ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 20(ii)


காதல்!
காயங்கள் நிறைந்தாலும் கானல்கள் நிரம்பினாலும் மனங்கள் புதைத்து வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்புக்களில் ஒன்று தானே இந்த காதல்.

சிலருக்கு தவமின்றி கிட்டும் வரமாகிடும்.சிலருக்கு வரமின்றி அனுஷ்டிக்கும் தவமாகிடும்.
தவமெனவோ..வரமெனவோ..
எல்லார் வாழ்விலும் ஏதோ ஒரு இடத்தில் காதல் உண்டு.இல்லையென்றாலும் காதலின் சாயலேனும் உண்டு.

எல்லாம் மரத்துப் போன மனமும் ஏதோ ஒரு மூலையில் காதலுக்கென உயிர்ப்பாக காத்திருப்பதுண்டு.தன் வாழ்வும் காதலால் மாறிப் போகும் என துளி நம்பிக்கையில் எத்தனையோ பேர் ஜீவனை பற்றிக் கொண்டு நகர்வதுமுண்டு.

அது தானே காதலின் விந்தை! காதல் செய்திடும் மாயம்!

பையனுக்கோ சத்தியமாய் அது புரியவில்லை.புரிந்து கொள்ளும் மனநிலையிலும் இல்லை,அவன்.

ஆழ்ந்த நித்திரையில் சுருண்டு உறங்கியவளிடம் தன் மன எண்ணத்தை கொட்டி விட்டு வந்து அவனுக்கு நிம்மதியை வாரி வழங்கினாலும் மனதுக்குள் ஏதோ வலித்தது.

அவளுக்கு நிச்சயம் தன் மீது காதல் வந்திடாது என குருட்டு நம்பிக்கையுடன் இருப்பவனுக்கு யார் தான் எடுத்துரைத்திட காதலில் மாயையை..?

காதல் என்றால் சொல்லிக் கொண்டா வருகிறது..?
அகத்தில் எண்ணிலடங்கா மாற்றங்களை கேட்டு விட்டா தருகிறது..?

அவனும் காதல் கொண்டவன் தான்.ஆனால்,காதலை முழுதாய் கண்டவன் அல்லவே.அதனாலோ என்னவோ பாவையவளின் காதல் அவனை ஆட்டுவித்திடும் ஆழம் தெரிந்திடும் வாய்ப்பில்லை.

மேனியை தழுவிக் கொண்டு ஓடிய நீர்த்திவலைகளுடன் அவன் எத்தனை மணிநேரம் ஒருமித்துப் போயிருந்தானோ..?
அதீத குளிர்மையை மேனி உணர்ந்திடத் துவங்கும் போதே தன் செயல் உரைத்திட குளித்து முடித்து விட்டு வெளியே வந்த பின்னும் உறக்கம் கலைந்திருக்கவில்லை,பாவையவளுக்கு.

"நம்மள டிஸ்டர்ப் பண்ணிட்டு இவ மட்டும் எப்டி தான் டிஸ்பர்டன்ஸே இல்லாம தூங்கறளோ தெரில.." கடுப்படித்தவனுக்கு அவளின் நிம்மதியான உறக்கத்தின் மீது கோபமாய் வந்தது.

அவன் உறக்கத்தில் நிம்மதி இருந்ததா என்று பையனுக்கு தெரியாது.ஆனால்,இப்போது இல்லாதது போலவே தோன்றிற்று.அதுவும் நேற்றைய இரவு அவளின் குரட்டை சத்தம் இல்லாது உறக்கம் தழுவ மறுத்ததும் நினைவில் வர அவளை எழுப்பியே தீர வேண்டும் என்கின்ற உந்துதல்.

அவள் துயிலை விரட்டி விழித்தெழச் செய்திடும் நோக்குடன் நெருங்கி விட்டாலும் சற்றே அதிகமாகி இருந்த இதயத் துடிப்பு அப்படியே தடுத்தது,பையனை.

●●●●●●●●

"இந்த ரெண்டு வாராம இந்த மனுஷன் எதுக்கு இப்டி டல்லா இருக்குன்னு தெரிலியே..என்ன கேட்டாலும் சொல்லாது கல்லுளி மங்கன்.." அலைபேசியை கவனம் பதித்திருந்தவளை அவள் இதழ் இதழ்கள் திட்டித் தீர்த்திட அவளிடம் இருந்து தன்னாலே பெருமூச்சொன்று.

அவளை ஆழ்ந்து யோசித்திட வைக்கும் விதமாகத் தான் பையனும் நடந்து கொள்கிறான்,இந்த இரு வாரங்களாய்.

முன்பென்றால் அவளுடன் கதைக்கும் போதும் சரி அளவளாவும் போதும் சரி ஒரு வித உயிர்ப்புத் தெரியும்.உண்மை இருக்கும்.

ஆனால்,இப்போது அப்படித் தோன்றிடவில்லை.ஏதோ அழுத்தத்தில் தன்னை புறக்கணிக்க முடியா தன்னுடன் கடமைக்கு கதைப்பது போன்ற எண்ணம்.

ராமநாதனை நம்பிடச் செய்ய நடிக்கத் துவங்கி தான் இருவரும் நெருங்கியிருந்தாலும் அவளிடம் தோழனாய் இருப்பதாய் அவன் வாக்குத் தந்ததில் இருந்தே அவளின் அக்கறை கொஞ்சமாய் அவளுக்கு புரிந்திருந்தது.

புரிந்து கொண்ட அக்கறையை எண்ணி அவள் மகிழும் போதெல்லாம் பையனே அதை சப்பென்றாக்கி விட நம்புவதா இல்லையா என்கின்ற குழப்பமும் அவளுக்குள்.

அந்த குழப்பம் அவளின் நேசத்தை கொஞ்சமும் குறைத்திடவில்லை.அவள் தான் எந்தவொரு அக்கறையையும் எதிர்பார்த்திடவில்லையே.

அக்கறை எதிர்பாராவிடினும் சமீப நாட்களாய் அவன் காட்டிடும் புறக்கணிப்பெ அவளுக்கு வெறுமையைத் உருவாக்கி வைத்திட அவளும் இயல்பாய் இல்லை.

ராமநாதனும் பலமுறை கேட்டு விட்டார்,இருவருக்கும் இடையே ஏதேனும் சண்டையா என்று.பேசிப் புரிந்து சண்டையை தீர்க்கும் படி அறிவுரையும் கூறிவிட்டார்.

அவர்களுக்கிடையே சண்டை இருந்தாலும் பரவாயில்லை.அவளுக்கே புரியாமல் அல்லவா இருக்கிறது பையனின் புறக்கணிப்பின் அகராதி..?

அவள் தன்னை இதழ்களை மெதுவாய் நகர்த்தி திட்டித் தீர்ப்பது தெரிந்தும் எதிர்வினையாற்றாது இருந்தாலும் அடிக்கடி அவளை உரசிடத் தவறவில்லை,பையனின் விழிகள்.

அவள் தன்னைப் பாதிக்கிறாள் என்று தெரியும் அவனுக்கு.ஆனாலும் ஏன் விழிகளை அவளை வட்டமிடுது என்று யோசித்திடவில்லை,பையன்.பாதித்தாலும் காதலில் விழா மாட்டேன் என்கின்ற இறுமாப்பு தான் அதன் அடிநாதமோ..?

காதலின் சுழலில் இறுக்கங்களே சுக்கு நூறாய் போகுமிடத்து இறுமாப்புக்கள் எம்மாத்திரம்..?

அவளின் மெல்லிய இதழசைப்புடன் கூடிய அர்ச்சனையை ஒரு இதழ் சுளிப்போடு தோள் குலுக்கி கடந்து விட்டவனோ தன் வேலையை முடித்து விட்டு எழுந்து கொள்ள அப்போதும் அவள் புலம்பல் நின்றபாடில்லை.

"வர வர வாய்க்கொழுப்பு ரொம்ப கூடிப் போச்சு இவளுக்கு..ரொம்பத் தான் பண்றா இந்த மைக் செட்ட்ட்ட்ட்.." மனதுக்குள் நினைத்தவனோ எதையும் காட்டாத முகத்துடன் நடந்து சென்று அவளருகே இருந்த மின்சூளை எடுத்துக் கொண்டு திரும்பி நடகத் துவங்கியது தான் தாமதம்,

பின்னிருந்த கால்கள் முன்னே எட்டு வைக்கும் முன் பின்னிக் கொண்டு பின்னலிட்டு சதி செய்ய பின்னோக்கி வளைந்து விட்டான்,பையன்.

"ஐயோ சாரே.." கட்டிலில் அமர்ந்திருந்தவளை பதறிக் கொண்டு எழுந்து வந்து அவனைப் பிடித்திட ஒரு கரம் அவனின் முதுகிலும் அழுந்தப் பதிந்திருக்க மறுகரமோ பையனின் முழங்கையின் மேற்பகுதியை இறுக்கமாய் பிடித்திருந்தது.

கொஞ்சம் வளைந்து பின்னே சரிந்து ஒரு பாதம் மட்டும் தரையில் தரிக்க அவளின் பிடியுடன் சமநிலையில் இருந்தவனின் விழிகளின் கருமணிகளோ எதிரெதிர் முனைகளில் வந்து நின்றிட மெதுவாய் அழகாய் அமைதியாய் அவனிதயம் குத்திச் சென்றது,அவள் விம்பம்.

விழுந்திடுவோம் என்று தெரிந்தும் சீராய் இருந்த இதயம் அவள் தொடுதலிலும் அருகாமையிலும் எம்பிக் குதிக்க பிளந்த இதழ்களுடன் மூச்சு விட மறந்து போயிருந்தவனுக்கு இமைகள் கூட ஒட்டவில்லை.

"சாரே நேரா நில்லுங்க..முதுகு வலிக்கப் போகுது.." கரிசனையாய் அவள் மொழியவுமே தன்னிலையில் விழுந்தவனுக்கு சுற்றம் உரைக்க பட்டென்று நிலைக்கு வந்தாலும் இதயம் வேகமெடுத்து துடித்தது.வழமை போலவே இடது புற நெஞ்சில் அழுத்தமாய் கரத்தை பதித்தவனின் விரல்களே இதயமதின் வேகத்தை உணர்ந்து தொலைத்தன.

"ஏதாச்சும் அடி பட்டுச்சா..? கால் ஏதும் சுளுக்கிருச்சா..?" அவனுடனான கோபம் மறந்து பையனை மேலிருந்த கீழ் ஆராய்ந்த அந்த விழிகளில் பதட்டம் படையெடுத்திருந்தது.

"ஒன்னுல்ல இசை.. ஐ அம் ஃபைன்ன்ன்ன்ன்.." எம்பிக்குதித்த இதயத்தை அடக்கும் வழி தெரியாது அவளிடம் இருந்து விலக முயன்றவனின் செயலில் அவளுக்கு கோபம்.

"வர வர ரொம்ப ஓவரா தான் பண்றீங்க நீங்க..?"

"என்ன பண்றேன்..சும்மா நீயா ஏதாச்சும் நெனச்சுக்காத..போ போய் வேலய பாரு.." அவளிடம் இருந்து விலகி ஓகட முயன்றவனின் செயலில் அவள் புருவங்கள் சுருங்கின.

"உங்களுக்கு என்ன தான் ப்ரச்சன சாரே..இப்போ ரெண்டு வாரமா என் கூட நார்மலா பேசாம உங்க பாட்டுல இருக்கீங்க..?உங்களுக்கு என்ன தான் ப்ரச்சன..அன்னிக்கிம் சிடுசிடுன்னு தான் இருந்தீங்க..ஆனா என்னோட ஆஃபீஸ் வர்க்க பண்ணித் தந்தீங்க..அப்போலாம் நார்மலா இருப்பீங்க..? இப்போ திடீர்னு உங்களுக்கு என்ன தான் ஆச்சு சாரே..?"

"இசை ஒன்னுல்ல..ஒன்னுல்ல..நீ போய் வேலய பாரு.." அவளுக்கு மறுமொழி உரைக்க விடாது அவன் கடந்து செல்ல தொங்கிப் போனது,பாவையவளின் முகம்.

"என்ன மறந்துரு அதுக்காக ஃப்ரெண்டா இருக்கேன்னு சொல்ல வேண்டியது..ஆனா ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு உர்ரு மூஞ்சோட சுத்த வேண்டியது.." பையனின் செவியை தீண்டிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலேயே சற்று சத்தமாக பேசி விட்டு அவள் நகர எந்தவோர் எதிர்வினையும் இல்லை,பையனிடமிருந்தது.

அலுவலகத்துக்கு அவளை தனியாக கிளம்பச் சொல்லி விட்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டவனின் மனமோ இனிமேல் தனிமைக்கு பழகிட வேண்டும் என தனக்குத் தானே கட்டளை விதித்துக் கொண்டிருந்தது,அன்று அவன் உணர்ந்த வெறுமையால்.

அவளின்றிப் போன அந்த ஒரு நாளில் அவன் உணர்ந்த வெறுமை ஒன்றும் கொஞ்ச நஞ்சம் அல்லவே..?ஏதோ வாழ்க்கையே மாறி விட்டது போலல்லவா சுற்றிக் கொண்டிருந்தான்,பையன்..?

எப்படியும் அவளை விட்டு விலகத் தான் போகிறான்.அது நிச்சயம் அவனுக்கு ஆழமாய் வலிக்கத் தான் செய்யும்.அந்த வலியின் ஆழத்தை குறைக்கத் தானோ இந்த முயற்சி..? அப்படித் தான் போலும்.

வாகன நெரிசலில் வண்டியை மெதுவாகவே ஓட்டிக் கொண்டு வந்தவனுக்கு பக்கத்தில் இசையவள் இல்லா வெறுமையை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டே இருந்தது.அவளிருந்தால் என நினைக்கும் போதே இதழ்கடையோரப் புன்னகையும் அத்தோடு பெருமூச்சும் எழுந்திட சலிப்பாய் தலையாட்டிக் கொண்டவனின் விழிகளில் வீழ்ந்தாள்,அந்தப் பெண்.

வாகனங்கள் வீதியின் சமிஞ்சைக்கேற்ப தரித்து நின்றிருந்தது,பாதசாரிகள் கடக்க வேண்டி இருக்கவே.

அந்தப் பெண்ணை எங்கோ கண்டிருப்பது போல் தோன்றினாலும் நினைவடுக்கின் இடுக்குகளில் இருந்து வெளிக்கொணர்வது சற்றே சிரமமாய்.

ஸ்டியரிங்கில் விரல்கள் தாளமிட தீவிரமாய் யோசித்தவனுக்கு பாவையவளின் கல்லுரிப் புகைப்படங்களில் இருந்த பெண் என்பது தெரிய வர இசையவளுக்கு அழைக்கலாமா என யோசிக்கவும் செய்தான்,பையன்.

அழைப்பு விடுத்து விடயத்தைச் சொன்னால் அவள் மகிழ்ந்திடுவாள் என்கின்ற எண்ணத்தில் அவளுக்கு அழைப்பெடுக்க முயன்றவனின் பார்வை எதேச்சையாய் மறுபுறம் திரும்ப அங்கு அந்தப் பெண்ணின் பக்கத்தில் புன்னகை நிரம்பி வழிய அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்,அபிஷேக்.

அபிஷேக்கை கண்டதும் பையனின் முகத்தில் தோன்றிட்ட சிறு நகை அவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்க்கையில் மறைந்திட முகத்தில் சிந்தனை ரேகைகள்.

அந்தப் பெண்ணை பாவையவளின் தோழியாக தெரிந்தவனுக்கு அபிஷேக் அவளின் காதலானகவோ கணவனாகவோ இருப்பது கூட பிரச்சினையில்லை.ஆனால்,இசையவள் அபிஷேக்கை யாரென்று தெரியாத விதமாய் நடந்து கொண்டதே நினைவிலாட அதுவே பெருத்த யோசனையாய்.

எப்படியும் தோழியின் திருமணம் பற்றி அவளுக்கு தெரியாது இருக்காதே என மனம் தன்பாட்டில் சிந்தனையை வளரவிட்டது.இருபுறமும் தலையாட்டி பெருமூச்சு விட்டவனுக்கு மனமை பாவையவளிடம் கேட்டே தீர வேண்டும் என எண்ணத்தை விதைத்துக் கொண்டது,தீவிர பாவத்துடன்.

அலுவலகம் சென்று விடயத்தை கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள பாவையவளுக்கு அழைத்த போதிலும் வேண்டுமென்று அவளின் அழைப்புக்களை புறக்கணித்து அவனுக்குள் கடுப்பை பரப்பினாள்,மகராசி.

அவனின் புறக்கணிப்புக்கான பழிவாங்கல் போல.அவனுக்கு அப்படியே தோன்றிட பற்களை நறநறத்தவனை அரவிந்த் விசித்திரமாய் பார்த்தது வேறு கதை.

மீள வீடு செல்லும் பையனின் மனதில் யோசனைகள் நிரம்பியோடியது.ஏனென்று தெரியாமல் மனதில் சிறு நெருடல்.

இரவு கவிழ்ந்திருந்த நேரம் அது.

கட்டிலை ஒழுங்கிப் படுத்திக் கொண்டிருந்தவளோ அவனுடம் கோபம் காட்டிக் கொண்டிருக்க பையனுக்கு ஏனோ இப்போது சமாதானம் செய்யும் மனமில்லை.இனிமேல் இப்படி இருக்கக் கூடாது என நினைத்து முடிவெடுத்திருந்ததே அவன் மனது.

"இசை.."

".............."

"இசைஐஐஐஐஐ"

"................"

"இசைஐஐஐஐஐ" சற்றே சத்தமாக வந்து செவியில் மோதிட்ட பையனின் வார்த்தைகளில் அவள் கொஞ்சம் பயந்து விட்டாள்.மெல்லிய பயம் சூழ் விழிகளுடன் அவனை ஏறிட அவளின் பயம் புரிய இதழ் குவித்து ஊதிக் கொண்டான்,பையன்.

"ப்ச்..பயப்டாத நா ஒன்னும் அடிக்க மாட்டேன்..ஆமா அன்னிக்கி நீ காட்டனியே ஒரு ஃபோட்டோ அதுல இருந்தாங்களே உன்னோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க.." என்றிட சட்டென பாவையவளின் மூளைக்குள் மின்னலடித்தது.

இன்று காலையில் பையனின் கண்பட்ட அந்த தோழி இசையவளுக்கு முன்பே அழைப்பெடுத்து பையன் தம்மை பார்த்திட்ட விடயத்தை எத்தி வைத்திருந்தாளே.அதனால் சற்றே இயல்பாய் காட்டிக் கொள்ள முடிந்தது.இல்லாவிடின் அதற்கும் பயந்து பதறி இருப்பாள்.

"ஆமா அன்னிக்கி காட்டுனேன்..அவ ரம்யா..எங்க க்லேஜ் என்னோட டிபார்ட்மண்ட்..எதுக்கு இப்போ திடீர்னு அவள பத்தி கேக்கறீங்க..?"

"அந்த பொண்ணுக்கு மேரேஜ் ஆயிடுச்சா என்ன..?"

"ஆமா இப்போ ஒரு மாசம் முன்னாடி தான் ஆச்சு..அதுவும் அன்னிக்கி வீட்டுக்கு வந்தாரே உங்க வக்கீல் சார்..அவர் கூடத் தான்.." இயல்பாய் காட்டிக் கொண்டு அவள் பேசினாலும் உள்ளுக்குள் அத்தனை பயம்.பையன் தன் பொய்யை கண்டு பிடித்து விடுவானோ என்கின்ற கலக்கம் அவள் தேகத்தில் முழுவிடத்திலும்.

"அப்போ எதுக்கு நீ மேரேஜ்கு போகல.." அவளிடம் இருந்து இப்படி இயல்பான பதிலை பையன் எதிர்பார்த்து இருக்காவிடினும் அவனின் உடல்மொழி ஏனோ அவள் சொல்வது உண்மையென பையனுக்கு நம்பத் தடுத்தது.

"அவங்க சின்னதா தான் மேரேஜ் பண்ணுனாங்க..அதனால ஃப்ரெண்ட்ஸ் யாரயும் கூப்டல.." அமைதியான குரலில் சொல்லி விட்டு விட்டால் போதுமென ஓடியவளைப் பார்த்திருந்த பையனின் விழிகளில் சிறு தீவிரம்.

உயிர்த்தொடும்.

2024.09.13
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 21(i)


பையனிடம் நேற்றிரவு அடித்து விட்டு பொய்யை நினைக்க நினைக்க பாவையவளுக்கு உடலில் குளிர் கண்டது போல்.

ரம்யா அழைத்து விடயத்தை சொல்லும் உண்டாகிய நடுக்கத்தை விட பையன் அவளிடம் கேள்வி கேட்கையில் உருவெடுத்த நடுக்கம் பல மடங்கு.

அவனிடம் இயல்பாய் காட்டிக் கொள்வது போல் நடித்து சரளமாக பொய்யை சொல்லி இருந்தாலும் அவனுக்கு தான் சொல்வது பொய் என்பதை ஊகிக்க முடியாது போய் இருக்காது என்கின்ற எண்ணம் அவள் மனதோரம்.

பையனின் எடை போடும் விழிகளும் ஆழ்ந்து ஆராயும் தன்மையும் அத்தனை எளிதில் பொய்யொன்றை பொய்யென்று நம்புவதற்கு இடம் கொடுத்து விடாது என்று அவளுக்குத் தெரியும் அல்லவா..?

அவள் விடயத்தில் அரவிந்த் உதவி செய்ததால் அவளின் பொய்களை நம்ப வைத்திட வசதியாய்ப் போயிற்று.இல்லையென்றால் மாட்டிக் கொண்டு இருவருக்கும் நடந்திருக்காது என்பது நிச்சயம் உறுதி.

அந்த யோசனையும் மனதுக்குள் முளைவிட்டிருந்த பயமும் அவளை வாட்டியெடுக்க அவளின் கரம் பற்றி அவன் இழுத்தச் சென்றதற்கு மறுப்பேதுமின்றி அவனின் இழுப்புக்கேற்ப இழுபட்டுச் சென்றவள் கொஞ்சமேனும் விழிகளை சுழற்றி சுற்றத்தை அலசியிருக்க வேண்டும்.

அப்படி அலசி இருந்தால் அவ்விடத்தில் ராமநாதன் இல்லாதிருப்பது தெரிந்திருக்குமே.அவனின் பின்னூடு நடந்து வந்தவளின் மொத்த கவனமும் தன் எண்ணத்தில் அல்லவா நிலைத்திருந்தது..?

பையனுமே அவளிடம் இருந்து விலகிடத் தான் பார்க்கிறான்;அதற்கெனத் தான் தவிக்கிறான்.ஆயினும்,நடந்தேறிய பாடில்லையே.

இன்றும் வழமை போல் அவளின் கரத்தின் மணிக்கட்டை பற்றி விட்டான்.அவ்விடத்தில் ராமநாதனும் இல்லை.ராமநாதன் இருந்தால் தான் கரத்தைப் பற்றிக் கொள்வது வாடிக்கை.அது தானே வழமை.அவர் இல்லையென்று தெரிந்தும் பற்றிய கரத்தை விட முடியவில்லை.

வழமை என்றும் வழமையாக இருக்க வேண்டும் என்றால் பழமைமகள் அல்லவா நிறைந்திருக்கும்...?
வழமைகளும் மாறத்தானே வேண்டும்..?

அழுந்தப் பற்றிக் கொள் என்கின்ற எண்ணமொன்று மனதில் பற்றிக் கொண்டிருந்ததே!
பின்னே எப்படித் தான் அவனும் கரத்தை விடுவிப்பதாம்..?

மெதுவாய் மென்மையாய் அவளின் கரம் பற்றினாலும் அவனிதயத்துடிப்பு ஏனோ வேகமெடுத்துத் தொலைத்தது.அவளுக்காக இப்பொதெல்லாம் துடித்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மை தான்.அவனே இன்னும் உணரா உண்மையது.

அவன் இடது நெஞ்சின் மேல் இருந்த வலக்கரத்தின் விரல்கள் அவளுக்கான துடிப்பை உணர்ந்தது.அவளின் மணிக்கட்டை பற்றியிருந்த இடக்கரத்தின் விரல்கள் அவனுக்காக துடிப்பை உணர்ந்தது.தனக்கான துடிப்பையும் தனது துடிப்பையும் உணர்ந்தவனின் இதயத்தில் மெல்லிய படபடப்பு.

அவளைப் பற்றியிருந்த கரத்தின் விரல்களில் மெல்லிய நடுக்கம் இழையோடிட சத்தியமாய் வேறு சிந்தையில் லயித்து இருந்ததால் அதை உணரவில்லை,பாவையவள்.

மின் தூக்கிக்கு அருகில் வந்து அவளின் கரத்தில் தன் விரல்களை விடுத்து மார்புக்கு குறுக்கே கையை கட்டிய படி நின்றாலும் விழிகள் தாழ்ந்து அவளின் மணிக்கட்டை பற்றியிருந்த விரல்களை ஒரு கணம் ஆராய்ந்தது,ஒரு வித தவிப்புடன்.

"கன்ட்ட்ட்ட்ரோல் யாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்.." மனதை திடப்படுத்திக் கொள்ள முயன்றவனுக்கு அத்தனை எளிதில் அது சாத்தியமில்லை என்கின்ற எண்ணமோ,தன்னில் இருந்து ஓரடி தள்ளி பக்கத்தில் நின்றவளைக் காண்கையில்.

அனுதினமும் அவர்கள் இருவரையும் மட்டுமே சுமந்து இறங்கும் மின் தூக்கி இன்று இன்னும் பலரையும் ஏற்றிக் கொண்டிட பாவையவளுக்கு மற்ற ஆண்களுடன் உரசாதிருக்க பையனுடன் நெருங்கி நின்றிட வேண்டிய கட்டாயம்.ஆட்கள் ஏறிக் கொள்ள அவனை ஒட்டித் தான் நின்று கொண்டாள்,அவள்.

முன்பென்றால் அவனின் ஸ்பரிசமே அவளுக்குத் திணறலைத் தரும் தான்.இப்போது அப்படியல்ல,இயல்பாய் பழகுவதால் கொஞ்சம் முன்னேற்றம்.

பையனை நெருங்கி வந்தவளின் நிலை புரிந்து அவனும் இடம் கொடுத்தாலும் உள்ளுக்குள் பதறித் தீர்த்து விட்டான்.அவள் நெருங்க நெருங்க அவனின் இதயத் துடிப்பு எடுத்த வேகம் மட்டும் குறைந்தபாடில்லை.ஏறிக் கொண்டு அவனை வதம் செய்தது.

ஒரு கட்டத்தில் அவளோ அவனின் நெஞ்சில் பக்கமாய் சிரசு மோதும் விதமாய் பையனின் தோற்பட்டைக்கு சற்றுக் கீழே கரத்தை தன் இரு கரங்களாலும் பற்றிக் கொண்டு நின்றிட செத்தே விட்டான்,யாழவன்.

அன்று அவள் தோளணைத்து நிற்க வைத்திட்ட போது இப்படி எல்லாம் உணர்வலைகளே இல்லை.ஆனால்,இன்று..?

சற்றே வேகமெடுத்து ஓடிக் கொண்டிருந்த இதயம் தடதடத்து ஓடிய வேகம் அவனின் செவியை நிறைத்தது.இமைகள் படபடவென அடித்துக் கொள்ள தவித்துப் போனவனின் உறுதியை மொத்தமாய் உருக்குலைத்து போட்டிருந்ததே,அவளின் அருகாமை.

இயல்பாய் இருந்த சுவாசம் பிறழ்ந்து போக இதழ் பிளந்து சுவாசித்தவனின் உள்ளங்கையும் கழுத்தோரமும் வியர்வை ஈரத்தால் நனையத் துவங்கிட நெற்றியோரமும் வியர்வைப் பூக்கள்.கழுத்தோரத்தில் மெல்லிய சூடு பரவத் துவங்கிட மெதுவாய் தடவுவது போல் தேய்த்து விட்டவனின் விரல்களில் அந்த சூட்டை விரட்டிடும் வேகம்.

ஆழமாய் மூச்சு வாங்க இதழ் குவித்து ஊதிய படி திணறலை அடக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்,பையன்.அலைபாய்ந்த விழிகளும் இதயத்துக்கு போட்டியாய் இலேசாக துடிக்கத் துவங்கிய இதழோரங்களும் அவள் உண்டாக்கிடும் தவிப்பை உணர்த்திட விலக முடியாமல் உணர்வுகளை மறைக்க முயன்று தோற்று பையன் நின்றிருந்த விதம் அத்தனை அழகு.

முகத்தில் அரும்பியிருந்த பதட்டமும் விழிகளில் தோன்றி மறைந்த உணர்வுக் கோலங்களும் அடிக்கடி எச்சில் கூட்டி விழுங்கியதால் ஏறி இறங்கிய தொண்டைக்குழியும் தன்னை ஈடு செய்ய உள்ளங்கையை இறுகப் பொத்தி நின்றிருந்ததும் பேரழகாய்.

நெற்றியில் பூத்த வியர்வைத் துளியொன்று கன்னத்தை வழித்தடமாக்கி வழிந்து வந்திட இதயம் இன்னும் இன்னும் படபடத்து இன்னுமே தடதடத்து ஓடியது,அதி வேகத்தில்.

வெடுக்கென பாய்ந்து வந்த புறங்கை வியர்வைத் துளியை துடைத்து விட்டாலும் அவளின் நெருக்கம் தரும் திணறல் கண்டு சத்தியமாய் பயந்து விட்டான்,பையன்.
அவளின் அருகாமை அவளை இந்தளவு ஆட்டி வைத்திடும் என்று கனவிலும் நினைக்கவில்லை,அவள்.

அவனை மொத்தமாய் புரட்டிப் போட்டதை கூட அறியாமல் தலை தாழ்த்தி யோசித்து கொண்டிருந்தவளோ தனிச்சையாய் விழியுயரத்திப் பார்த்து விட்டு மீள தாழ்த்திக் கொள்ள மாண்டே விட்டது,அவன் ஜீவன்.பக்கமாய் தலை திருப்பி இதழ் குவித்து ஊதியவனோ தன்னிலை மீட்டத் தெரியாது தடுமாறிப் போனான்,அவனே நினைத்திராத அளவு.

அலைபேசியை எடுத்து துழாவுவது போன்று நடிக்கலாம் என்று நினைத்து அலைபேசியை எடுத்திட முயன்ற விரல்களின் நடுக்கம்.விய்த்திருந்த கரங்களில் இருந்து அலைபேசி வழுக்கிக் கொண்டு நழுவவும் கூடும்.அத்தனை ஈரம் அவனது உள்ளங்கைகளில்.

விழிகளின் கருமணிகள் தவிப்பு தாளாமல் முனைக்கு முனை ஓடித் திரிய ஆழமாய் பெருமூச்சு விட்டவனோ இன்னும் பின்னிருக்கும் நிலைக்கண்ணாடியூடு தன் முதுகை ஒட்டி நின்றிட்ட நிம்மதியடைய பாவி மகள் அதற்கு இடம் கொடுத்தால் தானே..?

யாரோ பின்னே சரிந்து அவள் மீது மோதப் பார்த்திட அதில் இருந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ளப் பார்த்திட்டவளோ சமநிலைக்கு பையனின் இடது புற நெஞ்சில் அவளின் உள்ளங்கைளை உன்றிட பையனின் இதயம் நின்று துடித்தது.
ஏற்கவனவே கொஞ்சம் கொஞ்மாய் செத்துக் கொண்டிருந்த உயிர் மொத்தமாய் மாய்ந்து புதைந்து அவளுக்குள் தொலைந்தே போனது.

விழிகள் இரண்டு பிதுங்கி விரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டவனோ மூச்சடைத்து உணர்வுடன் அவளைப் பார்த்திட அந்த மகராசியோ தான் மோதி விடாததை எண்ணிய நிம்மதியும் விழி மூடியிருந்தாள்,ஆசுவாசப் பெருமூச்சுடன்.

அவள் கரம் பட்டதும் அவனின் தேக மயிர்கள் மொத்தமும் சிலிர்த்துக் கொண்டு நிற்க அவள் கரத்தில் இருந்த வெம்மை அவன் உயிரை மொத்தமாய் உருக்கியே விட்டது.

உருக்கிய உயிரையும் விட்டு வைத்திடாமல் உறைய வைத்திடும் முயற்சியில் தான் இன்னும் அவள் கரம் அவனின் நெஞ்சில் பதிந்து இருந்ததோ..?
தேகம் உணர்ந்த வெம்மைக்கு பதில் இதயத்தில் பரவிய குளிர்மையில் அவன் உயிர் அவள் வசமாகி உறைந்திருந்தாறும் புதுமையில்லை.உறைந்த உயிர் மீள அவள் உயிருக்குள் கரைந்திருந்தாலும் அதியசமில்லை.

நெஞ்சில் பதிந்திருந்த விரல்களின் ஸ்பரிசத்தை இதயமும் உணர்ந்து கொண்டாற் போல் உதைத்து தள்ள உள்ளுக்குள் உயிர்க்கரைந்தோடும் உணர்வு,பையனுக்கு.
கரைந்து வழிந்தோடி அவளுக்குள் காணாமல் போய் விடுமோ என்று தோன்றிற்று,பா(வி)வையவளால்.

அவள் ஸ்பரிசத்தில் உஷ்ணத்தில் அவன் கர்வம் காயக் கண்டான்.அவளால் அவன் ஜீவன் மெல்ல மெல்ல தேயக் கண்டான்.ஆட்டம் கண்டிட்ட ஆன்மா ஆர்ப்பரித்து ஓயக் கண்டான்.அவள் முன் மட்டும் அவன் தன்னிலை மறந்து சாயக் கண்டான்.உள்ளமதில் உருப்பெறா உணர்வுகளும் கூட மேயக் கண்டான்.

சட்டையைத் தாண்டி அவள் ஸ்பரிசம் அவன் நெஞ்சாங்கூட்டில் விதைத்த குறுகுறுப்பு அவனுக்கே வியப்புத் தான்.விரல்கள் ஒவ்வொன்றும் அவனுக்குள் உஷ்ணத்தை கடத்தியது.

அவள் மெல்லிய ஸ்பரிசம் அவன் ஜீவனின் மோட்சத்தை காட்டுவித்து நெஞ்சமதில் பூகம்பங்களை உண்டு பண்ணி மெல்ல மெல்ல ஆட்டுவித்த உணர்வுக்கோலங்களால் அவனின் இறுக்கங்கள் தகர்ந்து போயின.அழுத்தங்கள் எல்லாம் தளர்ந்து போயின.எடுத்திருந்த உறுதி மொத்தமும் காணாமல் காற்றில் கானலாகியே போயின.காணமல் போய் காற்றைப் போல் எங்கோ ஓடின.

அவனின் நெஞ்சாங்கூட்டில் அவள் கரம் படர அதை விலக்கத் தெரியாமல் அவன் இடற தேகம் தொடா அந்த மெல்லிய ஸ்பரிசத்தில் மொத்தமாய் அவன் விழுந்து போனதன் மாயம் தான் என்ன..?

காதல் தானே..
காதலே தானே..
கருவாய் உருவாகியிருந்த அவளின் பாதிப்பு காதலாகி நிற்பது பையனுக்கு இன்னும் தெரியவில்லை.உணர்ந்து அவன் முற்றாய் தெளியவில்லை.

தன் நெஞ்சில் பதிந்திருந்த அவளின் கரத்தையும் அவளின் முகத்தையும் மாறி மாறி அலைபாய்ந்த விழிகளுடன் பார்த்தவனோ இதழ் கடித்து தன்னை நிலைப்படுத்த போராடிக் கொண்டிருந்தது அவனுக்கும் அந்த கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம்.

காதுமடல் சூடாகி சிவந்து போக கன்னத்தில் வேறு சிவப்பின் சாயல்.உண்மை தான்,சிவந்து தான் போயிருந்தது,பையனின் வதனம்.

"கடவுளே.." இதழ்கள் உச்சரித்திட அவன் மார்புக்கூடு ஏறி இறங்கிய அளவே சொல்லும் அவள் இழுத்து விட்ட மூச்சுக்காற்றின்,ஆழத்தை.கீழ்த்தளம் சீக்கிரமாய் வந்து தொலைய வேண்டும் என மனமோ மானீசமாய் கடவுளை வேண்டியும் கொண்டது.

"இ..இ...இசை.." மொழிகள் திணற இதழ்கள் பதட்டத்துடன் மொழிய காற்றாய் வந்தது,அவன் குரல்.சத்தியமாய் அவனுக்குமே அவன் குரல் கேட்டிடவில்லை.

விழிகள் அலைபாய மொழிகள் மௌனித்து கொள்ள இசையவளின் அருகாமை மீட்டிய இ(ம்)சையில் கரைந்து தொலைந்து போனவனாய் பையனின் தோரணை அசத்தும் அழகு.ஆளைக் கொன்று அசரடிக்கும் அழகு.

சத்தியமாய் அவனுக்கு அந்நிலமையைக் கையாளத் தெரியவில்லை.இது வரை உயிர் வரை ஆட்டம் கண்டதில்லையே.ஜீவனின் ஆழம் வரை தொட்டு நி(கொ)ன்றதில்லையே.

"ஊப்ப்ப்ப்ப்.." மூச்சை இழுத்து இதழ் வழியே வெளிச்செலுத்தியவனோ விழிகளை ஒரு முறை அழுந்த மூடித் திறந்து அவளின் பெயரை அழைத்திட அப்போதும் குரலில் காற்று மட்டுமே.

அவளருகே வேகமாய் வெளிவந்த மூச்சுக் காற்றுக்கு இருந்த தைரியம் கூட அவனின் குரலுக்கு இல்லை,போலும்.பையனைப் போல் தானும் முற்றாக உருகி விடுவோம் என்று தான் உள்ளுக்குள் பதுங்கி நின்றதோ என்னவோ..?

"இ..இசை.." ஈரெழுத்துக்களை உச்சரித்திட இரு நிமிடம் எடுத்துக் கொண்டவனோ நாலைந்து தடவையேனும் மூச்சை இழுத்து விட்டிருப்பான்,மூச்சுக்கு திணறுபவன் போல்.

மெல்லமாய் ஒலித்த பையனின் குரல் அவளுக்கு கேட்டிருக்க வேண்டும்.விழி நிமிர்த்திப் பார்த்தவனுக்கு அவளின் முட்டை விழிகளை முட்டிக் கொள்ளும் நெருக்கத்தில் கண்டிட ஏன் அழைத்துத் தொலைத்தோம் என்றாகிற்று.

பாவி மகள் பார்வையை தழைத்திடவில்லை.அவனை அழைத்ததெற்கென விழி பார்த்து நின்றிட பக்கமாய் அவனை ஏறிட்ட அவளின் விழிகள் கூட படையெடுத்து பதற வைத்திட்டதே.

"கொ..கொஞ்..கொஞ்சம் தள்..கைய எடுக்கறியா..?" மூச்சு வாங்கிய படி கேட்டிட அவளுக்கு பாதி விழுங்கலுடன் வந்து செவியுரசிய பையனின் வார்த்தைகளில் எதுவும் புரியவில்லை.

"என்ன சாரே மொகமெல்லாம் இவ்ளோ வேர்த்து போட்டுருக்கு..ரெண்டு நிமிஷத்துக்குள்ள.." அவனின் முகத்தை ஆராய்ந்து கேட்டவாறு அவளின் கையில் இருந்த கைக்குட்டையால் அவன் நெற்றியில் இருந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுத்து பையனின் இதயத்தின் உதைப்பை உச்சமாக்கினாள்,பாவி.

பையனுக்கு தடுக்கக் கூட பேச்சு வரவில்லை.நெஞ்சில் இருந்த கரத்தை எடுக்காது மறுகரத்தால் தன் வியர்வையை ஒற்றி எடுப்பவளின் செயல் அவனை கொலையாய்க் கொன்றது.கொன்று தீர்த்தது.

"கை..கைய எடுமா.." தாழ்ந்தே விட்டது அவன் குரல்.ஓடியே விட்டது அவனின் கம்பீரம்.கரைந்தே விட்டது அவனின் ஆளுமை.மடிந்து புதைந்தே போய் விட்டது,அவனின் உறுதி.

"ஓஹ்ஹ்ஹ் சாரி சாரி.." அவள் கையை எடுக்கும் போதே கீழ்த்தளமும் வந்து விட உயிர் திரும்பி வந்த உணர்வு பையனுக்கு.

உயிர்த்தொடும்.

2024.09.13
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 21(ii)


கீழ்த்தளம் வந்ததும் பையனின் அகத்தில் அடைந்து கொண்ட நிம்மதிக்கு அளவே இல்லை.ஏதோ ஒரு மாயச்சுழலில் இருந்து தப்பிக்க கதவு திறந்தாற் போல் உணர்ந்தான்,அவன்.

மின்தூக்கியின் கதவு திறக்க ஆட்கள் வெளியே சென்றதும் பையனின் வரவுக்காக அவனின் முகம் பார்த்தவாறே ஈரடி தள்ளி நின்று கொண்டாள்,பாவையவள்.

அவளிடம் வெளிச்செல்லுமாறு சைகை செய்திட அவனின் முகம் பார்த்தவாறு அவள் வெளியேறியது தான் தாமதம்,நெஞ்சில் வலக்கரத்தை அழுத்திப் பதித்து தன் இதயத் துடிப்பை உணர முயன்றான்,பையன்.

அவள் இருந்த அருகாமையில் பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொடுத்திடவோ இடது நெஞ்சில் மேல் கரம் அழுத்திப் பிடிக்கவோ சத்தியமாய் இடமிருக்கவில்லை.

ஆழமாய் மூச்சிறைத்து சுவாசித்தவனோ சற்றே சரிந்து நிலைக்கண்ணாடியில் முதுகை முட்டுக் கொடுத்து நின்றவாறு அண்ணாந்து பார்த்து இதழ் குவித்து ஊதிக் கொண்டான்,நிதானத்தை வரவழைத்திட.

பின் மனதுக்குள் எழுந்த எண்ணத்தின் தாக்கத்தால் பின்னிருந்த நிலைக்கண்ணாடியில் தன் விம்பம் ஆராய்ந்திட அவனுக்கு நம்ப முடியாத நிலை.

காது மடலுக்கு நிகராய் வதனம் முழுக்க செந்நிறம் ஏற்றியிருந்தது.அதிலும் கன்னம் ஏகத்துக்கு சிவந்து போயிருக்க புறங்கையால் தேய்த்து கன்னச் சிவப்பை விரட்ட முனைந்தான்,தன்னிலை மறந்து.

அவன் அழுத்தித் தேய்க்கத் தேய்க்க கன்னம் மேலும் சிவந்து போனது தான் மிச்சம்.அத்தனை எளிதாய் அவனின் முகச் சிவப்பை விரட்ட முடியாதென்று பையனுக்கு யார் தான் புரிய வைத்திட..?

மீள மீள விரல் கொண்டு அழுத்தித் தேய்த்து அந்த சிவப்பை அகற்ற பிரயத்தனப்பட்டு தோல்வியைத் தழுவி நின்றவனுக்கு இதற்கு முன் இப்படி நடந்தேயில்லை என்பது வேறு பெரும் குறையாய்.

"என்ன இது இவ்ளோ செவந்து போயிருக்கேன்.." தன் முகமதின் விம்பத்தை உரசிய படி தன்னிடம் கேள்விக்கணை தொடுத்தவனுக்கு மறந்து தான் போயிருந்தது,அப்போது அவன் வேந்தன் என்பதும் இப்பொழுது இசையவளின் யாழ் என்பதும்.

பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து அழுத்தமாய் தலைக் கோதிக் கொண்டவன் வேக நடையுடன் வெளியே வந்தாலும் அவன் அவனாய் இல்லை.

எதிர்பாரா நிகழ்வு மனதில் தந்து சென்ற களேபரத்தில் அவளை புறக்கணிப்பதாய் எடுத்திருந்த முடிவைக் கூட தற்காலிகமாய் மறந்து போயிருந்தான்,பையன்.

நேற்றைய தினத்தை போல் இன்றும் தனியாகக் கிளம்பிச் செல் என்று கூறி விடுவானோ என பயந்து கொண்டிருந்தவளுக்கு அவனை வண்டியில் ஏறி ஹாரன் அடித்ததும் அப்பாடவென்றிருந்தது.

மிதமான வேகத்தில் வண்டியை செலுத்திய பையனின் மனநிலை கொஞ்சமும் அனுமானிக்க முடியாமல் அவன் முகபாவம்.

பாவையவளின் கவனம் முழுக்க அவனின் செந்நிறம் ஏற்றிய வதனத்தில் நிறைந்திருக்க என்ன காரணம் என்று தீவிரமாய் யோசிக்கச் செய்தது,அவள் மனது.

அவளின் அருகாமை தந்த எதிர்வினைகளில் ஒன்று தான் இந்த செந்தூர நிறம் பூசிக் கொண்ட வதனம் என்று கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை,மகராசி.

"சாரேஏஏஏஏஏஏ" மனதுக்குள் அரித்துக் கொண்டிருந்த சந்தேகத்தை கேளாமல் இருக்க முடியவில்லை அவளால்.அவளின் முதல் அழைப்புக்கு பதில் சொல்லவில்லை,பையன்.கவனம் வேறொங்கே நிலைத்திருந்தது.

"சாரேஏஏஏஏஏஏ" கொஞ்சம் அழுத்தி சத்தமாக உச்சரித்தாள்,அவள்.

"ம்ம் என்ன இசை..?" அதட்டலுமின்றி தோழமையின் சாயலுமின்றி பிரித்தறியா முடியாத பேதத்தில் பையனின் குரல்.

"உங்களுக்கு ஏதாச்சும் ப்ராப்ளமா..?"

"ஏன்ன்ன்ன்..?"

"இல்ல மொகமெல்லாம் ரொம்ப ரெட் ஆயிருக்கு..அதான் பாஸ் ரோஸ் கலர் ஆயிருக்கு..பூச்சி கீச்சி ஏதாச்சும் கடிச்சிருச்சா..? இல்லன்னா வெயில்ல நடந்து வந்ததுக்கு இப்டி ஆயிருச்சா..?இல்லயே லிஃப்ட்ல கூட இப்டி தான இருந்தீங்க..? என்ன திடீர்னு மொகமெல்லாம் செவந்து போயிருக்கு..?"

"..................."

"ஏதாச்சும் காலைல சாப்டது அலர்ஜியா ஆயிடுச்சா..வேர்த்த மாதிரியும் இருக்கு..ஏதாச்சும் அலர்ஜி ஆயிடுச்சா சாரே..?" தானே ஒன்றை யோசித்து அவன் மீதான அக்கறையில் பதபதைத்து கூறிட சுழன்று அவள் புறம் திரும்பி அவளை உரசி மீண்ட விழிகளில் தெரிந்தது தான் என்ன..?

"அலர்ஜி ஒன்னும் இல்ல..என் மொகம் ஒன்னும் செவந்து போயும் இல்ல.." அவள் முன் ஒத்துக் கொள்ள பிடிக்காது மழுப்பலாய் பதில் சொன்னவனுக்கு அவளிடம் பேசிட மனமே இல்லை.அதற்கு இடம் கொடுத்திடவில்லை,அவன் மனதில் விரவியிருந்த தவிப்பு.

"இல்ல சாரே நெஜமா செவந்து தான் போயிருக்கு.."

"செவந்து போய் ஒன்னும் இல்ல..நீ சும்மா சும்மா ஒவ்வொன்னு சொல்லாத..எனக்கு காண்ட் ஆகுது"

"ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ் சாரி சாரி..சாரே நா ஒன்னு சொல்லட்டா..?"

"இல்லன்னா விட்ரவாடி போற மைக்செட்ட்ட்..சொல்லித் தொல.."

"சாரே என்ன எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க..?"

"ம்ம் சொல்லு.."

"நா பாக்குறப்போ எல்லாம் நீங்க டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணி அழகா இருப்பீங்க..அப்போலாம் செம ஸ்மார்ட்டா ஹேன்டஸா இருப்பீங்க..ஆனா இன்னிக்கி.."

"இன்னிக்கி.." அவளின் வார்த்தைகளில் அவனுள்ளும் சிறு ஆர்வம்.

"இன்னிக்கி மொகமெல்லாம் செவந்து ரோஸ் கலர்ல பொறந்த புள்ள மாதிரி அழகா இருக்கீங்க..அப்டியே க்யூட்டா டிபரன்டா அழகா.." இமை சிமிட்டாது குரலிலும் உணர்வுகள் வழிந்தோட கூறியவளால் மீண்டும் அவனுக்கு பேரலைகள் எழ முயல சட்டென்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்,பையன்.

"போதும் எனக்கு புரிது..ஆனா என் மொகம் ஒன்னும் செவந்து போய் இல்ல..உன் கண்ணுல தான் ப்ரச்சன" சற்றே கரகரப்பாய் ஒலித்தன,அவனின் வார்த்தைகள்.தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றான்,பையன்.

"செவந்து போய் ரொம்ப அழகா இருக்கீங்க சாரே.." அவனிடம் மீண்டும் மொழிந்தவளுக்கு பையனை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.அவனோ அவளின் வார்த்தைகளில் ஒருமுறை அவளை உறுத்து விழித்திட சட்டென அமைதியாகிப் போனாள்,பாவையவள்.

சில நிமிடங்கள் மௌனத்தில் ஊறி ஓடின.அதற்கு மேலும் பொறுத்திருக்க இயலவில்லை,பாவையவளால்.இதழ்களோ பாடலை முணுமுணுக்கத் துவங்கி இருந்தன,சத்தமாய்.

"கண்ணை கசக்கும் சூரியனோ ரெட் ரெட் ரெட் ரெட்..காணும் மண்ணில் சரி பாதி ரெட் ரெட் ரெட் ரெட்..உடம்பில் ஓடும் செங்குருதி ரெட் ரெட் ரெட் ரெட்..உழைக்கும் மக்கள் உள்ளங்கை
ரெட் ரெட் ரெட் ரெட்.." அவள் கட்டைக்குரலில் கத்த பையனுக்கு தலைவலித்தது.

"இந்த மாயக்காரி வேற நம்ம நெலம தெரியாம பாட்டு படிச்சு சாவடிப்பா..நம்மளயே மைன்ட் வாய்ஸ்ல திட்ட வச்சிட்டாளே..மனுஷனோட நெலம தெரியுதா இவளுக்கு..பிசாசுஉஉஉஉஉ"

அவளுக்கு பையனின் மௌனமான புலம்பல்கள் எங்கனம் செவியை அடைந்திடும்..?
அவன் வாயைத் திறந்து சொல்லும் பலதே அவளுக்கு புரிந்தும் புரியாத நிலை தான்.இதில் அவனின் மௌனமான அரற்றல் எம்மாத்திரம்..?

"மருதாணி செவப்பு செவப்பு..மகராணி சிரிப்பு சிரிப்பு.." அவள் அடுத்த பாடலை துவங்கிடவும் தான் அவளின் பாடலின் தேர்வுக்கான காரணம் தன் முகத்தின் சிவப்பு என புரிய வர பற்களை கடித்துக் கொண்டான்,பையன்.

"இசைஐஐஐஐஐஐ"

"என்ன சாரே..?"

"எதுக்கு இப்போ இப்டி பாட்டு படிச்சிட்டு இருக்க..?"

"அதுவா சாரே உங்க மொகம் செவந்து போச்சுல..அதான் செவப்பு கலர்ல இருக்குற பாட்டெல்லாம் ஞாபகம் வரவும் படிச்சிகிட்டு இருக்கேன்.."

"இது செவப்பு கலர் மாதிரியா தெரிது உனக்கு..?செவப்புன்னு பாட்டு பாடிட்டு இருக்க" அடிக்குரலில் கடுப்படித்தவனுக்கு தெரிந்து தான் இருந்தது,தன் வதனம் செந்நிறம் கொண்டிருப்பது.ஏனோ அவள் முன் அதை ஒப்புக்கொள்ள இஷ்டமில்லை.

"ஆமால..இது செவப்பு கலர் இல்ல..ஒரு மாதிரி பேபி பிங்க் கலர்ல..அப்டின்னா நா ரோஸ் கலர்கு எங்க பாட்டு தேட்றது..?"தன்பாட்டில் உளறிக் கொட்டியவளை கண்டு தீயென அவன் முறைத்திட அப்படியே நின்றது அவள் பேச்சு.

●●●●●●●

"அம்மா இப்போ எனக்கு கல்யாணம் வேணாம்மா..ப்ளீஸ் மா..ப்ளீஸ் மா.." கெஞ்சிக் கொண்டிருந்தவளை வெற்றுப்பார்வை பார்த்தார்,அவளின் தாயார்.

அவருக்கு இன்னும் திருமணத்தை தள்ளிப் போடும் மகள் மீது கோபமாய் வந்தது.மகளுக்கு அவரின் அமைதியை கண்டு கோபம் பீறிட்டுக் கிளம்பிட வார்த்தைகள் தடித்தன.

"எனக்குத் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்ல.." பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்பியவளுக்கு அப்படியொரு கோபம்.

"இங்க பாரு இவ்ளோ நாள் உன்னோட இஷ்டத்துக்கு விட்டாச்சு..இப்போ அதெல்லாம் சரிப்பட்டு வராது..மரியாதயா கல்யாணத்துக்கு ஒத்துக்க..அவ்ளோ தான்.."

"அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ"

"அம்மா நொம்மான்னு என்ன சொன்னாலும் மாப்ள வீட்டுக்காரங்க வரத்தான் செய்வாங்க..பேசாம ரெடியாகற வழிய பாரு.."அவளுக்கு பதில் பேச இடம் கொடுத்திடாமல் அவர் கதவை அடித்து சாற்றி விட்டு செல்ல தலையில் கை வைத்து அமர்ந்தவளின் மனதில் பலவித எண்ணங்கள் சுழன்றடித்தன.

அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இல்லை.ஆனால் திருமணம் செய்து கொள்ள இப்போது பிடித்தமில்லை என்பதே உண்மை.

தாயின் பேச்சை மீற முடியாது சூழ்நிலைக் கைதியாய் தயாராகிக் கொண்டு வெளியே வந்தவளின் முகத்தில் துளியும் உயிர்ப்பில்லை.கற்பாறை போல் இறுகிக் கிடந்தது.

புன்னகை தெரியா முகத்துடன் வந்தவளுக்கு அவ்விடத்தில் இருந்தவரைக் கண்டதும் தானாகேவ இதழ்கள் விரிந்திற்று.

அவளுக்கு அவரின் குணங்கள் நிரம்பப் பிடிக்கும்.அவரின் குணங்கள் பெரும் மரியாதையும் உண்டு.

"இவரு பையனுக்கு தான் உன்ன பொண்ணு கேட்டு வந்துருக்காங்க.." என்றிடவும் அவளுக்கு இத்தனை நேரம் இருந்த உறுதி மெதுவாய் தளர்வது போல்.

மனிதரின் மீது அவளுக்கு மரியாதை உண்டு.அதை விட அதிகளவு மரியாதை அவரின் மகன் மீது உண்டு.மனிதரின் மகனைப் பற்றிய பேச்சுக்களும் ஊழியர்கள் முதலாளியின் மீது வைத்திருந்த மரியாதையும் யாரென்று தெரியா இதுவரை கண்டிராத அந்த அவனின் மீது அவளுக்கு தானாய் ஒரு மதிப்பை உண்டு பண்ணியிருந்தன.

மனிதரோ அவளைப் பார்த்து மெதுவாய் இதழ் பிரிக்க பதிலுக்கு அவரிடம் புன்னகை செய்தவளின் முகத்தில் மெல்லிய மாற்றம்.அதுவும் அவரின் மனைவி அவளின் கரம் பற்றி தன்னருகே அமர வைத்துக் கொண்ட பொழுது அவளால் மறுக்கவும் இயலவில்லை.

மனிதருக்கு முன்னே அமர்ந்திருந்த அவளின் தந்தைக்கும் மனதுக்குள் நிறைவின் தூறல்.மகளின் வாழ்க்கை நல்லதாக அமைந்து விட்டால் அவருக்கு போதுமே.

"இங்க பாருமா உன்னோட அம்மா நீ என்ன மனநெலமைல இருக்கன்னு எல்லா விஷயத்தயும் சொல்லிட்டாங்க..நாங்க கண்டிப்பா உன்ன எந்த விஷயத்துலயும் ஃபோர்ஸ் பண்ண மாட்டோம்..இவருக்கு உன்ன எங்க பையனுக்கு கட்டி வச்சிரனும்னு ரொம்ப நாள் ஆச..எங்க பையனும் கல்யாணத்துக்கு பிடி கொடுக்கற மாதிரி தெரில..அதான் உங்கூட பேசி பாத்துட்டு போலாம்னு வந்தோம்.."அவர் பரிவாய் பேசிட அவளுக்கோ தர்மசங்கடமான சூழ்நிலை.

"எங்க பையன பத்தி சொல்றதுக்கு ஒன்னுல்ல..நீ தான் உன்ன பத்தி சொல்லனும்..நீ என்ன பண்ற இப்போ..?"

"இப்போ வேல பாக்கறேன் மேடம்..ஒரு ஆறு மாசமா.." சிறு குரலில் பதிலளித்தவளைத் தொடர்ந்து நீண்டன அவர்களின் சம்பாஷணை.

சம்பிரதாய முறைப்படி பெண் பார்த்து விட்டு அவர்கள் சென்றிட அவர்ளிடம் என்ன பதிலைக் கூறுவதென்று தான் அவளுக்கு தயக்கம்.

அவர்களின் தவப் புதல்வனின் புகைப்படம் வேறு அவளின் தாயாரின் வசம் இருந்தது."ஃபோட்டோ வேணும்னா கேளு.." மகளின் மனதை ஆழம் பார்க்க விரும்பியவரோ நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்திட அவள் கருத்தில் அது அவ்வளவாய் உரைக்கவில்லை.

இரவு முழுவதும் உறக்கமே வர மாட்டேன் என்றது அவளுக்கு.அவனைப் பற்றி அவளுக்கு தெரிந்தவை எல்லாம் அவன் மீது மரியாதையை உண்டாக்கியதே இல்லாமல் ஈர்ப்பை ஏற்படுத்தி விடவில்லையே.

மதிப்பு இருக்கிறது தான்.அவன் குணங்கள் மீது அளவு கடந்த மரியாதையும் இருக்கிறது தான்.அதற்கென்று சட்டென்று திருமணத்துக்கு அவளால் ஒப்புக் கொண்டிட இயலாதே.வாழ்க்கை சம்பந்தட்ட விடயம் அல்லவா..?

"என்னடி மாப்ளய புடிச்சி இருக்கா..?" நடுநிசியில் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு தோழியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி சிரிப்பை தருவதாய்.

அவளுக்கே இன்னும் தன் மனம் சொல்லும் வார்த்தைகள் புரியாதிருக்க தோழிக்கு எங்கனம் பதில் உரைத்திடுவாள் அவள்..?

குறுஞ்செய்திக்கு பதில் அளிக்காது உறங்கியும் விட்டாள்,அவள்.அதிக நேரம் யோசித்ததன் பயன் ஆழ்ந்த உறக்கம் அவளை தழுவியிருந்தது.

காலையில் தாமதமாக எழுந்தவளோ முதல் வேலையாய் குளித்துக் கொண்டு கோயிலுக்கு கிளம்பியது,சிந்தையில் தெளிவு வேண்டி.

சாமி சன்னிதியின் தனித்து நின்று மனமுருக வேண்டியவளின் மனதின் அலைக்கழிப்பை வெளிப்படுத்தும் விதமாய்,அவள் கருமணிகள் இமைகளூடு உருள்வதும் தெரிந்தது.

"எனக்கு என்னன்னு புரில கடவுளே..மனசு ஒரு மாதிரியா இருக்கு..நீ தான் நல்ல வழிய காட்டனும்.." இதழ்கள் சற்று சத்தமாகவே உச்சரித்திட சில நொடிகளுக்கு முன் அவ்விடத்தில் வந்து நின்றவனின் இதழ்களில் அவர் வார்த்தைகளால் சிறு புன்னகை.

உயிர்த்தொடும்.

2024.09.13
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 22(i)


அவளின் மெல்லிய இதழசைவின் ஓசை முன்னிருந்தவனுக்கு நன்றாகவே கேட்டிட இதழ்களுக்குள் புன்னகையை அடக்கிக் கொண்டான்,அவன்.அவள் முகத்தில் வளர்ந்து தேய்ந்த உணர்வுகளைக் கண்டு அவனுக்கு பாவமாகவும் இருந்தது.

அவளோ விழிகளைத் திறந்தாலும் அவனை கவனித்திடவில்லை.வேண்டுதலை முடித்து பிரகாரத்தை சுற்றி வந்து குளக்கட்டின் படியொன்றில் அமர்ந்து கொண்டவளின் மனமோ மானசீகமாய் கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தது.

"கடவுளே எனக்கு ஒரு நல்ல வழிய காட்டு..ஓகே சொல்றதா இல்லயான்னு ரொம்ப கொழப்பமா இருக்கு.." மானசீகமாய் கேட்கையிலே அடித்தது,அவளின் அலைபேசி.தோழியிடம் இருந்து தான் அழைப்பு.

"ஹலோ..சொல்லு தாமர என்ன விஷயம்..?" கோயில் என்பதால் சுருக்கமாய் பேசி விட்டு அழைப்பை துண்டிக்க விழைந்தது,அவள் மனம்.

"அடி அரசி..நேத்து உன்ன பொண்ணு பாக்க வந்தாங்கன்னு சொன்ன ல..அந்த பையன பத்தி நானும் தெரிஞ்ச எடம் எல்லாம் விசாரிச்சு பாத்துட்டேன்..ரொம்ப நல்ல பையனாம்..நல்ல பொறுப்பானவருன்னு சொல்றாங்க..எனக்குன்னா நீ ஓகே சொல்லிருன்னு சொல்லத் தான் தோணுது.."

"...................."

"பையனோட ஃபோட்டோவ பாத்துட்டியா நீ..?"

"ம்ஹும் இன்னும் இல்ல..ஃபோட்டா அம்மா கிட்ட தான் இருக்கு..வாட்ஸப்ல அனுப்பி விடவான்னு கேட்டாங்க பையன் வீட்ல இருந்து..நா இப்போதக்கி வேணாம்னு சொல்லிட்டேன்..ஃபோட்டோ பாக்க மனசுக்கு தோண மாட்டேங்குது.."

"ஏய் என்னாச்சு டி..? எதுக்கு ஃபோட்டோ பாக்க தோணலன்னு சொல்ற..?"

"தெரில டி..எனக்கு என்னமோ இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லுங்குற மாதிரி தான் மனசு சொல்லி கிட்டு இருக்க..அந்த பையனோட கேரக்டரோட நா டோட்டலா ஓகேயாகிட்டேன்..அதனால அவங்க சைட்லயும் ஓகேன்னா ஃபோட்டோ பாக்கலாம்..மனசுல ஏதாச்சும் ஆச வளந்து நடக்காம போச்சுன்னா எனக்கு தான் கஷ்டம்.." நிதர்சனத்தை பேசியவளின் குரலிலேயே அவளுக்கு அந்தப் பையனின் மீது விருப்பம் இருப்பதை உணர்ந்து கொண்டாள்,தோழி.

"அரசி நெகடிவ்வா யோசிக்காத..மிஸ்டர்.யாழ்வேந்தனோட அப்பாம்மாவே வந்து உன்ன பொண்ணு பாத்துட்டு போயிருக்காங்க..நீ உனக்கு சரி பட்டதுன்னா ஓகே சொல்லு.." தோழியை தெளிவுபடுத்த முனைந்தவளின் முயற்சி அத்தனை வெற்றியளிக்கவில்லை.

"பேசாம குங்கும் விபூதிய பேப்பர்ல மடிச்சு போட்டு பாத்துரேன் டி..எப்பவும் அதத் தான பண்ணுவ..இப்போவும் பண்ணுனா உன் மனசுக்கு நிம்மதியா இருக்கும்"

"ம்ம் நா பாக்கறேன் தாமர..யோசிச்சு பாத்துட்டு பதில சொல்றேன்.." அத்துடன் அழைப்பை துண்டித்தவளோ மனம் நிலையின்றி தவித்தது.

மீண்டும் சாமி சன்னிதிக்கு வந்தவளோ சற்று சத்தமாகவே வேண்டுதல் வைத்திட அது இப்போதும் பின்னிருந்தவனின் காதில் விழ புன்னகையை இதழுக்குள் ஒளித்துக் கொண்டான்,பையன்.

"கடவுளே நா பேப்பர்ல குங்குமமும் விபூதியும் மடிச்சு வச்சு போட்டு பாக்க போறேன்..இந்த கல்யாணத்துக்கு உள் மனசு சம்மதம் சொல்லுன்னு சொல்லுது..குங்குமம் வந்ததுன்னா ஓகே சொல்லுவேன்..இல்லன்னா நோ தான்.." அவள் புலம்பிட பையனின் மனதில் ஆயாசமான நினைப்பு.

"கல்யாணத்துக்கு ஓகேன்னா சொல்ல வேண்டியது தான..அதுக்கு ஏன் குங்குமம் எல்லாம் போட்டு பாக்கனும்..?" அவளை மனதுக்குள் திட்டியவனுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது தான்.ஆனால்,இப்படியெல்லாம் நடந்து கொள்வதை அவன் மனம் ஏற்பதில்லை.

அதுவும் அவள் முகத்தில் இருந்த உணர்வலைகளை வைத்து அவள் இந்த திருமணத்தை ஆழ் மனதில் இருந்து விரும்புகிறாள் என உணர்ந்து கொண்டவனுக்கு பாவையவளின் செயல் மடத்தனமாய் தோன்றாது இருப்பின் தான் அதிசயம்.

அவளோ விபூதியை ஒரு தாளிலும் குங்குமத்தை ஒரு தாளிலும் மடித்து வைத்து போட்டுப் பார்த்திடும் முன்னே தாயிடம் இருந்து அழைப்பு வந்திட பூஜை கூடையின் அருகே இரண்டு மடித்த காகிதங்களையும் வைத்து விட்டு சற்றே தள்ளிச் சென்றாள்,ஆட்கள் இருப்பதால்.

இவ்வளவு நேரம் அவனை கவனிக்க அவனுக்குள் உந்தியதன் காரணம் என்னவென்று பையனுக்கு தெரியவில்லை.அவன் அப்படி யாரையும் கவனிக்கும் ரகமும் இல்லை என்பதும் வேறு விடயம்.ஆனால்,பாவையவளை மட்டும் அவனின் ஏதோ ஒன்று கவனிக்க வைத்திட்டது.அவளுக்கு வந்து விழப்போவதைக் கொண்டு அவள் எடுக்கப் போகும் முடிவு என்னவென்று பார்த்திட அவனுக்குள் ஆர்வம்.

அவள் நகர்ந்து சென்றதும் அவனுக்கும் என்றுமில்லாமல் ஏதோ தோன்ற யாரினது கருத்தையும் கவராது மெதுவாய் அந்த காகிதங்கள் இரண்டையும் கவர்ந்தெடுத்து விபூதி இருந்த காகிகத்தை வெறுமையாக்கி அதிலும் குங்குமத்தை போட்டு முன்பு போலவே மடித்து வைத்தான்,கேடி.

அவள் மீது அவனுக்கு அந்நேரம் பிரத்தியேகமாய் எந்த உணர்வும் இல்லை.அவளின் செயல் பெரும் மடத்தனமாய் அவன் மனதில்.பிடித்தால் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே என்கின்ற அவனின் எண்ணம் தான் பையனை இப்படி செய்ய வைத்தது.

கேடியவன் தன் வேலையை முடித்து விட்டு ஓரமாய் சென்று நின்று அவளின் வருகைக்காக காத்திருந்தான் பையன்,மார்புக்கு குறுக்கே கரங்களை படரவிட்ட படி.

பூசாரி அவனைக் கவனித்து நமுட்டுச் சிரிப்புடன் நகர்வதை கண்டு காணாது நின்றிருந்தவனோ பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து அழுந்தக் கோதிக் கொண்டான்.

நிர்மலமான முகத்துடன் வந்தவளோ ஒரு காகிதத்தை எடுத்திட அவள் விழிகளில் வந்து சேர்ந்த பிரகாசம் அவனுக்கு சிரிப்பைத் தான் தந்தது.அவள் மாற்றி எடுத்திருந்தால் நொந்து போயிருப்பாள் என்பதை அவள் விழிகளில் கசிந்த உணர்வுகளே உணர்த்திட தான் செய்தது சரியென்கிற எண்ணமே,பையனுக்கு.

பாவையவளுக்கும் மனதுக்குள் அப்படி ஒரு நிம்மதி.ஏனென்று தெரியவில்லை ஊற்றெடுத்த நிம்மதியில் அவள் உயிரும் அடங்கி நின்றது.

உள்ளத்தில் எழுந்த உவகையுடன் இரு காகிதங்களையும் ஓரமாய் கையில் எடுத்துக் கொண்டு நடந்தவளுக்கு அதைப் பிரித்துப் பார்த்திட அந்நேரம் அகத்தை அடைத்திருந்த ஆனந்தப் பிரவாகம் இடம் தரவில்லை.பையனுக்கோ அவள் இரண்டு காகிதங்களையும் பிரித்துப் பார்த்தாள் மீளவும் இதையே செய்யக் கூடும் என்பது புரிந்தாலும் அதற்கு மேலும் அவனால் எதுவும் செய்ய இயலாதே.

அவனுக்கு வழியமைத்துக் கொடுப்பது போல் அவளும் பூஜைக் கூடையை கையில் வைத்துக் கொண்டு மீண்டும் கடவுளுக்கு விழிமூடி மனம் நெகிழ நன்றி கூறிட பின் தொடர்ந்து வந்தவனோ அந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டான்,அந்த யாரோ ஒருத்திக்கென.

கடவுளை வணங்கி விட்டு விழி திறந்தவளுக்கு யாரோ தன்னை கடந்து சென்றது புரிந்தாலும் பெரிதாய் சிந்திக்கவில்லை,அப்போது.

பாவையவளினதும் பையனினதும் சிந்தனைகள் ஒரே புள்ளியை தொட்டு நிற்க அவனுக்குத் தெரிந்த நினைவுகள் தந்த இதத்தில் அவனும் அவளுக்குத் தெரிந்த நினைவுகள் தந்த நிம்மதியில் அவளும் லயித்திருந்தனர்,சுற்றம் உரைக்காது.

பாவையவளுக்கு இன்னுமே தன் காகிதத்தில் குங்குமத்தை மாற்றி வைத்து புண்ணியவான் யாரென்று தெரியாது.யாரோ ஒரு ஜீவன் விபூதிக்கு பதிலாய் குங்குமத்தை மாற்றி வைத்ததை சில வருடங்களுக்கு பின்னர் பூசாரியை தற்செயலாய் வேறொரு ஊரில் சந்தித்த போது தெரிய வந்திட அன்றில் இருந்து அந்த ஜீவனைக் கண்டிட வேண்டும் என்பது அவள் மனதின் ஓரமாய் இருக்கும் சிறு எதிர்பார்ப்பு.கண்டுலிடுத்து நன்றி கூற வேண்டும் என்கின்ற எண்ணமும் கூட.

இங்கு பையனின் இதழ்களோ தாராளமாய் அவளைத் திட்டித் தீர்த்தவாறு இருந்தன.அன்றும் சம்பந்தமே இல்லாமல் அவள் விடயத்தில் மூக்கை நுழைத்தது இன்று அவனை தவிக்க வைத்தது.

"மாயக்காரி..அப்போவே நா எதுக்குன்னு இல்லாம அவள கவனிச்சு தான் இருக்கேன்..ச்சே..இப்போவும் படுத்தி எடுக்குறா.." முணகியவனுக்கு இப்போது தான் மூளையில் மின்னல் வெட்டியது.

"அன்னிக்கி கோயில்ல வச்சு கல்யாணம் பண்றதுக்கு கடவுள் கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு இருந்தா..ஆனா அதுக்கப்றம் லவ் வந்து ஒரு பையன ரொம்ப வருஷமா லவ் பண்றேன்னு தான சொன்னா.." அவனுக்கு எங்கேயோ இடித்தது.

அப்போது அவள் சொன்ன போது அவனும் அந்த பையனைத் தான் திருமணம் செய்து கொள்வதாய் நினைத்து வேண்டியிருப்பாள் என எண்ணியவனுக்கு இப்போது அந்த எண்ணம் வரவில்லை.அதுவும் சமீப கால நடவடிக்கைகள் அதற்கு இடம் தரவுமில்லை.

இசையவளுக்கு முன்னைய காதல் ஒன்று இருந்திருக்காது என்கின்ற சிந்தனை அவனில் வேரூன்றி இருக்க இப்போது எல்லாம் சேர்ந்து யோசனையில் அமிழ்த்தி ஆழ்த்தி தள்ளிற்று.

"அவ லவ் பண்ணியிலன்னு தோணுது..ஆனா அன்னிக்கி கோயில்ல வச்சி கல்யாணம் பண்ணிக்க கேட்டது உண்ம மாதிரி தான இருந்துச்சு..என்னமோ நடந்து இருக்கு..என்ன சட்டுன்னு கல்யாணம் பண்ண ஒத்துக்கற பொண்ணும் இவ கெடயாது..லவ் பண்ற பையன ஏமாத்தியும் இருக்க மாட்டா..தென் வை..? அவ எதுக்கு என் கிட்ட பொய் சொல்லனும்..?" என்றவனுக்கு தலை வலித்தது.

"ஒருவேள அவ கல்யாணத்துக்கு முன்னாடி நம்மள விரும்பி இருப்பாளோ..?" மனதில் உண்டாகிற்ற கேள்வி பையனின் இதயத்தில் நடுக்கத்தை கிளப்பியது.

அப்படி மட்டும் இருக்கவே கூடாது என வேண்டிக் கொண்டது,அவனின் ஆழ் மனம்.இப்போது வெளிப்படும் அவள் காதலே அவனை கொன்று புதைக்கிறது.இதில் மௌனமான காதல் அதிகாரம் ஒன்றிருந்தால் மூச்சடைத்து உயிரும் வேரோடு அசைய மாண்டே போவான்,பையன்.

தலையைக் கோதிக் கொண்டவனோ என்ன செய்வதென்று புரியாது அலைபேசியை எடுத்திட பாவையவளிடம் இருந்து பதிமூன்று அழைப்புக்கள்.

அரவிந்தை வீட்டுக் கிளம்பச் சொல்லி விட்டு இன்னும் அலுவலகத்தில் தான் தரித்திருந்தான்,பையன்.ஏழு மணியை கடிகாரம் காட்டியும் வீட்டுக்குச் செல்ல மனமில்லை.

அங்கு சென்றால் நிச்சயம் தவித்து தனக்குள் மருகி தடுமாறி நிற்கும் விதமாய் ஏதேனும் நடந்திடுமோ என பயந்தவன் அலுவலகத்தில் தரிக்க அதற்கு இடம் கொடுத்திடுவாளா பாவையவள்..?

வாட்ஸப்பில் வந்த குறுஞ்செய்தியைக் கண்டவனுக்கு கோபம் என்றால் வாட்ஸப்பில் அவள் வைத்திருந்த ஸ்டேட்டஸை கண்டு உள்ளம் கோபத்தில் கொந்தளித்தது.

வதனம் முழுவதும் சிவந்து தொலத்திருக்க அதற்கு மேலாய் கன்னம் இன்னும் சிவந்து பின்கோதராமய் விரல் நுழைத்து அவன் சிகைக் கோதிக் கொண்டிருந்ததை அவனுக்குத் தெரியாமல் அலைபேசியில் படம் பிடித்திருந்தாள்,பாவிமகள்.

வண்டியை செலுத்திக் கொண்டிருக்கும் போது அவளின் வர்ணனைகளுக்கு அவன் திணறிய போது எடுத்து விட்டிருப்பாள்,போலும்.சரியாய் தான் கணித்தது பையனின் மனது.

அந்த புகைப்படத்தை "ரெட்டிஷ் பேபி.." என்று கீழே தட்டச்சு செய்திருந்த வாசகத்துடன் ஸ்டேடஸ் வைத்திருக்க பையனுக்கு கோபம் வராமல் போகுமா என்ன..?

அதுவும் குறுஞ்செய்தியில் " இந்த ஃபோட்டோவ அரவிந்த அண்ணாக்கும் சென்ட் பண்ணி விட்டுட்டேன்.." என்றும் அனுப்பியிருக்க பையனுக்கோ கட்டுக்கடங்கா கோபம்.

"இவளஅஅஅஅஅஅஅஅ" பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவனோ அடுத்த கணமே அவளுக்கு அழைப்பெடுக்க அழைப்பை ஏற்றிடாது இன்னும் சோதித்தாள்,அவனின் மாயக்காரி.

"பிசாசு..வேணும்னே ஃபோன எடுக்க மாட்டேங்குறா..பைத்தியம் பண்ணியிருக்க வேலய பாரு.." என்றவனுக்கு தனக்கு மட்டும் தெரியும் படி தான் ஸ்டேடஸ் வைத்திருப்பாள் என்கின்ற மனதில் ஆழமாய்.

அதற்கு மேலும் அவனால் அலுவலகத்தில் தரிக்க இயலுமா என்ன..?மின்னல் வேகத்தில் வண்டி கிளம்பி இருந்தது,வீட்டுக்கு.

பாவையவளுக்கு தெரியும்,இன்னும் பத்து நிமிடங்களுக்குள் பையன் தன் கண் முன்னே வந்து நிற்பான் என்று.

அவளை அவன் புறக்கணிப்பு புரிந்தாலும் அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது போக அவனை சீண்டி விட்டிருந்தவளுக்கு பையனின் எதிர்வினையை எண்ணுகையில் நெஞ்சமதில் பயத்தின் தூறல்.

குரலைச் செருமிக் கொண்டு அவன் வாசலை நெருங்கும் போதே அறைக்குள் நுழைந்து கதவை அடைத்திட பையனின்?கோபம் எல்லை கடந்தது.

நல்லவேள ராமநாதன் வீட்டில் இருக்கவில்லை.இருந்து இருந்தால் அவரும் தன்பாட்டுக்கு பையனை ஒரு வழி செய்திருப்பாரே..?

கதவடைத்திட்ட சத்தமே அவனுக்கு அவளின் செயலை உரைத்திட அறைக்கதவை நெருங்கி கதவைத் தட்டினான்,பையன்.

"இசை செம கோபத்துல வந்து இருக்கேன்..கடுப்பேத்தாம கதவத் தெற..லேட்டாகிச்சுன்னு வையி பல்லு முழுக்க கீழ கொட்டிரும்.."

"ம்ஹும் நீங்க அடிப்பீங்க சாரே" அவள் மறுப்பு சொன்னது தெளிவாய் விழுந்தது,அவன் செவிகளில்.

"அடிக்காம என்னடி பண்ணுவாங்க..? நீ பண்ணி வச்சிருக்குற வேலக்கி..சித்தப்பா வர முன்னாடி கதவ தொறந்தா உனக்கு சேஃப் இல்லன்னா இருக்கு உனக்கு.." கருவியவனுக்கு அவள் முன் தான் வீழ்ந்து போகும் ஆற்றாமை கூட அவளின் மீது கோபமாய் உருமாறியிருந்தது.

"இசை கதவத்தெற.."

"அடியேய் மாயக்காரி கதவத் தெறடி டென்ஷன் ஏத்தாம.." பையன் கத்திட அந்த சமயம் வீட்டுக்குள் நுழைந்த ராமநாதனுக்கு அவளின் அழைப்பு மட்டும் தான் செவியில் நுழைந்தது.

அவரைக் கண்டதும் பையன் சட்டென அமைதியாகி கதவருகில் நிற்க அவருக்கோ இத்தனை நேரம் பையன் கத்திக் கொண்டிருந்தது தெரிந்திடும் வாய்ப்பில்லையே.

"வர வர உனக்கு லவ் ஓவர் ஃப்ளோல போகுதுடா மகனே..இசைமாங்குற..இசைங்குற..இப்போ இந்த மாயக்காரி இன்னும் நல்லா இருக்கு..ம்ம்..ம்ம்..நடத்து நடத்து.." அவரும் தன்பங்குக்கு வாரி விட சுவற்றில் தலையை முட்டிக் கொள்ளும் நிலை தான்,பையனுக்கு.

ராமநாதனின் அரவம் பாவையவளையும் கதவைத் திறக்க வைத்திட கதவிடுக்கின் வழியே தன்னைப் பார்த்தவாறு மெல்ல கதவைத் திறந்தவளின் செயலில் பையனின் கோபம் உச்சிக்கு ஏறியது.

"கதவத் தெறடி.." இடுக்கின் வழியே தெரிந்த அவளின் ஒற்றை விழியில் விழுந்தெழுந்து வார்த்தைகளை கடித்து துப்ப நிஜமாய் பயந்து விட்டாள்,அவள்.

அவனின் வார்த்தைகளில் தெறித்த கோபத்தில் மிரண்டு அவள் விழிக்கும் முன்னே கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவனின் செயலில் அவளுயிருக்குள் பயம்.

"என்னடி பண்ணி வச்சிருக்க..? எதுக்கு என் ஃபோட்டோவ ஸ்டேடஸ் போட்ட..?" ஏனென்று இல்லாமல் கத்தியவனை புரியாது பார்த்தாள்,அவள்.

அந்த கோபத்திலும் இடைவெளியில் தரித்து தன்னிலை காத்துக் கொள்ள பையன் மறந்திடவில்லை.பின்னே,சேதாரம் அவனுக்குத் தானே..?

"எதுக்கு இப்ப முழிச்சு பாத்துட்டு இருக்க..? என்ன பாத்தா எப்டி இருக்கு..?"

"..............."

"என்ன பாத்தா எப்டி இருக்குன்னு கேக்கறேன்..ஒன்னும் சொல்லாம இருக்கு..? எப்டி இருக்கு என்ன பாத்தா..? பதில் சொல்லுடி.." அவளின் அமைதி உஞற்றிய கடுப்பில் அவன் கத்த அவளுக்கோ அத்தனை பதட்டம்.சொல்லியே விட்டாள்,அவளின் மன எண்ணத்தை.

"புள்ளத்தாச்சி பொண்ணு மாதிரி இருக்கு.."

"வாட்ட்ட்ட்ட்..?" அவனின் புருவங்கள் சுருங்கின.

"இல்ல அவங்களும் அப்டி தான இருப்பாங்க..எப்போ எப்டி இருப்பாங்கன்னு கொஞ்சமும் கண்டு புடிக்க முடியாம மூட் ஸ்விங்கோட இருப்பாங்களே..அது மாதிரி இருக்காங்க.." பாவமாய் பூனைக்குட்டி போல் முழித்துக் கொண்டு அவள் சொல்ல அவளின் முகபாவத்திலேயே நழுவிப்போன இதயத்தை இழுத்துப் பிடிக்க வெகுவாய் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது,பையனுக்கு.

"ஊஃப்ப்ப்ப்" இதழ் குவித்து ஊதிக் கொண்டவனின் கரம் சற்றும் மாற்றமின்றி இடது புற நெஞ்சை அழுத்திப் பிடித்தது.

"போடி.." ஆற்றாமை மின்னும் விழிகளுடன் மெதுவாய் இதழசைத்து விட்டு நகர்ந்தவனின் செயல் மண்டை குழம்ப நின்றாள்,அவள்.

"அவராவே வந்தாரு..அவராவே திட்டுனாரு..இப்போ அவராவே போறாரு..என்ன தான் ஆச்சு இந்த மனுஷனுக்கு..ரோபோ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருதே.." தன்பாட்டில் யோசித்தவளுக்கு சத்தியமாய் எதுவும் பிடிபடவில்லை.

●●●●●●●

"என்ன தான் டா ஆச்சு உனக்கு..?எதுக்கு இப்டி ஒன்னும் புரியாம நடந்துக்குற..என்ன தான் ஆச்சு யாழ் உனக்கு..?" நிலைக்கண்ணாடியில் தெரிந்த தனது விம்பத்திடம் வினாத் தொடுத்தவனுக்கு தன் பேச்சை மீறிடும் மனதின் மீது ஆத்திரம்.

அவள் புறம் அவன் ஈர்க்கப்படுவதாய் அவன் நினைத்திருந்தான்,இன்று காலையில் நடந்த நிகழ்வு.

அத்தனை தவிப்புக்கும் தடுமாற்றத்திற்கும் காரணம் அவள் மீது துளிர்விட்டிருக்கும் ஈர்ப்பு என்று தான் நினைத்திருக்கிறான்,பையன்.

அது மலரென பூத்த ஈர்ப்பல்ல,இதயத்தின் ஆழத்தில் இருந்து வேர்ப்பிடித்து எழுந்த காதல் என்று அவனுக்கு யார் தான் புரிய வைத்திட..?

ஆம்,காதல் தான்.
சத்தியமாய் காதல் தான்.

அவள் மீது அவனுக்கு ஆரம்பத்தில் அக்கறை இருந்தது உண்மை தான்.அது அவளுடன் இருக்கும் போது ஈர்ப்பாக மாறியிருக்க அன்று அவள் தோழமைக் கரம் நீட்டியதும் நட்பென்று உருவம் கொடுத்திருந்தான்,ஈர்ப்புக்கு.

ஈர்ப்பு தான்,
ஈர்ப்பின்றி ஏன் அவளருகில் அவன் தடுமாறிப் போக வேண்டும்..?
தன்னிலை தவறி தடம் மாற மாட்டேன் என்று உறுதி அவனுக்கு இருந்தால் அவளின் முன் மட்டும் ஏன் இத்தனை தடுமாறிப் போக வேண்டும்..?

அவளுடன் நட்பின் பிடியில் இறுகி வெகுவாய் குறுகிய நாட்களுக்குள் அவளுடன் நெருங்கிப் போனதற்கு அவன் வேண்டுமென்றால் ஆயிரம் காரணம் சொல்லலாம்.

கல்லூரியில் கூட பெண் தோழிகளுடன் நட்பாய் பழகியவன் இவளிடம் மட்டும் ஏன் வீழ்ந்து போக வேண்டும்..?
வீழ்ந்து போய் தொலைந்து போக வேண்டும்..?

அவளையும் வெறும் தோழியாய் பார்த்திருக்கலாம்.ஏன் நெருங்கிய தோழியாய் ஆக்கியிருக்கலாம்.அப்படியான எண்ணத்துடன் அவளுடன் பழகியவனுக்கு தடுமாற்றம் வந்ததன் காரணம் தான் என்ன..?

நட்பாய் பழகி இருந்தால் இத்தனை தூரம் அவன் தடுமாறி தடம் மாறி தன்னிலை மறந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லையே.

ஆக,இது காதல் தானே.
காதலால் மட்டும் தானே அவனில் இத்தனை மாற்றங்கள் சாத்தியம்.
அது தானே நிஜமும் கூட.காதல் இல்லையென்று அவன் தான் அவனையே ஏமாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆக,சத்தியமாய் இருவருக்குள்ளும் காதல் இருக்கிறது தான்.அது மறுக்க இயலாத உண்மை.அதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

உணர்ந்தும் உரைக்க திடமின்றி அவள் காதல்..
உணர்ந்து உரைக்க
இடமின்றி அவன் காதல்..

உயிர்த்தொடும்.

2024.09.14
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 22(ii)


ஆக,அவள் மீது காதல் மலர்ந்திருந்தும் அதை ஏற்றுக் கொள்ளாமல் வீம்பு பிடிக்கிறது,பையனின் மனது.

ம்ஹும்,வீம்பு பிடிப்பதாய் சொல்லவும் முடியாது.அவனின் சூழ்நிலைக்கேற்ப அவனின் மன எண்ணங்கள் சரி தான்.அதைத் தவறென்று கூறிட இயலாது.தவறென்று கூறினாலும் அது அடுக்காது.

நிலைக்கண்ணாடியில் தவிப்புடன் அலைந்தோடிய தன் விழிகளின் விம்பத்தை கண்டவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.காற்றில் ஆடும் நூலறுந்த பட்டமென அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததை அவன் மட்டுமே அறிவான்.

முகத்தை குளிர்ந்த நீரால் அடித்துக் கழுவிக் கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வர அவனுக்கென விழித்துக் காத்திருந்தாள்,அவனின் இசை..அவன் அகத்தை குடைந்தெடுக்கும் இம்சை.

பையனுக்கோ அவளை மீண்டும் எதிர்கொள்ளும் திராணி இல்லை.முகம் பாராது கடந்திடப் பார்த்தவனை அப்படியே தரிக்க வைத்தது,அவளின் வார்த்தைகள்.

"சாரே ப்ளீஸ்..நா சொல்ற ஒரு நிமிஷம் கேளுங்க..நா சும்மா தான் ஸ்டேட்டஸ் போட்டேன்..அதுவும் உங்களுக்கு மட்டும் காட்றதுக்கு தான் போட்டேன்..நா ஃபோன் பண்ணதும் அட்டன்ட் பண்ணாம இருந்தீங்கல..அதான் சும்மா சீண்டி பாக்கலாம்னு..அதுவும் அரவிந்த் அண்ணாக்கு நா ஃபோட்டாவ அனுப்பல..சும்மா தான் சொன்னேன்..சாரி.." கரகரத்த குரலில் சொன்னவளுக்கு விழிகளில் நீர் கட்டியிருந்தது.

அவனுடன் சாதாரணமாக பேசி மன்னிப்புக் கேட்டிடலாம் என்று தான் அவள் நினைத்து இருந்ததே.ஆனால்,அவன் முகத்தில் தென்பட்ட மாற்றம் அவளை ஏதோ செய்ய அவளின் செயல்கள் பையனை காயப்படுத்தியது போன்ற நினைப்பு மனதில் எழுந்தது,நீரலையென.

அவளின் கலங்கிய விழிகளும் கமறிப் போன பையனை வெகுவாய் ஆட்டுவிக்க அவளுக்கென துடிக்கத் துடித்த இதயத்தை அடக்கியவனோ வெறுமனே தலையசைப்புடன் கடந்து கட்டிலில் விழுந்தான்,சரிவாய்.

●●●●●●●

"என்னாச்சு அரசி உனக்கு..? ரெண்டு நாளா ரொம்ப டல்லா இருக்கியே மா..என்னாச்சு..?" ராமநாதன் பரிவாய் வினவிட அவளுக்கு சங்கடமாய் ஆகிற்று.

"ஒன்னுல்ல மாமா..ஆஃபீஸ்ல வர்க் டென்ஷன் அதான்..கொஞ்சம் அது கம்மியானதும் நா நார்மலாயிடுவேன்.." தன் மனதை மறைத்து அவரிடம் கூற அவரும் எளிதாய் அதை நம்பிவிட்டது,அவளுக்கு வசதியாகிற்று.

"சரிமா பாத்து பண்ணு..நீ டல்லா இருக்கும் போது வீடே வெறிச்சோடி போய் இருக்கு..எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு அதான்.." அவர் தன்னிலை விளக்கம் அளித்திட அவளுக்கோ குற்றவுணர்வு.

அவளின் வருத்தம் அவரையும் சேர்த்து வருந்த வைப்பதை புரிந்து கொண்டவளின் மனமோ இனிமேல் இயல்பாய் இருப்பது போல் நடிக்கவாவது வேண்டுமென்கின்ற முடிவை எடுத்துக் கொண்டது.

பையனை தன் நடத்தைகள் கீறி விட்டது என்கின்ற அலைப்புறுதலில் சற்றே தள்ளி நிற்பவளுக்கு அது பெரும் சிரமம் தான்.ஆனால்,அதைத் தவிர வேறு வழியும் இருக்கவில்லை.அவளால் துளியும் அவன் காயப்பட்டிடக் கூடாது என்பதற்கு தான் இந்த முடிவே.

வாய்க்கு வந்ததை அடித்து விட்டு மனிதரை சமாளிப்பவளை பெருமூச்சுடன் பார்த்திருந்தான் பையன்,கழுத்துப் பட்டியை சரி செய்த படி.

அன்று அவனிடம் மன்னிப்பு கேட்ட பின் தான் அனுஷ்டிக்கிறாள்,இந்த மௌன விரதத்தை.தான் அன்று கோபத்தில் திட்டி விட்டதால் தான் விலகி நிற்கிறாள் என நினைத்தவனுக்கோ அதுவும் பிடிக்கவில்லை.தான் திட்டியதற்கெல்லாம் விலகி நிற்கும் ரகமில்லை என்று தெரிந்தும் உடனே காரணம் அறிய முயலவில்லை,அவன்.

காதலுக்கு அக்கறை எனும் போர்வையை போர்த்தி அதை அடக்கி கல்லுளி மங்கள் அவனை கட்டுக்குள் கொண்டு வைக்க முயல்கிறான் போலும்.பாவம்,வெள்ளம் வந்த பின் தான் அணை கட்ட முயல்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை.

தேவைக்கென மட்டும் பேசி தன்னெல்லைக்குள் நிற்பவளின் மீது கோபமாய் வந்து தொலைத்தது."லூஸாடா நீ..?"அவனின் மனசாட்சியே குழம்பிப் போய் அவனிடம் கேள்விக் கேட்டிட அதற்கெல்லாம் அசரும் ஆளா பையன்..?

"ஒன்னு பேசி பேசி சாவடிப்பா..இல்லன்னா பேசாம சாவடிப்பா.." அவளுக்கு வைதிட "நீ தான் டா என்ன அவ கிட்ட இருந்து எதிர்பாக்கறன்னு புரிஞ்சிக்காம என்ன சாகடிக்கிற.." பையனின் மனசாட்சி அவனை திட்டித் தீர்த்தது.

அவசர கதியில் உணவுண்டு விட்டு வெளிக் கிளம்ப ஓடியவளின் கரத்தைப் பிடித்துத் தடுத்தான்,பையன்.

"இரு நானும் வர்ரேன்.." கறாரான குரலில் கூறியவனை பரிதாபமாய் பார்த்தாள்,அவள்.விலக முயலும் தன்னை தடுத்திடும் அவனின் செய்கையின் உள்ளர்த்தம் அவளுக்குப் புரியவில்லை.அவனுக்கேப் புரியாத போது அவளுக்குப் புரிந்திடும் சாத்தியம் ஏது..?

அவளின் கரம் தொட்டதும் இசைக்கென துடிக்கும் இதயம் சற்றே வேகமெடுத்தை புறக்கணித்து விட்டான்,பையன்.

அவளின் கரத்தை விடாது பற்றிக் கொண்டவனுக்குமே அவளிடம் தான் என்ன எதிர்பார்க்கிறோம் சத்தியமாய் தெரியவில்லை.தெரியா விடினும் அதன் காரணத்தை ஆராயாமல் அவன் மொத்த கடந்த காலத்தையும் மறந்து நிகழை துறந்து அந்த நொடியை இரசித்திடவே விழைந்தான்,பையன்.

காரை எடுத்துக் கொண்டு அவன் வரும் முன்னே எங்கோ நடந்தவள் உடையில் சேற்றைப் பூசிக் கொண்டு நின்றவளை விழி விரியப் பார்த்தான்,அவன்.

"சேறு பட்ருச்சு..அஞ்சு நிமிஷத்துல வர்ரேன்.."

"ம்ம்.." என்றிட கடகடவென ஓடியவளின் செயலில் அவனிதழ்களில் மென்னகை.

ஆழ் மனம் உணரவில்லை,அவனுக்கு அவனாய் இருக்க அவள் வேண்டும் என்று.ஆனால்,புத்தி தீர்க்கமாய் உணர்ந்து தான் இருந்தது,அவளுக்கு தான் வேண்டவே வேண்டாம் என்று.அதனால் தான் விலகி நிற்பதாய் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள முயல்கிறான்,பையன்.

பரபரவென உடை மாற்றிக் கொண்டு வந்தவளோ காரின் கண்ணாடி இடைவெளியின் அடித்தளத்தின் கையூன்றி விழியெடுக்காது அவளைப் பார்த்திருந்தவனை கவனிக்கவில்லை.

முதலில் அவன் விம்பம் கருமணிகளுக்குள் பொதிந்தவுடன் இதயம் சற்றே வேகமெடுத்திட பார்வையை தழைத்துக் கொண்டாலும் "பார்" என சண்டையிட்ட மனதோ புத்தியை மதிக்காது விழிகளை அவள் புறம் திருப்பி விட திணறினான்,பையன்.

அவன் ஷர்ட்டின் நிறமான கருநீல நிற சுடிதார் அணிந்து துப்பட்டாவை விரித்து போட்டிருந்தவளோ கூந்தலை பின்னியிருக்க அது முன் தோற்பட்டையில் வழிந்து கொண்டிருந்தது.

பதட்டத்துடன் ஓடி வந்தவளின் செயலில் அவன் விழிகளில் இரசனை என்றாலும் அவன் விழிகளுக்கு அவள் பேரழகாய்த் தெரிந்ததன் மாயம் தான் என்ன..?

அவளைக் கண்டதும் கருமணிகள் விரிந்து கொள்ள நொடியில் பார்வையை விலக்கி தன்னை மாற்றிக் கொள்ள இயலவில்லை,பையனால்.

முழங்கை ஊன்றப்பட்டிருக்க அதே கரத்தின் விரல்களோ தாடையை தடவிய படி இருந்தாலும் விழிகள் அவனின் இசையை உரசிக் கொண்டிருக்க செவியோரமே அவனிதயத்தின் இசையை உணர்ந்து கொண்டிருந்தது.

இடையிடையே விழிகள் தாழ்ந்து போனாலும் மீளவும் அவள் விம்பத்தை உரசிட்ட மாயம் அவன் அறியான்.

அவள் தன்னை நெருங்கி வரும் வரை விரிந்திருந்த கருமணிகள் அசையாது நிற்க விழி தாழ்த்தி நிமிர்த்தி அவளையே பார்வையால் ஸ்பரிசித்தவன் அவள் அருகில் வந்ததும் எச்சில் கூட்டி விழுங்கியதால் தொண்டைக் குழி ஏறி இறங்கிட சட்டென பார்வையை மாற்றி சுற்றும் அலைய விட சத்தியமாய் அது புரியவில்லை,மகராசிக்கு.

கார்க்கதவை திறந்து ஏறிக் கொண்டவளின் வதனத்தை பார்வையால் வருட பரிதவித்த விழிகளை பெருமூச்சுடன் தடுத்து விட்டான்,பையன்.

வண்டியில் ஏறிக் கொண்டதும் விழி மூடி சாய்ந்து கொண்டாள்,பாவையவளை.வழி முழுக்க அவனைக் கேளாமல் முனைக்கு அவளைக் காண ஓடிய கருமணிகளை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடிப் போனான்,பையன்.

"என்ன இவ இன்னிக்கி இவ்ளோ அழகா தெரியுறா..எப்பவும் போல தான இருக்கா இந்த மைக்செட்ட்ட்ட்ட்.." கள்ளப்பார்வையால் வருடிய கேடியின் எண்ணம் இது தான்.

வாகன நெரிசலில் வண்டி நிற்க அவளைப் பார்த்திடத் தவித்த விழிகளை தன்னாதிக்கத்தில் வைப்பது சத்திய சோதனையாய் ஆகி விட்டது,பையனுக்கு.

இதயத்தில் தோன்றிய படபடப்பை மறைக்க முயன்று ஸ்டியரிங்கில் விரல்களால் தாளம் தட்டியவனின் விழிகள் தடுப்பை உடைத்துக் கொண்டு நகர்ந்தோடி அவளை பார்வையால் தொட்டுக் கொண்டிருந்தன.

அத்தனை அழகாய் புதிதாய் தெரிந்தாள்,பாவையவள்.இதழ் பிளந்து காற்றில் அங்குமிங்கும் சிகை அசைந்தாட அவள் உறங்கியிருந்த தோற்றம் அவனை அசைத்தே விட்டது,வேரோடு.

"கன்ட்ரோல்ல்ல்ல்ல் யாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்.." பட்டென திருப்பிய விழிகளை தாழ்த்தி பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கலைத்து விட்டவனோ நெடுமூச்செறிந்தான்,சுயம் மறந்து.

அவளருகாமையில் அவனை வாட்டியெடுக்கும் மலி மறைந்தோடிடக் கண்டவனுக்கு மொத்தமும் மறந்து தான் சுயம் இழப்பது புதிதாய்.அதன் காரணம் பெரும் புதிராய்.

அவன் ஒரு போதும் நினைத்ததில்லை.அவனை வலிகளை மொத்தமாய் மறக்கடித்து அவனை முற்று முழுதாய் உள்வாங்கும் எதுவும் அவன் வாழ்வில் வந்திடாதென.

ஆனால்,வந்து விட்டதே.அவன் நினையாததை எல்லாம் நடத்திக் காட்டி விட்டதே.அது காதலின் பேராற்றல்!

வாகன நெரிசல் ஓரளவு சீரானதும் வண்டியை அவன் மிதமான வேகத்தில் செலுத்த பாதியில் உறக்கம் கலைந்து விட்டது,பாவையவளுக்கு.

கை மறைவில் கொட்டாவி விட்ட படி எழுந்தவளோ மறந்தும் பையனின் புறம் திரும்பிடாதது அவனுக்கு கோபத்தை கிளறிற்று.

"மாயக்காரி..நம்ம பக்கம் கூட பாக்க மாட்டேங்குறா..பிசாசு..நம்மளுக்கு இவ பேசாம இருக்குறது என்னவோ மாதிரி இருக்கு..ச்சே..மாயக்காரி நமக்கு வசியம் ஏதேச்சும் பண்ணிட்டாளோ.." கடுப்பு இழைந்தோடிய குரலில் மெதுவாய் திட்டியவனுக்கு அவளுடன் பேசியே ஆக வேண்டும் என்கின்ற உந்துதல்.

"இசை.."

"ம்ம்.."

"ஒத்த வார்த்தல பதில் சொல்றா..வேணும்னே பழி வாங்கறா..இவளஅஅஅஅஅ" மனதுக்குள் நினைத்து பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது,அவனால்.

"நா திட்டுனேன்னு என் மேல கோபமா இருக்கியா..?" மனதில் அரித்துக் கொண்டிருந்ததை கேட்டு விட மறுப்பாய் தலையசைத்தாள்,அவள்.

"அப்போ எதுக்கு இப்டி பேசாம இருக்க..? நா ஏதாச்சும் உன்ன ஹர்ட் பண்ணிட்டேனா.." பையனின் வார்த்தைகள் சாதாணம் என்றாலும் குரலில் இழைந்தோடிய ஏதோ ஓர் உணர்வது உயிர்த்தொடுவதாய்.

"ம்ஹும்..அப்டி ஏதும் இல்ல.." பதறிக் கொண்டு மறுப்புத் தெரிவித்தாள்,அவள்.

"அப்றம் எதுக்கு பேசாம இருக்க..என்னாச்சு உனக்கு..?" பையனின் முகபாவமே கூறியது,அவள் அப்படி இருப்பது அவனுக்கு துளியும் பிடிக்கவில்லை என்பதை.

"ஒன்னுல்ல.." இயல்பாய் பதில் சொன்னவளுக்கு அவனின் கேள்விகளில் இருந்து எப்படித் தப்பிப்பதென்று தெரியவில்லை.

"ம்ஹும் நீ பொய் சொல்ற இசை..எதுக்கு இப்போ என் கிட்ட பேசாம இருக்க..?" வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அவள் புறம் திரும்பி அவன் கேட்டிட சிரசை தாழ்த்திக் கொண்டவளுக்கு பையனிடம் உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை.

தான் செயல்கள் அவனைக் காயப்படுத்த கூடாது என்று தான் விலகி நிற்பதாய் அவள் கூறின் அவனுக்கும் வலிக்கும் அல்லவா..?
அவன் மனதில் தன்னால் சிறு குற்றவுணர்வும் எழுந்திடுவதை பாவையவள் விரும்பவில்லை.

"சும்மா தலய குனிஞ்சி கிட்டு இருக்காம எதுக்கா இப்டி இருக்கன்னு சொல்லு.."

".................."

"என்னன்னு சொல்லு இசை..நீ எதுக்கு இப்டி இருக்க என்ன தான் ஆச்சு உனக்கு..?"

"அ..அது அன்னிக்கி உங்கள கோவப்படுத்திட்டேன் ல.."

"சும்மா சும்மா கத விடாத உன் கண்ண பாத்தாலே நீ உண்மய சொல்றியா பொய்ய சொல்றியான்னு எனக்கு தெரிஞ்சிடும்..ஸோ உண்மய சொல்லுறது உனக்கு பெட்டர்.." அதட்டலாய்த் தான் சொன்னான்,பையன்.இல்லாவிடின் அவளிடம் இருந்து வார்த்தைகளை கறந்திட முடியாது என்று அவனுக்கு தெரியுமே.

"ஒன்னுல்ல.." மீண்டும் மீண்டும் அவள் தன் எண்ணத்தை சாதிக்க விட்டிடுவானா பையன்..?

"இசை..சும்மா சும்மா என்ன டென்ஷன் ஏத்தாத..என்னன்னு ரீசன சொல்லு.." அழுத்திக் கேட்டதில் அவன் முகம் காட்டிய பாவனைகளை கண்டவளுக்கு உண்மையை உரைப்பதே உசிதம் எனத் தோன்றிற்று.

"அது..நா ..நா பண்ணினதால..நீ..நீங்க ஹர்ட் ஆகிட்டீங்களோன்னு நெனச்சு தான்.." அவள் கூற முடிக்கும் முன்னே கையமர்த்தி தடுத்தான்,பையன்.

அவள் மீது அவன் கொண்டிருந்த பொய்க்கோபம் கூட காற்றில் மாயமாகிப் போன சாயல் அவனிதயத்தில்.இன்னும் எத்தனை ஆழத்தில் அவள் தன் மீதான நேசத்தை அழுத்தி வைத்திருக்கிறாள் என்று கொஞ்சமும் கணிக்க முடியவில்லை,பையனுக்கு.

தான் வருந்தக் கூடாதென வருந்தி அவளையும் வருத்தி அவனைப் பற்றியே யோசித்திடும் அவள் நேசம் யாழவனை மொத்தமாய் கூறு போட மனமெல்லாம் அடைந்து போனது.

மெல்லிய பாரம் மனதைச் சூழ்ந்தாலும் காட்டிக் கொள்ளாதவன் வண்டியைக் கிளப்பி அவளின் அலுவலகத்தின் முன்னே வந்து நிறுத்திட இறங்கப் பார்த்தவளை தடுத்தான்,பையன்.

"இசை.."

"ம்ம்.."

"நா அன்னிக்கி ஏதோ அப்சட்ல இருந்தேன்..அதான் உன் கிட்ட அப்டி பேசிட்டேன்..ரியலி சாரி..நீ எப்பவும் போல என் கிட்ட நார்மலா பழகு..நா திட்டுனேன்னா பதிலுக்கு திட்டு..நீயா ஒன்ன கற்பன பண்ணிகிட்டு உன்ன அப்சட் ஆக்கி எங்களயும் அப்சட் ஆக்காத..நீ என்ன எதுவும் ஹர்ட் பண்ணல இசை..நீயே நெனச்சாலும் உன்னால என்ன ஹர்ட் பண்ண முடியாது..காட் இட்.."
நீளமாய் பேசியவனைக் கண்டு பேய் முழி முழித்தாள்,அவள்

"என்ன பதில காணோம்.."

"ம்ம் சரி.."

"இவ்ளோ நேரம் நார்மலா இருன்னு தான சொல்றேன்..அப்றமும் என்ன..? நா ஏதாச்சும் உன்ன ஹர்ட் பண்ணிட்டேனா..?"

"ம்ஹும்..ம்ஹும்..அப்டி எதுவும் இல்ல சாரே.."

"ம்ம் குட்" என்றவனோ "ப்ரெண்ட்ஸ்" என்று கையை நீட்டிட அவனைப் போலவே யோசிப்பது போல் நடித்து விட்டு கரத்தைப் பற்றி குலுக்கியவளை இரசனையோடு ஏறிட்டன,அவன் விழிகள்.

அவள் கரம் பற்றி குலுக்கியதும் இதயம் வேகமெடுக்கத் துவங்கிட உடல் முழுவதும் அதிர்வலைகள் பரவிற்று.

நட்பில் காதலைத் தேடும் அவளும்..
காதலுடன் நட்பை நாடும் அவனும்..
கொஞ்சம் வித்தியாசம் தான்.அந்த வித்தியாசம் தானே அவர்களின் காதலின் அழகே!

நட்பின் சாயலில் அவர்களிடையே இழைந்தோடுவது காதல் என புரிந்து கொள்ளும் நொடி,காதலில் கசிந்துருகிடுவது தான் நிஜம் போலும்.

வண்டியைத் திருப்பிக் கொண்டு கிளப்பியவனுக்கு உள்ளத்தில் எழுந்த உணர்வலைகள் தாளவில்லை.அவளின் காதலின் ஆழம் உணருகையில் அவனுக்குள் அதே ஆழமாய் வாழ்வின் நிதர்சனமும் துளைத்துச் சென்றிடும்.அது தானே அவளின் காதலை ஏற்க விடாமல் அணையென நிற்கிறது.

அவன் வாழ்வில் சிலது நடந்தேறி இல்லாதிருந்தால் அவள் காதலை ஏற்றுக் கொண்டிருப்பான் என்று நிச்சயம் இல்லை.ஆனால்,அது நடந்திராவிட்டால் நன்றாக இருக்கும் என்கின்ற எண்ணம் முதன் முதலாய் அவன் மனதில் துளிர்த்ததை ஆராயவில்லை,பையன்.இருந்த மனநிலை மாறி கலங்கி நின்றவனின் மனம் தவியென தவித்தது.

இசையிடம் மடி சாய்ந்து ஆறுதல் தேடிய மனதை அடக்கும் வழி தெரியாது தோற்றவனுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு அவள் தானே.ஏனென்றில்லாம் மொத்தத்தையும் அவளிடம் கொட்டித் தீர்க்கத் தோன்றினும் உண்மை தெரிந்தால் தன்னுடன் இருந்து அவள் வாழ்வையும் வீணடித்துக் கொள்வாள் என்கின்ற எண்ணமே அவனை அமைதிப்படுத்தியது.

அவனுக்காக அவளும்..
அவளுக்கென அவனும்..தன்மை மறப்பதை விடவா வேறேனும் காதலாய் மாறிடப் போகிறது..?

"ப்ச்" என சலிப்போடு சொல்லிக் கொண்டு வானொலியை இயக்கி பாடலை ஓட விட அவன் மனதில் அவளுக்கான தேடலை பிரதிபலிப்பது போல ஒரு பாடல்.

"உன் வார்த்தைக்கு முன்னால்…
என் வாழ்வே உன் பின்னால்…
உன் மடியில் எந்தன் கண்ணீா் வழியுமடி…

உன் சோகம் ஒரு மேகம்…
நான் சொன்னால் அது போகும்…
உன் கண்ணீர் ஏந்தும்
கன்னம் நான் ஆகும்…"

பாடலில் வார்த்தைகள் இசையவளின் நினைவுகளை மீட்டிட யாழவனின் உயிர்த்தொட்டு நின்றாள்,இசையவள்.

உயிர்த்தொடும்.

2024.09.14
 
Status
Not open for further replies.
Top