ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யாழின் இசையாய் -கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 23(i)


"உன் சோகம் ஒரு மேகம்..நான் சொன்னால் அது போகும்..உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நானாகும்.." சற்றே சத்தமாய் இதழசைத்து பாடிய படி உடைகளை மடித்துக் கொண்டிருந்தவளை ஒரு கணம் தானாய் உயர்ந்து உரசின,அவன் விழிகள்.

அவளுக்கு பிடித்த பாடல் என்பது அடிக்கடி அவள் தன் கட்டைக்குரலில் பாடிடும் போதே அவனுக்குத் தெரியும்.அப்போதெல்லாம் வெறும் அவளுக்கு பிடித்த பாடலாய் இருந்தது,இப்போது அவனுக்கென அவள் பாடுவதைப் போல் ஆகி விடுவதன் காரணம் தான் என்ன..?

"உனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்குமா இசை..?" மடிக்கணினியின் விசைப்பலகையில் விரல்கள் ஓடித்திரிய அவன் கேட்டதற்கு துள்ளலுடன் பதில் சொன்னாள்,அவள்.

"ஆமா சாரே..ரொம்ப புடிக்கும்..அதுவும் அந்த லிரிக்ஸ் ரொம்ப ரொம்ப நல்லாருக்கும்.." என்றவளோ உடைகளை மடித்து வைத்து விட்டு மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்திட அவள் உருவம் மறையும் பையனின் பார்வை தன்னை பின் தொடர்ந்ததை அறியவில்லை,பாவையவள்.

இப்போதெல்லாம் அப்படித் தான.அவள் பக்கத்தில் இருந்தால் அவனின் காயங்கள் தந்திடும் நினைவுகள் நில்லாது ஓடி ஒளிய அதுவே அவனுக்கு பெரும் இதமாய்.

அவளுடன் இருக்கும் போது அவளைத் தாண்டி அவனால் எதையும் யோசிக்க முடியாது என்கின்ற கட்டத்திற்கு பையன் தள்ளப்பட்டிருந்ததை அவன் இன்னுமே உணரவில்லை.உணர்ந்து தொலைத்தாலும் ஏற்றுக் கொள்வானா என்றும் தெரியவில்லை.

அவனைப் பொறுத்த வரையில் அவளின் அருகாமையில் நித்தம் நிந்தித்திடும் நிதர்சனங்கள் மறக்கடிக்கப்படும் என்றிருக்க அதற்காகவே பாவையவளுடன் பெரும்பாலான பொழுதுகளை கழித்திடுவான்,பையன்.

மொத்தமும் மறக்கும் அளவு அவள் தனக்குள் உடுருவியிருக்கிறாள் என்பதை உணர்ந்து தொலைக்கவில்லை, அந்த கல்லுளி மங்கன்.

காலையில் அவளுடன் கதைத்துக் கொண்டே சமைப்பதாகட்டும் சமையலுக்கு உதவுவதாகட்டும்..
ஆடைகளை அழுத்தி முடிந்த பின்பும் தன்னுடைகளை அழுத்துபவளுடன் கதைப்பதாகட்டும் அவளுக்கு உதவுவதாகட்டும்..
அவள் அறையில் இருந்தால் பின்னூடு வந்த நுழைந்து கொள்வதாகட்டும் இல்லாத வேலைக்காக மடிக்கணினியை திறந்து வைப்பதாகட்டும்..
பசியெடுத்தாலும் பாவையவளின் வருகைக்காக காத்திருதாகட்டும் வந்தவளுக்கும் சேர்த்துப் பரிமாறிய கதைத்த படி அவளுடனே உண்பதாகட்டும்..
உறக்கத்தில் விழும் வரை அவளுடன் கதையளப்பதாகட்டும் அவள் உறங்கிய பின் அவளின் வதனத்தை பார்வையால் வருடிய படி கண்ணயர்வதாகட்டும்..

சொல்லப் போனால் யாழவனின் நாள் முழுக்க இசையவளின் அருகாமையில் தான் என்றாலும் அது பொய்யில்லை.அத்தனை தூரம் அவளின் அருகாமை தேவைப்பட்டது,அவனுக்கும் அவனே உணரா அவள் மீதான காதலுக்கும்.

விலகி நிற்கத் தான் அவன் போராடுவதே.இருப்பினும் அவள் காதலும் உணரா அவனின் காதலும் அவனின் மொத்த போராட்டத்தையும் முறியத்தல்லவா விடுகிறது,சிறிதும் கணக்கின்றி.

அவள் தன்னை விட்டு விலகிச் சென்ற பின்பு தான் இத்தனைக்கும் ஏங்கிப் போவோம் என்று தெரிந்தும் மீதி வாழ்க்கையின் நினைவுகளாய் தன் கொள்கைகளை உடைத்து அவன் இந்த நொடிகளை இரசித்துக் கடத்த முன்னின்றதற்கு அழுத்தமான காரணம் ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.காரணம் காதல்;ஆழ்மனதில் வேர்ப்பிடித்து எழுந்து நிற்கும் அவள் மீதான அவனின் காதல்.அவனின் பயங்களை தாண்டி அவன் வாழ்க்கையை பொக்கிஷமாக்க உந்திடும் அவள் மீதான அவனின் உணராக் காதல்.

இன்றும் அப்படித் தான்.ஏனென்றில்லாமல் அவளுடன் வெளியே சென்று வரத் தோன்றிற்று.அதன் காரணம் ஆராயவும் இல்லை,பையன்.

தாமிருவரும் தனித்து எங்கும் வெளியே பெரிதாய் சென்றிராது இருப்பது அவனுக்குள் பெரும் குறையாய் உறுத்திக் கொண்டே இருந்திடவே இந்த முடிவு.

அவளுக்கோ அவனின் மனது உந்தி தான் வெளியே செல்வதற்கான தீர்மானம் என்று புரியவேயில்லை.

"மாமா தான் நாம அந்நியோன்னியமா இருக்கோம்னு நம்பிட்டாருல்ல சார்..அப்றம் எதுக்கு சாரே திரும்ப வெளில போனும்..?"

பையன் தன்னுடன் நேரத்தை செலவழித்திட விரும்புவதை அறியாமல் அவளும் தன்பாட்டில் புலம்ப பையனும் அதற்கு மறுப்பேதும் கூறிடவில்லை.

தான் தான் காரணம் என்று சொன்னால் அவளாக ஏதும் கற்பனை செய்து கொள்ளக் கூடும் என சிந்தித்து அவனும் அமைதி காக்க பாவையவளுக்கோ அவனின் அமைதி தான் சொல்வதை ஒத்துக் கொள்ளும் ஆமோதிப்பின் வடிவமாய்.

●●●●●●●

தன் முன்னே அமர்ந்து இருந்தவளை அடிக்கடி இமை வெட்டாது வருடித் தொலைத்தன,அவன் விழிகள்.

ஒவ்வொரு முறையும் வித்தியாசமாய் இன்னும் மெருகேறித் தெரிய விழிகள் அவன் பேச்சைக் கேட்பதை அடிக்கடி மறந்து தான் போகின்றன.

"நீங்க எதுவும் சாப்டலயா..?"வாயின் உணவை அடைத்துக் கொண்டு கேட்டவளுக்கு மறுப்பாய் தலையசைத்தான்,அவன்.

"நீ சாப்டு எனக்கு இப்போ பசிக்கல.."

"எதுக்கு பசிக்கல..வீட்ல எப்பவும் இந்த டைம்கு சாப்டுவீங்க தான..ஒரு வேள நைட் டைம்கு ஹெவியா எதுவும் சாப்ட கூடாதுன்னு யோசிக்கிறீங்களோ..அதெல்லாம் ஒன்னும் ஆகாது பாஸ்..சாப்டுங்க.." தன் தட்டில் ஒன்றை அவன் புறம் தள்ளி வைத்திட அவனுக்கு சிரிப்பாய் வந்தது.

"அப்போவும் தெளிவா ஒரு தட்ட தான் தள்ளி வக்கிற..ம்ம்..?" ஒற்றைப் புருவம் ஏற்றி இறக்கி அவன் கேட்டிட திருட்டு முழியுடன் தலை தாழ்த்தி அசடு வழிய சிரித்தவளைக் இரசனையுடன் ஒரு கணம் பார்வையால் தொட்டு விட்டு அவள் கொடுத்த உணவை சுவைக்க பின்னிருந்த கேட்ட சத்ததில் தலையை திருப்பி பார்த்தான்,பையன்.

பின்னே அமர்ந்திருந்த இரு ஆண்களின் பார்வை இசையவள் மீது படிந்திருந்த உச்சிக்கு சினம் பெருகிற்று,யாழவனுக்கு.

விழிகளில் அனல் தேக்கி அவர்களை உறுத்தி விழித்தவனுக்கு இருவரையும் அடித்து விடும் வேகம்.

"புல் ஷிட்ட்ட்ட்ட்.." நீள் நயனங்களின் சிவப்பு பரவிட அழுத்தமாய் ஆட்காட்டி விரலாலும் பெரு விரலாலும் நெற்றியை தேய்த்துக் கொண்டவனுக்கு பொறாமையும் கோபமும் சரி விகிதமாய்.

பட்டென பார்வையை திருப்பி பாவையவளை உரசிட அநியாயத்திற்கு அழகாய்த் தெரிந்தாள்,அவள்.எப்போதும் முடியை பின்னிக் கொண்டே திரிபவள் குளித்து விட்டு ஈரம் காயாததால் சிறு க்ளிப்பினும் அடக்கி விட்டிருந்தவளின் தோற்றம் அவன் விழிகளுக்குள் உயிருள் கரைந்து நின்றதே.

என்ன யோசித்தானோ தெரியவில்லை,ஏறிய கோபத்துடன் "இசை" என்றான்,அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய்.

"என்ன சாரே..?" உணவில் கவனமாய் இருந்தவளுக்கு சுற்றம் சத்தியமாய் உரைக்கவில்லை.

"நீ இந்த சைட்கு வா நா அந்த சைட்கு போறேன்..கம் க்விக்.."

"ஏன் சாரே கஷ்டமா இருக்கா..?" கேட்டுக் கொண்டு அவனிருக்கைக்கு வர அவள் புறம் வந்தவனின் பார்வை அந்த இரு ஆணையும் அமர்த்தலாய் தொட்டது.

இசையவளோ சாப்பிட்டு முடித்து கைகளை கழுவிக் கொண்டு ஓய்வறைக்குள் செல்ல அந்த சந்தர்ப்பத்தை தனதாக்கிக் கொண்டு அந்த ஆண்களின் அருகே வந்தான்,பையன்.

"இனிமே அந்த பக்கம் கண்ணு திரும்பிச்சு முழியோ தோண்டிருவேன்.." முகத்தில் புன்னகையுடன் நிதானமாய் இதயத்தை நடுங்கச் செய்யும் அழுத்தத்துடன் மொழிந்தவனின் விழிகளில் மின்னிய கோபம் இருவருக்கும் பயத்தைக் கிளப்பியது.

விரல் நீட்டி எச்சரித்தவனோ தன்னிடத்துக்கு வந்திட சுற்றம் இருந்த ஓரிருவரின் பார்வை தன் மீது வேறு விதமாய் படிவதைக் கண்டாலும் வெறுமேன தோளை உலுக்கிக் கொண்டான்,அவன்.

அவன் மீது சுமத்தப்பட்ட பொய்ப்பழி இல்லையென்று ஆன பின்னும் அவர்கள் அவன் புறம் தவறு இல்லை என்று நம்பிடவில்லை.அது ஒன்றும் அவனுக்கு புதிதும் அல்ல.

"பணம் இருக்குல தப்ப செஞ்சிட்டு தப்பிச்சு இருப்பான்.."

"காசு நல்லா இருக்கு..தப்பு பண்ணிட்டு அத இல்லன்னு சொல்றதுக்கு இவ்ளோ டைம் அவசியமே இல்லயே.."

பையனின் காது பட பேசியவர்களையே கணக்கெடுக்காது கடந்தவனுக்கு இந்த பார்வை எம்மாத்திரம்..?

"அடுத்தவன் என்ன நெனச்சுப்பான்னு பாத்தா நாம சாகத் தான் வேணும் தாமர..அவனுங்க என்ன நெனச்சாலும் அப்டியே கடந்து போக வேண்டியது தான்.." பாவையவள் தோழிக்கு அடிக்கடி கூறும் அறிவரை பையனின் இதயத்தை தீண்டியல்லவா இருக்கிறது..?

அந்த நினைவு தந்த புன்னகையில் இதழ் இலேசாக பிரிய அமர்ந்திருந்தவனின் முன்னே வந்து அமர்ந்தவளுக்கு அவனின் புன்னகையை கண்டு தானாக இதழ்களில் மென்னகை நெளிந்தது.

"என்ன பாஸ் தனியா சிரிக்கிறீங்க..?"

"சும்மா தான்.." என்றவனின் இதழ்களில் ஓடிய புன்னகையில் மாற்றமில்லை.

"போங்க சாரே வர வர ரொம்ப டிஃபரன்ட் தான் நடந்துக்குறீங்க..என்னன்னும் புரில.."

"டிஃபரன்டா நானா நோ நோ..அப்டி ஏதும் இல்ல.." தன் பிடியில் நின்றவனுக்கு அவளின் வார்த்தைகளை புறந்தள்ளவும் முடியவில்லை.

"ஆமா என்ன என்ன டிஃபரன்டா நடந்துக்குறேன்.." அவளிடம் கேட்டவனுக்கு இதயம் படபடத்தது.

அவன் நிம்மதியாய் நொடிகளை இரசித்து வாழ்கிறான் என்று அவன் இருக்க அவளோ அவன் மாறியிருக்கிறான் என்று கூறுவதை ஏற்றுக் கொள்வானா அந்த கல்லுளி மங்கன்..?

"அது ரொம்ப.." அவள் ஆரம்பிக்கும் போதே பையனின் அலைபேசி ஒலித்திட பாவையவளின் பேச்சு பாதியிலேயே தடைப்பட்டது தான் விதியின் சதியோ..?

அவள் மட்டும் பையனின் மாற்றங்களை போட்டுடைத்து இருந்தால் காதலை உணர்ந்து கொள்ள இன்னும் தாமதமாக்கி இருக்க மாட்டானோ என்னவோ..?
யாரைப் பிழை சொல்ல..?

விதி வலியது.

"இரு ஒரு நிமிஷம் வர்ரேன்.." அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல பாவையவளின் பார்வை சுற்றும் முற்றும் அலசிட அப்போது தான் அவளுக்கு மூச்சடைத்திட வைப்பது போல் யாரோ ஒரு பெண்ணுடன் உள் நுழைந்தான்,ப்ரித்வி.

ப்ரித்வியைக் கண்டதும் உடல் அதிர தூக்கி வாரிப் போட்டது,அவளுக்கு.விழிகள் விரிந்து கொள்ள பயத்தில் கால்கள் நடுங்கின.

ப்ரித்விக்கோ அந்த பதட்டம் எதுவும் இல்லை போலும்.விசிலடித்த படி நடந்து வந்தவனுக்கு பாவையவளைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.

"அரசி இங்க பண்ற..ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.."

"என் புருஷனும் வந்திருக்காரு டா.." அவன் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் அவள் போட்டுடைத்திட அவன் முகத்தில் மெல்லிய கலவரம்.

"என்ன சொல்ற நீ..?"

"ஆமா நா வேற உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய்யா சொல்லிருக்கேன்..உனக்கு தெர்யும்ல..ப்ளீஸ் எப்டியாவது அவரு கண்ல படாம தப்பிச்சிரு..உன்ன கெஞ்சி கேக்கறேன்.." அவள் அழுகுரலில் கூறிட அவளை இன்னும் அதிர வைக்கும் படியாய் அமர்த்தலான நடையுடன் உள்ளே நுழைந்தான்,பையன்.

ப்ரித்வியுடன் வந்திருந்த அவனுடன் அலுவலகத்தில் பணிபுரியும் தோழி தீபாவுக்கு எதுவும் புரியவில்லை.இருவரையும் மாறி மாறி பார்த்தவளுக்கு மண்டை குழம்பியது.

"அந்த ஃபோட்டோவ இருந்த சம்யுக்தாவ தான் உன்னோட வைஃப்னு அவர் கிட்ட சொல்லி வச்சுருக்கேன்..அன்னிக்கி என்ன பொய் சொன்னேன் சொன்னேன்ல உன் கிட்ட..எப்டியாச்சும் சமாளிங்க ப்ளீஸ்..அவர் கிட்ட வந்துட்டாரு.." பதட்டத்துடன் கூறியவள் நிலமையை சமாளிக்க விடயத்தை சுருக்கமாய் கூறியதே அதிசயம்.

"சரி நா பாத்துக்கறேன்.." நிலமையை கையில் எடுத்துக் கொண்ட ப்ரித்வியோ தீபாவிற்கு கண்ணைக் காட்ட அவளும் எதுவும் புரியாவிடினும் மேலும் கீழும் ஆட்டி வைத்தாள்,சிரசை.

பையன் தம்மை நோக்கி வருவது தெரிந்து முகத்தை இயல்பாகிக் கொண்டவனோ பாவையவளிடம் சாதாரணமாக பேசிட அவளும் பதில் சொல்வது போல் நடித்தாலும் முகத்தில் பயம் அப்பட்டமாய்.

"இப்டி பேயக் கண்ட மாதிரி இருக்காத அரசி..நார்மலா இரு.." அதட்டிட தன் முக பாவத்தில் தெரிந்த பயத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டாள்,அவள்.

பையனுக்கு வெளியே இருக்கும் போதே ப்ரித்வி வருகை புரிந்திருக்க பாவையவளின் நடவடிக்கைகளை பார்த்த படி வெளியே நின்றிருந்தான்.தூரமாய் இருந்த படியால் அவளின் முகபாவம் பெரிதாய் பிடிபடவில்லை என்றாலும் ஏனோ ப்ரித்வியுடன் அவள் பேசியது அவனுக்கு பிடிக்கவில்லை;அறவே பிடிக்கவில்லை.பொறாமையாய் இருந்தது.

உள்ளுக்குள் எழுந்த பொறாமைத் தீயை அடக்க முடியாது போயிருக்கத் தான் வணிக விடயம் தொடர்பான முக்கியமான அழைப்பை கூட பாதியில் துண்டித்து விட்டதே.

சரியாய்ப் பார்த்தால் அவள் மீது அவனுக்கு எந்த உணர்வும் இல்லையென்றால் இருவரையும் பேச விட்டு ஆராய்ந்து உண்மையை கண்டு பிடித்திருக்கத் தானே வேண்டும்..?
அதை செய்ய இயலாது தடுத்தது,காதல் தானே.

அழுத்தமான நடையுடன் தம்மை நோக்கி வருபவனைக் திரும்பிப் பார்த்த ப்ரித்விக்கும் பயம் தான்.இருப்பினும் சாதுர்யமாய் மறைத்துக் கொண்டான்,உள்ளம் நடுங்க.

"அரசி இது தான் உன்னோட ஹஸ்பண்டா..? ஹாய் சார்..ஐ அம் ப்ரித்வி" பையன் தன் முன்னே நின்றதும் போலியாய் கேட்டுக் கொண்டு கரத்தை நீட்ட அதைப் பற்றி குலுக்கினாலும் பையனின் முகத்தில் கொஞ்சமும் புன்னகை இல்லை.

"வாங்க ப்ரித்வி கொஞ்சம் உக்காந்து பேசலாம்.."பையன் அழைத்திட பார்வையோ இசையவளின் முகத்தில் தான் நிலைத்திருந்தது.

அவளின் வதனமோ பயத்தில் வெளிறிப் போயிருக்க அவளின் முகத்தில் தென்பாடது போன கலக்கத்தின் சுவடுகள் பையனுக்கு அவள் கூறியது பொய் என்று பறைசாற்றுவதாய்.

அவள் பொய் சொல்லியிருக்கிறாள் என்று தெளிவாய் தெரிந்த பின் அவனுக்கு கோபம் எழாமல் உள்ளுக்குள் நிம்மதியின் நீர்வீழ்ச்சி வழிந்தோடக் காரணம் தான் என்ன..?

காதலின்றி வேறொன்றை வார்த்தைக்கேனும் காரணம் எனக் கூறினால் தகுமா என்ன..?

"என்ன இசை உன் ப்ரெண்ட உக்காருன்னு கூட சொல்ல மாட்டியா..?" பையனோ "ப்ரெண்ட்" என்கின்ற வார்த்தையை அழுத்திக் கேட்ட விதத்தில் ப்ரித்விக்கு ஏதோ புரிவது போல்.

பாவையவளின் அருகே அமரப் போன தீபாவை ப்ரித்வி கை பிடித்து நிறுத்த அதற்குள் பாவையவளின் அருகே சென்று அமர்ந்தே விட்டான்,பையன்.

அவர்கள் இருவருக்கும் நேரெதிரே ப்ரித்வியும் தீபாவும் அமர்ந்து கொண்டிட பையனின் கூர்ப்பார்வை ப்ரித்வியவனை கூறிட்டது.

"ம்ம் எதுக்கு எல்லாரும் சைலன்டா இருக்கீங்க..?இசை என்ன முன்ன பின்ன தெரியாதவங்க வந்து இருக்கற மாதிரி சைலன்டா இருக்க..நார்மலா பேசு..ஓகே ஏதாச்சும் ஆர்டர் பண்ணலாம்..என்ன பண்ணலாம்னு சொல்லுங்க..ஆமா இது யாரு ப்ரித்வி..?"

"இது என்னோட வர்க் பண்ற தீபா.." என்றவனுக்கு முன்பு கண்ட யாழ்வேந்தன் இப்போது இல்லை என்கின்ற எண்ணம்.

பையனின் நடத்தைகளில் இருந்த மாற்றம் பாவையவளுக்கு புரியவில்லை என்றாலும் ப்ரித்விக்கு நன்றாக தெரிந்தது.

உரிமையுடன் இசையவளின் அருகே அமர்ந்து கொண்டதும் தோழன் என்று அழுத்திச் சொல்கையில் விழிகளில் தென்பட்ட கோபமும் அவனின் முகத்தில் ஏறியிருந்த அனலும் எதையோ மௌனமாய் சொல்லிக் கொண்டிருந்தன.பையனின் மன எண்ணத்தை ஆராய விரும்பினான்,ப்ரித்வி.

"எப்டி இருக்க இசை..?" குரலை கலக்கமாய் வைத்துக் கொண்டு முகத்தில் வருத்தத்தை தேக்கி வினவியவனின் கேள்வியை விட அவனின் அழைப்புத் தான் பையனுக்கு உள்ளுக்குள் தீ மூட்டியது.

இசையவளோ பேயறைந்தது போல் ப்ரித்வியைப் பார்த்திட அவனோ அவளின் அதிர்ச்சியை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.

"என்ன இசை இப்போ பதில் சொல்ல இவ்ளோ யோசிக்கற..?" குரலில் வருத்தம் தோய்த்து மீளக் கேட்டிட பையனின் விழிகளில் செந்தணல்.

"அரசி நல்லா தான் இருக்காங்க ப்ரித்வி.." வார்த்தைகள் இயல்பானவை என்றாலும் குரலில் கோபம்.மீண்டும் அவளை "இசை" என்று அழைத்துப் பாரேன் என்கின்ற மறைமுக மிரட்டல் விழிகளில்.மீளவும் அவன் "இசை" என்று அழைத்திருந்தால் பையன் அறைந்தே விட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அத்தனை உரிமையுணர்வு அவனில்.

"பார்ரா இசைங்குற பேர இவருக்கு பட்டா போட்டு கொடுத்து இருக்குற மாதிரி பிஹேவ் பண்றாரு..பட் இன்ட்ரஸ்டிங்.." என்று மனதால் நினைத்தவனுக்கோ பையனை சீண்டத் தான் மனம் உந்தியது.

"நீ நல்லாருக்கன்னு உன் ஹஸ்பன்ட் சொல்றப்போ நிம்மதியா இருக்கு இ..அரசி.." வேண்டுமென்றே "இசை" என அழைக்க வந்தவன் பையன் மேசையில் உணவுக்கென வைக்கப்பட்டிருந்த சிறு கத்தியை கையில் எடுத்துக் கொண்டதும் விளிப்பை மாற்றியிருந்தான்,வெகுவாய் பயந்து.

பயந்தாலும் அவன சீண்டுவதென்றே உறுதி கொண்டு குருட்டு நம்பிக்கையில் பேசினான்,அவன்.

"ஆனா நா நல்லா இல்ல அரசி..அவசரப்பட்டு உன்ன விட்டுட்டு கல்யாணம் பண்ணிட்டேன்னு தோணுது.." பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு மொழிந்திட இசையவளின் விழிகள் அதிர்வைத் தாங்கி நிற்க யாழவனின் கோப நரம்புகள் புடைத்தெழுந்தது.

விழிகளில் போலிக்கலக்கம் தேக்கி இசையவளை பார்த்திருப்பவன் நடிக்கிறான் என்று ஆழ் மனம் கூவினாலும் அதையும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை,பையனால்.

அதுவும் ப்ரித்வி அவள் மீது வீசிய பார்வையில் தவறு இல்லையென்று புரிந்தாலும் மனதில் உரிமையுணர்வு தலை விரித்தாடியது.

"அதுக்கு இசை என்ன பண்ணுவாங்க ப்ரித்வி.." அமர்த்தலான பார்வையுடன் சற்றே அவள் புறம் சரிந்து அவளிருக்கையில் கரத்தை நீட்டி அவளின் தோளைப் பற்றிக் கொண்டவனின் இதயம் வேகமெடுத்தது,அவளுக்கென.

உயிர்த்தொடும்.

2024.09.15
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 23(ii)


தன்னிருக்கையின் பின்னே கரத்தை படரவிட்டு தன்னைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனின் செயலில் திடுக்கிட்டவளோ பக்கவாட்டாய் பையனின் வதனத்தை ஏறிட ஒற்றைக் கண் அடித்து "சும்மா" என்று மெதுவாய் இதழசைத்தான்,பையன்.

அவனுக்கோ அவளருகில் இதயத் துடிப்பும் கூடிற்று.சுவாசமும் அடைத்திற்று.இருப்பினும் இயல்பாய் காட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தான்,தன் திணறலை மறைத்து.

அவளுக்கோ அவன் சைகை செய்தது விளங்கியது என்னவோ வேறு அர்த்தத்தில் தான்.ப்ரித்வியின் முன்னும் அவனை ஏமாற்றுவதற்காக நடிக்கிறான் என்று நினைத்துக் கொள்ளலானாள்,அவசரக்காரி.

"இங்கயும் ஆக்டிங்கா.. முடிலடா சாமி.." ஆயாசமாய் நினைத்தவளுக்கு புரிந்திட வாய்ப்பில்லை,அது பையனின் நிஜமான உரிமையுணர்வு என்பது.

பையனின் தோள்வளைவில் அவளின் தோற்பட்டை உரசிட நெருங்கி அமர்ந்திருந்தவனை சங்கடத்துடன் பார்த்தவளுக்கு விலகி அமரவும் வழியில்லை.அத்தனை இறுக்கமாய் அவளின் தோற்பட்டையை பற்றியிருந்தன,அவனின் நீண்ட விரல்கள்.

அந்த ஸ்பரிசம் உணர்த்திச் சென்ற அழுத்தமே போதும்,அவள் மீது அவன் மனதில் நிலைபெற்றிருக்கும் உரிமையுணர்வை மௌனமாய் அவளுயிருக்குள் கடத்திட.

ப்ரித்விக்கோ ஏகபோக குஷி.அவன் ஊகித்தது போலவே இருந்த பையனின் நடவடிக்கைகளில் இசையவள் உணரா விடயங்களை புரிந்து கொண்டிருந்தான்,அவன்.

"இ..அரசியால.." என்பதாய் துவங்கும் முன்னமே "ஆஆஆஆ" என்று அலறிவிட்டிருந்தான்,அவன்.

"ப்ரித்வி என்னாச்சு..?" தீபாவும் பாவையவளும் ஒரு சேரக் கேட்டிட பதிலேதுமின்றி இருந்தவனின் விழிகள் பையனையே சுட்டிட அவனோ இருபுறமும் தலையசைத்தான்,அசட்டையாய்.

"சாரி கால தவறுதலா மிதிச்சுட்டேன் போல இருக்கு.." குரலில் வருத்தத்தின் சாயலேயின்றி மன்னிப்பு கேட்டவனின் தொனியிலேயே சிறு திமிர்.

"தவறுதலாவா..? அடப்பாவி இன்னும் கொஞ்சம் விட்ருந்தா வெரல் ஒடஞ்சிருக்கும்.." பையனை மானசீகமாய் திட்டியவனுக்கோ தன் வாயால் வந்த வினை என்று நினைவில் வர தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான்.

முதலில் வேண்டுமென்று பையனை கடுப்பேற்ற தான் "இசை" என்று அவளை விளித்ததே.ஆனால்,இப்போது தற்செயலாய் உரைத்திட அதில் கடுப்பாகி காலை மிதித்து விட்டிருந்தான்,கேடி.

காலில் மிதி வாங்கிய பின்னர் தான் இன்னும் அவனை வைத்து செய்ய வேண்டும் என்று எண்ணினான்,ப்ரித்வி.பாவம்,அது அவனுக்கே திரும்பப் போவது தெரியாதே.

"அரசியால எதுவும் பண்ண முடியாது..பட் ஐ மிஸ் ஹர் அ லாட்..ஏதோ சிட்டுவேஷன் கல்யாணம் பண்ணிட்டேன்..பட் ஐ மிஸ் ஹர்ர்ர்ர்ர்.." அவள் மனமுருகி சொல்வது போல் சொல்ல பையனின் விழிகளில் இன்னும் அனல் ஏறிற்று.

"இந்த பக்கி எதுக்கு இவ்ளோ ஓவரா பர்ஃபோம் பண்ணிட்டு இருக்குன்னு ஒன்னும் புரிலியே.." அகத்தில் ஆயிரம் கேள்விகள் குடைந்தெடுக்க விழித்தவளோ பையனின் வதனத்தை விழிகளால் உரசிட அவனின் கோபம் கண்டு பயமும் குழப்பமும் ஒருமித்து.

"ஈஸ் இட்ட்ட்ட்..? பட் இசை உங்கள ஒரு செக்கன் கூட மிஸ் பண்ணதில்ல..அப்டி தான இசை..?" பையனின் விளிப்பில் தன் எண்ணத்தில் இருந்து கலைந்தவளோ தலையாட்டி வைத்திட ப்ரித்விக்கோ இருவரையும் இரசிக்கத் தான் தோன்றிற்று,ஒரு கணம்.

"நெஜமாவே நீ என்ன மிஸ் பண்ணலயா அரசி..?" கை தேர்ந்த கலைஞன் போல் போலிக் கண்ணீருடன் அவன் நாடகமாடுவது தெரிந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை,பையன்.ஏறும் கோபத்தையும் கொஞ்சமும் குறைத்திடவுமில்லை.

"இல்ல ப்ரித்வி..கண்டிப்பா அவங்க உங்கள மிஸ் பண்ணல.." அவன் ஒருமையின் விளிப்பதை சுட்டிக் காட்டி அவன் கூறியதில் ப்ரித்வியின் புருவங்கள் மெச்சுதலாய் ஏறி இறங்கின.

அவனின் விழிகளோ வேகமெடுத்து இருக்கும் இதயத் துடிப்புக்கு பயந்து இடது நெஞ்சில் அழுத்தமாய் பதிந்திருக்கும் கரத்தையும் கவனிக்கத் தவறிடவில்லை.

"பார்ரா ஒத்தைல பேசுனாலும் இந்த ஆளுக்கு கடுப்பாகுது..இது கண்டிப்பா முன்ன இருந்த வேந்தன் இல்லயே.."

"என்ன ப்ரித்வி தனியா யோசிச்சுகிட்டு இருக்கீங்க..?ஏதாச்சும் கற்பனயா..?" எள்ளலில் கரைந்த குரலில் வந்து செவியேறிய வார்த்தைகளுக்கு அவனும் பதில் கொடுத்தாக வேண்டுமே..?

"கற்பன ஒன்னும் இல்ல மிஸ்டர்.வேந்தன் சும்மா தான்..சப்போஸ் ஒருவேள நா கல்யாணம் ஆகாம வந்து இசைய எனக்கு கட்டிக் கொடுங்கன்னு கேட்ருந்தா நீங்க என்ன பண்ணியிருப்பீங்க.." பையனை ஆழம் பார்க்க அவன் கேட்டிட பையனுக்கு சுர்ரென்று ஏறியது.

"அப்டியே உண்மயா நடந்து எவனாச்சும் வந்தா கட்டி வச்சிருப்பாரு" மனதுக்குள் நினைத்தவளோ மறந்தும் எதுவும் பேசிடவில்லை.

"ஒன்னும் பண்ணியிருக்க மாட்டேன்..அப்டியே உங்கள திருப்பி அனுப்பி வச்சிருப்பேன் நாலு பேர் தூக்கிட்டு போற மாதிரி.." முதலில் சத்தமாகவும் பின்னர் பையன் மெதுவாய் ப்ரித்விக்கும் மட்டும் தெரியும் படி அழுத்தி இதழசைக்கவும் முன் பாதி மட்டும் தான் விழுந்தது,பாவையவளின் செவிகளில்.

"அதான பாத்தேன் இவரே எப்படா என்ன தள்ளி விடலாம்னு பாத்து கிட்டு இருக்காரு..இதுல ஏதாச்சும் பண்ணி கிழிச்சிருவாரு.." முணுமுணுத்தவளுக்கோ பையனுக்கு தன் மீது காதல் வந்திடவே வந்திடாது என்கின்ற ஆழமான எண்ணம்,தன்னில் அவன் வீழ்ந்து கிடப்பது தெரியாமல்..ம்ஹும்..ம்ஹும்..இல்லை..இல்லை,புரியாமல்.

அவனின் மாயக்காரியின் மரமண்டைக்கு எதுவும் விளங்கவில்லை என்றாலும் முழுதாய் மயங்கி விழுந்து கிடப்பவனின் வார்த்தைகள் முன்னிலையில் இருந்த அவளின் முன்னால் காதலன் என சித்தரிக்கப்பட்டிருப்பவனுக்கு நன்றாய் புரிந்திட விழிகள் விரிந்து நின்றன.

"என்ன கொல பண்ற ரேஞ்சுக்கு பேசறாரு.."

"என்ன ப்ரித்வி பேச்சவே காணோம்.."

"ஒரு வேள அரசி என்ன அப்பவும் லவ் பண்ணிகிட்டு இருந்தான்னா என்ன பண்ணியிருப்பீங்க..?"அவன் வார்த்தைகளை முடிக்கும் முன்னமே சட்டென இடை வெட்டினான்,பையன்.

"இசை உங்கள ஒரு நாளும் லவ் பண்ணிகிட்டு இருக்க மாட்டாங்க..பண்ணியும் இருக்க மாட்டாங்க.."

"‌என்ன வேந்தன் சார்..முன் பாதிய சத்தமாவும் அதுக்கப்றம் வாய்க்குள்ளாளவும் சொல்றீங்க..ஒன்னும் புரியல.."

"ஓகே வெய்ட் தெளிவா புரிய வச்சிர்ரேன்.." வில்லத் தொனியில் மொழிந்தவனோ இசையவளின் புறம் திரும்பிட அவன் விழிகளில் வினாக்கள் தொக்கி நின்றன.

"முட்ட முழி முழிச்சே நம்மள ஏதோ பண்ணுவா.." அந்த ரணகளத்திலும் அவள் விழிகளுக்குள் விழுந்து மீள மறந்திடவில்லை,கேடி.

"இசைமா நீ தான் ரெஸ்ட் ரூம் போனும்னு சொல்லிட்டு இருந்தியே..பொய்ட்டு வாம்மா செல்லம்.." நினைவுபடுத்துவது போல் அவளுக்கு கட்டளையிட அவளும் பயந்து பயந்து இருக்க முடியாதென்பதால் இது தான் வாய்ப்பென்று ஓடி விட அவளின் பின்னூடு தீபாவையும் நகர வைத்தது,பையனின் அழுத்தமான பார்வை.

"நாம கொஞ்சம் வெளில பொய்ட்டு பேசலாமே ப்ரித்வி.." தேனொழுகும் குரலில் சொல்லும் போதே ப்ரித்வி சுதாரித்துக் கொண்டாலும் தப்பித்திடும் வாய்ப்பு தான் இல்லை.

"இனிமே இசைன்னு அவங்கள கூப்ட கொன்னுருவேன்.." விரல் நீட்டி எச்சரித்த பையனோ அவனின் வாயிலேயே ஒன்று போட சத்தியமாய் வலித்தது,ப்ரித்விக்கு.

"நா இசைன்னு தான் கூப்டுவேன்..இசை இசை இசை.." வலித்ததால் அவனும் வீம்பு பிடித்துக் கொண்டு ஒற்றைக் காலில் வம்புக்கு நின்றிட வாயிலேயே அடிகள் விழுந்தது,அவனுக்கு.

"அவங்க எனக்கு மட்டுந் தான் இசை..நாட் ஃபார் யூ காட் இட்..?" அடிக்குரலில் சீறியவனின் விழிகளில் அவளுக்கான காதல் நிரம்பவே.அவள் உயிர் மொத்தமாய் கரையும் அளவுக்கு.

"வாட் ஆர் யூ ஜோக்கிங்க்..? அவ என்னோட எக்ஸ்..?" அவன் கூறி முடிக்கும் முன்னமே பையனின் ஐ விரல் தடங்களும் அவனின் கன்னத்தில் பதிய ப்ரித்வியின் சட்டைக் காலர் பையனின் கைப் பிடிக்குள் சிக்கிக் கொண்டது.

"ஒரு தடவ சொன்னா உன்னால புரிஞ்சிக்க முடியாதா..? ஷீ ஈஸ் மை வைஃப்..உங்களுக்குள்ள பாஸ்ட்ல லவ் இருந்தாலும் இல்லன்னாலும் ப்ளா ப்ளா ப்ளா..நவ் ஷீ ஈஸ் மை வைஃப்..என்ன கேட்ட இசை உன்ன லவ் பண்ணுனா என்ன பண்ணுவேன்னா..?"

"................."

"இசைய பத்தி உன்ன விட எனக்கு நல்லா தெர்யும்..அவங்க கண்டிப்பா உன்ன அப்டி லவ் பண்ண மாட்டாங்க..அப்டியே பண்ணினாலும் அவங்க மனச எப்டி மாத்தி என் வைஃபா மாத்திக்கனும்னு எனக்கு தெர்யும்..காட் இட்..? நல்லா மைண்ட் ல வச்சிக்கோ நவ் ஷீ ஈஸ் மை வைஃப்..இந்த யாழோட வைஃப்..யாழோட இசை மட்டுந்தான்..இனிமே அவங்கள இசைன்னு கூப்புர்ரது பொய்யாக் கூட இப்டி கேள்வி கேக்கறது நடந்துச்சுன்னு வை..உன்ன தொலச்சி கட்டிருவேன்.." பற்களை நறநறத்த படி பேசியவனோ இசையவளின் "சாரே" என்கின்ற விளிப்பைக் கேட்டு நொடியில் தன் முகபாவத்தை மாற்றிக் கொள்ள ப்ரித்வியின் முகத்தில் அதிர்வின் ரேகைகள்.

"ஏதாச்சும் அவங்க கிட்ட சொன்னன்னு வை..அப்றம் இருக்கு உனக்கு.." அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாய் காதோரம் கர்ஜித்தவன் இயல்பாய் நின்று கொண்டிட அவளைக் கண்டதும் அவனின் விழிகளில் ஏறிய துள்ளிலும் இதழ்களில் ஒட்டிக் கொண்ட புன்னகையும் வதனம் தன்னுள் சேர்த்துக் கொண்ட விகசிப்பும் யாழவனை இன்னும் அழகாகக் காட்டியது.

அந்த நொடி நேர மாறுதல்..அது தான் எத்தனை அழகு..?சட்டென தன்னை அவளுக்கென மாற்றிக் கொண்டு விட்டானே,கள்வன்.கேடி தான்..கேடியே தான்.

"சாரே இங்க என்ன பண்றீங்க..?" அவனைத் தேடி களைத்துப் போய் மூச்சிறைத்தவாறு வினவியளின் விழிகளை மிச்சம் மீதியின்றி இரசித்து தொலைத்தன,பையனின் விழிகள்.

அவனை சுற்றி எப்போதும் வட்டமடித்துக் கொண்டிருக்கும் எண்ணங்கள் யாவும் அவளின் அருகாமையிலும் பார்வையிலும் திக்கற்று சிதறி தொலைவாய் சென்று விழுந்து தொலைந்திடக் கண்டான்,பையன்.

"க்கும்.." ப்ரித்வி தொண்டையைச் செரும தன்னிலை மீண்டவனோ பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து கோதிக் கொண்டிட விழிகளை ப்ரித்வியை முறைத்து தள்ளின.

"இல்லமா..ப்ரித்வி தான் வாங்க போய் வெளில காத்தாட நின்னுகிட்டே காத்தாட பேசலாம்னு கூட்டிட்டு வந்தாரு.." பவ்யமாய் பதில் சொன்னவனை அவளிருந்த குழப்பத்தில் நம்பித் தான் தொலைத்தாள்,அவளும்.

"சரி ப்ரித்வி..நாங்க அப்போ பொய்ட்டு வர்ரோம்.." என்றவனோ இசையவளை தோளுடன் அணைத்து கொண்டே நடந்திட விடுபட முயன்று தோற்றாள்,அவள்.

கொஞ்சம் அமைதியாய் இருந்திருக்கலாம்..
அவளுக்கென தடதடவென ஓடும் அவனின் இதயத் துடிப்பை கேட்டிருக்கலாம்..
அவள் அருகாமையில் விடுபடும் மூச்சின் வேகத்தை அறிந்திருக்கலாம்..
தோற்பட்டையை பிடித்திருந்த விரல்களி் ஓடும் மெல்லிய நடுக்கத்தை உணர்ந்திருக்கலாம்..
இயல்பாய் காட்டிக் கொள்பவனின் இயல்பின்றிய தன்மையை கண்டு கொண்டிருக்கலாம்..
அவள் கொஞ்சம் அமைதியாய் நிதானமாய் இருந்திருந்தால்.

"சாரே.."

"ம்ம்.."

"கைய எடுங்க எல்லாரும் பாக்கறாங்க.." அவள் சங்கடமாய் சொல்லிட அவனுக்கோ சத்தியமாய் அவள் பேச்சை மீறத் தான் தோன்றியது.அதுவும் அந்த நொடிகள் அவனுக்கு வெகுவாய் பிடித்தும் இருந்ததே.

இன்னும் விடுபடாது இருந்த விரல்களை பார்த்தவளுக்கோ சிறு அவஸ்தை.

"சாரே அந்த ப்ரித்விக்கு இவ்ளோ தூரம் கண் தெரியாது.." அவளே எடுத்துக் கொடுக்க அதற்கு மேலும் வேறேதும் மொழிந்திடவா வேண்டும் பையனுக்கு..?

"சொல்லத் தெரியாது இசை..நமக்கு எதுன்னாலும் சேஃப்டி தான் முக்கியம்..நடிக்கிறத காருக்கு போற வர கச்சிதமா நடிக்கலாம்.." அவளை அமைதிப்படுத்தியவனுக்கு தன் மனம் செல்லும் பாதை புரியவே இல்லை.

பாதங்கள் எட்டு வைத்திட விழிகளோ அவளைத் தான் சுழன்று உரசி தனக்குள் பொதிந்து கொண்டிருந்தன.இன்னும் காதலை உணரவில்லை,அவன்.
ஆனாலும்,அவள் காதலை உணர்கிறானே.

புரிந்து உரைத்திட இயலாமல் அவன்..
புரிந்தும் மறைத்திட முடியாமல் அவள்..

●●●●●●●

அன்று கோயிலில் இருந்து வீட்டுக்குச் சென்றவளுக்கு மனதுக்குள் பெரும் நிறைவு.

காகித மடிப்பில் குங்குமம் வந்ததை முதலில் தோழிக்கு தெரிவித்தவளுக்கு அதன் பிறகு திருமணத்துக்கு மறுப்பு சொல்ல எந்த காரணமும் இருக்கவில்லை.

அலுவலகத்தில் பணி புரியும் போதெல்லாம் பையனைப் பற்றி மற்றவர்கள் கதைக்கும் போதெல்லாம் அமைதியாய் இருப்பவளுக்கு அடி மனதில் மட்டும் சிறு சந்தோஷப் பூ துளிர்ப்பதாய்.

இதுவரை அவனை புகைப்படத்தில் கூட கண்டதில்லை,அவள்.பெண் பார்க்க வரும் நேரம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.

பையனின் மீது காதலெல்லாம் இல்லை.ஈர்ப்பென்றும் சொல்லிட இயலாது.ஏதோ ஒரு பிடிப்பு.

திருமணம் பேசிடும் போது யாரோ ஒருவரின் மீது மட்டும் இனம் புரியாமல் ஒரு பிடிப்பு ஏற்படுமே.அந்த பிடிப்பு தான் அவளுக்கும்.

இதுவரை கண்டிடா யாழவனின் மீது மெல்லிய பிடிப்பு,இசையவளுக்கு.இதற்கு முன்னர் யார் மீதும் ஏற்பட்டிடா பிடிப்பொன்று.

இருந்தாலும் அந்த பிடிப்பை கூட கண்டு அஞ்சினாள்,அவள்.நிச்சயம் என்றொன்று நடந்திடும் வரை அந்த பிடிப்பை கூட சாதாரணமாய் வைத்திருக்க முயன்றாலும் மனமோ கொஞ்சம் அவளின் பேச்சை புறக்கணித்தது.

பாவையவள் வீட்டில் திருமணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க இரு வீட்டினரும் அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை.ஆனால்,என்ன உரியவனிடம் மட்டும் விடயம் தெரிவிக்கப்படாது இருந்தது தான் கவலைக்குரிய விடயம்.

ரத்னவேலுக்கு ஏக சந்தோஷம்.அவருமே பையனைப் பற்றி பேசுகையில் அவள் முகத்தை கூர்ந்து அவதானிப்பதும் அவளை மென் சிரிப்பால் சீண்டுவதாகவும் இருக்க அப்படியிருந்தும் பாவையவளோ தன்னை இயல்பாகத் தான் காட்டிக் கொண்டாள்.அவளுக்கு மனதில் முழுதான நம்பிக்கை இன்னும் எழுந்திருக்கவில்லை.

அன்றும் அப்படித் தான்.

அலுவலகத்தில் செவ்வனே தன் பணியை செய்த படி கணினியில் ஆழ்ந்து இருந்தவளின் தோளை மெல்லச் சுரண்டினாள்,உடன் பணி புரியும் பெண்ணொருத்தி.

என்னவென்று விழியுயர்த்தி கேட்டவளின் காதுகளில் மெதுவாய் கிசுகிசுத்தாள்,அவள்.

"அரசி..நம்ம ரத்னவேல் சாராட பையன் இங்க வந்து இருக்காரு..இன்னிக்கி சும்மா பாக்கறதுக்கு வந்து இருக்காரு..அவரும் அவரோட தங்கச்சியும் இன்னொரு பொண்ணும் வந்து இருக்கு.."

"சரி நீ போ நா வர்ரேன்.." அவள் கிளம்பிட பாவையவளுக்கு எழுந்து செல்ல ஏனோ மனமில்லை.சில நொடிகள் தனக்குள்ளேயே உழன்று பின்னர் கீழிறங்கியவளுக்கு அங்கு நின்றிருந்தவனை கண்டதும் விழிகளில் விரியாமல் இல்லை.

"இது தான் டி ரத்னவேல் சாரோட பையன்.." தோழியொருத்தி சத்தமாய் கூறிட ஏனோ இதயம் திடுமென எம்பிக் குத்தது.

முதல் பார்வை மட்டும் தான்.அதன் பின் பார்க்கக் கூட இல்லை,விடுவிடுவென பாராமல் தன்னிடத்துக்கு வந்தவளுக்கு அன்று தன்னை காப்பாற்றியது பையன் தான் என்று நினைவில்லாது போகுமா என்ன..?

அன்றில் இருந்து இரண்டு நாட்களுக்கு பையனின் நினைவு தான்.இப்படியெல்லாம் அவள் மனம் தத்தளித்ததே இல்லை.இருப்பினும் மனதுக்குள் சிறு நெருடல்.

அன்று ஏதோ வேலை விடயமாக கோப்பொன்றை கையில் வைத்துக் கொண்டு ரத்னவேலைக் காண அவரின் பிரத்தியேக அறைக்குள் சென்றவளின் பாதங்கள் அவரின் பேச்சு சத்தம் கேட்டு அப்படியே வேரூன்றிக் கொண்டன.

"என்னால எப்டி போய் அந்த பொண்ணு கிட்ட சொல்ல முடியும்னு சொல்லு மரகதம்..? தானும் தன்னோட வேலயும் இருந்த பொண்ணு..போய் கல்யாண பேச்ச இழுத்தது நான் தான.."

"................."

"வேந்தன் மனசுல அபி இருக்குறது தெரியாம நா வேற போய் வாக்குக் கொடுத்துட்டேன்..என்னால வேந்தன் கிட்ட சொல்லவும் முடில..அதுக்குன்னு அந்த பொண்ண ஏமாத்தவும் முடில..என்னோட வாக்கு தான் பெருசுன்னு போய் அரசிய கட்டிக்கோன்னு வேந்தன் கிட்ட எப்டி சொல்றது மரகதம்..?அவன் மனசுல இன்னொரு பொண்ணு இருக்காளே..என்ன பண்றதுன்னே புரில.."

அவர் தன்பாட்டில் புலம்பித் தீர்க்க இடையிடையே கேட்டதை வைத்தே அவர் உரையின் சாராம்சரத்தை கணித்துக் கொண்டவளின் மனதில் வலியில்லை.மனதுக்கு ஏதோ போல் இருந்தது.

வந்த வழியே அதன் தடயமின்றி கிளம்பி விட்டவளுக்கு மனதில் ஒரு வித தொய்வு.பையனை நேசிக்கவில்லை,அவள்.நேசித்திருந்தால் நிச்சயம் வலித்து இருக்குமே.

மனதுக்கு ஒரு மாதிரியாய் இருக்க பாதியில் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவளோ செய்த முதல் வேலை,திருமணம் பிடிக்கவில்லை என்று தாயிடம் பொய் கூறியது தான்.

"என்ன அரசி நெனச்சிகிட்டு இருக்க உன் மனசுல..நீ சரின்னு சொன்னதால தான நாங்க அவங்க கிட்ட விருப்பம்னு சொன்னோம்..இப்போ என்னன்னா திடுதிப்னு வேணாம்னு சொல்ற..? உன் இஷ்டத்துக்கு நடந்துக்கற..‌இப்போ எதுக்காக வேணாம்னு சொல்ற..?" தாயார் கண்டிப்புடன் அதட்டிட ஒரு வார்த்தை பேசவில்லை,பாவையவள்.

உயிர்த்தொடும்.

2024.09.15
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 24(i)


தாயின் காரசாரமான திட்டல்களை காதில் வாங்கிக் கொள்ளாது உணர்வற்ற சிலையென நின்றிருந்தவளுக்கு பையன் வேறொரு பெண்ணை விரும்பும் விடயத்தை போட்டுடைத்து இருக்கலாம் தான்.மனம் அதற்கு இடம் தர வேண்டுமே..?

அவளைப் பொறுத்த வரையில் பையன் மீது எந்த தவறும் இல்லை.அவனின் விருப்பம் அறியாமல் தன்னை பெண் கேட்டு வந்த ரத்னவேலின் மீது தான் தவறிருப்பதாய் சிறு எண்ணம்.

அந்த எண்ணமும் தோன்றிய நொடியில் மொத்தமாய் மறைந்து போனது.மகன் மீது இருக்கும் பாசத்தினாலும் நம்பிக்கையினாலும் தான் அவருமே அப்படி நடந்திருக்கக் கூடும் என அவர் புறம் இருக்கும் நியாயத்தை எடுத்தியம்பியது,பாவையவளின் மனசாட்சி.

ஆக,யார் மீதும் தவறில்லை.அதனாலோ என்னவோ பையன் வேறொரு பெண்ணை விரும்பும் விடயத்தை தாயிடம் கூற அவளின் மனம் ஒப்புக் கொள்ளாது போனது.அதனால் தான் பழியை தன் மீது போட்டுக் கொண்டு பையனைக் காப்பாற்றினாள்,அவள்.

"என்ன அரசி..? நா என்னோட பாட்டுக்கு இவ்ளோ கத்திட்டு இருக்க..ஒரு பதிலும் சொல்லாம நீ பாட்டுக்கு பேசாம இருக்க..எதுக்கு இப்போ இந்த கல்யாணம் வேணாம்னு சொல்ற..?"

நல்ல வரனை வீண் பிடிவாதத்தால் மறுக்கிறாள் என்கின்ற மனப்பாங்கில் தாயவர் வசை பாடிட பெருமூச்சு எறிந்தவளோ மேற் கொண்டு எதுவும் பேசாமல் அறைக்குள் அடைந்து கொள்ள அவள் தாயாருக்கு உண்மையில் அத்தனை கோபம் தான்.அவளின் முடிவின் பின்னான நிஜக் காரணம் அவருக்குத் தெரியாதே.

வீட்டுக்கு வந்தவுடன் அவளின் தந்தையிடம் அவர் புலம்ப அவரும் பாவையவளை காய்ச்சி எடுத்து விட்டார்,தன் கீர்த்தனைகளால்.அப்படி நடந்தும் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு மௌனமாய்த் தான் நின்றிருந்தாள்,அவள்.

மறுநாளே சங்கடத்துடன் தயங்கித் தயங்கி ரத்னவேலிடம் அவளின் தந்தை அவளின் மறுப்பதாய் கூற மறுமுனையில் அவர் நிச்சயம் ஆசுவசாம் தான் அடைந்திருப்பார் என்பதை உரையாடலை இரகசியமாய் செவிமடுத்துக் கொண்டு இருந்தவளால் கணிக்க முடிந்திருந்தது.

அவளுக்கும் அது போதும்.இந்த பேச்சு நீளாமல் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டால் அது அவளுக்கு அது பெருத்த நிம்மதி தான்.

அதன் பின் அவள் நாட்கள் இயல்பாய் ஓடின.வீட்டில் தொடர்ந்து வரன் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்க யாரையும் பிடிக்கவில்லை.தாயார் புலம்பித் தீர்த்து விட தந்தை தான் கொஞ்சம் பொறுமை காத்தார்,மகளுக்கென.

என்னவென்றாலும் மகளின் வாழ்க்கை அல்லவா..? அவளின் பூரண சம்மதமின்றி யாருக்கும் அவளைக் கட்டிக் கொடுக்க உடன் பட மாட்டார்,மனிதர்.

தாமரைக்கும் அவள் மறுப்பு சொல்வதற்கான காரணம் தான் பிடிபடவில்லை.அவளுக்கே அது புரியாது போக தோழிக்கு மட்டும் எப்படிப் புரியும்..?

"ஸ்பார்க் வர்ல தாமர..நம்ம மனசு இவரு தான் உன்னோட லைஃப் பார்டர்னு சொல்லனும்..பர்ஸ்ட்கு அப்டி தான் தோணுச்சு..பட் இப்போ யார் ஃபோட்டோவ பாத்தும் அப்டி தோணல..நா என்ன பண்ணட்டும்..அந்த ஸ்பார்க்காக தான் வெயிட் பண்றேன்.." தாமரை தோண்டித் துருவும் போதெல்லாம் சமாளிப்பவளின் உண்மைக் காரணமும் அது தான்.

இடையில் பையனின் நிச்சயதார்த்த விடயம் கேள்விப்பட மனதில் வலி இல்லை.ஆனால்,ஏதோ செய்தது,அகத்தின் ஆழத்தில்.

அப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட ஒரு நாள் அலைபேசியை நோண்டிக் கொண்டிருக்கும் போது தற்செயலாய் தென்பட்ட செய்தி அவளை பெரும் அதிர்வுக்குள் தள்ளி விட்டன.

கண்டவுடன் அவள் மனது இல்லையென்று கத்தியே விட மீண்டும் மீண்டும் அந்த செய்தியை படித்தவளுக்கு நெஞ்சத்தின் நடுக்கம் மட்டும் துளியும் குறைந்தபாடில்லை.

"இல்ல இருக்காது..இருக்காது..அவரு அப்டி பண்ணியிருக்க மாட்டாரு.." பையனின் மீதான பொய் பாலியல் குற்றச்சாட்டை படித்தவளின் இதழ்கள் தன்பாட்டில் பிதற்றிட அவளுக்கோ பையனின் மீது அபார நம்பிக்கை.

நெஞ்சத்தில் தோன்றிய படபடப்பும் பயமும் அப்படியே பூஜையறை நோக்கி அவளின் பாதங்களை நடக்க வைத்தன.

பூஜையறையில் கடவுள் படங்களின் முன் அவள் கை கூப்பி எத்தனை நேரம் நின்றிருந்தாள் என்று அவளே அறியாள்.மனம் சமப்படும் வரை பையனுக்காக கடவுளிடம் வேண்டியவளுக்கு மனமே அடைத்துக் கொண்டது போல்.

தொண்டைக்குழி ஏறி இறங்க விழிகளின் கருமணிகள் தவிப்போடு அங்குமிங்கும் உருண்டோட கடவுளிடம் கோரிக்க வைத்தவளுக்கு அன்றிரவு உறக்கமே இல்லை.

மறுநாள் அலுவலகத்துக்கு செல்லும் போது ரத்னவேல் வந்திராது இருக்க அது அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.அவரிடம் தான் என்ன விடயமென்று கேட்டுக் கொள்ள நினைத்திருந்தாள்,நேற்றிரவு.

தாமரையிடம் வந்ததும் புலம்பித் தீர்த்து விட்டாள்.தாமரையோ பதிலின்றி தலையாட்டி வைத்திட அவளின் செயலிலும் பாவையவளுக்கு கோபம்.

ஏறத்தாழ ஒரு வாரம் கடந்த பின்னரும் அவளுக்கு அவனின் வழக்கைப் பற்றி சரியாய் எதுவும் தெரியவரவில்லை.

அப்போது தான் தாமரையின் காதல் விவகாரமும் காதலிப்பது அரவிந்தை என்பதும் அரவிந்த் பையனின் தோழன் என்பதும் தெரிய வரவே நிம்மதியடைந்தது,மனது.

ஒரு நாள் தாமரையுடன் சென்று அரவிந்தை சந்தித்து முழு விடயங்களையும் கேட்டறியும் போது தான் பையனின் நிச்சயம் முறிந்து போனதும் தற்போது அவன் வீட்டில் இல்லை என்பதும் தெரிய வந்தது.

அரவிந்துக்கோ அவள் முகத்திலும் குரலிலும் தெரிந்த உண்மையான அக்கறை பாதியுண்மைகளை சொல்லிடச் செய்தாலும் மீதியை சொல்ல ஏதோ ஒன்று தடுத்தது.

பாவையவளை வியந்து அவன் பார்ப்பதை உணர்ந்தவளால் அவளால் அதன் காரணத்தை கண்டு பிடிக்கத் தான் முடியவில்லை.யாரும் நம்பாதவனை யாரென்று தெரியாமல் நம்பித் தொலைக்கிறாளே என்கின்ற எண்ணம் தான் அந்த வியப்பின் காரணம் என்று அவளுக்கு யார் தான் எடுத்துரைத்திட..?

அதன் பின் அடிக்கடி பையனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்பவளுக்கு அவனின் குடும்பத்தினரின் மீதும் கோபம் இருந்தது உண்மை.

அரவிந்துக்கும் அவளைக் கேட்கையில் விடயத்தை மறைக்கவோ மறுத்துப் பேசவோ மனம் இடம் தந்திடாது.அவளின் விழிகளில் பையனுக்கான அக்கறையை காண்பவனால் பதில் சொல்லாது இருக்கத் தான் இயலுமா..?

அப்படியே நாட்கள் கழிய அரவிந்த் வந்து புலம்பியதைக் கேட்டுத் தான் பாவையவளின் நெஞ்சம் தடதடத்தது.

"வேந்தனோட கேஸ எடுத்து நடத்திகிட்டு இருந்த வக்கீலும் இப்ப முடியாதுங்குறாரு..ரொம்ப பேர் கிட்ட பேசி பாத்துட்டோம் யாருமே முடியாதுங்குறாங்க..அந்த முகேஷ் அவங்கள மெரட்டி வச்சி இருக்கான்..இன்னும் நாலு நாள்ல் ஹியரிங்க் இருக்கு..யாராச்சும் நல்ல லாயரா பாக்கனும்..என்ன பண்றதுன்னே தெரில.." தலையை கோதிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திடனே பாவையவளின் சிந்தனை தாவியது,அபிஷேக்கை நோக்கி.

"இசை என்ன யோசிச்சிகிட்டு இருக்க..?" பையனின் வார்த்தைகளில் தன்னிலை மீண்டவளுக்கு அத்தனை எளிதாய் முகத்தில் இருந்த பதட்டத்தை மறைத்திட முடியவில்லை.

அவனுமே பொறுத்து பொறுத்து பார்த்து விட்டான்,அவளின் அமைதியை.ஆனால்,அதை வெகு நேரத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மனம் முரண்டு பிடித்ததே.

"ஒன்னுல்ல.." அவள் திணறிடவே பையனுக்குள் சிறு சந்தேகம்.

"ம்ம்.." என்றவனோ தனக்குள் யோசித்து கணக்குப் போட்டுக் கொண்டானே ஒழிய அவளிடம் எதுவும் கேட்டிடவில்லை,அதைப் பற்றி.

இசையவளுக்கும் பேசிட பயம்.மனதில் கனமாய் ஏதோ நிறைந்திருப்பது போன்ற எண்ணம்.

விழி மூடி சாய்ந்து கொண்டவளோ உறக்கத்திலும் விழுந்திட கொஞ்ச நேரத்தில் சரிந்த தலை பையனின் தோற்பட்டையில் விழ அவனின் இதயத் துடிப்பு வேகமெடுத்தது.

தடதடவென எப்போதும் போல் இதயம் ஓடிட நெற்றியில் அரும்பிய வியர்வைப் பூக்களை துடைத்துக் கொண்டவனுக்கு அழமாய் மூச்சு வாங்கியது.

அவள் தான் அவனை எத்தனை மாற்றி வைத்திருக்கிறாள்..?
தடுமாறி தடம் மாறி தன்னிலை தவறி எல்லாம் மறந்து அவளில் வீழ்ந்து கிடக்கிறானே,இந்த யாழவன்..?

அவள் உறக்கம் கலைந்திடாதவாறு மெதுவாய் வண்டியை நிறுத்தியவனோ நடுங்கும் விரல்களுடன் பாவையவளின் சிரசை இருக்கையில் கிடத்திட விழிகள் அவள் வதனத்தை ஆழமாய் தனக்குள் உள் வாங்கிக் கொண்டன.

அந்த விழிகளில் தோன்றிய இரசனையில் ஆயிரமாயிரம் காதல் பாஷைகள்,மொழியின்றி மௌனமாய் கூறப்பட்டுக் கொண்டிருக்க விழியடுக்காது பார்வையில் அவளை வருடியவனோ திடுமென கேட்ட ஹாரன் சத்தத்தில் கலைந்து தன் செயலை நொந்து பின்காதோரமாய் சிகைக்குள் விரல் நுழைத்து அழுந்தக் கோதிக் கொண்டான்.

விரல்கள் கேசத்தை கோதிய விதமே போதும்,அவனின் தடுமாற்றத்தின் ஆழம் காட்டிட.

விழிகளில் இரசனையும் விரல்களில் நடுக்கமும் இழையோட அமர்ந்திருந்தவனின் இதழ்களோ உச்சரித்தன,"மாயக்காரி" என.

"எதுக்கு டா இப்டி பண்ற..?" மனசாட்சி அவனுக்கு புரிய வைத்திடும் முனைப்பில் வினாத்தொடுத்திட "சும்மா தான்..பட் இது லவ் இல்ல.." அப்பட்டமாய் பொய் கூறி தன்னையை தேற்றிக் கொண்டான்,பையன்.

●●●●●●●●

"இசை வா சாப்டலாம்.." உணவு மேசையில் அமர்ந்து குரல் கொடுத்தவனின் வார்த்தைகளை அவளை இன்னும் பதட்டத்துக்குள் தான் விழுந்திடச் செய்தது.

"வர்ரேன்..வர்ரேன்.." உணவை எடுத்துக் கொண்டு ஓடி வந்தவளுக்கும் பசி வயிற்றை கிள்ளியது,தான்.

"நீ காலைல இருந்து எதுவும் சாப்டல தான..?" அவளின் முகம் பார்த்து கேட்டவனுக்கு மையமாய் தலையாட்டி வைத்திட அவனுக்கோ அவள் மீது கோபம்.

"ரொம்ப நேரம் தூங்கறேன்னா தட்டி எழுப்பி விட வேண்டியது தான..எதுக்கு நீ மட்டும் சமச்ச..? அதுவும் ஒன்னும் சாப்டாம.." அவன் சீற அமைதியாய் நின்றவளும் என்ன பதிலைத் தான் சொல்லிட..?

இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொண்டதன் விளைவாய் கொஞ்சம் அசந்து தூங்கியிருந்தான்,பையன்.அவளோ அவனை தொந்தரவு செய்யக் கூடாது என்கின்ற நினைப்பில் மொத்த வேலையையும் முடித்திருக்க அவனுக்கு அதுவே குற்றவுணர்வு.

வழமையாய் இருவரும் சேர்ந்து உணவு சமைப்பது தான் வழக்கம்.அவளுக்கோ தனியாய் செய்திடுவதில் சிரமமாகிப் போக அந்த பதட்டத்தில் அவள் எதுவும் சாப்பிடாது இருந்தது வேறு கோபத்தை கிளப்பியது,நன்றாகவே.

"இன்னும் என்ன யோசிச்சிகிட்டு இருக்க..வந்து உக்காரு.." பையன் அதட்டிடவே வந்தமர்ந்தவளுக்கு அப்போது தான் சாப்பிட கரண்டி ஏதுமில்லாது மண்டையில் உரைத்தது.

அவரசகதியின் வெங்காயம் வெட்டிட அவளும் இருவிரல்களில் ஆழமான வெட்டு.இரத்தத்தை நிறுத்தி மருந்திட்டிருந்தவளுக்ககு உண்ணுவது சிரமம் அல்லவா.

"எதுக்கு இப்போ ஓடறா..?" இருவருக்கும் சேர்த்து தட்டில் எடுத்து வைத்தவனுக்கு அவள் வந்தமர்கையிலேயே அவள் விரல்களில் இருந்த காயம் கருத்தில் விழ பதறி விட்டான்,பையன்.

"ஏய் என்னாச்சு..? வெரல்ல என்ன காயம்..?" அவளின் கரத்தை பற்றி தன்னருகே இழுத்து ஆராய அவன் விழிகளில் இருந்த பதட்டத்தில் அவள் உள்ளுக்குள் ஆயிரம் மத்தாப்புக்கள் வெடித்தன.

இயல்பா இல்லை நடிப்பா என்கின்ற குழப்பம் தீர்ந்தபாடில்லை என்றாலும் இரண்டில் எதுவாக இருந்தாலுமே அவளுக்கு அது பிரச்சினையில்லை.

"ஒன்னுல்ல சாரே விடுங்க.." கரத்தை உருவிக் கொண்டவளை முறைத்துத் தள்ளினான்,பையன்.

"பாத்து செய்ய மாட்டியா எந்த வேலயயும்..? இப்டி தான் கவனமில்லாம இருப்பியா..? பேசறது புரிதா உனக்கு..?"

"ம்ம்.."

"மைன்ட் வாய்ஸ்லயே வாழ்க்கய ஓட்டு.." அவன் திட்டிட அமைதியாய் அமர்ந்து கரண்டியால் உண்ணப் பார்த்தவளின் செயலில் அவனுக்கு இன்னுமே கோபம்.

மல்லுக்கட்டி கரண்டியால் ஒரு வாய் உணவை வாயில் வைத்தவளின் பார்வையோ ஒரு வித சிந்தனையுடன் பையனை தழுவிட என்னவென்று கேட்டான்,விழிகளால்.

"நா ஒன்னு கேக்கட்டுமா சாரே..?"

"ம்ம்.."

"இப்போ எதுக்காக நீங்க எனக்காக பதறுறீங்க..?" அவள் கேட்ட கேள்வியைத் தானே அவனின் மனசாட்சியும் அவனிடம் இத்தனை நேரம் கத்தி கூவிக் கொண்டிருந்ததே.

சத்தியமாய் அவள் கேட்ட கேள்வியில் அவனுக்குள் அதிர்வுகள் கிளம்பின தான்.ஆனால்,பையன் அதைக் காட்டிக் கொள்ளவில்லை,அவ்வளவே.

அவனோ உணர்வற்ற பாவத்துடன் உள்ளுக்குள் எழுந்த போராட்டத்தை அடக்கியவாறு அமர்ந்திருக்க பாவையவளுக்கு அது நிதானமாய் இருப்பதாய் அல்லவா தோன்றிற்று.

"எதுக்குன்னு கேட்டா..? ஒரு அக்கற தான்..எப்பவுமே கூட இருக்குற பொண்ணு..போதாததுக்கு நம்மள லவ் பண்ற பொண்ணு..அப்டின்னா ஒரு அக்கற வரும்ல..அதான்.."

அவனுக்கு சத்தியமாய் இன்னும் காரணம் புரியிவல்லை.அத்தனை சீக்கிரமாய் புரிந்து கொள்ளவும் மாட்டான்,கல்லுளி மங்கன்.அவனை அவள் மீதான உணர்வுக்கு அக்கறை என பெயர் சூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்தான்,அவளையும் கூடவே அவனையும்.

"புரில.." மண்டையில் ஓடிய குழப்பத்தை முகத்தில் காட்டி அவள் கேட்டிட அவனுக்கோ அவள் பாவனையில் மெல்லிய புன்னகை.

"அக்கற தான்.." அவன் மீண்டும் அழுத்திக் கூற நம்பத் தான் வேண்டும்.இல்லையென்றால் அப்படியே விட்டு விடும் ரகமா அவன்..?அவள் மீது இருப்பது அக்கறை தான்.அப்படித் தானே கூறி தன் கருத்தில் நிற்கிறான்,பையன்.

அக்கறை தான்..
இறுகிய இதயத்தை மொத்தமாய் அசைத்து பார்த்து விட்டு இளைப்பாறும்,இந்த அக்கறை..
அவள் முட்டை விழிகளுக்குள் விழுந்து மாண்டு போய் விட வைக்கும் இந்த அக்கறை..
அவளுடனான தருணங்களில் மொத்தமாய் வலி மறக்க வைத்து அவளையே நினைக்க வைத்திடும் இந்த அக்கறை..
அவளருகாமையில் மூச்சுக்கு திணற வைத்து அவனை மாற்றி விட்டிடும் இந்த அக்கறை..
அவள் ஸ்பரிதத்தில் அவனின் உயிரைக் கரைந்தோடிடச் செய்திடும்,இந்த அக்கறை.

அக்கறை தான்.அக்கறையே தான்,அவனைப் பொறுத்த வரை.

"...................."

"அக்கறன்னா அக்கற தான்.." மெதுவாய் கூறிக் கொண்டே அவளின் தாடையை பிடித்து தன் புறம் திருப்பி அவள் வாயில் அடைத்திட அவளுக்கோ விழிகள் பிதுங்கின.

அதிர்ச்சியில் விழுங்ககக் கூட மறந்து அவள் விழிக்க பையனின் உலுக்கி பின்னர் தான் வாயில் இருந்த உணவு தொண்டைக்குழிக்குள் இறங்கியது.

"கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.." அவன் ஊட்டி விடுவதில் குழம்பிப் போய் மீண்டும் கேட்டவளுக்கு அவனின் காட்டும் அவதாரங்களில் அழுகை வராத குறை தான்.இதிலும் ஊட்டி விட்டத்தில் நெஞ்சுக்குள் வலியே வந்து விட்டது.

"அக்கற தான் இசை..அக்கறய தாண்டி எதுவும் இல்ல..அதனால இப்டியெல்லாம் நடந்துக்குறேன்..என்ன தான் நாம ஒருவருஷத்துல பிரிஞ்சுருவோமுங்குற கண்டிஷனோட அக்ரிமன்ட் கல்யாணம் பண்ணிகிட்டோம்னாலும் எனக்கு உன் மேல அக்கற இருக்கு.."

"................."

"அப்டின்னா ஒரு கொழந்த மேல ஒரு அப்பாவுக்கு இருக்குற அக்கற..ஒரு ப்ரெண்ட் மேல இன்னொரு ப்ரெண்ட்கு இருக்குற அக்கற..ஒரு சின்ன பொண்ணு மேல ஒரு பெரியவருக்கு இருக்குற அக்கற..நமக்கு ரொம்ப புடிச்ச ஸ்டூடன்ட் மேல ஒரு டீச்சருக்கு இருக்குற அக்கற..எந்த உறவும் இல்லன்னாலும் நமக்கு ரொம்ப புடிச்சவங்க மேல நமக்கு இருக்குற அக்கற.." அவன் நிறுத்தி விட்டு உணவைப் பிசைந்து அவளின் வாயில் ஊட்ட விழுங்கியவளுக்கோ அவன் சொன்னதை கிரகித்துக் கொள்ள சில நொடிகள் அவசியமானது.

ஆமாம்,பையன் சொன்னது உண்மை தானே.இத்தனை அக்கறையின் வகையறாக்களால் தானே அவளின் தள்ளி இருந்தும் அவனிதயம் இப்போதும் வெடிப்பது போல் துடிக்கிறது.

"நல்ல வேள ஒரு அண்ணனுக்கு இருக்குற அக்கறன்னு சொல்லல..ஹப்பாடி.." அவனின் செவிகளில் விழும் அளவு சத்தமாகவே உச்சரித்து திருப்திப் பட்டுக் கொண்டது,அவள் இதழ்கள்.

அவளின் வார்த்தைளில் மெல்லமாய் இதழ் பிரித்து சிரித்தவனுக்கு அவளை எந்த ரகத்தில் கொண்டு சேர்த்திட என்று இப்போதும் புரியவில்லை.

அவள் தன்னை மறப்பதாய் பொய்யை அடித்து விட்டு இன்னுமும் காதலிப்பதை அறியாதவன் இல்லை,அவன்.ஆக,அவள் மீது அக்கறையை தாண்டிய உணர்வொன்று இல்லை என கூறியதற்கு வருத்தப்படுவான் என அவன் நினைத்திருக்க அவளோ வேறேது எண்ணி அப்போதும் அவன் வார்த்தைகளில் நிறைவை அல்லவா காண்கிறாள்..?

வியப்பாய் இருந்தது,பையனுக்கு.இது வரை யாரையும்... இப்படி எதிர்பார்ப்பின்றி அவனியல்பின் குறை காணாமல் அதை நிறையாய் ஏற்றுக் கொண்டு காதலிக்கும் யாரையும் அவன் வாழ்வில் கண்டதில்லை.

அது தானே அவள் இசையாகிறாள்!
அதனால் தானே அவள் இசையாகிறாள்,யாழவனின் இதயம் மீட்டும்!

பையனுக்கோ அவளை சீண்டிப் பார்க்கும் எண்ணம்."இன்னும் விளக்கமா சொல்லனும்னா ஒரு அண்ணன்.." என அவன் இழுக்கும் முன்னே பதறி அவனின் வாயைப் பொத்தினாள்,அவள்.

"இல்ல இல்ல எனக்கு புரிஞ்சிடுச்சி..திரும்ப திரும்ப விளக்கம் சொல்ல தேவல.." படபடவென கூறி அவன் பேச்சை பாதியிலே நிறுத்த வைத்தவளோ அவன் சொன்னதை எல்லாம் மீண்டும் ஓடவிட்டுப் பார்த்திட அவளுக்குள் மின்னல் அடித்தது.

"அப்போ உங்களுக்கு என்ன புடிக்குமா..?" விழிகளில் பளிச்சிட கேட்டவனுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்திட அவளின் முகத்தில் விகசிப்பின் பூக்காடு.

"புடிக்கும் தான் ஆனா அது லவ் இல்ல..லவ் வர்ரத்துக்கா பிடிப்பும் இல்ல..காட் இட்.." அழுத்தமாய் கூறிப அவளுக்கோ அது பிரச்சினையேயில்லை.

"ஐயோ அதெல்லாம் சீனே இல்ல..உங்களுக்கு என்ன புடிக்கும் தான..அது போதும்.." அலட்டலின்றி சொன்னவளின் வாயில் மொத்தமாய் உணவை அடைத்து விட்டிருந்தான்,பையன்.

உயிர்த்தொடும்.

2024.09.16
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 24(ii)


பையன் அடைத்து விட்ட உணவை விழுங்கியவளின் முகத்தில் அத்தனை பிரகாசம்.விழிகளில் பல்வேறு உணர்வுகள் துள்ளியோட சிதறிப் போனான்,அவன்.

"நா உன்ன லவ் பண்றேன்னு எதுவும் சொல்லல..எதுக்கு இவ்ளோ சந்தோஷப்படற..?" அள்ளிய உணவை தன் வாய்க்குள் திணித்துக் கொண்டே வினவியவனை மென்னகையுடன் எதிர் கொண்டாள்,அவள்.

"அத எப்டி சொல்றதுன்னு தெரில சாரே..ஆனா நா ஹேப்பி..சாரே ஆனாலும் நீங்க ரொம்பத் தான் மாறியிருக்கீங்க..?"

"வாட் நானா..?"

"ஆமா நீங்க இல்லாம வேற யாரு..முன்ன எப்பவுமே உர்ருன்னு தான் மொகத்த வச்சிகிட்டு இருப்பீங்க..இப்போ அப்டி இல்ல..நா என்ன பண்ணாலும் முன்ன திட்டிட்டு இருப்பீங்க..ஆனா இப்போ திட்றதும் இல்ல..அதுவுல்லாம அன்னிக்கி கார் கண்ணாடிய ஒடச்சதுல தப்பு என் மேல தான்னு தெரிஞ்சும் எனக்கு தான் சப்போர்ட் பண்ணீங்க..அதெல்லாம் பாத்தா மாறிட்டீங்க தான.." அவள் கூறிட அவளின் வார்த்தைகளை எங்கு கவனித்தான்,பையன்..?
அவளின் வதனம் காட்டிய பாவங்களில் மூழ்கி மொத்தமாய் தனைத் தொலைத்திருந்தானே..?

"என்ன சாரே நா சொல்றது புரிஞ்சுத தான..நீங்க மாறித் தான இருக்கீங்க..?" அவள் கேட்டதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவனுக்கு அவளின் அருகில் இன்னும் இதயம் வேகமாய் துடித்துக் கொண்டு தான் இருந்தது.

"ஆமா இதுக்கு முன்னாடி யாரும் உன்ன லவ் பண்ணது கெடயாதா..?" அவளிடம் அடிக்கடி வினவிட நினைக்கும் வினாவை அவனிதழ்கள் எடுத்தியம்பிட அவளின் பார்வையோ அசட்டையாய் அவன் மீது படிந்தது.

"அதெல்லாம் எப்டி சாரே நடக்கும்..? அப்டி நடந்தா ஒலகம் தான் அழிஞ்சு போகும்..நானும் யாரயும் பாக்க மாட்டேன்..நம்மளயும் யாரும் பாக்க மாட்டாங்க..அப்டியே சிங்கிளாவே வாழ்க்க போச்சு..இப்போ தான் லவ்வுன்னு ஒன்னு வந்துருக்கு..அதுக்கு லவ்வரே செவப்பு கொடி காட்டுனா நா என்ன செய்வேன்..?" அவள் தோளைக் குலுக்கியவாறு உதடு பிதுக்கலுடன் சொல்ல பையனின் மனதில் சில்லென்ற பனித் தூறல்.

அவள் காதலிப்பது அவனுக்கு தெரியும்.பையனுக்குத் தெரியும் என்பதும் அவளுக்குத் தெரியும்.இருப்பினும் ஒரு போதும் அவள் தன் காதலை விளையாட்டுக்கேனும் வார்த்தைகளால் வரித்தது இல்லை.

இன்று தன்னை மீறி பேச்சு வாக்கில் புலம்பலாய் அது செவியில் நுழைந்து இதயத்தை ஓசையை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கச் செய்திட குளிர்மழையின் சாரலடித்தது போல் இருந்தது,உள் நெஞ்சில்.

அவளோ உளறிக் கொட்டியதற்கு பயந்து பையனின் பயத்துடன் முகம் பார்த்திட அவனால் முறைக்கக் கூட இயலவில்லை.இதழ்களினோரம் புன்னகையில் துடிக்கத் துவங்கிட அதை அடக்கியவனோ அழுத்தமாய் அவளைப் பார்த்த அடுத்த கவளத்தை நீட்டினான்,அவளின் வாயருகே.

"எதுக்கு உன்ன நீயே கீழா நெனச்சிக்கற..?" முக்கியமானதை விடுத்து மற்றயதை பிடித்துக் கொண்டு கேள்வித் தொடுத்தவனை ஆயாசமாய் பார்த்தாள்,அவள்.

"வச்சி வச்சி மனசுக்குள்ள இருந்தத தவறுதலா சொல்லிட்டேன்..ரியாக்ஷன் காட்டுதா பாரு.." முணுமுணுத்தவளின் மனமோ சத்தியமாய் அவனிடம் இருந்து எதிர்வினையொன்றை எதிர்பார்க்காதது,உண்மையே.

"அதான உண்ம.."அவள் சலிப்பாய் சொல்ல அவனுக்கு அவளின் தலையில் ஓங்கிக் குட்ட வேண்டும் என்று தோன்றிற்று.

"பைத்தியம்.." மெதுவாய் அவனிதழ்கள் அசைந்திட இத்தனை காதலிக்கும் பெண்ணை யாரும் காதலிக்க மாட்டார்களா என்கின்ற எண்ணம் தான் பையனின் மனதில்.

எண்ணத்தின் சொந்தக்காரனுக்கு தெரியவில்லை,அவள் காட்டும் காதல் மொத்தமும் அவனுக்கானது என்பது.

"சாரே நா இன்னொரு கேள்வி கேப்பேன்..கோச்கிக்க கூடாது.." அவளின் கட்டளையான குரலுக்கு முற்றிலும் பணிந்தான்,பையன்.

"ம்ம் சொல்லு.."

"அது நீங்க அக்கறன்னு சொன்னீங்கள்ல..முன்ன எல்லாம் அந்த அக்கற இல்லன்னு தான சொல்லிட்டு இருப்பீங்க.."

"அக்கற இல்லன்னு சொல்லி திட்டிட்டு இருப்பேன்..ஆனா உனக்கு அப்டி தோணி இருக்கா..?" ஆழ்ந்த தொனியில் பேசியவனோ அவளின் கன்னத்தில் ஒட்டியிருந்த உணவுத் துகளை எடுத்து விட்டான்,மறு கரத்தின் பெருவிரலால்.

"அது எனக்கு கொஞ்சம் கன்பியூஸா இருக்கும்..நீங்க நடந்துக்குறத பாத்தா அக்கற இருக்குற மாதிரி தோணும்..ஆனா நீங்க திட்றப்போ நா கொழம்பிருவேன்.."

"எப்பவுமே உன் மேல எனக்கு அக்கற இருக்கும் இசை..என்னிக்கி நா உன் கழுத்துல தாலி கட்டுனேனோ அப்போ ல இருந்து உன் மேல அக்கற இருக்கு.." என்கவும் அவள் விழிகள் தெறித்து விரிந்தன.

"அப்போவும் இப்போவும் என் மனசுல இருக்குற ஒரே தாட் நீ என்ன எந்த ரீசன்காகவும் விரும்பிரக் கூடாதுங்குறது தான்..அதான் அப்டி நடந்துகிட்டேன்..அக்கற இருக்கு தான்..ஆனா இது வெறும் அக்கற மட்டுந்தான்..லவ்வுக்கான அக்கற இல்லை..புரியுதா உனக்கு..? நா அக்கற காட்டி உன் மனசு தடுமாறிடக் கூடாதுன்னு தான் அக்கற இல்லன்னு சொல்லி சொல்லி உன் மனசுல பதிய வக்க ட்ரை பண்ணேன்.." கனிவு மின்ன கூறியவனோ அவளின் கூந்தலை ஒதுக்கி விட அவளுக்கோ அவனை இன்னுமின்னும் பிடித்துத் தான் போனது.

"ஆனா இப்போ மட்டும்....?"

"ஆனா இப்போ தான் இந்த இசைப் பொண்ணு என்ன என்ன மறந்துர்ரதா சொல்லி வாக்கு கொடுத்துட்டால..அப்றம் எதுக்கு பயப்டனும்..? அதான் இருக்குற அக்கறய காட்டிட்டு இருக்கேன்.." இறுதி வாயை அவளுக்கு ஊட்டி விட்டு மறு கரத்தால் அவளின் உச்சந்தலையை அழுத்தி விட்டு பையன் எழுந்து செல்ல அவனுக்குத் தான் தெரியும்,அவளுடன் பேசும் போது அவன் தடுமாறி நின்ற அளவை.

அவள் வாக்குத் தந்தாள் என்கின்ற எண்ணத்தில் தான் அவளுடன் அவன் நெருங்கத் துவங்கியதே.அது பொய்யல்ல.ஆனாலும்,பையனுக்கு தெரியாமல் இல்லையே,அவள் தன்னை மறப்பதற்கான அறிகுறி கூட இல்லையென்று.அப்படியிருந்தும் அதையே சாக்காக வைத்துக் கொண்டு அவளுடன் நெருங்கிப் பழகுவது ஏனோ..?

உண்மை புரிந்தும் தன்னிலை தவறி உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுக்கு அக்கறை எனப் பெயர் சூட்டி அவளுடன் இயல்பாய் நடந்திடுவதன் காரணம்,அவள் அருகில் அவன் அனைத்தையும் மறந்து விடுவது தானே.

கல்லுளி மங்கனுக்கு அவளின் மனது தெரியும்.அவன் நினைத்தால் விலகிடவும் முடியும்.அப்படி விலகிட முடியாமல் அவள் காதல் கட்டியிழுத்திட அவன் காதல் அவள் புறம் தள்ளியல்லவா விடுகிறது.

வெறுமனே அக்கறை என்று அவன் கூறினாலும் அதைக் கூறுகையில் அவன் மனம் நெருடியதே.உள்ளமதை இனம் புரியா உணர்வொன்று வருடியதே.தான் கூறியது முற்று முழுதாக உண்மையில்லை என உணர்ந்தும் அதை ஆராயவில்லை,பையன்.

பாவையவளின் விழிகளில் மெலிதாய் ஈரம் சேர்ந்தது.இந்த குணம் தானே அவன் காதலிக்காவிடினும்..
காதலிப்பது தெரியாவிடினும் இன்னும் அவனை ஆழமாய் நேசிக்க வைத்திடுவது.

அந்த இறுக்கமானவனை நேசித்தவளை இன்னுமின்னுமே தன் வசம் கட்டியிழுத்து வாரி சுருட்டிக் கொள்கிறானே,இந்த இளகியவன்.

பாவையவளுக்கு இன்னும் காதல் அவன் பால் கூடிட மனதிலோ அவனை மறந்திடும் எண்ணம் இல்லை,கிஞ்சிற்றும்.

பையனுமே உணரவில்லை,அவள் தன்னிடம் அன்று மறப்பதாய் வாக்குத் தரவில்லை என்பதை.

அதே நேரம்,

"இவ்ளோ நாளா அரசி அவங்க ரெண்டு பேரோட லைஃப பத்தி என் கிட்ட மூச்சு விட்டதில்ல..ஆனா என்னால அவங்க லைஃப் எப்டி இருக்குன்னு ஊகிச்சுக்க முடியாம இல்ல..அன்னிக்கி எனக்கு கல்யாணம் ஆயிட்டதா பொய் சொல்லிட்டேன்னு சொன்னா..ரொம்ப பயந்து இருப்பா போல..அதான் என் கிட்ட சொல்லியிருக்கா..நேத்து வர என் மனசுல..இசைக்கு..ச்சே அரசிக்கு வேந்தன் பொருத்தமானவரு இல்லங்குற தாட் தான் இருந்துச்சு..பட் அவரு அறஞ்சதுல இருந்து அவருக்கும் அரசி மேல ஏதோ ஒன்னு இருக்கு.."

"என்னது நீ சொல்றது நெஜமா..?இசை மேல ஃபீலிங் இருக்கா அவனுக்கு..?"

"இசை இல்ல அரசி..தப்பித் தவறி உன் ஃப்ரெண்ட் முன்னாடி இசைன்னு சொல்லிராத..அடுத்து உன் பல்லு மொத்தமும் தான் வெளில கொட்டிரும்.."

"டேய் உண்மயாவாடா சொல்ற..? என்னால நம்ப முடில.."

"இல்லாம பொய்யாடா சொல்லிகிட்டு இருக்கேன்..என் கன்னத்த பாரு..எவ்ளோ பலமான அறன்னு..அச்சு கூட அப்டியே இருக்கு..இதெல்லாம் யாரு அடிச்சது..உன்னோட ஃப்ரெண்டு தான்.."

"சத்தியமா என்னால நம்ப முடில.." அவனின் தாடையை விரல்களால் பற்றி முகத்தை திருப்பி கன்னத்தை ஆராய்ந்தவனின் கரத்தை தட்டி விட்டு முகத்தை கூம்பச் செய்தான்,ப்ரித்வி.

"டேய் எதுக்குடா இப்டி இருக்க..? அவன் ஒரு அற தான அறஞ்சான்.." மனதில் இருந்த நிறைவில் தோழனுக்கு வக்காலத்து வாங்கியவனின் முகத்தில் குத்து விடத் தோன்றியது,ப்ரித்விக்கு.

"ஆமா நீ அப்டி தான் சொல்லுவ..ஆனா அடி வாங்கி அற வாங்கி நின்னது நா தான..நேத்து என்ன நடந்துச்சுன்னு சீன் பை சீன் உன் கிட்ட வெளக்கமா சொல்லியும் நீ நம்ப மாட்டேங்குற..எனக்கென்ன வேண்டுதலா இப்டி பொய் சொல்லனும்னு" எகிறியவனுக்கு இன்னுமே தன்னை அடித்தற்கு பதில் கொடுக்காது வந்ததை எண்ணி தன் மீதான கோபம் மனதில் கனன்று கொண்டு தான் இருந்தது.

"டேய் டேய் விட்றா..நீ பொய் சொன்னன்னு நா மீன் பண்ண வர்ல..வேந்தன் அப்டி நடந்து கிட்டாங்குறது ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்..நானே அவன் ரொம்ப நாள் கழிச்சி இப்டி நடந்துகிட்டு இருக்கானேன்னு சந்தோஷமா இருக்கேன்.." உரைத்தவனோ தோழனின் மாற்றத்தால் அத்தனை நெகிழ்ந்து போயிருந்தது என்னவோ மறுக்க இயலாத உண்மை.

"எப்புர்ரா இருந்திருக்கும்..? எனக்கும் உன் கூட இருந்து இருக்கனும்னு தோணுது.."

"க்கும்..இவன் ஒருத்தன் வேற..ஒருத்தி அந்தாள லவ் பண்ணி நம்மள டார்ச்சர் பண்றான்னா இவன் ஃப்ரெண்டா இருந்து நம்மள சாடிக்கிறான்.." அரவிந்தின் காதுகளில் விழுமாறு சத்தமாய் முணகிய போதும் அவனோ தன் சிந்தனையில்.

"ஆமா இசைக்கு.."

"இசைன்னு சொல்லதடா பக்கி..இசைன்னு சொல்லித் தான் என் கன்னம் ஒன்னு பன்னு கணக்கா வீங்கி இருக்கு.."

"சாரி சாரி தங்கச்சிக்கு இந்த விஷயம் புரிஞ்சுடுச்சா..?"

"உன் ஃப்ரெண்டுகே அந்தாளு அரசிய லவ் பண்றதுன்னு புரிஞ்சிதான்னு தெரில..இதுல அவளுக்கு புரிஞ்சி கிழிச்சிரும்..அந்த பைத்தியம்.." என்றவனின் குரலில் இருந்த சுருதி தன்னாலே இறங்கியது,நேற்று பையனிடம் வாங்கிய அறை நினைவில் மின்னலாய் வந்ததில்.

"அவ வேற ஒன்னும் புரிஞ்சிக்காம மட்டி மாதிரி சுத்திகிட்டு இருக்கா..நீ வேற கடுப்ப கெளப்பாத அரவிந்த்.."

"அப்டிங்குற..? பட் எனக்கும் வேந்தனோட லவ்வ பாக்கனும் போல இருக்கே.." பெருமூச்சுடன் சொன்னவனின் மனதிலோ இனி தோழனின் வாழ்வு சீராகிவிடும் என்கின்ற ஆழமான நம்பிக்கை.

●●●●●●●●

மடிக்கணினியில் தட்டிக் கொண்டிருந்தவனை அடிக்கடி பார்ப்பதும் தலை கவிழ்வதுமாக கடந்தன,அரவிந்தின் நாழிகைகள்.

"என்னடா இவன் கிட்ட ஒரு சின்ன சேஞ்சும் இல்ல..அந்த ப்ரித்வி பேய் நம்ம கிட்ட பொய் சொல்லி இருக்கானா..?" பையனின் இயல்பான நடத்தைகள் ப்ரித்வியின் பேச்சை பொய்யென்று சந்தேகப்படும் நிலைக்கு தோழனை தள்ளியிருந்தது.

தன் வேலையை முடித்துக் கொண்டு தலை நிமிர்த்தியவனோ தோழனை அழைத்திட அரவிந்துக்கு புருவங்கள் சுருங்கின.

"என்ன மச்சான்..? என்ன விஷயம்..?"

"எங்க கல்யாணத்த ரெஜிஸ்டர் பண்ணாத விஷயத்த நீ யார் கிட்டவும் சொல்லல தான..?" பையன் கேட்டி ஆமோதிப்பாய் தலையசைத்தவனின் மனதுக்குள் நடுக்கவலைகள்.

"ம்ம்.." அத்தோடு பையன் இன்னொரு கோப்பை எடுத்துக் கொண்டு வேலையில் ஆழ அரவிந்துக்கோ அத்தனை பயமாய்.பையனின் ருத்ர தாண்டவத்தை பார்க்கப் போவதை நினைக்கையிலேயே உள்ளம் கலங்கிற்று.

அந்த நினைப்பில் உழன்று கொண்டிருந்தவனோ கதவு திறக்கும் சத்தத்தில் விழி நிமிர்த்திப் பார்த்திட அங்கு நின்றிருந்த முகேஷைக் கண்டதும் விழிகளில் பேரதிர்வு.

அனுமதி கூட கேளாமல் முகத்தில் ஏளனம் படர கோணல் சிரிப்புடன் பையனை நோக்கி வந்து கொண்டிருந்தவனை நிதானமாய் பையனின் விழிகள் ஏறிட்டாலும் அவனுள்ளம் எரிமலையென தகித்தது.

இவருவரும் தொழில் முறையில் எதிரிகள் தான்.அவனுக்கோ பையனின் மீது இருந்த பழியுணர்ச்சி என்று வன்மமாக உருப்பெற்றது என்று தெரியவில்லை.

தொழிலில் போட்டியை விடுத்து தனிப்பட்ட வாழ்வில் பையனை பழிவாங்க ஆரம்பித்திருந்தான்,அவன்.முதலில் அவன் போட்ட திட்டங்கள் எல்லாம் பாழாகிப் போக பையனின் மீது பொய்ப்பழி போட தீட்டிய திட்டம் மட்டும் நிறைவேறியதை விதி என்று தான் சொல்ல வேண்டும்.

தவறே செய்யாமல் காதலை இழந்து குடும்பத்தை பிரிந்து குற்றமில்லை என்று தெரிந்தும் அவன் சுமக்கும் அவப் பெயர்களுக்கு முழு முதற் காரணம் அவன் தான்.அந்த கோபம் அணையா தீயாய் பையனின் மனதில் இருக்கத் தான் செய்தது.

அதுவும் பையன் ஏதேனும் தன்னை செய்யக் கூடும் என்று பயந்து சில வருடங்கள் வெளிநாட்டில் தலைமறைவாகி இருந்தவனுக்கு இப்போது தைரியத்தின் கொடுக்கு முளைக்கக் காரணம் அவனின் அண்ணனுக்கு அரசியல் கட்சியொன்றில் முக்கியமான இடம் கிடைத்தது தான்.

"எப்டி இருக்கீங்க மிஸ்டர்.யாழ் வேந்தன்..?" நக்கல் குரலில் கேட்டுக் கொண்டு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்திட அழுத்தமாய் அவனைத் தீண்டின,பையனின் விழிகள்.

அவனுக்கு கோபம் இருந்தாலும் முகேஷை பழிவாங்கவெல்லாம் அவன் யோசிக்கவில்லை.அதற்கு அவன் நாட்களில் இடமும் இருக்கவில்லை.

"என்ன மிஸ்டர் யாழ் வேந்தன்..ரொம்ப நல்லா இருக்கீங்க போல..? லவ்வர் கு கல்யாணம் ஆயிடுச்சாம்..வீட்ட விட்டு தொரத்திட்டங்காளம்..எக்ஸிட்ரா..எக்ஸிட்ரா..நா இல்லாதப்போ இவ்ளோலாம் நடந்துருக்கு..அதான் நீங்க எப்டி இருக்கீங்கன்னு கேக்கறேன்..?" எகத்தாளமான அவன் பேச்சில் துளியும் கோபப்படாது பேபர் வெயிட்டை விரல்களால் சுழற்றிப படி இருந்த பையனின் நிதானம் தோழனுக்குள் பயத்தை பரப்புவதாய்.

பையனின் நிதானத்தில் பின்புலத்தை ஆழமாய் அறிந்தவன் அல்லவா,அவனின் உயிர் தோழன்.கதிரையில் கொஞ்சம் சரிவாய் அமர்ந்து இரு புறமும் சிறு அலைவை ஆற்றிக் கொண்டு அமர்ந்திருந்தவனின் தோரணையில் ஒரு வித மிடுக்கும் ஆளுமையும்.

"என்ன மிஸ்டர் யாழ் வேந்தன் எதுவும் பேச மாட்டேங்குறீங்க..? வட்ஸ் ராங் வித் யூ..இதுல யாரோ ஒரு பொண்ணு கூட கல்யாணமும் ஆயிடுச்சாம்.." அவன் சொல்லிட அப்போது அதே தோரணையில் இருக்கையில் சரிந்திருந்தான்,பையன்.

அரவிந்துக்கு கிலி பிடித்துக் கொண்டது.தோழன் உச்ச கட்ட கோபத்தில் முகேஷை ஏதேனும் செய்து விடுவானோ என்று பயந்தவனுக்கு தொடராய் வந்த அழைப்பு வேறு எரிச்சலை கொடுத்திட அணைத்துப் போட்டான்,அலைபேசியை.

இசையவள் தான் அவர்களின் அலுவலக நுழைவாயிலில் இருந்து அரவிந்துக்கு அழைப்பெடுத்து ஓய்ந்து போனாள்,வெகுவாக.

முகேஷுக்கு பையனின் அமைதி இன்னும் வன்மத்தை கிளறிட வார்த்தகைள் தடித்தன.பையனின் நிதானம் அவனுக்கு தன்னிலையை மறக்கடித்திருந்தது.

"என்ன என்ன பேசுனாலும் பேசாம இருக்குறது கெத்துன்னு நெனப்பா..இப்போ எங்கண்ணன் பெரிய போஸ்ட்ல இருக்கான்..நா தப்பு பண்ணாலும் யாரும் எதுவும் பண்ண முடியாது..ஆனாலும் நீ ரொம்ப பாவம் வேந்தன்..எல்லாத்தயும் தொலச்சிட்டு தனி மரமா நிக்கற..? இப்டியிருந்தும் உன்ன ஒருத்தி கட்டி கிட்ட இருக்கா..அதுவும் கோர்ட்ல ஜட்ஜ்மன்ட் கூட வராதப்போ..ரேப்பிஸ்ட்னு தெரிஞ்சும் கட்டி கிட்டு இருக்கான்னா.." அவன் மேற் கொண்டு எதுவும் பேச முடியாமல் பையனின் கையில் இருந்த பேபர் வெயிட் அவனின் நெற்றியை பதம் பார்த்திருக்க நெற்றி புடைத்தது.

நல்லவேளை முழுதாய் அவன் மீது படவில்லை.நெற்றியின் ஓரத்தில் தான் அடித்து பின்னே சென்று வீழ்ந்தது.பையன் எறிந்த வேகத்தில் பட்டிருந்தால் நடுநெற்றி வெடித்திருப்பது சர்வ நிச்சயம்.

முகேஷ் சுதாரிக்கும் முன்னமே அவனின் காலரை எட்டிப் பிடித்த பையனோ இழுத்த வேகத்தில் தள்ளி விட கதிரையை தள்ளிக் கொண்டு கீழே விழுந்தவனுக்கு நடந்ததை கிரகித்திட நேரம் தேவைப்பட்டது.

அதுவும் பையனிடம் அடி வாங்கிய பின் தன்மானம் சீண்டப்பட தகாத வார்த்தைகளுடன் கத்தியவனின் வயிற்றில் எத்தியவனோ அவனின் காலரைப் பற்றி எழுப்பி சுவற்றில் சாய்த்து முகத்தில் குத்து விட தடுக்க முயன்று மறு முழங்கையால் அடி வாங்கிக் கொண்டான்,தோழன்.

"மைன்ட் யுவர் வேர்ட்ஸ்ஸ்ஸ்ஸ்..சொலச்சிருவேன்" விரல் நீட்டி எச்சரித்தவனுக்கு மீண்டும் அவனை அடிக்கும் எண்ணமில்லை.

"என்னடா என்னடா பண்ணுவ..ரேப்பிஸ்ட் கல்யாணம் பண்ண அவ மட்டும் நல்ல.." அதற்கு மேல் அவனுக்கு எதுவும் உரைக்கவில்லை.அறை வாங்கிய வேகத்தில் தலை கிறுகிறுத்துக் கொண்டு போக அதை உணரும் முன்னர் வாயில் விழுந்த குத்தில் இரத்தம் பீறிட்டது.

இடைவேளை நேரம் என்பதால் பையனின் அறைக்கு வெளியே யாரும் இல்லாதிருந்தது பையனுக்கு இன்னுமே வசதியாகிப் போனது.கண்ணாடித் தடுப்புக்கு வெளியே யாரும் இருந்தாலும் அவர்களும் பையனின் அனுமதியின்றி உள் நுழைந்திட தயங்கித் தான் போயிருப்பர் என்பதும் உண்மை தான்.

"என்னடா சொன்ன..?" பையனின் நிதானம் வெகு தூரம் பறந்து போயிருக்க அவனை சட்டைக் காலரை பற்றி இழுத்து வயிற்றுக்கு முழங்காலால் ஒரு உதை விட்டவனோ படாரென அவனை சுவற்றில் அடித்திட அதுவே பெரும் சத்தமாய்.

சத்தியமாய் பயந்து விட்டான் அரவிந்த்,பையனின் ஆவேசம் கண்டு.ஆவேசம் என்பதை விட மூர்க்கம் என்பதே பொருத்தம்.அவனைச் சொன்ன போது அடித்தததில் ஆவேசம் இருந்தாலும் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வரும் நிதானம் இருந்தது.

ஆனால்,இப்பொழுது நிதானம் என்கின்ற வார்த்தையை அறிந்திராதவன் போல் மூர்க்கத்தனமாய் தொடராய் முகத்துக்கு அடித்துக் கொண்டிருந்தவனை எத்தனை முயன்றும் அசைத்திடவே முடியவில்லை.

கழுத்தை நெறிக்காதது பாக்கி.கரங்களும் கால்களும் சராமாறியாய் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்க அரவிந்துக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

"மச்சான் விட்றா..அவன் செத்துறப் போறான்டா..விட்றா.." முகேஷின் முகத்துக்கு நேரே இருந்த கையை பிடித்துக் கொண்டு கத்திட உதறிக் கொண்டு மீண்டும் குத்தப் பார்த்தவனை நிறுத்தியது,பாவையவளின் சத்தமான அழைப்பு.

உயிர்த்தொடும்.

2024.09.16
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
யாழின் இசையாய்..

யாழிசை 25(i)


அவளின் அழைப்பு பையனின் செவிமோதிட அந்த நிறுத்தம்..அந்த நிதானம்..அந்த அமைதி..அந்த அடக்கம்..அந்த தயக்கம் எல்லாம் ஒரு நொடி தான்.

முகத்துக்கு முன்னே நின்றிருந்த கரத்தை அரை மயக்க நிலையில் கண்டு கொண்ட முகேஷ் ஆசுவாசப் பெருமூச்சு விடும் முன்னை மீண்டும் கன்னத்தில் ஒரு குத்து.

பதறித் தான் போய்விட்டாள்,இசையவள்.கதவைத் திறந்தவளோ அதி வேகத்தில் பையனை நெருங்கி வர அரவிந்துக்கோ அத்தனை நிம்மதியாய் இருந்தது,பாவையவளைக் கண்டதும்.

யாழவனை நெருங்கிய இசையவளோ அவனின் கரத்தை அழுத்திப் பிடித்திழுக்க வழமைக்கு மாற்றமின்றி இப்போதும் அவனிதயம் வேகமெடுத்திட அது விளங்கினும் தன் கோபத்தை அடக்கும் நிலையில் இல்லை,பையன்.

"இசை என்ன விடு.." மீண்டும் சீறியவனோ அசைந்து கொடுக்கவில்லை. முகேஷின் சட்டைக் காலரை பற்றியிருந்த கரத்தை பிரித்தெடுக்க முடியாமல் திண்டாடியவளுக்கோ பையன் மீது கோபமும்,நிறைவாய்.

"விடுங்கன்னு சொல்றேன்ல.." அவள் அதட்டிட நகர மறுத்தாலும் மீண்டும் அடிக்காது அடங்கித் தான் நின்றிருந்தான்,அவனும்.

அவனின் கோபத்துக்கு மீண்டும் கரம் நீளவிடா இந்த அடக்கமும் சற்றே அதிகப்படி என்கின்ற எண்ணம் தான் அவனுக்குள்.அழுத்தமாய் கால்கள் வேரூன்ற நின்றிருந்தான்,கல்லுளி மங்கன்.

"அண்ணா இவர புடிச்சி இழுங்கண்ணா..பர்ஸ்டு இந்தாள கொண்டு போய் ஹாஸ்பிடல் சேருங்க..ஐயோ விடுங்க சாரே.." அவள் அழுந்தப் பற்றி இழுக்க இறங்கி வராதவனின் தேகம் முழுவதும் அவள் ஸ்பரிசத்தின் குளிர்மை பரவிற்று.

"இப்போ அவர விடப் போறீங்களா இல்லியா..? காது கேக்குது தான.." கத்தியவளுக்கு அதிகப்படியான பயம் தான்,முகேஷுக்கு ஏதாவது ஆகி பையனின் மீது பழி வந்திடுமோ என்று.

"அவனுக்கு சாரி கேக்க சொல்லு விடறேன்.." தன் பிடியில் விடாது தரிப்பவனை அவளும் என்ன தான் செய்திட முடியும்..?

அவள் ஒன்றும் பூஞ்சை தேகத்துக்கு சொந்தக்காரியும் அல்ல.மென்மையான கைப்படியின் அகராதியும் அல்ல.ஆனாலும்,கல்லுளி மங்கனை ஓரடியும் தள்ளி நகர்த்திட இயலவில்லையே.

"என்னாச்சு உங்களுக்கு..? நல்லா தான இருந்தீங்க..?தல அடிபட்ருச்சா..? என்ன பேசி கிட்டு இருக்கீங்க..?" கோப மிகுதியில் அவனைத் திட்டியவளுக்கு அவனின் மண்டையில் நான்கு குட்டினால் என்ன என்பதாய் மனநிலை.

பையனின் கட்டளை அரை மயக்க நிலையில் இருந்தவனின் செவிகளிலும் விழுந்திருக்க வேண்டும்."சாரி.." தன்னை விடுமாறு அவன் உச்சரித்திட இசையவளின் பார்வை யாழவனை தீர்க்கமாய் தீண்டிற்று.

"சாரி சொல்லிட்டாருல விடுங்க.." இழுக்க முயன்றவளின் செயலில் அவனிதழ்களில் மர்மப் புன்னகை.கள்வனின் விழிகளில் அவளுக்கான இரசனை அபரிமிதமாய்,காதலில் தோய்ந்து.

முரணில் ஒரு முரணாய்,பையனின் விழிகளை நனைத்திருந்த காதலும் அழகிய கவிதையாய்.

"உன் கிட்ட சாரி சொன்னா விட்றேன்.."

"வெளயாட்றீங்களா நீங்க..? என் கிட்ட எதுக்கு சாரி சொல்லனும்..விடுங்க அவர.." அவள் கத்தும் போதே "சாரி மேடம்.." முணகியவனின் மெதுவான வார்த்தைகள் காற்றாய் இருவரின் செவிகளிலும் நுழைந்தன,சிரத்தையின்றி.

அரவிந்தோ ரணகளத்தை மறந்து பையனைத் தான் வெகு சுவாரஷ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனறிந்த வேந்தன் இல்லை இது.இதுவரை கண்டிராத முற்றிலும் புதிதான பரிமாணத்தில் இசையவளின் யாழவனாகத் தான் ஊன்றிப் போனான்,தோழனின் விழிகளுக்குள்ளும்.

அவன் விழிகளில் வழிந்தோடிய காதலும் இத்தனை நேரம் இருந்த இறுக்கம் அகன்று போய் முகத்தில் தோன்றிய கனிவும் பதட்டத்தில் இருந்தவளுக்கு புலப்பபாது போய்விடினும் அவனுக்கு தெளிவாய் ஆழமாய் தெரிந்தது.அதுவும் அந்த களேபரத்தில் அடிக்கடி அவளை இரசித்த விழிகள் ஆளை அசத்தியதே.

பையனுக்கு அவளின் கெஞ்சலும் மிஞ்சலும் கொஞ்சம் கூடுதலாகவே பிடித்துப் போய் விட அவனை மேலும் தவிக்க விட்டான்,கேடியவன்.

நெருக்கத்தில் கண்ட அவளின் பேராழி விழிகள் உள்ளுக்குள் காதல் மாயங்களை கோடி கோடியாய் நிரப்பி விட்டால் அவனும் என்ன தான் செய்வது..?

"அவரு தான் சாரி சொல்லிட்டாருல..விடுங்க.." கத்தியவள் அழாதது மட்டுந்தான் மிச்சம்.

"அண்ணா நீங்க என்ன பே பேன்னு பாத்துட்டு இருக்கீங்க..? விட சொல்லுங்க அவர..டயட் டயட்னு திரிஞ்சிட்டிருக்குற மனுஷன அசக்க கூட முடியல.." அவளின் கத்தலில் சிந்தை கலைந்த அரவிந்தோ பாவையவளின் பக்கத்தில் மார்புக்கு குறுக்கே கையை கட்டி பேசாமல் நின்றிருக்க இருவரையும் பார்த்து கத்தியே விட்டாள்,அவள்.

அடிவாங்கியவனை இன்னும் தன் பிடிக்குள் வைத்திருந்த பையன் அவளின் இரத்த அழுத்தத்தை எகிற வைத்தது போதாதென்று தோழனும் அவளின் கோபத்தை கூட்டிட செவிப்பறை கிழியும் அளவு கத்தத் தான் முடிந்தது.

"நா சொல்ற யாராச்சும் கேளுங்க.."அறை அதிர கத்தியவளின் பொருட்படுத்தாது காதைக் குடைந்து கொண்டவனை விசித்திரமாய் பார்த்தாள்,அவள்.

"என்ன மேக் டா இவன்..?" அழுகுரலில் புலம்பிய படி அவளின் கரத்தை அவனிடம் இருந்து விலக்கி விட்டு இடுப்பில் கரம் குற்றி பெருமூச்செறிந்தவளை கண்டு கள்ளச் சிரிப்பு சிரித்த அரவிந்தோ அவளின் பின்னே நகரப் பார்த்த சமயம் காலை குறுக்கே வைத்து இடறச் செய்திட பின்னோக்கி சரிந்தவளைக் கண்டு பதறித் தீர்த்திருந்தான்,பையன்.

"மாயக்காரி பாத்துடி.." கத்திய படி அவளை நோக்கி நீண்ட கரம் ஒற்றைக் கரம் அவளின் மணிக்கட்டை அழுந்தப் பற்றிட மறு கரமோ அவளின் முழங்கைக்கு மேற் பகுதியில் இறுக்கமாய் பதிந்திருந்தது.

அந்த குரலில் தான் எத்தனை பதட்டம்..?
அந்த விழிகளில் தான் எத்தனை பயம்..?
அகத்தில் தோன்றிய பரிதவிப்பது விழிகளிலும் விரவிப் பரவியதே,அவனைக் கேளாமல்.

"ஹப்பாடி விட்டுட்டான்..." நிம்மதியாய் நினைத்த அரவிந்துக்கு தன் திட்டம் ஜெய்த்ததில் உள்ளுக்குள் வெற்றிக் களிப்பு தோன்றிட காரித் துப்பியது,மனசாட்சி.

தொய்ந்து விழப் பார்த்த முகேஷை பிடித்து நிறுத்தியவனோ அவனை அருகே இருந்த கதிரையில் அமர வைத்து மூச்சு வாங்கிடவும் பையனின் கரங்களை உதறிக் கொண்டு முறைப்புடன் பாவையவள் நிமிர்ந்திடவும் சரியாய் இருந்தது.

உறுத்து விழித்த படி அவள் பையனைக் கடந்து சென்றிட பையனோ அவளுக்கு முதுகு காட்டி நின்று பெருமூச்சு விட்டு இடது நெஞ்சில் அழுத்தமாய் கரம் பதித்து நின்றதை சற்றே எட்டிப் பார்த்து கண்டு கொண்ட தோழனின் புருவங்கள் வியப்பில் மேலேறி நின்றன,சிறு சுருக்கத்தோடு.

"அண்ணா யாரயாச்சும் வர சொல்லி இவர கூப்டு போங்க.." கடுப்புடன் சொன்னவளின் விழிகளில் அனல் பறந்தது.

"ம்ம சரிம்மா.." பவ்யமாய் கூறியவனோ இருவருக்கு அழைத்திட அடுத்த பத்து நிமிடங்களில் அருகே இருந்த மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தான்,முகேஷ்.

சுழல் நாற்காலியில் சாய்ந்தமர்ந்து விசிலடித்த படி இருந்தவைனக் காண காண அவளுக்கு கோபம்.அரவிந்தோ அவளின் திட்டுக்களை ஏற்க முடியாதென தப்பித்து விட்டிருந்தான்,கிடைத்த இடைவெளியில்.

இரு கரத்தின் விரல்களையும் கோர்த்து பின்னந்தலையில் கோர்த்து பாதங்களை எத்தி மெல்லிய அலைவை ஆற்றிக் கொண்டிருந்தவனின் தோரணை அவளின் விழிகளை இரசிக்க வைத்திட விழைய கடிவாளமிட்டு அடக்கிக் கொண்டாள்,மனதை.
அவளின் இரசனையை அவன் மீதிருந்த கோபம் புதைத்து வைத்தது.

"அறிவிருக்கா உங்களுக்கு..? இப்டி போட்டு அடிச்சு இருக்கீங்க..? ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுச்சுன்னா என்ன பண்றது..? யாரு பதில் சொல்லுவா..? என்ன பதில் சொல்லாம இருக்கீங்க..?" ஆக்ரோஷமாய் கொதித்தவளை இரசிக்காமல் இருந்திடுவானா காதல்காரன்..?

படபடவென பொறிந்தவளின் விழிகள் ஆடிய நர்த்தனத்தில் மொத்தமாய் தொலைந்து தான் போனான்,அவனும்.மனமோ அவளை இரசித்தல்லவா தொலைக்கிறது..?

யாருக்கும் இப்படி தன்னை திட்டும் உரிமையை அவன் கொடுத்ததில்லை.அவன் தான் அடக்கி விடுவானே ஒழிய இப்படி அடங்கி நிற்கும் வர்க்கம் இல்லை,பையன்.

வர்க்கங்களின் ஆட்சி அவ(ள்)ன் காதலின் முன் தர்க்கமின்றி தலைகீழானதோ..?
யாரறிவர்..?

அவனுக்குள் ஏதோ மென்னீரைலையாய் மாற்றம் உருவெடுப்பதை உணர்ந்தவனோ பட்டென பார்வையை திருப்பி விழிகளை அலையவிட்டு பின்காதோரமாய் விரல் நுழைத்து சிகைக் கோதிக் கொண்டு இன்னும் அவளுக்குள் கோபத் தீயை அல்லவா பரப்பினான்..?

"நா இவ்ளோ மூச்சு வாங்க திட்டிட்டு இருக்கேன்..இந்தாளு என்ன பண்ணுது..இருக்குறத பாரு..எல்லாம் என்னோட தல விதி.." தன்னை நொந்து கொண்டவளுக்கு பையன் புதிதாய் தெரியாமல் இல்லை.தன் விழிகளுக்கு வித்தியாசமாய்த் தெரிகிறான் என சந்தேகத்தை அடக்கி விட்டாள்,அவசரக்காரி.

விழிகளில் அனல் தேக்கி முறைப்பொன்றை அள்ள வீசி விட்டு அவள் நகரப் பார்த்திட பையன் தடுத்தாலும் அவனின் தோரணையில் மாற்றம் இல்லை.அவளை வெறுப்பேற்றத் தான் அப்படி இருந்தான்,போலும்.

"எங்க போற..?" அசட்டையாய் கேட்டவன் தானா காலையில் பேசியவன் என்று அவளுக்கே சந்தேகம் வந்து விட்டது.

அப்போது தந்தையாய் மாறியிருந்தான்.இப்போது மொத்த குறும்பையும் கட்டவிழ்த்து விளையாட்டு காட்டுகிறானே..?

"எதுக்கு கேக்கறீங்க..?" அவள் குரலில் ஏகப்பட்ட கடுப்பு.

"சும்மா தான்.." அவனும் அவளைப் போலவே சொல்லிட முறைத்துப் பார்த்தவளோ அவன் கண்களுக்கு பேரழகாய்த் தெரிந்தாள்,காதல் செய்த மாயாஜாலங்களால்.

"ஆமா உங்களுக்கு காது நல்லா கேக்குது தான..? நா அவ்ளோ கத்தியும் வவ்வர் மாதிரி விடாம அந்தாள புடிச்சி கிட்டு இருக்கீங்க..?"

"லவ்வர் கழுத்தயா புடிப்பாங்க.." அவள் கூறி முடிக்கும் முன் அவன் இதழ்களுக்குள் முணங்கிட அவனிதழசைவது தெரிந்தாலும் வார்த்தைகள் புரியவில்லை.

"என்ன வாய்க்குள்ள முணுமுணுப்பு..? உங்க கூட தா நா பேசி கிட்டு இருக்கேன்.." அமர்த்தலாய் அவள் கூறிட மெச்சுதலாய் ஏறி இறங்கின,அவன் புருவங்கள்.

"நம்ம கூட இருந்து நம்மள அப்டியே ஃபோலோ பண்றா மாயக்காரி.."

"நா பேசுனா பதில் சொல்ல மாட்டீங்களா..?" ஏறியிருந்த அவளின் குரல் இறங்கிட பார்வையில் கூர்மை ஏறிற்று.

"உங்களுக்கு அடி பட்டுச்சா..?" பதட்டத்துடன் அவள் முன்னோக்கி வந்திட அவளை விட பதறியது என்னவோ அவன் தான்,அவளின் அருகாமையை நினைத்து.

"அ..அடி எல்லாம் இல்ல" பையனின் வார்த்தைகள் திணறின.

"பொய் சொல்லாதீங்க..தோ நெத்தி வீங்கி இருக்கு..கைலயும் காயம்.." அவள் ஆராய்ந்து பார்த்திட அவனுக்கும் தெரியும்,முகேஷின் பலவீனமாவ எதிர்த்தாக்குதலில் அவனுக்குள் சில காயங்கள் விழுந்தது.

முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு அருகில் நின்று "கோவம் வர்லாம்..ஆனா இவ்ளோலாம் ஆகாது.." திட்டியவாறு அவள் முகத்திலும் தேகத்திலும் இருந்த சிறு காயங்களுக்கு மருந்திட அவளின் அருகாமை பையனின் அகத்தை ஆழமாய் கீறி அழகாய் காயம் செய்வது அவளுக்குத் தெரியாது.

அவள் அருகாமையில் அவனுக்குள் நடந்தேறும் மாற்றங்கள் கொஞ்சமும் ஏமாற்றாமல் நிகழ்ந்திட விழிகளை இறுகப் பொத்திக் கொண்டவனோ தன்னை இயல்பாய் காட்டிக் கொள்ள சிரமப்பட அவளும் காரியத்தில் மட்டுமே கண்ணாயிருந்து மருந்திட்டு முடித்து அகன்றிடவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.

"ஒவ்வொரு தடவயும் மருந்து போட வரும் போது தான் நமக்கு ஏதேதோ ஆகுது.." நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு பிதற்றியவனுக்கு அவள் அருகாமையும் பார்வையும் மட்டும் அத்தனை இம்சையாய்.

●●●●●●●

"ச்சே..என்ன இன்னிக்கி இப்டி புளுக்கமா இருக்கு..?" இரவு நேரத்தின் குளிர் கொஞ்சமும் இல்லாது போக வெளியே வந்து நின்றான்,ப்ரித்வி.

அவன் தங்கியிருக்கும் வீடு அது.சுற்றி பெரிதாய் ஆட்கள் இல்லை.அலுவலகத்துக்கு பக்கதத்தில் அமைந்திருப்பதால் இங்கு தங்கியாக வேண்டிய கட்டாயம்.

மற்றைய நாட்களில் வேலைகள் இழுத்துக் கொள்வதால் சலிப்பை உணராதவனுக்கு இன்றோ வேலை ஏதும் இல்லாது போனது கடினமாய்.

வெளியில் சென்று வரலாம் என்று தான் நினைத்திருந்தான்.தொற்றிய சோம்பல் அதற்கு தடை போட்டிருந்ததே,பெரும் பாறையென.

வீட்டின் முன் புறம் இருக்கும் சிறு பூங்காவை ஒற்றை ஆளாய் வலம் வந்து கொண்டிருந்தவனுக்கு ஹாரன் சத்தத்த்தை தொடர்ந்து பாதச்சத்தங்கள் கேட்டிட எட்டிப் பார்த்தவனுக்கு தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த பையனைக் கண்டதும் விழிகள் பிதுங்கின.

நேற்று வாங்கித் தொலைத்த அறையும் நினைவில் வர அரவிந்தின் முன் திட்டும் போது இருந்த தைரியத்தின் இருப்பிடத்தின் விலாசம் கூட காணாமல் ஆகியிருந்தது.

அவனின் முகத்தில் வெளிப்பட்ட பயத்தை கண்டு தன்னையே நொந்து கொண்டான்,பையன்.

அவனுக்கே தெரியும்,நேற்று தான் நடந்து கொண்டது சற்று அதிகப்படி என்பது.அந்த நேரத்தில் அவனால் அவனை வரையறைக்குள் வைத்து கோபத்தை அடக்கிட இயலாமல் இருந்தது என்பதும் சத்தியமான உண்மை.

தன் முன்னே வந்து நின்றவனை வீட்டுக்குள் அழைத்திடக் கூட ப்ரித்விக்கு நா எழவில்லை.தன் வீட்டு விலாசத்தை எப்படி கண்டு பிடித்திருப்பான் என்கின்ற யோசனையும் உள்ளுக்குள் படர்ந்தது.

"என்ன ப்ரித்வி வந்தவங்கள வீட்டுக்குள்ள வான்னு கூட சொல்ல மாட்டேங்குறீங்க..?"

"உ..உள்ள வாங்க.." பயத்தில் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

"என்ன ப்ரித்வி கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க..ஆனா உங்க வைஃப ஆளே காணோம்..நீங்க மட்டும் வர்க்னால இங்க வந்து தங்கியிருக்கீங்களா..?" அவன் கேட்ட தொனியில் வில்லங்கள் விரிந்து நின்றது பையன் கேட்ட விதத்தில்.

அவரசத்தில் நா கூட எழவில்லை,ப்ரித்விக்கு.அவனுக்கு புரிந்து விட்டது ஏதோ ஒன்று தெரிந்ததால் தான் தன்னைத் தேடி வந்திருக்கிறான் என்பது.ஆயினும் விடயம் தெரிந்த ஆழம் பிடிபடவில்லையே.

"நீங்களா என் கிட்ட எல்லாத்தயும் சொல்லிட்டா யூ ஆர் சேஃப் ப்ரித்வி.." இறுக்கமான குரலில் பையன் மிரட்டிட அதற்கு மேலும் மறைப்பானா அவன்..?

"நீங்களும் இசையும் லவ் பண்ணீங்களா..?"

"இல்ல.." உடனடியாய் அவன் மறுக்க பையனின் மனதில் விவரிக்க முடியா இதமென்றாலும் உள்ளுக்குள் வலியின் சிறு கீறலும்.

"அப்டின்னா எதுக்காக என் கிட்ட பொய் சொன்னீங்க..?"

".................."

"உண்ம என்னன்னு தெரிஞ்சிக்காம நா உங்கள விட்ருவேன்னு தோணுச்சுன்னா நீங்க அமைதியா இருக்கலாம்.."

"நீங்க நெனக்கிற மாதிரி இல்ல..அரசிக்கு உங்கள முன்னாடியே தெரியும்..உங்கப்பா உங்களுக்கு ஃபர்ஸ்ட் பாத்த பொண்ணு அரசி தான்.." என்றிட பையனின் விழிகள் இடுங்கி பின் யோசனையாகின.

"வாட்ட்ட்ட்ட்ட்ட்..?"

"ஆமா..அவ..அவங்களுக்கு உங்கள முன்னவே தெரியும்..உங்க ஃபோட்டோ கூட பாக்காம உங்கப்பா ஆஃபீஸ் ஆளுங்க சொல்றத வச்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க.."

"பைத்தியமா இவ.." கடுப்பில் தலை கோதிக்கொண்டான்,பையன்.அவன் நினைத்தை விட அவளின் நேசம் ஆழமாய் இருந்திட அவனுக்கோ அத்தனை குற்றவுணர்வு.

"ம்ம்.."

"அப்றம் தான் உங்களுக்கு ஒரு பொண்ண புடிச்சி இருக்குன்னு தெரிய வந்துச்சு..அவளே..சாரி சாரி அவங்களே திரும்ப கல்யாணம் வேணாம்னு சொல்லி வீட்ல சண்ட வேற.."

"இசை என்ன கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணல தான..?" இருக்கக் கூடாது,இருக்கவே கூடாது என்கின்ற இறைஞ்சலுடன் அவன் வினவிட ப்ரித்வி பதில் சொல்லும் வரை இதயத் உதைத்த உதைப்பு கொஞ்ச நஞ்சமில்லை.ஆழ் மனம் இருக்கக் கூடாதென்ற வேண்டுதலுடன் தவியாய்த் தவித்தது.

"இல்ல.." அவன் மறுத்திடவே போன உயிர் திரும்பி வந்தது பையனுக்கு.அவன் மட்டும் ஆமென்று பொய்யாய் சொல்லியிருந்தாலும் செத்தே போயிருப்பான்,பையன்.

"அதுக்கப்றம் தான் உங்க மேல கேஸ் விழுந்துச்சு..சாரி சாரி நா ஹர்ட் பண்ணல..அவங்க ஒத்தக் கால்ல நின்னா நீங்க அப்டி பண்ணிருக்க மாட்டீங்கன்னு..ஏன்னு தெரில அவ மட்டும் நம்பவே இல்ல..யாரு சொல்லியும்..அவங்க தான் அபிஷேக்க.." இழுத்தவனோ வார்த்தைகளை மென்று முழுங்க பையனின் பார்வையில் தீர்க்கம் வழிந்தது.

"என்ன திரும்ப சொல்லுங்க..?"

"அபிஷேக் அவங்களோட காலேஜ் ப்ரெண்டோட அத்த பையன்..அரசிக்கு அபிஷேக்க நல்லா தெர்யும்..அவங்க தான் அரவிந்த் கிட்ட பேச சொல்லி அபிஷேக்க மீட் பண்ண வச்சதே..?"

"தென் அரவிந்த்கு முன்னாடியே இசை யாருன்னு தெரிஞ்சு தான் இருக்கு..?" அழுத்தமான பார்வையுடன் வினவியவனுக்கு ஏனோ உச்சானிக் கொம்பில் கோபம்.

"ம்ம் தெர்யும்.." பயந்தவனோ அரவிந்தின் காதல் விவகாரத்தை பற்றி மூச்சு விடவில்லை என்றாலும் பையன் தேடித் தெரிந்து கொள்ள மாட்டானா..?
அரவிந்த் மீது இருந்த அளவற்ற நம்பிக்கை தான் இதுவரை அவனின் செயல் எதையும் ஆராய்ந்து பார்த்திட விடவில்லை.

இப்போதும் அதே நம்பிக்கை இருக்கிறது.அந்த நம்பிக்கையை விட சிறு சந்தேகமும்.தோழன் தன்னை ஏமாற்ற மாட்டான் என்று தெரியும்.ஆனால்,தன் நல் வாழ்க்கைக்காக பொய் சொல்லக் கூடும் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியுமே.

"சரி எதுக்கு இசையோட லவ்வர் னு பொய் சொன்னீங்க..?"

"நீங்க தான் கல்யாணம் பண்ணிக்க ஒத்து கிட்டாலும் பிரிஞ்சு போறதுன்னு முடிவுல இருந்தீங்கல..அதான் அரசிக்கு என்ன பண்றதுன்னு தெரில..அரவிந்த் அக்ரிமண்ட் கல்யாண விஷயத்த அவங்கி கிட்ட சொன்னாலும் நீங்க மறுத்திட்டீங்க..அதான் லவ்வர் இருக்கு வீட்ல கல்யாணம் பண்ணி வக்க பாக்கறாங்க..அவன் வந்ததும் பிரிஞ்சு போயிர்ரேன்னு சொல்லி உங்கள கல்யாணம் பண்ணிகிட்டாங்க.." அவன் கூறிட பையனின் கை முஷ்டிகள் இறுகின.

உயிர்த்தொடும்.

2024.09.17
 
Status
Not open for further replies.
Top