறுதியாய் இருந்தவனனின் குரல் இறுதியில் மட்டும் ஏன் இத்தனை உடையே வேண்டும்..?

இனம் புரியா உணர்வின் தாக்கமா என்ன..?

பெயர் தெரியா இனம் புரியா அந்த உணர்வது,பையனை வெகுவாய் அசைத்திடுது போலும்.

உயிர்த்தொடும்.

2024.09.12
 
Status
Not open for further replies.
Top